All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரையானாவின் "தவத்தின் வரமாய்..." - கதைத் திரி

Status
Not open for further replies.

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
AJ Hospital and research center

AJ குழுமம்

திரு. வெங்கடாச்சலம் கட்டிட துறையில் புகழ் பெற்ற குடும்பத்தை சேர்த்தவர். திரு. தனஜெயன் மருந்தகம் ( pharmacologist ) துறையை சார்ந்தவர். இருவரின் நட்பு
AJ மருத்துவமனைக்கு அடித்தளம் அமைந்தது என்றால், வெங்கடாச்சலத்தின் மகள் பிரியா மற்றும் மருமகன் திரு. சிவா, தனஜெயனின் மகன் பிரகாஷ் மற்றும் மருமகள் லாவண்யா , இந்த நால்வரின் முயற்சியால் இப்பொழுது இந்தியாவில் தலை சிறந்த மருத்துவமனையாக மாறியுள்ளது. மற்ற தொழில் அனைத்தும் சென்னையில் இருந்தாலும், மருத்துவமனைக்காக இந்த இரு குடும்பமும் ஒரே குடும்பமாக கோவையில் வசித்து வருகின்றனர்.

பிரியா தந்தையின் வழியில் கட்டிட பொறியாளர் துறையை தேர்ந்தெடுதார். பிரகாஷ் இருதய அறுவை சிகிச்சை நிபுணர், அவரது நண்பர் சிவா நரம்பியல் சிகிச்சை நிபுணர், நண்பனை காண மருத்துவமனை வருபவர், பின் பிரியா விடம் தன் காதலை பகிர்ந்து அனைவரின் ஆசியுடன் மணந்தார். அவர்களின் ஒரே காதல் சின்னம் தான் ஜோயா. அந்த வீட்டின் கடைசி வாரிசு, பார்க்க அமைதியாக இருந்தாலும் அவள் இருக்கும் இடத்தில் கலவரம் நடந்தால் அதான் காரணம் அவளாக தான் இருக்கும். பிரகாஷ் மற்றும் லாவண்யா திருமணத்திற்கு பின் காதல் என்னும் வகையை சார்ந்தது. இவர்களின் காதல் பரிசு ஆர்யன் மற்றும் அத்விக்.

ஆர்யன் அழுத்தம் நிறைந்தவன். ஒரு வார்த்தை பேச, எதிரில் இருப்பவர் ஒரு மணிநேரம் பேச வேண்டும். இருந்தும் தன் முடிவுகளை வார்த்தைகளில் அன்றி செயலில் வெளிப்படுத்தும் வகையை சேர்ந்தவன். அத்விக் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோற்றம் மட்டும் அன்றி குணமும் ஆர்யன் போல் இருப்பவன். அவன் தமயனுக்கு நேர் எதிர் குணம் கொண்டவன் என்பது குடும்பத்தில் இருப்பவர்கள் தவிர யாருக்கும் அறியா விஷயம். அத்விக், ஜோயா இருவரும் 2வருட இடைவெளி இருந்தாலும் இரட்டை படை போல் ஒற்றி கொண்டே சுற்றும் போர்வழி. இந்த இருவர் அட்டகாசம் தாங்காமல் படிப்பு என்ற பெயரில் இருவரையும் 2 வருடம் வெளிநாடு துரத்தி விட்டு விட, ஜோயா 3 மாதம் முன்பு தான் தன்னுடைய மனோதத்துவ படிப்பு முடித்து நாடு திரும்பி இருக்கிறாள். ஆர்யன் தந்தை ஒற்றி நரம்பியல் மருத்துவம எடுத்து இன்று நாட்டின் தலை சிறந்த இளம் நரம்பியல் மருத்துவன் என்ற பெயருக்கு சொந்தகாரன் . அத்விக் தாயை ஒற்றி மருத்துவ மேலாண்மை எடுத்தான்.



AJ மருத்துவமனை

மேலாண்மை கட்டிடத்தின் நான்காவது தளம், தளத்தின் நுழைவு வாயில் " Restricted Area " பலகையை தங்கி இருக்க தளத்தின் நீளத்திற்கு இருக்கைகள் போட பட்டிருக்க , வலது பாக்க கண்ணாடி அறை " Director's room " எனும் தக்கையை தாங்கி.

கலந்தாய்வு அறை

மருத்துவமனை இயக்குனர்களின் மாதாந்திர கூட்டத்தொடர் நடை பெற்று கொண்டிருந்தது. பிரகாஷ், லாவண்யா, சிவா, பிரியா , ஆர்யன், அத்விக், ஜோயா, தணிக்கையாளர், உட்பட அனைவரும் இருக்க, அந்த மாத அறிக்கை சமர்ப்பிக்கபட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை அனைத்தும் குறிக்கப்பட்டது. கூட்டம் நிறைவு பெற்றது.


சிவா தான் மகள் ஜோயவை நிறுத்த, ஆர்யன் மற்றும் அத்விக்கும் நின்றனர். கடந்தவாரத்தில் தள்ளிவைக்க பட்டு நடத்த பட்ட அறுவை சிகிச்சை ( postponed surgery ) பற்றி கேட்க. நடந்ததை விளக்கமாக கூற….


"உனக்கு எப்படி தெரிந்தது? "

" அன்றய அறுவை சிகிச்சை பட்டியலில், நிறுத்தப்பட்டது, குறித்து விசாரணை செய்யும் போது தெரிந்தது " என்றாள் தலை குனிந்தவாறு.

