All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே...." கதைத் திரி(temporally stopped)

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
உ ப்பா…

NPNN 4

"மண்ணாக நினைச்சு சும்மாத்தா இருந்தா
உன் வாழ்வு எப்போதும் தேறாது ...
பொன்னாக நினைச்சு எப்போதும் உழைச்சா
ஆனந்தம் எந்நாளும் மாறாது…

இந்த பூமியே எங்க சாமியம்மா செய்யும் வேலையே எங்க பூஜையம்மா.."

வழக்கம் போல் கிராம நாயகனின் பாடல் உரக்க ஒலித்துக் கொண்டிருக்க, மண்புழு உரத்திற்கான படுகைக் குழியில் இருந்த மண்ணை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மகிழ் வேந்தன்.


"வேந்தா! இங்கே என்னாடா பண்ற? அந்த கோயிலு நெலத்தில புழுதி ஓட்றானுங்க அது பரவால்ல.. அங்கன பாழடைஞ்சு ஒரு கெணறு இருந்ததே, அதைத் தூர் வாருறாங்கன்னு பாத்தா.. நைசா சைடுல வெட்றானுங்க டா மாப்ள. இவனுங்க குடையிற குடைல நம்ப வரப்பு மண்ணெல்லா அதிருது.." எனவும் ஆச்சரியம் மிக நிமிர்ந்து பார்த்தான்.


"என்னாது, கோயில் கெணத்தை தூர் வார்றாங்களா? கோயில் கமிட்டி அதுக்கெல்லா சம்மதிக்க மாட்டாங்களே! தர்மகர்த்தா, செயலாலரு பொருளாலருன்னு ஆயிரம் கரைச்சல் கொடுப்பானுங்களே.."

"ம்க்கும்.. இவனுங்க செல்வாக்குதா பாதாளம் வரை பாயுதே.. கெணத்துக்குள்ள பாயாதா.. ஆனா சைடுக்கா கொடையறானுங்க மாப்ளை.. என்னான்னு பாரு.. "

கையில் உதிரி உதிரியாக விழுந்த மண்ணை ஆற்றிப் பார்த்து, அதில் நெளிந்த உழவர்களின் நண்பர்களை அன்பு பொங்கப் பார்த்தவன், சிறு முறுவலுடன் மீண்டும் குழியில் இட்டான்..

"ஏலே எசக்கி, ஒரம் ரெடியாகிடுச்சு. கவனமா சலிச்சு எடுத்து மண்புழுக்கள பிரிச்சு எடுத்து அந்த தொட்டில போடனும் கேட்டியா.. " என சத்தமிட,


செந்தில், "ப்ச். நா என்னா சொல்லிட்டு இருக்கேன் நீ.. " என்று சலித்தவனை கையமர்த்தியவன் ,


"ஏம்லே, பக்கத்து காட்ல இருக்கவேங் கூட மல்லுக்கு நிண்டுகிட்டே இருந்தா, நம்ம சோலிகள எவம்லே பாக்கறது? மூனு வருசமா வெள்ளாமை எடுக்காத விட்டது , தண்ணியில்லேன்னு தானே. புதுசா வாங்குனவே தண்ணி வாரதுக்கு உண்டான வேலையத் தானே மொதல்ல செய்வான்.. செய்யட்டும்.."


"மறுக்கா மறுக்கா என்ன மாப்ள.. நாயப்படி சைடுல , அடுத்தவன் நிலம் வரை தோண்டறது தப்பு. மண்ணு சரிஞ்சு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிப் போயிட்டா!! "

" தோண்டறவன் அதெல்லா பாத்து தா பண்ணுவா.. ஒன்னு தெரிஞ்சுக்க அவனுங்க பண்றது சட்டப்படி தப்பில்ல. அதனால அதெல்லா நாம போய் கேள்வி கேட்க முடியாது. நீ ஆவுற சோலியா, தக்காளி நாத்துவிட வெத போட்டமில்ல அதுல மீனமிலம் தெளிச்சிட்டு வா.. "


ஏதூ.. என்றவாறு, மூக்கை மூடிக் கொண்டவன், "மாப்ள நீ என்ன வேல கொடு நா செய்யறே, இது மாட்டும் வேணாம் மாப்ள.. மதியம் சோறு உள்ள எறங்காது .. "

முறைத்தவன், " அப்ப அவரைல பூ பிடிச்சிருக்கு.. அதுக்கு போய் .."


இடை நிறுத்தி, "தேமோரு தானே தெளிக்கறேன்.. தெளிக்கறேன், இதுக்கு அது தேவலாம்." என்றவாறு அவசரமாக ஓடினான்.


மகிழ்வேந்தனோ,
"உடம்பில்
இங்கே வேர்வை வர
வேலை செஞ்சா
உலகம்
உன் காலடியில்
வந்து விழும்
காலம் எல்லாம் ராவு பகல்
பாடு பட்டு
வேலை செய்வோம் " என்று பாடியவாறே.. மீன் கழிவுகளில் வெல்லம் கலந்து நொதிக்க வைத்து தயாரான மீன் அமிலத்தில், நீர் கலந்து மருந்து தெளிக்கும் கலத்தில் ஊற்றலானான்.


"பூமியே எங்க சாமியம்மா…" என்ற பாடலின் தாளத்துக்கு ஏற்றவாறு தோள்களைக் குலுக்கியவாறே தலையாட்டும் இளையவனை முறைத்தான் பாரி..


இந்திரன், "நம்ம நாட்டுபுறப் பாட்டு பாட்டுதா.. என்னா அடி.. கவனிச்சியா பாரி, எப்பவும் இந்த வயல்ல பாட்டுச் சத்தம் கேட்குது. பாடியே பயிர வளக்குறானுங்களோ என்னவோ.. " என்றவாறு கடிகாரத்தைப் பார்த்தான்.


பாரி எதுவும் பேசாமல், கிணற்றின் உள்ளே உற்றுப் பார்த்தவாறு இருந்தவன், "ஏ.. அந்த இடது பக்கமா அந்த பாறைய தட்டி விடு." எனவும்

கிணற்றினை ஆழப்படுத்தும் பணியில் இருந்தவன் தன் கையில் இருந்த உளியால் தட்டத் தொடங்கினான். இவ்வளவு நேரம் தட்டியதற்கும் இப்போது தட்டும் ஒலியிலும் வித்யாசம் இருப்பதை உணர்ந்தவனாய் நன்கு ஓங்கி அடிக்க,

"ஆ, அப்படித்தான் அந்த இடத்திலே ஒரு அடிக்கு நல்லா ஒடைச்சு விடு." என்று சொல்ல,

அவன் சொல்லியவாறே தட்டிய சில நிமிடங்களில் ஈரம் தெரிய ஆரம்பித்து தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது.

ஹே என்ற ஆட்களின் குரலில்,

"புது ஊத்துக்கண்ணு திறந்திடுச்சா.. " என்றவாறு எட்டிப் பார்த்தான் இந்திரன்.


இறுக்கமாய் ஆமென தலையசைத்தவனைக் கண்டு, "நீ நெனச்ச மாரியே இந்த கிணத்துல தண்ணீ கொணார்ந்துட்ட, இது போலவே, நம்ம நெலத்திலே இருக்க கெணறுங்கள்ள தண்ணீர் வந்திட்டா ஆப்பரேஷன் ஏ முதல் படி சக்ஸஸ். "

"அதுல தண்ணீர் வர வைக்கிறது கஷ்டம்னு தான் நீர்மட்டம் பாக்கிறவன் சொல்லிட்டானே.. அந்த வத்தாகெணறு இருக்க நிலங்கள வரவைக்க என்னா வழின்னு தான் பாக்கனும். " என்று சொன்ன நேரத்தில் காற்றில் ஏதோ வித்யாசமான பழ வாசனை .


"என்னா இது, ஊறல் வாசனை வருது." என்று மூக்கை பொத்திக் கொண்டான் இந்திரன்.


"ஏதாச்சும் இயற்கையான ஒரம் மருந்து அடிப்பாங்க ஐயா.. பாவநாச சந்தைலேயே செவந்தி ஐயா காட்டுக் காய்களுக்கு பழங்களுக்கு கிராக்கி அதிகம். எல்லா இயற்கையா அவக பண்ணைலையே தயாரிப்பாக.. களிவு குப்பைன்னு ஏதும் கெடையாது. எல்லாம் ஒரம் தா. வேந்தனய்யா ஒரு பக்கம்னா நீலாம்மா மறுபக்கம் அப்படி கருத்தா பாத்துக்கிடுவாக.. "

வரப்பினை வெட்டிக் குறுகலாக்கி கொண்டிருந்த உள்ளூர் ஆள் சொல்லியவாறே வேலை செய்ய,

காதை தேய்த்து விட்டுக் கொண்ட இந்திரன், "ஓவரா துதி பாடறானுங்களே.. " என்றவாறு மீண்டும் கடிகாரத்தைப் பார்க்க,

பாரி, "என்ன எங்கேயும் போகனுமா என்னாத்துக்கு மணிய மணிய பாக்கறவே.."


"ப்ச் , நேத்து முந்தாநாளெல்லா இந்த நேரத்துக்கு வந்திட்டா.. " என்றவனின் கண்கள் விரிந்தன.


ஆம் நீலாம்பரி தான் , தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தாள். வழக்கமான இடத்தில் வாகனத்தை நிறுத்தியவள் , இரண்டு பைகளை கைக்கொன்றாய் பற்றிக் கொண்டு களையெடுத்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஏதோ கேட்பதும் பின் சிறு கிளையில் பைகளை தொங்க விட்டு விட்டு இவர்கள் பக்கமாய் பார்ப்பதும் புலனாக.. இந்திரன் மெதுவாக சிரித்து, முன்னும் பின்னும் நகர்ந்து தனது இருப்பை புலப்படுத்த,


பாரி உரத்த குரலில், "வெரசா வெட்டுங்க டே.. இன்னிக்கு முழுக்க வரப்பையே வெட்டி மொறையக் கழிக்கப் பாக்காதீங்க.. இன்னிக்குள்ள இந்த காட்டுல இரண்டு ஒழவு போட்றனும்.. ஹூம்.. "
என்று உறுமலாய் சொல்லவும்,

ட்ராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ஜேசிபியின் இயந்திரக் கை கொண்டு இரண்டடி அகலமாய் இருந்த பாதையை, அரையடி வரப்பாய் மாற்றிக் கொண்டிருந்தவர்கள்.. வேகமாக செய்யலானார்கள்.

சிறு கூடை ஒன்றை எடுத்தவாறு நடந்து வந்தவள், கடந்து செல்ல வேண்டிய பாதையே இல்லாமல் ஆகுவது கண்டு ஆச்சரியத்துடன் முன்னேறி வந்தாள்.

நிமிர்ந்து தேடிய பார்வையில் தனை பார்த்தவாறு இருக்கும் இந்திரனிடம் , "இதென்னா இத்தனை வருசமில்லாத வழக்கமா பாதைல எல்லாம் கை வைக்கறீங்க.. இன்னும் இருவது நாள்ளல ஆடி அம்மாவாசைக்கு ஊரே கூடி வரும். அவங்க எப்படி இந்த ஒத்தையடிப் பாதைல கடந்து போவாங்க. ஆரு உங்களுக்கு இந்த மாதிரி ரோசனை சொல்லிக் கொடுத்தது?" என சற்றே உரத்த குரலில் கேட்க,


பதில் என்னவோ அடுத்தவனிடம் இருந்து வந்தது.
பாரி, அவள் புறமாய் திரும்பியும் பாராமல், "கோயிலுக்கு வரனுமின்னா, ஊருணி வரப்போரமா நடந்து வரட்டும். இல்ல நாங்க வந்த ரோடு வழி வரட்டும்.."

"அட , உங்களுக்கு அது வசதியா இருக்கலாம். ஆனா வீகே புரத்துக்காரவங்களுக்கு அது கஷ்டம். அஞ்சு கிலோ மீட்டர் சுத்து வழி.. எங்க பண்ணை வழியா வந்து தா அய்யனார் கோயிலுக்கு போவாங்க. இன்னிக்கு வெள்ளிக் கிழமை.. அய்யனாருக்கு பூசை கொண்டாடியே இந்த வழியாத்தான் வந்தாகனும். தெரியுமா? "


"அதுக்கு.. அதுக்கு நான் இரண்டு சென்ட் நிலம் அளவு எடத்தை பயிர் பண்ணாத வேஸ்ட்டா விட முடியாது." என்றவனை ஆழ்ந்து பார்த்தவள்,


"உங்களை யார் விடச் சொன்னா.. பயிரை பந்தோஸ்து வேணாவா.. வரப்புங்கறது வெறும் நடை பாதை இல்லீங்க. வச்ச பயிர காப்பாத்தற வேலியும் கூட.. அங்கன பாருங்க." என்று தங்களின் வயல்களின் புறமாய் சுட்டிக் காட்டினாள்.

"வரப்போரம் அகத்தி , ஆமணக்கு , சோளம் எல்லாம் அடுத்தடுத்து நட்டீங்கன்னா அதுங்களே உயிர் வேலியா நின்னு பயிர்களுக்கு பூச்சிங்களால சேதாரம் வராம பாத்துக்கிடுங்க. நீங்க வியாபாரத்தில தான் கெட்டி, வெவசாயத்தில கத்துக்குட்டி, அதால அக்கம்பக்கம் , வேளாண்மை பத்தி அறிஞ்சவங்க தெரிஞ்சவங்கட்ட கேட்டு நடந்துக்கிடுங்க. " என்றவளை.. நிதானமாய் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் இருந்த அனலும் இறுக்கமும் கண்டு, நீலாம்பரி திகைத்து விழித்தாள்.

கோவிலுக்கு ஊரே செல்லும் பாதையை தன் இஷ்டத்திற்கு குறுக்குகிறானே என்ற ஆற்றாமையில் , அதட்டும் தொனியில் பேசிவிட்டோமோ என்று அவள் பேசிய வார்த்தைகளை யோசித்த வேளையில்,

"நீலூ.." என்ற குரலில் வேகமாக திரும்பியவள் தன் பின்னால் நின்ற அத்தானைக் கண்டு அவனை நோக்கி நடந்தாள்.


அலைபேசியை இடது கையில் நீட்டி வைத்தவாறு வந்தவன், வரப்பு குறுகி இருப்பதையும், அவளின் முகம் கசங்கி இருப்பதும் கண்டு சட்டென திரும்பி அங்கே நின்று கொண்டிருந்த சகோதரர்களை உறுத்துப் பார்த்தான் .


"என்ன நீலு ,என்ன பிரச்சனை?" எனக் கேட்வும் எச்சில் விழுங்கியவள், "அது.. அது அத்தான் , கோவிலுக்கு போலாமான்னு பாத்தா வரப்பு வெட்டி சுருக்… இல்ல திருத்திட்டு இருந்தாங்களா, அதா எப்படி போகன்னு தெரியல. சரி , பரவால்ல நா சாயங்காலமா ஊருணி சுத்தி போய் விளக்கு போட்டுக்கிடுதேன்." என்றவாறு அவனை நோக்கி நடக்க,

அலைபேசியை நீட்டி , " பெரியத்தை பேசுதாக பாரு. அங்கன பேச்சிக்கு எலுமிச்ச வெளக்கு போடுவியாம். அதைச் சொல்ல ஒன் செல்லு கூப்டாகளாம். நீ எடுக்கலைன்னு எனக்கு அடிச்சாக." என்றவன் தனது சட்டைப் பைக்குள் கைவிட்டு எலுமிச்சம் பழங்களை எடுத்து நீட்டினான்.

"இல்லத்தான். நான் வண்டில போய் , சுத்திப் போய்கிடுறேன்." என்று நடக்க ஆரம்பித்தவள்,


" ஏலே வரப்பு கொத்தறது நிறுத்துங்கலே.." என்ற குரலில் நின்றாள்.

"நீலாம்பரி." என்று அழைத்தவாறு சகோதரனைத் தாண்டி முன்னால் வந்த இந்திரன், "நீங்க கோயிலுக்கு போயிட்டு வாங்க. வரப்பு செதுக்கற வேல இப்ப வேணாம். உழவு போடுங்கடே." என்றான்.


அவள் திரும்பி வேந்தனைப் பார்க்க, "பன்னெண்டுக்குள்ள விளக்கு போடச் சொன்னாங்க. போயிட்டு வெரசா வா. நா இங்கனயே நிக்கேன்." என்றவனின் பார்வை பாரியை நோக்கி இருந்தது .


சரியென்று தலையசைத்தவள், தயங்கியவாறு அடியெடுத்து வைத்து நடந்து கோயிலை நோக்கிச் செல்ல, துணைக்கு செல்பவன் போல அவளிடம் ஏதோ பேசியவாறே நடக்கும் சகோதரனை வெறித்து விட்டு திரும்பியவனின் விழிகள் தனை பார்த்துக் கொண்டிருக்கும் மகிழ்வேந்தனின் மீது நிலைத்தன.


இரத்த சிவப்புக் கலரில் சட்டை, மஞ்சளில் இருந்த உள் பனியனை காட்டும் வண்ணமாய் மேலிருந்த இரு பொத்தான்கள் போடப் படாமல் இருக்க, பச்சை கலரில் முட்டிக்கு கீழ் வரை இருந்த அரை கால் சட்டையின் நடுவே இடுப்பில் இருந்தது பலவண்ணங்களில் இருந்த சாரம். இடப்புறம் வளைய,

அவனைப் பார்த்தவாறே , " என்றாங்கடே வேடிக்க.. சோலியப் பாருங்க.. வரப்பு மட்டும் தா இருக்கனும். பாதை கீதைன்னு ஏதும் இருக்கக் கூடாது. " என்றவன் , அலைபேசி எடுத்து " விக்ரம சிங்க புரம் அய்யனார் கோயிலுக்கு பக்கத்து நிலத்துக்கு முன்னூறு யூக்கலிப்டஸ் ஐநூறு சவுக்கங்கன்னு கேட்டேனே.. இன்னும் வந்து சேரல." எனவும் ,

அதிர்ந்து பார்த்தான் மகிழ் வேந்தன்.

