All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயாய் ஒரு தென்றல்- கதை திரி

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்:2



மேடம்!"-ஏதோ கோப்புகளை சரிப்பார்த்து கொண்டிருந்தவள் நிமிர்ந்துப் பார்த்தாள்.

"உங்களை பார்க்க இரண்டு பேரு வந்திருக்காங்க!"-யார் அவர்கள் என அவள் விழிகள் வினவின.


"வர்மா பில்டர்ஸ் எம்.டி!மேனேஜர்-அவளது முகம் இறுகியது!!



"விசிடர்ஸ் ரூம்ல உட்கார சொல்லு!"



"எஸ் மேடம்!"-என்றவன் வெளியேறினான்.கையிலிருந்த கோப்பினை மூடி வைத்தவள்,சில நொடிகள் ஏதேதோ சிந்தித்தாள்.


அப்போது மொபைலில் அழைப்பு வர...எடுத்தவள் எதிரே கூறப்பட்ட செய்தியை கேட்டு நிர்மலான முகத்துடன் வெளியேறினாள்......


ஆதவா செம்ம கடுப்புல இருக்கேன்!நீ வேணும்னா இருந்து பேசிட்டு வா!"




"டேய்!பொறுமையா இருடா!"-இருவரும் பேசிக் கொண்டிருக்க நடுங்க வைக்கும் சிம்மமாய் உள்ளே நுழைந்தாள் மாயா.ப்ரதாப் வர்மாவின் விழிகள் அவள் மேல் ஆழமாக பதிந்தன.ஆணவத்தின் மறுபிறப்பு என்று அனைவரும் கூறுவதில் தவறு இருப்பதாய் தோன்றவில்லை அவனுக்கு!!


நேராக வந்தவள் அவர்களை தாண்டி அடுத்த அறைக்குள் சென்றாள்....


அவளது நடவடிக்கை ஒவ்வொன்றும் வர்மாவின் குருதியை கொதிக்க வைத்தது.....


அவர்கள் கண்ணாடி கதவின் வழியே அவள் சென்ற அறையை பார்த்தனர்......அங்கிருந்த க்ஷோபாவில் அமர்ந்து ஒரு கால் மீது மறு காலை போட்டு
"சுடு!"-தனது கைத்துப்பாக்கியை மேசை மீது வைத்தாள் மாயா.எதிரில் அமர்ந்திருந்தவன் திடுக்கிட்டு போனான்.

"ஏதோ!என்னை கொல்ல போறேன்னு சொன்னியாம்?"

"மேடம்!நான் அப்படி எல்லாம் சொல்லலை!"

"இன்ட்ரஸ்டிங்!"-என்று அவள் சொடுக்கிட,அந்த அறையில் இருந்த தொலைக்காட்சி உயிர் பெற்றது.

அதில்,

"மாயான்னா என்ன பெரிய இவளா?அவளுக்கு நான்தான்டா எமன்!என் கையால அவளை துடிக்க துடிக்க சாகடிக்கணும்!கேவலம் ஒரு பொண்ணு அவ!அத்தனை பேர் முன்னாடி ஒரு ஆம்பளைன்னு கூட பார்க்காம இடித்ததுக்கு அறைந்துட்டா!"

"ஆமாடா!நான் வேணும்னே தான் அவளை இடித்தேன்!என்ன பண்ணிடுவா அவ?நான் நினைத்தால் அவளை என்ன வேணும்னாலும் செய்ய முடியும்!என்ன வேணும்னாலும்!ஒரு பொண்ணுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது எனக்கென்னடா?"-குடி போதையில் உளறினான் அவன்.

"மேடம்!நான் ஏதோ தெரியாம..மன்னிச்சிடுங்க மேடம்!"

"கன்னை எடுத்து சுடு!"

"மேடம் ஸாரி மேடம்!"

"கன்னை எடு!"-அவள் பொறுமை இழந்துப் போனாள்.

"மேடம்?"-சட்டென அவன் சுதாரிப்பதற்குள் துப்பாக்கியை எடுத்தவள்,அவனது தோள்பட்டையில் இருமுறை சுட்டாள்.

"ஆ...!"என்று அலறியப்படி விழுந்தான் அவ்வாலிபன்.


அங்கு நின்று கொண்டிருந்த பயில்வானை பார்த்து துப்பாக்கியை அவள் நீட்ட,அதனை வாங்கிக் கொண்டான்.

"டிஸ்போஸ்!"-அவள் உத்தரவிட, துப்பாக்கியை இடுப்பில் சொருகிக்கொண்டு அவ்வாலிபனை தூக்கினான் அவன்.....



"மாயான்னா பயம் இருக்கணும்!மறுபடியும் அந்த பயம் குறைந்தா,அடுத்ததா அந்த புல்லட் உன் இதயத்துக்கு பாயும்!"-என்றவள்,அவனை காலால் தள்ளிவிட்டு எழுந்து நடந்தாள்.எவருக்கும் ஆட்படாத அதிகாரமாய்!!!.....



நேராக வந்தவள் நாற்காலியில் அமர்ந்தாள்....

"என்ன விஷயம் ?"-கணினியை ஆராய்ந்தப்படி கேட்டாள்.அவளது நடவடிக்கை மேலும் வர்மாவின் குருதியை கொதிக்க வைக்க போதுமானதாக இருந்தது.....



"மாயா!உங்கக்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு வந்திருக்கோம்!"

"டென்டர் விஷயமா?"

"..............."

"டென்டர் விஷயமா?"-அழுத்தமாக கேட்டாள் அவள்.

அவள் நடவடிக்கையில் தூண்டிவிடப்பட்டவன் கொதித்து எழ பார்க்க,அவன் கைகளை பற்றினான் ஆதவன்.கண்களால் அமைதியாகும் படி கெஞ்சினான்.

"எஸ் மாயா!"

"மாயா!ஒரு விஷயம் வேணும்னு முடிவு பண்ணா அதை அடைந்தே தீருவான்னு தெரியாதா?"

"மாயா ட்ரை டூ அண்டர் ஸ்டாண்ட்!எங்களுக்கு அந்த டென்டர் வேனும்!இன்னிக்கு எல்லாம் முடியுற நிலையில இருக்கு!எல்லாரும் உங்களை எதிர்க்க பயப்படுறாங்க மாயா!"

"அதான் உதவி கேட்டு வந்திருக்கியா?"

"மாயா!அந்த இடத்த ஒரு நல்ல விசயத்துக்கு யூஸ் பண்ண தான் கேக்குறோம்......


மாயாவின் பார்வை வெகு நேரமாக அங்கு அவளை முறைத்து கொண்டு அமர்ந்திருந்த வர்மாவின் மேல் மொய்த்தது.ஒருவித ஏளனப் பார்வை அது!!அவனை நோக்கி தன் விரலை சொடுக்கினாள் மாயா!!



அவன் ருத்ர மூர்த்தியாய் நிமிர்ந்துப் பார்த்தான்.

"மிஸ்டர்ஸ்.சந்திர பிரதாப் வர்மா!"-அழுத்தமாக உரைத்தாள் அவள்.

"உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்...!!!.நீங்க இப்படி எங்கிட்ட யாசகம் கேட்டு வருவீங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல..என்றாள் நக்கலுடன்....



அவள் கூறியதில் அதுவரை கடைபிடித்த பொறுமை காற்றில் பறக்க....
"ஏ...!நானும் பார்த்திட்டே இருக்கேன்!பேசிட்டே போற?என்னடி?யார்டி நீ ?எவ்வளவு தைரியம் உனக்கு?நீ பாட்டுக்கும் மரியாதை இல்லாம உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போற?"-கொதித்துவிட்டான் வர்மா.மாயாவின் ஏளன பார்வை அவனை தாக்கியது.



அவள் தனது சுட்டு விரலை தன் இதழ் மீது வைத்தாள்.அவள் நடவடிக்கையில் மேலும் பொங்கியவனை அடக்கினான் ஆதவன்.

"பிரதாப்!என் கூட வா!"வர்மாவை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேற போனவனை பார்த்து விரலை சொடுக்கினாள் மாயா.


"மாயா!"-தடுக்க வந்த ஆதவனை கை காட்டி வெளியே அனுப்பினால் அவள்...



வர்மாவை பார்த்து....
அப்பறம்!வாழ்க்கை எல்லாம் சந்தோஷமா போகுதுன்னு கேள்விப்பட்டேன்!ரொம்ப சந்தோஷம்!மனசு திருப்தியா இருக்கு!"
"அப்புறம் எப்படி இருக்காங்க உங்க ஆருயிர் அத்தை என்றால் நக்களுடன்..... கேள்விப்பட்டேன் அத்தைனா அவ்வளவு உயிராமே!!!!! அவங்க வார்த்தையை மீறி எதுவும் செய்ய மாட்டியாம்!!!!!






ஏ!!!!!!!யாரடி நீ????? விட்டா ரொம்ப பேசிக்கிட்டே போற..... ஒரு ரூமுக்குள்ளே வச்சு ஒருத்தன சுட்டுட்டா !!!!நீ பெரிய ஆளா????



உனக்கு அதுல டவுட்டா!!!!!


ச்சீ......ஆப்ட்ரால் நீ ஒரு பொம்பளை .....உனக்கே இவ்வளவு இருக்குன்னா தி கிரேட் சந்திர பிரதாப் வர்மா.. எனக்கு எவ்ளோ இருக்கும்.... நீ பிச்சை போடுற இந்த டெண்டர் எனக்கு வேண்டாம் டீ......!!!!அத எப்படி வாங்கனுனு எனக்கு தெரியும்....என்றான் அதிகாரமாய்.....



பார்டா!!!அத்தையை சொன்ன உடனே உனக்கு இவ்ளோ கோவம் வருது..!!!!
அவ்வளவு ஸ்பெஷலா அவுங்க உனக்கு!!!!ஏற்றி இறக்கி ஏளனமாய் பார்த்தபடி கேட்க....


ஏய்ய்ய்ய்!!!!நரம்பு புடைக்க..கண்கள் சிவக்க.... கத்தியவன் இமைக்கும் நொடிக்குள் அவள் நெற்றி பொட்டில் தனது துப்பாக்கியை வைத்தான்.......






ஹா..ஹா...ஹா...சுடப்போறியா!!!!சுட்டுடு....
சுடாம விட்டுட்ட பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ......

என்னடி ???ரொம்ப மெரட்டுற...?? உன் மிரட்டலுக்கலாம் பயந்தவன் நான் இல்லை....


ஓ......அப்படியா கூடிய சீக்கிரம் பயப்படுவ..!!!! அப்போ தெரியும் இந்த மாயா யாருனு?? என்றாள் தீவிரமாய்....


ஹாஹாஹாஹா ...மாயா ...மாயா...நான் இதுவரைககும் இப்படி ஒரு ஜோக்க கேட்டதே இல்ல......என்று அடக்க மட்டாமல்
சிரித்தான்......



உஷ்! கத்தாத ...என் பேரை சொல்லி கூப்பிடுற துணிச்சல் உனக்கு வரக்கூடாது!"
இந்த மாயாக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா போதும்,வேரோட அழித்துடுவா! என்னையே எதிர்த்து நிற்கிற உன் சாம்ராஜ்யதாதே தரைமட்டமாக்குவேன்!"என்றாள் ஆங்காரமாய்.....





சீ ....நீயெல்லாம் ஒரு பொண்ணா!!!! நானும் போனா போகுது பொண்ணா இருக்கியேனு பார்த்தா ரொம்ப ஆடுற.....பொண்ணுனா பொறும வேணும்....உன்ன மாதிரி உள்ளவர்களால்தான் பொண்ணுங்களுக்கு உள்ள மரியாதையே கெட்டுப் போகுது என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்..!!!!



ஹாஹாஹாஹ.... நான் பொண்ணா இல்லையான்னு உனக்கு டவுட்டா இருக்கா!!! இதோ பக்கத்துல ரூம் இருக்கு.. போய் செக் பண்ணி பாத்துட்டு சொல்லு என்றால் கொஞ்சமும் கூச்சமில்லாமல்.......




அவள் கூறியதைக் கேட்டு அருவருப்புடன் நீ எல்லாம் ஒரு பொண்ணு.... ச்சி ச்சி தப்பா சொல்லிட்டேன்....நீதான் பொண்ணே இல்லையே!!!!!பொண்ணு ரூபத்துல இருக்குற கேவலமான ஜந்துடி .....உன்னல்லாம் தொட்டாலே பாவம்டி என்றவன் கோபமாய் அவளை முறைத்து விட்டு செல்ல எத்தனிக்க.....



சட்டென அவனது முகத்திற்கு நேரே சென்று....
கேவலமான ஜந்துவா?மாயானா அவ்வளவு இளக்காராமா உனக்கு?இன்னிக்கு உனக்கு எமனா வந்திருக்கிறது அதே பொண்ணு தான்டா!ஏன்டா,மாயான்னா என்ன சாதாரணப் பொண்ணுன்னு நினைத்துட்டியா?ஒட்டுமொத்த திமிரையும் எனக்குள்ள அடக்கினவடா நான்!நீ இன்னிக்கு எங்கிட்ட மோதி பெரிய தப்பு பண்ணிட்ட.....அதுக்கு தண்டனை நீ அனுபவிச்சே ஆகனும்.....!!!என்ன சொன்ன என்ன சொன்ன..என்ன தொட்டா பாவமா!!!!இனிமே என்ன தொடுற முழு அதிகாரமும் உனக்கு மட்டும் தான்..!!!!உனக்கு கல்யாணமுனு ஒன்னு நடந்தா அது என்கூட தான் என்றாள் .....நிமிர்வாய்


அதையும் பாக்கலாம்டி.!!!!!என்றவன் அறையை விட்டு வெளியேறினான்......


துணிச்சலோடு தன்னை எதிர்த்தவனின் பால் அவள் மனம் பகையை வளர்த்துக் கொண்டிருந்தது.....


நேரம் கடக்க,அது அவளது விழிகளை சிவக்க வைத்தது......


அவளையுமறியாமல் அவளது வாய் உச்சரித்தது அந்த வார்த்தையை "உன்ன அழிக்காமல் விடமாட்டேன்" என்று......




என்ன உங்களுக்கு?கொஞ்ச நாளாவே ஏன் இப்படி வித்தியாசமா பண்றீங்க?"-சற்றே கோபமாக வினவினாள் அம்ருதா.

"இப்படி உட்கார்!"-எதிரில் இருந்த ஆசனத்தை சுட்டினான் வர்மா.

கோப மூச்சை விடுத்தவள்,அவன் எதிரே அமர்ந்தாள்.


"பொண்ணுன்னா எப்படி இருக்கணும்?"

"ஆ..??"-திடீரென்று அவன் விடுத்த வினா அவளை திடுக்கிட வைத்தது.



"டோன்ட் மிஸ்டேக்!எப்படி நடந்துக்கணும்?"

"எப்படி நடந்துக்கணும்?"

"அடக்க ஒடுக்கமா இல்லைனாலும்,அன்பா பழகணும்!அறிவா இருக்கணும்!மொத்ததுல உன்னை மாதிரி இருக்கணும்!"-அவனது புகழ்ச்சி அவள் முகத்தை மலர வைத்தது.

"ஆனா!அவளும் இருக்கா பாரு..!பத்ரகாளி!!பொண்ணா அவ!"

"யாரு?"

"அந்த மாயா!என்னை...நல்லாக் கேளு !கமிஷ்னர்ல இருந்து கலெக்டர் வரைக்கும் மரியாதை கொடுக்குற உன் அத்தானை எப்படி அவமானப்படுத்துனா தெரியுமா?"-என்று நிகழ்ந்த நிகழ்வை விளக்கினான் வர்மா.அதைக்கேட்டவள் பட்டென சிரித்துவிட்டாள்!"

"என்னடி சிரிக்கிற?"


"ஒண்ணுமில்லை..மேலே!"

"அவளை..அவளை நான் சும்மா விடமாட்டேன்!"

"மாமா!"-அவனது கரத்தை இறுகப் பற்றினாள் மித்ரா.

"எதுக்கு இந்தப் பகை??விடுங்க..!அதான் எல்லாம் முடிந்ததுல!"

"அம்ரூ..!"

"மாமா!சில நேரத்துல நம்ம சந்தர்ப்ப சூழ்நிலை கூட நம்மை தவறு செய்ய தூண்டலாம்!"



"அது சரி!விட்டுக்கொடுப்பியா நீ?நீயும் பொண்ணு தானே!அதான் சப்போர்ட் அங்கே போகுது!"


"நான் ஒண்ணும் யாருக்கும் சப்போர்ட் பண்ணலை!அது சரி,அம்மாவ மாயாக்கு எப்படி தெரியும்....உங்களையும் தெரிஞ்சிருக்கு.???




அதானே!!!!!அத்தையையும் தெரிஞ்சிருக்கு....
"ஏ..அம்ரூ எனக்கு நல்லா ஞாபகமிருக்கு!எனக்கு மாயான்னு யாரையும் தெரியாது!


"பேசாம அம்மாகிட்ட கேட்கலாமா???!"




"அதான் பண்ணணும்!விடியட்டும் அத்தைகிட்ட கேக்குறேன்!"

"நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க!முதல்ல சாப்பிட வாங்க!"

"என்ன சமையல்?"

"ம்..விஷம்!"

"நீ கொடுத்தாலும் கொடுப்படி!போ வரேன்!"-மெல்லிய புன்னகையை விடுத்தவள்,அங்கிருந்து நகர்ந்தாள்.தனிமையில் விழிகளை மூடியவனின் நினைவுகளில் மாயாவின் செய்கை வந்து போனது....



"திமிர் பிடித்தவள்!கடைசி வாய்ப்பு!மறுபடியும் எதாவது நடக்கட்டும்....தொலஞ்சா அவ!! என்றவன் கோபமாய் தனது கைகளை மேஜையில் குத்தினான்......
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 3







நிலா!நான் சொல்றதைக் கேளும்மா!என் மேலே எந்தத் தப்பும் இல்லை!"-பிரிந்து செல்ல நினைக்கும் தன் மனைவியை இயன்றவரை தடுக்க முயன்றாள் அவர்....


"ச்சீ..கையை விடு!எனக்கு அருவருப்பா இருக்கு!"-கரம் தீண்டிய கணவனின் கரத்தினை உதறினார் அவர்.....


"நான் சொல்றதைக் கேளு!என் மேலே எந்தத் தப்பும் இல்லை!தயவுசெய்து போகாதே!ந...நம்..நம்ம பொண்ணுக்காகவாது இரும்மா!அம்மா இல்லாம அவ வளரக் கூடாது!உன்னை நான் கெஞ்சி கேட்கிறேன்!"-அப்பெண்மணி சுவரோரம் அச்சத்தோடு ஒட்டி இருந்த தன் புதல்வியின் மேல் ஒரு அக்னிப் பார்வையை வீசினார்.....



"உன் பொண்ணு தானே!அவளும் இனி உன்னை மாதிரி தான் வளர்வா!எனக்கு அப்படிப்பட்ட அவமானம் தேவையே இல்லை!"-என்றவர் பதிலுக்கு காத்திராமல் அவரது அருகே சென்று அவர் காதினில் ஏதோ கூற......


