All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கதை திரி

Status
Not open for further replies.

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15753


டியர் பிரெண்ட்ஸ்,

இனிய மாலை வணக்கம்:)

கடந்த பதிவை வாசித்த,

விருப்பம் தெரிவித்த,

கருத்தைப் பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

மனமார்ந்த நன்றிகள்:):)

எண்ணற்றோர் வாசிக்கிறீர்கள்.

கதை குறித்தான உங்கள்

எண்ணவோட்டத்தை சில

வார்த்தைகளில் தெரிவித்தாலும்

பெரும் உத்வேகம் பெறுவேன்.

உங்கள் கருத்து எதுவாயினும்

தயங்காது பகிர்ந்து

கொள்ளுங்கள்.நன்றி:)

கதையின் நான்காம் அத்தியாயம்

உங்களோடு.உங்கள் கருத்தை

அறிய ஆவலுடன்

காத்திருப்பேன்.நன்றி:)

ப்ரியமுடன்,
நித்திலா


14679


இரவு பத்து மணியை நெருங்கி
இருந்தது நேரம்.

அனைவரும் அவரவர் அறைக்குச்
சென்றதும்,தன்னறைக்குச்
சென்றாள் மயூரிகா.

நீண்ட நேரத்திற்குப் பிறகு
அவளுக்குத் தனிமை
கிடைத்திருந்தது.

மதுரகீதனைப் பார்த்த காட்சிகள்
அவள் கண் முன் படமாக
ஓடியது.அவள் கன்னம்
நனைத்தது விழி நீர்.

எத்தனை காலம்?எத்தனை
காலம் காத்திருந்தேன்?

கதவு திறக்கும் ஓசையில்
பதறி,அவசரமாகத் தன்
கண்ணீரைத் துடைத்துக்
கொண்டு எழுந்து அமர்ந்தாள்
மயூரிகா.

“என்னம்மா”

“ஒண்ணும் இல்லை தங்கம்.
அம்மா உன் கூடப்
படுத்துக்கலாம்னு வந்தேன்”

“வாங்கம்மா”நகர்ந்து தாய்க்கு
இடமளித்தாள் மயூரிகா.

“படுத்துக்கத் தங்கம்”

மகள் அருகில் அமர்ந்து
அவளுக்குப் போர்த்தி விட்டு
விட்டுத் தானும் படுத்தார்
அன்னலட்சுமி.

“அப்பா தூங்கிட்டாராம்மா”

“எதோ புக் படிச்சுட்டு இருக்கார்
தங்கம்.கொஞ்ச நேரம் கழிச்சுத்
தூங்கறேன்னு சொன்னார்”

“ம்”

“நேரா நேரத்துக்கு சாப்பிடணும்.
தாத்தா பாட்டியைத் தொந்தரவு
பண்ணக் கூடாது.சரியா”

“சரிம்மா”

“கிளாஸ் முடிஞ்சா நேரா
வீட்டுக்கு வந்துடணும்.வெளிய
போகணும்னா தனுவையோ,
வருணையோ கூப்பிட்டுப் போ
தங்கம்”

“சரிம்மா.நீங்க கவலைப்
படாமப் போயிட்டு வாங்க”

“சரிடா.தூங்கு”

அன்னலட்சுமி அமைதியாகி விட,
தாயின் முகத்தைக் கனிவுடன்
பார்த்தாள் மயூரிகா.

அம்மாவால் பத்து நாட்கள்
என்னைப் பிரிந்திருக்க
முடியாது.மலரைப்
பிரிந்திருந்து பழகி
விட்டார்கள்.நாளை கிளம்பும்
வரை என்னுடனே இருக்க
ஆசைப் படுகிறார்கள்.

தாயின் அன்பு ரணமான அவள்
மனதிற்கு இதம் சேர்த்தது.

அலை கடலாய் ஆர்ப்பரித்த
உள்ளத்தை அடக்கியபடி கண்
மூடிக் கொண்டாள் மயூரிகா.

இரவு நகர்ந்து கொண்டிருந்தது.

தன்னருகில் கேட்ட அழுகுரலில்
திடுக்கிட்டுக் கண் விழித்தார்
அன்னலட்சுமி.

“மயூயூ...என்னம்மா...
என்னாச்சுடா”

“வேண்டாம் மதூ...நில்லுங்க
மதூ...ப்ளீஸ் மதூ..”

“தங்கம்..என்னம்மா சொல்றே..
கண்ணு...”

"மதூ...மதூ..."

அன்னலட்சுமியின் பலமான
உலுக்கலில் அவள் உளறல் நின்று
விழிகளும் திறந்தது.

தாயின் பதட்ட முகம் கண்டு
அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.

"என்னாச்சும்மா"

"நீ தான் தங்கம்
என்னென்னவோ சொல்றே?
கனவு எதுவும் கண்டியா?"

கடவுளே!என்ன உளறினேன்?

"தங்கம்..."

“ஆ..ஆமாம்மா”

“வேண்டாம் மது வேண்டாம்
மதுன்னு பயங்கரமா சத்தம்
போடறே.யார் அந்த மது?
என்ன வே..மயூ...அழறயா”

தன் ஆசை மகளின் கன்னத்தில்
படிந்திருந்த ஈரத்தைத்
தொட்டுப் பார்த்து அதிர்ந்தார்
அன்னலட்சுமி.

அவசரமாகத் தன் கண்ணீரைத்
துடைத்துக் கொண்டு
புன்னகைத்தாள் மயூரிகா.

“தண்ணி குடிக்கிறயா”

“வேண்டாம்மா”

“எதுக்குடா அழுகறே?
பயந்துட்டியா”

“இல்லைம்மா.நான் அழுகலை..
கனவோ என்னவோ...எனக்கே
தெரியலை”

“யார் தங்கம் மது?உன்
பிரெண்டா?நீ எதுவும் சொன்ன
மாதிரி ஞாபகம் இல்லையே”

“பழைய பிரெண்ட்மா.அவ
தான் கனவுல வந்தா...ஏதோ
கெட்ட கனவு.அதுல
கத்திட்டேன் போலிருக்கு”

“கெட்ட கனவா?என்ன கனவு
மயூ.ஏன் அழுகறே?அந்தப்
பொண்ணுக்கு எதாவது
ஆபத்தா?பாட்டிக் கிட்ட
சொன்னா கனவுக்குப் பலன்
சொல்லுவாங்க.நீ அந்தப்
பொண்ணுக்கிட்ட சொல்லு.
கவனமா இருந்துக்கும்.
அவளுக்கு எந்தப்
பிரச்சனையும் வராது.நீ
அழாதே தங்கம்"

"சரிம்மா.நீங்க பதட்டப்
படாதீங்க.காலையில
பாட்டிக்கிட்ட சொல்லலாம்.
இப்பப் படுங்க"

"சரி தங்கம்.அம்மா
உனக்குத் திருநீர் வைச்சு
விடறேன்.கெட்ட கனவு
எதுவும் வராது”அறையில்
இருந்து வெளியேறினார்
அன்னலட்சுமி.

உங்களுடைய இந்த
அப்பாவித்தனமான குணத்தால்
தான் அப்பா உங்களை
அதீதமாக நேசிக்கிறார் அம்மா.
உங்களை இமையாகக்
காத்தும் வருகிறார்.

அம்மா பயந்திருப்பார்கள்.
என்னை மன்னித்து
விடுங்கள் அம்மா.

முட்டாள்!முட்டாள்!
இப்படியா கத்துவேன்?கனவு
வருமென்று நான்
நினைக்கவில்லையே!

இப்போது தான் தூங்க
ஆரம்பித்தேன்.அதற்குள்
கனவா?

நான்கு ஆண்டுகளாக என்னைத்
துரத்தும் கனவல்லவா இது?

ஓவென்று கதறி அழ
வேண்டுமென்ற எண்ணத்தைத்
தன் தாயின் வருகையால் ஒத்தி
வைத்தாள் மயூரிகா.

மகளுக்குத் திருநீர் பூசி விட்டு,
தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்த
பிறகே உறங்கத் தொடங்கினார்
அன்னலட்சுமி.

இனிய கனவொன்றிற்கும்
பொல்லாத கனவொன்றிற்கும்
இடையில் தன் மகள்
போராடுவதை,பாவம் இவர்
அறியவில்லை.

அதிகாலைப் பொழுது.

மதுரகீதன் கைபேசி ஒலிக்க,
விழிக்க மனமற்று விழித்துக்
கைபேசியை எடுத்தவன்,
தந்தையின் அழைப்பென்பதில்
அவசரமாகக் காதில் வைத்தான்.

“சொல்லுங்கப்பா”

“நைட்டும் வீட்டுக்கு வரலை.
இப்ப வர்றயா ராஜா?அம்மா
கவலைப் படறாப்பா”

“சாரிப்பா.வீட்டுக்கு
வர்றேன்னு அம்மா கிட்ட
சொல்லிடுங்கப்பா”

“சரி ராஜா.பொறுமையா
எந்திரிச்சு வாப்பா.
வைச்சுடறேன்பா”

கைபேசியை வைத்து விட்டுக்
கண்களை மூடிக் கொண்டான்
மதுரகீதன்.

அப்பா தோட்டத்திற்குச் செல்ல
நேரமே எழுந்திருப்பார்.அது
தான் உடனே என்னை
அழைத்திருக்கிறார்.

மயூவை நினைத்துக் கொண்டு
அப்படியே தூங்கி இருக்கிறேன்.

மயூ,என் மயூ,உன் மதுவை
மன்னித்து விடு மயூ.

கலங்கிய கண்களோடு
வருணனை அவள் பார்த்த
பார்வை!எத்தனை வலி
அந்த விழிகளில்?அந்தப்
பார்வை என்னைக்
கொல்கிறது.

உன் வலியைப் போக்குவேன்.
உன் விழிகளில் மீண்டும்
காதலைக் கொண்டு
வருவேன் மயூ.

மயூரிகாவை நினைத்த
மதுரகீதன் மனது கடந்த
காலத்தை நினைத்துப்
பார்த்தது.

கடந்த கால நினைவுகள்
சுகமளிக்க,அந்நினைவுகளில்
மூழ்கி கடந்த காலத்திற்குச்
சென்றான் மதுரகீதன்.

கடந்த காலம் தந்த சுகத்தில்
மனம் அமைதி கொள்ள,
மெல்ல உறக்கத்தின்
வசப்பட்டான் மதுரகீதன்.

ஆதவன் முழுமையாகத் தன்
துயில் கலைந்திருந்தான்.

கைபேசி விடாமல் ஒலித்து,
மதுரகீதனைக் கடந்த காலக்
கனவுகளில் இருந்து நிகழ்
காலத்திற்கு அழைத்து வந்தது.

சோம்பலுடன் விழிகளைத் திறந்த
மதுரகீதன்,மணி எட்டென்பதில்
அவசரமாக எழுந்து அமர்ந்தான்.

அம்மா தான்
அழைத்திருக்கிறார்கள்.என்னை
நினைத்துக் கவலையுடன்
இருப்பார்கள்.

மின்னல் வேகத்தில்
குளியலறைக்குச் சென்று முகம்
கழுவி வந்தவன்,வீட்டைப் பூட்டி
விட்டுக் காரில் ஏறினான்.

முக்கால் மணி நேரப் பயண
தூரத்தில் இருந்த அவன்
இல்லத்தை நோக்கி அவன்
கார் சீறிப் பாய்ந்தது.

மதுரகீதன் வீடு சென்று
சேர்கையில்,குடும்பத்தினர்
அனைவரும் உணவருந்தும்
மேஜையில் கூடியிருந்தனர்.

“வா ராஜா.ஏன்பா நைட்
வரலை”

மகனைக் கண்டு கவலை
அகன்று வினவினார் பூர்ணிமா.

“சாரிம்மா”

“பரவாயில்லை ராஜா.
உட்காருப்பா.சாப்பிடலாம்”

“நான் குளிச்சுட்டு வந்து
சாப்பிடறேன்மா”

“சரிப்பா.முகம் வாடிப்
போயிருக்கு.எதுக்குப்பா நீ
இப்படி அலையணும்?நமக்குத்
தொழில் எல்லாம்
வேண்டாம்பா”

“ஆமாம் மது.ஏசியில
ஜாலியா வேலை பார்க்கிறதை
விட்டுட்டு,உனக்கு எதுக்கு
இந்தக் கஷ்டம்”வசந்தி
தாயின் கருத்தை ஆமோதிக்க.

“தொழில் தொடங்கிற
வரைக்கும் அதிக அலைச்சல்
இருக்கும்கா.அப்புறம்
குறைஞ்சுடும்.நான் என்னைப்
பார்த்துக்குவேன்.நீங்க
கவலைப் படாம இருங்க”

“அம்மாவும் அக்காவும்
சொல்றதைக் கேளு மது.உன்
பிடிவாதத்தை விட்டுடு”வசந்தியின்
கணவன் கந்தவேல்,அவர்கள்
கருத்தையே பிரதிபலித்தான்.

“இல்லை மாமா.நான் என்
முடிவை மாத்திக்க மாட்டேன்.
என்னை மன்னிச்சுடுங்க”

“மதுவுக்கு என்ன விருப்பமோ
அதைச் செய்யட்டும் விடுங்க”
மதுரகீதனின் தந்தை கதிர்காமன்
மட்டும் அவனுக்கு ஆதரவாகப்
பேசினார்.

தந்தையின் ஆதரவில் மதுரகீதன்
முகம் மலர,மற்றவர்கள்
முகத்தில் மலர்ச்சி துளியும்
இல்லை!

“போ ராஜா.போய் குளிச்சுட்டு
வந்து சாப்பிடு”

“சரிப்பா”

தந்தையின் வார்த்தையை ஏற்றுத்
தன்னறைக்குச் சென்றான்
மதுரகீதன்.

குளித்து விட்டு வந்து கண்ணாடி
முன் நின்ற மதுரகீதன்,
“ராஜா”என்ற தாயின்
அழைப்பில் உணவருந்தச்
சென்றான்.

“ரவா ரோஸ்ட் சூப்பரா
இருக்கும்மா”

மகன் ரசித்து உண்பதைக்
கனிவுடன் பார்த்திருந்தார்
பூர்ணிமா.

“எவ்வளவு நாளாச்சு இப்படி
உங்க கையால சாப்பிட்டு”

மகன் வார்த்தை கேட்டு
எழுந்த குற்றவுணர்ச்சி
பூர்ணிமா விழிகளுக்குக்
கலக்கத்தைக் கொடுக்க,
மகனிடம் அதைக் காட்டாமல்
எழுந்தார் பூர்ணிமா.

“இன்னொரு தோசை சுட்டு
கொண்டு வர்றேன்பா”

“போதும்மா”

“காபி கொண்டு வரட்டுமா”

“சரிம்மா”

உணவை முடித்து,தாய்
கொடுத்த காபிக்
கோப்பையோடு தன்
அறைக்குச் சென்றான்
மதுரகீதன்.

ஜன்னலருகே சென்று
அசையும் மரங்களைப்
பார்த்தபடியே காபியை
அருந்திய மதுரகீதன்,மயூ
என்ன செய்து
கொண்டிருப்பாள் என
யோசித்தான்.

தன் கைபேசியை எடுத்து,
தன்னை உயிர்ப்புடன்
வைத்திருக்கும் அந்தப்
புகைப்படத்தைப் பார்த்தான்
மதுரகீதன்.

“ஸ்மைல் பண்ணுங்க
மதுரன்.நம்ம செல்பி அழகா
இருக்க வேண்டாமா”

அழகோவியமாய்த் தன்
தோளை அணைத்து
நின்றிருந்த மயூரிகாவை
ஏக்கத்துடன் பார்த்தன
மதுரகீதன் விழிகள்.

குரோதம் கொப்பளிக்கும்
வருணனின் விழிகள் அவன்
நினைவில் எழுந்தது.

