All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டியர் பிரெண்ட்ஸ்,

என் கதை பக்கத்திற்கு வருகை புரியும்

அனைவரையும் அழகு மலர்களுடன்

வரவேற்கிறேன் :)



14162




நான் நித்திலா.உங்களில் சிலருக்கு

என்னைத் தெரிந்திருக்கலாம்.

பலருக்கு நான் புதியவளாக இருப்பேன்.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு

மீண்டும் எழுத வந்துள்ளேன்.

ஜூலை முதல் ராதையின் தேடலைக்

காண்போம்.

திங்கள் முதல் வியாழன் வரை

இரவுப் பொழுதில் கீதம் ஒலிக்கும்.

கீதம் உங்கள் உள்ளத்தை வசப்படுத்தியதா

என்று என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்தொன்றே எனக்கு

உற்சாகத்தையும்,நிறைவையும்

அள்ளித் தரும்.

கதையின் முன்னோட்டத்துடன் விரைவில்

உங்களை சந்திக்கிறேன்.நன்றி :)

அன்புடன்,
நித்திலா
 
Last edited:

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear sri mam,

நான் கேட்டவுடனே திரி அமைத்துக்

கொடுத்தீர்கள்.உங்கள் வேகம்

வியப்பளித்தது.உங்களுக்கு

மீண்டும் எனது நன்றிகள் :)

அன்புடன்,
நித்திலா
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலான உனை
கை பிடிக்கும்
நாளுக்காய்
நான் காத்திருக்க
என் கண் மறைந்து
போனாய்!
என் இதயம்
துகள்களாகப்
போனாய்!
நொடிகள் யுகமாய்
கடந்து போக
உயிரும் சுமையாய்
மாறிப் போக
நீளும் காத்திருப்பிற்கு
முற்றுப்புள்ளியா?
என் காதலுக்கு
முற்றுப்புள்ளியா?
எதைத் தரப்
போகிறாய் அன்பே?
மௌனமா?
உயிர் உருகும்
உன் காதல் கீதமா?

-மயூரிகா டைரியிலிருந்து


நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

உங்கள் கருத்துக்கள் இங்கு மலரட்டும் :):)

அன்புடன்,
நித்திலா
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுரகீதனிடம் சொல்லி விட்டுக் கார்க்
கதவில் கை வைத்தவளின் கை பிடித்து
நிறுத்தினான் மதுரகீதன்.

“நாம இன்னும் பேசலை மயூ”

“........”

“என் கிட்டப் பேச மாட்டியா மயூ?
நான் எப்படி இருக்கேன்னு கேட்க
மாட்டியா?என்கிட்ட எதாவது கேளு மயூ.
எதாவது பேசு மயூ.ப்ளீஸ்...”

“எப்ப கனடாவில இருந்து வந்தீங்க”

“போன மாசம் மயூ”

அவன் கையை விலக்கி விட்டு அவன்புறம்
திரும்பினாள் மயூரிகா.

“கார்ல உட்கார்ந்து பேசலாம் மயூ”

“இப்படியே சொல்லுங்க”

“எதுக்கு?வெயில்ல நின்னு என் முகம்
டேன் ஆயிடுச்சுன்னு அழுகவா”பழைய
நினைவில் மதுரகீதன் பேச.

“பரவாயில்லை.சொல்லுங்க”

“இப்ப உன் கிட்டப் பேசினாரே.அவர்
யார் மயூ”

“இது தான் நீங்க பேச வந்ததா”

“இல்லை.ஆனா நான் தெரிஞ்சுக்கணும்”

“என் பிரெண்ட்”

“அது யார் எனக்குத் தெரியாத பிரெண்ட்”

“என்னைக் கேள்வி கேட்கிற உரிமையோ,
தகுதியோ உங்களுக்குக் கிடையாது
மிஸ்டர் மதுரகீதன்”

மயூரிகாவின் இரு தோள்களிலும் கை
வைத்து அவள் முகத்தை நெருங்கினான்
மதுரகீதன்.

“எனக்குக் கிடையாதா”

“ஆமாம்.என்னைப் பிரிஞ்ச நாலே
மாசத்துல இன்னொரு பொண்ணு கூடக்
கல்யாணத்தை நிச்சயம் பண்ண
உங்களுக்கு என்னைக் கேள்வி
கேட்கிற தகுதி கொஞ்சமும் கிடையாது”

இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சம்
அறையை நிறைத்திருந்தது.

கண்கள் மூடி இருந்தாலும் உறங்காமல்
தான் இருந்தாள் மயூரிகா.

மதுரகீதன் நினைவுகளில் மூழ்கிக்
கிடந்தவள்,தன் அறைக் கதவு திறந்ததையோ,
அது தாழிடப் பட்டதையோ உணரவில்லை!

யாரோ அருகில் அமர்ந்ததை உணர்ந்ததும்
அவள் விழிகள் திறந்து கொண்டது.

கத்தி விடுவாளோ என அச்சம் கொண்டு
மயூரிகாவின் வாயைத் தன் கரம் கொண்டு
பொத்தினான் மதுரகீதன்.

“எனக்கு வேற வழி தெரியலை மயூ.
என்னோட இந்தத் தப்பையும் மன்னிச்சுடு
மயூ”

மயூரிகா விழிகள் இமைக்க மறந்து அவன்
முகத்திலேயே நிலைத்திருந்தது.

சத்தமின்றிக் கிளம்பிய வருணன் கதவருகே
சென்று நின்று திரும்பிப் பார்த்தான்.

இந்த வலியை நீ அனுபவித்துத் தான் ஆக
வேண்டும் மது!

உங்கள் தவறுக்கான தண்டனையை நீங்கள்
அனைவரும் அனுபவித்துத் தான் ஆக
வேண்டும்!

மதுரகீதன் கால்கள் தானாக வருணனை
நோக்கிச்சென்றது.

“கேம் ஓவர் மிஸ்டர் மதுரகீதன்”

வருணனின் இகழ்ச்சிப் பார்வை எப்போதும்
போல அப்போதும் மதுரகீதனை இலக்குத்
தவறாத அம்பாகத் தைத்தது.


டியர் பிரெண்ட்ஸ்,

முன்னோட்டம் குறித்தான உங்கள்

எண்ணவோட்டத்தை என்னோடு

பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆவலுடன் காத்திருப்பேன்.நன்றி:)

அன்புடன்,
நித்திலா
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம்:)

கதைக்குள் செல்வதற்கு முன்னால்,

என் கதை பக்கத்திற்கு வருகை

புரிந்த,விருப்பம் தெரிவித்த,

வரவேற்று வாழ்த்துத் தெரிவித்து

உற்சாகமளித்த அனைவருக்கும்

எனது மனமார்ந்த நன்றிகள்:)

முன்னோட்டத்திற்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைச் சொல்லி

மகிழ்ச்சி தந்த தோழமைகளுக்கு

உளமார்ந்த நன்றிகள்:)

இனி கதைக்குள் செல்வோம்

வாருங்கள்.

உற்சாகமான காலைப் பொழுதில்,

முதல் அத்தியாயத்தைப் பதிவு

செய்கிறேன்.

