All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதில் அதிர்ச்சியடைந்தவளுக்கு அனைத்தும் புரிபட அதில் இனிமையாய் அதிர்ந்தவள் இனி மலரை எப்பிடியும் இந்த இரண்டு குண்டன்களும் காப்பாற்றி விடுவார்கள் என எண்ணிக் கொண்டவள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


மலரோ தன் கணவன் வந்ததை கூட உணராமல் அந்த கயவனின் பிடியில் சிக்கியிருந்தவள் அவனிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருக்க மற்றவனோ போலிசை பார்த்தும் “டேய்.. போலிஸ் வந்திருக்கிடா அவள போட்டுத் தள்ளிட்டு ஓடிப்போய்டு...” என்றவன் அங்கிருந்த தப்பிக்க முயல அங்கிருந்த மற்ற போலிஸ்காரர்கள் அவன கையும் களவுமாய் பிடித்துக் கொண்டனர்.


இங்கு மலரை பிடித்துக் கொண்டிருந்தவன் போலிஸ்காரர்கள் வந்துவிட்டார்கள் என்றதும் பதட்டத்தில் மலரின் தலையில் துப்பாக்கியை வைத்து இன்னும் அழுத்தியவன் அவர்களின் புறம் திரும்பி “டேய்... எல்லாரும் துப்பாக்கிய கீழ போடுங்கடா...இல்லன்னா இவ தல சிதறிடும்...” என கத்த அதில் இன்னமும் பயந்த மலர் போலிஸ்காரர்களின் பக்கம் திரும்ப அங்கு அவளின் கணவன் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் முகம் புன்னகையில் மின்ன அவனையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.


இருவருக்குமிடையில் பல அடிகள் இடைவெளி... தூரத்தில் நின்றிருந்த போதும் இருவரினது கண்களும் ஒன்றோடொன்று காதலுடன் பின்னிப்பிணைந்து இருந்தது. இருவரின் இதயமும் ஒன்றுடன் ஒன்று கலந்தது.


இங்கு வார்த்தையால் சொல்லப்படாத காதல் இருவரினது விழிகளாலும் பேசப்பட்டது. இதயமோ தன் இணையுடன் தஞ்சமடைந்தது.


தன் தலையில் துப்பாக்கியை வைத்திருக்கிறான் என்று தெரிந்து இத்தனை நேரம் செய்த ஆரப்பட்டம் எல்லாம் கணவனை கண்டதும் மறந்து போக சிலையாய் அவனின் விழிகளுன் விழி கலந்து நின்றாள். கண்கள் கண்ணீரில் நனைந்தது. ஆனால் அவன் தன்னை எப்பிடியும் காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை அவளுள் அழுத்தமாய் பதிந்திருந்ததால் அவள் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.


அந்த கடத்தல்காரனோ யுத்கார்ஷை பற்றி முழுமையாய் அறியாது அவனின் மனைவியின் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்திக் கொண்டு “இப்போ நீங்க வச்சருக்கிற துப்பாக்கியை கீழ போடப்போறீங்களா இல்லையா... இல்லன்னா இவள போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்...” கத்த அதில் ஆதித்யன் “எல்லாரும் துப்பாக்கிய கீழ போடுங்க...” என குரல் கொடுக்க அவனின் குரலில் இருந்த அழுத்தத்தில் அத்தனை பெரும் துப்பாக்கியை கீழே போட்டிருந்தனர்.


அவனோ மலரை பிடித்து இழுத்தவாறே நின்றபடியே பின்னால் நகர அத்தனை நேரம் தன் மனைவியின் விழி வீச்சில் கட்டுண்டு கிடந்த யுத்கார்ஷ் அவனின் செயலில் வெறி கொண்டவனாய் யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னிடமுள்ள கை துப்பாக்கியால் மலரை பிடித்துக் கொண்டிருந்தவனின் இதயத்தை குறிவைத்து சுட்டிருந்தான்.


அந்த சத்தத்தில் உடல் தூக்கிப் போட அப்படியே மயங்கிச் சரிந்தாள் மலர்.


அவளுடன் சேர்த்து அவளை பிடித்துக் கொண்டு நின்றவனும் கீழே விழ ஒரு நொடியில் மலர் கீழே விழாமல் தன் கைகளில் ஏந்தி இருந்தான் யுத்கார்ஷ்.


தன் கையில் துவண்டு வாடி வதங்கிய கொடியாய் கிடந்த மனைவியை கைகளால் இறுக கட்டிக் கொண்டவனின் மனம் சொல்லொன்னாத வேதனையில் தவித்தது.


அதில் அவளை கைகளில் ஏந்தியபடியே கீழே சரிந்தவன் அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்தான். எப்போதுமே கம்பீரமாய் ஆளுமையுடன் இருப்பவன் இன்று தன் தகுதி மறந்து தரையில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தான் மனைவியை கையில் தாங்கிக் கொண்டு


முகமெல்லாம் வேதனையில் கசங்கியிருந்தது. கிடைப்பாளா மாட்டாளா என்று தெரியாமல் இன்று முழுவதும் மனைவிக்காய் ஏங்கியவனுக்கு மனைவி கையில் கிடைத்ததும் அதை தாங்கும் சக்தி அற்றுப் போனான்.


ஒருவனால் அதிக இன்பத்தையும் தாங்க முடியாது. அதிக துன்பத்தையும் தாங்க முடியாது. வாழ்க்கை முழுவதும் இன்பவமாகவே வாழ்ந்தால் அந்த வாழ்க்கை சலிப்புற்று போய்விடும். அதே போல் தான் துன்பமும். எப்போதுமே ஒருவனுக்கு துன்பமே வாழ்க்கை என்று ஆகிவிட்டாள். அவனுக்கு வாழ்வே வெறுத்துவிடும்.


ஆனால் அந்த இரண்டையும் இன்று ஒன்றாய் அனுபவித்திருந்தான் யுத்கார்ஷ். மனைவியை காணாத ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு துன்பமாய் நரகவேதனையாய் இருந்ததென்றால் மனைவி கிடைத்த இந்த நொடி அவனுள் திகட்ட திகட்ட தேன்மழை பொழிந்தது போல் இருந்தது.


அதில் மீண்டும் அவளை வாரிச்சுருட்டி அணைத்துக் கொண்டான் சுற்றுப்புறத்தை மறந்து, அந்த உலகில் அவனும் அவனின் மனைவியும் மட்டும் தான் இருந்தனர். அவர்களை தவிர வேறு யாரும் அங்கில்லாதது போல் மீண்டும் மீண்டும் அவளை இழுத்தணைத்து முத்தமிட்டு தன் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டான்.


அளவிடமுடியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தவனிற்கு மனைவி மயக்கத்தின் பிடியில் இருக்கிறாள் என்பதே புரிபடவில்லை. அந்தளவு தன்நிலை இழந்திருந்தான்.


அத்தனை நேரம் சுற்றி நடப்பவற்றை தன் விழிகளால் கூர்மையாய் அளவிட்டுக் கொண்டிருந்த யுவேதா அதன் பின்பே சூழ்நிலையை புரிந்து கொண்டு யுத்கார்ஷின் அருகில் விரைந்தவள் “ப்ரோ...” என அவனை உலுக்க அதில் திரும்பி பார்த்தவன் அங்கு யுவேதா நின்று கொண்டிருக்கவும் “வேதி நீ இங்க என்ன பண்ற...” என்றான் கண்டனக் குரலில்.


அதில் அசடு வழிந்தவள் “அது... அதுவந்து ப்ரோ...” என இழுக்க “ம்... சொல்லு...” என்றான் அமைதியாய்.


இத்தனை நேரமும் மனைவியின் நினைவில் அவளை மட்டுமே மனதில் கொண்டு கரைந்து கொண்டிருந்தவன் இப்பொது யுவேதாவின் குரலில் தன்னிலைக்கு திரும்பி இந்த நேரத்தில் இவள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள் என ஒரு அண்ணனாய் கவலை கொண்டு அவளை அதட்டினான்.


அவளோ ‘இதுக்கு ஆதிக்கிட்டயே நான் சிக்கியிருக்கலாம்..’ என காலங்கடந்து யோசித்தவள் “ப்ரோ என்னை விட்டிடுட்டு அண்ணிய கவனிங்க...” என்றவள் “அவங்க இப்போ கான்ஷியஸ்ல இல்ல நாம ஹோஸ்பிடல் கூட்டிட்டு போலாம்... வாங்க...” என்க அப்போது தான் அவனுமே தன்னவளை உற்று நோக்கினான்.


உடம்பெல்லாம் சிறு சிறு கீறல்களும் கன்னத்தில் பதிந்திருந்த விரல்களும் உதடு பிய்ந்ததில் காய்ந்து போயிருந்த ரத்தமும் என துவண்டு சரிந்திருந்தவளை பார்த்தவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு ஆதியை நோக்கி திரும்ப அவனோ ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனும் விதமாய் கண்களை மூடித் திறக்க அவசரமாய் மருத்துவமனை நோக்கி விரைந்தான்.


அதற்குள் யுவேதா தன் பெரியம்மா பெரியப்பாவிற்கு அழைத்து அவர்களை மருத்துவமனை வரும் படி கூறியிருக்க அடுத்த சில நொடிகளில் மலரின் கடத்தல் குறித்த சம்பவம் தேவியின் வீட்டினருக்கு தெறிபட மொத்தக் குடும்பமும் மருத்துவமனையில் கூடியிருந்தது..


மலர் அவசர பிரிவிற்குள் அனுமதிக்கப்பட்டு இருக்க அவளின் சிறு காயத்திற்கு மருந்து போட்டிருந்த மருத்துவர் ஆப்ரேசன் செய்த இடத்தில் தினமும் பூசுவதற்காக ஒரு மருந்தை எழுதி கொடுத்திருந்தார்.


மனைவியின் மயக்க நிலையை பார்த்து பதறிய யுத்கார்ஷிடம் சாதாரண மயக்கம் தான் என்று கூறியவர் சிறிது நேரத்தில் கண் விழித்து விடுவாள் என்றும் கண்விழித்ததும் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுக்குமாறும் கூறி விட்டு சென்றார்.


அவர் வெளியேறியதும் அவளருகில் அமர்]ந்தவன் மனைவியின் கையை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டான். இதை என்றும் விடவே மாட்டேன் என்பது போல். ஆனால் அடுத்த நொடிய தன் மனைவிக்கு இந்த சிறு மயக்கம் வருவதற்கும் பயம் என்றால் என்னவென்றே தெரியாத தன்னை ஒரு சில நொடிகள் பயப்பட வைத்ததற்கும் அவனின் வாழ்முழுக அவன் அனுபவிக்க வேண்டும் என எண்ணியவன் மனைவி பார்த்தவர் வெளியேறினான்.


வெளியே வரும் மகனின் முகத்தை வைத்தே ஏதோ செய்ய போகிறான் என யூகித்த ருத்ராவும் சித்தார்த்தும் ஒன்றும் பேச முடியாமல் அமைதியாய் நின்றனர்.


பேசினாலும் அது எடுபடப் போவதில்லை என்பதை உணர்ந்த பின் எதற்காக வீணாய் பேச வேண்டும் என்று எண்ணினரோ என்னவோ..

அத்தனை அவசரத்திலும் அங்கு நின்றிருந்த யுவேதாவின் அருகில் சென்றவன் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.


“இனியொரு தடவ இத மாதிரி நடக்ககூடாது.. இது தான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்...” என கடுமையாய் உச்சரித்தவன் அவளை கடுமையாய் முறைத்தவாரே அங்கிருந்து சென்றான்.


அவன் சென்றதும் தன் பெரியம்மாவின் அருகில் சென்றவள் “பார்த்தியா ரூ உன் பையன.. எப்பிடி என்ன அறைஞ்சிட்டு போறான்... ஆனா நீ ஈஈன்னு வேடிக்கை பார்த்திட்டு இருக்க..” என சலுகையா உரையாடியவாறு ருத்ராவின் தோளில் சாய்ந்து கொள்ள அவளின் தலையை வாஞ்சையாய் தடவிய ருத்ராவும் சித்தார்த்தும் “அவன் இவ்ளோ கோபப்படுறான்னா நீ எதையோ லூசுத்தனமா செய்ஞ்சி வச்சிருக்க.. அப்பிடி என்ன பண்ண வேதி...” என கவலையாய் கேட்க


அவளோ “நான் பெருசா ஒன்னும் பண்ணல... ப்ராமிஸ்.. சத்தியம்.. இந்த வேதா என்னைக்கும் உண்மைய மட்டும் தான் பேசுவா... உண்மையை தவிர வேறு எதுவுமில்லை...”
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என ‘க்ளுக்’கென சிரித்தவள் “சரி மேட்டர்க்கு வரேன்.. எங்கண்ணன் ஏதோ ஒரு பெரிய கேஸ் விஷயமா அலைஞ்சிட்டு இருந்தானா... எனக்குத்தான் அவன் ஏதாவது பண்ணா மூக்கு வியர்த்திடுமே... சோ அதனால அவனுக்கு தெரியாம அவன் இன்வெஸ்டிகேட் பண்ற அந்த கேஸ் பைலை அவனுக்கு தெரியாம படிச்சிட்டு அவன் போனை ட்ரேஸ் பண்ணி அவன் போக வேண்டிய இடத்திக்கு அவனுக்கு முன்னாடியே போய் சேர்ந்து எனக்கு தேவையான டிடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன்.. அங்க தான் அண்ணிய பார்த்தேன்.. மயக்கம் போட்டு கீழ கிடந்தாங்க... அப்றோம் அவங்கள எழுப்பி அவங்கள தோள்ள தூக்கி போட்டிட்டு ஓடி கடைசியில அவனுங்க கிட்ட மாட்டிக்கிட்டோம்.. அப்றோம் தான் என் ரெண்டு அண்ணன்களும் வந்தாங்க... அப்றோம் அப்பிடி இப்பிடின்னு ஒரு வழியா இங்க வந்திட்டோம்...” என்றவளை கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள் இருவரும்..


அவர்களின் கோபமான முகத்தை பார்த்தவள் ‘அடச்சே... ஓவர் எக்ஸ்சைட்மென்ட்ல மொத்தத்தையும் உளறிக் கொட்டிட்டேன் போல... இவங்க இப்போ அட்வைஸ் பண்ணியே கடுப்பேத்துவாங்களே...’ என்றவள் நைசாக அவர்களிடமிருந்து நழுவி வெளியே வந்தவள் ஆதிக்கு அழைத்து “டேய்.. என்னோட லேப் அங்கதான் எங்கயோ இருக்கு.. வரும் போது அதையும் எடுத்திட்டு வந்திடு...” என்றவள் அவசரமாய் இணைப்பை துண்டித்தாள்.



எங்கே அவனிடமும் பாட்டு கேட்க வேண்டி வந்துவிடுமோ எனும் பயத்தில் தான்.


பின் தன் கோபக்கார அண்ணனை நினைத்துப் பார்த்தவளுக்கு இன்று அவனின் இன்னொரு முகம் புரிந்தது. எப்போதும் விறைப்பாய் இருக்கும் தன் அண்ணனான யுத்கார்ஷ் தன் மனைவி மட்டும் மென்மையானவனாய் மாறுவது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது


அதேநேரம் இருவரும் பொருத்தமான ஜோடி தான் நினைத்துக் கொண்டவள் அவர்களின் திருமணத்தின் போது லண்டன் சென்றிருந்தாள். அதனால் அவர்களுடன் பேசுவதற்கு நேரமில்லாது போக ஒரு வருடத்தின் பின்பு மறுபடியும் இப்போது தான் தன் பெரியப்பாவின் குடும்பத்தை பார்க்கிறாள். அதனால் தான் அவளுக்கு மலரை பற்றி தெரியாது போனது. அதன் பின்பு அவள் குழந்தை பிறந்து விட்டதை பற்றி சொன்னதால் தன் மருமகளை காணச் சென்றவள் அவளை தன் கைகளிலிருந்து இறக்கவே இல்லை. அந்தளவு அவளுடன் ஒட்டிக் கொண்டாள். மலரைப் போலவே இவளும் எளிதல் எல்லோருடனும் பழகி விடுவாள்.


