All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே....
உங்களது கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்....
(it's my kindly request )
 

Ddsubbu

Member
கட்டிலில் சாய்ந்தமர்ந்து புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த ருத்ரா வாயிலில் அசைவு தெரியவும் புத்தகத்தை மூடி வைத்தவர் வாயிலை நோக்கி திரும்பிப் பார்க்க அங்கு மகனும் மருமகளும் முகச் சுணுக்கத்துடன் நிற்பதை பார்த்து “மறுபடியும் பிரச்சினையா...” என கவலை கொண்டவர் மகனை நோக்கி “என்ன த்ருவா ஏதாவது பிரச்சினையா” என கவலையுடன் கேட்க அதை கேட்டு அவரை முறைத்தவன் “என்ன மாம் நான் எப்போ உங்க ரூமுக்கு வந்தாலும் எதாவாது ப்ரோப்லமான்னே கேக்கிறீங்க... போங்க மாம்” என சிறுபிள்ளையாய் சினுங்கியவனை ஆசையுடன் பார்த்தார் ருத்ரா...


இதுவரை அவன் அப்படியிருந்து அவர் பார்த்ததில்லை. எப்போதும் ஆளுமையுடன் இருக்கும் மகன் இன்று சிறுபிள்ளையாய் மாறியதை எண்ணி தன் மருமகள் வந்த நேரம் என மகளான மருமகளை பார்த்து சிரித்தவர் இருவரையும் உள்ளே வருமாறு சைகை செய்துவிட்டு “என்ன விஷயம் மலர்...” என மலரை பார்த்து கேட்க.... அவளோ கணவனை பார்த்து ‘பார்த்தீங்களா... அத்தை என்கிட்ட தான் முதல்ல கேக்கிறாங்க...’ என சிறுபிள்ளைத்தனமான பாவனையொன்றை முகத்தில் காட்டி கணவனை கேலியாய் நோக்க அவனோ மனைவியின் அந்த செய்கையில் மனம் மகிழ்ச்சியில் திளைக்க அதே மகிழ்ச்சியுடன் அவளை பார்த்திருந்தான்


இதுவே பழைய யுத்கார்ஷாக இருந்திருந்தால் கோபத்தில் தாம்தூமென குதித்திருப்பான். தன்னைத்தான் முதலில் கேட்டிருக்க வேண்டுமென சீரியிருப்பான். தான் மட்டுமே முதன்மையாய் இருக்க வேண்டுமென எண்ணியிருப்பான். ஆனால் இப்போதிருப்பவன் அந்த கோபக்கார யுத்கார்ஷ் அல்லவே... இவன் ஒரு சிறுபெண் தன் மேல் கொண்ட காதலினால் தன்னை மறந்து அவளின் காதல் மழையில் நனைந்து அதைவிட அவளை அதிகளவு காதலிற்கும் காதல் கணவனாய் மாறியிருக்கும் யுத்கார்ஷ் அல்லாவா...


அவன் தன் மனைவியின் ஒவ்வொரு செய்கையிலும் மலர்ந்தான். மனம் மயங்கினான். அவள் தன்னுடன் மனம் விட்டு பேசுவதற்காக காத்திருக்கிறான். அவளின் காதலை அவள் வாய் மொழியாலே கேட்க ஆவா கொண்டு ஏங்கிக் கொண்டிருக்கின்றான். ஒரு மனைவியாய் அவள் எப்போது தன் உரிமையை நிலைநாட்டுவாள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்.


காதல் தான் எத்தனை விசித்திரமானது... இங்கு எரிமலையாய் சீறிக் கொண்டிருந்த கோபக்காரனை ஒரே ஒரு நொடியில் தலைகீழாக மாற்றிவிட்டதே... மனைவியை எப்படியெல்லாம் கடத்து குதறலாம் என எண்ணிக் கொண்டிருப்பவன் இந்த காதலெனும் மாயவலையில் சிக்கி சின்னாபின்னமாகி இப்போது அவளை எப்படியெல்லாம் காதலிக்கலாம் என எண்ணிக் கொண்டிருக்கின்றான்.