நீ ருத்ரனாய் நின்று என்னை
எரிக்க முனைந்தாலும் நான்
மயூவிடம் நெருங்கவே
செய்வேன் வருண்!

தங்களுக்கு இடையே
இமயமாய் வருணன் நிற்பான்
என்பதை உணர்ந்த மதுரகீதன்
இதழ்கள் புன்னகை
கொண்டது.

முன்னொரு காலத்தில்,
வானைத் தொட்டு நின்ற
இமயமும் நீரில்
அமிழ்ந்திருந்தது வருண்.

அது போல,என் காதலின்
பேராழியில் உன்னை
அமிழ்த்தி,என் மயூவின்
கரம் பிடிப்பேன் வருண்!

மதுரகீதனின் காதல் கொண்ட
மனதின் உறுதி,அவன்
காதலை அவனுக்கு மீட்டுத்
தருமா?

உனைப் பிரிந்திட
முடிந்தது!
உனை மறந்திட
முடியுமோ?
என் வாழ்வின் ஆதாரம்
நீ தானடி கண்ணே!

கீதம் மயக்கும்...


நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15752


ஹாய் பிரெண்ட்ஸ்,

இனிய மாலை வணக்கம்.

கடந்த பதிவை வாசித்த,

விருப்பம் தெரிவித்த,

கருத்தைப் பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

மனமார்ந்த நன்றிகள்:)

கதையின் ஐந்தாம் அத்தியாயம்

உங்களோடு.உங்கள் கருத்தை

அறிய ஆவலுடன்

காத்திருப்பேன்.நன்றி:)

ப்ரியமுடன்,
நித்திலா


14775


ஸ்ரீரங்கநாயகி இல்லம் காலை
நேரத்திற்கே உரிய பரபரப்புடன்
காணப் பட்டது.

காலை உணவுக்குப் பின்
அன்னலட்மியும்,குமரகுருவும்,
தங்கள் இளைய மகள்
மலர்மதியைக் காண பெங்களூர்
நோக்கிப் புறப்பட்டனர்.போகும்
வழியில் இருக்கும்
உறவினர்களைக் காண்பதற்காகக்
காரில் தங்கள் பயணத்தை
மேற் கொண்டனர்.

மகனுக்கும் மருமகளுக்கும்
கையசைத்து விடை கொடுத்து
விட்டு,வீட்டினுள் சென்றனர்
குணவதியும்,மயில்வாகனனும்.

“உங்க பேத்தியைப் பார்த்தீங்களா”

“பார்த்துட்டுத் தானே இருக்கேன்.
ஏன் தங்கம்,நீயும் போறயா
கண்ணு?காரைத் திருப்பச்
சொல்லவா”

“ஐயோ!வேண்டாம் தாத்தா.
எனக்கு லேசா தலை வலிக்குது.
வேற ஒண்ணுமில்லை”

“ஏன் நைட் எல்லாம்
தூங்கலையா?எந்நேரமும்
அந்த செல்லை நோண்ட
வேண்டியது”

“பாட்டீ...நான் ஒண்ணும்
செல்லை நோண்டலை”

“நம்பிட்டேன்”

“நான் என் ரூம்முக்குப்
போறேன் தாத்தா.கொஞ்சம்
நேரம் படுத்திருக்கேன்”

“சரி கண்ணு.தாத்தா
மில்லுக்குப் போயிட்டு
வர்றேன்டா”

“சரி தாத்தா”

“என் செல்லப் பாட்டி”
குணவதியின் கன்னத்தைப்
பிடித்துக் கிள்ளி விட்டுப்
படிகளில் ஏறி அவர்கள்
பார்வையில் இருந்து
மறைந்தாள் மயூரிகா.

தன்னறைக்குள் நுழைந்து
கதவைத் தாழிட்டுக் கொண்ட
மயூரிகா,கட்டுப் படுத்தி
வைத்திருந்த கண்ணீரைத்
தடையின்றி வெளியேற்றினாள்.

இரவெல்லாம் யார் நினைவில்
அவள் மனம் ரணமானதோ,
மீண்டும் அவனிடமே
அடைக்கலம் கொண்டது
அவள் மனது.

நான்கு வருடங்கள்!நீண்ட
கொடிய நரகமான நான்கு
வருடங்கள்!நான்கு வருடம்,
ஐந்து மாதங்கள்!

மதுரகீதன் நினைவில்
வெள்ளமாகப் பெருக்கெடுக்கத்
துடிக்கும் கண்ணீரை
எப்போதும் கட்டுப்
படுத்தியே வைத்திருப்பாள்
மயூரிகா.தனிமை கிட்டும்
போது மட்டுமே அவள்
விழிகள் அழுவதற்கான
சுதந்திரத்தைப் பெறும்.

தனது வாட்ரோபைத் திறந்து,
தன்னுடைய ஐபோனை
எடுத்து வந்து உயிர்ப்பித்தாள்
மயூரிகா.

மதுரகீதன் புகைப்படங்களையும்,
அவனுடனான உரையாடல்களை
மட்டுமே தனது ஐபோனில்
வைத்திருக்கிறாள் மயூரிகா.
அதை தற்போது பயன்
படுத்துவதில்லை.

இரவுப் பொழுதுகளில்,ஐபோனை
வெளியில் எடுத்து அவன்
புகைப்படத்தைப் பார்த்தபடியோ,
அவனுடன் பேசியதைப்
படித்தபடியோ வான்
நிலவிற்குத் துணையிருப்பாள்.

அவன் புகைப்படத்தைப் பார்த்த
அவள் விழிகள் அருவியானது.

“ஏன் மதுரன்?ஏன் இப்படிப்
பண்ணீங்க?உங்ககிட்ட இருந்து
நான் இதை எதிர்பார்க்கலை
மதுரன்”

கண்ணீர் மீண்டும்
பெருக்கெடுக்க,“ஏன் மது?
ஏன் மது?”என மீண்டும்
மீண்டும் வினவினாள்.

ஐபோனை நழுவ விட்டுப்
படுக்கையில் சாய்ந்தவள்
முதுகு அழுகையில்
குலுங்கியது.

“நான் என்ன தப்புப்
பண்ணேன்?எதுக்கு எனக்கு
இவ்வளவு பெரிய
தண்டனை கொடுத்தீங்க
மதுரன்?நீங்க என்னைப்
புரிஞ்சுக்கவே இல்லை
மதுரன்”

எப்போதும் அவனிடம் கேட்கும்
கேள்வியை இப்போதும்
கேட்டுக் கொண்டே
தேம்பினாள் மயூரிகா.

மதுரகீதனின் “மயூ” என்ற
கதறலான அழைப்பும்,அவனின்
காதல் சொல்லும் கண்களும்
அவள் கண் முன்னே
மீண்டும் மீண்டும் வந்து
போனது.

பயம்,பதட்டம்,நிம்மதி,
கலக்கம் என உணர்வுகள்
மாறி மாறி மையம் கொண்ட
அவன் முகத்தில்,கடைசியாய்
வேதனை தன்னை நிலை
நிறுத்திக் கொண்டது.

வேதனை தோய்ந்த மதுரகீதன்
முகத்தை மனக்கண்ணில்
கண்ட மயூரிகாவையும்
அவ்வேதனை பீடித்தது.

காதல் கடலில்
நான் அமிழ்ந்திருக்கையில்
கரை ஏறிச் சென்று
விட்டாய் நீ!
யுகங்கள் பல
கடந்த பின்
வந்து நிற்கிறாய்!
கோப அலையில்
உனை கரையில்
நிறுத்த நினைக்கையில்
உயிருருகும்
பார்வை வீசி
காதல் கடலினுள்
பாய்ந்து விட்டாய் நீ!

மாலைப் பொழுது.

மில்லில் இருந்து திரும்பி
இருந்தார் மயில்வாகனன்.
சிந்தனை படிந்த முகத்தோடு
அமர்ந்திருந்த மனைவியின்
அருகில் சென்று அவர்
தோள் மீது கை
வைத்தார் மயில்வாகனன்.

“என்ன குணா,நான்
வந்தது கூடத் தெரியாம
அப்படி என்ன யோசனை”

“உங்க அருமைப் பேத்தி
காலையில இருந்து
ரூம்மை விட்டு வெளியில
வராம இருக்கா.ஒரு நாளும்
இப்படி இருந்ததில்லை”

மயூவிற்கு என்னவானது?ஏன்
அறைக்குள் அடைந்து
கிடக்கிறாள்?

“ரூம்மில எல்லாம் ஒரு
நாளும் சாப்பிட்டதில்லை.
அதுவும் சரியா சாப்பிடலைன்னு
பூமணி சொல்றா.இந்த
மயூவுக்கு என்ன ஆச்சுன்னே
தெரியலைங்க.நான்
அன்னத்தைக் கூப்பிட்டு
சொல்லப் போறேங்க”

“அதெல்லாம் வேண்டாம்.
ரெண்டு பேரும்
பதறியடிச்சுட்டு வருவாங்க.
வருண் வந்தாலே மயூ
சரியாயிடுவா.நீ பேசாம
இரு”

“என்னையே மிரட்டுங்க.
உங்க பேத்தி கிட்ட என்ன
ஏதுன்னு கேட்காதீங்க”

“இந்தக் காலப் புள்ளைககிட்ட
அப்படியெல்லாம் ஈஸியா
பேசிட முடியாது குணா”

காலடிச் சத்தம் கேட்க,
அவர்கள் கவலைக்கு
உரியவளே வந்து
கொண்டிருந்தாள்.

“வாடா கண்ணு.
தலைவலி குறைஞ்சுதா?
நல்லா தூங்கினயா”

“பரவாயில்லை தாத்தா.
நல்லா தூங்கினேன்”

“ஏன் மதியம் சரியா
சாப்பிடலை”

“பசிக்கலை பாட்டி.டிபன்
கொண்டு வரட்டுமா தாத்தா”

“கொஞ்ச நேரம் போகட்டும்
தங்கம்”

“நான் தோட்டத்துல நடந்துட்டு
வரட்டுமா தாத்தா”

“சரி கண்ணு.காத்துல நடந்தா
தலைவலி சரியாயிடும்.
பூமணியை உனக்குக் காபியும்,
டிபனும் கொண்டு வர
சொல்லட்டுமா”

“சரி தாத்தா”

வேக எட்டுக்களுடன் நகரும்
பேத்தியைக் கவலையுடன்
பார்த்தார் மயில்வாகனன்.

“அழுதிருக்காங்க.நாம
எதாவது கேட்டுடுவோம்னு
ஓடறாங்க”

“ம்”

“என்னவா இருக்குங்க?குரு
கிட்ட சொல்லிடலாமா”

“நான் தான் வருண் வந்தா
சரியாயிடுவான்னு சொல்றனே.
கேட்க மாட்டியா”

“நாளைக்கு உங்க பையன்
வந்து கத்துவான்.அப்ப
நீங்களே பதில் சொல்லுங்க.
என்னை இழுக்காதீங்க”

அந்நேரம் கைபேசி ஒலிக்க,தன்
கைபேசியை எடுத்தவர்,
மனைவியிடம் கொடுத்தார்.

“மகா தான் கூப்பிடறா.பேசு”

பேத்தியிடம் இருந்து
அப்பெரியவர்களின் கவனம்
தங்கள் மகள்
மகாலட்சுமியிடம் திரும்பியது.

தோட்டத்தில் நடந்து
கொண்டிருந்த மயூரிகாவின்
மனதில் ஆயிரம் கேள்விகள்
முட்டி மோதிக் கொண்டிருந்தது.

மதுரன் கனடாவில் இருந்து
வந்து விட்டானா?எப்போது
வந்தான்?வருணுக்குத்
தெரிந்திருக்குமா?
தெரிந்திருந்தால்....என்னிடம்
சொல்லி இருப்பானே!

இல்லை.வருணின் கோபம்
என்னிடம் சொல்ல விடாது.

இல்லை....எனக்காக
சொல்லி இருப்பான்.நாளை
அவனிடமே கேட்கிறேன்.

மதுரன் எப்படி இருக்கிறான்
என நான் அறிந்து கொள்ள
வேண்டும்.நன்றாகத் தான்
இருப்பான்.

இல்லை.மதுரன் நன்றாக
இல்லை.தாடி வைத்துக்
கொண்டு...கண்களில்
வலியோடு...இது
என்னுடைய மதுரன் இல்லை.

மதுவின் அந்த காந்தக்
குரல்....மயக்கும் குரல்....
அது மட்டும் மாறவில்லை.
அதன் மென்மை
குறையவில்லை.

மதுவின் கண்ணம்மா என்ற
அழைப்பைக் கேட்டு
எத்தனை காலமாகி விட்டது?

தன்னருகில் வந்த வண்டை
கையுயர்த்தி விரட்டியவள்
பார்வை,தன் விரலில்
நெடுங்காலமாகக் குடி
கொண்டிருக்கும் வைர
மோதிரத்தில் பதிந்தது.

“ஐ லவ் யூ கண்ணம்மா”

உள்ளத்துக் காதலை எல்லாம்
தேக்கி காதல் சொன்ன
மதுரகீதன் குரல்,பட்டின்
மென்மையைச்
சுமந்திருந்தது.

“வாவ்!ரொம்ப அழகாயிருக்கு
மதுரன்”

“தேங்க்ஸ் கண்ணம்மா”

“இன்னைக்கு என்ன ஸ்பெஷல்
மதுரன்?வேலண்டைன்ஸ் டே
இல்லை.என் பர்த்டேவும்
இல்லை.எதுக்கு இப்ப
இந்த ரிங் மதுரன்”

“என்னடா மயூ,நான்
உனக்கு ஸ்பெஷல் டேல
மட்டும் தான் கிப்ட்
கொடுக்கறனா”

“இல்லை...இருந்தாலும்
இவ்வளவு காஸ்ட்லியான
கிப்ட்டை சும்மா
கொடுக்கிறதுன்னா...நம்ப
முடியலையே.ஒழுங்கா
உண்மையைச் சொல்லுங்க
மதுரன்”

“என்னோட கிப்ட்டை
இருபத்திநாலு மணி நேரமும்
நீ வைச்சிருக்கணும்னு
ஆசையா இருந்துச்சு...
அதுக்குத் தான்”

“என் மதுரனுக்கு இப்படி
ஒரு ஆசையா?ஓகே ஓகே.
என் உயிர் இருக்கிற
வரைக்கும் இந்த ரிங் என்
கையில தான் இருக்கும்.
என் உயிர் போன...”

தன் கரம் கொண்டு அவள்
வாய் பொத்தி பேசாது
செய்தான் மதுரகீதன்.

“இப்படியெல்லாம் பேசாதே
மயூ”என்றான் கண்டிப்புக்
குரலில்.

அவள் சரியெனத்
தலையசைக்க,தன் கரத்தை
விலக்கினான் மதுரகீதன்.

“சாரி”

“விளையாட்டுக்குக் கூட....
அப்படியெல்லாம் பேசாதே மயூ”

அவன் முக வாட்டம் கண்டு
ஏதேதோ கதை எல்லாம் கூறி
அவனைச் சிரிக்க வைத்தாள்
மயூரிகா.

சிரித்துக் கொண்டிருந்த
மதுரகீதன் முகம் மறைந்து
போக,நிகழ் காலத்திற்கு
வந்தாள் மயூரிகா.

மோதிரத்தைப் பார்த்தவள்
விழிகள் மீண்டும் கலங்கத்
தொடங்கியது.

“பாப்பா,பாப்பா”என்ற
பூமணியின் அழைப்பில்,
தன்னை திடப்படுத்திக்
கொண்டாள் மயூரிகா.

“என்னக்கா”

“போன் பாப்பா”

பூமணி நீட்டிய தன்
கைபேசியை வாங்கிப்
பார்த்தாள் மயூரிகா.

வருண் தான்
அழைத்திருக்கிறான்.எதாவது
கேட்பானோ?

