All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கதை திரி

Status
Not open for further replies.

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16192

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம்🌹🌹:)

கடந்த பகுதிக்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

அன்பான நன்றிகள்😍😍

மதுவின் வருகைக்கான

காரணத்தை அறிந்து

கொள்வோமா?

வாசித்து உங்கள் கருத்தைப்

பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி.

அடுத்த பதிவு

வியாழனன்று.

ப்ரியமுடன்,
நித்திலா

16193

இருண்ட வானில்
மின்னல் ஒன்று
மின்னி மறைந்தது.
மழை வரப் போவதை
மேகங்கள் முரசு
கொட்டி அறிவித்துக்
கொண்டிருந்தன.

வெளியுலகம் அறியாமல்
தங்களுக்கான தனி
உலகத்தில் இருந்தனர்
மதுரகீதனும்,மயூரிகாவும்.

தன்னவன் முகத்தில்
மயூரிகா பார்வை
பதிந்திருக்க,தன்னையே
பார்க்கும் மயூரிகா
விழிகளில் கட்டுண்டு
தன்னையே
மறந்திருந்தான்
மதுரகீதன்.

அவன் பார்வை
அசையாதது கண்டு,
தன் வாய் மீதிருந்த
அவன் கரத்தை விலக்கி
விட்டு எழுந்து
அமர்ந்தாள் மயூரிகா.

"சாரிடா.என்னை திடீர்னு
பார்த்ததுல பயந்து
கத்திடுவியோன்னு
தான்..."அவள்
அசைந்ததும் பிரக்ஞை
பெற்றான் மதுரகீதன்.

"பரவாயில்லை மது"

"நான் இப்படி...இந்த
நேரத்துல உன் ரூம்முக்கு
வந்திருக்கக் கூடாது.பெரிய
தப்பு தான்.ஆனா...
என்னால பொறுமையா
இருக்க முடியலை மயூ"

".........."

"ரெண்டு நாளா நீ வீட்டை
விட்டு வெளியிலயே வரலை.
வருண் சத்தம் போட்டதுல...
நீ அப்செட்டா இருந்தே…
சாப்பிடுவியா...அழறயா...
என்ன பண்றயோன்னு
கவலையா இருந்துச்சு.
வருணும் ரெண்டு நாளா
இங்க வரலை.சண்டைப்
போட்டீங்களோ...
உன்னால வருண் பேசாம
இருக்கிறதைத் தாங்கிக்க
முடியாதேன்னு...எல்லாம்
யோசிச்சு யோசிச்சு...
இன்னைக்கு உன்னைப்
பார்த்தே ஆகணும்னு...
வேற வழியில்லாம...இப்படி
வந்துட்டேன் மயூ"

"நான் நல்லா இருக்கேன்
மது.நீங்க கவலைப்
படாதீங்க.நான் தான்
தனியா இருக்கணும்னு
சொன்னேன்.அதான்
வருண் வரலை.நாங்க
சண்டை எல்லாம்
போடலை"

"ஓ!சரிடா கண்ணம்மா"

"எதுக்கு இந்த நேரத்துல
வந்தீங்க மதுரன்?இவ்வளவு
ரிஸ்க் வேண்டாம் மதுரன்"

"சாரிடா"

"எனக்குப் போன் பண்ணி
இருக்கலாமே மது"

"சாரிடா.நான் போன்
பண்ணா நீ பேசுவியோ...
மாட்டியோன்னு..."

"சரி பரவாயில்லை.
கிளம்புங்க.நாம
நாளைக்குப் பேசலாம்"

"நான்..மயூ...நான்
வந்ததுக்கு வருண் மட்டும்
காரணம் இல்லை.அபிநயா
உன் கிட்டப் பேசுனாளா?
அதுவும் ஒரு காரணம்...
நான் வந்ததுக்கு"

மதுரகீதன் முகத்தை
அகலாதிருந்தது அவள்
பார்வை!

"நான் உன் கிட்டப் பேசக்
கூடாதுன்னு சொல்லி
இருக்கேன்.அபி என் மேல
இருக்கிற அன்பில...
எனக்கு நல்லது
செய்யறதா நினைச்சுப்
பேசி இருப்பா.அவ உன்
மனசு நோகிற மாதிரி
பேசுனாளா மயூம்மா"

மயூரிகா விழிகளில்
வியப்பின் சாயல்!

"அவ உன்னைக் கோபப்
படுத்திட்டாளா?
அவளுக்காக நான்
மன்னிப்புக்
கேட்டுக்கறேன் மயூம்மா"

மயூரிகா முகத்தில்
சிந்தனை ரேகைகள் தன்
தடம் பதித்தது.

"எதாவது பேசு மயூ"

அவளின் மௌனத்தில்
தவித்தான் மதுரகீதன்.

"எனக்கும் நம்ம விஷயத்தில
மத்தவங்க தலையிடறது
பிடிக்காது மயூ.அபி ஏன்
இப்படி முந்திரிக்கொட்டை
வேலை பண்ணான்னு
தெரியலை.சாரி மயூ"

"இல்லை இல்லை.அபி
எதுவும் சொல்லலை.நீங்க
சாரி சொல்ல வேண்டாம்
மது"

பின் ஏன் உன் குரலில்
அவ்வளவு கோபம் மயூ?
நம் விஷயத்தில்
அடுத்தவர் தலையிட்டது
மட்டும் தான் உன்
கோபத்திற்குக்
காரணமா?

கோபத்தில் கூட எனக்கு
உன் வாழ்க்கையில்
இடமில்லை என்ற
வார்த்தைகளை உன்னால்
உதிர்க்க முடியாதே மயூ!

மதுரகீதன் சிந்தனை
வயப்பட்டு அமைதியாகி
இருக்க,மயூரிகாவிடமும்
மௌனம்!

நீண்ட நிசப்தத்தைக்
கலைத்தாள் மயூரிகா.

"நான் நல்லா இருக்கேன்.
நீங்க கிளம்புங்க மது"

இந்நேரத்தில் பேச்சை
நீட்டிப்பது சரியில்லை என
நினைத்தவனாய் எழுந்தான்
மதுரகீதன்.

"வரேன் மயூம்மா"அவன்
எழவும்,அவன் கையைப்
பிடித்து எழாமல் செய்தாள்
மயூரிகா.

"என்னடா"

என்னவென்று சொல்லாமல்
அவனை இறுக அணைத்துக்
கொண்டாள் மயூரிகா.

மயூரிகாவின் அணைப்பு
மதுரகீதனை வியப்பில்
ஆழ்த்தியது.

என்னிடம் பேசாதவள்...
அணைக்கிறாளா?நான்
அவள் குடும்பத்தாரிடம்
மாட்டிக் கொள்வேன்
என்று பயப் படுகிறாளா?

"நான் போயிடுவேன்
மயூம்மா.நீ பயப் படாதே.
உன் வீட்டில யாரும்
என்னைக் குறை சொல்ற
மாதிரி நான் நடந்துக்க
மாட்டேன்"

"நான் போயிடுவேன்.
மாட்டிக்க மாட்டேன் மயூ"

"மயூ குட்டி"

"கண்ணம்மா"

"மயூம்மா"

"எனக்குக் கெட்டப் பேர்
வந்துடுமோன்னு பயப்
படறயா"

"வருண் கோபப் படுவான்னு
பயப் படறயா"

"என்னடா மயூ"அவன் கரம்
மெல்ல எழுந்து அவள்
முதுகைத் தடவிக்
கொடுத்தது.

அவனுடைய எந்த
அழைப்பிற்கும்,கேள்விக்கும்
அவளிடம் பதில் இல்லை!

அவளுடைய அணைப்பின்
இறுக்கம் புதிதாக இருந்தது
மதுரகீதனுக்கு.

அரணாய்த் தன்னைத்
தழுவிக்
கொண்டிருந்தவளின்
முதுகைத் தயக்கத்துடன்
வருடிய மதுரகீதன்,
காற்றையும் இடையிடத்
தடை விதிக்கும் படியான
அவள் இறுக்கத்தில்
தெரிந்த பரிதவிப்பில்
துணுக்குற்றான்.

"என்ன கண்ணம்மா"
என்றவன் கரங்களும்
தயக்கத்தை உதறி
அவளைத் தழுவிக்
கொண்டது.

ஜன்னல் வழியே ஊடுருவிய
வானின் மின்னல் மட்டும்
அவர்கள் அணைப்பைக் கண்
சிமிட்டிச் சிமிட்டிப் பார்த்துக்
கொண்டிருந்தது.

"நீங்க என்னோட மது.
இந்த மயூவோட மதுரன்.
உங்க கண்ணம்மா
உங்களை நல்லா
பார்த்துக்குவா.யாரும்
உங்களை வேதனைப்
படுத்த விட மாட்டா.
நான்...நான் தப்புப்
பண்ணிட்டேன்.இனி
எந்தத் தப்பும் நடக்க
விட மாட்டேன்"

மயூரிகா ஏன் இப்படிப்
பேசுகிறாள் எனப் புரியா
விட்டாலும்,அவள்
வார்த்தைகளில்
வெளிப்பட்ட தன் மீதான
நேசத்தில் மதுரகீதன்
உள்ளம் நெகிழ்ந்தது.
சற்றும் மாறாத அவள்
நேசத்தில்,அவள்
மீதான காதல்
பிரவாகித்தது.

"நான் உன்னோட மதுவா
இருக்கணும்னு தான்
எப்பவும் ஆசைப்
படறேன் மயூ.
மயூவோட மதுரனா
இருக்கணும்னு தான்
ஏங்கறேன்.ஐ லவ் யூ
கண்ணம்மா"மென்மையான
கரங்களின் வன்மையான
அணைப்பில் தன்னைக்
கொடுத்து விட்டு
அமைதியாகி விட்டான்
மதுரகீதன்.

நீண்ட பல நிமிடங்களுக்குப்
பிறகு,தானாகவே
விலகினாள் மயூரிகா.

"கிளம்புங்க மது"

அவளை ஒரு கணம்
பார்த்தவன்,அவள்
நெற்றியில் தன்
இதழ்களை அழுந்தப்
பதித்து விட்டு எழுந்தான்.

"மனசைக் குழப்பிக்காமத்
தூங்கு மயூ.குட்நைட்"

"இருங்க மது"

படுக்கையில் இருந்து
இறங்கிச் சென்று குடை
ஒன்றை எடுத்து வந்து
கொடுத்தாள் மயூரிகா.

"மின்னிட்டே இருக்கு.
பார்த்துப் போங்க மதுரன்"

இந்த அன்பல்லவா உன்
மீதான என் காதலை
அமுதச் சுரபியாய்
வைத்திருப்பது!

"மழை வர்றதுக்கு
முன்னாடி கிளம்புங்க
மதுரன்"

உள்ளம் அங்கேயே நிலை
பெற்று விடக் கெஞ்ச,அதை
அதட்டி அடக்கி விட்டு,
அவள் நெற்றியில் ஓர்
அவசர முத்தத்தைப்
பதித்து விட்டு
வெளியேறினான்
மதுரகீதன்.

மதுரகீதன் சென்றதும் சில
நிமிடங்களுக்குக் காதைத்
தீட்டிக் கொண்டு
அமர்ந்திருந்தாள்
மயூரிகா.

எந்த சத்தமும் இல்லை!
மது சென்று விட்டான்.
நன்றி தெய்வமே!

எப்படி வந்தான்?எப்படிச்
சென்றான்?பின் வழியாகத்
தான் வந்திருக்க
வேண்டும்!எப்படியோ
மாட்டிக் கொள்ளாமல்
சென்று விட்டான்.

வெகு நேரம் விழித்திருந்து
யோசித்தபடியே
படுத்திருந்த மயூரிகா,
மதுரகீதனை
நினைத்தபடியே
உறங்கிப் போனாள்.

தன் வீட்டிற்குச் சென்று
படுக்கையில் விழுந்த
மதுரகீதனுக்கு மயூரிகாவின்
நினைவுகளே!

உன்னைப் பார்க்காமல்
நான்கு வருடங்களுக்கு மேல்
இருந்திருக்கிறேன்.ஆனால்
இப்போது இரண்டு நாட்கள்
என்னால் உன்னைப்
பார்க்காமல் இருக்க
முடியவில்லை மயூ.

அதுவும் உன் கண்ணீர்
முகம் என்னை மிகவும்
வாட்டி விட்டது மயூ.
என்னால் எதிலும் கவனம்
செலுத்த முடியவில்லை.
வேறு வழியில்லாமல்
இரவில் உன் அறைக்கு
வரும்படி ஆகி விட்டது.

மன்னித்து விடு மயூ.உன்
அறைக்கு நான் வந்திருக்கக்
கூடாது.அதுவும் இந்த
நேரத்தில்...இனி
இத்தவறை நான் செய்ய
மாட்டேன் மயூ.

மயூவின் பார்வையில்
இருந்தது என்ன?இது
வரை நான் அவள்
பார்வையில் கண்டிராதது
அது!

எதற்கு அப்படி
அணைத்தாள்?நான்
மாட்டிக் கொள்வேன்
என்ற அச்சத்தினால்
விளைந்த அன்பிலா?

இல்லை இல்லை.வேறு
ஏதோ இருக்கிறது!ஏன்
அப்படிப் பேசினாள்?

அபியிடம் அவ்வளவு
கோபமாகப் பேசி விட்டு...
அந்த அணைப்பிற்கான
அர்த்தம் என்ன?

உன் பார்வைக்குப் பொருள்
புரியாமல் நான் தவிக்கும்
நாள் வருமென நான்
நினைத்ததே இல்லை மயூ.

வருண் பேசியது மயூவை
பாதித்து விட்டதா?
இருக்காது.அவர்கள்
புரிதல் மிக ஆழமானது.

வருண் பேசியது சரி
தான் என்றாலும்...ஏன்
அத்தனை கடுமை
காட்டினான்?தன்
குடும்பத்தை எண்ணியா?

என்னால் உனக்கு மட்டும்
தான் வேதனை என
நினைத்துக்
கொண்டிருந்தேன்.அது
எத்தனை பெரிய தவறு?

மயூ திருமணம் குறித்து
அவளைப் பெற்றவர்கள்
எத்தனை கனவோடு
இருந்திருப்பார்கள்?

என்னென்ன காரணங்கள்
சொல்லி மறுத்தாய் மயூ?

மயூவிற்குப் பின் மலர்
இருக்கிறாள்.மயூ
திருமணம் முடிந்தால்
தான் மற்றவர்கள்
திருமணத்தைப் பற்றி
யோசிப்பார்கள்.

மயூ வாழ்வோடு மலர்,
வருண்,கார்த்தி
வாழ்வையும் நான்
பாழாக்கிக்
கொண்டிருக்கிறேன்!

போதும்!இனி யார்
வாழ்வும் வீணாக
வேண்டாம்!

நான் நாளையே
மயூவிடம் பேசி
அனைவரும் மகிழும்படி
செய்வேன்.என் மயூ
நிச்சயம் என்னைப்
புரிந்து கொள்வாள்.
அவள் பார்வையிலும்,
பேச்சிலும் என் மீதுள்ள
அன்பு வெளிப் பட்டதே!
நாளை தாமதிக்காமல்
மயூவைச் சந்திக்க
வேண்டும்.ஒரு முடிவு
எடுத்தே ஆக
வேண்டும்.

நாளை தான் முற்றிலும்
உடைந்து போய்
தேற்றுவாரின்றித்
தவிக்கப் போவதை,
பாவம் மதுரகீதன்
அறிந்திருக்கவில்லை!

நேரம் காலை பத்தரை
மணியை நெருங்கிக்
கொண்டிருந்தது.

சிந்தனை படிந்த
முகத்துடன் சோபாவில்
அமர்ந்திருந்தனர்
குணவதியும்,
மயில்வாகனனும்.

"அன்னம் இல்லாம
வீடு வீடாவே இல்லைங்க.
இந்த மயூவுக்கு என்ன
ஆச்சுன்னே
தெரியலைங்க.அவ
ரூம்குள்ளயே அடைஞ்சு
கிடக்கிறா.மணி
எவ்வளவு ஆகுது?
இன்னும் கீழ வரலை.
இவ போக்கே
சரியில்லைங்க"

"வருணுக்குத்
தெரிஞ்சிருக்கும்.அவன்
வாயைத் திறக்க
மாட்டான்.பார்ப்போம்.
என்ன தான்
நடக்குதுன்னு.மயூ வர்றா.
அவளை எதுவும் கேட்டு
வைக்காதே"

"மில்லுக்குப் போகலையா
தாத்தா"

"கிளம்பிட்டே இருக்கேன்
கண்ணு"

"நீ கிளாஸ்சுக்குப்
போகலையா மயூ"

"இல்லை பாட்டி.ஷாப்பிங்
போகலாம்னு இருக்கேன்.
கொஞ்சம் கிராப்ட் ஐடம்ஸ்
வாங்கணும்"

"சாப்பிட்டு அப்புறம் போ"

"பார்த்துப் போயிட்டு வா
தங்கம்.தனுவையும்
கூப்பிட்டுக்க"

"சரி தாத்தா"

"நான் உன் பாட்டியைத்
தோப்பில விட்டுட்டு,
அப்படியே மில்லுக்குப்
போயிடறேன் தங்கம்"

"சரி தாத்தா.லன்ச்சுக்கு
கரெக்ட் டைம்முக்கு
வந்துடுங்க"

"சரி கண்ணு.வர்றோம்"

மயில்வாகனனும்,
குணவதியும் சென்றதும்
தன் அறைக்குச் சென்று
தனது மடிகணினியில்
மூழ்கினாள் மயூரிகா.

அரைமணி நேரம்
கடந்திருந்தது.

"என்ன விஷயம் மயூ?
எதாவது பிரச்சனையா?
இந்த நேரத்துல கூப்பிட
மாட்டியே.எதுக்குடா
உடனே வர சொன்னே"

கார்த்திகேயன் குரலில்
நிமிர்ந்த மயூரிகா
அவனைப் பார்த்து
மறுப்பாகத் தலை
அசைத்தாள்.

"பிரச்சனை எல்லாம்
இல்லை கார்த்தி.டென்சன்
பண்ணிட்டனா"

"இல்லை இல்லை.மது
கிட்டப் பேசினயா"
ஆவலுடன் கேட்டான்
கார்த்திகேயன்.

"இல்லை கார்த்தி.எனக்கு
ஒரு ஹெல்ப் வேணும்"

"லூசு!சும்மா சொல்லு"
என்றான் மெத்தையில்
அவளருகில் அமர்ந்தபடி.

"இந்த போட்டோஸ் பாரு"

தன் கைபேசியைக்
கார்த்திகேயனிடம்
கொடுத்தாள் மயூரிகா.

புகைப்படங்களைப்
பார்த்தவன் அதிர்ச்சியுடன்
அவள் முகம் பார்த்தான்.

"இதைப் பார்த்து தான்
மேடம் ரொம்ப சைலண்டா
இருக்கீங்களா?
இதுக்கெல்லாம் மூட்அவுட்
ஆகலாமா?இதெல்லாம்
இந்தக் காலத்துல ஒரு
செகண்ட்ல
பண்ணிடுவாங்க மயூ"

"போனும் வந்துச்சு"

"என்ன!!"

மயூரிகா போன்
உரையாடலைக் கூறவும்,
அதிர்ச்சியுடனும்,
குழப்பத்துடனும் அவள்
முகம் பார்த்தான்
கார்த்திகேயன்.

"மது எப்பவுமே உன்னோட
மது மட்டும் தான்.நீ எதுக்கு
அந்தப் பொண்ணு கிட்ட
அப்படி சொன்னே மயூ"

"அவ இன்னும் எதாவது
பேசி வைப்பா கார்த்தி.
இன்னும் எதாவது அனுப்பி
வைப்பா.இன்னும் எதாவது
செய்ய நினைப்பா.எதுவும்
செய்யாம இருக்கட்டும்னு
தான் அப்படி சொன்னேன்"

"நீ சொல்றதும் ஒரு
வகையில சரியா தான்
இருக்கு.ஆனாலும்..."

"எனக்கு அந்தப் பொண்ணு
யாருன்னு தெரியணும்
கார்த்தி.நான் அவளைப்
பார்க்கணும்.அவ பேர்
அபிநயா"

"கண்டு பிடிச்சுடலாம்"

"வருணுக்குத் தெரிய
வேண்டாம் கார்த்தி"

"சரி மயூ.நான் சொல்ல
மாட்டேன்"

"எது எனக்குத் தெரியக்
கூடாது மயூ"

வருணனின் குரலில்
இருவரும் திடுக்கிட்டுக்
கதவைப் பார்த்தனர்.

