All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதற்கு அவர் “இன்னும் எதுவும் சரியா தெரியலன்னாலும் கொஞ்ச நாளாவே பொண்ணுங்க இப்பிடி காணாம போறதா ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் பைலாகி இருந்தது... நாங்களும் முயற்சி செய்து பார்த்திட்டோம்... ஆனா அவங்கள இன்னும் எங்களால நெருங்க முடியல... இதுக்கு பின்னாடி பெரிய ஒரு கேங் இயங்கிட்டு இருக்குன்னு மட்டும் தான் எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு.... அதுவுயில்லாம இண்டர்நேசனல் லெவல் இந்த கிட்னாபிங் நடந்திட்டு இருக்கு... இதுக்கு பின்னாடி அரசியல்வாதிங்களோட பசங்க இன்வோல்வ் ஆகிருக்காங்கன்னு இந்த கேஸ இப்போ விசாரிச்சிக்கிட்டு இருக்கிற ACP விக்ரமாதித்யன் சீக்ரெட் டிடைல்ஸ் கலெக்ட் பண்ணியிருக்காரு...” எனக் கூற...


அதை கேட்டு தலையை அசைத்தவனுக்கு இந்த கும்பல் எப்படியும் பிடிபட்டு விடுமென்றே தோன்றியது... அதற்கு காரணம் ACP விக்ரமாதித்யன்... என்கவ்ன்ட்டர் ஸ்பெசலிஸ்ட்... இதுவரைக்கும் பல ரௌடிகளை கோர்ட்டிற்கு அழைத்து செல்லும் வழியிலேயே சுட்டு தள்ளிவிட்டு ‘தப்பிக்க முயன்றார்கள் என் பாதுகாப்பிற்காக அவர்களை ஷூட் பண்ண வேண்டியதாகி விட்டது’ எனும் ஒற்றை வரி பதிலில் அத்தனை குற்றவாளிகளையும் வேட்டையாடும் காட்டுப்புலி. இதுவரைக்கும் அவன் கைகளுக்கு சென்ற எந்த கேஸ் பைலும் முற்றுப்பெறாமல் இருந்ததில்லை.


இதோ இப்போது அவன் கையிலெடுத்திருக்கும் இந்த கேஸும் விரைவிலேயே முடிந்து விடும் என அறிந்த யுத்கார்ஷிற்கு ‘மலர் அந்த கும்பலில் தான் மாட்டியிருக்கிறாளா இல்லை வேறு எதிலாவது சிக்கிக் கொண்டாளா’ என்ற விடையறியாத மிகப்பெரிய கேள்வி மனதில் அழுத்திக் கொண்டிருக்க அதற்கு விடை தெரிந்தால் தான் தன்னால் நிம்மதியாய் மூச்சு விட முடியும் என எண்ணியவன் அப்போது தான் வந்திறங்கிய தன் தந்தையின் அருகில் சென்றான் தன்னவளின் நினைவுகளுடன்.


அதே நேரம் தன் கணவனின் நினைவுடனும் தன் குழந்தையின் நினைவுடனும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த மலர் மெதுவாய் கண்களை மலர்த்தினாள். உடலெல்லாம் அடித்துப்போட்டாற் போல் வலி எடுக்க கை காலை அசைக்கமுடியாமல் சுருண்டு கிடந்தவள் தான் எங்கு இருக்கிறோம் என புரியாமல் சுற்றும் முற்றும் கண்களால் அலசினாள்.


கண்களை சுழற்றியவளின் கண்களுக்கு புலப்பட்டதென்னவோ இருட்டு அறையொன்று தான். சும்மாவே இருட்டென்றால் பயப்படுபவள் இது எந்த இடமென்றும் புரியாமல் தன்னுடன் யார் யார் இருக்கின்றார்கள் என்றும் புரியாமல் கலங்கித் துடித்த மனதை சரி செய்யும் வழியும் அறியாது சுருண்ட கிடந்த வாக்கிலே ஏதாவது சிறு ஒளி தென்படுகின்றதா என கண்கள் எதிர்பார்ப்பில் மின்ன கண்களை சுழல விட்டவள் அப்படியொன்றும் தென்படாததால் சோர்ந்து போய் மீண்டும் சுருண்டு கொண்டாள்.


எத்தனை நேரம் தான் ஒரே இடத்தில் இருக்க முடியும்... ஒரே இடத்தில் வெகு நேரம் சுருண்டு கிடந்ததில் உடலின் ஒவ்வொரு பாகமும் வலியை பிரதிபலிக்க அதை தாள முடியாமல் மெதுவாய் எழுந்தமர்ந்தாள்.


மண்ணில் விழுந்து புரண்டதில் கைகால்கள் சிராந்திருக்க கையை தரையில் ஊன்றி எழுந்தமற முயர்சித்தவளின் கைகள் வலியில் நோவ சட்டென கையை எடுத்து அதை தடவிக் கொடுத்தவளுக்கு சில வருடங்களுக்கு முன்பு நடு வீதியில் நான்கைந்து கயவர்களின் வெறியில் அவர்களின் உடலின் இச்சையில் தன் உடலை புண்ணாக்கி அதை தாள முடியாமல் மரணம் வரை சென்று போராடி மயிரிழையில் மீண்டும் உயிர்பிழைத்த தன் தேவிம்மாவின் நினைவு வந்தது.


அத்தனை பெரிய துன்பத்திலிருந்து மீண்ட அவளின் மன உறுதியை எண்ணியவளின் மனதிலும் சிறு நம்பிக்கை பிறக்க அத்துடன் தன் கணவன் தன்னிடம் கூறியதை எண்ணியவளின் மனதில் அந்த சிறு நம்பிக்கை ஒரு பெரும் விதையாய் அவளின் மனதினுள்ளே ஆழப்பதிந்தது


“நீ யாருன்னு உனக்கு தெரியுமா பேபி... இந்த யுத்கார்ஷோட வைப்... தி கிரேட் பிசினஸ் மேக்னெட் த்ருவ் யுத்கார்ஷ் ராவ் அஹ்லுவாலியாவோட வைப் அவனை மாதிரியே கம்பீரமா இருக்கணும்...” என கூறியவனின் குரலே அவள் செவிகளில் ஒலித்து அவளின் தைரியத்தை பன்மடங்கு அதிகப்படுத்தியது.


கணவன் குரல் காதில் ஒலிக்க ஒலிக்க அவனின் பேச்சுக்கு பதில் கூறுவது போல் “கம்பீரமா இருக்கணும்” என தனக்கு தானே கூறிக் கொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் சிறு பயப்பந்து உருண்டாலும் அதை வெளிக்காட்டாமல் தன்னவனைப் போல கம்பீரமாய் அமர்ந்து கொண்டாள். அந்த இருட்டிலும் தன்னை கம்பீரமாய் சித்தரிக்க முயற்சித்துக் கொண்டிருந்த மலரை பார்த்து மென்மையாய் புன்னகைத்த அவளின் தேவிம்மாவின் ஆன்மா எப்போதும் போல் இன்றும் அவளுக்கு துணையாயிருந்தது.


ஒரு சில மணி நேரங்கள் இருளில் இருந்தவள் அதற்கு மேல் அந்த கும்மிருட்டில் தாக்கு பிடிக்க முடியாமல் எவ்வளவு தான் தைரியமாய் இருந்தாலும் இருளின் ஆதிக்கத்தில் மனதில் பயம் அப்பிக்கொள்ள செய்வதறியாது அவள் முழித்துக் கொண்டிருக்கும் போது அந்த அறையினுள் நுழைந்து அங்கிருந்த விளக்கை உயிர்ப்பித்தான் அவன்


இருளில் இருந்த அறையினுள் வெளிச்சம் பரவ திடீரென வந்த வெளிச்சத்தில் கண்கள் கூச கண் முன் இருந்தவை மங்கலாய் தோற்றமளிக்க கண்களை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தவள் அங்கு நின்று கொண்டிருந்தவனை பார்த்து அதிர்ந்து விழித்தாள்.


இத்தனை நேரம் இருட்டு அறையில் தன்னந்தனியாய் இருந்தவளின் யோசனை தன்னை பற்றி மட்டுமே சுழன்று கொண்டிருந்தது. ஆனால் இந்த திடீர் வெளிச்சத்தில் தான், தான் எப்பேற்பட்ட ஆபத்தில் சிக்கி இருக்கிறோம் என்பதும் தன்னுடன் வந்தவர்களை எங்கே காணோம்... அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள்.... அவர்கள் தன்னுடன் இல்லையா.... இல்லை தன்னை தனியாய் அடைத்து வைத்திருக்கிறார்களா.... எதற்காக தன்னை தனியாய் வைக்க வேண்டும்.... அந்த பெண்களை என்ன செய்தார்கள்... தான் இதிலிருந்து எப்படி தப்பிப்பது.... அந்த பெண்களையும் காப்பாற்ற வேண்டுமே... அத்தனை பேரையும் ஒற்றை ஆளாய் நின்று என்னால் காக்கமுடியுமா... என்ற எண்ணமும் மனதில் ஓடி அவளின் திடத்தை குறைக்க தன் மனயுருதி தன்னை விட்டு தளர்வதை எப்படி தடுப்பது என குழம்பியவள் காற்றோடு காற்றாய் மிதந்து கொண்டிருந்த தன் தேவிம்மாவை துணைக்கு அழைத்தாள்.


‘தேவிம்மா இப்போ என்ன பண்றதுன்னே எனக்கு ஒன்னும் புரியல தேவிம்மா... இப்போ நான் என்ன பண்ணும்... நீங்க தான் ஏதாவது சொல்லணும் தேவிம்மா... நான் பேசுறது உங்களுக்கு கேக்குதா.... நான் இப்போ என்ன பண்ணும்னு எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குதே.... ஒரே ஒரு தடவ அவர முகத்த பார்க்கணும் போல இருக்கு தேவிம்மா... நான் எங்க மாட்டியிருக்கிறது அவருக்கு தெரியுமா தெரியாதான்னு கூட தெரியலையே... ஒருவேல தெரிஞ்சிருந்தா என்ன தேடுவாரா... இல்ல....’ என தேவிம்மாவிடம் உதவி கேட்டவளின் மனம் அந்தர் பல்டி அடித்து தன் கணவனை நோக்கி ஓடியது.


அவனை ஒரு முறை பார்க்க வேண்டும்... அவனின் அணைப்பில் இளைப்பாற வேண்டும் என மனம் துடிக்க அது இப்போது நடக்காது என்ற நிதர்சனம் எடுத்துரைக்க தன் கணவனின் குரலையாவது கேட்க மாட்டோமா என ஏங்கியது அந்த பேதை பெண்ணவளின் இதயம்.


ஆனால் அதுவும் முடியாதே. தான் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாத நிலையில் கணவனிடம் எப்படி உரையாடுவது. அதுமட்டுமன்றி அவனிடம் பேசுவதற்கு அலைபேசி வேண்டும். அதுவும் தற்போது அவளிடம் இல்லை. அப்படியே ஏதாவது ஒரு வழியில் கிடைத்தாலும் கணவனின் அலைபேசி எண் அவளுக்கு தெரியாதே.. ஆக எல்லா வழியுமே இங்கு அவளுக்கு அடைபட்டிருந்தது.


என்ன செய்வதென புரியாமல் விழித்தவள் மீண்டும் தன் தேவிம்மாவையே துணைக்கு அழைத்தாள். அவள் வருவாளா மாட்டாளா என்றெல்லாம் அவள் அந்த நிலையில் யோசிக்கவில்லை. அவள் இருந்த இந்த இக்கட்டான நிலையில் யாருடையாவது உதவி அவளுக்கு மிக அவசியமாய் பட்டது. ஆனால் யாரையுமே கூப்பிட முடியா நிலை. அதனால் தான் மீண்டும் தன் தேவிம்மாவையே அழைத்தாள்.


