All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரும்பி வருவேன் உன்னை தேடி - கதை திரி

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 4

மனோஜ் இறந்த விஷயம் அவர்கள் வீட்டிற்கு சொல்லபட அவர்கள் நந்தனை கட்டி கொண்டு கதறினர்..

மனோஜ் உடல்பிரேத பரிசோதனைக்கு பிறகு வர அது ஒரு விபத்து என முடிவு ஆகி இறுதி சடங்குகள் செய்யபட்டனர்
நண்பர்கள் நால்வரும் மனோஜின் உயிர் அற்ற உடலை பார்த்து சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாயினர்..

எத்தனையோ பேரை இவர்களின் அற்ப சந்தோஷத்திற்காக அவர்களை துன்பபடுத்தி அழ வைத்தவன் இனறு சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் உயிர்யில்லாத உடலாக கிடந்தான்...

எல்லா வேலைகளும் நடைபெற அவனது உடல் இறுதி பயணத்தை மேற்கொள்கிறது..

சில நாட்களுக்கு பிறகு
ருத்ர " இன்னும் எத்தனை நாள் தான்டா இப்படியே இருக்க போற "
தனது கைபேசியை பார்த்து கொண்டு இருந்தவன்

நந்தன் " ச்ச ப்ப என்ன பண்ண சொல்றிங்க "

ருத்ர " ம்ம் கிளம்பி ஆபிஸ் வானு சொல்றேன் "
இவர்களின் பேச்சை கேட்ட வெளியே வந்த பாரு

" என்னங்க என்னாச்சு "

ருத்ர " அத உன் புள்ளை கிட்டயே கேளு "

பாரு " ஏங்க இப்படி சொல்றிங்க "

ருத்ர " ஆபிஸ் வாடானு சொன்னேன் அதுக்கு இப்படி சலிச்சுகுறான் காசு சேக்கலனாலும் சேத்த காச காப்பாத்த தெரியனும் "

நந்தன் " பச் டாட் இப்ப என்ன ஆபிஸ் வரனும் அதான வரேன் விடுங்க "

பாரு " அதான் அவன் வரேனு சொல்லிட்டான் இல்ல நீங்க கிளம்புங்க நான் அவன அனுப்பி வைக்குறன் "

ருத்ர " நீ நல்ல நாள் அது இதுன்னு பாத்துட்டு இருக்காத அவன அனுப்பு "
என தனது வேலை முடிந்தது என வெளியே செல்ல

நந்தா நந்தா என்று தாய் அழைத்ததை காதில் வாங்காமல் வெளியே சென்றான் நந்தன்..

தந்தை சொல்படி ஆபிஸ் கிளம்பி செல்ல அவனது பிஏ வாக மீனா நியமிக்கபட அவனும் அது எதையும் பொருட்படுத்தாமல் எப்போதும் போல நேரத்தை கழித்து கொண்டு இருந்தான்

நண்பர்கள் நால்வரும் ஒரு நாள் முடிவு செய்து நந்தனின் வீட்டில் சந்தித்து கொள்ள முடிவு செய்தனர்....

ரிஷி " மச்சான் நம்ப மனோஜ் இப்ப நம்மகூட இல்லனுறத என்னால ஏத்துகவே முடியல டா "

சுகன் " டேய் நீ வேற சும்மா இரு டா நந்தா நீ நல்ல விசாரிச்சியா இது ஆக்ஸிடென்ட் தானா "

நந்தா " ம்ம் விசாரிக்காம இருப்பனா ஆக்ஸிடென்ட் தான் "

வினோத் " இல்ல மச்சான் என் உள் மனசு ஏதோ சொல்லுது "

சுகன் " ஏய் நீ சும்மா ஏதாச்சும் உளறாத அமைதியாக இரு எங்க டாடி நல்ல விசாரிச்சுடாரு இது ஆக்ஸிடென்ட் தான் "

வினோத் " யாரு உங்க டாடி தான அவரு காச வாங்கிட்டு யாரு பக்கம் வேணாலும் பேசுவாருனு எங்களுக்கு தெரியாத "

சுகன் " ஏய் என்னடா எங்க அப்பா பத்தி எங்கிட்டயே தப்பா பேசுற அவ்வளவு திமிரா "

வினோத் " ஏன் உங்க அப்பா தப்பே பண்ண மாட்டாருனு சொல்றியா "

சுகன் " எங்க அப்பா எனக்கு எதிரா எதுவும் பண்ண மாட்டாருனு சொல்றேன் "

வினோத் " நாளைக்கே நான் காசு கொடுத்த கூட உங்க அப்பா உன்னையே பிடிச்சு உள்ள போடுவாரு "

இதனை கேட்ட சுகன் " எனடா சொன்ன "
என எகிறி அவனது சட்டையை பிடிக்க

குடிபோதையில் ஏதோ பேசி கொள்கிறார்கள் என நினைத்த நந்தன் நிலைமை கை மீறி போவதை உணர்ந்து

இருவரையும் விளக்க
ஒருவரின் சட்டை ஒருவர் பிடித்து சண்டை போட தயாராக நின்றனர்..

வினோத் ஒருபடி மேலையே போய் சுகனை அடிக்க

சுகன் " என் மேலையே கை வைச்சுடல உன்ன என்ன பண்ணுறேன் பாருடா "

நந்தன் " டேய் அவன் ஏதோ விளையாட்டா பேசுனான் டா அது போய் பெருசு பண்ணிட்டு "

சுகன் " டேய் என் அப்பா பத்தி தப்பா பேசுனது உனக்கு விளையாட்டா போச்சா "

நந்தன் " டேய் நான் அப்படி சொல்லல டா ஆங்கிள் பத்தி எனக்கு தெரியாதா "

சுகன் " நல்ல தெரியுது டா நீ பேசுறத பாத்தே "
அவன் கோபமாக கிளம்பி செல்ல

நந்தா " டேய் என்னடா பண்ணுறிங்க மனோஜ் இறந்து ஒரு மாசம் கூட முழுசா ஆகல நீங்க சண்ட போட்டுட்டு இருக்கிங்க ச்ச "

ரிஷி " சரி விடு மச்சான் சுகன் கிட்ட காலையில் பேசுறேன் "

" அடேங்கப்பா நானே எதிர்பாக்கல உங்கள பிரிக்கறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சேன் இவ்வளவு தானா "
என நினைத்து கொண்டு அவர்களை பார்த்தபடி அந்த உருவம் நிற்க...

யாரோ வரும் சத்தம் கேட்ட நந்தன் அறையின் வெளியே பார்க்க அங்கு கமலா வந்து கொண்டு இருந்தார்..

நந்தன் " என்ன வேணும் "

கமலா " தம்பி அம்மா எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டாங்க "

நந்தன் " ம்ம் போங்க வரேன் "

நந்தன் " சரிடா வாங்க சாப்பிடலாம் அம்மா கூப்பிடுறாங்க "
என அனைவரும் செல்ல

பாரு " டேய் நந்தா என்னடா ஆச்சு சுகன் வேகமாக போயிட்டான் டா நான் கூப்பிட்டது கூட அவன் காதுல வாங்கல டா "

நந்தன் " மா அவனுக்கு முக்கியமான வேலை இருக்காம் அதான் நீங்க சாப்பாடு வைங்க "

" சரிப்பா "
என அவரும் கமலாவும் அனைவருக்கும் சாப்பாடு வைக்க அந்த இரவு கழிந்தது...

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 5

நாட்கள் கடக்க அதன்பிறகு வினோத் சுகன் இருவரும் சரியாக பேசி கொள்ளவில்லை..

ஒருவர் இருக்கும் இடத்தில் மற்றொரு இருக்கவில்லை இந்த விஷயத்தை முடிக்க நந்தன் ரிஷி இருவரும் திட்டம் ஒன்றை தீட்டி அதன்படி நால்வரும்
ஒரு இடத்தில் சந்தித்து கொள்ள முடிவு செய்து பிரபல ஹோட்டலுக்கு வர வைத்தனர்...

சில நாட்களுக்கு பிறகு நண்பர்கள் நால்வரும் சந்தித்து கொள்ள வேண்டா வெறுப்பாக அங்கு வந்தான் வினோத்

ரிஷி " என்ன மச்சான் ஏன்டா இப்படி மூஞ்சிய தூக்கி வைச்சு உட்கார்ந்து இருக்க ஏன்டா "
என தன் கையில் இருந்த சரக்கை வாயில் சரித்து கொண்டே கேட்டான்..

