All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெஃப்ரியின் "இதயம் மீட்டும் நினைவலைகள்" - கதை திரி

Status
Not open for further replies.

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் எட்டாம் நினைவை உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!


ஜெஃப்ரி......!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-9

21504
நாட்கள் அழகாக நகர, இதோ சஹானா வேலைக்கு சேர்ந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. அஜய் வேலையில் புயலாக சுழன்று அடித்தானென்றால், சஹானாவோ அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்கத் தடுமாறினாள்.

ஒரு வேலையை அவள் செய்யும் போதே அடுத்த நான்கு வேலைகளை அவளிடம் அடுக்குவான் அஜய். எல்லாமே அவன் விரல்நுனியில் இருக்கவேண்டும் என்று விரும்பும் அஜய், சஹானாவிற்கும் அவ்வாறே பயிற்சியளித்தான். அவனது வேகத்தைப் பார்த்து வெளியில் அவனை திட்டிக்கொண்டாலும், மனதிற்குள் அவனை மெச்சினாள்.

அவனது அறைக்கு வெளியில், மிக அருகிலே ஒரு கண்ணாடித் தடுப்பு ஏற்படுத்தி அவளை தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தான். கண்களைப் பார்த்து மட்டுமே பேசும் அஜய்யின் கண்ணியம் சஹானாவை மிகவும் கவர்ந்தது.

ஆனாலும், அவள் வேலையில் முனைப்புடன் ஈடுபட்டிருக்கும்போது யாரோ தன்னை பார்வையால் துளைப்பது போன்ற உணர்வு அவளுல் அடிக்கடி எழுந்தது. அப்படி கவனிக்கின்ற போது, ’ஒரு வேளை இவனாக இருக்குமோ?’ என்று ஒரு சிறு ஐயத்துடன் அவனைப் பார்த்தால், அந்நேரம் அவனோ மும்மரமாக தன் மடிக்கணிணியில் எதையோ செய்துக்கொண்டிருப்பான்.

அவளுக்கு எங்கே தெரியப்போகிறது, அவள் முன் கண்ணியம் காப்பவன், அவள் வேலையில் மும்மரமாக இருக்கும் போது மட்டுமே அஜய் அவளை அணு அணுவாக ரசிக்கிறான் என்பது.

*********

அன்று சனிக்கிழமை...

விடிந்த பின்பும் துயில் கொண்டிருக்கும் சஹானாவின் அலைபேசி இசைக்க, தூக்ககலக்கத்தில் அதை அணைத்துவிட்டு தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள். அதன் பின்னர் தாயின் அர்ச்சனையில் தாமதமாக எழுந்து, கீழே வந்து முகப்புக்கூடத்தில் இருக்கும் எவரையும் கண்டுகொள்ளாமல், அங்குள்ள நீள் சாய்விருக்கையில் அமர்ந்திருந்த தன் தந்தையின் மடியில் படுத்துக்கொண்டு,

"குட்மார்னிங்ப்பா. ரேனு, காஃபி..." என்று குரல் கொடுத்தாள்.

அவரோ அசடு வழிந்த படியே,

"சானுமா, எழுந்திருடா. சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா." என்று கூற,

"
ஏன்ப்பா? எங்கப்பா போறோம்?" என்று ஆவலுடன் கேட்டாள்.

அவள் தாய் ரேணுகா காஃபியை அவள் கையில் திணித்தபடியே,

"
நாங்க எங்கேயும் போகல. நீ தான் ஆஃபிஸ் போற. சீக்கிரம் கிளம்புடி", என்று அதட்டிவிட்டு சென்றார்.

சஹானாவோ, "அப்பா, வர வர உங்க வைஃப் சரியில்லப்பா, ஓவரா ரூல்ஸ் பேசுறாங்க, இதுக்கு அந்த ரித்வியே பெட்டர்", என்று காஃபியை ஒரு மிடறு குடுத்தவாறே நிமிர்ந்தவள், எதிரே இருந்த உருவத்தைப் பார்த்ததும் அதிர்ந்தாள்.

கைகள் அந்தரத்தில் தொங்க, தாய் கொடுத்த காஃபியை குடிக்க மறந்து, அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்திருந்தவளை காஃபியை பருகியவாறே கண்களால் அவளையும் பருகிக் கொண்டிருந்தான் அஜய்.

கனவென்று எண்ணியவள், இவன் ஒருத்தன் சும்மா சும்மா முன்னாடி வந்து படுத்துறான்என்று வாய்க்குள் முனகியபடியே கண்களைத் தேய்த்துக்கொண்டே,

அப்பா, அந்த சோபால யாராவது இருக்குறாங்களாப்பா?” என்று கேட்க, அவரோ,

அஜய் வந்து பத்து நிமிஷமாச்சுமா” என்றார் சிரித்துக்கொண்டே. அஜய்யோ அவளை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருக்க, அவளோ அதிர்ந்து,

எ..என்ன..ரித்..அ..அஜய்..திடீர்னு” என்று தந்தியடித்தாள்.

“ஏன் நான் உன் வீட்டுக்கு வரக்கூடாத சஹானா?”என்று அஜய் அவளிடம் கேட்க, அவள் பதிலளிகும் முன்,

“சானுமா, அஜய்க்கு இன்னைக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்காம். உனக்கு கால் பண்ணினாராம், நீ எடுக்கலனு உன்ன கூப்பிட வந்திருக்காரு, நீ போய் கிளம்புடா" என்று அவளின் தந்தை ரகுராம் கூற,

சஹானாவோ, “நான் எதுக்கு அஜய்?எனக்கு இதெல்லாம் பழக்கமில்ல” என்று தயக்கத்துடன் கூற, அதில் அஜய்க்கு சிறு கோபம் துளிர்த்தாலும், அதை முகத்தில் காட்டாது,

என்னோட பி.ஏ நீதானே, அப்போ கண்டிப்பா நீதான் என்கூட வரனும். ஏதாவது முக்கிய நோட்ஸ் எடுக்கவேண்டி வரலாம், அண்ட் ஸ்ரீராம் வேற ஊருக்குப் போயிருக்கான், பதினோறு மணிக்கு மீட்டிங்” என்று தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறு பேச்சை முடித்துக் கொண்டான். அவன் தோரணையே,’சீக்கிரம் கிளம்பிவாஎன்று ஆணையிட அவளும் எழுந்து சென்றாள்.

அவள் சென்ற பின், "அங்கிள், கார்த்திக் உங்ககிட்ட எல்லாம் சொல்லிருப்பான்னு நினைக்குறேன். அந்த உரிமையில் தான் இப்போ நான் சஹியை கூப்பிடுட்டு போறேன்.” என்று அஜய் கூற,

அவரும், “அந்த நம்பிக்கைல தான் நான் உங்ககிட்ட வேலைக்குனு சொன்னதும் சம்மதிச்சேன் என்று மறைமுகமாக தன் விருப்பத்தைக் கூறினார்.

சஹானாவின் தாய் ரேணுகா ஏதோ தன்னிடம் கூற விரும்புவதை உணர்ந்த அஜய்,

“ஆன்ட்டி, நான் சஹானாவை விரும்புறேன். பட், அவ எனக்கு தான்னு உரிமையான அப்புறம் தான் என் சுண்டுவிரல் கூட அவ மேலபடும். நீங்க என்ன தாராளமா நம்பலாம் ஆன்ட்டிஎன்று கூற,

அவரோ, என்ன தம்பி இப்படி பேசுறீங்க, நாங்க உங்கள முழுசா நம்புறோம். ஆனா, முறைனு ஒண்ணு இருக்குல்ல, உங்க அம்மா என்கிட்ட பேசிட்டாங்க தான். ஆனா, முறைப்படி பொண்ணுப் பார்த்து சின்னதா உறுதி செஞ்சிடோம்னா, எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் பாருங்க. அதுக்கு தான் சொல்றேன்", என்றார்.

அஜய்யோ அமைதியாய் இருக்க, அவரே தொடர்ந்தார்,

அதுக்கப்புறம் நீங்க அவளை எங்க கூப்பிட்டுட்டுப் போனாலும், யாரும் எதுவும் கேக்கவும் மாட்டாங்க. ஊரு, உலகமும் வசதி இருந்தும் ஒரே மகளை வெளிய வேலைக்கு அனுப்பிருக்காங்கனு தப்பா சொல்லாது...” என்று ரேனுகா தயங்கியபடியே கூற, அவர் கூறியதிலிருந்தே அதன் பொருளை அறிந்து கொண்ட அஜய்,

“சாரி ஆன்ட்டி, இப்படி ஒரு ஆங்கில்ல நான் யோசிக்கவேயில்ல, எனக்காக ஒரு பத்து நாள் பொறுத்துக்கோங்க. எனக்கு சஹானாகிட்ட இருந்து வேண்டியது அவளோட வாய்மொழி சம்மதம் மட்டும் தான். அது கிடைச்ச மறுநாளே எங்க நிச்சயதார்த்தம் தான்.. ஆனா,அவ எனக்காக மட்டுமே என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கனும், அதனால தான் அவள் என் பார்வைக்குள்ளயே வச்சி இருக்கேன்", என்று காதலுடன் மாடிப்படியிலிருந்து இறங்கிய சஹானாவைப் பார்த்துக்கொண்டே கூறினான்.

கூடத்திற்குள் நுழைந்த சஹானா, தாயின் வற்புறுத்தலில் பெயருக்குக் கொறித்துவிட்டு, பெற்றோரிடம் விடைபெற்று அஜய்யுடன் கிளம்பினாள்.

தன் மகிழுந்த்தில் ஏறி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன், அவளுக்காக முன்னிருக்கையின் கதவைத் திறந்துவிட, அவளும் இவன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுஎன்று தன் மனதில் எண்ணியவாறே அவனருகில் முன்னிருக்கையில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும்,

சீட் பெல்ட்” என்று அருகே சென்று கையை நீட்டினான்.

அவனது மூச்சுக்காற்று அவளது கன்னம் தீண்டி அவளை இம்சிக்க, அனிச்சை செயலாக விலகி அவளேப் போட்டுக்கொண்டாள். இவ்வாறு, மிக அருமையாகத் தொடங்கியது அவர்களது முதல் கா(தல்)ர் பயணம்....!

வணிகக்கூட்டம் நடக்கும் அந்த நவீன கருத்தரங்கு அறையிலும் சஹானாவைத் தன்னருகிலேயே அமர்த்திக்கொண்டான் அஜய். சஹானாவை யாரென்று கேட்ட தன் தொழிலுலக பிரமுகர்களுக்கும் அவளை தன் நெருங்கிய உறவினர் என்றே அறிமுகப்படுத்தினான். ஏனோ, சஹானவை தன் செயளாலராகக் காட்டிக்கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை.

சஹானாவுமே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அவளுக்கு நன்றாகவே தெரியும் ஏனென்று கேட்டாள், அதற்கென தகுந்த பதிலை வைத்திருப்பானென்று...!

சாப்பிட அழைக்கையில், சஹானா அஜய்யிடம்,

“ரித்.. அஜய்...நா..” என்று ஏதோ கூற வந்தவளை தடுத்து,

வரலைனா ஏன் ட்ரை பண்ணுற. நீ ரித்வினே கூப்பிடு”, என்றான்.

சஹானா, “நான் வேணும்னா அங்க லேடீஸ்கூட போய் சாப்பிடட்டுமா?” என்று கேட்க,

அஜய்யோ அவளை நோக்கி ஒரு ஆழ்ந்த பார்வையை வீசி,

“ஏன் என்கூட இருக்குறதுல உனக்கு விருப்பமில்லையா?” என்று இரு பொருள்படக் கேட்டான்.

“ஐயோ ரித்வி, நான் அந்த மீனிங்ல சொல்லல” என்று சஹானா பதற,

சே எஸ் ஆர் நோ. விருப்பமிருக்கா? இல்லையா?” என்று அஜய்யும் தன் வாதத்திலேயே பிடிவாதமாய் நிற்க,

சஹானாவோ வேறு வழியின்றி,

“விருப்பமிருக்கு” என்று தரையைப் பார்த்தபடியே சொல்ல,

அஜய் மனதில் நிறைந்த மகிழ்ச்சியுடன்,

“அப்போ ஏன் மத்தவங்கள பத்தி வொர்ரி பண்ணுற? நம்ம வாழ்க்கைய எப்போவுமே நமக்கு பிடிச்ச மாதிரி மட்டும் தான் அமைச்சிக்கணும். அதுல நமக்கு நெருங்கியவங்ககிட்ட வேணும்னா கருத்துக் கேட்கலாம். பட், முடிவு உன்னோடதா மட்டும் தான் இருக்கனும்.” என்று கூற, அவளோ இப்போ ஏன் இது?’ என்பது போல் பார்த்து வைக்க, அந்த பார்வையின் பொருள் புரிந்த ஆணவனோ,

“ஸோ, இப்போ என்கூடவே இரு. அண்ட் உன்ன வேற எங்க போகவும் நான் அல்லோவ் பண்ணமாட்டேன்” என்றான் அவள் கண்களை ஆழ்ந்துப் பார்த்து.

