All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயாய் ஒரு தென்றல்- கதை திரி

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே.... நான் அனு தினேஷ்.... எனது முதல் கதையை உங்களின் ஆதரவினால் வெற்றிகரமாக முடித்து விட்டேன்..... அதைத் தொடர்ந்து எனது இரண்டாவது கதையில் முதல் டீஸரை இங்கு பதிவிடுகிறேன்....




தீயாய் ஒரு தென்றல்:


முன்னோட்டம்:




போனில் கத்திக்கொண்டிருந்தான் ப்ரதாப்.....




ஆதவா யாரு டா அவ?வீடு தேடி போனவுங்கள அவமானப்படுத்தி அனுப்பி இருக்கா?"-எரிச்சலோடு வினவினான்..
...

"மாயா!"

"மாயா???"


இந்தியன் எக்கனாமியே பார்த்து நடுநடுங்குற ஒரு இன்டஸ்ட்டியலிஸ்ட்!"

"அவ எவளா வேணும்னாலும் இருக்கட்டும்!நீ எதுக்கு அவ வீட்டுக்கு இவனுங்கள அனுப்புன?"



"எல்லாம் அந்த டென்டர் விசயமா!"


"என்ன உளர்ற?"

"ஆமா பிரதாப்!இன்னும் பத்து நாள்ல ஒரு டென்டர் வருது ஞாபகமிருக்கா!"

"ஆமா!நாமக்கூட அந்த டென்டருக்கு கொட்டேசன் அனுப்பிருக்கோமே... !!?!?



"அதே தான்!ஆனா,அதுக்கு மாயா பில்டர்ஸ் கொட்டேஷன் அனுப்பிருக்காங்க.......!"

சோ வாட்?"


தமிழ்நாட்டுல மாயாவை எதிர்க்கிற தைரியம் எவனுக்கும் இல்லை!எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை!தான் ஜெயிக்க எத்தனை பேரை வேணும்னாலும் அழிக்க தயங்க மாட்டா அந்த மாயா!அதுக்காக தான்..."



"விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்ச அனுப்பினியா?"



"நமக்கு வேற வழி இல்லைடா!"


டேய் இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்ல...... போயும் போயும் ஒரு பொண்ணுக்கு பயந்துக்கிட்டு அவகிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க என்று சீறினான்......


"யாருக்கும் அடங்காத பொண்ணு ப்ரதாப்!அவ முன்னாடி எதிர்த்து பேசுற தைரியம் கூட யாருக்கும் வந்தது இல்லை..!"

"ஏ...!"

ப்ரதாப்!பிசினஸ் விஷயமா அவளை யாராலும் எதுவும் பண்ண முடியாது!தயவுசெய்து கோபப்பட்டு காரியத்தை கெடுத்துடாதே!உன்னை நான் கெஞ்சி கேட்டுக்கிறேன்!



ப்ரதாப்பின் முகம் முழுதும் அவ்வளவு எரிச்சல்!!

"நாம நேரா அவ ஆபிஸ் தான் போகணும்!"

"வாட்?பைத்தியமா நீ?அந்த திமிர் பிடித்தவளை தேடி நாம போகணுமா??"

"வேற வழியில்லை ப்ரதாப்! அந்த இடம் நமக்கு வேணும்னா கண்டிப்பா நாம அவள சந்தித்தே ஆகனும்.....


என்னால முடிந்த அளவுக்கு நான் ட்ரை பண்ணிட்டேன்.... நோ யூஸ் ...அவ பேரை கேட்டாலே எல்லாரும் அலறுகிறாங்க!"

"மாயா...மாயா...மாயா..ச்சே!"

"ப்ரதாப் புரிஞ்சிக்கோ... நீ உடனே கெளம்பி வா என்றான்......




"என்னமோ பண்ணு! நான் உடனே கிளம்பி வரேன்...... ஆனா அந்த மாயா மட்டும் கிடைச்சா!எனக்கு இருக்கிற கோபத்துக்கு அங்கேயே அவளை சுட்டு கொன்னுடுவேன்!!"-கோபமாக உரைத்தான் ப்ரதாப்....


ஒரு கால் மீது மறு காலை போட்டு
"சுடு!"-தனது கைத்துப்பாக்கியை மேசை மீது வைத்தாள் மாயா.எதிரில் அமர்ந்திருந்தவன் திடுக்கிட்டு போனான்.

"ஏதோ!என்னை கொல்ல போறேன்னு சொன்னியாம்?"

