All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அணங்குடை முந்நீர்

Status
Not open for further replies.

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5


அவள் விழித்து பார்கையில் அவன் அங்கே இல்லை. சென்ற அவனைப் பற்றி அவள் சிந்தனை கொள்ளவும் இல்லை. அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.
அதன் பிறகு மாதங்கள் ஆனது அவர்கள் சந்திக்க.

அன்று தனது வாள்பயிற்சியில் இருந்தாள். கோரத்தாண்டவம் ஆடிய அவளது ஆத்திரத்தை அவள் அதன் வழி மடை திருப்பியிருந்தாள். இல்லை அவன் திருப்பியிருந்தான். கடந்த ஒரு நிகழ்வில்
தனது அறைக்கு வந்து சேர்ந்தவள். முகம் கழுவிவிட்டு நிமிர அவளுக்கான உணவு வந்திருந்தது. தனக்கான உணவை சுவைத்துக் கொண்டிருந்தாள்.

"தலைவர் தங்களுக்காக அறையில் காத்திருக்கிறார்."

"வருகிறேன்" என்றாள். ஆனால் செல்லவில்லை.


மனதிற்கு இனிய வாசனை பொருட்கள் சேர்க்கப்பட்டு உடலுக்கு இதமான சூட்டில் இருந்த பளிங்கினால் ஆன அந்த தண்ணீர் குளத்தில் அமிழ்ந்து இருந்தாள். கண்களை மூடி லயித்திருந்த அவளுக்கு தண்ணீரை இருபுற தோள்களிலும் தண்ணீரை ஊற்றிய மிங் மெல்ல தோள்பட்டையை பிடித்து விட்ட தொடங்கினாள்.

" மிங் அப்படித்தான் அப்படியே பின் கழுத்து பகுதியின் பக்கம் பிடித்துவிடு."
என்றாள். அது போல பிடித்து விட கண்களை திறவாமலே
"ஏதாவது கூற வேண்டுமா மிங்.ஏன் இத்தனை அமைதி "
அப்பொழுதும் பதில் வரவில்லை என்றதும் அந்த கரங்களை பிடித்து தடுத்தவள்
"இப்போது நீ கூறப் போகிறாயா இல்லை "
என்றபடி திரும்பியவளின் முன் இருந்ததுஎன்னவோ ஜாங்யி தான். அவனைக் கண்டதும் அதிர்ந்தாலும் விழிகளை மற்றவர்களை தேடி சுழற்றினாள். அவனோ தனது பட்டு மேலங்கியை களைந்தவாறு
"நமக்கு இடையில் அவர்கள் ஏன் என்று தான் அகற்றிவிட்டேன்.வா நாம் நீராடலாம் "

என்றழைத்தான். சினம் மிக அவனை முறைத்து விட்டு எழப் போனவள் தன்னிலை உணர்ந்து மீண்டும் தண்ணீருக்குள் நின்று கொண்டாள்.
" வெளியே போகிறீர்களா...இது பெண்களுக்கான இடம்."
என்று சத்தமிட
"ஓ அப்படியா? ஆனால் சௌ இது எனது அந்தப்புரம் அதுமட்டும் இன்றி நீ எனது மனைவியும் இங்கு நுழையவோ பார்க்கவோ எனக்கு மட்டும் தான் உரிமை அதிகாரம் உண்டு.வா நான் இதமாக அழுத்திவிடுகிறேன்."
என்ற படி உள்ளே இறங்கியவன் தனது உள்சட்டையான அந்த வெண்ணிற ஆடையின் முடிச்சுகளை அவிழ்த்தான். அந்த நொடி சௌ அவனது கரம் பிடித்து இழுத்தாள். அதில் அவனது ஆடையின் ஒரு கரத்தினுள் தனது கரத்தினை நுழைத்திருந்தாள். மறுநொடி அவனது முதுகுப் புறம் வழி சுழன்று அவனது கரத்தின் மறுபுறத்தையும் கழற்றி தனது கரத்தை தர இப்போது ஆடை அவள் வசமாகி இருந்தது . ஆனால் அவள் அவன் வசத்தில் இருந்தாள்.

அவளது கரத்தின் நுனியைப் ஆடையுடன் சேர்த்து பற்றியிருந்தான் ஜாங் யி. இருவரும் எதிர் எதிர் புறம் இருக்க சிறு புன்னகை அவன் முகத்தில். அவளோ கோபத்துடன் தற்காப்பு கலையை தனது கரத்தினால் அவனது கரத்தை வெட்ட முயல அவனோ அதனை எளிதாக தடுத்துவிட்டு அவளை இருகரங்களையும் பற்றி பின்புறமாக திருப்பி பிடித்திருந்தான். இப்போது அவளை முன்புறமாக திருப்பியவன் திமிரிய அவளை அனைத்துப் பிடித்தவன் அவள் முகம் நோக்கி நெருங்க செள முத்தமிடப் போவதாக எண்ணிவிழிகளை மூடிக்கொண்டாள். ஆனால் அவனோ அவள் காதுகளில்
" சற்று விரைவாக வருகிறாயா உன்னுடன் பேச வேண்டும் "
என்றதில் கண்திறந்து அவனைப் பார்த்தாள். இப்போது அவனோ குறும்பு சிரிப்பை முகத்தில் தேக்கி " நீ என்ன எதிர்பார்த்தாய் ? முத்தமிடுவேன் என்றா? " என்றதில் எம் மாதிரியான உணர்வைக் அவள் கொண்டு இருக்கிறாள் என்பதை அவளுக்கே தெரியவில்லை பிறகு எப்படி அந்த உணர்வை வெளிக்காட்ட. கையும் களவுமாக கோபியர்களிடம் பிடிபட்ட கண்ணன் போன்ற ஒரு பாவனை அவளிடம். அவனிடமோ கொஞ்சித் தீர்க்கும் கோபியரின் மனநிலை.

" இன்று இரவு உன்னறைக்கு வருவேன்" என்று கூற நினைத்தேன்."
"எதற்கு "
"கணவன் எதற்கு மனைவியின் அறைக்கு வருவான் "
"அது காதல் கொண்டு மணந்தவர்களுக்கு மற்றவர்களுக்காக மணந்தவர்களுக்கு இல்லை."
" அப்படியானால் "
" ம் அரசியல் காரணங்களை தவிர வேறு எதற்கும் தாங்கள் வரத் தேவையில்லை"

"நான் வரத் தேவையில்லை எனில் நீயே வருகிறேன் என்கிறாயா ? ஆஹா அற்புதம்…"
"உங்கள் கனவில் கூட நடக்காது."

"நனவில் அதுவும் இன்று இரவுக்குள் நீயே என்னைத் தேடி வருவாய்"
என்றவன் அதைச் செய்தும் இருந்தான். அவள் உயிர் துடிக்க துடிக்க

ஜாங் யி எழுந்து சென்று விட்டான். அவன் சென்ற சற்றைக்கு எதுவும் செய்துவிட்டால் என்று யோசித்தவள்
'ம் பார்த்துக் கொள்ளலாம். என்னை இவன் என்ன செய்து விட முடியும்? கொல்வதை தவிர.'
அவள் என்றும் தன்னுயிருக்கு பயந்தவள் அல்லவே கடைவீதிக்கு சென்றுவிட்டாள்.அதுதான் அவள் செய்த தவறோ
கடைவீதியில் பல இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்ளுர் பொருட்களும் என பரபரப்பாக இருக்க பார்த்துக் கொண்டே வந்தவள் கால்கள் அந்த அங்காடிக்கு முன் நின்று விட்டது. சற்று நேரம் நின்று பார்த்தவள் மனதினை அடக்க முடியாமல் உள்ளே நுழைந்தாள். நுழைந்தவளுக்கு குளிர்பனி மனதில் சில்லென்று வருடியதை போன்று சில நினைவுகள் வந்தது அவை அவளுக்கும் ஃபோவுக்குமானது ஆனால் அதில் முழ்க முடியவில்லை. இனி ஜாங் யி உனது கனவன் எனும் நிதர்சனம் உரைக்க இப்போது அவையே கூர்மையான உறைபனி நீட்சிகளாக மாறி உடைந்த கண்ணாடியின் கூர்மையுடன் கீறி ரணப்படுத்துவதையும் செய்தன. அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்து திரும்பி கடலை வெறித்துக் கொண்டிருந்தாள்.

சௌ ஜாங் யியை பழிவாங்க காத்திருப்பவள் அதனால் தான் அவனை அவன் காதலை ஏற்க இயலாது மறுத்தாள். ஆனால் அவனோ ஃபோவையும் மக்களையும் பகடையாக்கினான் அதில் சினம் இன்னும் மிக அவன் தானே நிறுத்த வேண்டும் என்பதற்காக சரிபாதி அதிகாரம் பாதிக்கலங்கள் தனது சொத்து நிபந்தனை விதித்தாள். இந்தக் காரணங்களை காரணம் காட்டி அவளை மறுப்பான் என்றால் அவனோ அவளை மணந்து கொண்டு விட்டான். இனி அவளது வாழ்வு எனும் கலம் அவன் செலுத்தும் வழியிலா
என் வாழ்வை அழித்தவனுடன் வாழ்வா?
"இல்லை. இல்லை ஒருபோதும் இல்லை."
என தன் போக்கில் சிந்தித்து கொண்டிருந்தவள் வாய் திறந்து கத்தியவள். ஆனாலும் இனி அது முடியாது என்பது அவளுக்கும் தெரிந்துதான் இருந்தது. ஏனெனில் கல்யாணம் ஒன்றும் ஒப்பந்தம் அல்லவே வேண்டாம் எனில் முறித்துக் கொள்ள என்பது நினைவுக்கு வந்தது. அவள் காதலுக்கும் திருமணத்துக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தாள். பல நாட்களாக இன்றும்
பதிலற்று குழப்பமே விஞ்சியது.

தன் நினைவுக்கு வந்தவள் வீடுதிரும்ப எண்ணி திருப்பி நடந்தாள்.அப்போது
அவளைத் தேடி வந்தாள் மிங்.
தேடி வந்தாள் என்பதை விட ஓடிவந்தாள் என்பது சரியாக இருக்கும். மிங் கூறிய செய்தியில் சௌ சமைந்துவிட்டாள். என்றாலும் மிங் "சௌ ...சௌ…" என உலுப்பியதில் சுயம் பெற்றவள் தலைதெறிக்க விடுதியை நோக்கி ஒடினாள். அவளைத் தொடர்ந்து மிங்கும். அங்கே விடுதிப் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் வாள் முனையில் நிறுத்தப்பட்டிருந்தனர் குவாங்சோவினால்.

சினம் மிக அவனை உறுத்து விழித்தாள். அவன் கண்களில் உடல் மொழிகளில் ஒரு எள்ளல் என்ன செய்துவிட முடியும் உன்னால் என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அதை புரிந்து கொண்டவள்.

"நான் ஜாங் யின் மனைவி ம் இங்கிருந்து வெளியே செல்லுங்கள் இல்லை உங்களது உயிர் உங்களுக்கு சொந்தம் இல்லை."

என்றவள் வாளை உருவினாள்.அவள் உருவிய வேகத்திற்கே அந்த பெண்களை சுற்றி நின்ற வீரர்கள் சிதறி விழுந்தனர்.
ஆனால் குவாங்சோ அவளை எளிதாக தடுத்து .
"எனக்கும் நமது வாளின் பலத்தை சோதித்து விட ஆசைதான் என்றாலும் தலைவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் ஆகையினால். மோதுவதற்கு முன்... "

தனது இடுப்பில் இருந்த அந்த காகிதத்தை எடுத்து அவள் முன் நீட்டினான்.அவனை முறைத்தபடி அதை வாங்கியவள்

" நான் ஜாங்யின் மனைவி என்ற வார்த்தைகளை நீ கூறியிருந்தால் நீ என்னை ஏற்றுக் கொண்டதாக பொருள்". அப்போதுதான் அவளுக்குமே தன்னை மீறி
அந்த சில நொடிகளில் அந்த வார்த்தைகளை கூறிவிட்டது புரிய நிமிர்ந்து பார்த்தாள் வீரர்கள் இவள் முன் மண்டியிட்டு இருக்க குவாங்சோ இவளைப்
பார்த்தபடி நின்றான். சௌவின் விழிகள் மீளவும் கடித்தத்தில் பதிந்தன.

"மீண்டும் இது போன்ற சூழல் நேரக்கூடாது எனில்…"

இப்போது அவளுக்கு புரிந்து போயிற்று அவளது நிலை இன்று இப்போது இவர்களை காப்பாற்றி விட்டாள். ஆனால் தினமும் இது போன்ற ஒரு ஆபத்தை தன்னால் தன் மக்களுக்கு தரவும் முடியாது. கூடவே இருந்து நீக்கவும் முடியாது ஏனெனில் அவனது மறுபக்கம் எத்தனைக்கொடூரமானது என அவள் அறிவாள் காலையில் அவன் கூறிய வார்த்தைகள் மூளையில் மின்ன என்ன செய்ய வேண்டும் என்பதை அவள் புரிந்து
கொண்டாள். மறு நொடி அவள் புரவி
இல்லத்தை நோக்கி பறந்தது.

"ஜாங் யி "
"ஜாங் யி"
"எங்கே இருக்கிறீர்கள்."
என வாசலில் இருந்து கதறிக் கொண்டு தேடி ஓடினாள். அவள் பின்வந்த குவாங்சோ
"பன்ஜின் (Panjin) சிவப்பு கடற்கரையில்."

"என்ன சிவப்பு கடற்கரையா " அதிர்ந்து நின்று விட்டாள்.

