All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரும்பி வருவேன் உன்னை தேடி - கதை திரி

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 17

" ஐஞ்சு பேரா "
என தலையில் அடித்து அழுது கொண்டே
" வாய் பேச முடியாத என் செல்லத இப்படி பண்ண எப்படி தான் மனசு வந்துச்சோ "
என ஓவென அழுதவரை கண்டு இந்திரா அஞ்சு இருவரும் அழ....

" விட கூடாது மா விட கூடாது இவனுங்க யாரையும் சும்மா விட கூடாது என் பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சுனு இல்ல இனி எந்த பொண்ணுக்கும் இது மாதிரி ஆக கூடாது மா ஆக கூடாது "
என ஆவேசமாக கத்தியவர்...

" உனக்கு எப்படி மா இதலா தெரியும் "
" சொல்றேன் பா "
என அந்த போலிஸ்காரர் பேசி சென்றபின் நடந்ததை கூற தொடங்கினாள்..

அவள் கையில் இருந்த ஐடி கார்டை வெகு நேரம் பார்த்து கொண்டு இருந்தவள் சட்டென ஒரு முடிவு வந்தவளாக எழுந்து அதில் உள்ள அட்ரஸை தேடி சென்றாள்...

அந்த இடம் இவர்கள் ஊருக்கு வெளியே உள்ள இடம் என்பதால் அவழ் போய் சேரவே இரவு எட்டு மணியை நெருங்கிவிட்டது..

தயங்கி தயங்கி வெளியே நின்றவளை அந்த வீட்டின் உரிமையாளர் கவனித்து விட்டார்..

" என்னமா யாரு நீ இங்க என்ன பண்ணற "

" நான் நான்... ஸ்வேதா வ பாக்கனும் "
என ஒருவாறு திக்கி திணறி கூற

இப்போது அவரது முகத்தில் பதற்றம் ஒட்டி கொண்டது
" நீ ஏன் மா என் பொண்ண பாக்கனும் "
அவர் என் பொண்ணு என்று கூறியதில் சற்று நிம்மதி அடைந்தவள்
" பிளிஸ் மா நான் அவங்கிட்ட கொஞ்சம் பேசணும் பிளிஸ் மா "

" இங்க பாரு மா என் பொண்ணுக்கு இப்ப தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு அவங்க ரூம்ல இருக்காங்க இப்ப போய் பாக்கனும் சொன்னா நல்லாவா இருக்கும் நீ போயிட்டு காலையில வா மா "

கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவள்
" இல்ல மா ஒரு பத்து நிமிஷம் நான் பேசிட்டு போயிடுறேன் பிளிஸ் மா "

" அப்படி என்ன பேச போற அவகிட்ட "
என எரிச்சலுடன் அவர் கேட்க

" மா ஒரு மாசத்துக்கு முன்னாடி என் தங்கச்சிய யாரோ கொண்ணுட்டாங்க அந்த இடத்துல உங்க பொண்ணு ஐடி கார்ட் கிடந்துச்சுனு ஒருத்தர் உதவி பண்ணாங்க என் தங்கச்சி சாவுக்கு நியாயம் கிடைக்க தான் இப்படி அலைஞ்சுட்டு இருக்கேன் பிளிஸ் மா ஸ்வேதா க்கு இது சம்பந்தமா ஏதாவது தெரியுமானு கேட்க தான் "
என அவள் கூறியது தான் தாமதம் உடனடியாக அவள் அருகில் வந்து அவளது கைகளை பற்றி ஒரு ஓரமா இழுத்து கொண்டு போனாள்..

" மா உன் காலு விழுந்து கேட்குறேன் என் பொண்ணுக்கு இப்ப தான் கல்யாணம் ஆச்சு நீ ஏதாவது கேட்க போய் அவ வாழ்க்கைய நாசம் பண்ணிடாத தயவு செஞ்சு இந்த இடத்த விட்டு போயிட்டு போ மா "

வெளியே சென்ற தாய் இவ்வளவு நேரம் திரும்பி வராததால் வெளியே வந்த ஸ்வேதா ஓரமாக நின்று தன் தாய் யாருடனோ பேசி கொண்டு இருப்பதை கண்டு அருகில் சென்றாள்..

