All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபத்தி ஒன்றாம் பகுதி....

நந்து மலரை வெகுதூரம் கூட்டி வந்திருந்தான். கரை நிறுத்து என மலர் பல முறை கூறியும் அவன் கேட்கவில்லை. சொல்லிச்சொல்லி ஓய்ந்துபோனவள், இறுதியில் அமைதியாகிப்போனால். வண்டி சடன் பிரேக்கிட்டு ஓரிடத்தில் நின்றது..

மலர் நாம் எங்கு வந்திருக்கிறோம் என சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏதோ ஒரு நெடுஞ்சாலைபோலவே இருந்தது, தவிர எந்த இடம் என விளங்கவில்லை, எதற்காக இங்கு வந்துள்ளோம் எனவும் விளங்கவில்லை.

எதற்காக இப்படி இங்கே கூட்டிவந்துள்ளாய் என்றாள் மலர். உனக்கு இனிமேல் சாருவும், அவன் குடும்பமும் , வேண்டாம். நானிருக்கிறேன், உன்னைத் தங்கமாக பார்த்துக்கொள்வேன். யார் எது சொன்னாலும் அதை எல்லாம் கேட்டுக்கொண்டு உன்னை வஞ்சிக்க மாட்டேன் என்றான்.

நீதானே இது அனைத்திற்கும் காரணகர்த்தா, நீ சாரு செய்தது தவறு என்கிறாய். சரிதான் என மலர் மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

அவளது முகத்தை தன் பக்கம் திருப்பியவன், நான் என்ன சொன்னாலும் சாரு நம்பிவிடுவதா? அதாவது உன்னை நம்பாமல் என்றான் நந்நு.


இதே இப்போது என்னை ஏமாற்றி கடத்திவரவில்லையா? அதேபோல் அவரையும் ஏமாற்றி இருப்பாய்,...

என்ன மலர் நீயே இப்படி சொல்கிறாய், நீயாக விருப்பப்பட்டுத்தானே என்னோடு வந்தாய்,...


அடப்பாவி,... வீட்டில் இப்படியா சொல்லிவுள்ளாய்.


இல்லை இனிமேல்தான் சொல்வேன் என்றவன், தனது செல்போசியை கையிலெடுத்தான்.

அவனை ஓங்கி ஒரு அறைவிட்டவள், மடமடவென காரிலிருந்து இறங்கி நடந்தாள்.


அவள் வேகமாய் நடந்து செல்வதை காரிலிருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தான் நந்து. கண்ணில் வஞ்சத்துடன், உதட்டில் சிரிப்புடனும், அவனது வாய் இப்போ தைரியசாலி மலர் என் மலர் என்றான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கயிற்றில் கட்டப்பட்ட நிலையில், வாய் இருக்கக்கட்டப்பட்ட நிலையில் , கண்கள் மட்டும் வழித்திருக்க நின்றிருந்தாள் ரஞ்சனி. அவளைச்சுற்றி கும் இருட்டு, காப்பாற்றுங்கள் என கத்தினாள்... ஆனால் வாய் மூடப்பட்ட நிலையில் தெளிவற்ற லேசான சத்தம் மட்டுமே வந்தது.


வாயிற் காப்பாளன் கிட்டத்தட்ட அறை கிலோமீட்டர் முன்னால் வாயிலில் நின்றிருக்கிறான்.

நாய்களிரண்டும் சற்று முன்னால் வீட்டு வாசலில் கூண்டிலிருந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தது.


ஊட்டியில் பனி அதிகமாக கொட்டியது. குளிர் தாக்கியது. ரஞ்சனியை மேலும் கஷ்டப்படுத்த மழை பெய்யத் தொடங்கியது.

ரஞ்சனியின் தைரியத்தை மிகவும் சோதித்தது. ரஞ்சனி உடலளவில் வலு இழந்தாள். மயக்கம் சற்றே வரத்தொடங்கியது.

