All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
உறவு : 5



வசுந்தரா தேவி எப்போதடா கல்லூரிக்குச் செல்வோம் என்று பரபரப்புடன் காத்திருந்தாள். அவளது அன்னை தையல்நாயகி கூட அவளை அதிசயமாகப் பார்த்தார்.



"என்னடி அதிசயமா இருக்கு? சூரியன் மேற்கே உதிச்சிருச்சா?"



"ம்மா, மசமசன்னு நிற்காம டிபனை எடுத்துட்டு வாங்க..." அவள் அன்னையை அவசரப்படுத்தினாள்.



"இருடி வர்றேன்..." அவர் சமையலறை உள்ளே செல்ல...



அப்போது வேணுகோபாலன் அங்கு வந்தார். என்றும் இல்லாத அதிசயமாக மகள் சீக்கிரமே கல்லூரிக்கு கிளம்பி இருப்பதைக் கண்டு அவருக்குப் பெருத்த ஆச்சிரியமாக இருந்தது.



"வசும்மா, சீக்கிரமே கிளம்பிட்ட போலிருக்கு. இன்னைக்குக் காலேஜில் என்ன விசேசம்?"



"நம்ம காலேஜ் தேர்தல் கணிப்பு பார்த்து எனக்கு ஒரே சந்தோசம்ப்பா... அதுக்குக் காரணமான சாமை பாராட்டத்தான் கிளம்பிட்டு இருக்கேன்." மகள் உற்சாகமாகச் சொல்ல...



"அதுக்காக இந்த அப்பாவை கூட மறந்துட்டு போறியே வசும்மா? உன் முகத்தில் முழிக்காம என் வேலை எதுவும் நடந்திருக்கா?" வேணுகோபாலன் சுணக்கத்துடன் சொல்ல...



"சாரிப்பா..." என்று மன்னிப்பை வேண்டியவள் பின்பு அவரது கழுத்தில் கட்டி கொண்டு, "என் செல்ல அப்பா..." என்று கூறியபடி அவரது கன்னத்தில் முத்தமிட... மகளது முத்தத்தில் தந்தை குளிர்ந்து தான் போனார்.



"இது சரியில்லையே..." வருண் மஹாராஜ் முகச்சிளிப்புடன் அங்கு வந்தான்.



"என்னடா சரியில்லை?" வேணுகோபாலன் மகனை அதட்டினார்.



"அவனை அதட்டாம அவன் சொல்ல வர்றதை கேளுங்க..." என்றபடி அங்கு வந்த தையல்நாயகி எல்லோருக்கும் தட்டு எடுத்து வைத்து உணவு பரிமாற ஆரம்பித்தார்.



"வசு, இதென்ன ஒரு வேலைக்காரனை போய்ப் பாராட்டுவது... அவன் அவனோட வேலையை, கடமையைத் தானே செய்தான்." வருண் மஹாராஜ் தங்கையைச் சத்தம் போட்டான்.



"ப்பா, பாருங்கப்பா..." மகள் அழுகையில் உதட்டை பிதுக்க... அதைப் பாசமிகு தந்தையால் காண இயலவில்லை.



"விடு வருண்... சின்னப் பாராட்டு தானே... பாராட்டிட்டு போகட்டும்." வேணுகோபாலன் மகனை சமாதானப்படுத்தினார்.



"சின்னதா ஆரம்பிக்கும் விசயம் தான் பின்னாளில் பெரிய பிரச்சினையை உருவாக்கும்." அவன் கோபத்துடன் முணுமுணுத்தான்.



"குழந்தையைப் போய் என்னடா பேசுற?" வேணுகோபாலன் அதட்டவும் அவன் அமைதியாகி விட்டான்.



"நீ போயிட்டு வாடாம்மா..." வேணுகோபாலன் மகளுக்குச் சம்மதம் தெரிவிக்க...



வசுந்தரா தேவி சந்தோசமாய்க் கிளம்பி சென்றாள். அவள் சென்றது கல்லூரி தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே... அதனால் சாம் இன்னமும் கல்லூரிக்கு கிளம்பி வரவில்லை. சாம் வந்ததும் தன்னை வந்து பார்க்குமாறு கடைநிலை ஊழியரிடம் பணித்துவிட்டு அவள் அறைக்குச் சென்று விட்டாள். சரியாக எட்டரை மணிக்குச் சாம் கல்லூரிக்கு வந்தான். அவனிடம் விசயம் சொல்லப்பட... அவன் நேரே அவளைச் சந்திக்கச் சென்றான்.



சாம் வசுந்தரா தேவியின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் எழுந்தவள்,



"வா வா சாம்... உனக்காகக் காத்திருந்தேன்." என்க... அவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.



"எங்கப்பா தான் வெற்றி பெறுவார்ன்னு நீ தேர்தல் கருத்துக் கணிப்பில் சொல்லியிருந்தல்ல... அதைப் பார்த்து எனக்கு ரொம்பச் சந்தோசம்... அதுக்குக் கிப்ட்டா அப்பா கிட்ட சொல்லி இந்த மாசத்தில் இருந்து உன்னோட சம்பளத்தை அதிகரிச்சுக் கொடுக்கச் சொல்றேன்." என்று மகிழ்ச்சியோடு கூறியவள் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை அணைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.



அவள் கொடுத்த முத்தத்தில் ஒரு கணம் திகைத்தவன் அடுத்தக் கணம் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான். அவன் அறைந்ததில் முதலில் அதிர்ந்து நின்றவள் பின்பு சினத்தில் முகம் சிவக்க அவனைப் பார்த்தாள். அவளைப் பொறுத்தவரையில் அவள் சாதாரணமாகத் தான் அவனை அணைத்தாள், முத்தமிட்டாள், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவ்வளவே... அதற்காக அவன் அவளை அறைவானா!



"ஹௌ டேர் யூ..." அவள் ஆத்திரத்தில் வார்த்தைகள் வராது தடுமாறியபடி நின்றிருந்தாள்.



"இப்படிக் கட்டிப்பிடிக்கிறது, முத்தம் கொடுக்கிறது எல்லாம் எனக்குப் பிடிக்காது மேம்..." அவன் எச்சரிக்கும் தொனியில் பேச...



"டேய் சோடாப்புட்டி, உனக்கு ரொம்பத்தான் நினைப்பு... ஏதோ சந்தோசத்தில் இப்படிப் பண்ணிட்டேன். அதுக்குன்னு நீ ஓவரா கற்பனையை வளர்த்துக்காதே..." என்றவள் கோபத்துடன் அவனை அறைவதற்குக் கையை ஓங்க... அவனோ அவளது கையை இறுக பற்றிக் கொண்டு,



"இதே இது நான் நீங்க செய்ததைச் செஞ்சிருந்தால் உங்க ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும்?" என்று நிதானமாகக் கேட்க...



"செருப்பு பிஞ்சிருக்கும்." என்று அவள் கோபத்துடன் சொல்ல...



"அதே தான் எனக்கும்... பெண்களுக்கு மட்டும் தான் கற்பு, ஒழுக்கம் இருக்குன்னு நினைக்காதீங்க... ஆண்களுக்கும் உண்டு..." என்றவன் அவளது கரத்தினை விட்டு விட்டு,



"எனிவே, நீங்க சம்பளம் ஏத்தி கொடுத்ததுக்குத் தேங்க்ஸ்..." என்றவன் அறையை விட்டு வெளியில் வர...



அவள் திகைப்புடன் நின்றிருந்தாள். அவன் அவளை அறைந்தது கோபம் தான் என்ற போதும், அவனது வார்த்தைகள் என்னமோ அவளது மனதில் சாமரம் வீசியது.



வெளியில் வந்த சாம் வசுந்தரா தேவியை அடித்த தனது கையை விரித்துப் பார்த்தான். அவளது கன்னத்தை ஸ்பரிசித்த தனது கரத்தை காணும் போது சில்லென்று ஐஸ்க்ரீம் உண்டது போலிருந்தது. அவனது உதடுகளில் அவனையும் அறியாது மந்தகாச புன்னகை தோன்றியது.



'அடேய், உன் திறமை என்ன? படிப்பு என்ன? உனக்கு இந்த அடி முட்டாள் தான் வேணுமா?' அவனது மனசாட்சி அவனைக் காறி துப்பியது.



'அது முட்டாள் இல்லை... இன்னொசென்ஸ்...' அவன் மனசாட்சியைத் திருத்தினான்.



'எங்க ஊரு பக்கம் இதைக் கிறுக்குத்தனம், பைத்தியக்காரத்தனம்ன்னு சொல்லுவாங்க.' மனசாட்சி மறுபடியும் கவுண்ட்டர் கொடுத்தது.



'இப்போ என்ன சொல்ல வர்ற?' அவன் சலிப்புடன் மனசாட்சியைக் கண்டு கேட்டான்.



'நீ அவளுக்கு வில்லன் தான்... அதனால் வந்த வேலையை மட்டும் பாரு. தேவையில்லாம சென்ட்டிமென்ட் விசயத்தில் சிக்கி சின்னாபின்னமாகிறாதே. சீஃப்க்கு இதெல்லாம் பிடிக்காது.'



'சீஃப் கொடுத்த வேலையை உயிரை கொடுத்தாலும் செய்வேன். அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?'



'அதான் சொன்னேனே... நீ வந்திருப்பதோ வில்லன் வேலை பார்க்க... அது தெரிஞ்ச பிறகு அவள் உன்னை லவ் பண்ணுவாளா? இதெல்லாம் உனக்குத் தேவையா?' மனசாட்சி சொன்னதும் அவன் மௌனம் சாதித்தான்.



'இப்போ நான் சொல்ல வருவது புரிந்ததா? உன் வாழ்க்கையில் நீ பார்க்காத பெண்களா? எதுக்கு இந்தச் சண்டிராணியைப் பிடிச்சிட்டு தொங்குற... போ, போய் வேற வேலையைப் பாரு.' மனசாட்சி அவனைக் கடிந்து விட்டு மறைந்து விட்டது.



சாம் யோசனையுடன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அவன் வாழ்வில் எத்தனையோ பெண்களைச் சந்தித்து இருக்கிறான் தான். ஆனால் இந்த மாதிரி ஒரு சண்டிராணியை, யுனிக் பீசை அவன் இதுவரை சந்தித்தது இல்லை. விரிவுரையாளரான அவளுக்குச் சப்ஸ்ட்டிட்யூட்டாக அவனை வேலைக்கு அமர்த்தி இருப்பதன் மூலம் அவளது அறியாமையை அறிந்து கொள்ளலாம்.



சாம் வசுந்தரா தேவியை நினைத்து புன்னகைத்தபடி சென்று கொண்டு இருந்தான்.



*************************



தேர்தல் வியூகத்தின் அடுத்தக் கட்ட நகர்வாக வேணுகோபாலன், வருண் மஹாராஜ் இருவரும் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என்றால்... சும்மா அவர்களைச் சந்தித்துக் கைக்கூப்பி வணக்கம் போட்டுப் புகைப்படம் எடுப்பது மட்டும் இல்லை. இவர்கள் மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் அந்த வேலையை இவர்களும் இறங்கி செய்ய வேண்டும் என்பதே!



"அவன் சாக்கடையைச் சுத்தம் செஞ்சிட்டு இருந்தா... நாங்களும் அதைச் செய்யணுமா?" வேணுகோபாலன் எரிச்சலுடன் சொல்ல...



"கட்டாயம்... அப்போ தான் மக்கள் மனசில் இடம் பிடிக்க முடியும்... அடுத்துக் கோட்டையில் கொடியை நிலைநாட்ட முடியும்." என்ற ஜெகனை உறுத்து பார்த்தவர்,



"எல்லாம் சரி தான்... உங்க சாரை நாங்க எப்போ தான் சந்திப்பது? பணம் எல்லாம் கொடுத்தும் எங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லையே." என்று கேட்க...



"உங்களுக்கு வேண்டியது வெற்றி... எங்களுக்கு வேண்டியது பணம்... நீங்க வெற்றி பெறலைன்னா தான் நீங்க எங்களைக் கேள்வி கேட்க வேண்டியது இருக்கும். மத்தபடி இது தேவையில்லாத ஒன்று." ஜெகன் கத்தரித்தார் போன்று பேசினான்.



வருண் மஹாராஜ் தான் தந்தையை அடக்கினான். இதோ பணம் முழுவதும் கொடுத்ததும் அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்த சொல்லி அறிக்கை கொடுத்து இருந்தனர். அதில் முதலில் உள்ளது தான் இந்த ரத யாத்திரை.



ரத யாத்திரை கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. லட்சக்கணக்கில் தொண்டர்கள் புடைசூழ வேணுகோபாலன் ரதத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ரத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவரது ரதம் புறப்பட்டுச் செல்ல... அவரின் பின்னே லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். இந்தச் செய்தி தமிழகத்தையே அதிர செய்தது.



இது குறித்து வெற்றி வேந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டனர்.



"வேணுகோபாலன் சார் ரதத்தை ஓட்டி ஆரம்பித்துப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?"



"அவருடைய தந்தை கார் டிரைவர்... அந்தப் புத்தி மகனை விட்டு போகவில்லை போலும்..." என்று அவன் கிண்டலாய் பதில் சொன்னான்.



இந்தச் செய்தியை கேட்டு வேணுகோபாலன், வருண் மஹாராஜ் இருவரும் கொதித்தனர். இதற்கு எதிர் அறிக்கை விட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். அந்த இடத்தில் வருண் மஹாராஜ் சற்று நிதானித்துத் தந்தையிடம்,



"எதற்கும் ஜெகனிடம் கேட்போம்..." என்று சொல்ல...



"ஆமாடா, ............. இதுக்குப் போகணும்ன்னா கூட அவன் கிட்ட கேட்டு தான் போகணும் போல..." வேணுகோபாலன் ஆத்திரத்தில் வார்த்தைகளை விட...



"பொறுமையா இருங்கப்பா..." என்று தந்தையைச் சமாதானப்படுத்திய வருண் ஜெகனுக்கு அழைத்துப் பேசினான்.



"வெற்றிக்கு எதிரா நாங்க அறிக்கை கொடுத்தே ஆகணும். எங்களை அவமானப்படுத்திப் பேசிய அவனை நாங்களும் அவமானப்படுத்த வேண்டும்." வருண் மஹாராஜ் ஜெகனிடம் கொதித்தான்.



"நோ, நோ அப்படி எல்லாம் அவசரப்பட்டுப் பண்ணிராதீங்க... இதைப் பொறுமையா தான் கையாளணும்." என்ற ஜெகனை கண்டு வருண் மஹாராஜ்க்குக் கோபம் வந்தது.



"என்னங்க பேசுறீங்க? நாங்க எலெக்சன்ல ஜெயிக்கணும் தான். அதுக்காக எங்க தன்மானத்தை இழந்துட்டு ஜெயிக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை."



"நீங்க இதை நெகட்டிவ்வா பார்க்கிறீங்க... நாங்க இதைப் பாசிட்டவ்வா பார்க்கிறோம்."



"எங்களைக் கேவலப்படுத்துறது உங்களுக்குப் பாசிட்டிவ்வா? நீங்க எங்காளா? இல்லை அவங்க ஆளா?" வேணுகோபாலன் கோபத்துடன் கேட்க...



"உங்க கிட்ட தானே பணம் வாங்கி இருக்கோம். அப்போ நாங்க உங்க ஆளு தான்... நான் சொல்றபடி செய்ங்க..." என்றவன் மேற்கொண்டு அவர்கள் செய்ய வேண்டியதை சொல்லி கொடுத்தான். அதைக் கேட்டு அவர்களது முகம் மலர்ந்தது.



"ஓட்டுநர்கள் என்றால் கேவலமா நமது முதலமைச்சர் மகனுக்கு? அவர் தனது ஆணவ பேச்சால் அனைத்து ஓட்டுநர்களையும் கேவலப்படுத்தி விட்டார். கார், ஆட்டோ, லாரி, மினி வேன், பஸ், ரயில், என்று அனைத்தும் ஓட்டுபவர் ஓட்டுநரே… அப்படி என்றால் எல்லோருமே கேவலமா? வெற்றி வேந்தன் என்னைக் கேவலப்படுத்தவில்லை. நம்மில் ஒருவனைக் கேவலப்படுத்தி இருக்கிறார். அதாவது என்னை, உங்களைக் கேவலப்படுத்தி இருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லோரும் சரியான பாடம் புகட்ட வேண்டும். செய்வீர்களா?" வேணுகோபாலன் கண்கள் கலங்க, உணர்ச்சி மிக மக்களிடையே வீராவேசத்துடன் முழங்கினார்.



அவரது முழக்கம் எல்லாச் சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பட்டது. இது எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது. அதன் விளைவு அனைத்து ஓட்டுநர்கள் சங்கங்களும் வேணுகோபாலனை ஆதரித்துச் சமூக ஊடகங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். சமூக ஊடகங்களில் இந்தப் பதிவுகள் எல்லாம் வைரலாகி டிரெண்டானது. தொலைக்காட்சிகளில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஓட்டுநர் என்ற வார்த்தை மெல்ல விஸ்வரூபம் எடுத்து சாதி, இனம் என்று பிரச்சினையை வேறு ரூபத்துக்கு மாற்றியது.



இவை எல்லாம் வேணுகோபாலனுக்குச் சாதகமாக மாறியது. மதியழகனுக்குப் பெருத்த தலைவலியாக மாறியது.



"வெற்றி, உனக்குத் தான் அரசியல் ஒத்து வரலையே... அப்படின்னா ஒதுங்கி நிற்க வேண்டியது தானே... எதுக்குத் தேவை இல்லாம வாயை கொடுத்த... இப்போது வாங்கிக் கட்டிக்கிறது யாரு? நான் தான்... சும்மாவே இருக்க மாட்டியாடா?" மதியழகன் மகனை கடிந்தார்.



வேணுகோபாலனுக்குப் பெருகிய ஆதரவு கண்டு வருண் மஹாராஜ் மகிழ்ச்சி அடைந்தான்.



"என்னமோ சொன்னீங்களேப்பா...? இப்போ பார்த்தீங்களா? இனிமேலாவது பேசாம அவங்க சொன்னதைக் கேட்டு நடந்துக்கோங்க." என்று அவன் தந்தையிடம் சொல்ல...



"இனி அவங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்." வேணுகோபாலன் திருப்தியுடன் சொன்னார். இப்போதே வெற்றி அவர் வசம் என்பது போல் ஒரு மகிழ்வு அவருள்...



தந்தை திட்டியதும் வெற்றி வேந்தனுக்கு மிகவும் வருத்தமாக, எரிச்சலாக இருந்தது. அவன் தனது கோபத்தைத் தணிக்கும் வகைத் தெரியாது காரை எடுத்துக் கொண்டு வேகமாக ஊரை சுற்றி வந்தான். அப்படி இருந்தும் அவனது மனம் அமைதி அடையவில்லை. தனது வார்த்தையைக் கொண்டே தன்னைக் கட்டம் கட்டிய வேணுகோபாலன், வருண் மஹாராஜ் மீது அவன் கொலைவெறியில் இருந்தான். அன்று வீட்டிற்குச் செல்ல பிடிக்காது அவன் தனது விருந்தினர் மாளிகைக்கு வந்தான். அங்கு வந்ததும் அவனுக்குப் பிரியதர்சினி ஞாபகம் வந்தது. அவளோடு கொண்ட உறவு அவனால் மறக்க முடியாது. அவனது மனம் அதிலேயே உழன்றது.
 

ஶ்ரீகலா

Administrator


வெற்றி வேந்தன் தனது செயலாளரை அழைத்துப் பிரியதர்சினியை அழைத்து வர சொன்னான். அவனும் சரியென்று விட்டு சென்றவன் அரை மணி நேரத்தில் சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி வந்தான்.



"எங்கே அவள்?" செயலாளருக்கு பின்னே பார்த்தபடி அவன் கேட்டான்.



"அவங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க..."



"என்னது?" அவன் ஆத்திரத்துடன் சோபாவில் இருந்து எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் கனம் கூடிய அந்தச் சோபா சிறிது பின்னால் நகர்ந்தது.



