All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-20

விக்ரம் ஓரிடத்தில் காரை நிறுத்த படாரென்று எழுந்த நந்தினி என்னவென்பது போல் அவனை நோக்க... “காரிலேயே வெயிட் பண்ணு நான் வந்துடறேன்” என்றவன் வாகனத்திற்கு திரும்பும் போது காபியும், பலகாரமும் அடங்கிய பையை ஏந்தியபடி சமீபித்திருந்தான்.

“இந்தா காபியை குடிச்சுட்டு இந்த வடை சாப்பிடு” என்று நீட்ட அவனின் அக்கறை கண்டு நேசம் சுரந்தது.

“தேங்க்ஸ் எனக்கே எதாவது குடிக்கணும் போல இருந்துச்சு”

“தெரியும் அதனால் தான் வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு”

“இதெல்லாம் கூட கண்டு பிடிக்கறீங்க பரவாயில்லை நல்லா தேறிட்டீங்க”

“முதல் பார்வையிலேயே உன் மனசை கண்டு பிடிச்சவன் இதை கூட புரிஞ்சுக்கமாட்டேனா?” என்று வாய்விட நந்தினி கண்களை அகல விரித்து போலியாக முறைத்தவள்...

“பிராடு அப்போ என்னை பற்றி புரிஞ்சுகிட்டு தான் அப்படி எல்லாம் பேசினீங்களா?” என்று முதுகில் நாலு போட அவனோ அசராது பெற்றுக் கொண்டவன் முகம் புன்னகையில் விரிந்தது.

“போதும் விடு” சிரித்துக் கொண்டே கூறியவன் அவள் கரங்களை தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டு...

“எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிவிடுற பாக்கியம் பெற்றவன் நானில்லை நந்து... இதே நான் கல்யாணம் ஆகாமலோ, சப்போஸ் கல்யாணம் மட்டும் ஆகி ஆதன் கூட இல்லாமல் இருந்திருந்தாலோ எந்த தயக்கமும் இல்லாமல் என் மனசை வெளிப்படுத்தியிருப்பேன்... ஆனால் இது எதுக்கும் வழியில்லாமல் கையில் குழந்தையோட, ஊர் சொல்லும் அவப் பெயரோட இருந்தவன், வயது பெண் உன்கிட்டே நெருங்கி பழகி என்னால் உனக்கு எதுவும் கெட்ட பெயர் வந்துதுன்னா என்னால் தாங்கிக்க முடியுமா?”

அவனின் குரலில் இருந்த ஏக்கமும், இயலாமையும் அவளால் உணர்வு பூர்வமாக உணர்ந்து கொண்டிருக்க இயந்திரத்தை கொண்டு மனதை குடைவது போல் இருந்தது. அப்போது தான் அவள் அவனிடம் கேட்க வேண்டும் என்று இருந்த அந்த கேள்வி உதிக்க அதை கேட்கலானாள்.

“நான் இதை தான் உங்ககிட்டே முதல் கேள்வியா கேட்கணும்னு நினைச்சேன், ஆனால் அதை மறந்துட்டு வேற என்னனமோ பேச்சு வந்திருச்சு”

“அப்படி என்ன கேட்கணும் கேளு” என்றதும்...

“நீங்க எல்லாத்தையும் இவ்ளோ அக்கறையா பார்த்துக்கிறீங்க, அப்படி இருக்ககுள்ள ஆதனை நீங்க ரம்யா வீட்டில் விட்டது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு, அவன் அங்கே எப்படி இருக்கிறான் தெரியுமா? அவனை பார்க்கவே எனக்கு பாவமா இருந்தது விக்ரம்... பசியில் இருக்கிறவனுக்கு பச்சை தண்ணி கூட அமிர்தமா தெரியும்ன்னு கேள்விதான் பட்டிருக்கேன் ஆனால் அதை நான் ஆதன் மூலாமாதான் தெரிஞ்சுகிட்டேன்”

“எனக்கு எல்லாம் தெரியும் நந்து” என்றவனை அதிர்ந்த பார்வையால் நோக்கினாள்.

“என்ன தெரியுமா? அப்புறமும் ஏன் அவனை அவங்க பொறுப்பில் விட்டீங்க?” சற்று காரமாகவே அவனிடம் வினவியிருந்தாள்... அதில் அவள் ஆதன் மேல் கொண்ட அக்கறை புரிந்துக் கொண்டவன் நிதானமாக பதில் கூறினான்.

“வேற என்ன செய்யணும் நந்து?” என்றவனை முறைத்தவள்...

“எத்தனையோ பண்ணலாம்... ஏன் கண்ணம்மா இல்லைன்னா மில்லில் செந்தில் அண்ணன் இருக்கிறாரு, அப்படியும் இல்லையா அங்கே உங்க ரூமில் யாரையாவது ஆளை வச்சு பார்த்துக்க சொல்ல முடியாதா?” பச்சை மிளகாயை கடித்தது போல் சுறுசுறுவென்று காரம் ஏற கேட்டவளை இமைக்காமல் பார்த்தவன்...

“சில விஷயம் சொல்லுறது ரொம்ப சுலபம் நந்து... ஆனால் அதை செயல்படுத்துறதில் தான் சிரமம் இருக்கும்ன்னு அதை செய்றவங்களால் மட்டும் தான் புரிஞ்சுக்க முடியும்” என்றவனை புருவம் சுருக்கி பார்த்தாள்.

“நீ சொல்லுற மாதிரி செய்ய நான் யோசிக்காமலா இருந்திருப்பேன்? முதல் நாள் அவனை ரம்யா வீட்டுக்கு அனுப்பினப்போ அன்னைக்கு ராத்திரி ஆதன் அடுத்த நாள் போகவேமாட்டேன்னு அடம் பிடிச்சான், ஏன்னு கேட்டேன் அவனும் அவனுக்கு தெரிஞ்ச வகையில் அவங்க பார்த்துக்கிற விதத்தை ரொம்ப வருத்தப்பட்டு சொன்னான், குழந்தை ஓடியாடி விளையாட ஆசைபடுவான் கொஞ்சம் அப்படி இப்படி குறும்புத்தனத்தோட தானே இருப்பான்... இதில் ஏதோ ஹாஸ்டல் வார்டன் மாதிரி கட்டளை போட்டா அவன் என்ன பண்ணுவான்? அடுத்த நாள் ரம்யா அம்மா என்கிட்டே நேரடியா சொல்லிட்டாங்க அவனை ஒரே இடத்தில் உட்கார வைக்க பழக்கனுமாம், சிந்தாமல் சாப்பிட சொல்லிக் கொடுக்கணுமாம், அப்புறம் இத்யாதி... இத்யாதி... பெரிய அறிவுரை பாடமே எடுத்தாங்க... அவனுடைய வயசுல ஒரு சில பசங்க சாப்பிடவே அப்போதான் பழகியிருப்பாங்க... ஆனால் இவன் சாப்பிடவும் பழகி அதிலேயும் சிந்தாமல் சாப்பிடவும் கற்று கொடுத்திருக்கிறேன் நந்தினி, இருந்தாலும் சின்ன குழந்தை தானே ஒன்றிரண்டு சாதம் விழுந்தா அதை குறையாவா பார்க்க முடியும்?”

“ம்ம்ம்ம்...” என்று முனகியவளுக்கு துக்கத்தில் தொண்டையடைக்க, இதோ நான் வந்துவிடுவேன் என்று கண்ணீர் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

“அவங்க அதையும் குறை சொன்னாங்க, நான் தான் போகவே மாட்டேன்னு அடம் பிடிச்சவனை வீடியோ கேம் வாங்கிக் கொடுத்து அன்பா பேசி அனுப்பிவிட்டேன்... பாவம்! துறுதுறுன்னு இருக்கிறவன் அங்க போனாலே சோர்ந்து தான் இருப்பான் என் மனசு வலிக்கும் நந்து... ஆனால் நீயே யோசிச்சு பாரு இவங்க வீட்டில் இருக்கிறவங்க யாரு வருவாங்க போவாங்கன்னு தெரியும், இவனுக்கு அங்கே சுதந்திரம் இல்லைனாலும் பாதுகாப்பு இருக்கும். ஆனால் மில்லில் அப்படி இல்லை என்னதான் செந்தில் அண்ணன் பார்த்துக்குவாருன்னு சொன்னாலும், அவருக்குன்னு மில்லில் சில பொறுப்புகள் இருக்கு எந்த நேரம் வேணாலும் எதையாவது பார்க்க போகலாம், அப்படி தான் நீ சொன்ன மாதிரி ஆள் கூட போட்டேன் அதுவும் வயசு பொண்ணு வேண்டாம்ன்னு கல்யாணம் ஆகி நடுத்தர வயது பெண்ணை தான் நியமிச்சேன்... ஆனா அந்த பொண்ணு இவனை நிதமும் அடிக்கும், பற்றாததுக்கு என் மேலேயும் தப்பான ஒரு பார்வை, இருக்கிறதெல்லாம் போதாதா இது வேறையான்னு தலைவேதனையா போச்சு... அதனால தான் பின்னதுக்கு முன்னது பெட்டர்ன்னு ரம்யா வீட்டிலேயே விடுவேன்” என்றதும் அவளுக்கு கண்கள் கலங்கிய குட்டையானது.

“என்னது கண்ணில் டேம் எதுவும் கட்டி வச்சிருக்கியா ஆனா ஊன்னா திறந்து விடுற” அவளின் மனதை மாற்ற வேடிக்கையாக அவன் கூற அவளும் அவனுக்காக உதட்டை இழுத்து பிடித்த ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

“சாரி விக்ரம் நீங்க அவனை கண்டுக்கலையோன்னு நினைச்சு ஏதேதோ பேசிட்டேன்”

“யாரு நீ தானே பேசினா பேசு நந்து, இன்னும் என்ன எல்லாம் என்கிட்டே கேட்டு என்னை திட்டணும்னு நினைக்கறியோ திட்டு... இத்தனை நாளா இதுக்கெல்லாம் யார் இருந்தாங்க? ஆனால் இப்போ நீ இப்படி உரிமையா கேட்கும் போதே மனசுக்கு எவ்ளோ சந்தோசமா, ஆறுதலா இருக்கு தெரியுமா” என்றவனை வாஞ்சையுடன் நோக்கினாள்.

“சரி சரி ஆதன் இப்போவெல்லாம் உங்ககிட்டே என்னை கேட்டு நச்சரிக்கிறது இல்லையா?”

“இல்லை அப்படியே கேட்டாலும் காலேஜ் போயிருக்கா முடிஞ்சதும் வருவான்னு சொன்னா, பெரியா ஸ்கூலான்னு கையை விரிச்சு காட்டி கேட்டுட்டு ஆமான்னு சொன்ன போயிடுறான்”

“அவன் கேட்கமாட்டான் ஏன்னா இனிமேல் என் மகன் என் பொறுப்பு சோ ட்ரைனிங் இந்த நந்தினியோடது அதனால் நந்தினி புருஷனை அவன் தொந்தரவு பண்ணமாட்டான்” அவள் சொல்லிய விதத்தில் அவனுக்கு கட்டியணைக்க வேண்டும் போல் இருக்க கடினத்துடன் அடக்கிக் கொண்டவன்...

“பாருடா! உன் மகன், உன் ட்ரைனிங்கா நீ நடத்து” அவன் கூறியதை கேட்டு களுக்கென்று சிரிக்க, அவளையே கூர்மையான பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான், அவனின் பார்வை அவளிடம் ஏதோ கேட்க இருப்பதை உணர்த்த...

“என்ன?” என்று ஒற்றை புருவத்தை ஒயிலாக உயர்த்தி வினவ...

“நான் ஒண்ணு கேட்பேன் என்கிட்டே கோவிச்சுகிட்டு முகத்தை திருப்பக்கூடாது”

“அப்படியா அது நீங்க சொல்ற விஷயத்தை பொறுத்து இருக்கு” அவளும் மிகவும் உஷாராக கூறியிருக்க...

“இல்லை, ஊரே வெறுக்கிற என்னையும், ஆதனையும் நீ இவ்ளோ நேசிக்கிறயே, அதுவும் எந்த கபடமும் இல்லாமல் ஆதனை உரிமையா என் மகன்னு உரிமை பாராட்டி என் மனசை குளிர்விக்கிறயே, இவன் ஓடிப்போன என் முதல் மனைவி ஷைலஜாவிற்கு பிறந்த பையன்னு மற்றவங்களுக்கு தோன்றின சுமை உனக்கு தோணலையா?” அவனின் கேள்விக்கு சண்டையிடுவாள், கோபப்படுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் அவனை வெகு சாதாராணமாக பார்த்ததை கண்டு உள்ளுக்குள் சிறு ஏமாற்றம் பரவியது... ஆனால் அதுவும் நொடியில் துடைத்தெறிந்தால் அவன் மனதை கொள்ளை கொண்ட இனியவள்.

“இந்த கேள்வி கேட்டதுக்கு நியாயமா எனக்கு கோபம் வரணும் விக்ரம், ஆனால் எனக்கு வரலை மாறா ஒரு விஷயம் தான் தோணுது”

“என்ன நந்து”

“மற்றவங்க ஆதனை சுமையா பார்க்கிறாங்கன்னா அவங்களுக்கு உங்க மேல விருப்பம் இல்லாமல் வெறும் பணமும், அந்தஸ்தும் தான் முக்கியமானதா இருக்கலாம்... அதனால் ஆதனை சுமையா நினைக்க நூறு சதவீதம் வாய்ப்பிருக்கு” என்று நிதானமாக அளித்த பதில் மேலும் அவனை தைரியமாக கேள்வி கேட்க தூண்ட...

“இருக்கட்டும் நந்தினி உனக்கு என் பணமோ, அந்தஸ்தோ பெரிசில்லை நான்... மிடில் கிளாசா இருந்திருந்தா கூட என்னை ஏற்றுகிட்டு இருந்திருப்ப, அதுவும் நீ வயது பெண் உனக்கும் கல்யாண கனவுகள்ன்னு ஆசை எல்லாம் இருக்கும், அதில் என்னை தவிர ஆதன் உனக்கு சுமையாவே தெரியலையா எங்கே உன் வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருப்பனோன்னு”

“தோணலை விக்ரம் ஏன் தெரியலை... அவன் மேல வெறுமனே பரிதாபம்ன்னு பொய் சொல்லமாட்டேன் அது உண்மையான பாசத்தை கொச்சைப்படுத்துற மாதிரி ஆகிரும்... அவனை பார்த்ததும் அவனை நான் அரவணைக்க முடியலையேன்னு வந்த தவிப்பு இருக்கே அதை என்னால் சொல்ல முடியலை விக்ரம்... பெற்ற தாய்க்கு ஏற்படக்கூடிய அந்த வலி எனக்கு ஏன் தோணனும் பெறாமல் பெற்றெடுத்த இன்பத்தை தந்தவன் ஆதன் அவன் என்னைக்குமே எனக்கு சுமையா ஆகமாட்டான்”

“என்ன இருந்தாலும் நான் ஷைலஜாவுடன் வாழ்ந்....” என்று கூறி முடிப்பதற்குள் வேகமாக இடையிட்டவள்...

“அந்த ஒரு நாள் வாழ்க்கையை தூக்கி குப்பையில் போடுங்க... நம்ம ஊரில் டிவோர்ஸ்ன்னு ஒரு விஷயம் நடக்கிறதே இல்லையா, அப்படி டிவோர்ஸ் பண்ணுறவங்க கல்யாணம் பண்ணிக்கிறது தான் இல்லையா? சுருக்கமா சொல்லனும்னா சேற்றில் பூ விழுந்திருசுன்னா அதை எடுத்து தண்ணியில் கழுவிட்டு நாம உபயோக படுதிறதில்லையா? இத்தனை ஏன் சேற்றிலும் தானே செந்தாமரை வளருது அந்த தாமரையை பறிச்சு நாம உபயோகப்படுத்த நினைக்கிறதில்லையா... சேற்றிலேயும் தாமரை வளருதுன்னு ஒட்டு மொத்த தாமரையும் அசுத்தம்ன்னு ஒதுக்கிற முடியுமா, அதுவும் பூன்னு தான் சொல்றோம்... இப்படி இரண்டு தன்மையுள்ள அந்த தாமரை பூவை உலகத்தை படிச்ச ஆதிசிவன் ஈசனே ஏற்றுக்கும் போது நாம என்ன தூக்கியா எறியுவோம்?” என்று புன்னகையுடன் பதிலளிக்க உணர்ச்சி பெருக்கெடுக்க அனைத்து தளைகளையும் மறந்தவனாக நந்தினியை இறுக அணைத்துக் கொண்டான்.

அவன் கண்கள் உணர்ச்சி பிழம்பில் கலங்கிச் சிவந்திருக்க அவன் இதயம் விம்மியது... நந்தினிக்கு அவன் அணைப்பில் எழும்புகள் நொறுங்கிவிடுவது போல் தோன்றினாலும் அவனை புரிந்தவளாக தானும் அவனுக்கு இசைந்து விட்டிருந்தாள்.

விக்ரம், நந்தினி இருவரும் நேசத்தின் ஆழியில் மூழ்கி அதன் சுகத்தை அனுபவித்ததில் மனம் நிறைந்திருந்தார்கள். நந்தினி விக்ரமின் சந்திப்பு பாதுகாப்பாக தொடர்ந்தது. விக்ரமுக்கு அவளின் படிப்பு பாதிக்கக்கூடாது என்ற எண்ணமே நந்தினிக்கு விக்ரமை உயர்த்தி நிறுத்தியது... அது மட்டுமில்லாமல் எவ்வளவு தனிமை கிடைத்தாலும் அவளுக்காக யோசித்து செயல்பட்டு அவளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் விதம் மேலும் அவனை இருமடங்கு உயர்த்தில் நிறுத்தி அவனை கவர்ந்தது.

இத்தனைக்கும் நந்தினி விக்ரமிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சிந்தனையின்றி அவன் மேல் ஈசித்து கொண்டு இழைபவள் அவளின் தொடுகையையும் அருகாமையையும் விக்ரம் ஒரு நாளும், ஒரு பொழுதும், ஒரு கணமும் தவறாக பயன்படுத்தாது அவளின் ஆசைக்கு தடா போடாமல் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை அவனுக்குள் இருத்திக் கொண்டிருந்தான்.

அச்சமயத்தில் விக்ரம் மட்டும் எனக்கு நீ வேண்டும் நந்தினி என்று கண்ணசைத்திருந்தால் போதும்... அவனிடம் நான் என்றும் உனதே எடுத்துக் கொள்ள என்று சரணாகதி ஆக தயாராக இருந்தாள். அதையெல்லாம் அறிந்தும் அறியாதவனை போல் விக்ரம் நடந்து கொள்ளும் விதம் விக்ரமின் அன்னையை போற்ற வைத்தது.

ஆண்மகனின் ஒழுக்கம் அன்னையின் வளர்ப்பில் என்பதற்கு சான்றாக இருந்தான் விக்ரம்... அப்போது தான் அவளுக்கு அந்த அச்சம் தோன்ற அதை அவனிடமே கேட்டுவிட்டாள்.

“விக்ரம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு”

“எதுக்கு நம்ம கல்யாணம் நினைச்சு தானே விடு பார்த்துக்கலாம்” என்றவனிடம்...

“அச்சோ அதில்லை” என்று பார்வையை எக்கினாள்.

“வேறென்ன?” புருவம் சுருக்கி தீவிர சிந்தனையுடன் நோக்க...

“உங்களை உங்க அம்மா எவ்ளோ நல்லா பையனா வளர்த்திருக்காங்க, அதே போல நான் ஆதனை வளர்ப்பேனா?” என்று கவலையுடன் கேட்க கடகடவென்று உரக்க சிரித்துவிட்டான்.

“அடியேய் எதெதுக்கெல்லாம் பயப்படுறதுன்னு விவஸ்தை இல்லை” என்றவனின் பேச்சில் அவள் முகம் கூம்ப...

“என் பயத்தை கண்டா சிரிப்பா இருக்கா உங்களுக்கு, சிரிங்க சிரிங்க” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க...

“ஆதன் உன்னை நந்தினி அம்மான்னு உரிமையா கூப்பிடணும்னா அவனுக்கு அந்த தகுதி இருக்கணும்னு அவன் மனசில் புகுத்திட்டேன்” என்றவன் முகம் தீவிரமாக இருக்க நந்தினி திகைத்து நின்றாள்.

அவன் பேச்சின் சாராம்சம் புரியாதவளா அவள்... “வி..க்..ர..ம்...” என்று திக்கி திணறியவளின் மனம் அன்பில் நெகிழ்ந்திருந்தது...

“உன் விக்ரம் தான் நந்துமா... போதும் இதுக்கு மேல கண்ணை விரிக்காதே கண்ணுமுழி வெளியே தெறிச்சு விழுந்துற போகுது” என்று கேலி பேச மற்றதை மறந்து களுக்கென்று சிரித்து விட்டிருந்தாள்.

“சரி நான் கிளம்பவா?”

“ஏன் நேரமாகிருச்சா?”

“ம்ம்ம்... ஆமாம் நான் பிராக்டிகல் கிளாஸ் இருக்கு அது இதுன்னு கதை சொல்லிட்டு வந்திருக்கேன், இப்போவே மணி ஆறு ஆகிருச்சு வீட்டுக்கு போக சரியா இருக்கும்”

“சரி பார்த்து போ” என்றவன் அவளுக்கு விடை கொடுக்க ஆதன் முத்தமிட்டு அவளை வழியானுப்பினான்.

நந்தினி புன்னகை முகத்துடனே வாகனத்தை கையாள எதிரில் யாரென்று கண்ணுறாமாலே செலுத்தியவள் சரக்கென்று பிரேக்கை பிடித்து வண்டியை நிறுத்தியிருந்தாள். எதிரில் கோபத்துடன் நின்றிருந்த இருவரையும் கண்டு நந்தினி கலவையான உணர்ச்சியை சுமந்தப்படி தத்தளித்து கொண்டிருந்தாள்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-20
விக்ரம் ஓரிடத்தில் காரை நிறுத்த படாரென்று எழுந்த நந்தினி என்னவென்பது போல் அவனை நோக்க... “காரிலேயே வெயிட் பண்ணு நான் வந்துடறேன்” என்றவன் வாகனத்திற்கு திரும்பும் போது காபியும், பலகாரமும் அடங்கிய பையை ஏந்தியபடி சமீபித்திருந்தான்.