மலரின் இடைசி வார்த்தைகள் அவள் செவியில் கேட்டது. எனது இறப்பு இவ்வளவு கொடுமையாக அமைந்ததற்கு நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். ஏனென்றால் தவறான நபரை காதலித்தால் வாழ்க்கையில் எதையெல்லாம் சந்திக்க நேரும் என்பதை இந்த போராட்டம் எனக்கு சொல்லிக்கொடுத்தது. இதை நான் அடுத்த பிறவியிலும் மறக்காமல் இருக்கவே இறைவன் இத்தகைய கடுமையை எனக்கு காட்டினான். என்றாள்.


ரஞ்சனியின் மனது தவறான நபரை காதலித்து அவனை நம்பி வந்ததற்கு சரியான பாடம், மலரைப்போலவே நமக்கும் முடிவு நெருங்கிவிட்டதை நினைத்தாள். திடீரென வயிற்றிலிருக்கும் குழந்தை ஞாபகம் வர அனைவாக வயிற்றில் கை வைத்தவள், மறு நொடி மயங்கினாள்.


நரி ஒன்று ஆளை மோப்பம் பிடித்து வந்தது. நரிகளின் வாடையை உணர்ந்த நாய்கள் நிலையில்லாமல் குரைத்தது.

நாய்களின் சத்தத்தை கேட்ட வள்ளி எழுந்து கொண்டாள். நாய்கள் சத்தத்தை கேட்டு வந்தவள் கண்ட காட்சியில் உறைந்து நின்றாள்.

ரஞ்சனி கயிறு கட்டப்பட்ட நிலையில் வலிப்பு வந்துவிட, வெள்ளைநிற சுடிதார் முழுவதும் ஆங்காங்கே கயிறு அறுத்து சிராய்ப்பால் சிவப்பு நிறமாய் மாறி இருந்தது. வலிப்பால் கைகால்கள் வெட்டி இழுத்தது. அதன் பின்னே நரி வருவதை பார்த்த வள்ளி அலறினாள்..

அதற்குள் மருது வந்துவிட பட்டென நாய்களை திறந்துவிட்டான்.நாய் இரண்டு பாய்ந்து சென்று நரியை வேட்டையாடிக்கொன்றது. அதற்குள் ரஞ்சனியின் வெண்நிற ஆடை ஏறக்குறைய சிவப்பானது.

விரைந்து செயல்பட்ட வள்ளியும் மருதுவும் ரஞ்சனியை ஊட்டியின் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

மருது காரை ஓட்டிச்செல்ல, வள்ளி ரஞ்சனியை தாங்கிபிடித்து அழைத்துச்சென்றனர்.

மருத்துவர்கள் கேள்வி கேட்டு இருவரையும் துளைத்தெடுத்தனர். ஏனென்றால் ரஞ்சனியின் நிலை அப்படித்தான் இருந்தது.

மருத்துவர்கள் கேட்கும் அருவருப்பான கேள்வியில் வள்ளி அழுதுவிட்டாள். ஒரு பெண்ணை நடு இரவில் உடலெல்லாம் இரத்தம் பாய்த்த ஆடைகளுடன் தூக்கிவரவும், மருத்துவமனை ரஞ்சனிக்கு சிகிச்சையளிக்க மறுத்தது.

ஏதும் புரியா நிலையில், வள்ளி சத்யாதேவிக்கு அழைத்தாள். சத்யாதேவி அப்போதுதான் போக்குவரத்து சரிவர வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வள்ளி சத்யாதேவியிடம், அம்மா, ரஞ்சனி அம்மாக்கு வலிப்பு வந்துடுச்சு, எனவும் சத்யாதேவிக்கு பகீரென்றது.நாக்க அவங்கள ஆஸ்பத்ரிக்கு தூக்கீட்டு வந்தோம், ஆனா சேத்துக்க மாட்றாங்க, நீங்க பேசுங்க எனவும் , சத்யாதேவி மருத்துவரிடம் பேசினார்.

சத்யாதேவி அவரை அறிமுகப்படுத்திக்கொண்டு, முதலில் சிகிச்சையைத் தொடங்குங்கள், உங்களுக்கு ஏதும் ஆகாது.தான் அனைத்தையும் பார்த்துக்கொள்வதாக கூறினார்.

