All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஜோவின் "நீலத் திரைக்கடல் ஓரத்திலே" - கதைத் திரி

Status
Not open for further replies.

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 8



இருவரும் கிளம்பி ஷாப்பிங்கை முடித்துவிட்டு, நேராக அவர்களது கெஸ்ட் அவுசிற்கு சென்றனர்.

ரெப்ரெஷ் செய்து அமர்ந்தவர்கள், அடுத்த வேலைகளைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.

“கங்கா நம்ம மேரேஜ் பத்தி பேப்பர்ல நாளைக்கு வந்துடும். கூடவே ஒரு மினி ரிசெப்சன் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.”

“நீங்க என்ன செஞ்சாலும் சரியா இருக்கும் மாமா”

“தேங்க்ஸ் கங்கா. இன்னொரு விஷயம், மாமா கோமால இருந்ததா சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு தெரியும். கூடவே, அவர் உன் பேர்ல எல்லா சொத்தையும், முன்னாடியே என் தாத்தா மூலமா எழுதி வைச்சு இருக்கார், அதாவது அவருக்கும், மயூரிக்கும் பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் சொத்து சேரும். பசங்க மேஜர் ஆனாலும் மயூரி தான் கார்டியன். மயூரி கையெழுத்து இல்லாம அந்த சொத்துக்களை விற்கவோ, மற்றவருக்கு எழுதி கொடுக்கவோ முடியாது. இன்னொன்னு பசங்க விருப்பம் இல்லாமல், மயூரி வற்புறுத்தி, யாருக்கும் சொத்து எழுதிக் கொடுக்க முடியாது. அதுக்கு மயூரிக்கு உரிமை இல்லை. ”



“அன்னிக்கே சொன்னிங்க... ஆனா இதெல்லாம் புது தகவலா இருக்கு”

“ஆமா. இது கூடவே மாமா ஒரு டிவிஸ்ட் அடிச்சு வைச்சு இருக்கார். அதாவது தனது குழந்தைகளுக்கோ, மனைவிக்கோ, யாருக்காவது மரணம் ஏற்பட்டால், அது நிச்சயம் கொலை முயற்சி தான். அதுவும் தன் உடன் பிறந்தவர்கள் தான் காரணம் அப்படினும் சொல்லி, அப்படி தனது மனைவி, மகள், இந்த உயில் எழுதிய பின்பு, தனக்கும், தன் மனைவிக்கும் பிறக்கும் குழந்தை என அனைவரும் இறந்தால், இந்த சொத்துகள் அனைத்தும் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். ஒருவேளை யாரேனும் ஒருவர் இறந்தால், மற்ற இருவரையும் சாரும். மயூரி இறந்தால் சொத்துகள் குழந்தைகளுக்கு சேரும், அதற்கு கார்டியனாக சுப்பிரமணியன் இருப்பார், அப்படின்னு எழுதி வைச்சுட்டு தான் உன் அப்பா முன்னேற்பாடு செஞ்சு வைச்சு இருக்கார்”



“அப்படினா அப்பாக்கு ஏற்கனவே சந்தேகம் வந்து இருக்கு”

“உண்மைதான் கங்கா. உன் அப்பா உன் அம்மாவோட கண்ணீருக்காக குடியை விட முயற்சி செஞ்சு இருக்கார். அவரை ருத்ரனும், விஜயனும், சங்கரனும், கூடவே தாத்தாவும் ஊத்திக் குடுத்து அவரை அடிமையாக்கி வைச்சு இருக்காங்க”

“இது வேற நடந்து இருக்கா?”

“இன்னும் பல ரகசியங்கள் இருக்கு. அது எனக்கும் தெரியாது. கொஞ்சம் பொறுமையா தான் நாம கண்டு பிடிக்கணும்.”

“சரி சொத்துக்காக அப்பாவை கொல்ல திட்டம் போட்டு வேலை செஞ்சவங்க, ஏன் இன்னும் கொல்லாம வைச்சு இருக்காங்க?”

“காரணம் இருக்கு”

‘என்ன காரணம்?”

“உன் அப்பாக்கு உண்மை தெரிஞ்ச விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு, சோ அவரை கொலை பண்ண பிளான் பண்ணி ஆள் அனுப்பி இருக்காங்க. அந்த ஆக்சிடெண்ட்ல அவர் வெளிய விழுந்து தலைல அடிபட கோமாக்கு போய்ட்டார்.”