------------------------------------


ஆதித்யாவிற்கு அழைத்த யுத்கார்ஷ் மற்ற இருபது பெண்களை கடத்தியவர்களும் இவர்கள் தான் என்றதும் இந்த விஷயம் மீடியாவிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறியவன் அந்த கும்பலை தன் கொடோணிற்கு அழைத்து வருமாறு கூற அதை கேட்டு “சரி”என்றவன் தன்னுடன் இரு கான்ஸ்டபில்லை இருக்குமாறு பணித்து விட்டு மற்றவர்களை போகுமாறு கூற அவர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.


அதன் பின்பு DSP யிடம் யுத்கார்ஷ் பேசியதை பற்றி கூறியவன் அந்த இடத்தை பழைய படி திருத்தி அமைக்குமாறு கட்டளையிட்டவன் அங்கு ஒரு அறையினுள் ஒருவன் இறந்திருக்கவும் அவனை போஸ்மாடம் பண்ண அழைத்து செல்லும் படி உத்தரவிட்டவன் யுத்கார்ஷ் சுட்டவனை புதைக்கும் கூறிவட்டு எஞ்சியவர்களுடன் யுத்கார்ஷின் இடம் நோக்கிச் சென்றான்.


ஆதி எப்படியோ அதையும் விட ஒரு படி மேலே யுத்கார்ஷ். இன்று அவனின் மனைவியையே கடத்தியிருக்கிறார்கள் என்றால் அவர்களை சும்மாவா விடுவான்.


பலியாடு போல் அவர்களை இழுத்துச் சென்று யுத்கார்ஷின் கொடோனிற்குள் தள்ளியவன் “இவங்கள நீயே பார்த்துக்கோ த்ருவா.. நான் போய் அந்த வேதி நாலு அப்பு அப்பினாத்தான் என்மனசு ஆறும்...” என கொதிக்க அவனின் தோளை தட்டி ஒரு பார்வை பார்க்க அதன் அர்த்தம் புரிந்தவன் “அப்போ நீயே அடிச்சிட்டியா...” என்றான் நிம்மதியாய்.


அவனுக்கு அவன் தங்கை மீது எந்தளவுக்கு கோபம் வந்ததோ அதை விட அதிகமாய் அவள் மீது பாசமும் உண்டு. ஆனால் ஒரு பொழுதும் அதை அவளிடம் வெளிக்காட்டியதில்லை.


அதனால் தான் இன்று கோபம் வந்தும் அவளை அடிக்க தயங்கினான். ஆனால் யுத்கார்ஷிற்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. அதனால் அவளை அடித்தும் விட்டிருந்தான். ஆதலால் நிம்மதியாய் உணர்ந்த ஆதி அதன் பின்பு அங்கிருந்து வெளியேறியிருந்தான்.


அவன் சம்பத்தப்பட்ட எதாவது என்றால் அவனே அதை முடித்திருப்பான். ஆனால் இது யுத்கார்ஷுடன் தொடர்புடையது. அதனால் இதை அவன் தான் கையாள்வான் என தெரிந்ததாலே அவன் அங்கிருந்து வெளியேற ஆதி சென்றதும் தன் முன் நின்றிருந்தவர்களை அவன் பார்த்த பார்வையில் அவர்களின் உயிர்போய் மீண்டது.


இந்த தொழிலை அவர்கள் பலவருடமாய் செய்தாலும் அவர்களுக்கு துணையாய் அரசியவாதிகளின் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்குள் சிறு பயம் இருக்கத்தான் செய்தது. இன்று அந்த பயத்தை அதிகரிப்பது போல் தங்கள் முன் நின்றிருந்தவனும் அவனின் இறுகிய உடலும் வெறியுடன் மின்னிய விழிகளும் பார்ப்பதற்கே அச்சத்தை கொடுக்க உள்ளுக்குள்ளே நடுங்கிப் போயினர்.


அவனோ சதீஷை பார்த்து கண்ஜாடை காட்ட அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் தலையசைத்தவன் அவர்களை ஐவரையும் அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.


பின் அவர்களை வயர்களால் சுற்றி அங்கிருந்த ஸ்விட்சை ஆன் செய்தான்.


ஐவரையும் ஒரே போல் கட்டியிருக்க அவர்கள் ஐவருக்கும் பொதுவாய் ஓடிக் கொண்டிருந்தது ஒரு வயர். அதை பார்த்து ஏளனமாய் புன்னகைத்தவன் அவர்களின் அருகில் சென்று அதில் தலைவன் போலிருந்தவனின் மூக்கில் குத்த அதில் வீரிட்டு அலறியவனின் மூக்கில் இருந்து சீறிக் கொண்டு பாய்ந்தது இரத்தம். அதை பார்த்து மற்ற நால்வரும் அவனின் அச்சத்துடன் நோக்க அவர்களை இதழில் விஷமப் புன்னகையுடன் நோக்கியவன் ஐவருக்கும் பொதுவாய் இருந்த வயரின் ஸ்விட்சை காலால் அழுத்த அதில் வந்த மின்சாரத்தின் தாக்கத்தில் மரண பயத்தில் அவர்கள் அலற அதை ரசித்துப் பார்த்தான் யுத்கார்ஷ்.


இத்தனை நேரம் தான் பட்ட துன்பத்திற்கு அவர்களின் அலறல் மருந்தளிப்பது போலிருக்க அதை ஆழ்ந்து ரசித்தவன் “என்னோட பொண்டாட்டியையே தூக்கி இருக்கேன்னா உங்களுக்கு எவ்ளோ தைரியம் வேணும்... அதுவும் த்ருவ் யுத்கார்ஷ் ராவ் அஹ்லுவாலியாவோட மனைவிய...” என ஆங்காரமாய் கத்தியவன் அவர்களை தீயின் ஜுவாலையை ஒத்த விழிகளுடன் ஏறிட்டவாறு “ஹாப்பி ஜேர்னி” என்றவன் அந்த ஸ்விட்சை காலால் தட்டிவிட்டு வெளியேற அவனின் பின்னோடு வெளியேறினர் அவனின் ஆட்கள்.


உள்ளே அவர்கள் ஐவரும் உடலை தீண்டிய மின்சாரத்தின் வேகம் தாங்காதவர்களாய் அலற அலற வெளியில் நின்றிருந்தவனின் முகத்தில் விபரீத புன்னகை மலர்ந்தது.


அதன் பின் சதீஷை நோக்கியவன் “அவ்ளோ சீக்கிரம் அவனுங்க சாகக்கூடாது... புரிஞ்சிதா...” என்க ‘ஆம்’ என தளயசைத்தவன் அவன் அங்கிருந்து சென்றதும் உள்ளே சென்று அந்த ஸ்விட்சை ஆன் செய்வதும் ஆப் செய்வதுமாய் இருக்க அதில் தங்களின் உயிரை இனியும் தாக்குபிடித்து வைக்க முடியாமல் அவர்கள் ஒருவர் பின்னே ஒருவராய் உயிரை துறந்திருந்தனர்.


கொடியவர்களுக்கு மரணம் சட்டென வந்து விட்டால் அவர்களை பார்ப்பவர்களுக்கு இன்னுமொரு தப்பு செய்வதற்கு பயம் வராது.. அதுவே அவர்கள் சித்திரவதை அனுபவித்து அணுவணுவாய் மரணித்தால் அவர்களை பார்ப்பவர்களுக்கு இன்னுமொரு முறை தப்பு செய்வதற்கு மனம் வராது. அது தான் யுத்கார்ஷின் எண்ணமும் கூட....


தன் சிந்தனையில் மூழ்கி இருந்தவன் மகளின் சிணுங்களில் தன் நினைவு கலைந்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன் அவளை கொஞ்சத் துவங்கினான்.


அன்றைய அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்தவள் இன்று வரை முழுமையாய் குணமடையவில்லை. அவள் எழும் போதெல்லாம் அவளுக்கு அந்த துப்பாக்கி சூட்டின் சத்தமே காதில் ஒலிக்க ஆரம்பித்து அவளை நடுங்க செய்து பின் மயக்கத்தில் ஆழ்த்தி விடும்.


அதனாலே அவனும் மனைவியை கவனமாய் பார்த்துக் கொண்டான்.


காதலித்து மணம் முடிக்காவிடிலும் கல்யாணத்தின் பின் காதலிப்பவனாயிற்றே... அதனால் சற்று அதிக அக்கறையுடனே மனைவியை பார்த்துக் கொண்டான்.


அங்கு யக்ஷித் தன்னவளின் உண்மையான குணத்தை அறிந்து உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருந்தான். அவளுக்கு நடந்த கொடுமைக்காக அதற்கு காரணமானவனின் மனைவியை அதே போல் ஆக்குவதற்காக தான் செய்த முட்டாள்தனமான செயலை எண்ணி வெட்கிப் போனான். இதில் பாதிக்கப்பட்டது இரு அப்பாவிப் பெண்களில் வாழ்க்கை அல்லவா..


அதுவும் அவளின் உயிர்த்தோழி தேவிக்கு அவள் செய்த கொடுமை தான் அவனின் நெஞ்சை குற்ற உணர்வில் கூனிக் குறுக வைத்தது. அதை அவன் தன் அன்னையிடம் கூட சொல்லவில்லை. இத்தனை நாள் திருமணம் வேண்டாம் என்றிருந்த தான் இப்போது திருமணத்திற்கு சம்மதிக்கவும் சந்தோசமாய் வலம் வரும் அன்னை இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் நிச்சயம் துவண்டு போய்விடுவார் என எண்ணியவன் அவரிடம் அதை சொல்லாமலே மறைத்தான்.


ஆனாலும் நெஞ்சின் உள்ளே தன் காதல் பொய்த்துப் போன வலி இன்னமும் இருந்து கொண்டே தான் இருந்தது. அவன் இயற்கையில் உதவும் குணம் கொண்ட நல்லவன் தான். ஆனால் தன் காதலியின் நிலையறிந்த பின் தான் அவன் இப்படி மாறிப் போனான். ஆனால் இன்று தான் செய்த தவறை உணர்ந்து யுத்கார்ஷிடம் மனதார மன்னிப்பு கேட்டிருந்தான்.


அதில் அவனை ஒரு பார்வை பார்த்தவன் “என்ன டிசைட் பண்ணியிருக்க” என்றான் மொட்டையாய். ஆனால் யக்ஷித்திற்கு அது நன்றாகவே புரிந்தது இருந்தும் ஒன்றும் சொல்லாமல் “என்னோட வாழ்க்கை எப்பிடிப் போகுதோ அது படியே வாழ ஆசைப்படுறேன்... கடவுள் ஒவ்வொருத்தனோட தலைவிதியையும் எப்பிடி வச்சிருக்கான்னு தெரியாதே...” என சோபையாய் புன்னகைத்தவனை பார்த்த யுத்கார்ஷிற்கு அவன் ஸ்ரேயாவின் மேல் கொண்ட காதலின் அளவு நன்கு புரிந்தது. ஆனால் இவனை மன்னிக்க முடிந்தவனால் அவளை மன்னிக்க முடியவில்லை.


அதன் பின் நாட்கள் வேகமாக நகர சரியாய் ஒன்றரை மாதத்தின் பின் யுத்கார்ஷின் வீட்டில் அவர்களின் தவப்புதல்வியின் பெயர் சூட்டும் விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாய் ஆரம்பமானது..



கள்வன் வருவான்....
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயத்தை பதிவு பண்ணிட்டேன்...
அநேகமாய் அடுத்த பதிவுடன் கதை முடிந்துவிடுமென்று நினைக்கிறேன்... சோ உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய கதையில் இருக்கும் நிறையையும் சொல்லுங்க... ஏதாவது குறை இருந்தாலும் சொல்லுங்க... அடுத்த கதை எழுதும் போதும் திருத்திக் கொள்கிறேன்...

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து


ஆவலுடன்

NJN
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 34 (இறுதி அத்தியாயம்...)


யுத்கார்ஷின் தவப்புதல்வியின் பெயர் சூட்டும் விழாவிற்காக அவர்களின் மொத்த சொந்த பந்தத்தையும் அழைத்திருந்தனர். ருத்ராவும் சித்தார்த்தும் தங்கள் உறவினர் அனைவரையும் அழைத்திருக்க தமயந்தியும் சுந்தரபாண்டியனும் தங்கள் ஊரிலுக்கும் முக்கியமானவர்களை அழைத்திருக்க அகிலாண்டேஸ்வரி அவரது சொந்த பந்தங்கள் அத்தனை பெயரையும் அழைத்திருந்தார்.


அந்த மூன்று குடும்பத்திலும் பிறந்த அடுத்த தலைமுறை முதல் வாரிசு என்பதால் மிகவும் பிரம்மாண்டமாக அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தான் யுத்கார்ஷ். தன் காதலை உணர காரணமாய் இருந்த மகள் மீது அவனுக்கு அத்தனை பாசம். தன்னை தந்தையென கர்வப்பட வைத்த மகளின் மீது அவனிற்கு அத்தனை அன்பு.


கிட்டத்தட்ட ஒன்றை மாதத்திற்கு முன்பு நடந்த அந்த அசம்பாவிதத்திற்கு பின் அவன் மனைவியையும் குழந்தையையும் தன் நெஞ்சிலே சுமந்தான். இந்த ஒன்றை மாதகாலமாய் மலரின் கால்கள் தரையிலேயே படவில்லை. அந்தளவு தன்னவளை அக்கறையுடன் ஆசையுடன் பார்த்துக் கொண்டான்.


ஆனால் இன்னமும் அவன் தன் காதலை கூற முயற்சிக்கவில்லை. அன்று அவன் எத்தனை ஆசையுடன் காத்திருந்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அன்று அவனால் அவன் மனைவியிடம் காதலை கூறவே முடியவில்லை. அந்த வடு இன்னமும் அவனின் மனதை விட்டு அகலாததால் அவனால் அவளிடம் தன் காதலை கூறவே முடியவில்லை.


மலரும் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவளை பொறுத்தவரை அவளுக்கு அவள் கணவன் மட்டும் தான் முக்கியம். இத்தனை நாட்கள் அவனின் வெறுப்பை சம்பாதித்திருந்தவள் இப்போதெல்லாம் அவனின் அன்பு மழையில் நனைவதால் அவனின் அன்பில் மூழ்கி திளைத்தவள் கணவனின் உள்ளத்தில் தன் மீது காதல் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் அவள் ஆராய்ச்சி செய்ய முற்படவில்லை.


அவளை பொருத்தமட்டில் கணவனை தன்னை ஏற்றுக் கொண்டதே போதும் என்ற நிலையில் இருந்தாள். அன்று அவனின் கண்களில் கண்ட காதல் அவளின் இதயத்தை அடைந்திருந்ததால் அவனின் அன்பு ஒன்றே தன் ஆயுளுக்கும் போதும் என எப்போதோ தீர்மானித்து விட்டிருந்தாள். ஆனால் உள்ளுக்குள் சிறு ஏக்கம் இருக்கத்தான் செய்யும்.


சிலவேளைகளில் கணவனை எதிர்பார்ப்புடன் நோக்குவாள் அவனோ தன்னவளின் கண்களில் தோன்றும் எதிர்பார்ப்பை பார்த்து தனக்குள்ளே நொறுங்குபவனுக்கு அவளிடம் தன் காதலை சொல்ல மனம் வரவில்லை. ஏதோ ஒன்று அவனை தடுத்தது. ஒருவேளை எங்கே தான் காதலை சொல்லிவிட்டால் அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமும் கூட காரணமாய் இருக்கலாம்.


முதலில் தேவியிடம் காதலை சொல்ல சென்றபோது அவள் உயிரை துறந்து விட்டிருந்தாள். இப்போது தன்னவளிடம் தன் காதலை சொல்ல முயற்சித்த போது அவள் காணாமல் போய்விட்டிருந்தாள். ஆக மொத்தத்தில் காதலுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம் போலும். அதனால் தான் அவளிடம் அவன் தன் உயிர்காதலை சொல்ல தயங்குவது.


