All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜனனிராமகிருஷ்ணனின் "காலத்தின் தேவி காதலுடன் அவன்" - கதை திரி

Status
Not open for further replies.

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
24284
கலீபா

காலம் 9

ஒரு வழியாக கூட்டநெறிசலில் சுவாமி தரிசனம் பார்த்து வெளியே வந்த ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு நிம்மதி அவர்களையும் அறியாமல் குடிக்கொண்டு இருந்து.

ஆகாஷ் தன் தாயையும் தந்தையையும் தங்களுடைய காரில் அமரச் சொன்னவன், கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த அஞ்சலி மற்றும் ஜீவாவுடன் பேசிக்கொண்டு இருந்த வைஷ்ணவியை நோக்கி சென்றான்.

ஹாய் bro.... என்று ஜீவா அங்கு வந்து கொண்டிருந்த ஆகாஷை நோக்கி கையை அசைக்க.....

அதனை கண்டுக்கொல்லாத ஆகாஷ் என்னாச்சு வைஷு? எதற்கு இவங்க இரண்டு பேரும் இங்கே நிற்கிறாங்க! சென்னைக்கு தானே போகப்போறதா சொன்னாங்க! வாட் பிராப்லம்? என்று வைஷ்ணவியிடம் கேட்டவன், கேள்வியாக அஞ்சலியை நோக்க!

மலையை விட்டு கிழே இறங்கியவுடன் சென்னைக்கு போகுறதா தான் பிளான் இருந்துச்சாம்,இப்போ பார்த்தா கார் பஞ்சர் ஆகிடிச்சாம் என்ன பண்ணுறதுனு தெரியாம நிற்குறாங்க ஆகாஷ் சார், என்றாள் வைஷ்ணவி கவலையுடன்.

சரி நம்ம வண்டியில் இப்போ ஏறச்சொல்லு,போகுறவழியில் நான் இவங்களுக்கு வேற வண்டி ஏற்பாடு பண்ணுகிறேன் என்ற ஆகாஷ் நிற்க...

வேண்டாம் ஆகாஷ் நீங்கள் இதுவரை செய்த உதவியே ரொம்ப பெரிசு,அதனால இதுக்கு மேல நான் பார்த்துகுறேன் என்று கூறிய ஜீவா, அங்கு இருந்த கல் மேடையில் அமர்ந்து தலையை பிடித்து யோசிக்க ஆரம்பித்து இருந்தான்.

ஜீவா கூறியதில் கோபம் அடைந்த ஆகாஷ்,யூ இடியட் நீ பெரிய இவனா டா....உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா, அதைக்கூட யோசிக்காம நீயே பார்த்திப்பியா! எப்படி பார்த்துப்ப?ஒழுங்கா இரண்டு பேரும் வந்து வண்டியில் ஏறுங்க! என்றவன், இதுக்கு எல்லாத்துக்குமே காரணமான இவளை தான் முதலில் உதைக்கனும் என்று வைஷ்ணவியை பார்த்து சத்தமாக சொன்னவன் யாரையும் பார்க்காமல் வேகமாக காரை நோக்கி சென்றான்.

நான் என்னத்த பண்ணேன்!என்னையை கோபமாக கத்திட்டு போறான் பன்னி என்று கண்ணையையும் உதட்டையும் சுழித்து வைஷ்ணவி திட்டியவள், அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்தாள்.

நீ எதுக்கு எங்களை முறைச்சு பார்க்குற வைஷு.... நாங்கள் என்ன பண்ணோம்! என்று அப்பாவியான முகப்பாவத்துடன் ஜீவா கேட்க!

டேய் நாயே உன்னோட அப்பாவியான முகத்தை பார்த்து போனாப் போகுதேன்னு உன்னை இவக் கூட சேர்த்து வைக்க கூட்டிட்டு வந்ததுனாலே இந்த அல்ஷேஷன் நாய்லாம் என்ன கத்திட்டு போகுது... என்று கோபமாக தொடங்கியவள் சோகமாக முடிக்க...

காரில் அமர்ந்த ஆகாஷ் காரின் ஹாரனை விடாமல் அடித்து கொண்டே இருக்க.....

இதோ ஹாரன் அடிச்சுட்டே இருக்குறான் பாரு வாங்க போயுடலாம் இல்லைனா கடிச்சு கிடிச்சு வெச்சுட போறான் என்ற வைஷ்ணவி இவர்களை இழுத்து கொண்டு காரை நோக்கி நடந்தாள்.

@@@@@@@@@@

தனதறையில் நிலா தேவியுடன் டிவி பார்த்துக் கொண்டு இருந்த வைஷ்ணவி....... ஆனாலும் இந்த ஜீவாவோட லவ்வர் அஞ்சலி இப்படி அநியாயமா இறந்து போய் இருக்க கூடாது நிலா அக்கா....

ம்ம்ம்ம்ம்........

கேட்ட எனக்கே இப்படி வலிக்குதுனா......காதலிச்ச ஜீவாவுக்கு எப்படி வலிச்சுருக்கும்.......

அதனால நாம என்ன செய்ய முடியும் வைஷு? அந்த பெண்ணோட விதி அவ்வளவு தான் விடு!இனி உன்னோட வாழ்க்கை ஜீவாக்கூட தான் , அதனால நீ அவனை நல்லாப் பார்த்துக்கோ என்ற நிலா தேவி டி.வியை பார்க்க ஆரம்பிக்க...

என் செல்ல அக்கால நீ! உன்னால மட்டும் தான் இதை எல்லாத்தையும் மாத்த முடியும் நீ மாத்தேன்.... என்றாள் வைஷு.

இல்லை வைஷு நான் உனக்காக காலத்தை மாத்துனா!உன்னை சுற்றி இருக்குற எல்லாரோட வாழ்க்கையும் மாறும்! அப்படியே மாறினாலும் அது சந்தோஷமாக இருந்தால் சரி,அதுவே கண்ணீராகா மாறினால்!அந்த ஆதி சக்தி தாயே என்னை மன்னிக்க மாட்டார்கள்,என்று கண்ணை மூடிக்கொண்டு கூறினாள் நிலா தேவி.

எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை நிலா அக்கா....... வைஷ்ணவி

அப்படி என்றால் நீ உனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று கூறிவிடு"நிலா தேவி".

பச்..... ஜீவாகிட்ட சரி சொல்லிட்டேன் அப்பா, அம்மா, பாட்டி,தாத்தா,அண்ணா எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு நான் என்ன பன்னுறது என்று சோகமாக புலம்பிய வைஷு டிவியில் ஓடிக்கொண்டு இருந்த நீயூஸை அதிர்வுடன் பார்த்து கொண்டு இருந்தாள்.

@@@@@@@@@@@@@

அந்த மலைச் சாலையில் தன்னோட காரை வேகமாக ஓட்டிக் கொண்டே அலைபேசியில் வேறொருவருக்கு பல கட்டளைகளை இட்டுக் கொண்டே வந்தான் ஆகாஷ்.

தீடீரென கார் வேகம் எடுக்கவும் தன்னுடைய தூக்கத்தை கலைத்த வைஷ்ணவி என்னவென்று ஆகாஷை கேட்க....

அவனோ தங்களுக்கு பின்னாடி தொடர்ந்து வரும் இரண்டு கார்களை கண்களால் காட்டியவன் , இன்னும் அதிக வேகமாக காரை ஓட்டினான்.

பையா.... முன்னைவிட அந்த கார் இன்னும் வேகமாக போகுதே,நாம அவங்களை பின் தொடர்ந்து வரது அவங்களுக்கு தெரிஞ்சு இருக்குமோ! அதான் அவங்க இன்னும் வேகமாக போறாங்களோ"என்று அந்த அடியாள் கேட்க!

ம்ம்ம்ம்ம் ஆமாம் டா அப்படி தான் இருக்கும்,அதனால அந்த காரையே துக்கிடலாம் என்றவன் அந்த காரை மலையில் இருந்து கிழே தள்ளிவிட தங்களுடைய காரை அவர்களை நோக்கி வேகமாக செலுத்தினர்.

டேய் ஆகாஷ் எதுக்கு இப்படி கார வேகமாக ஓட்டுர மெதுவா போட என்றார் ரவிந்தர்.

அதே நேரம் தங்கள் காரை சடனாக நிப்பாற்றிய ஆகாஷ் அனைவரையும் இறங்கச் சொல்லியவன் , அங்கு வந்த வேறோரு காரில் அவர்கள் அனைவரையும் அமரச் சொன்னவன்,தன்னை ஏறிட்ட அன்னையை ஒன்றும் இல்லை என்று கண்களால் சமாதனம் செய்தவன், அவர்களை அங்கிருந்து கிளப்பினான்.

அவனுக்கு ஏதோ நடக்க கூடாத ஒன்று நடக்க போவது போல் தொன்றிக்கொண்டே இருக்க....அதே நேரம் தங்களை பின் தொடர்ந்து வந்த கார்களை பார்த்தவன்,ஏதோ சரியில்லை என்பதை கூற.... இதனால் தன்னவர்களுக்கு எதுவும் ஆகக் கூடாது என்பதால், அவர்களை முதலில் இங்கிருந்து அப்புறபடுத்தினான்.

ஆனால் அவர்களுடன் வைஷ்ணவி போகாமல் தன்னுடனே இருந்தது ஆகாஷிற்கு ஆறுதல் அளித்தாலும்....எங்கே அவளுக்கும் எதாவது துன்பம் நேர்ந்து விடுமோ என்று அவன் மனம் பரிதவிக்க..."ஏய் ஏண்டி அவங்க கூட போகலை என்று அவன் கூறி கொண்டு இருக்கும் வேலையில்"....

சட்டென்று ஆகாஷை இழுத்து கொண்டு அந்த பக்கம் போய் விழுந்த வைஷ்ணவி,"இதுக்காக தான் நான் போகலை என்றவள் அவனை பார்க்க"!

அதே நேரம் அந்த இடத்திற்கு வந்த வேறோரு படையினர் அந்த ரௌடிகள் வந்த காரினை தங்களது தோட்டாக்களாள் துவம்சம் செய்ய ஆரம்பிமித்திருந்தனர்....

தன்னுடைய ஜீப்பை விட்டிறங்கிய கௌரவ் கபூர் ஆகாஷை நோக்கி வந்தவன் அவன் மண்டையில் பிஸ்டலை வைத்து, எங்கடா என்னோட மச்சானும் தங்கச்சியும் என்று ஆகாஷை பார்த்து கேட்க.....

என்னது உன்னோட தங்கச்சி யா?.... என்னடா சொல்லுற!இதோ என் பக்கத்தில் இருக்காளே இவ தான் உன்னோட தங்கச்சியா என்று வைஷ்ணவியை சுட்டி க் காட்டி கேட்டான் ஆகாஷ்!

டேய் நான் என் தங்கச்சி அஞ்சலிய கேட்டேன் என்று கௌரவ் கத்த.....

என்னது அஞ்சலி உன்னோட தங்கச்சியா என்று ஆகாஷ் அதிர்ச்சியாக கேட்டவன், வைஷ்ணவியை முறைக்க!

வைஷ்ணவியோ முகத்தை அப்பாவியாக வைத்தவள் ஆமாம் என்று ஆகாஷிற்கு சொல்ல....

அடிக் கொலைகாரி‌‌ என்ன எப்படி எல்லாம் போட்டு தள்ளுரதுக்கு பிளான் போட்டுருக்கா என்று மனதிற்குள் நினைத்தவன் கௌரவை பார்க்க....அவனோ கொலை வெறியில் அவனை போட்டு தள்ள நிற்க.......

அதே நேரம் இவர்கள் மூவரையும் பல காலங்களில் தேடிக் களைத்தவள், இவர்களை கண்டு விட்ட மகிழ்ச்சியில் நோடி நேரமும் தாமதிக்காது.... தன்னுடைய சக்தியால் நிலச்சரிவை உண்டாக்கியவள், அவர்கள் மூவரும் உயிரை விடுவதை சந்தோஷத்துடன் பார்த்தவள் அந்த மலையே அதிரச் சிரித்தாள் "கலீபா".
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 10

காதல் பலரின் வாழ்க்கையை

மாற்றும் என்பார்கள்
என்வாழ்வில் நிகழ்ந்த
மிகப்பெரும் திருப்பமும்
உன்னை காதலித்த பின்பு தான்
அன்று முதல் இன்று வரை
என் வாழ்வில் நிகழும்
அனைத்திலும் ஓர் முக்கிய
அங்கம் வகிக்கிறாய்
இன்பத்தில் ஓர் நிறைவு
துன்பத்தில் ஓர் அமைதி என
என் நிம்மதியை மட்டுமே
விரும்பும் உன் விழிகளை
என்றும் எனதாக்கிக்கொள்ளவே

துடிக்கிறேன்.

தொழிலதிபர் ஆகாஷ் அரோரா மற்றும் கபூர் குருப் ஆஃப் கம்பெனிஸ் டாட்டர் அஞ்சலி தேவி இருவரும் போன மாதம் ஓரே கார் விபத்தில் இறந்ததில்,"கபூர் குருப் ஆஃப் கம்பெனிஸ்க்கு முழு பங்கு உள்ளது என்று ஆகாஷின் தந்தை "திரு.ரவிந்தர் அரோரா" அளித்த புகாரில்!சிஐடி இந்த ஒரு மாதம் விசாரித்ததில்...அஞ்சலி தேவி காதலித்த ஆகாஷ் தன்னுடைய தொழில் எதிரி என்பதனாலும் ,அஞ்சலி காதலித்த காரணத்தினாலும் "திரு கௌவ்ரவ் கபூர்" இருவரையும் கொன்றுள்ளதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்"
என்று அந்த புகழ்பெற்ற நீயூஸ் சேனலில் ஹெட்லைனில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது .

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வைஷு, தான் ஜீவாவால் ஏமாற்றபட்டதை நினைத்து கோபம் அடைந்தாள் , கோபத்துடனே அங்கிருந்து செல்ல பார்க்க....

அதே நேரம் கோபத்துடன் வெளியே செல்லப் போன வைஷ்ணவியின் கையை பிடித்த நிலா தேவி, அந்த இடத்தில் அப்போது நடந்ததை அவள் மனக்கண்ணில் காட்டி கொண்டு இருந்தாள் நிலா தேவி.

அன்று அந்த அழகான காலை பொழுதில் தான் யார் என்பதை பற்றி வெளிஉலகிற்கு தெரிவிக்க,ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க பிளாக் கோர்ட்டு சூட்டில் சார்மிங் இளவரசனாக இருந்தவனை கண்டு பெண்களே பொறாமை படும் அளவிற்கு அழகாக கிளம்பி கொண்டு இருந்தான் "ஆகாஷ் அரோரா".

தன் அண்ணனிடமிருந்து தப்பித்து வந்த அஞ்சலி எப்படியாவது சென்னையில் இருக்கும் தன் காதலனை பார்க்க அவ்வழியே வந்த ஏதாவது ஒரு வண்டியில் ஏறி ஏர்போர்ட் செல்ல வேண்டும் என்ற முடிவோடு அங்கு வந்து கொண்டிருந்த ஆகாஷின் வண்டியில் தான் அவசரமாக ஏர்போர்ட் செல்ல வேண்டும் கூறியவள் அவனைப் பதட்டமாக பார்க்க....

அவளின் பதட்டமான முகம் ஆகாஷை எதுவும் யோசிக்க விடாமல் உடனே சரி என்று சொல்ல சொல்லியது! அஞ்சலியை அமரச் சொன்னவன் வண்டியை ஏர்போர்டிற்கு டிரைவரிடம் செல்ல சொல்லிவிட்டு, அந்த வாட்டர் பாட்டிலை அவளிடம் குடிக்க கொடுத்தவன்!தனது செல்போனை பார்க்க ஆரம்பித்தான்.

இரண்டு நாள் எதுவும் சாப்பிடாதது, ஓடிவந்தது என அவளும் களைப்புடன் இருக்க எதுவும் பேசாமல் அந்த தண்ணீரை மடமடவென குடிக்க ஆரம்பித்தாள் அஞ்சலி.
அதே நேரம் அஞ்சலி அந்த காரில் ஏறியதை வீடியோ காலில் பார்த்து கொண்டு இருந்த "நிதின் கபூர்" குருரமாக சிரித்தவர்..... அந்த காரை தூக்க சொல்லியவர் காலை கட் செய்தார்.

என்னடா அவரு பொண்ணும் அதுலதான் டா இருக்கு,இவரு என்னடான்னா தூக்க சொல்லுறாரு!

நமக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு, அவங்க செய்ய சொன்னத நமா செய்யனும்,வா போகலாம் என்றவன், அந்த காரை மூன்று முறை விடாமல் இடித்ததில் தரைமட்டாமாகி இருப்பதை பார்த்து திருப்தி அடைந்தவர்கள், தங்களுடைய லாரியை எடுத்து சென்றுவிட்டிருந்தனர்.

அந்த காரினில் உள்ளே இருந்த ஆகாஷ்,அஞ்சலி மற்றும் டிரைவர் மூவருமே அந்த இடத்திலே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.இதனை தன் மனக் கண்ணில் பார்த்த வைஷு பாரம் தாங்காமல் ஓவென்று அழுக ஆரம்பித்தாள்.