" இன்று இரவுக்குள் எப்படி?"

" எப்படி என யோசித்து நேர விரயம் செய்வதை விட பயணத்தை தொடங்குவது நல்லது என்றான்."
அவன் வார்த்தைகளின் பின் ஆக்ரோஷமாக எழுந்த மனதை சில நொடிகளில் அமைதி நிலைக்கு கொண்டு வந்தவள்.
"இன்று இரவுக்குள் நான் அங்கு இருப்பேன். ஆனால் இவர்களுக்கு சிறு காயம் என்றாலும் உங்கள் தலைவர் உயிரோடு திரும்ப மாட்டார். "
என்றவள் பின்புறம் திரும்பியவள் மிங்கிடம்.
"மிங் நீ விடுதிக்கு செல் அங்குள்ளவர்களுக்கு ஏதேனும் சிறு காயம் கூட வராது "
" சௌ"
என்ற மிங்கிடம் கண்களால் எதையோ உணர்த்திவிட்டு
"யோசிக்க நேரம் இல்லை செல் "
என்றவள் புரவியில் ஏற அப்போதும் முகம் தெளியாத மிங்
"ஆனால் உங்களுக்கு எதுவும்" என்றவளை அனைத்துக் கொண்டவள்
"என்னை காப்பாற்றிக் கொள்ள எனக்கு தெரியும். ஆகையால் நான் கூறியதை செய்"
என்ற சமிக்ஞையை தன் அனைப்பினுள் இருந்த அவளுக்கு முதுகில் எழுதி கூறியவள் சென்று விட்டாள்.

ஜாங் யி அலைகள் குறைந்த ஆழம் கொண்ட அந்த கடலில் மூங்கில்கள் கொண்டு வேயப்பட்டிருந்த அந்த குடிலின் சாளரத்தின் வழியே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தி சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் அடிவானத்தில் மறையத் துவங்க அவனது அந்த செந்நிறத்தை தான் வாங்கிக் கொண்ட அந்த கடலே இரத்தமென சிவந்து இருந்ததது. தங்கள் தலையில் தணல் வைத்தது போல் அங்கும் இங்குமாய் பறந்த அந்த செந்தலை கொக்குகளுக்கு இன்னுமே தங்கள் இடத்திற்கு திரும்பும் எண்ணமின்றிதன் இணையை கொஞ்சிக் கொண்டிருந்தன.

இது போலவே தானும் சௌவை கொஞ்சிட அவனுக்குள் ஆசை வந்தது. உள்ளே திரும்பி பார்த்தான் சௌ அந்த மஞ்சத்தில்
உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்ததும் அவனுக்குள் மீண்டும் ஒரு புத்துணர்ச்சி அதில் சிறு புன்னகை உதயமாகிட அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான்.

அன்று அவள் வந்த விதத்தை எண்ணி இப்போதும் அவன் வியந்து கொண்டிருந்தான். புயல் போல அவள் வருவாள் என்றவன் எண்ணியிருந்தான் தான் ஆனால் புயலையே உபயோகித்து வருவாள் என்றவன் எதிர்பார்க்கவில்லை. ஆம் அவள்அப்படித்தான் வந்திருந்தாள்.

அன்று காற்றின் வேகம் அதிகம் இருக்க அதனை அதிகரித்து அசாத்தியமான ஆயிரம் மைல் தொலைவை அனாயசமாக கடந்து வந்து சேர்ந்திருந்தாள். வந்தவள்

"உங்கள் எண்ணப்படி உங்களிடம் வந்துவிட்டேன். இனி எந்த ஆபத்தும் நேராது தானே. "
என்றவளைப் பார்த்தபடி தன் கையில் இருந்த அந்த பறவையை பறக்கவிட்டவன்
அவளை தன்னை நோக்கி இழுத்தான். அதில் அவன் மீது வந்து விழுந்த அவளை அனைத்துக் கொண்டான்.

"ஆபத்து என் அனைப்பினுள் இருக்கும்போது அங்கெப்படி வரும்."

அவளை முத்தமிட இப்போது அவளிடம் மறுப்பு இல்லை. அவளும் தன் உண்மை உணர்வுகளை பதுக்கி வைத்து அவனை ஏற்றுக் கொள்ளத்தான் நினைத்தாள் ஆனால் அவனோ அதற்கு மேல் முன்னேறவில்லை.

" கொதிக்கும் இரும்பு இப்போது குளிரத் துவங்குகிறது போலும்."
என்றான்.

"அதுதான் உங்கள் விருப்பப்படி வளைத்தாயிற்றே. "
எனும் அவள் குரலில் கட்டுப்படுத்தப்பட்ட சினம் அமைதியாக மாறி இருந்தது.

"எனில் இனி குளிரவைத்து பிறகுதான் கூர்தீட்ட வேண்டும் பின்புதான் அதை பயன் படுத்த வேண்டும். "

"என்ன கூற வருகிறீர்கள்?"

"இல்லை இன்னும் தெளிவு தேவை உனக்கு உன் மனதில் அதன் காதலில் நான் இல்லை. ஆனால் என் மனைவி எனும் அதிகாரம் அது தரும் அந்தஸ்து இவைதானே உன் நோக்கம். "

அதிர்ந்துதான் போனாள் அவன் கூறிய வார்த்தைகளில். அதுதான் உண்மையும் கூட

"இல்லை ஜாங் யி தாங்கள் கணவன் எனும் எண்ணம் என்னுள் வந்துவிட்டது ஆனால் காதல் இல்லை. மேலும் ஃபோவை விரும்பினேன் ஆகையினால்தான் தாங்கள் மணக்க கேட்ட போது அதை நினைத்துத் தான். அத்தகைய நிபந்தனைகளை விதித்தது. ஆனாலும் நீங்கள் என்னை மணந்து கொண்டீர்கள். அதனால்தான் தங்களிடம் உண்மையாக நடந்து கொள்ள எண்ணி"

"ஃபோவை மறந்துவிட்டாயா ?"

"இல்லை ஒதுக்கி வைக்க கற்றுக் கொண்டேன்."

"நல்லது. ஆனால் நமது உறவு அரசியல் ஒப்பந்தமாகவே இருக்கட்டும்."

"ஏன் அவ்வாறு?" என்பது அவளுக்கு தேவையில்லாத தேவைக்கான கேள்வி என்பது அவளுக்கும் புரிந்ததது.

" நமக்கான பாதையை வகுக்க வேண்டும் அதற்கு நீ தயாராக வேண்டும்.
ஓய்வு எடுத்துக் கொள் நான் பிறகு வருகிறேன் தற்போது கொஞ்சம் வேலை இருக்கிறது. என வெளியே சென்றவன்"
பிறகு அவளுக்கு யாரோவாகிப் போனான். அவளுக்கு யாவரும் அவனே ஆகிடும் எண்ணம் கொண்டு.

 
Last edited:

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


அத்தியாயம் 6

அரிசி சாதத்தையும் சில கறித்துண்டுகளையும் கிண்ணத்தில் இட்டு இரண்டு குச்சிகளின் உதவியுடன்
உணவை உட்கொண்டு இருந்தவளிடம் வந்தாள் மிங்.

எப்படி இருக்கிறீர்கள் சௌ ?

தங்களுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என பதறிப் போய் இருந்தேன். கண்களில் கண்ட பிறகு தான் நிம்மதி.
அதில் அவளது கரிசணம் மிகுந்த அன்பு தெளித்தில் சௌவின் முகவாசல் பூத்ததது.
அத்துடன் அவளை நோக்கி மற்றும் கிண்ணத்தில் உணவை வைத்து அவள் புற நகர்த்த

அதிர்ந்து அவளை நோக்கினாள். இல்லை... இது... இப்...போது… இனி… என எப்படி சொல்வது திகைத்தவள். ஒருவாறாக "தங்கள் நிலை இப்போது வேறு தலைவி நான் இருக்கும் தரம் வேறு "
சௌவோ அப்படியா ஆனால் நேற்று வரை இருந்த நான் தான் இன்றும் என்றும் உனக்கு அமர்

மிங் அப்ப பொழுதும் தயங்க
அவள் கையைப் பிடித்து அமர வைத்தவள் இது பொது இடம் அல்ல எனது தனி அறை.

என்று அவளை உட்காரவைத்து உணவுக் கிண்ணத்தை தர மிங் அதற்கு மேலும் வாதாட திறன் அற்று அமர்ந்து உண்ணத் தொடங்கினாள்.

நான் கூறியதை முடித்துவிட்டாயா?

ஆம் முன்பே தங்கள் கட்டளைப்படி இங்கிருந்து தப்பி செல்வது போல் நடித்து ஆன் வியட்நாமிற்கு அவனுடன் சென்று விட்டாள். அவள் மூலமாக தங்கள் தாய் தந்தையரை கொன்றவர்களை முக்கிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. ஆனால்

"ஆனால் என்ன ? என்றவளின். ஒரு மரக் குதிரின் வழியே அந்த எண்வயது சிறுமியின் கண்கள் கண்டவை கொழுந்து விட்டு எரிந்த பெரு நெருப்பும் வாள்முனையில் வாழ்விழந்த பல உயிர்களும். தொடர்ந்து நடந்தவை என கண்முன் அவளது கடந்தகாலம் ஒரு முன்னோட்டம் காட்டியது.
அந்த நெருப்பு விழிகளில் மின்ன மிங்கை ஏறிட்டாள். அதன் தாக்கம் முழுவதும் அறியாத அவள்

" ஜாங்குயி தங்கள் கணவரின் அண்ணன்."

"ஆதால் அவனை விட்டுவிடலாம் என்கிறாயா?"
பதிலற்றவளாய் நின்றாள் மிங்.

"கணவர் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னை படுகுழியில் தள்ளியவன் எவ்விதம் காப்பாளான் ஆவான்."

" தங்களை தனது மனைவியாக்கி தனது தவறை சரிசெய்து விட்டார் அல்லவா."

"என்ன சரிசெய்தானா எதை ? அதற்கு முன் ஏன் தவறினான் என்று சீறியவள் அவன் யார் அவனுக்கு எது அந்த உரிமையை தந்தது. எனது வாழ்கை என்ன அவன் செல்லும் பாதையா அவனே கொத்தி படுகுழியாக்கிவிட்டு அதே தான் வேண்டும் எனும் நேரத்தில் மண்கொட்டி செப்பணிட ?"

"தலைவி தாங்கள் என்ன கூற வருகிறீர்கள்?"
என மிங் விழிக்க

"என் எண்ணங்கள் அவற்றின் நிலைப்பாடுகள் பலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். சிலருக்கு வெறுப்பை உருவாக்கும் . ஆனாலும் நான் அனுபவித்த துயரத்தை இன்னும் மறக்கவில்லை. நான் முழு தேவதையும் இல்லை ராட்சசியும் இல்லை. தேவைகேற்ப்ப தான் எதுவும். "

அவளது கூற்றில் எதுவும் மிங்கிற்கு விளங்கவில்லை, அவள் விழிப்பதை கண்ட சௌ

"கவலை கொள்ளாதே மிங் என்னை உனக்கு புரியவில்லை. ஆனால் ஜாங் யி அறிவான். அதைவிட முக்கியம் அவன் சரி செய்யவில்லை நான் செய்ய வைத்தேன்."
என்று வார்த்தைகளை வாய் பகர்ந்தாலும்
'ஆகையால் தான் தன்னை தன் காதலை இன்னும் புரிய வைக்கத் தான் அவன் நெருங்க முயலவில்லை. ஒருவேளை அவன் காதல் உண்மை அரசியலுக்காக இல்லையோ அதற்குள் வேறு ஏதேனும் நான் அறியாமல் இருக்குமோ அதற்காகத்தான் தள்ளி நிற்கிறானோ. என பல திசைகளில் ஆதரவாகவும் எதிராகவும் கடந்தவையும் நிகழ்ந்தவையும் சௌவின் மனம் மீண்டும் ஆலோசனையில் என மாறிய வானிலையில் சிக்கிய கப்பலாக மேலும் கீழும் ஏறி இறங்க அதில் பயணம் செய்பவர்களுக்கு வரும் ஒவ்வாமை போல் இவளுக்கும் தோன்றியது அதன் விளைவு. அவனை நம்ப இயலவில்லை

அவளும் தான் என் செய்வாள் வராத நேசத்தை வலியக் கொண்டு வர முடியுமா? இல்லை வரவே வராதா
என தன் போக்கில் சிந்தித்தாள்.



ஜாங் யி அவனும் அதைத் தான் யோசித்தான். இவளை என் செய்து என் சொல்லி தன்னை விளக்க அப்படி அவளது கடந்தகாலத்திலும் தான் காப்பாளனாக இருந்ததை விளக்கி காதலை பெறுவதில் விருப்பம் இல்லை. அவளே வரட்டும் அதுவே அவனை கண்ணியத்திற்குள் வைத்தது.அவள் ஓட முடியாது மனைவி எனும் தளை கொண்டு கட்டினான். மாடுகளை ஆநிரைகளை மேய்ப்பவன் அவற்றை பழகும் வரை எல்லைக்குள் மேய முளையடித்து கயிறு கொண்டு கட்டி தான் நிழல் ஒதுங்கி மேய்வதை கண்காணிப்பது போல் பார்க்கலானான்.

தன் கடந்த காலத்தை பற்றியோ தன் மனதை பற்றியோ தானே எதையும் எவருக்கும் அறியத்தராதவள் மிங் மட்டும் அறியத் தந்துவிடுவாளா என்ன?
அதை விடு இந்த குவாங்சோவை எப்படி சமாளித்தாய் ?