"அண்ணா..."

"உன்னோட வழக்கமான
நேரத்துல வராம,இந்த
நேரத்துல மயூவைப்
பார்க்க வந்ததை நான்
கவனிக்க மாட்டேன்னு
நினைச்சியா?மயூவைத்
தவிர யாருக்காகவும்
நீ பண்ணையில இருந்து
அசைய மாட்டேன்னும்
எனக்குத் தெரியும்"

"எனக்கு வெளியில போற
வேலையிருக்கு.திரும்பி
வர லேட்டாகும்.மயூவை
ரெண்டு மூணு நாளா
பார்க்கலை.இன்னைக்கும்
பார்க்க முடியாமப்
போயிடுமேன்னு...
இப்பவே பார்க்கலாம்னு
வந்தேன் வருண்"

"நிறுத்துடா.நீங்க
பேசினதை நான் முழுசா
கேட்டுட்டேன்.பொய்
சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை.நான்
உன் பின்னாடியே தான்
வந்தேன்.நீ கவனிக்கலை"

தம்பியின் அருகில் சென்று
அவன் கையில் இருந்த
கைபேசியைப் பறித்துப்
புகைப்படங்களைப் பார்த்த
வருணன் உள்ளத்தில் புயல்
மையம் கொண்டது.

மயூரிகாவும்,
கார்த்திகேயனும்
ஒருவரை ஒருவர்
செய்வதறியாது பார்த்துக்
கொண்டனர்.

"எவ்வளவு தைரியம்?
இப்பவே இதுக்கெல்லாம்
ஒரு முடிவு கட்டறேன்"

கைபேசியோடு
வெளியேறியவனைத்
தடுக்கத் தோன்றாமல்
பார்த்திருந்த மயூரிகாவும்,
கார்த்திகேயனும் விபரீதம்
உணர்ந்து அவன் பின்னே
ஓடினர்.

"வருண் நில்லு.நான்
சொல்றதைக் கேளு"

"அண்ணா நில்லு"

"கோபப் படாதே வருண்.
நில்லுடா.எங்கடா போறே
நீ"மயூரிகாவைப் பதற்றம்
தொற்றிக் கொண்டது.

"உன் மதுவுக்குப் பாடம்
புகட்டப் போறேன்"ஒரு
கணம் நின்று
மயூரிகாவிற்குப்
பதிலளித்து விட்டுத்
தனது வேக நடையைத்
தொடர்ந்தான் வருணன்.

"வேண்டாம் வருண்.
போகாதே வருண்"

அவர்கள் குரல்
கேட்டாலும்,நிற்காமல்
தனது வேகத்தை அதிகப்
படுத்தி விரைந்தான்
வருணன்.

"நில்லு வருண்.நீ போகக்
கூடாது"

மயூரிகா குரலில் தெறித்த
உறுதியில்,படிகளில்
இறங்கிக் கொண்டிருந்த
வருணன் கால்கள் ஒரு
கணம் நின்று பின்
மீண்டும் சென்றது.

மயூரிகாவின் கையைப்
பிடித்து நிறுத்தினான்
கார்த்திகேயன்.

"நீ இரு மயூ.நான் அவன்
கிட்டப் பேசறேன்"

"வருணுக்கு மதுவைப்
பிடிக்காது.ரொம்பக்
கோபமா இருந்தான்.
இப்ப இதுவும்
சேர்ந்துடுச்சு"

"நீ டென்சன் ஆகாதே
மயூ.நான் போய் வருண்
கிட்டப் பேசறேன்.நான்
அவன் கிட்டப் பேசிட்டு
உன்னைக் கூப்பிடறேன்.
நீ உன் ரூம்முக்குப் போ"

"சரி.சீக்கிரம் போ"

கார்த்திகேயன்
போர்டிகோவிற்குச் செல்லும்
போது,வருணனின்
கார் கேட்டைத் தாண்டிச்
சென்றிருந்தது.இருந்தும்,
தன் இருசக்கர வாகனத்தில்
வருணனைத் தொடர்ந்தான்
கார்த்திகேயன்.

எனையன்றி
உன் இதயம்
யார் கொள்வது?
நானின்றி
உன் நினைவை
எவர் வெல்வது?
என் கனவின்றி
என்று நீ
துயில் கொண்டது?
மாறாது உன்
காதல் ராகம்!
நீளும் நம்
காதல் வானம்!

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16499

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம் :)

கடந்த பதிவிற்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப் பகிர்ந்து

கொண்ட தோழமைகளுக்கு

எனது அன்பான நன்றிகள் :love::)

மதுவும்,வருணும் என்ன

செய்கிறார்கள் என்று

தெரிந்து கொள்வோம்

வாருங்கள்.

வாசித்து உங்கள் கருத்தைப்

பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி:)

ப்ரியமுடன்,
நித்திலா

16501

காலை உணவை பத்தரை
மணிக்குச் சாப்பிடும்
மகனை கவலையுடன்
பார்த்தபடி பரிமாறிக்
கொண்டிருந்தார்
பூர்ணிமா.

மது இப்போதெல்லாம்
அடிக்கடி இரவு வீட்டிற்கு
வருவதில்லை.சற்று
முன் தான் வந்தான்.
அதுவும் சோர்ந்த
முகத்துடன்.

அந்தப் பெண்ணைச்
சந்தித்திருப்பானா?
பேசி இருப்பானா?
என்னால் அல்லவா
என் மகனுக்கு இந்த
வேதனை?

மகன் வீடு திரும்பாததில்
கவலையுடன் இருந்த
கதிர்காமன்,மகனுடன்
பேசுவதற்காக முன்னறையில்
காத்திருந்தார்.அவருடன்
கந்தவேலும் இணைந்து
கொண்டான்.

அப்போது,கதவை
பலமாகத் தட்டியதோடு,
"மதூ..மதூ.."என
இரைந்தான் வருணன்.

"யாரு தம்பி நீங்க?
உள்ள வாங்க"என
கனிவாகக் கூறினார்
கதிர்காமன்.

"நான் மதுவைப்
பார்க்கணும்.அவனை
வர சொல்லுங்க"

"முதல்ல உள்ள வாங்க
தம்பி"

வரவேற்பறையின் நடுவில்
சென்று நின்ற வருணன்,
"வெளியில வா மது"
என மீண்டும் கத்தினான்.

யார் இவன்?ஏன் இப்படி
நடந்து கொள்கிறான்?

கதிர்காமனும்,கந்தவேலும்
புரியாத பார்வை ஒன்றைப்
பரிமாறிக் கொண்டனர்.

"உட்காருங்க தம்பி.
மது இப்ப வந்துடுவான்"
கந்தவேலும் கூற.

"மது சாப்பிட்டு
இருக்கான் தம்பி.கை
கழுவிட்டு வருவான்.
பொறுமையா இப்படி
வந்து உட்காருங்க
தம்பி"கதிர்காமன்
தன்மையாகக் கூற.

அவருக்குப் பதிலாக
டீப்பாய் மீதிருந்த
பூ ஜாடி வருணன் கரம்
பட்டு தரையில்
விழுந்து சிதறியது.

"என்ன பண்றீங்க
தம்பி"என அலறினர்
இருவரும்.

கை கழுவிக்
கொண்டிருந்த
மதுரகீதன்,ஏதோ
உடை படும் சத்தம்
கேட்டு,பதட்டத்துடன்
முன்னறைக்கு
ஓடினான்.

"மயூ நல்லா இருக்கா
தானே வருண்"

தவிப்புடன் தன் எதிரே
நின்றிருந்த மதுரகீதனைக்
கண்டு மெல்லச்
சிரித்தான் வருணன்.

"சொல்லு வருண்.ப்ளீஸ்"

வருணன் வீட்டிற்கே
வந்தது மயூரிகாவிற்கு
என்னவானதோ என
மதுரகீதனைப் பதற
வைத்தது.

"இந்தத் தவிப்பு,
துடிப்பெல்லாம்
அவளை விட்டுட்டுப்
போனப்ப எங்க
போயிருந்துச்சு
மிஸ்டர் மதுரகீதன்"

"என் மேல அப்புறம்
கோபப் படு வருண்"

கைகளைக் கட்டிக்
கொண்டு வருணன்
பார்த்த பார்வைக்குப்
பொருள் புரியாமல்
நின்றான் மதுரகீதன்.

"பொய் சொல்லி அவ
மனசை உடைச்சியே!
அப்ப உனக்குத்
தோணலையா மயூவை
வேதனைப் படுத்தறோம்னு?
ஏன் அவளை விட்டுப்
போனேன்னு எப்படி
மனசுடைஞ்சு
போயிருப்பா?அவளுக்கு
வலி...வேதனைன்னா...
என்னன்னே தெரியாது.
நாங்க அப்படித் தான்
அவளை வளர்த்தோம்.
ஆனா...நீ...காதல்னு
சொல்லிக்கிட்டு...அவ
மனசை உடைச்சு,
அவளை வேதனைப்
படுத்தித் துடிக்க
வைச்சுட்டே!"

"நான் தப்புப்
பண்ணிட்டேன் வருண்.
மயூ நல்லா இருக்கான்னு
சொல்லிட்டு,நீ என்னை
என்ன வேணும்னாலும்
பேசு.நான் கேட்டுக்கறேன்"

"மயூ நல்லா இருக்கா.
நீ நினைக்கிற மாதிரி எந்த
முட்டாள்தனத்தையும் அவ
எப்பவும் செய்ய மாட்டா.
அதுக்கு நான் விடவும்
மாட்டேன்"

"தேங்க்ஸ் வருண்.
எனக்கு இது போதும்.என்
மயூ நல்லாயிருக்கா.எனக்கு
இது போதும்"பதறிய அவன்
உள்ளம் அமைதி கொண்டது.

"நல்லாவே நடிக்கறீங்க
மிஸ்டர் மதுரகீதன்.
மயூவுக்காக நீங்க
தவிக்கிறதும்,
துடிக்கிறதும்...
பிரமாதம்.ஒரு உன்னதக்
காதலனா ரொம்ப
நல்லா நடிக்கறீங்க"

"வருண் ப்ளீஸ்.
என்னைக் காயப்
படுத்தணும்னு
பேசறீங்க.அதுக்காக
என் அன்பை,தவிப்பை
நடிப்புன்னு சொல்லாதீங்க.
என்னால அதைத் தாங்க
முடியாது.என்னைப்
பிராடுன்னு சொல்லுங்க,
ஏமாத்துக்காரன்னு
சொல்லுங்க.நான்
ஒத்துக்கறேன்.ஆனா..."

"ஓகே மிஸ்டர்
மதுரகீதன்.நான் நேரா
விஷயத்துக்கு வரேன்"

"இந்தத் தம்பி
என்னப்பா சொல்லிட்டு
இருக்கு?நீயும்
கேட்டுட்டு இருக்கே"
கதிர்காமன் இடையிட.

"வருண் நியாயத்தைக்
கேட்கறார்பா.நான்
கேட்டுத் தான் ஆகணும்"

மகன் பின்னே அங்கு
வந்து நின்றிருந்த
மனைவியைப் பார்த்த
கதிர்காமன் முகத்தில்
துயரம் நிறைந்திருந்தது.

"சொல்லுங்க வருண்"

"உனக்குத் தான்
ஏற்கனவே நிச்சயம்
ஆயிடுச்சே!அப்புறமும்
எதுக்கு மயூ பின்னாடி
வந்துட்டு இருக்கே?
எதுக்கு இந்த உருகல்
நாடகம்?பொழுது
போகவா?அதுக்கு மயூ
தான் கிடைச்சாளா?என்ன
நினைச்சுட்டு இருக்கே
உன் மனசுல?நான்
கையைக் கட்டிட்டுப்
பார்த்துட்டு இருப்பேன்னு
நினைச்சியா?உன்னோட
காதல் நாடகத்தை
எல்லாம் வேற யார்
கிட்டயாவது வைச்சுக்கோ"

வருணன் பேசியதில்
முதல் வரியை மட்டும்
எடுத்துக் கொண்டு
சிந்திக்கலானான்
மதுரகீதன்.

மயூவும் அன்று இதைத்
தானே சொன்னாள்?ஏன்
இப்படிச் சொல்கிறார்கள்?

"நிறுத்துங்க தம்பி.நீங்க
பேசறது சரியில்லை"
பூர்ணிமாவின் குரல்
கோபம் கலந்து ஓங்கி
ஒலித்தது.

"அபாண்டமா
பேசாதீங்க தம்பி.
உங்க மயூவையே
நினைச்சு வாழ்ந்துட்டு
இருக்கிறவனைப்
பார்த்து மனசாட்சி
இல்லாமப் பொழுது
போகவான்னு
கேட்கறீங்களே.நீங்.."

"வேண்டாம் மாமா"
கந்தவேலிடம் இறைஞ்சல்
பார்வை ஒன்றைச்
செலுத்தினான் மதுரகீதன்.

அருகில் வந்து நின்ற
தாயின் முகம் பார்த்துப்
பேச வேண்டாமெனத்
தலை அசைத்தான்
மதுரகீதன்.

மகனின் வேதனை
நிறைந்த முகத்தைப்
பார்த்து அவரால்
பேசாமல் இருக்க
முடியவில்லை.

"என் பையன் அப்படிப்
பட்டவன் இல்லை.நான்
அவனை அப்படி
வளர்க்கவும் இல்லை.
அவன் சொக்கத் தங்கம்.
உங்க கிட்ட யாரோ
ஏதோ தப்பா சொல்லி
இருக்காங்க.அதை
நம்பிட்டு என்
பையனைக் கண்டபடி
பேசறீங்க?கேள்வி
கேட்கறீங்க?உண்மை
என்னன்னு தெரிஞ்சுக்காம
வாய்க்கு வந்தபடி எல்லாம்
பேசாதீங்க தம்பி"

"உண்மை தெரிஞ்சு
தான் வந்திருக்கேன்மா.
உங்க பையனைப் பத்தி
யாரோ சொல்லலைம்மா.
உங்க பொண்ணு தான்
சொன்னது.சொந்த
அக்கா சொன்னது
எப்படிப் பொய்யா
இருக்கும்மா"

"என்ன??"பூர்ணிமாவின்
முகம் அப்பட்டமான
அதிர்ச்சியைப்
பிரதிபலித்தது.

"என்ன தம்பி பேசிட்டு
இருக்கீங்க"கதிர்காமனுக்கு
மனைவியின் அதிர்ச்சியைக்
காணச் சகிக்கவில்லை.

"உண்மை எப்பவும்
கசக்கத் தான் செய்யும்
சார்"

கந்தவேலோ கேட்டதை
நம்ப முடியாமல் பிரமை
பிடித்தவனாக நின்றிருந்தான்.

மதுரகீதன் முகம் மட்டும்
வேதனையைத் தொலைத்து
தெளிவைக் கொண்டிருந்தது.

"மதூ...இவர் என்ன
சொல்றார் மது?இங்க
என்ன நடக்குது?வசு
எப்ப...என்ன சொன்னா?
உனக்குத் தெரியுமா
கண்ணா"பூர்ணிமா
குழப்பத்துடன் மகன்
முகம் பார்க்க.

"அம்மா..."

"அத்தை கேட்கறாங்கல்ல?
சொல்லு மது"வாய் திறந்த
கந்தவேலின் முகத்தில்
தெரிந்த இறுக்கத்தில்
அவசரமாகப் பதிலளித்தான்
மதுரகீதன்.

"மாமா ப்ளீஸ்...
அக்காவைத் தப்பா
நினைக்காதீங்க.அவ
நல்லது தான்
பண்ணியிருக்கா"

"என்ன மது சொல்றே"

"அம்மா...அக்கா நல்ல
எண்ணத்தில தான் அப்படி
ஒரு பொய் சொல்லி
இருப்பாங்கம்மா"

"எதிர்பார்த்தேன்.நீ
இப்படித் தான்
சொல்லுவேன்னு
எதிர்பார்த்தேன்"
வருணனின் ஏளனச்
சிரிப்பு அவ்விடத்தை
நிறைத்தது.

"என் அக்காவைப் பத்தி
எனக்குத் தெரியும்
வருண்.மயூவுக்கும்,
எனக்கும் கல்யாணம்
நடக்க வாய்ப்பே
இல்லைங்கிறப்ப,மயூ
என்னையே நினைச்சுட்டு
இருந்திடக் கூடாது,தன்
வாழ்க்கையை வீணாக்கிக்கக்
கூடாதுன்னு தான் அக்கா
எனக்கு மேரேஜ் பிக்ஸ்
ஆயிட்டதா பொய் சொல்லி
இருக்காங்க"

மதுரகீதன் விளக்கத்தைக்
கேட்டு கை தட்டியதோடு,
வாய் விட்டு பலமாகவே
சிரித்தான் வருணன்.

அவன் எதற்குச்
சிரிக்கிறான் எனப்
புரியாமல் அனைவரும்
அவனையே
பார்த்திருந்தனர்.

ஒருவாறு தன் சிரிப்பை
நிறுத்திக் கொண்டு
மதுரகீதனைப் பார்த்தவன்
பார்வையில் பரிதாபம்
நிறைந்திருந்தது.

"மயூ சொன்னது
சரியாதான் இருக்கு.நீ
அநியாயத்துக்கு
நல்லவனா இருக்கே மது.
நீ ஏன் இவ்வளவு
நல்லவனா இருக்கே மது?
உன்னை மாதிரியே
மத்தவங்களும்
இருப்பாங்கன்னு...
பாவம் மது நீ"

"வருண் ப்ளீஸ்.
உங்க கோபத்தை என்
மேல மட்டும் காட்டுங்க.
அக்காவை எதுவும்
சொல்லாதீங்க"

"ஓகே.நீ சொல்ற
மாதிரி உங்க அக்கா
மயூ நல்லதுக்காகத்
தான் பொய்
சொன்னாங்கன்னே
வைச்சுக்குவோம்"

மதுரகீதன் கேள்வியுடன்
பார்க்க,தன் கையில்
வைத்திருந்த மயூரிகாவின்
கைபேசியில் இருந்த
புகைப்படங்களை
அவனிடம் காட்டினான்
வருணன்.

"எந்த நல்லதுக்காக
இந்த மாதிரி
போட்டோஸை மயூவுக்கு
அனுப்பினாங்க மது?
அதுவும் ரெண்டு நாள்
முன்னாடி?அப்புறம்
போன்கால்!உன்னை
விட்டுடனுமாம்.
இல்லைன்னா அபிநயா
தற்கொலை
பண்ணிக்குவாங்களாம்"
வருணன் குரலில்
எள்ளல் கூடியிருந்தது.

வருணன் என்ன
சொல்கிறான் எனப்
புரியாமல் விழித்தான்
மதுரகீதன்.

"நீ மயூவை நிழல் மாதிரி
தொடர்றது தெரிஞ்சு,மயூ
உன் கிட்ட ஏமாந்துடக்
கூடாதுங்கிற நல்ல
எண்ணத்திலயா இருக்குமோ?
தன் தம்பியாவே இருந்தாலும்
பரவாயில்லை,அவனோட
உண்மையான முகத்தைக்
காட்டி ஒரு அப்பாவிப்
பொண்ணுக்கு நல்லது
செய்ய நினைச்சிருப்பாங்களோ?"
வருணன் பார்வையிலும்,
பேச்சிலும் ஏளனம் விரவிக்
கிடந்தது.

என்ன சொல்கிறான் எனக்
குழப்பமாக நின்றிருந்தவர்களிடம்,
"எல்லாரும் பாருங்க"
எனப் புகைப்படங்களைக்
காட்டினான் வருணன்.

"ஏதோ பங்ஷன்ல எடுத்த
போட்டோவை என்கேஜ்மென்ட்
போட்டோவா மாத்தி
இருக்காங்க.என் மதுவை
விட்டுடு,தற்கொலை
பண்ணிக்குவேன்னு பேச
வைச்சிருக்காங்க.மயூ
எவ்வளவு வேதனைப்
பட்டிருப்பா?"

இரண்டு நாள் முன்பு
நடந்தது என்றால்...
மயூ அமைதிக்குக்
காரணம் இது தானா?
அப்போது என்னை
அணைத்ததன் காரணம்...

மதுரகீதன் குடும்பத்தினர்
ஒருவர் முகத்தை ஒருவர்
குழப்பத்துடன் பார்த்துக்
கொண்டிருந்தனர்.

அவர்கள் முகங்களைக்
கண்டு தன் சிந்தனையை
வசந்தியிடம் திருப்பினான்
மதுரகீதன்.