மனதில் புதிதாய் பூத்த மகிழ்ச்சியுடன் தன்னவளையே பார்த்துக் கொண்டிருந்த யுத்கார்ஷ் அவள் இன்னமும் பேச ஆரம்பிக்காதிருக்கவும் கேள்வியாய் அவளை நோக்கினான்.


கணவனின் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவளோ ‘ஒன்றுமில்லை’ எனும் விதமாய் தலையை அசைத்து விட்டு மெதுவாய் பேச ஆரம்பித்தாள்.



இதுவரையிலும் தன் அத்தையுடன் பேசிப் பழகி இருந்தாலும் தன் எல்லை அறிந்தே பழகியவள். இத்தனை நாளில் அவரிடம் எதுவும் அவள் கேட்டு பெற்றதில்லை. அவரிடம் என்றில்லை யாரிடமும் அவள் எதையும் கேட்டு பெற்றதில்லை. மற்றவர்கள் தனக்கு கொடுப்பதை வைத்தே மகிழ்ச்சியுடன் வாழ கூடியவள்.


இத்தனை நாளாய் அப்படியிருந்தவள் இப்போதும் அப்படி இருக்கத்தான் எண்ணினாள். ஆனால் மனம் ஏனோ கோவிலுக்கு போயே ஆக வேண்டும் என உரக்க கூறுவது போலிருக்க தன் தயக்கத்தை மறந்து தன் அத்தையை நோக்கியவள் “அதுவந்து அத்த... நான் கோவிலுக்கு போய்ட்டு வரட்டுமா... இங்க வந்ததிலிருந்து கோவிலுக்கு போகவே இல்லையே... அதான்...” என இழுக்க...


அவளை ஆதுரத்துடன் பார்த்தவர் “இப்போ நீ இருக்கிற நிலமையில எப்பிடி மலர் கோவிலுக்கு போக முடியும்.... நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா மலர்...” என மெதுவாய் கூற... அதில் முதலில் புரியாது விழித்தவள் அதன் பின்பே அதற்கான அர்த்தம் புரிந்து அசடு வழிந்து கொண்டே கணவனை ஏறிட்டாள்.


அதில் அவளை கிண்டலுடன் நோக்கியவன் ‘ஐயோ... பாவமே...’ என்ற கிண்டல் பார்வையுடன் அங்கிருந்து அகல அதை பார்த்து மூக்கு விடைக்க அழுகை பெருக ஆரம்பிக்க அதை அடக்கி அணைபோட்டவள் தன் அத்தையை பரிதாபமாய் நோக்கினாள்.


இன்னும் சில நாட்களுக்கு அவளால் கோவிலுக்கு போக முடியாது... இதை எப்படி தான் மறந்து போனோம் என தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டவள் இருந்தாலும் மனம் கோவிலுக்கு போயே ஆகவேண்டும் என உறுதியாய் எண்ணிக் கொண்டிருக்க செய்வதறியாமல் தவித்தாள்.



அவளின் உள்மனது என்றும் நிலைதடுமாறியதில்லை. ஆனால் இன்று ஏதோ ஒருவித படபடப்பும் நடுக்கமும் உள்ளே பரவிக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று நடக்க போகின்றது என்பது மட்டும் தெள்ளதெளிவாய் புரிந்தது. ஆனால் அது யாருக்கு என்பது தான் அவளுக்கு புரியாது போயிற்று.


இருந்தாலும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு எழுந்து செல்ல எத்தனித்தவளின் கையை பிடித்து தடுத்த ருத்ரா, “என்னடாம்மா ஒரு மாதிரியா இருக்க... முகமெல்லாம் வாடி வதங்கிப் போயிருக்கு.... என்னாச்சு... உடம்புக்கு ஏதாவது பண்ணுதா...” என அனுசரணையுடன் கேட்க அதில் தன் முகத்தை சீராக்கியவள் “ஒன்னுயில்ல அத்த... நான்.. மே... மேல போயிட்டு வரேன்...” என சிரமப்பட்டு ஒருவழியாய் கூறியவள் அங்கிருந்து விறுவிறுவென அகன்று தன் கணவனின் அறை நோக்கி சென்றாள்.


