All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதினைந்தாம் பாகம்...

முதலிரவு அறைக்கு ரஞ்சனியை, பவித்ரனுக்கு நேரடி சகோதரிகள் இல்லாததால், ஒன்றுவிட்ட தங்கை தயார் படுத்தி அனுப்பினாள். பவித்ரனின் தாய் வழியில் இருந்தவர்கள் சற்று நடுத்தரக்குடும்பமாகவும், பவித்ரனின் தந்தை வழி, மிகவும் வசதி படைத்ததாகவும் இருந்தது. அவர்கள் பவித்ரனுடைய தொழிலையும் வசதியையும் ஒரு பொட்டாக நினைக்கவில்லை. தாய் வழி பாசமாய் இருந்த போதிலும், சற்று பொறாமை குணமும் இருந்தது.

அனைவரும் திருமணம் முடிந்த உடனே கிளம்பிவிட்டனர். வள்ளி சற்று மேடிட்ட வயிற்றுடன் வீட்டை சுத்தப் படுத்திக்கொண்டிருந்தாள்.

வீட்டில் சத்யதேவி அவருடைய அறைக்கு சென்றுவிட்டார். வள்ளியையும் நாளை பார்க்கலாம் படு என்றார். அவள் வேலையை முடித்துவிடலாம் என செய்து கொண்டிருக்கும்போது, பவித்ரனின் அறையிலிருந்து ரஞ்சனியுடைய ஒரு அலரல் கேட்டது, வள்ளிக்கு பகீரென்றது.

என்னானதோ என பதறிய நிலையில் அவள் துடைப்பத்தை இறுக்கி பிடித்து நிற்க, மருது உள்ளே நுழைந்தான்.

என்ன புள்ள என்னாச்சு என அவளின் நிலைகண்டு பதறி வந்து அவளை அரவணைத்தான். ரஞ்சனி அம்மா சத்தம் கேட்டது, அலரல் போல எனக்கு பயமா இருக்குயா? சின்னம்மாக்கு என்னாச்சோ? வா போய் கேப்போம் என கணவனிடம் கூறினாள்.

ஹே என்ன புள்ள நீ அவங்களுக்கு என்ன விசேசம் வச்சிருக்காக, இப்ப போய் அவங்கள தொல்ல பண்ண சொல்ற, அதொல்லாம் ஒன்னுமில்ல, நீ வா காலைல எல்லாத்தையும் செய்யலாம் என வள்ளியை கூட்டிச் சென்றுவிட்டான்.

அவர்கள் இன்னும் சிறிது நேரம் கூடத்தில் இருந்தால், நிச்சியம் அவர்களே கதவை தட்டி இருப்பார்கள், ரஞ்சனியை ரட்சிக்காமல் போனது, ஆளில்லாத பெரிய வீடு.அவளின், கதறலையும், வலியையும் தனக்குள் புதைத்து ரகசியம் காத்தது அந்த நீண்ட இரவு.

படுக்கையில் தொய்ந்து கிடந்தவள், அவனது ஒரு கரத்தை தன்னுடைய இரண்டு கரத்தினாலும் கஷ்டப்பட்டு விலக்கினாள். ஓடிச்சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அவளது உடல் வலித்திருந்தது. இதயம் கனத்திருந்தது. அவளது கைகளில் அவனது கைத்தடம் சிவப்பாக படிந்திருந்தது. அவன் தொட்ட இடமெல்லாம் எரிவதுபோல தோன்ற ஹவரில் அழுத்தித் தேய்த்து குளித்தாள். யாருமற்ற காட்டில் இருட்டில் தனித்துவிடப்பட்டதுபோல் உணர்ந்தாள்.

அவளது உடல் நிலை பொருட்டு வேகமாக தண்ணீரைவிட்டு வெளியேறியவள். மாற்று உடை உடுத்தி வேகமாக தலையை உலர்த்தினாள். அவளின் மனதில் உள்ள ஒரே எண்ணம் தன்னை நம்பி வந்த கருவை காப்பது மட்டுமே, தன்னுடைய எண்ணங்களும், உடல்நிலையும், அதை ஒருபோதும் பாதித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.

தலையை உலர்த்திக்கொண்டிருந்த போது, பவித்ரனது கரம் அவளது தோள்களில் விழுந்தது. ரஞ்சூ என உறக்கத்திலே கூப்பிட்டான். அவள் அந்த கரத்தை தட்டிவிட்டு எழுந்து அறையிலிருந்த சோபாவிற்கு சென்றுவிட்டாள்.

பவித்ரனுக்கு கோபம் வர பட்டென அவள் புறம் அமர்ந்தவன், அவளது கையிலிருந்த ஹேர் டிரையரை பிடுங்கி எரிந்தான். பவிதரன் திஸ் இஸ் த லிமிட் என்றாள் ரஞ்சனி.

உறக்கச் சிரித்தவன், ஓ..... ஏற்கனவே நான் அதல்லாம் தாண்டியாச்சு என்றவன். அவளது மடியில் தலை சாய்த்து உறங்க ஆரம்பித்தான். ஹே என்ன எழுந்திரு என அவனை அவள் தாட்டிவிட, அந்த கரத்தை எடுந்து தோலில் போட்டுக்கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான்.

ரஞ்சனி தன்னுடைய நிலை கண்டு, தன்னிரக்கம் கொண்டாள். எவ்வளவோ பேருக்கு அநியாயத்திலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாப்பு அளித்திருக்கிறாள். இன்று தன்னைத் தானே காக்கக் கூட உடல் வலிமையற்ற நிலையை நினைத்தவள், மனதில் வெட்கினாள். கணவனாக இருந்தபோதிலும், அவனின் அத்துமீறலை அடக்க நிச்சயம் உடல் வலிமை வேண்டும் என தனக்குள் சிந்தித்தாள்.

அவளது சிந்தனையை கலைத்தது, பவித்ரனின் புலம்பல், ரஞ்சூ... ஐம்... ம்.. சா.ரி... ரஞ்சூ... ஐம்... ம்... ரஞ்சூ என அவளது மடியில் தலைவைத்து புலம்பிக்கொண்டிருந்தான்.

அவன் டாலீ..டாலீ.. என எதையோ சொல்ல ஆரம்பிக்கவும் அதற்கு மேல் கேட்கப்பிடிக்காதவள், எழுத்துவிட்டாள்.

பவித்ரன் ஆறடி உடலை குருக்கிக்கொண்டு படுத்திருந்தான். அவனை இரண்டு நிமிடம் வெறித்தவளுக்கு உண்மையில் நம்பமுடியவில்லை, சற்று முன்னர் தன்னிடம் கடுமை காட்டியவன், பலாத்காரம் செய்தவன் இவன் என்பதை. அவனை பார்க்கப்பார்க்க அவன் செய்த அனைத்தும் மறந்து, அவன்மேல் காதல் கொண்டாடுகிற மனதை தடுக்கத் தெரியாமல் சோபாவின் முன் மண்டியிட்டு மடங்கி அமர்ந்தாள். அவன் தன் உடலை வென்றதை விட தனது மனதை வென்று, தன் காதலை கண்முன்னே சிறுகச்சிறுக அழிப்பதைத்தான் ரஞ்சனியால் தாங்க முடியவில்லை

அவனது தலைக்கு தலையணை கொடுத்து, போர்த்திவிட்டவள், அவனது தலையைக் கோதினாள். தனது கண்ணீர் அவனது நெற்றியில் விழ, அதை அவன் உணர்ந்து தூக்கம் கலையாமல் இருக்க, லேசாக துடைத்துவிட்டு, படுக்கையை சரி செய்யச் சென்றாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வள்ளி கதவைத்தட்டி இருவருக்கும் காபிகொடுத்தாள். அவளது பார்வை ரஞ்சனியின் மேலிருந்து கீழாக சென்றது.

என்ன வள்ளி, என்ன? என ரஞ்சனி வினவ,

அது ஒன்னுமில்லம்மா, நீங்க நேத்து... உங்களுக்கு ஒன்னுமில்லியே, ஆ.... னு உங்க சத்தம் கேட்டுச்சு என்றாள்.

நத்திங் , என்றவள் காபிக்குவளையை வாங்கிக்கொண்டு அவளை அனுப்பிவிட்டாள்.

பவித்ரனின் செல் ஒலித்தது, உறக்கம் கலைந்து எழுந்தவன் கடிகாரத்து பார்க்க அது மணி எட்டு என்றது. பட்டென எழுந்தவனின் முன்னாள் தயாராக அமர்ந்திருந்தாள் ரஞ்சனி.

காபி என்றவனிடம், ஒருமணிநேரம் முன்னால் வள்ளி கொடுத்த, காபியை நீட்டினாள்.

அதைப் பார்த்து முறைத்தவன், காபி நீ போட்டு எடுத்துட்டு வா, உடனே என்றான் அழுத்தமாக..

ஓகே பிரஸ் பண்ணுங்க, எடுத்துட்டு வரேன் என்றவள் எழுந்து சென்று வள்ளியிடம் சீனி காபித்தூள் எங்கெங்கே இருக்கிறது என கேட்டு காபி கலந்தாள்.