அத்தனை நேரம் அவளின் கோரிக்கை ஒன்றிற்காகவே காத்திருந்த தேவி அவள் தன்னிடம் உதவி கேட்டதும் தன் விளையாட்டை ஆரம்பித்தாள். அவளுக்குத்தான் எப்போதுமே புதுவித விளையாட்டில் ஆர்வம் அதிகமாயிற்றே... இன்றும் அதையே அந்த அரக்கனிடம் விளையாட முடிவு செய்தாள்.


இங்கு தேவி தன் விளையாட்டை ஆரம்பிக்க முடிவு செய்த நொடி யுத்கார்ஷின் குடோனில் மயக்கத்தின் பிடியில் சிக்கியிருந்த விக்ரம் மெதுவாய் கண்களை திறந்தான்.


கள்வன் வருவான்....
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....
இந்த பதிவு எப்பிடி இருக்குன்னு உண்மையிலேயே எனக்கு தெரில... சோ நீங்க தான் பார்த்திட்டு எப்பிடி இருக்கிங்கிற உங்க கருத்துக்களை என்னிடம் சொல்ல வேண்டும்...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 32


இரும்பினை ஒத்த கரங்களில் அறை வாங்கியதால் வந்த வலி தாளாமல் கன்னங்கள் ஏறிய நினைவு தப்பி மயக்கநிலைக்கு சென்ற விக்ரம் பல மணிநேரங்கள் கழித்து இப்போது தான் மெதுவாய் கண்களை திறந்திருந்தான்.


கண்களை திறந்தும் கூட சுற்றியுள்ள அனைத்தும் மங்கலாய் தெரிய கண்களை சுழற்றியவன் அப்போதும் எதுவும் சரியாய் தெரியாததால் கண்களை தோய்க்க கைகளை எடுக்க முயற்சிக்க கைகளை அவனால் சற்றும் அசைக்க முடியவில்லை. அதில் மீண்டும் மீண்டும் முயற்சித்தவன் அப்போது தான் தன் கரங்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை உணர்ந்து அதை விடுவிக்க முயற்சித்தான்.


அவன் எப்பிடி எப்பிடியெல்லாமோ முயற்சித்தும் கூட கைக்கட்டை அவிழ்க்க முடியாது போக தன் கைகளை கட்டியவனை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.


தான் எப்பிடியாவது இங்கிருந்து தப்பித்தால் தான் மலரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் வேக வேகமாக சிந்தித்தவன் தான் எப்போதும் கையில் வைத்திருக்கும் சிறு கத்தியை தேடினான்.


அது அவனின் சாக்ஸினுள் பத்திரமாய் இருந்தது. அதில் சற்று ஆசுவாசப்பட்டவன் தான் அமர்ந்திருந்த கதிரையில் இருந்து கீழே சரிந்து கால்களை குறுக்கி தன் கட்டப்பட்டிருந்த கைகளை கொண்டு கட்டப்பட்டிருந்த கால் சாக்ஸினுள் மெதுவாய் கையை நுழைத்து அதிலிருந்த சிறு கத்தியை எடுத்தவன் நிமிர்ந்து அமர்ந்து முழங்காலிற்கு இடையில் கட்டப்பட்டிருந்த கைகளை வைத்தவன் பற்களினால் கத்தியை கெட்டியாய் பிடித்துக் கொண்டு தன் கைகளை கட்டியிருந்த கயிற்றை வெட்ட ஆரம்பித்தான்.


அப்போது மணி ஆறு முப்பதை தொட்டிருந்தது. வானம் முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. அவனை வைத்திருந்த இடத்தில் ஒரு மங்கிய சோடியம் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதை தவிர அங்கு வேறு எந்த வெளிச்சமும் அவன் கண்களுக்கு தென்படவில்லை. அது அந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு போதாவிடிலும் இருக்கும் நிலையும் அதன் தீவிரமும் புரிந்து மீண்டும் மீண்டும் முயற்சித்தவனுக்கு கயிறு லேசாய் அறுபடவும் அதை கொண்டு மேலும் அதை அறுக்க ஒருவழியாய் கயிறு பிய்ந்து கீழே விழுந்தது.


அதில் அத்தனை நேரமாய் பிடித்து வைத்திருந்த மூச்சை ஆழ இழுத்து வெளியிட்டவன் மளமளவென காலிலிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு கண்ணனுக்கு கெட்டும் தூரம் வரையிலும் யாராவது தென்படுகிறார்களா என நிதானமாய் அவதானித்தவன் யாரையும் காணாது போகவே தன் பக்கெட்டினுள் கையை விட்டு செல்போனை தேடினான்.


தேடினான் தேடினான்... விடாது தேடிக்கொண்டு தான் இருந்தான். ஆனால் அவனின் செல்போன் அவனின் கண்களுக்கு புலப்படாமல் ஆட்டம் காட்டியது. அதில் எரிச்சல் அதிகரிக்க தலையை தடவியவன் ‘சீனு போன் பண்றேன்னு சொன்னானே... பண்ணியிருப்பானா... நான் எப்பவும் போன பேன்ட் பாக்கெட்ல தானே வைத்திருப்பேன்... இப்போ மட்டும் எப்பிடி மிஸ் ஆச்சு... தொலைஞ்சிடிச்சா இல்ல இவனுங்க யாராவது எடுத்து வைத்திருக்காங்களா... அப்பிடியே இவனுங்க கிட்ட இருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்ல... மலர் இருக்கிற இடத்த சுலபமா கண்டுபிடிச்சிடலாம்...’ என தனக்குள் யோசித்தவன் அவர்களை நாடிச் சென்றான்.


அவன் எழுந்தது முதல் அவன் வெளியே வருவது வரை அத்தனையும் தன் முன் இருந்த திரையில் ஓடிக்கொண்டிருக்க அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான் யுத்கார்ஷ்.


உள்ளம் முழுவதும் தீவிர சிந்தனை வலம் வந்து கொண்டிருந்தது. ஆனால் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாதளவு முகம் கல்லாய் சமைந்திருந்தது. பயம் என்றால் என்னவென்றே அறியாதவன். தன்னை எதிர்ப்பவர்களை ஒற்றை விரலசைவிலேயே ஓட ஓட விரட்டுபவன் தொழில் சாம்ஜாயத்தின் முடி சூடா மன்னன் அவனின் மனைவியை பல மணி நேரங்களாக காணவில்லை. அத்தனை இடத்திலும் ரகசியமாய் விசாரித்தாகி விட்டது. ஆனால் இதுவரையிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.


ஒருபுறம் மனைவிக்காய் உடலும் உள்ளமும் ஏங்கிக் கொண்டிருக்க இன்னொரு புறம் தன் தாயின் புலம்பல்கள் மகளின் வீறிடல் இதற்கிடையில் ACP விக்ரமாதித்யனின் குடைஞ்சல்கள்.


உங்கள் மனைவி சிலகாலம் உங்களை விட்டு எதற்காக பிரிந்திருந்தார்கள்... நீங்கள் வீட்டை விட்டு அனுப்புனீங்களா இல்ல அவங்களாவே விருப்பப்பட்டு போனாங்களா... இப்போ கூட நீங்களே ஆள் செட் பண்ணி அவங்கள கடத்திட்டு அவங்கள காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கீங்களா... எதுக்காக அவங்கள கடத்துனீங்க...’ என பல கேள்விகள்... அதை கேட்க கேட்க அவனின் ரத்தம் ஆத்திரத்தில் கொதித்தது.


‘எத்தனை ஆசை ஆசையாய் மனைவியிடம் காதலை சொல்ல காத்திருந்தான்... ஆனால் அவனின் கனவு அத்தனையும் கனவாகவே போய்விட்டதே...’ எனும் துயரில் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தவனிடம் ஆதித்யன் கேட்க கேள்விகள் அவனை கோபம் கொள்ள செய்தது.. ‘எதுவும் தெரியாமல் இவன் பாட்டுக்கு உளறிக் கொண்டிருக்கிறான்’ என எரிச்சலில் இருந்தவனிற்கு அழைத்த சதீஷ் அவனின் மடிகணனியை பார்வையிடுமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.


அதில் தான் விக்ரமின் தப்பிக்கும் படலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அடுத்த நொடி அவனின் முகம் ஆத்திரத்தில் இறுகியது. அவனை தன் முன் கொண்டுவருமாறு கட்டளை இட்டவன் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க ஆரம்பித்தான்.


அடுத்த ஐந்து நிமிடத்தில் விக்ரமை அவன் முன்னால் அழைத்து வந்திருந்தனர் அவனின் ஆட்கள். அதில் தன் முன்னால் நின்றவனை பார்த்து இதழ் துடிக்க விஷம புன்னகை பூத்தவன் “தப்பிக்கும் படலம் நல்லபடியா முடிஞ்சதா...” என சிரித்துக் கொண்டு கேட்க அதை கேட்டு பல்லை கடித்த விக்ரம் தன் கையை கெட்டியாய் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் கைகளை உதறிவிட்டவாறு “இதோ பாரு யுத்கார்ஷ்...” என பேச முற்படும் முன் அவனின் பின்னால் நின்றிருந்தவர்கள் அவனின் தலையில் துப்பாக்கியை அழுத்த அதை பார்த்து இளம் முறுவலுடன் விக்ரமை ஏறிட்ட யுத்கார்ஷ் “த்ருவ் யுத்கார்ஷ் ராவ் அஹ்லுவாலியா” என கம்பீரமாய் தன் பெயரை உரைத்த யுத்கார்ஷ் ஒரே ஒரு நொடி விக்ரமின் கண்களில் தோன்றி மறைந்த ஆச்சர்யத்தையும் எரிச்சலையும் கவனிக்க தவறவில்லை.


அதில் அவனை கேள்வியாய் உற்று நோக்க அவனின் பார்வைக்கான அர்த்தம் புரியாத விக்ரம் முதலில் குழம்பி பின் எரிச்சலுடன் “இதோ பாருங்க சார்... நான் இங்க உங்க பெயர சொல்றதுக்காக வரல... நீங்க எந்தளவுக்கு லேட் பண்றீங்களோ அந்தளவுக்கு மலர ஆபத்து சூழ்ந்திருக்குன்னு சொல்றதுக்காகத்தான் நானே உங்கள பார்க்கலாம்னு இருந்தேன்... அதுக்கு முதல்ல என்னோட போன் உங்க கிட்ட அத கொடுங்க... மலர் எங்க இருக்கான்னு சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்...” என படபடக்க அவன் மலர் என ஆரம்பித்ததுமே அவனை வெறுப்புடன் பார்த்தவன் அவன் அவளிருக்கும் இடம் தெரிந்து விடும் எனக்கூறிய நொடி அவனை ஆராய்ச்சியுடன் பார்த்தான்.


“உனக்கு எப்பிடி என்னோட வைப் இருக்கிற இடம் தெரியும்னு நான் தெரிஞ்சிக்கலாமா...” என கேள்வியெழுப்ப அத்தனை பெரிய விஷயத்தை கூறியும் அவன் வெகு அமைதியாய் இருப்பதை பார்த்த விக்ரமிற்கு முதலில் தோன்றியதென்னவோ ‘இவனுக்கு மலர் மேல அக்கறையே இல்லையா’ என்பது தான்.


