All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மைவிழியே மையல் கொள்ளாதே - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாங்க போன வருஷமே ரைட்டிங்ல குதிச்சிட்டோம்டா 🤭 அத வெச்சித்தான் மாப்ள ஜூனியர்னு சொன்னேன்...
அப்படி சொன்னா ஜூஊஊனியர் தான்டா மாப்ள.....ஆனா கமெண்ட்ல நான் தான்டா சூப்பர் சீனியருஉஉ😂😂😂😂😂🙈🙈🙈🙈(வெவ்வவ்வெஎஎ)
 

Deviaru79

Active member
First congrats oru story one day finish panunathuku indraya kalangalalil innum sila pengal vittil puchiyathan irrukanga veli thotratha vachu niriya per thavarana mudivu gal edukaranga intha story oru example santhos mathire palaper irrukanga suriya pola sila per irrukangala 😯😯😯
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மைவிழியே மையல் கொள்ளாதே!!

இன்றைய தலைமுறையினரின் மை விழி மயக்கத்தை தெளிவாக பறைசாற்றும் கதை..இன்றைய சமுதாயத்தின் உண்மை நிலையை அப்படியே எடுத்துரைக்கிறது.. சமிபத்தில் ஒரு டிக்டாக் பிரபலம் பதினாக்கு வயது பெண்ணை கற்பமாக்கியது என்னுள் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்படி இப்படி எல்லாம் முடிகிறதென்று..யாரை குறை கூறுவதென்று தெரியவில்லை..

சோசியல் மீடியா! பேரழிவுகளின் இருப்பிடம், நம் காலத்தையும் விரயமாக்கி, வாழ்க்கையையும் சூன்யமாகிப் போகச் செய்யும் கேடுகளில் முதலிடம்.
நிழல் முகங்களே பலரால் விரும்பபடுகின்றன..நிஜங்கள் இங்கே விலைப்போவதில்லை..

நந்தினி நிகழ்கால விருப்பங்களின் பலி!
தவறு இழைத்துவிட்டாள் தான் ஆனால் அதற்காக அத்தவறை மறைத்து வேறொருவரை ஏமாற்ற முயற்சி செய்யவில்லை..இங்கு தனித்துக் காணப்படுகிறாள்..இம்மாதிரி நிகழும் பெண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு..

சூர்யா போன்ற ஆண்மகன் நிஜ வாழ்க்கையில் அனைவருக்கும் கிடைக்கப்போவதில்லை!! ஆனால் இருக்கிறார்கள்..சூர்யா சிறந்த கதாபாத்திர வடிவமைப்பு..

அதே போல் நந்தினியை தவறிழைக்கச் செய்து அதிலிருந்து மீண்டது போல் காட்டியிருப்பது எஞ்சியிருக்கும் நம்பிக்கையின் மிச்சம்!

நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுக்கொண்டால் பிரச்சினை ஏதுமில்லை! ஆனால் இக்காலத்தில் அப்படி இருந்து விட இந்த சமூக வலைத்தளங்கள் விடுவதில்லை.

இப்படி இருந்தா தான் அழகு
இப்படி இருந்தா தான் கெத்து
இப்படி இருந்தா தான் ட்ரெண்டு

என ஒரு கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு தனிமனித பிடித்தங்களையும் அவரவர் தனித்தன்மைகளையும் வெளிக்கொணர விடுவதேயில்லை..

இந்நிலை மாறுமோ?

மாற்றம் என்பது நம்மிடமிருந்துத் தொடங்க வேண்டும் என்றும் புரியும் வரை மாற்றங்கள் நிகழப் போவதே இல்லை!!!

மாற்றத்திற்கான விதையை உங்களின் இக்கதை மூலம் கொடுத்ததிற்கு மிகப் பெரிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஆசிரியரே!

அடுத்த கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா... என் தல விஷயத்துல மட்டும்தான் அந்த பழக்கம் காணாம போயிடுது....
உங்க தல விஷயத்துலயும் இதையே நான் கடைபிடிக்கிறதால தான் உங்களுக்கு என்மேல காண்டு 🤣🤣
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
First congrats oru story one day finish panunathuku indraya kalangalalil innum sila pengal vittil puchiyathan irrukanga veli thotratha vachu niriya per thavarana mudivu gal edukaranga intha story oru example santhos mathire palaper irrukanga suriya pola sila per irrukangala 😯😯😯
நன்றி நன்றி சிஸ் 😍😍😍.. ஒரே நாளில் எழுதலை சிஸ்.. எழுதிட்டு மொத்தமா அப்லோட் பண்ணியிருக்கேன்.

நீங்க சொல்ற மாதிரி சந்தோஷையும் சூர்யாவையும் இனம் காண நாம பழகிட்டா நல்லா இருக்கும் ❤.
 
Top