All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

When is your next ud...
Waiting......
Really love nandhini lot....
Such a brave character....
Never show her invaluable love at stupid but protect him for her love....
Very very brave kind and most wanted character for today's society. . Love her lot ... And you toooooooo.... The way you narrating this story was really really amazing .... Don't get disappointed..
 

PriyaPraveen

Bronze Winner
wow very very interesting going...
Ranjini semma super aval tha ivlo nal Pavithranukku bathukappu koduthurukka,Jeevitha,kannam ellame Ranjini velai semma sharp mind....
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,

Do one favour for me,
My kadhai thread has lot of msgs , please clear all ur msgs, who post .

I starts, i clear my all replys,

Pls help me to clear my thread.

Kindly post ur commond on karuththu block.

Thank u😊😊
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பத்தி நான்காம் பகுதி..

ரஞ்சனி ஆனந்திடம் பேசிவிட்டு, எழுந்து சென்றாள். டேசியா என ஒருத்தி வந்ததையும், காகிதங்களை அவள் முன் வீசியதையும் ரஞ்சனி கண்டுகொள்ளவே இல்லை.

டேசியா இப்போது கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். கன்னம் , காது நெற்றிவரை சிவந்துவிட்டது.

ரஞ்சனி!! என கிட்டத்தட்ட கத்தியவள், ரஞ்சனியின் வலக்கரத்தைப் பிடித்து அவளது நடையைத் தடுத்தாள்.

ஆனந்துடன் பேசியதில் நேரமாகிவிட, தன் குழந்தையைக்காண செல்ல வேண்டும் என நடந்தவளை டேசியா தடுக்க, என்னவென திரும்பிப் பார்த்தாள் ரஞ்சனி.

ரஞ்சனியின் மேசையில் சிதறிக்கிடந்த காகிதங்களையும், புகைப்படத்தையும் சுட்டிக்காட்டி, என்ன இது?? என்றாள் டேசியா ஆங்கிலத்தில்

நீதான தூக்கிப்போட்ட, எடுத்துட்டு போ என்றாள் ரஞ்சனி.

அதிலிருந்த செய்திகளும், புகைப்படமும், ஜார்ஜையும் ரஞ்சனியையும் இணைத்து காதல் கதைகள் பேசின..

டேசியா வெடித்துவிட்டாள், தகாத ஆங்கில வார்த்தைகளால் சரமாரியாக திட்டியவளை, இல்லாத பொருமையை இழுத்துப் பிடித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ரஞ்சனி.

எனது காதலனை கைக்குழந்தையுடன் வந்து ஏமாற்றப் பார்க்கிறாயா?? உன் நாட்டிற்கே ஓடிவிடு என முடித்தாள் டேசியா.

சரி கையைவிடு என்றாள் பொருமையாக ரஞ்சனி...

டேசியா, அடுத்த கத்தலை ஆரம்பிக்க, ரஞ்சனியின் இடக்கரம் டேசியாவின் கன்னத்தில் இடியென இறங்கியது.

டேசியா அதிர்ச்சியில் பேச்சிழந்து நிற்க, ரஞ்சனி கையை உதறிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.

ஜார்ஜ் அறைவாயிலில் நிற்பதைக் கண்டு அவனை துளைக்கும் பார்வை பார்த்தவளிடம், அவன் இதற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சரணடைந்தான்.

அவனை கடந்து சென்றவள், அடுத்திருந்த தாய்_ சேய் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

டேசியா அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ரஞ்சனியின் பின்னால் வேக எட்டுக்களில் வர, இப்போது ஜார்ஜ் டேசியாவின் கையைப் பிடித்தான்.

கல்லூரி கேண்டியனில், ஜார்ஜ் குளிர் நீர் அடங்கிய கண்ணாடிக்குவளையால், டேசியாவின் கன்னத்திற்கு ஒத்தடமிட்டான்.

ரஞ்சனியின் கைத்தடம், டேசியாவின் கன்னத்தில் பதிந்திருந்தது.

டேசியா ஒரு பெரிய மாடல் அழகி. ஜார்ஜூடன் இணைத்து பலமாக கிசுகிசுக்கப் பட்டவளும் கூட..