அதனை கேட்டு அதிர்ச்சியாகி ஸ்தம்பித்து போனவர் ....அடுத்த நொடி தன்னை சுதாரித்து கொண்டு
இவ்வளவு கேவலமானவளா நீ?ச்சே...!இனி நான் உனக்கு கணவனும் இல்லை!நீ எனக்கு மனைவியும் இல்லை!உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை ....என்று கூற மழை பெய்வதை கூட பொருட்படுத்தாமல் சென்றாள் அவள்....


தன் காதல் பொய்த்து போனதில்
செய்வதறியாது நின்றிருந்தவரின் கால்களை வந்து கட்டிக்கொண்டாள் அவரது ஆருயிர் புதல்வி!!





"பா!"-அவளது அழைப்பில் நொடிந்துப் போய் மண்டியிட்டார் அவர்.தன் தந்தையின் கண்ணீரை துடைத்தவள்,

"அழாதீங்கப்பா!நான் இருக்கேன்!"என்றாள்.துக்கம் இதயம் முழுதும் வியாபிக்க,தன் புதல்வியை இறுக அணைத்துக் கொண்டார் அவர்.

அம்மா அப்பாவ விட்டு போகாதீங்க.....போகாதீங்க ...என்று தூக்க கலக்கத்தில் புலம்ப...அவளை அணைத்து ஆறுதல் கூற கூட யாரும் இல்லை.....


ஏய் சுதந்திரா...எந்திரிடி என்று அவள் முகத்தில் நீரை ஊற்றினாள் கனகா....

முகத்தில் நீர் பட்டதும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள் திருதிருவென விழித்தாள்.....

என்னடி தூக்கத்துல பொலம்புற..
கனவுல எவன் கூட ஆடிப்பாடிக்கிட்டு இருந்த....


ஐயோ அத்தை அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றால் பாவமாய்.....


என்னது அத்தையா!!!!! என்று அவளை எட்டி உதைக்க .....



ஐயோ !!!!மன்னிச்சிடுங்க மேடம் தெரியாம சொல்லிட்டேன்....... என்றாள் வந்த அழுகையை அடக்கியபடி......


இங்க பாருடி இன்னைக்கு என் மகன் வரான்... அவனோடு ரூம் எல்லாம் கிளீன் பண்ணிடு... அப்புறம் அவனுக்கு பிடிச்ச சமையல் எல்லாம் நான் சொல்றேன் அதையும் சமைச்சு வச்சுடு..... அதை முடிச்சிட்டு கொள்ளப் பக்கம் அழுக்கு துணி எல்லாம் இருக்கு அதையும் தொவச்சி போட்டுடு....





மே...ட....ம்... இன்னைக்கு பரிச்சை ஸ்டார்ட் ஆகுது...... இதெல்லாம் பண்ணிட்டு போக லேட்டாயிடும்....
பரிட்சை எழுதிட்டு வந்து எல்லா வேலையும் செய்யட்டுமா!!!!! என்று திக்கித் திணறி கூற.....



ஆமா!!! இவ பெரிய கலெக்டர் எக்ஸாம் எழுத போறா.....!!! பத்தாங்கிளாஸ் பரிட்சை எழுத இவ்வளவு அளப்பறை....... ஒழுங்கு மரியாதையா நான் சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டு அப்புறமா பள்ளிக்கூடத்துக்குப் போ.... என்று கூறிவிட்டு சென்றவர்.... ஒரு நிமிடம் நின்று அவளிடம் திரும்பி...


இதோ பாரு டி.... ஊரிலிருந்து என் பையன் வர்றான்..... அவன் கிட்ட ஏதாவது பேச்சு வச்சுக்கிட்ட உன்னை கொன்றனு போட்டு விடுவேன்......அவன் திரும்பி போறவரைக்கும் அவன் கண்ணில் நீ படக்கூடாது...!!!! புரியுதா!!!!!


" ம்"என்று தலையாட்டினாள் .....



என்ன மசமசன்னு முழிச்சுக்கிட்டே உட்கார்ந்து இருக்க.... எழுந்து போய் வேலையை பாரு... என்று கூறி விட்டு சென்றார் ......



தன் நிலையை நினைத்து சுதந்திராவிற்கு கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது...... ஏம்பா!!! நீங்களும் என்னை விட்டு போனீங்க .....கூடவே என்னையும் கூட்டிட்டு போய் இருக்கலாமே!!!! இப்போ பாருங்கப்பா!!!! இவங்க என்னெல்லாம் பேசுறாங்க.... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா!!!! நீங்க என்ன சொன்னீங்க ....அத்தை உன்ன நல்லா பாத்துப்பானு தான சொன்னீங்க.... ஆனா நீங்க இருக்கிற வரைக்கும் என்ன நல்லா பார்த்துக்கிட்டாங்க... ஆனா நீங்க இறந்த பிறகு அவங்க ரொம்ப மோசமா நடந்துக்குறாங்க பா !!!!என்று நினைத்து கண்ணீர் வடிக்க....


கண நேரத்தில் தன் தோளை யாரோ ஸ்பரிசிப்பதாய் ஒரு உணர்வு ஏற்பட,திடுக்கிட்டு திரும்பினாள்.அதே புன்னகை மாற முகத்துடன்,நின்றிருந்தார் ரத்னாகர்.

"பா!"-அவர் அவளது கண்களைத் துடைத்தார்.


" அம்மூ ஏன்டா அழற?"

"பா!இங்க நடக்குறத எல்லாம் நீங்க பாக்குறீங்க தானே!"




அம்மு!!!!நான் தான் முதல்லயே உன்கிட்ட சொன்னேன்ல?வாழ்க்கையில கஷ்டம் வரும்போது கலங்கி நின்றால்....வாழ்க்கையை வாழுற தகுதியை நாம இழந்துவிடுவோம்...சந்தோஷத்தைவிட,கஷ்டத்தை தான் நாம சந்தோஷமா எதிர்ப்பார்க்கணும்...ஏனென்றால்...சந்தோஷம் நமக்கு வாழ்க்கையை அனுபவிக்க சொல்லுது.கஷ்டம் நம்ம வாழ்க்கையோட அனுபவத்தை சொல்லுது! புரியுதா?"

"ம்"என்று தலையாட்டியவள்
அப்பா!"-அவரை அணைக்க அவள் முயல,அதற்குள் காற்றோடு காற்றாய் கலந்தது அவர் உருவம்!!

"பா!"-கண்ணீரோடு மண்டியிட்டாள் .அப்போது



டிங் டிங் என்று கடிகாரம் ஒலி எழுப்ப அதனை பார்க்க மணி 6 ஆகியிருந்தது..... அதற்குமேல் உட்காராமல் அரக்கப் பரக்க எழுந்து ஓடினாள் சுதந்திரா.....





வானம் மெல்ல கருமை படிந்துக் கொண்டிருந்தது..!

ஈரப்பதம் நிறைந்த சில்லென்ற காற்று அந்தக் காலை வேளையிலும் சூரியனை துயில் கொள்ள வைத்து வீசியது.

மேகங்கள் எல்லாம் ஒன்றுக்கூட சமயம் வந்ததும்,வானில் இருந்து துளித்துளியாய் ஜீவன் மண்ணுலகை நோக்கி வந்துக் கொண்டிருக்க,ஆட்கள் குறைந்துக் காணப்பட்ட அந்தச் சாலையில் உறுதியாக பதிந்தன வர்மாவின் அவனது காலடி தடங்கள்!!


இயற்கையின் அந்த அற்புதச் சூழலை உள்வாங்கியப்படி நடந்தான் அவன்.இதமான தென்றல் காற்று அவன் உள்ளத்தை வருடியப்படி செல்ல,மூச்சை நன்றாக இழுத்துவிட்டான்..மெல்ல சாரல் வலுப்பெற்று மழையாய் மாற,அவ்வளவு நேரமும் தன்னை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவன்,தன் மனக்கட்டுப்பாட்டை தகர்த்தறிந்தான்.ஆள் அரவமில்லாமல் தனித்திருந்த அச்சாலையில் தன்னை பால்ய பருவத்திற்கே அழைத்து செல்லும் சாரல் மழையை இருக்கரம் நீட்டி வரவேற்றான் வர்மா!!அவன் எதைக் குறித்தும் சிந்திக்கவில்லை.சிந்திக்கவும் அச்சமயம் அவனுக்கு அவசியமில்லை,தன் மனதிற்கு பிரியமான மழையை அன்போடு வரவேற்றான் அவன்.அவன் தாளத்திற்கேற்ப ராகமாய் பாடியது மழையும்!!இயற்கையாய் உதிக்கும் ஆகாயகங்கையில் தன்னை முழுதாக கரைத்தான் அவன்.நேரம் கடக்க,மழையின் அளவும் கரைந்தது,அவன் ஆட்டத்தின் அளவும் குறைந்தது!!தனது கை கடிகாரத்தைப் பார்த்தான் வர்மா.மணிஒன்பது!!


அலுவலகத்திற்கு நேரமானது!!அரக்கப்பறக்க ஓடிச்சென்று தன் காரில் ஏறினான் அவன்...

இந்த வர்மா காலையிலே எங்க போனானு தெரியல....


"அம்ரூ! வர்மாவ பார்த்தீயா?"-காபிக் கோப்பையை ராமசந்திரனிடம் கொடுத்து கொண்டே கேட்டார் நிர்மலா.....


"இங்க தான் எங்காவது இருப்பார் !"

"இல்லையே!வீடு முழுக்க தேடிட்டேனே!"

"இவன் பின்னாடியே யாராவது ஓடணும் போல!வரட்டும் அவனுக்கு இருக்கு!என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான்....


வர்மா என்னப்பா இது...இப்படி நனஞ்சி போயி வந்துருக்க ...உடம்புக்கு முடியாம போனா என்ன பண்றது என்றவர் அவனை அமர வைத்து அவனது தலையை துவட்டி விட்டார்....


அப்படி எதாவது நடந்தா பாத்துக்க தான் அன்பான என்னோட அத்தை இருக்காங்களே!!!!


அதுவும் சாதரண அத்தையா!!!..டாக்டர் அத்தை என்றாள் அம்ருதா சிரித்து கொண்டே....!!!!


கரெக்டா சொன்ன அம்ரூ..அத்தை இருக்கும்போது எனக்கென்ன கவலை என்று கூறி நகைத்தான்.....

வர்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...!!!

தாராளமா பேசலாமே!!??

இல்லை...நான் உன் கல்யாணம் விஷயமா பேசனும்!"

"சமாதி கட்ட பார்க்குறீயா ஒருவாட்டி ஏமாந்தது பத்தாதா மறுபடியும் நான் ஏமாற தயாராக இல்லை என்று வெறுப்புடன் கூறியவன்....!!!என்ன துரோகம் பண்ணேன் உனக்கு?" என்று சிரிப்புடன் முடித்தான்....

"அப்படியே போட்டேன்னா!என்னடா பேச்சு இதெல்லாம்?" எவளோ ஒருத்தி உன்னை ஏமாத்திட்டு போனதுக்காக கல்யாணமே பண்ணிக்காம இருப்பியா!!!!

"சரி...டென்ஷன் ஆகாதே!!"

"அம்ரூ பற்றி என்ன நினைக்கிற?"


அவ ஒரு "லூசு!"

"ஏ...!"

"வேற என்ன சொல்ல சொல்ற?"

"அவளை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"-அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.


"அத்தை!"

"சொல்லுடா!"

"எனக்கு அந்த எண்ணம் இருந்திருந்தா,என்னிக்கோ அவளை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்!"

"டேய்!"

"அத்தை!அம்ரூ என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட் !நான் அவளை டீஸ் பண்ணுவேன்!கிண்டல் பண்ணுவேன்!ஆனா இதுநாள் வரை தவறான கண்ணோட்டத்துல அவளை பார்த்தது இல்லை!"

"ஆனா!"

"நீ அம்ருகிட்ட கேட்டாலும் இதே பதில் தான் என் செல்லமும் சொல்லுவா பாரேன்!"

"போடா!அப்போ எப்போ தான் கல்யாணம் பண்ணிப்ப!"

"ஐயா லவ் மேரேஜ் தான்!நீ வேணும்னா உன் மகளுக்கு ட்ரை பண்ணு!"

"லவ்வா??யாருடா?யார்டா அந்தப் பொண்ணு?"

"இன்னும் கண்டுப்பிடிக்கலை!"

"அடச்சே..!சுத்த தண்டம்!"

"அத்தை !"

கழுத வயசாகுது!இன்னும் ஒரு பொண்ணைக் கூட லவ் பண்ணலை!வெட்கமா இல்லை!"

"நானா பண்ண மாட்றேன்!அமைய மாட்டுது!"

"எப்படி அமையும்?இப்படி தாடியும் மீசையுமா இருந்தா !!!அதிகப்பட்சமா அடுத்த வருட பிறந்தநாள் வரை டைம் தரேன்!அதுக்குள்ள கல்யாணம் பண்ற வேலையை பாரு!இல்லை..."

"என்ன பண்ணுவ?நீயே பார்த்து.வைத்துடுவியா?"

"எனக்கு வேற வேலை இல்லை?சாமியாரா போடான்னு துரத்தி விட்டுவிடுவேன்!ஜாக்கிரதை!"-என்றார்....


டேய் வர்மா!உனக்கு எதிரி வெளியே இல்லடா!ம்...நமக்கானவள் எங்கே இருக்காளோ!எப்படி இருக்காளோ!உயிரோட இருக்காளா?இல்லை தற்கொலை எதாவது பண்ணிட்டாளான்னு தெரியலையே!"-அவனிடம் இருந்து ஏக பெருமூச்சு ஒன்று வெளியானது.....


அப்போது அவனுக்கு மாயா கூறியது நினைவு வர ...அத்தை உனக்கு மாயானு யாரையாவது தெரியுமா!!!!


மாயா என்ற பெயரைக் கேட்டதும் அவருள் சிறு தடுமாற்றம்......இ...இ.. இல்...லையே எ..எ...என...க்கு அப்படி யாரையும் தெ..தெ..தெரியாது....எ..து...க்கு கேக்குற....


அவரின் தடுமாற்றத்தை கவனித்துக்கொண்டே.... சும்மாதான் கேட்டேன் .... என்றவன் ஆபீஸ்க்கு டைமாச்சு என்று கூறிவிட்டு தனது அறையை நோக்கி சென்றான்





ஆதவா

"..............."


டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடியா!!!


"................"


குட்!மீட்டிங் அரெஞ்ச் பண்ணு!15 நிமிடத்தில் வந்துடுவேன்!"-என்று இணைப்பைத் துண்டித்தான் வர்மா...



மாயா பேரை சொன்னதும் அத்தைக்கு ஏன் இவ்ளோ பதட்டம் ..... நிர்மலாவின் தடுமாற்றம் அவனுக்கு புதிதாய் இருந்தது.....!!!

அப்போது அவனது கைப்பேசி மீண்டும் ஒலிக்க அதனை உயிர்ப்பித்தான்.

"சந்திர பிரதாப் வர்மா!"

"............"

"ஹலோ!"

"............."

"யாரது?"

"கோபத்துல கூட அழகா பேசுறீயே செல்லம்!"-மாயாவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டான் அவன்..



"உன் கூட பேசாம!சண்டை போடாம நிம்மதியாகவே இல்லை!அதான் உன் நம்பரை வாங்கி போன் பண்ணிட்டேன்!"

"என்னௌட நம்பர் எப்படி கெடச்சது????

மாயா நெனச்சா இந்த உலகத்தில் முடியாதது எதுவுமே இல்லை!!!!ஆப்ட்ரால் ஒரு நம்பர் வாங்கறதா கஷ்டம்..!!!




"ஐயோ!அப்படியா....!! என்று நக்கலாக கூறிவிட்டு !!! சட்டென இணைப்பை துண்டித்தான்


சில நொடிகளில் மீண்டும் அழைப்பு வந்தது.

"என்ன வேணும் உனக்கு?"

"ஒருமுறை கோபமா பேசு!"

"மாயா!நீ யார்கிட்ட விளையாடுறோம்னு தெரியாம விளையாடுற!"

"தெரியாமலா கோல் பண்ணிருக்கேன்!"



"என் நேரத்தை வீணாக்காதே!"
கைப்பேசியில் சண்டையிட்டப்படி இருக்க....

அவள் எதோ கூற வாயெடுப்பதற்குள்.....

"ஆ..!"என்ற அலறல் சத்தத்தோடு எங்கோ போய் விழுந்து அவனின் மொபைல்.

"வர்மா!"-அதிர்ந்துப் போய் கத்தினாள் மாயா.
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 4




வர்மா பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது காலில் ஏதோ ஊர்வது போல் இருக்க கீழே குனிந்து பார்த்தவன் அங்கே அம்ரூவின் செல்ல பிராணி அவனது காலை நக்கி கொண்டிருந்தது..அவனை பார்க்கும் போதெல்லாம் குறைத்து கொண்டு அவனை முறைத்து கொண்டே திரியும்.....அதனால் அவன் அதன் அருகில் கூட செல்ல மாட்டான்...அதுவும் இல்லாமல் சிறு வயதிலிருந்தே நாய் என்றால் அவனுக்கு பயம்....
தன் காலை நக்கியதும் அதிர்ந்து போய் ஆ என்று அலற கையிலிருந்த போன் நழுவி கீழே விழுந்து அணைந்து போனது....




அவனது சத்தத்தை கேட்டு அம்ருதா அடித்து பிடித்து ஒடி வர அங்கு அவள் கண்ட காட்சியில் வயிற்றை பிடித்து கொண்டுசிரித்தாள்....


வர்மா கட்டிலில் அமர்ந்து கொண்டு ஸ்ஸு ஸ்ஸு என்று விரட்ட அது அவனை முறைத்து கொண்டே நின்றது....அவன் அம்ருதாவை பார்த்ததும் செல்லம் பிளீஸ்டி அத்தான காப்பாத்துடி.....இத இங்கிருந்து கூட்டிட்டு போ என்று கெஞ்சினான்.....


எவ்வளவு பெரிய தொழிலதிபர் நீங்க... உங்கள பார்த்தா கமிஷ்னரிலிருந்து கலெக்டர் வரைக்கும் பயப்படுவாங்கனு சொன்னீங்க....நீங்க ஒரு நாய்க்கு பயந்து இப்படி கத்துறத பாத்தா என்ன நினைப்பாங்க அத்தான்.....என்று கூறி மேலும் சிரிக்க....


எல்லாரும் என்ன பாத்து பயப்படுவாங்க...ஆனா எனக்கு இத பாத்தா பயம்..பீளீஸ் அம்மு இத இங்கிருந்து கூட்டி போ....


சரி சரி என்று அதை அழைத்து சென்றாள்...




சிறிது நேரத்திற்கு பிறகு அவன் கீழே இறங்கி வர அங்கு அமர்ந்திருந்தவளை பார்த்து அதிர்ந்து போனான்...ஒரு கால் மேல் மறு கால் போட்டு வரும் அவனையே ஏளனத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் மாயா.....


அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ந்தவள் அடுத்த நொடி அவனது வீட்டில் இருந்தாள்....


அங்கு அம்ருதா தன் பெற்றோரிடம் கூறி சிரிக்க... அதை கேட்டு கொண்டே வந்தவள் அங்கு இருப்பவர்களை கண்டு கொள்ளாது கால் மேல் கால் போட்டு ஒருவித அதிகாரத்துடன் அமர்ந்திருந்தாள்....!!!



இவர்கள் மூவரும் அவளது செய்கையை பார்த்து யாரிவள் என்று அதிர்ச்சியோடு அமர்ந்திருக்கும் நேரம் வர்மா கீழே வந்தான்.....