" இன்னிக்கு நைட்டுக்குள்ள டெலிவரி பண்ணிடு. " என்றவன் அலைபேசியை சட்டைப் பையில் வைக்க,

கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன, " புஞ்சைக் காட்டுல போய்.. இந்த நெலம் ஒரு வருச குத்தகைக்கு தானே எடுத்திருக்கீங்க.. அதுல வெள்ளாமை பாக்கலாம். இது போல மரமெல்லா நட முடியாது. " என அடிக் குரலில் அழுத்தமாய் சொல்ல,


அலட்டலின்றி தனது குளிர்க் கண்ணாடியை கழற்றி துடைத்து சட்டையில் சொருகியவாறே, "இந்த நெலம் மட்டுமல்ல.. நீ நிக்கற நிலம்.." கண்களால் கோவிலை சுட்டியவன், "அந்த நிலம் எல்லாமே.. ஏன் ! இந்த ஊரே என் முப்பாட்டனோட பாட்டனுக்கு சொந்தம். 1952ல நில உச்ச வரம்பு சட்டம் வந்த காலத்தில என் முப்பாட்டன், 'பொறுக்கிக்கங்கடா' ன்னு விட்டெறிஞ்சுட்டு போனது தான், நீங்க இப்ப பகுமானமா கொழிச்சிட்டு இருக்கிற நிலம்.. கொடுத்த எங்களுக்கு எடுக்கவும் தெரியும்.. ஏதோ பப்ளிக் சர்வீஸ் எக்ஸாமுக்கு படிக்கறியாமே.. அதை எப்படியாவது பாஸ் பண்ணிடு, நல்ல வேலைக்கு ரெகமண்ட் பண்றேன். இந்த ஊருணி சுத்தி இருக்க எல்லா நெலமும் என்னுது.. யூக்கலிப்டஸ் நடுவேன். சவுக்கு நடுவேன் ஏன்.. கள்ளிச் செடியா கூட வச்சுவிடுவேன்.. நீ என்ன கேக்கறவே ?" என்றவன்.. கிணற்றுப் புறமாய் நகர்ந்தவாறு, "மேலே இருக்க கிணறுங்களுக்கு வெடி வைக்க ஆட்கள் கூட்டியாரேன்னு சொன்னே, எப்ப வர்றானுங்க.. " என்று கிணறு வேலை மேற்பார்வை செய்தவனிடம் கேட்பதினை பார்த்துக் கொண்டே கைகள் கட்டி நின்று கொண்ட மகிழ் வேந்தனின் பார்வை தூரத்தில் பேச்சியம்மனிற்கு விளக்கு ஏற்றும் மாமன் மகளின் மீது இருந்தது..


இந்திரன் அவளிடம் ஏதோ சொல்லியவாறு பக்கத்து மண்டபத்தில் இருந்த சிலையை காட்டுவதை கவனித்தவனின் கண்கள் சுருங்கின.


சிலையின் பின்னிருந்த வெள்ளைச் சுவற்றில் கொட்டை கொட்டையாய் செதுக்கப்பெற்று வர்ணம் பூசப் பெற்று இருந்த எழுத்துக்களும் புலப்பட்டன.

" வேட்டைக்கார சேதுபதி பாரி வேந்தன் "




நாயகன் ஆடுவான்..
 

தாமரை

தாமரை
யூடி எப்போ என்று நீங்கள் கேட்பது என் மீதான அன்பா , கதையின் சுவாரஸ்யமான நகர்வா எனத் தெரியலை தோழமைகளே.. ஆனாலும் ஜாலியாத்தான் இருக்கு. எனது பிரச்சனைகள் புரிந்து ஓரிரு நாட்கள் தாமதமாவது புரிந்து காத்திருக்கும் அன்புக்கு மிகுந்த நன்றிகள் ❤❤❤🙏🙏🙏💕💕💕💕


கதை பற்றி உங்களின் கருத்துக்கள் பகிர,







அடுத்த பதிவு😁😁😁😁😁😁😁😁 வெள்ளி எனது இலக்கு. விருந்தினர் வருகை வேறு உள்ளது.. எனவே முன்னே பின்னே வரலாம். தாமதமாகும் என்றால் முன்பே தெரிவித்து விடுகிறேன்.

லவ் யூ ஆல்💕💕💕💕💕💕💕💕💖💖💖💖💝💝🙏🙏
 

தாமரை

தாமரை
உ ப்பா

5

மாப்ளே.. எனும் குரலில் திரும்பிப் பார்த்தான் மகிழ் வேந்தன் .

நீலா ஃபோனு கதறிகிட்டே கெடக்கு , எங்க அந்தப் புள்ள.. என்று கேட்கவும் கை காட்டினான்.

அவள் கோவிலில் இருந்து வெளியேறி வருவதும், உழுது கொண்டிருக்கும் ட்ராக்டர்களைக் கண்டு சற்றே தயங்குவதும், பின் அவசரமாக வரப்பு வழியே நடந்து வருவதும் அவளுக்கு பின்னாலேயே வரும் இந்திரனையும் பார்த்துக் கொண்டேயிருக்க.. காதருகில் வந்து தாழ்ந்த குரலில் பேசினான் செந்தில்,


" அவனுங்க கிணறு மட்டுமா தூர் வாருறேன்ங்கற பேர்ல ஆக்ரமிப்பு பண்றானுங்க.. பாதையும் பாதி தொலவட்டுக்கு கடிச்சு வச்சுருக்கானுங்க, இதையும் ஏன்னு கேட்க மாட்டியா நீ.. என்று பொருமவும்,

ப்ச் என்றவன், நீலாம்பரி அருகில் வந்ததும், அலைபேசியை அவள் புறமாய் நீட்டியவன், "எங்கே போனாலும் கைல வச்சுக்க நீலு. எத்தனவாட்டி சொல்லிருக்கேன்.." எனவும்,

அமைதியாக வாங்கி சோதித்தவள், "அப்பா ஏன் கூப்பிட்டுருக்காங்க?" என்றவாறு அழைத்து காதில் வைத்தாள்.


"ப்பா.. கோவிலுக்கு போனேன்.. ஆங்.. மொட்டை போடறதுக்கு தான் பத்து நாளு இருக்கே.. அப்பறமேட்டு வாங்கலாம்.. பட்டு பாவாடை, பொடவ திருநவேலி டவுன்ல தான் வாங்கனும். சின்னத்தை செய்யறேன் சொன்னாங்களே.. பெரியத்தை யா.. என்னையா,
சரிப்பா, ஞாயிறு மஞ்சு கூட போறேன். சரிப்பா.."

என்று பேசிக் கொண்டிருந்தவளை மெதுவாக கை பற்றி தங்களது தோட்டத்தின் பக்கமாக மகிழ் வேந்தன் இழுக்க, அவனுடைய இழுவைக்கு நகர்ந்தவாறே.. இந்திரனை திரும்பிப் பார்த்து புன்னகை சிந்திவிட்டு பேசிக் கொண்டே சென்றாள் .


ஒரு கையசைவில் மீண்டும் ஆட்களை ஏவி, பாதையை வரப்பாக மாற்றும் வேலையை செய்ய வைக்கும் அண்ணனின் அருகில் சென்ற இந்திரன், " ஸ்… ஏன் பாரி? பூசாரி கூட என்னப் பாத்து மொறச்சான். கோவில் ஆட்கள்ட்ட தேவயில்லாத பிரச்சனை பண்ற நீ. இதெல்லா நம்ம ப்ளான்ல இல்லியே.." எனவும்,

என்றவனை ஏறிட்டுப் பார்த்தவன், ஊருணி மடைல இருந்து நிலங்களுக்கு தண்ணீர் வர்ற பாதைய சீரு பண்ணா இந்த ரெண்டு குழியும் நெல்லு பயிரு வைக்கலாம்னு நேத்து பேசினோமே.. இப்போ அங்கே தான போயிட்டு வர்ற.. அதை பாத்திட்டு வந்தியா? என்றான்.

"அது.. இல்ல .." என்று தலையசைத்தவனை கண்கள் சுருக்கிப் பார்த்தவன், சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு குரல் இறக்கி, "அத விட்டு அவ பொறத்தாலே போய்கிட்டு… நீ போற வழி எனக்கு பிடிக்கல கேட்டியா.. ****** நேத்து அவளுக்கு கல்யாணம்னா உனக்கு ஏன்டே பதறுது.. என்னா கண்டவுடன் காதலா.. ?" என்று உறுமியவனை கீழ்க்கண்ணால் பார்த்தவன்,

ப்பூ பூ…. என மெலிதாய் விசிலடித்தவாறு தன் அத்தானுடன் நடந்து செல்லும் அவளைப் பார்த்தான்.


"காதலா… தெரியல. ஆனா பிடிச்சுருக்கு. என் கற்பனை ஃபியான்ஸிக்கு 60% ஒத்து வந்திட்டா, மிச்சம் நாப்பதும் இருக்கிறான்னு தோனிட்டா.. ஹூம்.. ஃபிக்ஸ் ஆகிடுவேன்." என்று சிரிப்பவனை கொலை வெறியாகப் பார்த்தவன், வாய்க்குள் ஏதோ முணுமுணுத்து..

"இங்க வெட்டியா நின்னுட்டு இருக்கிற அந்த ஆளுங்களக் கூட்டிட்டு போய் வாய்க்கால் தூரு வார்ற வேலையப் பாக்க சொல்லு.." எனவும் ,


"சரி " என்றவாறு திரும்பி மீண்டும் அவள் பக்கமாய் திரும்ப போனவன், "ஊருணி பாத்து போடாங்கறேன்.. " எனும் அதட்டலில், தோளைக் குலுக்கி விட்டு, "ஏற்கனவே பாதைய குறுக்கிட்டன்னு அந்த பூசாரி கடுப்பில இருக்கான். நீ அந்த பக்கமே திரும்ப திரும்ப வைக்கிற.. சூடம் காட்ற தட்டாலேயே மண்டல போட போறான்.. ம்.. சரி போறேன்." என்றவாறு கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தான் .


அப்போது பாதையை கொத்திக் கொண்டிருந்தவன் தூக்கிய ஜேசிபியின் இயந்திரக் கரத்தில் இருந்து கொட்டிய மண்ணோடு கொத்தாக வந்து விழுந்தது ஒரு பாம்பு. விழுந்த வேகத்தில் படமெடுத்து நின்ற அதனை பார்த்த இந்திரன் துள்ளிப் பின் வாங்கியவன், பக்கவாட்டில் இருந்த வயலுக்குள் குதிக்க, அவனின் அசைவில் மிரண்ட அந்தப் பாம்பு வேகமாக பாரியை நோக்கி வந்தது.

ஜேசிபி ஓட்டிக் கொண்டிருந்தவன் பதறி அலறினான், அய்யா ஓடுங்கய்யா.. பாம்பு உங்கள பாத்து தா வருது.

, அசையாமல் நின்றவன் கண்கள் மட்டும் சுற்றிலும் பார்க்க , காலில் இருந்து சில அடிகள் தள்ளி கீழே கிடந்த மண் வெட்டி கண்டு அதனை எடுக்க குனிய, அவனின் அசைவில் மூர்க்கமடைந்த நாகம் சீறியபடி மூன்றடி எழும்பி முன்னால் வந்து சரியாக அவனின் கையை பதம் பார்த்த நேரத்தில், அதன் மீது வந்து விழுந்தது ஒரு பெரிய மண்கட்டி..


அதன் நடு உடலில் மண் கட்டி விழுந்திருக்க, பாரியின் கைக்கு வந்திருந்த மண் வெட்டி அதன் தலையின் மீதே விழுந்து துண்டித்திருந்தது.


பாரீ…

அத்தான்..

வேந்தா… என கத்தல்கள் கேட்க முன்னால் சரிந்து மண்டியிட்டு கைகள் ஊன்றி நிலைப்படுத்திவன்.. தலை அடிபட்டு இருந்தாலும் வாலில் அசைவு இருப்பது கண்டு மீண்டும் ஒரு முறை அடித்தான்.


அதற்குள் மண் கட்டியை எறிந்து அவனைக் காப்பாற்றி இருந்த மகிழ்வேந்தன் ஓடி அங்கே வர, பின்னோடு அவனை அழைத்தபடியே வந்தனர் நீலாம்பரியும் செந்திலும்.


அவசரமாக ஓடி வந்த வேந்தன், பாம்பு அடிபட்டு ரத்தம் சிந்திக் கிடப்பது கண்டு, முகம் இறுக, பாரியை குனிந்து பார்த்தான்.


தரையில் முட்டியிட்டு அம்ர்ந்திருந்தவனைக் கண்டு, பதட்டத்துடன் தூக்கி விட முயல,

தொடாதே.. என்றவன்.. மண் வெட்டியைத் தூக்கி போட்டு விட்டு தானே கையூன்றி எழுந்து நின்றான்.


செந்தில், சத்தமாய், "க்க்கும்.. என்ன தொடாதே.. ன்னு கூப்பாடு வேண்டிக் கெடக்கு. எங்க வேந்தன் மட்டும் சுதாரிச்சு ஒரு செகண்டுல மண்ணாங்கட்டியத் தூக்கிப் போடலேன்னா, நீ இந்நேரம் அதுட்ட கடி வாங்கி மண்ணக் கவ்விட்டு கிடந்துருப்ப மக்கா. இவேம் சலம்பலு தாங்கல.." என்று சத்தமாய் முணுமுணுத்தவன், எழுந்த அவன் தள்ளாடுவது கண்டு, "என்னா முட்டி உடஞ்சுருச்சா.. இல்லே பாம்பு ஒரு போடு போட்ருச்சா..?" என்றான் நக்கலாக.. அதற்குள் இந்திரனும், கிணறு தூர் வாரிக் கொண்டிருந்தவர்களும் ஓடி வந்திருக்க, இந்திரன் தன் தமையனைத் தாங்கிக் கொண்டான்.


"பாரி .. பாரி ஒன்னும் இல்லை ல.. பேசு.. கடிக்கலைல" என்று கேட்டவனை பற்களைக் கடித்தவாறு நிமிர்ந்து பார்த்தவன்,

"ஏன் கத்தற, நல்லாத்தானே இருக்கேன்." என்றவாறு தன் கையினை உற்றுப் பார்த்தான்.

வலது கையின் மேற்புறத் தோலில் சிறு சிறு கீறல்கள் தென்பட்டன. ஒரு ரத்தப் புள்ளி வேறு தெரிந்தது.


அப்போது அவனின் அருகில் வந்த நீலாம்பரி பதட்டத்துடன் ," எங்கே கையைக் காட்டுங்க " எனவும் ,

கைகளை உதறியவன், "ஒன்னும் தேவையில்ல." என்றவாறு நகர முற்பட,

"அய்யோ கையைக் காட்டுங்க, பாம்பு கடிச்சிருக்கா ன்னு பாக்கனும். செந்திலண்ணே, சொர்ணாவை கூட்டி வாங்க. பாம்பு கடிச்சதுக்கு, மருந்து மூலிக பறிச்சிட்டு வரச் சொல்லுங்க." என்றவாறு அவன் அருகில் செல்ல, வேகமாக நகரத் தொடங்கியவன் அவள் நகர்வில் பாதை மறித்ததில் எரிச்சலுற்று கையை உதறினான்.

பதட்டத்துடன் ப்ச் என்றவள்,
அடிபட்டு கிடந்த பாம்பை உற்று நோக்கி மனம் படபடக்க , "நாகப் பாம்புங்க.. நீங்க பாட்டுக்கு கண்டுக்கிடாம இருக்காதீங்க.." என்றவள் இந்திரனிடம்

"ஏங்க, நீங்களாச்சும் உங்க அண்ணாச்சிக்கு சொல்லுங்க. எதிர்பட்டது நாகப் பாம்பு.. கடிச்சிருந்தா ரொம்ப ஆபத்து, அரை மணிக்குள்ளாற ட்ரீட்மெண்ட் பாக்கனும். ஆசுபத்திரிக்கு கூட்டிப் போங்க. அதுக்கு முன்னே கையை, கடிபட்ட இடத்தில நல்லா கழுவிட்டு , தேவைன்னா முழங்கைக்கு கிட்ட விஷம் உடம்புல ஏறாம இருக்க ஒரு கட்டு போடனும். " எனவும்

அவளை முறைத்தவன், "நான் தான் சொல்றேன்ல கடிக்கல. அதுக்கு முன்னேயே நான் அடிச்சிட்டேன். நீ போ.." என கத்த,

மனம் கேட்காமல் அருகில் நின்றிருந்தவர்களிடம், "அண்ணாச்சி நீங்க தண்ணீர் கொண்டு வாங்க.. சோப்பு ஏதும் இருக்கா.. ஆங் என் பையில இருக்கும். செந்திலண்ணே, எடுத்து வாங்க. இந்தர் உங்கண்ணாச்சி நடக்கக் கூடாது. அந்த கிணத்து மேட்டுல உட்கார வைங்க.." என்று அடுத்தடுத்து சொல்லவும், கண்டு கொள்ளாது நடக்க முற்பட்டவன்,

சகோதரனால் அழுந்தப் பற்றப் பட்டு அமர வைக்கப்பட , முதலில் தள்ள முயற்சித்தவன், பின்பு கையில் உணர்ந்த வித்யாசமான உணர்வால் சிடுசிடுவென முகத்தை வத்தவாறு அமர்ந்தான்.