" மா யாரு இவங்க இங்க நின்னு என்ன பேசிட்டு இருக்க "

அவள் வருவதை எதிர்பார்க்காத அவளது தாய்
" ஏய் நீ ஏன் இங்க வந்த போ உள்ள நான் உன்கிட்ட அப்புறம் எல்லாம் சொல்றேன் "

" நீ தான் ஸ்வேதா வா "

" ஆமாம் நீங்க "
அவள் கேட்கும்போதே இடையில் புகுந்த அவளது தாய்
" மா நான் தான் சொன்னேன்ல அவளுக்கு எதுவும் தெரியாதுனு நீ வெளியே போ முதல போ மா "
என அவளை இழுக்க
அவள் சற்றும் அசைந்து கொடுக்காமல்

" போன மாசம் இரண்டாம் தேதி பாலத்துக்கு பக்கத்துல உள்ள சவுக்கு காடுல என் தங்கச்சி புணமா கிடந்தா "
என கூறி முடிக்கும் முன்னே

" ஐய்யோ அக்கா என்ன மன்னிச்சுடுங்க கா ஐய்யோ நான் எவ்வளவு பெரிய பாவம் பண்ணிட்டேன் என்னால தான உங்க தங்கச்சி அன்னைக்கு உயிர விட்டா "
என தலையில் அடித்து அழுதவளை

" அடியே வாய் மூடு டி ஏதாவது உளறி நாளைக்கு உனக்கே அது பிரச்சினையா வர போகுது டி வாய மூடு "

" அன்னைக்கு என்ன நடந்துச்சு என் தங்கச்சிக்கு "

இதற்கு மேல் பேசினாலும் இவர்கள் கேட்க போவது இல்லை என எண்ணிய தாய்

" எதுவா இருந்தாலும் உள்ள வந்து பேசுங்க அக்கம்பக்கத்துல கேட்டா எங்க மானமே போயிடும் "

உள்ளே வந்தும் ஸ்வேதாவின் அழுகை நின்றபாடு இல்லை அப்போது எதார்த்தமாக அங்கு வந்த அவளது கணவன் அவள் அழுவதை கண்டு விசாரிக்க அவளது அழுகை அதிகமானதே தவிர ஓய்ந்தபாடில்லை...

" உன்னை கெஞ்சி கேட்கிறேன் என் பொண்ண விட்டுடு இந்த பிரச்சனை நா அவள ஈடுபடுத்துவதா நாங்களே இப்ப தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கோம் "

" ஆனா நாங்க நிம்மதியா இல்லையே இந்த தங்கச்சி எப்படி இருக்கு எங்க குடும்பமே நொந்து போயிருக்கோம் உங்க பொண்ணு சொல்ல போற பதில் தான் எங்க தங்கச்சிக்கு ஒரு நியாயம் கிடைக்கும் நம்புறேன் "

" சொல்லுங்க அக்கா இன்னும் என்ன சொல்லணும் "

"இன்னைக்கு என்ன நடந்துச்சு "

"அன்னைக்கு என்னோட காலேஜ்ல கடைசி நாள் அமே பிரண்ட்ஸோட கொண்டாடிட்டு நைட்டு எட்டு மணிக்கு மேலும் வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன் அப்பதான் எதிர்பாராத சம்பவம் நடந்துச்சு அன்னைக்கு நான் வந்து நடுவிலே பஞ்சராகி நினைச்சு சீக்கிரமா வீட்டுக்கு போங்க நெனச்ச நான் குறுக்கு வழியில் இருந்து பாலத்லு வழியா போனா சீக்கிரமா வந்து தரலாம்னு நெனச்சேன் அதுபடி வந்தேன் ஆனால் அங்க "
அதற்கு மேல் சொல்ல முடியாமல் முகத்தை மூடியபடி அழுக அவளது பக்கத்தில் அமர்ந்த அவளது கணவன் ஆதரவாக அவளது கையைப் பிடித்துக் கொண்டான்...

அவன் கொடுத்த தைரியத்தில் மேற்கொண்டு பேச ஆரம்பித்தாள்
" நான் வரும்போது யாருனே தெரியாத அந்த பெண் என்னை வழிமறித்து நின்றார்கள் பயந்த நாம் கூட தப்பிக்க நினைக்கும் போதே அவன் கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணாங்க தப்பிக்க நான் அவர்கிட்ட ரொம்ப கஷ்டப்பட்டு போராடினேன் அப்ப அந்த வழியா வந்த பொண்ணு அவங்க பின்னாடி இருந்து கட்டையை எடுத்து என் சேலையை பிடிச்சு இருந்த பையனோட தலையில அடிச்சா அவர் சுதாரித்துக் கொள்ள நான் அங்கிருந்து விலகி ஓட ஆரம்பிச்ச கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்த அப்ப தான் தெரிஞ்சது எனக்கு காப்பாத்த வந்த பொண்ணு அவங்க கையில மாட்டிகிட்டானு உயிர் பயத்தில் இருந்த நான் என்ன காப்பாத்திக்க மட்டும் நினைச்சு ஓடி வந்துட்டேன் "

இப்போது அவளது காலின் அருகில் அமர்ந்து மடியில் முகத்தை புதைத்துக்கொண்டு " என்ன மன்னிச்சிடுங்க அக்கா அந்த இடத்துலே என்னால எதுவும் பண்ண முடியல சாரிக்கா "

