All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

lax

New member
Hi Udhaya
I just read your pazhiku pazhi and it is excellent.
Keep writing, it is born gift not possible for everyone.
Best wishes to you
 

Samvaithi007

Bronze Winner
வணக்கம்,

எந்த ஒரு கதை எழுதுவோருக்கும், உற்சாகம் பிறப்பது, அடுத்தடுத்த பகுதிகளை எழுத ஊக்கமளிப்பது, உங்கள் கருத்துக்கள் தான். ஆனால் உங்களுடைய கருத்துக்கள் எனக்கு திருப்திகரமாக இல்லை. எனவே நான் கதை எழுதுவதில் தாமதமாகும்.


நன்றி.
Why why this kolaveri ippidi ellam thidir mudivu edukka koodaathu and கருத்து திருப்பதிகரமாக இல்லை அதனால் கதை வர லேட் ஆகுமா
ஏண்டாமா ஏன் எங்களுக்கு பிடிச்ச கதையா கண்டுபிடிச்சு படிச்சிட்டு அடுத்த epi eppa varumnu kaathirunthaa irunthaa கதை காலதாமதம் ஆகும்னு போஸ்டர் தான் வருது ....

Your a fabulous and wonderful writer உங்க கதைக்கு கருத்து பதிவு பண்ணற அளவுக்கு நாங்க இன்னும் வளரலனுக்கூட வச்சிக்கலாம் .But sis intha desicion nallaavae illa , elluroem antha roomukullayae சிக்கிகிட்டு இருக்கோம் வெளியே கொண்டு வாங்க ...
 

sriseetha

Active member
வணக்கம்,

எந்த ஒரு கதை எழுதுவோருக்கும், உற்சாகம் பிறப்பது, அடுத்தடுத்த பகுதிகளை எழுத ஊக்கமளிப்பது, உங்கள் கருத்துக்கள் தான். ஆனால் உங்களுடைய கருத்துக்கள் எனக்கு திருப்திகரமாக இல்லை. எனவே நான் கதை எழுதுவதில் தாமதமாகும்.


நன்றி.
Why Uthaya sis? Why? Eppo parthu kadha nalla sudu pidichu right track la poogudhu...
Nanga ellam romba aavaloda story ah watch pannitu irukkom...
please engalukkaga konjam consider pannunga...
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்.

இது நான் எழுதும் முதல் கதை, பல யோசனைகள் இருந்தாலும், எப்படி அதை நீங்கள் புரிந்து கொல்லும் வகையில் எழுதுவது, என முதலில் திணறித்தான் சில பகுதிகளை எழுதினேன். ஆனால் என்கதை மீது எனக்கே ஆர்வம் ஏற்படும் அளவிற்கு முன்னேறியுள்ளேன். அதற்கான பிரதிபலிப்பை உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்.


ஆனால் நான் போட்ட கதை தாமதமாகும் பதிவினால், அமைதியாக என் கதையைப் படித்து கடந்து செல்வோரும், ஆர்வமாக கதை வேண்டும் எனக் கேட்டிருப்பதால், எழுந்த உற்சாகத்துடன் பதிவிடுகிறேன்.

நன்றி
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பத்தி இரண்டாம் பகுதி...

கண்ணனின் குரலில் இருந்த பதற்றம் ரஞ்சனியையும் தொற்றிக்கொண்டது.

என்னாச்சு ?? கண்ணன். பவித்ரனுக்கு ஒன்னுமில்லையே என்றாள் ரஞ்சனி வேகமாக.

பவித்ரன் சாருக்கா?? அவருக்கென்ன?? ஒன்னுமில்லை என்றான் கண்ணன்.

ஓ... சரி, பின்ன எதுக்கு இப்படி பதட்டமா பேசுறீங்க என்றாள் ரஞ்சனி.

சாரைத்தவிர வேறுயாருக்கு எதுவானாலும் பரவாயில்லையா?? என்றான் கண்ணன் வெடுக்கென்று.

இதெல்லாம் சன்னல் வழியாக பவித்ரனின் காதில் சென்று சேர்ந்தது.

ரஞ்சனிக்கு ஒன்றும் புரியவில்லை. சற்றே யோசித்தவள், பட்டென அந்த கேள்வியைக் கேட்டாள்.

ஜீவிதா.. ஜீவிதாவுக்கு என்னாச்சு?? கண்ணன்.