சத்யாதேவியின் வார்த்தைக்கு உடன்பட்டு மருத்துவமனை சிகிச்சையை தொடங்கியது.

சத்யாதேவி ரஞ்சனிக்கு குளிரினால் வரும் வலிப்பு என மருத்துவரிடம் தெரிவித்ததால், அதற்குரிய சிகிச்சையை தொடங்கினர்.

சத்யாதேவி வண்டியை திருப்பிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.

ரஞ்சனி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாள். ரஞ்சனி மயக்கம் தெளிந்தாள்.

மருத்துவர் அவரிடம் என்ன நடந்தது என விசாரணை நடத்தினர்.

அவள் மௌனமாக இருந்தாள். நல்லவேளை இதில் உங்கள் கருவிற்கு ஏதுமாகவில்லை என்றனர். அதைக்கேட்டதும் ரஞ்சனியின் முகத்தில் சற்றே சந்தோசம் எட்டிப் பார்த்தது. இப்போதாவது சொல்லுங்கள் என்றனர்.

குளிர் ஒத்துக்கொள்ளாமல் வலிப்பு வந்துவிட்டது, என்றாள்.

மருத்துவர்கள், எப்படி உடலில் காயங்கள், என்றனர் சந்தேகமாய்..

விழுத்த இடம் கரடுமுரடான தரை எனவே, சிராய்த்தது என்றாள்.

அதற்குள் சத்யாதேவி வந்துவிட காத்திருப்பு பகுதியில் இருந்த மருதுவிடமும், வள்ளியிடமும் நடந்த விவரம் கேட்டார்.

வள்ளி தான் கண்ட காட்சியை ஒரு பிழையின்றி ஒப்பித்தாள்.

சத்யாதேவிக்கு இதைச் செய்தது பவித்ரன் என்று தெளிவாகத் தெரிந்தது.

ரஞ்சனிக்கு ஏதும் நேரக்கூடாது என கடவுளை வேண்டினார்.

மருத்துவர் தீவிர சிகிச்சை அறையிலிருந்து வெளிவந்து நலமாக உள்ளதாகக்கூறினார்.

ரஞ்சனியை சாதாரண அறைக்கு அழைத்துச் சென்றனர்.

சத்யாதேவி ரஞ்சனியைக் காண சென்றார். உடன் வள்ளியும் மருதுவும் சென்றனர்.

வள்ளி, என்னம்மா இப்படி பயம்புரித்தீட்டீங்க, நல்லா இருக்கீங்களா? என்றாள்.

ரஞ்சனி, ம் வள்ளி நல்லா இருக்கேன் , ஒன்னுமில்ல என்றாள்.

யாருமா உங்கள கட்டுனது எனவும், ஒரு நிமிடம் யோசித்த ரஞ்சனி,

நானேதான் ஒரு பந்தயம், எனக்குள்ள ஊட்டி குளிர ஒரு இரவு தாங்க முடியுதா? இல்லையா? பாக்கலாம்னு அது இவ்வளவு விபரீதமாக ஆகும்னு நான் நினைக்கல, சாரி உன்ன பயம்புருத்துனதுக்கு, நன்றி என்ன காப்பாத்துனதுக்கு என சிரித்த முகமாய் கூறிட வள்ளியும் மருதுவும் நிம்மதியுடன் வெளியேறினர்.

சத்யதேவி ரஞ்சனியின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். ரஞ்சனி உடம்பு எப்படி இருக்கும்மா என்றார்.

ரஞ்சனி, சத்யதேவியை ஒருமுறை முறைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். இதற்கு காரணம் பவித்ரன் தான ? என அவர் கூறவும், சீறும் பாம்பாய் கண்ணைத் திறந்தவள், ஆமா எல்லாம் தெரிஞ்சுட்டுதான் வந்துருக்கீங்க, ரைட்.

அப்போ நான் செல்றதுக்கு எதுவுமில்ல, யூ.... கெட் அவுட் என நெருப்பாய் வார்த்தைகள் வந்தன.

