All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜனனிராமகிருஷ்ணனின் "காலத்தின் தேவி காதலுடன் அவன்" - கதை திரி

Status
Not open for further replies.

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
டேய் ரிஷி! நீ பாட்டுக்கு இவ்வளவு தூரம் நடக்க வைச்சே கூட்டிட்டு வந்துட்ட சாப்பிடுறதுக்கு என்ன பன்னுரது... இதுக்கு மேல என்னால நடக்க முடியாது டா என்று மூச்சு வாங்க சொல்லி கொண்டு இருந்தான் ஆகாஷ்.

பச்.....எனக்கு மட்டும் பசிகாமயா இருக்கு......எனக்கும் அதே தான்!இங்க பக்கத்துல ஏட்டியம் எங்கயாச்சும் இருக்கானு முதல்ல பார்க்கனும்.

டேய் என்கிட்ட ஏட்டியம் கார்டு இல்லை டா.... எல்லாம் கார்லயே வெடிச்சுடுச்சே.....இப்போ என்ன பண்ணுரது என்று ஒன்றும் புரியாமல் ரிஷியை பார்த்து கேட்டான் ஆகாஷ்.

என்கிட்ட என்னோட ஏட்டியம் கார்டு இருக்கு கவலை படாதிங்க, அதுல இருந்து பணம் எடுத்து சாப்பிட்டு அதுக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் யோசிக்கலாம்.

இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தவர்களுக்கு ஏட்டியம் கண்ணில் பட......பணம் எடுக்க ரிஷி போக....தனக்கு கால் வலிப்பதினால் வெளியில் அமர்ந்து கொண்டான் ஆகாஷ்.

ஒரு 40,000ருபாயை ஏட்டியமிலிருந்து ரிஷி எடுத்தவன் பணத்தை பாதியாக பிரித்து ஆகாஷின் சட்டை பாக்கேட்டில் வைத்தவன்..."திடீரென ஏதோ ஓன்று அவனை தாக்க சட்டேன்று கையை எடுத்தவன் ஒன்றும் புரியாமல் ஆகாஷிடமிருந்து சற்று நகர்ந்து விட்டான்".

ஏதோ யோசனையில் அமர்ந்து கொண்டு இருந்த ஆகாஷ் தன் சட்டை பையில் ரிஷி பணம் வைத்தவுடன்,"டேய் என்ன இதுலாம்... இந்தா பணத்த புடி என்றான்".

ஆகாஷ் சார் எதாவது ஆவசரத்துக்கு வேண்டும் என்றால் என்ன செய்வது!"இதுபோல் ஏட்டியம் நாம போற இடத்துல இருக்குமான்னும் தெரியல, இன்னும் எவ்வளவு தூரம் நடக்கனுமோ தெரியல!...ஆதானால இதை வச்சிகோங்க".

சரி இங்கே பக்கத்துல தான் ஹோட்டல் இருக்கு"உட்கார்ந்து இருக்கும் போது பார்த்தேன்,வா சாப்பிட்டு போயிடலாம்....இப்பவே நைட் ஆகிடிச்சு டா இதுக்கு மேலே நடக்கனும் நாலும் தேம்பு வேணும் டா".

ம்ம்ம்......என்ற ரிஷி அந்த ஹோட்டலிற்கு ஆகாஷுடன் நடந்தான்.

ஹோட்டலில் மினி சைவ தாலியை தனக்கும் ரிஷிக்கும் ஹந்தியில் ஆர்டர் கொடுத்த ஆகாஷ் ரிஷியின் புறம் திரும்பி என்ன ரிஷி ஏதோ அப்போதிலிருந்து யோசனையாவே இருக்க?

பச்.....உங்க கார் அக்சிடேன்ட் எதார்த்தமா நடக்கல ஆகாஷ் சார்.....யாரோ திட்டம் மிட்டே நடக்க வைத்தது,அதை யார் செஞ்சாங்கன்னு தான் எனக்கு தெரியலை ஆனால் இதுக்கு மேலே இங்கே இருக்குறதும் நமக்கு கண்டிப்பா சேப் இல்லைன்னு மட்டும் தெரியுது, ஆதான் என்ன பன்னுரதுனு யோசிச்சுட்டு இருக்குறேன்.

உனக்கு எப்படி தெரியும்?... என்று ஆகாஷ் ரிஷியை பார்த்து திவிரமான கூறலில் கேட்க.

எனக்கு தலைவலி வந்ததே அதனால தான்...... அப்போ அக்சிடேன்ட் நடக்க போறதுக்கு முன்னாடி மொத்தத்தையும் என் கண் விழியில் தெரிந்தது.உங்ககிட்ட அதை பற்றி சொல்ல வருவதற்குள் தலைவலி உயிரே போற அளவுக்கு வலித்தது. பிறகு அங்கு என்ன நடந்ததுனு உங்களுக்கே தெரியுமே என்று ஆகாஷை பார்த்து கூறினான்.


அதற்குள் இவர்கள் ஆர்டர் பண்ன மினி சைவ தாலி உணவு வந்தவுடன் கடும் பசியில் இருந்த இருவருமே உண்ண ஆரம்பித்தனர்.

மினி சைவ தாலி இதில் சாப்பாத்தி,நான், சென்னா மாசாலா,பச்சடி,டால்,கீ ரைஸ், பாசந்தி,குலோப்ஜாமுன் போன்ற உணவு வகைகள் அடங்கும்.
சரி அவங்க சாப்பிட்டு முடிச்சுட்டாங்க நாமோ சீக்கிரமா அவங்களுக்கு முன்னாடி போயிடலாம் இல்லனா நம்மல விட்டுட்டு போயிடுவாங்க இருவருமே......

யப்பா சேம பசி எப்படியோ நல்லா சாப்படாச்சு அடுத்து என்ன செய்வது ஆகாஷ் சார்.

நானும் அதை தான் யோசிக்குறேன் பார்ப்போம்.....சரி வா போய் தண்ணீரும் கொஞ்சம் தின்பண்டங்களும் வாங்கிட்டு அப்படியே நடந்து போவோம்.

இவர்கள் அந்த நெடுஞ்சாலையில் இருக்கும் கடைக்கு செல்ல....
இங்கு கடையின் அருகில்....ஒருவரை சுற்றி நான்கு ஐந்து பேர் மராத்தி மொழியில் சண்டையிட....அந்த தனி நபரோ, அதற்கு சரிசமமாக தானும் தமிழில் சண்டை இட..... என அந்த இடமே இன்னும் சிறிது நேரத்தில் கைகலப்பு ஆகிவிடும் நிலைமையில் இருந்தது.

என்ன டா நீ திருடிட்டு கூட்டம் சேர்க்குரியா?.....என்னங்கடா எங்கக் கூட யாரும் இல்லை ஏமாத்தி புடலாம் நினைச்சியா....என்று கோபம் கொப்பளிக்க தன் வேட்டியை மடித்து கட்டி சண்டைக்கு நின்றார் ஐயனார் சாமியை போலே இருந்த அந்த பெரிய மனிதர் நமசிவாயம்.

அங்கே என்ன கூட்டம் என்று பார்க்க ஆகாஷும்,ரிஷியும் அந்த இடத்திற்கு சென்றவர்கள்,அங்கே சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மனிதர்களை தான் பார்த்தார்கள்!யாரும் அங்கே நடக்கும் தகராரை நிப்பாற்றாமல் அப்படியே நின்றிருந்தனர்.
'இதனை பார்த்த ஆகாஷிற்கு கோபம் தான் வந்தது,எது நடந்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று இருக்கும் இந்த சுயநல மனிதர்களை கண்டு அவன் மனம் ரௌத்திரம் கொண்டது,அதே ரௌத்திரத்துடன் தன் அருகில் இருக்கும் ரிஷியை கண்டமேனிக்கு திட்டிக்கொண்டு இருந்தான்'.

இவன் பொழிந்தது வேறு ஒருவரான ஐயனார் சாமியை போல் இருந்தவரின் பக்கத்தில் இருந்தவருக்கு கேட்க....அவர் இவர்கள் இருவரிடம் வந்தவர் அந்த ஐவரான வடநாட்டவரிடம் பேச சொல்லி கேட்க.....