“இந்தா காபியை குடிச்சுட்டு இந்த வடை சாப்பிடு” என்று நீட்ட அவனின் அக்கறை கண்டு நேசம் சுரந்தது.

“தேங்க்ஸ் எனக்கே எதாவது குடிக்கணும் போல இருந்துச்சு”

“தெரியும் அதனால் தான் வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு”

“இதெல்லாம் கூட கண்டு பிடிக்கறீங்க பரவாயில்லை நல்லா தேறிட்டீங்க”

“முதல் பார்வையிலேயே உன் மனசை கண்டு பிடிச்சவன் இதை கூட புரிஞ்சுக்கமாட்டேனா?” என்று வாய்விட நந்தினி கண்களை அகல விரித்து போலியாக முறைத்தவள்...

“பிராடு அப்போ என்னை பற்றி புரிஞ்சுகிட்டு தான் அப்படி எல்லாம் பேசினீங்களா?” என்று முதுகில் நாலு போட அவனோ அசராது பெற்றுக் கொண்டவன் முகம் புன்னகையில் விரிந்தது.

“போதும் விடு” சிரித்துக் கொண்டே கூறியவன் அவள் கரங்களை தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டு...

“எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிவிடுற பாக்கியம் பெற்றவன் நானில்லை நந்து... இதே நான் கல்யாணம் ஆகாமலோ, சப்போஸ் கல்யாணம் மட்டும் ஆகி ஆதன் கூட இல்லாமல் இருந்திருந்தாலோ எந்த தயக்கமும் இல்லாமல் என் மனசை வெளிப்படுத்தியிருப்பேன்... ஆனால் இது எதுக்கும் வழியில்லாமல் கையில் குழந்தையோட, ஊர் சொல்லும் அவப் பெயரோட இருந்தவன், வயது பெண் உன்கிட்டே நெருங்கி பழகி என்னால் உனக்கு எதுவும் கெட்ட பெயர் வந்துதுன்னா என்னால் தாங்கிக்க முடியுமா?”

அவனின் குரலில் இருந்த ஏக்கமும், இயலாமையும் அவளால் உணர்வு பூர்வமாக உணர்ந்து கொண்டிருக்க இயந்திரத்தை கொண்டு மனதை குடைவது போல் இருந்தது. அப்போது தான் அவள் அவனிடம் கேட்க வேண்டும் என்று இருந்த அந்த கேள்வி உதிக்க அதை கேட்கலானாள்.

“நான் இதை தான் உங்ககிட்டே முதல் கேள்வியா கேட்கணும்னு நினைச்சேன், ஆனால் அதை மறந்துட்டு வேற என்னனமோ பேச்சு வந்திருச்சு”

“அப்படி என்ன கேட்கணும் கேளு” என்றதும்...

“நீங்க எல்லாத்தையும் இவ்ளோ அக்கறையா பார்த்துக்கிறீங்க, அப்படி இருக்ககுள்ள ஆதனை நீங்க ரம்யா வீட்டில் விட்டது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு, அவன் அங்கே எப்படி இருக்கிறான் தெரியுமா? அவனை பார்க்கவே எனக்கு பாவமா இருந்தது விக்ரம்... பசியில் இருக்கிறவனுக்கு பச்சை தண்ணி கூட அமிர்தமா தெரியும்ன்னு கேள்விதான் பட்டிருக்கேன் ஆனால் அதை நான் ஆதன் மூலாமாதான் தெரிஞ்சுகிட்டேன்”

“எனக்கு எல்லாம் தெரியும் நந்து” என்றவனை அதிர்ந்த பார்வையால் நோக்கினாள்.

“என்ன தெரியுமா? அப்புறமும் ஏன் அவனை அவங்க பொறுப்பில் விட்டீங்க?” சற்று காரமாகவே அவனிடம் வினவியிருந்தாள்... அதில் அவள் ஆதன் மேல் கொண்ட அக்கறை புரிந்துக் கொண்டவன் நிதானமாக பதில் கூறினான்.

“வேற என்ன செய்யணும் நந்து?” என்றவனை முறைத்தவள்...

“எத்தனையோ பண்ணலாம்... ஏன் கண்ணம்மா இல்லைன்னா மில்லில் செந்தில் அண்ணன் இருக்கிறாரு, அப்படியும் இல்லையா அங்கே உங்க ரூமில் யாரையாவது ஆளை வச்சு பார்த்துக்க சொல்ல முடியாதா?” பச்சை மிளகாயை கடித்தது போல் சுறுசுறுவென்று காரம் ஏற கேட்டவளை இமைக்காமல் பார்த்தவன்...

“சில விஷயம் சொல்லுறது ரொம்ப சுலபம் நந்து... ஆனால் அதை செயல்படுத்துறதில் தான் சிரமம் இருக்கும்ன்னு அதை செய்றவங்களால் மட்டும் தான் புரிஞ்சுக்க முடியும்” என்றவனை புருவம் சுருக்கி பார்த்தாள்.

“நீ சொல்லுற மாதிரி செய்ய நான் யோசிக்காமலா இருந்திருப்பேன்? முதல் நாள் அவனை ரம்யா வீட்டுக்கு அனுப்பினப்போ அன்னைக்கு ராத்திரி ஆதன் அடுத்த நாள் போகவேமாட்டேன்னு அடம் பிடிச்சான், ஏன்னு கேட்டேன் அவனும் அவனுக்கு தெரிஞ்ச வகையில் அவங்க பார்த்துக்கிற விதத்தை ரொம்ப வருத்தப்பட்டு சொன்னான், குழந்தை ஓடியாடி விளையாட ஆசைபடுவான் கொஞ்சம் அப்படி இப்படி குறும்புத்தனத்தோட தானே இருப்பான்... இதில் ஏதோ ஹாஸ்டல் வார்டன் மாதிரி கட்டளை போட்டா அவன் என்ன பண்ணுவான்? அடுத்த நாள் ரம்யா அம்மா என்கிட்டே நேரடியா சொல்லிட்டாங்க அவனை ஒரே இடத்தில் உட்கார வைக்க பழக்கனுமாம், சிந்தாமல் சாப்பிட சொல்லிக் கொடுக்கணுமாம், அப்புறம் இத்யாதி... இத்யாதி... பெரிய அறிவுரை பாடமே எடுத்தாங்க... அவனுடைய வயசுல ஒரு சில பசங்க சாப்பிடவே அப்போதான் பழகியிருப்பாங்க... ஆனால் இவன் சாப்பிடவும் பழகி அதிலேயும் சிந்தாமல் சாப்பிடவும் கற்று கொடுத்திருக்கிறேன் நந்தினி, இருந்தாலும் சின்ன குழந்தை தானே ஒன்றிரண்டு சாதம் விழுந்தா அதை குறையாவா பார்க்க முடியும்?”

“ம்ம்ம்ம்...” என்று முனகியவளுக்கு துக்கத்தில் தொண்டையடைக்க, இதோ நான் வந்துவிடுவேன் என்று கண்ணீர் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

“அவங்க அதையும் குறை சொன்னாங்க, நான் தான் போகவே மாட்டேன்னு அடம் பிடிச்சவனை வீடியோ கேம் வாங்கிக் கொடுத்து அன்பா பேசி அனுப்பிவிட்டேன்... பாவம்! துறுதுறுன்னு இருக்கிறவன் அங்க போனாலே சோர்ந்து தான் இருப்பான் என் மனசு வலிக்கும் நந்து... ஆனால் நீயே யோசிச்சு பாரு இவங்க வீட்டில் இருக்கிறவங்க யாரு வருவாங்க போவாங்கன்னு தெரியும், இவனுக்கு அங்கே சுதந்திரம் இல்லைனாலும் பாதுகாப்பு இருக்கும். ஆனால் மில்லில் அப்படி இல்லை என்னதான் செந்தில் அண்ணன் பார்த்துக்குவாருன்னு சொன்னாலும், அவருக்குன்னு மில்லில் சில பொறுப்புகள் இருக்கு எந்த நேரம் வேணாலும் எதையாவது பார்க்க போகலாம், அப்படி தான் நீ சொன்ன மாதிரி ஆள் கூட போட்டேன் அதுவும் வயசு பொண்ணு வேண்டாம்ன்னு கல்யாணம் ஆகி நடுத்தர வயது பெண்ணை தான் நியமிச்சேன்... ஆனா அந்த பொண்ணு இவனை நிதமும் அடிக்கும், பற்றாததுக்கு என் மேலேயும் தப்பான ஒரு பார்வை, இருக்கிறதெல்லாம் போதாதா இது வேறையான்னு தலைவேதனையா போச்சு... அதனால தான் பின்னதுக்கு முன்னது பெட்டர்ன்னு ரம்யா வீட்டிலேயே விடுவேன்” என்றதும் அவளுக்கு கண்கள் கலங்கிய குட்டையானது.

“என்னது கண்ணில் டேம் எதுவும் கட்டி வச்சிருக்கியா ஆனா ஊன்னா திறந்து விடுற” அவளின் மனதை மாற்ற வேடிக்கையாக அவன் கூற அவளும் அவனுக்காக உதட்டை இழுத்து பிடித்த ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

“சாரி விக்ரம் நீங்க அவனை கண்டுக்கலையோன்னு நினைச்சு ஏதேதோ பேசிட்டேன்”

“யாரு நீ தானே பேசினா பேசு நந்து, இன்னும் என்ன எல்லாம் என்கிட்டே கேட்டு என்னை திட்டணும்னு நினைக்கறியோ திட்டு... இத்தனை நாளா இதுக்கெல்லாம் யார் இருந்தாங்க? ஆனால் இப்போ நீ இப்படி உரிமையா கேட்கும் போதே மனசுக்கு எவ்ளோ சந்தோசமா, ஆறுதலா இருக்கு தெரியுமா” என்றவனை வாஞ்சையுடன் நோக்கினாள்.

“சரி சரி ஆதன் இப்போவெல்லாம் உங்ககிட்டே என்னை கேட்டு நச்சரிக்கிறது இல்லையா?”

“இல்லை அப்படியே கேட்டாலும் காலேஜ் போயிருக்கா முடிஞ்சதும் வருவான்னு சொன்னா, பெரியா ஸ்கூலான்னு கையை விரிச்சு காட்டி கேட்டுட்டு ஆமான்னு சொன்ன போயிடுறான்”

“அவன் கேட்கமாட்டான் ஏன்னா இனிமேல் என் மகன் என் பொறுப்பு சோ ட்ரைனிங் இந்த நந்தினியோடது அதனால் நந்தினி புருஷனை அவன் தொந்தரவு பண்ணமாட்டான்” அவள் சொல்லிய விதத்தில் அவனுக்கு கட்டியணைக்க வேண்டும் போல் இருக்க கடினத்துடன் அடக்கிக் கொண்டவன்...

“பாருடா! உன் மகன், உன் ட்ரைனிங்கா நீ நடத்து” அவன் கூறியதை கேட்டு களுக்கென்று சிரிக்க, அவளையே கூர்மையான பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான், அவனின் பார்வை அவளிடம் ஏதோ கேட்க இருப்பதை உணர்த்த...

“என்ன?” என்று ஒற்றை புருவத்தை ஒயிலாக உயர்த்தி வினவ...

“நான் ஒண்ணு கேட்பேன் என்கிட்டே கோவிச்சுகிட்டு முகத்தை திருப்பக்கூடாது”

“அப்படியா அது நீங்க சொல்ற விஷயத்தை பொறுத்து இருக்கு” அவளும் மிகவும் உஷாராக கூறியிருக்க...

“இல்லை, ஊரே வெறுக்கிற என்னையும், ஆதனையும் நீ இவ்ளோ நேசிக்கிறயே, அதுவும் எந்த கபடமும் இல்லாமல் ஆதனை உரிமையா என் மகன்னு உரிமை பாராட்டி என் மனசை குளிர்விக்கிறயே, இவன் ஓடிப்போன என் முதல் மனைவி ஷைலஜாவிற்கு பிறந்த பையன்னு மற்றவங்களுக்கு தோன்றின சுமை உனக்கு தோணலையா?” அவனின் கேள்விக்கு சண்டையிடுவாள், கோபப்படுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் அவனை வெகு சாதாராணமாக பார்த்ததை கண்டு உள்ளுக்குள் சிறு ஏமாற்றம் பரவியது... ஆனால் அதுவும் நொடியில் துடைத்தெறிந்தால் அவன் மனதை கொள்ளை கொண்ட இனியவள்.

“இந்த கேள்வி கேட்டதுக்கு நியாயமா எனக்கு கோபம் வரணும் விக்ரம், ஆனால் எனக்கு வரலை மாறா ஒரு விஷயம் தான் தோணுது”

“என்ன நந்து”

“மற்றவங்க ஆதனை சுமையா பார்க்கிறாங்கன்னா அவங்களுக்கு உங்க மேல விருப்பம் இல்லாமல் வெறும் பணமும், அந்தஸ்தும் தான் முக்கியமானதா இருக்கலாம்... அதனால் ஆதனை சுமையா நினைக்க நூறு சதவீதம் வாய்ப்பிருக்கு” என்று நிதானமாக அளித்த பதில் மேலும் அவனை தைரியமாக கேள்வி கேட்க தூண்ட...

“இருக்கட்டும் நந்தினி உனக்கு என் பணமோ, அந்தஸ்தோ பெரிசில்லை நான்... மிடில் கிளாசா இருந்திருந்தா கூட என்னை ஏற்றுகிட்டு இருந்திருப்ப, அதுவும் நீ வயது பெண் உனக்கும் கல்யாண கனவுகள்ன்னு ஆசை எல்லாம் இருக்கும், அதில் என்னை தவிர ஆதன் உனக்கு சுமையாவே தெரியலையா எங்கே உன் வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருப்பனோன்னு”

“தோணலை விக்ரம் ஏன் தெரியலை... அவன் மேல வெறுமனே பரிதாபம்ன்னு பொய் சொல்லமாட்டேன் அது உண்மையான பாசத்தை கொச்சைப்படுத்துற மாதிரி ஆகிரும்... அவனை பார்த்ததும் அவனை நான் அரவணைக்க முடியலையேன்னு வந்த தவிப்பு இருக்கே அதை என்னால் சொல்ல முடியலை விக்ரம்... பெற்ற தாய்க்கு ஏற்படக்கூடிய அந்த வலி எனக்கு ஏன் தோணனும் பெறாமல் பெற்றெடுத்த இன்பத்தை தந்தவன் ஆதன் அவன் என்னைக்குமே எனக்கு சுமையா ஆகமாட்டான்”

“என்ன இருந்தாலும் நான் ஷைலஜாவுடன் வாழ்ந்....” என்று கூறி முடிப்பதற்குள் வேகமாக இடையிட்டவள்...

“அந்த ஒரு நாள் வாழ்க்கையை தூக்கி குப்பையில் போடுங்க... நம்ம ஊரில் டிவோர்ஸ்ன்னு ஒரு விஷயம் நடக்கிறதே இல்லையா, அப்படி டிவோர்ஸ் பண்ணுறவங்க கல்யாணம் பண்ணிக்கிறது தான் இல்லையா? சுருக்கமா சொல்லனும்னா சேற்றில் பூ விழுந்திருசுன்னா அதை எடுத்து தண்ணியில் கழுவிட்டு நாம உபயோக படுதிறதில்லையா? இத்தனை ஏன் சேற்றிலும் தானே செந்தாமரை வளருது அந்த தாமரையை பறிச்சு நாம உபயோகப்படுத்த நினைக்கிறதில்லையா... சேற்றிலேயும் தாமரை வளருதுன்னு ஒட்டு மொத்த தாமரையும் அசுத்தம்ன்னு ஒதுக்கிற முடியுமா, அதுவும் பூன்னு தான் சொல்றோம்... இப்படி இரண்டு தன்மையுள்ள அந்த தாமரை பூவை உலகத்தை படிச்ச ஆதிசிவன் ஈசனே ஏற்றுக்கும் போது நாம என்ன தூக்கியா எறியுவோம்?” என்று புன்னகையுடன் பதிலளிக்க உணர்ச்சி பெருக்கெடுக்க அனைத்து தளைகளையும் மறந்தவனாக நந்தினியை இறுக அணைத்துக் கொண்டான்.

அவன் கண்கள் உணர்ச்சி பிழம்பில் கலங்கிச் சிவந்திருக்க அவன் இதயம் விம்மியது... நந்தினிக்கு அவன் அணைப்பில் எழும்புகள் நொறுங்கிவிடுவது போல் தோன்றினாலும் அவனை புரிந்தவளாக தானும் அவனுக்கு இசைந்து விட்டிருந்தாள்.

விக்ரம், நந்தினி இருவரும் நேசத்தின் ஆழியில் மூழ்கி அதன் சுகத்தை அனுபவித்ததில் மனம் நிறைந்திருந்தார்கள். நந்தினி விக்ரமின் சந்திப்பு பாதுகாப்பாக தொடர்ந்தது. விக்ரமுக்கு அவளின் படிப்பு பாதிக்கக்கூடாது என்ற எண்ணமே நந்தினிக்கு விக்ரமை உயர்த்தி நிறுத்தியது... அது மட்டுமில்லாமல் எவ்வளவு தனிமை கிடைத்தாலும் அவளுக்காக யோசித்து செயல்பட்டு அவளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் விதம் மேலும் அவனை இருமடங்கு உயர்த்தில் நிறுத்தி அவனை கவர்ந்தது.

இத்தனைக்கும் நந்தினி விக்ரமிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சிந்தனையின்றி அவன் மேல் ஈசித்து கொண்டு இழைபவள் அவளின் தொடுகையையும் அருகாமையையும் விக்ரம் ஒரு நாளும், ஒரு பொழுதும், ஒரு கணமும் தவறாக பயன்படுத்தாது அவளின் ஆசைக்கு தடா போடாமல் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை அவனுக்குள் இருத்திக் கொண்டிருந்தான்.

அச்சமயத்தில் விக்ரம் மட்டும் எனக்கு நீ வேண்டும் நந்தினி என்று கண்ணசைத்திருந்தால் போதும்... அவனிடம் நான் என்றும் உனதே எடுத்துக் கொள்ள என்று சரணாகதி ஆக தயாராக இருந்தாள். அதையெல்லாம் அறிந்தும் அறியாதவனை போல் விக்ரம் நடந்து கொள்ளும் விதம் விக்ரமின் அன்னையை போற்ற வைத்தது.

ஆண்மகனின் ஒழுக்கம் அன்னையின் வளர்ப்பில் என்பதற்கு சான்றாக இருந்தான் விக்ரம்... அப்போது தான் அவளுக்கு அந்த அச்சம் தோன்ற அதை அவனிடமே கேட்டுவிட்டாள்.

“விக்ரம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு”

“எதுக்கு நம்ம கல்யாணம் நினைச்சு தானே விடு பார்த்துக்கலாம்” என்றவனிடம்...

“அச்சோ அதில்லை” என்று பார்வையை எக்கினாள்.

“வேறென்ன?” புருவம் சுருக்கி தீவிர சிந்தனையுடன் நோக்க...

“உங்களை உங்க அம்மா எவ்ளோ நல்லா பையனா வளர்த்திருக்காங்க, அதே போல நான் ஆதனை வளர்ப்பேனா?” என்று கவலையுடன் கேட்க கடகடவென்று உரக்க சிரித்துவிட்டான்.

“அடியேய் எதெதுக்கெல்லாம் பயப்படுறதுன்னு விவஸ்தை இல்லை” என்றவனின் பேச்சில் அவள் முகம் கூம்ப...

“என் பயத்தை கண்டா சிரிப்பா இருக்கா உங்களுக்கு, சிரிங்க சிரிங்க” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க...

“ஆதன் உன்னை நந்தினி அம்மான்னு உரிமையா கூப்பிடணும்னா அவனுக்கு அந்த தகுதி இருக்கணும்னு அவன் மனசில் புகுத்திட்டேன்” என்றவன் முகம் தீவிரமாக இருக்க நந்தினி திகைத்து நின்றாள்.

அவன் பேச்சின் சாராம்சம் புரியாதவளா அவள்... “வி..க்..ர..ம்...” என்று திக்கி திணறியவளின் மனம் அன்பில் நெகிழ்ந்திருந்தது...

“உன் விக்ரம் தான் நந்துமா... போதும் இதுக்கு மேல கண்ணை விரிக்காதே கண்ணுமுழி வெளியே தெறிச்சு விழுந்துற போகுது” என்று கேலி பேச மற்றதை மறந்து களுக்கென்று சிரித்து விட்டிருந்தாள்.

“சரி நான் கிளம்பவா?”

“ஏன் நேரமாகிருச்சா?”

“ம்ம்ம்... ஆமாம் நான் பிராக்டிகல் கிளாஸ் இருக்கு அது இதுன்னு கதை சொல்லிட்டு வந்திருக்கேன், இப்போவே மணி ஆறு ஆகிருச்சு வீட்டுக்கு போக சரியா இருக்கும்”

“சரி பார்த்து போ” என்றவன் அவளுக்கு விடை கொடுக்க ஆதன் முத்தமிட்டு அவளை வழியானுப்பினான்.

நந்தினி புன்னகை முகத்துடனே வாகனத்தை கையாள எதிரில் யாரென்று கண்ணுறாமாலே செலுத்தியவள் சரக்கென்று பிரேக்கை பிடித்து வண்டியை நிறுத்தியிருந்தாள். எதிரில் கோபத்துடன் நின்றிருந்த இருவரையும் கண்டு நந்தினி கலவையான உணர்ச்சியை சுமந்தப்படி தத்தளித்து கொண்டிருந்தாள்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-21

“எங்களை உனக்கு நியாபகம் இருக்கா மிஸ்.நந்தினி?” என்று ரம்யா இளக்காரமான பார்வையுடன் காட்டமாக வினவ...

“அவளுக்கு எப்படி நியாபகம் இருக்கும் ரம்யா... அதுதான் அம்மையாருக்கு புதுசா ஒரு உறவு கிடைச்சிருக்கு இனி நம்மளை எல்லாம் எதுக்கு கண்டுக்கப் போகிறா?” என்று வினிதா அவளை விட இருமடங்கு கடுமையாக கூற, நந்தினி செய்வதறியாது உதட்டை கடித்துக் கொண்டிருந்தாள்.