டேசியாவை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான் ஜார்ஜ். எப்படி அடித்துவிட்டாள் பார் என அவன் தேள்சாய்ந்து, கன்னத்தை காட்டினாள் டேசியா.

இதே போல வாங்கிய அனுபவம் ஜார்ஜூக்கும் இருந்ததால், டேசியாவைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது.

ரஞ்சனிக்கு கோபம் அதிகம். நீ இதேபோல் அவளைக் காண கல்லூரிவரை வராதே!, உன் நன்மைக்குத்தான் செல்கிறேன் என்றான்.

டேசியா ஜார்ஜை முறைத்தாள். பின்பு டேசியாவின் பார்வையில் ரசம் கூட, எத்தனை முறை நீ அடி வாங்கியிருக்கிறாய் என்றாள் சட்டென...

கேள்விகேட்ட அவளும் சிரித்துவிட்டாள். ஜார்ஜூம் சிரித்துவிட்டான். பின்பு ஒரே முறை என்றான் மெதுவாக.

ஜார்ஜ் கல்லூரிக்கு வருவது வழக்கமாகிவிட, அவனைச்சுற்றி வளைக்கும் கும்பல் குறைந்துவிட்டது. ஆனால் அவனை துரத்தும் பார்வைகள் குறையவில்லை.

டேசியா, தலையை இடவலமாக ஆட்டி, நான் நம்பமாட்டேன் என்றாள்.

முறைத்த ஜார்ஜைப் பார்த்து, முதல் சந்திப்பிலேயே என்னை அடித்துவிட்டாள். நீ தினமும் அவளை கல்லூரியில் சந்திப்பாய், கன்னம் பழுத்திருக்குமே, எங்கே காட்டு, காட்டு என ஆவளானாள் டேசியா.

இவர்களின் நெருக்கம், தொடர் புகைப்படமாகப்பட்டிருந்ததை அறியாமல் டேசிய, இருக்கும் இடத்தையும் மறந்து அவனின் முகம்நோக்கி வர, ஜார்ஜ் , டேசியா இது கல்லூரி!! என அவளுக்கு நினைவூட்டினான்.

விளையாட்டெல்லாம் ஓய்ந்து போக, டேசிய அமைதியாகிவிட்டாள்.

சரி டேசியா, எனக்கு வகுப்பிற்கு நேரமாகிறது, வா போகலாம்! என்றவனின் கையை பிடித்து தடுத்தவள், நீ ரஞ்சனியைத்தான் விரும்புகிறாயா ஜார்ஜ் என்றாள் தனது கண்களின் தவிப்பை மறைத்துக்கொண்டு.

ஜார்ஜ், முகம் இந்தக்கேள்வியில் , தன்னை மறந்து மலர்ந்தது. டேசியா உள்ளுக்குள் நொருங்கிப்போனாள்.

வேகமாக எழுந்த டேசியா, குட்லக், அண்டு குட்பாய் என்றுவிட்டு விறுவிறுவென வெளியேறினாள்.

ஜார்ஜ் அவளின் பின்னால் ஓடிவந்து அவளது கையைப்பிடித்தான்.

ஹே!! என்னாச்சு டேசியா! எதற்காக குட்பாய் , நானும் நீயும் நண்பர்கள் இல்லையா?? என ஜார்ஜ் கேட்க,

டேசியா இல்லை என்றாள். நான் நட்பிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டேன். இனி என்னால் பின்வாங்க முடியாது. உன்னை தொல்லை செய்யவும் விரும்பவில்லை என நாசூக்காக தனது காதலை வெளிப்படுத்தினாள்.

டேசியா விளையாட்டுத் தனம் இல்லாமல் அவனிடம் பேசுவது இதுவே முதல்முறை. ஜார்ஜ் டேசியாவின் இந்த நிதானத்தில் பேச்சிழக்க, அவனிடமிருந்து தன் கையை உருவிக்கொண்டவள், குட்பாய்!! என்றுவிட்டு அவனைவிட்டு பிரிந்து சென்றாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உலைகலமாய் கொதிக்கும் மனதை அடக்கும் வழி தெரியாமல், வெளியே வந்தான் ஆனந்த்.