நந்தா " டேய் நீங்க இரண்டு பேரும் முகம் கொடுத்து கூட பேச மாட்டிரிங்க தான்டா உங்கள இங்க கூட்டிட்டு வந்ததே "

வினோத் " பின்ன அவன் கை நீட்டி அடிக்கும் போது நீ சும்மா தான இருந்த "

நந்தா " டேய் நீ தான்டா அவன முதல அடிச்ச அப்புறம் தான் அவன் உன்ன அடிச்சான் எதிர்பாக்காம நடந்தது அதுவும் இல்லாமா அவங்க அப்பா பத்தி அப்படி பேசுனதால தான அவன் அடிச்சான் அப்ப உன்மேல தான்டா தப்பு அவன் இங்க தான் வந்துட்டு இருக்கான் நீ யோசி "
வினோத் யோசிக்க

காரில் முழு சத்தத்தை வைத்து கொண்டு பாட்டு கேட்டபடி சுகன் வர அவனது ஃபோன் அழைக்க
அதனை பார்த்தவன் முகம் புன்னகையில் விரிய

" ம்ம் சொல்லு டார்லிங் "

" எங்க இருக்கிங்க "

" ஏய் அதான் சொன்னேன்ல பிரெண்ட் பாக்க போறேனு "

" சொன்னிங்க இல்ல சும்மா தான் கேட்டேன் "

" ஏன் நீ வரியா நாம ஹோட்டலுக்கு போகலாம் "

" வேணாம் வேணாம் நீங்க உங்க பிரெண்ட பாக்கவே போங்க ஆங் சரி என்ன ஹோட்டல் நேம் சொன்னிங்க மறந்துட்டேன் "

" நான் உன்கிட்ட சொல்லவே ‌
இல்லையே "

" அப்போ சொல்ல மாட்டிங்க அதானா "

" பிவிஸ் ஹோட்டல் போறேன் "

" ம்ம் ஓகே பாய் "
அதன்பிறகு அவன் ஹோட்டல் செல்ல காரை பார்க்கிங் செய்து விட்டு சாவியை கையால் சுற்றியபடி விசில் அடித்து கொண்டு வர யாரோ தன்னையே பார்பதை போன்ற பிரம்பை அவனுக்கு வர சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் இல்லாததை கண்டு நிம்மதி அடைத்தவன் லிப்டில் ஏறி எட்டாவது மாடிக்கு பொத்தானை அமுக்கினான்..

லிப்ட் இடையில் நான்காவது மாடியில் நிற்க கதவு திறக்கப்பட எதிரில் நவநாகரீக மங்கை ஒருத்தி சுகன் கண்ணில் விழுந்தான் ...

அவளது அழகை கண்ட சுகன் மயங்க அதனை தனக்கு சாதகமாக்கி கொண்ட அந்த பெண் அவனை பார்த்து இதழ் புன்னகை விரித்தாள்.

" அடடா என்ன அழகு வைச்சு செயலாம் போலயே செமயா இருக்காலே "

" ஆஆஆவவ்அஅச்ச் "
என அந்த பெண் கத்த

" என்னாச்சு மேடம் "

" கால்ல ஏதோ பூச்சி கடிச்சுடுச்சு போல "

" நான் வேணா பாக்கவா "
என அவளை கண்டு வழிந்தபடி கூற

" ச்சி நாட்டி சின்ன பூச்சி தான் நானே பாத்துகுறேன் "
என சிரித்தபடி பதில் தந்தாள்..

எட்டாவது மாடியில் நிற்க
" நீங்க எந்த ப்ளோர் சொல்லவே இல்லையே "

" நான் 12 வது ப்ளோர் "

" நான் வேணா வந்து விடவா "

" இப்ப வேணா நைட்டு 11 மணிக்கு வாங்க பாய் "
என மனதை மயக்கும் சிரிப்பை உதிர்த்து விட்டு மங்கை அவள் செல்ல அவளின் பேச்சில் மயங்கி போனான் மானிடன் அவன்...

அறைக்கு சந்தோஷமான மனநிலையில் வந்த சுகன் எதிரில் உள்ளவனை கண்டு முகம் சுருங்கி போனான்..

நந்தா " டேய் வாடா ஏன் லேட்டு "

சுகன் " கொஞ்சம் வேல மச்சி அதான் "

ரிஷி " டேய் இவன் வேற உனக்கு வேற தனியா சொல்லனும் டா முடிஞ்சது முடிஞ்சு போச்சு இனி பழசை மறப்போம் புதிதாக பிறப்போம் "
என தன் கையில் இருந்த கிளாசை தூக்கி காட்ட

வினோத் சுகன் அருகில் வந்த
" சாரி மச்சான் ஏதோ கடுப்புல உங்க அப்பா பத்தி பேசிட்டேன் சாரி டா "

" சரி விடுடா "
என இருவரும் அந்த விஷயத்தை விட்டு அவர்களுடன் இணைந்து மது அருந்த ஆரம்பித்தான்...

நந்தா வினோத் சரக்கு அடிக்க சுகன் மெதுவாக பால்கனி பக்கம் சென்று கையில் இருந்த சரக்கை பருகி கொண்டு இருந்தான்..

அவனை கண்ட ரிஷி அவனுடன் சேர்ந்து
ரிஷி " சூப்பர் மச்சான் எங்க உங்க இரண்டு பேரோட பிரச்சினை ரொம்ப இழுக்குமோனு நினைச்சேன் பரவால டா நீயாச்சு விட்டு கொடுத்தியே "

சுகன் " என்னது விட்டு கொடுத்தனா நானா இப்போதைக்கு அவன விட்டு இருக்கேன் அவ்வளவு தான் என் அப்பா பத்தி தப்பா சொல்லுவான் என்னையே கை நீட்டி அடிப்பான் இப்ப வந்து சாரி மச்சானு சொன்னா நானும் உடனே ஓகே சொல்லனுமா அதுக்கு இந்த நந்தா வேற உடந்தை பாத்துகுறேன் டா‌ அவன அல்ரெடி எங்க அடிக்கனும் முடிவு பண்ணி அடிச்சுட்டு தான் இருக்கேன் அது தெரியாமா பயபுள்ள ரொம்ப சந்தோஷமா இருக்கான் "

ரிஷி " டேய் என்னடா பண்ண லூசு மாதிரி ஏதாச்சும் பண்ணிடாத "
கண்களில் பீதியுடன் கேட்க..

சுகன் வினோதை கண்டு நக்கல் சிரிப்பு சிரிக்க

ரிஷி " மச்சான் சொல்லுடா இப்ப நீ சொல்லல இத பத்தி நான் நந்தா கிட்ட சொல்லுவேன் "
இம்முறை சற்று கடுப்பான சுகன்

" உன் வேலைய என்னவோ அத மட்டும் பாரு "

ரிஷி " டேய் பதறுது டா சொல்லு "

சுகன் " ப்ச்ச் இப்ப என்ன உனக்கு நான் என்ன பண்ணேனு சொல்லனும் அவ்வளவு தான அவன் ஆள நான் க்ரெட் பண்ணிட்டேன் போதுமா "

ரிஷி " என்னது ஆளா "
என சற்று யோசித்தவன்

" அவன் மாமா பொண்ணு ரீது வா டேய் அவன் சின்சியரா அந்த பொண்ண லவ் பண்ணுறான் டா நீ எதும் விளையாடாத "

சுகன் " பட் அந்த பொண்ணு அவனுக்கு சின்சியரா இல்லையே டா உனக்கு தெரியுமா மச்சான் ஒரே வாரத்துல அவள் க்ரெட் பண்ணி டேட்டிங்கே போயிட்டேன் இப்ப கூட வரும் போது அவகிட்ட தான் ஃபோன் பேசிட்டு வந்தேன்"
என சிரித்து கொண்டே கூற

அந்த நேரம் அவர்களின் முதுகில் சட்டென ஒரு கை பட இருவரும் அதிர்ந்தனர்..

மெதுவாக திரும்பி பார்க்க அவர்களை பார்த்தபடி நந்தன் நின்று கொண்டு இருந்தான்...

" என்னடா ரொம்ப நேரமா இரண்டு பேரும் கிசுகிசுனு பேசிட்டே இருக்கிங்க அப்படி என்னடா விஷயம் "

அவனது பேச்சில் அவன் ஒன்றும் காதில் வாங்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு சுகன் ரிஷி இருவரும் நிம்மதி அடைந்தனர்..

