All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஜோவின் "நீலத் திரைக்கடல் ஓரத்திலே" - கதைத் திரி

Status
Not open for further replies.

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - யின் முதல் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.


அத்தியாயம் - 1

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - யின் இரண்டாம் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.


அத்தியாயம் - 2

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - யி்ின் மூன்றாம் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.


அத்தியாயம் - 3

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - யி்ின் நான்காம் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.


அத்தியாயம் - 4

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - யி்ின் ஐந்தாம் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.


அத்தியாயம் - 5

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புக்களே,

சென்ற வாரம் அத்தியாயம் எதுவும் போட முடியவியல்லை. இன்று மூன்று அத்தியாயங்களாக பதிவிட்டுள்ளேன்.

உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலத் திரைகடல் ஓரத்திலே!











அத்தியாயம் – 6


உன் முதலடி

உணர்ந்த அந்த நொடி!

நம் வீடும்

உயிர்பெற்றதடி!


பாலை போல

வெம்மை தந்ததில்லை!

பனி நிலவாய்

குளிர்ந்ததில்லை!


ஆனாலும்

நிறைவாய் இருந்ததில்லை!

இதுவரை!


இன்று மனம் நிறைந்ததடி!

உன் பாதம் பட்ட

ஒரு நொடியில்!



சாகருடன் வீட்டில் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்த கங்கா, அந்த வீட்டின் அழகில் மனம் மயங்கி நின்றாள்.



இமைக்காது அவளையேப் பார்த்துக்கொண்டு இருந்த சாகருக்கு மனதில் உற்சாகம் பீறிட்டு எழுந்தது.

"மேடம் உங்க ஆராச்சியை அப்புறமா வைச்சுக்கோங்க, முதல்ல குளிச்சுட்டு வந்து விளக்கேத்துங்க" என்ற சாகரனின் கிண்டல் குரலில் அவனைத் திரும்பி பார்த்தவள்,



"ம்ம், அதுக்கு முதல்ல எனக்கு ரூமை காட்டணும் லாயர் சார்" என்று அவனுக்கேற்ப கிண்டலாகவே பதில் கொடுத்தாள்.

அவள் கிண்டல் பதிலில் புன்னகைத்தவன், "வா" என்று அவர்களது அறைக்கு அழைத்துச் சென்றான்.

"இது தான் நம்ம ரூம்? நல்லா இருக்கா?"

"ம்ம்."

"சரி குளிச்சுட்டு ட்ரெஸ் மாத்திக்கோ, இது தான் ட்ரெஸ்ஸிங் ரூம் அட்டாச்ட் வித் பாத்ரூம், தென் ட்ரெஸ்ஸிங் ரூம்க்கு ஸ்கிரீன் தான் இருக்கு, நான் வர மாட்டேன். கவலைப்படாம டிரெஸ் மாத்திக்கோ." என்று ஸ்கீரினை இழுத்துவிட்டான்.

"பேசாம இதுக்கு ஒரு கதவு போடலாம்ல"

"நான் ரொம்ப ப்ரீ பிளானா தான் கதவு போடல" என்று கண்ணடித்துக் கூறியவனைக் கண்டு வெட்கம் கொண்டவள்,

"நீங்க ரொம்ப மோசம் மாமா" என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய பையை எடுத்து பிரிக்கத் தொடங்கினாள்.



அவளை ஒரு நிறைவுடன் பார்த்துக்கொண்டே,

"நீ குளிச்சுட்டு வா, நான் வெளிய இருக்கேன்" என்றவன் அங்கிருந்து வெளியேறி கட்டிலில் சென்று அமர்ந்து, அறையில் இருந்த டீவியை உயிர்ப்பித்தான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவள் தயாராகிய கங்கா, வெளியேறி, "நீங்க போயி குளிச்சுட்டு வாங்க, நான் என் திங்க்ஸ் அடுக்கி வைக்கிறேன், நீங்க வந்ததும் சேர்ந்து போலாம்" என்று சொல்ல,



"எஸ் யுவர் ஆனர்" என்று சொல்லிவிட்டு அவன் குளிக்கச் சென்றான்.



அவள் கொண்டு வந்த புத்தகங்கள், உடைகளை அடுக்கி வைத்துவிட்டு, டீவியை போட்டு அமர்ந்தாள். கண்கள் டீவியில் இருக்க, மனமோ எதிர்கொள்ளப் போகும் விஷயங்களை எண்ணிக் கலக்கமுற்று இருந்தது..

"நான் ரெடி" என்ற குரலில் நடப்பிற்கு திரும்பியவள், டீவியை அணைத்துவிட்டு, தயாராகி வந்த சாகருடன் ஒரு சிறு புன்னகையுடன் இணைந்துகொண்டாள்.



புன்னகை முகமாக அவள் பூஜையறையில் விளக்கேற்றியது கண்டு அங்கிருந்த வேலையாட்கள் அனைவரும், மன நிறைவுடன் வேலை செய்தனர். வீட்டின் அரசி என்ற முறையில் அந்த வீட்டில் முதன் முதலாக விளக்கேற்ற ஒரு பெண் வந்ததில் அவர்களுக்கு ஒரு நிறைவு இருந்தது.

அவர்களின் மனதின் ஓட்டத்தை உணர்ந்தவள் அனைவருக்கும் புன்னகை ஒன்றை சிந்தி, சாகரனிடம் தீபாராதனைத் தட்டைக் காட்டினாள்.