இப்போ சொல்லு நாம அந்த கடந்த காலத்தை மத்தனுமான்னு என்ற நிலா தேவி வைஷுவை பார்க்க...

நோடியும் தாமதிக்காத வைஷு
ஆமாம் என்று சொல்லியவள்... இவர்கள் இருவரையும் கொன்றவர்களை அழிக்கும் வெறியில் இருந்தாள்.

இன்று இரவு போன மாதத்திற்கு செல்வோம் என்று கூறிய நிலா தேவி அங்கிருந்து மறைந்துவிட்டார்.

@@@@@@@@@@@

கலீபா அந்த மலையே அதிரச் சத்தமாக சிரித்தவள், இந்த முறை இவர்கள் மூவரும் இறந்து விட்டால், உன்னால் இவர்களை மீட்கவும் முடியாது சந்திரவதனா..... உனது வரமே உனக்கு சாபமாக அமைந்தது பார்த்தாயா! என்று கூறியவள் அவள் கண்ணீர் விடுவதை கண்டு திருப்பதியுற்று தனது நீண்ட கால வேலை நிறைவடைந்த மகிழ்ச்சியில் தனது சக்தியை கொண்டு அங்கிருந்து மறைந்தாள்.

தன் சக்தியால் அவர்களை காப்பாற்ற முடியாத விரக்தியில் இருந்த நிலா தேவி,நோடி நேரம் தாமதிக்காது தானும் அம்மலையில் இருந்து கீழே குதித்தவள் கண்டதென்னவோ தூரத்தில் மணலில் புதையுண்டு போகப் போற மூவரையும் தனது கால சக்தியால் அவர்களை light speedடில் வேறோரு இடத்திற்குபத்திரமாக அனுப்பியவள் தானும் அவர்களுடனே அந்த இடத்திற்கே பத்திரமாக வந்து சேர்ந்தாள்.

அடியே நிலா.... உனக்கு என்னை காப்பாத்றதுக்கு இவ்ளோ நேரமா.... கொஞ்ச நேரத்தில எனக்கே அல்லு விட்டுடுச்சு!சாவை நேர்ல பார்த்துட்டேன் டி....இவ்ளோ ஆபத்து இருக்குனு நீ முன்னாடியே சொல்லி இருந்தேன்னா,நான் கண்ட கண்ட நாயேல்லாம் காப்பாத்துறனு வீராங்கனை கணக்கா வந்து இருக்க மாட்டேன்ல.....

அதை தான் நான் முன்னாடியே சொன்னேன் நீ தான் கேட்கவே இல்லை என்றவள்,"ஏனோ வைஷுவை போய் கட்டிப்பிடித்து கொண்டாள்",வைஷுவிற்கு ஏதாவது ஆகிஇருந்தாள் என்ற நினைப்பே அவளுக்கு அச்சத்தை விளைவித்திருந்தது.

நிலா அக்கா...நிலா பேபி...அடியே நிலா.... விடுடி எவ்ளோ நேரம் தான் இப்படியே கட்டிபிடிச்சுட்டு இருப்ப.... நம்ம கூட விழுந்த இரண்டு பேரும் இருக்கங்களா! இல்லை மேலிருந்து விழம்போதே போயிடிச்சுங்களான்னு பார்களாம் வா... என்ற வைஷ்ணவி நிலாவை தன்னிடம் இருந்து பிரித்தவள் அவர்கள் இருவரையும் பார்க்க....

ஆகாஷொ குப்பிற விழுந்து கிடக்க....கௌவ்ரவோ மல்லாக்க இரண்டு கைகளையும் கால்களையும் விரித்து வைத்து படுத்துக் கொண்டு"நான் சொர்க்கத்தில இருக்குறேனா இல்லை நரகத்தில் இருக்குறேனா"..... என்று சொன்னதையே திரும்ப சொல்லி கொண்டு இருக்க....

ம்..... நீ செஞ்ச பாவத்துக்கு கண்டிப்பாக நரகம் தான், நீ இப்போ நடிகறத நிப்பற்றலை நானே உன்னோட மண்டைல கல்லை தூக்கி போட்டுடுவேன், அப்புறம் நீ கேளு சொர்க்கத்தில இருக்கியா இல்லை நரகத்தில இருக்கியான்னு! என்று வைஷ்ணவி சொல்ல...

இது கண்டிப்பா சொர்கமாதான் இருக்கனும்... இவ்வளோ அழகான பொண்ணுலாம் சொர்கத்துல தானே இருக்கும் என்று நிலா தேவியை பார்த்து ஜொல்லு வடிய கூறினான் கௌவ்ரவ்.

இவர்கள் பேசுவதை எல்லாம் படுத்து கொண்டே கேட்டிருந்த ஆகாஷ் அய்யய்யோ என்று சவுண்டு கொடுக்க...

எவண்டா அவன் என்பதை போல் கௌவ்ரவ் பார்த்து வைக்க....

பேபி என்னாச்சு என்று வைஷு ஒடி போய் ஆகாஷை கேட்க....

அவனோ பேபியை கவனிக்காமல் விட்டவன்,"நாம இருந்த இடம் நிலச்சரிவு வந்துச்சு அப்போ அப்பா அம்மாலாம்......

டேய் என்னோட தங்கச்சி அஞ்சலி எங்கடா!..."கௌவ்ரவ்".

டேய் நீ இப்போ சும்மா இருடா.... என்று முறைத்த வைஷ்ணவி கேள்வியாக?நிலா தேவியை பார்த்து வைக்க.

அனைவரும் நலமே! என்று இரண்டு வரியில் பதில் சொன்ன நிலா தேவி வைஷ்ணவியை குறுகுறு என்று பார்க்க...

என்னை இப்படி பார்குறத நிப்பாட்டிட்டு, இங்கே இருந்து வீட்டுக்கு போக வழி ரேடி பண்ணு என்று வைஷ்ணவி அதிகாரத்தோடு சொல்ல...

பண்ணி தொலைக்குறேன்.... என்ற நிலா தேவி,அந்த குகை முழுவதும் தன் சக்தியை கொண்டு வண்ணமையான ஒளிகளை வரச் செய்தவள்,அதனை வியந்து பார்த்த இருவரையும் இழுத்து கொண்டு வைஷ்ணவியும் நிலா தேவியும் ஷிம்லாவில் இருக்கும் ஆகாஷின் வீட்டிற்கு ஒளியால் பயணம் செய்து வந்தடைந்தனர்.

இவர்கள் வந்ததை பார்த்து அங்கிருந்த நால்வரும் ஷாக் அடைந்திருந்தனர் என்றால், அதில் பயணம் செய்த இருவருமே அதிர்ச்சியில் உரைந்தே விட்டனர்.(ஷாக்கை குறைங்க..ஷாக்கை குறைங்க...ஷாக்கை குறைங்க..... இதுக்கே இப்படி ஆகிட்டிங்களே இனிமே தானே மெயின் பிச்சரே இருக்கு என்று நிலா தேவியுடன் விதியும் சேர்ந்து சிரித்து கொண்டே கூறியது).
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம்11

ஆகாஷின் வீட்டில் ஷாலினி ரவிந்தர் அஞ்சலி ஜீவா ஆகிய நால்வரும் காரிலிருந்த தாம் எப்படி வீட்டிற்கு வந்தோம் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்க!

அப்போது திடீரென அந்த அறையில் பல வண்ண ஒளிகதிர்கள் கண்களையே கூசும் ‌அளவிற்கு அந்த அறையில் சூழ்ந்து கொள்ள, அந்த ஒளியில் இருந்து வந்திறங்கினர் அந்த நால்வரான நிலா தேவி, வைஷ்ணவி, ஆகாஷ் மற்றும் கௌவ்ரவ்.

இவர்கள் ஒளியில் இருந்து வந்திறங்கியதை பார்த்த மற்ற நால்வரோ என்னடா நடக்குது இங்கே! என்று உறைந்த நிலையில் நின்று கொண்டு இருக்க.... அதில் பயணம் செய்த இருவரோ பயத்தில் மயக்கமே போட்டு கிழேயே விழுந்தே விட்டனர்.

மயக்கம் தெளிந்த ஆகாஷ்,கௌவ்ரவ் மற்றும் அவர்களை குழுமியிருந்த மற்ற நால்வரும் நிலா தேவி மற்றும் வைஷ்ணவியை பார்த்து,இங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று அனைவரும் ஒரே நேரத்தில் கேட்க?
வைஷ்ணவியோ இப்போ நீ உன்னை பற்றி சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துடுச்சு என்று நிலா தேவியிடம் வைஷ்ணவி ‌கூறியவள்,அனைவருடன் தானும் அமர்ந்தவள் இத்தனை நாள் நிலா தேவியியை பற்றி அறியாத ரகசியத்தை அறிய சந்திரவதனாவை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள் பாவையவள்.

அதே நேரம் நிலா தேவி அனைவரின் கண்களிலும் தன் கடந்த காலத்தை காட்ட தொடங்கினாள்.

பல ஆயிர வருடங்களுக்கு முன்.......

அத்திநவநீதகம் பேரரச சாம்ராஜ்யத்தை அந்திகாவலன் ஆண்டு வந்தான்.இவன் ஆட்சியில் எல்லோரும் நலமாகவும் வலமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர். அந்திகாவலன் மனைவி மையிலிசைக்கு சந்திரதேவரின் அருள் ஆசியுடன் சந்திரவதனா என்கின்ற நிலாதேவி பிறந்தாள்.

பௌர்ணமி நிலவு எப்படி ஒளி தருமோ அது போல் நிலாதேவியின் ஒளி அந்த அத்திநவநீதகம் பேரரச சாம்ராஜ்யத்தையே ஜொலிக்க வைத்தது, அந்த நாள் வரும் வரை....

இது எல்லாம் நிலாதேவியின் 5வயது வரைக்கும் தான் அதன் பிறகு சந்திரகிரகணத்தின் போது அந்திசாய்ந்த வேலையில் அரண்மனையில் தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்த நிலாதேவியின் உடம்பு முழுவதும் கருநிறமாக மாறி அந்த இடத்திலேயே மயக்கமடைந்தவள் படுத்த படுக்கை ஆனாள்,அவளை சரிசெய்ய பல வைத்தியர்களை வரவைத்தும் பலன் என்னமோ பூஜ்யமாகவே இருந்தது.

இதனால் அரசி மையிலிசை கவலையுடன் தன் கணவனிடம் அழுது கொண்டே குழந்தை பேறே இல்லாத நான்... பல விரதங்கள் வேள்விகள் என எல்லாவற்றையும் செய்து பிறந்த என் தவ புதல்வி இப்படி படுத்த படுக்கையாக இருக்கவா நான் இவ்வனைத்தும் செய்தேன்.நான் இருந்த விரதங்கள்கூட என் மகளை எழுந்து நடமாட செய்யாத?அரசே என்றவர் தன் கணவனை கட்டிக் கொண்டு அழுகையில் கரைந்தாள்..

அரசருக்கும் என்ன செய்வதேன்றே தெரியாத நிலை!"தன்னை கண்டு தந்தையே என்று செல்லம் கொஞ்சும் மகள்,ஒளி இன்றி கருமையை போற்றி கொண்டு எந்தவித பேச்சும்இன்றி கலைஇழந்து காணப்படும் மகளை பார்த்து நெஞ்சடைத்தது தந்தை அவர்க்கு.

இது இப்படி இருக்க...... நிலா தேவி சந்திரகிரகணத்தின் போது கருமை சூழ்ந்து மயங்கி விழுந்த நேரம் அத்திநவநீதகமே இருளை தத்தெடுத்திருந்தது.மக்கள் அனைவரும் கிரகணத்தால் சூழ்ந்த இருள் என்று நினைக்க, ஆனால் மறுநாள் சூர்ய உதயமே நிகாழாமல் இருக்க எல்லோரும் நிலாதேவியை தூற்ற ஆரம்பித்தனர்.
அதே நேரம் ராஜகுருவின் வழி காட்டுதலில் கிழக்கு திசையில் உள்ள ஐராவனத்திற்கு தனது ராஜிய படைகளுடன் அந்திகாவலன் சென்றிருந்தார்.

27751
ஐராவனம்

ஐராவனம் அன்னை ஆதி சக்தியின் வனதுர்கைமலையை காவல் காக்கும் மாயவனம்.பல மாயங்களையும் மர்மங்களையும் தனதாக்கி கொண்டு தீயநோக்குடன் எவர் வந்தாலும் தீயாலே சம்பலாக்கும் அற்புதங்கள் நிறைந்த கொடிய வனம்.
பலர் வரவே பயப்படும் வனத்திற்கு தன் ராஜியபடைகளுடன் அரசர் அந்திகாவலன் வர காரணம் தன் மகள் சந்திரவதனாவை காப்பாற்ற அயிர்சூலன் ஒருவரால் மட்டுமே முடியும் என்று ராஜகுரு சொன்னவுடன் சிறிதும் தாமதிக்காமல் உடனே அந்த கடும் பயணத்திற்கு புறப்பட்டு விட்டார்.

அதே நேரம் அரசரை ஐராவனத்திற்கு தன் சூழ்ச்சியால் அனுப்பிய ராஜகுரு கார்மேகன் தனது விசுவாசிகள் சிலரை வைத்து இளவரசி சந்திரவதனாவை கடத்தினான் அவள் கலீபாவின் சொல்லிற்கினங்க!

கலீபா அழகே பொறாமை படும் பேரழகை கொண்டவள் 14நான்கு லோகத்திற்கும் தானே அதிபதி ஆகவேண்டும் என்ற பேராசையுடையவள், இதற்காகவே பல காலம் தவமிருந்தாள் அன்னை ஆதிசக்தியின் பாதுகாவலர்கள் தேவநாகரி(தேவநாகரி என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும்) பிறப்பதற்காக!

இவள் யாருக்காக தவமிருந்தாளோ அவர்களோ இவளை காக்கவைக்காமல் அடுத்துதடுத்து இந்த புவியில் பிறப்பெடுத்தனர்‌ தங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக!

27752

வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.இந்த ஒன்பது வடிவங்களின் அம்சமாக தெய்வீக சக்தியுடன் பிறந்தனர் அந்த 9 பெண்களும்.
1.சைலபுத்ரி-ஹேமாவதி
2.பிரம்மச்சாரிணி-தேவி குமரி
3.சந்திரகாண்டா-சந்திரவதனா
4.கூஷ்மாண்டா-ஜகன்மோகினி
5.ஸ்கந்த மாதா-பத்மாசினி
6.காத்யாயனி-ஆக்ன்யா
7.காளராத்திரி-சுபங்கரி
8.மகாகௌரி-அம்பிகா
9.சித்தி தாத்ரி-கமலதாரணி .


27750

1.சைலபுத்ரி
ஒன்பது வடிவங்களில் அன்னையின் முதல் வடிவம் சைலபுத்ரி ஆகும். இவளை நவராத்திரியின் முதல் நாளில் வழிபடுகின்றனர். 'சைலபுத்ரி' என்றால் மலைமகள் என பொருள்படும். மலை அரசன் இமவானின் மகளாக இருப்பதாலும் அன்னைக்கு இவ்வாறு ஒரு பெயர் உண்டு. சதி, பார்வதி, பவானி என இவளுக்கு பெயர்கள் உள்ளன. ஹிமவானின் மகளாக உள்ளதால் ஹேமாவதி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. இவளின் முன் அவதாரத்தில் இவள் தட்சனின் மகளாக பிறந்ததால் 'தாட்சாயினி ' என்றும் கூறுவர்.இவளே பார்வதியாகப் பிறந்து சிவனைத் திருமணம் செய்து கொண்டாள்.
இவள் ஒன்பது சக்ரங்களில் முதல் சக்கரம் மூலாதாரமாக இருக்கிறாள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்குவர். அதனால் இவளே முதல் சக்தியாகப் போற்றப்படுகிறாள். இவளின் வாகனம் நந்தி (காளை). இவளின் ஆயுதம் சூலம் ஆகும்.

இவளுக்கான தியான மந்திரம் :

“வந்தே வாஞ்சித் லாபாய சந்திர கிருத சேகரம்
விருஷபாருடம் சூலதாரிநீம் ஷைல புத்ரீம் யஷஷ்விநீம்”


"விருஷபம் (நந்தியின்) மேல் ஏரி வருபவளும், சூலத்தை ஆயுதமாக கொண்டவளும், மூன்றாம் பிறையைத் தன்னுடைய கிரீடமாகக் கொண்டவளும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரும் யஷஷ்வின்யாம் ஷைல புத்ரி தேவியை வணங்குகின்றேன்"
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
ஹாய் மக்களே ஐயம் சோ சாரி. இத்தனை மாதம் கழித்து மீண்டும் அத்தியாயம் போடுறதுக்கு நானும் இத்தனை மாதம் யோசிச்சு பார்த்து அடுத்து கதையை எப்படி கொண்டு போகலாம் என்று யோசித்து யோசித்து இத்தனை மாதம் ஆகிவிட்டது & எனக்கும் காதலுக்கும் ரோம்ப தூரம் போல நானும் காதலை கொண்டு வரலாம் பார்த்தா அது என்கிட்ட வரல ஆனாலும் கஷ்டப்பட்டு காதலை கதைல கொண்டு வரேன் மக்களே இத்தனை நாள் தாமதத்திற்கு மன்னிக்கவும் மக்களே இன்னும் 21 அத்தியாயத்துல கதையை முடிச்சுடுவேன் காதலோட மன்னிச்சுக்குங்க மக்காஸ்😘😘😘😘😘😘😘 பிளிச் tommrow ud உண்டு🤗🤗🤗🤗
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 12

பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஓர் உயிரும் தோன்றாத வேளையில் ஓம் என்ற நாதத்துடன் உருவாகிய ஒலியில் தோன்றிய பெண் சக்தி 14நான்கு லோகத்தையும் இந்த பால்வெளியில் படைத்து அதில் வாழ பல உயிரினங்களை வெவ்வேறு ரூபங்களில் வடிவமைத்து, அதில் குறிப்பிட்ட சிலருக்கு சில திறன்களை கொடுத்து 14நான்கு லோகத்தையும் காக்கும் பொறுப்பு கொடுத்து அப்பெண் தேவியானவள் மறைந்து விட!

