பவித்ரன், கண்ணன் என அழைத்தான்.
கண்ணன் திடுக்கிட்டு, தன் பின்னால் இருந்த சன்னலைப் பார்த்தான்.
அங்கே பவித்ரன் நின்றிருந்தான். கண்ணனின் மூளை வேலைநிறுத்தம் செய்ய, அப்படியே நின்றுவிட்டான். சே !!
கதவைத்திற என்றான் பவித்ரன்.
போச்சு, மேடம் ஏற்கனவே செம கோபத்துல இருக்காங்க, இதுல இவர் வேற என்னப் பார்த்தது தெரிஞ்சது, அவ்வளவுதான்!! என நினைத்தவாறு கதவைத் திறந்தான் கண்ணன்.
பவித்ரன், வேகமாக உள்ளே வந்து ஜீவிதாவைப் பார்த்தான்.
அவங்களுக்கு ஒன்னுமில்லை, நான்... வந்துவிட்டேன் என்றான் கண்ணன் தயங்கியவாறு.
பவித்ரன், கண்ணன் புறம் திரும்பினான். அவனை கண்களால் அளந்தான்.
யார் நீ?? என்றான் அறையின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு..
நான், அது... என தயங்கி நின்றான் கண்ணன்.
ரஞ்சனியிடம் நீ பேசியது அனைத்தையும் கேட்டுவிட்டுத்தான் வந்துள்ளேன், அதனால் என்னிடம் எதையும் மறைக்காதே, உண்மையைச் சொல், என்றான் பவித்ரன்.
சொல்கிறோன், ஆனால் ரஞ்சனி மேடம்.., அவங்களுக்கு தெரியக்கூடாது என்றான்.
எது தெரியக்கூடாது???
நீங்கள் என்னைப் பார்த்ததை, என்னைப் பற்றி தெரிந்து கொண்டதைப் பற்றி சொல்லக்கூடாது என்றான்.
ஆறடி உயரத்துல இருந்துட்டு, சின்ன குழந்த மாதிரி பேசுற, என முறைத்த பவித்ரன், கண்ணன் அமைதியாகவே இருக்க, சரி சொல்லல , நீ சொல்லு யார் நீ ?? என்றான் பவித்ரன்.
நான் சில தப்புக்களை தட்டிக்கேட்டதால், போலீஸ் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டவன் என்றான் கண்ணன்.
அப்போது, என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தபோது, செல்வபாண்டியன் சாரும், ரஞ்சனி மேடமும் இந்த கேசை என்னிடம் ஒப்படைத்தனர். இது எனக்கு ஒரு பிராஜெக்ட், முடித்துக் கொடுத்ததும், அதற்கான சம்பளம் வரும். இந்த கேசை நேர்த்தியாக செய்யும் பட்சத்தில், இதுபோல செல்வ பாண்டியனே பல பிராஜெக்ட் தருவதாக கூறியுள்ளார் என்றான்.
பவித்ரன் புருவம் சுருக்கி, கண்ணனின் கதையைக் கூர்ந்தவன், உன் கதை எனக்கு அவசியமற்றது. ரஞ்சனி உன்னிடம் கொடுத்த வேலை என்ன?? என்றான்.
உங்கள் உயிருக்கு பலவகையில் ஆபத்து வரும் என்றும், அதனால் உங்கள் நிழல் போல தொடந்து, உங்களை காப்பதும், ஜீவிதாவின் அண்ணனை கொன்ற கொலைவழக்கின் சாட்சியங்களை சேகரித்து, செல்வபாண்டியனிடம் தருவது.
என் உயிருக்கு என்ன ஆபத்து??என்றான் பவித்ரன் கடுப்பாக..
நீங்கள் காச்சலில் இருந்த போது, தவறான மாத்திரைகளை ஆனந்த் மாற்றினான்.ஆதை நான் திரும்பவும் மாற்றி சரியான மாத்திரைகளை வைத்தேன்.