ஏய்!!! நீ எப்படி இங்க ... ....யாரு இவள உள்ள விட்டது.... முதல்ல இங்கிருந்து போ என்று கத்தினான்.....


போங்க மாமா உங்க சத்தத்தை கேட்டு நான் என்னமோ ஏதோன்னு பயந்து போய் வந்தேன் தெரியுமா!!!!!......


அவள் கூறியதை கேட்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..எனக்கு ஏதோ ஆபத்துனு நெனச்சி ஒடி வந்துருக்கா....இவ கொஞ்சமே கொஞ்சம் நல்லவ தான்.... என்று நினைத்தவன் தன் மனம் போகும் போக்கை கண்டு அதிர்ச்சியானான்.... ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு...
ஏய் !!!யாருக்கு யாருடி மாமா!!!..என்ன அப்படி கூப்ட உனக்கு எந்த உரிமையும் இல்ல....




தி கிரேட் பிரதாப் வர்மா உங்க வீரம் எல்லாம் எங்கிட்ட மட்டும் தானா மாமா !!!!உங்க வீட்டு நாய் கிட்ட எல்லாம் அந்த வீரம் பலிக்காது போலவே !!!!என்று கூற அங்கு அமர்ந்திருந்த அம்ருதாவை ஒரு தீ பார்வை பார்த்தான்.......



அவள ஏன் மொறக்கிற....அவ எதுவும் சொல்லல..... நான் உள்ளே வரும் பொழுது அவங்க பேசிகிட்டு இருந்தாங்க நான் கேட்டேன் என்றாள் கூலாக......



இப்படி அடுத்து வீட்டுக்குள்ள வந்து ஓட்டு கேட்க உனக்கு வெக்கமா இல்ல..!!!!!



அடுத்த வீடா???? என்னோட வருங்கால புருஷனோட வீடு!!! நான் வர்றதுக்கு எதுக்கு வெக்கப்படனும் ...!!!!




ஏய் போதும் நிப்பாட்டு..!!!! என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு என்று கர்ஜித்தான்......



இருவருக்கும் நடக்கும் சண்டையை பார்த்து மூவரும் ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்......


வர்மா!!!!யார் இந்த பொண்ணு என்றார் நிர்மலா.... .



மாயா!!!

மாயா..???


ஏன் இதுக்கு முன்ன இந்த பேரை கேட்டதில்லையா..!!!அவள் அவரை கூர்மையுடன் நோக்க....




இதோ பாரும்மா நீ யாருன்னு எனக்கு தெரியாது..!!!! உன்னை நான் பார்த்தது கூட இல்லை..!! நீ யாரு மா என்று அன்பாய் வினவ......



அதுவரை அமைதியாக இருந்த மாயா வெகுண்டெழுந்தாள்.... தெரியாதா!!!!! என்ன உனக்கு தெரியாது???? யோசிச்சு பாரு !!!!நல்லா யோசிச்சு பாரு!!!! அப்ப தெரியும் இந்த மாயா யாருன்னு என்றாள் அக்கினிப் பிழம்பாய் மாறி.....




ஏய்!!! யார் வீட்டில் வந்து யாருகிட்ட திமிரா பேசுற என்றவன் அவள் கழுத்தை பிடித்து நெறித்தான்.....


வர்மா!!!!! இது என்ன புது பழக்கம்... பொண்ணுங்க மேல கையை வைக்கிறது..முதல்ல கையை எடு...என்றார் அதட்டலாய்...




பாத்தியாடி!!! இதுதான் என்னோட அத்தை.... தப்பு செஞ்சவங்களாவே இருந்தாலும் மன்னிக்கிறது தான் அவங்களோட பழக்கம்..... இதெல்லாம் உனக்கு எங்கே புரிய போகுது!!!! நீ தான் பொண்ணு ரூபத்தில் இருக்கிற ஒரு அரக்கியாச்சே!!!!!



போ மாமா.... சும்மா அரக்கினு சொல்லாத!!!? என்னதான் இருந்தாலும் நீ என் கூட வாழனும் தானே!!!?? உன் பொண்டாட்டிய பார்த்து இப்படி சொல்லலாமா!!!!! என்றால் நக்கலுடன்.....




ஒரு வாட்டி சொன்னா உனக்கு புரியாதா!!?? நீ நினைக்கிற எதுவுமே நடக்காது......




அதையும்தான் பார்க்கலாமே !!!!!



இங்க பாருமா நீ ஏன் இங்கே வந்து இப்படி பேசிகிட்டு இருக்க என்று கேட்டார் ராமச்சந்திரன் .....




வாங்க வாங்க வாங்க மிஸ்டர் பொண்டாட்டி தாசரே..... இவ்வளவு நேரம் அமைதியா தான இருந்த... அதேபோல இப்பவும் ஒரு ஓரமா உட்கார்ந்துக்க...... அதுதான் உனக்கு நல்லது என்றாள்.....




அவள் கூறியதை கேட்டு வர்மாவின் கண்கள் சிவந்து போனது..... உனக்கு இதுக்கு மேல மரியாதையே இல்லை என்றவன்... தன் ஒட்டு மொத்த பலத்தையும் திரட்டி ஓங்கி விட்டான் ஒரு அறை....



தொப்பென அங்கிருந்த சோபாவில் சரிந்தாள்....



வர்மா !!!!என்ன இது என்று நிர்மலா கோபமாய் கத்த ......


ஹலோ ஹலோ லவ்வர்ஸ்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும்...... இப்போ அடிக்கிற என்னோட மாமா கொஞ்ச நேரம் கழிச்சு என்னை கட்டி புடிச்சுப்பாரு....நீ எதுக்கு குறுக்க வர..... என்று அவரைப் பார்த்து முறைக்க......




இதோ பாரும்மா நீ ரொம்ப ஓவரா போற..... இத்தோட நிறுத்திக்கோ இல்லை பின்விளைவுகள் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும்.....




பார்டா!!!! என்ன கொன்னுடுவியா!!!




அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா அதையும் நான் செய்வேன் என்றான் ருத்ரமூர்த்தியாய்......





மாமா...மாமா...என்ன பிரச்சினை உனக்கு....... நான் இங்கே உன்னோட அத்தை கிட்ட தான பேசிகிட்டு இருக்கேன்..... நீ எதுக்கு குறுக்க வர்ற..... ஒரு ஓரமா நின்னு என்ன பேசுறோம்னு கேளு.... அதை விட்டுட்டு சும்மா தையதக்கனு குதிக்குற ......




ஏய்!!!!உனக்கு ஒருவாட்டி சொன்னா அறிவு இல்லை .....நான் மறுபடியும் சொல்றேன்..... நீ நினைக்கிறது ஒருபோதும் நடக்காது.....



ஏன் நடக்காது..!!!!



ஏன்னா இதோ நிற்கிறாளே என் அத்தை பொண்ணு அமிர்தாகும் எனக்கும்அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் என்று கூற ...அதைக் கேட்டு அங்கிருந்த மூவருமே அதிர்ந்து போயினர் .....



வர்மா நீ என்ன சொல்ற...!!!




ஆமா அத்தை... எங்க ரெண்டு பேருக்கும் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.....


அதேநேரம் அம்ருதா அ..ம்..மா....என்று கத்த.....அவளை பார்த்த மூவரும் அதிர்ந்து போயினர்....





அவன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று கூறும் போதே பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து அவளது கையை வெட்டி இருந்தாள்.....



அவளது கையிலிருந்து ரத்தம் வழிய.... தாங்காமல் கத்தி கொண்டிருந்தாள்.....
அம்ரு என்று அவன் கத்த அதற்குமேல் நிற்கமுடியாமல் மயங்கி சரிந்தாள் அம்ருதா....



என்னங்க First aid kit எடுத்துட்டு வாங்க என்று நிர்மலா கூற.....அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளுக்கு முதலுதவி செய்து கையில் கட்டு போடப்பட்டிருந்தது .....



அதுவரை மூளை மரத்துப் போய் நின்றிருந்த வர்மாவுக்கு உயிர் வந்தது .....


இது சின்ன சாம்பிள்தான்..... கல்யாண பேச்சை எடுத்ததுக்கு கைய வெட்டி இருக்கேன் ....கைய வெட்டுன எனக்கு தலையை வெட்ட ரொம்ப நேரமாகாது!!!! புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.... என்று கூறிவிட்டு செல்ல முயன்றவள்...


திரும்பி அவனை பார்த்து.. அவ மேல அவ்வளவு பாசமா மாமா!!!! அப்போ இது போல எனக்கும் ரத்தம் வந்தா எனக்காக இப்படி நீ துடிப்பியா என்று கேட்டுக்கொண்டே அதே கத்தியை கொண்டு தனது கையை வெட்டிக் கொண்டு அவனது முகத்தை ஏக்கத்தோடு பார்க்க....


இயற்கையாவே உதவும் குணம் கொண்டவன்
ஏய்!!!!என்ன பண்ணிருக்க நீ .....என்று அவள் கையை பிடித்து அருகில் இருந்த பெட்டியை எடுத்து அவளது கையில் கட்டு போட்டான்.....அது வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த மாயாவிற்கு முகத்தில் ஒரு சின்ன புன்னகை எட்டிப்பார்த்தது......


இருக்கு மாமா..... என் மேல உனக்கு லவ்
இருக்கு...
இது போதும்.... இனிமே யாரு நினைச்சாலும் என்கிட்டே இருந்து உன்ன பிரிக்க முடியாது..... என்று நிர்மலாவை கூர்மையுடன் பார்த்துக்கொண்டே கூற.... அவர் அவளது பார்வையை பார்த்து அச்சத்துடன் ஒடுங்கி போயிருந்தார்...


.
மாயா அவருக்கு அருகே சென்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்

எனக்கு நரகம் புதுசு இல்லை!!?"மாயா நரகத்துல தன்னோட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குனவ!எதையும் அழிக்கிற சக்தி எனக்கு இருக்கு!உன்னோட வாழ்க்கையில இனி சந்தோஷம் வர போறதில்லை.....நான் ஜெயிக்கணும்!அதுக்காக இந்த மாயா எந்த எல்லைக்கும் போவா!!யாரை கொன்றும் வாழ்வா!!! உனக்கு மன்னிப்பை நான் கொடுக்க மாட்டேன்!தண்டனை தான்!அதுவும் வாழ்க்கை முழுசும் சித்ரவதையை கொடுப்பேன்!துடிக்கணும் நீ துடிக்கணும்!அது என் காதுல விழணும்!என் பிடிவாதம் இந்த உலகத்தையே என் காலடியில விழ வைக்கும்!"நான் கொடுக்க போற வேதனையை பார்த்து ஒருவேளை மரணத்துக்கே உன் மேலே கருணை சுரந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை!"-அவள் கண்கள் ரௌத்திரத்தில் சிவந்துப் போயின.



"நான் எந்தப் பாவத்துக்கும் இரக்கப்பட்டு மன்னிக்கிறவள் இல்லை!என் நீதி எல்லாம் மரணம் ஒண்ணு மட்டும் தான்!அன்னிக்கு ஒரு களங்கமில்லாத ஒரு பொண்ண உயிரோட கொன்றியே!அவ உயிருடன் இருந்திருந்தா,இன்னிக்கு பல வேதனைகள் எனக்கு வராம போயிருக்கும்!எல்லாத்துக்கு மூலக்காரணம் நீதானே!அன்னிக்கு அவ அனுபவித்த அதே வேதனையை இனிமே இந்த மாயா உனக்கு தரப் போறா!"-என்றவள் அங்கிருந்து நகர அவள் கூறியதைக் கேட்டு நிர்மலாவின் முகம் பேயறைந்தது போல் ஆனது.....


அவள் இரண்டு அடி எடுத்து வைக்க பின்னாலிருந்து அவளது காலை நக்கியது அவ்வீட்டின் செல்லப்பிராணி... அவள் புன்னகையுடன் அதைத் தூக்கிக் கொஞ்ச.....அதுவும் அவளது முகத்தை தன் நாவினால் நக்கி அன்பை வெளிபடுத்தியது.....அதற்கு ஒரு முத்தம் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்...
நடப்பவைகளை நம்ப இயலாமல் பார்த்துக்கொண்டிருந்தான் வர்மா...


மாயாவை பார்த்தியா?அழகா சிரிக்கிறா தானே!"-என்று அவனது மனசாட்சி கேட்க ...



அது கேட்டது அவனுக்கு உறைக்கவில்லை.... !உறைந்துப் போயிருந்தான்!!


அவனறியாமல் அவன் மனதில் அவள் பிம்பம் பதிந்தது..

"இவ சிரிக்கும் போது உண்மையிலே ரொம்ப அழகா இருக்கா!"-தன்னையறியாமல் கூறினான் வர்மா.....




மெல்லிய,மென்மையான சிணுங்கல்.சில்லென்று மனதை இதமாக வருடித் தரும் சிணுங்கல்.காதோடு காதல் பேசும் சிணுங்கல்.என்ன அந்த சிணுங்கல்?காற்றா...?கவிதையா...?கனவா...?மெல்ல ஜன்னல் திரைச்சீலையை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தான் ஆதவன்.அவன் கன்னத்தை வருடி தந்தது,ஆடி மாத குளிர்ந்த காற்றுடன்,கூடிய மழைச்சாரல்.அவனுள் புகுந்து சென்ற அந்தக் காற்று,அவன் ஆழ்மனதுள் ஆழமாக ஊடுருவியது.சில்லென்ற இதமான அந்த சூழலில்...மிகுந்த நாட்களுக்கு பிறகு,ரசனையோடு அதை ஏற்றுக் கொண்டது அவன் மனம்......


அதே நேரம் சார் காபி என்று அவனின் முன் வந்தாள் சுதந்திரா...


அதனை வாங்கி கொண்டே ....நீ யாரு என்றான்???

நா...நான்...


இந்த வீட்டு வேலக்காரிப்பா!!!புதுசா சேந்திருக்கா என்று அங்கு வந்த கனகா கூற....


அம்மா பாக்க ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா....இவளா எல்லா வேலையும் பாக்குறா....


ஐயோ !!!!அம்மா அப்படி எல்லாம் வேல வாங்குவனா!!!எனக்கு கூடமாட உதவி செய்வா அவ்ளோ தான்.....


பாப்பா என்ன படிக்கிற!!!!


நான் பாப்பா இல்ல..!!!என் பேரு சுதந்திரா...
டென்த் முடிக்க போறேன்..!!!
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எந்த ஸ்கூல்....!!!


அவள் பள்ளியின் பெயரை கூறிக் கொண்டிருக்கும் போதே....


சரி சரி பேசுனது போதும்...போம்மா உனக்கு ஸ்கூலுக்கு லேட்டாச்சு....


அவர் கூறியதை நம்ப முடியாமல் அங்கிருந்து சென்றாள் சுதந்திரா.....


சரிப்பா நீ சீக்கிரம் ரெடியாகி வா...என்றுவிட்டு சென்றார்......



அவன் ரெடியாகி கீழே வந்ததும் உணவு பரிமாறபட்டது.... சாப்பிட்டு முடித்தவன் சுதந்திரா அங்கு பள்ளிக்கு ரெடியாகி நிற்பதை கண்டு ..நீ பள்ளிக்கூடத்துக்கு எப்படி போவ......



பஸ்ஸில் தான்.....



சரி வா நான் இன்னைக்கு உன்னை ட்ராப் பண்றேன்....


இல்ல வேண்டாம்....நானே போய்கிறேன்.....



பரவாயில்லை வா!!! அம்மா நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க.....



அதான் அவ சொல்றாலே !!!? அப்பறம் என்ன!!! அவ போயிடுவா....



அம்மா!!! எனக்கு அந்தப் பக்கமாக தான் வேலை இருக்கு.... நான் அப்படியே விட்டுட்டு போயிடுவேன் என்று கூற....


வேண்டாவெறுப்பாய் அதான் சொல்றான்ல கிளம்பி போ என்றார் அடக்கப்பட்ட கோபத்துடன்....



அவள் அவர் முகத்தை பார்த்து பயந்து கொண்டே சரி என்று தலையாட்டினாள்.....



அவர்கள் சென்றதும் அவன் கூப்பிட்ட உடனே கெளம்பிட்டியா!!! அவன் ஊருக்கு கிளம்பட்டும்..... அப்புறம் இருக்கு உனக்கு !!என்று மனதில் கறுவிக்கொண்டார்....




சுதந்திரா உன்கிட்ட நான் ஒன்னு கேட்கட்டுமா !!!!!



கேளுங்க.....


முதல்ல இந்த சார் போடுவத நிப்பாட்டு..!!! என் பேரு ஆதவன்... ஆதுனு கூப்பிடு.....!!!

இல்ல வேண்டாம்.... மேடம்க்கு தெரிஞ்சா திட்டுவாங்க....!!


யாரு மேடம் என்றான் புருவத்தை உயற்றி!!!!


உங்க அம்மாதான் என்று திக்கி திணறி கூற.... அவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.....


அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.... நீ ஆதுனே கூப்பிடு....



சரி என்று தலையாட்டினாள் .....



ஆமா நீ எப்படி இங்க வந்த.....


அ...து வ..ந்...து என்று தடுமாற...



இதோ பாரு!!! என்ன உன்னோட பிரண்டா நெனச்சுக்கோ!!! என்கிட்ட எந்த தயக்கமும் வேண்டாம்.... அதனால மறைக்காம சொல்லு......



எனக்கு சொந்த ஊர் ரத்னகிரி.....அங்க நான் எங்க அம்மா,, அப்பா ரொம்ப சந்தோஷமா இருந்தோம்..... ஒரு நாள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை ...... அம்மா எங்க அப்பாவ விட்டுட்டு போறதா சொன்னாங்க...... அதைக்கேட்டு நானும் எங்க அப்பாவும் அதிர்ச்சி ஆயிட்டோம்.....நானும் அப்பாவும் எவ்வளவோ வற்புறுத்தியும் அவங்க எங்க கூட இல்லை .....போய்டாங்க....



எதுக்காக சண்டை வந்தது....!!!



எங்க அப்பா கூட வாழ பிடிக்கலையாம்!!!!
நீயே சொல்லு ஆது!!!! பிடிக்காதவங்க எதுக்கு அப்பாவை கல்யாணம் பண்ணிக்கணும்..... எதுக்கு என்னைய பெத்துக்கணும்!!!!என்று கேட்க... ..




அவனுக்குத்தான் ஏண்டா இந்த கேள்விய கேட்டோம் என்றாகிவிட்டது.......


சரி சரி அத விடு!!! உங்க அப்பா இப்போ எங்க....


அவளது கண்களில் இருந்து கண்ணீர் வடிய..... எங்க அப்பா இறந்து போய்விடார்..... அவர் சாகுறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு லெட்டர் கொடுத்து எனக்கு கல்யாணம் ஆன பிறகு தான் அத படிக்கனுனு சத்தியம் வாங்கிட்டு செத்து போய்டார்.......


அதுக்கப்புறம் எனக்கு யாருமே இல்ல!!! என்ன பண்றது!! எங்க போறதுன்னு தெரியலை ....அப்போதான் அந்த ஊரில் உள்ள தாத்தா எங்க அப்பாவுக்கு ஒரு தங்கச்சி இருக்கிறதாவும்,,, நீ அங்க போனு அட்ரஸ் கொடுத்து அனுப்பி வைத்தார்....



