All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தனை ஆசையுடனும் கனவுடனும் தன் காதலை சொல்ல ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை தன் காதலை இன்று சொல்லவே முடியாதென்று.


வெளியே நின்று கொண்டு கோவிலை ரசிக்கும் மனைவியை கண்களில் காதல் பொங்க பார்த்தவன் “உள்ள போகல...” என கேள்வியாய் வினவ...


“இல்ல.... இந்த நேரத்தில போக கூடாது... நான் இப்பிடி வெளிய நின்னே பார்த்துகிறேன்....” என்றவள் இன்னமும் தன் ரசனையான பார்வையை மாற்றவில்லை.


எத்தனை நாட்கள் ஆகிவிட்டது அவள் கோவிலுக்கு சென்று. ஊரில் இருக்கும் போது தினமும் கோவிலுக்கு சென்று வந்தால் தான் அவளின் நாட்கள் விடிவது போலிருக்கும்.


ஆனால் இங்கு வந்ததிலிருந்து கோவில் பக்கம் கூட அவள் செல்லவில்லையே. அதை நினைத்து கவலை கொண்டவள் கடவுளிடம் மனமுருக வேண்டினாள்.


‘எல்லாருக்கும் நல்லாதே நடக்கணும்....’ என உளமார வேண்டியவள் (தனக்கும் நல்லதே நடக்க வேண்டும் என வேண்டியிருக்கலாமோ) கணவனை பார்த்து “நீங்க சாமி கும்மிடல” என்க....


அவனோ “இல்ல... எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல... நீயே உன்சாமிய நல்லா வேண்டிக்கோ..” என்றவன் அவள் முகத்தை சுருக்கிக் மீண்டும் கடவுளை வணங்க ஆரம்பிக்கவும் அவளை பார்த்து சிரித்தவனுக்கு அவனின் சீப் செக்யூரிட்டியிடமிருந்து அழைப்பு வர மனைவியை நோக்கியவன் அவள் கண்களை மூடி வேண்டிக் கொண்டிருக்கவும் சற்று தள்ளி சென்று அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் “எஸ்” என்றான்.


மறுபக்கத்தில் அவனின் சீப் செக்யூரிட்டி வில்லியம்ஸ் கூறிய செய்தியை கேட்டு “ம்ம்... டூ மினிட்ஸ்ல அங்க இருப்பேன்...” என்றவன் மனைவியை நோக்கி சென்று அவளின் தோளை தட்டியவன் அவள் நிமிர்ந்து பார்க்கவும் “சாரி பேபி இம்போர்டன்ட் கால் சீக்கிரம் கிளம்பனும்... வா போகலாம்... இன்னொரு நாளைக்கு வரலாம்...” என்று அவசரபடுத்த...


அவளோஅவனின் அவசரம் புரியாமல் “இல்லங்க... ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குத்தான் வந்திருக்கேன்... நான் கொஞ்ச நேரம் இருந்திட்டு வரட்டுமா...” என கெஞ்சலுடன் கேட்க...


அத்தனை அவசரத்திலும் மனைவியின் முகத்தில் தோன்றிய அந்த கெஞ்சலையும் அவள் உதட்டையும் கண்களையும் சுருக்கக் கொண்டு நின்றதையும் பார்த்து ரசித்தவன் அதன் பின்பே தன் வேலை நினைவு வர “அதெல்லாம் முடியாது... இப்போ வரப்போரியா இல்லையா...” என குரலை உயர்த்த...


அவளோ வரமறுத்து நின்ற இடத்திலே காலை ஊன்றி நின்றவள் “ம்ஹ்... நான் வரமாட்டேன்... இன்னிக்கு மட்டும் தாங்க.... நான் உடனே கிளம்பிடுவேன்.... ப்ளீஸ்ங்க.... நீங்கவேணா மணியண்ணன கார எடுத்திட்டு வர சொல்லுங்க அதுவரைக்கும் நான் உள்ள ஒரு ஓரமா நின்னிட்டு இருக்கேன்.... ப்ளீஸ்ங்க” என மீண்டும் மீண்டும் கெஞ்ச அவனோ சற்றும் தன் நிலையிலிருந்து இறங்கவில்லை.


அதில் மனமுடைந்தவளின் முகம் அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சியை தொலைத்து கண்களில் நீர் துளிர்க்க முகம் வேதனையில் கசங்க கவலையுடன் காட்சியளித்தது.


அவளின் கெஞ்சலில் கூட இறங்காதவன் அவளின் முகத்தில் தோன்றிய வேதனையில் தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு “சரி... சரி... இப்போ எதுக்கு டேங்க திறந்து விடுற...” என கடுகடுத்தவன் தங்கள் வீட்டு கார் டிரைவர் மணிக்கு அழைத்து தாங்கள் வந்திருந்த கோவிலுக்கு வரச்சொன்னவன் மறைமுகமாக தன் சம்மதத்தை சொல்ல அவளோ அவனின் சம்மதத்தில் முகம் விகசிக்க மலர்ச்சியுடன் அவனை பார்த்தவள் “தேங்க்ஸ்ங்க” என்க...


அவனோ அதை கண்டுகொள்ளாமல் “ம்ம்ம்...” என்றவாறு “டிரைவர் வரும்வரைக்கும் உள்ள போய் நிக்கலாம் வா” என்க அவளோ அவனை கேள்வியாய் பார்த்தாள்.


“ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னீங்க..” என அவனுக்கு கேட்குமாறு முணுமுணுக்க...


“அதெல்லாம் எனக்கும் தெரியும்... டிரைவர் வரும் வரைக்கும் நானும் உன்கூட நிற்கிறேன்... அப்றோம் போறேன்....” என்க....s


அவளோ “அதெல்லாம் வேணாங்க நான் தனியா பத்திரமா நின்னுப்பேன்... நீங்க போங்க... முக்கியமான வேலைன்னு வேற சொன்னீங்க... நான் உண்மையிலேயே பத்திரமா நின்னுப்பேன்ங்க...” என சூலமடித்து சத்தியம் செய்யாத குறையாக கூற அவனோ அரைகுறை மனதுடன் “பத்திரமா நின்னுடுவியா... தனியா நிற்கிறதில ஒன்னும் ப்ரோப்லம் இல்லையே....” என பலமுறை கேட்டவன் அவளை உள்ளே சென்று நிற்குமாறு பணித்து விட்டு காரின் அருகில் சென்றவன் மீண்டும் அவளருகில் வந்து அவளின் கைகளை அழுத்தி “கவனமா இருந்துக்கோ” என்றவன் தன் காரை எடுத்துக் கொண்டு குடோன் நோக்கி சென்றான்.


------------------------------------------


பாதித்தூரம் சென்றவனுக்கு மனது ஏனோ படபடப்பாய் இருக்க காரை அந்த ஆள் அரவமற்ற சாலையில் நிறுத்தியவன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.


சீட்டில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு சற்று நேரத்தின் முன்பு வந்த அழைப்பின் நினைவு வந்தது.


அவனின் சீப் செக்யூரிட்டி வில்லியம்ஸ் தான் அவனை அழைத்திருந்தான். அமெரிக்காவில் இருந்து ஒட்டுப்புல் போல் அவனுடன் ஒட்டிக் கொண்டு வந்தவன். அந்தளவு அவனுக்கு யுத்கார்ஷை பிடிக்கும்.


எப்போதும் கம்பீரத்துடன் இருக்கும் அவனின் தோற்றமும் வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படும் அவனின் திறனும் தன் கீழ் உள்ளவர்களை அடக்கி ஆளும் அவனின் ஆளுமையும் கோபம் வந்தால் கூட சிரித்துக் கொண்டே எதிராளிகளை அடித்து வீழ்த்தும் அவனின் புத்தி கூர்மையும் தன் ஒற்றை கண்ணசைவிலேயே பல்லாயிரம் கோடி வருமானம் வரும் தொழில் சாம்ராஜ்யத்தை நிருவகிக்கும் அவனின் திறமை என அனைத்தும் அவனின் மனதில் யுத்கார்ஷை பெருமளவு உயர்த்தி வைத்திருந்தது.


ஆனால் அவனிடத்தில் அவனுக்கு பிடிக்காத ஒரே ஒன்று அவனின் பெண்கள் சகவாசம். இருந்தாலும் அவனை எதிர்த்து வில்லியமினால் ஒரு வார்த்தை கூட பேசமுடியாது. அந்தளவிற்கு அவனுக்கு தைரியமும் பத்தாது. மற்றவர்களை ஒற்றை கண்ணசைவிலேயே பத்தடி தூரம் தள்ளி வைக்கும் அவன் யுத்கார்ஷிடம் எப்போதுமே தலைகுனிந்து தான் பேசுவான். அது அவன் மேல் உள்ள பயத்தில் அல்ல.... அவன் யுத்கார்ஷ் மீது கொண்டுள்ள மரியாதையால்.


எப்போதும் யாருக்கும் சிம்ம சொப்பனமாய் கர்சிக்கும் சிங்கமாய் சீறும் எரிமலையாய் தன் எதிராளிகளை ஒற்றை பார்வையிலேயே சுக்கல் சுக்கலாய் வீழ செய்யும் அவன் குழந்தைகளிடத்தில் மட்டும் எந்த தடையுமின்றி சகஜமாய் பழகிவிடுவான்.


எப்போதும் தகுதி தராதரம் பார்த்து பழகும் அவன் எப்படி அவர்களிடத்தில் இந்தளவு சகஜமாய் பழகுகின்றான் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.


அந்தளவு அவனுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். அதனால் தான் ஆதரவற்ற குழந்தைகளுக்காக சிறுவர் காப்பகம் ஒன்றை அமைத்து அவர்களது அத்தனை செலவையும் தானே ஏற்று அவர்களை பராமரித்து வருகிறான்.


அவன் எத்தனை பெரிய பணக்காரன் என்று தெரிந்தாலும் அவனின் இந்த ஒரு செயலில் அவன் மேல் பெரும் மதிப்பு கொண்டு அவன் கீழ் வேலை செய்தே ஆகவேண்டும் எனும் லட்சியத்தில் அவனின் கீழ் வேலைக்கு சேர்ந்தவன் இன்று படிப்படியாய் உயர்ந்து அவனின் சீப் செக்யூரிட்டி ஆனவன் தான் வில்லியம்ஸ்.


