All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெஃப்ரியின் "இதயம் மீட்டும் நினைவலைகள்" - கதை திரி

Status
Not open for further replies.

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் மூன்றாம் நினைவை உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
 
Last edited:

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-4

20878

அன்று புதன்கிழமை....
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில், கார்த்தி சஹானாவின் தலையை வருடியவாறே,
"சானுமா... போயிட்டு வர்றேன். 6 மாசம் தான்டா. சீக்கிரம் ஓடிடும், நல்ல சாப்பிடு, நல்ல எக்ஸாம் எழுது..." என்று சொல்லிக் கொண்டிருந்தவனைத் தடுத்த அவன் தாய்
"போதும்டா.. எத்தனை தடவை தான் சொல்லுவ? அதெல்லாம் அவ சரியா தான் செய்வா. நீ போற வேலையை வெற்றிகரமாக முடிச்சிட்டு வா.." என்றார் அவன் தாய் ரேனுகா. அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டவன், ஞாயிறு அன்று, கடற்கரையில் வைத்து தான் வெளிநாடு செல்லவிருப்பதைத் தெரிவித்த நிகழ்வை நினைவுக் கூர்ந்தான்.
அன்று மாலை தங்கையின் விருப்பப்படி, பல நாள்களுக்குப் பின் குடும்பமாக கடற்கரைக்குச் சென்றனர். பெசண்ட் நகர் கடற்கரை மணலில் கம்பளம் விரித்து நால்வரும் அமர்ந்து பேசியவாறேக் கொரித்துக் கொண்டிருக்க, சஹானாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. அப்போது தான் கார்த்திக்,
"நான் ஒண்ணு சொல்லனும்.. நான் 3 வருஷமாக ட்ரை பண்ணின அமெரிக்கன் கம்பெனியில் இருந்து எனக்கு ஆஃபர் வந்திருக்கு. ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு" என்றதும் அனைவரும் மகிழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
கார்த்தி, "..அதுக்கு இப்போ... இப்போ நான் யூ.எஸ் போயாகனும். ஒரு 6 மாசத்துக்கு" என்றான் தயங்கியவாறே.
அங்கு நிலவிய சில நொடி அமைதியைத் தகர்த்துவிட்டு,
"என்னண்ணா நீ? இப்போ கார்மெண்ட்ஸ் விட்டுட்டு அப்பாவால எப்படி யூ.எஸ் வரமுடியும், அப்பா வராமல் அம்மாவும் வர மாட்டாங்க, எனக்கும் ஃபைனல் எக்ஸாம்ஸ் இருக்கு, ஒரு த்ரீ மந்த்ஸ் கழிச்சுன்னா ட்ரைப் பண்ணலாம்", என்றாள் அனைவரும் செல்லும் நோக்குடன். சஹானாவின் கூற்றின் நோக்கத்தை அறிந்த கார்த்திக், தான் அமெரிக்கா செல்லும் எண்ணத்தை வலுப்படுத்தினான்.
கார்த்திக்,"இல்லடா அம்மு, நான் மட்டும் தான் போறேன்" என்க,
சஹானா,"நோ அண்ணா.... போனால் நாலு பேரும் சேர்ந்து போகணும், இல்லன்னா போகக்கூடாது", என்று சொல்லிவிட்டு அவ்வளவு தான் பேச்சு என்பது போல் தன் கையில் இருந்த முறுக்கில் கவனமானாள்.
இப்போது சஹானாவின் நோக்கம் தெளிவாகவே பெற்றோருக்கும் புரிய, கார்த்திக் அமெரிக்கா செல்வதனால் ஏற்படும் இந்த சிறு பிரிவும் அவளுக்கு அவசியம் என்று உணர்ந்தனர்.
கார்த்திக்,"சானுமா....அது.." என்று இழுக்க,
சஹானாவோ, "அம்மா, அந்த காஃபியை ஊத்து" என்றாள்.
கார்த்திக்,"அம்மு... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.." என்று கெஞ்ச,
சஹானா, "அப்பா, நீங்க கார்மெண்ட்ஸை ஒரு 6 மாசம் யார் பொறுப்பிலாவது விட முடியுமாப்பா?" என்க, அவரோ அதிர்ந்து விழித்தார்.
ரேணுகா,"சானு, இது என்ன ஆட்டோவா? காரா? வேறு ஆள்கிட்ட ஒப்படைத்துட்டு வர? அவன் போய்ட்டு வரட்டும். 6 மாசம் தானே?" என்றார்.
சஹானா, "என்னம்மா சொல்ற நீ? அண்ணாவைப் பார்க்காமல் என்னால இருக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் வரலைன்னா பரவாயில்ல, நான் போறேன்... நான் எக்ஸாம்லாம் எழுதல, நான் வர்றேன்ண்ணா உன் கூட" என்றாள்.
இப்போது அதிர்ந்து விழிப்பது அனைவரின் முறையாயிற்று.
ரகுராம், "சானுமா, கொஞ்சம் பொறுமையா இருடா., அவன் ஏதோ சொல்ல வர்றான். சொல்லட்டும், அவன் கூட நீ மட்டும் தனியாக அங்க இருக்க முடியாதுமா", என்றார் பொறுமையாக.
கார்த்திக், "அம்மு, இப்போ 6 மாசமே இருக்கமுடியாதுன்னா, நாளைக்கு மேரேஜ் ஆகி எப்படிடா இன்னொரு வீட்டில் போயிருப்ப?" என்றான் ஒரு சிறு கண்டிப்புடன்.
சஹானாவும் முறுக்கை வாயில் போட்டவாறே, "சிம்பிள், வீட்டோட மாப்பிள்ளை பார்த்திருண்ணா...!" என்றதும் பெரியவர்கள் இருவருக்கும் ஒரு அதிர்ச்சி. கார்த்திக் ஓரளவிற்கு இந்த பதிலை எதிர்ப்பார்த்திருந்ததால் அதிர்ச்சியடையவில்லை.
கார்த்திக், "சரி தான் சானு. ஆனா, அதுவும் மேல ஒரு 2 இல்ல 3 வருஷத்திற்கு தானடா?" என்க,
சஹானா,"ஏன்.அது என்ன 2 இல்ல 3 வருஷம்?"என்று கேட்க,
கார்த்திக்,"ஆமா, அதுக்கப்பறம் நான் மேரேஜ் பண்ணனும்லா?" என்றான்.
சஹானா,"ஸோ, வாட்??"என்க,
கார்த்திக்,"அப்போ 3 வருஷத்தில் நானும் ஒரு பொண்ண மேரேஜ் பண்ணிக்கிட்டு இன்னொரு வீட்டிற்கு வாழப் போகனும்லாமா?" என்று கூற,
ரேணுகா ஏதோ கூறுவதற்கு வாயெடுக்க, ரகுராம் அவரை கையமர்த்தித் தடுத்தார்.
சஹானா, "என்னண்ணா பேசுற, நீ ஏன் இன்னொரு வீட்டிற்கு போகனும். உன்னைக் கட்டிக்கப்போற அண்ணி தான நம்ம வீட்டிற்கு வரனும்?" என்றாள் அதிபுத்திசாலியாக.
கார்த்திக், "அதெப்படி சானுமா. உன்ன கல்யாணம் செய்யப்போகிற பையனை மாதிரி தானே நானும் அவங்க வீட்டில் போய் இருக்கணும்?" என்றதில் பிற்பகுதியை மட்டும் கேட்டுக்கொண்டவள்,
"கல்யாணம் செய்துகிட்ட மாப்பிள்ளை நீ எப்படி அண்ணா பொண்ணு வீட்டிலே இருப்ப? அண்ணி தான் நம்ம வீட்டுக்கு வரனும்.." என்றாள்.
கார்த்திக், "உன்ன கல்யாணம் செய்துட்டு மாப்பிள்ளை நம்ம வீட்டில் வந்து இருக்குறப்போ, நான் ஏன் அந்தப் பெண் வீட்டில் போய் இருக்கக்கூடாது?” என்று நெத்தியடியாய் கேட்க,
சஹானாவோ இதற்கென்ன சொல்வது என்று விழிக்க,கார்த்திக்கே தொடர்ந்தான், "மேரேஜ்க்கு அப்பறம் நம்ம வீட்டிலே நீ இருக்கனும்னு நினைக்குற மாதிரி தானே அந்தப் பெண்ணும் நினைப்பாள்?"என்று.
சஹானா, "இப்போ எதுக்கு இந்த பேச்சு எல்லாம்?" என்று அவள் பேச்சை மாற்ற,
கார்த்திக்,"ஆணாய் இருந்தாலும் சரி, பெண்ணாய் இருந்தாலும் சரி, எங்கேயும் ஒரு சிறு பிரிவு இருக்கும் டா... ஆண்கள் நாங்கள் உழைப்பதற்காக... பெண்கள் நீங்கள் உறவுகளுக்காக...! சரி அம்மு, அதெல்லாம் நடக்குறப்போ பார்த்துக் கொள்ளலாம். இப்போ நான் யூ.எஸ் போகலாமா? வேண்டாமா? சொல்லு... என்று தொடங்கிய இடத்திற்கே வந்தான்.
சஹானா அமைதியாய் இருக்க, ரேணுகா, “அவன் ஒண்ணும் அங்க செட்டில் ஆக போகலையேடி. ப்ராஜெக்ட்காக தானே போறான். முடிஞ்சதும் இங்க தானே வரப்போறான். போய்ட்டு தான் வரட்டுமே. உனக்கு தான் நாங்க, உன் ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாரும் இருக்குறோம்ல?” என்றார்.
சஹானா,”அப்பா நீங்க என்ன சொல்றீங்க?” என்றுந்தன் தந்தையிடம் கேட்க,
அவரோ,”அதான் அவனோட ஆம்பிஷன்னு வேற சொல்றானே, முடிச்சுட்டு வரட்டும் சானுமா” என்று முடித்துவிட்டார்.
இருவருமே கார்த்திக்கிற்கு ஆதரவாக பேச, வேறு வழியின்றி ஒரு மனதாக சரியெனத் தலையாட்டினாள்.
தன்னருகில் இசைத்த அலைபேசியின் ஒலியில் நடப்பிற்கு வந்தவன், தந்தையிடம் சென்று "அப்பா..." என்று ரகுராமின் கைகளைப் பிடித்துக் கொண்டே, "இந்த 23 வருஷத்தில் முதல்முறையாக உங்களைப் பிரிந்து போறேன். கண்டிப்பா, உங்கள கஷ்டப்படுத்துற நோக்கத்தோட இல்ல... என் வாழ்நாளோட ஒரு சின்னக் குறிக்கோள். அதிகப்பட்சமா 6 மாசம், அதற்கப்பறம் உங்களுக்கு உதவியாக உங்க பிஸ்னஸைப் பார்த்துட்டு உங்கக்கூடவே தான் இருப்பேன்ப்பா. நீங்க உங்களை விட மேலாக சஹானாவை நல்லாப் பார்த்துக்குவீங்கனு தெரியும். சோ, உங்க ஹெல்தைப் பார்த்துக்கோங்கப்பா. நான் போய்ட்டு வர்றேன்.." என்றான் கார்த்திக்.
இதை அனைவரும் விழி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க, ரகுராமோ 23 வருடத்தில் முதல் முறையாக தன்னை அப்பா என்றழைத்த மகனை நெகிழ்வுடன் பார்த்தவராய், "சரிப்பா கார்த்திக், நீ நல்லபடியாக போய் உன் ஆம்பிஷனை முடிச்சுட்டு சீக்கிரமாக வா, டேக் கேர்", என்று அவனின் கைகளில் இருந்த தன் ஒற்றைக் கையில் அழுத்தம் கொடுத்து, மற்றொரு கையினால் அவனது தோள்களைத் தட்டிக் கொடுத்தார்.
சஹானா எதுவும் பேசாமல், அவனருகில் தோழிகளுடன் நிற்க, கார்த்திக்கிற்கு தான் மிகவும் வேதனையாக இருந்தது.
"அம்மு...." என்று கார்த்திக் இழுக்க, "ஹாய் கார்த்தி, ஹவ் ஆர் யூ மேன்", என்று அங்கே பிரசன்னமானார்கள் கார்த்திக்கின் நண்பர்கள் ‘ஆதித்யா’ மற்றும் ‘அர்ஜூன்’.
பெரியவர்களிடம் நல விசாரிப்புகளை முடித்துவிட்டு, "ஹாய் சஹானா, ஹவ் ஆர் யூ?", என்றான் ஆதித்யா, சென்னையில் மிகவும் பிரபலமான கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறான்.
சஹானா, "ஐயம் குட் ஆதிண்ணா, நீங்க..?" என்றாள் அவனருகில் இருப்பவனை முறைத்தவாறே...! அவன் அர்ஜூன். கார்த்திக்கின் நண்பன், சென்னை மாநகரத்தின் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் (ASP).
அர்ஜூனைப் பார்த்த பூஜா, "ஹேய்... இது அந்த முசுடு முருகனில்லா....! இவர் அண்ணாக்கு ஃப்ரெண்டா?" என்றாள் சஹானாவிடம்.
சஹானா,"ஆமா.. ரொம்ப க்ளோஸ் தான் ஸ்கூல் படிக்குறப்போவேயாம்... அவங்க 5 பேர் ஒரு காங் டி... மீதி ரெண்டு பேரை நான் பார்த்ததில்லை." என்றாள்.
அதற்குள், "அவனுங்களை எங்கேடா?" என்றான் கார்த்திக். "இதோ வந்துட்டோமே" என்று அங்கே ஆஜராகினார்கள் அஜய்யும் ஷ்யாமும் யாழினியுடன்....!
யாழினியைப் பார்த்த கார்த்திக்கிற்கோ 'இப்போ ஏன் இவளை கூடிட்டு வந்தானுங்க. நமக்கு ஆப்பு வைக்கன்னே கிளம்பி வருவானுங்களே...'என்று மனதுக்குள் சலித்தவாறுப் பொதுப்படையாக சிரித்து வைத்தான்.
அஜய் மற்றும் ஷ்யாமைப் பார்த்த பூஜா மற்றும் மிதுனா, "குட் ஈவினிங் சார்" என்க,
ரீனாவோ, "ஹேய் வோலினி,.... நீ எங்கே இங்கே? அதுவும் எங்க சார்ஸ் கூட?" என்று தன் முக்கியமான கேள்வியைக் கேட்டாள்.
"காலேஜ் முடியுற டைம்ல, அதான் அண்ணா என்னையும் கூடிட்டு வந்துட்டாங்க" என்று பதிலுரைத்தாள் யாழினி, கார்த்திக்கின் பார்வையில் மறைந்திருக்கும் கேள்விக்கும் சேர்த்தே.
ரீனா,"யாரு உன் அண்ணா?" என்று கேட்க,
யாழினியோ, அவர்களை கைப்பிடித்து இழுத்து வந்து,
"இவங்க தான்" என்று அறிமுகப்படுத்த, மூவருக்கும் உச்சக்கட்ட அதிர்ச்சி.....!!!
அதைக் கண்ணுற்ற ஐவருக்கும் சிரிப்பு வர, சிரித்தவாறே அஜய்யோ சஹானாவைப் பார்த்து,
"இது யாருடா? 4 வாலில்லா குரங்குகளின் கூட்டத்தில் ஒரு அமைதிப் புறா" என்றான் அவள் யாரென்றேத் தெரியாமல்.
"என்னது அமைதிப் புறாவா?" என்று அதிர்ந்தனர் அங்கிருந்த அனைவரும் ஷ்யாமைத் தவிர.
கார்த்திக்,"டேய், இது தான்டா என் தங்கச்சி சஹானா... சானுமா, இது அஜய் ரித்விக், ஹீ இஸ் ஷ்யாம் மாதேஷ்... உன் ஃப்ரெண்ட்ஸோட எம்.டீஸ்" என்று அறிமுகப்படுத்த, அதுவரை அர்ஜூனை முறைத்துக் கொண்டிருந்த சஹானா,"ஓ....” என்று புன்னகைத்தாள் அவர்களைப் பார்த்து.
அவனும் பதிலுக்கு புன்னகைக்க,
ஷ்யாமோ,”ஓ...என் தங்கை பாடும் பல்லவி, இந்த சஹானா ராகம் தானோ?” என்க, அவளோ உடனே திரும்பி யாழினியை முறைத்தாள்.
யாழினியோ, ஜானு,..ம்ம், சாரி சானு.. அம்மா கேட்டாங்க, சொன்னேன்.. நானா எதுவுமே சொல்லலை..”என்றாள்.
சஹானாவின் அருகில் வந்த கார்த்திக்கின் தோழன் அர்ஜூன், “சஹா, அதான் அன்னைக்கே சாரி சொல்லிட்டேன்ல.. சரி இங்க இப்போ ஒரு 1000 பேராவது இருப்பாங்க தானே. இங்க வச்சு சாரி கேக்குறேன்...” என்க,
சஹானாவோ கார்த்திக்கிடம்,