" ஊழியர்களின் தனிப்பட்ட நடவடிக்கை கண்கணிப்பது யார்?? "

" ------ "
" தனிப்பட்ட நடவடிக்கை கண்கணிப்பது அவர்கள் தேவையை இயன்றவரை நிறைவு செய்யவும், யாருக்கும் விலை போகாமல் இருப்பதற்கு தான். அவர்களை குறை கூறுவதற்கு அல்ல "

"-------- "

" இது என்னுடைய நிறுவனம் என்று ஒவ்வொரு ஊழியனும் நினைக்கின்ற வரை தான் அது நிறுவனம் ஆக இருக்கும். இது வேலை பார்க்கும் இடம் என்னும் நினைப்பு வந்துவிட்டால் அந்த நிறுவனம் இருந்த அடையாளம் கூட இல்லாமல் போய்விடும். " என்றவர் சிறிது இடைவெளி விட்டு " கவனம். உன்னுடைய சிறு தவறுக்கு விலை ஒரு உயிர் ஆகி விடக்கூடாது. " என்று கூறிவிட்டு சென்றுவிட, ஆர்யன், அத்விக் பார்த்து அவளை அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்றான்.

சிவாவுக்கு நன்கு தெரியும் நடந்த அணைத்து விஷயம். ஏன் தவறிழைத்த அவனுக்கு கிடைத்த தண்டனை உட்பட. தன் மகள் தன்னுடைய அணைத்து குணங்களும் கொண்டிருந்தாலும். தவறும் போது ஆசானாக அவளை நெறிபடுத்தவும் தயங்கவில்லை.

காரில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவளை, இரண்டு மூன்று தரம் பார்த்தவாறு காரை செலுத்தி கொண்டு வந்தான் அத்விக்.

" என் மூஞ்சிய ஏன் வேடிக்கை பாக்குற? "

இந்த விஷத்தில் இருந்து அவளை திசை திருப்ப எண்ணி,
" இல்ல எனக்கு க்ரில் சிக்கன் ஓட பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு நீ என்னா சொல்லுவேன்னு தான் பாக்குறேன்? "

" அட கொய்யால, நான் இன்னைக்கு திட்டு வாங்கிட்டு வந்து இருக்கேன், உனக்கு பிரியாணி கேக்குதா டா ? " என்றவாறு வாகனம் ஓட்டுவதை கூட பொருட்படுத்தாது அவன் தலை முடியை பிடித்து ஆட்ட,

" ஏய், விடு டீ என் ஹேர் ஸ்டைல் கலஞ்சுடும்" என்று கத்த,

" கார் ஓட்டுறது விட உன் ஹேர் ஸ்டைல் முக்கியமா என்று கேக்க,

" வரலாறில் அழகு முக்கியம் அமைச்சரே ! "
என்று வடிவேல் சொல்வது போல் சொல்ல…..

இது வரை இருந்த இறுக்கம் கலைத்து சிரித்து விட்டாள். பின்பு "இப்போ எதுக்கு உனக்கு பிரியாணி? " என கேட்க.

" எப்பவும் என்ன திட்டு வாங்க வைக்குற ஒருத்தி இன்னைக்கு, நல்ல வாங்கி கட்டி கிட்ட அதும் என் முன்னாடி எனக்கு ஹாப்பியா இருக்காதா? அதான் " என கூறி தன் பற்கள் அனைத்தையும் காண்பிக்க.

அவனை முறைத்தவள் " என் அடிமை, என் அனுமதி இல்லாம சிரிக்க கூடாதே, இது சரி இல்லையே…. " என்று அவனை ஒரு மார்க்கமா பார்த்து சிரிக்க. அதை கண்டு அவன் ஜெர்க் ஆக, வெளியில் சிரித்தபடி

" அப்படி எல்லாம் இல்ல மா, நான் சும்மா சொன்னேன் " என சமாளிக்க

" நான் நிஜமா சொன்னேன் " என்றாள் ஜோயா

இதை தான் தவளை தன் வாயால் கெடும் என்பது. அத்விக் இப்படி அலறுவதற்கு காரணம் இருக்கிறது. ஜோயா இவ்வாறு சிரித்தாள் அது தனக்கு நல்லதல்ல என்பதை நன்கு உணர்ந்தவன்.

சிறு வயதில் பிரகாஷின் தயார் எதற்கோ அத்விக்கை திட்ட முகத்தை பிடித்து வைத்து கொண்டு அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தான், லாவண்யா மற்றும் பிரியா அன்று இனிப்பு செய்து அனைவரும் கொடுப்பதற்காக தட்டுகளில் நிரப்ப, இடை புகுந்த பத்து வயது ஜோயா தான் சென்று பாட்டி மற்றும் தாத்தாவிற்கு கொடுப்பதாக சொல்ல, இரண்டு தட்டுகளை பெற்று கொண்டு வந்தவள், ஆத்விக்கை துணைக்கு அழைக்க, தட்டுகளின் பாரம் தாங்காமல் உதவிக்கு அழைக்கிறாள் போலும் என்று எண்ணி ஒன்றை வாங்க, அறை வாயில் வரை வந்தவள் அவனை ஒரு முறை பார்த்து விட்டு, தான் கொண்டு வந்ததை தாத்தாவிடம் கொடுத்து விட்டு சென்று விட்டாள். அத்விக் வேறு வழி இன்றி பாட்டியிடம் கொடுத்து விட்டு வெளியேறினான். சற்று பொறுத்து வந்த லாவண்யா இனிப்பில் உப்பு போட்டதற்காக அவனை நன்றாக கவனித்து விட்டு போக, ஒன்றும் புரியாமல் விழித்தபடி இருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தாள் ஜோயா. தன் தாய் திட்டி விட்டு போனதை பற்றி அவளிடம் புலம்பியவன்
" நான் எங்கு உப்பு போட்டேன் எதற்கு திட்டினார்கள் " என அவளிடம் கேட்க

" எனக்கு நீ வீட்டுப்பாடம் எழுதி தரல இல்ல அதுக்கு தான் "

" அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் " என கேட்க

'அட லூசே ' என்பது போன்ற பார்வை செலுத்தியவள்….

" நான் தான் உப்பு போட்டேன் " என்றாலே பார்க்கலாம்….

