All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "உயிர்த்தெழ செய்வாயா எனதாகிய உன்...???" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Kalaikavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
நன்றி சிஸ் 🙏....
 

Kalaikavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே 🙏,
நம்பளோட கதையோட அறிமுகத்தை உங்களுக்கு முன்னோட்டமா கொடுக்கலாம்னு இருக்கேன் , படுச்சு பாத்துட்டு கதையோட தடத்தை கண்டு புடுச்சிடீன்கனா எனக்கும் கொஞ்சம்😉 சொல்லுங்க.....

ஸ்ரீகலா அக்காக்கு ரொம்ப நன்றி🙏 நான் கேட்டவுடன் தளம் அமைச்சு குடுத்ததுக்கு.....

என்னோட குறைகளை தோழமைகளா தோளில் தட்டி சொல்லி குடுங்க பிரண்ட்ஸ், நிறைகளை உங்க வீட்டில் ஒரு உறுப்பினரா நினைச்சி ஊக்கப்படுத்துங்க.......
:smiley5::smiley5:
 

Kalaikavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம்:-
தன்னவனின் கண்களை ஆழ்ந்து நோக்கி அவள் கூற ஆரம்பித்தாள் “அடிக்கடி சொல்வல்ல இந்தர்… நமக்குள்ள செட் ஆகாதுன்னு… ஆனா பாரேன் நான் ஒரு லூசு?? ஏதோ ஒரு நம்பிக்கை… என் காதல் மேல!!! என்னைக்காவது ஒருநாள் நீயா!!!! என்கிட்ட வந்து ‘உன்ன தவற என்னை வாழ்க்கை முழுசும் யாராலும் சகிச்சிக்க முடியாதுடி லூசு… என்ன ஒன்னு நெறையயய சொதப்புவேன் பொறுத்துக்கோ… ஆனா எவ்ளோ சொதப்புறேனோ அத விட ஆயிரம் மடங்கு உன்ன நேசிப்பேன்… அதனால ஏதோ போனா போதுன்னு உன் இந்தர் மாமாவ கல்யாணம் பண்ணிக்கோடி செல்லம்” இப்படியெல்லாம் நெறைய நெறைய எதிர்பார்த்து இருந்தேன்… என இத்தனையும் கூறியவளின் கண்களில் கண்ணீர் திரையும் உதடுகளில் ஒரு வித புன்னகையும் உறைந்து இருந்தது…

ப்ச்.. விடு இதெல்லாம் இப்ப பேசி என்ன ஆக போது… அப்புறம் நம்ப பிரியர்த்துக்கு ஏதேதோ காரணம் சொன்னல அது........ எதுக்காகவும் இல்ல “உன்ன உனக்காக மட்டுமே விட்டு கொடுத்துட்டு போறேன்” என்று அவன் இதயத்தின் மேல்பக்கத்தில் அவளின் ஆட்காட்டி விரலை வைத்து அழுத்தி கூறும் போது அத்தனை உறுதி அந்த வார்த்தைகளில்….

கடைசியா??? ஒன்னே ஒன்னு சொல்லணும்… என்று கூறி அவனுக்கு மிக அருகில் சென்றவள் அவன் வலது தாடையில் தன் கரத்தை அழுத்த பதித்து, நான்கு கண்களும் ஒன்றோடு ஒன்று மோதிய தருணத்தில் அந்த வார்த்தைகளை உதிர்த்திருந்தாள்…

இத்தனை நேரம் அவள் பேசியதை எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்து கொண்டுருந்த அவன் கண்கள்.. அவள் கூறிய வார்த்தையின் வீரியத்தை அவளின் கண்களின் மொழியில் உணர்த்தவனின் அதிர்ச்சியை பார்த்து திருப்தியுற்றவளாய் புன்னகை ஒன்றை சிந்திய அடுத்த நிமிடம் அங்கு நில்லாது அவனை திரும்பியும் பாராது சென்றுவிட்டாள்…

சொற்கள் உணர்த்தா உன் வலியையை, உன் கண்ணின் மொழியில் உணர்த்தி விட்டாயடி பெண்ணே!!! எப்படி துடைப்பேன் என் பாவத்தை?? விடை அறியா கேள்விகளுடன்? உன்னில்… நான்!!!!