“அண்ணா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்னு உன் ஃப்ரெண்ட்கிட்ட சொல்லு” என்றவாறே திரும்ப, அர்ஜூன் சஹானாவின் கைகளைப் பிடித்து,
அதான் பேசிட்டு இருக்கேன்ல, அதுகுள்ள என்ன ஓடுற? பரம தேவதையே..! மன்னிச்சிருமா..” என்றான்.
சஹானா காதில் வாங்காதது போல் நிற்கவே,
“சரி.... நீ சொன்ன எல்லா கண்டீசன்ஸ்க்கும் ஒத்துக்குறேன். ஆர் யூ ஹாப்பி நவ்?” என்று அர்ஜூன் கேட்க, அவளோ சிறு குழந்தை போல் குதித்தவாறே, “வெரி வெரி ஹாப்பி... அப்போ இனி இந்த ஹிட்லர் ஃபேஸை கொஞ்சம் மாத்திட்டு ஹிருத்திக் ரோஷன் ஃபேஸை வச்சுக்கோங்க” என்றாள் அவனின் தோளில் தட்டியபடி. அனைவரும் அந்நேரம் அங்கு ஒரு பார்வையாளர்களாகவே இருக்க, அவர்களில் இருவர் முகம் மட்டும் அதிருப்தியை வெளியிட்டது...!
அர்ஜூன் சிரித்த படியே,
“சஹா, இந்த ட்ரெஸ்ல நீ சூப்பர் என்க,
அவளோ, “நான் எப்பவுமே சூப்பர் தான். இருந்தாலும் என் அண்ணனோட செலெக்சன் மாதிரி வருமா?” என்று கண்சிமிட்டினாள்.
அர்ஜூனோ, ”தெரிஞ்சே உன்கிட்ட எதிர்பார்த்தேன் பாத்தியா?எனக்கு இது தேவை தான்” என்று குறைபட,
ரீனாவோ, “அதானே நீயாவது உன் அண்ணனை விட்டுக்குடுக்குறதாவது...!” என்றாள்.
அர்ஜூனோ, “சஹா, உன் ஃப்ரெண்ட்ஸா? இன்ட்ரோ குடுக்கமாட்டியா?” என்க,
சஹானா, “ஓ ஷ்யூர் அண்ணா.. அதுல உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்குண்ணா” என்றதும், அஜய்யின் உதடுகள் தானகவே, “அண்ணாவா என்று முணுமுணுத்தது.
சஹானாவோ சிரித்தபடியே, “ம்ம்.... அண்ணாவின் நண்பன் எனக்கும் அண்ணாவே….!” என்றாள்.
தோழிகளிடம் ஆதியைக் கைக்காட்டிய சஹானா,”இது ஆதிண்ணா, ரீனு உனக்கு சுத்தமா பிடிக்காத ஃபீல்டில் வொர்க் பண்றாங்க. தென், இது அர்ஜூண்ணா.. பூஜ்,இவங்க உனக்கு ரொம்ம்ம்பபபப் பிடிச்ச ஃபீல்டில் வொர்க் பண்றாங்க...” என்றதும் அனைவரும் அதிர்ந்தனர் அவள் அறிமுகப்படுத்திய விதத்தில்...
“அண்ணாஸ் இது ரீனா, மிதுனா, பூஜா அண்ட் யாழினி; என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். யாழி எங்களுக்கு ஜூனியர் தான், பட் எங்க டீம். இவங்க மூனு பேரும் அஜய்-ஷ்யாம் அண்ணா ஆஃபிஸ்ல தான் வொர்க் பன்றாங்க” என்றதும்,
ஆதி, “யாழினி தெரியும், அஜய்-ஷ்யாம் ஓட தங்கை” என்றான்.
சஹானாவோ வெகு இயல்பாக, “அப்பறம் அர்ஜூண்ணா, என் ஃப்ரெண்ட் பூஜாவை தான் என் வருங்கால அண்ணியா, அதாவது Mrs.அர்ஜூன் ஆக நான் செலெக்ட் பண்ணிருக்கேன். உங்களுக்கு ஓகே தானே?” என்று ஒரு இடியை இறக்கினாள்.
பூஜாவோ, “ஹேய், சானு,..” என்று அதிர,
ரேணுகாவோ, “சஹானா, என்னடி உளருற?எதில் விளையாடுறதுனு ஒரு அளவு வேண்டாமா? எல்லாம் இவங்கல்லாம் குடுக்கிற செல்லம் தான்”, என்று கடிந்துக் கொண்டார்.
சஹானா,“நோ மாம். ஐயம் சீரியஸ்.” என்க,
ரகுராம், “குட்டிம்மா, இது ஏர்ப்போர்ட் டா. மேரேஜ் விஷயமெல்லாம் இப்படி நடு வீதியில் வச்சா செய்வாங்க? வீட்டுக்குப் போய் அவங்களுக்கு விருப்பம்னா பெரியவங்கக்கிட்ட பேசலாம். இப்போ, இங்க வேண்டாம்டா” என்று அவளை சமாதனப்படுத்த, ரேணுகாவோ தலையில் அடித்துக் கொண்டார்.
சஹானா, “நான் ஆல்ரெடி பூஜாப்பாகிட்ட பேசிட்டேன். அர்ஜூன் அண்ணாக்கு சம்மதம்னா அவங்களுக்கும் சம்மதமாம்” என்றாள் தோள்களைக் குலுக்கியவாறே...!
கார்த்திக், “சரி ஓகேடா. அர்ஜூன் வீட்டில் இப்படி பேசினா சரி வராதுல்ல? சும்மாவே அவனுக்கும் அவங்க அப்பாக்கும் டெர்ம்ஸ் சரிவராது. சோ, பொறுமையா யோசிச்சுட்டு அப்பறம் பேசலாம்” என்றான்.
சஹானா, “அங்கேயும் பேசிட்டேனே அண்ணா” என்றதும் அனைவரும் அதிர,அர்ஜூனோ சிரித்தவாறே, பூஜாவைத் தான் பார்த்தான். அவளோ அதிர்வின் விளிம்பில் சஹானாவைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மிதுனா, “அங்கே என்னடி பேசித் தொலைச்ச?” என்று கேட்க,
சஹானா, “ஒரு டைம் (அர்ஜூனின்) அக்காகிட்ட பேசும்போது, பூஜா பத்தி சொன்னேன். அக்காக்கு ஓகேனு சொல்லிட்டாங்க. அப்பாக்கிட்ட அர்ஜூண்ணா பத்தி சும்மா ஒரு பிட் போட்டேன். அப்பா கத்த ஆரம்பிச்சுட்டாரு. அப்போ, அப்பாவே நீயே ஒரு நல்ல பொண்ணா அங்கேயே பாரு பாப்பானு சொன்னாரு. அம்மாக்கு இந்த விஷ்வாமித்திரன் கல்யாணத்துக்கு சம்மதிச்சாலே போதும்னு சொன்னாங்க.. ஆப்பரேஷன் சக்சஸ்” என்று கண் சிமிட்டியவாறே தன் இரு கைகளிலும் பெருவிரலை உயர்த்திக்காட்டியபடியே கூறினாள்.
ஆதி, ”என்னடா இது? என்கூட தானடா இருக்குற. ஒரு வார்த்தை சொன்னியாடா துரோகி” என்று அர்ஜூனைக் கடிய,
அர்ஜூன், “டேய், எனக்கே இப்போ தான்டா தெரியும். இதுக்கு தான் என் அம்மா நாங்க எப்போ சென்னை வரட்டும்னு கேட்டுட்டே இருக்காங்களா?” என்று கேட்க,
சஹானாவும் ஆமாம் என்பது போல் கண்ணடிக்க, அர்ஜூனோ, ”ஆமா சஹா, இதுல உன் ஃப்ரெண்ட்க்கு விருப்பமானு கேட்டியா?” என்று பூஜாவைப் பார்த்தவாறே கேட்க,
சஹானாவோ, “கேட்கல அண்ணா. ஆனா, அந்தப்பக்கம் பச்சைக்கொடி தான். டோன்ட் வொர்ரி.. உனக்கு சம்மதம் தானே பூஜ்....?” என்று பூஜாவின் தோளில் தன் நாடியை அழுத்தியவாறு கேட்க, அப்போது தான் பூஜா என்ற சிலைக்கே உயிர் வந்தது போலும்.
“என்ன சொன்ன?” என்று பூஜா கேட்க,
சஹானாவோ, “ஆமா தானேனு கேட்டேன் பூஜ்” என்க, பூஜாவோ உச்சக்கட்ட அதிர்ச்சியில் என்ன ஏதென்று கூட விசாரிக்காமல்,
“ஆங்...ஆமா தான்” என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
மிதுனாவும், ரெண்டும் சரியான லூஸுங்கஎன்று தன் தலையில் அடித்துக் கொள்ள, சஹானாவோ,
“நான் சொன்னேன்ல அண்ணா. பூஜாக்கு உங்களை மேரேஜ் பண்ணிக்க இஷ்டம் தான்னு. பார்த்தீங்களா அவளே சொல்லிட்டா” என்றாள்.
பூஜா, “நான் எப்போடி சொன்னேன்?”என்று அதிர்ந்து கேட்க,
ரீனா, இப்போ தான். அதான் அழகா பூம்பூம் மாடு மாதிரி ஆமா போட்டியே” என்க,
சஹானா, “அப்பறம் அண்ணா,…” என்று ஆரம்பிக்க, பூஜா அவளை அடிக்க வர, சஹானா ஓட என்று விமான நிலையமே ஒரு விருந்து வீடாக மாறிய எண்ணமே அங்கிருந்த அனைவருக்கும். கார்த்திக்கும் இதமாக உணர்ந்தான்.
அவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் இதனை ரசித்துக்கொண்டிருந்த அஜய்யின் மேல் இடித்து அவனைத் தள்ளிவிட்டவள், “என்ன அஜய் அண்ணா, நீங்களும் ட்ரீம்ல டூயட் பாட போய்ட்டீங்களா? உங்களுக்கும் ஹெல்ப் பண்ணனுமா?”என்று கேட்டாள்.
அஜய் என்ன உணர்ந்தான் என்றே அவனால் சொல்லமுடியாத நிலையில் இருக்க, தன்னை சஹானா கூறிய அந்த அண்ணா என்ற அழைப்பை மட்டும் அவனால் ஏனோ ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அஜய் ஏதோ மறுப்பாக சொல்ல வாயெடுக்க, அதற்க்குள் அவனைக் காப்பாற்றினாள் அவன் தங்கை யாழினி, “சானு என் அண்ணாவை எப்படி நீ அண்ணானு சொல்லலாம்?” என்று.
சஹானாவோ, “சரிதான் போமா,. அப்போ நீயும் என் அண்ணாவை அண்ணானு கூப்பிட்ட, அப்பறம் இருக்கு உனக்கு” என்று தன் சகோதரனையும் காப்பாற்றினாள்.
ஷ்யாமோ அஜய்யிடம், “டேய், பாருடா. அறிமுகப் படலம் ஆரம்பிச்ச அரை மணி நேரத்துல, அரை கல்யாணத்த நடத்தி முடிச்சுட்டாளேடா...! பேசாமல் என் மேட்டரையும் சானுகிட்ட சொல்லிராம்னு யோசிக்குறேன்டா” என்க,
அஜய்யோ, “நீ ட்ரை பண்ணுடா, எனக்கே பிரம்மிப்பா தான் இருக்குதுடா. ஏனோ அவகிட்ட சம்திங் ஸ்பெஷல்டா” என்றான்.
சஹானாவோ, “அர்ஜூண்ணா, நீங்க வாட்ஸ்அப் பார்க்கலையா?” என்று கேட்க,
அர்ஜூன், ”மெஸேஜ் பண்ணிருக்கியா என்ன?”என்றவாறு தன் அலைபேசியை எடுத்து, கட்செவி அஞ்சலைப் (WhatsApp) பார்வயிட்டான்.
“எஸ் அண்ணா, அது தான் பூஜாவோட நம்பர். சேவ் பண்ணிக்கோங்க அண்ணா” என்று கூறி பூஜாவின் முறைப்பை தாராளமாகவே சம்பாதித்தாள்.
ஷ்யாம், “தெய்வமே! எனக்கும் தாங்கள் தான் ஒரு அருள்வாக்கு சொல்லவேண்டும் தாயே” என்றான் ரகசியமாய்.
சஹானாவோ சப்தமாக,
நிச்சயம் அருள்புரிகிறேன் பக்தா...! ஆனால் அதற்கு தக்க சன்மானமாக வருகிற ஞாயிறுக்கிழமை எங்கள் ஐவரையும் மெக்டொனால்ட்ஸ் க்கு அழைத்து சென்று பில்-பே பண்ணவும்” என்றாள்.
ஷ்யாமோ அதிர்ந்து விழிக்க, ஆதியோ, “சானு,நீ சரியான ஆளை தான் கூப்பிட்ட போ. அவனுக்கே அஜய் தான் பே பண்ணுவான்” என்க,
“டோன்ட் வொர்ரி ஆதிண்ணா, அவங்க ரூட்டையும் க்ளியர் பண்ணிடலாம். நமக்கு தேவை பில்-பே பண்ண ஆள்”,என்று சஹானா தோள்களைக் குலுக்கியவாறு சொல்ல,
ஷ்யாமோ, “அவனா? நல்லா சொன்ன போ.. சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காதுமா” என்க, அவளோ புரியாமல் விழிக்க,
அர்ஜூன், “சஹா, நீ என்னையே விஷ்வாமித்திரன்னு சொல்லுவ. அவன் என்னை விட மேல கடுமையான தவம் புரிகிற விஷ்வாமித்தரன் மா”என்று தன் நண்பனின் புகழ்பாட,
“ஓ...”என இழுத்த சஹானா,
“சரி இருக்கட்டுமே. அவங்களுக்கென ஒரு மேனகை வராமலா போய்ருவா?” என்றாள்.
கார்த்திக், “வந்துட்டா” என்றதும் அனைவரும் அவனை நோக்க,
சீக்கிரமே வந்திருவானு சொன்னேண்டா” என்று சமாளிப்பாக கூறினான். அஜய்யின் மனம் அதை ஆமோதித்ததும், கண்கள் தாமாகவே சஹானாவைப் பார்த்தது. எண்ணத்தின் நாயகியோ ஷ்யாமிடம் கதைத்துக் கொண்டிருந்தாள்.
சஹானா ஷ்யாமிடம், “அண்ணா,அந்த பக்கம் லைட் எறியுறது, மணி அடிக்குறதலாம் கொஞ்சம் கஷ்டம் தான் அண்ணா. ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் வேற... சோ, டைரெக்டா மேலிடத்தில் அப்பீல் பண்ணிலடாம்” என்க, அவனுக்கோ அதிர்ச்சி.
ஷ்யாம், “சானு, பொண்ணு யாருனு நான் சொல்லவே இல்லையேமா?” என்க,
சஹானா, “அதெல்லாம் நீங்க சொல்லனுமா அண்ணா. மிது தானா? நீங்க விட்ற ஜொல்லுல இன்னும் கொஞ்ச நேரத்துல வெல்லமே வரப்போகுது. அப்போ என் அண்ணா ஃப்ளைட் கேன்சல் ஆகிரும்லா?” என்று சொல்ல அவனோ அசடு வழிந்தான். அவள் சொன்னதைக் கேட்டு நண்பர்கள் நால்வரும் ஷ்யாமை ஒரு வழியாக்கிவிட்டனர்.
ஆதி, “எப்படியோ கார்த்தி, சீக்கிரம் ப்ராஜெக்டை முடிச்சுட்டு வந்துருடா. உனக்கு தொடர்ந்து கல்யாண சாப்பாடு இருக்கு..” என்று சொன்னதும் சஹானாவின் முகம் மறந்திருந்த கவலையைத் தத்தெடுத்துக்கொண்டது. அதை அஜய்யின் தன் மனதும் குறித்துக்கொண்டது. கார்த்திக்கைப் பார்க்க, அவனோ ஸ்ருத்திக்காவிடம் அலைபேசித் தொடர்பிலிருந்தான்.
அதற்குள் கார்த்திக் உள்ளே செல்வதற்கான அழைப்பும் வந்துவிட, சஹானாவைப் பார்த்தவன், தாய் தந்தையிடம் விடைப்பெற்று, தங்கையிடம் வர, அவளோ அவனது சட்டையைப் பிடித்துக்கொண்டு,
“போகாதேண்ணா” என்று சிறுபிள்ளை போல் அழுதுகொண்டிருந்தாள். சற்று நேரத்திற்கு முன்பு தன் பேச்சால் அனைவரையும் வாட்டி வதைத்த சஹானாவா என்றேத் தோன்றியது அனைவருக்கும்.
“நானும் வர்றேன், என்னையும் கூடிட்டுப்போண்ணா”, என்று அழுதவளை பார்த்து தோளோடணைத்து சமாதானப்படுத்த வேண்டுமென்றே தோன்றியது அஜய்க்கு.
கார்த்திக், “அம்மு இங்கே பாரு, நான் 6 மாசத்தில் வந்துருவேண்டா அழக்கூடாது. இங்கபாரு, நீ அழறதப் பார்த்து புதுப்பொண்ணே அழறாங்க.. என்னோட ஆம்பிஷண்டா, ப்ளீஸ் சானுமா. எனக்கு மட்டும் உனக்கு விட்டுட்டு போகனும்னு ஆசையா?” என்று அவனுடைய சமாதானமும், தோழிகள் மற்றும் பெற்றோரின் சமாதானமும் கூட எடுபடவில்லை.
ஒருவழியாக அவளின் முன்நெற்றியில் முத்தமிட்டு, பெற்றோரிடம், “பார்த்துக்கோங்கப்பா” என்று விடைபெற்றான். அதே நேரம், நண்பர்களிடமும் கட்டித்தழுவி, “கொஞ்சம் கவனிச்சுக்கோங்கடா” என்று சொல்லவும், யாழினியிடமும், “டேக் கேர், நல்ல படி. வர்றேன்” என்று சொல்லவும் மறக்கவில்லை.
அனைவரிடமும் விடைபெற்று விமானம் ஏறினான் கார்த்திக்.....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நான்காம் நினைவை உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.:):)

