All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "உயிர்த்தெழ செய்வாயா எனதாகிய உன்...???" - கதைத் திரி

Status
Not open for further replies.

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னூட்டம்:-

ஓசையோ உன்னை உணர்த்தி செல்ல,

மர்த்தினி.... மகிஷாசுரமர்தினியாக மாறி நிற்பவளை சைட் அடிக்க மனம் தூண்ட!!!!

பெருகும் நீரோ நீ எங்கே என என்னை கேள்வி கேட்கிறதே!!!! என்னுள் நீ......

அடுத்த அத்தியாயத்துக்கு ஒரு குட்டி முன்னூட்டம்😁😁...
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் பதின்னொன்று:-
1127611277

இளமையும் முதிர்ச்சியும் என்னுள் வந்து அடங்கிக்கொள் என்று அழைக்கும் வசந்தகாலம்!!!! ஆனால் அவன் தேர்ந்தெடுத்ததோ தன்னுடைய தொழில் பாதை… இளங்கலை கட்டிடக்கலை பொறியாளப் பட்டப்படிப்பு முடித்தயுடன் வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்கிறாயா என்று கேட்ட தந்தையை மறுத்து…. அவன் படிக்கும் போதே அடித்தளம் செய்து முடித்த தன் ஒப்பந்தங்களை ஒவ்வொன்றாக முடிக்க…

அவர்கள் சொந்த முயற்சியில் தன் தந்தையின் கையெழுத்துடன் வங்கியில் பணம் வாங்கி நண்பன் விஷ்ணுவும் அவனும் சேர்ந்து ஆரம்பித்த சிறிய அளவிலான கம்பெனியான வி.வி கன்ஸ்ட்ரக்ஷன் மூலம் அவர்கள் திறமைகளை அந்த பறந்து விரிந்த தொழில் சாம்ராஜ்யத்திற்கு தங்களை அடையாளம் காண்பிக்க விளம்பர பொருளாக பயன்படுத்திக் கொண்டான் அந்த சிறந்த வியாபாரி…

ஆரம்ப காலத்திலே அவனை சுற்றி நின்ற கை தாளங்களை (ஜய்ன்ஞ்சக்) அடையாளம் கண்டவன் அவர்களை களையெடுத்து அவனைச் சுற்றி அமைத்திருந்ததோ கருப்பு வைரக்கோட்டை!!! அத்தனை சுலபமாக வெட்டி எடுத்திட முடியாத பத்து ஆண்டு கால உறுதி!!! அந்த கர்வம் அவனிடம் என்றுமே திமிராகவே வெளிப்படும்…..

அப்படி தன் இருபத்தி நான்காம் வயதிலே தன் கடின உழைப்பிற்கு கிடைத்த அரசாங்க ஒப்பந்தம் ஒன்றை சரியான இடம் பார்த்து தனித்துவமாக முடித்து தர வேண்டும் என்று அவன் இந்தியாவிலும் விஷ்ணு வெளிநாட்டிலும் உறக்கமின்றி அயராது உழைத்த சமயம்…..

கட்டித்தரவிருக்கும் கட்டிடமானது துப்புரவு தொழிலாளர்களுக்கான வாழ்விடம்…. அதனை தன் தொழிலுக்கான வளர்ச்சிக்காக மட்டுமின்றி அவர்களின் பாதுகாப்பையும் பிரதானப்படுத்தி அவனே இரவு பகலாக முன் நின்று செய்து கொடுத்தான்….

தன் சைட்டில் நின்று தொழிலார்களை கண்காணிக்கும் தருணம் அல்லது பேசிக்கொண்டிருக்கும் நிமிடங்கள் எதுவாக இருந்தாலும் சரியாக ஐந்து மணிக்கு அவன் செவி தீண்டி தன்னை கடந்து செல்லும் சைக்கிள் பெல்லின் சத்திற்காக அவன் இதயமும் சேர்ந்தே தவமிருக்கும் அவன் மூளையின் ஒட்டுமொத்த மறுப்பான சண்டித்தனத்துடன்!!!!!

சரியாக ஐந்து மணி…. விடாது ஒலித்த பெல்லின் ஓசையில் ஒருநிமிடம் அவன் இதயம் தாளம் தப்பி தயவு செய்து திரும்பி பாரேன் என்று இறைஞ்ச!!! இவனோ வீரப்பாக கட்டிடத்தை பார்ப்பது போல் நின்றிருந்தான் சரியான வீம்புக்காரன் இல்லையோ!!! ஆனால் இன்றோ அந்த ஒலி நீ திரும்பி பார்க்காமல் செல்ல மாட்டேன்…. என்பது போல் அடித்துக் கொண்டே இருக்க,

என்னடா இது எப்பவும் திரும்பலானா போய்டுவா இன்னைக்கு என்ன??? என்று ஒரு நொடி சிந்தித்தவன் நெற்றி சுருங்க திரும்பி பார்க்க,

அவளோ மனதில் எரும எரும எங்கையாவது திரும்பி பாக்கறானா பாரு… திமிர் புடுச்சவன்.. என்று அவன் முதுகை முறைத்து கரித்துக்கொட்டிக் கொண்டிருந்தவள், அவன் திரும்பியும் அப்படியே முகத்தை வைத்திருந்தாள்….

திரும்பியவன் கண்டதோ பள்ளி இறுதியாண்டில் படிப்பதற்கான அடையாளங்களான பள்ளியின் சீருடையில் இரண்டு புறமும் மடித்து பின்னலிட்ட பின்னல், நெற்றியில் சிறிதான கருப்புநிற பொட்டு இதெற்கெல்லாம் மேல் இன்னும் வீட்டிற்கே செல்லாமல் உன்னைத்தான் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொல்வது போல் சைக்கிளின் பின்பகுதியில் கீழே விழுந்து விடாத அளவுக்கு கட்டிவைக்கபட்டிருந்த பையுடன் ஒரு காலை தரையில் ஊன்றியும் மற்றொரு காலை பெடலின் மீதும் வைத்து இவனை முறைத்து கொண்டிருந்தவளை தான்….

அவளை பார்த்தவன் வாயை திறந்து பேசவெல்லாம் இல்லை.. தன் குளிர் கண்ணாடியை மூக்கின் மேல் இறக்கியவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி இருந்தான்…

இங்கு எதுக்கு பிரேக் போட்ட?? என்பது போல்,

அதில் கட்டுப்படைந்தவள்
ஏன் துரை வாய திறந்து பேசினா கீழ கொட்ற முத்தெலாம் நான் திருடின்னு போய்டுவேன்னா என்ன??? என்று அவனை வறுத்தவள் அவனிடம்,

இந்தர் என்கூட கொஞ்சம் வரீங்களா??? என்று கண்ணை சுருக்கி கேட்க….

அசட்டையாக நின்று கொண்டிருந்தவன் அவளின் இந்தர் என்ற அழைப்பில் ஒரு நிமிடம் ஜெர்க்காகிவிட்டான்…. இருந்தும் எப்டி இவ்ளோ சின்ன பொண்ணு நம்பள பேர்சொல்லி கூப்புடலாம் என்ற ஈகோ தலைதூக்க,

ஹே என்னடி கொழுப்பா பேர்சொல்லி கூப்புட்ற??? உன்ன விட ஆறுவருஷம் பெரியவன் அந்த நினைப்பு கொஞ்சமாவது இருக்கா? இன்னோரு தடவ பேர் சொல்லி கூப்ட பல்ல தட்டி கைல கொடுத்துடுவேன் ஜாக்கிரதை!!! என்று அவள் பக்கத்தில் வந்தவன் இவர்கள் மட்டும் கேட்கும் அளவிற்கு அதேசமயம் காரமாக அவளுக்கு உரைக்க வேண்டும் என்று மிரட்ட,

நீங்க என் மாமன் பையன் விஜயேந்திரமித்ரன் தான??? என்று அவள் அவனிடமே ‘அவனா நீ’ என்ற தொனியில் கேட்க,

அவனிற்கே ஒரு நிமிடம் சந்தேகம் வந்து விட்டது ஏன் இப்டி கேக்கறா?? என்று எண்ணியவன் விட்டுக்கொடுக்காமல்,

பாத்தா எப்டி தெரியுது மேடம்க்கு?? என்று கெத்தாக கேட்க,

அவனை மேலிருந்து கீழ்வரை இதுதான் சமயம் என்று அவன் முன்னே சைட் அடித்தவள்… அவன் கண்களை பார்த்து,

புலிக்கு பொறந்தது பூனையாகுமா என்ன??? என் அத்தையோட அழகும் என் மாமாவோட கம்பீரமும் சேர்ந்து பாக்க ஆளு செம்மயா சும்மா நச்சுனு தான் இருக்கீங்க!!! என்று ஒற்றை கண்ணை அடித்து குறும்புடன் சொன்னாளே பார்க்கலாம்,

ஆனால் அவளிடம் கேள்வி கேட்டு விட்டு ஏதோ உள்ளுக்குள் எதிர்பார்த்தவனுக்குத் தான் புஸ்ஸென்று ஆகிவிட்டதில்லாமல், கடுப்பையும் சேர்த்து கிளப்பி விட்டிருந்தாள் அந்த அத்தை பெத்த ரத்தினம்….

என்னைய சைட் அடிக்கிறாளா இல்ல எங்க அப்பாவையா!!! என்ற கேள்வி மனதில் சிறிது பொறாமையுடன் சேர்ந்து எழ அதை புறம்தள்ளியவன் அவளிடம்,

இப்ப எதுக்கு வெட்டி பேச்சு பேசிட்டு நிக்குற முத வீட்டுக்கு கிளம்பர வேலைய பாரு… என்று அவள் கிளப்பிய கடுப்பை அவளிடமே பாதியாக தள்ளிவிட்டிருந்தான்,

இந்…. இந்தர் என அவன் பெயரை அழைக்க வந்தவள் பாதியில் நிறுத்தி என்னங்க என்று கூப்பிட்டவள்,

அங்க மூணு ரவுடி பசங்க கலாய்க்கறாங்க கொஞ்சம் வந்து என்னனு பாக்கறீங்களா!!!! என்று கெஞ்சுவது போல் கேட்க,

முதலில் இந்தர் என்று அழைக்க வந்து பின்பு மாற்றியவளை கண்டவன் வெளியில் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை எனினும் அவன் மனதோ அந்த இந்தர் என்ற வாய்மொழி அழைப்புக்கு ஏங்கி சிறுபிள்ளை போல் நின்று கொண்டிருக்க,

அவள் பேச்சில் கவனம் வைத்துக்கொண்டே அமைதியாக நின்றிருந்தவன் கலாய்க்கிறார்கள் என்ற சொல்லில் கொதிநிலை அடைந்து தாடைகள் இறுக நிற்க… அதனை பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தவளின் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது இந்தருக்கு….

ஏண்டி அறிவில்ல உன்னக்கெல்லாம்… பொண்ணுனா தைரியம் வேணும் என் அத்தை மாதிரி.. அவங்களுக்கு பொறந்துட்டு இப்படி சின்ன கொழந்த மாதிரி கம்பளைண்ட் கொடுத்துட்டு நிக்குற… எந்த இடத்துல உன்ன கலாய்ச்சானோ அங்கையே தூக்கி போட்டு மிதிச்சிட்டு வந்து மாமா இப்டி பண்ணிட்டேன்னு சொல்லி இருந்தேன்னு வச்சுக்கோயேன் அப்ப என் வீட்டு பொண்ணுன்னு பெருமப்பட்டு இருப்பேன்… வந்து நிக்கிறா நல்லா பெருசு பெருசா கண்ணு வச்சிட்டு முட்டைக்கண்ணி முட்டைக்கண்ணி (டேய் திட்றதுக்கு ஒரு நியாயம் வேணாமாடா) என்று அவள் பேச சிறிது கூட இடம் கொடுக்காது அவன் கத்திக் கொண்டிருக்க,

இந்த ஆத்திரம் அவள் மேல் அவனுக்கு வந்ததல்ல… மொத்த சமூகத்தின் மேல் ஒரு தனிமனிதனின் பொறுக்க முடியா ஒரு வலி…

தனியாக பெண்கள்!!!! அதில் சிறுவர்கள் பெரியவர்கள் மத்திய வயதை சேர்ந்தவர்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லை…. “பெண்கள்” என்று பெயர் ஒரு பொம்மைக்கு வைத்திருந்தாலே தப்பாக பார்க்கும்… பேசும்…. நடந்து கொள்ளும் இந்த பல கொடூர மனிதர்களும் அல்லாது மிருகங்களும் என்று வரையறுக்க முடியாத ஜந்துக்கள் வாழும் இதுபோன்ற சமூகத்தில்,

யார்யாரையோ ஏன் அது தந்தை அண்ணன் தம்பி காதலன் கணவன் நண்பன் என எந்த பெயரில் நம்முடையவர்கள் இருந்தாலும் அவர்களை எல்லா நேரமும் சார்ந்து இருப்பதை விட தன்னம்பிக்கையும் அவளிடம் உள்ள தற்காப்புக்கலையும் அவளை காப்பற்றும் எந்த நிலையிலும்….. என்பது இந்தரின் அசைக்க முடியாத எண்ணம்!!!!

