All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கதை திரி

Status
Not open for further replies.

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கருப்பழகி”

அத்தியாயம் – 10




“சுகிம்மா! இங்க பாரு அழுகாதடா. உன் மனசு சங்கடப்படும்னு தான் நான் இதெல்லாம் உங்கிட்ட சொல்லலை. ஷிவ் எப்படினு நமக்கு தெரியும். ஏன் வருத்தப்படனும்? உனக்கு பிடிக்கலைனா நாம விஷ்வாவோட இந்த வீட்ட விட்டு போயிடலாம்டா. இங்க நமக்கு வேண்டாம். ஷிவ் நம்ம கைவிட்டு ரொம்ப தூரம் போயிட்டான். திருப்பி வரது கஷ்டம்! உண்மையா சொல்லபோனா அது நடக்காத ஒன்னு. அவனுக்காக ஏன் நம்ம எல்லாரும் கஷ்டப்படனும். உனக்காக நம்ம சிவணா இல்லம் எப்பவும் காத்துட்டு இருக்கு. இப்ப கூட நாம கிளம்பலாம் வாடாமா” என்றார் ராஜேந்திரன்.



“என்னங்க சொல்லுறிங்க! ஷிவ் இப்படி ஆகிட்டானேனு எனக்கு வருத்தம் தான், இல்லைனு சொல்ல மாட்டேன். அதுக்காக அவன் செய்யுற தப்பை எல்லாம் என்னால பொறுத்துக்க முடியாதுங்க. பாருங்க இந்த பொண்ண எப்படி கேவலமா நடத்துறானு. நாம நமக்கு என்னனு சும்மா விட்டா அந்த பாவமெல்லாம் நமக்கு தான். அவன் நம்ம புள்ளங்க அவன் தப்பு செஞ்சா அவன திருத்தி அந்த தப்ப சரி பண்ண வேண்டியது நம்ம கடமைங்க. இந்த பொண்ணுதான் நம்மோட சின்ன மருமக. இவளுக்காகவாது நாம இங்க இருந்து தான் ஆகனும். இவளுக்கான நியாயம் கண்டிப்பா கிடைக்கணும். இந்த பொண்ணு மனசு கஷ்டப்பட்டா நம்ம தலைமுறைங்க நல்லபடியா இருக்க மாட்டாங்க. இவளுக்கு ஒரு நல்ல வழி காட்டாம நாம இந்த வீட்டைவிட்டு நகரக் கூடாதுங்க” என உறுதியாகக் கூறிவிட்டார் சுகுணா.



ராஜேந்திரன் முகத்தில் நிம்மதியுடன் கூடிய புன்சிரிப்பு படர்ந்தது. மனைவியை எப்படிச் சமாளிப்பது என்று அவர் பயந்து கிடக்கையில் புதிதாக வந்திருக்கும் மருமகளுக்காக ஆருயிர் மகனை எதிர்க்கத் துணிந்துவிட்ட அவளை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. “சரிடா சுகி, நான் கூட அதான் யோசிச்சேன் நீ என்ன சொல்வியோனு தான் கொஞ்சம் பயந்தேன். இந்த பொண்ணு தான் நமக்கு மருமக. அவளுக்காக நாம யாரவேனா எதிர்க்கலாம். நம்ம ஷிவ்வா இருந்தாலும் சரி!” என்றார் குரலில் உறுதியுடன்.



“சரி சரி என்ன சமாதானப்படுத்தினது போதும் நம்ம மருமகளைப் பாக்கலாம் வாங்க. அவளுக்கு தாங்க இப்போ ஆறுதல் தேவை. பாவம் சின்ன பொண்ணு, முடியாத குழந்தை எப்புடி சுட்டுட்டான்! மனசே ஆறலை.” என்றவாறே இருவரும் ஷிவேந்திரனின் மனைவியின் அருகில் சென்றுவிட்டனர்.



“ஹம்ம்ம் பேரன் பேத்தி எடுத்ததுக்கு அப்புறமும் உங்க மகனும் மருமகளுக்கும் ஆசை குறையுதா பாருங்க! நடு ஹால்ல எல்லாரையும் வச்சிக்கிட்டு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம கட்டிப்பிடிச்சிட்டு கொஞ்சிட்டு இருக்காங்க.” எனக் கேலியாகக் கூறினார் ரகுவரன். சுகுணாவின் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அழகின் மேல் எப்பொழுதும் ரகுவரனுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. ராஜேந்திரனுக்கு சுகுணா செய்யும் பணிவிடைகளைக் கண்டு ரகுவரனுக்கு பொறாமை தீ கொழுந்து விட்டு எரியும். வீடு அலுவலகம் இரண்டிலும் கணவனுக்கு பக்க பலமாக இருக்கும் அருமையான மனைவி. தனக்கும் ஒன்று வாய்த்திருக்கிறதே!!!! என எப்பொழுதும் பல்லைக் கடிப்பார்.



தர்மேந்திரன் ரகுவரனை நோக்கி மௌனமாக ஒரு பாசப் பார்வை பார்த்து வைத்தார். அரண்டு விட்டார். “கொஞ்சம் ஓவராதான் பேசிட்டோமோ. கிழவன் பார்வையே சரியில்லையே! டேய் ரகு உனக்கு நாக்குல சனி உக்காந்திட்டு நர்த்தனம் ஆடுது. கொஞ்சம் அடங்கினா நீ பொழச்சிக்கலாம்” என மனதினில் எண்ணியவாறே பார்வையை மனைவியை நோக்கித் திருப்பிவிட்டார்.



தர்மேந்திரன் ரகுவரன் “அற்ப பதரே” என்றதொரு பார்வை பார்த்துவிட்டு புகழினியை சூழ்ந்த கொண்ட மகனையும் மருமகளையும் பார்த்தார்.



அன்னம்மா அவர்களை பார்த்து எழுந்து நின்றார். அவரது கண்கள் கலங்கி இருந்தது. சுகுணா அழ வேண்டாம் எனக் கண் சாடை காட்டினார். பிறகு ராஜேந்திரனின் பார்வையைப் புரிந்து கொண்டு இருவரும் புகழினியை தூக்கி நிறுத்தினார். ராஜேந்திரன் ஒரு அலைபேசி அழைப்பு வரவே அதனை எடுத்துக் கொண்டு மனைவியிடம் தலையசைத்து நகர்ந்து சென்றுவிட்டார்..



சுகுணாவும் அன்னம்மாவும் புகழினியை கை தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர வைத்தனர். அவளுக்குக் குடிக்க பழசாறும் உண்ண பிரட் சாண்டவிச்சும் தருவிக்கப்பட்டது. அவளும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் உண்டாள்.



“ஏன் மம்மி, இது அமேசான் காடுகளில மட்டும் கிடைக்கும் அரிய உயிரினம் போல!! அத்தான் பெரிய பிஸ்னஸ் மேன் ஆச்சே அதான் ரேர் பீஸ்னு விடாம கட்டி தூக்கி கிட்டு வந்துட்டாறோ!!! லேப் பர்பஸுக்கு யூஸ் பண்ணுவாறு போல அதான் விடாம அத்தான் அலேக் பண்ணிட்டாறு.” என ஏற்ற இறக்கங்களோடு புகழினியின் தோற்றத்தை எள்ளி நகையாடினாள் விமன்யா. அதனைக் கேட்டு வசுந்தராவும், மேகவதியும் உரக்கச் சிரித்தனர்.



“விமன்யா” என அழுத்தமான குரலில் விளித்தார் சுகுணா. அங்கு உள்ளவர்களுக்கு அவரின் இந்தக் குரல் புதிது. என்றுமே அவர் தன் குரலை உயர்த்தியதில்லை. அவர்களின் வம்பள பேச்சில் சிக்காமல் ஒதுங்கிப் போய் விடுவார். இன்று தான் முதல் முறையாக அவரின் குரல் சுபிக்ஷத்தில் அழுத்தமாக எதிரொலித்துள்ளது.



“இவ என்னோட மருமக அதாவது இந்த வீட்டு சின்ன எஜமானி ஷிவ்வோட பொண்டாட்டி, அதை மனசுல வச்சுக்கிட்டு எல்லாரும் பேசினா நல்லாருக்கும்.” என ஆழ்ந்த குரலில் அந்த ஹாலில் குழுமியிருந்தவர்களை பார்வையால் அளந்தவாறேக் கூறினார்.



“சின்ன எஜமானியா! யாரு இந்த நொண்டி சின்ன எஜமானியா? இதுல ஷிவ்வோட பொண்டாட்டி வேற?? என்ன மாதிரி பொண்டாட்டி இவ!!! என் பேரன் சொன்னத கவனிச்சதானே! உன் மிடில் கிளாஸ் புத்தி உன்ன விட்டுப் போகுமா. யாரு சின்ன எஜமானி? நீயே இங்க ஒண்ட வந்தவ. உனக்கே இங்க அடையாளம் இல்லை. இதுல நீ இவளைச் சின்ன எஜமானினு சொல்ல வந்திட்ட!! கிரேசி லேடி..” என எகத்தாளமாகப் பேசினார் மேகவதி.



“ஹம்ம்ம்ம் ஒண்ட வந்தவ!! இந்த ஒண்ட வந்தவ காலில் விழுந்து கதறி தான் என் குடும்பத்த முப்பது வருஷத்துக்கு முன்னாடி இங்க வரவச்சிங்க, மறந்துடுச்சா?? என் புருஷங்கிட்ட வேணா நாம இதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா? என்ன சொல்றிங்க? ம்ம்ம் என்னோட அடையாளம் என்னனு கேட்டிங்க.. நேர்மையா சுயமா உழைச்சி முன்னேறின சிவகாமி இண்டஸ்டிரீஸ் சேர்மன் அண்ட் எம்.டி ராஜேந்திரனோட மனைவி நான். சிவகாமி இண்டஸ்டிரீஸ் சி.ஒ.ஒ விஷ்வேந்திரன், எ.எ இண்டஸ்டிரீஸ் சி.ஃப்.ஒ ரூபா தேவி அண்ட் உலகம் முழுசும் கொடிக் கட்டிப் பறக்கிற பிஸ்னஸ் சாம்ராட் ஷிவேந்திரனோட அம்மா நான். இதோ இவளுக்கு நான் மாமியார். ஃபைனலி நான் சிவகாமி இண்டஸ்டிரீஸோட ஜெ.எம்.டி சுகுணா ராஜேந்திரன். என்னுடைய அடையாளங்கள் போதுமா??” என அவர்களின் முகத்தில் கருமையை பூசிவிட்டு கம்பீரமாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார் சுகுணா. மறந்தும் அவர் ஷிவேந்திரனை திரன் குரூப்ஸின் எம்.டி என்று உரைக்கவில்லை. அவர்களை ஒதுக்கிவிட்டுத் தன்னுடைய குடும்பத்தை தனி தன்மையுடன் விவரித்ததைக் கண்டு அவர்களின் முகங்கள் யாவும் கொடூரமாக மாறின. ஆனால் அது அவரைச் சற்றும் பாதிக்கவில்லை, தயங்காமல் அவர்களின் பார்வையை எதிர்கொண்டார். அதுவேறு அவர்களை அக்னி பிழம்பாக கொதிக்க வைத்தது.



அன்னம்மா அவர்களின் முகத்தில் ஜொலித்த வன்மத்தில் “அம்மாடியோவ் காலங்காலமா குடியழிச்ச கூனி கூட்டம்டா சாமி இது! சுகுணா அம்மா இப்பயாவது வாய் திறந்தாங்களே அந்த மட்டிலும் சந்தோசம். ஆனா இதுங்க சும்மா இருக்காதுங்களே உடனே சதி ஆலோசனை கூட்டத்தை நடத்தி மக்கள சாய்ச்சிட்டுதானே மறுவேலை பாக்குங்க” என மனதினுள் புலம்பினார்.



புகழினியின் தோளில் ஆதரவாக கைகளை போட்டு “என் மருமக கிட்ட மரியாதையா நடந்துக்கனும், நடக்கல? நான் நடக்காததையும் நடக்க வப்பேன். அன்னம்மா அந்த வாக்கிங் ஸ்டிக்ஸ கொண்டு வாங்க” என அழுத்தமான குரலில் இயம்பினார் சுகுணா.



மேகவதியும், வசுந்தராவும் சுகுணாவிடம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிட நினைக்கையில் ராஜேந்திரன் யாரோடு அலைபேசியில் உரையாடிவிட்டு வந்தார். அவர்களைப் புருவம் சுருங்கப் பார்த்தவாறே மனையாளை நெருங்கினார்.



மாமானாரின் முன் அமருவதற்கு புகழினி சங்கடப்பட்டு, எழுந்து கொள்ள முற்பட்டாள். சுகுணா லேசான கண்டிப்பான புன்னகையுடன் அவளின் தோளை அழுத்தி மறுபடியும் அமர வைத்தார்.“என்னடாம்மா, சாப்டியா இப்ப கொஞ்சம் தெம்பா இருக்கா? இன்னும் கொஞ்சம் எதாவது சாப்பிடிறியாமா” எனப் பாசத்துடன் தலையை வருடியவாறு கேட்டார் ராஜேந்திரன்.



“வேண்டாங்கெ மாமா, இப்பத்தேன் அன்னம்மா ஆத்தாவும், அத்தெயும் சூஸும், பன்னு ரொட்டியும் தந்தாய்ங்க.” என மண் மனம் மாறா தெக்கித்தி தமிழில் மெல்லிய குரலில் வெள்ளந்தியாக சிரித்தபடி பதில் கூறினாள்.