அதை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டவன், விபூதியை வைத்துக்கொண்டு அவளுக்கும் விபூதி, குங்குமம் வைத்துவிட்டான்.

தட்டைக் கீழே வைத்துவிட்டு வெளியேறிய கங்கா, "நீங்க ரூம்ல இருங்க, நான் ரெண்டு பேருக்கும் டீ கொண்டு வரேன்" என்று சொல்லிக்கொண்டே கிட்செனை நோக்கிச் சென்றாள்.

சாகரனோ கங்காவின் பிரவேசத்தினால் அடுத்து அவன் வீட்டை நோக்கி வரும் புயலை எதிர்கொள்ளும் வழியைத் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துக் கொண்டே அறையை நோக்கி சென்றான்.



அவனுடைய யோசனை கங்கா வரும் வரை நீடித்து இருந்தது.

"என்ன யோசனை?" என்று கங்கா தான் அவன் எண்ணத்தைக் கலைத்தாள்.

"ம்ம். அடுத்த கட்டத்துக்கு தயாராகணுமே"

"என்னது?"

"டீ குடி சொல்றேன்" என்றவன் அவளிடம் இருந்து டீயை வாங்கிப் பருகிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தான்.

அவளும் பதில் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு டீ குடிக்க ஆரம்பித்தாள்.

"நான் டீ குடிச்சுட்டேன்" என்ற அவள் குரலில் அவள் முகம் பார்த்தவன், அவன் கையில் இருந்த டீயை முற்றிலுமாக காலி செய்துவிட்டு அவளருகே நெருங்கி வந்து அமர்ந்தான்.

அவன் அருகாமையில் உட்கார முடியாமல் படபடப்பாக உணர்ந்தவள், மெல்ல நகர, அவள் கரம் பற்றி இழுத்து, தன் மடி மீதே உட்கார வைத்தவன்,

"லிசன் கங்கா, நாம மத்தவங்களுக்கு கணவன் மனைவி, நீ இப்படி என் பக்கத்துல உட்காரவே தயங்குனா எல்லாருக்கும் சந்தேகம் வரத்தானே செய்யும். சோ கொஞ்சம் உன் தயக்கத்தை விட்டுட்டுடேன்" என்று அவளிடம் கெஞ்சும் குரலில் சொன்னவனின் பிடியில் இருந்து விலக முயற்சித்து தோல்வி கண்டவள்,

"ம்ஹ்ம்.... என்னால முடியாது" என்றவளின் கன்னங்கள் தானாக சிவக்க ஆரம்பித்தன.

"நீ இப்படி வெட்கப்பட்டா என்னாலையும் முடியாது"

அவள் அவனை முறைக்க ஆரம்பிக்க,

"ஹே... நான் நம்ம திட்டத்தை சொன்னேன்"

"சொல்வீங்க... சொல்வீங்க" என்று அவள் செல்லமாக நொடித்துக்கொள்ள,

"சரி சரி.. இப்ப முக்கியமான விஷயம், இன்னும் கொஞ்ச நேரத்துல உன் அத்தையும், மாமாவும் பதறியடிச்சு ஓடி வருவாங்க."

அவன் சொன்னதில் பயந்த கங்கா தன்னையமறியாமல், அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டே, "எனக்கு பயமா இருக்கு மாமா"

"இதுக்குத்தான் உன்கிட்ட இப்ப பேசறேன். இங்க பாரு, அவங்க வந்தா முதல்ல பயப்படாத, தைரியமா இரு, ரெண்டாவது அவங்களை அலட்சியப்படுத்து"

"அது தப்பு மாமா"

"ம்ம், உன்னையும் அத்தையையும் அவங்க நடத்துன விதத்தை மனசுல கொண்டு வா, சரி ஆகிடும்"

"ம்ஹ்ம்.. என்னால அப்படிலாம் நடக்க முடியாது"

"ஏய், மாமாவை காப்பாத்த நீ போராடற மாதிரி நட, சொதப்பின எல்லா பிளானும் குளோஸ்"

"ப்ச் என்ன மாமா நீங்க. இதெல்லாம் எனக்கு வராது"

"என் மாமாகிட்ட பேச, ஒவ்வொருத்தரும் மென்னு முழுங்குவாங்க, நீ அவரோட பொண்ணு, ஆனா நீ மென்னு முழுங்கற, எல்லாம் அவர் நேரம்"

"ப்ச். அப்பாக்கு அப்புறம் என் தைரியம் எல்லாம் அவர் கூடவே போய்டுச்சு மாமா, யாரையும் எதிர்த்து பேச எனக்கு வர மாட்டிங்குது"

"ஏன்?"

"ஏன்னா அப்ப அப்பா இருந்தார், எனக்கு துணைக்கு. இப்ப?"

"நான் இல்லையா?" என்ற அவன் கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

"ம்ம். நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கறேன். ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"இருக்கு. குழம்பின குட்டைல மீன் பிடிக்க போறோம்"

"புரில"

"வெயிட் அண்ட் சீ"

"சரி இப்ப அடுத்து நான் என்ன பண்ணனும்?"