வாசித்து உங்கள் கருத்தைப் பதிவு

செய்து இக்கதையின் முழுமையான

பயணத்திற்குமான உற்சாகத்தை

அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்

கொள்கிறேன்.நன்றி:)

மதுரகீதன்,மயூரிகா காதல் சொல்லும்

"ராதை தேடிய கீதம்"

உங்கள் பார்வைக்கு.

கீதம் உங்கள் உள்ளம் தொடுமா

என்றறியக் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
நித்திலா:)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15755


கீதம்-1


இயற்கை அன்னையின் அருளைப்
பரிபூரணமாகப் பெற்றிருக்கும் ஈரோடு
மாவட்டம்.

பகலவன் பனித்துளியாய்க் கரைந்து
கொண்டிருந்தான்.மாலைக் காற்றின்
இதத்தில் அவனி இளைப்பாறத்
தொடங்கி இருந்தது.

“ஸ்ரீரங்கநாயகி பவனம்”.
கிரானைட்டில் மின்னியது எழுத்துக்கள்.
அலைமகள் அருள் நிறைந்திருப்பதை
உரக்கச் சொல்லி நின்றிருந்தது
அம்மாளிகை வீடு.

ஈரோடு மாவட்டத்தின் பிரபல
தொழிலதிபரான குமரகுரு,பதினைந்து
வருடங்களுக்கு முன்பு தனது பூர்வீக
வீட்டினைப் புதுப்பித்து மாளிகையாக
உருமாற்றி இருந்தார்.தற்போது
தனது குடும்பத்துடன் எழில்
கொஞ்சும் அம்மாளிகையில்
ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்.

குமரகுருவின் தந்தையான
மயில்வாகனனின் தாயாரின் தாயாரே
ஸ்ரீரங்கநாயகி ஆவார்.அவர் மீது
கொண்ட அன்பாலும்,பக்தியாலும்
மயில்வாகனன் அவருடைய வீடு,
தொழில்கள் அனைத்திற்கும்
ஸ்ரீரங்கநாயகி எனப் பெயரிடுவதை
வழக்கமாகக் கொண்டிருந்தார்.
குமரகுருவும் அதை மாற்றவில்லை.

விசாலமான வரவேற்பறையினுள்
நிலவிய அமைதி,“அன்னம்,அன்னம்”
என்ற உரத்த அழைப்பினில் மறைந்து
போனது.

“வர்றேன் அத்தை”எனக் குரல்
கொடுத்தபடியே சமையலறையில்
இருந்து ஹாலிற்கு விரைந்தார்
அன்னலட்சுமி.

“என்ன அன்னம்,கிச்சன்ல என்ன
பண்றே”

“மயூ வர்ற நேரமாச்சு அத்தை.
அதான்...”

“சரிசரி போ.புள்ளைக்கு வாய்க்கு
ருசியா எதாவது செஞ்சு கொடு.
நாங்க கோயிலுக்குப் போயி்ட்டு
வந்துடறோம்”

“சரிங்கத்தை.செல்வத்தைக்
கூப்பிட்டீங்களா அத்தை”

“நான் கூப்பிட்டுக்கறேன்மா”

“சரிங்கத்தை”

குமரகுருவின் தாய் தந்தையான
குணவதியும்,மயில்வாகனனும்
கோவிலுக்குக் கிளம்பிச் செல்ல,
அவர்கள் கார் கேட்டைத் தாண்டும்
வரை பார்த்திருந்து விட்டு உள்ளே
சென்றார் அன்னலட்சுமி.

சில நிமிடங்கள் சென்றிருக்க,
“லட்சுமி,லட்சுமி”என்ற அழைப்பு
கேட்டது.

தன் கணவனின் குரலில்
அன்னலட்சுமியின் முகம்
தாமரையாய் மலர்ந்தது.

“பூவு,மெதுவா திருப்பு.நான்
வந்துடறேன்”

சமையலோடு அனைத்து
வேலைகளையும் மேற் பார்வையிடும்
பூமணியிடம் சொல்லி விட்டு
நகர்ந்தார் அன்னலட்சுமி.

“சரிங்கம்மா”

கைகளைக் கழுவித் துடைத்து விட்டு,
சமையலறையில் இருந்து ஹால்
சோபாவில் அமர்ந்திருந்த கணவனின்
அருகில் சென்று அமர்ந்தார்
அன்னலட்சுமி.

“அத்தையும்,மாமாவும் இப்ப தாங்க
கோயிலுக்குக் கிளம்பினாங்க”

“வழியில பார்த்தேன் லட்சுமி.
என்னம்மா பண்றே?வேலை எதுவும்
இழுத்துப் போட்டுட்டு செஞ்சுட்டு
இருக்கியா?”மனைவி முகத்தில்
இருந்த வியர்வைத் துளி கண்டு
குமரகுரு வினவ.

“இல்லைங்க.மயூ பஜ்ஜி
சாப்பிடணும் போல இருக்கும்மான்னு
சொல்லிட்டு இருந்தா.அதான் அவ
வர்றதுக்குள்ள செஞ்சுடலாம்னு”
அவசரமாகப் பதிலளித்தார்
அன்னலட்சுமி.

மனைவி வேலை செய்வது
மகளுக்காக என்றதும் குமரகுருவின்
முகத்தில் இருந்த கடுமை
மறைந்தது.

“உன்னோட செல்லப் பொண்ணுக்கு
உன் கையாலயே செய்யறயா?
எனக்குக் கொடுப்பியா?”

“என்னங்க விளையாட்டு?உங்களுக்கு
இல்லாமயா”

“மயூ ஏன் இன்னும் வரலை”

“இன்னும் நேரம் இருக்குங்க.நீங்க
உங்க பொண்ணைப் பார்க்கிறதுக்கு
முன்னாடியே வந்திருக்கீங்க”

“ஓ!பரவாயில்லை.போன்
பண்ணிக் கேளு லட்சுமி”

“சரிங்க.அடுப்பை நிறுத்திட்டு
அப்புறம் கேட்கறேன்.வந்தானா
சுடச்சுட சாப்பிடுவா”

“சரிம்மா”

“காபி குடிக்கறீங்களா”

“மயூ வரட்டும் லட்சுமி”

“சரிங்க”

அன்னலட்சுமி சமையலறைக்குச்
செல்ல,தனது கைபேசியில்
ஆழ்ந்தார் குமரகுரு.

தனது முன்னோர்களின் “ஸ்ரீரங்கநாயகி
ஸ்பின்னிங் மில்லை”தற்போதும்
வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்
குமரகுரு.

அத்தோடு அவர்கள் குடும்பத்திற்குச்
சொந்தமான பால் பண்ணை,
தென்னந்தோப்பு,மாந்தோப்பு,வாழைத்
தோப்பு,ஷாப்பிங் காம்ப்பிளெக்ஸ் என
இதர சொத்துக்களையும் சிறப்பாக
நிர்வகித்து வருகிறார்.

எத்தனை வேலைகள் இருந்தாலும்
மாலை நேரத்தை மகளுடன்
செலவிட வீட்டிற்கு வந்து விடும்
குமரகுருவிற்கு மகள் மீது அதீத
பாசம் உள்ளது.

மூன்று தளங்களைக் கொண்ட
அக்கட்டிடத்தின் பெயர்ப் பலகையில்
“ஸ்ரீரங்கநாயகி டவர்ஸ்”என
தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதி
இருந்தது.

