All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெஃப்ரியின் "இதயம் மீட்டும் நினைவலைகள்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🖌 வணக்கம் சகோஸ்/ஜிங்கிள்ஸ்/இஸ்திரிக்கள்/வல்லுனர்கள்,

கதை
காதலிலே மூழ்கி, காதலையே உயிர்மூச்சாக வாழும் காதலர்களுக்கான எனது முதல் பிஞ்சு பாத அடிகள்... (baby steps:baby:👶👶)

நான் ரசித்த பல நாவல்களின் எழுத்திலும், கருவிலும் கவரப்பட்டு, என் கற்பனையில் செதுக்கி பெற்றெடுக்கப்பட்ட முதல் குழந்தை, இந்த கதை. இதன் முழு வளார்ச்சியையும் வாசகர்களான உங்களிடமே ஒப்படைக்கின்றேன்....!

" 💞இதயம் மீட்டும் நினைவலைகள்💞 ", no twist, no masala, காதலை இயக்கும் காதலர்களாக நம்முடன்
'அஜய் ரித்விக்' ❤ 'சஹானா ', இவர்களுடன் மரத்தை சுற்றி ஆடி, பாட இன்னும் சில ஜோடிகள்.....!

நல்ல நட்புக்களையும், நல்ல குடும்ப உறவுகளையும் வரமாகப் பெற்ற காதலர்களின் வாழ்விலும் “காதல் போராட்டம்” உண்டு, என உணர்த்தும் கதைக்களம் கொண்ட கண்ணோட்டத்தில் உருவான கதைக்கரு..

காதலர்களின் ஊடலுக்கான காரணத்தையும், அவர்களை இணைக்கும் மையப்புள்ளியையும் கதையின் நடையில் தெரிந்து கொள்ளலாம்.

இதயக்கடலின் நினைவலைகளை மீட்ட, என்னுடன் சேர்ந்து மீட்டுங்கள்.....!

என்னுடைய முதல் முயற்சிக்கு தளம் அமைத்து கொடுத்த SMS தள நிர்வாகி சகோதரி ஸ்ரீகலா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...!

உங்கள் ஆதரவும் அன்பும் பெறக் காத்திருக்கும்,
ஜெஃப்ரி….. 💖
 

Attachments

Last edited:

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்புகளே....!

என் முதல் கதையான, " 💞இதயம் மீட்டும் நினைவலைகள்💞 ", கதைக்கு ஒரு குட்டி டீஸர்.......


ராகிணி, “அஜய், கொஞ்சம் உக்காருப்பா ரேஷ்மா போன் பண்ணியிருந்தா விக்ரம் மாப்பிள்ளையோட சித்தப்பா பொண்ணுக்கு வரன் பாக்குறாங்களாம். ரேஷ்மாவோட அத்தை கால் பண்ணி பேசினாங்க. அவங்க... உன்... உன்ன தான்பா அந்தப் பொண்ணுக்கு கேக்குறாங்க...." என்று தயக்கத்துடன் கூறி முடித்தார்.
அஜய், "நீங்க என்ன சொன்னீங்க மா?" என்று கேட்க,
"
வீட்டில் பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன். ஏன்னா அது உன் அக்கா வாழப்போன வீடு இல்லையா? நீ என்னப்பா சொல்ற?" என்று ஆர்வத்துடன் அவனை பார்த்தார் ராகிணி.
அஜய், "வேணாம் மா. நான் மாமாகிட்ட பேசுறேன் " என்று மறுக்க,
ராகிணி,"அந்த பொண்ணு போட்டோ பார்த்தேன் அஜய், அழகா இருக்கா. டாக்டர்க்கு வேற படிச்சு இருக்காப்பா. அப்புறம்.." என்று தொடர்வதற்குள் இடைமரித்த அஜய்,
"அம்மா ப்ளீஸ்... இந்த பேச்சை விடுங்க. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்வதில் விருப்பமில்லை” என்றான்.
இடைபுகுந்த அபிஜித், அஜயின் காதருகில் "அண்ணா, அழகான ஆஃபர் வரும் போது ஏன்ண்ணா வேணாம்னு சொல்ற? பொண்ணு வேற அழகா இருக்காங்கனு அம்மா சொல்றாங்க. ஓகே சொல்லிருண்ணா " என்றான்.
அஜய் தாயிடம் திரும்பி ,"அந்தப் பொண்ணு டாக்டர்னு சொன்னீங்கல்லமா?" என்றான் யோசனையுடன்.
ராகிணி ஆர்வமாக ,"ஆமா அஜய், பிடிச்சிருக்கா. முடிச்சிரலாமா?" என்றார்.

________________________________________________________________________________________________________________________________


சஹானா, ஹே சாரிப்பா, வீட்டில் ஒரு பஞ்சாயத்து, அதனால் தான் லேட்" என்று காரணம் சொல்ல,
ரீனு,"இது என்ன புதுசா, வழக்கம் போல் நடக்கிறது தானா? கடைசியாக காரில் தான வந்த?" என்று கேட்டாள்.
சஹானா,"இல்ல, டூ வீலெர்ல தான் வந்தேன்" என்று அசால்ட்டாக கூற, மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
உடனே மிதுனா,"சஹா, உண்மையாகவா சொல்றா?" என்று அதிர,
பூஜா,"ஹேய் மிது, அவ பொய் சொல்றாடி, நீயும் அதை நம்புறா?" என்று கேட்க,
சஹானா,"இல்லை. உண்மையில் நான் டூ வீலெர்ல தான் வந்தேன்; நான் தான் ட்ரைவ் பன்னுனேன்" என்று கூற,
"
அப்படின்னா, முகத்தில் ஒரு தேஜஸ் தெரியனுமே....? அது எங்கே?" என்று அதிமுக்கியமான கேள்வியை ரீனா கேட்க,
அதில் கடுப்பான சஹானா, "நான் தான் ட்ரைவ் பன்னேன், பட் அண்ணா பின்னாடி உக்கார்ந்துட்டு நானும் வருவேன்னு வந்தான். நான் இறங்கினதும் கிளம்பிட்டு சொல்லு, நான் வர்ரேன்னு வண்டியை எடுத்துட்டு அவன் ஃப்ரெண்ட்ஸ பார்க்கப் போய்விட்டான்" , என்று சோகமாக கூற, தோழிகள் மூவரும் நகைக்க ஆரம்பித்தனர்.
அதானே பார்த்தேன். உங்க வீட்டுலயாவது, உன்னை நம்பி வண்டியை தருவதாவது" என்று பூஜா ரீனாவுடன் ஹைஃபை கொடுத்துக் கொண்டாள்.
மிதுனா, "அவங்க பயப்படறதும் சரிதானாடி விடு, ரோட்லப் போற எல்லாரும் ரூல்ஸ் படி வண்டி ஓட்றதில்லயே, அது தான் அவங்களுக்கு பயமா இருக்கும்" என்று தேற்றினாள்.
சஹானா,"யாரு எவ்வளவுதான் பார்த்துப் போனாலும் வந்தாலும் நமக்குனு எழுதப்பட்டத யாராலும் மாத்த முடியாது", என்று அலுப்பாக கூறினாள்.
 
Last edited:

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-1


20372

வெண்மேக பஞ்சணையில் இருந்து தன் மஞ்சள் தேகத்தால் பூமி அன்னையை பொன்னிறமாக மாற்றித் துயில் களைந்து விழித்தான் ஆதவன், மின்னும் நட்சத்திரமும்; குளிர் நிலவும்; சுட்டெரிக்கும் சூரியனின் வேகம் கண்டு நாணி வெண்மேக பஞ்சணையில் முகம் புதைத்து மறைந்தன.
அழகிய காலைப் பொழுதின் தொடக்கமாக வானில் சிறகை விரித்து பறந்தப் பட்சிகள் "கீச் கீச்" என்று குதூகலமாக ரீங்கரித்து தங்களது இரைத் தேடும் பணியை தொடங்கச் சென்றன.
‘ஆம்.....!’ எந்த ஒரு தனிமைப்படுத்தலும், ஊரடங்கு உத்தரவும் இவ்வுலகின் இயக்கத்தை நிறுத்தாமல் இயங்கவைக்கும்.
‘வந்தாரை வாழ வைக்கும் சிங்காரச் சென்னை’யின் நகர இரைச்சலில் இருந்து தற்காத்து, கடல் அன்னையின் அருகில் அமைந்த, பணம் படைத்தவர்களின் ராஜ்ஜியமான கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அமைதியான பகுதியில் அமைக்கப்பட்ட பளிங்கு மாளிகையில், அன்றைய நாளின் துவக்கத்தின் அறிகுறியாக, அம்மாளிகையின் தலைவி ‘ராகிணி’யின் கைமணத்தால் வீடெங்கும் வடிகட்டிய குளம்பியின் (Coffee) மணம் வீசியது.
அம்மாளிகையின் குடும்ப தலைவர் ‘ஜெயப்பிரகாஷ்’, பேராசிரியராக இருந்து சமீபத்தில் அரசு உதவிப் பெறும் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றவர். சிறு வயதிலிருந்தே பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்டு இன்று வரை அதை தன் வாழ்விலும் கடைபிடித்து வாழ்பவர், கணவருடைய கொள்கைகளையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு, அன்போடும் பண்போடும் அவரின் இன்ப துன்பங்களிலும் உற்றத் துணையாக அவருடன் பயணிக்கிறார் ராகிணி.
இந்த அன்பான தம்பதியர்களுக்கு ஐந்து வாரிசுகள், முதல் மகவுகளாக ‘ராகுல்’ மற்றும் ‘ரேஷ்மா’ இரட்டையர்கள்.
‘ராகுல்’ வக்கீலாக பணியாற்ற, ராகுலின் காதல் மனைவி ‘திவ்யா’ இல்லத்தரசி. இவர்களுக்கு ‘ஆதர்ஷ்’ மற்றும் ‘வைஷ்ணவி’ என்று இரு குழந்தைகள்.
‘ரேஷ்மா’ திருமணமாகி கணவர் விக்ரமுடன் ஊட்டியில் வசிக்கிறாள், ‘விக்ரம்’ ஊட்டியில் உயர்தர நட்சத்திர தனி விடுதிகளையும், தந்தையின் சாக்லேட் தொழிற்சாலையையும் கவனித்து வருகிறார். இவர்களுக்கு ‘சஞ்சய்’ மற்றும் ‘ஸ்ரீநிஹா’ என இருக் குழந்தைகள்.