"மேடம்!நான் அப்படி எல்லாம் சொல்லலை!"

"இன்ட்ரஸ்டிங்!"-என்று அவள் சொடுக்கிட,அந்த அறையில் இருந்த தொலைக்காட்சி உயிர் பெற்றது.

அதில்,

"மாயான்னா என்ன பெரிய இவளா?அவளுக்கு நான்தான்டா எமன்!என் கையால அவளை துடிக்க துடிக்க சாகடிக்கணும்!கேவலம் ஒரு பொண்ணு அவ!அத்தனை பேர் முன்னாடி ஒரு ஆம்பளைன்னு கூட பார்க்காம இடித்ததுக்கு அறைந்துட்டா!"

"ஆமாடா!நான் வேணும்னே தான் அவளை இடித்தேன்!என்ன பண்ணிடுவா அவ?நான் நினைத்தால் அவளை என்ன வேணும்னாலும் செய்ய முடியும்!என்ன வேணும்னாலும்!ஒரு பொண்ணுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது எனக்கென்னடா?"-குடி போதையில் உளறினான் அவன்.

"மேடம்!நான் ஏதோ தெரியாம..மன்னிச்சிடுங்க மேடம்!"

"கன்னை எடுத்து சுடு!"

"மேடம் ஸாரி மேடம்!"

"கன்னை எடு!"-அவள் பொறுமை இழந்துப் போனாள்.

"மேடம்?"-சட்டென அவன் சுதாரிப்பதற்குள் துப்பாக்கியை எடுத்தவள்,அவனது தோள்பட்டையில் இருமுறை சுட்டாள்.

"ஆ...!"என்று அலறியப்படி விழுந்தான் அவ்வாலிபன்.


அங்கு நின்று கொண்டிருந்த பயில்வானை பார்த்து துப்பாக்கியை அவள் நீட்ட,அதனை வாங்கிக் கொண்டான்.

"டிஸ்போஸ்!"-அவள் உத்தரவிட, துப்பாக்கியை இடுப்பில் சொருகிக்கொண்டு அவ்வாலிபனை தூக்கினான் அவன்.....



"மாயான்னா பயம் இருக்கணும்!மறுபடியும் அந்த பயம் குறைந்தா,அடுத்ததா அந்த புல்லட் உன் இதயத்துக்கு பாயும்!"-என்றவள்,அவனை காலால் தள்ளிவிட்டு எழுந்து நடந்தாள்.எவருக்கும் ஆட்படாத அதிகாரமாய்!!!
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Theri teaser akka pakka masss entry to maya samma love you akka
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.... தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீயாய் ஒரு தென்றல்



அத்தியாயம் 1


எப்பொழுதும் கோபம் என்னை தீண்டாமலே....
அகம்பாவம் என் நெஞ்சில்
ஊடாமலே....
ஏளனங்கள் பிறரை நான்
ஏசாமலே....
ஏழைகளின் வயிற்றில் நான்
அடிக்காமலே....
பொய், களவு, சூது ,என்னில் அணுகாமலே...
பொறாமை எனக்கு என்றும்
வராமலே....
ஆணவப்பேய் என்னை
பிடிக்காமலே.....
செல்வத்தால் பிறர் குடியை
கெடுக்காமலே.....
காம,குரோத செயலில் நான்
சிக்காமலே.....
செய்நன்றி நான் என்றும்
மறவாமலே....
வாழ்ந்தாலும்,தாழ்ந்தாலும் நான்
உன்னை தூற்றாமலே.....
வறட்டு கௌரவம் என்
தலையில் ஏறாமலே......
உன் புகழை பாட வேண்டும் சிவநேசா
உன் அடிமை ஆக வேண்டும் சிவநேசா.......




வழக்கமான இறை வழிப்பாட்டில் தன்னைத் தொலைத்திருந்தான் வர்மா.... இறைபக்தி மிகுந்தவன் அவன்!!சிறு வயதில் பெற்றோரை இழந்த அவனுக்கு,அன்பினை வழங்கியது நிர்மலா!அரவணைப்பை வழங்கியது ராமச்சந்திரன்! அவனுக்கு வாழும் நம்பிக்கையை நல்கியது ...எல்லாம் வல்ல கடவுளும் ....அவனின் சுற்றத்தாரும்.....