“.................” அவளின் மௌனத்தை கண்ட இருவருக்கும் மேலும் சினம் தொக்கிக் கொள்ள...

“ஏய் விடுடி இனிமே நம்ம கூட அவ பேசக்கூட யோசிப்பா” என்று எரிந்து விழுந்தாள்.

“அதானே மேடம் யாரு மாடிவீட்டு மகாராணி ஆச்சே” என்று ரம்யா குத்தலாக மொழிய நந்தினி அவர்களை பச்சா தாபத்துடன் பார்த்திருந்தாள்.

“ப்ளீஸ் நீங்க இப்படி எல்லாம் பேசினா மனசு வலிக்குது” கண்களில் வலியுடன் கூறியவளின் துயரத்தை பொறுக்காதவர்கள் சற்றே இறங்கினார்கள்...

வினிதா, ரம்யாவிடம் கண்களால் ஏதோ பேச அதை அப்படியே நந்தினியிடம் விளம்பினாள்.

“நாளைக்கு காலேஜ் முடிச்சுட்டு ஈவ்னிங் வர நாம மீட் பண்றோம்” என்றதும் திடுக்கிட்டவள்...

“ஈவ்னிங்கா” என்று கூறி விக்ரமின் இல்லத்தை கண்ணுற்றவளை கண்டு இருவரின் பார்வையும் மாறியிருந்தது.

ஆனால் அதை பற்றி சிறிதும் லட்சியம் செய்யாத நந்தினி... “ஹேய் ப்ளீஸ் டி மதியம் வேணா மீட் பண்ணலாமா, இல்லைன்னா சாட்டர்டே மீட் பண்ணலாமா?” என்று தயவுடன் ஆலோசித்து கொண்டிருந்தாள்.

“அதான் நாம நினைச்சது சரி தான் ரம்யா... மேடம் பசலை நோயில் விழுந்து பித்து பிடிச்சிருக்காங்க, அதனால் நம்மளை பார்க்க வரணும்ன்னா முக்கியமானவர் கிட்டே பர்மிசன் கேட்கணும் போல”

“ச்சே.. ச்சே.. அப்படி எல்லாம் இல்லை டி வினி... இப்போ என்ன நாளைக்கு பார்க்கணும் அவ்ளோதானே சரி வரேன் என்று வேறு வழியின்றி சம்மதித்திருந்தாள்

அவர்கள் சொன்னபடியே மாலையில் சந்தித்து கொள்ள இருவரும் நந்தினியைவெட்டிக் கொண்டிருந்தனர்... எதுவாகினும் அவர்களே ஆரம்பிக்கட்டும் என்று நந்தினி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“எது நடந்துரக் கூடாதுன்னு நான் அவ்ளோ தூரம் ஜாக்கிரதையா இருக்க சொன்னேனோ கடைசியில் அதுவே நடந்திருக்கு” என்று ரம்யா ஆரம்பித்து வைக்க, அவளை தொடர்ந்த வனிதா...

“மற்றவங்களை குறை சொல்லி பயனில்லை டி... நல்லா படிச்சு பட்டம் வங்கியிருக்காளே அவளை சொல்லணும்”

“..........” அவர்களின் பேச்சுக்கு எந்த எதிரொலியும் இல்லாது மௌனமே உருவாக அமர்ந்திருந்தவளை கண்டு இருவருக்கும் கடுப்பாகியது.

“ஏய் என்னடி இப்படி பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கிற, நாங்க என்ன யாரோ ஒருத்தர்கிட்டயா பேசிட்டு இருக்கோம் இப்படி உம்முனு முகத்தைக் வச்சுக்கிட்டு இருக்கிற?”

“என்னை என்ன சொல்ல சொல்றீங்க ரெண்டு பேரும்? நான் காதலிக்கிறது ஒரு தப்பா” அழுத்தமாக பார்த்தப்படி வினவியவளை கண்டு திகைத்தவர்கள்...

“நீ காதலிக்கிறது தப்பில்லை நந்தினி... ஆனால் யாரை காதலிக்கிறேன்னு தான் பிரச்சனை... அவன் கல்யாணம் ஆகி குழந்தையோட இருக்கிறவன்... அதுவும் அவங்களுக்குள்ள என்ன சிக்கல் ஆகி விவாகரத்து ஆச்சோ ஊரில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசிக்கிறாங்க... உனக்கு என்ன குறைன்னு அந்த விக்ரமை போய் காதலிக்கிற? ஆதனை நாங்க அடக்கி வைக்க காரணம், அவனை அடக்க ஆள் இல்லாமல் இருக்கிறதால தப்பு பண்ணாமல் இருக்கத்தான்” என்று ரம்யா கூற, அதுவரை தோழிகள் என்று நட்புக்காக அடங்கி கட்டுப்பட்டு இருந்தவள் முற்றிலும் பொறுமையை சிதறடித்துவிட்டு....

“போதும் நிறுத்து ரம்யா... ஊரில் ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசுறாங்க தான், ஆனால் உண்மை என்னன்னு உனக்கு தெரியுமா?” ஆவேசத்துடன் பேசிக் கொண்டிருந்த தோழியை அதிர்ந்த விழிகளால் நோக்கினர். அவர்களின் அதிர்ச்சியை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் பிடியில் உறுதியாக நின்று பேசலானாள்.

“எனக்கு தெரியும் நடந்த உண்மை என்னன்னு... ஆதனை நீங்க சரியான விதத்தில் கொண்டு போகத்தான் அவனுக்கு அத்தனை கண்டிஷன் போட்டீங்களா? அப்படி நினைக்கிற நீங்க அவனை ஒதுக்கி வச்சு செய்திருக்கக்கூடாது... உங்க வீட்டில் இருக்கிற ஒருத்தனா நினைச்சு குழந்தையை எப்படி ட்ரீட் பண்ணணுமோ அப்படி ட்ரீட் பண்ணியிருக்கணும்... ஆனால் அவனை நீங்க அறியா பையன்னு கூட பார்க்காமல் அவன் வயசுக்கே உள்ள சில விஷயங்களை கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்தி அராஜகமா அடக்கி வச்சீங்க? இதுக்கு நீங்க அவனை பார்த்துக்கவே முடியாதுன்னு சொல்லியிருந்தா இன்னும் பெட்டர்” என்று ஆவேசத்தில் கொந்தளித்தாள்.

“ஏய் நந்து ஏன் டி அவளை திட்டுற, அவ அவருடைய வீட்டு பக்கத்திலேயே பல வருஷமா இருக்கிறவ அவளுக்கு தெரியாததா உனக்கு தெரிஞ்சுற போகுது”

“வீட்டு பக்கத்தில் இருந்தா எல்லாம் தெரிஞ்சவங்களா ஆகிற முடியுமா? சில பெற்றவங்களுக்கே பிள்ளைகள் மனசில் என்ன இருக்குன்னு தெரியாது”

“ஆமாம் உன்னை போல தானே?” அவளை குத்தி காட்டத்தான் அவள் கூறினால் ஆனால் அதற்கெல்லாம் அசராத நந்தினி...

“ஆமாம் அப்படி தான் இருக்கட்டுமே இப்போ என்ன? நான் இப்போ பேசுறது விக்ரம் வாழ்க்கையில் நடந்த அந்தரங்க வாழ்க்கையை பற்றி... ஊரில் ஏதேதோ பேசிக்கிறாங்கன்னு சொல்லிட்டு அதுக்காக அவருடைய அந்தரங்கத்தை மேடை போட்டு மைக் செட் வச்சு ஒளிபரப்ப முடியாது... அதுக்கான அவசியமும் இல்லை... ஏன் நம்மளுடைய அந்தரங்கமும் அப்படித்தானே, இதையெல்லாம் நீங்க வசதியா மறந்துட்டீங்க?” ஆத்திரம் தாங்காது எண்ணையில் இட்ட கடுக்காய் படபடவென பொரிந்து தள்ளியிருந்தாள். அவள் கூற்றில் அவர்களுக்கும் ஒப்புதல் இருந்த போதும் தங்கள் தோழியின் வாழ்க்கை ஆயிற்றே என்று கருதி...

“ஏய் நாங்க உன் வாழ்க்கைக்காக தான் டி பேசினோம், ஆனால் நீ எங்க மேலேயே கோபப்படுற? ஆதன் இப்போ வேணா உனக்கு சுமையா இல்லாமல் இருக்கலாம்... ஆனால் கல்யாணம் ஆன பிறகு சில விஷயங்களுக்கு நீயே அவனை சுமையா தான் நினைப்ப?” என்றவளை சரேலென்று பார்வை உயர்த்தி பார்த்தவள் முகத்தில் தீட்சண்யம் கரைபுரண்டோடியாது.

“நீங்க சொல்ற அந்த காரணம் எந்த காரணம்ன்னு புரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை... அந்த காரணமும், சூழ்நிலையும் அமையும்... ஆனால் அதுக்காக எங்க வாழ்க்கையை நாங்க வாழாமலும் இருக்கமாட்டோம்... அதை எல்லாம் யோசிக்காமல் என் விக்ரம் இருக்கமாட்டாரு... ஏன்னா என் விக்ரம் பேருக்கு தான் திருமணம் ஆனவர்... பொண்டாட்டியோட வாழ்ந்தவர்... ஆனால் அந்த போலி திரைக்கு பின்னாடி இருக்கிற உண்மையை அறிஞ்சவ நான் மட்டும் தான்” என்று தலையை சிலுப்பிக் கொண்டவள் தொடர்ந்து...

“அவர் வாழ்ந்தவர்ன்னு சொல்லுறதை விட ஊருக்காக கணவன் மனைவியா வலம் வந்தவர்... இதுக்கு மேல அவருடைய அந்தரங்கத்தை நான் சொல்ல விரும்பலை... ஏன்னா அவர் என்கிட்டே சொன்னதுக்கு காரணம் அவருடன் நான் வாழப் போறேன் அப்போ கடந்த காலம் என்னன்னு தெரியாமல் இருக்கக் கூடாதுங்கிற ஒரு காரணத்துக்காக தான்... அவருக்கு நடந்தது கிட்டத்தட்ட ஒரு பொம்மை கல்யாணத்துக்கு சமம், ஆதன் பிறப்பு ஒர்நாள் விபரீதமான விபத்தில் நேர்ந்த விதியின் விளையாட்டு... உங்களை போலவே நானும் இதுபோல் நெறைய யோசிச்சிருக்கேன் மனசை போட்டு குழப்பியிருக்கேன்... ஆனால் என் விக்ரம் என்னிடம் உண்மையை சொன்ன பிறகு எனக்கு அவரை தவிர வேற யாரை பற்றியும் சிந்திக்க முடியலை” என்று ஓவ்வொரு முறையும் 'என் விக்ரம்' என்பதை அழுத்தம் கூட்டி கூறியதே அவளுக்கு அவன்மேல் கொண்ட ஈடுப்பட்டை பட்டவார்த்தைனமாக வெளிச்சமிட்டு காட்டியிருக்க, அவர்களுக்கு அதற்கு மேல் அதை பற்றி பேசும் அருகதை இன்றி என்றுணர்ந்தவர்கள்...

“எங்களை மன்னிச்சிரு தாயே ஏதோ நீ எங்களுடைய நெருங்கின பிரெண்டுன்னு நினைச்சு தான் உனக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வந்தோம்... ஆனா யாரோ ஒரு மூணாவது ஆளுக்காக எங்களையே எடுத்தெறிஞ்சு பேசிட்டா, இதுக்கு மேல நாங்க பேசினா அது எங்க மரியாதைக்கு தான் பங்கம், நீயாவே பட்டு திருந்தினா தான் உண்டு நாங்க கிளம்பறோம்... இனி உன் பக்கமே வரமாட்டோம்” என்று தலை மேல் இருகரம் கூப்பி கூறிவிட்டு விருட்டென்று நகர்ந்துவிட்டிருந்தனர்.

நந்தினியை கரித்துக் கொட்டி விட்டு சென்ற இருவரையும் கண்டு, தானும் அத்தனை கடுமையாக பேசியிருக்க கூடாதோ என்று வருந்தினாள்.

“இப்போ நீங்க என்மேல கோபித்துகிட்டு போறீங்க... ஆனால் ஒரு நாள் என்னை தேடி வருவீங்க, அன்றைக்கு நான் விக்ரமுடன் நன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன்” என்று தனக்குள் பிரதிக்ஞை செய்துக் கொண்டாள்.

அப்போதே அங்கு நேரமாகிவிட இனி விக்ரமை பார்ப்பது என்பது முடியாத விஷயமாக எண்ணியவள் அடுத்த தினம் கல்லூரியும் விடுமுறை என்பதால் நேரமாக செல்லலாம் என்று முடிவெடுத்து அதை விக்ரமிடமும் தெரிவித்துவிட்டு இல்லம் திரும்பியிருந்தாள்.

விக்ரமின் வீட்டில் காலடி எடுத்து வைக்க வீட்டில் நிசப்தமே நிலவியது... யாரும் இல்லையா என்று எண்ணியபடி வீட்டை சுற்றி தேடிக் கொண்டிருக்கும் போதுதான்... “பே...” என்று பேய் மூகமூடி அணிந்த ஆதன் அவள் எதிர்பாராமல் பயமுறுத்தியதில் பயந்து அலறி திரும்பிய சமயம் எதிரில் விக்ரமும் அதே போல் அவளை பயமுறுத்தினான்.

அவர்களின் குறும்பு புரிந்தாலும் எதிர்பாரத அச்சத்தின் தாக்கம் இருவர் மேலும் சினம் கொள்ள வைக்க, இருவரையும் பலமாக முறைத்துவிட்டு தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கோபமாக கிளம்ப ஆயத்தமானவளை கண்ட ஆதன்...

“நந்தினிம்மா... நந்தினிம்மா” என்று கூவ...

“நந்து...” என்று ஒரே தாவில் விக்ரம் அவள் கரத்தை தாங்கி பிடித்துக் கொண்டான்.

“ஏய் நந்து சும்மா விளையாட்டுக்கு தானே பண்ணிணோம் இதுக்கு போய் கோபப்படுற?”

“விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா ஒரு நிமிஷம் என் இதய துடிப்பே நின்னு போச்சு”

“இந்த ஐடியா கொடுத்தது உன் மகன் தான் அவனை கேளு” என்று மகனை மாட்டிவிட்டால் தான் அவளின் கோபத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற யுக்தியை பயன்படுத்தியிருந்தான்... தந்தையின் திட்டத்தை அறியாஹ்ட ஆதனோ நந்தினியிடம் மாட்டிக் கொண்டதில் திருதிருவென்று விழிக்க, நந்தினி ஒற்றை புருவம் உயர்த்தி அவனை கண்டிப்புடன் பார்த்தாள்.

“இதெல்லாம் உன் வேலையாடா?” என்று மிரட்ட அவனோ மிரண்டு விழித்தவன்...

“ங்னா அப்பாக்கூத தான் விளையாண்தேன் நந்தினிமா” என்று மழலையில் மிழற்ற இருவரையும் மாறி மாறி முறைத்தவள், அவர்களின் மிரண்ட விழி பார்வையில் சிரிப்பை கட்டுப்படுத்த இயலாது “ஹாஹாஹா” என்று கலகலத்து சிரித்துவிட்டிருந்தாள்.

“சரி கண்ணம்மா ம்மா எங்கே?” என்று ஆதனிடம் விசாரிக்க...

“கண்ணம்மா கோவிலுக்கு போயிருக்காங்க வர நேரம் தான்” என்று விக்ரம் அவளிடம் கூறியவன் பேசிக் கொண்டே அவளுக்கு தேநீர் தயாரித்து எடுத்தும் வந்திருந்தான்.

“இதையெல்லாம் ஏன் விக்ரம் நீங்க செய்யுறீங்க? என்கிட்டே சொன்னேனா நான் செய்யமாட்டேனா”

“எல்லாம் நான் உன் கழுத்தில் தாலி கட்டி இந்த வீட்டுக்கு வர வரைக்கும் தான், அதுக்கப்புறம் அய்யாவுக்கு சகல பணிவிடைகளையும் அம்மையார் தான் பார்க்கணும்” என்று இமைசிமிட்டி கூற வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

கண்ணம்மாவும் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்திருக்க... “அடடே நந்தினிமா வா வா” என்று அழைத்தார்.

நந்தினியும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு ஆதனுடன் சிறிது நேரம் செலவழித்துவிட்டிருந்தாள்... நந்தினி விக்ரமிடம் பேச வேண்டும் என்பதை உணர்த்தியதும் ஆதனை கண்ணம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு மாடிக்கு அழைத்து சென்றவன் அவன் அன்னையின் அறையை காட்டி அங்கிருந்த பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.

“ஏன் விக்ரம் இங்கே கூட்டிட்டு வந்தீங்க?”

“என் ரூம் பால்கனியில் இருந்து பார்த்தா ரம்யா வீட்டு மாடி போர்ஷன் நல்லா தெரியும், சப்போஸ் அவங்க அம்மா பார்த்துட்டா உனக்கு தான் பிரச்சனை” என்ற உண்மையில் அவன் முனெச்சரிக்கை நடவடிக்கை எண்ணி மாட்சிமையுடன் நோக்கினாள்.

“ஆமாம் நேத்து உன் பிரெண்ட்ஸ் பேசினாங்க போல?” என்று விசாரித்தவனை யோசனையாக பார்க்க...

“நீ இந்த தெருமுனையை தாண்டுற வரைக்கும் நான் மாடியில் நின்னு பார்ப்பேன், அப்படித்தான் நேத்தும் பார்த்தேன்”

“ம்ம்... ஆமாம் பேசினாங்கன்னு சொல்லுறதை விட என்னை தாளிச்சாங்க” என்றதும் அங்கே சில கணங்கள் மௌனம் நிலவியது.

“என்னுடைய முடிவுக்கு எல்லாரும் எதிர்ப்பு தான் தெரிவிப்பங்கன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சிருந்தாலும் கூட, படிச்ச என்னுடைய நெருக்கமான பிரெண்ட்ஸ் கூட எதிர்ப்பாங்கன்னு நேற்று தான் தெரிஞ்சுகிட்டேன் விக்ரம்”

“...................”

“நானும் அவங்ககிட்டே எவ்வளவோ எடுத்து சொல்ல முயற்சித்தேன் விக்ரம்... ஆனால் அவங்க என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே முயற்சிக்கலை” என்றவள் கதனம் தாங்க முடியாமல் அவன் மார்பில் சாய்ந்து துக்கத்தை ஆற்றலானாள்.

அவன் மார்பில் ஆண்மைக்கே உரித்தான வாசம் அவளின் பெண்மையை வசீகரித்து அவளின் வியாகூலத்தை அடியோடு துடைத்தெறிந்து கொண்டிருந்தது தான் விந்தையிலும் விந்தை!

அவள் அவன் மார்பில் ஆறுதல் தேடிய விதம் அவனை நெகிழ்வில் உறைய வைத்தது... திருமணம் எனும் இல்லற வாழ்வில் தன்னவளிடம் எதிர்பார்த்த அந்த உணர்வுகள், அவன் ஊரறிய நிச்சயித்து சுற்றம் முற்றம் சூழ கைபிடித்து வந்த மனைவி அவனுக்கு அளிக்க தவறிய இனிமையான தருணங்களை, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தன் பரிசுத்தமான நேசத்துடன் அவனுக்கு பரிசாக அளித்துக் கொண்டு அவன் உயிரில் ஆழமாக பதிந்து ஆணிவேராக உருவாகியிருந்தாள் நந்தினி.

“நந்தினி ம்மா... நந்தினி ம்மா...” என்று அழைத்தபடி வந்த ஆதனின் அழைப்பில் சுதாரித்து விலக எத்தனிக்க, அவளை தன் பிடியில் நிறுத்திக் கொண்டவன் அவள் நெற்றியில் மென்மையாக அவனின் காந்த இதழ்களை ஒற்றி எடுத்த பிறகே தன் பிடியில் இருந்து விடுவித்திருந்தான். ஆதன் பார்வையில் படும் முன் அவசரமாக இருவரும் தங்களை சமன் செய்துக் கொண்டு இயல்பாக நின்றுக் கொண்டனர்.

“நந்தினிம்மா இதை எப்படி வரையறது?” என்று புத்தகத்தில் இருந்த படத்தை காட்டி வினவ, நந்தினியும் விக்ரமை விட்டு விலகி அவன் கேட்டதற்கு சிறிதும் சலிப்பில்லாமல் பொறுப்பாக பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

நந்தினி ஆதனை கையாளும் விதம், அவனின் கேள்விக்கு நிதானமாக பொறுமையாக பதிலளிப்பது, அவன் மேல் கொண்ட அக்கறை என பல விதமான அவளின் செய்கையில் விக்ரமுக்கே ஆதனை பெற்றவள் நந்தினி தானோ என்ற சந்தேகம் எழும்பியது... இதே வேறொரு பெண்ணாக இருந்திருந்தாள் விக்ரமுடன் சல்லாபிக்க இடைஞ்சலாக கருதி ஆதன் மேல் வெறுப்பை உமிழ்ந்திருப்பாள் என்று எண்ணியவனுக்கு நந்தினியின் மேல் நேசம் அதிகரித்தது.

இது பெண்மைக்கே உண்டான தாய்மையின் இயல்பான குணம் என்றாலும் கூட, ஆதனின் பின்புலம் யாரையும் தள்ளி நிறுத்தும் அபத்தமான கதையாக இருக்க, அவை அனைத்தும் துட்சமென கருதி அவனை அரவணைத்து கொண்டிருந்தவளின் அன்பில் விக்ரமின் சித்தம் நிறைந்துவிட்டிருந்தது.

அவர்கள் மூவரும் பார்க்கவே ஓர் குடும்பமாக இணைந்திருந்த அந்த தருணம் நிலைப்பெருமா? நீடிக்குமா... என்ற சந்தேகம் அவனுள் பிரளயத்தை கிளப்பியது.

‘ச்சே... இப்போ போய் ஏன் இந்த மாதிரி தோணுது’ என்ற அவன் உள்ளுணர்வின் எச்சரிக்கை தான் எதிர்காலத்தில் நிஜம் ஆகப் போவதை என்பதை அறிந்திருந்தால் அவன் அக்கணமே உயிரை மாய்த்திருப்பான்... ஆனால் விதியிடம் இருந்து தப்பிக்க அவன் ஆமானுஷ்யமோ, தெய்வமோ அல்லவே சாதாரண மனித பிறவி ஆயிற்றே!!

