All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜனனிராமகிருஷ்ணனின் "காலத்தின் தேவி காதலுடன் அவன்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
ஹாய் செல்லம்ஸ்,
நான் ஜனனி ராமகிருஷ்ணன், 4 வருஷம் விடாமல் பல கதைகளை படித்த :)எனக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆவல் பிறந்தவுடன் கதையும் எழுத ஆரம்பித்தேன்.நான் கேட்டவுடன் கதை திரி அமைத்து தந்த ஶ்ரீ அக்காக்கு என்னோட ரொம்ப ரொம்ப நன்றிகள் 😍😍😍😍😁பானு அக்காக்கும் என் நன்றிகள் பல ❤இது தான் என் முதல் கதை என்பதால் கதையில் குறைகள் இருந்தால் சுட்டி காட்டி என்னை ஆதரியிங்கள் மாக்காஸ்:love::love::love::love:


சரி மக்களே கதைக்கு வருவோம்.......
காலத்தின் தேவி காதலுடன் அவன்.....
கதையோட தலைப்பு பார்த்தா உங்களுக்கு என்ன தோனுது :unsure::unsure::unsure:உங்க மையின்ட் வாய்ஸ் சொல்லுது இது காதல் கதைதானே எஸ்.....:D:D:D:D:D:D இது காதல் கதை+ அதுக்கும் மேலே! ம்ம்ம் என்னாவா இருக்கும்னு நீங்க யோசிங்க :unsure::unsure::unsure: ஈவினிங் உங்களுக்கு டீசர் தாரேன்...........:)
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
Teaser 1

நான் எதிர் காலத்தில் இருந்து வந்து இருக்கேன்...
என்று சொல்லி விட்டு ஆகாஷின் முகத்தை பார்க்க!
ஆகாஷோ ஏதோ காமேடியை கேட்டது போல் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தவன்,"ஜஸ்ட் கெட் அவுட் ஆப் மை ஹவுஸ் இடியட்" என்று கோபத்தில் வீடே அதிரும் படி கத்தினான்.
அவன் கோபத்தில் உள்ளுக்குள் நடுங்கினாலும்.... வெளியே சார் உங்களுக்கு ஆதாரம் தானே வேனும் ,இந்தாங்க இது என்னோட மொபைல்.இதுல இன்டர்நெட்ல இருந்து சேவ் பன்ன உங்க விடியோஸ் இருக்கு நீங்களே பாருங்க... என்று கொடுத்தான்.
அதில் ஆகாஷ் இறந்ததை வைத்து கிளம்பிய காசிப்ஸ்,அவன் இறந்த உண்மையான காரணம் போன்ற கானோலிகளை கண்டவன்," மேலும் தான் யார் என்று யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த ரகசியம் மொத்தமும்...அந்த கானோலியில் இருந்ததை கண்டுஅதிர்ச்சியில் இருந்தான்!...இது பொய்யாக இருக்க வாய்ப்பேயில்லை என்று தனக்குள் கூறிக்கொண்டவன்!அந்த செல்போனில் செமித்து வைத்த கானோலிகளின் தேதியும் நேரத்தையும் பார்த்தால்.... இது ஒரு மாதத்திற்குள் நடந்தது எனக் காட்டி கொண்டு இருந்து.(அதாவது நாளையிள் இருந்து நடக்க இருப்பதை காட்டி கொண்டு இருந்தது).
இப்போது தன் எதிரில் இருந்தவனை ஆராய்ச்சியாகவும்... அதே சமயம் சற்று பயத்தோடும் பார்த்து கொண்டு இருந்தான் ஆகாஷ்.....
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
Teaser 2....

நீங்க இங்கே தூங்குனா! நான் எங்க பாஸ் தூங்குறது!

டேய் அதான் பக்கத்தில இவளோ இடம் இருக்குல வந்து படுடா...

"என்னால உங்ககூடலாம் தூங்க முடியாது பாஸ், எனக்கு வேற ரும் தாங்க இல்லைன்னா ஹாலில் போய் நான் படுத்துக்குறேன்".

"டேய் நீ பன்றதுலாம் ஒரு மார்கமவே இருக்கு..... நான் அதுமாதிரி ஆழ் இல்லை பார்த்துக்கோ"....

அடிங்... நானும் பார்த்துட்டே இருக்கேன்,நீ ரோம்ப ஓவரா போற...."போனால் போகட்டும்னு உன் உயிரை காப்பாற்றிட்டு போகலாம்னு பார்த்தா....."ஒரு மார்கமவே இருக்க ,நோர்கமாவே இருக்கனு கருத்து வேற பேசுர""!

$$$$$$$$$$$$$$$$$$$$

ஹெய் என்ன நீங்க என்னை அடிக்கலாம் வரிங்க.....