 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-5
21000

கார்த்திக் அமெரிக்கா சென்று முழுதாக ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் அன்று, அஜய்யின் அலைபேசி இசைத்து அர்ஜூனின் பெயரைத் திரையில் காட்டியது. அழைப்பை ஏற்றவன், ”சொல்லுடா,என்ன ஆச்சர்யம்! கால் பண்ணியிருக்க? என்ன விஷயம்?” என்று அஜய் கேட்க,

அர்ஜூனோ, “டேய் என்ன நக்கலா?சரி வீட்டுக்கு எப்போ போவீங்க? ஷ்யாம் உன்கூட வருவானா?” என்று தன் கேள்விகளை அடுக்கினான்.

“டேய் போலீஸு,ஒவ்வொரு கேள்வியாக கேளேன்டா, 7 மணிக்குள்ள போகனும். ஸ்வாதிக்கு இன்னைக்கு எக்ஸாம்ஸ் முடிஞ்சிருச்சுல்ல, அதான் அவ ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போயிருக்கா. சோ, அவளை பிக்அப் பண்ண ஷ்யாம் போயிருக்கான். என்னடா என்கொயரி? மீட்டிங் போடவா?” என்றுக் கேட்டான்.

“ஆமாடா, ஷ்யாம் எப்போ வருவான்?” என்று அர்ஜூன் கேட்க,

“அர்ஜூன்,எங்க வீட்டுக்கு வாடா.அங்க தான் எல்லாரும் இருக்காங்க, ஷ்யாமும் அங்க தான் வருவான்.சோ,நீயும் வீட்டுக்கே வந்துரு”,என்று அழைப்பு விடுக்க,

“நானும் வீட்டுக்கு தான் வர்றேன்னு சொல்றேன். ஸோ, நான் ஆதியை பிக்அப் பண்ணிட்டு ஒரு 8மணிக்கு வந்திடுறேன்”, என்று அலைபேசியை அணைத்தான்.

****

“அடடே!வாங்கப்பா. இப்போ தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சதா?” என்றபடி கைகளில் பழங்கள் மற்றும் இனிப்புகளுடன் வந்த அர்ஜுன் மற்றும் ஆதித்யாவை வரவேற்றார் அஜய்யின் தாயார் ராகிணி.

“கொஞ்சம் வேலை அதிகம்மா, அதான் வரமுடியலை” என்று வருத்தம் தெரிவித்து அனைவரிடமும் நலம் விசாரித்தான்.

ஆமா, கார்த்திக்கை அனுப்ப ஏர்போர்ட் போனதிலிருந்து உனக்கு பயங்கர வேலைனு கேள்விப்பட்டேன்”, என்றாள் திவ்யா.

“அய்யோ அண்ணி, நான் இந்த ஒரு வாரமா தான் இங்க வராம இருக்கேனா என்ன? போங்க அண்ணி” என்றவாறு, ராகிணியிடம் “அம்மா உங்கக்கிட்ட பேசனும்னு சொன்னாங்கம்மா”, என்று தன் அலைபேசியில் தன் தாய்க்கு அழைப்புவிடுத்தான்.

அர்ஜூனின் அம்மா தான் கூறவேண்டிய செய்தியை அஜய் மற்றும் ஷ்யாமின் தாய்மார்களிடம் தெரிவித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

". அதுக்காக தான் இந்த ஸ்வீட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தியா அர்ஜூன்?" என்று கேட்க,

அர்ஜூன், "எனக்கு இதெல்லாம் தெரியாதுமா. அம்மா வாங்கிட்டு தான் போகனும்னு சொன்னாங்க", என்று அசடு வழிந்தான்.

அனைவரும் என்னவென்று நோக்க," என்னடா முழிக்கிறீங்க? உங்களுக்கே விஷயம் தெரியாதா?" என்று சரிதா கேட்க

அர்ஜூனோ, “நோ மா, ஈவன் ஆதிக்கு கூட தெரியாது. ஈவினிங் தான் கன்ஃபார்ம் ஆச்சு. ஃபர்ஸ்ட் உங்ககிட்ட தான் சொல்லணும்னு வந்தேன்..." என்றான் இழுத்தபடியே.

"
வருகிற ஞாயிற்றுக்கிழமை அர்ஜூனுக்கு நிச்சயதார்த்தம், நாம எல்லாரும் போகனும்" என்று கூற.

ஆதியோ, "அடப்பாவி, ஒரு வார்த்தை சொன்னியாடா, உன் கூடவே தானேடா இருந்தேன்?" என்று ஆதங்கப்பட,

அர்ஜூனோ,"டேய், எனக்கே இப்போ ஈவினிங் தான் தெரியும், அவங்க எல்லா வேலையையும் முடிச்சுட்டு சொல்வாங்கனு நானும் எதிர்ப்பார்க்கலைடா, நம்புங்கடா.." என்றான் அலறியபடியே.

ஷ்யாமோ, "பூஜாக்கு சம்மதம் தானே?" என்று கேட்க,

அர்ஜூனோ, “ஆமா,பூஜாகிட்ட அன்னைக்கே பேசிட்டேன். அவளுக்கு சம்மதம் தான்", என்றான்.

அஜய், "உனக்கு பொண்ணு பார்த்துக் கொடுத்த ஆள்கிட்டயாவது சொல்லிட்டியா?இல்லையா?" என்று கேட்க,

"
நீ வேறடா... எங்க நிச்சயதார்த்தத்திற்கே எங்க ரெண்டு பேரோட அப்பாக்கிட்டயும் பேசி, எங்களை இன்வைட் பண்ணியதே அவதான்டா என்று கூறி அங்கே ஒரு சிரிப்பலையை பரவவிட்டான் அர்ஜூன்.

அதன் பின் கார்த்திக்கிடம் காணொளி அழைப்பின் மூலம் நண்பர்கள் நால்வரும் பேசிவிட்டு விடைபெற்றனர்.

*****

ஞாயிறுகிழமை

அர்ஜுன் - பூஜா நிச்சய விழா...!

அனைவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளுடனும், ஆசைகளுடனும் அன்றைய நாள் அழகாக விடிந்தது. விடுமுறை நாளிலும் கூட பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த மாநகரத்தின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள அந்த திருமண மண்டபத்தின் முகப்பில் பூஜா மற்றும் அர்ஜூனின் பெயர்கள் பூக்களால் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூஜாவின் தந்தை தொழிலதிபர் என்பதாலும், அர்ஜூன் தலைநகரின் உயர் பதவியில் இருப்பதாலும் சற்றே பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்தத்தின் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

அர்ஜூனை அவனது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டிருந்தனர்.மேடையில் வீற்றிருந்த அர்ஜூனின் கண்கள் பூஜாவின் வரவையே எதிர்ப்பார்க்க, அனைவரின் எதிர்ப்பார்ப்பையும் சோதித்து விட்டு தோழிகள் புடைசூழ மேடைக்கு வந்தாள்,பூஜா.

அனைவரின் கண்களும் பூஜாவின் மேலிருந்தாலும்,ஒரு சிலரின் பார்வைகளோ சஹானாவையே வட்டமடித்தது.

நல்ல நேரத்தில் தாம்பூலம் மாற்றப்பட்டு, நிச்சயம் உறுதிசெய்யப்பட்டு பூஜாவும் அர்ஜூனும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

சற்று நேரத்தில் அங்கே மேடையில், யாருமே எதிர்பார்க்காத விதமாக ஒரு இனிய நிகழ்வு அரங்கேறியது.

"சல சல சல சோலை கிளியே


சோலைய தேடிக்க

சிலு சிலு சிலு சா்க்கர நிலவே

மாலைய மாத்திக்க..



மாமன்காரன் ராத்திாி வந்தா

மடியில கட்டிக்க

மாமன் தந்த சங்கதி எல்லாம்

மனசுள வச்சுக்க



மாமன்காரன் ராத்திாி வந்தா

மடியில கட்டிக்க

மாமன் தந்த சங்கதி எல்லாம்

மனசுல வச்சுக்க…”

என்ற இசையில் அனைவரும் மேடையைப் பார்க்க அங்கே சானு&கோ-வின் பாடலுடன் கூடிய நடன அரங்கேற்றம் ஆரம்பமானது.

"கண்ணாளனே எனது கண்ணை


நேற்றோடு காணவில்லை...."


என்று சஹானா தன் இனிய குரலில் பாடியவாறே ஆட ஆரம்பிக்க, ஏற்கனவே அவளது தேன்குரலின் ரசிகனான அஜய் அவளையே கண் இமைக்காமல் ரசிக்க ஆரம்பித்தான்.

"ஆளான ஒரு சேதி அறியாமலே


அலைபாயும் சிறு பேதை நானோ..."

என்ற அந்த மயக்கும் தேன் குரலிலும், முகபாவனைகளிலும் தன்னிலையை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துக் கொண்டிருந்தான் அந்த இளம் தொழிலதிபன்....!

“உந்தன் கண் சாடை விழுந்ததில் நெஞ்சம்


நெஞ்சம் தறிகெட்டுத் தலும்புது நெஞ்சம்

எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம்

கொஞ்சம் பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும்

உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல

சித்தம் துடிதுடிக்கும்

புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல

பனித்துளிதான் என்ன செய்யுமோ

மூங்கில் காட்டில் தீ விழும்போது

மூங்கில் காடென்று ஆயினல் மாது..."

ஆடிக்கொண்டிருந்த அம்மாதுவின் ஆடை அலங்காரத்திலும், அவளின் நடன அசைவுகளிலும் தன்னை இழந்துக் கொண்டிருந்தான், திருமணத்திற்கு முன் காதல் என்றால் பொய்யென்று வாதிடும் அந்த வாலிபன்...!

"ஒரு மின்சார பார்வையின் வேகம் வேகம்


உன்னோடு நான் கண்டுகொண்டேன்

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்

என்னோடு நான் கண்டுகொண்டேன்"

என்று அவள் பாடும் போது, தாமாகவே சஹானாவின் கண்கள் அஜய்யிடம் நிலைக்க, இரு பார்வைகளும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது...!!!

"என்னை மறந்துவிட்டேன்


இந்த உலகத்தில் நானில்லை நானில்லை

உன்னை இழந்துவிட்டால்

எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

இது கனவா இல்லை நனவா

என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்

உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்..."


என்று அவள் பாடலை நிறைவு செய்ய, அவளுள் முற்றிலுமாக தன்னையிழந்து காதல் பாடத்தை கற்கத் தொடங்கியிருந்தான் அந்த காதல் மாணவன்...!!!!