ஏனோ தன்னவனை பார்க்க வேண்டும் போல அவள் உள்ளம் பரபரத்தது. விரைவாய் அவனறை நோக்கி சென்றவள் மெதுவாய் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய அவனோ எங்கோ செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.



கண்ணாடி முன் நின்று தலை கோதிக் கொண்டிருந்தவன் மனைவி உள்ளே நுழையவும் அவளை பார்த்து சிரித்தவன் அவளை தன் அருகில் வருமாறு சைகை செய்ய அவளோ ஏதோ கனாவில் இருப்பது போல் தன்னை மறந்து அவனை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.


எப்போதும் கோர்ட் சூட் அணிந்து ஆண்மையின் கம்பீரத்துடனும் மிடுக்குடனும் பணக்கார தோரனையுடனும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தி கிரேட் யங் பிசினஸ் மேன் யுத்கார்ஷ் இன்று வெள்ளை நிற முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டு அதே நிறத்தில் பேன்ட்டும் அணிந்து தலைமுடியை கோதிக் கொண்டிருந்தவனின் அழகு அவளை கொள்ளை கொள்வதில் வியப்பேதும் இல்லையே.



விழிவிரிய தன்னை பார்த்தவாறு வந்து கொண்டிருக்கும் தன் மனைவியை பார்த்தவனின் இதழ்கள் கர்வத்தில் அழகாய் மின்னியது.


தன்னை அறியாமல் தன் கணவனின் அருகில் நெருங்கிய மலர் அவனின் முகத்தை ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தாள். இத்தனை நாள் அவனை பார்த்திருந்தாலும் இன்று ஏனோ அவள் கண்களுக்கு அவன் புதிதாய் தெரிந்தான்.


அவனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு. ஏதோ உள்ளுக்குள் உடைவது போல் அவள் மனம் பதைபதைத்தது. அவனை பார்க்க பார்க்க ஏதோ நடக்ககூடாத ஒன்று நடக்கபோவது போல் உள்ளம் துடித்தது.


மனதுக்குள் பல எண்ணங்கள் தோன்றி மறைந்து அவளை திடுக்கிட செய்ய அதை தாள முடியாமல் சட்டென அவன் நெஞ்சை தஞ்சமாக்கி அதில் தலை சாய்த்துக் கொண்டாள். மனைவியின் இந்த செயலை எதிர்பாராத யுத்கார்ஷின் கரங்கள் மனைவியை தழுவ பரபரத்தது.


மனம் முழுக்க அத்தனை மகிழ்ச்சி. அவனின் ஒவ்வொரு அணுவும் அவளின் சிறு தழுவலில் மரணத்தை தொட்டு மீண்டது போலிருந்தது. தன் உள்ளக்களிப்பை மனைவியிடத்தில் வெளிப்படுத்தும் வகை அறியாது அவளின் தலையை மெதுவாய் கோதிக் கொடுத்தான். அவளின் அந்த சிறு செயலில் அவனின் அவன் எப்படி மகிழ்வு கொண்டானோ அதே போல் அவனின் செயலில் அவளும் மலர்ந்து போனாள். பல நிமிடங்கள் மௌனத்திலே கழிய இருவருக்குமே எதுவும் பேசத்தோன்றவில்லை.


சில வேளைகளில் மௌனம் கூட சிறந்த மொழி தான். பேச தோன்றாத நேரங்களில் மௌனத்தை விட சிறந்த மொழி வேறு எதுவுமில்லை. அந்த மௌனத்திலே சில நிமிடங்கள் கழிய அதற்கு மேல் மௌனம் சாதிக்க முடியாமல் மனைவியின் முகத்தில் அப்பிக் கிடந்த அவனை பேச தூண்ட “நீ என்கிட்டே ஏதாவது...” என ஆரம்பிக்கும் போதே அவளும் “நான் உங்ககிட்ட ஒன்னு....” என ஏதோ சொல்ல வரவும் இருவருக்குமே சிரிப்பு வந்தது.


