All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பன்னிரெண்டாம் பாகம்..,

ரஞ்சனி சற்று தெளிந்தமர்ந்தாள். பவித்ரனும் அவனுடைய இருக்கையில் அமர்ந்து, சிக்னல் கிளியரன்சுக்கு காத்திருக்கும்போது எதிர் சாரியில் மழையில் அணை திறந்து விடப்பட்டிருப்பதால் நீர் சில இடங்களில் தேங்கி நிற்பதாகவும், அப்பகுதிக்கு செல்பவர்கள், வேறு பகுதியில் உள்ள தெரிந்தவர் வீடுகளுக்கோ அல்லது அரசாங்கம் தற்காலிகமாக அமைத்திருக்கும் இடங்களிலோ தங்கிக்கொண்டு, நாளை நீர் வடிந்தவுடன், அவரவர் இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவித்துக்கொண்டு அரசாங்க வாகனம் அவனுக்கு எதிர்சாரியில் பயணப்பட்டது.

அரசாங்கம் அறிவித்த சில பகுதிகளில் ரஞ்சனி வீடும் அடங்கும். பவித்ரன் திரும்பி ரஞ்சனியைப் பார்க்க அதே சமயத்தில் அவளது போனும் ஒலித்தது.

இப்போதும் ரஞ்சனியின் அன்னைதான் அழைத்திருந்தார்கள். காதில் வைத்தவள் ஹலோ என்றாள் கமறிய குரலில்.

ரஞ்சு என்னாச்சுமா, தொண்ட கட்டுன மாதிரி இருக்கு, என்ன செய்யுது மா என்றார் ஒரு அன்னையாக மகளை உணர்ந்து.

நத்திங் மா, ஐ திங் திடீர் மழை சேரல போல, என்றாள் ரஞ்சனி பட்டும் படாமலும்..

வேற ஒன்னுமில்லயே மா, மழை தண்ணீ ஏதும் மேல படலியே என்றார் லதா.

பவித்ரனை ஒரு பார்வை பார்த்தவள், ம்.. நல்லாத்தாம்மா இருக்கேன் என்றவள், நம்ம வீட்டுபக்கத்துல தண்ணியாம், சோ நான் என்னோட பிரண்டு நந்தினி இருக்கால, பவித்ரன் வீட்டுக்கு பக்கத்து ஏரியால அங்க போறேன் என்றாள் இருவருக்கும் பெதுவாக,

ஆமா ரஞ்சனி அதுக்காகத்தான் போன் பண்ணேன், நீ பத்ரமா இருந்துப்ப தான மா என்றார் லதா.

ம்..ம் என்றவள் போனை அணைத்துவிட்டு, கையை கட்டிக்கொண்டு அமர்ந்தாள்.

ரஞ்சனி பவித்ரன் கேட்டவற்றிற்கு தலையசைத்துவிட்டு இதுவரை அமைதியாய் இருந்தாலே ஒழிய எதுவும் பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை. பவித்ரன் அதை சோர்வு என்றே நினைத்திருந்தான், ரஞ்சனி அவள் அன்னையிடம் பேசும்வரை, இப்போது அவள் தோழிவீட்டிற்கு கூட்டிச்செல்லும்படி கூறிவிட்டு, அதுவும் நேரடியாக கூறாமல், சட்டமாக அமர்ந்திருக்க கடுப்பானான்.

எதிர் சாரி சாலைக்கும் இவர்கள் சாலைக்கும் இடையை இருந்த தடுப்பை, காரைக்கொண்டு மோதி உடைத்துக்கொண்டு எதிர் சாரியில் பயணப்பட்டான். அவனைப்பார்த்து அவனுக்கு பின்நின்ற வாகனங்களும் அவனின் வழியை தொடர்ந்தனர்.

கார் பவித்ரனின் கையில் சீறிப்பாய்ந்தது, மழையையும் பொருட்படுத்தாமல். ரஞ்சனி ஏன் என்றும் கேட்கவில்லை, மெதுவாய் செல்லவும் சொல்லவில்லை. மொத்தத்தில் அவன் புறம் திரும்பவே இல்லை.