"ரொம்பப் பெரிய ஷாக்
போலிருக்கே!ஓகே.
நானே சொல்லிடறேன்"

வருணன் பார்வை
மதுரகீதன் முகத்தில்
நிலைத்தது.

"உங்க அக்கா
அவங்களோட நல்லதுக்காக,
என்கேஜ்மென்ட் நடந்த
மாதிரி போட்டோஸை
அனுப்பி,மயூகிட்ட
யாரையோ பேச
வைச்சிருக்காங்க.நீ
போன நாலே மாசத்துல
கட்டி விட்ட அந்த
நிச்சயதார்த்தக் கதையை
இப்ப வரைக்கும்
கன்டினியூ பண்றது மயூ
நல்லதுக்காக இல்லை.
அவங்களோட
சுயநலத்துக்காக"

"ஆமாம்.சுயநலம் தான்.
தன் தம்பி நல்லா
இருக்கணும்கிற சுயநலம்.
தன் தம்பிக்கு எதுவும்
ஆகிடக் கூடாதுங்கிற
சுயநலம்.அப்ப
மயூவுக்காகப் பொய்
சொன்னவங்க.இப்ப
எனக்காக இதெல்லாம்
செஞ்சிருக்காங்க"
மதுரகீதன் குரலும்
உயர்ந்திருந்தது.

வருணன் முகத்தில்
சினம் துளிர்த்தது.தன்
கோபத்தைக் கட்டுக்குள்
வைக்க முயன்றான்
வருணன்.

"கண்மூடித்தனமான
நம்பிக்கை ரொம்ப
ஆபத்தானது மது"

"அக்கா எனக்காக,என்
வாழ்க்கையை நினைச்சு
எவ்வளவு வேதனைப்
படறான்னு எனக்குத் தான்
தெரியும்.எனக்காக
எவ்வளவு கோயிலுக்குப்
போயிருக்கான்னும் எனக்குத்
தான் தெரியும்.அவ
எனக்காக வருத்தப்
படறதை நான் தான்
தினமும் பார்த்துட்டு
இருக்கேன்.நீங்க இல்லை
வருணன்"

"அவ்வளவு தத்ரூபமான
நடிப்பு!பாராட்டினேன்னு
சொல்லிடுங்க மிஸ்டர்
மதுரகீதன்"

"வருண்!!"மதுரகீதனின்
கத்தலில் அவ்விடம் ஒரு
கணம் அமைதியானது.

வருணன் அலட்சியப்
பார்வையுடன் நிற்க,
தன்னை முயன்று கட்டுப்
படுத்திக் கொண்டான்
மதுரகீதன்.

"என்னைப் பத்தி என்ன
வேணும்னாலும் பேசுங்க.
உங்க கோபம் தீர அடிங்க.
ஆனா என் அக்காவைப்
பத்திப் பேசாதீங்க.
அவங்க பா..."

"என் மயூ சந்தோஷத்தைப்
பறிச்சவங்களைப் பத்தி நான்
பேச தான் செய்வேன்.நாலு
வருஷம் அவ கஷ்டப்
பட்டதைப் பார்த்தவன் நான்.
இன்னும் அவ நிம்மதியைப்
பறிக்கத் திட்டம் போட்டா
விட்டுடுவனா?ஒரு தடவை
ஏமாந்துட்டேன்.இனி ஏமாற
மாட்டேன்"

"வேண்டாம் வருண்.நீங்க
கோபத்தில பே..."

"இல்லை.நான் கோபத்தில
பேசலை.உண்மையைப்
பேசறேன்.பாசம் இருக்க
வேண்டியது தான்.ஆனா
கண்மூடித்தனமான பாசம்
இருக்கக் கூடாது.அது
உன் வாழ்க்கையோட,
உன்னைச் சார்ந்தவங்க
வாழ்க்கையையும்
அழிச்சுடும்.உனக்கு
இப்பவே உன் அக்காவோட
சுயரூபத்தைக் காட்டறேன்
பாரு"

தன் கைபேசியை எடுத்து
அதில் ஒரு காணொளியைக்
காட்டினான் வருணன்.

"ஆமா.அந்த வீடு
ரொம்பப் பெரிசு"என
வசந்தி பேசுவதோடு
ஆரம்பித்திருந்தது அந்தக்
காணொளி.

"எதாவது ஐடியா பண்ணி
மதுவே எனக்கு எழுதி
வைக்கிற மாதிரி
பண்ணிடுவேன்"

"உனக்குத் தான்
ஏற்கனவே வீடு
வாங்கிக்
கொடுத்துட்டானே"

"அது இவ்வளவு
பெரிசில்லை.அதை
விடு,இப்ப என்
டென்சன் எல்லாம் மது
ஆறு மாசத்தில
இந்தியா வந்துடுவான்.
திக்குதிக்குன்னு இருக்கு.
உண்மையைக் கண்டு
பிடிச்சுடுவானோன்னு
பயமாயிருக்கு.
எப்படியும் வந்தவுடனே
நேரா அந்தப் பொண்ணு
கிட்டத் தான் போவான்.
அவளைப் பத்தித்
தெரிஞ்சுக்கணும்னு
நினைப்பான்.நான்
சொன்னதை அவ
நம்பலை.இன்னும்
கல்யாணம் பண்ணிக்காம
இருக்கா.மது அவகிட்டப்
போகாம எதாவது
நாடகமாடி சமாளிக்கணும்"

"உன் தம்பி,உன்னைப்
பத்தி யார் என்ன
சொன்னாலும் நம்ப
மாட்டான்.எதுக்கு
வீணா பயப் படறே?"

"அதென்னவோ உண்மை
தான்.பார்ப்போம்.
அடுத்தது,மது அவளை
மறக்கலைன்னா என்ன
பண்றதுன்னு யோசிச்சுட்டு
இருக்கேன்"

"ஒரு தடவைப் பிரிச்ச
உனக்கு இன்னொரு
தடவைப் பிரிக்கிறது
கஷ்டமா என்ன"

"அப்ப மது இங்க
இல்லை.என் வேலை
ஈஸியா முடிஞ்சுது.
மது இருக்கறப்ப...
யோசிச்சு செய்யணும்.
என் மேல சந்தேகம்
வராத மாதிரி
செய்யணும்"

"அந்தப் பொண்ணோட
இல்லைனாலும் வேற
யாராவதோட உன்
தம்பிக்குக் கல்யாணம்
பண்ணத் தானே
செய்வாங்க.அப்ப என்ன
செய்வே வசந்தி"

"அது கஷ்டம்.அவன்
அவளை மறக்க
மாட்டான்னு தோணுது.
நல்லது தான்.அவளை
நினைச்சுட்டே காலத்தை
ஓட்டிடுவான்"

"உனக்கு ஜாக்பாட் தான்"

"மது கல்யாணம்
பண்ணாமயே
இருந்தான்னா நல்லா
தான் இருக்கும்.ஆனா
அம்மா எமோஷனலா
பேசி எதாவது
பண்ணாங்கன்னா,மது
சம்மதிக்க
வாய்ப்பிருக்கு.அப்ப
எனக்குத் தலை
ஆட்டறவளா பார்த்துப்
பண்ணி வைச்சுடுவேன்"

"அபிக்கு என்ன"

"அவ நல்லவ.ஒத்து
வர மாட்டா"

"மது வந்தது தெரிஞ்சு
உன் தம்பி காதலிச்சப்
பொண்ணு தேடி
வந்துட்டா என்ன
செய்வே"

"அவ வர மாட்டா.
அவளுக்கு மது எங்க
இருக்கான்னு தெரியாம
இருந்திருக்காது.அவ
நினைச்சிருந்தா
பிளைட்டைப் பிடிச்சு
மது பின்னாடியே
போயிருக்க முடியும்.
ஆனா அவ அப்படி
செய்யலை"

"பணக்காரப்
பொண்ணுன்னு சொன்னே
இல்லே?இறங்கி வர
மனசு வராது"

"இது போதும்னு
நினைக்கிறேன்"

காணொளியை நிறுத்தி
விட்டு,மதுரகீதன்
முகத்தைப் பார்த்து
விட்டுச் சுற்றிலும்
பார்வையை
ஓட்டினான் வருணன்.

அனைவரும் பேரதிர்ச்சியில்
உறைந்து நின்றிருந்தனர்.

சத்தமின்றிக் கிளம்பிய
வருணன் கதவருகே
சென்று நின்று திரும்பிப்
பார்த்தான்.வேதனை
தோய்ந்த மதுரகீதன்
முகம் அவனை இளக்க,
முயன்று
கடுமையாக்கினான்.

இந்த வலியை நீ
அனுபவித்துத் தான் ஆக
வேண்டும் மது!

உங்கள் தவறுக்கான
தண்டனையை நீங்கள்
அனைவரும் அனுபவித்துத்
தான் ஆக வேண்டும்!

மதுரகீதன் கால்கள்
தானாக வருணனை
நோக்கிச் சென்றது.

"கேம் ஓவர் மிஸ்டர்
மதுரகீதன்"

"........"

"உங்க அக்கா ரொம்ப
வருஷம் முன்னாடி
ஆரம்பிச்ச விளையாட்டை,
நான் இப்ப முடிச்சு
வைச்சிருக்கேன்.இனி
அவங்க விளையாடாம
நீங்க பார்த்துக்கங்க.
பை மிஸ்டர் மதுரகீதன்"

மதுரகீதனிடம் பேசி
விட்டுத் திரும்பிய
வருணன்,கேட்டை
அடைந்து வெளியேறி
தன் காருக்குச் செல்லவும்,
கார்த்திகேயன் அவனருகில்
வந்து நிற்கவும் சரியாக
இருந்தது.

"அண்ணா..."

"என்ன?மயூ அனுப்பி
வைச்சாளா?மதுவைக்
காப்பாத்த வந்தயா?"
என்று கேட்டுச் சிரித்தான்
வருணன்.

"உன் கோபத்தைப் பத்தி
எனக்கும் தெரியும்"

"டேய்!நான் இந்தக்
கதையோட ஹீரோடா.
நீங்க ரெண்டு பேரும்
சேர்ந்து என்னை
வில்லனாக்கிடுவீங்க
போலிருக்கே"

சிரிப்புடன் தம்பியின்
கன்னத்தில் தட்டிக்
கொடுத்து விட்டு,
"பண்ணைக்குக் கிளம்பு.
நான் வந்துடறேன்"என்று
சொல்லி விட்டுத் தன்
காரில் ஏறிச் சென்றான்
வருணன்.

நானும் அறியாத
வலை இது!
உன் கண்ணீர் காணும்
நிலை கொடிது!
எனை மன்னிக்காது
தண்டித்து விடு அன்பே!


கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16818

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம்🌹🌹

கடந்த பகுதிக்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

அன்பான நன்றிகள்:love::love:

அத்தியாயம் பதினாறில்

என்ன இருக்கிறது

என்று தெரிந்து

கொள்வோமா?

வாசித்து உங்கள் கருத்தைப்

பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

அடுத்த பதிவு

வியாழனன்று.

ப்ரியமுடன்,
நித்திலா

16819

ஆதவனின் கடும்
வெப்பத்தைக்
குறைக்க முடியாமல்
காற்று திணறிக்
கொண்டிருந்தது.

நெடு நேரமாகப்
பதட்டத்துடன்
ஹாலினுள் குறுக்கும்
நெடுக்குமாக நடந்து
கொண்டிருந்தாள்
மயூரிகா.

"வந்து சாப்பிடு பாப்பா.
பாட்டி தோப்புல இருந்து
வந்தாங்கன்னா..என்னை
உண்டு இல்லைன்னு
பண்ணிடுவாங்க.
நேரத்துக்குச் சாப்பிடாம
ஏன் இப்படி உடம்பைக்
கெடுத்துக்கறே பாப்பா"

"எனக்குப் பசிக்கலைக்கா.
கார்த்தி இப்ப வந்துடுவான்.
அவன் வந்ததும்
சாப்பிடறேன்கா.நான்
போட்டு
சாப்பிட்டுக்கறேன்கா"

"சரி பாப்பா"

மயூரிகா கால்கள்
ஓய்ந்ததோ,சோபாவில்
பொத்தென்று அமர்ந்தாள்.

மது வீட்டில் என்ன
நடக்கிறதென்று
தெரியவில்லையே!

கார்த்தி மாலையில்
என்னைக் காண வரும்
போது அவனிடம் சொல்லி
இருக்க வேண்டும்.எனக்கு
அவசரம்,அந்தப் பெண்
யாரென்று அறிய!

வருண் எப்போது
எங்கிருப்பான் என்று
யாருக்கும் தெரியாது!

நான் கூப்பிடக் கூப்பிட
நிற்காமல் செல்கிறான்.
இவன் பேச்சு,நடத்தை
எல்லாம் மாறிக்
கொண்டிருக்கிறது!

"மயூ"

கார்த்திகேயனின் குரலில்
உயிர் வந்தவளாக
எழுந்தாள் மயூரிகா.

"கார்த்தி..."

"மது வீட்டில எந்தப்
பிரச்சனையும் இல்லை
மயூ"

"நிஜமாவா"

"பிராமிஸ் மயூ"

"நம்ப முடியலையே"

"என்ன நடந்துச்சுன்னு
எனக்குத் தெரியாது மயூ.
வழியில போன் வந்துடுச்சு.
அப்பா போனை எடுக்காம
இருக்க முடியாது.வேலை
விஷயமா தான்
கூப்பிடுவார்.வருண்
அதுக்குள்ள போயிட்டான்.
சாரிடா.நான் மதுவோட
புது வீட்டுக்குப் போயிட்டு,
அப்புறம் தான் பழைய
வீட்டுக்குப் போனேன்.
நான் போனப்ப வருண்
மது வீட்டில இருந்து
வெளியில வந்துட்டான்"

"கோபமா இருந்தானா?
எதாவது சொன்னானா"

"அவன் என்ன பண்றான்,
என்ன பேசறான்,எப்ப
சிரிப்பான்,எப்பக் கோபமா
இருப்பான்னு ஒண்ணுமே
புரிய மாட்டீங்குது மயூ"

"......"

"முதல்ல உட்காரு.உன்
முகமே சரியில்லை"அவளை
அமர்த்தி அருகில் தானும்
அமர்ந்து கொண்டான்
கார்த்திகேயன்.

"......."

"வருணுக்கு மது மேல
நிறையக் கோபம் இருக்கு.
ஆனாலும்,யோசிக்காம
எதையும் செய்ய மாட்டான்.
உன்னை வேதனைப் படுத்தற
எதையும் அவனால செய்ய
முடியாது மயூ.நீ இவ்வளவு
டென்சன் ஆக வேண்டிய
அவசியமே இல்லை மயூ.
நாம பதட்டத்துல
யோசிக்காம ஓடி
இருக்கோம்"

கார்த்தி சரியாகத் தான்
சொல்கிறான்.நான்
வருண் கோபத்தையே
நினைக்கிறேன்.
அவனுடைய அன்பான
குணத்தை மறந்து
விடுகிறேன்.

"சரி கார்த்தி.நான்
வருண் கிட்டப் பேசறேன்"

"உன் மொபைல் கொடுத்து
விட்டான்.நான் அந்த
போட்டோஸை டெலிட்
பண்ணிட்டேன்.அந்தப்
பொண்ணு நம்பரை
பிளாக் பண்ணிட்டேன்"

"ம்"

"எனக்கு பேங்க் போகிற
வேலை இருக்கு.நான்
கிளம்பட்டுமா"

"சரி கார்த்தி.சாரி.
நான் உன்னைத்
தொந்தரவு
பண்ணிட்டேன்"

"உளறாதே மயூ.நான்
நைட் வரேன்.நீ
ரிலாக்ஸா இரு"

"சரிடா.பை"

அங்கேயே அமர்ந்திருந்த
மயூரிகா மனதில்
கோபமாகச் சென்ற
வருணன் பிம்பம்
எழுந்தது.

மதுவிடம் கை நீட்டி
விடுவானோ என்று
பயந்து விட்டேன்.
நன்றி கடவுளே!

மதுவிடம் என்ன பேசி
இருப்பான்?அவன்
குடும்பத்தினர் முன்
என்ன பேசினானோ?

அந்தப் பெண்ணைப்
பற்றித் தெரிந்து கொண்டு
தான் என்னைக் காண
வருவான்.

எத்தனை துணிச்சல்
அவளுக்கு?யாரென்று
தெரியட்டும்.அவளை
கவனித்துக் கொள்கிறேன்!

என் மதுவை ஏய்க்க
நினைக்கும் எவரையும்
நான் மன்னிக்க
மாட்டேன்!

தன்னறைக்குச்
செல்லலாமென எழுந்த
மயூரிகாவிற்குத் தலை
சுற்றுவது போலிருக்க,
மீண்டும் சோபாவிலேயே
அமர்ந்து கொண்டாள்.

இப்போதெல்லாம் அடிக்கடி
இது போல் ஏற்படுகிறது என
நினைத்தவளாய் அங்கேயே
கண் மூடி அமர்ந்திருந்தாள்
மயூரிகா.

மாலைப் பொழுது.உலகம்
தன் கூட்டுக்குள் அடை
படத் தொடங்கி இருந்த
நேரம்.

யாராக இருக்கும்?யார்
என் மதுவிற்கு எதிராகச்
சதி செய்வது?

இக்கேள்வியே கடந்த
இரண்டு நாட்களாக
மயூரிகா மனதை
வண்டாய்க் குடைந்து
கொண்டிருக்கிறது.

தன்னுடைய யூகம்
தவறாகப் போய் விட
வேண்டுமென்று
வேண்டினாள் மயூரிகா.

கார்த்திகேயன் சென்றதில்
இருந்து அறைக்குள்ளேயே
அடைந்து கிடக்கிறாள்.
பூமணி வற்புறுத்துவதால்
அறையிலேயே
சாப்பிடுகிறாள்.

யோசித்து யோசித்து
எனக்குப் பைத்தியம்
பிடிக்கப் போகிறது!நான்
மதுவிடம் பேசுவது
தான் இதற்குத் தீர்வு!

ஒரு முடிவிற்கு வந்தவளாக
உடை மாற்றி வெளியில்
செல்லத் தயாரானாள்
மயூரிகா.

அச்சோ!ஆறரை ஆகப்
போகிறது.இப்போது
எப்படிச் செல்வது?
அம்மாவிற்குத் தெரிந்தால்
திட்டுவார்களே!

மது என் அறைக்கு
வந்தது மட்டும்
தெரிந்தால்...
அவ்வளவு தான்!

அவள் கைபேசி ஒலிக்க,
வருணனின் பெயரைப்
பார்த்து எடுத்துக் காதில்
வைத்தாள்.ஆனால்
பேசவில்லை.

"........."

"ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
உண்மை புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி"

"........"

"எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர்
இடம் வேண்டும்"

"......"

"ஏது பந்தப் பாசம்
எல்லாம் வெளி வேஷம்"

"எதுக்குடா இப்ப
இந்த சோகப் பாட்டை
எல்லாம் என் கிட்டப்
பாடிட்டு இருக்கே"

"இப்படிப் பாடாத குறையா
உன் மது கால் போன
போக்கில ரோட்டுல
போயிட்டு இருக்கான்
மயூ"

"மது கிட்ட சண்டைப்
போட்டியா"

"நீ தான் சண்டைப்
போடக் கூடாதுன்னு என்
கையைக் கட்டி
வைச்சுட்டியே"

"......."

"மயூயூயூ"

"நிஜமா தான் சொல்றயா
வருண்"

"என்ன மயூ?உன்னைத்
தவிர அவனுக்கு வேற
பிரச்சனையே இருக்காதா
என்ன"

வருணிடம் பிறகு
கேட்போம்.முதல்
மதுவைப் பார்க்கலாம்.

"......."

"மதுவை எங்க பார்த்தே
வருண்"

"நம்ம வீட்டு்க்கு வர்ற
வழியில ஒரு பார்க் சைட்
இருக்குமே,அது பக்கத்தில
இருக்கிற ஆல மரத்தடியில
கடைசியா பார்த்தேன் மயூ.
இன்னும் அங்க
இருப்பானான்னு தெரியாது"

"சரி வருண்.நான்
பார்த்துக்கறேன்.பை"

கைபேசியை எடுத்துக்
கொண்டு பூமணியைத்
தேடிச் சென்றாள் மயூரிகா.

"என்ன பாப்பா"

"நான் தனு வீட்டுக்குப்
போயிட்டு வரேன்கா.
தாத்தாபாட்டி வந்தாங்கன்னா
சொல்லிடுங்கக்கா"

"சரி பாப்பா"

கார் சாவியை எடுத்துக்
கொண்டு யோசித்தபடியே
நடந்தாள் மயூரிகா.