அன்று நீங்கள் சென்றதுமே அவனும் சென்றுவிட்டான். எந்த தொந்தரவையும் தரவில்லை யாருக்கும். என்றதில் சற்று மகிழ்வே இப்போது அவளது மனம் தற்போது அவன் பக்கம் சாய அதை நிறுத்தியவள் மிங்கிடம்
"ஆன் கொண்டு வந்த செய்தியை கூறு "

என்றாள்.அவள் கூறிய செய்தியில் மிக்க மகிழ்ச்சி காலம் கனிந்து விட்டது. அவன் விதைத்ததை அறுவடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நான் ஜாங் யியை சந்தித்து விட்டு வருகிறேன்.என்றவள் வெளியே சில அடிகள் நடந்தவள்
"மிங் படகு ஒன்றினை தயார் நிலையில் வை."

என்று விட்டு வெளியேறி இருந்தாள்.

கதிரொளியில் தன்னை உலர்த்திய பெண் போல ஒய்யாரமாய் நின்று கொண்டு இருந்தது அந்த கலம். அதன் தோற்றம் அதனை தலைமைக் கலம் என்பதை உறுதி செய்தது. நீரில் மிதக்கும் அரண்மனை போன்ற அதில் சீன பகோடா எனும் அமைப்பில் இரண்டு தளங்கள் இருந்தன. அதன் முன்புறம் டிராகன் வடிவம் கொண்டதாக இருந்தது. அதன் மேல் பகுதியில் செந்நிறக் கொடி பறந்து கொண்டிருந்தது.
அமைப்புடன் இருந்த அதனை மறைத்தபடி மற்ற போர்க் கலங்கள் மற்றும் சிறுகலங்கள் படகுகள் நின்று கொண்டு இருந்தது.

உள்ளே தனது அறையினுள்
ஜாங் யின் முன் இருந்த சௌ
" இனி உங்கள் தமையனுக்கு உதவி செய்வதுதேவையில்லை."
ஏன் என்று கேட்கவில்லை ஆழ்ந்து அவளை பார்த்தவன் எழுந்து நடைபயில தொடங்கியிருந்தான்.


தற்போதைய வியட்நாம் அப்போது அவர்களுக்குள் இருபிரிவாக பிரிந்து போராடிக் கொண்டிருந்தது. ஒன்று பேரசர் லியூவின் வம்சம் மற்றொன்று
நயங்ஹீயூ தலைமையில் இவர்களை ஒடுக்கிக் கொண்டிருந்தது. இதில் ஜாங்யின் தமையன் ஜாங்குயி (Zheng Qi) மட்டுமே பேரசருக்கு விசுவாசமாக இருந்தார்.

எனவே நயங்ஹீயு தங்களது ஆதரவாளர்களின் உதவியுடன் ஜாங்குயியை அழிக்க முயலுவதாக செய்தி அவனை எட்டி இருக்க என்ன செய்வது என அவன் மனதும் சற்றுமுன் சௌ கூறிய ஆலோசனையதிலும் தான் அறிந்ததிலும் சிக்கிக் கொண்டு இருந்தது.


 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


அத்தியாயம் 7

"என்ன தமையனுக்கு உதவ வேண்டாமா? என்ன உளருகிறாய்?. "

இது அவனது பலம் அது என்பது புரிய அவள் தனது வார்த்தைகளை மாற்றி "ஆம் ஏனெனில் அவர் உங்களது ரத்த சொந்தம் இல்லையே அதனால் தானே இன்று வரை அவருக்கு உங்கள் குடும்பத்தில் இருக்கும் மதிப்பு உங்களுக்கு இல்லை."

ஜாங்குயி மற்றும் ஜாங் யி இருவருக்கும் தந்தை ஒன்று தாய் வேறு அதிலும் சீன மரபுப்படி ஒருவனுக்கு பல மனைவிகள் இருக்கலாம். அதில் அதிக செல்வம் செல்வாக்கு பெற்ற குடும்பத்தில் இருந்து வந்தவளுக்கு முன்னுரிமை . நிர்வகிக்கும் அதிகாரம் ஒருவளுக்கு மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் அதிலும் ஜாங் யின் தாய் மனைவி என்ற நிலையிலும் இல்லை அதற்கும் கீழ் நிலை.

நமது நாட்டைப் போல் பல தார மணம் மணந்து கொள்ளாமலே விரும்பும் பெண்களுடன் வாழும் வழக்கம். பெண்கள் பொருட்கள் போல வாங்கி உபயோகித்து வேண்டாம் எனில் உடைப்பது , தூர எறிவது இல்லை மற்றவருக்கு தருவது என்பது வழக்கில் இருந்தது.

இதனால் ஜாங் யி முறையற்ற மகனாகிப் போக தன்னை தன் செல்வாக்கை நிலைநிறுத்த கடற்கொள்ளையில் சிறந்து விளங்கினான். அதன் காரணமாக ஜாங்குயி அவனை தன்னுடன் இணைத்துக் கொண்டான்.

இதை அறிந்தே சௌ மெல்ல அவனது கடந்த அவமானக் காயங்களை அவனுக்கு உணர்த்தி காய்நகர்த்தினாள் தனக்கு ஆதாயமாக.

"அவனுக்காக இல்லை எனினும் வீரர்களை காப்பாற்ற வேண்டும் அல்லவா?"

"நிச்சயம் தாங்கள் அங்குள்ள வீரர்களை காப்பாற்றவும் வேண்டும் ஏனெனில் தாங்கள் தானே கடல் பிராந்தியத்தின் பேரசர். "

"என்ன கூறுகிறாய் சௌ விளங்கும் படி சொல்?"

"அரசே தற்போது தங்களிடம் இருப்பது சில நூறு கப்பல்கள் அதுவே சற்று பொறுமையாக இருந்தால் இனி இந்த கடல் பகுதிக்கு தாங்களே பேரரசர். "

எப்படி என்றவன் பார்வை ஆசையில் மின்னியது என்றாலும் இதை ஏன் அவள் செய்ய வேண்டும் எனும் ஐயமும் கூடவே அதில் இவளுக்கு என்ன இலாபம் என்றும் யோசித்தவாறு அவளைப் பார்த்தவன்.

"உனது திட்டத்தை கூறு. "

"ஜாங்குயின் அழிக்க நயங்ஹீயூவின் ஆட்கள் புறப்பட்டுவிட்டனர். அவர்கள் அவனை அழித்தொளித்த பிறகு அவனது கலங்கள் படைவீரர்கள் நிலை என்னவாகும்?"

"தலைவன் இல்லா படை துடுப்பு இல்லாத படகு அல்லவா? "

"அத்தகைய நிலையில் இருக்கும் ஜாங்குயின் படைகளை தாங்கள் கரம் கொடுத்து காப்பாற்ற வேண்டும். அவ்விதம் செய்தால்.."

"அவர்கள் அனைவரும் எனது விசுவாசிகள் அந்தக் கப்பல்களும் எனது "

"ஆனால் இதில் உனக்கு என்ன பயன் ?"

"மறந்து விட்டீர்களா தங்களது கலத்தில் அதிகாரத்தில் சமபங்கு உள்ளவள். உங்கள் நலனுக்கு அல்ல என்றாலும் எனக்காக செய்து கொள்வேன்."

ஜாங்யி அவளுடன் பேசியபடி இருந்தவன் சட்டென்று வெளியே அரந்த அறையினுள் அவளைத் தள்ளி பூட்டியவன்
"காவலர்களே " என அழைத்தான்.

"கவனம் நான் திரும்பி வரும் வரை எக்காரணம் கொண்டும் இந்த அறையில் இருந்து அவள் வெளியேறக் கூடாது மீறினால் உங்கள் உயிர் மட்டும் அல்ல உங்களுடைய உறவினர் உயிரும் இருக்காது. "

"ஜாங் யி கதவைத் திற ஜாங் யி " என்று கதவை உடைத்துக் கொண்டு இருந்த செள விடம் ஜன்னல் வழியே

"உன் வழி தவறு சௌ ஜாங்குயியை கொல்லாமலே நான் இதை பெறுவேன். உன் கடந்தகாலத்திற்கு நான் பகடையா அது முடியாது." என்றவன்.
"உணவு நீர் சரியாக கொடுங்கள் புரிந்ததா? "
என உத்தரவிட்டு ஜாங்குயை நோக்கி விரைந்திருந்தான்.


"நான் நினைத்ததை சாதித்தே தீருவேன் ஜாங் யி.என் இழப்புக்கு அவன் பதில் கூறியே ஆக வேண்டும்."
என்றவள் சுற்றிலும் ஆராயத் தொடங்கினாள். வெளியேறுவதற்கான வழிவகைகளைத் தேடி . ஏதும்
தட்டுப்படாமல் போக சோர்ந்து தலைக்கு மேலே கரம் போட்டு மெத்தையில் சரிந்திருந்வளை ஜன்னல் வழியாக கண்காணித்த விட்டு சிரிப்புடன் நகர்ந்தனர் காவலர்கள்.

இரவு உணவினை கதவின் இடைவழியாக வைத்து விட்டு மீண்டும் அவள் உறங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொண்டு போயினர் அறியாத காவலர்.


வியட்நாமிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லைப் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தது அந்த படகு பாய்மரம் தாங்கிய அந்தக் கலத்தினை ஒற்றையாய் செலுத்திக் கொண்டிருந்தாள் சௌ. தனது குறிக்கோளை அடையும் வேகம் அவளிடம்.

சுற்றிலும் சிதறியிருந்த காயாத இரத்தத் துளிகள் சற்றுமுன் நடந்த அவள் அந்தக் கலத்தை கைப்பற்றிய விதத்தை பறை சாற்றிக் கொண்டு இருந்தது.அவள் ஆடை வியட்நாமிய வீரர்கள் போல் இருந்ததது.

அவள் மனம் நெருப்பில் பட்ட உடல் போல் காந்திக் கொண்டிருந்தது. 'என்ன நினைத்தான் இவன் எண்ணம்போல் தமையனை காப்பாற்றி விடலாம் என்றா ? அது என்னிடம் நடக்காது. இத்தனை வருடங்கள் இதற்காகவே காத்திருந்தவள் அத்தனை எளிதில் விட்டு விடுவேனா நாளை உனது நிலையும் இதுதான். ' என்றவள் விழிகள் கதிரொளி பட்ட கூர்வாளாய் மின்னின.

அந்த கலத்தில் சுற்றிலும் வீரர்கள் இருக்க ஜாங் யி ஜாங்குயின் கழுத்தில் பதியவிருந்த தனது வாளை நிறுத்தி
"இனி இந்த கலம் படை அனைத்தும் எனது. ஓடி விடு உயிராவது மிஞ்சும் "
என்றதில் தனது படை வீரர்கள் முன்னிலையில் தோற்று வெளியேறினான் .

ஆர்பரித்த வீரர்களிடம் திரும்பிய ஜாங் யி "அனைவரும் கப்பல்களை குவாங்சோவுக்கு திருப்புகள் இனி வியாட்நாமிய துறைமுகத்தில் இருந்தால் நமக்கு ஆபத்து ம் சீக்கிரம் என்றவன் நிற்காமல் தொடர்ந்து பிறபித்த கட்டளைகளுக்கு அப்படியே பணிந்தனர்."

தனது ஒற்றை கலத்தினுள் இருந்த ஜாங்குயியோ தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த மரணத்தை அறியவில்லை. மதுவின் பிடியில் இருந்தான்.

சற்று தொலைவினில் இருந்தே இவனது கலத்தை கவனித்து விட்டவள் அவனை நோக்கி முன்னேறினாள். கயிறு வழியாக
மேலே ஏறியவள் உள்ளே குதித்தாள். இருள் அவர்களை சூழ்ந்திருந்த சோகம் போல் இருந்தது.

மெல்ல பரவும் பொறாமை அதன் வழி நுழையும் நகரும் நன்மனம் பெருகும்சினம். அதன் வழி துன்பம் இறுதி வரும் மரணம் என எதுவும் முதலில் தெரியாது அதுபோல சௌவும் மெல்லப் பரவிய இருளாய் நகர்ந்து வர
அதிக அளவில் இல்லாத காவல் அவளுக்கு வாய்ப்பாயிற்று.

ஒரு ஓரத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த சிலரில்
ஒருவன் மது குறையவும் "நான் சென்று புதிது எடுத்து வருகிறேன் " என்றபடி எழுந்து தள்ளாடிய படி வந்தான். அவன் தன் முன் ஏதோ உருவம் தெரியவும் தன் கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தவன் உறுதிபடுத்திக் கொள்வதற்குள் கதை முடிந்து இருந்தது.

போனவனை காணவில்லை என்றதும் "என்வென்று பார்த்து வருகிறேன் எனது வாளை எங்கே?"
என தேடத் துவங்க "இந்தாருங்கள்" என வாளுடன் ஒரு கரம் நீள
"ஆம் இதுதான் கொடு " என கரம்
நீட்ட அதை கடலுக்குள் வீசியவள்

"அதற்குள் ஏன் வீசினாய்?" என்றான் நிற்க இயலாமல்

"நீயும் அங்கு போக வேண்டுமாம் காவல் காக்க தலைவர் கூறினார்."

"ஓ அப்படியா எனில் நானே செல்கிறேன் "
என்றவன் தானே படியென தடுப்பு சுவர் மீது ஏறி கடலுள் வீழ்ந்தான்.
திரும்பியவள் அமர்ந்தவாறு விழுந்தவாறு கிடந்த உடல்களை தாண்டி உள்ளே நுழைந்தாள்.