ரஞ்சனி உண்மைய சொல்லு உனக்கும் அவனுக்கும் நடுவுல என்னம்மா? ஆனந்த் இறந்ததுக்கு காரணம் நீயா? என்னாச்சுமா,

எனக்கு பவித்ரன் ரூம்ல லெட்டர் படுச்சதுல இருந்து படபடப்பாவே இருக்கு, உன்ன பழிவாங்கவா தீரன் கல்யாணம் பண்ணிகிட்டான். சொல்லும்மா, என்ன உன்னோட அம்மாவா நினச்சு சொல்லு என்றார்.

அம்மாவா நீங்களா? என்னோட எதிரிய பெற்று வளர்த்த நீங்க எப்படி எனக்கு அம்மா ஆக முடியும்.

அப்படி எல்லாம் சொல்லாதம்மா, நான் பவித்ரன் ட பேசுறேன், எல்லா சரி பண்ணலாம் என்றார்.

எனக்கு இந்த உறவு தேவையில்ல, அதனால நீங்க சரி பண்ணவும் தேவையில்ல, நான் தெரிந்தே தோற்ற ஒரே இடம் மணவறை, ஒரே நபர் பவித்ரன். நான் தோல்வியை வெற்றி ஆக்காமல் அவரை சந்திக்க மாட்டேன். என்னுடைய விடுதலைப்பத்திரம் வரும், இனி நான் பவித்ரனை என் வாழ்க்கையில் சந்திக்க விரும்பவில்லை.

அவனை வெறுக்கும் நீ எதற்கு, அவனை காட்டிக்கொடுக்காமல்,அனைவரிடமும் பொய் சொல்லி பழியை உன்மேல் போட்டுக்கொண்டாய் என்றார் ஒரு தொழிலதிபராக...


அவரை ஒரு பார்வை பார்த்த ரஞ்சனி, நான் தோற்றுவிட்டேன் என்று பறையடிக்க மாட்டேன். ஆனால், என்னை யார் எங்கே அடித்தார்களோ அதைவிட இரண்டு மடங்கு அவர்களை அடிக்காமல் ஓய மாட்டேன்.

இன் மை கோர்ட், யூ அண்டு யூவர் சன் ஆர் சேம் கேட்டகிரி, கெட் லாஸ்ட் என்றவளின் கடைசி வார்த்தை அலறலானது. வள்ளி மருது, நர்ஸ் யாவரும் அவள் சத்தத்திற்கு உள்ளே ஓடி வந்தனர்.

உள்ளே வந்த நர்சிடம் ரஞ்சனி, சத்யாதேவியை சுட்டி இந்த பொம்பள இனிமே என்ன பாக்க வரக்கூடாது என்றாள் கர்ஜனையில்,.

வள்ளிக்கும் மருதுக்கும் ஏதும் புரியவில்லை, ஆனால் ரஞ்சனியுடைய கர்ஜனைக்கு பின்னர் அவர்களுக்கு ஏதும் கேட்கும் தைரியம் இல்லை.

சத்யா தேவி வாழ்நாளில் இப்படி ஒரு அவமானத்தை உணர்ந்ததில்லை.

இவ்வளவு நேரம் உயிருக்கு போராடியவரிடமிருந்து இப்படி ஒரு குரலை நர்ஸ் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. நர்ஸ் அனைவரையும் சற்று வெளியே இருக்கச்சொன்னார்.

ஒருநிமிஷம் என்ற ரஞ்சனி, என்னோட ஐஞ்சுநாள் சாப்பாட்டு காசு உங்களுக்கு வந்து சேரும் என்றாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மருத்துவமனையில் வள்ளியையும் , மருதுவுவையும் காவலுக்கு வைத்துவிட்டு சத்யதேவி வீட்டிற்குச்சென்றார்

அங்கே நரி நார்நாராய்க் கிடந்தது. இரத்தம் பாய்ந்த கயிறு ஒன்று அதன் பக்கத்தில் அறுந்து கிடந்தது.

வாட்ச் மேனிடம் நரியை புதைக்கச் சொன்னார்.

எப்படி நரி வந்தது என வினவினார்.

எல்லாமே காடு தானம்மா, மனுஷ வாடை இரத்தவாடை வந்நதுண்ணா வருங்க என்றான் வாட்ச் மேன்.

