நாற்பத்தி ஐந்தாம் பகுதி...
கண்ணன் பவித்ரனுடன் நடந்தவாறு, யார்?? இதைச் செய்தது என கேட்டான்.
தனது கைபேசியில் வந்த புகைப்படத்தை கண்ணனுக்கு காட்டினான் பவித்ரன்.
கண்ணன் கார் ஓட்டிக்கொண்டு செல்ல, பவித்ரன் செல்வ பாண்டியனுக்கு அழைத்தான்.
அவர் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதாக தகவல் வர பவித்ரன் காத்திருந்தான். சற்று நேரத்தில் பேசியில் தொடர்பு கிடைத்துவிட, பவித்ரனை முந்திக்கொண்டு செல்வபாண்டியன் பேசினார்.
ரஞ்சனி, கண்ணன்தான் மற்றொரு இணைப்பில் இருக்கிறான். அவன் பதில் பேச முடியாத நிலையில் உள்ளான். நீ விவரங்களை நேரடியாக அவனிடமே கூறு, அவன் அதன்படி செய்துவிடுவான். கண்ணா!! கேள்!! என்றவர் அமைதியாகிவிட்டார்.
பவித்ரன் இன்பமாக அதிர்ந்தான். கண்ணன் லைனில் இருக்கிறீர்களா??? என்றாள் ரஞ்சனி.
பவித்ரன் ம்.ம். எனவும் சிலநொடிகள் ரஞ்சனி பேசவில்லை. செல்வபாண்டியன், வேகமா சொல்லுமா!! நமக்கு நேரமில்லை என்றார்.
இல்லை அங்கிள், அது... என சற்று தயங்கியவள், பவித்ரன் நீங்களா??? என்றாள் பட்டென.
இப்போது பவித்ரன் முகம் மலர்ந்தது. யெஸ்!! என்றான். தன்னை மறைக்க விரும்பாமல்...
செல்வபாண்டியன் யாராக இருந்தால் என்ன?? காரியம் நடக்க வேண்டும். பவித்ரனிடமே சொல்!! என்றார் செல்வ பாண்டியன்.
அப்படியானால் கண்ணன், தன்னை வெளிப்படுத்திக்கொண்டானா??? சே என மனதில் நினைத்தவள், கண்ணன் என்னிடம் வேலை பார்ப்பதால், நான் அவரிடம் வேலை சொல்கிறேன். ஆனால் பவித்ரன் அப்படி இல்லை அங்கில் என்றவள், நீங்களே பார்த்துச் செய்யுங்கள் என்றாள் விட்டேற்றியாக..
என்னால் எதுவும் செய்யமுடியாது. கண்ணனும் எல்லா ஆதாரங்களையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இந்த கேஸை முடித்துவிட்டார். இப்போது நீ சொல்வதைச் செய்ய பவித்ரன் மட்டும்தான் உள்ளார். வேண்டுமானால் சொல்!! இல்லையெனில் விட்டுவிடு என்றார் அவரும் ரஞ்சனியைப் போலவே.
இப்போது பவித்ரன் பேசினான். நானும் கண்ணனும் மலரின் கணவரை காவல்நிலையத்தில் காணத்தான் செல்கிறோம். ஏற்கனவே சாருநேசனுக்கு பதிலாக வேறுஆள் நியமித்தாகிவிட்டது. இப்போது போலீசை சமாதானப்படுத்தி, ஆளை மாற்ற வேண்டும். மாற்றிவிடுவோம். இது சாலை விபத்தாகத்தான் பதிவாகி இருக்கிறது. இதில் உயிர் சேதம் இல்லை. எனவே நிறைய சாதகங்கள் நம்மிடம் உள்ளன. கவலை வேண்டாம் என்றான் பவித்ரன்.
செல்வபாண்டியன் சிரித்தார். ரஞ்சனி எதை என்னிடம் செய்யச் சொன்னாலோ, அதையே தான் நீயும் சொல்கிறாய் என்றார் அவர்.
கண்ணனிடம் போனைக் கொடுங்கள் என்றாள், ரஞ்சனி.
பவித்ரன் ஸ்பீக்கரில் போட்டு பேசு!! என்றான் சைகையால்...
கண்ணன் ஹலோ!! என்றான்.
கண்ணன் நீங்கள் அனுப்பிய சாருநேசன் புகைப்படம் வந்தது. தக்க சமயத்தில் நிறைய உதவிகளை எனக்கு செய்துள்ளீர்கள் நன்றி என்றாள்.
பரவாயில்லை மேடம், இது எனது வேலைதானே!! என்றான்.
ஆனால் சொல்லாத வேலை பலவற்றையும் செய்திருக்கிறீர்கள் போலவே!! என்றாள் கடுப்புடன்.
அது, தெரியாமல் பவித்ரன் என்னை பார்த்துவிட்டார் என்றான் கண்ணன் தயக்கமாக..
நீங்கள் செய்தது ஒரு தவறல்ல, பல. உங்களை வெளிப்படுத்திக்கொண்டது, வேலை நேரத்தில் காதலில் விழுந்தது, முக்கியமானது என்னிடம் உண்மையை மறைத்தது..என சற்று கடுமையாக முடித்தாள் ரஞ்சனி.
அது..சாரி.. மேடம், ஆனா.
நீங்கள் ரகசிய வேலைக்கு லாயக்கற்றவர் கண்ணன். இத்துடன் நம்முடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொல்வோம், உங்களுக்கு நான் கொடுப்பதாகச் சொன்ன தொகை உங்கள் கணக்கில் போட்டுவிட்டேன் என்றாள் ரஞ்சனி.