“காபியும்,டிபனும் கொண்டு
வர்றேன் பாப்பா”

“வேண்டாம்கா.நானே கொஞ்ச
நேரம் கழிச்சு வரேன்.நீங்க
வேலையைக் கவனிங்க”

“சரி பாப்பா”

பூமணி அங்கிருந்து சென்றதும்,
வருணனை அழைத்து
கைபேசியைக் காதில் வைத்தாள்
மயூரிகா.

“குட் ஈவ்னிங் மேடம்”

“குட் ஈவ்னிங் வருண்”

“நல்ல தூக்கமா”

“ஆமாம் வருண்”

“தலைவலியோட கோல்டும்
சேர்ந்துடுச்சு போலிருக்கே”

“அதூ..நேத்து தனு கூடச்
சேர்ந்து நிறைய ஐஸ்கிரீம்
சாப்பிட்டுட்டேன்.அது
சேரலைன்னு நினைக்கிறேன்”

வருணன் சிரிப்பதைக் கேட்டவள்,
“எதுக்குடா சிரிக்கறே”என்றாள்
கோபக் குரலைக் கொணர்ந்து.

“உனக்குத் தெரியாதா”

“எதுக்கு இப்ப போன் பண்ணே”

“காலையில இருந்து
தலைவலின்னு பொய்
சொல்லிட்டு,ரூம்முக்குள்ள
ஒளிஞ்சு அழுது வடிஞ்சிட்டு
இருக்கிற பொண்ணை
எழுப்பலாம்னு போன்
பண்ணேன்.நீயே
எந்திரிச்சுட்டே.குட்!”

“வீட்டுக்கு வர்றயா”

“வேலையிருக்கு மயூ.
நாளைக்குக் காம்ப்பிளக்ஸ்ல
பார்க்கலாம்”

“ம்”

“வைச்சுடட்டுமா”

“இரு வருண்”

“என்ன மயூ”

“கார்த்தி எங்கே”

“பண்ணையில இருக்கான்”

“அவன் ப்ரீயானதும்
எனக்குப் போன் பண்ண
சொல்லு வருண்”

“எதுக்கு?அவன் கிட்ட
யாரைப் பத்திக் கேட்கப்
போறே?”

“சொல்றதைச் செய்யேன்
வருண்”

“ஓகே.பை”

கைபேசியோடு நடந்தவள்
முகத்தில் சிந்தனை
ரேகைகள்!

நாளைக்கு எப்படி வருணைச்
சந்திப்பது?

அவன் முகம் பார்த்து
என்னால் பேச முடியுமா?
அவனிடம் என்னவென்று
சொல்வது?இப்போதே குரலில்
அனல் தெறிக்கிறது!

முதல் முறையாக வருணனை
எண்ணி அச்சம் கொண்டாள்
மயூரிகா.ஏனோ அவள்
மனம் அமைதியின்றித்
தவித்தது.

கல்லும் உருகும்
உன் காதலில்!
கன்னி நான் வீழ்ந்தேன்
உன் பார்வையில்!
கானலான நீ
காதல் சொல்ல
மீண்டும் வந்தாயா?

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15751

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய மாலை வணக்கம்:)

கடந்த பதிவிற்கு விருப்பம்

தெரிவித்த,கருத்துத் தெரிவித்த

நட்புகளுக்கு எனது அன்பும்,

நன்றியும்:):)

கீதம் ஆறில் என்னவுள்ளது

எனக் காண்போம் வாருங்கள்.

வாசித்து உங்கள் உள்ளம்

சொல்வதை விருப்பமாகவோ,

கருத்தாகவோ பகிர்ந்து

கொள்ளுங்கள்.நன்றி:)

ப்ரியமுடன்,
நித்திலா

14911


“24”என்ற எண்ணைத்
தாங்கி நின்ற அவ்வீடு,
ஓட்டு வீடாக இருந்து
சில காலங்களுக்கு
முன்,அதன் பழமை
மாறாமல்,சகல
வசதிகளும் கொண்ட
வீடாக மாற்றப்
பட்டிருந்தது.இரு
தளங்களைக் கொண்டு
எளிமையாகக் காட்சி
தந்தாலும்,அழகிற்கும்
குறைவில்லாமல்
நின்றிருந்தது அவ்வீடு.

தரைதளத்தில் பூர்ணிமா,
கதிர்காமனோடு தற்போது
மதுரகீதனும் வசிக்க,மேல்
தளத்தில் வசந்தி,தன்
கணவன் கந்தவேல்
மற்றும் குழந்தைகள்
சித்ரா,தர்ஷணாவோடு
வசித்து வருகிறாள்.

ஆசிரியர் பணியில்
இருந்து ஓய்வு
பெற்றிருந்த கதிர்காமன்,
தங்களுடைய வாழைத்
தோப்பை கவனித்து
வருகிறார்.

இருபாலருக்குமான
ஆடையகத்தை சிறப்பாக
நடத்தி வருகிறான்
கந்தவேல்.கந்தவேலின்
ஒரே உறவான
அவனுடைய தாய்
மறைந்த பிறகு,அவன்
மனம் தேற தன்
வீட்டிற்கு அழைத்து
வந்த மதுரகீதன்,
கந்தவேலைத்
தங்களுடனே தங்கச்
செய்து விட்டான்.

மதிய உணவிற்குப் பின்பு
ஓய்வெடுத்துக்
கொண்டிருந்த கணவன்
அருகில் சென்று
அமர்ந்தார் பூர்ணிமா.

“நம்ம மது இங்கயே
இருக்கிறதா சொல்றான்.
அவனுக்கு ஒரு
கல்யாணத்தைப்
பண்ணிட்டா
நல்லதுன்னு தோணுதுங்க”

“ம்”

“நம்ம சொந்தத்திலயே
நிறைய பொண்ணுக
இருக்காங்க.
அவங்களையே
பார்க்கலாங்க”

“ம்”

“அண்ணனையும் பார்க்க
சொல்லலாங்க”

“ம்”

“என்னங்க இது?
எதுவுமே சொல்ல
மாட்டீங்கறீங்க.நம்ம
மதுவோட கல்யாணங்க”

“நம்ம மதுவுக்குக்
கல்யாணம்
பண்ணனும்னு தான்
நானும் நினைக்கறேன்
பூர்ணி.ஆனா..அது
அவன் விருப்பத்தோட
சந்தோஷமா நடக்கணும்னு
நினைக்கிறேன்”

“என்னங்க சொல்றீங்க”

“மது அந்தப் பொண்ணை
மறந்துட்டானான்னு
தெரிஞ்சுக்கிட்டு அப்புறம்
கல்யாணப் பேச்சை
ஆரம்பின்னு சொல்றேன்”

பூர்ணிமா மனதில் பயக்
குதிரை ஒன்று தறி கெட்டு
ஓடத் தொடங்கியது.

“மாப்பிள்ளையை மது
கிட்டப் பேச சொல்லலாம்.
மது மனசுல என்ன
இருக்குன்னு
தெரிஞ்சுக்கிட்டு,அப்புறம்
தான் எதையுமே
செய்யணும் பூர்ணி”

கணவனின் பேச்சிற்கு
மௌனமாகத் தலை
அசைத்தார் பூர்ணிமா.

மது இன்னுமா அந்தப்
பெண்ணை நினைத்துக்
கொண்டிருப்பான்?
எத்தனை வருடங்களாகி
விட்டது?

ஆனால்...மது அவளை
மறக்கவில்லையோ?
அதனால் தான் ஐடி
வேலை வேண்டாம்.
சொந்தமாகத் தொழில்
செய்கிறேன் என்று
சொல்கிறானா?மது
இங்கேயே இருக்க
நினைப்பதற்கு அவள்
தான் காரணமா?

இப்போது என்ன
செய்வது?மதுவிடம்
கேட்கலாமா?

வேண்டாம் வேண்டாம்.
என்னிடம் மனம் விட்டுப்
பேச மாட்டான்.
மாப்பிள்ளையைப் பேசச்
சொல்வோம்.அது தான் சரி.

மது அந்தப் பெண்ணை
மறந்து விட்டதாகச்
சொன்னால்,எத்தனை
சீக்கிரம் முடியுமோ
அத்தனை சீக்கிரமாக
அவனுக்கு மணமுடித்து
விட வேண்டும்.

ஒரு வேளை....
மதுவின் நேசம்
மாறாமல் இருந்தால்....
கடவுளே!நான் என்ன
செய்வேன்?

பயம் பூர்ணிமா முகத்தில்
வியர்வைப் பூக்களைப்
பூக்க வைத்தது.

“என்ன யோசனை
பூர்ணி?நீயும் கொஞ்ச
நேரம் படுத்து ரெஸ்ட் எடு”

“வசு என்ன பண்றான்னு
பார்த்துட்டு வர்றேங்க”

புடவை முந்தானையால்
தன் முக வியர்வையைத்
துடைத்த பூர்ணிமாவால்
மனதில் இருந்த
பயத்தைத் துடைத்தெறிய
முடியவில்லை!

மணி நான்கு முப்பதை
நெருங்கிக் கொண்டிருந்தது.

ஸ்ரீ லேங்குவேஜ் அகாடமியில்,
தன்னுடைய அலுவல்
அறையில்,தனது சுழல்
நாற்காலியில் கண்களை
மூடி அமர்ந்திருந்தாள்
மயூரிகா.

அவள் முகம் அவள்
இயல்பிற்குத் திரும்பி
இருந்ததைச் சொல்லியது.

வருண் ஏன் இன்னும்
வரவில்லை?முக்கியமான
வேலை எதாவது
வந்திருக்கும்.
இல்லையென்றால்
என்னைக் காண
வராமல் இருக்க மாட்டான்.

கார்த்தி ஏன் எனக்குப்
போன் பண்ணவில்லை?இந்த
வருண் சொல்லவில்லையா?

“எக்ஸ்கியூஸ் மீ மேடம்”

கண்களைத் திறந்து,
“விளையாடாம உள்ள வா”
என்றவளின் வார்த்தையில்,
கதவருகில் நின்றவன்
அவள் எதிரில் சென்று
அமர்ந்தான்.

“வருணைப் பார்க்க வந்தயா”

“இல்லை.உன்னைப் பார்க்க
வந்தேன்”

“என்ன விஷயம் கார்த்தி”

“நேத்தே உனக்குப் போன்
பண்ணலாம்னு இருந்தேன்.
அப்புறம் வீட்டுக்குப்
போயிக்கலாம்னு
வி்ட்டுட்டேன்.
பண்ணையிலயே நேரம்
போயிடுச்சு.வர முடியலை”

“பரவாயில்லை கார்த்தி”

“டல்லா இருக்கே மயூ”

“தலைவலி.வேற ஒண்ணும்
இல்லை”என்றாள் தன்
விழிகளைத் தாழ்த்தி.

என்னிடமே பொய்யா?உண்மை
எனக்குத் தெரியும் மயூ என
நினைத்தவனாய் அவள்
முகத்தைக் கூர்ந்தான்
கார்த்திகேயன்.

“என்ன கார்த்தி”என்றாள்
அவன் பார்வையில் நிமிர்ந்து.

“வந்தூ...மதுகிட்டப்
பேசினயா”அவனால்
கேட்காமல் இருக்க
முடியவில்லை.

“இல்லை”

“கனடாவுல இருந்து
வந்துட்டார் போலிருக்கு”

“ம்”

“வருண் கோபமா
இருந்தான்.என்னைத்
துரத்தி விட்டுட்டான்.
மதுகிட்ட சண்டைப்
போட்டானா”

“இல்லை”

“நான் வேணா...
மதுகிட்டப் பேசிப்
பார்க்கட்டுமா”

“என்ன பேசப் போறே?மயூ
உங்களுக்காகத் தான்
காத்திட்டு இருக்கா.
அவளைக் கல்யாணம்
பண்ணிக்கங்கன்னு
கெஞ்சப் போறயா”

“இல்லை மயூம்மா.
அப்படி இல்லை.நீ
கோபப் படாதே”

“நீ மதுகிட்டப்
பேசினேன்னு மட்டும்
எனக்குத் தெரிஞ்சுது...
நான் என்ன செய்வேன்னு
உனக்கே தெரியும்”

“இல்லை.நான்
பேசலை”அவசரமாக
மறுத்தான் கார்த்திகேயன்.

“என்னை நினைச்சு
மனசைப் போட்டுக்
குழப்பிட்டு இருக்காதே கார்த்தி”

உன் கண்களில் தெரியும்
இந்த சோகத்தைப் பார்த்துக்
கொண்டு என்னால் எப்படி
அமைதியாக இருக்க முடியும்
மயூ?

“வேலையிருக்கு.நான்
கிளம்பறேன் மயூர்”சொல்லி
விட்டு எழுந்த கார்த்திகேயன்,
விடுவிடுவென்று அங்கிருந்து
வெளியேறினான்.

“கார்த்தி...நில்லு...
நான் சொல்றதைக் கேளு...”

எழுந்தவள் மீண்டும்
இருக்கையில் அமர்ந்து
கொண்டு,பழையபடி
கண்களை மூடிக் கொண்டாள்.

இவன் ஏன் என்னைப்
புரிந்து கொள்ள மறுக்கிறான்?
என் நன்மைக்குத் தான்
சொல்கிறான்.ஆனால்...

“ஒரு நாள் முழுக்கத்
தூங்கியும் தூக்கம் பத்தலையா”

வருணன் குரலில்
கண்களைத் திறந்தவள்,
அவனிடம் ஓர் உஷ்ணப்
பார்வையைச் செலுத்தினாள்.

“உன்னைப் பார்க்க
வரலைன்னு கோபமா?சாரி
செல்லம்”

“கோபம் எனக்கு இல்லை.
உனக்குத் தான்.எதுக்குடா
என் மேல காரை ஏத்திக்
கொல்லப் பார்த்தே”

“ஐயகோ!என்ன வார்த்தை
சொல்லிட்டே மயூர்?
சொன்னது நீ தானா?
சொல்!சொல்!சொல்!”

“உதை வாங்காம ஒழுங்கா
உட்காருடா”

“அமைதி!அமைதி!”

“என்ன நினைப்பில கார்
ஓட்டறே நீ?நான் இல்லாம
வேற யாராவதா இருந்தா
நல்லா மொத்துக்
கிடைச்சிருக்கும்”

“அது தான் அந்தப்
புண்ணியவான் என் கார்க்
கண்ணாடியை உடைக்க
வந்தானே.நீ பார்த்து
ரசிச்சுட்டு இருந்தியே”

“ஒரு நாள் மொத்து
வாங்கினா தான் உனக்குப்
புத்தி வரும்”

“அடப்பாவி!எத்தனை
நாள் ஆசை இது”

“எது”

“நான் மொத்து வாங்கணும்கிறது”

“உனக்கு எவ்வளவு நாள்
ஆசை இது”

“எது”

“என் மேல காரை ஏத்தறது”

“அதை விடு.முக்கியமான
விஷயத்துக்கு வா”

“அது என்ன முக்கியமான
விஷயம்”

“மயூவோட மதுரனைப்
பத்திப் பேசலாமா”

“நான் பேச விரும்பலை”

“பேசித் தான் ஆகணும் பாப்பா”

“வருண்!!”

“என்ன?தலை வலிக்குதா?”

“ஆமாம்”

“நாளைக்குப் பேசலாமா?
வேண்டாம்.நாலு நாள்
டைம் தரேன்.பாவமேன்னு
கொடுக்கிறேன்.அப்ப நீ
பேசியே ஆகணும்”

“ம்”

வருண் முன்பாகவா நான்
மதுவைப் பார்க்க வேண்டும்?
கடவுளே!இவன் கேள்வி
கேட்டே என்னை ஒரு
வழி செய்து விடுவானே!

இவன் அமைதியாக
இருந்தாலும் பிரச்சனை.
கேள்வி கேட்டாலும்
பிரச்சனை.