ரஞ்சனி சமயலறையை விட்டு வெளியே வர, சத்யதேவி எதிர்பட்டார். இந்தவீடு பிடிச்சிருக்காமா? என்றவரிடம், ம் நல்லாயிருக்கு என பதில் கூறிவிட்டு மாடிக்குச்சென்றாள்.

அவன் இருந்த இடத்தைவிட்டு அசையாமல், ஆபிஸுக்கு போன் செய்து வேலைகளை பணித்துக்கொண்டிருந்தான்.

அவனிடம் காபியை நீட்டியவளிடம், போனை கட்செய்துவிட்டு, காபி வாங்கி அருந்தினான்.
இதுக்கு முன்னாடி காபி போட்ருக்கியா? என்றான் பவித்ரன்.

ம்.. எங்க வீட்ல செல்வ் சர்வீஸ் தான் ,என்றாள்.

ஓ.. அப்போ எப்பயுமே இப்படி கேவலமாதான் காபி குடிப்பியா? என்றான்.

என்ன இப்படி பேசுகிறார் என நினைத்தவள், வேண்டான்னா குடுத்துருங்க, வள்ளிய வேற காபி போட்டு வர செல்றேன் என்றாள்.

வேலக்காரி நீ இருக்கும்போது, அவ கையால நான் எதுக்கு குடிக்கனும், போ காபித்தூள் தூக்கலா போட்டு ஸ்ராங்க ஒரு காபி எடுத்துட்டு வா, கோ என்றான்.

வாட்? வேலக்காரியா?

ம்... தென் வாட், வீட்டூக்காரின்னு செல்லனுமா என நக்கலாகக் கேட்க, ரஞ்சனி கீழ்தனமான செய்கைகளும் பேச்சுக்களும் வேண்டாமே, நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் , என அருகில் அமர்ந்தாள்.

அவளை சொடுக்கிட்டு கூப்பிட்டவன், ஆள்காட்டி விரலால் எழு என சைகை செய்தான். அவள் புருவத்தை சுருக்கி அந்த விரலை எரித்துவிடுவது போல பார்த்தாள்.

ஐ செட் ஸ்டேண்டு அப் என்றான். அழுத்தமான உயிரை உறைய வைக்கும் குரலில்.

ரஞ்சனி அசரவில்லை, முடியாது, என்றாள், அவனைவிட அழுத்தமாக..

ஓ... யூ நீட் மீ என அவள் தோளில் கைபோட, பட்டென தட்டிவிட்டு எழுந்தாள் ரஞ்சனி.

ரஞ்சனியை மேலும் கீழும் பார்த்தவன், அவனது சல்வாரை சுட்டிக்காட்டி, சேரி கட்டு, இத மாத்து என்றான்.

எதுக்காக?...

சேரி கட்டு அவ்வளவுதான், கேள்வி கேக்காத, என்றான்.

சரி பவி, நான் கொஞ்சம் பேசணும், பிளீஸ் என்றவளிடம், நாம ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும், அங்கபோய் என்ன பேசணுமோ பேசிக்கலாம். என்றவன் அவளது பதிலை கேட்காது எழுந்து சென்றுவிட்டான்.

சற்று நின்றவன், திரும்பி, ஒருவாரத்துக்கு தேவையான டிரஸ் எடுத்துக்கோ என்றவன் , குளியலறைக்குள் புகுந்தான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காரில் பவித்ரனும், ரஞ்சனியும் ஊட்டிக்கு சென்றனர். சத்யதேவி எவ்வளவோ தடுத்தும், அவளுக்கு குளிர் ஒத்துக்கொள்ளாது , வேறு இடம் எதற்காவது செல்லலாம் என சொல்லியும் அவன் கேட்கவில்லை. கடைசியில் தனியாக செல்லக்கூடாது என வள்ளியையும் மருதுவையும் துணைக்கனுப்பி வைத்தார்.

ஹனிமூன் வந்தது போலவே இருவரும் நடந்து கொள்ளவில்லை. ரஞ்சனி வேறொரு அறையில் தங்கிக்கொண்டாள். பவித்ரன் வந்ததும் கிளம்பி வெளியில் சென்றுவிட்டான்.

பவித்ரனுக்கு ஊட்டியில் ஒவ்வொரு இடமும் நன்கு தெரியும். நீச்சல் பயின்றது, ஆனந்த்துடன் சுற்றியது. ஹனிமூன் கொண்டாட வருபவர்களைபற்றி கேலி பேசியது. காலேஜ் டூர் வருபவர்களுக்கு, ஊட்டி கைட்டாக பணியாற்றி, கல்லூரி பெண்களுடன் கடலைபோட்டது. போட்டிங் சீசனில் படகை எடுத்துக்கொண்டு போட்டி போட்டது. என ஒவ்வொரு இடமும் ஆனந்த்தின் நினைவை வாரி வழங்கியது.

அழகிய வண்ண மலர்களுடன் ஊட்டி தன் அழகை எப்போதும் போல் அள்ளித்தெளித்தது. ஆனால் பக்கத்தில் ஆனந்தின் சிரிப்பொழி இல்லை.

வீட்டில் இரவு உணவிற்காக ரஞ்சனி டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, வள்ளி உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். ரஞ்சனி இட்டிலியை பிட்டு முதல் வாய் எடுத்துச்செல்ல, பவித்ரன் ரஞ்சனியிடம் கெட் அப் என்றான்.

ரஞ்சனிக்கு ஒன்றும் புரியவில்லை, கையை உதறிக்கொண்டு எழுந்தவள், என்ன? பவி என்றாள்.

அவன் ரஞ்சனியிடம் பேசாமல் வள்ளியை பார்க்க, அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

அடுப்படியில் வேலைக்காரர்கள் சாப்பிடும் இடம் இருந்தது. தட்டை எடுத்தவன், ரஞ்சனியை இழுத்துச்சென்று அந்த இடத்தில் அமர்ச்சொன்னவன், நௌ ஈட் என்றான்.

ரஞ்சனிக்கு வயிற்றில் உள்ள பசி மரத்துவிட்டது. நெஞ்சு பற்றி எரிந்தது. அவனிடம் ஒரு வார்த்தை பேசவும் மனமில்லாமல் சிலையாக விறைத்து நின்றாள்.

என்ன வேண்டாமா? என்றான் அவள் சாப்பிடாமல் இருக்கவும்.

பதிலற்று அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

சாப்பிடு, இப்ப வேலக்காரங்க இடத்துல உக்கார வச்சிருக்கேன், அடம் பண்ண, அடுத்தது, நாயோட இடத்துலதான் என அவளிடம் சுட்டுவிரல்காட்டி மிரட்டியவன், இன்னும் பத்து நிமிசத்துல வருவேன் சாப்பிட்டு முடிக்கணும் என்றவன், மாடியில் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

அங்கே ரஞ்சனியின் பொருட்கள் ஏதுமின்றி இருக்கவும், பக்கத்து அறையை திறந்து பார்த்தவன் அதிலிருக்கும் அவள் பொருட்கள் அனைத்தையும் தன் அறைக்கு மாற்றினான்.

ரஞ்சனி தட்டில் இருந்ததை அப்படியே குப்பையில் கொட்டிவிட்டு, தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தாள்.

புயலென சமையலறையில் நுழைந்தவன், அவள் சாப்பிடாமல் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து, அவளை இழுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றான்.

அந்த வீட்டைச்சுற்றி இரவில் மூன்று நாய்கள் காவல் காத்தது. அந்த பங்களாவில், வாட்ச்மேன் எப்போதுமே பணிபுரிவார்.


வள்ளி தன் கணவனிடம், பவித்ரன் ரஞ்சனியிடம் நடந்து கொண்ட முறையை கூறினாள்.

எனக்கு பயமா இருக்குய்யா!, ரஞ்சனி அம்மா பசிக்கிதுன்னு சொன்னாங்க ஒருவாய் கூட சாப்பிடல என வருத்தப்பட்டாள். அம்மாவுக்கு போன்போட்டு சொல்லீருவோமா எனக்கேட்டாள்.

மருதுவோ, என்ன புள்ள இது புருசன் பொண்டாட்டி பூசல், இதுல நாம தலையிடக்கூடாது. விடிஞ்சா எல்லா சரியாயிடும் வா நீ முதல்ல சாப்பிடு புள்ளத்தாச்சி என வள்ளியை அழைத்தான்.

ரஞ்சனி பவித்ரனின் அறைக்கு சென்றதும் கையை உதறிக்கொண்டு விளகினாள்.
ஸ்டாப் இஸ் பவி, வேலக்காரங்க முன்னாடி எப்படி நடந்துக்கணும்னு, ஒரு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாது.

ஏன்? அவமானமா இருக்கா?

ம்... ஆமா என்ன நினச்சு இல்ல, உன்ன நினச்சு என்றாள்.

குட், இப்படியும் சொல்லிக்கலாம், நீ அவமானப்பட்டு , சாப்பிடாம வந்ததை..

எதுக்கு தேவையில்லாத வாதம், என்ன எதுக்கு ஹனிமூன்ற பேர்ல தனியா கடத்தீட்டு வந்துருக்க...