அப்பதிநான்கு லோகத்தில் இருக்கும் அனைவரும்

மேல் உலகங்கள் ஏழு
7. சத்யலோகம் - பிரம்ம தேவனின் உலகம்
6. தபோலோகம் - தேவதைகள் இருக்கின்ற உலகம்
5. ஜனோலோகம் - பித்ருக்களின் உலகம்
4. மஹர்லோகம் - தேவர்களின் உலகம்
3. சுவர்லோகம் - முனிவர்களின் உலகம்
2. புவர்லோகம் - கிரகங்கள், நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் உலகம்
1.பூலோகம் - நாம் வாழும் மண் உலகம்

கீழ் உலகங்கள் ஏழு


பாதாளம் எனும் பூமிக்கு கீழே உள்ள 7 உலகங்கள்
1. அதல லோகம்
2. விதல லோகம் – அரக்கர்கள்
3. சுதலலோகம் – அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தான, தர்மங்களால் உயர்ந்தவரை உலகளந்த வாமனனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி(மகாபலி சக்கரவர்த்தி வாமன அவதார கதை)
4. தலாதல லோகம் – மாயாவிகள்
5. மகாதல லோகம் – நல்ல செயல்கள் பல செய்து புகழ்பெற்ற அசுரர்கள்
6. பாதாள லோகம் – வாசுகி உள்ளிட்ட பாம்புகள்
7. ரஸாதல லோகம் – அசுர குருக்கள்.


இந்த பதிநான்கு லோகங்கலும் தங்களை படைத்த புவனேஸ்வரி தேவியை போற்றி வணங்க தங்களுடைய அனைத்து சக்திகள் மற்றும் திறன்களை ஒன்று திரட்டி 14ஆபரணங்களை உருவாக்கி, பூ உலகத்தில் அஷ்ட பைரவர்களின் காவலோடும் வனத்தின் நடுவில் மலையில் துர்க்கை வடிவில் சுயம்புவாக உருவாகி இருக்கும் அன்னைக்கு சங்கின் முழக்கத்துடன் அப்பதிநான்கு ஆபரணங்களையும் தேவிக்கு சமர்ப்பித்து அவரவர் உலகிற்கு சென்றனர்.

காலங்கள் உருண்டு ஓட வனத்திலும் மலையிலும் பல மாற்றங்களோடும் மர்மங்களோடும் தன்னை தானே பாதுகாத்து கொள்ள, அந்த ஒன்பது பெண்களும் இப்போது வனதுர்க்கை மலையில் பருவ மங்கைகளாக பாதுகாப்பாக வளர்ந்திருந்தனர்.

அயிர்சூலன் சந்திரகிரகணத்தின் போது நடக்க இருப்பதை தன் ஞானதிருஷ்டியால் அறிந்ததினால் கார்மேகனிடமும் கலீபாவிடமும் அந்த ஒன்பது குழந்தைகளையும் தன் சக்தி கொண்டு காப்பாற்றியவர் அவர்களை துர்க்கையிடம் ஒப்படைத்துவிட்டு தான் தவம் செய்ய ஆரம்பித்திருந்தார்.

அத்திநவநீதகம்

தன் மகளின் பிறப்பின் ரகசியத்தை அயிர்சூலன் மூலமாக அறிந்த அந்திகாவலன் தன் மகவை அந்த இறைவியிடம் மனதார ஒப்படைத்தவர், தன் நாட்டிற்கு திரும்ப அங்கு தன் நாடு பழைய நிலைக்கு திரும்பியிருப்பதை நினைத்து சந்தோஷபட்டவர்,அதே நேரம் தன் பாச மகளை இனி காணமுடியாததை நினைத்து கண்ணீர் விட்டவர்,'மகளை நினைத்து கவளை கொண்டு இருக்கும் மனைவியிடம் அவள் தெய்வபிறப்பினை பற்றி கூறியவர் கண்ணீருடன் மைலிசையை அனைத்து கொண்டார்'.

அடுத்து என்னாச்சு என்று பழைய நிகழ்வை பார்த்து கொண்டு இருந்த இரண்டு ஜீவன்கள் கேட்க......

அதற்கு அயிர்சூலனிடமே கேட்டு கொள்ளுங்கள் என்று கூறிய நிலா தேவி அவ்வேழுப்பேரையும் கடந்த காலத்திற்கு அழைத்து வந்திருந்தாள்.

தங்களை சுற்றி மரங்களாக இருந்ததை பார்த்த ஏழ்வரும் என்ன இடம் என்று ஒரு சேர கேட்க?

வனதூர்கை மலை என்று கூறிய நிலா தேவி முன்னே நடக்க...

கௌவ்ரவ் என்ன நிலா பேபி வனதூர்கை மலை சொன்ன ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் மலையையே காணோம் எங்களை ஏமாத்துரியா நீ!

27906

அட அறிவு கெட்ட முண்டமே நீ மலை மேலே தான் நிக்குறியே!என்ற நிலா தேவி மரங்களின் வேர்களாள் ஆன படிகளில் வைஷ்ணவியுடன் முன் நடக்க,பின்னேயே அந்த வேர்களில் தன் பாதத்தை பதித்தபடியே தன் தாய் தந்தையருடன் ஆகாஷ் நடந்து வர, இங்கு நடப்பதை எதுவும் நம்ப இயலாமல் அஞ்சலியும் ஜீவாவும் பயத்துடன் ஒருவர் கையை மற்றோருவர் கெட்டியாக பிடித்து அடியெடுத்து வைத்தனர்.
27907
கருமையை போற்றி கொண்டு இருந்த மலையில் ஒவ்வொருவரும் திகிலுடன் அடியேடுத்து வைக்க,"வைஷ்ணவி" இரண்டு மண்டபத்தை பார்த்து,"ஹே இதோ கோயில் வந்துடுச்சு என்று அனைவரிடமும் உற்சாகமாக சொல்லியவள் அதே உற்சாகத்துடன் நிலவு தேவியை பார்க்க!"

சந்திரவதனாவோ வைஷ்ணவியை பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்டு, இன்னும் முன்னோக்கி சென்று கொண்டு இருந்தாள்.

சாரி மக்களே நான் தப்பா சொல்லிட்டேன் கோபிச்சுகாதிங்க என்று அனைவரிடமும் கூறிய வைஷ்ணவி ஆகாஷைப் பார்த்து ஒரு சிரிப்பை உதிக்க...

"அவனோ சகிக்களை வா, அவங்க ரொம்ப தூரம் போகிடப்போறாங்க என்றவன் வைஷ்ணவியின் கையை பிடித்து கொண்டு முன்னே செல்ல",இதனைப் பார்த்த மற்றவர்களோ நமட்டு சிரிப்புடன் பின் தொடர்ந்தனர்.

27908
மேலே வந்தவர்களோ அந்த இருளிலும் கோவிலைப் பார்த்தவர்கள் மெய்சிலிர்த்தனர் என்றால் அதில் பால் போன்று நன்னீர் கோயிலின் மூன்று திசைகளிலும் அருவியாக ஊற்ற இங்கு நடந்த சில துயரசம்பவங்களினாலும் தன் முழு சக்தியையும் இழந்தாலும் இன்னும் அதே கம்பிரத்துடன் இருந்தது வனதூர்கை ஆலயம்.

உரியவர் வந்தால் உடனே வழி பிறக்கும் என்ற பழமொழி போல் ஒன்பது பெண்களில் இருவர் கோவிலில் அடியேடுத்து வைக்க சந்திரவதனாவின் சக்தியால் இருள் போற்வை விலகி நிலவுவெளிச்சம் உண்டாக, வைஷ்ணவியின் வரவால் ஓம்கார நாதம் ஒலிக்க தொடங்க,இதனையெல்லாம அதிசயித்து பார்த்து கொண்டே வந்தவர்கள் தீடீரென குளிரில் நடுங்க தொடங்கியவர்கள் முன்னே வைத்த கால்களை பின்னே வைக்க,அதே நேரம் தூர்கையை கண்டவுடன் தன்னையே மறந்த நிலையில் சந்திரவதனாவுடன் தானும் உரையும் பனியில் மூன்று முறை தூர்கையை வலம் வர துவங்கினாள் வைஷ்ணவி.

இங்கு நடப்பவற்றை எல்லாம் கண்ட ஆகாஷ் ஏனோ வைஷ்ணவியை நிலாவுடன் தனியே விட மனமில்லாமல் அந்த பனிகளாள் சூழ்ந்த கருவறைக்குள் நுழைந்தான்,"இவன் தூர்கையின் கருவறைக்குள் நுழைந்த நேரம் அயிர்சூலன் பல வருடத் தவத்தை முடித்தவர் புன்னகையுடன்,ஆட்டத்தை தொடங்கியவனே அதனை முடிப்பதற்கு அடியேடுத்து விட்டான், இனி ஆடப்போகும் ஆட்டம் அந்த ஆதிசக்தி அன்னையின் உடையது என்றவர் கோயினுள் பிரசன்னமாகினார்".

கடந்த காலம்...


27910
ஆகமநாதன்

வனதூர்கையின் ஆலயத்தை பற்றி தன் தந்தையிடம் அறிந்த ஆகமநாதன் கந்தர்வலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்திருந்தான்,ஐராவனத்தை தாண்டி தான் வனதூர்கை மலைக்கு போக முடியும் என்பதாலும் ஐராவனம் சிலபேரை சாம்பல் ஆக்கியதை நேரினில் கண்டதாலும், ஏனோ அவனுக்கு உள் நுழைய சற்று பயமாகவே இருந்தது அதே பயத்துடன் வேப்பம் மரம் அடியில் யோசனையுடன் படுத்திருந்தவனிற்கு சங்கிதங்களாக ஒலித்தது பல பெண்களின் சிரிப்போலிகள்.

அதில் சிவப்பு நிற பட்டில் பாரிஜாதம் மலர்களை வாழைநாரினால் ஆனகூடையில் வைத்து கொண்டு சில பெண்களுடன் நடந்து வந்த மங்கையை கண்டவனிற்கு கண்களை வேறு எங்கும் திசை திருப்ப முடியவில்லை மனமோ அவனிடம் 'இவள் தான் உன்னவள்' என்று எடுத்துக் கூற அதை கேட்டவனிற்கோ உள்ளம் திடுக்கிட்டது!என்னது கண்டதும் காதலா ஆகமநாத! என்று ஆச்சசிர்யத்துடன் நின்றிருந்தான்.
அதே நேரம் 15வருடங்கள் கழித்து தனவந்தன் சொல்லை மீறி ஐராவனத்தை விட்டு வெளியே வந்தனர் அறுவரான 'பத்மாசினி,சுபங்கரி,ஆக்ன்யா,அம்பிகா,ஜகன்மோகினி மற்றும் கமலதாரணி'அவர்கள் வெளியே வந்த சிறிது நேரத்திலே, அதே இடத்திற்கு தானும் வந்தாள் கலீபா.

கலீபாவை பற்றி பல கதைகளை வனத்திலுள்ள விலங்குகளிடம் கேட்டறிந்த ஒன்பது பெண்களும் அதனை கதை என்று நினைக்க, ஆனால் நேரில் பார்த்த பின்பே தாங்கள் வனத்தை விட்டு வெளியே வந்த தவறினை அரிந்தவர்கள் மீண்டும் உள்ளே செல்ல முயல ஆனால் வெளியேறும் போது சுலபமாக வெளியேறியவர்கள் உள்நுழைய வழியறியாது கலீபாவிடம் சிக்கிகொண்டனர்.

ஓவ்வொருவரும் தங்களுக்கு உரிய சக்திகளை கொண்டு அவளை தாக்க அவையனைத்தையும் சுலபமாக முறியடித்த கலீபா ஒவ்வொருவரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தாள் கடைசியாக ஜகன்மோகினி தன் கந்தர்வ சக்தியால் தன்னைப்போல் மாயதோற்றத்தை கலீபாவிற்கு உருவாக்கியவள் அங்கிருந்து மறைந்து செல்ல பார்த்தவள் முடியாமல் போக, அங்கிருந்த மரத்திற்கு பின்னால் வந்து ஒலிந்து கொண்டாள்.
ஒளிந்து கொண்டவளோ தீடீரென தான் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் வானில் பறந்து கொண்டிருந்தாள்.

கலீபா இந்த முறை ஐவரை பிடித்தவள் நான்கு பேரை தவற விட்டதை எண்ணி அந்த இடமே அதிர கோபமாக கத்தினாள்!

கலீபா வின் குரல் அதிர்வை கேட்டு தன் குடிலை விட்டு வெளியே ‌வந்த தனவந்தன் தன் சொல் மீறி சென்ற அருவவரையும் நினைத்து வருந்தியவர், அயிர்சூலனிற்கு தான் என்ன பதில் சொல்ல போகிறோம் என்று தெரியாமல் தவித்தவர்!
"மீதி இருக்கும் மற்ற முவரையும் எக்காரணம் கொண்டும் இந்த தூர்கை மலையை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தவர், இங்கிருந்து விளையாட்டாக சென்ற அருவரும் நல்ல முறையில் திரும்பி வருவதென்றாள் அது ஜகன்மோகினியால் மட்டுமே முடியும் என்று கூறியவர் அயிர்சூலன் இருக்கும் இடத்திற்கு சென்றார்.

ஹெமாவதி, தேவி குமரி,சந்திரவதனா மூவரும் சற்று கலக்கத்துடன் அந்த வனதூர்கையை சரணடைந்தனர்.

பிரம்மச்சாரிணி
27911
நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியாக வணங்கப்படுகிறாள். 'பிரம்ம' என்றால் தபஸ் என்று பொருள். பிரம்மச்சாரிணி என்றால் 'தப சாரிணி ' என பொருள்படும். இவள் மிகவும் எளிமையாக காட்சி தருபவள். இவளின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படும். அன்னைக்கு வாகனம் ஏதும் இல்லை. பூமியில் நடப்பவளாக இவள் காட்சிபடுத்தப்படுகிறாள்.
இவள் இமாலயத்தில் பிறந்தாள் என கூறுவர். சிவபெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தாள். இவளின் தவ உகரம் மூன்று உலகங்களிலும் எதிரொலித்தது. இறுதியில் சிவன் இவளை மணம் புரிந்தார்.
பிரம்மச்சாரிணி நன்றி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் வடிவானவள். தன்னை வணங்குவோர்க்கு மிகுந்த பொறுமையைத் தர வல்லவள். அவர்கள் தங்களுடைய துன்பமான நேரத்திலும் மணம் தளராது இருக்க அருள்பவள். இவள் அருள் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லது.
உடல் சக்ரங்களில் இவள் 'ஸ்வாதிஷ்தானத்தில் 'இருப்பவள் .இரண்டாம் நாள் யோகிகள் இவளின் அனுக்ராகதால் இந்த சக்ரத்தை அடைவர் .
இவளுக்கான மந்திரம் :
“ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்
தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன”

"கமண்டலமும், தண்டமும் தன் தாமரைக் கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள வேண்டும்."
இவளுக்கான கோவில்கள்: இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் செய்கிறாள்.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 13

மரத்தின் பின் வந்து ஒளிந்த ஜகன்மோகினியை தீடீரென ஒரு உருவம் அவள் வாயைப் பொத்தி அங்கிருந்து அழைத்து செல்ல!

எங்கே தான் கலீபா விடம் மாட்டி கொண்டோமோ என்று பயந்த மோகினி தன் சக்தியேல்லாம் ஒன்று திரட்டி விடுபட போராடியவள் முடியாமல் போக தன் வாயைத் கொண்டு அந்த உருவத்திற்கு சொந்தகாரனை கடித்து விட,'அவனோ அவள் கடித்த வலியில் அவளை கிழே தள்ளி விட்டவன்,கன்றி சிவந்திருந்த தன் கையை பார்த்தவன் கிழே விழுந்து இருந்தவளை ஏகத்துக்கும் முறைத்து பார்த்தவன், அந்த கலீபாவிடமிருந்து உன்னை காப்பாற்றியதற்கு, நீ என்னையே கடிக்கிறாயா என்றவன், கீழே விழுந்திருந்தவளை கண்டு தன்னையே கடிந்து கொண்டவன் அவள் எழுவதற்கு கை கொடுக்க!