"அவங்க இப்ப வருவாங்க, நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ, அவங்களை இங்க இருந்து வெறியேத்தி அனுப்பி வைக்கிற. இது உன் வீடு, வர்றவங்க அழைக்காத விருந்தாளி, இதை மனசுல வைச்சுக்கிட்டு அவங்களை ஒழுங்கா மட்டம் தட்டற மாதிரி பேசற, இங்க இருந்து போறப்ப அவங்க முகம் தொங்கி போகனும்"

"வர்றது உங்க அப்பா, உங்க அம்மா"

"அதெல்லாம் ஒரு காலத்துல, இப்ப எனக்கு நீ, உனக்கு நான், அவ்ளோதான்"



"அடுத்து?"

"அடுத்து நமக்கு புது புது பிரச்சனை ஏற்படுத்துவங்க, அடிக்கடி வருவாங்க, உன்னை மிரட்டுவாங்க, ஆனா நான் எப்பையும் உன் கூட இருப்பேன், இன்னொன்னு நான் இல்லாட்டியும் உனக்கு பாதுகாப்புக்கு ஆள் இருப்பாங்க, நீ எக்காரணத்தை கொண்டும் பயப்படக் கூடாது"

"ம்ம்"

"தென், நம்ம வீட்ல அவங்களுக்கு ஒரு இன்பார்மர் இருக்காங்க, அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க"

"யாரு அது?"

"சமையல் வேலை செய்யற ராதா"

"ஹோ"

"அவங்ககிட்ட நீ ஜாக்கிரதையா இருக்கனும், குறிப்பா அவங்க முன்னாடி நான் வந்து தொட்டா உடனே ஓடிரக் கூடாது." என்று சீரியஸாக பேசிக்கொண்டு இருந்தவன், கிண்டலாக சொல்ல,

"அதெல்லாம் சரி, அதுக்காக நீங்க அவங்க முன்னாடி வந்து வேணும்னே என்னைத் தொடக்கூடாது" என்று உதட்டைச் சுழித்துக்கொண்டே அவளும் சொன்னாள்.

"அதெல்லாம் அப்புறம் பாப்போம். இப்ப போயி உன் வேலையை சார்ஜ் எடுத்துக்கோ"

"என்ன வேலை? என்ன சார்ஜ்?" என்று அவள் புரியாமல் கேட்க,

"மேடம், இந்த வீட்டோட முதலாளியம்மா நீங்க தான். போயி அதைப் பாருங்க. யாரெல்லாம் என்ன பண்ணி வைச்சு இருக்காங்களோ எனக்கு தெரியாது, போயி கண்டுபிடிச்சு சரி பண்ணு"

"ம்ம். ஏன் மாமா, பேசாம அந்த ராதாவை அனுப்பிட்டா?"

"லூசு. அப்புறம் இங்க நடக்கறத அங்க யார் சொல்லுவா?"

"ஏன் சொல்லனும்"

"ம்ம், அவங்களை இங்க நடக்கற விஷயம் டைவர்ட் பண்ணா தான், நாம சரியான பாதைல டிஸ்டர்ப் இல்லாம போலாம்"

"ம்ம். சரி.. நீங்க சொன்னபடியே செய்யறேன். மத்தபடி எனக்கு போர் அடிச்சா?"

"அதுக்கும் கவலைப் படாதே, எனக்கு ஹெல்ப் பண்ணு, அதுக்கு நான் நிறையா பிளான் பண்ணி இருக்கேன், அப்புறம் பார்க்கலாம். இப்ப சீக்கிரம் கீழ போயி நம்ம வேலையை ஆரம்பி"

"ஆனாலும்........"

"என்ன ஆனாலும்ன்னு இழுக்கிற?"

"இல்ல ஒரு பயம் தான்"

"ஏய், உன் அப்பா உயிரோட இருக்கார், உனக்கு நிழலா நான் இருக்கேன், நீ எக்காரணத்தை கொண்டும் பயப்படாத"

"ம்ம். பார்க்கறேன்"

"சரி, இன்னொன்னு, வேலைகாரங்ககிட்ட ரொம்ப நெருங்கி நடக்காத, சரியா? அப்புறம் ராதாவை தனியா டிரீட் பண்ணிடாத"

"ம்ம்"

"நீ போ. நான் வரேன்" என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, வீட்டு வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்டது.

"வந்துட்டாங்க" என்ற அவன் வார்த்தையில் கங்காவின் முகம் பயத்தில் வெளுத்தது.

அவள் முகம் பார்த்தவன், "சரி வா. நான் இருக்கேன் , பயப்படாம வா" என்று சொல்லி அவளுடன் மெல்ல நகர்ந்தவன், சட்டென்று அவளை இழுத்து இறுக்கமாக அணைத்தான்.

அவனது திடீர் செயலில் திகைத்தவள், கண்கள் விரிய அவனைப் பார்த்தாள்.

"நான் இருக்கேன். பயப்படாத அம்லு" என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அவனது செய்கையில் முகமும், அகமும் மலர்ந்தவள், மெல்ல புன்னகைத்தவாறே தலையசைத்தாள்.

இருவரும் இறங்கி கீழே வரவும், அவனது பெற்றோர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

சாகரனுடன் இறங்கி வந்த கங்காவைப் பார்த்த அவனது அன்னை கமலா, அவளை வெறித்துக்கொண்டே பாதியில் நின்றார்.

அவரது பார்வையில் பீதியடைந்த கங்காவோ சாகரனின் கைகளை இறுகப் பற்றினாள்.

சாகரனின் தந்தை ருத்திரனோ மகனை பொசுக்குவது போல பார்த்தார்.