புத்திசாலி நீ!, என்றவனின் கண்கள் அனல் கக்கியது, என்னோட நண்பனுக்கு மூனு நாள் நரகம் காட்டின உனக்கு நான் அதை திருப்பி செய்யப்போறேன் அதுக்கு..

ஆனந்த், அவனுக்காகத் தான, அவன் யாரன்னே எனக்கு தெரியல, நீ வேற யாரோன்னு நினச்சு என்கிட்ட உன்னேட கோபத்த காட்ற பவித்ரன். உன்னோட கோபம் குறையுதுன்னா, நீ நார்மல் ஆகிறன்னா எனக்கு சந்தோசம் தான். ஆனா கோபத்துல நீ பேசுற வார்த்தைகளும் நடந்துக்குற முறையும், என்னிக்கும் அழியாது. நம்ம உறவு கெட்டுபோவதற்கும் அது காரணமாகும் என்றாள்.

உறவா? என்ன உறவு கல்யாணமா அதை நான் ஏற்படுத்தினதுக்கு முக்கிய காரணமே என்னோட நண்பனுக்கு, அவனோட சாவுக்கு நியாயம் செய்யத்தான். என்ன சொன்ன ஆனந்த நீ பாத்ததில்ல, என்றவன் அவள் கையை இழுத்துச்சென்று இரண்டு அறை தள்ளி பூட்டி இருந்த அறைக்கு ரஞ்சனியை இழுத்துச்சென்றான்.

அந்த அறை ஆனந்த் உடையது. அதில் அவனது பல பகைப்படங்கள், பொருட்கள், நீச்சல் உபகரணம் கிடந்தது. அவனின் பெரிய புகைப்படத்தின் முன் ரஞ்சனியை நிறுத்தியன், இவன நல்லா பாத்து சொல்லு யாருன்னு தெரியாது, எனக்கேட்டான்.

அவனது புகைப்படத்தில் இருந்த தந்திரக் கண்களை அவளால் மறக்க முடியுமா? ஆனந்த்தின் கண்களை உற்று பார்த்தவளுக்கு அவன் செய்த மண்ணிப்பிற்கு அப்பாற்பட்ட தவறுகளும் ஞாபகம் வந்தது.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதினாறாம் பாகம்...

ஆனந்தின் பாஸ்புக்கில் இருந்த புகைப்படம் பள்ளிக்காலத்தில் எடுக்கப்பட்டது போல் இருந்தது. அதில் அவனை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.

எதிரில் இருக்கும் முழுநிள புகைப்படத்தில் அவனை அடையாளம் கண்டுகொண்டவள், இவனோட பேர் ஆனந்தா? இல்லியே, என சற்று யோசித்தவள், நந்து தான என க்கேட்டாள்.

அப்படியும் கூப்பிடுவோம், எங்க குரூப்ல என்னகூட விதின்னு கூப்பிட்டு கேலி செய்வாங்க, ஆனந்த் எப்பயுமே அப்படித்தான் கூப்பிடுவான் என அவனை நினைவுகூர்ந்தவன், அவன தெரியாது, முன்ன பின்ன பாக்காத உனக்கு அவனோட நிக்னேம் எல்லாம் எப்படித் தெரியும்?

எனக்கு தெரிஞ்சது அந்த பேர் மட்டும் தான், நான் அவனோட உண்மையான பெயரே அதுதான்னு நினச்சேன், பிராடு எல்லா விஷயதுலயும் ஏமாத்தின மாதிரி இதுலயும் ஏமாத்தி இருக்கான்.

யாரு பிராடு, போலீச ஏமாத்தி அவன டார்ச்சர் பண்ண நீயா? இல்ல உன்னால மன அழுத்தம் அதிகரிச்சு தற்கொலை செய்துகிட்டவனா?

அவனுக்கு மன அழுத்தம், அத நான் நம்பனும்,அது மனசாட்சி இருக்குறவங்களுக்கு, நாட் பார் ஹிம், நான் குடுத்த மூனுநாள் டார்ச்சர் ரொம்ப கம்மி, நான் மட்டும் அரபு நாட்ல தீர்ப் கொடுக்குற இடத்துல இருந்தா இவன கண்டம் கண்டமா வெட்டி எறியச்சொல்லுவேன் என அவள் முடிப்பதற்க்குள் பவித்ரன் ரஞ்சனியின் கழுத்தைப் பிடித்திருந்தான்.

அவள் மூச்சுக்காக அவன் கண்முன்னே தினறி போராட, பட்டென கையைவிட்டான். அவள் நிற்க தெம்பின்றி சரிய அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

அவள் சாப்பிடாமல் பசியில் இருந்ததால், கழுத்தைப்பிடித்த மாத்திரத்தில் தொய்ந்துவிட்டாள். அவளை அணைத்திருந்த பவித்ரனாலும் அதை உணர முடிந்தது. அவளை அங்கிருந்த கட்டிலில் கிடத்தியவன், இன்டர்காமில் வள்ளியை அழைத்து பழங்களையும், ஆரஞ்சு ஜூசும் எடுத்துவரச்சொன்னான்.

அவளை மடி தாங்கி சொட்டு சொட்டாக தண்ணீர் புகட்டினான். கண்களை விழித்தவளின் முன்னால் ஆனந்தின் ஆளுயர புகைப்படமும், பவித்ரனின் கலங்கிய விழிகளும் ஒரே சமயத்தில் தெரிந்தது.

பவி என ஆரம்பித்தவள், நான் சொல்றத கேளுங்க பவி பிளீஸ் என்று சொல்லும் முன்னே மயக்கம் வந்து அப்படியே படுக்கையில் சரிந்தாள்.

பவித்ரன், பழச்சாற்றை சிறுகச்சிறுக புகட்டினான். இப்போது அவள் முன்னால் ஆனந்த்தின் புகைப்படம் இல்லை, பவித்ரன் அவளை தன் அறைக்கு தூக்கி வந்திருந்தான்.

கண்விழித்துப் பார்த்தவளிடம், பசிக்கிதா? வள்ளிய இட்லி எடுத்துட்டு வர சொல்லவா? என வினவினான்.

அவள் தலையை மறுப்பாக அசைத்துவிட்டு கண்மூடிக்கொண்டாள். ரஞ்சூ என்ன செய்யுது? எதுக்கு இப்படி வீக்கா இருக்க? டாக்டர கூப்பிடவா? என்றவனை கண்கள் திறந்து பார்த்தவளின் மனதில் நான் மசக்கையில் இருக்கிறேன் என்று சொல்ல ஆசைதான். இப்போது அவனின் மனநிலை தெரியாமல், தங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற நிலையில் இதைச் சொல்ல அவள் விரும்பவில்லை.

நீ தந்தையாகப் போகிறாய் என்று சொன்னதும் அவன் முகத்தில் தோன்றும் இன்ப ரோகையை அணுஅணுவாய் ரசிக்க நினைத்தவளின் விழிகள் கண்ணீர் சிந்தியது.

அது கண்களைவிட்டு வெளியேறிய உடன் பவித்ரனின் கைகள் அந்த நீர் துளியை ஏந்திக்கொண்டது. அதுபோலவே இப்போது உண்மையைச்சொன்னால் தன்னைத்தூக்கி கூத்தாடுவான். குழந்தையை ஏந்திக்கொள்வான் தான் ஆனால் அதைச்சொல்லி தப்பித்துக்கொள்ள ரஞ்சனி விரும்பவில்லை.

எதையும் தன் வாதத்தால் வாதிட்டு, அவனுக்கு அவன் நண்பனின் உண்மை முகத்தை காட்டிடவே விரும்பினாள்.

அவள் கண்கள் கண்ணீரின் ஈரத்துடன், பவித்ரனின் முத்தத்தின் ஈரத்தையும் உணர்ந்தது.

டாலி,.. டாலி அழுகாத எல்லாத்தையும் நாளைக்கு பேசிக்கலாம் , தூங்கு என தலையை தடவிக்கொடுத்தான். கணவனின் அருகாமை பிடிக்காமல் அடுத்த அறைக்கு சென்றவள், அவன் கைகளையை இருக்கபற்றிக்கொண்டு உறங்கினாள்.

தனது கையையே மரமாக பற்றிக்கொண்டு தூங்கும் அவளைக்கண்டவனுக்கு, ரஞ்சனியின் மேல் தீராத காதலும், ஓயாத மோகமும், வெறிகொண்ட பகையும் போட்டிபோட்டு அலைமோதியது உணர்வலைகள்.

இதில் எந்த உணர்வும் ரஞ்சனியின் உடல்நிலையைத்தான் பாதிக்கும் என கருதியவன் அவள் கைகளை உருவிக்கொண்டு எழுந்து கொண்டான்.

தூங்கும் அவளை ரசித்தவனுக்கு, தான் உண்ணாத பசியும் மறந்துவிட்டது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஊட்டியில் ரஞ்சனிக்கு இரண்டாம் நாள் அழகாக விடிந்தது. காலையில் படுக்கையை விட்டு எழ மனமில்லையா? என பவித்ரன் சிரித்த முகமாய் கேட்டான். ரஞ்சனியும் இளம் புன்னகையில் எழுந்து அமர்ந்தாள். காலையில் எழுந்தவளின் கையில் காய்கறி சூப்பைத் திணித்தான்.