அவனுக்கு தன் மேலுள்ள மரியாதை காரணமாகவே தான் இந்தியா செல்லப்போகிறேன் என அறிந்ததும் தன்னுடனே வர வேண்டுமென உறுதியாய் நின்றவனை இந்தியாவிற்கு அழைத்து வந்ததும் அதனால் தான்


அவனுக்கு எந்தளவிற்கு அவன் மீது மதிப்புள்ளதோ அதேயளவு மிகவும் சுருசுருப்பானவனும் கூட. எந்த வேலை கொடுத்தாலும் அதில் கடுகளவு பிழையுமின்றி செய்து முடித்து விடக்கூடியவன்.


அதனால் தான் யுத்கார்ஷ் அவனிடம் அந்த லாரிகாரனை பற்றி விசாரிக்க கூறியது. இதோ அதையும் முடித்து விட்டான். அந்த அழைப்பின் பெயரில் தான் இத்தனை நாள் தன்னுடன் மறைமுகமாக விளையாடிக் கொண்டிருந்த தன் எதிரியை சந்திக்க சென்று கொண்டிருக்கின்றான்.


ஆனால் அவன் ஒன்றை அறிந்திருக்கவில்லை.


தன் எதிரி தன்னுடன் விளையாட தன் மனைவியை பகடை காயாய் வைத்திருக்கிறான் என்பதை.


அதை அறியும் போது அவனின் நிலை என்னவோ...


கள்வன் வருவான்.....
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்......

இருபத்தி ஒன்பதாவது அத்தியாத்தின் மீதியை பதிவு பண்ணிட்டேன்...
பார்த்துவிட்டு மறக்காம உங்க கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

ஆவலுடன்
NJN
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 3௦


சிந்தனைகள் வேறு திக்கில் சென்றதாலோ என்னவோ மனதின் அழுத்தம் சிறிது குறைந்தது போலிருக்க காரை கிளப்பியவன் எத்தனை மெதுவாய் செலுத்தினாலும் ஆளரவமற்ற சாலை என்பதால் அவன் கைகளில் கார் சீறிக் கொண்டு சென்றது.


மனதின் அழுத்தம் முற்றும் நீங்காததால் அந்த வேகம் கூட அவனுக்கு ஒருவித சுகத்தையே அளித்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு சிறு சுணக்கம் நமநமத்துக் கொண்டே தான் இருந்தது.


அதனால் இன்னுமின்னும் வேகத்தை அதிகரித்தவன் வெகுவிரைவிலேயே தன் குடோனை அடைந்தும் விட்டிருந்தான். காரை நிறுத்தி அதிலிருந்து முடியை கோதிக் கொண்டு இறங்கியவன் தனக்காக காத்திருந்த தன் படையுடன் அதற்குள் நுழைந்தான்.


இவன் வந்ததை அறிந்ததும் அத்தனை நேரம் வெள்ளைக்காரனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த சதீஷ் விறைத்துப் போய் எழுந்து நிற்க அவனை கூர்ந்து பார்த்த யுத்கார்ஷ் அங்கிருந்த இருக்கையில் கம்பீரமாய் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.


அவன் அமர்ந்ததும் அவனருகில் வந்த வில்லியம்ஸ் “இட் கன்டைன்ஸ் ஆல் தி டிடைல்ஸ் யு ஹேவ் ஹியர்ட்...” என்றவாறு அங்கிருந்த ப்ரொஜெக்டரை உயிர்பித்தான்.


வில்லியம்ஸ் அதை உயிர்ப்பித்ததும் அங்கு அதனருகில் வந்த சதீஷ் அதில் இருந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி “பேரு விக்ரம்.. பிறந்தது வளர்ந்தது எல்லாமே அன்னை சாரதா ஓர்பனேஜ்ல (orphanage) தான். ஸ்காலர்ஷிப்ல படிச்சி இப்போ டைடெல் பார்க்ல வொர்க் பண்றான். த்ரீவீக்ஸ் முன்னாடி முன்னாடி நடந்த அந்த லாரி ஆக்ஸிடென்ட் அரேஞ்ச்ட் பண்ணது கூட இவன் தான். மோடிவ் என்னன்னு தெரியல பட் இன்னொரு இம்போர்டன்ட் மேட்டர் இருக்கு...” என தயங்கி நிறுத்தினான்.


அத்தனை நேரம் அந்த படத்தில் இருந்தவனையே உள்ளம் எரிமலையாய் கொதிக்க முகத்தில் உடலிலோ எந்த மாற்றமும் இல்லாமல் நிர்மலமாய் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவன் சதீஷ் பாதியில் நிறுத்தவும் அவனை கண்களால் கூர்ந்து நோக்கினான்.


அதிலிருந்து தீயின் ஜுவாலையை ஒத்த நெருப்பு பொறியில் சிக்கி சின்னாபின்னமாக பார்த்த சதீஷ் மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்ட நாக்கை சற்று ஈரப்படுத்தி பதட்டத்தில் முகத்தில் பூத்த வியர்வையை தன் கைக்குட்டையால் ஒற்றி எடுத்தவன் கைகளை பிசைந்து கொண்டு மெதுவாக வார்த்தைகளை கோர்த்து கொண்டு அதை பற்றி பேச ஆரம்பித்தான்.


“இன்னுமொரு இம்போர்டன்ட் மேட்டர் என்னன்னா இவன் மேடம ஒன் சைடா லவ் பண்ணியிருக்கான். அத சொல்றதுக்கு ட்ரை பண்ணும் போது அதுக்குள்ள ஆன் சைட்ல அமெரிக்கா போக வேண்டியதா போயிருக்கு சோ அத முடிச்சிட்டு வந்து சொல்லலாம்னு இருக்கும் போது தான் உங்க வெட்டிங் நடந்திருக்கு சோ இது கூட இந்த ஆக்ஸிடென்ட் நடந்ததுக்கான மோடிவா இருக்கலாம்னு தோணுது..பட் எதுவும் சூர் இல்ல சார்...” என்றவன் இவர் எப்படி எடுத்துக்கொள்ள போகிறாரோ எனும் பயத்தில் உறைந்து போனான்.


அவனின் குணம் தெரிந்தவனாயிற்றே. தனக்கு பிடித்ததோ பிடிக்காததோ அது தன்னிடம் இருந்தால் அதன் முழு உரிமையும் தனக்கு மட்டுமே உரியது என எண்ணுபவன் அதன் மீது வேறு யாருடையதாவது பார்வை போனாலும் அவர்களை உருத்தெரியாமல் அழித்து விடுவான்.


அப்படிப்பட்டவனின் மனைவியை ஒருத்தன் நேசித்து இருக்கிறான். அதுவும் அவளை திருமணம் முடித்ததால் தன்னையே கொல்ல நினைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு எந்தளவு கோபம் வரும் என நினைத்து அவன் பதட்டத்துடன் நிற்க யுத்கார்ஷோ அவனின் பயம் தேவையற்றது என்பது வெகு சாதாரணமாய் அமர்ந்திருந்தான்.


அவனது முகம் தான் உணர்ச்சிகலற்று நிர்மூலமாய் இருந்தது. ஆனால் அவனின் பேச்சை கேட்டு உடலின் ஒவ்வொரு அணுவும் வெடித்து சிதற காத்திருந்த எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தது.


அவனின் கண்கள் கூரிய வால் போல் எதிரிளிருந்தவர்களை துளைத்துக் கொண்டிருந்தது ஆனால் அதிலிருந்து யாராலும் எதையும் கணிக்கத்தான் முடியவில்லை.


அவனின் கடினப்பட்ட இதழ்களோ விஷமத்துடன் நெளிந்து கொண்டிருந்தது. ஆனால் அதன் அர்த்தம் யாருக்கும் புரிபடவில்லை. ஆகமொத்தத்தில் அவனை யாராலும் கணிக்க முடியவில்லை.


அவனின் இறுகிப்போன உடலும் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காத கண்களும் வெறுமையாய் இருந்த முகமும் அவனை சுற்றி நின்று கொண்டிருந்தவர்களின் மனதில் கிலியை மூட்டியது.


இருந்தாலும் எதுவும் செய்ய இயலாது ஒவ்வொருவரும் விறைத்துப் போய் நின்றிருக்க தன் முன் நின்றிருந்தவர்களை கூரிய விழிகளால் ஒரு சில நிமிடங்கள் ஆராய்ந்தவன் “ஹி இஸ் நாட் மை ரியல் எனிமி…. (he is not my real enemy) ஹி ஹைட்ஸ் அண்ட் வான்ட்ஸ் டு ப்ளே வித் மீ...”( he hides and wants to play with me) என்று இதழ்களில் குறுஞ்சிரிப்பு மின்ன கூறியவனின் இதழ்கள் மட்டும் தான் சிரிப்பில் மலர்ந்திருந்தது. ஆனால் அவனின் குரலில் அத்தனை அழுத்தம் குடிகொண்டிருந்தது. ‘என்னுடனே விளையாடிப் பார்க்க ஆசைபடுகிறான்’ எனும் வெறி குடிகொண்டிருந்தது. ஆனால் அதை யாராலும் அவ்வளவு சுலபத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை.


அதுமட்டுமன்றி எப்படி இவன் அவனின் உண்மையான எதிரி இல்லை என்கிறான் என்றும் அங்கிருந்தவர்களுக்கு புரியவில்லை. காரணம் புரியாமல் அவர்கள் தலையை பிய்த்துக் கொள்ள இவனோ சாவதானமாய் இருக்கையில் இருந்து எழுந்து அந்த ப்ரொஜெக்டர் ஸ்க்ரீன் அருகில் சென்றவன் அதிலிருந்த விக்ரமின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். s


அவனை பார்க்க பார்க்க அவனுள் ஆத்திரம் மூண்டது. ‘இவன் எப்படி என்னவளை காதலிக்கலாம்...’ என்ற கோபம் அவனின் உடல் முழுவதும் பரவி அவனை முழுதாய் ஆக்கிரமிக்க கண்கள் கோபவெறியில் பளபளக்க அங்கிருந்த நாற்காலியை தூக்கி வீசியவனின் கைகளில் சிக்கிய அந்த கதிரை தூரப்பறந்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளில் போய் மோத மறு நொடி அத்தனையும் பலத்த சப்தத்துடன் சில்லிசில்லாய் உடைந்து அறையெங்கும் தெறித்து விழுந்தது


அதில் அதிர்ந்து போய் அங்கு நின்றவர்கள் அவனை நிமிர்த்து பார்க்க அவனோ குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். அவனின் எந்தவொரு செயலுக்கும் காரணம் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றவர்கள் அவனிடம் காரணம் கேட்பதற்கு பயந்து ஒருவரை ஒருவர் பார்த்தவாறு செய்வதறியாது நின்று கொண்டிருக்க அப்போது யுத்கார்ஷ் தன் சிகையை அழுந்த கோதிக் கொண்டு இவர்களின் புறம் திரும்பியவன் “ஹி வில் ஹேவ் எனதெர் பிக் பிளான் நொவ்.... (He will have another big plan nowl) சோ வி நீட் டு பைன்ட் ஹிம் பிபோர் ஹி கேன் இம்ப்ளிமென்ட் தி பிளான்”.... (so we need to find him before he can implement the plan) என்றவன் “பிபோர் தட் ஹி ஷுட் கம் ஹியர்.... (Before that he should come here) என்று ப்ரொஜெக்டரில் மின்னிக் கொண்டிருந்த விக்ரமின் புகைப்படத்தையே உற்று நோக்கிக் கொண்டு கோரியவன் "இன்னும் டென் மினிட்ஸ் டைம் தாரேன் அதுக்குள்ள இவன் இங்க வரனும்...” என அழுததுடன் உரைத்தவாறு மீண்டும் பழைய படி தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனால் இன்னமும் அவனின் உள்ளகொதிப்பு அடங்கியபாடாய் இல்லை. இருந்தாலும் வெளியில் தன்னை சாதாரணமாய் காட்டிக் கொண்டான்.