கணவனால் சூடுபட்டு, தள்ளுபட்டு, அவமானப்பட்டு அழுது கரைந்தவள் தான்! ஆனாலும் அதையல்லாம் நொடிப் பொழுதில் மறந்துவிட்டு வெள்ளந்தியாக சிரிக்கும் இந்த அப்பாவி பெண்ணையா தன் மகன் வஞ்சிக்கிறான். விடமாட்டேன் இன்னொரு சிவகாமியை இந்த சுபிக்ஷத்தில் உருவாக நான் விடமாட்டேன்! என மனதிற்குள் சூளுரைத்தார் ராஜேந்திரன்.



“உனக்கு என்ன வேணாலும் எங்ககிட்ட கேளுடா ராஜாத்தி, நீயும் எங்களுக்கு இன்னொரு மக தான்! உனக்கு இங்க எல்லா உரிமையும் இருக்கு, எங்கள மீறி உன்னை யாரும் இனிமே எதுவும் செய்ய முடியாதடாமா. அப்படி யாராவது உன் மனச சங்கடப்படுத்தர மாதிரி பேசுனாலோ நடந்திக்கிட்டாலோ எங்ககிட்ட சொல்லுடா, நாங்க கவனிச்சுக்குறோம்.” என ஆதரவுடன் கூறினார். சுகுணா கணவனின் கூற்றை தலையசைத்து புன்னகையுடன் ஆமோதித்தார். அன்னம்மாவுக்கு மனது நிறைந்து விட்டது. கடவுள் புகழினிக்கு கொஞ்சம் கருணை காட்டவே செய்கிறார் என மனதினில் எண்ணி நிம்மதியுற்றார்.



புகழினி கண்களில் நீர் சுரக்க வெண் முத்த பற்கள் பளிரிட கள்ளமின்றி சிரித்து தலையாட்டினாள். ராஜேந்திரனும் சுகுணாவும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் நோக்கிக் கொண்டனர்.



“உன் பேரு என்னடாமா? உன் புருஷன் எதோ ஒரு பேரு சொன்னான், அதுவா உன் பேரு??” என சந்தேகத்துடன் வினவினார் ராஜேந்திரன்.



புகழினி “எல்லாரும் என்ன கருப்பின்னுதேன் அழைப்பாய்ங்க மாமா. ஆனா அது எம்பேரு இல்லெ. எம்பேரு புகழினி தெய்வமங்க” எனப் பெருமையுடன் முகம் விசுவிசிக்கச் சொன்னாள்.



“எவ்வளவு அழகானப் பெயரை எங்க சின்ன குட்டிக்கு வச்சிருக்காங்க. அதுவும் காரணப் பெயர் புகழினி தெய்வமங்கை. நீ நிச்சயம் தெய்வமங்கை தாண்டா! கண்டிப்பா பேரும் புகழோட இருப்படா கண்ணா நீ. நாங்க இனிமே உன்ன புகழினினு தான் கூப்பிடுவோம். எல்லாரும் அப்படிதான் உன்னை இனிமே கூப்பிடுவாங்க” என மனம் உவந்து வாழ்த்தினார் அந்த அன்பு மாமியார் சுகுணா.



“சரி சரி சுகிம்மா, புகழினிக்கு டையர்டா இருக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். காலையிலே சாவகாசமா அரட்டை அடிக்கலாம் உன் செல்ல மருமக பொண்ணுக்கிட்ட” எனக் கேலியுடன் தூங்குவதற்கு ஆயத்தமாகச் சொன்னார் ராஜேந்திரன்.



கணவரை பொய் கோபத்துடன் முறைத்துவிட்டு “நீ வாடா புகழ் நாம ரெண்டும் பேரும் உங்க மாமாவ ஓட்டிவிட்டுட்டு நாம ஜாலியா கதை பேசிட்டே தூங்கலாம்.” என எளிதாக புகழினிக்கு தான் துணையாக இருப்போம் என்று சுட்டிக்காட்டிவிட்டார் சுகுணா.



“பாத்தியாடா புகழ்மா! உன் அத்தை நீ வந்தோன என்னை கழட்டிவிட்டுட்டு உன் கூட கூட்டு சேர்ந்துட்டா! இனிமே உங்க அத்தைக்கிட்ட இருந்து ஒரு வாய் தண்ணி கூட எனக்கு கிடைக்காது, பின்ன எப்படி சோறு கிடைக்கும்!!! “ என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கண்களில் கேலியுடன் கூறினார் ராஜேந்திரன்.



“அத்தைய கோளாறு சொல்லாதிங்க மாமா, அவுக ரொம்ப நல்லவய்ங்க. உங்குளுக்கு என்ன என்ன வேணும்னு கேளுங்க மாமா, நாக்குக்கு ருசியா நான் வக வகயா ஆக்கி போடுறேன்! நான் ஐரமீனு கொழம்பு வச்சா ஊரே மணய்க்கும். நாந்தேன் எங்க வீட்டுல சமைப்பேன், ஒரு ஊருக்கே நிமிஷத்துல ஆக்கிப்புடுவேன் மாமா” என சிரிப்புடன் ஆற்பாட்டமின்றிக் கூறினாள் புகழினி.



“புகழும்மா ஆனாலும் நீ ரொம்ப விவரந்தான் ஒரே நேரத்தில எனக்கும் உங்க அத்தைக்கும் சேர்ந்து குல்லா போடுறியே!” எனக் கிண்டலடித்தார் ராஜேந்திரன்.



“என் மருமக சமத்துக் குட்டி..” எனச் செல்லம் கொஞ்சினார் சுகுணா.



“ஆமா ஆமா கண்டிப்பா சமத்து தான். நல்லா சமைக்கும் போலயே! ஹப்பாடி இனிமே நான் இந்த வீட்டில நல்ல சாப்பாடு சாப்புடலாம்! உன் அறுவை சாப்பிட்டிலிருந்து எனக்கு விடுதலை சுகி. புகழும்மா நீ நல்லா இருப்ப, உங்க அத்தைக்கிட்ட மட்டும் சமையலுக்கு எதுவும் ஐடியா கேட்டுடாதடா. உனக்கு புண்ணியமா போகும்!!!” எனக் கடைசி வாக்கியத்தை மட்டும் இரகசியம் கூறுவது போல் புகழினியின் அருகில் குனிந்து சத்தமாகச் சொல்லி மனைவியைச் சீண்டினார் ராஜேந்திரன்.



“ஓ அறுவ சாப்படா, சரி தான்! புகழ் குட்டி சில பேரு சுகிம்மா பால் பணியாரம் செஞ்சுத்தாயேன், அதிரசம் செஞ்சு தாயேன், மீன் கொழம்பு வச்சித்தாயேன், மட்டன் கோலா செஞ்சுத்தாயேன், கொத்து கறி செஞ்சுதாயேன், வெள்ள சீடை செஞ்சித்தாயேனு வாய சப்புக் கொட்டிட்டு வருவாங்கங்க இல்லை, அப்ப அடுப்புல காயவச்ச தோசை திருப்பியால சப்புக்கொட்டுற அந்த வாயிலயே ரெண்டு சூடு இழுத்துடலாம்! நீ என்னடா சொல்ற குட்டி??” எனக் கணவனை ஒரு மார்க்கமாக பார்த்துபடி புகழினியிடம் வினவினார் சுகுணா.



ராஜேந்திரன் மனைவி போட்ட போட்டில் வெளிப்படையாகவே தனது வாயை இரு கைகளாலும் மூடிக் கொள்ளவும் புகழினி பகிரங்கமாக வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.



குழந்தையன தனது மனக்கிலேசத்தை மறந்துவிட்டு கண்களில் நீர் வரச் சிரிக்கும் அந்த அப்பிராணிப் பெண்ணை கண்டு கண்கள் பனிக்க வாஞ்சையுடன் பார்த்தனர் ராஜேந்திரன் சுகுணா தம்பதியர்.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஷ்ஷ்ஷ்ஷ், மாம் இந்த செண்டிஸ்ஸ நான் படத்துல கூட பாத்தது இல்லை. ஊஊஊஃப்ஃப்ஃப்ஃப் தாங்கலை!” என மனம் பொங்கினாள் விமன்யா. தனது மாமனோ அத்தையோ இது போன்று ஒரு நெருக்கத்தை தன்னிடம் என்றும் காண்பித்தது இல்லை என்பதில் அவளுக்குக் கோபம் மேலிட்டது. அத்தோடல்லாமல் புதிதாக வந்திருக்கும் நொண்டி பெண்ணைத் தூக்கி தலையில் வைத்து ஆடும் அவர்களை வெட்டவா குத்தவா என்று பார்த்து கொண்டிருந்தாள் வசுந்தராவின் அருமை புதல்வி.



“எஸ் விமி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மூதேவி சுகுணா ஷிவ்வை வெறிச்சி பார்த்திட்டு, எங்க அண்ணனை கட்டிக்கிட்டு அழுது சீன் போட்டா. இப்போ பல்லை பல்லைக் காட்டுறா. நம்மையே எதிர்த்து பேசுறா. ஷிவ்வ உரிமை கொண்டாடுறா! உன்னை ஷிவ்கு மேரஜ் பண்ண சொல்லி கேட்டா அண்ணனும் இந்த லோ கிலாஸ் நாயும் முகத்தை ஒரு மொழத்துக்கு தூக்கி வச்சிக்குதுங்க. இப்ப பாரு இந்த ஜந்துவோட இதுங்க ரெண்டும் பாச பயிரை வளக்குறதை! ராஜ் கூடப் பிறந்த தங்கச்சி எங்கிட்ட இப்படி ஒரு நாள் பேசினது உண்டா?? எல்லாம் கொழுப்பு! புருஷனும் புள்ளையும் ஒழுங்கா வாச்சிட்ட கொழுப்பு அந்த மோகினி பேய் சுகுணாவுக்கு” என காந்தினாள் வசுந்தரா. மறந்தும் சுகுணாவை அண்ணி என விளிக்கவில்லை அவள்.



வசுந்தராவிற்கு சுகுணாவின் மேல் என்றும் பொறாமை உண்டு. அழகான அந்தஸ்தானக் கணவன், கெட்டிக்காரப் பிள்ளைகள் அவருக்கு அமைந்து விட்டதில் அவள் ஆத்திரம் கொண்டாள். அதிலும் ஷிவ்வை போன்ற ஒரு தொழில் சாம்ராட்டினை பெற்ற பெருமை அவளைச் சேருவதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை.. அவனைத் தனது மகளுக்கு மணமுடித்து வைத்து அவன் பெருமையில் இவர்கள் குளிர் காய வேண்டும் எனக் கணக்கிட்டாள். அவனோ நீயெல்லாம் எனக்கு ஈடா என்கிற ரீதியில் பார்த்துவிட்டு போய்விடுவான். அதில் அவளுக்கு எல்லை இல்லா வருத்தம் உண்டு. பய மசிய மாட்டேங்கிறானே!!! என அங்காய்லிப்பாள்.



“வசு விம்மி! ராஜ் இருக்கான் மைண்ட் இட். நாம அப்புறம் பேசிக்கலாம்” என அடிக் குரலில் சீறினார் மேகவதி. அவருடைய பயம் அவருக்கு. மற்ற இருவரும் தங்கள் வாயைக் கப்பென்று இறுக மூடிக் கொண்டு அவர்களை முறைத்து வண்ணம் இருந்தனர்.



தர்மேந்திரன் யோசனையோடு மகன், மருமகளை, புகழினியை பார்த்துக் கொண்டிருந்தார். ரகுவரன் வாயைத் திறப்பதுமாக மூடுவதுமாக இருந்தார். அவரால் ராஜேந்திரன் முன்பு நினைத்ததைப் பேசிவிட முடியுமா!!! அதோடு தர்மேந்திரன் பார்த்த பாசப் பார்வையில் அவருக்கு உதறல் எடுத்தது.



கீழே ஹாலில் நடைபெறும் அத்தனை களேபரங்களுக்கும் காரணமானவன் முதல் தளத்தில் தனது குளியரையில் ஷவரின் கீழே நின்று கொண்டிருந்தான். ஷிவேந்திரனின் நெஞ்சுக் கூடு வேகமாக ஏறி ஏறி இறங்கியது, மூச்சுக்களை ஆழ இழுத்து வெளியே விட்டான். அவனது தேக்கு மர தேகத்தில் நீர் வழிந்தோடியதைக் காண வெகு கவர்ச்சியாக இருந்தது. எந்தச் சூட்டினை தணிக்க மணிக்கணக்கில் நீருக்கடியில் நின்றானோ தெரியவில்லை!! ஒருவாறாகக் குளித்து முடித்து இடுப்பில் ஒரு பெரிய டர்க்கி டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தான். ஃபிரிட்ஜில் இருந்த டின் பியரை உடைத்து தன்னுடைய தொண்டையில் சரித்து கொண்டு, பால்கனியில் நின்று புலரவிருக்கும் அதிகாலை பொழுதினை வெறித்துப் பார்த்தான்.



அவனுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவனது முகத்தில் எள்ளல் சிரிப்பு. தமிழ்நாட்டின் நம்பர் ஒன் தொழிலதிபனுக்கு ஆள் அம்பில்லாமல் திருமணம் நடந்து முடிந்துவிட்டதா! அவனது தாடை இறுக, கருப்பிஈஈஈஈ!!! எனப் பல்லை கடித்தான். அவனது கைகளில் இருந்த காலி டின் பியர் குடுவை நசுங்கியது.



ஷிவேந்திரனின் கைபேசி சிணுங்கியது, எடுத்து பார்த்தான் ஒரு அழகிய அதிரூப சுந்தரியின் படமும் பெயரும் அதில் மின்னியது.. அவனை மணக்க காத்திருக்கும் அழகிய கிளி.. அரண்மனை கிளி! தன் கைபேசியை அணைத்து தூக்கி படுக்கையில் வீசி எறிந்தான்.