அவள் என்னவென பார்க்க, சூப் பிரஸ் பண்ணு சீக்கிரம், ம்... அடுத்த பத்து நிமிசத்துல காலி கப் இருக்கணும் என்றவன், அலுவலக விஷயமாக செல்லில் உரையாட பால்கனிக்குச்சென்றான்.

பட்டென துப்பாக்கிச் சத்தம் கேட்க, அதைத் தொடந்து, பவித்ரனின் சத்தமும் கேட்க, ரஞ்சனி பால்கனிக்கு ஓடிச்சென்றாள். பவித்ரன் வலது முழங்கையிக்கு மேலே லேசாக குண்டு பாய்ந்திருந்தது. அது கையை உரசிச்சென்று சுவற்றில் துளையிட்டு நின்றது. பவித்ரன் சரிந்து கிடந்தான்.

பவி, பவி என்ற ரஞ்சனியின் அலரல் வீட்டையே உலுக்கியது. அவனை தொட்டவளின் கையை உதறித் தள்ளியவன், உன்னோட வேலதான என்றான்.

பவி நான் எதுக்கு இப்படி பண்ணணும், நீங்க என்னோட புருசன். பவி ரத்தம் வருது, டாக்டர கூப்பிடுறேன் என அவள் எழ எத்தனிக்க, அவளின் கையை பிடித்து தடுத்தவன், நடிக்காத எனக்கு தெரியும் போட்டீன்னு வந்துட்டா உன்னோட திட்டம் என்ன? எப்படி வீழ்த்த நினைப்ப, எல்லாமே, கல்லாணத்துக்கு அமைதியா எப்படி சம்மதிச்ச? எப்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஊட்டி வரைக்கும் தனியா என்னோட வந்தனு யோசிச்சேன், நௌ ஐ கியர், உன்னோட பதிலடி இதுன்னா, என்னோடத பாக்க தயாரா இரு என்றான்.

ரஞ்சனிக்கு பேசவே பவித்ரன் இடம் கொடுக்கவில்லை. அவன் பேசி முடிக்கவும், வள்ளி உட்பட வேலையாட்கள் பவித்ரனின் குரலுக்கு கூடிவிட்டனர். அதன்பின் ரஞ்ஜனியால் பேசவும் முடியவில்லை.

அவனிடமிருந்து கைகளை உருவிக்கொண்டு மருத்துவரை அழைத்தாள். குண்டு கைகளில் இல்லாததால், சிறி கட்டுடன் முடித்துக்கொண்டார்.

பவித்ரன் வேலையாட்களிடம் அம்மாவுக்கு விஷயம் தெரியக்கூடாது என உறுதியாக கூறினான். யாரும் வாய் திறக்கவில்லை.

பவித்ரன் தனிமையில் இருக்க, ரஞ்சனி அவனுக்கு பால் கலந்து சென்றாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன் அடக்கப்பட்ட சினத்தில் பல்லைக்கடித்தான்.

பவி, சத்தியமா இதை நான் செய்யல, உங்க சத்தமும் குண்டு சத்தமும் கேட்டதும், நான் துடிச்சிட்டேன், உங்கள பாக்கிறவரைக்கும் என்னோட இதயம் நின்னே போச்சு, நான் அத செய்யல, உங்கள நான் எதுக்காக கொல்லணும், நீங்க என்ன கொல்றதுக்காக, முயற்சி செஞ்சது தெரிஞ்சும், அத கேட்டு உங்கள கஷ்டப்படுத்தக்கூடாது, நம்ம உறவு நல்லா இருக்கணும், உங்களோட கடைசி வரைக்கும் வாழணும்னு நினைக்கிறேன் , நான் போய் இப்படி எல்லாம் செய்வேனா சொல்லுங்க என்றாள் ரஞ்சனி.

குட், என்ன கொலைபண்ற முயற்ச்சி தோத்ததும், உன்ன நான் கொலை பண்ண நினச்சேன்னு புதிய கதையா, இந்த கதை டிராமா எதுவும் தேவையில்ல, அதுதான் நான் டாக்டர்ட கூட கத்தி கிழிச்சதுன்னுதான சொன்னேன், பயப்படாத போலீஸ்ல சொல்ல மாட்டேன்.

பவி புருஞ்சுகங்க, பிளீஸ் நான் எதுவும் பண்ணல, தெரியும் உன்னபத்தி உன்னோட குணத்தப்பத்தி, எல்லாம் உன்னவிட எனக்கு நல்லாவே தெரியும், இனி என்னோட முறை, அடி எப்படி எங்க விழுதுன்னு பாரு, என்றவன் அவள் எடுத்துவந்த பாலை பருக ஆரம்பித்தான்.

அவள் என்ன சொல்லி புரியவைப்பது என விளங்கிமல் இருக்க, இதுல எதுவும் கலந்திருக்கமாட்ட ஏன்ன இதுல நீ ஈசியா மாட்டிக்குவ, அதனாலதான் குடிக்கிறேன் என்றவன் காலிக்கோப்பையை அவளிடம் கொடுத்தவன், நாளைக்கு காலைல வரைக்கு சந்தோசமா இரு, அப்பறம் அது முடியாது என்றவன், உறங்கச்சென்றான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலையில் ரஞ்சனியும் பவித்ரனும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வள்ளி ரஞ்சனியிடம், அம்மா இன்னிக்கு குறிஞ்சி மலர் பூக்குற நாளுங்க, ஊரே அங்கதான் கூடும், வாங்கம்மா பாக்கலாம் என்றாள்.

ரஞ்ஜனி படத்தில் பார்த்திருக்கிறாள், நேரில் பார்த்ததில்லை , பவித்ரன் மருதுவை அழைத்தான். வள்ளியை கூட்டிச்சென்று குறிஞ்சி மலரை காட்டும்படி பணித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

வள்ளி, நீங்களும் சின்னையாவ கூட்டீட்டு வாங்கம்மா என கூப்பிட்டாள், தங்களுக்குள் பேச்சுவார்த்தைக்கே பஞ்சமாகிவிட, இதை எப்படி இவளுக்கு சொல்லிபுரியவைப்பது என தெரியாமல், லேசாக உதட்டை இழுத்துப்பிடித்து சமாளித்துக்கொண்டிருந்தாள் ரஞ்சனி.

வள்ளி, நீ புள்ளத்தாச்சியா இருக்கேன்னு சின்னய்யா நீ ஆசப்பட்டைனு அனுப்பறாங்க, அம்மாவையும் ஐயாவையும் தொல்ல செய்யாத வா என வள்ளியை அழைத்துச்சென்றான் மருது.

சாப்பிட்டுக்கொண்டிருந்த ரஞ்சனிக்கு மருதுவின் தொல்ல செய்யாத என்ற பேச்சைக்கேட்டவுடன் உணவு பாதியில் நின்றது. வீட்டில் இருக்கிற வேலைக்காரர் களுக்கு எல்லாம் ஒவ்வொரு வேலையாக கொடுத்து பவித்ரன் வெளியே அனுப்பி விட்டான்.

வீடும் அதைச்சுற்றிய தோட்டமும் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் இப்போது யாரும் இல்லை.

கைகளை கழுவிக்கொண்டு முன்னறையில் உட்கார்ந்தாள்.

திடுதிப்பென இரண்டு வேட்டை நாய்கள் பின்கட்டிலிருந்து ஒடி வந்து ரஞ்சனியைப்பார்த்து குறைத்தது.

அவை ஒவ்வொன்றும் மூன்றடி உயரம், காலைத்தூக்கி நின்றாள் ஆறடி இருக்கும், ரஞ்சனி பயந்து, பவி, பவி என கூப்பிட்டாள்,

நாய்கள் பாய்ந்து வரவும் வெளியே தோட்டத்திற்கு ஓடினாள். அங்க கருமைநிறத்தில் அதை போன்ற நாய் நின்றிருந்தது. பவித்ரன் அதனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

பவி, பவி என கத்தியவாறு, ரஞ்சனி பவித்ரனின் பின்னால் ஒழிந்து கொண்டாள்.

கம் டாமி, வீசி என்ன இவள கூட்டீட்டு வர இவ்வளவு நேரமா என்றான் அவளை துரத்தி வந்த நாய்களிடம் பவித்ரன்.

பவி இது உன்னோட வேலையா? ம்.. யெஸ், நீ ஆனந்துக்கு குடுத்த டார்ச்சர் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன், அத இப்போ நீ அனுபவிக்கப்போற, பல்லுக்குப் பல் என்றான் கண்ணை எட்டாத சிரிப்பில் பவித்ரன்.

பவி வேண்டாம் பவி, ஆனந்தப் பத்தி நான் சொல்றேன், கேட்டுட்டு முடிவெடு,என்றவளிடம், சட்ஆப், நீ பேசவே கூடாது, பேசவும் முடியாது, நான் சொல்றத கேக்கிறதத் தவிர வேற வழி உனக்கு இல்ல.