நேசம் உயிர்க்கும்….

10771
 
Last edited:

Kalaikavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
கதையோட முன்னோட்டம் போட்டுட்டேன், எப்டி இருக்குனு ஒரு வார்த்தை சொல்லுங்க.... ஆவலுடன் வைட்டிங்😁😁
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் ரெண்டு:-
தன் வீட்டிற்கு வந்தவள் எப்பொழுதும் போல், அனைவரிடமும் சிரித்த முகமாக பேசி பதில் அளித்தாள். பின் சிறிது நேரம் கழித்து தான் ஓய்வெடுக்க செல்வதாக கூறி தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டவள்,

தாழிட்ட மறுநிமிடம் இத்தனை நேரம் அவள் அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையும் கண்ணீராக வெடித்தது… எங்கே தன் குரல் வெளியில் கேட்டு விடுமோ என்ற அச்சத்தில் தன் இரு கைகளாலும் வாயைப் பொத்தியவள் எவ்வளவு நேரம் அழுதாளோ….. எழுந்து விறுவிறுவென்று சென்று பீரோவை திறந்தவள் அவன் ஞாபகமாக அவளிடம் இருக்கும் அந்த பொருளை(அதனை அவள் அவனாகவே நினைத்து கொள்வாள்) பார்த்து கதற ஆரம்பித்தாள்…… ஆறுதல் கூற யாருமின்றி… கூறினால் மட்டும்???

உன்னிடம் காட்டிய மொத்த "வீராப்பும்” உடைந்து சிதறுகிறது.. என் அறையின் தாழ்ப்பாளை பூட்டிய அடுத்த நிமிடம்…..

ஏன்டா ஏன் அப்டி சொன்ன??? நீ என்னை கொஞ்ச கூட புரிஞ்சிக்கவே இல்லையா???? இல்ல என் காதல உனக்கு நான் சரியா உணர்த்தவே இல்லையானு எனக்கு தெரிலையே….. சொல்லுடா சொல்லு?? என அங்கு அவன் நிற்பது போல் அவனிடமே கேள்வி கேட்டவள்,
அவனை(அந்த பொருளை) பார்த்து ஒரு விரக்தி சிரிப்பை சிந்தி கண்களில் நிற்காமல் வழியும் கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் தொடர்ந்தாள்,
என்ன சொன்ன?? நம்ப பிரிச்சிடலாம்னு தான…. அவ்ளோ ஈசியா போச்சு உனக்கு அது???? எப்டிடா என்னால முடியும்…. வாழ்க்கைய முழுசும் உன்னோட கற்பனையில் வாழ்ந்துட்டு இருக்கேன்…. அத அழிச்சிட்டு உன்னைய யாரோ போல நினைக்கறதும், வாழறதும் என்னால முடியும்னு நினைச்சிட்டல….. இப்டி ஒரு நரக வேதனைய பரிசா குடுத்துட்டியே!!!!!

நம்ப காதல சிறுக சிறுக எவ்ளோ அழகா தேனீ போல சேமிச்சு வெச்சிருந்தேன் தெரியுமா?? இப்டி ஒரே நிமிஷத்துல கண்ணாடிய உடைக்கற மாதிரி மொத்தமா என் மனச உடைச்சிட்டியேடா…… இதுக்கு மேல நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு புரியலையேடா……..
அதற்கு மேல் எத்தனை அடக்கியும் அவளால் தன்னை கட்டு படுத்தவே முடியவில்லை…… இந்த அழுகையின் மூலம் அவளின் மொத்த வலியையும் கரைத்திட எண்ணினாலோ என்னவோ??????
நடக்குமா என்ன? அந்த பேதைக்கு யார் சொல்வது,

முயற்சிக்கும் விடயம் எத்தனை முயற்சித்தாலும் தோல்வியில் முடிவது காதலின் பிரிவில் மட்டுமே….. என்று!!! (நினைவுகளை மறப்பது)

நேசம் உயிர்க்கும்…….