அனைவரின் கைத்தட்டல் ஒளியில் நடப்பிற்குத் திரும்பிய அஜய்யிடம்,

“என்னடா ஆச்சு உனக்கு, ஒரு மார்க்கமா முழிக்குற?" என்ற ஆதியிடம்,

அஜய், “அவ எங்கேடா?" என்றான்.

ஆதி,"அவ போய் பத்து நிமிஷமாச்சு. ஆனால் அஜய், நம்ம ஷ்யாம் கூட இந்தளவுக்கு ஜொல்லு விடலடா... நீ என்னடான்னா அப்படியே ஸ்டன் ஆகி நிக்குற" என்றான்.

ஷ்யாமோ, "என்ன அஜய், உன்னோட பத்து நாள் ஆராய்ச்சியை ஒரே பெர்ஃபார்மன்ஸ்ல சஹானா முடிவுக்கு கொண்டு வந்துட்டா போல?”என்று கேட்டான்.

அஜய், “தெரியலைடா.ஆனால் இதெல்லாம் சரி வருமா?கார்த்திக் நம்ம ஃப்ரெண்ட். இதெல்லாம் தப்போனு எனக்கு தோணுது.இது அவனுக்கு தெரிஞ்சா அவன் என்ன நினைப்பான்?”என்றான் எதையோ எண்ணிய படி....!


அவன் எண்ணத்தின் நாயகியோ அதே குழப்பத்தில் தான் இருந்தாள். ஆடிக்கொண்டிருந்த போது திடீரென்று தான் ஏன் அஜய்யை பார்க்க வேண்டும்?அவனது கண்களில் இருந்த அந்த பாவத்திற்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பார்வையில் விழுந்தாள், சோக ரேகை படர்ந்த முகத்துடன் தனியாக அமர்ந்திருந்த யாழினி.

யாழினியின் அருகில் சென்று அவள் தோளில் கை வைத்து,"என்ன யாழ், எல்லாரும் ஒன்னா ஹாப்பியா இருக்குற நேரம் உன் ஆள் மட்டும் இல்லாம போய்ட்டானேனு ஃபீல் பண்ணுறியா?" என்றவாறு அவளருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவளோ அதிர்ந்து விழிக்க, சஹானாவோ, "அவன் இங்க இருந்தா மட்டும் அப்படியே உன்கூட டூயட் சாங் ஆடிருவானா என்ன? அது ஒரு பயந்தாங்கொள்ளி. சியர் அப் மை கேர்ள்" என்று சொல்ல,

யாழினியோ அதிர்ச்சியின் விளிம்பிற்கே சென்று,

சானு.. நீ.. நீங்க எ... என்ன சொல்றீங்க?" என்று திக்கித் திணறிக் கேட்டாள்.

சஹானா, "என்ன சொல்றீங்களா.....? ஓ... நாத்தனாருக்கு மரியாதை கொடுக்கணும்னு சொல்றியா? எனக்கு அதெல்லாம் வேண்டாம்மா. நீ எப்பவும் போலவே இரு.. என்கிட்டயும் எதிர்பார்க்காதே..." என்று தோள்களைக் குலுக்கினாள்.

யாழினி, “சானு.. உ..உனக்கு எ..எப்படி தெரியும்?”என்று கண்கள் கலங்க,

சஹானா, “ஹே..சில் மா,எனக்கு முன்னாடியே கொஞ்சம் சந்தேகம் தான்.அன்னைக்கு ஏர்போர்ட்டில் என் அண்ணா போறப்போ அழுதியே,அப்போவே எனக்கு தெரியும். அன்னைக்கு என் அம்மா கூட அழவில்லை. அப்போ தான் கன்ஃபார்ம் பண்ணேன்."

"சாரி சானு" என்று யாழினி வருந்த, சஹானா, ஹே லூசுஎதுக்கு சாரி சொல்றா. சொல்லப்போனா,எனக்கும் இதில் சந்தோஷம் தான். யாரோ ஒருத்தி எனக்கு அண்ணியா வர்றதுக்கு நீ வந்தால்,ரியல்லி ஐ வில் ஃபீல் ஹாப்பி" என்று சொல்ல,யாழினியோ மனதில் பெரு மகிழ்ச்சியுடன் சஹானாவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள். சஹானாவையேப் பார்த்துக் கொண்டு தன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த அஜய்யின் விழிகளிலிருந்தும் இது தப்பவில்லை...!

யாழினியோ, “நீ சொன்னால் தான் உங்க அண்ணன் இதுக்கு சம்மதிப்பாங்க" என்று கூற, சஹானாவோ, “நீ சொன்னாலும் அவன் சம்மதிப்பான். அண்ணா வரட்டும், அப்புறம் பார்க்கலாம்" என்றாள்.

சிறிது நேரம் எதையோ யோசித்த யாழினி, “சானு,என் அண்ணன் இதுக்கு சம்மதிக்கமாட்டானே" என்றாள்.

சஹானா, “டூ யு மீன் அஜய்..?" என்று கேட்க, யாழினி ஆமாம் எனத் தலையாட்டினாள்.

சஹானா, “ஏன்?" என்று கேட்க,

யாழினி, “அவனுக்கு லவ் பிஃபோர் மேரேஜ் பிடிக்காது" என்றாள்.

அதற்கு சஹானா,

அப்போ ஷ்யாம் அண்ணாவோட லவ்க்கு மட்டும் பச்சைக்கொடி காட்டுறாங்களே??" என்று அதிமுக்கியமாக தன் சந்தேகத்தை கேட்க,

யாழினியோ அதிர்ச்சியாகி,

“என்னது... ஷ்யாம் அண்ணா லவ் பண்றாங்களா? யாரை?இது என்ன புது கதை?" என்று கேட்டாள்.

சஹானா, “அதெல்லாம் பழசு கண்ணா பழசு... நம்ம மிது தான். சரி இப்போ உன் கதைக்கு வா" என்றாள்.

யாழினி, “உங்க அண்ணன் அவனுக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். இதில் என் காதல் கதை தெரிஞ்சா, யார் பக்கம் பேசுறதுனு சங்கடப்படுவான்.அப்பறம், என்னாலயுமே என் அண்ணா கிட்ட இதை எப்படி சொல்லமுடியும்?" என்று கண்கலங்கினாள்.

சஹானா, “சரி விடு,அழாத.. யோசிக்கலாம்" என்று கூற,

யாழினியோ, சானு, எனக்காக என் அண்ணாக்கிட்ட நீ பேசறியா?" என்று கேட்டாள்.

“என்னது நானா?", இம்முறை அதிர்வது சஹானாவின் முறையாயிற்று.

யாழினி, “ஆமா சானு, உன்னாலதான் முடியும். இன்னைக்கு பூஜா நிச்சயதார்த்தம் நடக்க முதல் காரணமே நீ தான். எனக்காக நீ கொஞ்சம் அண்ணாகிட்ட போய் பேசேன்.. ப்ளீஸ்" என்று கண்களை சுருக்கியபடியே கெஞ்ச,

'
இவ வேற கெஞ்சுறாளே, இவள பார்த்தாலும் பாவமா இருக்கு, அவனை பார்த்தாலே பேச்சு வரமாட்டேங்குது, இந்த லட்சணத்தில் இவ காதலுக்கு என்னை தூது போக சொல்றாளே…' என்று தன் மனதிற்குள் புலம்ப,

யாழினியோ, “சானு....." என்று அவளை உலுக்கினாள்.

சஹானா, “வேணும்னா இப்படி பண்ணலாமா? நான் வேணும்னா என் அண்ணா கிட்ட பேசி அவனையே அஜய்கிட்ட பேசச்சொல்றேன்" என்று நழுவிக்கொள்ள முயன்றாள்.

அது சரி தான்.ஆனா, அதுக்கு முன்னாடியே என் அண்ணா வேறு யாரையும் பார்த்து வச்சிடக் கூடாதே. சானு, உன் அண்ணா ஒண்ணு சொன்னா எப்படி உன்னால மறுக்கமுடியாதோ அது மாதிரி தான் நானும்" என்று வருத்தத்துடன் யாழினி கூற,

"
சரி நான் போய் பேசுறேன்" என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்து மிதுனாவிடம் திரும்பினாள் சஹானா.

சஹானாவை அஜய்யுடன் பேசவைக்கவே திட்டம் தீட்டிய யாழினி ஒரு பெருமூச்சுடன் தன் தாயின் பக்கம் நகர்ந்தாள்.

யாழினிக்காக, அஜய்யுடன் தான் நடத்தப்போகும் இந்தப் பேச்சுவார்த்தையே தன் வாழ்விற்கு அடித்தளமாக அமையும் என்பதை அவள் அறியவில்லை....!
 

Attachments

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் ஐந்தாம் நினைவை உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


முந்தைய என்னுடைய பதிவுகளுக்கு கருத்துக் கூறி என்னை ஊக்குவித்த அனத்து உள்ளங்களுக்கும் நன்றி..:)
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-6
21143
ரீனா கல்லூரித் தோழிகளுடன் ஐக்கியமாகி விட மிதுனாவை அழைத்த சஹானா,

"மிது ரொம்ப தலைவலிக்குது, எனக்கு ஒரு டேப்லெட் வாங்கிட்டு வர்றியா?" என்றாள்.

மிதுனாவும், "சரி நீ ரெஸ்ட் எடு, நான் ரீனுகூட போய்ட்டு வர்றேன்" என்றாள்.

சஹானா," நீ ரீனுவை கூப்பிட்டா, அவ இப்போ ஊரையே கூட்டுவா, அவ இங்கே இருக்கட்டும். நீ வா, நான் உன்கூட ஷ்யாம் அண்ணாவை அனுப்புறேன்." என்க,

மிதுனாவோ," ஷ்யாம் சார் கூடவா? வேண்டாம்மா. அதுக்கு நான் தனியாவே போய்ட்டு வந்திடுறேன், மெடிக்கல் ஷாப் பக்கத்தில் எங்கயிருக்குனு மட்டும் சொல்லு" என்றாள் அலறியபடியே.

சஹானா, "அது தெரிஞ்சா நான் ஏன் உன்கிட்ட சொல்றேன். அவங்க தான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்காங்க. பட் என் தேவைக்கு அவங்கள தனியா அனுப்ப முடியாதில்ல, போய்ட்டு வா மிது. இல்லைன்னா நான் போறேன்"என்று அடுக்கிக்கொண்டே செல்ல,

மிதுனாவும்,"சரி நானே போறேன்.வரச் சொல்லு" என்றாள்.

அஜய், ஷ்யாம் மற்றும் ஆதியிடம் பேசிக்கொண்டிருக்க அங்கு சென்ற சஹானா, "ஷ்யாம் அண்ணா ஒரு ஹெல்ப்" என்றாள்.

"சொல்லுமா"என்றவனை,

சஹானா, "அண்ணா கொஞ்சம் வெளியே போகனும். கூட..." என்று முடிப்பதற்க்குள் ஷ்யாம் இடையிட்டு,

"சாரி சஹானா, இங்க நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கேன், கிடைச்ச சான்சை மிஸ் பண்ண விரும்பலை" என்றான் மிதுனாவை கண்களால் அளந்தபடி.

சஹானாவோ, "அப்படியா,சரி கொஞ்சம் வெளியே போகனும் தான், போகப்போறது நான் இல்ல மிது தான், ஷ்யாம் அண்ணாவோட முக்கியமான வேலையை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம். அஜய் சார், நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஸ்?” என்று கண்களை சுருக்கிக் கேட்டவாறு, ஷ்யாமை நோக்கி நாக்கை துறுத்தி அழகுக் காட்ட அஜய்யோ அந்த குழந்தைத்தனமான அழகில் தன்னை முற்றிலும் இழந்தான்.

ஷ்யாமோ, "நானே போறேன் சானு, நீ கேட்டு நான் போகாம இருப்பேனா?இப்போவே கிளம்புறேன்" என்று பொதுவாக சொல்லிவிட்டு, சஹானாவிற்கு மட்டும் கேட்கும் குரலில், "தேங்க்யூ சானுமா" என்று மகிழ்ச்சியுடன் மிதுனாவை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

"ஆதிண்ணா, உங்களை அர்ஜூண்ணா கூப்பிட்டாங்க. சொல்ல மறந்துட்டேன்"என்று அவனையும் அனுப்பினாள். அவள் அஜய்யிடம் ஏதோ தனித்து பேச விரும்புகிறாள் என்று உணர்ந்த ஆதியோ,

“மச்சான், பால் இப்போ உன்பக்கம் வந்திருக்கு, சிக்ஸர் அடிச்சிரு. மிஸ் பண்ணிறாத. சொல்லிடு" என்று அவனிடம் ரகசியமாய் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஆதி சென்றதும் தனித்து விடப்பட்ட அஜய் மற்றும் சஹானாவை சில கண்கள் நோட்டமிட்டதை கண்ணுற்றவாறே,

"
டெல் மீ சஹானா, என்கிட்ட என்ன பேசனும்?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அஜய்.

தான் அணிந்திருந்த லெஹங்காவின் துப்பட்டா நுனியை சுண்டு விரலினால் அளந்து கொண்டிருந்த சஹானா அஜய்யின் நேரடித் தாக்குதலில் அவனிடம் பேச வேண்டியதையே மறந்தாள்.

அஜய், "சஹானா, ஆர் யூ ஆல்ரைட்?"என்க,

சஹானா, "எஸ்,ஐயம்." என்றாள் சமாளிப்பாக.

அஜய், "நானே உன்கிட்ட பேசனும்னு நினைத்தேன், யுவர் பெர்ஃபார்மன்ஸ் வாஸ் வெரி வெரி நைஸ்... வாட் அ மெஸ்மெரைஸிங் வாய்ஸ்..!உங்களுக்கு பாடத் தெரியும்னு தெரியும், பட் பாடிகிட்டே இவ்வளவு அழகாக ஆடவும் தெரியும்னு இப்போ தான் தெரியும். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு" என்று பாராட்டி அவளை இயல்பிற்கு திருப்பினான்.

"தேங்க் யூ. பட் நீங்க பாராட்டுவீங்கனு நான் நினைக்கலை."

அஜய், "ஏன் நான் பாராட்டக்கூடாதா?” என்றான் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி.

சஹானாவோ, “அப்படி சொல்லலை. நீங்க அவ்வளவு சீக்கிரம் கேசுவலா பேசமாட்டீங்கன்னு நினைச்சேன்” என்றாள்.

அஜய், ”ஏன்மா? உண்மையா சொல்லப்போனால், உங்கக்கூட எங்க யாழிக்குட்டியும் ஆடினா தான், பட் அவளைக் கூட பார்க்க நீங்க அலோவ் பண்ணலை. அவ்வளவு க்ரேஸ் உங்க டான்ஸில்." என்று உளமார பாரட்டினான்.