" அப்புறம் வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லி அழுதேன் ஆனா குடும்பம் மானம் பறி போயிட கூடாதுனு இத வெளியே செல்ல எங்க அம்மா தடுத்துட்டாங்க "

" நாங்க நடுத்தர குடும்பம் மா அப்பா இல்லாத பொண்ணு போலிஸ் கேஸ் அது இதுனு என்‌ பொண்ணு வாழ்க்கையில விளையாடிட்டா அதான் இத வெளிய சொல்ல மனசு வரல அவசரமா என் தம்பிக்கு இவள கல்யாணம் பண்ணி வைச்சுட்டேன் ஆனா என் தம்பி நடந்து எல்லா உண்மையும் தெரிஞ்சு தான் என் பொண்ண ஏத்துக்கிட்டான்"

" அவங்கள பத்தி ஏதாவது தெரியுமா யாரு என்னனு "

" ஒரு நிமிஷம் கா "
என்று உள்ளே சென்றவள் தனது போனை எடுத்து கொண்டு வெளியே வர

" இது தான் கா அவங்க ஐஞ்சு பேர் அதுல ஒருத்தன் பேரு ரிஷி அத வைச்சு பேஸ் புக் ல தேடி இந்த ஐஞ்சு பேரையும் கண்டுபிடிச்சேன் என்னைக்காவது யார் மூலமாவது இவனங்கள அடையாள காட்ட தான் போட்டோவ சேவ் பண்ணி வைச்சேன் "

என்று கூறியவள் தனது போனில் இருந்து அவர்களது போட்டோ பேஸ்புக் ஐடி எல்லாவற்றையும் காப்பி செய்து கொண்டவள் கிளம்ப எழுந்தாள்..

" மா என் பொண்ணு வாழ்க்கை உன் கையில தான் இருக்கு தயவு செய்து இதை வெளிய சொல்லாத மா "
என்றவாறு கைய நீட்ட

அவர் கூறியதன் அர்த்தம் புரிந்தவள் தனது கையில் இருந்த ஐடி கார்ட் டை அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்த வழியே சென்றாள்....

( முதல் பாகத்தில் படித்த பச்சை நிற சேலை உடுத்தி சென்ற பெண் தான் ஸ்வேதா அவள் சிக்கி இடத்தில் அவளை காப்பாற்ற எண்ணிய மீரா தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் அவர்களது கையில் சிக்கி சிதைந்து அவளது உயிரை விட்டு இருந்தாள் )

அதன்பின் தான் இந்திரா தன் தாய் தந்தையுடன் சேர்ந்து முடிவு செய்து வேட்டையை ஆரம்பிக்க தனது பயணத்தை தொடர்ந்தாள்....

நடந்த அனைத்தையும் அங்கு‌ நின்று இருந்த ருத்ர வேலன் நந்தன் அனைவரிடமும் கூற அவளை அறியாமலே அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருந்தது..

அப்போது தான் அன்று நடந்ததை நினைத்து பார்த்து நந்தன் எப்போதும் போல நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற குடிப்பதர்க்கா ஒரு ஓரமாக வண்டியை நிறுத்த

அங்கு தனியே சென்று கொண்டு இருந்த ஸ்வேதா மேல் கயவர்களின் தன் பட
அவளை நெருங்கி தங்கள் வேட்க்கையை ஆரம்பித்தனர் அந்த நேரம் திடிரென எங்கிருந்தோ வந்த பெண் வினோத் தலையில் அடிக்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அந்த பெண் ஓட இவர்களது கையில் சிறு பெண் அவள் அகப்பாட்டாள்...

கை நழுவி போனது தீர்க்கும் விதமாக மாட்டிய அவளை சின்னா பின்னமாக்கினர்..

அவள் உயிர் பிரியும் நேரத்தில் அவர்கள் ஐவரையும் கண்டவள் தனது சைகையின் மூலம் திரும்பி வருவேன் என்று சைகை செய்ய

அப்போதும் அவள் தன்னை அடித்தாள் என கோபம் கொண்ட வினோத் அவள்மீது பெட்ரோல் ஊற்றி அவளை உயிருடன் வைத்து எரித்தனர்...

நடந்ததை நினைத்து பார்த்தவன் பயத்தில் பின்னே செல்ல செல்ல

" உங்கள் பழி வாங்க தான் நாங்க எங்க அடையாளத்த எல்லாம் மறைச்சு உங்க வீட்டு வேலகாரியா எங்க அம்மா இதோ இவரு வீட்டு வாட்ச்மேன் என் அப்பா நான் உங்க ஆபிஸ் ல வொர்க் கொஞ்சம் கொஞ்சமா உங்கள நெருங்கி வந்தோம் "
என்ன நந்தன் உன் பிரென்ட் எல்லாரையும் எப்படி கொண்ணேனு யோசிக்குறியா "

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 18

நடந்த அனைத்தையும் நந்தன் மற்றும் அவன் குடும்பத்தினர் யிடம் கூறினாள் இந்திரா அசைந்த சமயம் அவளது கையை பின்னால் இருந்த ஒருவன் தள்ள அவளது கையில் வைத்திருந்த துப்பாக்கி கீழே அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ருத்ரன் பட்டென துப்பாக்கியை எடுத்து கொண்டு அதனை கொண்டே அவளது தலையில் ஓங்கி அடித்து மயங்க வைத்தனர்...