ஏனென்றால் எவ்வளவு அது போன்ற வரையறையில்லாதவர்களை பார்த்தவுடன் கொல்ல வேண்டும் என்ற வெறி கழுத்து வரை உண்மையான ஆண்மகனாக இருப்பவர்களுக்கு இருந்தாலும், புலியின் தோளில் திரியும் கழுதைப்புலிகளான மொத்த பேரையும் கண்டறிந்து களையெடுப்பது என்பது அத்தனை சுலபமான செயலல்ல!!!!

இப்படியாக மொத்த பெண்களும் வீறு கொண்டு எழவேண்டும் என்று இவன் நினைத்திருக்க, இயல் இப்படி வந்து புகார் கூறுவது அவனுக்கு என்ன இவ இப்டி கோழை மாதிறி இருக்கா?? என்று கோபத்தை கிளறி விட்டதோடு, கண்டிப்பா இவளுக்கு தற்காப்புக்கு எதன்னா ஒன்னு சொல்லி கொடுக்க அத்தைக்கு தெரியாம ஏற்பாடு பண்ணனும் என்ற உடனடி தீர்வையும் காண வைத்தது….

சரி வா…. என்று சொல்லி அவளை சைக்கிளுடன் முன்னே நடக்க விட்டவன் அவளுடன் பின்தொடர்ந்து… அந்த கயவர்களை அடித்து கொன்று விடும் ஆத்திரத்தோடு வந்து கொண்டிருக்க…. ஆனால் அவன் அங்கு கண்ட காட்சியோ இந்த இடத்திற்கு தங்கள் வரவு தேவையற்றது!!! என்று சொல்வது போல் அவள் சொல்லிய மூவரும் தரையில், வெளியில் பார்த்தால் ஏதோ கீழே தெரியாமல் விழுந்து விட்டது போல் மொத்தமும் உள்காயதுடன் கம்பளி புழுவாக சுருண்டிருந்தனர்!!!!

அவனுக்கோ யாரிதை செய்திருப்பார்?? என்று விளங்காமல் சுற்றுமுற்றும் தேட அதற்குள் அவன் செவி தீண்டி இருந்தது அதற்க்கு காரணமுடையவளின் கனீர் குரல்….

யோவ் என் மாமன் மகனே!!! என்று தன் பக்கவாட்டில் இருந்து குரல்வர,
இவள….. என்று திரும்பியவன் அவள் நின்றிருந்த ஸ்டைலில் இங்கு நடந்த மொத்த தாக்குதலும் தலைவிக்கே சொந்தமானது!!!! என்று நன்கு அறிந்து மகிழ்ச்சியில் அமைதியானவன்... பாக்கலாம் என்னதான் சொல்றானு?? என்று நிதானித்து நிற்க,

அவனை அழைத்தவளோ…..
என்ன சொன்னீங்க உங்க அத்தைய மாதிரி தைரியமா இருக்கணுமா??? என்று ஒயிலாக கேட்டவள்,

சரியா பாத்துக்கோங்க மச்சான்! அங்கு அடையாளம்லாம் சரியா இருக்கானு!!!! ஏன்னா நாளைக்கு நீ அவள் இல்லைனு சொல்லிட கூடாது பாரு…. அந்த முன்னெச்சரிக்கை தான்!!! என்று சொன்னவள் கையானது அவள் வைத்திருந்த பொருளின் மீது அழுத்தி பிடித்து பெண்மைக்கே உரிய திமிருடன் நின்று அவனை பார்க்க….

இதோ இந்த பார்வையில் தான் இந்தர் மொத்தமாக விழுந்தது அவனை புரியாமல் தெரிந்தே…

கொல்றடி!!!! நானும் சின்ன பொண்ணாச்சேனு மனச எவ்ளோதான் கட்டுப்படுத்துறது!! ஆனா இந்த திமிர் பார்வை எல்லாத்தையும் எடுத்து ஸ்வாகா பண்ணிடுச்சு… இன்னும் ஒரு வருஷம் அதுக்கப்புறம் பாருடி உன் மாமனோட காதல!!! லுக்கா விட்ற லுக்கு….. என்று அவன் மனதில் அவளை கணக்கு செய்யும் திட்டத்தை தீட்டி இருந்தான் சிறந்த பொறியாளனாக…

அவளோ இவனிடம் சொல்லியே தீர வேண்டும் என்ற முனைப்பில் அவன் பார்வை மாற்றத்தை அறியாது….

அப்புறம் ஏதோ சொன்னீங்களே அடிச்சிருந்தா பெருமை பட்டு இருப்பேன்னு?? அது எப்டி நடந்ததுன்னு சொல்லவா!!!! என்று கேட்டவளுக்கு அமைதியாக அவன் தலையசைப்பை தர…. நடந்ததை கூற ஆரம்பித்தாள்,

அவள் தினமும் சென்று வரும் வழி ஒருநாள் பழுதாகி விட.. பள்ளியிலிருந்து வீட்டிற்கு ஒரு பதினைந்து நிமிடம் தாமதமெடுக்கும் இந்த வழியை பயன்படுத்தும் போது எதேச்சையாக தெரிந்ததுதான் இந்தர் இங்கு கட்டிடம் கட்டுவது.. அதிலிருந்து இந்த வழியையே உபயோகிக்க ஆரம்பித்தவள் இதுநாள் வரை அதையே தொடர்கிறாள் எப்படியாவது அவன் முகத்தை திருப்பி காண்பிக்க மாட்டானா!!! அந்த கிராதகன் என்ற ஏக்கத்தோடு…..

இன்றும் அதே போல் அவன் முகத்தை பார்த்து விடவேண்டும் என்ற நோக்கில் பள்ளி முன்னதாக விட்டுவிட (இதனாலே அவள் வழக்கமான நேரத்திற்கு அவனிடம் வர முடிந்தது) சைக்கிளை வேகமாக மிதித்து கொண்டு வர … இந்தர் இருந்த இடத்திற்கும் அவள் வந்து கொண்டு இருந்த இடத்திற்கும் அந்த வளைவை தாண்டினால் சென்று விடலாம் என்ற இடத்தில் கல்லூரி படிக்கும் மாணவியிடம் மூன்று பொறுக்கிகள் ஏதோ வம்பிழுத்து கொண்டிருக்க, அந்த யுவதியின் கண்ணிலோ தன்னை யாராவது வந்து காப்பாற்றி விட மாட்டாரா என்ற தவிப்புடன் சுற்றும் முற்றும் ஒரு தேடல்,

ஆனால் அவள் கண்ணிற்கு பட்டதோ பள்ளிச்சிறுமியான நம் இயல் தான்…. அத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும் அந்த பெண் நினைத்தது… அவளை எப்படியாவது இவர்களின் கண்ணில் மாட்டாமல் இந்த இடத்தை விட்டு அகற்றிட வேண்டும் எனத்தான், அவளை கண்களாலே இங்கிருந்து சென்று விடு என செய்கை செய்ய….
அதற்குள் அந்த ஜந்துக்கள் அவள் ஷாலை ஒரு பக்கம் பிடித்திழுக்க அதில் பயந்தவள் அவர்களிடம் மீண்டும் தன் மானத்தை காக்க போராட ஆரம்பித்தாள்….

பின்னிருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்த இயலோ தேடியது ஒன்றே ஒன்று தான்… அதனை பார்த்து, தேர்ந்து எடுத்து கையின் பின் மறைத்துக்கொண்டு அவர்களிடம் சென்றவள்,

அண்ணா… என்று விருப்பம் துளியும் இல்லாமல் அழைக்க,

அந்த பெண்ணிடம் அராஜகம் செய்து கொண்டிருந்தவர்கள் தோற்றத்தாலோ…. நான்தான் இந்த உலகத்திலே நல்லவன் என்பற்குரிய அத்தனை வெளிவேஷத்தையும் போட்டிருந்தார்கள்… இயல் அழைத்தயுடன் அவள் பக்கம் திரும்பியவர்களின் பார்வையானது அவர்கள் எப்படி சுருண்டிருந்தார்களோ அந்த கம்பளிப்புழு போல் அருவருக்க தக்கதாக மாறியது…. அதில் ஒருவனோ,

மச்சி ஒரு பச்சி மூணுபேருக்கும் எப்டி பத்தும்னு பாத்தோம்…. ஆனா பாரேன் இப்ப செம்ம தொக்கா இன்னொன்னு வந்து தானா மாட்டிகிச்சு…. என்று கொச்சை தமிழில் பேச,

அந்த பெண்ணோ இப்டி வந்து மாட்டிக்கிட்டியே!!!! என்று இயலிர்க்கும் சேர்த்து பயந்து கொண்டு நின்றாள்….

அண்ணன்களா அந்த அக்காலாம் எதுக்கு நானே உங்க மூணு பேருக்கும் சரியாதான் இருப்பேன்!!! என்று இயல் ஒரு தினுசாக சொன்ன வேகத்தில் மூவரும் அவர்களின் பைக்கில் இருந்து இறங்கி இருந்தார்கள்….

டேய் அந்த பொண்ணே வரேன்னு சொல்லு போதும் நமக்கு என்னடா?? என்று மற்றொருவன் சொல்ல,

இன்னொருவனோ…. என்ன இருந்தாலும் இவளையும் விட முடியாதுடா மச்சா… வேணும்னா ரெண்டு பேரையும் சேர்ந்து பாத்துக்கலாம் இது எப்டி இருக்கு?? என்று ஒரு கோண சிரிப்புடன் கூட்டாளிகளிடம் சொன்ன அடுத்த நொடி தரையில் விழுந்திருந்தான் கைகளை பற்றிக்கொண்டு அம்மா என்ற அலறலுடன்….

இவனின் அலறலில் சுதாகரித்த மற்ற இருவரும் யார் அடித்தது என்று பார்க்க….

அங்கு நம் நாயகியோ வேலாயுதத்துக்கு பதில் கையில் புன்னைமர கொம்புடன் கண்ணில் அனல் தெறிக்கும் மகிஷாசுரமர்தினியாக இவர்களை பார்வையால் பொசுக்கி கொண்டிருக்க….

அதற்கெல்லாம் பயந்திருந்தால் இது போன்ற இழிவான செயலை இவர்கள் செய்ய நினைத்து கூட இருக்க மாட்டார்களே…. பயம் என்ற ஒன்று பிறக்கும் ஒவ்வொருவனுக்கும் வாழ்க்கையில் இருக்க வேண்டும்… தனக்கு உயிர் கொடுத்தவளை போல, நடமாடும் அனைவரும் உணர்வு நிறைந்த பெண்கள்தான், அவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்த கூடாது என்பதில்..

ஆனால், இன்றோ சொல்லக் கூட நாக்கு தடைவிதிக்கும் அளவிற்கு மோசமான பல செயல்கள் நடந்தேறுகின்றன….. அதற்க்கு தண்டனை தான் இன்னும் ஸ்திரமாக இல்லை என்பது இவர்கள் போன்றவர்களுக்கு கையில் கிடைத்த பூமாலை….