இன்னும் இரண்டு நாள் இந்தப் பக்கம் யாரும் வர மாட்டாங்க, வந்தாலும் நான் அவங்களுக்கு வேல சொல்லி அனுப்பீருவேன். இந்த இரண்டு நாளும் உன்னோட இடம் என நாய் உட்காரும் சீட்டைக்காண்பித்தான். குளிக்கிறது, சாப்பிடுறது, எல்லாம் இந்த நாயோட தான். ஆனா தூங்க முடியாது, தூங்க நினச்ச, மூனும் உம்மேல பாஞ்சிடும், டேக் கேர் என்றவன் , மடமடவென நடந்து வீட்டினுள் சென்றுவிட்டான்.

கரடி, நரி போன்ற மிருகங்கள் தோட்டத்தில் நுழைந்தாள், அதை வேட்டையாடி விரட்டும் கடும் பற்கள் கொண்ட மூன்று நாய்கள் ரஞ்சனியை சுற்றி வளைத்தது

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதினேழாம் பகுதி..

ரஞ்சனியின் கால்கள் ஒரு எட்டு எடுத்து வைத்தாலே, பாயத்தயாராக இருந்தன நாய்கள். ரஞ்சனி உறைந்து நிற்க, வயிற்றில் தன் இருகைகளையும் வைத்து குழந்தைக்கு பாதுகாப்பு அளிப்பது போல் அணைவாக பிடித்துக்கொண்டாள். பவித்ரன் பால்கனிவழியாக இந்த காட்சியைக் கண்டான்.

நாய்கள் ரஞ்சனிக்கு பக்கவாட்டில் இரண்டும், முன்னால் ஒன்றுமாக, அமர்ந்து அவளை காவல் காத்தது. ரஞ்சனி சுற்றும் முற்றும் பார்க்க, உதவிக்கு யாருமில்லை, மெய்ன் கேட்டோ ரோடோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

ரஞ்சனி லேசாய் கால்களை இடப்புறம் நகர்த்த, இடப்பறம் இருந்த நாய் எழுந்து நின்றது. நாய்கள் தீண்டினாலே கருவுற்ற பெண்களுக்கு விஷம் என படித்திருக்கிறாள். எனவே கால்களை பழைய படி வைத்துக்கொண்டு சிலையென நின்றாள். நாயும் உட்கார்ந்து கொண்டது.

மதிய உணவாக நாய்களுக்கு பச்சை மாமிசம் கொடுத்தான் பவித்ரன். நாய்கள் அவளைச்சுற்றி உட்கார்ந்து உண்ண, ரஞ்சனிக்கு குமட்டியது, எதிரில் உள்ள பவித்ரனுக்கு எதையும் காட்டிக்கொள்ளாமல், அமைதியாக நின்றாள்.

அடுத்தது அவளுக்கு உணவைக்கொடுத்தான். சாப்பிடு என்றான். காலையிலிருந்து ஒரே இடத்தில் நின்றவள், மயக்கம் வந்து விழாமல் இருக்க, தட்டை வாங்கிக்கொண்டாள்.

அவளுக்கு அந்த இடத்தில் சாப்பிடுவது அருவருப்பாக இருந்தது, குழந்தையின் நலனும், உடம்பில் தெம்பும் இப்போது அவசியம் என நினைத்தவள், ஒருவார்த்தை கூட பேசாமல், உண்ண ஆரம்பித்தாள்.

பவித்ரன் இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு சாப்பாடு வேண்டாம் என்றாவது கூறுவாள் என எதிர்பார்த்தான். ஆனால் நாய்கள் கறியைத்திண்ண, அதன் நடுவே ரஞ்சனி வேகவேகமாக உண்டு கொண்டிருக்கும் காட்சியைக் கண்டவன் மனம் வலித்தது.

சட்டென அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்.

வெளிச்சம் மங்க ஆரம்பித்தது. ஒருகருநாகம் அங்கே நுழைந்தது. அது ரஞ்சனியின் பின்னால் பத்தடி தொலைவில் வந்தது. ரஞ்சனி அதை கவனிக்கவில்லை. நாய்கள் இரண்டு ஓடிச்செல்லவும் திரும்பி பாம்பைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

நாய்கள் அதை தொம்சம் செய்தது. தோட்டக்காரன் மரம் வைக்க தோட்டியிருக்கும் குழியில் பாம்பின் உடலை கொண்டு போட்டுவிட்டு, அவைகளே மண்ணைமூடி புதைத்துவிட்டது.

ஊட்டியில் சீக்கிரம் இருட்டி விடும், ரஞ்சனியைச் சுற்றி இருந்த நாய்களில் இரண்டு, எழுந்து சென்றுவிட்டது. ஒருநாய் அவளின் முன்னால் அமர்ந்திருந்தது. நாய்கள் எங்கே செல்கிறது என்ற அவளின் மனதின் கேள்விக்கு, பவித்ரன் வீட்டையும் தோட்டத்தையும் காவல் காக்க என்றான்.

அவளின் முன்னால் நாற்காலியில் அமர்ந்தான். கையில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது.

ரஞ்சனி கேள்வியாய் துப்பாக்கியைப் பார்க்க, பவித்ரன் லைசன்ஸ் இருக்கு, உனக்கு எதிரியை சுட ஆள் வேண்டும், எனக்கு யாரும் வேண்டாம். இதுவே போதும் என துப்பாக்கியை உயர்த்திக்காட்டினான்.

ரஞ்சனி அவனிடம், போச விரும்பவில்லை, அவன் பேச்சையும் கேட்கப் பிடிக்காதவள், அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டாள்.

பவித்ரனுக்கு அவளது செய்கை சினமூட்டியது. சுட மாட்டேன் நினைக்கிறியா? சுட்டுக்காட்டவா? என்றான் வேண்டுமென்றே.

ரஞ்சனி சுடு என்று போட்ட சத்தம் தோட்டத்தையே எதிரொலித்தது. காவலுக்குச் சென்ற நாய்கள் சத்தம் கேட்டு திரும்பி வந்தது. பவித்ரன் தன் சைகையில் அவற்றை அனுப்பிவிட்டு ரஞ்சனியின் பக்கம் திரும்பினான்.

கோபம் வருதோ, வரணும், நூத்துக்கணக்கான பேர சுட்டுவிரல ஆட்டி வச்ச நீ, இங்க அந்த விரலை நீட்டக்கூட முடியாம இருக்கும் போது, அந்த இயலாமை நிச்சியம் கோபத்தை வரவைக்கும். எனக்கும் அதுதான் வேண்டும். இப்ப தெரிஞ்சிருக்குமே ஆனந்தன் பட்ட கஷ்டம், மன அழுத்தம் இல்லியா?

ஆனந்த் ஒரு பெண்ணை நிற்கதியாக்கி நாசப்படுத்தி சாகும் வரை துன்புருத்தியதற்கு, அவனுக்கு நான் செய்தது சரி, சரி சரி தான். ஆனா அத உங்ககிட்ட சொல்லி நியாயப் படுத்த முடியாது, ஏன்னா நீங்களும் அதைத்தான் செய்றீங்க, என்ன ஒரே வித்யாசம், அவ இறந்துட்டா, நான் இன்னும் இறக்கல அவ்வளவே என்றவள் பேச்சு முடிந்ததென மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

ஆனந்தா? பொய் சொல்லாத, கதை தான இது, அவன் பெண்கள் பக்கமே போக மாட்டான் , இது பொய் என்றான் அழுத்தமாக.

ரஞ்சனி இதை எதிர்பார்த்தாள். எனவே எதுவும் பேசவில்லை. ரஞ்சனியின் முகத்தை தன்னைப்பார்க்கத் திருப்பிய பவித்ரன், உன்னோட பொய்ல, ஒரு சின்ன இடம் நிரப்பப்படல, அந்த பொண்ணு யாருன்னு நீ இன்னும் சொல்லல, அத சொல்லீட்டா, தட் இஸ் கம்ளீட்டட் பேக்கேஜ் என்றான்.

சொல்ல முடியாது, ஏன்னா இது ஒரு குழந்தையின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்றாள்.

ம்..ம்.. நம்பீட்டேன், என்றவன் அவனது நாற்காலியில் அமர்ந்து, அவளை நோட்டம் விட்டான்.

காலையிலிருந்து நின்று கொண்டே இருந்தவளின் கால்கள் ஊட்டிக் குளிரும் சேர்ந்து கொள்ள நடுங்க ஆரம்பித்தது. அதை கண்டுகொண்ட பவித்ரன், நான் காலைலயே உக்கார சொன்னேன், வீணா நின்னு மயங்கி விழப்போற என்றான்.

அவன் உட்காருவதற்கு தூக்கிப்போட்ட அழுக்கான நாய் சீட்டையும், அவனையும் முறைத்துப் பார்த்தவள் பவித்ரனை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு நின்றாள்.

மயக்கம் போட்டு வழுந்த நாய் உம்மேல பாஞ்சிடும் நான் பெறுப்பில்ல, என்றவன், நாயிடம் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான்.