மறித்த சிலரை மிக எளிதில் வீழ்த்தியவள் யாரும் அற்ற ஜாங்குயி யின் முன் நின்றாள். அவனோ மதுவின் பிடியில் இருந்தவன்

" யார் நீ " என்றான்
"உன் பாவங்களின் பலன்"
"என்ன உளருகிறாய்"
"குடித்திருப்பது நீ. நான் எப்படி உளருவேன் "
என்றவள் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தவள். ஒரு
மதுக் கோப்பையை எடுத்து அதில் மதுவை ஊற்றியவள் அதை மெல்ல சுவைத்தபடி அவனைப் பார்க்க

"ஓ நீ என் புறம் இருக்கிறாயா?"

"ஆம் பல ஆண்டுகளாக "

"நல்லது இரு இரு "
என்றவன் தனது கோப்பையை எடுத்து ஒரே மூச்சில் பருகியவன்
அதை கீழே வைக்க. அதை நிரப்பிய சௌ
"ஏன் உன் புறம் தெரியுமா?"
"ஏன்" என்றான் .
" அதற்கு முன் நான் என்பது தெரியுமா ? "
"கூறு தெரிந்து கொள்வோம்"
"கூறுகிறேன் .அதற்குத் தானே வந்திருக்கிறேன்."

என்றவள் கடந்தகாலம் விரியத் துவங்கியது.

 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8

அந்த கடலோர கிராமத்தின் அன்றைய இரவு அந்தகார இரவாக ஆகப்போவதை அறியாத அந்த எட்டு வயது சிறு பெண் தன் தாய் தந்தையுடன்
படுத்துக் கொண்டு விண்ணில் தெரிந்த நட்சத்திரங்களையும் தன்னுடன் விளையாட அழைத்துக் கொண்டு இருந்தாள்.
" உள்ளே போகலாம் வெளியே வாடை அதிகமாக உள்ளது."
என்ற தந்தையிடம்
" எப்படி தினமும் புதிய நட்சத்திரங்கள் வருகின்றன தந்தையே."
"நட்சத்திரங்கள் புதிது அல்ல அவை அங்கே தான் உள்ளன. இந்த ஒளி புதிது. "
"அது எப்படி ஒளி புதிது நட்சத்திரம் பழைது"

அவர்கள் அறியமாட்டார்ளே அன்று தான் காணும் ஒளி பலகோடி ஆண்டிகளாக பயணித்து வந்தது
என்பதை. ஒளி பல யுகங்கள் பயணித்தது ஆனாலும் அது புதிதாகாத்தான் இருக்கிறது. அப்படித்தான் அன்றைய இரவும் நினைவும் ஆகிப்போனது.

அவளது தலையை வருடிக் கொடுத்துபடி
"எனக்கு அதைப்பற்றி தெரியாது ஆனால் இதனை பயன்படுத்தி திசை காணவும் மழை கணிக்கவும் தெரியும்.அதைப்பற்றி உனக்கு நாளைசொல்லி தருகிறேன் "

என்றவர் அறியவில்லை. அந்த கப்பல் உருவத்தில் அவர்கள் வாழ்வின் சூனியம் வந்து கொண்டு இருந்தது என்பதை

மீண்டுமாய் தன் தாய் மற்றும் தந்தை இருவரும் ஏதோ கதை கூறியதிலும் பகல் முழுவதும் விளையாடியதிலும் தூங்கியிருந்தாள்.

தீடீரென்று எங்கும் மரண ஓலமும் பெருநெருப்பும் எரிய அலற வேண்டும் என்பது கூட தெரியாமல் போன அந்த சிறுமயை தந்தை தூக்கிக் கொண்டார். சௌ பயந்து போய் தந்தையின் ஆடையை பிடித்த படி தோளில் தொங்கிக் கொண்டு இருந்தாள்.

கப்பலின் கொள்ளையர்கள் தங்கள் விருப்பப்படி அங்குள்ள பெண்களிடம் நடந்து கொண்டனர். அவர்களை கேள்வி கேட்க என் தடுக்க யாரும் இல்லை.மீறியவர்களை வெட்டி வீசி எறிந்னர். அவர்கள் வாழ்வின் கேளிக்கை இவர்கள் வாழ்வில் விளையாடுவது.

அந்த வகையில் சௌவின் வீட்டுகதவு உடைபட்டு கீறல்கள் விழ துவங்கியது. நேரம் அதிகம் இல்லை என்று உணர்ந்து கொண்ட தாயும் தந்தையும் அவளை அந்த குதிரில் இறக்கி கண்ணீருடன் முத்தம் இட்டு "என்ன நடந்தாலும் வெளியே வரக் கூடாது புரிகிறதா "
என்றவர்கள் அவளுக்கு மறுத்து நானும் வருகிறேன் என்று சொல்ல கூட அவகாசம் இல்லை. அதற்குள் முன் கதவு உடைக்கப்பட்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர் அவர்களை படை மாற்ற மற்றோரு வழி நோக்கி சென்ற செளவின் தந்தை முதுகில் அந்த வாள் பாய்ந்து இருந்தது. உயிருக்கும் துடிக்கும் கணவனை கண்டு உயிர் துடிக்க அவனை அணைக்க போனவளை இழுத்து வந்து தங்கள் மோகம் தீர்த்துக் கொண்ட நாய்கூட்டத்தின் தலைவன் தானே நீ
என்றவள் மிதித்ததில் அந்த நாற்காலியுடன் விழுந்திருந்தான். விழுந்த வேகத்தில் அவனுக்கு போதை தெளிந்திருந்தது . அவள் யார் என்பதும் நினைவு வந்து இருந்தது. அதில் தனக்கு ஆபத்து என்றதும் மூளை முயன்று தன்னை சுதாரித்து கொண்டதில் எழுந்தவன் கண்கள் மதுவெறியில் சிவக்க சினம் மிக வாளை சுழற்றினான்.

அவன் வேகத்துக்கு ஈடுகொடுத்த சௌவிற்கு வியப்பு வந்தது அவன் வீரத்தை கண்டு . இந்த சூழ்நிலையில் கூட இத்தகைய வேகமா என இருந்தாலும் அவள் வாள் அவன் மேனியில் விளையாட இன்னும் ஆத்திரம் மிக மதி இழந்து இஷ்டம் போல் சுழற்றினான். அதனை கண்டு கொண்டவள் இப்போது தனது வேகத்தை கூட்டினாள். அதற்கு ஈடுதர இயலாது கீழே விழுந்தவனின் மார்பில் தனது
வாளை சொருகப் போனவளிடம்
"அந்த பெட்டியில் இருக்கும் பொன் முழுவதும் தருகிறேன்."
என்றதும் வாளை நிறுத்தினாள். அதில் தான் இன்னும் உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தவன்
"உனக்கு இன்னும் பொன் தருகிறேன் என்னை இங்கு ஏதாவது ஒரு தீவில் விட்டு விடு "

"ம் செய்து விடலாம். அதுவரை " என அவனை வாளால் அவனை மயங்கி செய்து வந்து நின்றான் ஜாங்யி .சௌவிற்கு பதிலாக பேசியபடி வந்த அவனைக் கண்டு கண்கள் ஒரு நொடி இடுங்கி விரிந்தது.

இங்கு உங்களுக்கு என்ன வேலை உங்க படையை திரும்ப அழைத்துச் செல்லுங்கள்.எனது பகையை நான் தீர்த்தகொள்வேன். என்று பேசியபடி ஜாங் குயை கட்டி தனது படகில் ஏற்ற இழுத்து வர அவளுடன் வந்தவன்
"நான் வந்தது உனக்கு ஆச்சரியம் தரவில்லை யா?"
"நான் தப்பிவிட்டேன் எனும் செய்தி உங்களுக்கு ஆச்சரியம் தந்தா?"
"கேள்விக்கு பதில் கேள்வி"
"இல்லை நீ தப்பிவிடுவாய் என்பது நிச்சயம் தான் எவ்விதம் எனும் ஆவல் மற்றொன்று உனது வெறுப்பிற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என்று இங்கு வந்தேன்."
என்றவாறு அவனை படகிற்கு மாற்றியவனை உறுத்து பார்த்தவளிடம்.

"அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கூறு."

"அது தெரிய வேண்டும் எனில் நீ இறக்க வேண்டும்."
என்றவளிடம் எதையோ கேட்கப் போனவனிடம் பேசாமல் அமைதியாக இருக்கும் படி சைகை செய்தாள்.மறுபக்கம் கண்கள் காட்ட அங்கு நாயங்ஹீ படகுகள் வந்து கொண்டு இருந்தன.

வியட்நாமிய வீர்கள் நெருங்கியபோது ஜாங் குயி இருந்த கலம் எரிந்து முழ்கிக் கொண்டிருந்தது.இருந்தாலும் அவனை தேடும் பணியை தொடர்ந்தனர்.

அருகில் மூங்கில் புதர்கள் மண்டியிருந்த அந்த காட்டில் ஜாங்குயிக்கான தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. ஆயிரம் வெட்டு எனும் சிறுக சிதைவு முறையில் வெட்டப்பட்டு இறந்து கிடந்தான்.

(இந்த தண்டணையில் குற்றவாளியை, பொதுஇடத்தில் மரத்தில் கட்டி முதலில், மார்பகங்கள், கால் முட்டிகளை வெட்டுவார்கள். பின்னர் காது, மூக்கு என ஒவ்வொரு பாகமாக வெட்டி உடலை சிதைத்த பின்னர், இதயத்தை வெட்டுவார்கள்.
இது 900 ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தது 1905 ஆம் ஆண்டு இந்த தண்டணை தடை செய்யப்பட்டது.
)

கடல் அலைகள் அவள் மீது மோத அங்கிருந்த பாறைகள் மீது தானும் ஒரு பாறை போன்று அமர்ந்து இருந்தாள் அவள். அதை விட பெரிய அலை அவள் மனதில் வீசிக் கொண்டிருந்தது.


ஆறு ஒன்றுதான் பல ஆண்டுகளாக அங்கிருப்பதுதான் ஆனால் அதன் நீர் மாறிவிடுகிறதே... அது போல இவள் கண்ட காட்சிகள் மாறவில்லை ஆனால் அதன் பிண்ணனியின் உண்மைகள் அவளை பாறை மீது அலையாக வீசி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தன.
 
Last edited:

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9

கடல் அலைகள் பாறைகள் மீது வீசிய துளியாய் வீடு வந்து சேர்ந்தாள். அவள் உள்ளே நுழைகையில் ஜாங் யி தன் வாள் பயிற்சியில் இருந்தான். எதிரில் இருந்தவர்கள் அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தனர் . அலட்சியமாக வாளை சுழற்றி அவர்களை தள்ளி விட்டான். அவனைப் பார்த்ததும் அவளின் கடந்தகாலம் மேகம் தூறலாய் சினம் பொழிய அதை அடக்கி அவள் இவனை கண்டும் காணாதது போல் வீட்டுக்குள் போக அவனோ


"வா சௌ தேனீர் அருந்தி விட்டு போகலாம்"

என அவளை அழைக்க வேறு வழியின்றி வந்து அமர்ந்தாள். தனது வாளை மேசை மீது வைத்தவன் தேனீர் அருந்திய படி அவளை அளவிட்ட விழிகளுடன்

"உன் எண்ணப்படிஜாங் குயி இறந்து விட்டான். உனது தாய் தந்தை இறப்பிற்கு நியாயம் செய்துவிட்டாய் இப்போது நிம்மதி தானே. "

என்றான் . அவளது வஞ்சினத்தின் விகிதாச்சாரம் அவன் மீது உள்ளது என்பதை சற்று குறைவாக மதிப்பிட்டுவிட்டானோ.

அவளுக்கோ ஆத்திரம் இன்னும் அவளுள் உயிருடன் இருக்க தாளாமல் எதையும் யோசிக்காமல் பாய்ந்து விட்டாள்


"உன் அண்ணன் செய்த தவறுக்கு தம்பிஉன் துணை இல்லாமலும் தண்டனை தந்து இருப்பேன். அவனை நெருங்க உன்னை மணக்கவில்லை."

அவனுக்கு எதிராக சுழன்றாடினாள்.
இப்போது அவனுக்குள் சில ஐயங்கள்.அவற்றிற்கான தெளிவு அவளிடம் இருந்து தான் கிடைக்கும். அவளோ வாய் திறவாதவள். இன்றைக்கு எப்படியும் வாங்கி விடுவது என முடிவு கொண்டு தூண்டி
விட்டான் ஜாங் யி.

அவளுக்கு இருமனம் ஒன்று இவன் புறம் சாய்ந்து இவனை படிய வைக்க மறுமுனையில் நின்றததுவோ இவன் செய்ததற்கு பழிகொள்ள சொல்லி தகித்தது. வீசும் காற்றில் ஒருமுறை மென்காற்று அலை பற்ற வைத்து கனிய வைக்க மறுமுறை எதிராக வீசி தானே அனைத்து விளையாடுவது போல் இவளின் ஆத்திரமும் ஆசையும் மாறி மாறி வீசிட இவள் மனம் பச்சை விறாகாக புகைய நமநமத்த நாசியும் எரிந்து சிவந்த கண்கள் என இவளும் கடந்த கால ரணத்தில் சிறைப்பட்டாள். புகையேறிய அறையில் இருந்து வெளிக் காற்று தேடும் நுரையீரலாய் சௌவின் வேகம் பகை முடித்திட வாளை வீசிட ஜாங்யி தன் நிலையை அடையும் முன் அவனை பதம் பார்த்து இருந்தது.குருதி வெள்ளம் என பெருக அவன் சரிந்து விழுந்தான் .