இயல்தான் அடித்தாள் என்று தெரிந்தவுடன் அவர்களின் வெறி எல்லையை கடக்க, அவளை தாக்க எண்ணியவர்கள் முதலில் ஆயுதமாக எடுக்க நினைத்தது அவள் பெண்மையை தான்… கண்களாலே ஒருவனுக்கு மற்றொருவன் செய்கை செய்து அவளை சுற்றி வலைத்தவர்கள் அவளிடம்…

ஏண்டி உனக்கெல்லாம் எவ்ளோ தைரியம் இருந்தா என் ஆளையே அடிப்ப??? பொட்டச்சி உனக்கெல்லாம் இவ்ளோ ஆங்காரம் இருக்க கூடாதே!!!! சோ நாங்க இப்ப என்ன பண்ண போறோம்னா…. என்று சொன்னவன் அவளை தொட வர,

சொன்னவனுக்கு மட்டுமில்லை நின்னவனுக்கும் சேர்த்து பல தர்ம அடிகள் வஞ்சனை இல்லாமல் கிடைத்திருந்தது அந்த வீரமங்கையிடம் இருந்து…. இத்தனை தைரியத்திற்கும் காரணம் அவள் சிறுவயது முதல் கற்று…. பயிற்சி பெற்று இன்று சிறுவர்களுக்கு சொல்லி தரும் நம் தமிழ்நாட்டின் மொத்த வீரத்தையும் இதனுள் அடக்கலாம் என்று மார்த்தட்டி நம் பெரியவர்கள் சொல்லி கொள்ளும் "சிலம்பம்"….

முதலில் இறுக்கி பிடி….

கவனம் இலக்கு மட்டுமே…

அடித்தால் வீழ்த்தி இருக்க வேண்டும்!!!!!!


என்ற மொத்த தாரக மந்திரத்தையும் சிலம்பமாக கற்று தேர்ந்தவள் இன்று மர்த்தினி வடிவத்தில் அனைவரையும் வீழ்த்தி ஓய்ந்திருந்தாள்!!!!

ஆத்திரம் தீரும் மட்டும் அவர்களுக்கு உட்காயம் மட்டுமே படும் அளவு மூன்றுபேரையும் புரட்டி எடுத்தவள் அவர்கள் கெஞ்சிய கெஞ்சல்களை இறுதிவரை காதில் வாங்கவும் இல்லை அவர்களிடம் அவள் பேசவும் இல்லை…..

இத்தனை கலவரத்திற்கு பின்னும் சமயோசிதமாக யோசித்தவள் அந்த பெண்ணை உடனே அங்கிருந்து தன்னுடன் அழைத்து சென்று சிறிது தூரத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் அவள் வீட்டிற்கு தெறிந்த ஆட்டோ அண்ணாவிடம் அவளை பத்திரமாக சேர்த்து விட்டு வீட்டிற்கு தகவல் கொடுக்குமாறு சொல்லிவிட்டே இந்தரை பார்க்க வந்தது…

இவள் கூறிய அனைத்தையும் அவர்கள் மேல் வெறுப்பு அதிகரிக்க கேட்டு கொண்டிருந்தவன்.... அவள் செயலில் வியந்து இறுதியாக அவளைவிட வயதில் பெரியவளை பத்திரமாக சேர்ப்பித்து விட்டாள் என்று கூறி முடிக்கவும்…..

சபாஷ் தமிழ்!!! என்று கைத்தட்டவும் சரியாக இருந்தது….

அவர்களை பார்த்தவனுக்கு நன்றாக புரிந்து போனது அவளுடைய இலக்கு எது என்று… தெரிந்தும் இருந்தது அதை வெற்றிகரமாக முடித்துவிட்டாள் என்று…. இனிமேல் இங்கு சுருண்டிருக்கும் ஒருவனாலும் நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்திற்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது என்பது அச்சரம் பிசக்கா உண்மை!!

அவனின் பாராட்டை பெற்றவளோ அவனிடம் ஒன்றும் சொல்லாது தன் தேரை எடுத்தவள் அவனை குழப்பி விட்டு சிறிது தூரம் அவனை விட்டு சென்று,

டேய் என் அத்த மகனே!!! என்று வேண்டுமென்றே சத்தமாக அழைக்க… (பேர சொல்லியா கூப்பிட கூடாது... அனுபவி ராசா 🤣🤣)

அவனுக்கோ பக்கென்றாகி விட்டது..
அப்பவே நினச்சேன் என்னடா வெடிகுண்டு!!! நமத்து போன பட்டாசு மாதிரி போதேன்னு…. கொழுப்ப பத்தியா இவளுக்கு!!! என்று அவன் மனதில் நினைப்பதற்குள் அடுத்த திரியை வேகமாக பற்ற வைத்திருந்தாள் சுடர்….

குளிர்கண்ணாடி போட்டிருந்ததால் அவன் அதிர்ச்சி அழகாக மறக்க பட்டிருக்க… அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,

இன்னொருவாட்டி நான் வரும்போது பராக் பாத்துட்டு நான்தான் இந்த உலகத்திலே சின்சியர் தகர டப்பான்ற ரேஞ்சுக்கு நின்னுட்டு இருந்த மகனே அதே கெதிதான் உனக்கும்!!!! என்று கீழே இருந்தவர்களை காண்பித்தவள்… கண்ணை உருட்டி, ஆள்கட்டி விரலை காண்பித்து அவனை எச்சரித்து…. அதைவிட எச்சரிக்கையாக அவன் பதில் பேசும் முன் தன் வாகனத்தில் றெக்கைக்கட்டி பறந்திருந்தாள் அந்த சேட்டைக்காரி!!!!

அவனோ புல் பிளாட்….. வாயை திறந்து நிற்கவில்லை அதுவொரு குறைதான்!!!

இதனை இங்கு கேட்டு கொண்டிருந்த விஷ்ணுவுக்கோ அதற்க்கு மேல்தாக்கு பிடிக்க முடியவில்லை…. பேசிக்கொண்டே அவன் ஜீப்பின் அருகில் வந்தவர்கள், வண்டியின் முன்பகுதியின் மேல் விஷ்ணுவும் பக்கவாட்டு கண்ணாடியின் மேல் விஜயும் கைவைத்து நின்றிருக்க,
வண்டியிலிருந்து வயிற்றை பிடித்துக்கொண்டே கீழிறங்கியவன்…

அய்யய்யோ மச்சி முடியலடா!!! நானும் எவ்ளவோ இந்த சிரிப்ப அடக்க பாக்கறேன் ஹா ஹா ம்ஹும் இதுக்கு மேல தாங்காது… செம்மடா தங்கச்சி!!!! என்று வயிறுவலி வரும் அளவு சிரித்தவன்….

ஆனா இதுல ஹைலைட் என்ன தெரியுமா??? பிரீ பேமலி பிளானிங்… சிறப்பான சம்பவம்டா!!! என்று சிரித்துக்கொண்டே விஜயின் தோள்தொட,

இத்தனை நேரம் அவன் பேசியதோ சிரித்ததோ அவன் கேட்டானா என்பது செவி மட்டுமே அறிந்த ஒன்று.. ஆனால் அவன் மனதோ அவனவளிடம் வீழ்ந்து கிடைக்க… நினைவலைகளின் வலியால் இரும்பையும் உருகியிருந்தால் அந்த இயலிறகு!!!

அவனை தொட்டு திரும்பியவன் கண்டதோ விஜயின் கண்களில் இதோ விழுந்து விடுவேன் என நிற்கும் கண்ணீர்த்திரைகள்… அதை பார்த்து சிரித்து கொண்டிருந்தவன் அவனிடம்,

டேய் மித்ரா என்னடா மச்சி?? என்று அவன் தோள் தொட்டு கேட்டவனுக்கு…. தெரிந்த ஒன்றுதானே தன் மித்ரன் கடந்த சில ஆண்டுகளாக தன்னிடம் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை மறைகிறான் என்றும், அதுவும் அது இயல் சார்ந்தது என்பதுவரை…

அதன் பொருட்டே அவனிடம் ஒன்றும் இதுநாள்வரை கேட்காமல் அவனே சொல்லுவான் என்றும் அமைதி காத்தது… இன்று அதற்கான வாய்ப்பு கிட்டவே அவளை பற்றி அவன் வாய்மொழி சொல் வழியாக கேட்டவன் சிரிக்க ஆரம்பித்திருந்தான்…

ஆனால், இது அவன் எதிர்பார்த்து காத்திருந்த சமயம்… அவ்வளவு எளிதாக விஜய் அவன் வலியை வெளியில் சொல்பவன் இல்லை என்பது அவனறிந்த அவன் குணம்…. அப்படியிருக்க காயத்தை தன்னிடம் சொன்னால் சிறிதேனும் ஆறும் என்ற நம்பிக்கையிலே அவனை வார்தைமிகாமல் பேச தூண்டியது…. விஜயிடம் அதற்கு எதிர்வினை சரியாகவே வந்திருந்தது என்பதுதான் ஆச்சரியம்!!!!!

வலி….

சிலநேரம் வார்த்தைகளாக வெளிப்படும்,
சிலநேரம் புலம்பல்களாக வெளிப்படும்…
சிலநேரம் எழுத்துக்களாக வெளிப்படும்…
சொல்ல முடியாத வலி கண்ணீரால் மட்டுமே வெளிவந்து உருகி கரையும்… என்பது விந்தையிலும் விந்தை!!!!!


நேசம் உயிர்க்கும்…

 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பிரண்ட்ஸ்:-
அடுத்த அத்தியாயம் பதினொன்றை பதிவு செஞ்சிட்டேன்🙂🙂... ஒருவார்த்தை எப்டி கதை போகுதுனு படிச்சி பாத்து சொல்லிட்டு போய்டு திருப்பும் பதிவு பண்ணும் போதும் வந்துடுங்க மக்கா😜😜😉... போன பதிவுகளுக்கு லைக் மற்றும் கமண்ட் போட்டவங்க எல்லாருக்கும் மிக்க நன்றி 😍😍😁😁
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையோட மைய முன்னூட்டம்:-
காட்டில் இரண்டு மான்கள் சிங்கத்தை விரட்ட,
விளையாட்டு காட்டும் சிங்கத்திற்கு யார் உரைப்பது துரத்துவது மான் அல்ல அம்பு வைத்திருக்கும் வேட்டைக்காரர்கள் என்று....
சிங்கம் தான் காட்டின் ராஜா என நினைத்து துரத்தும் அந்த மான்களுக்கு யார் சொல்வது தங்கள் இலக்கு பின்வரும் நரியென்று!!!!!
இந்த மொத்த ஆடுகளத்தையும் கண்காணிக்கும் அந்த கண்கள் யாரை காப்பாற்றும் யாரை கதற குதறும் என்பது அந்த கண்கள் மட்டுமே அறிந்த ஒன்று!!!!

அவர்களின் ஒருவன்.....

பிரண்ட்ஸ் எதனா கெஸ் பண்ண முடுஞ்சா ஒருவார்த்தை சொல்லுங்க 😉😉
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் பனிரெண்டு:-
11336


11337

அரண்மனையா இல்லை மாளிகையா என்று பார்ப்போர் வியக்கும் அளவுக்கு இருந்த அந்த பிரம்மாண்ட வீட்டிடை சுற்றிலும் கருப்பு மற்றும் காவி உடை போட்ட காவலர்கள் பாதுக்கப்புக்கு தூண் போல் இருபத்துநான்கு மணிநேரமும் நின்றபடியே இருக்க..

அவ்வீட்டின் முகப்பிலோ திருவிழா கூட்டத்தை போல் அத்தனை மக்கள்திரள் அந்த ஒற்றை முகத்தை காணும் ஆவலில், அந்த வீட்டின் முகப்பிற்கும் மைய வாசற்படிக்கும் எப்படியும் ஒரு கிலோமீட்டர் இருக்கும் என்பது மக்கள் அறியா திருப்பதிவாசல்…

ஐயா எப்ப வருவார்???

நம்பத்தான் பார்க்கற அவசரத்துல ஐயா எப்பயும் வர நேரத்த விட சீக்கிரமா வந்துட்டோமே!!!!
அவர பாத்துட்டா போதும் நம்ப குறையெல்லாம் தீர்ந்திடும்….