எதை பற்றியும் யோசிக்காமல் ரிஷி அட வாங்க அண்ணே....நம்ம ஊருகாரருக்கு இதைக்கூட செய்யலைனா என்ன அண்ணே வாங்க நாம பேசி பிரச்சினையை முடிச்சி வைப்போம் வாங்க என்று அவர்களிடம் செல்ல......

ஆகாஷ் பல்லைகடித்தான்..... இவன் பேசுவதை தாங்காமல்.

நமசிவாயத்தின் அருகில் நின்று அவர்கள் பேசுவதை கேட்க கேட்க கோபம் வந்தது ரிஷிக்கு,
நமசிவாயத்திற்கும் அவர்கூட இருந்தவருக்கும் அவர்கள் பேசுவது தெரியாமல் இருந்தாலும் ரிஷிக்கு ஆகாஷிற்கும் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது,தகாத வார்த்தை எல்லாம் பேசினவர்களை நினைத்து.
ஒரு கட்டத்தில் பொருமை இழந்த ஆகாஷ் அடிக்க செல்ல,ஆனால் அதர்குள் எல்லாரையும் வெலுத்து வாங்கினான் ரிஷி "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று ஹிந்தியில் சொன்னவன் திருடிய பொருளை வைக்க சொல்ல..."

அப்போதும் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டே இருக்க .....கையைகொண்டு திருப்பி அடிக்க செல்ல.... இதற்கு மேல் இங்கே இருந்தால் தங்கள் உடம்பு தாங்காது என்று நினைத்தவர்கள், திருடிய பொருட்களை வைத்து விட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்.

ஆகாஷ் அவனையே அதிசியமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.:love:

என்ன சார் சைட் 😉அடிக்கிறிங்கலா என்னை?....

அவன் தலையை தட்டி விட்டவன்,இந்த ஆசை வேறு உனக்கு இருக்கா!....🤣

நமசிவாயம் இவர்கள் அருகில் வந்தவர், ரிஷியின் தோள்பட்டை பிடித்து நன்றி கூறியவர் அவர்களை பற்றி கேட்க

ரிஷி தன்னுடைய தோள்பட்டை பிடித்தவுடனே உடனே அவரிடம் இருந்து விலகியவன் முகத்தை சற்று
சங்கடமாக வைக்கவும்.

என்ன தம்பி என்னாச்சு சண்டைல அவனுங்களாள ஏதாவது உங்களுக்கு காயம் பட்டுடுச்சா தம்பி என்று மனதுவருத்தத்துடன் கேட்டார் சிதம்பரம்.

ஆகாஷும் கேள்வியுடன் பார்க்க?....

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை சார்....

சரி தம்பி என்றவர்,லோடு ஏத்திட்டு போகும்மோது இது போல களவானி பயலுவ திருடிட்டு பொயிடுறானுக தம்பி முதாலாலி கிட்ட சொன்னாக்கா அவரு ஏதோ நான் தான் திருடிட்டு பொய் சொல்லுறேன் நினைக்குறாருப்பு, அதான் இந்த தடவ கையும் களவுமா பிடிக்குறதுக்கு ஊரில் இருந்து அண்ணனே கூட்டியாந்தேன்,ஆனால் இவனுக மொசாமானவனுகளா இருக்கானுங்க...அந்த நேரத்துல நீங்க தமிழ் பேச நான் உங்கள கூப்பிட்டன் கோவிச்சுகாதிங்க தம்பி, எனக்கோ மொழி தெரியாத ஊரா.... அதான் தமிழ் ஆளுகளை பார்த்தவுடனே உங்களை அழைத்தேன்.

ஆகாஷ் பாரவாலை சார்.....மனிதனுக்கு மனிதன் உதவுவதுலதான் இன்னும் மனித தன்மை அழியாம இருக்கு.

அவனை பார்த்து ரிஷி "அப்படியா" என்று பார்த்து வைக்க...

அதனனை காணாதவன் போல் இருந்தான் "ஆகாஷ்"

தம்பிங்க இரண்டு பேரும் எங்கே போகுறிங்க?என்று நமசிவாயமும் சிதம்பரமும் கேட்க!

நாங்க இருவரும் குலுமாணலிக்கு டிரிப் போறோம் சார் என்றான் ஆகாஷ்

ரிஷி அப்படியா என்று ஒரு பார்வை பார்க்க......

சிதம்பரம் அட தம்பி நாங்களும் லோடு ஏத்திட்டு அங்கே தானே போயிட்டு இருக்கோம் என்று சந்தோஷத்துடன் சொன்னார்.

நமசிவாயம் அப்ப வாங்க தம்பி நம்ப லாரிலேயே போயிடலாம் என்று அலைப்புவிடுக்க!

ஆகாஷும் ரிஷியும் சம்மதம் தெரிவித்தவர்கள் அவர்களுடன் கிளம்பினர் குலுமாணலிக்கு.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
ஹாய் செல்லம்ஸ் நான் இதுவரைக்கும் போட்டு இருக்குர ஒவ்வொரு வுட்லயும் டீசர்லயும் ஒருஒரு(clue) கதையை பற்றி iruku உங்களால் கண்டிப்பாக கண்டு பிடிக்க முடியும் செல்வங்களே கண்டு புடிச்சு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க மக்காஸ் 😍😍😍ஆகாஷை எதற்கு ரிஷி காப்பாற்ற வேண்டும்? எதற்கு காலபயணம் செய்து ரிஷி ஆகாஷை காப்பாற்ற வரவேண்டும்🤔🤔யார் இந்த ரிஷி இவன் ரிஷி தானா🤔😇😇😇😇😇போன்ற பல கேள்விகளுுக்க பதில் இனி வரும் எபிகளிள் கதையை படித்து விட்டு கதையைை பற்றிய கருத்துக்களைை கமெண்ட் பண்ணுங்க மக்காஸ்🙂🙂

இது என்னுடைய முதல் கதை என்பதால் என்னால் முயன்றதை கதையில் எழுதியுள்ளேன் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்☺❤❤❤
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 5
22856
கௌவ்ரவ் கபூர்


டேய் அந்த கார்ல எந்த பாடியும் இல்லைனு போலீஸ் ரிப்போர்ட் வந்துருக்கு நீ என்னடான்னா ஸ்பாட்லயே டெட்டுனு சொல்லுற.... எது உண்மை என்று தன் பி.ஏவிடம் ஹிந்தியில் கத்தி கொண்டு இருந்தான் கௌவ்ரவ் கபூர்.

சார் பிளாஸ்ட் ஆனதுனால பாடி கடைச்சுருக்காது சார், பட் ஹீ இஸ் ஸ்பாட் அவுட் சார்.

இடியட் நமக்கு அவன் எவ்வளவு முக்கியம் தெரிஞ்சும் அவன இப்படி கொன்னுட்டிங்களே டா.... அவனுக்கு தான் அரோரா குருப் ஆஃப் கம்பனிஸ் மிஸ்டர் அரோராவ பத்தி தெரியும்,அவன்டயிருந்து உண்மைய வாங்கிய பிறகு கொன்று இருந்தாக்கூட எவ்வளவு சந்தோஷபட்டு இருப்பேன் தெரியுமா!வேற வழில அவனை பத்தி தேடுங்க குயிக், கூடிய சீக்கிரம் அவனை பற்றிய தகவல் எனக்கு வந்து ஆகனும் என்று தன் பி.ஏவிடம் கத்தியவன்....

அரோரா நீ யாருனு தெரிஞ்ச மறு நிமிடமே உன்னோட உயிர் உன்னிடம் இருக்காது டா...... என்று கர்ஜனையாக அந்த ருமே அதிரும் படி கத்தினான் கௌவ்ரவ் கபூர்.