அவளது புறக்கணிப்பில் பவித்ரனின் காரின் வேகம் கூடியது. சாலை பவித்ரனின் வீட்டிற்கும், ரஞ்சனி தோழிவீட்டிற்கும் இரண்டாய் பிரிந்தது. லெப்ட் என்றவளை ஒருபார்வை பார்த்தவன், வலப்புறம் ஒடித்தான், அவன் வீட்டிற்கு.

பவித்ரனை பார்த்து முறைத்தவள், ஒருவார்த்தை பேசினாளில்லை. அவளது புறக்கணிப்பு அவனுள் கோபமாய் மாறி அவனை பித்தம் பிடிக்கச்செய்தது.

கேட்டை ரிமோட்டால் திறந்தவாறே வீட்டினுள் சீறிப்பாய்ந்தான். கேட்டை அதேபோல் ரிமோட்டில் மூடியவன். காரை நிறுத்திவிட்டு குதித்து இறங்கினான்.

காரைவிட்டு இறங்கிய ரஞ்சனி கேட்டை நோக்கி வெளியே செல்ல நடக்க ஆரம்பித்தாள். மழை இடியுடன் நீரை அவள் தலையில் கொட்டியது. வேகமாக சென்று அவளின் கையைபிடித்து நிறுத்தியவன், ஹே டோண்ட் பிகேவ் லைக் சைல்டு என்று அவளை உள்ளிழுத்தான்.

மழையில் நனைந்துகொண்டே, இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.

அவனின் கையை உதறித் தள்ளியவள் அடுத்து நடக்க ஆரம்பித்தாள். ஹே கேட் மூடி இருக்கு வெளில போக முடியாது, ஒழுங்கா உள்ளவா ரஞ்சி என அவளின் பின்னால் ஒடினான்.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்தவன் அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

ரஞ்சனியும் அவனுடைய செயலில் மனக்காயமுற்றிருந்ததால், திமிறிக்கொண்டு கீழே இறங்கியவள், லீவ் மீ ஐ ஹேவ் டூ கோ என்றாள் அதட்டிய குரலில்.

வெளியில மழை, உனக்கு சேராது, கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி எப்படி இருந்தனு தெரியுமா, என அதை ஒருமுறை மீண்டும் உணர்ந்தவன், அவளை இறுக்கி அணைத்தான்.

ஓ நல்லா ஞாபகம் இருக்கு, ஐ டோண்ட் கேர்னு, நீ சொன்னது, என்றாள் அவன் கைவளைவிற்குள் விறைத்து நின்று கொண்டே,

கைகளை விலக்கி அவளின் முகம் நோக்கியவன், சாரி டால், ஐ டோண்ட் நோ அபொட், திஸ். உனக்கு... இவ்வளவு தூரம் ஆகுன்னு எனக்கு தெரியாது என்றான் உண்மையான வருத்தத்தில்.

அவன் கண்களிலும், வார்த்தையிலும் பொய் இருப்பதாக ரஞ்சனிக்கு தோன்றவில்லை.

ஓகே, லீவ் என்றவள், தனது ஆடை பற்றி ஞாபகம் வந்தவலாக, நான் டிரஸ் மாத்தனுமே என்றாள்.

ரஞ்சனி இதுவரை விறைத்து நின்று, கோபப்பட்டு, சண்டையிட்டு பார்த்தவன், இப்போது, பவித்ரனின் ஜர்கின் மட்டுமே அணிந்து, அவன் முன் நிற்க சங்கப்படும்போது, அவளின் பெண்மையை ரசித்தான் பவித்ரன்.

அவனுக்குள் சட்டென உற்சாகம் பிறக்க, அப்போ சமாதானம் ஆயிட்ட, என்றான் கள்ள விழிகளில்,

ம்.. டிரஸ் என்றாள், அவன் அவளை புரிந்துகொள்ளாமல், பேசிக்கொண்டிருக்கிறானே என்று,

ம்.. னா

சரி சமாதானம், டிரஸ் பவி..

ஓகே , இந்த பிரசர் குக்கர சமாதானப்படுத்துனவனுக்கு பரிசு என கண்ணடித்தான்.

ரஞ்சனி அவனுடைய குறிப்பில் மிகவும் அவஸ்தையாக உணர்ந்தாள், அதுவும் இந்த உடையில்.