அக்கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில்
“ஸ்ரீ லேங்குவேஜ் அகாடமி”இயங்கிக்
கொண்டிருந்தது.ஆங்கிலம்,ஹிந்தி,
பிரென்ச் மற்றும் ஜெர்மன் மொழியில்
தேர்ச்சியாளர்களை உருவாக்கிக்
கொண்டிருந்தது.

வகுப்புகள் முடிந்து மாணவர்கள்
கூட்டம் கூட்டமாக வெளியேறிக்
கொண்டிருந்தனர்.

ஆண்களும்,பெண்களுமாக இருந்த
அக்கூட்டத்தில் இருந்து விலகி,
தரை தளத்தில் இருந்த ஐஸ்கிரீம்
பார்லருக்குள் நுழைந்தனர் அவ்விரு
பெண்களும்.

அருகருகே அமர்ந்து கொண்டு
ஐஸ்கிரீம்மை வரவழைத்து உண்ணத்
தொடங்கினர்.

“தினமும் இப்படி ஐஸ்கிரீம்
சாப்பிடறது நல்லதில்லை தனு”

“தினமுமா?பொய் சொல்லாதே
மயூர்.தினமும் சாப்பிடக் கூடாதுன்னு
சொல்லி என் கையையும்,வாயையும்
கட்டி வைச்சுட்டு,இப்படித் தினமும்
சாப்பிடறேன்னு சொல்றயே.இது
தர்மமா?நியாயமா?இந்த
ஐஸ்கிரீம்முக்கே இது அடுக்குமா?”

“போதும்போதும்.சாப்பிடு தெய்வமே”

“ஏதோ இன்னைக்குத் தான் என்
மேல கருணை வந்து ஐஸ்கிரீம்மைக்
கண்ணுல காட்டியிருக்கே.என்ன
விஷயம் மயூர்”

“அழுது வடியறயே.பாவமேன்னு
கூப்பிட்டு வந்தேன்”

“அப்படியா?டல்லா இருக்கனா”

“நடிக்காதே தனு.என்ன விஷயம்?உன்
ரோமியோவைப் பார்க்காதனாலயா?”

“ம்.பார்க்கவும் இல்லை.பேசவும்
இல்லை”

“முக்கியமான வேலை எதாவது
இருந்திருக்கும்.நைட் கூப்பிட்டுப் பாரு”

“ம்”

“உம்முன்னு சாப்பிடாதே.சிரி”

தன்னை வாஞ்சையுடன் பார்த்தபடியே
ஐஸ்கிரீம்மைச் சுவைப்பவளை
முறைத்தாள் தன்யஸ்ரீ.

“இப்ப என்ன”

“எப்பவும் அவனுக்குத் தான் சப்போர்ட்
பண்ணுவியா?எனக்கு ஏன் சப்போர்ட்
பண்ண மாட்டீங்கறே மயூர்”

“நீ அநியாயத்துக்குக் கோபப் படறே,
சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம்
சண்டைப் போடறே.நான் அவனை
சப்போர்ட் பண்ணாம என்ன பண்றது”

“நீ காதலிச்சுப் பார்.அப்ப தான்
உன்னால என்னைப் புரிஞ்சுக்க முடியும்”

தனக்குப் பதில் வராததில்,ஐஸ்கிரீம்மில்
இருந்து நிமிர்ந்து தோழியின் முகத்தைப்
பார்த்தாள் தன்யஸ்ரீ.

உணர்ச்சிகள் துடைக்கப் பட்டிருந்த
முகத்தைக் கண்டு குழம்பியவளுக்கு
ஐஸ்கிரீம் சுவையற்றுப் போனது.

“என்னாச்சு மயூர்?ஏன் ஒரு மாதிரி
ஆயிட்டே?”

“ஒ..ஒண்ணும் இல்லை தனு.நீ
சாப்பிடு”என்றாள் வரவழைத்த
புன்னகையோடு.

தோழியின் முகத்தை ஆராய்ந்தபடியே
ஐஸ்கிரீம் உண்பதைத் தொடர்ந்தாள்
தன்யஸ்ரீ.

அந்நேரம் கைபேசி ஒலி எழுப்ப,தன்
கைப்பையில் இருந்து கைபேசியை
எடுத்த தோழியைக் கேள்வியாகப்
பார்த்தாள் தன்யஸ்ரீ.

“அம்மா தனு”

“ஓ!பேசு பேசு”

“மேடம் யாருன்னு நினைச்சீங்க?
உங்க ரோமியோன்னு நினைச்சீங்களா?
இந்தத் தூது போகற வேலை
எல்லாம் எனக்கு ஆகாதுன்னு நான்
முதல்லயே சொல்லி இருக்கேன்.
அதனால நீங்க எவ்வளவு சண்டைப்
போட்டுக்கிட்டாலும் அவன்
கண்டிப்பா என்னைக் கூப்பிட
மாட்டான்”

“சரிசரி.முதல் அம்மா கிட்டப் பேசு
மயூர்”

“ம்”

கைபேசியைக் காதிற்குக் கொடுத்து,
“சொல்லுங்கம்மா”என்றாள்
மென்மைக் குரலில்.

“அப்பா உன்னைக் காணோம்னு
கேட்டாருடா தங்கம்.அதான்
கூப்பிட்டேன்.கிளாஸ் முடிஞ்சுதா
தங்கம்”

“இப்ப தான்மா முடிஞ்சுது.
அரைமணி நேரத்துல வந்துடுவேன்னு
அப்பாகிட்ட சொல்லிடுங்கம்மா”

“சரிடா தங்கம்.பார்த்து வா.
வைச்சுடறேன்”

கைபேசியைப் பையினுள் வைத்தவள்,
தோழியின் கேலிச் சிரிப்பில் பொய்க்
கோபம் காட்டி முறைத்தாள்.

“உன் அப்பாவுக்கு நீ அவர் கண்
முன்னாடியே இருக்கணும்”

“ம்.அப்பாவுக்கு மட்டுமில்லை,
அம்மாவுக்கும் தான்”

“அப்ப உனக்கு வீட்டோட மாப்பிள்ளை
தான் பார்க்கணும்”

மயூரிகா முகம் மீண்டும் சிலையானது.

காதல்,கல்யாணம் என்று பேசினாலே
இவள் முகம் மாறி விடுகிறது!

இவள் வாயைத் திறக்க மாட்டாள்.
யாரிடம் கேட்பது?

“கிளம்பலாமா தனு”

“பணம்...”

“கொடுத்துட்டேன்”

கைப்பையோடு விறுவிறுவென
நடந்தவளை ஓட்டமும் நடையுமாகப்
பின் தொடர்ந்தாள் தன்யஸ்ரீ.

“நாளைக்குப் பார்க்கலாம்.பை”

தன் முகம் பார்க்காத தோழியை
ஆராய்ச்சியாகப் பார்த்தபடியே
கையசைத்து விடை கொடுத்தாள்
தன்யஸ்ரீ.

பார்க்கிங் பகுதியில் இருந்த தங்கள்
வண்டியை எடுத்துக் கொண்டு,
அக்கட்டிட வளாகத்தில் இருந்து
வெளியேறிய தோழிகள்,சற்று தூரம்
வரை சாலையில் ஒன்றாகச் சென்று
விட்டுப் பின் வெவ்வேறு திசையில்
பிரிந்து சென்றனர்.