"ஆமாங்க சார், அவங்க இப்போ மும்பை கிளம்பறாங்களாம்."



"ஓ, என்னை விட அவளுக்கு மும்பை பெருசா போயிருச்சா?" என்றவன் தனது காரை எடுத்துக் கொண்டு அவளைத் தேடி சென்றான்.



வெற்றி வேந்தன் பிரியதர்சினியை தேடி சென்ற போது அவள் மும்பை செல்ல வேண்டி காரில் ஏறுவதற்காக வீட்டின் வெளியில் வந்து நின்றாள். அவனும் சரியான நேரம் பார்த்து தான் அங்குச் சென்று இருக்கிறான் போலும்... அவன் கோபத்துடன் காரை விட்டு இறங்கி அவள் முன் வந்தவன்,



"என்னடி, ரொம்பத் தான் துள்ளுற? நான் யாரு என்கிறதை மறந்துட்டு பேசுறியா?" என்று ஆத்திரத்துடன் கேட்க...



அவனது கோபம் கண்டு லீலா பயந்து போனார். பிரியதர்சினியோ அமைதியாக அவனைப் பார்த்திருந்தாள்.



"சார், அப்படி எல்லாம் இல்லைங்க... நிஜமா பேபிம்மாவுக்கு நாளைக்கு மும்பையில் ஷூட்டிங் இருக்கு." லீலா தன்மையுடன் மகளின் நிலையை அவனிடம் எடுத்து சொல்ல...



"அது நாளைக்குத் தானே... இன்னைக்கு நைட் என்னோட தங்கிட்டுப் போறதில் உங்க மகளுக்கு என்ன பிரச்சினை?"



"ஹலோ மிஸ்டர், என்னை அதிகாரம் பண்ணும் வேலை எல்லாம் வச்சுக்காதீங்க... கெட் அவுட்..." என்று அவள் வாயிலை நோக்கி கையைக் காண்பிக்க...



"யாரை பார்த்து வெளியில் போன்னு சொல்ற...? நான் நினைச்சா உன்னை உயிரோடு புதைச்சிருவேன்." அவன் ஆத்திரத்துடன் எகிற...



"பேபிம்மா, கோபத்தைக் குறை... தன்மையைப் பேசிட்டு எஸ்கேப் ஆகும் வழியைப் பார்..." லீலா மகளுக்குத் தணிந்த குரலில் அறிவுரை கூறினார்.



"இவன் என்னை என்ன பண்ண முடியும்?" அவள் அலட்சியமாகச் சொல்ல...



"என்ன பண்ண முடியுமா? என்ன பண்ண முடியும்ன்னு காட்டுறேன்டி..." என்று கோபத்துடன் சொன்ன வெற்றி வேந்தன் அவளது தலைமுடியை பிடிக்க வர...



அப்போது மாமிச மலை போன்றிருந்த இரண்டு தனியார் காவலர்கள் வந்து அவனை இரு புறமும் பிடித்துக் கொண்டனர்.



"டேய் விடுங்கடா... நான் யாருன்னு தெரியாம என் கிட்ட மோதுறீங்க." வெற்றி வேந்தன் அவர்களிடம் இருந்து திமிறினான்.



"நீ யாருடா?" அவர்கள் இருவரும் அவனைக் கண்டு கேலியாய் கேட்க...



"நான் சீஃப் மினிஸ்டர் மகன் டா..." அவன் தெனாவெட்டாய் கூற...



"நீ ஸ்டேட் கவர்ன்மென்ட்... நாங்க சென்ட்ரல் கவர்ன்மெண்ட்... உன்னோடது எதுவும் எங்களைப் பாதிக்காது." என்று அவனிடம் சொன்னவர்கள் அவளிடம் திரும்பி,



"நீங்க போங்க மேடம்..." என்று மரியாதையாகச் சொல்ல...



பிரியதர்சினி வெற்றி வேந்தனை அற்பமாய்ப் பார்த்தபடி காரிலேறி அமர்ந்தாள். உடன் லீலாவும் ஏறிக் கொள்ள... கார் விமான நிலையத்தை நோக்கி பறந்தது.



கார் கண்ணை விட்டு மறைந்ததும் இரு காவலர்களும் வெற்றி வேந்தனை அம்போவென விட்டு விட்டு செல்ல... அவனோ பித்துப் பிடித்தது போல் நின்றிருந்தான். ஆம், பெண்ணவள் அளித்த போதை அவனைப் பித்துக் கொள்ளச் செய்திருந்தது.



*************************



மறுநாள் பத்மவிலாசினி வெளியில் செல்வதற்காகக் கிளம்பி தயாராக... அதைக் கண்ட வேங்கடநாதன் அவளிடம், "எங்கே போகிறம்மா?" என்று கேட்க...



"அவங்களைப் பத்தி கம்ப்ளையிண்ட் கொடுக்கப் போறேன்ப்பா..." இல்லத்தில் அனைவரும் அவரை 'அப்பா' என்றே அழைத்தனர். அதனால் அவளும் அவரை அப்பா என்று அழைத்தாள்.



"நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்காம்மா? இது உனக்கே ஆபத்தா முடிஞ்சிர கூடாது." அவர் கவலையுடன் சொல்ல...



"அதனால் தான் போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளையிண்ட் கொடுக்காம கமிஷனரை நேரில் சந்தித்துக் கம்ப்ளையிண்ட் கொடுக்கப் போறேன்." அவள் சொன்னதும் அவருக்கும் சிறிது நம்பிக்கை வந்தது.



"சரிம்மா, நல்லபடியா போயிட்டு வா..." அவர் அவளை வழியனுப்பி வைத்தார்.



பத்மவிலாசினி நேரே காவல்துறை ஆணையரை சந்தித்துத் தனது வீட்டினருக்கு நடந்த கொடுமையைப் பற்றி விலாவாரியாக எடுத்து சொல்ல... அந்த அதிகாரியும் அவள் சொன்னதைக் கவனமாகக் காது கொடுத்து கேட்டுக் கொண்டார். பின்பு அவளிடம்,



"நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன். நீங்க ஒரு புகார் எழுதி கொடுத்துட்டு போங்க." என்று சொல்ல...



பத்மவிலாசினி தனது கைப்படப் புகார் கடிதம் ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்தாள். அதை வாசித்துப் பார்த்தவர்,



"எல்லாம் ஓகேம்மா... நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன். நீங்க எங்கே தங்கி இருக்கீங்க? உங்க வீட்டிலா? உங்களைக் கான்டாக்ட் பண்ணணும்ன்னா எப்படிக் கான்டாக்ட் பண்றது?" என்று கேட்டார். ஏனெனில் அவள் புகார் கடிதத்தில் அவளது வீட்டு முகவரியை தான் கொடுத்து இருந்தாள்.



"இதோ சார்..." என்றவள் இல்லத்தின் முகவரி மற்றும் அவளது அலைப்பேசி எண்ணை எழுதி அவரிடம் கொடுத்தாள்.



"ஓகேம்மா... நான் பார்த்துக்கிறேன்." என்று அவர் சொல்ல...



"ரொம்ப நன்றி சார்..." அவள் நிம்மதியுடன் நன்றியுரைத்து விட்டு வெளியில் வந்தாள்.



பத்மவிலாசினி இல்லத்திற்கு வந்த அரை மணி நேரத்தில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வந்து அங்கு இருந்தவர்களிடம் பத்மவிலாசினியை கேட்டு மிரட்டியது. காவல்துறையின் பெரிய அதிகாரியும் பதவி அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகத் தான் இருந்தார். அந்த அதிகாரி பத்மவிலாசினி அங்கிருந்து சென்றதும் நேரே மேலிடத்திற்கு அழைத்துச் சொல்லி விட்டார். இதோ அவர்களது அடியாட்கள் அவளைக் கொலைவெறியுடன் தேடி இங்கு வந்து விட்டனர்.



இல்லத்தில் வேலை பார்க்கும் ஒருவர் வந்து தோட்டத்தில் இருந்த வேங்கடநாதனிடம் விசயத்தைச் சொல்ல... அவர் அங்குச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பத்மவிலாசினியை இழுத்துக் கொண்டு அங்கிருந்த சமையலறையை நோக்கி சென்றார். அங்குப் பலசரக்கு குவித்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றவர் அங்கிருந்த அரிசி மூட்டைகளை அகற்றினார்.



"ப்பா, என்ன பண்றீங்க?" பத்மவிலாசினி புரியாது கேட்டாள்.



"ஷ், சத்தம் போடாதே... நான் சொல்லும் வரை நீ இந்த இடத்தை விட்டு அகல கூடாது." என்றவர் அங்கு மறைந்திருந்த நிலவறையைத் திறந்து அவளை உள்ளே போகச் சொல்லியவர் பின்பு அதை மூடிவிட்டு அதன் மீது அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்தார்.



பத்மவிலாசினி ஒன்றும் புரியாது மூச்சை அடக்கி கொண்டு உள்ளே இருந்தாள்.



வேங்கடநாதன் சமையலறையில் சமையல் செய்வது போல் அங்கேயே நின்றிருந்தார். அப்போது அடியாட்கள் அங்கு வந்தனர். ஒருவன் நேரே அவரை நோக்கி வந்து அவரது சட்டையைப் பிடித்து,



"எங்கேய்யா அந்தப் பொண்ணு?" என்று மிரட்டலாய் கேட்க...



"எந்தப் பொண்ணு?" அவர் தெரியாதது போல் கேட்க...



"அதான் அந்தப் பத்மா பொண்ணு... இங்கே தான் இருக்கிறதா எழுதி கொடுத்து இருக்கு."



"இங்கே ஆயிரம் பத்மா வர்றாங்க... யாருன்னு சொன்னால் தானே எனக்குப் புரியும்." அப்போதும் அவர் புரியாதது போல் சொல்ல...



"டேய், இந்தாளு கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை. நல்லா தேடுங்கடா..." இன்னொருவன் சொல்ல...



எல்லோரும் சமையலறையைப் புரட்டி போட்டு தேடினர். எல்லாவற்றையும் இழுத்து போட்டு, வாரியிறைத்து பத்மவிலாசினியை தேடினர். அரிசி மூட்டைகளை இழுத்து போட்டு கீழே தள்ளி தேடியதில் அரிசி எல்லா இடமும் இறைக்கப்பட்டு நிலவறை கதவு அரிசியால் மூடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் கண்களுக்கு நிலவறை தெரியவில்லை. அடியாட்கள் இல்லத்தை ஒருவழியாக்கி விட்டு பத்மவிலாசினி கிடைக்காத ஏமாற்றத்தில் சென்று விட்டனர்.



அவர்கள் சென்ற பிறகே வேங்கடநாதன் நிலவறையைத் திறந்து பத்மவிலாசினியை வெளியில் வர சொன்னார். மயக்கம் வருவது போல் களைத்திருந்த அவளுக்குப் பழச்சாறு அளித்து அவளைத் தெளிய வைத்தவர்,



"கமிசனர் கிட்ட கொடுத்த புகார் தான் இதுக்குக் காரணம் பத்மா..." என்று வருத்தத்துடன் சொல்ல...



"என்ன சொல்றீங்கப்பா?" அவள் அதிர்வுடன் கேட்க...



அவர் நடந்ததை அவளிடம் சொல்லலானார். அவள் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்து இருந்தாள். மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையே இப்படி இருந்தால்... மக்கள் எப்படிப் பாதுகாப்பாக வாழ்வது? அவளுக்குத் தனது நிலையைக் குறித்துச் சற்றுப் பயமாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.



"முதல்ல உன் சிம் கார்டை உடைச்சு போடு பத்மா..." வேங்கடநாதன் அவளை அவசரப்படுத்தினார்.



அவள் உடனே அவர் சொன்னதைச் செய்தாள். அதன் பிறகே வேங்கடநாதனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.



"இனியும் நீ இங்கே இருப்பது நல்லது இல்லை பத்மா..." என்றவரை கண்ணீருடன் பார்த்தவள்,



"அநியாயம் பண்ணியவங்களை அப்படியே விட்டுட்டுப் போகச் சொல்றீங்களா? அவங்க செஞ்ச தப்புக்குத் தண்டனை வேண்டாமா?" என்று வேதனையுடன் கேட்க...



"கடவுள்ன்னு ஒருத்தன் இருப்பது உண்மை என்றால்... நிச்சயம் அவங்க தப்புக்குத் தண்டனை கிடைக்கும் பத்மா... அதைப் பார்ப்பதற்கு உனக்கு உயிர் இருக்க வேண்டுமே. முதலில் நீ தெலுங்கானாவை விட்டு வெளியேறு... இங்கிருந்து போய்விட்டால் பயம் இல்லை." என்றவரை கண்டு அவள் குழப்பத்துடன் பார்த்தாள்.



"யாரிடம் போக?" அவளுக்கு யோசனையாக இருந்தது.



"யாராவது உன் பிரெண்ட் வீட்டுக்கு போ... அப்படியே வெளிநாடு போயிரு. இப்போதைக்கு நீ இங்கே வராமல் இருப்பதே நல்லது."



"சரிப்பா..." என்றவள் உண்மையைக் கசப்பாக விழுங்கி கொண்டாள்.



அப்போது தான் அவளுக்கு அவளது நண்பன் சக்திமாறனின் நினைவு வந்தது. படிக்கும் காலத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். அவனுக்கு அழைத்து விசயத்தைச் சொன்னால் நிச்சயம் அவன் அவளுக்குத் துணை இருப்பான். உடனே அவள் வேங்கடநாதன் அலைப்பேசியில் இருந்து அவனுக்கு அழைத்தாள். அவனும் உடனே அழைப்பை ஏற்றான்.



"மாறா, நான் பத்மா பேசறேன்."



"ஹேய் பத்து, புது நம்பரா இருக்கு? எங்க இருக்க?" மறுபுறம் சக்திமாறன் மகிழ்ச்சியோடு கேட்டான்.



"இந்தியா வந்திருக்கேன்."



"ரொம்பச் சந்தோசமான விசயம்." அவன் குதூகலத்துடன் சொன்னான். இன்னும் அவனுக்கு அவளது விசயம் தெரிந்திருக்கவில்லை போலும்.



"மாறா, எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?"



"ஹேய், இதென்ன உதவி பண்ணுன்னு கேட்டுட்டு... செய்ன்னு சொன்னா செஞ்சிட்டு போறேன். சொல்லு பத்து, என்ன செய்யணும்?"



"இப்போதைக்கு எனக்குத் தங்க பாதுகாப்பான இடம் வேணும் மாறா..."



"பத்து, என்னாச்சு? ஏதும் பிரச்சினையா?" அவன் பதற்றத்துடன் கேட்டான்.



"எதுவும் கேட்காதே மாறா... உன்னால் உதவி பண்ண முடியுமா? முடியாதா?" அவள் கேட்கவும் ஒரு நொடி யோசித்தவன் மறுநொடி,



"ஐஞ்சு நிமிசம் டைம் கொடு..." என்றுவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.



தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வேங்கடநாதனை கண்டு புன்னகைத்தவள், "சக்திமாறன் என்னோட சீனியர்... நிச்சயம் உதவி பண்ணுவான்." என்று சொல்ல...



"சந்தோசம் பத்மா... நீ பாதுகாப்பா இருந்தால் சரி தான்." வேங்கடநாதன் நிம்மதி அடைந்தார்.



சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து சக்திமாறன் அவளுக்கு அழைப்பு எடுத்தான். அவள் அழைப்பை உயிர்ப்பித்ததும்,



"நீ நேரே கிளம்பி டெல்லிக்கு போ... அங்கே ஏர்போர்ட்ல உன்னைப் பிக்கப் பண்ண கார் வரும். அவங்க கூட்டிட்டு போற இடத்துக்குப் போ... உலகத்திலேயே பாதுகாப்பான இடம் அது தான்." என்று அவன் சொல்ல...



"தேங்க்ஸ் மாறா..." அவள் நன்றி பெருக்கில் கண்ணீர் வடிக்க...



"எனக்கு நன்றி எல்லாம் சொல்வியா?" அவன் கண்டிப்புடன் கேட்க... அவளது இதழ்களில் புன்னகை மலர்ந்தது.



"உன்னை எப்போ பார்க்கலாம் மாறா?" அவள் கேட்க...



"எனக்கு ஒரு ப்ராஜெக்ட் இருக்கு... அந்த வொர்க் முடிஞ்சதும் நானே உன்னைப் பார்க்க வர்றேன்." அவன் சொன்னதும் அவள் சரியென்று விட்டு அழைப்பை துண்டித்தாள்.



அடுத்தச் சில நிமிடங்களில் பத்மவிலாசினி விமான நிலையத்தில் இருந்தாள். எப்படியோ அதிகப் பணம் கொடுத்து டெல்லி செல்லும் விமானத்தில் பயணச்சீட்டு வாங்கி விட்டாள். விமான நிலையத்தில் சம்பிரதாயங்கள் முடிந்து விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகே அவளுக்கு நிம்மதி பெருமூச்சு எழுந்தது.



இரண்டே கால் மணி நேர பயணத்தில் பத்மவிலாசினி டெல்லி வந்தடைந்தாள். சக்திமாறன் சொன்னது போல் அவளை அழைத்துச் செல்ல கார் வந்திருந்தது. அவள் அதில் ஏறி பயணமானாள்.



வேட்டையாடும் சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதற்கு மான் விரும்பியே சென்றது. தான் வேட்டையாட போகும் மான் அவள் தான் என்று சிங்கத்திற்குத் தெரியாது. தன் குடும்பத்தின் நிலைக்குக் காரணமான குற்றவாளி அவன் தான் என்று மானுக்கும் தெரியாது. இருவருமே ஒருவரை ஒருவர் அறியாது, தெரியாது சந்திக்க இருக்கின்றனர்.



இனி தான் ஆடு, புலி ஆட்டம் ஆரம்பம்! சிங்கம், மான் வேட்டை ஆரம்பம்! அரசியலாட்டம், காதலாட்டம் விளையாட்டை ஆரம்பிக்கலாம்ங்களா!!!



"சிங்கம் மானை வேட்டையாட நினைக்க,

மான் சிங்கத்தைத் தண்டிக்க நினைக்க,

சிங்கம், மானை குள்ளநரி கூட்டம் துரத்த,

அரங்கேறும் அரசியலாட்டத்தில்,

சிங்கம் அரியணையேற மான் துணை நிற்குமோ!

களம் காணும் காதலாட்டத்தில்

மான் உய்விக்கச் சிங்கம் உயிர் கொடுக்குமோ!!!"



உயிர் கொல்லும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
இந்தக் கதைக்கு டிஸ்க்ளைமர் போட்டுர்றேன் மக்களே! இந்தக் கதையில் வரும் கதைமாந்தர்கள் அனைவருமே சந்தர்ப்பவாதிகள். இப்படித்தான் நாயகன், நாயகி இருக்க வேண்டும் என்று ஒரு கோடு போட்டுக் கொண்டு இந்தக் கதையைப் படிக்காதீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வரையறைக்குள் இவங்க யாரும் வர மாட்டாங்க... விருப்பமுள்ளவங்க மட்டும் படிங்க...



உறவு : 6



அந்தப் பங்களாவின் முன்பு போய் நின்ற காரிலிருந்து பத்மவிலாசினி இறங்கினாள். பின்பு தனது உடமைகளை எடுத்து கொண்டவள் எங்கே செல்வது என்று தெரியாது விழித்தபடி ஓட்டுநரை பார்த்தாள். அவனோ வந்த வேலை முடிந்தது என்பது போல் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான். அவன் இதுவரை அவளைக் கண்டு பேசவில்லை, சிரிக்கவில்லை என்பது இப்போது தான் அவளது புத்தியில் உறைத்தது. இயந்திரம் போல் வந்தவள் சுற்றுப்புறத்தை உற்று கவனிக்கவில்லை.



மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்த பொழுது அது... பங்களா மின்விளக்கின் உபயத்தில் பகல் போல் ஜொலித்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் சிறிது பயம் எட்டிப்பார்க்க தான் செய்தது. அவள் சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.