****************

நந்தினி அவளின் முதுகலை கல்லூரி படிப்பை முடித்திருந்தாள்... அதுவரை நாள் பார்த்து, கிழமை பார்த்து, அக்கம் பக்கம் பார்த்து விக்ரமுக்காக, விக்ரமின் வார்த்தைக்காக என பதுங்கி பதுங்கி அவனை சந்தித்து கொண்டிருந்தவளுக்கு அதிலிருந்து விடுதலை கிடைத்து விட்டதாக எண்ணியவள் அதை விக்ரமிடமும் பகிர்ந்து கொண்டாள்.

“இனிமே நாம சந்திக்க எந்த தடையும் இல்லை... நீங்களும் எனக்கு தடா போட முடியாதாக்கும்” என்று குஷியாக கூறியவளை அபிலாஷையுடன் பார்த்தவன்...

“சோ, உங்க வீட்டில் நான் பெண் கேட்க நேரம் வந்திருச்சுன்னு சொல்லுற?”

“ஆமாம் விக்ரம்... எனக்கு இப்போவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க எனக்கு தெரியாமல் ரெண்டு மூணு இடத்தில் ஜாதகத்தை கொடுத்துட்டாங்க” என்று துடிப்புடன் ஆரம்பித்தவளின் குரல் முடிவில் உள்ளே சென்றுவிட்டதை கண்டு அவனுக்கும் அவளுடைய உணர்வுகள் தொற்றிக் கொண்டது. பக்கவாட்டிலிருந்து அவனை அணைத்து கொண்டவளின் சிரம் அவள் விலாவில் பதிந்திருக்க வலது கரம் அவன் கழுத்தை சுற்றிக் கொண்டிருந்தது.

‘இவளின் இந்த உரிமையும், அன்பும் எனக்கு வேண்டுமே... கடவுளே! என் நந்தினியை கைப்பிடிக்கும் வரத்தை மட்டும் எனக்கு கொடு வேறெதுவும் நான் உன்னிடம் கேட்கப் போவதில்லை’ என்று அவன் மானசீகமாக கடவுளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தான்.

“விக்ரம் நம்ம கல்யாணம் நடந்திரும் தானே? யார் சம்மதித்தாலும் சம்மதிக்கலைனாலும் நீங்க என்னை கைவிடமாட்டீங்க தானே?” என்று நடுங்கும் குரலில் வினவியவளின் சொல்லில் அவன் மனதை சம்மட்டியால் அடிப்பது போல் இருக்க ஓர் நொடி துடித்தவன்.

“நான் விடமாட்டேன் நந்தினி... உன்னை விடமாட்டேன்! நம்ம கல்யாணத்துக்கு யார் குறுக்கே நின்றாலும் அவங்களை வெட்டி போடவும் தயங்கமாட்டேன்” கண்களில் தீப்பொறி பறக்க கூறியவனின் சொல்லை கேட்டு கொண்டிருந்த விதியோ... ‘நீதான் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஒதுக்கி வைக்க போகிறாய்... உங்கள் உறவுக்கு வில்லன் நீயாகவே இருக்கப் போகிறாய்’ என்ற விதி கெக்கலி கொட்டி சிரித்ததை அவனால் அறிய முடியாமல் போனது தான் அந்தோ பரிதாபம்!

“நாம நாளைக்கு திருச்சி மலைகோட்டை கோவிலுக்கு போயிட்டு வரலாம் நந்தினி”

“எதுக்கு?”

“உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்... அதுக்கப்புறம் நீ உன் குடும்ப சூழ்நிலையை எப்படின்னு பார்த்து ஒரு நாளில் சொல்லு... நான் கண்ணம்மா ம்மா, செந்தில் அண்ணாவுடன் சேர்ந்து உன்னை பெண் கேட்டு உன் வீட்டுக்கு வரோம்” என்று இனம் புரியாத அச்சம் ஆட்கொண்டு அவளுக்கு படப்படவென்று அடித்துக் கொண்டது. அவள் கரங்களின் நடுக்கத்தை உணர்ந்து இறுக பிடித்துக் கொண்டவன்...

“என்னடா பயமா இருக்கா?” என்று பரிகாசமாக சிகையை கோதி வினவ..

‘ஆமாம்’ என்று மேலும் கீழும் தலையசைத்தவள்...

“பேசாமல் நாம மலைக்கோட்டையில் வச்சு நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா? அப்புறம் என்ன வந்தாலும் சரி நாம ஒண்ணா சேர்ந்து பார்த்துக்குவோம்” என்று நந்தினி கூறிய யோசனையை முற்றிலும் நிராகரித்தான்.

“இல்லை நந்துமா நான் தான் தாய், தந்தை இல்லாமல் ஒற்றை ஆளா நிற்கறேன்... உனக்கு இருந்தும் இல்லாமல் போக வேண்டாம். என்ன பிரச்சனை ஆனாலும் உங்க அம்மா, அப்பாகிட்டே பேசிட்டே அவங்க சம்மதத்தோடவே நாம கல்யாணம் பண்ணிக்குவோம்”

“ஆனால் எனக்கு என்னமோ உள் மனசில் ஏதோ ஒரு பயம் வந்து போய்கிட்டே விக்ரம்... ஒரு வேளை நீங்க எனக்கு இல்லைங்கிற சூழ்நிலை வந்திருச்சுன்னா நான் என் உயிரை விட்டிருவேன்” என்றதும் உள்ளம் நடுங்க ஆடிப்போனான்.

“பைத்தியம் இப்படி எல்லாம் பேசாதே அறைஞ்சு பல்லை கழட்டிருவேன் ஜாக்கிரதை” ஒருவித வேகத்துடன் கடிந்து கொண்டுவிட்டிருந்தான்.

“இங்கே பாரு நந்தினி என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள தைரியத்தை தான் வளர்த்துக்கனுமே தவிர இப்படி முட்டாள்தனமா முடிவெடுக்கக்கூடாது... நாளைக்கு என்னுடன் வர நாம கோவிலுக்கு போகிறோம், அதுக்கப்புறம் அடுத்தகட்டத்துக்கு நாம அடியெடுத்து வைக்கிறோம்” என்றவர்கள் அடுத்ததினம் மலைகோட்டை உச்சி பிள்ளையார் ஆலயம் சென்றனர்.

ஆதனை விட்டுவிட்டு விக்ரம் வந்திருக்க... “ஏன் விக்ரம் ஆதனை விட்டுட்டு வந்தீங்க, குழந்தை பொக்குன்னு போயிருவான்” என்று அவனிடம் உரிமை சண்டையிட்டு போலியாக கோபித்து கொண்டாள்.

“உன்கூட தனியா நேரம் செலவழிக்கனும்ன்னு தான் அவனை விட்டுட்டு வந்தேன்” என்றவன் அவளுடன் ஏதேதோ பேசியபடியே மலையேறினர்.

அவர்களின் பேச்சுகள் அனைத்தும் திருமணத்திற்கு பிந்திய வாழ்வின் திட்டமாக இருந்ததில் நந்தினிக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி உண்டானது.

அவர்களின் சந்திப்பு மனதிற்கு மிகுந்த நிறைவை அளித்திருந்தது... “இப்படியே நான் உங்ககூட வந்திறவா?” என்று அவன் மேல் சாய்ந்துக் கொண்டு ஆசையாக கேட்டவளை அவள் சொல்படி செய்துவிட துடித்தாலும் சில கட்டுபாடுகள் அவனுக்கு தளைகள் இட்டு கட்டுபடுத்தியிருந்தன.

“என்னுடன் தான் நீ இருக்கப் போகிற அதில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் உன் பெற்றவங்க சம்மத்தத்தோட என் மனைவியா நீ வரணும்” என்றழைத்துக் கொண்டு ஒரு புடவைக் கடையில் நிறுத்தியவனை கேள்வியாக பார்த்தவளிடம்...

“உனக்கு புடவை எடுத்து தரணும்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன் அதுக்கு தான் வா” என்றதும் அவனுடன் சென்றாள்.

பட்டுப் புடவை பிரிவில் பல வண்ணங்களும் அவளின் கருத்தை கவர அதை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு புடவையாக நந்தினியின் மேல் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தான்...

“என்ன வச்சு கண்ணு வாங்காமல் என்னை மட்டுமே பார்த்துட்டு இருக்கிற? நீயும் புடவை செலக்ட் பண்ணு” என்றவனிடம்...

“அது தான் பார்த்து பார்த்து அலங்காரமா எனக்கே எனக்காக என் புருஷன் தேர்ந்தெடுத்துட்டு இருக்கிறாரே, அவரை விட நான் நல்லா செலக்ட் பண்ணிற போறேன், நீங்க பார்த்து எது எடுத்து கொடுத்தாலும் எனக்கு டபுள் ஒகே” என்றவளின் விருப்பத்திற்கு உடன்பட்டு தானே அவளுக்கு புடவையை தேர்வு செய்துவிட்டிருந்தான்.

இவர்களின் சந்திப்பையும், நெருக்கத்தையும் இருவிழிகள் அதிர்ச்சியும், கோபமும் என கலவையான உணர்ச்சிகளுடன் பார்த்துக் கொண்டிருந்ததை இருவருமே அறியவில்லை!!

**************************

வணக்கம் நட்பூக்களே...

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-20 & 21 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் மூன்று பதிவுகள் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:


Telegram Channel Link:


நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-22
நந்தினி விக்ரமின் பரிசான புடவையை பெற்று கொண்டவள் அவனின் சரிபாதியாக ஆகிவிட வேண்டும் என்ற கனவுடனும், விரைவில் நந்தினியின் கரம் பற்றி தன்னுடையவளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இருவரும் ஒரே நோக்கத்துடன் தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்.

நந்தினி ஆயிரம் கனவுகள் வலம் வர, தன் சித்தத்தில் விக்ரமின் நினைவுகளை சுமந்தபடி புன்னகை முகத்துடன் வீட்டுக்குள் காலடி வைக்க படாரென்று அவள் காலடியில் வீழ்ந்த அரிவாளை கண்டு அரண்டு பின் வாங்கினாள்.

அவள் எதிரில் கண்கள் அழலென சிவந்து ரௌத்திரத்துடன் அவள் தந்தை துரைசாமி நின்றிருந்ததை கண்டு நந்தினியின் முகம் அச்சத்தில் ரத்த பசையின்றி வெளிறிப் போனது.

****************

துரைசாமி தெரிந்தவரின் பெண் திருமணத்திற்காக மணப்பெண்ணுக்கான ஜவுளி எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார்... அதை அறியாமல் விக்ரம் நந்தினியை அழைத்துக் கொண்டு அதே கடைக்கு சென்றது தான் மிகவும் துரதிர்ஷ்டமாக போனதோ? எதிர்பாராமல் நந்தினியின் தந்தை பார்வையில் விழுந்திருக்க, ஊரில் தெரிந்தவர்கள் மூலமாக விக்ரமின் கதையை கேட்ட துரைசாமிக்கு மகளை அவனுடன் கண்டதும் கண்மண் தெரியாமல் ஆத்திரம் கொப்பளித்தது.

அவருடன் இருந்த நெருங்கியவர்... “என்ன துரைசாமி உன் பொண்ணு அந்த மில்லுக்கார பையனோட சுத்திட்டு இருக்கிறா? அவனுக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி ஓடிப் போயிட்டா கையில் ஒரு பையன் இருக்கிறான் அவனுடன் உன் மகளுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு இதெல்லாம் சரியில்லை முதலில் அவளை கண்டிச்சு வை” என்று பற்ற வைத்து விட்டு நகர்ந்துவிட்டார்.

துரைசாமிக்கு சினத்தில் மீசை துடைக்க அவர்களின் உரையாடல் கேட்கும் படியான குறிப்பிட்ட தூரத்தில் நின்றுக் கொண்டு உளவு பார்த்த போது தான் நந்தினியின் ‘புருஷன்’ என்ற வார்த்தை நாராசமாய் விழுந்து அவர்களுக்குள் உண்டான உறவை பறைசாற்றி இருந்தது.

துரைசாமி கோபாவேசத்துடன் வீட்டை அடைந்தவர்... “ரேவதி... ரேவதி...” என்று உரத்த குரலில் அழைத்தவரின் குரலுக்கு பதறி...

“என்னங்க என்னாச்சு” என்று பதறியடித்துக் கொண்டு வந்திருந்தார்.

“உன் பெண்னை செல்லம் கொடுத்து வளர்த்தி படிக்க வச்சதுக்கு என்ன காரியம் பண்ணிட்டு இருக்கிறா தெரியுமா?” என்று கர்ஜனையான குரலில் கூறியதும்... ரேவதிக்கு ஏதோ விபரீதமான செயல் என்று மட்டும் புரிய முகத்தில் பதட்டம் அப்பிக் கொள்ள உடல் வியர்த்து விறுவிறுத்தது.

“விகேஎஸ் மில்லுக்காரன் அந்த விக்ரம் பயலோட காதல் பண்ணி சுத்திட்டு திரியுறா உன் பொண்ணு, இன்னைக்கு வரட்டும் அவளை வெட்டிப் போடுறேன்னா இல்லையான்னு பாரு” என்றவர் அரிவாளை எடுக்க பதை பதைத்து போன ரேவதி...

“ஐயோ கடவுளே! என்னங்க அவசரப்படாதீங்க பொறுங்க எதுனாலும் அவ வீட்டுக்கு தானே வருவா, வரட்டும் அவளை பேசிக்கலாம்” என்றவருக்கு மற்ற பணிகள் அனைத்தையும் மறந்துப் போனார்... கணவரின் கோப முகம் அவருக்கு மிகவும் பயங்கரமாக இருக்க உடனடியாக தன் மூத்த மகள் அகிலாவுக்கு தெரிவித்து வர வைத்துவிட்டிருந்தார்.

சதீஷ் உடனடியாக மனைவியை அழைத்துக் கொண்டு பிரசன்னமாகியிருக்க... சதீஷ் தான் துரைசாமியை அணுகி விசாரித்தான்... மனைவி மகளிடம் கோபத்தை காட்டி எரிந்து விழுந்த அவரால் மருமகனிடம் அதை காட்டிக் கொள்ள முடியாமல் போக நடந்ததை விலாவாரியாக கூறியிருந்தார்.

“என்ன விகேஎஸ் மில் ஓனர் விக்ரமா? அவருக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகிருச்சே மாமா” என்று கூற...

“அது மட்டுமா அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்... இருந்திருந்து இந்த நந்தினிக்கு அவன் தான் கிடைச்சானா?” என்று அகிலாவும் எசைபாட்டு கூற, ரேவதி துடித்துப் போனார்.

“பாவி மக இப்படி எங்க தலையில் இடியை இறக்கிப்புட்டாளே” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினார். நந்தினியை பற்றி பேசி வீடே போர்க்களம் ஆகிப் போனது.

“அவளை வீட்டுக்குள்ளையே விடக்கூடாது நான் அவளை வெட்டிப் போட்டுட்டு தான் வருவேன்” என்று வீச்சரிவாளை தூக்கிக் கொண்டு கிளம்பியவரை கண்டு அனைவரும் கலங்கிப் போயினர்.

“மாமா அவசரப்படாதீங்க நந்தினி நம்ம வீட்டு பொண்ணு கொஞ்சம் நிதானமா யோசியுங்க” என்று அடக்கிய சதிஷின் பேச்சில் தான் துரைசாமி சற்றே நிதானித்தார்.

****************

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் அச்சம், பதற்றம், கோபம் என கலைவையான உணர்ச்சிகள் தென்பட நந்தினிக்கு அடிமனதில் கலவரம் சூழ்ந்துக் கொண்டது.

அவள் அன்னை ரேவதி புடவை தலைப்பை வாயில் வைத்து பொத்தியபடி அதிர்ச்சியிலும், துக்கத்திலும் அழுதுக் கொண்டிருக்க, அன்னையின் விலாவை பிடித்தபடி அகிலா நந்தினியை முறைத்துக் கொண்டிருந்தாள். சுற்றி இருந்தவர்களின் உணர்வுகளை அவதானித்து வேகமாக சிந்திக்க அவர்கள் அனைவருக்கும் விக்ரமுடன் தான் காதல் கொண்டு விட்ட விவகாரம் தெரிந்துவிட்டது என்று ஸ்பஷ்டமாக விளங்கிப் போனது.

தந்தையின் கோபத்தில் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் அதை மறைத்துக் கொண்டு துணிச்சலை திரட்டி வரவழைத்துக் கொண்ட மனோதிடத்துடன் உள்ளே செல்ல முயன்றவளிடம்...

“வீட்டுக்குள்ளே காலை வச்ச வெட்டி போட்டிருவேன்” மிளகாயின் காரத்துடன் வெளிப்பட்ட தன் தந்தையின் உறுமலில் தடுமாறினாள். ரேவதி, அகிலா இருவரும் தந்தையின் வார்த்தைக்கு மறுப்பு கூற பம்பிப் கொண்டிருக்க சதிஷ் உதவிக்கு வந்தான்...

“மாமா முதலில் அவளை உள்ளே கூப்பிடுங்க மற்றதை அப்புறம் பேசிக்கலாம்” என்று கூறியதை கேட்ட துரைசாமி...

“அவளை எல்லாம் இத்தனை நாள் வீட்டுக்குள்ள வச்சு சோறு போட்டதுக்கு தான் நன்றிக் கடனா குடும்ப மானத்தை வாங்கிட்டாளே... இதுக்கு மேல அவளை இந்த வீட்டுக்குள் சேர்த்துக்கணுமா மாப்பிள்ளை?” என்று ஆக்ரோஷத்துடன் சீறினார்.

“மாமா அவளை இதுக்கு மேல வாசலில் நிறுத்தி வச்சீங்க அக்கம் பக்கம் பார்க்க ஆரம்பிச்சுருவாங்க, அப்புறம் நம்ம வீட்டு விஷயம் அவங்க வாய்க்கு அவலா போயிரும்” என்றவன்...

“நந்தினி நீ உள்ளே வா” என்று அவளை உள்ளே அழைத்துக் கொண்டவன் வேகமாக வாசற்கதவை மூடி தாழிட்டிருந்தான்.

அதுவரை அமைதியாக இருந்த ரேவதி... “ஏன் டி சின்ன பொண்ணுன்னு செல்லம் கொடுத்து சீராட்டி வளர்த்ததுக்கு, எங்க தலையில் நெருப்பள்ளி கொட்டிட்டியே டி பாவி... போயும்! போயும்! கல்யாணம் ஆகி கையில் குழந்தையோட இருக்கிறவன் மேல ஆசை வைச்சு சுத்திட்டு இருக்கியே உனக்கு புத்தி என்ன பிசகிப் போச்சா?”

“அவளுக்கு புத்தி இருந்தா ஏன் அவன்கூட ஜோடி போட்டுகிட்டு சுத்திட்டு திரியப் போறா” என்ற துரைசாமி அவள் கையில் இருந்த அந்த நெகிழி பையை வெடுக்கென்று உருவ முயல நந்தினியோ அதை இறுக பற்றிக் கொண்டவள்...

“அப்பா ப்ளீஸ் ப்பா... விடுங்க ப்பா” என்று அதை தந்தை பறித்துவிடாது அடைக்காப்பதில் சிரத்தையானாதும் அதில் கொந்தளித்துப் போன துரைசாமி கீழே எறிந்த அரிவாளை எடுத்து அவளை வெட்டப் போக அனைவருக்கும் பீதி வியாபித்துக் கொள்ள...

“அப்பா... மாமா... என்னங்க” என்று ஆளுக்கொரு முறை கூச்சலிட்டு தடுத்தனர். நந்தினியோ நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள் நான் என் நிலையில் இருந்து மாறமாட்டேன் என்று அழுத்தமாக விரைத்துக் கொண்டு நின்று மற்றவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் டி அப்படி என்னடி உங்களுக்கு அம்மா, அப்பா குறை வச்சாங்க... உனக்கு புடவை வேணும்னு கேட்டிருந்தா நம்ம வீட்டில் வாங்கி கொடுத்திருக்கமாட்டாங்களா?” என்று அகிலா தங்கையை கடுமையாக கடிந்துக் கொண்டிருந்தாள்.

“அவ அதை மட்டுமா செய்தா இவளுக்கு அவன் புருஷனாம் இதையெல்லாம் நான் காதால் கேட்டு தொலைக்கிறதுக்கு தான் இவளை மகளா பெற்றேனா?” என்று துரைசாமி கொதிக்க, நந்தினியோ விசுக்கென்று பார்வையை திருப்பி அவரை தீர்க்கமாக பார்த்தவள்...

“ஆமாம் விக்ரம் தான் என் புருஷன்” என்று அழுத்தமாக கூறியதும் தான் தாமதம் துரைசாமியின் முரட்டு கரம் அவளின் கன்னத்தில் பதிந்ததில் சுருண்டு விழுந்தவள் செவிப்பறை கிழிந்தது போல் ‘ங்கொய்’ என்ற சப்தம் எழும்பியது.

மற்றவர்களோ அவளை அடித்தது தாங்களே அடிப்பெற்றது போல் வாயடைத்து அதிர்ந்து இருக்க... நந்தினியோ தன் தந்தை அடித்ததினால் உண்டான வலியையும் மீறி, அந்த புடவை பையையே மேலும் மேலும் இறுக பற்றி கொண்டிருந்தாள். மகளின் செயலில் துரைசாமிக்கு பற்றிக் கொண்டு வரவே அவள் தலைமுடியை இறுக பிடித்து மேலும் கன்னம் கன்னமாக அறைய, ரேவதிக்கு பெற்ற வயறு வலித்தது என்றால், அகிலாவிற்கு தங்கையின் மேல் பலத்த பரிதாபம் சுரந்தது.

“அப்பா போதும் அவளை விட்டுருங்க ப்பா” என்று தங்கையை அணைத்துக் கொண்டு இருகரம் கூப்பி மன்றாடினாள் அகிலா.

“நீ விடுக்கா” என்று வெகு அலட்சியமாக அகிலாவை தள்ளிவிட்டவள், தந்தையை நேருக்கு நேருக்கு பார்த்தப்படி...