தாத்தாவும்,பாட்டியும்
அத்தை வீட்டில் இருந்து
சீக்கிரம் கிளம்ப
மாட்டார்கள்.அவர்கள்
வருவதற்குள் நான்
திரும்பி வந்து விட
வேண்டும்.தனு இங்கு
வந்து என்னை மாட்டி
விடாமல் இருந்தால்
சரி.

நான் நினைத்த நேரத்தில்
வந்து போவதால் தாத்தா
பெரிதாக எதுவும்
நினைக்க மாட்டார்.
ஆனால் பாட்டிக்கு
சந்தேகம் வந்து விடும்.

மரத்தில் சாய்ந்து
அமர்ந்து கண்களை
மூடியிருந்த மதுரகீதன்,
உள்ளுணர்வு உந்த
கண்களைத் திறந்து
பார்த்தான்.

கலைந்த தலை,கசங்கிய
சட்டை,வேதனை சுமந்த
முகம்,ஜீவனற்ற கண்கள்
என இதுவரை தான்
கண்டிராத தோற்றத்தில்
மதுரகீதனைக் கண்டு
ஆயிரம் நெருஞ்சிகள் தன்
நெஞ்சைக் குத்துவதாய்
உணர்ந்தாள் மயூரிகா.

"எதுக்கு இப்படி இங்க
உட்கார்ந்துட்டு
இருக்கீங்க மது"

"மயூ...நீ இங்க..."
அவன் கண்களில் சிறு
ஒளி வந்தது.

"உங்க கார் எங்கே"

"நான் கார்ல வரலை
மயூ"

"சரி கார்ல ஏறுங்க.
உங்களை வீட்டில
விட்டுடறேன்"

"வேண்டாம் மயூ"

"ஒழுங்கா கார்ல
ஏறுங்க மது"

மயூரிகாவின் கண்டிப்பு
நிறைந்த பார்வையில்,
பேசாமல் காரில் ஏறி
அமர்ந்தான் மதுரகீதன்.

"நான் டிரைவ் பண்றேன்
மயூ"

அவனிடம் வாக்குவாதம்
செய்யாமல் காரில் ஏறிய
மயூரிகாவின் பார்வை
சாலையில் இல்லாமல்
மதுரகீதனிடமே இருந்தது.

மதுரகீதன் பார்வை
அவளிடம் திரும்ப,தன்
பார்வையை விலக்கிக்
கொண்டு வெளியில்
பார்த்தாள் மயூரிகா.

இருள் சூழத் தொடங்கி
இருந்த போது,தன்
வீட்டை அடைந்திருந்தான்
மதுரகீதன்.

கேட்டின் முன் காரை
நிறுத்தி விட்டு இறங்கினான்
மதுரகீதன்.

"தேங்க்ஸ் மயூ.
இருட்டாயிடுச்சு.நீ
கிளம்புடா"

சரியெனத் தலை
அசைத்தவளின் பார்வை
அவன் முகத்திலேயே
இருந்தது.

"எல்லாம் சரியாயிடும்.
கவலைப் படாதீங்க"

"தேங்க்ஸ்டா மயூ"

"நீங்க உள்ள போங்க.
நான் அப்புறம் போறேன்"

அவள் விருப்பத்தை
மறுக்காமல் கேட் திறந்து
உள்ளே சென்றான்
மதுரகீதன்.

மயூரிகா காரைக் கிளப்பிச்
சென்ற பின் மெல்ல
வீட்டை நோக்கி நடக்கத்
தொடங்கினான்.வீட்டைத்
திறந்து உள்ளே சென்று
சோபாவில் விழுந்தவன்
அப்படியே கிடந்தான்.

நீண்ட பல நிமிடங்களுக்குப்
பிறகு,"மதூ மதூ"என்ற
மயூரிகாவின் அழைப்பில்
திடுக்கிட்டு எழுந்தான்.

மயூ செல்லவில்லையா?
கார் கிளம்பியதைப்
பார்த்தேனே!

"மதூ..."

அவசரமாக எழுந்து
விளக்குகளுக்கு உயிரூட்டி
வெளிச்சத்தைக் கொண்டு
வந்தான் மதுரகீதன்.

கதவருகே
நின்றிருந்தவளைக்
கண்டு அவளருகே
சென்றான்.

"லைட் போடாம இருட்டில
எதுக்கு உட்கார்ந்துட்டு
இருக்கீங்க மது"

"தோணலை"

"என்னை உள்ள கூப்பிட
மாட்டீங்களா"

"சாரிடா.உள்ள வா"

அவனோடு உள்ளே
சென்றவள் கையில்
இருந்த பார்சலை
டீப்பாய் மீது வைத்தாள்.

"என்னடா இது"

"நீங்க எதுவும்
சாப்பிட்டிருக்க
மாட்டீங்கன்னு
வாங்கிட்டு வந்தேன்
மது"

"தேங்க்ஸ் மயூ"

"ஆர்டர் பண்ணலாம்னா
எனக்கு இந்த வீட்டு
அட்ரஸ் தெரியாது.
வீட்டுக்குப் போயிட்டு
வர லேட்டாகும்.அதுவும்
இல்லாம இந்த நேரத்தில்
எதுவும் இருக்காது.
அதான் கடையில
வாங்கிட்டு வந்தேன்"

"பரவாயில்லை மயூ"

"டிபன் தான் வாங்கிட்டு
வந்தேன் மது"

"டிபனே போதும்டா.
எனக்குப் பசியில்லை"

தலை கலைந்து,சட்டை
கசங்கி அழுக்காகி இருந்த
மதுரகீதனின் தோற்றம்
மயூரிகாவை நோகச்
செய்வதாக இருந்தது.

"பிரெஷ்ஷாயிட்டு வந்து
கொஞ்சமாவது சாப்பிடுங்க
மது.நான் பாத்திரத்துக்கு
மாத்தி வைச்சுட்டுப்
போறேன்.கிச்சனுக்குப்
கூப்பிட்டுப் போறீங்களா"

"அதெல்லாம் வேண்டாம்
மயூ.நான் போட்டு
சாப்பிட்டுக்கறேன்"

"நீங்க சாப்பிட மாட்டீங்க.
எனக்குத் தெரியும்.நானே
போயிக்கறேன்"

"சரி வா"

மதுரகீதனுடன் இணைந்து
சமையலறைக்குச்
சென்றவளுக்கு மஞ்சள் நிற
வண்ணத்தில் மிளிர்ந்த
சமையலறையை மிகவும்
பிடித்திருந்தது.

"கிச்சன் ரொம்ப
அழகாயிருக்கு மது.
யெல்லோ கலர்
சூப்பராயிருக்கு"

"தேங்க்ஸ்டா"அவன்
முகத்தில் லேசாக ஒரு
புன்னகை எட்டிப்
பார்த்தது.

பாத்திரங்களை எடுத்து
உணவை மாற்றி
வைத்தவளையே பார்த்துக்
கொண்டிருந்தான்
மதுரகீதன்.

"கண்டிப்பா சாப்பிடணும்.
சாப்பிடாம உடம்பைக்
கெடுத்துக்காதீங்க"

"எனக்கு சாப்பிடப்
பிடிக்கலை மயூ.எனக்கு...
எதுவுமே பிடிக்கலை"

சாம்பாரை ஊற்றிக்
கொண்டிருந்தவள் ஒரு
கணம் திரும்பி அவனைப்
பார்த்தாள்.

"என்னாலயா"

"இல்லை..."தலை
கவிழ்ந்தான் மதுரகீதன்.

ஏன் இந்த அடிபட்ட
தோற்றம்?யார் என்
மதுவைக் காயப்
படுத்தியது?

சாம்பாரை ஊற்றி மூடி
வைத்து விட்டு,அவன்
அருகில் சென்றாள்
மயூரிகா.

"மது"என்ற அழைப்போடு
அவன் தாடை தொட்டு
முகத்தை நிமிர்த்திய
மயூரிகா,அவன்
கண்களில் தெரிந்த
வலியைக் காணச்
சகியாமல் அவனை
இறுக அணைத்துக்
கொண்டாள்.

அவன் வேதனையைத்
தான் வாங்கிக் கொள்பவள்
போல,அவனைத்
தன்னோடு இறுக்கிக்
கொண்ட மயூரிகாவின்
அணைப்பு இறுகிக்
கொண்டே சென்றது.
அவனும் அவளைத்
தஞ்சமடைந்தவனாய்
அவள் அணைப்பினில்
அடங்கினான்.

மயூரிகா கொண்ட சிறு
ஊடல் தீர்ந்ததோ?
அவள் காதல் மீண்டும்
கை சேர்ந்ததோ?

உன் வலியில்
என் விழிகள்
நீர் கோர்க்குதே!
பிரிந்தாலும்
மறந்தாலும்
காதல் தன் குணம்
காட்டுதே!
உயிரே!
உனைத் தேற்றத்
தவித்தோடுதே!

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17577


டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம்:)

அனைவரும் நலமா?

அப்டேட் கொடுப்பதற்கு

சற்றுத் தாமதமாகி விட்டது.

மன்னியுங்கள்.

கடந்த பகுதிக்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப் பகிர்ந்து

கொண்ட தோழமைகளுக்கு எனது

அன்பான நன்றிகள்:):love:

மதுரகீதன்,மயூரிகா வந்து

விட்டார்கள்.என்ன சொல்கிறார்கள்

என்று அறிந்து கொள்வோமா?

வாருங்கள்.வாசித்து உங்கள்

கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி:)

அடுத்த பதிவு திங்களன்று.

ப்ரியமுடன்,
நித்திலா

17578

தன் அலுவல் அறையில்
ஆடிட்டரிடம் பேசிக் கொண்டிருந்த
வருணன்,அனுமதியின்றி கதவு
திறக்கப் பட்டதில் கோபம்
பொங்க யாரெனப் பார்த்தான்.

கார்த்திகேயனைக் கண்டதும்
அவன் கோபம் மட்டுப்பட்டது.

“ஓகே.நீங்க கிளம்புங்க.நான்
உங்களை ஆபிஸ்ல வந்து
பார்க்கறேன்”

வருணன் அவரை அனுப்பியதும்,
கதவைச் சாத்தி விட்டு,அவன்
எதிரில் இருந்த இருக்கையில்
சென்று அமர்ந்தான் கார்த்திகேயன்.

“எனக்கு மது வீட்டில என்ன
நடந்துச்சுன்னு தெரியணும்”

“மயூ கிட்ட சொல்லவா”

“எனக்கும் தெரியணும்.எனக்கும்
மயூ வாழ்க்கையில அக்கறை
இருக்கு”

“கோபப் படாதே கார்த்தி.இப்ப
உனக்கு என்ன தெரியணும்”

“அந்த போன்கால்,போட்டோஸ்
அதுக்கெல்லாம் யார் காரணம்னு
தெரியணும்.மதுவும்,மயூவும்
சேரக் கூடாதுன்னு ஏன்
நினைக்கறாங்கன்னு தெரியணும்.
கண்டிப்பா உனக்குத் தெரிஞ்சிருக்கும்”

"....."

"சொல்லுணா.ஏன் மதுவையும்,
மயூவையும் பிரிக்க நினைக்கறாங்க"

“பேராசை,சுயநலம்,அதிகாரம்
எக்ஸெட்ரா எக்ஸெட்ரா”

“யாருக்கு”

“இந்த வீடியோவைப் பாரு”

தன் கைபேசியில் இருந்த வசந்தியின்
காணொளியைத் தம்பியிடம்
காட்டினான் வருணன்.

“ஓ!கெஸ் பண்ணது தான்.ஆனா...
மது அவரோட அக்கா ரொம்ப
நல்லவங்க.ரொம்பப் பாசமா
இருப்பாங்கன்னு...நிறைய
சொல்லி இருக்காருண்ணா.
அவங்களா இப்படி?மது பாவம்”

“அதெல்லாம் ஒன்ஸ் அபான் எ
டைம் கார்த்தி கண்ணா”

“எனக்கு அந்த என்கேஜ்மென்ட்
கதை கேட்டதுல இருந்தே டவுட்
தான்ணா.மயூ தான் அதை
நம்பலையேன்னு விட்டுட்டேன்.
மதுவும் இல்லைன்னு ஆராய்ச்சிப்
பண்ணத் தோணலை”

“எனக்கும் அப்ப தான் தோணுச்சு
கார்த்தி”

“மதுகிட்ட சொல்லிட்டியா?அவங்க
வீட்டில இந்த வீடியோவைப்
பார்த்துட்டாங்களா”

“சொல்லாம எப்படி அவங்க
விளையாட்டுக்கு முடிவு கட்டறது
கார்த்தி.வெளியில இருந்து
எதாவது பிரச்சனைன்னா நம்ம
வேலையைக் காட்டலாம்.இங்க
முடியாதே.அவங்க குடும்பத்துனால
மட்டும் தான் அவங்களைக்
கன்ட்ரோல் பண்ண முடியும்”

“மதுவால...அவங்க அக்கா
பண்ணதைத் தாங்கிக்க
முடியாதுண்ணா”

அவர்கள் பேச்சிற்கு இடையூறாய்
கார்த்திகேயன் கைபேசி ஒலி
எழுப்பியது.

“தனு கூப்பிடறாண்ணா”

“பேசு”

“சொல்லு தனு”என்றான்
கைபேசியைக் காதில் வைத்து.

“என்ன!!”

“சரி.நான் பார்க்கிறேன்.நீ
வீட்டுக்குப் போ.பை”

கைபேசியை வைத்து விட்டுப்
பதட்டத்துடன் வருணன் முகத்தைப்
பார்த்தான் கார்த்திகேயன்.

“தனு மயூவைப் பார்க்க வீட்டுக்குப்
போயிருக்கா.ஆனா மயூ,தனு
வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு
வேற எங்கயோ போயிருக்காண்ணா.
அதுவும் இந்த நேரத்துல.நீயோ
நானோ இல்லாம வேற எங்கயும்
அவ போக மாட்டாளே வருண்”

“டென்சன் ஆகாதே செல்லம்.
மயூ மதுவைப் பார்க்கப்
போயிருக்கா கார்த்தி”

“என்ன??மதுவைப் பார்க்க...
எப்படி வருண்?அவ தான் மதுவைத்
தேடிப் போக மாட்டேன்னு
சொல்லி இருக்காளே.இப்ப
எப்படி?”

“மயூ ஆசைப்படி மது தான்
அவளைத் தேடி வந்துட்டானே
கார்த்தி”

“.........”

“மயூ இப்ப ஆறுதல் சொல்லத்
தான் போயிருக்கா.நீ ஓவரா
கற்பனை பண்ணிக்காதே”

“ஆறுதலா...”

“துரோகத்தோட வலி இரும்பு
இதயத்தையே நொறுக்கிடும்.உங்க
மது வேற பூ மனசுக்காரர்!மனசு
கேட்காம மயூ கிட்ட மது சோக
கீதம் வாசிச்சுட்டு இருக்கான்னு
சொல்லிட்டேன் கார்த்தி”

“காயத்தையும் ஏற்படுத்திட்டு,
மருந்தும் போடறே?ஏன்ணா”

தம்பியின் கேள்வியில் வாய் விட்டுச்
சிரித்தான் வருணன்.

"நீ லவ் பண்றயானே எனக்கு
டவுட்டா இருக்கு கார்த்தி கண்ணா"

கார்த்திகேயன் பார்வை உஷ்ணமானது.

“சிரிக்காதே வருண்.மயூ
ஏற்கனவே அமைதி இல்லாமத்
தவிக்கிறா.உன் கோபத்தை
நினைச்சு பயப் படறா.மதுவை
நினைச்சுக் கவலைப் படறா.
அவளுக்குப் பிரஷர் அதிகமா
இருக்கு.முறைக்காதே.எனக்கே
லன்ச்சுக்குப் போயிருந்தப்ப
தான் தெரிஞ்சுது.அடிக்கடி
தலை சுத்தற மாதிரி
இருக்குன்னு சொன்னா.பிரஷர்
செக் பண்ணிப் பார்த்தேன்.
என்னால நம்பவே முடியலை.
ரொம்ப அதிகமாயிருக்கு”

“அப்பவே என்னைக் கூப்பிட்டு
சொல்ல வேண்டியது தானே”
சிரிப்பைக் கை விட்டுப்
பதட்டமானான் வருணன்.

“சொன்னா..உனக்கு இன்னும்
கோபம் வரும்.நைட் பொறுமையா
சொல்லிக்கலாம்னு சொல்லலை”

கடவுளே!நான் ஒன்று நினைத்தால்...
இவள் ஏன் தான் இப்படி
இவன் மீது பித்தாக
இருக்கிறாளோ?

“மயூவுக்குப் போன் பண்ணி
எங்கிருக்கான்னு கேளு”

“இங்க வர்றதுக்கு முன்னாடியே,
நிறைய தடவை பண்ணிட்டேன்.
ரிங் போகுது.எடுக்க மாட்டீங்கறா”

“மதுவுக்குப் பண்ணு”

“உன்கிட்ட நம்பர் இருக்கா”

“சொல்றேன்.பண்ணு”

அண்ணனை வியப்புடன் பார்த்தபடியே
எண்ணை அழுத்தி விட்டு ஒரு
படபடப்புடன் காதில் வைத்தான்
கார்த்திகேயன்.

“எடுக்க மாட்டீங்கறார் வருண்”

“ட்ரை பண்ணு”

இம்முறை மதுரகீதன் குரல்
காதில் கேட்டதும்,பேசத்
திணறினான் கார்த்திகேயன்.

“ஹலோ”

“மதூ...”

“கார்த்தி தானே”

“ஆமாம் மது”

“எப்படி இருக்கே கார்த்தி”

“நல்லா இருக்கேன் மது.மயூ...”

“இங்க தான் இருக்கா”

“அவளுக்குக் கொஞ்சம் உடம்பு
சரியில்லை.நீங்களே அவளை
வீட்டில கொண்டு வந்து
விட்டுடுங்க மது”

“சரி கார்த்தி.பை”

போனை சட்டைப்பையில் வைத்து
விட்டு அண்ணன் முகத்தைக்
கவலையுடன் பார்த்தான்
கார்த்திகேயன்.

மனதோரம் முணுமுணுத்த
வலியை மறைத்துப் புன்னகைத்து,
தம்பிக்கு உற்சாகம் அளித்தான்
வருணன்.

நெடுங்காலங் கழித்து இணைந்திருக்கும்
காதலர்களுக்கு இடையூறு
விளைவிக்கக் கூடாது என
சங்கல்பம் செய்தது போல்
காற்றும் அவர்களை விட்டுத்
தள்ளி நின்றிருந்தது.

தங்கள் தலைவி வந்து விட்டாள்
எனப் புரிந்தது போல அக்காதல்
மாளிகையில் சந்தோஷ அலைகள்
பரவி இருந்தது.

அணைத்துக் கொண்ட இருவருக்கும்
விலகும் எண்ணமே இல்லை
என்பதை மெய்ப்பிப்பது போல
தழுவிக் கொண்ட அவர்களின்
அணைப்பு நிமிடங்கள் பல கடந்த
பின்னும் தொடர்ந்தது.

கார்த்திகேயன் அழைத்த பின்பே,
இருவரும் திடுக்கிட்டு விலகினர்.

கார்த்திகேயன் சொன்னதைக் கேட்டு
மதுரகீதன் மனதின் பாரம் மேலும்
கூடியது.

“உனக்கு உடம்பு சரியில்லையா
மயூம்மா?ஏன்டா என்கிட்ட
சொல்லலை”

“எனக்கு ஒண்ணும் இல்லை மது.
கார்த்தி சின்ன விஷயத்தைப்
பெரிசு பண்ணுவான்”

அவள் நெற்றியில் கை வைத்துப்
பார்த்தான் மதுரகீதன்.

“பீவர் எல்லாம் இல்லை மது.
பிரஷர் கொஞ்சம் அதிகமாயிருக்கு.
அவ்வளவு தான்”

கடவுளே!இந்த வயதில் என்
மயூவிற்கு...இந்தப் பாவி தான்
இதற்கெல்லாம் காரணம்!

அழைப்புமணி ஒலிக்கத் தொடங்க,
அவளை விட்டு முழுவதுமாக
விலகி நின்றான் மதுரகீதன்.

“நான் யாருன்னு பார்க்கறேன்
மயூ.நீ இங்கயே இரு”

மயூரிகா தலையசைக்க,
யோசனையுடன் முன்னறைக்கு
விரைந்தான் மதுரகீதன்.