ஜெயப்ரகாஷ்-ராகிணியின் மூன்றாம் மகவு தான் நம் கதையின் நாயகன் ‘அஜய் ரித்விக்’, ஆறடிக்கு சற்று அதிகமான உயரமும், அதற்கேற்ற உடற்கட்டும் தீர்க்கமான சிந்தனையைப் பறைசாற்றும் கூர் பார்வை எதிரில் இருப்போரின் மனதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விடும், 'நான் பிடிவாதக்காரன்' என்பதைக் காட்டும் அழுத்தமான உதடுகள், மிகவும் கோபக்காரன் என்று பறைசாற்றும் இறுக்கமான தாடைகள், நினைப்பதை அடைவதின் பிடிவாதம் அவனது ஒவ்வொரு வெற்றியிலும் வெளிப்படும்.
லண்டனில் கட்டுமான கம்பெனி ஒன்றில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றி தற்பொழுது தன் ஆத்ம நண்பன் ஷ்யாம் மாதேஷின் வேண்டுகோளுக்கிணங்க, ‘ஷ்யாமுடன்‘இணைந்து “RS CONSTRUCTIONS” ஆரம்பித்து அதிலும் வெற்றியை ருசித்துக் கொண்டு இருக்கின்றான்.
இவர்களை தொடர்ந்து பிறந்தவன் ‘அபிஜித் தேவ்’, கடந்த மாதம் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக தன் சேவையை தொடங்கியுள்ளான்.
இவனை தொடர்ந்து கடைக்குட்டியாக பிறந்தவள் ‘யாழினி’, பொறியியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி, இக்குடும்பத்தின் இளவரசி.
வெய்யோனின் சிதறலில் வேர்வைகள் வைரமாக மின்ன, கடற்கரை மணலில் கால் புதிய ஓடிக்கொண்டிருந்தனர் ‘அஜய்யும், ‘ஷ்யாமும்’... யார் முதலில் வாகன நிறுத்துமிடத்தில் இருக்கும் அவர்களது இருச்சக்கர வாகனத்தை தொடுவது என்றப் போட்டியுடன்.
இது இவர்களுக்கிடையே வழக்கமாக நிகழும் ஒரு நிகழ்வு தான், மெது ஓட்டமாக துவங்கி ஓட்டபந்தயத்தில் முடியும்.
அஜய்யின் ஆத்ம நண்பன் தான் ‘ஷ்யாம் மாதேஷ்’. ஷ்யாமின் தந்தையும், அஜய்யின் தந்தையும் ஒன்று விட்ட சகோதரர்கள், அவர்களை தொடர்ந்து ஷ்யாமும், அஜய்யும். இருவரும் பள்ளிப்பருவம் முதல் இணைந்தே வளர்ந்த நண்பர்கள், வழக்கம் போல் இருவரும் இணைந்தே சிறு சிரிப்புடன் அவர்களது இரு சக்கர வாகனத்தை அடைந்தனர்.
“ஓகே டா, ஆபிஸ்ல மீட் பண்ணலாம்”, என ஷ்யாம் விடைபெற எத்தனிக்க,
“வாடா, காபி குடிச்சிட்டு போலாம்”, என அஜய் அழைக்க இருவரும் அஜய்யின் வீட்டிற்கு சென்றனர். வீட்டின் வாயிலை அடைந்த பொழுதில் இருவரும் அதிர்ச்சி(மழை)யில் நனைந்தனர்.
இருவரும் கோபத்துடன் தலையை உயர்த்தி வீட்டின் மேல் மாடத்தை நோக்கினார்கள். அங்கே அவர்களின் செல்லத்தங்கை கையில் வாளியுடன் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள்.
“அய்யோ, சாரிண்ணா. நீங்க ரெண்டு பேரும் வருவீங்கன்னு நினைக்கலைண்ணா”, என மேலே இருந்தபடியே யாழினி மன்னிப்பை வேண்ட, இவர்களின் எதிரே கையில் இரு டீசார்ட் மற்றும் துவாலையுடன் பலத்த சிரிப்புடன் வரவேற்றான் அபிஜித்.
“டேய், இதெல்லாம் உன் வேலை தானா?” என்று ஷ்யாம் கேட்க,
“அய்யோ அண்ணா, வாட்டர் ஃபால்ஸ் வந்தது மேல இருந்து, நனஞ்சிட்டீங்களேன்னு உங்களுக்கு ட்ரெஸ்ஸும், டவலும் கொண்டு வந்தேன் பாருங்க என்னைச் சொல்லனும், இந்த உலகத்தில் நல்லதுக்கே காலமில்லடா அபி” என்று அபிஜித் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மாடியிலிருந்து ஓடி வந்த யாழினி அபியைத் துரத்தலானாள்.
“என்ன ஏன்டி துரத்துர பப்லிமாஸ்? நீதானடி அண்ணா'ஸ் மேல தண்ணிய ஊத்தின?” என அபி வீட்டினுள் ஓட, இவர்களின் விளையாட்டை கண்டு சிரித்து கொண்டே ஷ்யாமும், அஜய்யும் உடை மாற்ற சென்றனர்.
உடை மாற்றிவிட்டு இருவரும் வர, வீட்டின் முகப்பு அறையில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த ராகுல், “என்னடா இது, காலங்கார்த்தாலயே பஞ்சாயத்தா?” என்று நிமிர, அப்போதும் யாழினி அபியை மொத்திக் கொண்டிருந்தாள்.
ராகிணி அனைவருக்கும் காபி கொண்டு வந்து தர, மாடியிலிருந்து ஆதர்ஷ், வைஷு உடன் இறங்கி வந்த படியே, “என்ன சித்தப்பா’ஸ் ரெண்டு பேரும் ஜாகிங் முடிச்சுட்டு வரும்போதே குளிச்சுட்டே வந்துட்டீங்களா?”, என்று சிரிக்க,
ஷ்யாம் சிரித்துக் கொண்டே யாழினியிடம் திரும்பி, “சொல்லுடா யாழிமா, காலையிலயே என்ன போர் நடக்குது?” என்றான்.
யாழி அபியை கைக் காட்டியபடி “எல்லாம் இவனாலதான்...ண்ணா. ரெண்டு நாளைக்கு முன்னாடி என் ப்ரொபசர் இவங்க ஹாஸ்பிடல் போயிருக்கார். அவர்கிட்ட இவன் ‘என் தங்கச்சிக்கு ஏன் சார் ரொம்ப ரெக்கார்டு ஒர்க் கொடுக்குறீங்க, பாவம் எங்க அண்ணிக்கு தான் வேலை அதிகம்’ என்று போட்டுக் குடுத்துட்டான்...ண்ணா, இப்போ அவர் என்னை திரும்ப எழுதச் சொல்றாரு”, என்றுச் சிணுங்க, அங்கிருந்த அனைவரும் சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தான்.
அதை கேட்ட உடன் இருக்கையில் இருந்து எழுந்த ராகுல், “எனக்கு இன்னைக்கு ஒரு ஹியரிங் இருக்கு, நான் போய் கிளம்புறேன்” என எழுந்துவிட்டான், ராகுலிற்கு தெரியும் இன்னும் கொஞ்சம் நேரம் தான் அங்கிருந்தால் அவனும் ஒரு ரெக்கார்டு எழுத வேண்டிய சூழ்நிலை வருமென்று.
அஜய்யும் எழுந்துகொள்ள, உடனே ராகிணி, “அஜய், கொஞ்சம் உக்காருப்பா ரேஷ்மா போன் பண்ணியிருந்தா விக்ரம் மாப்பிள்ளையோட சித்தப்பா பொண்ணுக்கு வரன் பாக்குறாங்களாம். ரேஷ்மாவோட அத்தை கால் பண்ணி பேசினாங்க. அவங்க... உன்... உன்ன தான்பா அந்தப் பொண்ணுக்கு கேக்குறாங்க...." என்று தயக்கத்துடன் கூறி முடித்தார்.
அஜய், "நீங்க என்ன சொன்னீங்க மா?" என்று கேட்க,
"வீட்டில் பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன். ஏன்னா உன் அக்கா வாழப்போன வீடு இல்லையா? நீ என்னப்பா சொல்ற?" என்று ஆர்வத்துடன் அவனை பார்த்தார் ராகிணி.
அஜய், "வேணாம் மா. நான் மாமாகிட்ட பேசுறேன்" என்று மறுக்க,
ராகிணி,"அந்த பொண்ணோட போட்டோ பார்த்தேன் அஜய், அழகா இருக்கா. டாக்டர்க்கு வேற படிச்சு இருக்காப்பா. அப்புறம்..." என்று தொடர்வதற்குள் இடைமறித்த அஜய்,
"அம்மா ப்ளீஸ்... இந்த பேச்சை விடுங்க. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்வதில் விருப்பமில்லை” என்றான்.
இடைப்புகுந்த அபிஜித், அஜய்யின் காதருகில் "அண்ணா, அழகான ஆஃபர் வரும் போது ஏன்ண்ணா வேணாம்னு சொல்ற? பொண்ணு வேற அழகா இருக்காங்கனு அம்மா சொல்றாங்க. ஓகே சொல்லிருண்ணா" என்றான்.
அஜய் தாயிடம் திரும்பி, "அந்தப் பொண்ணு டாக்டர்னு சொன்னீங்கல்லமா?" என்றான் யோசனையுடன்.
ராகிணியும் ஆர்வமாக, "ஆமா அஜய், பிடிச்சிருக்காப்பா. முடிச்சிரலாமா?" என்றார்.
அஜய், "எஸ் மா, முடிச்சுருங்கம்மா. ஆனா எனக்கு இல்லை. அபிக்கு..." என்றான். அதுவரை அவர்களது சாம்பாசினையை கேட்டுக்கொண்டிருந்த திவ்யா,
"அஜய், அபி உன்ன விட சின்னவன், நானும் ரேஷ்மா கிட்ட பேசினேன். நல்ல பொண்ணுனு சொல்றா, கொஞ்சம் எங்களுக்காக யோசிக்கக்கூடாதா? எத்தனை நாள் தான் இப்படியே இருப்ப?" என்க.
அப்பொழுதும் அஜய் யோசனையுடன் அமர்ந்திருக்க அதைபார்த்த ஷ்யாம், "டேய் என்னடா இது, அம்மாக்காக கொஞ்சம் யோசிடா" என்றான்.
வெகு சில வினாடிகள் புருவம் சுருக்கி யோசித்த அஜய், "ஆமாம்மா, அபிக்கு வேண்டாம். அவன் சின்ன பையன். சோ, என்னை விட 3 மாசம் பெரியவனான இவனுக்கு முடிச்சுருங்கமா, ‘சரிதா’ம்மா கிட்ட பேசுங்க. நான் ஆபிஸ் போகனும், கிளம்புறேன்" என்று சொல்லிவிட்டு மாடியேறிவிட்டான்.
ஷ்யாம், "அம்மா, கொஞ்ச நாள் அவனை அவன் இஷ்டத்துக்கு விடுங்கமா. லண்டனில் இருந்து வரமாட்டேன்னு சொன்னவன எப்படியோ வர வச்சிருக்கோம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பேசிப் பார்க்கலாம். அவனை கட்டாயப்படுத்த வேண்டாம் மா" என்றான்.
உடனே அபி, “வட போச்சே!!" என்று கூறியபடியே நாளிதழை கையில் எடுக்க, அவனை முறைத்தவாறே ஷ்யாமும் விடைப்பெற்றான்.
 
Last edited:

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
20373
இரவையும்-பகலையும் மறக்கடித்த வண்ண வண்ண விளக்குகளும், வெயிலின் வெக்கையை விரட்டியடித்த குளுமையும், உள்ளத்தின் பேரமைதியையும் கிழித்து செல்லும் பேரிரைச்சலும், மக்களிற்கு தேவையான அணைத்துப் பொழுதுப்போக்கு அம்சத்தையும் தன்னுள் உள்வாங்கிய பெரிய வணிக வளாகத்தை சுற்றி பார்க்கவே நமக்கு ஒரு நாள் தேவைப்படும்…!!! தேவையை மிஞ்சிய ஆசையை தூண்டும் அங்காடிகள் நம் வருமானத்தை முழுவதும் விழுங்கி கொள்ள அன்றைய தன் இயக்கத்தை தொடங்கியது.
வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கைகளின் அடக்கமான கைபேசியுடன் ‘செல்ஃபி புள்ளைகள்’ தங்களை எண்ணியல் படக்கருவியில் பதிவேற்றம் செய்துகொண்டு நடைபாதையை மறந்து கேளிக்கைகளில் ஈடுபட்டும்… கிடைத்த இடங்கள் எல்லாம் விளையாட்டு மைதானமாக மாற்றிக்கொண்டு சுற்றித் திரிந்த சிறார்களும், பழக்கமே இல்லாத திடிரென்று சுமத்தப்பட்ட குழந்தைகள் பொறுப்பில் முழி பிதுங்கிய ஆண்கள், தங்கள் இல்லதரசியிடம் "அம்மா தாயே!! போதும் ஷாப்பிங்" என்று கெஞ்சிக்கொண்டும்... தங்கள் நட்புடன், காதலுடன் தங்களின் ரசனைகளை பகிர்ந்து 'விண்டோ ஷோப்பிங்கில்' மூழ்கிய இளம் வயதினர்களை மிகவும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்து கொண்டே மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள உணவு விடுதியில், தங்கள் அலைபேசியையும், கண்ணுக்கு எட்டிய வளாகத்தின் வாயிலில் ஒரு கண்ணும் என்று நிலையில்லாமல் வளவளத்தபடி ஒரு மேசையின் நாற்காலியில் அமர்ந்தனர் ‘ரீனா’, ‘மிதுனா’ மற்றும் ‘பூஜா’.
அதிக நேரம் காத்திருந்த சிறு சலிப்புத்தன்மையுடன் ரீனா, மிதுனா மற்றும் பூஜாவை நோக்கி, "என்னடி இன்னும் இவள வரக்காணோம், இவ எப்போ வந்து நாம எப்போ ஷாப்பிங் முடிச்சி ஹாஸ்டல் போறது" என்று அங்கலாய்த்தாள்.
"அவள பத்தி தெரியாதா, அவங்க வீட்ல இவள எப்படியும் தனியா டூ வீலர்ல விட மாட்டாங்க இவ அதுக்கு பஞ்சாயத்து வச்சிருப்பா" என்று தோழியை அறிந்தவளாக மற்ற தோழிகளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் பூஜா.
அவர்களின் எண்ணத்தை போலவே நம் நாயகி, தன் வீட்டில் அம்மாவுடனும், தமையனுடனும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தாள்.
“ம்மா… ப்ளீஸ் மா. இந்த ஒரு தடவை மட்டும் மா... ப்ளீஸ்...” என்று தன் தாய் ரேணுகாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் சஹானா.
ரேணுகா, “முடியாது, எத்தனை தடவை நீ கெஞ்சினாலும் முடியாது. இதுக்கு மேல நீ என்கிட்ட கேட்டா வெளியவே போக வேணாம் வீட்லயே இரு. உங்கிட்ட டூவீலர தந்துட்டு உன் அப்பாகிட்ட யார் திட்டு வாங்குறது”, என்று கூறினார். இனி இவரிடம் தன் ஆட்டம் செல்லுபடியாகாது என்றுணர்ந்து மெல்ல தன் தமையனிடம் சென்றாள் சஹானா.
“அண்ணா, நீயாவது சொல்லுண்ணா… ப்ளீஸ்ண்ணா… என் ப்ரண்ட்ஸ்லாம் அங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, என் செல்ல அண்ணா இல்ல, ப்ளீஸ்… இந்த ஒரு தடவை மட்டும்”, என்று தன் அன்பு அண்ணன் கார்த்திக்கிடம் செல்லம் கொஞ்சி ஐஸ் வைத்துப் பார்த்தாள், ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியமே!!!
கார்த்திக், “அம்மு, உன்ன போகவேண்டாம்னு நாங்க சொல்லல, டூ வீலர்ல போக வேணாம்னு தான் சொல்றோம். நானே உன்னை மாலில் ட்ராப் பண்றேன்”, என்று அவனும் கை விட்டு விட,
சஹானா, “அண்ணா, என்கிட்ட தான் லைசென்ஸ் இருக்கே, ஹெல்மெட்லாம் போட்டுட்டு போறேண்ணா, மெதுவா பாத்து ஓட்டுவேன்ண்ணா, ப்ளீஸ்ண்ணா...” என்று இறுதி முறையாய் தன் பலமான கோரிக்கைகளை முன்வைத்தாள்.
கார்த்திக், “சாரிடா, நீ என்ன சொன்னாலும் உன்னை தனியா அனுப்ப எனக்கு விருப்பமில்லை, நீ ஒழுங்காப் போனாலும், உனக்கு முன்னால், பின்னால் வர்றவங்க எப்போ, எந்த மாதிரி வருவாங்க என்று சொல்ல முடியாது அம்மு, உன்ன அப்படி தனியாக அனுப்பிட்டு எங்களால் நிம்மதியாக ஒரு வேலையும் செய்யமுடியாதுடா, புரிஞ்சிக்கோமா”, என்று தன் தங்கையின் தலையை பாசமாக வருட, அதன் பின் அடம்பிடிப்பாளா நம் நாயகி…! ஒரு வழியாக, தாயிடம் சில பல அறிவுரைக் கேட்டுவிட்டு தன் சகோதரனுடன் வீட்டு வாயிலை அடைந்தாள்.
எவ்வளவு தான் அறிவுரைக் கேட்டு, நடைமுறையில் வாழ்ந்தாலும் நடக்கவிருக்கும் ஒரு சில கோர நிகழ்வுகளை நம்மால் தடுக்க இயலாதல்லவா?!!!
வீட்டின் வாசல் வரை வந்ததும், காரை எடுக்காமல் தன் இரு சக்கரத்தின் அருகில் செல்லும் சகோதரனைக் கண்டு சஹானா,
"வாவ். இந்த ரேணுவோட அர்ச்சனையிலருந்து தப்பிக்க தான் அவ்வளவு ரூல்ஸ் பேசுனியா? சூப்பர்ண்ணா ", என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க,
கார்த்திக்,"ஷ்ஷ்... சத்தம் போடாத, அம்மா வந்துட்டா இப்போ இதுலப் போகமுடியாது, சீக்கிரம் ஏறு", என்றபடி அவளது ‘வெஸ்பா’வை இயக்கினான்.
தங்கள் வீடு இருக்கும் பகுதியில் இருந்து வெளி வந்ததும் சஹானாவிடம் வாகனத்தை செலுத்தச் சொல்லி, பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டான். இவர்கள் வணிக வளாகத்தை அடையும் முன் நம் நாயகியின் அறிமுகத்தை பார்க்கலாம்.
‘சஹானா கார்மெண்ட்ஸின்' உரிமையாளர் ரகுராம் மற்றும் அவரின் இரண்டாம் மனைவி ரேணுகாவின் தவப்புதல்வி தான் 'சஹானா ரக்‌ஷிதா', மென்மையான குணம் கொண்ட ரகுராமின் முதல் மனைவி தன்னுடைய பிரசவத்தில் பிரசவித்த 'ஸ்ருதிகாவை' பரிசாக கொடுத்து இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். ஸ்ருதிகாவை சிரம் கொண்டு 6 வயது வரை வளர்த்தவர், பின் தன் பெண்ணிற்கும் அன்னையின் அரவணைப்பு வேண்டித் தன் தாய்வழி உறவுமுறையில் இளம் விதவையான 5 வயது சிறுவன் கார்த்திக்குடன் இருந்த ரேணுகாவை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.
ஸ்ருதிகா தற்போது திருமணம் முடிந்து கணவர் ‘பிரபு’வுடன் கோயமுத்தூரில் வசித்து வருகிறாள். இவர்களுக்கு 5 வயதில் ‘தீக்‌ஷிதா’ என்ற பெண் குழந்தை உள்ளது.
தன் தாயின் மறுமணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாத ஐந்து வயது சிறுவன் கார்த்திக் அனைவரிடமும் ஒதுக்கம் காட்டியே பழகி வந்தான். அவனது 8-ஆம் வயதில் ரேணுகா சஹானாவை ஈன்றெடுத்தார், பூ போன்ற தன் கண்ணிமைகளை சுருக்கிச் சுருக்கி, தன்னைப் பார்த்த சஹானாவை தன் கைகளில் ஏந்தியப்பின்னரே அவன் தன் கூட்டில் இருந்து சிறிது சிறிதாக வெளியே வரத் தொடங்கினான். அதன் பின் அவனது மொத்த உலகமும் அந்த சின்னச்சிறு மொட்டென்று மாறியது…!
சஹானா வளர வளர அவளுக்காகவே தன் தாய், சகோதரி ஸ்ருதிகா என அனைவரிடமும் சிறிதுசிறிதாக ஒன்றினான், ஆனால் இன்றளவும் ரகுராமிடம் மட்டும் சிறு ஒதுக்கம் இருக்கும்.
கார்த்திக்கின் பட்டப்படிப்பு முடிந்து தன்னுடன் ‘சஹானா கார்மெண்ட்ஸி’ல் பொறுப்பேற்றுக் கொள்வான் என்று ரகுராம் எதிர்ப்பார்க்க, தொழிலில் விருப்பம் இருந்தாலும் ரகுராமுடன் சரளமாக பழக முடியாததால் பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொறியாளனாக பணிப்புரிகின்றான்.
இப்பொழுது, சஹானா மிகவும் நிதானமாக சென்னை போக்குவரத்தில் கலந்து வணிக வளாகத்தை அடைந்தாள். அவளிடம் இருந்து வாகனத்தை வாங்கி கொண்டு, தன் தங்கையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சையைக் கண்டு, அவனும் புன்னகையுடன் அவளிடம் விடைப்பெற்று தன் நண்பர்களைக் காண மெரீனா கடற்கரையை நோக்கிச் சென்றான்.
வளாகத்தின் உள் நுழைந்த சஹானா தன் தோழிகள் அமர்ந்து இருந்த உணவு விடுதிக்குள் சென்று அவர்கள் அமர்ந்த மேசையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
இவளை காணாதது போல அவளது தோழிகள் முகத்தைத் திருப்பி வேறெங்கோ வேடிக்கைப் பார்க்க,
சஹானா, “ஹே சாரிப்பா, வீட்டில் ஒரு பஞ்சாயத்து, அதனால் தான் லேட்" என்று காரணம் சொல்ல,
ரீனு, “இது என்ன புதுசா, வழக்கம் போல நடக்கிறது தானா? கடைசியா கார்ல தான வந்த?” என்று கேட்டாள்.
சஹானா, “இல்ல, டூ வீலெர்ல தான் வந்தேன்" என்று அசால்ட்டாக கூற, மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
உடனே மிதுனா, “ஹேய் சானு, உண்மையாவா சொல்ற?" என்று அதிர,
பூஜா, "ஹேய் மிது, அவப் பொய் சொல்றாடி, நீயும் அதை நம்புற?" என்று கேட்க,
சஹானா, “இல்லை. உண்மையிலே நான் டூ வீலெர்ல தான் வந்தேன். நான் தான் ட்ரைவ் பண்ணுனேன்" என்று கூற,
"அப்படின்னா, முகத்தில் ஒரு தேஜஸ் தெரியனுமே....? அது எங்கே?" என்று அதிமுக்கியமான கேள்வியை ரீனா கேட்க,
அதில் கடுப்பான சஹானா, "நான் தான் ட்ரைவ் பண்ணுனேன், பட் அண்ணா பின்னாடி உக்கார்ந்துட்டு நானும் வருவேன்னு வந்தான். நான் இறங்கினதும் ‘கிளம்பிட்டு சொல்லு, நான் வர்ரேன்’னு வண்டியை எடுத்துட்டு அவன் ஃப்ரெண்ட்ஸ பார்க்கப் போய்ட்டான்" என்று சோகமாக கூற, தோழிகள் மூவரும் நகைக்க ஆரம்பித்தனர்.
“அதானே பார்த்தேன். உங்க வீட்டுலயாவது, உன்னை நம்பி வண்டியை தர்றதாவது" என்று பூஜா ரீனாவுடன் ஹைஃபை கொடுத்துக் கொண்டாள்.
மிதுனா, "அவங்க பயப்படறதும் சரிதானடி. ரோட்ல போற எல்லாரும் ரூல்ஸ் படி வண்டி ஓட்றதில்லயே, அது தான் அவங்களுக்கு பயமா இருக்கும்" என்று தேற்றினாள்.
சஹானா,"லுக் மிது, யாரு எவ்வளவுதான் பார்த்துப் போனாலும் வந்தாலும் நமக்குனு எழுதப்பட்டத யாராலும் மாத்த முடியாது" என்று அலுப்பாக கூறினாள்.
அதில் கடுப்பான ரீனா, “அம்மா பரதேவதையே! வந்ததே லேட்... இதுல உன் தத்துவத்தைக் கேக்கவா? இல்லன்னா என் வயிறு போடுற சத்தத்தைக் கேக்கவா?" என்று எகிறினாள். சஹானாவின் கூற்றும் ஒருநாள் உண்மையாகும் என்பதை அங்கிருந்த யாவரும் அறிந்திலர்....!
அதன் பின் நால்வரும் தங்களுக்கு பிடித்தமான உணவை வாங்கிக் கொண்டு தங்கள் அரட்டையைத் தொடர்ந்தனர்.
ரீனாவும், மிதுனாவும் திருச்சியைச் சேர்ந்தவர்கள், பள்ளிப் பருவத் தோழிகள்; அதனாலே இணைந்தே சென்னையிலும் பி.ஆர்க் (B.Arch) படிப்பைத் தொடர்ந்தனர். பூஜாவின் தந்தையும், சஹானாவின் தந்தையும் நண்பர்கள்; பெரியவர்கள் துவக்கிய நட்பு பாதையை சிறியவர்கள் வெகுச் சிறப்பாகத் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது இவர்கள் நால்வரும் சென்னையின் பிரபலமான தனியார் கல்லூரியில் பி.ஆர்க் (B.Arch) படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பூஜாவின் பெற்றோர்கள் தொழில்ரீதியாக லண்டனில் தங்கியிருப்பதால், அவர்கள் வீட்டில் தாத்தா பாட்டியுடன் பூஜா தங்கி இருக்க, ரீனா மற்றும் மிதுனா கல்லூரி விடுதியில் தங்கியிருந்தனர், இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்க அனுமதி இல்லை என்பதால் தற்பொழுது பெண்கள் விடுதியில் தங்கியுள்ளனர்.
"தென், ஜாப் பத்தி என்ன ப்ளான்?" என்று மிதுனா ஆரம்பிக்க,
ரீனா,"ஹேய், முழுசா இன்னும் 50 நாள் கூட இல்லப்பா, அதுக்குள்ள ஒரு வேலையைத் தேடியாகனும், இல்லன்னா எங்க வீட்டில் என்ன ஊருக்குக் கூப்பிட்டுருவாங்க" என்றாள்.

பூஜா, "அப்படின்னா, இப்படி வெட்டியா பேசிட்டே இருக்குறத விட்டுட்டு ஒரு 10-15 கம்பெனிக்கு ரெஸ்யூம் அனுப்ப வேண்டியது தான்" என்று கூற,
மிதுனா,"சும்மா எப்படி ரெஸ்யூம் அனுப்புறது. முதலில் ஒரு நாலு நல்ல கம்பெனியை செலக்ட் பண்ணி கம்பெனி பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணலாம்.அப்புறம் ரெஸ்யூம் அனுப்பலாம்", என்று கூறினாள்.
ரீனா, “எப்படியோ நம்ம எக்ஸாம்ஸ்க்கு முன்னாடி வேலைக் கிடைச்சிட்டா ரொம்ப நல்லா இருக்கும்" என்று தன் வீட்டின் நிலையறிந்து கூறினாள்.
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க, நம் நாயகியோ கருமமே கண்ணாக, பீஸ்ஸா சாப்பிட்ட ப்ளேட்டில் தக்காளி சாஸினால் தன் பெயரை எழுதிக் கொண்டிருந்தாள்.
ரீனா, “ஏன்மா சஹானா, உனக்கு உன் பேர் மறந்துப்போய்டுச்சா?" என்றுக் கேட்க, திருதிருவென முழித்த சஹானாவைப் பார்த்து பூஜா,
"சானு, உன் வீட்டுல உன்ன வேலைக்கு அனுப்பமாட்டாங்னு யோசிக்குறியா?" என்று கேட்டாள்.
சஹானா, “அப்பா அம்மாக்கு சுத்தமா விருப்பமில்லடி. அப்பாவையாவது சமாளிச்சுருவேன், அம்மாவை சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்." என்று வருத்தப்பட,
ரீனா,"ஆமா சானு, உன் அப்பா பெயரை விருதுக்கே நாமினேட் பண்ணலாம்", என்று கூறி சிரிக்க, தொடர்ந்து தன்னை முறைத்த சஹானாவைப் பார்த்து,
"சரி சரி முறைக்காதே..! அண்ணாவை வச்சு ஏதாவது கேம் ட்ரைப் பண்ணு, சக்ஸஸ் ஆகலாம்" என்று ஐடியா கொடுத்தாள்.
சஹானா, "முதல்ல அவன சமாளிக்கவே எனக்கு நாக்குத் தள்ளும், அவன்கிட்ட ஆல்ரெடி பேசிப்பார்த்துட்டேன். ‘அப்பாக்கூட அவர் கம்பெனிக்கே போ, எதுக்கு வெளியே’னு கேக்குறான்... பி.ஆர்க் படிச்சுட்டு கார்மெண்ட்ஸ் போய் நான் என்னடி செய்யப்போறேன்? இனி பிரபு மாமாகிட்ட தான் பேசனும்", என்று கோபமாக ஆரம்பித்து சலிப்பாக முடித்தாள்.