அந்த அட்ரஸ் தேடி கண்டுபிடிச்சு உங்க வீட்டுக்கு வர எனக்கு மூணு நாளாச்சு..... அந்த மூணு நாள்ல சாப்பாடு தண்ணி கிடைக்காம,, எவ்வளோ கஷ்டபட்டேன் தெரியுமா ஆது!!!?




நீ என்ன சொல்ற....!!!! எங்கம்மா உன்னோட அத்தையா!!!! என்னால நம்பவே முடியல!!!! எங்கம்மா ஏன் இதை பத்தி என்கிட்ட ஒன்னும் சொல்லல !!!! என்றான் அதிர்சியாய்......



எனக்கு தெரியாது என்றாள் பாவமாய்..!!!


சரி சரி நீ ஒன்னும் கவலைப்படாதே!!! அதான் நான் வந்துட்டேன்ல!!!! இனிமே உனக்கு என்ன வேணும்னாலும் என் கிட்ட கேக்கணும் புரியுதா!!!! என்று அவன் கன்னத்தைத் தட்ட சிறு சிரிப்புடன் "ம்"என்று தலையசைத்தாள்......




ஏய்!!!!மாமா பொண்ணு.... நீ என்ன தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி எது கேட்டாலும் தலய தலய ஆட்டுற என்றான் ......



அதற்கு அவள் அழகாய் ஒரு புன்னகை செய்தாள்.....



குட்..இப்படி தான் சிரிச்சிகிட்டே இருக்கணும் சரியா!!!! ஸ்கூல் வந்துடுச்சு.... நான் ஈவினிங் ஃப்ரீயா இருந்தா உன்ன வந்து கூட்டிட்டு போறேன்!!!!
என்றவன் ஒரு நிமிடம் நின்று சுதந்திரா!!! அப்புறம் எப்படி எங்க வீட்டு அட்ரஸ் கண்டுபிடிச்ச!!!



அதுவா!!! நான் அட்ரஸ் தெரியாம தேடிகிட்டு இருக்கும்போது ஒரு அங்கிள் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணார்..... அவர்தான் என்னை கொண்டு வந்து இங்க விட்டுட்டு போனார்..... அவரும் அப்பா போல ரொம்ப நல்லவர் ஆது என்றாள்.....



சரி சரி நீ போய்ட்டு வா என்று கூறி விட்டு சென்றான்.....
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 5



வர்மாவின் கார் அவனது கையில் பறந்து கொண்டிருந்தது.......அவனது மனமோ உலையாய் கொதித்து கொண்டிருந்தது......வர்மாவால் சிறிதும் நம்பிக்கை கொள்ள இயலவில்லை ...சற்று நேரத்திற்கு முன்பு தன் மாமா கூறிய செய்தி பொய்யாய் இருக்க கூடாதா என்று அவன் மனம் தவித்து.....அப்படி நடந்தது தான் என்ன???துரோகம்..நம்பிக்கை துரோகம்......வர்மா மறுபடியும் தன் மொபைலை ஆன் செய்து அந்த போட்டோவையே உற்று பார்த்தான்......அதில் ஆதவனின் கைக்குள் மாயாவின் கை புதைக்க பட்டிருந்தது.....அப்போது அவனது மாமா கூறியது நினைவுக்கு வந்தது.....

அன்னிக்கே சொன்னேனே!என் பேச்சை கேட்டியாடா?ஆதவா ஆதவானு தலைல தூக்கி வச்சி கொண்டாடுனியே!!!!இப்போ பாத்தியா....???


மாமா ப்ளீஸ்..என்னால இத நம்ப முடியல....


என்னடா இன்னும் நம்ப முடியல...அதான் ஆதாரத்தோட அனுப்பிருக்கேனே!!!!அத பார்த்தும் உன்னால நம்ப முடியலனா நீ உடனே கிளம்பி அந்த ஹோட்டலின் பெயரை கூறி இங்கு வா என்றார்....


அப்போது அவனின் மொபைல் சிணுங்க தன் நிலை திரும்பியவன் தான் வர வேண்டிய இடம் என்று தெரிந்து காரை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தான்...அங்கே அவனது மாமா அமர்ந்திருக்க அவரின் அருகே சென்றவன் அவர் கை காண்பித்த திசையை பார்த்தவன் அதிர்ந்து போனான்....

ப்ளீஸ் மாயா நான் சொல்றத கொஞ்சம் கேளு....



அவள் அவனையே வெறித்து கொண்டிருந்தாள்....

மாயா சொன்னா புரிஞ்சிக்கோ....இன்னும் கொஞ்ச நாள் தான்டா.....அப்பறம் நாம நெனச்சது எல்லாம் நடந்துடும்....அதுக்கு அப்பறம் உன்னோட எந்த முடிவிலும் நான் தலையிட மாட்டேன்....அதுவரைக்கும் நீ பொறுமையா தாண்டா இருக்கனும்......


என்னால இனிமே பொறுமையா இருக்க முடியாது....அந்த நிர்மலாவ கொண்ணு புதச்சா தான் வர்மா எனக்கு கிடைப்பாருனா அத செய்ய கூட நான் ரெடி என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்....


மாயா.... மாயா புரிஞ்சுக்கோ...நீ ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது....நீ அந்த லேடிய கொண்ணுட்டா ப்ரதாப் சும்மா இருப்பானு நினைக்கிறியா!!!!அடுத்த நிமிஷம் அவன் உன்ன கொண்ணுடுவான்....இவ்வளவு நாள் பொறுமையா இருந்தல்ல..அதுபோல இன்னும் கொஞ்ச நாள்....நாம நெனச்சது எல்லாம் நடந்துடும்....என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் முன்பு ஏதோ நிழலாடுவதை போல் இருக்க திரும்பியவர்கள் அதிர்ந்து போயினர்.....



ப்...ர...தா...ப்...என்று வார்த்தைகள் தடுமாற எழுந்தான் ஆதவன்....

என்னடா !!ஷாக் ஆயிட்ட....நான் இங்க வருவேனு நீ எதிர்பாக்கலல.....


இ...ல்...ல... அ..து...வ..ந்.. து

என்னடா இவ்ளோ நேரம் நல்லா தான பேசிட்டு இருந்த .....என்னைய பார்த்ததும் ஏன்டா வார்த்தை தடுமாறுது.....உன்னோட சுயரூபம் தெரிஞ்சு போச்சுனா!!!!என்றான் அடக்க பட்ட கோபத்துடன்....

இல்லடா ப்ரதாப் நான் சொல்றத கொஞ்சம் கே.....


ஏ...நடிக்காதே!!நண்பன்னு நினைத்த கொண்டாடினதுக்கு நல்லாவே முதுகுல குத்திட்ட!"

"பிரதாப்!"



போதும் நிறுத்து....இது நாள் வரைக்கும் நீ சொன்னத கேட்டதே போதும்....இனிமே நீ சொல்றத கேட்க நான் முட்டாள் இல்ல....



அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ராமசந்திரன் பாத்தியா வர்மா....
அவனுக்காக என்னைய எத்தனை முறை திட்டியிருப்ப.....கிடைத்த வாய்ப்பெல்லாம் அவன் பயன்படுத்திகிட்டு இவளோட சேர்ந்து உன் வாழ்ககையே அழிக்க பாக்குறான் என்று பொரிந்து தள்ளினார்.....



தான் ஏமாற்றபட்டதை தாங்க முடியாதவன்...
"மாமா!ப்ளீஸ்..!"என்றான்...



"இப்போதாவது உண்மையை புரிஞ்சிக்கோ!நட்பு நட்புன்னு நீதான் கர்ணனா இருந்திருக்க,ஆனா,எக்கேடா கெட்டு போடா!"-என்றவர் அங்கிருந்து விரைந்தார்.....


அங்கே எதுவும் நடவாதது போல் மாயா தன் போனை நோண்டி கொண்டிருந்தாள்....



எல்லாம் இவளுக்காக தான!!!என்னால நம்பவே முடியலை!எனக்கு இவ பண்றது கூட பெரிசா தெரியலை!ஆனா,நீ இவகிட்ட விலை போயிட்டன்னு என்னால நம்ப.."



"விலை போயிட்டாருன்னு சொல்றதை விட,நாம வேற மாதிரியும் எடுத்துக்கலாம் இல்லையா?"என்றாள் கெத்தாக...



"புரியலை!"


உனக்கு புரிஞ்சா நீ ஏன் உன் அத்தையோட முந்தானைய புடிச்சிகிட்டு சுத்த போற....என்றால் நக்கலுடன்...


ஏய்!!!!என்று தொண்டை நரம்பு புடைக்க கத்தினான்....


சுற்றி இருந்த அனைவரும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தனர்......

சும்மா கத்தாத.....எனக்கு ஆதவன சின்ன வயசுல இருந்தே தெரியும்!!!!


இதை கேட்டவன் மேலும் அதிர்ச்சியானான்....தான் இதுவரை அவனிடம் எதுவுமே மறைத்தது இல்லை....ஆனால் .....அவன் ஆதவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்து கொண்டே......


"இருக்கலாம் மாயா!இப்போ எல்லாம் நண்பனை விட காதல் தான் எல்லோருக்கும் முக்கியமா போச்சு!"-அவன் கூறியதை கேட்டு ஆதவன் திடுக்கிட்டான்.....



ப்ரதாப்.....!!!



அப்படி கூப்டாத...அந்த தகுதிய நீ இழந்துட்ட...!!உன்னை தானடா உயிரை விட மேலாக நம்பி இருந்தேன்..,ஆனா நீ இன்னைக்கு என்ன விட்டுட்டு இவ கிட்ட போய் சரண் புகுந்துட்ட!!ஆனால் நீ எதற்காக இதை செஞ்ச??உண்மையிலே உன் விசுவாசம் இவளிடம் தானா!!!?இத்தனை நாள் நடித்து ஏன் என்னை ஏமாற்றினாய்??என்னிடம் ஒரு நொடி கூட இவளை பற்றி உரையாட வேண்டும் என்று கூட தோன்றவில்லையா உனக்கு??என்று வருத்தத்துடன் கூறியவன் அங்கு இருந்த மாயாவை பார்த்து அனைத்திற்கும் ஆதிக்காரணம் இவள் தான்!!இனி,பெண்ணென்று பொறுமை காப்பது மடமை!!அவனது கண்கள் சிவக்க தொடங்கின.

அவன் ஆதவனை நோக்கி"இனி இவ என் காலடியில வந்து விழுவா!விழ வைப்பேன்! சபதமொன்றை ஏற்றான் வர்மா...


இல்லை பிரதாப் நான்..."


"ஏ...நடிக்காதே!!நண்பன்னு நினைத்த கொண்டாடினதுக்கு நல்லாவே முதுகுல குத்திட்ட!"

"பிரதாப்!"

"இனி நீயும் சரி,உன் மாயாவும் சரி நிம்மதியா வாழவே முடியாது!"

"பிரதாப் நான் சொல்றதை கேளு...!"

"உஷ்..!இனி நீ பேசக்கூடாது!நான்தான் நான் மட்டும் தான் பேசணும்!!எல்லாத்துக்கும் காரணம் உன் மாயா தானே!!இனிப்பார் இவ எப்படி துடிக்கப் போறான்னு மட்டும் வேடிக்கைப் பார்!மவனே...இவளோட கண்ணீர் உனக்கு வலிக்கணும்டா!!வலிக்க வைக்கிறேன்!"-


அதுவரை பொறுமையாய் இருந்த ஆதவன் என்னை மீறி தான் உன்னால அவள தொட முடியும் என்றான்....


ஒ... சூப்பர் ...கை நீட்டி சம்பளம் வாங்குறது என்கிட்ட....விசுவாசம் மாயா கிட்டயா!!!!


இதுக்கு மேலயும் உன்கிட்ட நான் வேலை பாப்பேனு நினைக்கிறியா!!!


சூப்பர் !உனக்கு என்னைவிட உன் லவ் பெரிசா போயிடுச்சுல்ல!"


ஸாரி சார்!இனி நான் உங்க எம்ப்லாயி இல்லை!உங்களை நியாயப்படுத்திக்க உறவுகளை கொச்சை படுத்தாதீங்க!"-என்றவன் உடனடியாக மாயாவை அழைத்து கொண்டு வெளியேறினான்....



"மாயா!"-என்று கத்தியவன்,அங்கிருந்த கண்ணாடி மேசையை அழுந்த தட்ட அது உடைந்து அவன் கரத்தை காயப்படுத்தியது.விழிகள் இரண்டிலும் குரோதத்தை படர வைத்தவன் தன் வாழ்நாள் சங்கல்பத்தை அந்நொடி ஏற்றான்.....



தனது மொபைலை எடுத்து ஆதில் இருந்த ஒரு நம்பருக்கு அழைத்தவன்...


ஹலோ மிஸ்டர் நரேஷ்...நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது...எனக்கு மாயா பில்டர்ஸ் பத்தின எல்லா டீடெய்ல்சும் வேனும்....குறிப்பா ஆதவனுக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தமுனு எனக்கு தெரிஞ்சாகனும் என்று கூறிவிட்டு வைத்தான்.....



மா...யா!"-உச்சரித்தவன் குரலில் உச்சமடைந்த சினம் எட்டிப் பார்த்தது...




எந்த வேலையும் ஓடாமல் செயலற்று போய் இருந்தான் வர்மா.அலுவலகத்திற்கு சரியாக போகாமல்,எப்பணியையும் சீராக ஆற்றாமல் சிதைந்து போய் இருந்தான்.

"அத்தான் !"-துள்ளி திரிந்தவனின் ஒடுக்கம்,சகிக்க இயலாமல் வினவ வந்தாள் அம்ருதா.தன் தோள்களை ஸ்பரிசித்தவளை உணர்ந்து,கண்களை துடைத்துக் கொண்டான் வர்மா.

"வா அம்ரு!"


"என்ன அத்தான்?என்ன ஆச்சு?"

ஆதவன் இப்படி பண்ணுவானு நான் நினைக்கல...!!!




"கவலைப்படாதீங்க அத்தான்!எல்லாம் சரியாயிடும்!"

"ரொம்ப கஷ்டமா இருக்கு அம்ரு!இத்தனை வருஷமா பழகி இருக்கோம்!ஆனா,அவன் இப்படி செய்வான்னு நான் எதிர் பாக்கலடி?"

அம்ருதாவிற்கு ஆறுதல் கூற வார்த்தை ஏதும் புலப்படவில்லை.



"எல்லா பிரச்சனைக்கும் காரணம் அவ தான் !நானும் பொண்ணாச்சேன்னு விட்டா ரொம்ப பண்றா!இனியும் என்னால பொறுமை காக்க முடியாது!மாயாக்கு கடைசி வாய்ப்பு இது!இல்லைன்னா,ர
வர்மா எப்படிப்பட்டவன்னு அவளும் தெரிந்துப்பாள்!"

"அத்தான்!"

"தயவுசெய்து அவளுக்காக என்கிட்ட வராதே!!மாயா தன் வாழ்க்கையில இனி நரகத்தை மட்டும் தான் பார்க்க போறா!"-குரோதத்தோடு உரைத்தான் வர்மா.


"..............."


காதலின் சுவடுகள்...மனித வாழ்வினில் அழிக்க இயலா தடங்களை பதித்து நகர்கின்றன...

எண்ணற்ற இன்பங்கள்,வேதனைகள்,காயங்கள், வலிகள்,உரிமைகள்,அக்கறைகள்,வாக்குகள் இவற்றை மனித இருதயத்தில் மிக ஆழமாக பதித்து செல்கின்றன...







கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி காய்ந்து போயிருந்தது....முகமெல்லாம் அழுதழுது வீங்கி போயிருந்தது.....


தன்நிலையை எண்ணி கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள் சுதந்திரா....

ஏண்டி இப்படி எளவு விழுந்த வீடு போல அழுது வடியிற....உன்ன என்ன வீட்ட விட்டா தொறத்த போறேன்..கல்யாணம் தானடி பண்ணிக்க சொல்றேன்...அதுக்கு போயி இப்படி ஒரு வேலையும் இல்லாம அழுதுகிட்டு உட்காந்துருக்க.....


வேண்டாம்மா...எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம்...நான் எங்கயாவது போய்டுறேன்...என்ன விட்டுடுங்க ....என்று கையெடுத்து கும்பிட்டாள்....


என்னது விட்டுடனுமா!!!!உனக்கு இவ்வளவு நாள் போட்ட தண்ட சோறு,,உனக்கு செஞ்ச வெட்டி செலவு எல்லாத்தையும் எப்படி நான் வசூல் பண்றது.....

நான் படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போய் சம்பாதிச்சு குடுக்குறேன்...எனக்கு படிக்கனும்..எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம்மா!!!என்று கதறினாள்...


நீ எப்போ படிச்சு முடிச்சு சம்பாதிக்குறது....அது வரைக்கும் உனக்கு யாரு தண்ட செலவு பண்றது...இப்போ வந்துருக்குற மாப்பிள்ளைக்கு என்ன கொறச்சல்....பெரிய பணக்காரங்க....என்ன மாப்ள கொஞ்சம் குடிப்பாராம்..அப்ப்போ கொஞ்சம் கஞ்சா அடிப்பாராம் ....அவ்ளோ தான் மத்தபடி சொக்க தங்கம்.....


அதை கேட்ட சுதந்திரா கண்களில் கண்ணீர் நிக்காமல் வழிந்தது....


இதோ பாருடி அடம்பிடிக்காம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ!!!!இந்த காலத்துல யாருடி ஓண்ணுமே போடாம கட்டிக்குவா!!!!நீ மட்டும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா பத்துலட்சம் தர்றாங்களாம் என்றார் கண்கள் மின்ன....


வேணாம்மா பணத்துக்கு ஆசபட்டு என்ன அவுங்க கிட்ட வித்துடாதீங்க.....அப்பறம் நீங்க பண்ற எல்லாத்தையும் நான் ஆது கிட்ட சொல்லிடுவேன்.....



அடி செருப்பால...என்னடி ஆது கீதுனு உரிமை கொண்டாடுற....ஒ அவன மனசுல நினச்சிகிட்டு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்றியா???

அய்யோ !!!அப்படி எல்லாம் இல்லம்மா என்று பயந்து நடுங்கினாள்......


அப்படி ஒரு நெனப்பு இருந்தா அத பொதச்சிடு.....ஒழுங்கு மரியாதயா நல்ல பொண்ணா அடக்கமா வர்ர மாப்பிள்ளையோட அப்பாகிட்ட நடந்துக்க...இல்ல..உன்ன கொன்னு பொதச்சிடுவேன் என்று கூறிவிட்டு சென்றார்.....


கடவுளே என்ன ஏன் இப்படி சோதிக்கிற....நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்...எனக்கு படிக்கனும்...எப்படியாவது இந்த கல்யாணத்த நிப்பாட்டிடு....ஆது வேற ஊருல இல்ல...இப்ப நான் என்ன பண்றதுனு புரியலயே!!!உன்ன நம்பி தான் நான் போறேன் என்று கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு வருகிறவர் முன்பு அலங்கார பொம்மையாய் நிற்க தயாரானாள்....



கண்ணா உன் பேரு என்னடா!!


அதுவரை தலை குனிந்து நின்ற சுதந்திரா அந்த கண்ணா என்ற அழைப்பில் நிமிர்ந்து பார்க்க ஆனந்த அதிர்ச்சி ஆனாள்....