“---------------------------------------------“

“அப்புறம் அவரை கொல்ல முயற்சி செய்யறப்ப, ஒருத்தர் தடுத்து இருக்காங்க. அது யார்ன்னு தெரில. அவங்க செய்த உதவி, அவரை காப்பாத்தி இருக்கு”

“அப்ப இறந்ததா போட்ட நாடகம்”

“அது சொத்தை அடைய போட்ட பிளான். ஆனா அப்ப உயில் விஷயம் தெரில”

“---------------------------------------------“

“உன்னையும், அம்மாவையும் வீட்டை விட்டு அனுப்பி வைச்சுட்டு சொத்த மாத்தி எழுத அவங்க ஏற்பாடு பண்ணினாங்க”

“---------------------------------------------“

“அதே சமயம் உங்களை அனுப்பும் போது தாத்தா ஊர்ல இல்லை. ஒரு வேலை இருந்து இருந்தா, நிச்சயம் அவர் இங்கதான் கூட்டிக்கிட்டு வந்து இருப்பார்”

“---------------------------------------------“

“நேர்மையின் சிகரமா இருந்த என் தாத்தா, அவங்க சொத்து எழுதறத தடுத்து ஸ்டே வாங்கிட்டார். கூடவே ஒரிஜினல் உயிலை பத்திரப்படுத்தி வைச்சு முழு பொறுப்பையும் என் கிட்ட கொடுத்தார்.”

“---------------------------------------------“

“நானும் உங்களைத் தேட எவ்வளோ முயற்சி செஞ்சேன். எனக்கு உங்க ஊர் தெரியாது. சென்னைன்னு ஒரு தடவை தாத்தா சொன்னார். அவருக்குமே தெரில. அப்புறம் என் பவர யூஸ் பண்ணி கண்டுபிடிக்க ஏற்பாடு பண்ணேன், கண்டுபிடிச்சுட்டேன்”

“---------------------------------------------“

“இப்ப சொத்து அவங்க பேருக்கு போகணும்ன்னா, உன் அப்பா மறுபடியும் பிழைச்சு வரணும். சோ அவரை டிரீட்மென்ட் குடுத்து பார்த்துக்கறாங்க”

“---------------------------------------------“

“இன்னொன்னு, இப்ப தாத்தா, பாட்டி ரெண்டு பேரும் இல்லை. இவங்க மூனு பேரையும் கண்காணிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை”

“சரி இப்ப அப்பாவ நாம எப்படி கண்டுபிடிக்கிறது?”

“எனக்கு தெரிஞ்ச எல்லா ஆஸ்பிட்டல்லையும் விசாரிச்சுட்டேன், மாமா எதுலையுமே இல்ல. சோ அவர் இருக்கற இடம் இன்னும் தெரில”

“இப்ப எப்படி கண்டுபிடிக்கிறது?”

“ஒரு வழி தான் இருக்கு. அது இந்த சொத்துக்களோட உரிமையை நீ எடுத்துக்கனும்.”

“இது என் மேல அவங்களுக்கு இன்னும் கோபத்தை அதிகரிக்கும்”

“கங்கா, இந்த கூட்டத்தோட அச்சாணி யார் தெரியுமா? ருத்ரன்”

“சரி... அவர் தான் ஏற்கனவே என் மேல கொலை வெறில இருக்காரே”

“ஆமா. அவர் அடைய நினைச்ச சொத்து முழுக்க, இப்ப அவர் மருமக வசம். இப்ப அது, அவர் கைலன்னு, அவருக்கு புரிஞ்சா போதும்”

“எனக்கு புரில மாமா”

“இத்தனை சொத்தும் யாருக்காக அவர் அடிச்சு பிடுங்க முயற்சி பண்ணார்?”

“உங்களுக்காக!”

“சோ இப்ப உங்கிட்ட இருந்தாலும் சரி, என்கிட்ட இருந்தாலும் சரி சொத்து யாருக்கு?”

“உங்களுக்கு தான்”

“இதை அவர் தெரிஞ்சுக்கனும்”

“அதான் எப்படி?”