சஹானாவின் மனமோ, 'இவன்கிட்ட நீ என்ன பேசவந்துட்டு இப்போ என்ன பேசிட்டு இருக்க?' என்று கேள்வியெழுப்ப,

அஜய், "சஹி, என்னாச்சு? எதையோ சொல்ல வந்திங்க. எனி ப்ராப்ளம்?" என்று கேட்க, சஹானாவோ, 'நீ தாண்டா ப்ராப்ளம். உன்னை பார்த்ததிலிருந்து தான் நான் இப்படி இருக்கேன்' என்று மனதிற்குள் அவனைத் தாளித்தாள். இதில் அவன் தன்னை பிரத்யேகமாக அழைத்ததை கூட கவனிக்கத் தவறிவிட்டாள்.

அஜய், "இப்போ ஏன் தயங்குறீங்க? பீ ஃப்ராங்க்" என்றான்.

"நீங்க பேசவிட்டா தானே அஜய்?"

"சரி சொல்லுங்க."

சஹானா, "இந்த வாங்க போங்க-லாம் வேண்டாம். அஜய்,நான் சொல்றதை கொஞ்சம் கோபப்படாமல் பொறுமையாக யோசித்து பாருங்க. நான் நேரடியாக விஷயத்திற்கு வர்றேன்."என்று பேசும் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.

"அஜய்,அது வந்து.. யாழி.. யாழி என் அண்ணாவை விரும்புறா" என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்க்க அவன் முக பாவனைகளிலிருந்து அவளால் எதையுமே கணிக்க முடியவில்லை.

"ரி... அ..அஜய்.."

அஜய்,"ஃபுல்லா சொல்லு"என்க,

சஹானா, "அவ இதை யார்க்கிட்டையும் சொல்லமுடியாமல், கார்த்திகிட்டேயும் சொல்ல முடியாமல் தவிக்குறா. இப்போ கூட நானா அவகிட்ட வலிய போய் கேக்கும் போது தான் சொன்னா. யாழி உங்க தங்சச்சின்றதாலயும், என் அண்ணா உங்க ஃப்ரெண்ட் என்பதாலும் நீங்க தயங்குவீங்கன்னு யாழி சொல்றா"என்க,

அஜய்,"கரெக்ட் தான்" என்றான்.

சஹானாவும் துளிர்த்த கோபத்துடன்,

"ஏன்? என் அண்ணாக்கு என்ன குறை?" என்க,

“நான் அப்படி சொன்னேனா? உனக்கு அண்ணனா ஆகுறதுக்கு முன்னாடியே அவன் எனக்கு ஃப்ரெண்ட்"என்று அஜய்யும் சற்று கோபத்திலே கூற,சஹானாவும் அமைதியாய் இருக்க, அஜய்யே தொடர்ந்தான்,

"லுக் சஹானா, அவனிடம் நான் எப்படி சொல்லுவேன், என் தங்கச்சி உன்னை விரும்புறா, அவளை கல்யாணம் பண்ணிக்கோனு? அப்படி சொன்னா என் தங்கையை அவனிடம் விட்டுக்கொடுத்த மாதிரி ஆகிடும், அவன் என் ஃப்ரெண்ட்தான் ஆனாலும் அதை ஒரு நாளும் செய்யமாட்டேன். அப்படியே அவளோட விருப்பத்திற்காக கார்த்திக்கிட்ட கேட்டாலும், அவனுக்குனு ஒரு எதிர்பார்ப்புகள் இருக்கும்.என் தங்கைகாகவே ஆனாலும் அவன்மேல் கல்யாண விஷயத்தில் என் விருப்பத்தை திணிக்கவும் மாட்டேன்" என்றான் தீர்க்கமாக. இது தான் அஜய். தோன்றியதை செய்து முடிப்பவன் தான், ஆனாலும் எதையுமே கட்டாயத்தின் பேரில் திணிக்கமாட்டான்.

ஆனால் மனிதன் எப்போதும் தான் கொண்ட கருத்தில் நிலையாக இருக்க முடியுமா? அப்படி முடிந்தால், அங்கே இறைவனின் விளையாட்டு தான் என்ன???!!!

சஹானா,"இப்போ என்ன பண்ண போறீங்க?" என்று கேட்க,

"தெரியலை. யோசிப்போம்" என்றான்.

யாழினியிடம் தான் கூறிய அதே கருத்து. ஆனால் யாழினியிடம் தான் கூறியபோது எவ்வாறு உணர்ந்தாலோ,அதே கூற்றை அஜய் தனக்கு கூறும் போது அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு ஏமாற்றம் பரவுவதை உணர்ந்தாள்.

சஹானா, "இப்படியே யோசிச்சா, ஆகிருமா? அவன் நாளைக்கு வேற யாரையும் பிக்அப் பண்ணிட்டு வர்றதுக்கா? எப்படி தான் இவ்வளவு பெரிய்ய்ய்ய பிஸ்னஸ் மேக்னட் ஆனீங்களோ?" என்று ய் ல் அழுத்தம் கொடுத்துக் கேட்டாள்.

இந்த கேள்வியை வேறு எவராலும் அவனிடம் அவ்வளவு எளிதாக கேட்டிருக்க முடியாது. அப்படியே கேட்டிருந்தாலும், அதன் பின் விளைவுகள் கடுமையாகவே இருக்கும் என அவனைப் பற்றி அறிந்த அனைவருக்குமே தெரியும். ஆனால், தன் மனதிற்கினியவள் கேட்கும் போது அவனால் கோபப்பட முடியவில்லை. மாறாக, அவள் கேள்வியையும் அவள் கேட்ட விதத்தையும் ரசித்தான்.

அஜய்யும், "சரிங்க மேடம்,வேற என்ன செய்யனும். நீங்களே சொல்லுங்க" அவளிடமே சரணடைந்தான்.

சஹானாவும், "அப்படி வாங்க வழிக்கு, என் அண்ணாக்கு கால் பன்னுங்க, இந்த என்கேஜ்மெண்ட் பத்தி பேசுங்க, ‘இது பார்த்ததும் யாழினிக்கும் இதே மாதிரி பண்ணனும், அவளுக்கு ஒரு நல்ல வரன் பார்த்து பண்ணனும்னு சொல்லுங்க, உடனே அவன் சைலண்ட் ஆகிருவான்"என்க

அஜய்யும், "ஏன்?" என்று கேட்க, சஹானாவோ தன் தலையில் அடித்தவாறே,

"
நான் உங்களைப் பார்த்து கேட்ட கேள்வி தப்பே இல்லை. பின்ன, அவனுக்கும் தங்கச்சினு நான் ஒருத்தி இருக்கேன்லா? அவனும் அதை நினைப்பான்ல?" என்று கேட்டாள்.

"ரைட்டு..."

"நான் ஏண்டா எங்க யாழிக்கு வெளியே மாப்பிள்ளை தேடனும். நீ தான் இருக்குறியே. நீயே என் தங்கச்சியை கட்டிக்கோனு டைரெக்டாவே கேளுங்க." சஹானா தன் ஆலோசனைகளை அள்ளி வீச,

அஜய்யும், "ஓ..." என்று இழுத்தான்.

"பிகாஸ், சுத்தி வளைத்துப் பேசுவதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் கூட செட் ஆகாது, ஒன்லி ஆக்சன்" என்று சிரிக்க, அந்த கள்ளம் கபடமற்ற சிரிப்பில் தானும் கலந்துகொண்டான்.

"எப்படி என் ஐடியா?"என்று தன் லெஹங்காவில் இல்லாத காலரைத் தூக்கிவிட,

அவனோ, "க்ரேட்..செம்ம ஐடியா" புருவம் உயர்த்தி அவளை பாராட்டினான்.

சஹானா, "சும்மா மச்சான் மச்சான்னு கூப்பிடுறதை உண்மையில் மச்சானாக உறவாக்கிக்கோங்க ரித்வி" என்று கூற, அவளுடைய பிரத்யேகமான அந்த ரித்வி என்ற அழைப்பில் நெகிழ்ந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,

"அப்போ நான் கார்த்தியை உண்மையில் மச்சான் ஆக்கிக்கலாம்னு சொல்ற.. ரைட்..?" என்றான் இரட்டை பொருள்பட.

"டெஃபெனைட்லி..."

அஜய்யோ, "அப்போ இதில் உனக்கு சம்மதம் தானே?"என்று அவளது கண்களைப் பார்த்தபடியே கேட்க,

"செர்ட்டன்லி"

அஜய்,"ஆர் யூ ஷ்யூர்?"என்று மறுபடியும் கேட்க,

சஹானா தோள்களைக் குலுக்கியபடியே,

"
இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்?"என்றாள் கடுப்பாக.

"
அப்போ உங்கப்பா எனக்கு மாமனார், ரைட்...?"என்று கேட்க,

சஹானாவும், "ஆமா" என்றாள் பொறுமையை இழுத்து பிடித்தபடி.

"அப்போ..." என்று, அவன் அடுத்த கேள்வியை துவங்கும் முன்,

"
போதும் ரித்வி, மொத்தமாக இன்னைக்கே கேட்டு முடிச்சுராதீங்க. நாளைக்கும் மிச்சம் வைங்க. நீங்க மாமானு கூப்பிடுவீங்களோ,மச்சான்னு கூப்பிடுவீங்களோ, இப்போ என் வயிறு என்னை கூப்பிடுது, நான் போய் அதை கவனிக்கனும், உங்ககிட்ட பேசனும்னு இந்த மிதுவை வேற ஷ்யாம் அண்ணாகூட அனுப்பி வச்சிருக்கேன். மிது என்ன பாடுபடுறாளோ? முதல்ல ஷ்யாம் அண்ணாக்கு கால் பண்ணுங்க, ஒரு தலைவலி மாத்திரை வாங்க இவ்ளோ நேரமானு கொஞ்சம் கோபமா கேளுங்க,பார்க்கலாம்" என்று கூற, அவனோ தன் காதலியின் அபிநயங்களின் தொலைந்துவிட்டான்.

முன்னே சென்று கொண்டிருந்தவள் திடீரென நினைவு வந்தவளாக,

“அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்” என்று திரும்பிய வேகத்தில் அஜய்யின் மேல் மோதிக்கொண்டாள். மோதியதில் அவன் நெஞ்சிற்க்கு இடம்பெயர்ந்த தன் தலையைப் பிரித்தவாறே,

பார்த்து வரமாட்டீங்களா?” என்றாள் கடுப்புடன்.

“நீ இப்படி திடீரென்று திரும்புவேன்னு எனக்கென்ன அசரீரியா ஒலிச்சது? சரி சொல்லு, என்ன முக்கியமான விஷயம்?”

சஹானாவோ, “அண்ணாகிட்ட பேசுறப்போ என்னையும் உங்க கம்பெனிக்கு வேலைக்கு அனுப்ப சொல்லி ஏதாவது பேசுங்களேன்... ப்ளீஸ்” என்று மூக்கைச் சுருக்கிக் கேட்டாள்.

கேக்கலாம். பட்,என் ஆஃபிஸ்ல இப்போ வேலை இல்லையே... என்ன பண்ணலாம்?”என்று அஜய் தன் ஒற்றை புருவத்தை நீவியபடியே சிறிது யோசிக்கும் போதே அங்கே ஆதித்யாவுடன் ரீனா, ஷ்யாம் மற்றும் மிதுனா வந்தனர்.

மிதுனா சஹானாவிடம் மாத்திரையைக் கொடுக்க அவளோ, “அந்த தலைவலி போய்ட்டுடிஎன்று சொல்லிவிட்டு மிதுனாவிற்கு தலைவலியை ஏற்றிவிட்டு,

“நீங்க சொல்லுங்க அஜய்..” என்று அவனை உலுக்கினாள்.

அஜய், “ஆக்ச்சுவலா சஹி, எங்களுக்கு இப்போதைக்கு ஆட்கள் தேவையில்லை தான், கொஞ்சம் வெளிநாட்டு ப்ரோஜெக்ட்ஸ் சைன் பண்ணிருக்கோம்.உன் ஃப்ரெண்ட்ஸ நாங்க அப்பாயிண்ட் பண்ணிருக்குறது கூட அதுக்கு தான். இதுவரை நானும் ஷ்யாமும் ஒண்ணா தான் பார்த்தோம், இனி வொர்க்கை டிவைட் பண்ணிக்கிற பார்க்குற மாதிரி ப்ளான் பண்ணிருக்கோம். ஸ்ரீராம் கூட இனி ஷ்யாம்க்கு மட்டும் வொர்க் பண்ண சொல்லிருக்கேன்” என்று நீளமாக பேசினான்.

சஹானா, “அப்போ உங்களுக்கு...?”என்று கேட்க,

அஜய்,”என்ன எனக்கு?”அவனும் திருப்பி கேட்க,

“ஷ்யாம் அண்ணாவோடா பி.ஏ வாக இனி ஸ்ரீ இருப்பாங்க, அப்போ உங்களுக்கு யார் பி.ஏ?”

“அதைப் பத்தி இன்னும் யோசிக்கலை. ஈவன் நியூ டீம் என்னோட அண்டர்ல தான் இருக்கும்.ஸோ, நானே மேனேஜ் பண்ணிக்குவேன்.”என்று அஜய் கூற,

உங்களுக்கு பி.ஏ வாக நான் வரட்டுமா,ப்ளீஸ் ரித்வி?” என்று அவள் கேட்க, அனைவரும் அதிர்ச்சியாக,

“எனக்கா?”என்றான் அஜய்.

சஹானா, “ஆமா. நான் வர்றேனே, நான் இப்படி படபடனுபேசுவேன் தான், பட் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரி யா மாறிடுவேன்” என்க,

ஷ்யாமோ அவனிடம், “அவ சின்ஸியராக இருப்பா தான், ஆனா அவ இருந்தா நீ ஒழுங்கா வேலைப் பார்க்கனுமே!என்றான் ரகசியமாய்.

அஜய், “இல்ல சஹானா,உன்னோட படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காதே!”என்று மறுக்க,

சஹானா, “அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீங்க அண்ணாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசுங்க” என்றாள்.

ஆதி, ”டேய்,இங்க யாருடா எம்.டி? யாரு யாருக்கு வேலை கொடுக்குறாங்க? ஒன்னுமே புரியலை” என்று கடுப்பாக கூற,

அஜய்யோ அசடு வழிந்தவாறே, சஹானாவிடம், “ஓகே சஹி, பி.ஏ போஸ்ட் கன்ஸ்ட்ரக்சன் ஃபீல்ட் மாதிரி கிடையாது. ரொம்ப வொர்க் இருக்கும், நான் என்ன.....” என்று பேச ஆரம்பித்தவனைத் தடுத்த சஹானா,

அதெல்லாம் தெரியும் ரித்வி. உங்க மெயில் செக் பண்ணனும், மீட்டிங் ஷெட்யூல், இப்படி நீங்க என்ன சொன்னாலும் செய்யனும், சிம்ப்ளா சொல்லனும்னா, உங்க பின்னாடி நாய்க்குட்டி மாதிரி சுத்தனும். ஆம் ஐ ரைட்?”என்று முடித்தாள் ஒரு நீண்ட விளக்கத்துடன்.

இருவரது பிரத்யேக அழைப்புகளும், இருவரின் வெகு எதார்த்தமான உரையாடலும், அவர்களது அனுமதி இன்றி ஏதோ ஒன்றை அவர்களது நட்புகளுக்கு உணர்த்தியது.