அங்கு அவனுடைய கார் இல்லை. அதில்தான் ஜீவிதாவை கண்ணணும், பவித்ரனும் தூக்கிச் சென்றனர்.

தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, சாலையில் சீறிப்பாய்ந்தான்.

ரஞ்சனியிடம் பேசியதில் இருந்து, தன்னை மொத்தமாக அழித்துவிட திட்டம் நிறைவேறி இருக்கிறது, ஆனால் அதற்கு முன் பவித்ரன், ஜீவிதா, துரை முக்கியமாக தன்னை அடித்தவன், என அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு துரை இருந்த மருத்துவமனை நோக்கி சென்றான்.

போகும் வழியிலிருந்த உணவகத்தின் முன் வரிசையில் பவித்ரனின் கார் நின்றிருந்தது. சே!! அவன் காரை இங்கு நிறுத்திவிட்டுத்தான் தப்பித்தானா?? என ஆனந்த் சில வினாடிகள் யோசிக்கும் முன் பின்னிருந்து வந்த லாரி அவனை வாகனத்துடன் அடித்து வீழ்த்தியது.

சில அடி தூரம் தரையில் ஆனந்தை இழுத்து வந்ததில், அவன் குருதியிலிருந்து, பாதி உடற் சதைகள்வரை பூமாதேவி குடித்துவிட்டாள். கைகால்கள் வாகனத்தில் சிக்கி அவனது உடலிலிருந்து விடைபெற்றன.

ஆனந்தின் அகராதியில், அவன் கொலைசெய்தவர்களுக்கு , அவன் சூட்டும் பெயர் சாலைவிபத்து, அதையே போக்குவரத்து அதிகாரிகளும் , காவல்துரையும் இந்நிகழ்விற்கு சூட்டினர்.

மருத்துவமனையில் அனைவரும் துறையை திகைத்துப் பார்க்க, அவரோ இப்போதுதான் அவன் சாலைவிபத்தில் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது என்றார்.

அப்பா... நீங்களா??? என ஜீவிதா திகைத்து விழிக்க..

சே! எனக்கும் இதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் துரை.

பவித்ரனின் சந்தேகப்பார்வை கண்ணன் மீது விழுந்தது.

பவித்ரனைப் பார்த்த ஜீவிதாவும் , கண்ணனை உற்று நோக்க, கண்ணன் இந்த மருத்துவமனை மேல சத்தியமா இதை நான் செய்யல என்றான்.

அனைவரும் சிரித்தனர். எனக்கென்னவோ பவித்ரன் சார் மேலதான் சந்தேகமா இருக்கு என்றான் கண்ணன்.

இப்போது அனைவரின் பார்வையும் பவித்ரன் புறம் திரும்பியது.

உனக்கெல்லாம் கெல்ப் பண்ணேன் பாரு... என்றான் பவித்ரன் கண்ணனிடம்.

பின்ன யாரு?? இதை செய்தது என்றாள் ஜீவிதா, அப்போது துரைக்கு மற்றொரு செல் அழைப்பு வர அதை காதில் வைத்தவர், எதிர்புறம் பேசுவதை மட்டும் கேட்டுவிட்டு வைத்தார்.

என்னாச்சு சார்?? என்றான் கண்ணன், துரையிடம்.

ஆனந்த் சாகலை, உயிருடன் தான் இருக்கிறான் என்றார்.

ஓ... காற்றிறங்கிய பலூன் ஆனார்கள் அனைவரும்.

ஜீவிதா! கடவுள் இருக்கிறார்! என ஜீவிதாவின் கைகளை நெற்றியில் அழுத்திக்கொண்டு கண்ணீர் விட்டார் துரை.

என்னாச்சு அங்கிள் என ஒருபுறம் பவித்ரனும், மறுபுறம் கண்ணனும் துரையின் தோள்களை பிடித்துக்கொள்ள, அண்ணனின் மரணத்திற்கு பிறகு மீண்டும் தந்தையின் கண்ணீரைக் கண்ட பதற்றத்தில் பேச்சிழந்தாள் பாவை.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சற்றே நிதானத்திற்கு வந்த துரை, அவன் விபத்தில் உயிருடன்தான் இருக்கிறான். ஆனால் இரண்டு கையும், இரண்டு காலும் மொத்தமாக இழந்து, அந்த இழப்பை தன் கண்களால் பார்த்து துடித்துக்கொண்டிருக்கிறான் என்றார் துரை.