இவர்.... இவர் தானே நான் வழி மாறி தவித்த போது என்னை இங்கு அழைத்து வந்து விட்டார்...
இவர் எப்படி இங்கே!!!!


அவ பேரு சுதந்திராங்க...சின்ன பொண்ணு இல்லையா!!!அதான் பயப்படுது...என்றார் கனகா.....


ஒ ...அப்படியா!!!என்ன பாத்து பயப்படாதம்மா...நான் உன்ன எதுவும் பண்ண மாட்டேன்...உனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தான என்றார் சத்யபிரகாஷ்...


அவளுக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம்...என்றார் சுதந்திராவை முறைத்து கொண்டே.....


ரொம்ப சந்தோஷம்...என் பையன பத்தி உன்கிட்ட எல்லாம் சொன்னாங்களா!!!

அவள் கனகா கூறியதை மட்டுமே வைத்து ம்...என்று தலையாட்டினாள்.....

ரொம்ப சந்தோஷம்மா!!!சின்ன பொண்ணா இருக்கியே உன்ன வற்புறுத்தி தான் ஒத்துக்க வச்சிட்டாங்களோனு நினச்சி பயந்தேன் என்று அவர் கூறும் போதே...அவள் ஏதோ கூறுவதற்கு வாய் திறக்கும் முன்..

உனக்கு படிக்க விருப்பம் இருந்தா நீ கல்யாணத்துக்கு அப்பறம் கூட படிக்கலாம் என்று கூற...வாய் வரை வந்த வார்த்தையை முழுங்கி விட்டு முகம் பிரகாசமாக நிஜமாவா !!என்றாள்


ஆமா !!!நிஜமா தான் சொல்றேன்..உனக்கு எவ்வளவு படிக்க விருப்பமோ அதுவரைக்கும் படிக்கலாம் என்றார்....

முகம் பிரகாசிக்க அப்போ சீக்கிரம் எனக்கு கல்யாணம் பண்ணுங்க என்றாள் வெகுளியாய்...
.

அவளது சந்தோஷத்தை கண்டு சத்யபிரகாஷ் மனதளவில் அடிவாங்கினார்..அவரது மனசாட்சியோ ஒரு சின்ன பொண்ணு வாழ்க்கையை பாழாக்க நினைக்கிறியே!!!!என்று கூற....
தன் மனதை அடக்கி விட்டு எனக்கு என் பையன் சந்தோஷம் தான் முக்கியம்....அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா அவன் கொஞ்ச கொஞ்சமா மாறிடுவான்....என் குடும்பத்துக்கும் ஒரு வாரிசு கெடச்சிடும் என்று நினைத்தவர் சரிம்மா அடுத்த முகூர்த்ததுலயே கல்யாணம் வச்சிக்கலாம் என்று கூறிவிட்டு சென்றார்....


அவர் சென்றதும் கனகா அவளை வாரி அனைத்து செல்லம் கொஞ்சினார்....
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 6



வர்மா தனது அறையிலிருந்து வெளியே வந்தான்....

ஹாலில் நிர்மலாவும் அம்ருதாவும் அமர்ந்திருந்தனர்.....


வாப்பா ...உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார்....


இல்ல அத்தை நான் கொஞ்சம் வெளிய போறேன் .......

"நைட் லேட்டா வருவீயாப்பா?"-கேட்டார் நிர்மலா.

"ஆமா அத்தை !இன்னிக்கு ஒரு பார்ட்டி!"

"என்ன பார்ட்டி?"

"இந்தியாவுல இருக்கிற லீடிங் பிஸ்னஸ் மேக்னட்ஸ் எல்லாருக்கும் ஒரு சின்ன வார்ம் அப்!"

"நீங்க ஏன் போகணும்?"என்றாள் அம்ருதா

"அடிப்பாவி..நான் எல்லாம் டாப்-டென் லிட்ஸ்ல ஒருத்தன்!"

"சரிப்பா...போனோமா!கொஞ்ச நேரம் இருந்தோம்மான்னு வந்துடு!!!குடிக்க கூடாது!"-உறுதியாக கூறினார் நிர்மலா.....

"ஓ.கே. குடிக்க மாட்டேன்!"-வாக்களித்துவிட்டு வெளியேறினான் வர்மா....
.



அன்றிரவு...

அந்த பிரம்மாண்ட விடுதி நவீனமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பாரதத்தின் முக்கிய பிரமுகர்கள் அங்கு குழுமி இருந்தனர்.ஆண்கள்,பெண்கள் என யாவரும் அங்கு கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அங்கு மாயாவும் வர கட்டாயமாகி போனது !!இயல்பாக அவள் ஆரவாரத்தை வெறுத்து ஒதுக்குபவள்.அங்கு நடக்கும் நாடகத்தை அவள் வெறுப்பவள்....ஆனால் இன்று அவள் வர காரணம் வர்மா.....அவனின் வருகைக்காக காத்திருந்தாள்....


அப்போது ...
"ஏ...மாயா!இங்கே ஏன் தனியா இருக்க?கம் ஜாயின் வித் அஸ் பேபி!"-ஒரு நடுத்தர வயது எம்.என்.சி.உரிமையாளர் பரிந்துரைத்தார்....



"நோ..நோ தேங்க்ஸ்!நான் இங்கேயே இருக்கேன்!"-நாகரிகமாய் மறுத்தாள் அவள்....

"ஓ..பேபி!"-என்று அவளருகே அமர்ந்தார் அவர்.

"யு லுக் கார்ஜேரியஸ் பேபி!"

"தேங்க்ஸ்!"-மனதின் வெறுப்பை உமிழாமல் கூறினாள் அவள்.

"ஜஸ்ட் எ மினிட்!"-என்றவர் மேலும் சிலரை அழைத்தார்.

"இவங்க என் ப்ரண்ட்ஸ்!"-என்று ஒவ்வொருவராய் அறிமுகம் செய்தார்.

"அண்ட் இது என் சன் ராபட்!என்று ஒருவனை மகனென்னு அறிமுகம் செய்தார்.அவனது பார்வை மாயாவிடமே நிலைப்பெற்று இருந்தது....

"ஹாய்!"-என்று மாயாவை அணைக்க வந்தான் அவன்.நிலையின் விபரீதம் உணர்ந்தவள் சட்டென விலகினாள்.

"ஓ..ராபர்ட்!மாயா கலாச்சாரம் வேற!இதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது!"-அவர் நிலையை விளக்க முயன்றார்.அதே சூழலில் அங்கு நடப்பவற்றை இரு கண்கள் சிவந்தப்படி கவனித்துக் கொண்டிருந்தன....

தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர்களை கவனிக்காமல் கையில் மதுக் கோப்பையுடன் மாயாவையே கவனித்துக் கொண்டிருந்தான் வர்மா.

"கம் ஆன் மாயா!"-என்று மதுபானத்தை ஒரு குவளையில் ஊற்றி அவளுக்கு அளித்தனர்.

"இல்லை..பழக்கமில்லை!"

"வாட்?இதுக்கூட பழக்கமில்லையா?"

"இல்ல"

"நோ பிராப்ளம்!கூல்டிரிங்க்ஸ் குடிக்கிறீயா?"




"இல்லை..பிடிக்காது!"

"ஓ..கம் ஆன் டியர்!யு ஷூட் டிரிங் சம்திங்!எனக்காக ப்ளீஸ்.."-அவளுக்கு தலை சூடானது.

"ஜூஸ்!ஜூஸ்சாவது குடிப்பியா?"-வேறு உபாயமின்றி தலையசைத்தாள்.


"கிரேட்!என்றவன் அங்கிருந்து செல்ல முற்பட....


ராபட்....


எஸ் மேம்...

ஃபெஜ் சம் ஜூஸ் டூ ஹர்!!

"யா மாம்!"-ஒரு தீர்க்கமான பார்வையை மாயாவின் மேல் உதிர்த்தப்படி விலகினான் அவன்.

அடேய் ப்ரதாப் வர்மா...எங்கடா இருக்க..!இவங்கக்கிட்ட இருந்து என்னை சீக்கிரமா வந்து காப்பாத்து !"-மனதினுள் வேண்டினாள் அவள்.

"மாயா!"-பழத்தின் சுவை மிகுந்த சாற்றை கொணர்ந்து அவளருகே வைத்தான் அவ்வாலிபன்.

"தேங்க்ஸ்!"-அவளை தவிர அங்கிருந்தோர் வேறு பானங்களை அருந்த,ஒரு அருவருப்போடு பழச்சாற்றை அருந்தினாள் மாயா.

அவ்வாலிபனின் அருவருப்பூட்டும் பார்வை அவளை மொய்ப்பதை மாயா உணராமலுமில்லை.அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று அவள் எண்ணிய சமயம்,அவளது புத்தி மரத்துப் போக ஆரம்பித்தது.மந்தமாய் உணர்ந்தவள்,ஒரு வித மயக்கநிலைக்கு தள்ளப்பட்டாள்.

"மாயா!வாட் ஹேப்பண்ட்?"

"மயக்கமா இருக்கு!"

"வெயிட்!ராபட் மாயாவை வீட்டில டிராப் பண்ணிடு!"

"இல்லை..பரவாயில்லை!"

"கம் ஆன் பேபி!ராபட்
உன்னை டிராப் பண்ணுவான்!"-அவரை எதிர்க்க இயலாத மயக்கநிலைக்கு தள்ளப்பட்டாள் மாயா.

நடப்பவற்றை எல்லாம் சற்று தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு அனைத்தும் விளங்கியது.


"எக்ஸ்யூஸ்மீ ஜென்டில்மேன்!ஐ ஹேவ் டூ கோ நௌ!ஐ ஆம் ஸாரி!"-பரபரப்பான விரைந்தான் வர்மா....அவ்வாலிபன் மாயாவை தனது காரில் ஏற்றும் சமயம் சரியாக அங்கு வந்தான் அவன்.

"ஹே ராபட்!"

-அனைத்தும் கைக்கூடும் வேலையில் தடுக்கும் குரலின் முகவரி அறிய திரும்பினான் அவன்.

"வர்மா?"

"ம்கூம்...!என்னாச்சு மாயாக்கு?"

"நத்திங்!கொஞ்சம் ஓவரா குடித்துட்டாங்க!"

"குடிச்சாளா?"-உண்மையை அறிந்தவன் சந்தேகமாய் கேட்டான்.

"ம்...யா!"

"ஓகே!நோ ப்ராப்ளம்!நான் அவளை டிராப் பண்ணிக்கிறேன்!"

"ஏன்?"-அவனிடமிருந்து மாயாவை வலுக்கட்டாயமாக இழுத்தான் வர்மா.மயக்கத்தில் தள்ளாடியவள்,அவனது தோள் மீது சாய்ந்தாள்.

"பிகாஸ் ஷி இஸ் மைன்!மை பியான்ஸி!"-கடுமையாக அவன் கூற,ஒரு நொடி ஆடிப்போனான் அவன்.

"ஸா..ஸாரி வர்மா
!"-தப்பித்தால் போதுமென்று வேகமாக ஓட்டம் பிடித்தான் அவன்.தனிமையில் நின்றிருந்தவனின் தோளில் மலர் மாலையாய் சாய்ந்திருந்தாள் மாயா.

"மாயா!"

"..........."

"ஏ..மாயா!"-இதமாக அவள் செவியோரம் கிசுகிசுத்தான் அவன்.

"............"-ஆழ்ந்த மயக்கம் அவளை ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தவன் கைக்குழந்தையை தூக்குவதுப் போல இரு கைகளாலும் அவளை தூக்கி சென்று தன் காரில் கிடத்தினான்.



"ம்.."-மெல்லிய முனகல் சத்தம் அவளிடமிருந்து வெளியானதை உணர்ந்தவன் காரை நிறுத்தினான்.அவளது மயக்கம் மெல்ல கலைய,கண்விழித்து திருதிருவென விழித்தாள் மாயா.

"ம..மாயா!"-சற்றே அச்சத்தோடு வெளியானது அவன் குரல்.அவன் முகத்தை ஒரு நிமிடம் உற்று பார்த்தவள்,"யார் நீ?"என்றாள் சிறு குழந்தையாய்!"

"யாரா?என்னை உனக்கு தெரியலை?"

"ம்ஹூம்!"-என்று மீண்டும் சில நொடிகள் சிந்தித்தாள்.

"ஓ..நீதான் புதுசா ஜாயின் பண்ண டிரைவரா?"-ஒரு கேள்வியில் அவன் மானத்தை காற்றில் பறக்கவிட்டாள் மாயா.விழிகளை கடுப்போடு மூடி திறந்தவன்,

"இன்னும்!அதான் நடக்கலை!"என்றான்.

"சரி..சீக்கிரமா போ!எனக்கு தூக்கம் வருது!"-என்று அவனது புஜங்களை இறுகப் பற்றியப்படி அவன் மீது சாய்ந்து உறங்கிப் போனாள் மாயா.

எதுக்குறித்தும் சிந்திக்காமல் அவள் காட்டிய நெருக்கம்,அவனைஅப்படியே உறைய வைத்தது....!!மெல்ல புன்னகைத்தவன்,அவளை மெல்ல இருக்கையில் சாய்த்தான்.மீண்டும் பயணம் ஆரம்பித்தது.இம்முறை அது நெடுந்நேரம் எடுக்கவில்லை.சில நிமிடங்களிலே முடிந்தது.வாயிலில் கார் சப்தம் கேட்டதும் கதவை திறந்தார் காவலாளி.ஓட்டுநர் இருக்கையில் வர்மாவை கண்டதும் குழம்பிப் போனார்.


யாரு நீங்க???


நான் வர்மா?


அவனுக்கு அருகில் மாயாவை கண்டதும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் கதவை திறந்தான்....


கார் உள்ளே நுழைந்ததும் அதனை நிறுத்திவிட்டு மாயாவை காரிலிருந்து இறக்க அவள் தடுமாறி கீழே விழப் போனாள்....

உடனே அவளை தாங்கி பிடித்தவன் வேறு வழி இல்லாமல் அவளை அலேக்காக தூக்கி கொண்டு உள்ளே சென்றான்.....




மாயாவை கையில் ஏந்தியபடியே அவளின் வீட்டின் உள்ளே நுழைய அங்கு இருந்த பணியாள் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்து கொண்டே... அவளது அறையை காட்ட அவள் காட்டிய திசையை நோக்கி படியேறி சென்று.. அங்கு இருந்த கட்டிலில் அவளை கடத்தினான்....ஆனால் அவளோ அவனது கழுத்தை மாலையாய் கோர்த்து கொண்டு ஐ லவ் யூ மாமா.....என்று அவனது கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்தாள்...அவளது தீடீர் செய்கையில் செயலற்று போனவன் அவளது கைகளை பிரித்து தன்னையும் அறியாமல் அவளது தலையை நீவி விட்டு அவள் நெற்றியில் அவளுக்கு வலிக்குமோ என்று பயந்து மென்மையாக தன் இதழ் பதித்தான்.......


தூக்கத்தின் ஊடே அதை ஆழ்ந்து அனுபவித்தவள்.. சிணுங்கி கொண்டே இங்க ஒரு முத்தா என்று கை விரலால் தன் கண்ணத்தை காட்ட வர்மா தான் குழம்பி போய்... ஒரு வேல இவ நம்மகிட்ட குடிச்ச மாதிரி நடிக்கிறாளோ!!!! என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே நான் குடுக்குறேன் மாமா என்று கூறி சட்டென்று அவனை இழுக்க ....பிடிமானம் ஏதும் இல்லாமல் அவள் மீது சரிந்தான்.....மிக நெருக்கத்தில் அவளது முகம் கண்டவன் தன் கட்டுப்பாட்டை இழந்து அவளது பால் வண்ண மேனியில் முத்த ஊர்வலம் நடத்த தொடங்கிய நேரம் உவ்வே என்ற சத்தத்தோடு அவன் மீது வாந்தியை எடுத்தாள்......

பார்ட்டியில் குடித்தது எல்லாம் கெட்ட நாற்றத்துடன் வெளி வந்தது.....
கடவுளே !!!இது வேறயா!!!என்று அலுத்து கொண்டவன் அந்த அறையில் இருந்த பாத்ரூமிற்குள் சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தான்......




அயர்ந்து கைகளை குறுக்கி கொண்டு உறங்கும் மாயாவை கண்டவன் இவ்வளவு அமைதியாக உறங்குபவளா தன்னிடம் முரட்டு தனமாக நடந்து கொள்கிறாள் என்று நினைததவன் ......அவளது உடைகளும் அழுக்காகி இருப்பதை உணர்ந்து அதனை சுத்தப்படுத்த அருகே சென்றவன் தயங்கி தயங்கி நின்றான்...பின் ஆபத்துக்கு பாவமில்லை என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டவன் ...அவளது உடைகளை கழட்ட துவங்க .....அவனது இதயமோ தாறுமாறாய் எகிறி துடித்தது....அவனுக்கு முகம் எல்லாம் வியர்த்து கொட்டியது....தன் கண்களை மூடி கொண்டு ஒரு வழியாய் அவளை சுத்தப்படுத்தி முடித்து அங்கிருந்த டவலை எடுத்து அவளது இடுப்பை சுற்றி கட்ட போகும் நேரம்...அவனது மனசாட்சியோ டேய் நீ ரொம்ப நல்லவன் தாண்டா....


இது போல உனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காது....அவ உன்ன எவ்வளவு அசிங்கபடுத்தி இருக்கா!!!அவள பழி வாங்க உனக்கு ஒரு நல்ல சந்தர்பம் கிடச்சிருக்கு ..இத யூஸ் பண்ணிக்கோ!!!அவ பண்ணுனதெல்லாம் நெனச்சு பாரு !! என்று தவறான நேரத்தில் தவறான ஐடியாவை கொடுக்க.....

அதுவரை மனித நேயத்துடன் நடந்து கொண்டவன் ,,,அவள் தன் நண்பனை தன்னிடமிருந்து பிரித்தது,,தன் வீட்டிற்கே வந்து தனது குடும்பத்தை அவமானபடுத்தியது மட்டுமில்லாமல்,,தன் மேல் பாரபட்சமின்றி அன்பை காட்டும் அம்ருதாவின் கையை வெட்டியது என அவள் செய்த அனைத்தையும் நினைத்து பார்த்தவன் முகம் அக்னி பிழம்பாய் ஜொலிக்க......அவளை எப்படியாவது அசிங்க படுத்த வேண்டும் என்று நினைத்தவன் மிருகமாய் மாறி தனது சட்டையை கழட்டிவிட்டு அவளை அணைத்து கொண்டே ,,,தன் மொபைலை எடுத்தவன் அவனது முகத்தை மறைத்து ,,இருவரையும் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தான்.....


எடுத்து முடித்து தனது மொபைலை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு தூங்கும் அவளை பார்த்து ஒரு கொரூர புன்னகையை சிந்திவிட்டு அங்கிருந்து சென்றான்.......


நேரம் இரவு பதினொரு மணி கடந்திருந்தது...வர்மா வீட்டின் உள்ளே நுழைய அவனுக்காக காத்திருந்தார் நிர்மலா....

அத்தை நீங்க இன்னும் தூங்கலயா???


இல்லப்பா!!!உன் கிட்ட கொஞ்சம் பேசனும் ...அதான் காத்துகிட்டு இருக்கேன்...


சொல்லுங்க அத்தை!!!

எல்லாம் உன்னோட கல்யாணம் பத்தி தான்!!!


அத்தை இப்ப எதுக்கு அதெல்லாம்...!!!