" இந்திரா "
என மாணிக்கம் அஞ்சு இருவரும்ஒரு சேர கத்த அவர்களது வாயிலும் துணி வைத்து அடைத்தனர்...

" இவங்க மூன்னு பேரையும் நம்ப குடோன்ல வைங்க நான் வந்து காரியம் பண்றேன் ம்ம் போங்க "
என தனது ஆட்களை ருத்ரன் அனுப்ப

வேலன் " என் புள்ளைய கொண்ண இவங்களுக்கு என் கையால தான் சாவு "

ருத்ரன் " அவசரபடாதிங்க வேலன் அந்த தினேஷ் நம்பல என் நேரமும் கண்காணிச்சுட்டு இருக்கான் இப்போ இவங்கள குடோன்ல அடைச்சு வைக்கலாம் அடுத்து என்ன செய்றதுனு யோசிக்கலாம் "
என்றவர் கூற அதனை ஆமோதித்து வெளியே வந்தனர்...

நடந்ததை நினைத்த நந்தன்
" எங்கே எந்த தப்பு நான் பார்தத்து மீனா இல்லையே அவ முகம் அவ அவ மீரா தான் அப்புறம் எப்படி மீனா நான் தான் உங்கள கொல பண்ணேனு சொல்றா புரியலயே இதுக்கு எல்லாம் அவ தான் பதில் சொல்லனும் அப்புறம் இருக்கு அவளுக்கு என் பிரெண்ட்ஸ் கொண்ண அவளோட சாவு ரொம்ப கொடுரமா இருக்கும் "
என மனதில் வன்மத்தை கூட்டியவன் உடல் ஒத்துழைக்காமல் திரும்பவும் மயக்கம் வர அப்படியே கட்டில் மீது சாய்ந்தான்...

தினேஷ் திவ்யா வுடன் இணைந்து மீனா என்கிற இந்திராவை தேட கடைசியில் அவள் மற்றும் அவள் குடும்பத்தை அடைத்து வைத்து இருக்கும் இடத்தை அடைந்தான்...

தினேஷை இந்த கேஸில் இருந்து விலக சொன்ன வேலனிடம் ஏதோ தவறு இருப்பதாக பட்டவன் வேலனின் ஆட்களில் ஒருவனிடம் பணம் அதிகமாக கொடுத்து அவர்களை கண்காணிக்க சொன்னான்..

அதன்படியே இந்திரா எதற்காக அவர்களை கொலை செய்தாள் தற்போது அவரிடம் மாட்டியது என எல்லாம் கூற அதனை கேட்ட திவ்யா தினேஷ் இருவரும்

" ச்ச என்ன ஒரு கொடுமை ஒரு சின்ன பொண்ணு கூட பாக்காம அவ வாழ்க்கையே சீரழிச்சு எரிச்சு கொண்ணுட்டாங்களே "
என்ற திவ்யா

" ஆமாம் திவி நான் கூட அவங்க மேல ஏதோ தப்பு இருக்குனு உணர்ந்தேன் ஆனா இப்படி பண்ணி இருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை "

" விடக்கூடாது தினேஷ் பாவம் அந்த குடும்பம் நாம ஏதாவது பண்ணணும் "

" நிச்சயமா வேலன் கூட இருக்குற நம்ப ஆளு அட்ரெஸ் எல்லாம் கொடுத்து இருக்கான் நான் போய்ட்டு வரேன் நீ இங்கேயே இரு எதாவது பிரச்சினைனா போலிஸ் கூட்டிட்டு அங்க வா "

" முடியாது நான் உங்கள தனியா அங்க அனுப்ப மாட்டேன் நானும் வரேன் "
என அவள் பிடிவாதமாக கூற
சரி என ஒத்து கொண்டவன் அவளையும் அழைத்து கொண்டு இந்திராவை அடைத்து வைத்திருந்த குடோனுக்கு சென்றனர்...

அங்கு வெறும் ஐந்து பேரே இருக்க சுலபமாக அவர்களை அடித்து வீழ்த்தி விட்டு இந்திரா மற்றும் அவள் குடும்பத்தை காப்பாற்றி தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்....

