All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சுமை தாங்கியாய் உள்ள சின்ன பெண்ணின் மனதை ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக கூறு போட்ட பதிவு...

சாதாரண லிப்ஸ்டிக் விளம்பரத்திற்கு நீச்சல் உடை எதற்கு? அமர் பம்பாயில் உட்கார்ந்து ஆட்டுவிக்க இந்த நிறுவனம் அஞ்சலியை ஆட வைக்கிறது... பாவம்! ஏழ்மையில் சிக்கி தவிக்கும் அவள் என்னத்தான் செய்வாள்... ஒவ்வொரும் அவளை ஏளனத்துடன் காம கண்களுடனும் காண அதை சகித்து கொண்டாலும் அவள் தந்தை அடுத்த வாய்ப்பு வந்தால் விட்டு விடாதே என்பது அவன் மனிதனாக உள்ளதர்க்கு தகுதி உள்ளவன் தானா? இவர்களை எல்லாம் விலக்குமாறால் அடிப்பது தப்பே இல்லை... சொல்லி அழ ஆள் இல்லாமல் பாவம் அவள் தனியே தவித்து கதறி அழுகிறாள்...

சூரியபிரகாஷ் இவளை சுற்றி வருகிறான் என்பதை அமர் அறிந்து பாவம் அவனையும் ஏதோ செய்து விட்டான் போல...

இளமையில் ஏழ்மை கொடியது எவ்வளவு சத்யமான வாக்கியம்... அருமை ஸ்ரீ மேம்.. ஒவ்வொரு வரிகளையும் அதன் நிழற்படங்களாய் எங்கள் கண் முன்...

அந்த கடிகாரம் யார் கொடுத்தது அவளுக்கு?

அமர் இவன் வேற லெவல் போல.. கனிக்கு தாய் போல் மரியாதை கொடுக்கும் இவன் பணம் மீதே புரண்டாலும் கடை வீதியில் சாப்பிடுவதும் சாலையோர மக்களுக்கு உணவு வாங்கி கொடுப்பதும் இவன் நல்லவன் என்று எடுத்து காட்டுகிறது... ஏதோ தவிர்க்க முடியாத சூழ்நிலையால் ஒப்பந்தத்தின் பேரில் அவனுக்கு திருமணம் நடந்துள்ளது... அவன் மனைவியிடம் வார்த்தைகளை ஜாக்கிரதையாக கோர்த்து பேசுவது யாருக்கோ கட்டுண்டுள்ளான்... மனைவியின் தந்தை காந்தியவாதி... அவருக்காகவா ஸ்ரீ மேம்?... ஹனிமூன் போகலாமா என்ற மனைவிக்கு சிரித்துக்கொண்டே அவன் கொடுத்த பதிலடி நெத்தியடி...

மொத்தத்தில் கேள்விகள் அடுக்கடுக்காய் எங்கள் மனதில் தோன்றி அதன் விடைகளை காண காத்திருக்கும்....
 

ilakkiyamani

Bronze Winner
sri mam erendu epiyum serthu padithen migavum arumai.kuruvi thalayil panakkayai vaithathu pondru. iruvathu (இருவது) vayathu pennirrkku evvalavu..kadamaikal,poruppugal,!kastangal pavam anjali.anjali suryavai ninaithu azhavillai,endral yarai ninaithu alukiraal,adhai arithukolla aavaludan adutha pathivirkaga waiting. kadhai starting migavum arumai.story diffrent & interesting a irukku srimam. all tha best srimam👍👍👍
 
Top