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

அந்த ஓடும் லாரி வண்டியில்,அந்த அதிகாலை நேரப் பணி காற்று தன் மேல் பட்டு கண்விழித்தான் ரிஷி தான் போட்டு இருந்த ஜெர்கினையும் மிறி குளிர் ஊசி பொல் உடம்பை ஊடுருவி கொண்டு இருந்ததை உணர்ந்தான்.

இவன் எழுந்ததை பார்த்து நமசிவாயம் ரொம்ப நேரமா அப்படியே தூங்கிட்டு வந்திங்களா அதான் தம்பியை எழுப்பலை, அகாஷ் தம்பி இப்போ தான் கண்அசந்தாரு, அது வரைக்கும் எங்கக்கிட்ட தான் பேசிட்டு இருந்தாரு என்று அவன் பார்வை உணர்ந்து சொன்னார்.

ரிஷி அவர் சொன்னதுக்கு சிரித்து வைத்தவன்,இப்போ நாம எங்கே வந்து இருக்கோம் சார்?

சிதம்பரம் லிபேட் மன்பூர் ஹைவேல(lebad manpur highway) இருக்கோம்ப்பா.....என்றவர் சாலையில் கவணம் ஆனார்.

யப்பா.....போட்டு இருக்குர ஜெர்கினையும் தாண்டி குளிர் இப்படி ஊசி போல குத்துதே நான் எப்படி இந்த குளிர தாங்க போறேன் தெரியலையே என்று ரிஷி புலம்பினான்.

இது பணி காலம்ல தம்பி அதான் குளிரு அதிகமாக இருக்கு இன்னும் போக போக பாருங்க குளிரு அதிகம் அகிடும், பகல்ல சூரியனோட சூடு கொஞ்சம் கதகதப்பு தரும் அனாலும் பணி எல்லாம் அப்படியே தான் இருக்கும்,அப்புறம் சாய்ந்திரம் நாலு மணிக்குலாம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பனி மூடும் என்று ரசனையாக சொன்னார் சிதம்பரம்.

ஏனுங்க தம்பி இதுபோல டிரிப் போற பயலுகலாம் நிறைய பொருளுகளை அடைச்சு எடுத்துட்டு போவனுகளே.... அது போல நீங்க எதையும் எடுத்துட்டு வரல என்று கேள்வி கேட்டார் நமசிவாயம்.

நானும் இவனும் தீடிரென குலுமாணலிக்கு போகலாம்னு பிளான் போட்டோம்,இவனை விட்டா எனக்கு வேலை இருக்குனு சொல்லி அதுக்கு அப்புறம் வரமாட்டான்,அதான் கையோட இலுத்துட்டு வந்துட்டேன்,போகமோது நமக்கு தேவையானது வாங்களாம் சொல்லி வந்துட்டோம் என்றான் ரிஷி.

நல்லா வந்திங்க சரி இந்தாங்க இந்த பெட்ஷீட் போர்த்திகோங்க போகும்போது தம்பி எங்காவது நிப்பாட்டுவான்....அங்க உங்களுக்கு தேவையானது எல்லாம் வாங்கிக்கோங்க என்றவர் பேட்ஷிட்டை ரிஷியிடம் கொடுத்தவர்...."கிழம்பும்போது உங்க அண்ணி பெட்ஷீட்லாம் கொடுத்தபோது ரொம்ப திட்டினேன் டா ஆனால் அது எவ்வளவு உதவுதுனு இப்போதான் புரியுது சிதம்பரம் என்றார் நமசிவாயம் தனது தம்பியிடம்".

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
2285422855


அங்கே சுற்றிலும் கடை இருக்க தனக்கு தேவையானதை வாங்கி கொண்டு அகாஷும் ரிஷியும் வந்து கொண்டு இருந்தனர்.

அகாஷ் டேய் ரிஷி உனக்கு ஹிந்தி தெரியாதுனு நினைச்சுட்டு இருந்தேன்,நீ என்னடான்னா ஹிந்தி மொழி பேசுர இதுல பைட்டிங் சீன்வேற பலமா பின்னுற இன்னும் உன்னோட திறமை எது எல்லாம் என்கிட்ட மறைக்குற என்று சிரித்து கொண்டே கேட்டவனின் கேள்வியில்....."நீ எதையாவது என்னிடம் மறைக்கிறாய என்ற மறைபொருள் இருந்தது".

அது அம்மாக்கு எல்லாம் மொழிகளையும் நான் கற்று கொள்ளனும் ஆசை அதனால எல்லாம் மொழியையும் கத்துகலைனாலும் ஹிந்தியாவது கத்துகலாம்னு கற்றுங்கொண்டது தான் ஹிந்தி.பட்,போலிஸ் அகனும்னு சொல்லி கற்றுக்கொண்டது சண்டை,போலிஸ் டிரைனிங் போயி செலக்ட்கூட ஆகிட்டேன் பட் பாட்டியும் அம்மாவும் பல டிராமா போட்டு என்னோட வயாலையே வேண்டாம்னு சொல்ல வெச்சுட்டாங்க என்று சிரித்து கொண்டே சொன்னான்.

உனக்கு கஷ்டமா இல்லையா?... ஆகாஷ்.


இருந்தது ஆனால் அவங்களோட சந்தோஷத்தை நினைச்சு பார்த்தா என்னது ஒன்னும் அவ்வளோ பெரிய விஷயம் இல்லைனு தோனிச்சு.
சரி வாங்க சார் அவங்க நமக்காக வெயிட் பன்னிட்டு இருப்பாங்க என்ற ரிஷி விரைவாக நடந்தான்.

சாரி சார் எங்களாள உங்களுக்கு வேறே நேரம் விரையம் ஆகிடிச்சு என்று கவலையுடன் ஆகாஷ் கூறினான்.

"சிதம்பரம்" அதுலாம் ஒன்னும்மில்லை தம்பி,நாங்க லோடு ஏத்திட்டு வரும்பபோது இரண்டு வண்டியா தான் வந்தோம் ஆனா அது வர வழியிலே ஏதோ ரிப்பேர் ஆகி அங்கயே நின்னுடுச்சு,அவங்க அதை சரி பார்த்து வரேன் என்றவர்கள் எங்களை முன்னாடி போகச் சொல்லி சொன்னாங்க,நாங்களும் வந்துட்டோம், இப்போ பக்கத்துல வந்துடாங்கலாம்,அப்படியே அவங்களும் வந்துடுவாங்க நாமளும் கிளம்ப வேண்டியது தான் அதனால வெசனப்பாடதிங்க(கவலைப்படாதிங்க)தம்பி.

சிறிது நேரத்தில் மற்றோரு லாரியும் வந்துவிட இவர்கள் பயணமும் தொடர்ந்தது.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
22858
வைஷ்ணவி

போன தடவை இந்த அம்மாக்கிட்ட வேற தேர்வுல பாஸ்ஆகிடுவேன் வேற சொல்லி இருக்குறேன்....ஆனால், நான் படிக்கிறதுக்கு நிச்சயமா தேர்வுல பெயில்ஆகிடுவேன் போலயே என்று தனக்குள் பேசி கொண்டு இருந்தாள் வைஷ்ணவி.

என்ன குட்டிமா புக்கை தொறந்து வெச்சுட்டு யோசிச்சுட்டு இருக்குற?படிகலாம்ல என்றார் நீலகண்டன்.

ச்சு...... போங்க தாத்தா நான் எவ்வளவு படிச்சாளும் மறந்து போயிடுது,சரி நான் படிச்சதாவது தேர்வுல வருதான்னு பார்த்தா அதுவும் வரமாட்டீங்குது, நான் தேர்வுல பெயில் ஆகிட்டனா இந்த அம்மா கண்டிப்பா தோலை உறுச்சுடுவாங்க என்று சோகமாக சொன்னாள் வைஷ்ணவி.

சரிவிடு குட்டிமா பாத்துகலாம் இதை நினைச்சு கவலை படதா பாரு உன் முகம் எப்படி சோர்ந்து போச்சு பாரு!