யாராக இருக்கும்?நான் மயூவை
அனுப்பியிருக்க வேண்டும்.மயூவை
இங்கு எவரேனும் கண்டு விட்டால்
நன்றாக இருக்காது.

முன்னறைக்குச் சென்ற மதுரகீதன்,
திறந்திருந்த கதவருகே நின்றிருந்த
கந்தவேலைக் கண்டான்.அவன்
மன பாரம் குறைந்தது.

“உள்ள வாங்க மாமா”

தயங்கியபடியே உள்ளே வந்த
கந்தவேலைக் கேள்வியாகப்
பார்த்தான் மதுரகீதன்.

“வெளியில கார் நிற்குதே!உன்
பிரெண்ட்ஸ் யாராவது
வந்திருக்காங்களா?நான் அப்புறம்
வரட்டுமா”

கடவுளே!மயூவின் காரை மறந்து
விட்டேனே.அவள் காரை
தெரிந்தவர்கள் பார்த்து விட்டால்...
இருட்டாகி விட்டதே!

“மயூ தான் மாமா வந்திருக்கா.
என்னை ரோட்டில பார்த்துட்டு
வீட்டில விடறேன்னு சொன்னா
மாமா.கிளம்பிட்டா...நான்
சாப்பிட்டிருக்க மாட்டேன்னு
டிபன் வாங்கிட்டு வந்தா.இப்பக்
கிளம்பிடுவா.நீங்க உட்காருங்க.
நான் மயூவை வீட்டில விட்டுட்டு
வந்துடறேன்”

“சரிப்பா”

சமையலறைக்கு மதுரகீதன்
செல்கையில்,கை கழுவிக்
கொண்டிருந்தாள் மயூரிகா.

“போட்டு வைச்சுட்டேன் மது.
நான் கிளம்பட்டுமா”

“மாமா வந்திருக்கார் மயூ”

“கேட்டுச்சு மது”

“போகலாம் மயூ”

மயூரிகாவைக் கண்டதும் கந்தவேல்
எழ,“ஐயோ!உட்காருங்க”எனப்
பதறினாள் மயூரிகா.

“பரவாயில்லைம்மா.மதுவுக்கு
நீ தான்மா உலகமே.சீக்கிரமே
அவனைக் கல்யாணம் பண்ணிட்டு,
அவனுக்கு நிம்மதியைக் கொடும்மா.
அவனுக்கு எல்லாமுமா இருந்து
நீ தான் அவனைப்
பார்த்துக்கணும்மா.அவன்
சந்தோஷமா வாழ்றதை நான்
பார்க்கணும்மா”அவன் கண்களில்
நீர் திரையிட்டது.

கந்தவேலின் பேச்சை மதுரகீதன்,
மயூரிகா இருவருமே
எதிர்பார்க்கவில்லை!

செய்கிறேன் என சொல்லவும்
முடியாமல்,செய்ய மாட்டேன்
என மறுக்கவும் முடியாமல்
தடுமாறினாள் மயூரிகா.

“இருட்டாயிடுச்சு மாமா.வீட்டில
விட்டுட்டு வந்துடறேன்”என
மதுரகீதன் இடையிட,“வர்றேங்க”
எனக் கைகூப்பி விடை பெற்றாள்
மயூரிகா.

கார் வரை மௌனமாகவே
சென்றனர் இருவரும்.அதன்
பின்னும் மௌனம் மட்டுமே!

மயூரிகா வீடு வந்ததும்,
“உடம்பைப் பார்த்துக்கோ மயூ”
என்றான்.

“ம்.போயிடாதீங்க.நான் டிரைவர்
அண்ணாவை அனுப்பறேன்”

“சரிடா”

இறங்காமல் தன்னையே பார்ப்பவளின்
முகத்தையே தானும் பார்த்தான்
மதுரகீதன்.

என் வேதனை கண்டு அரவணைக்கும்
உன் அன்பிற்கு இந்த அகிலமும்
ஈடாகாது மயூ!அதுவும் நான்
உன் மனதை உடைத்துச் சென்ற
பின்பும் எனை ஓடி வந்து
தாங்கும் உன் அன்பு கிடைக்க
நான் செய்த தவம் தான் என்ன?

தன்னையும் மீறி அவள் நெற்றியில்
மிருதுவாக முத்தமிட்டான் மதுரகீதன்.

“எனக்கு ஒண்ணும் இல்லைடா.
நான் சரியாயிடுவேன்.நீ
என்னையே நினைச்சு உன்னைக்
கஷ்டப் படுத்திக்காதே”

சரியெனத் தலையசைத்து விட்டு
இறங்கியவளை வலியுடன்
தொடர்ந்தது மதுரகீதனின் பார்வை.

தனது ஓட்டுனருடன் மதுரகீதனை
அனுப்பி விட்டு,வீட்டினுள்
சென்றவளை பூமணி எதிர்
கொள்ள,தாத்தா பாட்டி இன்னும்
வீடு திரும்பவில்லை என்பதில்
நிம்மதியுடன் அறைக்குச் சென்றாள்
மயூரிகா.

நேராகச் சென்று தன் படுக்கையில்
அமர்ந்து தலையணை ஒன்றை
எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.

மதுவிடம் எதுவும் பேச
முடியவில்லை.இருட்டிய பிறகு
நான் தாமதிக்க முடியாது.மதுவும்
அதை விரும்ப மாட்டான்.

மதுவை அப்படி ஒரு நிலையில்
காண்பேன் என நான் நினைத்ததே
இல்லை!

எது அவனை இப்படி உடைத்துப்
போட்டது?நன்றாக அழுதிருப்பதை
முகம் சொன்னதே!

அப்படிக் கண்ணீர் விடுமளவிற்கு
என்ன நடந்தது?

வருணின் வேலையா இது?
வருணால் அமைதியாக இருக்க
முடியாது.கை நீட்டும் அளவிற்குச்
செல்ல மாட்டான்.ஆனால்
அவனால் கேட்காமல் இருக்க
முடியாதே!

வருண் நிச்சயம் அந்த போட்டோஸ்,
போன்கால் பற்றிக் கேட்டிருப்பான்!

ஆனால் அதற்கு எதற்கு மது அழ
வேண்டும்?உடைந்து போக
வேண்டும்?யார் செய்த சதி
என்று கோபம் அல்லவா
கொள்ள வேண்டும்?

மயூவைத் தவிர என்
வாழ்க்கையில் யாருக்கும்
இடமில்லை என்று சொன்னால்
போதுமே!

ஒரு வேளை...வருண்
கோபத்தைக் கண்டு..நான்
வருந்துவதாக எண்ணி..நான்
அந்த போன்காலை நம்பி விட்டேன்
என நினைத்து வருந்துகிறானா?

இருக்காது இருக்காது.நம்பி
இருந்தால் என் அறைக்கு வந்த
போது கோபம் கொண்டிருப்பேன்
என நினைத்திருப்பான்.

அத்தோடு எந்நிலையிலும் அவன்
நேசம் எனக்கு மட்டும் தான்
என்பதை நானறிவேன் என மது
நன்கு அறிவான்.

என்னாலா என்று கேட்டதற்கு
இல்லை என்றானே!

வருண் புயல் போல் சென்றான்.
அப்புயலே என் மதுவைப்
புரட்டிப் போட்டிருக்கிறது!
ஆனால் எவ்வாறு?

"இதுக்கெல்லாம் இப்பவே ஒரு
முடிவு கட்டறேன்"

வருணன் வார்த்தைகள் அவள்
காதில் எதிரொலிக்க,உண்மை
புரிபடத் தொடங்கியது.

கடவுளே!என் வேண்டுதல்
பொய்த்து,என் யூகம்
உண்மையாகி விட்டதா?

நான்கு வருடத்திற்கு முன்பான
கதையை வருண் அறிவானே!
அப்போது வருண் கோபம்
கொண்டு சென்றது மது
அக்காவின் மீது!

மது வீட்டிற்கே சென்றிருக்கிறான்
என்றால்,வருண் அவர்கள்
சூழ்ச்சியை அறிந்திருக்க
வேண்டும்!அதுவும் ஐயமின்றி!
வெறும் யூகத்தைக் கொண்டு
நிச்சயம் வருண் செயல்பட
மாட்டான்!எப்படி அறிந்தான்?

ஐயோ!வருண் மதுவிடம் சொல்லி
இருக்க வேண்டும்!

அன்பு நிறைந்த அந்த நெஞ்சம்
எங்ஙனம் சூழ்ச்சியின் வலியைத்
தாங்கும்?துரோகத்தின் சுவடு
பதிந்த அவன் மென்மை
இதயத்தின் வலியை எங்ஙனம்
போக்குவேன் நான்?

தன் அக்காவின் அன்பைப்
பற்றி மகிழ்ச்சி பொங்கப் பேசும்
மதுரகீதன் முகம் அவள்
நினைவில் எழுந்தது.

தாயன்பு என என் மதுரன்
சிலாகித்த அந்த அன்பு பொய்த்துப்
போனதே என் மதுரனை
நிலைகுலையச் செய்திருக்கிறது!

ஆம்!அப்படித் தான் இருக்க
வேண்டும்!

மதுவின் மாமா...அவர்
முகத்தில் இருந்த சோகம்...
அவர் வார்த்தைகளில் தெரிந்த
வலி...தன் மனைவியின்
சதியை அறிந்ததால் ஏற்பட்டதே!

நான் மதுவை வெறுக்கவா
இத்தகைய நாடகம்?

என்னை நானே வெறுக்க முடியுமா?

என் மதுரனை செந்நீர் வடிக்கத்
செய்த உங்களை ஒரு போதும்
நான் மன்னிக்க மாட்டேன்!

மயூரிகா விழிகளில் தேங்கிய
நீர்த் துளிகள் அவள் கன்னத்தில்
உருண்டது.

தன்னவன் துரோகத்தில்
துவண்டதை விட,தன்னை
எண்ணியே கண்ணீர் சிந்துகிறான்,
தனக்கு இழைத்த அநீதியை
எண்ணியே துன்புறுகிறான் எனத்
தெரியாமல் தவிக்கிறாள் மயூரிகா!

கண்ணாளா!
இமையாய் உனைக்
காத்திருப்பேன்!
உனை நீங்காது
பார்த்திருப்பேன்!
எனதன்பு கொண்டே
அரண் அமைப்பேன்!
பூவும் உனைத் தீண்ட
தடை விதிப்பேன்!
கண்ணீர் நீ கொண்டால்
காதல் வாள் வீசுவேன்!
என் நெஞ்சில்
உனை நான் தாங்குவேன்!

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18076

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம்:)

கடந்த பகுதிக்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப் பகிர்ந்து

கொண்ட தோழமைகளுக்கு எனது

அன்பான நன்றிகள்:):love:

இந்தப் பதிவு உங்களைக்

கவர்ந்ததா என்று வாசித்து

உங்கள் கருத்தைப் பகிர்ந்து

கொள்ளுங்கள்.நன்றி:)

அடுத்த பதிவு வியாழனன்று.

ப்ரியமுடன்,
நித்திலா

18077

தோட்டத்தில் போடப் பட்டிருந்த
நான்கு பிரம்புக் கூடையில்,
ஒன்றில் அமர்ந்து தொலைவில்
தெரிந்த நிலவை வெறித்துக்
கொண்டிருந்தாள் மயூரிகா.

அங்கிருந்த புல் தரையில்,
கைகளைக் கோர்த்து அதில்
தலை வைத்துப் படுத்திருந்தான்
கார்த்திகேயன்.

“மறுபடியும் தலை சுத்துச்சா”

“இல்லை கார்த்தி”

“பொய் சொல்லக் கூடாது”

“ம்”

“மது கிட்டப் பேசினயா”

“நான் மதுவை அவர் வீட்டில
விட்டேன்.அவர் என்னைத்
திரும்பக் கொண்டு வந்து
விட்டுட்டுப் போயிட்டார்.எதுவும்
பேசலை.லேட் ஆயிடுச்சே.
எதுவும் பேச முடியலை”

“ம்”

“குழந்தைக ரெண்டும் ஏன்
பால் குடிக்காம ஓடி வந்துடுச்சுக”

இருவரிடமும் தான் டிரேயில்
வைத்து எடுத்து வந்த பால்
டம்ளரைக் கொடுத்தான் வருணன்.

“தாத்தாவும்,பாட்டியும் படுத்துட்டாங்களா”

“படுத்துட்டாங்க மயூ.முதல்
பாலைக் குடி.இனிமேல் ஒழுங்கா
சாப்பிடலைன்னா அத்தைக்
கிட்டப் போட்டுக் கொடுத்துடுவேன்”

“அம்மா கிட்ட எதாவது சொன்னே...
அடி வாங்குவே.எனக்குப் பால்
வேண்டாம் வருண்.நீ குடி”

பிரம்பு டீப்பாய் மீது டிரேயை
வைத்து விட்டு,மயூரிகா
அருகிலிருந்த சேரில் அமர்ந்தான்
வருணன்.

“என் மேல இருக்கிற கோபத்தை
எதுக்கு சாப்பாட்டில காட்டிட்டு
இருக்கே மயூ"

"எனக்குப் பசியில்லை வருண்"

"எதுக்கு இப்ப என்கிட்ட முகத்தைத்
தூக்கி வைச்சுட்டு இருக்கே மயூ"

"ஏன்னு உனக்குத் தெரியாதா"

வருணன் அவள் தோளில் கை
வைக்க,அவன் கையைப் பற்றி
விலக்கினாள் மயூரிகா.

“நீ என்னைப் புரிஞ்சுக்கிட்டது
இவ்வளவு தானா?மதுவைப் பத்தி
எனக்குத் தெரியாதா?இல்லை...
மது தான் உன்னோட உயிருன்னு
எனக்குத் தெரியாதா?நான் எப்படி
அவனைக் காயப் படுத்துவேன்?
நான் என்ன செஞ்சாலும் உன்
நல்லதுக்காக மட்டும் தான்
செய்வேன்.இதை நீ நல்லா
உன் மனசுல பதிய வைச்சுக்கோ.
மனசை அமைதியா வை.
அநாவசியமா யோசிக்காதே.
எல்லாம் நல்லதா நடக்கும்”

"காயப் படுத்தி இருக்கியே வருண்!
நான்...நீ கோபத்துல மதுவை
அடிச்சுடுவியோன்னு பயந்தேன்.
ஆனா...நீ அவர் இதயத்தையே
உடைச்சுட்டே"

"மது என்ன சொன்னான்"

"அவர் எதுவும் சொல்லலை.நானா
புரிஞ்சுக்கிட்டேன்.மதுவோட அக்கா
போட்டோஸ்,போன்கால் அளவுக்குப்
போக மாட்டாங்க.வேற யாராவதா
இருக்கும்னு முதல்ல நினைச்சேன்.
ஆனா அந்த கனடா போறதுக்கு
முன்னாடியே என்கேஜ்மென்ட்
நடந்ததா சொன்னது மதுவோட
அக்கா தான்னு நினைக்க சொல்லுச்சு.
ஆனாலும் என்னால நம்ப முடியலை.
மதுவைப் பக்கத்துலயே வைச்சுட்டு
அவங்கனால சூழ்ச்சி பண்ண
முடியாதேன்னு நினைச்சேன்.
மாட்டிக்குவோம்னு பயந்துக்குவாங்கன்னு
நினைச்சேன்.மதுவுக்கு வேண்டாதவங்க
யாராவது இருப்பாங்களோ...மது
கிட்டயே கேட்கலாம்னு தான்
கிளம்பிட்டு இருந்தேன்.என்
மது அப்படி உடைஞ்சு போயிருக்கார்.
உனக்குக் கிண்டலா இருக்கா"

எழுந்து வருணன் முதுகில்
நான்கு அடி வைத்தாள் மயூரிகா.

"தெய்வமே!தெய்வமே!
என்னைக் காப்பாற்று தெய்வமே!"

"மறுபடியும் பாடறயா நீ"அவனை
முறைத்துக் கொண்டே அமர்ந்தாள்
மயூரிகா.

"நம்ம மதுவுக்கு விசிறிகள் தான்
அதிகம் மயூ.வேண்டாதவங்க
யாரும் இருக்க மாட்டாங்க"
கார்த்திகேயன் இடையிட.

"மது புகழைப் பாடாம உன்னால
இருக்க முடியாதே"

"என்ன செய்யறது?அவர் பிரென்ச்
கிளாஸ் எடுத்த அழகு இருக்கே!
அப்ப இருந்தே நான் அவர் பேன்
ஆயிட்டேன்.உனக்கு ஞாபகம்
இருக்கா மயூ"

"இருக்கு கார்த்தி"அத்தனை
நேரம் இருந்த வாட்டம் போய்
மயூரிகா முகம் புன்னகை கொண்டது.

"நீங்க டைம் மிஷனை அப்புறம்
ஓட்டுங்க.முதல் இப்ப நடக்கிறப்
பிரச்சனையைப் பாருங்க"வருணன்
அதட்டலில் பழைய நினைவுகளை
விட்டு விட்டுத் தன் கேள்விக்கு
வந்தாள் மயூரிகா.

“உனக்கு எப்படி மதுவோட அக்கா
தான்னு தெரிஞ்சுது வருண்”

“மது கனடா போனதுல இருந்து,
நான் மது வீட்டைக் கண்காணிச்சுட்டு
இருக்கேன் மயூ”

மயூரிகாவும்,கார்த்திகேயனும்
வியப்பால் கண்களை விரித்தனர்.

"என்ன!!ஏன் வருண்?"

“மது உன் கிட்ட சொல்லாம
அவ்வளவு தூரம்,அவ்வளவு
காலம் போனது நம்பற மாதிரி
இல்லை மயூ.அதுவும் அப்படியே
திடீர்னு மாயமா மறைஞ்சு
போனான்.அவன் உன் மேல
பைத்தியமா இருந்தான்.அவன்
எப்படி உன்னைக் கஷ்டப்
படுத்துவான்?அவன் குணத்துக்கு
அவன் பொய் சொன்னது,
சொல்லாமப் போனது எதுவுமே
பொருந்தலை.அவன் ஏன் அப்படி
நடந்துக்கிட்டான்னு தெரிஞ்சுக்கணும்னு
நினைச்சேன்.மதுவோட அக்கா
அவன் என்கேஜ்மென்ட் பத்திப்
பேசிட்டு இருந்ததைக் கேட்டதா
சொன்னயே!அப்ப இருந்து தான்
மனசுக்குள்ள ஒரு நெருடல்”

அந்தக் கொடிய நாள் அவள்
நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது.

“எங்கம்மாவும்,அப்பாவுமே
பொண்ணைப் பார்த்துப் பேசி
முடிச்சுட்டாங்க.மதுவை வர
சொல்லி நிச்சயம் பண்ணிட்டோம்.
கல்யாணம் மது கனடாவில இருந்து
வந்ததுக்கு அப்புறம் தான்.என்
தம்பி அம்மா பேச்சைத் தட்ட
மாட்டான்.அதான் நாங்களே போய்
பொண்ணு பார்த்துட்டு வந்துட்டோம்.
என் தம்பி மாதிரி ஒரு பையனை
இந்தக் காலத்துல பார்க்கவே முடியாது”

யாரிடமோ பெருமையும்,பூரிப்புமாக
பேசிக் கொண்டிருந்த வசந்தியின்
குரல் மயூரிகா இதயத்தில்
ஈட்டியைப் பாய்ச்சியது.

அந்நாளின் நினைவில் அவள்
கண்களில் தேங்கிய கண்ணீர் அவள்
கன்னத்தில் இறங்கியது.

“மயூ...”பதறியவனாய் அவள்
கண்ணீரைத் துடைத்தான் வருணன்.

“அதெல்லாம் பொய்.அதை எதுக்கு
நினைக்கறே?உன்னோட மது எப்பவும்
உன்னோட மது மட்டும் தான்.
உனக்குத் தெரியும் தானே”

“ம்”

“என்ன சொல்லிட்டு இருந்தேன்?
நெருடல்னு சொல்லிட்டு இருந்தனா?
மது உன்னை அவ்வளவு நேசிச்சுட்டு,
திடீர்னு இன்னொரு பொண்ணு கூட
நிச்சயதார்த்தம்கிறது என்னால
சுத்தமா நம்ப முடியலை.ஒரு
வேளை சூழ்நிலை அவனை
அப்படி ஒரு முடிவுக்குத் தள்ளி
இருந்தா...அவன் தன்னோட
நிலைமையை உன் கிட்ட சொல்லி
இருப்பான் மயூ.உன் கிட்ட
மன்னிப்புக் கேட்டு அவனை
மறந்துட சொல்லி இருப்பான்.
உன் முகத்தைப் பார்த்து அவனால
சொல்ல முடியலைனாலும்
என் கிட்டயோ,கார்த்தி கிட்டயோ
கண்டிப்பா சொல்லி இருப்பான்”

“..........”