ஓ....உன்னை அடிக்காமல் விடுறேனேனு சந்தோஷப் படு...என கண்கள் இரண்டிலும் ரௌத்திரத்துடன் கூறினான்.

உங்களுக்கு தான் பொண்ணுங்கனாவே புடிக்காது😡 அதான் பையன் போல வந்தேன். எங்க காலேஜ்லாம் நான் இதுல எவ்வளவு 😎பேமஸ்னு கேட்டு பாருங்கசும்மா காலேஜே அதிரும்😈 என பெருமை பொங்க கூறினாள் வைஷூ.

ஹொ..... அந்த கருமத்தை வேற நான் கேக்கனுமா!அதான் நீ பண்ண லச்சனத்திலே🤮தெரியுதே இதுக்கு மேலயும் தெரியனுமா என்ன🤨🤭?!

தன்னை இப்படி கேவலமாக 😤கழுவி ஊத்துபவனை நினைத்து கோபம் தான் வந்தது🤬,இதற்கு எல்லாம் காரணமானவள்👸🏻தன் கண் முன்னே வந்தால் 🐶கொதரிவிடும் நிலையில் இருந்தாள்👩🏻.
 
Last edited by a moderator:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
சாரி மக்களே கொஞ்சம் வேலை பிசினாலே இரண்டாவது டீசர் பொடுறதுக்கு லேட் ஆகிடிச்சு,இனிமேல் காரேக்டா போட்டுறேன்.அதற்கு பதிலாக இன்று இரவு முதல் எபிசோட் போடுறேன் அப்படியே மறக்காம காமெண்ட் பண்ணிடுங்கபா:D:D:D:D:D:D:D:D
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
21878
21880
காலம்1
இந்த நடுநிசியில் தன் வீட்டின் காலிங் பெல் விடாமல் அடித்து கொண்டு இருந்ததை கேட்டு அவனுக்கு ரோம்பவே கோபம் வந்தது.அந்த கோபத்திலே கதவை திறந்தவன் ,அங்கே பதற்றத்துடன் நின்று கொண்டு இருந்த டெலிவரி பாயை பார்த்ததும் ,தன் கோபத்தினை கட்டு படுத்தி கொண்டு "என்ன வேண்டும்? என்று கேட்டான்","ஆகாஷ்".

அனால் அவனோ கதவை திறந்தவனை "செத்தவன் உயிரோடு வந்தது போல் அவனை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தான்".

ஏற்கனவே மனஉழைச்சலில் இருந்தவன்,தன்னை அதிர்ச்சியுடனே பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்து,தேவை இல்லாமல் அட்ரஸ் மாத்தி வந்து அடுத்தவங்க நிம்மதிய கெடுக்குரது என்று சொல்லி டப்.......என்று கதவை அடைத்தான் ஆகாஷ்.

கதவை அடைத்த சத்தத்தில் தன்னை மீட்டு கொண்டவனோ....இப்போது தன்னை தானே கேவலமாக திட்டி கொண்டு இருந்தான்.....இப்போது நேரம் வினாகுவதை உணர்ந்து மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினான்....'ஆனால் அந்த பக்கமோ இன்னும் கதவை திறக்காததால் ,அவனுடைய இதயத் துடிப்பின் வேகம் மிகவும் அதிகரிக்க தொடங்கி அவன் வியர்வையில் நினைந்த நேரம் ...'

இப்போது பொறுமையாக கதவை திறந்தவன், கையை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து தீர்கமாக பார்த்தான்.

அந்த டெலிவரி பாயோ அதில் மயங்கினாலும்.... டக்கென்று...... வீட்டினுள்ளே புகுந்து கொண்டு,அவனை விட தீர்கமாக பார்த்து கதவை அடைத்து கொண்டு வாங்க, நான் உங்களிடம் பேசவேண்டும் என்றான் அலுத்தமாக அதே சமயம் தீர்மானமாக.

நோடி நேரத்தில் தன் வீட்டில் புகுந்து கொண்டு தன்னிடமே அதிகாரமாக பேசுபவனின் மேல் கோபம் வந்தாலும்... அதே நேரம் சந்தேகமாகவும் அவனை பார்த்தான்...எதற்கோ இருக்கட்டும் என்று கத்தியை கையில் எடுத்து கொண்டு கதவை அடைத்தான்....