“முதல்ல, நீ சார்ஜ் எடுத்ததும், பிரச்சனையை கிளப்ப ஏற்பாடு செய்வாங்க, அந்த பிரச்சனையைத் தீர்க்க நான் ஊர்ல இருக்கமாட்டேன், நீ கூப்பிடப் போறது ருத்ரனை”

“புரியுது, இப்ப அவரை வைச்சு பிரச்சனை வராம தடுக்கற மாதிரி அவர் மனசுல நிக்கனும், குறிப்பா இந்த சொத்து அவரோடதுன்னு சொல்லாம சொல்லிகாட்டனும், இதை வைச்சு அவரை அந்த கூட்டத்துல இருந்து பிரிக்கனும்”

“அதே தான்”

“அதே சமயம், அவர் மூலமா அப்பாவைக் கண்டு பிடிக்கணும்”

“கரெக்ட் கங்கா. ஏன்னா, நாங்க இத்தனை வருஷமா தேடியும் அவரை கண்டுபிடிக்க முடில, கடைசியா பாட்டி இறக்கும் போது தான் அவர் உயிரோட இருக்கற விஷயம் நூறு சதவிதம் உறுதி ஆச்சு”

“இப்ப அவங்களை விட்டா வேற வழி இல்ல”

“ஆமா”

“சரி மாமா. நீங்க சொன்ன மாதிரியே செய்ய நான் ரெடி”

“வெரிகுட் செல்லம். இப்ப வேற பேசுவோம்”

“வேற என்ன?”

“எத்தனை குழந்தை பெத்துக்கலாம்? என்ன படிக்க வைக்கலாம்? இப்படி ஏதாவது” என்று அவன் கண்ணடித்துக்கொண்டே கேட்டான்.

அவள் ஏதாவது துடுக்குத்தனமாக சொல்வாள் என்று எதிர் பார்த்த சாகரனுக்கு, அவள் வெட்கம் பூஞ்சாரலாய் இருந்தது.

மெல்ல அவளருகே நெருங்கி அமர்ந்தவன், அவளைத் தன் மீது சாய்த்துக்கொண்டான்.

அவன் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்தவளின் கையை எடுத்து, மருதாணியில் சிவந்து இருந்த உள்ளங்கையில் முத்தமிட்டான்.

மீசையின் உரசலில் சிலிர்த்துக் கண்கள் மூடியவள், அவனை இன்னும் இறுக அணைத்தாள்.

மெல்ல அவள் முகம் நிமிர்த்தியவன், “பேசணும் அம்லு..... நாம நிறைய பேசணும்... குறிப்பா நம்ம காதல் கதையை....” என்று சொல்லிக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

பிரிய மாட்டேன் என்று அடம் படித்த இமைகளில் முத்தமிட்டவன், மெல்ல காதருகே குனிந்து, “மிஸ் யூ பேட்லி” என்று சொல்லிக் கண்ணீர் மல்க அவளை இறுக்கி அணைத்தான்.

அவளுக்கும் அந்த நொடி அந்த அணைப்புத் தேவையாக இருக்க, அதில் அடங்கிப்போனாள்.

சொல்லொண்ணாத் துயரங்கள் பல இருக்க, அனைத்தும் அந்த நொடி மறந்து போனது இருவருக்கும்.

இருவருக்கும் பிடித்தமான பாடல் எங்கோ ஒலிக்க,

இருவரும் பாடல் வரிகளில் மூழ்க ஆரம்பித்தனர்.



ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா!
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா!
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா!
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா!

(ஒரு கிளி )

நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா!
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா!
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி!
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா!

(ஒரு கிளி )

இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா!
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா!
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா!
(ஒரு கிளி)




அலை கரை தொடும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 9

புத்தம் புது பூமி!
புத்தம் புது வானம்!
புத்தம் புது காலை!
புத்தம் புது ராகம்!
புத்தம் புதிதாய் நானும்!
நின் முரட்டுக் கரங்களில்!
ஒவ்வொரு விடியலிலும்!

நின் நிழல் தொட
தவித்த நான்!
இன்று இயல்பாய்!
நின் கரங்களில் தவழ்கின்றேன்!

நின் மூச்சில்
பந்தையக் குதிரையாய்
ஓடும் என்னிதயம்!
இன்று இதமாய்!
உன்னருகாமையில்!!!