தினேஷ் " இனி நீங்க சேப் தான் கவலபடாதிங்க இங்க நீங்க ரொம்ப பத்திரமா இருப்பிங்க "

இந்திரா " நாங்க தான் கொலை செஞ்சோனு தெரிஞ்சும் எங்கள ஏன் காப்பாத்தினிங்க "

தினேஷ் " கொலை நீங்க செஞ்சாலுமா அதுக்கு தண்டனை கொடுக்குற உரிமை அவங்கிட்ட இல்ல "
என்றவன் செல்ல திரும்பி இவர்களை பார்த்து
" அண்ட் நீங்க கொலை செய்யல உங்க தங்கச்சி சாவுக்கு நியாயம் தேடிகிட்டிங்க "

இங்க நந்தன் மயக்கத்தில் இருந்து தெளிய அங்கே அவனது தாய் கண்ணில் கண்ணீர் பெருக அவனையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்..

" மா "
என்று அவன் அழைத்து கைகளினால் தண்ணீர் வேண்டும் என சைகை செய்தான்..

எழுந்தவள் சமையல் அறைக்கு சென்று அவனுக்கு ஜூஸ் எடுத்து வந்து தனது கைகளினால் அவனை தாங்கியபடி பருக வைக்க
அவனும் மயக்கத்தின் பிடியில் இருந்ததால் முழுவதுமாக குடித்து முடித்த பின் தான் நிமிருந்து தன் தாயின் முகத்தை பார்த்தான்...

எப்போதுமே கணிவுடன் தன்னை பார்க்கும் தாயின் கண்ணில் இன்று வித்தியாசத்தை கண்டு கொண்டவன்

" என்னமா ஏன் இப்படி பாக்குற "

" ஏன்டா இப்படி பண்ண "

தனது தாயுக்கு தன்னை பற்றிய உண்மை தெரிந்து இருக்குமோ என எண்ணியவன்
" நான் என்ன பண்ணேன் நீங்க எதுவும் பேசாமா இந்த இடத்த விட்டு போங்க "

" ஆமாம் டா இத்தனை நாள் நான் பேசாம தான் இருந்தேன் ஆனா இன்னைக்கு பேசுவேன் டா நீ கேட்கனும் ஏன்னா இனி நான் பேசுனா நீ கேட்க போறதில்ல "

நந்தன் புரியாமல் தனது தாயை பார்க்க

" ஒரு பெண்ண கற்பழிப்பு கொல்ற அளவுக்கு உனக்கு எப்படி டா தைரியம் வந்துச்சு நீயும் ஒரு தாய் வயித்துல தான பொறந்த நான் உன்ன அப்படியா வளர்ந்தேன் ஒரு பொண்ணு பொறந்ததுலேந்து எவ்வளவு அவச்சைகளை அனுபவிக்குறனு உனக்கு தெரியுமா ஒவ்வொரு மாதமும் அவளோட உடம்புல என்ன என்ன மாற்றம் இருக்குனு தெரியுமா அந்த மூன்று நாள் அவ படுற துன்பம் தெரியுமா இது எதுவுமே தெரியாம உன் ஐஞ்சு நிமிஷம் சந்தோஷம் தான் பெருசுனு அந்த குழந்தையை கெடுத்து கொண்ணு இருக்க அவ்வளவு வெறியா டா உனக்கு ச்சி "
என அவன் முகத்தில் காரி உமிழ

" மா "
என்றவன் எழ முயல அவனுக்கு குமட்டி கொண்டு வர வாயில் கை வைத்து பார்த்தவன் இரத்தம் வழிய

" மா டாக்டர்க்கு கால் பண்ணு மா டாடிக்காச்சும் கால் பண்ணு இரத்தமா வாந்தி வருது மா வயித்த வலிக்குது மா "
என திணறி கொண்டே கூற

" இப்படி தான்டா அந்த பொண்ணுக்கு வலிச்சு இருக்கும் அந்த பொண்ணோட எரிஞ்ச உடல பாத்து அவள பெத்தவங்களுக்கு கூட பொறந்தவளுக்கும் இப்படி தான்டா வலிச்சு இருக்கும் "

அப்போது தான் அவனுக்கு உரைத்தது தனது தாய் தான் தனக்கு ஏதோ செய்து விட்டார் என உடனடியாக தனது கைபேசியை தேடி எடுத்தவன்
" உன்ன என்ன பண்றேனு பாரு ஃபர்ஸ்ட் டாடி கிட்ட சொல்றேன் "

அவர் அவனது கையில் இருந்த போனை பிடித்து தரையில் தூக்கி எரிந்து உடைக்க
அவன் அதற்கு மேல் வலி தாங்க முடியாமல் தனது தாயின் காலை பிடித்து கெஞ்ச தொடங்கினான்..