வருணன் அவளை
ஆராய்ச்சியாகப் பார்க்க,
அங்கிருந்து சென்றால்
போதுமென நினைத்தாள்
மயூரிகா.

இருவரும் தத்தம்
சிந்தனைகளில் மூழ்கி
அமைதியாகி விட,
கதவைத் தட்டி விட்டு
உள்ளே சென்ற தன்யஸ்ரீ,
இருவரையும்
விசித்திரமாகப் பார்த்தாள்.

“என்ன இது உலக
அதிசயமாயிருக்கு?எப்படி
ரெண்டு பேரும் இவ்வளவு
அமைதியா இருக்கீங்க”

“போனா போகுதுன்னு
வாய்க்கு ரெஸ்ட்
கொடுத்துட்டு
இருக்கோம் தன்யா”

வருணன் பதிலில் அவனை
முறைத்து விட்டுத்
தோழியைப் பார்த்தாள்
தன்யஸ்ரீ.

“கிளாஸ்சுக்குப் போற
அவசரத்தில ஒண்ணும்
பேச முடியலை.ஏன்
டல்லா இருக்கே மயூர்?
உன் கிளாஸ்ஸை வேற
என்னையே எடுக்க
சொல்லிட்டே.உடம்பு
சரியில்லையா”

“இவன் என் கையை
உடைச்சு தொட்டில் கட்டற
நிலைமைக்குக் கொண்டு
வந்துட்டான் தனு.அதான்
டயர்டா இருக்கு”

முழுக்கை சுடிதாரில்
அவளுக்கு எதுவும்
தெரியவில்லை!

“ஐயோ!ஐயோ!என்னமா
ரீல் விடறா?ஒரு சின்னக்
காயம் கூட இல்லை தன்யா.
கையை உடைச்சுட்டேன்னு
மனசாட்சி இல்லாம
சொல்றயே மயூ.என்
பாவம் உன்னை சும்மா
விடாது.இந்த பூமிக்கே
இது பொறுக்காது”

“போதும் போதும்.ஓவர்
ஆக்ஷன் பண்ணாதே வருண்.
நான் கிளம்பறேன்.ரெஸ்ட்
எடுத்துட்டு நாளைக்கு
வர்றேன்.சாரி தனு.
நாளைக்குப் பேசறேன்.
பை.பை வருண்”

தன் கைப்பையோடு
அலுவல் அறையில்
இருந்து வெளியேறினாள்
மயூரிகா.

மயூரிகா விழிகளில் தெரிந்த
சோகம் தன்யஸ்ரீயின்
மனதைப் பிசைந்தது.

திடீரென்று மயூவிற்கு
என்னவானது?நன்றாகத்
தானே இருந்தாள்?
வகுப்பிற்குக் காலையில்
வராமல்,மூன்று மணிக்கு
வருகிறாள்!ஒரு நாளும்
இப்படி வந்ததில்லையே...

“மயூ முகத்தில என்ன
தெரியுது தன்யா”

“டல்லா இருக்கா.ரெண்டு
பேரும் சண்டைப் போட்டீங்களா”

“நானாவது மயூர் கூட
சண்டைப் போடறதாவது?
ஏன் தன்யா?”

“மயூவை இவ்வளவு
டல்லா நான் பார்த்ததே
இல்லை.நீங்களும்
யோசனையா இருக்கீங்க”

“ம்”

“ஏன் ரேஸ்ல போற
மாதிரி கார் ஓட்டறீங்க
வருண்?மயூருக்கு
எதாவது ஆகியிருந்தா...
ஐயோ!நினைக்கவே
முடியலை”

“மயூவுக்கு எதுவும் ஆக
விட மாட்டேன் தன்யா”

“இனிமேல் கவனமா
இருங்க வருண்”

“உண்மை தான்.நான்
கவனமா இல்லை தான்”

“நல்லவேளை மயூவுக்கு
அடி எதுவும் படலை”

“அடி பலமாவே பட்டிருக்கு
தன்யா.என்னால எதுவும்
செய்ய முடியலை.
ராட்சஷி”

அவன் பதில் எதுவும்
புரியாது குழப்பத்துடன்
அவன் முகம் பார்த்தாள்
தன்யஸ்ரீ.

“வருண்...நீங்க வேற
எதையோ நினைச்சுப்
பேசறீங்கன்னு
நினைக்கிறேன்”

“நாம அப்புறம் பேசலாம்
தன்யா”

மயூரிகா மயங்கிச் சரிந்தது
அவன் கண் முன் வந்து
போனது.அவன் முகம்
கடினமானது.

நீ இந்த வருணனை மறந்து
பெருந்தவறு செய்தாய் மது.
மயூவை வேதனைப் படுத்தும்
துணிச்சல் கொண்டாய்
அல்லவா?உனக்குத் தக்க
பாடம் புகட்டுகிறேன்.
காத்திரு மது.

வருணன் முகத்தை
அலட்சியப் புன்னகை ஒன்று
அலங்கரித்தது.

உன் நினைவினில்
வாழ்ந்திட நினைத்தேன்
உன் வருகையில்
சிறகின்றிப் பறந்தேன்
ஆயினும்
உன்னிடம் காட்டாது
பொய்க் கோபம்
வளர்த்தேன் உயிரே!

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15749

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய மாலை வணக்கம்:)

கடந்த பதிவிற்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

மனமார்ந்த நன்றிகள்:):love:

கதையின் ஏழாம் அத்தியாயத்தில்

என்ன இருக்கிறது எனக்

காண்போமா?

வாசித்து,ஒரு வார்த்தை

பகிர்ந்தாலும் பெரும் மகிழ்ச்சி

கொள்வேன்.நன்றி:)

ப்ரியமுடன்,
நித்திலா


15019


ஸ்ரீரங்கநாயகி டவர்ஸ்ஸை
நிர்வகிக்கும் பொறுப்பை
மயூரிகாவிடம்
ஒப்படைத்திருந்தார்
குமரகுரு.அப்பொறுப்போடு
தங்களுடைய ஸ்ரீ
லேங்குவேஜ் அகாடமியில்
ஆங்கில வகுப்புகளையும்
எடுத்து வந்தாள் மயூரிகா.

மயூரிகாவின் பள்ளித்
தோழி தன்யஸ்ரீ.
நட்புக்காகக் கல்லூரிப்
பணியை விட்டு விட்டு
ஸ்ரீ லேங்குவேஜ்
அகாடமியில் பணி
புரிய வந்தவள்.ஆங்கிலம்,
ஹிந்தி,ஜெர்மன்,
பிரென்ச் என நான்கு
மொழிகளிலும் தேர்ச்சி
பெற்றவள்.மயூரிகாவோடு
மட்டுமல்லாது அவள்
குடும்பத்தோடும்
நல்லுறவில் இருப்பவள்.

தன் கைபேசிக்கு வந்த
குறுஞ்செய்தியை நம்ப
முடியாமல்,வியப்புடன்
ஸ்ரீரங்கநாயகி டவர்ஸ்ஸின்
அலுவலக அறை நோக்கிச்
சென்று கொண்டிருந்தாள்
தன்யஸ்ரீ.

கதவைத் தட்டி விட்டு
உள்ளே சென்றவள்,
கதவருகிலேயே
நின்றிருந்தவனைப்
புரியாது பார்த்தாள்.

கை நீட்டிக் கதவைத்
தாழிட்டு விட்டு,அவள்
கை பிடித்து உள்ளிருந்த
ஓய்வறைக்கு அழைத்துச்
சென்றான் கார்த்திகேயன்.

“கார்த்தி...என்ன
பண்றீங்க?மயூவோ,
வருணோ வந்தா என்ன
நினைப்பாங்க”

“மயூ வீட்டுக்குக்
கிளம்பிட்டா.மயூ
கிளம்பிட்டானா
வருணுக்கு இங்க
என்ன வேலை?அவனும்
இந்நேரம் கிளம்பி
இருப்பான்”

அங்கிருந்த சோபாவில்
அவள் தோள்களைப் பிடித்து
அமர வைத்து விட்டு,
அவள் மடியில் சாய்ந்து
கொண்டான் கார்த்திகேயன்.

“என்னாச்சு உங்களுக்கு?
போன் கூடப் பண்ண
மாட்டீங்க.இன்னைக்கு
என்னடானா...”

“எனக்கு நிம்மதி
வேணும் ஸ்ரீ.கொஞ்ச
நேரம் படுத்திருக்கனே.
ப்ளீஸ்”

“சரி”

எதுவும் பேசாமல் அவன்
தலையை வருடிக் கொடுத்துக்
கொண்டிருந்தாள் தன்யஸ்ரீ.

என்னவானது இவனுக்கு?
இன்று யாருமே
சரியில்லை!மயூ,
வருண்..இப்போது
இவன்...மூவர்
வருத்தத்திற்கும்
தொடர்பு இருக்கிறதா?

“எனக்கு வருணை
நினைச்சா...கவலையா,
பயமா இருக்கு.நான்
சொல்றதைக் காதிலயே
வாங்க மாட்டீங்கறான் ஸ்ரீ”

“........”

“மயூ ஏன் இப்படி அவ
வாழ்க்கையை வீணாக்கிக்கிறா”

“........”

“வருண் என்ன
செய்வானோன்னு எனக்கு
திக்குதிக்குன்னு இருக்கு ஸ்ரீ”

அவன் மனதில் உள்ளதைக்
கொட்டட்டும் என
அமைதியாகக் கேட்டுக்
கொண்டிருந்தாள் தன்யஸ்ரீ.

“எனக்கு மயூ சந்தோஷமா
இருக்கணும்.அது மதுனால
மட்டும் தான் முடியும்.
ஆனா என்னால வருணை
மீறி எதுவும் செய்ய முடியாது.
மயூவும் ஒத்துக்க மாட்டா.
அவ வருணுக்கு மேல
இருப்பா”

மதுவா?இத்தனை காலம்
இந்தப் பெயரை யாரும்
சொன்னதில்லையே!

மயூவின் சந்தோஷம்
மதுவிடம் என்றால்.....
காதல் என்றதும்
கல்லான மயூரிகா
முகம் நினைவு வந்தது.

இங்கு நானறியாத காதல்
கதை ஏதோ உள்ளது.ஏன்
ஒருவரும் என்னிடம்
சொல்லவில்லை?அது
வேதனை நிரம்பியது
என்பதாலா?

“கவலைப் படாதீங்க
கார்த்தி.எல்லாம்
சரியாயிடும்.மயூ
சந்தோஷமா வாழ்வா
பாருங்க”

“ம்.எனக்கும் அப்படித்
தான் தோணுது.மதுவைப்
பார்த்ததுல இருந்து நல்லது
நடக்கும்னு நம்பிக்கை
வந்திருக்கு.ஆனா
வருணை நினைச்சா தான்
பயமாயிருக்கு”

“மயூ சந்தோஷமா
வாழணும்னு தானே
வருணும் நினைப்பார்?
வருண் அளவுக்கு மயூ
மேல அன்பும்,
அக்கறையும் யாருக்கு
இருக்கும் கார்த்தி”

“அது தான்,அந்த
அளவில்லாத அன்பு
தான் பிரச்சனையே”

கார்த்திகேயன் மௌனமாகி
விட்டதில்,மேற் கொண்டு
பேசாமல் தானும்
அமைதியானாள் தன்யஸ்ரீ.

மாலைப் பொழுது.

வெயில் பூமியிடம் விடை
பெற்றுக் கொண்டிருந்தது.

மயூரிகா வரும் வழியில்,
அகன்ற மரத்தின் அடியில்
காரை நிறுத்தி,அதில்
சாய்ந்து நின்று சாலையில்
பார்வை பதித்திருந்தான்
மதுரகீதன்.

வேகமாக வந்த
பார்ட்டுனர் ஒன்று,
அவனருகில் வந்ததும்
வேகம் குறைத்து நின்றது.

வெறுமனே பார்த்துக்
கொண்டிருந்த மதுரகீதன்
விழிகள்,கார்க் கதவைத்
திறந்து இறங்கிய
மயூரிகாவைக் கண்டதும்
ஒளி கொண்டது.

ஏன் திடீரென்று காருக்கு
மாறி விட்டாள்?

வேகமாக எட்டு வைத்து
அவளருகில் சென்றவன்,
அவள் முகக்தைக் கூர்ந்தான்.
அதில் தெரிந்த வாட்டம்
தன்னால் என்பதில் அவன்
முகமும் வாடியது.

“ஐயம் சாரி மயூ.
அழுதியா கண்ணம்மா”

மயூரிகா அவன்
முகத்தையே பார்க்க,
அவள் முகத்தில் பார்வை
பதித்திருந்தவன்,
கையுயர்த்தி அவள்
நெற்றியில் இருந்த
சிறிய தழும்பைத்
தொட்டுப் பார்த்தான்.

மயூரிகா அவன் கரத்தை
விலக்க,அவனே விலக்கிக்
கொண்டான்.

“இந்தத் தழும்பு முன்னாடி
இல்லையே மயூ”

“வருணும்,நானும்
சண்டைப் போட்டப்ப
ஊஞ்சல் பட்டுடுச்சு”

“காயம் ஆழமா?ரொம்ப
வலிச்சுதா?”

“ரொம்ப ஆழம்.உயிரே
போயிடுச்சு”தடுமாறிய
குரலையும்,கலங்கத்
தொடங்கிய கண்களையும்
அவனிடம் மறைக்க
முயன்று தோற்றாள்
மயூரிகா.

அவள் தான் ஏற்படுத்திய
மனக்காயத்தைக்
கூறுகிறாள் என்பதை
உணர்ந்த மதுரகீதன்,
“மயூ..சாரிடா.நான்...
தப்புப் பண்ணிட்டேன்...”
என்றான் வருத்தம்
கொண்டவனாக.

கண்ணீரை விழுங்கிக்
கொண்டு கண்டனப்
பார்வையோடு,“எதுக்கு
இப்படி ரோட்டில
நின்னுட்டு இருக்கீங்க”
என்றாள் குரலில்
கடுமையைக் கொண்டு
வர முயன்று
தோற்றவளாய்.

“மயூ...அதூ...நீ
எப்படி இருக்கேன்னு...”
அவளின் முகத்தில்
கோபம் கூடுவது
கண்டு தன் பேச்சை
நிறுத்தினான் மதுரகீதன்.

“நான் ரொம்ப
நல்லாயிருக்கேன்.
இனிமேல் என்னைப்
பார்க்கணும்னா என்
வீட்டுக்கோ,
காம்ப்பிளெக்ஸ்கோ
வாங்க”என்றவள்,
சட்டென நினைவு
வந்தவளாய்,“எதுக்கு?
நாம எதுக்குப்
பார்க்கணும்?வேண்டாம்”
என்று சொல்லி விட்டுக்
காருக்குத் திரும்ப,அவள்
கை பிடித்து நிறுத்தினான்
மதுரகீதன்.

திரும்பாமல்,அசையாமல்
நின்றவளின் முன் சென்று,
“நான் டிரைவ் பண்றேன்
மயூ.வீட்டுக்குப் போகலாம்”
என்று விட்டு அவள் கையை
விட்டான் மதுரகீதன்.

உள்ளுக்குள் சுழன்றடிக்கும்
உணர்ச்சிகளில் தான்
சாலையில் கவனம்
பதிப்பது கடினம் என
உணர்ந்து மயூரிகா
சரியெனத் தலையசைக்க,
இருவரும் அமர்ந்ததும்
கார் கிளம்பியது.

மதுரகீதன் பக்கம் செல்லத்
துடித்தப் பார்வையை
முயன்று கட்டுப் படுத்தி,
அவன் பக்கமே திரும்பாமல்
வெளியிலேயே பார்த்துக்
கொண்டு வந்த மயூரிகா,
வீடு வந்ததும் பார்வையை
அவனிடம் திருப்பினாள்.