நாட்கள் மெதுவாக நகரத்தொடங்க, கங்கா தன் தந்தையின் உயில் கொண்டு, சொத்துக்களை முறையாகவும், சட்டப்படியும் தன் பெயரில் மாற்றிக்கொண்டாள். சாகரனின் தீவிர நடவடிக்கையில், எவ்வித தடையும் இன்றி சொத்துக்கள் கங்கா பெயரில் மாற்றப்பட்டது. ஆம் கங்கா மாற்றிக்கொண்டாள் என்பதை விட, சாகரன் மாற்றம் செய்து தந்தான் என்பதே சரியாகும்.

என்னதான் ரமணன் உயிருடன் இருந்தாலும், சட்டபடி 7 வருடங்கள் ஒருவர் காணமல் போனால், அவர் இறந்ததாகக் கருதப்படுவார். இங்கு ரமணனின் பெயரிலோ இறப்புச்சான்றிதழ் இருக்க, காரியம் சுலபமாக முடிந்தது.

அதே போல் திருமணத்தை அனைவருக்கும் முறைப்படி அறிவித்தவன், ஒரு சிறு ரிசெப்சனையும் நடத்தி முடித்திருந்தான்.

சாகரன் அன்று முக்கியமான கேஸ் விஷயமாக கோர்ட்டுக்கு செல்ல நேரிட, அன்று தகுந்த பாதுகாப்புடன் கங்கா மட்டும் கோவிலுக்குத் தனியே செல்ல நேர்ந்தது.

அதனை ராதா போன் செய்து கமலாவிற்கு தெரிவித்தார்.

கமலாவும், ராதிகாவும் புறப்பட்டுக் கோவிலுக்குச் சென்றனர்.

“என்னத்தை? இன்னும் அந்த பரதேசிய காணோம்?”

“வருவா இரு... எங்க போகப் போறா?”

“அன்னிக்கு அவ்ளோ திமிரா என்னை வீட்டை விட்டு வெளிய அனுப்பினா! இன்னிக்கு அவ இந்த கோவில் வாசப்படிய மிதிக்க கூடாது.”

“ராதி! இது நம்ம கோவில்... இதை கட்டினதே என் மாமனார் தான். நமக்குத்தான் இங்க முதல் மரியாதை. நீ நினைச்சது கண்டிப்பா நடக்கும்”

இருவரும் பேசிக்கொண்டு இருக்கையிலேயே, கங்காவின் கார் வந்து நின்றது.

அவளுக்கு முன்னும், பின்னும் வந்து நின்ற கார்களில் இருந்து இறங்கிய பாதுகாப்பு ஆட்கள் வேகமாக வந்து கதவைத் திறக்க, அதிலிருந்து ஒரு ராணியின் தோரணையுடன் கங்கா இறங்கி வந்தாள்.

அவளைக் கண்டதும் கடித்துக் குதறும் வெறிநாயின் வேகத்துடன், ராதிகா அவளை நோக்கிச் செல்ல, அவளை அணுக விடாமல் சுற்றியும் பாதுகாப்பு ஆட்கள் நின்றனர்.

ஆனாலும், அசராமல் கங்காவிடம் எகிற ஆரம்பித்தாள், ராதிகா.

“எங்க வந்த?”

“ம்ம்... பார்த்தா தெரில... கோவிலுக்கு”

“நக்கலா?”

“நீ தாண்டி கேட்ட.... உன் கேள்விக்கு பதில் சொன்னா நக்கலா? அப்ப நீ கேட்டதுக்கு என்ன பேர்?”

“ஏய்... ஒழுங்கு மரியாதையா திரும்பி போய்டு”

“ஷ்... பைத்தியம் முத்திடுச்சு... வெளிய விடாதிங்கன்னா, உங்க அப்பா கேட்கிறாரா?” என்றபடி கங்கா நடக்க ஆரம்பிக்க, பாதுகாப்பு ஆட்கள் ராதிகாவை விலக்கி நடக்க முற்பட்டனர்.

அவளோ நகராமல் நிற்க, முன்னால் இருந்த விக்னேஷ் அவள் கரம் பற்றி சற்று தள்ளி நிறுத்தினான். அவன் தொட்டதில் வந்த ஒரு வெறியில் அவனை அறைந்தேவிட்டிருந்தாள் ராதிகா.