ஆனால் அதேநேரம் இவனுக்கு பின்னால் இருந்து யார் தன்னுடன் மோதுவது என புரியாமல் தன் தொழில் போட்டியாளர்கள் பட்டியலை மனதுக்குள் ஓட்டிப்பார்த்தவன் அது நீண்டு கொண்டே போகவும் சலிப்படைந்தவாறு இருக்கையில் நன்கு சாய்ந்தமர்ந்து கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தான்.


மனதினுள் பல எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க அதனுடன் சேர்த்து விடைதெரியாத பல கேள்விகளும் சுழன்றடித்துக் கொண்டிருக்க ஆனால் எதற்குமே அவனால் விடைகளை கண்டறிய முடியவில்லை.


அதில் எரிச்சல் அதிகரிக்க அதை தாள முடியாமல் கண்களை மூடிக்கொண்டவனது மனக்கண்ணில் தோன்றினால் அவனின் மனையாட்டி.


தன்னவளின் முகத்தை கண்டதும் உள்ளத்தில் ஊற்றெடுத்துக் கொண்டிருந்த எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாய் வடிந்து மனம் நிர்மலமாக அப்போது அவனால் தெளிவாய் யோசிக்க முடிந்தது.


அதில் இதுவரைக்கும் தன் வாழ்வில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை மனதினுள் ஓட்டிப் பார்த்தவனுக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போலவும் தோன்ற தன் அருகில் இப்போதும் பயத்துடன் கையை பிசைந்து கொண்டிருந்த சதீஷை பார்த்தவன் அவனை கண்களால் அழைத்து “இந்த ஒன் மன்த்ஸா விக்ரம் யார் யாரோட போன் பேசியிருக்கான் எங்கேங்க போயிருக்கான்னு மொத்த டிடைல்ஸையும் எனக்கு இமிடியட்டா விசாரிச்சு சொல்லு குய்க்...” என அவசரபடுத்தியவன் அவன் அங்கிருந்து நகரவும் தங்கள் வீட்டு கார் டிரைவர் மணிக்கு அழைத்தான்.


காரை ஓட்டிக் கொண்டிருந்த மணி செல்போன் இசைக்கவும் காரை ஓரமாய் நிறுத்தியவன் செல்போனின் யுத்கார்ஷின் எண்ணை கண்டதும் அவசரமாய் எடுத்து காதில் வைத்து “ஐயா...” என்க...


அவனோ, “கோவிலுக்கு போய் சேர்ந்திட்டீங்களா...” என வினவ...


“இன்னும் இல்லங்க ஐயா... இதோ ரெண்டு நிமிசத்துல அங்கன போய்ருவேன் ஐயா...” என கூறs


“சரி... சரி... சீக்கிரம் கோவிலுக்கு போய் சேர்ந்துட்டு போன் பண்ணுங்க...” என்றவன் அழைப்பை துண்டிக்க மணியோ அதிவேகத்தில் காரை செலுத்தியவன் ஐந்து நிமிடங்களில் போய் சேர வேண்டிய இடத்திற்கு யுத்கார்ஷிடம் சொன்னது போல் இரண்டு நிமிடங்களில் போய் சேர்ந்தான்.


கோவில் வாசலில் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு......


பல நாட்களின் பின் பார்த்த கோவிலை திறந்த விழி மூடாமல் ரசித்துக் கொண்டிருந்த மலர் ஒரே இடத்தில் வெகு நேரமாய் இருந்ததால் அலுப்பு தட்டவே மெதுவாய் எழுந்து கோவிலில் வாயிலை அடைந்தாள்.


அன்று கோவிலில் பெரிதாக எதுவும் கூட்டமில்லாது அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் நடமாடிக் கொண்டிருக்க அவர்களை வேடிக்கை பார்த்தவள் தூரத்தில் ஒரு பாட்டி பூ வைத்து விற்றுக் கொண்டிருப்பதை பார்த்து அவரருகில் செல்ல ஆரம்பித்தாள்.


அவள் முதன் முதலாய் கணவனுடன் வெளிய செல்ல போகிறாள் என்றறிந்து மகிழ்ந்த ருத்ரா யாருமறியாமல் சில ஆயிரங்களை அவளின் கைகளில் திணித்திருந்தார். அவள் எவ்வளவு மறுத்தும். இப்போது அந்த பூ விற்கும் பாட்டியை பார்த்து தலையில் பூ வைக்க ஆசைப்பட்டு தன் அத்தை திணித்த பணத்தை கைகளில் எடுத்தவள் மானசீகமாய் அவருக்கு மனதினுள் நன்றி உரைத்து விட்டு அவரின் அருகில் செல்ல துவங்கினாள்.


இவள் எப்போது கோவிலினுள் இருந்து வெளியேறுவாள் என அவளுக்காய் காத்திருந்த அந்த கூட்டம் இவளை தூக்குவதற்காய் பின்தொடர அதை அறியாத மலர் அந்த பாட்டியை நெருங்கும் வேளையில் அங்கிருந்த தெருவில் இருந்து ஏதோ அணுகும் சத்தம் கேட்கவும் சுற்றும் முற்றும் பார்த்தவள் அந்த தெருவில் யாருமில்லாது போகவும் தலையை தட்டிக் கொண்டு ‘பிரம்மை போல...’ என எண்ணிக் கொண்டு நகர முயன்றவள் மீண்டும் அதே சத்தம் சற்று பலமாய் ஒலிக்கவும் மனதை திடப்படுத்திக் அந்த தெருவில் இறங்கி நடந்தாள்.


இதுவரைக்கும் அவள் இந்த பக்கமெல்லாம் வந்தது கூட கிடையாது. அதனால் வயிற்றுக்குள் ஒரு பயப்பந்து சுழன்று கொண்டிருக்க இருந்தும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துகொண்டிருப்பது போல் உள்ளுணர்வுக்கு தோன்ற அவளின் அசட்டு தைரியம் அவளை அந்த தெருவை நோக்கி இழுத்து சென்றது.


இந்த பயணம் தன் வாழ்க்கையையே மாற்றி அமைக்க போகின்றது என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை. ஒருவேளை அதை அவள் முன்கூட்டியே அறிந்திருந்தால் தன் கணவனுடனேயே சென்றிருப்பாளோ....


அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்த அந்த கூட்டம் அவள் அந்த தெருவினுள் நுழையவும் அதை எண்ணி தங்களுக்குள் சிரித்துக் கொண்டு அவர்களும் அந்த தெருவினுள் நுழைந்தனர்.


மலர் முந்தானையால் முகத்தில் பூத்த வியர்வையை துடைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தவள் அந்த தெருவிலிருந்து பிரிந்து சென்ற இன்னொரு பக்க தெருவிலிருந்து சத்தம் வரவும் ஓட்டமும் நடையுமாய் அந்த இடத்தை அடைந்தவள் அங்கு கண்ட காட்சியில் உறைந்து போனாள்.


அங்கு பத்து பன்னிரெண்டு ஆண்கள் கைகளில் துப்பாக்கியுடன் நின்று கொண்டு அங்கிருந்த பெண்களை ஒரு லாரியினுள் ஏற்றிக் கொண்டிருந்தனர். அத்தனை பெரும் பதின்வயது பாவைகள்.


அவர்கள் அலற அலற அத்தனை பேரையும் அந்த லாரிக்குள் தள்ளிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் அவர்களின் சட்டையை பிடித்து விட்டு விடுமாறு கதறிக் கொண்டிருக்க அவளின் கதறல் காதிலேயே விழாதது போல் ஒருவன் அவளை அறைந்து தள்ள முயற்சிக்க இன்னொருவனோ அவளின் அங்கங்களை கண்களாலேயே கூறு போட்டுக் கொண்டிருந்தான்.


அதில் பெரியவன் போல் இருந்தவனோ அவள் அணிந்திருந்த தாவணியின் முந்தானையை பிடித்து இழுத்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.


அதையெல்லாம் தாங்கமுடியாமல் அந்த பெண் அவர்களின் காலில் விழுந்து கதற அவளை காலால் எட்டி உதைத்தவர்கள் அவளையும் லாரியினுள் அள்ளிப் போட்டு கொண்டிருந்தனர்.


கிராமத்திலே பிறந்து வளர்ந்து ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தாலும் அவளுக்கு தெரிந்த இடங்கள் எல்லாம். தேவியின் வீடும் ருத்ராவின் மற்றொரு வீடும் தான்.. அதை தவிர்த்து இரண்டு வீட்டிற்கும் அருகிலிருக்கும் ஸ்வீட் ஸ்டால்... அவ்வளவு தான் அவளுக்கு பழக்கமான இடங்கள்.


ஆனால் இன்று அடம்பிடித்து கோவிலுக்கு வந்து கோவிலில் தனியாய் கவனமாய் இருப்பதாய் கணவனுக்கு சத்தியம் செய்து கோவிலினுள்ளே இருந்தவள் பூக்கடையை பார்த்ததும் அதை வைக்க ஆசைப்பட்டு இதோ எக்குத்தப்பாய் இங்கு வந்து நின்று கொண்டிருக்கின்றாள்.