முதலில்நான் ஜீவிதாவைப் பார்த்ததே, உங்களை கொல்ல வந்த கும்பலிடமிருந்து, உங்களை காப்பாற்ற வரும் போது தான்.
அப்போது தான் ஒன்றைக் கண்டுகொண்டேன். உங்களுக்கு வரும் பல ஆபத்துக்களுக்கும் ஒரே காரணகர்த்தா , அது ஆனந்த்.
உங்களுக்கு மட்டுமல்ல, ஜீவிதா, அமைச்சர் துரை அனைவருக்கும், ஏதோ ஓர் வகையில் வரும் ஆபத்திற்கு ஆனந்தே காரணமாக இருந்தான். எனவே அவனது போனை ஒட்டுக்கேட்டு, அவனை பின் தொடர்ந்து தான், உங்கள் அனைவரையும் ரகசியமாக காப்பாற்றி, கிட்டத்தட்ட கார் விபத்து வழக்கும் முடியும் நிலையில் உள்ளது என்றான்.
ஆனால் அதற்க்குள் நான் உங்களிடம் மாட்டிக்கொண்டேன் என்றான்.
நீ வெளிய போலாம், எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இதை ரஞ்சனியிடம் நீயே சொல்லிவிடு என்றவன், அடுத்த கண்ணனின் பேச்சை கேட்க தயராக இல்லை.
ஜீவிதாவை பவித்ரன் எழுப்ப, அவளிடம் எந்த அசைவும் இல்லை. முகத்தில் தண்ணீரை அடித்துப்பார்த்தான், அப்போதும் அவள் கண்திறக்கவில்லை.
பவித்ரனும் கண்ணனும் பதற்றமாயினர்.
மருத்துவமனையில் , பவித்ரனும், கண்ணனும் காத்திருக்க, உள்ளே ஜீவிதாவிற்கு வைத்தியம் செய்தனர்.
பவித்ரன் கண்ணனை முறைத்தான். என்னை பின் தொடர தேவையில்லை என்றான் கடுப்பாக,
ஆனால் கண்ணனிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை.
சுவற்றில் நெற்றியைப் பதித்து கண் மூடி இருந்தான் கண்ணன். ஏதோ அதைப் பார்த்த பவித்ரனால் கண்ணனை திட்டவோ, வெளியேற்றவோ முடியவில்லை. பவித்ரனால் கண்ணனின் காதலை புரிந்துகொள்ள முடிந்தது.
பவித்ரன் அடுத்த வார்த்தை பேசும் முன், மருத்துவர் உள்ளிருந்து வந்தார்.
பவித்ரன், மருத்துவரிடம் செல்ல, கண்ணன் ஜீவிதாவின் அறைக்குள் நுழைந்தான். பவித்ரனுக்கு கண்ணனை தடுக்கத் தோன்றவில்லை. ஏனோ அவன் ஜீவிதா மீது காட்டும் அக்கரை, பவித்ரன் மனதிற்கு இதமளித்தது.
மருத்துவரும் கண்ணனின் ஓட்டத்தைப் பார்த்து, எழுந்த புன்னகையுடனே , பவித்ரனிடம் பேசினார். ஒன்னுமில்லை, ஏதோ மாத்திரை தவறுதலா போட்ட மாதிரி இருக்கு, மயக்கம் தெளிய மருந்து குடுத்தாச்சு, எழுந்துட்டாங்க, போய் பாக்கலாம் என்றவர், சற்று நிறுத்தி , உள்ளே சென்றவர் அனுமதி அளித்தால் போங்கள் என்றார், கலகலவென சிரித்தவாறு...
பவித்ரன் நாகரீகம் கருதி உள்ளே செல்லவில்லை. ஆனால் பிளீஸ்!! வெளியே போங்கள்!! என ஜீவிதா கத்தினாள்.
பவித்ரன், பதறியடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.
பலியாவாளா?? பலிகொடுப்பாளா??