சுகன் " ஒன்னுமில்ல மச்சி சும்மா தான் "

நந்தா " சரி வா ஆரம்பிக்கலாம் "
என நால்வரும் அமர்ந்து போதை உண்டாக்க கூடிய அனைத்து மருந்துகளையும் அருந்தினர்..

இது இவர்களுக்கு வழக்கமான ஒன்று தான் மாதத்தில் அல்லது ஒரு சில நாட்களில் நண்பர்கள் இணைந்து அளவுக்கு அதிகமான போதைகளை எடுத்து கொண்டு மறுநாள் வீடு செல்வது வழக்கம்...

நேரம் ஆக நேரம் ஆக நந்தன் ஏதோ அளவுக்கு அதிகமான போதை ஏறி மயக்க நிலைக்கு தன்னை தள்ளுவது போல உணர்ந்தான். அப்படியே மயங்கினான்..

அடுத்து ரிஷி வினோத் மயங்க சுகன் மட்டும் அவனது போதை மருந்து கொஞ்சமாக எடுத்து கொண்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் மயங்குவது போல நடித்தான்..

இரவு பதினொரு மணி அளவில் சுகன் கண்களை திறந்து சுற்றி அனைவரையும் கண்டு மயக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டு அறை விட்டு வெளியே வந்து லிப்டில் நுழைந்து 11 மாடிக்கு பொத்தானை அழுத்தினான்...

" செம ஃபிகர் கண்ணுக்குள்ளயே நின்னாலே சுகன் இன்னைக்கு இருக்குடா உனக்கு வேட்டை "
லிஃப்ட் கதவு திறக்கப்பட வெளியே வந்தவன் காதில் சிறு மணிகளின் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க மாலையில் பார்த்த மங்கை மணிகளின் மீது நின்று அவனை கண்டு கண் அசைத்தாள்..

சிவப்பு நிற புடவையில் மாலையில் பார்த்ததை விட சற்று அதிகமான மேக் அப்பில் கண்டவர் மயங்கும் கண்களுடன் அவனை கண்டு கண் அசைத்தாள்...

" ஏய் இங்க என்ன பண்ணுற உன் ரூம் அங்க தான் இருக்கு "

" என்ன பண்ணுறது நானே எதிர் பாக்காம என்னோட பாய் ப்ரெண்ட் வந்துட்டான் உங்கள ஏமாத்த மனசு வரல அதான் நானே வந்துட்டேன் "
என குரலை மென்மைபடுத்தி கூற அதில் மயங்கியவன்

அவளை பிடிக்க கைகளை நீட்டினான்.
ஆனால் அவள் அவன் கைகளுக்கு சிக்காமல் நாக்கை துருத்தி காட்டிவிட்டு மாடிகளில் தாவி ஏறி ஓடினாள்..

" ஆகா புள்ளி மான் கணக்கா ஓடிறாளே பரவால்ல இதுவும் புதுசா தான் இருக்கு "
என எண்ணகயவன் அவள் பின்னே ஓட

ஆள் அரவமற்ற மொட்டை மாடியை அடைந்தான்.
" எங்க போனா இவ "
என நினைத்தபடி

" ஏய் பேபி எங்க இருக்க பேபி பேப் "
என அவளை அழைத்தபடியே அந்த இடம் முழுவதையும் சுற்றி வந்தான்..

இறுதியில் முதுகை காட்டியபடி திரும்பி நின்றவளை கண்டு அவன் மெதுவாக அவளிடம் சென்று பின்னிருந்தை அவளை அணைத்தான்..

ஆனால் அந்த அணைப்பில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவன் அவளின் முன்னே செல்ல அவளின் முக தோற்றம் முற்றிலும் மாறி போயிருந்தது..

அதிர்ந்த சுகன்
" நீ நீ .....எப்படி நீ தான் செத்து போயிட்டே "
என அவன் வாய் தந்திஅடிக்க

" ஆமாம் டா நான் தான் நானே தான் உன்ன தேடி திரும்ப வந்துருக்கேன் "
என பேசியபடி அவன் கழுத்தை பிடிக்க

" பிளிஸ் பிளிஸ் என்ன விட்டுட்டு விடு பிளிஸ் "
என கைகளை கூப்பி படி கூற

" நானும் இப்படி தான அன்னைக்கு கெஞ்சுனேன் நீங்க யாரும் எனக்கு பாவம் பாக்கலயே டா "

" வேணாம் வேணாம் "

" நான் அனுபவிச்ச வலில பாதியாவது நீ அனுபவிக்க வேணாம் அனுபவி "
என‌ இவனை அப்படியே மாடியில் இருந்து தள்ளி விட தலை சிதறி மூக்கு வாய் தலை இரத்தம் பிறிட அப்படியே அவனது உயிர் பிரிந்தது....

இதனை கண்ட அவளது கண்ணில் சந்தோஷ ரேகை பிறிட அப்போது ஆள் வரும் ஓசை கேட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தாள்...

கண்ணில் கோபம் அனல் பறக்க
" டேய் சுகன் எங்கடா இருக்க டேய் "
என கத்தியபடி அந்த இடத்தை சுற்றி வந்தான்..

ஒரு ஓரத்தில் சுகன் நின்றதர்கான காலடி தெரிய அங்கு வந்தவன் சுற்றி சுற்றி பார்த்து இறுதியில் கீழே பார்க்க அங்கு சுகன் இரத்த வெள்ளத்தில் உயிர் பிரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்..

இதனை கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் வினோத்....

தொடரும்.
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 6

சுகன் கீழே இறந்து கிடந்ததை கண்ட வினோத் நிலை தடுமாறி அப்படியே கீழே சரிய நடப்பது புரியாமல் அவன் இங்கும் அங்கும் அலைந்தான்.....


" சுகன் சுகன் எப்படி இதுலா இந்த நேரத்துல நான் இங்க இருக்கறத பார்த்தா என்ன தானா எல்லாரும் கொலை பண்ணேனு நினைப்பாங்க நோ நோ முடியாது நான் இவங்க கிட்ட சிக்க கூடாது நான் உடனே தப்பிக்கனும் "
என எண்ணியவாறே வேக வேகமாக படி இறங்கி ஓடினான்..

நந்தன் ரிஷி தங்கிருந்த அறைக்கு சென்று தனக்கும் இதற்கும் இதில் சம்பந்தம் இல்லை என்பது போல அறையின் உள்ளே கதவை திறந்து நுழைய ரிஷி பாத்ரூம்‌ கதவை திறந்து வெளியே வந்தான்...

ரிஷி " டேய் மாப்பிள எங்கடா போன இந்த நேரத்துல அந்த சுகன் பையனையும் காணும் டா "

வினோத் " நான் நான் எங்க மச்சி போக போறேன் இங்க தான் போன் பேச போனேன் "

ரிஷி " சுகன பாத்தியா மச்சான் "

வினோத் " இல்ல இல்ல இல்லடா நான் யாரையும் பாக்கல "
என அவன் திணறியபடி கூற

ரிஷி " அதுக்கு ஏன் டா இப்படி சொல்லுற வாயல உளறுர "

வினோத் " அது அது மச்சான் கொஞ்சம் போதை அதிகமா ஆகிடுச்சு அதான் "

ரிஷி " சரி எங்கயாச்சும் போயிருப்பான் வந்துடுவான் நான் படுக்குறேன் "
என்றவாறு அவன் மெத்தையில் படுக்க

மறுபக்கம் படுத்த வினோத்திற்கு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்..
" இது எப்படி நடந்துச்சு அவன் மேல் நான் கோபபட்டது உண்மை தான் அவன் கூட சண்டை போட தான் வெளியே போனேன் ஆனா அவன் எப்படி கீழ விழுந்தான் யாரு அவன கொல பண்ணி இருப்பாங்க "

நடந்த நிகழ்வுகளை அவனது மூளை ஆராய தொடங்கியது...