ஷ்யாமோ, “இப்படி ஒரு இன்டர்வியூவை நான் பார்த்ததேயில்லைடா. என்னடா, அப்பாயிண்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ண சொல்லவா?”என்று அஜய்யிடம் கேட்க,

இது என்ன கேள்வி அண்ணா? நான் செலக்டட் தானே அஜய்?”என்று சஹானா கேட்க, அஜய்யும் ஆமென்று தலையாட்டினான்.

ஆதி, “மச்சான், ஒரே நாளில் இப்படி டோட்டலா ஃப்ளாட் ஆகுவேன்னு சத்தியமா நான் நினைச்சிக்கூட பார்க்கலடா” என்றான் ஆண்கள் இருவருக்கு மட்டும் கேட்கும்படி.

சஹானா, “பட் எனக்கு இந்த அப்பாயிண்மெண்ட் ஆர்டர், சேலரிலாம் வேண்டாம், ஜாப் மட்டும் போதும்” என்றாள்.

ஷ்யாம் ஏதோ கூற முயல அவனை தடுத்த அஜய்,

“அப்போ டைம் பாஸ்க்கு தான் வேலைக்கு வர்றேன்னு சொல்றீங்களா?” என்று கேட்டான். அவன் குரலில் இருந்த மாற்றத்தை கண்டுகொண்ட சஹானா,

அப்படி டைம்பாஸ்க்கு போகனும்னா என் அப்பாகூடவே போயிருப்பேனே!"என்க,

அஜய், "தென் ஒய்?"

சஹானா, "சம்பந்தமில்லாத வேலையாக இருந்தாலும் இது என் ஃபீல்ட்” என்றாள் உறுதியாக.

அஜய், “உங்க அப்பா ஆஃபிஸ் போனால் நீங்க சி.இ.ஒ ஆகலாமே?”என்று கேட்க,

சஹானா, “அஃப்கோர்ஸ்... பட் அது என் ஃபீல்ட் இல்லையே. ஆர்க், என்னோட விருப்பத்திற்காக என் ஃபேமிலியோட எதிர்ப்பை மீறி நான் தேர்ந்தெடுத்த ஃபீல்ட். உங்களுக்கு பி.ஏவாக ஆனாலும் அங்கே எனக்கு பெரிதா ஒரு வேலையும் இருக்காது, ஸோ, கன்ஸ்ட்ரக்சன் வேலையும் கூடவே பார்த்துக்கலாமே! இது அப்பாகூட போனால் முடியுமா?” என்றாள்.

அஜய், ”தெளிவு தான்” என்க,

சஹானா, ”என் ஃப்ரெண்ட்ஸும் அங்க இருப்பாங்க அண்ட், இப்போ நான் அப்பாகூட ஆஃபிஸ் போனா, என் அண்ணா கார்மெண்ட்ஸ்க்கு வரனும்னு நினைக்கமாட்டான், அவன் அந்த சாஃப்ட்வேரையும், நான் இந்த கார்மெண்ட்ஸ்யும் கட்டிட்டு அழனும்னு நினைப்பான், அதான்” என்று தோல்களைக் குலுக்கினாள்.

ஷ்யாம், “அதில் ஒண்ணும் தப்பில்லையே. உனக்கு ஆர்க் பிடிச்ச மாதிரி அவனுக்கு சாஃப்ட்வேர்"என்க,

சஹானா, "நோ அண்ணா, அவனுக்கு சாஃப்ட்வேரை விட அட்மினிஸ்ட்ரேஷன் தான் இண்ட்ரெஸ்ட், ஹீ வில் டூ ஸோ மச் பெட்டர் தேன் மீ" என்றாள்.

அஜய், "அதெல்லாம் சரி தான், இண்டர்வியூ ப்ரொசிஜர்ஸ் இருக்கு, சோ,ஆஃபிஸ் வா, மீதி அங்கே பார்த்துக்கொள்ளலாம்"என்றான்.

"ஹேய், இப்போ இங்கே ஏதாவது ப்ரொசிஜர் படி நடந்துதா?" என்று ரகசியமாய் ரீனு மிதுனாவிடம் கேட்க, அதை வெளிப்படையாகக் கேட்டு அஜய்யின் முறைப்பைப் பெற்றான் ஆதித்யா.

அந்நேரம் அங்கே சஹானாவின் அன்னையிடம் பேசிக்கொண்டிருந்த அஜய்யின் தாய் அவனை அழைத்தார்.

சஹானா, “ரித்வி,அந்த ஆன்ட்டி உங்களை கூப்பிட்றாங்க, கூடவே ரேனுவும் இருக்கு, இந்த ரேனு பார்வையே இன்னைக்கு சரி இல்லைடி, வாங்க போலாம்" என்று அவள் கூற அவளுடன் சென்றனர்.

தன் அன்னையுடன் இருந்த சஹானாவின் அன்னையைக் கருத்தில் கொண்டு, அவரிடம் அஜய் நலம் விசாரித்துக் கொண்டிருக்க, ஷ்யாம் அனைவரையும் அறிமுகப்படுத்தினான்.

தன் தாயின் கண் ஜாடையில், 'எனக்கு பசிக்குது, இப்போ பார்த்து இந்த ரேனு ஆசீர்வாதம் வாங்க சொல்லுது' என்று மனதில் தன் தாயை வசைபாடியவாறே சஹானா அஜய்யின் தாயிடமும், ஷ்யாமின் தாயிடமும் காலில் விழுந்து வணங்கினாள்.

அஜய்யின் தாய் ராகிணியோ, "அழகா இருக்குற சஹானா, மனசுக்கு பிடிச்ச நல்ல மணாளன் கிடைப்பான், நல்லா இரும்மா" என்று அவளுடைய நெற்றியில் இதழ் பதித்தார். அப்போது கண்கள் தாமாகவே அஜய்யைப் பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். திவ்யாவிற்கோ சஹானாவைப் பார்த்ததும் பிடித்துவிட்டது.

திவ்யா, "சானு,எங்க வீட்டிற்கு எப்போ வருவ?" என்று கேட்க,

"
சீக்கிரமே வர்ரேன் அக்கா"என்று சொல்லிவிட்டு வைஷுவுடன் மழலை உலகத்தில் ஐக்கியமாகிவிட்டாள், இடைப்பட்ட நேரத்தில் பெரியவர்களுக்குள் நிகழ்ந்த பேச்சுவார்த்தை தெரியாமல்....!

வைஷு, உன்ன நான் எப்பிதி கூப்பித?”என்று கேட்க,சஹானா பதில் சொல்லும் முன்பாகவே திவ்யா,

“வைஷு பாப்பா, இவங்களை சித்தினு கூப்பிடனும், சரியா?” என்று சொல்லிக் கொடுத்துவிட்டு,

“என்னை அக்கானு தானே கூப்பிட்ட?”என்று கூறினாள்.

திவ்யாவின் மகன் ஆதர்ஷ்ஷோ,

“அப்போ நீங்க எப்போ எங்க சித்தப்பா கூட எங்க வீட்டுக்கு வருவீங்க?”என்று கேட்டான்.

சஹானாவோ,”ஆது குட்டி, அது என்ன உங்க சித்தப்பா கூட தான் வரனுமா? வேற யாருடனும் வரக்கூடாதா?”என்று கேட்க,

ஆதர்ஷ்,”என் ஃப்ரெண்ட் கவின் தான் சொன்னான், சித்தினா, அவங்கள சித்தப்பா தான் வீட்டுக்கு கூப்பிட்டு வருவாங்கனு. சித்து, நீங்க எப்போ சானு சித்தியை நம்ம வீட்டுக்கு கூடிட்டு வருவீங்க, அவங்க அழகா டான்ஸ் ஆடுறாங்க. சீக்கிரம் கூப்பிட்டு வாங்க”, என்று சஹானாவிடம் ஆரம்பித்து அஜய்யிடம் சென்று முடித்தான்.

சஹானாவோ, அம்மா, பூஜா கூப்பிடுறா. நான் போய்ட்டு வர்றேன்” என்று தோழிகளுடன் நகர, அஜய்யும் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

ரேணுகா,”தப்பா நினைச்சுக்காதீங்க. இது தான் இவக்கிட்ட பிரச்சனை, இன்னும் குழந்தைத்தனமாகவே இருக்கா, எல்லாம் அவங்க அப்பாவும் அண்ணனும் கொடுக்கிற செல்லம் தான்.” என்று கடிந்து கொள்ள,

ராகிணியோ,”எனக்கு அது தான் சஹானாகிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க எல்லாருக்குமே விருப்பம் தான், அஜய்கிட்ட மட்டும் தான் பேசனும், நீங்க வீட்டுக்கு போய்ட்டு எல்லார்கிட்டயும் கலந்து பேசிட்டு சொல்லுங்க. ஒரு நாள் வீட்டுக்கு வந்து பேசலாம்” என்றார்.

தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த ரகுராமின் அருகில் சென்ற அஜய்,

"ஹாய் அங்கிள், எப்படி இருக்கீங்க?" என்றான்.

ஜெயப்பிரகாஷ்,"டேய் ரகு, மீட் மை சன் அஜய் ரித்விக்.." என்று ஆரம்பித்தவரை தடுத்த அஜய்,

“அப்பா, அங்கிளை எனக்கு நல்லாவே தெரியும், அன்னைக்கு ஏர்போர்ட்டில் கூட பார்த்தேன்" என்றான்.

அஜய்,"அங்கிள், இஃப் யூ டோண்ட் மைண்ட், உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?" என்று கேட்க,

ரகுராம்,"கேளுங்க" என்றார்.

அஜய்,"சஹானாவை எங்க ஆஃபிஸ்க்கு வேலைக்கு அனுப்புறீங்களா? பி.ஆர்க் வேற படிச்சிருக்காங்க. நல்ல டேலண்ட் இருக்கு. அதுக்கும் மேல ஃபீல்ட் இண்ட்ரெஸ்ட் ரொம்பவே இருக்கு, அதான் அவங்ககிட்டயே கேட்டேன். அவங்க 'அப்பாவும் அண்ணனும் சரி சொன்னா வர்றேனு சொன்னாங்க. அதான் உங்ககிட்ட கேட்கிறேன் அங்கிள்" என்று கூற அவரோ, "வீட்டில் பேசிட்டு சொல்றேன்ப்பா" என்றார்.

அதன் பின்னர் சாப்பிட்டுவிட்டு, மணமக்களுடன் சேர்ந்து புகைப்படங்களும், கைகளை தலைக்கு மேலே உயர்த்தி சுயமிகளும் எடுத்துக்கொண்டனர். அதே நேரம் மிதுனாவை ஷ்யாமின் அன்னையிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தவும் சஹானா மறக்கவில்லை. அழைத்து அனைவரும் விடைபெறும் நேரம் சஹானாவும் பொதுவாக, "நீங்களும் வாங்க எங்க வீட்டுக்கு" என்று கூற,

ராகிணியும் அவள் உச்சி முகர்ந்து, "கூடிய சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்திட்டு வர்றோம்மா" என்று விடைபெற்றனர்.

நினைவுகள் தொடரும்.....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.....!

"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் ஆறாம் நினைவை ஆயுத பூஜை ஸ்பெஷலாக உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.




கடந்த பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி....!

ஜெஃப்ரி......
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-7
21275

வீட்டிற்கு வந்ததும், களைப்பில் இருந்த சஹானா உறங்கச் சென்றுவிட, அவள் உறங்கிவிட்டதை அறிந்த ரேணுகா தன் கணவனிடம் பேசச் சென்றார்.

ராகிணி தன் மகன் அஜய்க்கு சஹானாவை பெண் கேட்டதை கூற, அதைக் கேட்ட அவரது கணவர்

ரகுவோ, "ஆனால் ஜெய் என்கிட்ட நம்ம கார்த்திக்கிற்கு அவனோட பொண்ணு யாழினியை சம்பந்தம் பண்ணலாமானு தான் கேட்டான்" என்றார்.

ரேணுகா, "நீங்க என்ன சொன்னீங்க?"என்க,

ரகுராம், "நான் என்ன சொல்ல? அந்த பொண்ணுக்கு இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு. சோ,கார்த்திக் வரட்டும். அவன்கிட்ட பேசலாம்னு சொன்னேன்" என்றார்.

ரேணுகா, "எனக்கும் அந்த பொண்ணு யாழினியை ரொம்பப் பிடிச்சிருக்குங்க."என்று கூற,

ரகுராம், "நமக்கு பிடிக்குறது அப்புறம் இருக்கட்டும்.கார்த்திக்கு பிடிக்கனுமே?" என்க,

ரேணுகா, "பேசாமல் நம்ம பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாமா?அவங்க குடும்பத்தில் எல்லாருமே நல்ல மாதிரி பழகுறாங்க. அதிலும் அவங்க அம்மா ராகிணிக்கு நம்ம சானுவை ரொம்ப பிடிச்சிருக்குங்க" என்றார் பெருமையாக.

ரகுராம், "நானும் கவனிச்சேன், எனக்கும் அஜய் மேல நல்ல அபிப்ராயம் இருக்கு. சானுகிட்ட கேட்கலாமா?" என்று கேட்க,

ரேணுகாவோ தன் தலையில் அடித்தபடி,

“கிழிஞ்சது போங்க, அவளே வேலைக்கு போகனும்னு அடம்பிடிச்சுட்டு இருக்கா, இப்போ போய் அவகிட்ட கல்யாணம்னு சொன்னா அவ்வளவு தான். கண்டிப்பா ஒத்துக்கமாட்டா. வேப்பில்லை எடுக்காத குறையா ஆடி முடிச்சுருவா” என்றார்.

ரகுராம், “அஜய்யும் சஹானாவை என்கிட்ட வேலைக்கு அனுப்புறீங்களானு கேட்டாரு" என்று யோசனையுடன் கூற,

ரேணுகா, “அப்படியா?ஆனா அவரு எப்படினு தெரிஞ்சிக்காம நாம முடிவெடுக்க வேண்டாம். நீங்க எதுக்கும் கார்த்திக்கிட்ட பேசிப்பாருங்களேன்" என்றார்.

ரகுராம், "நானும் அதுதான் யோசிக்குறேன்" என்றபடி கார்த்திக்கு அலைபேசியில் தொடர்புகொண்டார்.

அந்நேரம் அர்ஜூனுடன் காணொளி தொடர்பில் இருந்தவன் தந்தையின் அழைப்பை ஏற்று, "ஹலோ அப்பா, எப்படி இருக்கீங்க?அம்மா,அம்மு எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்றான் ஆர்வமுடன்.

அவனின் அழைப்பில் நெகிழ்ந்தவராய்,

"நாங்கள் எல்லாரும் நல்லா இருக்கோம்பா.நீ எப்படி இருக்க? வேலை எல்லாம் எப்படி போகுது?" என்றார்.

கார்த்திக், "ஃபைன், நல்லா போகுது" என்றான்.

ரகுராம், "கார்த்திக், உன் ஃப்ரெண்ட் அஜய் எப்படி? அவங்க வீட்டில் நம்ம சானுவை பொண்ணு கேக்குறாங்கப்பா"என்றார்.

கார்த்திக், "வாவ்... சூப்பர்பா. அஜய் ரொம்ப நல்ல டைப். ஒரு கெட்டப்பழக்கமும் கிடையாது. என்ன, முன்கோபம் மட்டும் கொஞ்சம் அதிகம். மற்றபடி, ஹீ இஸ் வெரி ஹொனெஸ்ட் பெர்சன். ஜாயிண்ட் ஃபேமிலி வேற.எனக்கு டபுள் ஓகே”என்றான் குதூகலமாய்.