ஆறு பியர் டின்களை காலி செய்த பின் படுக்கையில் சென்று விழுந்தான். அவன் மனையாளுக்கு அவன் தாலி கட்டிய காட்சி அவன் மனக்கண் முன் படமாக ஓடியது. அந்த விழிகள்! நீர் தளும்பிய அந்த விழிகள்! தன் கண்களை மெதுவாக மூடிக் கொண்டான் ஷிவேந்திரன்.



அன்னம்மாவிற்கு புரிந்தது புண்பட்டிருக்கும் இந்த சிறு பெண்ணுக்காக தங்கள் காயங்களை மறைத்துக் கொண்டு அவர்கள் கலகலக்கிறார்கள் என்று. அவளை மீட்கவே இந்த முயற்சி. மேன் மக்கள், மேன் மக்கள் தான்! ஆயினும் புகழினி அழுகினி பிள்ளை அல்லவே! வெகு சீக்கிரமாக தன்னைச் சூழ்நிலைக்கு பொருத்திக் கொண்டாளே. அவளுக்கு அவ்வாறான சூழ்நிலைகள் வெகுவாக பழக்கமோ??? எப்படி ஜீரணிக்கிறாள் இந்தச் சின்ன பெண்!!! அன்பான பண்பான பெண். ஆனால் வாய்த்த மணாளன் ஆணழகனாக இருந்து என்ன பிரயோசனம், அவளுக்கு அனுசரணையாக இல்லையே.. ஹ்ம்ம்ம் என மனதிற்குள் பெருமூச்சு விட்டார்.



“அன்னம்மா, அன்னம்மா, என்ன விடிய பொழுதுலியே கனவோ. நல்ல படியா கனவு காணுங்க கடவுள் நடக்கட்டும்னு அருள் புரிஞ்சிடுவாறு” என்றார் ராஜேந்திரன்.



“ஹிஹிஹி அப்படியல்லாம் இல்லங்கய்யா” என்றார் அன்னம்மா சற்று நெளிந்தவாறு.



“சரிடாமா நேரமாச்சு தூங்க போகலாம்” என்றார் சுகுணா. புகழினியை கைதாங்கலாக தூக்கிவிட்டனர் அன்னம்மாவும் சுகுணாவும். அவளுடைய ஊன்றுகோலை வாங்கிக் கொண்டு நகர முற்பட்டாள்.



“கொஞ்சம் இருடா புகழ்” எனக் கூறிவிட்டு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் புகழினியை கைகளில் ஏந்திக் கொண்டார் ராஜேந்திரன். அன்னம்மா திறந்த வாய் மூடாமல் தனது எசமானை பார்த்துக் கொண்டிருந்தார். சுகுணா சிரிப்புடன் கணவனைப் பின் தொடர்ந்தார். அவரது கைகளில் அவளின் ஊன்றுகோல்கள் இருந்தன.



“ம்ம்ம்ம் மூச்ச்ச்ச் பேசக் கூடாது. நான் உனக்கு அப்பாடா என் மகளுக்கு முடியாதப்ப இத கூட செய்யலனா. நான் அப்பானு எதுக்கு இருக்கேன்??? பேசமா இருக்கனும்.” எனக் கண்டிப்பானக் குரலில் கூறினார். புகழினியும் அவரது கண்டிப்பான அன்பில் மனம் நெகிழப் பூவை போல அசராது அவர் கைகளில் இருந்தாள்.



சுகுணா ராஜேந்திரன் தம்பதியரின் அருகிலிருந்த விருந்தினர் அறையில் பஞ்சு மெத்தையில் நித்சலமாக உறங்கிக் கொண்டிருந்தாள். ராஜேந்திரன் மனைவியை விட்டு விட்டு மருமகளுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு போய்விட்டார். சுகுணா அவளைப் படுக்கவைத்து தூங்குமாறு பணித்தார். அவளும் அயர்வின் காரணமாக உறங்கிவிட்டாள். இரவு விளக்கின் ஒளி படர்ந்த இருளை வெறித்தார்.



வழக்கம் போல அதிகாலை 4.30 மணிக்கு விழித்துவிட்டாள் புகழினி. கைகளைக் கூப்பி கண் மூடி “ஆத்தா மீனாட்சி எல்லாரையும் சுகமா வையு ஆத்தா” என மனமார வேண்டி வணங்கினாள். சுகுணா அசந்து உறங்கிக் கொண்டிருந்தார். அவரின் கவனத்தை கவராமல் தன் ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.



முதல் தளத்தின் முடிவிலிருந்த பால்கனியை நோக்கி மெல்ல நடந்தாள். அந்த அலங்கார பால்கனியின் சோபையில் சொக்கி விட்டாள். பால்கனி சுவரின் முன்புறமாக சாய்ந்து கொண்டு புலரும் வானை ஆவலுடன் பார்த்தாள். பல வகையான மலர்களின் மகரந்த வாசம் காற்றில் மிதந்து வந்தது. அவளுக்குத் தேனியின் அந்தக் காலை குளிரும் அதன் இதமும் நினைவில் வந்தது, ஆனால் நிமிடத்தில் தன்னை நிதானப்படித்திக் கொண்டவள் அவளின் ஊன்றுகோல்களை ஒரு பக்கத் தூணில் சாய்த்து வைத்து விட்டு கைகளை விரித்து தலையை மேலே தூக்கி ஆழ மூச்சை உள்ளுக்கிழுத்தாள்.



“தென்றல் காத்தே! தென்றல் காத்தே! சேதி ஒன்னு கேட்டியா??

கன்னிபூவு கண்ணில் நூறு கோலெம் போட்டா பாத்தியா!!

மாமென் மொகத்த பாத்துதேன் வந்து சேர சொல்ல மாட்டியா??

தென்றல் காத்தே! தென்றல் காத்தே! சேதி ஒன்னு கேட்டியா??

கன்னிபூவு கண்ணில் நூறு கோலெம் போட்டா பாத்தியா!!”



என மெல்லியக் குரலில் காலைப் பொழுதில் சில்லென்று வீசிய தென்றலை அனுபவித்துப் பாடினாள்.



லேசாக அவளின் இடது பக்கம் திரும்பிப் பார்த்தால் அவளுடைய ஊன்றுகோல்களைக் காணவில்லை! “ஆத்தீ இம்புட்டு நேரம் இங்கனதானே இருந்துச்சி! எங்கிட்டு போச்சு என மெதுவாக ஒற்றை காலை நொண்டிக் கொண்டு திரும்பியவள் பேயைக் கண்டவளைப் போல மிரண்டு விழித்தாள்.

அவளுக்குச் சூடுபோட்ட சுப்பன்! பால்கனி வாயிற்கதவில் சாய்ந்து ஒரு நின்று கொண்டிருந்தான். ஷிவேந்திரனை அந்த நேரத்தில் புகழினி எதிர்பார்க்கவில்லை.



வெள்ளை ஸ்லீவ்லெஸ் பனியனில் முறுக்கேற்றிய கைகளோ, தின்னெண்று இருந்த பரந்து விரிந்த மார்புகளோ, முட்டி வரை அணிந்திருந்த அடர் நீல ஷர்ட்ஸ் மறைக்காத அவனுடைய தேக்கு மர கணுக்கால்களோ, முகத்தில் இருந்த அதீத கம்பீரமோ கவர்ச்சியோ எதுவும் அவளின் கருத்தை கவரவில்லை.



“ஆத்தா மீனாட்சி உன்னைய நெதம் வெள்ளி மொளைக்கையில கும்பிடறனே! உனக்கு நெஞ்சுல ஈரமில்லையா?? கையில குச்சி இருந்தப்பவே தட்டி விட்டாக.. எல்லாரும் இருக்கப்ப சூடு வச்சாக,. இப்படி ஒத்தையா வந்து மாட்டிக்கிட்டேனே! என்னய அப்படியே தலை குப்புற இந்த வெளி திண்ணையிலெ இருந்து தள்ளி விட்டுறுவாங்களா!! ஆத்தி வெவரமில்லாம நான் சொப்பனம் கண்டவ கணக்கா வந்துட்டேனே அத்தை மாமாவும் அசந்து உறங்குறாங்கா.. இப்ப என்ன பண்ண???” என பயத்தில் நா உளர்ந்தது புகழினிக்கு. இமை கொட்டி அவளது கணவனை பார்த்து விழித்தாள். அவள் ரூபா தேவியின் பழைய முட்டி வரை அணிய கூடிய இரவு கவுனை அணிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் பெரியதாகவும் தொள தொளப்பாகவும் இருந்தது.



அவளின் ஊன்றுகோல்களை கைகளில் சுழற்றியவாறு அவளின் அருகில் வந்தான் ஷிவேந்திரன். தலையைத் தாழ்த்தி கொண்டாள். அவளின் தலையில் தன்னுடைய மார்பகம் இடிக்கும் அளவு நெருங்கி நின்றான். பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள் புகழினி. குனிந்து அவளைப் பார்வையிட்டவன் இரு முறை சொடக்கிட்டான். அவனின் மேனியில் உரசி அவளின் தலை நிமிர்ந்தது. அவளின் கண்களை உற்று நோக்கியவன் டைகர், ரைனோ எனக் கத்தினான். இரண்டு வேட்டை நாய்கள் பால்கனியின் கீழே தன் எசமானனின் கட்டளைக்காக தன் கோரப் பற்களை காட்டி தன்னுடைய வாலை ஆட்டியவாறே அண்ணாந்து பார்த்தன.



புகழினியை ஒரு முறைத் தலை முதல் கால் வரை பார்த்துவிட்டு கீழே இருந்த நாய்களைப் பார்த்து “கேட்ச் இட்” எனக் கத்தியபடி அவளின் ஊன்றுகோல்களைக் கீழே அவற்றை நோக்கி வீசினான். அவை அவற்றைத் தரையில் இருந்து கவ்வி இழுத்துக் கொண்டு ஓடின. புகழினிக்கு முதுகு தண்டு சில்லட்டிது, எவ்வளவு பெரிதாக இருக்கின்றன! அவளின் உயரத்துக்கு அல்லவா வளர்ந்து இருக்கின்றன! தன்னுடைய ஊன்றுகோல்??? ஷிவேந்திரன் அவளின் மருண்ட முகத்தைப் கண்ணுற்று லேசாக உதட்டைச் சுழித்துவிட்டு போய்விட்டான்.



புகழினிக்கு ஒன்றும் புரியவில்லை. மெதுவாக நொண்டிக் கொண்டு பால்கனியின் வாயிலை அடைந்தாள். பிறகு சுவரை பற்றியபடி மெதுவாக நடந்தாள். அன்னம்மா ஆவி பறக்கும் காபி கோப்பைகளுடன் அவளின் முன்னே வந்துவிட்டார். சுகுணாவும் அவளைத் தேடி அறை வாசலுக்கே வந்துவிட்டார்.



“புகழ்மா என்னடா இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிட்ட, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ல. ஆமா எங்க போயிருந்த நீ?? நான் பயந்துட்டேன்” எனச் சற்று பதட்டத்துடன் கூறினார்.



“ஒன்னுமில்ல அத்தே வெள்ளி மொளக்கிறதை பாக்க எனக்கு எப்பவும் புடிக்கும்! அதேன் அங்குன போய் பாத்தேன். எனக்கு நெதமும் இந்த நாழிக்கு ஏந்திருச்சு தான் பழக்கம் அத்தெ.” என்றாள் உற்சாகத்துடன் புகழினி.



“சரிடா இந்தா இந்த காஃபி எடுத்துக்கோ” எனக் கூறிக் கொண்டு அவளிடம் ஒரு காபி கோப்பையை நீட்டினார்.



“பால் காபியா அத்தே! மணக்குது! எங்க வீட்டுல நான் நீராகாரம்தேன் குடிப்பே(ன்). மத்தவங்ய்கதேன் காபி குடுப்பாய்ங்க” என்றாள் சிறு சிரிப்புடன் காபியை நுகர்ந்து கொண்டே.



சுகுணாவும் அன்னம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



“அன்னம்மா ஆத்தா காபி மணமா ருசியா நல்லா இருக்கு!” என மனமார பாராட்டினாள். அன்னம்மா அதனை சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார்.



“புகழ் கண்ணா பால்கனிக்கு போனது சரி, உன் வாக்கிங் ஸ்டிக் எங்க?? அத எடுத்துட்டு போயிருக்கலாம்ல??” என வினவினார் சுகுணா. புகழினி தலையை குனிந்து கொண்டாள். என்னவென்று சொல்வாள் “என் புருசன் தூக்கி நாய்க்கு விசிறிட்டாறுனா!”.



சுகுணா புகழினிடம் நெருங்கி அவளின் நாடியில் கைவைத்து அவளின் முகத்தை நிமிர்த்தி அவளைக் கூர்ந்து நோக்கினார். அதில் கவலை தென்பட்டது. மருண்ட விழிகள் ஷிவேந்திரனை அவருக்குச் சுட்டிக்காட்டியது. அவள் வாய் திறக்க மாட்டாள் என்பதில் அவருக்கு வெகு உறுதி. இருப்பினும் இப்படியே விட்டுவிடல் ஆகாதே!



“புகழ்மா உனக்கு எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அத்தை மாமா கிட்ட சொல்லுடா. நாங்க இருக்கோம். எதுக்கும் பயப்படுற! சொல்லு எங்க உன் வாக்கிங் ஸ்டிக்??? ஷிவ் வந்தானா?? உன்ன பாத்தானா??” என அவளிடம் அமைதியான குரலில் வினவினார் சுகுணா.