தான் ஏதாவது செய்து விடுவேன் என்று முன்னேச்சரிக்கையுடன் கத்தியுடன் அமர்ந்து இருக்கும் அவனை பார்த்து...பாவமாக இருந்தது."அவன் இதுவரையில் அனுபவித்த துன்பமே போதும் என்று கடவுளிடம் மனதால் வேண்டி விட்டு",அவனிடம் பேச ஆரம்பித்தான்."மிஸ்டர் ஆகாஷ் நான் யாருனு உங்களுக்கு தெரியாது பட் நீங்க யாரு எப்படி பட்டவருனு எனக்கு தெரியும்" நீங்க இதுக்கு மேல எந்த துன்பமும் படகூடாது என்ற நோக்குடன் நான் சொல்லுவதை கேட்டு பாதுகாப்பாக இருங்க பிளிஸ்.... என்றான்.

அவன் கூறியதை பொறுமையுடன் கேட்டவன், சரி எனக்கு என்ன ஆபத்து வர போகுதுனு உனக்கு எப்படி தெரியும்?,ஏதாவது ஆதாரம் வைத்து இருக்கியா? என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்... ஆகாஷ்.

ஒரு கனத்த அமைதிக்கு பின் சொல்ல ஆரம்பித்தான் அவன்.... நான் எதிர் காலத்தில் இருந்து வந்து இருக்கேன்...என்று சொல்லி விட்டு ஆகாஷின் முகத்தை பார்க்க!

ஆகாஷோ ஏதோ காமேடியை கேட்டது போல் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தவன்,ஜஸ்ட் கெட் அவுட் அப் மை ஹவுஸ் இடியட்" என்று கோபத்தில் வீடே அதிரும் படி கத்தினான்.

அவன் கோபத்தில் உள்ளுக்குள் நடுங்கினாலும்.... வெளியே சார் உங்களுக்கு ஆதாரம் தானே வேனும் ,இந்தாங்க இது என்னோட மொபைல்.இதுல இன்டர்நெட்ல இருந்து சேவ் பன்ன உங்க விடியோஸ் இருக்கு நீங்களே பாருங்க... என்று கொடுத்தான்.

அதில் ஆகாஷ் இறந்ததை வைத்து கிளம்பிய காசிப்ஸ்,அவன் இறந்த உண்மையான காரணம் போன்ற கானோலிகளை கண்டவன்," மேலும் தான் யார் என்று யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த ரகசியம் மொத்தமும்...அந்த கானோலியில் இருந்ததை கண்டுஅதிர்ச்சியில் இருந்தான்!...இது பொய்யாக இருக்க வாய்ப்பேயில்லை என்று தனக்குள் கூறிக்கொண்டவன்!அந்த செல்போனில் செமித்து வைத்த கானோலிகளின் தேதியும் நேரத்தையும் பார்த்தால்.... இது ஒரு மாதத்திற்குள் நடந்தது எனக் காட்டி கொண்டு இருந்து.(அதாவது நாளையிள் இருந்து நடக்க இருப்பதை காட்டி கொண்டு இருந்தது).

இப்போது தன் எதிரில் இருந்தவனை ஆராய்ச்சியாகவும் அதே சமயம் சற்று பயத்தோடும் பார்த்து கொண்டு இருந்தான் ஆகாஷ்.....
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
ஹாய் திபாவளி வேலை ரோம்ப பிசியா இருந்துருப்பிங்க😁😁😁😁நானும் ரொம்ப பீசிப்பாா😅😅சரி தீபாவளி இரட்டிப்பு சந்தோஷமா 2அத்தியாயம் போட்டு இருக்கேன் பேபிஸ்😍மறக்காம படிச்சுட்டு கமெண்ட்ஸ் போட்டுடுங்க செல்லம்ஸ்😘😘😘😘😘
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
2216622167

காலம் 2

தன்னை அதிர்ச்சி மற்றும் பயத்துடன் பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்து ."இப்போது இவன் கலவரத்துடன் ,சார் நீங்க நினைப்பது போல் நான் பேய் எல்லாம் இல்லை சார் நானும் மனிதன் தான்" என்று சொல்லி விட்டு,"மனதுக்குள் பின்னே இவன காப்பாத்த வந்துட்டு கடசியில எனக்கு ஏதாவது ஆபத்து வந்திடிச்சுனா?யாரு என்னை காப்பாத்துரது அந்த கடவுள் தான் என்னைய காப்பாத்தனும்".

சரி நீ எதிர் காலத்தில் இருந்து என்ன காப்பாத்த வந்த ஓகே ஆனா நீ எதுல டைம் டிராவல் பன்னி வந்தனு தெரிஞ்சுகலாமா என்று ஆர்வமாக கேட்டான் "ஆகாஷ்".