வாயால் மட்டுமின்றி, கண்களாலும், கைகளாலும் அவன் பேசிய தோரணையில் இமைக்க மறந்து அவனைப் பார்த்திருந்தாள் சஹானா. அதன் பின்னர், அவன் வார்த்தைகளைப் பின்பற்றியது போல அஜய்யுடன் சகஜமாக உரையாடி, அவனுடன் அமர்ந்தே சாப்பிட்டாள்.

தன்னுடன் வலிய பேசவரும் பெண்களைக் கூட தன் ஒற்றை பார்வையில் தள்ளி நிறுத்தும் அஜய், இன்று ஒரு பெண்ணுடன் வந்தது மட்டிமின்றி, வந்தது முதல் அவளுடனான அவனது நெருக்கம் அங்கிருந்த சிலரை கிசுகிசுக்க வைத்தது.

உணவருந்தி விட்டு கைகழுவ அஜய் சென்ற நேரம், அங்கு வந்த அவனுடைய தொழில்முறை நண்பர்,

ஹலோ மிஸ்டர் அஜய், உங்க பி.ஏ ஸ்ரீராம்க்கு என்னாச்சு? நியூ பி.ஏ அப்பாயிண்ட் பண்ணிட்டீங்க போல? அண்ட், நீங்க எப்படி ஒரு லேடிய பி.ஏவா நீங்க சூஸ் பண்ணீங்க?” என்று கேட்க,

அஜய்க்கு காலையில் ரேனுகா கூறியதே காதில் ஒலிக்க உடனடியாக,

“நோ மிஸ்டர் அஷோக். இப்போவும் ஸ்ரீராம் தான் என் பி.ஏ. அண்ட் ஷீ இஸ் நாட் மை பி.ஏ. ஷீ இஸ் மை ஃபியான்ஸி.” என்று சஹானாவைப் பார்த்தபடியே கூறியவாறே விடைபெற்றான் அஜய்.

எதிரிலிருந்தவனோ, கண்களில் காதலுடன் தன்னுடன் பேசிவிட்டு, சஹானாவை நோக்கி செல்லும் அஜய்யையே ஆராய்ச்சியாய் நோக்கியபடியே தன் அலைபேசியை இயக்கி யாருடனோ பேச ஆரம்பித்தான்....!

அஜய்யின் கைகளில் அவனது ஆடி கார் வெகு நிதானமாக ஓட்டி செல்ல, வெளியில் மழை பெய்துகொண்டிருந்தது. மழையின் வேகம் சற்று குறையவும் அதுவரை கண்ணாடிச் சாளரம் வழியாக மழையை ரசித்துக் கொண்டிருந்த சஹானா,

"ரித்வி... கொஞ்சம் நிறுத்துறீங்களா? மழையில நனையனும் போல ஆசையா இருக்கு. வீட்டுக்குப் போனா அம்மா விடமாட்டாங்க. ப்ளீஸ் ரித்வி, கொஞ்ச நேரம்." என்று தன் மூக்கைச் சுருக்கி கெஞ்ச, அந்த அழகில் மயங்கிய அவனும்,

"சரி போய்ட்டு சீக்கிரம் வா. டென் மினிட்ஸ் தான் டைம்", என்று அனுமதி கிடைத்ததும் சிட்டாகப் பறந்தாள்.

அஜய்யோ காரினுள் இருந்தபடியே, அங்கே இரு சிறுமிகளுடன் சேர்ந்து, மழையில் நனைந்தபடியே ஆடிக்கொண்டிருந்த தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

பத்து நிமிடத்தில் தானே சென்று அழைத்தும் வராதவளை, அவளது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கைப்பிடித்து இழுத்து வந்து, ஏறுஎன்று பணித்துவிட்டு ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தான். எதேச்சையாக, அவளைப் பார்த்தவன், மூச்சுவிட மறந்து அவளையே பார்த்திருந்தான்.

மழையில் நனைந்திருந்ததால் உடலோடு ஒட்டிய ஆடைகள் அவளது மேனியழகைப் படம் பிடித்துக் காட்ட, ஈர கூந்தலுடனும்,முகத்தில் ஆங்காங்கே மழைத்துளி ஒட்டியிருக்க தேவதையாக ஜொலித்தாள் சஹானா. பெரும்பாடுபட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, அவளிடம் பூந்துவாலையை தந்து துடைக்கும் படி பணித்தான். அவனை மேலும் சோதித்தது அவளின் இதழின் மேல் ஒய்யாரமாய் வீற்றிருந்த அந்த ஒற்றை மழைத்துளி.....! அதை தன் இதழ் கொண்டு பருக வேண்டுமென்று எழுந்த தாபத்தை அடக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான் அந்த இளம் தொழிலதிபன்....!

தங்களை கடந்து சென்ற வாகனத்தின் ஒலியில் தன்னை மீட்டுக் கொண்ட அஜய், மகிழுந்தை இயக்க முற்பட, சஹானாவோ அவனை மேலும் சோதிக்கும் வண்ணம்,

ரித்வி, நீங்களும் தான் நனைஞ்சிருக்கீங்க. துடைச்சிக்கோங்க", என்று தான் துடைத்த பூந்துவாலையை அவனிடம் தர, அதை வாங்கி தன் முகத்தைத் துடைத்தவன் நுகர்ந்தது என்னவோ அவளைத் தான். அந்த பூந்துவாலை முழுவதும் அவள் வாசனை...! அதைக் கொண்டு மீண்டும் தன்னை துடைத்து விட்டு, அதை பத்திரப்படுத்திய பின்பே பயணத்தை தொடர்ந்தான்.

வாகனம் சீரான வேகத்தில் பயணிக்க, இரு கைகளையும் தேய்த்துக்கொண்டே,

“ரொம்ப குளிருத்துல்ல ரித்விஎன்று கேட்க,

அவனோ அவளை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு,

ஹ்ம்ம்..! எனக்கு ரொம்ப சூடா இருக்குஎன்று முணுமுணுத்தவாறே, காரின் சூடேற்றியை இயக்கினான்.

சிறிது நேரம் மௌனமாய் கழிய,அஜய் சஹானாவிடம்,

“என்னைப் பத்தி என்ன நெனைக்குற சஹானா?" என்றான்.

“உங்களப் பத்தி நான் என்ன நெனைக்க? நீங்க ஒரு நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர்னு பொய் எல்லாம் சொல்லமாட்டேன்" என்று சிரித்துக்கொண்டே சஹானா கூற அவனும் குதூகலமாய்,

“ம்ம்..., அப்புறம்..." என்று இழுத்தான்.

எனக்கு அப்படியெல்லாம் சொல்லத்தெரியல ரித்வி. ஆனா நீங்க பெரிய பிஸ்னஸ் மேக்னட்டா இருந்தாலும், இந்த ஸ்மோக்கிங், ஆல்கஹால் மாதிரி கெட்டப்பழக்கம் இல்லாம என் அண்ணாவ மாதிரியே பெர்ஃபெக்ட்”என்று அவனுக்கு நற்ச்சான்றிதழ் வழங்க,

"
சரி தான்... அப்புறம்..."

"அப்புறம் ரித்வி, அத்தனை பொண்ணுங்கல்லாம் உங்ககிட்ட பேச வர்றப்போ, 'எட்டி நில்'னு ஒரு ஆக்சன் ஹீரோ லுக் விடுறீங்களே, அது செம்மஎன்று கூற,
அவனோ, "ஙே...." என விழிக்க, சஹானாவோ அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தாள்.

"ஆனா ரித்வி, அவங்கள எல்லாம் நோஸ் கட் பண்ணிட்டு, என்னை மட்டும் பக்கத்துல வச்சிட்டு, என்கூட சிரிச்சு சிரிச்சு பேசி, என்கூட ஷேர் பண்ணி சாப்பிட்டீங்களே அப்போ அவங்கள நீங்க பார்க்கணுமே...GEM (Ginger Eating Monkey) மாதிரி....சூப்பர் ரித்வி” என்று அவன் தோளில் தட்டி சிரிக்க, அவனோ மனதில், எதை கவனிக்கனுமோ அதலாம் விட்டுட்டு மத்ததெல்லம் நல்ல கவனிக்குறமாஎன்று தன்னவளுக்கு பாமாலை சூட்டினான்.

திடீரென்று அமைதியானவள், சற்று யோசித்துவிட்டு,

“ரித்வி, உங்கள கட்டிக்கப்போற பொண்ணு ரொம்ப லக்கி”, என்று மனதார கூறினாள் சஹானா.

“அப்படியா?” என்று சிரிப்புடன் கேட்டுவிட்டு,

“சஹி,ஏதோ ஒரு தேவைக்காக மேல விழுந்து பழகுற இந்த மாதிரி லேடீஸ வச்சு சொல்லக்கூடாது. இவங்கல்லாம் என்னோட லைஃப்ஸ்டைல்க்கு கொஞ்சம் கூட செட்டாக மாட்டாங்க”, என்று தன் தோள்களைக் குலுக்க,

சஹானாவும், “நானும் இவங்கள வச்சு சொல்லல. அருமையான பேரெண்ட்ஸ், ஜாலியான குடும்பம், அதுவும் ஜாயிண்ட் ஃபேமிலி வேற. ஆரோக்கியமான ஃப்ரெண்ஸிப், நேர்மையான பிஸ்னஸ், எல்லாத்துக்கும் மேல, இப்படி ஒரு பெர்ஸனாலிட்டி வாழ்க்கைத்துணையா கிடைக்குறது இந்த காலத்துல கஷ்டம். அப்படின்னா, உங்களக் கட்டிக்கப்போறப் பொண்ணு லக்கி தானே”, என்றாள். அவள் கூறும் போது தன்னுள் ஒரு ஏமாற்றம் பரவுவதை உணர்ந்தாள்.

“அப்படின்னா, அந்த லக்கியா ஏன் நீ இருக்கக்கூடாது” என்று பட்டென்று அஜய் கூற, அவளோ தான் சரியா தான் கேட்டோமாஎன்று அதிர்ந்து,

எ... என்ன சொன்னீங்க அஜய்” என்றாள்.

அஜய்யோ ஒரு பெருமூச்சைவிட்டு, கண்களை ஒரு நொடி மூடி திறந்து,

எஸ் சஹிமா, ஐயம் இன் லவ் வித் யூ... ஐ வாண்ட் டு க்ரோ ஓல்ட் வித் யூ... லெட்ஸ் ஸ்பெண்ட் தெ ரெஸ்ட் ஆஃப் அவர் லைவ்ஸ் டுகெதர்...” என்று தன்னருகில் இருந்த அவளது வலக்கரத்தை எடுத்து தன்னிரு கரங்களுக்குள் பொதிந்துகொண்டு,

சஹி, ஐ காண்ட் இமாஜின் எ லைஃப் வித்தவுட் யூ இன் இட்.” என்றான் கண்களில் காதலைத் தேக்கி......!

அஜய் ஒவ்வொரு வார்த்தைகளை உச்சரிக்கும் போதும், அவனது கண்களில் வழிந்த காதலில் இமைக்க மறந்து அவனையேப் பார்த்திருந்தாள் சஹானா. எதிர்பாராத நேரத்தில் அவளது வலது கையைப் பிடித்து அதில் தன் முதல் முத்திரையைப் பதித்தான் அஜய்...!

அஜய்யின் இதழின் குறுகுறுப்பில் தான் சஹானா என்ற சிலைக்கு உயிர் வர, அவனது கைகளில் அம்சமாய் அடங்கியிருந்த தன் கைகளை உருவிக்கொண்டு,

உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்ப்பார்க்கல அஜய். உங்கள நம்பித்தான எங்க வீட்டுல என்ன அனுப்பி வச்சாங்க.” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

அவனோ அவளது அனுமதியின்றி முத்தமிட்டதற்காக மட்டுமே வருந்த,

“நான் உங்கள லவ் பண்ணல அஜய். அந்த மாதிரி எண்ணத்துல தான் என்கிட்ட பழகியிருந்தீங்கன்னா தயவுசெஞ்சி மாத்திக்கோங்க” என்று அவனுக்கு முதல் தோல்வி பயத்தைக் காட்டினாள் சஹானா…!

“ஏன் சஹி?”

“பிடிக்கலை. ப்ளீஸ் இந்த பேச்சை இத்தோட விட்டுருங்க”

“ஏன்னு கேட்டேன். ஐ வாண்ட் ரீஸன்”

“அதான் பிடிக்கலைனு சொல்றேனே..”

“என்னை பிடிக்கலையா? காதல் பிடிக்கலையா?”

“எனக்கு லவ் பண்ண பிடிக்கல”

“ஸோ வாட்? என்னை பிடிச்சுருக்குல்ல?”