" அட கிராதகி " என்றவனை

" நான் சொன்ன நீ செய்யணும் இல்லனா இப்படி தான் "

" நான் உன்னை விட இரண்டு வயது பெரியவன். "

" அதனால் என்ன ?, எனக்கு வாய்த்த அடிமை என்னை விட பெரியவன் " என்று அசால்ட்டாக கூறி விட்டு அந்த இடம் விட்டு ஓடி விட்டாள்.

இது போல் அவனை படுத்தி எடுத்தாலும், எப்பொழுதும் இருவரும் ஒன்றாகவே சுற்றி கொண்டிருக்கின்றனர் இன்று வரை.
-----------------------
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ் ,

" தவத்தின் வரமாய் " அத்தியாயம் -3 பதிந்து இருக்கிறேன். படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுக பா பிளீச் !!!!!!!

அண்ட் என்னோட ud like and , commend குடுத்த எல்லாருக்கும் நன்றி,

Waiting for
Comments :):):):)

 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவம் - 4

அத்விக் மற்றும் ஜோயாவை அனுப்பிவிட்டு , தன் வாகனத்தில் புறப்பட்ட ஆர்யனின் எண்ணம் முழுவதும் ஜோயா தான் .

ஓரே வீட்டில் இருந்தாலும் அத்விக் உடன் இருக்கும் நெருக்கம் ஏன் தன்னிடம் வரவில்லை என பலமுறை தன்னிடம் கேட்கும் கேள்வியை , மீண்டும் ஒரு முறை தன்னையே கேட்டு கொண்டான் . நெருக்கத்தை விட அவள் தன்னை இதுவரை அவளுடைய நண்பனாக கூட ஏற்று கொள்ள மறுப்பது ஏன் என்று இன்னும் அவனுக்கு புரியவில்லை . இத்தனைக்கும் அவள் நண்பர்கள் வட்டம் பெரியது. ஜோயாவின் இதழ்கள் பேசுவதற்கு முன் அவள் கண்கள் பேசிவிடும் , அந்த விழி மொழிக்காக அவளுக்கு நிறைய ரசிகர் பட்டாளம் உண்டு. இத்தனைக்கும் அவள் A J குழுமத்தின் வாரிசு என்று விரல் விட்டு எண்ண கூடிய நபர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது . படிப்பிற்காக வெளிநாடு சென்று வந்த பின் அவளுடைய நடவடிக்கை சிலவற்றில் மாற்றம் ஏற்பட்டது அதன் காரணமும் புரிந்தது தான் இருந்தது. இப்பொழுது இருக்கும் ஜோயா வேறு குறும்பு தனம் முற்றிலும் குறைத்து , யாரையும் நம்பாமல், அவள் அன்னை மற்றும் அத்விக் தவிர யாரிடமும் அவள் இயல்பாக இருப்பது இல்லை என்ற எண்ணம் அவனுக்கு, ஆனால் அது யாரும் அறியா வண்ணம் மறைக்கவும் கற்று கொண்டு விட்டாள் . முன்பு சேர்ந்தால் போல் இரண்டு மணி நேரம் ஒரு இடத்தில் பார்க்க முடியாது, இப்பொழுது பகல் முழுவதும் மருத்துவமனை, இரவின் வெகு நேரம் மாடியில் இருக்கும் தோட்டம். இதில் இருந்து அவளை வெளியே கொண்டு வர ஆர்யனும், அத்விக்கும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர்.

சிறுவயதில் இருந்து அவளது சேட்டைகளை ரசித்து வருபவன். அவள் அத்விக்கை படுத்தும் பாடு கண்டு கோபப்படுவான், ஆனால் அவர்களின் நட்பு அவனை நிறுத்திவிடும். அத்விக் தவிர மற்ற ஆண்களிடம் அவள் பழகுவதை சுத்தமாக விரும்பமாட்டான். இதை அவளின் பாதுகாப்பிற்காக என நினைத்து இருந்தவனுக்கு, அது அப்படி அல்ல அது காதல் என உணரும் நாளும் வந்தது.


ஜோயாவின் கல்லுரியில் ஆண்டு விழா , தோழிகள் அனைவரும் சேலை உடுத்துவது என முடிவாகிவிட கல்லூரி செல்ல தயாராகி அறையை விட்டு வெளியே வந்தவளை , வரவேற்பு அறையில் இருந்த பிரியா , லாவண்யா அவளின் அழகை தங்களுக்குள் ரசிக்க ,

" எனக்கு டிரஸ் நல்ல இருக்க? " ஜோயாவின் குரலில் நிமிர்ந்து பார்த்த ஆர்யன் இமைக்க மறந்து நின்று விட்டான், லைட் கனகாமரா நிற பிளைன் சேலையில் , ஜர்தோசி வேலைப்பாடு கொண்ட வெள்ளை பார்டரில் அதற்கு ஏற்ற வெள்ளை தந்த நிற பிளவுஸ் அணிந்து படி இறங்கி வந்தவளை கண்டு.

லாவண்யா மற்றும் பிரியா தாயின் வாஞ்சையில் அவளை பார்த்திருக்க , ஆர்யன் உடல் மட்டும் தான் அங்கிருந்தது மனமோ ,

அடர்ந்த இருட்டில் மெல்லிய வெளிச்சம் பரவ , அந்த வெளிச்சம் பட்டு சிறு மொட்டு ஒன்று மிதமான வேகத்தில் வளர்த்து பட்டென்று வெடிக்க அந்த மலரில் இருந்து வந்த வாசம் , மொட்டு மலர்ந்த சுகம் இரண்டும் ஆர்யன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது .மலரின் மணம் அந்த இடம் முழுவதும் நிரப்ப , வெளிச்சம் மனம் முழுவதும் நிரப்ப , அந்த மலரின் மணத்தை நிஜத்தில் அவன் நாசிகளும் உணர்த்து தான் விந்தை .அந்த மணத்தை உணர்ந்து திகைக்கும் அதே வேளையில் மனம் முழுவதும் மூச்சு முட்டும் சந்தோசம் தோன்றி அவனை மூச்சு திணற வைத்தது , தன்னை மறந்து மூச்செடுக்க மறந்து அவளை பார்த்து கொண்டிருக்க , கீழே வந்த அவள் ,