"அட பக்கி பயலே"
என்று மனதிற்குள் திட்டிவிட்டு..."சாரி சார்" நான் அதை பற்றி உங்களிடம் நான் சொல்ல கூடாது "சீக்ரேட்" சொன்ன உங்க உயிருக்கு தான் ஆபத்து ....இவளோ கஷ்டப்பட்டு உங்கள காப்பாற்ற வந்து நான் சொல்லி நீங்க இறந்தா என் மனசு தாங்காது சார் புரிஞ்சுகோங்க... சார் என்று அப்பாவியாக சொன்னான்"

ம்ம்ம்.... சரி நீ சொல்லுரத நம்பரேன்..."பட் நீ மட்டும் என்ன ஏமாத்தனனு எனக்கு தெரிந்தது கத்தியை காட்டி கதம்...கதம்"என்றான்.

நான் எதுக்கு சார் உங்கள ஏமாத்த போறேன்...உங்கள காப்பாற்றி விட்டுட்டு ,நான் பாட்டுக்கு என்னோட வீட்டுக்கு ஜாலியா போயிடுவேன் என்று சிரித்தான்.

சரி உன்னோட பெயர்,வீட்டோட முகவரி சோல்லு என்றான் அவனை பார்த்து அகாஷ்

ஆவனோ "ரிஷி" என்று தன் பெயரைச் சொன்னவன்,தனது முகவரியை சொல்வதில் சிறிது தயக்கம் காட்டியவன், பின்பு என்ன நினைத்தனோ சென்னையில் இருப்பதை மட்டும் கூறினான்,வேறு எதுவும் இப்போது என்னால் சொல்ல இயலாது என்றும் சொல்லியவன் அமைதியாக ஆகாஷின் முகத்தை பார்த்தான்.

இப்போது கனத்த அமைதி இருவரிடம்..............

ஆகாஷ் இப்போ அடுத்து என்ன பன்னனும்னு உனக்கு தெரியுமா ரிஷி.....ஏன்னா நான் இப்போ இங்கே இருந்து கிளம்ப போறேன்.....நீ எங்கே போகப் போற?நீ இருக்குறதோ சென்னைன்னு சொன்ன!.. இங்கே உனக்கு யாரையாவது தெரியும்னா சொல்லு டாரப் பன்னிட்டு கிளம்பரேன் என்றான்....

மணியை பார்த்த ரிஷி அது மூன்றறை என்று காட்டி கொண்டு இருந்தது.... இப்போது பேருமூச்சு ஒன்றை விட்டவன்....சார் தெரியாதனமா வாயவிட்டு இங்கே வந்து மாட்டிட்டு இருக்கேன்."இப்போ நான் உங்களை சேப் பன்னா மட்டும் தான், நான் எங்க வீட்டுக்கு சேப்பா போக முடியும் இல்லனா நான் இங்கேயே மாட்டிப்பேன் சார்.நீங்க இனி வரும் ஒன்பது நாட்களும் உங்களுக்கு வருகிற ஆபத்த சமாளிச்சிடீங்னா உங்கள யாராலயும் வீழ்தமுடியாது என்றான்.


ஆகாஷ் சிரித்து கொண்டே...."சோ நீ வருகிற ஒன்பது நாட்களும் என்னுடன் தான் இருப்பேனு மறைமுகமாக சொல்லுர....ம்ம்ம்....உனக்கு பேச்சு திறமை ரொம்பவே இருக்கு டா ரிஷி நீ பொலச்சுப்ப!
--------------------------------------------------------------
22168

லங்காயம் சங்கர்தேவி காமாட்சி காஞ்சிகாபுரே
பிரதியும்னே ஸ்ரீகலதேவி சாமுண்டி குரோஞ்சபட்டனே
ஆலம்பூர் ஜோகுலம்பா ஸ்ரீசைலே பிரமராம்பிகா
கோலாபுரே மகாலட்சுமி முஹூரியே ஏகவீரா
உஜ்ஜைனியம் மகாகலி பீதகாயம் புருஹூட்டிகா
ஓஜயம் கிரிசாதேவி மாணிக்க தட்சி தெற்கு
ஹரிக்சேத்ரே காமருபி பயணிக்கும் மாதவேஸ்வரி
ஜ்வாலியம் வைஷ்ணவ்தேவி கயா மங்கல்யா கோவரிகா
வாரணாசி விசாலாட்சி காஷ்மீரேத்து சரஸ்வதி
அஷ்டதாஷா சுபிதஹானி யோகினமாபி துரதிர்ஷ்டம்