தன் மனதில் பொங்கிய
உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக்
கொண்டு வண்டியைச் செலுத்திய
அந்த அழகிய நங்கை,சாலையில்
இருந்து விலகி அகன்ற மரத்தின்
அடியில் வண்டியை நிறுத்தினாள்.

கடவுளே!இவன் நினைவுகள்
இத்தனை வலிமையானதா?ஒரு
வார்த்தையில் விருட்சமாக எழுந்து
நின்று என்னை வாட்டத் தொடங்கி
விடுகிறான்!

நான் காதலை அறியாதவள் இல்லை
தனு.காதலையே சுவாசித்துக்
கொண்டிருப்பவள்.ஆனால்,அந்தக்
காதல் என்னை விட்டுத் தொலை
தூரம் சென்று விட்டது.

தன் அருகில் வந்து நின்ற பைக்கில்,
தன் எண்ணங்களை விடுத்துத்
திடுக்கிட்டுத் திரும்பியவள்,
“வண்டியில எதாவது பிரச்சனையா
மேம்”என்ற கேள்வியில்
நிம்மதியானாள்.

“இல்லைப்பா.போன் பண்ணலாம்னு
ஓரமா நிறுத்தினேன்.நீ கிளம்புப்பா”

“ஓகே மேம்.பை”

முட்டாள்!முட்டாள்!ரோட்டில்
நின்று கொண்டு என்ன யோசனை
உனக்கு?வேறு யாராவது வந்து
கேட்பதற்குள் ஒழுங்காக இடத்தைக்
காலி செய்.

அந்த மாயாவியை நினைத்தேன்
அல்லவா?இந்த முட்டாள் பட்டம்
எனக்கு அவசியம் தான்!

அவள் தன் டியோவைக் கிளப்பவும்,
அவளைப் பின் தொடர்ந்து வந்து
அவள் நின்றதால் நின்ற பலேனோ
மீண்டும் அவளைப் பின் தொடரத்
தொடங்கியது.

காதல் சொல்லி
கானலான
உனையே
நிதம் தேடித் தவித்து
காணத் தவிக்கிறேனடா
காதலா!

கீதம் மயக்கும்...


நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம்:)

இரவு நெட் ஸ்லோவாக

இருந்ததால் இப்போது

பதிவிடுகிறேன்.

நான் இங்கு எழுதும் முதல்

கதையிது.அத்தோடு நெடு நாள்

கழித்து எழுதுவதும் கூட.

ஆதலால்,ஆவலுடன் பார்த்துக்

கொண்டே இருந்தேன்.முதல்

பதிவிற்கு விருப்பம் தெரிவித்த,

கருத்தைப் பகிர்ந்து கொண்ட,

வாசித்த தோழமைகளுக்கு எனது

அன்பான நன்றிகள்:):)

இரண்டாம் அத்தியாயம் உங்களோடு.

வாசித்து உங்கள் உள்ளம்

சொல்வதை என்னோடு பகிர்ந்து

கொள்ளுங்கள்.மனநிறைவு

கொள்வேன்.நன்றி:)

ப்ரியமுடன்,
நித்திலா
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15756


கீதம்-2


“ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன”

காரில் வழிந்த பாடலோடு சேர்ந்து
தானும் பாடலை முணுமுணுத்தபடியே
காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்
மதுரகீதன்.

வண்டியை ஏன் திடீரென்று
நிறுத்தினாள்?மயூவுடன் வந்து
பேசியவன் யார்?

யாரோ வம்பு செய்கிறார்களோ
என ஒரு நிமிடம் பயந்து
விட்டேன்.மயூவுக்குத்
தெரிந்தவன் தான் போலுள்ளது.

உனக்கு ஒரு துன்பம் என்றால்,
என்னால் அதைத் தாங்க முடியாது
மயூ.அன்றும் இன்றும்
என்றுமே மயூ.

தன் மனதில் குடி கொண்டவளிடம்
மனதோடு பேசிக் கொண்டிருந்த
மதுரகீதன்,கண்ணெதிரே நடந்த
சம்பவத்தில் உள்ளம் பதற காரை
நிறுத்தி விட்டு இறங்கி ஓடினான்.

அவளறியாமல் அவளைத்
தொடர்ந்தவனை,அவளை நாடி
ஓடச் செய்தது எதுவெனப்
பார்த்தால்,அதிவேகத்தில் வந்த
கார் ஒன்று மோதுவது போல்
வந்து கடைசி நொடியில்
மோதலைத் தவிர்த்து பிரேக்கிட்டு
நிற்க,நொடியில் சுதாரித்துத்
தடுமாறிய வண்டியைச் சமாளித்து
நிறுத்தி சாலையில் கால்
ஊன்றியிருந்தாள் அவள்.

கடவுளே!என்ன நடந்தது?
என் கவனம் எங்கிருக்கிறது?

அந்த மாயாவியை நினைத்துக்
கொண்டிருந்தால் நான் நேராக
வைகுண்டம் போக வேண்டியது
தான்!

அவள் படபடப்பை அதிகரிக்கச்
செய்தது மதுரகீதனின் கதறலான
அழைப்பு!

“மயூயூயூயூ...”என்ற அலறலான
அழைப்பு காதில் கேட்டும் அவள்
திரும்பவில்லை!

கடவுளே!எனக்குப் பைத்தியம்
பிடித்து விட்டது.அது என்றுமே
தெளியாது.எப்போதும் அவன்
நினைவு.எங்கும் அவனே
தெரிகிறான்.அவன் குரல்,
என்னை மயக்கும் அந்தக் குரல்
கேட்டுக் கொண்டே இருக்கிறது.

“கண்ணம்மா…”

அவ்வழைப்பில் தன்னையும்
அறியாமல் திரும்பிப் பார்த்தாள்
அவள்.

யார் குரலைக் கேட்காமல் அவள்
நாட்கள் வெறுமையானதோ,அவன்
அவள் எதிரே நின்றிருந்தான்.யார்
முகம் காண வேண்டும் என்று
தினமும் துடித்தாளோ,அவன்
அன்று கண்டது போலவே இன்றும்
அவள் எதிரே நின்றிருந்தான்.

“மதூ...”வண்டியில் இருந்து
இறங்கி இருந்தாள் அவள்.

மெல்ல உச்சரித்தாலும் அவள்
உதட்டின் அசைவினில் தன்
பெயரை உணர்ந்தவன் விழிகள்
லேசாகக் கலங்கியது.

வியப்பில் ஆரம்பித்து மகிழ்வு,
ஏக்கம்,ஆதங்கம்,கோபம்,சோகம்
என உணர்வுகளைக் கண்ணாடியாகக்
காட்டியவளின் முகத்தையே
இமைக்காது பார்த்திருந்தான்
மதுரகீதன்.

நான்கு ஆண்டுகள் இருக்குமா?
முகத்தில் இருக்கும் தாடியைத்
தவிர எந்த மாற்றமும் இல்லை.
இது நிஜமா?எப்போதும் போல
கனவா?