" என் டிரஸ் நல்லா இருக்கானு கேட்டேன் ?'' கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து , போலி கோபத்துடன் , இடது பக்க ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கி கேட்க ,

" புடவை நல்ல பொருத்தமா இருக்குடா கண்ணா ? " ப்ரியா பதில் சொல்லும் முன்னே லாவண்யா வாஞ்சையுடன் கூற ,

" அப்போ புடவை தான் நல்ல இருக்கா நான் இல்லையா ? "

" நீ , அழகா இருக்க , இந்த புடவை அழகா இருக்கு , இந்த புடவையில் நீ இன்னும் அழகா இருக்க போதுமா ? " என தன் மகளின் மனம் எதனை விரும்பும் என அறிந்து பதில் கொடுக்க , ஜோயாவின் இதழ்கள் சிறு வெக்கத்துடன் கூடிய திருப்தி புன்னகை பூத்த நொடி ,

" இந்த உலகத்திலே நீ மட்டும் தான் அழகு " தன் சுயத்தை மறந்து , நிற்கும் இடம் மறந்து அவளில் தன்னை மறந்து உரக்க கூறியிருந்தான் ஆர்யன் .

இப்பொழுது திகைத்து நிற்பது பெண்களின் முறையாயிற்று .

" என்னடா சொல்ற ?" லாவண்யா கேட்க . தன்னை மறந்த நிலையில் உரைத்து இருந்தவன் , தான் உளறியதை எண்ணி , " போன் , கால் " என்று மேலும் உளறிவிட்டு அந்த இடம் விட்டு வெளியேறினான் .

வெளியே தன் காரின் வந்து அமர்ந்தவனுக்கு மூச்சு எடுப்பதே சிரமமாக இருந்தது . தலையை இருகைகளையும் கொண்டு கோதி விட்டவன் , பட பட வென அடிக்கும் இதயத்தின் மீது கையை வைத்து அழுத்த தேய்த்து விட்டு கொண்டான் . தனக்கு ஏதோ ஆகிவிட்டதோ என எண்ணியவன் வலிக்கு மாறாக , மனம் முழுவதும் உள்ள பூரிப்பும் , நாசியில் உணர்த்த நறுமணமும் அவனை செயல்பட விடாது தடுத்தது .
அவன் உளறியதை கேட்டு மேலும் திகைக்க , தன்னை சுதாரித்த பிரியா " புடவை கட்டி முதல் முறை வெளியே போற கவனமா இரு , ஆர்யன் உன்ன கல்லூரி வரை விட்டு விடுவான் , அப்பா உன்ன கூட்டி போக வருவாங்க…….." என முடிக்கும் முன்

" நீயா யார் கூடையும் வராத , முக்கியமா பிரண்ட்ஸ் கூட வராத ? " என ஜோயா முடித்து வைக்க இருவரையும் பார்த்து லாவண்யா சிரிக்க, பேசி முடித்து ப்ரியாவை பார்த்த ஜோயா " விடு ஜுட் … " கத்தி விட்டு வாசலை நோக்கி ஓடி விட்டாள்.


தன்னை ஒருவாறு சமன் படுத்தி இயல்புக்கு திருப்பியவன் இதயம் மீண்டும் வேகமாக துடிக்க, பட்டென்று திரும்பியவன் பார்வையில் தனது வாகனத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தாள் ஜோயா. காரில் அமர்ந்து போகலாம் என கூறி அலைபேசியில் தன் தோழியுடன் பேச தொடங்க, தன் மூச்சை நிறைந்த நறுமணத்தையும், இதய துடிப்பையும் சமன் படுத்தவும் முடியாமல், காரை இயக்காமல், இனிய உணர்வில் தவித்து, வெளிய வர விரும்பாமல் நின்றான்.

தோழியுடன் பேசிவிட்டு இன்னும் அரை மணித்தியாலம் தான் அங்கு வந்து விடுவதாக கூறி தொலைபேசி வைத்தவள், தங்கள் வீட்டு வாயிலை கூட கடக்காமல் இருப்பதை கண்டு குழம்பி ஆர்யனை பார்க்க, அவன் முகம் முழுக்க சந்தோஷமும்,, இதழ்களில் புன்னகையுடன் மோன நிலையில் இருந்தான்.

' இந்த ஜிஞ்சர் மங்கி, நமக்கு தெரியாம வீட்டுல செஞ்ச பாயசம் எல்லாத்தையும் குடிச்சிடுச்சா? மூஞ்சி இவளோ பல்பு எரியுது? '

'" போகலாமா? ""

""------------"" இன்னும் உலகபிரஞை அற்று இருப்பவனை போல் இருப்பவனை கண்டு…

'எப்பவும் நடு ராத்திரி வீட்டுக்கு வருவனே, ஒருவேள மோகினி பேய் ஏதும் அடிச்சிடுச்சோ, இல்ல பேய் பிடிச்சிடுச்சோ,,, அய்யயோ, அப்புறம் கூட போற நம்ம கதி, அத்விக் மாடே இந்த நேரம் பார்த்த ஊரு சுத்த போவ? ' என தனக்கு தானே பேசியவள், வண்டியின் ஹரனை அலற விட, அதில் சுயம் பெற்றவன் அவளை பார்க்க

" போகலாமா ? " அழுத்தத்துடன், வினோத ஜந்துவை போல அவனை பார்த்து வைக்க. அவள் பார்வையும், கூற்றையும் கேட்டவன் அடுத்த நொடி வாகனத்தை கிளப்பி இருந்தான்.