வழக்கமான வழிப்பாட்டினை பூர்த்தி செய்தவன்,இறுதியாக ஒருமுறை இறையாற்றலை வணங்கி பூஜை அறையை தியாகித்து வெளிவந்தான்......

"ஏ...லூசு!"-அவள் தன் பாதங்களை வெளி வைத்த நொடியிலே அம்ருதாவின் அழைப்பு அவனை சிறைப்பிடித்தது.....


ஏய் வாயாடி என்னடி லூசுங்குற......


பின்ன என்ன அத்தான்....இந்த மாடர்ன் வேல்ட்ல உங்கள மாதிரி ஒரு ஹான்ட்சம்மான பையன் டெய்லியும் ஒரு கல்ல போய் கடவுளா கும்பிட்டுட்டு இருந்தா நீங்க லூசு இல்லாம வேற என்ன..........



ஏம்மா இந்த பிரபஞ்சத்துல ஒரு வயசு பையன் சாமி கும்டுறது தப்பா!!!!



தப்பே இல்லப்பா என்று கூறி கொண்டு அங்கு வந்தார் அவனுடைய செல்ல அத்தை .....நிர்மலா...


போம்மா நீ எப்பவுமே அத்தானுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ என்று சினுங்க....



நான் எப்பவுமே வர்மாக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்.....


என் சப்போட்டும் வர்மாக்கு தான் என்று ஆஜரானார் ராமச்சந்திரன்....


இங்க என்ன நடந்ததுனு தெரியுமா!!! சம்மந்தமே இல்லாம எதுக்கு ஆஜராகுறீங்க என்று அம்ருதா கேட்ட.....

சம்மந்தம் இருக்கு.... இல்ல... அது முக்கியம் இல்லம்மா..... என் பொண்டாட்டி எங்க இருக்காளோ அந்தப் பக்கம் தான் நானும் என்று கூறி அவர் கண்ணடிக்க.......


ஏ அம்ரு பாத்தியா... குத்துக்கல்லாட்டம் நாம நிக்கும்போதே மாமா அத்தையை பார்த்து சைட் அடிக்கிறார்.... அப்போ நாம இல்லாதப்போ என்னெல்லாம் பண்ணுவார் என்று கூறி சிரிக்க.....



அத்தான் கரெக்டு தான்..... இதுக்கு மேல நாம இங்க இருக்கக் கூடாது.... வாங்க நாம எஸ் ஆகிடலாம் என்று அங்கிருந்து நகர்ந்தனர்......



என்னங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.... வர்மாவ இப்படி பாக்குறதுக்கு என்றார் கண்கள் கலங்க .....


ஏய் நிர்மலா இதுக்கெல்லாம் கண் கலங்கலாமா...!! இவங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரம் கல்யாணத்தை முடித்து விட வேண்டியது தான்.... அப்போ உன்னோட சந்தோஷம் டபுள் ஆய்டும்...


நீங்க சொல்றது கரெக்ட் தான்.....இத பத்தி வர்மாகிட்ட பேசனும்.....

அவன்கிட்ட கேக்குறதுக்கு என்ன இருக்கு..... நீ சொன்னா மாட்டேனா சொல்வான்...... நீ சொன்னா ஒரு கழுதையைக் கூட கட்டிப்பான்.....நம் பொண்ணையா கட்டிக்க மாட்டான் என்றார் சிரிப்புடன்....





அவரை முறைத்து கொண்டே.... சரி சரி சீக்கிரம் ரெடி ஆகுங்க..... என்ன ஹாஸ்பிடல்ல ட்ராப் பண்ணிடுங்க..... இன்னிக்கு ஒரு முக்கியமான கேஸ் இருக்கு என்றவர் அங்கிருந்து சென்றார்......



அந்த பங்களாவே அமைதியாக இருந்தது....சிறு ஊசி விழுந்தாள் கூட சப்தம் கேட்பது போல் அவ்வளவு அமைதி......மிக மிக அமைதி....

வீட்டை சுத்தப்படுத்தி கொண்டிருந்தாள் அப்பெண்...அப்போது வீட்டின் மணி ஒலிக்க ....திறந்தவள்...


யார பாக்கணும்.....???

மாயா மேடம்?????



ஒ மேடமா!!!!...இருங்க..நான் போய் மேடம் கிட்ட சொல்லிட்டு வரேன் என்றவள் அவளின் அறையை நோக்கி சென்றாள்....


அப்பெண் அந்த அறையின் கதவை திறந்து மேடம் என்று அழைத்த வேளையில் மெல்ல மூடியிருந்த அவள் நேத்திரம் திறந்தது......