மாலை பதானேதனயம் சர்வசத்ரவாசனா.
அந்த அதிகாலை பிரம்ம முகுர்த்த வேலையில் பார்வதி தேவி சிலையின் முன் அமர்ந்து அஷ்டதாச சக்தி பீட்டா ஸ்தோத்திரத்தை,இனிமையான குரலில் பாடி கொண்டும் மலர்கள் மற்றும் குங்குமத்தால் பூஜை செய்து கொண்டு இருந்தார்கள்..... அவ்வீட்டின் பெண்கள்.அவ்வீடு முழுவதும் சாம்பிராணி மற்றும் விலக்கின் ஒளியில், கோயிலை போல் காட்சி அளித்து கொண்டு இருந்தது. அந்நேரம் அந்த அழகான சின்னசிட்டு "வைஷ்ணவி" தன் பாட்டியிடம் கேள்விகனைகளை வரிசையாக அடிக்கி கொண்டே இருந்தாள்.

இதனை கண்ட அவளது தாய் "தக்ஷயானி"...."இப்போ நீ பாட்டிய கேள்வி கேக்காம அமைதியாக சாமி கும்பிடல.... நான் என்ன பன்னுவனு தெரியும்ல" என்று கண்களாலயே தன் மகளை மிரட்டி கொண்டு இருந்தார்.

"சாவித்திரி" தன் மருமகள் தக்ஷயானியிடம் அமைதியாக இருக்கும் படி பனித்தவர்,கண்களில் கண்ணீரை தேக்கியபடி தன்னையே பார்த்து கொண்டு இருந்த பேத்தியிடம், "பாட்டி உனக்கு சாமி கும்பிட்ட பிறகு சொல்லுகிறேன் என்றவர் கடவுளுக்கு தீபாராதனை காட்ட அரம்பித்தார்".

அவங்க சாமி கும்பிடறதுகுள்ள நான் அவங்கள பத்தி சொல்லிடுறேன் வாங்க.

"அவர் சாவித்திரி அக்குடும்பத்தின் தலைவி, நீலகண்டனின் மனைவி,மாறனின் தாய், தக்ஷயானியின் அத்தை, ரிஷிவர்தன் மற்றும் வைஷ்ணவியின் பாட்டி" என்று பல உறவுகளை தனதாக்கி ஆனிவேறாக இருந்து....தன் குடும்பத்தை வழி நடத்தி செல்லும் திறமையான பெண்மனி.

"நீலகண்டனோ வெலுத்தது எல்லாம் பால் என்று நினைக்கும் அப்பாவியான குணம் கொண்ட நல்ல மனிதர்.இந்த நல்லது என்று ஒன்று வந்தால் அதற்கு எதிராக தீயது என்று ஒன்று கண்டிப்பாக வந்தே தீரும் என்பது போல இவருக்கும் அது வந்ததால் நம்பகூடாதவர்களை எல்லாம் நம்பி, படகூடாத துயரத்தையும் பட்டு தன் மனைவியின் வழிகாட்டுதலில் இப்படி தான் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டை போட்டு வாழுகிறார்".

"மாறனோ தந்தையின் குணநலன்களை அச்சரு பிசாகமல் அப்படியே வந்தான்...... எங்கே இன்னோரு நீலகண்டன் உருவாகிவிடுவானோ என்று பயந்த சாவித்திரி,"தைரியமும் வாழ்க்கை பற்றிய தெளிவையும் கொண்ட தக்ஷயானியை கண்டவர் தனது மகனுக்கு ஏற்றவள் இவளே" என்று தேர்வு செய்தவர் நல்ல முறையில் திருமணமும் நடத்தி வைத்தார்".

மாறன் தக்ஷயானி தம்பதியருக்கு குழந்தை பேறே இல்லாமல் மருத்துவமனைக்கும் கோவில்களுக்கும் அலைந்ததில்,"கடவுளின் வரமாக வந்தான் "ரிஷிவர்தன்" இவன் ஒருவன் தான் தங்கள் மகன் என்று வாழ்ந்து வந்தவர்களுக்கு ........ஏழு வருடங்கள் கலித்து நான் வரம் வாங்காமல் உங்களிடம் வந்த தேவதை என்று தக்ஷயானியின் மணி வயிற்றில் உதித்தாள் "வைஷ்ணவி" அவள் பிறந்ததில் குடும்பத்திற்கே இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்தது".

தன்னுடைய பேத்தி வைஷ்ணவியை தன் மடியில் அமர்த்திய சாவித்திரி சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் வைஷ்ணவி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் சாவித்திரி......"தங்ககுட்டி என்ன கேட்டிங்க?..பாட்டிகிட்ட..... என்று ஒன்றும் தெரியாதவர் போல் வைஷ்ணவியிடம் கேட்க".....