அவளை கல்லுரியில் விட்டு மருத்துவமனை வந்தவன இயல்பாக இருக்க முடியவில்லை. பிறந்ததில் இருந்து இன்று வரை தினமும் பார்ப்பவன், இன்று மட்டும் தோன்றிய வினோத உணர்வுக்கு அர்த்தம் புரியவில்லை அந்த மருத்துவனுக்கு. ஜோயவை அழைக்க செல்வதாக கூறிய சிவாவை தடுத்து விட்டு தானே சென்றான் அவளை மீண்டும் காணும் ஆவலை கட்டுபடுத்த இயலாமல்.

கல்லூரிக்கு சென்று தொலைபேசியில் அழைத்து விட்டு அவள் வருவதற்காக காத்துகொண்டு இருந்தான். வாகனத்தில் இருந்து இறங்கி சிறிது நடந்தவன், இருதய பட படப்பும், முன்பு உணர்த்த மெல்லிய நறுமணமும் மீண்டும் உணர சட்டென்று திரும்ப ஒரு காரின் பின் புறம் ஜோயா நின்று தன் தொலைபேயில் ஏதோ செய்து கொண்டிருக்க அவளை நோக்கி ஒரு மாணவன் மலர் செண்டை முதுகு புறம் மறைத்தவாறு வந்து நின்று அவளை அழைத்தான்.

" ஹாய், "

தன்னை அழைப்பதை உணர்ந்து திரும்பியவள், அவனை கண்டு புன் முறுவல் செய்ய,

"ஜோ…… என்னக்கு….. உன்கிட்ட கொஞ்சம்….. பேசணும்….."

அவன் அவளுக்கு சீனியர் மாணவன் கார்த்திக் எப்பொழுதாவது பார்க்கும் போது ஹாய், ஹலோ சொல்வது வரை மட்டுமே அவர்கள் நட்பு இருக்கிறது.

அவனுடைய பதற்றம், முதுகின் பின் புறம் மறைத்து வைத்து இருந்த பூ செண்டு அருகில் நின்றிருந்த கார் கண்ணாடியில் தெரிய, அவன் சொல்ல வருவதை ஓரளவு கணித்தவள்,

' ரயிட்டு, இன்னைக்கு ஒரு அடிமை சிக்குச்சி, வா டா வா ' என மனதுக்குள் நினைத்தவள், மேலும் ஒரு அழகிய சிரிப்பை அவனுக்கு கொடுத்தவள்,

" என்ன கார்த்தி சொல்லுக "

அவளின் சிரிப்பில் மேலும் தைரியம் வர பெற்றவன் ,

சட்டென்று அவள் முன் மலர் செண்டை நீட்டியவன், அடுத்த நொடி " ஐ லவ் யூ " என்று சொல்லி இருந்தான்,

காரின் மறுபுறம் இருந்த ஆர்யனுக்கு, இதயம் ஒரு நொடி நின்று துடித்தது, அந்த மாணவனை கண்டு கொலை வெறி வந்தது,, அவனை அடித்து விடும் நோக்கத்தோடு அடி எடுத்து வைத்தவன் சட்டென்று நின்றான் ஜோயாவின் வார்த்தைகளில் ,

" சரி, பட் 3 கண்டிஷன் " என்றாள், மலர் செண்டை வாங்குவது போல பாவ்ல ( நடிப்பு ) செய்தவரே,


ஜோயாவின் முகத்தில் இருந்த சிரிப்பு ஆர்யனை முற்றும் கலங்க வைக்க, அவளை அவன் உணரும் பொழுது ஏற்பட்ட பட படப்புக்கு பதில், தன் இதயத்தில் ஏதோ கனமான ஒன்றை வைத்து அழுத்துவதை போன்று உணர்ந்தான். கலக்கத்துடன் அவளை பார்த்தவாறே நிக்க,

ஜோயாவின் பதிலில், கார்த்திக் சந்தோஷத்தின் உச்சியில் நின்றான்.

"முதல் கண்டிஷன் உன்னோட organ எல்லாத்தையும் வாலன்டியரா organ டொனேஷன் பன்றேன்னு நீ எழுதி குடுக்கணும் நானும் எழுதி குடுத்து இருக்கேன். .

செகண்ட் கண்டிஷன், நானும் உன்ன லவ் பண்றல அதுக்கு கிப்ட் ஆஹ் உன்னோட சொத்து என் பேருக்கு மாத்தி குடுத்துடு. நாம ரெண்டு பேரும் சமூக சேவை செய்யலாம்.

மூணாவது கண்டிஷன், நீ என்னக்கு முழுக்க முழுக்க அடிமைனு எழுதி குடுத்துடு,
அது போல நாம ரெண்டு பேரும் காதலுக்கு அடிமையா இருப்போம். "

இமைகள் கொட்டியவாறு, தலை சாய்த்து, இதழ் சிரித்த படி அவள் கேக்க. இதுவரை இது போல் ஒரு கண்டிஷன் கேட்டிராதவன் திகைத்து நிற்க. அவனின் உறைந்த நிலையை பயன்படுத்தி யோசிச்சு சொல்லு என்று கையில் இருந்த செண்டை வாங்காமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.

அவள் பின்னிருந்து கேட்டு கொண்டிருந்த ஆர்யனுக்கு, சிறிது நேரம் ஒன்னும் புரியவில்லை. அவனை நிராகரிக்க இவ்வாறு சொல்கிறாள் என புரிய, கூண்டில் அடைபட்ட பறவை சிறகுஅடித்து சுதந்திர வானில் பறப்பது போன்ற உணர்வு. அவனது வலது கை தானாக இதய பகுதியை வருடி கொடுக்க, கண்கள் இரண்டும் தன் வாகனத்தை நோக்கி செல்லும் அவளை பின்தொடர்த்தது.
***************************************


ஹாய் friends,

"தவத்தின் வரமாய் " அத்யாயம் 4 பதிவு செய்து இருக்கேன். படிச்சிட்டு கருத்து சொல்லுக பிரண்ட்ஸ். 😍😍😍😍😍😍😍

இனிமே திங்கள் மற்றும் வெள்ளி அன்று யூடி கொடுக்கறேன் பா. 😇😇😇😇😇😇😇😇

இது வரை எனக்கு லைக் மற்றும் கமெண்ட் பண்ணவங்களுக்கு நன்றி😘😘😘😘😘😘😘😘.