"வாங்க, வாங்க..." என்று விரிந்த புன்னகையுடன் அவளை வரேவற்றபடி அங்கு வந்தான் ஜெகன்.



தன்னை வரவேற்றவனைக் கண்டு பத்மவிலாசினி நிம்மதி கொண்டவளாய் அவனைக் கண்டு புன்னகைத்தாள்.



"நீங்க...?" அவள் கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.



"நான் சக்தியோட பிரெண்ட்... நீங்க வர்றதா சக்தி சொன்னான். அதுக்கான ஏற்பாடு எல்லாம் நான் பண்ணிட்டேன்." என்றவனை அவள் நன்றியுடன் பார்த்தாள்.



"நீங்க வாங்க..." என்றவன் அவளிடம் இருந்து உடமைகளைக் கை நீட்டி வாங்க முயல...



"இருக்கட்டும்..." அவள் கொடுக்காது மறுத்தாள்.



"அட பரவாயில்லை கொடுங்க..." என்ற ஜெகன் அவளது உடமைகளைப் பறித்துக் கொண்டு தனது கரங்களில் தூக்கி கொண்டவன் அவளைப் பங்களாவின் பக்கவாட்டிற்கு அழைத்துச் சென்றான்.



"இது உங்க வீடு இல்லையா?" அவள் அவனைக் கண்டு கேட்க...



"எனக்கும், சக்திக்கும் வீடு எல்லாம் கிடையாது. நாங்க எங்க சீஃப் கூடத்தான் இருக்கோம்." என்றவன் பக்கவாட்டில் மாடிப்படி அருகே இருந்த மின்தூக்கி பொத்தானை அழுத்தினான். அது திறந்ததும் உள்ளே சென்றவன்,



"வாங்க..." என்று அவளை அழைக்க...



சிறிது யோசித்தாலும் பத்மவிலாசினி அவன் சொன்னதைச் செய்தாள். அவள் ஏறியதும் ஜெகன் மூன்றாவது இலக்கத்தினை அழுத்தினான்.



"கீழே, ஃபர்ஸ்ட் ஃப்ளோர் எல்லாம் சீஃப்போடது... அதுக்கு மேலே இருக்கிறது தான் எங்களுக்கானது... எனக்கு ஒரு ஃப்ளோர், சக்திக்கு ஒரு ஃப்ளோர்... ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் தங்குவோம்..." என்று பேசியபடி வந்தான் ஜெகன்.



அவளுக்கு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எதிர்காலம் என்ன? என்று அவள் தனக்குள் யோசித்தபடி வந்தாள்.



"ஃப்ளோர் வந்திருச்சு... வாங்க..." ஜெகனின் அழைப்பில் தன்னுணர்வு பெற்றவள் அவனுடன் மின்தூக்கி விட்டு வெளியில் வந்தாள்.



"இது தான் தேர்ட் ஃப்ளோர். சக்தியோடது தான். நீங்க இங்கே இருந்துக்கோங்க. யாரும் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டாங்க. வேளா வேளைக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பாங்க. வேற எதுவும் வேணும்ன்னா என் கிட்ட சொல்லுங்க. நான் செகண்ட் ஃப்ளோர்ல தான் இருப்பேன்."



"ரொம்பத் தேங்க்ஸ்..." அவள் மனமார நன்றி சொல்ல...



"எங்க சீஃப்க்கு தான் நீங்க நன்றி சொல்லணும். இதுவரை எந்தப் பெண்ணும் இந்த வீட்டுக்கு வந்து நான் பார்த்தது இல்லை. நீங்க தான் முதல் முறை... அதுவும் சக்திக்காக அவர் ஓகே சொல்லி இருக்கிறார்." அவன் தனது முதலாளியை பாராட்டினான்.



"அவர் கிட்டேயும் என் நன்றியை சொல்லிருங்க."



"நிச்சயமாய்..." என்று அவன் சொல்லும் போதே இரவு உணவை கொண்டு வந்து வைத்து விட்டுப் போனார்கள்.



"நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க... காலையில் சீஃபை போய்ப் பார்க்கலாம்." என்றவன் விடைபெற்று சென்று விட்டான்.



ஜெகன் சென்றதும் பத்மவிலாசினி தனது அலைப்பேசியில் இருந்து வேங்கடநாதனுக்கு அழைத்துப் பேசி தான் பத்திரமாக இருப்பதாகச் சொன்னாள். பிறகு சக்திமாறனுக்கு அழைத்தாள். அவள் அழைத்ததும் அவன் உடனே அழைப்பை எடுத்தான்.



"மாறா, நான் பத்மா பேசறேன்..."



"டெல்லி வந்துட்டியா பத்து... ஜெகன் ஹெல்ப் பண்ணினானா?" சக்திமாறன் படபடவெனக் கேட்டான்.



"ஆமா மாறா... இப்போ தான் என்னை உன்னோட வீட்டில் கொண்டு வந்து விட்டுட்டு போனார்."



"இனி பயம் இல்லை... நீ நிம்மதியா இரு..." என்றவன் அவளது பிரச்சினையைப் பற்றிக் கேட்கவில்லை. அவளாகச் சொல்லட்டும் என்று அவன் அமைதி காத்தான்.



"இங்கேயே ஒரு வேலையைத் தேடிக்கலாம்ன்னு இருக்கேன் மாறா..."



"நீ தேடி கஷ்டப்பட வேண்டாம். நான் சீஃப் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ண சொல்றேன். டோன்ட் வொர்ரி." என்று அவன் சொல்ல...



"தேங்க்ஸ் மாறா..." என்று நன்றி சொன்னவளை கண்டு,



"நன்றி சொன்ன உதை வாங்குவ... சரி, நீ ரெஸ்ட் எடு... நாளைக்குப் பேசலாம்." என்க...



"ஓகே மாறா... இது தான் என்னோட புது நம்பர்... சேவ் பண்ணிக்கோ..."



"ஓகே பத்து... குட்நைட்..." என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.



பத்மவிலாசினிக்கு அடுத்து என்ன செய்வது? என்று தெரியவில்லை. உயிர் பயத்தில் அச்சமுற்று தலைமறைவாக ஓடி வந்திருக்கும் தனது நிலையை எண்ணி அவள் விரக்தி அடைந்தாள். தன்னால் கொலைகாரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கம் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. அதேசமயம் ஏதாவது செய்து அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் அவளுள் கொழுந்து விட்டு எரிந்தது.



பிறகு நிகழ்காலத்திற்கு வந்தவள் தனது யோசனையைத் தள்ளி வைத்து விட்டுக் குளிக்கச் சென்றாள். குளித்து விட்டு வேறு உடை மாற்றிக் கொண்டு வந்தவள் இரவு உணவினை உண்டு விட்டுக் கை கழுவி கொண்டு வந்தாள். அதன் பிறகே அவளுக்குச் சுற்றுப்புற அழகு கண்ணில் பட்டது.



அந்த ஒரு தளம் முழுவதும் 'பென்ட் ஹவுஸ்'ஆக மாற்றப்பட்டு இருந்தது. அதாவது ஒரே தளத்திலேயே மாடி வைத்து கட்டப்பட்டு இருக்கும். அங்கிருந்த ஒவ்வொரு பொருளிலும் பணத்தின் செழுமை தெரிந்தது. அவள் பணக்காரி என்பதால் அவளுக்கு அங்கிருந்த பொருட்களின் மதிப்பு நன்கு தெரிந்தது. பணத்தை வாரியிறைத்து அலங்கரித்து இருந்தனர். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தவள் அங்கிருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அழகிய தோட்டம் கண்ணில் தென்பட்டது. மின்விளக்கின் ஒளியில் தோட்டம் இந்திரலோகம் போல் ஜொலித்தது. முன்பு போல் அவள் இருந்திருந்தால் இதை எல்லாம் ரசித்து இருப்பாள். இப்போது இருக்கும் மனநிலையில் அதை ரசிக்க அவளுக்குத் தோன்றவில்லை.



அங்கிருந்த படுக்கையறையில் சென்று படுத்தவளுக்கு விழிகளைச் சுழற்றிக் கொண்டு உறக்கம் வந்தது. அவள் அசதியில் அப்படியே உறங்கி போனாள்.



மறுநாள் காலையில் எழுந்த பத்மவிலாசினி குளித்து முடித்துப் புத்துணர்வோடு கிளம்பி தயாராகினாள். அதற்குள் காலை உணவு வந்துவிட... அவள் உணவு உண்டு முடித்துவிட்டு ஜெகனின் அழைப்பிற்காகக் காத்திருந்தாள். ஜெகன் சொன்னது போல் அங்கிருந்த இன்டர்காம் மூலம் அவளைத் தொடர்பு கொண்டு கீழே வர சொன்னான். அவள் கீழே சென்ற போது ஜெகன் மின்தூக்கி அருகிலேயே நின்றிருந்தான்.



"குட்மார்னிங்..." என்று அவன் முறுவலிக்க...



"குட்மார்னிங்... என்னோட பெயர் பத்மவிலாசினி... பத்மான்னே கூப்பிடுங்க..." அவள் புன்னகையுடன் சொன்னாள்.



"ஓகே பத்மா..." என்றவன் முன்புறம் அவளை அழைத்துச் சென்றான்.



நேற்றிரவு பார்த்ததை விட இப்போது அந்தப் பங்களா பிரம்மாண்டமாய்த் தெரிந்தது. பத்மவிலாசினி ஒவ்வொன்றையும் பார்த்தபடி உள்ளே சென்றாள். உள்ளே சென்றவள் அங்கிருந்த உள் அலங்காரங்களைக் கண்டு அப்படியே திகைத்து நின்றாள். அங்கிருந்த பொருட்கள் எல்லாமே வெள்ளை, கருப்புக் கொண்டே உருவாக்கப்பட்டு இருந்தது. வெள்ளை நிற மாளிகையில் கருப்பு நிற அலங்கார பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு மீன் தொட்டியில் இருந்த மீன்கள் கூடக் கருப்பு நிறத்தில் இருந்தது. கூண்டில் இருந்த பறவைகளும் கூடக் கருப்பு நிறமே... எங்குமே வண்ணங்களைக் காண முடியவில்லை. பூச்சாடிகள் எதுவும் இல்லை. இருந்தாலாவது வண்ண வண்ண மலர்கள் இருந்திருக்கக் கூடும். அவளுக்கு மிகுந்த ஆச்சிரியமாக இருந்தது.



"உங்க சீஃப் ஒரு புரியாத புதிர் தான் இல்லையா?" அவள் கேட்டதும் ஜெகன் வியப்பாய் அவளைப் பார்த்தான்.



"அட ஆமாங்க... இத்தனை வருசமா பழகுற எங்களுக்கே அவர் ஒரு புரியாத புதிர் தான். வந்த உடனே அவரைப் பத்தி நீங்க புட்டு புட்டு வைக்கிறீங்களே..." அவன் ஆச்சிரியமாய் அவளைப் பார்த்தான்.



அவள் பதில் சொல்லாது அவனைக் கண்டு புன்னகைத்தாள்.



அப்போது ஜெகனின் அலைப்பேசிக்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசியவன் சரி, சரியென்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.



"சீஃப்க்குப் பிரைம் மினிஸ்டரை சந்திக்கிற அப்பாயிண்ட்மென்ட் இருக்காம். திடீர் ஏற்பாடு போல... நாளைக்கு நாம சீஃப்பை சந்திக்கலாம்."



"ஓ, ஷ்யூர்..."



இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்தனர்.



"சக்தி சொன்னான், உங்களுக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணி கொடுக்கச் சொல்லி... நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" ஜெகன் கேட்க...



அவள் பதில் சொல்லும் முன், "ஜெகன்..." என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது.



"எஸ் சீஃப்..." ஜெகன் விறைப்பாய் நின்றான்.



பத்மவிலானிசி திரும்பி பார்த்தாள். அங்கு விறுவிறுவென வேக நடையில் வந்த சிபி சக்ரவர்த்தியை கண்டு ஒரு நொடி விழிகளைச் சுருக்கியவள் மறுநொடி சாதாரணமாக முகத்தை வைத்து கொண்டாள்.



அவள் முதலில் கவனித்தது சிபி சக்ரவர்த்தியின் கரடுமுரடான தோற்றத்தை தான்... பின்பு அவள் அவனை உற்று நோக்கினாள். அவனது விழிகளில் தெரிந்த உறக்கமின்மை, அதனால் வந்த சிவப்பு, அந்தச் சிவப்பினை மேலும் அதிகரிப்பது போல் அவனது பார்வையில் தெரிந்த வெறி, அவனது உணர்வுகளைக் காட்டாத முகம் என்று எல்லாமே அவளது விழிகளில் இருந்து தப்பவில்லை. அவள் அவனை அளவிடுவது போல் பார்த்தாள்.



ஆனால் அவனோ அவளைக் கண்டு கொள்ளவில்லை... மாறாக வேக நடையுடன் காரை நோக்கி வந்தவன் காரிலேற... முன்னால் ஜெகன் ஏறிக் கொள்ள... கார் விருட்டென்று கிளம்பி சென்றது.



பத்மவிலாசினி கார் சென்ற திசையைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அப்போது அவளது அலைப்பேசியில் அழைப்பு வந்தது. அவளது குரு தயாளன் அழைத்திருந்தார்.



"குட்மார்னிங் சார்..." அவள் மரியாதையோடு அவருக்குக் காலை வணக்கம் சொன்னாள்.



"குட்மார்னிங் பத்மா... உனது இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்..." அவரது வார்த்தைகள் அவளது துக்கத்தினைக் கிளறிவிட... அவளது விழிகளில் விழிநீர் அரும்பியது. அவள் தனது துக்கத்தினை விழுங்கி கொண்டு சாதாரணமாகப் பேச துவங்கினாள். அவரும் அவளது மனநிலையை உணர்ந்தார் போன்று பேசலானார்.



"நீ எப்போ இங்கே வர போற பத்மா?"



"நான் அங்கே வரலை சார்... இங்கேயே வேலை தேடிக்கப் போறேன்."



"ஓ... உன்னுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது பத்மா... இருந்தாலும் வாழ்த்துகள்... உன்னுடைய கேரியரில் நீ மேலும் மேலும் வளர வேண்டும்."



"தேங்க்ஸ் சார்..."



"உன்னோட ரிசர்ச் புக்குக்காகச் சில விபரங்களை மெயில் பண்ணியிருக்கேன். செக் பண்ணிக்கோ..." என்றவர் அழைப்பை துண்டித்து விட்டார்.



பத்மவிலாசினி தனது இருப்பிடத்திற்கு வந்தவள் தயாளன் அனுப்பிய கோப்புகளைத் தரவிறக்கம் செய்து ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தாள். வாசிக்க, வாசிக்க அவளது விழிகள் வியப்பில் விரிந்தது. எதிர்பாராது கிடைத்த புதையல் அது... அடுத்தச் சில நொடிகளில் அவள் அதோடு ஒன்றி போய்விட்டாள்.



****************************
 

ஶ்ரீகலா

Administrator


காலையில் கல்லூரி வந்த வசுந்தரா தேவி சற்று எரிச்சலுடன் வந்தாள். நேற்று சாம் நடந்து கொண்ட விதம் அவளை அலைக்கழித்தது. எப்போதும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கும் தந்தை ரத யாத்திரை சென்று விட்டதால் அவளுக்குத் தனிமை மிகவும் கொடுமையாக இருந்தது. அந்தத் தனிமை அவளுக்குச் சாமின் நினைவுகளை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. அது அவளுக்குப் பெருத்த எரிச்சலை உண்டு பண்ணியது.



"குட்மார்னிங் மேம்..." அப்போது சாமின் குரல் கேட்டதும் அவளுக்குக் கோபம் அதிகரித்தது.



"ஏன் இவ்வளவு லேட்?" அவள் கோபத்துடன் குரலை உயர்த்திக் கேட்க...



"நான் லேட் இல்லை மேம்... நீங்க தான் சீக்கிரம் வந்திருக்கீங்க. இன்னைக்கு எதுவும் விசேசமா மேம்?" அவன் நமட்டு சிரிப்புடன் கேட்டான்.



"போய் வேலையைப் பார்..." அவள் கோபத்துடன் சொல்லிவிட்டு சென்று விட்டாள்.



அவன் புன்னகையுடன் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தவன் பின்பு தலையை இடம் வலமாய் அசைத்து தனக்குள் சிரித்தபடி சென்று விட்டான்.



சாம் வகுப்பில் பாடம் எடுக்கும் சமயம் வசுந்தரா தேவி வகுப்பினுள் நுழைந்தாள். சாம் மரியாதை நிமித்தம் பாடம் எடுப்பதை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான்.



"என்னைய எதுக்குப் பார்க்கிற? நீ பாடத்தை நடத்து..." என்றவள் அங்கிருந்த அவனது நாற்காலியில் சட்டமாய் அமர்ந்து கொண்டாள்.



வகுப்பு நேரம் முடியும் வரை அவனை நிற்க வைத்துத் தண்டனை கொடுத்தாள். அவனும் அவளது மனம் புரிந்தார் போன்று அவளது விருப்பம் போல் நடந்து கொண்டான். அப்படி இருந்தும் அவளது மனதின் வெம்மை குறையவில்லை. எப்படி அவனை அலற விடுவது என்று அவள் தனக்குள் யோசித்துக் கொண்டு இருந்தாள்.



சாம் வகுப்பு முடிந்து வெளியில் செல்ல... அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள். அவன் அவளைக் கவனித்தாலும் கவனிக்காது போல் சென்றான்.



"சாம்..." என்று அவள் அழைக்க... அவன் நின்று திரும்பி பார்த்தான்.



"என்ன சொன்ன? உன்னைத் தொட்டா அடிப்பியா?" என்று அவள் கேட்க...



"என்னைக் கிஸ் பண்ணினா தான் அடிப்பேன்னு சொன்னேன்." அவன் சிரிப்பை அடக்கி கொண்டு பதில் சொன்னான்.



அவள் திடுமென அவன் அருகில் வந்து அவனை அணைத்து கொண்டவள் பின்பு அவனை விடுவித்து விட்டு சற்று தள்ளி ஜாக்கிரதையாக நின்று கொண்டு, "எங்கே, இப்போ அடி பார்க்கலாம்?" என்று சொல்லிவிட்டு நாக்கை துருத்தி காட்டியபடி ஓடி விட்டாள்.



'அட கிறுக்கே...' என்று நினைத்தபடி அவன் சிரிப்புடன் அவளைப் பார்த்திருந்தான்.



'இந்தக் கிறுக்கு கிட்ட மாட்டிக்கிட்டு நீ கிறுக்காகப் போற...' அவனது மனசாட்சி எப்போதும் போல் அவனைக் கிண்டலடித்தது. அவன் அதைப் புறம் தள்ளிவிட்டு தன் மீது ஒட்டியிருந்த பெண்ணவளின் வாசத்தை விரும்பியே சுவாசித்தான்.



**********************



"எங்கேடி உன் புள்ள? காலையில் இருந்து ஆளை காணோம்?" மதியழகன் மனைவியிடம் கேட்டபடி உணவு உண்ண அமர்ந்தார்.



"அண்ணா ரூமை விட்டு வெளியில் வரலைப்பா..." மகள் ஐஸ்வர்யா பதில் சொல்ல...



"ஏன்டி, சும்மா எதுக்கு அவனைப் போட்டு கொடுக்கிற? சாப்பிட்டுட்டு ஒழுங்கா ஸ்கூலுக்குக் கிளம்பி போகும் வழியைப் பார்..." இளமதி மகளைச் சத்தம் போட்டார்.



"வெவ்வவ்வே... என்னையவே குறை சொல்லுங்க..." ஐஸ்வர்யா பழிப்பு காட்டிவிட்டு எழுந்து சென்று விட்டாள்.



"எதுக்கு ஐசை திட்டுற? பெண் பிள்ளை வளர்ப்பில் நான் தலையிட கூடாதுன்னு தான் அமைதியா இருக்கேன். உனக்குத் திட்டணும்ன்னா உன் மகனை போய்த் திட்டு... என்னவாம் துரைக்கு? காலையில் இருந்து ரூமில் அடைஞ்சு கிடக்கிறான்."