“கிளம்பலாம்”

“ஐ நீட் ஆன்ஸ்வர்”

“எனக்கு இப்போ வீட்டுக்குப் போகனும்” என்றாள் உறுதியாக.

“பதில் சொன்னா இங்கயிருந்து கிளம்பலாம். இல்லன்னா.... எனக்கொன்னும் ப்ராப்ளம் இல்ல.. மனசுக்கு பிடிச்ச பொண்ணு பக்கத்துல இருக்குறப்போ, இப்படியே பார்த்துகிட்டே இருக்குறது கூட நல்லா தான் இருக்கும்” என்று, தன் தாடையில் கைகளை ஊன்றி, தன்னவளை கண்களால் கைது செய்ய ஆரம்பித்தான்..

அவனது பார்வையின் குறுகுறுப்பைத் தாங்க முடியாத மங்கையவள்,

“என் அண்ணா சொல்றப் பையன தான் நான் கல்யணம் பண்ணிக்குவேன்” என்றாள்.

“அவ்வளவு தானே. உனக்கு என்ன பிடிச்சிருக்குனு சொல்லு, இப்போவே கார்த்திக்கிட்ட நான் பேசுறேன்”

“நோ. எனக்கு பிடிக்கலை. ப்ளீஸ் அஜய், என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க... என்னால உங்களை லவ் பண்ண முடியாது.. ப்ளீஸ்” என்று அழ ஆரம்பிக்க, அவனோ தன்னவளின் கண்ணீரைக் காணப் பிடிக்காமல் வாகனத்தை இயக்கினான்.

சஹானாவின் வீட்டில் அவளை இறக்கி விடும் வரை அங்கே மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது. சஹானா இறங்கும் நேரம் அவளிடம்,

“போய் குளிச்சுட்டு, ஹாட்டா ஒரு சுக்கு காஃபி குடிச்சுட்டு, எதையும் யோசிக்காம படுத்ததுத் தூங்கு. மண்டே பார்க்கலாம்” என்றான்.

அவளோ, “அது மண்டே...” என்று மறுப்பாக ஏதோ கூற வந்தவளைத் தடுத்தவன்,

எனக்கு ப்ரொஃபெஸனலும், பெர்சனலும் வேற வேற தான்... அண்ட் ஒன் மோர் திங், பாண்ட்ல சைன் பண்ணிருக்க, மறந்துறாத... டேக் கேர்” என்று அவள் பேச அனுமதி அளிக்காமல், அனைத்தையும் கூறினான்.

அவனது அக்கறையான பேச்சில் சஹானாவின் மனம் குளிர்ந்தாலும், வண்டியை ரிவர்ஸ் எடுத்தவன்,
ஓகே... சஹி பேபி, ஐ லவ் யூ” என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றான் அந்த காதல்காரன்...!

“பார்த்த நொடியே

கண்களுக்குள்

ஓவியமாய்…

காத்திருக்கும்

என் விழிகளும்

உன்னுடன் சேர்ந்து

காவியம் பாட....”


நினைவுகள் தொடரும்.......!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் ஒன்பதாம் நினைவை உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!


ஜெஃப்ரி......!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-10

21718

வீட்டிற்கு வந்த சஹானாவோ யோசனையிலும், தூக்கத்திலுமே அன்றையப் பொழுதைக் கழித்தாள். இரவு ஒரு தட்டில் இட்லியுடன் வந்த தாயைப் பார்த்ததும்,

பசிக்கலனு சொன்னேன்லம்மா” என்று கடிந்தாள்.

அவரோ, “அதெப்படி பசிக்காம இருக்கும், மழைல வேற நனைஞ்சிருக்கியே? அந்த அஜய் தம்பி போன் பண்ணி சொன்னாரு.. மழைல நனைஞ்சிட்டா, கஷாயம் வச்சுக்கொடுங்கனு. ஆனாலும் ரொம்ப நல்ல பையன்என்று அவனுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்க,

அவளோ, ’புள்ளையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறானா? இருடா, உன்னை நேர்ல வந்து கவனிக்குறேன்என்று மனதில் கறுவியவாறே தாய் ஊட்டிவிட்ட இரண்டு இட்லிகளை விழுங்கிவிட்டு நித்திரைக்குச் சென்றாள்.

******

RS Constructions…

ஷ்யாம், இந்த டிசைன் எப்படி இருக்குனு பாருங்களேன். நான் உங்ககிட்ட மார்னிங் காட்டுனத விட இது தான் பெட்டர்னு எனக்கு தோணுது” என்று மகிழ்ச்சியுடன் அவனருகில் சென்று தன் மடிக்கணினியை அவனுக்குக் காட்டினாள் மிதுனா.

ஷ்யாமோ, லேப்டாப்பை பார்வையிடுவதற்கு பதில், லப் டப்என்று தன் இதயத்தின் ஓசை அவனுக்கு கேட்குமளவுக்கு தன்னருகில் நெருக்கமாக இருக்கும் தன் மனம் கவர்ந்தவளையே பார்வையிட்டான்.

“எப்படியிருக்கு ஷ்யாம்? இது ஓகே தானே?” என்று மிதுனா தன் மடிக்கணினியை பார்த்தவாறே ஷ்யாமிடம் கேட்க, அதில் கலைந்தவன் அவசரமாக பார்வையை அந்த மடிக்கணினியில் பதித்துவிட்டு,

வாவ், சூப்பர் மிது, ரொம்ப நல்லா பண்ணியிருக்க. எஸ்பெஷல்லி, இந்த கலர் ஷேட்ஸ் ரொம்ப தூக்கலா இருக்கு.” என்று மனமார அவளைப் பாராட்டினான்.

அவனது பாராட்டை ஒரு சிறு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவள்,

“இதுக்கு எவ்வளவு செலவாகும்னு ஒரு எஸ்டிமேஷன் கூட போட்டுருக்கேன் பார்க்குறீங்களா ப்ளீஸ்...” என்று தயங்க,

ஷ்யாமோ, “யா ஷ்யூர் மிது. காட்டு, பார்க்கலாம்” என்றான்.

மிதுனாவும் ஒரு உற்சாகத்தில், அவன் புறம் குனிந்து, அவன் முன் இருந்த தன் மடிக்கணினியில், சற்று எட்டி அந்த கோப்புறையைத் தேடினாள்.

“இங்க தானே வச்சிருந்தேன், எங்க போச்சு” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள், இன்னும் கொஞ்சம் அவன் புறம் குனிந்து தேடினாள்.

தன் இருக்கையில் அமர்ந்திருந்த ஷ்யாமுக்கோ, இருப்பு கொள்ளவில்லை, தன்னிருக்கையின் பின்னாலிருந்து தன் புறம் குனிந்திருந்ததால், மின்விசிறியின் உபயத்தில் அவளது முடிக்கற்றைகள் வேறு காற்றில் பறந்து அவன் முகத்தில் விழுந்து அவனை மிகவும் சோதித்தது. மிதுனா தலைக்கு குளித்திருந்ததால், அவளின் கூந்தலிலிருந்து வந்த சீயக்காயின் நறுமணமும் அவன் நாசியில் புகுந்து அவனை இம்சித்தது...!

அந்த சிகைக்குள் புதைந்து போகும் வேட்கை அவனுள் எழுந்தது. மனதிற்குள், ’கொல்றாளே என்று ஷ்யாம் அலற, அதிலும் அச்சாரமாய், அவளிடமிருந்து வந்த பெண்மைக்குரிய பிரத்யேக வாசனை அவனை வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல, தன்னுள் தன்னவள் தோற்றுவிக்கும் அவஸ்தயை அடக்க தெரியாமல் தடுமாறினான் ஷ்யாம்..!

இங்கே ஒருவன் தன் அருகாமையினால் தடுமாறிக் கொண்டிருக்கின்றான் என்பதை அறியாத மிதுனாவோ,

“இது ஓகேவா ஷ்யாம்?சரியா பண்ணிருக்கேனா?” என்று கேட்க, அதில் பதில் வராமல் போக, அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் அமர்ந்திருந்த தோற்றத்தில், அவனின் தோளைத் தட்டி,

“ஷ்யாம், வாட் ஹாப்பண்ட்? இது ஓகேவா?” என்று மீண்டும் கேட்டாள் மிதுனா.

அதில் கலைந்தவன் தன் தலையை உலுக்கிகொண்டு,

“ரொம்ப நல்ல பண்ணிருக்க மிதுனா, கரெக்டா எஸ்டிமேட் பண்ணிருக்க. இத எனக்கு மெயில் பண்ணிரு, நான் கரெக்‌ஷன் பாத்துக்குறேன்என்று பாராட்டிவிட்டு, இதற்கு மேல் இங்கு இருந்தால் தன் கட்டுப்பாட்டை மீறி நிச்சயம் அவளை முத்தமிட்டுவிடுவோம் என்று அஞ்சியவனாய்,

அஜய்... நான் அஜய் வந்துட்டானானு பார்த்துட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்று அஜய்யின் அறைக்குள் நுழைந்து பெருமூச்சுவிட்டான்.

என்னடா இது எனக்கு வந்த சத்திய சோதனை...! இந்த முட்டக்கண்ணி, என்ன ஒரு வழி ஆக்காம விட மாட்டா போல இருக்கே….? இவ பக்கத்துல வந்தாலே பி.பி தானா எகிறுதே...!!' என்று அஜய்யின் அறையில் தனக்குள் பேசியபடியே அந்த அறையை நடந்தே அளந்து கொண்டிருந்தான் ஷ்யாம்,
அவகிட்ட சொல்லிறலாமா?’ என்று யோசித்தவன், ’வேண்டாம், இந்த முட்டக்கண்ணி கண்டிப்பா ஒத்துக்கமாட்டா.. தலையாலேயே நம்மள தண்ணிக் குடிக்க வைப்பா... பேசாமல், சானு சொன்ன மாதிரி அம்மாகிட்டயே சொல்லிரலாமா?’ என்று கண்மூடி யோசித்திருந்தவனின் சிந்தனையை தற்காலிக இடைநிறுத்தம் செய்தது அர்ஜூனின் வருகை....!

“வாடா அர்ஜூன், என்ன புதுசா இந்த பக்கம் உன் காத்து அடிக்குது?” என்று கேட்க,

இல்லடா, ஒரு கேஸ் விஷயமா இந்த பக்கம் வந்தேன். அதான் அப்படியே உங்களயும் பார்த்துட்டு போலாமேனு வந்தேன்...” என்று இழுக்க,

ஷ்யாமோ, யாரு நீ....?எங்கள பார்த்திட்டு போலாம்னு வந்த...? இத நம்ப சொல்றியா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கே சோர்ந்த நடையுடன் வந்தான் அஜய்.

அர்ஜூனைப் பார்த்தவன்,

“நான் சரியான அட்ரஸ்க்கு தான் வந்திருக்கேனா?” என்று வியக்க,

ஷ்யாமும், “நீ சரியா தான்டா வந்திருக்க. இவன் தான் நம்ம ரெண்டு பேரையும் பார்த்திட்டு போகலாம்னு வந்துருக்கானாம்டா” என்று கூற.

அர்ஜூனோ அசடு வழிய, ஷ்யாமோ ஏற்கனவே இருந்த கடுப்பில்,

“டேய் என்ன வெக்கமா? என்ன வேணாலும் பண்ணு, ஆனா அந்த கருமத்த மட்டும் பண்ணித் தொலைக்காதடா. பார்க்க சகிக்கல” என்று வாரியதோடு,

“நீ பார்க்க வந்த ஆளு ரைட் சைடு ஃபர்ஸ்ட் கேபின் தான். பட், விசிட்டர்ஸ் ரூம்க்கு கூடிட்டு போய் பேசு... கண்ஸ்ட்ரக்ஸன் கம்பெனிய காதலர் பார்க்கா மாத்திராதடா..” என்று மேலும் அவனை சீண்ட,

அர்ஜூனும் பதிலுக்கு, “அத நீ சொல்லாதடா. நீ விடுற ஜொல்லு பத்தி தான் சஹா சொன்னாலே...!” என்று இருவரும் ஒருவர் மாற்றி மற்றொருவரை சீண்டிக் கொண்டிருக்க, யாருக்கு வந்த விருந்தோ என்று மேசையின் மீதுள்ள தாட்கட்டையை (Paperweight) உருட்டிக் கொண்டிருந்தான் அஜய்...!

தன்னவளுடன் தன் முழுநாளை செலவிட போகிறோம் என்ற மகிழ்ச்சியில் காலையில் வெகு உற்சாகமாய் சென்ற அஜய்யின் சோர்ந்த முகம் நண்பர்கள் இருவரையும் பாதித்தது.