ஆனால் அவனுக்கெங்கே தெரியும் யுத்கார்ஷ் மலர் மேல் வைத்திருக்கும் காதலின் அளவினைப் பற்றி. அவன் மலர் என கூறியதும் அவன் மேல் வெறுப்பு வந்ததென்னவோ உண்மை தான். ‘இவன் எப்பிடி என்னவளின் பெயரை இத்தனை உரிமையை அழைக்கலாம்’ என்ற பொறாமையில் வந்த வெறுப்பு தான் அது. ஆனால் மறுநொடி அவன் அவளிருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடலாம் எனக்கூறியதும் அவனுள்ளே உற்பத்தியான சந்தோஷ சாரலும் ஆனந்தமும் அவனின் ஒவ்வொரு அணுவிலும் பீரிட்டு தன் மனைவியை வெகு சீக்கிரத்தில் காணலாம் என்ற மகிழ்ச்சி அவனுள் பரவியதை அவனன்றி யாராலும் அறிந்து கொள்ளமுடியாது.


அப்படி இருந்தும் அவன் விக்ரமிடம் அப்படியொரு கேள்வியை எழுப்பியதற்கு காரணம் இவனுக்கும் தன் மனைவி காணாமல் போனதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்ற எண்ணத்தில் தான்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யுத்கார்ஷின் கேள்வியில் அவனை முடிந்தளவு முறைத்தவன் “நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்... ஆனா நீங்க என்ன கேட்டிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கு புரியுதா சார்... காணாம போயிருக்கிறது உங்க மனைவி... அவங்க இருக்கிற இடம் என்னோட போன்ல இருக்கும்னு நான் சொல்லிட்டு இருக்கேன்... நீங்க என்னடான்னா எப்படி தெரியும்னு சாவதானமா கேள்வி கேட்டிட்டு இருக்கீங்க” என எரிச்சலுடன் உரைக்க...


அதில் கோபத்துடன் அவனருகில் நெருங்கி அவனின் கழுத்தை ஒரு கையால் இறுக பற்றியவன் “நான் ஏதாவது கேட்டேன்னா முதல்ல அதுக்கு பதில் சொல்லி பழகிக்கணும் புரிஞ்சதா...” என இதழில் மின்னிய சிரிப்புடன் உறுமியவன் “சொல்லு உனக்கு எப்பிடி தெரியும்” என்க அதில் மீண்டும் கோபம் ஏறினாலும் அவன் இறுக பற்றிய தொண்டைய செருமி தொண்டையை சரி செய்தவன் சுருக்கமாய் நடந்ததை கூறினான்


அதை கேட்க கேட்க அவனின் உடலின் உஷ்ணம் அதிகரித்தது. தன்னை பற்றி தெரிந்திருந்தும் தன்னுடன் மோத எண்ணிய அவனின் செயலில் எந்தளவுக்கு ஆத்திரம் மூண்டதோ அதேயளவு தன்னையே எதிர்த்த அவனை பார்த்தே ஆகவேண்டும் போலும் அவனின் மனம் பரபரத்தது.


யக்ஷித்தை பற்றி கூறிய விக்ரம் யக்ஷித் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் தான் மலரை கடத்தி இருப்பார்கள் என்றும் கூறியிருந்தான். ஆனால் அவனுகெங்கே தெரியபோகின்றது மலர் மாட்டியிருப்பது உலகளாவிய ரீதியில் பெண்களை கடத்தி வெளிநாட்டிற்கு விற்கும் அரக்கர்களிடம் என்பது.


அது தெரியாத விக்ரம் யக்ஷித்தையும் அவன் ஏற்பாடு செய்திருந்த ஆட்களை பற்றியும் கூற அடுத்த நிமிடம் தான் காரில் அவனின் வீட்டை நோக்கி பறந்தான் யுத்கார்ஷ்.


அதே நேரம் யக்ஷித்தும் யுத்கார்ஷின் வரவிற்காகவே அவனின் வீட்டில் காத்திருந்தான். அவன் தன்னவளுக்கு பண்ணிய கொடுமைக்கு தான் அவன் அவனின் மனைவியை பழிவாங்க எண்ணினான். அதற்காத்தான் ஆட்களை கொண்டு அவளை கடத்தி தன்னவளுக்கு கொடுத்த அதே தண்டனையை அவனின் மனைவிக்கு கொடுக்கவும் முற்பட்டான். ஆனால் அவனின் மனைவியை அவனின் ஆட்கள் தூக்கும் முன்பு வேறு யாரோ தூக்கிவிட்டதாக அவனின் ஆட்கள் கூறவும் முதலில் அவர்களை காய்ச்சு காய்ச்சென காய்ச்சியவன் பின்பு ‘நான் கடத்தி இருந்தா சுலப்பத்தில கண்டு பிடிச்சிருப்பான்... இப்போ யாருன்னே தெரியாத ஒருவன் தூக்கி இருக்கான். இப்போ எப்பிடி அவன் அவனோட பொண்டாட்டிய காப்பாதுறான்னு நானும் பார்க்கிறேன்...’ என அலட்சியமாய் தலையை அசைத்து அவனின் ஆட்களை ஊருக்கு புறப்படுமாறு கூறிவிட்டிருந்தான்.


இப்போது யுத்கார்ஷின் வருகைக்காக காத்திருந்தான். அவன் எப்படியும் தன்னை தேடி வருவான் என்று யூகித்திருந்ததால் நிதானமாகவே அமர்ந்திருந்தான்


தன் முகம் தெரியாத எதிரியின் வீட்டை அடைந்திருந்த யுத்கார்ஷ் நிதானமாய் காரிலிருந்து இறங்கி அவன் வீட்டின் காலிங் பெல்லை அழித்தினான்.


யக்ஷித் அலுவலக அறையில் இருந்ததால் அவனின் அன்னை சுபத்ரா சமையல் வேலையை பாதியில் வைத்து விட்டு கைகளை துடைத்தவாறு கதவை திறந்தவர் வெளியில் நின்றிருந்தவனை கேள்வியாய் பார்த்தவாறு “உள்ள வாப்பா...” என அவன் உள்ளே வர வழிவிட்டவர் அவன் வீட்டினுள் நுழைந்ததும் அங்கிருந்த இருக்கையை காட்டி “உற்காருப்பா....” என்றதும் அவரை பார்த்து லேசாய் புன்னகைத்தவாறு மறுப்பாய் தலையசைத்தவன் “ய...” என ஆரம்பிக்கும் முன்பே “ஒஹ்... நீதானாப்பா... இவ்ளோ நேரமா உனக்காத்தான்ப்பா காத்திட்டிருந்தான். இப்போ தான் ஆபீஸ் ரூம்குள்ள போனான்... அதோ அங்க இருக்குப்பா...” என்றவர் “நீங்க பேசிட்டு இருங்க நான் ஸ்நாக்ஸ் எடுத்திட்டு வரேன்...” என்க அதில் இறுகிய முகத்துடன் அவனின் அலுவலக அறை நோக்கி சென்று கதவை திறந்தவன் அங்கிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்


யக்ஷிதோ பின் பக்க வழியால் உள்ளே நுழைந்தவன் தன் இடத்திற்கே வந்து தன் அறையிலேயே அமர்ந்து கொண்டு கம்பீரமாய் இருக்கும் அவனை நினைத்து ஒரு நொடி அதிர்ச்சியானவன் மறுநொடி தன்னவளின் நிலை எண்ணி இறுகிப்போனான்.


ஒன்றும் பேசாமல் மௌனமாய் அவன் முன் வந்து நின்றவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அவனை ஏறிட்டான்.


அத்தனை நேரம் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்தவனின் காதில் அவனின் அசைவுகள் விழவே நிதானமாய் அவனை ஏறிட்டு பார்த்தவன் அவன் யாரென தெரிந்ததும் ஒரே ஒரு நொடி அவனை கூர்ந்து பார்த்தவனின் கண்களில் வியப்பின் சாயல்.


அன்று தன்னவளுக்கு ஆடை வாங்க சென்ற போது தன்னை வரவேற்று உபசரித்தவன் என்ற எண்ணம் தோன்றும் போதே அதனுடன் சேர்த்து அன்று நடந்த விபத்தும் கண்முன்னே தோன்ற அதில் தன் தலை முடியை கோதியவன் ஒன்றும் பேசாமல் அவனை அளவிட்டுக் கொண்டிருந்தான்.


யக்ஷித்தும் ஒன்றும் பேசவில்லை. யுத்கார்ஷ் ஏதாவது பேசுவான் என்று காத்திருந்தான். ஆனால் அவனோ எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கவும் சற்று குழம்பியவன் தானே முதலில் பேச்சை ஆரம்பித்தான்.


“உன்னோட வைப் காணாம போயிட்டான்னு கேள்விப்பாட்டேன் உண்மையா...” என எகத்தாளமாய் வினவ அதை கேட்டு இதழில் சிறு புன்னகையை தவள விட்டவன் கையை அசைத்து மேலே பேசுமாறு சைகை செய்ய அவனோ இவனின் வினோதமான செயலில் ஒரு நொடி குழம்பியவன் ஒன்றும் பேசாது அமைதி காத்தான்.


யக்ஷித் அமைதியானதும் தன் தொண்டையை கனைத்து கைகளை நீட்டி சோம்பல் முறித்தவன் கைகளை பின்னால் மடக்கி அதில் தலை சாய்த்தவன் “என்கிட்ட ஏதாவது சொல்லனும்னு மனசு துடிக்குதா..” என்றான் அலட்சியமாய்.


அதில் வெகுண்டு எழுந்தவன் “ம்ம்... நிறைய சொல்லணும்... உன் பொன்டாட்டிய அணுவணுவா சித்திரவதை பண்றதை நீ பார்த்து கதறனும்டா... அத என்காதால நான் கேட்டு சந்தோசப்படனும்... என்னோட வெறி எல்லாம் தீரணும்னா நீ கதறுத நான் பார்க்கணும்...” என வெறி பிடித்தவன் போல் கத்த...


அதில் தன் காதை தோய்த்தவன் “நான் உன் பக்கத்தில தான் இருக்கேன்... பின்ன எதுக்கு இந்த ஓவர் சவுண்ட்...” என்றவன் “ம்ம்... மீதியையும் சொல்லி முடி...” என்க.


அதில் மீண்டும் வெகுண்டு எழுந்தவன் அறைக்கதவு தட்டப்படும் சத்தத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு “எஸ்” என்க அவனின் அறைக்குள் காபி தட்டுடன் நுழைந்தாள் ஸ்ரேயா..


அவளை பார்த்து அதிர்ந்த யக்ஷித் என்ன செய்வதென புரியாமல் தடுமாற அவனின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்துக் கொண்டிருந்த யுத்கார்ஷ் அவனின் பதட்டத்தை உணர்ந்து தனக்கு பின்னால் திரும்பி பார்த்தவன் அங்கு நின்றிருந்தவளை பார்த்து விழி சிவக்க ஆத்திரத்துடன் அவளை உறுத்து விழித்தான்.


ஸ்ரேயா அவனை பார்த்து மென்மையாய் புன்னகை பூத்தவள் அவனிடம் காபி கப்பை நீட்ட அதில் உள்ளம் கொதிக்க தன்னை கட்டுப்படுத்தியவன் வேண்டாம் என்பது தலையசைத்து விட்டு முன்னால் திரும்ப ஸ்ரேயாவோ ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் நின்றவள் பின் அறையை வெளியேறி இருந்தாள்.