சுகுணா சரியாக கணித்ததில் ஆச்சரியத்துடன் அவரை நோக்கினாள் புகழ். அதற்குள் ராஜேந்திரன் அவர்களை நோக்கி வந்தார். சிரிப்புடன் சற்று நகர்ந்து நின்றாள் புகழினி. சுகுணா அவசரமாகக் கணவனின் காதுகளில் எதோ கிசுகிசுத்தார். அவரின் தாடை இறுகி அவரின் முகம் யோசனைக்கு உள்ளானது.

“புகழ் மாமாக்கு ஒரு சின்ன வேலை இதோ வந்துடுறேன்” என அவளிடம் சிரிப்புடன் விடைபெற்றுச் சென்றார். அவர்கள் யாவரும் தங்கள் பொழுதைத் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர்.

காலை ஏழு மணி! டைனிங் ஹாலில் மொத்த குடும்பமும் குழுமி இருந்தன. புகழினியும் சுகுணாவும் தான் எஞ்சினர். ஷிவேந்திரன் அப்பொழுது தான் வந்தமர்ந்தான். அவனுடைய பி.ஏ ஆண்டோ அவனுக்கான அன்றைய வேலைகளை அவனிடம் மெல்லிய குரலில் பட்டியலிட்டான்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ட்ட்ட்ட்ட்ட்க் ட்க்க்க்க் ட்க்க்க்க்க் ட்க்க்க்ட் க்க்க்க்” எனச் சப்தம் எழுப்பியது அந்த புது வாக்கிங் ஸ்டிக். எல்லோரும் அவளை அசுவாரசியத்தோடு திரும்பி பார்த்தனர். அடர் நீல நிற மைசூர் பட்டில் ஃபெரன்ச் பிளாட் பின்னலிட்டு தலையில் இரு பக்கமும் மல்லிகை பூ தவழ முகத்தில் சிறு சிரிப்புடன் விந்தி விந்தி நடந்து வந்தாள் புகழினி. எல்லோர் முகத்திலும் ஆச்சரியம்! ஒரே இரவில் அவளுடைய மாற்றம் வியப்புக்குரியது தான். ஆனால் அதனை முகத்தில் காண்பிக்காமல் அலட்சியத்தோடு அவளைப் பார்த்தனர்.

ஷிவேந்திரனின் திருவிளையாடலை அறிந்து கொண்ட ராஜேந்திரன் பல்லை கடித்துக் கொண்டு தனது நண்பனுக்கு அழைத்து புகழினிக்கான பிரத்தியேகமான ஷூ மற்றும் வாக்கிங் ஸ்டிக்கை இரண்டு மணி நேரத்துகுள் கொண்டு வருமாறு பணித்தார். புகழினி முதலில் அந்தப் பிரத்தியேகமான காலணியை அணிந்து கொள்ள தயங்கினாள். பின்னர் சுகுணா வற்புறத்தவும் அணிந்து கொண்டாள்.

அவளுக்கு பேரானந்தமாக இருந்தது! அந்த ஆனந்தம் அவளின் முகத்துக்குத் தனி களையைக் கொடுத்தது. ஷிவேந்திரன் அவளின் பக்கம் திரும்பவில்லை.

ஷிவேந்திரனின் பக்கத்தில் அமர்ந்திருந்த விஷ்வேந்திரனின் மகன் சந்தோஷை எழுப்பி வேறு இடத்தில் அமர வைத்துவிட்டு புகழினியை அங்க அமருமாறு சொன்னார் சுகுணா. புகழினி மறுத்தாள்.

அப்பொழுது குதிகால் செருப்பு டொக் டொக் டொக் என சப்தம் எழுப்ப ஒரு அரேபியன் குதிரை போல் நடந்து இறுக்கிப் பிடித்த டிஷர்டும், ஜீன்சுமாக நடந்து வந்தாள் அவள்!

யாரையும் சட்டை செய்யாமல் ஷிவேந்திரனை நெருங்கி அவனின் பின்னால் இருந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அவனின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள்.

புகழினி மனம் பதற முகம் திருப்பி கொண்டாள். அவளும் பெண் தானே! ஆசை கொண்டு மணக்கவில்லை தான்! அவளை கொடுமை செய்பவன் தான்! ஆனால் அவன் அவளது கணவனாயிற்றே! அவளின் இதயம் தாறுமாறாக துடித்தது. கண்களில் நீர் மல்கி காட்சிகள் மங்கலாயின.



துடிக்கும் இதயம்! துடிக்கா நொடிகள்!



கருப்பு அழகி வருவாள்…



 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே 🙏

கஜா புயலில் டெல்ட்டா பகுதிகளில் கடுமையான பாதிப்புகள். கண் கொண்டு பார்க்க முடியவில்லை. மீடியா சுத்தமாக கை கழுவிவிட்டது. நிவாரணங்கள் சரியாக சென்று அடையவில்லை. உணவு, தண்ணீர் தட்டுப்பாடு. முக்கியமாக பணத் தட்டுப்பாடு இருக்கிறது.

SRM Valliamai college students சேர்ந்து FUND கலெக்ட் செய்கிறார்கள். உங்களாலான உதவி.. அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி.. தயவு செய்து உதவுங்கள் மக்கா...சிறுதுளி பெருவெள்ளம்.

உங்கள் நம்பகத்தன்மைக்காக இதனை ஆர்கனைஸ் செய்யும் மாணவர்களில் ஓரு தம்பியின் ஐடி கார்டை இணைத்துள்ளேன்.

பெயர் : பண்பாளன்.
B. E Civil Final year student.

உழவுக் கூட்டத்திற்க்கு உதவுவோம்! உழவையும், உழவனையும் உயர்த்துவோம் !

#save_delta

FB_IMG_15425367888840945.jpgIMG-20181118-WA0075.jpg
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கருப்பழகி”

அத்தியாயம் – 11

விமின்யாவிற்கு முகம் கருத்துவிட்டது. அவளால் ஷிவேந்திரனை எப்பொழுதும் நெருங்க முடிந்தது இல்லை. நெருப்பாகத் தகிப்பான்! ஆனால் இன்று எவளோ ஒருத்தி, அதிலும் அழகிய வெண் பளிங்கு சிலை போன்று இருப்பவள், அவனைக் கட்டித் தழுவி முத்தம் கொடுக்கவும் அவளுக்கு அடி வயிற்றில் பய பந்து சுழன்றது. அவள் கலவரத்துடன் தனது அன்னையை நோக்கினாள். வசுந்தராவோ மகளைவிடக் கலவரமான முகத்துடன் அந்தப் பேரழகியை அளவெடுத்துக் கொண்டு இருந்தாள். ஷிவேந்திரன் ஸ்திரீ லோகன் தான், ஆனால் எந்தப் பெண்ணும் இப்படி வீடு வரை வந்து அவனிடம் பட்டவர்த்தனமாக அனைவரின் முன்னிலையிலும் நெருக்கம் காட்டியதில்லை. அதைவிட கவனிக்கப்பட வேண்டியது, அவன் அந்த நெருக்கத்தை என்றுமே ஊக்குவித்ததும் இல்லை. ஆனால் இன்று! எல்லாம் தலை கீழாக நடக்கிறதே!



“சம்யு டியர், தட் வாஸ் எ ஸர்ப்ரைஸ்” என்றான் ஷிவேந்திரன் மந்தகாச புன்னகையுடன். அந்தப் புன்னகையை சுபிக்ஷ்மே ஆவென்று வாய் பிளந்து வேடிக்கை பார்த்தது. எப்பொழுதும் இறுக்கமான முகத்துடன் வலம் வருபவன், இன்று கவர்ச்சியாய் புன்னகைக்கிறான்! அதிசயம் தான்!!!! ராஜேந்திரனும் சுகுணாவும் மகனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.



“எஸ் டியர் உங்கள பார்த்து ஒன் வீக் ஆச்சு இல்லையா.. உங்கள பார்க்கனும் போல ஒரு ஃபீல், அதான் இந்த சர்பிரைஸ் மார்னிங் விசிட். சோ ஹௌ வாஸ் யுர் டேய்ஸ்?” எனக் ஸ்டைலாக அவன் தோள்களை அணைத்தவாறு அவனின் மேல் சாய்ந்து கொண்டு கேட்டாள் அவள்.



“கமான் ஹேவ் அ சீட், ஹேட் யுர் பிரேக் ஃபாஸ்ட்?? ஹேவ் இட். நாம அப்புறம் மத்தது எல்லாம் டிஸ்கஸ் பண்ணலாம்.” என புகழினிக்காக காலி செய்யப்பட்ட இருக்கையில் அவளை அமர்த்தினான் ஷிவேந்திரன்.



புகழினி தலை குனிந்து கொண்டு மெல்லச் சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள். ராஜேந்திரன் மனைவிக்குக் கண் ஜாடை காட்டவும், புரிந்து கொண்டவராக சுகுணா புகழினியை பின் தொடர்ந்தார்.



மேகவதிக்கு வந்திருக்கும் அழகியை எங்கேயோ பார்த்த ஞாபகம். அவரின் நினைவு பெட்டகத்தில் தேடிக் கலைத்து விட்டார். பாவம் வயதாகி விட்டது அல்லவா! ஆனால் தர்மேந்திரன் ஒரு சில வினாடிகளில் அவள் யாரென்று கண்டு கொண்டார். அதே சாயல்! என மனதிற்குள் எண்ணினார். ராஜேந்திரனும் அவளைக் கண்டு கொண்டார். ராஜேந்திரனுக்கு எதுவோ மனிதனுள்ளே நெருடிற்று, ஆனாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்து இருந்தார்.



அனைவரும் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்துவிட்டு தனது தொண்டையை லேசாக செறுமிக் கொண்டு “தாத்தா ஷி ஸ் சம்யுக்தா தேவி.. உதய்பூர் சமஸ்தானத்தோட ராஜகுமாரி. மை வெரி குட் ஃப்ரெண்ட் அண்ட் பிஸ்னஸ் பார்டனர். சம்யு மீட் மை ஃபாமிலி” என ஒவ்வொருவராக அவளுக்கு அறிமுகப்படுத்தினான்.



ராஜகுமாரியா! என அனைவரும் வாய் பிளந்துவிட்டனர். மேகவதிக்கு இப்பொழுது புரிந்துவிட்டது அவள் யாரென்று.



சுகுணாவை அறிமுகப்படுத்த அவன் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. எல்லோரின் அறிமுக படலத்திற்கு பின் “தாத்தா நானும் சம்யுவும் இன்னும் சிக்ஸ் மன்ஸ்த்ல மேரஜ் பண்ணிக்கலாம்னு டிசைட் பண்ணிருக்கோம்” எனச் சாப்பாடு மேசையில் இருந்த அவளது வலது கரத்தை தனது இடது கரத்துடன் பிணைத்துக் கொண்டு புன்சிரிப்புடன் எல்லோரின் தலையிலும் குண்டை தூக்கிப் போட்டான்.



சம்யுக்தா அனைவரையும் ஒரு அலட்சிய பாவத்துடன் எதிர் கொண்டாள். ஷிவேந்திரனை தவிர அங்குள்ள எவரையும் ஒரு பொருட்டாக அவள் மதிக்கவில்லை.



ஷிவேந்திரன் எல்லோரின் அதிர்ந்த முகத்தையும் தனது கூரிய விழிகளால் அளவிட்டான். தர்மேந்திரன் ராஜேந்திரனை தவிர மற்ற எல்லோரின் முகமும் விழுந்துவிட்டது. சம்யுவின் அலட்சியமும் ஷிவேந்திரனின் இந்த திடீர் அறிவிப்பும் ஏற்படுத்திய பாதிப்பு அவர்களின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.



தர்மேந்திரன் “ஷிவ் கண்ணா உன் விருப்பத்துக்கு இங்கே மறுப்பேது? உன்னோட தகுதிக்கு தகுந்த மாதிரி தான் பொண்ணு செலக்ட் பண்ணியிருக்க. ஐ ஆம் வெரி ஹாப்பி ஃபார் யு கப்பிள்..” என எழுந்து வந்து அவனை ஆரத்தழுவிக் கொண்டார்.



சம்யுக்தாவிடம் “வெல்கம் டு அவர் ஃபாமிலி பிரின்ஸஸ்! யு லுக் வெரி புயுட்டிஃபுல்..” எனச் சிரிப்புடன் புகழ்ந்தபடி கை குலுக்கினார். சம்யுக்தாவோ ஒரு படி மேல போய் “தாங்கஸ் கிராண்ட் பா” எனக் கூறிவிட்டு அவரை கட்டி தழுவி கன்னத்தில் ஆங்கிலேயர் பாணியில் முத்தமிட்டு தனது சந்தோசத்தை பரிமாறிக் கொண்டாள்.



சுகுணாவிற்கு அலுவலகத்தில் இருந்து அலைபேசியில் அழைத்திருந்தார்கள். அன்னம்மாவை புகழினியை பார்த்துக் கொள்ளுமாறு சாடை காட்டிவிட்டு சமையல் அறையில் இருந்து வெளியேறிவிட்டார். இதனைக் கவனித்து கொண்டிருந்த மேகவதி வசுந்தராவை வினயத்துடன் பார்த்தார்.



“ஏய் கருப்பி, ஏய்! இங்க சர்வ் பண்ணாம உள்ள என்ன பண்ணுற?” என எக்காளமாக சப்தமிட்டு அவளை அழைத்தார். அவர் கவனமாக ராஜேந்திரன் ஷவேந்திரனின் பார்வைகளைத் தவிர்த்தார்.