சாகரனோ துளியும் அஞ்சாது, மெல்ல ஹாலை நோக்கி நடந்தான். அவன் பார்வையில் அலட்சியம் நிறைந்திருந்தது.

"சொல்லுங்க என்ன விஷயம்?" என்று சாகரனே பேச்சை ஆரம்பித்தான்.

"யார்டா இவ?" என்று கமலா கோபமாக இருவரின் முன்னும் வந்து நின்றார், கங்காவின் முகத்தில் தெரிந்த பொலிவு அவரை ஆத்திரமடையச் செய்து இருந்தது.



பெண்கள் பொதுவாகவே சுற்றத்தை அணுவணுவாய் எடை போட்டு வைத்து இருப்பார்கள். இந்த குணம் இயற்கையாகவே அனைவரிடமும் உண்டு.



அதன் படி என்றாலும், கமலாவின் அதீத பொறாமை குணம், கங்காவை நொடியில் எடை போட்டு இருந்தது.



"என் பொண்டாட்டி"

"டேய்" என்று அவர் ஆத்திரத்தில் கத்த,

"ப்ச். சத்தம் போடாம வந்த விஷயம் என்னவோ அதை சொல்லுங்க, இல்லை வெளிய போங்க? நாங்க வெளிய போகனும்"

"டேய் சாகர். நாங்க உன்னை பெத்தவங்கடா" என்று ருத்ரன் இடையில் கோபமாக நுழைந்தார்.

"லிசன் மிஸ்டர் ருத்ரன், உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்க இங்க வந்து இப்படி கலாட்டா பண்றது நல்லா இல்லை. சோ வெளிய கிளம்புங்க"

"டேய். உனக்கு நாங்க ராதிகவை நிச்சயம் பண்ணி வைச்சு இருக்கோம்"

"நான் இல்லாம, என் சம்மதம் இல்லாம நீங்க நிச்சயம் பண்ணா, அதுக்கு நான் பொறுப்பு இல்லை. இன்னொன்னு எனக்கு நீங்களே உறவு இல்ல. இதுல எனக்கு நிச்சயம் பண்ண நீங்க யாரு?"



"டேய், நான் உன்னை பெத்தவ, அவ உன் மாமன் பொண்ணு, இப்ப என் தம்பிக்கு, நான் என்ன பதில் சொல்வேன்"

"அது உங்க பிரச்சனை" என்றவன் "ராதாம்மா" என்று சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ராதாவை அழைத்தான்.

"என்ன தம்பி"

"இவங்க போனதும், இந்த இடத்தை கழுவி விட்டுடுங்க"

"தம்பி" என்று அதிர்வுடன் கேட்க,

"சொன்னதை செய்ங்க" என்றவன் பெற்றோர் பக்கம் திரும்பி,

"தென், எனக்கும் என் மனைவி உயிர்க்கும் ஒரு சிலரால ஆபத்து இருக்குன்னு நான் போலீஸ்ல கம்பிளைன்ட் குடுத்து இருக்கேன், அந்த ஒரு சிலர்ல உங்க பேரும் அடக்கம். சோ பார்த்து நடந்துகோங்க" என்று சொன்னவன் "போலாமா" என்று மனைவியிடம் கேட்டவாறே, அவளை வெளியே கூட்டிச் சென்றான்.

காரில் ஏறி அமர்ந்து அது சிறிது தூரம் செல்லும் வரை மவுனமே அங்கு பிரதானமாக இருந்தது.

"என்ன கங்கா, பயந்துட்டியா?"

"ம்ம். ரொம்ப"

"இது ஸ்டார்டிங் தான். இப்ப நாம பாதிலயே வந்துட்டோம். நாளைக்கு நான் இல்லாதப்ப மறுபடியும் வருவாங்க. பாரு"

"என்ன நீங்க இல்லாத போதா?"

"கண்டிப்பா"

"அச்சோ. எனக்கு பயமா இருக்கு மாமா"

"நான் தான் சொல்லி இருக்கேன்ல, உனக்கு நானும் உன் அப்பாவும் வேணும்னா நீ அவங்களை எதிர்த்து தான் நடக்கனும்"

அவன் பதில் சொல்லிவிட்டு அமைதி காக்க அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

அன்றைய காலை உணவை வெளியே முடித்துவிட்டு, அவனது கெஸ்ட் அவுஸில் உறங்கி எழுந்து, அங்கேயே மதிய உணவையும் முடித்துவிட்டு மாலை நெருங்கும் நேரம் அவளைக் கொண்டு வந்து வீட்டில் விட்டவன், அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டான்.

இரவு உணவிற்கு ஆயத்தம் செய்துவிட்டு, வீட்டில் சில பொருட்களை ஆட்களை விட்டு இடமாற்றிகொண்டு இருந்தவள், வாயிலில் கேட்ட கார் சத்தத்தில் சற்று மிரண்டு தான் போனாள்.

அதே நேரம் அறைந்து சாத்தப்பட்ட கார் கதவின் சத்தம் அவளுக்குள் பயத்தை விட ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது.

அதே எரிச்சலில் விட்ட பணியை அவள் தொடங்க, அவளக்கு மிக அருகில் சொடக்கு சத்தம் கேட்டது.

அருகில் கேட்ட சத்தத்தில் திகைத்தவள், நொடியில் சுதாரித்துக்கொண்டு மெல்லத் திரும்பினாள்.