“என்னடா ஆச்சு உனக்கு?” என்று அர்ஜூன் அஜய்யின் தோளைத் தொட,

ஷ்யாமோ, “சானு எங்கடா? மீட்டிங்ல எதுவும் ப்ராப்ளமா?” என்று கேட்க,

அஜய்யோ, “மீட்டிங் நல்லா தான் போச்சு. நமக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைக்க 90% சான்ஸ் இருக்குடா” என்று ஷ்யாமின் இரண்டாவது கேள்விக்கு மட்டும் பதில் கூறினான்.

அஜய்யின் மனதைப் படித்தவாறு,

“சஹா எங்கடா?”என்று அர்ஜூன் கேட்க,

அவ வீட்ல விட்டுட்டு வந்துட்டேன்”என்று சுரத்தே இல்லாமல் பதில் சொன்னான்.

“சானு கூட என்ன பிரச்சனை?” என்று ஷ்யாம் தன் நண்பனின் மனம் உணர்ந்தவனாக கேட்க,

“அவகிட்ட ப்ரொப்போஸ் பண்ணிட்டேண்டா” என்று அஜய் கூற, நண்பர்கள் இருவரும் ஒரே நேரத்தில்,

வாட்?”என்று அதிர,

“தமிழ்ல தான சொன்னேன்... சஹானாகிட்ட என் காதலை சொல்லிட்டேன். போதுமாடா விளக்கம்?, என்றான் அஜய் கடுப்புடன்.

காதலியிடம் சம்மதம் கிடைக்கவில்லை என்பதை அவன் முகமே காட்டிக் கொடுக்க,

“நீ ஏன்டா அஜய் அவசரப்பட்ட? கொஞ்சம் தான் விட்டு பிடிக்கலாம்ல?” என்று அர்ஜுன் கேட்க,

அஜய்யோ கனவுலகத்தில் மிதந்தவாறு,

“அவள அப்படி பார்த்ததும் என்னால என்ன கண்ட்ரோல் பண்ணிக்க முடியலடா. அதான் சொல்லிட்டேன்” என்றான்.

“என்ன ரீஸன் சொல்றா?” என்று ஷ்யாம் கேட்க,

அவளுக்கு லவ் பிடிக்கலையாம்; அவ அண்ணன் பாக்குற மாப்பிள்ளைய தான் கட்டிக்குவாளாம். என்னை லவ் பண்ண மாட்டாளாம்”, என்றான் சலித்தவாறு.

அர்ஜூனோ, “ப்ச்.. இவ்ளோ தானா? கார்த்திக்கிட்ட பேசலாம்டா. கார்த்தி கண்டிப்பா ஓகே தான் சொல்லுவான்” என்க,

“அதெல்லாம் எப்போவோ பேசியாச்சுடா.” என்று அஜய் கூற,

“எப்போடா?” என்று இருவரும் கேட்க,

“ம்ம்... உன் என்கேஜ்மெண்ட் அன்னைக்கே அவன்கிட்ட சொல்லிட்டேன். அவனுக்கும் இதுல ஹாப்பி தான்... ஓகே சொல்லிட்டான்” என்று அசால்ட்டாக கூற,

அர்ஜூன், “மச்சான், நீயாடா இது?” என்று கூற,

அஜய்யும், “டேய் உங்களுக்கு நல்லாவே தெரியும் எனக்கு எதையுமே ஸ்ட்ரைட்டா பேசி தான் பழக்கம்" என்றான்.

“அப்புறம் உனக்கு என்னடா பிரச்சனை? கார்த்திக்கு இதுல விருப்பம்னா ஆல்மோஸ்ட் உன் கல்யாணம் நிச்சயமான மாதிரி தானே டா. பின்ன ஏன் நீ டல்லா இருக்க?" என்று அர்ஜூன் கேட்க, அஜய்யோ,

நோ அர்ஜூன், கார்த்திக்கு விருப்பம்னா என் கல்யாணம் நடக்கும் தான். பட், எனக்கு தேவை காதல்... அவளோட நேசம், பாசம்,அன்பு, கோபம், தாபம் எல்லாமே எனக்கு வேணும்டா. எனக்கு மட்டும் தான் வேணும்...” என்று சிறு குழந்தை போல அடம்பிடித்தான் அந்த காதல்காரன்...!

“வீட்ல சொல்லி பேசி முடி, அப்புறம் லவ் தானா வரும்” என்று தன் அனுபவப் பாடத்தை அர்ஜூன் கற்பிக்க,

ஷ்யாமும், “அனுபவம் பேசுதோ?” என்று திரும்பவும் அர்ஜூனை கலாய்க்க,

அஜய்யோ தீவிரமான குரலில்,

“நோ டா, ஐ வாண்ட் ஹெர் லவ். அவ என்னோட கைய பிடிச்சுட்டு என் வாழ்நாள் முழுக்க என்கூட டிராவல் பண்ணனும். இதுக்கு, அவ எனக்காக மட்டுமே என்னை கல்யாணம் பண்ண சம்மதிக்கனும். வேற யாருக்காகவும், எதுக்காகவும் இல்ல" என்றான் உறுதியுடன்.

ஷ்யாம், “அதுக்கு என்ன பண்ண போறடா?” என்று கேட்க,

அஜய்யோ கூலாக, “எதுவுமே பண்ணப்போறதா இல்லடா” என்றான் தன் கைகளை பின்னால் நீட்டி இருக்கையில் சாய்ந்தவாறு.

நண்பர்கள் இருவரும் புரியாது விழிக்க,

“சியர் அப் மச்சீஸ், லவ் ஒரு ஃபீலிங்டா... அது தானா உணரப்படனும். அது காம்ப்ரொமைசிங் மூலமாவோ, ரெக்கமண்டேஷன் மூலமாவோ வரக்கூடாதுடா என்று கூறிவிட்டு, ஒரு பெருமூச்சுடன்,

"என்னோட காதல அவகிட்ட சொல்லிட்டேன். அதை அக்செப்ட் பண்ணிக்குறதும், அவாய்ட் பண்ணிக்குறதும் அவளோட விருப்பம். என்னோட காதல் உண்மைன்னா, அதுவே அவளை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும். அதுவரை நான் அவளுக்காக வெயிட் பண்ணுவேன், எவ்வளாவு நாளானாலும் சரி” என்று கூறியவன்,

“அப்புறம், அவ மண்டே வேலைக்கு வருவா. அவள நான் டிஸ்டர்ப் பண்ண போறதுமில்ல. நீங்களும் எனக்கு சப்போர்ட் பண்றேனு அவகிட்டப் போய் எதையும் பேசவும் கூடாது... அவ அவளாகவே இருக்கனும். பட், என்ன நடந்தாலும் சரி, Mrs.அஜய் ரித்விக்... சஹானா மட்டும் தான்" என்றான் தீர்க்கமாக.

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒரு ஜோடி காதுகள் உள்வாங்கிக் கொண்டு யோசனையுடன் திரும்பியது தன் இருக்கைக்கு....!

“காதல்....

சுவையானது....!

சுமையாகத்

தோன்றினாலும்

அது சுகமானது....!”




நினைவுகள் தொடரும்.....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் பத்தாம் நினைவை உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.



கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!


ஜெஃப்ரி......!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-11

21805

விரல்கள் கணிணியில் நர்த்தனமாட, முகத்தில் விழுந்த ஒற்றை முடியை தன் இடது கையால் காதுகளுக்கு பின்புறம் அனுப்பியவாறே, வேலையில் ஆழ்ந்திருந்தாள் பூஜா. சிறிது நேரம் அவளையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன், அவளருகில் சென்று, தன் ஒரு காலை பக்கச்சுவற்றிலும், ஒரு காலை தரையிலும் ஊன்றி, கைகளைக் கட்டிக்கொண்டு, தன் வருங்கால மனைவியை தன் கண்களல் பருகிக்கொண்டிருந்தான்.

முதுகைத் துளைக்கும் பார்வையில் திரும்பிய பூஜா, கண்களில் காதலைத் தேக்கி தன்னை பார்த்துக் கொண்டிருந்த தன்னவனைக் கண்டதும் அதிர்ச்சியில் இருக்கையிலிருந்து எழுந்தேவிட்டாள்.

“அஜூ, நீ... நீங்க.. இங்க.. “ என்று பூஜா தந்தியடிக்க, அர்ஜூனோ எழுந்த சிரிப்பை அடக்கியபடியே,

“சிட் பூஜா, உங்க கிட்ட ஒரு என்கொயரிக்காக வந்தேன்” என்றான் தீவிரமான குரலில்.

பூஜாவோ, “என்கொயரியா? என்கிட்டயா?” என்று கேட்க, அவன் பதிலளிக்கும் முன் அங்கு வந்த ஷ்யாம்,

ஆமா பூஜா, ஏ.எஸ்.பி சார்க்கு உன்கிட்ட ஏதோ விசாரணை நடத்தனுமாம். ஏ.எஸ்.பி சார், விசிட்டர் ஹால் அங்க இருக்கு. அங்க போய் உங்க விசாரணையை ஆரம்பிங்க” என்று கூற, அவளோ முழித்தவாறே அர்ஜுனுடன் சென்றாள்.

“என்ன அஜூ,என்ன விஷயம்?” என்று கேட்க,

“இந்த பக்கம் ஒரு கேஸ் விஷயமா வந்தேன். அதான் அப்படியே உன்னையும் பார்த்திட்டு போலாம்னு....” என்று அவன் முடிக்கும் முன்பே இடையிட்ட பூஜா,

யாரு.... நீங்க? என்ன பார்த்துட்டு போலாம்னு வந்தீங்களா? இத நம்ப வேற சொல்றீங்களா?” என்று கேலியாகக் கேட்டாள் பூஜா. நிச்சயத்தார்த்தத்திற்கு பின்பு, தான் படித்துக் கொண்டிருக்கும் காதல் பாடசாலையில், தன்னுடன் பயிலும் சக மாணவனான அர்ஜூனுடன் நன்றாகவே பொருந்தியிருந்தாள் பூஜா......!

“என்னங்கடா இது? சேம் டயலாக்கை அங்க அவனுங்ககிட்ட சொன்னாலும் நம்பமாட்டிக்கிரானுங்க. இங்க நீயும் நம்பமாட்டிக்கிற... ஒருவேள, நான் தான் தப்பா சொல்லிட்டேனோ” என்று குறைபட, அவளோ முறைத்த படியே,

“டயலாக் தப்பில்லை, சொன்ன ஆளு தான் தப்பு”

“ஏன்டி, நான் சொல்லக்கூடாதோ?”

“காக்கிச்சட்டைக்காரனுக்கு காதல் வசனமெல்லாம் கூட பேச வருமா?”என்று அவனை சீண்ட,

“அதெல்லாம் வரும். சொல்லி என்ன காட்ட? நான் டெமொவே காட்ட ரெடி தான். நீ ரெடியா?” என்று தன் புருவத்தை உயர்த்திக் கேட்க,

பூஜாவோ உதட்டை சுழித்தப்படி,

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... ஆமா என்ன இந்த பக்கம்?” என்க,

“கொஞ்சம் ப்ரேக் கிடைச்சுது, அதான் உன்கூட அவுட்டிங் போகலாமேனு வந்தேன். வா எங்கேயாவது போய்ட்டு வரலாம்” என்று அழைத்தான்.

“இப்போவா? வேண்டாம் அஜூ”

“ஏன்டி”

“வேலை இருக்கு அஜூ” என்று மறுக்க,

அவனோ, “அதல்லாம் நான் அஜய்கிட்ட சொல்லிட்டேன். பூஜா, எனக்கே எப்போவாவது தான் ப்ரேக் கிடைக்கும், வாடி” என்று கெஞ்சலுடன் அழைக்க,

“அஜூ, நான் உங்ககூட வந்தா அவங்க ரெண்டு பேரும் எப்படி போவாங்க?” என்று யோசித்தாள்.

“அவ்ளோ தானே....! ஷ்யாம் கிட்ட சொல்றேன். அவனே எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டு இருக்கான்” என்க,

“ஆமா, சானு சொன்னா ஷ்யாம் அண்ணா மிதுவ லவ் பண்றாங்கனு” என்று சிரித்தபடியே கூற, அவனோ அவளருகில் நெருங்கி அமர்ந்தபடி,

எப்படியும் அஜய் இன்னைக்கு இருக்குற லவ் ஃபெயிலியர் மூட்ல, தனிமைய நாடி பீச்சுக்கு தான் போய்ட்டு தான் வீட்டுக்கு போவான். சோ, ஷ்யாமே அவங்கள விட்டுட்டு போவான். டோண்ட் வொர்ரி” என்றான்.

“என்னது? அஜய் சாருக்கு லவ்வா?” என்றாள் அதிர்ச்சியில் எழுந்து நின்றபடி,

அந்த கடுப்பில் அர்ஜூனும்,

“ஆமாடி, அதுக்கென்ன இப்போ?”என்க,

“யாரு அந்த லக்கி ஃபெல்லோ?”என்று ஆர்வத்துடன் கேட்க,

“ம்ம்ம்... சஹானா தான்”என்றான் ஆர்வமிழந்த குரலில்.