மெதுவாகப் பயந்து கொண்டே புகழினி வெளியே வந்தாள். ஷிவேந்திரனின் உடல் இறுகியது. வசுந்தராவும், விமன்யாவும் மனதிற்குள் சிரித்து கொண்டனர் “இப்ப மாட்டினியா!! இப்ப என்ன பண்ணுவ! இப்ப என்ன பண்ணுவ!!” என மனதிற்குள் குத்தாட்டம் போட்டனர்.



“ஹேய் ஷிவ் எல்லாரையும் இண்ட்ரொடுயூஸ் பண்ண, இவ ரொம்ப முக்கியமானவளாச்சே! உங்க அம்மா வேற இவ இந்த வீட்டுச் சின்ன எஜமானின்னு சொல்லுறா. இவளை இண்ட்ரொடுயூஸ் பண்ணலயா??? ” என நக்கலாக வினவினார் வசுந்தரா.



“சம்யு மீட் மை அன்னிஃபிஷியல் ஃபைப் கருப்பி” என அழுத்தமானக் குரலில் புகழினியை அறிமுகப்படுத்தினான். அவள் வழக்கம் போல் தலை குனிந்திருந்தாள்.



எல்லோருக்கும் தூக்கி வாரிப் போட்டது. ரகுவனுக்கு குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரையேறி விட்டது. ஆக இந்தப் பெண்ணிற்கு இவனின் இந்தத் திருமணத்தை பற்றி முதலிலே தகவல் சொல்லியாகிவிட்டது. வசுந்தராவும், விமின்யாவும் தங்கள் வாழ்க்கை முழுவதுமாக இருண்டுவிட்டது போல் அதிர்வைக் காட்டினர்.



ஷில்பாவின் தங்கை ஷீபா ஷிவேந்திரனை ஒரு தலையாக காதலிக்கிறாள். தனது தங்கையை எப்படியாவது ஷிவேந்திரனுக்கு மணம் முடித்துவிட்டால் திரன் குரூப் மற்றும் சிவகாமி இண்டஸ்டிரீஸ் இவ்விரு சாம்ராஜியங்களை மொத்தமாகக் கைப்பற்றிவிடலாம் என மன கணக்கு போட்டாள். கணக்கு தப்பாகி விட்டதே!



“பெரிய புளியங்கொம்பா புடிச்சிட்டானே” என வயிறெரிந்தாள் ஷில்பா.



இனி தன் தம்பி தனது நாத்தனாரை மணப்பது என்பது வெறும் கனவு தான் என்பதை வருத்தத்துடன் உணர்ந்து கொண்டாள் ரூபாதேவி. அதிலும் சம்யுக்தாவின் அலட்சியம் அவளுக்குத் தலைவலியை கொடுத்தது. “இந்தத் திமிர் பிடிச்சவ எனக்கு பிறந்த வீடே இல்லாம பண்ணிடுவா போலயே!” என மனதிற்குள் ஆதங்கப்பட்டாள்.



“ஓ எஸ்! சொன்னிங்களே ஷிவ்.. கருப்பி மீன்ஸ் பிளாக்கி ரைட். ரீசனபிள் நேம்!!!” எனப் புகழினியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நக்கலாகச் சிரித்தாள் அந்த அரசிளங்குமரி.



புகழினிக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது. தமிழ் வழிக் கல்வி தான் பயின்றாள். அவள் தான் ஆறாம் வகுப்பைக் கூட தாண்டவில்லையே! சம்யுக்தா கூறியது புரியாவிடினும் அவள் குரலில் இருந்த ஏளனத்தை புகழினி புரிந்து கொண்டாள்.



“புகழ்மா நமக்குக் கொஞ்சம் வெளில வேலையிருக்கு வாடாமா போலாம். உங்க அத்தை எங்க??” என வினவியவாறு அவளை அணைவாக அழைத்துக் கொண்டு மனைவியைத் தேடி சென்றுவிட்டார் ராஜேந்திரன்.



ஷிவேந்திரன் செல்லும் அவர்களை உணர்ச்சியற்ற முகத்துடன் நோக்கினான். திடீரென சம்யுக்தா “ஷிவ் நாம வெளில போய் சாப்பிடலாமா? ஐ வாஸ் ரியலி லாங்கிங் ஃபார் அவர் ப்ரைவட் மினிட்ஸ்.” என்றாள் கொஞ்சலானக் குரலில்.



ஷிவேந்திரன் “வைய் நாட் டியர்! தாத்தா வீ ஆர் லீவிங் நௌ. அஃப்டர் நூன் நார்வே கிளையண்ட் மீட்டிங் இருக்கு. எனக்காக கவர் பண்ணுங்க.” எனக் கூறிவிட்டு அவளை இடையோடு அணைத்தவாறே வெளியே சென்றுவிட்டான். ஆண்டோ தனது முதலாளியைப் பின் தொடர்ந்தான்.



தர்மேந்திரன் ரகுவரன் விஷ்வேந்திரன் மூவரும் தங்களது உணவை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பி சென்றுவிட்டனர். மேகவதி, வசுந்தரா, விமன்யா, ஷில்பா நால்வரும் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தனர்.



வீட்டின் தோட்டத்தில் உள்ள கொடி மண்டபத்தில் ராஜேந்திரனும் சுகுணாவும் பூக்களை ரசித்துக் கொண்டிருந்த புகழினியை அளிவிட்டு கொண்டிருந்தனர். தன்னுடைய கவலைகளை இமைக்கும் பொழுதில் மறைத்துக் கொண்டு வலம் வரும் அந்தப் பெண்ணை நினைத்தால் மனம் கனத்தது.



“புகழ்மா உன்னப் பத்தி நீ எதுவும் சொல்ல வேண்டாம், நீ எப்படிப்பட்ட பின்னணி உள்ளவளா இருந்தாலும் என்னைக்கும் எங்களோட மருமக நீ தான். ஆனா ஷிவா உன்ன எப்படி சந்திச்சான்? அதை நீ எங்களுக்கு கண்டிப்பா சொல்லனும்மா..” என்றார் ராஜேந்திரன்.



“ஐயா! இனிமே நான் உங்களை அப்படிதேன் கூப்பிடுவேன், இவுக எனக்கு ஆத்தா. என்னைய மருமகனு சொல்லிப்புடாதிய அப்புறம் உங்க மயென் அடிச்சிப்புடுவாக” எனக் கேலியுடன் கூறினாள்.



ராஜேந்திரன் அவளை ஆழ்ந்து பார்த்தார். அவள் உதட்டைக் கடித்து கொண்டு தலை கவிழ்ந்தாள். சுகுணா கணவனைப் பார்த்து வேண்டாம் எனத் தலையசைத்தார்.



“புகழ்மா நேத்து எனக்கு வகை வகையா சமைச்சி போடுறேனு சொன்ன, இப்ப இங்க நின்னுட்டு வேடிக்க பாத்துட்டு இருக்க! பாத்தியா உன் ஐயாவ ஏமாத்திட்ட..” எனக் கேலியாக பேச்சை மாற்றினார். அவர் எதிர்பார்த்தபடியே புகழினியின் முகம் பூவாக மலர்ந்துவிட்டது.



“அச்சோ மா.. ஐயா நான் மறந்தே போயிட்டேன். அன்ன(ம்) ஆத்தா எனக்கு செட்டிநாட்டுக் கோழி கொழும்பு செய்யச் சொல்லி தாரேனு சொன்னாக.. இந்தா நான் போயிட்டே இருக்கேன்” எனச் சிரித்தபடி நகர்ந்தாள்.



உற்சாகத்துடன் செல்லும் அவளை இரக்கத்துடன் பார்த்தனர் இருவரும். எதிர்காலம் கேள்வி குறியான பின்பும், கவலைகளை மறந்து பட்டாம் பூச்சியாகச் சிறகடிக்கும் அவளுடைய குணம் அவர்களை ஈர்த்தது. மாமா என்று விளிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஐயா என மாற்றி அழைத்தபோது அவளின் முகம் ஒரு நொடி கன்றியதை இருவரும் கவனித்தும் கவனியாதவர்களாக சிரித்தனர்.



“ஹ்மம்ம்ம்ம்ம்ம்” எனப் பெருமூச்சு விட்டார் சுகுணா. அவர் அங்கிருந்த இருக்கையில் அலங்கார மர இருக்கையில் அமர்ந்தார்.



“சுகிம்மா அந்த பொண்ணு சம்யுக்தாவ பத்தி நீ என்ன நினைக்கிற” என வினவினார் ராஜேந்திரன். அவரது கேள்வியில் கணவனை முகத்தைக் கூர்ந்து பார்த்தார்.



“உதய்பூர் சமஸ்தானத்தோட ராஜகுமாரின்ற விஷயத்தைத் தவிர உனக்கு அந்த பொண்ண பத்தி வேற எதாவது தெரியுமா?”.



‘இல்லை’ எனத் தலையசைத்தார் சுகுணா.



“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி என்னை மாப்பிள்ளை கேட்டு ஒரு ராஜ பரம்பரையில் இருந்து வந்தாங்கன்னு சொன்னேன்ல, அது உதய்பூர் சமஸ்தானம் தான்.” என மெல்லிய குரலில் மனைவியை ஆழ்ந்து நோக்கியவாறுக் கூறினார்.



சுகுணாவின் புருவங்கள் உயர்ந்தன, ஆனால் முகத்தில் எவ்வித மாறுதலையும் காண்பிக்கவில்லை. மனைவியைக் கவனித்து கொண்டிருந்த ராஜேந்திரனுக்கு மனைவியின் இந்த மாற்றத்தைக் கண்டு பெருமையாக இருந்தது. திருணனமானப் புதிதில் இவ்வாறு கூறியிருந்தால் ‘ஐயோ’ என நெஞ்சை பிடித்துக் கொண்டு அழுதே கரைந்திருப்பார். ஆனால் இன்று அமைதியுடன் உள்வாங்கிக் கொள்ளும் இந்த சுகுணா, ராஜேந்திரனின் மனைவி மட்டுமல்ல சிவகாமி இண்டஸ்டிரீஸின் ஜெ.எம்.டி ஆயிற்றே! மனைவி மறுபடியும் புருவம் உயர்த்தவும் அவர் சகஜ நிலைக்குத் திரும்பினார்.



“இந்த பொண்ண நான் வந்தோன்ன அடையாளம் கண்டுபிடிச்சிட்டேன் சுகிம்மா. ஏனா இந்த பொண்ணு அச்சு அசல் அவளோட அத்தை ராஜகுமாரி ரதிதேவியோட ஜாடை. அந்த ரதிதேவிக்கு தான் என்னை மாப்பிள்ளை கேட்டாங்க.” என நிறுத்தித் தொலை தூரத்தை வெறித்தார் ராஜேந்திரன். அவர் எதையோ சொல்லத் தயங்குவதை புரிந்து கொண்டவராக சுகுணா கணவனின் கைகளை மென்மையாகத் தட்டி கொடுத்தார்.



“வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே”



அந்தப் பேரின்பத்தை அனுதினமும் அடைந்து கொண்டிருப்பவர். காரணம் அவருடைய அன்பு மனைவி சுகுணா அல்லவா! தன்னைப் புரிந்த கொண்டு அரவணைக்கும் தன் மனைவியின் அன்பில் எப்பொழுதும் போல் அவர் கசிந்துருகினார். இந்த அன்பு தானே அவரை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது.



“சுகிம்மா அந்த ராஜகுமாரி ரதிதேவி இப்போ உயிரோட இல்லை. நமக்கு கல்யாணம் நடந்து இரண்டு மாசம் கழிச்சு நாம கொடைக்கானல் போனோம்ல அங்க தான் ரதி கார் ஆக்ஸிடண்ட் ஆகி இறந்துட்டா. மத்தவங்களைப் பொருத்தவரைக்கும் அது ஒரு ஆக்ஸிடண்ட். ஆனா ரதியோட ஃபாமிலிக்கு அது சூசைட். இட் சீம்ஸ் ஷீ வாஸ் எ வெரி குட் டிரைவர்! எவ்வளவோ டைம்ஸ் ரதி அவங்க கொடைக்கானல் ரிசார்ட்கு தனியா டிரைவ் பண்ணிட்டு போயிருக்கா. அன்னைக்கு மட்டும் ரதி கார் பள்ள தாக்குல விழுந்தது ஆக்ஸிடண்ட் இல்லை, தான் விரும்பினவன் தன்னை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி ஏமாத்திட்டு, இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டானேன்ற மன உளைச்சல் தான் அவ சூசைட் பண்ணிக்க காரணம்னு அவங்க முழுசா நம்புறாங்க.” என இறுகிய குரலில் கூறினார்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஓ” என யோசனையுடன் கூறிய சுகுணா, “இந்த விஷயம் ஷிவாக்கு தெரியுமாங்க?” என்று வினவினார்.



“தெரியாதுன்னு நீ நினைக்கிறியா சுகிம்மா! அந்த பொண்ணு உள்ள வந்தப்ப எனக்குப் பயங்கர ஷாக். அவ என்ன ஒரு தினுசா பாத்துட்டு வந்தது. கண்டிப்பா என்னால சொல்ல முடியும் அந்த பொண்ணு கண்ணுல பழி வெறி இருக்கு. பத்தாதுக்கு உன்ன வெளிப்படையாவே முறைக்க வேற செஞ்சுதே, அதை நீ கவனிச்சியா?”



“ம்ம்ம் கவனிச்சேங்க. ஏன் இந்த பொண்ணு நம்மள இப்படி முறைக்குதேனு பாத்தேன். இப்ப தான் காரணம் புரியுது. விஷயம் ரொம்ப சீரியஸ் போல தெரியுதேங்க. நம்ம மட்டும்னா பரவாயில்லை. இப்ப நம்ம புகழ் வேற இருக்கா. அவளை அந்த பொண்ணு சும்மா விடாதுன்னு தோணுது. அவளுக்கு புகழ் பத்தி தெரியுமா?”