நாய் மூணு இருக்கணுமே இரண்டுதான் இருக்கு இன்னோன்னு எங்க...என்றார்.

அதுவாம்மா அத பவித்ரன் தம்பி சுட்டுட்டார் மா, அது ரஞ்சனி மேடம கடிக்க வந்தது அதனால சுட்டுட்டார் என்றான்.

இந்த நாய்கள் வேட்டைக்காக பயன்படுத்தப்படுபவை, மிருகங்களை வேட்டையாடுமே ஒழிய என்றும் மனிதரைக் கடிக்காது.

இது ரஞ்சனியை கடிக்க முயன்றிருக்கிறது என்றாள், பவித்ரன் இந்த நாய்களை ரஞ்சனியைக் கடிக்க ஏவினானா? நினைத்த மாத்திரத்தில் அவருக்கு நெஞ்சில் சுருக்கென்றது.

மாடிக்குச்சென்றவர் பவித்ரன் அறைக்கதவை தட்டினார். அவன் தூக்கத்தில் இருந்தான்.

கதவைத் தட்டி ஓய்ந்து போனவர் ,உள்ளே சாவி துவாரத்தில் பார்த்தார். அவன் உறங்கிக்கொண்டிருந்தான்.

அவன் எழட்டும் என கீழே வந்தவர். நெஞ்சு வலிப்பது போல் இருக்கு, மடமடவென தண்ணீர் குடித்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தார்.

அதிகாலை லேசான வெளிச்சம் பரவ ஆரம்பித்தது.

அதீத அழுத்தத்தால் சத்யதேவி உயிர் அவர் உடலை விட்டு பிரிந்தது.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபத்தி இரண்டாம் பகுதி....



காலையில் பவித்ரனின் அறைக்கதவு பலமாக தட்டப்பட்டது. தூக்கமாத்திரையின் வீரியம் குறைந்து அப்போதுதான் பூலோகம் வந்தான்.

அவன் வாழ்க்கையில் மிக முக்கிய இரவில் தூங்கிவிட்டவன், எழுந்ததும் அவனை விட்டு அனைத்தும் சென்றுவிட்டது.

மருது, ஐயா ரஞ்சனி அம்மா ஆஸ்பத்ரில இருந்து அப்படியே சென்னை போய்ட்டாங்க, பெரியம்மா கீழ இருக்காங்க என்று காபிக்கோப்பையைக் கொடுத்தான்.

பவித்ரனுக்கு ஒன்றும் புரியவில்லை, ரஞ்சனிக்கு என்ன?? என்றான்.

ரஞ்சனி அம்மா பனில இருந்ததால அவங்களுக்கு வலிப்பு என இரவு நடந்ததைக் கூறினான்.

பவித்ரன் இதயம் நின்று துடித்தது. தான் கோபத்தால் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்தான். அம்மா எப்போ வந்தாங்க என்றான்?

போன் பண்ணதுமே வந்துட்டாங்க, ஆனா என்ன நடந்ததுன்னு தெரியல ரஞ்சனி அம்மா பெரியம்மாவ கோபமா போசுனாங்க, ரஞ்சனி அம்மாவ, எங்கள பாத்துக்க சொல்லீட்டு பெரியம்மா வீட்டுக்கு வந்துட்டாங்க, சோபால தூங்கீட்டு இருக்காங்க என்றான்.

மருது சொல்லி முடிக்கவில்லை, வள்ளி பதட்டமாக மாடிக்கு வந்து சேர்ந்தாள். ஐயா அம்மாக்கு காபி குடுத்தேன், அவங்க எந்திரிக்கவே இல்ல, உடம்பெல்லாம் ஜில்லுனு ஆயிடுச்சு, வந்து பாருங்க என்றாள்.

பவித்ரன் ஓடிச்சென்று அவன் அன்னையைத்தொட்டு அம்மா? அம்மா!!! என்றான் , சத்யதேவி தலை சரிந்தது.

பவித்ரன், டாக்டர கூப்பிடுங்க, என்றுவிட்டு கை கால்களை பரபரவென தோய்த்தான், நாடித்துடிப்பை பார்த்தான்.