ரஞ்சனியால் நிற்க முடியவில்லை. அவன் சென்னது போல் மயக்கம் வந்துவிடும் போல இருந்தது. இவ்வளவு நேரம் உட்காரமல் இப்போது உட்கார்ந்தாள், நாய் பாய்ந்து விடுமோ என்றும் பயமாக இருந்தது.

தெம்பின்றி கைகால்கள் மிதக்க ஆரம்பித்தது, அவள் கட்டுப்படுத்த நினைத்தும் முடியவில்லை, விழுந்தாள் நாய் பாயுமே என்ற பயத்தில் யோசிக்காமல் ஓட ஆரம்பித்தாள்.

நாய் வேகமாக அவளின் கழுத்தைக் குறிபார்த்துப் பாய்ந்தது. இரண்டு எட்டு வைக்கும் முன் மயங்கி சரிந்தாள் ரஞ்சனி. நாய் அவளைத் தாண்டி குதித்துவிட, அது கீழே விழும் முன் இறந்தது.

பவித்ரன் துப்பாக்கியால் சுட்டிருந்தான்.

துப்பாக்கி சத்தம் கேட்டு மற்ற நாய்கள் ஓடி வந்து பார்க்க, அங்கே இறந்து கிடந்த நாயும் ஒரு நாற்காலியும் தவிர யாருமில்லை.

அங்கே மலைப்பறைகள், ரஞ்சனியின் முட்டி நெற்றியை பதம் பார்த்திருந்தது. பவித்ரன், கண்ணத்தைத்தட்டி எழுப்பிப் பார்த்தான் பதிலற்றுப் போகவும் மருத்துவரை அழைத்தான்.

மருத்துவரிடம், நாய்களைப்பார்த்து பயந்து விழுந்துவிட்டாள், அந்த அதிர்ச்சியில் மயங்கிவிட்டாள் என்றான் பவித்ரன்.

லேசான காயம்தான் என மருந்திட்டார். காயம் ஆற்றவரைக்கும் தண்ணிபட வேண்டாம் என்றவர், ஹனிமூன்னுக்கு வந்துட்டு மாறி மாறி அடிபட்டுட்டு இருக்கீங்க, எப்படியோ எனக்கு வருமானம் வந்தா சரி என கேலிபேசிவிட்டு சென்றார்.

மருத்துவர் போட்ட ஊசியால் மெல்ல கண்திறந்தாள். கால் அசைக்கக்கூட முடியாமல் மறத்து இருந்தது. பவித்ரன் குவளையில் குளுக்கோஸ் போட்ட ஜூஸை நீட்டினான்.

அதை உணர்வற்ற பார்வை பார்த்தவள், அதை வாங்கிக்கொள்ளாமல், படுக்கையைவிட்டு எழுந்தாள்.

ரஞசனி குடி, எம்பொறுமைய சோதிக்காத என்றான். அவள் கண்டுகொள்ளாமல் கீழே இறங்கினாள். தெம்பின்றி மறுபடி உட்கார்ந்துவிட்டாள்.

எங்க போற நீ...

பாத்ரூம், போதுமா!

அவளை அலேக்காக தூக்கியவன், அவளை பாத்ரூமில் இறக்கினான். விழுத்ததில் அமுக்கான உடையை அவள் தடுக்கக் கேட்காமல் மாற்றிவிட்டவன், அவளுக்கு ஜூஸை புகட்டினான்.

ரஞ்சனிக்கு, ஒன்றுமே பிடிக்கவில்லை, ரசிக்கவில்லை, பிடிக்காமல் விழுங்கிய ஜூசும், குமட்டிக்கொண்டு வந்தது.

ஜூசை குடிப்பதை நிறுத்தியவள், அவன் மீதே மொத்தத்தையும் வாந்தி எடுத்தாள்.

என்னாச்சு டாலி.. டாலி என்றவன், ஜூஸை டேபிளில் வைத்துவிட்டு அவளது தலையைத் தாங்கிப்பிடித்தான்.

வேகமாக உடையை மாற்றி இடத்தை சுத்தப்படுத்தியவன், அவள் வாய்கழுவ நீர் எடுத்து வந்தான்.

வாய் கழுவியவள், தலைசுற்ற அப்படியே படுத்துக்கொண்டாள்.

சிறிது நேரத்தில், பவித்ரன் அவளை எழுப்பினான். அந்த இடமே அழகிய வாசத்தில் நிரப்பப்பட்டு இருந்தது. ஒன்னுமில்ல ரூம் ஸ்ரே என்றவன். இட்லியை பிட்டு அவளுக்கு ஊட்டினான்.

ரஞ்சனியின் கண்கள் கலங்கியது. அவளால் பவித்ரனின் வெறுப்பையும் தாங்க முடியவில்லை, பாசத்தையும் தாங்க முடியவில்லை. அவன் பாசம் காட்டினால் சமாதானம் ஆகிவிட்டான் எனவும் எடுத்துக்கொள்ள இயலவில்லை. துன்புறுத்தினால், வெறுத்துவிட்டான் எனவும் நினைக்க முடியவில்லை.

பக்கத்தில் அன்னை போல தான் வாயைத்திறந்து உணவை வாங்கிக்கொள்ளும் போதெல்லாம், அவனது வாயும் ஆ.. என திறந்து மூடும் இவனிடம், எதைச்சொல்லி எப்படி புரியவைப்பது என யோசித்தாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறுநாள் மருதுவும் , வள்ளியும் வந்தனர். நாய்கள் இறந்ததைப் பார்த்து மருது துடித்தான். வள்ளி அவனை சமாதானப்படுத்தி வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

அங்கே ரஞ்சனி, தலை, கை கால்களில், பிளாஸ்திரியுடன் காபி போட்டுக்கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த வள்ளி, பதறிப்போனாள். என்னாச்சுமா? எப்படி அடி பட்டது என்றாள்.

ரஞ்சனி,என்ன பதில் கூறுவது என தெரியாமல் ஒரு நிமிடம் நின்றாள். அதற்க்குள் பவித்ரனின் ரஞ்சனி! ரஞ்சனி என்ற சத்தம் கேட்க, வந்து சொல்றேன் என்றவள், காபிக்கோப்பையுடன் ஹாலுக்குச் சென்றாள்.

மாடியிலிருந்து இறங்கிய பவித்ரன், ரஞ்சனியைப் பார்த்து முறைத்தான். யாரக்கேட்டு கீழ இறங்கின என்றவன். அவளை அலேக்காக தூக்க கை நீட்டினான்.

ரஞ்சனி, கண்களால் வள்ளியையும், மருதுவையும் சுட்டினாள். எனக்கு பரவாயில்ல, என்றவள் மெல்ல படியேறி மாடிக்குச்சென்றாள்.

சின்னைய்யா நாய்க்கு என்னாச்சு என்றான். நாய்க்கு வெறி பிடிச்சிருச்சு மருது, ரஞ்சனிய விரட்டீருச்சு, அதனால தான் சுட வேண்டியதாபோச்சு, புதச்சிரு என்றவன், மடமட வென மாடி ஏறி சென்றுவிட்டான்.

நாய் விரட்டுனதுலதான், அம்மா விழுந்துட்டாங்க போல என்றாள் வள்ளி. இல்ல வள்ளி நாய் அப்படியெல்லாம் பண்ணாது, எனக்கு ஏதோ சரி இல்லாத மாதிரி படுது, என்றான் மருது.

சின்னம்மாவுக்கு அடிபட்டுடுச்சுல்ல, அதனால ஐயா சுட்ருப்பாரு, இதுல என்ன தப்பு, நீ வளத்த நாய்க்கிறதால உனக்கு பாசம், வேறவொண்ணுமில்ல, வா குழி தோண்டுவோம் என்றாள் வள்ளி.

மருது நாயை புதைக்கும்போது அழுதே விட்டான். அவனோடு சேர்ந்து, மற்ற இரண்டு நாய்களும் அழுதது. நண்பனை இழந்த துக்கமும், உண்மை தங்களுக்குள் புதைத்த சோகமும் சேர்ந்து கண்ணீராய் வெளிப்பட்டது.

நாய்கள் சாப்பிடாமல் முரண்டு பிடித்தது. பவித்ரன் நாய்களை திறந்துவிடக்கூடாது என்றதால் கூண்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

ரஞசனியை கீழே இறங்கக் கூடாது என்ற பவித்ரன் தானே உணவு வகைகளை மாடிக்கு எடுத்துச் சென்று பரிமாரினான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஞ்சனிக்கு ஒரு யோசனை தோன்றியது.

பவி, நான் உங்கள கல்யாணம் பண்ணாம, நீங்க என்னக்கொல்லவந்தத கண்டுபிடிச்ச உடனே, உங்கள போலீஸ்ல பிடிச்சு குடுத்துட்டு, வேற ஒருத்தர நான் கல்யாணம் பண்ணா என்ன செய்து இருப்பீங்க? என்றாள் ரஞ்சனி.

சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், நிமிர்ந்து பார்த்து முறைத்தான். சாப்பிடும் போது, பேசாத என்றவன், அடுத்து உண்ண ஆரம்பித்தான்.

இல்ல எனக்கு தெரியனும் சொல்லுங்க என்றாள் ரஞ்சனி.