ஆகமநாதனை முறைத்தபடியே எழுந்த மோகினி அடுத்து என்ன செய்து தன் தோழிகளை கலீபாவிடமிருந்து மீட்டேடுப்பது என்று யோசிக்க தொடங்கியவள் அப்போது தான், தான் இருக்கும் இடத்தை பார்த்தவள் கேள்வியாக?,"நாம் இப்போது எங்கே இருக்கிறோம்!இந்த இடம் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக உள்ளதே என்று ஆகமநாதனிடம் கேட்க!".

அவனோ இது கந்தர்வர்களின் உலகம் என்று கூறியவன், கந்தர்வர்களின் உலகம் அல்லாமல் இன்னும் சில தேவர்களின் உலகில் கலீபா உள்நுழையாதவாரு பாதுகாப்பு வலையம் உருவாக்க பட்டுள்ளது, அதனால் இங்கும் இன்னும் ஆறு உலகங்களுக்கும் அவளால் வர இயலாது, அவள் கலீபாவை நினைத்து அச்சப்படுகிறாள் என்று நினைத்து ஆகமநாதன் கூறினான்.

ஆகமநாதன் ஒரு பெண்ணுடன் கந்தர்வவுலகிற்கு வந்ததை பாதுகாவலர்கள் முலம் அறிந்த ஆனந்தன், தன் மகனை காண கோபமாக வந்தவர், அங்கிருந்த மோகினியை பார்த்து திகைத்தது ஒரு நொடி தான், அதன் பின் தன் மகனின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்!

தன் தந்தை அடித்ததில் நிலை தடுமாறிய ஆகமநாதன், அடுத்த நோடியே தன்னை ஏன் அடித்தார் என்று கேள்விக்கனைகளை வரிசையாக வைக்க!

ஆனந்தனோ இதுவரை தன் மகனிடம் சொல்லாத ரகசியத்தை சொல்ல ஆரம்பித்தார்,"ஒருவர் பிறக்கும் போதே அவர்களுக்கான இணையோட விதியையும் அவர்கள் விதியோடு எழுதப்பட்டே பிறக்கின்றனர்,அப்படி உன் விதியில் உனக்காக எழுதப்பட்டவள் தான் இந்த கந்தர்வகன்னி ஜகன்மோகினி,வனதூர்கை அன்னையின் ஆபரணங்களை பாதுகாக்கும் ஒன்பது கன்னிகையுள் ஒருவள்",நீ என்று வனதூர்கை அன்னையை பார்க்க பூலோகத்தில் காலெடுத்து வைக்கின்றாயோ, அது எத்தகைய சூழ்நிலையாயினும் அதற்கு முன் உன்னவள் உன் முன் தோன்றுவாள்,இது உனக்கு மட்டும் எழுதப்பட்ட விதியல்ல, இது ஆபரணங்களை காக்கும் ஒன்பது பெண்களின் விதி!

அப்படி என்றால் என்னோடு வந்த மீதி ஐந்து பேருக்கும் அவரவர் இணை வந்ததினால் தான் நாங்கள் அறுவரும் ஐராவனத்தை விட்டு வெளியேறினோமோ என்று ஆனந்தனை பார்த்து ஜெகன் மோகனி கேட்க!

அப்படி தான் இருக்க வேண்டும் மகளே என்று மோகினியிடம் கூறியவர்! மகனிடம் அங்கு என்ன நடந்தது என்று விசாரிக்க தொடங்கினார்!

தான் ஐராவனத்தின் வெளியே நின்றது முதல் கலீபா அவர்கள் ஐவரையும் கடத்தியது மற்றும் ஜகன் மோகினியை தங்கள் உலகிற்கு அழைத்து வந்த அனைத்தையும் கூறி முடித்த நாதன்(ஆகமநாதன்) தன் தந்தையை பார்க்க!

அவரோ,"ஏன் நாதா உனக்கு இந்த அவசரம், நான் தான் காலம் வரும் வரை காத்திரு நாம் அனைவரும் செல்லலாம் என்றேனே!அதனை கேட்காமல் இப்போது எத்தகைய பெரிய சங்கடத்தை உருவாக்கி வந்துள்ளாய் என்று தெரியுமா! வரும் பௌர்ணமியை கடந்தால் யாராலும் அந்த ஆபரணங்களை எடுக்க இயலாது, அதனை தெரிந்து கொண்ட கலீபா இவர்கள் அறுவரையும் வெளியே வரவைக்க அவரவர் இணையை அந்த இடத்திற்கு வரவைத்துள்ளாள்,இவர்களது விதியை அவளுக்கு அவள் சாதகமாக அமைக்க முயன்று உள்ளாள்".

இப்போது நான் எவ்வாறு என் தோழிகளை கலீபாவிடமிருந்து காப்பாற்றி, நாங்கள் வனதூர்கை ஆலயத்திற்கு செல்ல இயலும் என்று தங்களால் கூற இயலுமா!"மோகினி".

நான் சுவடியை பார்த்து நாளை கூறுகிறேன் மகளே!இப்போது நீ இந்த கந்தர்வலோகத்தை விட்டு வேறு எங்கும் செல்லாதே உன் பாதுகாப்பையும் இந்த 14நான்கு லோகத்தின் நலன் கருதி கூறுகிறேன் கேள், என்றவர் தன் சரிபாதியான மனைவி மந்தாகினியிடம் மோகினியை பார்த்து கொள்ளுமாறு கூறியவர் அங்கிருந்து நகர்ந்தார்.

தங்கள் குலவதுவை கண்டு மகிழ்ச்சி அடைந்த மந்தாகினி,மகனிடம் கண்ஜாடையில் நான் பார்த்து கொள்கிறேன் என்று கண் சிமிட்டி கூறியவர் தன் மாளிகைக்கு மோகினியை அழைத்து சென்றார்.

செல்லும் மோகினியை பார்த்து தன்னவள் தன்னுடனே இருந்து விட கூடாதா என்று ஏக்கத்துடன் கேட்ட இதயத்தை, தன் கைகளால் அதனை அமைதி படுத்தியவன், அதற்கு மோகினியை விரைவிலே வனதூர்கை மலைக்கு அழைத்து செல்ல வேண்டும், அவள் கடமையை நிறைவேற்றிய அடுத்த நிமிடம் மோகினி ஆகமநாதனின் பதியாகி இருப்பாள் என்று கனவோடு கூறியவன், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தந்தையிடம் கேட்க சென்றான்.

பாதாள லோகம்

"கலீபா"
,தான் கடத்தி வந்த ஐவரை நோக்கி பார்வையை செலுத்தியவள், நான் உங்களை சிறுவயதில் பார்த்ததற்கு இப்போது பருவ பெண்களாக நான்றாகவே வளர்ந்துள்ளிர்கள் என்று கூறி அழகாக சிரித்தவள், ஆனால் சிறுவயதில் உங்களை தவற விட்டதை போல் இப்போதும் தவறவிடப்போவதில்லை,அதனால் இம்முறை நான் சொல்வது போல் செய்தாள் உங்கள் உயிரோடு உங்கள் வருங்கால துணைகளின் உயிரும் காப்பாற்றப்படும் ,இல்லையேனில் எல்லாம் சர்வநாசமாக்கபடும் என்றவள் அவர்கள் ஐவரையும் பார்க்க!

ஐந்து பெண்களான பத்மாசினி,சுபங்கரி, ஆக்ன்யா, அம்பிகா மற்றும் கமலதாரணி என்ன உலருகிறாய் என்று ஐவரும் ஒருசேர கேட்க!

நான் உலரவில்லை நடப்பதை மூன்கூட்டியே எச்சரித்து விட்டேன்!என்றவள்,தன் அரக்கசக்தியை கொண்டு இவர்கள் ஐவரின் துனையை காட்சிகளாக காட்ட!

அங்கு பாதாள லோகத்தில் கொட்டும் நெருப்பு குளம்பிள் ஆயுதங்களை அரக்கர்கள் உருவாக்கி கொண்டு இருக்க... அங்கு கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடலில் தீக்காயங்களுடன் அனல் கக்கும் அந்த இடத்தில் நிற்க முடியாமல் நின்று கொண்டு இருந்தனர் வாமனன், விக்ரமன், கருடன்,பலநேத்ரா மற்றும் பூதேஸ்வரா.

பெண்கள்"ஐவருக்கோ",நெஞ்சிகூட்டிற்குள் ஏதோ உடைவது போன்ற வலியை உருவாக்க, கண்கள் எல்லாம் கலங்கி நின்றிருந்தனர், அவர்களின் வருங்கால துணைகளின் நிலையை பார்த்து! பெண்கள் தங்கள் தலையை தானாக ஆட்டி ஒப்பு கொண்டனர் திருமணத்திற்கு.

கலீபா தான் எண்ணிய காரியம் அதற்குள் ஈடேறிய சந்தோஷத்தில் சத்தம் போட்டு சிரித்தவள் அடுத்து தான் இன்னும் செய்ய வேண்டிய சிறுசொச்சம் வேலைகளை செய்ய அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

கலீபா அகன்ற மறு நிமிடம் ஆக்ன்யா தன்னிடம் தொலை நுண்ணுணர்வு(Telepathy) முலம் பேசிய மோகினியிடம், நாங்கள் எங்கள் சக்தியை உபயோகித்தும் எங்களால் இங்கிருந்து தப்ப இயலவில்லை மோகினி என்று கூறிய ஆக்ன்யா, 'அந்த பக்கம் மோகினி கூறியதை கவனமாகக் கேட்டவள் அதன்படியே அனைவரையும் யோக நிலையில் அமரச்செய்தவள் சிறிது நேரத்திலே ஆழ்ந்த யோக நிலைக்கு சென்றவர்கள், தங்கள் உடம்பில் இருந்து ஆன்மாவாக வெளியேறினர்!'.

வெளியேறிய ஐவரும் நேராக சென்றது ஐராவனத்தின் வாயிலில், அதற்கு முன்பே மோகினி தானும் ஆன்மா வடிவில் வந்து நின்றிருந்தாள்.

அறுவரும் ஒன்று செர்ந்து வனதூர்கையை வேண்டி கைகூப்பி நிற்க!,அங்கு ஒலியாக வந்த அயிர்சூலனின் குரல்,"நீங்கள் ஐவரும் கலீபா சொல்படி அவள் கைகாட்டும் உங்கள் துணைகளை திருமணம் செய்து செய்து கலீபாவுடன் வனதூர்கை மலைக்கு வாருங்கள் என்றவர், மோகினி அவர்கள் கலீபாவுடன் வானதூர்கை மலைக்கு வரும் முன் நீ ஆகமதாதனை திருமணம் செய்து பௌர்ணமி தொடங்கிய அடுத்த நொடியே சிறிதும் தமாதமின்றி தூர்கையின் முன் தோன்றிவிடு, அப்படி நீ கலீபாவிற்கு பின் வந்தால் நடக்க போகும் அசம்பாவிதம் மிகக் கொடியதாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்".

திருமணம் செய்யாமல் வனத்தில் நுழைய வேறு மார்க்கம் உண்டா முனிவரே என்று அறுவரும் ஒருசேர கேட்க!

உன்னவர்கள் உங்களுடன் இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்ற குரல் மறைந்து விட!

அறுவரின் ஆன்மாவும் அவர் அவர் உடம்பில் தஞ்சமடைந்து நடக்க போகும் நிகழ்வை நினைத்து ஆழ்ந்த யோசனையில் இருந்தனர்.

கந்தர்வலோகம்

அதிகாலையில் ஆகமநாதன் மோகினியை காண தன் தாயின் மண்டபத்திற்கு வர!

ஆனால் அவனின் பைங்கிளியோ இங்கிருக்கும் நந்தவனத்தை பார்வையிடுகிறேன் என்று மந்தாகினியிடம் கூறியவள், சிட்டாக பறந்தவள் நின்றதென்னவோ கந்தர்வர்களின் நந்தவனம் என அழைக்கப்படும் பூக்களால் நிறைந்த சோலையில்.

தானும் உடனே நந்தவனத்திற்கு வந்த ஆகமநாதன், "அங்கு அடிமேல் அடியேடுத்து வைத்து தன் நீண்ட கருங்கூந்தலை முன்னே விட்டபடி குனிந்து அந்த வண்ணத்துப்பூச்சியை பிடிப்பதற்கு முயன்று கொண்டு இருந்தவளை கண்டு காதலுடன் புண்ணகைத்தவன்", அவள் விட்ட வண்ணத்துப்பூச்சியை சுலபமாக பிடித்தவன் அவளிடம் நீட்ட!

"அதனை ஆசையுடன் வாங்கிய மோகினி, அதனை முத்தமிட்டு பறக்க செய்தவள்,பின்பு தான் அதனை கொடுத்தவனை பார்க்க",அங்கு தன்னை உயிர்வரை அழைத்து செல்லும் காதல் பார்வை பார்த்து கொண்டு இருந்த ஆகமநாதனுக்கு நன்றி சொல்ல வாயேடுத்தவளுக்கு வார்த்தையோ வருவேனா என்று வீம்பு செய்ய வார்த்தை தடுமாறிய படியே நன்றி சொன்னவள் அங்கிருந்து விரைவாக செல்ல பார்க்க!

அதற்குள் அவள் கை பற்றி நிறுத்திய ஆகமநாதன், அவன் தந்தையிடம் வனதூர்கை மலைக்கு எப்படி செல்வது பற்றி பேச அழைக்க வந்ததாக தெரிவித்தவன்(ஆனால் மனதோ இப்படி அப்பட்டமாக பொய் கூறுகிறாயே ஆகமநாதா என்று சொல்ல!) அதனை கண்டு கொள்ளாமல் அவன் தந்தை இருக்கும் மாளிகைக்கு அழைத்து சென்றான்(அதாவது இழுத்து சென்றான்).

அங்கு வைரங்களாளும் நவரத்தினங்களாளும் அலங்கரிக்க பட்ட அந்த பெரிய சிம்மாசனத்தில் தங்க கிரீடத்தில் வெள்ளை மற்றும் நீலநிற கற்கள் பதித்து,அதே வேலைப்பாடுகள் கொண்ட பட்டு வஷ்திரம் அணிந்து கம்பிரமாக அமர்ந்திருந்தார் கந்தர்வரகளின் ராஜா ஆனந்தன்.

ஆனந்தன் மகன் வந்த விஷயம் அறிந்தவர், தான் கையில் வைத்திருந்த ஓலை சுவடியை மோகினியிடம் கொடுத்தவர் அதில் இருக்கும் மார்கத்தை சொல்ல தொடங்கினார்.....,"உனக்கும் ஆகமநாதனுக்கும் பௌர்ணமி தொடங்கும் முன் திருமணம் முடிந்து நொடியும் தமதிக்காது ஐராவனத்தின் முன் நின்றால்!,தடை விலகி வழி உண்டாகும்",அந்த இரு நொடியில் உள்ளே சென்ற அடுத்த நிமிடம் அதாவது பௌர்ணமி தொடங்கும் நேரம் நீங்கள் இருவரும் அம்மன் முன் இருந்தே ஆகவேண்டும், உங்களுக்கு முன் கலீபா ஐவருடனும், அவர்கள் துணைவருடன் வந்துவிட்டாள் என்றால் பின் நடக்க இருக்கும் விபரிதத்தை தேவர்களாலும் காப்பாற்ற இயலாது என்றவர் தன் மகனையும் மோகினியையும் பார்க்க!

மோகினி தனக்கு இது முன்பே தெரிந்ததினால், திருமணத்திற்கு சம்மதம் சொல்லியவள் அங்கிருந்து செல்ல துவங்கினாள்!

மோகினி செல்வதை பார்த்து தந்தையிடம் விடைபெற்ற ஆகமநாதன்,"மோகினி செல்லாதே நில், நான் உன்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தபடி நெருங்கிய நாதன்,அவளை சந்தோஷத்தில் கட்டி அனைத்த பின்பு அவளின் கடமையை உணர்ந்தவன் தன்னையே கடிந்தபடி விலகி சென்றான்".
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 14

மங்கை திருமகளாய்
மணவறையில் காத்திருக்க

ஆன்றோர் வாழ்த்துரைக்க
ஆயிரமாய் பூச்சொரிய
நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவன் நாண்பூட்ட
கட்டியவன் கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட
மெல்லியலாள் முகம் சிவக்க
இவள் பாதியிவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்

மணமக்கள் வாழியவே!

கந்தர்வலோகத்தில் சங்கீத மேள தாளங்கள் முழங்க பூக்களால் ஆன மணமேடையில் திருமண வஸ்திரம் மற்றும் அணிகலன்கள் அணிந்து பேரழகோடு ஆகமநாதன் மோகினியின் கழுத்தில் மாலை அணிவிக்க!,"மோகினியும் மங்களத்தின் அடையாளமாக கருதப்படும் சிவப்பு மற்றும் மஞ்சள் நீறப்புடவையில் கற்களின் வேலைபாடுகளோடு பல ஆபரணங்களோடும் நாணத்தோடு🥰 ஆகமநாதன் கழுத்தில் மாலை அணிவித்தவள், அடுத்த அடுத்து திருமண சம்பிரதாயங்களிள் ஆகமநாதன் பொன்னாலான மாங்கல்யத்தை மோகினியின் கழுத்தில் அணிவித்து மோகினியை தன் சரிபாதியாக ஆக்கினான்.