டாக்டர் பவித்ரனிடம், சாரி! இறந்து ரொம்ப நேரமாச்சு, என்றார்.

பவித்ரனின் கதறல், காலைப்பெழுதில் அந்த இடம்முழுவதும் எதிரொலித்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி அதே அதிகாலைப் பொழுதில் வீடு போய்ச் சேர்ந்தாள். லதா மகளை அணைத்து வரவேற்றார்.

என்னடா போனே பேசல, நான் போன்பண்ணாலும் போல, இன்னைக்கு சாய்ந்தரம் ரிசப்சன், நல்லவேலை காலைலயே வந்துட்ட, என்னமா ? நான் பேசீட்டே இருக்கேன், நீ அமைதியா இருக்க, எங்கமா மாப்பிள்ளை என வெளியில் எட்டிப் பார்த்தார்.

அங்கே ரஞ்சனி வந்த வாடகை வண்டி நின்றது. என்ன ரஞ்சனி மாப்பிள்ள கார் எங்க? என்றார் லதா.

ரஞ்சனி, அதுக்கு பில் கொடுத்துட்டு வா மா சொல்றேன் என மாடிக்குத் திரும்பினாள்.

அப்போது தான் லதா அவளது கையிலிருந்த டிரிப்ஸ் ஏற்றுவதற்காக போடப்பட்டிருந்த நாப்பை பார்த்தார்.

என்னாச்சு ரஞ்சனி டிரிப்ஸ் போட்டியா? உடம்புக்கு என்ன என ரஞ்சனியின் கைகளைத் தூக்கி தொட்டுப் பார்த்தார்.

அவளின் கை முழுவதும் கத்தியால் கீறியது போல பலகோடுகள் வடுக்களாக இருந்தது.

லதா இதயம் படபடக்க என்ன ரஞ்சனி இது? என அவள் முழுக்கை சட்டையை சற்றே மேலேற்றி கைகளைப் பார்த்தவர் இதயம் நின்றே விட்டது.

எல்லா இடத்திலும் சிவப்பு நிற வடுக்கள், கல்யாணமாகி முதல்முறை வீட்டிற்கு வரும் பெண்ணை தாய் இந்த கோலத்தில் கண்டால் ,தாயின் நிலை....

அவர் ராஜனை கூப்பிட்டார். மனைவியின் குரலில் இருந்த ஈரம் உணர்ந்தவர் மடமட வென வந்தார்.

அம்மா எனக்கு ஒன்னுமில்ல, சின்ன ஆக்சிடெண்ட் , லேசான சிராய்ப்பு என சமாளித்தாள் ரஞ்சனி.

மகளைப் பார்த்து மனைவி அழுவதைப்பார்த்த ராஐனின் இதயம் படபடத்தது.

என்னாச்சு ரஞ்சனி, என்ன லதா? என பதட்டமாக வினவினார்.

லதா மகளின் முழுக்கை சட்டையை முழுவதும் உயர்த்தி, ரஞ்சனியின் கையை ராஜனுக்கு காட்டினார்.

ரஞ்சனி எப்படி அடிபட்டது? மாப்பிள்ள எங்க? என வினவினார்.

அதற்க்குள் கார் ஹாரன் வரவே முதல்ல அவனுக்கு காசு குடுத்து அனுப்புங்க, அப்பறமா சொல்றேன்.

ராஜன் லதாவிடத்தில் என்னவென கேட்ககச்சொல்லி கண்காட்டிவிட்டு குடும்ப மருத்துவருக்கு அழைத்தார்.

லதாவிற்கு என்ன நடந்தது என ரஞ்சனி கூறிவிட்டால் கூட பரவாயில்லை, தான் கேட்கும் கேள்விகளுக்கு ஒன்றுமில்லை என அவள் மழுப்புவதே அவருக்கு மிகுந்த பயத்தைத் தந்தது.

மருத்துவரிடம் பேசிவிட்டு வந்த ராஜன், மனைவியிடம் கண்களால் வினவினார்.