10796



 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பிரண்ட்ஸ்,
முன்னோட்டம் ரெண்டு பதிவிட்டுடேன்.... படிச்சிட்டு என்ன நினைக்கிறீங்க உங்க ஹீரோயின் பத்தி சொல்லிட்டு போங்க 🙂🙂
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் ஒன்று :-10854
"கெட்டிமேளம் கெட்டிமேளம் "
என்று ஐயர் உரைத்த வரையிலுமே எதற்கும் நிமிர்ந்து பார்த்திடாதவள்… நாத்தனார் முடுச்ச யார் போட போறா? என்ற கேள்வியில் விளுக்கென்று நிமிர்ந்து பார்க்க...

அதற்காகவே காத்திருந்தவன் போல பொறுமையாக முன்றாம் முடுச்சையும் தங்கையை நிராகரித்து தானே அவளின் கண்களை பார்த்து கட்டினான்... அதுவரை விழுந்து விடுவேன் என்று இருந்த அவள் கண்ணீர் அவனின் கையில் பட்டு சிதறியது..

அதே நேரம் அவளின் கண்ணின் வழியாக மனதை படிக்க முயற்சித்தவன்…அவள் கண்ணீரில் முதல் முறையாக அவளிடம் நேரடியாக திருமணத்திற்கு சம்மதம் கேட்காதது தவறோ??? என எண்ணினான்..
(ரொம்ப சீக்கிரம் ராசா என மனம் கிண்டல் செய்ய) அதை அசட்டை செய்தவன்..

அச்சச்சோ ஹோம குண்டத்தில இருத்து வரும் புகைல கண்ணு எரியுது போல... என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான்... (ஹி ஹி இந்த கண்ணீர உன் கண்ல இருந்து வராம பாத்துக்க ராசா)
ஆனால் அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அவன் சரிபாதியோ.....
அவளவனிடம் ஒரு நாள் தான் கூறிய "எனக்கு மூணு முடுச்சும் நீதான் போடணும் "என்ற போது,

அதெல்லாம் முடியாது போடி... என்று கூற……

ஏன்? என சீறிவந்தது மறுநிமிடம் அவளிடம் இருந்து கேள்வி ...

அதற்கு அவன், அதெல்லாம் சடங்குடி.. அதது எப்படி நடக்குமோ அப்டிதான் நடக்கும் என்றதற்கு…

அவனை முறைத்து பார்த்து கொண்டே,
நீதான் மூணு முடுச்சும் போடனும் போட்ற .....வேற யாரும் என் கழுத்துல தாலி கட்ட கூடாது... டாட்... என காட்டமாக கூற

அடிப்பாவி !!! அவ என் தங்கச்சிடி... என்று அவன் அலற

யாரா?? இருந்தாலும் இந்த விஷயத்துல மூணாவது மனுஷங்க தான்.....

அதற்கு அவன் அவளை விட்டு சற்று விலகி நின்று அப்ப என்னை தவிர வேற யார கல்யாணம் பண்ணாலும் இத தான் சொல்வியா??? தன் தங்கையையை முன்றாம் மனுஷி என்று சொல்லிவிட்டாளே!!என்ற ஆதங்கத்தில் ஒரு வேகத்துடன் கேட்டு விட...(அடேய் மங்கூஸ் மண்டையா 💂‍♂️ நீ மட்டும் தான் முடுச்சே போடணும்னு சொல்றா அவ!!!! உனையெல்லா வச்சுண்டு….. விளங்கிடும்ம்ம்ம் விளக்குமாறு போ )