“இது எதுவுமே நடக்காம மது
மாயமா மறைஞ்சு போனதை
என்னால ஏத்துக்க முடியலை மயூ.
மது அக்கா பேசினதை நீ கேட்டது
தற்செயலானதா இல்லை நீ
கேட்கணும்னே பேசுனாங்களாங்கிற
சந்தேகமும் எனக்கு இருந்துட்டே
இருந்துச்சு மயூ”

“..........”

"ஆனா..மதுவோட பிரெண்ட்
மது கனடாவுல இருந்து வந்ததும்
கல்யாணம்னு மதுவே சொன்னதா
சொன்னப்ப...மதுவோட அக்கா
உண்மையை தான் சொல்றாங்களோன்னு
நான் குழம்ப ஆரம்பிச்சேன்.நீ
அவனை வெறுத்துடனும்,
மறந்துடனும்னு பொய் சொன்னானா,
சொல்லாமப் போயிட்டானோன்னு
எல்லாம் தோணுச்சு"

"எப்படி உன் குழப்பம் தீர்ந்துச்சு வருண்"

"மது ஏன் அப்படி சொல்லாமப்
போனான்னு ஒரு காரணம் சொல்லி
எப்பவும் மதுவுக்கு சப்போர்ட்
பண்ணுவியே.அது சரியா
இருக்குமோன்னு யோசிக்க
ஆரம்பிச்சேன்.மதுவோட குணத்துக்கும்,
அவன் உன் மேல வைச்சிருக்கிற
காதலுக்கும் அந்தக் காரணம்
பொருந்துச்சு.நான் மதுவோட
காதலை நம்பினேன்.நீ அவன் மேல
வைச்சிருந்த நம்பிக்கையை
நம்பினேன்.ஆனா மது ஏன் அவன்
இயல்புக்கு மாறா நடந்துக்கிட்டான்கிற
கேள்விக்கும்,அந்த என்கேஜ்மென்ட்
கதைக்கும் பதில் தெரிஞ்சுக்கணும்னு
நினைச்சேன்"

“நான் மதுவோட அக்காவைப்
பாலோ பண்ண சொன்னேன்.
கண்டபடி செலவு பண்றாங்கன்னு
மட்டும் தான் சொன்னாங்க.
வேற எதுவும் தெரியலை.
இருந்தாலும் பாலோ பண்ண
சொன்னேன்.மது வரப் போறான்கிற
பதட்டத்துல அவங்க பேசினதைக்
கேட்டதுக்கு அப்புறம் தான் என்
சந்தேகம் தப்பில்லைன்னு
தெரிஞ்சுக்கிட்டேன்”

“மது அவர் அக்காவைப் பத்தி
ரொம்ப உயர்வா பேசுவார்.அவர்
மேல ரொம்ப அன்பா இருக்கிறதா...
அம்மா மாதிரின்னு சொல்லுவார்”

மதுரகீதனை எண்ணி அவள்
உள்ளம் வேதனை கொண்டது.

போட்டோ,போன்கால் எல்லாம்
அவரால் முடியாது.வேறு
யாரோ என்று நினைத்தேனே!
இவ்வளவுக்கு இறங்குவார்கள்
என்று நான் நினைக்கவில்லை!

“ஆசைக்கு அன்பு,பாசமெல்லாம்
தெரியாது மயூ”

“அப்ப சொன்ன என்கேஜ்மென்ட்
கதையை டெவலப் பண்ணி
எங்களைப் பிரிக்க முயற்சி
பண்ணி இருக்காங்க”

வருணன் மற்றும் கார்த்திகேயனின்
மௌனம் அவளுக்கு உண்மையைச்
சொல்லியது.

"அபிநயா யார் வருண்.மது
சொல்றதை வைச்சுப் பார்த்தா...
அவங்க நல்லவங்க மாதிரி தான்
தெரியுது.என் கிட்டப் பேசினது
அவங்க தானா...இல்லை...
அவங்க பேர்ல வேற யாராவதா?
அவங்களே பேசி இருந்தா...ஏன் அப்படிப்
பேசணும்?அதை எதுக்கு மது கிட்ட
சொல்லணும்?ஏன் என் மதுவை
வேதனைப் படுத்தணும்"

"உன் மதுவுக்கு எல்லாருமே
நல்லவங்க தான்"என
முணுமுணுத்தான் வருணன்.

"என்ன..."

"சொல்றேன்னு சொன்னேன்.
மது அக்காவுக்குப் பழக்கமான
குடும்பத்துப் பொண்ணு தான்
அபிநயா.நல்ல பொண்ணு தான்.
எனக்கு என்ன தோணுதுனா..
மது அக்கா எதாவது எமோஷனலா
பேசி அந்தப் பொண்ணைப் பேச
வைச்சிருக்கலாம்.அது அப்பாவிப்
பொண்ணு தானே,இவங்க
சூழ்ச்சி தெரியாமப் பேசி இருக்கும்.
அவங்க மது கிட்ட சொல்ல
சொல்லி இருப்பாங்க.இதுவும்
அப்படியே சொல்லி இருக்கும்.
அந்தப் பொண்ணு மேல உனக்குக்
கோபம் இருக்காதுன்னு நினைக்கிறேன்"

"இல்லை வருண்.தம்பிக்கு எதிரா
சூழ்ச்சி செய்வாங்கன்னு அந்தப்
பொண்ணு நினைச்சிருக்குமா?
நல்லது நினைச்சு பண்ணி இருக்கும்"

"நான் பேசிட்டு இருக்கிறது மது
கிட்டயா,மயூ கிட்டயான்னு எனக்கு
டவுட் வருது மயூ"

"மது வேற,மயூ வேறயா"

"ஆரம்பிச்சுட்டாங்கப்பா"என்று
கார்த்திகேயன் சிரிக்க,வருணனும்
அவனுடன் சேர்ந்து சிரித்தான்.

சில நிமிடங்கள் மௌனமாகக்
கழிந்தது.

"மது வீட்டுக்கு அவங்க சதியை
சொல்ல தான் போனயா?மது
எப்படி நம்பினார்?அவங்க
வீட்டில எப்படி நம்பினாங்க"

"......"

"சொல்லு வருண்"

“இந்த வீடியோவைப் பாரு”

தன் கைபேசியை எடுத்து வசந்தியின்
காணொளியைக் காட்டினான் வருணன்.

வருணன் காட்டிய காணொளியைப்
பார்த்த மயூரிகா முகத்தில்
உணர்வுகள் மாறி மாறி வந்து
போனது.

“இதை மது கிட்டக் காட்டினயா
வருண்?நீ தப்புப் பண்ணிட்டே!
நீ முதல் என் கிட்டக் காட்டி
இருக்கணும்.நான் மதுவைப்
பார்த்துக்குவேன்.யாரும் அவரை
ஏமாத்தாமப் பார்த்துக்குவேன்.
மதுவுக்கு அவங்க துரோகம்
தெரிஞ்சிருக்கக் கூடாது வருண்.
மது பாவம் வருண்”

"இல்லை மயூ.நான்.."

“அப்படி அவங்க சுயநலமா
பேசற வீடியோவை நீ காட்டி
இருக்கக் கூடாது.என் மதுவை
நான் அப்படிப் பார்த்ததே
இல்லை.தெரியுமா?அவங்க
சூழ்ச்சியைத் தடுக்க நம்மால
முடியாதா”

“என்ன பேசறே மயூ”வருணன்
குரல் உயர,அவன் கையைப்
பிடித்துப் பார்வையாலேயே
இறைஞ்சினான் கார்த்திகேயன்.

“என்னைக் காதலிச்சனால தான்
மதுவுக்கு இன்னைக்கு இவ்வளவு
வேதனை.அவர் அக்காவுக்கு
ஏனோ என்னைப் பிடிக்கலை.
அதான் அ...”

“மயூ!!மதுவோட அக்காவுக்கு
உன்னை மட்டும் இல்லை.
யாரையுமே பிடிக்காது.உளறாதே”

"......"

"நான் போய் அவன் அக்காவைப்
பத்தி சொன்னா உடனே அவன்
நம்பிடுவானா?அவங்க வீட்டில
தான் நம்புவாங்களா?எடுத்து
சொல்லுவோம் வேற வழியில்லைனா
வீடியோவைக் காட்டுவோம்னு
தான் நானும் நினைச்சேன்.
ஆனா அவன் என்னடானா
அக்கா நல்லது தான் செய்வாங்கன்னு
குழந்தை மாதிரி சொல்லிட்டு
இருக்கான்.வேற வழியில்லாம
வீடியோவைக் காட்ட வேண்டியதா
போச்சு"

"நீயும்,மதுவும் கல்யாணம்
பண்ணிக்கணும்.இனிமேல் உங்க
வாழ்க்கையில குழப்பம் பண்ற
எண்ணமே அவங்களுக்கு வரக்
கூடாதுன்னு தான் மதுவுக்கும்,
அவன் குடும்பத்துக்கும்
உண்மையைத் தெரிய வைச்சேன்.
மதுவோட அக்கா இனி எந்த
சூழ்ச்சியும் செய்யாம அவங்க
குடும்பமே பார்த்துக்கும்”

வருணன் அமைதியாகி விட,
எழுந்து அவளருகில் நின்று தோளில்
கை வைத்தான் கார்த்திகேயன்.

“முதல்ல அதிர்ச்சியா தான்
இருக்கும்.வலிக்கத் தான் செய்யும்.
ஆனா மது சீக்கிரமே அதுல
இருந்து வெளியில வந்துடுவார்
மயூ.உன் மது மேல உனக்கு
நம்பிக்கை இல்லையா”

“இருக்கு”

“அப்ப இப்படிக் கவலைப்
படறதை விட்டுட்டு அமைதியா
இரு.இப்ப எந்திரி லேட்டாகுது.
போய் நல்லா தூங்கு.
உடம்பைக் கெடுத்துக்காதே”

சரியெனத் தலை அசைத்து
விட்டுச் சென்றவளையே பார்த்துக்
கொண்டிருந்தனர் வருணனும்,
கார்த்திகேயனும்.

“இவ ஏன்டா இப்படி இருக்கா?
மதுவோட அக்காவைப் பத்தி
சொல்லாம என்ன பண்றது”

“மதுவோட வலி மட்டும் தான்
அவளுக்குத் தெரியுதுண்ணா.
நிதானமா யோசிச்சா புரிஞ்சுக்குவா”

“ம்”

“அந்தப் போன்கால்,போட்டோஸ்
குழப்பத்தில இருந்தா.அது
தீர்ந்ததும்,மதுவை நினைச்சுக்
கவலைப் பட ஆரம்பிச்சுட்டா.
எப்ப தான் மயூவை சந்தோஷமா
பார்ப்போம்னு இருக்குண்ணா”

“நாலு நாள் தான் கார்த்தி.
அப்புறம் மது,மயூ கல்யாணம்
பிக்ஸ் ஆயிடும்"

“அண்ணா!!"என வியந்து விட்டு,
"அசத்தறே போ.நீ எதுக்கு அந்த
வீடியோவை உடனே காட்டினே?
அவளுக்குப் பிரஷர் எகிறப் போகுது”

“அவங்களோட உண்மையான
முகத்தை மயூ தெரிஞ்சுக்கிறது
நல்லது தான் கார்த்தி.எதிர்காலத்துல
எச்சரிக்கையா இருப்பா”

“மயூ தெரிஞ்சுக்கிறது நல்லது
தான்ணா.இன்னைக்கே சொல்லி
இருக்க வேண்டாம்னு நினைச்சேன்.
சரி பரவாயில்லை”

“நான் கொஞ்சம் உஷாரா
இருந்திருந்தா...மயூவுக்கு இந்த
வேதனை எல்லாம் இல்லை”

“அண்ணா நீ உடைஞ்சு போயிடாதே.
எங்களை நீ தானே பார்த்துக்கணும்”

“ம்.வா போகலாம்”

வருணன் தம்பியின் தோள்
மீது கை போட்டுக் கொள்ள,
வீட்டினுள் ஒன்றாகச் சென்றனர்
இருவரும்.

வராமல் அடம் பிடிக்கும்
உறக்கத்தை அழைக்காமல்
தலையணை ஒன்றை மடியில்
வைத்து சாய்ந்து அமர்ந்திருந்தாள்
மயூரிகா.

அவள் கைபேசி ஒலி எழுப்ப,
புது எண் என்பதால் எடுப்பதா
வேண்டாமா என யோசித்துக்
கொண்டே எடுத்துக் காதில்
வைத்தாள் மயூரிகா.

“ஹலோ”

“மயூ...”

“மதூ...”

வெகு காலத்திற்குப் பிறகு
கைபேசியில் தன்னவன் குரல்
கேட்டு அவள் விழிகள் கலங்கியது.

“எப்படி இருக்கே மயூ?சாப்பிட்டியா”

“நல்லா இருக்கேன் மது.
சாப்பிட்டேன்.நீங்க சாப்பிட்டீங்களா”

“சாப்பிட்டேன்டா”

அதன் பின் என்ன பேசுவது
என அறியாவதவர்கள் போல
இருவரும் மௌனம் சாதித்தனர்.

“மயூ”

“ம்”

“ரொம்ப யோசிச்சுட்டே இருக்காதே
குட்டி.உடம்பைக் கெடுத்துக்காதே”

“சரி மது.நீங்களும் வருத்தப்
பட்டே இருக்காதீங்க.எல்லாம்
சரியாயிடும்”

“சரிடா.நீ எப்படி இருக்கேன்னு
தெரிஞ்சுக்கத் தான் கூப்பிட்டேன்.
தூங்கு குட்டி.வைச்சுடறேன்”

“சரி மது”

அத்தனை வேதனையிலும் என்
நலமறிய என்னை அழைத்திருக்கிறான்!

மதுரகீதனின் எண்ணை மதுரன்
எனப் பதிவு செய்து வைத்து
விட்டுக் கைபேசியை அருகில்
வைத்த மயூரிகா தூங்குவதற்கு
முயற்சி செய்தாள்.

தலையில் கைகளைக் கோர்த்தபடி
அறையின் இருளை வெறித்துக்
கொண்டிருந்தான் மதுரகீதன்.

இந்த நாள் இப்படி ஒரு மோசமான
நாளாக இருக்குமென்று நான்
நினைக்கவே இல்லை!

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக
எத்தனை வேதனை?

கடந்த காலத்தை மாற்ற முடிந்தால்
எத்தனை நன்றாக இருக்கும்?

அம்மாவும்,அப்பாவும் நிம்மதியாக
வாழ்ந்திருப்பார்கள்!

மாமா என்னைப் பற்றிய
கவலையின்றி இருந்திருப்பார்!

என் மயூ!என் மயூவைக் கை
பிடித்திருப்பேன்.எத்தனை அழகாக
எங்கள் நாட்கள் நகர்ந்திருக்கும்?

மயூ போன்று அழகான குழந்தை
என் கைகளில் இருந்திருக்கும்!

கடவுளே!எப்பேர்ப்பட்ட சொர்க்கத்தைக்
கை நழுவ விட்டிருக்கிறேன்!

அவன் விழியில் வடிந்த கண்ணீர்
அவன் காதைத் தொட்டது.

எந்த ஒரு காரணமும் இல்லாமல்
உனக்கு எவ்வளவு துன்பத்தைத்
தந்திருக்கிறேன்?என்னை நீ
காதலித்திருக்கக் கூடாது மயூ.
உன் வாழ்க்கையை நான்
வீணடித்து விட்டேன்.

என்னால் எத்தனை வேதனை
உனக்கு?எத்தனை நம்பிக்கையுடன்
பேசுவாய்?

உனக்காகப் பேசாமல் போனேனே!
யாருக்கும் எந்தத் துன்பமும்
இல்லாமல் போயிருக்குமே!

நம் காதலுக்கு நானே
தடையானேனே!நீ என்னை
ஏற்றுக் கொள்ள முடியாதபடி
பெரும் தவறைச் செய்து விட்டேன்
மயூ.என்னை மன்னித்து விடு!

தன் பொருட்டு மயூரிகா அனுபவித்த
வேதனையை எண்ணி எண்ணி
உள்ளம் நொந்தான் மதுரகீதன்.

தேவதைப் பெண் நீயடி!
உனைத் தொலைத்து விட்டு
தேம்பும் காதலன் நானடி!
என் பிழையை மன்னித்துத்
தலை கோதுவாயா?
எனை தண்டிக்கத்
தொலை தூர நிலவாகுவாயா?

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18299

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம்:)

கடந்த பகுதிக்கு விருப்பம் தெரிவித்த,

கருத்தைப் பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

மனமார்ந்த நன்றிகள்:):love:

இந்தப் பதிவில் இருந்து

பிளாஷ் பேக் ஒவ்வொரு காட்சி

இடம் பெறும்.

வாசித்து உங்கள் உள்ளத்தைக்

கவர்ந்ததா என்று உங்கள் கருத்தைப்

பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன்

கேட்டுக் கொள்கிறேன்.உங்கள்

கருத்துக்களே என்னை நிறைவடையச்

செய்யும் வல்லமை பெற்றதாகும்.

நன்றி:)

அடுத்த பதிவு திங்களன்று.

ப்ரியமுடன்,
நித்திலா

18300



அந்த மாலை நேரத்தில் டியூபின்
மூலமாக செடிகளுக்குத் தண்ணீர்
விட்டுக் கொண்டிருந்தாள் மயூரிகா.

மதுரகீதனிடம் இருந்து தன் மனதைத்
திருப்பும் முயற்சியாகவே இவ்வேலையை
மேற் கொண்டிருந்தாள் மயூரிகா.

“உனக்கெதுக்கு இந்த வேலை
எல்லாம்?உன் அப்பாவுக்குத் தெரிஞ்சா
என்னை தான் திட்டுவான்”

“நான் சொல்லிக்கறேன் பாட்டி.
தாத்தா என்ன பண்றார்”

“அவர் ஏதோ புக் படிச்சுட்டு
இருக்கார்.நீயும்,வருணும் சமாதானம்
ஆனீங்களா இல்லையா”

“நாங்க எப்ப சண்டைப் போட்டோம்
பாட்டி”

“இதையே தான் அவனும் கேட்டான்”

அவள் கைபேசி ஒலியெழுப்ப,தன்
குர்த்தா பாக்கெட்டில் இருந்து
கைபேசியை எடுத்துப் பார்த்தாள்
மயூரிகா.

“டியூப்பை என் கிட்டக் கொடு.நீ
போய் பேசு”

“தனு தான் பாட்டி.அப்புறம்
பேசிக்கறேன்”

“எடுத்துப் பேசு மயூ.எதாவது
முக்கியமான விஷயமா இருந்தா
என்ன பண்றது”

எதாவது புது சண்டையாக இருக்கும்.
பாட்டியிடம் அதைக் கூற முடியாது.

கைபேசியைக் காதில் வைத்து,
“சொல்லு தனு”என்றாள்.

“வீட்டில இருக்கியா?வரட்டுமா”

“வா தனு”என்றதோடு இணைப்பைத்
துண்டித்துக் கைபேசியைப் பாக்கெட்டில்
வைத்தாள் மயூரிகா.

“தன்யா வர்றாளா?நான் போய்
பூமணியை டிபன் ரெடி பண்ண
சொல்றேன் மயூ”

“சரி பாட்டி.தனு வந்ததும் உள்ள
வரேன்”

செடிகளுக்குத் தண்ணீர் விட்டபடியே
யோசிக்கலானாள் மயூரிகா.

இப்போது என்ன பிரச்சனை
செய்திருக்கிறாளோ?பாவம் கார்த்தி!
இல்லை...மூன்று நாட்களாக
என்னைப் பார்க்கவில்லை என்று
வருகிறாளா?

சில நிமிடங்களில் ஸ்ரீதரன்,
தன்யஸ்ரீயை இறக்கி விட்டு விட்டுச்
செல்ல,தோழிகள் இருவரும்
பேசியபடியே வீட்டினுள் சென்றனர்.

"ஏன் ஸ்ரீ உள்ள வராமயே போறார்"

"நான் கூப்பிட்டேன்.வேலையிருக்குன்னு
போயிட்டார்.அண்ணனைப் பார்க்க
வந்திருந்தார்.நான் கிளம்பறதைப்
பார்த்து நானே கொண்டு போய்
விடறேன்னு சொன்னார்.சரின்னு
வந்துட்டேன்"

"திரும்பிப் போகும் போது கார்ல
போ.டிரைவர் அண்ணாகிட்ட
சொல்றேன்"

"ம்"

ஏன் ஸ்ரீ என்னிடம் ஒரு வார்த்தை
கூடப் பேசாமல் சென்று விட்டார்?