அதே சமயம் இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாத ஒமி மும்பையில் இருக்கும் தன் பெற்றோரை சென்னை வரவழைத்து அகிலாண்டேஸ்வரி தேவியின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொஞ்சி தனக்கும் பின்டோவிற்கும் திருமணத்திற்கு நல்ல நாள் குறிக்கும் படி கேட்க அவரோ முதலில் அதெல்லாம் முடியாதென முறுக்கி பின் ஒவ்வொருவராய் அவரின் மனதை கரைத்து இதோ இன்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் போல் வைக்கலாமென கூறியிருக்க ஆக அந்த இரண்டு முக்கிய விஷேஷமும் இன்று யுத்கார்ஷின் வீட்டிலே நடைபெறவுள்ளது.


இன்று இரட்டை வைபவம் என்பதால் அனைவரும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆளுக்கொரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததில் ஒருவாறு அனைத்தும் தயார் நிலையிலே இருந்தது.


தன் அறையில் தன் செல்ல மகளுக்கு அழகிய கவுன் ஒன்றை அணிவித்துக் கொண்டிருந்த மலரை தேடி வந்த தமயந்தி மலர் இன்னமும் தயாராகவில்லை என்பதை பார்த்து அவளை செல்லமாய் கடிந்து கொண்டவர் “மலர் நான் குழந்தைய தயார் பண்ணிக்கிறேன் நீ போய் சீக்கிரம் தயாராகிட்டு வா... ஐயர் வந்திடுவார்...” என்க...


அவளோ “இல்லம்மா... என் செல்லத்த ரெடி பண்ணிக் கீழே கூட்டிட்டு வந்து உங்க கிட்ட கொடுத்தப்றம் நான் ரெடி ஆகிக்கறேன்... நீங்க கீழே போங்க... அத்த தனியா எல்லா வேலையையும் இழுத்துப் போட்டிட்டு செய்ய ஆரம்பிச்சிடுவாங்க...” என நல்ல மருமகளாய் கூற..


தன் மகளின் அக்கறையான பேச்சிலும் அவள் தன் குடும்பத்தினரிடம் காட்டும் அக்கரையிலும் மனம் நெகிழ்ந்த தமயந்தி அவளின் நெற்றியை வழித்து திருஷ்டி கழித்தவர் அவளின் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து நகர போகும் தன் பெறாத அன்னையையே கண்களில் பூத்த ஆனந்த கண்ணீருடன் பார்த்த மலர் இதழில் பூத்த புன்னகையுடன் தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவளுக்கு அலங்காரம் பண்ணியவள் மகளின் அழகில் தன் கண்ணே பட்டுவிடும் என அவளை செல்லம் கொஞ்சியபடி அவளுக்கு திருஷ்டி பொட்டு வைத்தவள் குழந்தையுடன் கீழிறங்கிச் சென்று தன் அன்னையில் கைகளில் குழந்தையை கொடுக்க அவரோ “நீ போய் அண்ணிக்கிட்ட குழந்தைய கொடும்மா... நான் சொல்ல சொல்ல கேக்காம அதையும் இதையும் இழுத்துப் போட்டிக்கிட்டு செஞ்சிக்கிட்டு இருக்காங்க... நீ போய் குழந்தைய கொடுத்தீன்னா ஒரு இடத்தில அமைதியா உக்கார்ந்திடுவாங்க...” என்க..


அதை கேட்டு சிரித்துக் கொண்டே தன் அத்தையின் அருகில் சென்றவள் “அத்தை குழந்தைய கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் போய் ரெடி ஆகிட்டு வாரேன்...” என்றவள் அவர் ஏதோ பேச ஆரம்பிக்கவும் கடகடவென உள்ளே ஓடினாள்.


அதை பார்த்து சிரித்த ருத்ரா அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு குழந்தையுடன் உரையாட துவங்க அதையே கண்களில் ஏக்கத்துடன் வின்னி பார்த்துக் கொண்டிருந்தாள் என்றால் அப்போது தான் தயாராகி கீழே வந்து கொண்டிருந்த பின்டோ கண்களில் கனவுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அழகிய இளம் சிவப்பு நிற பட்டுப்புடவையில் அன்றலர்ந்த மலர் போல் அழகாய் இருந்தாள் அவள். அதனுடன் இன்று நிச்சயதார்த்தம் என்றதில் அவளின் வெள்ளைத்தோல் சிவப்பாய் மாறியிருக்க பெண்மையின் இலக்கணத்துடன் மிளிர்ந்தாள். இதுவரைக்கும் சேலை அணிந்தே பழக்கமில்லாதவள் இன்று பட்டுப் புடவை வேறு அணிந்ததில் தத்தித் தத்தி நடந்து வந்து கொண்டிருக்க அப்போது தான் தன் பெற்றோர் சகிதம் யுத்கார்ஷின் வீட்டினுள் நுழைந்த ஒமி தன்னவளையே மயக்கும் புன்னகையுடன் ஏறிட்டுக் கொண்டிருந்தான்.


அவனையும் அவனின் விழுங்கும் பார்வையையும் விஷமப் புன்னகையையும் பார்த்த பின்டோ உள்ளம் தடதடக்க கண்களை தாழ்த்திக் கொண்டாள்.


இத்தனை நாள் பாவாடை சட்டையும் பேன்ட் சேர்ட்டும் அணிந்து வலம் வந்த தன் உள்ளம் கவர்ந்தவள் இன்று முதன் முறையாய் சேலையில் அழகுப் பதுமையாய் வீற்றிருக்கவும் அவள் மேல் இருந்த கண்களை விலக்குவது என்பது ஒமிக்கு பெரும் திண்டாட்டமாகவே இருந்தது.


அதே நிலையில் தான் அவனின் மனங்கவர்ந்தவளும் இருந்தாள். இத்தனை நாட்களாய் பேன்ட் சேர்ட்டில் விளையாட்டு பையனாய் தெரியும் தன்னவன் இன்று பட்டு வேஷ்டி சட்டையில் சும்மா ஜம்மென்று இருக்கவும் தன் விழிகளை அவனிடமிருந்து பிரிக்க சிரமப்பட்டவள் சுற்றியுள்ள அனைவரும் தங்களையே சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்க்கவும் சட்டென தன் பார்வையை அவனிடமிருந்து அகற்றியவள் வெட்கத்துடன் உள்ளே ஓடினாள். அதை காதலுடன் பார்த்த ஒமின் இதழ்களில் அழகிய காந்த புன்னகை வந்தமர்ந்தது.


ஒமியினதும் பின்டோவினதும் காதல் அரங்கேற்றத்தை பார்த்து அங்கிருந்த இளவட்டங்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு அவர்களை கிண்டலடித்துக் கொண்டு இருக்க இது அத்தனையையும் வெறுமையான விழிகளுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் வின்னி.


அன்றொரு நாள் அவள் அவனை பார்த்தது தான் இன்று வரையிலும் அவன் அவள் கண்களில் படவேயில்லை. ‘ஏன்... ஏன்... ஏன்...’ என்ற கேள்வி மனம் முழுக்க வியாபித்து இருக்க அதற்கு விடை தான் அவளிடம் இல்லை. தன்னை மறந்து விட்டானோ என்று கூட அவளுக்கு தோன்றும். ஆனால் அவள் அன்று அவனின் கண்களில் பார்த்த காதல் அது மட்டும் தான் அவளை இத்தனை நாட்கள் நிம்மதியாய் வாழ வைத்துக் கொண்டிருந்தது.


அவன் தன்னை தேடி வருவானா மாட்டானா என தெரியாமல் ஒவ்வொரு நாளும் அவனுக்காய் காத்துக் கொண்டிருக்கிறாள். பின்டோ கூட அவளிடம் எத்தனையோ முறை கூறிவிட்டிருந்தாள். அவனை மறந்து விட்டு உன் வாழ்க்கையை பார் என்று. எப்போதெல்லாம் அவளை ஒரு விரக்கதியான புன்னகையுடன் ஏறிட்டுக் கொண்டு தன் வேலையை பார்த்துக் கொண்டு போய் விடுவாள். ஒமியும் கூட அவளுக்கு எடுத்துக் கூறி புரிய வைக்க எத்தனையோ தடவை கூட முயன்றும் அவள் அதை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.


அத்தனை நம்பிக்கை அவளுக்கு தன் காதல் மீது. ஆனால் நாட்கள் போகப்போக அந்த நம்பிக்கையும் கூட அவளை விட்டுப் போய்விட்டிருந்தது. இதோ இன்று அவளின் அந்த நம்பிக்கை மொத்தமாய் வடிந்து விட்டிருந்தது. அதனால் இன்று இரவே அமெரிக்காவிற்கு செல்ல முடிவு செய்திருந்தாள். இதற்கு மேலும் அவனுக்காய் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்றே அவளுக்கு தோன்றியது. அவனின் பெற்றோர் மீதான பயம் அறிந்தவளாயிற்றே... அதனாலேயே அவனை விட்டு விலக முடிவு செய்தாள். தனக்காக அவன் தன் பெற்றோரை இழப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. அவன் தனக்காக அவன் பெற்றோரை விட்டுவிட்டு வருவானா என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. ஒருவேளை வந்து விட்டால்? என்ற பயத்தில் தான் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு இப்படியொரு முடிவை எடுத்திருந்தாள்.


ஆனால் நேரம் செல்ல செல்ல அவளின் அந்த முடிவும் கூட ஆட்டம் காண்பதை போல் தான் இருந்தது. ஒமியினதும் பின்டோவினதும் பார்வை பரிமாற்றத்தையும் யுத்கார்ஷ் மலரின் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் தானும் இப்பிடியெல்லாம் வாழ மாட்டோமா எனும் ஏக்கம் அவளுள்ளே அதிகரித்துக் கொண்டே சென்றது.


அதில் எங்கே தான் உடைந்து விடுவோமோ எனும் பயத்தில் யாரும் அறியாமல் அங்கிருந்த தோட்டத்தினுள் நுழைந்தாள். அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தவளின் மனம் தன்னை சுற்றியுள்ள தோட்டத்தையும் அதன் அழகிலும் மயங்கவில்லை. மாறாக தன்னவனின் நினைவில் கண்ணீரே வடித்தாள்.


ஒவ்வொரு நாளும் அவனுக்காய் ஏங்கி ஏங்கி அன்று முழுவதும் அவன் வாராமலே போகும் போதெல்லாம் தனக்குள்ளே மடிந்து மொத்தமாய் உருக்குலைந்து போயிருந்தாள். என்ன முயன்றும் அவளால் அவனை மறக்கவே முடியவில்லை. மறப்பதற்கு அவள் அவன் மேல் கொண்டது ஈர்ப்பு அல்லவே. காதல்... ஈர்ப்பு மறைந்து விடும் ஆனால் காதல் காலங்கள் கடந்தாலும் மாறாது.. மறவாது.


வெகு நேரம் அங்கிருந்து அழுது கொண்டிருந்தவள் அந்த பக்கம் யாரோ வரும் ஓசை கேட்டு கண்களை துடைத்தவள் மீண்டும் வீட்டினுள்ளே போய் விட்டாள்.


குழந்தையை அத்தையிடம் ஒப்படைத்து விட்டு கணவனின் அறைக்குள் நுழைந்த மலர் அவன் அங்கு இல்லாது போகவும் அவனை தேடிப் பார்த்து விட்டு அலமாரியில் இருந்த உடைகளில் எதை அணிவது என தனக்குள்ளே ஒரு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.


இத்தனை நாட்களாய் அவர்கள் தங்கள் காதலை வாயால் சொல்லவில்லையே தவிர அதை மனதால் உணர்ந்திருந்தனர். அதனாலேயே அவளின் உடைகள் அவளுக்கு தேவையான அனைத்தையும் இங்கேயே மாற்றி இருந்தனர்.


இந்த ஒன்றரை மாதமாய் இருவரும் வேறு வேறு அறையிலும் இருந்தாலும் கூட மனதால் ஒன்றினைந்திருந்தனர். முன்பு எப்பிடியோ ஆனால் இப்போதெல்லாம் யுத்கார்ஷிற்கு தன் மனைவியை காணாமல் இருப்பதே பெரும்பாடாய் இருக்க ஆனால் அவளின் உடல் நிலையை கருத்தில்கொண்டு தன் தவிப்பை துடிப்பை பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.


அப்போது வெளியில் வந்திருந்தவர்களை மரியாதை நிமித்தமாய் வரவேற்றுவிட்டு தன் அறைக்குள் வந்திருந்த யுத்கார்ஷ் அங்கு மனைவி ஒவ்வொரு புடவையாய் தன் மேல் வைத்து அழகு பார்ப்பதும் பின் உதட்டை சுழித்துக் கொண்டு மீண்டும் அதை இருந்த இடத்தில் வைப்பதுமாக இருப்பதை பார்த்தவன் அவளின் சிறுபிள்ளைத்தனமான செய்கையில் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தவன் அவளின் பின்னால் நின்று கொண்டு அவளின் இடையை கைகளால் கட்டிக் கொள்ள அவனின் வரவை முபே உணர்ந்தவள் அவனை அண்ணார்ந்து பார்த்து சிரித்து விட்டு மீண்டும் தன் பணியில் கவனத்தை செலுத்தினாள்.


யுத்கார்ஷோ தான் ஓசை படாமல் வந்தும் கூட தன்னவள் தன் மனதை மயக்கிய அழகி தன் சின்னு தன்னை கண்டு கொண்டதை நினைத்து அவளின் காதலின் ஆழத்தை எண்ணி அவளை பிரம்மிப்பாய் அவளை காதலுடன் நோக்கியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டு “எப்பிடி பேபி நான் வந்தததா கண்டுபிடிச்ச...” என சரசமாய் வினவ...s
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதில் அவனை காதலுடன் பார்த்தவள் அவனின் புறம் திரும்பி அவனை அண்ணார்ந்து பார்க்க அவனோ ஆவலுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அவனை சீண்ட வேண்டும் போல் அவள் உள்ளம் குறுகுறுக்க “அதுவா..” என இழுத்தவள் “இந்த பெட்ரூம்குள்ள வேற யாரால இப்பிடி தைரியமா நுழைஞ்சு என் இடுப்ப கட்டிப்பிடிக்க முடியும்... உங்களால மட்டும் தானே.. அப்பிடித்தான் கண்டுபிடிச்சேன்...” என குறும்பாய் சிரிக்க அதை கேட்டு அவளை கோபமாய் முறைத்தவாறு அவளின் நெற்றியில் முட்டியவன் அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவளுமே அவனின் இறுகிய அணைப்பில் வாகாய் அவனுள்ளே அடங்கிக் கொண்டாள். அதில் திருப்தி புன்னகையொன்று அவனின் இறுகிய இதழில் அழகாய் மலர்ந்தது.


எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தனரோ முதலில் தன்னிலைக்கு வந்த மலர் அவனை அண்ணார்ந்து பார்த்தபடி “எனக்கு இன்னைக்கு என்ன புடவை போடுறதுன்னே புரிய மாட்டேங்குதுங்க...” என சிறு குழந்தையாய் சிணுங்க...


அதில் அவளை தன்னிடமிருந்து விலக்கி தன் கார்போர்டை நோக்கி சென்றவன் அதனுள் இருந்த தான் அவளுக்காய் ஆசையாசையாய் வாங்கி வைத்திருந்த புடவையை கையில் எடுத்தவன் அதை அவளிடம் நீட்டினான்.


அதில் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தவள் “அன்னைக்கு புடவை எடுக்கும் போது கூட நீங்க எதுவும் எடுக்கலையே.. அப்போ இது எப்போ எடுத்தீங்க...” என்க..


அவள் அப்படிக் கேட்பதற்கு காரணம் அவளுக்கு உடம்புக்கு முடியாததால் அவளை புடவைக்கு அனுப்பமனமின்ரி அவர்கள் வழக்கமாய் செல்லும் புடவைக் கடையில் இருந்து அவர்களையே ஆடைகளை கொண்டு வரும் படி கூறியிருந்தான். அத்துடன் நகை கடைகளிலிருந்தும் புது மாடல் நகைகளையும் கொண்டு வரும் படி பணித்திருந்தான். ஆக இந்த மொத்த விசேஷத்திற்கும் அவர்கள் அலைய வேண்டிய அவசியமேயின்றி செய்திருந்தான் அவளின் மனதை திருடிய அவளின் கள்வன்.