இல்லப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்கு...அந்த பொண்ணு வந்து அன்னைக்கு மிரட்டிட்டு போனிச்சுல...அதுலேருந்து எனக்கு மனசே சரியில்லை...உடனே உனக்கு கல்யாணம் பண்ணனும்...


அத்தை அவளுக்கு பயந்து நான் கல்யாணம் பண்ணிக்கனுமா!!!


இல்லப்பா எனக்கும் வயசாகுதுல...


அத்தை ஏற்கனவே ஒருத்தி நான் வேண்டானு என்ன விட்டுட்டு வேற ஒருத்தன் கூட ஓடிட்டா. .!!வர போறவ எப்படி இருப்பாளோ!!!


அந்த கவலை உனக்கு வேண்டாம்....உனக்கும் நம்ம அம்ருக்கும் தான் கல்யாணம்...


அத்தை அது நான் அந்த மாயாவ வெ.....


நீ ஓன்னும் சொல்ல வேண்டாம்..
...அடுத்த முகூர்த்ததுல உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம்......இந்த முடிவுக்கு நீ சம்மதிக்கலனா நாங்க இந்த வீட்ட வீட்டு போய்டுவோம்.....இது தான் என்னோட கடைசி முடிவு.....



அத்தை அம்ரு இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாளா!!!!


அதபத்தி நீ கவலை படாத ....அவள ஒத்துக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்....


அவன் தான் அவர் கூறியதை கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான்.....


அதேநேரம் அம்ருதா தனது அறையில் அழுது கொண்டிருந்தாள்...அப்போது அவளது செல்போன் விடாமல் அடித்து கொண்டே இருக்க,, அதை ஆன் செய்து காதில் வைத்தவள் கத்த தொடங்கினாள்...


இப்போ எதுக்கு இத்தன வாட்டி கோல் பண்ற..!!!


ஏய் அம்முகுட்டி அழுதியா!!!!



உன்ன காதலிச்ச பாவத்துக்கு அத மட்டும் தான் என்னால பண்ண முடியும்!!!


ஏண்டி இப்படியெல்லாம் பேசுற!!!!


வேற எப்படி பேச சொல்ற!!! எங்க வீட்ல எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றாங்க!!!


ஏய் அப்படி எல்லாம் நடக்க விட்டுடுவேனா!!!

ஆமா நீ இப்படியே சொல்லு!!!இங்க என் அத்தான் வர்மாக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணியே ஆகனுனு எங்க அம்மா ஒத்த கால்ல நிக்குறாங்க!!!


ஏய் நீ பயப்படாத!!! உங்க அத்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான்!!!

நானும் அந்த தைரியத்துல தான் இருக்கேன்!!!!



அம்மு என் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா!!!!!



உன்னை நம்பாம வேற யாரை நம்ப போறேன்!!!!!


தேங்க்ஸ் டி.... எனக்குன்னு சில கடமைகள் இருக்கு.... அத முடிச்ச உடனே இந்த உலகத்துல யார் தடுத்தாலம்.. அது எல்லாத்தையும் தகர்த்து எறிந்து விட்டு உன்னை என் கூட கூட்டிட்டு வருவேன்....அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடி!!!!



சரிடா !!!!ஆனா உன் கடமை எல்லாம் முடிக்க எவ்வளவு நாள் ஆகும்!!!



இன்னும் கொஞ்ச நாள் தான்டி!!!!

சரி!!!



அம்மு ஐ லவ் யூ டி!!!


மீ டூ டா!!!


சரி டைம் ஆகுது...நீ எதையும் நினைக்காம தூங்கு...என்றவன் போனை கட் செய்தான்....


அதுவரை அழுது கொண்டிருந்தவள் தன்னவன் கொடுத்த தைரியத்தில் நிம்மதியாக உறங்க தயாரானாள்.....
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்:7



அந்த திருமண மண்டபமே கலை கட்டியிருந்தது....எந்த பக்கம் திரும்பினாலும் சொந்த பந்தங்களும் நண்பர்களும் என நின்று கொண்டிருந்தனர்....

பெண்கள் கூட்டம் ஒருபுறம் நின்று கொண்டு ஏய் உன்ன பாத்து எத்தன வருஷம் ஆச்சு!!!


இந்த நகை உனக்கு நல்லா இருக்கு!!எங்க வாங்குன!!!



உங்க தங்கச்சி ஓடி போய்டாலாமே!!!


கல்யாண பொண்ணுக்கு சொந்தமுனு சொல்ல யாருமே இல்லையாமே!!!!


அந்த பொண்ணு யாருக்கு என்ன பாவம் செஞ்சாலோ இவன கட்டிக்க ஒத்துகிட்டு இருக்கா!!!


எல்லாம் இந்த சொத்துக்கு ஆசபட்டு தான்!!!இல்லைனா இப்படி ஒரு பைத்தியத்த கட்டிக்க சம்மதிசிருப்பாலா!!!!



பாவம்... பாக்க சின்ன பொண்ணா இருக்கா!!!கடவுள் தான் இவ வாழ்க்கையை காப்பாத்தனும்!!


இப்படி ஆளாளுக்கு தங்களின் கருத்துக்களை மற்றவருடன் கூறி கொண்டிருக்க....


இவ்வளவு கூட்டத்தையும் பார்த்து பயந்து போய் அமர்ந்திருந்தாள் சுதந்திரா.....
அவ்வளவு கூட்டம் அங்கு இருந்தும் அவளது பயத்தை போக்க கூட யாரும் இல்லை...

அப்போது.....

நாழி ஆகறது யையனை கூட்டி வாங்கோ!!!
என்று ஐயர் கூற...

இதோ மாப்பிள்ளையே வந்தாச்சு என்று ஒருவர் கூற...

அவர் கூறிய திசையை பார்த்த அனைவரும் அதிர்ந்து போயினர்....

பட்டு வேட்டி சட்டை அணிந்து கையில் ஒரு பிராந்தி பாட்டிலுடன் தட்டுத் தடுமாறி கீழே விழுந்து எழுந்து வந்தான் அவன்....

எ..டுக்..காகே இய்கங்க இவ்ல்லோ க்கூட்இம் இர்இக்கு.என்று வார்த்தைகள் தடுமாற கேட்க...
சத்ய பிரகாஷ் ஒன்றும் கூற முடியாமல் அவனை அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்தார்...

எந்த பொண்ணு உன் பையனை கட்டிக்க சம்மதிப்பா...உன் பையனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது...என்று கூறியவர்களின் மூக்கை உடைக்கவே அவர் இந்த திருமணத்தை ஆடம்பரமாக நடந்தினார்...ஆனால் அவர் மகன் இன்று கூட குடித்து விட்டு வந்து எல்லோரின் முன்பும் அசிங்க படுவான் என்று நினைக்க வில்லை.....


கூடி இருந்த அனைவரும் தங்களுக்குள்ளே ஏதோ முனகி கொண்டனர்...அவரை எதிர்த்து பேச நினைத்தவர்கள் அவரின் பண பலத்தை கண்டு அஞ்சி எதுவும் கூறாமல் அமைதியாய் இருந்தனர்......



சுதந்திரா கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது...இங்கிருந்து எழுந்து ஒடி விட்டால் தான் என்ன என்ற எண்ணம் தோன்ற அங்கு நின்றிருந்த கனகாவை பார்த்தாள்....அவரோ அவளை முறைத்து கொண்டே நின்றார்....


அபச்சாரம்... அபச்சாரம்..ஒரு கல்யாண நாளும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்துருக்கேளே!!இது நோக்கே சரினு படுதா!!!


ஏல்லேய்..ஸ்ஸ்சொச்ட..யாஆர்டா நீயீ.!!!

காலம் கெட்டு போயிடுத்து!!!இப்படி எல்லாம் நடக்குறதுனால தான் நாட்டுல மழையே பெய்ய மாட்டேன்றது!!!


டேய் க்கேன க்கூ**** மவனே உம் வ்வேல ப்பார்டா....


அவன் கூறியதை கேட்டு அனைவரும் முகம் சுளித்தனர்....


கடவுள் தான் இந்த பொண்ண காப்பாத்தனும்!!!!


சத்ய பிரகாஷ் அனைவரிடமும் தாலியை காட்டி ஆசீர்வாதம் வாங்க அனைவரும் வேண்டா வெறுப்புடன் மஞ்சள் கலந்த அரிசியை எடுத்துக் கொண்டனர்...... ஐயர் தாலியை எடுத்து அவனது கையில் கொடுத்து கட்டுங்கோ என்று கூற....

அதை வாங்கியவன் அவளின் கழுத்துக்கு அருகே கொண்டு சென்று அவளிடம் நெருங்கி ஏய்யய்ய்....நீ ப்பத்தியா...லி..இல்ல க்கல்..யாணத்துக்கு அப்பலம் எவன் கூடயோ ஒலி போய்லுவியா என்று கேட்டு கொண்டே மூன்று முடிச்சு இட்டு தன் மனைவியாக்கி கொண்டான்....

அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து போய்...
கண்ணிலிருந்து வரும் கண்ணீரை கூட துடைக்காமல் அவன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டாள் சுதந்திரா.....


அந்த குங்குமத்தை எடுத்து பொண்ணு நெத்தியில இடுங்கோ!!!


அவன் குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் வைக்க திரும்பியவனின் வயிற்றை ஏதோ புரட்டுவது போல் இருக்க "உவ்வ்வ்வ்வ்வே"என்று அவளின் மேல் வாந்தியை எடுத்தான்.....



சுற்றியிருந்த அனைவரும் அருவருப்புடன் முகத்தை சுளிக்க.... அவன் மீண்டும் ஒரு முறை அவள் மீது வாந்தி எடுத்துவிட்டு மயங்கி சரிந்தான்........




மிஸ்டர் பிரகாஷ் நீங்க இப்படி பண்ணுவீங்னு நான் எதிர்பாக்கல.....


டாக்டர்!!!


உங்க பையன் இருக்குற நிலமையில அவனுக்கு இப்போ கல்யாணம் அவசியமா!!!!



கல்யாணம் பண்ணுனா கொஞ்சமாவது மாற முயற்சி பண்ணுவானு நெனச்சேன்....


நீங்க சொல்றதும் கரெக்ட் தான்....
ஒரு பொண்ணால காயம்பட்ட அவனோட மனச இன்னொரு பொண்ணால தான் குணப்படுத்த முடியும்......அதுக்காக ஒரு சின்ன பொண்ணு வாழ்க்கையை போய்......



அவர் அங்கு பயத்துடன் நின்றுகொண்டிருந்த சுதந்திராவை அழைத்து ..இதோ பாரும்மா.... நீயே பார்க்க சின்ன பொண்ணா இருக்க.... அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கோ!!!!


அவன் வாழ்க்கையே ஒரு பொண்ணு கெடுத்துட்டா.....அதனால்தான் அவன் குடிச்சி குடிச்சி உடம்பு கெடுத்துகிறான்..... நீதான் எப்படியாவது அவன மாத்தனும் என்றார்.....


அவள் எல்லா பக்கமும் தலையை ஆட்டி சரி என்றாள் .....


அவருக்கோ அவளின் நிலையை பார்த்து பரிதாபமாக இருந்தது....


தூங்குறதுக்கு ஒரு இன்ஜக்ஷன் போட்டிருக்கேன்.... அவனை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.... ஏதாவது எமர்ஜென்சினா கால் பண்ணுங்க என்று கூறிவிட்டு சென்றார்.....


எவ்வளவு நேரம் விழித்திருந்தாலோ தெரியாது....பசி வயிற்றை கிள்ள,,தூக்கம் கண்களை சூழற்ற...
அந்த அரண்மனை போன்ற வீட்டில் எங்கே சென்று படுப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.....


என்னமா!!! தூக்கம் வருதா!!!!


ஆம் என்று தலையை ஆட்டினாள்.....



இவன் இங்கேயே இருக்கட்டும்..... அவன் ரூம் மேல இருக்கு நீ அங்க போய் தூங்கு என்று அவளை அனுப்பி வைத்தார் .....




தன் மகனின் அருகே சென்று அவனது தலையை கோதிக் கொண்டே,,, ஏன்டா இப்படி ஆயிட்ட..... ஒருத்தி உன்னை ஏமாத்திட்டானு இப்படி குடித்து குடித்து உடம்பை கெடுத்துககிறியே !!!! இது நல்லா இருக்கா...... இதோ பாருடா கண்ணா!!! நான் பேசுவது உனக்கு கேக்காதுனு எனக்கு தெரியும்..... இருந்தாலும் சொல்கிறேன்.... உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா அதற்காகவாவது இனிமே நீ குடிக்காமல் இருக்கனும். அவளுக்காகவாது இனிமே நீ மாறனும் என்று கூறியவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவனின் நெற்றியில் பட்டு தெறிந்து விழுந்தது........


எவ்வளவு நேரம் உறங்கினானோ தெரியாது விழித்தவன் தலை பாரமாய் இருக்க இந்த வலியை போக்க தட்டுத் தடுமாறி தனது அறைக்கு சென்று ஒரு பாட்டிலை திறந்து வாயில் சரித்தான்.....
பின்பு அறையில் வைத்திருந்த போதை ஊசியை கையில் ஏற்றி கொண்டு போதையின் உச்சத்தை அடைந்தான்....அப்போது அவனது கட்டிலில் மங்கலாய் ஏதோ தெரிவது போல் இருக்க...அருகில் சென்று பார்க்க அது ஒரு பெண் என்பது தெரிந்து....

யாலுடா இவ்வ....என் லூம்ல ....

ஒஒஒ.....இவ அவ்வலாலலாலா....என்றவன் அவளை நெருங்கி உறங்கும் அவளையே பார்த்தான்...பிறகு என்ன நினைத்தானோ தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்து அவளது வெற்று இடையில் வைத்தான்....


சுளீர் என்ற வலியில் அப்பா என்று கத்தி கொண்டே எழுந்தவள் கையில் சிகரெட்டுடனும்...கண்கள் இரண்டும் செக்க செவேலென சிவந்து போய் அமர்ந்திருந்தவனை கண்டவள் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது......


ஏய்ய்ய்ய்!!!உன்கு என்லா தைலியம் இர்ந்தா இங்க வல்து பலுப்ப..
என்று கேட்டுக் கொண்டே அவளது புடவையை இழுக்க....அதில் பயந்து போய் விடுங்க ...விடுங்க நான் போகனும் என்று கத்திகொண்டே அவனிடம் போராடினாள்...


அவள் கத்த கத்த அவனுக்கு வெறியேற அவளை பிடித்து இழுத்து அவள் மேல் முரட்டு தனமாய் படந்தான்...


அய்யோ!!!விட்டுடுங்க நான் எங்கயாவது போய்டுறேன்.....நான் படிக்க தான் உங்கல கல்யாணம் பண்ணிகிட்டேன்.....என்று கதற...


அவள் கூறிய எதுவும் அவன் காதில் விழுந்தால் தானே!!!!!அவன் தான் போதை என்னும் அரக்கனிடம் மாட்டியிருந்தானே!!!!
அவளது கத்தல் மேலும் அவனுக்கு போதையூட்டியது....

அவள் உடல் முழுவதும் சூடு வைத்து கொண்டே அவளது பிஞ்சு உடலை நசுக்க ஆரம்பித்தான்....

அய்யோ!!!!எனக்கு வலிக்குது !!!என்ன விட்டுடுங்கோ !!!!!அப்ப்ப்பாபா என்னால முடியலயே!!!!என்று கத்தினாள்...தாம்பத்தியம் என்றால் என்ன என்றே அறியாத அந்த பேதை அந்த அரக்கனிடம் மாட்டி சின்னாபின்னமாகி கொண்டிருந்தாள்.......



சத்ய பிரகாஷ் தனது அறையில் லாப்டாப்பில் ஏதோ அனுப்பி கொண்டிருக்க ஏதோ அலறல் சத்தம் கேட்பது போல் இருக்க உடனே அங்கிருந்து விரைந்தவர் தன் மகனை பார்க்க அவனை அங்கு காணாமல் போக அவனின் அறையை நோக்கி ஒடினார்.....

கதவை கூட மூடாமல் தன் மகன் அரக்கனை போல் நடந்து கொண்டிருப்பதை கண்டு அவரது முகம் அக்னி பிளம்பாய் சிவக்க தன் ஒட்டு மொத்த பலத்தையும் திரட்டி "சந்திராராரா"என்று கத்தி கொண்டே அவளிடமிருந்து அவனை பிரித்து அவனது கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்....


சுதந்திரா ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் மயக்க நிலைக்கு சென்றாள்...அவள் உடலில் ஒட்டு துணி இல்லாமல் உடல் முழுவதும் சூடு வைக்க பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்....


அப்போது தான் அவருக்கு தான் செய்த தவறின் வீரியம் புரிந்தது....தன்னுடைய கௌரவத்திற்காக ஒரு சின்ன பெண்ணின் வாழ்க்கையை அழித்து விட்டோமோ என்று கண்ணீர் வடித்தார்....


அப்போது அவர் தாயுமானவராய் மாறி அவளுக்கு வேறு உடையை மாற்றிவிட்டு தனது போனை எடுத்து தங்களது குடும்ப டாக்டரை அழைத்தார்....




பிரம்மாண்டமான மருத்துவமனையின் உள்ளே...

டாக்டர் உங்கல பாக்க யாரோ வந்துருக்காங்க...உங்க கேபினில் வெயிட் பண்ண சொல்லியிருக்கேன்....என்று ஒரு மருத்துவர் கூற....

தாங்க்யூ டாக்டர் நான் போய் பாக்குறேன் என்றவர் தன் அறையின் கதவை திறக்க அங்கே அவரது சேரில் அமர்ந்து கொண்டு கால் இரண்டையும் டேபிளின் மேலே வைத்து கொண்டு வாங்க டாக்டரம்மா என்று வரவேற்க ....அங்கு இருந்த மாயாவை கண்டு அதிர்ந்து போனார் நிர்மலா....


உனக்கு என்ன தைரியம் இருந்தா என் ரூம்கே வந்து என்ன அதிகாரம் பண்ணுவ....


எதுக்கு இப்போ கத்துற நீ!!!!


உனக்கு என்ன வேணும்!!!!



உன்னோட உயிர்!!!


வாட்????



எஸ்!!!!எனக்கு உன்னோட உயிர் வேணும்...குடுப்பியா!!!



என்ன உளற்ற!!!



என்ன பாத்தா உளற்ற மாதிரியா இருக்கு!!!!



மரியாதையா நீ யாருனு சொல்லு!!!!


அய்யோ!!!அய்யோ!!!நீ டாக்டர் தான!!ஞாபக மறதிக்கு ஏதாவது ட்ரீட் மென்ட் இருந்தா எடுத்துக்க போ!!!!


ஏய்!!!யாருகிட்ட பேசிகிட்டு இருக்க தெரியுமா!!!

தெரியுமே!!!மத்தவுங்க சொத்துக்கு ஆசைபட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இரண்டு ஜிவன உயிரோட கொண்ண கொலைகாரி கிட்ட பேசிட்டு இருக்கேன்!!!


ஏ..ஏ...ய். நீ....நீ எ...ன்...ன சொ...ல்...ற!!!
என்று எச்சில் விழுங்கினார் நிர்மலா!!!


ஹாஹாஹா எதுக்கு இவ்வளவு தடுமாற்றம்....மாட்டிகிட்டோமேனா!!??