“அந்த பொண்ணுக்கும் நம்ம புகழை நமக்கு முன்னடியே தெரிஞ்சிருக்கு. ஷிவ் இந்த மேரேஜ் பத்தி பிரயரா இன்ஃபார்ம் பண்ணியிருக்கான்.”



கணவனும் மனைவியும் எவ்வளவு நேரம் அவ்வாறு அமைதியாக அமர்ந்திருந்தார்களோ ராஜேந்திரனின் பி.ஏ சரவணன் அவர்களைக் காண வந்திருந்தான். இளைஞன் சுறுசுறுப்பானவன். ராஜேந்திரனின் பாலிய நண்பனும் முன்னாள் பி.ஏவுமான சந்திரனின் மகன். தந்தைக்குப் பக்கவாதம் வந்து விட்டமையால் பொறுப்பைத் தானாக முன் வந்து ஏற்றுக் கொண்ட கெட்டிக்காரன்! ராஜேந்திரன் சுகுணா தம்பதியருக்கு அவன் மேல் வெகு பிரியம்.



“குட் மார்னிங் சார், வணக்கம் மேடம்”



“வாங்க சரவணன்” வ ரவேற்றார் சுகுணா.



“குட்மார்னிங் எங் மேன், என்ன விஷயம்?? இன்னைக்கு வீட்டுக்கே வந்திருக்கிங்க. ஓ! முதல்ல உக்காருங்க.” உபசரித்தார் ராஜேந்திரன்.



இது தான் ராஜேந்திரன் சுகுணா தம்பதியர்! தங்களிடம் வேலை பார்க்கும் ஊழினைக் கூட மரியாதையாக விளிக்கும் பண்பு. அவர்களிடம் வேலை செய்பவர்கள் அவர்களின் இந்த மரியாதையான அன்பிற்குக் கட்டுண்டு இருந்தனர்.



“சாந்தி இண்டஸ்டிரீஸ் பத்தின நியூஸ் கேள்விப்பட்டிங்களா சார்?”



“ம்ம்ம் காலையில டிவில நியூஸ் ஓடிட்டு இருந்தது. பிஸ்னஸ் கம்பிலீட் வாஷ் அவுட் போலயே சரவணன். பையன் ரொம்ப நொந்திருக்கனும். பாவம் சின்ன வயசு, ரொம்ப நல்ல பையன். பட் எப்படி திடீர்னு எல்லாத்தையும் பிளாக் பண்ணுற மாதிரி! வாட் இஸ் தி ரீசன்?”



“சார்… அது வந்து… ஷிவ் சார் தான் எல்லாத்தையும் பேக்ரவுண்ட்ல இருந்து ஆப்பிரேட் பண்ணியிருக்காரு.” தயங்கி தயங்கி கூறினான் சரவணன்.



“வாட்!” ராஜேந்திரனின் குரலில் அவ்வளவு அதிர்ச்சி.



“எஸ் சார், பிஸ்னஸ்ல மட்டுமில்ல சார், அவங்க வைஃபோட அஃபையர் விடியோஸ்லாம் நெட்ல போட்டுட்டார். இது தெரிஞ்சு சாந்தனோட அப்பா ஹார்ட் அட்டாக் வந்து நேத்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. சாந்தன் ஷிவ் சார் ஆஃபிஸுக்கு போய் சத்தம் போட்டுருக்காரு, அவரை சாராட பாடிகாட்ஸ் அடிச்சி தூக்கி போட்டுருக்காங்க. இன்னைக்கு எர்லி மார்னிங் சாந்தனோட தங்கைய அவங்க லவ் பண்ண டிரைவரோட வீட்டை விட்டு ஓட வைச்சிருக்காங்க. இந்த விஷயம் அவரோட அப்பாக்கு எப்படியோ தெரிஞ்சு போயிடுச்சு, ம்ம்ம்ம்ம்ம் ஹீ இஸ் நோ மோர் சார். அவரோட அம்மாவுக்கு தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் ஸ்டோரக் வந்திடுச்சி. அண்ட் சாந்தனோட வைஃப் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. ஹர் கண்டிஷன் இஸ் டேம் கிரிட்டிகல். பிழைக்கிறது கஷ்டம்னு நமக்கு தெரிஞ்ச டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க சார்.”



கணவனும் மனைவியும் இறுகிப் போய் அமர்ந்திருந்தனர். ஒரு குடும்பத்தை கொடூரமாக வேட்டையாடிவிட்டு தனது காதலியுடன் உல்லாசமாகச் சுற்றும் தங்களது இளைய மகனை எண்ணி அவர்களுக்கு வேதனையாகவும் வெறுப்பாகவும் இருந்தது. சுகுணா தொண்டையை கனைத்துக் கொண்டு,



“சரவணன்! ஏன் ஷிவேந்திரன் சாந்தன கார்னர் பண்ணுறான்?” வினவினார்.



மனைவியின் ஷிவேந்திரன் என்ற விளிப்பு மனைவி இளைய மகனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டதை புரிந்து கொண்டார் ராஜேந்திரன். அவருக்கு மனம் வலித்தது. தன்னை போல் இருக்கிறான் என்று ஒரு காரணத்திற்காக மனைவி மற்ற பிள்ளைகளை விட அவனின் மேல் அதிக அளவில் பாசம் வைத்திருந்தாள். இன்று அவையாவும் அர்த்தமற்று போய்விட்டதே!



வசந்தனின் சூழ்ச்சியில் சாந்தன் வீழுந்தது, அதனால் ஷிவேந்திரன் பொங்கி எழுந்தது, வசந்த் காணாமல் போனது என ஒன்று விடாமல் ஒப்புவித்தான் சரவணன்.



“வசந்த் எங்க இருக்கான்?” சுகுணா



“மேடம் அவரு ஆள் அப்பவே அப்ஸ்காண்ட் ஆகிட்டாரு, இருந்தாலும் ஷிவேந்திரன் சார் டிரேஸ் பண்ணி இருப்பாருனு நினைக்கிறேன். இட்ஸ் மை ஹண்ச் மேடம்.”



விரக்தியான சிரிப்புடன் “அதுல டவுட்டே வேண்டாம் சரவணன். கண்டிப்பா அவனோட கஸ்டடியில தான் வசந்த் இருப்பான். அவனை என்ன பாடு படுத்துறானோ!”



சரவணன் மௌனமாக நின்றான்.



“என்னங்க நாம சாந்தனோட வீட்டு துக்கதுக்கு போயிட்டு வந்திடலாம்.”



“ம்ம் சரி சுகிம்மா.”



“புகழையும் அழைச்சிட்டு போகலாங்க, என்ன யோசிக்கிறிங்க? இங்க குழந்தையை விட முடியுமா? நாம நம்ம டிரஸ்ட்ல விட்டுட்டு போயிடலாம். ஆனி மேடம் பார்த்துப்பாங்க. என்ன சொல்றிங்க?”



இங்கே புகழினி இருந்தால் உன் பிறந்த வீட்டினர் அவளை வார்த்தைகளால் குதறிப் பிய்த்து எறிந்துவிடுவார்கள் என மறைமுகமாக தன்னுடைய மனைவி கூறுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ராஜேந்திரன்,



“சரிம்மா, புகழ அழைச்சிட்டு போகலாம்.” என சம்மதித்தார்.



“வாங்க சரவணன் போகலாம்.”



“சரி சார்”



அவர்கள் மூவரும் வீட்டின் ஹாலை அடைந்துவிட்டனர். சோபாவிற்கு அருகில் செல்கையில் அன்னம்மாவுடன் புகழினி வெளிப்பட்டாள்.



“ஐயனக்கும், ஆத்தாவுக்கும் சூஸு கொண்டார இருந்தேன். இந்த அண்ணனையும் உங்களோட தோட்டத்துல கண்டேனா, அதேன் அவய்ங்களுக்கும் சேத்து கொண்டாந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டிய!”



“சரவணன், புகழினி தெய்வமங்கை எங்க சின்ன மருமக, ஷிவேந்திரனோட மனைவி. நேத்து தான் கல்யாணம் ஆச்சு.”



சரவணனுக்கு அந்தச் செய்தி அதிர்ச்சி தான். இந்தப் பெண் ஷிவேந்திரனின் மனைவி என்று யாரேனும் கூறினால் சின்ன குழந்தைக் கூட நம்பாது. ஆனால் அதைச் சொல்வது ஷிவேந்திரனின் தந்தை நேர்மையாளர் ராஜேந்திரன் ஆயிற்றே! முகத்தில் எதையும் காட்டி கொள்ளாது, புன்சிரிப்புடன் மரியாதையாக அவளை வணங்கினான்.



“ரொம்ப சந்தோசம் சார். வணக்கம் மேடம்.”



“வணக்க(ம்)ணன் என்னைய மேடமினு சொல்லாதிய.. ஒரு மாதிரி இருக்கு.. புகழினினுனே அழைங்க. இந்தா எல்லாரும் சூஸு எடுத்துக்குங்க, குடுங்க அன்னம்மா ஆத்தா”



“புகழ் குட்டி நீ குடிச்சியா?? நாம இப்போ கொஞ்சம் வெளில கிளம்பனும்டா. வரதுக்கு ராத்திரி கூட ஆகலாம்.”



“நான் குடிச்சிட்டேன் ஆத்தா. ம்ம்ம் சரி ஆத்தா இதோ கிளம்புறேன்” என்றாள் புகழ் உற்சாகமாக. அவள் இது வரையிலும் வீட்டை விட்டு ஊர் சுற்ற என்று எங்கும் சென்றது இல்லை. புது விதமான சந்தோச உணர்வு அவளை ஆட்கொண்டது.



“நல்லது. ஏங்க ஒரு பத்து நிமிஷம் நாங்க வந்துடுறோம். சரவணனுக்கு டிஃபன் எடுத்து வைங்க அன்னம்மா. வாடா புகழ் நாம டிரெஸ் பண்ணிட்டு கிளம்பலாம்.” ராஜேந்திரன்.



“சார் நான் வீட்ல சாப்பிட்டேன், அதான் புகழ் மேடம் ஜுஸ் குடுத்துட்டாங்களே. இதுவே போதும் சார்.”



ராஜேந்திரன் சிறு சிரிப்புடன் தலை அசைத்தார். வெளியே வந்தவர்கள், அங்கே இருந்த செயற்கை நீர் ஊற்றின் அருகே இருவரும் மறைந்தார்போல் ஒதுங்கி நின்றனர். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு,





“சரவணன் ஷிவேந்திரனோட மேரஜ் பத்தி முன்னடியே தெரியுமா??”



ராஜேந்திரனும், சுகுணாவும் எப்பொழுதும் தங்கள் இளைய மகனை நெகிழ்ந்த பாசமான குரலில் ஷிவா என்று தான் அழைப்பார்கள். இன்று இருவரும் அவனது முழுப் பெயரை சொல்லி அழைப்பதையும், அவர்கள் குரலில் இருந்த ஒட்டாத தன்மையையும் அவன் புரிந்து கொண்டான். எப்பேர்ப்பட்டவர்களுக்கு எப்பேர்ப்பட்ட பிள்ளை! அவனுக்குச் சங்கடமாக இருந்தது.



“இல்லை சார், நீங்க சொன்னப் பிறகு தான் எனக்குத் தெரிஞ்சுது. ஷிவேந்திரன் சார் ஒரு ஸ்டார் ஹோட்டல் டீலிங் விஷயமா மதுரையில டூ டேய்ஸ் ஹால்டட்னு தான் எனக்கு இன்ஃபோ வந்தது சார்.”



“ஓ! அலபி கிரேயட் பண்ணியிருக்கான். சரவணன் இனிமே எனக்கு அவனோட ஒவ்வொரு மூவ்ஸும் கிளியரா தெரிஞ்சாகனும். வாட்ச் ஹிம் கிலோஸ்லி அண்ட் இன்னும் மூனு நாள் கழிச்சி நான் ஆண்டோவ மீட் பண்ணனும். ஸ்பாட்ட, மீட் பண்ணுறதுக்கு ஒன் ஹவர் முன்னாடி நான் சொல்றேன்.”



“ஒ.கே சார்”



அரவம் கேட்டு இருவரும் திரும்பினர். சுகுணாவும், புகழினியும் வந்து கொண்டிருந்தனர். புகழினியின் முகத்தில் இருந்த உற்சாகம் இப்பொழுது காணாமல் போய் வருத்தம் சூழ்ந்திருந்தது. மனைவி தெரிந்தவர் துக்கம் என்று தான் சொல்லி இருப்பாள் என்பது ராஜேந்திரனின் கணிப்பு. அதுவே உண்மையும் கூட. சுகுணா அவருக்குக் கண் சாடை காட்டினார். ராஜேந்திரன் புரிந்து கொண்டு தலையாட்டினார்.







 
Last edited:

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நால்வரும் காரில் ஏறி புறப்பட்டுச் செல்வதை மாடி பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் மேகவதியும் வசுந்தராவும். சம்யுக்தா ஷிவேந்திரனோட கைகோர்த்து வெளியே செல்லவும், விமன்யா கோபமாக வெளியே சென்றுவிட்டாள்.