"கையை நீட்ட சொல்லி கழுவச் சொல்லுங்க ." என்றவாறு இந்திரனை பார்க்க அவன் வேகமாக பாரியின் கையைப் பற்றி காட்டினான். வேகமாக தண்ணீரை ஊற்றியவள் செந்தில் கொணர்ந்த சோப்பினை இந்திரனிடம் தர, அவனும் காயத்தின் மீது தடவி கழுவி விட. . வெளிச்சத்தில் உற்று நோக்க இரண்டு மிக லேசான இரத்தப் புள்ளிகள் கீறல்கள் போலத் தெரிந்தன.

மகிழ்வேந்தனை நிமிர்ந்து பார்த்தவள், "ஆழமா படல.. கடிச்சுருக்கா என்னன்னு தெரியல. " மகிழ்வேந்தனின் புறம் திரும்பி, "அத்தான். எதுக்கும் ஆன்டி வேனம் கொடுத்திட்டா தேவலாம். நடக்கக் கூடாது.. தூக்கிட்டு போங்க." என்றவளை முறைத்தவன்,

"இந்திரா, அந்த காண்ட்ராக்டர்ட்ட இன்னிக்கு கொடுத்த வேலைகளையெல்லாம் பாக்க சொல்லு.. நா போய்க்கிடுவேன். யாரும் ஏதும் செய்ய வேண்டாம். " என்றவன், எந்த பதட்டமும் இன்றி கோவில் அருகே நிறுத்தப் பட்டிருக்கும் வாகனம் நோக்கி நடந்து செல்லலானான்.


துளியும் தடுமாற்றம் இன்றி விரைப்பாய் செல்லும் அவனையே சில நொடிகள் பார்த்தவள், மகிழ் வேந்தனும் செந்திலும் ஏற்கனவே தங்கள் வயல் புறமாய் செல்லத் தொடங்கியிருப்பது கண்டு , விரைந்து அவளும் சென்று இணைந்து கொண்டாள்.

செந்தில், "என்னா ஆளு இவன்? ஒதவி செய்ய வர்ற ஆட்களைக் கூட ஒட்ட
விடாத வெரட்டுற ஆள இப்பத்தா பாக்கிறேன். ஹூம். " எனவும்

சன்னமாய் சிரித்தவன், "சில பேர் அப்படித்தான். அதும் இவன்.. சரியான இடும்பு (திமிர்) புடிச்சவன். இனி நாம ஒதுங்கிப் போறது தா நல்லது. நீலு, நீ இனி கோவிலுக்கு இந்த வழி வராதே.. உனக்கு சாயங்காலத்துக்குள்ள நம்ம கார்த்திக் நிலத்து கிணத்து ஓரமா ஒரு பாதை எடுக்க சொல்லி ஊருணிக் கரை வழியா நடக்கறாப் போல செம்ம பண்ணிடறேன். " எனவும்,


நீலாம்பரி, " எதுக்கு அத்தான். இங்க இருக்கிற வேல வுட்டு போட்டு அத பாக்க வேணாம். ம்ம் அம்மாவாச கொடைக்குள்ள பண்ணிட்டா போதும். கார்த்தி அண்ணே மகளுக்கு மொட்ட போட்டு காது குத்தறது அன்னிக்கு தான் முடிவு பண்ணிருக்காங்க. ஆடி பட்டத்துக்கு நிலங்கள ரெடி பண்ணனும், விதைங்க நேர்த்தி பண்ணனும் வேற.."


உடன் நடந்து வந்து கொண்டிருந்த செந்தில், "ஆங் நம்ப தாசில்தார்ட்ட எழுதிக் கொடுத்தா நூறுநா வேல பாக்கப் போறேன்னு சால் அடிச்சிட்டு திரியறவங்கள வச்சிட்டு, அந்த ஊருணிக் கரைய உயர்த்தறது பண்ண வச்சிடுவாங்க, அது பொது வேல தானே." என்றவனின் தோள் தட்டி எதிரே காட்டினான்.


" செஞ்சிற கிஞ்சிற போறாங்க. அடுத்த அம்மவாசைக்கு தா பண்ணுவானுங்க. அந்த பாரி சொன்னது கேட்டில்ல , அவனுங்க மடை வழில தூர் வாரக் கெளம்பிட்டானுங்க.. அப்புறம் நாம கரையெடுக்கவும் தகராறுக்கு வருவானுங்க. அவனுங்க அங்கன வருமுன்னே இன்னிக்கு பண்ணிடறது நல்லது. அப்படியே இங்கத்தி நெலவரமெல்லா கோயில் ட்ர்ஸ்ட் ஆட்கள் காதில போட்டு வச்சிரனும்." என்றவன்,

அமைதியாய் நடக்கும் மாமன் மகளை திரும்பி பார்த்து, " என்ன நீலூ.. இன்ன யோசனை? அந்த பாம்பை கையோட தூக்கிப் போனா ட்ரீட்மெண்ட் ஈஸியா இருக்கும்னு மண்டைக்குள்ள ஓடுதா, பாம்பை இரண்டடி தோண்டின குழிக்குள்ள பாலூத்தி புதைக்கனுமே.. மஞ்சள் குங்குமம் எல்லாம் வைக்கனுமே.. அப்படின்னு ஓடுதா


புன்முறுவல் சிந்தியவள், அதெல்லா அப்போவே ஓடி முடிஞ்சுடுச்சு.. அதான் ஒதுங்கிப் போறது நல்லதுன்னு சொல்லிட்டீங்களே.. அப்பவே அந்த நினப்புங்களையும்." என்றவாறு ஊற்றி முடியாச்சு என்பது போல சைகை செய்தவள், அடுத்த வாரம் கார்த்தி அண்ணன் அண்ணி வீட்டாளுங்களும் வருவாங்க போலத் தெரியுது அதுக்கு என்ன ஏற்பாடு பண்ணேன்னு யோசிச்சேன்.

அதெல்லாம் நேத்தே பெரிய மாமா சொல்லிட்டாரு, அவங்கள பாவநாசம் சசிகுமார் லாட்ஜில தங்க வச்சு , நேரா கோயிலுக்கு வரச் சொல்லிடலாம்னு.. கார்த்தியும் அவன் சம்சாரமும் வேணா இங்கே வீட்ல தங்குவாங்களா இருக்கும்.

ம் ம்.. பெரியம்மா பெரியப்பா என்ன சொல்றாங்களோ என்றவர்கள் எதிரே அரக்க பரக்க ஓடி வந்த சொர்ணாவைப் பார்த்து நின்றனர்.


வந்தவள் அவசரமாக கத்தியை எடுக்க, யாத்தே என்று அலறினான் செந்தில்

மூச்சு வாங்கியவாறு, பா.. பா.. பாம்பு கடிச்சிருச்சாமே. யாருக்கு, உடனே கடிவாயை வெட்டி ரத்தத்தை வெளியேத்தனும்.. கையா காலா.. எங்கே என்றவாறு எல்லோரையும் ஆராய..


ஆங் மூக்கு.. என்றான் செந்தில்.


என்னாது மூக்கா? என வாய் பிளந்தவளிடம்,

ஆமா.. ஆனா அந்த பேஷண்ட் மூக்குல கத்தி விட்டு ஆட்டப்போற ஒன் ட்ரீட்மெண்ட் பத்தி தெரிஞ்சு எப்பவோ எஸ்கேப்பு.. இந்நேரம் டவுனு ஆஸ்பத்திரி பெட்ல போய் விழுந்திருப்பான். எனவும்

பக்கென்று சிரித்தான் மகிழ்வேந்தன்..



நாயகன் ஆடுவான்…





 

தாமரை

தாமரை
உ ப்பா..

NPNN 6

ஏஏஏஏஏஏ என்ற அதிரும் ஒலியுடன் டமடமவென்ற பறை சத்தமும் தொடர்ந்து குலவை சத்தம் வர.. நீள் இருக்கையில் அமர்ந்தவாறு தன் அலை பேசியில் ஏதோ அவசரமாக தட்டச்சிக் கொண்டிருந்த மஞ்சரி, நெஞ்சில் கை வைத்தவாறு நிமிர்ந்து பார்த்தாள்.


வாசலில் இருந்த குழாயில் கைகால் அலம்பிக் கொண்டிருந்த மகிழ்வேந்தனின் அலைபேசியில் இருந்துதான் அந்த சத்தம். உள்ளிருந்த வராந்தாவின் இருக்கையின் மீது வைத்து விட்டு கைகால் கழுவுவது அவனின் வழக்கம்..

"அம்மன் கோயில் வாசலிலே..ஏ.
வாசலிலே..ஏ.ஏ.ஏ..
தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே..ஏ.
பூங்குயிலே..ஏ.ஏ.ஏ..

ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு.."

இசையும் குரலும் அந்த சிறு இடத்துக்குள் எதிரொலித்து கிடுகிடுக்க செய்ய,
உடன் சேர்ந்து பாடியவாறு கைகளை துடைத்து வந்தவன்,

மூக்கை சுருக்கி முறைத்தவாறு இருந்தவளை பார்த்தவுடன் சிரிப்பு விரிய அலைபேசியை எடுத்தான்.


"ஏ.. கார்த்தி சொகமா இருக்கியாடே.. அக்கா , பொண்ணுக்குட்டி சொகமா?" என..

மறுபுறம் பதில் கூறியவன் என்ன சொன்னானோ.. உரக்க சிரித்தவன்..
" உன்னைய பேர் சொல்லுறேன்.. நாம ஒன்னா வளந்தவக, ஒன் பொண்டாட்டிய அக்கான்னா, அவங்க என்ன விட இரண்டு வருஷம் பெரியவங்க டே.. சரி சரி மரியாதைக் களுதையெல்லா தானா வரணும் கட்டி இழுத்தா வராது கேட்டியாடே.. " என்றவன்,

பெரிய மாமாவா, ஆஸ்பத்திரி போனவங்க இன்னும் வரல. ஆங்.. அத்தைக்கு நல்லாருக்கு. பேத்திய பாக்கப் போற சந்தோசம் வேற, நீ வரங்குள்ள நடமாடிருவாக. ஆங்.. அவட்டையா , நானா… சரி சொல்லிடுறேன். எல்லாம் பாத்துக்கிடலாம்.. வந்ததும் பேசச் சொல்றேன். சரி வீடியோ கால் பண்ணிடலாம். " என்றான்.


தன்னை முறைத்து புசுபுசுவென மூச்சுவிடுபவளைக் கண்டவன் இன்னமும் சிரிப்பு விரிய,

"என்ன டீச்சரம்மா பாசமா பாக்குறே.. அத்தான் அம்புட்டு அழகாவா இருக்கேன்.. " என்றவாறு அங்கிருந்த கண்ணாடி பார்த்து மீசை முறுக்க

"அய்யே.. முறைக்கிறதுக்கும் பாக்கறதுக்கும் வித்யாசம் தெரியல..? அங்… உங்களுக்குன்னு எங்கேருந்து பாட்டு கெடைக்குது. ரிங் டோன்.. ஒரு நிமிசம் மூச்சு நின்னுட்டது.."


ஹா ஹா என நகைத்தவன், "இம்புட்டு பயந்தாங்கோழியா இருக்கவ என்னெண்டு அத்தனை ஆம்பள, பொம்பளப் புள்ளைகளை கட்டி மேய்க்கறவேன்னு தெரியலையே.. " எனக் கிண்டலடித்தவன்..
சுற்றி பார்த்து , " சரி சரி எங்க நீலூ.. வீட்ல இல்லியா.. இருந்திருந்தா இந்நேரம் ஓடி வந்து அத்தான் சாப்படறீங்களான்னு கேட்ருப்பா.. "

முறைத்தவாறே.. "டவுனுக்கு போயிருக்கா.. அத்தை கூட போயிருக்காங்க.. கம்பஞ்சோறு இருக்கு, சாப்பிடுங்க. நா முக்கியமான வேலையா இருக்கேன்." என்றவளின் பேச்சைக் கேட்டவாறே உணவு மேசை நோக்கி நடந்திருந்தவன் வழக்கம் போல தானே எடுத்து பரிமாறிக் கொண்டு உண்ணத் தொடங்கினான்.

சில நொடிகள் கழித்து நிமிர்ந்து பார்த்தவள் அவன் தொட்டுக் கொள்ள ஏதும் இல்லாமல் உண்பதை கவனித்து நாக்கைக் கடித்துக் கொண்டவளாய் எழுந்து அவசரமாய் சமையலறை சென்று நீலாம்பரி வறுத்து வைத்து விட்டுப் போயிருந்த கருவாட்டினை எடுத்துக் கொண்டு வந்து அவனருகில் வைத்தாள்.


"ஆங் அதானே.. காணோமேன்னு பாத்தேன். நீலு நீலுதான்." எனவும்

உதட்டைக் கோணி வக்களம் காட்டியவள் கையை நன்கு கழுவி விட்டு மீண்டும் அலைபேசி எடுக்க..

டப்பா திறந்து முகர்ந்து பார்த்தவன், "ஹூம்.. பிஸிக்ஸ் டீச்சருக்கு தெரியுமா கருவாடு வாசனை, ரசனை இல்லாத.. ஹூம்." என்றவாறு சாப்பிட..


"எதே.. ரசனையா.. நாத்தம்... அத.. ரத்த செவப்புல சட்டை ஸ்கை ப்ளூல பேண்ட் போட்ருக்க நீங்க பேசக் கூடாது.. " என்று மூக்கு விடைத்தவள்,

அவனின் சிரிப்பு அதிகமாவது கண்டு வேகமாக தனது அறைக்குள் நுழைந்து அமர்ந்து கொண்டாள்.

உணவு உண்டவாறே ஏதோ நினைத்து புன்னகை புரிந்தவன், "ஏ டீச்சரூ.. சீக்கிரம் இந்தி கத்துக்கோ.. என்னா.."

அவனின் குரல் கேட்டு புருவம் சுருக்கியவள்.. "ஏது ஹிந்தியா ? ஏன் என்னவாம்.. எனக்கு புடிக்காது.. தேவையே இல்ல.. "


"ஆங் இப்படித்தா சொல்லுவ.. ஆரு கண்டா எதிர்காலத்தில இந்திலேயே பொளந்து கட்டுவியா இருக்கும்! " என்று சொன்னவாறு வேகமாக உண்டு கொண்டிருக்க..

இவன் ஏதும் விளையாட்டுக்கு சொல்லும் ஆள் இல்லியே, என்ற நினைப்பில் புருவம் நெரிய அவனைப் பார்த்தவள், அவன் மேலும் சிரிப்பது கண்டு.. என்னவோ ஆகிடுச்சு.. இந்த ராமராஜனுக்கு.. என்று மனதிற்குள் திட்டியவளாய், தனது வேலையைத் தொடர்ந்தாள்.


அப்போது நெல்லையப்பரின் கை தாங்கிப் பிடித்தபடி சிவகாமி அம்மா உள்ளே வர , அவர்களைத் தொடர்ந்து, வசூலுக்கு சென்றிருந்த சிவந்தியப்பரும் வீட்டினுள் நுழைந்தனர்.


வரவேற்பாய் தலையசைத்தாவறே எழுந்தவன், "அத்தைக்கு டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று கேட்டான்.

சோகையாய் சிரித்தவர், "ஆங் வழக்கம் போல படுக்கையிலேயே கிடக்க சொல்றாங்க. செக்கப்பு போகனுமாம். எச்சச்ஸ் பண்ணனுமாம் ஆனா எல்லாம் உட்கார்ந்துட்டு படுத்துட்டு பண்ணனுமாம். எவ்வளவு காலம் வண்டி ஓடுது பாப்போம். " என்றவர் மெதுவாக வந்து அமர்ந்து கொள்ள,

அவசரமாய் வந்த தேவ மஞ்சரி பெரியன்னைக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.

அவளையே வாஞ்சையாய் பார்த்தவர், ந "ஹூம் இந்த பிள்ளைகள் கல்யாணம், அதுங்க பிள்ளை குட்டிகள பாக்கும் வரை நடமாடத் தெம்பு இருந்தா போதும்.. அப்புறம்.." என்றவாறு கையினை மேலும் கீழுமாய் அலைக்க, அவரின் முன்பு அமர்ந்தவன்.. அவரின் மெலிந்த கைகளை அழுத்தி, "அதெல்லாம் பல வருசம் நல்லா திடம்மா இருப்பீங்க அத்தே.." என்றான்.

அவனின் கைகளை பற்றிக் கொண்டவர், " நா இருக்கது இருக்கட்டு. நாலு மாசம் முடிஞ்சப்பறம் தான் கல்யாணம் பற்றிப் பேசனும்னு அத்தை சொன்னாங்களாம். நீ இந்த அத்தைக்காக அதுக்கு மேல நாளு கடத்தாம கல்யாணம் பண்ணிக்கனும் கேட்டியா. அப்பவே அடுத்த முகூர்த்தத்திலேயே சின்ன தங்கத்துக்கும் கல்யாணம் வச்சிடனும் என்ன தம்பி?" என்றார்.

அங்கு வந்த சிவந்தியப்பரை பார்த்து , சரிதானே தம்பி எனவும்
அண்ணியின் பேச்சு புரியாமல் அண்ணன் நெல்லையப்பரை பார்க்க, ஆமோதிப்பாய் தலையசைத்தவர்,
"இரு.. முக்கியமான விஷயம், அம்மாவையும் கூட்டியாறனும்.. அம்மச்சிய கூட்டி வா வேந்தா." எனவும்

ஆச்சரியமாக பார்த்தபடி அவர் சொல்படி செய்தான். எழுபதை நெருங்கும்
பாட்டி உலக நாயகி திடமாய் நடந்து வந்து அமர்ந்ததும்,

நெல்லையப்பர், "அம்மா தம்பி கேட்டுக்கிடுங்க. நம்ம மஞ்சரிக்கு கார்த்தி ஒரு எடம் கொண்டாந்துருக்கான். அவன் கூட பேங்குல ஆனா அவனை விட பெரிய வேல பாக்க பையனாம். நாங்குநேரிக்காரங்க தானாம். ஆனா பொறப்பு வளர்ப்பு எல்லாம் பம்பாயாம்.. நட்சத்திரம் ஜாதகம் எல்லாம் நல்லா பொருத்தமா இருக்கு.. கார்த்தி இங்கே இருக்க சமயம் பொண்ணு பாக்க வரலாமா கேட்ருக்காங்க.. என்ன சொல்றீங்க.." என்றவர் மகிழ் வேந்தனிடம், "வேந்தா! மாப்பிள்ளை ஃபோட்டோ காட்டு." எனவும்

சிரித்தவாறே தனது அலைபேசி எடுத்துக் காட்டினான்.