“நீங்க என்னை அடிச்சு கொன்னாலும் பரவாயில்லை, எனக்கு விக்ரம் தான் புருஷன், ஆதன் தான் என்னுடைய மூத்த மகன்” என்று திண்ணக்கமாக கூற, அவளின் வார்த்தையை கேட்டு அனைவரும் முகம் சுளித்தனர். துரைசாமி மகள் என்றும் பாராமல்...

“அப்போ நீ சாவு” என்று கழுத்தை நெறிக்க ஆரம்பித்திருக்க, வீடே ரணகளம் ஆகி ஆள் மாற்றி ஆள் துறைசாமியை தடுத்தனர்.

தந்தையின் செயலில் தொண்டையை அடைத்துக் கொள்ள “லொக்... லொக்...” என்று இருமி தன்னை சரி செய்ய முயற்சித்து கொண்டிருந்த நந்தினியை நெருங்கிய மூவரும்...

“ஏன் டி உங்க அப்பா கோபக்காரர்ன்னு தெரிஞ்சும் அவர்கிட்ட எதிர்த்து பேசிட்டு இருக்கியே உனக்கு என்னடி ஆச்சு” என்று ரேவதி மகளிடம் அங்கலாய்த்தார்.

“நான் அவளை அடிக்கலை திட்டலை... ஆனால் அவன் பக்கம் இனிமே உன் பொண்ணை போகக் கூடாதுன்னு சொல்லு ரேவதி” என்று மனைவியிடம் கூற, அதை கேட்டு கொண்டு இறுமாப்புடன் அழுத்தமாக நின்றிருந்தாள்.

“ஏய் அதுதான் உங்க அப்பா சொல்லுறாருல சொல்லுடி” என்று ரேவதி அதட்ட...

“ப்ளீஸ் நந்தினி அப்பாகிட்டே சொல்லு, நீ இனிமே அவரை பார்க்கமாட்டேன், பேசமாட்டேன்னு சொல்லு” என்று அகிலா கெஞ்சலாக கூற எதற்கும் அசையாமல் பிடிவாதமாக நின்றாள்.

“நந்தினி அதுதான் உங்க அப்பா சொல்றாரே கேளு... அவரு உனக்கு விக்ரமை விட வேற நல்ல பையனா நல்லா இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுப்பாரு, பெற்றவங்க அவங்க என்ன உன்னை குழியிலேயா தள்ளுவாங்க உன் அப்பா அம்மாவுக்காக சொல்லுமா” என்று சதீஷும் தன் பங்கிற்கு அவளுக்கு போதனை வழங்க, அனைவரையும் ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவள் பலவீனத்தில் தோய்ந்த உடலை சிரமப்பட்டு தூக்கி கொண்டு எழுந்துவிட்டிருக்க...

“சொல்றேன் கேட்டுக்கோங்க” என்று உள்ளே இறங்கிய குரலில் மெல்லிதாக ஆரம்பித்தவளின் பேச்சு, அனைவர்க்கும் மனதை குளிர வைத்துக் கொண்டிருந்த கணமே அதில் அனல் கங்குளை அள்ளி கொட்டுவது போல்...

“விக்ரம் தான் என் புருஷன், என் வயிற்றில் உருவாகிற குழந்தைக்கு அவர் மட்டும் தன் அப்பாவாக இருக்க முடியும்” என்றவளின் பதிலில் வேப்பங்காயை மென்று விழுங்கியது போல் கசப்பான பார்வையை பிரதிபலித்தனர்.

துரைசாமியின் கண்கள் கனலை கக்க எங்கே தன் தங்கையை அடித்து துவாசம் செய்து விடுவாரோ என்று பயந்த அகிலா தன் தாயிடம் கண்ணை காட்ட, ரேவதி சுதாரித்து எழுந்தவர்...

“இங்கே பாருங்க நீங்க போய் அவளுக்கு சீக்கிரமா ஒரு நல்ல மாப்பிள்ளையை பாருங்க, அவளை நாங்க பார்த்துக்கிறோம்... அவ நான் பெத்த பிள்ளை நம்ம பேச்சை மீறி என்ன செய்திருவான்னு பார்த்திருவோம்” என்று கணவனிடம் உரைத்து மருமகனை அவருடன் துணைக்கு அனுப்பி அவரை சமாதானம் செய்ய வைத்தவர், நந்தினியை அழைத்து சென்ற ரேவதி, அகிலா இருவரும் மாறி மாறி போதனை அளித்து விக்ரமை மறந்துவிடும் படி மன்றாடிக் கொண்டிருந்தனர்.

“இல்லைம்மா என்னை சாகக்கூட சொல்லுங்க சந்தோஷமா செத்துப் போறேன் ஆனால், விக்ரமை மட்டும் மறக்க சொல்லாதீறீங்க ம்மா” என்று கரம் கூப்பி வேண்டியவளை கண்டு இருவருக்கும் வேதனையாக இருந்தது.

“அடியேய் உன்னை இத்தனை வருஷமா பாங்கு பார்த்து வளரத்தினது ரெண்டாந்தாரமா கட்டிக் கொடுக்கவா?” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு வினவினார்.

“நந்தினி நீ விக்ரம் தான் வேணும்னு அடம் பிடிக்கிற அளவுக்கு உனக்கு என்னடி குறை? சப்போஸ் நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிற சூழ்நிலை நேர்ந்த ஊர் உலகம் உனக்கு என்ன குறையோன்னு தான் பேசும். சொல்றதை கேளு அவருடைய பின்புலம் ரொம்ப மோசமானது, நாளைக்கு உனக்கும் அதே போல எதுவும் ஆகலாம், அதில் மாட்டிக்கிட்டு நீ கஷ்டப்படுறதை பார்க்க எங்களால் முடியாது”

“நாம ரோட்டில் நடந்து போகும் போது பக்கத்துல போற வண்டியால் நம்ம மேல சேற்று நீர் வாரி அடிச்சிட்டா, அதனால் உண்டாகிற கரைக்கு நம்ம மேல தப்பு சொல்ல முடியுமா? அது மாதிரி தான் க்கா என் விக்ரமுடைய கடந்த கால வாழ்க்கையும், அவர் முதல் திருமணம் எல்லாரையும் போல எதார்த்தமான எதிர்பார்ப்புகள் இருக்கிற இயல்பான திருமணம் தான்... ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் எதுவும் அவருக்கு சாதகமா அமையவும் இல்லை, அவர் ஆசைப்பட்டபடி மூத்த மனைவியும் மனசு ஒத்து வாழலை... பாவம் க்கா அவரு, சாதாரண ஆசைகள் கூட அவருக்கு நிறைவேறாமல் எல்லாத்தையும் விதியோட சதியால் தொலைச்சிட்டு நிற்கிற அப்பாவி ஆண்மகன், முக்கியமா யாருக்கும் குண்டூசி அளவு கூட துரோகம் நினைக்காதவரு”

“ஏய் இதுக்கு மேல ஏதாவது பித்து பிடிச்சவ மாதிரி உளறின உன்னை நானே கொன்னுருவேன்” என்று ரேவதி தாங்க முடியாமல் கூற...

“கொன்னுரு ம்மா... ஆனால் அதுக்கு முன்னாடி ஒரே ஒரு நாளாவது நான் விக்ரம் கூட வாழ்ந்துடறேனே அதுக்கு மட்டும் அனுமதி தாங்க” என்று கெஞ்சியவளின் பிதற்றலை கண்டு இருவருக்குமே தலைசுற்றியது.

“நந்தினி நீயா இப்படி எல்லாம் பேசுற? என்னை விட நீ தெளிவான பொண்ணுன்னு தானே நினைச்சேன், ஆனால் பைத்தியக்காரி மாதிரி பேசிட்டு இருக்கிற, அப்படி என்னடி அந்த விக்ரம் கிட்டே கண்டுகிட்ட”

“எந்த தவறும் செய்யாத நேர்மையான மனிதர்” என்று அகிலாவை உற்று நோக்கியபடி கூறியவளின் சொல்லில் அகிலாவுக்கு எதுவோ உறுத்தியது.

“ஒஹ்! அவர் நல்லவர் வல்லவர் எல்லாம் சரிதான்... ஆனால் அது நிஜம் தான்னான்னு வாழ்ந்து பார்த்தவ சொல்லுறியே, இன்னைக்கு நிதர்சனத்தில் நடக்குற கதையெல்லாம் நீ அறியாத ஆளா?”

“ஏன் நீ என்ன மாமா கூட வாழ்ந்து பார்த்துட்டா கல்யாணம் பண்ணின?” என்று எதிர்த்து கேட்க, ரேவதி பொறுமை இழந்து அவள் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்திருந்தார். தங்கையின் கேள்வியில் திகைத்து பார்த்துக் கொண்டிருந்த அகிலாவுக்கே அப்போது தான் சுரணை வந்திருந்தது.

“நானும் பார்க்கிறேன் ரொம்ப ஓவரா எதிர்த்து பேசிட்டு இருக்கிற, உனக்கு யாருடி இப்படி எல்லாம் பேச சொல்லி கொடுக்கிறது? கொஞ்சமாச்சும் அக்காங்கிற மரியாதை இருந்திருந்தா, நாங்க பெரியவங்கன்ற மதிப்பு இருந்தா நீ இப்படி எல்லாம் பேசுவியா? இதோட அவ்ளோதான் இனிமே நீ என்ன வேணா பண்ணிக்கோ... ஆனால் இந்த வீட்டை விட்டு போக காலடி எடுத்து வச்சா இரும்பை காய்ச்சி சூடு வச்சிருவேன் ஜாக்கிரதை” என்று விரல் நீட்டி எச்சரித்தப்படி கடுமையாக கண்டித்தவர்...

“அகிலா நீ வாடி அவ என்னதான் பண்ணிருவான்னு நாமளும் பார்த்திருவோம்” என்று மகளை பார்வையால் எரித்துக் கொண்டே வெளியேறி சென்றயிருக்க, அன்றிரவே அவள் என்ன செய்ய முடியும் என்பதையும் கூறினாள்.

குடும்பத்துடன் ஆலோசித்த அனைவரும் இறுதியில் அவளிடம் எடுத்துக் கூறி புரிய வைத்து விடலாம் என்று முடிவெடுத்து அதை செயல்படுத்த எண்ணினர்... இரவு உணவிற்கு அனைவரும் ஒன்றாகவே அமர்ந்திருக்க, நந்தினி உணவருந்தி முடிக்க காத்திருந்தவர்கள் அவள் சாப்பிட்டு முடித்ததும் அவள் முன்பு மாப்பிள்ளை போட்டோக்களை பரப்பினர்.

“இங்கே பாரு இந்த பசங்க எல்லாமே உன்னை மாதிரியே ரெண்டு டிகிரி முடிச்சவங்க, கை நெறைய சாம்பாரிக்கறாங்க, எல்லாமே அருமையான இடம்... முக்கியமா இவங்க எல்லாருக்கும் நீ தான் முதல் தாரம், அந்த விக்ரம் மாதிரி ரெண்டாம் தாரம் இல்லை... உன் விருப்பம் போல தான் கல்யாணம் நடக்கணும்ன்னா அப்படியே பண்ணி வைக்கிறோம், அகிலாவுக்கு நாங்களே பார்த்து முடிவு செஞ்ச மாதிரி இல்லாமல் உனக்காக நாங்க இதை செய்கிறோம் இந்த படங்களை பார்த்து யாரையாவது ஒருத்தரை கைகாட்டு நாங்க பார்த்து பேசி முடிக்கிறோம்” என்ற துரைசாமியின் குரல் மிகவும் தன்மையாக வெளிவந்தது.

“அதில மூணாவது போட்டோவில் இருக்கிற பையனுக்கு திருச்சியில் அந்த விக்ரம் வச்சிருக்கிற மில்லை விட ரெண்டு மடங்கு பெரிய மில்லு... அவங்க வெளிநாட்டுக்கு எல்லாம் ஏற்றுமதி பண்ணுறாங்களாமே, மிகப் பெரிய இடம்! அதுவும் முதல் கல்யாணம் தான் இந்த மாதிரி இன்னும் எத்தனையோ நல்ல வரன் இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு ரெண்டாந்தரமா வாக்கப்பட்டு போக நினைக்காத” கறாராக கூறினார் ரேவதி.

“ஓஹ்! அவங்களை உனக்கு பிடிச்சிருக்கா?” என்று அன்னையை கூர்ந்து பார்த்தப்படி வினவ, அகிலாவுக்கு உள்மனதில் அவள் எதுவோ குதர்க்கமாக கூறப் போகிறாள் என்ற அபாய மணி அடித்தது.

“எங்களுக்கு பிடிச்சதால தான் வம்பாடு பட்டு விசாரிச்சு வச்சிருக்கோம்” என்றவரின் பதிலில்...

“பிடிச்சிருந்தா அப்போ நீயே கட்டிக்கோ, ஏன் என்னை இம்சை பண்ணுற?” எடுத்தெறிந்து கூறியவளின் பேச்சிற்கு எதிரொலியாக அங்கிருந்த டீப்பாய் சுவற்றில் வேகமாக மோதி சத்தத்தை எழுப்பியது.

“நீங்க இருங்க... ஏய் நந்தினி ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கிற? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, எங்க விருப்பப்படி தான் உன் கல்யாணம் நடக்கும் அப்படியே இல்லைனாலும் அந்த விக்ரமை கல்யாணம் பண்ண விடமாட்டோம்”

“அப்போ நீங்களும் கேட்டுக்கோங்க, நீங்க ஒதுக்கலைனாலும் நான் விக்ரமை கல்யாணம் பண்ணத் தான் போறேன், ஏன்னா நான் மேஜர்! என்னுடைய விருப்பம் போல கல்யாணம் பண்ணிக்க எனக்கு உரிமையும் இருக்கு, என் கழுத்தில் தாலிகட்டி உங்க முன்னாடியே என்னை ராணி மாதிரி வாழ வைக்க விக்ரமிடம் செல்வாக்கும், அந்தஸ்தும் இருக்கு” என்று ஆவேசமாக பேசியவள் அறைக்குள் புகுந்து கொண்டிருந்தாள்.

****************

நந்தினி இல்லத்தின் சிறையில் அடைப்பட்டு போனாள்... அவளின் கைபேசி அகிலாவால் பறிக்கபட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்க, தங்கையிடம் அவ்வப்போது நிதானமாக எடுத்து கூறி அவளை வழிக்கு கொண்டு வர முயற்சித்தாள்... ஆனால் அத்தனை போதனைகளும் கிணற்றில் இட்ட கல்லை போல கிடந்ததே ஒழிய, நந்தினி சொன்னததையே சொல்லுமாம் கிளிபிள்ளை போன்று விக்ரமை பற்றியே கூறி ராகமிட்டு கொண்டிருக்,க அதில் எரிச்சலடைந்த அகிலா...

“ஏன் நந்தினி நீ என்னமோ சொல்லுறியே அந்த விக்ரமுக்கு நடந்தது விபத்துன்னு... நீ சொல்லுற மாதிரி விபத்தாவே வைத்துக்குவோம் ஆனால், அவன் அவளுடன் இசைந்து வாழாமலா மகன் உண்டாகி இருப்பான்? அவனுக்கு நடந்தது விபத்தோ... இல்லை, விருப்பமோ. எதுனாலும் அவன் ஏற்கனவே தாம்பத்ய வாழ்க்கையில் இருக்கிற சுகத்தை அனுபவித்தவன் அதை நினைத்துப் பார்க்கும் போது உனக்கு அருவெறுப்பா இல்லையா?” அவளை வார்த்தையால் குத்தி கிழித்தால் தான் அவள் சரிபட்டு வருவாள் சற்றேனும் சிந்திப்பாள், தங்கையின் வாழ்க்கை தன்னை போல் இல்லாமல் சரியாக அமைந்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் அகிலா அவளுக்கு உரைக்கும் படி சுருக்கென்று கூறியிருந்தாள்... ஆனால் அப்படி கூறிய தமக்கையை இகழ்ச்சியாக உதட்டை வளைத்து பார்த்தவள்...

“ஏன் அகி இதே கேள்வியை இப்போ நான் உன்னை திருப்பி கேட்டா உன்னுடைய பதில் என்னவா இருக்கும்” சற்றே ஆங்காரத்துடன் தான் நந்தினி வினவினாள்... ஆனால் நந்தினியை போல் அவளால் அத்தனை சுலபமாக அதை எதிர்கொள்ள முடியவில்லை, அவளின் கேள்வியே அவமானத்தில் முகம் கருக்க வைத்தது என்றால், எதை வைத்து அவள் இத்தனை திமிராக கேட்கிறாள் அதுவும் அவளுக்கு நாம் தமக்கை என்ற இங்கிதம் இல்லாமல் கேட்கிறாள் என்று கோபம் வரப்பெற்றவள்...

“இங்கே பாரு தங்கச்சின்னு பார்க்கமாட்டேன் விளாசிவிட்டிருவேன்... நீ என்கூட பிறந்தவள் டி, உன் வாழ்க்கைக்காக தான் நான் பேசிட்டு இருக்கேன்... நானும் எவ்வளவோ நிதானமா பேச முயற்சி பண்ணி அதுக்கு நீ சரி வரலைன்னு இங்கிதம் பார்க்காமல் தான் வார்த்தையை விட்டேன், ஆனால் நீ அக்கான்னு பார்க்காமல், நீ வயசு பொண்ணுன்னும் யோசிக்காமல் என்னையே கேள்வி கேட்கறியே உனக்கு அப்படி என்னடி கொழுப்பு? நீ கேட்கிற மாதிரி முதலில் நான் ஏன் என் புருஷன் கூட வாழ அருவெறுப்புப் படனும்” அவள் என்னவோ தன் அந்தரங்க வாழ்க்கையை பற்றி என்ன தெரியும் என்ற மிதப்பில் தான் கேட்டிருந்தாள்... நந்தினியோ சிறிதும் அலட்டிக் கொள்ளாது மிதப்பாக பார்த்தவள்...

“மாமா மட்டும் என்னமோ கல்யாணத்துக்கு முன்னாடி சுத்தமானவரா இருந்த மாதிரி பேசுறியே, அந்த லீலாவதி கதை எனக்கு தெரியாது நினைச்சு சொல்லிட்டியா?” என்றதும் மின்சாரத்தில் தாக்குண்டவள் போல் பார்த்தவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

“நீ... நீ.. என்ன.. சொல்ற..?” வார்த்தைகள் திக்கித்திணற தடுமாறியவளை சாதாரணமாக எதிர்கொண்டவள்...

“ரொம்ப அதிர்ச்சி ஆகாதே மாமா குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயத்தை பற்றி கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு தெரிஞ்சதா? ஏன் வெளியில் ஒன்னு ரெண்டு பேருக்கு தெரிஞ்சிருந்தாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற மாதிரி எல்லாத்தையும் மூடி மறைச்சு தான் உனக்கு கல்யாணம் பண்ணியிருக்காங்க, நீயும் அவருடைய குழந்தைக்கு தாயான ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சிருக்கு உடனே நீ மாமா கூட வாழ மாட்டேன்னு தூக்கி போட்டுட்டா வந்துட்ட, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு சகிச்சுகிட்டு வாழலை”

“.....................” தங்கையின் பேச்சில் பேஸ்தடித்தது போல் உறைந்து நின்றுவிட்டாள்.

“என்ன அக்கா ஊமை ஆகிட்ட?” என்றதும் அவமானத்தில் கருத்து விழுந்த முகத்தை சிரமப்பட்டு சரி செய்து கொண்டு அவளை விழியுயர்த்தி பார்த்தவள்...

“உனக்கெப்படி இந்த விஷயம் தெரிஞ்சது?”

“பாலா உபயம்” என்று சுருக்கமாக முடித்திருக்க... அகிலா அவளை பச்சாதாபத்துடன் நோக்கியவள், அங்கிருந்து நகர்ந்த சமயம் நந்தினிக்கே ஒருமாதிரி ஆகிப்போனது.

“அக்கா ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு நீ சுருக்குன்னு பேசினதும் அந்த கோபத்தில் ஏதோ பேசிட்டேன், நிஜமாவே உன்னை ஹுர்ட் பண்ணணும்னு பேசலை” என்று அவள் கரம் பிடித்து மன்றாடியவளின் கரத்தை தட்டி விட்டவள் வேகமாக வெளியேறினாள்.

தமக்கையை எப்படி சமாதானம் செய்வது, என்ன இருந்தாலும் அவளிடம் தாம் பேசியது மிகவும் அதிகம் என்று காலம் கடந்தே உணர்ந்தாள்.

அவள் சிந்தனை வயப்பட்டிருக்கும் போதே அகிலா நந்தினியை நோக்கி வந்தவள் அவள் பறித்துக் கொண்டிருந்த அலைபேசியை அவள் கரத்தில் வழுக்கட்டயமாக திணித்துவிட்டு...

“என் வாழ்க்கையை வச்சு நீ கார்னர் பண்ணுறதை நீ புத்திசாலித்தனமா நினைக்கலாம்... ஆனால் நான் தெரியாமல் குழியில் விழுந்துட்டேன்... நீ கண்ணை திறந்து வச்சுகிட்டே குழியில் விழப்போறேன்னு சொல்ற, இது தான் உனக்கும் எனக்குமான வித்தியாசம் இதுக்கு மேல உன்னுடைய விதி எதுவோ அதுவே நடக்கட்டும்” என்றவள் அதற்கு மேல் அவளிடம் ஒரு வார்த்தை பேசாமல் விருட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டிருந்தாள்.

அகிலா கண் பார்வையில் இருந்து மறையும் வரை மட்டுமே அவளை எண்ணி வருந்திக் கொண்டிருந்தவள் அவள் பார்வையிலிருந்து மறைந்ததும்... மற்ற அனைத்தும் மறந்து விக்ரம் மட்டுமே நினைவில் நிழலாட இத்தனை நாட்களில் எத்தனை அழைப்பும், எத்தனை குறுந்தகவலும் வந்து குவிந்திருக்கிறதே என்னை காணாமல் தவித்துப் போயிருப்பான். சீக்கிரமே அவனுக்கு அழைத்து பேச வேண்டும் என்ற வேகத்துடன் அலைபேசியை உயிர்பிக்க அதுவோ மின்சார சேமிப்பு இன்றி அணைந்து கிடந்ததை கண்டு...