“உனக்கு ஒண்ணும் இல்லே
தானேடா?எனக்கு...ஒரு நிமிஷம்
உயிரே போயிடுச்சு”தவிப்புடன்
அவளை ஆராய்ந்தது அவன்
பார்வை.

அவள் நெற்றியில் வியர்வை
தோன்றக் கண்டு,“பயந்துட்டியா
மயூ?ஒண்ணும் இல்லைடா.உனக்கு
ஒண்ணும் இல்லை”என மீண்டும்
மீண்டும் கூறினான் மதுரகீதன்.

அவள் பார்வை அவன்
முகத்திலேயே நிலைத்திருந்தது.

காற்றில் கலைந்து முகத்தில்
விழுந்த முடிகளை,அவள்
முகத்திலிருந்து மென்மையாக
ஒதுக்கினான் மதுரகீதன்.

அதே மென்மையான ஸ்பரிசம்!
பூவும் தோற்றுப் போகும்
ஸ்பரிசம்!

நிஜம்!இது நிஜம் தான்!நான்
கனவு காணவில்லை!எனக்குப்
பைத்தியம் பிடிக்கவில்லை!

மது திடீரென்று எப்படி இங்கு?
என் கண்கள் காண்பது உண்மை
தானா?

அவள் பார்வை சற்றுத் தள்ளி
நின்றிருந்த மதுரகீதன் காருக்குச்
சென்று வந்தது.

என் பின்னால் தான்
வந்திருக்கிறான்!விபத்தென்றதும்
ஓடி வந்திருக்கிறான்!

உணர்வுகளை மறைத்து
வெறுமையான முகத்துடன் பதில்
சொல்லாமல் தன்னையே பார்த்துக்
கொண்டிருந்தவளின் கன்னத்தில்,
“மயூர்,மயூர்”என மிருதுவாகத்
தட்டினான் மதுரகீதன்.

தன்னை வெறித்த விழிகளைக்
கண்டவன் நெஞ்சத்தில் வலியொன்று
ஆழமாய்த் தாக்கியது.

இந்த அதிர்ச்சி...நேரவிருந்த
விபத்தாலா?என்னைப்
பார்த்ததாலா?

“எதாவது பேசு மயூ”

“.....”

“நான் பண்ணது தப்பு.பெரியத்
தப்பு.என்னைத் திட்டு மயூ”

“.....”

“மயூ...என்னைத் திட்டு..
அடி..இப்படிப் பார்க்காதே மயூ”

“.....”

அவள் அப்போதும் இமைக்காமல்
பார்க்க,காரின் ஹாரன் சத்தம்
மதுரகீதனின் உணர்வுகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்தது.

அப்போதே அந்தக் காரில் இருந்து
ஒருவரும் இறங்கி வராததைக்
கண்டான்.

பணக்காரத் திமிர்!இவர்களைச்
சும்மா விடக் கூடாது!

வேக எட்டுக்களுடன் சென்று,
“ஏய் மிஸ்டர்,வெளியில
வா”என்றதோடு,கார்க்
கண்ணாடியைப் படபடவென்று
தட்டினான் மதுரகீதன்.

கண்ணாடியை இறக்கியவனோ,
“எதுக்கு மிஸ்டர் என் கார்ல
ட்ரம்ஸ் வாசிக்கறீங்க”எனச்
சிரிப்புடன் கேட்டான்.

மதுரகீதன் கோபம் நீர் ஊற்றிய
நெருப்பாய் அணைந்து போனது.

காரில் இருந்து இறங்காமல்
சிரிப்புடன் பேசியவனைப் பார்த்து
சிலையென நின்றான் மதுரகீதன்.

வருண்...வருணன்!மயூ
ஓயாமல் உச்சரிக்கும் பெயர்!

“என்ன மிஸ்டர்,என்ன பிரச்சனை
உங்களுக்கு”

“.....”

“ஹலோ!நடு ரோட்டில என்னை
நிறுத்திட்டு இப்படி சைலண்ட்
மோடுக்குப் போனா எப்படி
மிஸ்டர்”

“.....”

“ஹலோ!எதாவது பேசுங்க
மிஸ்டர்”

“.....”

“எதுக்கு இப்படி என் டைம்மை
வேஸ்ட் பண்றீங்க மிஸ்டர்”

வருணன் முகத்தை வெறித்த
மதுரகீதன்,ஒரு கணம் கண்களை
இறுக மூடித் திறந்தான்.

“நீங்க ஆக்ஸிடென்ட் பண்ண
இருந்தது உங்க மயூவை.
கண்ணை நல்லா திறந்து
பாருங்க”

“அதான் ஒண்ணும் ஆகலையே.
நீங்க எதுக்கு நடுவுல வந்து
ஹீரோ ஆகப் பார்க்கறீங்க
மிஸ்டர்.இவளுக்கு இதே
வேலை தான்.ரோட்டில கனவு
கண்டுட்டு வந்து எனக்குத்
திட்டு வாங்கிக் கொடுக்கிறா.
தள்ளுங்க.கதவைத் திறக்கணும்”

மதுரகீதன் விலகி நிற்க,கார்க்
கதவைத் திறந்து இறங்கி,“மயூ
மயூ”என அழைத்தபடியே அவளை
நெருங்கினான் வருணன்.

அவள் அதிர்ச்சியை உணர்ந்து,
அவள் தோள்களைப் பிடித்து
உலுக்க,சுயநினைவு பெற்று
அவன் முகம் பார்த்தாள்
தெளிவற்ற பார்வையோடு.

பழைய நினைவுகள் ரங்க
ராட்டினமாய் அவளுள் சுழன்று
அவள் விழிகளை மூடச்
செய்தது.

“மயூயூ...”அவளைத் தன்
தோளில் சாய்த்துக் கொண்டு
மதுரகீதனை எரித்து விடுவது
போல் பார்த்தான் வருணன்.

“முதல் மயூவைக் கவனிங்க
வருண்”

“எனக்குத் தெரியும்”

“டேய் கார்த்தி!வாட்டர் பாட்டில்
எடுத்துட்டு வாடா”வருணன்
கத்தியதில்,கார்த்திகேயன் காரில்
இருந்து வாட்டர் பாட்டிலோடு
இறங்கி ஓடி வந்தான்.

“மயூவுக்கு என்னாச்சு வருண்?
நானே டிரைவ் பண்ணி
இருப்பேன்.உ..”

“மயங்கிட்டா.பார்த்தா தெரியலை”

இவன் மீது தப்பை வைத்துக்
கொண்டு,எதற்கு இவன் என்
மீது எரிந்து விழுகிறான்?

அவள் முகத்தில் நீர் தெளித்து
அவள் மயக்கத்தைத் தெளிய
வைத்தான் கார்த்திகேயன்.

“வருண்...”சாய்ந்திருந்தவள்
நேராகி வருணனைப் பார்த்த
பார்வையில் சொல்லொணாத
வலி தெரிந்தது.

“மயூம்மா”கார்த்திகேயன் பரிவுடன்
அழைக்க.

“கார்த்தி..”கலங்கிய கண்களோடு
அவன் முகம் பார்த்தாள் அவள்.

“பயந்துட்டியா மயூ”

“இல்லை கார்த்தி”

“அடி எதுவும் பட்டிருக்கா”

“இல்லை கார்த்தி”

“பேசாம இருக்கியா”வருணனின்
கத்தலில் அமைதியானான்
கார்த்திகேயன்.