இவர்கள் பக்கம் இல்லாத சற்றே வெளுப்பான நிறத்தில் அழகான நீலமும் வெள்ளையுமாய் இருந்த சட்டை அணிந்து இருந்த கண்ணாடி அணிந்திருந்த வாலிபன் அழகாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

"ஏ டீச்சரூ.. மாப்பிள்ளய நல்லா பாத்துக்கிடு. பேரு கிஷோர் தேவ்.. தேவ் , தேவ மஞ்சரி பேர் பொருத்தம் ப்ரமாதம் போ.." என்று அகலமாய் சிரித்த வேந்தனை வெறித்துப் பார்த்தவள், தன் தகப்பன் பெரிய தகப்பனை மாறி மாறி பார்த்தாள்.

"ஏ.. ஏன் பெரிப்பா .. திடீர்னு.. என் கல்யாணத்துக்கு என்ன அவசரம். அதும் மும்பையா?" என்று கலங்கிய குரலில் சொல்ல..

அவளை கையசைவில் தன் பக்கம் வரவைத்து அமர்த்திய சிவகாமி, " நான் தான்டா தங்கம் நல்ல இடம் வந்தா பாக்க சொன்னேன். காரணம் தா உங்களுக்கு தெரியுமில்ல. மாப்பிள்ளய பாரு.. நேர்ல வர்றாங்கல்ல.. பேசி பாரு பிடிச்சா செய்வோம் .. என்னா.. என்றவர், அவளின் முகம் தடவி " அவங்களும் உன் படம் பார்த்தே விரும்பி வர்றாங்க தங்கம்." எனவும்..


பதில் ஏதும் கூற மொழி மறந்து போனவளாய் அமைதியாய் அமர்ந்து இருந்தாள் தேவ மஞ்சரி.

ஏனோ மனம் கனத்து கண்களும் கனக்கும் உணர்வு.

***************

கால் நீட்டி கைகட்டி கண்மூடி அமர்ந்து இருந்தவன் கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு கண் திறந்தான்.

உள்ளே மெதுவாய் வந்த தந்தையைக் கண்டவன்.. என்ன என்பது போல பார்க்க..

"ஏதும் உடல் எரிச்சல், மயக்கம் போல எல்லாம் இல்லைல பாரி? கையில வலி இருக்கா?" என்ற தந்தையின் கேள்விக்கு மறுப்பாய் தலையசைத்தவன்,

"அதான் சொன்னேனே. பல்லுதா லேசா பட்ருந்தது. விஷம் கொட்ரதுக்கு முன்னாடி அதை போட்டுத் தள்ளியாச்சே.." எனவும் பெருமையாய் முறுவலித்தவர்,

"ஆறு மாசத்துக்குள் போட்ட காசை எடுக்கனும். அந்த மொத்த நிலமும் நம்ம கைக்கு வரனும்னு சொன்னேன் தான் ஆனா, நீ வெரசா போற வழில இப்படி எல்லாம் பிரச்சனை வருதே.." என அங்கலாய்க்க,

"இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. இப்போ எப்படி மொத்த நிலத்தை வாங்கறது தா பிரச்சனை. நீங்க சொன்ன மாதிரி கொடச்சல் கொடுத்தா நெல்லையப்பர், சிவந்தியப்பர் வேணா பயப்படலாம், ஆனா அந்த வேந்தனையும் அவளையும்.. ம்ஹூம்.. " என்று மறுப்பாய் தலையசைத்தான்.

" (வி)சாரிச்ச வர அவங்க ரொம்ப கொணம்மான ஆட்கள். சண்டசச்சரவு பக்கம் போகாதவங்க. எல்லாருக்கும் நல்லது பண்ணனும்னு நெனக்கிற ஆட்கள்."

" அதென்னவோ சரிதான். ஆனா நெஞ்சழுத்தம் சாஸ்திதா. என்ன மெரட்டுனாலும் அப்படிச்சும்மா தட்டி விட்டுட்டு போதுங்க.. "


" அடிமேல அடி வச்சா அம்மியே நகரும்.. இவங்கள நகத்த முடியாதா. நாம நினைச்சது போல நடக்க சில மாசமாகலாம் ஏன் வருசங்கள் கூட ஆகலாம்.."


"ப்ச்.. அம்புட்டு பொறுமை இல்ல."

" ம்.. நெல்லயப்பர் பையன் ஏதோ வடநாட்டுக்காரிய கல்யாணம் பண்ணிட்டான்னு அவங்க ஆயிஅப்பனுக்கு வருத்தம் போல.. ஆனாலும் சேத்துக்கிட்டாங்க. அவனுக்கு ஆரம்பத்திலேருந்தே விவசாயத்தில நாட்டமில்ல. ஒரு விக்கெட்டு அவுட்டா.. அடுத்து வாசுகி.. அவங்க பையன் ஏதாவது பெரிய உத்யோகத்துக்கு போனுமின்னு அவங்க அப்பாரு ஆசை. அதனாலே சீக்கிரமே அந்த விக்கெட் அவுட்டு ஆகிடும். அடுத்தவரு சிவந்தி, ரெண்டும் பொண்ணு.. மூத்தவள வேந்தனுக்கு கல்யாணம் பண்ணனும்னா எப்பவோ முடிச்சுருக்கலாம், தாமசப் படுத்தறது பாத்தா ஏதோ வில்லங்கம் போல இருக்கு. இரண்டாவது பொண்ணு லெக்சரரு. அது விவசாயம் பாக்காது. சீக்கிரமே பாக்க ஆளில்லாத ஆகிடும். ஆனா இதுக்கு
இன்னோரு வழியும் இருக்கு. " என்றவர் சில நொடிகள் அமைதியாகவே இருக்க,

"அதுவாச்சும் கொக்கு தலை மேல வெண்ண வச்சு, அது உருகி கொக்கு கண்ணை மறைச்சப்புறம் புடிக்கறாப் போல இல்லாம, செரியான வழியா சொல்லுங்க பா.." என்று எரிச்சலுடன் சொல்ல,

"எதிராளி குடும்பத்த உறவாடிக் கெடுன்னு வழி சொல்லிக் கொடுத்திருக்காங்களே.. அதான். அந்த குடும்பத்தில பொண்ணு எடுக்கறது.."

முகம் சுருங்க வாய்க்குள் ஏதோ முணுமுணுக்க,

என்ன மகனே! திட்றியா? என்று நகைத்தவாறு கேட்டார் சேதுபதி .

பின்ன! இத விட வேர நல்ல ரோசனை கிடைக்கலையா.. இந்த படங்கெல்ல எல்லா வாராப் போல மொத்த குடும்பத்தையும் நம்ம த்ரெட் ஃபேக்டரி குடௌன்ல கட்டி வச்சு , பெரிசு கழுத்தில கத்தி வச்சு கையெழுத்து போடச் சொல்ல சொன்னாக் கூட நா ஓகே சொல்லிருப்பேன். இது என்ன கூறு கெட்ட யோசனை.. என்று சிடுசிடுக்க,


ஹா ஹா என்று நகைத்தவர், ரெண்டும் ஒன்னு தான். கல்யாணங்கறது அவ்ளோ பவர்ஃபுல். மொத்த குடும்பமும் , அவங்க பொண்ணு வாழ்க்கைக்காக நம்ப சொல்றபடிதா ஆடும்.. உங்க அம்மையோட அப்பன் சாவும் போது கூட என்னைய பாத்து கையெடுத்து கும்புட்டு தா செத்தான் பாத்தீல்ல. அதா பவரு.


தலையசைத்தவன், அந்த காலம் மலையேறிப் போச்சு.. சும்மா அம்மைய வச்சு தாத்தன வச்சு பெரும பேசாதீங்க. இப்பத்தி பொண்ணுங்க பாத்து நம்மதா பயப்படனும். ஆனா ஊனான்னா.. கதையல்ல நிஜம்னு டெலிவிஷன் சேனல்ல போய் உக்காந்துக்கிடுவாளுங்க. இல்ல கிழி கிழின்னு கிழிச்சு யூடியூப், இன்ஸ்டாக்ராம்னு போட்ருவாளுங்க.. கோர்ட்டுக்கெல்லா போகாமலே , மானம் மருவாதிக்கு சங்கூதிடுவாளுங்க..


அது.. இன்னும் நம்ம சீமை பக்கம் வரல கேட்டியா..
நீதா பாக்கறியே.. அவியள பாத்தா அப்படி மல்லுக்கு நிக்க ஆட்களப் போலவா இருக்கு!


இல்லை என்பதாய் தலையசைத்தவன், அதுக்காக பயந்தவங்களும் கிடையாது.. அதும் இல்லாம, எனக்கு அந்த ஆட்களப் பாத்தாலே எரியுது. தலமுற தலமுறயா நம்ம சொத்த வச்சு பகுமானமா இருக்காங்க..


செரி, அப்படி பாத்தா நாம பல பேரு கூட வம்புக்கு போகனும். எங்கூடப் பொறந்தவன் எப்படி நம்பள த்ராட்ல விட்டு சுத்த விடுறான். நம்ப டையிங் ஃபாக்டரி, நா பாத்து வளத்த சொத்து எல்லாம் அவே கைக்கு போய்டுச்சு. நாய்க்கு எலும்புத் துண்டு போடுதாக்கில இதை வாங்கிக் கொடுத்து ஏமாத்துறான். இதுல நம்ப வம்சாவளி சொத்து நீ நல்லா வந்துடுவேன்னு வாழ்த்து வேற.. ஊருக்குள்ள கேளு, அவேம் தா நீதிமான், நல்லவே அப்படின்னுவாங்க. ஒத்த பொண்ணு வச்சிருக்கான். இவனுக்கு அப்புறம் எல்லாம் அந்த குருவி தா பாக்குமாம். ஆண் வாரிசை கொடுக்க வழியில்ல பேச்ச பாத்தியா..

பெரியப்பா, அவரின் பெண் பற்றிய பேச்சு வந்ததும் அமைதியான பாரி, என்னவோ பண்ணுங்க என்றவாறு இறங்கி தலையணையில் தலைவைத்துப் படுக்க,

அறை விட்டு வெளியேறினார் சேதுபது.


******************


"வெள்ளைக் குதிரையில அய்யனாரே
வேகமாய் வந்தருளும் அய்யனாரே



கோட்டைக் கருப்பசாமி நீங்க
குடியிருந்து காக்க வேணும்

மந்தையில மாரியாயி மலைமேல மாயவரே
மழைய எறக்கிவிடு மானுடங்க மனங்குளிர
மழைக்கு வரங்கேட்டு - நாங்க
மருகுகிறோம் சாமி

எலந்தை முள்ளால கோட்டைக்காரி எங்களை
ஏறிட்டுப் பாரம்மா சக்கதேவி

காட்டைக் காத்தது காளியாத்தா - கம்மாய்க்
கரையக் காத்தது அய்யனாரு"


ஒலிபெருக்கி உரத்து ஒலித்துக் கொண்டிருக்க, ஊருணி காத்த அய்யனார் கோவிலில் கொடைக்காக கூடியிருந்தனர் மக்கள்.


கண்மாய்க் கரை சாலை வழியாக பல சிற்றுந்துகள் வந்து நின்று கொண்டிருக்க, சிறிய வாகனங்களில் மகிழ் வேந்தன் அமைத்த பாதை வழியே வந்திருந்தனர் விக்ரமசிங்கபுர மக்கள்.

சுற்றுப்பட்டியில் அனைவருக்கும் பூரண பொற்கலை சகித ஊருணிகாத்த அய்யனார் இஷ்ட தெய்வம். மூன்று தலைமுறையாக நெல்லையப்பர் குடும்பத்திற்கும் அவரே குலம் காத்த தெய்வம் ஆகிப் போனார். இவர்களின் வாழ்வாதாரம் கோவில் சுற்றி இருக்கும் நிலங்களும் , அய்யனார் காத்து அருளும் ஊருணியும் என்பதால் அவரை வணங்காமல் ஏதும் நடக்காது.

எனவே நெல்லையப்பரின் மகன் வழிப் பேத்தியின் முதல் முடி இறக்கி காதணி அணிவிக்கும் விழா அன்று நடந்து கொண்டிருந்தது.

பண்ணையாட்கள் அனைவரும் முகமெல்லாம் சிரிப்புடன் ஒருவருடன் ஒருவர் பேசியபடி இருக்க, கார்த்திக்கின் மனைவிக்கு சகோதரன் யாரும் இல்லாததால் , தாய்மாமா முறை வைத்து மகிழ்வேந்தனின் மடியில் அமர்த்தி மொட்டையிடும் வைபவம் நடக்க, இது பற்றி ஏற்கெனவே அறிந்து இருந்தாலும் கத்தி கதறும் பிள்ளை பார்த்து கண்கலங்க நின்று கொண்டிருந்தாள் கார்த்திக்கின் மனைவி ரோஷிணி.

ஒரு புறம் தடபுடலாய் விருந்து தயாராகிக் கொண்டிருக்க, மொட்டை எடுத்து முடித்தவுடன் கோவில் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளுக்கு பலி கொடுக்க ஆடும் கோழியும் கட்டுப்பட்டு இருந்தன.


எதிரில் இருந்த நிலம் முழுவதும் ஆங்காங்கே மக்கள், குடும்பத்துடன் அடுப்பு மூட்டி சமைத்துக் கொண்டிருந்தனர்.

ஆடி அம்மாவாசை என்பதால், சாம்பார் மற்றும் காய்கறிகள் அவிக்கும் மணம் காற்றில் எங்கும் பரவியிருந்தது.


கோடை வெம்மை தணிக்க ஆடிக்காற்று பலமாய் வீசி மரத்தில் தொட்டில் கட்டி படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகளை அசைத்து தூங்க வைக்கும் வேலையை அதுவே செம்மையாக செய்து கொண்டிருந்தது.


கோவிலின் கர்ப்பக் கிரகத்தின் வலப்புறத்தில் இருந்த இடத்தில் பொங்கல் வைக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர் நெல்லையப்பர் குடும்பப் பெண்கள். உடல்நிலை சரியில்லாத சிவகாமி அம்மா அங்கிருந்த திண்டில் அமர்ந்து முறுவலுடன் பார்த்துக் கொண்டிருக்க , வாசுகி அடுப்பை கவனிக்க, நீலாம்பரியும் தேவமஞ்சரியும் வெல்லம் தட்டுதல் மற்றும் தேங்காய் துருவும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எப்ப வர்றாங்களாம் டா?" என்ற பெரியன்னையின் கேள்விக்கு தேங்காய் துருவியவாறே பதிலளித்தாள் நீலாம்பரி,

பதினொன்றரைன்னு அண்ணே சொல்லுச்சு பெரிம்மா.. எனவும்

வெல்லம் தட்டிக் கொண்டிருந்த தேவ மஞ்சரி , கைகள் நடுங்க வேகமாகத் தட்டினாள்.

அப்போது டமடமவென பூஜைப் பறை மற்றும் மணியடிக்கும் ஒலி கேட்க ,

சாமிக்கு அலங்காரம் ஆகிடுச்சு போல, குட்டிப்பிள்ள சட்டைத்துணி , நகை சாமி பாதத்தில வச்சு வாங்கிட்டு வா தங்கம்! என்ற பெரியன்னையின் குரலில் , துருவிய தேங்காயை வாழை இலை போட்டு மூடியவள், தட்டை எடுத்துக் கொண்டு சிறு மண்டபம் போன்ற கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்க அங்கே

அழகிய பெண்ணொருத்தி பக்கத்தில் நிற்க , பரிவட்டம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாரி வேந்தனைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.

நாயகன் ஆடுவான்…







 

தாமரை

தாமரை
அன்புத் தோழமைகளே..
இரணடு யூடியாக கொடுக்க எண்ணி வேக வேகமாக ஓடிய நேரத்திலே ப்ரேக் பிடிக்காத குடும்பத் தண்ணி லாரிங்க குறுக்கே வந்ததால்.. கும்பகர்ணன் வேறு பாசமாக வந்து அருள்பாலித்ததால்.. கொடுக்க முடியல. நேற்று போட்ட யூடி குட்டி, குட்டி என்று கதறிய அன்புள்ளங்களே. இன்று யூடி பரவால்லியா.. ஒரு லார்ஜ் சைஸ் வந்து விட்டதா.. செப்புங்கள்..

கதையின் குறைகள் பற்றி சில வார்த்தைகள் சொல்ல மிக மகிழ்வேன்.
ஆமா நிறைகளை மனசுக்குள் வச்சுக்கோங்க. குறைகளை, லலிக்காம கொட்டி சொல்லுங்கோ.
திருத்திக்க முயற்சிக்கறேன்😁😁😁😁😁😁😁


அடுத்தடுத்த யூடிக்களும் இப்படி வேகமாக எழுதிக் குவிக்க, வாசுகி, ரூபி அம்மைகளும்... அய்யனும் அருள் வழங்கட்டும்.💕💕💕💕😛😛😛😛😛😛😛

விரைவில் சந்திப்போம் தோழமைகளே.
 

தாமரை

தாமரை
உ ப்பா..