அவள் வெளியேறிய மறுநொடி அமர்ந்திருந்த இருக்கையை உதறி விட்டு எழுந்த யுத்கார்ஷ் தன் முன்னால் நின்றிருந்தவனின் சட்டை காலரை பற்றி தன் முன்னால் இழுத்தவன் “இவள் எப்பிடி இங்க வந்தா... உனக்கும் இவளுக்கு என்ன சம்பந்தம்...” உறும அதில் சற்று பயந்து தான் போனான் அவன்


இத்தனை நேரம் இருந்தவன் இல்லை இவன். இவன் அசுரன் கொடியவர்களை வேட்டையாடி வீழ்த்தும் அசுரன். இந்த நொடி வரை தன்னால் வியாபாரத்தில் நஷ்டமைடைந்து தன்னை பழி வாங்குவதற்காக தன்னவளை கடத்தி இருக்கிறான் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு ஸ்ரேயாவை பார்த்தும் அனைத்தும் ஒரு நொடியில் புரிந்து போயிற்று.


இவனின் பிடியில் இருந்து விடுபட முயன்ற யக்ஷித் “கைய விடுடா... உன்ன கொல்லணும்னு என்னோட மனசு சொல்லிக்கிட்டே இருக்கு... அதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி உனக்கு ஒரு ட்ரைலர் காட்டினேன்... நீ நான் காதலிக்கிற பொண்ண எப்படி சித்திரவதை பண்ணி அவள பைத்தியமாக்கினியோ அதே மாதிரி உன்னோட பொண்டாட்டியும் ஆகணும்னு தாண்டா இத்தன நாள் ஆசைப்பட்டேன்...” என கத்த...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அதில் கோபம் கொண்டு அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் “என் பொண்டாட்டி மேல உங்க சுண்டு விரல் பட்டது ஒருத்தன்... ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டான்... என்கிட்டையே விளையாடி பார்க்க முடிவு பண்ணியிருக்க.. அதுக்கே உன்ன கண்டம் துண்டமா வெட்டிப் போட்டிருப்பேன்... ஆனா உன்ன இவ்ளோ நேரம் விட்டு வச்சதுக்கு காரணம் நீ எதுக்காக என் பொண்டாட்டிய கடத்தினங்கிரத உன் வாயால தெரிஞ்சிக்கத்தான்... ஆனா நீ இப்பிடி பண்றதுக்கு காரணம் இவள்னு தெரிஞ்சதுக்கப்ரம் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன்... நீ யாருக்காக இப்பிடி பண்ண ஆசைப்பட்டியோ அவளை தான் கொல்ல போறேன்..” கண்களில் கொலைவெறி தாண்டவமாட அழுத்தம் திருத்தமாய் உச்சரித்தவன்...


“நீ ஒரு பொண்ண காதலிச்சிருந்தா ஏதோ தெரியாம பண்ணிட்டேன்னு மன்னிச்சாவது விட்டிருப்பேன்... ஆனா நீ... காதலிச்சிரிக்கிறது ஒரு பொண்ண இல்ல... ஷி இஸ் க்ருள்” (she is cruel)


அதை கேட்டு யக்ஷித் அவனை அதிர்ந்து நோக்கினான். ஒரே ஒரு நொடி யுத்கார்ஷின் கண்கள் கலங்கி சீரானது. அதை பார்த்த யக்ஷிதின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.


மனைவியை காணவில்லை என்ற போது தைரியமாய் இருந்தவன் தன் காதலியை பற்றி கூறியதும் அவள் கொடூரமானவள் எனக்கூறி கண் கலங்குகிறான் என்றால் தன்னவள் எப்படிப்பட்டவள் என அவளை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.


கண்களை மூடி ஆழ மூச்செடுத்து தன்னை சமன் படுத்திக் கொண்ட யுத்கார்ஷ் “இப்போ என்னோட வைப் எங்க...” என்றான் மரத்த குரலில்.


அவனின் குரலில் தன்னிலைக்கு திரும்பிய யக்ஷித் “என்னோட ஆளுங்க உங்க வைப கிட்னாப் பண்ணல... அவங்களுக்கு முன்னாடியே வேற யாரோ அவங்கள கிட்னாப் பண்ணிட்டாங்க...” என தன்னை அறியாமல் மரியாதை பான்மையில் அவனை அழைத்திருந்தான்.


அதை கேட்டு அதிர்ந்து போய் அவனை நோக்கியவன் “வாட்ட்டட்ட்ட்....” கத்தியவனுக்கு அதற்கு மேல் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்ட முடியவில்லை.


மனைவியை காணவில்லை என்றதிலிருந்து வந்த அலைச்சல். அவள் தன்னிடம் வருவாளா இல்லையா என்ற ஏக்கம்.. தன் செல்ல மகளின் அழுகை... தன் தாயின் கண்ணீர்.. மதியத்திலிருந்து எதுவும் சாப்பிடாததால் வந்த களைப்பு.. இப்படி ஏகப்பட்ட நிலையில் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்தவன் விக்ரமின் மூலம் இவன் தான் தன் மனைவியை கடத்தியிருப்பான் என்றறிந்து அவனை தேடி வந்தால் இங்கு மைலுவின் மரணத்திற்கு காரணமாவளை தண்டித்ததால் அவளின் காதலன் தன் மனைவியை கடத்தியிருக்கிறான் என எண்ணியிருக்க அவனோ தான் உன் மனைவியை கடத்தவில்லை எங்களுக்கு முன்னாடி வேறு யாரோ கடத்தி விட்டார்கள் என்றால் அவனும் தான் என்ன செய்வான்.


ஒன்றும் செய்ய முடியாமல் தான் அமர்ந்திருந்தான். ஒன்று செய்யவும் முடியவில்லை. இங்கிருந்தால் அவளை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஆனால் அவளிங்கும் இல்லையே. பின்னே வேறு எங்கு தான் சென்றிருப்பாள்.


யோசித்து யோசித்து தலை வெடிக்க தலையை பிடித்தபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனின் முன்பு காபியை நீட்டினான் யக்ஷித்.


அதில் அவனை கேள்வியாய் நோக்க அவனோ ஒன்றும் சொல்லாது “தலைவலிக்கு காபி குடிச்சா சரியாகிடும்...” என்றபடி காபியை அவனின் கைகளில் திணிக்க அதை கையில் வைத்திருந்தவனின் மனதில் மனைவியின் நினைவுகள்.


இன்று அவள் தனக்கு காபி கொண்டு வந்தது.. தான் அவளை சீண்டியது... அனைத்தும் அவனின் விழிகளில் வலம் வந்தது. அதில் மீண்டும் தலைவலி அதிகரிக்க காபியை ஒரே மூச்சில் குடித்தவன் அவனின் அறையை விட்டு வெளியேறி தன் காரின் அருகில் சென்றான்.


அவனின் பின்னாலே வந்த யக்ஷித் “ஸ்ரேயா...” என இழுக்க அவனை கண்டன பார்வை பார்த்தவன் “அவளோட சிஸ்டர் ஷாரா ரதோட்... சென்னைல இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறா... ஸ்வீட் கேர்ள்.. அவளுகிட்டயே விசாரிச்சு தெரிஞ்சிக்கோ” என்றவன் தன் காரை கிளப்பிப் கொண்டு பறந்தான்.


----------------------------------


மலரை அடைத்து வைத்திருத்த அறைக்குள் நுழைந்த அந்த தடியனை பார்த்து விஷம புன்னகை பூத்த தேவி மெதுவாய் தன் விளையாட்டை ஆரம்பித்தாள்


அந்த தடியனோ அங்கிருந்த சிறு கட்டில் அமர்ந்தவன் லேப்டாப்பில் எதையோ நொண்டிக் கொண்டிருக்க மலரோ லேசான பயத்தில் அமர்ந்திருக்க அந்நேரம் அங்கு ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கு அணைபட்டது.


அதில் தன் செல்போனை எடுத்து பிளாஷ்லைட்டை ஆன் செய்தவன் மலர் இருந்த இடத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு ஸ்விட்ச்சை போட முயன்றவன் அது ஆனில் இருக்கவும் ‘பவர்கட் போல...” என எண்ணிக் கொண்டு மீண்டும் தன் இடத்தில் வந்து அமர முயன்றவனை கடந்து சென்றது ஒரு உருவம்.


அதில் ‘அந்த பெண் தான் விளையாடுகிறாளோ’ என மலர் இருக்கும் புறம் திரும்பியவன் அவள் சுவரோடு ஒன்றிக் கொண்டிருக்கவும் தலையை தட்டி ‘சே’ என்றவன் அந்த கட்டில் போய் அமர்ந்து கொண்டான்.


கட்டில் அமர்ந்தவன் அருகில் இருந்த தூணில் நன்றாய் சாய்ந்தபடி கொட்டாவி ஒன்றை வெளியிட்டவன் கண்களை மூடி சாய்ந்திருக்க அவனின் காதில் விழுந்தது அந்த சத்தம்.


“ஹ்ஹாஹூஹூஹூஆஆஆஹ்ஹ்ஹாவ்வ்வ்” என்ற மெல்லிய கலவையான ஒலி அவனின் செவியை தீண்ட படக்கென கண்களை திறந்தவன் சத்தம் வந்த திசையை நோக்கினான்.


அந்த பக்கம் ஒரு ஜன்னல் திறந்த நிலையில் இருக்கவும் அதே நோக்கி சென்றவன் ஜன்னலை மூட எத்தனிக்க சரேலென கடந்து சென்றது ஒரு உருவம்...


அதில் எச்சிலை விழுங்கியவன் “யாரு...” என சிறு பயத்துடன் கேட்க அதில் அங்கிருந்த அத்தனை ஜன்னல்களும் திறக்கப்பட்டு படபடவென அடித்துக் கொள்ள அதில் விதிர்விதிர்த்து போனவன் “ஹே...ஹேய்... யார்றா அது... என்கிட்ட விளையாடுறது... தொலச்சிடுவேன்...” என உருமியவன் சுற்றும் முற்றும் பயத்துடன் பார்க்க ஆரம்பித்தான்


மலரோ தன்னை சுற்றி நடப்பது எதுவும் புரியாமல் பேந்த பேந்த விழித்தபடி முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தாள்.


அந்த தடியனோ செல்போனை தூக்கிப் பிடித்துக் கொண்டு அந்த வெளிச்சத்தில் தன் இடத்தில் அமர்ந்தான். உள்ளுக்குள் பயப்பந்து உருண்டு கொண்டிருந்தது. ஆனால் முகத்தை கெத்தாய் வைத்துக் கொண்டிருந்தான்.


மனிதனுக்கு மனிதனை பார்த்தால் பயம் வராது. ஆனால் பேயை பார்த்தால்... எத்தனை பெரிய வீரன் என்றாலும் சில வேளைகளில் சில சறுக்கல்கள் நடந்தால் அவனும் கோழையாகி விடுவான்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்கு இந்த தடியனின் நிலையும் அது தான். இதே நேரம் இங்கு வேறு யாராவது வந்திருந்தால் தன்னிடமுள்ள கைத்துப்பாக்கியால் அவர்களை சுட்டு தள்ளி விட்டு எதுவும் நடவாதது போல் இருந்திருப்பான். ஆனால் இப்போது அவனுள் லேசான பயம் முளை விட்டிருந்தது.


ஒருவனை வீழ்த்த வேண்டுமென்றால் அவனின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்தால் போதும். இங்கு இவனின் பலவீனம் பயம். அதை தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டாள் தேவி.


படபடப்பு குறைந்தாலும் பயம் குறையாததால் தன்னை சுற்றி பார்வையை ஓட்டியவன் மடிகணனியை மடியில் வைத்துக் கொண்டு அதில் முக்கியமான சில விடயங்களை படித்துக் கொண்டிருந்தவன் கதவு படபடவென தட்டுப்படவும் அவசரமாய் எழுந்தவனின் கால் அங்கிருந்த சிறு மரக்குற்றியில் பட்டு இடற அதில் “ஆஆ...” என்ற லேசான அலறலுடன் விழுந்தவனின் தலையை பதம் பார்த்து இரும்பிக் கம்பிகள்


அவன் கீழே விழுவதற்கும் அணைந்திருந்த விளக்கு எறிவதற்கும் நேரம் சரியாய் இருக்க அவன் விழுந்ததில் அவன் வைத்திருந்த செல்போன் மலரின் காலடியில் போய் விழுந்தது.