இதுவரைக்கும் இப்பிடிப்பட்ட காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்தவளுக்கு இன்று கண்முன்னாலே இப்பிடி ஒரு சம்பவம் நடக்கவும் அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தனை பெண்களையும் பெற்றவர்களின் நிலையை இந்த அரக்கர்கள் உணர்ந்து கொள்ளவில்லையே. இதே போல் தனக்கும் ஒரு குடும்பம் இருக்கின்றது என்பதையும் அவர்கள் உணரவில்லை. அந்த பெண்களின் கதறலை ஒருவன் ரசித்துக் கொண்டிருக்க இன்னொருவனோ அவர்களின் அங்கவடிவங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.


அதை எல்லாம் பார்த்தவளின் உடல் முழுவதும் வியர்வையில் குளித்தது போன்றிருந்தது. நண்பகல் நேர வேப்பக்காற்றுடன் சேர்த்து அவள் உள்ளத்தின் பயமும் வியர்வையாய் ஊற்ற கை, கால்கள் இரண்டும் நிற்க முடியாமல் தடுமாற நெஞ்சம் பதற தலை சுழல இதற்கு மேலும் தன்னால் இங்கு நின்று தாக்குபிடிக்க முடியாது என்றுணர்ந்து யாரையாவது இங்கு அழைத்து வரவேண்டும் எனும் உந்துதலில் அங்கிருந்து அகல முயன்றவளின் கால்கள் ஒரு இன்ச் கூட அசைய மறுத்தது.


தனக்கெதிராய் சதி செய்யும் தன் கால்களை பற்களை கடித்துக் கொண்டு கடினப்பட்டு நகர்த்தியவள் அங்கிருந்த கல்லில் மோதி “அம்மாஆஆ...” என்ற அலறலுடன் குப்புற விழுந்தாள்.


இவளின் அலறல் சத்தத்தில் அங்கிருந்தவர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி வர அவர்கள் வரும் ஓசை கேட்டு தப்பிக்கும் மார்க்கம் அறியாது பதறித்துடித்த மனதை சமாதனப்படுத்த முடியாது உள்ளம் கதற மனமோ தன்னவனை தேட அவன் இங்கில்லையே என மனம் அறிவுறுத்த ஒரு நொடியில் மனதினுள் பல எண்ணங்கள் தோன்றி மறைந்து அவளை வெடவெடக்க செய்ய மூச்சை இழுத்து விட்டவள் எழ முயற்சித்தாள்.


முயற்சித்தாலே தவிர அவளால் உடலை நகர்த்த முடியவேயில்லை. மூளை அதன் இயக்கத்தை எப்போது நிறுத்தியிருந்தது. மனம் மட்டும் தான் முழித்துக் கொண்டு அவளை இங்கிருந்து அகலுமாறு கட்டளை இட்டுக் கொண்டிருக்க அதை செயல்படுத்த முடியாமல் மூளை செயலிழந்திருக்க அவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் தன்னை பார்த்து விடுவார்கள் அதன் பின் நிலைமை மோசமாகிவிடும் என யூகித்தவள் மனதினுள் கணவனின் பிம்பத்தை கொண்டு வந்து கடைசியாய் பார்ப்பது போல் மனக்கண்ணில் அவனை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் நம்பிக்கை துளிர் விட மெதுவாய் தரையில் இருந்தவாறே அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.


பெரிதாக போக்குவரத்து செய்யாத தெரு என்பதால் கற்களும் குப்பைகளும் மண்ணும் குவிந்திருக்க அதன் மேல் ஊர்ந்து நகர்ந்தவளுக்கு வயிற்று பகுதி உயிர் போவது போல் வலித்தது.


ஆப்ரேஷன் செய்து இன்னும் முழுதாக குணமடையாத உடம்பு தரையில் பட்டதும் ஒவ்வொரு அணுவும் வலியால் துடிக்க அதற்கு மேல் நகர முடியாமல் உயிர்போவது போல் வலியை உணர்ந்தவள் வயிற்றை இருகரங்களாலும் பிடித்துக் கொண்டு எங்கே தன் சத்தம் கேட்டால் அவர்கள் வந்துவிடுவார்களோ எனும் பயத்தில் பல்லை கடித்துக் கொண்டு மெளனமாக கதறியவளின் கதறல் யாருக்கும் கேட்டிருக்கவில்லை. கேட்ககூடதேன்று தான் அவளும் வேண்டிக் கொண்டிருக்கிறாள். மெதுவாய் வாயை இருகரங்களாலும் மூடிக் கொண்டு அங்கிருந்த பெரிய பலகையின் பின்பு மறைந்து கொண்டாள்.


ஆனால் விதியோ அவளின் வேண்டுதலை ஏற்காது அதற்கு நேர்மாறாய் ஒரு காரியத்தை செய்து வைத்தது.


அந்த பெண்களை கடத்துபவர்களில் சிலர் சத்தம் வந்த திசையை நோக்கி வந்து விட்டு அங்கு யாருமில்லாது போகவே அங்கிருந்து அகல ஆரம்பிக்க இங்கு ஒரு பெரிய பலகையின் பின் மறைந்திருந்த மலரோ வலி தாங்க முடியாமல் “அம்மாஆஆஆஆ......” வீரிட அதில் திரும்ப எத்தனித்தவர்கள் மீண்டும் நகர்ந்து வந்து அந்த பலகையின் மறுபுறம் நிற்க அதனுள் மறைந்திருந்த மலரோ இருகைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு தன் சத்தத்தை குறைக்க முயற்சிக்க ஆனால் விதியோ அன்று பார்த்து அவளுக்கு எதிராய் சதி செய்ய சத்தம் வரக்கூடாது என வேண்டிக் கொண்டிருந்தவளுக்கு அதற்கு மேலும் அடக்கும் வழி தெரியாது வாயை மூடிக் கொண்டிருந்த கைகளை விலக்கியவள் வயிற்றை இறுக பற்றிக் கொண்டு “அம்மாஆ” என மீண்டும் மெதுவாய் முனகினாள்


அந்த பலகையின் மறுபக்கம் நின்றிருந்தவர்களுக்கு அவளின் சிறு முனகலும் தெளிவாய் கேட்க கையில் துப்பாக்கியுடன் அந்த பலகையை தட்டிவிட்டவர்கள் மறுபக்கத்தில் வயிற்றை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து “ஏய்... யாருடி நீ... இங்க என்ன பண்ற... ஏய் உன்னத்தான் எழுந்திரிடி... ***************** “ என கெட்ட வார்த்தையால் திட்ட அவர்கள் பலகையை தட்டி விட்டதுமே பயத்தில் வெலவெலத்து போயிருந்தவள் அவர்களின் பேச்சில் கூனிக் குறுகிப் போனாள்.


அதில் அங்கிருந்த ஒருத்தன் அவனுடன் நின்றிருந்தவனிடம் “பிகரு நச்சுன்னு இருக்கு.... இவளையும் ஏத்து நமக்கும் போரடிக்க கூடாதில்ல...” என்றவாறு அவளின் தோளை அழுந்தப் பற்ற.


அவளோ அத்தனை பயத்திலும் அவனின் கைகளை தட்டி விட்டவள் அவன் தொட்ட இடத்தில் கம்பளிப்பூச்சி ஊர்வது போலிருக்க அதை நினைத்து அருவருப்படைந்தவள் தன் கைகளால் அவன் தொட்ட இடத்தை நறநறவென தேய்த்தாள்.


அதை பார்த்து எக்காளமிட்டு சிரித்தவர்கள் “பொண்ணு ரொம்ப கூச்சபடுதுடா...” என கூறி அதற்கும் சிரித்துக் கொண்டு இருந்தவர்களை அங்கிருந்து அழைத்தான் அவர்களில் பெரியவன் போன்றிருந்தவன்.


“டேய்... இன்னும் என்னடா பண்றீங்க... சீக்கிரம் வாங்க... லாரிய அனுப்பனும்...” என்று கூவ...


அதை கேட்டு “சரி தல இதோ வரோம்....” என்றவன் “ஆ... தல இங்க ஒரு சூப்பர் ஐடெம் ஒன்னு சிக்கியிருக்கு அதையும் தூக்கட்டுமா...” என அசிங்கமான சிரிப்புடன் கூவ..


“சரிடா... சீக்கிரம் வந்து தொலைங்க... அந்தாளு வேற போன் பண்ணி எப்போ வருது.... எப்போ வருதுன்னு கேட்டுக்கிட்டே இருக்கான்...” என அலுப்புடன் கூற அதை கேட்டு அடக்கமாட்டாமல் சிரித்தவர்கள் தங்களுக்கு எதையோ விரசமாய் கூறிச் சிரித்துக் கொண்டே அவளின் கை பற்றி இழுத்துக் கொண்டு சென்றனர்.


அவர்களின் செய்கையில் அத்தனை நேரம் மழுங்கிப் போயிருந்த மூளை சட்டென இயங்க ஆரம்பிக்க அவர்களின் கையில் இருந்து தன் கரத்தை விடுவிக்க போராடியவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் ஒரு கை நீட்டி “கொன்னுடுவேன்...” என மிரட்டியாவாறு அவளை இழுத்து சென்று அந்த லாரிக்குள் தள்ளினான்.


ஏற்கனவே வயிற்று பாகம் உயிர்போகும் வலியை கொடுத்திருக்க இதில் அவன் அறைந்ததில் அவனின் ஐந்து விரல்களும் கன்னத்தில் ஆழப்பதிந்து உதடு கிழிந்து ரத்தம் வந்து கொண்டிருக்க இதில் அவன் தள்ளிவிட்டதில் உடலில் ஆங்காங்கே வலி ஏற்பட அவற்றை தாளமுடியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தன் சுயத்தை இழக்க ஆரம்பித்தாள் அவள். மனதில் தன் கணவனினதும் மகளினதும் நினைவுகளுடன்...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை தள்ளிவிட்டு அவன் லாரியை மூடிவிட்டு தங்கள் காரில் எறியமர அங்கிருந்த ஒருவன் அந்த லாரியை ஓட்ட ஆரம்பித்தான். அதன் பின்னே சென்றது அந்த அரக்கர்களின் கார்


இது அத்தனையும் ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே நடந்தேறி இருந்தது. இங்கு நடந்தேறியதை ஏதோ படம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த மலரை கடத்த வந்த கும்பல் தங்கள் பாஸிற்கு அழைத்து நடந்ததை சுருக்கமாய் கூற அதை கேட்டு மறுபக்கத்தில் கொந்தளித்தவன் “சரி... சரி... நீங்க இதுக்கு மேலயும் அங்க நிக்க வேணாம்... அங்கிருந்து கிளம்பிடுங்க... முக்கியமா இந்த ஊர்ல இருக்க வேணாம் ஒவ்வொருத்தனும் வேற வேற ஊருக்கு போய்டுங்க... இந்நேரம் அவன் நம்மள யாருன்னு கண்டுபிடிச்சு இருப்பான்...” என எதையோ முணுமுணுத்தவாறு அழைப்பை துண்டிக்க அவர்களோ அவசரமாய் அங்கிருந்து அகன்றனர்.