7

கோவில் மணி உரத்து ஒலிக்க, பரிவட்டம் கட்டிய பூசாரி , மாலையும் அணிவிக்க, இன்னொரு மாலையை பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் கொடுத்து விட்டு, உடைத்த தேங்காய் , பழங்கள் மற்றும் பிரசாதங்கள் இருந்த தட்டை பாரியிடம் நீட்ட வாங்கியவன்,

வாம்மா நீலா. என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தான். ஒரு வாரமாக கண்ணிலேயே படவில்லையே, ஏதோ விழா என்று பேசிக் கொண்டார்களே.. பட்டுச் சேலையில் வேறு மாதிரி இருந்தாள்.


பூசாரி, என்ன ம்மா, பாதத்துல வச்சுக் கொடுக்கனுமா?

என்றதும், தலையசைத்தவாறு தட்டினை நீட்டியவள், இவர்கள் இருந்த புறம் தலை திருப்பாமல் அய்யனை வணங்கியபடி நிற்க , அவள் அருகில் வந்து நின்றான் மகிழ் வேந்தன்.

அரவம் உணர்ந்த நீலாம்பரி அனிச்சை செயலாய் வேகமாய் எதிர்புறமாய் நகர,

நீலு , குட்டி பிள்ளைக்கு மொட்டை போட்டாச்சு. குளிக்க வைக்கறாங்க. பெரிய மாமா துணிய கொடுக்க சொன்னாங்க. எனவும்,

சன்னதி நோக்கி கைகாட்டினாள். சாமி பாதத்தில வச்சு எடுத்து கொடுக்கனும் அத்தான். என,

உள்ளே சென்ற பூசாரியோ, இன்னும் மாலைகள் எடுத்து வந்து எதிரில் இருந்த பாரியின் குடும்பத்தில் இருந்தவர்களுக்கு மாலை தருவதினை அவசரமாக செய்து கொண்டிருக்க, பாரியின் அருகில் இருந்த பெண் மகிழ் வேந்தனை பார்த்து கண்களை விரித்து முறுவலித்ததோடு, அருகில் நின்ற தாயிடம் ஏதோ சொல்ல, அவரும் நட்பு முறுவல் சிந்தினார்.

சற்றே புருவம் சுருக்கிய மகிழ் வேந்தன், முறுவலித்தவர்களிடம் மரியாதையான முறுவலுடன் சிறு தலையசைவில் அங்கீகரித்தவாறு,

நேரமாவதை உணர்ந்து, முருகா அந்த தட்டு கொடு. என்று உரக்க சொல்லவும், பூசாரி இளைஞன் அவசரமாக எடுத்து வந்து தந்தான்.


இந்திரன் நீலாம்பரியை பார்த்து நிற்பதும், புன்னகைப்பதும் வெளிப் பார்வை வட்டத்திற்கு அப்பால் மங்கலாய் தெரிந்தாலும் சிறிதும் அப்புறம் திரும்பாமல் அய்யனாரையே பார்த்தவாறு தட்டினை வாங்கிய நீலாம்பரி, வெளியேறும் வழி திரும்பியவள், அவசரமாக தட்டினை சோதித்து, " குட்டி பிள்ளை கழுத்தில போட மாலை கொடுத்து வச்சிருந்தோமே.. அதை சாமி கழுத்தில இருந்து எடுத்து வாங்க. " என்றவாறு ஏறிட்டாள்.

பூசாரிக்கு சிறப்பு நாள் உதவியாளாக வந்திருந்த இளைஞன் விழித்தான்.

சற்று நேரம் முன்பு தான், பெரிய பூசாரி அய்யனாருக்கு அணிவித்த அந்த மாலையை அவன் அந்த இளம் பெண்ணின் கையில் கொடுத்திருந்தான்.

அவன் பார்வை போன திசையையும் , அவனின் பதட்டமும் கண்ட மகிழ் வேந்தன்,

அது இருக்கட்டும். அதோ புஷ்கலையம்மாக்கு போட்ருக்க மல்லி மாலைய எடுங்க.

கலவரமான குரலில் அத்தான், என்று மெல்லமாய் அழைத்த நீலாம்பரி, அது மல்லி, வெயிட்டா இருக்கும் குட்டிக்கு குத்தும்னு தா பெரியம்மா.. மெனக்கெட்டு ரோஜா இதழ்கள் வச்சு பண்ண சொல்லி வாங்கினோம்..
எனவும் என்ன செய்வது என நின்ற நொடியில்,
இவர்களின் பேச்சை கவனித்த அந்த பெண்மணி தன் மகளின் கையிலிருந்து மாலையை வாங்கி முன்னோக்கி நகர்ந்து வந்து,

தம்பி, இது நீங்க சாத்தினதா? நல்ல வேளையாக கனகா கையில தான் கொடுத்தாங்க. இந்தாங்க. என்று நீட்டினார்.

நீலாம்பரி தயங்கவும், மகிழ் வேந்தன் முன் சென்று வாங்கி தட்டில் உடுப்புகளின் மீது வைத்தான்.

நீ போய் கொடு நீலு. என்றவாறு நகர முற்பட்டவனிடம்,

நீங்க நம்ம பாப்பாக்கு கோச்சிங் சென்டர்ல கிளாஸ் எடுக்கறீங்கன்னு இப்போது தான் சொன்னா. இதான் உங்க குல தெய்வமா? எனக் கேட்க,

சிறு முறுவல் சிந்தியவன், ஆமாம் மா. அஞ்சு தலைமுறையா இவரைத் தா வழிபடறதா ஆச்சி சொல்வாங்க. என்றான்.

ஓ மகிழ்ச்சி தம்பி. எங்களுக்கு உடன்குடி பக்கம் தான் குலதெய்வம். ஆனா ஏழு தலைமுறை முன்னே இங்கே கோயில் படையெடுத்தது இவங்க பெரியவங்களாம். இன்று எங்க பாரிக்கு பிறந்த நாள். அதான் இங்கேயே பூஜை வச்சோம். என்று சகஜமாக பேச,


சரிங்கமா, இன்னிக்கு எங்க மாமா பேத்திக்கு மொட்டை போட்டு காது குத்தறோம். நீங்களும் குடும்பத்தோட குழந்தையை வாழ்த்த வாங்க. என்றவன்,

நிமிர்ந்து அங்கிருந்த அனைவரையும் பார்த்து, எல்லோரும் வந்து குழந்தையை ஆசீர்வாதம் பண்ணனும். என்று அழைப்பு விடுத்தான்.


நிச்சயம் வர்றோம் ப்பா.. என்று அகலமாய் சிரித்த சின்ன சேதுபதியை பார்த்து தலையசைத்தவன் நகர முற்பட,


வேந்தா என்ற அழைப்புக் குரலில் நின்றான்.

உங்க பெரிய மாமா சின்ன மாமா எங்கே இருக்காங்க என சேதுபதி வினவவும்

அது… ம்.. வேட்டைக்காரர் மண்டபத்தில உட்கார்ந்து இருப்பாங்க.


ஓ இதோ நாங்க கோயிலை சுத்திட்டு அங்கே வர்றோம். என்றார் சேதுபதி.


வாங்க என்று கரம் குவித்தவன் நகர்ந்து முன்னே செல்ல அனைவரும் கோவிலின் சிறு மண்டபம் விட்டு வெளியேறி, வலம் வரத் தொடங்கினர்,

வேகமாக முன்னே சென்ற மகிழ்வேந்தன் வழிமறித்து ஏதோ கேட்ட தாயாரிடம் பதில் சொல்லியவாறு, கண்களால் சுட்டி க்ருஷ்ணா கோட்ஸ் கிருஷ்ண ராய சேதுபதியும், விஜய ராய சேதுபதியும்.. நம்ம பக்கத்துக் காட்டை வாங்கினவங்க. அந்த பாரிக்கு பொறந்த நாளாம். பூஜ முடிச்சு வர்றாங்க. என்று சுருக்கமாக சொல்லிவிட்டு மரநிழலில் இருந்த பண்ணையாட்களை நோக்கிப் போனான்.


நட்புணர்வுடன் புன்னகை செய்தவாறு வாசுகிடம் பாரியின் பெரியன்னை இராஜேஸ்வரி பேசத் தொடங்கியதும், பாரி முதலான ஆண்கள் நடக்கத் தொடங்கி விட்டனர். கூடி பொங்கல் வைக்கும் அழகிய குடும்பத்தை கண்நிறைய பார்த்த பூங்கோதை, சத்தமின்றி நெடுமூச்சு விட்டு வழக்கம் போல கணவரின் அடியொற்றியவராய் பின்னே சென்றார்.


பெரியவர் கிருஷ்ண சேதுபதி, பாரிக்கு இருவத்தியெட்டு முடிஞ்சு இருவத்தொம்போது ஆகுதுல்லா.. இந்த வருஷம் கல்யாணம் பண்ணிடனும் விஜயா.

ம்.. ஆமா.. அதுக்கு தான் வழி பாத்திட்டு இருக்கேன். இந்த மகிழ்வேந்தன் குடும்பத்தில பொண்ணெடுக்கலாமான்னு.. என்று சொன்னார் சின்ன சேதுபதி.


மெதுவாய் நடந்தவாறு தம்பியை திரும்பி பார்த்தவர். ஓ.. நல்ல குடும்பம். சந்தோஷம். பாரி என்ன சொல்றான்?. என்றார்.


ப்ச்.. என்ற பாரி, ஏதாச்சும் சாதிக்கிற வரை இந்த பேச்செல்லா வேணாம்னு சொல்றேன். க்ருஷ்ணா கோட்ஸ் விட பெரிசா ஒரு ஸ்தாபனம் நிர்மாணம் பண்ணனும். அப்படி வீட்ல கல்யாணம் வைக்கனும்னு ஆசையா இருந்தா, இதோ இவனுக்கும் தா மூனு களுதை வயசாச்சு, இவனுக்கு மொதல்ல பண்ணுங்க. உங்க யோசனை எல்லாம் இவனுக்கு தான் சரிப்படும் , எனவும்

சிரித்தவாறே ஹே ஜாலி.. நான் ரெடி என்றான் இந்திரன்.

சிறு முறுவல் சிந்திய பெரிய தகப்பன், அண்ணன் இருக்க தம்பிக்கு கல்யாணம் பண்ண என்ன அவசரம்னு கேட்கறவங்களுக்கு என்ன பதில் சொல்றது. யோசனை இல்லாம பேசாதே பாரி. அம்மா கூட வருத்தப்படறா.. காலாகாலத்தில அதது நடக்கனும் கேட்டியா? என்றார்.

'ஆங் அவங்க வேலைதானா இதெல்லாம். எவ்ளோ சொல்லியும் இவர்ட்ட போய் புலம்பினாங்களா? ' முகம் இறுக, திரும்பி தாயை முறைத்தான்.

அவர்தான் தன் பெயர் அடிபட்டதும் புத்திசாலித்தனமா நகர்ந்து பிள்ளையார் அமர்ந்து இருந்த அரச மரத்தை சுற்றப் போய் விட்டாரே.

பேசியவாறே அங்கேயிருந்த சிறு சிறு சன்னதிகள் கடந்து கோவிலின் முன்புறம் வந்திருந்தனர்.


சிறு மண்டபம், ஆங்காங்கே இருந்து சிறு தெய்வ சன்னிதிகள், மரத்தடி என்று எங்கும் மக்கள்.. சிறுவர் சிறுமிகள் ஓடியாடி விளையாட, விடலை பருவத்தினர் கள்ள விழிகளுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தனர். இன்னிக்கு நாளைக்கு லீவா போச்சு அதான் இம்புட்டுக் கூட்டம். அடுத்த வருசமெல்லா பேசாத.. ராட்னம், வளையல், பலூன் விக்க கடைகள் கூட, கான்ட்ராக்ட் விட்டு போட சொல்லிடலாம். என்று விரித்த பனை ஓலை பாய்களில் அமர்ந்தவாறு கதை பேசிக் கொண்டிருந்தனர் பெரியவர்கள்.

சொன்ன ஆளை கூர்ந்து பார்த்த பாரி, நம்ப கும்பிடறதுக்கு கோயிலு மண்டபம்னு கட்டி வச்சா, இவனுங்க என்னாமா கடை போட்டு வருமானம் பண்ண யோசிக்கறாங்க பாருங்க. என முணுமுணுக்கவும் புன்முறுவல் சிந்திய பெரிய சேதுபதி,

அதான் வியாபாரம் பண்றவங்க மூள, எங்கே எத எப்படி வியாபாரம் பண்ணனும்னு புத்தி ஓடிட்டே இருக்கும். ஏன் நீ யோசிக்கலையா? விவசாயம் பண்ண வாங்கிக் கொடுத்த காட்ல பணப் பயிர் மட்டுமே போடனும் இல்லாட்டி ஃபேக்கரி கட்ட இந்த நிலத்தை எப்படி தோதா மாத்தனும்னு..

இரண்டு ஃபேக்டரில ஒரு ஃபேக்டரி எம் பேர்ல இல்ல பசங்க பேர்ல மாற்றிக் கொடுத்திருந்தா ஏன் அவன் அப்படி எல்லாம் யோசிக்கப் போறான் என்று இடை புகுந்தார் சின்ன சேதுபதி.


ஏற்கனவே பேசித் தீர்த்த விஷயத்தை ஏன் நோண்டறவே.. இதற்கு தான் கோவிலுக்கு வாங்க வாங்கன்னு பல தடவ கூப்பிட்டியா. என்று சற்றே கடுமையேறிய குரலில் கேட்க,

வாங்கிக் கொடுத்த காட்டை எம் பிள்ளைகள் எப்படி கருத்தா பாக்கறாங்கன்னு தெரிஞ்சுக்குவீங்கன்னு தா. அது மட்டும் இல்லாத மொத்த நிலமும் கைக்கு வந்தா தான் ஏதாச்சும் பெருசா செய்ய முடியும்னு பிள்ளைக அபிப்பராயப் படுறாக., அதான் ஒன்னு பங்காளியா ஆகிடனும். இல்ல பணங் கொடுத்து வாங்கனும். பொண்ணு எடுத்தா அதச் சாதிச்சிடலாம்.
அதுக்கு அந்த சிவந்தியப்பர்ட்ட பொண்ணு கேட்கனும். அதுக்கு பெரியவங்க வச்சு கேட்டாத்தானே , கவுரவமா இருக்கும்? ஒன்னு பொண்ணு வரணும் இல்ல, அந்த நிலங்களை நீங்களே பேசி வாங்கிக் கொடுங்க. நீங்க தா நேக்கா பேசி சரியா காரியம் சாதிக்கறவக. நீங்க வளத்த பிள்ளைகன்னு வாய்க்கு வாய் சொல்வீங்கல்ல. இதை முக்கியமா செய்யுங்க. என்றார் வேகமாய்.


ப்பா இதில்லா பெரியப்பாட்ட முன்னமே சொல்லி கூட்டி வரலையா நீங்க என்று கையை இழுத்த மகனிடம், கண்களால் அமைதியாய் இருக்குமாறு சைகை செய்தவர்,

அதோ நம்ம முப்பாட்டன் சிலை கிட்ட தா இரண்டு அப்பனுங்களும் நிக்கறானுங்க. வாங்க போய் பேசலாம் என்று தமையனை கைப்பிடியாய் கூட்டிச் சென்றார் .

*********


எடே.. என்று தன் பண்ணையாட்களை அழைத்தவன் ஓடி வந்த முத்துவிடம், எல்லாம் காலை டிஃபனு சாப்டாச்சா. நாலு பேரு போய், நாட்டுக் கோழிங்களுக்கு தீவனங் கொடுக்கறது ஒராள் பண்ணு, தண்ணி மடை மாத்தி விடற வேல இரண்டு பேர் பாருங்க.. மாடுங்களுக்கு தீவன புல் அறுக்கறது ஒரு ஆள் பண்ணு. இன்னிக்கு மரங்களுக்கு தண்ணீர் விடற நாளு. அப்படியே அந்த கம்போஸ்ட் ஓரம் எடுத்து போய் தென்னை, கொய்யாக்குள்ள ஊடு பயிராக கெடக்க செடிகளுக்கு போடனும். போயிட்டு செந்தில அங்கன மஞ்சரியோட காட்டுல களையெடுத்திட்டு இருக்க பொம்பளயாளுகள வரச் சொல்லு. அவிக இன்னும் சாப்பிடல. எனவும்.


சரியென்று தலையசைத்தவன் திரும்ப,
ஏலே என்று நிறுத்தியவன் தோள் தொட்டு திருப்பி
,கோயிலுக்கு பின்னால போட்ட புதுப் பாதைல போ டே.. மேச்சலுக்கு வர்ற மாடுங்க கூட ஒருக்கா சொன்னதும் வழி மாத்திடுது.. நீ இன்னும் மாறல. எனவும் தலை சொரிந்தவன், பல வருஷப் பழக்கம் வேந்தண்ணே.. என்றவன் கோவிலின் புறமாய் சென்றான்.

அப்போது அங்கே வந்த கார்த்திக், வேந்தா , தேவ் ஃபோன் பண்ணான். வரச் சொல்லிடலாமா?

ஏடே, இன்னுமா கேட்டுட்டு இருக்காங்க, காரு தா எப்பவோ அனுப்பியாச்சே. அவுகள சீக்கிரமே வரச் சொல்லிருக்கலாம்ல..

எங்க அம்மா கேட்டா தானே.. நல்ல நேரத்துல தா அவங்க கிளம்பனுமாம். நல்ல நேரத்துல தா இங்க வந்து மஞ்சரிய பாக்கனுமாம் , பேசனுமாம்.

ஏன்லே சலிச்சுக்கறவே.. இதச் சொல்லத்தா பெரியவக.. செரி செரின்னுட்டு போகனும் கேட்டியா.. எனவும்


சிரித்தவன், அது செரி நீ என்னைக்கு உங்க அத்தைய மாமன விட்டுக் கொடுத்திருக்க. செரி , வா காது குத்த நேரம் ஆச்சு , வாடா தாய்மாமா.