என்னடா இது நம்ப இவ்ளோ பேசியும் இவ எதுமே சொல்லாம இருக்கா?? என நிமிர்ந்தவன், அவள் கண்களை பார்த்த பொழுதுதான் அவன் கூறிய வார்த்தையின் அர்த்தமே அவனுக்கு விளங்க.... இதுவரை தன்னை காதலாகவோ, கோபமாகவோ மட்டுமே நோக்கிய விழிகள் முதல் முறையாக அவன் இதுவரை கண்டிராத பயத்தோடும், ஒரு வித அச்சத்தோடும் பார்ப்பதை எண்ணி அவளை பலவாறாக கெஞ்சி, அதட்டி மிரட்டி சமாதானம் செய்தான்……
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

யாரோ??? தன் பெயரை அழைக்க நிமிர்ந்து பார்த்தவள்……
அன்றைய தன்னுடைய பயம் இன்று நிஜமாகி விட்டதே……..

அவளவன் இன்று

வேறொருவனாக???

வேறொருவன் அவள் கணவனாக!!!!!


என்று எண்ணிய மாத்திரத்தில் அவள் இதழ்களில் இருந்து விரக்தி புன்னகை ஒன்று அழகாக உருவானது….

அவள்…. அவள்தான்
இந்தரின் காதலி????
விஜயின் மனைவியாகிய!!!!
நம் கதையின் கதாநாயகி
"இயற்றமிழ்சுடர்"

நேசம் உயிர்க்கும்….




 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புகளா,
நீங்க கேட்ட மாதிரி கதையோட முதல் அத்தியாயத்தை பதிவு செஞ்சிட்டேன், நீங்க எப்டி இருக்குனு ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா எனக்கு உதவியா இருக்கும்..... அப்புறம் நானும் ஹாப்பியா இருப்பேன் 😁
வைட்டிங்....... முன்னோட்டம் ரெண்டுத்துக்கும் லைக் மற்றும் கமெண்ட் சொன்ன எல்லாருக்கும் மிக்க நன்றி 🙏... முடுஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் ரிப்ளை குடுக்க பாக்கறேன்... தெரியாம யாரையாவது விட்டு இருந்தா மன்னுச்சு.....
 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் இரண்டு:-
10871 திருமண சடங்குகள் அனைத்தும் முக்கியமே….. அதிலும் அக்னியை சுற்றி வலம் வரும் சடங்கானது இந்திய கலாச்சரத்தில் பெரும்பான்மையினோரின் திருமண சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறது……

அதுபோல…… இங்கு நம் புதுமண தம்பதிகள் அக்கினியை சுற்றி வலம் வரும் பொழுது, அவர்களது இரண்டு விரல்களின் பிணைப்பில், அவள் உடம்பில் ஒரு நொடிக்கும் குறைவாக வந்து சென்ற சிலிர்ப்பை அவளும், அவனும் சேர்ந்தே உணர்ந்தனர்…… இந்த உணர்வை ஒருவேளை இருவரும் சரிவர புரிந்திருந்தால்??? (பார்ப்போம் நாமும் அவர்களின் பார்வையாளராக)

இவ்வளவு நேரம் கல்யாண பரபரப்பில் இருந்தவன் முதல் முறையாக நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான். பார்க்கறதுக்கு சந்தோசமா இருக்குற மாதிரி தான் இருக்கா??? ஆனா எனக்கு மட்டும் ஏன் அப்டி இல்லனு தோணுது, அவளா எதிலையும் ஒதுங்கியும் போகல ஆனா எவ்ளோ அழகா ஒவ்வொரு விஷயத்திலும் சின்ன சின்னதா உணர்த்தி இருக்கா…. இதோ இப்ப கூட என் கையுள்ள தான் அவ கை இருக்கு… ஆனா அத அவ புடுச்சுக்கவும் இல்ல.. அதுக்காக விலக்கவும் இல்ல…. நீ என்ன பண்ணாலும் அதனால எனக்கு எந்த பாதிப்பும் இல்லனு… சொல்லாம சொல்றளே…
எப்பா சாமி…. ஒரு பொண்ணால இதுக்கு மேல வார்த்தையின்றி உணர்த்த முடியுமா?? தன் நிராகரிப்பை….(ஹி ஹி🤭🤭 ஒன்னும் தெரியாத க்ரீன்பேபியா இருக்கியே… இதுதான் ஆரம்பம் செல்லம்… மெயின் பிக்ச்சர் கமிங்…)