அதில் கங்காவும் ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்க, சுற்றிலும் மக்கள் கூடிவிட்டனர்.

“என்னடி? இந்த பொட்டப்பசங்களைக், கூட்டிக்கிட்டு வந்தா, உன்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைப்பா?”

“ஏய்? யாரைப் பார்த்து என்ன பேசற! ஒழுங்கா மத்தவங்களுக்கு உண்டான மரியாதையைக் குடு. இல்லை உன்னை ரோட்ல போற தெரு நாய் கூட திரும்பி பார்க்காது”

“அத இன்னொரு தெருநாயான நீ சொல்லக்கூடாது”

“ யாருடி தெரு நாய்? நானா இல்ல நீயா? இந்த ஊர்ல கொடிகட்டி பரந்த ரமணனோட பொண்ணுடி இந்த கங்கா... ஆனா நீ?”

“கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு நான், இந்த ஊரோட பெரிய தொழிலதிபர், விஜயனோட பொண்ணு”

“ஹா....ஹா..... சொத்தா? உனக்கா?” என்று சிரித்தவள், “ஒழுங்கா நீ அடிச்சதுக்கு அவர்கிட்ட மன்னிப்பு கேளு”

“மன்னிப்பா? நானா? கனவுல கூட நான் கேட்க மாட்டேன்... இதுல போயும் போயும் இந்த பிச்சைக்காரன் கிட்ட கேட்பேனா?”

“இங்க பார்.... இது கோவில்... யார் வேணா வரலாம்... அதை தடுக்க உனக்கு எந்த உரிமையும் இல்ல, அதே மாதிரி அடுத்தவங்களை தர குறைவா பேசவும் உனக்கு உரிமை இல்லை”

“ஏன் இல்ல. அவ என் மருமக.. அதை மொதல்ல நீ நியாபகம் வை”

“அட அட.... வாங்க அத்தை... நீங்களும் இங்கதான் இருக்கீங்களா?”

“வாயை மூடு... யாருக்கு யார் அத்தை?”

“ப்ச்... மறந்துட்டேன்... உங்களுக்கு நான் அப்படி கூப்பிட்டா பிடிக்காதுல்ல... ப்ச்.. என்ன பண்றது... இத்தனை வருஷம் ஓடிடுச்சே...”

“என்னடி என்னையே கிண்டல் பண்றியா? பல்லைத் தட்டி கைல குடுத்துடுவேன்”

“அச்சோ.. பயந்துட்டேன் அத்தை...” என்றவள், முகத்தை விளையாடுத்தனத்தில் இருந்து சீரியசாக மாற்றிக்கொண்டு, “ஒழுங்கா வழிய விடுங்க... எனக்கு நேரம் ஆச்சு... உங்க மகனுக்கு வேற போய் மதியம் லன்ச் ரெடி பண்ணனும்”

“இது எங்க குல தெய்வ கோவில்... உள்ள போக உனக்கு எந்த உரிமையும் இல்லை”

“திருமதி கமலா அம்மையாரே, இது எனக்கும் குல தெய்வ கோவில். என்னை தடுக்க யாருக்கும் உரிமை இல்ல”

“உனக்கு எப்படிடி இந்த கோவில் குல தெய்வ கோவிலாகும்?”

“வயசானாலே இப்படித்தான். உங்க பையனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததால, இது எனக்கு குல தெய்வம் கோவில்”

“கட்டிக்கிட்டு வந்தியா? ஒட்டிக்கிட்டு வந்தியா? யாரு கண்டா?”

“என்னையும் உங்களோட ஏன் ஒப்பிட்டு பேசறிங்க. நான் மயூரி பொண்ணு. உங்களை மாதிரின்னு நினைசுட்டீன்களோ? அதான் எங்க கல்யாண ரெஜிஸ்ட்ரேசன் பத்தி தீர விசாரிச்சு வைச்சு இருக்கீங்களே”

“என்னடி வாய் நீளுது”

“இல்லையே... வார்த்தை உங்க பக்கம் நீளுது. அதான் என் பக்கமும் வார்த்தை நீளுது”

“முடிவா சொல்றேன்.. நீ உள்ள போக கூடாது” என்று அவர் சத்தம் போடும் போதே, கோவில் உள்ளே இருந்து அறங்காவலர், பூசாரி அனைவரும் வந்தனர்.