அந்த கும்பலில் இருந்த ஒருத்தனோ என்ன செய்வதென புரியாமல் குழம்பிப் போயிருந்தான். அவன் விக்ரம் ஏற்பாடு செய்த ஆள்


யக்ஷித் தன்னிடம் கூறினாலும் வேறு ஏதோ செய்ய திட்டமிட்டிருக்கிறான் என்பதை அவன் அன்றொரு நாள் தன்னை அழைத்ததில் இருந்தே புரிந்து கொண்ட விக்ரம் அவனின் செல்போனை ட்ரேஸ் செய்து அவன் யார் யாருடன் எல்லாம் உரையாடுகிறான் என்பதை கண்டுகொண்டவன் அவன் ஏற்பாடு செய்திருந்த கும்பலில் ஒருவனை தன் பக்கமாய் மாற்றியிருந்தான்


அவன் தான் இப்போது தாங்கள் கடத்த வந்த பெண்ணை வேறு ஒருவன் கடத்தி சென்றதை பார்த்து செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இப்போதே விக்ரமிடம் இதை சொல்ல வேண்டும் போல் உள்ளம் பரபரத்தது. ஆனால் தன்னுடன் இருப்பவர்களுக்கு அது தெரிந்தால் எங்கே தன்னை கொன்று விடுவார்களோ எனும் பயத்தில் வாயை இறுக மூடிக் கொண்டிருந்தவன் அதை சொல்வதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தான்.


தங்கள் பாஸிற்கு அழைத்து அவர் அங்கிருந்து கிளம்பச் சொன்னதும் அங்கிருந்து வெளியேறி தங்கள் ஜீப்பில் ஏறி அந்த இடத்தை விட்டு அகன்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இறங்கிக் கொள்ள கடைசியாய் மிஞ்சியது விக்ரமால் ஏற்பாடு செய்யப்பட்ட சீனுவும் ஜீப் ஓட்டியவனும் தான்.


தன்னுடன் வந்த அத்தனை பேரும் இறங்கிச் சென்றதில் ஏதோ நடக்கப்போகிறது என்றுணர்ந்த சீனு அவசரமாய் விக்ரமின் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிவிட்டு அங்கிருந்த புதருக்குள் செல்போனை வீசியவன் அமைதியாய் அமர்ந்து கொண்டான்.


இப்பொது அவனின் மனம் அமைதியடைந்தது போலிருந்தது. அவன் தப்பான காரியங்கள் செய்பவன் தான். ஆனால் தப்பானவன் இல்லை. தப்பானவர்களுடன் சேர்ந்து மாறிப்போனவன். வயிற்றுப்பசிக்காக திருட ஆரம்பித்து அந்த திருட்டு கொலையில் முடிந்து இதோ இப்போது கொலைகாரன் எனும் பட்டத்துடன் சுற்றிக் கொண்டிருப்பவன்.


உலகத்திலேயே மிகக் கொடியது பசி. சாப்பாடு இல்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியாது. ஒரு நாளைக்கு பட்டினியாய் இருக்கலாம். ஆனால் பல நாட்கள் ஒன்று சாப்பிட வழியில்லாமல் பட்டினியாய் கிடந்தால் அது ஒரு மனிதனை முற்றிலும் மாற்றி விடும்.


இந்த சமுதாயத்தில் கொலைகாரனாக அடையாளம் காணப்படும் ஒவ்வொருத்தனுக்கு பின்னாலும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் பிரதானமாய் இருப்பது பசியாகத்தான் இருக்கும்.


அப்படிப்பட்ட பசியால் தான் இங்கு ஒருவன் கொலையாளியை மாறிபோயிருந்தான். ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்த காளி ஜீப்பை இடையில் நிறுத்து விட்டு இதோ வருகிறேன் என இறங்கிச் செல்ல சீனுவோ தனக்குள் சிரித்துக் கொண்டான். தன் முடிவு நெருங்கி விட்டதை எண்ணி. ஆனால் எதுவும் செய்ய தோன்றவில்லை.


காளி சென்ற சில நிமிடத்தில் அங்கு வந்தான் அவனின் பாஸ். அவரை பார்த்தும் ஜீப்பிலிருந்து இறங்கியவன் ஒன்றும் தெரியாதவன் போல “என்ன பாஸ் இந்த பக்கம்...” என கேட்டு மெதுவாய் சிரிக்க அவனோ “உன்னப் பார்க்கத்தான் சீனு...” என அடக்கமாட்டாமல் சிரிக்க அதை கேட்டு உள்ளுக்குள் பல்லை கடித்தவன் வெளியில் முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டு “என்ன விஷயம் பாஸ்...” என்க அவனோ சீனுவின் தோளில் கையை போட்டுக் கொண்டு அவனின் தோளில் தட்டியவன் “கத்துக் கொடுத்தவன்கிட்டயே வேலையை காட்டுறியா சீனு... நான் பழம் தின்னு கொட்ட போட்டவன்டா... என்னை யாருன்னு நினைச்ச... வட குமாரு.... என்பெயர கேட்டாலே என்பக்கத்தில நின்னு பேச பயப்படுவான்.... ஆனா நீ என்கூட இருந்துக்கிட்டே குழி பறிக்கணும்னு பார்க்கிறியா” என வெடிச்சிரிப்பு சிரித்தவன் தன் கையில் இருந்த கத்தியால் அவன் முதுகில் குத்தி “செத்து தொலைடா ****” என கத்தியவன் காளி வந்ததும் அவனுடன் ஜீப்பில் ஏறிச்சென்று விட்டான்.


அங்கு பல அப்பாவிப் பெண்களை காக்க மலரினும் மென்மையான மனம் கொண்ட மலர் தன் உயிரை பணயம் வைத்திருக்க இங்கு அந்த மலர் போன்ற பெண்ணவளை காக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவனோ உயிரை விட்டிருந்தான்.


ஐந்து நிமிடங்களின் பின் கோவில் வாசலில்........


காரிலிருந்து இறங்கிய மணி சுற்றும் முற்றும் பார்த்தவாறு மலரை தேடிக் கொண்டு கோவிலினுள் நுழைந்து ஒரு இண்டு இடுக்கு விடாமல் தேடியவன் அவளை எங்கும் காணாது போகவும் மனம் பதற அங்கிருந்த கடைக்காரர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான்.


வேலைக்காரர்கள் என்றாலும் தங்களுடனும் சரிசமமாய் பழகும் மலரை அவர்களின் வீட்டில் வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் பிடிக்கும். அதனாலேயே அதிகம் கவலை கொண்ட மணி ஒவ்வொருவரிடம் சென்று விசாரிக்க அவர்களோ அப்படி ஒரு பெண்ணை நாங்கள் காணவில்லை என கூற அதை கேட்டு அதிர்ந்தவர் உடனே யுத்கார்ஷிற்கு அழைப்பு விடுத்தான்.


அங்கு தன் குடோனில் விக்ரமின் சட்டை காலரை பற்றி அவனை தன் முன் நிறுத்தியவன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான். அதில் நிலை தடுமாறி அங்கிருந்த இருக்கையில் விழுந்த விக்ரம் தொண்டையை செருமி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு “எதுக்காக என்னை தூக்கிட்டு வந்து அடிக்கிறீங்க...” என குரலை உயர்த்த...


அதில் கோபம் தலைக்கேறிய யுத்கார்ஷ் மீண்டும் அவன் கன்னத்தில் அறைந்திருந்தான். அவனை பார்க்க பார்க்க யுத்கார்ஷினுள் எரிமலை போல் உணர்வுப் பேரலைகள் வெடித்து சிதறியது. அதில் தன்னவளை இவன் எப்படி காதலிக்கலாம் எனும் கோபமும் ஆக்கிரமித்துக் கொள்ள மாறி மாறி அவனின் இரு கன்னத்திலும் அறைந்து கொண்டிருந்தவனுக்கு செல்போனின் ஓசை எட்டவில்லை.


அவனின் ஒரு அறையையே தாங்கமுடியாத விக்ரம் அவன் மாறி மாறி அறையவும் கண்கள் சொருக மயக்கத்தில் அழ ஆரம்பித்தான். அவன் மயக்க நிலைக்கு சென்றுவிட்டான் என்று புத்திக்கு எட்டினாலும் மனமோ ‘அவன் எப்படி தன்னவளை காதலிக்கலாம்’ என்ற எண்ணத்தில் அவனுக்கு அறையத்தான் துடித்தது.


யுத்கார்ஷ் தன்னிலையின்றி அவனை அறைந்து கொண்டிருப்பதை பார்த்த சதீஷ் பயத்துடன் அவனருகில் வர அதேசமயம் மீண்டும் அவனின் செல்போன் இசைத்தது.


அதில் அவனை மறந்து அவனின் செல்போனை எடுத்தவன் டிரைவர் காலிங் என திரையில் மின்னவும் அதை எடுத்துக் கொண்டு யுத்கார்ஷின் அருகில் விரைந்தவன் “சார்...” சத்தம் போட்டு அழைக்க அதில் அவனை திரும்பி முறைத்தவன் ‘என்ன’ எனும் விதமாய் அவனை நோக்க அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் அவனிடம் அவனின் செல்போனை நீட்டினான் சதீஷ்.


அதை வாங்கியவன் மணியின் எண்ணை கண்டு அவசரமாய் எடுத்து காதில் வைத்தவன் பேச ஆரம்பிக்கும் முன்பே “ஐயா... சின்னம்மாவ எல்லா இடத்திலையும் தேடிப்பார்த்திட்டேன்... ஆனா எங்கயும் அவங்கள காணோம் ஐயா... எனக்கு என்ன பண்றதுன்னே புரியலைங்கையா...” என மூச்சிரைக்க பதட்டத்துடனும் படபடப்புடனும் கூற அதை கேட்டு “வாஆஆட்” என கர்ச்சித்தவனின் குரலில் மறுபக்கம் அழைப்பில் இருந்த மணியின் காது “ங்கொய்” என செவிபொறி கிளிந்ததென்றால் அவனுடன் குடோனில் இருந்த அத்தனை பெரும் அவனின் திடீர் கத்தலில் திடுக்கிட்டு அவனை பார்த்தனர். ஆனால் அவனோ மணி சொன்னதை கேட்டு கண்கள் அசையமறுத்து ஓரிடத்தில் நிலைகுத்தி நிற்க அசைவற்று போய் நின்றிருந்தான்..