கார்த்தி எதாவது சொல்லி
இருப்பானோ?ம்ஹூம்.வருண்
வேலையாக இருக்கும்.அது
தான் என் பக்கமே திரும்பாமல்
செல்கிறார்.

முன்னறையில் இருந்த குணவதியிடமும்,
மயில்வாகனனிடமும் சில நிமிடங்கள்
பேசிக் கொண்டிருந்து விட்டு,
மயூரிகாவுடன் அவள் அறைக்குச்
சென்றாள் தன்யஸ்ரீ.

“கார்த்தி கூட சண்டையா”

“இல்லை மயூ.நான் உன்னைப்
பார்க்கத் தான் வந்தேன்.ஒரு
வாரத்துக்குக் கிளாஸ்சுக்கு வர
மாட்டேன்னு வருண் சொன்னார்.
அதான் பார்த்துட்டுப் போகலாம்னு
வந்தேன்”

“ஒரே வேலை பார்த்து போரடிச்சுடுச்சு
தனு.அதான் ஒரு பிரேக்”

"நம்பிட்டேன்"

மயூரிகாவின் அறையில் ஜன்னலோரம்
போடப் பட்டிருந்த சோபா கம்
பெட்டில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

மெத்தை மேல் குவிந்திருந்த
உடைகளில் தன்யஸ்ரீயின் கவனம்
செல்ல,“அயன் பண்ணலாம்னு
தோணுச்சு.அப்புறம் மூடு
மாறிடுச்சு”என்றாள் விளக்கம் போல.

“நீங்க மூணு பேருமே சரியில்லை.
என்கிட்ட எதையுமே சொல்ல
மாட்டீங்கறீங்க”

“யார் மூணு பேரும்”

“விளையாடாதே மயூ”

“எதுக்கு இப்ப இவ்வளவு சீரியஸ்
ஆகறே தனு”

“வருண் புதிராவே பேசறார்.நீ
மூச்சே விட மாட்டீங்கறே.கார்த்தி
புலம்பினா தான் எனக்கு விஷயமே
தெரியுது.நான் உன் பிரெண்ட்.
எனக்கு உன் மேல அக்கறை
இருக்காதா?நீ என்னை பிரெண்டா
நினைக்கலையா மயூ”

“உளறாதே!என் கதை பழைய
கதை.அதை நான் பேச விரும்பலை.
வருணும் இவ்வளவு நாள்
பேசினதில்லை.கார்த்தி மட்டும்
எப்படிப் பேசுவான்?மது இப்ப
வந்தனால...”

“அவர் பேர் மதுவா?ஆமாம்.
நானே கேட்டேன்.அன்னைக்கு
நம்ம ஆபிஸ்சுக்கு வந்திருந்தார்.
உன்னை அவர் பக்கத்துல நிற்க
வைச்சுப் பார்த்தேன்.சூப்பரா
இருந்தீங்க”

“.........”

"நாம சிக்ஸ்த் படிக்கிறதுல இருந்து
பிரெண்ட்ஸா இருக்கோம்.காலேஜ்ல
தான் பிரிஞ்சோம்.ஒரே காலேஜ்ல
படிக்கலைனாலும் நம்ம பிரெண்ட்ஷிப்
அப்படியே தான் இருந்துச்சு.இருக்கு.
எனக்குத் தெரியாம மது எப்ப உன்
வாழ்க்கையில வந்தார்?உன் கிட்டக்
காதல்ல விழுந்ததுக்கான எந்த
அறிகுறியையும் நான் பார்த்ததே
இல்லையே!மூளையை ரொம்பக்
கசக்கிட்டேன்.நீயே சொல்லிடு
மயூ"

"........"

“பார்த்தியா சைலண்ட் ஆயிட்டே”

“இல்லை.யோசிச்சேன்.என் காதல்
மலர்ந்து மணம் பரப்பலை.மொட்டு
விட்டவுடனே வாடிடுச்சு.அதான்
உனக்குத் தெரியலை தனு.நானும்..
அதுக்கப்புறம் மதுவைப் பத்தி
பேச விரும்பலை"

“சாரி மயூ.உங்களுக்குள்ள என்ன
பிரச்சனை மயூ?ரெண்டு பேரும்
மனசு விட்டுப் பேசுனீங்கன்னா
எல்லாம் சரியாயிடும்”

பேசித் தீர்ப்பதற்கு என்ன
பிரச்சனை இருக்கிறது?

“உன் மதுவை எப்பப் பார்த்தே,
எங்க பார்த்தே,யார் முதல்ல
காதலை சொன்னது”தோழியின்
முக வாட்டத்தைப் போக்கும்
வேகத்தில் படபடத்தாள்
தன்யஸ்ரீ.

“இப்ப எதுக்கு அதெல்லாம்?
உனக்குத் தான் விஷயம்
தெரிஞ்சுடுச்சல்ல”

“உன்னோட லவ் ஸ்டோரியைத்
தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு
மயூ”

“உன் காதல் கதை மாதிரி
இருக்காது தனு”

“பரவாயில்லை மயூ”

“போரடிக்குதுன்னு சொல்லுவே”

“போரடிக்குமா?உன் காதல் கதையை
நீயே இப்படி சொல்லலாமா?”

“முதல் என் கதை,காதல்
கதையே கிடையாது தனு”

“ஐயோ!குழப்பறாளே”

“உன் கதை மாதிரி நவரசமும்
இருக்காது.ஒரே வரியில கதை
முடிஞ்சுடும்”

“ஓ!லவ் அட் பர்ஸ்ட் சைட்.
கரெக்டா”

“ம்ஹூம்”

“காதல் கதையே இல்லைன்னு
சொன்னயல்ல...நீயே சொல்லிடு மயூ”

“நான் டென்த் முடிச்சுட்டு போர்
அடிக்குதுன்னு பிரென்ச் கிளாஸ்ல
ஜாயின் பண்ணேன்.ஞாபகம்
இருக்கா?உன்னைக் கூப்பிட்டனே.
நீ தான் வரலை"

"ஆமாம்.எங்க வீட்டில டூர்
போயிட்டோம்.அதான் எனக்கு
மதுவைத் தெரியலையா?"

"ம்.அப்பா என்னைத் தனியா அனுப்ப
மனசில்லாம,கார்த்தியையும் என்
கூடச் சேர்த்து விட்டுட்டாங்க.
வருணுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை.
அங்க தான் மதுவைப் பார்த்தோம்”

“அடிப்பாவி!நான் உன்னைப் பச்சை
மண்ணுன்னு நினைச்சுட்டு இருக்கேன்.
ஸ்கூல் முடிக்காததுக்கு முன்னாடியே
லவ்வா?”

அருகிலிருந்த குஷனை எடுத்து
தன்யஸ்ரீயின் தோளில் நான்கு அடி
வைத்தாள் மயூரிகா.

“வாயிலயே போடுவேன் பார்த்துக்கோ!
சொல்றதை ஒழுங்கா முழுசா கேளு”

“சாந்தி சாந்தி.நீ சொல்லு.நான்
பேசலை"

“மது அப்ப பிஈ செகண்ட் இயர்
முடிச்சிருந்தார்.நாங்க ரெண்டு
பேரும் மதுவோட பேட்ச்.
கிளாஸ்லயும் பக்கத்துல பக்கத்துல
உட்கார்ந்திருப்போம்”

“பிரெண்ட்ஷிப் டெவலப் ஆகியிருக்கும்.
மது நல்ல பையன்கிறனால வருண்
ஒண்ணும் சொல்லி இருக்க மாட்டார்"

"ம்கூம்.நான் சீக்கிரம் யார்கிட்டயும்
பேச மாட்டேன்.மதுவும் அப்படித்தான்.
அளவா ஒரு ஸ்மைல் பண்ணுவார்.
அவ்வளவு தான்.கார்த்தி தான்
பேசுவான்.கோர்ஸ் முடியறப்பத்
தான் மது ஓரளவுக்குப் பேசினார்.
வருண் எதுவும் சொல்லலை.அது
வேணா கரெக்ட்"

"இதுக்கப்புறம் நான் சொல்றேன்
மயூ.ப்ளீஸ்"

"சரி சொல்லு.பார்ப்போம்"

"கிளாஸ் இன்னைக்குத் தான் லாஸ்ட்
டே.இனி உன்னைப் பார்க்கவே
முடியாதுன்னு புரிஞ்சதும்,அவர்
காதலும் அவருக்குப் புரியுது"

"ம்"

"இப்ப நான் தான் மது"

"அடக்கொடுமையே!சரி சொல்லு"

தன்யஸ்ரீ ஓடிச் சென்று பிளவர்வாஷில்
வைத்திருந்த செயற்கை ரோஜா மலரை
எடுத்து வந்தாள்.

"எந்திரி மயூ"

"என்ன பண்ணப் போறே"கேட்டுக்
கொண்டே எழுந்து நின்றாள் மயூரிகா.

மயூரிகா முன் முழங்காலிட்டு செயற்கை
ரோஜாவை நீட்டினாள் தன்யஸ்ரீ.

"பியூட்டி!ஐ லவ் யூ பேபி.நான்
உன்னை எவ்வளவு காதலிக்கறேன்னு
என்னால சொல்லவே முடியாது மயூ.
ஐ லவ் யூ மயூ"

நாடக பாணியில் சொல்லி விட்டு,
எழுந்து மயூரிகா கன்னத்தில் முத்தமிட்டாள்
தன்யஸ்ரீ.

"ஐய்யே!"நான்கடி பின் நகர்ந்தாள்
மயூரிகா.

தன் துப்பட்டாவால் கன்னத்தை
அழுத்தித் துடைத்துக் கொண்டு
தோழியை முறைத்தாள் மயூரிகா.

"சினிமா பார்த்துப் பார்த்து நீ
ரொம்பக் கெட்டுப் போயிட்டே தனு.
என் மது ஒண்ணும் இப்படி
எல்லாம் பண்ணலை"

"வேற என்ன...இரு நான்
சொல்றேன்"

"போதும்மா!என் மது இமேஜை
நீ டேமேஜ் பண்ணது போதும்.
என் கதையை நானே சொல்றேன்.
நீ பேசாமக் கேளு"

பழைய இடத்திலேயே அமர்ந்து
கன்னத்தில் கை வைத்துக் கதை
கேட்க ஆயத்தமானாள் தன்யஸ்ரீ.

"லாஸ்ட் டே கிளாஸ் முடிஞ்சதும்
என்னையும்,கார்த்தியையும் ஐஸ்கிரீம்
பார்லருக்குக் கூட்டிட்டுப் போய்
எங்களுக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம்
எல்லாம் வாங்கிக் கொடுத்து,
நல்லா படிச்சுப் பேர் வாங்கணும்,
ஆல் தி பெஸ்ட்னு சொல்லிட்டுப்
போயிட்டார் தனு"

"அட அட!குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம்
வாங்கிக் கொடுத்து பிரியா விடை
கொடுத்திருக்கார்.அப்புறம் என்ன
நடந்துச்சு"

"அப்புறம் என்ன?மது படிப்பில
மூழ்கிட்டார்.எதாவது பண்டிகைனா
கூப்பிட்டுத் தவறாம என்னையும்,
கார்த்தியையும் விஷ் பண்ணுவார்"

"அடக் கடவுளே!முதல் எப்ப
பிரெண்ட்ஸ் ஆனீங்கன்னு
கேட்டிருக்கணும் போலிருக்கே"

"ஏய்!அடி வாங்குவே.இருபத்தி
நாலு மணி நேரமும் பேசிட்டு
இருந்தா தான் பிரெண்ட்ஷிப்பா?
அதிகமா பேசலைனாலும்,மதுவுக்கு
என் மேலயும்,கார்த்தி மேலயும்
நிறைய அன்பு,அக்கறை எல்லாம்
இருந்துச்சு"

"சாரி சாரி"

"நான் காலேஜ் போனப்ப,அவர்
படிப்பு முடிஞ்சு வேலை கிடைச்சு
பெங்களூர் போயிட்டார்”

"சுத்தம்.லவ் வர்ற வாய்ப்பே
இல்லாமப் போச்சே"

"உஷ்!!"

வாய் மீது விரல் வைத்து அமர்ந்தாள்
தன்யஸ்ரீ.

"நான் காலேஜ் சேர்ந்த ஆறு
மாசத்தில எனக்கும்,கார்த்திக்கும்
ஆக்ஸிடென்ட் ஆச்சே.ஞாபகம்
இருக்கா"

"மயூ!!அப்ப உங்களைக் காப்பாத்தினது
உன்னோட மதுவா"

"ம்"

"கூடப் படிச்ச பையன் தான்
ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கான்னு
எல்லாரும் பேசிக்கிட்டாங்க.பேர்
யாரும் சரியா சொல்லலை"

"என் மது தான் அன்னைக்கு
என்னையும்,உன் கார்த்தியையும்
காப்பாத்தினவர் தனு"

"அடுத்த தடவை அவரைப் பார்க்கும்
போது தேங்க்ஸ் சொல்லணும்"

அவள் குரலில் இருந்த தடுமாற்றத்தில்
தோழியை அணைத்துக் கொண்டாள்
மயூரிகா.

"தனூ...கார்த்தி இப்ப நல்லாயிருக்கான்.
ரிலாக்ஸ் டா"அவள் முதுகில் தட்டிக்
கொடுத்து சமாதானப் படுத்தினாள்
மயூரிகா.

தன் மனதைத் தேற்றிக் கொண்டு
விலகி அமர்ந்தாள் தன்யஸ்ரீ.

"அப்ப தான் மது மேல லவ்
வந்துச்சா”

"இல்லை"

"அப்பவும் வரலையா?"

"லவ் வரலை.ஆனா கொஞ்சம்
நெருக்கமாயிட்டோம்.அடிக்கடி பேச
ஆரம்பிச்சோம்.கிளோஸ் பிரெண்ட்ஸ்
ஆயிட்டோம்னு சொல்லலாம்.அப்ப
இருந்து தான் வருணும் மது கூடப்
பழக ஆரம்பிச்சான்"

"பிரெண்டாகவே ரெண்டரை வருஷம்னா...
காதலிக்க?நீங்க இது வரைக்கும் லவ்வை
சொல்லி இருக்கீங்களா இல்லையா?"

"அதெல்லாம் சொல்லி இருக்கோம்"

"எப்ப"

“மூணு வருஷம் கழிச்சு தனு”

“என்னது!!த்ரீ இயர்ஸ்?”

“என்ன ரியாக்ஷன் இது"

"நிஜமாலுமே மூணு வருஷம் கழிச்சு
தான் உனக்குக் காதல் வந்துச்சா"

"ஆமாம்"

“உன்னை எல்லாம் மியூசியத்தில
வைக்கணும்.மது மாதிரி ஸ்மார்ட்டா,
ஹேண்ட்சமா,ஹீரோ மா..”

“வேண்டாம் தனு”சுட்டு விரல் நீட்டி
மயூரிகா எச்சரிக்க.

“ஓகே ஓகே.நோ வயலன்ஸ்"

"அந்த பயம் இருக்கட்டும்"

"மது மாதிரி ஒரு நல்லவரை,
வல்லவரைக் காதலிக்க மூணு
வருஷம் எடுத்திருக்கீங்களே!
உங்களை என்னன்னு சொல்றது?
மேல் மாடி காலின்னு தான்
சொல்லணும்"

"எதுக்கு என்னைத் திட்டறே?
எனக்குக் காதல் வர்றப்ப தானே
நான் காதலிக்க முடியும்?"

"உண்மைதான்.தங்கள் மனதில்
காதலைப் பூக்க வைத்த அந்த
வரலாற்றுச் சம்பவம் என்னவோ"

தன்யஸ்ரீ கேலியாகக் கேட்டாலும்,
மயூரிகா மனதில் அந்நாள் நிழலாடவே
செய்தது.

மயூரிகாவின் மனது கடந்த
காலத்திற்குச் செல்ல,மௌனமாக
அந்நாளை எண்ணிப் பார்த்தாள்.

பொட்டீக் ஒன்றில் உடைகளை
வாங்கிக் கொண்டு வெளியேறியவளை
“மயூரிகா”என்ற அழைப்பு தடுத்து
நிறுத்தியது.

யார் அழைப்பது எனப் பார்த்தவள்,
பக்கத்திலிருந்த ஐஸ்கிரீம் பார்லரில்
இருந்து ஒருவன் ஓடி வருவதைக்
கண்டாள்.

யாரிவன்?பார்த்தது போல் இல்லையே!

ஐஸ்கிரீம் பார்லர் அவளுக்கு
மதுரகீதனை ஞாபகப் படுத்தியது.

எப்படி அவ்வளவு மென்மையாகப்
பேசுகிறான்?அன்பாகவும்!மதுவிற்குக்
கோபமே வராதா?

“எப்படி இருக்கீங்க மயூரிகா”

“சாரி.நீங்க யாருன்னு தெரியலை”

“நான் மதுவோட பிரெண்ட் குமரன்”

“சாரி.நாம பேசி இருக்கமா?உங்களை
மது கூடப் பார்த்த ஞாபகம் இல்லை”

“இல்லைங்க.நானும் உங்களை
போட்டோல தான் பார்த்திருக்கேன்.
ஏதோ ஒரு பங்ஷன் போட்டோ.
மது மொபைல்ல பார்த்தேன்”

“எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க”

“நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்”

“நானா”

“ஆமாம்.நீங்களும் மதுவும் கிளோஸ்
பிரெண்ட்ஸ்னு தெரியும்.அதான்
உங்க கிட்டக் கேட்கறேன்”

“சொல்லுங்க.என்னால முடிஞ்சா
கண்டிப்பா செய்யறேன்”

“மதுவோட அம்மா அவனை நினைச்சு
ரொம்பக் கவலைப் படறாங்க.
கல்யாணப் பேச்சை எடுத்தாலே
எதாவது சாக்கு சொல்லி இப்ப
வேண்டாம்னு சொல்லிடறான்னு
சொல்லி வருத்தப் பட்டாங்க.அவன்
மனசுல யாராவது இருக்காங்களான்னு
தெரிஞ்சுக்கணும்னு நினைக்கறாங்க.
நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம்
பேசிப் பார்த்துட்டோம்.நீங்க ட்ரை
பண்ணிப் பாருங்க.உங்ககிட்ட
மனசுல இருக்கிறதை சொல்றானான்னு
பார்க்கலாம்.லவ் இல்லைன்னா
கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க”

“சரிங்க.நான் மது கிட்டப் பேசறேன்”

“தேங்க்ஸ் மயூரிகா.நான் வரேன்.பை”

“பை”

வியப்பு விலகாமலே சென்று காரில்
ஏறி அமர்ந்தாள் மயூரிகா.

"போலாம்ணா"

மிஸ்டர் பெர்பெக்ட் மதுவிற்குக்
காதலா?நம்பும்படியாக இல்லையே!
தானுண்டு,தன் வேலை உண்டு
என்று இருப்பவனாயிற்றே!

ஆனால்...ஏன் திருமணத்தை
மறுக்க வேண்டும்?

மது காதல்,கல்யாணம் பற்றியெல்லாம்
என்னிடம் பேசியதே இல்லை.
சிறுபெண் என நினைத்திருப்பான்.

நல்ல வேலை,கை நிறைய சம்பளம்!
திருமணம் செய்வதற்கு என்ன?

காதல் தானா?வேறு காரணம் எதுவும்
இருக்க வாய்ப்பில்லையே!

மதுவைப் பார்த்தால்..சிந்தை
தடுமாறும்.பொன்மனம் படைத்தவன்.
படிப்பு,வேலை,சம்பளம் அனைத்தும்
நிறையே அன்றி குறையேதும் இல்லை!

மது திருமணத்திற்குச் சம்மதித்தால்...
பெண்ணைப் பெற்றவர்கள் இப்படி
ஒரு நல்ல பையனை நிச்சயம்
தவற விட மாட்டார்கள்.

மதுவைப் போன்ற ஒருவனை இது
வரை எவரும் நேசிக்காமல் இருக்க
வாய்ப்பில்லை!

மதுவும்..அவன் மனதை எவருக்கேனும்
தந்திருக்கலாம்!

இல்லையென்றால்...மது மனதில்
தன் மனைவி குறித்து ஏதேனும்
கனவு இருக்கலாம்.