ஏன் தாத்தா இந்த வினா தாள் முன்னாடியே எனக்கு தெரிஞ்சா! நான் அதுல இருக்குறத மட்டும் படிச்சுட்டு மார்க் வாங்கிடுவேன்ல என்று கற்பனையில் தன் தாத்தாவிடம் சொன்னாள் சின்னசிறு வைஷ்ணவி.

பேத்தியின் கற்பனை பேச்சை கேட்டு சத்தம் போட்டு சிரித்தவர்,சரி எப்படி உனக்கு வினா தாள் கிடைக்கும் என்று புருவத்தை உயர்த்தி கேலியாக தன் பேத்தியிடம் கேட்டவர்?...."பின்பு அப்படியேல்லாம் அதிசயம் நடக்காது குட்டிமா அதனால உன்னால முடியறவரை படி" என்று தன் பேத்தியின் கண்ணத்தை பாசமுடன கிள்ளிவிட்டு சென்றார்.

ஹம்.....நமக்கு ஏதாவது மிராக்கல் நடந்து என் கைக்கு வினாதாள் கிடைச்சதுனா!....அதுல இருக்கிறது எல்லாம் படிச்சு நானும் தேர்வுல பாஸ் ஆகிடுவேன் என்று மகிழ்ச்சியில் சிரித்தவள்,"கடவுளே எப்படியவது என்னோட கைக்கு அந்த வினாதாள் கிடைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் என்று சத்தமாக கடவுளிடம் வேண்டினாள்".

இவளின் ஆசைக்காகவே அது காத்து கிடந்தது போல், "அந்த அறையே வண்ணமயமாக மாறி சுழற்சி ஒன்று சுழன்று அந்த அறையில் வழி ஒன்று உருவானது".

அதனை பார்த்து பயந்தவள் உடனே புத்தகத்தை எல்லாம் போட்டு விட்டு தெள்ளதெறிக்க அந்த அறையை விட்டு வெளியேற முயன்றாள்."ஆனால் கதவு மற்றும் ஜன்னல் எல்லாம் திறக்காமல் அப்படியே கல் போலே இருந்து,இவளுக்கு வழிவிடாமல் இருந்தது".

இதனையெல்லாம் கண்டு பயந்து போனவள் உடனே கத்தி அழுக ஆரம்பித்தாள் வைஷ்ணவி,
இவள் அழுகையிட ஆரம்பித்ததும் அந்த சுழற்சி இவளை உள்ளிழுத்து கொண்டது.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 6
22969
அந்த சுழற்சியில் சுழன்று கொண்டே கீழே வந்து விழுந்தவள் சுற்றி பார்க்க தனது விடே இருக்க குழம்பினாள்😇(பின்னே டிவியில் காமிப்பது போல் வேறு ஏதோ மாயஜால✨ உலகிற்கு போவோம் என்று அந்த பீதியிலும்🥴 அவள் நினைத்திருக்க கடைசியில் தன்னுடைய வீடே என்றவுடன் அவளுக்கு சப்பென்று😤 ஆகிவிட்டது).வேறு வழி இல்லாமல் தனது அறையை பார்த்தவள் பயந்துவிட்டாள்......சிறிது நேரம் முன்பு இருந்த அறைக்கும் இதற்கும் துளிகூட சம்மதமே இல்லை என்பது போல் பளிச்சென்று இருந்தது, தலையை சொறிந்தவள் அப்படியே நிற்க.....

ஏண்டி நேற்று போட்ட உடையையே போட்டு இருக்க போ போயி வேறுஉடை மாற்றிவிட்டு நாளைக்கு மேக்ஸ் எக்சம்க்கு(exam) போய் படி என்ற தக்ஷயானி சமையல் கட்டுக்கு செல்ல.....

வைஷ்ணவி சமையல் கட்டுக்குள் நுழைந்துகொண்டே....அம்மா உனக்கு என்ன ஆச்சு இன்னிக்கு.....நாளைக்கு எனக்கு இங்கிலிஷ் எக்சாம்மா என்றாள் கண்னைஉருட்டி.

ஏய் மக்கு நேற்று விழுந்து விழுந்து படிச்சதுல மண்டை குழம்பி போச்சா.... என்று சிரித்து கொண்டே கேட்டவர் "இந்தா இதை சாப்பிட்டு போய் படி என்றார்".

அதனை வாங்கி கொண்டு குழப்பத்துனே வைஷு செல்ல ......
மகளை நினைத்து புண்ணகை மிளிர்ந்தது தாயிடம்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த வைஷு அம்மா ஸ்னாக்ஸ் தா என்று தக்ஷயானிடம் கேட்க....ஏய் இப்போ தானே டி கொடுத்தேன்,அதுகுள்ள அதை சாப்பிட்டியா நீ என்று சந்தேகமாகவே மகளை கேட்க.....

மகளுக்கு என்ன புரிந்ததோ உடனே அங்கிருந்து தனதரைக்கு ஒடி வந்தவள் தனது ஸ்கூல் பேக்கை பார்த்தவள் தனது இங்கிலிஷ் கொஸ்டின் பேப்பர் காணாமல் போயிருப்பதை கண்டு சிரிக்க ஆரம்பித்தாள் வைஷ்ணவி..

அவள் சிரிப்பதை அவளே விசித்திரமாக ஒளிந்து கொண்டு பார்த்து இருந்தாள் நேற்றில் இருந்து வந்த வைஷ்ணவி...

என்ன மாக்காஸ் புரியலையா அப்படியே கொஞ்சம் ரிவைன்ட் பண்ணி பாருங்க........

என்ன அம்மா மேக்ஸ எக்சம்னு சொல்லுறாங்க....என்று யோசித்தவள்🤔🤔🤔 நம்ம எக்சாம்க்கு தாப்ப கிப்பா படிச்சுட்டோமோ!.... ஓ மை காட் என்று மனதிற்குள்ளே அலறியவள்😱 எக்சாம் என்னிக்கு என்று பார்க்க பேக்கை எடுத்தவள் நோட்டை தேட ஆனால் கிடத்தது என்னவோ இங்கிலிஷ் கொஸ்டின் பேப்பர்.....நாளைய தேதி போட்டு இங்கிலிஷ் பேப்பர் சிரித்து கொண்டு இருக்க..... ஹே......என்று சந்தோஷத்தில் கூச்சல் போட...."ஆனால் அதற்குள் அவளின் வாயை பொத்தி அவளை இழுத்து மறைத்து கொண்டது அந்த உருவம்".

இன்றைய வைஷ்ணவி அந்த அறையை விட்டு நகர்ந்ததும்...இங்கே அந்த உருவம் நேற்றில் இருந்து வந்த வைஷ்ணவியை அழைத்து கொண்டு மீண்டும் சுழற்சி முறையில் இன்று வந்து விட்டு இருந்தனர்.

தனதறையில் அந்த உருவத்துடன் வந்து விழுந்த வைஷ்ணவி நிமிர்ந்து அந்த உருவத்தை பார்த்தவள் அப்படியே உறைந்து விட்டாள் அந்த சின்னஞ்சிறிய பெண்.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
கயிலை மலையிலே
பனி வாசம் வெகுவாக
வெள்ளிமலை சாரலில்
அழகாக மின்ன
வெள்ளிப் பனி
பாறையெல்லாம்
கனிந்து நிரம்ப
குளிரும் பனியில்
கதிரவன் எழும்ப
இருட்டும் வெளிச்சமும்
விட்டும் விடாமலும்
மப்பும் மந்தாரமுமாக
வெண் போர்வை
மெல்ல மெல்ல விலக
வெளிறிய போது
மஞ்சள் முகத்தான்
பட்டும் படாமலும்
பகட்டும் பகட்டாமலும்
அசையாமல் மௌனமாக
வெளி வரும் தோற்றம்
மனதிற்கு ஈடொன்னா
அமைதியை நல்க
கண் கொள்ளாக்
காட்சி கண் நிறைய.

சிம்லா குலு மணாலி.....மலைகளை மூடி இருக்கும் பனிகளை கண்டு வைத்த கண் வாங்காமல் ரிஷி பார்த்து கொண்டு இருக்க மற்ற மூவருக்கும் இது சாதாரணம் போல அதையேல்லாம் கண்டு கொள்ளாமல் சிதம்பரம் வண்டி ஓட்டி கொண்டு இருக்க மற்ற இருவரும் அவரவர் ஊர்களை பற்றி பேசி கொண்டு இருந்தனர்.