ஒருவழியாக 3 மணி நேரத்தை அவ்வணிக வளாகத்தில் கடத்தியப் பின்னரே தன் சகோதரனுக்கு அழைப்பு விடுத்தாள் சஹானா. பூஜாவும் தன் காரை எடுத்துக் கொண்டு வெளியே வர,
ரீனாவின், “ஹாய் அண்ணா, எப்படி இருக்கீங்க?” என்ற ஒலியில் காரை நிறுத்தினாள் பூஜா.
கார்த்திக், “யா குட் மா. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்றான்.
நல விசாரிப்புகளுக்குப் பின், “அண்ணா, ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?” என்று மிதுனா கேட்க,
“சஹா கிட்ட டூவீலெர கொடுக்க சொல்றத தவிர, வேற என்னன்னாலும் சொல்லுமா. செய்றேன்”, என்று சொன்னதும் அனைவரும் சிரித்து சஹானாவின் முறைப்பைப் பெற்றனர்.
“நாங்க இங்கே ஜாப் போகலாம்னு டிசைட் பண்ணிற்கோம். நாங்கன்னா நாங்க மூனு பேரும் தான் அண்ணா, சஹா இல்லை. கம்பெனிப் பற்றிய டீடெயில்ஸ் வேண்டும், உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல கண்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கம்பெனீஸ் இருந்தா சொல்வீங்களா அண்ணா?” என்று மிதுனா கேட்க, சில வினாடிகள் யோசித்த கார்த்திக்,
”ஒன் மினிட்”, என்றவாறு தன் அலைபேசியுடன் நகர்ந்தான்.
சற்று நேரத்தில் திரும்பி வந்த கார்த்திக்,”RS CONSTRUCTIONS கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த கம்பெனியோட எம்.டி அண்ட் ஜே.டி ரெண்டு பேருமே என்னோட ஃப்ரெண்ட்ஸ் தான், இப்போ பேசுனேன் நல்ல கம்பெனி, உங்களுக்கு விருப்பம்னா சொல்லுங்க அட்ரஸ் கொடுக்குறேன். நாளைக்கே நீங்க போய் அவங்களை பார்க்கலாம்” என்று நீளமாக பேசி முடித்தான்.
ரீனா, “என்னண்ணா விருப்பமானு கேட்குறீங்க. கண்டிப்பாக போகிறோம்.” என்று சொல்ல,
பூஜா ரீனாவிடம்,“அடியே! நாளைக்கு சண்டே டி. எந்த ஆஃபிஸ் இருக்கும்” என்று சின்னக் குரலில் கூற, அதை வெளிப்படையாகவேக் கேட்டுவிட்டாள் சஹானா.
சஹானா, “நாளைக்கு சண்டே அண்ணா.” என்று கூற,
“தெரியும்டா, அஜய்கிட்ட பேசிட்டேன். நீங்க போறதா இருந்தா மட்டும், இண்டர்வியூக்கு அவங்க ரெண்டு பேரும் வருவாங்க.” என்றான்.
பூஜா, “ஆக்ச்சுவலா, இப்போ அங்கே வேக்கன்ஸி இருக்குதாண்ணா? அப்பறம்.... ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணா இப்படி கேட்குறேனுனு, அந்த எம்.டீஸ் எப்படி?” என்று தன் ஐயத்தைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வினவினாள்.
கார்த்திக்,”இதில தப்பா நினைக்க ஒன்னுமே இல்லமா, போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் கேட்டுத் தெளிவுப்படுத்திட்டு போறது தான் பெட்டர். எனக்கு அஜய் & ஷ்யாம் சின்ன வயசிலிருந்தே ஃப்ரெண்ட்ஸ் அவங்க ரெண்டுப் பேரும் கஸின் ப்ரதர்ஸ், நல்ல ஒழுக்கமான பசங்க. இதுக்கு முன்னாடி லண்டன்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தாங்க, இப்போ இங்க கம்பெனி ஆரம்பிக்கனும்னு இங்க வந்துட்டாங்க. கம்பெனி ஆரம்பிச்சு இன்னும் 2 வருஷம் கூட ஆகல, பட் நல்ல டேலண்டட் பெர்சன்ஸ். ஆக்ச்சுவலி, இப்போ அவங்களுக்கு ஆட்கள் தேவையில்ல தான். அடுத்த மாசம் கம்பெனிய கொஞ்சமாக விரிவுபடுத்துற ப்ளான்ல இருக்குறதா சொன்னான். அதான், வேலைக்கு ஆட்கள் தேவைப்படுமா என்று நான் கேட்டுப் பார்த்தேன். வர சொல்லிட்டான். போதுமா மா டீடெயில்ஸ்?” என்று நீளமாக பேசி முடித்தவனைப் பார்த்து பூஜாவிற்கு சிரிப்புத் தாங்கவில்லை.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த சஹானா, ”ஹேய் நீங்க வேலைக்குப் போறீங்களா? இல்லைன்னா மாப்பிள்ளைப் பார்க்கப் போறீங்களா? எதுக்கு டி இந்த டீடெயில்ஸ்லாம்?” என்றுக் கேட்டுவைத்தாள், அது உண்மையாகப் போவதை அறியாமல்.....!


 
Last edited:

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் முதல் நினைவை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-2
20543
மறுநாள் அலுவலகம் செல்ல தயாராகி தன் அறையில் இருந்து வெளியேறி படிகளில் இறங்கும் பொழுதே வீடு திருவிழாக்கோலம் பூண்டிருந்ததை கவனித்துக்கொண்டே இறங்கியவனின் கழுத்தை பின்னிருந்துக் கட்டிக்கொண்டு, “ஹாய் டார்லிங், எப்படி இருக்க? ஏன் நீ வீட்டுக்கே வரல? நான் உன்ன எவ்வளவு மிஸ் பண்ணுனேன் தெரியுமா டார்லிங்? நேத்து சாட்டர்டே தானா, நேத்துமா வரமுடியலை உன்னால?” என்று தன் இரண்டு வாரக் கேள்விகளையும் மொத்தமாய் அடுக்கினாள் தன் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எழுதிக் கொண்டிருக்கும் ஸ்வாதி ஷ்யாமின் தங்கை.
அவளின் படபட கேள்விகளில் சிரித்த அஜய்,”மேடம், வெயிட் வெயிட், கேள்விகள எல்லாம் ஒன் பை ஒன்னா கேளுங்க, முதல்ல, நான் நல்லா இருக்கேன், நான் வீட்டுக்கு வந்தா நீங்க எப்படி எக்ஸாம்க்கு படிப்பீங்க, அப்பறம் உங்க மம்மி என்னைத் திட்டவா?,” என்றவன் சிரித்தபடியே, ”நேத்து, ஃப்ரெண்ட்ஸ் மீட் டா, மெரீனால, அங்கே போய்ட்டோம், ம்ம், நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனேன்டா, பட், என்ன பண்ண? உன் அருமை அண்ணன் வேற உனக்கு எக்ஸாம்ஸ் முடியுற வரை உன் வீட்டுப் பக்கமே வரக்கூடாதுனு சொல்லிட்டான்”, என்று உதட்டைப் பிதுக்கியவாறே அவள் தோளில் கைப்போட்டுக் கொண்டு உணவு உண்ணும் அறைக்குச் சென்றான்.
ஸ்வாதி,”அப்போ ஏன் டார்லிங், நீ மட்டும் அவன்கூட பேசுற? பேசாம, அவனை டைவர்ஸ் பண்ணிடு. நான் உனக்கு வேற ஆள் ரெடி பண்ணித் தர்றேன்” என்று தன் புருவத்தை உயர்த்தியபடியே சொல்ல,அவள் தலையில் ஒரு கொட்டு விழுந்தது.
”ஆ.... ஏன்மா கொட்டினா?“ என்று தலையைத் தேய்த்தவாறே தன் தாய் சரிதாவிடம் கேட்க, அவரோ,
”எத்தனை தடவைடி சொல்றது, அவனை டார்லிங்னு கூப்பிட்டாத, ஒழுங்கா அண்ணானு கூப்பிடு” என்று கூறினார்.
ஸ்வாதி, ”போமா, நான் அப்படி தான் கூப்பிடுவேன். ஏன்ண்ணா நான் அப்படி உன்னை கூப்பிடக்கூடாதா?”, என்று கேட்டு அவரின் இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரித்தாள்.
அஜய் அங்கே அமர்ந்துருந்தவர்களை நலம் விசாரித்து கொண்டிருந்தவன் இவளது கேள்வியில் சிரித்தவாறே, “விடுங்க சித்தி, சின்னப் பொண்ணு தான, நீ எப்படி வேணுனாலும் கூப்பிடுடா,”என்று ஸ்வாதிக்கு உரிமம் வழங்க, அவளோ அஜய்யின் தோள்களில் சாய்ந்தபடியே,
”சோ ஸ்வீட்ண்ணா” என்று அஜய்யை கொஞ்சிவிட்டு தன் தாயிடம் நாக்கைத் துருத்தி அழகுக் காட்ட, அவளை முறைத்தவாறே பரிமாறும் வேலையை செய்தார் ஷ்யாமின் அம்மா சரிதா.
“என்ன அஜய், இன்னைக்கு ஏன்பா இந்த அவசர இண்டர்வியூ வச்சுருக்கீங்க, இவன்கிட்ட கேட்டா, உருப்படியா ஒரு பதிலும் வரலை” என்று கேட்டார் ஷ்யாமின் அப்பா சங்கர்.
அஜய்,”அவசரம்னு இல்ல சித்தப்பா, நேத்து கார்த்தி போன் பண்ணிக் கேட்டான். அவனோட தங்கச்சியோட ஃப்ரெண்ட்ஸ் 3 பேருக்கு ஜாப் டீடெயில்ஸ் கேட்டான். நெக்ஸ்ட் நாம ஸ்டார்ட் பண்ணப்போற ஃபாரின் ப்ரோஜெக்ட்ஸ்க்கு நமக்கும் தேவைப்படும், அதான் கார்த்திக் நேத்து கேட்டதும் யோசிச்சேன், பி.ஆர்க் ஸ்டூடண்ஸ் வேற. திறமை இருந்தா எடுத்துக்கலாமேனுதான்பா”, என்று தன் தந்தைக்கும் சேர்த்தே தகவல் அளித்தான்.
‘கார்த்தி’ என்ற பெயரைக் கேட்டதுமே ஷ்யாமுடன் பேசிக் கொண்டிருந்த யாழினி, தன் பேச்சை நிறுத்திவிட்டு அஜய்யை கவனிக்கலானாள். அவனுடைய தங்கை என்றதுமே, அவனிடம் ஓடி வந்து, ”அண்ணா, இண்டர்வியூக்கு வர்றது சானு & கோ வா?”, உற்சாகத்துடன் வினவினாள்.
அஜய்,”அது என்னடா சானு & கோ? அவனோட தங்கச்சியோட ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னான். எனக்கு மத்த டீடெயில்ஸ் தெரியலடா” என்க,
யாழினி, ”அது... உன் ஃப்ரெண்ட் கார்த்தியோட தங்கச்சினு சொன்னியா!!! அவங்க தங்கச்சி சானு எங்க காலேஜ் தான், அவங்க பி.ஆர்க் ஸ்டுடென்ட் அவங்க கேங் தான் சானு & கோ, அதான் கேட்டேன்ண்ணா”, என்றாள்.
அஜய், “ஓ...” என்று கூறிவிட்டு சாப்பாட்டில் கவனமாக,
ஷ்யாம் தான்,”டேய் அஜய், கார்த்தி எப்படிடா அவன் பாசமலரை வேலைக்கு அனுப்புவான்?” என்று கேட்டான்.
அஜய்,”அவன் என் தங்கச்சியோட ஃப்ரெண்ட்ஸ்க்குனு சொன்னதா தான் ஞாபகம். சரி, நேரில் போய் பார்த்துக்கலாம்”, என்றதும், அஜய்யின் அம்மா,
”கார்த்திக்கு தங்கச்சி இருக்காளா ஷ்யாம்? நீ என்கிட்ட சொல்லவே இல்லை”, என்றார். அதற்கு ஷ்யாம் பதிலளிக்கும் முன், அவர் கேள்வியின் நோக்கத்தை அறிந்த அஜய்,
”கார்த்திக்கு ஒரு தங்கச்சி இருக்குறது தெரியலனாதான் ஆச்சர்யம். அண்ட், அம்மா, நாங்க வேலைக்கு மட்டும் தான் ஆள் எடுக்கப் போறோம்”, என்று அந்த ‘மட்டும்’-ல் ஒரு அழுத்தம் கொடுத்துக் கூறிவிட்டு இருக்கையை விட்டு எழுந்து விடைப்பெற்று அலுவலகத்திற்கு ஷ்யாமுடன் சென்றான் அஜய்.
அவனின் பதிலில் அதிருப்தியான குடும்பத்தினர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, நிலைமையை சீர்படுத்த யாழினி, “ஆமாம்மா. அண்ணா ஃப்ரெண்ட் கார்த்திக் தங்கச்சி தான் சஹானா, சூப்பரா பாடுவாங்கமா. அவ்வளவு அழகு தெரியுமா? எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா”, என்று சானு & கோ வின் பெருமைகளை அள்ளிவீசி, அவர் மனதில் ஒரே நேரத்தில் இரு விதைகளைப் போட்டாள் யாழினி. அந்த விதை வளரத் தானே தண்ணீர் ஊற்றுவோம் என்பதை அறியாமலேயே அலுவலகத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தான் அஜய்.....!
******


 
Last edited:

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“RS CONSTRUCTIONS”, என்ற பெயர்த் தாங்கிய பலகையைக் கொண்டிருந்த அவர்களுடைய அலுவலகம் சில ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாகவே விரிந்திருந்தது.
அங்கு, பூஜா தன் காரை நிறுத்தியதும், ரீனா,”அடேங்கப்பா, எவ்ளோ பெரிய்ய ஆஃபிஸ்”என்று வியக்க,
பூஜா தன் தலையை வெளியே நீட்டி அங்கு நின்ற வாயிற்காவலனிடம், "காரை உள்ளே பார்க் பண்ணலாமா?", என்றுக் கேட்டாள்.
உடனே, அந்தக் காவலன் வாகனத்தினுள் இருந்த மூவரையும் உற்றுப் பார்த்துவிட்டு, "அப்பாய்ண்ட்மெண்ட் இருக்குதா?" என்று வினவினார்.
பூஜா,"அப்பாய்ண்ட்மெண்ட் இல்லை, பட் அஜய் சாரைப் பார்க்கனும், சார் தான் இண்டர்வியூவிற்கு வர சொல்லி இருந்தாங்க", என்றாள்.
காவலன் தன் இடைச்செய்தித்தொடர்பின் (இண்டர்காம்) மூலம் அஜய்க்கு தகவல் சொல்லி உத்தரவு கிடைத்ததும், அந்த பெரிய கதவை ஒரு வணக்கத்துடன் வாயிற்காவலன் திறந்து விட,பூஜாவின் கார் வழுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தது. வரவேற்பறைக்கு வந்த மூவரையும் வரவேற்றது அஜய் மற்றும் ஷ்யாமின் தனிப்பட்ட உதவியாளர் ஸ்ரீராம்.
பூஜா,"இண்டர்வியூக்கு வந்திருக்கோம்", என்றுக் கூற,
ஸ்ரீ,"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க", என்று கூறிவிட்டு அங்குள்ள பணியாளரை அழைத்து அவர்களுக்கு குளிர்பானம் வழங்குமாறு பணித்துவிட்டு அஜய்யின் அறைக்குச் சென்றான்.
ரீனா,"என்னங்கடா இது? இண்டர்வியூக்கு வந்ததுக்கே ஜூஸா? அப்போ, நல்ல கம்பெனியா தான் இருக்கும்.எப்படியாவது இங்கேயே வேலைக் கிடைச்சிடனும்பா", என்று அவசரக் கோரிக்கை விடுத்தாள் ஆண்டவருக்கு....!
பூஜா,"என்ன மிது, எதுவுமே பேசாம இருக்க. இண்டர்வியூ டென்சனா?" என்றுக் கேட்டாள்.
மிது,"அதெல்லாம் ஒண்ணுமில்லடி, இன்னேரம் சானு அம்மாவையும் அண்ணாவையும் ஒரு வழி ஆக்கிருப்பாளேனு நினைச்சேன்", என்றதும்,
ரீனா, "ஆமாப்பா, அவ இல்லாம ஒரு மாதிரியா தான் இருக்கு. இது இண்டர்வியூ தான பார்க்கலாம்" என்று கூறினாள்.
சரியாக அந்நேரம் மூவரது அலைபேசிகளுக்கும் கட்செவி அஞ்சல் குழுமத்தில் (வாட்ஸ்அப் குரூப்) செய்தி வந்ததற்கான அறிவிப்பு நாதம் இசைத்தது.
மூவரும் தங்களுக்குள் சிறுப் புன்னகையை பரிமாறிக்கொண்டே சஹானா அனுப்பிய, "மொபைலை சைலண்ட்டில் போட்டுட்டு உள்ளே போங்கடி. இதை சொல்லத்தான் மெஸ்ஸேஜ் பன்னுனேன். சரி நீங்க போய் இண்டர்வியூ அட்டண்ட் பன்னுங்க. நான் போய் என் தூக்கத்தைக் கண்டினியூ பன்றேன். ஆல் தி பெஸ்ட்!" என்று சில பல முகவடிக்களுடன் (எமோஜி) முடித்திருந்த செய்தியை படித்து சிறு நகையுடன் நிமிர்ந்தனர்.
அப்போது ஸ்ரீ வந்து அவர்களை உள்ளே அழைப்பதாகக் கூறியதும்,வேறு எதை பற்றியும் யோசிக்காமல் (எம்.டி) அறையில் அனுமதிப் பெற்று உள்ளே சென்றனர்.
அங்கே சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆண்கள் மூவரையும் பார்த்ததும், உள்ளே சென்றப் பெண்கள் மூவருக்கும் ஆச்சார்யமும், ஒரு வித மகிழ்ச்சியும், பதட்டமும் ஒருசேரத் தோன்றியது.ஏனென்றால் அங்கு அஜய் மற்றும் ஷ்யாமுடன் மூன்றாமவராய் அமர்ந்திருந்தது கார்த்திக்....!
கார்திக்கைப் பார்த்ததும் மூவருக்கும் மூன்று விதமான எண்ணங்கள்.
ரீனாவிற்கு,'அப்பாடா கார்த்தி அண்ணா இருக்காங்க. சோ, ஜாப் கன்ஃபார்ம்' என்று மகிழ,
பூஜாவோ,'கார்த்தி அண்ணாக்கு இவங்க இவ்ளோ க்ளோஸா?' என்று வியக்க,
மிதுனாவிற்கோ,'கார்த்தி அண்ணா முன்னாடி சொதப்பிடக் கூடாதே', என்ற பதட்டம் தோன்றியது.
முதலில் சுதாரித்த ரீனா,”குட் மார்னிங் சார்’ஸ்”, என்று தன் வழக்கமான பணியை கையில் எடுக்க அதைத் தொடர்ந்த பூஜாவும் மிதுனாவும் கூட காலை வணக்கத்தை ஒரு சிறு புன்னகையுடன் நிறுத்திக் கொள்ள,
ரீனாவோ, ”ஹாய் அண்ணா, நீங்க வர்றேன்னு சொல்லவே இல்லை”, என்று தன் தோழிகள் இருவருடைய முறைப்பையும் சம்பாதித்தாள்.
கார்த்திக்கும் ஒரு சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொண்டான்.
பூஜாவோ, ”பக்கி, நாம இண்டர்வியூக்கு வந்திருக்கோம்டி, மானத்தை வாங்காதே”, என்று அடிகுரலில் எச்சாரித்தாள்.
அஜய், ”வெல்கம்....அண்ட் டேக் யுவர் சீட்..”, என்று பெண்களைப் பார்த்துக் கைக்காட்டியவன், ஷ்யாமிடம் திரும்பி, ”டேய்,என்னடா ஆச்சு உனக்கு?”, என்று அவன் தோளைத் தட்ட மறக்கவில்லை.
அறைக்குள் நுழைந்தப் பெண்களைக் கண்டதும் ஒரு நொடி வியந்த ஷ்யாம், அதிலும் குறிப்பாக, அந்த வானநீல நிறத்தில் அனார்கலி சுடிதார் அணிந்து அதற்கு ஏற்ற சின்ன சின்ன நகையணிந்து, வானத்து தேவதையோ என்று எண்ணும் அளவிற்கு இருந்த மிதுனாவைப் பார்த்ததும் மெய் மறந்துப் பார்த்திருந்தான், இதை அந்தப் பெண்கள் கவனிக்கும் முன் சுதாரித்த அஜய் அவனை நடப்பிற்கு மீட்டினான்.
அஜய், ”வெல்... யுவர் சர்டிஃபிகேட்ஸ்..”, என்று கேட்க, பூஜா தனதுச் சான்றிதழ்கள் அடங்கியக் கோப்புகளை அஜய்யிடம் கொடுத்தாள். அதனைப் பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு திருப்தி நிலவியது, அவன் பார்த்ததும் ஷ்யாமிடம் தர அவனும் பார்த்துவிட்டு கார்த்திக்கிடம் கொடுத்தான்.
கார்த்தி ‘தன்னிடம் ஏன்’ என்றவாறு புருவம் உயர்த்த அஜய், ” பாத்துச் சொல்லு”, என்று முடித்துவிட்டான்.
மூன்று பேரின் மதிப்பெண்கள், கூடுதல் பாடதிட்ட சான்றிதழ்கள் அனைத்தையும் பார்வையிட்ட இருவர் முகத்திலும் ஒரு திருப்தி நிலவியது. கார்த்திக் இதனை எல்லாம் தன் தங்கையின் மூலம் பார்த்திருந்ததால் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை.
ஷ்யாம், “ஃப்ரெஸ்ஸர்ஸ் (Freshers), சோ, அனுபவம் இருக்காது பட், இதற்கு முன்னாடி எதாவது ப்ராஜெக்ட் பண்ணிருக்கீங்களா?”,என்று கேட்க,
மிதுனா அவனை நேரே பார்த்து, “இது எங்களோட ஃப்னல் இயர் ப்ராஜெக்ட் சார். பட், குரூப் ப்ராஜெக்ட் தான்”, என்று ஒரு விரலியை (Pen drive) அவனிடம் கொடுத்தாள்.
அதனை தன் மடிக்கணினியில் பொருத்தி பார்வையிட, அந்தக் கோப்பு விரிகையில் அதன் முகப்புப் பக்கத்தில், குழுவில் உள்ள நால்வரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்ததும் அஜய்யின் உதடுகள் தானாகவே அந்த ராகத்தை முணுமுணுத்தது ”சஹானா.....” என்று….!
அதைப் பெண்கள் மூவரும் கவனிக்கவில்லையெனினும், அவனின் இரு பக்கத்திலும் இருந்த தன் நண்பர்கள் இருவரும் கவனித்துவிட்டனர். ஆனால் அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளாமல் கோப்பில் கவனத்தை செலுத்தினான். அவர்களுடைய அந்த சிறு செயல்திட்டம் கூட அஜய்யை வெகுவாகக் கவர்ந்தது என்றால், ஷ்யாம் ஒரு படி மேலே சென்று வெளிப்படையாகவேப் பாராட்டினான்.
பணி நிமித்தமானக் கேள்விகள் முடிந்து, ஆளுமைத்திறமையைச் சோதிக்கும் தனிப்பட்ட நேர்க்காணல் சுற்று வரவே ரீனாவினால் மூச்சு விட முடிந்தது.
அவர்களின் பொழுதுப்போக்குப் பற்றிக் கேட்கப்பட, அவர்கள் கூறிய பதில் அனைத்தும் குழுத் தொடர்புடையதாகவே இருந்தது, அது ஏனோ அஜய்க்கு காலையில் யாழினி கூறியதை நினைவுப்படுத்த அந்தக்கேள்வியைக் கேட்டான்.
“டெல் சம்திங் அபௌட் யுவர் சானு & கோ”, என்று கேட்க, அவனது அந்தக் கேள்வியில் அங்கிருந்த ஐவருமே அதிர்ந்து அவனை நோக்கினர்.
பூஜா,"ச..சார் என்னக் கேட்டீங்க?", தன் காதில் சரியாக தான் கேட்டதா என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் கேட்டாள்.
அஜய் மிகத் தெளிவாக," உங்களது சானு&கோ பற்றிச் சொல்லுங்க” என்றுக் கேட்க,
மிதுனா,"சார் அது எங்க ஃப்ரெண்ட்ஸ் குரூப், காலேஜ்ல கல்ச்சுரலஸ் ப்ரோக்ராம்காக எங்க டீமிற்கு நாங்க வச்ச நேம்" என்றாள்.
ரீனா,"எங்க 4 பேரோட பெயரும் அதில் இருக்கும்" என்றாள்.
ஷ்யாம்,"யாரந்த நாலாமானவர்?" என்று மிதுனாவிடம் கேட்க,
ரீனா, "அது வேற யாருமில்லை, கார்த்தி அண்ணாவோட தங்கச்சி சஹானா தான், அண்ட் சார், ஒரு திருத்தம். அவ நாலாமானவர் இல்லை. அவளும் எங்க குரூப்பில் ஒருத்தி, இங்க முதல், கடைசினு யாருமே இல்லை" என்றாள் ஒருத் தீவிரத்துடன்.
ஷ்யாம் மேற்க்கொண்டு ஏதோ கேட்க வர, அதனைத் தடுத்த அஜய் அவர்களது வேலையை உறுதி செய்து, சம்பளவிகிதம் பற்றியும், வேலைக்கான பயிற்சிப் பற்றியும் கலந்தாலோசித்து விட்டு, மகிழ்வுடன் வேலை நியமன உத்தரவுடன் விடைபெற்றனர் மூவரும்.
பெண்கள் சென்றதும் அஜய், "தென் கார்த்தி, உன் சிஸ்டரை எந்த கம்பெனிக்கு அனுப்பப்போற?" என்று கேட்டான்.
கார்த்தி,"எங்கேயும் அனுப்பலடா", என்று சலித்துக் கொள்ள,
ஷ்யாம்,"அப்போ எதுக்குடா பி.ஆர்க் படிக்க வச்சீங்க?" என்றான்.
கார்த்தி, "டேய், உங்களுக்கு எங்க வீட்டு நிலைமை நல்லாவே தெரியும். அவ ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக தான் அவளை பி.ஆர்க் படிக்கவச்சோம். இப்போ இவங்களோட வேலைக்கு வரனும்னு ஒரே அடம், அவங்க அப்பா சம்மதிக்கமாட்டாங்கடா. அதையும் மீறி நான் அனுப்புறது எனக்கு சரினு படலடா," என்று வருந்தினான்.
அஜய்,"அப்புறம் உன் தங்கச்சிக்கு மேரேஜ் பண்ணி வைக்கப் போறீங்களா?", என்று கேட்டான்.
கார்த்தி,"இல்லடா, அது பத்திப் பேச்சு இன்னும் வீட்டில் வரல. ஒருவேளை அவர் நினைச்சிருக்கலாம்" என்க,
அஜய்,”தென், ஆன்ட்டி கிட்ட சொல்லி நல்லா சமைக்கக் கத்துக்க சொல்லு! அதுவாவது யாருக்காவது உதவும்" என்றான் நக்கலாக.
கார்த்தி, "அதலாம் அவ சும்மாவே செய்வாடா. பட் இதுக்காகவா அவ்வளவு ரிஸ்க் எடுத்து அவளை பி.ஆர்க் சேர்த்தோம்?" என்று வருத்தப்பட,
அஜய்,"அதுதான் நானும் கேட்கிறேன்" என்றான்.
கார்த்தி,"நான் அவளை அப்பாக்கு உதவியா கார்மெண்ட்ஸ்க்கு போக சொன்னேன்", என்றதும் அஜய் கோபத்தில்,"ஏன், அதை நீ செய்திருக்காலாமே?" என்று கேட்க,
கார்த்தி, "அது அவளோட அப்பா கம்பெனி டா. அவருக்கு அப்பறம் அவ தானே பார்த்துக்கனும்" என்றான்.
அஜய், "நீ என்ன லூஸா டா, நீ பேசுவது உனக்கு நல்லா இருக்கா? ஒரு பொண்ணு அதுவும், பி.ஆர்க் படிச்ச உன் தங்கச்சி அவரோட தொழிலைப் பார்த்துகணும்னு சொல்லுற, நான் பெண்களால முடியாதுனு சொல்ல வரல. சொல்லப்போனா, ஆண்களை விட பெண்களுக்குத் தான் பொறுமை, நுண்ணறிவு எல்லாமே கொஞ்சம் அதிகமா இருக்கும். ஆனா நீ, சொந்தத் தொழிலை விட்டுட்டு யாரோ ஒருத்தருக்கு கீழ் வேலை செய்யப்போறேனு சொல்ற? அந்த ஃபீல்டில் ஆர்வம் இருந்த நீயே அதை ஏற்றுக் கொள்ள முன்வராதப்போ, அந்த பொண்ணு, அதுவும் நாளைக்கு மேராஜாகி இன்னொரு வீட்டுக்கு போற அந்தப் பொண்ணு எப்படி கார்த்தி இதை ஏற்று செய்ய முன்வருவா..? சொல்லு", என்று அதிரடியாய் கேட்டான் அஜய்.
அவனுக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்த கார்த்தியின் தோளில் கை வைத்த அஜய், "டேய் கார்த்தி, இஃப் யூ டோண்ட் மைண்ட், உன் சிஸ்டரை என்கிட்ட அனுப்புறியா? நான் பார்த்துக்கிறேன்", என்றான் ஒரு ஆசானாக தொழிற்ப்பாடத்தைப் பயிற்றுவிக்கும் நோக்குடன். ஆனால்,தானே அவளுக்கு வாழ்வியல் பாடமும் கற்றுக் கொடுப்போம் என்பதை அஜய் அப்போது அறியவில்லை........!
 