ஐயாவோட தெய்வீக சிரிப்ப பாத்தா போதும் என் ஜென்ம சாபம் தீர்ந்திடும்…

இப்படியான பல குரல்கள் அங்கு நின்றிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் இடையில் ஆரவாரமாக ஒலிக்க…

இதெற்கெல்லாம் நான் ஒருவனே பதில் என்பது போல் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார் நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் தெய்வீகப்பாண்டியன்….

வெள்ளை கதர்வேஷ்டி சட்டை, நெற்றியில் பட்டை அதன் இடையில் சிறிதான சந்தன பொட்டு… அவர்கள் கூறுவது உண்மைதான் என்று தோன்றும் அளவு தெய்வ கடாட்சம் பொருந்திய புன்னகை… கண்களோ யார் வந்தாலும் வரவேற்கப்படுவீர்கள் என்று சொல்லும் அளவு சாந்தமாக பார்க்க தன் முன் நின்றிருந்த மொத்த பேரையும் பார்த்து இருகரம் கூப்பி அழகாக தன் தொண்டர்களை வரவேற்று…

ஏன் எல்லாரும் நின்னுட்டு இருக்கீங்க உக்காருங்க…. என்று சாந்தமாக சொன்னவர்,

டேய் ரத்தினம் ஏன் யாருக்கும் சேர் போடாம இருக்க என தன் ஆளை மிரட்ட, அவனோ வழக்கம் தானே என்பது போல் நின்றிருக்க,

கூட்டத்தில் இருந்த அனைவரும் இல்லைய்யா நாங்க இப்டியே உக்காஞ்சிக்கிறோம் என்று சொன்னபடி தரையில் அமர்ந்து விட்டனர் அவரின் பக்தகோடிகள்….

அவரோ அதற்க்கு ஒருபடி மேல்சென்று தான் ஒரு மத்தியமைச்சர் என்ற எந்த பந்தாவுமின்றி அவர்களுடனே தரையில் சம்மணமிட்டு அமர மொத்த கூட்டமும் பதறி அடித்துக்கொடு எழுந்து நின்றது….

ஐயா… என்சாமி…. குலதெய்வமே என்ற அடைமொழி சொல்லோடு,
அமைச்சரோ அமைதியாக

அவர்களை பார்த்தவர்….
இங்க பாருங்கய்யா எனக்கு 58 வயசாகுது இப்டி பொசுக்கு பொசுக்குனுலாம் உக்காந்து எழுந்துக்க முடியாது சொல்லிப்புட்டேன் பாத்துக்கோங்க… என எங்கு தட்டினால் காய் விழும் என்று சுண்டிக்கோலை பார்த்து அடித்தார் அரசியல்வாதியாயிற்றே!!!!

அதற்க்குமேல் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தது அந்த படை..

சொல்லுங்க எல்லாரும் எப்டி இருக்கீங்க?? இவ்ளோ தூரம் இந்த சின்னவன பாக்க வரவேண்டிய அவசியம் என்ன… இவனுங்க யார்க்கிட்டையாவது சொல்லி இருந்தீங்கனா நானே உங்க தொகுதியில வந்து பாத்து இருப்பேனே… என்று அன்பொழுக கேட்க,

கூட்டத்தில் இருந்த ஒருவனோ எழுந்து கைகட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தான்,
ஐயா நீங்களே எங்களோட நல்லதுக்காக ராவும் பகலும் குடும்பத்தலாம் விட்டுட்டு அந்த தில்லில போய் கஷ்டப்படறீங்க… மாசத்துல ஒருநாள்தான் இங்க விடுப்பு எடுத்துட்டு வரீங்க… அப்பவும் ரெண்டுமணி நேரம் எங்களலாம் பாக்க டைம் கொடுக்குறீங்க…. இப்டி எங்களுக்காக பாடுபடர உங்கள் அலைகழிச்சா அது எங்க குலத்துக்கு நாங்க சேக்கற பாவமா போய்டுமய்யா!!!! என்று கண்ணில் கண்ணீர் மல்க உரைக்க….

யோவ் செந்திலு இப்ப என்ன நீங்களே வந்து என்னை பாக்கணும் அவ்ளோதானா… இதுக்கு போய் ஏன்யா கண்ண கசக்கிட்டு நின்னுட்டு இருக்க… முத உக்காரு, என் பெருமைய சொல்றதுக்கு இதுவா நேரம்?? உங்க குறையெல்லாம் தீர்ப்பேன்ற நம்பிக்கைல நீங்க எனக்கு ஓட்டு போட்டு இவ்ளோ பெரிய இடத்துல உக்கார வச்சி இருக்கீங்க… உங்களலாம் பாத்துக்கிட்டாலே என் குடும்பம் நல்லா இருக்கும்யா… (பிறர் குடும்பத்துக்கு சோறு போட்டா நம்ப குடும்பத்துக்கு சாம்பார் வந்துடும்ன்ற லாஜிக்கோ🤔🤔) என்று பெருந்தன்மையோடு சொன்னவர் ஒவ்வொருவரிடமும் அவர்களின் குறையை கேட்டு அறிந்து அதனை தன் காரியதரசியிடம் அவசர வேலையாக குறித்தும் வைத்துக் கொள்ள சொன்னார்…

அவர்களின் மொத்த குறையையும் கேட்டு அறிந்தவர் அனைவரையும் தன் வீட்டின்முன் உள்ள பந்தலில் சாப்பிட அமர்த்தி விட்டே தன்னில்லம் சென்றிருந்தார் அந்த அன்னதானபிரபு….. அவர் வீட்டிற்கு வரும் எல்லாருக்கும் அது எத்தனை மணியாக இருந்தாலும் சாப்பாடு பரிமாறப்பட்டு அனுப்பவேண்டும் என்பது அமைச்சரின் அன்புகலந்த வேண்டுகோள் தன் பணியாளர்களுக்கு…..

தன் இல்லத்தின் வாயிலை அடைந்தவர்க்கு உள்ளிருந்து வந்த ஊதவத்தி மனம் தன் மனையாளை உணரவைத்து அவள் தெய்வத்திடம் என்ன வேண்டிக் கொண்டிருப்பாள் என்பதையும் தெள்ளத் தெளிவாக அறிய வைத்தது…

அத்தனை பெரிய ஹாலில் ஒருவர் கூட இல்லாமல் இருப்பதை எல்லாம் கண்டு கொள்ளாதவர் வலதுபுறம் உள்ள பூஜையறையின் முன் போய் நிற்க, பள்ளி விடும் நேரத்திற்கு காத்திருக்கும் சிறுமி போல் கணவனின் வருகை அறிந்து அவர் மனைவி லட்சுமி தீபார்த்தி தட்டுடன் அவரை பார்த்து புன்னகைத்தார்…

தெய்வீகம் ஆரத்தி எடுக்க கைக்கொண்டு போகும் சமயம் தட்டு பின்னிழுக்கப்பட்டது….. குழம்பியவர் மனைவியின் முகத்தை ஏறிட, அவர் கண்களாலே அவர் காலை சுட்டி காண்பித்து செருப்பை அவிழ்க்க சொல்ல,

லக்ஷ்மிம்மா ரொம்ப கஷ்டம்டா உன்கிட்ட… சின்ன தப்பு கூட உன்கண்ல இருந்து தப்பறது இல்ல… என வெளியில் சிரித்த அதே சிரிப்பை சிரித்தவர் ஆரத்தியை வணங்கி தட்டில் உள்ள குங்குமத்தை முதலில் எடுத்து தன் நெற்றியிலிட்டவர் கையில் உள்ள மீதியை மனைவியின் நெற்றிவகிட்டிலும் தாலியிலும் வைத்து மனைவியின் மனதை நிறைய வைத்தார்…

லக்ஷ்மிம்மா தப்பா நினைச்சிக்காதடா ஒரு சின்ன வேல ஒருமணிநேரத்துல உன் பாண்டி உன்கூட இருப்பான் ஓகேவா என்று கன்னத்தை பிடித்து கேட்க,

அய்யோ மாமா என்னதிது விடுங்க யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க என்று சினுங்க,

எவன்டி அது என்னை கேக்கறது… என் பொண்டாட்டிய எங்க வேணும்னாலும் நான் கொஞ்சுவேன்... என்று அவர் மீசையை முறுக்கி கொண்டே சொல்ல,

அதில் லச்சையுற்ற லட்சுமி அம்மாள் முகம் முழுக்க வெட்கத்துடன்,
போதும் மாமா போய் சீக்கிரமா உங்க வேலைய முடிச்சிட்டு சாப்பட்ற நேரத்துக்கு வந்து சேருங்க, அப்பறம் இந்த வேலயிருக்கு அந்த வேல இருக்குனு சொல்லக் கூடாது.. என்று கொஞ்சி மிரட்டியவர் மீண்டும் பூஜையறையில் புகுந்துக் கொண்டார் தன் வேண்டுதலை தொடர….

அவர் மனைவியிடம் பேசிவிட்டு வீட்டின் பின்கட்டிற்கு வந்தவர் இத்தனை நேரம் பூசிக்கொண்டிருந்த பட்டையை அழித்து சட்டையின் கையையும் வேட்டியையும் மடித்து கட்டியவர் நான் அவன் இல்லை என்று சொல்லாமல் காண்பித்து தன் புல்லட்டை உதைக்க,
இத்தனை வயதிலும் கட்டுமஸ்தான உடம்பு ஒரே உதையில் வேகமெடுத்திருந்தது..

தென்னிதிய மண்ணின் நிறம், முறுக்கிய மீசை சூடேறிய கண்ணின் நரம்புகள் சிகப்பு நிறத்தில் இருக்க.. பார்ப்பதற்கு சண்டியர் என்று சொல்லுமளவிற்கு அனைத்து அம்சங்களும் பொருந்தி இருந்தது….

இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தன் ரகசிய ராஜ்யத்திற்கு வண்டியை பறக்க விட்டவர், வண்டியிலிருந்து இறங்கி வேக எட்டுக்களுடன் வாசற்கதவை அடைய, அவர் வருகை அறிந்து கதவை திறந்து விட்டவனோ நெஞ்சில் விழுந்த உதையால் தூர பரந்திருந்தான்…. அவரின் அந்த ஒரு செயலே வெறியின் அளவை சொல்ல நின்றிருந்த மொத்த ஆட்களும் பயத்தில் நடுங்கி கொண்டு நிற்க,

கதவை திறந்து உள்நுழைத்தவரோ கர்ஜிக்க ஆரம்பித்திருந்தார்…
எப்பிடிடா எப்புடி… இது எப்டி சாத்தியம்… என் குகைக்குள்ள நுழஞ்சி ஒருத்தன் என் ஆளையே தூக்குறானா... அவனுக்கு அவ்ளோ தைரியத்தை குடுத்தது யாரு??? என்று தன் சுற்றுப்புறம் குலுங்க கத்தியவர் தனக்குமுன் இருந்த டீபாயை எட்டி உதைக்க அது அதற்க்குமுன் கீழே விழுந்தவுடன் சேர்ந்து ஒரு ஓரமாக முடங்கியது….

தெய்வீகமோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நிற்றவர் அந்த கூட்டத்தின் தலைவனை பார்த்து,

ரத்தினம் யார் இந்த காரியத்தை செஞ்சது…. என்று ஆத்திரத்துடன் கேட்டுக்கொண்டே அவரின் பிரத்யேக சாய்வு நாற்காலியில் அமர, அதுவோ அவரை கம்பீரமாக உள்வாங்கியது பர்மா தேக்காயிற்றே!!!!