தலை உலுக்கியவன், அந்த புள்ள ரெண்டு நாளாத்தா எம்முகம் பாத்து சிரிச்சுட்டு வந்திச்சு. அதுக்குள்ள அதை எம்மடில வச்சு எம்புட்டு கொடும படுத்த முடியுமோ படுத்தி.. என்னிய பாத்தாலே அலறி திரும்புதா போல வச்சிட்டீங்களாடே.. போ போ.. வர்றேன். என்றவாறு நடந்தவன்,

க்ருஷ்ணா கோட்ஸ் பெரியவர் தனது மாமன்களிடம் பேசிக் கொண்டிருப்பதையும் தனது பெரிய மாமன் முகம் இருண்டு இருப்பதைக் கண்ணுற்று,

கார்த்தி, அங்கே என்ன நடக்குது போய் பாரு. நிலவரம் ஏதோ சரியில்ல. காது குத்த போறோம்னு சொல்லி இரண்டு மாமனுங்களையும் கோவிலுக்கு கூட்டிட்டு வந்திடு. மாப்ள வீட உடனே வரச் சொல்லுடே. என்றவன் உற்று நோக்கி,

ஏதோ சரியில்ல.. சீக்கிரம் போ டே.. என்று துரத்தினான்.


*************


காது குத்தி பூஜை முடித்ததும் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட, பெரியவர்கள் சம்பிரதாயமான அறிமுகம் முடிந்ததும் , சிறியவர்களை அறிமுகம் செய்து வைத்தனர். இருவருக்கும் பொதுவான கார்த்திக் ரோஷினி பெரியவர்களுக்கு இடையே பாலம் போல நின்று கொண்டு இருந்தனர். பல வருடங்களாக வடக்கில் இருந்த போதிலும் தமிழ் மண்ணும் கலாச்சாரமும் ஊறியவர்களாக பெரியவர்கள் இருக்கு, சற்றே வட இந்திய கலாச்சாரத்தினனாய் மாப்பிள்ளை கிஷோர் தேவ் இருந்தான்.

தேவ மஞ்சரியை புகைப்படத்தில் பார்த்தே பிடித்து போயிருந்த அவனுக்கு நேரில் பார்த்தும்.. இன்னுமும் பிடித்தது, அவனின் மலர்ந்த முகத்திலும் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருந்த புன்முறுவலில் தெரிந்து விட , கார்த்திக் தனது வீட்டுப் பெரியவர்களின் முகத்தினைப் பார்த்தான். திருமணத் தேதி, நிச்சயம் செய்வது எப்போது எப்படி என்ற பேச்சு ஓடத் தொடங்க,

ஒரு நிமிஷம் என்று எழுந்த கிஷோர், நான் பொண்ணுட்ட பேசனும். என்றான்.


அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குடும்பப் பெரியவர் நெல்லையப்பரைப் பார்க்க

அதுக்கென்ன பேசுங்க., மஞ்சரி! அப்படியே அந்த பாதை வழியா நம்ம காடு வரை போயிட்டு வாங்களேன். என,

அவளின் பார்வையில் என்ன உணர்ந்தானோ மகிழ் வேந்தன்,
நீங்க முன்னாடி போங்க , நானும் நீலுவும் பின்னாடியே வர்றோம் என்றான்.


சரியென்று தலையசைத்தவள், எழுந்து கோவிலின் பின்புறமாய் நடக்கத் தொடங்க, நீள எட்டுக்களுடன் அவளுடன் இணைந்து நடந்தான் கிஷோர் தேவ்.

கோவிலில் இருந்து பஞ்சாங்கத்தை வாங்கிக் கொண்டு வா செந்திலு என்று சொன்ன நெல்லையப்பர் குரலினைக் கேட்டவாறே ஏற்றத்தில் ஏறி ஒற்றையடிப் பாதையை அடைந்தாள் தேவ மஞ்சரி.

கற்பித்தல் தொழிலில் இருப்பதால் அநாவசிய அலட்டல்கள் இன்றி இயல்பும் கம்பீரமுமாய் நடக்கும் அவளைக் கண்டவன் , சிறு முறுவலுடன் பின் தொடர்ந்தான்.


கண்மாய் பாதி நிறைந்து இருப்பதைக் கண்டவன், இந்த பாண்ட் எப்பவும் இவ்ளோ தண்ணீர் இருக்குமா என்றான் இயல்பாய் பேச்சு தொடங்கியவனாய்.


சில நொடிகள் அமைதியாய் இருந்தவள், இந்த வருஷம் கோடைல மழை அதனால ஒரளவு தண்ணி இருக்கு. பொதுவா பாதி ஊருணி நிறஞ்சு இருக்கும். மழை சரியில்லை ன்னா காஞ்சு பொட்டலா கூட கிடக்கும். என்றாள்.


ஓ, என்றவன், அப்புறம் ஏன் தனியா கூப்டேன்னா, எனக்கு உங்கள உங்க ஃபேமிலி ரொம்ப பிடிச்சு போச்சு. உங்களுக்கு இந்த ப்ரொபோஸல் பிடிச்சு இருக்கா? என்னை பற்றி, என் குடும்பம் ஜாப் பற்றி கார்த்திக் சொல்லிருப்பாங்க.

எனவும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

கல்யாணம் பத்தி எதிர்காலம் பத்தி ஏதும் கேட்க சொல்லனும்னு இருந்தா சொல்லிடுங்க. இந்த பதினஞ்சு நிமிஷப் பேச்சு தான் நம்மோட மிச்சமிருக்கிற வாழ்க்கையை தீர்மானிக்க போகிறது இல்லியா? என்று சிரித்தவன் , சொல்லுங்க மஞ்சரி..ஐ மீன் பேசுங்க. என்றவனை பாராமல் அமைதியாக நடக்க,

என்னை பிடிச்சுருக்கான்னு கேட்க முடியல. நான் தான் வந்ததிலிருந்து பாக்கிறேனே.. நீங்க என்ன நிமிர்ந்து கூட பாக்கல. இதை வெட்கம் என்று நினைக்கற அளவு நான் மோசமான 90'ஸ் கிட் இல்ல. உங்க மனசில என்ன இருந்தாலும் சொல்லுங்க என்றவன் , அவள் அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் புடவையின் முந்தி நுனியை கையில் திருகியபடி நடப்பதைக் கண்டவன் , தானும் அமைதியாகி கைகளை பின்னால் கட்டியபடி நடந்தான். சில நொடிகள் அவ்வாறே கழிய,

க்ராக் எனும் பயங்கர சத்தம் கேட்டு திடுக்கிட்டு நின்றாள்.


கண்மாயில் இருந்த பறவைகளில் ஒன்று தான் வாள் போன்ற நீண்ட கூரிய அலகினை திறந்து சப்தமிட்டுக் கொண்டிருந்தது.

பெரிய உருவமும் நீண்ட சிறகுகளும் உடைய பறவைகள் அங்கே கும்பல் கும்பலாய் எக்கச்சக்கமாய் நின்று , நீந்திய படி மீன் மற்றும் நத்தை வேட்டையில் பிஸியாக இருந்தன்.

மதிய சூரியன் உச்சிக்கு ஏறி இருக்க, வெயிலும் காற்றும் சம அளவு இருந்தது.

அவள் பதில் ஏதும் சொல்லாமல் நடப்பது கண்டவன் அப்படியே நின்றான். சில பத்து அடிகள் நடந்தவள், அவன் அருகில் வராதது உணர்ந்து நின்று திரும்பி பார்க்க, நாம திரும்பலாம் ங்க. இது போல தண்ணீர் பாக்க இங்கே வரை. மை ஜாப் ஓவர். இனி உங்களுக்க பிடித்தம் பிடித்தமில்லாதது என்னிடம் சொல்லலைனாலும்
உங்க ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட சொல்லுங்க.. என்றவன் திரும்பி நடக்கலானான்.

பேசீட்டீங்களா என்று கேட்ட மகிழ்வேந்தனை நோக்கிப் புன்னகை சிந்தியவன், நான் மட்டும், உங்க பொண்ணு பேசல. எங்க சைட் ஓகே, நீங்க பார்த்துக்குங்க.. என்றவன் தனது அலட்டலில்லா நடையில் கோவில் புறம் செல்ல..

நீர் நாரைகளை பார்த்தவாறு நிற்கும் தேவ மஞ்சரியிடம் சென்றான்.



ஓய் டீச்சரு,


மஞ்சரிம்மா..

எனும் குரல்களுக்கு திரும்பாதவள்,

மாரீயம்மா.. மாரீயம்மா… என்ற மலேஷியா வாசு தேவனின் குரலுக்கு முறைத்தவாறு திரும்பினாள்.

அலறிய அலைபேசியை எடுத்து, கையில் பிடித்தவாறு சில நொடிகள் இருக்க..

அதை நிறுத்துங்க அத்தான் எனும் மஞ்சரியின் அதட்டலில் சிரித்தவாறே அழைப்பினை எடுத்தான்.


என்னடே.. செனையா இருந்த ரேகாவா.. சாப்பிடாம அலபாயுதா.. செரி செரி.. நம்ப டாக்டருக்கு கூப்பிடு.. நம்ப அழகம்மா பாட்டிய கூப்பிட்டு பக்கத்துல இருந்து பாத்துக்க சொல்லு. நாங்க இன்னும் சித்த நேரத்தில கிளம்பிருவோம் டே.. என்றவன்..

எதிர்புறம் என்ன கேட்டானோ.. அம்மாவாச அதுமா கறிக்கஞ்சி கேக்குதாடே.. தோ வர்றேன்.. ஒன்னிய வைடே ஃபோன.. என்றவன்..


நீலூ, நீயே ஒந்தங்கச்சிட்ட பேசு.. என்ன இந்த அம்மைய தாங்கனுமோ.. ஏ டீச்சரு கொஞ்ச நேரத்துக்கு மின்னே மாப்பிள்ள ஃபோனு அடிச்சது.. எப்படி அடிச்சது தெரியுமா… என்று பெரிய ஆச்சரியம் போலக் கேட்க..

சுளித்த புருவத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவள்.. அமைதியாக பார்க்க.


அப்புறம் திரும்பவும் அடிச்சது.. தெரியுமா, அவரு கட் பண்ணிட்டாரு.. என இழுக்க..


ப்ச்.. ஃபோனு அடிக்கறதை ஏன் இழுத்து இழுத்து சொல்றீங்க.. என்னவாம்.. எனவும், அவளின் தலையில் அலைபேசியாலேயே ஒரு தட்டு தட்டியவன்,


இப்போ ஹிட்டாச்சே ஒரு பாட்டு.. நீ கூட கேட்டுட்டே இருநிதியே.. ஆங்.. அகநக முக ன்னு வருமே அந்த பாட்டு.. அதும் அப்படியே காத்துல மொதக்க விடறாப் போல ஒரு புல்லாங்குழல் ரீமிக்ஸ்.. சவுண்டு.. சட்டையும் பாத்தியா வெள்ளை, மேல மெலிசா ப்ளூ.. செம்மையா இருக்காருல்ல.. ரசனை எல்லாம் ஒத்துப் போகும் போலத் தெரியுது. எவ்ளோ பாந்தமா பேசுறாக.. ஆசைதா இரண்டாயிரம் கிமீ தாண்டி வந்திருக்காங்க, ஒரு வார்த்தை கூட பேசாத.. என்ன புள்ளையோ.. என்றவன்.

நீலு ஒந்தாங்கச்சிட்ட நீ பேசு.. இந்தா அம்மையும் வந்திட்டாங்க.. மீ எஸ்கேப்பு.. என்றவாறு நடக்க ஆரம்பித்தான்.


சற்று நேரத்தில் மூச்சு வாங்க வந்து நின்ற வாசுகி, ஏண்டி, இப்பவே தட்டு மாத்தனும்னு பெரிய அண்ணாச்சி சொல்லுதாரு. மாப்பிள்ள என்னவோ நீ வந்து சரின்னு சொல்லனும்ங்கறாரு. இங்கே என்ன வழக்காடிட்டு இருக்கீங்க. எனவும்,


ப்ச் .. எல்லாம் உங்களால தா அத்தை என்றாள் மஞ்சரி.


ஏது.. என்னாலவா.. நா என்னடி பண்ணே.. என அதிர்ந்தவரின் குமட்டில் குத்தியவள், உங்கள யாரு ஒரு பையன மட்டும் பெறச் சொன்னது. இரண்டு பையனா பெத்திருந்தா நானும் உங்க பிள்ளையே கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே இருப்பேன்ல.. என்று விளையாட்டாய் சொன்னவள்.. கண்களில் நீர் நிறைய, உங்களை எல்லாம் பிரியனும்.. இந்த ஊரு, இந்த ஊருணி.. இந்த வயலு இதெல்லா எனக்கு எட்டாத தூரத்துல போய்டும்.. ஏன் என்னிய வேரூருக்கு கட்டிக் கொடுக்கனும்னு நினைங்கிறீங்க. நம்மூருல, பாவநாசத்துல எல்லாம் மாப்பிள்ள இல்லியா என்ன.. என்று கேட்க..

நீலாம்பரியை திரும்பிப் பார்த்தவர், என்னடியம்மா இவ இந்நேரம் இப்படிச் சொல்றா.. இந்த க்ருஷ்ணா கோட்ஸ் குடும்பத்துக்காரவங்க, சித்த நேரம் மின்னே பொண்ணு கேட்டுட்டாங்கனு சின்ன அண்ணாச்சி பாதி வெசனமும் பாதி சந்தோஸமும்மா சொல்லிட்டு இருந்தாரு.. இது காதுல விழுந்தா.. நல்லவேளையா போச்சுன்னு அந்த ஆட்கள் தட்டை தூக்கிட்டு வரப் போறாங்க. எனவும்


நெஞ்சில் கை வைத்து நீலாம்பரி , "அத்தே என்ன இப்படி சொல்றீங்க. நிசம்மாவா.. அந்த ஆளுங்க மண்ணையும் மதிக்க மாட்டாக பொண்ணையும் மதிக்க மாட்டாக. அவங்கட்ட எந்தங்கச்சி போய் வாழனுமா.. அப்பாட்ட நா சொல்றேன். அந்த பாரிய கல்யாணம் பண்றதும் இதோ இங்கன இருக்க புத்துக்குள்ளாற கை விடறதும் ஒன்னுன்னு சொல்றேன்." என்று பாதை நோக்கி கைகாட்டியவாறு திரும்பியவள், அங்கே ஆறடி உயர ராஜநாகமாய் தலையுயர்த்தி இடுப்பில் கை வைத்தவாறு நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்து நின்றாள்..



நாயகன் ஆடுவான்….
 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளுக்கு வணக்கம் .
கதை நகர்வு பிடித்திருக்கிறதா, கருத்து பகிரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே கதை சொல்லியாக என்னை இயங்க வைக்கிறது என்றால், அது மிகை இல்லை. உங்கள் கருத்துக்களை
https://www.srikalatamilnovel.com/community/threads/நீலப்-பெருவெளியில்-நின்றாடும்-நாயகனே-கருத்துத்திரி.2621/ பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைய எபிக்கான எஸ்ஸே😛😛😛😛😛
தக்கி முக்கி எழுதி இந்த அத்யாயம் போஸ்ட் பண்ணுங்குள்ள 😤😤😤😤😤😤😤 உங்களை நீண்ட நாட்கள் காக்க வைத்ததற்கு மன்னிக்கனும். எனக்கும் உங்களைப் போலவே, வேளாண்மை மிகப் பிடிக்கும். நகரத்தில் அமர்ந்து இருந்தாலும எனது வேர்கள் சிறிய கிராமத்தில் இருப்பதாலோ என்னவோ எனது பெரியவர்களின் அணுக்கள் தந்த உணர்வோ.. மாடியில் ஒரு சிறிய தோட்டம் வைத்திருக்கிறேன். காய்கறிகள் விதைக்க தோட்டத்தை செப்பனிட வேண்டியிருந்தது. மூன்று நாட்கள் அதற்கான ஆட்கள் வந்தது, மற்றும் வார இறுதியில் தான் பிள்ளைகள் மாதிரி பரீட்சைகள் எழுதுவார்கள்.. எனவே அதிலேயே பொழுதும் கவனமும் ஓடி விட்டன. அடுத்து திங்கள் டாக்குமெண்ட் ஓபன் செய்தால்.. என்ன எழுதன்னே தெரியல 😨😨😨😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫 ப்ளாங்கா இருக்கு. நினைத்து வைத்திருந்த நகர்வை எழுதுங்குள்ள ஒரு வழியாகிட்டேன்.. வழக்கம் போல ஆயிரத்தெட்டு தொந்தரவுகள் அழைப்புகள்.. ஹூம்.. இவிங்களுக்கு மத்தில (கதை சொல்லியோட)உயிரக் காப்பாத்துரதே பெரும்பாடா இருக்கு னு புலம்பிட்டே எழுதிருக்கேன். அதனால அஞ்சு மார்க் எக்ஸ்ட்ராவா போட்டு இநத எபியை பாஸ் பண்ணி விடவும்..

லவ் யூ ஆல்..💝💕💖💝💖💕
 

தாமரை

தாமரை
ப்பா..






NPNN 8


தனை வரச்சொல்லி விட்டு, மடியில் கோர்த்திருக்கும் கையையை பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய மாமனை ஆச்சரியமாகப் பார்த்தான் மகிழ் வேந்தன்.


கார்த்தியும் அவன் மனைவியும் திருநெல்வேலி டவுனுக்கு போயிருந்தார்கள். அத்தை மாத்திரை போட்டு விட்டு உறங்குகிறார்கள் போலும். ஒரு நோய் எப்படி ஓடியாடித் திரிந்த மனிதியை ஒன்றுக்கும் உபயோகமற்றவராக மனம் சுணங்க வைத்து முடக்கி விடுகிறது?