ரஞ்சனி ஏதேனும் வாய் திறந்து சொன்னால் தானே லதா சொல்வதற்கு, லதா கண்ணீர் விட்ட படியே தெரியவில்லை என தலையசைத்தார்.

மகளை நகர்த்தி சோபாவில் அமரவைத்தார் ராஜன். லதா மகள் பக்கத்தில் அமர்ந்தார்.

எதிரில் அமர்ந்த ராஜன், மகளிடம், எப்போ ரிசப்சனுக்கு மாப்பிள்ளை வருவாரு, என்றார் மகளின் மனதை அறிய,

பட்டென ராஜனை நிமிர்ந்து பார்த்த ரஞ்சனி, வரமாட்டார், வரக்கூடாது என்றாள், அவள் பட்ட துன்பம் ஒருவினாடி அவள் கண்களில் வந்துபோனது.

ராஜன் அதைக் கண்டுகொண்டார். அவரது மனம் மகள் கண்ணில் வேதனை கண்டு, நின்று துடித்தது. இருந்தாலும், தந்தையாக அவர் அறிய வேண்டிய பதிலை சுற்றிவளைத்துக் கேட்டார்.

மாப்பிள்ள வராம வேறு ஒருத்தர வைச்சா ரிசப்சன் பண்ண முடியும் என்றதும், ரஞ்சனியின் கண்கள் தணலைக் கக்கியது. ராஜன் மனது அப்பாடா மகள் பவித்ரனை ஒரேயடியாக வெறுக்கவில்லை என ராஜனுக்கு ஒரு பொறி தட்டியது.

நீ போன் போட்டு போசு, அவர் வருவாரு என ராஜன் பவித்ரனுக்கு அழைத்தார்.

தந்தையிடமிருந்து அதை வாங்கி அனைத்தவள், அப்பா, முதல்ல ஒரு வக்கீல கூப்பிடுங்க, நான் விவகரத்து செய்யனும் என ஒரே வார்த்தையில் பெற்றோர்களை மூச்சடைக்க வைத்தாள்.

அப்பறம் அந்த ரிசப் சனையும் கேன்சல் பண்ணீருங்க, என அவள் எழ எத்தனிக்க, லதா மகளின் கையைப்பிடித்து தடுத்தார்.

ரஞ்சூ என்ன நடந்ததுன்னு சொல்லு, காயம் எப்படி ஆச்சுன்னா, சின்ன ஆக்சிடெட்டுனு சொல்ற, திடீர்னு பவித்ரன விவாகரத்து பண்ணணும்ணு சொல்ற, என்னம்மா??? நடந்தது. இது ஒன்னும் வியாபாரம் இல்ல, வாழ்க்க, நீ என்னனு சொல்லு அம்மா நான் சரி பண்றேன் டா என லதா மகளிடம், எடுத்துரைத்தார்.

தாயையும் தந்தையையும் மாறி மாறி பார்த்தவள், ஆமா, இது பவித்ரனாலதான் ஏற்பட்டது, என்னோட ஐஞ்சு நாள் போராட்டத்துல, இரண்டு முறை நூலிழையில உயிர் புழைச்சிருக்கேன். இனி பவித்ரன, பாக்கவோ , பேசவோ என்ன கட்டாயப் படுத்தாதீங்க, எனக்கு பயமா இருக்கு என்றவள், கண்கள் குளமானது. அதை லேசாக துடைத்துக்கொண்டு நடக்க முடியாமல் நடந்து மாடி ஏறிப் போனவலை பார்க்கையில் ராஜன் கண்களும் நீர் சொரிந்தது.

லதா மகளின் நிலைகண்டு கதறிவிட்டார். சில , பல நிமிட ஆஸ்வாசத்திற்குப்பின் லதா, என்னங்க சத்யாதேவிக்கு போடுங்க, அவங்க தங்கமா பொண்ண பாத்துக்கிறேன்னாங்களே, இதுதான் பாத்துக்கிற லட்சணமான்னு கேப்போம் என அழுகையின் ஊடே கூறினார்.

போன் செய்தவர்களுக்கு சத்யாதேவியின் மரணச் செய்திதான் பதிலாக வந்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனியை பெண்மருத்துவர் வந்து சோதித்தார். லதாவுக்கும், ராஜனுக்கும் இருப்பு கொள்ளவில்லை.