" மா மா பிளிஸ் மா என்ன எப்படியாவது காப்பாத்து மா இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன் மா நான் தான மா உன் செல்ல புள்ள எனக்காக தான வாழ்றேனே சொல்லுவ பிளிஸ் மா காப்பாத்து மா காப்பா கா "
என சொல்லும் போதே தரையில் விழுந்து அவனது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக துடித்து துடித்து இறக்க

இதனை எல்லாம் கண்டும் அவளது தாய் மனது இறங்கவில்லை மாறாக ஒரு பெண்ணாக அவளது மனது அன்று தனது மகனால் அவளுக்கு ஏற்பட்ட துயரத்தை நினைத்து வலித்தது...

கொஞ்சம் கொஞ்சமாக அவனது உயிர் பிரியும் தருவாயில் ருத்ரன் வர அறையில் மகன் உயிர் பிரிய அதனை கண்டவன்
" நந்து நந்து என்ன டா ஆச்சு உனக்கு நந்து "
என கூப்பிட கூப்பிட அவனது உடலில் எந்த அசைவும் இல்லை அவனது உயிர் பிரிந்து கொண்டதை அறிந்தவன் வேகமாக மனைவியிடம்
" ஏய் அவனுக்கு எப்படி டி இப்படி ஆச்சு நீ ஏன் எதுவும் தடுக்கல "
என கேட்டபடி அவளை உலுக்க

" அவன் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்குறான் "
என்று கூற அவளின் பேச்சு பார்வை எல்லாம் விச்சியாசமாக பட அவள் கூறியதை கேட்டதும் ஓங்கி அவளை அறைய

" அப்போது நீ தான் நம்ப புள்ளைய கொன்னியா சொல்லு டி "

" நம்ப புள்ள இல்ல‌ ஒரு பொண்ணோடு உணர்வுகள மதிக்காம அவள குப்பை மாதிரி கசக்கி கொண்ண கொலைகாரன தான் நான் கொன்னேன் "

இதனை கேட்ட மீண்டும் அவளை அடிக்க கையை ஓங்க அவனது கையை பிடித்தவள்
" இன்னொரு முறை என்ன அடிக்க கை ஓங்கின நான் இன்னொரு கொலை பண்ண வேண்டியதா இருக்கும் "

இதுவரை தன்னை எதிர்த்து பேசாதவள் தனக்கு கீழே தன் சொல்படி நடப்பவள் இன்று அவனை கொலை செய்ய போவதாக கூற அதனை கேட்டவன் அதிர்ச்சி அடைந்து அப்படியே அங்கிரூந்த தரையில் அமர்ந்தான்.‌.

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 19 ( இறுதி அத்தியாயம் )


வேகமாக அறைக்கு ஓடி வந்த திவ்யா தினேஷ் யிடம்
" இங்க வாங்க எல்லாரும் நீயூஸ் பாருங்க சீக்கிரம் வாகாக "
என பரபரத்தபடி அழைத்து செல்ல
மற்ற அனைவரும் அவள் பின்னாலேயே சென்று நியூஸ் பார்த்தனர்...

அதில் பிரபல தொழிலதிபர் ருத்ரன் மகன் நந்தன் மர்மநபர்கள் குத்தப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டு வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
என்ற செய்தி கேட்ட ஒரு குழப்பம் அனைவரும் முகத்திலும் இருந்தது...

" இது எப்படி நடந்து இருக்கும் நந்தன் உடல்நலம் ரொம்ப நல்லா இருக்குனு தான சொன்னாங்க இப்போ எப்படி இறந்து இருப்பான் "
என தினேஷ் கேட்க

" எப்படியோ செத்தான்லா அது போதும் "
என்ற திவ்யாவிடம்

" அது எப்படி சாக முடியும் இல்ல இதுல ஏதோ விபரிதம் இருக்கு "

" அவங்க அம்மா தான் அவன கொன்னு இருக்காங்க "
என்று கூறிய இந்திராவை அனைவரும் பார்க்க

" நான் அவங்க கூட நல்லா பழகினத வெச்சு சொல்றேன் அவங்களுக்கு நந்தன் தான் உயிர அவன் செத்து கெடக்கும் போதும் இப்படி அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமா உட்கார்ந்து இருக்காங்க அத பார்த்தாலே தெரியுது அவங்க தான் கொலை பண்ணிருக்காங்க "

" அவங்க ஏன் பண்ணனும் "
என்று திவ்யா கேட்க

" மீரா சாவுக்கு நியாயம் கிடைக்க இத பண்ணிருக்கலாம் "
என்றவுடன் அனைவரும் திரும்பவும் வந்து தங்களது இடத்தில் அமர்ந்து அடுத்து என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்தனர்...