அங்கு நவ நாகரிக யுவதி ஒருத்தி நின்று கொண்டு இருந்தாள். அவளது முகம் கோபத்தில் சிவந்து கிடந்தது.

அவள் தோற்றமே கங்காவிற்கு ஒரு எரிச்சலைக் கொடுத்தது.

அதே எரிச்சலில், "எஸ்" என்று வேண்டா வெறுப்பாக கேட்டுவைத்தாள்.

"உனக்கு பத்து நிமிஷம் டைம், நீயா வெளிய போற. இல்லை, உன்னை நான் வெளிய அனுப்புவேன். சும்மா இல்ல அடிச்சு"

அவள் பதில் கேட்ட கங்கா அடுத்த நிமிடமே முடிவு செய்துவிட்டாள், இதுதான் அந்த ராதிகா என்று.

அவள் பதில் சொன்னதும், ஒரு நொடி தயங்கிய கங்கா, அன்று காலை சாகரன் சொன்ன வரிகளை நினைவு கூர்ந்தாள். "உனக்கு பயம் வந்தா, ஜஸ்ட் கோபப்பட்டு முடிச்சுடு. பயமும் போயிடும், நாம பயந்தோம்ன்னு நம்ம எதிர்ல இருக்கவங்களுக்கும் தெரியாது."

"என்ன காதுல விழலையா?" என்ற ராதிகாவின் கோபக்குரல் கங்காவை நடப்பிற்கு கொண்டு வந்தது.

மெல்ல அவளை ஏறிட்டுப் பார்த்தவள், நேராக சென்று ஹாலில் இருந்த இன்டெர்க்காமை எடுத்து செக்யூரிட்டிக்கு அழைத்தாள்.

"கேட்ல என்ன வேலை பார்க்கறீங்க நீங்க? எதுக்கு இந்த மாதிரி பைத்தியத்தை எல்லாம் உள்ள விடறீங்க? இனி யார் வந்தாலும் என்னை கேட்காம உள்ள விடக்கூடாது. மொதல்ல உள்ள வாங்க" என்று செக்கியூரிட்டியிடம் கோபத்தில் கத்திவிட்டு, இண்டர்காமை கீழே வைத்தவளை, நோக்கி கொலைவெறியில் ராதிகா வந்தாள்.

"யாரைப் பார்த்து பைத்தியம்னு சொன்ன?" என்று அவள் கையை ஓங்க, அவள் கரத்தைப் பற்றி தடுத்து இருந்தாள் கங்கா.

"ஏய், என்ன வீடு புகுந்து அராஜகம் பண்றியா? தொலைச்சுடுவேன் தொலைச்சு. யார் வீட்ல வந்து யாரை மிரட்டுற? இது என் வீடு. உன் அதிகாரத்தை வேற எங்கையாவது வைச்சுக்கோ. ஒழுங்கு மரியாதையா வெளிய போ" என்று அவள் சொல்லவும் அதே நேரம் செக்யுரிட்டி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"இவளை வெளிய அனுப்புங்க. இன்னொரு தடவை இவளை என்னை கேட்காம உள்ள விட்டீங்க அப்புறம் உங்க வேலைல தான் நான் கை வைப்பேன்" என்று கங்கா நகரப் போக,

"ஏய்" என்ற ராதிகாவின் உறுமல் அவளைத் தடுத்து நிறுத்தியது.




கைகளைக் கட்டிக்கொண்டு அவளை நேராகப் பார்த்தவள்,



"பார்க்கற எல்லாத்துலையும் உரிமை இருக்குன்னு நீயா நினைச்சுக்கிட்டு சுத்தற போல, அதான் இப்படி. செக்யுரிட்டி எதுக்கும் அந்த கார் யாருதுன்னு பாருங்க." என்றவளை அறைய ராதிகா கையை ஓங்க, இந்த முறை அவளைத் தடுத்தது சாகரன்.

"ஏய் ரோட்ல போறவல்லாம் என் பொண்டாட்டியை அடிக்க கையை ஓங்கினா, நடந்துருமா?"

"மாமா!"

"என்னை அப்படி நீ கூப்பிடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா?"

"மாமா!

"இப்பத்தான் சொன்னேன்"




"இருங்க... நான் ரோட்ல போறவளா?"



"பின்ன?"



"அப்பா இவ?"



"இது என் மனைவி"



"மாமா"



"லிசன், என்னை அப்படி கூப்பிட என் மனைவிக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. அவளுக்கு மட்டும் தான் நான் தந்து இருக்கேன்"



"அப்ப நம்ம நிச்சயம்?"



"நிச்சயமா? அப்படினா?"



"மாமா"



"ஸ்ஸ். எனக்கு வேலை இருக்கு. முதல்ல கிளம்பு." என்றவன், "செக்யூரிட்டி இவங்களை வெளியே அனுப்புங்க. இனி எங்களை கேட்காம யாரையும் உள்ள விடாதீங்க"



"எஸ் சார்" என்றவன் ராதிகாவைப் பார்க்க,



"வைச்சுக்கிறேன். இதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு. இந்த வீட்டுக்கு உரிமையுள்ளவளா ஒரு நாளைக்கு நான் வருவேன். அப்ப வைச்சுக்கறேன் உங்களுக்கு"



"கனவுல கூட நினைக்காத"



"நிஜத்துல நடக்கும்"



"என் பொண்டாட்டி சொன்ன மாதிரி நீ பைத்தியம் தான்" என்றவன், "செல்லம் எனக்கு டவல் எடுத்து குடுத்துட்டு வந்து டிபன் எடுத்துவை" என்று கங்காவின் தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டு மேலே ஏறினான்.