"யாருக்கு தெரியும்? ஒருவேளை தூங்கிட்டு இருப்பானா இருக்கும். நீங்க சாப்பிடுங்க..." இளமதி கணவனுக்குப் பரிமாற ஆரம்பித்தார்.



உணவு உண்டு விட்டு எழுந்த மதியழகன் மனது கேட்காது மகனின் அறைக்குச் சென்றார். அங்கு மகன் மது கோப்பையுடன் அமர்ந்து இருப்பதைக் கண்டு திகைத்துப் போனார்.



"என்னடா இது? அதுவும் காலங்கார்த்தால..." அவர் மது கோப்பையைப் பிடுங்கி வைக்க முயல...



"எனக்கு அது வேணும்..." வெற்றி வேந்தன் மது கோப்பையைத் தனக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டான்.



"என்னடா இதெல்லாம்...?"



"ஒருத்தி என்னைய கேவலப்படுத்திட்டு மும்பை கிளம்பி போயிட்டாள்... நீங்க உங்க இன்ஃப்ளூயன்சை பயன்படுத்தி அவளை இங்கே வரவழைங்க..." அவன் மது போதையில் உளறினான்.



"கருமம் ஒரு பொண்ணுக்காகவா? எது எதுக்கு இன்ஃப்ளூயன்சை உபயோகிக்கணும்ன்னு ஒரு விவஸ்தை இல்லையா? பொண்ணுக்காடா பஞ்சம்?" மதியழகன் தலையில் அடித்துக் கொண்டார்.



"நோ, எனக்கு அவள் தான் வேணும்... அவள் மட்டும் தான் வேணும்..." என்றவன் மது போதையில் தன்னையும் மறந்து படுக்கையில் விழுந்தான்.



மதியழகன் மகனை பார்த்தபடி கவலையுடன் நின்றிருந்தார். அவனுக்கு என்னவானது? என்று அவருக்குத் தெரியவில்லை.



***************************



மாலை பொழுது மயங்கி இருள் கவிழும் பொழுதினை பத்மவிலாசினி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருந்தாள். பக்கவாட்டில் தெரிந்த தோட்டத்தினை அப்போது தான் அவள் கூர்ந்து பார்த்தாள். வீட்டினை போலவே தோட்டத்திலும் வண்ண வண்ண பூக்கள் இல்லாது குரோட்டன்ஸ் வகைச் செடிகளே அதிகம் இருந்தது. செடி கருப்பு வண்ணத்தில் இருந்திருந்தால் அதை வைத்து இருப்பார்கள் போலும். அவளது இதழ்கள் லேசாக வளைந்தது.



அப்போது இன்டர்காம் அழைத்தது. அவள் அதை எடுக்க... மறுபுறம் ஜெகன் தான் பேசினான்.



"பத்மா உடனே கிளம்பி கீழே வாங்க..." என்றவன் உடனே அழைப்பை துண்டித்து விட்டான்.



அவனது குரல் பதட்டத்துடன் ஒலித்ததோ! அவள் யோசனையுடன் கீழே சென்றாள். அங்கிருந்த வரவேற்பு அறையில் சிபி சக்ரவர்த்தி நடுநாயகமாக அமர்ந்திருக்க... சுற்றிலும் நிறையப் பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களைப் பார்த்தால் ஊடகவியலாளர்கள் போல் தெரிந்தது. அவள் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தபடி வந்தாள்.



"இதோ நீங்க கேட்ட பெண் பத்மவிலாசினி... த கிரேட் டைமண்ட் பிசினஸ்மேன் நாராயணனோட ஒரே டாட்டர்..." சிபி சக்ரவர்த்தி அவளை ஊடகவியலாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.



அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள். அவனோ அவளைப் புன்னகையுடன் பார்த்திருந்தான்.



"நீங்க என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்தையும் அவள் கிட்ட கேட்டு உண்மையைத் தெரிஞ்சுக்கலாம்." அவன் அமர்த்தலான குரலில் சொல்ல...



'என்ன உண்மை?' அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அப்போதும் அவனது புன்னகை மாறவில்லை.



"சார் சொல்றது எல்லாம் உண்மையா?" ஊடகவியலாளர் ஒருவர் அவளிடம் கேட்க...



"என்ன உண்மை?" அவள் குழம்பி போய் நின்றாள்.



"நீங்க தெலுங்கானாவில் உங்க குடும்பம் தற்கொலை செஞ்சதுக்குக் காரணம் அங்கு ஆளும் ஆளுங்கட்சி தான் காரணம்ன்னு கம்ப்ளையிண்ட் கொடுத்து இருக்கீங்க. இந்த விசயத்தை ஆளுங்கட்சி மூடி மறைக்கப் பார்த்தாங்க... எப்படியோ விசயம் வெளியில் கசிஞ்சிருச்சு... அங்கே தெலுங்கானாவில் எதிர்கட்சி இந்த விசயத்தைப் பெரிசாக்கி போராட்டம் பண்றது உங்களுக்குத் தெரியுமா?"



ஒரே நாளில் என்னவெல்லாம் நடந்து விட்டது!



"தெரியாது..." அவள் மறுப்பாய் தலையசைத்தாள்.



"ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்ததுக்குக் காரணம் சிபி சக்ரவர்த்தி சார் தான்னு அவருக்கு எதிராவும் எல்லோரும் பேசுறாங்க... இது எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?"



அவள் அதற்கும் மறுப்பாய் தலையசைத்தாள். அப்போது சிபி சக்ரவர்த்தி எழுந்து அவள் புறம் வந்தான்.



"நீ பண்ணி வச்ச வேலையால் எல்லாவனும் என்னைக் கிழிகிழின்னு கிழிக்கிறான்... அதை எல்லாம் நான் மாத்தணும்... மாத்தி அமைக்கணும். உன்னால் சரிந்த என்னோட இமேஜை இப்போ உன்னை வச்சு தான் நான் தூக்கி நிறுத்த போறேன்." என்று அடிக்குரலில் உறுமியவனை அவள் பயத்தில் தேகம் அதிர ஏறிட்டு பார்த்தாள்.



சிபி சக்ரவர்த்தி அவள் தன்னைப் பார்ப்பதை கண்டு கொள்ளாது அவளது தோள் மீது கை போட்டு அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டவன்,



"எஸ், என்னால் தான்... சாரி எங்களால் தான் சினியோட, நான் பத்மவிலாசினியை சினி என்று தான் கூப்பிடுவேன். எங்களோட ரிலேசன்ஷிப் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு அவங்க எல்லோரும் அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. இது முழுக்க முழுக்கத் தற்கொலை தான்... அரசியல் கொலை எல்லாம் இல்லை. ஆனால் எங்க மனசாட்சி உறுத்துது... இதுக்குக் காரணம் நாங்க தான்னு..." என்றவனை அவள் அதிர்ச்சியுடன் ஏறிட்டு பார்த்தாள்.



"ரிலேசன்ஷிப் என்றால்? எப்போது திருமணம்?" அங்கிருந்த ஒருவர் கேட்க...



"திருமணமா?" ஏதோ ஹாஸ்யம் கேட்டது போல் வாய்விட்டு சிரித்தவன், "ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் லிவ்விங் டுகெதர்... தமிழில் சொல்வதாக இருந்தால் வை..." என்று சொல்ல வந்தவன் பின்பு அவளைக் கண்டு கோணல் சிரிப்பு சிரித்தபடி,



"ஆசைநாயகி..." என்றான் அசராது...



எல்லோரையும் ஆட்டுவிப்பவன் அவன்... பெண்ணவளை விட்டு வைப்பானா என்ன!!!



"என்ன சொல்றீங்க சார்?" எல்லோரும் திகைப்புடன் கேட்க...



"என்னமோ புதுசா கேள்விப்படாததைக் கேள்விப்பட்ட மாதிரி ஷாக் ஆகிறீங்க? நாட்டில் நடப்பது தானே..." அவன் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்க...



"மேம், நீங்க சொல்லுங்க..." ஊடகவியலாளர்கள் அவளிடம் கேட்க...



பத்மவிலாசினியோ இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவள் அப்படியே சிலையாய் நின்றிருந்தாள். அப்போது அவன் குனிந்து அவளது கன்னத்தில் முத்தமிட... ஆணவனின் முத்தத்தில் பெண் சிலைக்கு உயிர் வந்தது. அவனது உதடுகள் பட்ட இடம் அவளுக்குத் தீயென எரிந்தது.



"உன்னிடம் தான் கேள்வி கேட்கிறாங்க பேபி... பதில் சொல்லு..." அவன் மந்தகாச புன்னகையுடன் உல்லாச குரலில் சொல்ல...



அவள் அவனையே பார்த்திருந்தாள். அவனோ ஒற்றைப் புருவத்தை உயர்த்தி மிதப்பாய் அவளைப் பார்த்து வைத்தான். 'உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்?' என்கிற அகந்தை அவனது விழிகளில் அப்பட்டமாய்த் தெரிந்தது. அதைக் கண்டவள் ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமன் செய்து கொண்டு பின்பு ஊடகவியலாளர்களை நோக்கி,



"ஆம், நாங்க ரிலேஷன்சிப்பில் இருக்கிறோம். இந்த விசயம் கேள்விப்பட்டுத் தான் என்னோட குடும்பத்தார் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. நான் தான் அவங்களைக் கொன்னுட்டேன். நான் தான் அவங்களைக் கொன்னுட்டேன். நான் பாவி..." என்று முகத்தை மூடி கொண்டு அழுதவளின் துக்கம் எதனால் என்று அவளுக்கு மட்டுமே தெரியும்.



சுற்றி இருந்தவர்கள் அவள் தனது குடும்பத்தார் இழப்பிற்கு அழுகிறாள் என்றே நினைத்து கொண்டனர்.



"சாரி சார்... உங்களைப் பற்றித் தவறான செய்தியை போட்டதற்கு..." எல்லோரும் அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு செல்ல...



இப்போது சிபி சக்ரவர்த்தி, பத்மவிலாசினி, ஜெகன் மூவர் மட்டுமே தனித்திருந்தனர்.



"ஜெகன், நீ கிளம்பு... இந்த விசயம் சக்திக்கு தெரிய கூடாது. மீறி தெரிஞ்சது..." என்றவனது பார்வை உணர்த்திய செய்தி ஜெகனுக்குத் தெரியாது இருக்குமோ!



"இல்லை சார்... நான் சொல்ல மாட்டேன்..." என்ற ஜெகன் அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டான்.



"சிங்கத்தின் குகைக்குள் தைரியமாக வந்த மானுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்... இனி உன்னுடைய வாழ்க்கை என் கையில்..." என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் அவளது மனதில் வைராக்கியம் ஆழமாய் வேரோடி இருந்தது.



'யார் வாழ்க்கை யார் கையில் என்று பார்ப்போம்?' அவள் மனதிற்குள் இகழ்ச்சியாய் சொல்லி கொண்டாள்.



"பெண்ணவளை எங்கே தட்டினால் வீழ்வாள்

என்பதை ஆண் அறிந்திருந்தான்...

ஆணவனை எங்கே தட்டினால் வீழ்வான்

என்பதை இந்தப் பெண் மட்டுமே அறிவாள்...

நியாயம், அநியாயம் பார்ப்பதில்லை,

போராக இருந்தாலும் சரி,

காதலாக இருந்தாலும் சரி...

இவர்களது போரும் அப்படிப்பட்டதே!

அவரவர் நியாயம் அவரவருக்கு!!!"



உயிர் கொல்லும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உறவு : 7



சிபி சக்ரவர்த்தி அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தவன் கால் மேல் கால் போட்டபடி சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான். பின்பு புகையை இழுத்து விட்டபடி பத்மவிலாசினியை பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஒற்றை வார்த்தையில் அவளது உலகத்தைத் தலைகீழாக மாற்றி, அவளது நடத்தையைக் கேள்விக்குறியாக்கி... அப்பப்பா, அனைத்தையும் நொடி நேரத்தில் செய்து முடித்திருந்த அவனது திறமையை அந்த நேரத்திலும் அவளால் மெச்சாது இருக்க முடியவில்லை.



'இவன் எல்லாம் பிறக்கும் போதே கிரிமினலாகப் பிறந்திருக்க வேண்டும்.' அவள் மனதிற்குள் வெறுப்பாக நினைத்து கொண்டாள்.



"எல்லார் முன்னும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன்." அவன் கேலி குரலில் சொல்ல...



"அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாலும் நீ அதுக்கும் ஒரு கதை வச்சிருப்பியே..." என்றவளை கண்டு அவனது விழிகள் மின்னியது.



"கரெக்ட்... அதுக்கும் ஒரு காரணம் வச்சிருந்தேன்."



"என்ன? நான் பைத்தியம்ன்னா?"



"எஸ், அதே தான்..." என்றவனைக் கண்டு அவள் முறைத்து பார்த்தாள்.



"நீயே எல்லாத்தையும் ஒதுக்கிட்ட... இனி எனக்குப் பிரச்சினை இல்லை. நீயும் பிரச்சினை பண்ண மாட்டேன்னு நினைக்கிறேன். இதுக்கு மேல உன்னால் எதுவும் பிரச்சினை வந்தது... மவளே, உன்னைச் சாவடிச்சிருவேன்." என்று கோபத்தோடு சொல்ல வேண்டிய கடைசி வரியை புன்னகை மாறாது சொன்னவனைக் கண்டு அவள் விரக்தியாய் சிரித்தாள்.



"அதான் உயிரோடு கொன்னுட்டியே... என் குடும்பத்து ஆளுங்களைச் சாகடிச்சு, என்னை உயிரோடு சாகடிச்சு... இனியும் சாகடிக்க என் கிட்ட என்ன இருக்கு?"



"இங்கே பார்... உன் வீட்டு ஆளுங்க செத்ததுக்கு நான் காரணம் இல்லை. நான் கிங் மேக்கர் ஒன்லி... இது ப்யூர்லி பிசினஸ்... என் கிட்ட பணம் கொடுத்தாங்கன்னா அவங்களுக்காக நான் என்ன வேணா செய்வேன்." என்றவனைக் கண்டு உறுத்து விழித்தவள்,



"பணத்துக்காக உங்கம்மாவை கூட்டி கொடுப்பியா?" என்று நக்கலாய் கேட்க...



அதைக் கேட்டு அவனது முகம் கறுத்து சிறுத்துப் போனது. பின்பு சுதாரித்துக் கொண்டு அவளைப் பார்த்தவன்,



"எஸ், அஃப்கோர்ஸ்..." என்றான் கோணல் சிரிப்புடன்...



"ச்சீ, உனக்கு வெட்கமா இல்லை. அதான் நீ தாயாய் நினைக்க வேண்டிய நாட்டைப் பணத்துக்காகக் கெட்டவங்களை ஆட்சியில் அமர்த்தி, அந்தப் பணத்தில் குளிர் காய்கிறாய். உனக்குப் பணம் வேண்டும் என்றால் மாமா வேலையைப் போய்ப் பார்... அதுக்காகத் தாய் நாட்டைப் பணத்துக்காகக் கண்டவனுக்குக் கூட்டி கொடுக்காதே..." அவள் மூச்சு வாங்க ஆத்திரத்துடன் கத்தி பேச...



"பேசி முடிச்சிட்டியா? குடிக்கக் கூலா சோடா கொண்டு வர சொல்லவா?" என்று அவன் கேலி குரலில் கேட்க...



அவள் என்ன கோபப்பட்டும் அவன் கோபம் கொள்ளாது பேசுவது கண்டு அவள் விழிகளைச் சுருக்கினாள். அவன் எதற்கும் அசராதவன் என்பதை அந்த நொடி அவள் புரிந்து கொண்டாள்.



"ரைட், உனக்கும், எனக்குமான டீல் முடிஞ்சு போச்சு... இன்னும் ஏன் இங்கே நின்னுட்டு இருக்க...? கெட் அவுட்..." அவன் வாயிலை நோக்கி கையைக் காட்டினான்.



அதைக் கண்டு அவளுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. ஆனாலும் வெளியில் செல்ல கூடாது என்று உறுதியாக நினைத்தவள் அசையாது அங்கேயே நின்றாள்.



"என்ன... நான் சொல்றது காதில் விழலையா?" அவன் சற்று குரலை உயர்த்த...



"எதுக்குப் போகணும்? அதான் நீயே எல்லோர் முன்னாடியும் சொல்லிட்டியே! வச்சிக்கிட்டு இருக்கேன்னு..." அதைச் சொல்லும் போதே அவளுக்கு அழுகை வந்தது. ஆனால் அவள் அழுகையை அடக்கி கொண்டாள்.



"அதுக்கு...?" என்றவன் அவளைக் கூர்ந்து நோக்கினான்.



பின்பு அவளது வார்த்தைக்கான அர்த்தம் புரிந்து பலமாய் வாய்விட்டு சிரித்தவன் எழுந்து அவள் அருகில் வந்தான். அவள் அச்சம் கொள்ளாது தைரியமாக அவனை நிமிர்ந்து பார்த்திருந்தாள். அவன் அவளது பார்வையைக் கண்டு கொள்ளாது அவளை நெருங்கி வந்தவன் அடுத்த நொடி அவளை இறுக அணைத்திருந்தான். அவள் உள்ளுக்குள் விதிர்த்து போனாலும் வெளியில் இயந்திரம் போல் இரும்பாய் இளகாது அப்படியே நின்றாள். அவன் அவளை அணைத்த மறுநொடி அவளை விட்டு விலகியவன் அவளைக் கண்டு இகழ்ச்சியாய் பார்த்து வைத்தான்.



"எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கப் போலிருக்கு..." அவனது நக்கல் பார்வையில் அவள் உள்ளுக்குள் கூனிக்குறுகி தான் போனாள். ஆனால் வெளியில் எதையும் காட்டி கொள்ளவில்லை.



"ஆசைநாயகிக்கு அர்த்தம் இது தானே... பிறகு எதுக்குத் தடுக்கணும்?" அவள் அவனை விட நக்கலாய் கேட்டாள்.



"ஆனா இங்கே அதுக்கு வேலை இல்லை. உன் ஆள் மயக்கித்தனத்தை வேறு ஆண்கள் யார் கிட்டேயாவது போய்க் காட்டு... அதுக்கு ஆள் நான் இல்லை." என்றவன் அவளை விட்டு தள்ளி நின்றான்.



"ஏன் உன்னால் ஒரு பெண்ணைத் தொட முடியாதா? இல்லை உன்னால் ஒரு பொண்ணைத் திருப்திப்படுத்த முடியாதா?" அவளது விழிகள் கனலை கக்கிய போதும் அவளது வார்த்தைகள் அத்தனை கிண்டலாய் வெளிவந்தது.



"எதுக்குப் பொண்ணுங்களைத் தொடணும்? எதுக்குப் பொண்ணுங்களைத் திருப்திப்படுத்தணும்? அது என்ன தேவைக்கு? இல்லை எனக்கு வேற வேலை இல்லையா? நீ இப்படிச் சொன்னால் நான் ஆண்மகனா பொங்கி எழுவேன்னு பார்த்தியா? நோ நெவர்... சேற்றில் பன்றிகளோடு புரள எனக்கு விருப்பம் இல்லை... என்னைப் பொறுத்தவரை பெண் இனம் சேற்றில் புரளும் பன்றிகள் போல..." அவன் அருவருப்பும், அலட்சியமுமாய்ச் சொல்லி முடித்தான்.



"பன்றி இனத்தோடு சேர்ந்து சேற்றில் புரண்டு பன்றியாக மாறி விட்டேன்னு நீ தான் மீடியாவை கூப்பிட்டுப் பெருமையா தம்பட்டம் அடிச்சு இருக்க... நானில்லை..." அவள் இடக்காகப் பதில் சொன்னாள்.