“இங்கயே நிறுத்தவா
இல்லை உள்ள போகணுமா”

“இங்கயே நிறுத்துங்க”

மயூரிகா காரில் இருந்து
இறங்கிக் கொள்ள,
மதிற்சுவரை ஒட்டி காரை
நிறுத்தினான் மதுரகீதன்.

கேட் அருகில்
நின்றவளிடம் சென்று
கார் சாவியைக் கொடுத்து
விட்டு,“கிளம்பறேன் மயூ”
என்றான்.

கலங்கி இருந்த
மயூரிகாவின் கண்களைக்
கண்டவன் நெஞ்சமும்
கலங்கித் தவித்தது.
அவளை அள்ளி
அணைத்து ஆறுதல்
படுத்தத் துடித்த மனதை
அடக்கி விடை பெறும்
விதமாகத் தலை
அசைத்தான்.

“உள்ள வாங்க”

வியப்பில் விரிந்த
விழிகளோடு தாமதம்
செய்யாமல் மயூரிகாவைப்
பின் தொடர்ந்தான்
மதுரகீதன்.

தன் கைப்பையில் இருந்த
சாவியை எடுத்து கதவைத்
திறந்து உள் நுழைந்தவள்,
அவனுக்குச் சோபாவைக்
காட்டினாள்.

“உன் அப்பா அம்மா
மட்டும் தானே பெங்களூர்
போயிருக்காங்க மயூ”

“ம்.தாத்தா,பாட்டி
அத்தை வீட்டுக்குப்
போயிருக்காங்க.பூமணி
அக்கா அவங்க வீட்டுக்குப்
போயிருக்காங்க.
மத்தவங்க தோப்புல எதோ
வேலையிருக்குன்னு
போயிருக்காங்க”

“ம்”

“உட்காருங்க.ஜூஸ்
கொண்டு வரேன்”அவன்
முகம் பார்க்காமல்
சொல்லி விட்டு,
சமையலறைக்குள்
சென்று மறைந்தாள்
மயூரிகா.

மயூரிகா தன்னை
வீட்டிற்குள் அழைத்ததை
நம்ப முடியாமல் அவள்
சென்ற திசையையே
பார்த்துக் கொண்டிருந்தான்
மதுரகீதன்.

சில நிமிடங்களில் ஜூஸ்
டம்ளரோடு வந்த மயூரிகா
மனது மதுரகீதனை உடனே
அங்கிருந்து அனுப்பி விடத்
துடித்தது.

எந்த நொடியிலும் ஓடிச்
சென்று அவனை
அணைத்துக் கொண்டு
அழுது விடுவோமோ என
அஞ்சினாள் மயூரிகா.

“எடுத்துக்கங்க”என அவன்
முகம் பார்க்காமல் சொல்லி
விட்டு,அவனுக்கு எதிரே
அமர்ந்தாள்.

மயூரிகா முகத்தைப்
பார்த்தபடியே அவன்
பழச்சாற்றைப் பருக,
மயூரிகாவோ ஒரு வாய்
மட்டும் பருகி விட்டு,
கையில் இருந்த ஜூஸ்
டம்ளரை இறுக்கிப் பிடித்துக்
கொண்டு அமர்ந்திருந்தாள்.

அழக் கூடாது அழக்
கூடாது என உள்ளுக்குள்
உருப்போட்டுக்
கொண்டிருந்தவளின்
மனதைப் படிக்க
முயற்சிப்பவன் போல
அவள் முகத்தையே
பார்த்துக் கொண்டிருந்தான்
மதுரகீதன்.

“தேங்க்ஸ் மயூ.நான்
கிளம்பறேன்”

“இருங்க.டிரைவர்
அண்ணாவை வரச்
சொல்லி இருக்கேன்.
இப்ப வந்துடுவார்.அவர்
கூடப் போங்க”

மதுரகீதன் அவள்
விழிகளைப் படிக்க முயல,
அவளோ தரையில் இருந்த
கார்பெட் டிசைனை
ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

ஹாரன் சத்தம் கேட்கவும்,
விடுதலை பெற்ற
உணர்வுடன் சோபாவில்
இருந்து எழுந்தாள்
மயூரிகா.

“வரேன் மயூ”

மதுரகீதன் காரில் ஏறிச்
செல்லவும்,வேக
எட்டுக்களுடன் வீட்டினுள்
சென்று கதவடைத்தாள்
மயூரிகா.

மதுரகீதன் அமர்ந்திருந்த
ஒற்றைச் சோபாவின் அருகில்
சென்றவள் விழிகள் ஏக்கம்
சுமந்திருந்தது.அளவில்லாத
வாஞ்சையுடன் மெல்ல
சோபாவை வருடினாள்
மயூரிகா.

தன் கார் நின்றிருந்த
இடத்தில் மயூரிகாவின்
காரில் இருந்து இறங்கிக்
கொண்டான் மதுரகீதன்.

தன் காரில் ஏறி அமர்ந்து
இருக்கையில் சாய்ந்து
கண்களை மூடிக் கொண்ட
மதுரகீதன் கண் முன்
மயூரிகாவின் முகம்
வந்து போனது.

எதற்காக இத்தனை
மை தீட்டியிருக்கிறாய்
மயூ?உன் கண்களின்
சோர்வை மறைக்கவா?

உன் கண்ணீருக்கு நான்
காரணமாவேன் என்று ஒரு
நாளும் நான்
நினைத்ததில்லை மயூ.
உன்னை என்
கண்களுக்குள் வைத்துப்
பார்த்துக் கொள்ள
வேண்டுமென்று தான்
ஒவ்வொரு நொடியும்
நினைத்துக்
கொண்டிருந்தேன்.
ஆனால்...

போனது போகட்டும்.
இனி உன் கண்கள்
நீரைச் சிந்தாமல் நான்
பார்த்துக் கொள்வேன்
மயூ.இத்தனை காலம்
உன்னைத்
துன்புறுத்தியதற்கு
என்னை மன்னித்து
விடு மயூ.

கடந்து போன
காலத்திற்கும் சேர்த்து
நாம் வாழலாம் மயூ.
என்னை மன்னித்து
ஏற்றுக் கொள் மயூ.

ஆனால்....அவளிடம்
என் நிலையை
என்னவென்று நான்
சொல்லுவேன்?
கடவுளே!

என் மீது மயூ
வைத்துள்ள அன்பு!அது
சற்றும் குறையவில்லை
என்பதை சற்று முன்
காட்டி விட்டாள்.

நான் நடந்து செல்லக்
கூடாதென்று தானே
என்னை உன் வீட்டினுள்
அழைத்தாய்?உன்
ஓட்டுனர் வரும் வரை
காத்திருந்தாய்?

இந்த அன்பே உன்னை
என்னிடம் கொண்டு
வந்து சேர்த்து விடும்
மயூ.

காணக் கிடைக்காத
உனதன்பினை இனியும்
என்னால் இழக்க
முடியாது மயூ!

ஒரு தவறால் உன்னைப்
பிரிந்தேன்.மீண்டும் ஒரு
தவறால் தான் உன்னோடு
இணைய வேண்டும்
என்றால் அதற்கும் நான்
தயாராக உள்ளேன் மயூ.

உன்னுடைய அன்பு
நிறைந்த மனது,என்
தவறுகளை நிச்சயம்
மன்னித்து விடும்!

என்னால் நீ நேசித்த
மிஸ்டர் பெர்பெக்ட்
மதுவாக இனி இருக்க
முடியாது மயூ.அப்படி
இருந்து உன்னை
என்னால் இழக்க
முடியாது.

மதுரகீதன் இதழ்கள்
குறுநகை ஒன்றைப்
புரிந்தது.

அவள் தன்னை வந்து
சேர தான் அனுபவிக்க
வேண்டிய துயரம் மிகக்
கொடியது என்பதை
பாவம் மதுரகீதன்
அறிந்திருக்கவில்லை.

பாலை வழியில்
நான் விட்டுச்
சென்ற பின்பும்
என் சௌகர்யம்
எண்ணித் தவிக்கிறாள்
என் காதலி!
கோபமறியாத
குழந்தை அவள்!
காதல் மட்டுமே அறிந்த
என் ராதை அவள்!

கீதம் மயக்கும்...


நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15747

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய மாலை வணக்கம்:)

கடந்த பதிவிற்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

மனமார்ந்த நன்றிகள்:):love:

கதையின் எட்டாம்

அத்தியாயத்தில் மயூவும்,

மதுரனும் என்ன பேசுகிறார்கள்

என்று தெரிந்து கொள்வோமா?

வாசித்து உங்கள் உள்ளம்

சொல்வதை என்னோடு

பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி:)

ப்ரியமுடன்,
நித்திலா

15087


நட்சத்திரங்கள் கண்
சிமிட்டாமல் அவனியின்
அழகை அள்ளிப் பருகிக்
கொண்டிருந்த இரவுப்
பொழுது.காற்று
சோம்பலாய் வீசியபடி
இரவை நகர்த்திக்
கொண்டிருந்தது.

படுக்கையில் சாய்ந்து
கால் நீட்டி அமர்ந்திருந்த
மயூரிகாவின் கவனம்
கையில் இருந்த
புத்தகத்தில் இல்லாமல்
எங்கோ இருந்தது.

அவள் கைபேசி ஒலி
எழுப்ப,அவள் கவனம்
கைபேசிக்குத்
திரும்பியது.

எவருடனும் பேச
விருப்பம் இல்லை
என்றாலும்,தங்கையின்
அழைப்பென்பதால்
எடுத்து காதிற்குக்
கொடுத்தாள் மயூரிகா.

“சொல்லுடா மலர்.
அம்மாவும் அப்பாவும்
தூங்கிட்டாங்களா”

“தூங்கிட்டாங்க
மயூக்கா.ஏன்கா
கோல்டா?திடீர்னு
எப்படி?பீவர் இருக்கா?”

“பீவர் எல்லாம்
இல்லைடா.ஐஸ்கிரீம்
அதிகமா
சாப்பிட்டுட்டேன்.
ரெண்டு நாள்ல
சரியாயிடும்.நீ
அம்மாகிட்ட
சொல்லிடாதே”

“சரிக்கா.உடம்பைப்
பார்த்துக்கோ”

“ம்.அம்மா என்ன
சொல்றாங்க”

“அம்மா உன்னை
நினைச்சு பயங்கரப்
புலம்பல்கா.பச்சைக்
குழந்தையை விட்டுட்டு
வந்திருக்கிற மாதிரி
இந்த அன்னம் பண்ற
அலும்பிருக்கே”

“வாலு!பரவாயில்லை
விடு.அப்பா
சமாளிச்சுக்குவார்”

“நான் கொஞ்ச நேரம்
தான் கேட்கறேன்கா.
ஆனா அப்பா...
பாவம்கா.குருவுக்குக்
கோயிலே கட்டலாம்.
ரெண்டு நாள்ல
கிளம்பிடுவார் பாரு”

“அம்மா கேட்கணும்.
அப்பா பேர்
சொல்றயான்னு அடி
பின்னிடுவாங்க"

"மயில்வாகனன் இருக்க
பயமேன்"

"போக்கிரி!உனக்குக்
கன்பார்மா அடி உண்டு.
நீ அம்மாவை நினைச்சுக்
கவலைப் படாதே.அப்பா
ஈஸியா சமாளிச்சுடுவார்
மலர்.நான் கோல்டு
சரியானதும்
அம்மா கிட்டப் பேசறேன்”

“சரிக்கா.நீ கோல்டோட
கஷ்டப் பட்டுப் பேச
வேண்டாம்.ரெஸ்ட் எடு”

“சரிடா.நீ போய்த் தூங்கு.
நாளைக்கு ஆபிஸ்சுக்குப்
போகணுமில்லே”

“ம்”

“என்னடா,என்கிட்ட
எதாவது சொல்லணுமா”

“நான் ஜாப்பை ரிசைன்
பண்ணிடலாம்னு
இருக்கேன்கா”

“என்னடா திடீர்னு”

“ஊருக்கே வந்துடலாம்னு
தோணுதுக்கா”

“ரொம்ப சந்தோஷம்டா.
அம்மாஅப்பா கிட்ட
சொல்லிட்டியா”

“இல்லைக்கா.திடீர்னு
ஊர்ல வந்து குதிச்சு
அவங்களுக்கு சர்ப்ரைஸ்
கொடுக்கலாம்னு
இருக்கேன்கா”

“முன்னாடியே சொல்லிடு
மலர்.அம்மா
கோவிச்சுக்குவாங்க”

“நான் அம்மாவை
சமாதானப் படுத்திடுவேன்.
நீ கவலைப் படாதே
மயூக்கா.இனிமேல்
நாம ரெண்டு பேரும்
ஒண்ணா இருக்கப்
போறோம்கா.
நினைக்கறப்பவே
அப்படியே துள்ளி
குதிக்கலாம் போல
இருக்கு.எப்படா
ஊருக்கு வருவோம்னு
இருக்கு மயூக்கா”

“ரிசைன் பண்ணிட்டியா,
பண்ணப் போறயா”

“அதை சொன்னா என்
சர்ப்ரைஸ் பிளான்
பிளாப் ஆயிடும் மயூக்கா.
வைச்சுடறேன்கா.
குட் நைட்”

“குட்நைட் மலர்”சிரிப்புடன்
கைபேசியை வைத்தாள்
மயூரிகா.

எங்கே பேசினால் உளறி
விடுவோமோ என்று
அவசரமாக வைக்கிறாள்.

மலர் ஏன் திடீரென்று
ஊருக்கு வருகிறாள்?
பணிபுரியும் இடத்தில்
எதாவது பிரச்சனையாக
இருக்குமோ?

இருக்காது.பிரச்சனைக்கு
பயப் படுபவள் அல்ல என்
தங்கை.

இந்த ராட்சஷிக்குப் போய்
மலருன்னு பேர்
வைச்சிருக்கீங்களே என்று
வருண் கேட்பது நியாயம்
தான்.மலரின் துணிவு
அவள் பிரச்சனைகளைத்
துரத்தி விடும்.

மலருக்குப் பெங்களூர்
வாழ்க்கை சலிப்பைத்
தந்திருக்க வேண்டும்.
அது தான் காரணமாக
இருக்கும்.பார்ப்போம்.
மீண்டும் பேசும் போது
அவளே உளறி விடுவாள்.
மலருக்கு எதையும்
மனதிற்குள் வைத்திருக்க
முடியாது.

மலர் வந்து விட்டால்
வீடே கலகலப்பாக மாறி
விடும்.அம்மாவும் மகள்
தன்னருகிலேயே
இருக்கப் போகிறாள்
என சந்தோஷப்
படுவார்கள்.

மலருக்கு எதாவது
பொறுப்பைக் கொடுக்க
வேண்டும்.அப்பாவிடம்
சொல்லி வைக்க
வேண்டும்.

தங்கை வீடு வந்து
சேரப் போகிறாள்
என்றதும் மயூரிகா
மனதில் இருந்த
சோர்வு மறைந்து
உற்சாகம் பிறந்தது.

மயூக்கா மயூக்கா என்று
தன்னையே சுற்றி வந்த
சின்னப் பெண்ணை
நினைத்தபடியே உறங்கிப்
போனாள் மயூரிகா.

காலை பத்து மணியைத்
தாண்டி நேரம் நகர்ந்து
கொண்டிருந்தது.

காலை உணவை
உண்டதாகப் பெயர்
பண்ணி விட்டுத் தன்
அறைக்குச் சென்ற
மயூரிகா,கண்ணாடி
முன் அமர்ந்து
பின்னலிடத்
தொடங்கினாள்.

எப்போதும் ஒன்பது
மணிக்கே
காம்ப்பிளெக்ஸில்
இருப்பேன்.
பரவாயில்லை.