பாதாள லோகம்

பாதாள லோகத்தில் பத்மாசினி,சுபங்கரி, ஆக்ன்யா, அம்பிகா மற்றும் கமலதாரணி ஐவரும் கலீபா சொல்படி அவள் கொடுத்த உடையணிந்தவர்கள் தாங்கள் திருமணம் செய்ய போகும் துணைவர்களுக்காக காத்து கொண்டு இருக்க!

"அதே நேரம் கலீபாவின் காவலாளிகளாள் வாமனன், விக்ரமன், கருடன்,பலநேத்ரா மற்றும் பூதேஸ்வரா இவர்கள் அழைத்து வரப்பட்டனர், இவர்கள் ஐவரும் ரிஷிமுனிவர் காசியின் புதல்வர்கள், ஐவரும் மருத்துவத்தில் உயிரை காப்பாற்றும் வல்லுனர்கள் சஞ்சீவினி பூக்களை பறிப்பதற்காக ஐவரும் ஐராவனத்திற்கு வந்தவர்கள் உள்ளே நுழைய முடியாமல் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த நேரம் கலீபாவினால் மாயமாக்க பட்டு பாதளாலோகத்திற்கு வந்தனர்.

பத்மாசினி❤ வாமனன்,சுபங்கரி❤ விக்ரமன், ஆக்ன்யா❤ கருடன், அம்பிகா❤பாலநேத்ரா, கமலதாரணி❤பூதேஸ்வரா ஐவரின் இணையும் கலீபாவின் பார்வையில் திருமணம் நடந்தேற!

கலீபாவோ தான் 14நான்கு லோகத்தையும் ஆளபோகிறோம் என்ற சந்தோஷத்துடன் அவர்களை ஐராவனத்திற்கு அழைத்து செல்ல....

இதே நேரம் மோகினியும் ஆகமநாதனும் ஐராவனத்தில் உள் நுழைந்து விட்டனர், என்று கலீபாவின் ஆந்தை கூற!

அதனை கேட்டு கோபம் அடைந்த கலீபா ஐவர் இணையை இழுத்து கொண்டு வனதூர்கையின் முன் வந்து நின்றாள்.

வனதூர்கை மலை

ஹோமாவதி, தேவி குமரி, சந்திரவதனா
ஆகிய மூவரும் பௌர்ணமி பூஜைக்காக தாயார் செய்து கொண்டிருந்தவர்கள் முன் கலீபா தேவநாகரிகளான ஐந்து பேரோடு அவர்களின் கணவர்மார்களையும் அழைத்து கொண்டு வந்து நிற்க!

இதனை பார்த்த இருவருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க,"காலத்தை பார்க்க கூடிய சக்தி உடையவளான சந்திரவதனா அடுத்து நடக்க இருக்கும் அழிவை தடுத்து நிறுத்த அப்போது அங்கு வந்து நின்ற மோகினி மற்றும் ஆகமநாதனை கண்டு கண்ணீர் விட்டவள் நொடியும் தமதிக்காது இருவரையும் தூர்கையின் கையிலிருக்கும் நெருப்பு சுடரை இருவர் மீது தூக்கி வீச!".

தங்கள் இருவர் மீது தீசுடரை போட்ட சந்திரவதனாவை மோகினி "ஏன் இப்படி செய்தாய்" என்று கோபமாக கேட்டவள் நொடியில் ஆகமநாதனுடன் சாம்பலாக, மற்றவர்களோ ஏன் இப்படி செய்தாய் நிலா என்று கேட்க!

கலீபா சந்திரவதனாவை தன் மந்திர கட்டுக்குள் வைத்தவள், தன் கோபமேறிய கண்களால் மீதி இருக்கும் ஏழ்வரையும் அம்மனின் கழுத்தில் இருக்கும் ஆபரணங்களை எடுக்க சொல்லி உந்தியவள், அவர்கள் கணவர்மார்களை கொண்றுவிடுவேன் என்று சொல்ல!

ஏற்கனவே கண்ணேதிரே இரண்டு பேர் சாம்பலாக மாறியதை நினைத்து பயம் கொண்டவர்கள்,மீதி இருப்போருக்கும் எதுவும் ஆகாமல் இருக்க, தங்கள் மாங்கள்யத்தை காப்பதற்காக கடமையை மறந்து, சுயநலத்தோடு ஆபரணங்களை எடுக்க அம்மனின் மீது கைவைத்தவர்களை அம்மனின் மந்திர கட்டு சக்தியினால் தூக்கி எறிந்து வீச!

கலீபா கோபமடைந்தவள் தேவர்களும் அசுரர்களும் உருவாக்கிய நல்ல அதிர்வுகளை(positive vibrations) தன் முழு பலத்தையும் பிரயோகித்து அதனை உடைத்தவள், மறுபடியும் அவர்கள் வாழ்க்கை துணைவர்களோடு எடுக்கச் சொல்ல!

ஹேமாவதி, தேவி குமரி இருவருக்கும் அவர்களது துணை இல்லாத காரணத்தினால் அவர்கள் இருவரும் ஆபரணங்களை எடுப்பதற்கு சென்றவர்கள் தூக்கி எறிய பட்டு அங்கிருந்த வற்றாத கங்கை நீர் குளத்தில் தண்ணீரோடு தண்ணீராக கலந்து விட!, "மற்ற ஐவர்களும் ஐந்து ஆபரணங்களை அவர்களின் துணைகளின் உதவியோடு எடுத்து கலீபா விடம் கொடுத்தவர்கள், அந்த இடத்திலே கற்சிலைகளாக மாறிவிட!".

கலீபா கையில் ஆபரணங்கள் கிடைத்த மகிழ்ச்சியில் ,அதனின் சக்தியை தன்னுள் புகுத்த பார்த்தவள் பின்பு முடியாமல் போக! அப்போது தான் அங்கிருக்கும் சூழ்நிலையை கிரகித்தவளுக்கு ஆத்திரமாக வந்தது சந்திரவதனாவை நினைத்து!, இதுவரை சந்திரவதனாவிற்கு சாதாரணமான வெளிச்சம் சக்தி‌ மட்டுமே இருந்தது என்று நினைத்து கொண்டிருந்த கலீபாவிற்கு, இப்போது தான் அவளுக்கு காலத்தை பார்க்கும் சக்தி உள்ளதை நினைத்தவருக்கு, என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியகாரியை தன் தோல்வியை நினைத்து அந்த இடமே அதிர கத்தினாள்!

அதே நேரம் சந்திரவதனா தான் ஒளியால் பயணிக்கும் சக்தியை வைத்து அயிர்சூலண் சொல்படி மோகினியின் மறுபிறப்பை தேட துவங்கினாள்.

காலங்கள் பல உருண்டு ஓட கலீபா சந்திரவதனாவை தேட....,சந்திரவதனா மோகினியின் மறுபிறப்பை தேட இப்படி இவர்களின் தேடலிலும்,நீலகண்டனின் மூதாதையர்கள் 107சக்தி பீடத்திற்கு சென்று வந்ததினாலும், 108வதாக நீலகண்டன் சாவித்திரி தம்பதியர் தங்கள் பேரப்பிள்ளை ரிஷிவர்தன் பிறந்ததினாள் தன் மகன், மருமகள் ,ரிஷிவர்தன் என்று குடும்பம் சகிதமாக வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்று வந்தவர்களுக்கு, அடுத்த மாதம் மீண்டும் தக்ஷயானி கருவுற்று இருப்பதை கேட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர் மாறனின் பெற்றவர்கள்!

நீலகண்டனின் குடும்ப தலைமுறையின் படி அவர்களுக்கு ஒற்றை ஆண் வாரிசு தான், ஆனால் திருமணம் முடிந்து தனது மாமியார் மூலம் இதனை கேள்வி பட்ட சாவித்திரி ஏனோ இதனை நம்பவில்லை ஆனால் மாறன் பிறந்த பின்னர் அடுத்த குழந்தை வேண்டும் என்று நினைத்தவருக்கு ஏனோ மாறனை தவிர வேறு குழந்தை இல்லை."அதன் படியே தக்ஷயானிக்கும் பிள்ளை பேறே இல்லாமல் ஒற்றை பிள்ளையாக ரிஷிவர்தன் பிறக்க அடுத்து ஏழுவருடம் கழித்து குடும்பத்தை ஆச்சிர்யத்தில் திகைக்க வைத்தவள் அடுத்த பத்து மாதத்தில் வைஷ்ணவியாக பிறப்பேடுத்தாள் ஜெகன் மோகனி தன் காதல் கணவனை காப்பதற்காக.

இதனை அனைத்தையும் அயிர்சூலனின் வாய்மொழியால் கேட்ட அனைவரும் திகைத்து நின்றனர் என்றால்,வைஷ்ணவியோ பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தவளின் பார்வை தீயாய் சந்திரவதனாவை சுட்டுக் கொண்டு இருந்தது,'அவள் வனதூர்கையை எப்போது தன்னையறியாமல் மூன்று முறை சுற்றினாலோ அப்போதே அவளின் முந்தைய பிறப்பின் ஞாபகமும் வந்து விட்டிருந்தது ஆனால் அது தெளிவில்லாமல் இருக்க, இப்போது அயிர்சூலன் சொன்னதின் மூலம் முழுவதுமாக நினைவு வந்து விட்டிருந்தது'.

"கௌவ்ரவ்"
,அப்போ நாம வரும் போது பார்த்த சிலைகள் எல்லாம் அந்த பெண்களும் அவர்களுடைய கணவர்களுமா!,"ஏய் நிலா ஏற்கனவே இவங்க எல்லாரும் போனது பத்தாதுனு எங்களையும் இங்கேயே கைமா பண்ண தானே எங்களை இங்க நீ நல்லவ மாதிரி கடத்தி வந்து இருக்க!"

ஏய்.... என்று கௌவ்ரவை அடிப்பதற்கு கையை நிலா தேவி ஓங்க!

ஆகாஷ் எங்களுக்கும் நீங்க சொல்லுற கதையை நம்புறதா வேண்டாமான்னு தெரியலை, ஆனால் இங்க இருக்குறது, எங்க யாருக்கும் சரி இல்லைனு படுது,அதனால எங்க எல்லாரையும் எங்க வீட்டிலேயே விட்டுவிடுங்க! என்றவன் அனைவரையும் அழைத்து கொண்டு வெளியே வந்திருந்தான்!

இவர்களுடனே வெளியே வந்த அயிர்சூலன், "நிகழ் காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு பயணம் செய்து வந்தால் அவர்கள் கடமை முடிந்து தான் நிகழ் காலத்திற்கு திரும்பி செல்ல முயலும் என்றவர் வானத்தை பார்க்க!"அங்கே பறக்கும் தேர் இவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தது!".

28054
இவர்கள் அருகில் வந்து நின்ற தேரில்,"ஒரு பரலோக குரல் அவர்களை தேரில் ஏறச் செய்தது. அது மனதின் வேகத்தில் ஓடத் தொடங்கி, அவர்களை ஒரு மர்மமான இடத்திற்கு அழைத்துச் சென்றது, ரவிந்தர், ஷாலினி, அஞ்சலி, ஜீவா,கௌவ்ரவ், ஆகாஷ், வைஷ்ணவி,நிலாதேவிஅனைவரும் தாங்கள் எப்படி அந்த குறளுக்கு கட்டுப்பாட்டில் வந்தோம் என்று தெரியாமல் தங்களை குழப்பிக் கொள்ள!",அயிர்சூலன் மௌனமாக அந்த தேரினிலிருந்து இறங்கியிருந்தார்.

அது தேன் மற்றும் பழமையான சில்வன் காடுகளால் சூழப்பட்ட ரத்தினங்களின் தீவாக இருந்தது.

அவர்கள் தேரில் இருந்து இறங்கியதும், ஆண்கள் ஐவரும் பெண்களாக மாறியிருந்தனர்.

அவர்கள் தீவை ஆராய்ந்தபோது அவர்கள் ஒன்பது அடைப்புகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு பேரரசு நகரத்தைக் கண்டனர் மற்றும் கடுமையான பைரவர்கள், மாத்ரிகாக்கள், க்ஷேத்ரபாலர்கள் மற்றும் திக்பாலர்களால் பாதுகாக்கப்பட்டனர்.

அவர்கள் நகரத்திற்குள் நுழைந்தவுடன், அதன் செழிப்பு மற்றும் உயர்ந்து வரும் உள்கட்டமைப்புகளால் வியப்படைந்தனர், இறுதியாக யோகினிகளால் பாதுகாக்கப்பட்ட சிந்தாமணி கிரிஹா என்ற பேரரசு அரண்மனையை அடைந்தனர்.

இதற்கு ஸ்ரீபுரா (தேவிபட்டனா)தேவி புவனேஸ்வரியின் தலைநகரம், மணித்வீபத்தின் பேரரசி, ஆதி பராசக்தியின் இருப்பிடம். அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது, அனைத்து உலகங்களுக்கும் ராணியான தேவி புவனேஸ்வரியைக் கண்டார்கள்.
அவள் நிறம் சிவப்பாக இருந்தது. அவள் மூன்று கண்கள், நான்கு கைகள், சடை முடி மற்றும் சிவப்பு ஆபரணங்கள் அணிந்திருந்தாள். அவள் தாமரை மாலையை அணிந்திருந்தாள், அவளுடைய உடலில் சிவப்பு சந்தனப் பூசப்பட்டது. அவள் இடது கைகளால் ஒரு கயிறு மற்றும் கயிற்றைப் பிடித்தாள், அவளுடைய வலது கைகள் அபய மற்றும் வரத முத்திரைகளைக் காட்டியது. அவள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள் மற்றும் பிறை நிலவின் இலக்கம் கொண்ட கிரீடத்தை முகடு நகையாக அணிந்திருந்தாள்.

வெண்ணிற நிறமும், வெண்ணிற ஆடையும் அணிந்தும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவருமான புவனேஸ்வர மகாதேவரின் இடது மடியில் அவள் அமர்ந்திருந்தாள் . அவனது தலைமுடி மேட்டாக இருந்தது மற்றும் பிறை சந்திரன் மற்றும் கங்கையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர் மூன்று கண்களுடன் தலா ஐந்து முகங்களையும், நான்கு கரங்களையும், வரத மற்றும் அபய முத்திரைகளைக் காட்டும்போது திரிசூலத்தையும் போர்க் கோடரியையும் ஏந்தியிருந்தார். படைப்பிற்கு முன், விளையாட்டில் ஈடுபடும் போது, தேவி பகவதி தனது உடலை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, வலது பாகத்தில் இருந்து புவனேஸ்வரரை உருவாக்கினார்.

தெய்வீக தம்பதியினர் பஞ்சப்ரேதாசனத்தில் அமர்ந்திருந்தனர், இது பரமசிவனை பலகையாகக் கொண்டிருந்தது, சதாசிவன், ஈஸ்வரன், ருத்ரன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் ஐந்து கால்களாக இருந்தனர். பல யோகினிகள் அவர்களுக்குப் பரிமாறுகிறார்கள், சிலர் விசிறி, சிலர் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு, சிலர் கற்பூரம் கலந்த வெற்றிலையைக் கொடுத்தனர், சிலர் தேன், நெய் மற்றும் தேங்காய்த் தண்ணீர் கலந்து செய்த பானத்தை வழங்குகிறார்கள். சிலர் புவனேஸ்வரியின் தலைமுடியை அலங்கரிப்பதற்கும், சிலர் மேக்கப் செய்வதற்கும், சிலர் மாலைகளை அணிவிப்பதற்கும் மும்முரமாக இருந்தனர், சிலர் பாடி, நடனமாடி தேவியை மகிழ்வித்தனர்.

மற்ற பதிப்புகளில், லலிதா திரிபுரசுந்தரி தானே ஒரே சிம்மாசனத்தில் (பஞ்சப்ரேதாசனஸ்தானம் ) தனியாக அமர்ந்திருக்கிறார், தேவிக்கு பலகையாக சேவை செய்யும் பரசிவனைத் தவிர , அவரது தொப்புளில் இருந்து எழுந்த தாமரை மற்றும் தேவி அதன் மீது அமர்ந்திருக்கிறார். அவளது வலது கால் அவளது உடலுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவளது இடது கால் ஸ்ரீ சக்கரத்தின் மீது அமர்ந்திருக்கிறது, உலகளாவிய உந்தம் மற்றும் செயலின் தெய்வீக வட்டு. ஒன்பது ரத்தினங்கள் மற்றும் குருவிந்த ரத்தினங்களால் செய்யப்பட்ட கிரீடம் கொண்ட ஆபரணங்கள் மற்றும் நகைகளுடன், வெர்மில்லியன் நிற ஆடைகளை அணிந்துள்ளார். தேவி தனது கிரீடத்தில் பிறை சந்திரனையும் பத்மராக கல்லையும் அணிந்திருக்கிறாள். அவளுடைய நிறம் உதய சூரியனின் நிறம், ஒரு நட்சத்திரத்தின் நிறத்துடன் போட்டியிடுகிறது மற்றும் ஆயிரம் சூரியன்களை விட பளபளப்பானது. சம்பகம், அசோகம், புன்னகை மற்றும் சௌகந்திகா மலர்களால் அவளுடைய தலைமுடி அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேவி நான்கு ஆயுதங்களுடன், மேல் கரங்களில் பாஷா (கயிறு) மற்றும் அங்குஷா (கோடு) ஏந்திய நிலையில், கீழ் கரங்களில் கரும்பு வில் மற்றும் மலர்களால் செய்யப்பட்ட அம்புகள் உள்ளன. தேவி தன் நடத்தையில் எப்போதும் சிரித்து அமைதியாக இருக்கிறாள். அவள் ஷோடஷி, காமேஸ்வரி, காமக்ஷி, ஸ்ரீவித்யா, சந்திரகாலேஷ்வரி, பரமேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறாள். பரசிவனாகக் கருதப்படும் காமேஸ்வர சிவன் அவள் துணைவி.பிரபஞ்சத்தின் மிகவும் இணக்கமான அம்சம்.