ரகுராம் யோசனையில் இருக்க கார்த்திக்கே தொடர்ந்தான்,

“அப்பா, உண்மையா சொல்லப்போனா, நானுமே அஜய்க்கு தான் சஹானாவை கேக்கனும்னு நினைச்சேன். நீங்க தயங்காம,சீக்கரம் ஓகே சொல்லிருங்க" என்றான்.

ரேணுகா, "கார்த்தி,அவங்க சானுவை மட்டும் கேட்கலைடா. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற மாதிரி கேக்குறாங்க."என்க,

ரகுராமும், "ஜெய், யாழினியை உனக்கு கல்யாணம் செய்துவைக்க விரும்புறான்" என்றார்.

கார்த்திக், "அந்தப் பொண்ணு இப்போ படிக்குறா. படிச்சு முடிக்கட்டும். முதல்ல நம்ம சானு-அஜய் கல்யாணத்துக்கு ஓகே சொல்லுங்க" என்றான்.

ரேணுகா, "ஏண்டா,அந்த பொண்ணு யாழினி அழகா தானே இருக்கா, அப்பறம் என்ன உனக்கு?டேய், யாரையாவது விரும்புறியா?"என்று நொடித்துக்கொள்ள,

கார்த்திக், "அம்மா, நான் யாழினியை வேண்டாம்னு சொல்லலை. பட் எனக்கு இப்போ வேண்டாம்னு தான் சொல்கிறேன். நான் அஜய்கிட்ட பேசிக்குறேன். நீங்க சானுகிட்ட சொல்லிட்டீங்களா?" என்றான்.

ரேணுகா, “இல்லைடா,அவ கண்டிப்பாக ஒத்துக்கமாட்டா. நீ தான் அவகிட்ட பேசனும்." என்று கூற,சற்று யோசித்த கார்த்திக்,

"இப்போ நீங்க சானுகிட்ட எதுவும் பேச வேண்டாம்மா. அவ வேலைக்கு போக ஆசைப்படுறா,இப்போதைக்கு அவ அஜய்கிட்டயே வேலைக்கு போகட்டும், அதுக்கு மட்டும் ஓகே சொல்லிருங்க." என்றான்.

ரேணுகா, “கார்த்தி, அவ இன்னும் குழந்தைதனமாகவே பிகேவ் பண்ணுறா. அது மட்டுமில்லாமல் மாப்பிள்ளைகிட்டயே இவளை வேலைக்கு அனுப்புறது எனக்கு என்னவோ சரியா படலை" என்றார் கவலையுடன்.

கார்த்திக், அம்மா, நான் என்னை விட ஒரு படி மேலேயே அஜய்யை நம்புறேன்மா, தைரியமாக அனுப்புங்க. அப்புறம், இப்போதைக்கு கல்யாண விஷயத்தை ஹோல்ட் பண்ணி வைங்க" என்று கூறிவிட்டு மேலும் சில விஷயங்களையும் பேசிவிட்டுத் தொடர்பைத் துண்டித்துவிட்டு அஜய்யைத் தொடர்புகொண்டான்.

மெத்தையில் படுத்திருந்த அஜய்க்கு உறக்கம் வருவதற்குப் பதிலாக,சஹானாவின் முகம்தான் வந்து போனது.

'எவ்வளோ அழகா இருந்தாள்.....! துறுதுறுன்னு அங்கேயும் இங்கேயும் அலை பாய்ஞ்சுட்டு இருந்த கண்களாலேயே என்னை மயக்கிட்டா..! ஒரு டீன் ஏஜ் பையன் மாதிரி மனசுக்குள்ள வர்ற இந்த குறுகுறுப்பு....! நிச்சயமா இது வயசுக்குண்டான கவர்ச்சி இல்ல....! இப்படி பார்த்த உடனே ஒரு பொண்ண காதலிக்க ஆரம்பிச்சிடுவேன்னு நேத்து வரைக்கும் யார் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன். கண்டிப்பா இது காதல்தான்....! நிச்சயம் சஹானா என்னவள்தான்....! என்று தன் மனதுடன் உடையாடிக் கொண்டிருந்தவனின் சிந்தனையைக் கலைத்தது கார்த்திக்கின் பெயருடன் இசைத்த அவனுடைய அ(தொல்)லைபேசி...!

அஜய், ”ஹலோ மச்சான், ஹவ் ஆர் யு டா?” என்று கேட்க, முன்னர் பலமுறை அவனை அப்படி அழைத்திருந்தாலும், ஏனோ அஜய்க்கு இப்போது அந்த அழைப்பு மிகவும் பிடித்திருந்தது.

கார்த்திக், "ஐயம் குட் டா. நீ எப்படி இருக்க? ஏதோ பேசனும்னு மெஸேஜ் பண்ணியிருந்த. சொல்லுடா" என்றான்.

அஜய், "கார்த்தி, நான் உங்கிட்ட ஒண்ணு கேட்பேன்.தப்பா நினைச்சுக்க மாட்டியே?" என்று கேட்க,

கார்த்திக், "என்னடா பீடிகைலாம் பலமா இருக்கு,சொல்லு. என்ன விஷயம்?"என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்க,

அஜய், "அர்ஜூன்-பூஜா என்கேஜ்மண்ட் பார்த்ததும் எனக்கும் இதைவிட க்ராண்டா ஒரு நிச்சயதார்த்தம் நடத்தனும்னு ஆசை வந்துட்டுடா" என்றான்.

"வாவ்..சூப்பர் மச்சான். நீதான்டா ஓகே சொல்லமாட்டேங்குற. வீட்டில் ரெடியா தான் இருக்காங்க" என்று கார்த்திக் கேட்டதும், தன் மனக்கண்ணில் மின்னிய சஹானாவின் மதிமுகத்தை எண்ணி புன்னகைத்தவாறே,

"
டேய், நான் எனக்கு சொல்லலடா, அதெல்லாம் பொறுமையா பார்த்துக்கலாம். நான் இப்போ பேசுறது என் தங்கை யாழினி பற்றி. யாழினிக்கு மாப்பிள்ளை பார்க்கனும்னு நாங்க டிசைட் பண்ணிருக்கோம்டா”என்று அஜய் கூற, கார்த்தியோ அமைதியாய் இருந்தான்.

“பட், எனக்கு நீ தான் பெட்டர் சாய்ஸ். என் தங்கையை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமாடா?" என்று தன் மனதிற்கினியவள் கூறியது போலவே நேரடியாகவே கேட்டுவிட்டான்.

கார்த்திக்கும், "ஏன்டா உனக்கு இந்த அவசரம்? முதல்ல அவ படிப்பை முடிக்கட்டும், அப்பறம் பார்த்துக்கலாம்" என்று கூற,

அஜய்யும், "நான் உன்னை இப்போவே மேரேஜ் பண்ணிக்க சொல்லலையே, உன்னோட ஒபீனியன் தான் கேட்கிறேன்" என்றான்.

கார்த்திக் மனதில் ஒரு முடிவுடன்,

"எனக்கு யாழினியை பிடிச்சுருக்கு அஜய், ஆனா, இப்போவே எதையும் கன்ஃபார்ம் பண்ண வேண்டாம்” என்றான்.

அஜய்யோ குழப்பத்துடன்,

“ஏன்டா?”என்று கேட்க,

“அஜய், தொழிலதிபர் ரகுராமோட வளர்ப்பு மகன் கார்த்திக்கா உன் வீட்டுக்கு பொண்ணுக் கேட்டு வர்றதை நான் விரும்பலை.நான் தொழிலதிபர் கார்த்திக்கா நான் உன் வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும் அஜய். புரிஞ்சிக்கோடா”என்க,

அஜய்யும் அதை ஆமோதிக்க, கார்த்திக்கே தொடர்ந்தான்,

“அதுக்கு முன்னாடி நான் என் தங்கச்சி சஹானாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளெல்லாம் இருக்கு, சஹானா படிச்சு முடிச்சுட்டாடா. இப்போ கூட அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்குனு வீட்டில் சொல்றாங்க. ஆனா,என் தங்கைக்கு நான் தான் மாப்பிள்ளை பார்ப்பேன். நான் பார்த்தால் தான் அவளே சம்மதிப்பேன்னு வேற சொல்லிருக்கா...." என்று பேசிக்கொண்டே சென்றான்.

கார்த்திக் பேசுவதைப் பார்த்து, எங்கே தான் கண்டெடுத்த சொர்க்கம் கை நழுவி சென்றுவிடுமோ என்று அஞ்சிய அஜய், கார்த்திக்கின் பேச்சை இடைநிறுத்தி,

"கார்த்தி, ஐயம் இன் லவ் வித் சஹானா" என்றான் கண் இமைக்கும் நேரத்தில்.

கார்த்திக் இதை ஓரளவு எதிர்ப்பார்த்திருந்தாலும் மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில்,

"அஜய், வாட் டூ யூ மீன்?"என்று கேட்க,

அஜய்யோ, "எஸ் கார்த்தி. நேத்து வரை அவளோட வாய்ஸ் மட்டும் தான் ரொம்ப தொல்லை பண்ணுதுனு நினைச்சிருந்தேன். பட்,இன்னைக்கு தான் புரிஞ்சுகிட்டேன் நான் அவளை லவ் பண்றேன்னுஎன்றான் நண்பனிடம்.

“இப்போ அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கனும்னு நீ வார்த்தையால சொல்றதை கூட என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியலை கார்த்தி. அவ பாடின ஒவ்வொரு வரியும் கூட எனக்காகவே அவ பாடின மாதிரி தோனிச்சுடா. நான் உன் தங்கச்சியை.. நோ, என் சஹியை நல்லபடியாக பார்த்துக்குவேன் கார்த்தி. ஆனால், யாழினியை மேரேஜ் பண்ணிக்க சொல்லி நான் உன்கிட்ட கேட்டது என்னோட காதலுக்காகனு நீ நினைக்க வேண்டாம். என் தங்கச்சிக்கு நீ தான் பெர்ஃபெக்ட் மேட்ச்னு தோணுச்சி. பட், உனக்கு யாழினியை கல்யாணம் பண்ண விருப்பமில்லன்னா கூட என்கிட்ட நேரடியாகவே சொல்லலாம். உன்னை கண்டிப்பா நான் கட்டாயப்படுத்தவே மாட்டேன். அதேநேரம், யாருக்காகவும் என் சஹியை நான் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்" என்று அந்த யாருக்காகவுமில் அழுத்தம் கொடுத்து கூறினான்.

நண்பனின் பேச்சில் இருந்த உறுதியைக் கண்டு மனதிற்குள் மெச்சிய கார்த்திக்,

"சானுகிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்க,

இல்லைடா, நேத்து வரைக்கும் லவ் பிஃபோர் மேரேஜில் நம்பிக்கை இல்லாத நான், இன்னைக்கு லவ் அட் ஃப்ர்ஸ்ட் சைட்னு சொல்றதை என்னாலயே நம்பமுடியலை. அவ எப்படிடா நம்புவா?கொஞ்ச நாள் போகட்டும். சொல்லனும். கார்த்தி உனக்கு என் மேல கோபமில்லையாடா?” என்று அஜய் கேட்க,

கார்த்திக்கோ, “இப்போவாது கேட்கனும்னு தோணிச்சே” என்று சிரிப்புடன் கூறிவிட்டு,

ஆக்ச்சுவலா அஜய், நான் இத கொஞ்ச நாளைக்கு முன்னாடியே யோசிச்சுட்டேன், இடையிலே இந்த ப்ராஜெக்ட், அதான் பேசமுடியலை. நானே இந்தியா வந்ததுக்கு அப்பறம் இது விஷயமா உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன், பட் நீ முந்திட்ட. ஆனா அவகிட்ட சொல்றதுக்கு முன்னாடியே என்கிட்ட ஏன்டா சொன்ன?” என்று கார்த்திக் கேட்டதற்கு

நீ தானே உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கனும்னு சொன்ன? அதான், அப்பறம் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க எல்லா தகுதியும் என்கிட்ட இருக்கு, என்னை வேண்டாம் சொல்ல உன்கிட்ட எந்த காரணமும் இருக்காது, ஆனால் சஹானாகிட்ட காரணம் இருக்கலாம்ல?” என்று எதிர்கேள்வி கேட்டான்.

கார்த்திக்கோ, ”சஹானா யாரையும் லவ் பண்ணுறானு நினைக்குறியா அஜய்?” என்று சற்று கோபத்துடன் கேட்க,

அஜய், “அப்படி நினைக்கலடா, அவ யாரையுமே லவ் பண்ணல, அது எனக்கு நல்லாவே தெரியும். அந்த சிரிப்பிலும், பேச்சிலும் கள்ளத்தனம் இல்லை, குழந்தைத்தனம் தான் இருக்கு, ஐ லைக் தட்” என்று மனமுவந்து கூற கார்த்திக்கின் கோபம் தணிந்தது.

அதை உணர்ந்த அஜய்,

ஆனா கார்த்தி, காதலுக்காக சஹானா என்கிட்ட என்ன சொன்னாலும் என்னால செய்யமுடியும், வீட்டோட மாப்பிள்ளையா உன் வீட்டுக்கு வர்றதைத் தவிர” என்றான் தீர்க்கமாக.

அஜய்யின் கூற்றிலிருந்த நிதர்சனத்தை உணர்ந்த கார்த்திக் வார்த்தைகளின்றி அமைதியாக இருக்க, அஜய்யே தொடர்ந்தான்,

“நோ ஃப்ராப்ளம் மச்சான், எனக்கு என் குடும்பமும் வேணும், என் சஹியும் வேணும். அதுக்கு கொஞ்சம் வெயிட் பண்ணனும், அவ மனசில் நான் இடம்பிடிக்குறவரை. அதுவரைக்கும் இதைப்பத்தி நீ இப்போதைக்கு வீட்டில் எதையும் பேசாதடா. அவளை என்கிட்ட வேலைக்கு அனுப்ப சொல்லி அங்கிள்கிட்ட பேசுனேன்டா, இப்போ நீ அவளை வேலைக்கு அனுப்பசொல்லு, மத்ததை பின்னாடி பார்த்துக்கலாம்.” என்று நீளமாக பேசி முடித்தான்.

கார்த்திக்கும், “அப்பா சொன்னாங்கடா, நானும் அனுப்புங்கனு சொல்லிட்டேன். ஆமா,என்ன ஜாப்?” என்று கேட்க

அஜய், “பி.ஏ ஜாப் தான், அந்த ஜாப் கண்டிப்பா வேணும்னு அவளே சொல்லி, அவளே அப்பாயிண்ட் ஆகிட்டா” என்று கூறி சிரித்தான். பின் நண்பர்கள் வேறு சில கதைகளை பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்தனர்.

காதல்...!


பேரன்பு...!


நினைவுகள் தொடரும்....!

 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் ஏழாம் நினைவை உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

கடந்த பதிவிற்கு பின்னூட்டம் கொடுத்த அனவருக்கும் நன்றி...!