ரத்தினம் என்று அவரால் அழைக்கப்பட்டவனோ நெடு நெடுவென ஆறடிக்கும் மேல் வளர்ந்து பார்ப்பவர்களை அச்சுறுத்தும் எண்ணெய் பூசிய இரும்பு தேகம் கொண்டிருக்க… அவர் கூப்பிட்ட அடுத்த நொடி கையை கட்டிக்கொண்டு வந்து அவர் கண்களை சந்திக்காது வேறொரு திசையில் பார்த்துக் கொண்டு நின்றான்,

இப்ப அசிங்கப்பட்டு ஒன்னும் புடுங்க முடியாது, உங்களலாம் நம்பனா.... கூடயிருந்தே கழுத்த அறுத்துடுவீங்க போல!!! இனிமே நானே டீல் பண்ணிக்கிறேன்… என்று ஒருவரையும் பேசவிடாது முறைத்தவர்,

யார் பண்ணதுன்னு கேட்டு ரொம்ப நேரம் ஆச்சுன்னு நினைக்கிறேன்?? என கால்மேல் கால்போட்டு திமிராக வினவ,

ஐயோ VM-னு… என சொல்ல முடியாது இழுக்க…

அவரோ காது கேட்காதது போல் காதை தன் இடது கையால் குடைந்தவர்
புரில VM னா??? அவன் என்ன பெரிய ஆளா!!!! பேர சொல்லுடா வெண்ணை… என்று அசட்டையாக கேட்க,

விஜயேந்திரமித்ரன்…. VM கான்ஸ்டருக்ஷனோட முதலாளி ஐயா!!!

எவனா இருந்தா எனக்கு என்ன அந்த பருப்புக்கு செல்வத்த போன் போட சொல்லு…

செல்வம் என்பவனும் விஜயின் எண்ணிற்கு கால் போட்டு தர,

இங்கு தன் நண்பனிடம் பேசிவிட்டு தன்னவளின் நினைவுகளில் ஜீப்பை எடுத்தவனோ மொபைலின் திரையில் மிளிர்ந்த பிரைவேட் நம்பர் என்ற சொல்லில் இதோழோராம் சிரிப்பு மின்ன காலை உயிர்ப்பித்தான்…

அமைச்சர்வாள்..... என்ன இவ்ளோ ஸ்லோவா இருக்கீங்க!!! உங்க பதவிக்கு அப்டேஷன் வேகமா இருக்க வேணாமா??? என தன் குரலை மாற்றி சிறுபையன் போல் விளையாட,

தான் யார் என்று தெரியாமல் தான் இப்படி செய்துவிட்டான் என்று விஜயை எளிதாக எடை போட்டவர் எப்பொழுதும் இதுபோன்ற செயல்களுக்கு பயன்படுத்தும் பெயர் தெரியாத எண்ணில் இருந்து அழைக்க சொல்ல, அவனோ இவரின் பூர்விகத்தையே சொல்லிவிடுவேன் என்பது போல் எடுத்தவுடன் அவரை பதவி சொல்லி அழைத்து மிரள வைத்திருந்தான்…

என்ன தெய்வீகம் நான் யாருன்னே உங்களுக்கு தெரியாத போதே இப்டி பயந்து போய் பிரைவேட் நம்பர்ல இருந்து கூப்புடுறீங்களே!!!! நான் யாருன்னு உங்க அல்லக்கைங்க உங்களுக்கு சொல்லல போலையே அச்சச்சோ சோம்பேறி பசங்க…

சரி அத விடுங்க, அடுத்தவங்க யாருன்னு நம்ப தெரிஞ்சிக்கறத விட…. நம்ப யாருன்னு அடுத்தவங்க சொல்லி கேக்கும் போதும் ஒரு கிக்கு இருக்குமாம் பாருங்க கிக்கு அதெல்லாம் ஒரு தனி சுகம்….. என்று வருடும் வார்த்தையில் சொன்னவன் அவருக்கே மறந்ததை மீண்டும் தெளித்து தெளிய வைத்திருந்தான்….

டேய் என்ன கொழுப்பா?? பொடிபையன் நீ என்னையே மிரட்டுறியா???? உன்னெல்லாம் உரு தெரியாம அழிச்சிடுவேன் பாத்துக்கோ!!! என்று கொதிநிலையை அடைந்து கொண்டிருந்தவர் மிரட்ட,

பாத்தியா நான் எவ்ளோ மரியாதையா.... நீயெல்லாம் ஒருநாளைக்கு ஆயிரம் கணக்கானவங்கள ஏமாத்தற பொறம்போக்கு, உள்ளுக்குள் ஒன்னு வெளில ஒன்னுன்னு பொண்டாட்டிகிட்டியே வேஷம் போடற பொறுக்கி, ஒன்னுமே தெரிலனாலும் எல்லாமே தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிற அறிவுகெட்டவன்னு தெரிஞ்ச பிறகும்…. என்று இழுத்தவன்

மரியாத குடுத்து ங்க போட்டு பேசறேன்…. ஆனா நீ?? என்று கேள்வியோடு நிறுத்தியவனின் அடுத்த சொற்கள் கர்ஜனைகளாக மாறியிருந்தது,

இன்னொருவாட்டி மரியாதையில்லாம ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்துச்சு.. இதோ இப்ப உன்ன சுத்தி நீயும் நானும் பேசறத லவுட் ஸ்பீக்கர் வழியா கேட்டுட்டும் கேக்காத மாதிரி, உனக்கு கைகட்டி கூழ கும்பிடு போட்டுட்டு நிக்கறானுங்க பாரு உன் அடியாளுங்க அவனுங்க எல்லாரும், இவ்ளோதானா நீன்னு பாக்கற அளவுக்கு என் பேச்சு இருக்கும்.... அப்புறம் அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன் பாத்துக்கோ!!! என்று இவன் அழுத்தமாக அதேசமயம் கெத்தாக உரைக்க….

இங்கு இருக்கையில் அமர்த்திருந்தவர்க்கோ தாடையின் இருபக்கமும் கோடாக வியர்வை இறங்க, அவர் வயிற்றிலோ புளி கரைய ஆரம்பித்திருந்தது….

அவன் நான்கு வரியில் கூறியதே இந்த பெரிய மனிதரின் பெருமையான வரலாறு… சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிவந்தவர் வட மாநிலத்திற்கு சரக்கு லாரியின் வழியே தப்பித்து சென்று அங்கு கிடைத்த சின்ன சின்ன வேலைகளை செய்தவர்…. படிக்கவில்லை என்றாலும் அங்கு அந்த மனிதர்களை திறமையாக ஏமாற்றி பிழைக்கும் அளவு வடமாநிலத்து மொழிகளை பேச கற்றுக் கொண்டார்,

இப்பொழுது அவர் பதவி வகிக்கும் கட்சி தலைவரின் கையில் அவரது பதினாறு வயதில் அகப்பட, இவரது பேச்சு திறமையை பார்த்தவர் தன்னுடனே வைத்துக்கொண்டு சுற்ற, இன்று அவர் ஆட்கள் செய்யும் வேலையை அன்றே திறமையாக செய்துத் தேர்ந்து நாட்டின் முக்கிய பதவியில் இருக்கிறார் என்பது இதுவரை அவர் மட்டுமே அறிந்த ஒன்று….

அதுவும் இல்லாமல் அங்கு இருக்கும் பெண்களை மணப்பதற்கு தேடாமல் நம் தமிழ்நாட்டின் பெண் என்று சமூகம் போற்றும் (அதாங்க புருஷன் சொல்லே வேதம்… மறுபேச்சு அறவே ம்ஹும்,,,) அத்தனை கடாட்சமும் பொருந்திய லக்ஷ்மியை மணந்து இங்கு கட்டியிருக்கும் வீட்டிலே வைத்தவர் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் வந்து செல்வார் என்பது ஊர் அறிந்த விஷயம்....

இதில் அவர் மனைவியும் மக்களும் அறியாத ஒன்று இந்த ஒருநாள் கூட தன் மண்ணில் தான் செய்யும் தகிடுதத்தை யாரும் கண்டுபிடித்திடக் கூடாது என்ற உள்நோக்கமும், அவர் ஆட்களை நம்பாத நமபிக்கையின்மையும் முதற்காரணம்….
அனுபவஸ்தராயிற்றே!!!! அவர் செய்து மேலேறி வந்ததை தனக்கு யாராவது செய்து விடுவார்களோ என்ற பயம் என்பதுதான் சொல்ல முடியாத உண்மை….

இதுவரை தன்னுடன் இருபத்தியெட்டு வருடம் வாழ்ந்த தன் மனைவியே அறியாத என்பதை விட அவர் மறைத்து வந்த ஒன்று, ஏன் தன்னை சுற்றி இங்கு நிற்கும் நாற்பது பேருக்கு அவர் அடித்தளம் என்னவென்றே தெரியாதபோது,

தானே அவனுக்கு அழைத்திருக்கிறோம் என்று அறிந்தும் துளி அளவுகூட பயம் இல்லாமல் தன்னையே மிரட்டுகிறான் என்றால் என்று சற்று நிதானித்தவர்…. கையாலே உள்ளிருந்த மொத்த பேரையும் வெளியில் போக சொல்ல, அவர்கள் மொத்த பேரும் அகன்றவுடன் பயந்ததிற்க்கான எந்த அடையாளமும் இல்லாமல் உரையாடலை தொடர்ந்தார்….

Mr.விஜய்!!!

ஹான் இது எப்படியிருக்கு கேக்க.. இப்ப செப்பு!!! என்று ஸ்டைலாக சொல்ல,

ஹா ஹா நான் பயந்துட்டேன்னு நீ சொல்ற… ஆனா உண்மையென்னனா நீதான் என்கிட்டே பயந்துட்ட… இல்லனா இப்படி அடையாளம் தெரியாம என் ஆள தூக்கிட்டு போக வேண்டிய அவசியம் இல்லையே!!! என்று விழுந்தாலும் ஒட்டவில்லைன்ற கணக்கில் பேச,

ஓ ரியலி!!!! என்று ஒற்றை புருவத்தை மெதுவாக உயர்த்தி கேட்டவன்,

அய்யயோ கண்டுபிடிக்க மாடீங்கன்னு நினச்சேன் சார் எப்டி தெரிஞ்சது??? என்று அவன் பயந்தது போல் பாசாங்கு காட்ட,

அதில் தெய்வீகமோ மீன் வலையில் சிக்குவதற்கான வழியை கண்டறிந்த மகிழ்ச்சியில் அந்த பக்கம் இடியே அவன் காதில் விழுவது போல் சிரிக்க,

ஓட்டுநர் இருக்கையில் அமர்த்திருந்தவனோ பக்கத்து சீட்டு வரை அவன் தொல்லையை விளக்கி பிடிக்க வேண்டியதாயிற்று…

அய்யோ தெய்வா அதுக்குள்ளே முழுசா சிரிச்சிடாதீங்க இன்னும் முக்கிய செய்திகள் இருக்கு, அதையும் வாங்கிட்டு உங்க முத்தான சிரிப்பை உதறுங்க… என்று இந்தப்பக்கம் அவன் குறும்பாக சொல்ல,

அவன் பேசிய விதத்திலே அவர் சற்று நிதானிக்க வேண்டியதாயிற்று….

நேத்து நைட் உங்க வீட்ல கரண்ட் நின்னுச்சுதான??? என்று கேட்டவன்,
ச்ச ச்சே இத எப்டி மறந்தேன் நீதான் ரொம்ம்ம்ப பிஸியான மனுஷன் ஆச்சே…. அதான் உனக்கு பதில் இங்க எல்லாத்தையும் பாத்துக்குற ஒரு நொள்ளக்கை இருக்குமே அவன் பேர்க்கூட ம்ம்… ரத்தினம் அவன கூப்ட்டு கேளு… சொன்னவன் மறுநொடி செல்லை எடுத்திருந்தான் காதிலிருந்து அடுத்து என்ன வரும் என்று அறிந்து….

ரத்தினம்… என்று காட்டு கத்தல் கத்தியவர் ஓடிவந்தவனை பார்த்து,

டேய் நேத்து நைட் வீட்ல கரண்ட் போச்சா??? என்று கேட்க,

எப்பொழுதும் நடக்கும் சாதாரண விஷயத்தை ஏன் கேட்கிறார் என்று கேள்வி மனதில் எழுந்தாலும் கேட்கும் தைரியம் அவனுக்கு இல்லை….

ஆமாங்கய்யா… என்று இவன் சொன்னது தான் தாமதம் விஜயிடமிருந்து அடுத்த கேள்வி வந்தது….