எதுக்கு பாத்தி(பாட்டி)இந்த பாட்ட தினமும் பாடுரோம்?....

நாம யார கும்பிடுரோம்?

பாரு(கடவுள் பார்வதி) சாமிய தானே!....

ம்ம்ம்.... கரெக்ட்....என்று சிரித்து செல்லம் கொஞ்சியவர் மேலும் தொடர்ந்தார்......

இலங்கையில் சங்கரி தேவி,

காஞ்சிபுரத்தில் காமாட்சி,
பிரதிம்னாவில் சுங்கலா தேவி மற்றும் மைசூரில் சாமுண்டா,
ஆலம்பூரில் ஜோகுலம்பா தேவி,
ஸ்ரீ ஷைலத்தில் பிரம்மரம்பிகா தேவி,
கோலாப்பூரில் மகா லட்சுமி தேவி மற்றும் மஹூரில் ஏகா வீரா தேவி,
உஜ்ஜைனில் மஹா காளி தேவி,
பீதிகாவில் புர்ஹுதிகா ஒடியானாவில் கிரிஜா தேவி
மற்றும் தக்ஷாவின் வீட்டில் மாணிக்கா
விஷ்ணுவின் கோவிலில் காம ரூபி,
பிரயாகராஜில் மாதவேஸ்வரி,
ஜ்வாலா முகி மற்றும் கயாவில் மங்கலா கவுரி,

வாரணாசியில் விஷாலக்ஷி தேவி,காஷ்மீரில் சரஸ்வதி.
நாம பாடின பாட்டு பார்வதி சாமி இருக்குர 18 மாக சக்தி பிடம்,நமக்கு எப்படி வீடு இருக்கோ.....


ஆதே மாதிரி பார்வதி சாமியோட வீடு தான் இந்த பாட்டுல வர கோவில்.... மேலும் தொடர போனவர் தன் மடியில் தூங்கி இருந்த வைஷ்ணவியை பார்த்து சிரித்து கொண்டே தன் மருமகளிடம் கொடுத்தவர், தன் அன்றாட காலை வேலைகளை பார்க்க சென்றார்.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
22171
காலம் 3

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஹைவே சாலையில் பல வண்டிகளோடு வேகமாக காற்றை கிழித்து சீறி பாய்ந்து சென்று கொண்டு இருந்தது அந்த ஆடி கார்...... அதனுள்ளே இருந்த ரிஷி விடாமல் பேசி கொண்டே வந்தான்.....

"ஒரளவுக்கு இவன் பேசுவதை பொறுமையாக கேட்டு கொண்டே வந்த ஆகாஷ், இதற்கு மேல் தன் காது தாங்காது என்ற காரணத்தினால் "ரிஷி வில் யூ ஷட்அப்.... நீ இப்படி பேசிட்டே இருந்தனா கண்டிப்பா என்னால டிரைவ் பண்ண முடியாது...அன்டு உன்னைய இங்கேயே விட்டுட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்" என்ற முகபவனையுடன் சொன்னவன் காரை ஓரம்கட்டுவது போலே கொண்டு சென்றான்".

எங்கே தன்னை இங்கேயே விட்டுவிட்டு சென்று விடுவானோ என்று பயந்த ரிஷி அதன் பின் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக வந்தான்.
'அது என்பதை போல் அவனை பார்த்த ஆகாஷ் அதன் பின் தான் வண்டி ஓட்டுவதில் கவணம் ஆனான்'.

ஆப்போது தான் அது நிகழ்ந்தது வேகமாக வந்த கண்டேய்னர் ஆகஷின் ஆடி காரின் மீது இடிக்க....."இந்த பக்கம் கார் சுழன்று விழ அந்த கண்டேய்னரும் குப்புறவிழுந்து ரோட்டினை தேய்த்து கொண்டே காரினை நோக்கி வந்து டோம்......என்று வேடித்து நோடி நேரத்தில் தீ பற்றி எரிய எல்லாம் முடிந்தது"..........
_________________________________________
22172
சாக்தம் சக்தியை கடவுளாக வழிபாடு செய்யும் சமயம்.இவர்களுக்கு சக்தியே தெய்வம் அவரையே தாயாக வழிபடவேண்டும் என்ற கோள்கையை உடையவர்கள்.

சக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தியே அனைத்துலகத்தையும் படைத்து,காத்து,தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது இவர்களின் கருத்து ஆகும்.

இவர்கள் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.

சாக்தர்கள்,வாமாசாரர்கள்,
தட்சிணசாரர்கள் என்று இரண்டு வகையாக பிரிக்கபடுகின்றனர்.