“என்னது? சானுவா?என்ன அஜூ நீங்க ஷாக் மேல ஷாக் குடுக்குறீங்க?” என்று பூஜா கேட்க,

“அதான் விஷ்வாமித்திரனா இருந்த எங்களோட தவத்த கலைக்குறதுக்குனு மேனகைகளா வந்துட்டீங்களே நீங்க தான்.. அழகா 'முஸ்தபா... முஸ்தபா...' பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டு இருந்த எங்க அஞ்சு பேரையும் இப்படி 'தேவதையைக் கண்டேன்..... காதலில் விழுந்தேன்'னு பாட வச்சுடீங்களே.....” என்றான்.

பூஜாவோ புரியாது விழிக்க, அர்ஜூனும்,

“எதுக்கு இப்போ இந்த முழி முழிக்குற.... அஜய் லவ்ஸ் சஹா, இன்னைக்கு தான் ப்ரொப்போஸ் பண்ணிட்டு வந்திருக்கான்” என்றான் அவனது முகத்தை அவளது கழுத்தில் அழுத்தியபடி.

பூஜாவோ அதை கண்டுகொள்ளாமல்,

“வாட்? இது எப்போ? சானு என்ன சொன்னாளாம்?" என்று தன் கேள்விகளை அடுக்கினாள்.

அண்ணா சொல்ற பையன தான் மேரேஜ் பண்ணிக்குவேன்னு சொல்லிருக்கா" என்றான் தானும் சிரியஸாகி.

நெனச்சேன்... அந்த அரைலூஸு இப்படி தான் சொல்லிருக்கும்னு... அஜய் சார்க்கு என்ன குறை?" என்று தன் ஆருயிர் தோழியை வசைபாடிவிட்டு,

“சானுகிட்ட எப்படி பேசுனா அவள வழிக்கு கொண்டுவரலாம்னு எனக்கு தெரியும். அத நான் பார்த்துக்குறேன்"என்று கூற,

அர்ஜூனோ, “நோ பூஜா. அஜய்க்கு எப்பவுமே, எந்த விஷயத்திலுமே, யாரோட ஹெல்ப்புமே தேவைப்படாது. அவன் ஒரு விஷயத்த ஆசைப்பட்டுட்டான்னா அத அடையாம விடமாட்டான். சோ, லீவ் இட். வேணும்னா, ஷ்யாம்க்கு ஹெல்ப் பண்ணு.. அண்ட், இப்போ என்னை மட்டும் கவனி.. நாம கிளம்பலாம்" என்று கூற,

அஜய்யிடம் சொல்லிவிட்டு, தோழிகளிடமும் சொல்லிவிட்டு அர்ஜூனுடன் விடைபெற்றாள் பூஜா...!

********

கடற்கரை மணலில் அமர்ந்து, தன் மனதைப் போல் அடங்க மறுத்த அலைகளை, அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான் அஜய். சஹானா தன்னிடம் வேலைக்கு சேர்ந்ததிலிருந்தே, ஒன்றுமில்லாத விஷயத்திற்க்கு கூட அவளுக்கு அழைப்பு விடுத்து மணிக் கணக்கில் கதைக்கும் அஜய், நேற்று சஹானாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு வந்ததிலிருந்து அலுவலக விஷயமாகக் கூட அவளை அணுகவில்லை. அவனுக்கும் தனிமை தேவைப்பட்டது. தனிமையை நாடி கடற்கரை வந்தவனுக்கு கரம் கொடுத்தது அவனுடைய அலைபேசி.....!

அழைத்தது கார்த்திக். அவன் அழைக்கும் காரணத்தை அறிந்திருந்ததால், தன் உதடுகளில் ஒட்டிக்கொண்ட சிறு புன்னகையுடன், அலைபேசியை இயக்கி காதுக்குக் கொடுத்தான்.

“சொல்லு கார்த்தி, என்னடா, இந்நேரம் கால் பண்ணியிருக்க?” என்றான் அஜய்.

“டேய் மச்சான், என்னடா பிரச்சனை உனக்கும் அம்முக்கும்?” என்று நேரடியாகவே கேட்டுவிட,

“என்ன மச்சான் உனக்கு உண்மையிலே தெரியாதா? இந்நேரம் உன் காதுக்கு வந்திருக்குமே?” என்று ஆச்சரியப்பட,

கார்த்திக்கும், “நோ டா, அவ எதுவுமே சொல்லல. நானும் கேட்டுப்பார்த்தேன். உடம்புக்கு எதுவும் சரியில்லையானு, ஐயம் ஆல்ரைட் அண்ணானு மட்டும் தான் சொல்றா. அதான் உன்கிட்ட கேட்குறேன்என்று கூற அஜய்யின் மனதிலோ மெல்லிய சாரல் அடித்தது.

ஏனெனில், உலகிலேயே சஹானா அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் அவளது அண்ணன் கார்த்திக், அவனிடம் கூட தன்னைக் காட்டிக் கொடுக்காமல் மறைத்தது, சோர்ந்திருந்த அஜய்யின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அஜய் யோசனையில் இருக்கவே,

“ஹலோ அஜய், கேன் யூ ஹுயர் மீ?" என்று கேட்க,

அதில் கலைந்தவன்,

“எஸ் டா, சொல்லு" என்றான்.

கார்த்திக், “என்னடா ஆச்சு? அம்மா சொல்றாங்க உன்கூட வெளியே போய்ட்டு வந்ததிலிருந்து தான் இப்படி இருக்கானு. என்ன பிரச்சனைடா?" என்று கேட்க,

அஜய்யும், “பெருசா ஒண்ணுமில்லடா. அவகிட்ட ப்ரொப்போஸ் பண்ணிட்டேன், அவ்ளோ தான்." என்றான்.

கார்த்திக்குமே இந்த பதிலை ஓரளவுக்கு எதிர்ப்பார்திருந்ததால்,

“சானு என்ன சொன்னா?" என்றான்.

“என்னடா சொல்லுவா. நீ எதிர்ப்பார்த்த அதே பதில தான் சொன்னா. 'என் அண்ணா பாக்குற பையன தான் மேரேஜ் பண்ணிப்பேன், லவ் பண்ணமாட்டேன்னு' சொன்னா" என்றான்.

"சரி அஜய், நான் அவகிட்ட பேசுறேன்" என்று கார்த்திக் கூற,

"நோ கார்த்தி" என்று உடனடியாக மறுத்தான் அஜய்.

"அஜய், நான் சொன்னா அவ கண்டிப்பா சம்மதிப்பாடா" என்க,

"அதனால சொல்றேன்... வேண்டாம். இது பத்தி நீ அவகிட்ட எதுவுமே பேசாத கார்த்தி, ப்ளீஸ்" என்றான் உறுதியாக.

"ஏன்டா?" என்று கார்த்திக் கேட்க,

"டோன்ட் மிஸ்டேக் மீ கார்த்தி. நீ சொல்ற, அவங்க சொல்றாங்க, இவங்க சொல்றாங்கனுலாம் அவ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கக்கூடாது. எனக்காக மட்டுமே அவ என்னை கல்யாணம் பண்ணிக்கனும். அவளோட மனசுல நான் இருக்கனும்... என் மேல காதல் இருக்கனும்." என்றான் பிடிவாதமாய்.

கார்த்திக்கோ அஜய்யின் உறுதியில் அதிர்ந்து போய், மௌனிக்க அஜய்யே தொடர்ந்தான்.

"கல்யாணம் ‘ஆயிரம் காலத்துப் பயிர்' னு சொல்வாங்க. ஆயிரம் காலத்துக்கும் நிலைத்து இருக்ககூடிய ஒரு பந்தம் காம்ப்ரொமைசிங்ல கண்டிப்பா நடக்ககூடாது. அப்படி நடந்தா அதுல உயிர்ப்பே இருக்காதுடா மச்சான். கல்யாணமே இப்போதைக்கு வேண்டாம்னு இருந்த என் மனசுல அந்த விதையை போட்டதே அவதான். அப்படியிருக்கும் போது, என் கல்யாணத்துல நடக்குற சின்ன சின்ன விஷயத்துல கூட எங்களுக்குள்ள மனஸ்தாபம் இருக்கக்கூடாது. முகத்துல எப்போவும் ஒரு ஹேப்பினஸோட, மனசுல எங்க வாழ்க்கைய பத்தின கனவுகளோடு, கண்ணுல காதலோடும் நாங்க ரெண்டுபேருமே எல்லா நிகழ்வுகளையுமே என்ஜாய் பண்ணனும்டா. இதுக்கெல்லாம் அவ என்னை லவ் பண்ணனும்டா" என்று தத்துவத்துடன் ஆரம்பித்து, ஏக்கத்துடன் முடித்தான் அஜய்.

"கார்த்தி டோண்ட் வொர்ரிடா. கண்டிப்பா அவ என் சஹி தான். நான் கண்டிப்பா அவள தான் மேரேஜ் பண்ணுவேன் . அண்ட் நான் சொன்ன மாதிரி எங்க மேரேஜ் நடக்கும்." என்று உறுதியுடன் வாக்களித்தான் அஜய்.

அஜய்யின் வாக்கில் மகிழ்ந்த கார்த்திக்கும், “ஓ.கேடா மச்சான். நான் என்ன நினைச்சேன்னா, வர்ற ஜூன்-15 சானுக்கு பிறந்தநாள். சோ, நான் ஒரு த்ரீ டேஸ் லீவ்ல ஊருக்கு வருவேன். டிக்கெட்டும் போட்டுட்டேன். அன்னைக்கே உங்க ரெண்டு பேருக்கும் என்கேஜ்மெண்ட் வச்சிரலாம்னு நினைச்சேன்டா" என்று வருத்தப்பட,

அஜய், “டேய் மச்சான், அதுக்கு இன்னும் 18 நாள் இருக்குடா. அதுக்குள்ள என்னவேணாலும் நடக்கலாம்டா. சோ, டோண்ட் ஃபீல். அதுக்கு முன்னாடி கண்டிப்பா ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்னு நினைக்குறேன். நீ வாடா. பார்த்துக்கலாம்" என்றான் உற்சாகமாக....!

அஜய்யின் பேச்சில் கார்த்திக்குமே தன் கவலையை மறந்து அலைபேசியை அணைத்தான்.

“ஒட்டு மொத்த

கவலைகளும்

நீங்கி விடுகின்றது....

உன் நினைவு

தென்றலாய் என்னைத்


தீண்டுகையில்...”



நினைவுகள் தொடரும்....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-11 உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.



கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!


ஜெஃப்ரி......!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-12

22106

திங்கள் அன்று காலை, உற்சாகமாக அலுவலகத்தில் நுழைந்த அஜய் மற்றும் ஷ்யாமை வரவேற்றது, சஹானாவின் வெறுமையான முகமே. புன்னகையை விலைக்கு வாங்கி, தன்னோடு எப்போதும் அணிந்திருக்கும் சஹானா இன்று அமைதியாக இருக்கவும், அஜய்யே வலியச் சென்று,

"
குட் மார்னிங் சஹானா, கம் டூ மை ரூம்!" என்று கட்டளையிட்டபடி தனதறைக்குள் நுழைந்தான்.

சஹானாவிற்கோ மறைந்திருந்த கோபம் மீண்டும் தலைகேறியது. இத்தனை பேர் இருக்காங்க, அதலாம் பத்தி கேர் பண்ணிக்காம, அவன்பாட்டுக்கு, என்னவோ அவன் பொண்டாட்டிய கூப்பிட்ற மாதிரி கம் டூ மை ரூம்னு சொல்லிட்டு போறான் எவ்ளோ திமிர்என்று மனதினுள் அவனுக்கு பாமாலை சூட்டியபடி அவனறைக்குச் சென்றாள்.

இவ்வளவு நாளும் தன் வட்டத்தைத் தாண்டி, அதுவும் அலுவலக ரீதியாக அவளிடம் அப்படி தான் கட்டளையிடுவான் என்பதை மறந்தாள்.

கோபத்துடன் உள்ளே சென்று அதே கோபத்துடன், ”என்ன சார், உங்க இஷ்டத்துக்கு கம் டூ மை ரூம்னு ஆர்டர் போடுறீங்க? நான் என்ன உங்க பொண்.....” பொண்டாட்டியாஎன்று கூற வந்தவள் அத்தோடு நிறுத்தினாள்.

அவனோ, “ம்ம்ம்... கமான் சஹானா.. சொல்ல வந்தத சொல்லுமா.. ஏதோ சொல்ல வந்தியே... பொண்... ஃபினிஷ் இட்” என்றான் உற்சாகமாக.

அவளோ அமைதியாய் நிற்க, ”சொன்னாலும் சொல்லலனாலும் நீ என் பொண்டாட்டி தான். அத எவனாலயும் மாத்தமுடியாது.அண்ட், ஆஃபிஸ் விஷயமா உன்கிட்ட இதுவரை அப்படி நடந்துகிட்டதாதான் நியாபகம். ஆமா, என்ன புதுசா சார்னு கூப்பிடுற?” என்று கேட்டான்.