பலர் பார்க்க ஏங்க படும், பலர் பார்க்வே முடியாத உலகையும், அதில் தாங்கள் தெய்வமாக வழிபட்டு வரும் புவனேஸ்வரி மாதாவை கண்டது கனவுகளா என்று நினைத்தவர்கள் கண்களுக்கு புவனேஸ்வரி தேவியின் கால் நகத்தின் பளபளப்பிள் மில்லியன் கணக்கான பிரபஞ்சங்களைக் கண்டனவர்களு நமது உலகம் மட்டுமே இப்புவியில் உலகம் இல்லை என்று அனைத்தையும் அறிந்தவர்களுக்கு ஏனோ தங்களையும் அறியாமல் கண்ணீருடன் ஆதி சக்தி அன்னையை வணங்கினர்.
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
28056
காலம் 15

தேவி புவனேஸ்வரி மணித்வீபாவின் ராணியாக அனைத்து உலகையும் காக்கும் அன்னையாக அனைவரையும் பார்த்து புண்ணகைத்தார்.

"அயிர்சூலன்" தேவி தாங்கள் தான் கலீபாவை அழிக்க மார்க்கம் கூற வேண்டும்!

கலீபா அழியவேண்டும் என்றால் தேவநாகரி ஒன்பது பேரும் தங்கள் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்றவர் நிலா தேவி, வைஷ்ணவி மற்றும் ஆகாஷை பார்த்து புண்ணகையுடன் கூற!

நிலா தேவி ஆனால் தாங்கள் தானே எங்களை அந்த ஆபரணங்களை பாதுகாக்க படைத்தீற்கள் , ஆனால் நாங்கள் ஏன் உயிரை தியாகம் செய்ய வேண்டும்!

மகா பௌர்ணமியை நீங்கள் ஒன்பது பேரும் கடந்திருந்தால், அந்த ஆபரணங்களின் சக்தி என்னுள் அடங்கியிருக்கும்! இப்போதும் நீங்கள் ஒன்பது பேர் ஒன்று சேரும் நேரம் எல்லையில்லாத சக்தியாக நான் வருவேன் தூர்கையாக என்றவர் புண்ணகைக்க!

அதே நேரம் அணைவரும் தேவி பட்ணாவிலிருந்து தேரில் ஏறியிருந்தனர், பெண்களாக மாறிய ஆண்கள் அனைவரும் இப்போது ஆண்களாகவே மாறியிருந்தனர், அதே மனதின் வேகத்தோடு வனதூர்கை மலைக்கு வந்திறங்கிய தேர் அனைவரையும் இறக்கி விட்டு மாயமாகி விட!

அதே நேரம் வைஷ்ணவி,நிலா தேவியை தன் கோபம் குறையும் வரை கண்ணம் கண்ணமாக அறைந்திருந்தாள்!,"நம்பிக்கை துரோகி போன பிறவியில் தான் எங்களை கொன்றே, இந்த பிறவியிலும் எங்களை கொல்லுறதுக்காகவே தேடி வந்தியா!உன்னை நம்பின பாவத்துக்கு நான் இறக்குறேன் சரி எதுக்கு இவங்களை இங்கே அழைத்து வந்தாய் சொல் சொல் என்று அவளை கட்டி அணைத்து கதறி அழ..."

ஆகாஷோ,அவள் அழுவதை 😭 பொறுக்காதவன் வைஷ்ணவியை தன் நெஞ்சினில் அனைத்து கொண்டவன்,வைஷ்ணவி எதுவாக இருந்தாலும் அது என்னை தாண்டி தான் உன் கிட்ட வரும் கலங்காத நான் இருக்கிறேன் என்று ஆகாஷ் ஆறுதல் கூற!

"நிலா தேவி",வைஷ்ணவி நான் காலத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒரு பொம்மை வைஷ்ணவி,அப்போது நான் உங்களை எதுவும் செய்யவில்லை என்றால் இப்படி இருக்காது இந்த உலகம் புரிந்து கொள் என்று அழுகையுடன் வைஷ்ணவியின் காலை பிடிக்க!

"ஜீவா" இங்கு இவங்க ரெண்டு பேரும் வந்ததற்கு சரியான காரணம் இருந்தது, ஏன் நாங்கள் அனைவரும் இவர்களுடன் வரவேண்டும் என்று அயிர்சூலனிடம் கேட்க!

அவரோ புண்ணகையுடன் உங்கள் பூர்வபுண்ணியமும் உங்களது நல்ல கர்மவினையும் தேவியின் தரிசனத்தை பெறுவதற்காக இங்கு இவர்களோடு வந்திருக்கிறீர்கள்.

அதே நேரம் வைஷ்ணவி ஆகாஷின் நெஞ்சினில் இருந்து விலகியவள் அவனை அங்கிருந்து தனியே அழைத்து வந்தவள், ஆகாஷ் நான் எது செய்தாலும் உன் நல்லதுக்கு தான் செய்வேன் உனக்கு நம்பிக்கை இருக்கா!

எதுக்கு இந்த நேரத்தில் இப்படி சொல்லுறே!"ஆகாஷ்"

நீ சொல்லு நம்பிக்கை இருக்கா! இல்லையா?"வைஷ்ணவி"

இருக்கு! நான் என்னையே விட இந்த பத்து நாட்களில் உன்னைய மட்டும் தான் நம்பி எல்லாம் இடத்துக்கும் வந்து இருக்குறேன் வைஷ்ணவி இனிமேலும் வருவேன் என்றவன் சிரிக்க!

அவன் என்னமாதிரியான மனநிலையில் கூறினானோ, "ஆனால் காதல் கொண்ட வைஷ்ணவியின் மனதிற்கு அது மிகவும் தைரியம் அளித்தது, அதனால் எதனைபற்றியும் யோசிக்காமல் கண்ணீருடன் தன் இதழைஅவன் இதழோடு பொருத்தி தன் காதல் முழுவதையும் தன்னவன் நெஞ்சிற்குள் தெரிவித்தால் பெண்ணவள் தன் நேசத்தை!"

அவளின் இதழின் முத்தத்தில் காதலை அறிந்தவனிற்கோ கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன், இப்போது தன் காதலை வைஷ்ணவிக்கு தன் இதழ்களால் உணர்த்தி கொண்டு இருந்தான்.

நீண்ட இதழ் முத்தத்தில் பிரியவே மணமில்லாமல் தூரத்தில் கேட்ட நிலாவின் குரலில்,தாங்கள் இருவரும் பிரிந்தனர்‌ ஆகாஷூம் வைஷ்ணவியும்,
இப்போது சிறிது நேரத்தில் இங்கு நிலா தேவி வந்துவிடுவாள் அதற்குள் தான் ஆகாஷிடம் சொல்ல வேண்டிய காட்டாயத்தை உணர்ந்தவள்,இனி இங்கே நடக்க போற எதுலயும் தலையிடாத ஆகாஷ்,"ஆகாஷ் எதுவோ சொல்ல வர",அவன் வாயைத் தன் கைக் கொண்டு முடியவள், நான் இன்னும் சிறிது நேரத்தில் வைஷ்ணவியா இல்லாமல் மோகினியா மாறி இருப்பேன்,அப்போது நீ என்னை கொல்லக்கூடிய சூழ்நிலை வந்தாலும்,நம்ம காதலை நினைக்காமல் என்னை கொல்ல வேண்டும் என்றவள் அவன் கண் கொண்டு பார்க்க!

'ஆகாஷ் அவள் சொல்வதை கேட்டவனின் கண்களின் நீர் அவளின் கைகளை நினைத்தது',வைஷ்ணவியின் கைகளை அகற்றியவன், அப்போ அந்த சாமி சொன்ன மாதிரி நீ உன்னோட உயிர விட போறியா! வேண்டாம் வா நாம இங்கே இருந்து நம்மவீட்டுக்கு போகலாம் வைஷ்ணவி.

நாம் இதை சரி செய்தால் மட்டுமே இங்கே இருந்து போக முடியும் ஆகாஷ்!

பாரவாஇல்லை எந்த காலமா இருந்தா என்ன நீ என்னோட இருந்தாலே போதும் அதனால வா இப்பவே அப்பா அம்மா மற்ற எல்லோரையும் அழைச்சிட்டு போகலாம்!

இன்னும் கொஞ்ச நேரத்தில் பழைய நிகழ்வு நடந்த அதே நேரத்திற்கு நீயும் நானும் செல்ல போகிறோம் என்றவள் நம்முடன் வந்த மற்ற அனைவரும் அவரவர் காலம் மற்றும் நேரத்தில் அவர்களது வாழ்க்கையில் இனைந்து விடுவார்கள் என்றவள் மற்றதை எல்லாம் மறைத்து விட்டாள்.

அதற்குள் இவர்கள் அருகில் வந்த நிலா தேவி வைஷ்ணவி என்று அழைக்க!
"இப்போது நிலா தேவியை பார்க்க திரும்பிய வைஷ்ணவி அங்கு யாரும் இல்லாமல் காடாக இருப்பதை பார்த்தவள் திரும்பி ஆகாஷை பார்க்க,அங்கு ஆகாஷ் ஆகமநாதனாக நின்றிருந்தான்".

மோகினி தாமதமாகி கொண்டு இருக்கிறது நிற்காமல் வா!நாம் வனதூர்கை மலைக்கு செல்ல வேண்டும் என்றவன் மோகினியாக இருக்கும் வைஷ்ணவியின் கைகளை பிடித்த ஆகமநாதனாக இருக்கும் ஆகாஷ், தன் கந்தர்வலோக சக்தியை கொண்டு வனதூர்கை மலைக்கு கலீபாவிற்கு முன் வந்துவிட்டிருந்தனர்.

ஹேமாவதி, தேவி குமரி இருவரும் பௌர்ணமி பூஜைக்கு தயார் செய்து கொண்டு இருக்க!"சந்திரவதனா வைஷ்ணவிக்காக காத்து கொண்டு இருந்தாள்!"

ஆகாஷ், வைஷ்ணவி தங்களின் மாயசக்தி முலம் ஆலயத்திற்குள் வந்தவர்களை பார்த்த ஹேமாவதியும் குமரியும் அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி மோகினியிடம் வினவ!

வைஷ்ணவியோ மோகினசிரிப்புடன் சிரிப்புடன் இருவரையும் கங்கை குளத்தில் மூழ்கி எழ சொல்லியவள், அங்கு நின்றிருந்த வனதூர்கை சிலையை பார்த்து மர்மமான ஒரு புண்ணகை சிந்தியவள், தேவியின் கழுத்தில் இருக்கும் ஆபரணத்தை ஒன்பது தாமரை உதவியுடன் எடுத்தவள் ஆபரணங்கள் அனைத்தையும் தூர்கையின் முன் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு குண்டத்தில் போட தங்கம் நெருப்பில் உருகி அதில் இருக்கும் சக்தி ஒரு இடியின் முழக்கத்துடன் அந்த வனதூர்கை மலையே அதிர பெரிய சிவப்பு ஒளி உருண்டை வடிவில் அந்த நெருப்பு குண்டத்தில் மிதந்து நிற்க!

ஹேமாவதி, குமரி இருவரும் ஏய் மோகினி என்ன காரியம் செய்கிறாய் என்று கோபத்துடன் கேட்டவர்கள்,தங்கள் நீர் சக்தியினால் அவளை தாக்க!

அவர்களின் நீர் தாக்குதலிருந்து தப்பித்தவள் ஆகமநாதனை சற்று நகர்த்திவிட அவனோ நெருப்பு குண்டத்தின் அருகில் போய் நிற்க!

அதே நேரம் கலீபா,"பத்மாசினி வாமனன்,சுபங்கரி விக்ரமன், ஆக்ன்ய கருடன், அம்பிகா பாலநேத்ரா, கமலதாரணி பூதேஸ்வரா ஐவரின் இணையும் அழைத்து கொண்டு வனதூர்கை மலைக்கு கலீபா வந்தவள், பார்த்தது ஹேமாவதி,தேவி குமரி, ஜகன்மோகினி மற்றும் சந்திரவதனா சண்டையிட்டு கொண்டு இருப்பதும் அங்கு தூர்கையின் முன் இருக்கும் நெருப்பு குண்டலத்தின் மேல் 14பதிநான்கு சக்தியும் உருண்டை வடிவில் இருப்பதை பார்த்து ஆனந்தம் அடைந்தவள் தான் வந்த காரியம் சுலபத்தில் ஈடேற்றிய தன் தங்கை ஜகன் மோகினியை பார்வையிட்டாள் கலீபா.

கலீபாவின் பார்வை ஜகன் மோகினியாக இருக்கும் வைஷ்ணவியின் மேல் பட்டவுடன் அவள் தன் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட சந்திரவதனா,தன்னுடன் மற்ற ஏழ்வரையும் அழைத்து கொண்டு தீப்பிழம்பு உருண்டையாய் இருக்கும் ஆபரணத்தின் சக்தியை தொட அதில் அவர்களின் உடம்பு சாம்பலாகி காற்றில் கலந்து விட அவர்கள் ஆத்மா ஜோதியாகி அந்த ஆபரணத்தின் சக்தியில் கலந்து விட!

வாமனன்,விக்ரமன்,கருடன்,பாலநேத்ரா,பூதேஸ்வரா, ஆகமநாதன் அறுவரும் இங்கு நடப்பதை தடுக்க வழியாறியாது கண்ணீருடன் ஆபரணசக்தியை சுற்றி காவலாக இருக்க!

ஒரு நிமிடத்தில் நடந்து விட்டதை நம்பமுடியாத பார்வையுடன் பார்த்த கலீபா இப்போது தன் தங்கையை பார்த்து நீ எத்தனை முறை காலத்தையே மாற்றி வந்தாலும் இந்த முறை நடப்பதை உன்னாலே தடுக்க முடியாது என்றவள், தன் உயிர் சக்தி, யோக சக்தி என்றுஎல்லாவற்றையும் ஒன்று திரட்டி மோகினி உடம்பில் வந்த கலீபா சத்தம் போட்டு சிரித்தவள், அந்த ஆபரணத்தின் சக்தியை தன்னுள் ஐக்கியமாக்க போக!

வாமனன்,விக்ரமன்,கருடன்,பாலநேத்ரா,பூதேஸ்வரா ஐவரும் கலீபாவுடன் சண்டையிட்டு கொண்டு இருக்க!
மோகினி உடம்பில் கலீபா வந்துவிட்டிருந்ததை பார்த்த ஆகமநாதனிற்கோ(ஆகாஷிற்கோ), மோகினி (வைஷ்ணவி)ஆத்மாவை தேட அதுவோ கலீபா உடம்பில் இருக்க, அவளால் நகரமுடியாதபடி கலீபா மந்திரத்தால் கட்டுபோட்டுவிட்டிருக்க!

கலீபா ஐவரையும் தன் மந்திர வாளினால் கொண்றவள் அவர்களின் ரத்தத்தில் நடந்தபடி அந்த சக்தியை உள்வாங்கி கொண்டு இருக்க!

ஆகாஷ் போய் என்னோட உடம்பை கொல்லு என்று கலீபாவின் உடம்பிலிருந்த மோகினி சத்தமிட!

அதற்குள் அவள் அருகில் வந்த அகமநாதன்(ஆகாஷ்) என்னால முடியாது வைஷ்ணவி என்று பெருங்குரலேடுத்து அழ !

இது அழுகுற நேரமில்லை ஆகாஷ் போ! என்று பெருங்குரலேடுத்து வைஷ்ணவி கத்த!

மோகினியின் உடலில் இருக்கும் கலீபா என்ன கொல்ல போறியா ஆகாஷ்.......ஆகமநாதா..... என்று அவளது குரலில் கேட்டவள்,"நம்ம காதல் மற்றும் நான் உன் மனைவி என்பதை நினைத்து பாராக்காம என்ன கொல்ல போறிங்களா! நாதா" என்று மோகினியின் குரலில் கண்ணீருடன் கேட்டவள், அவன் தடுமாறி கொண்டு இருப்பதை தனக்கு சாதகமாக அமைத்தவள் நொடியும் தாமதிக்காமல் இன்னும் சக்திகளை வேகமாக உரியதொடங்கினாள் கலீபா.

ஆகமநாதன் இப்போது நொடியும் தாமதிக்காமல் கலீபாவின் உடம்பில் தனது வாள் கொண்டு வயிற்றை குற்றி கிழிக்க!

"நான் உங்களிடம் தேவி புவனேஸ்வரி மாதா கூறியதை மறைத்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் நாதா!", என்ற மோகினி கலீபாவின் உடம்பிலிருந்து ஜோதியாக வெளியேறியவள் ஆபரணத்தின் சக்தியோடு ஐக்கியமாக!