சுகன் அறையை விட்டு சென்று சில நிமிடங்களில் வினோத்திற்கு ஃபோன் கால் வந்தது.
முதலில் தவிர்த்தவன் திரும்ப திரும்ப அழைப்பு வர தூக்கத்தை விட்டு எழுந்து போனை காதில் வைத்து
" ஹலோ "
" ஹலோ "
" ஹலோ யாரது நடு ராத்திரியில் கால் பண்ணி அமைதியாக இருக்கிங்க யாரு நீங்க "

" என்ன தம்பி உனக்கு ஒரு விஷயம் சொல்லலானு கால் பண்ணா நீங்க இப்படி கோப படுறிங்க "
என மறுபக்கத்தில் இருந்து கரகரப்பான ஆண் குரல் கேட்க

வினோத் " ஏய் லூசா நீ விஷயம் சொலாறதுக்கு இதுவா நேரம் எதுவா இருந்தாலும் காலையில சொல்லு இப்ப போன வை "

" தம்பி தம்பி வைச்சுடாதிங்க இது உங்க வாழ்கை பத்தின முக்கியமான விஷயம்"

வினோத் " இங்க பாரு சொல்ல வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்லு எனக்கு தூக்கம் வருது நான் தூங்கனும் "

மறுபக்கத்தில் இருந்து பயங்கரமான சிரிப்பு சத்தம் கேட்க இதனை கேட்டு சற்று கடுப்பான வினோத்
" ஏய் என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது ஒழுங்கா போன வை இல்ல என்ன நடக்கும்னே தெரியாது "

" இல்ல உங்க வாழ்கை பத்தி சொல்ல போறேன் அத கேட்ட உங்களுக்கு எப்படி தூக்கம் வரும் அத நினைச்சு சிரிப்பு வந்துட்டுச்சு "

வினோத் " ஏய் இப்ப ஒழுங்கு மரியாதையா சொல்ல போறியா இல்லையா "

" சரி சரி கோப படாதிங்க தம்பி சொல்றேன் ஆமா உங்க பிரெண்டு சுகனுக்கும் உங்களுக்கும் சண்டையாமே அப்படியா "

வினோத் " இது உனக்கு தேவையில்லாத விஷயம் நீ என்ன சொல் வரியோ அத மட்டும் சொல்லு "

" ம்ம் உங்க நட்பு மேல அவ்வளவு நம்பிக்கை ஆனா அவன் அந்த நட்புக்கு உண்மையா இல்லையே தம்பி "

வினோத் " என்ன உளருற அவனுக்கு என் மேல சின்ன கோபம் அவ்வளவு தான் எனக்கு எதிராலா அவன் எதும் பண்ண மாட்டான் "

" பண்ணிடானே உங்க கூடவே இருந்து உங்களுக்கே துரோகம் பண்ணிடானே "

வினோத் மனது ஏதோ ஒன்றை உரைக்க அவனை பேச விட்டு அமைதி காத்தான்..

" உங்க காதல் இப்போ அவன் காதலா ஆக்கிட்டான் இருங்க இருங்க எதுவும் பேசாதிங்க அப்படியே அவனோட ஃபோன் எடுத்து அதுல போட்டோ ஓபன் பண்ணி பாருங்க "

வினோத்திற்கு மனதின் ஒரு ஓரத்தில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட சுகனது போனை தேடினான்..

அவனது கெட்ட நேரமா இல்லை சுகன் கெட்ட நேரமா என்று தெரியவில்லை ஃபோன் உடனே அவனதீ கையில் அகபட‌ அதனை ஓபன் செய்து கேலரியை பார்த்தான்..

அதில் ரீது என்கிற பெயரில் இருந்த கேலரியை ஓபன் செய்ய அதில் சுகன் மற்றும் ரீது எடுத்து கொண்ட போட்டோக்கள் ஒன்று ஒன்றாக வர தொடங்கியது...

போக போக ரீதுவுடன் நெருக்மாக இருந்த புகைபடங்கள்‌ வர அதனை கண்டவன் முகம் கோபத்தில் வெடித்தது..

வினோத் " ஏய் யாரு உனக்கு எப்படி இதுலா தெரியும் நீ யாருனு சொலலு "

" நான் யாரா இருந்தா உனக்கு என்ன போ போய் உனக்கு துரோகம் பண்ணவன கேளு ஓடு ஓடு "
என எதிர்முனையில் ஃபோன் கட் ஆக

வினோத் அறை முழுவதும் சுகனை தேடினான் அவன் அகப்படாமல் போக வெளியே வந்தவன் சுற்றி சுற்றி பார்த்து ஒரு ஒரு புளூர் ஆக அவனை தேடி இறுதியில் மாடிக்கு சென்றான்....

அங்கு தான் அவன் சுகன் இறந்து கிடந்ததை கண்டு பழி தன் மேல் திரும்பாமல் இருக்க அறைக்கு வந்து படுத்து கொண்டான்..

ஆனால் அவன் அறியவில்லை இதுவே அவனுக்கு எதிராக திரும்ப போகிறது என.....

அதனை பற்றி நினைவுகளில் இருந்தவன் தன்னை அறியாமல் தூங்க சில மணி நேரத்திற்கு பிறகு போலிஸ் ஆம்புலன்ஸ் என மாறி மாறி வரும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்து எழுந்தான் வினோத்..

அவன் எழுந்து சில மணி துளிகளிலே அவனது அறை கதவு வேகமாக தட்டபட மூவரும் எழுந்து அறை கதவை திறந்து பார்த்தனர்..

போலிஸ் உடையில் நின்ற அதிகாரியை பார்த்து நந்தன் புரியாமல்
" என்ன சார் என்ன வேணும் "

போலிஸ் " நீங்க தான் நந்தனா "

நந்தன் " ஆமாம் "

போலிஸ் "நீங்க எல்லாரும் கீழ வாங்க விசாரிக்கனும் "

நந்தன் " என்னாச்சு எதுக்கு எங்கள விசாரிக்கனும் "

போலிஸ் " நீங்க உடனே வாங்க இன்ஸ்பெக்டர் உங்கள கூப்பிடுறாரு "

வினோத் எச்சில் விழுங்கிய படி நிற்க நந்தன் ரிஷி இருவரும் புரியாமல் பார்த்தனர்...

போலிஸ் " அட வாங்க பா சீக்கிரம் "
என்றபடி முன்னால் நடக்க மூவரும் பின்னால் நடந்தனர்..

போலிஸ் " சார் இவங்க தான் அந்த பசங்க "

இன்ஸ்பெக்டர் " நந்தன் பேருல தான் ரூம் புக் ஆகிருக்கு நீ தான் நந்தனா"
என நந்தனை கை காட்டி கேட்க
அவன் ஆம் என தலை ஆட்டினான்..

இன்ஸ்பெக்டர் " எத்தன பேர் சேர்ந்து ரூம்ல இருந்திங்க "

நந்தன் " நாங்க நால் பேர் சார் ஆனா எங்க பிரெண்ட் சுகன் காணும் எங்க போனானு தெரியல "

இன்ஸ்பெக்டர் " இதுவானு பாருங்க "
என கை காட்ட

அங்கிருந்த அதிகாரி துணியை விளக்கி காட்ட அங்கு சுகனின் உடலை கண்டு மூவரும் அதிர்ந்தனர்.

முகம் முழுவதும் இரத்தம் கறையுடன் கண்கள் மேல் எழும்பி கிடந்த அவனை கண்ட மூவருக்கும் கண்கள் கலங்க

" சுகா சுகா "
என அவனை நோக்கி ஓடினர்..

இன்ஸ்பெக்டர் " சார் சார் பாடிய டச் பண்ணாதிங்க பிளிஸ் பார்மாலிடிஸ் முடிக்கனும் "

நந்தன் " எப்படி சார் நைட்டு கூட எங்க கூட தான் இருந்தான் "

இன்ஸ்பெக்டர் " அத நாங்க உங்ககிட்ட கேட்கனும் இவருக்கு என்னாச்சு "

நந்தன் " நாலு பேரும் ஒன்னா தான் இருந்தோம் அப்புறம் போதையல‌ நாங்க தூங்கிட்டோம் இவன் இவன் தெரியல சார் "
என பொங்கி வந்த அழுகை அடக்கி கொண்டு கூற

இன்ஸ்பெக்டர் " சரி நாங்க விசாரிக்குறோம் நீங்க இந்த பையன் வீட்டுல இன்பார்ம் பண்ணிடுங்க "

ரிஷி " சார் இவன் கமிஷ்னர் வேலன் ஆங்கிள் சன் சார் "

இன்ஸ்பெக்டர் " வாட் ஓகே நான் பாத்துக்குறேன் "

அடுத்த அடுத்த வேலைகள் துரிதமாக நடைபெற ஐந்து பேர் கொண்ட நண்பர்கள் இன்று மூவராக இருக்க கலங்கி போயினர்.....