"உங்களுக்கும் எனக்கும் இடையில இருக்கிற ரிலேஷன்ஷிப், ஒரு எம்ப்ளாயர் அண்ட் எம்ப்ளாயிக்கு இடையில இருக்கிற ரிலேஷன்ஷிப்தான். சோ, இனி நான் உங்களை 'சார்'னுதான் கூப்பிடுவேன்....!" என்றாள் அழுத்தமாக.

“ஓ...”என்று புருவம் உயர்த்தியவன்,

“அது இப்போ தான் உனக்கு தெரிஞ்சிதா? ஓ.கே. இட்ஸ் யுவர் விஸ். பட், நீ என்னை சீண்டிப் பார்க்கனும்னு என்ன சார்னு கூப்பிட்டா, நானும் உன்னை சீண்டிப் பார்க்க, பொண்டாட்டி, டார்லிங், சஹி பேபினு கூப்பிடுவேன். டீல்?” என்று தன் கைகளை உயர்த்திக் காட்ட,

சஹானாவோ கோபத்தில் முகம் சிவக்க,

“இப்போ எதுக்கு கூப்பிடீங்க?” என்று கேட்டாள்.

அவள் கோபத்தை ரசித்தவன், பச்சை நிற பட்டியாளா சுடிதாரில், கூந்தலை தளர பின்னி, நெருக்கமாகத் தொடுத்த மல்லிகைப் பூவைச் சூடியபடி நின்றிருந்தவளின் அழகு அவனை பித்தனாக்கியது. உள்ளே நுழைந்ததுமே மல்லிகைப் பூவின் வாசம் ஆளை அசரடிக்க, அவளை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் போல் தோன்றிய ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

அஜய்யின் பார்வை தன்னுள் ஏற்படுத்திய தடுமாற்றத்தை மறைக்க, தன் இதழ்களை அழுந்த கடித்துக்கொண்டாள்.

தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், அதன் பின்னர் அவளிடம் அலுவலக நிமித்தமாய் மட்டுமே பேசினான். அவளிடம் காதலைக் காட்டினாலும் வேலை என்று வந்துவிட்டால் ஒரு தொழிலதிபனாக மட்டுமே சிந்தித்தான்.

உணவு இடைவேளையின் போது, சஹானா அமைதியாகவே சாப்பிட, விஷயம் அறிந்த தோழிகள் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் சஹானாவிடம் பேச்சுக் கொடுத்தனர்.

ரீனா, “என்ன சானு, ஷாக்கு மேல ஷாக் குடுக்குற” என்று கேட்க,

சஹானாவோ அதிர்ந்து விழிக்க, ரீனாவே தொடர்ந்தாள்,

இல்ல, வழக்கமா அமைதியா நீ சாப்பிடவே மாட்ட... அதிலும் இன்னைக்கு உனக்கு சுத்தமா பிடிக்காத லெமன் ரைஸ அவ்ளோ ரசிச்சு குனிஞ்ச தலை நிமிராம சாப்பிடுறியே, அதான் கேட்டேன்” என்றாள்.

“அதுவா? கொஞ்சம் தலைவலிடி. அதான்” என்க, பூஜாவோ, “சாட்டர்டேல இருந்தேவாடி? ஃபர்ஸ்ட் நல்ல ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணு” என்றாள்.

மிதுனாவோ அவளது இடது கையை பிடித்துக்கொண்டு, “என்னாச்சு சானு?” என்றாள்.

“ஒண்ணுமில்லடி. அஜய்சார் ஒரு வொர்க் குடுத்தாரு. அதுல... கொஞ்சம் டென்சன்.அதான்” என்று அழகாக பொய் கூறினாள் சஹானா.

ரீனாவோ, “என்னது அஜய் சா...ரா? இது எப்பத்துல இருந்து....?” என்று கேட்க,

அவளோ தடுமாறியபடி, “ஏன்டி நான் அப்படி கூப்பிடக்கூடாதா? நாமெல்லாம் எம்ப்ளாயீ, நீங்களும் அவர அப்படிதான கூப்பிடுறீங்க” என்றாள்.

“நாங்க அப்படி தான் கூப்பிட்றோம், நீ எப்படி கூப்பிட்ட? ரித்வினு தானே. இப்போ என்ன புதுசா அஜய்... அதுலயும் அந்த சார்... கொஞ்சமில்ல ரொம்பவே டூ மச் தான் சானு” என்று கூறிவிட்டு பூஜா கொண்டு வந்த உருளைகிழங்கு வறுவலை கவனிக்கத் தொடங்கினாள் ரீனா.

பூஜா, அர்ஜூனண்ணா அன்னைக்கு ஆஃபிஸ் வந்தாங்களாமே, சொல்லவே இல்ல” என்று சஹானா பேச்சை மாற்ற,

பூஜாவோ கோபத்தில், “ஆமாடி, நீயும் தான் அன்னைக்கு அஜய் சார் கூட வெளியே போன, எங்க போன, மீட்டிங் எப்படினு ஏதாவது சொன்னியா? அது பத்தி கேட்டா மட்டும் நல்லா பேச்சை மாத்துற” என்று கத்த, சஹானா ஏதோ சொல்ல தொடங்கும் முன் அவள் அலைபேசி இசைத்தது.

அலைபேசியை உயிர்ப்பித்து, “சொல்லுங்க சார்” என்று கூற,

அஜய்யோ, “அந்த சின்ன டிபன் பாக்ஸை சாப்பிட்டு முடிக்க இவ்ளோ நேரமா டார்லிங்? சீக்கிரம் வாடி, வேலை இருக்கு சஹி டியர்” என்று அழைக்க,

அவளோ கோபத்தில், “இப்போ என்ன வேணும் உங்களுக்கு? லன்ச் டைம் முடிய இன்னும் நேரமிருக்கு. வருவேன், வைங்க ஃபோனை” என்று கத்திவிட்டுத் துண்டித்தாள்.

நிலைமையை சீர்ப்படுத்த மிதுனாவும்,

“ஷ்யாம் ஒரு டிசைன் கேட்டாரு, குடுக்கணும். நான் வர்றேன்” என்று கிளம்பிவிட, அனைவரும் கலைந்தனர்.

இப்படியே மூன்று நாட்கள் கழிந்திருக்க, சஹானாவின் துள்ளல் மிகவும் குறைந்துவிட, அஜய் அவளிடம் சீண்டும் வேலையை வெகு சிறப்பாகவே செய்துகொண்டிருந்தான்.

அன்று அஜய் மற்றும் ஷ்யாம் பேசிக்கொண்டிருக்கும் நேரம், அனுமதி பெற்று பெண்கள் நால்வரும் உள்ளே நுழைந்தனர். என்னஎன்று அஜய் அவர்களைக் கேள்வியாகப் பார்க்க, சஹானாவோ மனதினில், ’வாய் திறந்து கேட்டா என்ன குறைஞ்சா போய்டுவாருஎன்று கேட்க, மற்றொரு மனமோ, ’ஆமா கேட்டா மட்டும் நீ அழகா பதில் சொல்லிடுவ பாருஎன்றது.

ஷ்யாம், “என்ன? நாலுபேரும் சேர்ந்து வந்திருக்கீங்க. என்ன விஷயம்?” என்றான்.

மிதுனாவோ, “அது... சார் நாளைக்கு எங்க நாலு பேருக்கும் லீவ் வேணும்” என்க,

அஜய், “நாலு பேருக்குமா?எதுக்கு?”என்று கேட்டான்.

ரீனா, “சார் நாளைக்கு காலேஜ்ல ஃபேர்வெல் பார்டி இருக்கு” என்றாள்.

ஷ்யாம் உடனே, “அத முடிச்சுட்டு இங்க வந்துருங்க. நாளைக்கு வொர்க் நிறைய இருக்கு” என்க,

பூஜா, “இல்ல சார், நாளைக்கு ஃபுல்டே லீவ் எடுத்துக்குறோம்.ப்ளீஸ் சார்.. வேணும்னா சண்டே கூட வர்றோம்” என்றாள்.

“ஓ.கே நீங்க மூணு பேரும் லீவ் எடுத்துக்கோங்க. சஹானா நாளைக்கு பதினோறு மணிக்கு J.K குரூப்ஸ் மீட்டிங் இருக்கு. ரெடியா இருங்க, நான் வந்து பிக்அப் பண்ணிக்குறேன்” என்று ணஜய் சொல்ல,

அவ்வளவு தான், கோபத்தில் எண்ணெயிலிட்ட கடுகு போல் பொரிய ஆரம்பித்தாள் சஹானா,

“ஹலோ,என்ன... அவங்களுக்கு ஃபேர்வெல்னா எனக்கும் தான். அது தெரிஞ்சும் மீட்டிங்க்கு வானு கூப்பிட்டா என்ன அர்த்தம்?" என்று கேட்க,

அஜய்யோ, “நீ தான் என் பி.ஏ னு அர்த்தம்" என்றான் கூலாக.

அங்கிருந்த மற்ற அனைவருக்கும் சிரிப்பு வர, சஹானாவோ சுற்றுப்புறம் மறந்து கத்த,

“அதுக்கு தான் அந்த தீ வெட்டித் தலையன் ஸ்ரீராம் இருக்கானே, அவன கூடிட்டு போங்க.. இல்லன்னா, 'அஜ்ஜிய்'னு ஓடிவருவாளே, அந்த ஒட்டுப்புல் நிஷா.. அவளை கூடிட்டு போங்க. நானெல்லாம் வர மாட்டேன்" என்று கூற அதை கேட்ட அனைவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, சஹானாவிற்குத்தான் என்னவோ போலாகிவிட்டது.

ஒருவழியாக விடுப்பைப் பெற்றுவிட்டே அங்கிருந்து அகன்றனர் தோழிகள் நால்வரும்...!

****

வீட்டிற்கு வந்த அஜய் முதலாக தேடி சென்றது தன் தங்கை யாழினியை தான். தன் அண்ணி திவ்யா மற்றும் சகோதரன் அபிஜித்துடன் கதையளந்தபடியே, எழுதிக் கொண்டிருந்த யாழியின் அருகில் சென்று, அவள் தலையைப் பாசமாக வருடியபடியே,

“யாழிமா, என்னடா பண்ணுற?” என்றான்.

“ரைட்டிங் நோட்ஸ்ண்ணா. நீ ஏன்ண்ணா இன்னைக்கு லேட்?” என்று யாழினி வினவ,

அஜய்யும், “கொஞ்சம் வொர்க் டா... இந்தாடா, உன்னோட ஃபேவரைட் ஸ்வீட்”என்று கூறி, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து யாழினிக்கு பிடித்த “பன்னீர் ஜாமூனை” அவளிடம் நீட்டினான்.

உடனிருந்த அபிஜித்தோ, “என்ன அண்ணி, காத்து இந்தப் பக்கம் பலம்ம்மா வீசுது..” என்று தன் சகோதரனை கலாய்க்க,

அவளோ குழந்தையின் குதூகலத்துடன்,

வாவ், தேங்க்ஸ்ண்ணா” என்று கூறியவுடன்

அஜய், “யாழிமா, நாளைக்கு உங்க காலேஜ்ல ஏதும் ஃபங்சனாடா?” என்று கேட்டான்.

அவளோ, “இல்லையே அண்ணா” என்று உதட்டை பிதுக்க,

அஜய்யும், “உன் ஃப்ரெண்ட்ஸ் நாலுபேரும் நாளைக்கு லீவ் சொல்லிருக்காங்களே, அதான் கேட்டேன்” என்றான்.

ஓ அதுவா? அவங்க டிப்பார்ட்மெண்ட்க்கு நாளைக்கு ஃபேர்வெல். செம்ம சூப்பரா இருக்கும்ண்ணா.” என்று துள்ள,

அபிஜித், “அப்போ, நீயும் நாளைக்கு உன் க்ளாஸ கட் பண்ணிட்டு அவங்ககூட போய் என்ஜாய் பண்ண போறனு சொல்லுஎன்று போட்டுவாங்கினான்.

“கண்டிப்பா. ஆல்ரெடி காலைலேயே ரீனு இந்த ஐடியாவ சொல்லிட்டா” என்று அஜய் இருப்பதை மறந்து உளர, அபியோ வாய்விட்டு சிரித்தான்.

அவனை முறைத்துவிட்டு யாழினியோ,

ஐயோ அண்ணா, அவங்ககிட்ட போய் கேட்டுராத அண்ணா, ப்ளீஸ்” என்று அஜய்யிடம் கெஞ்ச,

அவனோ, “நோ யாழி, நானும் அதான் சொல்றேன். நீ நாளைக்கு உன் க்ளாஸ்க்கு லீவ் எடுத்துட்டு, அவங்க கூட என்ஜாய் பண்ணு.” என்று கூற,

யாழினிக்கோ அதிர்ச்சி என்றால், அபியோ பன்னீர் ஜாமூனை சாப்பிட உயர்த்திய கைகளை இறக்க மறந்து வியப்பாய் அஜய்யை ஏறிட்டான்.