மோகினியின் ஆத்மா ஒன்றினைந்த நேரம், ஆபரணத்தின் சக்தி வெடித்து சிதற அங்கு தேவி புவனேஸ்வரி மாதா மகாக்காளியாக கோபமாக அவதரித்தார்!

மோகினியின் உடம்பில் இருக்கும் கலீபாவை தன் கொடுவாள் கொண்டு வெட்டி அந்த உடம்பில் இருக்கும் கலீபாவின் ஆத்மாவை தன் காலில் எரிந்து கொண்டிருக்கும் ஜூவாலையியில் பொசுக்கியவர் மோகினியின் உடலை சாம்பலாக்கியவர் அதனைக் காற்றோடு கலந்து விட்டிருந்தார்.

உக்கிரமாக காளி இதனையனைத்தையும் தன் கோபம் குறையாமல் நிமிடத்தில் நிகழ்த்திவிட!

ஆகமநாதன் (ஆகாஷ்) உங்களையே நம்பி இருந்து உங்களுக்காக உயிரை விட்ட இவர்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள் தேவி என்று ஆகமநாதன் மண்டியிட்டு கண்ணீர் விடுக்க!

நீ உன் காதலை தியாகம் செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் நாதா, ஆனால் காலப்படி நடப்பதை மாற்ற முடியாது என்றவர்!நீ வந்த கடமை முடிந்ததினாள் நீ உன் காலத்திற்கே செல்வாய், மற்றும் நான் உன் குலதேவதையாய் இருந்து உன் குலத்தை காப்பேன்!

நான் என் காலத்திற்கு சென்றாலும் நான் எதையும் மறக்காமலிருக்க அருள்பாலிக்க வேண்டும் தாயே!"ஆகமநாதன்"

அவ்வாறே ஆகட்டும் என்றவர் மறைந்து விட!

தேவதையாய் எனது வாழ்வில் நுழைந்தவள்
காற்றாய் கரைந்து சென்றிருக்க!
விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம் இருக்கும்!
வலிபோக்க வழி என் இனிய தனிமையே!
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
28276
காலம் 16

உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு.....

இந்த ஆறு மாதத்தில் சென்னை முழுவதையும் வைஷ்ணவியை தேடி அலைந்த ஆகாஷிற்கு ஏனோ அவள் சம்பந்தபட்ட எந்த தகவலும் கிடைக்கவில்லை, அப்போது தான் அவனுக்கு புரிந்தது வைஷ்ணவி நிரந்தரமாக இந்த உலகிலிருந்து சென்றுவிட்டிருந்ததை,ஆனால் காதல் கொண்ட அவன் மனது அதனை ஏற்காமல் இல்லாத ஒருத்தியை நினைத்து காதலால் கரைந்து கொண்டிருந்தது.

அதே நேரம் அவன் போன் ஒலி எழுப்ப,அதன் திரையில் இருந்த அவனது தாயின் பெயரை கண்டவன், அதனை அட்டென்ட் செய்து காதில் வைக்க!

கண்ணா இன்னும் எத்தனை மாதம் தான் சென்னையிலே இருப்ப, இந்த ஆறுமாதமா உன்னோட அனைத்து கம்பெனி பொறுப்புகள் முழுவதையும் ஓய்வின்றி உங்க அப்பா செய்யுறதுல அவருக்கு ரோம்ப சோர்வா இருக்கு ,சீக்கிரம் வா கண்ணா என்று ஷாலினி மகனிடம் பேச!

ஆகாஷோ அதற்கு பதில் அளிக்காமல் போனை கட் செய்தவனின் நினைவோ தான் கண் விழித்த நாளுக்கு சென்றது!

"வனதூர்கை மலையிலிருந்து மறைந்தவன் கண் விழித்தது மும்பையில் இருக்கும் தனது தாத்தா விஜயேந்திர அரோரா வீட்டில் தான் எப்படி இங்கே என்று யோசித்தவன்,தன் அருகினில் உள்ள மொபைலில் தேதியும் நேரமும் பார்க்க அது நவராத்திரி பத்தாவது நாளான தசமி முடிந்து அடுத்து இரண்டு நாள் கடந்து விட்டிருந்ததை காட்டி கொண்டு இருந்தது!

ஒன்றும் புரியாமல் பெட்டில் அமர்ந்து கொண்டு இருக்க!

அப்போது அவன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஷாலினி அப்பா எப்படியோ கண் விழிச்சிட்டியா, டாக்டர் உனக்கு ஒன்னும் இல்லைன்னு சொன்னாலும் எனக்கு தான் நீ கண்விழிக்குற வரைக்கும் நெஞ்சுல நெருப்பு சுமந்துட்டு இருக்குற மாதிரி இருந்துச்சு!

ஆமாம் மாம் நீங்க சிம்லாவில் தானே இருப்பிங்க, எப்படி தாத்தா வீட்டுக்கு வந்திங்க!

நீ அந்த ஜீவாவுக்கும்,அஞ்சலிக்கும் கல்யாணம் பண்ணி வச்சத தெரிஞ்ச அஞ்சலியோட அப்பா நிதின் கபூர்,நாம ஜுவாலாமுகி கோவிலுக்கு போய்விட்டு வரவழியில் நம்ம கார் ரிப்பேராக,நீ அதை சரி செய்துட்டு வரேன்னு சொல்லி எங்களை அனுப்பிட்ட கொஞ்ச நேரத்தில உனக்கு அஞ்சலியோட அப்பா நிதின் கபூரால உனக்கு ஆக்சிடென்டாக,நாங்கள் உன்னை தேடி வருகிற நேரத்தில் அங்கே மிகப் பெரிய நிலச்சரிவு வந்துவிட அங்கிருந்து உன்னை காப்பாற்றியது அங்கு வந்த அஞ்சலியோட அண்ணன் கௌவ்ரவ் கபூர் தான் அவன் மட்டும் இல்லைனா உன்னை இப்படி உயிரோடவே பார்த்து இருக்க முடியாது!

அம்மா நாங்க எல்லோரும்ன்னு சொன்னியே யார் யாரேலெல்லாம்மா?

என்னடா! இப்படி கேக்குற உனக்கு அப்ப நடந்தது எதுவுமே நினைவுஇல்லையா ஆகாஷ்?"ஷாலினி"

இல்லை ஆக்சிடென்ட்ல எதுவுமே ஞாபகம் இல்லை மாம்! என்றவன் இன்னும் அன்னையின் முகத்தை ஆகாஷ் ஆர்வமாக பார்க்க!

நானு, அப்பா, அஞ்சலி, ஜீவா என்று மகனிற்கு பதில்கூறிய ஷாலினி,"ஆகாஷ் ஹாஸ்பிடலுக்கு ரெடியாகு நாம உனக்கு ஃபுல் பாடி செக்கப் செய்யலாம் என்றவர் வெளியேற!".

அப்படியேன்றால், இந்த பத்து நாட்களில் நான் வைஷ்ணவிய சந்திகலயா காலம் மாறிடிச்சா, அப்போ வைஷ்ணவி என் வாழ்வில் வந்தது,போனது எல்லாம் என்னை தவிர யாருக்கும் தெரியாதா என்று நினைத்த ஆகாஷ் கோபத்தில் தன் முன்னே இருக்கும் அந்த பெரிய கண்ணாடியில் அங்கிருந்த பொருள் கொண்டு அடிக்க அதுவோ சில்லு சில்லாக உடைந்தது!

நீ என்னை பற்றி யோசிக்காமல் உன்னோட உயிரை விட்ட, நான் எதுக்கு உன்னை பத்தி யோசிக்கனும் நான் உன்னை பற்றி யோசிக்க மாட்டேன் என்று கோபமாக வைஷ்ணவியிடம் கூறிக்கொள்வது போல் தனக்கு கூறிக்கொண்டவன் குளித்து விட்டு தன் தாத்தா விஜயேந்திரரை பார்க்க சென்றான் ஆகாஷ்.

விஜயேந்திரர் தனது வீல் சேரில் அமர்ந்து பகவத்கீதை படித்து கொண்டிருக்க,அதே நேரம் அவர் அறையில் நுழைந்த ஆகாஷ் அவரது கட்டிலில் அமர்ந்தவன் புருவம் உயர்த்தி என்னவென்று தாத்தாவிடம் கேட்க!

விஜயேந்திரரோ அடேய் படவா! இதுவரைக்கும் நீ மறைந்திருந்து விளையான்ட விளையாட்டு போதும், இன்னிக்கே பிரஸ் வைச்சு நீ தான் ஆகாஷ் அரோரா, அரோரா குருப்ஸ் ஆஃப் கம்பெனி CEO இந்த விஜயேந்திர அரோராவோட பேரன்னு இந்த உலகுக்கு சொல்லு!
"நேத்து முளைச்ச காளான் அந்த நிதின் கபூர் அவன் என்னோட பேரனை கொல்லுவான, நடக்குமா இந்த விஜயேந்திரன் கிட்ட அதான் அவனை லண்டன்லயே பிளாஸ்ட் பண்ணிட்டேன்" என்று சொன்னவர் தன் பேரனை பார்த்து சிரிக்க!

தாத்தா நீங்க அந்த காலத்திலே வில்லன் இப்போ சொல்லவா வேணும்! என்று ஆகாஷ் சிரித்தவன், தன் போனை எடுத்து சில பல கட்டளைகளை தனக்கு கிழ் வேலை செய்யும் அந்த நால்வரிடம் கூறியவன் பிரஸ் மீட்டிங்கிற்கு கிளம்பினான்.

மும்பை தாஜ் ஹோட்டலில் அந்த பெரிய மீட்டிங் ஹாலில் பிரஸ் மீட்டிங் ஏற்பாடு செய்ய பட்டிருக்க, அங்கு பத்திரிகையாளர்கள் யார் அரோரா குருப்ஸின் அந்த கண்ணுக்கு தெரியாத வாரிசு என்று காத்துக் கொண்டிருக்க!
அரோரா குருப்ஸுடன் போட்டி போட்டு தோற்ற சிலரோ,தங்களை அப்படி தொழிலில் விழ்த்திய அந்த நபர் யார் என்று அரிய அவர் அவர் இடத்தில் நியூஸ் சேனலை பார்வையிட்டு கொண்டு இருக்க!

அங்கு கருப்பு நிற கோர்ட் சூட்டில் ஜெல் தடவிய பிரிங்ச்அப் ஹேர்ஸ்டைலில் அவனின் வெள்ளை தேகம் மிண்ண கருப்பு நிற அடர்த்தியான மீசையில் கம்பீரமாக ஐம்பது பாதுகாவலர் படைசூல அந்த மீட்டிங் மேடையில் தோன்றினான் ஆகாஷ் அரோரா!

ஹாய்,நான் ஆகாஷ் அரோரா, அரோரா குருப்ஸ் ஆஃப் கம்பெனியின் எம்டி, விஜயேந்திர அரோரா வின் பேரன், சன் ஆஃப் ரவிந்தர் அரோரா என்றவன் அங்கிருக்கும் செய்தியாளர்களை பார்க்க!

நீங்கள் எதுக்கு இந்த நான்கு வருடங்களும் உங்களை இந்த உலகிற்கு காட்டாமல் இப்போது இந்த பிரஸ் மீட்டிங் வைத்து இருக்கிறீர்கள் என்று ஒரு பெண் கேள்வி கேட்க!

அப்படி என்றால் நான் இப்போது என்னை அறிமுகப் படுத்தியிருக்க வேண்டாம் சொல்லுறிங்களா மிஸ்...என்று சிரித்து கொண்டே அப்பெண்ணிடம் கேட்டவன், ஜோக்ஸ் அபார்ட், இனியும் இந்த கண்ணாம்பூச்சி அட்டத்தை தொடர வேண்டாம் என்ற காரணத்தினாலும் என்னோட நியூ புராஜக்ட் சென்னையில் தொடங்க போவதை அறிவிப்பதற்காகவும் இந்த பிரஸ் மீட்டிங் என்ற ஆகாஷ் நன்றிகூறி அங்கிருந்து விடைபெற்றவன், நேரே சென்றது ஹாஸ்பிடலிற்கு தான் அங்கு ஷாலினியின் அறிவுறுத்தலில் முழு உடல் பரிசோதனை செய்தவன் ‌தான் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக அறிக்கை வர அங்கிருந்து வெளியேறியவன் சென்னைக்கு பயணபட்டான், இதோ இந்த ஆறு மாதத்தில் அவளை பற்றி ஒரு தகவலும் வரமால் இருக்க சோர்ந்தவன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தவன் தன் பாதுகாவலர்களுடன் விமானம் ஏறுவதற்கு நடந்து கொண்டு வந்தான் ஆகாஷ்.

அதே நேரம் ரிஷி அண்ணா என்று ஒரு பெண் கூவியபடி....,அந்த ஆண் அவனை அனைத்து கொள்ள,"அந்த குரலில் அதிர்ந்த ஆகாஷ் உடனே திரும்பி அந்த குரலுக்கு சொந்தகாரியை பார்க்க!"

இவனின் மனதை பொய்யாக்காமல் அங்கே ரிஷியிடம் சந்தோஷகூப்பாடு போட்டு கொண்டு இருந்தாள் வைஷ்ணவிதேவி.

"தக்ஷாயினி",சத்தம் போடத வைஷூ பாரு எல்லாரும் நம்மையே பார்க்குறாங்க வா,எதுவாக இருந்தாலும் கார்ல போய் பேசலாம் என்றவர் மகளை இழுக்காத குறையாக அங்கிருந்து அழைத்து செல்ல!

ரிஷி அவர்களின் பின்னே சிரித்தபடி அந்த லெக்கேஜ் இருக்கும் அந்த வண்டியை இழுத்தபடி ஏர்போர்ட்டில் இருக்கும் கார் பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் தன் காரில் அதனை வைத்தவன் தன் தாயையும் தங்கையும் அழைத்து கொண்டு மைலாப்பூரில் இருக்கும் தங்கள் வீட்டின் முன் காரினை நிப்பாற்றினான்.

வைஷ்ணவியை விமான நிலையத்தில் பார்த்த ஆகாஷிற்கு அது ஒரு ஆனந்த அதிர்ச்சி என்றால்,'அவள் தோற்றத்தில் இருக்கும் மாறுபாட்டில் அது வைஷ்ணவி என்பது தானா என்று சந்தேகத்தையும் அவனுக்கு தோற்றுவித்தது'.

அவள் வைஷ்ணவி தான் என்பதை உறுதி படுத்த நொடியும் தாமதிக்காமல் ஆகாஷ் அவர்கள் பின்னே செல்ல!

இவனின் மெய்காப்பாளர்களோ தங்கள் முதலாளி எவ்வழியோ நாங்களும் அவ்வழியே என்று அவர்களின் ரேடியெஷன் கண்களினாலும் எக்ஸ்ரே பார்வையினாலும் தொடர்ந்து வந்தனர்.

தன் காரினில் நுழைந்த ஆகாஷ் தன் டிரைவரிடம் அந்த காரை பின்தொடர சொன்னவன்,தன் பாதுகவலரிடம் அடுத்த ஒருமணி நேரத்தில் எனக்கு இவர்களை பற்றி மொத்த இன்பர்மேஷன் வந்தாக வேண்டும் என்று கூறியவன்,அவர்களை தொடர்ந்து செல்ல!

அதே நேரம் வைஷ்ணவி வருவது தெரிந்த சாவித்திரி மற்றும் நிலகண்டன் வாசலிற்கே ஆரத்தியுடன் நிற்க!

வைஷ்ணவி வந்திறங்கியவுடனே சாவித்திரி கண்ணீருடன் தனது பேத்திக்கு ஆலம் சுற்றியவர் கணவரிடம் பேத்தியை உள்ளே அழைத்து செல்ல சொல்லியவர் அதனை வாசலில் ஊற்றிவிட்டு உள்ளே செல்ல!

அவர்களை பின் தொடர்ந்து வந்த ஆகாஷின் கார் வைஷ்ணவி வீடு தெரியும் படி காரை நிப்பாற்றியவன் அவ்வீட்டினை கண்ணேடுக்காமல் கண்ணீருடன் பார்த்து கொண்டே இருக்க,அதனை தடை செய்வது போல் அலைபேசியில் வந்த தகவலை கேட்டவன் ஆதிர!

ஹெலோ சார் நீங்க கேட்டபடி அவங்கள பற்றி கலெக்ட் பண்ண இன்பர்மேஷன் படி,அவங்க தாத்தா நிலகண்டன் காலத்தில்திலிருந்து தேவி இம்போர்ட் & எக்ஸ்போர்ட் பிசினஸ் நன்றாகவே போகுது!

நீலகண்டன் தன் மனைவி சாவித்திரியின் உதவியோடு இந்த கம்பெனியை தொடங்கியவர் நடுவில் சிறு சறுக்கலில் நஷ்டம் ஏற்பட அதிலிருந்து மனைவியின் உதவியோடு மீண்டவர், மனைவியின் சொல்லை என்றும் பின்பற்றுபவர்!