ஐம் ரியலி சாரி மேடம் என்றான் கண்ணன் அதை கேட்பதற்கு ரஞ்சனி இணைப்பில் இல்லை.
கண்ணன் அமைதியாக காரை ஓட்டினான்.
பவித்ரனுக்குத்தான் பாவமாக இருந்தது. கண்ணன் தோள்களை தட்டிக் கொடுத்தான்.
ஆமா, என்னோடதான இவ்வளவு நேரமும் இருந்த, எப்படி எனக்கு தெரியாம டாலிக்கு போட்டோ அனுப்புன, அப்பா!! உங்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் போலவே!! என்றான் பவித்ரன்.
கண்ணன் பவித்ரனை ஓரக்கண்ணால் பார்த்து, டாலின்னா ரஞ்சனி மேடமா??? என்றான் , ஆச்சர்யமாக!!
பவித்ரன் முகம் பிராகசமானது...
சார் நீங்க, கிளாமர் கிங் சார் , அப்பா!! ரஞ்சனிமேடம்னு சொன்னதும் பிரைட் ஆயிட்டீங்க!! என வம்பிழுத்தான்.
நீ நல்லா எங்கிட்ட அடி வாங்குவ.. கிண்டல் பண்ணாம வண்டி ஓட்டு என்றான் பவித்ரன்.
கண்ணன் விடவில்லை, பிரப்போஸ் பண்ணீட்டீங்களா?? எப்போ கல்யாணம் எனக் கேட்டான்.
பவித்ரன், ஓ.. உனக்குத் தெரியாதா?? என் முன்னால் மனைவி என் டாலி என்றான்.
கண்ணனுக்கு இப்போது ரஞ்சனியின் பேச்சும், கோபமும் புரிந்தது. அங்கே சங்கடமான அமைதியை நீட்டிக்க விடாமல், காவல் நிலையம் வந்துவிட்டது.
காலையிலிருந்து தொடங்கிய ஓட்டம் எத்தனை நபரை எத்தனை விதமாக புரட்டிப்போட்டுவிட்டது.
இரவாகிவிட்டது. மது கையில் குழந்தையுடன் நின்றிருந்தாள். பக்கத்தில் சாருநேசன் அம்மா அழுது கொண்டிருந்தார். மலரின் தந்தை பக்கத்தில் அமர்ந்திருந்தார்.
மது பவித்ரனைப் பார்த்ததும் அவனிடம் ஓடிவந்தாள். சார் அத்தான்! என அவள் சொல்லும் முன், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றான் பவித்ரன்.
மது, ஆனால் அத்தானிடம் முதலில் பேசுங்கள், நான் தான் செய்தேன். ஆனந்தை கொலை செய்யவே இதைச் செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துவிட்டார் என்றாள்.
அவருக்கு ஆனந்தைப் பற்றியும், உண்மைகளும் எப்படி தெரிந்தது, என கேட்டான் பவித்ரன்.
நான்தான் ஏதோ கோபத்தில் மலரை சரியாக பார்த்துக் கொல்லவில்லை. திருடனை நம்பியவர் மனைவியை நம்பவில்லை என திட்டினேன். ஆனால் அவர் இப்படி செய்வார் என நான் நினைக்கவில்லை என்றாள் மது.
மதுவை முறைத்தவன். மடமடவென அவளை கடந்து சென்றான்.
காவல் அதிகாரியிடம், துரை ஏற்கனவே பேசியதில் இவர்கள் வேலை சுலபமானது. ஆனால் சாரு நேசன் லாக்கப்பிலிருந்து வெளியே வரமாட்டேன் என்றார்.
என் மனைவி, எப்படி கைகால்கள் இழந்து தன் கடைசி நாட்களைக் கழித்தாளோ!! அவனும் இப்போது அதையே அனுபவிக்கிறான். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு சைக்கோவை, கொடூரனை இந்த நிலைக்கு உள்ளாக்கியதை நான் மறைக்க விரும்பவில்லை. சொல்லப்போனால் பெருமையாகத்தான் கருதுகிறேன் என்றான் சாருநேசன்.
பவித்ரன், மதுவின் கையிலிருந்த குழந்தையை வாங்கி சாருநேசன் கையில் கொடுத்தான். நீங்களே சிறையில் வைத்து வளர்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
அனைவரும் அதிர்ந்து நின்றனர். அம்மாவிடம் பாப்பாவைக் கொடுங்கள். அவர்கள் வளர்ப்பார்கள் என்றான் சாரு தயக்கமாக...
பாட்டி ஏன்?? வளர்க்க வேண்டும். ஒரு குழந்தையை, அதன் பெற்றவர்கள்தான் வளர்க்க வேண்டும். அம்மா இல்லாத பட்சத்தில், அந்தக்குழந்தையை நீங்கள் தான் வளர்க்க வேண்டும். ஆனால் நீங்கள் மிக நேர்மையாக சிறை செல்ல இருப்பதால்,ஒரு குற்றவாலியை அழித்து, சிறையில் பல குற்றங்களை செய்த, பல குற்றவாலிகளின் மத்தியில் பெண்குழந்தையை வளருங்கள் என்றான்.
சாருநேசன் பவித்ரன் சொல்வதை நினைக்கவும் பயந்தவன், நான் என்ன செய்ய வேண்டும் என சரணடைந்தான்.