தொடரும்..
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 7


சுகன் இறந்து செய்தி அவன் குடும்பத்தை மட்டும் இல்லாமல் ஐவரின் குடும்பத்தையும் புரட்டி போட்டது....

சுகன் உடல் அவனது வீட்டிற்கு கொண்டு வரபட அதனை கண்டு அவனது தாய் தந்தை என மொத்த குடும்பமும் கூறியது...

வேலன் தான் பெற்ற ஒரே மகனை பறிகொடுத்து கலங்கி நிற்க அவருக்கு ஆறுதல் சொல்ல முயன்ற நந்தனின் சட்டையை அத்துனை பேர் முன்னிலையில் பற்றினார்..

வேலன் " டேய் என்னடா பண்ணிக்க என் புள்ளைய உங்க கூட தானடா இருந்தான்"

நந்தன் " அங்கிள் சுகன் இறந்தது எங்களுக்கும் வருத்தம் தான் ஆனா இப்படி நடக்கனும் நாங்களே எதிர் பார்க்கல "

வேலன் நந்தனின் சட்டையை பிடித்து கேட்டதை கண்ட ருத்ர கோபமாக
" என்ன பண்ணுறிங்க கைய எடுங்க உங்களுக்கு தெரியாத அவங்க எத்தன வருஷமா நண்பர்களா இருக்காங்க நீங்களே இப்படி பண்ணா "

நந்தன் " டாட் விடுங்க சுகன் இறந்ததால அங்கிள் இப்படி நடந்துக்குறாங்க எனக்கு அது புரியுது நீங்க எதும் அவர சொல்லாதிங்க வாங்க "
என தனது தந்தையை அழைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர

இதனை எதையும் கருத்தில் கொள்ளாமல் ஏதோ ஒரு யோசனையில் இருந்த வினோத்தை நந்தன் கண்டு விட்டான்..

நந்தன் " டேய் ஏன்டா இப்படி இருக்க வா கிளம்பலாம் "

ரிஷி " இரு மச்சி நானும் வினோத் தும் போய் சுகன் அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு வரோம் "

வினோத் " நா நா நா ஐ எதுக்கு அதலா வேணாம் டா "
என பட்டென பதில் வர

நந்தன் ரிஷி இருவரும் அவனை வித்தியாசமாக பார்த்தனர்..

வினோத் " இல்ல இல்ல மச்சான் இறந்து போனவங்க வீட்டுல சொல்லிட்டு போக கூடாதுனு சொல்லுவாங்க அதான் "

நந்தன் " ஓஓஓ அப்படியா சரிடா கிளம்புலாம் "

சுகன் இறந்து அவனுக்கு காரியம் செய்து விட்டு வந்த போதும் வேலனின் மனது ஆறவில்லை..
ஒரு மகனின் சாவிற்கு காரணம் ஒரு வழியை கண்டு பிடித்தார்..

மூன்று நாட்களுக்கு பிறகு

" வணக்கம் சார் நான் தினேஷ் "
என்றவாறு வந்து நின்றவனை கண்டு புரியாத பார்வை பார்த்தார் வேலன்..

தினேஷ் " சார் நான் டிடெக்டிவ் உங்க மகன் இறந்ததுக்கு காரணம் கண்டுபிடிக்க சொல்லிருந்திங்களே "

வேலன் " ஓஓ சாரி சாரி வாங்க மிஸ்டர் ...."

தினேஷ் " தினேஷ் சார் "

வேலன் " ஆங் தினேஷ் சாரி வேற ஒரு நியாபகத்துல இருந்ததால‌ கவனிக்கல வாங்க "

தினேஷ் " சொல்லுங்க சார் நான் என்ன பண்ணனும்"

வேலன் " என் பையன் பேரு சுகன் படிச்சுட்டு சும்மா தான் இருக்கான் பிரெண்ட் கூட ரெண்டு நாள் முன்னாடி ஹோட்டல் போனா அங்க தான் மொட்டை மாடியில இருந்து விழுந்து இறந்துட்டான் எப்படி இறந்தான் இது கொலையா தற்கொலை யா என்னனு எனக்கு தெரிஞ்சு ஆகனும் அதுக்கு உங்க உதவி வேணும் "

தினேஷ் " ஓகே சார் நான் பாத்துகுறேன் உன் பையன் இறந்ததுக்கு காரணம் கண்டுபிடிக்க நீங்களும் எனக்கு உதவனும் "

வேலன் " சொல்லுங்க என்ன பண்ணணும் "

தினேஷ் " உங்க பையன் ஏன் அன்னைக்கு ஹோட்டல தங்க போனாறு "

வேலன் " இது எப்பவும் நடக்குறது தான் என்னைகாச்சும் பசங்க ஒன்னா சேர்ந்து இது மாதிரி ஹோட்டல தங்குவாங்க "

தினேஷ் " யார் அந்த பசங்க அவங்கள நான் பாக்கனும் வர சொல்ல முடியுமா "

வேலன் " கண்டிப்பா இப்பவே வர சொல்றேன் "

தினேஷ் " இப்ப வேணா‌ நாளைக்கு காலையில பத்து மணிக்கு என் ஆபிஸ் வர சொல்லுங்க "

வேலன் " ஓகே கண்டிப்பா சொல்றேன் தேங்க் யூ "

தினேஷ் " நான் வரேன் சார் பாய் "
என்று தினேஷ் அந்த இடத்தை விட்டு நகர வேலன் நந்தன் மற்றும் அவன் நண்பர்களிடம் விபரத்தை கூறி அவர்களை சென்று தினேஷை பார்க்க சொன்னார்...

ரிஷி " யாருடா "

நந்தன் " சுகன் அப்பா டா ஏதோ டிடெக்டிவ் மூலமா சுகன் இறந்த சேதிய விசாரிக்க போறாங்களா அதுக்காக நம்பல போய் பாக்க சொன்னாரு "

ரிஷி " என்ன மச்சா இதலாம் நம்ப தான் சுகன் பிரெண்ட்ஸ் அவன் இல்லாதது நமக்கும் தான் கஷ்டமா இருக்கு அதுக்காக நம்பலயே சந்தேகம் பட்டா எப்படி டா "

நந்தன் " டேய் பொறு டா அவங்க சந்தேகத்த நம்ப போக்கிட்டா எந்த பிரச்சனையும் இல்ல அது மட்டும் இல்ல நமக்கும் சுகன் எப்படி இறந்தானு தெரியனும் அதுக்கு தான் சொலாறேன் நாளைக்கு போகலாம் என்னடா வினோத் நீ என்ன சொல்ற "

வினோத் " ஆங் சரி மச்சான் ஒன்னும் பிரச்சினை இல்ல நாளைக்கு போகலாம் "

மறுநாள் காலை நந்தன் ரிஷி வினோத் மூவரும் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டு இருக்க தனது மற்றொரு பெண் நண்பருடன் அந்த இடத்திற்கு வந்தார் தினேஷ்
" ஹாய் கைஸ் நான் தினேஷ் இவங்க என்னோட அசிஸ்டென்ட் திவ்யா "

நந்தன் " ஹாய் சொல்லுங்க என்ன கேட்கனும் உங்களுக்கு "

தினேஷ் மூவரையும் உற்று நோக்கினான்...

தினேஷ் " பெருசா ஒன்னும் இல்ல சுகன் டெத் சம்பந்தமா சில கேள்விகள் அவ்வளவுதான் "

ரிஷி அலட்சிய புன்னகையுடன்
" அததான் போலிஸ் கண்டுபிடிச்சுபாங்க அப்புறம் எதுக்கு நீங்க கேள்விலா கேட்டுட்டு "

அவனை சற்று நந்தன் முறைக்க தனது வாயை மூடி கொண்டான் ரிஷி..

தினேஷ் " க்ரெட் தான் மிஸ்டர்..."