பெரிய அத்தை சிவகாமி, மூத்த மருமகளாக வீட்டிற்கு வந்தவர். இந்த குடும்பம் தாண்டி ஏதும் யோசிக்கத் தெரியாது. அவரைப் பொறுத்த வரை கார்த்தி, வேந்தன், மஞ்சரி எல்லோரும் ஒன்று, சமமே. அப்படித்தான் இருப்பார். மஞ்சரி சிறு பிள்ளையாக இருந்த போது ஏற்பட்ட ஒரு விபத்தில் சின்னத்தை ராஜேஸ்வரி இறந்த பின் என்று இல்லை , அதற்கும் முன்பே அவர் இரு பெண்களுக்கும் பெரிய அன்னை தான். மடி சுமந்து பெற்ற பெண்களாகத் தான் வளர்த்தார்.


இன்று இருவரும் பொறுப்பும் அருமையான குணங்களுடன் இருப்பது நிச்சயமாக அது அவரது வளர்ப்பினால் மட்டுமே.


சுவரில் இருந்து புகைப்படம் கூட மஞ்சரி சடங்கு நீர் ஊற்றும் விழாவன்று அனைவரும் குடும்பமாக இருக்கும் படமும் கார்த்தி திருமண சமயம் எல்லோரும் இணைந்து நின்று எடுத்த படமும் தான்.



அவையே அவர் இக்குடும்பத்தின் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த பாசத்தைச் சொல்ல, அப்பு எனும் அவரழைப்பின் நினைவில் மனம் லேசாக விம்மியது. ஏதோ யோசனையில் இருக்கும் பெரிய மாமனை தொந்தரவு செய்யாமல் படங்களை பார்வையிட்டவாறு நின்றான்.


க்கும் என்ற செறுமலில் தலை திருப்பியவன்,


அத்தைக்கு இன்னும் சில முறை ட்ரீட்மெண்ட் போக வேண்டியதிருக்கும் போல வேந்தா. இன்னும் சில லட்சங்கள் தேவைப்படும் . கார்த்தி வாங்கின மும்பை ஃப்ளாட்டுக்கு இறுதி இன்ஸ்டால்மெண்ட் பணம் கட்டனும் போல.. லேசா சொன்னான்.

என்று சொல்லியவர் அமைதியாக,


ம், வாழை வித்தது இருக்குமே மாமா. அவனுக்கு கொடுங்க. பத்தலைன்னா நம்ம வயலை அடமானம் வச்சு பணம் வாங்கினோம் மாமா.. அதிலேயே இன்னும் லோன் போட்டுக்கலாமா? இல்லாட்டி நம்ம சொரிமுத்து அய்யனார் கோவில் பக்க ப்ளாட்ட விற்றிடலாம் மாமா.. என்று சொல்லவும் மறுப்பாக தலையசைத்தார்.



அது நாளபின்ன நல்லதா வீடு கட்டனும்னா வேணும். அந்த பிஞ்சை நிலத்துக்கு பைனான்ஸ் கம்பெனி , இதுக்கு மேல கேட்டா இன்னும் ஏதாச்சும் நம்மள கொண்டாரச் சொல்வான். சிக்கல்ல மாட்டுவான் வேணா..


மகிழ்வேந்தன் யோசித்து, அப்படி கேட்டா எம் பேர்ல உள்ளது கொடுக்கலாம் மாமா, இன்னும் ஒன்றிரண்டு மாசம் தான் தாக்கு பிடிச்சிட்டா, கரும்பு ரூவா வந்திடும்.


மறுப்பாய் தலையசைத்தவர், நிலம் எல்லாத்தையும் வில்லங்கத்தில மாட்டிற வேண்டாம் கேட்டியா! அந்த நிலத்தை வித்திறலாம்னு கார்த்தி ரோசனை சொல்லுதான். எனவும் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.


என்னது, நல்ல கேணியுள்ள புஞ்சை நிலத்தை விக்கிறதா.. இந்த பக்கம் அந்த பாரி அந்த பக்கம் எவனோ வந்து பயிரு வைக்க , நடுவில இருக்க காட்டில பின்னால நாம என்ன பண்ணுறது? எப்படி இப்படி சொல்றார்? என்று திகைத்தவன்..


இதுக்கு தான் முன்னமே சொன்னேன் மாமா , பேரு யாரது என்றெல்லாம் யோசிக்காதீங்க.. கிணறு இல்லாத நம்ம பூர்வீக நிலத்தை அடமானத்தில வைங்கன்னு சொன்னேன். நீங்க , மாமா இரண்டு பேரும் வேணாம் சொல்லிட்டீங்க. என்றான் வருத்தமாய்.



இல்லப்பா , அது நம்ம குலகௌரவம் அதை எங்கும் அடகு வைக்க முடியாது. அதுல பெரியவங்க பாடுபட்ட யோகம் தா இப்ப நாம வெள்ளாம பண்ற காடுகள் வாங்க வச்சது. அதை கொண்டு அடமானம் வைக்கறது எனக்கு சரின்னு படல. ம் நீயும் ஆஃபீஸராகிட்டா நிலம் பாக்க ஆள்தோது இல்லாம போய்டும், எனக்கோ செவந்திக்கோ ஏலாது. ஹூம்.


மறுப்பாய் தலையசைத்தவன், அதெல்லாம் வேலைக்கு போனாலும் பாத்துக்கலாம். அதான் நம்ம ஆக்களுக்கு சரியா நா ட்ரெயினிங் கொடுக்கேனே. நீலு நல்லா பார்த்துப்பா மாமா. பணத் தேவைன்னா என் பெயர்ல உள்ளது வச்சு கடன் வாங்கலாம். ப்ச்.. நான் வேற இந்த நேரத்தில நாட்டு மாடுங்க வாங்கி செலவு பண்ணிட்டேன். பேசாம அதுங்கள கூட வித்திடலாம் மாமா. பெரிய ஒன்னு ரூவா கூட வந்திடும். எனவும்



அடிபடுவ என்று கை ஓங்கியவர், அவனின் தோளணைத்து,


அதெல்லாம் விக்க கூடாது அய்யா. மாடு கன்னு விக்கற அளவு நாம தாழ்ந்து போகல கேட்டியா. அந்த ஃபினான்ஸ் ஆட்கள்ட்ட கேட்டு பார்ப்போம்.. என்றவர் இன்னும் சிந்தனையில் ஆழ,



மெதுவாக எழுந்தவாறு, உங்களுக்கும் அத்தைக்கும் ஒன்னுன்னா செய்ய எல்லோரும் இருக்கோம். நா வேற ஏதும் ஏற்பாடு பண்ண முடியுதா பாக்கிறேன். அவசரப்பட்டு யார்ட்டையும் ஏதும் பேச வேண்டாம் மாமா. நாளை காலை ஒரு பொழுது டைம் கொடுங்க. என்றான்.


ஆமோதிப்பாய் தலையசைத்தவர் , ஆமா, இந்த மஞ்சரிப் பிள்ள என்ன சொல்லுது? பெரியம்ம நாளு குறிக்கலையா குறிக்கலையான்னு என்னிய கொடயுதா.. எனவும்,



அது.. ஊரு குடும்பம் விட்டு போறோம்னு வெசனப் படுது போல மாமா, ஆனா, எனக்குத்தா இன்னும் ஒரு வருசம் செண்டு செஞ்சா எல்லாம் சரியா வரும் னு தோனுது. இந்நேரம் ஏங் கல்யாணம், செலவு .. என்றவனை


கையமர்த்தித் தடுத்தவர், அதெல்லாம் சுபச் செலவு, எந்த கொறவும் இல்லாம செஞ்சுப்புடலாம். அதெல்லா சின்னப்பிள்ளைங்க நீங்க நினைக்கப்பிடாது கேட்டியா? என்று அதட்டிய மாமனைப் பார்த்து பக்கென்று சிரித்தான்.


இந்த சின்ன்ன்னப் பிள்ளைகளுக்கு தா நீங்க கல்யாணம் கட்டி வைக்கப் பாக்கறீங்க.. ஹூம். என்றான்.



அது அப்படியில்லடா மருமவனே.. வளர்த்தில கல்யாண வளர்த்தின்னு ஒன்னு இருக்குது. வெவரமில்லாத திரியறதுங்க கூட கல்யாணம் ஆனதும் அறிவு கூடிப்புடும். அதான். இவனின் மாமன் ஆயிற்றே, அதே அலட்டாத சிறு முறுவலுடன் சொல்லவும்,



தலையசைத்தவன், அப்படின்னா இந்த பள்ளிக்கூடம், காலேஜெல்லா போய் படிக்கறது வேஸ்ட்டா மாமா.. ஆளாளுக்கு கல்யாணம் மட்டும் பண்ணாப் போதுமோ. என்று மிகுந்த சிந்தனையில் இருப்பது போன்ற முக பாவனையுடன் கேட்டவன், கவலையால் சுருங்கியிருந்த மாமனின் முகம், தனது விளையாட்டால்.. விரிவது கண்டு இன்னும் வம்பிழுத்து சிரிக்க வைக்க எண்ணியவனாய்,


சொடுக்கிட்டு, ஆங், அம்மச்சி சொல்லிருக்காங்க. நீங்க கூட என் வயசுல இரண்டு வேள கோயில் போயிட்டு, ருத்திராட்சம் எல்லாம் போட்டுட்டு கல்யாணம் இப்போ வேணாம்ன்னு விரைப்பா சுத்திட்டு இருந்தீங்கன்னு.. சன்னியாசி ஆகிடுவீங்களோன்னு பயந்தாங்களாம்.. அத்தையப் பாத்ததும் மாறிட்டீகளோ.. அதாவது அதுக்கப்புறம் தா வெவரமானீகளோ..


எனவும் மென்மையாய் சிரித்தவர், சிவமே என்று இருந்தாலும் சக்தி இல்லைன்னா அது ஜடமாத்தான் போய்டும் வேந்தா. அது போலத்தா சம்சார சாகரம் கடக்காதவே, சன்னியாசம் ஏற முடியாது. அது போலத்தா நீ நிறைய சாதன செய்ய ஆசப்படுதீயல்ல, அதுக்கெல்லா நம்ம புள்ள துணையிருந்து ஏத்தி விடும் , அவள நீ உயர்த்தனும்.. அதா தர்மம் கேட்டியா..



வட்டமாய் தலையசைத்தவன், செரி நீங்க உறங்குற தேரமாசாச்சு. படுங்க மாமா. கார்த்தி வந்தா நா கதவு தெறந்து விட்ருறேன். என்றவாறு எழுந்து வெளியே வந்தான்.


வெளியே வந்தவன் தொலைக்காட்சி சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் , இரவு உணவை உண்டவாறே தொலைக்காட்சித் திரையை பார்த்துக் கொண்டிருந்த மாமனின் சின்ன மகளைக் கண்டு அவளை நோக்கிச் சென்றான்.



தோசையை பிய்த்து சாம்பாரில் தோய்த்தவள் கவனம் டீவியில் இருக்க, கறிவேப்பிலையையும் வாயில் வைப்பதை பார்த்தவன் என்ன டீச்சரு கரப்பான் பூச்சி சாம்பார் சாப்படறீயா என்றான்.



வாயில் வைத்த கை அப்படியே நிற்க நாவின் நெருடலில், பதறி, ஓங்கரிக்க.. தூ என்று துப்பியவள், தட்டில் விழுந்த கறிவேப்பிலை கண்டு மனம் படபடக்க கண்களில் நீர் கோர்க்க அவனை முறைத்தாள்.



தலையில் தட்டியவன், பயம் வருதல்லா.. பின்ன, சாப்பிடும் போது தட்டில கவனம் வைக்கனும் தெரியாது. உங்கத்தைக்கு சோடியா நீயும் சீரியல் பாக்கறியா.. ம்.. என்று சின்னத் திரையை பார்த்தவன், நா மாமா கூட பேச உள்ள போம்போது இந்தாளு கோவில சுத்த ஆரம்பிச்சான். இன்னும் சுத்தி முடியலையா. நல்ல வேள உருண்டு கொடுக்கிறது(அங்கப் பிரதட்சணம்) பண்றா போல சீனு எடுக்கல, அந்தாளு கொடலெல்லா வெளிய வந்திருக்கும். என்னா இழுவ இழுக்குறானுங்க. இதையும் பாக்கறீங்க.. என்றவன் அவள் கடுப்புடன் எழுந்ததும், மருவாதியா அந்த கரப்பான் பூச்சி சீ கறிவேப்பில சாம்பாரை வழிச்சு வாய்ல போடு. என்று மல்லுக்கு நின்றான்.



நவருங்க அத்தான். சாப்பிடும் போது கண்டதை சொல்லி சாப்பிட விடாத செஞ்சதே நீங்கதா. அப்படிதா பண்ணுவேன், குப்பைல தா போடுவேன். என்றவள் சமையலறைக்குள் செல்ல தனது தட்டுடன் வெளியே வந்தாள் நீலாம்பரி.


இன்னுமா நீ சாப்பிடல நீலு. என்ற மகிழின் கேள்விக்கு, அண்ணே அண்ணி வந்துருவாங்கனு பாத்தேன். இன்னும் நேரமாகுமாம். இப்போ தான் அங்கேருந்து ப்ளசர்(கார்) கெளம்புது.



ம்.. என்றவன் மஞ்சரி தனது அறைக்குள் சென்று மறைவது கண்டு, என்னா சொல்லுது மஞ்சு? மாப்பிள்ளைய பிடிச்சிருக்காமா? பேங்க் ஆஃபீஸரு , இந்தியா முழுக்க ராத்தல்ல வர்ற வேல. இவ போன நேரம் தமிழ்நாட்டு பக்கமா கூட மாத்தல் கிடைக்கலாம். ஆளுங்க நல்ல கொணமா இருக்காங்க. நல்ல இடம், நம்ம பிள்ளய சந்தோஸமா வச்சுப்பாங்க தோனுது. கார்த்தியும் அங்கே இருக்கான் பின்ன என்ன கவலையாம், ஏன் கம்முன்னு இருக்கா. நீ எடுத்து சொல்லு நீலு.



எங்கத்தான், இது பத்தி பேசினாலே நகர்ந்துடறா.. இல்ல எங்கிட்டோ பாக்கிறா.. ஏதோ குட்டிச் சொவத்திட்ட பேசற மாதிரி இருக்கு.. எனவும்


நகைத்தவன், குட்டிச் சொவரும் அவளும் ஒன்றுதான் , அஞ்சடி ஒயரம் இரண்டும்.. பாப்போம், இல்லாட்டி அவ சொல்லுதாப் போல உள்ளூரு மாப்பிள்ள கிடைக்கது கஸ்டம், பாவநாசம் திருநவேலி பக்கமா தேடலாம்.



சாப்பிட்டுக் கொண்டிருந்தவளிற்கு, சட்டென புரையேற, தலை தட்டியவன் , தண்ணீர் செம்பை அவள் புறமாய் நகர்த்தினான்.


நீ சாப்பிட்டு, மூனு வருஸம் மின்ன நம்ம எல்லோர் பேர்ல எஃப்டி கட்டினப்போ போட்ட பத்திரங்கள எடுத்திட்டு வா, நா சீரியல்ல அந்த கோவில சுத்துற பயல சித்த நேரம் பாக்கிறேன். என்றவன் எழுந்து சென்று தன் தாயின் அருகில் அமர்ந்தான்.


லேசாக சரிந்து தாய்க்குலமே, அப்பா உங்கள கூப்பிட்டாக. என்றவனின் புறம் திருப்பாமல்,


மாட்டாக, அவக **** சூப்பருல உள்ளத்தை அள்ளித்தா படம் ஓடுது அத பாத்திட்டு இருக்காக. இன்னும் ஒரு மணி நேரம் தேட மாட்டாக,



அது சரி , புருசனை ரம்பாவ சைட்டடிக்க விட்டுட்டு , ஹூம் கொஞ்சம் கூட பொறுப்பேயில்ல, காலைல சீம்பால் கறக்க தனி சட்டியெல்லா தந்தீகளா..


எல்லா கொடுத்தாச்சு, ஆரு உங்கப்பாவா, போடா போய் உன் ரேகா போட்ட புது குட்டிக்கு வேறென்ன ராமராஜன் ஹீரோயின் போரு வைக்கலாம்னு ரோசி.. தொல்ல பண்ணாத, அங்கன ஓடிப் போ என்றவர் ப்ச்.. இன்னும் ஒரு சுத்து சுத்தியிருந்தா, அவட்ட அவன் பேசிருப்பான்.



உக்கும் , காமெரா ஆளு தலைசுத்தி அங்கனயே விழுந்திருப்பான் , உங்களுக்கு இப்படி பாக்கது கண்ணு, தல வலிக்கலயா தாய்க்குலமே.. என்னமோ பண்ணுங்க.. என்றவாறு எழுந்தவன் தனது செல்லப் பிள்ளைகளை பார்க்க நடந்தவன் , வாய் சீழ்கை அடித்து பாடலை முணுமுணுத்தது,



பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி..



*****************


வழக்கமான பாதையில் தனது வாகனத்தை ஓட்டியவாறு வந்து நாவல் மரத்தின் அடியில் நிறுத்தி, கையிலிருந்த பைகளை எடுத்து அங்கிருந்த கிளைகளில் மாட்டியவளின் நாசி ஏதோ மருந்து வாடையைக் கண்டு கொண்டது.


என்னது என்று மனம் முணுமுணுக்க சுற்றிலும் பார்த்தாள் டேவிட் அண்ணாச்சி.. ச்சே பாரி வேந்தனின் காட்டுக்குள் நின்ற இலவம்பஞ்சு மரத்தின் கீழே சிறு சிறு பாக்கெட்டுகள், மணல் நிறத்தில் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.