*************************
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் friends,

"தவத்தின் வரமாய் " அத்யாயம் 5 பதிவு செய்து இருக்கேன். படிச்சிட்டு கருத்து சொல்லுக பிரண்ட்ஸ்.

I need you're comments pa, plz leave your comments athu yethuva irunthalum yennaku ok oru vatti commend page pakkam yetti pathutu poga pa

இது வரை எனக்கு லைக் மற்றும் கமெண்ட் பண்ணவங்களுக்கு நன்றி.
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவம் - 5
ஜோயா அந்த மாணவனுடன் பேசியதை கேட்டு ஆர்யன் அவளை பார்த்தவாறே நின்றுவிட்டான். அவள் மறுப்பதற்காக அவ்வாறு கூறியதாக இருந்தாலும் கூறிய விஷயங்கள் அவனை யோசனையில் ஆழ்த்தியது.
அந்த மாணவன் தன் காதலை உரைத்த நொடியில் தான் ஆர்யன், ஜோயா மேலான தனது காதலை உணர்ந்திருந்தான். இதுவரை ஜோயாவிடம் யாரையும் நெருங்காமல், நெருங்க விடாமல் அவளுக்கு என்று தனியாக ஆட்களை வைத்து பார்த்து கொண்டது அவளை பாதுகாப்பததற்கு என்று எண்ணி இருக்க. மாறாக அவளை யாரிடமும் விட்டு குடுக்க இயலாத காரணத்தால், யாரும் நெருங்கவிடாமல் பொத்தி பாதுகாத்தான் என்பது அந்த நொடி அவனுக்கு உரைத்தது. அது அவள் மீதான அவனின் உரிமை உணர்வு.
இன்று அவன் உணர்த்த வினோத உணர்வுகளும், நறுமணமும், சற்று முன் நடந்த நிகழ்வும் அவனுக்கு தன்னுடைய காதலை உணர்த்த, சிறகின்றி வானத்தில் பறந்தான். காரை நோக்கி சென்றவள் ஆர்யனை அழைக்க, தன் சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான். இரவு உணவுக்கு பின் அனைவரும் சென்றுவிட, தனது அறையில் கட்டிலில் அமர்ந்து தனது காதலை எண்ணி கொண்டிருந்தவனுக்கு அவளை பார்க்க வேண்டும் போல் இருக்க அவள் அறைக்கும் செல்ல முடியாமல், என்ன செய்வது என்ற எண்ணத்துடன், தோட்டம் நோக்கி வெளியே வந்தான். வீட்டின் வலது பக்கம் உள் நுழைகையில் சிறிது இடம் விட்டு உட்புறமாக தோட்டம் அமைத்து இருக்க, அங்கு மரத்தின் அருகில் தேனீர் அருந்துவதற்கு( sofa model )கல் மேடை அமைக்கப்பட்டு அலங்கரித்து இருந்தது. ஜோயாவிற்கு பிடிக்கும் என ஊஞ்சலும் அதனுடன் இருக்க, அது சிறியதாக இல்லாமல் நன்கு உயரமாக அமைக்கபட்டிருந்தது. ஊஞ்சலில் லேசாக ஆடியபடி ஜோயாவும், அருகில் அவளை பார்த்தபடி அத்விக்கும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த வெளிச்சத்தில் தோட்டத்தில் நுழைகையில் ஆர்யன் பார்த்து விட்டான். இது அவர்களின் தினப்படி ஒன்றுதான் ஆனால் அங்கு வந்த ஆர்யனுக்கு அவனுடைய காதல் கொண்ட மனதால் அதை ஏற்க இயலவில்லை. அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தவன் ஜோயா இன்று நடந்ததை ஆத்விக்கிடம் கூறி கொண்டிருந்தாள், தன்னை பற்றி ஏதேனும் சொல்வாளோ என்ற எண்ணம் தோன்றிய உடனே அங்கிருந்த இருட்டில் தன்னை மறைத்து கொண்டு அவர்களை கவனிக்க ஆரம்பித்தான், அந்த மருத்துவன் . காதலும், கள்ளத்தனமும் இரட்டையர்கள் போல, ஒன்று வந்தவுடன் மாற்றத்தையும் அழைத்து வந்து விடுகிறது.
" என்னோட கண்டிஷன் கேட்டு ஷாக் அடிச்ச மாதிரி நின்னான் பாரு எனக்கு சிரிப்பு அடக்க முடில, ஆனாலும் இது தான் சான்ஸ்னு யோசிச்சு சொல்லுனு சொல்லிட்டு வந்துட்டேன். " அவள் கூறியதை மெல்லிய புன்னகையுடன் கேட்டு கொண்டிருந்தவன்
" எப்புடி இப்படிலாம் யோசிச்ச, ரூம் போட்டு யோசிச்சிய? "
" மண்டைல பிரைன் இருக்கவங்களுக்கு அதுலாம் தான வரும் " உடையில் இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள.
" இதுக்கு நேரா நோ சொல்லி இருக்கலாம் "
" சொல்லலாம் தான், இனிமே சொல்றேன் ".
" உனக்கு ஒரு secret சொல்லவா " ஜோயா ரகசிய குரலில் கேட்க, அவளின் ஆர்வத்திலும், ரகசிய குரலிலும் குஷியானவன்
"என்ன? "
" உன் நொண்ணன் யாரையோ லவ் பண்ரான் "
அவளின் ரகசிய குரல் ஆர்யனையும் சென்றடைய, அவள் கூறிய வார்த்தை இருவரையும் ஒரு நொடி ஸ்தம்பிக்க வைத்தது.
" என்னடி சொல்ற உனக்கு யார் சொன்ன?, "
" நான் தான் சொல்றேன், இன்னைக்கு என்ன காலேஜ் இருந்து கூப்பிட வரும்போது அவன் முகம் தோஸண்ட் வாட்ஸ் பல்ப் போல எரிச்சது, இன்னைக்கு நீ இங்க இல்லைல அதான் பாக்க மிஸ் பண்ணிட்டா, "
"நோ, எனக்கு தெரிஞ்சு சான்ஸ் இல்ல, காலேஜ் ல லவ் சொன்ன பொண்ணுகளை எல்லாம் ஊமை சாமியாரா இருந்து துரத்தி விட்டு இருக்கான் அவன் லவ் பண்ண போறானா? "
" நீ நம்புல இல்ல, அவன் யார லவ் பண்றன் எப்போ இருந்து லவ் பண்றன் எல்லா டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வந்து சொல்றேன். என்ன பெட்? "