“கமலாம்மா? என்ன இது? இப்படி நடந்துக்கறிங்க?”

“கண்ட கண்ட கழுதைகளையெல்லாம் உள்ள விட முடியாது?”

“அவங்க உங்க மருமக”

“அவளா? இதோ இங்க நிக்கறாளே... இந்த ராதிகா... இவ தான் என் மருமக”

“என்னம்மா நீங்க? வயசுல பெரியவங்க நீங்களே இப்படி பண்ணலாமா?”

“இங்க பாருங்க... முதல்ல இவளை வெளிய அனுப்புங்க”

“அம்மா... கோவில் அனைவருக்கும் சமம். வெளிய போன்னு நாங்க யாரையும் சொல்ல மாட்டோம். நீங்க இனியும் பிரச்சனை பண்ணுன்னா, அப்புறம் நாங்க போலீஸ்குத் தான் சொல்லனும்”

“என்னய்யா? என்னையே மிரட்டறின்களா?”

“பின்ன என்னம்மா பண்ணறது? சாகர் தம்பிக்கு தெரிஞ்சா அவ்ளோதான்”

“இது என் மாமனார் கட்டின கோவில். நியாபகம் இருக்கட்டும்”

“அம்மா, இப்ப கோவில் முதல் மரியாதையை உங்க மாமனார்க்கு அப்புறம் நாங்க தர்றது சாகர் தம்பிக்குத்தான். அவர் பொண்டாட்டியை வெளிய விரட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. அவர் பொண்டாட்டி மட்டும் இல்ல, இந்த கோவிலுக்கு வர யாரையும் விரட்ட உங்களுக்கு உரிமை இல்லை” என்றவர், “வாங்கம்மா” என்று கங்காவை அழைத்துச் செல்ல முற்பட,

“யோவ் அறங்காவலரே... உனக்கு ஒரு நாளைக்கு இருக்கு” என்று கருவிக்கொண்டே காரை நோக்கி கமலா நகர,

“ஒரு நிமிஷம்... உங்க தம்பி பொண்ண, இவர்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க” என்று கங்கா இடையிட்டாள்.

“முடியாதுடி... கேட்க முடியாது... என்ன பண்ணுவ?” என்று ராதிகா எகிறிக் கொண்டு வர,

“ப்ச்... அண்ணா? இது சொன்னா கேட்காது... அவ தந்ததை நீங்க திருப்பி குடுத்தாலும் சரி, இல்ல உங்க மனசுல தோன்ற தண்டனையைக் குடுத்தாலும் சரி, நீங்க பார்த்துக்கோங்க” என்றவள், மற்றவர்களிடம் திரும்பி, “நீங்க இங்கயே இருங்க.. நான் வந்துடறேன்” என்று சொல்லிவிட்டுக் கோவிலுக்குள் சென்றாள்.

ராதிகா அறைந்ததில் கோபத்தில் இருந்த விக்னேஷோ திரும்பி ராதிகாவை ஆத்திரத்துடன் பார்த்தான்.

மெல்ல அவளை நோக்கி அவன் அடியெடுத்து வைக்க, அவளோ உன்னால் என்னை என்ன செய்ய முடியும்? என்பது போல பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.

“ஒரு ஆம்பிளையை கை நீட்டி அடிக்கிற அளவுக்கு உனக்கு அவ்ளோ திமிரா?”

“ப்ச்..” என்று அவள் முகம் திருப்ப,

அவள் கன்னங்களை பிடித்து, தன் பக்கம் திருப்பி,

“என்ன ரொம்ப பண்ற? பணம் இருக்கிற திமிரா?”

அவன் கரத்தை தட்டி விட்டவள்,

“போயும் போயும் ஒரு பொம்பளைக்கிட்ட அடி வாங்கிட்டு நிக்கற, பெரிய ஆம்பளையாட்டம் என்கிட்ட வந்து சண்டை போடறியா? இது ஆம்பிள்ளையாம் ஆம்பிள்ளை? நீயெல்லாம் ஆம்பிள்ளையா?”

“யாரடி ஆம்பளை இல்லைன்னு சொல்ற?”