திடீரென அங்கிருந்த அணைத்து விளக்குகளும் எறியவும் பயத்துடன் எழுந்தவள் சற்று நேரத்தின் முன்பு இந்த அறையினுள் நுழைந்தவன் இப்போது தலையில் இருந்து இரத்தம் வடிய சுயநினைவற்று கிடப்பதை பார்த்து பயத்தில் “ஆஆஆஹ்ஹ்ஹ்..” அலறியவள் அவசரமாய் வாயை இறுக மூடிக் கொண்டாள். யாரவது வந்து விடுவார்களோ எனும் பயத்தில்.


நெஞ்சுக்கூடு பயத்தில் ஏறி இறங்கியது. தொண்டை வற்றிப் போய் தண்ணீருக்காய் ஏங்கியது. இதழ்கள் பயத்தில் நடுங்கின.. பற்கள் தந்தியடித்தன. கண்கள் வலுவிழந்து தொய்ய ஆரம்பிக்க அங்கிருந்த தூணை பிடித்துக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள் மலர்.


அப்போது காலில் ஏதோ தட்டுப்படவும் கீழே குனிந்து பார்த்தவள் அங்கிருந்த செல்போனை பார்த்தும் மனம் பரபரப்பாக முகம் மகிழ்ச்சியின் சாயலை பூசிக் கொள்ள கீழே குனிந்து எடுத்தவளின் தன்னவனுக்கு அழைக்க வேண்டும் போல் பரபரத்தது.


ஆனால் அவனின் எண் தெரியாதே... அத்தனை நேரமும் இருந்த மகிழ்ச்சி அவனின் செல்போனின் நம்பர் தெரியாததால் களையிழந்து போக ஏமாற்றத்துடன் மீண்டும் தரையில் அமர்ந்து கொண்டாள்.


என்ன செய்வதென்றே அவளுக்கு புரிபடவில்லை. இங்கு இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இது என்ன இடமென்று தெரிய வேண்டும். தெரிந்தாலுமே அவளுக்குத்தான் சென்னையில் எந்த இடத்தையும் தெரியாதே. பின் அவள் எப்படி இங்கிருந்து தப்பிப்பது. அப்படியே தப்பித்து வேறு எங்காவது சென்று மாட்டிக் கொண்டால். வேறு வினையே வேண்டாம் என்றபடி சோக சித்திரமாய் தன் முன்னால் இரத்தம் வடிய விழுந்து கிடந்தவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்


அவளின் மனம் இந்த மகிழ்ச்சியாய் இருந்தது. தான் எப்படி தப்பிப்பது என்று புரியாவிட்டாலும் அவனின் இரத்தத்தை பார்க்க பார்க்க அவளுள் இனம் புரியா மகிழ்ச்சி. ஏதோ பெரிய சாதனை செய்து வெற்றி பெற்றது போல். எத்தனையோ பெண்களை கடத்தி அவர்களின் சாபத்தையெல்லாம் பெற்றவன் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் மரணித்துக் கொண்டிருப்பது அவளை பொருத்தமட்டில் சந்தோசம் தான்.


இவளையே பார்த்துக் கொண்டிருந்த தேவி அவளுக்கு அவள் கணவனின் செல்போன் நம்பர் தெரியாததை உணர்ந்து மெதுவாய் அவளருகில் சென்றவள் ஓடிக் கொண்டிருந்த இரத்தத்தில் அவனின் எண்ணை எழுதினாள்.


அவனின் இரத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் அதில் ஏதோ எழுதப்படவும் அதனருகில் சென்று பார்த்தவள் அதில் சில எண்கள் எழுதப்பட்டிருக்கவும் மீண்டும் பரபரப்பானாள்.


‘இது யாரோட நம்பர்... இத யாரு எழுதினா... என்னை தவிர இந்த ரூம்குள்ள வேற யாராவது இருக்காங்களா... எனக்கு அவங்க உதவி பண்ணும்னு நினைக்கிறாங்களா.. இல்ல ஏதாவது சிக்கல்ல மாட்டி விட பார்க்கிறாங்களா....’ என பலவாறு யோசித்தவள் கணவனின் பிம்பத்தை மனதில் நிறுத்திக் கொண்டு “யா...யாரவது இருக்கீங்களா... எனக்கு உதவி பண்ணும்னு ஆசை படுறீங்களா... நீங்க யாரு... என் முன்னாடி வாங்க... இல்ல நான் கேக்கிற கேள்விக்காவது பதில் சொல்லுங்க...” என சஞ்சலத்துடன் படபடத்தவள் “யாரவது என்னோட இருக்கீங்களா...” என குரலை தணித்து மெதுவாய் கேட்க...


சிறிது நேரம் அந்த இடமே மயான அமைதியாய் காட்சி அளித்தது. அதில் தொண்டையில் முள் சிக்கியது போல் தத்தளித்தவள் இதழை அசைக்க முயலும் போது அங்கிருந்த பழைய சாய்வு நாற்காலி ஒன்று தானாய் ஆடியது.


அதில் தன் சேலை முந்தானையை இறுக பற்றியவள் முகத்தில் பூத்த வியர்வை துளியை மெதுவாய் ஒற்றி எடுத்துக் கொண்டு தான் கீழே வைத்த செல்போனை கையில் எடுத்தவள் அந்த எண்களை அதில் ஒற்றியவள் பயத்துடன் அதை எடுத்து காதில் வைத்தாள்.


தலை கணக்க விரைவாய் காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் செல்போன் இசைக்கவும் காரை ஓரமாய் நிறுத்தி விட்டு அதை எடுத்து பார்த்தவன் அன்நோன் (unknown) நம்பரில் இருந்து அழைப்பு வரவும் வேக வேகமாய் சிந்தித்தவன் தான் எப்போதும் காரில் வைத்திருக்கும் டெப்பை (tab) எடுத்து தன் மொபைலுடன் கனெக்ட் செய்தவன் அதை ஆன் செய்து காதில் வைத்தான்.


தன் அழைப்பை மறுபக்கத்தில் எடுத்தும் அந்த பக்கம் யாரென தெரியாமல் என்னவென்று பேசுவது என குழம்பிய மலர் பேச்சற்று நிற்க மறுபக்கத்தில் இருந்த யுத்கார்ஷ் அவர்கள் யாரென அறிவதற்காய் அமைதியாய் இருக்க ஆக மொத்ததில் இருவருமே பேசவில்லை


‘மலர் எத்தனை நேரம் இப்பிடியே அமைதியாய் இருக்கப் போற... நீ பேசினாத்தனே அந்த பக்கம் யாருன்னு தெரியும்... இந்த வழிய விட்டா வேற எந்த வழியும் இப்போதைக்கு இல்ல... இந்த சந்தர்ப்பத்த நழுவ விட்டிடாத... சீக்கிரம் பேசு.. அப்போதான் நீயும் தப்பிச்சு அந்த பொண்ணுங்களையும் காப்பாத்த முடியும்...’ என மனம் உந்த அதில் தொண்டையை நனைத்து ஈரப்படுத்தியவள் பேச ஆரம்பிக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டது.


அது தெரியாமல் “ஹலோ... ஹலோ... நான் பேசுறது கேக்கிதா...” என கத்தியவள் அந்த பக்கம் மௌனமே நிலவவும் தலையிலடித்துக் கொண்டு மீண்டும் முயற்சி செய்தாள்.


இம்முறை “தி நம்பர் யு ஹேவ் டயல்ட் இஸ் கரென்ட்லி ஸ்விச்ட் ஆப்” (the number you dialed is currently swiched off) என அழகிய பெண் குரலொன்று இனிமையாய் மொழியவும் அவள் கடகடவென மொழிந்ததில் எதுவும் புரியாவிட்டாலும் ‘ஸ்விச்ட் ஆப்’ என்பது நன்கு புரிந்து அவளை பெரும் கவலை கொள்ள செய்ய அதில் போனை மீண்டும் பழையபடி அதனிடத்தில் வைத்தவள் படபடப்புடன் வாயில் கதவினருகில் சென்றாள்.


மறுப்பக்கம் யாராவது நிற்பார்களா.. என்னை பார்த்து விட்டால் என்ன செய்வது என பலவாறு யோசித்தவள் மனதை திடப்படுத்திக் கொண்டு கடவுளையும் கணவனையும் எண்ணிக் கொண்டு தடதடத்த மனதுடன் ஓசை படாமல் அந்த கதவை திறந்தாள்.


இத்தனை நேரம் அடைக்கப்பட்ட அறைக்குள் இருந்தவளுக்கு அறைக்கதவை திறந்ததும் உடலை தழுவி சென்ற இயற்கை காற்று மனதுக்கு புத்துணர்வு அளிக்க அதை அழ இழுத்து விட்டவள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வெளியேறினாள்


அந்த இடத்தை சூழ சுற்றிலும் பல பெரிய கட்டிடங்களும் சிறிய அறைகளும் இருக்க சில அறைகளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க மற்றைய இடங்கள் இருளடைந்து காணப்பட்டது.


அதையெல்லாம் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் “ஆவேன” வாயை பிளந்து கொண்டு பார்த்தவள் மெதுவாய் நடக்க ஆரம்பிக்க அவளின் கொலுசொலியோ அவளின் நடைக்கேற்ப தாளமிட அதில் யாரவது வந்து விட போகிறார்கள் எனப் பயந்து அதை கழற்றியவள் மற்ற காலில் அது இல்லாதிருக்கவும் அதை நினைத்ததெல்லாம் கவலை கொள்ளாமல் விரைவாய் கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்.


திடீரென தன் செல்போன் சார்ஜ் இல்லாமல் அணைபடவும் தன்னிடமிருந்த மற்ற போனை எடுத்து DSP அங்கிளிற்கு அழைத்தவன் “அங்கிள் இந்த நம்பர் எங்க இருந்து வந்திருக்கின்னு சீக்கிரம் ட்ரேஸ் பண்ணுங்க...” என்றவன் ஒரு காதில் DSP உரையாடிபடி டெப்பில் இருந்து தனக்கு வந்த எண்ணுக்கு அழைத்துக் கொண்டே இருந்தான். அவனின் அழைப்பை ஏற்க மறுபக்கம் யாருமில்லாது போக கோபத்தில் கையால் ஸ்டியரிங்கில் ஓங்கிக் குத்தியவன் காரை விரைவாய் செலுத்தினான்.


அதற்குள் சதீஷிற்கு அழைத்து தன் ஆட்களை தயாராய் இருக்கும் படி கூறியவன் மறுபக்கம் DSP யும் ACP விக்ரமாதித்யனும் தாங்களும் வந்து கொண்டிருப்பதாக கூற அனைவரும் ஒரு புள்ளியை நோக்கி தங்கள் வாகனத்தை அதிவிரைவில் செலுத்தினர்.


இதற்கிடையில் மலர் தப்பித்து விட்டதை அறிந்த அந்த கும்பல் ‘எங்கே அவள் இங்கிருந்து தப்பித்து சென்றால் தாங்கள் மாட்டிக் கொள்வோமோ’ என பயந்தவர்கள் ஆளுக்கொரு கை துப்பாக்கியை எடுத்து கொண்டு மலரை தேட ஆரம்பித்தனர்.