“ச்சே சார்ஜ் இல்லை” என்று சலித்துக் கொண்டவள், சார்ஜ் ஏற்றி காத்திருந்து உயிர்பித்தவளுக்கு அவனிடமிருந்து ஒரு தகவலும், ஒரு அழைப்பும் இல்லாததை கண்டு பெருத்த ஏமாற்றம் விளைந்தது.

“என்ன ஆச்சு? ஒரு கால், ஒரு மெச்செஜ் கூட போடலை ஒருவேளை அவருக்கு உடல்நிலை எதுவும் சரியில்லையோ” என்று சிந்தனை குதிரை வேகத்தில் தறிகெட்டு பாய அவளே அவனுக்கு அழைத்திருந்தாள்.

பலமுறை அவனுக்கு முயற்சித்த நந்தினிக்கு அவளின் எந்த ஒரு அழைப்பும் அவனால் எடுக்கப்படாமல் போகவே தோல்வியுற்றவளாக, அலைபேசியை நிலைகுத்தியப்படி பார்த்துக் கொண்டிருந்தவள் சோர்ந்து போனவளாக மடிந்து சரிந்திருந்தாள்.

**************************

வணக்கம் நட்பூக்களே...

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-22 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-23
நந்தினியிடமிருந்து சரமாரியாக தொடர்ந்து வந்த யாதொரு அழைப்பையும் உயிர்பித்து, அவளுக்கு பதிலளிக்க முடியாமல் கைக்கு விலங்கிட்டிருந்த இயலாத நிலையை எண்ணி நொந்து நூலாகிக் கொண்டிருந்தான். அவன் விழிகளில் விரக்தியும், வேதனையும் டன் கணக்காய் வழிய சுழல் நாற்காலியில் சாய்ந்தபடி இமைமூடி கொண்டான்.

பெற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் நந்தினி விக்ரமுடன் சென்றுவிடுவதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவள் வீட்டினர், அடுத்து என்ன செய்வது என்றறியாமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த போதுதான், அகிலாவின் கணவன் சதீஷ் அதை கூறியிருந்தான்.

“மாமா இனிமேல் நந்தினிக்கிட்டே பேசுறதால ஒண்ணும் மாறப் போறதில்லை... சும்மாவே அவ பிடிவாதக்காரி, இந்த விஷயத்தில் அவ சொன்னது போல் விக்ரமை தேடி ஓடிப் போகத்தான் நிறைய வாய்ப்பிருக்கு” மருமகனின் பேச்சை கேட்ட துரைசாமிக்கு கண்கள் சிவந்து மீசை துடித்தது.

“அவ என் பொண்ணு மாப்பிள்ளை அவன் கூட ஓடிப் போக விடத்தான் நான் குத்துகலாட்டம் இருக்கிறேனா? அப்படி ஏதாவது செய்தானா என் மகளுக்கு முன்னாடி அவனை வெட்டி போட்டிருவேன்” என்று விரோதத்துடன் மொழிய...

“அவ மட்டும் அப்படி எதுவும் செய்துட்டானா நான் உயிரோடவே இருக்கமாட்டேன்” என்று ரேவதி வாய்பொத்தி அழ, இருவரின் பேச்சையும் தாங்கமாட்டாத அகிலா...

“அம்மா கொஞ்சம் நீ இப்படி பேசாமல் இருக்கிறியா? அவதான் ஏதோ புரியாமல் பண்றானா நீயும் அபசகுணமா பேசலாமா?”

“இங்கே பாருங்க அத்தை முள்ளை முள்ளால் எடுக்கிற மாதிரி தான் இந்த விஷயத்தை நாம கையாளனும்... நம்ம நந்தினியை தான் நம்மளால் மாற்ற முடியாது, ஆனால் அந்த விக்ரம்கிட்டே பேசி அவனை நம்ம வழிக்கு கொண்டு வர முயற்சிக்கலாம்”

“எப்படி மாப்பிள்ளை இது நடக்கும்? நம்ம வீட்டு பெண்ணே நம்ம பேச்சை கேட்காத போது யாரோ ஒருத்தர் அவர் நம்ம பேச்சை கேட்பாரா?” என்று நாசியை உறிஞ்சியபடி பிரலாபித்தார் ரேவதி.

“சாத்தியம் தான் அத்தை! அவர் ஒண்ணும் துள்ளி குதிக்கிற விடலை பையன் இல்லை... என்னுடைய நண்பர் ஒருத்தர் விக்ரமுக்கு குடும்ப உறவினர், அவர்கிட்டே கேள்விப்பட்ட வரைக்கும் அவர் கொஞ்சம் சென்டிமெண்டில் பலவீனமானவர்... நீங்களும், மாமாவும் போய் பேசுங்க நிச்சயம் நம்ம வழிக்கு வர வாய்பிருக்கு”

“அப்படியும் அவன் ஒத்துக்கலைன்னா அவனை போட்டு தள்ளிடுறேன்” என்று மீசையை முறுக்கியவரை கண்டு அச்சமடைந்த அகிலா...

“ஐயோ அப்பா! நீங்க வேற வெட்டி போட்டிருவேன், கைமா பண்ணிருவேன்னு மீசையை முறுக்காதீங்க... விக்ரமும், நந்தினியும் விரும்பிட்டாங்க, அதுக்காக விக்ரமை நம்ம நந்தினியை விட்டு விலக சொல்ல உரிமை இருக்கே தவிர, அவரை கொல்லவோ அடிக்கவோ நமக்கு உரிமையில்லை... அவரை நம்பி ஒரு பையன் இருக்கான், அவனை அனாதையா விட்ட சாபம் நம்ம குடும்பதுக்கு வேண்டாம்” என்று அடக்கியவள் கணவனையும் அவர்களுடன் போகச் சொல்லி வற்புறுத்தினாள் அகிலா.

“இங்கே பாரு அகி உங்க அம்மா, அப்பா போனாலே போதும் நான் எதுக்கு அங்கே?”

“என்னங்க நீங்க கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம எனக்கென்னன்னு பேசறீங்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்களும் தானே பார்த்தீங்க உங்க மாமனார் மீசையை என்ன முறுக்கு முறுக்கினாருன்னு... என்னதான் எங்க அப்பா பொறுமையா இருந்தாலும் பிள்ளைங்கன்னு வந்துட்டா யாரா இருந்தாலும் பார்க்கமாட்டாரு, அதுவும் என்னை விட நந்தினி மேல தான் அப்பாவுக்கு பாசம் ஜாஸ்தி... அதனால் விக்ரம் எதாவது விடாப்பிடியா பேசினா எதவாது விபரீதமா நடக்கலாம், அதனால தான் அவங்களை தனியா அனுப்புறது சரிவராதுன்னு சொல்றேன், தயவுசெய்து நீங்களும் போயிட்டு வாங்க”

“சரி சரி இதுக்கு போய் கெஞ்சிகிட்டு, நான் போறேன்” என்றவன் அவர்களுடன் சேர்ந்தே விக்ரமை காண சென்றிருந்தான்.

அன்றைய தினம் எழுந்ததிலிருந்தே விக்ரமுக்கு ஏதோ ஒன்று அசம்பாவீதமாக நடக்கப் போவதை போன்று உறுத்திக் கொண்டே இருந்தது. ஆதனுக்கு முதலாம் வகுப்பு சேர்க்கைக்கு பள்ளியிலிருந்து அழைத்து அறிக்கை தெரிவித்திருந்ததால் அவனுக்கு பணம் கட்டி பள்ளியில் சேர்க்க திட்டமிட்டு சென்றிருந்தான். அதன் காரணமாக நந்தினியையும் அழைத்து பேச முடியாமல் போனது... பள்ளியில் வேலையை முடித்துவிட்டு மில்லுக்கு திரும்பிய போதுதான் நந்தினியிடமிருந்து அழைப்பு, குறுந்தகவல் எதுவும் வாராது இருப்பதை கருத்தில் கொண்டவனுக்கு சஞ்சலம் ஏற்பட்டது.

“என்ன ஆச்சு? எப்போவும் இப்படி கால் பண்ணாமல் இருக்கமாட்டா, ஆனால் இப்போ ரெண்டு நாளா ஒரு போனும் வரலை... நாம பண்ணலாம்னாலும் அவ என்ன சூழ்நிலையில் இருக்கான்னு தெரியலையே, ஒரு வேளை நாம கூப்பிடும் போது எதுவும் சிக்கல் ஆகிருச்சுன்னா என்ன செய்ய? சரி பொறுத்திருந்து பார்ப்போம் இல்லைன்னா, நாமளே போன் பண்ணிருவோம்” என்று சங்கல்பம் மேற்கொண்டு விட்டு மில்லுக்குள் நுழைந்தான்.

அங்கேயும் அவனுக்கு வரிசையாக காத்துக் கொண்டிருந்த வேலைகள் நந்தினியை பற்றிய சிந்தனைகளை தற்காலிகமாக ஒதுக்கி வைத்திருக்க சிரத்தையாக பணியில் ஆழ்ந்தந்திருந்தான்... முக்கிய வாடிக்கையாளர்களிடம் அலைபேசியில் பேசி கொண்டிருந்த சமயம், செந்தில் அவன் முன்பு பிரசன்னாமானவர் முகத்தில் பதட்டம் நிலவி இருந்தது. அலைபேசியில் ஆழ்ந்தபடியே என்ன என்று ஜாடையால் வினவியவனிடம், எப்படி கூறுவது என்று கையை பிசைந்து முகத்தில் கலவரத்தை தேக்கியபடி சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தவரை கண்டு கொண்டு அழைப்பை விரைவாக துண்டித்துவிட்டு திரும்பியவன்...

“என்ன செந்தில் அண்ணா ஒரு மாதிரி இருக்கீங்க என்ன ஆச்சு?” என்றவனிடம்...

“தம்பி நம்ம நந்தினியம்மாவோட அம்மா, அப்பா அவங்க அக்கா வீட்டுக்காரருன்னு மூணு பெரும் ஒண்ணா வந்திருக்காங்க” என்று கூறியதும் தூக்கி வாரிப்போட எழுந்தவனுக்கு அன்றைய உறுத்தல் நந்தினியின் விவகாரம் என்று தெள்ளத் தெளிவாக விளங்கிவிட்டது.

“எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியுமா அண்ணா?” ஏனோ அவனுக்கும் ஒரே படபடப்பாக இருந்தது தான் மெய்.

“தெரியலை தம்பி... ஆனா அந்த அம்மா முகம் அழுது வடிஞ்சு இறுகியிருக்கு, அய்யா கோபமா இருக்காரு... நம்ம நந்தினி பொண்ணுக்கும், உங்களுக்கும் உள்ள விவகாரம் தெரிஞ்சுருச்சோ” என்று தயங்கித் தயங்கி கூறியிருக்க, அவர் கூறிய அனைத்தும் அவனுக்கும் உடன்பாடு இருக்க, இனி அவர்களிடம் எப்படி பேசி நந்தினியின் கரத்தை பற்றுவது என்று கலக்கம் சூழ்ந்தது.

“சரி அவங்களை வர சொல்லுங்க” சூழ்நிலை உணர்ந்து வருவது வரட்டும் எதையும் எதிர்கொண்டு தானே ஆக வேண்டும் என்ற திடத்துடன் கூறியிருந்தான்.

“சரி தம்பி” என்று கூறி நகர்ந்தவரிடம்...

“அண்ணா அப்படியே அவங்களுக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வந்திருங்க” என்றதும் அவன் சொல்லை ஏற்று அவர்களை அவன் அறைக்கு அனுப்பி வைத்தவர் அவர்களை உபசரிக்க பழச்சாறு வாங்கி வந்தார்.

விக்ரமின் அறைக்குள் ரேவதி, துரைசாமி உடன் சதீஷும் உள்ளே நுழைய மூவரையும் இன்முகத்துடனே வரவேற்க, அவர்களோ அவனை விரோதியை பார்ப்பது போல் பார்த்து வைத்தனர். அந்த ஒற்றை பார்வையே அவர்கள் பேச வந்த விஷயமும் சரி, அவர்களின் முடிவும் சரி அனைத்தையும் பட்டவார்த்தைனமாக வெளிச்சமிட்டு காட்டியிருக்க விக்ரம் அவர்களிடம் எப்படியாவது பேசி மனதை கரைத்து நந்தினியை அடைந்து விட வேண்டும் என்று திடசித்தம் கொண்டான்.

“நின்னுகிட்டே இருக்கீங்க உட்காருங்க” தன்மையாக உபசரித்தான்.

“நாங்க இங்கே உட்கார்ந்து விருந்து சாப்பிட வரலை உங்ககிட்ட பேசணும், அதுவும் எங்க மகள் வாழ்க்கை சம்மந்தமா பேசணும்” என்று இறுகிய குரலில் கூறியதும் அவன் மிகவும் தவிப்புக்குள்ளானான்.

“எதுவா இருந்தாலும் பரவாயில்லை, பேசிக்கலாம் அதற்கு முதல் உட்காருங்க” என்று அழுத்தி கூறியதும் சதிஷ் அமர்ந்து விட தாங்களும் அமர்ந்தனர்.

அங்கே சில வினாடிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காது மௌனமாக கழிய, செந்தில் அவர்களுக்காக பழச்சாரை வைத்துவிட்டு நகர்ந்திருக்க...

“ஜூஸ் சாப்பிடுங்க” என்றவனிடம் அதற்கும் ஏதோ மறுப்பு கூற சென்றவர்களை...

“ப்ளீஸ் இதுக்கும் முன்னாடி சொன்ன காரணம் தான், நீங்க எதுக்காக வந்தீங்க என்கிறதை விட என் மில்லுக்கு வந்த விருந்தாளி அதுக்காக சாப்பிடுங்க”

“நாங்க உங்களுக்கும் உறவும் இல்லை, விருந்தாளியும் இல்லை, நண்பர் குடும்பமும் இல்லை” கராறாக கூறிய துரைசாமியின் பேச்சிற்கு...

“எதிரியும் இல்லை” என்று முடித்து வைத்தான்.

“ஆனால் எங்களுக்கு நீங்க எதிரிதான் ஒய்... அதுவும் பரம எதிரி, என் பெண் மனசை களைச்ச பாதகன் நீங்க” என்று அவனை வரிந்து தள்ளினார்.

அவரின் வசைவுகள் அனைத்தையும் நந்தினியின் தந்தை என்பதற்காக பல்லை கடித்து பொறுத்து கொண்டான். அவனின் உணர்வலைகளை அவதானித்துக் கொண்டே பேசி கொண்டிருந்தவருக்கு அவனின் பொறுமை அவருக்கு திமிராக படவே...

“என்ன பேசாம திமிரா உட்கார்ந்திருக்கீங்க? என் பொண்ணு உங்க மேல மயக்கத்தில் இருக்காங்கிற மிதப்பா, ஏன் ஊரில் உலகத்துல உங்களுக்கு வேற பெண்ணா கிடைக்கலை” என்று கேட்டு அவனை பேச வைக்கும் யுக்தியாக அவனை பலமாக சீண்டிவிட்டிருக்க... நிமிர்ந்து அமர்ந்த விக்ரமின் நேர்கொண்ட பார்வை அவரை வாளில்லாமல் வெட்டியது.

“இங்கே பாருங்க நானும் உங்க பெண் நந்தினியும் காதலிக்கிறோம்......” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவசரமாக இடையிட்டவர்...

“போதும் நிறுத்துங்க” என்று உரத்த குரலில் உறுமியவர்...

“காதலாம் காதல் பொல்லாத காதல்... கல்யாணம் பண்ணி அந்த பொண்டாட்டிக்கிட்டே ஒரு பையனை பெத்துக்கிட்டு, அவளை எவன் கூடவோ ஓடவும் விட்டு வேடிக்கை பார்த்துட்டு, மகனை பொறுப்பா பார்த்துக்கிற வயசில் என்னையா காதல் வேண்டிக்கிடக்கு? அப்படிதான் உன் பையனுக்கு ஆயா வேலை பார்க்க ஒருத்தி வேணும்னு தோணிச்சுன்னா உன்னை மாதிரியே புருஷனை இழந்துட்டு நிற்கிறது கைம்பெண்ணை காதலிக்க வேண்டியது தானே வயசு பொண்ணு தான் வேணுமோ” அவனை வன்மையாக திட்டி காயப்படுத்தியவர் இறுதியில் கொச்சையாக கேட்டு விடவும் பொறுத்தது போதும் பொங்கி எழுந்த விக்ரம்....

“ச்சீ போதும் நிறுத்துங்க” என்று அருவெறுப்பில் முகம் சுளித்தப்படி உச்சஸ்தாயில் குரலெழுப்பியவன் கண்களில் கோப சிவப்பு மின்ன பார்த்திருந்தான்.

“நான் உங்களை பேச விட்டு அமைதியா கேட்டுக்கிட்டு இருக்கிறன்னா அதுக்கு காரணம் என் நந்தினியுடைய பெற்றவங்க என்ற ஒரு காரணத்துக்காக தான்... இதே வேற யாரும் இந்த வார்த்தையை சொல்லியிருந்தா அவங்களை கிழிச்சு தோரணம் கட்டி தொங்கவிட்டிருப்பேன்” என்று முகம் சிவக்க கடிந்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பியவனின் ஆத்திரம் கண்டு மூவருமே மருண்டனர்.

“வயசு பொண்ணுன்னு சொல்றீங்களே ஊரில் உலகத்தில் உங்களுக்கு மட்டும் தான் பெண்ணிருக்காளா? இல்லை; என்னால் அப்படி பெண்களை தேடி போக முடியாமல் தான் இருக்கிறேனா? ஆனால் இதை சொல்லுறதுக்கே எனக்கு நாக்கு கூசுதே, பெண்ணை பெற்றுவிட்டு என்னை காதலிசுட்டான்னு ஒரே காரணத்துக்காக அவளை அசிங்கமா பேச உங்களுக்கு எப்படி மனசு வருது?” அவர்களுக்கு நன்றாக உரைக்க வேண்டும் என்றே சுருக்கென்று வினவியிருந்தான்.

“.............................”

“தயவுசெய்து நந்தினி மேல நான் வச்சிருக்கிற நேசத்தை கொச்சை படுத்தாதீங்க... நந்தினியை விரும்ப எனக்கு தகுதி இல்லாமல் இருக்கலாம்... ஆனால், நந்தினி ரொம்ப நல்ல பொண்ணு அவளை அசிங்கப்படுத்தாதீங்க”

“அப்போ அவகிட்டே இருந்து நீ ஒதுங்கிரு” என்று கறாராக கூறிவிட்டிருக்க...

“என்னை மன்னிச்சிருங்க என்னால் அது முடியாது... நான் நினைச்சிருந்தேனா நந்தினியை அப்போவே தாலி கட்டி என்னுடன் அழைத்துக்கிட்டு இருந்திருக்கலாம்... ஆனால் என்னால் அதை செய்ய முடியலை நான் தான் பெற்றவன் இல்லாமல் தனிமரமா இருக்கிறேன் என்கிறதுக்காக, என் நந்தினியும் அப்படி நிற்கக்கூடாதுன்னு தான் நான் அப்படி செய்யலை, அவளுக்காக நீங்க வேணும்”

“இங்கே பாரு இந்த கதையெல்லாம் வேண்டாம்... எங்களால் ரெண்டாந்தாரமா எல்லாம் நந்தினியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாது, நீ அவளை விட்டு விலகு”

“முடியாதுன்னு சொன்னா?” என்றவனை துரைசாமி வேட்டைக்கு செல்லும் கருப்பசாமியின் ஆங்காரத்துடன் மீசை துடிக்க எழ, அதை லட்சியம் செய்யாமல் தொடர்ந்தவன்...

“நான் நினைச்சா நாளைக்கே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னில் சரி பாதியாக்கிக்க முடியும், என்ன செஞ்சு காட்டவா?” என்று ஆங்காரத்துடன் கூற, பொறுமையை இழந்த துரைசாமி ஆவேசத்துடன் எழுந்து அவன் சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டுவிட்டார்.

“ஏன் டா என்ன தைரியம் இருந்தா என்கிட்டேயே என் பெண்ணை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுவ” என்று ரௌத்திரத்துடன் பாய மற்ற இருவரும் அதிர்ந்து போனவர்களாக...

“என்னங்க” என்று ரேவதி ஒருபுறம் தடுக்க...

“மாமா! மாமா! விடுங்க மாமா” என்று சதீஷ் அவரின் கரங்களை பலவந்தமாக இழுத்தவன் விக்ரமை முறைத்தபடியே...

“ஏங்க அவரு தான் பெண்ணை பெற்றவர் ஏதோ பேசுறாருன்னா நீங்க பொறுமையா இருக்க மாட்டீங்களா?” என்று கடிந்து கொண்டான்.

“நான் பொறுமையா இருக்க போகத்தான் நீங்க இங்கே நின்னு பேசிகிட்டு இருக்கீங்க?”

ரேவதி சூழ்நிலை மோசமாவதை உணர்ந்தவர் மருமகனிடம் கண்ஜாடை காட்ட அவனும் புரிந்து கொண்டவன்...

“மாமா கொஞ்சம் அமைதியா இருங்க, அத்தை பேசட்டும் அவன் கோபமாகிட்டானா நம்ம பெண்ணை வழிக்கு கொண்டு வர முடியாது” என்று அவருக்கு மட்டும் கேட்கும் படியான மெலிதான அடிக்குரலில் கூறியிருக்க, துரைசாமி மீசை துடைக்க தன்னை கட்டுபடுத்திக் கொண்டு நின்றிருந்தார்.

“இங்கே பாருங்க தம்பி நந்தினி அறியாப்பிள்ளை அவளுக்கு உங்க மேல ஆசை வந்தது வயசு கோளாறு, அவளுக்கு தெரியாது கல்யாணத்துக்கு அப்புறம் வர பிரச்சனைகளை அவதான் பார்க்கணும்னு, ஆனால் கல்யாண வாழ்க்கையை பற்றி சகலமும் தெரிஞ்சவர் தம்பி நீங்க... இதில் நீங்க முதல் கல்யாணம் பண்ணினவ திடிர்ன்னு உங்க முன்னாடி நின்னு பையனுக்கு நான் தான் அம்மான்னு உறவாடினா என் பொண்ணு வாழ்க்கை என்னாகும்?” குட்டையாக கலங்கிய கண்களுடன் கூறியவரின் சொல் அவனை அசைத்துப் பார்த்தது...