வாமாசாரர்கள் கெளலிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் வேதங்கள் கூறும் வழிபாட்டுவிதிகளை பின்பற்றாமல் , தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப விதிகளை உருவாக்கிக் கொள்வர்.

தட்சிணசாரர்கள் இவர்கள் ஸ்ரீ வித்யோபாசகர்கள் அல்லது வைதிகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேதத்தினை பின்பற்றுபவர்கள் ஆவர். சந்தியாவந்தனம் , மூதாதயர்களுக்கு கடன் செலுத்துதல் , வேள்விகள் செய்தல் போன்றவற்றை பின்பறுபவர்கள் ஆவர்.


சதி தேவியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த 51 சக்தி பீடங்கள் சக்தி வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
_________________________________________
அதுவரை அமைதியாக அமர்ந்து கொண்டு வந்த ரிஷி திடீரென்று தலையில் கைவைத்து கத்தி அழுகவும்,பதட்டம் அடைந்த ஆகாஷ்......."ஏய் ரிஷி என்ன ஆச்சு?".....என்று கேட்டு கொண்டே காரினை ஓரமாக நிப்பாற்றினான்.

இங்கு நடக்க போகும் கோரமான விபத்தை தன் கண்ணின் வழியே கண்ட ரிஷி.....அதனை ஆகாஷிடம் சொல்வதற்குள் தலைவழி வந்து விட ஆழுதவன்......காரினை நிப்பாற்றியவுடன் தன் தலையை அழுத்தி பிடித்து கஷ்டப்பட்டு காரில் இருந்து இறங்கியவன், தன் நிலை இல்லாமல் கிழே விழுந்தான்.

"ஆகாஷ் கிழே விழுந்த ரிஷியை பார்த்து ..."ரிஷி ஆர் யூ ஆல்ரையிட்" என்று கெட்டு கொண்டே இருந்தவன்...... தன் காரில் இருந்து தண்ணீரை எடுத்து பருக கொடுத்தான்".

"தன்னை நிமிடத்தில் சரி செய்த ரிஷி நோடி நேரம் தாமதிக்காது ஆகாஷிற்கு கட்டளை இட ஆரம்பித்திருந்தான்.....ஆகாஷ் சார் உங்களோட முக்கியமானதை திங்ஸ் மட்டும் எடுத்து விட்டு காரினை ஆட்டோமேட்டிக் டிரைவிங் மோடுல போட்டுட்டு என்னுடன் எதையும் கேக்காம வாங்க குயிக் என்று கிட்டத்தட்ட கத்தி சொன்னவன்....... தன்னுடைய பேகினை எடுத்தவன் கூடவே ஆகாஷின் லேப்டாப் பேகையும் எடுத்தவன்.........ஆகாஷ் இன்னும் யோசனையில் தாமதிக்கரதை பார்த்தவன் சடுதியில் கார் கியை வாங்கி ஆட்டோமேட்டிக் டிரைவ் மோடில் போட்டவன் தாமாதிக்காது ஆகாஷை கையோடு இழுத்து சென்றான்".

தன்னேதிரே நடந்த கோரவிபத்தை புதரின் மறைவிலிருந்து பார்த்த ஆகாஷ் பேரதிர்ச்சியுடன் உரைந்த நிலையில் காணப்பட்டான்.

இதுவரையில் டிவியில் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை பார்த்த ரிஷி.....முதன்முதலாக நேரில் இது போன்ற விபத்தை பார்த்து ஆதிர்ச்சி அடைந்தவன்......ஹம்.....என்று பெருமூச்சு ஒன்றினை விட்டவன்.....இன்னும் இவனால என்ன என்னலாம் பார்க்க போறேனோன்னு தெரியலையே......"ஆத்தா நீதான் என்னைய காப்பாத்தனும்" என்று அந்த கடவுளிடம் ஒரு அவசர கோரிக்கையை வைத்தவன்."தம்பி ஆகாஷு....தம்பி ஆகாஷு கனவு கண்டது போதும் சாமி எழுந்திரு....ஆடேய் எழுந்திருடா உன்னைய துக்கிட்டு போற அலவுக்கு எங்க அம்மா என்னைய பழ்கா வளர்களை டா".....என்று ஆகாஷை உலுக்கி கொண்டு இருந்தான்.

ரிஷியின் உலுக்கலில் நினைவுலகத்துக்கு திரும்பி வந்த ஆகாஷ்,"அவனின் மாறுபட்ட வித்தியாசமான குரலில் சற்று குழம்பியவன் ஒன்றுமே புரியாமல் பார்த்து கொண்டு இருந்தான்".