ஒவ்வொரு இடமாய் ஓடிக்களைத்து ஏற்கனவே வந்த இடத்திற்கு தான் மீண்டும் வந்திருக்கிறோம் என ஓடி ஓடி களைத்து போயிருந்தாள் மலர். எந்த வழியில் போகிறோம் எங்கு போகிறோம் என அவளுக்கு எதுவும் புரிபடவில்லை. அதற்குள் அந்த கும்பலில் இருந்தவர்கள் அந்த இடத்தின் அனைத்து விளக்குகளையும் அணைத்து வைத்திருக்க இருளடைந்த அந்த இடத்தை பார்ப்பதெற்கே அவளுக்கு அத்தனை பயமாய் இருந்தது


எத்தனை நேரம் தான் அவளும் ஓடுவது. காலையில் சாப்பிட்டதற்கு இவ்வளவு நேரம் அவரை பச்சை தண்ணீர் கூட வாயில் படாததில் தலை சுழல எங்கே தான் மயக்கம் போட்டு விழுந்து விடுவோமோ எனும் பயத்தில் மறைவாய் இருந்த ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.


சேலை முழுவதும் வியர்வையில் குளித்து இருந்தது. எழ கூட அவளால் முடியவில்லை. இன்னமும் முழுதாய் குணமடையாத உடம்பு. மெதுவாகத்தான் ஓடினாலும் ஓடும் போது ஏற்பட்ட வலி அவளை துவள செய்தது. பசி வயிற்றுக்குள் தாளமிட்டுக் கொண்டிருந்தது. இதயத்தின் ஓசை தொண்டை குழிக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. கைகால்கள் துவள ஆரம்பித்தது. வயிற்றில் இடையிடையே ‘சுரீரென’ ஒரு மெல்லிய வலி பரவிக் கொண்டிருந்தது.


இத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும் தன் கணவனின் நினைவு ஒரு நொடி கூட அவளை விட்டு அகலவில்லை. அவன் தன்னருகில் வந்து விட்டது போல் ஒரு மாயை. தனக்கு மிகவும் நெருக்கமாய் இருக்கிறான் என அவளின் ஆழ்மனது கூக்குரலிட்டது. அதில் பிய்ந்து தொங்கிய அவளின் சோபையற்ற விழிகளும் வறண்ட இதழ்களும் தன் கணவனின் பெயரையே உச்சரிக்க ஆரம்பித்தது.


அதே நேரம் அவளின் விழிகளும் மெதுவாய் தன் சுழற்சியை நிறுத்த ஆரம்பிக்க வழக்கம் போல் இன்றும் அந்த குறுகிய இடத்தில் மயங்கிச் சரிந்தாள். கண்கள் பிரள மயங்கியவளின் காதில் கேட்டது துப்பாக்கி சூட்டின் சத்தங்கள்...


கள்வன் வருவான்......
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

அடுத்த பதிவ பதிவு பண்ணிட்டேன்... எப்பிடி வந்திருக்குன்னு தெரியல... சோ மக்களே தயவு செய்து பார்த்திட்டு உங்க கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

உங்கள் கருத்துக்களுக்காக நான் காத்திட்டு இருக்கேன் டியர்ஸ்...


1523792600149.png

அப்பிடின்னு மட்டும் நினைச்சிட்டு சும்மா இருக்காம ஒரு வரி கமெண்ட் பண்ணிட்டு போங்கப்பா...

ஆவலுடன்
NJN
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 33

மல்லாக்க படுத்துக் கொண்டு இருந்த மலரின் காதில் மீண்டும் மீண்டும் துப்பாக்கி சூட்டின் சத்தங்களே ஒலித்து பயத்தில் உடலை வெடவெடக்க செய்ய அதை தாள முடியாமல் அருகில் இருந்த எதையோ பற்றியவளின் உடலினுள் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது


பழக்கப்பட்ட ஏதோ ஒன்று போல் இருந்ததில் சிரமப்பட்டு இமைகளை பிரித்தெடுத்து தன் விழிகளை அலையவிட்டவளின் பார்வை தன் கண் முன்னே நின்றிருந்த கணவனை பார்த்ததும் மகிழ்ச்சியில் அகல விரிய தொலைந்து போன பறவையொன்று தன் தாயின் சிறகுக்கடியில் பத்திரமாய் இருப்பது போல் உணர்ந்தவள் அவனையே இமைக்காது பார்த்தாள்.


அவனை தவிர அவளின் நினைவலைகளில் எதுவும் இல்லையென்பது போல் அவனையே வெறித்தவள் தன் கைகளை மெதுவாய் அசைத்து அவனின் கன்னத்தில் பதித்தாள்


தன்னவள் கண்களை மலர்த்தியதும் உள்ளம் துள்ள அவளருகில் வந்தவன் அவள் தன்னையே விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருக்கவும் அவனின் காதல் மனம் விழித்துக் கொண்டு அவளருகில் கட்டிலில் அமர அவளும் அவனின் அருகாமையை விரும்பியவளாய் அவனின் கன்னத்தில் தன் கைகளை வைத்து அழுத்தினாள்.


தன் கணவனை தன் காதல் கள்வனை பார்க்கவே முடியாதோ என்ற நிலையில் இருந்தவளுக்கு தன் கணவன் தன் கண் முன்னே நிற்பது அத்தனை மகிழ்வை கொடுத்தது. அவனையே விழி சிமிட்டாது காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் பிறை நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாய் ஒற்றியெடுத்த யுத்கார்ஷ் “தூங்கு..” என மென்குரலில் கூறி அவளின் தலையை வருட அதில் மயக்கத்தின் பிடியிலிருந்து முழுமையாக வெளிவராத மலர் அவனின் வருடலில் தன்னை மறந்து சுகமாய் துயிலில் ஆழ்ந்தாள்.


மனைவி அசதியில் விழிகளை மூடவும் அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன் அவளின் காலருகில் வந்து அமர்ந்து தன் பாக்கெட்டில் இருந்த அவளின் கொலுசை எடுத்தவன் அவளின் காலை தன் கைகளில் தாங்கி அதை அணிவித்து அவளின் காலில் மென்மையாய் இதழ் பதித்தான்.


மனம் முழுக்க தன்னவள் தன்னுடன் இருக்கிறால் என்ற மகிழ்வு இருந்தாலும் நான்கு நாட்களுக்கு முன்பு நடந்ததை என்ன செய்தும் அவனால் மறக்க முடியவில்லை. அதை நினைத்தாலே அவனின் உடலில் ரௌத்ரம் குடிகொண்டது போல் அவனின் உடல் அவனின் கட்டுப்பாட்டை இழந்து இறுகிப் போய்விடும்..


இப்போதும் அந்த நிலையில் தன் இருந்தான். உடல் இறுகிப்போனது கண்களோ தீயின் ஜுவாலையை ஒத்து நெருப்பை கக்கியது ஆனால் இதழ்களோ குருஞ்ச்சிரிப்பில் மின்னியது.


அதை போக்குவதற்காக துயிலில் ஆழ்ந்திருந்த மனைவியின் அருகில் நெருங்கி அவளின் இடையை கட்டிக் கொண்டு அவளின் மாராப்பில் முகம் புதைத்தவனின் நினைவு மீண்டும் தன் கட்டுப்பாடு இழந்து நான்கு நாட்களின் முன் நடந்த நிகழ்வுகளையே அசை போட்டது...


நான்கு நாட்களின் முன்பு இரவு பதினொன்று நாற்பத்தைந்தை அடைந்த நிலையில்....


சிறு ஓடையொன்றில் யார் கண்களுக்கும் புலப்படாத வகையில் பயத்துடன் அமர்ந்திருந்தாள் மலர்.


சுற்றிலும் ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லாது இருளின் ஆதிக்கம் பரவியிருந்தது.


அந்த கடத்தல்கார கும்பலில் இருந்த ஒருவன் மலர் தப்பித்து விட்டதை அறிந்து தங்கள் குழுவிற்கு அறிவிக்க அவர்களோ எங்கே இவள் தப்பித்து விட்டாள் தாங்கள் மாட்டிக் கொள்வோமோ எனும் பயத்தில் அவள் இங்கிருந்து தப்பிப்பதற்கு முன் நாம் அவளை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று ஒவ்வொரு இடம் விடாமல் வலைவீசி அவளை தேடிக் கொண்டிருக்க அதேநேரம் அங்கு யாருக்கும் தெரியாமல் அந்த கடத்தல்கார கும்பலின் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் ஒரு இளம் பெண்.


சுற்றிலும் உள்ள இடங்கள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததில் அவர்கள் மலர் தப்பித்து விடுவாளோ எனும் பயத்தில் அனைத்து விளக்குகளையும் அணைத்து வைத்திருக்க அது பெரும் வசதியாய் போயிற்று அவளுக்கு.


அதில் தனக்குள் புன்னகைத்துக் கொண்டவள் தான் அணிந்திருந்த பேன்ட் பாக்கெட்டினுள் கை விட்டு அதற்குள் இருந்த சிறு பட்டன் கேமராவை தன் சேர்டில் பொருத்தியவள் அதை அங்கிருந்த தன் லாப்பில் கனெக்ட் செய்ய அவளின் சேர்ட்டில் பொருத்தியிருந்த காமேராவில் பதிவாகிய அனைத்தும் லேப்பில் சேமிப்பானது. அதை பார்த்து இளம் புன்னகை பூத்தவள் அதை யார் கண்ணிலும் படாதவாறு மறைத்து வைத்து விட்டு அந்த கயவர்களின் கோட்டைக்குள் நுழைந்தாள்.


காரில் மின்னல் வேகத்தில் பறந்து வந்து கொண்டிருந்த யுத்கார்ஷிற்கு செல்போன் வழியாய் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்த DSP “த்ருவா நாம வரவேண்டிய இடத்திற்கு இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு அவசரப்பட்டு எதுவும் செய்யாத.. நாங்க வந்துக்கிட்டே இருக்கோம்... அதுவுயில்லாம அங்க யார் யார் இருக்காங்கன்னும் நமக்கு தெரியாது... சோ பீ கேர்புல்...” என்றவர் கார் டிரைவரிடம் விரைவாய் போகும் உத்தரவிட அவனும் வேகமாய் காரை செலுத்திக் கொண்டிருந்தான்


தன் காரில் வேகமாய் வந்து கொண்டிருந்த ACP விக்ரமாதித்யன் காரை ஒரு கையால் லாவகமாய் செலுத்திக் கொண்டு இன்னொரு கையில் வோகிடோகியில் சிலருக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தான்.


ஆகமொத்தத்தில் அந்த சில நொடிகள் அத்தனை பேருக்கும் வேகமாகவும் பரபரப்பாகவும் கழிந்து கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில்.


மலரவளின் அதிர்ச்சி கலந்த பதட்டம் இளம் பெண்ணவளின் துணிச்சல் யுத்கார்ஷின் சீற்றம் விக்ரமாதித்யனின் அவர்களை உயிரோடு பிடித்து தன் முறைப்படி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு மேலதிகாரியை யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது என்ற கவலை அந்த கயவர்களுக்கு தாங்கள் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம்...


அத்தனை பெரும் மனிதர்கள் தான். ஆனால் அவர்களின் இயல்புகளும் எண்ணங்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தது. ஒருவனை போல் இன்னுமொருவன் இருக்க முடியாதல்லவா..


எப்போது வேகமாய் லாவகமாய் காரை செலுத்தும் யுத்கார்ஷ் இன்று அதையும் விட அதிவேகமாய் காரை செலுத்தினான். மனதில் புதிதாய் முளைத்த பயம் எனும் கொடிய மிருகம் அவனின் புலன்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றும் அதை தடுத்து தன் மனஉறுதில் அதிக நம்பிக்கை வைத்து தளராமல் வண்டியை செலுத்திய யுத்கார்ஷ் அந்த இடத்தை அடைந்து புழுதி கிளம்ப வண்டியை நிறுத்த சரியாய் அதேநேரம் DSPயினதும் ACPயினதும் கார் அங்கே நுழைந்தது. அவர்களுடன் சேர்த்து இன்னும் சில காவலாளர்கள்.