“இல்லை உங்க பயத்துக்கு இங்கே அவசியமே இல்லை... எனக்கும் அவளுக்குமான உறவு முடிஞ்சிருச்சு, நாங்க சட்டப்படி விவாகரத்து வாங்கிட்டோம்... அதுவுமில்லாமல் நந்தினிக்கு தெரியும் என் வாழ்க்கை எப்படிப்பட்ட வாழ்க்கைன்னு, என்னால் என்னை நம்பி வரப் பொண்ணை ஏமாற்ற முடியாது நான் ஏமாற்றவும் முயற்சிக்கமாட்டேன்” என்று தன் தரப்பில் இருந்து நிதானமாகவே கூற இப்போது சதீஷ் இடையிட்டவன்...

“நீங்க சொல்லலாம் எந்த பிரச்சனையும் வராதுன்னு... ஆனால் அத்தை சொல்லுற மாதிரி உங்க முதல் மனைவி பிரச்சனை பண்ணமாட்டன்னு என்ன நிச்சயம்? எப்படி உங்களுக்கெல்லாம் நந்தினி மாதிரி பெண் வாழ்க்கையில் விளையாட மனசு வருது?”

“நான் கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனவன்னு வெளியே தெரிஞ்சதால குற்றவாளியா உங்க முன்னாடி நிற்கிறேன் தான் இல்லைன்னு சொல்லலை... ஆனால் இதே இன்னைக்கு காலகட்டத்தில் காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பழகிட்டு அதை ரொம்ப சுலபமா மறைசுகிட்டு வெளியே தான் நல்லவங்கன்னு வேஷம் போட்டுக்கிட்டு வாழ்க்கை துணை தேடிக்கறாங்களே அதை எந்த வகையில் சேர்த்தி? அப்படி பார்த்தா அவங்களுக்கு கல்யாணம் என்கிற ஒரு விஷயம் அனாவிஷயம் தானே” அவன் குரலில் எள்ளல், குத்தல் அனைத்தும் இருக்கவே சதிஷின் மனதை குறி பார்த்து சுட்டது.

நந்தினியை அறிந்து அவள் மேல் மையல் கொண்டு விரும்பிய ஆரம்பகட்டத்திலேயே நந்தினி குடும்ப உறுப்பினர்களை பற்றி தெரிந்த வட்டத்தில் விசாரித்து அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தான் விக்ரம்... திருவையாறில் உள்ள நெருங்கிய நண்பனின் உறவுக்காரர்களில் ஒருவர் தான் சதிஷின் மாமா என்பதால், அவனின் திருமணத்திற்கு முந்திய வாழ்க்கை பற்றி அவர் மூலமாக அறிந்துக் கொண்டவன் தன் நண்பன் விசாரித்ததும் அவனின் விஷயத்தை அப்படியே இயம்பியிருந்தான்.

அவனின் வார்த்தையில் தாக்கப்பட்ட சதீஷ், அவனின் கூர்மையான பார்வையில் கூசிப் போனவனாக விழிகளை தாழ்த்திக் கொண்டான்... என்ன தான் நண்பன் கூறியிருந்தாலும் அது உண்மையோ, பொய்யோ என்ற அரைகுறையாக தான் நம்பி இருந்தான்... ஆனால் சதிஷின் உணர்ச்சி வெளிபாடு அவன் மேல் கொண்ட அவதூறு உண்மை என்று பறைசாற்றியதை அறிந்துக் கொண்டான்.

‘இவன் நம்மளை பற்றி எல்லாம் விசாரிச்சு வச்சிருக்கான் எமகாதகன்’ என்று விக்ரமை மானசீகமாக ஏசிக் கொண்டிருந்தான் சதீஷ்.

“தம்பி எதுவா இருந்தாலும் பரவாயில்லை, எங்க சின்ன பொண்ணு நந்தினிக்கு ரெண்டாந்தாரம் வாழ்க்கை வேண்டாம், அதற்கு நாங்க ஒத்துக்கமாட்டோம்... அப்படியே அவ எங்களை மீறி உங்களை கல்யாணம் பண்ணிகிட்டான்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் நான் என்னுடைய உயிரை விட்டிருவேன்” என்று கடைசி அஸ்திரத்தை பலமாக வீச விக்ரம் ஆடிப்போனான்.

செந்தில் இவர்களின் சம்பாஷணையை கண்ணாடி கதவு வழியாக கண்டவருக்கு விக்ரமின் அதிர்ச்சி ஏதோ உணர்ச்சிவசமாக தாக்குவது புரிய அவருக்கும் சஞ்சலத்தில் உள்ளம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

‘இவங்க நந்தினியம்மாவை இந்த தம்பி கூட சேர விட மாட்டாங்க போலவே’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டிருந்தார்... அறையையே கூர்ந்து கவனித்து கொண்டே இருக்க, ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர்கள் நியாயத்தை கூறுவது புரிந்து பல்லை நெரித்தார்.

ரேவதி விக்ரமின் கை பிடித்து மன்றாடியவர் அவனை முற்றிலும் கவிழ்க்க எண்ணி அவனே எதிர்பாராத விதமாக பட்டென்று அவனின் காலில் விழுந்துவிட்டார்.

“ஐயோ என்ன பண்றீங்க எழுந்திருங்க” என்று விக்ரம் அவசரமாக அவரை தூக்க எத்தனிக்க...

“இல்லை தம்பி உங்களுக்கு அம்மா, அப்பா இல்லை... எங்களை அந்த இடத்தில் வச்சு பாக்குறதா சொன்னீங்க அது உண்மைன்னா, இந்த பெத்தவங்களுக்கு பொண்ணை திருப்பி கொடுத்திருங்க தம்பி” என்று மன்றாட விக்ரம் உணர்ச்சியின் பிடியில் மாட்டிக் கொண்டவன் பொறியில் சிக்கிய எலியை போன்று தத்தளித்தான்.

“என் பிள்ளைன்னா எனக்கு உசுரு அவளுக்கு எப்படி எப்படியோ கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு கனவில் இருக்கிறோம், அதை எல்லாம் கலைச்சிராதே” என்று மன்றாடியவர் துரைசாமி என்பதால் அவனோ மின்சாரத்தில் கரம் பதித்தது போல் ஸ்தம்பித்துப் போனான்!

அதுவரை கனகம்பீரமாக வீராவேசத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு பேசியவர் திடிரென்று கண்களை நனைய விட்டதும் அவனுக்கு அடிமனம் ஆட்டம் கண்டது... ஏனோ அந்த பெற்றவர்களின் நெஞ்சில் அடிக்க விக்ரமால் முடியாது போனது தான் அந்தோ பரிதாபம்!

அவன் அதர்ச்சியின் பிடியில் உறைந்து இருக்கும் போதே மன்றாடுதலை தொடர்ந்து, அவனை அவர்கள் பக்கம் இழுத்து கரைத்துக் கொண்டிருந்தார்...

“நீங்க ஒண்ணும் கவலைபடாதீங்க தம்பி உங்களுக்கு ஒரு துணை வேணும்ன்னா உங்களுக்கு ஏற்ற பெண்ணா நாங்களே கூட பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்” என்று துரைசாமி வார்த்தை விட, அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவன் கசப்பாக புன்னகைத்துவிட்டு...

“உங்க பெண் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு பேசுறீங்கன்னா அதில் ஒரு நியாயம் இருக்கு, அதை மட்டும் பண்ணுங்க... என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்... நந்தினி நீங்க சொல்லுறதை கேட்பா தைரியமா போங்க, அவ வாழ்க்கை......” என்றவனுக்கு அதை கூற முடியாமல் அப்போதே தொண்டை குழிக்குள் உருண்டையாக அடைத்தது போல் இருக்க, தொண்டையை கனைத்து சரி செய்ய முயற்சித்தும் அவனால் முடியாமல் திணற, தன் மனதை கல்லாக்கி கொண்டு அதை கூறினான்...

“நீங்க பார்த்து தேர்ந்தெடுக்கிற மாப்பிள்ளையோட தான் நந்தினிக்கு கல்யாணம் நடக்கும் இதுக்கு நான் உத்திரவாதம் தரேன்”

“சத்தியமாவா?!” என்று ரேவதி கரம் நீட்ட... அவரை தீர்க்கமாக பார்த்தவன்...

“நான் சொன்னா சொன்னது தான், என் வார்த்தையே சத்திய வாக்கு தான் என்னைக்கும் நான் அதிலிருந்து மாறமாட்டேன்” என்றவனின் வார்த்தையை ஏற்று மூவரும் வந்த காரியத்தை சாதித்து விட்ட மிதப்பில் திருப்தியாக சென்றுவிட்டிருக்க, விக்ரம் தான் நந்தினியை பிரிய வேண்டிய தன் துரதிர்ஷ்ட நிலையை எண்ணி தரையில் எறியப்பட்ட மீனாய் துடித்துக் கொண்டிருந்தான்.

**************************

வணக்கம் நட்பூக்களே...


“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-23 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-24
அவர்கள் சென்றதும் செந்தில் அவன் முன்பு பிரசன்னமாக... “செந்தில் அண்ணா மற்ற வேலைகளை எல்லாம் நீங்க பார்த்துக்கோங்க, நான் வெளியே ஒரு வேலை இருக்கு போய் முடிச்சுட்டு வரேன்” என்றவனை அறியாதவரா அவர், விக்ரமுக்கு தேவைப்படும் தனிமையை தேடி ஓடுவதை அறிந்தவர்...

“தம்பி நம்ம சுந்தரேசன் ஐயாகிட்டே சொல்லி நானும், ஐயாவும் அவங்ககிட்டே பேசி பார்க்கிறோமே?” என்றவரிடம் இறுகிய புன்னகையை உதிர்த்தவன்...

“நேரம் தான் விரயம் அண்ணா” என்று சுருக்கமாக முடித்திருந்தான்.

“ஆதனை எப்படி தம்பி சமாளிக்கப் போறீங்க? நந்தினி அம்மா, நந்தினி அம்மான்னு நிதமும் தேடுவானே” வயதான அவரால் அவனை போல் மனதை இறுக்கிக் கொள்ள முடியாமல் போக தன் தோளில் கிடந்த துண்டை வைத்து வாயடைத்துக் கொண்டவரின் துக்கம் கண்டு அவனுள்ளும் ஊடுருவ வார்த்தைகளுக்கு பதில் கண்ணீர் திவாலைகள் தான் வெளியேறுமோ என்ற சந்தேகத்தில் கரங்களை விரித்து உதட்டை பிதுக்கி தெரியவில்லை என்று ஜாடை காண்பித்தவன், அக்கணத்தில் தன்னை சரி செய்துக் கொண்டு...

“நந்தினி வருவதற்கு முன்னாடி எப்படி இருந்தான் அப்படிதான் இனி இருந்தாகணும்” என்றவனால் அதற்கு மேல் பேச முடியாது என்று தோன்றிவிட விருட்டென்று வெளியே சென்றிருந்தான்.

விக்ரம் வாகனத்தை இலக்கின்றி செலுத்தினான்... இறுதியில் அவன் வந்தடைந்த இடம் அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிய கல்லணையில் அமைந்திருந்த அந்த மரத்தின் நிழல். அன்று அவளுடன் கதை பேசிய இடம் இன்று தனியாக அமர்ந்து அவன் துக்கத்தை பகிர்ந்து கொள்ள ஆளின்றி தன் சோகங்களை மரத்தின் நிழலில் கொட்டிக் கொண்டிருந்தான். என்ன யோசித்தாலும் அவன் நினைவுகள் நந்தினியை சுற்றியே வலம் வர, எப்படி அவளை தவிர்க்கப் போகிறோமோ என்ற ஆயாசத்தில் பெருமூச்சு விடுத்து கொண்டிருந்தான்.

அவன் இருக்கும் நிலையில் ஆளில்லாத இடத்தில மண்டியிட்டு அமர்ந்து ஹோவென்று உரக்க கத்தி அழ வேண்டும் போல் தோன்றினாலும், ஏனோ அவனால் கண்ணீர் விட்டும் அழவும் இயலவில்லை... அதற்கும் சில பாக்கியம் பெற்றிருக்க வேண்டும் போல என்று எண்ணிக் கொண்டவனுக்கு விரக்தி புன்னகை உதயமாக சிந்தை மரத்துப் போயிருந்தது.

தன்னை மறந்து அமர்ந்திருந்தவனுக்கு அலைபேசி ஒலியெழுப்ப அப்பொதுதான் அவன் மகன் ஆதன் நினைவுக்கு வரவே, தன் உள்ளங்கையை சேர்த்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு சிரத்தை உலுக்கிக் கொண்டவன் வரவழைத்துக் கொண்ட மனோதிடத்துடன் சென்றான்.

இரவில் நித்திரையை தொலைத்த நந்தியினியின் விழிகள் விக்ரமை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தன... அவள் அலைபேசியின் திரையில் மின்னிய விக்ரமின் முகம் அவளை அப்போதே அவனை சென்றடைய துரிதப்படுத்திக் கொண்டிருந்தது.

“ஏன் விக்ரம் என்கூட பேச மாட்டேங்குறீங்க? உங்களுடன் என்னை கூட்டிட்டு போயிருங்க விக்ரம், உங்களை பிரிஞ்சிருக்க வேண்டிய நிலையை என்னால் தாங்க முடியலை விக்ரம்... நீங்களும், ஆதனும் இல்லாமல் எனக்குள்ள ஏதோ இழந்த மாதிரி இருக்கு விக்ரம்” என்று தனக்குத் தானே பேசிக் கொள்வதாக நினைத்தவள் வாட்ஸ்அப்பில் குரல் பதிவேற்றம் செய்ததை அவளே அப்போது தான் கண்டிருக்க, இருக்கட்டும் அப்படியாவது அவன் தன்னை அழைக்கட்டும் என்று அவனுக்கு அனுப்பி வைத்துவிட்டிருந்தாள்.

விக்ரம் நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருக்கும் மகன் ஆதனின் சிகையை தடவி கொடுத்தவன் மனம் ஊமையாக அழுதுக் கொண்டிருந்தது... “நீ என்னடா பாவம் பண்ணின என் உயிரில் உருவாகிட்டேன்னு ஒரு காரணத்துக்காக நீயும் இப்படி வலியும், வேதனையும் அனுபவிக்கறியே” என்றவனுக்கு சித்தத்தில் பாராங்கல்லை வைத்தது போல் கனத்தது.

அலைபேசியில் செய்தி வந்ததற்கான ஒலியெழுப்ப, நந்தினியின் குரலை கேட்டு மரத்திருந்த அவன் சித்தமும் உயிர்ப்பு வர, அவனையும் அறியாமல் அவன் கண்கள் கலங்கி சிவந்தது. இது தான் பெண் கொண்ட நேசத்தின் சக்தியோ கல் மனதையும் கரைய வைக்குமோ என்று அலைபேசியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் கூறியது போல் நந்தினியை அழைத்து சென்று திருமணம் செய்வதும் சரி, வாழ்வதும் சரி அவனை பொறுத்த வரையில் சாத்தியம் இல்லாத ஒரு விஷயம் இல்லை தான் என்றாலும், அவள் பெற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி அவனை கடிவாளமிட்டு அடக்கிவிட்டிருந்தது.

விக்ரம் நந்தினியின் நினைவுகளை மட்டும் சுமந்தப்படி வலம் வர ஆரம்பித்தான்... ஓர் நாள் நந்தினி தந்தையின் அழைப்பில் தான் அவளை சந்திக்க வேண்டும் என்ற சூழல் நேர்ந்தது.

“நந்தினிக்கு வர ஞாயிறு நிச்சயம் வச்சிருக்கோம், அவ எப்படியாவது இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்” என்று மறைமுகமாக அவனுக்கு கட்டளை பிறப்பிக்க இமைமூடி திறந்தவன்...

“நந்தினியை பெரிய கோவிலுக்கு அனுப்பி வைங்க” என்றதும்...

“என்ன சொல்லி அவளை வழிக்கு கொண்டு வரப் போறீங்க?” என்று வினவியவரிடம்...

“அது என் கவலை” என்று பட்டுக்கத்தரித்தவன் நந்தினியிடம் பேச வேண்டியவற்றை ஒத்திகை பார்த்துக் கொண்டு விட்டு தான் சென்றிருந்தான்.

இவர்களின் சூழ்ச்சியை அறியாத நந்தினியோ விக்ரம் தன்னை கைவிடமாட்டான், அப்படியே அவன் தயங்கினாலும் அவனை சமாளித்துக் கொள்ளலாம் என்ற துணிச்சலுடன் சென்றாள்.

****************

தன்னினைவு மீண்ட விக்ரம் நந்தினியின் இல்லத்தையே வெறித்துவிட்டு வாகனத்தை உயிர்பிக்க ஆதன் சலசலத்தான்.

“அப்பா ப்ளீஸ்ப்பா நந்தினி ம்மாவை பார்க்கணும், கூட்டிட்டு போங்கப்பா” என்று மன்றாட விக்ரமுக்கு உயிரை வேரோடு பிடுங்கிவது போல் வலித்தது.

“ஆதன் நாம சீக்கிரமே லாஸ்ஏஞ்சல் போறோம்... அங்க என் பிரெண்ட் விக்கியோட பையன் ஜெகன் இருக்கான், அவனுடன் நீ டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்” என்றதும் சற்றே நந்தினியை பற்றிய சிந்தனையிலிருந்து வெளி வந்தான்... ஆனாலும் அவன் முகத்தில் சோகம் அப்பி கிடந்ததை மட்டும் அவனால் என்ன செய்தும் துடைத்தெறிய முடியாததை கண்டு வேதனையாக இருந்தது.

நந்தினி வீட்டிற்குள் நுழைகையில் பலர் குழுமியிருக்க... “இதோ பொண்ணு வந்துட்டா” என்றும்...

“நந்தினி சீக்கிரம் போய் டிரஸ் மாற்றிட்டு வாம்மா” என்று ரேவதியும் கூற, அவளுக்கு தலையை கிறுக்கிறுக்க வைத்தது.

“இங்கே பாரு நந்தினி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட முகம் சுளிக்காம பேசு” என்று கூறிய அவளின் ஓன்றுவிட்ட அத்தை ஊரிலிருந்துக்கு வந்திருப்பது அறிந்து அவர்களை திரும்பி பார்த்தாள். நந்தினிக்கு புரிந்தது, அவளை மீறி அனைத்தும் நடப்பதை கையாலாகாதனத்துடன் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.

அவளை அனைவருக்கு முன்பிலும் பதுமை போல் நிறுத்தி வைக்க கடமையே என்று நின்றவள் உடல் தகித்துக் கொண்டிருந்தது... மாப்பிள்ளை என்று நடுநாயகமாக அமர வைக்கப்பட்டிருந்தவனின் பார்வை நந்தினியை ஆர்வமாக வருடியதில் உடல் கூசிப் போனாள்.

“ச்சே... கண்டவன் முன்னாடி எல்லாம் நிற்க வேண்டியதா இருக்கே” என்று மனதிற்குள் அவனை தாளித்தாள்.

அனைவரும் கிளம்பி சென்றிருக்க, நந்தினி ஆடை மாற்றுவதற்காக உள்ளே சென்றவள் அலைபேசி இசைமீட்ட கண்ணம்மாவின் அழைப்பை கண்டு அவசரமாக உயிர்பித்தாள்... இப்போது அவரிடம் அவளுக்கு கேட்க நிறைய வினாக்கள் இருந்தன.

“நந்தினி ம்மா தம்பியும், ஆதணும் எங்கேயே வெளிநாடு போகப் போறாங்களாம்” என்று கூற, நந்தினிக்கு உயிரை அறுத்தது போல் வலித்தது.

‘கடைசியா என் முகத்திலும் விழிக்காமல் செல்ல திட்டமா? அதுவும் அவளுடனா?’ என்று அவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு புகைப்படஸ்தை காட்டியத்தை எண்ணி பேசிக் கொண்டவள், அவன் இப்படி அவளை ஒரேடியாக உதறி செல்ல என்ன தான் காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டி...

“கண்ணம்மா எங்க வீட்டில் உள்ளவங்க யாரும் விக்ரமை பார்த்து பேசினாங்களா? எதுனாலும் மறைக்காமல் சொல்லுங்க” என்று விளம்ப, கண்ணம்மா சில நொடிகள் யோசித்தவர் பின்பு மடை திறந்த வெள்ளமாக செந்தில் அவரிடம் கூறியதை ஒன்று விடாது நந்தினியிடம் கூறிவிட்டிருந்தார்.

அவர் கூறியதை மிகவும் கவனமாக கேட்டு கொண்ட நந்தினிக்கு தன் குடும்பத்தினரின் மேல் விரோதம் உண்டானது, அவள் ஓரளவு இது போல் ஏதாவது தான் நடந்திருக்க வேண்டுமென்று யூகித்திருந்தாள், அவளின் கணிப்பு தவறாமல் மெய்பித்திருக்க தீர்க்கமாக சிந்தாந்தம் மேற்கொண்டு விட்டிருந்தாள்.

****************

கண்ணம்மா, செந்தில் இருவரும் விக்ரம் முன்பு நிற்க... “நானும் ஆதனும் லாஸ்ஏஞ்சல்ஸ் போகப் போறோம் அண்ணா... திருச்சியில் இருக்கிறானே என் பிரெண்ட் விக்னேஷ் உங்களுக்கு கூட அவனை தெரியுமே, அவனுடைய கேபிஃடேரியா பிசினஸை கவனிச்சுக்க ஆள் வேணும்ன்னு சொல்லிட்டு இருந்தான்... அதனால் அவனுக்கு துணையா அங்கே போய் உதவலாம்ன்னு இருக்கிறேன்”

“ஏன் தம்பி அப்போ இங்கே இருக்கிற மில்லை யார் பார்த்துப்பாங்க?”

“இதை என்னுடைய இன்னொரு பிரெண்ட் பொறுப்பில் தான் விட்டுட்டு போறேன் அண்ணா... நானும் அங்கிருந்தே அப்பப்போ பார்த்துக்க ஏற்பாடு பண்ணிட்டு தான் போறேன்”

“ஆனா எதுக்காக நீங்க ஊரை விட்டு போகணும், கடல் மாதிரி வீட்டை கட்டி வச்சுட்டு வெளிநாட்டில் போய் இருக்கணுமா? இப்போ அதுக்கான தேவை என்ன இருக்கு?” வேதனையுடன் இயம்பியவருக்கு...