அவர்கள் செல்வதை ஒரு வெறியுடன் பார்த்துக்கொண்டு நின்ற ராதிகாவை செக்யூரிட்டி அழைக்க, கண்களில் வெறி மின்ன வேகமாக வெளியேறினாள்.



அறைக்குள் நுழைந்த கங்கா சாகரை இறுக அணைத்துக்கொண்டாள்.



"பயமா இருக்கு மாமா"



"எனக்கும் பயமா இருக்குமா"



"அவ்ளோ மோசமானவளா இவ?" என்று அவனை நிமிர்ந்து பார்த்து கேட்டாள்.



"ச்சேச்சே அவள பார்த்து யாரு பயப்படுவா?"



"ப்ச். இப்ப சொன்னீங்களே"



"அது உன்னை பார்த்து"



"என்னை பார்த்தா? ஏன்?"



"இப்படி என்னை கட்டிபிடிச்சுக்கிட்டு நின்னா, அப்புறம் நானும் அதையே பண்ணுவேன், அப்புறம்..." என்று அவன் சொல்லச் சொல்ல,



டக்கென்று அவனிடம் இருந்து விலகியவள், "நீங்க வர வர ரொம்ப மோசம் ஆகிட்டிங்க... உங்களை இப்படியே விடக் கூடாதே...." என்றவள், கட்டிலில் கிடந்த தலையணையை எடுத்துக்கொண்டு அவனை அடிக்க ஆரம்பிக்க, அவன் அவளிடம் இருந்து தப்பித்து ஓட, அவளும் விடாமல் துரத்தினாள்.



அறையில் இருந்து வெளியேறிய சாகர் நேராக மாடிக்குச் செல்ல, அவனைப் பின் தொடர்ந்து அவளும் மாடியை அடைந்து இருந்தாள்.



"ஓடாதிங்க... நில்லுங்க..."



"முடிஞ்சா பிடி..."



"நில்லுங்க"



"வா... வா... வந்து பிடி.."



"ப்ச்.. போங்க முடில..." என்று அவள் தலையணையை அங்கிருந்த நாற்காலியில் போட்டுவிட்டு அமர்ந்தாள்.



கைகள் இரண்டையும் பாக்கெட்டில் விட்டுக்கொண்டே அவளை நோக்கி சிரித்துக்கொண்டே வந்தவன்,



"என்னையே பிடிக்க முடில. என் பையனை எப்படி பிடிக்க போற?"



"அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே"



"சரி வா... போலாம்...."



"கொஞ்ச நேரம்..... எனக்கு ரெஸ்ட்...." என்று அவள் அசதியாய் சொல்ல,



சட்டென்று அவளைத் தன் கைகளில் தூக்கியவன், "இப்ப போலாமா?" என்று கேட்க,



அவளோ அவன் முகம் பார்க்காமல் சிவந்த முகத்துடன் "ம்ம்" என்றுத் தலையாட்டினாள்.



----- அலை கரை தொடும் -----


 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலத் திரைக்கடல் ஓரத்திலே!






அத்தியாயம் – 7

முத்தம்!
காதலைச் சொல்லும்!
அன்பைச் சொல்லும்!
ஆதரவைச் சொல்லும்!
தாபத்தைச் சொல்லும்!
கோபத்தைச் சொல்லும்!
மனதைச் சொல்லும்!
மகிழ்வைச் சொல்லும்!
மயக்கத்தைச் சொல்லும்!
பயத்தைச் சொல்லும்!

முத்தம்!
இரு இதழ்களின் பரிமாற்றமல்ல!
இரு உள்ளங்களின் பரிமாற்றம்!

முத்தம்!
ஒரு
இலக்கியமாகும்!
குழந்தையினிடத்தில்!


முத்தம்!
ஒரு
தூய மொழியாகும்!
மழலையினிடத்தில்!

முத்தம்!
ஒரு
இலக்கணமாகும்!
தூய அன்பிருக்கும் இடத்தில்!



அடிபட்ட புலியாக இருந்த ருத்ரன், அவருடைய வீட்டில், ஹாலின் நீள அகலத்தை அளப்பது போல கிழக்கு மேற்காக நடந்து கொண்டு இருந்தார். கமலாவோ கோபத்தில் அன்றைய நாளிதழ்களை கிழித்துப்போட்டுக்கொண்டு இருந்தார்.

அவர் எதிரில் ராதிகாவின் பெற்றோரும், (கமலாவின் தம்பியும், நாத்தனாருமான விஜயனும், மல்லிகாவும்) மகளின் வாழ்க்கையை எண்ணிக் கவலையுடன் உட்கார்ந்து இருந்தனர்.

“எனக்கு அவளைப் பார்த்ததுமே சந்தேகம், எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு, இப்பத்தானே தெரியுது, அவ அந்த மயூரியோட பொண்ணுன்னு” என்று கமலா கொந்தளித்து பேச,

“என்னண்ணி? உங்க அண்ணன் பொண்ண கட்டி வைச்சு என் பொண்ண கழட்டி விட யோசிச்சு வைச்சு இருந்திங்களா?” என்று மல்லிகா ஆரம்பித்தார்.