உ...உ...ன...க்...கு எப்..படி தெரியும்....!!!


இன்னுமா என்ன யாருனு தெரியல!!!!



''..........."



சரி விடு நானே சொல்றேன்....சுதந்திரானு உனக்கு யாராவது தெரியுமா!!!


சு..த...ந்...தி...ரா. அவள எ எ..ப்படி தெரியும் உனக்கு!!!சொல்லு நீ யாரு உனக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்!!!!அந்த ஏசி அறையிலும் அவருக்கு வியர்த்து கொட்டியது.....



அத நீதான் கண்டுபிடிக்கணும்.....உனக்கு ஒரு விசயத்த ஞாபக படுத்த தான் நான் வந்தேன்...!!!


முதல் மனைவி உயிரோட இருக்கும் போது உன் மருமகனுக்கு இரண்டாவது கல்யாணம் எப்படி பண்ணுவ.....அதுக்கு சட்டத்துல என்ன தண்டனை தெரியுமா!!!
சட்டத்தவிடு இந்த மாயாகிட்ட என்ன தண்டனை தெரியுமா!!!!!



மரணம்!!!!கொடூர மரணம்!!!



என் வாழ்நாள் லட்சியமே உன்ன அழிக்கனுங்குறது தான்.....நீ எல்லாம் பெண் இனத்துக்கே அசிங்கம்...உனக்கு நான் கொடுக்க போற தண்டனைய உன்னால நெனச்சு கூட பாக்க முடியாது....நான் நெனச்சா இப்பவே உன்ன அழிக்க முடியும்...ஆனா செய்ய மாட்டேன்......யாருக்கு முன்னாடி நல்லவளா நடிக்திறியோ அவனுக்கு முன்னாடியே உன் முகத்திரையை கிழிச்சு நீ எப்பேற்பட்டவனு நிரூபிச்சு உன்ன கொஞ்ச கொஞ்சமா கொல்லுவேன்....அது வரைக்கும் எவ்வளவு நடிக்க முடியுமோ நடிச்சிக்கோ!!!!ஏன்னா நான் கொடுக்க போற தண்டனைக்கு அப்பறம் நீ நடிக்கனுனு நெனச்சாலும் முடியாது!!! வர்மா உன்ன நல்லவனு நம்புற வரைக்கும்தான் உன்னோட உயிர் உனக்கு சொந்தம்....!!! அவன் பார்வையில எப்போ நீ கெட்டவளா தெரிய ஆரம்பிக்கிறியோ அந்த நிமிஷம் உன்னோட உயிர் எனக்கு சொந்தம் ...!!!!


அவள் கூறியதை கேட்டு முகத்தில் வியர்வை துளி முத்து முத்தாய் இருக்க அதனை துடைக்க கூட தோன்றாமல் வெளிறிய முகத்துடன் நின்றிருந்தாள் நிர்மலா....!!!!


அப்படியே உங்களுக்கு இன்னொரு ஷாக்கிங் நியூஸ் சொல்லட்டும்மா மிசஸ் நிர்மலா ராமசந்திரன்.....!!!ஓ..ஓ..ஓ...ஓ. ஸாரி ஸாரி மாத்தி சொல்லிட்டேன்!! மிசஸ் நிர்மலா ரத்னாகர்...என்று கூறி நிர்மலாவின் தலையில் இடியை இறக்கிவிட்டு சென்றாள்.....


அவள் சென்றதும் யாரு இவ!!! இவளுக்கும் சுதந்திராவுக்கும் என்ன சம்மந்தம்!!!ரத்னாகரை இளுக்கு எப்படி தெரியும் என்று நினைத்தவரின் தலை பாரமாய் இருக்க கண்கள் இரண்டும் சொருகி நிலை தடுமாறி கீழே விழப்போனவரை தாங்கி பிடித்தது ஒரு கரம்......
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்:8



மாயா கூறிவிட்டுச் சென்றதை நினைத்துப் பார்த்த நிர்மலா தலை சுற்றி கீழே விழப்போக தாங்கி பிடித்தான் வர்மா....


என்னாச்சு அத்தை !!!!நீங்க கொஞ்ச நேரம் உட்காருங்க என்று அவரை அமர வைத்தவன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்....



அங்கு வர்மாவை சற்றும் எதிர்பார்க்காத நிர்மலா.. நீ எப்படி இங்க என்றார் பதட்டத்துடன்.....



ஃப்ரெண்டோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை....இங்க தான் அட்மிட் பண்ணி இருக்காங்க .....அவங்களை பாத்துட்டு வரும்போது தான் உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.... வந்த இடத்தில் நீங்க இப்படி !!?!என்னாச்சு அத்தை ... உடம்புக்கு எதுவும் முடியலையா!!! நீங்க கிளம்புங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என்றான் அக்கறையுடன்...

இல்லப்பா...ஏதோ தலை சுத்துற மாதிரி இருந்துச்சு ...அதான் வேற ஒன்னும் இல்ல....
சரிப்பா என்றவள் அவனுடன் வீட்டிற்கு கிளம்ப தயாரானாள்....



அந்த பிரமாண்டமான வீட்டின் உள்ளே நுழைந்து அந்ந கார்....அதிலிருந்து சற்று பயத்துடன் அவசரமாக இறங்கிய சச்சிதானந்தம் அங்கிருந்த காவலாளியிடம்...ருத்ரா சார் எங்க என்றார்....


அவர் தோட்டத்துல இருக்கார்.....



அடித்து பிடித்து கொண்டு தோட்டத்தை நோக்கி ஓடினார் அவர்....


அங்கே இருந்த மரத்தில் ஒருவன் தலை கீழாய் கட்டி தொங்க அவனை சுற்றி நான்கு வேட்டை நாய்கள் தனது கொரூர பற்களை காட்டி கொண்டு தங்களுடைய இரைக்காக காத்திருந்தது....


வேண்டாம் ருத்ரா என்ன இறக்கி விடு...என்னோட அப்பாக்கு தெரிஞ்சா உன்ன உயிரோட விட மாட்டார்!!!


அவன் கூறியதை கேட்டு அலட்சியமாய் அவனை ஒரு பார்வை பார்த்தவன் அப்படியா !!உங்க அப்பா அவ்ளோ பெரிய ஆளா!!!

ஆமா !!!எங்க அப்பா இந்த நாட்டோட முதல்வர்..!!அவர் நெனச்சா உன்ன என்ன வேனாலும் பண்ணுவார்.....


அப்படியா!!!!என்னும் போதே அங்கு வந்தார் சச்சிதானந்தம்....


ருத்ரா சார் ..வேண்டாம் சார் என் பையன ஒன்னும் பண்ணிடாதீங்க..உங்க கால்ல விழுந்து கேட்குறேன் என்று தான் நாட்டின் முதல்வர் என்பதையும் மறந்து அவனின் காலில் விழுந்து கெஞ்சினார்...


மிஸ்டர் சச்சு உங்க கிட்ட இருக்குற பணிவு உன் பையன் கிட்ட இல்லையே!!!!அப்பா சி எம் னா அப்பாவி பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்துக்கலாமா!!!


தெரியாம பண்ணிருப்பான் சார்!!!அவன மன்னிச்சிடுங்க!!!


தெரியாம பண்ணுனானா!!!அங்கு ஒரு ஒரமாய் நின்று கொண்டிருந்த தன் வீட்டில் வேலை பார்க்கும் சுந்தரத்தை பார்த்து இங்கே வா என்றான்....


அவர் பவ்யமாய் அவனின் முன்பு நின்றார்!!!

சொல்லு சாரோட பையன் உன் பொண்ணுகிட்ட எப்படி நடந்துகிட்டாருனு!!!


எம்பொண்ணு பள்ளி கூடம் போய்டு வரும்போதெல்லாம் இவரு என் பொண்ணுகிட்ட வம்பு பண்ணிருக்காரு!!!நேத்து ஸ்கூலுக்கு போயிட்டு வந்த பொண்ண கடத்தி கொண்டு போய் இவரும் இவன் நண்பர்களும் சேந்து சின்ன பொண்ணுனு கூட பாக்காம அவள...அவள.....என்று கூறும் போதே அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது....


போதும்!!!என்று அவரை தடுத்தவன் உச்ச கட்ட கோபத்துடன் ஊர்ல உள்ள பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துகிட்டாலே அவன நான் கொண்ணுடுவேன்...என் வீட்டு பொண்ணு மேலயே கைய வச்சிருக்கானா அவன நான் சும்மா விட்டுடுவேனா!!!என்றவனின் முகம் ரௌத்திரமாய் மாறி போனது.....

வேண்டாம் ருத்ரா சார்...என் பையன ஒன்னும் பண்ணிடாதீங்க...கொஞ்சம் கருணை காட்டுங்கள் என்று கெஞ்சினார்!!!!


ருத்ரா தனது துப்பாக்கியை எடுத்து மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை நோக்கி குறி வைக்க.....


வேணாம் ருத்ரா! வேணாம்!!"-என்று பயத்தில் அலறினான் அவன்.

சச்சிதானந்தம் அருகில் நின்ற சுந்தரத்திடம் கெஞ்ச தொடங்கினார்....
"சுந்தரம் !என் பையனை மன்னித்துவிடுப்பா!அவன் உயிரை காப்பாற்றுப்பா!என் பையன் எனக்கு வேணும் அவனை காப்பாற்றுப்பா!"-கெஞ்சினார் அவர்....சுந்தரமோ அசையாமல் நின்றார்.....

ருத்ரா வேணாம் ருத்ரா....விட்டுடு ..என்று கெஞ்சினார்....



சச்சு ...சச்சு நீ இவ்வளவு கெஞ்சுறதால கொஞ்சம் இரக்கம் காட்டுறேன்...இந்தா இத பிடி என்று தனது துப்பாக்கியை அவரிடம் தினித்தான்.....அவர் வெளிறிய முகத்துடன் அவனை பார்க்க!!!

நான் த்ரீ சொல்லி முடிக்கும் போது நீ அந்த கயிர சுடனும்...இது உனக்கான ஆஃபர்...உன் பையன கொல்ற உரிமை உனக்கே கொடுக்கபட்டது என்றவன் தன் கவுன்டவுனை ஸ்டார்ட் செய்தான்.....



வேணாம் ருத்ரா!!!நடுக்கத்துடன் துப்பாக்கியை பிடித்து கொண்டே கூறினார்....

அவன் அவரை பார்த்த பார்வையில் சர்வமும் அடங்கி போனது...

ஒன்.....


ட்டூ....



த்ரீ...


என்று முடிக்கையில் டூமீல் என்ற சத்தத்துடன் கயிறு அறுந்து கீழே விழ லொள்...லொள்..என்ற சத்தத்துடன் தனது இறையை உண்ண ஆரம்பித்தது.....

வலியால் அலறும் தன் மகனை காப்பாற்ற இயலாமல் சிலையாகி நின்றார் சச்சிதானந்தம்....!!!


அப்போது வர்மாவின் மொபைல் ஒலிக்க... எடுத்தவன் ....


சொல்லுங்க டாக்டர்..


"..............."


"அப்படியா"


"..........."


ஒகே டாக்டர்...நான் உடனே வரேன் என்றவன் அங்கிருந்து மருத்துவமனை நோக்கி விரைந்தான்.....



அத்தை...
மாயா யாரு?எதுக்காக அவ உங்க மேலே இவ்வளவு பகை பாராட்டுறா?"-தனிமையில் மனம் உருத்திய வினாவிற்கு நிர்மலாவிடம் விடை தேடினான் அவன்.அவனது வினாவினால் இயற்கையின் சப்த நாடியும் ஒடுங்கி போயிருக்கலாம்!அதுவரை வீசிய தென்றல் காற்றும் சட்டென நின்று நிர்மலாவின் பதிலுக்காக தவமிருந்தது.

"சொல்லுங்கத்தை !மாயாக்கும் உங்களுக்கும் என்ன பந்தம்?அவ இன்னைக்கு ஹாஸ்பிட்டல் வந்து உங்கல மிரட்டிட்டு போனதுக்கு அர்த்தம் என்ன?"


"வர்மா"அவ பேசுனத எல்லாம் கேட்டியா!!!

இல்ல அத்தை அவ என்ன பேசுனானு எனக்கு தெரியாது!!!!ஆனா அவ பேச பேச நீங்க பயந்த மாதிரி தெரிஞ்சது!!!!


நிர்மலாவிற்கு இப்போதுதான் போன உயிர் திரும்பியது போல் இருந்தது....


அது ஒன்னும் இல்லைப்பா!!!உன் கல்யாணம் நடக்க கூடாதுனு மிரட்டிட்டு போனா...மீறி நடந்தா எங்க எல்லாரையும் ஆழிச்சிடுவேனு மிரட்டிட்டு போறா!!!இப்போ என்னப்பா பண்றது என்றார் அப்பாவியாய்!!!!


அவர் கூறியதை கேட்டு அவன் முகம் சிவக்க அத்தை நீங்க கல்யாணத்துக்கு உடனே ஏற்பாடு பண்ணுங்க....அந்த மாயாவா இல்ல வர்மாவானு பாத்துடலாம் என்றவன் ஒரு முடிவுடன் அங்கிருந்து சென்றான்.....



மேடம்!டயர் பஞ்சராயிடுச்சு!ஸாரி மேடம்!"

"இதெல்லாம் ஒழுங்கா பார்க்க மாட்டியா?"

"ஸாரி மேடம்!"

"வேலையில நீடிக்கணும்னு ஆசை இருக்கா?"

"..........."

"இருக்கா?"

"எஸ் மேடம்!"

"இனி ஒருமுறை இப்படி நடந்தா அந்த ஆசையை அழித்துக்கோ!போய் மெக்கானிக்கை கூட்டிட்டு வா!"

"ஓ.கே.மேடம்!"-அந்த ஓட்டுநர் விரைந்து ஓடினார்.

தன் கைப்பேசியை உயிர்பித்தவள்,யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.


ஆதவா!!!

"..............."

"காரை எடுத்துட்டு அந்த இடத்தை குறிபிட்டு வா!"-என்றவள் வெறுப்போடு காத்திருந்தாள்.இருளில் நிறத்தை ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் பளிச்சிட்டது ஒரு காரின் வெளிச்சம்!!புருவத்தை லேசாக சுருக்கி பார்த்தாள்.உள்ளிருந்து இறங்கியது ஆதவன் அல்ல!!இறங்கியவர் நால்வர்.....அவரவர் கரங்களில் கத்தி,கட்டை,துப்பாக்கி என்று தத்தம் ஆயுதம் ஏந்தி இருந்தனர்.மாயா குழப்பமாக அவர்களை நோக்கினாள்.சுற்றியும் ஒருவரும் இல்லை!!அவளையே முறைத்தப்படி நெருங்கினர் அவர்கள்!!மாயா இரண்டடி பின் நகர்ந்தாள்.நொடிகள் கடக்க,இருவரது வேகமும் அதிகமாகி ஓட்டத்தில் விட்டது.தனி ஒரு கன்னிகையை துரத்தினர் அந்த தடியன்கள்!!அவளும் தன்னால் இயன்றவரை ஓடினாள்.எவ்வளவு தான் ஓடுவாள்,ஒரு கட்டத்தில் சோர்ந்தவள் நின்றுப் போனாள்.



அந்த நால்வரும் அவளை நெருங்கினர்.

"மாயா!அதானே உன் பெயர்!"என்றான் ஒருவன்.

"கேவலம் ஒரு பொண்ணு நீ!உனக்கு அவ்வளவு திமிரா??"

"நாங்க இன்னிக்கு உன் திமிரை அடக்குறோம்டி!!"என்றான் இன்னொருவன்.அவள் முகத்தில் சலனமில்லை!!அந்தப் பிடிவாதம்,ஆணவம் துளியும் குறையவில்லை.

"என்னடி?பயமா இருக்கா?"-கேலி செய்தான் ஒருவன்.ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவள்,தான் அணிந்திருந்த மேல் சட்டையில் கைப் பகுதியை முட்டிவரை மடித்துவிட்டாள்.

"இங்கே பாருடா!"-என்று ஒருவன் கத்தியோடு அவளை நெருங்க,சட்டென அவனது கையை தடுத்தது ஒரு கரம்......தன் காலால் அவனது மார்பில் உதைத்தான் ......உதை வாங்கியவன் இரண்டடி பின் நகர்ந்தான்.யாவரும் புரியாமல் விழிக்க இன்னொருவன் வந்தான்.வந்தவன் அவனது கையில் அடிக்க அந்த இரும்பினை உயர்த்த,அதைப் பிடித்து தடுத்தாள் மாயா.....சட்டென அவள் கையிலிருந்து அதை உருவியவன்,அவனது முகத்தில் பலமாக அதை வைத்து அடிக்க முகம் முழுதும் எலும்பு நொறுங்கி இரத்தம் பீறிட விழுந்தான் அவன்.....அடுத்ததாக துப்பாக்கி கொண்டு ஒருவன் சுட சுதாரித்து விலகியவன் விரைந்து சென்று அவனது விலாவில் தாக்கி அவனை மண்டியிட வைத்து துப்பாக்கிப் பிடுங்கினான்.இறுதியாக நின்றிருந்தவன் அஞ்சி ஓட,அவனை துரத்தியவன் ஒரு கட்டத்தில் துப்பாக்கியால் அவனது காலில் சுட,அவன் தடுமாறி கீழே விழுந்தான்.அவனது கரத்தை முறுக்கி,அவனுக்கு வலிகளை தந்தவன்,

"சொல்லு!யார் உன்னை அனுப்பினது?"என்று மிரட்டினான்.

"சொல்லுடா!"

"சொல்லிடுறேன்!"

"யாரு?"

"உங்களை கொல்ல சொல்லி வர்மா சார் தான் அனுப்பினாரு!"என்றான்.

"வர்மாவா??"

"ஆமா!என்னை விட்டுவிடுங்க!"-அவன் கெஞ்சலை கேட்டு ,அவனை விடுவிக்க நால்வரும் ஓட்டம் பிடித்தனர்.....

அந்நால்வர் சென்ற திசையையே வெறித்தப்படி,துப்பாக்கியை மாயாவிடம் நீட்டினான் ருத்ரா.....


மாயா தலை குனிந்து நின்றாள்....

என் மாயா யாரு முன்னாடியும் தலை குனிந்து நிக்கிறது இந்த ருத்ராக்கு பிடிக்காது...அது நானா இருந்தா கூட....


வெடுக்கென நிமிர்ந்தவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது....


கண்ணீர் அது தான் ஒரு பெண்ணின் பலகீனம்...என் மாயா அவ்வளவு பலகீனமனவளா!!!என் மாயா இந்த உலகை ஆளப் பிறந்தவ!!!அவ இப்படி அழலாமா!!!அது மட்டுமில்லாம அழும்போது உன்ன பாக்க சகிக்கல!!!!

மாயா அவனை முறைத்து பார்த்து முடியாமல் சிரித்து கொண்டே ருத்ரா என்று அனைத்து கொண்டாள்....


அவளது தலையை ஆறுதலாய் வருடியவன் என்ன மாயா இதெல்லாம்!!!

மாயா அவனை பாவமாய் நிமிர்ந்து பார்க்க!!!


உன் விசயத்துல என்ன தலையிட கூடாதுனு சொன்னதால தான் நான் தலையிடாம இருக்கேன்...ஆனா அந்த வர்மாவால உனக்கு ஏதாவது ஆச்சு அவன உயிரோட விடமாட்டேன்!!!