“தேவை வந்திருச்சே கண்ணம்மா ம்மா, இவன் இங்கே இருந்தா அடிக்கடி நந்தினியை கேட்டுகிட்டே இருப்பான், அங்கே என் பிரெண்டுக்கும் ஒரு மகன் இருக்கிறான்... அவனுக்கும் அங்கே துணை இல்லாமல் அல்லாடுறானாம் ஆதன் போனா அவனும் குஷி ஆகிருவான், எப்படியும் கொஞ்ச நாளையில் எல்லாத்தையும் மறந்திருவான் அப்புறமா நான் இங்கே வருவதை பற்றி யோசிக்கிறேன்” என்று கூற இருவருக்கும் என்ன கூறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.

“உங்களுக்கு ஒரு நல்லது நடக்கணும்னு நினைச்சோம், ஆனால் கடைசியில் அது இப்படி ஆகிப்போச்சு?”

“எனக்கொரு நல்ல விஷயம் நடந்திருந்தா தான் ஆச்சர்யப்படனும் கண்ணம்மா ம்மா”

“உங்களுடைய இந்த நிலைமையை நினைச்சா எங்களாலேயே தாங்க முடியலையே, நீங்க எப்படி தாங்குறீங்க? உங்க அம்மா, அப்பா மாதிரி தானே எங்களையும் சொல்லுவீங்க, எங்களை தனியா விட்டுட்டு போறதுக்கு எங்க கூடவே இருந்திடலாமே தம்பி”

“எனக்கு பழகிப் போச்சு கண்ணம்மா... ஒரு தடவை அடிச்சா வலிக்கும், ரெண்டாவது தடவை கொஞ்சம் பழகியிருக்கும், மூன்றாவது அடியில் சுத்தமா உணர்ச்சி மரத்து போயிரும்... அது போல தான் என் வாழ்க்கையும், இப்படி தான்னு தெரிஞ்சு அதுக்கு தகுந்த மாதிரி இருக்க பழகிக்கிறது தான் நல்லது, நம்ம சந்தோசத்துக்காக அடுத்தவங்களை வேதனைப்படுத்துறது நியாயம் இல்லை கண்ணம்மா ம்மா”

“எனக்கு என்னமோ ஏதோ தப்பா நடக்கப் போகிறதா தோணுது தம்பி”

“எனக்கு தானே? விடுங்க செந்தில் அண்ணா, எதுனாலும் பார்த்துக்கலாம்” என்று சாதாரணமாக கூறியிருக்க...

“இல்லை தம்பி நம்ம நந்தினி அம்மாவுக்கு எதுவோ நடக்கப் போகிற மாதிரி தோணுது” என்றவரின் கூற்று விக்ரமையும் அசைத்துப் பார்த்தது.

“ஆமாம் தம்பி! நான் நேத்து தான் பாப்பா கிட்டே பேசினேன் குரலே சரியில்லை, அதுக்கு சுத்தமா விருப்பம் இல்லை போல... ஆனால் அவங்க பாட்டுக்கு நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கிறாங்க” அவர்கள் இருவரின் அச்சமும் ஒருவர் மேல் நாம் அளவு கடந்த அன்பு வைக்கும் போது தோன்றும் இயல்பான துடிப்பு தான் என்று கருதியவன், தனக்கும் ஏற்பட்ட உள்ளுணர்வையும் அப்படியே எண்ணி மறைத்து தன்னை சமாளித்துக் கொண்டவன்...

“அவங்க பொண்ணுக்கு அவங்க நல்லது தான் கண்ணம்மா செய்வாங்க” என்று கூறிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்துவிட, கண்ணம்மா, செந்தில் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி தயக்கத்துடன் நின்றுக் கொண்டிருந்தனர்.

விக்ரம் அவர்கள் இருவரும் நகராமல் இருப்பதை கண்டு விழியுயர்த்தி என்னவென்று விசாரிக்க... “தம்பி நாங்க ரெண்டு பேரும் நந்தினியம்மா நிச்சயதார்தத்ததுக்கு போயிட்டு வரோமே” என்று அனுமதி கோர...

“நீங்களா? நந்தினி வீட்டில் இருக்கிறவங்க நீங்க அங்கே போறதை விரும்புவாங்களா?”

“நந்தினியோட அப்பா தான் எங்களுக்கு கூப்பிட்டு சொன்னாரு தம்பி, அன்னைக்கு நீங்க வர வரைக்கும் நான் பேச்சு கொடுத்துட்டு இருந்தேன்னா அதனால் அந்த பழக்கத்தில் கூப்பிட்டு இருக்காங்க... என்கூட கண்ணம்மா வருவதை பற்றி பெரிசா எடுத்துக்கமாட்டாங்க”

“ஒஹ்!” என்று யோசனையாக உதட்டை குவித்தவன்...

“அப்போ அன்னைக்கு நீங்க என்னை பற்றியோ, என் விஷயத்தை பற்றியோ பேசலையா?”

“இல்லை தம்பி நான் பேசலை”

“அதான் உங்களை கூப்பிட்டிருக்காங்க... நல்ல வேளை அண்ணா நீங்க மட்டும் பேசியிருந்தீங்க இந்நேரம் உங்களையும் எதிரி லிஸ்டில் சேர்த்திருப்பாங்க” என்று முத்து முரல்கள் தெரிய சிரித்தப்படி கூறியவனின் மனதின் ஓரத்தில் முணுக்கென்று என்று எழும்பிய வலியை ஏனோ தடுக்க முடியாமல் போனது.

விக்ரமின் பேச்சை கேட்ட இருவரும் அவனுக்காக சோகையாக முறுவலித்துக் கொண்டிருந்தனர்... என்னதான் நந்தினி மேலும் அவர்கள் பாசம் கொண்டிருந்தாலும் முதல் உரிமை விக்ரமுக்கு தானே அவனை எண்ணினால் அவர்களுக்கு மகிழ்ச்சியோ, தூக்கமோ அத்தனை சுலபமாக வந்து விடுமா?

நந்தினி தனக்கு நடக்கும் நிச்சயத்தை தாய் தந்தையின் விருப்பப்படி ஏற்றுக் கொண்டது போல் மிகவும் இயல்பான மகிழ்ச்சியோடு இருப்பதாக அனைவரிடமும் காட்டிக் கொண்டிருந்தாள்... ஆனால் அவளறிந்த ஆழ்மனம் மட்டுமே அவளின் நிலையை எண்ணி குமுறிக் கொண்டிருந்தது.

“நந்து குளிச்சுட்டு வந்து புடவை எடுத்து வை அக்கா வந்து கட்டிவிடுவா” என்று அவள் அன்னை ரேவதி கூறிவிட்டு, நிச்சயதார்த்த வேலைகளில் பரபரப்பாக ஆழ்ந்துவிட, அவள் அன்னை எடுத்து கொடுத்த புடவையை ஓரமாக வைத்துவிட்டு அன்று விக்ரம் அவளுக்காக எடுத்துக் கொடுத்த புடவையை கையிலெடுத்து வருடிக் கொண்டிருந்தாள்.

“யார் என்னை கைவிட்டாலும் நீங்க என்னை கைவிட மாட்டீங்கன்னு நம்பினேனே விக்ரம், கடைசியில் நீங்களும் சொன்ன வார்த்தையை காப்பாற்ற தவறிவிட்டீங்களே... உங்ககிட்டே சொன்னேன், நீங்க இல்லாத ஒரு சுழல் உண்டானா இந்த நந்தினியும் இருக்கமாட்டான்னு, அதை நீங்க மறந்துட்டீங்கள்ள” என்றவளுக்கு உடல் விறைத்துக் கொண்டது.

“நந்தினி! நந்தினி!” என்று அழைத்துக் கொண்டிருந்த தமக்கையின் குரலில் சுதாரித்துக் கொண்டு கதவை திறந்தவளிடம்...

“இன்னும் ரெடி ஆகாமல் என்ன பண்ணுற? நேரம் ஆகிட்டே இருக்கு சீக்கிரம் ரெடியாகு” என்று கூறிவிட்டு அவளிடமிருந்து புடவையை பெற்றவள் அதிர்ந்த விழிகளால் நோக்கினாள்.

“ஏய் என்னடி இது?”

“பார்த்தா தெரியலை புடவை”

“ஏய் ஒழுங்கா இதை தூக்கி எறிஞ்சுட்டு நாங்க எடுத்த புடவையை எடு” என்று அகிலா அதட்ட, அவளின் குரலை கேட்டு ஓடி வந்த ரேவதி அகிலாவிடம் நடந்ததை விசாரித்து நந்தினியை கேள்வியுடன் பார்த்திருந்தார்.

“ஏன் நந்தினி இப்படி எல்லாம் பண்ணுற? உனக்காக தானே நாங்க பார்த்துப் பார்த்து எல்லாத்தையும் பண்ணுறோம்... இதுல மட்டும் ஏதாவது சதி பண்ணின என்னையும், உங்க அப்பாவையும் நீ உயிரோடவே பார்க்க முடியாது” என்று மிரட்டல் விடுக்க அகிலா திகிலடைந்தாள்.

நந்தினி நிதானமாக அன்னையை பார்த்தவள்... “நீங்க சொன்னதை கேட்டு தானே நான் எல்லாத்தையும் செய்துக்கிட்டு இருக்கேன், விக்ரமை விலக சொல்லி அவரும் விலகிட்டாரு, இனி அவரை பார்க்கவோ, பேசவோ முடியாது! கடைசியா, அவர் எடுத்து கொடுத்த இந்த புடவை கூடவா கட்டிக்கக் கூடாது” கூம்பிய முகத்துடன் வினவியவளின் கோரிக்கையை ஏனோ இருவராலும் பட்டென்று நிராகரித்து கூற முடியாமல் போனது.

இருவரும் ஒருவரை ஒருவர் யோசனையாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே... “இந்த புடவையை கட்டினா யாரும் கேட்டா என்ன செய்றதுன்னு தானே யோசிக்கறீங்க?” என்றதற்கு ஆம் என்று மேலும் கீழும் தலையசைக்க...

“இது விக்ரம் தான் எடுத்து கொடுத்தாருன்னு உங்களுக்கு மட்டும் தானே தெரியும், வேற யாருக்கும் தெரியாதுதானே” நந்தினி சொல்வதிலும் வாஸ்தம் இருக்க...

“ஆமாம் அம்மா! நந்து சொல்ற மாதிரி நமக்கு மட்டும் தானே தெரியும், விடுங்க புடவை தானே கட்டிக்கிட்டு போறா” அப்போதும் அகிலாவுக்கு தென்படாத அவள் பார்வையின் மாற்றம், அவளை பெற்ற தாயின் கண்களுக்கு தட்டுப்பட்டு நெஞ்சை உலுக்கியது.

“சரி நந்தினி நீ போய் ப்ளௌஸ் பாவாடை கட்டிக்கிட்டு வா” என்று அனுமதிக்கவும் துள்ளி ஓடினாள்.

தனிமையில் இருந்த மூத்த மகளிடம் “அகிலா இவளுக்கு புடவை கட்டிவிட்டுட்டு இவ கூடவே இரு எக்காரணம் கொண்டும் அவளை விட்டு நகர்ந்துறாதே”

“என்னம்மா சொல்றீங்க? நான் இவகூட இருந்தா நிச்சயத்துக்கு வரவங்களை யார் வரவேற்கிறதாம், நம்ம வீட்டில் இவ தனியா இருக்க என்ன ஆகிறப் போகுது?”

“சொல்லுறதை கேளு அகிலா... வரவங்களை நான், உன் புருஷன், உங்க அப்பா மூணு பேரும் பார்த்துகிறோம்... ஆனால் நீ மட்டும் இவளை விட்டு போகாதே அவ மேல ஒரு பார்வையை வச்சுகிட்டே இரு... அவ ஒரு மாதிரி பிடிவாதக்காரி நம்ம சொன்னத்தை கேட்டு நடந்துக்கிறதே எனக்கு எங்கயோ இடிக்குது இதுல அவ பார்க்கிற பார்வையே சரியில்லை, எனக்கென்னவோ மனசுக்குள்ள கருக்கடை கட்டினா போல இருக்கு” என்றதும் தாயின் கண்களில் இருந்த தவிப்பில் என்ன கண்டாளோ...

“அம்மா நீ கவலைப்படாதே நந்தினியை நான் பார்த்துக்கிறேன்” என்றவள் சொன்னது போலவே அவள் மேல் கண்ணுற்றபடியே இருந்தாள். நந்தினியும் அவளிடம் கேள்விக் கேட்காது அவள் துணையை விரும்பியதாக காட்டியிருக்க...

‘மனசு மாறிட்டா போல’ என்று தனக்குள் கருதிக் கொண்டவள்...

“நந்து கொஞ்ச நேரம் பத்திரமா இரு டி, நான் தாரணாவை ரெடி பண்ணிட்டு என் மாமியார் வீட்டிலிருந்துக்கு கிளம்பிட்டாங்களான்னு கேட்டுட்டு வந்துடறேன்... இல்லைன்னா அவங்க எனக்கு பொறுப்பே இல்லைன்னு தாளிக்க ஆரம்பிச்சிருவாங்க”

“ஓஹ்! சரி அகி, நீ போய் பேசிட்டு வா நான் வெயிட் பண்ணுறேன்”

“ஏய் உன்னை நம்பி போகலாமே பத்திரமா இருந்துக்குவ தானே” உள்ளார்ந்த மறை பொருளுடன் தங்கையிடம் வினவ...

“என்ன அகி இப்படி சொல்ற? இது நம்ம வீடு இங்கே உங்களை மீறியா விக்ரம் வந்திட முடியும்... அவர் அப்படி வரவும் மாட்டாரு ஏன்னா அவர் கையை, காலை செண்டிமெண்ட்டால் கட்டி போட்டு வச்சிருக்கே” ஒரு மாதிரி குரலில் அழுத்தமாக கூறியவளின் பார்வையில் இருந்த வன்மத்தை உணர்ந்தவள்...

“ஏய்....” என்று ஏதோ பேச வந்தவளை...

“போதும் தாயே! இழுக்காதே நானா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன், நீ போயிட்டு வா... அப்புறம் உன் மாமியார் வீடு எண்ணெயும், கடுகும் இல்லாமலே உன்னை தாளிச்சிருவாங்க” என்று இயல்பான புன்னகையுடன் கூறியதும் அவள் வன்மத்தை சுத்தமாக மறந்துப் போனவள், தன் மாமியார் வீட்டினரிடம் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள எண்ணி சிட்டாக பறந்திருந்தாள்.

தனிமையில் இருந்த நந்தினி தன் அலைபேசியின் புகைப்பட கேமராவை திறந்து பல கோணங்களில் செலஃபி எடுத்துக் கொண்டவள், அதில் விஷம சிரிப்புடன் நன்றாக இருக்கும் ஒரு புகைப்படத்தை மட்டும் விக்ரமுக்கு அனுப்பி அதில் தலைப்பாக...

“True Love Never Dies... லவ் யூ புருஷா!” என்று இதய வடிவு எமோஜியும், அவனுக்கு முத்தமிடுவது போன்ற வடிவுடன் கூடிய இமோஜியையும் சேர்த்து அவனுக்கு அனுப்பி வைத்தவள் உள்ளம் தீயாய் தகிக்க ஆரம்பிக்க, தன் உள்ளங்கையில் அடக்கி வைத்திருந்த அந்த பொருளை தன் கண்முன் வைத்து பார்வையில் தீட்சண்யம் பொங்க இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில கணங்கள் அப்படியே நின்றிருந்தவள் வெளியில் ஆள் வரும் அரவம் கேட்டு வேகமாக செயல்பட எண்ணி, கையிலிருந்த மாத்திரையை உட்கொண்டு விட்டு மடமடவென்று தண்ணீரை அருந்தி விழுங்கியவள் வேக மூச்சுகளை விடுத்து, அறையின் மூலையில் டப்பாவை விசிறியடிதிருந்தாள்.

இவளின் இந்த செயலை அறியாத அகிலா சீக்கிரமே மண்டபத்திற்கு அழைத்து செல்ல வந்த கட்டளையில் தங்கையுடன் காரில் புறப்பட ஆயத்தமாக, நந்தினியோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள்.

****************

விக்ரம் அன்று வீட்டிலேயே அடைந்துக் கொண்டவன் நந்தினியின் நிச்சயத்தை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்... ஆதன் தான் அவனிடம் நந்தினியை கேட்டு நச்சரித்து கொண்டிருக்க, அவனை திசை திருப்ப வேண்டி தன் நண்பனின் மகன் ஜெகனுக்கு காணொளி அழைப்பை இணைத்து கொடுத்து பிடிவாதமாக முரண்டு பிடித்தவனை விக்கியின் மனைவி ராதிகா தன் மகனுடன் சேர்ந்து நைச்சியமாக பேசி அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டாள்.

மடிக்கணினியில் தான் ஆதன் கானொளியில் இணைந்திருக்க, வெகுநேரம் கழித்தே விக்ரம் அலைபேசியை எடுத்து பார்த்திருந்தான்... அதில் புகைப்படத்துடன் இருந்த தகவலை மேல்வரல்பட்டு அறிக்கையாக காட்ட நெஞ்சை பிசைய ஆரம்பித்தது.

அவன் அறிந்திருந்தான் அவளின் மணப்பெண் கோலத்தை தான் தனக்கு புகைப்படமாக அனுப்பி வைத்திருப்பாள் என்று நிச்சயமாக நினைத்தவனுக்கு அதை திறந்து பார்க்கவே கரங்கள் நடுங்கியது. அவன் வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த போது கூட இத்தனை தூரம் பேதலித்து நின்றதில்லை, ஆனால் தன்னவளின் பிரிவு அவனை ஒவ்வொரு கணமும் கூடிய மன நடுக்கத்தில் பலமின்றி சோர்ந்துப் போனான்.

‘என் நந்தினியை நான் வேறொருவனுடன் மணப்பெண் கோலத்தில் பார்ப்பதா’ என்று விசாரம் கொண்டு அலைபேசி திரையை அணைத்தான்... அதை பார்க்காமல் கிடப்பில் போடவும் விடாமல் நீடித்த மனக் குழப்பத்தில் தன் கரங்களால் தலையை தாங்கியபடி சோர்வாக அமர்ந்துவிட்டான்.

அலைபேசியை எடுப்பதும், பார்ப்பதுமாக இருந்தவன் இறுதியில் ஒரு மனதாக திரையை உயிர்பிக்க அதில் இருந்த அவள் புகைப்படம் அவளின் தனிப்பட்ட புகைப்படமாக இருக்கவே சிந்தையின் ஓரம் நிம்மதி எழுவதை உணர முடிந்தது, சில கணங்கள் அவனின் நந்தினியாகவே ரசித்துக் கொண்டிருக்கும் போது தான் கவனத்தில் பட்டது அவன் எடுத்து கொடுத்த அந்த புடவை.

“என்ன நான் எடுத்து கொடுத்த புடவையை கட்டியிருக்கா? எப்படி அவங்க வீட்டில் இதுக்கு ஒத்துக்கிட்டாங்க” என்று வெளிப்படையாக கூறிக் கொண்டவன் மறுமுறை கூர்ந்து கவனித்ததில் தான் அவளின் விஷம சிரிப்பும் அதற்கு கீழ் குறிப்பிட்டிருந்த செய்தியும் அவன் உயிரை உலுக்கி பயமுறுத்தியது.

அவள் அனுப்பிய செய்தியை திரும்பத் திரும்ப எத்தனையோ முறை படித்தும் அதற்குள் ஏதோ பூகம்பம் ஒளிந்திருப்பதை உறுதிபடுத்திக் கொண்டே இருக்க சிந்தனைவயத்திலும், உணர்ச்சிவசத்திலும் ஆட்பட்டு உத்திரத்தில் கட்டப்பட்ட உரியை போல் உள்மனம் ஆடக் கண்டான்.

“இல்லை ஏதோ சரியில்லை, நந்தினி என்னடி பண்ணின” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மிகவும் பயங்கரமாக ஏதோ உறுத்த, கலக்கத்தில் உடல் வியர்த்து விறுவிறுத்துப் போனது.

ரேவதி, துரைசாமி மகளை முன்னே அனுப்பி வைத்துவிட்டு பின்தங்கி இருந்தவர்கள் இறுதியாக கிளம்பிச் செல்ல எத்தனிக்கையில்...

“ஏங்க கொஞ்சம் இருங்க நிச்சய மோதிரத்தை நந்தினி ரூமிலேயே வச்சுட்டேன் எடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு சென்றவர் மேஜை டிராயரில் இரண்டு நிமிடங்கள் அலசி மோதிரத்தை எடுத்துவிட்டு மூடியவரின் கண்களுக்கு வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மாத்திரை நெகிழி டப்பா கண்களில் பட்டு அவருக்கு உறுத்தல் ஏற்பட்டது.

அவர்கள் பொதுவாக வயலுக்கு பயன்படுத்தும் எந்த பொருளும் வீட்டில் வைப்பதில்லை அதற்காக என்று தோட்டத்தில் இருக்கும் அறையை தான் பயன்படுத்துவது அவசரத்திற்கு கூட வீட்டில் வைப்பதிலையே என்று புரிந்துப் போக, நெகிழி டப்பாவின் மேல் பாகமும், கீழ் பாகமும் வெவ்வேறு மூலையில் சிதறிக் கிடப்பதை கண்டு மூலையில் எச்சரிக்கை மணி ஒலிக்க கடுக்கடை கட்டிய சித்தம் ஏதோ மிகவும் ஆபத்து என்பதை நிகழ்வுறுத்தி, மகள் தான் ஏதோ செய்துக் கொண்டுவிட்டாள் என்று ஊர்ஜிதமானதும் அறையே தட்டாமாலை சுற்றுவது போல் உணர்ந்தவர் அதிர்ச்சியில்...

“நந்தினிஈ....!” என்று உச்சஸ்தாயில் வீடே அதிர அலறியிருந்தார்.

**************************

வணக்கம் நட்பூக்களே...

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-24 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்.
 
Status
Not open for further replies.
Top