பட்டென அவள் கழுத்தைப்பிடிக்கச்சென்றவன், அவளது உடல்நிலை காரணமாக, கை அவளின் கழுத்தின் நேராக அந்தரத்தில் நிற்க, கண்களைஇறுக்க மூடி தன்னை சமன் செய்தவன், கை கழுவிக்கொண்டு எழுந்து சென்றுவிட்டான்.

ம்சூ இப்ப கேட்ருக்கக்கூடாதோ என நினைத்தவள் அவளும் சாப்பிடாமல் எழ, பவித்ரன் திரும்ப உள்ளே நுழைந்தான்.

நினச்சேன். ஒழுங்கா சாப்பிடு! ம்.. என்றான்.

ரஞ்சனி, அவன் சொன்னதற்காக சிறிது உண்டவள், புறையேற, அப்படியே வாஸ்பேஷனுக்கு ஓடினாள். மொத்தத்தையும் வாந்தி எடுத்தாள்.

அவள் துவண்டு நிற்கவும், தாங்கிப்பிடித்து படுக்கையில் அமர்த்தியவன். ஏன்? ஒரே வாந்தி, இங்க பூட் உனக்கு சேரலயா? பிடிக்காட்டி சொல்லு, என்னவேணுமோ? எப்படி வேணுமோ சமைக்கலாம். உங்க வீட்டு சமையல்காரங்கல கூப்பிடவா என்றான்.

அதல்லாம் வேணாம் பவி, மனசில யோசனையோட சாப்டேன்ல அதனால தான்.

என்ன யோசன, அப்ப கேட்ட கேள்வியா?

ம்... ம் நீங்க பதில் சொல்லுங்க,

அவளைப் பார்த்து முறைத்தவன், என்ன பிரிஞ்சு போறதுக்கு உனக்கு உரிமை இருக்கு, ஆனா வேற கல்யாணம் செஞ்சுக்க உரிமையில்ல, நடத்த விடமாட்டேன். போதுமா..

அதுதான் உங்கல போலீஸ் பிடிச்சிட்டு போயிடுச்சே, அப்பறம் எப்படி தடுப்பீங்க, என்னோட கேள்வி, கல்யாணம் முடிஞ்சது, என்ன பண்ணுவீங்கன்னு..

எப்ப வர்றேனோ அப்ப உன்ன தூக்கீட்டு வந்துடுவேன். நீ இல்லாம என்னால இருக்க முடியாது.

முதல்ல கேள்வி கேட்டதும் கழுத்த பிடிக்க வந்தீங்க, கொன்னுடீவேன்னு செல்லுவீங்கனு நினச்சேன். சரி, இப்ப அடுத்த கேள்வி, அப்படி நீங்க வரும்போது தண்டனை அனுபவிச்சு ஒருவருசம் கழிச்சிடுச்சு, அப்போ நான் ஏழுமாசம் , கணவனோட சந்தோசமா, குழந்தையோட எதிர்காலத்த திட்டம் போட்டுட்டு இருக்கேன், அப்ப?

நிஜமாவே , என்னவிட்டு போயிடுவியா? என்றான், அவளை இறுக்கப்படித்துக்கொண்டு, இது சாதாரண கேள்விதான், உங்க பதில தெரிஞ்சுக்க, அவ்வளவுதான். சொல்லுங்க..

எனக்கு தெரியல, உன்னோட சந்தோசமும் முக்கியம், அதுக்காக நீ நல்லா வாழனும்னு வாழ்த்த என்னால முடியாது, உன்னப் பாக்கமுடியாத கண்காணாத தேசத்துக்கு போயிடுவேன்.

எனக்கு மயக்க மருந்து கொடுத்து என்னக்கடத்தி, நான் வேண்டாம் வேண்டாணு சொல்ல, என்னோட கருவ கலச்சு, என்ன பைத்தியாக்கி என சொல்லிக்கொண்டே சென்றவளின் வாயை தன் இதழ் கொண்டு மூடியவன், அவள் பேச்சை நிறுத்தினான்.

சில நிமிடங்கள் சென்றபின்னும், நிறுத்தாத அவனின் முத்தத்தை தாபம் எனக் கணக்கிட்டவள், அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்.

அவனது கண்கள் கலங்கி இருந்தது.அவளது மடியில் தலை சாய்த்தவன், ஏன் டாலி, நான் உன்ன அப்படி செய்வேனா? அதுவும் மாசமா இருக்கும் போது, யாராவது அப்படி செய்வாங்களா? எனக்கேட்டவன் மேல் நோக்கி அவள் முகம் பார்த்தான்.

குனிந்து அவனைப் பார்த்தவள், இத விட மோசமா செய்வாங்க, செஞ்சிருக்காங்க, உங்க உயிர் நண்பன் ஆனந்த்.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதினெட்டாம் பகுதி...


ரஞ்சனி ஆனந்தைப் பற்றி கூறியதும், சட்டென எழுந்தவன். வேண்டாம், ஆனந்த பத்தி பேசாத என்றான் பவித்ரன்.

பவி, நானும், ஆனந்தப்பத்தி விருப்பட்டு பேசல, உங்களுக்கு நான் எல்லாத்தையும் தெரியப்படுத்தனும், அதனால தான் என்றாள் ரஞ்சனி..

ரஞ்சனியைப் பார்த்து முறைத்தவன், தேவையில்ல, உன்னப்த்தியும் எனக்கு தெரியும், அவனப்பத்தியும் தெரியும் என்றான் பவித்திரன்.

பாத்தீங்களா! நம்ம சாதாரணமான மற்ற விஷயங்கள பேசும்போது, நீங்க கோபப்படல, ஏன் நான் கோபப்பட்டு திட்டினாலுமே, ஒரு கட்டத்துல நிலைதவறி நான் அடிசதுக்குக்கூட நீங்க கோபப்படல, என்னோட மனநிலைய புரிஞ்சிட்டு என்ன சமாதானப்படுத்த முயற்சி செய்றீங்க, ஆனா, ஆனந்த் பேர கேட்டாலே, அவனப்பத்தி பேச்செடுத்தாலே, நீங்க கோபப்பட்டு என்ன துன்பப்படுத்துறீங்க. நீங்க ஆனந்த் விஷயத்துல என்னப்பத்தி தவறா நினச்சிருக்கீங்க பவி, அதனாலதான் என பேச ஆரம்பித்தவளின் இதழை சிறை செய்தவன் விடுவிக்கவே இல்லை.

ரஞ்சனி, பவித்ரனை விலக்க நினைத்தபோது அவள் கைகளும் அவன் பிடியில் இருந்தன. சில நிமிடங்களுக்குப் பின் விடுவித்தவன். பேசாதன்னு சொன்னா புரியாது என்றவன், அவள் மூச்சிரைப்பதை பார்த்துவிட்டு, தண்ணீர் குடி என்றவன், எழுந்து சென்றுவிட்டான்.

பவித்ரனுக்கு எப்படி புரியவைப்பது. மலரின் நிலையை தான் சொன்னால் சரியாக வருமா என மனதில் கணக்கிட்டவள். மிகவும் சுயநலமாக, தனது நல்வாழ்விற்காக, மற்றவரின் அந்தரங்கத்தை, வெளிப்படுத்தவேண்டுமே என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கொள்ள, தலை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

எதை எங்கிருந்து சொல்வது என ரஞ்சனிக்கு புரியவில்லை.

சொன்னாலும் அவன் காதுகொடுத்து கோட்கவேண்டுமே என்றும் கவலையாக இருந்தது.

இப்போது மலரின் நிலையை நினைத்துப்பார்த்தவள், அவளின் துயரை ஒரு தாயாக தாய்மை அடைந்தவுடன் ரஞ்சனியால் பூர்ணமாக உணரமுடிந்தது.

மலர் தனது குழந்தையின் நலன் கருதி, அதை ஒரு பார்வை கூட பார்க்காமல், தன் இறந்துவிட்டதாக அவளது குடும்பத்திற்கு அறிவிக்க சொல்லிவிட்டு, குழந்தையை எடுத்துச்செல்லுங்கள் என்று சொன்னபோது, அவளின் மனம் பட்ட, வேதனை, குழந்தையை எடுத்துச்சென்றவுடன், அந்த மருத்துவமனையே, உலுக்கிய அவளது அழுகை என மலரை நினைத்த மாத்திரத்தில் ரஞ்சனிக்கு அழுகைவந்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலரை பார்த்த நாளை ரஞ்சனியால் மறக்க முடியவில்லை. அவள் அழகின் மொத்த உருவமாக, பயந்த விழிகளுடன், ஆனந்தின் பின்னால் கடைக்கு வந்தாள்.

அப்போது மலர் ஏழுமாத கர்பிணி, கர்பிணிகளுக்கே உண்டான நடையுடன் அசைந்து வந்தாள்.

ஆனந்தின் அதிகாரமும், மலரின் பயந்த போக்கும், ரஞ்சனியை உற்று கவனிக்க வைத்தது.

ரஞ்சனி கண்காணிப்பு கேமரா மூலம் அவர்களை கவனித்தாள்.

