All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Woooooow.... Wooooooooow super Super Super mam...... Semma semma story மது oda charater chance ah illa.... கல்யாணம் முன்னாடி eppadi இருந்த மது athuve கல்யாணம் appram thalai kizha maari.... அவன் babyma mela அவன் vechi irukara காதல் great great..... Avaluku avan கணவன் மட்டும் இல்ல தாயுமானவன் nu oru oru இடத்துலயும் nirubikkiraan..... Avanodaya காதல் arumai arumai..... ஆதி yum avanodaya thappai purinji thiruthikitaan.... Super Super mam....
 

Hanza

Bronze Winner
First of all My hearty congratulations Sri Mam for your come back..💐💐💐
நான் படிக்கும் உங்கள் கதைகளில் எனது இதயத்திற்கும் மூளைக்கும் வேலை கொடுக்காமல் என்னுடைய வாய்க்கு மட்டும் வேலை கொடுத்த முதல் கதை இது தான்.
இந்த மது பையனும் மன்னாரும் பாட்டியின் தோடை திருடுவது முதல் மனாலியில் அடிக்கும் லூட்டி வரை எம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டார்கள்... மது சைந்தவியை மட்டுமல்ல எம்மையும் கவர்ந்து விட்டான். 😍😍😍
அனைவருடனுமான அவனது அணுகுமுறை வேற லெவல்...💥💥💥 அவனுடைய பேபிமாவுடைய சந்தோஷத்திற்காக அவனது சுயத்தை இழப்பது எல்லாம் மாஸ்..

சைந்தவி ஆரம்பத்தில் எரிச்சல் மூட்டினாலும் போக போக அவளை பிடிக்கிறது. ஆனாலும் கை பட்டதற்காக சோப் போட்டு கழுவுவதெல்லாம் over... (ஒருவேளை corona phobia வாக இருக்கலாம். 😜)
அவனை வெச்சி செய்ய இவள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் அவளுக்கே revert அடிப்பது செம்ம...

சமுத்ரா ஆதித்யா போன்ற பணத்தின் பின்னால் ஓடுவோருக்கு மது சைந்து வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு..

அழகான கதை...💐💐💐

மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள் mam.
 

ushak

Well-known member
Madhu nee Thaayumaanavan thaan da... Unnai mathiri wife's mana nilai purinji avalukkku thevai psychological counselling correct avalai guide panni irukke :smiley7:Babyma Birthday kku koil poitu wish panni avalai kuppura thopakadeernu un pakkam saaya vachitiye 😅 plus inime babyai onnum panna mudiyathu solli aval kitte vambadi seidhadhu :love:

Saindhavi aval appavidam manippu kettathu:smiley7:

Kidaitha vaazhkkaiyai eppadi arumaiya vaazhanam enbadharkku udhaaranam Madhu and Babyma...

Ivangalai paarthu Samudhra and Adityavum thangal vaazhkkaiyai seer seidhu kondathu :smiley14:

Modhalail arambitha kadhal konjalil mudindhadhu :smiley9:

Sri :awesome:
 

Subasini

Well-known member
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ❤❤❤

கல்யாணம் என்னும் பந்தத்தில் இணையும் இருவர் என்ன காதல், பாசம்,அன்பு எதுவும் இல்லை என்று சொல்லி வாழ்ந்தாலும் காலம் அதனை மாற்றும் வல்லமை படைத்தது என்று மது மற்றும் சைந்தவி முலம் நமக்கு அழகான ஒரு காதல் கதையை தந்து இருக்கீங்க ஸ்ரீ மா....

என்ன கோபம்,ஈகோ என்று சொல்லிட்டு அவளை கல்யாணம் செய்தாலும் ஒரு பொறுப்பில்லாமல் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இல்லா ஒரு ஆண் மகனை திருமணம் மற்றும் மனைவி என்னும் பந்தம் எப்படி முழுமையான ஆணாக மாற்றும் என்று மதுசூதனன் கேரக்டர் முலம் இன்றைய பல வெற்றிப் பெற்று வாழும் ஆண் சமூகம் பற்றிய கதை இது அருமை....

ஆதித்யா என்ற ஆன்டி ஹீரோவ ஒரு சாதாரண ஹீரோவாக மாற்றிய பெருமை உங்களையே சாரும் ஸ்ரீ மா....😂😂 அவன் கேரக்டர் படிக்கும் போது அப்படி தான் மனதில் எண்ணம் வந்தது....

பொதுவாக மனதில் பிடிக்காது ஒரு நிகழ்வு ஆழமான காயத்தை ஏற்படுத்தும் போது அது சார்ந்த எல்லாம் அருவெறுப்பாக இருக்கும் என்பது தான் உண்மை...

ஹீரோயின் மனதில் இருக்கும் அவள் வியாதி அதற்கான காரணம் எல்லாம் படிக்கும் போது அது பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு இந்த கதை....

சுபா,அகி காதல் அழகு என்றால் சைந்தவி முதல் தங்கை மாடல் அழகியை அழகான மனைவியாக மாற்றி ஆன்டி ஹீரோ ஆதியை இரண்டாம் ஹீரோவாக ப்ரோமோட் பண்ணியது செமம... அவன் வில்லன் என்ற எண்ணம் பிறந்து அவனை படிக்க படிக்க அட‌பாவப்பட்ட ஜீவனே என்று தான் யோசிக்க தோன்றியது.... அன்பு மட்டுமே எல்லா தவறுகளையும் யோசிக்காமல் செய்ய தூண்டும் என்பதற்கு இவன் சிறந்த உதாரணம்...

மன்னார் தான் வேற லெவல் கேரக்டர் எனக்கு இவனை ரொம்ப பிடிச்சுருக்கு அதனால் இவன் தான் எனக்குsecond hero 😂😁

இந்த கதையில் ஒரு ஆண் தன் மரியாதை மற்றும் சுயமரியாதை எங்கு பார்க்க வேண்டும் யாரிடம் பார்க்க வேண்டும் என்பதை படிக்கும் நமக்கு தெளிவாக புரியும் ஸ்ரீ மா

உங்க எழுத்து எப்பவும் போல கட்டி இழுக்குது இளமையும் காதலும் அழகு சேர்க்குது....

பேபிம்மா படிக்கும் போது செம ஃபீல் 😂😂😂

மது இந்த கதையில் ஒரு இடத்தில் சொல்லுவான் சைந்தவியிடம் இந்த கதையில் ஹீரோ நீ ஹீரோயின் நான் என்று அதனால் 😂 ஒரு ஹீரோயின் ஆர்மி சார்பாக இந்த ஹீரோயின் (மதுசூதனன்) நடந்த அநியாயம் நான் தட்டி கேட்கறேன்😁 அவனோட பீலிங் விளையாடும் சைந்தவி "நீ பண்ணறது தப்பு மா😁என கண்டித்து இந்த ரீவ்யூ முடிக்கிறேன் ஸ்ரீ மா....

நம்ம அடுத்த கதையில் ராதாக்கு அநியாயம் நடக்க விடாமல் நான் போராடுவேன் 😁😁😁
 
Top