ஜெனெரேட்டர் ஒருமணி நேரம் ரிப்பேர் ஆச்சான்னு அப்டியே கேளு தெய்வீ!!! என்று செல்ல பேர்வேறு அவருக்கு…. இவனின் கேளு கேளு என்ற கேள்வியில் காண்டானவர் மீண்டும் செல்லை பெருக்கியில் வைத்திருந்தார் மானமே போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு…. (ஹா ஹா செம்ம பாண்டி போ)

அதை கேட்ட அவர் ஆளின் தலையோ குடுகுடுப்பைக்காரரின் மாடு போல் பூம்பூம் என்று தலையை ஆட,

இப்பொழுது அவன் கேள்வியை விட இவன் பதில்தான் அமைச்சருக்கு அமிர்தத்தை சாப்பிட்டது போல் முகம் மாறியிருந்தது….

சரி இப்பதான் மெயின் கதை, உன் வீட்ட சுத்தி ஒருபடையே உன் பாதுகாப்புக்கு நிக்க வச்சியிருக்க… அதுவுமில்லாம அரசாங்கமே வேற உன்கையில தான் இருக்கு!!!
ஆனா அதெல்லாம் மீறி அந்த ஏரியாலையே உன்வீட்ல மட்டும் கரண்ட கட் பண்ண வச்சி, உன் ஆள வச்சே ஜெனரேட்டர் ரிப்பர் பண்ணச் சொல்லி, சின்னதா கேட்டுக்கு வெளில ஒரு கலவரத்த மூட்டி... உன் முட்டா பசங்கள எல்லாரையும் ஒண்ணுக்கூட வச்சி, என் ஒரேவொரு ஆளு மட்டும் உன் இடத்துல வந்து உன் ஆளையே தூக்கிட்டு வர வச்ச எனக்கு!!!!! உன்ன பாத்து பயம்தான் தெய்வீ…. பயந்தான்!!!! என்று அவன் மிகச்சாதாரணமாக சிரிப்புடன் உரைக்க,

கொஞ்ச நேரம் அந்த திடகாத்திரமான உடம்புடன் சேர்ந்து இதயமும் ஆட ஆரம்பித்திருந்தது... சிறிதாக வடிந்து கொண்டிருந்த வியர்வையோ இப்பொழுது அவரை தொப்பலாக நினைத்திருத்தது….

ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்பதை மறந்தவர்,

டேய் என்ன திமிரா?? எத்தன பேர கீழ அழுத்தி மெருச்சி இந்த பதவிக்கு வந்திருக்கேன் தெரியுமா?? அவ்ளோ ஈசியாலாம் என்ன யாரும் ஒன்னும் பண்ண முடியாது..... ஒழுங்கு மரியாதையா அவன் என்னென்ன சொன்னானோ அதெல்லாம் மறந்துடு…. எவ்ளோ காசு வேணுமோ சொல்லு அத போடறேன்… எடுத்துட்டு ஓடிப்போய் உன் தொழில வளத்துக்கோ!!! என்று உளற,

ஹா ஹா தெய்வீ…. போட்டு வாங்கறதுன்னு கேள்வி பட்டு இருக்கேன், இது என்ன புது டெக்னீக்கா?? என்ஜினீயர் பசங்க மாதிரி…. நம்ப ஒரு இன்புட் குடுத்தா அவுட்புட் எதிர்பாராத விதமா ரொம்ப புதுசான இதுவரைக்கும் எதிர்பாக்காத பதில் வருமாமே!!!! அந்தமாதிரி நான் உன் ஆள வேறொரு விஷயத்துக்கு கடத்துனா…. நீ வேறேதோ சொல்லி என்கிட்ட பேரம் பேசற கலக்கிட்ட போ... நானும் என்னடா கொஞ்ச நாளா வாழ்க்கை சுவாரஸ்யமே இல்லாம போகுதேன்னு பார்த்தேன்…. இப்ப தானா வந்து ஆடு சிக்கியிருக்கு காவு குடுத்துட வேண்டியதுதான்…

ஆனா என்ன சாமிக்கு குடுக்கறதுக்கு முன்னாடி நல்லா தீனி போட்டு அத கொழுகொழுன்னு வளர விட்டுட்டு அப்பறம் அதுக்கிடையே சம்மதம் கேட்டுத்தான் வெட்டுவாங்க!!!!! அதேமாதிரி இந்த ஆட்டத்தோட முடிவுல உன்னோட சம்மந்ததோட நீ எத பெருசா நினைச்சி வாழ்ந்துட்டு இருக்கியோ அத இல்லாம பண்றேன் ஓகேவா தெய்வீ செல்லம்???? என்று சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கூடிய ஆண்மைக்கே உரிய திமிர் நிறைய….. இந்தா வச்சிக்கோ என்பதாக கர்வத்துடன் விஜயேந்திரமித்ரனிடம் இருந்து வெளிப்பட்டிருந்தது ஏதோ ஓர் உத்தியுடன்…

இவன் கடைசியாக பேசியதே அந்த செல்லின் கடைசி மூச்சாகி உயிர்விட்டிருந்தது……

இங்கு இவனோ நாட்டின் அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்க, நாளை அவன் இல்லத்தின் நிதியமைச்சரோ அவனுக்கு இன்பத்திற்ச்சி கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறாள்!!!!!!

நாமும் பார்ப்போம் அவர்களோடு அடுத்த பதிவில்!!!

நேசம் உயிர்க்கும்…..



 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரண்ட்ஸ் அடுத்த அத்தியாயம் பதிவு செஞ்சிட்டேன்🙂🙂... போன பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் பண்ண எல்லா தோழர்களுக்கும் நன்றி 😍😍
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி டீசர்:-

தண்டனையோ எந்த வகையில்???
மெத்து மெத்து.... மொத்து மொத்து..
வஞ்சமில்லா பேரழகு!!!! (என்ன அழகோ)

என்னவளை எங்கோ தொலைத்து தொலைந்து போகிறேன்!!!!

திட்டம் தொலைவாக மாறி விதியின் கையில் கெக்கலிக்கிறதே!!!!

கர்வத்தோடு வியந்து நிற்கிறேன் என்னவளின் லட்சிய பயண தொடக்கத்தால்!!!!!

அடுத்த அத்தியாயத்துக்கான ஒரு குட்டி டீ மக்கா🙂🙂
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் பதின்மூன்று:-
1139811399
ஜீப்பை விரைந்து செலுத்தியவன் வீட்டிற்கு வந்து சேர பத்துமணி போல ஆகிவிட, கல்யாணக் களைப்பில் அனைவரும் உறங்கிவிட்டார்கள் என்பதை கம்பீரத்துடன் உரைத்தது நான்கு ஏக்கர் பரப்பளவுக்கு இடையில் வீற்றிருந்த அந்த அழகான இல்லம் மங்கிய வெளிச்சத்தின் மூலம்….

ஜீப்பை கேட்டை திறந்து விட்ட காப்பாளரை தாண்டி அதனிடத்தில் நிறுத்தி காலனியை வெளியில் கழட்டியவன்… வீட்டின் வாயிற்கதவை திறக்க, இன்னும் எனக்கு ஓய்வு நேரம் வரவில்லை என்பது போல் சோம்பலாக திறந்தது எந்தவித அடைப்புமின்றி அக்கதவு…

உள்ளே வந்தவனோ பார்த்தது ஹாலின் நடுவில் வீற்றிருந்த சோபாவில் உட்கார்ந்த நிலையிலே உறங்கிக் கொண்டிருந்த அவன் மனையாளைதான்… அதில் உஷாரானவன் மனதில்,

அய்யய்யோ அப்பவே வீட்டுக்கு லேட்டா வந்தா கத்துவா…. இப்ப என்ன பண்ணுவான்னு இன்னும் நமக்கு அனுபவமே இல்லையே!!!! என்று வாயிற்கதிவின் அருகிலிருந்தே மனதில் புலம்பியவன்…

நல்ல வேல தூங்கிட்டுதான் இருக்கா… அதனால அலேக்கா அப்டியே தூக்கிட்டு போய்டலாம்… என்று ஒரு அக்மார்க் திருடனுக்கு எல்லாத்தகுதியும் உள்ளவன் போலவே நினைத்தவன், அதை செயல்ப்படுத்தவே ஆரம்பித்துவிட்டான்…. அவளிடம் சத்தம் எழுப்பாமல் மெதுவாக நடந்து வந்து அவளை உட்கார்ந்த வாக்கிலிருதே தூக்கியவன்….

யப்பா சாமி குண்டம்மா என்னா கனம் கனக்குறா…. நல்ல வேல காலையில கீழ எதுவும் போட்டுடல இல்லனா விஜய் நீ அவ்ளோதான்!!! ஆனா செம்மையா பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கா என் செல்லக்குட்டி… அப்டியே இவ மேல… என்று அதன்பின் அந்த மண்டையிலிருந்து என்ன சொல்லியிருப்பானோ அவள் தூங்கும் தைரியத்தில்….

அதற்குள் பட்டென்று விழுந்தது தோளில் ஒரு அடி…. அவன் புலம்பலின் பதிலாக,

ஹா ஏண்டி ராட்சசி நீ தூங்கலையா??? என்று இவன் கேட்க மீண்டும் இரண்டு அடிகள் விழ… அவளை கையில் வைத்துக்கொண்டே கத்தியவன்,

இது எதுக்குடி முட்டக்கண்ணி… என வலிக்காமல் வலித்தது போல் நடித்துக் கொண்டே கேட்க,

ம்ம்ம் முத விழுந்தது என்னை குண்டம்மானு சொன்னதுக்கு,

இத கேட்டிருந்தானா எப்படியும் எல்லாத்தையும்ல கேட்டு இருப்பா என்று மனதில் திகிலுடன் எண்ணியவன்,

அது சரி ஆனா அடுத்த அடிச்ச ரெண்டு அடி எந்த கணக்கு??? என்று அவளை ஒரு முறை தூக்கி பிடித்துக் கேட்க,

அதில் அவள் கைகள் தானாக அவன் கழுத்திடம் தஞ்சம் புகுந்தது கீழே விட்டுவிடாதே என்ற இறைஞ்சலுடன்… அவள் செயலில் கள்ளமாக சிரித்தவன் எதுவும் அறியாதது போல்,

ஹான் சொல்லு சொல்லு… என்று பிகு பண்ணிக் கொண்டே அவன் கேட்க..

அவன் கையில் இருந்து துள்ளி இறங்கியவள் துணைக்கு அவன் கையையே பிடித்து நின்று அவனை முறைத்துக் கொண்டே,

சாப்பிடாம இப்டி கிடைச்ச இடத்துல நழுவ பாத்ததுக்கு ரெண்டாவது அடி!!!! என்று அவள் சொல்ல,

கடன்காரி கண்டுபுடிச்சிட்டாளே!!! என்று மனதில் நினைத்தவன் வெளியில் வேண்டுமென்றே,

இல்லையே நான் வெளிலையே சாப்பிட்டு வந்துட்டேனே!!!!! என்று அவளை ஓரக்கண்களில் நோட்டம் விட்டுக்கொண்டே சொல்ல,

அவன் பதிலை அவள் சற்றும் கண்டுகொண்டதாக அவனுக்கு தெரியவில்லை… இவனிடமிருந்து நேராக சமையல் மேஜை அருகில் வந்தவள்…

எனக்கு பசிக்குது என்று காலி தட்டை தூக்கிக் கொண்டு நாற்காலியில் அமர,

லூசாடி நீ… என் வேலைய பத்தி உனக்கு நல்லா தெரியும்… அப்புறம் எதுக்கு எனக்கு வெயிட் பன்றேன்னு உன் உடம்ப கெடுத்துகிற????

அவள் இவ்வளவு நேரம் உண்ணாமல் இருக்கிறாள் என்ற கடுப்பில் கத்திகொண்டே வந்து அவளுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தவன் தட்டை எடுத்து வைத்து பாத்திரத்தில் தயாராக இருந்த சப்பாத்தியையும் குருமாவையும் எடுத்துக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்….