சில நிமிடங்களில், மலரின் விழிகள் கலங்கித் தவித்தது, அவன் இறக்கமே இல்லாமல் அவளை ஏசினான். ரஞ்சனிக்கு அவர்களின் பேச்சு கேட்காவிட்டாலும், கணவன் மனைவிக்குள் பூசல் என நினைத்தாள்.

கடையின் நுழைவுவாயில் எப்போதும் கூட்டமாகவே இருக்கும், அவன் எதுவும் வாங்காமல் கோபத்தில் வெளியே செல்ல மலரும் அவனைத் தொடந்து அவனது வேகத்திற்கு பின்னாலே ஓடினாள்.

கூட்டத்தில் அவன் மடமடவென வெளியேறிவிட்டான். பெரிய வயிற்றுடன், அவளால் நெரிசலில் வேகமாக செல்ல இயலாமல் தாமதித்துவிட்டாள்.

வெளியேறியவன், அவனது காரில் ஏறி அதை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான். மலரை கவனிக்கவே இல்லை.

இதை கவனித்துக்கொண்டிருந்த ரஞ்சனிக்கு பகீரென்றது.

என்னவானது, எதற்காக இப்படி நடந்து கொள்கிறான் எனவும் புரியவில்லை.

வெளியில் சென்று அவனை தேடிய மலர், அவனது காரைக்காணாமல், பயந்து கண்ணீர் விட்டாள், அதை கவனித்துக்கொண்டிருந்த ரஞ்சனிக்கு பாவமாக இருந்தது.

அழுது கொண்டிருந்தவள், நிற்க முடியாமல் தடுமாறவும், கண்காணிப்பாளருக்கு அழைத்து மலரை தன் அறைக்கு அழைத்து வரச் சொன்னாள் ரஞ்சனி.

மலருக்கு, ஜூஸ் கொடுத்து, என்ன பிரச்சனை எனக்கேட்டாள் ரஞ்சனி.

மலர் வாயே திறக்கவில்லை. கண்களில் கண்ணீர்மட்டும் நிற்காமல் வழிந்தது.

ரஞ்சனி, சரி ஏதும் சொல்லவேண்டாம், உங்க கணவர் வர்ற வரைக்கும் இங்கயே ரெஸ்ட் எடுங்க, சேர்ல உக்கார முடியலைனா, அங்க சோபா இருக்கு, அங்க கூட உக்காந்து கோங்க என்றவள், அவளது வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

ஒருமணி நேரம் கழித்து திரும்ப வந்தவன், மலரை அந்த கடையில் தேடினான்.

ரஞ்சனிக்கு ஆனந்த் திரும்பி வந்த தகவல் வர, சோபாவில் சாய்ந்து உட்காரமுடியாமல் சரிந்து அமர்ந்திருந்த மலரை புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் வருத்தமான முகத்துடன், காய்ந்த நீர்க்கோடு கன்னத்தில் தெரிய, அசதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

எப்படி கூப்பிடுவது, பெயரை கேட்கவில்லையே என நினைத்த ரஞ்சனி மெதுவாக மலரை எழுப்பினாள்.

மலர் திடுக்கிட்டு எழுந்தவள், ரஞ்சனியைப் பார்த்து, என்ன? என்னாச்சு என்றாள் பீதியில்...

நீங்க எதுக்கு இவ்ளோ பயப்படுறீங்க, ரிலாக்ஸ், உங்க கணவர் வந்துட்டார். அவர இங்க கூட்டீட்டு வர சொல்லவா? என்ற ரஞ்சனியின் கையை இறுகப் பற்றிய மலர், வேணாம் பிளீஸ், பிளீஸ், என்ன காப்பாத்துங்க மேடம் என அழ ஆரம்பித்தாள்.

என்னச்சு? உங்க கணவர் தானே அவர்? எனக் கேட்டாள் ரஞ்சனி.

மலரின் தலை இடவலமாக அசைந்து நின்றது.

பின்ன, அவர் யார்?

என்..என் னோட பழைய காதலர் என குனிந்தே பதில் சொன்னாள் மலர்.

ரஞ்சனி, கைகளை மலரிடமிருந்து உருவிக்கொண்டாள்.

கேள்வியாக நிமிர்ந்த மலரைப் பார்த்த ரஞ்சனியால், அவள் தவறு செய்பவள் என்றும் கூற முடியவில்லை. நிறைமாதமாக இருப்பவளிடம், தான் கடுமையாக பேசி விடுவோமோ என நினைத்தவள், அமைதியாக அவள் இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்து, தனது வேலையை கவனிக்கச்சென்றாள்.

ஆனந்த் தன் கணவனில்லை என்று சொன்ன உடன் ரஞ்சனி பார்வையால், தன்னை அருவருத்ததை உணர்ந்த மலர், மனம் வலித்தது.

தனக்காக யாருமில்லாத இந்த நிலையில், மலர் கஷ்டப்பட்டு எழுந்து, ரஞ்சனி அருகில் சென்றாள்.

ரஞ்சனி எதிர் இருக்கையை சுட்டி உட்கார் என்றாள்.

மலர் தவிப்பான முகத்துடன் எதிரில் அமர்ந்தாள்.

சொல்லுங்க, நான் என்ன செய்யனும்னு எதிர் பாக்குறீங்க என்றாள் நேரடியாக ரஞ்சனி.

மேடம் என்ன அந்த ரோக்ட இருந்து காப்பாத்துங்க மேடம் என்றாள் மலர்.

புரியல மிஸ், மிஸ்ஸஸ்என குழம்பிய ரஞ்சனியிடம், மிஸ்ஸஸ் சாருநேசன் என்றாள் மலர்.

மலரை ஒரு பார்வை பார்த்த ரஞ்சனி, உங்க பேரக்கேட்டேன் என்றாள்.

மலர் மேடம்.

என்ன உதவி செய்யனும், காப்பாத்துங்கன்னு சொல்லாம என்ன வேணூன்னு சொன்னாப் போதும் என்றாள் வெடுக்கென்று.

மேடம் அவன் மேசமானவன் மேம், என்ன டார்சர் செஞ்சு என்னோட புருஷன்ட இருந்து என்ன கடத்தீட்டு வந்து, என்னோட குழந்தையை கொல்ல சொல்றான் மேம். அவன் கிட்ட நான் மாட்ன, என்னோட குழந்தைய அழிச்சிருவான். என்ன, என் உடம்.. என மேலும் சொல்ல முடியாமல் அழுத மலரை பார்த்து, எதுக்காக உங்கள குறிவைச்சு கடத்தனும்? என்றாள் ரஞ்சனி.

ஒரு நிமிடம் யோசித்தவள், நான் அவன்ட சொல்லாம அவன் நோசனல் கேம்ஸ் போயிருந்த சமயத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டேன், என்றாள் குனிந்த தலையில்.

ஏன்? ஒருந்தன காதலிச்சிட்டு, அவன கைவிட்டுட்டு, இன்னோருத்தன கல்யாணம் செஞ்சு, இப்போ காதலனோட வந்து வழி தெரியாம முழிக்கணும் என சாட்டையாக வந்தது ரஞ்சனியின் வார்த்தை.

எந்தப் பொண்ணும், உழைச்சு சம்பாதிக்கிரவன, சொந்தக்கால்ல நிக்கிறவன தான் விரும்புவா, அவரப் பத்தி தெரிஞ்சதும் நண்பன்ற பேர்ல அவன் அவங்கள அட்டையா உறிஞ்சி எடுத்து தன் தேவையை பூர்த்தி செய்துட்டு, அவங்களுக்கு பெரும் நஷ்டத்த ஏற்படுத்த நினச்சாரு, அவரோட பிளான எங்கிட்ட சொன்னதும், நான் தவறான ஆளைத் தேர்தெடுத்து உள்ளேன் என தெரிந்து விலக முயன்றேன் , அதனால் வேற கல்யாணம் செய்துகிட்டேன் என்றாள்.

சரி இப்ப அவங்க உங்களேட கல்யாண வாழ்க்கையில குறிக்கிட்டா, நீங்க போலீஸ்லதான் புகார் கொடுக்கணும், எனக்கு தெரிஞ்ச கமிஷ்ணர் இருக்காரு மலர் கூப்பிடவா?

மேண்டாம் மேடம் பிளீஸ் என்றாள் மலர்.

சரி அப்போ உங்க கணவன் எங்கனு சொல்லுங்க உங்கள அவங்கட்ட அனுப்புறேன் என்றாள் ரஞ்சனி.

மலர் கண்களில் கண்ணீருடன், இட வலமாக தலையசைத்தாள்.

நீங்க சொல்றதப்பாத்தா எனக்கு உங்க மேலதான் சந்தேகமா இருக்கு, ஏன் கணவர்ட போக மாட்றீங்க,

கணவர்ட போனா என்னோட வியாதி அவருக்கும் வந்துடும் அதனாலதான்...

புரியல... என்ன வியாதி,

பைத்தியம் என்றாள் மலர்,

என்ன நடந்ததுன்னு கொஞ்சம் முதல்ல இருந்து சொல்லுங்க.. அப்பத்தான் என்னால உங்களுக்கு கெல்ப் பண்ண முடியுமான்னு தெரியும் என்றாள் ரஞ்சனி.
 
Top