நான் சென்றாலும்
வகுப்பெடுக்கச் செல்லப்
போவதில்லை.
மெதுவாகவே செல்வோம்.
வருணையும் பார்க்க
வேண்டி இருக்காது.

ம்கூம்.அவன் நினைத்த
நேரத்தில் வந்து நிற்பான்.
அவனைத் தவிர்க்க
முடியாது.

துரிதமாகத் தயாராகி
ஸ்ரீரங்கநாயகி டவர்ஸ்
நோக்கிப் புறப்பட்டாள்
மயூரிகா.

தனு வகுப்பில் இருப்பாள்.
அவள் கண்ணிலும் பட
வேண்டாம்.

வருணனும்,தன்யஸ்ரீயும்
இல்லாததால் நிம்மதியாகத்
தன் அலுவல் அறையில்
அமர்ந்திருந்த மயூரிகாவிற்கு,
வேலை செய்யப் பிடித்தம்
இல்லாமல் இருந்தது.அவள்
மனம் தனிமையை மிகவும்
நாடியது.

அறையில் இருந்து
வெளியேறிய மயூரிகா,
ஒவ்வொரு தளமாகப்
பார்வையிடத்
தொடங்கினாள்.

அவள் கைபேசி
ஒலியெழுப்ப,அப்பா
அழைக்கிறார் என
அவசரமாகக் காதில்
வைத்தாள் மயூரிகா.

“சொல்லுங்கப்பா”

“தங்கம்,நம்ம ஆபிஸ்
ரூம் லாக்கர்ல ப்ளூ
கலர் பைல் ஒண்ணு
இருக்கும்.அதை நம்ம
ஆடிட்டருக்கு எடுத்துக்
கொடுத்துடுடா.அவரை
வீட்டுக்கு வர சொல்லி
இருக்கேன்.அரைமணி
நேரத்துல வந்துடுவார்”

“சரிப்பா.நான் எடுத்துக்
கொடுத்துடறேன்.
வைச்சுடறேன்பா”

என்ன பைல் அது?
பார்த்த ஞாபகம்
இல்லையே!என்ன
இருக்கிறது அந்த
பைல்லில்?

அறைக்குச் சென்று தன்
கைப்பையை எடுத்துக்
கொண்டு,வேக
நடையுடன் கார்
பார்க்கிங்கிற்குச்
சென்றாள் மயூரிகா.

பிரதான சாலையில்
இருந்து விலகி மண்
சாலையில் திரும்பிய
மயூரிகாவின் கார்,
அகன்ற மரத்தின்
அடியில் காரில் சாய்ந்து
நின்றிருந்த மதுரகீதனைக்
கண்டதும் தானாக
நின்றது.

நான் சொல்லியும்
கேட்காமல் ரோட்டில்
நின்று கொண்டிருக்கிறான்.
மிஸ்டர் பெர்பெக்ட்
பட்டமெல்லாம்
காற்றோடு போய்
விடும்.இவனை...

மதுரகீதன் அவன் இடத்தில்
இருந்து நகரவும்,கார்க்
கதவைத் திறந்து கீழே
இறங்கினாள் மயூரிகா.

அவள் அருகில் வந்து
நின்ற மதுரகீதன்,அவள்
முகம் மலர்ந்திருந்ததில்
நிம்மதி கொண்டான்.

வருண் மயூ முகம் வாட
விட மாட்டான்.தேங்க்ஸ்
வருண்.

“உன் கிட்டப் பேசணும்
மயூ”

“நாம பேச என்ன இருக்கு”

“நீ என் மேல எவ்வளவு
வேணும்னாலும் கோபப்
படு மயூ.ஆனா நான்
பேசறதுக்கு ஒரு
வாய்ப்புக் கொடு”

மதுரகீதன் கேட்டுக்
கொண்டிருக்கும் போதே,
இருசக்கர வாகனமொன்று
அதிவேகத்தில் வந்து
மயூரிகா அருகில்
நின்றது.

இருவரும் திடுக்கிட்டுப்
பார்க்க,ஹெல்மெட்டைக்
கழட்டியவன் பார்வை
மதுரகீதனிடம் சென்று
பின் மயூரிகாவிடம்
திரும்பியது.

“எதுக்கு இப்படி வெயில்ல
நின்னு பேசிட்டு இருக்கே
மயூர்”

அவனின் உரிமையான
அதட்டலில்,மதுரகீதன்
யாரிவன் என
வந்தவனைப் பார்த்து,
பின் மயூரிகாவையும்
பார்த்தான்.

ஓங்கிய குரலிலும்,
அதட்டல் தொனியிலும்
மயூரிகா முகத்தில்
கோபச் சிவப்பு
பரவுவதைக் கண்ட
மதுரகீதன் விழிகள்,
வந்தவனைத்
துளைத்தெடுத்தது.

"இவர் யாரு மயூர்?
உன் பிரெண்டா?ஹலோ
சார்.நான் ஸ்ரீதரன் "

மயூரிகாவின் கோப
முகத்தையும்,மதுரகீதனின்
சல்லடையிடும்
பார்வையையும் கண்டு,
தன் குரலைத் தழைத்து
மென்மையாக்கினான்
ஸ்ரீதரன்.

“ஒண்ணும் இல்லைடா
மயூர்.உன்னோட அழகான
முகம் வாடுதேன்னு
சொன்னேன்”

கோபம் அகன்று வியப்பு
மேலிட,குழப்பத்துடன்
இவனுக்கு என்னவானது
என ஸ்ரீதரனின் முகத்தைக்
கேள்வியாகப் பார்த்தாள்
மயூரிகா.

“இந்த ரெட் சாரி உனக்கு
ரொம்ப அழகாயிருக்கு
மயூ.ஏன் ரோஸ்
வைக்கலை?ஆன்ட்டி
இருந்திருந்தா வைச்சு
விட்டிருப்பாங்க.
இனிமேல் மறக்காம
ரோஸ் வைச்சுட்டு வா
மயூ.நாளைக்கு மூவி
போகலாமா மயூ”

“ஆர் யூ ஆல்ரைட் ஸ்ரீ”

மீண்டும் அவள் முகம்
கோபத்தில் சிவந்திருந்தது.
இருந்தும்,குரலில் அதைக்
காட்டாமல் அமைதியாகவே
கேட்டாள்.

ஒரு கணம் விழித்து விட்டு,
"மயூ...நான்.."என
ஆரம்பித்து விட்டு,
சொல்லாமல் வார்த்தைகளை
விழுங்கினான் ஸ்ரீதரன்.

“அம்மா இதை உன்கிட்ட
கொடுத்துட்டு வர
சொன்னாங்க மயூ”என்றான்
அவள் முகம் பார்க்கத்
தயங்கியபடி.

ஒரு சிறிய சில்வர்
பக்கெட்டை எடுத்து
அவளிடம் கொடுத்தான்
ஸ்ரீதரன்.

“என்ன ஸ்ரீ இது”

“நேத்து தோப்புல
தேங்காய் போட்டோம்.
அம்மா உடனே பர்பி
செஞ்சுட்டாங்க.உனக்குப்
பிடிக்கும்னு கொடுத்து
விட்டிருக்காங்க மயூர்.
வருணையும்,உன்னையும்
பார்க்கலாம்னு தான்
காம்ப்பிளெக்ஸ்சுக்கு
வந்துட்டு இருந்தேன்.
உன் காரைப்
பார்த்துட்டு...”

“தேங்க்ஸ் ஸ்ரீ.நான்
வீட்டுக்குப் போய் ஆன்ட்டி
கிட்டப் பேசிக்கறேன்”

“சரி மயூ.நான்
கிளம்பறேன்”

“வீட்டுக்கு வா ஸ்ரீ.
தாத்தா பாட்டி
உன்னைப் பார்த்தா
ரொம்ப சந்தோஷப்
படுவாங்க.உன்னைப்
பத்திப் பேசாம
அவங்கனால இருக்க
முடியாது”

“ஆசையா தான்
இருக்கு.ஆனா வேலை
நிறைய இருக்கே மயூ.
இன்னொரு நாள்
கண்டிப்பா வர்றேன்.
பை மயூர்.உன் பிரெண்டை
இன்னொரு நாள் எனக்கு
இன்ட்ரொடியூஸ்
பண்ணி வை மயூர்.
பை சார்”

ஸ்ரீதரன் கிளம்பியதும்,
அவன் கொடுத்த சில்வர்
பக்கெட்டை காரின்
பின்னிருக்கையில் வைத்து
விட்டு,மதுரகீதனிடம்
திரும்பினாள் மயூரிகா.

“நான் கிளம்பறேன்”

மதுரகீதனிடம் சொல்லி
விட்டுக் கார்க் கதவில் கை
வைத்தவளின் கை பிடித்து
நிறுத்தினான் மதுரகீதன்.

“நாம இன்னும் பேசலை
மயூ”

“........”

“என்கிட்டப் பேச
மாட்டியா மயூ?நான் எப்படி
இருக்கேன்னு கேட்க
மாட்டியா?என்கிட்ட
எதாவது கேளு மயூ.
எதாவது பேசு மயூ.
ப்ளீஸ்...”

“எப்ப கனடாவில
இருந்து வந்தீங்க”

“போன மாசம் மயூ”

அவன் கையை விலக்கி
விட்டு,அவன்புறம்
திரும்பினாள் மயூரிகா.

“கார்ல உட்கார்ந்து
பேசலாம் மயூ”

“இப்படியே சொல்லுங்க”

“எதுக்கு?வெயில்ல நின்னு
என் முகம் டேன்
ஆயிடுச்சுன்னு அழுகவா”
பழைய நினைவில்
மதுரகீதன் பேச.

“பரவாயில்லை.சொல்லுங்க”

“இப்ப உன்கிட்டப்
பேசினாரே.அவர் யார் மயூ”

“இது தான் நீங்க பேச
வந்ததா”

“இல்லை.ஆனா நான்
தெரிஞ்சுக்கணும்”

“என் பிரெண்ட்”

“அது யார் எனக்குத்
தெரியாத பிரெண்ட்”

“என்னைக் கேள்வி கேட்கிற
உரிமையோ,தகுதியோ
உங்களுக்குக் கிடையாது
மிஸ்டர் மதுரகீதன்”

மயூரிகாவின் இரு
தோள்களிலும் கை வைத்து
அவள் முகத்தை
நெருங்கினான் மதுரகீதன்.

“எனக்குக் கிடையாதா”

“ஆமாம்.என்னைப் பிரிஞ்ச
நாலே மாசத்துல இன்னொரு
பொண்ணு கூடக்
கல்யாணத்தை நிச்சயம்
பண்ண உங்களுக்கு
என்னைக் கேள்வி
கேட்கிற தகுதி
கொஞ்சமும் கிடையாது”

ஒரு கணம் அதிர்ந்து
விட்டு,மறுப்பாகத் தலை
அசைத்தான் மதுரகீதன்.

“கோபத்தில பேசாதே
மயூ.என்னால இன்னொரு
பொண்ணை நினைக்க
முடியும்னு நீ நிஜமாலுமே
நம்பறயா மயூ”

உள்ளத்தில் பனிமழை
பொழிந்த போதும்,
விழிகளில் வெம்மையைக்
காட்டினாள் மயூரிகா.

“பதில் சொல்லு மயூ”
என்றான் அவள்
விழியோடு விழி கலந்து.

“..........”

“உன் மதுரன் உனக்கு
மட்டும் தான்னு உனக்குத்
தெரியும் கண்ணம்மா”

உருகிய உள்ளத்தைக்
காட்டாமல் அவன்
விழிகளில் இருந்து தன்
விழிகளைத் திருப்பினாள்
மயூரிகா.

“உனக்கு என் மேல
நிறைய கோபம் இருக்கும்.
அதுக்கு என்ன தண்டனை
வேணாலும் கொடு.ஆனா...
இப்படி மட்டும் பேச
வேண்டாம் மயூ.எனக்கு
நீ மட்டும் தான்...நீ
எனக்குக்
கிடைக்கலைனாலும்...
என் மனசுல நீ மட்டும்
தான் எப்பவும் இருப்பே.
என்னை நீ எவ்வளவு
வேணாலும் திட்டு,
கோபப் படு.ஆனா...”

“நானா எதுவும் பேசலை
மதுரன்.என்னைப்
பேச வைக்கறீங்க”

மதுரகீதன் பேச்சின்றி
ஊமையாக,அவன்
முகத்தைக் கூர்ந்தாள்
மயூரிகா.

“ஏன் அமைதி
ஆயிட்டீங்க"

அப்போது கார் ஒன்று
வந்து அவர்கள் அருகே
நின்றது.காரில் இருந்து
இறங்கிய வருணனை
இருவரும்
எதிர்பார்க்கவில்லை.

தன் தோள் மீதிருந்த
மதுரகீதன் கரங்களை
மெல்ல விலக்கினாள்
மயூரிகா.

“கார்ல ஏறு மயூ”

“வருண்...”

“ஆடிட்டர் உனக்காக
வெயிட் பண்ணிட்டு
இருக்கார்”

இரு ஆண்களையும்
பார்த்து விட்டு,
தயக்கத்துடன் காரில்
ஏறி அமர்ந்த மயூரிகா
பார்வையில்
அச்சமிருந்தது.
இருந்தாலும் காரைக்
கிளப்பிச் சென்றாள்.

“மிஸ்டர் மதுரகீதன்”

“சொல்லுங்க வருண்”

“இது தான் நான்
உங்களுக்குக் கொடுக்கிற
கடைசி வார்னிங்.மயூ
மேல கை வைக்கிற
தப்பை மறுபடியும்
பண்ணிடாதீங்க.
உங்களுக்கே தெரியும்
இந்த வருணன் யாருன்னு.
நான் சொல்ல
வேண்டியதில்லை”

தனது சொல்லம்போடு,
தனது அலட்சியப் பார்வை
ஒன்றையும் உடன்
செலுத்தினான் வருணன்.

“உங்களுக்கும் என்னைப்
பத்தி நல்லாவே தெரியும்
வருண்.நா....”

“தெரியலை.எனக்கு
உன்னைப் பத்தித் தெரியலை.
தெரிஞ்சிருந்தா...உன்னை
என் மயூ கூடப் பழக
விட்டிருக்க மாட்டேன்.
அவ கண்ணீர் சிந்தற
நிலைமை
வந்திருக்காது”

“........”

“நீ மயூவை மறந்துடு
மது.அது தான் உனக்கு
நல்லது”

“நீங்க என் மேல இருக்கிற
கோபத்தில,மயூவைப் பத்தி
யோசிக்க மாட்டீங்கறீங்க
வருண்.மயூனால நான்
இல்லாம வாழ முடியாது”

“போதும்!!”வருணன் குரல்
உயர்ந்திருந்தது.

“போதும் மது.இனி ஒரு
வார்த்தை பேசுனே...
என் கை என் பேச்சைக்
கேட்காது”

“பரவாயில்லை வருண்.
நீங்க என்னை அடிச்சா
நான் சந்தோஷமா
வாங்கிக்குவேன்.நான்
செஞ்ச தப்புக்கு
தண்டனை கிடைச்சதா
நினைச்சுக்குவேன்”

மதுரகீதன் பேச்சில் வாய்
விட்டுச் சிரித்தான் வருணன்.

“நீ செஞ்சது என்ன சின்னத்
தப்பா?இவ்வளவு சாதாரண
தண்டனை கொடுக்கிறதுக்கு?”

மதுரகீதன் முகத்தில்
வேதனை தன் வண்ணம்
பூசியது.

“எனக்கு எவ்வளவு கோபம்
வந்தாலும் சரி,உன் மேல
எவ்வளவு வெறுப்பு
இருந்தாலும் சரி,என்னால
உன்னை அடிக்க முடியாது
மது.உன்னை அடிச்சா
மயூவுக்குத் தான்
வலிக்கும்”கோபத்தில்
தொடங்கி மென்மையில்
தோய்ந்து முடிந்தது
வருணனின் வார்த்தைகள்.