ஜெஃப்ரி...!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-8
21396

அன்று புதன்கிழமை

சஹானா தன் தோழிகளுடன் ‘RS CONSTRUCTIONS’-ன் கருத்தரங்கு அறையினுள் அமர்ந்திருக்க, அவ்வறையின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தனர் அஜய் மற்றும் ஷ்யாம் தன் உதவியாளர் ஸ்ரீயுடன்.

நீலநிற காற்ச்சட்டை, லாவண்டர் நிற சூட் அணிந்து அகல நடையுடன் அவ்வறையினுள் பிரவேசித்தவனின் ஆறடி உயரம், உடற்பயிற்சி செய்த கட்டுமஸ்தான தேகம், கறுத்த பஞ்சாய் கேசம் அடர்ந்திருக்க, மனதில் நினைப்பதை பறைசாற்றி அனைவரையும் ஈர்க்கும் காந்த கண்கள், நீண்ட கூரிய முனையுடன் சிறுநாசி மூக்கு, கோவைப்பழம் போன்று சிவந்த உதடுகள், சிங்கத்தின் மீசை போன்ற கருத்த அடர்த்தியான மீசை, அழகிய நீள்வட்ட முகம், தோள்கள் உயர்ந்து படர்ந்த மார்புகள் என்று சாமுத்ரிக லட்சணம் அமையப் பெற்ற ஆணழகணாய் மங்கையவளைக் கவர, அவளோ முதன்முறையாகப் பார்ப்பது போன்று தன் கயல்விழிகளை அகலமாக விரித்து மெய்மறந்துப் பார்த்திருந்தாள் சஹானா....!

முன்னர் இரண்டு முறை சந்தித்திருந்தாலும், முதல்முறை தன்னை அலுவல் உடையில் சந்திப்பதால் வந்த பிரம்மிப்பே என்று சஹானாவின் பார்வையின் பொருளை உணர்ந்த அஜய்,தனது ஆளுமை அவளை பாதிக்கின்றது என்பதில் சிறு மகிழ்ச்சி பெற்றவனாய், அவளை சீண்டுவதற்கு மனம் தூண்டினாலும் அருகிலிருக்கும் ஸ்ரீயை கருத்தில் கொண்டு ஒரு சிறு புன்னகையுடன் அவர்களை அமரும்படி பணித்தான்.

சிலையென நின்றிருந்த சஹானாவின் கரத்தை அழுத்திய மிதுனா,

உனக்கென்னடி ஆச்சு?உட்க்காரு” என்று அமரவைத்தாள்.

ஷ்யாம் கல்லூரித் தொடர்பாக அவர்களிடம் கலந்துரையாட, அனுமதி பெற்று உள்ளே நுழைந்த அலுவலக உதவியாளர் நிஷா என்ற பெண், நால்வருக்குமான பணி நியமன ஆணைகளை அஜய்யிடம் சமர்பிக்க, அஜய் அதை நால்வருக்கும் வழங்கினான்.

காலேஜ் இல்லாத நேரம், இங்க வந்து நீங்க ட்ரைனிங் பீரியடா கத்துக்கலாம். இதனால, உங்க ஸ்டடிஸ்க்கு பாதிக்கப்படாத மாதிரி பார்த்துக்கோங்க. உங்களோட எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் வருகிற மண்டே உங்களோட ட்யூட்டி இங்க ஸ்டார்ட் ஆகிருக்கனும்.தேர் ஷுட் பீ நோ எக்ஸ்கியூஸ்” என்று ஷ்யாம் உறுதியாக சொல்லிவிட,

நீயா பேசியது என்ற தோரணையில் ஷ்யாமைப் புதிதாக நோக்கினர் பெண்கள் நால்வரும். அஜய் அவர்களது பணி தொடர்புடைய குறிப்புகள் அடங்கிய கோப்புகளை சஹானாவைத் தவிர மூவருக்கும் கொடுத்துவிட்டு,

உங்களுக்குத் தேவையான எல்லா இன்ஸ்ட்ரக்சன்சும் இதுல இருக்கு. மிதுனா அண்ட் ரீனா உங்க ரெண்டு பேருக்கும் ஷ்யாம் கைடு பண்ணுவார். பூஜா, உங்களுக்கு நிஷா கைடு பண்ணுவாங்க. அப்புறம் சஹானா உங்களுக்கு....” என்று அவன் கூறி முடிக்கும் முன்பாக அஜய்யின் பேச்சில் இடையிட்டு,

“எனக்கு ஸ்ரீ அண்ணா சொல்லிக்கொடுப்பாங்க. அதானே?” என்றாள் சஹானா.

அவளை முறைத்த அஜய்,

கண்டிப்பா இல்லை. உனக்கு எல்லாமே நான் தான் சொல்லிகொடுப்பேன், ஃபால்லோ மீ” என்று அந்த எல்லாமில் அழுத்தம் கொடுத்துக் கடுப்புடன் சஹானாவிடம் கூறிவிட்டு, பூஜா மற்றும் அலுவக உதவியாளர் நிஷாவையும் உடன் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

தனதறைக்கு வந்த அஜய், நிஷாவிடம் பூஜாவிற்கு அளிக்கவேண்டிய பயிற்சி விபரங்களைக் கூறிவிட்டு அவர்களை அகற்ற, நிஷாவோ அதிருப்தியுடன் அஜய்யையும், அவனுடன் நின்றிருந்த சஹானவையும் திரும்பிப் பார்த்தவாறே நகர்ந்தாள்.

தனதறையில், தன்னைத் தவிர அனைத்தையும் ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்த தன்னவளின் அழகை, தன்னை மீறி ரசிக்கத் தொடங்கினான் அஜய். அழகிய வேலைப்பாடு அமைந்த இளஞ்சிவப்பு வண்ண சுடிதார் அணிந்து, தலைக்குக் குளித்து உலர வைத்தக் கூந்தலை தளர்வாக பின்னலிட்டு, கண்ணுக்கு உறுத்தாத மிதமான ஒப்பனையோடு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் சஹானா. கண்ணியத்துடன் உடை அணிந்து, துப்பட்டாவைக் கூட ஒரு வித நேர்த்தியோடு அவள் அணிந்திருந்த விதம் அஜய்யைக் கவர்ந்தது. அவளைக் காதலுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன்,

"
அஜய்....!"என்ற சஹானாவின் அழைப்பில் தன்னை சுதாரித்துக் கொண்டு,

“சொல்லு சஹானா”என்றான்.

“நான் என்ன சொல்ல, நீங்க தான் சொல்லனும் அபௌட் மை வொர்க் டீடெயில்ஸ்..” என்று சஹானா கேட்க, அவளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகள் பற்றியும், அதன் நுணுக்கங்கள் பற்றியும் தெளிவாகக் கூறிக்கொண்டிருந்தான் அஜய். செயலாளர் வேலை, அதுவும் அவ்வளவு பெரிய நிறுவனத்தின் M.D யின் செக்ரெட்டரி எனும் போது வேலை சிறிது கடினம் தான். இருப்பினும், சஹானா இயற்கையிலேயே புத்திசாலி என்பதால் அனைத்தையும் துடிப்புடன் கற்றுக் கொண்டாள்.

“எனி வே, வெல்கம் டு அவர் RS CONSTRUCTIONS” என்று தன் கரங்களை அவள் புறம் நீட்டினான் குதூகலமான குரலில்.

அவனைப் பார்த்து சிறு புன்னகையை சிந்தியவள்,

“தேங்க் யூ அஜய், நீங்க மட்டும் அண்ணாகிட்டயும் அப்பாகிட்டேயும் பேசலைனா இதலாம் பாஸிபிள் இல்ல, நான் வேலைக்கு போறதப் பத்தி யோசிச்சுக் கூட இருக்க மாட்டேன்....தேங்க் யூ அகைன்...” என்றவாறே தன் கரங்களை அவனுக்குக் கொடுத்தாள்.

அவளை ரசனையாகப் பார்த்தவன்,

"
உன் தேங்க்யூவை வேற விதத்தில, வேணும்ங்கற போது வாங்கிக்கறேன்..” என்றான் புரியாத குரலில்.

தன்னை ஒரு மாதிரியாக பார்த்தவளைக் கண்டு,

"
இல்ல...உன் தேங்க்யூவை வொர்க்கில் காண்பிக்க சொன்னேன்” என்று சமாளித்தான் அஜய்.

"ஷ்யூர் ரித்வி....!”என்றாள்.

“ஆமா, ஆஃபிஸ்க்கு எப்படி வருவ, டூவீலர் இருக்கா?” என்று அஜய் கேட்க,

டூ வீலர் இருக்கு. பட், அண்ணா தர மாட்டான் காலேஜ் லீவ்னா மார்னிங் அப்பா கூட வருவேன். ஹாஃப்டே காலேஜ்னா பூஜாவோட வந்துருவேன்”, என்று கூற இந்த கள்வனோ,

அவங்க வராத நாள் கூட நீ வர வேண்டிய இருக்குமே…? நான் வேணும்னா கார்த்திக்கிட்ட டூ வீலர் தர சொல்லவா?” என்று இழுத்தான்.

சஹானாவோ, “என்னை தனியா கார்ல அனுப்பவே அவன் அவ்வளவு யோசிப்பான், இப்போ அண்ணா இங்க வேற இல்ல. சோ, கண்டிப்பா சம்மதிக்கவே மாட்டான். ட்ரான்ஸ்போர்ட்லாம் ப்ராப்ளமில்ல அஜய், டிரைவர் கூட வந்திருவேன்” என்றாள்.

அஜய்யோ, ”அப்போ நானே வந்து பிக் பண்ணிக்கறேன், கார்த்திக்கிட்ட நான் சொல்லிக்கிறேன். அண்ட், என்கிட்ட இருந்ந்து எப்போ கால் அண்ட் மெஸேஜ் வந்தாலும் கொஞ்சம் ரெஸ்பான்ஸ் பண்ணு. இப்போ இந்த பாண்ட்ல சைன் பண்ணு”, என்று அவளை யோசிக்கவிடாமல் அடுக்கிக்கொண்டே சென்றான்.

அவன் கொடுத்த படிவத்தைப் படித்துப் பார்ததும் கோபத்துடன் தன்னுடன் சண்டையிடுவாள் என்று அஜய் எதிர்ப்பார்க்க, அவளோ பொறுமையாக முழுவதையும் பரிச்சையின் வினாத்தாள் போன்று படித்துப் பார்த்து கையெழுத்திட்டாள்.

அஜய், ”ஃபுல்லா படிச்சுட்டு தானே சைன் போட்டஎன்று கேட்க,

சஹானா, “ஆமா அஜய், ரெண்டு வருஷம் அப்பா கார்மெண்ட்ஸ் பத்தியும், அம்மா மேரேஜ் பத்தியும் பேசமாட்டாங்க. நிம்மதியா இருக்கலாம்” என்றாள் சிரித்துக்கொண்டே.

“ஏன் மேரேஜ் பண்ண பிடிக்கலையா?” என்று அஜய் தன் உரையாடலைத் தன் மனதிற்கினியவளுடன் தொடர்ந்தான்.

“பிடிக்கலனு இல்ல...” என்று அவள் இழுக்க,

“வேற..?”

“இப்ப மேரேஜ் வேண்டாம்னு தோணுது”என்க,

“ஏன்?”

“கொஞ்ச நாளாவது வொர்க் பண்ணனும்னு ஆசையா இருக்கு”

“அதுக்காக மட்டும் தானா? ஏன் கேட்குறேன்னா, இப்போ எல்லாம் மேரேஜ்க்கு அப்பறமும் லேடீஸ் வொர்க் பண்ணுறாங்களே, அதான் கேட்டேன்”என்க,

“அதுக்கு அந்த மாதிரி மாமியார் வீடு அமையனுமே....?”என்று அவளும் பதிலுக்குக் கேட்க,

“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்” என்றான் அஜய்.

“அண்ட் மேரேஜ் பண்ணிகிட்ட என் வீட்டைவிட்டு இன்னொரு வீட்டுக்குப் போகனும்.” என்று கூற,

“சோ,வாட்? என்னைக்குநாளும் நடக்குறது தானே”என்று அஜய் தன் தோல்களைக் குலுக்க,

“என்னைக்குநாளும் நடக்குறது தான், ஆனா அதுவரை கொஞ்ச நாள் தாய்வீட்ட நல்ல அனுபவிச்சுட்டு போகலாம்னு தான்” என்று அவளும் பதிலுக்குத் தோல்களைக் குலுக்கினாள்.

“நல்ல அனுபவி. எனிவே, பிறந்தவீட்ட மாதிரி புகுந்த வீடு அமைய வாழ்த்துக்கள்” என்று மறுபடியும் வாழ்த்து கூற,

“அது அமையும்போது சொல்லுங்க” என்றாள் சிரித்தபடியே.

அதான் அமைஞ்சிடுச்சே' என்று மனதிற்குள் பேசியபடியே அவனும் அந்த சிரிப்பில் இணைந்துகொண்டான்.

விடைபெறும் நேரம் அஜய் நினைவு வந்தவனாக,

“ஆமா சஹானா, எனக்கு என்ன மார்க்?”என்றான்.

சஹானாவும் புருவத்தைச் சுருக்கியபடியே,

“என்ன மார்க்?”என்று அவனிடமே திரும்பக் கேட்டாள்.

“கான்ஃப்ரெண்ஸ் ஹால்ல நான் வரும் போது அப்படிப் பார்த்தியே, அதான் என்ன மார்க்னு கேட்டேன்என்று கேட்டான் சிரித்தபடியே.

சஹானா நாக்கை கடித்துவிட்டு அசட்டு சிரிப்புடன் திரும்பிக் கொள்ள, அந்தக் கள்வனோ,

“கண்டிப்பா ஃபெயில் ஆகியிருக்கமாட்டேன். எபவ் ஆவெராஜா? டிஸ்டிங்ஷனா?”என்று கண்ணடித்தபடியே தன்னவளிடம் வினவ,

அவளும் குறும்புடன்,

“அதை உங்க ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் நிஷாகிட்ட கேளுங்க, ஷீ வில் கிவ் யூ எக்ஸ்ட்ரா க்ரெடிட்” என்று கண்ணாடித்து கூறிவிட்டு வெளியேறினாள்.

இதுதான் அஜய் ரித்விக்....! தன்னவளை அவளுடைய ஒப்புதலுடனே அவன் வட்டத்திற்குள் இழுத்துக் கொண்டான்.

இனி, அவள் வாழ்க்கையில் அவனறியாமல், அவனது அனுமதி இல்லாமல், எதுவும் நடக்காது என்பதை அறியாதவளாய் மின்மினியாய் பறந்துக் கொண்டிருந்தாள் சஹானா.....!

மின்மினிப்பூச்சி தூரத்திலிருந்துப் பார்ப்பதற்க்கு தனி அழகு தான்.அதுவே உரியவனின் காதல் என்கிற பாதுகாப்பானக் கரங்களுக்குள் அடைபடுமா? இல்லை,விடுபட்டு செல்லுமா?என்பதற்கான பதிலைக் காலம் தான் சொல்ல வேண்டும்..!

காதல்...!


தாய்மையுணர்வு...!


நினைவுகள் தொடரும்....!

 
Status
Not open for further replies.
Top