காரை நிறுத்தியதும் அவசரமாய் அதிலிருந்து இறங்கி உள்ளே செல்ல முயன்ற யுத்கார்ஷை தடுத்து நிறுத்திய ஆதித்யன் கான்ஸ்டபிலை நோக்கி உள்ளே யாரவது இருக்கிறார்களா என பார்க்குமாறு உத்தரவிட்டவன் தானும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாராவது தென்படுகிறார்களா எனப் பார்த்தவன் யாரும் புலப்படாது போகவே தனக்கு பின்னால் வருமாறு சைகை செய்தவன் அவர்களின் இடத்திற்குள் நுழைந்தான்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்போதுமே தன்னை சுற்றியுள்ள இடத்தை கூர்மையாக அலசும் இளம் பெண்ணவளின் பார்வை சில நொடிகளிலேயே அங்கு போலீஸ் வந்து விட்டனர் என்பதையும் கண்டுகொள்ள இதற்கு மேலும் இங்கு நிற்பது உசிதமல்ல என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தவளை பார்த்து விட்டிருந்தான் அந்த கும்பலில் இருந்த ஒருத்தன்.


இருட்டில் அவள் யாரென்பது புலப்படாததால் அவளை மலர் என்று எண்ணியவன் அவள் நின்றிருந்த இடத்தை குறி வைத்து துப்பாக்கியை அழுத்தினான்.


அவனின் எண்ணத்தை யூகித்தவளோ ஒரு சிறு வினாடிக்குள் அங்கிருந்து நகர அந்த புல்லெட் அங்கிருந்த சுவரை துளைத்தது.


ஏற்கனவே பயம் பதட்டம் அதிர்ச்சி களைப்பு என அனைத்து வகை உணர்வுகளினும் பிடியிலும் சிக்கி இருந்த மலர் இந்த துப்பாக்கி சூட்டின் சத்தத்தில் உடல் தூக்கிவாரிப் போட நினைவு தப்பில் மயக்கத்தின் பிடியில் சிக்கினாள்.


அந்த இளம் பெண்ணவளோ அங்கிருந்து தப்பிக்க ஓட்டம் பிடிக்க அவளை பிடிக்க அந்த கும்பல் அவளை துரத்த துப்பாக்கியின் சத்தத்தில் மறுகோடியில் நின்ற விக்ரமாதித்யனும் யுத்கார்ஷும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓட அவர்களுடன் வந்த காவலாளிகளும் அந்த திசை நோக்கி ஓடினர்.


அந்த இளம் பெண்ணவளோ வந்த திசையை மறந்து எந்த பக்கம் ஓடிகிறோம் என புலப்படாமல் கால் போன போக்கில் ஓடிக் கொண்டிருந்தாள். இவள் மாறி மாறி ஓடி அந்த கும்பலை திசை திருப்பிக் கொண்டிருக்க அந்த கும்பலோ இவளை பிடித்து கொன்றே ஆகவேண்டும் எனும் எண்ணத்தில் அவளையே இலக்காய் வைத்துக் கொண்டு ஓடினர்.


யுத்கார்ஷ் மனைவிக்கு எதுவும் ஆகிவிட்டதோ எனும் பயத்தில் வீறு கொண்டு எழுந்து சத்தம் வந்த திசையை வந்தடைந்தவன் ஒவ்வொரு இடத்தையும் கண்களால் துளாவினான்.


விக்ரமாதித்யனின் போலிஸ் மூளை வேக வேகமாய் எதையோ சிந்தித்துக் கொண்டு எதிர் திசை நோக்கி அவனை ஓடச் செய்ய யுத்கார்ஷோ தான் நின்றிருந்த பகுதியை முழுமையாய் அலசினான்.


பெண்ணவள் ஓடி ஓடி களைத்ததில் அங்கிருந்த சிறு ஓடையினுள் மறைந்து கொள்ள எத்தனித்தவள் அதற்குள் ஒரு பெண் மயங்கிய சரிந்திருந்தை பார்த்து பதட்டம் கொண்டாள்.


யாரென்று தெரியாவிடிலும் இயற்கையிலே உதவும் குணம் கொண்டதால் அந்த பெண்ணருகில் விரைந்தவள் அவளை தூக்கி தன் மடியில் கிடத்தினாள்.


அவளுக்கிருந்த பதட்டத்தில் அடுத்து என்ன செய்வதென புரியாததால் குழம்பிப் போனவள் இருகைகளாலும் தன் தலையை அழுந்த பற்றிக் கொண்டாள்.


மூளையோ இங்கிருந்து அவசரமாய் விரைய வேண்டும் என கட்டளையிட்டுக் கொண்டிருக்க மனமோ இந்த பெண்ணை இங்கு விட்டு செல்வது சரியில்லை என அறிவுறுத்த மூளைக்கும் மனதுக்கும் இடையில் வெகு நேரம் போராடியவள் தன் மனதின் கூற்றுப் படியே செய்ய முடிவு செய்தாள்


சிலவேளைகளில் மூளையும் மனதும் போட்டி போடும் போது இரண்டில் எதை கேட்பது என்பது அனைவரினதும் பொதுவான பிரச்சினை


மூளையின் சொற்படி கேட்டிருந்தால் அவள் இங்கிருந்து தப்பித்து போயிருப்பாள். ஆனால் அவளோ ஒரு சாதாரண மனுசியாய் மனதின் சொற்படி கேட்டு நடந்தாள். தான் மட்டும் தப்பித்து சென்றுவிட்டாள் இந்த பெண்ணின் நிலை என்னவாகும் என்று யாரென்று தெரியாத ஒரு பெண்ணுக்காய் பாவப்பட்டவள் அவளை எழுப்ப முயற்சி செய்தாள்.


தன்னிடம் இருந்த சிறு போத்தலில் தண்ணீர் இருந்ததால் அதை அவளின் முகத்தில் தெளித்தவள் அதற்கும் அவள் எழுந்து கொள்ளாததால் அவளின் வாயினுள் தண்ணீரை ஊற்றினாள். தாகத்தில் இருந்தவளுக்கு அந்த தண்ணீர் சிறு தெம்பை கொடுத்ததோ மெதுவாய் இமை பிரித்தவள் தன் முன்னால் இருந்தவளை பார்த்து பயத்தில் அலற சட்டென அவள் வாயை தன் கைகளால் மூடினாள் அவள்.


அதில் அவளிடமிருந்து விலகி எழுந்தவள் அங்கிருந்த சுவற்றில் பல்லி போல் ஒட்டிக் கொண்டு “யா...யார் நீங்... நீங்க...” என பயந்த குரலில் கேட்க.


அவளோ “அதெல்லாம் சொல்றதுக்கு இப்போ டைம் இல்ல... முதல்ல நாம இங்கிருந்து தப்பிக்கணும்... நீ எப்பிடி இங்க வந்த...” என்க..


மலரோ அவளின் பேச்சில் இருந்த தெளிவிலும் நம்பகத்தன்மையிலும் அவளிடம் நடந்ததை பற்றி கூறியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. தன்னுடன் இங்கு வந்த பெண்களை நினைத்து.


அவளோ மலரின் கண்களை துடைத்து விட்டவள் “சரி.. அழாத... நாம இங்கிருந்து தப்பிச்சா தான் அந்த பொண்ணுங்களையும் காப்பாத்த முடியும்... வா... சீக்கிரம்”



"மலரின் கைகளை இறுக பற்றிக் கொண்டு ஓசைபடாமல் அங்கிருந்து நகர ஆரம்பிக்க மலரால் அவளின் வேகத்திற்கு சற்றும் ஈடு கொடுக்க முடியவில்லை.


வயிற்றின் வலி இப்போதும் இருந்து கொண்டே இருந்ததில் தன் கையை பற்றியிருந்தவளிடம் இருந்து தன் கைகளை பிரித்து எடுத்தவள் “என்னால இதுக்கு மேல நடக்க முடியலங்க... என்னை பத்தி கவலைபடாம நீங்க இங்கிருந்து போய் எப்பிடியாவது அந்த பொண்ணுங்கள காப்பாத்த முயற்சி பண்ணுங்க... நான் அவங்க கவனத்த என்பக்கம் திருப்பிக்கிறேன்...” என்க...


அதில் கோபத்துடன் மலரை முறைத்தவள் “என்ன பைத்தியமா நீ... நான் மட்டும் தப்பிச்சு போயிருக்கனும்னா அப்போவே போயிருப்பேன்... உன்ன கஷ்டப்பட்டு எழுப்பி இருக்க மாட்டேன்... சோ லூஸு மாதிரி பேசாம என்கூட வா...” என்றவள் “ஏன் உன்னால நடக்க முடியல பிரீயட்ஸா...” என கேட்க..


அதில் தயக்கமாய் இழுத்தவளுக்கு இந்த பெண்ணிடம் என்னவென்று சொல்வது என பெரும் கூச்சமாய் இருந்ததால் தனக்கு குழந்தை பிறந்ததை பற்றி கூறியவள் குழந்தையின் நினைவில் கண்கலங்கினாள்.


அதில் ஆறுதலாய் அவளை அணைத்த அந்த பெண் “டோன்ட் வொரி... சீக்கிரம் உன் குழந்தைக் கிட்ட நான் உன்ன கூட்டிட்டு போறேன்...” என்றவள் “உன்னால் நடக்க முடியலன்னா நான் உன்ன தூக்கிட்டு போகட்டுமா...” என்க..


அதில் திகைத்துப் போய் அவளை பார்த்த மலர் “நீயா... நீ எப்பிடி என்னை தூக்குவ...” என ஆச்சரியத்தில் கண்களை விரிக்க அவளின் செய்கையில் வந்த சிரிப்பை பெரும் பாடுபட்டு அடக்கியவள் அலேக்காய் அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கண்களால் யாரவது வருகிறார்களா என துளாவிக் கொண்டு விரைந்தாள்.


அந்நேரம் மலருக்கு தன்னவனின் நினைவு தான் வந்தது. அவனும் இப்பிடித்தானே எதை பற்றியும் யாரை பற்றியும் யோசிக்காமல் சடக்கென தூக்கிவிடுவான் என எண்ணியவளின் மனதில் கணவனின் நினைவுகள் பசுமையாய்.


மெல்லிய உடல் வாகை கொண்ட மலரின் உடம்பு அந்த பெண்ணுக்கு ஏதோ பஞ்சு மூட்டையை சுமப்பது போல் இருக்க விரைவாகவே அவளால் நடக்க முடிந்தது.


ஆனால் எத்தனை விரைவாய் நடந்தும் எந்த வழயில் செல்வதென்று புலப்படாததால் கால்போன போக்கில் நடந்தவள் அருகில் ஏதோ சத்தம் கேட்கவும் மலரை கீழே இறக்கி விட்டவள் வாயில் கையை வைத்து ‘எதுவும் பேசாதே’ என சைகை செய்தவாறு கீழே குனிந்து கொள்ள அவர்களை மறைத்தாற் போன்று இருந்த தடுப்பு சுவரின் மறுபக்கம் நின்றிருந்தான் ஒருவன்.