அவனோ பேச்சை மாற்றும் விதமாய் “அதெல்லாம் பிறகு சொல்றேன்... நீ முதல்ல போய் ரெடி ஆகு...” என்றபடி அவன் குளியலறைக்குள் நுழைய அவனை புரியாமல் பார்த்தவள் அங்கிருந்து நகர எத்தனிக்கும் போது அவனோ உள்ளிருந்து “பேபி என்னோட டவல் கொண்டு வா..” என்க அவள் தலையசைத்தாள்.


அவனோ “என்ன பேபி நான் கேட்டத தரப்போறீயா இல்லையா...” என கேட்க..


அவளோ “நான் தலைய ஆட்டினேனே...” என்றவள் அப்போது தான், தான் சொன்னதன் அபத்தம் புரிந்தவளாய் தலையில் அடித்துக் கொண்டு “ஆ... இதோ வரேன்...” என்றவள் அவனின் டவலை எடுத்துக் கொண்டு போய் குளியலறை கதவை தட்ட அதில் விஷமப் புன்னகையுடன் கதவை திறந்தவன் டவலுடன் சேர்த்து அவளையும் உள்ளே இழுத்திருந்தான்.


அதில் பதறியவள் “என்ன பண்றீங்க...” எனும் முன்பே அவளை ஷவரின் அடியில் நிறுத்தியவன் அவளை இறுக அணைத்திருந்தான்.


அதில் உடல் கூச அவனிடமிருந்து விலக முற்பட்டவளை “நீ இன்னும் வாஷ் பண்ணல பேபி சோ என்னோட சேர்ந்து நீயும் பிரெஷ் ஆகிக்கோ.. இல்லன்னா லேட் ஆகிடும் பாரு..” என சப்பை கட்டு கட்ட அதில் அவனை ஆனமட்டும் முறைத்தவள் பின் வேறு வழியில்லாததால் அவனுடன் இழைந்த படி ஒருவழியாய் குளித்து முடித்து வெளியே வந்த இருவரின் மனமும் ஏதோ ஒரு வகையில் நிறைந்திருந்தது.


வெளியில் வந்த மலர் தலையை துவட்டிக் கொண்டு அங்கிருந்த துணி மாற்றும் அறைக்குள் நுழைந்தவள் அப்போது தான் அந்த ஆடையை பிரித்துப் பார்த்தாள். பார்த்தவள் அதன் அழகில் மயங்கித் தான் போனாள். அத்துடன் தன் கணவனின் தேர்வை பார்த்து அசந்தும் போனாள்.


மில்க் பிங்க் நிறத்தில் இருபக்கமும் தங்க நிற வேலைப்பாடு செய்த அந்த ஷிபான் புடவையை கையில் எடுத்தவள் அதில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள். ஏதோ கணவனின் மார்பில் முகம் புதைப்பதைப் போலவே இருந்தது.


அதில் தன்னை எண்ணியே சிரித்தவள் அதன் பின் நேரம் செல்வதை உணர்ந்து அதை அவசரமாய் அழகாய் அணிந்தவளுக்கு அது தன் உடல் அங்கங்களை அப்படியே படம் பிடித்து காட்டுவதை போன்றிருக்கவும் ஒரு மாதிரியாய் ஆகிவிட்டிருந்தது. இருந்தும் தன் கணவன் ஆசையை வாங்கிக் கொடுத்தது என்பதால் ஒருவாறு அதை அணிந்தவள் தயக்கமாய் வெளியில் வந்தாள்.


அதற்குள் பட்டு வேஷ்டி சட்டையில் தயாராகி இருந்தவன் மனைவி வெளியில் வரும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தவனால் அவளிடமிருந்து தன் கண்களை பிரிக்கவே முடியவில்லை.


அவளுமே கணவனின் அழகில் சொக்கிப் போயிருந்தாள். அதில் அவனை பருகும் பார்த்து வைத்தாள். அவனுமே அவளின் அந்த விழி வீச்சில் மயங்கிய படி அதை வெளிக்காட்டாமல் அவள் அருகில் சென்றான்.


அவளின் நிறத்திற்கு அந்த புடவை வெகு பொருத்தமாய் இருக்க அவளின் அங்கங்கள் அப்பட்டமாய் வெளிப்பட அவனின் ஆண்மை அவளின் இந்த புதிய பரிணாமத்தை எதிர்பார்க்காமல் அவளை ஆட்கொள்ள துடிக்க அதில் வெகு பிரயத்தனப்பட்டு தன்னை கட்டுப்படுத்தியவன் அவளருகில் சென்று அவளின் கன்னத்தில் தன் இதழை அழுத்தமாய் ஒற்றியெடுத்தான்.


அதில் முகம் அந்திவானமாய் சிவக்க கூச்சத்தில் தலைகுனிந்தவளின் தாடையை ஒற்றை விரலால் நிமிர்த்தி அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தவன் “ரொம்ப அழகா இருக்கடி...” என்றான் தாபம் மேலிட குரல் குழைய..


அதில் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறக்க இதயம் இனிமையாய் அதிர இதற்கு மேலும் இங்கு நின்று தன்னால் தாக்குபிடிக்க முடியாது என்று எண்ணி வெளியேற போனவளை இழுத்து நிறுத்தியவன் அவளை அங்கிருந்து கண்ணாடி முன் கூட்டிச் சென்று அவளை அமர வைத்து அங்கிருந்த சிறு பெட்டியை அவளிடம் நீட்டினான்


என்னவென்று புரியாமல் அதை ஆசையுடன் வாங்கி திறந்தவள் அதனுள் இருந்தவற்றை பார்த்து வாயை பிளந்தாள்


அதனுள் ரூபியும் வைரமும் இழைந்த இளம் சிகப்பு நிற அணிகலன்கள் வீற்றிருந்தது. அதை பார்த்தும் கணவனை ஏறிட்டு பார்த்தவள் அவன் புன்னகை முகத்துடன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கவும் தன் மொத்த காதலையும் கண்களில் தேக்கி அவனை ஆசையுடன் பார்த்தவளின் விழிகளில் இருந்தது என்னவென்று அவனுக்கு புரியவில்லை.


ஆனால் அவளோ சிறிதும் தன் பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாட்களாய் தன்னை வெறுத்து தன்னை வீட்டை விட்டே விரட்டி தன் பெண்மையை இழிவு படுத்தி தன்னை மனுசியாய் கூட மதிக்காத தன்னவன் இப்போதெல்லாம் தன்னிடம் காட்டும் இந்த அக்கறை எதனால் என்று அவளுக்கு சத்தியமாய் புரியவில்லை. ஆனாலும் அவளால் அதை அவனிடம் தைரியமாய் கேட்க முடியவில்லை. அதனால் தன் பார்வையை அவனிடமிருந்து விலக்கி தன் கையில் இருந்த நகையையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதிற்குள் சிறு வலி. இதை வாங்கிக் கொடுப்பது கடமைக்காகவா இல்லை காதலாகவா... என்ற குழப்பம் அவளை சூழ்ந்து கொண்டது. இருந்தும் அதை அவனிடத்தில் வெளிப்படுத்தி இந்த மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ள விரும்பாமல் “தேங்க்ஸ்ங்க...” என்றவள் அவனிடமே அதை கொடுத்து “நீங்களே போட்டுவிடுங்க..” என ஆசையுடன் கூற அவனும் ஆசையுடன் அதை வாங்கிக் கொண்டான்.


தன்னவள் தன்னிடத்தில் எதை வெளிப்படுத்தி விடக்கூடாதென மறைத்தாளோ அதை அவளின் விழிகளில் இருந்தே படித்தவன் ‘இன்னிக்கு உனக்கொரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் பேபி... இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு’ என மனதுக்குள் கூறிக் கொண்டான். அவளை தன் விழிகளால் மொய்த்துக் கொண்டே.


பின் கீழிருந்து அழைப்பு வரவும் தன் மனைவியின் கழுத்தில் அந்த நெக்லஸ்ஸை அணிவித்தவனின் கைகள் தன் அனுமதியின்றியே அவளின் கழுத்தில் விளையாட ஆரம்பிக்க அவளோ உடல் சிலிர்க்க மயிர்கால்கள் கூச முள்ளந்தண்டு சிலிர்த்தெழும்ப அவனை கெஞ்சலாய் பார்த்தவள் “சீக்கிரங்க... நேரம் ஆயிடிச்சு...” என்று மெதுவாய் முணுமுணுத்தாள்.


அதையெல்லாம் கேட்பவனா அவன்... அதனாலேயே அவள் போதும் போதும் என அலறும் மட்டும் அவளுக்கு நகையை அணிவித்து விடுகிறேன் எனும் பெயரில் அவளை சீண்டி சிலிர்க்க வைத்தவன் அவளை சிவக்க வைத்த பின்பு தான் தன்னிடமிருந்து விடுவித்தான்.


அவன் விடுவிப்பதற்காகவே காத்திருந்தவள் அவன் தன்னை விட்டதும் ஒரே ஓட்டமாய் கீழே ஓட அவனோ அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டு அவள் பின்னே சென்றான்.


அவர்கள் இருவரையும் பார்த்திருந்த அனைவருக்கும் அவர்களின் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாய் இருக்க அனைவரது கண்களும் அவர்கள் இருவரின் மீதும் தான் இருந்தது.


அதற்குள் ஐயர் நல்ல நேரம் முடிவதற்குள் குழந்தையின் காதில் பெயரை சொல்லும் படி கூற அதை கேட்டு சிரித்த யுத்கார்ஷ் குழந்தையின் காதருகில் குனிந்து “ஆஷ்னா மைறா டெஸா தேவி” என்று மூன்று முறை கூற அதை கேட்டு தேவியின் குடும்பத்தினரும் மலரும் அவனை கண்களில் மின்னிய கண்ணீருடன் ஏறிட்டனர்.


அதில் தன் மனைவியின் கரத்தை அவன் பற்றி அழுத்த அவளோ சந்தோசத்தில் அவனின் தோளில் சாய்ந்து கொண்டு அவனை பார்த்தாள். அதை அங்கிருந்த கேமரா அழகாய் தனக்குள் உள்வாங்கிக் கொண்டது.


தேவியின் குடுமத்தினருக்கோ தங்கள் வீட்டு வாரிசே மீண்டும் பிறந்து வந்திருக்கின்றது என்பது போல் ஒரு நிறைவு. மலருக்கோ தன் தேவிம்மா என்றும் தன்னுடனே இருப்பாள் என்ற சந்தோஷம். யுத்கார்ஷிற்கோ தன் மனைவியின் மகிழ்ச்சி ஒன்றே அவனின் மனநிறைவு.


அத்துடன் இனிதே பெயர் சூட்டும் வைபவம் முடிவுற வந்திருந்தவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்தி விட்டு அடுத்த சுபகாரியத்திற்கு தயாராக சிறிது நேரத்தில் அதுவும் இனிதே ஆரம்பித்தது.


நல்ல நேரத்தில் அவர்களின் முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்ட ஜெனியும் ஒமியும் ஒருவரை ஒருவர் காதலுடன் விழிங்கிக் கொண்டிருக்க ஒமியோ மோதிரம் மாற்றும் சாக்கில் தன்னவளின் உள்ளங்கையில் கோலம் போட அவளோ வெட்கத்தில் தவிக்க அகிலாண்டேஸ்வரியோ கண்டிப்புடன் ஒமியை முறைக்க இளவட்டங்களோ மீண்டும் ஒரு காதல் காட்சியை பார்த்த சந்தோசத்தில் தங்களுக்குள் கிசுகிசுக்க யுத்க்கார்ஷும் மலரும் தங்களுக்குள் பார்வையை பாரிமாறிக் கொண்டனர்.


எப்போதும் யாருக்கும் அடிபணியாமல் தலைநிமிர்ந்தே வாழ பழக்கப்பட்டிருந்த யுத்கார்ஷ் முதன் முறையாய் அவை அத்தனையையும் தன்னவளிடம் சமர்பித்திருந்தான். அவளிடம் மட்டுமே தலைகுனிந்தான். அவளிடம் மட்டுமே மென்மையை கையாண்டான். அவளிடம் மட்டுமே இணங்கியும் போனான். மொத்தத்தில் அவளின்றி தான் இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான். ஆனால் அவள் அதை புரிந்து கொண்டாளா என்பதற்கு தான் விடையில்லை.


காதல் என்ற மூன்றெழுத்தில் தான் எத்தனை எத்தனை மாயாஜாலங்கள். அது ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு வகை மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. வன்மையானவனை மென்மையாய் மாற்றியதும் அந்த காதல் தான். மென்மையானவனை வன்மையாய் மாற்றியதும் அந்த காதல் தான்.


அதன் பின்பு ஒமியின் வேண்டுகோளுக்கிணங்க மாசி மாதம் பதின்நான்காம் திகதி திருமணத்தை வைத்துக் கொள்வதாக நாள் குறிக்கப்பட அத்தனையும் சுபமாய் முடிவு பெற்றது..


எந்த காதலர் தினத்தில் ஒமி தன்னவளை காயப்படுத்தினானோ அந்த காதலர் தினத்திலேயே அவளை திருமணம் செய்யவும் ஆசை கொண்டான். ஒரு முறை அந்த நாளில் அவளை காயப்படுத்தி விட்டோம். இனி வாழ்க்கை முழுவதும் அந்த நாளில் அவள் சந்தோசத்துடனே இருக்க வேண்டும் என்பது அந்த காதலனின் எண்ணம்.


அதன் வந்த உறவினர்கள் அனைவரும் இரு தம்பதியினரையும் வாழ்த்தி விட்டு விடைபெற இறுதியில் எஞ்சிய குடும்பத்தினர் அனைவரையும் பேச்சில் மூழ்கி விட அவர்கள் அனைவரிடமும் விடைபெற்று வெளியேறினாள் வின்னி.


இத்தனை நாள் தன்னுடன் இருந்தவள் இப்போது திடீரென பிரிந்து செல்வதில் பின்டோ கவலையுடன் நிற்க ஒமியோ தன்னவளின் கவலையில் தானும் அவளுக்காய் வருந்தி வின்னியிடம் இன்னும் சிறிது நாட்கள் இங்கு இருக்கும் படி கூற அவளோ உங்கள் திருமணத்திற்கு கண்டிப்பாய் வருவேன் என்ற வாக்குறுதியுடன் அங்கிருந்து மனம் கணக்க புறப்பட்டாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உடன் துணைக்கு வர முன்வந்தவர்களை தடுத்து தானே போய்க் கொள்வதாக கூறியவள் அங்கிருந்து வெளியேறி ஏர்போர்ட் நோக்கி சென்றாள்.


போகும் முன்பு கடைசியாய் ராமை சந்தித்த இடத்திற்கு வண்டியை விடச் சொன்னவள் அந்த இடத்தை சில நிமிடங்கள் ஆசை தீர பார்த்துவிட்டே புறப்பட்டாள். கண்களில் கண்ணீர் தளும்பியது. ஆனால் அழ முடியவில்லை. யார் தோளிலாவது சாய்ந்து தன் மனக்கவலையை எல்லாம் கொட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் சாய்வதற்கு தோள் இருக்கவில்லை. அதனால் கார் சீட்டில் தலையை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள்.


நினைவுகள் அனைத்தும் பின்னோக்கி ஓடியது. தன்னவனை முதன் முறை சந்தித்தது. அவனை பார்த்ததுமே தன்னை அறியாமல் தனக்குள் மலர்ந்த காதல். அவனை அறியாமலேயே அவனை நிழல் போல் தொடர்ந்தது. அதன் பின்பு அவனிடம் காதலை கூற முயன்றது. அவன் தன் தலையில் இடியை இறக்கியது. அதன் பின்பும் வெட்கமின்றி அவனின் மார்பில் தஞ்சமடைந்து அவனுக்காய் ஏங்கியது. இதோ அன்றிலிருந்து இன்று வர அவனுக்காய் ஏங்கிக் கொண்டிருப்பது. என அனைத்தும் அவளின் கண்களில் வலம் வர அதற்குள் கார் டிரைவர் “மேடம்... இடம் வந்திடிச்சு...” என்க.


அதில் முகத்தை அழுந்த துடைத்தவள் காரிலிருந்து இறங்கி தன் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அமெரிக்கா செல்பவர்களுக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்க செக்கிங் ஏரியாவிற்குள் நுழைய போனவளை தடுத்தது “வினு...” என்ற அழைப்பு...