"எல்லாம் உன்னால் தான்... நீ கம்ப்ளையிண்ட் கொடுத்தது தவறு இல்லை. ஆனால் அதில் இடைச்சொருகலா என் பெயரை ஏன் நீ சேர்த்திருந்த? அதனால் தான் உனக்கு இந்தக் கதி... எனக்கு என் இமேஜ் முக்கியம், அதைவிட என்னோட கம்பெனி முக்கியம். இரண்டுக்கும் கெட்ட பெயர் வர நான் விட மாட்டேன். நான் ரேசில் ஓடும் குதிரை... நான் பின்தங்கினால் என் மீது யாரும் பணம் கட்ட மாட்டாங்க."



"ஓ... உனக்குக் கெட்ட பெயர் வர கூடாதுன்னு எனக்குக் கெட்ட பெயர் உண்டாக்கினியா?"



"எஸ், எனக்கு நல்லது நடக்கணும்ன்னா நான் எதை வேணும்ன்னாலும் செய்வேன்..." என்றவன், "இங்கே பார்... உன்னைக் கெட்டவள்ன்னு சொன்னதால் நீ கெட்டு போகவும் இல்லை. நான் உன்னைத் தொடவும் இல்லை. மீடியா முன்னாடி நான் உன்னை அணைச்சது, முத்தமிட்டது எல்லாம் நடிப்பு. இப்போ நீ இடத்தைக் காலி பண்ணு... சக்தி சொன்னப்போ நீ யாருன்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா உன்னை வீட்டுக்குள்ளேயே எடுத்திருக்க மாட்டேன்." அவன் அவளை அனுப்புவதிலேயே குறியாக இருந்தான்.



"நான் போக மாட்டேன். நீ சொன்ன வார்த்தையை நீயே வாபஸ் வாங்கணும். நான் களங்கம் இல்லாதவள்ன்னு நீயே சொல்லணும். அதுவரை நான் இங்கிருந்து ஒரு இன்ச் நகர மாட்டேன்." என்று பிடிவாதமாய்ச் சொன்னவளை கண்டு அவனது உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தது.



"எனக்குச் சாதகமாக இல்லாததை நான் எப்போதும் சொல்வது, செய்வது கிடையாது..."



"நானும் இங்கிருந்து போகப் போவது இல்லை." என்று உறுதியாய் சொன்னவளை கூர்ந்து பார்த்தவன்,



"மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்... நீ கேள்விப்பட்டு இருக்கியா? நீயோ ஆசைநாயகி... சோ எல்லாம் முடிஞ்சு போச்சு... உன்னை இங்கிருந்து கிளப்புவது ரொம்ப ஈசி..." என்று சாதாரணமாகச் சொன்னான்.



அவள் தான் திகைத்து போய் நின்றிருந்தாள்.



"ஜெகன்..." அவன் கத்திய கத்தலில் எங்கிருந்தோ ஜெகன் ஓடி வந்தான்.



"உனக்கு இரண்டு நிமிசம் தான் டைம்... அதுக்குள்ள இவளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பி இருக்கணும்." அவன் ஜெகனை கண்டு கர்ஜித்தான்.



"சீஃப் நைட் நேரத்தில் எங்கே போவாங்க?" ஜெகன் தயக்கத்துடன் கேட்டான்.



"என்னை எதிர்த்து பேசும் அளவுக்கு நீ வந்துட்டியா? சொன்னதைச் செய்..." என்றவன் இளகாது நின்றிருந்தான்.



அவ்வளவு தான் அவன்... அவனுடைய காரியம் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு அவனுக்கு அவள் தேவையில்லை. அவளது செயலால் சரிந்த அவனது மதிப்பையும், மரியாதையையும் அவளைக் கொண்டே அவன் நிமிர செய்து மீட்டு எடுத்து விட்டான். அவன் என்றுமே காரியவாதி. அதில் மாட்டி கொண்டு துன்பப்படும் மனித மனங்களைப் பற்றி அவன் பெரிதாக யோசித்தது இல்லை. இனியும் அவன் யோசிக்கப் போவது இல்லை, அவனது குறிக்கோள் வெற்றி மட்டுமே...



"பத்மா..." ஜெகனின் அழைப்பில் பெண் சிலைக்கு உயிர் வந்தது.



"வாங்க போகலாம்..." ஜெகன் அவளிடம் சொல்ல...



"ஒரு நிமிசம் ஜெகன்..." என்று அவனைத் தடுத்து நிறுத்தியவள் சிபி சக்ரவர்த்திப் புறம் திரும்பி, "உனக்கு உன்னுடைய இமேஜ் ரொம்ப முக்கியம்ல..." என்று கேட்க...



"நிச்சயமாய்..." அவன் இறுமாப்புடன் சொல்ல...



"அப்போ சரி... இப்ப நீ என்னை வீட்டை விட்டு வெளியில் அனுப்பின... நான் உன் வீட்டு முன்னாடி போராட்டம் பண்ணுவேன். என்னை யூஸ் பண்ணிட்டு துரத்தி விட்டுட்டான்னு மீடியா முன்னாடி கண்ணீர் வடிப்பேன்." அவள் உறுதியான குரலில் சொல்ல...



"கண்ணீர் வடிச்சுக்கோ... யாருக்கு என்ன வந்தது?" அவன் அலட்சியமாகச் சொல்ல...



"அப்போ ஓகே... மீடியா முன்னாடி கொஞ்ச நேரத்துக்கு முன் கொஞ்சி குழாவினியே அது எல்லாம் பொய்யான்னு நாளைக்கு மீடியாக்காரங்க வந்து உன் கிட்ட கேட்பாங்க... அப்போ என்ன பதில் சொல்லுவ?" என்றவளை கண்டு அவன் விழிகள் சுருங்க பார்த்தான்.



"உன்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் என்னால் பதில் சொல்ல முடியும். எங்களுக்கு இடையில் எந்த ரிலேசன்ஷிப்பும் கிடையாது. இப்பவும் நான் கன்னிப்பெண் தான். எங்க குடும்பத்து ஆட்கள் கொலை செய்யப்பட்டதைத் தற்கொலைன்னு மாத்த தான் சார் அப்படி ஒரு பொய்யை சொன்னாரு. எனக்கு நியாயம் வேணும், நீதி வேணும்ன்னு போராடுவேன். அதுக்குப் பிறகு உன்னோட இமேஜ் டகடகன்னு கீழே இறங்கிரும்..." அவள் கையை மேலிருந்து கீழாகக் கொண்டு சென்றபடி நக்கலாய் கூற...



சிபி சக்ரவர்த்தி ஆத்திரத்துடன் அவளைக் கண்டு பல்லை கடித்தான். ஜெகனோ வாயை பிளந்தபடி இருவரையும் பார்த்திருந்தான். அவனோ, சக்திமாறனோ சிபி சக்ரவர்த்தியை எதிர்த்து பேசியது கிடையாது. இவ்வளவு ஏன் நாட்டின் பிரதமர் கூட அவனது வாரத்தைகளுக்கு மறுப்பு கூறாது செவி சாய்ப்பார். அப்படிப்பட்ட ஒருவனைச் சின்னப் பெண் அவள் ஆட்டி வைப்பது கண்டு அவன் ஆவென்று வாயை பிளந்தபடி பார்த்திருந்தான்.



"ஜெகன்..." சிபி சக்ரவர்த்தி அவனை அழைக்க...



"எஸ் சீஃப்..." ஜெகன் அவன் முன் வந்து நின்றான்.



"அவளை இங்கேயே தங்க சொல்லு... ஆனா என் முகத்தில் முழிக்கக் கூடாது. வேலை கிடைச்சதும் இங்கிருந்து கிளம்பி போகச் சொல்லு." அவன் அவளைக் காண விரும்பாது ஜெகனிடம் சொல்ல...



"அதெல்லாம் முன்பு... இப்போ நான் இந்த வீட்டில் தான் இருப்பேன். அதுவும் என் விருப்பத்துக்கு... அதைக் கேட்க ஜெகன் உங்களுக்கு மட்டுமில்லை, உங்க சீஃப்க்கு கூட ரைட்ஸ் கிடையாது." என்றவள் அங்கிருந்த சோபாவில் சட்டமாய்க் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்.
 

ஶ்ரீகலா

Administrator
"சீஃப் குட்நைட்..." என்ற ஜெகன் அவன் அழைக்கும் முன் அங்கிருந்து ஓடி விட்டான்.



சிபி சக்ரவர்த்தி அவளை யோசனையுடன் பார்த்தபடி அவள் முன் வந்து நின்றான். பத்மவிலாசினி சளைக்காது அவனது பார்வையைத் தாங்கி நின்றாள்.



"உனக்கு என்ன வேணும்?" அவன் நேரே விசயத்துக்கு வந்தான்.



"எனக்கு என்ன கொடுக்கணும்ன்னு உனக்குத் தான் தெரியணும்? ஒரு ஆம்பிளைக்கு இதை எல்லாமா சொல்லி கொடுக்க முடியும்?" அவள் அவனைக் கண்டு கண்ணைச் சிமிட்டியபடி கேட்டாள்.



"நீ என்ன தே...டியாவாடி?" அவன் பச்சையாகக் கேட்க...



"அப்படித்தானே நீ சொன்ன?" அவள் அவனை உறுத்து விழித்துக் கொண்டு கேட்க...



"சரி, நீ அப்படியே இரு... உனக்கான செட்டில்மென்ட் என்ன?"



"என் குடும்பத்துக்கான நீதி..." அவள் அசராது பதில் சொல்ல...



"அது என் உயிர் இருக்கும் வரை நடக்காது."



"நடக்கும், நடக்காது விட மாட்டேன். நீயே எல்லாவற்றையும் மாற்றியமைப்ப..." அவள் உறுதியான குரலில் கூற...



"அதற்கு மேற்கில் சூரியன் உதிக்க வேண்டும்." அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவள் பேசுவது எல்லாம் அவனுக்குச் சிரிப்பினை வரவழைத்தது.



"நீ கனவு கண்டுக்கிட்டே இரு..." என்றவன் உணவு மேசையை நோக்கி சென்றான்.



அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள். திரும்பி அவளைப் பார்த்தவன், "எதுக்கு நீ என் பின்னாடியே வர்ற?" என்று கேட்க...



"ராமன் எவ்விடமோ அதுவே சீதைக்கு அயோத்தி..."



"உன்னை...?" அவன் அடக்க மாட்டாது கோபத்தில் பற்களைக் கடித்தான்.



"உனக்கு மட்டும் தான் வயிறு இருக்குமா? எனக்கு வயிறு இல்லையா? எனக்குப் பசிக்காதா? எனக்கும் பசிக்கும்ல..." என்றவளை கண்டு அவன் ஒன்றும் பேசவில்லை.



சிபி சக்ரவர்த்திக் கை கழுவி விட்டு உணவு உண்ண அமர... பத்மவிலாசினி அவனுக்குத் தட்டு எடுத்து வைத்து பரிமாறி இருந்தாள். அவளது செயலை கண்டவன் ஆத்திரத்தில் தட்டை எடுத்து வீச போக... அவளோ அவனது கையைப் பற்றித் தடுத்தவள்,



"எதுக்குச் சாப்பாட்டை வீணாக்குற...? உனக்குப் பிடிக்கலைன்னா விடு..." என்றவள் அந்தத் தட்டை எடுத்து வைத்துக் கொண்டு அவள் உணவு உண்ண அமர்ந்தாள்.



நல்ல பசியோ என்னமோ! வேக வேகமாய் உணவினை உண்டவளை ஒரு மாதிரியாய் பார்த்தபடி அமர்ந்தவன் தானும் உணவு உண்ண ஆரம்பித்தான். அங்குக் கனத்த மௌனம் ஆட்சி செய்தது.



சிபி சக்ரவர்த்தி உண்டு விட்டு எழுந்து அறைக்குச் செல்ல... பத்மவிலாசினியும் அவனைப் பின்தொடர்ந்தாள். அவனைத் தொடர்ந்து அவனது அறைக்குள் நுழைய போனவளை அவன் தடுத்து நிறுத்தினான்.



"ஹேய் நில்லு... ஒரு ஆணின் அறைக்குள் உனக்கு என்ன வேலை?" அவன் கோபத்தோடு அவளைத் தடுத்து நிறுத்த...



"ஒரு ஆசைநாயகிய பார்த்து என்ன வேலைன்னு கேட்கிறியே? சரியான மாக்கானா இருக்கியே..." அவள் தலையில் அடித்துக் கொண்டு சிரித்தாள்.



"உனக்குக் கொஞ்சம் கூடப் பயமே இல்லையாடி?" அவன் இரு கைகளையும் கட்டி கொண்டு அவளை உறுத்து விழித்தபடி கேட்டான்.



"எதுக்குப் பயப்படணும்? மிஞ்சி போனால் என்ன பண்ணுவ? என் கற்பை களவாடுவியா? எடுத்துக்கோ... கற்புங்கிறது உடம்பில் இல்லை. அது மனசில் இருக்கு." என்றவளுக்குத் துக்கமாக இருந்தது. ஆனாலும் அவனை உண்டு இல்லை என்று ஒருவழி பண்ண வேண்டும் என்கிற வெறி மட்டும் அவளுக்கு அதிகம் இருந்தது.



"அப்போ எல்லாத்துக்கும் துணிஞ்சு தான் இங்கே வந்திருக்கியா?" அவன் கோணல் சிரிப்புச் சிரித்தான்.



"ம்..." என்று துணிச்சலாகச் சொன்னவள் அவனை இடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயல... அவனே அவளுக்கு வழி விட்டு விலகி நின்றான்.



அவள் அறையினுள் சென்று சட்டமாகக் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்தாள். அவன் அவளைக் கண்டு கொள்ளாது பால்கனி பக்கம் சென்றான். பால்கனியில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் வானில் பவனி வந்த நிலவினை பார்த்தபடி இருந்தான். அவனது எண்ணம் பத்மவிலாசினியை தான் சுற்றி வந்தது.



சக்திமாறன் அவளைப் பற்றிச் சொன்ன போது அவனுக்கு அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது. அதனால் தான் அவன் அவளை இங்கு வர சொன்னது. அவனுக்குப் பெண்களைக் கண்டாலே ஆகாது. அப்படி இருந்தும் சக்திமாறனுக்காகத் தான் அவன் அவளை இங்கு வரவழைத்தது. அவள் வந்த மறுநாள் தான் அவனுக்கு அவளைப் பற்றிய தகவல்கள் தெரிய வந்தது. 'போலீசுக்கு பயந்து திருடன் போலீஸ்க்காரன் வீட்டில் ஒளிந்திருந்தது' போல் அவள் அவனிடமே வசமாக மாட்டி கொண்டாள். அதைக் கண்டவன் சும்மா இருப்பானா? தெலுங்கானாவில் ஆட்டம் காண துவங்கிய அவனது மதிப்பினை அவளை வைத்தே இப்போது சரி செய்து விட்டான். எல்லாவற்றையும் சரி செய்து விட்டவனுக்கு அவளை என்ன செய்து வீட்டை விட்டு விரட்டுவது? என்று தெரியவில்லை. வீட்டை விட்டு விரட்டினால் அவள் நிச்சயம் அவனது நற்பெயருக்குக் குந்தகம் விளைவிப்பாள்... அது மட்டும் நடந்துவிடக் கூடாது.



ஒன்று மட்டும் அவனுக்குப் புரிந்தது. பத்மவிலாசினி சாதாரணப் பெண் இல்லை என்று...



எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தானோ? திடுமெனக் குளிர துவங்கவும் அவன் எழுந்து அறைக்குள் வந்தான். அங்குப் பத்மவிலாசினி அவனது கட்டிலில் படுத்திருந்தாள்.



'கொழுப்பு எடுத்தவ...' அவன் முனங்கி கொண்டே படுக்கையின் மறுபுறம் வந்து அமர்ந்தான்.



"என்னங்க சார், விளையாட்டை ஆரம்பிக்கலாமா?" பத்மவிலாசினி அவன் புறம் திரும்பி படுத்தபடி கேட்க...



"என்னது?" அவன் திகைப்புடன் படுக்கையில் இருந்து எழுந்து விட்டான்.



"இது கூடத் தெரியாமலா என்னை ஆசைநாயகியா வச்சிருந்தீங்க?" அவள் நக்கலாய் கேட்கவும்...



"எனக்குத் தெரியும்... உனக்கு அது தெரியுமா?" அவன் படுக்கையில் கையூன்றி அவள் பக்கமாய் நகர்ந்து வந்தான்.



அவள் அசையாது, அசராது அவனைப் பார்த்திருந்தாள். அவன் அவள் முகம் நோக்கி குனிந்தவன், "பத்து வரை எண்ணுவேன்... நீ தப்பிச்சு போறதுக்கு உனக்கான டைம்... அப்படியும் போகலைன்னா அதுக்குப் பிறகு நடக்கப் போறதுக்கு நான் பொறுப்பு இல்லை." என்றவன் விழிகளை மூடி கொண்டு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண துவங்கினான்.



"பத்து..." என்று கூறியவன் தனது விழிகளைத் திறக்க... அவன் கண்முன் அவள் அசையாது அவனைப் பார்த்தபடி படுத்திருந்தாள்.



"லூசாடி நீ..." என்றவனுக்கு அவள் புன்னகையைப் பதிலாகக் கொடுத்தாள்.



"இன்னைக்கு நான் உன்னைப் படுத்துற பாட்டில் நீ என் பக்கம் தலை வச்சுப் படுக்கக் கூடாது." என்றவன் அவளது முகம் நோக்கி குனிந்தான்.



பத்மவிலாசினி வெகு அருகாமையில் அவனது முகத்தினைக் கண்டவள் ஒரு நொடி திகைத்தாள். பின்பு அவள் தனது விழிகளை மூடி கொண்டு அவனை ஏற்றுக் கொள்ளத் தயாரானாள்.



"எல்லோரையும் ஆட்டுவிக்கிற என்னையவே நீ ஆட்டுவிக்க நினைக்கிறியா? உன்னைச் சாவடிக்கிறேன்டி..." என்றவனது குரல் மாறியிருந்தது. அத்தனை நேரம் அவனிடத்தில் இருந்த இளகு தன்மை மறைந்து ஒருவித கடினம் வந்திருந்தது.



சிபி சகர்வர்த்தி வன்மையாகப் பத்மவிலாசினி இதழ்களைக் கடித்துச் சுவைத்தான். அவளுக்கு அவனது செய்கை வலியை கொடுத்தது. ஆனாலும் அவள் வலியை பொறுத்துக் கொண்டு அமைதி காத்தாள். அவன் எவ்வளவு நேரம் அவளது இதழ்களைச் சுவைத்தானோ! அவனது இயல்பான வெறியோடு காமமும் கலந்து போட்டி போட... அவன் ஆதிகால மனிதனின் இயல்பிற்கு மாறியிருந்தான். அவனது உணர்வுகள் மட்டுமே அவனுக்கு முக்கியமாக இருந்தது. அவன் அவளது இதழ்களை விடுவித்து விட்டு அவளது கழுத்தில் முகம் புதைத்தவன் அங்கும் தனது பல் தடத்தினை ஆழமாய்ப் பதித்தான். போன ஜென்மத்தில் அவன் இரத்த காட்டேரியாகப் பிறந்து இருப்பானோ! அடுத்து அவனிடம் இருந்து வெளிப்பட்டது எல்லாம் வன்மை மட்டுமே... பெண்ணைப் போகப் பொருளாய் எண்ணுபவனுக்குப் பெண்ணும், பொம்மையும் ஒன்றும் தான் போலும். அப்படி எண்ணித்தான் அவன் அவளைப் பாடாய்ப் படுத்தினான்.



அவளுடன் கூடி கூடாமல், கலைத்துக் கலையாமல் கட்டில் விளையாட்டு விளையாண்டவன் ஒரு கட்டத்தில் அவளது முகத்தை ஏறிட்டு பார்த்தவன் உடனே அவளை விட்டு விலகினான். அவன் விலகியதை கண்டு அவள் தனது விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன் கோபத்தோடு அவள் மீது போர்வையைப் போர்த்தியவன்,



"இது தேவையா உனக்கு? என்னைச் சீண்டி விட்ட நீ உயிரோடு இருக்கும் போதே மரணத்தைப் பார்ப்ப... என்னை மிருகமா மாத்த முயற்சிக்காதே. என்னை விட்டு விலகி போயிரு." என்றவன் தனது சட்டையை அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியேறி விட்டான்.