ஏதேதோ புரியாத மொழியில் அச்சடிக்கப்பட்டு இருந்த கவர்களும், பார்த்தவளிற்கு ஏனோ அடிவயிறு பயத்தில் சுருண்டது.



வேகமாக பார்வை திருப்பியவள், ஒரு மாத வளர்ச்சியில் அழகாய் நின்ற தமது வயல் நெல் நாற்றுகளைப் பார்த்தாள். ஒவ்வொரு குழியின் மூலையிலும் அழகாய் செதுக்கப்பட்ட தென்னை மட்டை கைகாட்டி மரம் போல நின்றிருந்தது. அதில் அந்தந்த குழியில் இருக்கும் நாற்றின் பெயரையும், விதைக்கப்பட்ட தேதிக் குறிப்பையும் தாங்கி நின்று கொண்டிருந்தது.


எல்லாம் அத்தானின் வேலை தான். அவனுக்கு எதுவானாலும் ஆவணப் படுத்திடனும். என்னென்ன நாட்களில் என்னென்ன இயற்கை உரங்கள், பூச்சி விரட்டி மருந்துகள் கொடுக்கப் பட்டது அனைத்தும் அவன் குறித்து தர இவள் அவற்றை டாக்குமெண்டிலும் பதிந்து வைத்து விடுவாள். கோழி, ஆடுகள், மாடுகள் , உரங்கள் எல்லாவற்றிற்கும் இதே போல நடக்கும். மகிழ்வேந்தனின் படிப்பு அவனின் தந்தை ஆசைப்படி கணிதம் மற்றும் விஞ்ஞானம் சார்ந்ததாக இருந்தாலும் விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு. வணிகவியல் சேரச் சொல்லி அனைவரும்

ஆலோசனை கூற, இவள் வேளாண்மை படிக்க ஆசைப் பட்ட போது முதல் ஆதரவு அவனிடமிருந்து தான் வந்தது. அவளின் யோசனைகளை கேட்டுத் தான் ஏதும் செய்வான். அவளது சோதனை முயற்சிகள் அவனிடம் கோடு போட்டால் போதும் அது பற்றிக் கொண்டு அதனை வெற்றிகரமாக செய்து முடித்து விடுவான். அத்தான் அத்தான் தான் என்று எண்ணியவாறே நடந்தவளிற்கு ஒரு குழியை கடக்கும் போது வந்த பிரியாணி வாசம் மூக்கைத் துளைக்க, ஆசையாக பார்த்தாள். முதல் முறையாக அவர்கள் காட்டில் பாசுமதி பயிரிடுகிறார்கள். நாற்றில் பெரியதாக வித்யாசம் தெரியவில்லை , ஆனால் இந்த வாசனை ஆழ்ந்து மூச்செடுத்து நுரையீரலில் நிரப்பிக் கொண்டவள், சூரியனைப் பார்த்து அடடா நேரமாகிடுச்சு.. தீவனம் கவனிக்கணும், அடுத்து பொருட்களை சந்தைக்கு அனுப்பனும்.. என்று எண்ணியவாறு விரைந்து நடந்தாள்.


ஸ்டோர் ரூமிலிருந்து கோழி வளர்ப்பு

தீவனத்தை ஏந்தியவாறு வந்த செந்தில், அப்பாடி வந்தியாம்மா? நாட்டுக் கோழிங்களுக்கு, இந்த புதுசா வாங்குன கருங்கோழிங்களுக்கு ஏதோ மருந்து கொடுக்கனுமாமே. வேந்தன் டவுன்ல நிக்கிறானாம். உன்னட்ட கேட்டுக் கொடுக்க சொன்னான். என்ன மருந்துமா.. கால்பாலா, மஞ்ச டப்பா மாத்திரையா வெள்ளை டப்பா மாத்திரையா , சட்டுனு சொல்லு என்றான் ஓரமாய் இருந்த டப்பாக்களை பார்த்தபடி ..


சிரித்தவள், உங்களையே கண்ட மாத்திரை போடாதீங்கன்னு சொல்லிருக்கு, நீங்க கோழிங்களுக்கு கொடுக்க பாக்கறீங்க. எப்பவும் அத்தான் கூடவே நிக்கறீங்க அந்த டப்பால இருக்கது மாத்திரைங்க இல்லனு தெரியாதா. அதும் கால்பாலா . அதிமதுரம் , மணித்தக்காளி கீரைப் பொடி இருக்கு அண்ணே. அது இப்போ வேண்டாம். இன்றைக்கு அத்தான் பஞ்சகவ்யா தான் கொடுக்கனும் சொன்னாங்க. உரக் கிடங்குல இருந்து ஒரு பாட்டில்ல. ஊத்தி எடுத்திட்டு வாங்க .


என்னா பஞ்சகவ்யா , பயிருங்களுக்கு அடிக்கது, அதயா கோழிங்களுக்கு கொடுக்க என்று சிறு அதிர்வாய் கேட்க,


ஆமா , நாட்டுக் கோழி, கருங்கோழிக்கு இதெல்லா தான் கொடுக்கனும். நீங்க கொடுக்கற இங்கிலீஷ் மருந்தெல்லா அதுக்கு ஒத்துக்காது. நம்ம காட்டுல இருக்க மூலிகைங்களே போதும். பஞ்சகவ்யா நோயெதிர்ப்புக்கு நல்லது. இன்று அது குடுக்கிற நாள்.. என்றாள் அங்கிருந்த அட்டையை பார்த்தவாறு.



ஆங் அப்படி சொல்லுங்க நீலாம்மா.. நம்ம மருந்து தா நமக்கு நல்லது. காடு முழுக்க மணத்தக்காளி பொறக்கி நான் உங்களுக்கு தானே பொடி செஞ்சு கொடுக்கிறேன். அதெல்லா சாப்பிட்டு தா நம்ம கோழிங்க தெம்பா சுத்துதுங்க. சொன்னா இது நம்ப மாட்றது.. என்ற செல்வியை ஏற இறங்க பார்த்தவன் ,


ஏம்மா நீ எடுக்கறது பாதி வூட்டுக்கு தான மூட்ட கட்டுற. அவ்வளவும் ஹெர்பல் கம்பேனி ப்ரோக்கருக்கு தானே விக்கிற.. சம்பளம் இங்கே சைடு வருமானம் அங்கே.. போ போ.. போய் ஆடுங்களுக்கு அகத்திக் கீரை எடுத்தாநது போடு போ.. என்றவன்,


எம்மா நீலா சித்த இங்கே இரு, கோவிலுக்கு ஓடிறாதே , நா போய் பஞ்சகவ்யா எடுத்துட்டு வாரேன். இன்னிக்கி ஒரு நா அளவா நீயே எடுத்து நீயே கொடு, அந்த வாடை எனக்கே பிடிக்காது, கோழிங்க எப்படி குடிக்குதுங்க பாக்கிறேன்.

என்றவன் ஓட்டமாய் ஓடி எடுத்து வந்தான்.



ஆமா என்னாமா அங்கே கார்த்தி காட்டு கொய்யா மரத்துக்கு அடில ஏதோ பொட்டனம் பொட்டனமா ஆட்கள் கொண்டாந்து எறக்கிருக்காங்க. பாத்தா ஏதோ மண்ணு மூட்ட கணக்கா இருக்கு என்ன, வேந்தன் கூட ஏதும் சொல்லலியே.. என்று அவளிடம் கேட்க,

ஆட்டுக் குட்டியை தடவிக் கொஞ்சிக் கொண்டிருந்தவள். ஆச்சரியமாக பார்த்தாள்.


அங்கே அந்த டேவி.. ப்ச் க்ருஷ்ணா கோட்ஸ் காரவுங்க வயல்லயும் கிடந்தது. ஏதோ கெமிக்கல் வாசனை வேற.. என்னான்னே யாராச்சும் ஏதாச்சும் கொடுத்தா வாங்கிப் போடறதா.



இல்லைம்மா வேந்தன் தா இறக்கச் சொன்னதா சொன்னான் அந்த பய. அதான் விட்டுட்டேன்.


சரி அத்தான்ட்ட என்னான்னு கேட்போம். ஃபோன் பண்ண வேண்டாம்னு சொன்னாங்க என்று வாய் பேசியபடி இருக்க, கோழித்தீவனத்தில் சில மூடி அளவு திரவத்தை கலந்தவள், ஒரு கப்பினை எடுத்து அளந்து, கோழிகள் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தில் உள்ள நீரிலும் ஊற்றினாள். இது இரு வருடங்கள் முன்பு அம்பாசமுத்திரத்தில் நட‌ந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட போது அறிந்து கொண்ட விஷயம்.


இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளும் ஒரு சங்கிலிப் பிணைப்பு போல, ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருக்கும். அவற்றின் உணவு முறை அப்படித்தான். மனிதனுக்கு மண்புழுவும் தேவை பாம்பும் தேவை.. ஆசையாக மண்புழு உரத்திற்கென இருக்கும் பெரிய பேரல்களைப் பார்த்தாள்.


அய்யனார் கோவில் மணியொலி கேட்க, சட்டென்று எழுந்தவள்,


அண்ணே நீங்க , எலக்கட்டு, பழங்களை எல்லாம் வெரசா கொண்டாரச் சொல்லுங்க. அந்த ஆக்களுக்கு ஒரு சத்தம் கொடுங்க. நான் அய்யனாரை பார்த்துட்டு உடனே வர்றேன். என்றவாறு நடந்தாள்.


கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்தவள் ஆழத்தில் தெரிந்த நீரினை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அவளைப் பொறுத்தவரை எல்லமே சாமி தான். அதும் நீரின்றி எதுவும் அசையாது அவளின் பிடித்தமான விவசாயத்தில். ஆழத்தில் இருக்கு, ஆடி பதினெட்டுக்குள்ளாற ஒரு மழை வரும். வந்தா ஊருணி தண்ணி ஏறும் கேணித் தண்ணியும் கூடும். என்று எண்ணியவள்.. கண்களில் கொய்யா தோப்பில் ஒர் மரத்தின் அடியில் இருந்த பாக்கெட்டுகள் பட்டன.



வேகமாக சென்றவள் எடுத்து முகர்ந்து பார்க்க ஏதோ நைட்ரஜனும் அம்மோனியாவும் கலந்த வாசனை வருவதாக தோன்ற.. இது போலவெல்லாம் அத்தான் வாங்க மாட்டானே. என்று யோசித்தாள் ,


அவன் , அந்த பாரியின் வேலையாக இருக்குமோ, அவனைத்தான் வேந்தன் என்று அந்த ஆள் சொல்லி இருப்பானோ. கேட்டுப் பார்க்கலாமா என்று

கண்களை இறுக மூடியவள், ம்கூம் அத்தான் அவனுங்க வழிக்கே போகக் கூடாது சொல்லிருக்காங்க.. நேற்று வேற என்னென்னவோ உளறி வைத்து இருக்கோம். அந்நேரம் அவனின் பார்வை ஆத்தாடி இப்பவும் வயிறு சுருளும் உணர்வு. பேசிக் கொண்டிருந்த அத்தையை அங்கேயே விட்டு விட்டு ஓடி வந்தாயிற்று. இப்ப சாமி அய்யனாரப்பா, அவன பாக்கவே கூடாது..

என்று மனதுள் சொல்லியவளாய், பாதையில் ஏற, அங்கே தாழ இருந்த புங்கன் மரத்தடியில் மறைத்த கிளைகளை தள்ளிவிட்டு வெளியே வந்தான் அவன்..



எப்பவும் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் எங்கோ பார்த்து உதாசீனம் செய்யும் விழிகள், அவளின் மீதே நிலைத்ததாய்.. உச்சியிலிருந்து கால் வரை கூறிடுவது போல உணர்வாக, பொதுவாக இந்த பாதையில் வர மாட்டானே.. வேணாம் அப்புறமா போகலாம் என்று எண்ணி வேகமாக திரும்பப் போனவளை அவனின் குரல் நிறுத்தியது.



எப்பவும் பக்கத்து காட்டுல என்ன பண்றாகன்னு வேவு பாக்கது தா வேல போல.. எனவும்


யோசனையாய் புருவம் சுருக்கியவள், என்ன உளறுகிறாய் என்பது போலப் பார்த்தாள்.



உன் பெரியப்பன் அடமானம் வச்ச நிலப் பத்திரம் இப்போ என் கையிலே..இப்போதைக்கு அனுபவப் பாத்தியதைக்கு எழுதி வாங்கிருக்கு சீக்கரமே. முழுசா.. என்றவனின் பார்வையில் குரலின் தீவிரத்தில் உடலுறைய நிற்க,


மண்ணை மிதிச்சு ஆளனும் பொண்ணை முறிச்சுத்தா ஆளனும்.. ஆண்டு காமிக்கிறேன். சீக்கிரமே இந்த கொட்டாரம், பட்டறை எல்லாம் பிரிக்க ரெடியா இருங்க.. என்று கையசைத்த திமிரைக் கண்டவள்,


ஆத்திரத்தில் ஒற்றைப் புருவம் உயர, நிறுத்து என்றாள்.


என்ன.. குறுக்கு வழியில பாயற உனக்கு இம்புட்டு ஏத்தமிருந்தா , காலமெல்லாம் பாடுபட்டு காப்பாத்தின எங்களுக்கு, என்ன பிரிக்கணும், ஒனக்கு இவ்ளோ தான் மரியாதை, அடமானம் வச்ச நிலத்தை , உரிமை கொண்டாடடுறது எந்த சட்டத்தில இருக்கு. என்ன ரூல்ஸ் தெரியாத ஆடிட்டு இருக்க.


ஒற்றை விரல் உயர்த்தியவள், எச்சரிக்கை செய்வது போல அசைத்தவள் மரத்தடியில் இருந்தவற்றை சுட்டிக் காட்டி, மரியாதையா நீ கொட்டின குப்பைய எடுத்து ஒன் நிலத்தில கொண்டு போட்டுக்க.. முதல்ல இடத்தைக் காலி பண்ணு. என்று இறுகிய குரலில் எச்சரித்தாள்.


முகம் இறுக, " ஒன் பெரியப்பன்ட்ட பேசு, இந்த நிலம் யாருதுன்னு தெளிவா சொல்லுவான். அப்புறமா யார் எடத்தை யார் காலி பண்றதுன்னு பாக்கலாம். என்னிய பாத்தா கைநீட்டி மரியாத இல்லாம பேசற.. உன்னை… எப்படி பாக்கனுமோ அப்படி பாத்துக்குறேன்டி.. " என்று சொல்லிவிட்டு கிணற்றின் சுவற்றின் மீது ஏறி கால்மீது கால் போட்டு அமர்ந்தவனின் அசைவில் பாசனக் குழாய் தாக்கத்திற்கு வைத்திருந்த கல் கிணற்றுக்குள் தடாரென்ற ஒலியுடன் விழுந்து பேரலைகளைக் கிளப்பியது.



நாயகன் ஆடுவான்..
 

தாமரை

தாமரை
அன்புத் தோழமைகளே!

ஒருவழியாக எழுதி போட்டுட்டேன்.. கதை பற்றி உங்கள் கருத்துக்கள் பகிர,





🤧🤧🤧🤧🤧🤧
இப்ப எஸ்ஸே🙈🙈🙈🙈

பத்து நாட்கள் கழித்து வந்திருக்கேன்.. ஏற்கனவே சொன்னது போல எனது மாணவமணிகளுக்கு பரீட்சைகள் நெருங்கி விட்டன. அதனால் இரவு 8.30 வரை வகுப்புகள். சனி ஞாயிறு முழு வேலை நாட்கள்.

பற்றாததிற்கு புது அடிக்க்ஷன் ஆன தோட்டம் வேறு.. ஆடி பட்டம் என்று என்னை ஆட்டி வைக்கிறது 😷😷😷😷😷
இரவு கண்விழித்து எழுத முடியவில்லை என்ற பழைய எஸ்ஸே தான் புதிய கலரில்🙊🙊🙊🙊🙊🙊

ஆகஸ்ட் 20 பரீட்சகள் அடுத்து செப்டம்பர் 17 முக்கியமான திருமண விழா என்று அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ்.. இப்போது விட்டால் இனி எழுதவே முடியாதோ என்ற பயத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். உங்களையும் படிக்க வைத்து காக்க வைத்து கொடுமை படுத்தறேன். முடிந்த அளவு விரைவில் எழுத.. இந்த பாரி பய்யன் பஞ்சாயத்தை நல்லபடியா முடிச்சுக் கொடுக்க ஊருணி அய்யனாரும் உங்க அன்பும் துணை நிற்கட்டும்

லவ் யூ ஆல் டியர்ஸ்💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
நலமா தோழமைகளே💕💕💕☺☺🙏🙏🙏🙏🙏

இதோ வந்துடுறேன் என்று சொல்லிப் போனேன். இரண்டு நெடிய மாதங்கள் எப்படி ஓடுச்சுன்னே தெரியல..

பரீட்சைகள், சிறு உடல்நலக் குறைவிற்கு ஒரு வாரம் ஆஸ்பிடல் வாசம்.. நெருங்கிய உறவுத் திருமணம், ஒப்புக் கொண்ட ஒரு ஆன்லைன் போட்டி தேர்வு ஏற்பாடுகள், அதன் வெற்றி விழா என தொடர்ந்து ஓடிட்டே இருக்கிறேன் . அலைகள் ஓய்ந்து பின் கடல் இறங்க முடியாது என்பது புரிகிறது.. செயல்படுத்த களத்தில் இறங்க வேண்டும்.. நாளை மாலையில் 9 வது பதிவுடன் வருகிறேன் தோழமைகளே.. 🤭🤭🤭🤭 கதையே மறந்து போச்சா.. சரிதான் முன்கதை சுருக்கம் சொல்லிட்டு தொடர்ந்துடறேன்.. 💝🥰❤ உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து.. எழுத வைக்கும் 💖☺
 
Status
Not open for further replies.
Top