அவ்விழிகள்!!அதில் நிறைந்திருந்தது எல்லாம்,கோபம்!ஆணவம்!அகங்காரம்!வைராக்கியம் மட்டுமே!!இதழ்கள் புன்னகை பூக்கவில்லை.அகம் அதில் எங்கும் மகிழ்ச்சி இல்லை.வதனத்தில் ஒரு வித கம்பீரம்!!காண்போர் எவரையும் மிரள வைக்கும் கம்பீரம்!!எவருக்கும் ஆட்படாத தன்மை!!அதற்காகவே அவள் பிறவி எடுத்தார் போல்!!மனம் சகிக்காத அனைத்தையும் அழிக்கும் அவதாரமாய் இருந்தாள்!காண்பது அனைத்தும் தனக்கே சொந்தம் என்பதில் அவள் மனம் நிலைத்திருந்தது!!இறுதியாக, அங்கு நின்றவளை பார்த்து கோபம் தலைக்கேற அருகில் இருந்த பீங்கானை எடுத்து அவளுக்கு நேரே வீச.....



நின்று கொண்டிருந்த அப்பெண்ணின் தலையை பதம்பார்த்தது.....அவள் அம்மா என்றுகத்த போக...

தன் வாயில் விரலை வைத்து உஷ்...என்க..வந்த வார்த்தை தொண்டையிலே சிக்கி கொண்டது......


அவள் அதற்கு மேல் அங்கு எதுவும் நடவாதது போல் அவள் தன் வேலையில் மூழ்கிப் போக....


சத்தம் கேட்டு மற்றொரு வேலையாள் அங்கு வர.... தலையிலிருந்து ரத்தம் வழிய நின்று கொண்டிருந்தவளை அழைத்துச் சென்றவன்.....


ஏய் உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ......நீ எதுக்கு மேலே போன என்று சிடுசிடுத்தாள்......



அப்போதுதான் அவள் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை காட்ட ......

அந்த பெண் அவர்களை நோக்கி...


"யார் வேணும்?"

"மாயா மேடமை பார்க்கணும்!"

"தனிப்பட்ட விஷயமா?ஆபிஸ் விஷயமா?"

"ஆபிஸ் விஷயம்!"

"அப்படின்னா!இங்கே பார்க்க மாட்டாங்க!நீங்க ஆபிஸ் போங்க!"

"ஹலோ!நாங்க யாருன்னு தெரியுமா?வி ஆர் கம்மிங் ஃப்ரம்..."

"இங்கே பாருங்க!நீங்க யாரா வேணும்னாலும் இருங்க!ஆபிஸ் விஷயத்தை மாயாம்மா வீட்டில பார்க்க மாட்டாங்க!அவங்க வந்தா பெரிய பிரச்சனை ஆயிடும்!தயவுசெய்து போங்க!"-அவர்களில் ஒருவன் தன் கைப்பேசியை எடுத்து யாரிடமோ பேசினான்.

"ஆதவன் சார்!"

"..........."

"இல்லை சார்!மாயா மேடமை பார்க்க விட மாட்றாங்க!"

"............"

"நாங்க எவ்வளவோ சொன்னோம்!ஆபிஸ்ல போய் பார்க்க சொல்றாங்க!"

"..........."

"ஓ.கே.சார்!"-இணைப்பை துண்டித்தான் அவன்.


அப்பெண்ணை நோக்கி திரும்பியவன்,

"ஓ.கே.நாங்க ஆபிஸ்ல போய் பார்த்துக்கிறோம்!அவங்கக்கிட்ட ஆதவன் சார் அனுப்பி வைத்தார்னு சொல்லிடுங்க!"

"ம்..."-இருவரும் வந்த வழியே திரும்பினர்.


அவர்கள் சென்றதும் ஏய் இனிமே மாயாம்மா ரூம் பக்கம் போகாத....அவுங்களா கூப்டா மட்டும் தான் போகனும்...இனிமே எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு செய் என்றவள் அவள் காயத்திற்கு மருந்து போட்டு கொண்டே
"நல்லக்காலம்! நீ புதுசுங்குறதால இதோட போச்சு......இல்லைன்னா,பிரளயம் வெடித்திருக்கும்!சரி...நீ போய் வேலையைப் பாரு!"


"ம்..."-என்றவள் மீண்டும் தனது வேலையை தொடர்ந்தாள்.....