பத்மவிலாசினி மெல்ல எழுந்து அமர்ந்தாள். அவளுக்கு உடல் எல்லாம் வலித்தது. நாய்க் கடித்தது போல் அவன் அவளைக் குதறி விட்டுச் சென்றிருந்தான். அவளது உடல் எங்கும் கன்றி சிவந்து போயிருந்தது. படுக்கைக்கு நேரே இருந்த கண்ணாடியில் அவளது முகம் விகாரமாகத் தெரிந்தது. அவளது கன்னங்கள் கடிப்பட்டுக் கன்றி சிவந்து இருந்தது. உதடுகளில் இரத்தம் கட்டி வீங்கி போயிருந்தது. முகத்தில் ஆங்காங்கே நகக்கீறல்கள் இருந்தது.



அவள் குனிந்து தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். ஷவரில் இருந்து வழிந்த நீர்த்துளிகள் அவளது காயங்கள் மீது பட்டு எரிச்சலை உண்டாக்கியது. அவள் பற்களைக் கடித்துக் கொண்டு வலியை தாங்கி கொண்டாள். மனதின் வலியின் முன் உடல் வலி பெரிதாக இல்லை.



சிபி சக்ரவர்த்தியோ தனது அலுவலக அறையில் மூர்க்கமாய் அடங்காது அமர்ந்து இருந்தான். யார் இவள்? எங்கே இருந்து வந்தாள்? என்று அவனது மனம் முழுவதும் பத்மவிலாசினியை பற்றித் தான் யோசித்துக் கொண்டு இருந்தது. அவன் வாழும் வாழ்க்கைக்குப் பெண்கள் என்றுமே சரிவர மாட்டார்கள். அப்படி இருக்கும் போது... இவள் என்னடா என்றால் அவன் கூறிய ஒற்றை வார்த்தைக்காக அவனை இந்தளவிற்கு ஆட்டுவிக்கிறாள்.



"எல்லோரையும் ஆட்டுவிக்கும் பொம்மலாட்டக்காரனிடமே உன் வித்தையைக் காட்டுறியா? நான் யாருன்னு உனக்குக் காட்டுறேன்." என்று அவன் தனக்குள் உறுமி கொண்டான்.



பத்மவிலாசினி கட்டிலின் பக்கவாட்டு மேசையில் இருந்த தனது அலைப்பேசியைக் கையில் எடுத்தாள். அவள் ஜெகன் அழைத்த போதே அலைப்பேசியைக் கையோடு எடுத்து வந்திருந்தாள். அதில் அவள் புத்தக ஆய்விற்காகச் சில குறிப்புகளை எடுத்து வைத்திருந்தாள். அதை வாசித்துப் பார்த்தாள். பின்பு அதில்,



'ஆபரேசன் ஃபெயில்டு' என்று எழுதினாள்.



அடுத்து என்ன செய்வது? என்று அவள் தீவிரமாக யோசிக்கத் துவங்கினாள். அப்போது அவளது தந்தை ஒரு முறை அவளிடம் கூறியது ஞாபகத்தில் வந்தது.



"இந்த உலகத்தில் அணு ஆயுதத்தை விடப் பெரிய ஆயுதம் எது தெரியுமா அம்முலு?"



"பயோ வெப்பன்ஸ்?"



"நோ அம்முலு... லவ்..."



"வாட்?" அவள் வியப்பில் விழிகள் விரிய அவரிடம் கேட்டாள்.



"எஸ் அம்முலு... அன்பை விட மிகப் பயங்கரமான ஆயுதம் வேறில்லை. எதுனாலயும் சாய்க்க முடியாத மனுசனை அன்பால் சாய்த்து விடலாம். அன்புக்கு அடிமையாகாதவங்க இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஒருத்தரை எதிர்த்து, போர் செஞ்சு அவங்களை அடிமைப்படுத்துறதை விட... அன்பால் அவங்களை ஈசியா அடிமைப்படுத்திரலாம்."



"ஓ... இதில் இவ்வளவு இருக்காப்பா..." அவள் அறியாமையுடன் தந்தையைக் கண்டு கேட்டாள்.



அவை எல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது.



"பார்க்கலாம் மிஸ்டர் சிபி சக்ரவர்த்தி... நீயா? நானா? என்று..." அவள் தனக்குள் தீவிரமாய்ச் சொல்லி கொண்டாள்.



இருவரின் எண்ணமும் ஒன்று தான்... அவள் அன்பை ஆயுதமாக எடுக்க... அவனோ வன்மத்தை ஆயுதமாக எடுத்தான். எதிர் எதிர் திசையில் பயணிக்க நினைத்தாலும் இருவரின் பயணமும் முடியும் இடம் ஒன்று தான்...!



"ஆணின் வன்மம் பெண்ணவளின் அன்பில் கரைந்து காணாது போகும் என்பதை ஆண் அறியவில்லை. பெண்ணவளின் பொறுமை ஆணவனின் ஆத்திரத்தில் கரைந்து காணாது போகும் என்பதைப் பெண் அறியவில்லை."



உயிர் கொல்லும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
பிரெண்ட்ஸ்,

அமேசான் பென்டூபப்ளிஷ்க்கு கதை எழுதலாம்ன்னு ஒரு ஐடியா இருக்கு. அதனால் என்னை வாழ்த்தி, இடையிடையே லீவு எடுக்கப் பெர்மிசன் கொடுங்கோ மக்களே... இந்தக் கதை முடிந்தளவு திங்கள் மற்றும் வியாழன் இரண்டு நாட்கள் கொடுக்கப் பார்க்கிறேன். கமிட்மெண்ட் முடிந்ததும் எப்போதும் போல் தொடர்ந்து கதையைக் கொடுக்கிறேன். நன்றி...

இப்போ கதைக்கு வருவோம்... இந்தக் கதையின் நாயகன் சிபி சக்ரவர்த்தித் தான்... அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதேபோல் இது வழக்கமான காதல் கதையும் இல்லை. அதனால் எதைப் பற்றியும் யோசிக்காம கதையை மட்டும் படித்து அதன் கற்பனையோடு தொடர்ந்து வாருங்கள். யார் யார் எப்படி? என்று அவங்க அவங்க பக்கம் இருந்தே இந்தக் கதையைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். (பொங்க பானைக்குப் பயந்து எப்படி எல்லாம் கம்பு சுத்த வேண்டியிருக்கு
😰
😰
😰
)



உறவு : 8



சக்திமாறன் காலையில் எழுந்ததும் விழித்தது சிபி சக்ரவர்த்தி மற்றும் பத்மவிலாசினி இருவரது தொடர்பு பற்றிய செய்தியில் தான். அதிலும் பத்மவிலாசினி புகைப்படத்தைப் பெரிதாகப் போட்டு... சிபி சக்ரவர்த்தியின் புகைப்படம் இதுவரை எங்கும் வெளியானது இல்லை. அவனைப் பேட்டி எடுக்க வருபவர்களுக்குப் புகைப்படக் கருவி, அலைப்பேசி எதுவும் கொண்டு போகக் கூடாது என்று கட்டளையிட்ட பிறகே உள்ளே விடுவர். அந்தக் காலம் மாதிரி பேப்பர், பேனா மட்டுமே அனுமதி... அதனால் தான் அவனது புகைப்படம் எங்கும் இருக்காது. பெரிய பெரிய அரசியல்வாதிகளை அவன் சந்தித்தாலும் அது மிகவும் ரகசியமாகத் தான் இருக்கும். அந்தளவிற்கு அவன் ரகசியமாகவே இருந்தான். ஏன் என்று யாரும் இதுவரை அவனிடம் கேட்டது இல்லை.



செய்தியை படித்துப் பார்த்த சக்திமாறனுக்கு மிகுந்த அதிர்ச்சி... இருவரை பற்றித் தவறாக அவனது 'சீஃப்' சொல்லியிருப்பது மற்றும் அவளது குடும்பத்தாரின் நிலை இரண்டுமே அவனை அதிர்ச்சி அடைய செய்திருந்தது. பத்மவிலாசினியின் பெற்றோர் இறப்பு தெலுங்கானாவோடு முடங்கி விட்டதால் அது பெரிதாக வெளியில் பேசப்படவில்லை. ஆனால் சிபி சக்ரவர்த்தி இந்திய அளவில் பெரிதாகப் பேச கூடியளவு பிரபலமானவன். அதனால் அவனைப் பற்றிய செய்தி இந்தியா முழுவதும் உடனே பரவி விடும்.



அவர்கள் ஆடிய அரசியலாட்டத்தின் விளைவால் பத்மவிலாசினியின் குடும்பம் சிதைந்து போனதை அறிந்து அவனுக்குத் துக்கமாக இருந்தது. அதைவிடத் துக்கம், பத்மவிலாசினிக்கு நிகழ்ந்த கொடுமை... அவன் அவளை டெல்லிக்கு அனுப்பியிருக்கா விட்டால் இத்தகைய கொடுமை அரங்கேறி இருக்காது. சும்மாவே சிபி சக்ரவர்த்தித் தன்னை எதிர்ப்பவர்களை இருக்கும் இடம் தெரியாது அழித்து விடுவான். இப்போது அவன் மீது புகார் கொடுத்து இருக்கும் பத்மவிலாசினி வலிய சென்று அவனிடம் மாட்டினால் சொல்லவும் வேண்டுமோ! அவன் நன்றாக வைத்துச் செய்து விட்டான். அவன் மீதான பழியை மறைக்கப் பெண்ணவளை பகடைக்காயாக்கி விட்டான்.



பத்மவிலாசினியை பற்றி அவனுக்கு நன்கு தெரியும். அவள் அப்படிப்பட்ட பெண் இல்லை என்று... அதேபோல் சிபி சக்ரவர்த்தியை பற்றியும் அவனுக்கு நன்கு தெரியும். அவனைத் தேடி வரும் பெண்களைப் பற்றியும் தெரியும். அது அவனது அந்தரங்கம் என்பதால் சக்திமாறனும், ஜெகனும் பெரிதாகக் கண்டு கொள்வது இல்லை. அப்படியே கண்டு கொண்டாலும் சிபி சக்ரவர்த்தியை அவ்வளவு எளிதில் கேள்வி கேட்டுவிட முடியாது. அவ்வளவு எளிதில் அவனிடம் சாதாரணமாகப் பழகிவிடவும் முடியாது. மற்றபடி சிபி சக்ரவர்த்தி இருவருக்கும் நல்லவனே! அவர்களிடம் அன்பாக இருப்பான். அதனால் தான் அவனை நம்பி சக்திமாறன் தனது தோழியை அனுப்பி வைத்தான். தன் மீதான அன்பில் சிபி சக்ரவர்த்தி அவளுக்குப் பாதுகாப்பு கொடுப்பான் என்று... ஆனால் அவனோ? சக்திமாறனுக்குத் துக்கமாக இருந்தது.



சக்திமாறன் பதட்டத்துடன் உடனே தனது தோழிக்கு அலைப்பேசியில் அழைத்தான். பத்மவிலாசினியோ நன்றாக உறங்கி கொண்டு இருந்தவள் அலைப்பேசி சத்தத்தில் விழித்தாள். அரைத் தூக்கத்தில் கையை மட்டும் நீட்டி அலைப்பேசியை எடுத்து பார்த்தாள். தோழனின் அழைப்பு என்றதும் அவள் எழுந்து அமர்ந்தபடி,



"மாறா..." என்றாள் உற்சாகத்துடன்...



அவளது உற்சாகம் எதுவும் அவனது கவனத்தில் பதியவில்லை. அவன் பதட்டத்துடன், "அங்கே என்ன நடக்குது பத்து? மீடியாவில் இப்படி ஒரு செய்தி போட்டு இருக்காங்க... சீஃப் தான் அப்படிச் சொன்னாருன்னா நீயும் அதை ஆமோதிச்சிருக்க..." என்று கேட்க...



அவனது பேச்சை கேட்ட பத்மவிலாசினியின் உற்சாகம், தூக்கம் மறைந்து போனது. நிதர்சனம் முகத்தில் அறைய அவள் கன்றி போன முகத்துடன் அமர்ந்து இருந்தாள்.



"பத்து?" சக்திமாறன் அவளை அழைக்கவும் அவள் தன்னுணர்வுக்கு வந்தாள்.



"முள்ளை முள்ளால் தான் எடுக்கணும் மாறா..."



"அதுக்குன்னு இப்படி ஒரு பழியை நீ உன் மீது போட்டு கொள்வாயா? முன்பே இது பற்றித் தெரிந்து இருந்தால் நான் உன்னை அங்கே அனுப்பி இருக்க மாட்டேன். இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. முதலில் நீ அங்கே இருந்து கிளம்பு..."



"கிளம்பி...?" அவள் கேள்வியாக நிறுத்தினாள்.



"ஜெகன் மூலம் மாற்று ஏற்பாடு பண்றேன். என்னை நம்பு பத்து..."



"உன்னை நம்பாமலா? இப்போ நான் வெளியில் போனால் என் மீதான பழியை எப்படிப் போக்குவது மாறா? உங்க சீஃப் எவ்வளவு எளிதா என் மேல் பழி போட்டுட்டான்." என்றவளுக்குத் துக்கமாக இருந்தது.



"அவர் உன்னிடம் எதுவும் தவறாக...?" இதை அவன் கேட்கும் போதே அவனது இதயம் வேகமாகத் துடித்தது.



அதைக் கேட்டவள் தனக்குள் விரக்தியாய் சிரித்துக் கொண்டு, " உனக்கு ஒண்ணு தெரியுமா? நான் இப்போ எங்கே இருக்கேன்னு சொல்லு பார்க்கலாம்?" என்று கேட்க...



"எங்கே?" அவனுக்குப் பதற்றமானது...



"உங்க சீஃபோட ரூமில்..."



"என்னது?" அவன் அதிர்ந்து தான் போனான்.



"ஹேய் நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் நடக்கலை... உங்க சீஃபை ரூமை விட்டு விரட்டி விட்டுட்டேன்."



அவள் சொன்னது கேட்டு அவனுக்குச் சற்று நிம்மதியாக இருந்த போதும்... சிபி சக்ரவர்த்தி அவ்வளவு எளிதாக இப்படி விட்டு கொடுப்பவன் இல்லையே! அவனுக்கு உள்ளுக்குள் திக்திகென்று இருந்தது.



"பத்து..." அவன் திகைப்புடன் அவளை அழைத்தான்.



"ஒரு பெண் மீது எவ்வளவு எளிதா பழியைத் தூக்கி போட்டுட்டான். நான் அப்படிப்பட்ட பெண்ணா மாறா?" அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.



"பத்து, அவர் அப்படிச் சொன்னால் அது உண்மையாகிருமா? உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?"



"உனக்கு என்னைப் பத்தி தெரியும் மாறா... ஆனா ஊர், உலகத்துக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்? இன்னைக்கு மீடியாவில் வந்த செய்தியை உண்மைன்னு நம்பி என்னைத் தான் கேவலமா பேசும்." என்றவளுக்கு அத்தனை வேதனையாக இருந்தது. ஆனாலும் வேதனையை விழுங்கி கொண்டு மேலே பேசலானாள்.



"என்னைப் பத்தி கேவலமா சொன்ன உங்க சீஃப் வாயாலேயே நான் நல்லவள்ன்னு சொல்ல வைப்பேன். அதேமாதிரி என் குடும்பத்தாரோட இறப்புக்கு நியாயம் கிடைக்கணும். இது எல்லாம் நடக்காம நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்." அவள் உறுதியான குரலில் கூறி முடித்தாள்.



"சாரி பத்து... உன் குடும்பத்தார் நிலைக்கு..." சக்திமாறன் உண்மையில் மனம் வருந்தினான்.



"ஏன் மாறா, நீ இவன் கூட இருக்க...? இப்படி அநியாயம் செய்து தான் சம்பாதிக்கணுமா? நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு பிரிச்சு பார்க்காம பணத்துக்காக இப்படி வேலை பார்க்கிறது சரியா?" என்று கேட்டவளுக்கு அவனிடம் பதில் இல்லை.



"பத்து, இது ஒரு கார்ப்பரேட் கம்பெனி... ஒரு வீடு கட்டும் போது அங்கு இருக்கும் பூச்சி, புழுவை அழிச்சிட்டு தான் வீடு கட்டுறோம். ஒரு அணை கட்டும் போது ஒரு ஊரையே அழிச்சிட்டு தான் அணை கட்டுறோம். அது மாதிரி தான் இதுவும்... எங்க வேலையில் சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். இல்லைங்கல்ல... அதுக்காக இதை விட்டு விட முடியாது."



"அதுக்குன்னு இப்படியா பண்ணுவீங்க? தாதாக்கள், ரௌடிகளை ஆட்சியில் அமர வைப்பீங்களா? அதுக்கான விலையை என் குடும்பம் கொடுத்து இருக்கு." அவளுக்கு அவனால் எப்படி ஆறுதல் சொல்வது? என்று தெரியவில்லை.



"நீ கேட்கும் கேள்விகள் எதற்கும் என்னிடம் பதில் இல்லை. நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்... நீ முதலில் அங்கே இருந்து கிளம்பு..."



"அது முடியாது மாறா... இனி எனக்கு வேலை இங்கே தான்." என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.



சக்திமாறன் மனம் நொந்தவனாய் ஜெகனுக்கு அழைப்பை எடுத்தான். ஜெகன் இங்கே இருக்கும் நிலையை எடுத்து சொல்லி,



"நீ கவலைப்படாதே சக்தி... உன் பிரெண்ட் நம்ம சீஃப் கண்ணில் விரலை விட்டு ஆட்டிட்டாங்க... எதுக்கும் அசராத நம்ம சீஃபே அசந்து போயிட்டாருன்னா பார்த்துக்கோ..." என்று வியந்தான்.



"இருந்தாலும் ஒரே வீட்டில் இருப்பது என்பது..." சக்திமாறனுக்குத் தயக்கமாக இருந்தது.



"சீஃப் பத்தி உனக்குத் தெரியாதா?"



"தெரிந்ததால் தானே சொல்கிறேன்." சக்திமாறன் சலிப்புடன் சொல்ல...



"நான் அவர் கூடவே இருக்கிறவன் சக்தி. அதனால் எனக்கு உன்னை விட அவரைப் பற்றி நன்கு தெரியும்."



"எனக்கு மனசே சரியில்லை. கிளம்பி வரலாம்ன்னா இங்கே வேலை முடியலை..." சக்திமாறனுக்கு ஆற்றாமையாக இருந்தது.



"வேலையை முடிச்சிட்டு வா... இல்லைன்னா அதுக்கு வேற சீஃபோட கோபத்தைப் பார்க்க வேண்டி வரும்."



"ம், அதுவும் சரி தான்." என்ற சக்திமாறன் அழைப்பை துண்டித்தான்.



பிறகு வெகுநேரம் அலைப்பேசியைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான் சக்திமாறன். அவனுக்குச் சிபி சக்ரவர்த்தியிடம் பேச பெருத்த யோசனையாக இருந்தது. ஆனால் தோழிக்காகத் தனது யோசனையைத் தள்ளி வைத்தவன் சிபி சக்ரவர்த்திக்கு அழைப்பை எடுத்தான். மறுபுறம் அழைப்பை எடுத்ததும்,



"குட்மார்னிங் சீஃப்..." என்று அவன் சொல்ல...



"குட்மார்னிங்... வேலை எல்லாம் ஒழுங்கா போகுதா?" சிபி சக்ரவர்த்தி வேலையில் கண்ணாக இருக்க...



"அதெல்லாம் சரியா போகுது சீஃப்..."



"சரி நான் வைக்கிறேன்." என்றவனைக் கண்டு,



"சீஃப் நான் உங்க கிட்ட பேசணும்..." என்று அவசரமாகச் சொன்னான் சக்திமாறன்.