பின் அனைத்து சடங்குகளும் அதன் போக்கில் நடந்து முடிந்தது, யாரும் தன்னை அறியா வண்ணம் அவளும் மிக சாமர்த்தியமாக, எந்தவித குறையும் யாரும் கூறாதவாறு திருமண சடங்குகளில் பங்கேற்றாள்… ஆனால், அவளும் அறியா ஒன்று எத்தனை திறமை இருந்தாலும் கொண்டவன் உணர்வான் “கள்ளியின் கள்ளத்தனத்தை” என்று,

உணர்வுகள் புரியாத வரை
அது ஒரு வரமே!!!
புரியும் பொழுது……..
சாபமோ?? வாரமோ???
அவரவர் செய்த செயல்களே தீர்மானிக்கிறது……


காத்திருப்போம் இந்த “புரிதல்” அவனிற்கு சாபமா??? இல்லை வரமா? என தெரிந்துகொள்ள….

அவன்….. அவன்தான்
இயலின் கணவாகிய விஜய்….
தமிழின் அவளவனான இந்தர்!!!!
நம் கதையின் கைதி அச்சோ😜 சாரி சாரி கதாநாயகனாகிய
“விஜயேந்திர மித்ரன்”

VM என அனைவராலும் தொழில் வட்டாரத்தில் அழைக்கப்படும் வல்லவன்…. ,VM தொழில் சாம்ராஜ்யத்தின் சீ.இ.ஓ….. ஆறு ஆண்டு கால கடின உழைப்பும், நான்கு ஆண்டு கால அசுர வளர்ச்சியும் என பத்து வருட அவனின் சாதனையானது சமூகத்தில் அனைவரும் அவனை “சுயம்பு” என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக கை காட்ட காரணமாக இருக்கிறது…..

மிகவும் அழுத்தமானவன், அவனிடம் இருந்து அத்தனை எளிதில் எதையும் கண்டறிய முடியாது…. அதே அளவுக்கு இனிமையானவன் அவனுக்கு மனதிற்கு பிடித்தவர்களுக்கு மட்டும்….. பலரும் ஆச்சர்யம் அடைவது அவனின் பெயர் பொருத்தத்தில் தான்…..
ஆம், அவன் பெயரில் உள்ள “விஜய்” என்ற சொல்லிற்கு ஏற்ப அவன் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் மட்டுமே முடியும்…. இல்லையேல் அதற்கான வழியை அவனே உருவாக்கி இருப்பான்…… அத்தனை சூட்சமக்காரன்…. “இந்தர்” என்பதற்கு ஏற்ப எங்கு சென்றாலும் இவன் ராஜ்ஜியம் தான்…. “மித்ரன்” குடும்பத்தில் உள்ளவர்க்கு அன்பான தோழன், தன்னிடம் வேலை பார்ப்பவருக்கு தோளை தட்டி கொடுத்து.. தவறை சுட்டி காட்டி, அவர்களின் சாதனையில் ஒன்றாக கை குலுக்கி பங்கேற்கும் நண்பன்….. தன்னுடைய நட்பு வட்டாரத்தில் குறும்புக்கார ராமன்…….

இத்தனை பெயர் படைத்தவன் சறுக்கியதென்னவோ தன்னவளிடம் மட்டுமே……. பார்ப்போம் இந்த சறுக்கல் இவர்களை ஏற்றி விடுகிறதா??? இல்லை பிணைத்து விடுகிறதா!!! என்று……

நேசம் உயிர்க்கும்……

10872




 
Last edited:
Status
Not open for further replies.
Top