அருகில் நின்ற குவாங்சோ ஜாங்யியை தாங்கிக் கொண்டான் . சௌவை கொன்று விடும் ஆத்திரம் வந்தது. எனினும் சூழ்நிலை கருதி


"இவளை சிறையில் அடைத்து வையுங்கள் பிறகு விசாரித்துக் கொள்ளலாம். மருத்துவரை அழையுங்கள். "


என்றபடி உள்ளே செல்ல சௌ அங்கேயே திகைத்து நின்றுவிட்டாள்.ஆனாலும் அவள் மனம் குவாங்சோவின் பின்னே நகர்ந்து கொண்டே இருந்தது. அவள் அவனை கொல்ல நினைத்தாள் தான்.ஆனாலும் அவன்காயத்திற்கு அவள் உயிர் துடிக்கிறது. இத்தகைய வருத்தம் அளிக்கிறது ஏன் ? என உள்ளம் கொண்ட குழப்பத்தில் நின்றவள். தன்னுணர்வுக்கு வருமுன்னரே இழுத்து வந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தாள்.

ஜாங்யி மயக்கம் தெளிந்து கண்திறந்து பார்த்தவன் கேட்டது என்னவோ.

"குவாங்சோ சௌவை எங்கே?" என்று தான்.


"செய்ததற்கு சிறையில் இருக்கிறாள்."

என்றவன் ஜாங் யின் காயங்களுக்கான மருந்தை வைத்தவன்


விசாரணை நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.அவளது முடிவு இன்றாகக் கூட இருக்கலாம். என்றபடி பருத்திதுணியை கொண்டு சுற்ற வர அவன் கையை பிடித்து நிறுத்தி விட்டு வெடுக்கென்று எழுந்து கொண்டான்.


தனது மேலங்கியை அணிந்து கொண்டான். தொடர்ந்து வெளியேற முயல "தலைவா உங்கள் உடல் "

என அவனை தடுக்க முயன்றவனை முறைத்து பார்த்ததில் குவாங்சோ அவ்விடத்திலேயே நின்று விட்டான்.


நீதிமன்றம் சென்றடைந்த போது அவளுக்கு தண்டனை விதிக்கப்பட இருந்தது.

"நிறுத்துங்கள் என் மனைவி என்னை கொல்ல முயலவில்லை. வாள் பயிற்சியில் இருந்தபோது எனது கவனமின்மை காரணமாக நிகழ்ந்தது. ஆனால் அதை செய்தது . இதோ இவன் தான்"
என வியட்நாமியன் ஒருவனை ஒப்படைத்தான்.அவள் முகத்தில் குறுமுறுவல் இந்த அரசாங்கத்தின் அனைவரும் கைக்கூலிகள் இதில் நியாயம் எங்கிருந்து வந்தது. பணம் அதிகாரம் சொல்லும் வாக்கு செல்லும் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து இருந்தாள் .


ஜாங் யின் காயத்திற்கு சௌ காரணம் அல்ல என்பதை உறுதி செய்து அவளை விடுதலை செய்தது .மீண்டும் பனிச்சிற்பம் என உள்ளம் உறைந்துவிட தன் விடுதியை நோக்கி நடந்தாள்.ஜாங் யி தானும் அவளுடன் வந்தான். விடுதி முன்பு வரை எதுவும் பேசாமல் வந்தவள்


"அன்று கூறியதைக் தான் இன்றும் கூறுகிறேன்.நான் உங்கள் மனைவி ஆனால் என்னால் உங்களை காதலிக்க இயலாது. உங்கள் தேவை ஒரு உடல் அவ்வளவு தானே இதற்கு ஏன் காதல் காரணங்கள்"


எனும் கேள்வியை அவனிடம் கேட்டு விட்டுத்தான் உள்ளே வந்தாள். அதில் அவள் கரம் பிடித்து நிறுத்தியவன் அவளுக்கு பதில் சொல்ல வில்லை சற்று நேரம் அவளது உற்றுப் கண்களை பார்த்தவன்.


"இந்த கண்கள் என் மீது காதல் கொள்ளும். " என்று விலக முயல


"உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும்"

என்றவள் அவனருகில் வந்து எதையோ சொல்ல

"இது சாத்தியமா சௌ"

"நாம் நினைத்தால் முயன்றால்"

என்றவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
 
Last edited:

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10

அவளது திட்டத்தை அவன் மற்றும் அவன் கீழ் மிககச்சிதமாக நிறைவேற்றி இருந்தனர்.ஜாங் குயின் இறப்பின் போது சீன கடற்கொள்ளையர்கள் அப்போது தனித்தனியாக பிரிந்து கிடந்தனர். அவர்கள் யாரையும் விட அதிக கப்பல் மற்றும் வீரர்கள் ஜாங்யி இடம் இருந்தது. அவர்கள் அனைவரையும் தன் இடத்திற்கு வரவழைத்திருந்தாள்.



அந்த தீவின் சூதாட்ட விடுதியின் உள்ளறையில் முக்கியமான கடற்கொள்ளையர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களில் நடுநாயகமாக வீற்றிருந்தவன் ஜாங் யி, அவனருகில் அமர்ந்து இருந்தாள் சௌ.


அனைவரும் முன்பும் மதுவும் சில வகையான உணவுப் பொருட்களும் பரிமாறப்பட்டது. அவ்விடமே அமைதியாக இருந்தது. அவர்களைப் பார்த்து


"கடல்களும் அலைகள் வழி பேசும்போது கடலை சொந்தம் கொண்டாடும் நீங்கள் இத்தகைய அமைதி காக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றாள். "


ஒரு புறம் ஒப்பந்த பத்திரம் மறுபுறம் அவன் வாள் அதில் இருந்த இரத்தம் சற்று முன் நிகழ்ந்ததில் உயர்ந்த அச்சத்தை நெகிழ்ந்து விடாமல் உறைய வைத்து கொண்டு இருந்தது. சம்மதம் சொல்வதை தவிர வேறு உபாயம் ஏதும் இல்லை என்பது தெள்ளென உரைத்தது.


சற்றுமுன்…. நடந்த நிகழ்வு


சௌவின் சூதாட்ட விடுதியில் தென் சீன கடலின் பெரிய கொள்ளையர்கள் அனைவரும் இருந்தனர். அவர்களில் ஒருவன் தங்களது மதுவை அருந்தியபடி

"ஜாங் யி எங்களை அழைத்தன் காரணத்தை கூறு? "

"ஆம் அதற்காகத் தானே இவ்வளவு தூரம் மெனக்கிட்டு வந்துள்ளோம்."

என்றான் மற்றோருவன். ஜாங்யி

தனது இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.

"சௌ நீயே விளக்கி கூறு"

என்றதும் அனைவரது விழியும் அவளை நோக்க.

"இந்த கடல் பகுதியில் நாம் அடிக்கடி போர்த்துகீசியர், ஐரோப்பியர் இவர்களின் நெருக்கடியுடன் இவர்களுக்கு ஆதரவளித்து பாதுகாக்கும் சிங் அரசின் கப்பற்படை இவற்றால் பெருந்துயரருக்கு ஆளாக வேண்டியிருக்கிறது."

"இதற்கும் நீ இப்போது எங்களை அழைத்து இருப்பதற்கும் என்ன சம்பந்தம் ?"

என்றான். புரியாதவன் போல்

"சம்மந்தம் என்னவென்று இன்னும் உனக்கு புரியவில்லை யா வூ ?"

"எனக்கு புரிந்தது சரியா என்று தெரிய வேண்டும் மேலும் நீங்கள் அதெற்கனவே அழைப்பு விடுத்திருக்கும் போது நீயே விளக்கிவிடு"

அவனைப் பார்த்தவள் விழிகளில் என்ன இருந்தது.என்று தனது பாவனையை மாற்றிக் கொண்டவள்.

"தனித்தனியாக இருப்பதற்கு பதிலாக நமக்கு என ஒரு அமைப்பு . அந்த ஒப்பந்தப்படி நாம் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளலாம்."

"அருமை மிக அருமை "

என கைதட்டி படி எழுந்தவன்

"எப்படி நமக்கு என ஒரு அமைப்பு. கேட்கும் போதே எத்தனை இனிமையாக இருக்கிறது."

என்றவன் சௌ மற்றும் ஜாங் யின் முன் வந்து

"நீங்களே தலைவராக விரும்புகிறாய் உனக்கு கீழ் நாங்கள் அடிமையாக இருக்க வேண்டும் என நேரடியாக கூற வேண்டியது தானே அதைவிடுத்து ஏன் இவ்வளவு ஒப்பனைகளும் பாசாங்கும்."

"இல்லை அப்படி இல்லை"

"இது உன் வாய்மொழிவது ஆனால் உன் மனம் மொழிவது. போரின்றி சேதமின்றி எங்களை உனக்கு கீழ் கொண்டு வர முயல்கிறாய். "

என தனது உரையை முழுமையாக முடிக்கவில்லை. அதற்குள்

"அப்படித்தான். உங்களை விட அதிக கலம் மற்றும் ஆட்கள் இருக்கும் நாங்கள் ஆள நினைப்பதில் தவறென்ன அதற்கான என வழியும் உகந்ததுதான் உங்களையும் கப்பல்களையும் அழித்து வெற்றி கொண்டு எனக்கு லாபம் இல்லை. ஆனால் எங்களுக்கு பயன்படாது எனில் அதை அழித்தொழிக்க தயங்க மாட்டேன்"

என்ற சௌவின் வாள் அவனது கழுத்தை அறுத்திருந்தது. அந்த அறையில் இருந்த மற்றவர்கள் உறைந்து போயினர். வூ உடன் வந்த சிலர் இவள் மீது பாயவாளுடன் தயாராக ஜாங்கியின் கண்ணசைவில் அனைவரும் வாள் நுனியில் நிறுத்தப்பட இன்னும் சிலர் மற்றவர்களை நெருங்க செளவோ அங்கு வைக்கப்பட்டிருந்த டம்பிளிங்கை எடுத்து சுவைத்தபடி

" தேவையில்லை தள்ளி நில்லுங்கள் வூ போல இவர்களும் முட்டாள்கள் அல்ல "

என்றதில் அவர்களுக்கு புரிந்துவிட்டது. தங்களது நிலை என்னவென்பது.பிறகு சிறிது ஓயினை அருகில் இருந்த சிறிய பீங்கான் கோப்பையில் ஊற்றி ‌அதைப் பருகியபடி


"இடையில் சிறு தடங்கல் இனி நாம் மீண்டும் விவாதிக்கலாம். நீங்கள் நிதானமாக அந்த ஒப்பந்த பத்திரத்தை படித்துப் பார்த்து கையொப்பம் இடுங்கள். ஆனால் உங்கள் அனைவரின் கலங்களும் அதில் உள்ளவர்களின் பாதுகாப்பும் அதில் தான் உள்ளது. அதை நிர்ணயம் செய்ய இன்னும் ஒரு நாழிகை போது தான் உள்ளது. அதற்குள் தகவல் தெரிவிக்கப்படாவிடில்… "

என்றவளின் பார்வை வெளியே முற்றம் தாண்டி சென்றது. அவளை தொடர்ந்த மற்றவர்களின் பார்வை முடிவில் படகு ஒன்று பெருத்த ஓசையுடன் வெடித்து எரியத் துவங்கியது. அதில் அவர்களது கப்பலின் பாதுகாப்பு யாரிடம் என்பது புரிய மறுப்பேதும் இன்றி கையெழுத்இட நிறைவேறியது ஒப்பந்தம்.


ஃ போ வின் தலைமையில் இவர்களது ஆட்களின் வேர் அனைத்து இடங்களிலும் ஊடுறுவியிருந்தனர் அவர்கள் நினைத்தாலும் அழிக்க இயலாத படி. களை எதுவென தெரிந்தால் தானே நீக்க ஆனால்

அவர்களுக்கு இனி இந்த தென் சீனக் கடலினை ஆளப்போவது சிங்சௌ தான் என்பது தெள்ளன விளங்கியது.

எத்தனை தீர்க்கமான திட்டம் என்ன ஒரு ஆளுமை என மதிமறந்து மாற்றான் மனைவியின் மீது மனதை வைத்தான் அவன் இவள் என்னவளாக இருந்தால் எனும் எண்ணம் வித்தாகி வீழ்ந்தது.


இணைந்து நின்ற ஜாங்யி மற்றும் சௌ முன்பு மண்டியிட்டு அனைவரும் வணக்கம் செலுத்தினர்.


இனி நமது கப்பல்கள் சிவப்பு, வெள்ளை ,நீலம் ,கருப்பு ,மஞ்சள், பச்சை என ஆறு கொடியின் கீழ் குழுக்களாக செயல்படும். நீங்களே உங்கள் கப்பல்களின் தலைவராக இருந்து வழிநடத்தலாம். வூ இறந்து விட்டார் எனவே அவரது கலங்கள் குவாங்சோவின் தலைமையில் கருப்பு கொடியின் கீழ் செயல்படும்.என் மகன் ஃபோ இனி எனது தளபதி மற்றும் எனது மனைவிகளில் ஒருவரான சௌ இனி சட்டம் மற்றும் நிதி ஆலோசகராக மற்றும் நான் இல்லாத நேரத்தில் எனக்கு அடுத்து முடிவு எடுக்கும் உரிமையை வழங்குகிறேன்.


ஜாங்யி தனது தளத்தில் நின்று கொண்டு இருந்தான். சௌ அவனை நாடி வந்தாள்.