“மாம்! டாட் ஏன் இப்படி பண்றாரு? விமி ஷிவ்வுக்கு தானு முதல்ல இருந்து நாம சொல்லிட்டு இருக்கோம். அந்த திமிர் பிடிச்சவன் அந்த ஆணவம் பிடிச்சவள தான் கட்டிப்பேனு சொல்லிட்டான். டாட் அவங்களை கட்டிப்பிடிச்சு விஷ் பண்ணுறாரு. கடைசில எனக்கு நடந்த மாதிரி தான் என் பொண்ணுக்கும் நடக்குது போல..” எனப் பொரிந்தாள் வசுந்தரா. கடைசி வாக்கியத்தைச் சொல்லும் பொழுது அவள் கண்களில் நீர்மணிகள் துளிர்த்துவிட்டன.



மகளின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் மேகவதிக்கு உயிரைப் பிடிங்கி வெளியே எறிந்தார்போல் இருந்தது. தன்னுடைய மகனின் காதலால் தங்களது தொழில் சாம்ராஜியம் ஆட்டம் கண்டு, குடும்ப கௌரவம் உருகுலைந்து, மகளுக்குச் சரியான மணாளன் அமையாமல், இப்பொழுது தன் ஆருயிர் பேத்தியின் வாழ்க்கையும் அந்தரத்தில் ஊசலாடுவதை அவரால் சீரணிக்க முடியவில்லை. மகளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டு,



“வசு அழாதடா.. விமிய நாம அப்படி விட்டுறுவோமா” உரிமையாக கடிந்தார் மகளை.



“என்னை அப்படி தானே மாம் விட்டிங்க! வேற வழியில்லாம தானே ரகுவுக்கு என்ன மேரஜ் பண்ணி வச்சிங்க மாம்!”



“இல்லடா உன்னோட பிராப்ளமே வேற. விமிக்கு அப்படிக் கிடையாது. ஏன்னா ராஜோட லவ் மேரஜ்னால உன்னை அந்த ஃபாமிலி வேண்டாம்னு சொன்னது எல்லாருக்கும் தெரிஞ்சு நம்ம பிஸ்னஸ் ரொம்ப ஆட்டம் கண்டுப் போனது. அதோட ராஜ் தனியா அந்த பிடாரி கூட போய் பிஸ்னஸ் ஆரம்பிச்சான். இதெல்லாம் தான் உனக்கு நெகட்டிவான இமேஜைக் கிரியேட் பண்ணுச்சு.”



“மாம், அக்சுவலா என்னைவிட விமியோட சிச்சுவேஷன் தான் ரொம்ப மோசமா இருக்கு. ஷிவ்வும் ராஜும் எங்களை மதிக்கிறதில்லம்னு பிஸ்னஸ் சர்ஜிளில் எல்லாருக்கும் தெரியும். அண்ட் ரகு இன்னும் அவங்க பிரதர்ஸ டிபெண்ட் பண்ணிதான் இருக்காரு. இவரை உப்புக்கு சப்பையா தான் பிஸ்னஸ்ல வச்சிருக்காங்க! வசந்த் அவன் என்ன என்னவோ டிரைப் பண்ணி பாக்குறான், ஒன்னும் வொர்க் அவுட்டான பாடில்லை. ரகுவோட டாட்டர் & வசந்தோட சிஸ்டர்னு சொன்னா அவளை ஒரு ஈ, காக்கா கூட விமிய திரும்பி பாக்காது. ராஜ், ஷிவ்வோட ஷேடோ தான் மாம் அவளோட ஸ்டேடஸே இருக்கு. இதெல்லாம் நெகட்டிவ் தான மாம்! அதோட விமி ஷிவ்கிட்ட ஓபனா நிறைய பார்ட்டிஸ்ல, பப்ளிக்ல பிளர்ட் பண்ணியிருக்கா. எதுனால பண்ணா? ஷிவ்வ எப்படியாவது மேரஜ் பண்ணிக்கனும் தானே செஞ்சா! இப்போ அவன் வேற ஒருத்தி கூட போயிட்டான், இனி இவளை யாரு சீண்டுவா? கேவலமா பாப்பாங்க மாம்...”



மகளின் கூற்று முற்றிலும் உண்மை என்பதை உணர்ந்திருந்த மேகவதி தோட்டத்தை வெறித்தார். அமைதியான ராஜேந்திரனை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதில் ஆர்ப்பரிக்கும் ஷிவேந்திரனை அவர்களால் எங்கனம் கட்டுப்படுத்த முடியும்?? எப்பொழுதும் முடியாது!! எவராலும் முடியாது!!!



பேத்தி விமின்யாவின் நிலையை நினைத்தால் அவருக்குப் பயமாக இருந்தது. தன் மகன் ராஜேந்திரனின் பிள்ளைகள் யாவரும் பாரம்பரியமான மிகவும் அந்தஸ்தான குடும்பத்தில் விருப்பத்துடன் வாழ்க்கைப்பட்டு சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்க, தன்னுடைய மகள் வசுந்தராவின் பிள்ளைகள் மட்டும் பிச்சைக்காரர்கள் போல் கிடைத்ததை வைத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டிருப்பதைக் கண்டு அவர் உள்ளம் கொதித்தது.



மருமகன் ரகுவரன் தன்னுடைய மகளை அவ்வப்பொழுது குத்தீட்டி போன்ற வார்த்தைகளால் குத்துவதை கண்டும் காணாதது போல் செல்லும் இந்த வீட்டின் ஆண் மக்களை நினைத்து அவர் பல்லைக் கடிப்பார். அதே சமயம் தன்னுடைய மகன் அந்த சுகுணாவை யாரும் ஒரு சொல் சொல்ல விடாமல் ஒரு மகா ராணியைப் போல் உள்ளங்கையில் வைத்துத் தாங்குவதை கண்டு அவர் பெற்ற வயிறு பற்றி எரிந்தது.



இவர்களின் கோபத்தின் வடிகாலாக சுகுணா இருந்து வந்தார். அவரும் சூழ்நிலையை உணர்ந்தவராக எதனையும் முகத்தில் காட்டாது அமைதியாக சென்றுவிடுவார். ஆனால் நேற்று இரவு அதுவும் ஆட்டம் கண்டு விட்டதே. சுகுணாவிடம் இப்படி ஒரு நிமிர்வை எவரும் எதிர்பார்க்கவில்லை. புகழினியை கோழி தன் குஞ்சை அடைகாப்பது போல் அடைகாத்து வருகிறாள். இதற்கு ராஜேந்திரன் வேறு துணை! பல்லைக் கடித்தார் மேகவதி.



“மாம் என்ன யோசிக்கிறிங்க?” மகள் உலுக்கலில் யோசனையில் இருந்து விடுபட்டவர். மகளுக்குச் சூழ்நிலையை எடுத்துரைத்தார்.



“ம்ம்ம்ம் வசு, பிராக்டிகலா யோசி.. ஷிவ்வ நம்மளால கம்பெல் பண்ணி விமிக்கு கட்டி வைக்க முடியுமா? அதுவும் அந்த ராஜகுமாரியோட பிரசென்ஸ்ல? கண்டிப்பா இது நடக்காதக் காரியம். தென் ஏன் நாம டைம் வேஸ்ட் பண்ணனும்! விமிக்கு ஒரு நல்ல மாப்பிளையை பாக்குறது தான் புத்திசாலித்தனம். எவ்வளவு டௌரி வேணா குடுக்கலாம். பணத்துக்கு நான் பொறுப்பு, யூ டோண்ட் வொரி.”



“சரி மாம். பட் விமி ரொம்ப கோவமா இருக்கா! இதுக்கு சம்மதிப்பாளான்னு தெரியலியே??”



“ஸில்லியா பேசாதே வசு, அவ சின்ன பொண்ணு கோவத்தில பேசுறா. உனக்கு தெரியும் தானே இந்த மாதிரி இருந்தா என்ன என்ன பிராப்ளம் வரும்னு தெரியும் தானே! தெரிஞ்சும் இப்படி பேசறது புத்திசாலித்தனம் இல்லை வசு. பதுங்க வேண்டிய இடத்தில பதுங்கி தான் ஆகனும். சோ விமிக்கு சொல்லி புரிய வை. வீ ஹேவ் நோ அதர் சாய்ஸ்” கண்டிப்பானக் குரலில் மகளுக்கு நிதர்சனத்தை எடுத்துரைத்தார்.



வசுந்தராவிற்கா தெரியாது! இன்றளவும், திருமணத்திற்கு முன்பு பட்ட அவமானங்களும் ஏன் இப்பொழுது வரை அவள் பட்டுக் கொண்டிருக்கும் அவமானங்கள் மறக்குமா!!! நினைக்க நினைக்க நெஞ்சுக் காந்தியது. தன்னுடைய நிலைமையை மோசமாக்கியதும் அல்லாமல் தன்னுடைய பிள்ளைகளின் வாழ்க்கையையும் கேள்விக் குறியாக்கிய தன்னுடைய அண்ணனையும், சுகுணாவையும் நினைத்து அவளுக்கு வன்மம் மனதில் வளர்ந்து கொண்டே போனது.



ஈ.சி.ஆர் பங்களாவில் ஷிவேந்திரனின் அலைபேசி அலறியது. சம்யுக்தாவும் ஷிவேந்திரனும் அந்த நீச்சல் குளத்தில் ஒருவரை ஒருவர் பிடித்தபடி நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர். அலைபேசி சப்தத்தில் ஷிவேந்திரன் கரைக்கு நீந்திச் சென்று அங்கு இருந்த தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்த்துவிட்டு காதுக்குக் கொடுத்தான்.



சொல்லப்பட்ட தகவலை உள்வாங்கிக் கொண்டு “ம்ம்ம்ம்ம்ம்” என்ற பதிலுடன் அதனை அணைத்து வைத்துவிட்டுக் கரையேறியவன்,



“சம்யு பேபி, அர்ஜண்ட் வொர்க், வில் டேக் எ லீவ். யூ எஞ்சாய் டியர் வில் கால் யு லேட்டர்.” எனக் கூறிவிட்டு அவளுடைய பதிலுக்கு காத்திராமல் தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு பங்களாவிற்குள் சென்றுவிட்டான். போகும் அவனையே வெறித்துப் பார்த்தாள் சம்யுக்தா.



சம்யுக்தாவின் அத்தை ரதிதேவி ராஜேந்திரன் சுகுணாவை மணந்த செய்தி கேட்டவுடன் அதிர்ந்து விட்டாள். ஆனால் ஒருசில வினாடிகளில் அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டவள் “என்னை மணக்க அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை” எனக் கூறி கம்பீரத்துடன் நிமிர்ந்து நின்றாள். மகளின் நிமிர்வு பெற்றவர்களின் உடன் பிறந்தவர்களின் கவலைகளை மறக்கச் செய்தது.



ரதிதேவியின் தந்தை அவளுக்கு தன்னுடைய சொந்த அக்கா மகனை மணமுடிக்கத் தீர்மானித்தார். அவன் ஒரு சொகுசு பேர்வழி அவனது தந்தையைப் போல. தங்களுடைய சொத்துக்களை வைத்துச் சூதாடுவதிலும், பெண்களுடன் சல்லாபிப்பதிலும் தந்தையும் மகனும் வல்லவர்கள். எப்படியாவது மாமன் மகளை மணமுடித்து சொத்து சுகத்துடன் டாம்பீகமாக வாழ விழைந்தான். ஆனால் ரதி ராஜேந்திரனை விரும்பி மணக்க ஆசை கொண்டதை அறிந்தபின் அடிபட்ட புலியை போல் பதுங்கியவன் தக்க சமயம் பார்த்துப் பாயக் காத்துக் கிடந்தான். அப்பொழுது தான் அவள் விரும்பிய ராஜேந்திரன் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டதை என்பதை அறிந்து கொண்டான்.



எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டது. மிகத் தெளிவாக திட்டமிட்டு அவர்கள் குல தெய்வக் கோயிலில் உள்ள துர்காதேவி அம்மன் சன்னதியில் தன்னுடைய மாமனிடம் நல்லவன் போல் நடித்து ரதியை மணக்கச் சத்தியம் வாங்கிவிட்டான். வாக்குத் தவறவது ராஜபரம்பரையில் நடவாத காரியம். மிகப்பெரிய இழுக்கு! ரதியின் தந்தை தன்னிச்சையாக எடுத்த முடிவின் காரணமே அவரின் மகளின் உயிரைக் குடிக்க போகிறது என்பது அவருக்கு அப்பொழுது தெரிந்திருக்க வில்லை. தெரிந்திருந்தால்! ரதிதேவி இன்று உயிருடன் இருந்திருப்பாரோ!



ரதியின் வீட்டில் புயல் அடித்தது. எவரும் ரதிக்கு பிரதாப்புடனானத் திருமணத்தை தீவிரமாக எதிர்த்தனர். ரதி, அமைதியாக வேடிக்கை பார்த்தவள் தன்னுடைய காதலால் தன்னுடைய குடும்பத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவை எப்பாட்டுப்பட்டேனும் துடைக்க எண்ணினாள். அதனால் அத்தை மகனுடானான திருமணத்தில் அவளுக்கு முழுச் சம்மதம். வாக்கு வாதம் வலுத்தது. குல தெய்வ கோயிலில் தான் வாக்கு கொடுத்ததாக ரதியின் தந்தை கடைசியாக அறிவித்தவுடன், குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.



ரதியின் தாயும் உடன்பிறந்தவர்களும் அவளைத் துயரத்துடன் நோக்கினர். ரதி தான் அவர்களுக்கு தைரியமூட்டினாள். ரதி சிறந்த நிர்வாகி என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவளின் மணாளன்?? ரதியின் உடன்பிறந்த சகோதரர்கள் அவர்களது அத்தை மகனை மிரட்டினர். தங்களது தங்கையின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் அடுத்த நிமிடம் நீ ஒழிந்தாய் என கர்ஜித்துவிட்டுச் சென்றனர். தன்னை உதாசினப்படுத்தும் அவர்களைக் கொன்றுவிட துடித்தான் பிரதாப். அது தன்னால் ஆகாது என்று புரிந்து கொண்டு உறவாடிக் கெடுக்க முடிவு செய்தான். ரதியின் மேல் தீராத வன்மம் கொண்டான்.