நந்தன் இறந்த விஷயம் தெரியவர பாரு தான் கொலை செய்ததை ருத்ரன் யாரிடமும் கூறவில்லை. கூறி தனக்கு இருக்கும் ஓரே சொந்தத்ததை இழக்க விரும்பாதவன் அதனை அப்படியே தனது பண பலத்தை கொண்டு அடக்கினான்..

அப்படியே வேலனையும் தனது மகன்கள் செய்த விஷயம் வெளியே தெரிந்தால் இத்தனை நாட்கள் சேர்த்து வைத்த கௌரவம் கெடும் என அவனையும் அடக்கிவிட்டார்.....

மூன்று ஆண்டுகள் ஓடியது இப்போது பழையபடி இந்திரா தனது தாய் தந்தையுடன் இவர்களது ஊருக்கே வந்துவிட..

மாலை மூன்று மணிக்கு அந்த ஊரின் போலிஸ் ஸ்டேஷனுக்கு தீடிரென ஆட்கள் வந்து அங்கிருந்த அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்தனர்...

" ஹலோ யாருங்க நீங்க என்ன பண்ணறிங்க "
என அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் கேட்க

" நாங்களா லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் உங்க ஸ்டேஷன்ல பெரிய தொகை லஞ்சம் வாங்கி இருக்கிறதா தகவல் வந்துச்சு அதான் ரெய்டு வந்து இருக்கோம் "
என அதிகாரி ஒருவர் கூற

அந்த இன்ஸ்பெக்டர் முகம் வேர்வையில் நனைந்தது.. ஏனென்றால் சற்று நேரத்திற்கு முன் தான் அரசியல் ஒருவரின் ஊழல் பணத்தில் ஒரு பகுதி லஞ்சமாக வந்தது...
கையும் களவுமாக பிடிபட

" சார் வெளிய தெரியமா பாத்துக்கோங்க சார் தெரிஞ்சா டிபார்ட்மெண்ட் க்கு ரொம்ப அசிங்கம் "
என அந்த இன்ஸ்பெக்டர் கெஞ்ச

" உங்கள அரெஸ்ட் பண்ண வந்ததே உங்க டிபார்ட்மெண்ட் ஆள் தான் எதுவா இருந்தாலும் அங்க போய் பேசிக்கோங்க "
என அவர் கூற அதனை கேட்டவன் வேகமாக வெளியே வந்து பார்க்க

அங்கு காக்கி சட்டை உடையில் இந்திரா ஐபிஸ் ஆபிஷராக நிற்க..

" என்ன இன்ஸ்பெக்டர் என்ன அடையாளம் தெரியுதா "

அவன் புரியாமல் ‌விழிக்க

" அட எப்படி தெரியும் ஐஞ்சு வருஷத்துக்கு‌ முன்னாடி என் தங்கச்சி சாவுக்கு நியாயம் கேட்டு உங்க ஸ்டேஷன் வாசலில் அலைஞ்சனே அதே பொண்ணு தான் "
என கூற
அவன் முகம் வெலவெலத்து போனது...

" சிலர்க்கு தண்டனை ரொம்ப நாள் அப்புறம் கிடைச்சாலும் கிடைக்கும்..
என் தங்கச்சி சாவுக்கு நியாயம் கேட்டு உங்க கிட்ட வந்த அப்போ நீங்க அந்த பாவிகளுகிட்ட காச வாங்கிட்டு அவ கேஸ ஒன்னும் இல்லாமா ஆகிட்டிங்க அதுக்கான தண்டனை தான் இது "
என்றவள்
" இவர ஜீப்பில் ஏத்துங்க "
என்றவள் கூறியபடி முன்னாடி ஏற அந்த இன்ஸ்பெக்டரை ஏற்றி கொண்டு வண்டி அவளது அலுவலகத்திற்கு விரைந்தது..

இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வந்த இந்திராவை
" அக்கா "
என்றபடி ஓடி வந்து வரவேற்றாள் அந்த ஒன்பது வயது சிறுமி..

" மீரா குட்டி "
என்றபடி தனது தலையில் இருந்த காவல் தொப்பியை கழற்றி அவளது தலையில் மாட்டி விட்டவள் அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றாள்...

அவள் தினேஷ் கொடுத்த அறிவுரையை ஏற்று தனது கடின உழைப்பில் ஐபிஸ் படித்து டெல்லி பக்கத்தில் உள்ள ஊரில் கமிஷனராக போஸ்டிங்க வாங்க அங்கு சில சமுக விரோதிகளால் பாலியல் வன்முறைக்கு ஆளக்கபட்ட சிறுமியை தத்து எடுத்துக் அவளை தன்னுடைய ஊருக்கு அழைத்து வந்து தான் இழந்த தனது தங்கையின் பெயரையே அவளுக்கு வைத்து தன்னுடனே வளர்த்து வந்தாள்..
அதுமட்டுமின்றி இந்த கயவர்களுக்கு தக்க தண்டனையும் வாங்கி கொடுத்தாள்....