“தேங்க்ஸ்ண்ணா. ஆமா சானுக்கு என்னாச்சு அண்ணா? பேசவேமாட்டேங்குறா. வாட்ஸ்அப் குரூப்க்கும் வர்றதில்ல” என்று யாழினி குறைபட,

திவ்யாவும் தன் பங்கிற்கு, “அஜய், சஹானா எப்படி இருக்கா, அன்னைக்கு ஃபங்சன்ல பார்த்தது” என்றாள்.

தன் குடும்பத்தினரிடம் தன் காதல் விஷயத்தை அரங்கேற்ற, இதையே ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்ட அஜய் ஒரு பெருமூச்சை வெளியிட்டு,

“அவளுக்கென்ன அண்ணி, சூப்பரா இருக்கா. அதான் என்னை போட்டு படுத்தி எடுக்குறாளே!” என்று அலுவலகத்தில் சஹானாவின் சில பல தில்லுமுள்ளுகளை அள்ளிவீசினான்.

பொதுவாகவே, அஜய் அனைவரிடமும் நன்றாகவே பழகுவானென்றாலும், அதில் ஒரு கவனம் இருக்கும். அடுத்தவர்களைப்பற்றி, அது தன் நண்பர்களே ஆனாலும் அவர்கள் இல்லாத இடத்தில் அவர்களைப் பற்றி அதிகம் பேசமாட்டான். எதுவாக இருந்தாலும் முகத்திற்கு முன்பே பேசி பழக்கப்பட்டவன், இன்று ஒருவரைப் பற்றி பேசி சிரிக்கின்றான் என்றால், அதுவும் வெகு சில நாட்களே தான் பழகிய ஒரு பெண்ணைப் பற்றி அவளிடம் தான் ரசித்த சில விஷயங்களை பகிர்கின்றான் என்றால், அஜய்யின் மனது தெளிவாகவே அவர்களுக்கு புரிந்தது.

“ஃபைனலி அஜய் அண்ணா ஃபாலிங் இன் லவ்” என்று அபி கூற, அஜய்யோ அதை ஆமோதிக்கும் விதமாய் சிறு புன்னகையுடன் அமைதியாய் அமர்ந்திருக்க,

யாழினியோ மகிழ்ச்சியில்,

“அண்ணா, உண்மையாவா? அப்போ சானு தான் என் அண்ணியா?” என்று குதூகலிக்க,

அஜய் ஒரு வெற்றுப் புன்னகையுடன்,

“அத அவ தான் டிசைட் பண்ணனும்டா” என்றான்.

“என்னாச்சு அஜய்? ஏதும் ப்ரோப்ளமா?” என்று திவ்யா கேட்க,

“ப்ராப்ளம்லாம் பெருசா ஒன்னும் இல்ல அண்ணி, அவ இன்னும் என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கல, பட் பண்ணுவா. அவளுக்கு என்னைப் பிடிச்சுருக்கு, ஆனா ஒத்துக்கமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணுறா” என்ற சலித்துக் கொள்ள,

அபியோ சிரித்துக்கொண்டே,

“ஹா ஹா ஹா... எல்லாரையுமே கண்ணசைவில ஆட்டிவைக்குற தி க்ரேட் அஜய் ரித்விக்க ஆட்டிவைக்க ஒரு ஜீவன் வந்தாச்சு” என்று கூறினான்.

அஜய்யும் ஒரு சிறு புன்னகையுடன்,

“அது என்னவோ உண்மை தான் டா” என்று அவன் கூற்றை ஆமோதித்தான்.

திவ்யா தான் சற்று யோசித்துவிட்டு,

“அஜய், பேசாம அத்தைக்கிட்ட சொல்லி சஹானா வீட்டுல பேச சொல்லலாமா?அத்தைக்கும் சஹானாவ ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கூற,

அஜய்யோ, “அம்மா சஹியோட அம்மாகிட்ட பேசினது, அவங்களும் ஓ.கே சொன்னது எல்லாமே எனக்கு தெரியும் அண்ணி. நானும் கார்த்திக்கிட்ட பேசிட்டேன். கொஞ்ச நாள் அவள அவ போக்கில விட்டு பிடிக்கலாம்னு தான் வெயிட் பண்ணுறேன் அண்ணி” என்றான்.

“அண்ட் யாழிமா, எனக்கு ஹெல்ப் பண்றேனு நாளைக்கு அவகிட்ட போய், எனக்கு சப்போர்ட்டா எதுவும் பேசி நீ வாங்கி கட்டிக்காத. ஷீ இஸ் ஸ்டில் இன் கன்ஃபியூஷன், அவளாகவே தெளிஞ்சு வரட்டும். நாளைக்கு அவளோட ஃபோட்டோஸ் மட்டும் எனக்கு அப்போ அப்போ அனுப்பிக்கிட்டே இரு” என்று கூற மற்றவர்கள் சேர்ந்து அவனை கலாய்க்க, அவனோ அழகாய் வெட்கப்பட்டான்.

யார் சொன்னது வெட்கம் பெண்களுக்கே உரிய சிறந்த அணிகலன் என்று? கம்பீரமான, ஆறடி உயரமுள்ள ஆண்மகனின் வெட்கம் அதைவிட அழகானது...!

“ஒப்பனைகளே

தேவையில்லை...

உன் நினைவே போதும்

என்னை அழகனாக்க....


காதல் அழகானது....!”




நினைவுகள் தொடரும்....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கண்மனீஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்க அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!
அப்புறம் என்னோட உயிர்த்தோழி ‘மீனா’விற்கு இன்னைக்கு பிறந்தநாள். அவளுடைய பிறந்தநாள் பரிசாய், உங்க எல்லாருடைய சிறந்த வாழ்த்துகள் மற்றும் அவளது எதிர்கால வாழ்க்கைக்கான பிரார்த்தனைகளோடு சேர்த்து இந்த எபி-ஐ என் மீனுவிற்கு பரிசளிக்கிறேன்....!

அத்தியாயம்-12 போட்டாச்சு டியர்ஸ். படித்துவிட்டு உங்க மேலானக் கருத்துகளை பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்......!


நன்றி....!

உங்கள் ஜெஃப்ரி...!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-13

22310


றுநாள் அலுவலகம் வந்து சேர்ந்தவனுக்கு அவளில்லாத இடமே வெறுமையாய் காட்சியளித்தது. முயன்று தன் மனதை ஒருநிலைப்படுத்திய சிறிது நேரத்திலேயே தன் கட்செவி(வாட்ஸப்)க்கு தகவல்கள் வர, அதை திறந்தவன் இமைக்க மறந்தான். யாழினி அனுப்பியிருந்த அந்த புகைப்படத்தில் அடர் சிகப்பு நிறத்தில் தங்கநிற சரிகையுடன், கல் வேலைபாடுகளுடன் கூடிய அந்த புடவையில்,அழகாக சிரித்து அவனது நிலைமையை மேலும் சிக்கலாக்கினாள் அவனது செல்ல ராட்சசி சஹானா...!

பத்து நிமிடத்திற்கு ஒருமுறை யாழினி அனுப்பும் சஹானாவின் புகைப்படங்களிலும், காணொளிக் காட்சிகளிலுமே அன்றைய பொழுதைக் கழித்தான் அஜய். ஆனாலும் அவன் மனதில் ஒரு கோபம் உருவாகாமல் இல்லை. 'இவள யாரு இவ்ளோ அழகா, அதுவும் புடவை கட்டிட்டு போகசொன்னது. என்னாலயே பார்வையை திருப்ப முடியல. கண்டவன் கண்ணுலாம் அவமேல தானே இருக்கும். கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டா' என்று அவளைத் திட்டித்தீர்த்தான். அதேப்போல அங்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது...!

கல்லூரியில், பிரிவு உபசார விழாவில் தன் வகுப்புத் தோழிகளுடன் கொண்டாடிக் கொண்டிருந்த சஹானாவிற்குமே அஜய்யின் நினைவு வந்து அவளை அலைக்கழித்தது. 'என்ன பண்ணிட்டு இருப்பான். ஒரே சஹி, சஹினு கூப்பிடு என்ன பாடாய் படுத்துவான். இப்போ என்ன பண்ணுவான்?ஒரு வேளை அந்த ஒட்டுப்புல் நிஷாவ கூப்பிட்டுருப்பானோ...' என்று நினைக்கையில் அந்த நினைவே அவளுக்குப் பிடிக்கவில்லை.

சானு இன்னைக்கு நீ செம்மயா இருக்க. லுக்கிங் சோ கார்ஜீயஸ். எத்தன பேர் மயங்கபோறாங்களோ?" என்ற வகுப்புத் தோழிகளின் நக்கல் பேச்சில் நடப்பிற்க்கு வந்தவள், அஜய்யை சீண்டும் எண்ணம் வர தன் அலைபேசியில் ஒரு சுயமியை (selfie) எடுத்து அவனுக்கு அனுப்பிவைத்தாள். அவள் நினைத்தது போலவே, இரு நீல நிற குறியீடுகள் காட்டிய அடுத்த நிமிடமே அவளுக்கு அழைப்புவிடுத்தான்.

சஹானாவோ மனதில், ’சும்மா இருந்தவனை சீண்டிவிட்டுட்டோமோஎன்று எண்ணியபடியே அலைபேசியை இயக்கிக் காதுக்கு கொடுத்தாள்.

“சொல்லுங்க சார். நான் இன்னைக்கு லீவ்” என்றாள்.

“அது எனக்கு தெரியுமே சஹி பேபி. நீயில்லாம இங்க ரொம்ப போர் அடிக்குதுடி” என்றான் கிறக்கமாக.

அஜய் கூறியதைக் கேட்டதுமே மனதில் சாரலடிக்க,

ஏன், மீட்டிங் போகனும்னு சொன்னீங்க” என்றாள்.

“இதோ கிளம்பனும். கியூட்டி பை, யூ ஆர் லுக்கிங் சோ கார்ஜீயஸ்....! மயக்குறடி” என்றான் மயக்கத்துடன்.

அவள் அமைதியாய் இருக்க அவனே தொடர்ந்தான்,

அந்த மெரூன் கலர் உனக்கு பக்காவா பொருந்துது டார்லிங். எனக்கு உன்னை இப்போவே பார்க்கனும்போல இருக்குடி” என்றான் கிறக்கமாக.

அவளோ, “இப்போவா? நோ” என்க, அவனோ அதை காதில் வாங்காதவனாய்,

புடவைக் கட்டி, பூ வச்சு, என் முன்னாடி இருக்க வேண்டிய கெட்டப்ல உன்ன யாருடி காலேஜ்க்கு போக சொன்னா?” என்று எகிற,

“ஆரம்பிச்சுட்டீங்களா? உங்களுக்கு வேற வேலையிருந்தா போய் பாருங்க,நான் வைக்குறேன்” என்று அவள் தொடர்பைத் துண்டிக்கப் போக,

அஜய், “சஹிபேபி ஒன் மினிட்” என்றான்.

“என்ன சொல்லுங்க?” என்று கேட்டவளிடம்,

“ஐ லவ் சோ மச் டார்லிங்” என்று ஒரு முத்தத்தையும் அலைபேசி பண்பலை வழியே அனுப்பிவிட்டு தொடர்பைத் துண்டித்தான் அந்த கள்வன்...!

அதிர்ச்சியில் சிலையென இருந்தவளைக் கலைத்தது மிதுனாவின் குரல்.

“என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி சிலை மாதிரி இருக்க” என்று கேட்க,

“அது.. கால்... ரித்வி..” என்று உளற,

பூஜாவும், “அஜய் சார் கால் பண்ணாங்களா?”என்று கேட்க, அவளும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினாள்.

“என்னவாம், எதுக்கு கால் பண்ணுனாங்க?” என்று ரீனா கேட்க,

எதுக்கோ? அவங்களுக்கு வேற வேலை இல்லடி. வாங்க போகலாம்” என்று கூறிவிட்டு கூறியவளை தடுத்து நிறுத்தியது சக வகுப்புத் தோழியின் குரல்.

“ஹேய், நீங்க நாலுபேரும் ‘R.S CONSTRUCTIONS’ல ஜாயின் பண்ணிட்டீங்களாமே. ஏன்டி எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?” என்று ஒருத்தி குறைபட,

மற்றொருத்தியோ, “அங்க எம்.டீஸ் ரெண்டு பேரும் செம்ம ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்ஸம்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்களயும் அங்க சேர்த்துவிடுங்கப்பா.” என்று கூற, அவர்களுடன் இருந்த யாழினிக்கோ பெருமை தாங்கவில்லை.