அதில் யாரை கூப்பிடுகிறார்கள் எனப் புரியாமல் மீண்டும் நடையை எட்டிப் போட்டவளின் காதில் மீண்டும் அதே பெயர் ஆனால் அழுத்தமாய் சற்று சத்தமாகவும் கூட.


நடையை எட்டிப்போட்டவளின் கால்கள் ஷாக் அடித்தது போல் அந்த இடத்திலேயே அசையாமல் நின்றது. அவளின் மனம் ‘உண்மையா...’ என உள்ளுக்குள் கேள்வி எழுப்பியது.


‘உண்மையாக இருக்க வேண்டுமே....’ என அவளின் காதல் மனம் பரபரப்புற்றது. நெஞ்சம் அதி வேகமாய் துடித்தது. முகம் மாத்தாப்பூவாய் மலர்ந்தது.


அதில் படபடப்புடன் கண்கள் ஏக்கத்தில் துடிக்க நெஞ்சு சத்தமாய் மத்தாளமிட உடல் நடுங்க திரும்பியவளின் முன்பு சிரிப்புடன் நின்றிருந்தான் அவளின் ராம்.


அவனை பார்த்தும் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அவளின் கண்ணீர் அவள் அனுமதியின்றியே கண்களில் இருந்து வடிய அவனையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கால்கள் அசைய மறுத்து நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்று விட்டது போலிருந்தது.


அவனுமே அந்த நிலையில் தான் இருந்தான். அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தபடி. அவள் விரும்பிய அவள் காதலனாய் நின்றிருந்தான்.


எத்தனை நேரமாய் அவர்களின் மோன நிலை நிலைத்ததோ அவளின் விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வரவும் என்ன செய்வதென புரியாமல் மலங்க மலங்க விழித்தபடி நின்றாள்.


அவளின் அந்த தோற்றத்தில் கவர்ந்திழுக்கப்பட்டவன் அவளருகில் வந்தான். இத்தனை நாட்களில் அவள் தான் அவனிடம் சென்று வம்படியாய் பேசுவாள். இதுவரையிலும் ஒரு நாள் கூட அவன் அவளை நெருங்கி வந்ததில்லை. இன்று தான் முதன் முதலாய் அவளை நோக்கி அழுத்தமான நடையுடன் வந்தான்.


அதில் உள்ளம் அதிர அவனையே வெறித்துப் பார்த்தவள் அவன் அருகில் நெருங்கியும் கூட விலக முடியாமல் அவனையே விழி விரித்து பார்த்தபடி சிலையாய் சமைந்து நின்றாள்.


அவளை காதலுடன் ஒரு சில நிமிடங்கள் பார்த்தவனோ அவள் என்ன ஏதேன யூகிக்கும் முன் அவளை இறுக அணைத்திருந்தான். இனி என்றுமே உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்ற உறுதியுடன்.


இவன் இப்படி திடீரென அணைப்பான் என்று எதிர்பாராத வின்னி அவனை ஆச்சர்யத்துடன் பார்க்க அவனோ தாங்கள் இருக்கும் இடமும் சுற்றுப்புற சூழலும் மறந்து ஒருவரை ஒருவர் இறுகித் தழுவிய நிலையில் இருந்தவர்கள் பின்னால் இருந்து கேட்ட “இப்போ ஹாப்பியா...” என்ற கூவலில் தங்கள் நிலையை எண்ணி வெட்கத்துடன் விலகியவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த யுத்கார்ஷ்-மலர், ஜோகி-பின்டோ, யக்ஷித்-ஸ்ரேயா, வெரோனிக்கா-ஆஷிரா என அனைவரையும் பார்த்தும் முகம் செந்தணலாய் சிவக்க சட்டென ராமின் பின்னால் மறைந்து கொண்டாள்.


அவளின் வெட்கத்தை பார்த்து அவளை ஓட்டுவதற்காக பெண்கள் கூட்டம் அவள் புறம் செல்ல ராமை தங்கள் பக்கம் இழுத்தெடுத்திருந்தான் ஒமி.


அதில் அவனை சங்கடத்துடன் பார்த்த ராம் லேசாய் வெட்கப்பட அவனின் வெட்கத்தை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்த ஒமி “நல்லா தேறிட்டீங்க பாஸ்...” எனக் கூறியபடி அவனை அணைத்துக் கொண்டான்.


யக்ஷித்தும் தன் பங்கிற்கு அணைத்து வாழ்த்து தெரிவிக்க யுத்கார்ஷோ தன் கெத்து குறையாமல் லேசாய் சிரித்தபடி தலையசைத்தவன் அங்கு வந்திருந்த தன் தொழில் முறை நண்பனுடன் உரையாடியபடி அங்கிருந்து அகன்றான்.


ராமோ யுத்கார்ஷின் செயலில் மனம் சுருங்காமல் அவனின் வசதியை எண்ணி பிரம்மித்தவன் அவன் இத்தனை தூரம் வந்ததே பெரிது என எண்ணிக் கொண்டு மற்ற இருவரிடமும் ஐக்கியமாகி விட்டிருந்தான்.


இப்பொதும் யுத்கார்ஷ் ஸ்ரேயாவை மன்னிக்காவிடிலும் அவனின் சொந்த விஷயத்தில் தலையிடுவதற்கு தனக்கு உரிமையில்லை என எண்ணிக் கொண்டு விலகிவிட்டான். அவரவர் வாழ்க்கை அவரவர் தான் வாழ்ந்தாக வேண்டும். அந்த ஒரு வாழக்கையை அவர்கள் விரும்பியவருடனேயே வாழட்டும் என யக்ஷிதை அவன் போக்கிலேயே விட்டிருந்தான்.


வின்னியின் அருகில் சென்ற பெண்கள் அவளை இழுத்தணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவளோ கண்களில் பூத்த கண்ணீருடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


வெரோனிக்காவும் ஆஷிராவும் பின்டோவின் அழைப்பின் பெயரில் சற்று நேரத்தின் முன்பு தான் சென்னை வந்தடைந்திருந்தனர். வந்தவர்களை கையோடு இங்கு தான் அழைத்து வந்திருந்தான் பின்டோ. ஏற்கனவே அவர்களுக்கு இது தெரியும் இருந்தாலும் வின்னிக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க முயற்சி செய்தவர்கள் யாரும் அவளிடம் வாயை கூட திறக்கவில்லை.


வின்னிக்குமே அவர்களின் இந்த நாடகம் இப்போது தான் புரிந்தது. அதில் பின்டோவின் தலையில் நச்சென கொட்டியவள் “எதுக்காக என்கிட்டே இருந்து மறைச்சீங்க...” என்க அவர்களோ “எங்களுக்கு டைம் பாஸ் ஆக வேணாமா....” என கோரஸாய் கத்த அதில் அவர்களை மொத்துவதற்காக துரத்தினாள் வின்னி.


இதை எப்போதும் போல் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆஷிரா. அவளுடன் இப்போது மலரும். முகத்தில் பூத்த சிரிப்புடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்களை வேடிக்கை பார்க்க அந்நேரம் தன் உரையாடலை முடித்துக் கொண்டு வந்து சேர்ந்த யுத்கார்ஷின் விழிகளில் மனைவியின் புன்னகை முகம் பட அதற்கு மேல் அவனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.


அவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மனைவியை தாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்க மற்றவர்களோ அவனை பார்த்தும் அத்தனை நேரம் பொது இடம் என்பதை கூட மறந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டு அமைதியாய் நிற்க அதை பார்த்து உள்ளுக்குள் அடக்கமாட்டாமல் சிரித்த யுத்கார்ஷ் வெளியில் இறுகிய முகத்துடன் ‘போலாம்...’ என தலையை அசைக்கவும் ‘சரி’ என்றவர்கள் அவரவர் வந்த வாகனங்களில் புறப்பட யுத்கார்ஷும் மலரும் தங்கள் ரோல் ராய்ஸ் காரில் ஒரு முக்கியமான இடத்தை நோக்கி புறப்பட்டனர்.


யுத்கார்ஷ் தன்னவளுடன் செல்லும் இந்த கார் பயணத்தை ரசித்தபடி வந்து கொண்டிருக்க மலரும் தன்னவனுடனான இந்த பயணத்தை ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள்.


பல நாட்களின் பின்னான இந்த பயணம் இருவர் மனதிலும் ஏதோ ஏதேதோ எண்ணத்தை கிளப்பி இருக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவுவதும் மற்றவர் பார்க்கும் போதும் வேடிக்கை பார்ப்பது போல் மறுபுறம் திரும்புவதுமென இருந்தனர்.


அதில் இருவருக்குமே தங்களின் இந்த சிறு பிள்ளைத்தனமான செயலை எண்ணி உள்ளுக்குள் சிரித்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவிக் கொண்டனர். யுத்கார்ஷ் ஒரு கையால் காரை செலுத்திக் கொண்டு மற்றக் கையால் மனைவியின் கரத்தை இறுக பற்றியவன் அவளை மயக்கத்துடன் பார்த்தான்.


கணவனின் பார்வையில் முகம் சிவந்தவள் வெட்கத்துடன் கீழுதட்டை பற்களால் அழுந்த கடிக்க அதை பார்த்தவன் “ஏய்..” என கத்திக் கொண்டு காரை நிறுத்த அதில் பயந்து போனவள் அவனை அதிர்ச்சியுடன் பார்க்க அவனோ “பேபி என்ன பண்ற நீ...” என அதட்ட அவளோ தான் என்ன செய்தோம் என புரியாமல் குழம்பிப் போனவள் புரியாமல் அவனை பார்க்க அவனோ விஷம புன்னகையுடன் “நான் மட்டுமே யூஸ் பண்ற இடத்த நீ என்ன பாடுபடுத்திர பேபி... எனக்கு அது கொஞ்சங்கூட பிடிக்கல...” என்க


அவளோ “நான் என்னங்க பண்ணேன்...” அப்பாவியாய் வினவ...


அதில் அவளை செல்லமாய் முறைத்தவன் அவளருகில் நெருங்கி அவள் முகம் நோக்கி திரும்பியவன் அவள் நெற்றியுடன் தன் நெற்றியை முட்டிக் கொண்டு தன் ஒற்றை விரலால் அவளின் சிவந்த இதழ்களை பற்றி வருடியவன் “இது எனக்கு மட்டுமான பிளேஸ் பேபி... அத நீ எதுவும் பண்ணக்கூடாது...” என்க


அவளோ அவனின் அருகாமையையிலும் அவனின் பிரத்தியேக வாசனையிலும் மனம் மயங்கியவளின் தளிர் மேனி அவள் கட்டுப்பாடின்றியே அவனின் மார்பில் தஞ்சமடைய அதில் அவளின் முடியை கோதியவன் அவள் விழிகளுக்குள் தன் விழிகளை கலந்து அவளை காதலுடன் பார்த்தவாறு அவளிடமிருந்து விலகியவன் மீண்டும் காரை செலுத்தினான்.


ஆனால் அவளால் அத்தனை சீக்கிரத்தில் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் போக அதை மறைக்கும் பொருட்டு வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.


அதில் அவன் வீட்டுக்கு செல்லும் வழியில் இல்லாது வேறு வழயில் சென்று கொண்டிருக்கவும் அவனை திரும்பி பார்த்தவள் “எங்கயாவது போறோமாங்க...” என கேள்வியெழுப்ப..


“ரொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட பேபி..” என அவளை கிண்டலடித்தவன் அவள் தன்னை கேள்வியாய் பார்த்துக் கொண்டிருக்கவும் “ம்ம்...” என தலையசைத்தான்.


அவளோ “எங்க போக போறோம்..” என ஆவலுடன் கேட்க...


“அது இப்போ சொல்ல மாட்டேன்.. ஒரு சின்ன சர்ப்ரைஸ்...” என்றான் சிரித்துக் கொண்டே...


அவளோ அது என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் “ப்ச்... என்னன்னு சொல்லுங்களேன்...” என கெஞ்ச அவனோ “சர்ப்ரைஸ்னா அது சர்ப்ரைஸா தான் இருக்கணும்.. அதெல்லாம் சொல்லக்கூடாது பேபி... இன்னும் கொஞ்ச நேரத்தில உனக்கே தெரிஞ்சிடும்..” என்க...


அவளோ “இல்ல..இல்ல அது வரைக்கும் என்னால பொறுமையா இருக்க முடியாதே... என் மண்டையே வெடிச்சிடும்...” என சிணுங்கினாள்..


இந்த ஒரு மாதகாலமாய் இருவருமே இப்பிடித்தான். மனதை வெளிக்காட்டா விடிலும் தயக்கமின்றி இருவரும் சரளமாய் உரையாட ஆரம்பித்திருந்தனர். அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மௌனத்தை உடைத்து பழைய மலராகவே மாற ஆரம்பித்திருந்தாள். எப்போதும் மௌனமாய் அமைதியாய் இருக்கும் அவளை மாற்ற வேண்டும் என எண்ணிய அவனின் முயற்சி இப்போது வெற்றியை அடைந்திருந்தது.


ஆரம்பத்தில் கணவனுடன் பேச தயங்கினாலும் அவனின் இணக்கத்தில் அவள் தன் மௌனம் எனும் முகமூடியை அகற்றி இப்போது பழையபடியே மாறியிருந்தாள்.


யுத்கார்ஷ் தன்னவளின் சிணுங்களில் மெய் மறந்தவன் தன் பயணத்தை இத்துடன் முடித்தால் என்ன என்று கூட யோசித்து விட்டான். அந்தளவு தன் ஒவ்வொரு செய்கையாலும் அவனின் கட்டுப்பாட்டை தளர்த்திக் கொண்டிருந்தாள் அவனின் மலரினும் மென்மையான மனம் கொண்ட அவனின் செல்ல மனைவி.


இருந்தும் இன்னும் சில நிமிடங்கள் தான் என தன்னை பெரிதும் கட்டுப்படித்திக் கொண்டு “பேபி கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிறியா ப்ளீஸ்...” என கெஞ்ச அதில் அவனை முறைத்தவள் உதட்டை சுழித்துக் கொண்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.


கார் சென்று கொண்டே இருந்ததே தவிர அது நிற்கும் உத்தேசத்தில் இல்லை என்பதை உணர்ந்த மலர் அதற்கு மேல் வேடிக்கை பார்க்கவும் மனமின்றி கணவனிடம் பேசவும் வழியின்றி சீட்டில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.


அவள் தூங்க ஆரம்பித்த சில நொடிகளில் கார் அதன் இயக்கத்தை நிறுத்தியிருக்க காரில் இருந்து இறங்கிய யுத்கார்ஷ் மலர் இருக்கும் பக்கம் வந்து அவள் இறங்குவதற்காய் கதவை திறந்தவன் “பேபி...” என்றழைக்க அவனின் அழைப்பில் திடுக்கிட்டு எழுந்தவள் சுற்று முற்றும் பார்த்துக் அவனை கேள்வியாய் நோக்க அவனோ ‘வா’ என தலையசைத்த்வன் அவள் இறங்குவதற்காய் கையை நீட்ட அவனின் கையை பற்றியபடி இறங்கியவள் இருளில் மூழ்கி இருந்த அந்த இடத்தை குழப்பத்துடன் ஏறிட்டாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனோ ஒன்றும் பேசாது அவளை அழைத்துச் சென்றவன் அங்கிருந்து அறையினுள் அவளை அனுப்பி “நான் வெளியில வெயிட் பண்றேன் வா பேபி...” என்றவாறு அங்கிருந்து செல்ல அவளோ “என்னங்க...” என்றவள் அவன் திரும்பிப் பார்க்காமலே செல்லவும் மனதிற்குள் அவனை திட்டி தீர்த்தவள் தயக்கத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தாள்.


உள்ளே சில அழகுக்கலை நிபுணர்கள் அவளுக்காய் காத்திருக்க அவர்களை புரியாமல் பார்த்தவள் ஒன்றும் பேசத் தோன்றாது அமைதியாய் நிற்க அவர்களோ அவள் உள்ளே நுழைந்ததும் மரியாதை நிமித்தமாய் எழுந்து நின்றவர்கள் “வாங்க மேம்...” என அவளை உள்ளே அழைத்துச் சென்று “நீங்க பிரெஷ் ஆகிட்டு வந்தீங்கன்னா ஸ்டார்ட் பண்ணிடலாம்...” என்றனர்.