ரிஷி " ரிஷி "

தினேஷ் " ரிஷி பட் அத கண்டுபிடிக்க சொன்னதே ஒரு போலிஸ் தான் "

நந்தன் " உங்களுக்கு என்ன கேள்வி வேணுமோ கேளுங்க நாங்க பதில் சொல்றோம் அண்ட் எங்களுக்கும் சுகன் டெத் எப்படினு தெரியும் "

தினேஷ் " குட் நீங்க எல்லாரும் எத்தன வருஷமா பிரெண்டா இருக்கிங்க "

நந்தன் " நாங்க ஸ்குல் காலேஜ் எல்லாம் ஒன்னா தான் படிச்சோம் "

தினேஷ் " சுகன் எப்படி இறந்தானு உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா "

ரிஷி " அத கண்டு பிடிக்க தான நீங்க இருக்கிங்க "

திரும்பவும் அவனை முறைத்த நந்தன்
" இல்ல சார் நல்லா தான் இருந்தான் எப்பவும் போல தான் பேசினான் இதலாம் எப்படி நடந்துச்சுனு ஒன்னுமே புரியல "

தினேஷ் " நீங்க எல்லாரும் சேர்ந்து அந்த ஹோட்டல் ரூம்ல என்ன பண்ணிங்க "

ரிஷி " என்ன சார் கேள்வி இது சரக்கு அடிக்க போனோம் குடிச்சு மட்டை ஆகிட்டோம் என்ன நடந்துச்சுனு தெரியல "

தினேஷ் " அப்போ சுகன் ரூம விட்டு வெளியே போனத யாருமே பாக்கல அப்படி தான "

ரிஷி " ஆமாம் அதான் நாங்க போதையில கவனிக்கல "

தினேஷ் " நீங்க மட்டும் ஏன் இவ்வளவு அமைதியா இருக்கிங்க "
என வினோத்தை பார்த்து கேட்க

வினோத் " அப்படிலா இல்ல இவங்க பதில் சொல்றாங்கனு தான் "

தினேஷ் " ஓகே கையஸ் திரும்ப ஏதாவது டீடெயில்ஸ் வேணுணா கூப்பிட்டுறன் இப்ப நீங்க போலாம் "

மூவரும் கிளம்ப தினேஷ் அருகில் வந்த திவ்யா
" பாஸ் என்ன இவ்வளவு தான் கேள்வியா இன்னும் நிறைய கேள்வி கேட்டு இருந்த இன்னும் டீடெயில்ஸ் கிடைச்சு இருக்கும்ல "

தினேஷ் " இல்ல இவங்கள விசாரிக்க கூப்பிடல அவங்க முகத்த ஆராய தான் கூப்பிட்டேன் நீ அவங்கள நோட் பண்ணியா இந்த நந்தன் ரொம்ப கேஸ்வலா இருக்கான் இந்த ரிஷி ரொம்ப திமுரா இருக்கான் ஆனா வினோத் எதையும் முகத்துல காட்டல "

திவ்யா " ம்ம் ஆமா எனக்கு தெரிஞ்சு இந்த மூன்னு நேருலே அவன் தான் கொஞ்சம் நல்லவன் போல "

தினேஷ் " இல்ல திவி நம்ப முகத்துலேந்து எதையுமே இவங்களுக்கு காட்ட கூடாதுனு அந்த வினோத் நினைச்சு தான் அப்படி உட்கார்ந்து இருக்கான் அதான் எனக்கு சந்தேகமே "

திவ்யா " ம்ம் ஓஓஓ இருக்கலாம் சரி நெக்ஸ்ட் என்ன "

தினேஷ் " சுகன் வீட்டுக்கே போய் திரும்ப விசாரிக்கலாம் "

இருவரும் கிளம்பி வெளியே வர சுகனின் தந்தைக்கு கால் செய்து தாங்கள் வர போகும் விஷயத்தை கூறினான்...

தொடரும்.....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி


வினோத் மீது இருந்த சந்தேகம் தினேஷ்ற்கு வலுக்க வேலனின் வீட்டிற்கு சென்றார்..

வேலன் " வாங்க தினேஷ் சுகன் மரணத்துல ஏதாவது தடயம் கிடைச்சுதா "

தினேஷ் " இப்ப தானா சார் விசாரணைய ஆரமிச்சுறுக்கேன் அதுக்குள்ள எப்படி "

வேலன் " சரி சொல்லுங்க நான் என்ன பண்ணனும் "

தினேஷ் " நான் விசாரிச்ச வரைக்கும் சுகன் பிரெண்ட்ஸ் கூட எந்த சண்டையும் இல்ல அது தொழில் ரீதியா ஏதாவது பிரச்சினை உங்களுக்கு தெரிஞ்ச்சு "

வேலன் " எனக்கு தனிப்பட்ட விதத்துல போலிஸ் டிபார்ட்மெண்ட்ல நிறைய பிரச்சினை ‌இருக்கு ஆனா என் குடும்பத்த இது எதுலயும் நான் சம்மந்தபடுத்தினதே இல்ல "

தினேஷ் " வேற யாராவது குடும்பத்துல பிரச்சினை இல்ல நீங்க யாராவது அவன திட்டி அப்படி "

வேலன் " சுகன் ரொம்ப விளையாட்டு பையன் தான் எங்களுக்கு இருக்குறது ஓரே பையன் அதுனால அவன் எது கேட்டாலும் நாங்க உடனே செஞ்சுடுவோம் "

தினேஷ் " சார் உங்க வைப் கூப்பிட்டிங்கனா அவங்களையும் விசாரிச்சுடுவேன் "

வேலன் " இல்ல தினேஷ் அவங்க இப்ப பேசுற நிலைமையில இல்ல ஒரே பையன பறிகொடுத்த துக்கத்துல இருக்காங்க பிளிஸ் எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளுங்க "

தினேஷ் " ஓகே சார் எனக்கு புரியுது சரி சார் நான் கிளம்புறேன் ஏதாவது வேணுணா உங்கள கான்டெக் பண்ணுறேன் "

வேலன் " ஒரு நிமிஷம் தினேஷ் கொஞ்சம் நாளுக்கு முன்னாடி அவன் பிரெண்ட் கூட சண்டைனு சொன்னான் ஆனா அதுக்கு அப்புறம் அது பத்தி அவன் பேசல "

தினேஷ் " பிரெண்டுனா நந்தனா "

வேலன் " இல்ல இல்ல நந்தன் கூட அவனுக்கு எப்பவும் எந்த பிரச்சனையும் இருந்ததில்ல இது வினோத் கூட சண்ட "

தினேஷ் " என்ன சண்ட எதாவது தெரியுமா "

வேலன் " முழுசா விபரம் தெரியல அவன் இவன கை நீட்டி அடிச்சதா சொன்னான் ரொம்ப கோபமா இருந்ததால நான் எதும் கேட்டுக்கல "

சற்று சிந்தித்தவன்
வேலன் " ஓகே சார் நான் கிளம்புறேன் "
எனும் போதே அவனது ஃபோன் அடிக்க

தினேஷ் " சொல்லு திவி "

திவ்யா " தினேஷ் வினோத் தான் சுகன் கொலைக்கு காரணம் எல்லாம் விசாரிச்சுடேன் நீங்க உடனே நம்ப ஆபிஸ் வாங்க "

தினேஷ் " இப்ப நீ எங்க இருக்க "

திவ்யா " சுகன் தங்கி இருந்த ஹோட்டல நல்லா விசாரிச்சுடேன் நீ வாங்க நேர்ல பேசலாம் "
என்று போனை கட் செய்ய அவனது பேச்சில் இருந்த பதற்றம் வேலனையும் தொற்று கொள்ள

வேலன் " என்னாச்சு தினேஷ் ஏதாவது "
என தயங்கியபடி கேட்க

தினேஷ் " சார் நான் உடனே போகனும் முக்கியமான சாட்சி கிடைச்சு இருக்கு நான் வரேன் "
என்று செல்ல இருந்தவரை தடுத்த

வேலன் " நானும் வரேன் "

தினேஷ் " இல்ல சார் எதுவா இருந்தாலும் நான் முதல விசாரிக்குறேன் அதுக்கு அப்புறம் நீங்க அத பாக்கலாம் "

வேலன் " இல்ல தினேஷ் நான் ஒரு போலிஸ் ஆபிஸர் உணர்ச்சி வசபட மாட்டேன் பொறுமையா இருப்பேன் வாங்க போகலாம் "
என அவர் வாய் தான் கூறியதே ஓழிய தனது மகனின் சாவில் சிறு சந்தேகம் என்றாலும் அதற்கு காரணம் ஆனவனின் உயிரை குடிக்கும் அளவிற்கு அவருக்குள் கோபம் இருந்தது..