"சொல் சௌ என் மீது விருப்பம் ஏற்பட்டு விட்டதா என்ன? "

"அதற்கு என்றும் வாய்ப்பு இல்லை ஆனால் இப்போதும் மனைவியாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் ஏனெனில் பெண் என்பவள் உயிருள்ள பொருட்கள் தானே உங்களுக்கு தேவை எனில் பிறருடையது என்றாலும் கவர்ந்து விடுவது. அதில் எனது புத்தி இன்னும் மதிப்பு மிக்கவளாக எனை மாற்றியதில் எனக்கு எதைக் கொடுத்து போஷிக்கலாம் என்று தெரியாமல் தேவையில்லாமல் அன்பு பாசம் என்று பேதலிக்காதீர்கள் பொருந்தவில்லை. விலை மகளாக என்றாலும் அதற்கான விலையைக் கொடுத்து விட்டீர்கள் ஆதலால் தாங்கள் நெருங்கினால் தடுக்க மாட்டேன்."

என்றவள் அவன் அருகில் வந்து

"எனது தேவை உடல் அது மட்டும் தான் உள்ளம் அது எதற்கு உளைச்சல் தருவதற்கா என்பதுதானே உங்கள் கொள்கை பிறகு ஏன் இந்த நாடகம் அதுவும் என்னிடம்"


என்னவளின் வார்த்தைகள் அவனுக்கு அவனது மற்றும் அவளிடம் உள்ள அவனுக்கான கடந்தகாலம் இரண்டையும் நினைவிற்கு கொண்டு வந்தது.

 
Last edited:

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11

பெளர்ணமி நிலவு கடலெங்கும் மென்துகிலாய் தன்ஒளியை சமுத்திரத்தின் மீது மூட அது மெல்லையில் ஆடியபடி இருந்தது. ஜாங்யிக்கு அது மெல்லியாள் ஒருவள் வென்துகில் காற்றில் ஆட நடமிடுவதை போல் தோன்றியது.



அவளை கண்டதும் இது போன்ற முழுநிலவு தினத்தன்று தானே. தகவல் ஒன்றை பெற அந்த மலர்களின் விடுதிக்குள் நுழைந்தான்.இது அவனது முதல்முறை அல்ல ஐந்து ஆண்டுகளாய் அவர்களுக்கும் இந்த இடத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால் எப்போதும் ஜாங்யி தானே இங்கு வருவதில்லை அதற்கான தேவையும் இல்லை. எனில் ஃபோ இல்லை வேறு யாராவது வந்து கொடுக்க வேண்டியதை கொடுத்து தகவல்களை வாங்கிக் கொள்வது வழக்கம்

அப்போது நடன அரங்கேற்றம் நடந்து கொண்டு இருந்தது. அதன் மையத்தில் சுழன்றாடிக் கொண்டிருந்தாள் அவள். முகத்தினை மறைத்தபடி ஆடிக்கொண்டிந்தாள். அவளை கண்டதும்

தன்னை அறியாது நின்று விட்டான். சுற்றிலும் இருந்த அனைத்தும் மறந்து விட பெளர்ணமி நிலவினைக் கண்டதும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளாய் அவன் மனம் அவளைக் கண்டதும் பொங்கி வீசி அவளிடம் கரைசேர துடித்தது.


நடனம் முடிய அவள் வணங்கி விட்டு தனது அறைக்கு சென்ற பின் தான் அங்கிருந்த அனைவருக்கும் நனவுக்கு வந்தனர்.செல்வாக்கு மிக்க இல்லத்தின் பெண்கள் திருமணம் முடிந்து மனைவியர் இருக்க இன்னும் திருமணம் ஆகாமல் அவனது பெண்கள் எனும் பெயரில் சிலர் அவனுடன் வாழ்ந்திருக்க மேலும் இதுபோன்ற பல இடங்களில் பெண்கள் பொருளுக்காய் உறவாட ஆர்வமுற்றிருக்க இத்தகைய சூழலில் இருக்கும் ஜாங்யி அவனைப் பொருத்தவரை கொள்ளையிட்ட பொருட்கள் பெண்கள் இதில் என்ன பேதம் என்பதே அவனது நிலைப்பாடு.மேலும் அவன் இதற்கு முன் ஆட்சி செய்த மிங் வம்சத்தை சார்ந்தவன் என்பதால் அந்த ராஜ வாழ்க்கையை கைக்கொண்டு இருந்தான்.



அன்றைய காலகட்டத்தில் கடற்கொள்ளையர்கள் இவர்கள் கரையோர கிராமங்களில் தரையிறங்கினால் அங்கிருந்து பொன் பொருள் பெண்கள் அனைத்தையும் கவர்ந்து விடுவர் அந்த பெண்களை தங்கள் விருப்பப்படி அனுபவிப்பது இல்லை விற்றுவிடுவது உண்டு ஜாங் யி இது போன்ற நெறி தவறிய முறைகளை கண்டு கொள்வது கிடையாது.

நானா ஒரு பெண்ணிடம் தன்னிலை இழந்து நின்றேன் என்றென்னியவனுக்கு

மறுநொடி உகுத்துவிட்ட அவள் மீதான அவனது ஆசை உதித்து விட. இவள் ஒன்றும் என்னால் அடைய முடியாத பொருள் இல்லையே சூதாட்ட விடுதியில் இருப்பவள் தானே பொன்னை கொடுத்தால் தானே வந்து விட்டு போகிறாள்.

என மனச்செருக்கு பகிர அவனது ஆட்களில் ஒருவனை அவள் எனக்கு வேண்டும் என்பதாக பார்த்தான்.

" மன்னிக்க வேண்டும் தலைவரேஅது அத்தனை எளிது அல்ல அவள் யாரென்பது அந்த விடுதியின் உரிமையாளரைத் தவிர யாருக்கும் தெரியாது.மேலும் அவள் வேலை ஆடுவது மட்டுமே அதுவும் அவள் விருப்பம் போல் தான்"

"ஏன் இவளுக்கு மட்டும் இத்தகைய சுதந்திரம்"

"அவளது திறமை

ஆம் சூதாட்டத்தில் அவளை வென்றவர் இல்லை.அவளை வென்றவர் அவள் முகம் பார்க்கலாம் அவளுடன் உறவாடலாம்"

*எனில் அவள் முகத்தை பார்த்துவிட வேண்டியதுதான்" அந்த சூதாட்ட அறைக்குள் நுழைந்து இருந்தான்.


அங்கு மேசையின் மீது வெள்ளை மற்றும் கறுப்பு நிறக் காய்கள் இருந்தன. அவன் ஒரு புறம் இருக்க மறுபுறம் இருக்கைக்கும் மேசைக்கும் இடையில் திரை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.அதன் இருபுறமும் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர்


" இது எதற்காக?"

என்றான் திரையைச் சுட்டி


"முடிவு தெரியும் திரை இருக்கும். உங்களது நகர்வுகளை நாங்கள் கூறுவோம் அங்கிருந்து அவர்கள் உங்களுக்கு எதிராக தனது நகர்வுகளை கூற. அவர் சார்பில் நான் நகர்த்துவேன் .


"தொடங்கலாமா?"

ம் என்ற அவன் சம்மதம் தெரிவித்ததை அடுத்து போட்டி தொடங்கியது. அவனது நகர்வுகள் வெட்டி வீழ்த்திட துடிக்க அவளோ பதுங்கி பாய காத்திருந்தாள்.


இலயித்து விளையாடியவனுக்கு அவளின் சாதுர்யமான நகர்த்தல்கள் உடனே அவள் முகம் பார்க்க தூண்டியது. எனவே ஆட்டம் முடியும் முன்பே அவளும் பணியாளர்களும் ஆட்டத்தில் கவனம் கொண்டு இருந்த அந்த நொடியில் திரைதாண்டி உள்ளே பிரவேசித்தவன் அயர்ந்து போனான் அவள் அழகில்.


அனைவருக்கும் புத்தாண்டு இன்னும் இனியும் இனிமை இனிதே நிலவ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

கொஞ்சம் சின்ன எபிதான் பாதி இருக்கு மீதி நாளை
 
Last edited:

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாம் 11

மறுநொடி முகத்தை மறைத்தவள் சடுதியில் தனது அறைக்குள் சென்றிருந்தாள். ஜாங்யி அவளைத் தொடரக் கூட மறந்து ஆச்சரியத்தில் இருந்தான். ஆம் இது நாள் வரையில் இந்த விடுதியின் உரிமையாளராக அவனைச் சந்தித்து பேசியதம் தகவல்களை பகிர்ந்தது அனைத்தும் செய்தது ஒரு ஆண் என அவன் எண்ணியிருக்க இன்று வந்து உடன் சௌவின் நடனம் அவனை கவர்ந்தாலும் அவளது வடிவமும் கண்களும் அடிக்கடி சந்தித்தது போல் இருந்தது. ஆகையால் தான் உள்ளே வந்தவன் விதிகளை மீறியது.



ஆனால் சௌவோ தன்னையே கடிந்து கொண்டு இருந்தாள்.தனது இந்த திட்டம் பாழானதை எண்ணி வருந்தவில்லை நூறு வழி முறைகளை நொடியில் ஆலோசித்துவிடும் திறன் அவளிடம் உண்டு ஆனால் அவள் ஃபோவை இழக்க நேரிடும் என்று நினைக்கவில்லை.

ஆம் ஜாங் யி இவளின் மதிநுட்பம் தனது ஆசையை நிறைவேற்ற உதவும் என்று அறிந்து கொண்டவன் அவளை தன்னோடு வைத்துக் கொள்ள திருமணம் என்ற ஒப்பந்தத்தை முன் வைத்தான்.
"சௌ நான் உன்னை மணக்க விரும்புகிறேன்."
என்று நேரடியாக விஷயத்த்திற்கு வர
அவளோ
"நான் உங்களை விரும்பவில்லை. என் மனம் வேறு ஒருவரை வரித்துவிட்டது. மன்னியுங்கள்"
என்றாள் உடனே முடிக்க எண்ணி
"ஃபோவைத்தானே விரும்புகிறாய். அவனைப் புறந்தள்ளிவிட்டு என்னை ஏற்றுக் கொள் உனது நிலை நிதி அனைத்தும் உயரும்."
"தங்கள் உயர்ந்த எண்ணங்களுக்கு என் நன்றி ஆனால் என் நிலை நிதி அனைத்தையும் இவ்வளவு தூரம் உயர்த்தி கொள்ள தெரிந்த‌ எனக்கு இனியும் எவ்விதம் கையாள வேண்டும் என்பது நன்கு தெரியும் எனவே தாங்கள்" என வாயிலை நோக்கி கைகாட்டிட .
ஹா ஹா ஹா… என சத்தமிட்டு சிரித்தான். அவளது நிமிர்வு அவனுக்கு அவள் வேண்டும் என உரமேற்றிட அதற்காக எல்லா வழிகளையும் கைக்கொள்ள துணிந்தான். அவளது விடுதி பெண்கள் குழந்தைகள் கிராமத்தின் ஆட்கள் அனைவரும் அவனது கலத்தில் காவலில் இருக்க அவளுக்கு வேறு வழியில்லை என்றாலும்.

சற்று கலங்காமல் சிந்தித்து அவனது ஆசையான நிதி மற்றும் நிலையில் சம பங்கு கேட்டாள் அவன் தானே மறுத்து விடுவான் என்ற யூகத்தில் ஜாங் யி யோ அவளை ஆராதிக்க ஆரம்பித்து விட்டான்.

"இன்னும் இன்னும் என உள்ளம் இன்மையில் கூட உன்னை நாடிடுதே நீஅறியாயோ . உன் மீதான என் நேசமதை அனலின்றி சுடரும் விழிகளில் வாட்டி ஆடையென நெஞ்சில் போர்த்திக் கொள் வருந்திய நான் வாழ"
என புலம்பினான் ஐந்து ஆண்டுகளாய் சேர்த்து வைத்த காதலில் ஊற வைத்த போதையில்...அந்நேரம் இவனைக் காண வந்தாள் சௌ..

உச்ச பட்ச விரதத்தின் விரக்தியில் இருந்த அவனது மனதின் நிலவரம் புயலின் முன் தோணியாக நிர்ணயிக்க முடியாத நிலையில் இருந்தது.தவறென்றோ சரியென்றோ பாகுபடுத்தி பார்க்கும் அறிவுசார்மனம் அன்று அவ்வமயம் ஜாங் யி டம் இல்லை. எந்த ஒரு பொருளுக்கும் அது தாங்கும் வெப்பநிலை அழுத்த என்ற அளவு உண்டு அது அப்பொருளின் முறிவு நிலை (breaking point) என்றாகும் அதுபோல் மனதிற்கும் உண்டு அது தாங்கும் அழுத்தம்
அளவை தாண்டினால் பல விபரீதங்களை விளைவிக்க கூடும் என்று உணர்ந்தானோ என்னவோ தன்னை மறந்து விட வேண்டும் என என்றையும் விட அதிகமாக குடித்துக் கொண்டிருந்தான்.

அவன் மதுவின் பிடியில் இருப்பதை தெரிந்து கொண்ட செள அவளுக்கு பேசியாக ஆகி வேண்டிய அவசியம் நாளைக்கு வரை ஒத்திப்போட முடியாது.ஏனெனில் போர்ச்சுகீசிய வியாபார கப்பல் ஒன்றினை பற்றிய தகவல் கிடைத்திருந்தது. காலம் தாழ்த்தினால் கைமீறிபோய்விடும் என்பதால் தான் அவளே வந்தாள்.

மேலும் தற்போது உப்பளங்களில் வரி வசூலிக்கும் வேலையை புதிதாக தொடங்கியிருந்தது இவர்களது சங்கம் ஏனெனில் இது அவர்களின் கஜானாவிற்கு நிரந்தர பொருள் தரும் என்பதால் சௌவின் இந்த ஆலோசனையை அனைவரும் மறுப்பின்றி ஏற்றுக் கொண்டனர்.அதனை பற்றிய தகவல்களையும் தலைவர் என்ற முறையில் அவனிடம் கூற வேண்டியிருந்தது.