“உன்னைத்தான்”

“காட்றேண்டி... உனக்கு நான் ஆம்பளையா இல்லையான்னு... இப்பயே...” என்றவன் அவளைத் தர தர வென்று கோவிலுக்குள் இழுத்துச் சென்று, மரத்தடியில் வீற்றிருக்கும் மாகாளியின் முன் சென்று கீழே தள்ளி விட்டான்.

அவள் சுதாகரித்து நிமிர்வதற்குள், அங்கு காளியின் நேரே பதிக்கப்பட்டு இருந்த, சூலாயுதத்தில் இருந்த மஞ்சள் தாலியை எடுத்து வந்து, அவள் கழுத்தில் வலுக்கட்டாயமாக கட்டி முடிக்க, அதே நேரம் அங்கு கமலாவும், பிரகாரம் சுற்றப் போன கங்காவும் வர சரியாக இருந்தது.

“ஆம்பிள்ளையான்னு கேட்டில? இப்ப தெரியுதா? நான் ஆம்பிள்ளைடி? இனி என் கூட வாழறதுக்கு நீ தான் பயந்து சாகனும்.”

“ஏய்... இந்த கயிறை நீ கட்டிட்டா? நான் உன் பொண்டாட்டியா? இதைக் கழட்ட எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. பார்கறியா?” என்றபடி அவள் அதைக் கழட்டப் போக, விக்னேஷின் கரம் அவள் கன்னத்தைப் பதம் பார்க்க ஆரம்பித்தது.

“உனக்கெல்லாம் செல்லம் குடுத்து உன் அப்பனும் ஆத்தாளும் ஆட விட்டா நீ என்ன பண்ணுவ? இதைத்தான் பண்ணுவ”

“-----------------------------------------“

“எப்படி எப்படி? கழட்டிட்டு போவியோ? கழட்டுடி பார்க்கலாம்”

“---------------------------------------“

“இதை கழட்டி எறிஞ்சாலும், இந்த ஊரே சொல்லும். நான் தான் உன் புருஷன்னு... என்னிக்கு இருந்தாலும், நீ தான் என்னைத் தேடி வரணும்”

“----------------------------------------“

“யார பிச்சைகாரன்னு சொன்னியோ, அந்த பிச்சைக்காரன் பொண்டாட்டியா இருக்கப் போறியே அதுதான் உன் தலை எழுத்து!”

“-------------------------------------------“

“இதைக் கழட்டின, உன் கழுத்துல தலையே இருக்காது.. ஜாக்கிரதை! ஒழுங்கு மரியாதையா வீடு வந்து சேரு!” என்றவன் அடிப்பதை நிறுத்திவிட்டுத் திரும்ப, கங்கா குற்றம் சாட்டும் பார்வையுடன் நின்றிருந்தாள்.

அவளைக் கண்ட நொடியில் ஒரு நொடி தலை குனிந்தவன், அடுத்த நொடி! தலை நிமிர்ந்து நின்றான். அவன் பார்வையில் தான் செய்தது சரி என்றே இருந்தது.

அலை கரை தொடும்.....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புக்களே!

சுகமான புது ராகம் பாகம் 1 இன்னும் 4 அத்தியாயங்களே உள்ளன.
புத்தகம் முடிந்து மின்புத்தகமாக வெளியாக தயாராகிக்கொண்டு உள்ளது.

அவற்றை முடித்துவிட்டு நீலத் திரைக்கடல் ஓரத்திலே பதிவிடுகின்றேன்!

படிக்காதவர்கள் படித்துவிடவும்!
மின் புத்தகம் வெளியாகும் நேரத்தில், திரியை நீக்கிவிடுவேன்!

என்னை கோபித்துக்கொள்ளாதீர்கள் அன்பு நட்புக்களே!

அன்புடன்,
ஸ்ரீஜோ
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - யின் 1 அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.

இது Re-Edited version.


அத்தியாயம் - 1

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

நீலத் திரைக்கடல் ஓரத்திலே அத்தியாயம் - 2 பதிவிட்டுள்ளேன்.

இது Re-Edited version.


அத்தியாயம் - 2

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

நீலத் திரைக்கடல் ஓரத்திலே அத்தியாயம் - 3 பதிவிட்டுள்ளேன்.

இது Re-Edited version.

அத்தியாயம் - 3

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.
 
Status
Not open for further replies.
Top