அதைக் கேட்டு சிபி சக்ரவர்த்தி அமைதியாக இருந்தான். அதையே சம்மதமாக எண்ணி கொண்டு சக்திமாறன் பேச ஆரம்பித்தான்.



"சீஃப், பத்து பாவம்..." அவன் அப்படிச் சொன்னதும்,



"ஏனோ?" என்று கிண்டலாய் கேட்டபடி சிபி சக்ரவர்த்தி ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான்.



"நீங்க பண்ணியது தப்பு சீஃப்..." அவன் எப்படியோ தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்துவிட...



"எனக்கே பாடம் சொல்லும் அளவுக்கு நீ வளர்த்துட்டியா?" சிபி சக்ரவர்த்தியின் அமர்த்தலான குரல் அவனது வயிற்றில் புளியை கரைத்தது.



"அப்படி இல்லை சீஃப்..." சக்திமாறன் தயங்க...



"என்னோட இமேஜ்க்குக் களங்கம் விளைவிக்க நினைக்கும் அவளுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டாமா?"



"சீஃப், நான் உங்களை நம்பி தானே..."



"உன் பிரெண்ட் இன்னமும் அப்படியே தான் இருக்கிறாள். ஆனால் அவள் அப்படியே இருப்பதும், இல்லாது போவதும் அவளது கையில்... இல்லை இல்லை அவளது வாயில் இருக்கிறது. அவளை வீட்டை விட்டுப் போகச் சொல்லி ஒரு நாளாகி விட்டது. ஆனால் அவள் போகாது சட்டம் பேசி கொண்டு இங்கேயே இருக்கிறாள். இனி அவளே நினைத்தாலும் என்னிடம் இருந்து தப்ப முடியாது." என்று ஆக்ரோசத்துடன் சொன்னவன் அழைப்பை துண்டித்து விட்டான்.



சக்திமாறன் திகைத்துப் போயிருந்தான். சிபி சக்ரவர்த்தி ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை அந்த ஆண்டவனால் கூட அவனை மாற்ற இயலாது. பத்மவிலாசினியோ அதைவிடப் பிடிவாதமாய் இருக்கின்றாள். இருவரின் மனதினையும் அவனால் மாற்ற இயலவில்லை. இனி என்னவாகப் போகிறதோ? அவனுக்குப் பத்மவிலாசினி நிலை குறித்து மிகவும் பயமாக இருந்தது. பருந்திடம் மாட்டி கொண்ட புறாவின் நிலை என்னவாகப் போகிறதோ? அவனுக்கு உள்ளுக்குள் திக்திகென்று இருந்தது.



சக்திமாறனிடம் பேசிவிட்டு வந்த சிபி சக்ரவர்த்தி நேரே தனது அறைக்குச் சென்றான். அங்குப் பத்மவிலாசினி எழுந்து அமர்ந்து இருப்பதைக் கண்டவன் அவள் முன் வந்து நிற்க... அவள் அவனை ஏறிட்டு பார்த்தாள். உதடுகள் வீங்கி, முகத்தில் நகக்கீறல்களுடன் இருந்தவளை கண்டு அவனது உதடுகள் இளக்காரமாய் வளைந்தது. பின்பு தனது இடக்கை கொண்டு அவளது கரம் பிடித்துத் தூக்கி நிறுத்தியவன் அவள் என்ன, ஏதென்று யோசிக்கும் முன் தரதரவென வெளியில் இழுத்துச் சென்றான்.



"ஏய், என்ன பண்ற?" அவள் திமிறியபடி கேட்க...



அவனோ அவளது கத்தலை கண்டு கொள்ளாது அவளை இழுத்து சென்று அருகில் இருந்த மற்றொரு அறைக்குள் தள்ளி விட்டான். அவன் தள்ளி விட்டதில் அவள் நிலைக்குலைந்து போய் அங்கிருந்த கட்டிலில் மோதி கீழே விழ போனாள். பிறகு அவள் சுதாரித்துக் கொண்டு கட்டிலை பிடித்தபடி அவனைத் திரும்பி பார்த்தாள்.



"நீயே சொல்லிட்ட... இங்கே இருக்க விருப்பம்ன்னு... அதுவும் ஆசைநாயகியா... நீயே சொன்னதுக்குப் பிறகு நான் ஏன் மறுக்கணும்? நீ இங்கேயே தாராளமா இரு. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை." என்றவன் அவளைக் கண்டு கோணல் சிரிப்பு சிரித்தபடி அங்கிருந்து சென்று விட்டான்.



அவனது வார்த்தைகளில் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நேற்றுவரை வீட்டை விட்டு போ போ என்றவன், இன்று இப்படிப் பேசுவது ஏன்? ஏதோ ஒன்று சரியில்லையே... அந்தளவிற்கு அவன் நல்லவன் இல்லையே! அவள் தனக்குள் யோசித்தபடி இருந்தாள். சிறிது நேரத்தில் அவளது பொருட்கள் அனைத்தும் ஜெகனின் உபயத்தில் அந்த அறைக்குக் குடி வந்தது.



மாலை வரை அமைதியாகப் பொழுது சென்றது... அவளுக்கே சற்று ஆச்சிரியமாக இருந்த போதும் அவள் எந்நேரமும் எச்சரிக்கை உணர்வுடன் தான் இருந்தாள்.



***********************



சாம் வகுப்பறையில் கடைசியில் அமர்ந்து பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தியபடி பரீட்சை எழுதும் மாணவர்கள் சரியாக எழுதுகிறார்களா? என்று அவ்வப்போது நிமிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது வசுந்தரா தேவி திடுமென வகுப்பினுள் நுழைந்தாள். எல்லோரும் எழுந்து அவளுக்கு வணக்கம் தெரிவிக்க,



"உட்காருங்க உட்காருங்க..." என்று அமர்த்தலான குரலில் சொல்லியபடி அவள் சாமை தேடி வந்தாள்.



"கிளாஸ் எடுக்காம என்ன பண்ற?" அவள் மிடுக்காய் தோரணையுடன் கேள்வி கேட்க...



"கிளாஸ் எடுக்கலை மேம்... கிளாஸ் டெஸ்ட் வச்சிருக்கேன்." அவன் குரலை தாழ்த்தி மெல்ல பதில் அளித்தான்.



"ஓகே ஓகே..." என்றவள் அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.



அவள் அமர்ந்ததும் சாம் சற்று தள்ளி அமர்ந்தான். அவனது செய்கையை உணர்ந்து அவளும் அவன் பக்கமாய்த் தள்ளி அமர்ந்தாள்.



"ப்ச், என்ன மேம்?" அவன் சலித்தபடி இன்னும் தள்ளி அமர... அவளும் முன்பு போலவே செய்தாள்.



சாம் தலையை உயர்த்தி யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்தவன் மீண்டும் தள்ளி அமர்ந்தான். இப்போது அவன் இருக்கையின் ஓரப்பகுதிக்கு வந்திருந்தான். அவள் அதைக் கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தபடி இன்னும் அவனை நெருங்கி வந்தாள். அதற்கு மேல் தள்ளி அமர முடியாததால் சாம் சட்டென்று எழுந்து நின்று விட்டான். அவள் அதே நமட்டு சிரிப்புடன் அவனைப் பார்த்திருந்தாள். அவன் அங்கிருந்து விலகி சென்று முன்பக்கமாய் மாணவர்கள் கண்ணில் படும்படி நின்று கொண்டான். அதைக் கண்டு அவளுக்குக் கடுப்பாக இருந்தது.



வகுப்பு முடிந்து இருவரும் வெளியில் வந்தனர். வசுந்தரா தேவி அவனைக் கடுப்புடன் தடுத்து நிறுத்தினாள்.



"இப்போ எதுக்கு ஓவரா ரியாக்ட் பண்ற?" என்று அவள் சிடுசிடுவென்று கேட்க...



"நீங்க பண்றது சரியில்லை மேம்... இனி நீங்க இப்படி என்னைத் தொந்தரவு செய்யாதீங்க." அவன் முகத்தில் அடித்தார் போன்று சொல்லிவிட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான்.



வசுந்தரா தேவி அவமானத்தில் முகம் சிவக்க நின்று இருந்தாள். அவளுக்கு அவன் மீது அப்படி ஒரு கோபம் வந்தது. தான் வலிய வந்து பேசுவதால் தான் அவன் தன்னை இளக்காரமாக நினைக்கின்றான் என்று எண்ணி அவள் அவனிடம் இருந்து ஒதுங்கி செல்ல முடிவு எடுத்தாள். முடிவு எடுத்த பிறகு அதைச் செயல்படுத்த தான் அவளுக்கு அத்தனை கஷ்டமாக இருந்தது. அதனால் அவள் சில நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை போட்டு விட்டு வீட்டில் இருந்து பார்த்தாள்.



"எதுக்குடி லீவு போட்டு வீட்டில் இருக்க?" அவளது அன்னை தையல்நாயகி மகளைச் சந்தேகமாய்ப் பார்த்தார்.



"உடம்பு சரியில்லை..." அவள் சலிப்புடன் பதில் சொல்ல...



"தலைக்குக் குளிச்சி நல்லா தானே இருக்க... உடம்பு சரியில்லைன்னு சொன்னா நம்ப முடியலையே."



"ப்ச், வயிறு வலி... அதான் லீவு போட்டேன்." என்று அவள் அன்னையைச் சமாளித்தாள்.



தந்தை இருந்தாலாவது அவரது ஆறுதல் வார்த்தையில் அவளின் மனம் சமன்பட்டு இருக்கும். இப்போது தந்தையும் அருகில் இல்லாதது அவளுக்குக் கை ஒடிந்தது போன்று இருந்தது. அதனால் அவளது மனம் நாய்க்குட்டி போன்று சாமையே சுற்றி சுற்றி வந்தது.



இப்படியே ஐந்து நாட்கள் செல்ல... அவளுக்குச் சாமை காணாது இருப்பது பெரும் தவிப்பாக மாறியது. என்னவென்று புரியாத ஒரு உணர்வு அவளை வந்து தாக்கியதில் அவள் நிலைக்குலைந்து தான் போனாள். அவள் அதைப் பற்றி முழுவதும் ஆராய்ந்து பார்த்த போது அவளது மனம் சாம் பால் சாயத் துவங்கி இருந்ததை உணர்ந்து கொண்டாள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவளது அறிவு ஒத்து கொள்ளவில்லை.



அவள் எழுந்து அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று தனது உருவத்தைப் பார்த்தாள். அவளது விழிகளுக்கு அவள் அழகியாகத் தான் தெரிந்தாள்.



"உன் அழகு என்ன? உன் அந்தஸ்து என்ன? போயும் போயும் அந்தச் சோடாப்புட்டியவா விரும்புற? அவன் எல்லாம் உனக்கு வொர்த் இல்லை..." 'ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போல் அவள் சாமை நினைத்துத் தனக்குத் தானே சொல்லி கொண்டாள்.



இனி சாமை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று அவள் உறுதியாக முடிவு எடுத்தாள். அறிவு ஒன்று எண்ணினால்... மனம் ஒன்றை எண்ணுமே! மனதிற்குக் கடிவாளம் போட அவளால் முடியுமா!



***********************



சிபி சக்ரவர்த்தி அன்று மாலை அதிசயமாக வீட்டில் இருந்தான். அவன் வீட்டில் இருப்பதை அறிந்தும் பத்மவிலாசினி அவனைக் கண்டு கொள்ளாது அங்கிருந்த உணவு மேசையில் அமர்ந்து கொண்டு ஆப்பிளை வெட்டி உண்டு கொண்டு இருந்தாள். அவன் அவளது ஒவ்வொரு செய்கையையும் கோணல் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். அவளும் அவனது சிரிப்பை யோசனையாய்ப் பார்த்திருந்தாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளவில்லை.



"ஜெகன்..." சிபி சக்ரவர்த்தி ஜெகனை அழைத்தான்.



"எஸ் சீஃப்..."



"இன்னைக்கு ஷெட்டி வர்றான்ல... அவனுக்கு ஏத்த மாதிரி டின்னர் ரெடி பண்ண சொன்னேனே... எல்லாம் ஓகேவா?"



"எல்லாம் ஓகே சீஃப்..." என்றவன் சற்று தயங்கியபடி, "சீஃப் பத்மாவை இங்கிருந்து அப்புறப்படுத்திரலாமா?" என்று கேட்க...



"எதுக்கு? ஷெட்டிக்கு டின்னர் பரிமாறப் போறதே அவள் தானே..." என்றவனின் பார்வை திரும்பி அவள் மீது நக்கலாய் நிலைத்தது.



அவள் அதைக் கண்டு கொள்ளாது அமைதியாக அமர்ந்து இருந்தாள்.



"சீஃப், ஷெட்டி பத்தி உங்களுக்கே தெரியும். அவன் பெண்கள் விசயத்தில்..." ஜெகன் முடிக்காது நிறுத்த...



"அதனால் நமக்கு என்ன? அது அவனோட பெர்சனல் விசயம்..."



அதற்கு மேல் ஜெகனால் சிபி சக்ரவர்த்தியிடம் பேச முடியாது போனது. அவன் நேரே பத்மவிலாசினி புறம் வந்தான்.



"பத்மா முதல்ல இங்கிருந்து எழுந்து போ... டின்னருக்கு வர்ற ஷெட்டி பெண்கள் விசயத்தில் ரொம்ப மோசமானவன்... நீ வேற அழகா இருக்க..."



"தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்... ஆனால் ஒரு சந்தேகம்...? அவன் என்ன உன் சீஃபை விடவா பொம்பளை பொறுக்கி?" அவள் நக்கலாய் கேட்க...



"பத்மா..." ஜெகன் கோபத்தோடு சற்று குரலை உயர்த்த...



"ஜெகன் இன்னும் அங்கே என்ன பண்ற? போய் விருந்துக்கான ஏற்பாட்டைக் கவனி..." சிபி சக்ரவர்த்தி அவனைச் சத்தம் போட... ஜெகன் பத்மவிலாசினியை முறைத்துக் கொண்டு சென்று விட்டான். அவளோ அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கி விட்டு அமர்ந்து இருந்தாள்.



சிபி சக்ரவர்த்திப் பத்மவிலாசினியை வன்மத்துடன் பார்த்திருந்தான். அவளும் சளைக்காது அவனது பார்வையைத் தாங்கி நின்றாள்.



அடுத்த ஒரு மணி நேரத்தில் ஷெட்டி ஆர்ப்பாட்டமாய்ச் சிபி சக்ரவர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்தான். சிபி சக்ரவர்த்தியும் அவனை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றான். சிபி சக்ரவர்த்தியின் சில நிழல் வேலைகளுக்கு ஷெட்டி உதவி செய்வான். அதனால் இருவருக்குள்ளும் இறுகிய தொழில் ஒப்பந்தம் இருந்தது. சிபி சக்ரவர்த்திப் பத்மவிலாசினியை அழைத்தான். எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள எண்ணி அவளும் அவன் முன் வந்து நின்றாள். ஷெட்டியின் பார்வை அவள் மீது கிறக்கத்துடன் விழுந்தது. அழகான பெண்ணவளை கண்டதும் அவன் தன்வசம் இல்லை.



"ஷெட்டி, இது பத்மவிலாசினி..." என்று சிபி சக்ரவர்த்தி அவளை அறிமுகப்படுத்தி வைத்தான்.



"யார் இது? உங்க மனைவியா?" ஷெட்டி அவனிடம் கேட்க...



"இவள் என் மனைவியாக இருந்தால்... அவளைச் சைட் அடிச்ச உன்னை இன்னும் உயிரோடு விட்டு வச்சிருப்பேனா?"



"அது வந்து..." ஷெட்டி பயத்தில் மென்று முழுங்க...



"பரவாயில்லை... நீ இவளை தாராளமாகச் சைட் அடிக்கலாம். ஏன்னா இவள் என்னோட ஆசைநாயகி..." என்றான் நக்கல் குரலில், அவளைப் பார்த்தபடி... அவள் எந்த உணர்வும் காட்டாது அமைதியாக இருந்தாள்.



"நீங்க சொல்லி நான் மறுப்பேனா?" ஷெட்டி விகாரமாக இளித்துக் கொண்டே பத்மவிலாசினியை பார்வையால் மேய்ந்தான்.



"டின்னர் சாப்பிட்டுட்டே நாம பேசலாமா?" சிபி சக்ரவர்த்தி அவனை அழைக்க...



"ஷ்யூர்..." என்றபடி ஷெட்டி எழுந்தான்.



இருவரும் உணவு மேசையை நோக்கி செல்ல... பத்மவிலாசினி இறுகி போய் நின்றிருந்தாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.



"ஏய், வந்து பரிமாறு..." சிபி சக்ரவர்த்தி அவளைச் சொடக்கிட்டு அழைத்தான். அவளோ அவனை உறுத்து விழித்தபடி அங்கேயே நின்றிருந்தாள்.



"ஆசைநாயகின்னு சொன்னால் மட்டும் போதாது பேபி... அது மாதிரி நடந்துக்கவும் செய்யணும்."



"அது கட்டிலில் மட்டும் தான்... சாப்பாடு பரிமாறுவதற்கு இல்லை..." அவள் அசையாது அங்கேயே நின்றிருக்க...



சிபி சக்ரவர்த்திக் கோபமாய் அவள் புறம் வந்தவன் அவளது தோள்களை வலிக்கப் பற்றியபடி, "என்னடி, சொன்ன?" என்று கேட்டபடி தன்புறமாய் அவளைத் திருப்பினான். அவளுக்குத் தோள்பட்டை இரண்டும் கழண்டு விடுவது போல் வலித்தது. ஆனாலும் அவள் பல்லை கடித்துக் கொண்டு அமைதி காத்தாள்.



"கட்டிலில் மட்டும் தான் தேவைகளைப் பூர்த்திச் செய்வியா?" அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தபடி ஒரு மாதிரி குரலில் சொன்னவன்,



"ஷெட்டி..." என்று ஷெட்டியை அழைத்தான்.



"சொல்லுங்க சீஃப்..." ஷெட்டி அருகில் வந்தான்.



"உனக்கு டின்னரா சாப்பாடு வேண்டுமா? இவள் வேண்டுமா?" சிபி சக்ரவர்த்திக் கூறியது கேட்டு பத்மவிலாசினியின் உடல் நடுங்கியது.



"சாப்பாடு எப்போதும் சாப்பிடுவது தான்... இந்தப் பெண் தான் இப்போது வேண்டும்..." ஷெட்டி ஈயென்று இளித்துப் பல்லை காட்டினான்.



"அப்போ எடுத்துக்கோ... இவளை இங்கே இருந்து பெட்ரூமுக்கு அழைச்சிட்டுப் போறது உன் சாமர்த்தியம்..." என்ற சிபி சக்ரவர்த்தி அங்கேயே சோபாவில் கால் மேல் கால் போட்டபடி ரிலாக்சாக அமர்ந்து கொண்டான். பத்மவிலாசினி திகைப்புடன் இருவரையும் பார்த்தாள்.



"வா பொண்ணு..." ஷெட்டி அதற்குள் அவளது கையைப் பற்றி இழுத்திருந்தான்.



பத்மவிலாசினி அதிர்வுடன் அரக்கனான சிபி சக்ரவர்த்தியை பார்த்தாள். அவனோ சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தபடி 'இப்போ என்ன பண்ணுவ?' என்ற ரீதியில் அவளை வன்மமாய்ப் பார்த்திருந்தான்.



"தோல்வியறியாதவன் நான்,

பெண்ணிடம் தோற்பேனோ!

நீ தோற்கும் வரை ஓய மாட்டேன்,

மண்டியிடு, உயிர் பிச்சை போடுகின்றேன்."