“என்ன மல்லி பேசற நீ? ராதிகா எனக்கு தம்பி பொண்ணு, என்னதான் நீ என் சின்ன மாமனார் பொண்ணா இருந்தாலும் உன்னை இந்த வீட்டு பொண்ணத்தான் நாங்க வைச்சு இருக்கோம். இன்னைய வரைக்கும் உனக்கு வருஷ வருஷம் சீர் செய்யறோம், ஆனா நீ? இப்படி பிரிச்சு பேசறியே?”

“என்ன அண்ணி சொல்லி காட்டறின்களா?”

“தப்பு தப்பா அர்த்தம் பண்ணிக்காத மல்லி”

“நானா? சரி அதெல்லாம் விடுங்க, இப்ப என் பொண்ணு வாழ்க்கைக்கு வழி சொல்லுங்க”

“நாங்களே குழப்பதுல இருக்கோம். நீ வேற?”

“அக்கா, உன்னை நம்பி தான் என் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணி வைச்சு இருக்கேன், இப்ப அவளால வெளிய தலை காட்ட முடில, அவ ப்ரெண்ட்ஸ் எல்லாம் கேலி பண்ணி சிரிக்கிறாங்களாம். எனக்கு அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தே ஆகனும், அதுக்கு நான் என்ன வேணா செய்வேன்” என்று இருவரின் பேச்சுக்கும் இடையில் விஜயன் இடையிட்டார்.

“டேய், இப்பையும் சொல்றேன், இந்த வீட்டுக்கு உன் பொண்ணு தான் மருமக, முதல்ல அந்த சனியன வீட்டை விட்டு துரத்துவோம்” என்று கமலா சொல்ல,

அதுவரை நடை பயின்ற ருத்ரன் ஒரு நொடி நடையை நிறுத்தி, புன்னகையுடன் திரும்பினார்.

“விஜயா, எனக்கு ஒரு யோசனை தோணுது”

“சொல்லுங்க மாமா”

“அந்த கங்காவ வீட்டை விட்டு அனுப்பனும், அவளை நம்ம சாகரே விரட்டி விடனும்”

“அதெப்படி மாமா? அவளை மிரட்டி கூட அனுப்பிடலாம், ஆனா அவன் எப்படி அனுப்புவான்?”

“அனுப்புவான். என் பையனுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். எதுக்காகவும் அதை விட்டுத் தர மாட்டான்”

“உண்மைதான்”

“அவளை ஒழுக்கங்கெட்டவ, அப்படின்னு அவனை நம்ப வைச்சா போதும்”

“எப்படி மாமா? நாம தான் அந்த வீட்டுக்குள்ள போகவே முடியாதே”

“ராதாவை வைச்சு செய்யறோம்”

“இந்த வேலை ஒர்க் அவுட் ஆகுமாண்ணா?”

“ஆகும் மல்லி, அவ சென்னைல வளர்ந்தவ, அதுவும் ஒரு கம்பெனில வேலை செஞ்சு இருக்கா, அங்க எப்படியும் பார்ட்டி, பப்ன்னு போயி இருப்பா, கவலை படாத, அவளே சிக்குவா”

“அப்படியும் வேலை ஆகலைன்னா?”

“கொன்னு பொதைச்சுட்டு போய்கிட்டே இருப்போம்”

“ஏற்கனவே உங்க பையன் நம்ம பேர்ல சந்தேகம் இருக்குன்னு போலீஸ்ல பதிவு பண்ணி வைச்சு இருக்கான்”

“கமலா... அதுக்கும் ஒரு ஆள ஏற்பாடு பண்ண மாட்டோமா? ரமணன் கேஸையே ஊதி தள்ளிட்டோம், இது என்ன பெரிய விஷயமா?”

“ம்ம்... இப்ப புரியுது, சரிங்க நான் ராதாவை வர வைக்கிறேன். அவளுக்கு என்ன என்ன பண்றதுன்னு சொல்லி தந்துடுவோம்”

“சரிக்கா, நாங்க கிளம்பறோம், எதுக்கும் இன்னொரு தடவை அது உண்மையிலேயே மயூரி பொண்ணா, கல்யாணம் ஆகி இருக்கான்னு பாருங்க. ஏன்னா? நம்ம சாகர் இந்த கல்யாணத்தை நிறுத்த போட்ட பிளானா கூட இருக்கலாம், இதுல இன்னும் ராதிய வேற சமாதானம் செய்யனும்”

“சரிடா. முடிஞ்சா அவளை இங்க வந்து கொஞ்ச நாள் இருக்க சொல்லு”

“முயற்சி பண்றேன். என்ன பண்ண போறான்னு தெரில”

“சரிண்ணா நாங்க கிளம்பறோம்” என்று மல்லிகாவும், விஜயனும் விடை பெற்றனர்.

ஓரிரு நாட்கள் மெல்ல நகர்ந்து இருந்தது....

கதவு தட்டும் ஓசையில் கண் விழித்த சாகர் அருகில் பார்க்க, அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள் கங்கா.

முன்தினம் முழுக்க, வீட்டை சுத்தம் செய்து, பாத்திரங்கள், பொருட்கள் என அனைத்தையும் வேண்டியது, வேண்டாதது என பிரித்து வீட்டின் எழிலையே கூட்டி இருந்தாள்.