அவளோ ‘இவங்க என்னத்த ஸ்டார்ட் பண்ண போறாங்க... அதுக்கு நான் எதுக்கு பிரெஷ் ஆகணும்’ என ஒன்றும் புரியாமல் இதற்கெல்லாம் காரணமான கணவனை கையில் கிடைத்தால் கைமா ஆக்கிவிடும் நோக்கில் அவர்களை பார்த்து தலையசைத்தவள் அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து பிரெஷாகி வெளியில் வர அவள் வந்ததும் அவளிடம் ஒரு கவரை கொடுத்து அணியுமாறு கூறியவர்கள் அங்கிருந்த துணிமாற்றும் அறையை காண்பிக்க தன்னை நடப்பது எதுவும் புரிபடாமல் மண்டையை உடைத்துக் கொண்டு அவரகள் சொல் பேச்சு கேக்கும் பொம்மையை அங்கிருந்த துணி மாற்றும் அறைக்குள் நுழைந்தவள் அந்த கவரை பிரித்து அதனுள் இருந்த ஆடையை வெளியில் எடுத்தவள் அதன் அழகில் மீண்டும் மெய் மறந்து போனாள்.


இருந்தும் வெளியில் நின்றிருந்தவர்கள் எதற்காக இதை தன்னிடம் கொடுத்து அணிய சொல்கிறார்கள் என ஒன்றும் புரியாமல் அதனுள் இருந்த அழகிய டிசைனர் ஆடையை எடுத்தவள் ஒருவாறாய் அதை அணிந்து கொண்டு வெளிவர வெளியில் நின்றவர்கள் எந்த வித ஒப்பனையுமின்றி தங்கசிலை போல் நின்றிருந்த மலரை விழியகல பார்த்தவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அவளின் அழகை மேலும் அழகாக்கினர்.


அவள் அணிந்திருந்த ஆடைக்கு பொருத்தமாய் அவளுக்கு அணிகலன்கள் அணிவித்து முடியை விதவிதமாய் அலங்கரித்து முகத்திற்கு லேசான மேக்அப் போட்டவர்கள் அவளின் செந்நிற இதழில் அவளின் ஆடையின் நிறத்திற்கேட்ப உதட்டுச் சாயத்தை பூசி தங்கள் அலங்காரத்தை முடித்துக் கொண்டு அவளை பார்த்தவர்கள் அப்படியே வாயை பிளந்து கொண்டு நின்றனர்.


அதில் அங்கிருந்த பெண்ணொருத்தி அவளின் அழகில் மயங்கி “மேம் என்னோட கண்ணே பட்டிடும் போல ரொம்ப அழகா இருக்கீங்க...” என்றவாறு அவளுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்க அதில் மென்மையாய் இதழ் பிரித்து சிரித்தவள் கண்ணாடி முன் சென்று தன்னை பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.


‘இது நான் தானா...’ என ஆச்சரியத்துடன் விழி விரித்து பார்த்தவளுக்கு தான் சிறு பிள்ளை போல் தோற்றமளிப்பதை பார்த்து அத்தனை ஆச்சரியமாய் இருந்தது.


இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டு தன் முன் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களை பார்த்து தயக்கமாய் புன்னகை பூத்தவள் “வெளியில் போகட்டுமா...” என கேட்க அவர்கள் ‘ஆம்’ என தலையசைக்கவும் வெளியில் சென்றாள்.


எந்தவழியால் வந்தோம் என்பது மறந்து விடும் அளவிற்கு மொத்த இடமும் இருளில் மூழ்கி இருந்தது. அதில் உள்ளுக்குள் சிறு நடுக்கத்துடன் தான் அணிந்திருந்த ஆடையை கைகளில் தூக்கிப் பிடித்தவள் தன் முன் இருந்த பாதையில் காலை வைத்தாள்.


அவள் காலை வைத்ததும் அவள் கால் பட்ட இடத்தில் இருப்பக்கமும் வைக்கப்பட்டிருந்த விளக்குகள் எரிய ஆரம்பித்தது. அதை பார்த்து ஆச்சரியமடைந்தவள் மீண்டும் அடுத்த எட்டை எடுத்து வைக்க அவள் கால் வைக்க வைக்க அங்கிருந்த ஒவ்வொரு மின் விளக்குகாக எரிய ஆரம்பிக்க அதை பார்த்து சிறு குழந்தையின் மன மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்தவள் மொத்த விளக்குகளும் எரிய ஆரம்பித்ததும் தான் அந்த இடத்தை கண்களால் அலசினான்.


அந்த மொத்த இடமும் சீரியல் விளக்குகளாலும் ரோஜா இதழ்களாலும் மலர் அலங்காரங்களாலும் வண்ண வண்ண காகிதங்களின் கைவண்ணத்திலும் அழகு மயமாய் காட்சி அளித்தது.


அவை அத்தனையையும் விழி விரித்து தன்னை மறந்து வாயை ஆவேன விரித்த படி பார்த்தவளின் அருகில் வந்து சாதாரணமாய் கைவைப்பது போல் அவளின் விரிந்திருந்த வாயை மூட அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் மனதின் உள்ள சந்தோசத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாது... அந்தளவு உணர்ச்சிப்பிளம்பாய் நின்றிருந்தான்.


அதில் அவளருகில் குனிந்து “பிடிச்சிருக்கா...” என அவளின் காதில் தன் மீசையை உரசியவாறு கேட்க அவனை நிமர்ந்து பார்த்தவள் “ரொம்ப...” என்றாள் சிரித்துக் கொண்டே.


அதில் தானும் சிரித்தவன் “வா” என்றவாறு தன் கைகளை அவளை நோக்கி நீட்ட அதை அழகாய் பற்றியவள் அவனுடன் சேர்ந்து நடந்தபடி மேடை ஏறினாள்.


அவை அத்தனையையும் பார்த்து பார்த்து செய்வதற்காக பணத்தை தண்ணீராய் கரைத்திருந்தான் யுத்கார்ஷ். அந்த மொத்த இடமும் பணத்தின் செழுமையில் அழகாய் மின்னியது. தன் மனைவியிடம் தன் காதலை வெளிப்படுத்த நினைத்தான். அதை இந்த உலகமே பார்க்க வேண்டும் என ஆசை கொண்டான்.


அந்த இடத்தை மீடியா மக்கள் சுற்றி வளைத்திருந்தனர். அவனின் தொழில் துறை நண்பர்கள் அத்தனை பெரும் அந்த இடத்தில் குழுமி இருந்தனர். அவனின் மொத்த குடும்பமும் இவர்களின் வரவை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தனர்.


இவர்கள் மேடையை அடையும் வரை இசை முழக்கங்கள் நின்ற பாடாய் இல்லை. ஒரு பக்கமும் நடனம் மறுபக்கம் இசையுமென அங்கு நின்றவர்கள் எதை பார்ப்பது என குழம்பிப் போய் நின்றிருந்தனர்.


இத்தனை நேரம் தானும் கணவனும் மட்டுமே இருக்கிறோம் எனும் நினைவில் அவனுடன் உரசிக் கொண்டிருந்த மலர் அப்போது தான் அங்கு நின்றவர்களை கவனித்தவளாய் அவனிடமிருந்து விலக எத்தனிக்க அவனோ அவளை விலக விடாமல் அவளின் இடையில் தன் கைகளை அழுத்திக் கொண்டிருந்தான்.


அவை அத்தனையும் உலகம் முழுவதும் லைவ் டெலிகாஸ்ட் (live telecast) ஆகிக் கொண்டிருந்தது.


மலரோ இத்தனை பேரின் முன்பு சற்றும் கூச்சமில்லாமல் தன் இடையை வளைத்து பிடித்துக் கொண்டிருக்கும் கணவனை என்ன செய்தால் தகும் என்ற நினைவில் அவனை முறைப்பது போல் பாவ்லா காட்டிக் கொண்டிருந்தாள். அவனோ அவளின் முறைப்பில் அவளை பார்த்து கண்சிமிட்ட அவளோ அவனின் கண்சிமிட்டலில் முகம் ரோஜாப்பூவாய் மலர தன் முத்துப்பற்களை காட்டி அழகாய் புன்னகைத்தாள்.


அதில் அவளின் காதருகில் குனிந்து “இப்பயெல்லாம் பப்ளிக் வச்சு சிரிக்காத பேபி... அப்றோம் என்னால என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியாது...” என கூற...


இத்தனை நாட்கள் அவன் அவளுடன் பேசினாலும் என்றுமே அத்துமீறி பேசியதுமில்லை அப்படி நடந்து கொண்டதுமில்லை. என்றும் இல்லாத திருநாளாக இன்று அவன் தாபத்துடன் பார்ப்பதும் சிரிப்பதும் தன்னை அளவுக்கதிகமாய் நெருங்குவதையும் பார்த்தவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.


இதோ இப்போது கணவனின் இந்த பேச்சில் அவள் அவனை ஆச்சரியம் கலந்து புரியாமையுடன் பார்க்க அவனோ நான் புரிய வைக்கிறேன் எனும் ரீதியில் அவளிடமிருந்து பிரிந்து முன்னே வந்தவன்...


“குட் எவினிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்” என்றவன் மனைவிக்கு ஆங்கில அறிவு பெரிதாக இல்லையென்பதால் தமிழிலேயே உரையாட ஆரம்பித்தான்.


“என்னோட மனைவிக்கு தமிழ் என்றால் ரொம்ப பிடிக்கும். அது என்னவோ தெரியல இப்போ எல்லாம் அவளுக்கு பிடிக்கிற எல்லாமே எனக்கும் பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு சோ நான் இப்போ தமிழ் மொழியிலேயே பேச ஆசைபடுகிறேன்...” என்றவன்...


“உங்க எல்லாரையும் நான் இங்க வரவச்சதுக்கு காரணம் ஒரு முக்கியமான ஒன்னை சொல்றதுக்கத் தான்...”


“எங்களோட திருமணம் எங்களோட பேமிலி டிசைட் பண்ண அரேஜென்ட் மேரேஜ்... பட் என்னோட மனைவி என்னை திருமணத்திற்கு முன்பிருந்தே காதலிக்க ஆரம்பிச்சிருக்கா மை பேட் லக் எனக்கு அது இப்போதான் தெரிந்தது. அது தெரிந்ததும் ரொம்ப எக்ஸ்சைட் ஆகிட்டேன். என்னோட மனைவி என்னை ஆரம்பத்திலிருந்தே காதலித்திச்சிக்கிட்டு இருக்கான்னு தெரிஞ்சதும் என்னோட மனசும் அவளை கொஞ்சம் கொஞ்சமா காதலிக்க ஆரம்பிச்சிச்சு... இப்போ அந்த காதல் எந்தளவுக்கு இருக்குன்னா அதை என்னால எசேக்டா சொல்ல முடியல அந்தளவுக்கு நான் என்னோட மனைவியை காதலிக்கிறேன்... சோ என்னோட காதல அவகிட்ட சொல்லனும்னு தான் இந்த அரேஞ்ச்மென்ட் பண்ணேன். இப்போ நான் என்னோட மனைவிக்கிட்ட என்னோட காதல சொல்லி ப்ரொபோஸ் பண்ண போறேன்.. பர்ஸ்ட் டைம்...” என்றவன் தன்னவளின் புறம் திரும்பினான்.


அவளோ எந்தவகை உணர்ச்சியை பிரதிபலிப்பது எனப்புரியாமல் கண்களில் சொரிந்து பொங்கிய கண்ணீரை கூட துடைக்க திராணியற்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவன் பேச ஆரம்பித்ததும் சாதாரணமாய் கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் தன் காதலை அறிந்தது பற்றி பேச ஆரம்பித்ததுமே அவளின் இதயம் மத்தளம் கொட்ட ஆரம்பிக்க அவனையே திகைத்துப் போய் பார்த்தவள் அவனும் தன்னை காதலிப்பதாய் கூறவும் உலகமே தன் சுழற்சியை நிறுத்தியது போல் தன் இதய துடிப்பு மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க சுற்றி இருந்த அனைவரும் மறைய தானும் தன் கணவனும் மட்டுமே இருப்பது போல் மாய தோற்றம் உருவாக அவனையே தன் மொத்த காதலையும் மகிழ்ச்சியையும் கண்களில் தேக்கி ஊன் உருக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவளின் பார்வையை பார்த்தவன் அவளருகில் நிதானமாய் வந்து ஒரு காலை நீட்டி ஒரு காலில் அமர்ந்தவன் தன் பேன்ட் பக்கெட்டில் இருந்த சிறு பெட்டியை எடுத்து அதனுள் அழகாய் வீற்றிருந்த ‘க்ராப் பிங்க்’ (graff pink) எனப்படும் மிகவும் விலையுயர்ந்த மோதிரத்தை கையில் எடுக்க அதை எடுத்ததுமே அந்த இடமே சற்று அதிகப்படியான வெளிச்சடன் மின்னுவது போலிருக்க அவளை நோக்கி அதை நீட்டியவன்..


“பேபி...” என்றவாறு அவளை பார்த்து சிரித்தவன்..


“எப்பிடி நான் இப்பிடி மாறினேன்னு தெரியல பேபி.. ஆனா நீயில்லாம நான் இல்லைன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியுங்கிற அளவுக்கு நான் மாறிப்போயிட்டேன். எவ்ளோன்னு கேட்டா சொல்றதுக்கு அளவேயில்ல... எப்பிடின்னு கேட்டா சொல்ல முடியல... ஆனா என் இதயம் துடிக்கும் மட்டும் உன்னை காதலிச்சிக்கிட்டே இருக்கும்... ஐ லவ் யு பேபி... லவ் யு போர் எவர்...” உருகும் குரலில் கூறியவன் “என்னோட காதல ஏத்துப்பியா பேபி” என அவளை ஏக்கத்துடன் பார்க்க..


அவளோ அழுகையும் சிரிப்பும் மாறி மாறி போட்டி போட அவனை பார்த்து “ஆம்” என தலையசைக்க அதில் தன் கண்களில் பளபளத்த கண்ணீருடன் அவளின் விரல்களில் அந்த மோதிரத்தை அழகாய் அணிவித்தான். எந்த சூழ்நிலையிலும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் என்ற ஒன்றே வந்தது கிடையாது. முதன் முறை அவனின் கண்களில் கண்ணீரின் பளபளப்பு.


அவளோ அவன் அணிவிப்பதற்காகவே காத்திருந்தவள் அவன் அணிவித்து முடித்ததும் சுற்றுப் புறம் மறந்து அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள். அவனோ அவளை விட இறுக்கமாய் தன்னவளை அணைத்துக் கொண்டு அவள் இதழோடு இதழ் பொருத்தியிருந்தான். இது உலகமெங்கிலும் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது என்பதெல்லாம் அவனின் நினைவில் இல்லை. அவனுக்கு அவனின் மனைவியின் மகிழ்ச்சி ஒன்று மட்டுமே முக்கியம். அவளே வெட்கத்தை விட்டு இத்தனை பேரின் முன்பும் தன்னை அணைக்கிறாள் என்றால் அவன் சும்மா இருப்பானா...

அவனுக்குத்தான் யார் எதை பற்றியும் கவலையில்லையே. ஆனால் மலரோ கணவனின் இதழ் முத்தத்தில் உறைந்து போய் அவனிடமிருந்து விலகி அவனின் மார்பில் ஒண்டிக் கொண்டாள்.


இருவரின் மனதிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.. அகத்தின் அழகு அவர்களின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. அதை பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சியே...


ருத்ரா ஆனந்தத்துடன் தன் கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டார். சித்தார்த் மனைவியின் மனநிலையை எண்ணி அவரை ஆதரவுடன் அணைத்துக் கொண்டார்.


அகிலாண்டேஸ்வரி தன் பேத்தியின் ஆசை முழுமையாய் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் தன் வயதையும் மறந்து உல்லாசமாய் சுற்றி திரிந்தார். ஒமியும் ஜெனியும் ஒருவரை ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டனர். வின்னியும் ராமும் தாங்களும் இவர்களைப் போல வாழ வேண்டும் என எண்ணிக் கொண்டனர். ஸ்ரேயாவிற்கு இவர்களெல்லாம் யாரென புரியாவிட்டாலும் ஏதோ அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்கவும் தானும் சந்தோசமாய் யக்ஷித்தின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். அதை யக்ஷித் காதலுடன் பார்த்தான் என்றால் அதை மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தார் யக்ஷித்தின் அன்னை.