சிறிது நேரத்தில் கீழே வந்தவளுக்கு உணவு பரிமாற சாப்பிட்டு முடித்த பின் அடிபட்ட பெண்ணிடம் வந்து ....... இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து ஹாஸ்பிட்டல் போ என்று விட்டு சென்றாள்.... கையில் இருக்கும் பணத்தையும் செல்லும் அவளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் அப்புதியவள்......


அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் வர்மா.... அப்போது அவனுடைய செல்போன் சினுங்க.... எடுத்துப் பேசியவனின் முகம் கருத்துப் போனது........



ஓகே நான் பேசுகிறேன்.....என்றவன் ஆதவன் என்று நம்பருக்கு அழைத்தான்.... எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டதும்....




போனில் கத்த ஆரம்பித்தான் .....




ஆதவா யாரு டா அவ?வீடு தேடி போனவுங்கள அவமானப்படுத்தி அனுப்பி இருக்கா?"-எரிச்சலோடு வினவினான்..
...

"மாயா!"

"மாயா???"


இந்தியன் எக்கனாமியே பார்த்து நடுநடுங்குற ஒரு இன்டஸ்ட்டியலிஸ்ட்!"

"அவ எவளா வேணும்னாலும் இருக்கட்டும்!நீ எதுக்கு அவ வீட்டுக்கு இவனுங்கள அனுப்புன?"



"எல்லாம் அந்த டென்டர் விசயமா!"


"என்ன உளர்ற?"

"ஆமா பிரதாப்!இன்னும் பத்து நாள்ல ஒரு டென்டர் வருது ஞாபகமிருக்கா!"

"ஆமா!நாமக்கூட அந்த டென்டருக்கு கொட்டேசன் அனுப்பிருக்கோமே... !!?!?



"அதே தான்!ஆனா,அதுக்கு மாயா பில்டர்ஸ் கொட்டேஷன் அனுப்பிருக்காங்க.......!"

சோ வாட்?"


தமிழ்நாட்டுல மாயாவை எதிர்க்கிற தைரியம் எவனுக்கும் இல்லை!எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை!தான் ஜெயிக்க எத்தனை பேரை வேணும்னாலும் அழிக்க தயங்க மாட்டா அந்த மாயா!அதுக்காக தான்..."



"விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்ச அனுப்பினியா?"



"நமக்கு வேற வழி இல்லைடா!"


டேய் இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்ல...... போயும் போயும் ஒரு பொண்ணுக்கு பயந்துக்கிட்டு அவகிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க என்று சீறினான்......


"யாருக்கும் அடங்காத பொண்ணு ப்ரதாப்!அவ முன்னாடி எதிர்த்து பேசுற தைரியம் கூட யாருக்கும் வந்தது இல்லை..!"

"ஏ...!"

ப்ரதாப்!பிசினஸ் விஷயமா அவளை யாராலும் எதுவும் பண்ண முடியாது!தயவுசெய்து கோபப்பட்டு காரியத்தை கெடுத்துடாதே!உன்னை நான் கெஞ்சி கேட்டுக்கிறேன்!



ப்ரதாப்பின் முகம் முழுதும் அவ்வளவு எரிச்சல்!!

"நாம நேரா அவ ஆபிஸ் தான் போகணும்!"

"வாட்?பைத்தியமா நீ?அந்த திமிர் பிடித்தவளை தேடி நாம போகணுமா??"

"வேற வழியில்லை ப்ரதாப்! அந்த இடம் நமக்கு வேணும்னா கண்டிப்பா நாம அவள சந்தித்தே ஆகனும்.....


என்னால முடிந்த அளவுக்கு நான் ட்ரை பண்ணிட்டேன்.... நோ யூஸ் ...அவ பேரை கேட்டாலே எல்லாரும் அலறுகிறாங்க!"

"மாயா...மாயா...மாயா..ச்சே!"

"ப்ரதாப் புரிஞ்சிக்கோ... நீ உடனே கெளம்பி வா என்றான்......




"என்னமோ பண்ணு! நான் உடனே கிளம்பி வரேன்...... ஆனா அந்த மாயா மட்டும் கிடைச்சா!எனக்கு இருக்கிற கோபத்துக்கு அங்கேயே அவளை சுட்டு கொன்னுடுவேன்!!"-கோபமாக உரைத்தான் ப்ரதாப்....




அவசர அவசரமாக கீழே வந்தவன்
,எதிர் வந்தவளை கவனிக்காமல் மோதினான்.