அந்த கேள்வி கண்ணனை வெகுவாக தாக்கிவிட, ஆறடி மனிதன் நிற்க தெம்பின்றி பொத்தென கட்டிலில் அமர்ந்தான்.

ரஞ்சனி, கண்ணன்... கண்ணன் என்றாள்.

தான் கண்ட காட்சிகள் அனைத்தையும் ஒருவாறு விவரித்தான் கண்ணன். அதை கணவன் மனைவி இருவரும், கேட்கக் கேட்க இருவருக்கும் ஒரே உணர்வுதான், கோபம் .

ஆனந்த சும்மாவா விட்டீங்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டீட்டு போக வேண்டியது தானே என்றாள் ரஞ்சனி.

கண்ணன், நீங்க மலரோட கேஸ்ல எதுக்காக போலீஸ்ட போகல...எனக் கேட்டான்.

மலரா... அது அவங்களப் பத்தி .... உனக்கு...

தெரியும். ஆனந்தோட ஆதில இருந்து எல்லாமே கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு இந்த கட்டத்துல உங்களோட உதவி தேவைப்படுது என்றான் கண்ணன்.

என்ன உதவி??

மலரை, ஆனந்த் தாக்கி அதனால் மலர் படுகாயமுற்றது , அதற்கான ஆதாரங்கள், வீடியோ பதிவு எனக்கு வேண்டும்.

எதுக்கு??

ஜீவிதாவிடம் காட்ட வேண்டும், அப்போதுதான் அவளுக்கு ஆனந்தின் சுயரூபம் தெரியும் என்றான்.

தெரிந்து...

அப்போதுதான்... ஆனந்திடமிருந்து விலகி பாதுகாப்புடன் இருப்பாள் என்றான்.

நீங்கள் ஜீவிதாவைக் காதலிக்கிறீர்களா?? என பட்டெனக் கேட்டாள் ரஞ்சனி.

சிலவினாடி கண்ணனிடமிருந்து பதிலில்லை.

கண்ணன் படுக்கையில் கிடந்த ஜீவிதாவைப் பார்த்தான். அவனது கரம் தானாக எழுந்து அவளது தலையை வருடியது.

ம்..என்றான்.

ஓ... புரிந்துவிட்டது. இப்போது துப்பாக்கி எடுத்து ஆனந்தை கொல்லும் வெறியில் இருக்கிறீர்கள். சரிதானா?? ஆனால் அவனைக் கொன்றுவிட்டால், ஜீவிதாவின் மனதிலிருந்து அவனை அழிக்க முடியாது. உங்கள் காதலுக்கு அது இடைஞ்சல்.., எனவே, முதலில் மலரின் மானத்தை கப்பலேற்றி ..

இல்லை , அது ஜீவிதாவைக் காப்பாற்ற..

ஜீவிதாவைக் காப்பற்ற அல்ல, அவளை உங்கள் காதலியாக்க, என்றே சொல்லுங்கள்.

சத்தியமாக இல்லை என்றான் கண்ணன்.

ஜீவிதாவை ஆனந்திடமிருந்து காப்பாற்றிவிட்டு, அத்துடன் உங்கள் கடமை முடிந்ததா?? இல்லை ஆனந்தைக் கொன்றதும்தான் முடியுமா??

கண்ணன் இப்போது பதில் பேசத் திணறினான்.

ரஞ்சனி தொடந்தாள். உங்களின் வேலை என்ன?? ஜீவிதாவைக் காப்பதா?? என்றாள் கடுப்பாக, பவித்ரனை மறைந்திருந்து காப்பது. ஆனந்தின் பற்றிய உண்மைகளை சேகரித்து போலீசிடம் தருவது, அதுமட்டும் தான் என்றாள்.

இருந்தாலும், எனக்கு அந்த வீடியோ ஆதாரம் வேண்டும். இல்லை எனில் என்னால் இந்தப் பணியை தொடரமுடியாது என்றான் கண்ணன் அமைதியாக ,ஆனால் தெளிவாக.

என்னால் தர இயலாது. ஒரு பெண்ணிற்காக, மற்றொரு பெண்ணின் மானத்தை என்னால் பலியாக்க முடியாது என்ற ரஞ்சனி பட்டென இணைப்பைத் துண்டித்தாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன், கண்ணன் என அழைத்தான்.