நமசிவாயம் "தம்பி நம்ம ஊரு தேனிக்கு கண்டிப்பாக நீங்க ரெண்டு பேரும் வரனும்,வரும் போது எனக்கு கால் பண்ணிடுங்க நான் வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன் என்றார்".

சிதம்பரம் சார் இங்கே சிம்லா ஓல்டு பஸ் ஸ்டாண்ட் ரோடு கிட்ட நிப்பாட்டீடுங்க அங்க இருந்து காட்டேஜ்க்கு நடந்து போனா கரெக்டா இருக்கும் என்று அகாஷ் சொல்ல, ரிஷியும் எதுவும் தெரியாமல் ஆமாம் என்று மண்டையை ஆட்ட.

அதனை பார்த்து இருந்த நமசிவாயத்துக்கு சிரிப்பு வர,சிரித்து கொண்டே நீ என் பெண்னை போல துறுதுறுனு இருக்க ரிஷி என்றார்

அதனை கேட்ட ரிஷிக்கோ கொஞ்சம் ஜர்க் ஆனவன் அப்படியே ஈஈஈ...என்று இழித்து வைத்தான்.

அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் வண்டி நின்றது.

இவர்கள் இருவரும் இறங்கி விட்டு அவர்களுக்கு கை அசைக்க...ஹேப்பி ஜர்னி மை பாய்ஸ் என்ஜாய் யுவர் டூர் என்று கூறிய நமசிவாயம் கண்ணடித்து சிரித்து கொண்டே அவ்விருவரிடமும் விடைபெற்றனர்.

$$$$$$$$$$$$$$$
22970
நிலா தேவி (சந்திரவதனா).

தன் முன்னே தேவதை போல் நின்று இருந்த அந்த அக்காவை(😊அதான் பெண்னை) பார்த்து சுற்றி சுற்றி வந்தாள் வைஷ்ணவி.

அக்கா யாரு நீங்க?எப்படி வந்திங்க!இங்கே என்ன நடக்குது!என்று தேவதை பெண்ணவளை பார்த்து வைஷ்ணவி கேட்க?

நீ தானே உனக்கு கொஸ்டின் பேப்பர் கிடைச்சா பாஸ் ஆகிடுவேன் சொன்ன அதான் உனக்கு கொஸ்டின் பேப்பர் எடுக்க ஹெல்ப் பண்ணேன்.

ஆமா நான் கொஸ்டின் பேப்பர் கேட்டது உங்களுக்கு எப்படி தெரியும்?என்று புருவத்தை உயர்த்தி கேட்டவள்?"ஹெ நீ புள்ளை பிடிக்குற பொண்ணு தானே இரு உன்னை இப்பவே அம்மா கிட்ட சொல்லுறேன் என்று ஓடப்பார்தாள்".

ஹே எங்க ஓடுற வைஷ்ணவி ஓடாத நில்லு என்ற தேவதை பெண் இவள் அருகில் வர.

வைஷுவோ தேவதை பெண்ணவளின் சக்தியை தெரியாமல் ஓடுகிறேன் பேர்வழி என்று ஒரே இடத்தில் ஓடிக்கொண்டே இருக்க....தன் அருகில் வந்த (தேவதை அக்கா) தன்னை பிடித்தவுடன் தான் நின்றாள் வைஷு.
உனக்காக நான் எக்சாம் பேப்பர் எல்லாம் எடுத்து கொடுத்தா நீ என்னையே உங்க அம்மாகிட்ட மாட்டிவிடுவேன் சொல்லுற!என்று கேட்டவள் வைஷுவை முறைத்து பார்க்க....

சரி நான் அம்மாட்ட சொல்ல கூடாதுனா நீ யாருணு என் கிட்ட சொல்லு!

ம்ம்ம் நான் சொன்ன உனக்கு புரியுமா புரியாதானு தெரியலை இருந்தாலும் சொல்லுறேன் கேட்டுக்கோ....நான் காலப் பயணம் செய்யகூடியவள்.

அப்படினா என்ன?

நான் நாளைக்கு போவேன்,இன்னிக்கு வருவேன் நேற்றைக்கு கூட போவேன்! இப்போ புரியுதா உனக்கு வைஷு.

ஹே.....அப்பனா இன்று நேற்று நாளை படம் போல தானே!என்று கூறியவள் கேக்க பிக்கே என்று சிரிக்க.....

ம்....கிட்டத்தட்ட அப்படி தான் வைஷுகுட்டி.

அமா நீங்க யாரு?எப்படி இங்கே வந்திங்க?உங்க பேர் என்ன?

நான் நிலவின் தேவி சந்திரவதனா,நான் எப்படி வந்தேனு நீ பெரிய பெண் ஆனதும் சொல்கிறேன் என்றாள் சந்திரவதனா(நிலவின் தேவி இன்று முதல் நிலா தேவியாக அழைக்க படுவாள்)

ஓ... சரி எனக்கு இப்போ செஞ்ச மாதிரி ஹேல்ப் நான் கேட்கும் போதுலாம் செய்வேனு பிராமீஸ் பண்ணு....நான் அம்மா கிட்ட உன்னை பத்தி சொல்ல மாட்டேன் நிலா தேவி என்று வைஷு பிலக்மெயில் செய்ய!....

சிரித்து கொண்டே தானும் சத்தியம் செய்தாள் நிலவு பெண்.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 7
23201
வைஷ்ணவி
23202
ஆகாஷ்

தன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டவனை கோபமாக முறைத்து கொண்டு இருந்தாள் வைஷ்ணவி.

ஏய் பணத்துக்காக தானே வேசம் போட்ட,எந்த கம்பேனி உனக்கு காசு கொடுத்தது சொல்லு டி என்ற ஆகாஷ் கழுத்தை நெரிக்க...

அய்யோ நிலா வந்து காப்பாத்து டி.....இந்த கொலை காரப் பாவிக்கிட்ட இருந்து என்று மனதில் அரற்றியவள் தன் நகத்தினால் அவனை கீறி தன்னை விடுவிக்க‌ முயன்றாள்.

அவளை விடுவித்தவன் அதே குறையாத கோபத்துடன் அந்த சோபாவில் அமர்ந்தான் "ஆகாஷ்".

ஹலோ பணத்துக்காக உங்கூட வந்திருந்தேன்னா எதுக்கு என் பணத்தை எடுத்து உங்களுக்கு செலவு பன்னனும்.... என்னோட பாதுகாப்புக்காக தான் நான் ஆண் வேடம் போட்டேனே தவிர மத்த எந்த காரணமும் இல்லை.. என்றவள்
உன்னை போனா போகுதுன்னு காப்பாத்த வந்தா நீ என்னையே சாவடிக்க பாக்குரியா?
என்று வைஷ்ணவி கத்தினாள்.

ஏய் நான் உன்னை காப்பாத்த சொல்லி கேட்டானா டி என்றவன் பூச்சாடியை கிழே தள்ளிவிட......

தானும் அங்கிருந்த கண்ணாடி பொருளை உடைத்தவள்! நான் மட்டும் அந்த நேரத்துக்கு வரலை அங்கயே உன்னோட கதை முடிஞ்சு இருக்கும்!இப்போ பேசுரியே இந்த வாய்கூட உனக்கு இருக்காது டா என்க....

உடனே எழுந்தவன் வைஷுவை அடிக்க வர....ஹோ.....அடிக்க வரியா வாடா என்றவள் அங்கிருந்த கத்தியை எடுத்து அவனை சொருக வர...

ஹே என்னடி...காப்பாத்த வந்தேன் சொல்லிட்டு என்னை சாகடிக்க வர என்று மிரட்சியுடன் ஆகாஷ் கேட்க....