Last edited:

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் அடுத்த நினைவை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-3


20669

கார்த்திக், ”டேய்,வர்ற புதன்கிழமை எனக்கு ஃப்ளைட்”, என்றான்.

ஷ்யாம், ”டேய், அவன் அவ்ளோ சொல்றான், நீ என்னன்னா புதன்கிழமை ஃப்ளைட்னு சொல்ற?” என்க,

கார்த்தி,”இல்லடா, இப்போ நான் கண்டிப்பா போயாகனும். எப்படியும் என்னால என் அம்முவை பிரிந்து ரொம்ப நாள் இருக்கமுடியாது, சீக்கிரமே வந்துடுவேன்", என்று வருந்த,

அஜய்,"அதுக்கு ஏன் கார்த்தி ரிஸ்க் எடுக்கணும்? உங்க அப்பாகிட்ட பேசு. அவருக்கு நீ அவரோட கார்மெண்ட்ஸ் எடுத்துசெய்வது தான் அவரோட விருப்பம்னு எனக்கு தோன்றுகிறது", என்றான்.

கார்த்தி, "அது எனக்கும் தெரியும்டா, பட் இப்போ நான் பாதி கிணறு தாண்டிய நிலையில் இருக்கேன். இந்த ப்ராஜெக்ட் நல்லபடியா முடிச்சிட்டு வந்து அப்பாக்கிட்ட பேசுவேன் டா. அண்ட், என் தங்கச்சி சஹானாவையும் இங்கேயே அனுப்ப வீட்டில் பேசுறேன்", என்றான்.

அஜய்யும், "சூப்பர்டா.. ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹெர்", என்றான்.

கார்த்தி, "கண்டிப்பா மச்சான் நீ தான் பார்த்தாகணும்" என்றான் இரு பொருள்பட.

அஜய், "ஷ்யூர் மச்சான், நீ பாத்துக்குறத விட ஒரு படி மேலயேப் பார்த்துக்குறேன்டா, போதுமா?. வாடா, வீட்டுக்கு வந்துட்டு போ. இன்னைக்கு காலையில் கூட அம்மா உன்னைப் பத்தி தான் கேட்டாங்க நீ இங்க வருவன்னு தெரியாது. இல்லைன்னா உன்ன நான் வீட்டுக்கே வர சொல்லியிருப்பேன்", என்றான்.

கார்த்தி, "அட போடா, நீ வேற... நேத்து உன்கிட்ட இவங்களுக்கு இண்டர்வியூக்கு கேட்ட நேரத்திலிருந்து என் அம்முக்கு செம்ம கோபம், பேசவே மாட்டேன்றா. அதான் காலையில் அவ முழிக்குறதுக்கு முன்னாடியே இங்க வந்துட்டேன். அப்புறம், யூ.எஸ் போகுற விஷயத்தைப் வேற அவகிட்ட பேசனும். சோ, இப்போ கிளம்பியாகணும்." என்றான்.

அஜய் சிரித்துக் கொண்டே,"இன்னுமாடா நீ வீட்டில் சொல்லல?"

கார்த்தி,"இல்லடா,அப்பாகிட்ட முன்னாடியே சொல்லிட்டேன். சஹாவை தவிர வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன். இன்னைக்கு அவளை ஜாப் போக அவர்கிட்ட பெர்மிஸன் கேட்டுவிட்டு தான் சொல்லனும். அப்பவும், கையில் வேப்பிலை எடுக்காத குறையாக ஆடுவா" என்று கூறி சிரித்தான்.

அஜய்,"அதனால் தான் பெரிய டான்ஸரோ?!!" என்று சொல்லி சிரிக்க, இது எதையுமே கண்டுகொள்ளாமல், கனவில் மிதுனாவுடன் 'பார்த்த முதல் நாளே....' பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

ஷ்யாமின் வயிற்றில் குத்தி அவனை நடப்பிற்கு கொண்டு வந்த அஜய், "என்னடா டூயட் முடிஞ்சதா?" என்று கேட்க, புரியாமல் விழித்த கார்த்திகைப் பார்த்து, "அவன் இன்னும் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணலைடா", என்றான் ஷ்யாம்.

அஜய்,"ஆமாடா, நீ அவனுக்கு சொல்லிக்குடு. ஏண்டா இப்படியா வெளிப்படையா சைட் அடிப்பா?" என்று தலையில் தட்டிக்கொண்டான்.

ஷ்யாம்,"அவ்வளவு வெளிப்படையாவா தெரிஞ்சது?" என்று அசடு வழிய,

கார்த்தி, "டேய், யாரடா சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல" என்க,

அஜய்,"இல்ல மச்சான்,நீ எவ்ளோ கஷ்டப்பட்டு, இவ்ளோ நேரமும் உன்னோட சோகக்கதையை சொல்லிட்டு இருந்த. இவன் என்னடான்னா, இவ்ளோ நேரமும் அந்த பொண்ணு மிதுனா கூட 'உன்னைப் பார்த்த பின்பு நான்... நானாகவில்லையே'னு கனவுலோகத்தில இருக்கான்",என்று ஷ்யாமின் தோளின் குத்தினான்.

கார்த்தியோ, "என்னது?மிதுனாவா?" என்று அலற,

ஷ்யாமோ,"டேய் இவன் சும்ம சொல்றாண்டா, அந்த சாங் இல்லடா.'பார்த்த முதல் நாளே...'சாங்" என்று கூலாகக் கூற, நண்பர்கள் இருவரும் அவனை மொத்த ஆரம்பித்தனர்.

கார்த்தி, "டேய் இந்த விஷயம் மட்டும் அவளுக்கு தெரிஞ்சது.. மவனே நீ காலி தான்", என்க,

ஷ்யாமோ," ஆமா, யார்டா நீ? இப்போ அவ என் ஸ்டாஃப். நான் அவளோட பாஸ்",என்றான்.

கார்த்தி, "அத்தோட நிறுத்திக்கோடா, பாவம் அப்பா இல்லாதப் பொண்ணு", என்று தன் நண்பன் விளையாடுகிறானோ என்று வருந்த,

ஷ்யாம்,"சோ வாட், நான் அவளுக்கு எல்லாமுமாய் இருந்துட்டு போறேன்", என்றான் சிறிதும் யோசிக்காமல்.

கார்த்தி, "ஷ்யாம்,ஆர் யூ கிட்டிங்?"என்று கேட்க,

அஜய், "நோ கார்த்தி, அவன் உறுதியா தான் சொல்றான். ஹீ வில் மேரி மிதுனா" என்றான்.

இது தான் அஜய்...! தன் கண் முன் நிகழும் சிறிய நிகழ்வுகளைக் கூட தன் ஒற்றைப் பார்வையில் படித்து விடுவான். அதுவே, இந்த 29 வயதிலேயே அவனை பெரிய தொழிலதிபனாக உயர்த்தியது.

கார்த்தி அதிர்ந்து விழிக்க, அஜய், "டோன்ட் வொர்ரி கார்த்தி. நீ எங்களை நம்பி தான் அவங்களை இங்க சேர்த்திருக்கிற, அந்த நம்பிக்கையை நாங்க காப்பாற்றுவோம். என்னை மீறி அவன் எதுவுமே செய்யமாட்டான். அது உனக்கு நல்லாவே தெரியும். பட், இவன் உண்மையா மிதுனாவை லவ் பண்ணா, மிதுனாவின் சம்மதமும் தெரிஞ்சா நானே முன்னாடி நின்னு இந்தக் கல்யாணத்தை நடத்தி வைப்பென்” என்றதும் ஷ்யாம் பாய்ந்து வந்து அஜய்யைக் கட்டிக்கொண்டான்.

அஜய்யோ, ”டேய் அடங்குடா, ஃபர்ஸ்ட் மிதுனாவோட சம்மதத்தை வாங்கப் பாரு. அந்த பொண்ணோட சப்போர்ட் இல்லாம என் சப்போர்ட் உனக்கு கிடைக்காது ஷ்யாம். நான் ஒரு விஷய்த்துல ரொம்பவே உறுதியா இருப்பேன். ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை கல்யாணம் மட்டுமில்ல, அவளை மனதால் நினைப்பது கூட மிகப்பெரிய தப்பு தான்",என்றான். அப்போது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை அதே தவறைத் தானே செய்வோம் என்று....!

ஒரு சில நொடிகள் எதையோ யோசித்த கார்த்திக், "அஜய், நானும் உங்க கூட வீட்டிற்கு வர்றேன். எல்லாரும் அங்கேயே இருக்குறதால யூ.எஸ் போகிறதைக் கூட சொல்லிடலாம்", என்று அவர்களுடன் கிளம்பினான்.

அஜய்யின் வாகனம் வீட்டின் நுழைவு வாயிலில் நுழையும் போது கார்த்தி, "ஏதாவது ஃபங்க்‌ஷன் நடக்குதா?" என்று கேட்டு சிரித்தப்படியே காரினிலிருந்த்து இறங்க, அப்போது அங்கு அஜய்யின் கால்களைக் கட்டிக்கொண்டாள் அந்த சின்னங்குறுத்து வைஷ்ணவி.

"சித்து, எனக்கு சாக்கி..?" என்று தன் மழலை மொழியில் கேட்ட, மூன்று வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த தேவதையைத் தன் கைகளில் தூக்கி, அந்த குண்டுக் கன்னங்களில் முத்தமிட்ட அஜய்,"வைஷு டார்லிங், இப்போ லன்ச் டைம் தான? லன்ச் டைம்ல குட் கேர்ள்ஸ் எல்லாம் சாக்கி சாப்பிடமாட்டாங்களாம்.",என்று கூற,

மழலையோ,"ம்மா ரைஸ் குதுக்குறா. ரைஸ் நாணா",என்று மறுத்தாள்.

அஜய்,"அப்படியா... அப்போ சரி, அம்மாகிட்ட வேண்டாம்னு சொல்லிடலாம்", என்று கூறி திவ்யாவின் முறைப்பைப் பெற்றுவிட்டு,

"வைஷு பேபி,இங்கப் பாருங்க. நம்ம வீட்டுக்கு கார்த்தி மாமா வந்திருக்காங்க, நாம கார்த்தி மாமா கூட சேர்ந்து சாப்பிடலாமா? மாமாவை சாப்பிட கூப்பிடுங்க பார்க்கலாம்" என்று குழந்தையை ஏவினான்.