பவி... பிளீஸ் என்றவளை அதிகம் சோதிக்க மனமில்லாதவன், அவனது அறையை சுட்டினான்.

அவள் அறைக்குள் புகுந்துவிட, அவளின் வேகம் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டவன், வேறொரு குளியலறைக்குள் புகுந்தான்.

குளித்து முடித்து, துண்டுடன் வெளியில் வந்தவன், அவள் திரும்ப மழையில் நனைந்தது ஞாபகம் வர பால் காய்ச்சிக்கொண்டு அறை கதவை தட்டினான்.

சத்தம் ஏதும் வராததால், சற்றுமுன்னே அவள் மயங்கி சரிந்தது ஞாபகம் வர, பட்டென கதவை திறந்தான், கண்ட காட்சியில் உறைந்து நின்றான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞசனி குளித்து முடித்து, ஒன்றை துண்டுடன், அவனது அலமாறியை ஆராய்ந்து கொண்டிருந்தவள், கதவு தட்டப்படும் ஒலியில் திரும்பி பார்த்தாள்.

அவள் பிளீஸ் வெட் என்று சொல்லும் முன் கதவு திறந்து கொண்டது. ஐயோ திரும்பவும் இந்த கோலத்திலா என நினைத்தவள், பட்டென அலமாறிக்குள் மறைந்துகொண்டு, தலையை வெளியே நீட்டினாள்.

பவித்ரனுக்கு, அவளது செய்கை ஈர்த்தது. அவனை அறியாமலே அவனது கால்கள் அவள் புறம்பயணப்பட்டது.

அவன் அருகில் வருவதை உணர்ந்தவள், பிளீஸ் பவி என்றாள், வெளிப்படாத குரலில்,

குனிந்து தலையை மட்டும் நீட்டிய அவளின் முகத்தை உயர்த்தியவன், யூ பிளீஸ் டூ மீ என்றான் கிறங்கிய குரலில். அடுத்து அவளால் போசவே முடியாத வாறு அவளது வார்த்தைகளை உறிஞ்சியவன், மௌனத்தை பரிசலித்தான்.

அவனது செயலில் நாணியது, அவர்களின் உடைதான். யார் யாரை வீழ்த்தினார் என்பது, இருவருக்குமே நினைவில்லை.

அழகிய மஞ்சம், மன்றம் ஏறி தாலி வாங்காமலே முடிந்தது. அதைப் பற்றி இருவருமே கவலைப்படவில்லை. பவித்ரனை கணவனாகத்தான் உணர்ந்தாள் ரஞ்சனி. அவன் கேலியையும் கோபத்தையும், ஒதுக்கத்தையும் அவனுடன் சேர்ந்து ஏற்றுக்கொண்டாள். இப்போது அவனின் தீவிரமான காதலையும் ஏற்றுக்கொண்டாள்.இந்த ஐந்து நாட்கள் தான் பவித்ரனுடன் பழகினோம் என்பதை, அவளும் மறந்தாள். அவனுக்கும் மறக்கடித்தாள்.

பவித்ரனோ உறவு முடிந்தும் அவளை விலகினான் இல்லை. அவளது இடது தோளின் வழவழப்பில் கையால் பயணப்பட்டவன், அங்கே நேர்கோடாக ஒரு நெருடலை உணர்ந்தான். இது என்ன டாலி என்றான் .

அது ஸ்மால் ஆக்சிடன்ட் என்றாள் ரஞ்சனி,

ஆக்சிடென்ட் என்றவுடன் அவனது மோனநிலை கலைந்து, எப்படி என்றான்.

கார் ஆக்சிடண்ட், லாரி மேதிடுச்சு என்றவளிடம், என்ன ரஞ்சூ பாத்து போகக் கூடாதா என்றான் சற்று அதட்டலாக.

நல்லா முன்னாடியும், பின்னாடியும் வந்த லாரிய பாத்துட்டு, வெளில குதிச்சதால தான், புழைச்சேன், அப்படி இல்லனா, லாரிக்கு நடுல காரோட நசுங்கி இருப்பேன். என்ன சுரண்டிதான் வெளில எடுக்கணும் என்றாள் சற்று கேலியாக.

ஆனால் அவனுக்கு அது கேலியாக படவில்லை போல, பட்டென அவளின் வாயை மூடியவன், அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

ஹே, அதான் ஒன்னும் ஆகலியே, எதுக்கு இப்படி என்றவளை போச விடாமல், அவளது ஆறிப்போன வடுவிற்கு, முத்தத்தால் மருந்திட்டான். ரஞ்சனி போசும் நிலையைக் கடந்தாள், அவனும் தான்.

சூரியன் சென்னை வானில் பயணத்தைத்தொடங்க எத்தனிக்க, அவர்கள் பயணம் முடிந்தது. லேசான வெளிச்சம் ஜன்னலைத்தாண்ட, தன்னைக்கண்டு நாணியவள், அவனையே ஆடையாக்கி, உறங்கினாள்.

பவித்ரன் கொண்டு வந்த பால் தயிரானது. கேட்பாரற்று டேபிளில் கிடந்தது.

உச்சி வெயிலிலும் உறங்கும் ரஞ்சனியின் போன் உறங்கவில்லை போலும், அது ஒலித்து, தன் இருப்பிடத்தை தெரிவித்தது.

பவித்ரன் போன் ஒலித்ததில் உறக்கம் கலைந்தவன், தன்னை கட்டிக்கொண்டு கிடக்கும் ரஞ்சனியைப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டு, அவளது நெற்றியில் அழுத்த முத்தமிட்டவன். போனை நோக்கிச் சென்றான்.

இப்போது ரஞ்சனியின் தந்தை அழைத்திருந்தார். மணி மதியம் 1 என்றது முன் திரை, எடுத்து போசவா வேண்டாமா என தயங்கி நின்றான் பவித்ரன்.

திருப்ப மறுமுறை அழைக்கப்படவும், வேறுவழியின்றி, ரஞ்சனியின் பெற்றோரை பதட்டப்படுத்த மனமில்லாமல் போனை எடுத்தான்.

அவன் ஹலோ எனவும், ஒரு சில வினாடிகள் தயங்கி ஹலோ என்றார் ராஜன்.

பவித்ரன் ரஞ்சனி என தயங்கிய ராஜன், இரவு உங்க வீட்டிலா இருந்தா? என கேட்டு முடித்தார்.

அங்கிள்.. என்ற அவனது தயக்கமே அவருக்கு அனைத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டது.

நான் நந்தினி கிட்ட பேசுனேன் என்றார், அவனது தடுமாற்றம் உணர்ந்து,

ஹெவி டிராவிக் அங்கிள், லேட் நைட் ஆனதால, நந்தினி வீட்ல டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு, இங்கயே இருக்க வேண்டியதா போச்சு என்று , ஒருவழியாக சொல்லிமுடித்தான்.

ரஞ்சனி எங்கே என்றவரிடம், வெளில தோட்டத்த சுத்தி பாக்குறா, கூப்பிடவா என்றான், வாயில் வந்த பொய்யில்.

மதியம் மணி ஒன்றுக்கு தோட்டத்தை சுற்றிப்பார்க்கிறாளா? என நினைத்தவர் மேலும் விசயத்தை தோண்ட மனமில்லாது, சரி லதா வெயிட் பண்றா, சீக்கிரம் வாங்க, பட் லேட்டானதுக்கு இதவிட பெட்டர் பொய்யா யோசிச்சு வச்சுக்கோங்க, அவ தோண்டி தோண்டி கேள்வி கேப்பா, நாட் லைக்மீ என்று கடைசியில் கேலியில் முடித்தார்.

ரஞ்சனியை நாடிச்சென்றான் பவித்ரன். முதலில் அவளைக் கிளப்பி வீட்டில் விட வேண்டும் என்று நினைத்தவாறே அறையைத் திறந்தான்.

வெளிச்சம் அவள் பாதத்தில் விழ கால்களை போர்வைக்குள் இழுத்து தூங்கிக்கொண்டிருப்பவளை எழுப்ப அவனுக்கு மனம் வரவில்லை.

போர்வையுடன் அவளை இறுக்க அணைத்தவனை தூக்கத்திலே உணர்ந்தவள், பவி லவ் யூ, என்றாள் உளரலாக, தனக்குள் சிரிதுதுக்கொண்டவன், இப்படியே போனால் வேலைக்காகாது என்பதை உணர்ந்தவன், அவளை அலேக்காக தூக்கிச் சென்று நீர் நிரம்பிய பாத் டப்பில் போட்டான்.

அவள் தூள்ளிக்குதித்துக்கொண்டு எழுந்தாள். விழுந்த அதிர்ச்சியில் இருந்தவளிடம், இன்னும் பத்து நிமிசத்துல உங்கப்பா வர சென்னாங்க என்றவன், கதவை மூடிவிட்டு சென்றான்.

மடமடவென இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு கிளம்பினர்.
ரஞ்சனி வீட்டிற்கு வந்ததும் அவளறைக்கு ஓடிவிட்டாள். முடிவு லதாவிடம் மாட்டியது பவித்ரன்.

அவனுக்கு ஜூஸ் கொடுத்துவிட்டு, என்ன மாப்ள நான் எத்தன முறை கூப்பிடுறது. ஏன் இரண்டு பேரும் போனே எடுக்கல என்றார்.

அது ஆண்ட்டி போன் ஹால்லயே மறந்துட்டேன், அதனால கேக்கல என்றான். ஆமா இந்த ரஞ்சனிக்கு என்னாச்சு, போனும் கையுமா சுத்துவா, அது அவ ஃப்ரண்ட ரொம்ப நாள் கழிச்சு பாத்திருப்பா, அதுதா போன மறந்துட்டா போல என்றார்.

எந்த ப்ரண்டு?

அதான் நேத்து ரஞ்சனிய கொண்டு விட்டீங்களே.. நந்தினி.. என்றார் லதா.

லதா பவித்ரன் பேச்சை கேட்டவண்ணம் அருகே அமர்ந்திருந்த ராஜனை, பவித்ரன் ஒரு பார்வை பார்க்க, அவரோ வாயில் விரல் வைத்து, ச்சூ என்றார் ஜாடையில்,

ஓ அவங்களா என்றவன், வேறேதும் பேசவில்லை, சமாளித்து வீடு வந்து சேர்ந்தான்.

அவனது அறைக்குள் நுழைந்தவன் கட்டில் இருக்கும் நிலை கண்டு தனக்குள் சிரித்த வண்ணம், அதை சரி செய்தான். மனமும் உடலும் மிதப்பது போல் உணர்ந்தான்.

அறையின் இருவரும் மாறி மாறி இடித்துக்கொண்டு அவசரமாக கிளம்பியதில் அனைத்தும் கலைந்து கிடந்தது. ஒவ்வொன்றாக சரி செய்தவன், டிராவில் பொருட்களை திணிக்க, அவனது டைரி கண்ணில் பட்டது. அதை நடுங்கும் கைகளில் திறந்தவனை பார்த்து சிரித்தான் ஆனந்தன்.

பவித்ரனின் இதயம் நின்று துடித்தது, இதுவரை ரஞ்சனியின் கைவரிசையில் கலைந்து கிடந்த பொருட்களை ரசித்த வண்ணம் சரி செய்து கொண்டிருந்தவனுக்கு, இப்போது அது அபஸ்சுரமாக தெரிந்தது.

இவ்வளவு நேரம் என்பதைவிட, கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் அருகில் அவள் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் ஆனந்தன் ஞாபகம் வரவே இல்லை. பவித்ரன் தன்னைக்கூட மறந்து அவளைத்தான் நினைத்திருந்தான். இப்படி அவளருகில் அனைத்தையும் மறக்கும் பவித்ரனை இந்த பவித்ரன் முற்றிலும் வெறுத்தான்.

ரஞ்சனி அருகில் இருந்தும், அவளுக்கெதிராய் செயல்பட முடியாமல், அவளுடன் ஒட்டிக்கிடந்த, உருகிய தருணத்தை நினைத்தவன் மனம் மூங்கில் காட்டின் நெருப்புபோல் சட்டென மூண்டது, நிமிடத்தில் உள்ளத்தை தணலாக்கிச்சென்றது.

பவித்ரணுக்கு இப்போது ரஞ்சனி மீதுள்ள கோபத்தைவிட, நிலை தவறிய தன்மேல்தான் அதிக கோபம்.

டிரசிங் டேபிளில் அவனது பின்பம் தெரிய அதை உறுத்து விழித்தவன், அவன் பின்பத்தையே பார்க்க வெட்கினான்.

அறையின் ஒவ்வொரு இடத்திலும் நேற்று அங்கே நின்ற ரஞ்சனியே தோன்ற மூச்சுக்கு திணறியவன், அறையை திறந்துகொண்டு வெளியே வர, அங்கே பால் டம்ளர் கண்ணில் விழ, கோபத்தையெல்லாம் திரட்டியவன். அதை தரையில் ஓங்கி அறைந்தான்.

சிந்திய பாலை வெறித்தவன், இங்கே இருந்தால் பித்தம் பிடித்துவிடும் என நினைத்தவனாய், பொருட்களைமடமடவென எடுத்து பெட்டியில் அடுக்கியவன், கோயம்புத்தூர் பயணப்பட்டான்.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாளை கதையுடன் உங்களை சந்திக்கிறேன். அதற்க்கு முன் ஒரு கேள்வி, நீங்கள் பவி, ரஞ்சனி திருமணத்தை எதிர்பார்க்கிறவரா, நாளை நிச்சயம் உங்களுக்கு சுவாரசியம் கூடும், காத்திருந்தமைக்கு


நன்றி
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிமூன்றாம் பாகம்

கார் ஹாரன் கேட்டதும் சத்யதேவி, மகனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தார். பவித்ரனோ வேகமாக வந்தவன் அன்னையை கவனிக்காமலே மாடிக்கு சென்றுவிட்டான்.

பவித்ரனின் முகம் சரியில்லை என சத்யதேவிக்கு பட, அவனிடம் கேட்கலாம் என நினைத்தவர், அந்த எண்ணத்தை கைவிட்டார், கோபமாக இருக்கும் போது பவித்ரனிடம் பேசினால் எந்த கேள்விக்கும் லீவ் மீ என்ற பதில் தான் கிடைக்கும் என ஒரு அன்னையாக மகனைப்பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார் அவர்.

போனை எடுத்தவர் ரஞ்சனிக்கு அழைத்தார். போன் அடிக்கவும் ரஞ்சனிக்கு இன்ப கனவு கலைந்தது. அதை எடுத்தவள் சத்யதேவியிடம் குசலம் விசாரித்துவிட்டு, என்ன ஆண்ட்டி என்றாள்.

பவித்ரன் வந்துட்டான் மா என கூறியவர் அவளிடம் இருந்து என்ன பதில் வருகிறதென சில வினாடி இடைவெளி விட்டார்.

ரஞ்சனி இரண்டு வினாடி ஏன் சொல்லாமல் சென்றுவிட்டார் என யோசித்தவள், அதன்பின் சத்யதேவியிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல், ம் ஆண்ட்டி இப்பத்தான் பேசி வந்து சேந்துட்டேன் சொன்னாங்க, என பொய் கூறி முடித்தாள்.

அவளது தயக்கம் சத்யதேவிக்கு அனைத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டது. ஏதோ சரியில்லை என நன்றாகவே புரிந்தது. ரஞ்சனி எதையும் காட்டிக்கொள்ளாமல் சகஜமாக பேசினாலும், ஒரு அன்னையாக அவர் நல்லதை யோசிக்க, பவித்ரன் எப்படிமா நல்லவனா? கெட்டவனா? என விளையாட்டாக கேட்டார், அப்படியாவது, அவளின் மனதை புரிந்து, ஏதேனும் பிணக்கு இருந்தால் தீர்ப்பதற்காக,

ஆனால் ரஞ்சனியோ ம், நல்லவங்க தான் ஆண்ட்டி என சொல்லிவிட்டு, சரி ஆண்ட்டி அம்மாட்ட பேசுங்க என லதாவிடம் போனை கொடுத்துவிட்டாள்.

லதாவிடம் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்தார்சத்யாதேவி. ரஞ்சனியில் வார்க்கள் பவித்ரனுக்கு சான்றிதல் அளித்தாலும், குரலின் சிறிய ஏமாற்றம் சத்யாதேவிக்கு காட்டிக்கொடுத்தது. அவர்களுக்குள் என்ன என்பது தெரியாமல் எப்படி தீர்ப்பது என குழம்பினார்.

பவித்ரனாவது, பிரச்சனை ஏதேனும் என்றால், குரலிலாவது, சொய்கையிலாவது காட்டிக்கொடுத்துவிடுவான், இவளோ அதையும் காட்டாமல், சரியான கள்ளி, கடவுள் விட்ட வழி என அதன் பின் அவர் அந்த விஷயத்தை தோண்டவில்லை. அப்படி பவித்ரனை கண்காணித்திருந்தால், பல பலிகளை தடுத்திருக்கலாம்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் ஷவரில் நின்றிருந்தான். தண்ணீரின் ஸ்பரிசமும் ரஞ்சனியையே ஞாபகப்படுத்தியது. அவனது உள்ளும் புறமும் என்ன நினைக்கிறது என்பதை தெளிவாக அறியமுடியாத நிலையில் தவித்தான். ஒருபுறம் அவள் வேண்டும் என்று சொல்லும் நெஞ்சம், மறுபுறம் அவளை பழிவாங்கத் துடிக்கும் மனது, அவளது அருகாமையில் அனைத்தையும் மறக்கும் மனது, இப்படி இருக்க இப்போது அவளை நெருங்காமல் பழி வாங்குவது சாத்தியமா? என்று இப்போது கேள்வி கேட்கும் அதே மனது, இவற்றிற்கு நடுவே அலைபாய்ந்தான் பவித்ரன்.

கீழே பவித்ரன் இறங்கும்போது சத்ய தேவி ஆவலாக அவன் புறம் பார்த்தார். அவனோ, இரவு ஆபிசில் வேலை இருப்பதாகக்கூறி அலுவலகம் சென்றுவிட்டான். அலுவலகத்தில் ஒருவார வேலைகள் அவனுக்கு காத்திருந்தது.

யாருமற்ற அலுவலகத்தில் தனியாய் வேலைசெய்ய ஆரம்பித்தான். முதலில் மனதை ஒருமுகப்படுத்தத்தான் வேலைசெய்ய ஆரம்பித்தான் ஆனால் வேலை அவனை இழுத்துக்கொண்டது. காலையில் ஒரு ஒரு நபராக அனைவரும் வரத்தொடங்கினர்.

சத்யாதேவி கார் வருவதை பக்கவாட்டு ஜன்னலில் கண்டவன், வீட்டிற்கு கிளம்பிவிட்டான். வெளியேறும் பவித்ரனை எதிர் கொண்ட சத்யதேவி, பவி என் அறைக்கு வா என்றார்.

அவனோ, மாம் ஐம் சோ டையட்டு, நாளைக்கு போசிக்கலாம், எதுவானாலும், என்றவன், அவரது பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டான்.

சத்யாதேவிக்கு மகன் தன்னிடம் பேசுவதை தவிர்க ,தவிர்க மனதில் சிறு சஞ்சலம் பரவியது. திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ரஞ்சனி, பவித்ரனின் இந்த அமைதி, அவருக்கு புயலின் முன் அமைதியாக பட்டது.

வீடு வந்து சேர்ந்ததும் அவனை பார்த்து சிரித்தது அவனது பெட்டி, அதை கட்டில் அடியில் தள்ளியவன், படுக்கையில் விழுந்தான்.

அவனது போனுக்கு முயன்று தோற்றவள், அங்கே பெரும் குழப்பத்தில் இருந்தாள்.

எதற்காக தன்னிடம் சொல்லாமல் சென்றார் என்று மனதில் எழுந்த எண்ணத்திற்கு, அவளே சமாதானப்படுத்திக்கொண்டாள். வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும், எல்லா நேரமும் அனைவரும் நமக்காக யோசிக்க மாட்டார்கள், அவரவருக்கு வேலைஇருக்கும் என்று எண்ணினாள்.

ஆனால் அவளுக்கு தெரியவில்லை சாதாரண வாழ்க்கை தனக்கு அமையப்போவதில்லை என்றும், அமைந்த வாழ்க்கையை தாக்குபிடிக்க முடியாமல் கண்காணாத தோசம் ஓடி ஒழியப்போகிறோம் என்பதும், தெரிந்திருந்தால் பவித்ரனுக்கு இடம் கொடுத்திருக்க மாட்டாள்.

திருமணத்திற்காக, கடையின் வேலைகளில் பிசியானால், உணவை மறந்து கடையே கதியாக இருந்தாள்.

ரஞ்சனி எப்போதும் வேலையில் சரியாக நடந்து கொள்வாள். அதேபோல் வீட்டுக்கும் சரியான சமயத்துக்கு சென்றுவிடுவாள்.

இப்போது, மூன்று வாரங்களாக, மகள் கடையே கதியென்று இருக்கவும், மகளின் உடல்நலம் குறித்து தாயாக அச்சப்பட்டார். கல்யாணம் நடைபெற இருக்கும் இந்த சமயத்தில், அவளின் லேசான மெலிவு , ராஜா மேடம் சாப்பிடாமல் வேலைபார்க்கிறார்கள் என்று சொன்னது, இது தவிர மகளிடம் அதட்டிக்கேட்டும் எப்போதும் போல் லதாவின் பேச்சை காதில் வாங்காமல் ரஞ்சனி சென்றது அனைத்தும், சேர்த்து சேர அவர் ராமசாமியின் உதவியை நாடினார்.

ரஞ்சனி அலுவலகத்திலே இருப்பதால், ராமசாமி சொன்னால் அவள் கண்டிப்பாக கேட்கக்கூடும் என்ற உறுதியில், ராமசாமிக்கு அழைத்த லதா, அவளை மூன்று வேலையும் உண்ண வைப்பது உங்கள் பெறுப்பு என்றார்.

ராமசாமிக்கு பகீரென்றது, நானா சாப்பிடச்சொல்வது, இவர் அன்னையாக அதட்டாமல் என்னை மாட்டிவிடுகிறாறே என நினைத்தார். என்னால் முடியாது என மறுக்கும் முன், ரஞ்சனியின் நலனில் அக்கறை இருந்தால் இதைச் செய்யுங்கள் என மடக்கிய லதா, போனை வைத்துவிட்டார்.

ராமசாமி பயங்து கொண்டே ரஞ்சனியின் அறைக்கு சென்றார்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் அலுவலகத்தில் தனது போனை வெறித்தவண்ணம் இருந்தான். ரஞ்சனியிடமிருந்து வந்த ஒரு வாரத்தில் அடிக்கடி அவளது பெயரை சொல்லிக்கொண்டிருந்த போன், இந்த இரண்டு வாரங்களாக, காலையும் இரவும் அவள் பவித்ரனுக்கு அழைக்கும்போது மட்டும் சொல்கிறது, என நினைத்தவன், அவளுக்கு தனது ஞாபகங்கள் குறைவதாக நினைத்தவன் மனது வலித்தது.

ரஞ்சனிக்கு, அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக, சாப்பிடக்கூட முடியவில்லை. அப்படி இருந்தும், அவள் இடையில் அழைத்த அழைப்புகளை எடுத்தானில்லை. இதுவரை ஒரு கால் கூட எடுத்து பேசினானில்லை, அவனும் அவளுக்கு அழைத்தானில்லை, வருத்தம் மட்டும் படுகிறான்.

அப்போது மது மே ஐ கம் இன் எனவும், ம்.. ரஞ்சூ கம் என்றான் மனதிலுள்ள இருந்த ரஞ்சனியின் ஞாபகத்தால்,

பவித்ரனுக்கு அது தெரியவில்லை, ஆனால் மதுவிற்கு யார் அந்த ரஞ்சூ...ஊ என மனதில் குமுறினாள்.

பவித்ரன் ரஞ்சனியிடம் பேசும் ஞாபகத்தில், சில முறை பேபி என மதுவை அழைத்துவிடவும், தன்னைத்தான் கூப்பிடுகிறார் என்ற நினைவில், ரஞ்சூ என்ற பெயரையே மறந்து, பவித்ரனிடம் எப்படி காதலை சொல்வதோ என ஒத்திகை பார்க்கும் அளவிற்கு சென்றுவிட்டாள்.
 
Top