அவரின் பேச்சினை கேட்டு அவரையும் தன்னுடன் அழைத்து கொண்டு அவர்களது ஆபிஸ் சென்றார்..

அரை மணி நேரத்தில் அவர்களது ஆபிஸை அடைந்தவன் அதே வேகத்துடன் உள்ளே சென்றனர் இருவரும்...

தினேஷ் " சொல்லு திவி என்னாச்சு "
என பதட்டத்துடன் கேட்வரின் பின்னால் இருந்த வேலனை கண்டு தினேஷ் யின் முகம் காண அவன் கண்ணால் சொல்லு என்பது போல சைகை தர

திவ்யா " நீங்க சொன்னது க்ரைட் தான் வினோத் தான் இந்த கொலையை பண்ணது "

அவள் கூறியதை கேட்டு அதிர்ந்த இருவரும் அவளை நோக்க...

தொடரும்..


வணக்கம் நட்புகளே

எனக்கு கதை எழுதவே ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த கதைக்கு இதுவரை சரியான விமர்சனங்கள் வரவேயில்லை...
தயவு செய்து படிப்பவர்கள் கதைக்கு சரியான கருத்துக்களை தாருங்கள் அது நிறை குறை இருப்பினும் பரவாயில்லை...
தொடர் இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்....
( ஆரம்பம் முதல் கருத்து கூறி ஊக்குவித்தவர்களுக்கு நன்றி )

நன்றியுடன்
சிந்தியன்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 9

திவ்யா வினோத் தான் குற்றவாளி எனபதை கூற அதனை கேட்ட இருவரும் அதிர்ந்தனர்..

தினேஷ் " என்ன சொல்ற திவி "

திவ்யா " ஆமாம் நான் சுகன் தங்கி இருந்த ஹோட்டல் போய் விசாரிச்சேன் அப்போ நைட்டு ஏன் சுகன் மாடிக்கு போனானு தெரியல ஆனா வினோத் சரியாக 2 மணிக்கு மாடிக்கு போயிருக்கான் "

வேலன் " அது எப்படி உனக்கு தெரியும் அந்த ஹோட்டல் தான் கஸ்டமர் ப்ரைவேஷிக்காக கேமரா கூட இல்லனு சொன்னாங்களே அப்புறம் எப்படி டைம் கூட க்ரைட்டா சொல்லற "
வேலன் கூறியதை கேட்டு உதடு ஓரம் சிரிப்பை சிந்தியவள்....

திவ்யா " அதான் சார் விதி தான் மாடிக்கு போனது யாருக்கும் தெரியாதுனு நினைச்சு இருக்க அந்த வழியா போன வைட்டர் வினோத பாத்துருக்காங்கா "

ஏதோ கேட்க நினைத்த தினேஷை கை நீட்டி தடுத்தவள்
" ஏனா அந்த நேரத்துல 12 த் பிளோர் கஸ்டமர் ஒருந்தங்க குழந்தைக்கு பால் கேட்டதால அது கொடுக்க போன வைட்டர் கண்ணுல மொட்டை மாடிலேந்து இறங்கி வந்த வினோத் கண்ணுல பட்டுருங்காங்க பட் அது சும்மானு அவரு நினைச்சு
இருக்காரு "

வேலன் " இத ஏன் நாங்க விசாரிக்கும் போது அவரு சொல்லல "

திவ்யா " ஏனா நீங்க உங்க போலிஸ் எல்லாரும் அவங்கிட்ட ரொம்ப ஹார்ஸா விசாரிச்சு இருங்கிங்க அதுக்கு பயந்த அந்த வைட்டர் நமக்கு எதுக்கு வம்புனு அமைதியா இருந்தார் ஆனா நான் அவங்கிட்ட இதனால எந்த பிரச்சனையும் வராதுனு நம்பிக்கை கொடுத்தால என்கிட்ட தைரியமா சொன்னாரு "

இதனை கேட்டு யோசனையில் ஆழ்ந்த தினேஷ் திவ்யாவை மெச்சும் பார்வை பார்த்துவிட்டு வேலனிடம்
" சார் வினோத் மாடிலேந்து வந்தத தான் வைட்டர் சொன்னாரு ஆனா அவரு தான் கொல பண்ணாருனு எந்த சாட்சியும் இல்ல "

வேலன் " அது எப்படி 2 மணிக்கு கீழ் இறங்கி வந்தத வைட்டர் பாத்துருக்காங்க சுகன் இறந்தது எல்லாருக்கும் 4 மணிக்கு தான் தெரியும் சோ வினோத் தான் கொலகாரன் "

தினேஷ் " ஆனா அதுக்கு எந்த சாட்சியும் இல்லயே எதுவும் தெரியாம நாம முடிவு எடுக்க கூடாது "

வேலன் " அப்போ ஏன் அவன் அந்த நேரத்திலு மாடிக்கு போகனும் அப்படி சுகன் இறந்தத பாத்தாதும் ஏன் யாருகிட்டையும் சொல்லாம அமைதியாகவே இருக்கனும் "

தினேஷ் " ஆனா இதுக்கு எல்லாம் என்ன காரணணும் வினோத் கிட்ட தான் கேட்கனும் "

வேலன் " என்ன காரணம் நான் தான் உங்கிட்ட முன்னடியே சொன்னனே இரண்டு பேருகுள்ள பிரச்சினைனு அது தான் காரணம் அவன என்ன பண்ணுறேனு பாரு "
என கண்களில் கோபம் கொப்பளிக்க பேசிவரை கண்ட தினேஷ்
" அவசரபடாதிங்க சார் நீங்க அவசரபட்டா அவன் தப்பிக்க நிறைய வழி இருக்கு அவன்கிட்ட பேசி இங்க வர வைச்சு அப்புறம் விசாரிப்போம் "

திவ்யா " ஆமாம் தினேஷ் சொல்றது‌ தான் சரி இது விஷயமா நாம நந்தன் கிட்ட பேசுவோம் "

வேலன் " ஒரு வேல அவனுங்களும் இதுக்கு கூட்டா இருந்து நாம பேசி தப்பிச்சுட்டா "

தினேஷ் " ஓகே நான் நந்தனுக்கு கால் பண்ணி எங்க இருக்கிங்க அப்படினு மட்டும் விசாரிக்குறேன் "
என நந்தனுக்கு ஃபோன் செய்ய
இரண்டு மூன்று அழைப்புகளுக்கு பின்னரே ஃபோன் எடுத்தான்...

தினேஷ் " ஹாலோ நந்தன் நான் தினேஷ் டிடெக்டிவ் ஆபிஸர் "

நந்தன் " ம்ம் சொல்லுங்க என்ன விஷயம் "

தினேஷ் " இல்ல ஒரு சின்ன விசாரணை இப்ப எங்க இருக்கிங்க வர முடியுமா "

நந்தன் " ஹலோ எங்கள பாத்தா எப்படி இருக்கு நாங்க என்ன ஆக்யூஸ்டா என்னமோ நாங்க தான் கொல பண்ண மாதிரி உங்க இஷ்டத்துக்கு வர சொல்றிங்க சுகன் எங்க பிரெண்ட் அதனால தான் நீங்க கூப்பிட்டப்போ நாங்க வந்தோம் நாங்களா யாருனு தெரியும்ல "

தினேஷ் " கூல் கூல் கூல் நந்தன் இது ஒரு விசாரணை தான் வேலன் சார் கூட இங்க தான் இருக்காங்க "

வேலன் பேரை சொன்னதும் சற்று யோசித்த நந்தன்
" ஓகே இப்ப நான் வெளியே இருக்கேன் ஈவினிங் வரேன் "

தினேஷ் " உங்க பிரெண்ட்ஸ்லா "

நந்தன் " ஓ காட் நாங்க எல்லாரும் இப்போ ஏர்போர்ட்ல இருக்கோம் வினோத் அப்ராட் போறான் அவன அனுப்பி விட்டு நானும் ரிஷியும் வரோம் "
என கடுப்புடன் போனை வைக்க
அவன் கூறியதை கேட்ட அதிர்ந்த தினேஷ் வேலனிடமும் திவ்யா விடமும் விஷயத்தை கூறினான்...

திவ்யா " இப்போ என்ன பண்ணுறது "

வேலன் " வைட் "
என்ற வேலன் தனது போனை எடுத்து யாருக்கு அழைத்து சொல்ல வேண்டிய விஷயங்களை கூறினார்..