நான் தானே உன்னை காப்பாத்துனன் அப்போ நானே போட்டு தள்ளிடுரேன் என்றவள் கத்தியை வயிற்றை நோக்கி குத்த வர....

தனக்கு எதுவும் நேராமல் இருப்பதை உணர்ந்து கண்ணை திறந்த ஆகாஷ் கண்டதேன்னவோ சாந்தஸ்வரூபிணியான வைஷ்ணவியை தான்.....

அவ்ளோ பயம் இருக்குல!எதுக்கு நான் சொல்லுவது கூட புரிஞ்சுகாம கோபப்படுற... உன்னை கண்டிப்பாக ஏமாற்றனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை, உனக்கு தான் பொண்ணுங்கனாவே பிடிக்காது சொல்லிட்டு தான் நான் இதுபோல வந்தேன், பட் நான் உன்னை காப்பாத்த வந்த காரணம் உன்மை,அதை மட்டும் நல்லா புரிஞ்சுக்கோங்க ஆகாஷ் சார் என்றவள் அந்த கட்டிலில் போய் படுத்து கொண்டாள்.

ஆகாஷோ அவள் படுத்தவுடன் தன்னுடைய ருமை விட்டு அகன்றவன் சோபாவில் அமர்ந்து கொண்டு இங்கு வந்ததிலிருந்து நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்க்க ஆரம்பித்தான்.

சிம்லா வில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு ரிஷியுடன் வந்தவன்,தன் வீட்டின் காலிங் பெல்லை ஆகாஷ் அடித்தான்.

அந்த இரவு நேரத்தில் தன் வீட்டின் அழைப்பு மணியின் ஓசையைக் கேட்டு ஒன்றும் புரியாமல் எழுந்து வந்தார் ஷாலினி, வெளிலைட்டை ஆன் செய்து திரைசிலை வழியாக பார்த்தவர் யார் என்று குரல் கொடுக்க...

அம்மா நான் தான் ஆகாஷ் வந்ருக்கேன் கதவை திறக்கம்மா என்று ஆகாஷ் குரல் கொடுக்க....

அவருக்கோ நான்கு வருடங்கள் கழித்து கேட்கும் மகனின் குரலில் கண்கலங்கியவர் கதவை திறந்து மகனை அனைத்து கொண்டு ஹோ... வென்று அழுக ஆரம்பித்தார்.

அவனுக்கும் நான்கு வருடம் கழித்து பார்த்த தாயை அனைத்து ஆறுதல் கூறியவனுக்கு மனதில் சொல்லாத வலி.

ஆண்டி எவ்வளவு நேரம்தான் இந்த குளிரிலே நிக்குறது, வாங்க ஆண்டி வீட்டுக்குள்ள போலாம் என்று ரிஷி சொல்ல...

அவரும் அப்போது தான் உணர்வு வந்தவர் தன் மகனையும் அவனின் நன்பனான ரிஷியையும் வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

டேய் கண்ணா எப்படி இருக்க டா?அம்மாவ பார்க்க உனக்கு 4வருஷம் அச்சா என்றவர்.அப்பாக்கும் உனக்கும் பிரச்சினையா இருந்தா அம்மாகிட்ட கூட பேசமாட்டியா!

ச்ச்ச் அம்மா எதுவா இருந்தாலும் மார்னிங் பேசலாம் இப்போ போய் துங்குங்க என்றவன் தன் தாயை அறைக்கு போகச் சொல்ல...

தனதரைக்குள் போகப்போன ஷாலினி என்ன நினைத்தாரோ கண்ணா சாப்பிட்டியா?

"வருகிறவழியிலே சாப்பிட்டோம் மா சோ டோன்ட்வரி மா" என்று அன்னையை பார்த்து சிரித்த படியே கூறியவன் தனதரைக்கு ரிஷியை அழைத்து சென்றான் ஆகாஷ்.

நான்கு வருடங்கள் முன் எப்படி அவன் அறையை விட்டு விட்டு சென்றானோ, அப்படியே இருக்கும் தனது அறையை நினைத்து சிறுமுறுவல் புரிந்தவன்,அப்படியே கட்டிலில் சாய.....

"நீங்க இங்கே தூங்குனா! நான் எங்க பாஸ் தூங்குறது"என்று ரிஷி கேட்க!

டேய் அதான் பக்கத்தில இவளோ இடம் இருக்குல வந்து படுடா...

என்னால உங்ககூடலாம் தூங்க முடியாது பாஸ், எனக்கு வேற ரும் தாங்க இல்லைன்னா ஹாலில் போய் நான் படுத்துக்குறேன்.

பச்.... என்னடா உன்னோட பிரச்சினை என்று ஆகாஷ் கடுப்புடன் கேட்க!

நீதான் டா என்னோட பிரச்சினை! என்று ரிஷி பட்டென்று சொல்ல!

வாட்!.... என்று ஆகாஷ் அதிர்ச்சியாக கேட்க.

நானும் எத்தனை நாளுதான் ஆம்பிளை வேஷம் போட்டு ஆம்பிளை பிள்ளையா நடிக்கிறது,என்னால முடியலை அதனால உங்ககிட்ட உண்மைய சொல்லிடலாம்னு முடிவு பன்னிட்டேன் என்று ரிஷி கூற.

"என்னடா லூசு மாதிரி ஆம்பிளை வேஷம் அது இதுன்னு ஏது ஏதோ உலறுர"என்று ஆகாஷ் கேட்க.

நான் எதுவும் உலறல ஆகாஷ் சார், நான் சொல்லுரது எல்லாம் உன்மை என்றவன் என்னோட பெயர் வைஷ்ணவி,ரிஷின்ற பெயர் என்னோட அண்ணனோடது என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே......

"கோபத்தில் வைஷ்ணவியை ஓங்கி அரைந்திருந்தான் ஆகாஷ்".

இர்ரிடேடீங் இடியட் உலகத்துல பெண்களுக்கு எத்தனை ஆபத்து வருது,இவ என்னடான்னா என்னை காபாத்த இப்படி வந்துருக்கா! நாளைக்கு எது செய்யறோமோ இல்லையோ இவளோட மொத்த டீட்யல்ஸும் இவக்கிட்ட இருந்து வாங்கனும் என்றவன் அதன் பிறகே நிம்மதியுடன் உறங்கினான்.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
23989
ஹாய் மக்களே எல்லாருக்கும் 🇮🇳குடியரசு🧡⚪💚 தின நல்வாழ்த்துக்கள்🙏😁
சாரி செல்லம்ஸ் திடீரென exam வந்திடிச்சு சரி exam முடிச்சுட்டு அத்தியாயம் போடலாம்ன்னு பார்த்தா அது எழுதுறதுக்கு டயம் ஆகிடிச்சு சோ சாரி மக்காஸ்😪 இனிமே கரெக்டா எபிசோட் போடுறேன் இந்த சின்னப்பிள்ளைய உங்க பிள்ளையா நினைச்சு மன்னிச்சுபையிங் மக்களே😉😅😅😅😅
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 823993

அந்த அழகிய காலைப் பொழுதில் பனிகளை ரசித்தபடியே அந்த மலை மேட்டில் ஆகாஷூடன் அமர்ந்து கொண்டு இருந்தாள் வைஷ்ணவி.

நீ என்கூட இருந்த இந்த ஒன்பது நாளும் எப்படி பாஸ்டா ஓடிச்சுன்னு கேட்டா கண்டிப்பா என்கிட்ட பதில் இல்லை வைஷ்ணவி, "ஆனால் நீ என்னோட உயிரை காப்பாற்ற வந்த தேவதை டி நீ" என்று நெகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்தான் "ஆகாஷ்".

என்ன ஆகாஷ் சார் கண்ணுலாம் வேர்குது, அந்த அளவுக்கா எமோஷனல் ஆகிட்டேனா நானு...என்று புருவத்தை உயர்த்தி சிரிப்புடனே கேட்டாள் வைஷ்ணவி!