ஆதலால் அவனிடம் வந்தாள். மேலும் இதுநாள் வரை எந்த போதையிலும் நிதானம் இழந்ததது இல்லை என்று அறிந்தவள் அவனது அமைதியான பார்வையினை தனக்கான அனுமதி என்றெண்ணி தான் வந்த காரணத்தின் காரியங்களைப் பற்றி பேசலானாள்.

அவனோ இவள் ஏன் உன்னை விட்டு தள்ளி நிற்கிறாள். உன்னிடம் என்ன இல்லை. உரிமைப்பட்டவள் தானே எடுத்துக் கொள் என உந்திய ஆசைமதம் கொண்ட மனதின் முன் இது நாள் வரை அவளது காதலுக்காக காத்திருந்ததை குத்தி நிதானித்து செயல்பட கூறும் அங்குச அறிவு வேலை செய்யவில்லை. அவளுடன் மஞ்சத்தில் சாய்ந்தான்.

விளைவு எந்த காதலுக்காக காத்திருந்தானோ அந்தக் இனி எப்போதும் கிடைக்காது எனும் எண்ணம் புயல் மேகமாய் கவிழத் தொடங்கியது. வெளியே
முழு நிலவை தாழ்வு அழுத்தம் காரணமாக தோன்றிய கொண்டல் மூடியது காதல் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. தன்னுடன் இணைந்த பின் எதிர்காலத்தில் தன்னுருவம் தாங்கிடச் செய்தாவது அவள் தன் காதலை பெற்றிடலாம் என தனது அத்துமீறலுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டான் .

அவளோ மிக நிதானமாக அவனை ஏறிட்டவள் " நாய்கள் என்றுமே நாய்கள் தான் நீ அறிவாயா ஜாங் யி என்றவள் வார்த்தை அவனை கூர் பார்க்க நின்று திரும்பியவன்.
"நான் அடுத்தவன் மனைவியை நாடவில்லை. எத்தனை காலம் ஆனாலும் என்ன வழிமுறைகளை கையாண்டாலும் உன்னை மாற்ற முடியாது என்பதை உணர்ந்தால் தான். நீயும் உன் எதிர்ப்பை காட்டவில்லையே அதன் காரணம் நீ என்னை ஏற்றுக் கொண்டதால் தானே"
என திருப்பித் தாக்க
மிக நிதானமாக எழுந்து உடைமாற்றிக் கொண்டவள்.
"அயலவன் மனைவியை நாடவில்லையா முட்டாள். நீ மணந்து கொண்டதே அடுத்தவன் மனைவியைத் தான். என்ன கூறினாய் எதிர்ப்பை காட்டவில்லையா ஏன் காட்டவில்லை எவ்வளவு மறுத்தேன் ஆனால் நீ "

" இன்று நடந்து கொண்டதை தவிர்த்து இந்த ஐந்து வருடங்களில் உன் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறேனே ஆயினும் எனை ஏன் உன்னால் ஏற்க முடியவில்லை. இது என்னை ஏமாற்றுவது போலாகாதா "
என்றவனின் முகம் எப்படியும் இன்று முடிவு அறிந்திட வேண்டும் எனும் முடிவுடன் இருந்ததை அறிவித்தது. அவளோ வெகு அலட்சியமாக
"நீ எனக்கு செய்தவற்றால் நான் அனுபவித்த துன்பத்திற்க்கானவற்றை உன்னை கொண்டு தான் நிகர் செய்ய முடியும். உனக்கு ஒன்று தெரியுமா நான் ஏன் உன்னை மறுத்தேன் என்று "
" ஃபோ அவன் தானே "
"இல்லை. இன்று வரை நீ உயிருடன் இருக்க தான் அவன் காரணம்."
"என்ன உளருகிறாய்"
" உன் சாவுக்காக காத்திருந்த என்னை நீ மணந்து கொள்ள செய்ததன் மூலம் உன்னை காப்பாற்றியது அவனும் நீ தள்ளிநின்று செய்ததும் தான்."

"அப்படி என்ன செய்தேன் கூறு ?"
என்றவனை பார்த்து ஒரு இகழ்ச்சியை சிரிப்பாக உதிர்த்தவள்
" என்ன செய்தேன்… என்ன செய்தேன்… ம் எத்தனை எளிதான கேள்வி. கூறுகிறேன் கேள். அது தெரியவேண்டும் எனில் நீ இறக்க வேண்டும் என்றேன் நினைவிருக்கிறதா? இனி என்னை பொருத்தவரை நீ இறந்தவன் "


என்றவள் தன் கடந்தவற்றின் மீதான திரை விலக்கினாள்.
 
Last edited:

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12

நெருக்கமாக வேயப்பட்ட அந்த மூங்கில் கூடைக்குள் இருந்து வெளியே வந்தவள் கண்டது குற்றுயிரும் குறையும் நிலையில் கிடந்த தாயைத்தான்



"அம்மா "

எனக் கதறியபடி அவளிடம் ஒடி வந்த செளவின் குரலில் இமைகளை கூடஅசைக்க முடியாத நிலையிலும் மெல்ல விழி திறந்தவர்

"ச.." என்று இறுதியாய் ஒருமுறை அவள் பெயரை உச்சரித்துவிடுவதற்காய் பிரயத்தனம் செய்யதன உதடுகள் . தன் மகளின் வருங்காலத்தை எண்ணி எழும்பிய பேரலைகள் விழி ஓரம் வழிய பெரும் முயற்ச்சியில் தன் கரத்தை உயர்த்தி தனது மகவின் முகம் தடவியவர் கைகள் வீழ்ந்தது. கண்கள் மாத்திரம் அவள் மீது மட்டும் நிலைத்து நின்று விட்டிருந்தது.

"அம்மா எழுந்துருங்க"

என்று அழுதபடி எழுப்பியவள் அவளிடம் அசைவு இல்லை என்றதும் பயந்து போய் மீண்டும்

"அம்மா அம்மா " என்று உலுப்ப பலன் ஏதும் இல்லை .

அருகில் உள்ளவர்களை அழைக்கலாம் என்று எண்ணியவள் வெளியே ஓடி வந்தவள். கண்டது என்னவோ

"உதவி... உதவி…"

என அலறும் மனித உயிர்களைத் தான்.அவளே உதவி வேண்டியிருக்க எங்கே உதவுவாள். அருகில் இருந்த வீடுகள் அவளுக்கு தெரிந்த முகங்கள் என அனைத்தும் தீயிலிடப்பட்டு இருந்தது. மீண்டும் கொள்ளையர்கள் இவளைக் காணவில்லை அவர்கள் தான் கேளிக்கையில் இருந்தனரே ஆனால் அவள் கண்களுக்கு அரக்கர்களான அவர்கள் மட்டும் தான் தெரிந்ததனர் .காணும் சிலரையும் கொன்றுகுவிப்பது என்றிருக்க மிரண்டு போன சிறு பேதை, என்ன செய்வது என்றறியாமல் மீண்டும் வீட்டுக்கு போய்விடலாம் அதுவே தனக்கு பாதுகாப்பு என்று பழகிய உணர்வுகள் உந்தியதில்.
கால்கள் மீண்டும் வீடு நோக்கி திரும்பின.

ஆனால் வழி பெருநெருப்பு வழி வாழிடம் என பெருவாரியை விழுங்கியிருக்க அந்த படகுவீடுகளை ஒருங்கினைத்த பலகைகள் இன்றுதான் பிரகாசமாக காட்டியது அவளது
வீட்டையும் அந்த கிராமத்தையும் இனி என்றுமே மறக்கமுடியாத அளவுக்கு வெளிச்சமாய். செளவின் வீடு முழுவதும் சுற்றி பற்றி பரந்து இவள் ஓடிய நின்ற விளையாடிய இடம் அனைத்தையும் தன் கரங்களால் தேடியது. அதற்கு பதில் கூறாமல் அமைதியாக எரிந்து கொண்டிருந்தனர்.இவளைக் காணாமல்
ஆ...ஊவென காற்றுடன் சேர்ந்து பெருங்கூச்சலிட்டு அவளை அழைத்துக் கொண்டிருந்தது.அந்தத் தீ அந்தமிலா தீயாய்அவளுள் நின்றது


அழுதபடி நின்றவள் கண்களின் நீர் கூட தீக்கோளங்களாய் மாறி தீயைத் தான் பிரதிபலித்தது. அந்நேரம் தான் அவள் கண்களில் ஜாங்குயி விழுந்தான்.
தனது கப்பலில் இருந்த அவனோ நிகழ்வுகள் அத்தனையும் கையில் மதுக்குவளையுடன் சுவைமிகையேறிய பார்வையுமாய் நின்றான். தனது தோழர்களின் செயல்களில் மகிழ்ந்து போய் பாராட்டி கொண்டிருந்தவனைக் கண்டதும் அவனைக் கொன்றுபோடும் வெறி அவளுக்குள் ஊறியது.

அந்த ஆத்திரத்தில் அவனுக்கும் அவளுக்கும் இடையேயான தூரத்தை கண்கள் அளந்தன. அதனை மனதில் பதித்து கொண்டவள். நீரில் குதித்தாள். தங்கள் வீட்டின் அடித்தளத்தின் பக்கமாக சென்றவள் சிறுபோக்குவரத்துக்கு என அவளது தந்தை பயன்படுத்திய அந்த சிறிய படகில் அமர்ந்து அதை பாதி எரிந்த தனது வீட்டின் கைப்பிடியை பிடிங்கி துடுப்பாக மாற்றியவள் அவர்களது கலம் நோக்கி செலுத்த துவங்கினாள். கலத்தை நெருங்கியவள் இருளோடு பரவி முன்னேறக் முயன்று கொண்டு இருந்தாள். அவள் கண்ணில் அந்த சிறிய கலத்தில் இருந்த அவன் கிடைத்தான். இன்னும் உற்றுப் பார்த்தாள். அவன் தந்தையின் முதுகில் கத்தியை வீசியவன்.முதலில் அவனைக் களைய வேண்டும் அதைத் தாண்டி வேறு எதுவும் முன் இல்லை. அவனுக்காக ஏதேனும் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிய கண்களில் அது அகப்பட்டது. அதை எடுத்துக் கொண்டவள்
சத்தமின்றி நீரினுள் மீன்போல பாய்ந்தாள்.
அவனின் கலத்தின் பின்புறமாய் வந்தவள்
காத்திருந்தாள் மூச்சடக்கி முத்துக் குளிப்பவனின் பெண் அவளுக்கு மூச்சடக்க யார் பயிற்ச்சி வேண்டுமா என்ன?.

தன் கூற்றுவன் தன்னை நோக்கி விரைவதை அறியாத அவன்


" போதும் வாருங்கள் அரசு அதிகாரிகள் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிட வேண்டும்"

என்றவன் அருகில் இருந்த மற்ற படகுகளிடம்" சீக்கிரம் நீங்களும் செல்லுங்கள் தலைவர் உத்தரவு "

என்றதில் அந்த படகுகள் நகர்ந்த மறுகணம்
தனது முழு விசையும் பயன்படுத்தி மேல் நோக்கி பாயும் சுறாவாக பாய்ந்தாள்.
என்ன ஏது என்று சுதாரிக்கும் முன் அந்த தூண்டில் முள்ளை அவன் கழுத்தில் இறக்கி இருந்தாள். மேலும் அவனுக்கு அவகாசம் தராமல் மார்பு இன்னும் சில இடங்களில் தூண்டில் முள்ளில் குத்தியெடுக்க அவன்
துவண்டான் விறுவிறு கயிற்றில் சுற்றி கடலின் உள் நோக்கி வீசியவள் மறு நொடி சாகரத்தின் உள் மறைந்தாள்.

கையில் அகப்பட்ட பெண்கள் பொருட்கள் என அனைத்தையும் ஏற்றியவர்கள் இவனை கவனிக்க தவறிய சில நொடிகள் போதுமாயிருந்தது சௌவிற்கு. கலம் நகர்த்தப்பட்டு இருந்தது.அவங்கு இவனைத் தேட ஒருவன் தனியாக ஆடிய அவன் இருந்த படகு கலத்தின் அருகே நிற்பதை கண்டு

"அதோ அங்கே "

"எனில் துனைத் தளபதி அவர்கள் உள்ளே இருக்கிறார் போலும் " என மூடிக்கிடந்த அவன் அறையை பார்த்து கூற அனைவரும் சிரித்தனர். அவனோ கீழே மீன்களுக்கு உணவாக தொடங்கி இருந்தான் தன் உயிருடனே.