" நீயே சொல்லு? "
"அப்பா கிட்ட டூர் போக பெர்மிஸ்ஸின் வாங்கி தரணும் "
"முடியாது, வேற "
" ஓகே டூர் கு நீயும் கூட வா "
"முடியாது, உன் பிரண்ட் லாம் வேஸ்ட் பீசு, வேற, "
"டேய்… " என இருவரும் ஒருவரை ஒருவர் துரத்தி கொண்டு ஓட, கேட்டு கொண்டிருந்த ஆர்யனுக்கு அவள் தன்னை கண்டு கொண்டது சிலிர்க்க வைக்க, தான் அவளை காதலிப்பது தெரிந்தால் என்ன செய்வாள் என்ற குறுகுறுப்பும் தோன்றாமல் இல்லை. அந்த நொடியில் இருந்து காத்து கொண்டிருக்கிறான் அவள் தன்னை கண்டு பிடிப்பதற்கு எல்லா வழிகளையும் திறந்து வைத்து கொண்டு. ஆனால் இதுவரை அவள் தன்னை கண்டுகொள்ளாதது மட்டும் இன்றி இடையில் நடந்த நிகழ்வுகளும், அவளை இறுக வைத்துவிட்டது. இவளை எவ்வாறு சரி செய்ய செய்வது என்ற எண்ணத்துடன் பழைய எண்ணங்களில் இருந்து மீண்டவன், பணி நிமிர்த்தமாக ஒரு மருத்துவரை அழைக்க கோவை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் நோக்கி தனது வாகனத்தை செலுத்தினான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜூஹி தனது நண்பர்களிடம் திருமணத்திற்கு செல்லும் விசயத்தை கூறி சிலபல காதில் விழாத வார்த்தைகளில் வாழ்த்துக்களை பெற்றுவிட்டு இன்னும் இரு நாட்களில் கோவை நோக்கி பெற்றோருடன் செல்ல இருக்கிறாள். அன்று மாலையில் வீட்டு வரவேற்பு அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர் ஜூஹி, அருணாவும். நொடிக்கு ஒரு தரம் தாயின் முகத்தை பார்த்து கொண்டிருந்தவள்,
" அம்மா, இன்னைக்கு ஆபீஸ் வரை ஒரு வாட்டி போய்ட்டு வரட்டுமா "
"எதுக்கு போகணும் "
" கொஞ்சம் பொருள் எனக்கு வாங்க வேண்டி இருக்கு அதுலாம் வாங்கிட்டு, ஸ்டோருக்கு தேவையானதும் வாங்கிட்டு வந்துடலாம்னு தான். "
" ஸ்டோர்க்கு வாங்க வேண்டியதை கெளதம் வாங்கிடுவான் நான் அவன்கிட்ட பேசிட்டேன். உனக்கு என்ன வாங்கணும் சொல்லு நான் வாங்கிட்டு வரேன் இல்லைனா ரெண்டு பேரும்போலாம்." அருணா கூறியதை கேட்டு பற்களை கடித்து கொள்ள மட்டுமே முடிந்தது ஜூஹியால். அருணாவை பார்த்து முறைத்து கொண்டே அமர்ந்து இருக்க, அந்தநேரம் உள்நுழைத்த ராமமூர்த்தி மகளை பார்த்து சிரித்து விட்டு தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்து அவர்கள் அருகில் அமர்ந்தார்.
" அருணா, இன்னைக்கும் நாளைக்கும் ஆடிட் போய்ட்டு இருக்கு, ஏதும் வாங்குறதுக்கு இருந்த வாங்கிக்கோ, நான் வேலை முடிச்சிட்டு வர லேட்டா ஆகும், நீ ஏதும் ஸ்டோர் போறதுனா போய்ட்டு வந்துடு மா " மனைவியிடம் தொடங்கி மகளிடம் முடித்தார். தாயை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் தொலைக்காட்சி பக்கம் பார்வையை திருப்பி கொண்டார்.
மகளின் செய்கையை கண்ட ராமமூர்த்தி, மனைவியை பார்க்க முகம் அமைதியாக இருந்தாலும் கண்கள் அவரின் மன கலக்கத்தை காட்டியதை, நல்ல கணவராக படித்து கொண்டார். இருந்தும் மகளை சரி செய்வது முக்கியம் என கருதி,
" ஏன்டா, உனக்கு ஏதும் வேலை இல்லையா? "
"இருந்தா மட்டும் அனுப்பிட்டு தான் மறுவேலை….. " தாயை பார்த்தவாறு நேடித்து கொள்ள.
"ஏன் " என்ற தந்தையின் ஒற்றை வார்த்தைக்கு,
" ஏன்னு இவளோ சாதாரணமா கேக்குறீங்க, நாலு நாள் , நா….லு …… நா… லா…… ஹவுஸ் அரஸ்ட்ல இருக்கேன். தெரிமா உங்களுக்கு. அஹ்ஹா…. 2 நாளா என்னக்கே தெரில இதுல உங்களுக்கு எப்படி தெரியும். ஆனாலும் உங்க பொண்டாட்டி இவளோ கிளவ்வர வேலை செய்வாங்கனு தெரியாம போச்சி. " தந்தையின் ஒற்றை வார்த்தைக்கு ஒரு முலம் நீளத்திற்கு பேசி முடித்துவிட்டு அன்னையை பார்த்தாள்,
கடைசி தேர்வு முடித்து வந்தவளை, அன்றில் இருந்து வெளியே விடாமல் கிட்ட தட்ட வீட்டு சிறை கைதி போல அவளை நடத்துவதாக கூறி, இவ்வளவு நேரமும் அருணாவுடன் சண்டை இட்டு கொண்டிருக்க தந்தை வந்ததும் தனது ஆதங்கத்தை கொட்டி விட்டாள்.
" ஏன்மா வெளிய போய்ட்டு வரட்டுமே " ராமமூர்த்தி, அருணாவை பார்த்துக் கேட்க.
" போகட்டும் நானும் கூட வரேன்னு தான் சொன்னேன் ".தாயின் கூற்றை கேட்டு மீண்டும் சண்டைக்கு தயார் ஆனவளை. கண்களால் சமாதான படுத்தி, தான் பார்த்து கொள்வதாக கூறி அவள் அறைக்கு அனுப்பி வைத்தார். ஜூஹி தனது அறைக்கு சென்று விட்டதை உறுதிபடுத்திகொண்டு.
" இப்போ ஏன் இப்படி நடந்துக்கற "
"அவளை தனியா அனுப்ப பயமா இருக்கு " கண்கள் கலங்க கூறியவரை கண்டு
" இந்த விசயம் உனக்கு தெரிலான என்ன பண்ணி இருப்ப. "
" தெரியாமலே இருந்து இருக்கலாம் ".