வருத்தம் மறைந்து
மதுரகீதன் முகம்
புன்னகை கொண்டது.

“என்ன”

“மயூ மேல உங்களுக்கு
எவ்வளவு அன்புன்னு
நினைச்சேன் வருண்”

“அந்த அன்பு தான்
உன்னை என்கிட்ட
இருந்து காப்பாத்திட்டு
இருக்கு.நான் சொல்றதை
கவனமா கேளு மது.
நாங்க மயூவுக்கு
மாப்பிள்ளை பார்த்துட்டோம்.
மயூவை ஒத்துக்க
வைச்சுடுவோம்.
மயூவை மறக்கிறதைத்
தவிர உனக்கு வேற
வழியில்லை.அடிக்கடி
அவ கண்ணுல பட்டு,
அப்பாவோட பாசத்துக்கும்,
உன்னோட காதலுக்கும்
நடுவுல மயூ தவிக்கிற
மாதிரி ஒரு சூழ்நிலையை
ஏற்படுத்திடாதே”

“...........”

“நீ செஞ்ச தப்புக்கு நீ
மயூவை இழக்கிறது தான்
உனக்கான சரியான
தண்டனையா இருக்கும்
மது”

மதுரகீதன் பேச்சற்று
அதிர்ந்து நின்றிருக்க,
வருணன் பார்வை
கனல் கொண்டிருந்தது.

“நிலைமையைப் புரிஞ்சு
நடந்துக்குவீங்கன்னு
நம்பறேன்”

வருணன் குரலில்
சுயநினைவிற்கு வந்தான்
மதுரகீதன்.

“ஒரு நிமிஷம் வருண்”

“எஸ் மிஸ்டர் மதுரகீதன்”

“இப்ப மயூ கிட்டப்
பேசினாரே...அவர் தான்
நீங்க மயூவுக்குப்
பார்த்திருக்கிற
மாப்பிள்ளையா”

“ஆமாம்.ஸ்ரீதரன்.
என்னோட பெஸ்ட்
பிரெண்ட்.ரொம்ப
நல்ல பையன்.நீங்க
மயூவைப் பத்திக்
கவலைப் பட
வேண்டியதில்லை.
மயூவைத் தொந்தரவு
பண்ணாம விலகிப்
போயிடுங்க”

சில கணங்கள் மதுரகீதன்
முகத்தைப் பார்த்தபடியே
நின்றிருந்த வருணன்,தன்
காரில் ஏறி அமர்ந்தான்.

"இன்னொரு விஷயம்,
உங்க ரோமியோ
வேலையை எல்லாம்
இதோட நிறுத்திக்கங்க
மதுரகீதன்.குட்பை"

வருணன் அதிவேகத்தில்
கிளப்பிச் சென்ற
கார் எழுப்பிய மண்
புழுதி மதுரகீதன்
பார்வையை மறைத்தது.

உனக்கென எனை
தந்த பின்னே
என்னுயிர் வாங்கி
நீ சென்ற பின்னே
ஏதடி புது பந்தம்?
என்றும் நான்
உன் சொந்தம்!
எனைப் போலவே
நிலவே நீயும் தானடி!
உன் நெஞ்சில்
என்றும் என்
காதல் கீதம் தானடி!

கீதம் மயக்கும்....

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15746

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய இரவு வணக்கம்:)

கடந்த பதிவிற்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

மனமார்ந்த நன்றிகள்:):love:

கதையின் ஒன்பதாம்

அத்தியாயம் உங்களோடு.

வாசித்து உங்கள் உள்ளக்

கருத்தை வார்த்தையாய்

வடித்திடுங்கள்.நன்றி:)

ப்ரியமுடன்,
நித்திலா

15276

ஒளிர் விட்ட ஆதவன்
ஓய்வெடுக்க ஆயத்தமாகிக்
கொண்டிருக்கும் நேரம்.

தோட்டத்தில் இருந்து வீடு
திரும்பி இருந்தார்
கதிர்காமன்.மனைவி
கொடுத்த காபியைப்
பருகியபடியே வீட்டின்
அமைதியைக் கவனித்தார்.

“குழந்தைக எங்கே”

“வசு அவங்களுக்கு
எதோ வாங்கித்
தரணும்னு கூப்பிட்டுப்
போயிருக்காங்க”

“மது எங்கே”

“புது வீட்டுக்குப்
போனாங்க.இன்னும்
வரலை”

“பெயிண்டிங் வேலை
முடிஞ்சுதா”

“முடிஞ்சுதுன்னு தான்
சொன்னாங்க”

“ம்”

“வந்ததுல இருந்து
அந்த வீட்டு வேலையை
மட்டும் தான் பார்த்துட்டு
இருக்காங்க”

“ஆசையா
கட்டியிருக்கான்.
பார்க்கட்டும் பூர்ணி”

“இந்த வீடு பத்தாதா?
எதுக்கு அவ்வளவு பெரிய
வீடு”

“இது அவன் தாத்தாவோட
வீடு.அந்த வீடு அவனோட
உழைப்புல கட்டினது பூர்ணி”

“வீடா அது?மாளிகைங்க”

“இந்த வீட்டையும் தான்
மாளிகை மாதிரி எல்லா
வசதியும் இருக்கிற மாதிரி
மாத்தி இருக்கான்”

“ஆமாங்க.நம்மளோட
பழைய வீடா இதுன்னு
நிறைய நாள்
யோசிச்சிருக்கேன்”

“இந்த வீடு மதுவோட
சின்ன வயசு ஆசை
பூர்ணி.உங்களை ராணி
மாதிரி வாழ வைப்பேன்மான்னு
அடிக்கடி சொல்லுவானே.
அதை நிறைவேத்திட்டான்.
என்னோட ஆசையும் அது
தான்.மதுவால அது
நிறைவேறிடுச்சு.இப்ப
தான் எனக்கு
நிம்மதியாயிருக்கு”

“என்னோட நிம்மதி,
சந்தோஷம் எல்லாம்
உங்க கூட இருக்கிறதுல
தான் இருக்குங்க”

“தெரியும்மா”

கதிர்காமனின் பார்வையில்
வெளிப்பட்ட அன்பில்
பூர்ணிமாவின் மனது
நிறைவு கொண்டது.

“மாப்பிள்ளை கிட்டப்
பேசினயா”

“பேசிட்டேங்க.அவர்
மது கிட்டப் பேசறதா
சொன்னாருங்க.சீக்கிரமா
பேசி மது என்ன
சொன்னான்னு
சொன்னாருன்னா
பரவாயில்லை”

“அவசரப் படாதே பூர்ணி.
இது மதுவோட வாழ்க்கை.
நாம அவசரப்பட்டு எந்தத்
தப்பும் நடந்துடக் கூடாது.
என் பையன் இனியாவது
சந்தோஷமா வாழணும்”

“மது பழசை எல்லாம்
மறந்துட்டு சந்தோஷமா
வாழணும்னு தாங்க நான்
அவசரப் படறேன்”

“அவன் சந்தோஷம்
எங்கிருக்குன்னு முதல்
தெரிஞ்சுக்குவோம் பூர்ணி”

“மது அந்தப் பொண்ணை
மறந்திருக்க மாட்டான்னு
சொல்றீங்களா”

“உன் பையனைப் பத்தி
உனக்குத் தெரியாதா?
மதுவோட உயிரே அந்தப்
பொண்ணு தான்னு நான்
சொல்லுவேன்.நீ
கொஞ்சம் நிதானமா
இருந்திருக்கலாம் பூர்ணி”

பூர்ணிமா மௌனமாகி விட,
மனைவியைச் சிந்திக்க விட்டு
அமைதியானார் கதிர்காமன்.

“தாத்தா,பாட்டி”
அழைத்தபடியே ஓடி
வந்தனர் சித்ராவும்,
தர்ஷணாவும்.

“மெதுவா மெதுவா”இரு
பிள்ளைகளையும் தன்னருகில்
அமர்த்திக் கொண்டார்
கதிர்காமன்.

“என் செல்லக் குட்டிக
எங்க போயிருந்தாங்க”

“அம்மா எங்களை
ஷாப்பிங் கூட்டிட்டுப்
போனாங்க தாத்தா.புது
டிரெஸ்,புது ஸ்கூல் பேக்,
புது வாட்டர்கேன்,புது ஷூ
எல்லாம் வாங்கினோம்”

“பாட்டி உங்களுக்குப் பால்
கொண்டு வரேன்”

“வேண்டாம் பாட்டி.நாங்க
இப்ப தான் ஐஸ்கிரீம்
சாப்பிட்டோம்”

நாலைந்து ஷாப்பிங்
பைகளோடு உள்ளே வந்த
மகளிடம் விரைந்தார்
பூர்ணிமா.

“எதுக்கு நீயே
எல்லாத்தையும் தூக்கிட்டு
வர்றே வசு”

“டிரைவர் உள்ள கொண்டு
வந்து தர்றேன்னு தான்
சொன்னான்மா.நான்
தான் வேண்டாம்னு
சொல்லிட்டேன்”

“இப்படி மரியாதை
இல்லாமப் பேசாதேன்னு
உனக்கு எவ்வளவு தடவை
சொல்றது வசு.கொடு,நான்
கொண்டு வர்றேன்”

“அம்மா ப்ளீஸ்.நான்
டயர்டா வந்திருக்கேன்.
உங்க லெக்சரை
ஆரம்பிச்சுடாதீங்க.
வெயிட் எதுவும் இல்லை.
நானே எடுத்துட்டுப்
போயிடுவேன்.நீங்க
மாடி ஏற வேண்டாம்”

பைகளோடு படிகளில்
ஏறிச் சென்ற மகளை
கவலையுடன்
பார்த்திருந்தார் பூர்ணிமா.

ஸ்ரீரங்கநாயகி பவனம்.
கந்த ஷஷ்டி கவசமும்,
சாம்பிராணியின் வாசனையும்
வரவேற்க,வீட்டினுள்
சென்றான் கார்த்திகேயன்.

“மயூ எங்கிருக்கே”

“கிச்சன்ல இருக்கேன்
கார்த்தி.இங்க வா”

சமையலறைக்குச் சென்று
சமையல் மேடையில் ஏறி
அமர்ந்து கொண்டான்
கார்த்திகேயன்.

“மேடம் என்ன ஒரே
பக்திப் பரவசமா இருக்கீங்க”

“அம்மா இல்லை.பாட்டியும்
தோப்பில இருந்து வரலை.
அதான் நான் விளக்கேத்தி
வைச்சேன் கார்த்தி”

மயூரிகா முகத்தில்
வாட்டம் இல்லாததில்
நிம்மதி கொண்டான்
கார்த்திகேயன்.

“பர்பி எடுத்துக்கோ”

“பாட்டி செஞ்சாங்களா”

“இல்லை கார்த்தி.
ஸ்ரீயோட அம்மா செஞ்சது.
அவங்களுக்கு என் மேல
ரொம்பப் பாசம் கார்த்தி”

“எங்க மயூ மேல
எல்லாருக்குமே பாசம்
அதிகம் தான்”

“இன்னைக்கு என்ன
நடந்துச்சு தெரியுமா
கார்த்தி”சிரிப்புடன்
கேட்டவளை வியப்புடன்
பார்த்தான் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் அருகில்
சமையல் மேடையில்
ஏறி அமர்ந்து கொண்டாள்
மயூரிகா.

இருவரும் பர்பியைச்
சுவைத்தபடியே பேசத்
தொடங்கினர்.

“என்ன நடந்துச்சு?நீயும்,
மதுவும் சமாதானம்
ஆயிட்டீங்களா”

“இல்லை கார்த்தி.இது
நம்ம ஸ்ரீயைப் பத்தி”

“ஸ்ரீயைப் பத்தியா?
அவனைப் பத்தி என்ன..
உன் பிரெண்ட்ஸ்
யாரையாவது லவ்
பண்றானா?அதை நீ
கண்டு பிடிச்சுட்டியா”

“இல்லைடா.ஸ்ரீ
இன்னைக்கு என்கிட்டப்
பேசினது வித்தியாசமா
இருந்துச்சு கார்த்தி”

“வித்தியாசமாவா”

“ம்.இவ்வளவு நாள்
இல்லாம,புதுசா அழகா
இருக்கேங்கறான்.ரோஸ்
வைக்கலையாங்கறான்.
மூவி போகலாமாங்கறான்”

“ஸ்ரீயா இப்படியெல்லாம்
பேசுனான்?அவனுக்கு மறை
கழண்டுடுச்சுன்னு
நினைக்கிறேன்”

“உடனே அவன்கிட்ட
சண்டைக்குப் போயிடாதே
கார்த்தி”

“வருண் கேட்டிருக்கணும்.
அவன் எலும்பை எண்ணி
இருப்பான்”

“வர வர வருணுக்கு
ரொம்பக் கோபம் வருது.
அவன்கிட்ட சொல்லிடாதே
கார்த்தி”

“அவன் என்ன மூட்ல
இருக்கான்னே இப்பெல்லாம்
எனக்குப் புரிய
மாட்டீங்குது மயூர்”

“இன்னைக்கு மதுரன்
எதோ பேச வந்தார்
கார்த்தி”

“பேசினயா”

“அப்ப தான் திடீர்னு ஸ்ரீ
வந்து உளறித் தள்ளிட்டான்”

“அடப் பாவமே!மது வேற
இருந்தாரா?அவர் ஒண்ணும்
சொல்லலையா”

“யாருன்னு கேட்டார் கார்த்தி”

“எதோ காரமா பதில்
சொல்லி இருக்கே.முகம்
வாடுது”

“ம்.பாவம் மது.நான்
அப்படிப் பேசி இருக்கக்
கூடாது”

“காலம் ரொம்ப
வேகமானது மயூ.உன்
கோபத்தில உங்க வாழ்க்கை
கரைஞ்சு போயிடாமப்
பார்த்துக்கோ”

“மதுரன் என்ன பண்ணி
இருக்கார் தெரியுமா?
என்னால எப்படிக் கோபப்
படாம இருக்க முடியும்
கார்த்தி”

பழைய பிரச்சனையே
ஓய்ந்தபாடில்லை.புதிதாக
என்ன நடந்திருக்கும்?

மயூரிகா முகத்தில் கோபம்
சுடர் விடுவது கண்டு,
பேச்சை மாற்றினான்
கார்த்திகேயன்.

“மதுவைப் பத்தி உன்
கோபம் குறைஞ்சதுக்கு
அப்புறம் பேசலாம் மயூ”

“பேச ஒண்ணும் இல்லை
கார்த்தி.நாங்க
பேசறதுக்குள்ள வருண்
வந்துட்டான்.என்னைத்
துரத்தி விட்டுட்டான்”

“நெத்திக் கண்ணைத்
திறந்திருப்பானே”

“ம்.மது வேற என்
பக்கத்துல....தோள் மேல
கை வைச்சுப் பேசிட்டு
இருந்தாரா....”

“போச்சு.ரெண்டு பேரையும்
எதுக்குத் தனியா விட்டே?
மது சாது.பயமில்லை.
வருண் ருத்ரனாச்சே”

“கொஞ்சம் பயமா தான்
இருந்துச்சு.ஆனா வருண்
ருத்ரனா இருந்தாலும்
அவனால மயூவை எரிக்க
முடியாது கார்த்தி.எனக்கு
வலியைத் தர அவனால
முடியாது.மதுவோட வலி
என்னோட வலின்னு
வருணுக்கு நல்லாவே
தெரியும் கார்த்தி”

“அதென்னவோ உண்மை தான்”

“நான் வந்ததுக்கு அப்புறம்
என்ன நடந்துச்சுன்னு
தெரியலை.நீ பேசிப்
பாரு கார்த்தி”

“சரிடா.ஸ்ரீ கிட்ட நானே
பேசறேன்.அவன் இனி
உன் கிட்ட எதுவும் உளற
மாட்டான்”

“வேண்டாம் விடு கார்த்தி.
எனக்கு அவனை நினைச்சா
சிரிப்பு தான் வருது.அப்பா
சொன்னது ஸ்ரீயைப் பத்தியோ,
அதான் இப்படி உளர்றானோன்னு
யோசிச்சேன்.ஆனா ஸ்ரீயா
இருந்தா நம்மளுக்குத்
தெரியாம இருக்க
வாய்ப்பில்லை.தனு நம்ம
கிட்ட சொல்லி இருப்பா.
வருணுக்கும் தெரியாம
இருக்காது”

அந்த மடையனுக்குத்
திடீரென்று என்னவானது?