இங்கே இவ்வளவு நேரம் நிற்பது நல்லதில்லை என்று உணர்ந்த ரிஷி...,ஆகாஷை இழுத்து கொண்டு கால் போன போக்கில் நடந்து சென்றனர் இருவரும்.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 4

ஏண்டி வாய் மட்டும் நல்லா கிழிக்கிறல!..மார்க் எங்க போச்சு எல்லாத்தலயும் பேயில் ஆகிட்டு வரிங்க மேடம், கூடவே வாலு தனமும் பன்னுற! உங்க மிஸ்ஸு அவ்ளோ கம்பளயின்ட் பன்றாங்க என்கிட்ட, உனக்கு இங்கே இருக்குற எல்லாருடைய செல்லத்தையும் வச்சு போக்கு காட்டுரியா!என்று தன் மகள் வைஷ்ணவியை திட்டி கொண்டு இருந்தாள் தாஷாயினி

ஏம்மா அவள் 6வகுப்பு தானே படிக்குறா விடும்மா....குட்டி எவ்ளோ பயந்து இருக்கா பாரு என்று தன் மருமகளிடம் கூறி கொண்டு இருந்தார் நீலகண்டன்.

தன் மாமனாரை நன்றாக முறைத்தவள்,"ரிஷி அந்த வகுப்பில் இவளை விட நன்றாக தானே மாமா படித்தான் ஆனால் கழுதை திங்கறதுலயும் வாய் பேசுறதுலயும் காட்டுறத படிப்புல காட்டுனா என்ன என்று வைஷ்ணவியை முறைத்து கொண்டே கூறினார்" .

தன் பேத்தி கண்களில் கண்ணீரை கண்டு பொறுக்க முடியாதவர் வைஷ்ணவியை அழைத்து தன் அருகில் அமர்த்தி கொண்டவர்,தன் மருமகளின் முறைப்பை சற்று ஒதுக்கியவர் வேலையாலிடம் சொல்லி பலகாரங்களை எடுத்து வர சொன்னவர்!தனது பேத்தியை பார்த்து வைஷு குட்டி இனிமே எல்லாம் தேர்வுகளிலும் பாஸ் ஆகிடுவ தானே என்று ஒரு கண்ணை அடித்து பேத்தியிடம் கேட்க!...

தாத்தாவின் செயலை புரிந்து கொண்ட வைஷு உடனே ஆமாம் என்று தலையை ஆட்டியவள் .தன்னை முறைத்து கொண்டு இருந்த அன்னையிடம் ம்மா.... நான் அடுத்த தேர்வுல நல்ல மார்க் எடுக்கறேன்மா பிளிஸ் என்று கண்ணை சுருக்கி கேட்க....

அவள் கேட்பதில் சற்றே மயங்கினாலும்....வெளியே இதுதான் லாஸ்ட் என்று கண்டிப்புடன் கூறியவர் அங்கிருந்து செல்ல.....

தன் அன்னை அந்த பக்கம் போனாறா என்று செக் செய்த வைஷ்ணவி தன் தாத்தாவிடம் "தாத்தா யாரு இந்த அண்ணன நல்லா படிக்க சொன்னது இப்ப பாருங்க இவனால நான் அம்மாட்ட திட்டு வாங்கவேண்டியதா போச்சு".

அப்போது அங்கு வந்த ரிஷி அவள் மடியில் இருந்த பலகாரங்களை அவளிடமிருந்து பறித்தவன் தன் வாயில் போட்டு கொண்டே பேச ஆரமாபித்தான்..."நீ படிக்காம இருக்குரதுக்கு நான் ஏண்டி நல்லா படிக்க கூடாதுனு நினைக்குற திண்ணி பண்டாரம்"

ம்ம்ம்ம்...தாத்தா பாருங்க என்னைய திண்ணி பண்டாரம்னு சொல்லுறான் இந்த ரிஷி கேளுங்க தாத்தா அவனை என்றாள் வைஷு உதட்டை பிதுக்கி கொண்டே...

பாருங்க தாத்தா அப்படியே டைவர்ட் பன்னிட்டா.......

பாரு இனிமே நான் உண்னை விட நல்லா படிக்குறேன் போடா..... என்றவள் தான் சாப்பிட்டு கொண்டு இருந்த பலகாரங்களை எடுத்து கொண்டு ஓடினாள் வைஷ்ணவி.

போகும் அவளையே சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தனர் தாத்தாவும் பேரனும்.
@@@@@@@@@@@@
 
Last edited:
Status
Not open for further replies.
Top