அதுக்கும் மேலேயே ஆகிட்ட நீ! என்று கூறியவன்,ஆமாம் உன்னோட பூயூச்சர் ஹஸ்பேண்டோட லவ்வர எப்படியோ காப்பாத்திட்ட,அப்போ உன்னோட லைப்க்கு என்ன பதில்? நீயும் அந்த ஜீவாவ லவ் பண்ணிருப்பல! என்று தனது சந்தேகத்தை கேட்டான் ஆகாஷ்.
அட போங்க ஆகாஷ் சார் நானுலாம் அவர லவ்லாம் பண்ணல, ஏதோ எங்க தாத்தாவும் அப்பாவும் சொன்னாங்கனு ஓரே காரணத்துக்காக மேரேஜ்க்கு ஓகே சொன்னேன்.

ஹொ..... ஆனால் அவங்க இரண்டு பேரும் தான் சூப்பரான கபுல்ஸ் என்று வைஷ்ணவியை ஓரக்கண்ணால் பார்த்த படியே கூறியவன்,அவளின் எதிரோலியை பார்க்க!

ஆனால் வைஷ்ணவியோ நானும் ஜீவாகிட்ட இதை தான் சொன்னேன் அஞ்சலிய பார்த்த பிறகு என்று சிரித்து கொண்டே சொன்னவள், தனக்கும் ஜீவாவிற்கும் திருமணம் முடிவான தினத்தை பற்றி கூற ஆரம்பித்தாள் "வைஷ்ணவி".

ம்மா... எனக்கு இப்போதைக்கு மேரேஜ் வேண்டாம்மா பிளீஸ்..... நீங்கள் எல்லோரும் சொன்னிங்கன்ற ஒரே காரணத்திற்காக தான் நான் ஆசையா கஷ்டப்பட்டு படிச்சு செலக்டான போலிஸ் போஸ்டக்கூட விட்டுட்டு வந்துட்டேன், இப்போ என்னடான்னா கல்யாணம் பண்ணிக்க சொல்லிறிங்க! அந்த மலை மாடு ரிஷி என்னைவிட ஏழுவயசு பெரியவன் தானே அவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வைங்க, நானுலாம் பண்ணிக்கமாட்டேன் என அந்த வீடே அதிரும் படி எல்லோரிடமும் கத்தி கொண்டு இருந்தாள் வைஷ்ணவி.

ஏய் அண்ணன என்னடி மரியாதை இல்லாம பேசுற! உன்னை இப்படியே விட்டா இன்னும் என்னென்ன பண்ணுவியோ, அதனால நாங்க எல்லாரும் முடிவு பண்ணிட்டோம் உன்னை கல்யாணம் பண்ணி வீட்டைவிட்டு தொரத்துறதுனு அதனால நொய்யு நொய்யுனு எதுவும் பேசாமல் போய் ரெடியாகு போடி என்று தனது மகளை அதட்டி கொண்டு இருந்தார் தக்ஷயானி.

தன் அன்னையை திட்டி கொண்டே ரெடியாகியவள் தன்னை பெண் பார்க்க வந்தவர்களை ஏனோ தானோ வேன்று பார்த்தவள் தனதறைக்கு செல்ல....

அதற்குள் மாப்பிள்ளை பெண்ணிடம் பேசவேண்டுமாம் என்று அங்கிருந்தவர்கள் சொல்ல,தக்ஷயானி தன் கணவரை பார்க்க....மாறனோ மகளை தோட்டத்திற்கு அழைத்து செல்ல சொன்னார்.

"வந்துருக்குற மாப்பிள்ளை பையன் உன்கிட்ட ஏதோ பேசனுமாம், ஏதாவது ஏடாகூடமாக வாயாடாம அமைதியா இரு என்று கூறி , தோட்டத்தில் தனது மகளை விட்டுவிட்டுச் சென்றார் தக்ஷயானி"

இங்கு வந்தவனோ வைஷ்ணவியை பார்க்காமல் வேறெங்கோ பார்த்தபடி அவன் பேசவேண்டியதை கடகடவென்று ஒப்பித்து கொண்டு இருந்தான்,அதனை பொறுமையாக கை கட்டி கேட்டவள், "உங்கள் பெயர் என்ன என்று அவனை பார்த்து கேட்க?"

அவனோ ஙெ.... என்று அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்! யார்ரா இவள் மாப்பிள்ளை பார்க்க யார் வராங்கனுகூடவா தெரியாம வந்து நிற்ப்பா என்று மனதில் நினைத்ததை அப்படியே அவளிடம் கேட்க?

எனக்கு வேண்டாம் நினைச்சு கேட்கலை!இப்போ உன்னோட கதையை கேட்டு ஓகே சொல்லலாம் நினைக்குறேன் உனக்கு எப்படி என்று அவள் புருவத்தை உயர்த்தி கேட்க!

சிரித்து கொண்டே தனது பெயரை ஜீவா என்று சொன்னவன் ப்ரெண்ஸ் என்று சொல்ல, அவளும் ப்ரெண்ட்ஸ் என்று கைக்குலுக்கியவள்,"உங்கள் லவ் ஸ்டோரி ரியலி சூப்பர் ஜீவா நெகிழ்ச்சியுடன் கூறினாள் வைஷ்ணவி".

ஜீவாவும் வலி நிறைந்த கண்களுடன் சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றவன் தனது பெற்றோர்களிடம் தலையசைத்து திருமணத்திற்கான தனது சம்மதத்தை தெரிவித்தான் ஜீவா.

அவர்களும் திருமணத்தை உறுதி செய்ய அன்றே நிச்சயம் வைத்து ஐந்து மாதம் கழித்து திருமணம் என்று சொல்லி முடிவேடுத்தனர்.

ஹெ.... நிப்பாட்டு நிப்பாட்டு உங்கள் ஊருல திருமணம் செய்ய போறாங்கனா மாப்பிள்ளைய பற்றி விசாரிக்க மாட்டாங்களா? என்று தனது அதி முக்கியமான கேள்வியை ஆகாஷ் கேட்க.

எங்க அப்பா, அண்ணா, தாத்தா எல்லாருமே ஜீவாவ பற்றி விசாரிச்சுட்டு எனக்குனு முடிவு பண்ணப்பிறகு தான் வீட்டிற்கே வரவெச்சாங்க என்று கெத்தாக கூறியவள் அடுத்து ஏதாவது கேள்வி உள்ளதா என்பதை போல் அவனை பார்க்க!

இப்போ அஞ்சலிய காப்பாற்றி அஞ்சலிக்கும் ஜீவாவிற்கும் திருமணம் செஞ்சு வேச்சுட்டியே , அங்கே புயூட்சர்ல இதுனால பல மாற்றங்கள் உன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து இருக்குமே என்னப் ‌பண்ணப்போற?

"எல்லாத்திற்கும் ஏதாவது வழி கிடைக்குற மாதிரி இதற்கும் ஏதாவது வழி கிடைக்கும் பார்கலாம்" என்றவள் எழுந்து கொண்டு, ஷாலினி ஆன்டி இன்னிக்கு ஜுவாலாமுகி டெம்பிள்க்கு கூட்டிட்டு போறேன் சொன்னாங்க சோ... இதுக்கு மேல என்கிட்ட கதை கேட்காம என்கூட வாங்க ஆகாஷ் சார் என்ற‌ வைஷ்ணவி முன்னே நடக்க, தன் தலையை கோதி கொண்டே தானும் பின் தொடர்ந்தான் ஆகாஷ்.

@@@@@@@@@@@

டேய்... உன்னை நம்பி,நீ பாத்துகுறேன் சொன்னதால தானே உன்னோட தங்கச்சி அஞ்சலிய உன்னோட பொறுப்புல விட்டுட்டு நான் லண்டனுக்கு வந்தேன்,"ஆனால் அங்க அவளுக்கும் அந்த பிச்சைக்கார பய ஜீவா கூட கல்யாணமே ஆகிடிச்சாம்!நீ அங்கே அண்ணனா இருந்து என்ன பண்ணுற?இல்லை நீ தான் அவளுக்கு கல்யாணம் பண்ணிவெச்சியா!"