அந்த அசதியில் உறக்கம் கலையாமல் இருந்தவளை ஒரு புன்னகையுடன் பார்த்தவன், மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டு எழுந்தான்.

நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காமல் இருக்க, ராதா, “தம்பி, கங்காம்மா” என்று குரல் கொடுக்க, அவரது குரலில் தடை பட்டவன், மெல்ல யோசிக்க ஆரம்பித்தான்.

“யாரு?” என்று குரல் எழுப்ப,

“நான் தான் தம்பி, ராதா, காபி கொண்டு வந்தேன்”

“ஓ... இருங்க வரேன்” என்றவன், கட்டிலில் கிடந்தவளின் மீது, போர்வையை நன்கு இழுத்து, தலை மட்டும் தெரியுமாறு போர்த்தி விட்டான்.

அவனுடைய டீ சர்ட்டை கழட்டிப் போட்டவன், முன் தின இரவு, கங்கா குளித்துவிட்டு ஈர துண்டை அங்கிருந்த நாற்காலியில் போட்டது நினைவு வர, அதனை சட்டென்று எடுத்து போர்த்தியவாறே, கதவைத் திறக்க சென்றான்.

ஒரு நொடி கங்காவை திரும்பி பார்த்தவன், கதவைத் திறந்தான்.

அவனது கையில் காபி டிரேயை திணித்த ராதா, “அம்மா வருவாங்கன்னு பார்த்தேன். இவ்ளோ நேரம் ஆகியும் வரல, நேத்து முழுக்க வேலையா? உடம்பு முடியலையோன்னு நானே கொண்டு வந்துட்டேன்”

“அதெல்லாம் மேடம் நல்லா இருக்காங்க... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு வருவாங்க... நீங்க போயி சமையலைப் பாருங்க”

“சரி தம்பி” என்றவரது கண்கள் அறையை முடிந்தமட்டும் ஆராய்ச்சி செய்யத் தவறவில்லை.

“எனக்கேவா?” என்று மனதிற்குள் நினைத்த சாகர், மெல்ல கதவைச் சாத்தி, டிரேயை கொண்டு சென்று உள்ளே வைத்தான்.

பல் விளக்கி, முகம் கழுவி ரெப்ரெஷ் செய்து வந்தவன், காபியை எடுத்து ஊற்றி பருக ஆரம்பித்தான். அவன் கண்கள் கங்காவில் படிந்து இருந்தாலும், மனம் தந்தையை எண்ணிக் கொண்டு இருந்தது.

“ருத்ரன், நான் நினைச்ச மாதிரியே காய் நகர்த்தறிங்களே! கிரேட்!” என்று மனதிற்குள் சொல்லிகொண்டான்.

அன்று தாமதமாக எழுந்த கங்காவிற்கு நடந்தததை சொல்லியவன், கவனமாக இருக்கும்படி சொல்லித்தான் கீழே அழைத்துச் சென்றான்.

இருவரும் வழக்கம் போல சிரித்துப் பேசிகொண்டே கீழே சென்றனர். அவனுக்கு உணவு பரிமாறி, தானும் அமர்ந்து உணவு உண்ண அரம்பித்தாள்.

ராதாவோ இருவரையும் நோட்டமிட்டுக்கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார்.

“ஒழுங்கா சாப்பிடு, நீ இப்படி இருந்தா, எப்படி என் பசங்களை பார்த்துக்க முடியும்?”

“ஏன்? ஏன் என்னாலா பார்க்க முடியாது?”

“என்னைய சமாளிக்கவே முடில, இதுல என்னைய விட பல மடங்கு திறைமைசாலிகளா, அடம் பிடிக்கிறவன்களா இருக்கப் போற நம்ம பசங்களை எப்படி சமாளிக்கப் போற?”

“மாமா, வேண்டாம்”

“ஏண்டி?”

“என்கிட்ட வாங்கின அடியெல்லாம் மறந்துடுச்சா?”

“அடிக்கிற கைதானே அணைக்கவும் செய்யுது”

“ஸ்... இது டைனிங் ஹால்”

“எஸ்... ஓகே... இன்னில இருந்து உனக்கு ஒரு புது வேலை ஏற்பாடு பண்ணி இருக்கேன்”

“என்னது?”

“என்னதான் தாத்தா லாயர்னாலும் சில ப்ராபர்ட்டீஸ் சந்தர்ப்ப சூழ் நிலையால வாங்கி வைச்சிருக்கார். அதோட வரவு செலவு கணக்க நான் தான் பார்க்கிறேன். அதோட டீடைல்ஸ் பத்தி உனக்கு சொல்றேன். இனி நீ பாலோ பண்ணிக்கோ”

“ம்ம். சரி மாமா”

“அப்படியே இன்னிக்கு கொஞ்சம் ஷாப்பிங் போகலாம்”

“நானே சொல்லனும்னு நினைச்சேன். கொஞ்சம் க்ரோசரி வாங்கனும்”

“போலாம் ரெடியாகு”

“மொதல்ல பேசாம சாப்பிடுங்க, அப்பத்தான் சீக்கிரம் போக முடியும்”

“உத்தரவு மகாராணி” என்றவன் உணவில் கவனம் செலுத்த, கங்காவும் அமைதியாக உணவருந்த ஆரம்பித்தாள்.
 
Status
Not open for further replies.
Top