உயிர் கொல்லும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
சக்திமாறனிடம் பேசிவிட்டு வந்த சிபி சக்ரவர்த்தி நேரே தனது அறைக்குச் சென்றான். அங்குப் பத்மவிலாசினி எழுந்து அமர்ந்து இருப்பதைக் கண்டவன் அவள் முன் வந்து நிற்க... அவள் அவனை ஏறிட்டு பார்த்தாள். உதடுகள் வீங்கி, முகத்தில் நகக்கீறல்களுடன் இருந்தவளை கண்டு அவனது உதடுகள் இளக்காரமாய் வளைந்தது. பின்பு தனது இடக்கை கொண்டு அவளது கரம் பிடித்துத் தூக்கி நிறுத்தியவன் அவள் என்ன, ஏதென்று யோசிக்கும் முன் தரதரவென வெளியில் இழுத்துச் சென்றான்.



"ஏய், என்ன பண்ற?" அவள் திமிறியபடி கேட்க...



அவனோ அவளது கத்தலை கண்டு கொள்ளாது அவளை இழுத்து சென்று அருகில் இருந்த மற்றொரு அறைக்குள் தள்ளி விட்டான். அவன் தள்ளி விட்டதில் அவள் நிலைக்குலைந்து போய் அங்கிருந்த கட்டிலில் மோதி கீழே விழ போனாள். பிறகு அவள் சுதாரித்துக் கொண்டு கட்டிலை பிடித்தபடி அவனைத் திரும்பி பார்த்தாள்.



"நீயே சொல்லிட்ட... இங்கே இருக்க விருப்பம்ன்னு... அதுவும் ஆசைநாயகியா... நீயே சொன்னதுக்குப் பிறகு நான் ஏன் மறுக்கணும்? நீ இங்கேயே தாராளமா இரு. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை." என்றவன் அவளைக் கண்டு கோணல் சிரிப்பு சிரித்தபடி அங்கிருந்து சென்று விட்டான்.



அவனது வார்த்தைகளில் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நேற்றுவரை வீட்டை விட்டு போ போ என்றவன், இன்று இப்படிப் பேசுவது ஏன்? ஏதோ ஒன்று சரியில்லையே... அந்தளவிற்கு அவன் நல்லவன் இல்லையே! அவள் தனக்குள் யோசித்தபடி இருந்தாள். சிறிது நேரத்தில் அவளது பொருட்கள் அனைத்தும் ஜெகனின் உபயத்தில் அந்த அறைக்குக் குடி வந்தது.



மாலை வரை அமைதியாகப் பொழுது சென்றது... அவளுக்கே சற்று ஆச்சிரியமாக இருந்த போதும் அவள் எந்நேரமும் எச்சரிக்கை உணர்வுடன் தான் இருந்தாள்.



***********************



சாம் வகுப்பறையில் கடைசியில் அமர்ந்து பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தியபடி பரீட்சை எழுதும் மாணவர்கள் சரியாக எழுதுகிறார்களா? என்று அவ்வப்போது நிமிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது வசுந்தரா தேவி திடுமென வகுப்பினுள் நுழைந்தாள். எல்லோரும் எழுந்து அவளுக்கு வணக்கம் தெரிவிக்க,



"உட்காருங்க உட்காருங்க..." என்று அமர்த்தலான குரலில் சொல்லியபடி அவள் சாமை தேடி வந்தாள்.



"கிளாஸ் எடுக்காம என்ன பண்ற?" அவள் மிடுக்காய் தோரணையுடன் கேள்வி கேட்க...



"கிளாஸ் எடுக்கலை மேம்... கிளாஸ் டெஸ்ட் வச்சிருக்கேன்." அவன் குரலை தாழ்த்தி மெல்ல பதில் அளித்தான்.



"ஓகே ஓகே..." என்றவள் அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.



அவள் அமர்ந்ததும் சாம் சற்று தள்ளி அமர்ந்தான். அவனது செய்கையை உணர்ந்து அவளும் அவன் பக்கமாய்த் தள்ளி அமர்ந்தாள்.



"ப்ச், என்ன மேம்?" அவன் சலித்தபடி இன்னும் தள்ளி அமர... அவளும் முன்பு போலவே செய்தாள்.



சாம் தலையை உயர்த்தி யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்தவன் மீண்டும் தள்ளி அமர்ந்தான். இப்போது அவன் இருக்கையின் ஓரப்பகுதிக்கு வந்திருந்தான். அவள் அதைக் கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தபடி இன்னும் அவனை நெருங்கி வந்தாள். அதற்கு மேல் தள்ளி அமர முடியாததால் சாம் சட்டென்று எழுந்து நின்று விட்டான். அவள் அதே நமட்டு சிரிப்புடன் அவனைப் பார்த்திருந்தாள். அவன் அங்கிருந்து விலகி சென்று முன்பக்கமாய் மாணவர்கள் கண்ணில் படும்படி நின்று கொண்டான். அதைக் கண்டு அவளுக்குக் கடுப்பாக இருந்தது.



வகுப்பு முடிந்து இருவரும் வெளியில் வந்தனர். வசுந்தரா தேவி அவனைக் கடுப்புடன் தடுத்து நிறுத்தினாள்.



"இப்போ எதுக்கு ஓவரா ரியாக்ட் பண்ற?" என்று அவள் சிடுசிடுவென்று கேட்க...



"நீங்க பண்றது சரியில்லை மேம்... இனி நீங்க இப்படி என்னைத் தொந்தரவு செய்யாதீங்க." அவன் முகத்தில் அடித்தார் போன்று சொல்லிவிட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான்.



வசுந்தரா தேவி அவமானத்தில் முகம் சிவக்க நின்று இருந்தாள். அவளுக்கு அவன் மீது அப்படி ஒரு கோபம் வந்தது. தான் வலிய வந்து பேசுவதால் தான் அவன் தன்னை இளக்காரமாக நினைக்கின்றான் என்று எண்ணி அவள் அவனிடம் இருந்து ஒதுங்கி செல்ல முடிவு எடுத்தாள். முடிவு எடுத்த பிறகு அதைச் செயல்படுத்த தான் அவளுக்கு அத்தனை கஷ்டமாக இருந்தது. அதனால் அவள் சில நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை போட்டு விட்டு வீட்டில் இருந்து பார்த்தாள்.



"எதுக்குடி லீவு போட்டு வீட்டில் இருக்க?" அவளது அன்னை தையல்நாயகி மகளைச் சந்தேகமாய்ப் பார்த்தார்.



"உடம்பு சரியில்லை..." அவள் சலிப்புடன் பதில் சொல்ல...



"தலைக்குக் குளிச்சி நல்லா தானே இருக்க... உடம்பு சரியில்லைன்னு சொன்னா நம்ப முடியலையே."



"ப்ச், வயிறு வலி... அதான் லீவு போட்டேன்." என்று அவள் அன்னையைச் சமாளித்தாள்.



தந்தை இருந்தாலாவது அவரது ஆறுதல் வார்த்தையில் அவளின் மனம் சமன்பட்டு இருக்கும். இப்போது தந்தையும் அருகில் இல்லாதது அவளுக்குக் கை ஒடிந்தது போன்று இருந்தது. அதனால் அவளது மனம் நாய்க்குட்டி போன்று சாமையே சுற்றி சுற்றி வந்தது.



இப்படியே ஐந்து நாட்கள் செல்ல... அவளுக்குச் சாமை காணாது இருப்பது பெரும் தவிப்பாக மாறியது. என்னவென்று புரியாத ஒரு உணர்வு அவளை வந்து தாக்கியதில் அவள் நிலைக்குலைந்து தான் போனாள். அவள் அதைப் பற்றி முழுவதும் ஆராய்ந்து பார்த்த போது அவளது மனம் சாம் பால் சாயத் துவங்கி இருந்ததை உணர்ந்து கொண்டாள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவளது அறிவு ஒத்து கொள்ளவில்லை.



அவள் எழுந்து அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று தனது உருவத்தைப் பார்த்தாள். அவளது விழிகளுக்கு அவள் அழகியாகத் தான் தெரிந்தாள்.



"உன் அழகு என்ன? உன் அந்தஸ்து என்ன? போயும் போயும் அந்தச் சோடாப்புட்டியவா விரும்புற? அவன் எல்லாம் உனக்கு வொர்த் இல்லை..." 'ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போல் அவள் சாமை நினைத்துத் தனக்குத் தானே சொல்லி கொண்டாள்.



இனி சாமை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று அவள் உறுதியாக முடிவு எடுத்தாள். அறிவு ஒன்று எண்ணினால்... மனம் ஒன்றை எண்ணுமே! மனதிற்குக் கடிவாளம் போட அவளால் முடியுமா!



***********************



சிபி சக்ரவர்த்தி அன்று மாலை அதிசயமாக வீட்டில் இருந்தான். அவன் வீட்டில் இருப்பதை அறிந்தும் பத்மவிலாசினி அவனைக் கண்டு கொள்ளாது அங்கிருந்த உணவு மேசையில் அமர்ந்து கொண்டு ஆப்பிளை வெட்டி உண்டு கொண்டு இருந்தாள். அவன் அவளது ஒவ்வொரு செய்கையையும் கோணல் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். அவளும் அவனது சிரிப்பை யோசனையாய்ப் பார்த்திருந்தாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளவில்லை.



"ஜெகன்..." சிபி சக்ரவர்த்தி ஜெகனை அழைத்தான்.



"எஸ் சீஃப்..."



"இன்னைக்கு ஷெட்டி வர்றான்ல... அவனுக்கு ஏத்த மாதிரி டின்னர் ரெடி பண்ண சொன்னேனே... எல்லாம் ஓகேவா?"



"எல்லாம் ஓகே சீஃப்..." என்றவன் சற்று தயங்கியபடி, "சீஃப் பத்மாவை இங்கிருந்து அப்புறப்படுத்திரலாமா?" என்று கேட்க...



"எதுக்கு? ஷெட்டிக்கு டின்னர் பரிமாறப் போறதே அவள் தானே..." என்றவனின் பார்வை திரும்பி அவள் மீது நக்கலாய் நிலைத்தது.



அவள் அதைக் கண்டு கொள்ளாது அமைதியாக அமர்ந்து இருந்தாள்.



"சீஃப், ஷெட்டி பத்தி உங்களுக்கே தெரியும். அவன் பெண்கள் விசயத்தில்..." ஜெகன் முடிக்காது நிறுத்த...



"அதனால் நமக்கு என்ன? அது அவனோட பெர்சனல் விசயம்..."



அதற்கு மேல் ஜெகனால் சிபி சக்ரவர்த்தியிடம் பேச முடியாது போனது. அவன் நேரே பத்மவிலாசினி புறம் வந்தான்.



"பத்மா முதல்ல இங்கிருந்து எழுந்து போ... டின்னருக்கு வர்ற ஷெட்டி பெண்கள் விசயத்தில் ரொம்ப மோசமானவன்... நீ வேற அழகா இருக்க..."



"தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்... ஆனால் ஒரு சந்தேகம்...? அவன் என்ன உன் சீஃபை விடவா பொம்பளை பொறுக்கி?" அவள் நக்கலாய் கேட்க...



"பத்மா..." ஜெகன் கோபத்தோடு சற்று குரலை உயர்த்த...



"ஜெகன் இன்னும் அங்கே என்ன பண்ற? போய் விருந்துக்கான ஏற்பாட்டைக் கவனி..." சிபி சக்ரவர்த்தி அவனைச் சத்தம் போட... ஜெகன் பத்மவிலாசினியை முறைத்துக் கொண்டு சென்று விட்டான். அவளோ அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கி விட்டு அமர்ந்து இருந்தாள்.



சிபி சக்ரவர்த்திப் பத்மவிலாசினியை வன்மத்துடன் பார்த்திருந்தான். அவளும் சளைக்காது அவனது பார்வையைத் தாங்கி நின்றாள்.



அடுத்த ஒரு மணி நேரத்தில் ஷெட்டி ஆர்ப்பாட்டமாய்ச் சிபி சக்ரவர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்தான். சிபி சக்ரவர்த்தியும் அவனை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றான். சிபி சக்ரவர்த்தியின் சில நிழல் வேலைகளுக்கு ஷெட்டி உதவி செய்வான். அதனால் இருவருக்குள்ளும் இறுகிய தொழில் ஒப்பந்தம் இருந்தது. சிபி சக்ரவர்த்திப் பத்மவிலாசினியை அழைத்தான். எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள எண்ணி அவளும் அவன் முன் வந்து நின்றாள். ஷெட்டியின் பார்வை அவள் மீது கிறக்கத்துடன் விழுந்தது. அழகான பெண்ணவளை கண்டதும் அவன் தன்வசம் இல்லை.



"ஷெட்டி, இது பத்மவிலாசினி..." என்று சிபி சக்ரவர்த்தி அவளை அறிமுகப்படுத்தி வைத்தான்.



"யார் இது? உங்க மனைவியா?" ஷெட்டி அவனிடம் கேட்க...



"இவள் என் மனைவியாக இருந்தால்... அவளைச் சைட் அடிச்ச உன்னை இன்னும் உயிரோடு விட்டு வச்சிருப்பேனா?"



"அது வந்து..." ஷெட்டி பயத்தில் மென்று முழுங்க...



"பரவாயில்லை... நீ இவளை தாராளமாகச் சைட் அடிக்கலாம். ஏன்னா இவள் என்னோட ஆசைநாயகி..." என்றான் நக்கல் குரலில், அவளைப் பார்த்தபடி... அவள் எந்த உணர்வும் காட்டாது அமைதியாக இருந்தாள்.



"நீங்க சொல்லி நான் மறுப்பேனா?" ஷெட்டி விகாரமாக இளித்துக் கொண்டே பத்மவிலாசினியை பார்வையால் மேய்ந்தான்.



"டின்னர் சாப்பிட்டுட்டே நாம பேசலாமா?" சிபி சக்ரவர்த்தி அவனை அழைக்க...



"ஷ்யூர்..." என்றபடி ஷெட்டி எழுந்தான்.



இருவரும் உணவு மேசையை நோக்கி செல்ல... பத்மவிலாசினி இறுகி போய் நின்றிருந்தாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.



"ஏய், வந்து பரிமாறு..." சிபி சக்ரவர்த்தி அவளைச் சொடக்கிட்டு அழைத்தான். அவளோ அவனை உறுத்து விழித்தபடி அங்கேயே நின்றிருந்தாள்.



"ஆசைநாயகின்னு சொன்னால் மட்டும் போதாது பேபி... அது மாதிரி நடந்துக்கவும் செய்யணும்."



"அது கட்டிலில் மட்டும் தான்... சாப்பாடு பரிமாறுவதற்கு இல்லை..." அவள் அசையாது அங்கேயே நின்றிருக்க...



சிபி சக்ரவர்த்திக் கோபமாய் அவள் புறம் வந்தவன் அவளது தோள்களை வலிக்கப் பற்றியபடி, "என்னடி, சொன்ன?" என்று கேட்டபடி தன்புறமாய் அவளைத் திருப்பினான். அவளுக்குத் தோள்பட்டை இரண்டும் கழண்டு விடுவது போல் வலித்தது. ஆனாலும் அவள் பல்லை கடித்துக் கொண்டு அமைதி காத்தாள்.



"கட்டிலில் மட்டும் தான் தேவைகளைப் பூர்த்திச் செய்வியா?" அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தபடி ஒரு மாதிரி குரலில் சொன்னவன்,



"ஷெட்டி..." என்று ஷெட்டியை அழைத்தான்.



"சொல்லுங்க சீஃப்..." ஷெட்டி அருகில் வந்தான்.



"உனக்கு டின்னரா சாப்பாடு வேண்டுமா? இவள் வேண்டுமா?" சிபி சக்ரவர்த்திக் கூறியது கேட்டு பத்மவிலாசினியின் உடல் நடுங்கியது.



"சாப்பாடு எப்போதும் சாப்பிடுவது தான்... இந்தப் பெண் தான் இப்போது வேண்டும்..." ஷெட்டி ஈயென்று இளித்துப் பல்லை காட்டினான்.



"அப்போ எடுத்துக்கோ... இவளை இங்கே இருந்து பெட்ரூமுக்கு அழைச்சிட்டுப் போறது உன் சாமர்த்தியம்..." என்ற சிபி சக்ரவர்த்தி அங்கேயே சோபாவில் கால் மேல் கால் போட்டபடி ரிலாக்சாக அமர்ந்து கொண்டான். பத்மவிலாசினி திகைப்புடன் இருவரையும் பார்த்தாள்.



"வா பொண்ணு..." ஷெட்டி அதற்குள் அவளது கையைப் பற்றி இழுத்திருந்தான்.



பத்மவிலாசினி அதிர்வுடன் அரக்கனான சிபி சக்ரவர்த்தியை பார்த்தாள். அவனோ சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தபடி 'இப்போ என்ன பண்ணுவ?' என்ற ரீதியில் அவளை வன்மமாய்ப் பார்த்திருந்தான்.



"தோல்வியறியாதவன் நான்,

பெண்ணிடம் தோற்பேனோ!

நீ தோற்கும் வரை ஓய மாட்டேன்,

மண்டியிடு, உயிர் பிச்சை போடுகின்றேன்."



உயிர் கொல்லும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ நானும் நோசன் பிரஸ்க்கான கதை போட்டியில் எனது சிறு பங்களிப்பை அளித்து உள்ளேன். போட்டியில் வெல்வதோ, பரிசு தொகை பெறுவதோ எனது நோக்கமல்ல... இதன் மூலம் எனது வாசகர்கள் வட்டம் விரிவடையும் என்பதற்காகவே இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறேன். பாகம், பாகமாக, பக்கம், பக்கமாக என்னை எழுத சொன்னால் எத்தனை கதைகள் வேண்டும் என்றாலும் எழுதி தள்ளிருவேன். இப்போது குறுநாவல் கூடப் பழக்கமாகி விட்டது. ஆனால் சிறுகதை என்பது, அதுவும் 2000 வார்த்தைகளுக்குள் என்பது எனக்குப் பரிச்சயமில்லாத, சாத்தியமில்லாத ஒன்று. இதுவரை நான் முயற்சி செய்யாத ஒன்று... அதையும் இப்போது மிகவும் முயன்று சாத்தியமாக்கி உங்கள் முன் படைத்து இருக்கிறேன்.

'காட்சிப்பிழையாயின்... செவி கேள்!!!' சாதாரணக் கதைக்களம் தான். என்னுடைய பாணியில் சற்று வித்தியாசமாய்... இது உளவியல் சார்ந்த கதை… அந்த ஆப்சன் இல்லை. அதனால் கற்பனை என்று குறிப்பிட்டு இருக்கிறேன். எப்போதும் என்னுடைய கதைகளில் புதியதாக ஒரு விசயம் மற்றும் ஏதாவது சிறு கருத்தும் இருக்கும்.

இதிலும் அப்படிப்பட்ட ஒன்று இருக்கிறது. இது பற்றி நீங்கள் முன்பே கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? கேள்விப்பட்டு இருந்தால் உங்களது கருத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதையைப் படித்துவிட்டு அங்கேயே உங்களது கருத்துகளோடு, உங்க ரேட்டிங்கிசும் கொடுக்கத் தவறாதீர்கள். ரேட்டிங்க்ஸ் தான் கதையை வெற்றி பெற செய்வதில் முன்னணி வகிக்கிறது. கருத்துகள் மற்றும் ரேட்டிங்க்ஸ் கொடுக்க நமது தளம் போன்றே நீங்கள் உங்கள் இமெயில் ஐடியை மட்டும் நோசன் பிரஸ் தளத்தில் கொடுத்துப் பதிவிடலாம். உங்களது கருத்து மற்றும் ரேட்டிங்க்சை முகநூலை விட நோசன் பிரஸ் தளத்தில் நான் அதிகம் எதிர்பார்க்கின்றேன். உங்கள் எல்லோரது வரவினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

இந்தக் கதையை நான்கு முறை பதிவிட்டு தோற்று… பின்பு தான் எனக்கு உதவி பண்ணினாங்க. நன்றி என்று ஒற்றை வார்த்தையில் நன்றி சொல்லிவிட முடியாது. ஆனால் அதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை. நன்றி கவி 🙏🙏🙏

கதை லிங்க் :

அன்புடன்,
ஶ்ரீகலா :)

C4EBB5E1-82FB-4BB2-B532-81D82F439D96.jpeg
 
Status
Not open for further replies.
Top