கண்ணன் திடுக்கிட்டு, தன் பின்னால் இருந்த சன்னலைப் பார்த்தான்.

அங்கே பவித்ரன் நின்றிருந்தான். கண்ணனின் மூளை வேலைநிறுத்தம் செய்ய, அப்படியே நின்றுவிட்டான். சே !!

கதவைத்திற என்றான் பவித்ரன்.

போச்சு, மேடம் ஏற்கனவே செம கோபத்துல இருக்காங்க, இதுல இவர் வேற என்னப் பார்த்தது தெரிஞ்சது, அவ்வளவுதான்!! என நினைத்தவாறு கதவைத் திறந்தான் கண்ணன்.

பவித்ரன், வேகமாக உள்ளே வந்து ஜீவிதாவைப் பார்த்தான்.

அவங்களுக்கு ஒன்னுமில்லை, நான்... வந்துவிட்டேன் என்றான் கண்ணன் தயங்கியவாறு.

பவித்ரன், கண்ணன் புறம் திரும்பினான். அவனை கண்களால் அளந்தான்.

யார் நீ?? என்றான் அறையின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு..

நான், அது... என தயங்கி நின்றான் கண்ணன்.

ரஞ்சனியிடம் நீ பேசியது அனைத்தையும் கேட்டுவிட்டுத்தான் வந்துள்ளேன், அதனால் என்னிடம் எதையும் மறைக்காதே, உண்மையைச் சொல், என்றான் பவித்ரன்.

சொல்கிறோன், ஆனால் ரஞ்சனி மேடம்.., அவங்களுக்கு தெரியக்கூடாது என்றான்.

எது தெரியக்கூடாது???

நீங்கள் என்னைப் பார்த்ததை, என்னைப் பற்றி தெரிந்து கொண்டதைப் பற்றி சொல்லக்கூடாது என்றான்.

ஆறடி உயரத்துல இருந்துட்டு, சின்ன குழந்த மாதிரி பேசுற, என முறைத்த பவித்ரன், கண்ணன் அமைதியாகவே இருக்க, சரி சொல்லல , நீ சொல்லு யார் நீ ?? என்றான் பவித்ரன்.

நான் சில தப்புக்களை தட்டிக்கேட்டதால், போலீஸ் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டவன் என்றான் கண்ணன்.

அப்போது, என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தபோது, செல்வபாண்டியன் சாரும், ரஞ்சனி மேடமும் இந்த கேசை என்னிடம் ஒப்படைத்தனர். இது எனக்கு ஒரு பிராஜெக்ட், முடித்துக் கொடுத்ததும், அதற்கான சம்பளம் வரும். இந்த கேசை நேர்த்தியாக செய்யும் பட்சத்தில், இதுபோல செல்வ பாண்டியனே பல பிராஜெக்ட் தருவதாக கூறியுள்ளார் என்றான்.

பவித்ரன் புருவம் சுருக்கி, கண்ணனின் கதையைக் கூர்ந்தவன், உன் கதை எனக்கு அவசியமற்றது. ரஞ்சனி உன்னிடம் கொடுத்த வேலை என்ன?? என்றான்.

உங்கள் உயிருக்கு பலவகையில் ஆபத்து வரும் என்றும், அதனால் உங்கள் நிழல் போல தொடந்து, உங்களை காப்பதும், ஜீவிதாவின் அண்ணனை கொன்ற கொலைவழக்கின் சாட்சியங்களை சேகரித்து, செல்வபாண்டியனிடம் தருவது.

என் உயிருக்கு என்ன ஆபத்து??என்றான் பவித்ரன் கடுப்பாக..

நீங்கள் காச்சலில் இருந்த போது, தவறான மாத்திரைகளை ஆனந்த் மாற்றினான்.ஆதை நான் திரும்பவும் மாற்றி சரியான மாத்திரைகளை வைத்தேன்.

முதலில்நான் ஜீவிதாவைப் பார்த்ததே, உங்களை கொல்ல வந்த கும்பலிடமிருந்து, உங்களை காப்பாற்ற வரும் போது தான்.

அப்போது தான் ஒன்றைக் கண்டுகொண்டேன். உங்களுக்கு வரும் பல ஆபத்துக்களுக்கும் ஒரே காரணகர்த்தா , அது ஆனந்த்.