வைஷுவும் அஜய்யிடமிருந்து கார்த்தியிடம் தாவி,"மாமா, வா சாப்பிதலாம்" என்று தன் எச்சில் இதழ்களை அவன் சட்டையில் தோய்த்தாள். அதைப் பார்த்த திவ்யா,

"வா கார்த்தி, ஹே வாலு, அவன் ஷர்டை எச்சில் ஆக்கிட்டியா? வா இங்கே", என்று அதட்ட,

கார்த்தி,"அண்ணி, அதலாம் ஒன்னுமில்லை. அவ இருக்கட்டும்",என்று சில நல விசாரிப்புகளுடன் உள்ளே சென்றனர். வீட்டின் முகப்புக்கூடத்தில் அமர்ந்திருந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் சங்கரிடம் நலம் விசாரித்து விட்டு ராகுலுடன் பேசியவாறே அந்த நீள் சாய்விருக்கையில் அமர்ந்துக்கொண்டான்.

"என்ன கார்த்தி, உனக்கு இப்போ தான் இங்க வர அட்ரெஸ் தெரிஞ்சுதா?" என்றபடி கையில் தண்ணீருடன் வந்தார் ராகிணி.

கார்த்தி,"ஆண்ட்டி எப்படி இருக்கீங்க. சாரி ஆண்ட்டி ரொம்ப வொர்க், அதான்", என்றான்.

அஜய்,"அம்மா, இப்ப சார் வந்திருக்கிறது எதுக்குனு நினைக்குறீங்க?",என்று கேட்க,

ராகிணி," எதுக்கு?" என்றார்.

ஷ்யாம்,"அவன் யூ.எஸ் போறானாம், அதை சொல்லிட்டு போறதுக்கு தான்", என்று அஜய் கூறியதும், ராகிணியின் முகம் வெளிப்படையாகவே ஒரு வித வருத்தத்தை பிரதிபலித்தது.

கார்த்தி,"அதுக்காக மட்டும் வரல..., அதையும் சொல்லிவிட்டு போகலாம்னு வந்தேன்", என்றான்.

ஜெயப்பிரகாஷ்,"கார்த்திக், நான் சொல்றேன்னு தப்பா நினைத்துக்காதேப்பா. ரகுக்கும் வயசாகிட்டு இருக்கு, நீ வெளிநாடு போய் வேலை செய்வதற்கு அவன் தொழிலையே எடுத்து நடத்தலாமே!! அவனுக்கும் அது தானே விருப்பம்", என்றார்.

கார்த்தி,"சரி தான் அங்கிள், இப்போ நான் இந்த வேலையை முடிச்சுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன். நீங்க சொல்றது பத்தி எனக்கும் ஒரு நிபந்தனை இருக்கு. முதல்ல என் தங்கச்சிக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நான் அமைச்சிக் கொடுக்கனும். அப்பாவால் எல்லாமே முடியும் தான். ஆனா, என்னுடைய கடமையை நான் செய்யனும். அதான்... சாரி அங்கிள்", என்று கூறி வருந்தினான்.

சங்கர், "தங்கச்சி என்னப்பா படிக்குறா?" என்று கேட்கும் போதே கார்த்திக்கின் அலைபேசி ஒரு பெண்ணின் இனிமையான பாடலுடன் இசைத்தது. அந்தக் குரலைக் கேட்டதும் அஜய்யின் உதடுகள் தானாகவே , "மெஸ்மரைஸிங் வாய்ஸ்.....!!!" என்று அசைந்து.

கலக்கத்துடனே அலைபேசியை இயக்கிய கார்த்திக், "சொல்லுடா" என்றான்.

அந்த பக்கம் வந்த கேள்விக்கு,"ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்தேன்மா. இப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிருவேன். ஏன்டா எங்கேயும் வெளியே போகனுமா?" என்றான்.

".............."

கார்த்தி,"சாரிடா.. கண்டிப்பா 2 மணிக்கு வந்த்திருவேன்"

"............."

கார்த்தி,"அம்மு, நான் அஜய் வீட்ல தான் இருக்கேன். ப்ளீஸ் அம்மு, ஐ வில் பீ தேர் அட் 2 பி.எம்."

".........….."

கார்த்தி,"டேக் கேர்", என்று அணைத்தான்.

அஜய்,"யாருடா. உன் அம்முவா?" என்று கேட்க, இதுவரை நடந்ததை ஒரு வித கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ராகிணி தயங்கியவாறே,"அது யாருப்பா?" என்றார்.

ஷ்யாம், "வேற யாரு, அவனோட அருமை பாசமலர், தி க்ரேட் சஹானா" என்று அவரது கலக்கத்திற்க்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

ராகிணி, "என்னாச்சு கார்த்தி, அவசரமாக வேலையா?",என்றார்.

கார்த்தி, "இல்ல ஆன்ட்டி. சண்டே லன்ச் வீட்டுல தான் நாலு பேரும் ஒன்னா சாப்பிடனும்னு அவளோட உத்தரவு, மணி ஒன்னாச்சு. இண்டர்வியூ முடிச்சவங்களே வீட்டுக்கு போய் சாப்பிட்டும் முடிச்சாச்சு. உனக்கு என்னனு கேட்குறா!!!!" என்றான்.

அதைக் கேட்ட அஜய் சிரித்தவாறே,"ஒரு பாராகிராஃப் பேசவே யோசிக்குற உனக்கு சரவெடியாய் ஒரு வாயாடித் தங்கச்சியா?"

கார்த்தி,"சொன்னேனே நேத்துல இருந்து பேசமாட்டேங்குறா.. காலையில சொல்லிக்காம வந்துட்டேன்னு அம்மா வேற போன் போட்டு புலம்பல். நான் போன்லயே ரொம்பக் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். அஜய் வீட்டில் இருக்கிறேன்னு சொன்னதும் சீக்கிரம் வா,வெயிட் பன்னுறேன்னு வச்சுட்டா", என்றான்.

அஜய்,"அப்போ எப்படி டா நீ யூ.எஸ் ல இருப்ப?" என்க,

கார்த்தி,"பழகிக்க வேண்டியதான் மச்சான். வேறவழி? எப்படியும் நாளைக்கு இன்னொரு வீட்டிற்கு அனுப்பி தானே ஆகனும்"என்றான்.

ராகிணி,"அஜய், சஹானாவும் உங்ககிட்ட தான் வேலைக்கு சேர்ந்திருக்காளாப்பா?” என்று கேட்க,

அஜய்,"இல்லம்மா. அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் மூனு பேர் மட்டும் தான்" என்றான்.

ஜெயப்பிரகாஷ்,"ஏன்பா, வேலைக்கு அனுப்பலையா?” என்று கேட்க,

கார்த்தி, "அவளுக்கு ஆசை தான் அங்கிள். ஆனால், அப்பா, அம்மா ரெண்டு பேருமே வேண்டாம்னு சொல்றாங்க, வீட்டில் பேசிப் பார்க்கனும்", என்றான்.

அஜய்,"சரி வா, சாப்பிடலாம்" என்க,

கார்த்தி, "இல்லடா, நீங்க சாப்பிடுங்க. நான் கிளம்புறேன், அங்க வெயிட்டிங்" என்று கிளம்ப எத்தனிக்க,

ராகிணி,"கொஞ்சமாக சாப்பிட்டுட்டுபோப்பா", என்றார். அவன் மடியிலிருந்து விளையாடிக் கொண்டிருந்த வைஷுவும், ”மாமா,நீ என்கூத சாப்பிதுவேன்னு சொன்ன” என்று கூற அதன் பின் அவனால் மறுப்பு கூற முடியவில்லை.

அனைவரும் உணவருந்தும் அறைக்கு செல்ல, தன் அலைபேசியை மின்னூட்ட இணைப்பிற்கு கொடுத்து மேசையின் மேல் வைத்துவிட்டு, கார்த்திக் செல்லும் போது மாடிப்படிகளில் ஓடி வந்து கொண்டிருந்த யாழினி கால் தவறி கீழே விழப்போக கார்த்திக் அவளின் இடையில் கைக்கொடுத்து தாங்கிப் பிடித்தான். கார்த்திக் சுதாரிப்பதற்க்குள், அவன் மேலேயே யாழினி விழ, இருவரும் தரையில் உருண்டனர்.

எதிர்பாராத விதமாக நடந்த இந்த நிகழ்வு இருவருக்குள்ளும் ஒரு வித இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. முதலில் சுதாரித்த கார்த்தி அவசரமாக எழுந்து, யாழினியைத் தன்னிடமிருந்து விலக்கினான். அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் கண் முன்னே இந்த நிகழ்வில் சங்கடமாய் விழித்தப்படி நிற்க,

அபிஜித்,"கார்த்திண்ணா, ஆர் யூ ஆல்ரைட்? உங்களுக்கு எதுவும் ஆகல்லையே?" என்று கேட்க, அவனது கேள்வியின் அர்த்தம் புரியாமல் கார்த்தி அவனுக்கு பதில் சொல்ல முற்பட, அதன் உள்ளர்த்தம் புரிந்த மற்றவர்கள் சிரிக்க,

யாழினியோ கால்களைத் தரையில் உதைத்தவாறே,"அம்மா, பாருங்க மா இவன...", என்றவாறு தன் தாயிடம் ஓடினாள்.

அபி,"அண்ணா, நீங்க ஐயம் ஆல்ரைட்னு தானே சொல்ல வந்தீங்க, ஆனாலும் அண்ணா நீங்க வெரி ஸ்ட்ராங் தான்", என்று நகைத்து நிலைமயை சீர்படுத்தினான்.

ஜெயப்பிரகாஷ்,"சரி, வாங்க எல்லாரும் சாப்பிடலாம்", என்று முன் செல்ல,

கார்த்திக் அஜய்யிடம், "சாரி அஜய். தப்பா எடுத்துக்காதே மச்சான். பை மிஸ்டேக்...." என்று வருந்த,

அஜய்," லூஸாடா நீ. அதான் நீயே சொல்லிட்டியே பை மிஸ்டேக்னு, இது ஒரு ஆக்ஸிடண்ட், வேணும்னு நடக்கல... வா சாப்பிடலாம்" என்றான்.

மறுக்க முடியாமல், அவர்களுடன் உணவருந்தும் அறைக்கு செல்ல, ஆண்கள் அனைவரும் சாப்பிட அமர, கார்த்தி அஜய்யின் அருகில் வைஷுவிற்கு ஊட்டிய வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொறித்துக் கொண்டிருந்தான்.

ஷ்யாம் உண்ணாமல் தட்டையில் கோலம் போட்டுக் கொண்டிருக்க, அதைப் பார்த்த அபிஜித் ஷ்யாமிடம், "என்னண்ணா, அருந்ததியா, காஞ்சனாவா? மோகினியா?" என்று கேட்டான்.

ஷ்யாம் புரியாமல் விழிக்க அபி, "கனவுல யார் கூட டூயட் ஆடிட்டு இருந்த, அதன் அருந்ததியா காஞ்சனாவா மோகினியானு கேட்டேன்" என்று கேட்க,

ஷ்யாமோ மிதுனாவின் நினைவில், "டார்லிங்..." என்று முறைத்துக் கொண்டே கூற,

அபி, "அடடா...அது ரொம்ப மொக்கையாச்சே!" என்றதும் தான் தாமதம் கார்த்திக்கும், அஜய்யும் வெடித்து சிரித்தனர். அவர்களது சிரிப்பை புரியாமல் பார்த்தவாறு அபிஜித் அஜய்யிடம், "அண்ணா’ஸ், இது ஒன்றும் அவ்வளவு பெரிய காமெடி இல்லையே!!!" என்று கேட்க,

ஷ்யாமோ, 'எதுவும் சொல்லாதீங்கடா' என்று தன் கண்களால் வேண்ட, அவனிடம் ரகசியமாய் அஜய்,"டேய், நீ மிதுனா மேட்டரை வீட்டில் சொல்லியிருந்தா கூட அவன் அழகாய் அண்ணினு சொல்லிருப்பான், அநியாயமாய் அந்தப் பெண்ணை மொக்கைனு சொல்ல வச்சிட்டியேடா", என்றான்.

கார்த்தி அபியிடம்,"அது ஒன்னுமில்லை அபி, ஷ்யாம் இன்று காலைல தான்...." என்று ஏதோ கூற வர, அதற்குள் ஷ்யாம் அவன் வாயை மூடி,"சும்மா இருடா.. ப்ளீஸ்" என்று கெஞ்சினான்.

இவர்களின் இந்த விளையாட்டை அங்கிருந்த அனைவரும் சுவாரசியமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க,

அபி, " விடுண்ணா... நீங்க சொல்லுங்க கார்த்திண்ணா.. காலையில் என்னாச்சு அண்ணா காலையில் ஆஃபிஸ் தானே போனான் அஜய் அண்ணா கூட.." என்று கேட்டான்.

கார்த்தி, "காலையில் அந்த டார்லிங் மூவியில் வர்ற ஹீரோயின் மாதிரி ஒரு பெண்ணை மேரேஜ் பன்னுகிற மாதிரி கனவு கண்டானாம். அதான்", என்றுக் கூறினான்.

உடனே அபி, "அவ்ளோ தானா? டோன்ட் வொர்ரி அண்ணா எந்த காட்டிலாவதுத் தேடி நீ நினைத்த உன்னோட அந்த டார்லிங்யே நம்ம அண்ணியா கூட்டிட்டு வந்துரலாம்", என்று கூற, அதை அருள்வாக்கு போல் ஏற்றான் ஷ்யாம்.

திவ்யா, "என்ன ஷ்யாம் கல்யாண கனவு எல்லாம் வந்துடுச்சு போல... சின்ன அத்தை சீக்கிரம் கல்யாண சாப்படு ரெடிப் பண்ணுங்க. நானும் இங்க வந்து இன்னும் கல்யாண சாப்பாடு சாப்பிடவே இல்லை", என்று கேலியாய் ஷ்யாமிடம் ஆரம்பித்து சரிதாவிடம் வருத்தமாக முடித்தாள்.