ஒவ்வொருவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அந்த கூட்டத்தில் இருந்து நைசாய் கழண்டு வந்த யுத்கார்ஷும் மலரினதும் முகத்தில் தங்கள் காதல் கைகூடிவிட்ட மகிழ்ச்சி.


மலரோ தன் கணவனின் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டு “உங்களுக்கு எப்பிடி நான் உங்கள காதலிச்சது தெரியும்...” என குழப்பமாய் கேட்க.


அவனோ அன்று தான் அவளின் டைரியை படித்ததை பற்றிக் கூற..


அதை கேட்டு அவனின் மார்பில் குத்தியவள் “அப்போவே தெரியுமா.. அப்றோம் எதுக்கு என்கிட்டே தெரியாத மாதிரியே நடிச்சீங்க... சரியான கள்வன்...” என சிணுங்க..


அவனோ “கள்வனா...” என்றவன் மறுப்பாய் தலையை அசைத்துக் கொண்டு “உன்னோட இதயத்தை திருடிய காதல் கள்வன்...” என்றான்.


அவள் “க்கும்” என நொடித்துக் கொண்டு “காதல் கள்வன் இல்ல... இந்த கள்வனே காதலனாக...” என்றபடி கிளுக்கென சிரிக்க அதில் மெய்மறந்தவன் அவளை இழுத்தணைத்து அவள் இதழோடு இதழ் பொருத்தினான்.


மறைவாய் எந்த சத்தமும் இல்லாத அந்த இடத்தில் அவர்களின் காதல் யுத்தம் மெதுவாய் ஆரம்பித்தது.


இனி அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்திருக்கும்.....



************ முற்றும் *************
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

'கள்வனே காதலனாக' என்ற என்னுடைய முதல் நாவல் இன்றும் நிறைவுபெறுகிறது.
இத்தனை நாள் உடன் வந்துவிட்டு இன்று பிரிவது ஒரு மாதிரியாய் இருந்தாலும் கூடிய விரைவிலேயே இன்னொரு கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன்..

கதை எப்பிடி இருந்தது என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. முதல் கதை. முதல் முயற்சி. அதனால் எனக்குள்ளும் சிறு படபடப்பு இருந்து கொண்டு தான் இருந்தது. இதோ இப்போதும் கூட இருக்கிறது..

அதனால் தயவு செய்து மக்களே உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரைக்கும் எனக்கு ஆதரவு வழங்கிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

(சைலென்ட் ரீடர்ஸ் கதை போய்க் கொண்டிருக்கும் போது தான் நீங்கள் கருத்துக்களை போடவில்லை. இதோ இப்போது கதை முடிந்து விட்டது.. இதன் பின்பாவது என்னுடைய கதை பிடித்ததா இல்லையா என்பதை தெளிவாய் என்னிடம் சொல்லுங்கள்.. என்னை ஏமாற்றி விடாதீர்கள். என்னைப் போல் புது படைப்பாளிகளுக்கு உங்களின் கருத்துகள் தான் பேராதரவு. சோ ப்ளீஸ் என்னுடைய கதைக்கான உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதான் அடுத்த கதையுடன் வருவேன்... :LOL::LOL::LOL::LOL:)

ஆவலுடன்
என்றும் உங்கள்

RJ
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்... நீங்க கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறதால சும்மா முடிவுரை மாதிரி போட்டிருக்கேன்... இதுல உங்க குழப்பங்கள் தெளிதான்னு பாருங்க. அண்ட் இதில தேவியோட fb இருக்காது. முடிஞ்சு போன அவளோட நினைவுகள் முடிந்ததாகவே இருக்கட்டும் என்று நினைக்கிறேன்... அதில் சிலர் வருந்துவீர்கள் என்று நன்கு புரிகிறது. இருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள் மக்களே...


பெப்ரவரி 14 காதலர் தினத்தன்று..


அன்று தான் ஒமி தன் திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்திருந்தான்.


ஒரு வெட்ட வெளி பிரதேசத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு அங்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


ஒமியையும் பின்டோவையும் தவிர மற்ற அத்தனை பேரும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர். யுத்கார்ஷின் திருமணத்தின் போது யுத்கார்ஷிற்கும் மலருக்கும் ஜோடிப் பொருத்தம் அமோகமாய் இருந்ததே தவிர மனப்பொருத்தம் இல்லாது போயிருந்ததால் அத்தனை பெரும் எப்போது எந்த குழப்பம் நடக்குமோ எனும் பயத்திலேயே சுற்றிக் கொண்டிருந்ததால் அவர்களின் மகிழ்ச்சியின் அளவுக்கு சரி சமமாய் பயமும் சிறு பதட்டமும் கூடவே ஒட்டிக் கொண்டிருந்தது.



ஆனால் இந்த திருமணத்தின் போது ஒவ்வொருவரது மனதிலும் ஆனந்தம் ஆனந்தம்... ஆனந்தம் என்ற ஒன்று மட்டுமே இருந்தது. அங்கு கூடியிருந்த அனைவரின் மனதிலும் நிறைவுடன் கூடிய மகிழ்ச்சி.


அகிலாண்டேஸ்வரிக்கு கூட அத்தனை சந்தோசமாய் இருந்தது. ஜொகியின் திருமணத்தினாலும் தான் அதை விட முக்கியமாய் அவரது செல்ல மகள் ரூபசுந்தரி தேவியும் அவளின் கணவர் நிரஞ்சன் பூபதியும் அவளது இரண்டு மகள்களான மித்ரநந்தினி தேவியும் திவ்யநந்தினி தேவியும் பல வருடங்கள் கழித்து தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பி வந்திருந்தனர்.


அதில் தான் அகிலாண்டேஸ்வரி முகம் பூவாய் மலர்ந்திருந்தது. ரூபசுந்தரியும் அவளின் தாயை போலவே கடினமாய் இருந்தாலும் அவர் முள்ளுடன் இருக்கும் பலாப்பழம் போலவே. வெளியில் கரடுமுரடாக இருந்தாலும் உள்ளுக்குள் அத்தனை இனிமை.


அவரின் மகள்களோ அவரைப் போலவே அத்தனை இனிமையான மனம் கொண்டவர்கள். அதிலும் திவ்யநந்தினி கருணையே வடிவான அமைதிப் புறா. மித்ரநந்தினி கருணை மனம் கொண்டாலும் சரியான லொட லொட வாயாடி. வாயை திறந்தால் அத்தனை சுலபத்தில் மூட மாட்டாள்.


அத்துடன் அகிலாண்டேஸ்வரியின் மகன் வழி பேரனான விரேன் விஸ்வாஸ் பூபதியும் இத்தனை நாள் வெளிநாட்டு வாசம் முடிந்து இன்று தான் சென்னை வந்து சேர்ந்திருந்தான்.


தன் செல்ல தங்கையின் மரணத்திற்கு பின் அவன் அவனாகவே இல்லை. அவளின் மேல் அத்தனை பாசம் கொண்டவனுக்கு அவளின் இழப்பு பெரும் அடியாகவே இருந்தது. அதில் எங்கே இங்கிருந்தால் தன் தங்கையின் நினைவில் தன்னிலை இழந்து விடுவோமோ எனும் பயத்தில் மலர்-யுத்கார்ஷ் திருமணம் முடிந்த அன்றே அவன் ஆஸ்திரேலியா சென்று விட்டிருந்தான்.


ஆஸ்திரேலியா சென்ற இந்த இரண்டு வருடத்தில் தன் உடன் பிறந்த தங்கையின் மரணத்தையும் அவளையும் மறக்காவிடிலும் அதை ஜீரணிக்க பழகி இருந்தான்.


அதனால் தான் இத்தனை நாட்கள் அங்கிருந்தது போதுமென்று மறுபடியும் தன் ஊருக்கே திரும்பி வந்துவிட்டிருந்தான்.


இவன் வருவதை அறிந்து அவர்களின் வீட்டில் அனைவருக்கும் சந்தோசம் என்றால் அகிலாண்டேஸ்வரி தேவிக்கு இது இரட்டிப்பு சந்தோசமாய் அமைந்தது. காரணம் தன் மகள் வழி பேத்திகளும் இப்போது தான் பல நாட்கள் கழித்து ஊருக்கு வருகிறார்கள். அவர்கள் இருவரில் ஒருவரை தன் பேரனுக்கு கட்டி வைத்து விட்டால் தான் நிம்மதியாக போய் சேர்ந்து விடலாம் என்ற எண்ணம் அவருக்கு.


அதற்கு ஒத்து ஊதுவது போல் ரூபசுந்தரிக்கும் தன் அண்ணன் மகனை தன் மூத்த மகள் திவ்யநந்தினிக்கு கட்டி வைக்கவேண்டும் என்ற ஆசை. அதை லேசாய் தன் தாயின் காதில் போட்டு வைத்திருந்தாள். அவரும் தான் பார்த்துக் கொள்வதாக கூறவும் அவருக்கும் பெரும் மகிழ்ச்சி.


ஆக ஒரு திருமணத்தில் இன்னொரு ஜோடிக்கு திருமணம் பேச ஏற்பாடு ஆகிக் கொண்டிருந்தது.


சரி வாருங்கள் இவர்களை பற்றி பேசியது போது நாம் மணமகன் அறைக்கு செல்வோம்.


மணமகன் அறையில் கண்ணாடி முன் நின்றிருந்த ஜொகி தன்னுடன் நின்றிருந்த யக்ஷித்தையும் தன் ஆருயிர் நண்பனான ரெயானையும் போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்.


ரெயான்ஸ் அவனின் நண்பன் அவனும் இப்போது தான் தன் நண்பனின் திருமணத்திற்காக மும்பையில் இருந்து வந்திருந்தான்.


அவளின் காதல் கதைகளை அறிந்தவன். அவனை முழுவதும் புரிந்து கொண்டவனும் கூட. முதன் முதலில் அவன் ஜில்மில்லை பார்த்து தொபுக்கடீர் என காதல் வலையில் சிக்கியதும் அதன் பின்பு அவளின் வீட்டின் முகவரி அறிந்து பாரிஸில் இருக்கும் தன் நண்பனிடம் அவளின் வீட்டு முகவரியை கொடுத்து அவளின் செல்போன் எண்ணை கேட்டதும் அவனும் ஏதோ ஒரு அவசரத்தில் ஜில்மில்லின் எண்ணிற்கு பதிலாய் அவளின் செல்போன் எண்ணை போலவே ஒரு சில இலக்க மாற்றத்துடன் இருக்கும் பின்டோவின் எண்ணை கொடுத்ததும்.


அதன் பின்பு அவன் ஜில்மில் என நினைத்து பின்டோவுடன் கடலை போட பின்டோவோ அவனின் எண்ணை கொண்டு அவன் யாரென கண்டு பிடித்தவள் தன் மனதில் இருப்பவனே தனக்கு அழைத்து பேசுகிறான் என்ற சந்தோசத்தில் அவளும் அவனுடன் பேச ஆரம்பிக்க ஜொகியோ ஜில்மில் என நினைத்து பேசியதில் காதலர் தினத்தன்று அவளை அங்கிருக்கும் ப்ரிஜ் (bridge) அருகில் வரும் படி கூற பின்டோவோ தன் காதல் நிறைவேறப் போகும் சந்தோசத்தில் அங்கு செல்ல அவனோ ஜில்மில்லுடன் இவளை பார்த்திருந்ததில் தன்னை காதலிப்பவளிடம் அவள் தன்னை காதலிப்பதை அறியாதவனாய் தான் அவளுக்குத் தான் இத்தனை நாளாய் அழைத்து காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தோம் என்பது தெரியாதவனாய் அவளிடம் ‘உங்க பிரெண்ட் வரவில்லையா..’ என கேட்க அதற்கு அவள் இவன் யாரை கேட்கிறான் என புரியாமல் அவனிடம் தெளிவாய் கூறும் படி உரைக்க அவனோ ‘நான் உங்க பிரெண்டை காதலிக்கிறேன்...’ என போட்டு உடைக்க அத்தனை ஆசையாய் சென்ற பின்டோவின் காதல் மனம் சுக்கு நூறாய் உடைந்து சிதறியிருந்தது.


அதில் கோபத்துடன் அவனை பார்த்து கத்தியவள் தன் கையிலிருந்த அவனுக்காய் தான் ஆசையாய் வாங்கிய மோதிரத்தை அவன் மேல் விட்டெரிந்தவள் அங்கிருந்து ஓடி வந்திருந்தாள்.


ஜொகியோ இந்த பெண் எதற்காக இத்தனை கோபமாய் செல்கிறாள் என புரியாமல் ரெயான்ஸிடம் இதைப் பற்றிக் கூற அதன் பின்பு விசாரித்ததில் தான் அவனுக்குமே தன் தவறு புரிந்தது.


அத்தனை நாட்கள் பேசிய இருவருமே நன்கு பழகியவர்கள் போல் பேசினாலும் தங்கள் பெயரைக் கூட சொல்ல இருவரும் முற்படவில்லை. அதுவுமின்றி இருவரும் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்தது கூடயில்லை. அத்தனையும் செல்போனில் தான். ஆரம்பத்தில் ஜில்மில்லின் அழகிலும் அவளின் செய்கையிலும் காதல் கொண்ட ஜொகி பின்டோவை ஜில்மில் என நினைத்து அவளின் குரலில் தான் காதல் வசப்பட்டான்.


அவளுடன் உரையாட ஆரம்பித்ததில் இருந்து காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் அவரை அவன் அந்த குரலை மட்டும் தான் கேட்டுக் கொண்டிருப்பான். அவனை ஈர்த்ததே அந்த குரல் தான்.


அவனின் காதல் கதையை நினைத்து சிரித்துக் கொண்ட ரெயான் அன்று தோற்றுப் போன காதலை இன்று ஜெய்க்க வைத்திருந்த தன் நண்பனை பெருமையாய் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனோ வழக்கம் போல் தன் நண்பர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் “மச்சான்ஸ் இந்த பெர்ப்யும் போடட்டுமா இல்ல இதையா...” என இரண்டு பெர்ப்யும் பாட்டிலையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு கேட்க யக்ஷித்தும் ரெயானும் அவனின் குணம் தெரிந்ததால் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு அவன் இடது கையில் வைத்திருந்ததை கை காட்ட “தேங்க்ஸ்டா மச்சிஸ்...” என்றவன் அவர்கள் சொன்னதை டீபாயில் வைத்து விட்டு வலது கையில் இருத்ததை எடுத்து அடிக்க ஆரம்பித்தான்.


அதில் அவன் இப்படித்தான் செய்வான் என ஏற்கனவே அறிந்திருந்த அவனின் நண்பர்கள் இருவரும் அவனின் முதுகில் ஒரு போடு போட அதில் வேண்டுமென்ற சத்தம் போட்டு அலறியவன் “ஐயோ... என்னை காப்பாத்துங்க... இந்த ரெண்டு பேரும் என்னை கொல்ல பார்க்கிறாங்க...” என்க அதில் அந்த வழியால் வந்த ஸ்ரே இவனின் அலறலில் என்னவோ ஏதொவோவென பயந்து அந்த அறைக்குள் நுழைந்தவள் அங்கு யக்ஷித் ஜொகியின் முதுகில் அடித்துக் கொண்டிருக்கவும் அவனருகில் சென்றவள் அவனை முறைத்து வைத்தாள்.


தன்னவள் வருவாளென எதிர்பார்க்காத யக்ஷித் “நீ எதுக்கு இங்க வந்த..” என சிறு கண்டிப்புடன் கேட்க அவளோ அவனை முறைத்தவள் “நீங்க எதுக்கு எல்லாருக்கும் அடிச்சிக்கிட்டே இருக்கீங்க..” என்றால் சிறுபிள்ளை தனத்துடன்.


அவள் அப்படி சொல்வதற்கு காரணம் சற்று நேரத்தின் முன்பு வந்திறங்கிய ரெயானையும் அவன் இப்பிடித்தான் பாசமாய் அடித்து அணைத்து அழைத்து வர அதை தூரத்தில் இருந்து பார்த்த ஸ்ரே ‘இவர் என்ன அந்த பையனுக்கு இப்பிடி அடிக்கிறார்...’ என நினைத்துக் கொண்டாள். இதோ இப்போதும் அவன் ஜொகியை அடித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் தான் அவள் இப்படி கேட்டது.