அவன் செல்போனின் யாருடனோ “அவள எங்கயும் காணல தல... நீங்க டென்சன் ஆகாதீங்க.. எப்பிடியும் அவள பிடிச்சிடுவோம்...” என யாருடனோ உரையாடியபடி அவர்களை கடந்து செல்ல அவன் சென்று விட்டான் என்பத உறுதிப் படுத்திக் கொண்டு எழுந்து நின்றவர்களின் முன்பு கோணல் சிரிப்புடன் நின்றிருந்தான் இப்போது செல்போனில் உரையாடிக் கொண்டிருந்தவன்.


திடீரென முன்னால் ஒருவன் வரவும் அதில் திகைத்துப் போன இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நிற்க அதில் அந்த பெண் எதையோ யோசித்தவாறு பின்னால் கடைக்கண்ணை திருப்பியவள் அங்கு இன்னொருவன் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து உறைந்து போனாள்..
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தான் மட்டுமென்றால் கூட அவள் சமாளித்து விடுவாள். ஆனால் தன்னுடன் இன்னுமொரு பெண்ணும் நின்று கொண்டிருக்கவும் தான் அவளால் எதுவும் செய்ய முடியாது போயிற்று. தான் மட்டுமென்றால் அவர்களை எப்பிடிபயாவது தாக்கி விட்டு அகன்று விட்டிருப்பாள். ஆனால் குழந்தை பிறந்து இன்னும் முழுதாக குணமாகாத உடம்புடன் ஒரு பெண் நிற்கிறாள். அவளால் வேகமாய் நடக்கவும் முடியவில்லை.


இத்தனை நேரம் ஓடி ஓடி கலைத்தவளுக்கு இனிமேலும் ஓடுவதற்கு தெம்பும் இல்லை என்பது நன்கு புரிய தன் முன் நின்றவனையே அனல் கக்கும் விழிகளுன் ஏ்றிட்டுக் கொண்டிருந்தாள்.


அதில் தாங்கள் இருவரும் வசமாய் மாட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தாலும் மனதை தளர விடாமல் என்ன செய்வதென தீவிரமாய் சிந்திக்கலானாள். ஆனால் எந்த யோசனையும் அவளின் மூளையை எட்டாததால் மனதுக்குள்


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”



எட்டயபுரத்து கவிஞனின் இந்த வரிகளை மனதினுள் உறுதியுடன் சொல்லிக் கொண்டவள் கண்களை மூடி நிதானித்தாள்.


தப்பிக்கும் மார்க்கம் அறியாவிடிலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை தப்பித்து விடுவோம் என அவளுள் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்க அதையே பற்று கோலாய் கொண்டு தன்னை திடப்படுத்தியவள் “ஏய்... நீங்க யாரும் இங்க இருந்து தப்பிக்க முடியாது... இந்த இடத்த போலிஸ் ரவுண்டு அப் பண்ணிட்டாங்க...” என தடாலடியாய் கூற அதில் உள்ளுக்குள் பயந்த இருவரும் அதை முகத்தில் கட்டாது “அப்பிடியா... சரி பரவாயில்ல... அவனுங்க இந்த இடத்த கண்டுபிடிக்கிறதுக்குள்ள நாங்க உன்ன போட்டுத் தள்ளிட்டு அவள கூட்டிட்டு போய்றோம்...” என்றவன் பின்னால் நின்றிருந்தவனிடம் “டேய் அவள முதல்ல பிடிச்சு உள்ள இழுத்திட்டு போடா.. அவள பார்க்கனும்னு பாஸ் காத்திட்டு இருக்காரு..” என மலரின் பக்கம் கைகாட்ட அதில் பதறிப் போனவள் தன்னுடன் இருந்தவளின் கையை இறுக பற்றிக் கொண்டாள்.


அவனின் வார்த்தைகள் அவளுள் அருவருப்பாய் இறங்கியது. அதே நேரம் கணவனின் நினைவும் வந்தது. ‘நான் கல்யாணம் பண்ணக்க போற பொண்ண தொடுற முதல் ஆம்பிள்ளையும் நான்தான் கடைசி ஆம்பிள்ளையாவும் நானா மட்டும் தான் இருக்கணும்’ என்ற வார்த்தைகள் காதில் ஒலித்து அவளை நடுங்க செய்தது.


இவர்கள் தன்னை ஏதாவது செய்துவிட்டால் கடைசிவரை என்னவரின் காதல் எனக்கு கிடைக்காமலே போய்விடும் என்ற எண்ணம் மேலெழும்ப இதற்காகவாவது இவர்களிடமிருந்து எந்த சேதாரமும் இன்றி தன் தப்பிக்க வேண்டும் என எண்ணியவள் இத்தனை நேரமாய் தன் கையை விடாமல் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கையை இறுக பற்றிக் கொண்டு எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்ததோ தன் முன் நின்றிருந்தவனை உதறித் தள்ளியவள் ஓட்டம் பிடிக்க துவங்கினாள்.


மனதின் உறுதியின் முன்பு தன் உடலின் வலி அவளுக்கு பெரிதாய் தோன்றாததால் அவளால் வேகமாய் ஓட முடிந்தது.


ஆனால் இத்தனைநேரம் அவளை தூக்கிக் கொண்டு ஓடிய அந்த பெண்ணவளால் இவளின் இந்த அசுர வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் அவள் தடுமாற அவளின் கையை இறுக பற்றி நான் இருக்கிறேன் எனும் விதமாய் கணவனின் நினைவில் அழுத்தமாய் புன்னகைத்தவள் மீண்டும் விடாமல் ஓட அதில் கோபம் கொண்ட அவர்களை இவரை குறி வைத்து சுட அந்த சத்தத்தில் தன் ஒட்டுமொத்த தைரியமும் வடிய பெற்றவளாய் அதிர்ந்து நின்றாள் மலர்.


அவர்கள் இருந்த இடத்திற்கு மறுபக்கத்தில் நின்ற ஆதித்யனின் காதில் இந்த துப்பாக்கியின் சத்தம் காற்றில் மிதந்து வந்து செவியில் விழ செவியை கூர்மையாக்கி ஓசை படாமல் துப்பாக்கியை கையில் ஏந்தியபடி மெதுவாய் நடக்க அப்போது அந்த பக்கமாய் வந்த யுத்கார்ஷ் ஆதித்யன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு முன்னேறி கொண்டிருக்கவும் தானும் ஓசை படாமல் அவனை பின்தொடர்ந்தான்.


அதற்குள் அவர்கள் மலரின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல முற்பட மலரோ பயத்தில் “என்னை விடுங்க.... தயவு செஞ்சு என்னை விடுங்க...” என அவள் கதற அந்த பெண்ணோ “டேய்... அவள விடுடா... விடப்போறீங்களா இல்லையா...” என அவனின் சட்டையை பிடித்துக் கொண்டு அவனை உலுக்க அதில் கோபமானவன் அவளை ஒரு உதறித் தள்ள அந்த பலம் கொண்டவனின் கனத்தை தாங்க முடியாமல் தூரப் போய் விழுந்தாள் அந்த பெண்.


அதில் அவள் கோபம் கொண்டு எழும் முன்பு அவன் மலரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவளின் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தியிருந்தான்.


அதில் பதறியவள் “டேய்... அவள விடுங்கடா... என்னை என்ன வேணா பண்ணிக்கோங்க... அவள் விடுங்க....” என்றவளுக்கு சற்று நேரத்தின் முன் மலர் அவள் குழந்தையை பற்றி கூறியது கண்களில் மின்னி மறைந்தது.


அதனால் தான் தனக்கு என்னவானாலும் பரவாயில்லை என்று மலரை காப்பாற்ற முயன்றாள். ஆனால் அவர்களோ சற்றும் கருணையின்றி அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு விட்டு மலரை அழைத்து கொண்டு செல்வதிலேயே குறியாய் இருக்க எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தைரியத்துடன் தன்னம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் இருக்கும் யுவேதா இன்று எதுவும் செய்ய முடியாமல் முழி பிதுங்கி நின்றிருந்தாள்.


அவள் பத்திரிக்கை துறையில் வேலைக்கு சேர்ந்து இன்றுடன் ஒரு வருடமாகி விட்டது. இதுவரைக்கும் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளையும் அசால்டாய் சமாளித்து வந்திருக்கிறாள். வெற்றி ஒன்று மட்டும் தான் அவளின் இலக்கு.


இன்று கூட இந்த கடத்தகாரர்களை பற்றி அறிந்து அவர்களை கையும் களவுமாய் பிடிப்பதற்காக ஆதாரங்களை சேகரிப்பதற்காக தான் அவள் வந்திருந்தாள்.


ஒருவழியாய் அவள் தனக்கு தேவையான சில விடயங்களையும் சேகரித்து விட்டு இங்கிருந்து செல்ல முயலும் போது தான் போலிஸ் வந்ததை அறிந்தது. அதனால் தான் இன்னும் ஒரு நொடி கூட இங்கு தாமதிக்காமல் புறப்பட எத்தனிக்கும் போது தான் அந்த கும்பலில் இருந்தவன் பார்த்தது அவனிடமிருந்து தப்பிக்க முயற்சித்து மலரை பார்த்து அவளை காப்பாற்றி இப்போது மறுபடியும் அவர்களிடம் மாட்டியாகி விட்டது.


அவளுக்கு தான் இவர்களிடம் மாட்டிக் கொண்டது கூட கவலையில்லை. அவன் தன்னை பார்த்தால் கடித்து குதறிவிடுவான் என்ற எண்ணத்தில் தான் அவள் இங்கிருந்து அவசரமாக போக வேண்டும் எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அது சாத்தியமாய் அவளுக்கு தோன்றவில்லை.


யுவேதா யோசனையில் மூழ்கி என்ன செய்வதென சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் இருந்த இடத்தை அடைந்திருந்த ஆதித்யனும் யுத்கார்ஷும் அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து அதிர்ந்து போயினர்.


யுத்கார்ஷ் தன் மனைவியின் தலையில் ஒருவன் துப்பாக்கியை வைத்திருப்பதை பார்த்து உடல் தூக்கிவாரிபோட கோபம் அதன் எல்லைக்கோட்டை கடக்க தாடை இறுகி கண்கள் நெருப்புத்தனலாய் மின்ன தன்னவளின் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தக் கொண்டிருந்தவனையே வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


ஆதித்யனோ யுவேதாவை அந்த இடத்தில் சற்றும் எதிர்பாராமல் பார்த்ததில் உடல் இறுக நின்றிருந்தான். தான் அத்தனை தூரம் சொல்லியும் அவள் தன் பேச்சை கேட்காது இங்கு வந்திருந்ததில் அவனுள்ளம் கோபத்தில் கொந்தளித்தது.



‘இவளுக்கு கொஞ்சங்கூட அறிவேயில்ல லூஸு... நான் எத்தன தடவ சொல்லியிருக்கேன்... இந்த மாதிரி ரிஸ்க் எடுக்காதேன்னு நான் சொல்றத கேக்கிறாளா...’ என தன் ஆருயிர் குட்டி தங்கையை மனதுக்குள் திட்டி தீர்த்தவன் அவளை கண்டன பார்வை பார்க்க யுவேதாவோ ‘அச்சோ இந்த ACP கிட்ட மாட்டிட்டேனே... இவன் வீட்டில போய் பத்த வச்சிடுவானே... என்ன பண்றது... வேதா சீக்கிரம் எதையாவது யோசிச்சு இவன வீட்டில சொல்ல விடாம பண்ணணும்’ என தீவிரமாய் எண்ணிக் கொண்டவள் அப்போது தான் யுத்கார்ஷை கவனித்தாள்


‘ ப்ரோ!!!... இவரு எதுக்கு இங்க வந்திருக்காரு...” என்றவள் அவனின் பார்வையை போகும் திசையை பார்க்க அங்கு மலர் நின்றுகொண்டிருந்தாள்
 
Last edited:
Status
Not open for further replies.
Top