ஏனென்றால் அவன் நன்கு அறிந்தது அவன் முதலில் சாப்பிட்டு முடிக்காமல் எத்தனை வற்புறித்தினாலும் உணவை தொடமாட்டாள் என்று….

கடந்த காலங்களில் இரவு இதுபோல் என்றாவது வேலையில் தாமதமாகும் சமயங்களில் உணவு என்பதை மறந்து வேலை செய்பவன்.. இவளின் சாப்பிட்டாயா?? என்ற குறுந்தகவலின் ஒலியிலே உணர்வான் வயிறு என்ற உறுப்பு தனக்கும் கடவுள் படைத்திருக்கிறார் என்பதை!!!

இப்படி பலமுறை அவன் உண்ணாமல் இருப்பதை அறிந்தவள் இதுபோன்று தாமதமாகும் சமயங்களில் அவன் உண்ட பிறகே அவள் உண்பேன் என்பதை யுக்தியாக கடைபிடிக்க ஆரம்பிக்க... அதில் நொந்தவன் அவன் சாப்பிட்டு முடித்த பின் புகைப்படம் எடுத்து அதனை உறுதி செய்துவிடுவான் அவளிடம்.

இன்றும் அதுபோல் நடக்கவே தனக்கு உணவு பரிமாறி உண்டு முடித்தவன்… தன்னையே சரியாக சாப்பிடுகிறானா என்று பரிமாறாமல் இருப்பதை…. தண்டனையாக கொடுத்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தவளின் முன்னிருந்த தட்டை அவன் எடுக்க வர,

என்ன பாஸ் ஒரே தட்டுல உங்களால சாப்பிட முடியாதா??? இன்னொரு தட்டு எடுக்க வரீங்க.. அப்புறம் சாமான நீங்கதான் விளக்கி வெச்சுட்டு வரணும் பாத்துக்கோங்க!!! என்று கண்ணை உருட்டி இயல் மிரட்ட,

உனக்கெல்லாம் கொஞ்சநெஞ்ச கொழுப்பாடி ஏறி போயிருக்கு… அந்த வாய திங்கறதுக்கு மட்டும் இப்ப திற!!! என்று இருந்த கடுப்பில் அவன் கத்த,

அச்சோ இந்தர் நான்தான் எட்டுமணிக்கே சாப்ட்டேனே வயிறு முட்ட!!!! என்று வயிற்றை தடவிக் கொண்டே சொன்னாள் அந்த சீமாட்டி….

ஒருநிமிடம் அவனின் பார்வை அவளின் தடவிய கையின் மீதும் அது தடவப்பட்ட இடத்தின் மீதும் நிலைத்து நிற்க துடிக்க…. அதற்க்கு முன்னே சுதாரித்தவள் அவனை மாற்றும் பொருட்டு,

இதுக்குமேல சாப்பிடாம வெயிட் பன்னுவேன்னுலாம் நினைசீங்க…. அப்புறம் உங்க குரல்வளைய ஏலத்துக்கு போய்டும் பாத்துக்கோங்க!!!! என்று அதட்ட,

அவள் சொன்ன மறுநிமிடம் அவன் வலது கையால் அனிச்சைசெயலாக அவன் தொண்டையை பிடித்துக்கொண்டவன்… அவளை விட்டு தானாக இரண்டடி பின்னோக்கி நகர்ந்து (பார்த்த அனுபவமோ 🤣🤣🤣)

அடிக்கிராதாகி என்னடி பண்ண உனக்கு…. விட்டா கதையையே ஒரு நிமிஷத்துல முடுச்சிடுவ போல!!! என்று பயந்தது போல் சொல்ல,

என்ன பண்ணீங்களா??? பாஸ் என்ன பண்ணல??? என்று இடுப்பில் கைவைத்து தலையை சாய்த்து கேட்டவள்,

நேத்து கூட மனுஷன அந்த பாடுபடுத்திட்டு… என்ன பண்ணலன்னு கேட்குறியே?? நான்தான் ஒன்னுமே பண்ணலையேடி!!!! (எல்லாம் மனசுலதான்ங்க நம்ப ராசாக்கு இம்புட்டு தைரியம்)

காலைல அவ்ளோ ஆளுங்க இருகாங்க கொஞ்சம் கூட எதுவும் இல்லாம தூக்கிட்டு போறீங்க… பெரியவங்களாம் என்ன நினைப்பாங்க?????

பெரியவங்க தான…. சொல்லட்டுமா??? என்று தன் இடது புருவத்தை தூக்கி வேண்டுமென்றே அவளுடன் வம்பிழுக்க நேரத்தை வளக்க,

அதான் சொல்ல வந்துடீங்கள கொட்டிடுங்க… இல்லன்னா அடச்சிக்கும்!!! என்று நொடித்துக் கொள்ள,

அவளின் கொஞ்சமே கொஞ்சமாய் தலைதூக்கிய குறும்புத்தனத்தை மனதில் ரசித்து உள்வாங்கியவன்….. அவனின் திட்டம் செயல்பட ஆரம்பித்துவிட்டது என்பதை நன்கு புரிந்து,

ஹான் இப்பவாது இவன் தொல்ல நமக்கு ஒழிஞ்சது…. அவன பாத்துக்க அவன் பொண்டாட்டி வந்துட்டான்னு நினைச்சி இருப்பாங்க!!! என்று சிரிப்புடன் சொல்ல,

நான் கேட்டதுக்கும் நீங்க சொன்னதுக்கும் எதனா சம்பந்தம் இருக்கா??

எல்லாம் நல்லா…. புல்லா…. நெருக்கமா சம்பந்தம் இருக்கவேதான் சொல்றேன்!!!! என்று ஒருமார்கமாக அவளை பார்த்துக் கொண்டு சொல்ல,

என்ன நினைத்தாளோ இவனிடம் பேசிக் கொண்டே மேஜையை சுத்தம் செய்தவள் அதனை சமையலறையில் கூட எடுத்துவைக்காது அவர்கள் அறைக்கு செல்ல மாடிப்படி ஏறி பாதிபடியிலே நின்று,

இந்தர் என அழைத்தவள்..
மூணாவது அடி எதுக்குன்னு கேடீங்கல்ல!!!

அவனும் முதலில் எதுக்கு இப்டி தலதெறிக்க போறா என்று பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் கேள்வியில் அவளை ஏறிட்டு பார்க்க,

மெத்துமெத்துனா இருக்கேன் மெத்துமெத்துன்னு… மொத்து மொத்துன்னு மொத்திடுவேன்... இன்னொருவாட்டி சொன்னீங்கன்னா!!!! அதுக்கு எச்சரிக்கை மணிதான் இந்த அடி… என்று சொன்னவள் திரும்பி படி ஏற,

அவள் சொல்லிய விதத்தில் வாய்விட்டு சிரித்தவன்….
ஹே குண்டம்மா என்று வாயிற்கதவை நெருங்கியவளை அழைக்க,

இப்பத்தானடா சொன்னேன்!!! என்பது போல் அவனை உண்மையிலே கொன்றுவிடும் ஆத்திரத்தில் அவனை மிகவும் ரொமான்டிக்காக லுக்கு விட்டு அவள் திரும்ப,

நீ சொன்னதுகூட சரிதான் போல, உன்ன தூக்கிட்டு போகும் போதுகூட எப்ப என்ன பண்ணுவேன்னு தெரியாம யோசிச்சிட்டே இருகர்த்தனால முழுசா ரசிக்க முடிலடி… ஆனா இப்ப உன்ன முன்னாடி விட்டுட்டு பின்னாடி மாடிப்படி ஏறும் போது, அதும் இந்த நைட்டீல சைட் அடிக்கிற சந்தோசம் இருக்கே கண்கொள்ளா காட்சிடி பொண்டாட்டி!!!!!

தாபமாக சொல்கிறானா இல்லை குறும்பாக சொல்கிறானா என பிரித்தறிய முடியா குரலில் சொல்லி முடித்தவன்…. கண்களில் என்ன உள்ளது என்பதை இருவர் மட்டுமே அறிந்துகொண்டனர் என்பது மறைக்கப்பட்ட உணர்வு!!!

ஆனால் இவன் பேசியதை கேட்ட அவளுக்குத்தான் என்ன சொல்வதென்று புரியாமல் அறையினுள் சென்று முடங்கினாள்....

காலம் காயத்தை ஆற்றியிருக்கும் என ஒரு மனது நினைக்க, மற்றொரு மனதோ காயமா??? அது என்னவென்று கேள்வியுடன் நிற்கிறதே!!!!
கேள்வியும் பதிலும் யாருக்கு யாரோ???


அவனுக்கோ அவள் பதில் பேசாமல் சென்றதால் கிஞ்சித்தும் வருத்தம் என்பது இல்லை… இந்த அளவுக்காவது தன்னுடன் பேசுகிறாளே என்று மகிழ்த்தவனுக்கு இன்று மதியம் விஷ்ணுவிற்கும் தனக்கும் நடந்த உரையாடல் தான் நினைவு வந்தது….

தங்களின் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொண்டிருத்தவனுக்கோ, தன்னவளை அவளிடம் பேசிவிட்டு வந்த கடைசி நாளிலே இழந்துவிட்டான் என்பது திருமணத்திற்கு பின் உறுதியாக உரைத்தது பொட்டில் அடித்தது போல்…. கல்யாணத்திற்கு முன்னோ அவளை எளிதாக சமாளித்து விடலாம் என்று திமிராக எண்ணியவன் சறுக்கிவிட்டான் என்பது முதலிரவில் ஆழமாக உணர்ந்திருந்தான் அவள் விழிதீண்டா அவன் இமையின் ஏக்கத்தில்….

அதன் விளைவே கண்ணின் இமையில் மின்னும் கண்ணீர்த்திரை, சரியாக அந்த தருணத்திலே விஷ்ணுவின் கேள்வி தோளின் தொடுகை மூலம் கேட்டவன், இதுவரை தன்னை விட்டு வேறாருடனும் பகிராத தன்னவளின் குணாதீசியத்தை அவன்மேல் அவனுக்கே இருக்கும் ஆதங்கத்தால் கொட்ட ஆரம்பித்தான்…..

மச்சான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே உன் தங்கச்சி ரொம்ப அமைதியானவள்ன்னு…. வெளில பாக்கறவங்களுக்கு அவள அப்டித்தான் தெரியும், ரொம்ப மெச்சூர்ட் ஆனவடா!!!! அவ அம்மாவையும் தங்கச்சியையும் எந்த இடத்திலேயும் எப்பவும் விட்டு கொடுக்க மாட்டா… இன்னும் சொல்லனும்னா கோவம் நெறைய்ய்ய வரும் ஆனா அழகா மறைச்சுடுவா….. ஏன்னா எங்கடா தெரியாம கூட யாராவது நம்ப கோவத்தால கஷ்ட்டப் பட்டுடுவாங்களோன்ற பயம் அவளுக்கு…. செம்ம கேரக்ட்டர்டா மச்சி!!!! என்று சொன்னவனின் கண்களில் அத்தனை கர்வம், அவனவள் அல்லவா!!!

என்கிட்ட??? என்று நிறுத்தியவன் இதழில் வழிந்த சிரிப்புடன் கண்களும் பேச,

என்கிட்ட மட்டும்தாண்டா அவளோட மொத்த குழந்தைதனத்தையும் காட்டுவா, நிறைய சேட்ட பண்ணுவா, கோவத்த கட்டுப்படுத்தவே மாட்டா!!!அதனாலயே அவள இன்னும் இன்னும்னு அதிகமா காதல் பண்ணிகிட்டே இருக்கணும்னு தோணும்… ஆனா இப்ப என்னோட தமிழ எங்கையோ நான் தொலைச்சிட்டேன்டா விஷ்ணு!!!! என்று குரல் உள்போக இந்தர் சொல்ல,

மித்ரா தங்கச்சி உன்ன வெறுத்துடாங்கன்னு நினைக்கிறியா?? என்று விஷ்ணு கேட்ட மறுநொடி மறுத்துவன்

ச்ச ச்ச இல்லடா விஷ்ணு… அவ கண்ணுல எனக்கான காதல வெளிப்படுத்தறாடா… ஆனா ஏதோ ஒன்னு என்கிட்ட இருந்து அவள விலக்கி நிக்க வைக்குது அததாண்டா என்னால கண்டுபிடிக்க முடியல!!! என்று முடியை அழுத்த பிடித்தவன் புலம்ப,

நீ பேசின எதனா ஒன்னு அவங்கள காயப்படுத்தி இருக்க போதுடா?? என ஒரு நல்ல நண்பனாக அவன் மனவலியை போக்க தன்னால் இயன்ற உதவியை செய்ய நினைத்தே கேட்டிருந்தான்..