எங்கு செலுத்த வேண்டும் என்பது தெரியமல் ஏதோ திசையில் கை நோக தோணியை செலுத்தியவள் ஆத்திரம் மிக தாய் தந்தை உற்றார் உறவினர் என அனைவர்க்குமாய் அழுதாள். ஜாங்குயியை கொல்லமுடியாவிடினும் தன் பெற்றவர்களின் இறப்புக்கு இன்னும் முழு நியாயம் செய்யவில்லை என குமுறியது. இல்லை இதையாவது செய்தாயே என அவள் திருப்தி கொள்ள முயன்றால் முடியவில்லை. தன்னுடன் வாழ்ந்த மக்கள் கொலையுண்டு கிடக்க அதற்கு காரணமானவனை ஏதும் செய்ய முடியாதை எண்ணி அடித்த குளிர் காற்றில் அவளும் கண்ணீரும் விரைத்து விட்டதில் இறுகி விட்டாள். துடிப்பு கூட போட மனமில்லை இனி இருந்து என்ன? யாருக்கு? என்பதில் விரக்தியுற்று இதழ் கடை தானாக வளைந்தது. உயிரோடு இருப்பதன் சலிப்பு நிலை தானாக சாக மனம் அற்ற இளம்பிராயம் வடக்கிருந்தாள் அவள். அவளது படகு நடுக் கடலில் நிற்க இவளும் தன் பெற்றோர்களுடனான நினைவிலேயே நின்றாள்.இரண்டு நாட்களாக தண்ணிர் இன்றி படகில் பயணித்தவள் மூன்றாம் நாள் மயங்கிவிட்டாள். அரவணைப்பார் யாரும் இல்லை என்றாலும் வாழ்கை காற்று கரைநோக்கி வீச அலைகள் தள்ள மிதந்த படி வந்தவளை கண்டது அந்த சிறுவன் தான்

"தாத்தா தாத்தா அங்கு பாருங்கள் ஒரு படகு"

என்று சௌவின் படகை நோக்கி வந்தான்.

இரு சற்று மெதுவாக செல் வயதான என்னால் உன்னுடன் ஓடிவர முடியாது. என்று அவரது வாய் கூறினாலும் அவரது கால்கள் அப்படி இல்லை. அந்த சிறுவனுக்கு இணையாக ஓடியபடி தான் இருந்தது. படகு கடலின் உள் கொஞ்சம் இடுப்பளவு நீர் இருக்கும் பகுதியில் மிதந்தபடி இருந்தது.


"சீக்கிரம் கரைக்கு இழுத்து விட வேண்டும். இல்லை மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும் அபாயம் உண்டு ."

என்றதில் அந்த சிறுவன் வேகமாக நீந்தி படகை இழுத்து வர இருவரும் சேர்ந்து கரை அருகில் வந்த பிறகு தான் உள்ளே பார்க்க உள்ளே பிடிங்கி எறிந்த கொடி வெயிலில் வாடி வாழத் சொற்ப உயிரை தேக்கி தவிப்பது போல அவளும் இருந்தாள் . படகில் இருந்து அவளை தோளில் சுமந்து கரையில் மனலில் போட்டவர். " இந்த படகை கட்டிவிடு ஃபோ "

என்றார். அதில் அவன் அந்த சிறுபடகை கரையில் இழுத்து நிறுத்தினான்.

"தாத்தா தாத்தா இது நல்ல படகு எந்த சேதமும் இல்லை. இனி நாம் இதில் சென்று மீன் பிடித்து வயறார சாப்பிடலாம். அப்படித்தானே ."

என்ற படி அவரிடம் வந்தான்.அவர் அவனைப் பார்த்து சிரித்தவர். தனது இடுப்பில் இருந்த குடுவையில் இருந்த அந்த மதுவை சில மிடறுகள் அவள் வாயை திறந்து ஊற்றி மெல்ல அவள் அதை உள்ளே இறக்கும் படி செய்தவர். அவளை உப்பு மூட்டை போல தூக்கிக் கொண்டவர்

"வா ஃபோ வீட்டுற்கு போகலாம். இவளுக்கு உடலில் தண்ணீர் குறைந்து விட்டது. உடனடி சிகிச்சை தேவை."

என்றவர் வீட்டை நோக்கி விரைந்தார். ஃபோவும் அவரைத் தொடர்ந்தான். மரத்தாலான அந்த தொட்டியில் அவளை இருத்தியவர் அந்த தொட்டியில் நீர் மற்றும் சில மூலிகைகள் சேர்க்கப்பட்டிருந்தது.
பிறகு அவள் பருகவும் ஏதோ மூலிகை நீர் கொடுத்ததில். அவள் உயிரூட்டம் பெற்றாள். மறு தினம் கண் திறந்தவளிடம்

"நீ விழித்து விட்டாயா?" என்றவனை யார் நீ என்பது போல் பார்த்தவளிடம்

" நீ மயங்கி கிடந்தியா நான் தான் முதல்ல உன்ன பார்த்தேன். அப்புறம் "

" இரு இரு ஃபோ அவள் இன்னும் கொஞ்சம் தெம்பாகட்டும் பிறகு பேசலாம்."
என்றவர்
"மெல்ல எழுந்து கொள். இந்தக் கஞ்சியை பருகு "
ஏதேனும் தன்னைப் பற்றி கேட்பாரோ என்பது போல் பார்த்தவள் அந்த கஞ்சியை வாங்க யோசிததாள். ஏனெனில் இதற்கான கைம்மாறு எதுவும் அவளிடம் இல்லை.

"அச்சம் தேவையில்லை. உனக்கு விருப்பம் இல்லையெனில் உன்னைப் பற்றி எதுவும் கூறவேண்டாம்."

என்றவரின் வார்த்தைகளின் உறுதிக்கிணங்கி அந்த கஞ்சியை பருகியவள் தன்னையும் புதைத்தாள். புதிதாக வாழ்வை துவங்க எண்ணம் கொண்டவள் .

"என் பெயர் சௌ. உன் பெயர்?" என்றாள்.

தன் அருகில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனின் தேவை புரிந்தவளாக தன் கையில் இருந்த மீதி கஞ்சியை அவனிடம் தந்தாள். பசியில் இருந்தவன் வாங்கி மடமடவென பருகியவன். இடையில் தலையை தூக்கி

" என் பெயர் ஃபோ இது என் தாத்தா வாங்."

என்றவன் மீண்டும் கிண்ணத்தில் முகம் மறைத்தான். அதில் அவள் வாய் மலர் முகிழ

அதைக் கண்ட வாங் கும் சிரித்தார்
 
Last edited:
  • Like
Reactions: Ums

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13


தனது நீண்ட கூந்தலை அலசியவள் உலர்வதற்காக காய விட்டு இருந்தாள். தனது ஞாபங்களில் கடந்தவற்றை கழியும்

முடியாய் உதிர்த்தது விட்டு தன் புதிய வாழ்கையை ஐந்து வருடங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பதினெட்டு வயது செள


பனை மரத்தில் இருந்து உதிர்ந்து கிடந்தன பனம் பழங்கள். அருகில் ஏதோ சில மீன்களை பிடித்துக் கொண்டு வந்தவள் அதைக் கண்டதும் அதையும் சேகரித்துக் கொண்டாள்.


அந்த பனம் பழங்களை கழுவி மேல் தோலை நீக்கிவிட்டு அரிப்பு வலையில் வைத்து தேய்த்தாள். சுற்றிலும் இருந்த சாறு வலையின் அடிப்பகுதியில் சேகரமாக 'கொட்டையும் சக்கையும் தனியாக வைத்தவள் பிறகு அந்த சாற்றுடன் மாவு சர்க்கரை எள் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை போல செய்து மூங்கில் பாத்திரனுள் வைத்து எடுத்து வந்தாள். அதனை அடுப்பங்கரையில் மண் அடுப்பின்

கீழே நெருப்பு எரிய மேலே பதிக்கப்பட்ட பெரிய இரும்பினால், ஆனா அந்த இருப்புச்சட்டியினுள் நீர் கொதித்துக் கொண்டிருந்தது. இதனை அதில் வைத்து மூடி வும்.

உள்ளே வந்த வாங் "என்னம்மா இன்றும் நீயே சமைத்து விட்டாயா? சரி இன்றாவது நாம் செய்வோம் என்றுதான் சில மீன்களைப் பிடித்து வந்தேன்."


"நான் செய்து வைக்கிறேன் .நீங்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்."

என்று அந்த மீன்களை வாங்கிச் சென்றவள்

அதை சுத்தம் செய்து சமைக்க துவங்கவும்

மீண்டும் அவளிடம் வந்த வாங்


"இந்த வற்றலை உள்ளே வையம்மாஅரிசி வாங்க வேண்டுமா? இல்லை வேறு ஏதாவது வேண்டுமா?"


"இல்லை. நானே வரும் போது வாங்கி வந்து விட்டேன்."

என்றபடி பதப்படுத்தி காயவைக்கப்பட்டு இருந்த மரச்சீனி கிழங்கு (நூடுல்ஸ்) போன்ற வற்றலை பத்திரப்படுத்தினாள்.

"தாத்தா ஃபோவும் நானும் கடலுக்குள் சென்று வருகிறோம். நாங்கள் திரும்ப வரை நீங்கள் பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்."


என்று வாங்கிடம் கூறியபடியே மறுபுறத்தில் தனது முடியை உயர்த்தி கொண்டையிட்டு தன் மார்பை வெண்ணிற பருத்தி துணி கொண்டு சுற்றி இறுக்கி அதன் மீது வெள்ளை உள் சட்டை அதன் மீது ஆண்கள் அணியும் உடையான நீண்ட கை வைத்த அங்கி என அனைத்தையும் அணிந்து கொண்டவள். வெளியே அழகான பதின்பருவ ஆண் பிள்ளை போல இருந்தவளை கண்ட வாங்.தான் செய்தது சரியே என்று மற்றும் ஒருமுறை தன்னை மெச்சிக் கொண்டார். அன்று மயக்கத்தில் இருந்து எழுந்தவள் வெளியே செல்ல முயல

அதுவரை அந்த வீடு மற்றவர்கள் பார்வை படாமல் ஒதுங்கியிருந்தது. ஃபோ, வாங் இருவரின் பெரும்பாலான நேரம் கடலில் தான். எனவே ஊருக்குள் அவர்களை தேடுவார் யாரும் இலர். மேலும் வறுமையின் பிடியில் இருப்பாரை தேடி வருவார் யாரும் இலர். சௌவை காப்பாற்றி அழைத்து வந்தவர் யாருக்கும் பதில் உரைக்க வேண்டிய அவசியம் அற்று போயிற்று . ஆனால் அவள் வெளியே செல்வதென்றால் அந்நியர்கள் பார்வை விழுந்தால் அவளது அழகு அவளுக்கு ஆபத்தை கொண்டு வரும் என்பதோடு மட்டுமின்றி அவளின் பழைய மிச்சங்கள் வேறு அபாயத்தை உண்டாக்க கூடும் என்பதை ஊக்கத்தவர். அவளை ஆணாக மாற்றியிருந்தார்.


விளைவு அவளும் இவர்களுடன் கடலோடியனாள். அவள் கடலுக்கு வருவதையோ கலம் செலுத்துவதையோ அவரால் தடுக்க முடியவில்லை. தன் எண்ணங்களில் முழ்கி இருந்த வரை உலுக்கி

"தாத்தா, வருகிறேன்."

என்றவள் தாங்கள் முத்துக் குளிக்க போவதைப் பற்றி கூறவில்லை.

"அவரோ நானும் வரட்டுமா ?"

என்றதும் .

"தாத்தாவிடம் கூற வேண்டாம் செள அவர் விட மாட்டார்" என்ற தங்கள் திட்டம் நினைவில் வர குற்ற உணர்வு வந்தது.அவரின் முகம் பாராமல் தனது வலையை எடுப்பதாய் திரும்பிக் கொண்டாள்.

"இல்லை தாத்தா நீங்கள் அடுத்த முறை வாருங்கள் " என்று சொல்லிச் சென்றவள் அறியவில்லை. தான் எப்பேர்ப்பட்ட ஆபத்தை இதனால் வாங்கப் போகிறோம் என்று.


தென் சீனக் கடல் வணிகம் மட்டும் மன்று அதன் முத்துக்களுக்கும் பெயர் பெற்றது. சீனாவின் ஹான் அரசர்களின் காலத்தில் இருந்தே பிரபலம் . வெண்மையான ஒளியுடைய உருண்டையான கடல்முத்துக்கள். அவர்களுக்கு மிக விருப்பம் டிரகானின் கண்ணீர்த் துளிகள் அவை எனும் நம்பிக்கையோடு இருப்பவர்கள் உண்டு. மருத்துவ ரீதியிலும் பயன்படுத்தப்பட்டது.


இவை சீன அரசியின் மகுடம் ஆடைகள் செல்வந்தர்களின் வீட்டு பெண்களின் ஆபரணங்கள் மட்டும் இன்றி ஏற்றுமதியும் செய்யப்பட்டது. அமெரிக்க மற்றும் ஜரோப்பிய வணிகர்கள் இதனை பெரிதும் விரும்பினர் தங்கள் மக்கள் இம்முத்துக்களின் நுகர்வோர் ஆனதில்.


முத்துக் குளித்தல் என்பது எப்போதுமே சவால் மட்டும் அல்ல சாவின் விளிம்பை தொட்டு வருவது. சௌ காற்றின் திசைக்கு ஏற்ப மிக நேர்த்தியாக கலத்தை செலுத்திக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஃபோவும்

அமர்ந்து இருந்தான்.அவன் வயதையும் அதன் ஆபத்தையும் கவனத்தில் கொண்டவள்.

"ஃபோ கட்டாயம் நாம் இதை செய்துதான் ஆக வேண்டுமா? "

அவள் முகத்தில் தெரிந்த பயத்தில்

"சாவு என்பது வாழ்வின் ஒரே உண்மை நாம் அதை தவிர்க்க முடியாது. அதை நினைத்து அஞ்சியபடி வாழ்வதும் இயலாது. பசியில் இறப்பதை விட இப்படி முயன்று இறப்பதில் தவறு இல்லை."


இப்போதும் அவளுக்கு மனம் ஆறிற்று இல்லை ஆயினும் சற்றேனும் அவர்களை

மூச்செடுக்க இந்த மூச்சடக்குதல் அவசியம்


என்பது விளங்கியதால். தனது பதைபதைக்கும் நொடிகளுக்கு தயாரானாள்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top