“என்னை வீட்டுக்குக் கூப்பிட்டுப்
போ வருண்”

“சரி.வா போகலாம்”வருணன்
அவளின் கரத்தைப் பற்றிக்
கொள்ள,மதுரகீதனிடம் சென்றது
அவள் பார்வை.

“தேங்க்ஸ்”

நெஞ்சில் வாங்கிய அடியுடன்
அவள் முகத்தை வெறித்தான்
மதுரகீதன்.

“எதுக்கு”

“எனக்கு உதவி பண்ண
வந்ததுக்கு”

“இப்படியெல்லாம் பேசாதே மயூ”

“என் பேர் மயூரிகா.என்னை
மயூன்னு கூப்பிடாதீங்க”

இருவரையும் மாறி மாறிப்
பார்த்த வருணன் முகத்தில்
கடுமை குடியேறியது.

“மயூ வண்டியை நீ எடுத்துட்டுப்
போ கார்த்தி.நான் மயூவைக்
கூப்பிட்டு வரேன்”

“என்கிட்டக் கத்தற மாதிரி
மயூகிட்டக் கத்தாதே”

“எனக்குத் தெரியும் கார்த்தி”

மயூரிகாவின் தலையை வருடிக்
கொடுத்து விட்டு,அவள்
வண்டியைக் கிளப்பிச் சென்றான்
கார்த்திகேயன்.

“உட்காரு மயூ”கார்க் கதவைத்
திறந்து விட்டான் வருணன்.
அவள் அமர்ந்ததும் தானும் ஏறிக்
கொண்டான்.

“இனிமேல் ஹெல்மெட்டை
மறக்காதே மயூ”

கண்ணாடி அருகே குனிந்து பேசிய
மதுரகீதன் முகத்தைத் தன்
விழிகளை உயர்த்திப் பார்த்தாள்
மயூரிகா.

“ரோட்டில போறப்ப கவனமா
இருக்கணும் குட்டி”

மயூரிகா விழிகள் கலங்குவதைக்
கண்டு,மதுரகீதன் உள்ளமும்
கலங்கியது.

“நான் இப்படி திடீர்னு உன்
முன்னாடி வந்திருக்கக் கூடாது.
என்னை மன்னிச்சுடு
கண்ணம்மா”

மதுரகீதன் பேசியதில் சினம்
கொண்டு காரின் கண்ணாடியை
ஏற்றினான் வருணன்.

அத்தோடு நில்லாமல் இறங்கிச்
சென்று மதுரகீதன் எதிரில் நின்று
அவனை துவம்சம் செய்யும்
உத்தேசத்தோடு பார்த்தான்.

“இனி என் கண்ணுல
பட்டுடாதீங்க மிஸ்டர்.
அதுக்கப்புறம் நடக்கிறதுக்கு நான்
பொறுப்பில்லை”

அங்கிருக்க விரும்பாதவனாகக்
காரில் ஏறிய வருணன் கரத்தில்
கார் பறந்தது.

வெறிச்சோடிய சாலையில்
வெறுமையான மனதுடன் தனித்து
நின்றிருந்தான் மதுரகீதன்.

உன் நினைவாலே
என் ஆயுள்
நீண்டதடி!
இனி உனைப் பிரிந்தாலே
என்னுயிர்
நீங்கிடுமடி சகியே!


கீதம் மயக்கும்...


நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15757

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய மாலை வணக்கம்:)

சென்ற பதிவை வாசித்த,

விருப்பம் தெரிவித்த,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு

எனது மனமார்ந்த நன்றிகள்:):)

கதையின் மூன்றாம் அத்தியாயம்

உங்களோடு.வாசித்து உங்கள்

கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மனமானது ஆனந்தம் கொள்ளும்.

நன்றி:)

ப்ரியமுடன்,
நித்திலா


14608


வானின் சிவந்த பந்து சிறுகச்
சிறுக உலகத்தாரின் பார்வையில்
இருந்து மறைந்து கொண்டிருந்தது.

வருணன் முகத்தில் கடுமை
குறைந்திருக்க,மயூரிகாவும் தன்
அதிர்ச்சியில் இருந்து வெளி
வந்திருந்தாள்.கண்களை மூடி
இருக்கையில் சாய்ந்திருந்தாள்.

இருவரும் ஏதோ சிந்தனையில்
இருந்ததில்,கார் அமைதியாகப்
போய்க் கொண்டிருந்தது.

அரைமணி நேர பயணத்திற்குப்
பின்பு,ஸ்ரீரங்கநாயகி பவனத்தின்
கேட்டின் முன்பு நின்றது
வருணனுடைய கார்.

“உள்ள வா வருண்”

“நாளைக்கு வர்றேன் மயூ.
வேலையிருக்கு.கார்த்தியை
அனுப்பு”

“ம்”

மயூரிகா இறங்கிச் சென்ற
சில நிமிடங்களில் கார்த்திகேயன்
வெளி வர,அவனுடன் வந்தவளுக்கு
“பை மயூ”என்று கையசைத்து
விட்டுக் காரை ஓட்டிச் சென்றான்
வருணன்.

வருண் ஏன் மதுவைப் பற்றி ஒரு
வார்த்தை கூடப் பேசவில்லை?
அவன் குணத்திற்கு எத்தனை
பேசியிருக்க வேண்டும்?

எனது மயக்கத்தைக் கண்டு
அதிர்ந்திருப்பான்.அவன் கோபம்
இன்னும் அதிகமாகி இருக்கும்.

ஹாலினுள் சென்றதும்,சோபாவில்
அமர்ந்திருந்த தாய்தந்தையைக்
கண்டு அவசரமாகத் தன்
சிந்தனையை விடுத்து,ஓர்
புன்னகையை உதட்டில் ஒட்ட
வைத்துக் கொண்டாள் மயூரிகா.

“வாடா தங்கம்.கார்த்தியை
ரெண்டு பஜ்ஜி சாப்பிடுன்னு
சொன்னா,நிற்காம ஓடறான்.
வருண் உள்ள வராமயே
போறானா”

“ஏதோ வேலையா போறாங்கம்மா”

“வண்டிக்கு என்ன ஆச்சுடா?
மெக்கானிக்கை வரச்
சொல்லட்டுமா”

“அந்த அளவுக்கு எதுவும்
இல்லைப்பா.ஸ்டார்ட் ஆகாம
மக்கர் பண்ணுச்சு.வருண்
பார்த்துட்டு நானே வீ்ட்டில
விடறேன்னு கூப்பிட்டு
வந்துட்டான்பா”

“முகம் ஏன் வாடியிருக்கு மயூ”

“அதூ...லேசா தலை
வலிக்குதுப்பா.அம்மா கையால
காபி குடிச்சா சரியாயிடும்.
எங்கம்மா தாத்தா பாட்டியைக்
காணோம்”

“கோயிலுக்குப் போயிருக்காங்க
தங்கம்”

உற்சாக முகமூடியை அணிந்து
கொண்ட மயூரிகா,உடை மாற்றி
வருவதாகக் கூறித் தன்
அறைக்குச் சென்றாள்.