திருமணத்திற்கும் முன்பு ரதியை வெளியே அழைத்துச் செல்வான். அப்படிச் செல்லும் பொழுது அவளின் முன்னாள் காதலை சுட்டிக் காட்டி அவளை மனதால் நோகடிப்பான். ஆனால் வீட்டினரிடம் அவள் மனதில் இன்னும் பழைய காதல் தான் நிலைத்து இருக்கிறது என அழுது கரைந்து நாடகமாடினான். அவன் சொல்லை முதலில் ரதியின் வீட்டினர் நம்பவில்லை. ஆனால் ஒரு பொய்யை அடிக்கடி அழுத்திச் சொல்லும் பொழுது அது ஒரு சமயம் உண்மையாகிப் போகிறது. ரதியின் கதையிலும் அவ்வாறு தான் நடந்தது. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கையில் அவள் இவனிடமிருந்து விலகிச் செல்வதை புரிந்து கொண்டு அவன் கூற்று உண்மை என நம்பினார்கள்!



ரதிக்கு பிரதாப் ஆடிய நாடகம் தெரியாது. அவள் அவனின் கொடிய வார்த்தைகளுக்குப் பயந்தே ஒதுங்கினாள். திருமணத்திற்குப் பிறகு எப்படியும் சரியாகி விடும் என நம்பினாள். பாவம்!!!



ராஜேந்திரனின் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் இவர்களின் நிச்சயம் நடந்து அடுத்த பத்து தினங்களில் அவர்களின் திருமணமும் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. ரதியின் கணவன் அவர்களுடைய தேனிலவை கொடைக்கானலில் அவர்களின் சொந்த பங்களாவில் கொண்டாட விரும்பினான். எல்லோரும் அவனின் விருப்பத்திற்குத் தலை அசைத்தனர்.



அவன் கொடைக்கானலை தேர்ந்தெடுத்தான் காரணம், அங்கு ராஜேந்திரன் தன்னுடைய புது மனைவியுடன் தேனிலவு கொண்டாட வருகிறான் என்பதாலேயே. அவன் ராஜேந்திரனின் அசைவுகளை யாருக்கும் தெரியாமல் கண்காணித்துக் கொண்டிருந்தான். அவருக்குத் தொழிலில் நிறைய இடையூர்களைக் கொடுத்தான். ஆனால் ராஜேந்திரன் அவற்றை எல்லாம் தூசியை ஊதுவது போல் ஊதி தள்ளினார். அதுவேறு அவனுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. இந்தத் திறமையும், ஆளுமையும் தானே ரதியை ஈர்த்தது எனப் பழிவெறி கொண்டான்.



மனைவியுடன் கொடைக்கானலில் ராஜேந்திரன் முன்பு பிரசன்னமானான். ஆனால் ராஜேந்திரன் மனைவியின் அழகில் மூழ்கி இருந்ததால், எவரையும் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. ஆனால் ரதி கவனித்தாள். ராஜேந்திரனின் கண்களில் வழியும் குறும்பையும் சுகுணாவின் முகத்தில் பரவிய செம்மையையும் கவனித்தாள். அவளின் கண்கள் கலங்கியது. அதனை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள். ஆனால் அவளின் கணவன் கண்டுவிட்டானே, பாவி!
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கெஸ்ட் ஹவுஸிற்கு திரும்பியதும் ரதியின் கணவன் அவளை ராஜேந்திரனுடன் இணைத்துப் பேசி வார்த்தைகளால் கொன்றுவிட்டான். அவன் சென்ற பின்பு தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாள் ரதி. அப்பொழுது அவளின் எதிரே ராஜேந்திரன் மனைவியை அணைத்துக் கொண்டு வருவது தெரிந்தது. தன்னுடைய இழப்பின் வீரியம் பூதாகரமாக அவள் முன் தோன்றியது. சந்தேக பேய் பிடித்த கணவனிடம் இனி வாழ முடியாது என முடிவு செய்து, கடைசி முறை ராஜேந்திரனை தன்னுடைய கண்களில் நிரப்பிக் கொண்டு தன்னுடைய முடிவைத் தேடி கொண்டாள் அந்த ராஜகுமாரி. அவளுடைய கார் பள்ளத்தில் விழுந்து உருண்டது. மரணித்துவிட்டாள்.



மிகத் தந்திரமாக ராஜேந்திரனை நினைத்து ரதி எழுதியது போல் ஒரு டைரியை உருவாக்கினான் பிரதாப். அதில் ரதியின் கையழுத்து இருந்தது தான் அவனது சூழ்ச்சியின் உச்சம்! ரதியின் பிறந்த வீட்டினர் கதறினார்கள். ராஜேந்திரனை கொடைக்கானலில் கண்ட பின்பு ரதி மிகவும் மனதால் பாதிக்கப் பட்டுவிட்டாள் அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டாள் என அழுது கரைந்து வெகு சாமார்த்தியமாக கதை பிணைந்து அவர்களை நம்ப வைத்தான். அவர்களின் கோபத்தை ராஜேந்திரனின் மேல் திருப்பி விட்டான்.



மகளின் இழப்பை எண்ணி துயரம் கொண்ட அவள் பெற்றவர்கள் மகளைத் தேடிக் கொண்டு விண்ணுலகம் சென்றுவிட்டனர். ரதியின் உடன் பிறந்தவர்கள் ஒரே நேரத்தில் ராஜேந்திரனின் துரோகத்தால் உடன் பிறந்தவளையும், பெற்றவர்களையும் இழுந்து தவித்தனர். உதய்பூர் சமஸ்தானத்துக்கு ராஜேந்திரன் நிரந்தர எதிரியானார்!



இன்னொரு ரதி தேவி அவர்கள் குடும்பத்தில் உருவாகக் கூடாதென்று ரதிதேவியின் கதையைச் சொல்லிப் அவர்களின் பிள்ளைகளை வளர்த்தனர். ஏனென்றால் ரதி தேவியின் காதல் கதை கண் காது மூக்கு வைத்துப் பேசப்பட்டு அவர்களின் குடும்ப கௌரவத்தைப் பதம் பார்த்தது. இந்த நன்மையை அவர்களுக்குச் செய்தது சாட்சாத் ரதியின் கணவன் பிரதாப் தான்.



ஊருக்கே ராஜாவான சம்யுக்தாவின் தந்தை ரதி தேவியின் கணவனின் முன்பு தலை குனிந்து பணிந்து போவதை அவளால் பொறுக்க முடியவில்லை. ரதியினால் தங்களது சமஸ்தானத்துக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு முழு காரணம் ராஜேந்திரன் அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி நம்பவைத்து கழுத்தறுத்தது தான் என எண்ணினாள்.



ராஜேந்திரனை பழிவாங்கத் துடித்தாள். அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடும் பொழுது தான் ராஜேந்திரனின் இளைய மகனும் ராஜேந்திரனும் மோதிக் கொள்கின்றனர் என்ற விவரம் அவள் செவிகளை வந்தடைந்தது. அந்த இளைய மகனை பகடையாக்கி ராஜேந்திரனைப் பழிவாங்க எண்ணினாள். அப்படி தான் அவள் ஷிவேந்திரனை சந்தித்தது.



ஆனால் ஷிவேந்திரனை சந்தித்த பின்பு அவனின் கம்பீரத்திலும், ஆளுமையிலும், திறமையிலும், அழகிலும் கவரப்பட்டு அவனிடம் காதல் வயப்பட்டாள். உறவாடிக் கெடுக்க முடிவு செய்தாள். சுகுணாவை தனக்குச் சமமானவளாக அவள் என்றுமே நினைத்ததில்லை. அதனால் அவரை அவள் பொருட்படுத்தவில்லை. அவளுடைய ஒரேக் குறி ராஜேந்திரன் தான். ஆனால் இப்பொழுது இன்னொருத்தியையும் அவள் குறிப்பார்க்க வேண்டியிருக்கிறது.



கருப்பி! அவளை சும்மா விடமுடியாது.. ராஜேந்திரன் டைனிங் ஹாலில் அவளை அரவணைத்துச் சென்றதுமே அவளுக்கு ஆத்திரம் மேலிட்டது. அதிலும் அவளின் மேலான ஷிவ்வின் உரிமை கலந்த பார்வயைக் அவளுக்கு உடலில் மிளகாய் பூசியது போல் எரிந்தது. அதனைத் தணிக்கவே ஷிவேந்திரனுடனான இந்தக் காலை நேர நீச்சல் விளையாட்டு.



ராஜேந்திரன்! கருப்பி தானே உன்னோட வீக் பாயிண்ட்! அவளைக் கதறவிட்டு உன்னைத் துடிக்க வைக்கவில்லை, நான் சம்யுக்தா தேவியும் இல்லை, உதய்பூர் சமஸ்தானத்தின் ராஜகுமாரியும் இல்லை.. இது உன்னைக் காதலித்து உன் துரோகத்தால் உயிர் துறந்த என் அத்தை ரதிதேவியின் மேல் சத்தியம் என மனதிற்குள் சூளுரைத்தாள் சம்யுக்தாதேவி.



விதியின் விளையாட்டில் பகடையாய் சுழலப்போவது சம்யுக்தாவா?? புகழினியா?? இன்னொரு ரதி தேவி யார்???


கருப்பு
அழகி வருவாள்

 
Last edited:

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே,

'என் கருப்பழகி'-12வது அத்தியாயம் பதிந்துவிட்டேன். புதன்கிழமையன்று கொடுக்க வேண்டியது.. இன்றேக் கொடுத்துவிட்டேன்.

சில பேர் நான் எப்போ யூடி போடுறேன்னு கேக்குறாங்க. ஒவ்வொரு ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் யூடி போடுறேன். அதுவும் இரவில் தான் அப்டேட் கொடுப்பேன். தவிர்க்க முடியாத சமையங்களில் யூடி ஒரிரு நாட்கள் முன்னேப் பின்னே வரலாம்.

உங்க எல்லாருடையக் கருத்துகளுக்கும் ரொம்ப நன்றி. மீ வெரி ஹேப்பி அண்ணாச்சி...கொஞ்சம் பிஸி... எப்போ டைம் கிடைக்கிதோ கண்டிப்பா உங்க கருத்துகளுக்கு ரிப்ளை பண்றேன். .... சில பேருக்கு சில சந்தேகங்கள் இருக்கும்போல.. ஏன் நான் கதை படிச்சிட்டு கமெண்ட் போடுங்கன்னு ஒரு வரி எழுதறதில்லைன்னு.. ஆரம்ப காலத்தில நானும் அந்த வரியை மறக்காம பதிவிட்டேன்.. சிலக் கசப்பான சம்பவங்களால் கதை படிங்க, கமெண்ட் போடுங்கன்னு நான் பதிவிடறதில்லை. ஆரம்ப எழுத்தாளர்... ஒரு கதைக் கூட முடிக்கலை... எங்க கமெண்ட்ஸ் உங்களுக்கு வேண்டாமான்னு நீங்க தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்கிறப் பாலிசியை எல்லாவற்றிலும் நான் இப்ப எல்லாம் ஃபாலோ பண்றேன். வீண் மன உளைச்சள்களை தவிர்க்கிது.. எனக்கு உங்க ஆதரவே போதும். ஒரு லைக்/கமெண்ட்/ஜஸ்ட் சைலண்ட் ரீடர்.. எதுவாகயிருந்தாலும் எனக்கு சந்தோசமே... ஏன்னா நானும் ஒரு சைலண்ட் ரீடர் தான்.. எனக்கு கமெண்ட் சுத்தமா எழுத வராது. இந்த சைட் ஆத்தர்ஸ் சர்கிள்ல நிறையப் பேருக்கு இது தெரியும்...

உங்கள் ஆதரவு எந்த வடிவத்தில் இருந்தாலும் நான் அதை பெருமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். முகப்புத்தகத்தில் இந்தக் கதையின் நாயகி புகழினியின் பெயரை தனது பிரொஃபைல் பெயரா ஒருத்தங்க வச்சிருக்காங்க.. புகழினி தெய்வமங்கைன்னு... இதுவே போதும் மக்கா.... உங்க அன்புக்கு ரொம்ப நன்றி...

நெகடிவ் கமெண்ட்ஸ் ஆர் மோஸ்ட் வெல்கம்... தயங்காமல் சொல்லுங்க... கண்டிப்பா திருத்திக்கிறேன். தொடர்ந்து எழுதுவேனான்னு தெரியவில்லை...ஆனா எழுத ஆசைப்படுறேன்... ஒரு கதையாக இருந்தாலும்... அதுப் பட்டைத் தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்க வேண்டும் என்பதே என் அவா... அதை ஜொலிக்க வைப்பதில் உங்களது ஆதரவுக் கண்டிப்பாக தேவை மக்களே...

கதை உங்களுக்கு பிடித்திருப்பது எனக்கு புது தெம்பைக் கொடுக்குது. ஒரு வருசத்துக்கு மேலா இந்தக் கதை ஓடுது... சீக்கிரம் முடிக்க முயற்சிக்கிறேன்... உங்கள் எல்லோருடையப் பேராதரவோடு.. வேறு எதாவது இந்தக் கதையைப் பற்றித் தெரிய வேண்டுமெனில் தாராளமாகக் கேளுங்கள்... பதில் சொல்லக் காத்திருக்கிறேன்.

#SAVEDELTA
 
Status
Not open for further replies.
Top