இல்லை "பப்பா" எப்படி இந்த கல்யாணம் நடந்தததுனு எனக்கு சுத்தமாக தெரியலை என்று தன் தந்தைக்கு பயந்து குரலை இறக்கி கூறினான் அஞ்சலியின் அண்ணன் கௌரவ் கபூர்.

உன்னை நம்பி தொழில் கொடுத்தேன்,தொழிலை இரண்டாவது இடத்துக்கு கொண்டு வந்துட்ட,சரி தங்கச்சியாவது ஒழுங்கா பார்த்துப்பனு பார்த்தா அதையும் சரியாச் செய்யல,அதனால இப்போ நானே பார்த்துகுறேன்!நீ குறுக்குல புகுந்து எதையும் செய்யாம இருந்தாலே போதும் என்று கோபத்துடன் சொல்லி மொபைலை கட் செய்தார் "நிதின் கபூர்".

தன் தந்தை இப்படி சொல்லியது கௌவ்ரவிர்கு ஏதோ ஒரு வகையில் தன் தங்கையை நினைத்து பயம் வந்தது,உடனே தனக்கு நம்பிக்கைக்குரிய நபரிடம் விஷயத்தை வாங்கியவன் ஹெலிகாப்டரில் ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள ஜுவாலாமுகி கோவிலுக்கு செல்லத்துவங்கினான்.


@@@@@@@@@

23994
ஜுவாலாமுகி (Jawalamukhi), இந்தியாவின் இமாசலப் பிரதேசத்தில் காங்ரா நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், தரம்சாலாவிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கீழ் இமயமலையில் ஜுவாலாமுகி தேவி கோயில் உள்ளது.
சிவபெருமான் சக்திதேவியின் பூத உடலை தூக்கிக்கொண்டு கோரத் தாண்டவம் ஆடியபோது சக்தி தேவியின் உடலானது சிதைக்கப்பட்டு இந்த பூமியில் 51 இடங்களில் சக்தி பீடமாக விழுந்தது. அவற்றுள் ஜுவாலாமுகி ஒன்பதாவது இடமாக விளங்குகின்றது. சக்தி தேவியின் நாக்கு பகுதி விழுந்த இடம்தான் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள இந்த ஜ்வாலாமுகி திருத்தலம்.


சிம்லாவில் இருந்து ஐந்து மணி நேரப் பயணத்தில் ஜுவாலாமுகி கோவிலுக்கு வந்திறங்கினர் ஆகாஷ், வைஷ்ணவி, ஷாலினி மற்றும் ரவிந்தர்.

வைஷ்ணவி "ஆண்டி நீங்கள் எப்பவும் நவராத்திரி ஒன்பதாவது நாள் இந்த கோவிலுக்கு வருவிங்கலா ஆண்டி?".

ஆமாம் டா வைஷு! நவராத்திரி எட்டு நாளும் வீட்டிலேயே விரதம் இருந்து பூஜை செஞ்சாலும் ஒன்பதாவது நாள் மட்டும் கண்டிப்பா இங்கே வந்துடுவேன் என்றவர் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டை தேட....

என்னாச்சு ம்மா... என்ன தேடுறிங்க?... "ஆகாஷ்".

ஆண்டி பூஜை தட்டு‌ என்கிட்ட இருக்கு வாங்க ஆண்டி என்றவள் ஆகாஷை கண்டு கொள்ளாமல் ஷாலினியை அழைத்து கொண்டு முன்னாடி செல்ல!

இங்கே தந்தையும் மகனும் இந்த நான்கு வருடப் கோபம் மற்றும் பிரிவில் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் சங்கடத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

இந்த சங்கடம் எதுவும் இல்லாமல் இந்த கோவிலை பற்றிய அறிய ஷாலினியிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தாள் வைஷ்ணவி.

ஷாலினியும் தனக்கு தெரிந்ததை சொல்வதற்கு ஆள் வந்துவிட்ட மகிழ்ச்சியில் கணவரையும் மகனையும் மறந்தவர் கோவிலின் விஷேஷ்ஷங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

இந்தத் திருத்தலத்தில் சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள். காலம் காலமாக இந்த இடங்களில் இருக்கும் பழமையான பாறையின் இடுக்குகளில் இருந்து நீலநிறமான தீ ஜுவாலைகள் இயற்கையாகவே அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றது. இப்படி ஒன்பது இடங்களில் எரிந்து கொண்டிருக்கின்ற தீ ஜுவாலைகளை தேவியின் வடிவம் என்று கருதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் சக்தி தேவியானவள் காளிதேவி ரூபத்தில் காட்சி தருகின்றார். இந்தப் பாறைகளின் இடுக்கில் எறியப்படும் தீயானது எப்படி எரிகின்றது என்பது இதுவரை யாரும் அறியப்படாத ஒரு ரகசியமாகவே தான் இன்றளவும் இருந்துவருகிறது.

இந்த கோவிலில் அபிஷேகம் எல்லாம் இல்லை வைஷு பூவால் அர்ச்சனை மட்டும் தான் நடக்கும் என்றவர் சுவாமி (ஜுவாலைய) தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர்.

அதே நேரம் "அஞ்சலி" நாம எவ்வளவு பெரிய பிரச்சினையில் இருக்கோம், நீ என்னடான்னா இந்த கோவிலுக்கு வந்தே ஆகனும்னு அடம்பிடிச்சி என்னையும் கூட்டிட்டு வந்துட்ட என்று தன் மனதின் படபடப்புடனும் வரிசையில் நிற்கின்ற கடுப்புடனும் தன் துணைவியிடம் மனதில் இருப்பதை கொட்டிக் கொண்டு இருந்தான் "ஜீவா".

பேசிட்டிங்களா.... நம்ம கல்யாணம் நல்ல படியாக நடந்தா இந்த கோவிலுக்கு வரேன்னு வேண்டிட்டு இருந்தேன்,அதான் நாம சென்னைக்கு போகுறதுக்கு முன்னாடி இங்கே வந்துட்டு போயிடாலாம்னு உங்களையும் கூட்டிட்டு வந்தேன் என்றவள் முகத்தை சுளித்து சொல்ல.

பச்.... நான் அதுக்கு சொல்ல அஞ்சலி எப்ப வேணாலும் நமக்கு உங்க அப்பாவாலும், அண்ணாவாலும் ஆபத்து வரும்மா,அதனால தான் சீக்கிரமா இந்த இடத்தை விட்டு போகனும்னு நினைக்குறேன்.

ஏன் நாம இங்கே இருந்து சென்னைக்கு போனாக்கூட எங்க அப்பாவாளையும், அண்ணாவாளையும் எந்த ஆபத்தும் நமக்கு வராதா? எங்க போனாலும் வரும் தானே! அப்போ நம்மால் என்ன செய்ய முடியும் "அஞ்சலி".

உனக்கு சொன்னாப் புரியாது! எவ்வளவு சீக்கிரம் இங்கே இருந்து போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாம் இங்கே இருந்து கிளம்பனும் என்றவன் அந்த கடவுளை வேண்டிக் கொண்டே முன்னேச் சென்றான்.

@@@@@@@@@@@

ஹெலிகாப்டரில் இருந்து வந்திறங்கிய கௌவ்ரவ் தன் தங்கை அஞ்சலியையும் அவன் கணவன் ஜீவாவையும் தன் தந்தையிடமிருந்து காப்பாற்ற காங்ராவிற்கு வந்திறங்கியவன் ஜுவாலாமுகி கோவிலுக்கு அந்த ஜீப்பில் விரைவாக செல்லத்துவங்கினான்.

ஆனால் இவனுக்கு முன்னால் அவனுடைய தந்தையின் ஆட்கள்,அந்த கோவிலின் வாசலில் இவர்கள் இருவரையும் போட்டு தள்ள காத்து கொண்டு இருக்க! கோவிலின் உள்ளே இருக்கும் தாயோ இதை எல்லாம் மென்னகையுடன் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள், அந்த காலத்தையே வசப்படுத்தும் காளி தேவியான ஜுவாலா தேவி.PhotoEditor_2021126215524993.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top