‘சின்னு... சின்னு... சின்னு....’ என மனம் முழுக்க அவளின் பெயரே ஒலித்துக் கொண்டிருக்க அவளை காணவில்லை என்றது புரிந்தும் எதுவும் செய்ய முடியாமல் ஒரு நிமிடம் மூளை மழுங்க செய்வதறியாது நின்றவன் மறுநிமிடமே சீறும் சிறுத்தையாய் “எல்லா இடத்திலையும் நல்ல செக் பண்ணீங்களா... பக்கத்தில எங்கயாவது போயிருக்க போறா எல்லா இடத்தையும் இன்னுமொரு தடவ தரோவா செக் பண்ணுங்க நான் இன்னும் டூ மினிட்ஸ்ல அங்க இருப்பேன்...” என கடகடவென ஒப்பித்தவன் செல்போனை கையில் எடுத்துக் கொண்டு சதீஷை நோக்கி “DSP அங்கிளிற்கு போன் உடனே வர சொல்லு” என கர்ச்சித்தவன் அவர் வரும் வரை காத்திருக்க பொறுமையற்று உடனே தன் படையுடன் அந்த பிள்ளையார் கோவிலை நோக்கி விரைந்தான். விக்ரமுடன் ஒரு சிலரை நிறுத்திவிட்டு.....


ஒரு நாள்... ஒரு சில நிமிடங்கள்... மனிதனின் வாழ்க்கையை எப்படி எப்படியெல்லாம் பந்தாடுகிறது. ஒரு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு மணி அந்த கோவிலை அடைந்திருந்தானென்றால் ஒருவேளை மலர் காப்பாற்றபட்டிருப்பாளோ?... ஆனால் அவள் காப்பற்றபட்டிருப்பால் அந்த பெண்கள்... அவர்களின் வாழ்வு... ஒரு பெண்ணை காப்பாற்றி அத்தனை பெண்களையும் இழப்பதா... அதனால் தான் விதி இப்படியொரு விளையாட்டை விளையாடியதோ? விதியின் விசித்திர செயல்களை யாரால் புரிந்து கொள்ள முடியும்...


கள்வன் வருவான்...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே....

முப்பதாவது பதிவை பதிவு பண்ணிட்டேன்.... பார்த்துவிட்டு மறக்காம உங்க கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... கதை முடிவதற்கு இன்னும் சில அத்தியாயங்களே இருக்கு சோ நீங்க கமெண்ட் பண்ணினால் தான் கதை எப்பிடி போகுது உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு எனக்கு புரியும்... சோ ப்ளீஸ் மறக்காம கமெண்ட் பண்ணுங்க...

ஆவலுடன்
NJN
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 31


மணி அழைத்ததும் அதிவிரைவில் கோவிலை நோக்கி காரை செலுத்தி வந்தவன் காரிலிருந்து இறங்கி உள்ளே ஓடினான். அத்தனை வேகம்... எங்கே தன் கைப்பொருளை இழந்துவிடுவோமோ எனும் பயத்தில் வந்த வேகம்.


வேகமாய் கோவில் வாசலை நெருங்கியவன் அங்கு நின்றுகொண்டிருந்த மணியின் சட்டை காலரை இறுக பற்றி “என்னாச்சு...” என உறும அதில் பயம் கவிழ்ந்த முகத்துடன் “தெரிலங்க ஐயா... நீங்க போன வச்சதும் நான் இங்க வந்திட்டேன்... வந்ததும் சின்னம்மாவ தேடினேன் வெளியில் எங்கயும் அவங்கள காணோம்னதும் உள்ளேயும் எல்லா இடத்திலையும் பார்த்தேன் அங்கயும் அவங்க இல்ல... இங்க நின்னிருந்தவங்களுக்கிட்ட கூட விசாரிச்சு பார்த்திட்டேன் ஐயா ஆனா யாரும் அவங்கள பார்க்கலை போல் எல்லாருமே தெரியாதுன்னே சொல்றாங்க....” என அடிவயிற்றில் பிசைந்த பயத்துடன் உலர்ந்த தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டு கூற அதை கேட்டு கோபத்தில் அவனை உதறியவன் தன்னுடன் வந்திந்தவர்களை மீண்டும் ஒரு முறை ஒவ்வொரு இடமாக தேடிப் பார்க்கும் படி உத்தரவிட்டவன் தானும் தன்ன்வளும் சிறிது நேரத்தின் முன்பு நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்றான்.


அப்போது இருந்த தன் மனநிலைக்கும் இதோ இப்போது இருக்கும் தன் மனநிலைக்கும் இடையில் தான் எத்தனை வித்தியாசம் என எண்ணிப் பார்த்தவனுக்கு மனைவியின் நினைவுகள் அலைகடலென பொங்க அதை தாங்க முடியாமல் பொத்தென அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்தான்.


அதை பார்த்து பதறிப்போன மணி அவனருகில் செல்லவும் பயந்து ஒதுங்கி நின்று கொண்டான். எப்போதும் கம்பீரமாய் ஆளுமையுடன் இருக்கும் தங்கள் முதலாளியின் இந்த தோற்றம் அந்த விசுவாசியின் மனதில் பெரும் சுமையை உண்டாக்கியது.


அவனுக்கு மட்டுமல்ல யுத்கார்ஷுடன் வந்திருந்த அவனின் பாதுகாப்பு படையினருக்கும் கூட அவனின் இந்த ஓய்ந்து போன மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவனருகில் நெருங்க பயந்து ஒதுங்கியே நின்றிருந்தனர்.


தன்னை சுற்றி நின்று கொண்டிருபவர்கள் தன்னை பற்றி கவலை கொண்டு சஞ்சலத்துடன் நிற்கிறார்கள் அதில் தனக்கு எத்தனை கௌரவ குறைச்சல் என்பதெல்லாம் அவனின் நினைவில் இல்லை. அவனின் மனம் முழுவதும் அவனின் அழகி... அவனின் அழகியின் வசமே இருந்தது.


முதன்முதலில் அவளை பார்த்ததிலிருந்து இதோ இன்றுவரை நடந்த அத்தனையும் அவன் மனதில் படமாய் ஓடியது.


மைலுவின் வார்த்தைக்காக தனக்கு சிறிதும் பொருத்தமில்லா அவளை திருமணம் செய்து திருமணமான அன்றே அவளை வார்த்தை எனும் கத்தியால் குத்தி கிழித்து மலரினும் மென்மையானவளுடன் காதலுடன் கூட வேண்டிய கூடலை பழிவாங்கும் படலம் எனும் பெயரில் அவளுடன் கலந்து அதை கூறி அவளை வதைத்து அதையும் விட கேவலமாய் ‘வேசி’ என்பவளுக்கு இணையாக அவளை நிறுத்தி அந்த வார்த்தையால் அவள் இதயத்தை ரணமாக்கி அவளின் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அவளை வீட்டை விட்டு விரட்டி அதன் பின் அவளின் காதலை உணர்ந்து அவளின் உயிருக்காக போராடி தான் அவள் மேல் கொண்டுள்ள உயிர்காதலை உணர்ந்து அதை அவள் வாயால் கேட்பதற்கு அவா கொண்டு ஏங்கி கடைசிவரை அவள் அதை சொல்லாமலே இருக்க தன் காதலை தானே முதலில் கூறி அவளை மகிழ்விக்க எண்ணி அவளுக்கு பிடித்தமான கோவிலுக்கு அழைத்து வந்து அவளின் ஆசையை நிறைவேற்றி அதன் பின்பு தன் காதலை கூற வேண்டும் என பல கனவுகளுடன் இருந்தவனுக்கு இந்த நொடி மனைவி தன் அருகில் இல்லாதது எந்தளவு வலித்ததென்றால் அதை சொல்வதற்கு வார்த்தைகள் போதாது.


அந்தளவிற்கு அவனின் இதயம் வலித்தது. தன்னவளை சுமந்து கொண்டிருந்த அவன் இதயம். ‘தன்னவள் இப்போது எங்கிருக்கிறாளோ... என்ன செய்கிறாளோ... எந்த நிலையில் இருக்கிறாளோ...’ என மனம் பலவாறு சிந்தித்துக் கொண்டிருக்க அதில் எண்ணங்கள் எங்கெங்கோ ஓட கலங்கிப் போனவன் ‘சின்னு ப்ளீஸ் நீ எங்க இருந்தாலும் என்கிட்டே வந்திடிடி... உன் பாவா... நீ அப்பிடித்தானேடி இன்னிக்கி என்ன கூப்பிட்ட.... ப்ளீஸ்டி என்கிட்டே வந்திடு... என்ன ரொம்ப நேரம் தவிக்க விடாத சின்னு... நீ எங்க இருக்கேன்னு ஒரு சின்னு க்ளு கிடைச்சா போதும்... நான் உன்ன தூக்கிட்டு போய்டுவேன்....’ என மனதினுள் தன்னவளுடன் உரையாடிக் கொண்டு தலையை கோதியவாறு நிமிர்ந்தவனின் கண்களில் பட்டது அங்கிருந்த பூக்கடை.


அதை பார்த்தும் மனதினுள் சிறு மின்னலடிக்க அவசரமாய் தான் அமர்ந்திருந்த கல்மேடையில் இருந்து பழையபடி கம்பீரமாய் எழுந்து நின்றவன் தலையை கோதிக் கொண்டு அந்த பூக்கடை நோக்கி செல்ல எத்தனிக்க அதற்குள் அங்கு வந்து இறங்கினார் DSP சந்திரபிரதாப்.


அவரை கண்டதும் லேசாய் புன்னகை பூத்தவன் அவரிடம் செல்ல அவரும் அவனை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தார்.


அவனருகில் வந்த DSP “ஏதாவது இன்போர்மேஸன் கிடைச்சதா த்ருவா...” என கேட்க...


அவரை பார்த்து சோம்பலாய் புன்னகைத்தவன் தன் கண்களால் அந்த கோவிலை சுற்றியுள்ள இடைத்தை ஒருமுறை நோட்டம் விட்டவாறு “இங்க எங்கயோ தான் நாம தேடுற இன்போர்மேஸன் இருக்கனும்...” என எதையோ யோசித்தவாறு கூறியவன் தன் கார்ட்ஸிடம் திரும்பி “எல்லா இடைத்தையும் தரோவா செக் பண்ணீங்களா...” என புருவத்தை சுளித்தவாறு கேட்க....