" இந்திரா இங்க வாமா இத பாரு "
என அவளது தந்தை அழைக்க அவளுமா வந்து தொலைகாட்சியை பார்க்க அதில்
" பிரபல தொழிலதிபர் மகன் ரிஷி கொடுர நோயால் பாதிக்கப்பட்ட வந்த ரிஷி அதன் தாக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் "
என்ற செய்தியை கேட்டு அவளது உதடு புன்னகையில் விரிந்தது...

" அவன் செஞ்ச பாவம் அவன கொல்லுது "
என்றதுடன் முடித்து கொண்டு தனது அறைக்கு செனாறு திவ்யாவிற்கு ஃபோன் அடித்தாள்...

" நியூஸ் பாத்தியா ரிஷி இறந்துட்டான் "

" ம்ம் பாத்தேன் இந்திரா அவனுக்கான சரியான தண்டனை தான் இது "

" கண்டிப்பா திவி நான் அந்த நால்பேர கொன்னு தான் பழி வாங்குனேன்.... ஒருத்தன் தப்பிச்சுட்டானு மனசு அமைதியே அடையல... ஆனா நீ அவனுக்கு தெரியாம அவனுக்கு அந்த நோய் உள்ள ஊசிய போட்டு அவன கொஞ்ச கொஞ்சமாக கொன்னு இப்ப அவனாவே தற்கொலை பண்ணிக்க வைச்சுடிங்க "

" தற்கொலை பண்ணிப்பானு தெரியும் பட் இவ்வளவு சீக்கிரம் பன்னிக்குவானு தெரியாது "
சிரிப்புடன் கூறியபடி ஃபோன் அனைக்கபட...

இங்கு அவளது தாய் தொலைக்காட்சி யை வெறித்து பார்க்க அவரது கண்ணில் ஒருவித நிம்மதி தெரிய
" என்னமா "

" இதலா நம்ப மீராக்கு தான் டி.... இப்ப தான் அவ ஆன்மா சாந்தி அடையும் "
என்று கூறியபடி அறைக்கு சென்றவள் தனது தங்கை படத்தினை உற்று நோக்கினால்..

" நீ தான டி எல்லாம் பண்ண நான் முதன் முதலா மனோஜ் கொலை பண்ணும் போது அவன் என் முகத்துல உன் முகத்த பாத்து அதிர்ச்சி ஆனான் அதே போல தான் நான் ஒவ்வொரு தடவ இவனுங்கள கொல்லும் போதும் நீ என் மூலம் வந்து உன் பழிய தீத்துக்கிட்ட இப்போ ரிஷிய கொன்னதும் நீ தானு எனக்கு தெரியும் "
என்றவள் தனது முன்னால் இருந்த கண்ணாடி வழியே பார்க்க அங்கு அவளது தங்கையின் ஆன்மா அவளை கண்டு சிரித்த படி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது...
அதனை கண்டு அவளது விழிகள் கலங்க அப்படியே நின்றாள்...

மறுநாள் செய்தி தாளில்
" காதல் என்கிற பெயரில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்ட அடுத்த நாளிலே ஜாமின் என்கிற பெயரில் வெளியே வந்து விட்டாதாக "
என போடப்பட்டு இருந்த செய்தினை கண்டவள் வேகமாக தனது போனை எடுத்து தினேஷ் க்கு அழைத்தாள்...

" என்ன தினேஷ் அவனுங்க வெளிய வந்துட்டாங்க "

" என்ன பண்ணுறது இந்திரா எல்லாம் பணம் இருக்குற திமிரு "

" சரி இனி நம்ப வேலைய ஆரம்பிக்கலாம் திவ்யா கிட்ட சொலாலிடுங்க "

" ஓகே டன் "
என்ற போனை வைக்க..

இங்கே இந்திரா தனது காக்கி உடையை தவிரித்து சாதாரண உடையில் சில நாட்டுக்கு தேவையில்லாத களைகளை வேர் அறுக்க கிளம்பினாள்...


நன்றி...

வணக்கம் நட்பூக்களே

கதையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்... இந்த கதை இடையில் ரொம்ப தாமதம் ஆகிவிட்டது.. பொறுத்து படித்தவர்களுக்கு ரொம்ப நன்றி அண்ட் ரொம்ப சாரி டியர்ஸ் தாமதத்திற்கு...
அடுத்த கதை இப்போதே தான் எழுதிட்டு இருக்கேன்.....
அழகான‌ காதல் கதை கண்டிப்பா இந்த கதைய இடையில விட்டு போகமாட்டேன்.. தொடர்ந்து எழுதுவேன் ...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அதற்கு தொடர்ந்து உங்க ஆதரவ தாங்க...

நன்றியுடன்
சிந்தியன்.....
 
Top