“நான் ஒரு டைம் அஜய் சாரை மீட் பண்ணிருக்கேன்.என்ன ஒரு கம்பீரம்...! லேடீஸ்கிட்ட கண்ணி மட்டுமே பார்த்து பேசுற அவரோட கண்ணியம் சூப்பர்ப்டி. அவர கட்டிக்கப்போறவ ரொம்ப குடுத்துவச்சவடி” என்று அங்கலாய்க்க, சஹானாவிற்கோ முள்ளின் மேல் நிற்கும் உணர்வு.

ரீனாவிற்கோ குறும்பு தலைதூக்க, “ஓஹோ... அந்த மாதிரி ஏதாவது அப்ளிக்கேஷன் அஜய் சார்கிட்ட போடனும்னா சானுகிட்ட சொல்லுப்பா. சானு தான் அஜய் சாருக்கு பி.ஏ” என்று போட்டுக்கொடுத்து சஹானாவின் முறைப்பை சம்பாதித்தாள்.

அந்தப் பெண்ணோ, “அப்படியா சஹானா, அப்போ அஜய் சார்கூட ஒரே ரூம்ல இருப்பியா?” என்றுக் கேட்க, அவ்வளவு தான், அவளை உக்கிரமாக முறைத்த சஹானா, ”இல்லப்பா, வேற வேற ரூம் தான்.” என்று பொறுமையாகவே பதில் கூறினாள்.

அந்த பெண்ணோ, “அதானே பார்த்தேன், அஜய் சார் அவ்ளோ சீக்கிரம் எந்த பொண்ணுங்களையும் கிட்டயே அனுமதிக்கமாட்டாராம். ரொம்ப அளந்து தான் பேசவே செய்வாராம். என் அக்காவோட ஃப்ரெண்ட் அங்க வொர்க் பண்ணுனாங்க. அவங்க சொல்வாங்க” என்று அஜய்க்கு புகழாரம் சூட்ட,

சஹானாவோ, எந்த பொண்ணுங்களையும் கிட்ட அனுமதிக்கமாட்டானாமா, என்னை மட்டும் சீண்டிகிட்டே இருப்பான். என்கிட்ட மட்டும் வாய் திறந்தாலே மூடமாட்டான். சும்மா சும்மா சஹிபேபி, டார்லிங்னு சொல்லிட்டு…..’ என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டாலும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தாள்.

அதன் பின்னர் அவர்களது நேரம் இத்தனை நாள் கல்லூரி நாள் கதைகளை பேசியபடியே கழிந்தது. அனைவரும் விடைபெறும் நேரம், சஹானாவின் அருகில் வந்து,

சஹானா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான் அவர்களின் வகுப்புத்தோழன் டேவிட்.

“சொல்லு” என்க,

“தனியா பேசனும்” என்றான் மற்றவர்களைப் பார்த்தவாறே.

அவன் பேச விரும்பும் நோக்கத்தை அறிந்த சஹானா,

“பரவாயில்ல டேவிட், இப்படியே சொல்லு. இவங்களுக்குத் தெரியாம எனக்கு எந்த சீக்ரெட்டும் இருந்ததில்ல” என்று சொல்லும் போதே அவளது மனதே அவளுக்கு நினைவூட்டியது, அஜய் தன்னிடம் கூறிய காதல் விஷயத்தை இன்று வரை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளாததை.

அவனோ தயங்கியபடியே,

“ஐ லவ் யூ சஹானா. நீ அழகா இருக்குறதால மட்டும் நான் உன்ன லவ் பண்ணல. உன்னோட கேரக்டர்ஸ், நீ ரிச்சா இருந்தாலும் டிரடிஸ்னல ஃபாலோவ் பண்ணுற உன்னோட ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் அப்புறம்...” மேலும் என்ன கூறியிருப்பானோ, அவன் கூறுவதைக் கேட்க முடியாமல் அவனைத் தடுத்த சஹானா,

லுக் டேவிட், நீ இப்படி வர்ணிக்குறது உனக்கு வரப்போற மனைவியா மட்டும் தான் இருக்கனும். நீ நல்லவன் தான், உனக்கு கண்டிப்பா நல்ல லைஃப் அமையும். பட், அந்த லைஃப்ல கண்டிப்பா நான் இருக்கமாட்டேன். எனக்கும் உன்ன பிடிக்கும் தான் ஒரு ஃப்ரெண்டா மட்டும். அண்ட், என்னை வர்ணிக்கிற உரிமை என்னோட பெட்டர் ஹாஃப்க்கு மட்டும் தான் இருக்கனும். சோ, மனசை தெளிவா வச்சுக்கோ, டேவிட்.” என்று நீளமாக அவனுக்கு எடுத்துக் கூறினாள்.

டேவிட், “சாரி சஹானா, டூ யூ லவ் எனிஒன்?” என்று கேட்க,

அவளோ ஆமோதிப்பாய் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, தன் தோழிகளை நிமிர்ந்தும் பார்க்காமல், விடைபெற்று தன் காரில் ஏறிச் சென்றாள்.

சஹானா கூறிவிட்டு சென்றதைக் கேட்டு மகிழ்ந்தது அவளது தோழிகள் நால்வர் மட்டுமல்ல, யாழினியை அழைப்பதற்காக வந்த அஜய் மற்றும் ஷ்யாம்மும் தான்...!

மகிழ்ச்சியில் அதிர்ந்து நின்ற அஜய்யின் அருகில் வந்த மிதுனா,
நான் உங்கள அண்ணானு கூப்பிடலாமா? பிகாஸ் நான் இப்போ பேசப்போறது ஆஃபிஸ் விஷயமா இல்ல” என்று கூறி அவனிடம் அனுமதி வாங்கிவிட்டு,

“அண்ணா, சானு உங்கள தான் லவ் பண்ணுறா. அது உங்களுக்கு புரியுதா?” என்று கேட்க, அஜய்யும் அதை ஆமோதிப்பதாய் தலையாட்டினான்.

“பின்ன ஏன் இன்னும் டிலே பண்ணுறீங்க, அவளோட வீட்டுல பேசுங்க. வீட்டுக்காகவும் யோசிக்க முடியாம, உங்களுக்காகவும் யோசிக்க முடியாம எல்லாத்தையும் மனசிலே வச்சு மருகுறா.” என்று மிதுனா கூற,

பூஜாவும், “ப்ரீ-கே.ஜில இருந்தே அவள எனக்கு தெரியும்ண்ணா. அவளுக்கு எதையுமே வெளிப்படையா, இதோ இப்போ பேசினாலே இப்படி பேசி தான் பழக்கம். கார்த்திண்ணாக்கிட்ட சின்ன வயசில அவ சொன்னா நீ யார சொல்றியோ அவங்கள தான் மேரேஜ் பண்ணுவேன்னு’. அந்த ஒரு வாக்குக்காக தான் அவங்ககிட்ட பேசவும், உங்க லவ்வை அக்செப்ட் பண்ணிக்குறதுக்கும் தயங்குறா.” என்றாள்.

அஜய்யும், “நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுதுமா. எனக்கு தேவை, அவளோட வாய்மொழி சம்மதம்” என்று கூற,

மிதுனாவோ, “அண்ணா, எல்லார்கிட்டயுமே வெளிப்படையா பேசுறவ ஃபர்ஸ்ட் டைம் ஒரு விஷயத்தை மறைக்குறான்னா, அது உங்க விஷயம் மட்டும் தான் அண்ணா. அதுவும் எங்ககிட்டயே. உங்கள எங்ககிட்ட கூட அவளால விட்டுக்கொடுக்க முடியல. அதனால தான் இப்படி ஓடி ஒளியுறா. காதலே பிடிக்காத எனக்கே இது புரியும்போது, உங்களுக்கு புரியாதா அண்ணா?” என்று கூறிய மிதுனா கடைசி வாக்கியத்தை கூறும் போது மட்டும், கேள்வி அஜய்யிடமும் பார்வை ஷ்யாமிடமும் இருந்தது.

ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு அஜய்யே,
”அவள கஷ்டப்படுத்திப் பார்க்கனும்னு எனக்கும் ஆசையில்லமா. சீக்கிரமே அவளோட கண்ணாமூச்சி ஆட்டத்த முடிவுக்கு கொண்டுவர்றேன்” என்று கூறியதும் அனைவரும் விடைபெற்றனர்.

******

நாட்கள் அதன் போக்கில் செல்ல, அஜய்-சஹானாவின் காதலும் மெல்ல மெல்ல வளார்ந்தது. அன்று, அஜய்யின் கட்டளையின் பேரில், கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் ஒரு கோப்பை மும்மரமாகத் தேடிக்கொண்டிருந்தாள் சஹானா. அக்கோப்பு வைக்கப்பட்டிருக்கும் இடம் சற்று உயரமாக இருக்கவே, ஒரு கால்மணையில் (ஸ்டூல்) ஏறி, எட்டி எட்டி எடுக்க முயற்சித்த நேரம், சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் கோலின்’, அவள் கைப்பட்டு கீழே விழுந்து சிதறியது.

அந்நேரம் பார்த்து,

ஒரு ஃபைல் எடுக்க இவ்ளோ நேரமா?” என்று கேட்டுக் கொண்டே வந்த அஜய், கீழே கொட்டிக்கிடந்த திரவத்தை கவனிக்காமல் கால் வழுக்கி, பிடிமானத்திற்கு அவளைப் பிடிக்க, அவளும் நிலை தடுமாறி அவன் மேலே சரிந்தாள். அஜய் சஹானாவின் மேலே இருந்ததால் அவளால் எழும்ப முடியவில்லை. அவனும் எழும்ப முயற்சிக்க, அவன் அணிந்திருந்த காலணியும் உராய்வின் காரணமாக வழுக்கி, அவனுக்கு நன்றாக உதவி செய்தது.

சஹானா துப்பட்டாவை இரு புறமும் போட்டிருந்ததால் அது வேறு அவ்விருவரையும் பிணைத்து கொண்டது. இருவராலும் விலகவும் முடியவில்லை, எழும்பவும் முடியவில்லை.

அஜய்யின் நிலைமை தான் மிகவும் மோசமாகியது. பட்டாம்பூச்சி போல் படபடவென துடித்துக் கொண்டிருந்த அவளது கண்களையும், அவளது சிணுங்களுக்கு வளைந்த அந்த அழகிய அதரங்களையும் மிக அருகில் பார்த்தவனால், தன்னை கட்டுப்படுத்த இயலவில்லை. அதுவும் அவள் மனதிலும் தான் இருப்பது உறுதியானதால், துணிந்தே அவள் இதழோடு தன் இதழைப் பொருத்தினான். முதல் இதழ் முத்தம் அவனுள் ஹார்மோன்களின் மாற்றத்தை ஏற்படுத்த, அவன் தேனுண்ட வண்டாய் அவளது இதழ் தேனைப் பருகிக்கொண்டிருந்தான். முதலில் எதிர்த்தவளும் பின் அவனுள் ஒடுங்கினாள்.

முதலில் சுதாரித்தது என்னவோ அஜய் தான். தாங்கள் இருக்கும் இடம் கருதி, அவளது இதழுக்கு ஓய்வு கொடுத்து, நிதானமாக அவளையும் அணைத்துத் தூக்கியவாறே எழுந்து நின்றான். இருவரையும் பிணைத்திருந்த அவளது துப்பட்டாவிற்கு நன்றி கூறும் வண்ணம் அதை எடுத்துவிட்டு, அதற்கு விடுதலை அளித்தான் அஜய். துப்பட்டாவை விலக்கிய பின்னரும் அவள் விலக மனமின்றி அதே நிலையில் நிற்க, அவளது மூச்சுக்காற்று அவன் நெஞ்சில் பட்டு அவனை சூடேற்ற, இனிமேல் முடியாது என்று நினைத்தவன்,

“டார்லிங், இனி நம்ம ரூம்ல போய் கண்டினியூ பண்ணலாமா?” என்று கண்ணடித்துக் கேட்க,

சஹானா என்ற சிலைக்கு அப்போது தான் உயிர் வந்தது போலும், “ம்ம்.. ஆசைதான்..” என்று சொல்லிவிட்டு தன் ஆடையில் இருந்த அத்திரவத்தின் ஈரத்தையும் மறந்து சிட்டாகப் பறந்தாள்.

காதலை அடக்கி வைக்கலாம். ஆனால், அதுவே ஒருநாள் அனைத்து வேலிகளையும் தகர்த்தெறிந்து விட்டு பொங்கிப் பெருகும் போது, அதைக் கட்டுப் படுத்த யாராலும் முடியாது...!

காதல்

கங்கை நதி அல்ல

தெளிந்த நீரோடையாய் ஓட...

சுனாமியாய்

சீற்றம் கொண்டு எழும்


பெருங்கடல்...!!”

கங்கை நதியையே அடக்கி வைக்க முடியாது எனும் போது,பெருங்கடலையா அடக்கி வைக்க முடியும்...?

நினைவுகள் தொடரும்...!
 
Status
Not open for further replies.
Top