“எஸ் சார்... ஆனா மேடம எங்கயும் காணோம்....” என சிறு அச்சத்துடனே கூற அதை கேட்டு மெதுவாய் தலையசைத்தவன் DSP யிடம் திரும்பி “அங்கிள் ஒன் மினிட்...” என்றவாறு அந்த பூக்கடையை நோக்கி சென்றான்.


மனதில் சிறு பரபரப்பு இங்கு எங்கோ தான் தன்னவள் இருக்கிறாள் என்பது போல் இதயம் படபடத்தது... ஆனால் அது எங்கு என்று தான் அவனுக்கு தெரியவில்லை. அதுவுமின்றி அவளுக்குத்தான் தலையில் சரம்சரமாய் பூ வைப்பதென்றால் ஆசை ஆயிற்றே... ஒருவேளை இந்த கடைக்கு வந்திருப்பாளோ எனும் சிறு ஏக்கத்தில் தான் அவன் அந்த சிறு கடை நோக்கி சென்றது.


அந்த கடையின் அருகில் சென்றவன் தன் போனில் தன்னவளுக்கு தெரியாமல் தான் அவளை எடுத்த புகைப்படத்தை அங்கிருந்த வயதான பாட்டியிடம் காட்டி “இந்த பொண்ணு இங்க வந்தாளா...” என ஆசையும் ஏக்கமும் போட்டி போட சிறு தவிப்புடன் கேட்க அவரோ தன் கண்களை சுருக்கி அதிலிருந்த மலரின் புகைப்படத்தை உற்று நோக்கியவர் “இந்த பொண்ணு...” என இழுக்க யுத்கார்ஷின் படபடப்பு அதிகமாகியது.


அத்துடன் தன்னவள் கிடைத்து விடுவாள் என்ற நம்பிக்கையும் அதிகமாக “இந்த பொண்ணு வந்திச்சா....” என எதிர்பார்ப்புடன் அந்த பாட்டியை பார்க்க அவரோ “இல்லப்பா இந்த பொண்ணு இங்க வரலையே... அப்பிடியே ஒருவேல வந்திருந்தாலும் இந்த வயசான காலத்தில என்னால எல்லாரையும் ஞாபகம் வச்சிருக்க முடியாதேப்பா...” என அவர் கவலையுடன் கூற அதை கேட்டு அத்தனை நேரம் பிரகாசித்துக் கொண்டிருந்த யுத்கார்ஷின் சட்டென சூம்பிப் போனது இருந்தாலும் அவரின் கூற்றிலும் உண்மை இருப்பதால் ‘சரி’ எனும் விதமாக அவரிடம் தலையசைத்து விடைபெற்றவன் தாடையில் கைவைத்து யோசித்தவாறு அந்த தெருவை கடக்க காலை வைத்தவனின் பார்வை எதேர்ச்சியாய் அந்த தெருவை நோக்கியது.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆள் நடமாட்டமில்லாத அந்த தெருவை சிறிது நேரம் நோட்டம் விட்டவன் எதையோ யோசித்தபடி அந்த தெருவினுள் இறங்கி நடந்தான். மனம் முழுக்க சிந்தனை வயப்பட்டிருந்தாலும் கண்களோ அந்த இடத்தை கூர்மையாய் ஆராய்ந்து கொண்டிருந்தது.


ஒரு இண்டு இடுக்கையும் விடாது அவனின் கூர்மையான விழிகள் அந்த தெருவையையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க சிறிது தூரம் வந்தவன் அந்த தெரு இரண்டாய் பிரிந்திருப்பதை பார்த்து அந்த இரண்டு வழியையும் தன் லேசர் விழிகளால் கூர்ந்து பார்த்தான்.


அந்த இரண்டு வழியுமே பெரிதாக பயன்படுத்தபடாததால் ஏனோ தானோவென்று குப்பைகள் சூழ்ந்து கற்கள் மண்குவியல்களும் நிறைந்து என காணப்பட அதில் இருந்து வந்த வாசம் அவனை அருவருப்படைய செய்தாலும் மனைவியை காணவேண்டும் எனும் உந்துதலில் மூக்கில் கைவைத்து அந்த வாசனை தன் நாசியை தீண்டாமல் பார்த்துக் கொண்டவன் எந்த வழியில் போவது என இரண்டு வழியையும் சிறிது நேரம் உற்று பார்த்தவன் மனதின் உந்துதலிலோ என்னவோ மலர் சென்ற வழியிலேயே சென்றான்.


அந்த வழியில் சிறிது தூரம் சென்றவன் அங்கு பலகையொன்று விழுந்து கிடப்பதையும் அதற்கு அருகில் பாதியில் அணைக்கப்பட்ட சிகரெட் துண்டொன்று கிடப்பதையும் அவனின் கூர்மையான விழிகள் உடனே கண்டுகொள்ள அதனருகில் விரைந்தான்.


ஒரு நேரத்தில் பல விடயங்களில் கவனம் செலுத்த கூடியவர்கள் ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதில் இவனும் ஒருத்தன் போலும். மனதில் ஆயிரமாயிரம் யோசனைகள் நொடிக்கொரு தடவை தோன்றிக் கொண்டே இருக்கே அதற்கான காரணங்களை மூளை ஆராய்ந்து கொண்டிருக்க கண்களோ ஒவ்வொரு இடத்தையும் அக்குவேறு ஆணிவேராக பிரித்து நுண்ணிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது.


அதில் தான் அவனின் கண்களுக்கு அந்த பற்றவைக்கப்பட்ட சிகரெட் துண்டும் புலப்பட்டது.


ஓட்டமும் நடையுமாய் அந்த பலகையின் அருகில் சென்றவன் அதனருகில் கிடந்த சிகரெட் துண்டை கைகுட்டையால் கையில் எடுத்தவனின் மனதுக்கு நன்றாகவே தெரிந்தது ‘இது சற்று நேரத்தின் முன்பு தான் பற்றவைக்கப்பட்டிருக்கின்றது’ என்பது...


அதை பார்த்ததும் ஏதோ யோசனை சூழ்ந்த முகத்துடனும் நெரித்த புருவங்களுடன் சுழித்த உதடுகளுடனும் கீழே விழுந்து கிடந்த பலகையை நிமிர்த்தியவனின் கண்களில் தென்பட்டது அது....


அதை கைகளில் எடுத்தவனது மனது என்ன பாடுபட்டதென அவனன்றி யாராலும் புறிந்து கொள்ளமுடியாது. அது தினமும் காலையில் அவனை எழுப்பிவிடும் அவன் மனைவியின் காலில் அழகுற வீற்றிருக்கும் கொலுசு.


எத்தனை நாட்கள் அந்த கொலிசொலியில் மயங்கிப்போய் ஏங்கிப்போய் தன்னவள் துயிலில் ஆழ்ந்ததும் அதை ரசித்துப் பார்த்திருப்பான்.


அவளின் அந்த கொலுசு, தான் ஆசையாய் பார்க்கும் தன்னவளின் காலில் வீற்றிருக்கும் அந்த கொலுசு இன்று அவளின் காலில் அல்லாமல் தெருவில் கிடந்ததை பார்த்தும் அவனின் மனது பதறியது.


அதேநேரம் அவள் எதற்காக இங்கு வந்திருப்பாள் என மூளை வேக வேகமாக சிந்திக்க அவனின் விழிகளோ மீண்டும் அந்த இடத்தை ஒரு தடவை அலசியது.


எப்படிப் பார்த்தாலும் அதை தவிர அவனின் கண்களுக்கு வேறெதுவும் புலப்பாடாது போகவே தன் கையில் இருந்த செல்போனில் DSP அங்கிளின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தவன் அவர் அழைப்பை ஏற்றதும் தான் இருக்கும் இடத்தை கூறி அவரை வரும் படி பணித்தவன் தன்னவளின் கொலுசயையே வெகு நேரம் விழி மூடாது வெறித்துக் கொண்டிருந்தான்.


அதை பார்க்க பார்க்க அவனின் மனதில் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி தான் ஓடிக் கொண்டிருந்தது.


‘சின்னு எதற்காக இங்கு வந்திருப்பாள்... ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொண்டாளா... இல்லை... வழிதவறி எங்காவது சென்றுவிட்டாளா...’ என பல கேள்விகள் மனதில் ஓட ஆனால் ஒன்றுக்குமே அவனிடம் விடையில்லை.


இருந்தாலும் மனதில் ஒன்று மட்டும் உறுதியாய் தோன்றியது. ‘வழி தவறி போகுமளவு அவள் சிறுபெண் இல்லை... அதுவுமில்லாமல் தான் அங்கே கோவிலினுள் நிற்க சொல்லியும் அவள் இங்கே வந்திருக்கிறாலென்றால் ஏதோ ஒன்று நடந்திருக்கின்றது... அது என்ன... அவளுக்கு ஏதாவது பிரச்சினையா... இல்லை வேறு யாருக்காவதா...’ என ஒரு கேள்விக்கு விடை கிடைத்தால் அதனுடன் சேர்த்து புதிதாய் ஒரு கேள்வி முளைத்துக் கொண்டே இருக்க செய்வதறியாமல் விழித்தவனுக்கு ஏதாவது ஒரு வழியாவது கிடைக்காதா தன்னவளை கண்டறிய என ஆயாசமாய் இருந்தது.


அதற்குள் அங்கு DSP யும் அவருடன் யுத்கார்ஷின் ஆட்களும் வந்து சேர DSP யிடம் இதை பற்றி கூறியவன் மனைவியின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி ரகசியமாய் விசாரிக்கும் படி கூறியவன் தன் கட்டளைக்காய் காத்துக்கொண்டிருந்த தன் ஆட்களை பார்த்து சில கட்டளைகளை பிறப்பித்தான்.


இவர்களின் ஓட்டத்தை போலவே நேரமும் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. மதியம் பதினோரு மணியளவில் காணாமல் போன மனைவியை கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக தேடி தேடித் சலித்து போய் இருந்தான் யுத்கார்ஷ்.


எங்கு இருக்கிறாள் என தெரிந்தாளாவது பரவாயில்லை. ஆனால் இவள் எங்கு இருக்கிறாள் என்பதே யாருக்கும் தெரியவில்லையே.