அவள் அப்படிக் கேட்டதும் தன் நண்பனிடம் “இதோ வரேன்..” என சைகை செய்தவாறு அந்த அறையினுள் இருந்து வெளியேறியவன் அவளை கையோடு அழைத்துக் கொண்டு சிறிது தூரம் வந்து “ஏன் அடிச்சேன்னு கேட்டல்ல... அது ஏன்னா எனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு நான் அப்பிடித்தான் அடிப்பேன்..” என்றான்.


அவளோ “ஆஹ்..” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டு “அப்போ எனக்கும் அடிங்களேன்...” என்க முதலில் அவளை புரியாது பார்த்தவன் புரிந்ததும் அவளை முகம் மலர ஏறிட அவளோ அவனை பார்த்து சிறு பிள்ளை போல் அழகாய் சிரித்தவள் அங்கிருந்து ஓடியே விட்டிருந்தாள்.


அவள் சென்றும் கூட அந்த இடத்தை விட்டு அசையாமல் அங்கே நின்று கொண்டிருந்தான் யக்ஷித். தன் காதல் நிறைவேறப் போகும் சந்தோசம்.


அவன் அவளை முதன் முதலில் பார்த்தது பாரிஸில் தான். அப்போதே அவனுக்கு அவளை பிடித்து விட்டிருந்தது. ஆனால் அதை அவளிடம் சொல்வதற்கு தயக்கம். அதனால் சொல்லாமலே விட்டிருந்தான். அவளை தூரத்தில் இருந்தே பார்த்து ரசிப்பான்.


அவனின் மனமோ ‘இப்படி தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் வேறு ஒருவன் அவளை தூக்கிக் கொண்டு போய்விடுவான்...’ என எச்சரிக்கை செய்ய அதில் பெரிதும் பயந்தவன் அவளை தேட அவளோ அப்போது அங்கிருந்து ஊரிற்கு சென்றிருந்தாள்.


அதை அறிந்தவன் அவளை பற்றி விசாரித்து அறிந்து விட்டு மும்பையில் இருக்கும் அவளின் வீட்டிற்கு சென்று விசாரிக்க அவளின் பெற்றோரோ ‘அப்படி ஒரு மகளே எங்களுக்கு இல்லை..’ எனகூறி அவனை அனுப்பிவிட்டனர்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனால் அவளின் பாட்டி அவனை யாரும் அறியாமல் சந்தித்து அகிலாண்டேஸ்வரியின் குடும்பத்தின் மேல் இருந்த கோபத்தில் இல்லாததும் பொல்லாததுமாய் சொல்ல வேண்டியதை மறைத்து சொல்லக் கூடாததை சொல்லி அவனை உசுப்பேற்றி விட்டிருக்க அதில் தான் அவன் கோபம் கொண்டு யுத்கார்ஷை பழி வாங்க நினைத்தது.


அதை நினைத்து பார்த்தவனுக்கு ஸ்ரேயாவின் பாட்டி மீது அளவுகடந்த கோபம் வந்தது. அவரால் இவளின் கோமே மாறிவிட்டிருக்கின்றது என ஆத்திரம் வந்தது இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.


அதே நேரம் ஸ்ரேயாவும் ‘தான் யார்.. என்ன என்பது...’ நினைவு இல்லா விட்டாலும் அவளும் யக்ஷித்தை பற்றித் தான் நினைத்துக் கொண்டிருந்தாள். சில நாட்களாக அவனின் பார்வை தன்னை துளைப்பது போல் தான் இருந்தது. அவளின் மனநிலைக்கு அவளிற்கு அது தெளிவாய் ஏனென்று புரியாவிட்டாலும் சுபத்ராவின் அறிவுரையால் ஒன்றை மட்டும் நன்கு புரிந்திருந்தாள்.


யக்ஷித் தன்னுடன் இருந்தால் அவன் தன்னை நன்கு பார்த்துக் கொள்வான் என்று அதில் தான் அவன் ‘தனக்கு பிடித்தவர்களுக்கு தான் நான் அடிப்பேன்’ என்றதும் அவள் ‘தன்னையும் அடிக்கும்’ படி கூறியது.


அவள் மனதும் அவன் தன் மேல் காட்டும் அக்கரையிலும் அவனின் குறுகுறு பார்வையிலும் சிறிது சலனப்பட்டிருந்தது. ஆனால் அவளால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவளுக்குள்ளும் காதல் சிறு மொட்டாய் மலர்ந்திருந்தது. ஆனால் அவளால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவளின் மன நிலை இப்போது ஓரளவு தான் பக்குவப்பட்டிருந்தது. ஒருவேளை அது முழுதாய் குணமடைந்தால் அவளும் அவளின் காதலை உணர்ந்து அவனின் காதலை ஏற்றுக் கொள்வாள்.


அவனின் உண்மையான என்றும் தோற்றுப் போகாது.


அவர்கள் இருவரும் தங்கள் எண்ணத்தில் மூழ்கி இருக்க அங்கு வந்த ஜொகியின் தந்தை யக்ஷித்தை அழைத்து ஜொகியை மணமேடைக்கு அழைத்து வரும் படி கூற அவனும் சிரித்துக் கொண்டு ஜொகியின் அறைக்குள் நுழைந்தவன் அவன் இன்னமும் ஒழுங்காக தயாரகாததில் கடுப்பானவன் “மச்சீஈ... இன்னும் நீ ரெடி ஆகலையா...” என கடுப்புடன் கேட்க...


அவனோ “நோ டென்சன்... பீ கூல்..” என்றவன் தன் தலைப்பாகையை சரி செய்யும் படி கூற அதில் அவனுக்கு அடிப்பதற்கு கையை ஓங்கியவன் பின் நேரம் சென்று கொண்டிருப்பதை உணர்ந்து அவசரமாய் அவனின் தலைப்பாகையை சரி செய்து விட்டு ரெயானும் அவனும் சேர்ந்து ஜொகியை வெளியே அழைத்து சென்றனர்.


இவன் வெளியில் வந்ததும் மேலிருந்து ரோஜாப்பூக்கள் கொட்ட ஆரம்பிக்க அதை பார்த்து சிரித்தபடி வந்தவன் மணமேடையில் போய் அமர்ந்து கொண்டான்.


அவன் வந்து அமர்ந்ததும் ஐயர் “பொண்ணையும் அழைச்சிட்டு வாங்கோ...” என கட்டளை இட மணப்பெண்ணை அழைக்க மணமகளின் அறைக்கு சென்றாள் திவ்யநந்தினி.


மணமகள் அறையில் மலர், வின்னி, வெரோனிக்கா, ஆஷிரா, மித்ரநந்தினி, யுவேதா அவர்களுடன் மலர்-யுத்கார்ஷின் தவப்புதல்வி ஆஷ்னாவும் குழுமி இருந்தனர்.


மலர் தன் செல்ல குழந்தையை கையில் வைத்தபடி பின்டோவை ஓட்டிக் கொண்டிருக்க அவளுடன் சேர்ந்து மற்றவர்களும் அவளின் காலை வாரிக் கொண்டிருந்தனர்.


அங்கிருந்த பெண்கள் அத்தனை பேரின் முகத்திலும் பூரிப்பு. பின்டோ இவர்களின் கேலி தாங்காமல் முகம் செவ்வானமாய் சிவக்க வெட்கத்துடன் தலைகுனிந்த படி அமர்ந்திருக்க மலரோ தன் திருமணத்தின் போது தான் இருந்த நிலையையும் இதோ இப்போது தான் இருக்கும் நிலையையும் எண்ணிக் கொண்டவளின் முகத்தில் தன்னவனின் காதலை எண்ணி கர்வம் பொங்கி வழிந்தது.


வின்னியோ அடுத்தது எப்படியும் தனக்கும் ராமிற்கு திருமணமாகத்தான் இருக்கும் என்ற நினைவில் கண்களில் கனவு மின்ன அவளின் சிவந்த முகம் இன்னமும் சிவந்து கொண்டிருந்தது.


மற்ற மூவரும் நாங்கள் எப்போவும் சிங்கிள் தான் என்ற நினைவில் உள்ளுக்குள் சிணுங்கிக் கொண்டு வெளியில் மற்றவர்களை சிணுங்க வைத்துக் கொண்டிருந்தனர். எப்போதும் அமைதியாய் இருக்கும் ஆஷிரா கூட இப்போது பதிலுக்கு பதில் பேச ஆரம்பித்திருந்தாள்.


இது நம்ம மலரோட ட்ரைனிங் தான் செல்லங்களா...


அப்போது அறைக்குள் நுழைந்த திவ்யா இவர்களின் கலாட்டாவை பார்த்து மென்மையாய் சிரித்தபடி “பொண்ண அழைச்சிட்டு வரட்டாம்...” என்க...


அவள் சொல்லி முடித்ததும் அவசரமாய் எழுந்த பின்டோவை பார்த்த அனைவரும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க அவளோ ‘சே..’ என தலையை தட்டியவள் மலரின் முதுகின் பின்னால் மறைந்து கொண்டாள்.


அதை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்த யுவேதா “அட.. பொண்ணுக்கு இருக்கிற அவசரத்த பாரேன்...” என ஹை பை அடித்துக் கொண்டு கூற மற்றவர்களோ “ஓஹோ...” கோரஸாய் கத்த அதில் பின்டோவின் வெட்கம் இன்னமும் அதிகரிக்க மலரோ யுவேதாவை பார்த்து “போதும்..போதும்... வாங்க நல்ல நேரம் முடியிறதுக்குள்ள போய்டலாம்...” என்க அனைவரும் வட போச்சே எனும் ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டு பின்டோவை அழைத்துக் கொண்டு செல்ல அவள் வந்ததும் மேலிருந்து ரோஜாப்பூக்கள் கொட்ட ஆரம்பிக்க அதில் எல்லாரும் தங்களுக்குள் குசுகுசுக்க ஒரு வழியாய் அவளை மணமேடைக்கு அழைத்துச் சென்று ஒமியின் அருகில் அமர வைத்தனர்.


இத்தனை நேரம் மணமகள் அறையில் பின்டோவுடன் இருந்த மலர் அப்போது தான் கணவனின் நினைவு வர அவசரமாய் அவனை தேடியவள் அவன் அங்கு ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கவும் அங்கிருந்த பெரியவர்கள் மத்தியில் இருந்த ருத்ராவிடம் குழந்தையை கொடுத்தவள் ‘இதோ வருகிறேன்’ என்ற சொல்லோடு அங்கிருந்து நகர்ந்து வந்தவள் அங்கு மறைவாய் இருந்த ஓரிடத்திற்கு சென்று தன் ஐ போனில் இருந்து கணவனை அழைத்தாள்.


அவள் எவ்வளவு முறை மறுத்தும் விடாப்பிடியாய் அவளுக்கு ஐ போன் ஒன்றை வாங்கி பரிசளித்திருந்தான் யுத்கார்ஷ். அதுவும் எப்போதும் உன் கையிலே இருக்க வேண்டும் என்ற சிறு கண்டிப்போடு. அதிலிருந்து அது அவள் கையில் தான் எப்போதும் இருக்கும்.


ஒரு முக்கிய நபருடன் உரையாடிக் கொண்டிருந்த யுத்கார்ஷ் செல்போனில் அழைப்பு வரவும் அவரிடம் “ஒன் மினிட்..” என்றவன் செல்போனை எடுத்துப் பார்க்க அதில் ‘அழகி காலிங்’ என அழகாய் மிளிர்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்து சிரித்தவன் செல்போனை காதில் வைத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் இருக்க மலரோ அவனின் கோபம் அறிந்தவளாய் “என்மேல கோபமா பாவா...” என கேட்க...
அவனோ அதற்கு பதில் பேசவில்லை...


“பாவா... லைன்ல இருக்கீங்களா இல்லையா...” என கேட்க..


அவனிடமிருந்து “ம்ம்..” என சிறு முனகல்...s


அதை கேட்டு அவனின் கோபம் இன்னும் குறையவில்லை என உணர்ந்தவள் “அப்போ இன்னும் கோபம் குறையலையா...” என்றவள் தான் இருக்கும் இடத்தை சொல்லி அவனை வரும் படி கூற அதற்காகவே காத்திருந்த யுத்கார்ஷ் விரைவாய் அவளிருந்த இடத்திற்கு சென்றவன் அத்தனை நேரம் முகத்தில் படர்ந்திருந்த புன்னகையை மறைத்துக் கொண்டு அவளை கோபமாய் நோக்க அவளோ செல்போனை அணைத்து விட்டு அவனருகில் நெருங்கி வந்தாள்.


அவனோ தன்னை நெருங்கி வரும் மனைவியை ஆசை போங்க பார்த்துக் கொண்டிருக்க அவனருகில் வந்தவளோ அவனுடன் ஒட்டிக் கொண்டு “இப்போவும் கோபம் போகலையா..” என்க


அவனோ உள்ளுக்குள் அலைமோதும் தாபத்தை மறைத்துக் கொண்டு அமைதியாய் நின்றான்.


அவளோ அப்போதும் அவனின் கோபம் குறையாததை கண்டு அவனை இறுக அணைத்தவாறு அவனை நிமிர்ந்து நோக்கியவள் “இப்போவும் குறையலையா பாவா..” என்க..


அவனோ இவளின் அருகாமையிலும் அணைப்பிலும் நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க தன்னவளை ருசித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் கைகள் இரண்டையும் இறுக பற்றிக் கொண்டு பெரும் பாடு பட்டு அமைதி காக்க மலரோ தான் அருகில் வந்தும் கூட கோபத்துடன் நிற்கும் அவனை செய்வதறியாது பார்த்தவள் அவனின் கோபத்தை எண்ணி கோபம் கொண்டவளாய் அவனை முறைத்தவாறு உதட்டை சுழித்தவள் ‘போடா..’ என திட்டிக் கொண்டு நகர எத்தனிக்க அவனோ தன்னை விட்டு அகலும் மனைவியை இழுத்தணைத்தவன் அவளின் இதழில் கவி எழுத ஆரம்பித்தான்.


அவனின் இதழ் முத்தத்தில் தன் கோபங்கள் பறந்தோட ஒரு கையால் அவனின் பின்தலையை இறுக தழுவியவள் மறுகையால் அவனின் சட்டை காலரை இறுக பற்றினாள்.


அதில் அவளின் பெண்மை அவனின் நெஞ்சில் மோதி தாபத்தை கூட்ட அவளுள் இன்னும் ஆழமாய் புதைந்தவனின் முத்தத்தை தனதாக்கிக் கொண்டிருந்தாள் மலர்.


மனைவியின் செய்கையில் யுத்கார்ஷ் ஆனந்தமாய் அதிர்ந்து போக அவளோ அவனை ஆரத்தழுவி அவனின் இதழை ருசித்தவள் வெட்கத்துடன் அவனிடமிருந்து விலகினாள்.


அதில் மெய்மறந்தவன் தன்னவள் ருசிபார்த்த தன் இதழை ஆசையுடன் தடவிக் கொண்டவன் அவளை இழுத்தணைத்து தன் மார்பில் போட்டுக் கொண்டு “ரொம்ப கிக்கா இருந்திச்சு பேபி...” என்றான் ஹஸ்கி வாய்சில்..


அவளோ அவனின் குரலில் இருந்த மயக்கத்திலும் தாபத்திலும் தன்னை மறந்தவள் “ம்ம்..” என முணுமுணுக்க மனைவியின் இந்த முணுமுணுப்பிலேயே அவளின் நிலையை உணர்ந்த யுத்கார்ஷ் “வீட்டிக்கு போலாமா பேபி..” என கிசுகிசுக்க அதில் “ப்ச்..” என தலையசைக்க அவனோ “அப்போ இங்கயே உனக்கு ஓகேவா பேபி..” என்றான் சிரித்துக் கொண்டு..


அதில் அவனின் முதுகில் ஒரு போடு போட்டவள் “உங்க கோபம் கோபம் போய்டிச்சா பாவா..” என பரிதவிப்புடன் கேட்க..
 
Status
Not open for further replies.
Top