பவித்ரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. சொல்லப்போனால் வேதனையாகத்தான் இருந்தது. ஆனந்தின் நீச்சல் வேகம் பவித்ரன் கண்முன் வந்து போனது.

கண்ணன் , ஜீவிதாவைப் பார்க்க, அவளும் கண்ணனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உன் அண்ணனை குழப்பி, பண நஷ்டப்படுத்தி, கார் விபத்துல அவனை மொத்தமா கொன்னதும் இவன் தானாம். அப்போது, நான் எப்படித் துடித்தேனோ, அதேபோல் இப்போது அவன் துடிக்கிறான்.துடிக்கட்டும்!! என்றார் அழுத்தமாக துரை.

ஜீவிதாவிற்கு இது முற்றிலும் புதிய செய்தி, அண்ணனை கொன்றது ஆனந்தா?? கேள்வியாக கண்ணனைப் பார்க்க, அவன் ஜீவிதாவிடம் தலையசைத்து ஆம் என்றான்.

அண்ணனின் அகால மரணத்தை நினைத்தவள், கண்ணில் நீர் பெருகியது. கண்ணன் மற்றொரு கரம் ஜீவிதாவின் தோளில் விழுந்து, அவளை ஆறுதல் படுத்தியது.

இதைக்கண்ட துரை திடுக்கிட்டு பவித்ரனைப் பார்க்க, அவன் ஆம் என ஆமோதித்தான்.

துரை, கண்ணனை முறைக்க, அவன் கையை பட்டென எடுக்க, அடுத்த நொடி ஜீவிதா கண்ணன் கைகளைப் பற்றினாள்.

கண்ணன், கண்களால் துரையை சுட்ட, இப்போது தந்தையைப் பார்த்து பயந்து கண்ணன் கைகளை விட்டுவிட்டு அமைதியானாள் ஜீவிதா.

கண்ணன் சாரி!! சார் என்றான். ஆனால் நான் ஜீவிதாவை நேசிக்கிறேன்!! என்றான் தெளிவாக!

அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவியது.

துரை ஜீவிதாவை உற்று நோக்கினார். அவள் குனிந்த தலை நிமிரவில்லை.

துரை எழுந்து கொண்டார். பவித்ரனிடம் வா! என்றவர் முன்னோக்கி நடந்தார்.

துரை நகர்ந்ததும், கண்ணன் பவித்ரனிடம், சார் நீங்கதான் காப்பாத்தணும் என, பிளீஸ் பவி அண்ணா!! என்றாள் ஜீவிதா.

பவித்ரன் கவலை படாதே கண்ணா!! எப்படியாவது பாடுபட்டு ஜீவிதாகிட்ட இருந்து உன்னை காப்பாத்தீடுறேன் என சிரிக்காமல் சொல்லிவிட்டு சென்றான்.

கண்ணனிற்கும், ஜீவிதாவிற்கும் சற்றும் பயமில்லை. ஏனென்றால், பவித்ரன் கிண்டல் செய்ததே!! அவர்களுக்கு போதுமான நம்பிக்கையை அளித்தது

எல்லாம் இனி பவி அண்ணா பாத்துக்குவார் ....??? ஆமா உங்க பேர்??? கண்ணன்தான?? எனஜீவிதா தனது சந்தேகத்தைக் கேட்டாள்.

கண்ணன் ஜீவிதாவைப் பார்த்து சிரித்தான். என்னோட பேர்கூடத் தெரியாதா??

எப்படி தெரியும்??? ஜீ பூம் பா மாதிரி வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. எத்தனையோ முறை நீங்கள் போனதும் , சே! பேரைக் கேட்காமல் விட்டுவிட்டோமே!! என எண்ணிப்பார்த்திருக்கிறேன் என்றாள் ஜீவிதா.