யுத்கார்ஷின் வீட்டிலோ மருமகளுடன் வெளியில் சென்ற மகன் இன்னும் திரும்பி வராது போகவும் மகனுக்கு அழைக்க சொல்லி கணவனை ஏய்த்துக் கொண்டிருந்தார் ருத்ரா... கைக்குழந்தையை வைத்து விட்டு போயிருக்கிறார்கள். குழந்தை வேறு பசியில் வெகு நேரமாக வீரிட்டு கொண்டிருக்கிறாள்.... இந்த பிள்ளைகள் வேறு இன்னும் வரவில்லையே என மகனையும் மருமகளையும் நினைத்து கவலையில் ஆழ்ந்திருந்தார் ருத்ரா.


அவர் மட்டுமன்றி மற்ற மூவருக்கும் அதே கவலை இருந்தாலும் அதை வெளிப்படையாக கூற முடியாது அழுது வடிந்து கொண்டிருந்த குழந்தையை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கி இருந்தனர்.


ஆனால் அந்த குட்டி வாண்டோ தன் தந்தையை போல் தாயின் அருகாமைக்காகவே ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலை கேட்டு கலங்கிப்போன ருத்ரா உடனே தானே யுத்கார்ஷிற்கு அழைத்திருந்தார்
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்தளவு கணவனிடம் சொல்லிச் சொல்லி அலுத்து போயிருந்தார். சித்தார்த்தோ ‘மகன் வந்து விடுவான்... வந்துவிடுவான்...’ என மனைவிக்கு ஆறுதல் கூறினாரே தவிர மகனுக்கு அழைத்து அவனை வர வைக்க முயற்சிக்கவில்லை. எங்கே தான் அழைத்து அவசரமாய் வா என்றால் வேண்டுமென்றே தான் சொன்னதற்காக பல மணி நேரங்கள் கழிந்து வந்து விடுவானோ என்று தான் அவர் அவனை அழைக்காமல் அவன் வரும்போது வரட்டும் என்றிருந்தார்.


ருத்ராவோ கணவனின் எந்த சமாதானத்தையும் கேட்காது மகனிற்கு அழைத்தார்.


யுத்கார்ஷோ மனைவியை எப்போது காண்போம் எனும் சிந்தனையிலும் அவள் எங்கு எக்குத்தப்பாய் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கின்றாளோ எனும் சிறு அச்சத்திலும் பெரும் மனயுளைச்சலில் இருந்தவனுக்கு செல்போனை எடுத்து பேச வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. அந்த நேரம் அவனுக்கு தன் குடும்பத்தின் நினைவோ தன் உயிரில் உருவான மகளின் நினைவோ சுத்தமாய் இல்லை. அந்த நொடி அவன் நினைவில் இருந்தது எல்லாம் அவனின் சின்னு மட்டும் தான். அவள் தன்னிடம் பத்திரமாய் அவனது வந்து சேர வேண்டும் என்ற எண்ணமும் தான் அவன் மனதை ஆக்கிரமித்து இருந்தது.


யுத்க்கர்ஷிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போன ருத்ரா கடைசி முயற்சியாய் மீண்டும் ஒரு முறை அவனுக்கு அழைத்தார்.


அத்தனை நேரம் தன் சிந்தனை சுழலில் சிக்கி இருந்தவனுக்கு தன் செல்போனில் வந்த அழைப்புகள் காதை எட்டவில்லை. அதன் பின்பு தான் அருகில் ஏதோ சத்தம் வருவது போலிருக்க என்னவென்று திரும்பிப் பார்த்தவன் செல்போன் இசைத்துக் கொண்டிருக்கவும் அதை கைகளில் எடுத்துப் பார்த்தான்.


பார்த்தவனின் விழிகளில் சிறிது சுணங்கி மீண்டும் சீரானது. அதுவும் இத்தனை நேரம் வீட்டில் உள்ளோரின் நினைவு தனக்கு சிறிதும் வரவில்லையே என எண்ணியவனுக்கு மனைவியை பற்றி கேட்டால் இப்போது என்னவென்று கூறுவது என்று அது வேறு யோசனையை கிளப்ப பெருத்த யோசனையுடனே அன்னையின் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.


மறுபக்கத்தில் இருந்த ருத்ரா “என்னாச்சு த்ருவா... எவ்ளோ நேரமா போன் பண்றது... எப்போ வீட்டிக்கு வரப்போறீங்க...” என கவலையுடன் கேட்டவர் “உன் பொண்ணு வேற ரொம்ப நேரமா அழுதிட்டு இருக்கா சீக்கிரம் வரப்பாருங்க....” என கவலையுடன் கூற அதை கேட்டு தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போய் நின்றான் யுத்கார்ஷ்


அத்தனை நேரமும் ‘மனைவி... மனைவி...’ என மனைவியை பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு தங்கள் மகவின் நினைவு சுத்தமாய் இல்லை. தாயின் பேச்சில் தான் தன் மகவின் நினைவு வந்தவனாய் இங்கிருந்தே தன் வீட்டில் அழுது கொண்டிருக்கும் தன் மகளை பற்றி எண்ணி கலங்கியவனின் மனது முன்பை விட அதிகமாய் தன் மனைவிக்காய் ஏங்கியது. தங்கள் குழந்தைக்காகவாவது அவள் தன்னிடம் வர வேண்டும் என அரற்றியது.


“மா... பேபி ரொம்ப அழுறாளா....” என கவலையுடன் கேட்ட இந்த யுத்கார்ஷ் அவருக்கு புதிது... எப்போதும் எதற்கும் அலட்டாமல் இருக்கும் தன் மகனின் குரலில் அவர் கண்ட வேதனை ஒரு தாயாய் அவரை வருந்த செய்து பயம் கொள்ள வைத்தது.


‘த்ருவாவிற்கு என்ன ஆயிற்று... ஏன் இவனின் குரலில் இத்தனை வேதனை... இங்கு இருந்து கிளம்பிச் செல்லும் போது சந்தோசமாகத்தானே சென்றார்கள்... பின் என்ன நடந்தது... வழியில் ஏதேனும் சண்டையோ...’ என தன் மகனின் குணமறிந்து அந்த தாயின் எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல அதில் தன் மருமகளை எண்ணி கவலை கொண்டவர் “த்ருவா... நீ முதல்ல மலர்கிட்ட போன் கொடு... நான் அவகிட்ட பேசணும்...” என்க அதில் திடுக்கிட்ட தன் மனதை சமன் படுத்திக் கொண்டு “மா... டாட் உங்க பக்கத்தில இருந்தா அவருகிட்ட போன கொஞ்சம் கொடுங்க...” என்க அதில் பதறிப் போன ருத்ராவிற்கு பெரிதாய் ஏதோ நடந்து விட்டிருக்கிறது என்றே தோன்றியது..


ஆனால் அவனின் குரலில் இருந்த சிறு அழுத்தத்தில் இனி தான் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான் என புரிந்து கொண்டவர் தன் அருகில் அமர்ந்திருந்த கணவனின் கைகளில் செல்போனை திணித்தார்.


மகன் தன்னுடன் பேச விரும்புகிறான் என்றால் ஏதோ முக்கியமானதாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணிய சித்தார்த் அங்கிருந்து நகர்ந்து வெளியில் வந்தவர் போனை காதில் வைத்து “என்ன விஷயம் த்ருவா...” என நேரடியாகவே கேட்க...


அதில் சிறிது தயங்கினாலும் இனிமேலும் மறைக்க கூடாது என எண்ணியவன் தன் மனதை வெளிக்காட்டாத இறுகிய குரலில் “மலர காணோம்...” என்றான்.


அவன் தன்னுடன் பேச வேண்டும் என்றதிலேயே ஏதோ அவன் சம்மந்தப்பட்ட விஷயம் என ஏற்கனவே யூகித்திருந்த சித்தார்த் இப்போது அவன் கூறியதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.


உள்ளே தன் மருமகளுக்கு என்ன ஆனதோ என பதறிய மனதை வெகு சாமர்த்தியமாய் அடக்கியவர் “எப்போ... எங்க... என்னன்னு தெளிவா சொல்லு...” என்றவர் தன் மனைவியின் அறைக்குள் சென்று “முக்கியாமான வேலை ஒன்னு இருக்கு தானு... நீ உன் பையனுக்காக வெயிட் பண்ணாம டாக்டர்க்கு போன் பண்ணி குழந்தைக்கு வேற ஏதாவது மில்க் கொடுக்கலாம்னு கேட்டு கொடுத்து குழந்தைய தூங்க வைங்க நான் சீக்கிரம் வந்திடுவேன்...” என கடகடவென ஆணைகளை பிறப்பித்தவர் அதற்கு மேல் நிற்க நேரமில்லாமல் மனைவியிடம் கூறிவிட்டு வெளியில் அமர்ந்திருந்த சுந்தரபாண்டியனிடமும் தயமந்தியிடமும் முக்கியமான வேலை இருப்பதாக கூறியவர் அவசரமாய் யுத்கார்ஷ் கூறிய கோவிலை நோக்கி விரைந்தார்.


சித்தார்த் வருவதற்குள் சில வேலைகளை முடித்திருந்த யுத்கார்ஷை அழைத்த DSP “த்ருவா... இப்போதான் எங்களுக்கு ஒரு இன்போர்மேஸன் வந்தது... இருபது பொண்ணுங்க காணாம போயிருக்காங்க... ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊர்... ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தமில்லாத இருபது பொண்ணுங்கள கடத்தியிருக்காங்க... இது கடத்தலா என்னன்னு இன்னும் கன்போர்ம் ஆகல... அவங்க பேரெண்ட்ஸும் இவ்ளோ நேரம் இருந்திட்டு பயத்துல இப்போதான் கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க... ஒருவேல இந்த கடத்தல்ல தான் மலர் மாட்டியிருப்பாளோன்னு தோணுது...” என ஒரு யூகத்துடன் கூற...


“இதுக்கு யாரு காரணம்ன்னு தெரியுமா அங்கிள்...” என்றான் நெற்றியை தேய்த்துக் கொண்டு.... ஒரு புள்ளியில் ஆரம்பித்த யூகங்கள் இப்போது ஒவ்வொரு திக்கிலும் பறந்து கொண்டிருந்தது.


தாங்கள் யூகிக்கும் முறை சரியா தவறா என தெரியாவிட்டாலும் எல்லா வழியிலும் செல்ல தயாராகியிருந்தான் யுத்கார்ஷ். அதனால் தான் அவன் அப்பிடியொரு கேள்வியை எழுப்பியது
 
Status
Not open for further replies.
Top