"எருமை மாடு!கண்ணு தெரியலை உனக்கு?"-முந்திக் கொண்டு திட்டினான் அவன்.

"இடித்தது நீங்க?என்னை திட்டுறீங்க?"

"நான் தான் ஆபிஸ் போற டென்ஷன்ல வரேன்!உனக்கு என்ன?"

"ஆமா!ஒரு மொக்க ஆபிஸ்க்கு இவ்வளவு பில்-டப்!"

"ஏ...யார் ஆபிஸை பார்த்து மொக்கன்னு சொல்ற?வர்மா பில்டர்ஸை பார்த்தா,அவனவன் எப்படி நடுங்குவான் தெரியுமா?"


ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அத்தான்......



ஊர்ல உள்ளவன் எல்லாம் என்ன பாத்தா பயப்படுவாங்க...... என்ன பார்த்து பயப்படாதே ஒரே ஆளு நீதாண்டி ......



ஏன் அத்தான் உங்களுக்கு என்ன ரெண்டு கொம்பா முளைச்சிருக்கு...... உங்களை பார்த்து பயப்பட.....



அம்மா தாயே !!!!எனக்கு நேரமாச்சு நான் கெளம்புறேன்....

அத்தான் டிபன் சாப்டலயா.....!!!நான் தான் சமச்சேன்!!!!


அம்மா தாயே!!!எனக்கு கொஞ்ச நாளாவது உயிரோட இருக்க ஆசை....என் ஆசைல மண்ண போட்டுடாத தாயே!!!!



அத்தான்ன்ன்ன்.....என்று பல்லை கடிக்க!!!


சும்மா சொன்னேன்டா அம்ருகுட்டி.....எனக்கு பசிக்கல என்றவன்



அம்ரு அத்தான் ரூம்ம கொஞ்சம் க்ளீன் பண்ணிடுடீ.....


என்னால முடியாது .....எனக்கு நேரமாச்சு நான் ஹாஸ்பிடலுக்கு போகணும் .....



ப்ளீஸ்டி என்றவன் அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு வெளியே ஓடினான்......




ஒரு கணம் திகைத்து பின் சிரித்துக்கொண்டே அத்தானுக்கு இதே வேலையா போச்சு என்று கூறிக்கொண்டு அவனது அறையை நோக்கி சென்றாள்....



சந்திர பிரதாப் வர்மா!!இவனைக் குறித்து ஆராய்ந்துப் பார்த்தால்,தெரிய வருவது எல்லாம் ஒன்றே!!கூர்மையான பார்வை!அதில் சர்வ காலமும் நிறைந்திருக்கும் ஒருவித தேடல்!ஆறடி உயரம்!!கட்டான தேகம்!நேர்கொண்ட நெஞ்சம்!அதில் உறைந்திருக்கும் கம்பீரம்!சிறிது காலமாக இதழோரம் மலர்ந்திருக்கும் கவலையில்லா புன்னகை!இவையனைத்தும் அவனை ஆண்களில் தனித்துக் காட்டியது எனலாம்.
உலகின மிக சாதாரணமான நிகழ்வுகளை எல்லாம் மற்றொரு கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பவன்!!அகிலத்தின் எந்த ஒரு சக்தியாலும் தன் ஆனந்தத்தை பறிக்க இயலாது என்று சிறிது காலமாக நம்பிக்கை கொண்டவன்!!உலகின் அனைத்து ஜீவன்களையும் தனக்கு நிகராக வைத்து மதிப்பவன்!!இயற்கையில் உதித்த அனைத்தையும் காதலிப்பவன்!இது இவனது ஒரு பகுதி!அவன் மனதின் துயர் பகுதியை ஆராய்ந்தால்,தாயினை கருவில் இருந்து பிறந்த உடன் பிரிந்த சோகம்,தந்தையையும் சிறிது காலத்திற்க்கு முன் பறிகொடுத்தவன்......இது போல் அவனது வாழ்க்கையில் வெளிவராமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதி பல!!வர்மா இயல்பாகவே பழி வாங்கும் குணமுடையவன்!!தான் வென்ற சினத்தினை எவரேனும் தூண்டிவிடும் சமயம் எதிர்ப்பவர் எவராயினும் அழித்துவிட்டே மறுவேலை பார்ப்பான்!!இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களுள் ஒருவன் இந்த பிரதாப் வர்மா!!
 
Top