"உண்மையா மாற்ற முடியாது " என அவர் கூறிய அடுத்த நிமிடம், கண்கள் சிவக்க அழுத்தத்துடன் வந்து விழுந்தன வார்த்தைகள்.

" எது உண்மை, எந்த உண்மை. இது என்னோடது, எனக்கு மட்டும் தான் சொந்தம், யாரோடயும் பங்கு போட நான் தயாரா இல்லை. "

" உன்னோட நடவடிக்கை மாற்றம், மற்றவர்களுக்கு யுகத்தை ஏற்படுத்தாம பார்த்துக்கோ. " ராமமூர்த்தி கூறியதில் இருந்த அர்த்தம் புரிய அமைதியானார் அருணா.

அன்று காலை கோவை செல்ல அணைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டு ராமமூர்த்தி வருகைக்காக, அருணாவும், ஜூஹியும் காத்துகொண்டு, இடையில் ஆதி அவர்களை தொலைபேசியில் அழைக்க அவர்களுடன் உரையாடி கொண்டிருந்தனர்.
" ஹ்ம்ம், கல்யாணம் ரெண்டு நாள் தான், ஒரு வாரம் தங்குறோம், ரொம்ப நாள் கழிச்சி போறனால, எல்லாரையும் பார்த்துட்டு வரணும்னு மிஸஸ் அருணாவோட ஆடர், அத மிஸ்டர் அருணா வேண்டம் சொல்லுவார்??? உடனே ஓகேனு பெர்மிஸ்ஸின் கிராண்ட். " தமயனுடன் பேசி கொண்டிருந்தவள் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்துவிட்டு,
" சரிப்பா, நாங்க கிளம்புறோம், அங்க போய்ட்டு இரவு உனக்கு பேசறேன் " அலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டு, வண்டில லக்கேஜி எடுத்து வை, போகும் வழியில் அப்பாவை கூட்டி கொண்டு ஏர்போர்ட் போக சரியா இருக்கும். "
தன் கணவர், மகளுடன் கோவை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்வந்திறங்கிய அருணாவுக்கு தெரியவில்லை, அவர் எதை கண்டு பயந்தாரோ அது இனி நடக்க இருப்பது.
----------------------------
ஜோயவை பற்றிய எண்ணங்களுடன் ஏர்போர்ட் வந்தவன், அவரின் வருகைக்காக காத்திருந்த படி, அத்விக் உடன் ஜோயாவின் நிலை பற்றி பேசி கொண்டிருக்க.
" மாமா, அவ்ளோ கடுமையா பேசணுமா? . அவளே தவறு சரி செய்துட்டா இல்ல. அப்படியே விட்டு இருக்கலாம். மேலும் பேசி கஷ்டபடுத்திட்டார் "
" அவருடைய மகள், அவருக்கு தெரியும். நாம ஏதும் சொல்ல முடியாது. சரி இப்போ எப்படி இருக்கா?. "
"அவரோட மகள்னு சொல்லிட்டு இப்போ ஏன் கேக்குற, சொல்ல முடியாது போடா " தன் தோழி திட்டு வாங்கிய கவலை அவனுக்கு. அவள் மீதான அவனின் நட்பை உணர்ந்தவன் இதழ்கள் சிறு சிரிப்புடன் " சரி, இப்போ உன் தோழி எப்படி இருக்கா? "மீண்டும் அதே கேள்வியை மாற்றி கேட்க,
" அண்ணனா போயிட, போன போகுது பொழச்சி போ. இப்போ கொஞ்சம் நார்மல் ஆகிட்டா, ஆசிரமம் வந்து இருக்கோம், "
"சரி" என்றவாறு அழைப்பை துண்டித்து விட்டு திரும்ப அங்கு அவனுக்கு சில அடி தூரத்தில் அவனின் ஜோயா?
ஆசிரமத்தில் இருப்பதாக சொன்னான், இங்கு எப்படி,
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Status
Not open for further replies.
Top