பொய் மேல் பொய்
சொல்கிறேன்.இருவரும் என்னை
மன்னித்து விடுங்கள்.

மயூரிகா ஹாலிற்குத் திரும்பிய
போது,அவள் தந்தை
யோசனையுடன் அமர்ந்திருந்தார்.

“புள்ளைக்குச் சீக்கிரமா காபியும்,
பஜ்ஜியும் கொண்டு வா லட்சுமி”

“வர்றேங்க”

“எனக்கும் அப்படியே காபி
கொண்டு வா லட்சுமி”ஹாலில்
இருந்து மீண்டும் குரல்
கொடுத்தார் குமரகுரு.

“இப்ப தானே குடிச்சீங்க”

“அது உனக்காக.நான் மயூ
வரட்டும்னு தான் சொன்னேன்.நீ
தான் லேட்டாகுது.குடிங்க
குடிங்கன்னு கையில கொண்டு
வந்து கொடுத்தே”

“தப்பு என் மேல தான்.காபி
நிறையக் குடிக்கக் கூடாதுன்னு
புள்ளைக சொல்றாங்களே.ஏங்க
கேட்க மாட்டீங்கறீங்க”

“சின்ன டம்ளர்ல கொடு அன்னம்”

“கேட்க மாட்டீங்களே”

“காபியைக் குறைச்சுக்கங்கப்பா”

“சரி கண்ணு”

இருவருக்கும் காபி கொடுத்த
அன்னலட்சுமி,மகள் நெற்றியில்
கை வைத்துப் பார்த்தார்.

“என்னம்மா”

“சோர்வா தெரியறயே தங்கம்.
காய்ச்சல் அடிக்குதான்னு
பார்த்தேன்”

“லேசான தலைவலிம்மா.வேற
ஒண்ணும் இல்லை.அன்னத்தோட
காபியால அதுவும் ஓடிடும்.பஜ்ஜி
சூப்பரா இருக்கும்மா”என்று
சிரித்தாள் மயூரிகா.

மகளின் சிரிப்பில் அமைதி
கொள்ளாமல் அவள் முகத்தைக்
கூர்ந்தார் அன்னலட்சுமி.

“மலருக்கு வேலை அதிகம்னு
ஊருக்கு வந்து ஒரு மாசத்துக்கு
மேல ஆகுது.நாமளாவது போய்
பார்த்துட்டு வரலாம்னு அம்மா
சொல்றா மயூ”

குமரகுருவின் பேச்சில்
அன்னலட்சுமியின் மனம்
இளைய மகளிடம் சென்றது.

“ஒண்ணு ரெண்டு நாள் இல்லாம
ஒரு வாரம்..பத்து நாளாவது
இருந்துட்டு வரலாங்க.அவளுக்குப்
பிடிச்சதெல்லாம் சமைச்சுக்
கொடுக்கணும்னு எனக்கு
ஆசையா இருக்குங்க.பாவம்
புள்ளை.வெந்ததையும்
வேகாததையும் சாப்பிட்டு
இருக்கும்.இவளுக்கு என்ன
தலையெழுத்து?அங்க போய்
வேலை செய்யணும்னு?இருக்கிற
சொத்துபத்தைப் பார்த்துக்கிட்டா
போதும்னு சொன்னா காதிலயே
வாங்கறது கிடையாது”

“அவளுக்கு எப்ப விருப்பமோ
அப்ப வந்து பார்க்கட்டும் லட்சுமி.
அது வரைக்கும் அங்கயே
இருக்கட்டும்”

“நீங்க எப்ப என் பேச்சைக்
கேட்டிருக்கீங்க?உங்க புள்ளைக
சொல்றது தான் உங்களுக்குப்
பெரிசா இருக்கு”

“அம்மாவுக்கு மலரைப் பார்க்காம
இருக்க முடியாதுப்பா.நீங்க
நாளைக்கே கிளம்புங்க.அம்மா
ஆசைப்படி பத்து நாள் இருந்துட்டு
வாங்க.நான் இங்க
பார்த்துக்கறேன்”

“பத்து நாள்...கஷ்டம் மயூ.
எவ்வளவு வேலை இருக்கு”

“வருண் பார்த்துக்குவான்பா.
கவலைப் படாதீங்க.போயிட்டு
வாங்க”

“என்னது?நாங்க மட்டும்
போறதா?அக்கா வரலையான்னு
மூஞ்சியைக் காட்டுவா”

“அவ குழந்தை இல்லைம்மா.
புரிஞ்சுக்குவா”

“மயூர் இருக்கட்டும் லட்சுமி”

“என்னங்க பேசறீங்க?மலருக்கு
அக்காவைப் பார்த்தா போதும்.
நாம கூடத் தேவையில்லை”

“மலர் சின்னப் பொண்ணு
இல்லை.வளர்ந்துட்டா லட்சுமி”

“மலர் புரிஞ்சுக்குவாம்மா.நீங்க
கவலைப் படாதீங்க.நானும்
அவகிட்டப் பேசறேன்”

“முடிவு பண்ணிட்டீங்க.சரி நீ
இங்கயே இரு.தாத்தாவும்
பாட்டியும் நேரத்துக்குச்
சாப்பிடறாங்களா,
தூங்கறாங்களான்னு எல்லாம்
கவனமா பார்த்துக்கோ மயூ”

“சரிம்மா”

“நான் போய் பேக் பண்றேங்க.
இவளுக்காகத் தான் இவ்வளவு
நேரம் பேக் பண்ணாம இருந்தேன்”

“சரி லட்சுமி”

அன்னலட்சுமி அங்கிருந்து செல்ல,
யோசனையுடன் அவர் சென்ற
திசையைப் பார்த்தார் குமரகுரு.

“என்னப்பா”

“உன் அம்மானால பத்து நாள்
எல்லாம் இருக்க முடியாது.
உன்னைப் பிரிஞ்சு அவ இருந்ததே
இல்லை மயூ”

“ஆமாம்பா”

“ரெண்டு நாள் அமைதியா
இருப்பா.மூணாவது நாள் மயூ
சாப்பிட்டாளா,தூங்கினாளான்னு
புலம்ப ஆரம்பிச்சுடுவா”

“அம்மாவுக்கு நாங்க ரெண்டு
பேரும் பக்கத்திலயே
இருக்கணும்பா”

“ஆமாம்டா.உங்க ரெண்டு
பேருக்கும் கல்யாணம் பண்ணிட்டா
என்ன பண்ணுவாளோ?
நினைச்சாலே கவலையாயிருக்கு.
உன்கிட்ட முக்கியமான விஷயம்
சொல்லணும் கண்ணு”

“என்னப்பா”

“நாங்க எல்லாரும் சேர்ந்து
உனக்கு மாப்பிள்ளை
பார்த்திருக்கோம் தங்கம்”

“அப்பா...”மயூரிகா நம்ப
முடியாத அதிர்ச்சியுடன்
பார்க்க.