என்னதான் ரஞ்சனி ஒன்றுமில்லை எனக்கூறினாலும், ஒரு பெற்றவர்களாக, மகளின் வேதனையும் வலியும் அவர்களை வாட்டியது. பெண்பிள்ளையைப் பெற்றவராக, ஒரு பெண்ணாக, மகளின் நிலை எப்படி இப்படிஆனது என வேண்டாததையெல்லாம் கற்பனை செய்து கலங்கித் தவித்தார் லதா.

ராஜன், லதாவைப் போல் பதட்டத்தை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை, இருந்தாலும், மருத்துவர் சொல்லும் வார்த்தைக்கு படபடத்த இதயத்தில் தான் காத்திருந்தார்.

பவித்ரன்தான் காரணம் என்றாள், அழுதே பாராத தன் மகளின் கண்கள் அழுது வீங்கியிருந்தது அவர் கண்ணில் வந்து போய் மனதைப் பிசைந்தது.

சில நிமிட பரிசோதனை யுகமாக கழிய, வெளியே வந்த மருத்துவர், பயப்படும்படி ஒன்னுமில்ல, எல்லாமே வெளியில ஏற்பட்டு இருக்கிற சிராய்ப்பு தான். பயப்படாதீங்க, அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க, நல்லா சாப்பிட சொல்லுங்க, அப்பத்தான் குழந்த ஆரோக்கியமா பிறக்கும் என கூறினார்.
குழந்தை என்றதும் லதா திகைத்து நின்றார். ராஜன் மனைவியை அழைத்துக்கொண்டு மகளிடம் சென்றார்.

ரஞ்சனியைக் கண்டதும், லதா படபடத்தார், என்னடி மாசமா இருக்கிறனு சொல்றாங்க, என்னடி என்றார்.

ரஞ்சனி ஆமா, இது யார் குழந்தன்னு அபத்தமா கேக்கமாட்டனு நினைக்கிறேன். இது என்னோட குழந்த அந்த ஒரு அடையாளமே போதும். இந்த விசயத்தை நீ யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்றாள் கட்டளையாக....

லதாவின் அடுத்த பேச்சை ராஜன் கை நீட்டித் தடுத்தார்.

ராஜன், சத்யாதேவி மாரடைப்பால இறந்துட்டாங்களாம், என்றார், மகளிடம். புருவம் சுருக்கி ஒரு நிமிடம் யோசித்தவள், முகத்தில் மறுநொடி விஷமப் புன்னகை வந்தமர்ந்தது.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Vaazugi

Well-known member
Pazhi aedupathaai ninaithu
parikoduthu nirkiraai

Parikoduthu un thaiyai mattumalla
Saeiyayium thaan
Enna oru vithiyasam
Uyirodu onrai uyir illamal onrai
Unmai ar(aa)i yamal nee saeitha
Vibiritha vilaiyattu vizha vaithathu
Pennaval vaazhkai yai mattumalla
Un vazhkaiyum thaan
Ariyaamal thavaru seithaal
Adithu thiru thalam
Araaiyamal thavaru saeithal
Kaelvihal mattum ennulla
Vidaiyo ungal kaigalil

Eagerly waiting for ranji's action
Happy pongal udaya dear
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pazhi aedupathaai ninaithu
parikoduthu nirkiraai

Parikoduthu un thaiyai mattumalla
Saeiyayium thaan
Enna oru vithiyasam
Uyirodu onrai uyir illamal onrai
Unmai ar(aa)i yamal nee saeitha
Vibiritha vilaiyattu vizha vaithathu
Pennaval vaazhkai yai mattumalla
Un vazhkaiyum thaan
Ariyaamal thavaru seithaal
Adithu thiru thalam
Araaiyamal thavaru saeithal
Kaelvihal mattum ennulla
Vidaiyo ungal kaigalil

Eagerly waiting for ranji's action
Happy pongal udaya dear
Happy pongal....

அழகான வரிகள், என்
நன்றி, ...
 
Top