All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மிகவும் உணர்ச்சிகரமான வேதனை மிகுந்த பதிவு..

அஞ்சலி குற்ற உணர்வோடு தான் சாகணுமா? என்று கேட்ட ஓரே வார்த்தையால் ஷர்மியை திருமணம் செய்து கொண்டான் சூர்யா...

பிரசவ சமயத்தில் அஞ்சலியின் உடல் நிலையைப் பற்றி தெரிந்து கொண்ட அமர் அடைந்த வேதனை சொல்லில் அடங்கா.. அதற்கு அஞ்சலி சொன்ன விளக்கம் அமரை தன் குழந்தையாக...

குழந்தை பிறந்தவுடன் அஞ்சலிக்கு இழுப்பு வந்து தன் நினைவுகளை மறக்க புதிதாய் பிறந்தாள் அஞ்சலி.. அமரின் மனநிலை? சஞ்சய் அமரைப்பற்றி கெட்டவனாய் உருவகப்படுத்தி சொல்ல அமரின் கோபமான வார்த்தைகளால் மறுபடியும் அவளுக்கு இழுப்பு... அஞ்சலி உடல்நிலை சரியில்லாத்தால் செத்து பிழைத்தாள் என்றால் அமரோ குற்றுயிராகினான்... யாருக்கும் வர கூடாத நிலை...

அஞ்சலியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அமரும் குழந்தையும் தனியே இருக்க.. என்ன கொடுமை இது! நல்லவர்களை தான் கடவுள் அணுஅணுவாக சோதிப்பாரோ?

மருத்துவரின் ஆலோசனை படி அஞ்சலி சிறிது குணமானவுடன் மறுபடியும் அஞ்சலியை அமர் தன் பக்கம் ஈர்த்து திருமணம் செய்த பின்னும் மிருதுளா வடிவில் பிரச்சனை... அதனால் அவள் காட்டிய அதிக நெருக்கம் என்றும் போல் அமருக்கு பயத்தை கொடுக்க அவன் நினைத்தது போல் மறுபடியும் இரவில் அவளுக்கு இழுப்பு. இப்பொழுதும்
செத்து பிழைத்தான் அமர்..

ஸ்ரீ மேம் என்னவென்று சொல்ல அமரைப்பற்றி..
இதற்கு மேலாவது அமருக்கு நல்ல காலம் பிறக்குமா?
அருமையான ஆத்மார்த்தமான பதிவு...
 

Jayashree

Well-known member
Mam,
super update.
Perfection is the key to your story's success.
You have perfect planning,screenplay ,characterization ,dialogue delivery ,timing and content.
You give the story updates on time !
Poem or song selection is simply superb
Thanks for all the lovely updates.
 

Deebha

Well-known member
இன்றைய ud இல் புதிதாக ஒரு கற்பகால நோய் பற்றியும் அதன் side effects பற்றியும் கூறினீர்கள், nice..அஞ்சலியின் உடல் நிலையை கண்டு துயரம் கொள்வதும் , பின்பு அவள் நினைவுகள் அழிந்தாலும், அவளை மீட்டு எடுக்க அமர் போராடடுவதும் simply superb..மஹிமா குழந்தையை கஷ்ட படுத்தியதற்கு இன்னும் punishment கிடைக்க வேண்டும்
 

ilakkiyamani

Bronze Winner
கர்ப்பகால நோய் ,அதன் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு அருமை.தன் நினைவுகளை இழுந்தாலும்,தன் குழுந்தைக்காக முயன்று தன் நினைவுகளை பதிந்து கொள்ளும் அஞ்சலி போன்று தாய் உள்ள உலகத்தில்,மஹிமா போன்று சுயநலத்திற்காக தன் பெற்ற பிள்ளைகளை தன் கையால் கொள்ளும் தாய்களும் உள்ளனர்:mad::mad::mad::mad: மஹிிமாவிற்குு இதைவிட கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அமர் கோர்ட்டில்.😡😡😡
அருமையான பதிவு மேம்:love::love::love:
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

தன்னிலை மறந்தாலும்
தன்னுயிரை மீட்கும் காதல்!
தன்னை இழந்தாலும்
தன்னவனை எழுப்பும் காதல்!
தன்னைத் துறந்தாலும்
தன் தாயவனை தாங்கும் காதல்!
காலத்தால் மாறாத காவியமன்றோ...!

காதல் ஒன்றே தேடலாய்...
காவியராகம் பாடிய நாயகன் - இவன்
தாய்மை ஒன்றே பாடலாய்
அமரஞ்சலியின் ஆத்மராக காவலன்!

ஆத்மிக ராகத்தில்
தாய் மனதை மீட்டவள்
ஆனந்த ராகத்தில்
மெய் மனதை உயிர்த்தாளே!

நினைவும் கனவும் மறந்த மகள்
காதல் ஒன்றில் நிலைத்த மகள்
கரை சேர்க்க வந்துவிட்டாள்
மன்னவனை மடி தாங்க!

உறவை மறந்தாலும்
நிறைவை கண்டவள்
மரபை துறந்தாலும்
மனதை கொண்டவள்
தென்னவன் மனம் மீட்க
தேனிசையாய் ரிதம் கூட்ட...
இன்னிசை மழையில்
நல்லறமாய் இல்லறமே!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
Top