அவள் கூற்றின் மறைபொருளை உணர்ந்த அஜய் ராகுலிடம், "ஏண்ணா, வக்கீலா விட்டுக்குள்ளேயே இருக்காம அண்ணியை கொஞ்சம் கவனி… பாரு இப்ப வருத்தப்படுறாங்க." என்றான்.

ராகுல் திருதிருவென முழித்தவாறே," நான் என்னடா பன்னுனேன், இப்போ எதுக்குடா என்னை கோர்த்து விடுற?" என்றுப் பதற,

அஜய்யோ, "நீ ஒழுங்கா அண்ணியை ஏதாவது கல்யாண வீட்டிற்குக் கூட்டிட்டு போயிருந்தா அவங்க இப்படி சொல்வாங்களா...? என்ன அண்ணி?" என்றான்.

திவ்யா முறைத்தவாறே, "என்ன சமாளிக்குறதா நினைப்பா? அவர் அதெல்லாம் சரியா தான் செய்றாரு. நீங்களும் அது மாதிரி செய்யவேண்டாமா?" என்றாள் ஆதங்கமாக.

ராகுலோ சின்னக் குரலில் அஜய்யிடம் ,"டேய், கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும்னு சொல்வாங்களே.. அது இது தானாடா? இருந்தாலும் உன்னை பாராட்டனும்டா" என்றான்.

ஷ்யாமின் தாய் சரிதா, "திவ்யா இப்போ எதுக்குமா வருத்தப்படுற? கல்யாண சாப்பாடு தானே… சீக்கிரமாக ஏற்பாடு செய்யலாம். அதுவும் ஒன்று இல்லை ரெண்டையும் ஒண்ணாவே, சிறப்பா செய்திடலாம். அக்கா, நாம அதுக்கான வேலையை சீக்கிரமாகவே ஆரம்பித்துவிடலாம்", என்றதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கின் அலைபேசி அந்த இனிமையான குரலுடன் இசைத்தது.

இப்போது அஜய் வெளிப்படையாகவே,"வாவ்.... ! வாட் எ மெஸ்மெரைஸிங் வாய்ஸ் இச் திஸ்....! என்ன சாங் இது? ஃபார்வார்டு திஸ் டூ மீ. அழகா பாடியிருக்காங்க", என்றான்.

கார்த்தி, "அது சஹானா ராகம்டா.... என் தங்கச்சி வாய்ஸ்", என்று சிரித்தபடியே அலைபேசியை உயிர்ப்பித்தான்.

கார்த்தி, "அம்மு, இப்போ ஒரு 10 மினிடஸ்ல கிளம்பிருவேண்டா" என்க,

சஹானா, "இல்ல வேண்டாம். நீ அங்க சாப்பிட்டுடே வா" என்றாள்.

கார்த்தி," ஏன்மா?”என்க,

சஹானா,"நீ அங்க சாப்பிட்டே வா... அதை சொல்லத்தான் கால் பன்னுனேன்" என்றாள்.

கார்த்தி,"நான் சொன்ன டைம்க்கு அங்க இருப்பேண்டா"

சஹானா,"இல்லண்ணா.. நான் கோபமா சொல்லலை. மாம் இப்போ தான் சொன்னாங்க, நீ ரொம்ப நாளைக்கு அப்பறம் அங்கே போயிருக்கனு.. அங்க சாப்பிட்டுட்டே வா.. நான் சாப்பிட்டுட்டேன்" என்று கூறினாள்.

கார்த்தி, "உண்மையிலே சாப்பிட்டியா?அம்மா எங்கே?"என்று கேட்க,

சஹானா, "ஈவினிங் பீச் கூடிட்டு போறியா அண்ணா?" என்று கேட்க,

கார்த்தி, "ஷ்யூர்டா. போலாமானு என்ன கேள்வி? போறோம்..." என்றான்.

சஹானா, "அப்பாவும் நம்ம கூட வரனும்"

கார்த்திக்,"நீ கூப்பிட்டா நான் வேண்டாம்னா சொல்லப்போறேன்?"என்க,

சஹானாவும், "அப்பா கூட நான் சண்டை.சோ, நான் கூப்பிடமாட்டேன். அம்மாவும் கூப்பிடமாட்டாங்க..." என்று இழுக்க,

கார்த்தி,"நீ டிசைட் பன்னிட்ட.. பின்ன என்ன கேள்வி? கூப்பிட்றேன்" என்றுக் கூற,

சஹானா,"ஓகேண்ணா, நான் வைக்குறேன். நீ அங்க பேசு. டேக் கேர்" என்றதும் அழைப்பைத் துண்டித்தான்.

சரிதா,"என்னப்பா, தங்கச்சியா?என்ன சொல்றா?" என்றார்.

கார்த்திக், "ஆமா ஆன்ட்டி, சும்மா தான், நான் ரொம்ப நாள் கழிச்சி இங்க வந்திருக்கேன்னு அம்மா சொல்லியிருக்காங்க போல., அதான், அங்கேயே சாப்பிட்டிட்டு வானு சொல்ல கால் பண்ணிருக்கா?" என்றான்.

ராகிணி, "சஹானா ஃபோட்டோ காட்டேன்பா.. நான் பார்த்ததே இல்லை" என்றதும், தன் அலைபேசியில் சஹானாவின் புகைப்படத்தைக் காட்டி," நீங்க வீட்டுக்கு வாங்க ஆன்ட்டி" என்று அழைத்தான்.

குறுநகையுடன், ஒப்பனைகள் ஏதுமின்றி, அழகோவியமாய் இருந்த சஹானாவைப் பார்த்ததுமே அவருக்குப் பிடித்துவிட, மனமுவந்து, "நிச்சயமா வருவேன் கார்த்திக்" என்றார்.

பின், அலைபேசி கைமாறி பெரியவர்கள் நால்வர் மற்றும் திவ்யாவிற்கும், சஹானாவின் புகைப்படம் காட்டப்பட, அனைவரின் முகத்திலும் நிலவிய திருப்தியைக் கார்த்திக் குறித்துக்கொண்டான்.

அஜய்,"அதான் பெர்மிஸன் கிடைச்சுருச்சே. சாப்பிடு. நீயும் கனவு காணாதேடா" என்க,

ஷ்யாம்,"நீயும் கனவு காணும் நாள் வராம போய்டுமா என்ன? அன்னைக்கு இருக்குடா உனக்கு"என்று கூற,

அஜய்,"அது வரும்போது பார்த்துக்கலாம்." என்றவாறு சாப்பிட்டு முடித்து எழ, அஜய்யிடம் பேச வேண்டும் என்பதைக் குறித்துக்கொண்டான் கார்த்திக்.

ஆண்கள் சாப்பிட்டு முடித்ததும், பெண்கள் சாப்பிட அமர, வீட்டின் முகப்புக்கூடத்தில் இருந்து ஆண்கள் பேசிக்கொண்டிருந்த போது, "ஏன் அஜய், குடும்பத்தின் மேல் இவ்ளோ பாசமாக இருக்குற நீ மேரேஜ் செய்துக் கொள்வதில் மட்டும் அவங்க பேச்சைக் காதிலே வாங்கிக்காம இருக்க?" என்றுக் கேட்டான் கார்த்திக்.

சிறிது நேரம் மௌனித்த அஜய், "பெருசா ஒரு காரணமும் இல்லை இது ஒரு கூட்டுக்குடும்பம், இந்த மாதிரி இருக்கும் ஒரு கூட்டுக்குடும்பத்தில் நிறை, குறைகள் இருக்கும், அதை எல்லாம் அனுசரித்தும், அப்படியே என் பிஸ்னஸ்க்கும் எனக்கு ஒரு சப்போர்ட்டாக இருக்குற மாதிரி ஒரு பெண்ணாக இருந்தால் நான் ஏன் வேண்டாம்னு சொல்லப்போறேன்? பட் அப்படி ஒரு பொறுமையான பெண் கிடைக்குறது கஷ்டம் தான்" என்று கூறி அவனின் பதிலை எதிர்ப்பார்த்த அனைவருக்கும் பால் வார்த்தான்.

அவனின் பதிலில் மகிழ்ந்த ராகிணி, "ஏன்டா, இந்த குடும்பத்துக்கு மருமகளா நம்ம திவ்யா கிடைக்கலையா? இது வரை ஒரு குறை சொல்கிற அளவுக்கு நடந்திருப்பாளா? அப்பறம் ஏன் கஷ்டம்னு சொல்ற?" என்று கடிந்தார்.

அஜய்,"அம்மா, திவி இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்னாடியே உங்க மருமகள், அண்ணியை மருமகளா, நீங்க வெளியே போய் தேடல உங்க தம்பி பொண்ணா இருந்தாலும், சின்ன வயதிலேயே அவங்க தான் இந்த வீட்டு மருமகள்னு உங்களுக்கு ஏத்த மாதிரியே வளர்த்துட்டீங்க, அண்ணியை மாதிரியா அவங்க தங்கச்சி இருக்கா?" என்றான்.

அதை ஆமோதித்த திவ்யா, "அது சரி தான். இந்த உலகத்தில் அந்த மாதிரி ஒரு பெண் இல்லமலா போய்டுவா?"

ராகுல்,"நீ வேற தியா, அவன் சொல்வதைப் பார்த்தால், நம்ம வீட்டிற்கு மருமகள் தேட சொல்ற மாதிரி தெரியல.அவனுக்கு 24*7 பி.ஏ வாக வேலைக்கு ஆள் எடுக்குற மாதிரி சொல்றான்" என்று அவன் காலைவாறினான்.

அஜய்,"கரெக்ட் அண்ணா. நீ வக்கீல்னு நிரூபிச்சுட்ட... பட் 24*7 பி.ஏ வாக எல்லாம் வேண்டாம். எனக்கு தொழில் ரீதியாக சப்போர்ட்டாக இருக்கனும்னு தான் சொன்னேன். என்கூட ஃபீல்டு வொர்க் செய்யனும்னு நிர்பந்திக்கல, சிம்ப்ளாக சொல்லனும்னா, என் அம்மாவை மாதிரி இருக்கனும்." என்றான்.

சரிதா, "இத நீ முன்னாடியே சொல்லியிருக்கலாமே அஜய்?" என்று குறைபட,

ஷ்யாம், "மாம், அவசரப்படாதீங்க, அவனோட நிபந்தனைகளெல்லாம் இன்னும் முடியலை. கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லுவான், எவ்வளவு தூரம் இழுத்தடிக்கனுமோ அவ்வளவு இழுத்தடிப்பான்", என்றுச் சலித்தபடிக் கூற,

அஜய்யோ சிரித்தபடி,"இப்போ எனக்கு என்ன வயசாகிட்டு சித்தி, ‘29’ தான, பொறுமையாகத் தேடுங்க. இன்னும் 3 வருஷம் இருக்கு", என்க

அபி,"அது என்ன கணக்கு 3 வருஷம்?"என்று கேட்க,

கார்த்திக், "இவன் சொல்ற மாதிரி தேட கால அவகாசம் குடுக்குறானாம். அஜய், வேற என்னலாம் கண்டீசன்ஸ் வச்சிருக்க, இந்த பாடுறது, ஆடுறது மாதிரி அதையும் சொல்லிருடா. அப்போ தான் அவங்க தேட வசதியாக இருக்கும்" என்றான்.

அஜய்,"ஆடத் தெரிஞ்சிருக்கனுமோ இலலையோ, கண்டிப்பாக பாடத் தெரிஞ்சிருக்கனும்....! சமைக்கத் தெரிஞ்சிருக்கனும், கண்ஸ்ட்ரக்சன் ஃபீல்டில் இருந்தால் டபுள் ஓகே… கண்டிப்பாக ஜாலி டைப்பா இருக்கனும், எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு பிடிச்சிருக்கனும், கல்யாண விஷயத்தில் அவசரப்படக்கூடாது. சோ, பொறுமையாகத் தேடுங்க" என்றான், தானே ஒருத்தியை அவசரப்படுத்தி நிர்பந்தமாக திருமணம் செய்வோம் என்பதை அறியாமல்...!

அனைவரும் அதிர்ந்து விழிக்க, "எதையாவது மிஸ் பண்ணிட்டியா?" என்று ஷ்யாம் கேட்க,

அஜய், "ஞாபகம் வரும்போது எல்லாம் சேர்த்துக்கலாம்", என்றான் தன் தோள்களைக் குலுக்கியபடி.

கார்த்திக், "நான் கிளம்புறேண்டா", என்க,

அபி, "என்ன கார்த்திண்ணா, இதுக்கே கிளம்பிட்டீங்க" என்று கேட்க,

அஜய்,"ஏன் தான் கேள்வி கேட்டோம்னு ஆகிடுச்சா உனக்கு?" என்று சிரிக்க,

கார்த்திக்கோ, "நீ ஒன்றும் அவ்வளவு கஷ்டமான கண்டீசன்ஸ் எல்லாம் போடவில்லையே!" என்று கூற இப்போது விழிப்பது அஜய்யின் முறையாகிவிட்டது.

கார்த்திக், "ஓ.கே மச்சான், விரைவில் சந்திப்போம், உன் மனம் கவர்ந்த நாயகியை சந்திக்கும் படலத்துடன்... ஆல் த பெஸ்ட்", என்று கண்ணடித்துவிட்டு அனைவரிடமும் விடைப்பெற்றுச் சென்றான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top