சிறிது நேரத்திற்கு பிறகு வந்தவர் எல்லாம் பேசிட்டேன் இன்னும் ஒன் அவர்ல அவன் ஸ்டேஷனல இருப்பான்...

தினேஷ் " சார் நீங்க அவசரபடுறிங்கனு தோணுது கொஞ்சம் பொறுமையா "

வேலன் " ஸ்டாப் இட் நான் உங்கள யாரு கொலகாரணு கண்டுபிடிக்க தான் சொன்னேன் நான் என்ன பண்ணனும் நீங்க சொல்ல வேணாம் "
என மடமடவென பொரிந்து தள்ளி விட்டு இடத்தை காலி செய்தார்..

திவ்யா " என்ன இவரு இப்படி பேசுறாரு "

தினேஷ் " நான் தான் தப்பு பண்ணிட்டேன் அவரு போலிஸ் கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணுவாருனு நினைச்சேன் பட் புள்ள பாசம் இப்படி செய்ய வைச்சுடுச்சுனு நினைக்குறேன் சரி வா நாமளும் போகலாம் "

திவ்யா " இது நம்ப கேஸ் சரியான ஆதாரத்தோடு கண்டுபிடிக்கனும் ஹம் வா "
என இருவரும் அவரது ஆபிஸ் நோக்கி கிளம்ப..

இங்கு ஏர்போர்ட்டில் வினோத் பிளைட்டுக்காக போர்டிங்கிள் அமர்ந்திருந்தான்...
" எந்த பிரச்சனையும் இல்ல கொஞ்சம் நேரத்துல ஆஸ்திரேலியா போயிட்டலாம் அங்க அப்பா இருக்காரு எல்லாத்தையும் பாத்துபாரு "
என எண்ணியவாறு அமர்ந்திருக்க ..

இரு போலிஸ்கார்கள் அவனின் தோளை பின்னிருந்து தொட்டனர்..

" நீங்க தான் வினோத் "

" எஸ் "

" வாங்க ஸ்டேஷன் போலாம் "

வினோத் " ஹலோ யார் நீங்க நான் ஏன் உங்க கூட வரணும் இன்னும் டென் மினிட்ஸ்ல எனக்கு பிளைட் "

" அதலா அங்க பேசிக்கலாம் வாங்க தம்பி "
என அவனின் கைபிடித்து வெளியே இழுத்து வந்தனர்....

அவனை அனுப்பிவிட்டு நந்தன் ரிஷி காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வர போலிஸ் வினோத்தை இழுத்து கொண்டு வெளியே வந்தனர்..
அதனை கண்ட இருவரும் மறுபடியும் காரில் இருந்து கீழே புரியாமல் அவர்களிடம் சென்றனர்...

நந்தன் " ஹாலோ சார் என்ன பண்றிங்க எதுக்கு அவன வெளியே கூட்டிட்டு வரிங்க "

" நீங்க யாரு "
என அந்த போலிஸில் ஒருவர் கேட்க

நந்தன் " நாங்க அவனோட பிரெண்ட்ஸ் "

" இவன் மேல் ஒரு கேஸ் அதுக்கு தான் கூட்டிட்டு போறோம் "

ரிஷி " நாங்களா யாரு தெரியுமா எங்க பிரெண்டு டாடி தான் கமிஷ்னர் சொன்னா என்ன ஆகுனு தெரியுமா "

" கூட்டிட்டு வர சொன்னதே கமிஷ்னர் தான் "
என்றபடி வினோத்தை அழைத்து கொண்டு செல்ல..

ரிஷி " என்னடா ஒன்னுமே புரியல அங்கிள் ஏன் வினோத அரஸ்ட் பண்ண சொன்னாரு "

நந்தன் " எனக்கும் புரியல சரி வா நாம அவருகிட்டேயே கேட்போம் "
என அவர்களும் தனது காரில் ஏறி ஸ்டேஷன் சென்றனர்...

ஒரு நேரத்தில் வினோத்தை அழைத்து கொண்டு போலிஸ்காரர்களும் தினேஷ் திவ்யா இருவரும் மற்றும் நந்தன் ரிஷி என அனைவரும் கமிஷ்னர் ஆபிஸ் வந்து சேர்ந்தனர்...

நேராக வந்தவன் தினேஷிடம்
" என்ன நினைச்சுட்டு இருக்கிங்க நாங்க தான் வரோனு சொன்னோம்ல அப்புறம் ஏன் அவன மட்டும் அரெஸ்ட் பண்ணி அழைச்சுட்டு வந்திருக்கிங்க "

தினேஷ் " வினோத் தான் சுகன கொலை பண்ணி இருக்கானு அவனுக்கு எதிராக ஒரு சாட்சி சொல்லுது அதான் விசாரிக்க அவன கூட்டிட்டு வந்திருக்காங்க "

திவ்யா ஹோட்டலில் விசாரித்தது வைட்டர் சொன்னது அதன்பிறகு வேலன் எடுத்த முடிவுகளை பற்றி கூற இதனை கேட்ட இருவரும் அதிர்ந்தனர்..

நந்தன் " இல்ல கண்டிப்பா இல்ல வினோத் அப்படி பண்ண மாட்டான் அவன் எதுக்கு சுகன "

தினேஷ் " வினோத் தான் கொல பண்ணாணு நாங்களும் சொல்லல அவன் எதுக்கு அந்த நேரத்துல மாடிக்கு போகனும் ஒரு வேல அவனுக்கு சுகன் இறந்தது தெரிஞ்சு இருந்தா அது ஏன் மறைக்கனும் "
என கேள்வி கேட்டவனை கண்டு புரியாமல் முழித்தனர்...

அதற்குள் வினோத்திற்கு போலிஸ் விருந்து கிடைக்க பஞ்சனையிலே பிறந்து பால் பழம் மட்டுமே உண்டு வலி தெரியாமல் வாழ்ந்தவன் இரண்டே அடியில் வலி தாங்கமுடியாமல் உண்மைகளை கூற தொடங்கினான்...

இதனை எல்லாம் மற்றொரு அறையில் இருந்த தினேஷ் திவ்யா நந்தன் ரிஷி வேலன் என அனைவரும் கேட்க உண்மைகளை கூறினான்...

அதன்படி இரவு அனைவரும் தூங்கிய நேரம் தனக்கு வந்த அழைப்பு அதில் சுகன் தனது காதலியுடன் நெருங்கி எடுத்த போட்டோ அதனை கண்டு கோபத்துடன் அவனை தேடி பார்த்து பின்பு மாடிக்கு சென்றனது அங்கே சுகன் இறந்து கிடந்ததை கண்டு தன் மேல் பழி வர கூடாது என அங்கிருந்து தப்பி ஒன்றும் தெரியாமல் அறைக்கு வந்து படுத்தது என அனைத்தையும் கூறினான்...

இவர்கள் அனைவரும் அதனை கேட்க தினேஷ் எதிர்த்தமாக திரும்பிய போது ரிஷியின் முகத்தில் தெரிந்த ஒரு விதமான கலக்கம் அவன் கண்ணில் பட்டது...


வேலன் " பொய் பேசுறான் இவன் தான் கொல பண்ணிருக்கான் மாட்டிக்கிட்டதும் நான் பண்ணல ஏற்கனவே யாரோ பண்ணிட்டாங்க நான் பயந்தேனு கதை சொல்றான் "
என தனது கையில் கிடைத்த பெரிய கட்டையை எடுத்து வினோத் இருந்த அறைக்கு செல்ல அவர் செல்வதை கண்ட நந்தன் ரிஷி இருவரும்
" அங்கிள் கண்டிப்பா வினோத் அப்படிலா செஞ்சு இருக்கா மாட்டான் அவன் ஏன் அப்படி பண்ணாணு நாங்க கேட்குறோம் பிளிஸ் "

வேலன் " என்னங்கடா நாடகம் நடிக்குறிங்களா எனக்கு உங்க மேலையும் சந்தேகம் தான்டா நீங்க எல்லாரும் கூட்டா தான் இத பண்ணிங்களானு உங்கள் அப்புறம் வந்து விசாரிக்குறேன் அது வரைக்கும் நீங்க எங்கயும் போக கூடாது "
என அங்கிருந்த போலிஸ் ஒருவரை அழைத்து இவர்களையும் ஒரு அறையில் வைக்க சொன்னார்....

தொடரும்..
 
Top