கண்டிப்பா அது காரணம் இல்லன்னு தோணுதுடா… எத்தனையோ முறை விளையாட்டுக்கு பிரிஞ்சிடலாம்னு சொல்லியிருக்கேன், கோவப்பட்டிருக்கேன் அப்பலாம் திட்டோடவோ இல்லனா பேசாமையோ இருப்பாடா… அதுகூட என்னை நேர்ல பாக்கறவரைக்கும் தான்… இப்ப வேற ஏதோ ஒரு ஆழமான காரணம் அவள இந்த அளவுக்கு என்கிட்டயிருந்து தள்ளி நிறுத்தி வச்சிருக்கு….

இதுல எனக்கு பயமே அவ இதனால எவ்ளோ வருத்தப்பட்டா…. பட்டுட்டிருக்கானு தெரியாம இருக்கறதுதான்!!! எவ்ளோ வலி இருந்தாலும் சொல்லக்கூடாதுன்னு நினைச்சிட்டானா யாருகிட்டயும் அதபத்தி மூச்சு கூட விட மாட்டாடா மச்சி….. என்று கண்ணை அழுந்த மூடி சொன்னவன் ஒரு பெருமூச்சு விட்டு தன்னை சமன்படுத்தி,

இப்ப எனக்கு இருக்குற ஒரே வழி, திடீர்னு ஒருத்தருக்கு கண்ணு போயிடுச்சுனா எப்டி முன்னாடி பாத்தத வச்சி எல்லாத்தையும் கண்டுபிடிப்பாரோ அந்த உத்திய பயன்படுத்துறது தான்…

முன்னாடி என் தமிழ்க்கிட்ட எந்த விஷயம்லாம் சொல்லாம ரசிச்சி அவள நேசிச்சேனோ….. அந்த குறைய இப்ப தீத்து அவகிட்ட ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி சொல்லி அவளை தவிற யாராலும் என்னை முழுமையடைய செய்ய முடியாதுன்னு அவ நம்பற வரைக்கும் என் லவ்வ அவளுக்கு சொல்லிட்டே இருக்க போறேன்டா!!!!! என்று ஏதோ உலகத்தை வெல்ல திட்டம் தீட்டி முடித்த வெளிச்சம் அவன் முகத்தில் படர சொல்லி முடித்திருந்தான்…..

அங்கு சொன்ன இவனின் திட்டம் இப்பொழுது நிறைவேற ஆரம்பித்துவிட்டதாக அவன் பூரிப்படைய…. விதியோ என் திட்டத்தின் முன் உன் திட்டமெல்லாம் எம்மாத்திரம் என்று அது ஒருபக்கம் கெக்கலித்து சென்றது!!!!

இது அறியாமல் இந்தரோ தங்கள் அறைக்கு சென்றவன் நேற்று போல் இல்லாமல் இன்று வெறுமனே எதையும் கட்டி அணைக்காமல் தூங்கி கொண்டிருந்தவளை கண்டவன்…. கேவலம் இந்த பெட்சீட்டலாம் மறைக்கற அளவுக்கு உன் நிலைமை வந்துடுச்சேடா விஜய்!!என்று நொந்தவன் இத்தனை நாள் தனக்கு உறக்கம் தராத மெத்தை உரியவளை உள்வாங்கி உறங்கவைப்பது சிறிது வியப்புடன் சேர்த்து பொறாமையையும் தூண்டிவிட்டிருந்தது அவனுக்கு….

அதையெல்லாம் புறம் தள்ளியவன் அவள் தூங்கும் அழகை ரகசியமாக ரசித்து ஒருக்களித்து படுத்திருந்தவளை திருப்பியவன் கட்டியணைத்து உறங்கிவிட்டான்…..

காலையில் வழக்கம் போல் இருவரும் தங்களது காலை பயிற்சியை அவள் யோகாவாகவும் இவன் தன் வீட்டின் இரண்டாவது மாடியில் தனக்கென உருவாக்கியிருந்த உடற்பயிற்சி அறையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரை பயிற்சியாகவும் முடித்தவன்…. வழிந்திருந்த வியர்வையை துண்டில் துடைத்துக் கொண்டே அவர்களின் அறைக்கதவை திறக்க அங்கோ துலக்கி வைத்திருக்கும் பாத்திரத்தை போல மிக நேர்த்தியாக சந்தன நிறம் கலந்த சிகப்பு காட்டன் சேலையை உடுத்தி கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டிருந்த அவன் மனைவியைதான் பார்த்தான்…..

அவனுக்கோ எதுக்கு இவ்ளோ காலையிலே அதும் ஸ்கூல் டீச்சர் மாதிரி தலையில ஒரு கொண்டையோட எங்க கிளம்பிட்டு இருக்கா?? என குழப்பியவன் அவளை பார்த்துக் கொண்டே உள்வந்து குளியலறைக்கு செல்ல,

இங்கு நின்று அவன் வரவிலிருந்து அவனை கண்ணாடியின் வழியே நோட்டம் விட்டு கொண்டிருந்தவளுக்கோ இதழ் கடையோரம் புன்னகை உருவாக ஆனால் உண்மையானதோ அது கள்ளச்சிரிப்பு என்பதே….

தன்னை சுத்தப் படுத்திக்கொண்டு வெளியின் வந்து பால்கனிக்கு செல்லப் பார்த்தவனை நிறுத்தியது இயலின் குரல்…

இந்தர் முதல் முறையா வேலைக்கு போறேன் வாழ்த்து சொல்லுங்களேன்!!!!! என்று கேட்டவளின் கண்களிலோ அத்தனை எதிர்பார்ப்பு,

அவனோ முழுதாகவே குட்டையில் விழுந்தது போல் குழம்பிவிட்டான்,
முத தடவையா புரிலையே??? என்று முகத்தில் குழப்ப ரேகைகள் படர கேட்க,

ஹான்… இல்ல கல்யாணம் ஆனதுக்கப்புறம் முதமுறை இப்ப தான வேலைக்கு போறேன் அதனாலதான்!!!! என அவளிடமிருந்து தடுமாற்றத்தோடு பதில் வர,

அவன் மனதிலோ ஏதோ கோல்மால் பன்றா போலையே நம்ப ஆளு!!! சரி எதுவா இருந்தாலும் அவ வாய் வழியாவே வரட்டும்…

என்னவோ சொல்ற… எனிவேஸ் ஆல் தெ பெஸ்ட்!!! என்று அவன் கையை நீட்ட,

அவளோ அவன் கையையும் அவன் கண்ணையும் மாற்றி மாற்றி இவ்ளோதானா என்பது போல் பார்த்தவள்… அவன் கையை தள்ளி அவன் முகத்தின் உயரத்திற்கு எம்பியவள் அவன் இதழ்களும் மீசையும் சேரும் இடத்தில் இச்சொன்று அழுத்தமாக பதித்து, அவன் செயல்படும் முன் வெளியில் தன் கைப்பையுடன் ஓடியவள்….. அவன் அதிர்ச்சியாகி நிற்பதை ஒற்றை கதவிலிருந்து ஓரமாக எட்டிப்பார்த்து இப்பொழுதைக்கு உணர்விற்கு வரமாட்டான் என்பதை புரிந்தவள்,

Mr.விஜயேந்திரமித்ரன் நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க போலையே???? என்று தாடையில் ஒற்றை விரலை வைத்து யோசிப்பதுபோல் செய்கை செய்ய,

அவள் கொடுத்த முத்தத்தின் ஈரத்தில் மூழ்கியிருந்தவன் அவளின் குரலில் கலைந்து,

அடிங்க… என்று அவளை பிடிக்க வர, ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள் ஓடையப்பந்தையகாரி அவன் கைக்கு அகப்படாமல்….

அவளின் கிண்டலில் லயித்தவன் யோசனை வந்தவனாக தலையின் பின் பகுதியில் தட்டி…

டேய் விஜய் வேலைக்கு கிளம்பிட்டு இருந்தவள பராக்கு பாத்துட்டு.. அவ எப்டி ஆபீஸ் போவான்னு கேக்காம இறுக்கிக்கியேடா லூசு!!என்று தன்னையே திட்டியவன், விரைவாக உடுத்த கூடிய டீஷர்ட்டையும், ட்ராக் பான்டையும் உடுத்தி இரண்டிரண்டு படிகளாக தாவி கீழே வந்தவன் பார்த்ததோ தன் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டிருக்கும் இயலை…

எதையோ தீவிரமா நடத்துறா போலையே பாப்போம்…. என இந்த பக்கம் இந்தர் நினைக்க,

அவளோ கண்டிப்பாக இவன் கீழே இறங்கி வருவான் என்பதையும் வரும் நேரத்தையும் சரியாக கனித்தவள் அனைவரிடமும் விடை பெற்று, அவனை ஒருபார்வை பார்த்து வெளியில் இயல் செல்ல

மொத்த குடும்பமும்,
போய் வழி அனுப்பிச்சிட்டு வா விஜய்…. என்று கோரஸாக கத்தியது,

இவனோ அவர்களிடம் எல்லாம் தெரிந்தது போல் சிரித்தவன் மனதிலோ….

சரி ஏதோ ஒன்னு நம்பள தவற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு போலையே… எப்படியும் நம்ப கூடத்தான் வர போறா என்னன்னு தெரிஞ்சிப்போம்… என்று தன் கார் சாவியை சுழற்றிக் கொண்டே வெளியில் வந்தவன் கண்டதோ தன் வீட்டின் முன் நிற்கும் அரசு அதிகாரிக்குரிய வண்டியும் அதன் முன்பகுதியில் அமர்ந்திருந்த இயலையும்தான்…..

அந்த வாகனத்தை கூர்ந்து பார்த்தவனுக்கு அச்சரமாக தெரிந்தது அதில் அச்சிடப்பட்ட வார்த்தைகள்… அந்த வார்த்தையில் எத்தனை ஆனந்தமும் கர்வமும் அவன் மனைவி அவனுக்கு கொடுத்திருக்கிறாள் என்பது வார்த்தையில் விவரிக்க முடியாமல் அந்த வார்த்தையையே இந்தர் பார்த்துக் கொண்டிருக்க…. அதற்க்கு சொந்தமானவளோ வண்டியின் கண்ணாடியில் அவன் பூரிப்பை பார்த்துத் திருப்தியுற்றவள் ஓட்டுனரை வண்டி எடுக்க சொல்லியிருந்தாள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய
சப்-கலெக்டர்- “இயற்றமிழ்சுடர்”

நேசம் உயிர்க்கும்…..




 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ் 🙂🙂,
அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிட்டேன் படிச்சு பாத்துட்டு உங்க கருத்துக்களை ஒரு வரியாவது சொல்லிட்டு போங்க தோழமைகளா வெயிட்டிங்😁😁😁😉, போன பதிவுக்கு லைக் மற்றும் கமன்ட் சொன்ன எல்லாருக்கும் மிக்க நன்றி 😍😍😍
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி முன்னூட்டம்:-

நண்பனா நீ??? கேள்வி பாய்ந்து வர,
அண்ணேண்டா!!!! பதிலோ பவ்யமாக....

அவளின் முக்கியத்துவம் அவனறிந்து அவளுக்கு உணர்த்துவது அழகிலும் அழகு!!!!

வாழ்த்தோ!!!!! இதழோடு இதழின் வழியில் விழிமூடலின் துணையாக.....
அவனுள் அவள்!!!

அடுத்த பதிவுக்கான சின்ன முன்னூட்டம் படிச்சிட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க பிரண்ட்ஸ்😍😍😉😉😉
 
Status
Not open for further replies.
Top