Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
சீர்கெட்ட வாழ்விலும்
நேர்பட்ட வாழ்வு தேடும்
அவள்...!
செய்திட்ட துரோகம்
சிந்தையைத் தூண்ட
விட்டுப்போன பந்தம்
விடுவிக்குமோ அந்தம்!
பேர்கெட்ட வாழ்விலும்
சீர்பட்ட வாழ்வு தேடும்
அவன்...!
மெய்கெட்ட துரோகம்
சிந்தையைத் தீண்ட
பட்டுப்போன சொந்தம்
படமெடுக்குமோ நிந்தம்!
பதினாறு வயது பருவ மொட்டு
புதிதாய் உதித்த வண்ணச்சிட்டு!
படபடக்கும் மூச்சில்
பரவசம் தொட்டு
பாழாக நின்றதோ
பாசம் கெட்டு!
தட்டிக் கேட்டால்
எட்டிப் போகும் வயது -இது
கட்டிப் போட்டால்
வெட்டிப் போனதோ...?
ஊருக்குள் உல்லாசி!
கூட்டுக்குள் விசுவாசி! - அவன்
வீட்டுக்குள் சன்யாசி!
நட்பின் மேன்மையில்
நாளும் உயிர்ப்பவன்,
நற்கதி இல்லா
நாதியற்ற வாழ்வில்...
நரகாசூரனாய்...
நானிலம் எரிப்பவன்...!
கல்லுக்குள் ஈரமாய்...
தாய்க்குத் தலைமகன்
தாய்மையைக் காப்பவன்
தாளாத சோகத்தில்
வீழாத ஆண்மகன்!
துரோகத்தின் ரோகத்தில்
ஆரோகணம் செய்யும் மனங்கள்! - இது
அமரஞ்சலின் ஆத்மார்த்த ராகங்கள்!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
இனிய தோழி,
சீர்கெட்ட வாழ்விலும்
நேர்பட்ட வாழ்வு தேடும்
அவள்...!
செய்திட்ட துரோகம்
சிந்தையைத் தூண்ட
விட்டுப்போன பந்தம்
விடுவிக்குமோ அந்தம்!
பேர்கெட்ட வாழ்விலும்
சீர்பட்ட வாழ்வு தேடும்
அவன்...!
மெய்கெட்ட துரோகம்
சிந்தையைத் தீண்ட
பட்டுப்போன சொந்தம்
படமெடுக்குமோ நிந்தம்!
பதினாறு வயது பருவ மொட்டு
புதிதாய் உதித்த வண்ணச்சிட்டு!
படபடக்கும் மூச்சில்
பரவசம் தொட்டு
பாழாக நின்றதோ
பாசம் கெட்டு!
தட்டிக் கேட்டால்
எட்டிப் போகும் வயது -இது
கட்டிப் போட்டால்
வெட்டிப் போனதோ...?
ஊருக்குள் உல்லாசி!
கூட்டுக்குள் விசுவாசி! - அவன்
வீட்டுக்குள் சன்யாசி!
நட்பின் மேன்மையில்
நாளும் உயிர்ப்பவன்,
நற்கதி இல்லா
நாதியற்ற வாழ்வில்...
நரகாசூரனாய்...
நானிலம் எரிப்பவன்...!
கல்லுக்குள் ஈரமாய்...
தாய்க்குத் தலைமகன்
தாய்மையைக் காப்பவன்
தாளாத சோகத்தில்
வீழாத ஆண்மகன்!
துரோகத்தின் ரோகத்தில்
ஆரோகணம் செய்யும் மனங்கள்! - இது
அமரஞ்சலின் ஆத்மார்த்த ராகங்கள்!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி.