All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிஶ்ரீயின் ‘வெண்ணிலவு துணையிருக்க...’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri மேம், கேட்டதும் கதைக்கு திரி அமைத்து கொடுத்ததற்கு மிக மிக நன்றி.
ஹாய் நட்பூஸ், வெண்ணிலவு துணையிருக்க கதையை இந்த புதிய திரியில் படித்து உங்களது கருத்துக்களையும் என்னுடைய குறை நிறைகளையும் மறக்காமல் எழுதுங்கள்.
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg

எபி-1

விடியல் என்பது அனைவருக்கும் ஒரு வரம்… ஒவ்வொரு விடியலும் நமக்கான பரிசினை கதிரவனின் கரங்கள் வழி கொண்டு வரும் அத்தகைய விடியலை என்றும் போல் இன்றும் வணங்கிய சரஸ்வதி ’கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வ’…என்ற சுப்ரபாதத்தை பாடிக்கொண்டே தன் செல்ல மகளுக்கு காபி கலந்து கொண்டிருந்தார்.

ஆறு மணிக்கு வைத்த அலாரம் அலரிக்கொண்டே இருந்தது… கண் விழிக்காமலே அலாரத்தை அனைப்பதற்காக கைகளை நீட்டிய நிலாவின் கையில் சூடான காபி டம்ளரை சரஸ்வதி வைத்தார். “ஆ..அம்மா!” என்று அலரியவள் அன்னையை திட்டுவதற்காக வாயைத் திறப்பதற்குள்

“ஆ-அம்மா இல்லை நிலா, அ-அம்மா என்று நிலாவின் தலையில் மெதுவாக குட்டு வைத்தவர்… என்ன பொண்ணுமா நீ? தாய்மொழியும் சரியா தெரியலை, தாயின் மொழியும் சரியா புரியலை…” என்று தான் சமயோஜிதமாக கூறிய பன்ஞ் டயலாக்கை நினைத்து பெருமையாக எண்ணிக் கொண்டிருந்தவரின் முன் எழுந்து நின்ற நிலா தனது இரு கைகளையும் கூப்பி “அம்மா, தாயே போதும்!” என்று கும்பிட்டுவிட்டு அங்கிருந்து ஓடி அறையின் மூலையில் இருந்த குளியலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

’இவளை இப்படித்தான் வழிக்கு கொண்டு வரனும் போல’ என்று தனக்குள் சிரித்தவாரே சமயலறைக்குச் சென்று விட்டார்.
சரஸ்வதி, அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தவர், மகள் படித்து வேலையில் சேர்ந்ததும் வேலைக்கு வீஆர்எஸ் கொடுத்துவிட்டு மகளுக்காக வீட்டிலேயே தங்கி விட்டார். சரஸ்வதிக்கு மகள் வெண்ணிலா தான் அனைத்தும்.. நிலாவுக்கும் தாய்தான் உலகம். சரஸ்வதி பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் அவர்கள் குடியிருந்த பகுதியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மாலையில் டியூஷன் எடுப்பார். தாய் பேச்சை மீறாதவள் மகள் நிலா ஆனால் தாய் கூறும் அனைத்திற்கும் தலையாட்டாமல், விளக்கம் கேட்டுவிட்டு அது சரியென்று அவளுக்கு தோன்றினால் மட்டுமே அதனைச் செய்வாள்.

வெண்ணிலா, பெயருக்கு ஏற்றார் போல் ஆகாய நிலவின் அழகைக்கொண்டு பிறந்தவள். வட்ட முகமும், இடையைத் தாண்டி வளர்ந்திருக்கும் கூந்தலும், மெலிதான உடலும் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் காந்தக் கண்ணும், மூக்கில் மின்னும் வைரக்கல் மூக்குத்தியும் என்று வருணித்துக் கொண்டே இருக்கலாம். எத்துனை முறை பார்த்தாலும் தெகிட்டாத நிலவைப் போன்றவள்.

எபி-2

’நிலா கொஞ்சம் இந்த இட்லியை சாப்பிட்டு போடா, வெறும் வயிறோடு எதுக்குப் போற என்று அவள் பின்னாலே தட்டும் கையுமாக நடந்து கொண்டு இருந்தார் சரஸ்வதி.

அவரின் நச்சரிப்பு தாங்காமல், ஒரு வாய் இட்லியை எடுத்து வாயில் வைத்து விட்டு, இப்போ என் வயிறு காலியில்லை, இப்போ ஓகே வா உங்களுக்கு என்று அவரை நோக்கி கண் சிமிட்டினாள்.

அதில் கடுப்பான சரஸ்வதி அவளை முறைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டு நிலைமையை சரி செய்ய எண்ணியவள் அன்னையின் அருகில் வந்து அவர் கையிலுள்ள தட்டை வாங்கி அங்குள்ள மேஜையில் வைத்துவிட்டு அவரிடம் திரும்பி ‘சரஸு’ இப்போ நீ ஏன் இப்படி கோவிச்சுக்கிற? நான் என்ன சின்ன குழந்தையா? எனக்கு பசிச்சா நானே கேட்டு வாங்கி சாப்பிடப்போறேன். சாப்பிடாட்டி போ கழுதைன்னு சொல்லிட்டு போகாமா, இப்படி ஏன் என் பின்னாடி நாய் குட்டி மாதிரி வர மம்மி என்று அவரிடமே கேட்டாள். ’அப்படி இருக்க முடியிலயே நிலா’ ஆனா நீ கிடைச்ச சான்ஸில் ‘நாயின்னு’ சொல்லிட்டயே என்று போலியாக வருத்தப்பட்டார்.

‘ஹி ஹி ஹி நீ ரொம்ப கிளவர் மம்மி’ என்று அவர் கண்ணத்தில் முத்தம் வைத்துவிட்டு சற்று நிதானமாக ’மம்மி, இன்றொடு வெளைக்குச் சேர்ந்து ஆறு மாதம் ஆகிறது, கேம்பஸ் இண்டெர்வுயூவில் வேலை கிடைத்திருந்தாலும் இன்னைக்குத்தான் முடிவு பண்ணுவாங்க நான் இந்த வேலைக்கு பொருத்தமானவளா கடந்த ஆறு மாசம் வேலை செய்திருக்கிறேனா இல்லையானு, வெளியில் சிரிச்சாலும் உள்ளே ஒரே பயம், எனக்கு சத்தியமா பசிக்கவே இல்லை’ என்று அவரை கட்டி அணைத்துக்கொண்டே அவள் மன அலைப்புறுதலை தாயிடம் கொட்டித் தீர்த்தாள்.

சரஸு அவள் தலையை அரவனைப்பாய் தடவிக் கொண்டே ‘நிலா உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்’, நான் ஒன்னு சொன்னா செய்வியா? என்று அவளை பாவமாக பார்த்தார்.

தாயை போலியாக முறைத்தவள், நீ என்ன சொல்ல போறேன் நான் சொல்லவா மம்மி? ’நிலா’மா போகிற வழியில்தான் பிள்ளையார் கோவில் இருக்கு, அங்க போயிட்டு ஆபிஸ் போடா என்று அவரைப் போலவே சொல்லி முடித்தாள்.
அவளின் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்த சரஸ்வதி அவளின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்து ஒன்றும் பேசாமல் சமலறைக்குச் சென்று அவளுடைய லன்ஞ் பேக்-ஐ எடுத்துக் கொண்டு வந்து வண்டியின் மீது அமர்ந்து அவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் கையில் கொடுத்தார்.

அதை புன்னகையுடன் வாங்கியவள் ‘சரஸு, நீ ரொம்ப மாறிட்ட. நான் ஏதும் சொல்லாமலேயே புரிஞ்சுகிட்டயே, ஐ லவ் யூ’ என்று அவருக்கு பறக்கும் முத்தத்தைக் கொடுத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டு சரஸ்வதியை நோக்கி தலை அசைத்து விட்டு வண்டியை ஓட்டிச் சென்றாள்.

மகளை வழியனுப்பிய சரஸ்வதிக்கும் தாயிடம் விடைபெற்று வந்த நிலாவிற்கும் ஒரே கவலைதான். அது அவர்களின் எதிர்காலம், நினைக்கையிலேயே இருவருக்கும் கண்ணில் நீர் நிறைந்துவிடும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று அவரின் தினசரி வேலைகளை கவனிக்கச் சென்று விட்டார் சரஸ்வதி.

இன்றைய நாளை நினைத்து பதற்றத்துடன் வண்டியில் சென்று கொண்டிருந்த நிலா அவள் தாய் கூறிய அதே பிள்ளையார் கோவில் வாசலை கடக்கும் போது சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு பென்ஸ் காரின் கதவு இவள் புறமாக திறக்கப்பட்டது. அதில் மோதுவதை தவிர்ப்பதற்காக நிலா இடது புறமாக வண்டியைத் திருப்பினாள். அவளின் நேரம் அவளது ஸ்கூட்டி கட்டுப்பாட்டை இழந்து கோவிலின் வாயிலில் தேங்காய் உடைக்க வைத்திருந்த கல்லின் மீது மோதி சரிந்தது. நல்லவேளை பெரிதாக அவளுக்கு அடி படவில்லை, கை முட்டியில் சிறிது உராய்வு அவளுடைய அடர் பச்சை நிற அனார்கலியில் மண் ங்காய் ஒட்டியிருந்தது.

விழுந்த அதே வேகத்தில் எழுந்து நின்றவள் தன்னை தரையில் வீழ்த்தியவரை திட்டுவதற்காக திரும்பி பார்க்கையில், ஓட்டமும் நடையுமாக அங்கு வந்த ஐம்பது வயது மதிப்புள்ள பெண் தவறு செய்த சிறு குழந்தை செய்வதறியாது நிற்பதைப் போன்று, கையைப் பிசைந்து கொண்டு நின்றுகொண்டிருந்தார்.

அவரைக் கண்டவளுக்கு திட்டுவதற்கு வாய் வரவில்லை. அவர் முகத்தில் தெரிந்த கலவரத்தைக் கண்டவள் மெலிதாக சிரித்தாள். அவளின் செயலில் நிம்மதி அடைந்த அந்த பெண்மணி ‘என்னை மன்னிச்சிரும்மா நான் தெரியாம…’ என்று முடிக்கும் முன்னர் அங்கு வந்த வயதான ஒருவர் ‘மீனா, என்னாச்சு? ஏன் பதட்டமா நிற்கிற?’ என்று ஆராயும் பார்வை பார்த்தார். அவரின் முகத்தில் உரிமை கலந்த கடுமை தெரிந்தது.


கலைந்த கலவரம் மீண்டும் அப்பெண்மணியின் முகத்தில் திரும்பியது ‘அது வந்துங்க..’ என்று அவர் தொடங்கும் முன்னர் அவரை முந்திக் கொண்ட நிலா
‘ஒண்ணுமில்லை சார், வண்டி கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்து கல்லில் மோதிக்கிட்டேன் அதான் மேடம் சத்தம் கேட்டு உதவ வந்தாங்க’ என்று முடித்தாள்.

அந்த பெண்மணியின் முகத்தில் நிம்மதி திரும்பியது. நிலாவின் பதிலைக் கேட்டதும் அந்த வயதானவர் தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தார், அதன் அர்த்தம் அறிந்த அப்பெண்மணி ‘ஒரு ஐந்து நிமிடம் வந்திடுறேங்க’ நீங்க முன்னாடி நடங்க என்று கூறிவிட்டு சிதறிக்கிடந்த நிலாவின் கைப்பையை எடுத்துக் கொடுத்தார்.
கூடே இருந்த அந்த வயதானவர் ஏதும் பேச இயலாமல் வண்டியை நோக்கி நடந்தார். வேகமாக நிலாவின் அருகில் வந்த அப்பெண்மணி ‘ரொம்ப நன்றி மா’ என்று சொல்லிவிட்டு கையெடுத்து கும்பிட்டார்.

‘நீ எனக்கு பெரிய உதவியை செய்திருக்க, நீ நல்லா இருக்கனும், வரேன் மா’ என்று கண்ணில் கண்ணீருடன் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

‘புருஷன் ரொம்ப டெரர் போல, அதான் இந்த பயம் இவங்களுக்கு’ என்று மனதில் நினைத்துக்கொண்டவள் தனது வாழ்க்கை இப்படி ஒரு அடிமை வாழ்வாக இருக்கக் கூடாது கடவுளே என்று வேண்டிக்கொண்டாள்.

காரை நோக்கி நடந்துகொண்டிருந்த மீனா என்கிற மீனாட்சி, காலில் ஏதோ தட்டுப்படவும் அதைக்குனிந்து எடுத்துப் பார்த்தார்..பார்பதற்கு ஏதோ பர்ஸ் போல இருந்தது, அதனை எடுத்தவர் உடனே சுற்றும் முற்றும் பார்த்தார் அருகில் யாரும் இல்லை யாருடையது என்பதும் தெரியவில்லை, யாரிடம் குடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது காரின் ஹாரன் சத்தம் கேட்டது.

ஹாரன் சத்தம் கேட்டு வேகமாக நடந்தவர் காரின் உள்ளே ஏறிக்கொண்டார். கையில் இருந்த பர்ஸை புடவை முந்தானையில் மறைத்துக் கொண்டார்.

(தொடரும்)


எபி-3

ஹாய் ஷீலா! குட் மார்னிங்! என்ன சந்தோஷமா இருக்க? என்ற நிலா தனது காயத்தை ஆராய ஆரம்பித்தாள்.
குட் மார்னிங் ஸ்வீட்டி! என்னாச்சுடி கையில காயம்?
ஒன்னுமில்லை டி, வர வழியில் ஒரு சின்ன ஆக்ஸிடண்ட்? என்று மீண்டும் புன்னை நொக்கி ஊதினாள்

என்னடி சொல்ற? ஆக்ஸிடண்ட் அது இதுன்னு..என்னன்னு விவரமா சொல்லு..
அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம், எப்போ நம்ம கண்ஃபர்மேஷன் பத்தி பேசுவாங்க
என்னடி? நான் என்ன கேட்கிறேன் நீ என்ன பேசுற? நான் கேட்டதுக்கு பதிலைச் சொல் முதலில் என்று நிலாவைப் பார்த்து முறைத்தாள்.

விடமாட்டியே என்று சலித்துக் கொண்டவள், நடந்ததை முழுவதுமாக ஒப்பித்தாள்.
அதைக்கேட்ட ஷீலாவிற்கு கோபமாக வந்தது..’லூசாடி நீ, தவறான சைடுல கார் கதவை திறந்த அந்த லேடியை லெஃப்ட் ரைட் வாங்காமல், காப்பாத்தியிருக்க, காரில் வந்தால் பெரிய கொம்பா அவங்க?’ என்று பொரிந்தாள்.

“ஷீலு டார்லிங், ஒய் டென்ஷன்? அதான் எனக்கு ஒன்னும் ஆகவில்லையே என்ற நிலாவை வெட்டவா குத்தவா என்று பார்த்தாள்.

”இப்படி பார்க்காத ஷீலு எனக்கு வெட்கமா இருக்கு” என்று கூறிவிட்டு கணிணியை இயக்கி வேலையைத் தொடங்கினாள். ஒரு பெரு மூச்சுடன் ஷீலாவும் தன் பணியைத் தொடர்ந்தாள்.

சிறிது நேரம் கழித்து புதிதாகச் சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு வந்தது. அனைவரையும் பணியில் தொடர்வதற்கான உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. கடந்த ஆறு மாதமாக பணிபுரிந்த நேர்த்தியின் அடிப்படையில் வெவ்வேறு பதவி மற்றும் சம்பளம் நியமிக்கப்பட்டது.

நிலாவிற்கும் ஷீலாவிற்கும் தங்களது பழைய குழுவிலே தொடருமாறு அறிவிப்பு கிடைத்தது. நிலாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி, இனி வாழ்க்கை இனிதாக அமைந்துவிடும் என்ற நம்பிக்கை தோன்றியது. இந்தச் செய்தியைக் கேட்டதும் தன்னைவிட தன்னைப் பெற்றவள்தான் மிகவும் சந்தோஷப் படுவார் என்று நினைத்தவள் மதிய உணவு இடைவேளையில் சரஸ்வதிக்கு அழைத்து அந்த நற்செய்தியைக் கூறினாள்.

நிலா நினைத்தது போலவே சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சியடைந்தார், நிலா வேலையில் சேர்ந்த போது கூறிய அறிவுரைகளை மீண்டும் கொட்டிக் கவிழ்த்தார். “சரஸு, நீ ஒரு டீச்சர் அம்மான்னு அடிக்கடி நிரூபிக்கிற” என்று கிண்டலடித்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

புதியு புதிய பணிகள் என்று நாட்கள் இறக்கை கெட்டிக்கொண்டு பறந்தது. இதற்கிடையில் அவள் பணி புரியும் கம்பெனியின் இருபத்தைந்து ஆண்டு நிறைவு விழா அடுத்த மாதம் கொண்டாடப்படுவதாகவும் நிறைவு விழாவின் போது கம்பெனியில் ஏற்படுத்தியுள்ள சில முக்கியமான மாற்றங்கள் குறித்தும் அறிவிக்கப்படும் என்று நிலாவின் குழு தலைவர் அறிவித்தார். மேலும் சில சஸ்பென்ஸ்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

அனைத்து அறிவிப்பும் மறந்துவிட்டது, சஸ்பென்ஸ் என்று கூறியது மட்டும் அனைவரின் மனதையும் குடைந்தது. சிலருக்கு வேலையே ஓடவில்லை, அது என்னவாக இருக்கும் என்று தெரிந்தே ஆக வேண்டும் என்று சிலர் துப்பறியும் பணியில் ஈடுபட்டனர்.

நிலாவை எதுவும் பாதிக்கவில்லை ஆனால் ஷீலாவினால் முடியவில்லை நொடிக்கு ஒரு தரம் மின்விசிறியைப் பார்த்துக்கொண்டே பேனாவை எடுத்து தலையில் வலிக்காமல் தட்டுவதும், பின்பு வேலை செய்வதும் என்று மாலை வரை காத்திருந்தாள். வேலைகள் முடிந்ததும் நேரே குழு தலைவர் விக்கி என்கிற விக்னேஷிடம் சென்று ”சார், தலை வலிக்கிறது நாளை லீவு வேண்டும்” என்றாள்

“ஏன் ஷீலா, நல்லா தானே இருந்தீங்க திடீர்னு என்ன தலைவலி? ஒரு தலைவலி மாத்திரை எடுத்துக் கொண்டு கொஞ்சம் ரெஸ்டு எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கண் சிமிட்டு விட்டு தனது வேலையை தொடர்ந்தான்.

ஷீலா நகரவில்லை அதை உணர்ந்த விக்னேஷ் என்ன? என்பது போல் பார்த்தான்.

அவள் பதில் ஏதும் சொல்லவில்லை அவரையே பாவம் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

”நாளை சந்திப்போம், யூ மே கோ நவ்” என்று மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தார்.

“ம்க்கும்’ என்று செறுமிக்கொண்டு என் தலைவலி சரியாக ஒரே ஒரு வழிதான் சார், ஆனிவெர்ஸரிக்கு என்ன சஸ்பென்ஸ் என்று சொன்னால் தலைவலி ஓடிவிடும்” என்று சாட்டமாக விக்னேஷ் முன் அமர்ந்து கொண்டாள்.

“எனக்கு தெரியும் ஷீலா, உன் தலைவலி எதனால் என்று, ஆனால் பாரு எனக்கே தெரியாத போது அதை எப்படி நான் உனக்கு சொல்வேன்” என்று நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

“ஓ! சரி சார். உங்களுக்கே தெரியாத போது எப்படி நீங்க எனக்குச் சொல்வீங்க. எதுவாக இருந்தாலும் ஆனிவெர்ஸரி அன்று தெரிந்துவிடும் அப்போ சரி நான் கிளம்புறேன், சஸ்பென்ஸ் தெரிஞ்சு நான் என்ன செய்யப் போறேன் எப்படியும் என் அத்தை மகனுக்கு இன்று ஓகே சொல்லிவிட்டு அடுத்த மாதம் கல்யாணம் செய்து கொண்டு பறந்து செல்லப் போகிறேன்” என்று விமானம் தரையில் இருந்து பறப்பது போன்று செய்கை செய்தாள்.

அதனைக் கேட்டதும் நாற்காலியில் இருந்து பதறி எழுந்த விக்னேஷ் வேகமாக ஷீலாவின் முன் வந்து நின்று இரு கையையும் மார்பின் குருக்கே கட்டிக்கொண்டு அவளையே முறைத்தான். அதனை ஏதும் கண்டு கொள்ளாமல் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்புவதற்கு ஆயத்தமானாள்.

”ஏய் நில்லு, இப்போ என்ன சொன்ன?”

”ஏன் உங்களுக்கு காது கேட்காதா?”

“கேட்டது சரியானு கன்பார்ம் செய்யத்தான் கேட்கிறேன்”

“என் அத்தை” என்று அவள் தொடரும் முன்பே விக்கி பொரிந்துவிட்டான்.

“செவிடு பிஞ்சிரும், நான் பல முறை சொல்லியிருக்கேன், ஏதாவது ஒன்னுன்னா உடனே அத்தை பையனுக்கு கழுத்த நீட்டுவேன், மாமா பையனை கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லக்கூடாதுன்னு, இப்பிடியே சொல்லிட்டு இருந்தா ஒருநாள் அது தான் நடக்கும் சொல்லிட்டேன்”

“என்ன எனக்கே ரிவேர்ட்டா?”

“எதுவும் நம்ம கையில் இல்லடா அதுதான் நான் திரும்ப திரும்ப சொல்றேன், இது மாதிரியெல்லாம் பேசாதேனு”

“பின்னே சஸ்பென்ஸ் என்னன்னு சொல்ல மாட்டேன்னு அடம் பிடிச்சா”

“அடம் பிடிச்சா?”

“சரி, விடுங்க பாஸ், இப்ப சொல்லுங்க என்ன சஸ்பென்ஸ்?”

“உன் காரியத்தில் குறியாய் இரு, சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுடா எனக்கு சொன்னதைத் தான், உங்களுக்குச் சொன்னேன்”

“சரி, நம்பிட்டோம், நான் கிளம்புறேன்”

“ஓகே, கீழே வெயிட் பண்ணு நானும் வரேன்”

”சரி” என்று ஒரு நமட்டுச் சிரிப்போடு சென்றுவிட்டாள்.

ஷீலாவின் சுறுசுறுப்பான பேச்சும் தைரியமான போக்கும் விக்கியை ஷீலாவின் மீது காதல் கொள்ளச் செய்தது. அவள் இங்கு சேர்ந்து ஒரு மாதத்திலே தன் காதலை அவளிடம் சொல்லிவிட்டான்.

விக்கிக்கு முப்பது வயது ஆனால் ஷீலா இன்னும் கல்லூரி மாணவி என்னும் பருவத்தை தாண்டாதவள், விக்கி தன் காதலை சொன்னதும் ஷீலா கோபம் கொண்டாள். எல்லாரும் கூறுவது போல் வேலை செய்யும் இடத்தில் பொழுது போக்கிற்காக காதல் செய்வதைப் போன்று என்று நினைத்துக் கொண்டு அவள் பொரிந்து தள்ளினாள். ஆனால் அவளே அவனைத்தேடிச் சென்று ஒருநாள் தன் காதலைக் கூறினாள்.

ஷீலாவின் வீட்டில் படிப்பு முடிந்ததும் திருமணத்திற்கு வற்புறுத்தி வந்தனர். ஷீலாவை அவளது அத்தை மகனுக்கே திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்தன. சிறு வயதிலே சொல்லி வைத்திருந்தாலும் அவளுக்கு அந்தத் திருமணத்தில் ஒரு ஒட்டுதல் தோன்றவில்லை. இதற்கிடையில் தான் வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து அவள் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். இவ்வாறு நாட்களை நகர்ந்திக் கொண்டிருந்தவள் உடல்நிலை சரியில்லை என்று ஒரு நாள் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்துவிட்டாள். மறுநாள் இவள் சென்றதும் விக்கியின் கண்ணில் ஒரு மின்னல் தெரிந்தது, அவனது பார்வை பட்டதும் தன்னில் ஒரு வித மின்சாரம் பாய்வது போல் தோன்றியது ஷீலாவிற்கு. ஏனென்று புரியாமல் குழம்பினாள். ஆனாலும் அதை ஏதும் அவள் உணர முனையவில்லை.
விக்கி ஒரு குழு தலைவராக சொல்லித்தரும் விதம், அவனது பேச்சில் தெரிந்த பக்குவம் என்று மெது மெதுவாக அவனிடம் தன் மனதை பரி கொடுத்தாள்.

ஒரு நாள் விக்கி வரவில்லை, அவன் வரவிற்காக காத்திருந்த ஷீலாவிற்கு அன்றும் அதை அடுத்த இரண்டு நாட்களும் ஏமாற்றமே மிஞ்சியது. நான்காவது நாள் விசாரித்த பொழுது அவனுக்கு சிறிய விபத்து என்றும் மீண்டும் வேலைக்கு வர மேலும் ஏழு நாட்கள் ஆகும் என்று தெரிந்தது. இவளும் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலே இருந்துவிட்டாள், அவன் இல்லாத அலுவலகத்தில் இவளுக்கு வேலைக்குச் செல்ல மனம் வரவில்லை. இவ்வாறு பத்து நாட்கள் கடந்தது, பதினொன்றாவது நாள் வேலைக்கு வந்த விக்கியின் கம்பெனி மெயிலுக்கே “ஐ லவ் யூ” என்று மிகப் பெரிய எழுத்தில் ஷீலா மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள்.

இவளைப் பார்ப்பதற்காகவே ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியும், அதனை புறக்கணித்துவிட்டு பத்து நாட்களிலே வேலைக்கு திரும்பி விட்டான்.

காத்திருந்தவனுக்கு தெய்வம் காட்சி அளித்தது போல, ஷீலாவின் மின்னஞ்சலைக் கண்டவன் ‘யுவர் அப்ளிகேஷன் இஸ் அக்சப்டெட், இப்படிக்கு உன்னுடையவன்” என்று பதில் அனுப்பினான்.

அன்று முதல் அவர்கள் இரகசிய பார்வைகளையும், கடிதங்களையும் பகிர்ந்து கொண்டனர். ஷீலாவின் அத்தை மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட, திருமணப் பேச்சு சற்று தள்ளிப் போடப்பட்டது.

நிலா வேறு குழு என்பதினால் இவையேதும் அறியாது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துவிட்டாள்.
எல்லாரையும் போல தற்போது நிலாவும் சஸ்பென்ஸ் என்னவாக இருக்கும் என்று யோசனையுடன் வண்டி நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்தாள். அங்கு ஷீலா விக்கியுடன் நின்று பேசிக்கொண்டு இருப்பதையும் அவர்களின் அந்யோனத்தையும் கண்டவள் ஏதோ இருக்கிறது இவர்களுக்கிடையில் என்று நினைத்துக் கொண்டாள். ஏதேனும் இருப்பின் அவளாக சொல்வாள் என்று எண்ணிக்கொண்டாள்.

ஆனிவெர்ஸரிக்கு கலை நிகழ்ச்சிகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியவள். ஷீலாவும் விக்கியும் நிற்கும் இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கவும்.

வண்டி நிறுத்தியிருந்த பகுதியில் எவரோ புகை பிடித்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. புகை வந்த திசையை நோக்கி நடந்தவள் அங்கு புகை பிடித்துக் கொண்டிருப்பவன் முன் சென்று நின்றவள், புகையின் காரணமாக இருமத் தொடங்கினாள். சுவாசிக்கும் நமக்கே இப்படி இருக்கிறதே புகை பிடிப்பவனுக்கு ஏன் எதுவும் பாதிக்கவில்லை, எவ்வளவு ஸ்டைலாக நின்று புகை பிடிக்கிறான்.

புகை பிடித்துக் கொண்டிருந்தவனோ ஏதோ பதட்டத்துடன் தென்பட்டான். இவள் அவன் முன் நிற்பதையே உணராதவன் கை கடிகாரத்தைக் காண்பதும் புகையை இழுத்து விடுவதுமாக இருந்தான்.

மேலும் நிற்க முடியாமல் இருமியவள், பொறுக்காமல் “ஹலோ சார், இங்க புகை பிடிக்கக்கூடாது என்று எழுதியிருக்கிறது என்று அங்கு மாட்டியிருந்த ‘நோ ஸ்மோகிங்” பலகையைக் காட்டினாள்.

அதை நோக்கியவன் நீயெல்லாம் ஒரு ஆளா என்பது போல் பார்த்தான்.

அவனிடம் எந்த பதிலும் வராததால், அவன் கழுத்தில் ஐடி கார்டு தொங்குகிறதா என்று பார்வையால் தேடினாள். ஏதும் தட்டுப்படவில்லை, “உங்ககிட்டதான் பேசிக்கிட்டிருக்கேன்”
“ப்ளீஸ், கெட் லாஸ்ட் ஃப்ரம் ஹியர் ஃபார் காட் சேக் பிஃபோர் ஐ லூஸ் மை கண்ட்ரோல்” என்று கூறிவிட்டு புகைக்க ஆரம்பித்தான்.

“ஆர் யூ ஏன் எம்பிளாயி ஆஃப் ஜேகே க்ரூப்ஸ்?”

“ஹேய், திஸ் இஸ் யுவர் லிமிட்” என்றவன் அவளை எரித்து விடுவது போல் பார்த்தான்.

(தொடரும்)
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-4

படு ஸ்டைலாக காரின் மீது சாய்ந்து நின்றவனைக் கண்டவள், இவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து “செக்யூரிட்டி, செக்யூரிட்டி என்று பார்கிங் பகுதியின் வாயிலில் நின்று கொண்டிருந்தவரை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அது கீழ் தளத்தில் அமைகப்பட்டுள்ள கார் பார்க்கிங் என்பதினால் அவளது அழைப்பு எதிரொலித்தது. மும்முரமாக விக்கியுடன் பேசிக்கொண்டிருந்த ஷீலா, நிலாவின் குரலைக் கேட்டதும் குரல் வந்த திசையை நோக்கி நடந்தாள். விக்கியும் ஷீலாவையே பின் தொடர்ந்தான்.

நிலா வேகமாக வாயிலை நோக்கி நடப்பதைக் கண்ட ஷீலா “ஏய் நிலா, நிலா நில்லுடி, என்னாச்சு டி” என்று கத்திக்கொண்டே நிலாவை நோக்கி முன்னேறினாள்.

என்ன நடக்கிறது என்று புரியாமலே விக்கியும் அவளைப் பின் தொடர்ந்தான்.

ஷீலாவைக் கண்டதும் அவள் அருகில் வந்த நிலா “ஹாய் டி, ஹாய் சார்” என்று கோபத்தில் சிவந்திருந்த முகத்தை கஷ்டப்பட்டு இயல்பாக வைக்க முயற்சித்தாள்.

அவளை ஆராயும் பார்வை பார்த்த ஷீலா “எங்க வண்டியை எடுக்காம கிளம்பிட்ட? வண்டிக்கு ஏதும் பிரச்சினையா? ஏன் டென்ஷனா இருக்க?” என்று விசாரித்தாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது புகை பிடித்தவன் சாய்ந்து நின்றிருந்த கருநீல நிற கார் அவர்களை வேகமாகக் கடந்து சென்றது.

பேச்சை நிறுத்துவிட்டு அந்தக் காரை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் முகத்தின் முன் கை அசைத்த ஷீலா “என்னடி?” என்று விசாரித்தாள்.

“வாட்ஸ் ராங் நிலா?” என்று விக்கியும் தன் பங்கிற்கு விசாரித்தான்.

“ஒன்னுமில்லை சார், ஒரு ஆள் பார்கிங் ஏரியாவில் ஸ்மோக் பண்ணிகிட்டிருந்தான், இங்கெல்லாம் ஸ்மோக் பண்ணக்கூடாதுன்னு சொன்னேன், என்னமோ நான் தப்பு செய்தது போல் என்னிடமே எரிந்து விழுந்தான். அதான் செக்யூரிட்டியிடம் சொல்லலாம் என்று போயிட்டிருந்தேன். இதோ இப்போ சென்ற அந்தக் காரின் மீது தான் சாய்ந்து நின்று கொண்டிருந்தான், திமிர் பிடித்தவன்.”

”ஓகே, லீவ் இட், இன்னொரு முறை அவனை பார்த்தா என்கிட்ட சொல்லுங்க நான் பார்த்துக்கிறேன், சரி நான் கிளம்புறேன் யூ போத் கேரி ஆன்” என்று கூறிவிட்டு அவன் நகர முனைகையில் “சார்” என்று தயக்கத்துடன் நிலா விக்கியை அழைத்தாள்

“சொல்லுங்க”

“கம்பெனி ஆனிவர்ஸரிக்கு கலை நிகழ்ச்சிகள் ஏதும் இல்லையா?”

“இருக்கு நிலா, கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் ஆனிவெர்ஸரியா? ஏன் கேட்கறீங்க?”

“”எங்களுக்கு அது குறித்து ஏதும் தகவல் வரவில்லை, கல்லூரியில் சர்குலர் வரும், பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் பெயர் கொடுப்போம், அதுபோல இங்கயும் வரும் என்று எதிர் பார்த்தேன்”

“யூ ஆர் கிரேசி ஆண்ட் டிஃபரண்ட், எல்லாரும் சஸ்பென்ஸ் என்னவென்று என்னை கேட்டு குடையிராங்க என்று ஷீலாவை ஓரக்கண்ணால் பார்த்தான், நீங்க என்னவென்றால் கலை நிகழ்ச்சி குறித்து விசாரிக்கிறீங்க”

ஓரக்கண்ணால் பார்த்த விக்கியை முறைத்துக் கொண்டே “அவ ஏன் கேட்கிறானா, அந்த சர்குலர் வரும் பொழுதெல்லாம் பாட்டு போட்டிக்கு இந்தம்மா ஃபர்ஸ்ட்டா போய் பெயர் குடுப்பாங்க, இப்போ அதை எதிர்பார்த்து ஏமாந்து இருப்பாங்க, அதுதான் உங்ககிட்ட கேட்கிறா”

“தட்ஸ் கிரேட், ஐ லைக்டு யுவர் எந்தூஸியாஸம், ஆனால் நிலா நம்ம கம்பனியில் எல்லா வருஷமும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது ஒரு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, அவர்களே எல்லாவற்றையும் பார்த்துப்பாங்க. கலை நிகழ்ச்சி, அதை தொகுத்து வழங்குவது, அலங்காரம் இப்படி எல்லாவற்றையும் அந்த கம்பெனியே பார்த்துக்கும், நம்ம கம்பனி அவர்களுக்கு அதுக்கான தொகையை குடுத்திடுவாங்க”

“அப்போ நம்முடைய பங்களிப்பு”

“ஜஸ்ட், ஆனிவர்ஸரி அன்று வேலை ஏதும் செய்யாமல் ஜாலியா என்ஜாய் செய்வது”

“ஓ” என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்திவிட்டாள் நிலா.

“என்னாச்சு நிலா? வருஷம் ஃபுல்லா வேலை செய்றோம், அதற்கு ஈடா கம்பனி ஒரு நாள் நம்மை மகிழ்விக்கிறாங்க, எல்லா வருடமும் ஆனிவர்ஸரிக்கு இது தான் வழக்கம், இந்த வருஷம் இருபத்தைந்து ஆண்டு நிறைவு விழா என்பதால் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கொண்டாட்டம் இருக்கும்”

”ஓகே சார்”

“டைம் ஆச்சு நிலா, கிளம்புங்க, நாளைக்கு சந்திக்கலாம் என்று கூறிவிட்டு ஷீலாவிடம் லேசாக தலையை அசைத்துவிட்டு விக்கி சென்றுவிட்டான்.

ஏதோ யோசனையுடன் தனது வண்டியை எடுக்கச் சென்று கொண்டிருந்த நிலாவை தோல் தொட்டு நிறுத்திய ஷீலா “ரொம்ப யோசிக்காதடி” நானும் கிளம்புறேன், வாசலில் வெயிட் செய்றேன், நீயும் வண்டி எடுத்திட்டு வா” என்று கூறிவிட்டு தனது வண்டியை நோக்கிச் சென்றாள்.

கலை நிகழ்ச்சிகளை வேறு ஒரு கம்பெனி எடுத்து நடத்துவது நிலாவிற்கு சரியென்று தோன்றவில்லை. நாளை விக்கி சாரிடம் தான் நினைத்ததை எடுத்துக் கூற வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

ஒரு கம்பெனி தனது ஆண்டு விழாவை எப்படி வேறொரு கம்பனிக்கு கொடுக்கிறார்கள்? ஏன் எவரும் இதனைக் குறித்து யோசிக்கவில்லை இந்த முறையை எதிர்க்கவும் இல்லை என்று யோசித்து அன்று இரவு நீண்ட நேரம் நிலாவிற்கு உறக்கம் வரவில்லை, அவள் கண் சொருகும் நேரத்தில் வீட்டுக்கதவு தட்டும் சப்தம் கேட்டது, யார் இந்த நேரத்தில் என்று யோசித்தவாறு “அம்மா, அம்மா” என்று தாயை அழைத்தாள்.

பதில் ஏதும் வராததால், சரஸ்வதி நல்ல உறக்கத்தில் இருக்கக்கூடும் என்றெண்ணியவள் தானாகவே சென்று கதவைத் திறந்தாள். வாயிலில் நின்றிருந்த ஷீலாவைக் கண்டதும் ”என்னவோ ஏதோ என்று பதறியவள், என்னாச்சு ஷீலா? இந்த நேரத்தில் ஏன் தனியா வந்த? ஒரு போன் கால் செய்திருக்களாமே” என்று அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்தாள்.

நிலாவின் இழுப்பிற்கு உள்ளே வந்த ஷீலா மெதுவாக நிலாவின் தலையில் குட்டிவிட்டு “நிலாவை கட்டியணைத்து ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று கண்ணத்தில் முத்தமிட்டாள்.

ஷீலாவின் வாழ்த்து காதில் விழுந்தவுடன் தான், நிலாவிற்கு மூச்சே வந்தது. நடு இரவில் ஷீலா வீட்டு வாசலில் வந்து நின்றதும் ஏதோ பிரச்சினை என்று நினைத்து பதறியவள், அவள் வந்ததிற்கான காரணம் புரிந்ததும்தான் நிம்மதியடைந்தாள்.

“லூசு இதுக்கு ஏண்டி இந்த அர்த்த ராத்திரியில் வந்த? நான் பயந்தே போயிட்டேன் என்று ஷீலாவை செல்லமாக அடித்தாள்.

“சரி வா”

“எங்க?”

“வா சொல்றேன்” என்று சரஸ்வதியின் அறைக்கு இழுத்துச் சென்றாள்.

அன்னையின் அறைக்கதவைத் திறந்ததும் மின்னும் விளக்குகளும், பலூன்கள் என்று அறை முழுவதும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலா” என்று சரஸ்வதி மகளை கட்டிப் பிடித்துக் கொண்டார்.

“ஓ இதெல்லாம் உங்க திட்டமா?”

“இல்லை நிலா, திட்டம் ஷீலா சொன்னது நான் அவளுக்கு உதவி செய்தேன், அவ்வளவுதான்”

“நான் வேலை பற்றி நினைத்துக் கொண்டு பிறந்த நாளை மறந்திட்டேன் மா, இவள் வந்ததும் நான் பயந்திட்டேன்".

”சரி சரி வாங்க, கேக் வெட்டலாம் எனக்கு பசிக்குது”

“அதானே நீ ஏன் கஷ்டப்பட்டு இந்த திட்டத்தை போட்டன்னு எனக்குத் தெரியாதா?” என்று நிலா கண் சிமிட்டினாள்.

“ஹீ ஹீ ஹீ” என்று ஷீலா பல்லைக் காட்டினாள்.

“வாம்மா டைம் ஆகுது, நாளைக்கு வேலை இருக்குதானே, கேக் கட் பண்ணிட்டு சீக்கிரமா படுத்து தூங்க வேண்டாமா?” என்று அனைத்தையும் ரெடி செய்தார் சரஸ்வதி. கேக் கட் செய்து கொண்டாடியதும் வீட்டிற்கு புறப்படுவதற்காக கிளம்பிய ஷீலாவை இரவு அங்கேயே தங்குமாறு சரஸ்வதி வற்புறுத்தினார்.

“இல்லை ஆண்ட்டி, நான் காரில் வந்தேன், சோ கார் வெயிட்டிங், விடுதியில் பெர்மிஷன் கேட்டுட்டு வந்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.
எவ்வளவு சொல்லியும் ஷீலா தங்க மறுத்துவிட்டாள்.

அவளை வழி அனுப்பிவிட்டு வந்த சரஸ்வதி, “ஏன் நிலா, இந்தப் பெண் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்குவது வழக்கம் தானே ஏன் இந்த நடு ராத்திரியில் கிளம்பி போறா” என்று யோசனையாய் அங்கு நாற்காலியில் அமர்ந்தார்.

“அய்யோ அம்மா, அவளுக்கு ஏதாவது காரணம் இருக்கும், அவள் தங்கனும்னு நினைச்சிருந்தா போன்னு சொன்னாலும் தங்கி இருப்பா, நாளைக்கு ஆபீஸ் இருக்கு, அவளுக்கு வேலை இருக்கும் இப்படி ஏதாவது ரீசன் இருக்கும் அதான் அவள் போயிட்டா, நீங்க போய் தூங்குங்க நானும் தூங்க போகிறேன்” என்று அன்னையை சமாதானம் செய்தவள், சரஸ்வதி அறையின் உள்ளே சென்றதும் தனது அறைக்கு வந்து தாழ்பாள் இட்டு மீண்டும் யோசனையில் அழ்ந்தாள்.

ஷீலா காருக்குள் ஏறும் போது அங்கு டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவர் விக்கி சாரைப் போல் இருந்தது, ஆனால் அவள் அது குறித்து ஏதும் சொல்லவில்லை, ஏன் இவள் இப்படிச் செய்கிறாள். என்னதான் தோழியானாலும் எப்படி அவளாகச் சொல்லாமல் இதனைக் குறித்து கேட்பது, எதுவாக இருந்தாலும் நாளை பேசியே ஆக வேண்டும் என்று உறங்கிவிட்டாள்.

----
“அம்மா வேலைக்கு லேட் ஆகிடும்மா, இப்ப போயி கோவிலுக்கு கிளம்பனும்னு ஏன் அடம் பிடிக்கிறீங்க. மாலை சீக்கிரமே வரேன், நம்ம இரண்டு பேரும் சேர்ந்து போகலாம்னு சொன்னால் கேளுங்கம்மா, ப்ளீஸ்”

“நிலா, எல்லா வருடமும் பிறந்த நாள் அன்று இப்படித்தான் அடம் பிடிக்கிற. ஏன் கோவிலுக்குப் போகனும்னா வேப்பங்காய் சாப்பிடமாதிரி உனக்கு கசக்குது, அன்று இதே மாதிரி நீ கன்ஃபர்மேஷன் ஆகுமோ ஆகாதோன்னு நினைத்து டென்ஷனா இருந்தப்போ கோவிலுக்குப் போகச்சொன்னேன், அன்று என்னாச்சு?”

“என்னாச்சு, நான் கீழே விழுந்து மண்ணை கவ்வுனது தான் மிச்சம், என் பர்ஸும் தொலைந்து போனது” என்று மனதில் நினைத்தவள் வெளியே ஏதும் சொல்லாமல் தன் அன்னையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று நிலா விழுந்ததைக் குறித்து சரஸ்வதியிடம் ஏதும் சொல்லவில்லை, காயம் சரியாகும் வரை அன்னையில் கண்ணில் படாமல் பார்த்துக் கொண்டாள். சொல்லியிருந்தால் உடனே சரஸ்வதி ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அந்த தோஷம், இந்த தோஷம் என்று பூஜைகள் செய்ய தொடங்கியிருப்பார்.
நிலா சில ஆன்மீக முறைகளை பின்பற்றுபவள், சிலவற்றை பின்பற்ற மாட்டாள். எதையும் கண்மூடித்தனமாக அவள் நம்பவும் மாட்டாள். ஆனால் சரஸ்வதி இதில் எதிர்மறை. அவரின் வாழ்க்கையே இந்த கண்மூடித்தனத்தில் தான் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் கடவுளைத்தான் துணைக்கு அழைப்பார்.

அத்தகைய தாயிடம் வாதாட நிலாவிற்கு அன்று நேரம் இல்லை. என்னாச்சு என்று தன்னிடம் கேள்வி கேட்ட தாயிடம் “கோவிலுக்குச் சென்றதினால் கன்ஃபர்மேஷன் கிடைச்சது, நான் வேலை செய்ததற்காக இல்லை” என்று கூறிவிட்டு தனது கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

“நிலா, இந்த அம்மாவிற்காக இன்று ஒரு நாள் கோவிலுக்கு வாடா” என்று கெஞ்சினார்.

“சரி வாங்க, ஆனால் நேரே தெய்வத்தை வணங்கிவிட்டு வந்துவிட வேண்டும், வேறு எதற்கும் என்னை கட்டாயப்படுத்தக்கூடாது” என்றாள் கண்டிப்புடன்
வந்தால் போதும் என்று நினைத்த சரஸ்வதி வேகமாக இல்லை என்பது போல் தலையை அசைத்தார்.

நிலாவை பிறந்தநாள் அன்று மட்டும்தான் இப்படி வற்புறுத்தி அழைத்துச் செல்ல இயலும், மற்ற நாட்களில் அவள் பிடிவாதத்தின் உச்சத்தில் இருப்பாள், அல்லது வற்புறுத்தி அழைத்துச் சென்றாலும் கோவிலின் வாயிலிலே நின்று விடுவாள் உள்ளே செல்லமாட்டாள்.

இன்று நிலாவை வற்புறுத்தி அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. சமீபத்தில் அங்கு சித்தர் ஒருவர் வந்துள்ளார், அவர் அந்த கோவிலின் தூண் அருகே அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார். அனைவரும் அவரை வணங்கிவிட்டுச் செல்வார்கள், அவ்வாறு வணங்குபவர்களில் சிலருக்கு அவர்களின் எதிர்காலத்தைக் குறித்து சொல்வதுண்டு. அவர் கூறியது போலவே நிகழவும் செய்கிறது என்பதுதான் வியப்பு.

அதைக் கேட்டதிலிருந்து நிலாவையும் அவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சரஸ்வதிக்கு நீண்ட நாட்களாக ஒரு எண்ணம், இன்று எப்படியாவது நிலாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மாணித்திருந்தார். நிலா ஓ.கே சொன்னதும் உற்சாகமாக தயார் ஆகி அவளுடன் சென்றார்.

கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கிவிட்டு கடைசியாக அந்த சித்தரிடம் அழைத்துச் சென்றார், தாயின் பின்னால் சென்ற நிலா, சரஸ்வதி அவரை வணங்கவும் தானும் வணங்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகருகையில் “மனதைத் திற! உயரப் பற!” என்று கூறிவிட்டு கண்ணை மூடிக்கொண்டார்.

இதனைக் கேட்ட நிலா வாயைப் பொத்திக் கொண்டு ’க்ளூக்’ என்று சிரித்துவிட்டாள். “ஏய் நிலா, சும்மா இருடி” என்று தாய் அதட்டவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஏன் சிரிச்ச நிலா, வளர்ந்திட்டா இங்கிதம் மறந்துவிடுமா?”

“நீங்க கும்பிட்டதும் நானும் கும்பிட்டேன், அவர் என்னடான்னா திடீர்னு தூக்கத்தில் கனவு கண்டது போல ஏதோ சொல்லீட்டு மீண்டும் தூங்க ஆரம்பிச்சுட்டார்.” என்று கூறிய மகளை முறைத்தார்.

“சரி, சரி விடுங்க நான் இனி சிரிக்க மாட்டேன், முறைக்காதீங்க”

“நீ கிளம்பு நிலா, நான் கொஞ்ச நேரம் இங்கே இருந்திட்டு வீட்டுக்கு போறேன்”

“கோபமா?”

“இல்லை நிலா, எப்பவாவது வரேன் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்னு தோனுது, உனக்கு லேட் ஆயிடும் நீ கிளம்பு மா”

“சரி மா, இப்போ கிளம்பினால் தான் கரெக்ட்டா இருக்கும், நீங்க பத்திரமா போங்க”

“நிலா முடிந்தால் அரை நாள் லீவு எடுடா இன்று உன் பிறந்த நாள்”

“சரிமா கேட்டு பார்க்கிறேன்”

தாயிற்கு தலையை அசைத்து விட்டு வெளியே செல்லும் மகளையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டார் சரஸ்வதி.
பெண் பிள்ளையை பெற்ற அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் கவலைதான் சரஸ்வதிக்கும் நிலாவின் வாழ்க்கை, தந்தை இல்லாமல் தாய் வளர்த்த மகள் அவளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலைதான். எல்லாம் அந்த கடவுள் பார்த்துப்பார் என்று பெரு மூச்சுடன் நிலாவிற்காக அர்ச்சனை செய்ய அங்குள்ள பூசாரியை காணச் சென்றார்.

வெளியில் வந்த நிலா தனது வண்டியை இயக்கி நகருவற்கு முனைகையில் அவளை உரசுவது போல் ஒரு கார் வந்து நின்றது. ஒரு நிமிடம் அவளது மூச்சே நின்றுவிட்டது சுர்ரென்று கோபமும் வந்தது, வண்டியை சிறிது நகர்த்திவிட்டு திட்டுவதற்காக வாயைத் திறக்கையில் கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கிய பெண்மணியைக் கண்டு வாயை மூடிக் கொண்டாள்.

காரில் இருந்து இறங்கிய பெண்மணி டிரைவர் கதவருகே வந்து ’ஏன் இப்படி செய்கிறாய்’ என்பதுபோல் கையசைத்து கேட்டுவிட்டு நிலாவை நோக்கி நடந்தார். அவள் அருகில் வந்தவர் “எப்படிமா இருக்க? ரொம்ப நாளா உன்னை பார்க்கவே முடியவில்லை?” என்று அவள் தலை கோதினார்.

“நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க ஆண்ட்டி”

“நல்லா இருக்கேன் மா, என்னை மன்னிச்சிருமா அன்றைக்கு ஏதோ யோசனையின் நான் தவறான பக்கம் கார் கதவை திறந்திட்டேன், இதோ இப்போ தம்பி கொஞ்சம் வேகமா வண்டியை ஓட்டிடுச்சு, கடவுள் புண்ணியத்தில் ஏதும் ஆகவில்லை” என்று குற்ற உணர்வோடு பார்த்தார்.

“பரவாயில்லை ஆண்டி, வருத்தப்படாதீங்க”

ஏனோ நிலாவிற்கு அவரைப் பார்க்கும் பொழுது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது, அவரின் முகத்தில் தெரியும் தெய்வீகக் கலை, சாந்தம், அவரின் பொருமை என்று எதுவோ ஒன்று தன்னையும் அறியாமல் பேசத் தூண்டியது.

“நீங்க தனியாகவா வந்தீங்க” என்று பார்வையால் அவரின் டெரர் கணவரைத் தேடினாள்.

“அவர் வரவில்லைமா, தம்பி தான் துணைக்கு வந்தது”

“உங்க தம்பியா?”

“இல்லை மா, அது வந்து…” என்று அவர் மென்று விழுங்கினார். அப்போது நிலாவின் போன் அலறியது. ஒரு நிமிடம் என்று செய்கையில் காட்டிவிட்டு அழைப்பை எடுத்து பேசத் தொடங்கினாள்.

அப்போது அப்பெண்மணி வந்த கார் அவர்கள் அருகே வந்து நின்றது, அந்தக் காரைக் கண்டதும் நிலாவுடன் பேசிக் கொண்டு இருந்த பெண்மணி டிரைவர் கதவருகே சென்றார், காரின் கண்ணாடியை இறக்கி அவருக்கு சில ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு கார் பறந்தது. இவற்றை அனைத்தையும் தன் தோழியின் பிறந்த நாள் வாழ்த்தை பெற்றுக்கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த நிலா பார்த்துக் கொண்டிருந்தாள்.

பணத்தை வாங்கிவிட்டு நிலாவிடம் திரும்பியவர் நிலா போனை வைத்த பின்னர் “நீ அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவியாம்மா?” என்று விசாரித்தார்.

“இல்லை ஆண்ட்டி, எதாவது விஷேஷம்னா மட்டும்தான்”

“அதுதானே பார்த்தேன், நான் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வருவேன் மா, நீ அன்று விழுந்ததும் உன்னுடைய பர்ஸ்ஸும் கீழே விழுந்துவிட்டது போல நான் திரும்பி காருக்கு போகும் போது பார்த்தேன், முதலில் அது யாருடையதுன்னு எனக்குத் தெரியவில்லை வீட்டில் சென்று நிதானமா பார்த்த போது உன்னுடைய போட்டோ அதில் இருந்தது. வாரா வாரம் வரும்பொழுது நான் கையோடு எடுத்திட்டு வருவேன் உன்னைப் பார்த்தால் கொடுத்துவிடலாமென்று. ஆனால் உன்னைப் பார்க்கவே முடியவில்லை. இன்று அவசரத்தில் அதனை எடுக்க மறந்து விட்டேன் ஆனால் நீ கோவிலுக்கு வந்திருக்க”

“ரொம்ப நன்றி ஆண்ட்டி, அடுத்த முறை வரும் பொழுது நான் வாங்கிக்கிறேன் அதில் பெரிதாக எதுவும் இல்லை”

“பெரிதாக இருக்கோ இல்லையோ நியாயமா நான் உன்னிடம் கொண்டுவந்து கொடுத்திருக்க வேண்டும், ஆனால் சூழ்நிலை சரியில்லைமா அது தான் என்னால் கொண்டு வந்து தர முடியவில்லை”

“பரவாயில்லை ஆண்ட்டி”

“நீ ரொம்ப அழகா இருக்கம்மா, உன்னை இதற்கு முன்பு எங்கோ பார்த்த நியாபகம்”

“அதுதான் அன்று பார்த்திருக்கீங்களே” என்று கண் சிமிட்டினாள்.

“இல்லைமா, அன்றும் எனக்கு இப்படித்தான் தோன்றியது. ஆனால் அன்று இருந்த சூழ்நிலையில் என்னால் உன்னிடம் எதுவும் விசாரிக்க முடியவில்லை” என்று பேசிக்கொண்டிருக்கும் போது நிலாவிற்கு மீண்டும் செல்பேசியில் அழைப்பு வந்தது.

“ஒரு நிமிடம் என்று செய்கை செய்துவிட்டு அழைப்பை எடுத்து பேசிவிட்டு சீக்கிரமாக வைத்துவிட்டாள்”

“எனக்காக பார்க்காத, நீ பேசுமா”

“இல்லை ஆண்ட்டி, இன்று எனக்கு பிறந்த நாள் அதுதான் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒவ்வொருத்தரா கால் பண்றாங்க”

“ஓ! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா, ஒரு நிமிஷம் இங்கயே நில்லு” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த பூக்கடையில் பூவை வாங்கி நிலாவின் தலையில் வைத்துவிட்டார்.

“என் கண்ணே பட்டிடும் மா, வீட்டுக்குப் போனதும் அம்மாகிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போடச் சொல்லுமா”

இதற்கு ஒன்றும் சொல்லாமல் புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தாள்.

மீண்டும் நிலாவின் செல்பேசி அலறியது, இம்முறை நிலா அழைப்பை ஏற்கவில்லை.

“பேசுமா’

”இல்லை ஆண்ட்டி, வேலைக்கு நேரமாச்சு அதுதான்”

“சாரி மா, நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருந்துட்டேன். நீ கிளம்புமா, அதற்கு முன்பு உன் நம்பரையும் வீட்டு முகவரியையும் கொடுத்திட்டு போமா, உன் பர்ஸை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறேன்.

“இல்லை பரவாயில்லை ஆண்ட்டி”

“ஏன்மா தெரியாதவங்க கிட்ட வீட்டு முகவரியை கொடுக்க கூடாதுன்னு பார்க்கிறயா”

“அப்படி ஏதும் இல்லை ஆண்ட்டி, அன்றைக்கு நடந்ததை அம்மா கிட்ட நான் சொல்லவில்லை, அவங்க பயந்திடுவாங்க அது தான்”

“ஓ சரிம்மா, நான் உன்னை கோவிலில் அடிக்கடி பார்த்து பழகின ஃப்ரெண்ட்னு சொல்லிடு வேறு எதுவும் சொல்ல வேண்டாம்” என்றவரை எப்படி புரிய வைப்பது என்று சங்கடத்துடன் பார்த்தாள்.

”என்னாச்சு மா?”

“அது வந்து”

“சொல்லுமா”

“நான் கோவிலுக்கு வருவதேயில்லை, இன்று அம்மா வற்புறுத்தியதால் தான் வந்தேன், மற்றபடி நான் வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் வருவேன், அம்மாவிற்கும் அது நன்றாகத் தெரியும்”

”சரிமா நான் வரவில்லை, என் வீடு இங்கிருந்து இருபது கிலோமீட்டர் மா முடிந்தால் ஒரு நாள் வாம்மா. உனக்கு நேரமாகிறது கிளம்புமா” என்று அவளது எண்ணை குறித்துக்கொண்டார்.

“கண்டிப்பா வருகிறேன் ஆண்ட்டி”

(தொடரும்)
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபி-5

அந்த பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்ததால் நிலாவிற்கு ஆபீஸிற்கு தாமதமானது.

பிறந்தநாள் என்று சந்தோஷப்படுவதா, தாமதமானது என்று வருத்தப்படுவதா என்று யோசித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தாள்.

ஆபிஸ் நுழைவு வாயிலை அவள் கடக்கவும் எதிரே கார் வருவதற்கும் சரியாக இருந்தது. வேகமாக வந்த அந்த கார் உடனடியாக பிரேக் பிடித்து நின்றது, ஏதோ யோசனையில் வந்து கொண்டிருந்த நிலாவும் காரைக் கண்டதும் பிரேக் அடித்த வேகத்தில் நிலை தடுமாறி இடது புறமாக வண்டியுடன் விழுந்து விட்டாள்.

பிறந்த நாளன்று தாய் பரிசளித்த புடவையை உடுத்தி தேவதை போல வந்தவள் தரையில் விழுந்த வேகத்தில் சந்திரமுகியாக மாறினாள்.

காரின் கதவருகே வந்தவள் ‘டொக் டொக்’ என்று கண்ணாடியைத் தட்டினாள், மெதுவாக காரின் கண்ணாடி இறங்கியதும் அதன் உள்ளே இருந்திருந்தவனைக் கண்டதும் அவளின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.

“ஹேய் மிஸ்டர்! கண்ணு தெரியலை? கனவு கண்டுகிட்டா வண்டி ஓட்டுற”


“…”
“என்ன லுக்கு, கேட்டதுக்கு பதில் சொல்லு மேன்?”

எந்த அலட்டலும் இல்லாமல் காரின் கதவைத் திறந்து வெளியே இறங்கி காரின் மீது சாய்ந்து நின்று கொண்டு அவளையே பார்த்தான்”

’எப்பிடி பார்க்கிறான் பார் பொறுக்கி, திமிர் உடம்பெல்லாம் திமிர்’

எங்கோ சென்றிருந்த செக்யூரிட்டி அவசரமாக ஓடி வந்து
“தம்பி வண்டியை எடுப்பா அய்யா பார்த்தா என் வேலை அவ்வளவுதான், ஏம்மா நீயும் வழியில நிக்கிற, பேசுறதா இருந்தா கேண்டீன்ல போயி இரண்டு பேரும் பேசுங்கம்மா”

நிலாவிற்கு கொலை வெறியானது “சார் கடுப்பேத்தாதீங்க, இந்த ஆள் என் வண்டி மேல மோதியிருப்பான் நூல் இழையில் தப்பிச்சேன் இல்லைன்னா பிறந்த நாள் அன்னைக்கே எனக்கு இறந்த நாளும் கொண்டாடியிருப்பாங்க, இப்படியா வேகமா வண்டி ஓட்டுவாங்க கேம்பஸிற்குள்ளே?”

“சாரிம்மா, இங்கதான் நின்னுகிட்டு இருந்தேன், புதுசா வந்த வண்டிக்கு எண்ட்ரி போட போனேன் அதுக்குள்ள இப்படி நடந்திருச்சு”

“நீங்க ஏன் மன்னிப்பு கேட்குறீங்க?” என்று கார் ஓட்டி வந்தவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

“தம்பி அய்யாவோட டிரைவரம்மா, ஏதாவது அவசர வேலையா கிளம்பியிருக்கும், மன்னிச்சுக்கம்மா. நான் இங்க நிற்காமலிருந்ததினால் தான் இப்படி நடந்திருச்சு இனிமேல் கவனமா இருக்கிறேன் மா” என்று கெஞ்ச மாட்டாத குறையாக கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது கார் ஓட்டி வந்தவனுக்கு போன் வரவும் அவன் மொபைலை எடுத்து பார்த்துவிட்டு அதே வேகத்தில் காரில் ஏறி பறந்துவிட்டான்.

நிலா மட்டும் பறவையாக இருந்திருந்தாள், கூடவே பறந்து சென்று அவன் மூக்கை கொத்தியிருப்பாள்.

செக்யூரிட்டியின் தவறும் அதில் உள்ளதால் என்ன நடந்தது என்றுகூட விசாரிக்காமல் எப்படியாவது அவர்கள் இருவரையும் அந்த இடத்தில் இருந்து அகற்றினால் போதும் என்று அவர் மன்றாடிக் கொண்டிருந்தார். கார் சென்றதும் நிம்மதி பெரு மூச்சுவிட்டவர் நிலாவிடம் திரும்பி “அடி ஏதும் பலமா பட்டிருச்சாம்மா?”

‘எப்போ கேட்கிறார் பார்’ என்று நினைத்தவள் ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சென்றாள்.

தேவதையை போன்று உள்ளே நுழைந்தவள் ‘உம்’ என்று முகத்தை வைத்திருந்ததைக் கண்ட ஷீலா
“என்ன பெர்த்டே பேபி, அம்மா கூட ஃபைட்டா?”

“இல்லைடி”

“அப்புறம் ஏன் ‘உம்’ன்னு இருக்க? உன் காஸ்ட்யூம்முக்கும் ஃபேஸுக்கும் சம்பந்தமே இல்லை”

“…”

“நீ சொல்லப் போறது இல்லை நான் விடப்போவதும் இல்லை, ஆனால் எனக்கு கொஞ்சம் முக்கிய வேலைகள் இருக்கு, லஞ்சுக்கு கேண்டீன் வந்திடு இன்று என்னுடைய ட்ரீட், மீதியை அங்கே பேசிக்கலாம்” ‘சியர் அப் கேர்ள்’ என்று நிலாவின் கண்ணத்தில் செல்லமாக கிள்ளிவிட்டு சென்றுவிட்டாள்.

‘ச்ச மூடையே ஸ்பாயில் பண்ணிட்டான்’ என்று நினைத்தவள் வேலையில் மூழ்கி விட்டாள்.
மதிய உணவு இடைவேளையின் போது ஷீலாவுடன் கேண்டீனுக்குச் சென்று உணவை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டார்கள். சிறிது நேரத்தில் விக்கியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

காலையில் நடந்தவற்றை சொல்லாமல் ஷீலா விடப்போவதில்லை என்ற நிலையில் அனைத்தையும் ஒப்பித்தாள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த விக்கி ’நீ ஒரு மெயில் செக்யூரிட்டி ஹெட்டுக்கு அனுப்பு நிலா’ மறக்காமல் என்னையும் உன்னுடைய ரிப்போர்டிங் மேனேஜரையும் அதில் சேர்த்துக்கொள். நான் பேசுகிறேன் அவர்களிடம், எம்.டி யோட டிரைவர்னா என்ன வேணா செய்யலாமா, அட்லீஸ்ட்டு ஹீ ஷுட் பி வார்ண்டு” என்று சமாதானம் செய்தான்.

’ஓகே சார்’ என்று மூவரும் உண்ணத்தொடங்கினார்கள். அப்பொழுது அங்கே உணவுத்தட்டுடன் இளைஞன் ஒருவன் அவர்கள் அமர்ந்திருந்த டேபிள் அருகே வந்து நின்றான். விக்கிதான் முதலில் அவனை கவனித்தான், தட்டுடன் நின்றிருந்தவன் விக்கியை நோக்கி சிறிய புன்னகையை செய்துவிட்டு ‘மே ஐ’ என்றான்.

’யெஸ் ப்ளீஸ்’ என்று விக்கியும் நகர்ந்து உட்கார்ந்தான்.

யோசனையில் உண்டு கொண்டிருந்த நிலா மிளகாயை தெரியாமல் கடித்துவிட்டு ‘ஸ்ஸ்.. என்று நிமிர்ந்தவள் தனது எதிரே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் முகம் ஜிவ்வென்று சிவந்தது.

“ஏய் என்னடி, மிளகாய் கடிச்சிட்டியா? முகம் இப்படி சிவந்திருக்கு” என்று ஷீலா தனது தண்ணீர் பாட்டிலை எடுத்தவள் அது காலியாய் இருப்பதைக் கண்டதும் விக்கியை முறைத்தாள்.

காரம் அதிகமானால் நிலாவிற்கு விக்கல் வந்துவிடும், அவள் விக்கத் தொடங்கியதும் விக்கியின் கையைத் தட்டிய ஷீலா ‘ஒரு பொண்ணு மிளகாயை கடிச்சிட்டு விக்கல் எடுக்குறா, கொண்டுவந்த பாட்டிலையும் காலி பண்ணிட்டு யாருக்கோ வந்த விருந்துன்னு இப்படி மொக்கறீங்க?’

அதைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே எழப்போன விக்கியை தடுத்த இளைஞன் அவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் டம்ளரை நிலாவை நோக்கி நகர்த்தினான்.

’தேங் யூ’ என்று கூறிய ஷீலா ’எடுத்து குடிடீ’ என்றுவிட்டு உண்ணத்தொடங்கினாள்.

நிலா எந்த அசைவும் இல்லாமல் அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள், அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஏண்டீ விழுங்கிற மாதிரி அவனையே பார்த்துகிட்டு இருக்க? இப்படியா சைட் அடிப்ப பப்ளிக்கா?’ என்று நிலாவின் காதில் ஷீலா கிசுகிசுத்தாள்.

‘அவனைப் பார்த்த பார்வை இப்போது ஷீலாவிடம் திரும்பியது’

‘ஒய் டெரர் லுக்? சாப்பிடு’ என்றுவிட்டு ஷீலா உண்ணத் தொடங்கினாள்.

விக்கலின் சத்தம் கூடியதும் வேறு வழியில்லாமல் அவன் கொடுத்த நீரை எடுத்துக் குடித்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் நிலா நீரைக் குடித்ததும் உண்ணத் தொடங்கினான்.

மும்முரமாக உண்டு கொண்டிருந்த விக்கி நிலாவிடம் ‘யெஸ்டெர்டே யூ வேர் சேயிங் சம்திங் எபவுட் ஆன்னிவெர்ஸரி கல்சுரல்ஸ் ரைட், கேன்யூ டெல் மீ நவ்?”

உண்ணாமல் தட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவள் ‘ஆம்’ என்பது போல் சொல்வதற்காக நிமிர்ந்தபோது எதிரில் அமந்திருப்பவனைக் கண்டதும் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

‘ஏய் சொல்லுடி’ என்று ஷீலா இடித்தாள்

“சார் ஈவினிங் இது பத்தி பேசலாமா?”

“சாரி நிலா, ஈவினிங் மீட்டிங் இருக்கு அதில்லாமல் நாளை முதல் பத்து நாளிற்கு எனக்கு வேற பிரான்ஞ்சுக்கு ஒர்க் அலாட் பண்ணியிருக்காங்க, இட் வில் பி பெட்டர் இஃப் யூ கேன் ஸே நவ்”

தயங்கினாள் வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள் “சார், இது என்னுடைய ஸஜெஷன் மட்டும்தான், கல்சுரல்ஸ் ஏன் வேறொரு கம்பெனி எடுத்து நடத்தனும் அதுவும் வெளியில் இருந்து ஆள் கொண்டு வந்து, உலகம் முழுவதும் கணக்கெடுத்தா கிட்டத்தட்ட பத்தாயிரம் எம்பிளாயிஸ் நம்ம கம்பெனியிலே இருக்கிறாங்க, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பைக் கொடுத்து நடத்தலாமே. கலை நிகழ்ச்சிகளுக்கு நம் கம்பெனியிலிருக்கிற எம்பிளாயிஸே பெர்ஃபார்ம் செய்யலாம். கண்டிப்பா எல்லாருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும் அவங்களை கண்டறிந்து வாய்ப்பு தரலாமே. இதனால் நிறைய நன்மைகள் இருக்கு கம்பெனிக்கும் அதில் வேலை செய்பவர்களுக்கும். நம்ம வீட்டு விஷேசத்தை அடுத்தவங்க எடுத்து நடத்தினால் நல்லாவா இருக்கும் சார்” என்று நிதானமாக விக்கியை நோக்கி நிலா சொல்லி முடித்தாள்.

‘ஃபெண்டாஸ்டிக் ஸஜெஷன்’ என்று எதிரில் இருந்தவன் கூறியதும் மூவரும் ’இவன் கிட்ட யாரு கேட்டது’ என்பது போல் நோக்கினர்.

மூவரின் பாவனையும் ஒரே போல் இருந்ததைக் கண்டவன் ‘சாரி’ என்றுவிட்டு உண்ணத் தொடங்கினான்.

“குட் நிலா, ஆனால் வீ ஆர் லேட் ஐ திங்’

‘நாட் அட் ஆல், ஜஸ்ட் கிவ் ட் எ ட்ரை’

‘ஹே மைண்ட் யுவர் ஓன் பிஸினெஸ்’

‘யெஸ் ஐ டூ, தட்ஸ் வாட் ஐ ஆம் டூயிங்’

அவர்களின் வாக்கு வாதத்தைப் பார்த்து விக்கியும் ஷீலாவும் வாயடைத்துப் போயினர்.

அவனை ஒன்றும் செய்ய இயலாததால், உணவு மேஜையை ஓங்கி ஒரு அடி அடித்தாள் நிலா ‘ஸ்ஸ் ஆ’

‘ஏய் பார்த்துடி, உனக்கென்ன பைத்தியமா?’ என்ற ஷீலாவை வாயை மூடு என்று செய்கையில் காண்பித்தாள்.

‘இவளுக்கு என்னாயிற்று எவ்வளவு ஹேண்ட்சம்மா இருக்கான் அவன் முகத்தைப்பார்த்து எப்படி எரிந்து விழமுடிகிறது ’ஹ்ம்ம்ம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டவள் தன்னை நோக்கி வரும் அனல் காற்று எங்கிருந்து என்று பார்த்தபோது விக்கி இவளைத்தான் முறைத்துக்கொண்டிருந்தான்.

‘ஹிஹிஹி’ என்று பல்லைக் காட்டியவள் விக்கி கோபமாக எழுந்து செல்வதைக் கண்டு அவன் பின்னே தட்டை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

நிலாவிற்கு முள்ளின் மேன் அமர்ந்திருப்பது போல் தோன்றியது தானும் எழுந்து செல்லலாம் என்றால், கோபத்தில் வக்கியின் மொபைலை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டான் அதேபோல் ஷீலாவும் கைப்பையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டிருந்தாள்.

முன்னால் இருப்பவனோ எழுந்து செல்லும் எண்ணம் இல்லாததுபோல் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தான்.

‘ச்ச என்று தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

‘விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே’ என்றதும் எவண்டா அது என்று நிமிர்ந்தவள் வாழ்த்து சொன்னவனை நோக்கி ‘உன் வாழ்த்தெல்லாம் தேவையே இல்லை’ என்பது போல் பார்த்துவைத்தாள்.

‘ஓ.கே ஐ ஏம் ஸாரி பார் எவரிதிங் என்று நிறுத்திவிட்டு எக்செப்ட் டுடே மார்னிங்’ என்று அவள் கண்களை உற்று நோக்கினான்.
அவன் மன்னிப்பு கேட்டதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் கடைசியாக சொன்னதைக் கேட்டு கண் வெளியில் தெரித்து விடுவது போல் பார்த்தாள்.

’ஓகே கூல், காலையில் என்னுடைய தவறு ஏதுமில்லை நீதான் ஏதோ யோசனையில் வந்து இடித்துகிட்ட’
கையோடு பிடிபட்ட திருடனைப்போல் முழித்தாள்.

“சாரி டி தனியா விட்டுட்டு போனதுக்கு’ என்ற குரலைக் கேட்டதும் ‘அப்பாடி’ என்றிருந்தது நிலாவிற்கு.

“ஏன் என்னை பார்த்தால் மனுஷனாக தெரியலையா மிஸ்..என்று பெயரை அறிவதற்காக இழுத்தான்’

‘ஷீலா’ என்று பழக்க தோஷத்தில் சொல்லிவிட்டு நாக்கை உள்ளிழுத்துக்கொண்டாள்.

அவள் பின்னாடியே வந்த விக்கி ’உன்னை’ என்பதுபோல் ஷீலாவைப் பார்த்தான்.

‘அய்யய்யோ! இவன் வேற நேரம் காலம் தெரியாமல்’ என்று பரிதாபமாக நிலாவைப் பார்த்தாள்.

“ஹாய்! என் பெயர் ஆகாஷ், இந்த கம்பெனி எம்டி -யின் ஆஸ்தான டிரைவர் என்று விக்கியிடம் கை நீட்டினான்.

அதைக் கண்டு கொள்ளாதவன் போல் லேசாக ’சரி’ என்பது போல் தலையை ஆட்டினான்.

”நான் வேணுமென்றால் சாரிடம் நீங்க பேசியதைக்குறித்து பேசிப்பார்க்கிறேன்” என்றதும்
டிரைவர் சொல்வதையெல்லாம் எம்டி கேட்பாரா என்று மூவரும் ஒரே போல் நினைத்துக் கொண்டதை ஷீலா அவனிடமே கேட்டுவிட்டாள்.

‘ப்ரோ, எம்டி டிரைவர் சொன்னால் கேட்டுப்பாரா”

‘ஸ்மார்ட், என்று விக்கியின் முகபாவனையை ஆராய்ந்தான் அதின் மென்மை வந்திருந்தது “மை டியர் சிஸ்டர், டிரைவர்னா சும்மாவா அவருடைய வலது கை மாதிரி, அதே சமயம் நான் இதைப்பற்றி பேசுகிறேன் என்றுதான் சொன்னேன், தீர்மானம் அவருடையதாகத்தான் இருக்கும், ஸோ லெட் அஸ் ட்ரை”

“நீங்க நல்லா ஆங்கிலமும் பேசறீங்க”

“அவர்கூட பல இடங்களுக்கு போக வேண்டியிருக்கும் அதுதான் கத்துகிட்டேன்”

‘ஓகே கைஸ் யூ கேரி ஆன் எனக்கு மீட்டிங் இருக்கு’ என்றுவிட்டு விக்கி தனது மொபைலை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

ஷீலாவிற்கு ஆகாஷை மிகவும் பிடித்துவிட்டது அவன் தோற்றத்திற்கும் செய்யும் வேலைக்கும் பேசும் விதத்திற்கும் எந்தவொரு சம்மந்தமே இல்லாமல் இருந்தது, ஏதோ புதுமையாகத் தெரிந்தான்.

“நிலா கை கழுவி விட்டுவா, இன்னும் ஒரு அயிட்டம் மீதி இருக்கு அதில்லாமல் ட்ரீட் முழுமையடையாது என்றுவிட்டு ஆகாஷை நோக்கி நீங்களும்தான் ப்ரோ போயி கை கழுவீட்டு வாங்க கைகழுவ லேட் ஆனால் கல்யாணம் லேட் ஆயிடும்” என்று கண்சிமிட்டினாள்.

“இஸ் இட்! இண்ட்ரெஸ்டிங்’ என்று எழுந்தவன் நிலாவுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.

அவள் கை கழுவிக் கொண்டிருக்கையில் அவள் அருகில் சென்று நெருக்கமாக நின்றவன் ‘நீ புடவையில் ஏஞ்சல் போல இருக்க’ என்று கூறிவிட்டு வேகமாக நகர்ந்து சென்றுவிட்டான்.

நிலாவிற்கு கையிலிருந்த தட்டை எடுத்து அவன் தலையை உடைத்தாலென்ன என்று தோன்றியது.

‘’எங்கடி என்னோட ஹேண்ட்சம் ப்ரோவைக் காணோம்?” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

ஷீலாவின் கையைக் கிள்ளியவள் “நீ பார்க்கிற பார்வைக்கும் அழைக்கிற முறைக்கும் சம்பந்தமே இல்லை” என்றாள்

“அவ்வளவு அப்பட்டமாவாடி தெரியுது? பரவாயில்லை அழகான எதையும் ரசிக்கனும், அதைத்தான் நானும் செய்தேன், பட் கல்யாணம் அது என் விக்கியோட மட்டும்தான்’

இங்க தான் இருக்கேன் ஸிஸ் என்று கையில் ஐஸ்கிரீம் உடன் நின்றிருந்த ஆகாஷைக் கண்டதும் தன்னையும் அறியாமல் வாயைப் பிளந்தாள் ஷீலா.

‘வாவ்! சூப்பர் ப்ரோ’ என்று ஓடிச்சென்று அதனை வாங்கிக் கொண்டாள்.

இந்தா நிலா என்று ஷீலா நிலாவிடம் ஒரு ஐஸ்கிரீமை நீட்டினாள். அதனை வாங்க மறுத்த நிலா தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

நிலா மறுத்ததும் ‘வருத்தப்படாதீங்க ப்ரோ’ எல்லாத்தையும் நான் காலி செய்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து ஒரே மூச்சில் அனைத்தையும் காலி செய்தாள்.

அவளுக்கு எதிர்புறம் அமர்ந்து அவள் ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து உண்பதைக் கண்டவனுக்கு அவனையும் அறியாமல் சிரிப்பு வந்தது.

‘என்ன ப்ரோ என்னை பார்த்தா காமெடி பீஸா தெரியுதா?’ என்று பொய் கோபம் கொண்டாள்.

இல்லை என்பது போல் ஆகாஷ் தலையாட்டினான்.

‘அது’ என்ற பாவனையில் அவனைப் பார்த்தவள். ‘உணவு மேல கோபம், விருப்பு, வெறுப்பு எதையும் காட்டக் கூடாது முக்கியமா வேஸ்ட் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க அது தான் எல்லாத்தையும் நான் சாப்பிட்டேன் என்று விளக்கம் அளித்தாள்.

‘குட், விளக்கம் ஏதும் தேவையில்லை ஷீலா, ஐ அண்டர்ஸ்டேண்ட்’ என்றவன் எழப்போகும் போது ‘ஒரு நிமிஷம் ப்ரோ’ என்று தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

‘என்னை உன் சகோதரனா நினைத்தாள் யோசிக்காமல் கேட்கலாம்’ என்றான்.

‘நன்றி! உங்களுக்கும் நிலாவிற்கும் ஏதும் சண்டையா? மதியம் தான் பார்த்தோம் ஆனால் ஜென்ம விரோதி மாதிரி உங்களைப் பார்க்கிறாள். எனக்கு தெரிந்தவரை உங்களைப் பற்றி இதற்கு முன்னால் அவள் என்னிடம் பேசியதில்லை. பொதுவா அவள் யாரிடமும் சண்டை போடும் ரகமில்லை ஐஸ்கிரீம் தீரும் வரை யோசித்தேன் ஏதும் புரியவில்லை, கொஞ்சம் விளக்கினால் நைட் தூக்கம் வரும்’ என்று பேசிக்கொண்டே போனவளை கையெடுத்து கும்பிட்டவன்.

‘ஆகாயமும் நிலவும் சண்டை போடுமா?’ என்று ஒற்றை புருவத்தை உயர்த்தினான். ‘ஜஸ்ட் எ ஸ்மால் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் தட்ஸ் இட்’

‘ஈஸ் இட்? அப்போ சரி’ ஆனால் ப்ரோ… என்று அவள் இழுக்கவும்…

கை கடிகாரத்தைப் பார்த்தவன் ‘பை ஷீலா’ மீதியை நாளைக்குப் பேசலாம் என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.

இன்று இரவு தனக்கு தூக்கம் வருமா வராதா என்ற யோசனையிலேயே அவளது இருக்கைக்கு சென்று அமர்ந்தவள். நிலாவைப் பார்ப்பதும் இல்லை என்று தலையை ஆட்டுவதுமாக இருந்தாள் விக்கியிடம் சொல்லலாம் என்றால் அவன் பிஸியாக இருந்தான். சரி காத்திருப்போம் என்று வேலையில் மூழ்கினாள்.

நிலாவும் ஷீலாவும் வெவ்வேறு குழு என்றாலும் இருவரும் பார்த்துக் கொள்ளும் தொலைவில்தான் அவர்கள் இருக்கைகள் இருந்தன. ஷீலாவின் நிலைமைதான் நிலாவிற்கும் யோசனையுடன் தாமதமாக் இருக்கையில் வந்து அமர்ந்த ஷீலாவைத்தான் அடிக்கடி நிலாவும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனும் இவளும் இத்தனை நேரம் என்ன பேசிக்கொண்டார்கள், ஷீலா ஏன் யோசனையாக இருக்கிறாள் என்று நிலாவும் யோசனையில் ஆழ்ந்தாள். தனது கைப்பேசி ஒலி எழுப்பவும் நினைவுக்கு வந்தவள் அதில் அன்னையின் பெயரைப் பார்த்ததும்தான் இன்று மதியம் விடுப்பு எடுத்து வருவதாகக் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.

‘ச்ச எப்படி மறந்தேன், எல்லாம் அவனால் வந்தது என்று சலித்துக்கொண்டவள் சரஸ்வதியிடம் தனக்கு விடுப்பு கிடைக்கவில்லை என்று பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

யார் யாரிடம் பேசினால் எனக்கு என்ன வந்தது என்று தனது யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தவள் வேலையில் மூழ்கினாள். தேநீர் இடைவேளைக்கும் செல்ல இயலாத அளவு வேலை சூழ்ந்து கொண்டதால் சுற்றும் முற்றும் பார்க்கக்கூட அவளுக்கு சமயம் கிடைக்கவில்லை.

எல்லா வேலைகளையும் முடித்தவள் அப்பாடா என்று நிமிர்ந்து பார்க்கையில் ஆகாஷ் ஷீலாவுடன் ஏதோ மும்முரமாக பேசிக்கொண்டிருப்பது கண்ணில்பட்டது. விளையாட்டாக இருக்கும் ஷீலாவும் அவனைவிட மிக தீவிரமாக பதில் அளித்துக்கொண்டிருந்தாள்.

நிலாவிற்கு தலைவலி வந்துவிடும்போல் இருந்தது திரும்ப திரும்ப இவன் ஏன் என் கண்ணில் பட்டுத்தொலைக்கிறான் என்று நினைத்தவள் தேநீர் குடித்துவிட்டு வரலாம் என்று கேண்டீனை நோக்கி நடந்தாள்.

தேநீர் அருந்திவிட்டு திரும்புகையில் அவள் வழியை மறைப்பதுபோல் எதிரே வந்த ஆகாஷ் அவளிடம் ஒரு நிமிடம் ப்ளீஸ் என்று செய்கையில் கெஞ்சுவது போல் கேட்டான். அவள் சுற்றும் முற்றும் யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்தாள். வீட்டிற்கு செல்லும் நேரம் என்பதால் ஒன்றிரண்டு பேர் இருந்தனர் அவர்களும் தங்களது அலைப்பேசியில் மூழ்கி இருந்தனர்.

அதே நேரம் நிலாவின் கையைப் பிடித்து அருகிலுள்ள இருக்கையில் அமர்த்தியவன் அவளது எதிரே தானும் அமர்ந்துகொண்டு ‘லுக் நிலா, உனக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லை ஏதோ இரண்டு முறை உன் முன்னால் தவறு செய்துவிட்டேன் அதற்காக இப்படி நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நீ போயிருக்கக்கூடாது. நானும் உன்னைப் போல் இங்கு பணிபுரிபவன் தான் ஏதோ என் மனசு சரியில்லை சோ நான் ஸ்மோக் செய்தேன், ஐ அக்ரி அது தவறுதான் பட் யூ..’ என்று நிறுத்தியவன் ஒன்றும் புரியாத முகபாவனையோடு தனது எதிரே அமர்ந்திருந்த நிலாவைப் பார்த்ததும்தான் பேசுவது எதுவும் அவளுக்கு புரியவில்லை என்று கனித்தான்.

‘ஓகே ஐ கம் டூ தி பாயிண்ட், நீ என் மேல் கம்பிளைண்ட் செய்தாயா மேலிடத்தில்? ஐ காட் தி வார்னிங் ஃப்ரம் மேனேஜ்மெண்ட்’ என்று அவளின் பதிலை எதிர்பார்த்தான்.


இவன் என்ன சொல்கிறான் தான் எதற்கு இவனைப் பற்றி கம்பிளைண்ட் செய்யனும் என்று யோசிக்கும் பொழுதுதான் நேற்று நடந்தது ஞாபகத்திற்கு வந்தது ஆனால் தான் ஏதும் செய்யவில்லையே என்று குழம்பினாள்.

‘பதில் சொல்லு நிலா’

இவன் என்ன அவன் பொண்டாட்டியை அதட்டுவது போல் அதட்டுகிறான் என்று நினைத்துக்கொண்டாள், அடுத்த நொடியே தான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறோம் என்று வியந்தவள் இரு கைகளையும் வாய் மேல் வைத்து பொத்திக்கொண்டாள்.

என்ன ஆச்சு நிலா? யூ ஃபீல் வாமிட்டிங்? ஏதும் வேணுமா? உடம்பு சரியில்லையா? என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டவனிடம் ’திருதிரு’ என்று முழித்தாள்.

‘ஐ ஆம் சாரி, நீ என்ன நிலைமையில் இருக்கிறாய் என்று உணராமல் நான் ஏதோ பேசிவிட்டேன், ரியலி சாரி. சாரி பார் எவரிதிங்’ என்று பாவமாக அவளையே பார்த்தான்.

அவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை தான் மனதில் நினைத்ததை வாய் வழி வார்த்தையாக வெளியே வராமல் இருப்பதற்கு வாயைப் பொத்தினால் இவன் ஏன் என்னென்னமோ பேசுகிறான்.

‘ஹலோ ஷீலா கொஞ்சம் சீக்கிரம் கேண்டீன் வருகிறாயா?’

ஏன் ஷீலாவை அழைக்கிறான் என்று மனதில் நினைத்தவள் அவன் பதட்டமாக இருப்பதை உணர்ந்தாள். என்ன விளக்கம் அளிப்பது எதைச் சொல்வது என்று தனக்குத்தானே யோசனையில் இருந்தாள் அதற்குள் ஷீலா அங்கு வந்து சேர்ந்தாள்.

’ஷீலா யுவர் பிரெண்ட் இஸ் சிக் ப்ளீஸ் டேக் கேர்’ என்று இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

ஷீலா நிலாவின் அருகில் சென்று காய்ச்சல் அடிக்கிறதா என்று தொட்டுப்பார்த்தாள் நிலாவோ ஆகாஷைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனும் ஷீலாவிடம் நிலா ஏதும் சொல்கிறாளா என்று நிலாவின் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவர்களது பார்வையின் பொருள் புரியாத ஷீலா ‘ப்ரோ நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன்’ என்று அவனை அனுப்பி வைத்தாள்.

ஏய் என்னாச்சுடி நானும் காலையில் இருந்து பார்க்கிறேன் நீ ஆளே சரியில்லை, உனக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு சொல்றாரு ஆனா நீ வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக்கிட்டு குத்துக்கல்லாட்டம் இருக்கிற என்ன நடக்குது இங்க? என்று போலியாக முறைத்தாள்.

ஷீலா இவ்வாறு கேட்டு நிறுத்தியவுடன் நிலா குலுங்கி குலுங்கி சிரிக்கத் தொடங்கினாள் என்னவென்று கேட்ட ஷீலாவிடம் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு மீண்டும் மீண்டும் சிரிக்கத் தொடங்கினால்.

காலையில் தலைக்கு ஏதும் அடி பட்டுதாடி என்று கேட்ட ஷீலாவை முறைத்தாள்.

பின்னே இப்படி லூசு மாதிரி சிரித்தாள் யாராக இருந்தாலும் இப்படித்தான் கேட்பார்கள் என்று பதிலளித்தவளிடம் நடந்தவற்றை கூறினாள் நிலா.

இதைக்கேட்டு ஷீலா சிரிக்கவில்லை பதிலுக்கு ‘ஐ ஆம் சாரி நிலா, நீ கம்பிளைண்ட் செய்யவில்லை இந்த விக்கிதான் செய்திருக்கிறார், மதியம் ப்ரோ கூட நான் பேசினது அவருக்கு பிடிக்கவில்லை அதுதான் ஏதாவது செய்ய வேண்டுமென்று இப்படி செய்திருக்கிறார், சில நேரம் விக்கி இப்படித்தான், என்னை மன்னிச்சிடு என்று நிலாவின் கையை பிடித்தாள்…என்னிடம் வந்து ஆகாஷ் ப்ரோ சொன்னப்ப முதலில் நீ தான் என்று நினைத்தேன் உன்னிடம் பேசுகிறேன் என்று சொன்னேன் ஆனால் நீ இருக்கையில் இருந்து எழுந்து செல்வதைப் பார்த்ததும் தானே பேசிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தார் அதேசமயம் விக்கி கால் செய்து கம்பிளைண்ட் செய்தாகிவிட்டது என்று உன்னிடம் சொல்லச் சொன்னார்.. எனக்கு மனசு கேட்கவில்லை நல்லா திட்டிவிட்டு வைத்துவிட்டேன்’ என்று சோகமாக முடித்தாள்.

‘ஹேய் இட்ஸ் ஓகே ஷீலா, சார் எதுவும் தவறாகச் செய்யவில்லையே.. யாரோ ஒருவருக்காக ஏன் சாரிடம் நீ சண்டை போட்டாய்.. எனக்கு உதவத்தானே அவரே கம்பிளைண்ட் செய்தார்’ என்று சமாதானம் செய்தாள்.

இல்லை நிலா ஆகாஷ் ரொம்ப நல்லவர் நான் என் சகோதரனாதான் நினைக்கிறேன் விக்கி செய்தது மிகவும் தவறு, நான் எப்படி ப்ரோ முகத்தில் முழிப்பதுன்னு எனக்குத் தெரியலை என்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஷீலாவின் அலைப்பேசி அலறியது.

ஆகாஷ்தான் அழைத்தான் நிலாவின் நலம் விசாரித்துவிட்டு வைத்துவிட்டான்.

’ஆனால் நிலா ஒன்று மட்டும் புரியவேயில்லை’ என்று ஷீலா இழுக்கவும் என்ன என்பது போல் அவளையே பார்த்தாள்.

‘சரி விடு எவ்வளவு காலம் மறைக்க முடியும்னு நானும் பார்க்கிறேன்’

‘எதை மறைக்கிறேன்? தெளிவாக பேசு ஷீலா.. யார் மறைப்பது? நீயா? நானா?

’என்னடி அம்பை என்னை நோக்கி விடுற?’

‘பின்னே நீ அந்த டிரைவரிடம் பேசினாள் விக்கி சாருக்கு ஏன் கொபம் வருகிறது? அதற்கு முதலில் பதிலைச் சொல்’ என்று கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு ஷீலாவின் பதிலுக்காகக் காத்திருப்பது போல் பாவனை செய்தாள்’

‘இதைக்கூட புரிந்து கொள்ளாத முட்டாளா என் தோழி’ என்று நிலாவிடமே பதிலைக் கேட்டவள் வெட்கம் தாங்கமாட்டாமல் ஓடிவிட்டாள்.

‘ஹேய் நில்லுடி என்று அவள் பின்னே நிலாவும் ஓட முடியாமல் வேகமாக நடந்தாள்’

வேகமாக இருக்கையில் அமர்ந்த ஷீலா வேலையை முடித்துவிட்டு கிளம்பும் நேரம் நிலாவைப் பார்த்தாள் நிலாவும் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் தான் இன்று விரைவாகச் செல்ல வேண்டும் என்று செய்கை செய்தவள் வேகமாக சென்றுவிட்டாள்.

ஷீலா செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவளின் உருவம் மறைந்ததும் ஒரு பெரு மூச்சுவிட்டாள். வீட்டாரை எப்படி ஷீலா சமாளிக்கப் போகிறாள் என்று யோசித்த நிலா ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு தானும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிச்சென்றாள்.

தொடரும்…
 

Attachments

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-6

இங்க தான் இருக்கேன் ஸிஸ் என்று கையில் ஐஸ்கிரீம் உடன் நின்றிருந்த ஆகாஷைக் கண்டதும் தன்னையும் அறியாமல் வாயைப் பிளந்தாள் ஷீலா.
‘வாவ்! சூப்பர் ப்ரோ’ என்று ஓடிச்சென்று அதனை வாங்கிக் கொண்டாள்.
இந்தா நிலா என்று ஷீலா நிலாவிடம் ஒரு ஐஸ்கிரீமை நீட்டினாள். அதனை வாங்க மறுத்த நிலா தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
நிலா மறுத்ததும் ‘வருத்தப்படாதீங்க ப்ரோ’ எல்லாத்தையும் நான் காலி செய்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து ஒரே மூச்சில் அனைத்தையும் காலி செய்தாள்.
அவளுக்கு எதிர்புறம் அமர்ந்து அவள் ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து உண்பதைக் கண்டவனுக்கு அவனையும் அறியாமல் சிரிப்பு வந்தது.
‘என்ன ப்ரோ என்னை பார்த்தா காமெடி பீஸா தெரியுதா?’ என்று பொய் கோபம் கொண்டாள்.
இல்லை என்பது போல் ஆகாஷ் தலையாட்டினான்.
‘அது’ என்ற பாவனையில் அவனைப் பார்த்தவள். ‘உணவு மேல கோபம், விருப்பு, வெறுப்பு எதையும் காட்டக் கூடாது முக்கியமா வேஸ்ட் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க அது தான் எல்லாத்தையும் நான் சாப்பிட்டேன் என்று விளக்கம் அளித்தாள்.
‘குட், விளக்கம் ஏதும் தேவையில்லை ஷீலா, ஐ அண்டர்ஸ்டேண்ட்’ என்றவன் எழப்போகும் போது ‘ஒரு நிமிஷம் ப்ரோ’ என்று தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
‘என்னை உன் சகோதரனா நினைத்தாள் யோசிக்காமல் கேட்கலாம்’ என்றான்.
‘நன்றி! உங்களுக்கும் நிலாவிற்கும் ஏதும் சண்டையா? மதியம் தான் பார்த்தோம் ஆனால் ஜென்ம விரோதி மாதிரி உங்களைப் பார்க்கிறாள். எனக்கு தெரிந்தவரை உங்களைப் பற்றி இதற்கு முன்னால் அவள் என்னிடம் பேசியதில்லை. பொதுவா அவள் யாரிடமும் சண்டை போடும் ரகமில்லை ஐஸ்கிரீம் தீரும் வரை யோசித்தேன் ஏதும் புரியவில்லை, கொஞ்சம் விளக்கினால் நைட் தூக்கம் வரும்’ என்று பேசிக்கொண்டே போனவளை கையெடுத்து கும்பிட்டவன்.
‘ஆகாயமும் நிலவும் சண்டை போடுமா?’ என்று ஒற்றை புருவத்தை உயர்த்தினான். ‘ஜஸ்ட் எ ஸ்மால் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் தட்ஸ் இட்’
‘ஈஸ் இட்? அப்போ சரி’ ஆனால் ப்ரோ… என்று அவள் இழுக்கவும்…
கை கடிகாரத்தைப் பார்த்தவன் ‘பை ஷீலா’ மீதியை நாளைக்குப் பேசலாம் என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.
இன்று இரவு தனக்கு தூக்கம் வருமா வராதா என்ற யோசனையிலேயே அவளது இருக்கைக்கு சென்று அமர்ந்தவள். நிலாவைப் பார்ப்பதும் இல்லை என்று தலையை ஆட்டுவதுமாக இருந்தாள் விக்கியிடம் சொல்லலாம் என்றால் அவன் பிஸியாக இருந்தான். சரி காத்திருப்போம் என்று வேலையில் மூழ்கினாள்.
நிலாவும் ஷீலாவும் வெவ்வேறு குழு என்றாலும் இருவரும் பார்த்துக் கொள்ளும் தொலைவில்தான் அவர்கள் இருக்கைகள் இருந்தன. ஷீலாவின் நிலைமைதான் நிலாவிற்கும் யோசனையுடன் தாமதமாக் இருக்கையில் வந்து அமர்ந்த ஷீலாவைத்தான் அடிக்கடி நிலாவும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனும் இவளும் இத்தனை நேரம் என்ன பேசிக்கொண்டார்கள், ஷீலா ஏன் யோசனையாக இருக்கிறாள் என்று நிலாவும் யோசனையில் ஆழ்ந்தாள். தனது கைப்பேசி ஒலி எழுப்பவும் நினைவுக்கு வந்தவள் அதில் அன்னையின் பெயரைப் பார்த்ததும்தான் இன்று மதியம் விடுப்பு எடுத்து வருவதாகக் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
‘ச்ச எப்படி மறந்தேன், எல்லாம் அவனால் வந்தது என்று சலித்துக்கொண்டவள் சரஸ்வதியிடம் தனக்கு விடுப்பு கிடைக்கவில்லை என்று பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.
யார் யாரிடம் பேசினாள் எனக்கு என்ன வந்தது என்று தனது யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தவள் வேலையில் மூழ்கினாள். தேநீர் இடைவேளைக்கும் செல்ல இயலாத அளவு வேலை சூழ்ந்து கொண்டதால் சுற்றும் முற்றும் பார்க்கக்கூட அவளுக்கு சமயம் கிடைக்கவில்லை.
எல்லா வேலைகளையும் முடித்தவள் அப்பாடா என்று நிமிர்ந்து பார்க்கையில் ஆகாஷ் ஷீலாவுடன் ஏதோ மும்முரமாக பேசிக்கொண்டிருப்பது கண்ணில்பட்டது. விளையாட்டாக இருக்கும் ஷீலாவும் அவனைவிட மிக தீவிரமாக பதில் அளித்துக்கொண்டிருந்தாள்.
நிலாவிற்கு தலைவலி வந்துவிடும்போல் இருந்தது திரும்ப திரும்ப இவன் ஏன் என் கண்ணில் பட்டுத்தொலைக்கிறான் என்று நினைத்தவள் தேநீர் குடித்துவிட்டு வரலாம் என்று கேண்டீனை நோக்கி நடந்தாள்.
தேநீர் அருந்திவிட்டு திரும்புகையில் அவள் வழியை மறைப்பதுபோல் எதிரே வந்த ஆகாஷ் அவளிடம் ஒரு நிமிடம் ப்ளீஸ் என்று செய்கையில் கெஞ்சுவது போல் கேட்டான். அவள் சுற்றும் முற்றும் யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்தாள். வீட்டிற்கு செல்லும் நேரம் என்பதால் ஒன்றிரண்டு பேர் இருந்தனர் அவர்களும் தங்களது அலைப்பேசியில் மூழ்கி இருந்தனர்.
அதே நேரம் நிலாவின் கையைப் பிடித்து அருகிலுள்ள இருக்கையில் அமர்த்தியவன் அவளது எதிரே தானும் அமர்ந்துகொண்டு ‘லுக் நிலா, உனக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லை ஏதோ இரண்டு முறை உன் முன்னால் தவறு செய்துவிட்டேன் அதற்காக இப்படி நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நீ போயிருக்கக்கூடாது. நானும் உன்னைப் போல் இங்கு பணிபுரிபவன் தான் ஏதோ என் மனசு சரியில்லை சோ நான் ஸ்மோக் செய்தேன், ஐ அக்ரீ அது தவறுதான் என்று பட் யூ..’ என்று நிறுத்தியவன் ஒன்றும் புரியாத முகபாவனையோடு தனது எதிரே அமர்ந்திருந்த நிலாவைப் பார்த்ததும் தான் அவளுக்கு எதுவும் புரியவில்லை என்று கனித்தான்.
‘ஓகே ஐ கம் டூ தி பாயிண்ட், நீ என் மேல் கம்பிளைண்ட் செய்தாயா மேலிடத்தில்? ஐ காட் தி வார்னிங்’ என்று அவளைப் பார்த்தான்.

இவன் என்ன சொல்கிறான் தான் எதற்கு இவனைப் பற்றி கம்பிளைண்ட் செய்யனும் என்று யோசிக்கும் பொழுதுதான் நேற்று நடந்தது ஞாபகத்திற்கு வந்தது ஆனால் தான் ஏதும் செய்யவில்லையே என்று குழம்பினாள்.
‘பதில் சொல்லு நிலா’
இவன் என்ன அவன் பொண்டாட்டியை அதட்டுவது போல் அதட்டுகிறான் என்று நினைத்துக்கொண்டாள், அடுத்த நொடியே தான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறோம் என்று இரு கைகளையும் வாய் மேல் வைத்து பொத்திக்கொண்டாள்.
என்ன ஆச்சு நிலா? யூ ஃபீல் வாமிட்டிங்? ஏதும் வேணுமா? உடம்பு சரியில்லையா? என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டவனிடம் திருதிரு என்று முழித்தாள்.
‘ஐ ஆம் சாரி, நீ என்ன நிலைமையில் இருக்கிறாய் என்று உணராமல் நான் ஏதோ பேசிவிட்டேன், ரியலி சாரி. சாரி பார் எவரிதிங்’ என்று பாவமாக அவளையே பார்த்தான்.
அவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை தான் மனதில் நினைத்ததை வாய் வழி வார்த்தையாக வெளியே வராமல் இருப்பதற்கு வாயைப் பொத்தினால் இவன் ஏன் என்னென்னமோ பேசுகிறான்.
‘ஹலோ ஷீலா கொஞ்சம் சீக்கிரம் கேண்டீன் வருகிறாயா?’
ஏன் ஷீலாவை அழைக்கிறான் என்று மனதில் நினைத்தவள் அவன் பதட்டமாக இருப்பதை உணர்ந்தாள். என்ன விளக்கம் அளிப்பது எதைச் சொல்வது என்று தனக்குத்தானே யோசனையில் இருந்தாள் அதற்குள் ஷீலா அங்கு வந்து சேர்ந்தாள்.
’ஷீலா யுவர் பிரெண்ட் இஸ் சிக் ப்ளீஸ் டேக் கேர்’ என்று இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
ஷீலா நிலாவின் அருகில் சென்று காய்ச்சல் அடிக்கிறதா என்று தொட்டுப்பார்த்தாள் நிலாவோ ஆகாஷைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனும் ஷீலாவிடம் நிலா ஏதும் சொல்கிறாளா என்று நிலாவின் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவர்களது பார்வையின் பொருள் புரியாத ஷீலா ‘ப்ரோ நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன்’ என்று அவனை அனுப்பி வைத்தாள்.
ஏய் என்னாச்சுடி நானும் காலையில் இருந்து பார்க்கிறேன் நீ ஆளே சரியில்லை, உனக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு சொல்றாரு ஆனா நீ வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக்கிட்டு குத்துக்கல்லாட்டம் இருக்கிற என்ன நடக்குது இங்க? என்று போலியாக முறைத்தாள்.
ஷீலா இவ்வாறு கேட்டு நிறுத்தியவுடன் நிலா குலுங்கி குலுங்கி சிரிக்கத் தொடங்கினாள் என்னவென்று கேட்ட ஷீலாவிடம் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு மீண்டும் மீண்டும் சிரிக்கத் தொடங்கினால்.
காலையில் தலைக்கு ஏதும் அடி பட்டுதாடி என்று கேட்ட ஷீலாவை முறைத்தாள்.
பின்னே இப்படி லூசு மாதிரி சிரித்தாள் யாராக இருந்தாலும் இப்படித்தான் கேட்பார்கள் என்று பதிலளித்தவளிடம் நடந்தவற்றை கூறினாள் நிலா.
இதைக்கேட்டு ஷீலா சிரிக்கவில்லை பதிலுக்கு ‘ஐ ஆம் சாரி நிலா, நீ கம்பிளைண்ட் செய்யவில்லை இந்த விக்கிதான் செய்திருக்கிறார், மதியம் ப்ரோ கூட நான் பேசினது அவருக்கு பிடிக்கவில்லை அதுதான் ஏதாவது செய்ய வேண்டுமென்று இப்படி செய்திருக்கிறார், சில நேரம் விக்கி இப்படித்தான், என்னை மன்னிச்சிடு என்று நிலாவின் கையை பிடித்தாள்…என்னிடம் வந்து ஆகாஷ் ப்ரோ சொன்னப்ப முதலில் நீ தான் என்று நினைத்தேன் உன்னிடம் பேசுகிறேன் என்று சொன்னேன் ஆனால் நீ இருக்கையில் இருந்து எழுந்து செல்வதைப் பார்த்ததும் தானே பேசிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தார் அதேசமயம் விக்கி கால் செய்து கம்பிளைண்ட் செய்தாகிவிட்டது என்று உன்னிடம் சொல்லச் சொன்னார்.. எனக்கு மனசு கேட்கவில்லை நல்லா திட்டிவிட்டு வைத்துவிட்டேன்’ என்று சோகமாக முடித்தாள்.

‘ஹேய் இட்ஸ் ஓகே ஷீலா, சார் எதுவும் தவறாகச் செய்யவில்லையே.. யாரோ ஒருவருக்காக ஏன் சாரிடம் நீ சண்டை போட்டாய்.. எனக்கு உதவத்தானே அவரே கம்பிளைண்ட் செய்தார்’ என்று சமாதானம் செய்தாள்.
இல்லை நிலா ஆகாஷ் ரொம்ப நல்லவர் நான் என் சகோதரனா தான் நினைக்கிறேன் விக்கி செய்தது மிகவும் தவறு, நான் எப்படி ப்ரோ முகத்தில் முழிப்பதுன்னு எனக்குத் தெரியலை என்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஷீலாவின் அலைப்பேசி அலறியது.
ஆகாஷ்தான் அழைத்தான் நிலாவின் நலம் விசாரித்துவிட்டு வைத்துவிட்டான்.
ஆனால் நிலா ஒன்று மட்டும் புரியவேயில்லை என்று ஷீலா இழுக்கவும் என்ன என்பது போல் அவளையே பார்த்தாள்.
‘சரி விடு எவ்வளவு காலம் மறைக்க முடியும்னு நானும் பார்க்கிறேன்’
‘எதை மறைக்கிறேன்? தெளிவாக பேசு ஷீலா.. யார் மறைப்பது? நீயா? நானா?
’என்னடி அம்பை என்னை நோக்கி விடுற?’
‘பின்னே நீ அந்த டிரைவரிடம் பேசினாள் விக்கி சாருக்கு ஏன் கொபம் வருகிறது? அதற்கு முதலில் பதிலைச் சொல்’ என்று கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு ஷீலாவின் பதிலுக்காகக் காத்திருப்பது போல் பாவனை செய்தாள்’
‘இதைக்கூட புரிந்து கொள்ளாத முட்டாளா என் தோழி’ என்று நிலாவிடமே பதிலைக் கேட்டவள் வெட்கம் தாங்கமாட்டாமல் ஓடிவிட்டாள்.
‘ஹேய் நில்லுடி என்று அவள் பின்னே நிலாவும் ஓட முடியாமல் வேகமாக நடந்தாள்’
வேகமாக இருக்கையில் அமர்ந்த ஷீலா வேலையை முடித்துவிட்டு கிளம்பும் நேரம் நிலாவைப் பார்த்தாள் நிலாவும் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் தான் இன்று விரைவாகச் செல்ல வேண்டும் என்று செய்கை செய்தவள் வேகமாக சென்றுவிட்டாள்.
ஷீலா செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவளின் உருவம் மறைந்ததும் ஒரு பெரு மூச்சுவிட்டாள் வீட்டாரை எப்படி ஷீலா சமாளிக்கப் போகிறாள் என்று யோசித்த நிலா ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு தானும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிச்சென்றாள்.
இவளுக்காக காத்திருந்த சரஸ்வதி போலியாக கோபித்துக்கொண்டார்.
‘சாரி சரஸு, நான் தான் சொன்னேன் இல்லை லீவு கிடைக்களைன்னு.. என்ன காலேஜுக்கா போய்கிட்டு இருக்கிறேன் கேட்டதும் லீவு கிடைக்க… இதுக்கு போய் முகத்தை தூக்கி வைத்தால் எப்படி’ என்று இருவருக்கும் பரிமாறத் தொடங்கினாள்.
உணவு உண்ணத்தொடங்கியதும் நிலாவிற்கு அன்று மதியம் நடந்தது நினைவிற்கு வந்தது அதன் தொடர்ச்சியாக மாலை நடந்ததும் நினைவிற்கு வரவே அவள் தன்னையும் அறியாமல் சிரித்து விட்டாள்.
எதுவும் பேசாமல் தட்டையே பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி நிலாவின் விசித்திரமான சிரிப்பால் யோசனையாக நிலாவைப் பார்த்தார். தாய் தன்னை கவனிப்பதை உணர்ந்த நிலா மெதுவாக சரஸ்வதியிடம் திரும்பி ‘அது ஒன்னுமில்லை மம்மி, கேண்டீன்ல இந்த ஷீலா…என்று அவள் தொடங்கவும்’ சரஸ்வதியின் முகபாவனை எதையோ உணர்த்துவது போல் தோன்றவே ‘என்ன மம்மி இன்னைக்கு டெரர் லுக் தராங்க என்று தட்டைப் பார்த்தாள்.. அதில் சாதம் சிறிதளவும் பொரியல் சாப்பாட்டின் அளவிலும் இருந்தது.. அச்சச்சோ மம்மி.. சாரி சாரி.. நான் ஏதோ யோசனையாய்’ என்று இழுத்தாள்.
ஒன்றும் பேசாமல் எழுந்து சென்ற சரஸ்வதி, சரியான அளவில் சாதத்தையும் பொரியலையும் எடுத்து வந்து உட்கார்ந்தார்.
ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த நிலாவை சாப்பிடுமாறு செய்கை செய்தவர் தானும் உண்ணத்தொடங்கினார். உணவு உண்டுவிட்டு தனது அறைக்குச் சென்ற நிலாவை பின்தொடர்ந்த சரஸ்வதி அவளின் அருகில் அமர்ந்து நிலாவின் தலையைக் கோதினார்.
ஒன்றும் புரியாத நிலா அன்னையின் மடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டாள். சிறிது நேரம் தலை கோதிவிட்டு நிலாவைப் பார்க்கவும் அவள் விரல்களை ஒவ்வொன்றாக மடக்குவதும் விரிப்பதுமாக இருந்தாள்.
‘நிலா வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது நாம் நினைப்பதுபோல் பலநேரங்களில் அமைந்து விடாது. எதையும் யோசித்து செய்.. காலையில் சித்தர் சொன்னதும் நீ இப்போ நடந்து கொள்வதும் எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது’ என்று நிறுத்தினார்.
‘சித்தரா? அவர் என்ன சொன்னார் மம்மி?’
பெருமூச்சு விட்ட சரஸ்வதி ‘ஒன்றுமில்லை நிலா நான் ஒன்றே ஒன்றுதான் உன்னிடம் கேட்கிறேன், மனதில் யாரையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்றால் அடியோடு மறந்துவிடு உனக்கு ஏற்ற பையனை பார்க்கும் பொறுப்பு என்னுடையது இதை மட்டும் என்றும் மனதில் வைத்துக்கொள், அம்மா காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டேன், புரிந்துகொள்’ என்று கூறிவிட்டு அவள் கண்ணத்தில் முத்தமிட்டுவிட்டு படுக்கை அறைக்குச் சென்றுவிட்டார்.
தாயின் பேச்சில் இருந்த வருத்தம் கலந்த கண்டிப்பில் நிலா முற்றிலும் குழம்பினாள். நான் என்ன தவறு செய்தேன்? ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசுகிறார்? சித்தர் என்ன சொன்னார்? என்று ஆயிரம் கெள்விகள் அவள் மனதில் எழுந்தது. எத்துனைமுறை யோசித்தும் அவளுக்கு பதில் கிடைக்கவில்லை ஆனால் அவள் மனதில் என்றும் இல்லாத புத்துணர்ச்சி தோன்றியது.
தாயின் வார்த்தைகள் அவளைப் பெரிதாக பாதிக்கவில்லை உறங்குவதற்காக முயற்ச்சி செய்தவள் முற்றிலும் தோல்வியைத் தழுவினாள். என்ன செய்யலாம் என்று யோசித்தவள் வழக்கமாக துணைக்கு அழைக்கும் தோழியான தனது டைரியை நாடினாள். அவள் மிகவும் சந்தோஷமாக அல்லது துக்கமாக தோன்றும் பொழுதெல்லாம் அதனை எடுத்து கடந்த காலத்தில் தான் அதில் எழுதியவற்றை வாசிப்பாள் சில சமயங்களின் தனது மனதில் தோன்றுவதை அதில் எழுதியும் வைப்பாள். தாயிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளாதவள், டைரியிடம் எந்த தடையும் என்றி மனதில் தோன்றியவற்றையெல்லாம் கொட்டி தீர்த்து விடுவாள். இன்றும் அவள் அதையே செய்தாள். என்ன எழுதினாள் என்பது அவளுக்கே தெரியாது எழுதிமுடிந்ததும் தூக்கம் கண்ணைத் தழுவியது, டைரிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டாள்.
காலையில் வழக்கம்போல் தாயிடம் செல்லச் சண்டைகள், சீண்டல்கள் என்று சரஸ்வதியை வெறுப்பேற்றிவிட்டு வேலைக்கு கிளம்பிச் சென்றாள். மகள் சென்றதும் முந்தைய நாளில் நடந்தவற்றை மனம் அசை போட ஆரம்பித்தது.

‘மனதைத் திற உயரப் பற’ என்று சித்தர் மகளிடம் கூறியது நிலாவின் மனதில் யாரோ இருக்கிறார் என்று அர்த்தம் புரிந்து கொண்ட சரஸ்வதி வெகுவாக வருத்தப்பட்டார். தன்னுடைய நிலை எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்த சரஸ்வதிக்கு தன் மகளின் வாழ்வும் தன்னைப் போலவே ஆகிவிடுமோ என்ற எண்ணம் சூழ்ந்தது.
மகள் தனது சொல்பேச்சு கேட்பாள் ஆனால் தன்னைப் போல் நிலாவும் தன்னை எதிர்த்து நின்றால் என்ன செய்வது என்ற யோசனையுடன் இருந்தவர் விரைவாக வீட்டிற்கு வந்து நிலாவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஜோசியரைக் காணச் சென்றார். அங்கும் அவருக்கு மன வருத்தம் தான் மிஞ்சியது நிலாவின் திருமணம் இரண்டு மாதத்திற்குள் நடக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அடுத்த பத்து வருடங்களுக்குப் பிறகுதான் அதற்கான காலம் என்றும் இடியை இறக்கினார். சரஸ்வதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை யாரிடம் புலம்புவது சென்றமுறை வந்த போது தான் நிலாவின் வேலையைக் குறித்து மட்டும் கேட்டுவிட்டுச் சென்றது எத்தகைய மடத்தனம் அன்றே சிறு கருதலுடன் இருந்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இப்பொழுதுதான் நிலாவும் படித்து முடித்தாள் அதற்குள் எப்படி மணம் முடித்து கொடுப்பது என்று பல சிந்தனைகள் அவரைத் தாக்கியது.
மனவருத்தத்துடன் வீட்டிற்கு வந்தவர் நிலாவின் பிறந்த நாள் என்பதால் அவளுக்கு பிடித்தவற்றை சமைத்து அவளுக்காக காத்திருந்தார். காலையே நிலாவிற்கு விடுப்பு கிடைக்காது என்று தெரிந்திருந்தால் அவர் மதிய உணவை செய்து கொடுத்திருப்பார் அதுவும் இந்த முறை இயலவில்லை இனி அடுத்த பிறந்த நாளிற்கு மகள் தன்னுடன் இருக்க மாட்டாள் என்று நினைத்தவர் வருத்ததின் எல்லைக்கே சென்றார். இத்தகைய வருத்தத்துடன் இருந்தவருக்கு மகளின் நடவடிக்கையும் சரியாகப் படவில்லை அதனால்தான் என்னவென்று நிலாவிற்கு விளங்காவிட்டாலும் தான் சொல்ல நினைத்ததை மறைமுகமாகச் சொன்னார் அதனை எதிர்த்து நிலா ஒன்றும் பேசாதது கூட அவரின் உறக்கத்தைக் கெடுத்தது.
அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தவர் எப்பொழுது உறங்கினார் என்றே தெரியவில்லை வீட்டின் அழைப்புமணி ஒளித்ததும்தான் அவருக்கு விழிப்பு வந்தது. நிலாதான் திரும்பி வந்து விட்டாளோ ஏதேனும் மறந்திருக்கக்கூடும் என்று கதவைத் திறந்தவருக்கு அங்கு தனது வயதை ஒத்த பெண்மணி நிற்கவே யார் இவர் என்று யோசனையுடன் ’யார் நீங்க/’ என்றார்.
அந்தப் பெண்மணியோ சிறு புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நிலாவின் பர்ஸ் அவருக்கு கோவிலிருந்து கிடைத்ததாகவும் அதனை திருப்பிக் கொடுக்க வந்ததாகவும் கூறினார். அதனை வாங்கி உறுதி செய்துகொண்ட சரஸ்வதி ‘நன்றிங்க, இந்த காலத்தில் உங்களைப் போன்று மனிதர்களைப் பார்ப்பது அரிது. வீடுதேடி வந்து தந்ததற்கு மிகவும் நன்றி, உள்ளே வாங்க ஒரு கப் டீ குடித்துவிட்டு போகலாம் என்று அழைத்தார்.
அதனை மறுக்காமல் உள்ளே வந்தவரை உட்காருமாறு கூறிவிட்டு சமையலறைக்குச் சென்று விரைவாக டீ போட்டுக் கொண்டுவதார்.
உங்களை இதற்கு முன்பு எங்கோ பார்த்த ஞாபகம் என்று அப்பெண்மணி கூறவும் சரஸ்வதி மெலிதாக சிரித்துவிட்டு ‘நான் உங்களை இப்பொழுதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன்’ என்று பதிலளித்தார்.
நிலாவைப் பற்றி புகழ்ந்து தள்ளியவர் தனக்கு வரப்போகும் மருமகள் நிலாவைப் போன்ற பெண்ணாக இருக்க வேண்டுமென்று தான் தினமும் வேண்டிக்கொள்வதாகவும் கூறினார். அந்த பெண்மணியின் தோற்றத்தையும் அவர் வந்திருந்த காரை வைத்தும் அவர் பெரிய பணக்காரர் வீட்டு பெண் என்று கணித்த சரஸ்வதி ஒரு நொடி பொழுதில் தனக்கு தோன்றிய எண்ணத்தை அந்த நிமிடமே கைவிட்டார்.
பொதுவாக பேசிவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். பெரிய இடத்து பெண்ணாக இருந்தும் எந்த ஒரு பகட்டும் இல்லாமல் அவர் பேசியது சரஸ்வதிக்கு இதமாக இருந்தது. அவருக்கு தெரிந்த சில கசப்பான பெரிய இடத்து மனிதர்களிடமிருந்து இவர் முற்றிலும் வித்தியாசமாகத் தெரிந்தார்.

அவர் கிளம்பிச் சென்றது மீண்டும் சரஸ்வதியின் துயரங்கள் சூழ்ந்து கொள்ள தனது தினசரிகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-7

வேலைக்குச் சென்ற நிலா தனது தாய் புலம்பியதை ஷீலாவுடன் பகிர்ந்து கொண்டாள். அப்பொழுது ஷீலா சொன்ன விளக்கத்தைக் கேட்டதும் தான் நிலாவிற்கு தாய் எது குறித்து கூறினார் என்றே விளங்கியது.
‘நேற்று நான் கேட்ட கேள்விக்கு கோவப்பட்ட, இப்போ அது உண்மையாயிடுச்சு தானே?’
‘என்ன கேள்வி, ஏன் யாருமே ஒழுங்கா நேரடியா பேச மாட்டீங்கறீங்க?’
’ஹப்பா, எவ்ளோ சிவப்பு, நிலா வெள்ளையா இருக்கும் சிகப்பா இப்போதான் பார்க்கிறேன்’
‘..’
‘என் தோழி முட்டாளான்னு கேட்டேன், இன்னைக்கு உண்மைன்னு நிரூபிச்சிட்ட’
’உன்னை …’
‘என்னை…’
‘பொருள் பொதிந்த பேச்செல்லாம் எனக்கு வராது எதுவாக இருந்தாலும் நேரடியா பேசினால் தான் புரியும்’
‘கண்ணால் பேசினால் புரியுமோ?’
‘என்னடி உளருரே?’
‘சரி விடு, நீதான் நிரூபிச்சிட்டியே..உன்கிட்ட பேசி பிரயோஜினம் இல்லை ஆனால் ஒன்று நிலா பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?’
‘எல்லாம் தெரியும், வெட்டியா பேசாம போயி வேலையைப் பார்’
‘இது என்னடி புதுக்கதை நீதான் என்னை கூப்பிட்டு அம்மா புலம்புராங்கன்னு அழுத’
‘அழுதேன்னா?’
‘அழுத மாதிரி தான் இருந்தது’
‘சரி போய் வேலையை கவனி, அழுததாகவே இருக்கட்டும்’
‘அது’ என்று செய்கை செய்துவிட்டு இருக்கைக்கு செல்ல முற்பட்டவள் ஏதோ ஞாபகம் வரவே மீண்டும் நிலாவிடம் வந்தாள்.
‘இப்போ என்ன?’
‘மெயில் செக் செய்தியா?’
‘இல்லை, இனிமேல் தான்’
‘ஓகே, கல்சுரல்ஸ்க்கு பெயர் குடுக்கச் சொல்லி மெயில் வந்திருக்கு. என் ப்ரோ செம ஸ்மார்ட் எடுத்த காரியத்தை கரெக்டா முடிச்சுக்கொடுத்திட்டார் வேற யாராவதா இருந்தா கம்பிளைண்ட் செய்ததற்கு சண்டைக்கு வந்திருப்பாங்க.. ஹ்ம்ம்’ என்று பெரு மூச்சுடன் நிலாவின் பதிலுக்கு காத்திருக்காமல் சென்றுவிட்டாள்.
அதே நேரம் மின்னஞ்சல் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்த நிலாவிற்கு ஷீலா கூறிய அறிவிப்பு மின்னஞ்சல் கிடைத்தது. பாட்டு பாடுவதற்கு பெயர் கொடுக்கலாம் என்று நினைத்தவளுக்கு ஏனோ தயக்கமாக இருந்தது. முந்தைய தினம் ஆகாஷ் அவளிடம் வந்து கோபமாக கேட்டது அதன் பின்னர் பதட்டமாக ஷீலாவை அழைத்தது என்று சிறிது நேரத்தில் பலவிதமான பரிமாணங்களைக் கண்டாள்.
ஏன் கோபப்பட்டான், ஏன் வருத்தப்பட்டான், ஏன் பதட்டமாக இருந்தான் என்று புரியாமல் தான் நிலா அவனையே பார்த்தாள். அவளால் எதையும் கணிக்க முடியவில்லை முதலில் தனக்கு அவன் மேல் தோன்றிய கோபம் இப்பொழுது அவனை நினைக்கையில் ஏன் தோன்றவில்லை என்று பல சிந்தனைகள் அவளைச் சுற்றியது. சுற்றத்தை மறந்தவள் தனது அலைப்பேசி மணி கேட்டதும் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
சரஸ்வதிதான் அழைத்து நிலாவின் பர்ஸ் கிடைத்தாகவும் சற்றுமுன் நடந்தவற்றை விவரித்து விட்டு வைத்துவிட்டார். பர்ஸ் தொலைந்த விவரம் தாயிடம் மறைத்திருந்தாள் நிலா. மாலையில் சரஸ்வதிக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக்கொண்டே கணிணியை வெறித்துக்கொண்டிருந்தாள்.
அருகிலுள்ள பெண் நிலாவின் முகத்திற்கு முன்பாக கையை ஆட்டி ‘என்ன பகல் கனவா? காதல் கனவா?’
திரு திரு என்று முழித்த நிலாவிடம் ‘ஹேய் கூல், ரிலாக்ஸ்..ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்றுவிட்டு நகர்ந்துவிட்டாள்.
சிறிது நேரம் யோசித்தவள், பாட்டு பாடுவதற்கு பெயர் குடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தாள். நேற்று ஒரே நாளில் பலவிதமான குழப்பங்கள் நடந்து விட்டது.. இனி எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் யோசிக்காமல் பழைய நிலாவாக மாற வேண்டும் என்ற முடிவுடன் வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.
மதிய உணவு இடைவேளையின் போது ஷீலா வழக்கம் போல் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் ஆனால் நிலா தனியாக ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு ஓய்ந்து போன பிறகுதான் ஷீலாவிற்கு புரிந்தது தான் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது. நிலா யாரையோ பார்ப்பதும் உணவை உண்பதுமாக இருந்தாள். இவள் யாரை அப்படி பார்க்கிறாள் என்று நிலாவின் பார்வை சென்ற திசையைப் பார்த்தவளுக்கு அங்கு ஆகாஷ் அமர்ந்திருப்பது கண்ணில் பட்டது
‘ம்ம்க்கும்.. என்று தொண்டையை சரி செய்வது போல் ஷீலா நிலாவின் மோன நிலையை கலைத்தாள்.
‘என்ன மேடம் பார்வை பலமா இருக்கு’
‘ஷீலா, எனக்கு ஒரு உதவி’
‘கேட்டதற்கு பதில் வரவில்லை மேடம்’
‘நீ என்ன கேட்கிறன்னு புரியுது அதற்கு பதில் அளிக்க எனக்கு நேரமில்லை யூ ஸி’
‘ஓஹோ’
‘உதவ முடியுமா முடியாதா?’
‘சரி சொல்லு முடியுமா முடியாதான்னு சொல்றேன்’
‘அந்த டிரைவர் கிட்ட போய் சாரி சொல்லனும்’
‘நான் எதுக்கு சாரி சொல்லனும்’
‘நீயில்லை நான்’
‘நீ எதுக்கு சாரி சொல்லனும்’
‘என்னடி உளர, நான் தான் கம்பிளைண்ட் செய்ததாய் நினைச்சிட்டு நேற்று’
‘இட்ஸ் ஓகே, நான் எல்லாவற்றையும் சொல்லியாகி விட்டது, சாரியும் சொல்லிட்டேன், என் ப்ரோ ஜெண்டில்மேன் எல்லாத்தையும் அப்பவே மன்னிச்சு மறந்திட்டார்’
’என்னது மறந்திட்டாரா’
‘ஆமாம், அதுக்கு ஏன் நீ ஃபீல் பண்ற என்னவோ உன்னை மறந்திட்டது போல’
‘லூசு என்று அவளைக் கிள்ளி வைத்தாள்’

‘ஆ வலிக்குதுடி கழுதை’
’வலிக்கட்டும், ஓவரா பேசினால் இப்படிதான். எனக்கென்னமோ அவர் மறந்தது போல தெரியலை’
‘எதை வைத்து சொல்ற’
‘மறந்திருந்தா நம்மைப் பார்த்ததும் நேற்று மாதிரி இங்கு வந்து உட்கார்ந்து சாப்பிட்டிருப்பார்’ என்றவளை ஏதோ விசித்திரமான ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள் ஷீலா.
‘உன் மனசில் என்ன நினைச்சிட்டிருக்க?’
‘ஏன் ஏதும் தப்பா பேசிட்டேனா?’
‘முதலில் கேள்விக்கு பதில் சொல்லி பழகு’
‘முதலில் நேரடியா பேசி பழகு’
’—’
‘—’
‘நேற்று சுற்றியும் இடம் காலியில்லாமல் இருந்தது சோ நம்ம டேபிளில் உட்கார்ந்தார் இன்று பல டேபிள் காலியாக இருந்தது அதனால் அவர் இங்கு உட்காரவில்லை, போதுமா?’
’---’
‘உனக்கு நம்பிக்கை இல்லைனா நான் வேணா கேட்டு சொல்லவா’
’அய்யோ! வேண்டாம் தாயே நான் நம்பிட்டேன்’
‘அது மட்டும் இல்லை நிலா’ என்று நிறுத்தியவளை ஆவலாக பார்த்தாள் நிலா.
‘விக்கி கொஞ்சம் பொஸஸிவ் சோ பார்த்து நடந்துக்கோன்னு எனக்கு அட்வைஸ் பண்ணார், அதனால்தான் விலகி இருக்கிறார். இனிமேல் பார்த்தால் ஒரு சின்ன ஸ்மைல் அதோடு நிறுத்திக்கலாம்ன்னு சொன்னார் எல்லாம் இந்த விக்கியினால் வந்தது. காலையில் மெயில் பார்த்ததும் கால் செய்யலாம்னு நினைத்தேன் பிறகு வேண்டாம்னு தோணிச்சு ஜஸ்ட் ஒரு தேங்ஸ் மெஸேஜ் மட்டும் அனுப்பினேன்’.
‘ஓ’ என்று சொன்னவள் குணிந்து உண்ணத் தொடங்கினாள்.
‘’நீ ஏதும் குழப்பிக்காத, மன்னிப்பு கேட்கிற அளவு நீ ஏதும் தவறு செய்யவில்லை’
‘ஆம் என்பது போல் தலையை ஆட்டியவள் மொளனமாக உண்டு முடித்துவிட்டு இருக்கைக்குச் சென்று வேலையில் மூழ்கினாள்.
மாலை வீட்டிற்கு சென்று அன்னையிடம் எப்படி பர்ஸ் தொலைந்தது குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பது என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றவளுக்கு சரஸ்வதி காட்டிய முகம் புதிதாக இருந்தது.
மொளனமாக வரவேற்ற சரஸ்வதி காபி கலந்து நிலாவிடம் கொடுத்துவிட்டு இரவு உணவு தயார் செய்யச் சென்றார். தப்பித்தோம் என்றிருந்தது நிலாவிற்கு, சிறிது ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே பாட்டு கேட்டுக்கொண்டே உறங்கிவிட்டாள். எத்தனை நேரம் உறங்கினாள் என்பதே சரஸ்வதி இரவு உணவிற்கு நிலாவை அழைத்த போது தான் தெரிந்தது.
மணி எட்டாயிடுச்சு நிலா எழுந்து சாப்பிட வா, என்ன இது என்றைக்கும் இல்லாமல் இப்படி தூங்குற? என்று நிலாவின் கால் அருகே அமர்ந்து கூப்பிடவும் விடிந்து விட்டது என்று அடித்து பிடித்து எழுந்தவளைப் பார்த்து சரஸ்வதி வாய் பொத்தி சிரித்தார்.
’என்னாச்சு நிலா?’
’சாரி மா ஏதோ யோசனையாய் படுத்தேன் தூங்கிவிட்டேன் போல’
’சரி சரி எழுந்து வா’
இருவரும் மொளனமாக உண்டு எழுந்தனர். தனது அறைக்கு திரும்பிய நிலாவிடம் ‘இந்தா நிலா உன்னுடைய பர்ஸ்’ என்று தொலைந்த பர்ஸை நீட்டினார்.
‘தேங்ஸ் மா’
‘என்னைக்கு பர்ஸ் தொலைந்தது நிலா, என்கிட்ட நீ சொல்லவே இல்லை’
‘ஹீ ஹீ ஹீ எனக்கே நீ கூப்பிட்டு சொன்னப்பத்தான் தெரியுமா பர்ஸ் தொலைத்த விஷயம், அதில் வெறும் போட்டோஸ் தான் இருந்தது முக்கியமான பொருள் எல்லாம் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்தேன் என்று சமாளித்தாள்’
‘சரி நிலா பொருளை பத்திரமா வைச்சுக்கோ நீ கல்யாணம் ஆகி வேறொரு வீட்டிற்கு போகப் போகிற பெண்’
‘அம்மா..’
‘சரி சரி நீ படித்த பெண் பார்த்து பத்திரமா இருந்து கொள் நான் சொல்வதற்கு ஏதும் இல்லை’ என்ற அன்னையை கட்டியணைத்து ’என்னை பார்த்துக்கத்தான் நீ இருக்கியே சரஸு’ என்று கண்ணத்தில் முத்தம் இட்டுவிட்டு தனது அறைக்குச் சென்று கதவை பூட்டிக்கொண்டாள்.
தனது அறைக்கு திரும்பிய சரஸ்வதிக்கு தூக்கம் வரவில்லை அதே நிலைமைதான் நிலாவிற்கும். புரண்டு புரண்டு படுத்தவள் ஒரு கட்டத்தில் எழுந்து அமர்ந்து தனது தோழியிடம் மனதில் இருந்தவற்றை எழுதித் தீர்த்தாள். விடியல் வரை எழுதியவள் விடியத் தொடங்கும் தருவாயில் தன்னையும் அறியாமல் உறங்கிவிட்டாள்.
விடிந்தும் உறக்கம் வராமல் அவதிப்பட்டவர் சரஸ்வதி தான். எங்கிருந்து தொடங்குவது, வருடக்கணக்கில் தேடினாலும் மாப்பிள்ளை கிடைப்பது மிகவும் கஷ்டம் இதில் எத்துனை விஷயங்கள் பார்க்க வேண்டி இருக்கிறது. பெண் பிள்ளையை கண்ணை மூடிக்கொண்டு மணம் முடித்துக் கொடுக்க முடியுமா? அப்பப்பா நினைத்தாளே நெஞ்சு அடைக்கிறதே என்று மணியைப் பார்த்தவர் அது காலை ஆறு மணியைக் காட்டியதும் அடித்து பிடித்து எழுந்தார்.
வேகமாக சமயலை முடித்தவர், வழக்கம் போல் நேரம் கடந்தும் எழாமல் இருக்கும் மகளை நினைத்து கோபமும் வருத்தமும் கொண்டார். வேகமாக நிலாவின் அறைக்குச் சென்றவர் இரண்டு அடி கொடுத்து ‘எழுந்திரு நிலா, எத்தனை முறை சொல்வது சமயத்திற்கு தூங்கி எழ வேண்டும்’ என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.
அடிவாங்கிய அதே வேகத்தில் எழுந்தவள், வேகமாக தயார் ஆகி வேலைக்குக் கிளம்பிச் சென்றாள். அந்த வார இறுதியில் அனைவரும் காத்திருந்த விழா நடைபெற உள்ளதை நினைத்து அலுவலகமே உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தது. கேண்டீன், கார் நிறுத்தும் இடம் என அனைத்து இடங்களிலும் இரகசியமாக நிலா ஆகாஷைத் தேடினாள் ஆனால் அவன் நிலாவின் கண்ணில் படவேயில்லை. என்னதான் ஷீலா மன்னிப்பு கேட்டிருந்தாலும் தானும் ஒரு முறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவளது மனம் துடித்தது.
விக்கி இல்லாததினால் ஷீலாவின் கலகலப்பும் சற்று குறைந்திருந்தது. எத்துனை முறை வற்புறுத்திய போதும் நிலா பாடுவதற்காக பெயர் குடுக்கவில்லை. இவ்வாறு நாட்களும் நகர்ந்தது.
ஒரு புறம் சரஸ்வதி மன வேதனையில் மூழ்கிக்கொண்டிருந்தார், அவருக்கு உறவினர் என்றும் யாரும் இல்லை தெரிந்தவர்கள் எல்லாம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான்., நண்பர்கள் என்றும் எவரும் இல்லை வேலை பார்த்த சமயம் அவருடன் பணிபுரிந்தவர்கள் தான் அவருக்கென்று இருக்கும் நண்பர்கள், சில தோழிகளுக்கு திருமண வயதில் மகன் மற்றும் அவர்களின் உறவினர் வழி ஆண் பிள்ளைகளும் இருப்பதாக பேசுவதெல்லாம் உண்டு ஆனால் திருமணம் என்று வரும் பொழுது வரதட்சணை, சீர் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மறைமுகமாக தாங்கள் இதில் தலையிடப் போவதில்லை என்றெல்லாம் பேசக் கேட்டிருக்கிறார். கல்யாண தரகர்களிடமும் நிலாவின் விவரங்களைக் கொடுத்தாயிற்று ஆனால் அனைவரின் கேள்வியும் ஒன்றாகத்தான் இருந்தது. வரதட்சணை எவ்வளவு தேறும்? என்பது தான்.
இரு மனங்களை இணைக்கும் திருமணத்தை நடத்த எத்தனை பாடு என்று சரஸ்வதிக்கு இப்போது தான் புரிய ஆரம்பித்தது. தான் எத்துனை பெரிய தவறை இழைத்திருக்கிறோம் என்று அவர் உணரத்தொடங்கினார். அனைத்து வழிகளும் அடைக்கப்படுவதாக உணர்ந்தவர் தனக்கு ஆறுதல் தரும் கோவிலுக்குச் சென்றார். இறைவனிடம் தனது கஷ்டத்தை பகிர்ந்தவர், சிறிது மன பாரம் குறைந்தது போல் உணர்ந்தார். அங்குள்ள தூணில் சாய்ந்து அமர்ந்தவர் நிலா இன்று தனது அலுவலகத்தின் இருப்பத்தைந்தாம் ஆண்டு நிறைவு விழா நடை பெறுவதாகவும் அதனால் தான் வருவதற்கு தாமதமாகும் என்று கூறியதும் நினைவிற்கு வந்தது. இன்று தங்களுடன் ஷீலாவும் வீட்டிற்கு தங்க வருவாள் என்றும் கூறியிருந்தாள். தன்னைப்போல் மகளுக்கும் நண்பர்கள் என்று யாரும் இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது. சரஸ்வதிக்கு தெரிந்த வகையில் ஷீலா மட்டும்தான் நிலாவின் தோழி வேறு எந்த பெயரையும் அவள் கூறிக்கேட்டதில்லை.

உறவினர்களும் நண்பர்களும் நிலாவின் திருமணத்தால் மட்டும்தான் இனி தங்களுக்கு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டவர் பெருமூச்சு விட்டார்.
எபிசோட்-12
‘என்னங்க மூச்செல்லாம் பலமா இருக்கு, ஏதும் யோசனையா?’
‘நீங்களா மேடம், எப்படியிருக்கீங்க?’
‘சரியா சொல்லனும்னா நான் நல்லா இல்லீங்க. எல்லாம் இருக்கு ஆனால் ஏதும் இல்லாத நிலை தான் எனக்கு’
இரண்டாவது முறையாக பார்க்கும் தன்னிடம் எந்த தடையும் இன்றி தனது நிலைமை விளக்கும் அந்த பெண்மணியிடம் நட்புணர்வு தோன்றியது.
‘எல்லாம் சரியாகிடும், கடவுள் எதற்கு இருக்கிறார். அவர் மேல் பாரத்தைப் போடுங்க’
‘சரியா சொன்னீங்க, எனக்கு ஆறுதல் சொன்னவங்க கொஞ்சம் முன்னாடி வருத்தப்பட்டது போல இருந்தது’
’ஆம்’ என்பது போல் தலை ஆட்டினார் சரஸ்வதி.
’கவலை படாதீங்க நம்ம குறையை அந்த கடவுள் தீர்த்து வைப்பார், அதுவரை மனம் தளராமல் இருக்க அவரிடம் வேண்டிக்கொள்வோம்’ என்று நம்பிக்கை அளித்தார்.
அதற்கும் ’ஆம்’ என்று தலையை ஆட்டினார் சரஸ்வதி.
‘நிலா எப்படி இருக்கா?’
‘நல்லா இருக்கா’
‘எங்க வீட்டிற்கு நீங்களும் குடும்பத்தோட ஒரு நாள் வாங்க, எனக்கு என்னமோ உங்களையும் நிலாவையும் பார்க்கையில் என் சொந்தங்களைப் பார்ப்பது போல் இருக்கு’
‘கண்டிப்பா வருகிறோம் என்றவர் தான் கிளம்புவதாகக்கூறி எழ முற்படுகையில் தலை சுற்றுவது போல் தோன்றவே தூணை பிடித்துக்கொண்டார்’
‘என்னாச்சுங்க, என்ன பண்ணுது’’ என்ற வார்த்தைகள் எங்கோ தொலைவில் கேட்பதைப்போல் இருந்தது சரஸ்வதிக்கு.
கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விக்கியும் ஷீலாவும் பிரிந்திருந்த நாட்களின் ஏக்கத்தைத் தீர்க்க விழா நடக்கும் அரங்கின் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். நிலாவும் அவளுடன் வேலை செய்யும் சிலரும் அரங்கின் உள்ளே அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் காத்திருந்தது மின்னஞ்சலில் குறிப்பிட்ட அறிக்கைக்காகத்தான். கலை நிகழ்ச்சியை ரசிப்பதும் தங்களுக்குள் இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்று பேசிக்கொள்வதுமாக இருந்தனர்.
யாரோ தன்னை பார்ப்பது போன்று உள்ளுணர்வு தோன்றவும் நிலா தன்னைச் சுற்றி ஒரு முறை பார்வையிட்டாள். அப்போதுதான் தொலைவிலிருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷைப் பார்த்தாள். ஆயிரம் விளக்குகள் அவள் முகத்தில் ஒளிர்ந்தது கலை அரங்கின் கதவருகே மார்பின் குறுக்கே இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு தன்னையே நொக்கிக் கொண்டிருந்தவனை பார்த்ததும் நாணம் வந்தது ஆனால் அதன் காரணம் புரியவில்லை, ஆராயவும் இல்லை. அந்த உணர்வு அவளுக்குப் பிடித்திருந்தது.
மீண்டும் ஒருமுறை பார்க்கத் தோன்றியதும் யதார்த்தமாக பார்ப்பது போல் மெதுவாக நிலா பார்க்கையில் ஆகாஷ் நிலாவை வருமாறு செய்கை செய்தான், தன்னைத்தான் அழைக்கிறானா என்று சுற்றிலும் பார்த்தாள்.
அவன் மெலிதாக சிரித்துவிட்டு ‘உன்னைத்தான்’ என்று மீண்டும் செய்கையில் காண்பித்தான்.
‘டென் மினிட்ஸ், நான் வந்திடறேன் கைய்ஸ்’ என்று கூறிவிட்டு மந்திரித்து விட்ட கோழி போல அவனை நோக்கிச் சென்றாள். முகமெல்லாம் புன்னகையுடன் அவன் அருகில் சென்றவள் என்ன பேசுவது என்று தெரியாமல் அவனைப் பார்த்தாள்.
‘ஜாலியா இருக்க போல?’
இதற்கு என்ன பதில் அளிப்பது, இங்குள்ள அனைவரும் அதைத்தானே செய்கிறார்கள் சுற்றியும் பார்வையை சுழற்றினாள் யாரும் துக்கமாக இருப்பது போல் தெரியவில்லை. இவன் என்ன உத்தேசத்தில் கேட்கிறான், முகத்தில் சிரிப்பில்லை கேள்வியில் ஏதோ முள் தைப்பது போன்று தோன்றியது.
ஒருவேளை வேலையில் இருந்து நீக்கி விட்டார்களோ? அதுதான் அலுவலகத்தில் காண முடியவில்லையோ? இப்போது கூட வாயிலில் நிற்கிறான் உள்ளே வரவில்லை.
‘ச்ச அப்படி இருக்காது என்று நினைத்தவள் வேகமாக இருக்காது என்று தலையை ஆட்டினாள்’
‘என்ன ஜாலியா இல்லையா? பார்த்தா அப்படி தெரியலியே’
’ஓ மனசில் நினைக்கிறதா வெளியில் ரியாக்‌ஷன் காட்டிவிட்டேனோ’.
’என்ன பதிலைக் காணோம்’
அதேசமயம் பிரபல இசை அமைப்பாளரும் பாடகருமான அந்த இளைஞன் மேடை ஏறியதும் ஒரே ஆரவாரமாக இருந்தது. திடீரென மாறிய சூழல் எதனால் என்று நிலா மேடையை நோக்கினாள்.
அந்த இளைஞன் தனது புதிய பாடல்கள் சிலவற்றை கோர்வையாகப் பாடத்தொடங்கியதும் அரங்கம் முழுதும் அதற்கேற்றவாறு தாளத்தோடு கை தட்டத் தொடங்கியது.
‘பிடிச்சிருக்கா’ என்று ஆகாஷ் கேட்டதும் நிலாவின் இதயம் ஒருமுறை நின்று துடித்தது.
‘எ..என்ன கேட்டீங்க?’
’அவர் பாடின பாடல்கள் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்’
‘ஆமாம், அமேசிங் ஸிங்கர்’
பாடல் முடிந்ததும் அந்த பாடகர், அரங்கில் உள்ள யாரேனும் தன்னுடன் பாட விருப்பம் இருந்தால் கை உயர்த்துமாறு கூறினார். பலர் நான் நீயென்று போட்டி போட்டுக்கொண்டு கை உயர்த்தினர்.
மேடையை பார்த்துக்கொண்டிருந்த நிலாவின் காதருகே குனிந்த ஆகாஷ் ‘நிலா துணி கிழிந்திருக்கிறது கவனிக்கவில்லையா’ என்று கேட்டான்.
அதைக்கேட்டு அதிர்ந்த நிலா எங்கே என்றதும் அவளின் இடை பக்கமாக கையைக் காட்டினான். பதட்டத்தில் நிலா கையை உயர்த்தி எங்கே கிழிந்திருக்கிறது என்று குனிந்து பார்த்தாள். அதே சமயம் மேடையிலிருந்த அந்த பாடகர் ‘தட் கேர்ள் ஸ்டேண்டிங் இன் தி எண்ட்ரன்ஸ், யெஸ் ப்ளீஸ் கம் டூ தி ஸ்டேஜ்’
ஒளி விளக்குகள் நிலாவை நோக்கி பாய்ந்தது, ஆடை எங்கே கிழிந்திருக்கிறது என்று தேடிக்கொண்டிருந்தவள் வெளிச்சம் முகத்தின் மேல் படவும் என்னவென்று தலை நிமிர்ந்து பார்த்தாள். நிலாவின் கை மேல் நோக்கியிருந்தது அனைவரும் தன்னைப் பார்ப்பது புரிந்தது ஆனால் ஏன் என்று புரியவில்லை.
’என்ன’ என்று கேள்வியாக ஆகாஷைப் பார்த்தாள்.
‘நீ தான் அவர் கூட பாட கையை உயர்த்தின, அதுதான் உன்னை மேடைக்கு கூப்பிடுகிறார்’ என்றதும் தான் நிலாவிற்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.
கொலை வெறியுடன் ஆகாஷைப் பார்த்தாள், தான் ஏதும் செய்யவில்லை என்று செய்கை செய்தான்.
முடியவே முடியாது என்று கூறிய நிலாவிடம் செல்லாவிட்டால் பாடகரை அவமதித்தது போல் ஆகிவிடும் என்று அருகில் இருந்தவர்கள் கூறவும் தயங்கி தயங்கி மேடை ஏறினாள்.
அனைவரும் நிலாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
‘ஹாய், உங்களை அறிமுகப் படுத்திக்கோங்க மிஸ்..’
‘வெண்ணிலா’
‘வாவ், ப்யூட்டிபுள் நேம் ஆண்ட் இட் சூட்ஸ் யூ’
‘தேங் யூ’
தன்னை வெண்ணிலா என்றும் தனது வேலை செய்யும் பிரிவைக் குறித்தும் கூறியவள், சற்றுமுன் அந்த பாடகர் பாடியது மிகவும் இனிமையாக இருந்ததாகக் கூறினாள்.
’ஸோ, ஷால் வீ ஸிங்?’
‘…’
‘ஓகே, மொளனம் சம்மதம்’
அரங்கமே கைதட்டியது
நிலாவிற்கு வெட்கமாக இருந்தது.
‘உங்க பெயர் வெண்ணிலா என்பதால் ‘ஆஹாய வெண்ணிலாவே சாங் பாடலாம்னு இருக்கேன், என்னுடைய ஃபேவரைட் ஸாங், உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்’
ஆம் நிலாவிற்கு அந்த பாடல் மிகவும் பிடிக்கும். அதற்கான வரிகள் அவளுக்கு மனப்பாடம்.
’ஆம் எனக்கும் பிடிக்கும் சார், இங்குள்ள எல்லாருக்கும் அது பிடிக்கும் என்று நம்புகிறேன்’
‘லிரிக்ஸ் வேண்டுமென்றால் மொபைலில் காட்டுகிறேன்’
‘வேண்டாம் சார், வரிகள் எனக்கு பார்க்காமல் தெரியும்’
‘வாவ் கிரேட், தென் ஷால் வி ஸ்டார்ட்?’
‘ஷூர்’
பாடல் தேனாக இனித்தது, அனைவரும் அதன் சுவையில் மெய் மறந்து ரசித்தார்கள். நிலாவும் அந்த பாடகருக்கு இணையாக மிக அழகாகப் பாடினாள். பாடல் முடிந்ததும் ‘உங்க பெயர் மட்டும் இல்லை நிலா உங்க குரலும் உங்களைப் போன்று அழகாக இருக்கிறது, கண்டிப்பா நீங்க பாடுவதை நிறுத்தக்கூடாது’
ஆகாயத்திலிருந்து வந்த நிலாவிற்கு இந்த பாடலை நான் என் பரிசாக சமர்பிக்கிறேன் என்று அந்த பாடகர் கூறியதும் நிலாவிற்கு தலைகால் புரியவில்லை, ஆம் தான் சற்றுமுன்தான் ஆகாஷிடமிருந்து வந்தேன் என்று மனதில் நினைத்துக் கொண்டாள். தன் மனம் போன போக்கை நினைத்து நிலா வியந்தாள். பாடி முடித்தவள் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கி ஆகாஷ் நின்றிருந்த இடத்திற்குச் சென்றாள் அங்கு ஆகாஷைக் காணவில்லை. எங்கு சென்றிருப்பான் என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.
அதை எடுத்து பேசியவள், செய்தி கேட்டு செய்வதறியாது நின்றுவிட்டாள். மீண்டும் அரங்கம் அதிர கைத்தட்டல் கேட்டதும் உணர்வுக்கு வந்தவள் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக மருத்தவமணைக்குச் சென்றாள்.
மயங்கிச் சரிந்த சரஸ்வதியை மருத்துவமணையில் சேர்த்த மீனா என்கிற அந்தப் பெண்மணி, சரஸ்வதி கண் விழிக்கும் வரை அங்கேயே காத்து இருந்தார். சற்று முன் தான் சரஸ்வதி கண் விழித்தார், கண் விழித்ததும் நிலாவின் எண்ணை கேட்டு நிலாவிற்கு தகவல் அளித்தார்.
தகவல் அறிந்த சற்று நேரத்தில் நிலா அங்கு வந்து சேர்ந்தாள். மீனாவிற்கு நன்றி தெரிவித்த நிலாவிற்கு ஆறுதல் கூறினார் மீனா.

தொடரும்....
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg

எபி-8

‘அம்மாவிற்கு ஒன்றும் இல்லை நிலா, ஏதோ கவலை அதுதான் இரத்த அழுத்தம் அதிகமாகிடுச்சு என்று காலையில் நடந்தவற்றை விவரித்தார்.

’நீங்க தான் தெய்வம் ஆண்டி, நான் உங்களை மறக்க மாட்டேன், என்று கையெடுத்து கும்பிட்டாள்’
‘என்னமா இதெல்லாம், தைரியமா இரு, முதலில் அப்பாவிற்கு அழைத்துச் சொல்’ என்றவரை பாவமாக பார்த்தாள்.
’அப்பா…அப்பா… எனக்கு அம்மா மட்டும்தான் ஆண்டி, அப்பா கிடையாது. அவங்களுக்கு ஏதாவதுன்னா என்னால் தாங்க முடியாது’ என்று அவர் தோள் சாய்ந்து அழுத்தொடங்கினாள்.

அவளை ஆதரவாக அணைத்தவர் ‘முதலில் உன்னை அழைக்கலாம்னு நினைத்தேன், நீ சின்னப்பெண் பயந்திடுவ அதனால் உன் அப்பாவிடம் விவரம் தெரிவிக்கலாம்னு முடிவெடுத்தேன் ஆனால் அம்மா மயக்கமா இருந்ததினால நம்பர் வாங்க முடியவில்லை. டாக்டரும் பயபட வேண்டாம் ஒரு நாள் இருந்தால் போதும் என்று சொன்னார். இரவு நேரம் நெருங்கியதும் வீட்டில் தேடுவார்களே என்று வேறு வழியில்லாமல் உன்னை அழைத்தேன். ஆனால் நீ எடுக்கவே இல்லைமா வேலையாக இருப்பன்னு நினைத்துக்கிட்டேன். அன்று கோவிலில் வைத்து நீ எனக்கு நம்பர் தந்தது உதவியாய் இருந்தது. என்னை மன்னிச்சிடுமா, எனக்குத் தெரியாது உனக்கு அப்பா இல்லையென்று அம்மா இபோதுதான் கண் விழித்தாங்க, நானே அவங்களை வீட்டிற்கு கொண்டு வந்து விடலாம்னு நினைத்தேன் ஆனால் டாக்டர் இன்று ஒருநாள் இங்க இருக்கனும்னு சொல்லிட்டார். அதுதான் உன்னை அழைக்க வேண்டியதாயிற்று’ என்று அவளைச் சமாதானம் செய்வதாக நினைத்து பதட்டமாக ஏதேதோ பேசினார்.
’அம்மா தூங்கறாங்க, என்னுடன் வா கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம்’
‘இல்லை ஆண்டி, நான் பார்த்துக்கிறேன், நீங்க கிளம்புங்க உங்க வீட்டில் தேடுவாங்க’
‘நான் சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லிட்டேன் மா, வா சாப்பிடலாம் இல்லாவிட்டால் நீ சாப்பிட மாட்ட’
‘பசியில்லை ஆண்டி’
‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, அம்மாவிற்கும் நீ மட்டும்தான் இருக்க, நீ ஆரோக்யமா இருந்தால்தான் அவங்களை நல்லா பார்த்துக்க முடியும். இப்படி பட்டிணி கிடப்பதினால் எதுவும் ஆகப்போவதில்லை, தெம்பாக இருந்தால் குறைந்தது அவங்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றவர் அவளை கேண்டீனுக்கு அழைத்துச் சென்றார்.
உண்டு முடித்துவிட்டு சரஸ்வதி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
டாக்டர் கூறிய மருந்து மாத்திரைகளை வாங்கி வைத்திருந்த கவரை நிலாவிடம் கொடுத்து அதனை எப்பொழுதெல்லாம் குடுக்க வேண்டும் என்று விவரித்தார். மணி பத்து என்று காண்பிக்கவும், நேரமாகிவிட்டதுமா தம்பி எனக்காக கீழே காத்துகிட்டிருக்கு, நான் வரேன் என்று விடைபெற்று சென்று விட்டார்.

அவர் சென்றதும் தாயின் அருகில் அமர்ந்தவள், அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவளையும் அறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அப்படி என்ன கவலை அம்மாவிற்கு, படிப்பு முடிந்தாகிவிட்டது, வேலையும் கிடைத்துவிட்டது, பென்ஷன் பணமும் வருகிறது. வேறு என்ன கவலை என்று யோசிக்கும் போதுதான் கடந்த சில தினங்களாக அவர் நடந்துகொண்ட விதம் அவளுக்கு நினைவிற்கு வந்தது.
பலமுறை திருமணம் ஆகி வேறு வீட்டிற்கு செல்லும் பெண் என்று கூறியது நினைவிற்கு வந்தது. அப்படி என்ன திருமணத்திற்கு அவசரம், இப்போது தான் சிறிது நிம்மதியாக இருந்தோம், அதற்குள் அடுத்த பிரச்சினையா, முதலில் அம்மாவிற்கு க்ளாஸ் எடுக்கனும், சும்மா தேவையில்லாததெல்லாம் யோசிச்சுகிட்டு… என்று பெரு மூச்சுவிட்டவள் எழுந்து சென்று ஜன்னலின் அருகில் நின்றுகொண்டாள்.
‘பிடிச்சிருக்கா’ என்ற குரல் அவள் காதருகே கேட்டதும் பதறி திரும்பியவள் அங்கு யாருமில்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்தாள். ‘ச்ச என்ன நினைப்பு அம்மாவிற்கு உடம்பு சரியில்லை நான் ஏன் ஏதேதோ நினைத்துக்கொண்டிருக்கிறேன், சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தது அழகிய கனவாக மாறியது, விடையில்லா கனவாக.
‘அம்மா முதலில் உட்காருங்க, வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். டாக்டர் சொன்னதெல்லாம் காத்துல போச்சா? டீச்சர்தானே நீங்க ஒரு முறை சொன்னால் புரியாதா?’
‘டாக்டர் ஆயிரம் சொல்வார், நம்ம கஷ்டம் நமக்கு’
‘…’
’நீ வேலைக்கு கிளம்பவில்லையா?’
’நாளையிலிருந்து’
‘ஏன் தேவையில்லாம லீவு எடுக்கிற நிலா, தேவைக்கு லீவு வேண்டாமா?’
‘இதைவிட என்ன தேவை எனக்கு இப்போ?’
‘…’
‘சொல்லுங்கம்மா? ஏன் தேவையில்லாம அலட்டிகிறீங்க?’
’…’
தாயின் அருகில் வந்து அமர்ந்தவள் ‘அம்மா உங்களுக்கு நான் எனக்கு நீங்க இப்போதைக்கு இதை மட்டும் நினைவில் வெச்சுக்கோங்க வேறு எந்த சிந்தனையும் உங்களை பாதிக்காமல் பார்த்துக்கோங்க’ நீங்க வருத்தப்படும் அளவிற்கு நம்ம வாழ்க்கை மோசமாயிடாது புரிஞ்சுக்கோங்க’
மருத்தவமனையிலிருந்து வந்ததிலிருந்து தாயும் மகளும் இவ்வாறுதான் உரையாடிக்கொண்டனர். நிலா முடிந்தளவு தாயை சமாதானம் செய்ய முயன்றாள். அவளுக்கு டாக்டர் கூறியதுதான் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
‘பீபி அதிகமாயிருக்கும்மா, மருந்து ஒரு அளவுதான் வேலை செய்யும் மற்றபடி நீங்கதான் அவங்க உடல்நிலையையும் மனநிலையையும் பார்த்துக்கனும். இது விளையாட்டில்லை, அடிக்கடி பீபி அதிகமானால் வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்களை பயப்படுத்த நான் விரும்பவில்லை அதே சமயம் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார்.
நிலாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆனால் தாயின் மனநிலையும் உடல் நிலையும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தற்போதைய தேவை என்று முடிவெடுத்தாள்.
விடுப்பு முடிந்து வேலைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தவளின் அலைபேசி மணியடித்தது.
‘ஹலோ, ஆமாம் ஆண்டி, அம்மாவிற்கு இப்போது பரவாயில்லை’
’சரி ஆண்டி’
மீனா அழைத்து அன்னையின் நலம் விசாரித்ததாக தெரிவித்தவள் குழந்தைக்குச் சொல்வதுபோல் ஆயிரம் அறிவுரைகளை அன்னைக்கு கூறிவிட்டு மனமில்லாமல் வேலைக்கு கிளம்பிச்சென்றாள்.
அலுவலகம் சென்றவளுக்கு வேலைகள் சூழ்ந்துகொள்ள அதில் மூழ்கிப்போனாள். அவ்வப்போது ஷீலாவின் இருக்கையை எட்டிப் பார்த்தவள் மதியம் வரை அவளைக் காணாது போகவே அங்குள்ள அவள் குழுவினரிடம் விசாரித்தாள். ஆண்டு விழாவிற்கு பிறகு ஷீலா வரவில்லை என்றும் அவளது அலைப்பேசி எண் வேலை செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.
விக்கி சாரிடம் விசாரிக்கலாம் என்றால், அவரும் கடந்த இரண்டு நாட்களாக வரவில்லை என்று தெரியவந்தது.
அனைவரும் நிலாவின் பாடல் இனிமையாக இருந்தது என்று பாராட்டினர். நன்றியைத் தெரிவித்தவள் எத்தனை முறை முயற்சித்தும் ஷீலாவின் எண்ணில் தொடர்பு கொள்ள இயலவில்லை. என்ன ஆச்சு ஷீலாவிற்கு? என்று தனக்குள் பலமுறை கேட்டுக்கொண்டாள்.
ஒருவாரம் கடந்தது… ஷீலாவைக் குறித்து எந்த தகவலும் இல்லை, யாரிடம் விசாரிப்பது என்றும் நிலாவிற்கு தெரியவில்லை. அலைபேசி எண்ணைத் தவிர வேறு எதுவும் நிலாவிற்குத் தெரியாது அவளது விடுதிக்குச் சென்றும் விசாரித்தாள் அங்கும் அதே பதில் தான் ஆண்டு விழாவிற்குப் பிறகு ஷீலா வரவில்லை என்பது தான்.
மதிய உணவிற்கு கேண்டீன் சென்றவள் தன்னுடன் ஷீலா இருந்தால் சற்று நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். தனக்கென்று இருந்த ஓரே ஒரு தோழியும் திடீரென்று மாயமானதும் கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்டது போன்று உணர்ந்தாள். யோசனையாக நடந்து வந்து கொண்டவள் எதிரே விக்கியையும் ஆகாஷையும் ஒன்றாகக் கொண்டதும் அவர்களை நோக்கி வேகமாக நடந்தாள்.
ஓட்டமும் நடையுமாக விக்கியை நோக்கிச் சென்றவள் நிலாவைக் கண்டதும் அங்கிருந்து நகர்ந்து சென்ற விக்கியின் செயல் வித்தியாசமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் ஆகாஷை நோக்கியவளை ஏளனமாக பார்த்துவிட்டு அவனும் கடந்து சென்றான்.
என்னவாயிற்று ஏன் இருவரும் இப்படி நடந்து கொள்கின்றனர். தலையே சுற்றிவிட்டது நிலாவிற்கு சற்று நேரம் அங்கேயே நின்றவள் ஒரு முடிவுடன் விக்கியின் அறைக்குச் சென்றாள்.

‘சார், ஷீலா’
‘ப்ளீஸ் கெட் அவுட் நிலா, உங்ககிட்ட பேசக்கூடிய நிலையில் நான் இல்லை’
‘கொஞ்சம் புரியும்படியா பேசுங்க சார், ஷீலாவிற்கு…’
‘ஒரு முறை சொன்னால் புரிஞ்சுக்கோங்க, ப்ளீஸ்’ என்று வாயிலை நோக்கி கை காட்டினான்.
அதற்கு மேல் அங்கு நிற்காமல் வெளியில் வந்தவளுக்கு வேலையே ஒடவில்லை. விக்கி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?’
மாலை வேலை முடிந்து வண்டி நிறுத்தும் இடத்திற்கு விரைந்தவள் அங்கு ஆகாஷ் இருக்கிறானா என்று தேடினாள். அவள் எதிர் பார்த்தது போலவே அவன் அங்கு தான் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.
அவனை நோக்கி விரைந்தவள் ‘எனக்கு கொஞ்சம் பேசனும்’ என்று தயக்கத்துடன் தொடங்கினாள்.
‘உன்னிடம் பேச எனக்கு எதுவுமில்லை’
புகையினால் இருமியவள் ஆகாஷின் கையிலிருந்த சிகரட்டை வேகமாக எடுத்து தரையிலிட்டு காலால் நசுக்கினாள். இதனை சற்றும் எதிர் பாராதவன் ‘யூ’ என்று அவளை நோக்கி ஆள்காட்டி விரலால் எச்சரித்தான்.

‘ப்ளீஸ் நீங்களாவது சொல்லுங்க ஷீலா..’ என்று தொடங்கியதும்
‘வில் யூ ப்ளீஸ் ஸ்டாப்’
‘ஏன் எதற்காக நிறுத்தனும்? அதை முதலில் சொல்லுங்க’
‘..’
‘ஷீலாவிற்கு என்னாச்சு? ஏன் நீங்களும் விக்கி சாரும் முகம் கொடுத்து பேச மாட்டீங்கறீங்க?’
‘ஓ! அப்போ ஷீலாவிற்கு திருமணம் ஆனது அவளுடைய உயிர் தோழிக்குத் தெரியாது, இதை நாங்க நம்பனும்’
‘வாட்!’
‘நல்லா நடிக்கிற நிலா’
‘வாட் டூ யு மீன்? ஷீலாவிற்கு திருமணமா? எப்போ? யார் சொன்னது?’
‘முடிந்ததைப்பற்றி இனி பேச வேண்டாம்’
‘ப்ளீஸ் ஆகாஷ், உங்களுக்கு எப்படித் தெரியும், அவளுடைய விலாசம் இருந்தால் சொல்லுங்க நான் அவளை உடனே பார்க்க வேண்டும்’

அவன் பதில் ஏதும் பேசவில்லை அதற்கு பதில் நிலாவை ஒரு வித வெறுப்புடன் பார்த்தான். ஏனோ நிலாவை அந்தப் பார்வை பாதித்தது. அவள் பேச வருவதற்குள் ஆகாஷின் அலைபேசி அலறவும் அவன் அதை எடுத்து பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அதே யோசனையுடன் வீடு திரும்பினாள். ஷீலாவிற்கு திருமணமாகிவிட்டது என்பதை அவளால் உட்கொள்ள முடியவில்லை. ஏதோ நடந்திருக்கிறது, பாவம் ஷீலாவின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள மனம் துடித்தது.
அடுத்த நாள் வேலைக்குச் சென்றவள், நெற்றியில் குங்குமமும், கழுத்தில் தாலியுமாக இருக்கையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த ஷீலாவைக் கண்டதும் ஓடிச் சென்று ஷீலாவின் கையைப் பற்றினாள். மொளனமாக நிமிர்ந்து பார்த்தவள் கசந்த முறுவலுடன் கையை உறுவிக்கொண்டாள்.
‘ஷீலா’..
’ப்ளீஸ் நிலா, நான் எதுவும் பேச விரும்பவில்லை, நீ பார்ப்பது உண்மைதான்’
’ஷீலா ஏண்டி’
‘ப்ளீஸ், நான் வேலையை ராஜினாமா செய்வதற்காக வந்திருக்கிறேன். என்னை தொந்திரவு செய்யாதே’
நிலாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தன்னைச்சுற்றியிருந்த உலகம் திடீரென்று மொளனமானதாக உணர்ந்தாள். ஏதும் பேசாமல் தன் இருக்கைக்கு வந்தவள் ஷீலாவை பார்ப்பதும் வேலையைச் செய்வதுமாக இருந்தாள்.
மதிய உணவு இடைவேளையின் போது ஷீலாவை தேடியவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. யோசனையாக தனது தோழியை நினைத்துக்கொண்டு உணவு உண்டு கொண்டிருந்தவளின் அருகே நிழலாடியதும் நிமிர்ந்து பார்த்தாள்.
ஆகாஷ்தான் எதுவும் பேசாது நிலாவின் எதிரே அமர்ந்து கொண்டு உணவு உண்டு கொண்டிருந்தான்.
‘என்ன தோழியை சந்தித்து நலம் விசாரிச்சாச்சா?’
‘..’
‘உங்க ப்ளான் என்ன? தோழியைப் போல காதலிப்பது ஒருத்தனை கல்யாணம் செய்வது இன்னொருத்தனையா?’
‘..’
‘மொளனம் சம்மதம், ப்ளான் போட்டாச்சா இல்லை இனிமேல் தானா, யார் அந்த துரதிஷ்டவாதின்னு சொன்னால் முன்கூட்டியே எச்சரிக்க உதவியாக இருக்கும்’
‘ஆகாஷ்’
‘என்ன மேடம் என் பெயரை சொல்றீங்க, உங்க விளையாட்டுக்கு நான் வரவில்லை, நான் வேணா ஐடியா தரவா?’
நிலாவிற்கு கோபம் தலைக்கேறியது, எதுவும் பேசாமல் விருவிருவென்று வெளியேறினாள். சற்று தூரம் நடந்தவள் ஏதோ தோன்ற திரும்பிப்பார்த்தாள் அங்கு ஷீலா நிலாவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒருவித படபடப்புடன் நின்று கொண்டிருந்தவளை நோக்கி நிலா வேகமாக நடந்தாள்.
அருகில் சென்றவளின் கையில் ஒரு கடிதத்தை வைத்தவள் என்னவென்று நிலா உணரும் முன்னர் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றுவிட்டாள். ஏன் என்ற பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நிலா குழம்பினாள்.

அமைதியாக இருக்கையில் அமர்ந்தவள் விரைவாக வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள். என்றும் போல் ஆகாஷ் வண்டி நிறுத்தும் இடத்திற்கு அருகில்தான் இன்றும் நிலா தனது வண்டியை நிறுத்தியிருந்தாள். ஏதோ நினைவோடு வண்டியை எடுத்துக்கொண்டிருந்தவளை நோக்கி காலடிச் சப்தம் கேட்டதும் மெதுவாக திரும்பிப் பார்த்தாள் அங்கு முகத்தில் மென்முறுவலுடன் இளைஞன் ஒருவன் நிலாவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
‘ஹாய் நிலா, ஆண்டு விழாவின் போது நீங்க பாடின பாடல் மிகவும் இனிமையாக இருந்தது’
‘தேங்யூ’
‘யு ஆர் வெல்கம்’ என்றவன் ஆகாஷ் நிறுத்தியிருந்த வண்டியை நோக்கிச் சென்றான். அவனையே யோசனையாக பார்த்துக்கொண்டிருந்தவள் சற்று தொலைவில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த ஆகாஷைக் கண்டதும் வண்டியை வேகமாக எடுத்துக்கொண்டு கிளம்பிச்சென்றாள்.
சரஸ்வதியின் உடல் நிலை சற்று தேறியிருந்தது, பழையது போல் நடமாடத் தொடங்கியவரைக் கண்டதும் சற்று நிம்மிதியாக இருந்தது நிலாவிற்கு. யாரிடமும் மனதை திறக்க வழியில்லாமல் வருந்தியவள் அனைத்தையும் தனது டைரியில் எழுதத் தொடங்கினாள்.
மறுநாள் வேலைக்கு தயார் ஆகிக்கொண்டிருக்கும் மகளிடம் தன்னை கோவிலில் விட்டுவிட்டுச் செல்லுமாறு கேட்டார். மறுப்பேதும் தெரிவிக்காமல் அன்னையை கோவில் வாயிலில் இறக்கியவள் மீண்டும் அறிவுரைகளை அள்ளி வீசிவிட்டு கிளம்பிச் சென்றாள்.
தனக்கு அறிவுரை கூறும் அளவிற்கு மகள் வளர்ந்துவிட்டாள் என்று நினைத்தவர் தனது பாரத்தை இறைவனிடம் இறக்கி வைக்க முடிவு செய்தார். உள்ளே நுழைந்தவர் அங்கு மீனா நிற்பதைக் கண்டு சிநேகப் புன்னகையுடன் அவரை நோக்கி நடந்தார்.
சரஸ்வதியைக் கண்டதும் அங்கிருந்த பூசாரி ’வாம்மா, எப்படி இருக்க?’ என்று நலம் விசாரித்தார்.
‘நல்லா இருக்கேன் சாமி’ என்று மீனாவைப் பார்த்தார். கண்களில் கண்ணீர் நிறைந்திருக்க இறைவனையே பார்த்துக் கொண்டிருந்தவரைக் காண பாவமாக இருந்தது. அவர் அருகில் சென்று தோள் தொட்டவரைக் கண்டதும் வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு ‘வாங்க எப்படியிருக்கீங்க, தனியாகவா வந்தீங்க’
‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைங்க எல்லாம் சரியாகிடுச்சு’
இவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட பூசாரி ‘இங்கேயே இருங்கம்மா நான் அர்ச்சனை செய்த பிரசாதத்தை எடுத்துவரேன்’ என்று உள்ளே சென்றுவிட்டார்.
இருவரும் சரியென்பது போல் தலை ஆட்டினர்.
மீனாவிடம் தான் பிரகாரத்தை சுற்றிவிட்டு வருவதாக கூறிவிட்டு சரஸ்வதி அங்கிருந்து நகர்ந்தார். அர்ச்சனை தட்டுடன் வெளியே வந்த பூசாரி மீனாவிடம் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு சரஸ்வதியைத் தேடினார்.
’அவங்க பிரகாரத்தைச் சுற்றிவர போயிருக்காங்க சாமி’
‘ஓ’
‘தாங்க, நான் அவங்ககிட்ட குடுக்கிறேன்’
‘இந்தாங்கம்மா, இரண்டுபேரும் நெருக்கமாயிட்டீங்க போல’
‘ஆமாம் சாமி, பாவம் தனியா ஒரு பெண்ணை வளர்பது எவ்வளவு கஷ்டம், என்ன மன வேதனையோ அன்று கோவிலில் மயங்கி விழுந்துட்டாங்க’
‘வேறு என்னமா, பெண்ணை பெற்றவங்களுக்கு இருக்கிற கவலைதான். அவங்க பெண்ணிற்கு வரன் பார்க்கிறாங்க, இன்னும் ஒன்றரை மாதத்தில் திருமணம் ஆக வேண்டும் இல்லைன்னா கல்யாணம் தாமதமாகிடும் அந்த கவலைதான்’
’ஓ! பெண்னை பெற்றவங்களுக்கு மட்டுமில்லை சாமி எல்லா பெத்தவங்களுக்கும் இருக்கும் கவலைதான்’
‘அதுவும் உண்மைதான்மா, உங்க பையன் விஷயம் என்னாச்சு? தரகர் கிட்ட பேசுனீங்களா?
‘என்ன சொல்றது சாமி, எல்லாம் சிக்கலா இருக்கு, இப்போ இருக்கிற சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு கல்யாணத்திற்கு சம்மதிக்கனும், ஜாதகம் சேரணும், அவனுக்கு ஏற்ற பெண்ணாக இருக்கனும், இதெல்லாம் இன்னும் மூன்று மாதத்திற்குள் நடக்கனும், எனக்கு என்ன செய்வதுன்னே தெரியவில்லை’
‘கணவர் கிட்ட பேசுனீங்களா? அவர் என்ன சொல்றார், தொழில் வட்டாரத்தில் தெரிந்தவங்க பழகினவங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லி பார்க்கச்சொல்லுங்கம்மா.’
’எப்படி சாமி பெத்தவங்க தன் பெண்னை தோஷமுள்ள ஜாதகாரருக்கு கட்டி வைக்க சம்மதிப்பாங்க? ஒருபுறம் என் பையனாக இருந்தாலும் முறுபுறம் நானும் ஒரு பெண் தானே நானும் பிள்ளையைப் பெற்றவள் தானே, என்ன நடக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் வெடிச்சிடும் போல் இருக்கு’
‘வருத்தப்படாதீங்கம்மா, எல்லாம் சரியாகிவிடும் நம்பிக்கையா இருங்க’ என்று கூறிவிட்டு உள்ளே செல்ல திரும்பியவர் ஏதோ தோன்ற மீனாவை தயக்கத்துடன் பார்த்தார்.
‘என்ன சாமி’
‘ஒன்னுமில்லையம்மா, எனக்கொரு யோசனை, சரியான்னு தெரியாது, ஆனாலும் உங்ககிட்ட சொல்லிடலாம்னு தோனித்து’
----------------------------------
‘சொல்லுங்க சாமி’
‘இப்ப பார்த்தீங்களே சரஸ்வதியம்மா, அவங்க பெண்ணோட ஜாதகத்தை வாங்கி உங்க பையனுக்கு பார்த்தால் என்ன? தப்பா நினைக்காதீங்க, உங்க வசதிக்கு இல்லைதான் ஆனால் குணத்தில் சொக்க தங்கம், யாருடைய தயவும் இல்லாமல் தனியா பெண்ணை வளர்த்திருக்காங்க. அவங்ககிட்ட இல்லாத வசதி உங்ககிட்ட இருக்கு நம்ம பையன் நிம்மதியா நூறு வருஷம் சந்தோஷமா இருக்கனும் அதுக்கு நல்ல பெண்ணா பார்த்து திருமணம் முடிச்சாதான் உங்களுக்கும் நல்லது குடும்பத்திற்கும் நல்லது. முதலில் பொருத்தம் பார்ப்போம் ஜாதகம் சேர்ந்தா மேலே பேசுவோம் என்ன சொல்றீங்க?’
‘அய்யய்யோ வேண்டாம் சாமி, நான் எப்படி இதைப் பற்றி அவங்ககிட்ட பேசுவது, சிக்கல் ஒன்றிரண்டில்லை அவன் வாழ்க்கையே மொத்தம் சிக்கலா இருக்கு. அவங்களே பெண்ணை நினைத்து வேதனையில் இருக்காங்க தெரிந்து வைத்துக்கொண்டே புதிய சிக்கலை அவங்களுக்கு நான் தரமாட்டேன். நான் வாங்கி வந்த வரம் அப்படி.’
‘அப்படியெல்லாம் பேசாதீங்க, சிக்கல் கொஞ்ச நாளைக்குத்தான். சரியான ஜாதகம் அமைந்தால் எல்லாம் சரியாகிவிடும். வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லைன்னு நீங்க நினைத்தால் நான் வேணா அவங்க கிட்ட பேசுறேன்.’
‘வேண்டாம் சாமி, அவங்க வாழ்க்கையை குழப்ப வேண்டாம். அவங்களாவது நிம்மதியாக இருக்கட்டும்’
‘அம்மா, நீங்க இரண்டு பேரும் எனக்கு தெரிந்தவங்க, உங்களுக்கு தீங்கு செய்ய நான் நினைக்க மாட்டேன், அவங்க பெண் ஜாதகத்தை நான் முதலில் வாங்கி தருகிறேன் பொருத்தம் இருந்தால் அவங்ககிட்ட எடுத்துப் பேசுவோம் எல்லாம் சுபமாக இருந்தால் இரண்டு குடும்பத்திற்கும் சந்தோஷம்தானே’
‘நீங்க சொல்வது சரிதான் சாமி, ஆனால் அவங்க நிலையை நான் தவறாக பயன்படுத்தவதாக நினைத்தால்’
‘மனச குழப்பாதீங்கம்மா, கடவுளை வேண்டிக்கோங்க. நான் ஜாதகத்தை வாங்கி தருகிறேன், மத்ததை பிறகு பேசிக்கலாம்’ என்று பேசிக்கொண்டிருக்கும் போது சரஸ்வதி அங்கு வந்து சேர்ந்தார்.
’இந்தாங்க அர்ச்சனை பிரசாதம்’
‘நன்றிங்க’ என்று மீனாவின் கையிலிருந்து பிரசாதத்தை வாங்கிக் கொண்டார்.
‘நிலாமா, உங்க பெண் ஜாதகத்தையும் குடும்ப விவரத்தையும் நாளைக்கு வரும் போது எடுத்துவாங்க எனக்கு தெரிந்தவங்கிட்டயும் கொடுத்து தேடுவோம். நாலு பேரிடம் கொடுத்தால்தான் நல்ல வரணா அமையும்’
‘ரொம்ப நன்றி சாமி, நமக்கு ஏற்ற மாதிரி பார்க்கச் சொல்லுங்க. வசதி குறைவாக இருந்தா போதும் பெரிய இடமெல்லாம் வேண்டாம், ஒரே பெண், நம்ம வசதியையும் எடுத்துச் சொல்லுங்க, கூடுதலாகவும் குறைவாகவும் சொல்ல வேண்டாம்’
‘எல்லாம் எனக்குத் தெரியும்மா, நம்ம பெண்ணிற்கு நல்லதைத்தான் நான் நினைப்பேன், நம்பிக்கையா இருங்க எல்லாம் கடவுள் பார்த்துப்பார்’
’அதுதான் எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சாமி’ என்றுவிட்டு மீனாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.
ஷீலாவின் கடிதத்தை படித்ததிலிருந்து நிலாவிற்கு வாழ்க்கை மீதே வெருப்பு வந்தது. கடவுள் இருக்கிறார் என்ற சிறிய நம்பிக்கை போலும் இல்லாமல் போய்விட்டது நிலாவிற்கு. வாழ்க்கை நாம் நினைத்தததுபோல் அமைந்துவிடாது என்பது தெரியும் ஆனால் நினைக்காதது கூட நடக்கக்கூடும் என்று கண்கூடாக பார்க்க நேர்ந்தது. தாயின் உடல் நிலை ஒரு புறம் வாட்ட அந்த பாரத்தை தோழியிடம் கூறி சமாதானம் தேடலாம் என்று நினைத்திருக்கும் நேரத்தில் அந்த தோழியும் உடன் இல்லை என்றானதும் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல தன்னை உணர்ந்தாள்.
தலை பாரமாக உணர்ந்தவள் தேநீர் அருந்துவதற்கு கேண்டீன் சென்றாள். தேநீர் அருந்திவிட்டு சிறிது நேரம் கைபேசியை எடுத்து ஷீலாவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஷீலாவின் முகத்தை பார்க்க பார்க்க துக்கம் தொண்டையை அடைத்தது. இதற்குமேல் அங்கிருந்தால் அழுது விடுவோம் என்றெண்ணியவள் எழுவதற்கு முற்படுகையில் ஆகாஷ் அவள் முன் வந்து நின்றான்.

அவனைக் கண்டதும் எழுவதற்கு சற்று தயங்கியவள், இவனிடம் நட்பை எதிர்பார்ப்பதும் கடவுளின் மேல் உள்ள தன் நம்பிக்கையும் ஒன்றுதான் என்று நினைத்தவள் பெருமூச்சுடன் எழுந்தாள்.
”என்ன மேடம் பேச பேச நேற்று கிளம்பி போயிட்டீங்க, இன்னைக்கு பேசவே இல்லை ஆனாலும் கிளம்பீட்டீங்க’
‘உங்ககிட்ட பேச என்னிடம் ஏதுமில்லை’
’ஆனால் எனக்கு பேச சில விஷயங்கள் இருக்கு’
‘கேட்க எனக்கு நேரமில்லை’
‘நேரம் இருக்காது தான், உங்களுக்கெல்லாம் காதலிக்கும் போது தெரியாத வசதியும் வாய்ப்பும் பணக்கார மாப்பிள்ளை கிடைத்ததும் தெரிந்துவிடும். எங்களைப்போல் மாத சம்பளத்திற்கு வேலை செய்பவர்களிடம் பேசுவதற்கு நேரம் இருக்காதுதான்’
‘மிஸ்டர், மைண்ட் யுவர் வோர்ட்ஸ், எதுவாக இருந்தாலும் நேரடியா பேசுங்க’
‘நேரடியா பேசுனா புரியுமா? இல்லை புரியாத மாதிரி நடிப்பீங்களா?’
‘…’
‘என்ன பதிலைக் காணோம்?’
‘நான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு’
‘எனக்கு கேட்கலையே’
‘கேட்பதற்கு மனசு வேணும்’
‘மனசு மட்டும் வேண்டுமா? பணமும் வேண்டுமா?’
நிலாவிற்கு எரிச்சலாக இருந்தது, ஆறுதல் தேடி வந்தவளுக்கு ஆறுதல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை எரிச்சல் படுத்தாமல் இருந்தால் போதும் என்றானது.
‘என்ன யோசனை, எதை சொல்லலாம்னா?’
‘ப்ளீஸ், நான் இருக்கிற நிலைமையில் உங்க வார்த்தை விளையாட்டுக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை’
‘சரி நேரடியா கேட்கிறேன், என்னை கல்யாணம் பண்ண சம்மதமா?’
‘வாட்?’
‘இல்லை என்னை போல் ஒருத்தனை கல்யாணம் பண்ண சம்மதமான்னு கேட்டேன்?’
‘வாட் டூ யூ மீன்?’
‘ஐ மீன் வாட் ஐ செட்?’
‘புரியலை’
‘இதை தான் சொன்னேன், நேரடியா சொன்னாலும் உங்களுக்கெல்லாம் புரியாதுன்னு’
‘இப்போ உங்களுக்கு என்னதான் வேண்டும்?’
‘பதில் வேண்டும்?’
‘எதற்கான பதில்’
’மனசா? பணமா?’
‘எதைச் சொல்லனும்னு எதிர் பார்க்கறீங்க?’
‘..’
‘சரி கேட்டுக்கோங்க, உங்களைக் கல்யாணம் செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை’
ஆகாஷ் நிலாவையே இமைக்காமல் பார்த்தான்.
அந்த பார்வை என்ன உணர்த்தியதோ மீண்டும் தெளிவாகச் சொன்னாள் ‘உங்களைப் போல் மாதச் சம்பளம் வாங்கும் ஒருவரை திருமணம் செய்யும் எண்ணம் துளியும் இல்லை, நல்ல பணக்காரனா…’
‘போதும். மேல எதுவும் பேச வேண்டாம். ஐ அண்டர்ஸ்டுட்’
‘தேங்க்யூ, உங்களுக்கான பதில் சொல்லிவிட்டேன், இனி நான் கிளம்பலாம்னு நினைக்கிறேன்’
‘ஸ்யூர்’
மீண்டும் மனம் பாரமாக உணர்ந்தாள், கேண்டீன் வராமல் இருந்திருக்கலாம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை. இயந்திரம் போல் வேலையை முடித்தவள் ஓய்ந்து போய் வீடு திரும்பினாள்.
தாயைக் கண்டதும் அனைத்து கவலைகளும் மறந்தது, சூடாக தேநீர் வாங்கி அருந்தியவள் சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு தாயிற்கு இரவு உணவு தயார் செய்ய உதவியவள் பொதுவான விஷயங்களைப் பேசினாள். தன்னுடைய பாரத்தை எப்பொழுதும் போல் டைரியில் எழுதியவள் பாட்டு கேட்டுக்கொண்டு உறங்கிப்போனாள்.
மறுநாள் மகள் வேலைக்கு கிளம்பிச் சென்றதும் நிலாவின் ஜாதகத்தையும் அவளின் அனைத்து விவரங்களையும் எடுத்துச் சென்று கோவில் பூசாரியிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். இரண்டு தினங்கள் கழித்து நிலா வேலைக்கு கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் அழைப்பு மணி கேட்டது. யாராக இருக்கும் என்ற யோசனையில் கதவைத் திறந்தவருக்கு அங்கு மீனாட்சி நிற்பதைக் கண்டதும் உள்ளே வருமாறு உபசரித்தார்.
மீனாட்சி சரஸ்வதியே உருத்து உருத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
‘என்னங்க அப்படி பார்க்கறீங்க’
‘நிலாவின் அப்பா பெயர்’ என்று கேட்ட மீனாட்சியை யோசனையாக பார்த்தார் சரஸ்வதி
‘சொல்லுங்க நிலாம்மா’
‘நிலா அப்பா பெயர் சக்ரவர்த்தி’
‘முழு பெயர் சொல்லுங்க நிலாம்மா’
‘ஏன் கேட்கறீங்க’ என்ற சரஸ்வதியின் குரலில் கலவரம் இருந்தது.
‘அவர் பெயர் சக்ரவர்த்தி பாண்டியனா’
பேயரைந்தது போல் இருந்தது சரஸ்வதிக்கு
‘சொல்லுங்க, நான் சொன்னது சரியா?’
‘ஆம் என்பது போல் தலையை அசைத்தார்’
அதைக் கண்டதும் இருக்கையிலிருந்து எழுந்து சென்று சரஸ்வதியை அணைத்தவர் ‘அண்ணி என்னைத் தெரியலையா? என்றதும்’ இல்லை என்று தலையை ஆட்டினார்.
‘அண்ணி நான் … நான்.. அண்ணன்’
‘மேடம் நீங்க ஏதோ குழப்பத்தில் இருக்கீங்க, வீட்டிற்கு கிளம்புங்க இன்னொரு நாள் பேசலாம்’
‘இல்லை நான் தெளிவாக இருக்கேன் அண்ணி’
‘நான் கொஞ்சம் வேலையா இருக்கேன் இன்னொரு நாள் பேசலாம் நீங்க கிளம்புங்க’
‘எதிலிருந்து தப்பிக்க நினைக்கறீங்க அண்ணி? நிலாவோட அப்பா உயிரோடுதான் இருக்கிறார், ஏன் அண்ணி நிலாவிடம் அப்பா இறந்திட்டார்னு சொன்னீங்க?’
‘எதைச் சொல்ல சொல்றீங்க, நிலாவோட அப்பா எங்களை அனாதையா விட்டுவிட்டு வேற ஒருவரை கல்யாணம் செய்துகிட்டார்னு என் பெண்கிட்ட சொல்லச் சொல்றீங்களா? அதற்கு நான் சொல்லி வைத்த காரணம் எவ்வளவோ மேல் என்று நினைக்கிறேன்’
‘..’
‘உங்களை தயவுசெய்து கேட்டுக்கிறேன் இதுவரை நாங்க எப்படி இருந்தோமோ அப்படியே இருந்துவிட்டு போகிறோம், புதிதாக எந்த உறவும் தேவையில்லை, கையெடுத்து கும்பிடுகிறேன் இந்த விவரத்தை நீங்க நிலாவிடம் சொல்லிடாதீங்க’ என்று அழத்தொடங்கினார்.
அழுதால் அவரின் மன பாரம் குறையும் என்றெண்ணிய மீனா அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அழுகை ஓய்ந்த போது சரஸ்வதியின் அருகில் வந்து அமர்ந்தவர் ஆறுதலாக அவரின் கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு சமாதானம் செய்தார்.
’அண்ணி உங்களுக்கு நடந்த இழப்பை நிச்சயமா என்னால் ஈடு செய்ய முடியாது, அதற்கு மன்னிப்பு கேட்கும் தகுதி எனக்கோ என் குடும்பத்தாருக்கோ இல்லை ஆனாலும் என்னால் மன்னிப்பைத் தவிர கேட்பதற்கு வேறொன்றும் இல்லை, தயவுசெய்து மன்னிச்சிட்டேன் ஒரு வார்த்தை சொல்லுங்க அண்ணி’
‘உங்களை மன்னிக்க நான் யாரம்மா?’
‘அப்படி சொல்லாதீங்க, நானும் ஒரு பெண் தான் எனக்கு உங்களுடைய வேதனை புரியும், காலம் கடந்து மன்னிப்பை கேட்கிறேன் என் குடும்பத்தின் சார்பா, தயவுசெய்து மன்னிச்சுடுங்க அண்ணி’
‘எந்த புதிய உறவும் எனக்கு தேவையில்லை மேடம், என்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததற்கு நான் என்றும் உங்களுக்கு கடமை பட்டிருக்கேன் அதைத் தவிர நமக்குள் வேற எந்த பந்தமும் வேண்டாம், வேற பேச்சும் வேண்டாம், புரிஞ்சுக்கோங்க’
’அண்ணி நான் உங்களை தொந்திரவு செய்ய வரவில்லை. உங்களையும் நிலாவையும் பார்த்த நாள் முதல் எங்கோ பார்த்த உணர்வு மனதில் தோன்றியது ஆனால் அதை ஆராயப் போகவில்லை. அதற்கான காரணம் இன்றுதான் புரிந்தது. அதுதான் உடனே இங்கே கிளம்பி வந்து விட்டேன். உங்களுக்கும் நிலாவிற்கும் என்றும் நான் துணையாக இருப்பேன்’ என்றவரை கசந்த முறுவலுடன் பார்த்த சரஸ்வதி எதுவும் பேசவில்லை.
‘சரி அண்ணி, நான் கிளம்புறேன்’ என்று விடை பெற்றுச் சென்றார்.
சரஸ்வதிக்கு தன்னுடைய இளமைக் காலம் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு வந்தது. சரஸ்வதி படிக்கும் அதே கல்லூரியில்தான் மீனாட்சியும் படித்து வந்தார். மீனாவை அழைக்க தினமும் வரும் சக்ரவர்த்தி பாண்டியன் என்கிற மீனாவின் ‘பாண்டி அண்ணன்’ பேருந்து நிறுத்தத்தில் தனது தோழிகளுடன் கிண்டலும் கேளியுமாக நிற்கும் சரஸ்வதியை ஒரு புறமாக காதலித்தார். மீனா கல்லூரிக்கு வராத நாட்களிலும் சரஸ்வதியை காண்பதற்காக வரும் பாண்டி ஒருநாள் தனது மனதை சரஸ்வதிக்கு தெரிவித்து யோசித்து பதில் சொல்லுமாறு கூறிவிட்டுச் சென்றான். எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் அழகாகவும் நேரடியாகவும் தன் காதலை தெரிவித்த பாண்டியனை சரஸ்வதிக்கும் பிடித்திருந்ததது. பார்வையாலே காதல் செய்தவர்கள் நாட்கள் நகர நகர யாருக்கும் தெரியாமல் ஒன்றாக ஊர் சுற்றித் திரியத் தொடங்கினர்.
சரஸ்வதி சிறிது வசதி வாய்ப்பு உள்ள நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், சரஸ்வதிக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தனர். தந்தை அரசு பணியில் இருந்தார் அவரைப் பிண்பற்றி இரண்டு அண்ணன்களும் அரசு பணிகளில் தேர்ச்சி பெற்று நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சக்ரவர்த்தி பாண்டியன் குடும்பம் பரம்பரை பணக்காரர்தான் அனால் தந்தையின் குடிப்பழக்கத்தினால் குடும்ப சொத்தை அனைத்தையும் இழந்தனர். பரம்பரை பணக்காரர்களுக்கு ஒரு சாபம் உண்டு, அவர்களை ஊர் என்றும் பணக்காரர்களாகத்தான் பார்க்கும், மற்றவர்களைப் போல அவர்களுக்கு எளிதாக எந்த வேலையும் செய்ய முடியாது, பணம் இல்லை என்று வெளியில் சொல்ல இயலாது. தங்களது முன்னோர் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையை சிறிதளவும் குறையாமல் ஊர் மக்களின் முன் வாழ்ந்தாக வேண்டும். அதைத்தான் பாண்டியனும் மீனாவும் வாழ்ந்து கொண்டிருந்தினர். குடித்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை சேர்த்துவைத்த கடனை அடைக்க வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தனர். அந்த வரண்ட வாழ்க்கையில் தனக்கு கிடைத்த பொக்கிஷமாகத்தான் சரஸ்வதியை நினைத்தார் சக்ரவர்த்தி பாண்டியன்.
இந்நிலையில் கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆசிரியை பணிக்கு தேர்வு எழுதிய சரஸ்வதி அதில் வெற்றியும் கண்டார். தங்களது கிராமத்திலிருந்து புதிய நகரமான சென்னைக்கு வந்த சரஸ்வதி முதன் முதலில் குடும்பத்திலிருந்து பிரிந்து வந்த ஏக்கம் ஏதும் இல்லாமல் பாண்டியன் பார்த்துக் கொண்டார். சரஸ்வதியின் அண்ணன்கள் வராத வாரங்களில் சரஸ்வதிக்கு துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்து தந்தார். திருமணம் ஆகாமலே கணவன் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யும் பாண்டியனை உயிராக நினைத்தார் சரஸ்வதி.
இதற்கிடையில் மீனாட்சிக்கு திருமணமும் நடந்தது அதுவும் சென்னை மாப்பிள்ளை என்பது பாண்டியனுக்கு வசதியாகப் போனது. தங்கையையும் காதலியையும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் விதி தனது வேலையைக் காட்டியது.
எத்துனை நேரம் பழமையை நினைத்துக்கொண்டிருந்தாரோ அலைப்பேசி மணி அடிக்கவும்தான் சுயநினைவிற்கு வந்தார் சரஸ்வதி. நிலாதான் அழைத்திருந்தாள் சமயத்திற்கு மருந்து உண்டாரா இல்லையா என்று விசாரித்துவிட்டு வைத்துவிட்டாள். எல்லாவற்றையும் கனவாக எண்ணி வாழ்ந்து கொண்டிருந்தவரை மீனாட்சி ஞாபகப் படுத்திவிட்டார். தனது கடந்த கால வாழ்க்கையைக் குறித்து மகளிடம் இதுவரை எதுவும் சரஸ்வதி கூறியதும் இல்லை, நிலாவும் அதனை குறித்து விசாரித்ததும் இல்லை. தரகரை ஒருமுறை அழைத்து ஜாதகம் ஏதேனும் பொறுத்தம் உள்ளதா என்று விசாரித்தவர். இதுவரை எதுவும் சரியாகவில்லை என்ற பதிலைக் கேட்டதும் சரி என்று அழைப்பை துண்டித்துவிட்டு வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.
வேலையில் மூழ்கியிருந்த நிலா பழக்கதோஷத்தில் ஷீலாவின் இருக்கையை பார்ப்பதும் பின்பு வேலையை கவனிப்பதுமாக இருந்தாள். அவள் குழுவிலும் ஷீலாவின் குழுவிலும் ஏறக்குறைய அனைவரும் கேட்டாகிவிட்டது ஷீலாவின் திடீர் திருமணமும் அவளது ராஜினாமாவின் காரணத்தையும். நிலாதான் சமாளிக்க முடியாமல் திணறினாள். நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு சென்றேன் என்று சொல்வதா, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்கு தெரியாது என்று சொல்வதா என்று குழம்பிப் போனாள். தாயின் உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதித்திருந்த சமயத்தில் விடுப்பு எடுத்த நிலாவை ஷீலாவின் திருமணத்திற்காக நிலா விடுப்பு எடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டவர்களும் உண்டு.
தனிமையிலேயே உணவு உண்ணவும் தேநீர் அருந்தவும் சென்று கொண்டிருந்த நிலா தற்போது யாரேனும் துணையிருந்தால் மட்டும் போதும் நிலைக்கு ஆலானாள். ஷீலாவின் ஞாபகங்கள், தான் தனிமை படுத்தப்பட்டு விட்டோம் என்ற உணர்வு இவற்றையெல்லாம் விட அவள் ஒதுங்கியது ஆகாஷிற்காக. ‘ப்ரோ ப்ரோ’ என்று அழைக்கும் ஷீலாவைக் குறித்து ஒரு வார்த்தை கூட பேச விரும்பாதவன் தன்னையும் எதிரியாக பார்ப்பது இன்னும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
‘ஹே நிலா என்ன எப்போ பார்த்தாலும் வேற உலகத்திலேயே இருக்கிற’
‘இ..இல்லை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’
‘அப்பறம் எப்படி, மூன்று முறை நிலா நிலான்னு கூப்பிட்டோம், எந்த யூஸும் இல்லை, நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வான்னு பாடனுமா?’
‘ஹி ஹி ஹி’
‘சரி சரி கேட்டதற்கு பதில் சொல், புது சி.ஈ.ஓ -விற்கு எவ்வளவு மார்க்க் குடுக்கலாம்’
‘எதுக்கு மார்க்? புது சி.ஈ.ஓ வா?’ என்று விழித்தாள்.
‘அம்மா தாயே நீ ட்ரீம்ஸ்லயே இரு, உன் முட்டை கண்ணை உருட்டாதே’
’…’
’கம்பெனி ஆண்டு விழாவின் போது அறிமுகம் செய்தாங்களே நம்முடைய புதிய சி.ஈ.ஓ நீ பார்க்களையா நிலா? பகுதியிலே வரேன் சொல்லிட்டு போன அதுக்கப்புறம் லீவு, மே பி உனக்கு தெரிய வாய்ப்பில்லை, நாங்களும் ஆவலா..ஹூம் ஆசையா எதிர்பார்த்திட்டிருக்கோம், சர்ப்ரைஸ் ஃப்லோர் விசிட் பண்ணுவார்னு’
‘ஓ’
‘யெஸ் யெஸ்’
‘சரி டைம் ஆயிடுச்சு, கொஞ்சம் ஒர்க் இருக்கு நான் கிளம்பறேன், யூ கேரி ஆன் கைய்ஸ்’
‘ஷூர் நிலா’
அனைவருக்கும் விடை கொடுத்து எழுந்து வந்தவள் எதிர்புறம் டேபிளில் அமர்ந்திருந்த ஆகாஷைப் பார்த்ததும் சிறிது தேங்கினாள், அவனும் நிலாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் தான் அதன்பிறகு வேகமாக நடந்து சென்று விட்டாள்.
‘திமிர்’ என்று முனுமுனுத்தவன் அலைப்பேசியில் குருஞ்செய்தி வந்ததும் வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.
--
அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதிக்கு அலைப்பேசியில் அழைப்பு வந்தது.
‘சொல்லுங்க அய்யரே’
’அம்மா, உங்க பெண் ஜாதகம் எனக்கு தெரிந்த ஒரு பையனோட ஜாதகத்துடன் பொருந்தியிருக்கு, அது விஷயமா பேசலாம்னு உங்களை அழச்சேன்’
‘ரொம்ப சந்தோஷம் சாமி, வேற விவரம் ஏதும்’
‘எல்லா விவரத்தையும் நாளைக்கு நேரில் பேசலாம், நான் இன்னும் பையன் வீட்டில் பேசல. உங்களுக்கு சம்மதம்னா பையன் வீட்ல பேசலாம்னு நினைச்சேன். சரி அய்யரே, நாளைக்கு நேரில் பேசலாம்’
சரஸ்வதிக்கு மகிழ்ச்சியாகவும், பதட்டமாகவும் இருந்தது. எல்லாம் நல்லதாக அமையனும் கடவுளே என்று வேண்டிக்கொண்டார்.
எல்லாம் சரியாக அமைந்தால் நிலாவிடம் சொல்லலாம் இல்லையென்றால் அவள் தொடக்கத்திலேயே மறுத்துவிடுவாள் என்றெண்ணியவர் அது குறித்து ஏதும் நிலாவிடம் பேசவில்லை.
காலையில் மகள் வேலைக்குச் சென்றதும் கோயிலுக்கு கிளம்பிச் சென்றார். பூஜைகளை முடித்துவிட்டு வந்த அய்யர் ‘நிலாமா, சொல்றேன்னு தப்பா எடுக்காதீங்க. நம்ம பெண் வாழ்க்கை நல்லபடியா அமையனும். அதனால் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் மறுத்துடாதீங்க’
‘சரி அய்யரே, முதலில் விவரத்தை சொல்லுங்க’
‘பையன் வீடு இங்க சென்னைதான், ஒரே பையன், வெளிநாட்டில் படிச்சிருக்கான். அவங்களுக்கு சொந்த கம்பெனி இருக்கு.. அம்மா யோசிக்காதீங்க, நீங்க நினைக்கிற மாதிரி அவங்க பரம்பரை பணக்காரர்கள் இல்லை. பையனோட அப்பாதான் கம்பெனியை ஆரம்பிச்சது அது படிப்படியா வளர்ந்து இன்னைக்கு சென்னையில் சொல்லப்படுகிற பெரிய பணக்காரர்களில் ஒருவர்’
‘அய்யரே, பெரிய இடம் எங்களுக்கு வேண்டாம்’
‘அப்படி யோசிக்காம எடுத்தோம் கவுத்தோம்னு ஒரு முடிவை சொல்லாதீங்கம்மா, அது மட்டும் இல்லை ஒரு சின்ன தோஷம் பையன் ஜாதகத்தில் இருக்கு, அதனால தீர்க மாங்கள்ய பாக்கியம் உள்ள ஜாதகம் தான் சேரும். உங்க பெண் ஜாதகத்தில் அது நூறு சதவீதம் இருக்கு நம்பி கல்யாணத்தை செய்யலாம்’
‘அய்யரே, எனக்கு இருக்கிறது ஒரே பெண்’
‘அம்மா, பயப்பட ஒன்னும் இல்லை, அது ஒரு சின்ன தோஷம் தான். பையனோட அம்மாவும் அதனாலதான் பெண் பார்க்க தயங்கராங்க, என்னதான் இருந்தாலும் சொந்த பையன் இல்லியா கல்யாணம் பண்ணாம இருக்க முடியுமா?’

தொடரும்..
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg

எபி-9

‘நான் ரொம்ப சந்தோஷமா வந்தேன் அய்யரே, பையனோட தோஷம் என் பெண்னோட ஜாதகத்தினால சரியாயிடும்னா எனக்கு ஆட்ஷேபனை இல்லை. ஆனால் அவங்க பெரிய இடம் அதுதான் எனக்கு சரிவரும்னு தோனலை வேற ஜாதகம் இருந்தா சொல்லுங்க பார்க்கலாம்’
‘வித்தியாசமா இருக்கீங்க நிலாமா, எல்லாரும் பெரிய இடம்னா யோசிக்காம ‘சரி’ சொல்லுவாங்க நீங்க என்னடான்னா தோஷம் பெரிசில்லை பெரிய இடம்தான் இடிக்குதுன்னு சொல்றீங்க, நான் என்ன பண்ணட்டும் எல்லாரும் தோஷத்திற்கு பயப்படுறாங்க, ஏன் பையனோட அம்மாவே தான் எப்படி வேறொரு பெண்ணோட வாழ்க்கையை தோஷம் உள்ள தன் பையனுக்காக கேட்கிறதுன்னு தயங்கறாங்க. இதுதான் விதி’
’அர்ச்சனை பண்ணனும் அய்யரே’ என்று மீனாட்சி அங்கு வந்து நின்றார்.
‘இதோ வந்திடறேன் மா’ என்று கூறியவர் சரஸ்வதியிடம் ‘காத்திருப்போம் மா, ஏதும் நல்லபடியா அமைந்ததுன்னா தகவல் சொல்றேன்’ என்று சென்றுவிட்டார்.
‘அண்ணி’
‘வேண்டாம் மா, எதுவும் பேச வேண்டாம், நான் கிளம்புறேன்’ என்றவர் பதில் ஏதும் எதிர்பார்க்காமல் கிளம்பிச் சென்றுவிட்டார்.
கடவுளின் முன் நின்று கண்ணை மூடி வேண்டிக்கொண்டிருந்தவரை அய்யர் ஆரத்தியுடன் வந்து அழைத்தார்.
‘என்னம்மா கண் கலங்கி இருக்கு’
‘ஒன்னுமில்லை சாமி’
‘எல்லாம் கடவுள் பார்த்துப்பான், தைரியமா இருங்க’
‘எப்படி சாமி தைரியமா இருக்க?’
’சரஸ்வதியம்மாவ பார்த்து பேசிகிட்டிருந்தீங்களே, அவங்க கிளம்பிட்டாங்களா?’
‘ஆமாம் சாமி, ஏன் கேட்கறீங்க’
‘ஒன்னுமில்லைமா, அவங்க பெண் ஜாதகமும் உங்க பையன் ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்கு’
‘அப்படியா சாமி சொல்றீங்க’
‘ஆமாம் மா, இதில் சங்கடம் என்னன்னா அவங்க தோஷத்தை பற்றி கவலை படலை, உங்க அந்தஸ்து அதுதான் அவங்க மறுத்திட்டாங்க’
‘என்னோட பையன்னு சொன்னீங்களா?’
‘இல்லை அம்மா, அவங்க முன்னமே சொல்லியிருந்தாங்க பெரிய இடம் வேண்டாம்னு நான் தான் எதுக்கும் பார்க்கலாம்னு பார்த்தேன். பொருத்தம் இருந்தா எப்படியும் பேசி சம்மதிக்க வைக்கலாம்னு நினைச்சேன், பையனும் எனக்கு தெரிந்த இடம் பெண்ணும் எனக்கு தெரிந்த இடம் அதனால பயப்பட வேண்டிய அவசியமில்லைனு தோனித்து. ஆனால் பெரிய இடம்னு தெரிந்ததும் அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க, மேல பேசமுடியலை. பெண்ணிற்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் இல்லைன்னா திருமணம் தாமதிக்கும். என்ன செய்றதுன்னு தெரியலை’
‘சரி சாமி, நான் பேசி பார்க்கிறேன்’ என்றவர் பிரசாதத்தை வாங்கி கொண்டு வேகமாக நடந்தார்.
வீடு வந்த சரஸ்வதிக்கு அசதியாக இருந்தது. சிறிது படுக்கலாம் என்று படுக்கையறைக்குச் சென்றவர் வாயிலில் அழைப்பு மணி அடிக்கவும் யாராக இருக்கக்கூடும் இந்த நேரத்தில் என்ற யோசனையுடன் கதவைத் திறந்தார்.
‘உள்ள வர சொல்ல மாட்டீங்களா அண்ணி?’
‘..’
‘உங்க கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன் மறுத்திடாதீங்க அண்ணி’
‘’
‘அண்ணி, நாம் உள்ளே போய் பேசலாம். இது நம்ம நிலாவோட வாழ்க்கை பத்தினது’
சரஸ்வதிக்கு நிலா என்ற பெயர் கேட்டதும்தான் சுய உணர்வு வந்தது.
‘உள்ளே வாங்க’
‘அண்ணி, உட்காருங்க நான் ஒரு முக்கியமான விஷயத்தை பேசலாம்னு வந்தேன்’
‘சொல்லுங்க’
’தாகமா இருக்கு, ஒரு கப் தண்ணீர் வேணும் அண்ணி’
உள்ளே சென்றவர் சொம்பில் தண்ணீருடன் வந்தார்.
‘நன்றி அண்ணி’
‘சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்புங்க எனக்கு அசதியா இருக்கு’
’உடம்புக்கு சரியில்லையா அண்ணி, வாங்க டாக்டர் கிட்ட போயிட்டு வந்திடலாம்’
‘அதெல்லாம் ஒன்னுமில்லைங்க, தூங்குனா சரியாயிடும்’
‘தயங்காதீங்க அண்ணி, எதுனாலும் சொல்லுங்க’
‘தயவு செய்து சொல்ல வந்ததை சொல்லிவிட்டு கிளம்புங்க’
‘மன்னிச்சிடுங்க அண்ணி, நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். என் பையன் வாழ்க்கை உங்க கையில தான் இருக்கு’
‘உங்க பையன் வாழ்க்கையா?’
‘ஆமாம் அண்ணி, கோவில் பூசாரி சொன்ன பையன் வேற யாருமில்லை, என் பையனைத்தான்’
‘ஓ’
‘அண்ணி, நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க, முழுசா கேட்டுவிட்டு ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்க’
‘சொல்லுங்க’
‘என்னை ஒரு பையனைப் பெற்ற தாயா நினைங்க, பூசாரி சொன்னது போல் நம்ம குழந்தைங்க ஜாதகம் பொருந்தியிருக்கு, இதைக் கேட்டதும் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா அண்ணி, ஆனால் அவன் ஜாதகத்தில் இருக்கும் சின்ன தோஷம் தான் எனக்கு உருத்தியது. ஆனால் நீங்க அதை பெரிதாக எடுத்தக்கலைன்னு கேள்விப்பட்டேன் அந்த தைரியத்தில்தான் நான் உங்ககிட்ட பேச வந்தேன்’
‘மேல சொல்லுங்க’
‘’இதற்கெல்லாம் மேல ஒரு சின்ன சிக்கல் இருக்கு, ஆனால் அது தற்காலிகமானதுதான். அதைத்தான் உங்ககிட்ட சொல்லனும்னு நினைக்கிறேன்’
’விவரமா சொல்லுங்க’
’என் பையன் பன்னிரெண்டாவது வரை ஊட்டி காண்வெண்டில் படித்தான் அதன் பிறகு மேற்படிப்பு எல்லாம் வெளிநாட்டில் படித்தான் அதன் பிறகு அங்கேயே ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான், எங்க கம்பெனியில் சேர்ந்து அதனை எடுத்து நடத்த எத்தனை முறை சொல்லியும் கேட்கவில்லை. என் வீட்டுக்காரரும் கண்டுக்காமல் விட்டுவிட்டார். குறுகிய காலத்தில் பெரிய நிலையை அடைந்ததினால் நிறைய எதிரிகள் அவருக்கு தொழிலில். பலமுறை கொலை முயற்சியும் நடந்திருக்கிறது. அது எதுவும் அவனுக்கு தெரியாது, நான் தான் ஒரு நாள் பேசும் போது யதார்த்தமாக சொல்லிவிட்டேன். அவன் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை எங்களுக்குத் தெரியப்படுத்தாமல் திடீரென்று ஒருநாள் இந்தியா கிளம்பி வந்துவிட்டான். அவனை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்து வர எங்களது டிரைவர் சென்றிருந்தார். என் பையன் சிறு வயதிலிருந்தே கொஞ்சம் சுட்டி, கஷ்டகாலம் என்றுதான் சொல்லனும் அன்று ஏர்போர்ட்டிலிருந்து காரை ஓட்டிவந்தது என் பையன் அப்போது அதிக வேகம் காரணமாக எதிர்பாராத விதமா சின்ன விபத்து ஏற்பட்டது. தெய்வத்தின் கருணையில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. டிரைவருக்குத்தான் காலில் அடிபட்டுவிட்டது. ஒரு சில மாதங்கள் நடக்க முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். என் கணவர் கொஞ்சம் கண்டிப்பானவர், பையன் சொல்லாமல் வந்தது, வண்டியை தானாக ஓட்டி விபத்தில் சிக்கியது எல்லாம் சேர்ந்து அவருக்கு அவன் மேல கடும் கோபம். என் பையன் வந்து ஒருநாள் தான் வீட்டில் இருந்தான் அதற்குள் மனுநீதி சோழன் தீர்ப்பை சொல்லிவிட்டார்’

‘மனுநீதி சோழனா?’
‘ஆமாம் அண்ணி, என் கணவர்தான் அந்த மனுநீதி சோழன். அந்த டிரைவர் ரொம்ப காலமா எங்ககூட இருக்கார். டிரைவர்னு சொல்லுவதைவிட கூடப்பிறக்காத உடன்பிறப்புன்னு சொல்லலாம். அவருக்கு அடிபட்டுவிட்டதால், அவர் செய்து கொண்டிருந்த வேலையை என் பையன் தான் செய்யனும்னு சொல்லிட்டார், அது மட்டுமில்லாமல், டிரைவரின் கால் சரியாகும்வரை அவர்கள் வீட்டில்தான் தங்க வேண்டும், யாரிடமும் தன் அடையாளத்தை தெரியப்படுத்தக்கூடாதுன்னும் சொல்லிட்டார்’
‘ஓ’
‘அவன் ஆறாவது படிக்கும்போது என்னைவிட்டு பிரிஞ்சு போனது, படிப்பெல்லாம் முடிச்சு என் பையன் என்னிடம் திரும்பி வரும் நாளுக்காக காத்திருந்தேன் அதுவும் எனக்கு குடுத்து வைக்கவில்லை. அவன் செய்தது தப்பாக இருந்தாலும் பெத்த மனசு எப்படி இதையெல்லாம் தாங்குவது. நான் எவ்வளவோ போராடி பார்த்திட்டேன், என்னால் முடியவில்லை. தினமும் கோவிலில் வந்து எப்படியாவது டிரைவர் சீக்கிரமா எழுந்து நடக்கனும்னு வேண்டிக்கிறேன். என் கணவன் மனசை மாற்ற அந்த கடவுள் நினைத்தாலும் முடியாது, அது என் அண்ணன் விஷயத்தில் நடந்ததை வைத்து எனக்கு நல்லா தெரியும்’
‘என் அண்ணன்’ என்ற வார்த்தையில் உயிர் வரப்பெற்றவர், அப்படி எதுவும் தன் காதில் விழாததுபோல் மீனாட்சியையே பார்த்துக் கொண்டிருந்தார்.
’என் அண்ணன் விஷயத்தில் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரிய வேண்டாமா அண்ணி?’

’நான் அன்று சொன்னதுதான் இன்றும் சொல்கிறேன், எங்களுக்கு உறவென்று யாரும் கிடையாது, நீங்க யாரை சொல்றீங்கன்னு எனக்கு தெரியாது. இப்ப நான் என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க?’
‘அண்ணி என் பையனுக்கு கல்யாணம் இன்னும் கொஞ்ச நாளில் நடந்தாகனும், டிரைவர் கால் குணமாகி அதற்கப்புறம் பெண் தேடி கல்யாணத்தை வெச்சுக்கிற அளவு கால அவகாசம் இல்லை. பெரிய இடம்கிறதால எல்லாரும் கெட்டவங்க ஆகிடமாட்டாங்க. உங்க விஷயத்தையும் நிலா விஷயத்தையும் கூட்டி சேர்க்காதீங்க. என்னை நம்பவில்லைனாலும் என் கணவரை நீங்க நூறு சதவீதம் நம்பலாம். தயவுசெய்து கல்யாணத்திற்கு சம்மதிங்க அண்ணி, நிலாவிற்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டாமா?’ எப்படியும் நிலாவை நல்ல இடத்தில் கட்டி குடுப்பீங்க அது ஏன் என் பையனுக்காக நீங்க தரக்கூடாது அண்ணி, எல்லாரையும் மாதிரி நீங்க விசாரிங்க அதுக்கப்புறம் நீங்க பதில் சொன்னால் போதும். பெரிய இடம்னு மட்டும் சொல்லி ஒதுக்கிடாதீங்க அண்ணி.’
‘எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்’
‘கண்டிப்பா அண்ணி, நீங்க யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க’
‘சரிங்க’
‘அண்ணி அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்’
‘சொல்லுங்க’
‘இப்போதைக்கு நான் சொன்ன விஷயத்தையெல்லாம் உங்க மனசிலையே வெச்சுக்கோங்க, கல்யாணம் சின்னதா கோவிலில் நடத்தலாம். டிரைவர் உடல்நிலை சரியானதும் பெரிசா எல்லார் முன்னிலையிலும் ரிஷப்ஷன் வெச்சுக்கலாம் அண்ணி’
‘அதை பிறகு யோசிக்கலாம்ங்க’
‘இல்லை சொல்லும்போது எல்லாத்தையும் சொல்லிடனும்னு நினைக்கிறேன், கல்யாணம் ஆனாலும் என் பையன் இருக்கிற வீடுதான் உங்க பெண்ணிற்கும் புகுந்த வீடு, நாங்க இந்த கல்யாணத்தில் முதலாளி வீட்டாராகத்தான் பங்கெடுப்போம். நீங்க சம்மதிச்சா உடனே நல்ல நாளில் கோவிலில் திருமணம், பத்திர பதிவும் நடத்திடலாம். வேற எந்த விஷேசமும் வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம், எல்லாத்தையும் யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க அண்ணி’
‘சரி, நீங்க கிளம்புங்க எனக்கு தலைவலிக்கிற மாதிரி இருக்கு, என் பெண் வாழ்க்கை இத்தனை சிக்கலா இருக்கும்னு நான் கனவில் கூட நினைக்கலை’
’சரஸ்வதியின் அருகில் வந்த மீனாட்சி, மெதுவாக தன் கைக்குள் சரஸ்வதியின் கையை வைத்து, நம்ம கும்பிடற தெய்வம் கைவிடாது அண்ணி, எல்லாம் நல்லதாகவே நடக்கும், நான் வரேன் உடம்பை பார்த்துக்கோங்க’
சரி என்று தலையை ஆட்டியவர், மீனாட்சி சென்றதும் தலைவலி மருந்தை எடுத்துக்கொண்டு சிறிது நேரம் படுத்துக்கொண்டார்.

----
வீட்டிற்கு வந்த நிலா தாயின் கவலையான முகத்தைப் பார்த்து, ’என்ன சரஸு எந்த கப்பல் கவிழ்ந்தது, இவ்வளவு கவலை?’
‘போடி, உனக்கு எங்க புரியும் என் கவலை’
‘எனக்கும் அதுதான் புரியலை, கவலை ஏதும் இல்லாமலையே கவலைப்பட உன்னைவிட்டா யாரும் இல்லைமா’
‘ஆமா, என்னைவிட்டா யாரும் கிடையாது’
சிறிது நேரம் மொளனம் நிலவியது.
அன்றைய இரவும் விடியா இரவாக நீண்டது நிலாவிற்கும் சரஸ்வதிக்கும்.
மறுநாள் காலையில் வேலைக்குச் செல்ல நிலாவிடம் தன்னை கோவிலில் விட்டுவிடச் சொல்லியவரை மறுக்காமல் கோவிலுக்கு கூட்டிச்சென்றவள் என்றுமில்லாமல் தானும் உள்ளே சென்று கடவுளை கும்பிட்டாள்.

என்னம்மா, இன்றைக்கு ஏதும் விஷேசமா அம்மாவுடன் கோவிலுக்கு வந்திருக்க என்று கேட்ட பூசாரியிடம் ‘இல்லை’ என்பதுபோல் தலையை ஆட்டினாள்.
கடவுள் முன் கண்களை மூடி நின்றவளுக்கு ஆகாஷின் முகம் கண்முன் தோன்றியது. ச்ச என்ன இது என்று தோள்களை உலுக்கியவள், தன் மனதின் சஞ்சலத்தை நீக்கித் தருமாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். தன்னையே நம்ப முடியாமல் வியந்தாள். கடவுளை தொழாதவள், இன்று ஏதோ தோன்ற உள்ளே வந்து தன்னையும் அறியாமல், கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.
கவலையாக இருந்த தாயிற்கு ஒரு ஆறுதலை தர எண்ணி தான் நிலாவும் கோவிலின் உள்ளே சென்றாள், ஆனால் தானே ஆறுதல் தேடும் நிலைமையில் இருக்கிறோம் என்று உள்ளே சென்ற பிறகுதான் அவளுக்குத் தோன்றியது.

கடவுளை வேண்டிக்கொண்டவள், தாயிடம் விடைபெற்றுவிட்டு வெளியில் வந்தாள். அங்கே மீனாட்சியைக் கண்டவள் தானாகவே அவரிடம் சென்றாள்.

‘எப்படியிருக்கீங்க ஆண்ட்டி?’
‘நான் நல்லா இருக்கேன்மா, நீ எப்படியிருக்க? தனியாவா வந்த?’
‘அம்மா உள்ளேதான் இருக்காங்க’
‘ஓ, சமயத்திற்கு மருந்து எடுத்துக்கறாங்களா? செக் அப் போனீங்களா?’
‘மருந்து எடுத்துக்கிறாங்க, செக் அப் போறோம், எல்லாம் நடக்குது ஆண்ட்டி ஆனால் தேவையில்லாமல் கவலை படறாங்க, என்ன கவலைன்னு கேட்டால் பதில் சொல்ல மாட்டீங்கறாங்க. அடிக்கடி கல்யாணம் ஆகப் போகிற பெண் அது இதுன்னு உளறாங்க. நீங்களே சொல்லுங்க ஆண்ட்டி, இப்போதான் நான் படித்து முடித்து வேலையில் சேர்ந்திருக்கேன். அவங்களும் ரிடயர்டு ஆயிட்டு பென்ஷன் பணம் வருகிறது. இதற்கு மேல் என்ன வேணும்? கல்யாணம் செய்ய இன்னும் வயதிருக்கு, அதைப் பற்றி எல்லாம் இப்பவே யோசிச்சால் எப்படி ஆண்ட்டி நீங்களே சொல்லுங்க’
அவளது கவலைகளைக் கேட்டவர் மென்மையாக சிரித்துவிட்டு நிலாவின் கைகளை பிடித்தவர், என்கூட கொஞ்சம் வந்து அந்த மண்டபத்தில் உட்காரும்மா. என்று அவளின் முகத்தைப் பார்த்தார்.
ஆபிஸிற்கு நேரம் ஆகிக் கொண்டிருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருந்தவளை, உரிமையோடு இழுக்காத குறையாக மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அவர் அருகில் இருத்தியவர்.
‘கல்யாணத்திற்கு வயது என்று ஒன்றில்லைதான் நிலா ஆனால் நீ உன் அம்மாவின் நிலையில் இருந்து பார்க்கனும். எனக்கு தெரிந்தவரை உங்க இரண்டு பேருக்கும் நெருங்கிய சொந்தம் என்று யாரும் இல்லை, தெரிந்தவங்களும் மிகக்குறைவு. உன்னை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தால் உறவிற்கு உறவும் கிடைக்கும் உன்னை பார்த்துக்கொள்ள நிறைய சொந்தங்கள் இருக்காங்க என்கிற மன நிம்மதியும் கிடைக்கும் அதுவே அவங்க மனக் கவலைக்கான மருந்தாகவும் இருக்கும். நீ நல்லா வாழுவதைப் பார்த்து அவங்க சந்தோஷத்தோட வாழ்வாங்க’
அவர் சொல்வதும் ஒரு வகையில் சரிதான் என்று நினைத்தவள். ஒன்றும் சொல்லாமல் மீனாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இப்போ உன் கவலை என்னவென்று நான் சொல்லவா? உனக்கு கல்யாணம் ஆயிட்டா அம்மாவை யார் பார்த்துப்பாங்கன்னு தானே?’
ஆம் என்பது போல் தலையை ஆட்டினாள்.
அம்மா கண்டிப்பா நல்ல இடத்தைத்தான் உனக்கு பேசி முடிப்பாங்க, நல்லதையே நினைப்போம் நிலா. ஒரு நல்ல பையன் உன் கணவனா வந்தா, தன் தாயை மாதிரி உன் அம்மாவையும் பார்த்துப்பான். அம்மாவிற்கு மட்டும் இல்லை உனக்கும் தான் உறவுகள் கிடைப்பாங்க. நீ நினைத்துப்பார், உங்க இரண்டு பேருக்கும் மாமா, அத்தை, அவங்க சொந்தம் அப்படி இப்படின்னு எல்லா சொந்தங்களும் உங்களுக்கு உறுதுணையா இருக்கும். சொந்தங்கள் எதுக்குமா இருக்கு? இன்பம் தும்பம் எல்லாத்தையும் பங்கு போட்டுக்கத்தானே?. யோசி நிலா, சில வருஷங்களுக்குப் பிறகு நடக்கப்போகிற திருமணத்தை நீ இப்பவே செய்துகிட்டா, உங்க இரண்டு பேரின் தனிமையும் போயிடும், மனக்கவலையும் நீங்கிடும். என்ன சொல்ற? யோசிப்பதானே?

‘கண்டிப்பா யோசிக்கறேன் ஆண்ட்டி, நீங்க பெரியவங்க எனக்கு நல்லதைத்தான் நினைப்பீங்கன்னு தெரியும்’
‘நல்லது நிலா, நீ கிளம்பு நான் சாமி கும்பிட போறேன்’
விடைபெற்றவள் எப்படி அலுவலகம் வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. திருமணம் அதனால் தங்களுக்கு கிடைக்கப் போகும் சொந்தங்கள் என்று பலவிதமான காட்சிகள் கண்முன்னே வந்தது. அவளுக்கு புதுவித உணர்வுகள் தோன்றின. அந்த நினைவுகளுடனே தனது இருக்கைக்கு வந்தவள் கண்டது விக்கியும் ஆகாஷும் மிக மும்முரமாக பேசிக் கொண்டிருந்தது. நிலா அவர்களை நோக்கி புன்னகை செய்ய நினைத்த நேரம் அவர்கள் இரண்டுபேரும் இவளை நோக்கிவிட்டு ஒரு அலட்சிய பார்வை பார்த்தவளுக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் என்று தோன்றியது.
இனிமேல் அவர்கள் இருக்கும் திசைக்கே திரும்பக்கூடாது என்று முடிவு எடுத்துக் கொண்டாள். ஆகாஷின் மீது தோன்றியது சாதாரண ஈர்ப்புதான், அதற்கு மேல் அந்த உணர்விற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தது தனது முட்டாள்தனம் என்று தன்னைத்தான் தேற்றியவள், வேலையில் மூழ்கிப் போனாள்.
மதிய உணவு இடைவேளையில் கேண்டீனில் உணவு உண்டு கொண்டிருந்தவளின் முன்னே நிழல் ஆடவும், நிமிர்ந்து பார்த்தவளின் எதிரில் ஆகாஷ் நின்றுகொண்டிருந்தான். நிலா உண்ணுவதும் மெதுவாக அவனைப் பார்ப்பதுமாக இருந்தாள், ஆனால் ஆகாஷ் ஒருமுறை கூட அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. விரைவாக உண்டவன் அதே வேகத்தில் எழுந்து சென்று விட்டான். முகத்தில் அறைந்தது போல் இருந்தது நிலாவிற்கு. தான் அன்று சொன்ன பதிலும் அவனுக்கு அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். ஈர்ப்பு என்ற உணர்விற்கே தனக்கு இத்தனை மன வேதனையென்றால் காதல் என்ற உணர்வை கொண்டாடிய ஷீலாவின் நிலைமை எண்ணி மனம் நொந்தாள்.
அன்று வீடு திரும்பிய நிலாவிடம் சரஸ்வதி திருமணத்தைக் குறித்து பேசினார். நிலாவிற்கு ஏதோ பெரிய பாரம் தலையின் மேல் வைத்தது போல் உணர்ந்தாள். ச்ச திருமணம் என்பதைக் குறித்து சிறிதும் நினைத்துப் பார்த்திராத நிலாவிற்கு அந்த வார்த்தை பலவித உணர்வுகளை தந்தது. ஒருபுறம் காலையில் மீனாட்சி சொன்னது மறுபுறம் தாயின் நிலை, அடுத்து யாரென்று தெரியாத ஒருவருடனான தன் திருமணம், தனது எதிர்காலம் என பலதும் தன் முன்னே காட்சியாக விரிந்தது.

தொடரும்
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg

எபி-10

’அம்மா கொஞ்ச யோசிச்சு செய்யலாம்மா’
‘யோசிக்க ஒண்ணுமில்லை நிலா, உன் ஜாதகப்படி உடனே திருமணம் நடக்கனும்’
’அம்மா இதெல்லாம் டூ மச், ஜாதகம் அது இதுன்னு ஏன் இந்த காலத்துலையும் உங்களை போட்டு குழப்பிக்கிறீங்க’
‘நிலா, நான் உன் அம்மா, உன்னைவிட எனக்கு அனுபவம் ஜாஸ்தி. எல்லாம் காரணமாகத்தான் சொல்றேன்’
‘அம்மா, இருந்தாலும்’
‘ஏன் இழுக்கிற நிலா? உன் மனசில் யாராவது இருக்காங்களா?’
அந்த கேள்வியில் ஒரு நிமிடம் பதறிவிட்டாள்.
‘என்னம்மா?’
‘நீ யாரையாவது காதலிக்கிறியா/’
காதலா? தனக்கா? ஒருவேளை தான் ஒருவரை காதலிப்பதாகவும், இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறினால் தற்காலிகமாக திருமணத்தை தள்ளிப்போட வாய்ப்பிருக்கிறது. தாய் பிடிவாதம் பிடிப்பவர் என்றாலும் நிலாவின் விருப்பத்திற்கு என்றும் தடை சொன்னதில்லை. சரி அப்படியே சொல்லி விடலாம் என்று முடிவெடுத்தவள்
‘அம்மா, அது வந்து’
’சொல்லு நிலா’, யார் அந்த பையன்?’
என்னது இது என் மைண்டு வாய்ஸ் அம்மாவிற்கு எப்படி கேட்டது. இப்போ எந்த பையனைக் கை காட்டுவது. சொன்ன உடனே, ஜாதகத்தைக் காட்டி உடனே பையனின் வீட்டில் பேசலாம் என்றால் என்ன செய்வது? யோசி நிலா, யோசி என்று யோசித்துக் கொண்டிருந்தாள்
‘நிலா உன்னைத்தான் கேட்கிறேன், யார் அந்த பையன்?’
‘அது வந்து அம்மா’
‘உன் கூட வேலை செய்யிற பையனா?’
‘ஆமாம்’
‘விவரம் சொல்லு, பையன் பெயர், அவங்க குடும்ப விவரத்தையும் சொல்லு’
‘அம்மா, அவர் பெயர் ஆகாஷ், எங்க கம்பெனியில் டிரைவரா இருக்கார்’
‘என்னது?’
‘ஆமாம் அம்மா, வேற எந்த விவரத்தையும் என்கிட்ட கேட்காதீங்க’
‘நிலா, இந்த கல்யாணம் நடக்காது’
‘ஏம்மா?’
‘காரணமெல்லாம் சொல்ல முடியாது, இன்னும் கொஞ்ச நாளில் உனக்கு கல்யாணம், நான் பார்கிற பையனைத்தான் நீ கல்யாணம் செய்துக்கனும்.’
இதைக்கேட்டதும் நிலாவிற்கு கோபம் வந்தது. இதென்ன கொடுமை.
‘முடியாதுன்னு சொன்னால்’
‘நீ என்னை பார்க்க முடியாது’
‘அம்மா’
‘நான் பேச்சுக்கு சொல்லலை நிலா, நான் சொன்ன மாதிரி செய்வேன்’
‘அம்மா’
‘என் பேச்சை மீறி ஏதாவது செய்யனும்னு நினைத்தாலே நீ என்னை பார்க்க முடியாது, ஞாபகத்தில் வைத்துக்கொள்’
நிலா அதிர்ந்துவிட்டாள், அவள் ஏதோ தற்காலிகமாக திருமணத்தை தள்ளி போடுவதற்காகத்தான் சும்மா அடித்துவிட்டாள், ஆனால் தாய் இவ்வளவு வீம்பு பிடிப்பார் என்று நினைக்கவில்லை. முதலில் பையனின் விவரத்தை கேட்டவர் விவரத்தை சொன்னதும் எதிர்கிறார். காதலின் மீது வெருப்பென்றால் காதலிக்கிறேன் என்று சொன்னதும் எதிர்த்திருப்பார். ஆனால், விவரத்தை சொன்னதும் முடியாது என்கிறார். என்ன பிரச்சினையாக இருக்கும்?
இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால், பேசாமல் இருந்திருக்கலாம். போயும் போய் ஆகாஷை ஏன் இதில் இழுத்தோம்? அம்மா நடக்காது என்றதும் எனக்கு ஏன் கோபம் வரனும், ச்ச நம்ம நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு. ஆனாலும் இந்த அம்மா ஏன் இப்படியெல்லாம் என்னிடம் பேசறாங்க. நான் அவங்க பெண் தானே. என்னைப் பற்றி யோசிக்கவே மாட்டாங்களா? தூக்கு தண்டனை கைதிகிட்ட கூட கடைசி ஆசை பற்றி கேட்பாங்க, ஆனால் அம்மா எவ்வளவு தீர்மானமா சொல்லீட்டாங்க. இதே பையனாக இருந்தால் இப்படி நடத்தியிருப்பாங்களா? என்று என்னென்னவோ யோசித்தாள், தூக்கம் வரவேயில்லை, டைரியில் அனைத்தையும் எழுதியவள், விடியல் வரை விழித்திருந்து விட்டு காலை ஏழு மணிக்கே அலுவலகம் கிளம்பிச் சென்று விட்டாள்.
இதனை சற்றும் சரஸ்வதி எதிர்பார்க்கவில்லை. மகளிடம் சிறிது விளக்கியிருக்கலாமோ? நேற்று சரஸ்வதி தன் முடிவை சொன்னதும் தனது அறைக்கு எழுந்து சென்றவள் அதன் பின் சரஸ்வதியிடம் எதுவும் பேசவில்லை.
இது சரிப்பட்டு வராது, உடனே மீனாட்சியிடம் சம்மதத்தை தெரிவித்து கூடிய சீக்கிரம் திருமணத்தை நடத்த வேண்டும். ஒரு டிரைவருக்கு கட்டி குடுக்கவா இப்படி கஷ்டப் பட்டேன். எந்த தொழிலும் குறைவில்லை ஆனால் பணமில்லாமல் ஆரம்ப காலத்தில் தான் பட்ட கஷ்டத்தைப் போல் தன் பெண்ணும் கஷ்டப்படுவதை சரஸ்வதி விரும்பவில்லை. சின்னப் பெண் இப்போது வருத்தப்பட்டாலும் சிறிது காலம் கழித்து தன்னை புரிந்து கொள்வாள் என்று நம்பினார்.
உடனே மீனாட்சியிடம் தனது சம்மதத்தை தெரிவித்தவர் நிலாவிடம் எந்த விவரத்தையும் சொல்ல வேண்டாம், காலம் கூடி வரும் பொழுது எல்லாவற்றையும் சொல்லலாம் என்றும் கூறிவிட்டார்.
அலுவலகத்திற்கு வந்தவள் சிறிது நேரம் வேலை செய்தாள், பின்னர் அவளால் அமர்ந்து வேலை செய்ய இயலவில்லை. முந்தைய தினத்தின் தூக்கம், தலைவலி, மனக்கவலை என வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை. லீவு எடுத்து வீட்டிற்கு செல்ல மனமும் இல்லை. எங்காவது ஓடி விடலாமா என்றிருந்தது.
மேனஜரிடம் உடல்நிலை சரியில்லாத காரணமாக சிறிது நேரம் ஓய்வு கேட்டவள் கேண்டீனுக்குச் சென்று ஓரமாக இருந்த டேபிளில் தலை கவிழ்த்தி படுத்துக் கொண்டாள். எத்தனை நேரம் அந்நிலையிலேயே உறங்கினாளோ அவள் அருகே அலைபேசியின் சத்தம் கேட்டதும் விழிப்பு வந்தவள் எழுந்து திரு திருவென்று முழித்தாள்.
‘ரிலாக்ஸ், யாரும் இங்கில்லை, உட்காரு’
‘இவனா’
‘டீ ஆர் காபி?’
‘-’
‘போய் முகம் கழுவிட்டு வா, காபி வாங்கி வைக்கிறேன்’
சாவி கொடுத்த பொம்மையைப் போல் அவன் சொன்னதைச் செய்தவள், அவன் வாங்கி வைத்த காபியைக் குடித்தாள்.
‘இப்ப ஓகே வா?’
‘ஹ்ம்ம்’
‘சரி நான் கிளம்பிறேன்’, முடியலைன்னா எழுந்து வீட்டுக்கு போ’
‘ஆகாஷ்’
‘ஓ என் பெயர் ஞாபகம் இருக்கா?’
‘-’
’உடம்பு சரியில்லைன்னா, வீட்டுக்கு போ. இல்லை ரெஸ்ட் எடுக்க ஆபிஸில் ரூம் இருக்கில்லை அங்க போய் ரெஸ்ட் எடு, எதுக்கு இப்படி கேண்டீனில் வந்து தூங்கிற?’
’-’
‘என்ன பதிலைக் காணோம்?’
’-’
’மருந்து ஏதும் வேணுமா?’
‘இல்லை வேண்டாம் தேங்ஸ்’
‘சரி, கிளம்பு’
‘எங்க?’
‘உன் சீட்டுக்கு இல்லை உன் வீட்டுக்கு’
இரண்டிற்கும் செல்ல அவளுக்கு மனமில்லை. எங்காவது செல்ல வேண்டும் ஆனால் எங்கு செல்வது?
‘என்ன யோசிக்கிற? முடியலையா?’
‘என்னை வெளியில் எங்காவது கூட்டிகிட்டு போக முடியுமா?’
‘வாட்?’
’இல்லை, கொஞ்சம் மனசு சரியில்லை, எங்கேயாவது போனால் நல்லா இருக்கும்னு தோணுது. ஆனால் எங்கன்னு தெரியலை, உங்களுக்கு தொந்திரவுனா வேண்டாம்’
அவன் எதுவும் சொல்லாமல் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான். நிலாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ஏதோ ஒரு நினைப்பில் கேட்டுவிட்டாள். தன் கவலைகளை யாரிடமாவது சொல்லலாம் என்றால் அப்படி யாரும் அவளுக்கு இல்லை. வீட்டிற்கு சென்றால் சரஸ்வதியை பார்க்க வேண்டும். எல்லாரும் தன்னை இப்படி தனியாக விட்டுவிட்டார்களே என்று நினைத்துக் கொண்டிருக்கையில். ஆகாஷ் அவளிடம் நடந்து கொண்ட விதம் அவளுக்கு ஒரு வித ஆறுதலைத் தந்தது. அந்த தைரியத்தில் தான் அவள் வெளியில் கூட்டிச் செல்லுமாறு கேட்டுவிட்டாள்.
’போச்சு, ஷீலா கல்யாணம் பண்ணினதிலிருந்து சும்மாவே இவன் என்கிட்ட சாமி ஆடுவான், இதில் நான் வேறு இப்படி கேட்டு விட்டேனே. இதுக்கு பேசாம சீட்டிற்குச் சென்று வேலையையே கவனிக்கலாம்’
‘சாரி, தெரியாம கேட்டுட்டேன். நான் என் இடத்திற்கே போறேன்’
‘லீவு சொல்லிட்டு, பார்க்கிங் ஏரியாவில் வெயிட் பண்ணு’
‘இல்லை, பரவாயில்லை. நான் ஏதோ யோசனையில்..’
’சொன்னதை முதலில் கேட்டுப்பழகு’
அவள் ஒன்றும் சொல்லவில்லை, வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என்று தோன்றியது. யார்கிட்ட ஆறுதல் தேடுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போயிடுச்சு எனக்கு என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு பார்க்கிங் ஏரியாவில் அவள் வண்டி அருகே சென்று நின்று கொண்டாள்.
ஐந்து நிமிடம் கழித்து ஆகாஷும் அங்கு வந்து சேர்ந்தான்.
’எங்க போகனும்?’
‘-’
‘சாவி எங்கே’ என்றவனை ‘ஏன்’’ என்பதைப் போல் பார்த்தாள்.
‘ஏன் முழிக்கிற, வண்டி சாவி எங்க?’
‘இல்லை, நீங்க உங்க வண்டியில் வாங்க. நான் என் வண்டியில் வரேன்’

‘நான் என்ன உன் பாடிகார்டா?, நீ முதலில் போவ உனக்கு பாதுகாப்பா பின்னாடியே நான் வருவதற்கு’
‘அப்படியில்லை’
‘பின்னே எப்படி?’
‘ஏன் கோவப்படறீங்க?’
‘நீ பண்றதெல்லாம் அப்படியிருக்கு, என்கிட்ட வண்டி இல்லை, நான் ஓட்டுவது கம்பெனி கார், பர்ஸனல் யூஸுக்கு எடுக்க முடியாது. என் காசை செலவு பண்ணி உன்னை ஆட்டோவில் கூட்டிகிட்டு போக எனக்கு மனசில்லை, இங்கிருந்து கோவலம் வரைக்கும் நடக்க நீ தயார்னாலும் என்னால் நடக்க முடியாது. இருக்கிற ஒரே ஆப்ஷன் உன் வண்டியில் போவதுதான். விளக்கம் போதுமா?’
’-’
கையை அவள் முன்னே விரித்தான், அவள் ஏதும் பேசாமல் சாவியைக் கொடுத்தாள். இதற்கு தலைவலியே பரவாயில்லை என்று தோன்றியது.
அவன் வண்டியை மிதமான வேகத்தில் ஒட்டினான். அவளுக்கு ஏதேதோ உணர்வுகள் தோன்றின, மனம் சற்று ஆறுதல் அடைவது போல் தோன்றியது.
அவள்தான் அனைவரையும் வைத்து வண்டியை ஓட்டி இருக்கிறாள், தன்னை வைத்து முதன் முதலில் வண்டியில் அழைத்துச் செல்வது இதுவே முதல் முறை. அதுவும் ஒரு ஆண். தான் வானத்தில் மிதப்பதைப் போல் உணர்ந்தாள்.. ஷீலாவுடன் செல்லும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். நிலாவின் வண்டியில்தான் அவள் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டதே. திடீரென்று வண்டி நின்றது, என்னாச்சு என்று பார்த்தவள், வண்டி பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்தது.
தந்நிலைக்கு வந்தவள், வண்டியில் இருந்து இறங்கி அவசரமாக கை பையிலிருந்து பணத்தை எடுத்தாள். அதற்கு முன்னரே ஆகாஷ் பணத்தை கொடுத்துவிட்டான். என்ன செய்வது என்று யோசித்த நிலா, பணத்தை ஆகாஷின் முன் நீட்டினாள்.
‘என்னது’
’பெட்ரோலுக்கு’
அவளை முறைத்தவன், வண்டியைக் கிளப்பிவிட்டு உட்காருமாறு கண் அசைத்தான்.
‘போச்சு, வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு, இப்ப என்ன தப்பு பண்ணினேன்? ஆட்டோவுக்கு காசு இல்லாதவன் எதற்கு என் வண்டிக்கு பெட்ரோல் போடனும், அதுதான் கொடுத்தேன். இனி அவன் என்ன செய்ய சொன்னாலும் செய்திடனும், ஒரு வார்த்தை பேசக்கூடாது. அப்ப எந்த பிரச்சினையும் இல்லை என்று முடிவு எடுத்துக்கொண்டாள்.
இருவரும் கோவலம் வந்து கடற்கரையோரமாக அமர்ந்தனர். இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அலைகள் பொங்குவதைப் போல இருவர் மனதிலும் ஏதேதோ எண்ணங்கள் எழுந்தன. அமைதியாக ஒரு மணி நேரம் கடந்தது. சுண்டல் விற்றுக்கொண்டு வந்த ஒரு சிறுவன் சுண்டல் வாங்குமாறு வற்புறுத்தவே, இரண்டு பொட்டலங்களை வாங்கிக்கொண்டான்.
அந்தச் சிறுவன் அங்கிருந்து நகராமல் நின்று கொண்டிருந்தான். என்ன என்பதைப் போல் ஆகாஷ் பார்த்தான்.
‘அண்ணா இருபது ரூபாய்’
நிலா ஆகாஷைப் பார்த்தாள், ஆகாஷ் நிலாவைப் பார்த்து முறைத்தான்.
‘காசு யாரு உன் அப்பாவா குடுப்பாங்க?’
அவ்வளவுதான் அடக்கி வைத்திருந்த அழுகை பொங்கிவிட்டது. சத்தம் ஏதுமில்லை, கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. பணம் எடுப்பதற்கு இவ்வளவு நேரமா என்று அவளைப் பார்த்தவன் கண்ட காட்சி. கண்களை துடைப்பதும், கைப்பையில் தேடுவதுமாக இருந்த நிலாவை.
‘இவள் ஏன் அழுகிறாள்’
இருபது ரூபாயை கொடுத்து சிறுவனை அனுப்பி வைத்தவன், நிலாவிடம் திரும்பி ‘என்ன பிரச்சினை உனக்கு, இப்ப திடீர்னு ஏன் அழுற? பர்ஸ் தொலைஞ்சிருச்சா?’
’-’
‘ஏதாவது பேசுனாதானே தெரியும், சொல்லு’
‘-’
சரி, இந்தா இதை சாப்பிடு என்று ஒரு பொட்டலத்தை அவளிடம் கொடுத்துவிட்டு ’நான் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன்’ என்று எழுந்து சென்றுவிட்டான்.
‘என்ன பசிக்கலையா? இந்தா தண்ணீரை முதலில் குடி’
வாங்கி மடமடவென்று குடித்தவள், சுண்டலை தின்றுவிட்டு எப்படியாவது இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று வேகமாக தின்று முடித்தாள்.
அவன் கடலைப் பார்த்து மெதுவாக தின்று முடித்தான். அவன் முடித்ததும் எழுந்து நின்று மண்ணை தட்டிவிட்டவள்.
‘ஏய் ஏய்! என்ன பண்ற’ என்று கண்களை கசக்கிக் கொண்டே அவளைப் பார்த்த ஆகாஷை கண்டதும்தான், தன் தவறை உணர்ந்தாள்.
‘சாரி சாரி, நான் யோசிக்காம மண்ணை தட்டி விட்டுட்டேன்’ என்று அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தாள்.
‘எப்பவுமே இப்படித்தானா? இல்லை அப்பப்ப கழண்டுக்குமா?’
‘என்னது?’
‘ஒன்னுமில்லை’
‘எதுவா இருந்தாலும் புரிகிற மாதிரி சொல்லுங்க’
‘சொல்லி புரிஞ்சிட்டாலும், வெயிட் பண்ணு நான் முகத்தை கழுவிட்டு வரேன்’
’இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேன்னு தெரியலை’ என்று முனுமுனுத்தவள். ஆகாஷ் அவளை நோக்கி வருவதைக் கண்டு எழுந்து நின்றாள்.
‘சரியாயிடுச்சா?’
‘நாட் கம்ப்ளீட்லி, பட் ஐ கேன் மேனேஜ்’
‘சாரி’
‘இட்ஸ் ஓகே’
‘தேங்க்ஸ்’
‘சரி, நீ ஏன் அழுத?’
‘அது வந்து’
‘-’
‘எனக்கு அப்பா இல்லை’
ஒரு நிமிடம் மொளனமாக இருந்தவன்
‘ஓ எனக்கு தெரியாது, இனிமேல் ‘காசு யாரு உன் அம்மாவா குடுப்பாங்கன்னு’ கேட்கிறேன். ஓகே வா?’
அடிக்கும் வெயிலுக்கு அவளுக்கு ஏற்கனவே மண்டை காய்ந்தது இதில் இவன் வேறு, அவளுக்கு எரிச்சலாக வந்தது. பதில் ஏதும் பேசாமல் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
ஆகாஷ் ஒன்றும் பேசாமல் நிழலாக இருக்கும் இடம் தேடி சென்று அமர்ந்து கொண்டான். கோபமாக நடந்தவள் வண்டியின் அருகில் சென்று நின்று பார்த்தாள், அவன் வரும் அடையாளம் தெரியவில்லை. அங்கு நின்றிருந்த சிலரின் தோற்றம் இவளுக்கு பயத்தை ஏற்படுத்த, வந்த வேகத்திலே மீண்டும் ஆகாஷைத் தேடி ஓட்டுமும் நடையுமாகச் சென்றாள். அங்குள்ள ஒரு மண்டபத்தில் ஒய்யாரமாக தூணின் மீது சாய்ந்து கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தான். இவனை என்ன செய்தால் தகும்? ஒருத்தியை கூட்டிகிட்டு வந்தோமே, அவ எங்க போனா, என்ன ஆச்சு அவளுக்குன்னு சின்ன கவலை கூட இல்லாமல் காலை நீட்டி நல்ல ஆயா மாதிரி உட்கார்ந்திருக்கிறதைப் பார்’
அவனருகில் வந்தவள் ‘க்கும்’ என்று தொண்டையை சரிசெய்வதைப் போல் பாவனை செய்தாள்.
‘வாக்கிங் முடிஞ்சு வந்தாச்சா?’
’என்னது வாக்கிங்கா?’ என்று கத்தியவள் சரமாரியாக அவனை அடித்தாள். அவன் அதை தடுக்காமல் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்.
அடித்து ஓய்ந்தவுடன் அவனுக்கு எதிர்புறம் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஆகாஷைப் பார்த்தவள் ‘எமோஷன்லெஸ் இடியட்’ என்று திட்டிக்கொண்டே சிரித்தாள்.
‘தேங்க்ஸ் பார் யுவர் காம்ளிமெண்ட் மேடம்’ என்று அவனும் சிரித்தான்.
பின்பு சிறிது நேரம் இருவரும் பேசாமல் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நிலா தூணில் சாய்ந்த நிலையிலேயே தூங்கி விட்டாள். சில்லென்று காற்று முகத்தில் பட்டதும் பதறி எழுந்தவள், எதிரே ஆகாஷைக் காணததும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தாள், சூரியன் மெதுவாக மறையத்தொடங்கியிருந்தது.
மண்டபத்தைவிட்டு இறங்கியவள், சுற்றிலும் தேடினாள் ஆகாஷைக் காணவில்லை. ’நிலா நிலா இங்கே வா’ என்று கடற்கரையின் அருகில் இருந்து குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தவள் வேகமாக அவனை நோக்கி ஓடினாள்.
’எழுந்திட்டியா? ஸீ ஹவ் ப்யூட்டிபுள் தி சன் ஈஸ்’
’-’
‘என்னை ஏன் பார்க்கிற? சூரியனைப் பார் நிலா’ என்று சொன்னவன் என்னவோ தோன்ற ‘வாவ்’ என்று அவளை தன்னைப் பார்த்து நிறுத்திவிட்டு சற்று பின்னால் நகர்ந்து ‘சன் அண்ட் தி மூன் ஃபெண்டாஸ்டிக்’ என்று புன்னகைத்தான்.
புரியாமல் விழித்த நிலாவிடம் சூரியனைக் காட்டி ‘சூரியன் அங்க இருக்கு நிலா இங்க இருக்க குட் காம்பினேஷன், கரெக்ட்டா?
இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.
‘தென்’
‘ஒன்னுமில்லை, லேட் ஆயிடுச்சு கிளம்பலாமா?’
‘ஷ்யூர், ஆர் யு ஓகே நவ்?’
’யெஸ்’ என்று நடக்கத் தொடங்கினாள். அவனும் அவளுடன் நடக்கத் தொடங்கினான்.
’இப்போ எங்க போகிறது?’
‘வீட்டுக்கு’
‘நீ வீட்டுக்கு போவ, நான் எப்படி போறது?’
‘வீட்டுக்கெல்லாம் கொண்டு போய் விட முடியாது, வழியில் ஏதாவது பஸ் ஸ்டாபில் நிறுத்தறேன், சொந்த செலவில் பஸ் ஏறி வீட்டுக்கு போங்க’
‘எனக்கு தேவைதான்’
சிரிப்பை அடக்கிக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவள் வரும் பொழுது இருந்த மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. இந்த ஒரு நாள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் தெரியவில்லை ஆனால் பிடித்திருந்தது.
‘என்ன இறங்கிற உத்தேசம் இல்லையா?’ என்று ஆகாஷ் கேட்கவும் தான் தந்நிலைக்கு திரும்பினாள்.
வண்டியின் சாவியை அவளிடம் நீட்டியவன் ’பை’ என்று சொல்லிவிட்டு பஸ் ஸ்டாப்பில் சென்று நின்று கொண்டான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி மீண்டும் வந்தவனிடம்.
‘என்னாச்சு?’ என்று விசாரித்தாள்.
’நான் மறந்தே போயிட்டேன், சுண்டல் காசு நீ இன்னும் தரலை’ என்றவனை முறைத்தாள்.
‘என்ன முறைக்கிற பத்து ரூபாய் இருக்கா இல்லையா?’
‘இருந்தாலும் தருவதாக உத்தேசம் இல்லை’
‘ஏன்?’
‘பெட்ரோலுக்கு காசு வாங்கலை, சுண்டலுக்கு மட்டும் வேணுமா?’
‘ஆக்சுயலி இந்த ஒன் டே பிக்னிக் எனக்கும் தேவையாய் இருந்தது. சோ வண்டி உன்னுடையது பெட்ரோல் என்னுடையதுன்னு கணக்கு போட்டேன்’
’ப்பா, சகிக்கலை’
‘ஓகே. இன்னொரு நாள் வாங்கிக்கிறேன். அப்புறம் நிலா, உனக்கு கொஞ்ச நேரம் டிரைவரா இருந்ததுனால ப்ரியா ஒரு அட்வைஸ் தரேன் கேட்டுக்கோ. ‘எது செய்தாலும் கொஞ்சம் யோசித்து செய். நீ நினைக்கிற மாதிரி லைப் ஈஸி கிடையாது. ப்ராக்டிகலா இரு.
’டிரைவராமா, டூ வீலருக்கு’ என்று சிரித்தவள். அவன் சொன்ன வார்த்தைகளை நினைத்த நிலாவின் மனதில் மீண்டும் பாரம் ஏறியது. ஆகாஷை நோக்கி தலையை ஆட்டிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு திரும்பியும் பார்க்காமல் சென்றாள்.

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top