ருத்ரா அப்படி எல்லாம் எதுவும் நடக்காது....அப்படி நடக்க தான் நீ விட்டுடுவியா!!!!

அது சரி நீ எப்படி இங்க வந்த!!!!

பாத்தியா !!!வந்த விசயத்த மறந்துட்டேன்....அப்பாக்கு நினைவு வந்துட்டு...நினைவு வந்த உடனே மருமகள தான் பாக்கனுனு சொன்னார்...அதான் உன்ன கையோடு கூட்டிட்டு போகலானு வந்தேன் !!!!!


என்னது மாமாக்கு நினைவு வந்துடுச்சா!!!!
அப்போ சீக்கிரம் வா நாம உடனே போகலாம் என்றவள் ஆதவனுக்கு அழைத்து விசயத்தை கூறிவிட்டு ருத்ராவோடு கிளம்பினாள் மாயா.....!!!!
 
Last edited:

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 9


இரண்டு வாரம் கடந்திருந்தது.... விடிந்தால் பிரதாப் வர்மனுக்கும் அமிர்தாவிற்கும் திருமணம்..... வீடு திருமண களைகட்டியிருந்தது..... கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.....


அமிர்தா தனது அறையில் இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் !!! வர்மாவிடம் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினால் நிறுத்திவிடுவான் தான்...ஆனால்!! ஏற்கனவே திருமண பந்தத்தில் தோல்வியை சந்தித்தவனை மீண்டும் கஷ்டப்படுத்த விரும்பாமல் தன் நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.....


அப்போது தனது போனை எடுத்து "மை டார்லிங் "என்ற எண்ணிற்கு அழைத்தாள்... இப்போ உனக்கு சந்தோஷமா!!! நான் இருக்கேன்!!! நான் இருக்கேன்னு சொல்லி கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு!!! இதுக்கு மேல நீங்க நெனச்சாலும் இந்த கல்யாணத்தை நிப்பாட்ட முடியாது என்று புலம்பி தள்ளினாள்....


அம்மு நீ எதுக்கும் பயப்படாதே!!! நான் இப்பவும் சொல்றேன் நான் இருக்கேன்!!!!



இதையே எத்தனை வாட்டி சொல்லுவீங்க!!! எனக்கு இத கேட்டு கேட்டு போர் அடிச்சிருச்சு!!!


அம்மு என் மேல நம்பிக்கை இல்லையா!!!!




".................."



உன் கிட்ட தான் கேட்கிறேன் என் மேல நம்பிக்கை இல்லையா!!!!!


"இருக்கு"


இது போதும்..... நீ எதுக்கும் பயப்படாத!!!!நாளைக்கு கல்யாணமுனு ஒன்னு நடந்தா அது என் கூட தான்.....அதை யாராலும் மாற்ற முடியாது....!!!! எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் !!!!நீ சும்மா அழுது வடியாமல் கல்யாண பொண்ணா லட்சணமா சிரிச்சுக்கிட்டே இரு!!!நாளைக்கு நடக்க போற கல்யாணம் உனக்கும் எனக்கும் தான்!! என்று கூறிவிட்டு போனை கட் செய்தான்.....



அதேநேரம் தங்களது அறையில் என்னங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.... அதுக்கு மேல பயமாவும் இருக்கு...என்றார் நிர்மலா.....



பயமா!!!! எதுக்கு நிர்மலா!!!



அந்த மாயாவை நெனச்சுதான்......நாம செஞ்ச எல்லா தப்பையும் தெரிஞ்சு வச்சிருக்கா!!!!



அவளால இந்த கல்யாணத்தை ஒன்னும் நிறுத்த முடியாது..!!!!


. நானும் அதைத்தான் கடவுள்கிட்ட வேண்டுகிறேன்.... இந்த கல்யாணம் எந்த தடங்கலும் இல்லாமல் நல்லபடியா நடக்கணுமுனு.... எத்தனை வருஷம் காத்திருப்பு இது...!!!இந்த சொத்துக்காக எத்தனை கொலை பண்ணிருப்போம்!!!! இனிமே இந்த சொத்து எல்லாம் நமக்குத் தான்.... நமக்கு மட்டும்தான் என்று கண்கள் மின்ன கூறினார்.....!!!!



நிர்மலா இப்பவரைக்கும் நாம இந்த சொத்த அனுபவிச்சுகிட்டு தான இருக்கோம்.....பின்ன எதுக்கு இந்த கல்யாணத்த நடத்த இவ்வளவு முயற்சி பண்ற!!!!


அதான் நீங்களே சொல்லிடீங்களே!!!அனுபவிக்கிறோம் ..அவ்வளவு தான்!!!ஆனா இதே நம்ம சொத்தா இருந்தா ஒவ்வொரு விஷயத்துக்கும் அந்த வீணாப்போன வர்மாகிட்ட போய் நாம கெஞ்ச வேண்டியது இல்ல பாருங்க...!!!


நிர்மலா இதுல நம்ம பொண்ணோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு!!!!


அவளால தான இந்த சொத்தே நமக்கு கிடைக்க போகுது...


என்ன சொல்ற!!!!


அட ஆமாங்க!!!! உங்க தங்கச்சி வீட்டுகார கொண்ணு இந்த சொத்தை எல்லாம் நாம அடஞ்சிக்கலானு பார்த்தோம்...ஆனா அந்த நாயி இந்த சொத்து எல்லாத்தையும் அவனோட வரபோற மருமகளுக்குனு எழுதி வச்சிருக்கானே!!!!இப்போ நம்ம பொண்ண அந்த வர்மா கல்யாணம் பண்ணிகிட்டா நம்ம பொண்ணுகிட்ட சொல்லி இதெல்லாம் நம்ம பேருக்கு மாத்திக்குவோம்!!!இதுவே வேற எவளாவது இருந்தா இந்த சொத்தும் நமக்கு கிடைக்காது...இந்த வீட்லயும் எடம் இருக்காது!!!!


அப்போ எந்த பிரச்சனையும் இல்லாம இந்த கல்யாணம் நடக்கனும்!!!!


ஆமா!!!அந்த மாயா எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்த முயற்சி பண்ணுவா!!!நாம அதுக்கு வாய்ப்பே குடுக்க கூடாது!!!!

அது எப்படி முடியும்.....!!!


அதுக்கு நாம அவள எப்படியாவது ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிவிடனும்...என்று யோசித்தவர் முகம் பிரகாசமாக தனது போனை எடுத்து அந்த பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் அழைத்து ஏதோ கூறினார்........


நிர்மலா எதுக்கு இப்போ இதெல்லாம்!!!!என்றார் குழப்பமாய்....!!!


நாளைக்கு தமிழ்நாட்டோட லீடிங் நியூஸ் என்ன தெரியுமா!!!!



அதான் தெரியுமே!!!தி கிரேட் பிஸ்னஸ் மேன் மிஸ்டர் சந்திர ப்ரதாப் வர்மாவோட மேரேஜ் தான்!!!!!


அதுவும் தான்!!!ஆனா இன்னும் ஒன்னு இருக்கு!!!


அது என்ன நியூஸ் என்றார் புரியாமல்!!!



பிரபல பெண் தொழிலதிபர் மாயா பாலியல் வழக்கில் சிக்கினார்!!!அவருடன் உல்லாசமாக இருந்த அந்த நபர் யார்????இது தான் என்றார்!!!


நிர்மலா நீ என்ன சொல்ற!!! இது எப்படி சாத்தியம்.....ஆதாரம் இல்லாம.....


நீங்க என்ன சொல்ல வறீங்கனு புரியுது!!!ஆதாரம் இல்லாமலா இதை செய்வேன்!!!!

என்ன ஆதாரம்!!!

நேத்து என்னோட போன எங்கயோ வச்சிடடேன்...தேடி பாத்தேன் கிடைக்கல.அப்ப வர்மா போன் வாங்கி என்னோட நம்பருக்கு கோல் பண்ணும் போது தான் அவன் போன் கேலரி எதேச்சையாகைபட்டு ஓபன் ஆச்சு!!!அதுல இருந்த போட்டோவ பாத்து நான் ஷாக் ஆகிட்டேன்..!!!

என்ன போட்டோ அது!!!

மாயா யாரோ ஒருத்தன் கூட நெருக்கமா இருக்குற மாதிரி...அத உடனே என்னோட மொபைலுக்கு ஷேர் பண்ணிட்டேன் என்றார்!!!!

நிர்மலா அந்த போட்டோஸ் எப்படி வர்மா மொபைலுக்கு வந்தது..!!

அதபத்தி நமக்கு எதுக்கு!!!!அத வச்சி நம்ம நம்மோட வேலய பார்போம்...என்று கூறியவர் படுக்க சென்றார்...

வர்மா ஒய்ந்து போய் அமர்ந்திருந்தான்....அவனுக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை...ஆனால் ஆந்த மாயாவை தோற்கடிக்க இதை தவிர அவனுக்கு வேறு வழியும் இல்லை.....அப்போது அவனது செல்போன் சிணுங்க எடுத்தவன்...


சொல்லு நரேஷ்...மாயா பத்தி ஏதாவது தெரிஞ்சதா!!!!


ப்ரதாப் நீ உடனே கிளம்பி என் வீட்டுக்கு வா!!!


என்னாச்சு டா!!!!


மாயா பத்தி உன்கிட்ட பேசனும்!!!எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல..!!!அதான் என்னால வர முடியல!!!


டேய் !!டைம் பாத்தியா!!!லேட் நைட் ஆச்சு!!!விடிஞ்சா எனக்கு கல்யாணம்!!!இப்போ போய் எப்படி!!!



டேய் அவசரத்த புரிஞ்சிக்கோ!!!உடனே வா என்று கூறி கட் செய்தான்...!!!



அடுத்த பதினைந்து நிமிடத்தில் நரேஷின் முன்பு அமர்ந்திருந்தான் வர்மா!!!



சொல்லுடா அந்த மாயா யாரு!!!!



அவளுக்கும் ஆதவனுக்கும் என்ன சம்மந்தம்!!!!



ப்ரதாப் நான் சொல்ல போறது எல்லாம் இதுவரைக்கும் மாயாவ பத்தி கண்டுபிடித்த உண்மைகள்...இத நீ ஏத்துகிட்டு தான் ஆகனும்.....

சரிடா சொல்லு!!!!

அவ முழு பெயர் மாயா இல்ல..சுதந்திர மாயா....



சுதந்திர மாயா!!!!நைஸ் நேம்!!!


அவளோட அம்மா அவ சின்ன பொண்ணா இருக்கும் போதே அவங்க அப்பாவ விட்டுட்டு வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்டாங்க!!!


சோ ஸட்!!!


அவ அவுங்க அப்பா கூட தான் இருந்துருக்கா!!!!ஆனா அவுங்க அப்பாவும் கொஞ்ச நாள்ல செத்து போய்டாரு!!!


வர்மா எதுவும் கூறாமல் அமைதியாய் இருந்தான்!!!!



அவுங்க அப்பா சும்மா சாகல...எய்டஸ் நோய் வந்து செத்துருக்காரு!!!


".........."



அதுக்கு அப்பறம் தான் அவ அவுங்க அத்தை வீட்ல வளந்துருக்கா!!!!அவ அத்தை பையன் தான் ஆதவன்!!!

என்ன சொல்ற!!! நீ சொல்றது உண்மையா!!!அப்போ அவுங்களுக்குள்ள லவ் ஏதாவது.......


ப்ரதாப் அப்போ மாயாவுக்கு வயசு 15 தான்...பத்தாவது படிச்சிட்டு இருந்தா!!!!


ஆதவன் அம்மா அவள ரொம்ப கொடுமை படுத்திருக்காங்க....பணத்துக்கு ஆசைபட்டு ஆதவன் ஊர்ல இல்லாத நேரத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.....!!!



வாட்????உச்சகட்ட அதிர்சியானான்!!!!மாயாவுக்கு கல்யாணம் ஆச்சா!!!!!அவனது உள்ளே ஏதோ உடைந்து நொருங்குவது போல் இருந்து..!!!என்ன மாதிரியான உணர்வு என்று அவனுக்கே தெரியவில்லை...


எஸ் ப்ரதாப்!!!அவளுக்கு கல்யாணம் ஆகும் போது அவளுக்கு வயசு 15....அவள கட்டிகிட்டவன் ஒரு சைக்கோ.ட்ரக்ஸ் அடிட்...!!!


என்ன சொல்ற நரேஷ்!!!சின்ன வயசுலேருந்து ரொம்ப கஷ்டப்பட்டுருக்கால!!!! என்று அவளுக்காக வருந்தினான்.!!!!


நரேஷ் வருந்தும் அவனையே பார்த்து கொண்டிருந்தான்!!!!



இப்போ அவ ஹஸ்பண்ட் எங்க இருக்கான்...எப்படி இருக்கான்....என்று கேள்வி மேல் கேள்வி அடுக்க....


இருக்கான்...இப்போ ரொம்ப ஆரோக்கியமா லீடிங் பிஸ்னஸ் மேனா இருக்கான்...!!!!ஆனா இப்போ அவன் அவ கூட இல்ல..!!!!



ஹூ தட் கல்ப்ரேட்!!!!அவன் பேரு என்னா என்றான் அடக்கபட்ட கோபத்துடன்!!!!!


அவன் பேர தெரிஞ்சு நீ என்ன பண்ண போற!!!!


அவன சுட்டு கொல்லனும்....ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு அவ என்ன ஆனானு தெரிஞ்சிக்காம இப்படி அம்போனு விட்டுட்டு போயிருக்கானே!!!அவனெல்லாம் உயிரோட நிக்க வச்சி கொல்லனும்!!!என்று எதற்காக கோபப் படுகிறோம் என்று தெரியாமலே கத்தினான்!!!!



ப்ரதாப் அப்ப உன்னையே நீ சுட்டுக்கோ!!!!!



வாட்ட்ட்ட்???????என்று கத்தி கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தான்!!!!

எஸ் ப்ரதாப்!!!!மாயாவோட ஹஸ்பண்ட் நேம் மிஸ்டர் சந்திர ப்ரதாப் வர்மா!!!இன்டியாஸ் லீடிங் பிஸ்னஸ் மேன் என்றான்அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து கொண்டே!!!!


அவனால் இதனை நம்ப முடியவில்லை....அவனுக்கு ஒருபுறம் மகிழ்சியாகவும் மறுபுறம் வருத்தமாகவும் இருந்து ....என்ன மாதிரியான உணர்வு என்று அவனுக்கே தெரியவில்லை.....மாயா என் மனைவி...அதை நினைக்கும் போதே அவனது மனதில் ஏதோ ஒரு உணர்வு...அவனுக்கு கண்கள் கலங்க வார்த்தைகள் வராமல் உதடுகள் நடுங்கின!!!! அந்த உணர்வே அவனுக்கு சுகமாய் இருந்தது!!!!அதேநேரம் என் மனைவியின் முகம் கூட ஞாபகம் இல்லாதவனாகவா நான் இருந்துருக்கிறேன்....அவனை நினைத்து அவனுக்கே அசிங்கமாக இருந்தது..!!!!நான் எப்படிபட்டவன்!!!ஒரு பெண் செய்த துரோகத்தை நினைத்து இன்னொரு பெண்ணை அதுவும் சின்ன பெண்ணை கொடுமை படுத்தியிருக்கேனே!!!!அந்த செயலே அவன் மனம் வெடித்து சிதற போதுமானதாய் இருந்தது.....!!!!இதெல்லாம் கொஞ்ச நேரம் தான் அவளுக்காக மனம் இளகியது எல்லாம்..!!!அடுத்த நொடி அடுத்த நொடி அவள் செய்த செயலை நினைத்தவன் மனம் இரும்பை போல் ஆனது....!!!
அவளை விட்டு நான் செல்லவில்லையே!!!அவள்தானே என்னை விட்டு வேறு ஒருவனுடன் சென்றாள்!!!நான் வரும் வரைக்கும் காத்திருக்கலாமே!!!நான் வந்தவுடன் உன்னிடம் வாழ விருப்பமில்லை என்று கூறிவிட்டு சென்றிருக்கலாமே !!!!நான் அவளை தேடி வந்த போது எனக்காக காத்திருப்பாள் என்று நினைத்தேன்....ஆனால் ஆசையை பொய்யாக்கி என்னை விட்டு வேறு ஒருவனுடன் சென்றவள் தானே !!!!!என்று நினைத்தவனுக்கு இப்போது இரக்கத்திற்கு பதில் கோபமே வந்தது!!!!



நரேஷ் அப்பறம் எப்படி மாயா இவ்வளவு பெரிய பிஸ்னஸ் வுமன் ஆனா!!!!


அவ இந்த நிலமைக்கு வர காரணம் இந்தியாவின் நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன் மிஸ்டர் ருத்ரா தான் காரணம்!!!!


வாட்!!!ருத்ரா வா!!!அவருக்கு இவளுக்கும் என்ன சம்மந்தம்!!!!

அது தெரியல!!! ஆனா கடந்த ஒன்பது வருஷமா அவ ருத்ரா கூட தான் இருந்துருக்கா!!!!!இப்ப ஒரு வருஷமா தான் அவ தனியா இருக்கா!!!!

இவ்வளவு தான் என்னால மாயா பத்தி தெரிஞ்சிக்க முடிஞ்சது!!!இதுக்கு மேல நீ என்ன பண்ணலானு யோசிச்சு முடிவு எடு என்றான்!!!


தாங்ஸ் ப்போர் இன்பர்மேஷன் என்று கூறிவிட்டு தனது காரை எடுத்து கொண்டு புறப்பட்டான்.அவனால் சிறிதும் நம்ப முடியவில்லை..!!!மாயா தன்னுடைய மனைவி என்று!!!அப்போது அவள் என்னை விடுத்து ருத்ராவோடு தான் ஒடிப்போனாளா!!!!!இப்போது ருத்ராவை விட்டு என்னை தேடி வந்திருப்பது ஏன்!!!!ஒ இவளது குணம் தெரிந்து அவனே வீட்டை விட்டு விரட்டியிருப்பான்!!!!!இப்போது என் மனைவி என்ற உரிமையில் என்னை தேடி வந்திருக்கிறாள்!!!!இதெல்லாம் எதற்காக!!!! அவள் நினைத்தால் அவளிடம் இருக்கும் அழகிற்கும்,,பணத்திற்கும் யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்களாமே!!!!பிறகு என்னை தேடி வந்தது ஏனோ!!!! என்னை பழிவாங்கவா!!!நான் சந்தோஷமாக வாழ்வது பிடிக்காமல் என் சந்தோஷத்தை அழிக்க என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் குடும்பத்தை என்னிடம் இருந்து பிரித்து என்னை யாருமில்லாதவனாக்கி என்னை அழிக்க திட்டமிட்டிருக்கிறாளா..!!!ஏய் மாயா நீ நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது...நான் நல்லா வாழ்ந்துட கூடாதுனு தான நினைக்கிற!!! உன்ன ஜெயிக்க விட மாட்டேன்டி!!!என்னோட கல்யாணம் குறிச்ச நேரத்துல நடக்கும்!!!இத அந்த ஆண்டவனால கூட தடுக்க முடியாது!!!!என்று நினைத்தவன்
எவ்வளவு முயன்றும் அவனால் கடந்த காலத்தை நினைக்க முடியாமல் இருக்க முடியவில்லை!!!!
 
Top