மது மனதில் யாராவது இருக்கிறார்களா?
அவன் உள்ளத்தைக் கொள்ளை
கொண்டவள் யார்?

மயூரிகா மனது இக்கேள்வியிலேயே
நிலைத்திருந்தது.

மது மனதில் காதல் உள்ளதா?

அவன் நண்பர்களாலேயே அறிய
முடியவில்லை என்றால்...தன்
காதலை அத்தனை ரகசியமாக
வைத்திருக்கிறானா?

அந்தப் பெண் யாராக இருக்கும்?
யாராக இருந்தாலும் அவள் நிச்சயம்
அதிர்ஷ்டசாலி தான்!

அழகான பெண்ணொருத்தியைக்
கற்பனை செய்து மதுரகீதன்
அருகில் நிறுத்திப் பார்த்தாள்
மயூரிகா.

அக்கற்பனை அவளுக்கு உவப்பானதாக
இல்லாததோடு,அவளை அமைதி
இழக்கவும் வைத்தது.

எப்போது
என் இதயம்
உன் வசமானது?
விழி மூடா
கனவுகள்
உனைத் தேடுது!
காதல்
தன் முகம் காட்டுது!


கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18582

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம்:)

இருபதாவது அத்தியாயத்தைத்

தொட்டு விட்டோம்.தொடர்ந்து விருப்பம்

தெரிவித்து ஆதரித்து வரும்

தோழமைகளுக்கு

எனது மனமார்ந்த நன்றிகள்:):love::love:

உங்களுக்கு என்றும் எனது நன்றிகள்

உரித்தாகும்.நிறைய புதியவர்கள்

விருப்பம் தெரிவித்து உள்ளீர்கள்.

உங்களுக்கு எனது அன்பும்,

நன்றியும்:love::love::love:

கருத்தைப் பகிர்ந்து உற்சாகம்

அளிக்கும் தோழமைகளுக்கு

எனது அன்பான நன்றிகள்:love::love::love:

கதைக்குள் செல்வோம் வாருங்கள்.

இந்தப் பதிவை பிளாஷ் பேக்

ஆக்கிரமித்துக் கொண்டது.

உங்கள் உள்ளத்தை ஆக்கிரமித்ததா

என்று அறியக் காத்திருக்கிறேன்.

வாசித்து உங்கள் கருத்தைப்

பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி:)

அடுத்த பதிவு வியாழனன்று.

அன்புடன்,
நித்திலா

18583



ஒரு மாதம் கடந்திருந்தது.

மாலை நேரத்தில் கார்த்திகேயனும்,
மலர்மதியும் டென்னிஸ் விளையாடிக்
கொண்டிருந்தனர்.

“மயூக்கா கொஞ்ச நாளா டிஸ்டர்ப்பா
இருக்கிற மாதிரி தெரியுது கார்த்தி”

“அப்படி ஒண்ணும் தெரியலையே”

“நீ சரியா கவனிச்சிருக்க மாட்டே.
கண்டிப்பா ஏதோ இருக்கு”

“ஓவர் இமேஜினேஷன் உடம்புக்கு
ஆகாது பிளவர்”

“உன் அண்ணன் சொன்னா நம்புவியா”

“கண்டிப்பா”

காரின் ஹாரின் சத்தம் கேட்கவும்,
“நூறாயுசு.சொன்னவுடனே வர்றான்
பாரு”என்றாள் மலர்மதி.

கார் காம்பவுண்டினுள் நுழைந்து
போர்டிகோவில் சென்று நின்றது.

காரில் இருந்து இறங்கி தோட்டத்தில்
நின்றிருந்தவர்களிடம் சென்றான்
வருணன்.

“டென்னிஸ் கோர்ட் வேணும்னு
அடம் பிடிச்சியே!எதுக்கு இங்க
விளையாடிட்டு இருக்கே”

“அங்க வெயில் அடிக்குது.என்
கலர் எனக்கு ரொம்ப முக்கியம்”

“ஆமாம்மா.தினமும் நாலு பேஸ்பேக்
போட்டு உன் முகம் மட்டும் எதாவது
ஆயிடுச்சு...என் அம்மாவுக்காகக்
கூட உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற
தியாகத்தை நான் பண்ண மாட்டேன்.
இப்பவே சொல்லிட்டேன்”

“பண்ணவே வேண்டாம்.என் அப்பா
எனக்குப் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி,
எனக்கு இதை விட அழகான முகத்தைக்
கொடுப்பார்.இந்த அழகிக்கேத்த அழகனை
அவரே தேடிப் பிடிச்சுக் கல்யாணமும்
பண்ணி வைப்பார்”

“நினைப்பு தான்”

“ஏன்டா?என் அப்பா...”

“அமைதி!அமைதி!உங்க பஞ்சாயத்தை
அப்புறம் வைச்சுக்கலாம்.முதல் மயூ
விஷயத்தைப் பார்க்கலாம்”

“ஏன் மயூவுக்கு என்ன”அவன் பார்வை
கூர்மையானது.

“சின்னப்புள்ளையை பயமுறுத்தாம,
அன்பா கேளுடா”

“விளையாடாதே!மயூவுக்கு என்ன”

“மயூ டிஸ்டர்ப்பா இருக்கிறதா இவ
சொல்றாணா”

“நானும் கவனிச்சேன் கார்த்தி”

“பார்த்தியா கார்த்தி?இந்த மலர்மதி
சொன்னா கரெக்டா இருக்கும்”

“என்ன விஷயம்ணா?உன்கிட்ட
எதாவது சொன்னாளா”

“பேபி!காதல் விஷயத்தை எல்லாம்
எவ்வளவு க்ளோஸா இருந்தாலும்
சொல்ல மாட்டாங்க”

“சின்னப்பொண்ணு மாதிரியா பேசறே
நீ”

“ஆமாம்.நான் இப்ப தான் அஞ்சாவது
படிக்கிறேன்.லாலிபாப் வாங்கிக் கொடு”

“மறுபடியும் ஆரம்பிக்காதீங்க.மலர்
சொல்ற மாதிரி இருக்குமாணா”

“என்ன கார்த்தி நீ,என் பேச்சை
நம்பவே மாட்டீங்கறே”

“மயூ உன்கிட்ட சொன்னாளா”

“நோ பேபி.நாலு நாள் முன்னாடி
மயூக்கா அழுததைப் பார்த்தேன்.நான்
தூங்கிட்டேன்னு நினைச்சு அழுதுட்டே
படுத்திருந்தா.இன்னைக்குக் காலையில
என்னடானா,யார் எந்தன் சாலையோரம்
பூக்கள் வைத்ததுன்னு கண்ணாடிக் கிட்ட
கேட்டுட்டு இருக்கா கார்த்தி”

“மலர் என்னணா சொல்றா”

“உங்களோட செல்ல மயூவுக்கு லவ்
வந்துடுச்சுன்னு சொல்றேன்”

“ஏன்ணா எதுவும் பேச மாட்டீங்கறே?
மலர் சொல்றது உண்மையாணா?
யாரந்தப் பையன்?மயூவுக்கு உலகம்
தெரியாதுணா”

“உங்கண்ணன் அப்படியெல்லாம்
யாரையாவது மயூக்கா கூடப் பழக
விட்டிடுவான்?ஏன் கார்த்தி?ஓவர்
ரியாக்ஷன் கொடுக்காதே ஸ்டார்”

“அண்ணா...”

“அப்பா லட்சுமணா!மயூக்கா
பழகிறது அந்த ஸ்மார்ட் ஹீரோ
ஒருத்தர் கூடத்தான்.அதனால ம...”

“மதுவை சொல்றயா”

“ம்.அந்த ஹீரோவே தான்”

“மது உன் அக்காவைக் கல்யாணம்
பண்ணிக்கப் போறவர்.அடக்கி வாசி”

“பாருடா!இவன் கல்யாணம்
வரைக்கும் போயிட்டான்”

“என்னணா சொல்றே”

“நான் போய் மயூவைப் பார்த்துட்டு
வரேன்”யோசனையுடன் அங்கிருந்து
அகன்றான் வருணன்.

“வா கார்த்தி.நாமும் போய் என்ன
நடக்குதுன்னு பார்ப்போம்”
கார்த்திகேயனின் கையைப் பிடித்து
இழுத்துக் கொண்டு வருணன் பின்
சென்றாள் மலர்மதி.

வருணன் மயூரிகா அறைக்குச் சென்ற
போது,சோபாவில் அமர்ந்து
ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக்
கொண்டிருந்தாள் மயூரிகா.

வருணன் சென்று அவளருகில் அமரவும்,
அவள் விழிகள் திறந்தது.

“வா வருண்”என்றாள் ஹெட்போனைக்
கழட்டியபடியே.

“காபி,டீ எதாவது குடிச்சியா”

“இல்லை மயூ.அப்புறம் குடிக்கறேன்.
உனக்கு என்னாச்சுன்னு சொல்லு”

“எ..எனக்கு என்ன?நான் நல்லா தான்
இருக்கேன்”

“என் கிட்டயே பொய் சொல்றயா”

“சாரி”

“.........”

“மதுவோட பிரெண்ட் ஒரு விஷயம்
சொன்னார் வருண்”

“உன்னை டிஸ்டர்ப் பண்ற அளவுக்கு
அப்படி என்ன சொன்னான்”

மயூரிகா குமரன் பேசியதை அப்படியே
சொல்லவும்,கேள்வியுடன் அவள் முகம்
பார்த்தான் வருணன்.

“எனக்கு...அவர் சொன்னதைக்
கேட்டதுல இருந்து...எனக்கு எப்படி
சொல்றதுன்னு தெரியலை...என் மனசுல...
ஏதோ...ஏதோ பண்ணுது வருண்...
வலியா...தவிப்பா...கோபமா...
ஏக்கமா...தெரியலை...ஏதோ
ஒண்ணு...மனசை ஏதோ பண்ணிட்டே
இருக்கு.மது யாரையாவது
விரும்பறாரான்னு யோசிக்கக் கூட
முடியலை.மது பக்கத்துல...என்னால
யாரையும் நினைச்சுப் பார்க்க முடியலை.
மது கூட யாரையும் நினைக்கவே
எனக்குப் பிடிக்கலை”

“அதுக்குத் தான் அழுதுட்டு இருக்கியா”

“இல்லை”

“வேற என்ன”

“மது ரெண்டு பிரோஜெக்ட் இருக்கு.
முடிச்சாகணும்.பேசறது கஷ்டம்னு
சொன்னார் வருண்”

“எப்பக் கடைசியா பேசினான்”

“பத்து நாள் இருக்கும்”

“மது பேசாதது தான் அழுகைக்குக்
காரணமா”

“ம்”

“மது தான் முன்னாடியே
சொல்லிட்டானே மயூ.அவன்
சாப்பிடாம,தூங்காம வேலை
செஞ்சுட்டு இருப்பான்.ப்ரீயானதும்
உடனே உனக்குப் போன் பண்ணுவான்”

“தெரியும்”

“அப்புறம் எதுக்கு அழுகறே”

“………”

“உன் மனசுல என்ன இருக்குன்னு
என்கிட்ட சொல்ல மாட்டியா”

“.........”

“என்னவா இருந்தாலும் சொல்லு
மயூ.என்கிட்ட சொல்றதுக்கு என்ன”

“........”

“மதுவைப் பத்தி என்ன நினைக்கிறே
மயூ”

“வருண்...”அதிர்ச்சியுடன் அவன்
முகம் பார்த்தாள் மயூரிகா.

“சொல்லு மயூ.மனசுக்குள்ளயே
வைச்சுட்டு இருக்காதே”

“எனக்கு...மது பேசாம...என்
உலகமே நிசப்தமாயிடுச்சு வருண்.அதை
என்னால தாங்கிக்க முடியலை.மது
குரலைக் கேட்கணும் போலிருக்கு.
மயூன்னு என் பேரை சொன்னாலும்
போதும்னு தோணுது.இந்த உணர்வுகள்...
இந்தத் தவிப்பு...இதெல்லாம்
புதுசாயிருக்கு...புதிராயிருக்கு.ஏன்
இப்படி...எனக்கு என்னாச்சுன்னு
யோசிச்சுப் பார்த்தா...எனக்கு...எனக்கு...
மதுவை நட்பைத் தாண்டிப் பிடிக்க
ஆரம்பிச்சுடுச்சுன்னு தோணுது.மது
மனசுல யார் இருக்காங்கன்னு ஏன்
தவிச்சேன்னு அப்ப தான் புரிஞ்சுது.
மதுவுக்குக் காதல்...கல்யாணம்னு
எல்லாம் கேட்டவுடனே ஏன் ஏதேதோ
பண்ணுச்சுன்னும் புரிஞ்சுது.
மதூ...மது என் மனசுக்குள்ள
வந்துட்டார் வருண்”

உணர்ச்சி வசப்பட்டதில் அவள்
குரல் நெகிழ்ந்திருந்தது.

“ரிலாக்ஸ் மயூ.மது நல்ல பையன்.
உன்னைப் பூ மாதிரி பார்த்துக்குவான்.
நான் மாமா கிட்டப் பேசறேன்”

“வேண்டாம் வேண்டாம்”

“ஏன் மயூ”

“மதுவுக்கு என்னைப் பிடிக்க வேண்டாமா”

“மதுவுக்கு உன்னைப் பிடிக்கும் மயூ”

“அதூ...பிரெண்டா பிடிக்கும்.நான்
பிரெஞ்சு கிளாஸ்ல அவரை எப்படிப்
பார்த்தனோ அதே மாதிரி தான்
இப்பவும் இருக்கார்.அதே அன்பு,
அக்கறை,நட்பு...வேற ஒண்ணும்
இல்லை வருண்”

“அவன் வெளியில அம்பி மாதிரி
ஆக்ட் கொடுப்பான்.உள்ள அக்மார்க்
ரெமோ மயூ”

“என்ன வருண் சொல்றே”

“உன் மது உன்னைப் பைத்தியமா
லவ் பண்ணிட்டு இருக்கார்.வெளியில
பிரெண்டாவே மெயின்டெயின் பண்ணிட்டு
இருக்காருன்னு சொல்றான் மயூக்கா”

“ஐய்யோ!"தங்கையையும்,
கார்த்திகேயனையும் கண்டு முகத்தை
மூடிக் கொண்டாள் மயூரிகா.

“ஒட்டுக் கேட்டயா”

“நேரா தான் கேட்டேன்”

“பூனை மாதிரி வந்து நின்னு
கேட்டுட்டு...நீ எதுக்குக் கார்த்தி
இவ கூடச் சேர்ந்தே”

“இவ என் கையைப் பிடிச்சுட்டு விட
மாட்டீங்கறாணா”

“இனிமேல் ஒட்டுக் கேட்டுப் பார்”

“மயூக்கா...இவன் என்னை
மிரட்டறான்”அக்காவின் அருகில்
சென்று அமர்ந்து கொண்டு வருணனை
முறைத்தாள் மலர்மதி.

“விடு வருண்”என்றாள் தங்கையின்
புகாரில் நிமிர்ந்து.

“ரொம்ப சந்தோஷம் மயூ.மது
நம்ம வீட்டு மாப்பிள்ளைன்னு நினைக்க
எப்படி இருக்குத் தெரியுமா?என்னால
வார்த்தையில சொல்ல முடியலை”

“உடனே கல்யாணம் பண்ணிட்டு
என்னை விட்டுட்டுப் போயிடாதே
மயூக்கா”

“நீ போயிட்டா இவ ராஜ்ஜியம்
தான்னு மனசுக்குள்ள ஊலலல்லா
பாடிட்டு வெளிய இப்படி சோகமா
ஆக்ட் கொடுக்கிறா மயூ”

“நான் இல்லாம மலர் தவிச்சுப்
போயிடுவா வருண்”

“நீ தான் சொல்லிக்கணும்.நான்
போய் காபி குடிச்சுட்டு வர்றேன்
மயூ.அப்புறம் பேசலாம்”வருணன்
வெளியேற.

“இருக்கா.வந்துடறேன்”என
எழுந்தாள் மலர்மதி.

“வேண்டாம் மலர்.வருண் கிட்டப்
போய் வம்பிழுக்காதே”

“இதெல்லாம் அநியாயம் மயூக்கா.
அவன் தான் என்கிட்ட எப்பப்
பார்த்தாலும் வம்பு இழுக்கிறான்.
அவனுக்குப் பதில் சொல்லலைனா
எனக்குத் தலை வெடிச்சுடும்”

“விடு மயூ.ரெண்டும் என்னவோ
பண்ணட்டும்”

கார்த்திகேயன் மயூரிகாவிடம் பேசத்
தொடங்கினான்.

அறையில் இருந்து வெளியேறி கீழே
செல்லும் படிகளை எட்டிப் பார்த்த
மலர்மதி,அதற்குள் எங்கு மறைந்தான்
என யோசித்தபடியே நடந்தாள்.

“அம்மா...”கை பற்றி அறை
ஒன்றினுள் இழுக்கப் பட்டதில்
அலறினாள் மலர்மதி.

“எதுக்குப் பிசாசு மாதிரி கத்தறே”

“நான் பயந்துட்டேன்”

“நீ?பயப்படறே?”

“ம்”

“பாவம்.அப்பாவிப் பொண்ணு”

“ஆமாம்.உனக்கு மட்டும் தான்
மயூக்கா மேல பாசம் இருக்கா?
எங்களுக்கெல்லாம் இல்லையா?
இனி ஒரு தடவை எதாவது
சொல்லிப் பாரு”

“என்ன செய்வே”

“அதை அப்பத் தெரிஞ்சுக்கோ.
கையை விடுடா”

மலர்மதி அவன் கையை விலக்கி
விட்டு நகர,அவள் சடையைப்
பிடித்து இழுத்தான் வருணன்.

“ஆ!!!விடு வருண்”

“கத்தாதே!பிழைச்சுப் போ”

“போடா ஆங்கிரி பேர்ட்”சொல்லி
விட்டு ஓட முயன்றவளின் கை பற்றி
இழுத்து அருகிருந்த சுவற்றோடு
சாய்த்து நிறுத்தினான் வருணன்.

அவள் இருபுறமும் கை வைத்துச்
சிறைப் படுத்தி அவள் முகத்தைப்
பார்க்கலானான்.

வருணனின் அண்மையும்,பார்வையும்
மலர்மதியைப் பேச்சிழக்கச் செய்தது.

“ரொம்பப் பேசற இந்த வாய்க்குப்
பனிஷ்மென்ட் கொடுத்தே ஆகணுமே”

மலர்மதி விழிகள் பட்டாம்பூச்சியாய்ப்
படபடக்க,இதழ்கள் மலர்ந்த ரோஜாவை
ஒத்திருந்தது.

வருணனின் மூச்சுக் காற்றுப் பட்டு
அவள் தேகம் சிலிர்த்தது.

மலர்மதி விழிகள் மூடிக் கொள்ள,
இதழ்களோ தன் இணையை
எதிர்பார்த்திருந்தது.

“காதைப் பிடிச்சுட்டு சாரி வருண்னு
பவ்யமா சொல்லு”

அவன் குரலில் திடுக்கிட்டு விழிகளைத்
திறந்தவள்,அவனை முறைத்துக்
கொண்டே காதைப் பிடித்துக்
கொண்டாள்.

“சாரிங்க வருண்”

“அது என்ன புதுசா ஒரு “ங்க”
போடறே”

“பவ்யம் வேணும்னு கேட்டீங்களே”

“கண்ணுல அனல் பறக்குதே.சரி
பரவாயில்லை போ”

“சரிங்க வருண்”அவன் கைச்சிறையில்
இருந்து விடுபட்டு,இரண்டு எட்டு
எடுத்து வைத்தவள்,திரும்பி
அவன் கன்னத்தைக் கடித்து வைத்து
விட்டுப் பாய்ந்து ஓடினாள்.

“பார்த்துப் பார்த்து விழுந்து பல்லுப்
போயிடப் போகுது”

“போடா தண்டர்பேர்ட்”

அவள் கடித்த தன் கன்னத்தைத்
தடவிக் கொண்டு அருகிலிருந்த
படுக்கையில் சாய்ந்தான் வருணன்.
அவன் மனதில் மகிழ்ச்சி
நிறைந்திருந்தது.இதழ்களில் ஓர்
மந்தகாசப் புன்னகை தவழ்ந்தது.

எந்நொடி
என்னுள்ளத்தில்
நுழைந்தாய்?
என்றென்னை
உன் வசப்படுத்திக்
கொண்டாய்?
ஏனோ இந்தப் பரவசம்?
என்னுயிரும் இனி
உன் வசம்!

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 
Status
Not open for further replies.
Top