பேரைக்கூட சரியாக தெரிந்து கொள்ளவில்லை. எதைவைத்து என்னை?? என கண்ணன் எதையோ கேட்கவர,

உங்கள் குணம் என்றாள் ஜீவிதா. ஒருவரின் பெயரைவிட, பதவியைவிட, குடும்பத்தைவிட, மிக முக்கியமானது.

குணமா?? என்னைப் பற்றி என்ன தெரியும்??

நீங்கள் காப்பாற்ற வந்தது பவி அண்ணாவை, ஆனால் தேவையில்லாமல், இக்கட்டான சூழ்நிலையிலும், என்னையும், அப்பாவையும் காப்பாற்றினீர்கள். உங்களிடத்தில் வேறொருவர் இருந்து, இத்தனை சூழ்நிலைகளை கடந்து வந்தால், நிச்சியம், தன்வேலையை மட்டுமே பார்த்திருப்பார் என்றாள் ஜீவிதா.

கூடுதல் வேலை பார்த்தே, உங்கப்பா சொத்தையெல்லாம் சுருட்டத்தான் என்றான் கண்ணில் குறும்புடன் கண்ணன்.

ஜீவிதா, சில வினாடி மௌனமானாள். ஒருமுறை ஏமாறியவள், மறுமுறை ஏமாறமாட்டேன் என்றாள்.

கண்ணன், ஹே!! ஜீவிதா என்ன இது இவ்வளவு சீரியஸா?? நான் சும்மா விளையாடினேன் என்றான்.

தெரியும். இருந்தாலும் நான் என்னைப் பற்றியும் உங்களிடம் சொல்லிவிடுகிறேன். மறுமுறை நமக்குள் எந்த பிரச்சனையும் எழக்கூடாது என்பதற்காக.

ஆனந்த் என் அண்ணனின் தேர்வு. ஆனந்த் தான் மாப்பிள்ளை என யாரும் முடிவு செய்யவில்லை.

ஆனால் என் அண்ணனின் இறப்பிற்கு பிறகு, என் அண்ணனின் ஆசையை நான் நிறைவேற்ற நினைத்தேன். ஆனால் அப்போதும் பலமுறை அவர் நடந்து கொள்வதில், எனக்கு சில பல நெருடல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனந்தின் மீது பலமுறை பல விசயங்களில் சந்தேகம் முளைத்திருக்கிறது. ஆனால் அவர் இந்த அளவிற்கு செல்வார். இவ்வளவு மோசமானவர் என நான் நினைத்ததில்லை என்றாள்.

இதெல்லாம் நீ சொல்லாமலே எனக்குத் தெரியும். அத்தனையும் கண்டுபிடித்துவிட்டுத்தான், உன்னை கலவரத்தில் கண்டேன் என்றான் கண்ணன்.

ஜீவிதாவின் கண்கள் விரித்தது. ஓ...அப்படியானால் என்னைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லையா??

சொல்லாமல் நானே கண்டுபிடிப்பதுதான் சுகம் என்றான் கண்ணன் இரட்டை அர்த்தத்தில்.

ஜீவிதா முறைத்தாள். பேச்சு சரியில்லையே!! என்றாள்.

கையைத்தூக்கி சோம்பல் முறித்தவன், எது எது சரியில்லையோ, சரியாக்கு என்றான் ஜீவிதாவின் தோளை இடித்துவிட்டு.

அப்போது துரையும், பவித்ரனும் வேகமாக அறைக்குள் நுழைய, கண்ணன் பட்டென எழுந்து பக்கத்தில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அடக்கமாக...

ஜீவிதா கண்ணனைப் பார்த்து நகைத்தாள்.

பவித்ரன், ஜீவிதாவிடம் டிரைவர் வந்துவிட்டார் வீட்டிற்கு போ!! என்றான்.

கண்ணனிடம் திரும்பியவன், வா!! முக்கியமான வேலை!! என்றான்.

கண்ணனும் ஜீவிதாவும் ஒருவரையொருவர் கலவரமாக பார்த்துக்கொண்டனர்.

ஆனந்திற்கு விபத்து ஏற்படுத்தியவன் காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டானாம். அவனை நாம் காப்பாற்ற வேண்டும் சீக்கிரம் போ கண்ணா!! என்றார் துரை.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 
Top