‘யாரால் உன் மௌனத்தை சரியாய் மொழிபெயர்க்க முடியுமோ அவருக்கு மட்டுமே உன் மனதை படிக்கும் சக்தி உண்டு....’ என எங்கோ பார்த்த கவிதை தான் அந்நேரம் மலரின் மனதில் தோன்றியது. ‘எத்தனை உண்மையான வார்த்தைகள்... இதோ இவர் என் மௌனத்தை புரிந்து கொண்டாரே.. அதற்கான காரணத்தை கூட யூகித்திருப்பார்’ என நினைத்து கணவனை பெருமை பொங்க பார்த்தவள் இன்னும் அழுத்தமாய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.



இத்தனை நாளாய் இருந்த தயக்கம் கூட இன்று தூர விலகி சென்றது போலிருந்து அவளுக்கு. ஆனாலும் ஒரு பயப்பந்து தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது போல் தான் இருந்தது.


அதை மறைத்து அவனின் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து அவனின் முகத்தை நோக்கியவள் “ஏதோ சொல்ல வந்தீங்களே..” என தெரியாதது போல் கேட்க அவனோ “நான் ஒன்னும் சொல்ல வரலையே... நீ தான் ஏதோ சொல்ல வந்த என்ன விஷயம் பேபி... ஏதாவது என்கிட்டே சொல்லனுமா... எதுன்னாலும் சொல்லு பேபி... மனசில எதையும் ஒளிச்சு வைக்காம வெளிப்படையா என்கிட்டே பேசு சின்னு...” என அவன் ஊக்கினான்.


அதில் தன் மனதை சமன்படுத்திக் கொண்டவள் “அது... அதுவந்து... மனசு சரியில்லாத மாதிரி இருக்கு... ஏதோ பயமா....” என அதற்கு மேல் சொல்ல முடியாமல் பாதியில் நிறுத்த அவனோ அவளின் கையை பற்றி தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான் அவளுக்கு தைரியம் அளிப்பது போல்.


இருந்தும் அவளின் முகம் தெளிவில்லாமல் இருக்கவும் “நீ யாருன்னு உனக்கு தெரியுமா பேபி... இந்த யுத்கார்ஷோட வைப்... தி கிரேட் பிசினஸ் மேக்னெட் த்ருவ் யுத்கார்ஷ் ராவ் அஹ்லுவாலியாவோட வைப் அவனை மாதிரியே கம்பீரமா இருக்கணும்... எப்பிடி இருக்கணும் பேபி...” என அவளை நோக்கி வினவ....


“கம்பீரமா இருக்கணும்...” என மெல்லிய குரலில் முணுமுணுத்தவளுக்கு கணவனின் வார்த்தைகள் மூளையில் பதிந்ததே தவிர மனதில் அழுத்தமாய் பதிபடாமல் போய்விட்டிருந்து....



சில வேளைகளில் மூளை வேகமாய் செயல்படும் மனமோ மந்தமாய் செயற்பட்டுக் கொண்டிருக்கும். இப்போது அவளின் மனமும் அந்த நிலையில் தான் இருந்தது... மனதில் அப்பிக்கிடந்த பயம் அதை தவிர வேறு எதையும் சிந்தக்க விடாமல் செய்து கொண்டிருந்தது. அவன் பேசுவது அவளுக்கு தெளிவாய் கேட்டது... ஆனால் அது மனதில் பதியவில்லை.


ஒருவேளை அது அவள் மனதில் பதிந்திருந்தால் அவளுக்கு எதுவும் நேராது போயிருக்குமோ?


விதி எந்த நேரத்தில் எந்த ரூபத்தில் யார் வாழ்க்கையில் எப்படி விளையாடுமென யாரால் கண்டறிய முடியும்....


கள்வன் வருவான்......
Nice...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalla poikituiruku. Hero yepo villana identify ponuuvan. Suspense thangamudiyala please adutha episode yeppo
thanks for your comment dear...
and comments thread la comment pannunga maa,,,,
 
Status
Not open for further replies.
Top