உங்களுக்கு மட்டுமல்ல, ஜீவிதா, அமைச்சர் துரை அனைவருக்கும், ஏதோ ஓர் வகையில் வரும் ஆபத்திற்கு ஆனந்தே காரணமாக இருந்தான். எனவே அவனது போனை ஒட்டுக்கேட்டு, அவனை பின் தொடர்ந்து தான், உங்கள் அனைவரையும் ரகசியமாக காப்பாற்றி, கிட்டத்தட்ட கார் விபத்து வழக்கும் முடியும் நிலையில் உள்ளது என்றான்.

ஆனால் அதற்க்குள் நான் உங்களிடம் மாட்டிக்கொண்டேன் என்றான்.

நீ வெளிய போலாம், எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இதை ரஞ்சனியிடம் நீயே சொல்லிவிடு என்றவன், அடுத்த கண்ணனின் பேச்சை கேட்க தயராக இல்லை.

ஜீவிதாவை பவித்ரன் எழுப்ப, அவளிடம் எந்த அசைவும் இல்லை. முகத்தில் தண்ணீரை அடித்துப்பார்த்தான், அப்போதும் அவள் கண்திறக்கவில்லை.

பவித்ரனும் கண்ணனும் பதற்றமாயினர்.

மருத்துவமனையில் , பவித்ரனும், கண்ணனும் காத்திருக்க, உள்ளே ஜீவிதாவிற்கு வைத்தியம் செய்தனர்.

பவித்ரன் கண்ணனை முறைத்தான். என்னை பின் தொடர தேவையில்லை என்றான் கடுப்பாக,

ஆனால் கண்ணனிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை.

சுவற்றில் நெற்றியைப் பதித்து கண் மூடி இருந்தான் கண்ணன். ஏதோ அதைப் பார்த்த பவித்ரனால் கண்ணனை திட்டவோ, வெளியேற்றவோ முடியவில்லை. பவித்ரனால் கண்ணனின் காதலை புரிந்துகொள்ள முடிந்தது.

பவித்ரன் அடுத்த வார்த்தை பேசும் முன், மருத்துவர் உள்ளிருந்து வந்தார்.

பவித்ரன், மருத்துவரிடம் செல்ல, கண்ணன் ஜீவிதாவின் அறைக்குள் நுழைந்தான். பவித்ரனுக்கு கண்ணனை தடுக்கத் தோன்றவில்லை. ஏனோ அவன் ஜீவிதா மீது காட்டும் அக்கரை, பவித்ரன் மனதிற்கு இதமளித்தது.

மருத்துவரும் கண்ணனின் ஓட்டத்தைப் பார்த்து, எழுந்த புன்னகையுடனே , பவித்ரனிடம் பேசினார். ஒன்னுமில்லை, ஏதோ மாத்திரை தவறுதலா போட்ட மாதிரி இருக்கு, மயக்கம் தெளிய மருந்து குடுத்தாச்சு, எழுந்துட்டாங்க, போய் பாக்கலாம் என்றவர், சற்று நிறுத்தி , உள்ளே சென்றவர் அனுமதி அளித்தால் போங்கள் என்றார், கலகலவென சிரித்தவாறு...

பவித்ரன் நாகரீகம் கருதி உள்ளே செல்லவில்லை. ஆனால் பிளீஸ்!! வெளியே போங்கள்!! என ஜீவிதா கத்தினாள்.

பவித்ரன், பதறியடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

sriseetha

Active member
வணக்கம்.

இது நான் எழுதும் முதல் கதை, பல யோசனைகள் இருந்தாலும், எப்படி அதை நீங்கள் புரிந்து கொல்லும் வகையில் எழுதுவது, என முதலில் திணறித்தான் சில பகுதிகளை எழுதினேன். ஆனால் என்கதை மீது எனக்கே ஆர்வம் ஏற்படும் அளவிற்கு முன்னேறியுள்ளேன். அதற்கான பிரதிபலிப்பை உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்.


ஆனால் நான் போட்ட கதை தாமதமாகும் பதிவினால், அமைதியாக என் கதையைப் படித்து கடந்து செல்வோரும், ஆர்வமாக கதை வேண்டும் எனக் கேட்டிருப்பதால், எழுந்த உற்சாகத்துடன் பதிவிடுகிறேன்.

நன்றி
Thank you Uthaya sis for understanding and satisfying our wishes and needs. Thanks for the UD :)
We are there to support you and we will encourage you so keep writing... :)
 
Last edited:
Top