நீலகண்டன் மகன் மாறன் தந்தையின் தொழிலை ஏற்று நடத்துபவர்,மாறனின் மனைவி தக்ஷாயனி ஹவுஸ்வைப், மாறன் தக்ஷாயனியின் பெரிய மகன் ரிஷி குமார் தேவி குருப்ஸ் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எம்டி, மாறனின் இளைய மகள் வைஷ்ணவி தேவி!"போலிஸ் ட்ரைனிங் முடிச்சுருக்கா,ரிசன்டா ஆறுமாதம் முன்னாடி ஆன ஆக்சிடென்டில் கோமா ஸ்டேஜில் இருந்த பெண்ணிற்கு அமெரிக்காவில் ட்ரீட்மென்ட்காக குடும்பமே சென்றவர்கள்,பெண் தன் தூக்கத்தை(கோமாவை) கைவிட்டு எழுந்ததினால், ஆண்களோடு சாவித்திரி இந்தியா வர, வைஷ்ணவி நன்றாக குணமாகியபின் தன் மகளை அழைத்து கொண்டு தக்ஷாயனி இப்போது இந்தியா வந்துள்ளார் என்று அந்த பக்கம் வைஷ்ணவியின்
குடும்பத்தை பற்றி கூறிய அந்த நபர் போனை கட் செய்ய !

என்ன வைஷ்ணவிக்கு ஆக்சிடென்ட் ஆச்சா! என்று அவன் கட் பண்ணியதை கூட தெரியாமல் அவனிடம் கேட்க!
அதற்கு பதில்வரமாலிருப்பதை அறிந்து போனை பார்க்க!அதுவோ அந்த நபர் எப்போதோ வைத்து விட்டிருநந்ததை காட்டி கொண்டு இருந்தது, அதனை பார்த்து ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவன் இப்போது வைஷ்ணவியின் சிந்தனைக்கு தாவினான் ஆகாஷ்,"அப்போ ஆறு மாதத்திற்கு முன் என்றால் வைஷ்ணவி வனதூர்கை மலையில் இறந்த நேரம் இந்த ஆக்சிடென்ட் இந்த காலத்தில் நடந்து இருக்கு! என்று கரெக்டாக கண்டு பிடித்தவனிற்கு வைஷ்ணவியின் நிலையை எண்ணி கவலை கொண்டான் காதலன்".

மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...
 
Last edited:

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
காலம் 17

ஆகாஷ் எவ்வளவு நேரம் காரில் வைஷ்ணவியை நினைத்து உட்கார்ந்திருந்தானோ அவனுக்கே தெரியாது மறையும் சூரிய கதிர்கள் அவன்மேல் பட்டு நான் வீட்டிற்கு போக போகிறேன் என்பதை அவனுக்கு உணர்த்த தன் நினைவில் இருந்து வெளிவந்தவன் இப்போது உள்ளமும் அறிவும் தெளிவாக இருக்க சந்தோஷத்துடன் காரினிலிருந்து இறங்கியவன் வைஷ்ணவியின் வீட்டு காலிங் பெல்லை அமுக்க......

"அதே நேரம் தான் வைஷ்ணவியை முதன் முதலில் இதே போன்றதொரு சூழ்நிலையில் ஆண் வேடத்தில் சந்தித்த பொழுதை நினைத்து சிரித்து கொண்டிருந்தவன் ,கதவு திறந்தை கூட அறியாமல் பல்லைக் காட்டி கொண்டு சந்தோஷத்துடன் நின்றிருக்க!".

அதே நேரம் தக்ஷாயனி கதவை திறந்தவர் எதிரே பல்லைக் காட்டி சிரித்தபடி நின்றிருந்தவனை பார்த்து சந்தேகத்துடன்,"யார் தம்பி நீங்க, யார் வேண்டும் உங்களுக்கு என்று கேட்க!"

ஹாய் அத்தை வாங்களேன் உள்ள போய் பேசலாம் என்றவன் உள்ளே செல்ல!

தம்பி நீங்க யாருனே சொல்லாம நீங்க பாட்டுக்கு உள்ளே போறிங்க நில்லுங்க தம்பி நில்லுங்க தம்பி என்று தக்ஷாயனி சத்தமிட்டபடியே அவன் பின்னே வர!

தக்ஷாயனியின் சத்தமான கூரலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் அறையில் இருந்து வெளியே வர!

அதே நேரம் வெளியே வந்த வைஷ்ணவியை பார்த்து வைஷூ பேபி எப்படி இருக்க, இந்த ஆறு மாதமும் இந்த சென்னையில் உன்னை தேடி நான் எப்படி அலைஞ்சேன் தெரியுமா என்று அவளை கட்டி பிடித்து அழ!

"ஏய் யாரு நீ !எங்க பிள்யைய கட்டி பிடிக்குற வெளியே போடா என்று நீலகண்டன் கோபமாக கத்தியவர்", அவனை வைஷ்ணவியிடமிருந்து பிரிக்க!

ரிஷியோ மிஸ்டர் ஆகாஷ் பிளிஸ் கொஞ்சம் என் தங்கச்சிய விடுறீங்களா! என்று தன் கோபத்தை கட்டுப்படுத்தியபடியே சொன்னவன் வைஷ்ணவியை உள்ளே செல்ல சொல்லியவன், அவள் உள்ளே சென்ற அடுத்த வினாடி ஆகாஷின் மூக்கில் ஒரு குத்து ரிஷி விட!

அதில் ஆகாஷின் மூக்கில் ரத்தம் வந்தது!
ஏன்டா உன்னாலே தானே என் தங்கைக்கு இந்த ஆக்சிடென்ட் ஆச்சு என்று சொல்லியவன் இன்னும் அறைவிட,

"தனக்காக தானே வைஷ்ணவி வனதூர்கை மலையில் உயிரை நீத்தது என்று கவலையில் ஆகாஷ் இருந்தவன் ரிஷி கொடுத்த அடியை எல்லாம் வாங்கி கொண்டு இருக்க!

அதே நேரம் மகள் ஊரில் வந்ததை அறிந்த மாறன் தன் வேலையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மகளை பார்க்க வந்தவர், 'அங்கு ஆகாஷ் ரிஷியிடம் அடிவாங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ந்தவர், மகனின் கண்ணத்தில் ஓங்கி ஓர் அறைவிட,"அப்பா.... என்று அழைத்தவன் இங்கு நடந்தவற்றை கூற!"'

என்ன ஏதென்று தெரியாமல் ஒருவரை தாக்குவது குற்றம் ரிஷி, அப்படியும் நீ அடித்ததை இவர் தாங்குகின்றார் என்றால் அவர் உன் தங்கையின் மீது வைத்துள்ள காதலால் தான் என்பதை அறிவில் வைத்துக்கொள் என்றவர் ஆகாஷை சோஃபாவில் அமரவைத்தவர் மனைவியிடம் மருந்தை எடுத்து வர சொன்னார்.

மகனையும் தன் அருகினில் அமர்த்தியவர் வைஷ்ணவிக்கு ஆக்சிடென்டானது உன்னால் தான் ரிஷி என்று மகனை கடுமையாக முறைத்தபடி கூறியவர்,நீ அந்த கௌவ்ரவ்கிட்டருந்து பிறைநிலாவ காப்பாத்துறதா நினைச்சு உன் தங்கைச்சி வைஷ்ணவிய உன்னோட பிரச்சினை இழுத்து விட்டுருக்க!

என்னப்பா மாறா, என்ன நடந்தது நீ என்னென்னவோ சொல்லுற எனக்கு எதுவும் விலங்கமாட்டீங்குது என்று நீலகண்டன் சொல்ல!

என்னது கௌவ்ரவ் தான் வைஷ்ணவிக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கு காரணமா!அவனை......என்று பல்லைக் கடித்தவன்....இதுக்கு மேலே நான் அவனை பார்த்துக்குறேன் என்ற ரிஷி, ஆமாம் இது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிந்தது !

இந்த ஆறு மாதத்தில் நான் விசாரிச்சு வெச்சேன் என்றவர் இதற்கு மேலும் நீ பிறைநிலா விசயத்தில் உள் நுழைவது உனக்கு நல்லதல்ல ரிஷி,அதனால் நான் நமசிவாயத்திடம் பேசி ஒரு நல்ல முடிவை எடுக்குறேன் அதுவரை அமைதியா இரு,இது போல் பார்க்குற எல்லாரையும் அடிச்சுட்டு கோபத்தை காட்டிட்டு இருந்தா..... என் முடிவு வேறு மாதிரி இருக்கும் என்றவர்,"ஆகாஷிடம் திரும்பி எனக்கு நீங்க யாருன்னு தெரியும் உங்களோட பிரஸ் மீட்டிங் டிவில பார்த்தேன், ஆனால் நீங்கள் போனில் சொன்னநை என்னால் நம்பமுடியவில்லை!

ஆக்சுவலி மாமா என்று ஆகாஷ் சொல்ல...... ரிஷி முறைக்க,"கொஞ்சம் தண்ணீ தந்திங்கனா குடிச்சிட்டு பேசுவேன் என்று சொன்னவன் பாவமாக பார்க்க!"

அவரோ மனைவியிடம் ம்.....என்க,'ஆகாஷ் கையினில் தண்ணீர் நிறைந்த குவளையை கொடுத்த தக்ஷாயனி முறைத்தபடி விலக!'

இவங்க எல்லாரையும் மீறி என்னோட வைஷூ பேபிய எப்படி கல்யாணம் பண்ணிக்க போறேனோ கடவுளே நீயே துணை என்று மனதிற்குள் சொல்லி தண்ணீரை மடமடவென குடித்தவன், மடமடவென தன் காதல் கதையினை சொல்லி முடித்தவன் அனைவரையும் பார்க்க!

அங்கோ குண்டு ஊசி விழுந்தால் கேட்கும் அளவிற்கு அப்படி ஒரு அமைதி!

முதலில் அந்த அமைதியை கலைத்த சாவித்திரி ஆகாஷ் நீ சொல்லுறது எல்லாம் சரிதான்ப்பா ஆனால் எங்கள் பேத்திக்கு உன்னையும் சரி உன்னை காதலிச்சது இது எதுவுமே இப்போ அவளோட நினைவில் இல்லையே, அப்படி இருக்க எப்படி நாங்கள் நீ சொல்வது உன்மையென்று நம்புவது?

பாட்டிம்மா என்கிட்ட எங்களோட காதலை தவிர வேறு எதுவும் ஆதாரமில்லை!, நீங்க என்னை பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் விசாரிச்சு நல்ல பதில் சொல்லுங்க என்றவன் எழுந்து விடைபேற்று செல்ல!

அதே நேரம் கதவருகில் இதனை அனைத்தையும் கேட்ட வைஷ்ணவி மாடியில் ஏறிச்சென்று செல்லும் அவன் காரினை பார்த்து கொண்டு இருந்தாள், அவன்(ஆகாஷ்) அவளை கட்டி அனைத்த நொடி அவள் மனது அவளையும் அறியாமல் அவனிடம் செல்ல,இது என்னவென்று உணரமுடியாமல் கண்ணீருடன் நின்றிருந்தாள்.

சென்னை காபி ஷாப்☕

அஞ்சலியும், ஜீவாவும் திருமணம் செய்ததற்காக லண்டனிலிருந்தே அஞ்சலியை கொல்ல துணிந்த தந்தையை தன்னால் எதிர்க்க முடியாத அதே சமயத்தில் தன் தங்கையும் அவள் உயிரானவனையும் காக்கும் நோக்குடன் வந்த கௌவ்ரவ் அங்கு ஆக்சிடென்டாகி இருந்த காரைக் கண்டவன்,'அந்த கார் கீழே எப்போது வேண்டுமானாலும் விழகூடிய அபாயம் இருக்க, இந்தக் கார் தன் தங்கை வந்த காராக இருக்குமோ என்று பயந்த கௌவ்ரவ் தன் பணியாளர் உதவியுடன் அந்த காரினுள்ளே பார்க்க அங்கு மயக்கத்திலே ஆகாஷ் அரோரா இருக்க, அவனை தன் பணியாளர் உதவியுடன் தூக்கி செல்ல அதே நேரம் ஒட்டில் இருந்த கார் கீழே வெடித்து சிதற சரியாக இருந்தது.

நடந்தவை எல்லாம் அசைப்போட்டபடி தன் எதிரே இருந்தவனை நக்கலாக பார்வை பார்த்தபடி அந்த கோல்ட் காஃபியை ருசித்து கொண்டு இருந்தான் கௌவ்ரவ் கபூர்.

இத்தோடு நீ வைஷ்ணவி சம்பந்தப்பட்ட யாரோட விஷயத்திலும் தலையிடாத கௌவ்ரவ் நான் சும்மா இருக்க மாட்டேன்,நீ என்னை காப்பாற்றியதினால் மட்டுமே நான் உன்னிடம் அமைதியாக வார்ன் பண்ணிட்டு இருக்கேன் இல்லனா என்று ஆகாஷ் கூறி கொண்டு இருக்க!

என்ன ஆகாஷ் எங்க அப்பாவ போல என்னையும் பிளாஸ்ட் பண்ணிடுவியா!என்று புருவத்தை உயர்த்திய கௌவ்ரவ்,பட் இங்கே தான் நீ தெரிஞ்சிக்க வேண்டியது ஒன்னு இருக்கு, ஆக்சுவலி நானே என்னோட அப்பன போட்டு தள்ளுர பிளான்ல தான் இருந்தேன் ஆனால் அதற்க்குள் உங்க தாத்தா அதை சக்ஸஸ்ஃபுல்லா செயல் படுத்திட்டாரு என்றவன், ஆனால் பிறைநிலா விசயத்தில் உள் நுழையுற யாரையும் நான் சும்மா விட மாட்டேன் ஆகாஷ்,அது வைஷ்ணவியாக இருந்தாலும் சரி ரிஷியாக இருந்தாலும் சரி! என்று கௌவ்ரவ் ஆகாஷிற்கு எச்சரிக்கை விடுக்க!

ஆகாஷ் ஏய்............என்று கர்ஜிக்க!

கூல் கூல் ஆகாஷ், நான் ரிஷிக்கு போட்ட ஸ்கெட்சுல வைஷ்ணவி வருவான்னு எதிர்பார்கலை & அந்த சமயம் வைஷ்ணவிய எனக்கு ஞாபகமும் இல்லை, அப்புறம் பிறைநிலா யாருன்னு தெரியுமா! நிலா தேவி எனக்காக பிறந்தவளை நான் கைப்பிடிக்க கூடாதுன்னு சொல்ல,அந்த ரிஷிக்கு என்ன உரிமை இருக்கு என்று கோபமாக ஆகாஷைப் பார்த்து கௌவ்ரவ் கேட்க!

என்ன..... என்ன சொன்ன நீ என்று அதிர்ச்சியில் திக்கியபடியே ஆகாஷ் கேட்க!

ம்.....காலத்தை மாத்தகூடிய அந்த ஒளி அழகியை தான் சொல்லுறேன்!அவ தான் பிறைநிலா ரிஷியோட ப்ரெண்ட்.

அப்படின்னா உனக்கு இதுக்கு முன்னாடி நடந்த எல்லாமே ஞாபகம் இருக்கா! என்று அதிர்ச்சி விலகாத ஆச்சிர்யத்துடன் ஆகாஷ் கேட்க!

ம்.....எல்லாமே! என்று அலட்ச்சியத்துடன் கௌவ்ரவ் கூறியவன் நான் அங்கே மறைஞ்சி இங்கே நா நவராத்திரி ஏழாவது நாளே வந்துட்டேன், நீ வைஷ்ணவி தேடி அலையும் போது வைஷ்ணவி இருக்குற இடத்தை சொல்லலாம் கூட தோனுச்சு ஆனால் நீ என்னை இந்த மூன்று வருஷம் உன்னை தேடி அலையவச்சதுல கொஞ்சம் காண்டுல அலையட்டும் சொல்லி பிறைநிலாவ கரேக்ட் பண்ணுற வேலையில் இறங்கிட்டேன்! என்ற கௌவ்ரவ் இனியும் கால தாமதம் ஆக்காமல் உன் காதலை வைஷ்ணவிக்கிட்ட சொல்ல பாரு ஆகாஷ் என்றவன் கூலர்சை மாட்டி கொண்டு அங்கிருந்து செல்ல.....
முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ
மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே
வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே
தீரா நதி நீதானடி
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
நீதானடி வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்
ஒரு பாவை கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்
காணாத பாரம் என் நெஞ்சிலே
துணை இல்லா நான் அன்றிலே
நாளெல்லாம் போகும் ஆனால் நான்
உயிர் இல்லாத உடலே


அதே நேரம் ஆகாஷின் மனதை படபம்பிடிப்பது போல் அங்கு முதல் நீ முடிவும் நீ என்று இவன் காதலை பாடல்களாக ஒட சிரித்து கொண்டே தனது தாத்தாவிற்கு போன் செய்தவன் தன் திருமணத்தை உறுதி செய்ய வருமாறு அழைத்தவன், அவர் அந்த பக்கம் சந்தோஷத்துடன் சரி சொல்லிய பிறகே வைத்தவன்,தன் தலையை கோதி கொண்டு மீதி பாடலை அசை போட்ட படி அங்கிருந்து அகன்றான் ஆகாஷ்

தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி
பின்னோக்கி காலம் போகும் எனில்
உன் மன்னிப்பை கூறுவேன்
கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்
பிழை எல்லாமே கலைவேன்
நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன்
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா
நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்
முதல் நீநீ..
முடிவும் நீஈ..ஈ..
 
Last edited:
Status
Not open for further replies.
Top