“நீ மறுப்பு சொல்ல முடியாதபடி
நல்ல குணமான பையனா,
அழகான பையனா
பார்த்திருக்கோம் மயூ.எங்க
எல்லாருக்கும் ரொம்பப்
பிடிச்சிருக்கு.உனக்கும் தெரிஞ்ச
பையன் தான்.உனக்கு அவனைக்
கண்டிப்பா பிடிக்கும்.உன்னை
நல்லபடியா பார்த்துக்குவான்னு
தெரிஞ்சதுக்கு அப்புறம் தான்
முடிவு பண்ணோம் தங்கம்.
ஐப்பசி பிறந்ததும் வீட்டுக்கு
வர சொல்லி இருக்கேன்”

“என்னப்பா நீங்...”

“மறுப்பா எதுவும் சொல்லாதே
தங்கம்.இந்த விஷயத்துல அப்பா
இனி உனக்கு சப்போர்ட் பண்ண
மாட்டேன்.அம்மா இப்பெல்லாம்
உன் கல்யாணத்தைப் பத்தியே
தான் பேசறா.உன் தாத்தா
பாட்டியும் உன் கல்யாணத்தைப்
பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்
படறாங்க.எனக்கும் உன்னைக்
கல்யாணக் கோலத்தில
பார்க்கணும்னு ஆசையாயிருக்கு.
இனியும் தள்ளிப் போட
முடியாது தங்கம்”

“.........”

“புரிஞ்சுக்கத் தங்கம்.முன்னாடியே
பண்ணி இருக்கணும்.தப்புப்
பண்ணிட்டேன்.கல்யாண
விஷயத்துல நான் செல்லம்
கொடுத்திருக்கக் கூடாது.உன்
கல்யாணத்தை முடிச்சா தான்
மலருக்குப் பண்ண முடியும்.
உங்களுக்குக் கல்யாணம் பண்ணா
தான் அப்பா நிம்மதியா
இருப்பேன்.அப்பா பேச்சை மீற
மாட்டேங்கிற நம்பிக்கையில
மாப்பிள்ளை வீட்டில பேசிட்டேன்.
அப்பா நம்பிக்கையைக்
காப்பாத்திடு தங்கம்”

கவிழ்ந்திருந்த மகளின் தலையை
வருடிக் கொடுத்து விட்டு எழுந்து
சென்றார் குமரகுரு.

கண்ணீர் பாதையை மறைக்க,
படிகளில் ஏறித் தன் அறைக்குச்
செல்ல எடுத்து வைத்த
மயூரிகாவின் ஒவ்வொரு அடியும்
தடுமாற்றத்தைக் கொண்டிருந்தது.

அறைக்குள் நுழைந்து கைகள்
நடுங்கத் தன் கைபேசியை எடுத்து
வருணனை அழைத்தாள் மயூரிகா.

“பிருந்தாவனம்”எனப் பெயரிடப்
பட்டிருந்த அவ்வீடு,அடர்ந்த
மலர்வனத்தினுள் இருப்பது
போலவே காட்சியளித்தது.
வீட்டைச் சுற்றிலும் சிறிய
இடத்தைக் கூட விடாமல் பல
ரகமான பூச்செடிகள்
வளர்க்கப்பட்டு,மலர்வனமாகக்
காட்சி தந்து கண்ணிற்கு
விருந்தளித்தது அவ்வீடு.

கீழே நான்கு படுக்கையறை,
மேல்தளத்தில் நான்கு
படுக்கையறை என விசாலமாகக்
கட்டப் பட்டிருந்தது அவ்வீடு.

வீட்டின் மதிற்சுவர் அருகே
காரை நிறுத்தி விட்டு,
சாவியோடு சென்று கேட் திறந்து
உள்ளே சென்றான் மதுரகீதன்.

சிலுசிலுவென்று வீசிய காற்றில்
ஒரு கணம் நின்று விட்டு,பின்
மெல்ல நடந்து சென்று
போர்டிகோவை அடைந்து வீட்டின்
கதவைத் திறந்து உள்ளே சென்று
தாழிட்டான்.

நேராகத் தன் படுக்கையறைக்குச்
சென்ற மதுரகீதன்,மெத்தையில்
விழுந்து கண்களை மூடினான்.

சிரிப்பதா,அழுவதா என்று
அவனுக்குத் தெரியவில்லை!

நெடுங் காலத்திற்குப் பிறகு
என் மயூவை அருகில்
பார்த்திருக்கிறேன்.அவள் பார்வை
என் மீது பட்டிருக்கிறது.
அவளுடன் பேசி இருக்கிறேன்.
அவள் வாயால் என் பெயர்
உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன்.

ஆனால்...என்னைப் பார்த்து
மயூ மயங்கிச் சரிவாள் என நான்
நினைக்கவில்லை.இத்தனை
பாதிப்பை நான் எதிர்பார்க்கவில்லை
மயூ.

அவள் வருணனைப் பார்த்த
பார்வை...எத்தகைய வலியை
உனக்குக் கொடுத்திருக்கிறேன்?

“நீங்க இந்த மயூவோட
மதுரன்”காதோரம் கொஞ்சிய
மயூரிகாவின் குரல் மதுரகீதனை
வேதனைப் படுத்தியது.

என் கண்ணம்மாவை நானே
துன்புறுத்தி விட்டேனே!

தவறு என்று தெரிந்தே செய்த
எனக்கு மன்னிப்புக் கேட்கும் தகுதி
கூடக் கிடையாது.நான் செய்த
தவறு இன்று தான் எனக்கு
முழுமையாகப் புரிந்திருக்கிறது
மயூ.உன் மதுவை நீ
மன்னிப்பாயா மயூ?

நானில்லாமல் எவ்வளவு
துன்பத்தை அனுபவித்திருப்பாய்?

மயூ முகம் இன்று வாடி
இருந்ததே!என்னவாயிற்று
அவளுக்கு?

மயூ கவனம் சாலையில்
இல்லையா?இல்லை...
வருணின் பிழையா?நான்
சரியாக கவனித்தேனா?

வருண் மயூவின் மீது சிறு
துரும்பு படவும் விட
மாட்டானே!மயூவின் கவனக்
குறைவு தானா இது?

என்னைப் பார்த்ததனால் தான்
அவன் காரில் இருந்து
இறங்கவில்லையா?மயூ முன்
சண்டை வேண்டாமென
நினைத்திருப்பான்.

மயூ முகமே சரியில்லை.
வண்டியை ஓட்ட முடியாமல்
தான் நிறுத்தி இருக்க
வேண்டும்.

என் மயூ இளவரசி ஆயிற்றே!
அவளுக்கு என்ன துன்பம்?

உனக்குத் தெரியாதா மது?
அவளுடைய வாட்டத்திற்கு நீ
மட்டுமே காரணமாக இருக்க
முடியும்!ஆம்.நான் தான்
என்னை உயிராய் நேசித்தவளைத்
துன்பக் கடலில் தள்ளியவன்.

எப்படி என் தவறை சரி செய்யப்
போகிறேன் நான்?

சரி செய்யக் கூடிய தவறை நீ
செய்யவில்லை மது!

தன் மனது எடுத்துரைத்த
உண்மையில் சோர்ந்த
மதுரகீதனுக்கு,மேலும் பல
அதிர்ச்சிகளை வைத்துக்
காத்திருந்தது காலம்.

உனை எண்ணியே
நான் வாழ்ந்திருந்ததை
எங்ஙனம் உனக்கு
சொல்வேனடி?
உனக்காகவே
என் வாழ்வுள்ளதடி!

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 
Status
Not open for further replies.
Top