“நீ மாப்பிள்ளை பிரச்சனையை
விடு மயூர்.அதை நாங்க
பார்த்துக்கறோம்.நீ மதுவைப்
பத்தி மட்டும் யோசி”

“ம்”

இருவரும் சிறிது நேரம்
அமைதியாக இருந்தனர்.

“தனு கிட்டப் பேசினயா?
கேட்கலாம் கேட்கலாம்னு
நினைச்சு மறந்து
போயிடறேன்”

“பேசினேன் மயூ.நீ
அவளை நினைச்சுக்
கவலைப் படாதே”

“தினமும் ரெண்டு
நிமிஷமாவது பேசிடு
கார்த்தி.பாவம் அவ.நீ
பேசலைன்னு ரொம்ப
வருத்தப் படறா”

“சரி மயூ”

ஸ்ரீதருக்கு என்னவானது?
வருண் குணம் தெரிந்தும்
மயூவிடம் அவ்வாறு
பேசும் துணிவு
கொண்டானா?ஏதோ
சரியில்லையே!

ஸ்ரீ நற்குணங்கள் வாய்க்கப்
பெற்றவன்.இங்கு
அனைவருக்கும் அவனைப்
பிடிக்கும்.மயூவுக்கும்
அவனைப் பிடிக்கும்.
அப்படியென்றால்...ஸ்ரீ
தானா அந்த மாப்பிள்ளை?
வருணின் வேலையா இது?

எந்தப் பெண்ணும் ஸ்ரீயை
மணக்க மறுக்க மாட்டாள்.
ஆனால் மயூ மனது
மதுவிடம் உள்ளதே!

வருண் ஏன் சிக்கலை
அதிகப் படுத்துகிறான்?
மயூவிற்குத் தெரிந்தால்...
கடவுளே!வருணை
மன்னிக்க மாட்டாளே!

இல்லை!இல்லை!ஸ்ரீயாக
இருக்காது.வருணுக்கு
மயூவின் மகிழ்ச்சியைத் தவிர
எதுவும் முக்கியமில்லை.
மயூ மனம் நோகும் செயலை
அவன் செய்ய மாட்டான்.

ஒரு வேளை ஸ்ரீயாக
இருந்தால்...வருணே
காரணமாக இருக்க
வேண்டும்.இன்று
வருணுடன் பேசாமல்
விடப் போவதில்லை!

மனதினுள் கேள்விகள்
சுழன்றாலும் மயூரிகாவுடன்
பேச்சைத் தொடர்ந்தான்
கார்த்திகேயன்.

பெயிண்ட் வாசனையில்
நிற்க முடியாமல் தோட்டத்தில்
அமர்ந்திருந்த மதுரகீதன்
கண்கள் எரிச்சல் தாளாமல்
நீரை வழிய விட்டது.

பாவம் இந்த வேலை
செய்பவர்கள்.எப்படி
நாள் முழுவதும் வேலை
செய்கிறார்கள்?கொஞ்ச
நேரம் நின்றாலே கண்கள்
எரியத் தொடங்கி விடுகிறது.

“நீ எதுக்கு இப்ப உள்ள
போனே மது.நாளைக்குப்
போய் பார்க்கலாமல்ல”
என்றபடியே வீட்டினுள்
இருந்து வந்து மதுரகீதன்
அருகில் அமர்ந்தான் கந்தவேல்.

“எப்படி இருக்குன்னு
பார்க்கலாம்னு போனேன்
மாமா”கீற்றான புன்னகையோடு
கந்தவேலின் கரங்களைப்
பிடித்துக் கொண்டான்
மதுரகீதன்.

“தேங்க்ஸ் மாமா.நான்
சொன்ன மாதிரியே வீடிருக்கு.
நீங்க மட்டும் பக்கத்தில
இருந்து வேலை
வாங்கலைன்னா...இந்த
வீடு இவ்வளவு அழகா
உருவாகி இருக்காது மாமா”

“இது ஒரு சின்ன விஷயம்.
இதுக்குப் போய் தேங்க்ஸ்
சொல்லிட்டு..”

“இது சின்ன விஷயம்
இல்லை மாமா.வீடு
கட்டறது எவ்வளவு
கஷ்டம்னு எனக்குத்
தெரியும் மாமா.எவ்வளவு
அலைச்சல்,எவ்வளவு
டென்சன்...”

“அதையெல்லாம் விடு.
நான் உன்கிட்ட
முக்கியமான விஷயம்
பேசணும் மது”

“என்ன மாமா”

“உன்னோட இந்த
பிருந்தாவனத்தில,உன்
கூட வாழப் போற ராதை
யார் மது”

கந்தவேலின் கேள்வியில்
மதுரகீதன் முகம் பிரகாசித்தது.

“மயூ தான் மாமா”
என்றவனின் குரல்,
மயிலிறகின் மென்மையைச்
சுமந்திருந்தது.

நீ அந்தப் பெண்ணை
மறக்க மாட்டாய் என
நான் நினைத்தது
சரியாகத் தான்
இருக்கிறது.ஆனால்
அவள்?

“நான் வாழ்ந்தா மயூ
கூடத் தான் வாழ்வேன்
மாமா.அவ கூட வாழத்
தான் அவளைப் பிரிஞ்சு
போனேன்.அவளை
மறந்துட இல்லை”

அத்தையிடம் எவ்வாறு
இதைச் சொல்வேன்?

“நீ மயூவைப் பார்த்தியா?
பேசினயா?உன் கிட்டப்
பேசுச்சா”பதற்றத்துடன்
வினவினான் கந்தவேல்.

“தினமும் பார்த்துட்டுத்
தான் இருக்கேன் மாமா.
பேச முயற்சி பண்ணிட்டு
இருக்கேன்”

அப்படியென்றால்...
அப்பெண்ணிற்கு இன்னும்
மணமாகவில்லை
போலிருக்கிறதே!

“மயூவுக்கு இன்னும் க...”

“இல்லை மாமா.என்
மயூவுக்கு நான் வருவேன்னு
தெரியும் மாமா”


என்ன சொல்கிறான் இவன்?

“மயூ இவ்வளவு நாள்
கல்யாணம் பண்ணாம
இருக்கிறது உன்னை
நினைச்சுத் தான்னு
சொல்றயா”

“அது தான் உண்மை மாமா”

“மயூ மனசு இத்தனை
வருஷத்துல மாறி
இருக்கலாம் மது”

“என் மயூவோட அன்பு
மாறாது மாமா”

“நீ மயூவை அவ்வளவு
வேதனைப் படுத்தினதுக்கு
அப்புறமுமா”

“மயூ என்னைப்
புரிஞ்சுக்குவா மாமா”

காதல் பித்து இவனுக்கு
முற்றிப் போய் விட்டது.

“யோசிச்சுப் பாரு
மது.அந்தப் பொண்ணு
உன்னை நினைச்சுட்டு
இருக்கும்னு எப்படி
நினைக்கிறே?சொல்லக்
கஷ்டமா தான் இருக்கு.
அந்தப் பொண்ணுக்கு
இப்ப உன் மேல
வெறுப்பு மட்டும் தான்
இருக்கும் மது”

“இல்லை மாமா.என்
மயூவோட அன்பு கொஞ்சம்
கூடக் குறையலை மாமா.
என்னை அவளுக்குப் புரிய
வைச்சு என்னை ஏத்துக்க
வைப்பேன் மாமா”

“நீ ஆசைப்பட்ட
பொண்ணோட நீ
சந்தோஷமா வாழணும்னு
தான் நானும்
நினைக்கிறேன்.ஆனா
அது நடக்க வாய்ப்பு
இருக்கிற மாதிரி
தெரியலையே.பழசை
எல்லாம் மறந்துட்டியா மது”

“மறக்கலை.நான் அதை
நம்பவும் இல்லை.என் மயூ
வேதனைப் படறதை என்னால
பார்க்க முடியலை மாமா.
என்னாலயும் இனி மயூவைப்
பிரிஞ்சு இருக்க முடியாது
மாமா”

மதுவின் இந்த உறுதி
குடும்பத்தின் நிம்மதியை
உருக்குலைத்து விடுமே!

குடும்பத்தை விடக் காதல்
பெரிதாகப் போய் விட்டதா
இவனுக்கு?இது மதுவின்
குணம் இல்லையே!

அப்பெண் காத்திருக்கிறாள்
என்றால்..அவளைக் கை
விடுவது பாவமல்லவா?
ஆனால்,மது அவள் கை
பிடிப்பதும் எளிதில்லையே!
ஒரு வேளை...காலத்தின்
ஓட்டத்தில் காட்சிகள்
மாறுமா?மதுவின் காதல்
கை கூடுமா?

“அந்தப் பொண்ணுகிட்ட
உன் மேல எந்தத் தப்பும்
இல்லைன்னு சொல்லிட்டியா
மது?உண்மையை
சொல்லிட்டியா?”

“எந்த உண்மையை சொல்ல
சொல்றீங்க மாமா?நீங்க
உண்மைன்னு நம்பிட்டு
இருக்கிறதையா?”

“.......”

“என் கண்ணால பார்க்காத
எதையும் நான் நம்ப
மாட்டேன் மாமா.அதே
மாதிரி என் மயூ
வார்த்தைகள்ல எனக்கு
நம்பிக்கையிருக்கு.
அன்னைக்கு என்ன
நடந்துச்சுன்னு எனக்குத்
தெரியாது.இனி
தெரிஞ்சுக்கவும்
வழியில்லை.என்
மயூவை நான்
நம்பறேன்.எங்க
கல்யாணம் கண்டிப்பா
நடக்கும்.எந்தத் தடையும்
இல்லாம நடக்கும்”

“மயூவை எப்படி சமாதானப்
படுத்துவே மது”

“என்னால உண்மையை
சொல்லி மயூவை இழக்க
முடியாது மாமா.அதே
சமயம் பொய் சொல்லி
மயூவை ஏமாத்தவும்
முடியாது”

“என்ன செய்யப் போறே மது”

“நான் மயூ மேல
வைச்சிருக்கிற அன்பு
கேள்விக்குறியாயிடுச்சு.
ஆனா மயூ என் மேல
வைச்சிருக்கிற உன்னதமான
அன்பு அப்படியே தான்
இருக்கு.அந்த அன்பே
மயூவை என்கிட்டக்
கொண்டு வந்து சேர்க்கும்
மாமா”

“எனக்கு என்ன சொல்றதுன்னு
தெரியலைப்பா”

“அப்ப நடந்ததையும்,இப்ப
நடக்கிறதையும் நினைச்சுப்
பாருங்க மாமா.நல்லா
யோசிச்சுப் பாருங்க.
உங்களுக்கே உண்மை
புரியும்”

“.......”

“நடந்த எதையும் நான்
மயூகிட்ட கண்டிப்பா சொல்ல
மாட்டேன் மாமா.அவ
கோபத்தை என்னால
தாங்கிக்க முடியும்.அவ
வெறுப்பை என்னால தாங்க
முடியாது மாமா.என்னை
வெறுக்கிற நிலைமை
வந்தா...என் மயூவோட
மென்மையான இதயம்
நொறுங்கிப் போயிடும் மாமா.
அது நடக்கக் கூடாது.
இனியாவது அவ
சந்தோஷமா வாழணும்”

“ரிலாக்ஸ் மது.கொஞ்ச
நேரம் அமைதியா இரு”

“என்னால அமைதியா
இருக்க முடியாது மாமா”

“நீயும்,மயூவும் சேர்ந்தா
முதல் சந்தோஷப் படறது
நானா தான் இருப்பேன் மது.
நீ சொல்றதே உண்மையா
இருக்கட்டும்.உங்க
கல்யாணம் நடக்கட்டும்”

“என் வாழ்க்கை மயூவோட
தான்னு நான் எப்பவோ
முடிவு பண்ணிட்டேன் மாமா.
அது எப்பவும் மாறாது.ஒரு
தடவை என் மயூவை
நான் இழந்துட்டேன்.இனி
யாருக்காகவும் என்
மயூவை நான் இழக்க
மாட்டேன்.நாளையோட
எல்லா பிரச்சனையும்
முடிஞ்சுடும் மாமா”

உறுதி தெறித்த மதுரகீதன்
குரல்,இனியும் தன்
காதலை இழக்கத் தன்னால்
முடியாது என்பதைத்
தெளிவாகச் சொல்லியது.

தன்னைச் சுற்றிப்
பின்னப்படும் வலையை
அறுத்தெறிந்து மயூரிகாவைச்
சென்றடையுமா
மதுரகீதனின் காதல்?

உன்னுடன் வாழ்ந்திடவே
இக்காதல் மாளிகை!
நீ வாராது போனாலோ
நான் வாழ்ந்திடும்
கல்லறை!

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15745

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய மாலை வணக்கம்:)

கதைக்குள் செல்வதற்கு

முன்னால் ஒரு சிறிய

நன்றி நவிழல்:)

ராதை தேடிய கீதம்

பத்தாம் அத்தியாயத்தைத்

தொட்டு விட்டோம்.

இது வரை ராதை தேடிய

கீதத்தை வாசித்து

விருப்பம் தெரிவித்த

தோழமைகள்,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட தோழமைகள்

ஒவ்வொருவருக்கும் எனது

அன்பான நன்றிகள்😍:)

உங்களுக்கு என்றும் எனது

அன்பும்,நன்றியும்

உரித்தாகும்:):)

வாருங்கள்,வருணன் யார்

என்று அறிந்து கொள்வோம்:)

ப்ரியமுடன்,
நித்திலா

15460

கதவைத் தட்டும் சத்தம்
எங்கோ தொலைவில்
கேட்பது போல் இருந்தது.
பிரிக்க மனமில்லாமல்
இமைகளைப் பிரித்தாள்
மயூரிகா.

மணி எத்தனையாயிற்று?
அதற்குள் விடிந்து விட்டதா?

பூமணி அக்கா எதற்கு
எழுப்புகிறார்கள்?மெத்தையில்
இருந்து எழ மனமில்லாமல்
எழுந்து சென்று கதவைத்
திறந்தாள் மயூரிகா.

“வருண் தம்பி வந்திருக்கு
பாப்பா”

“வர்றேன்கா”

கலைந்திருந்த முடியை
அள்ளி கொண்டையிட்டுக்
கொண்டே கீழிறங்கிச் சென்ற
மயூரிகா,சோபாவில்
அமர்ந்திருந்த வருணனின்
அருகில் சென்று அமர்ந்தாள்.

“குட்மார்னிங் வருண்”

“குட்மார்னிங் மயூ.
நல்ல தூக்கம் போலிருக்கு”

“ம்.எதுக்கு என் தூக்கத்தைக்
கெடுத்தே வருண்”

“மணி எட்டு மேடம்.
அம்மா உன்னை சாப்பிடக்
கூப்பிட்டு வர சொன்னாங்க
மயூர்.தாத்தாவும்,பாட்டியும்
கோவில்ல இருந்து நேரா
அங்க வந்துடுவாங்க”

“பூமணி அக்கா இந்நேரம்
சமைச்சிருப்பாங்களே.அக்கா
என்ன டிபன்”

“கிச்சடி பாப்பா.சட்னி,
சாம்பார் எல்லாம் ரெடி”

“பாட்டி எதுவும்
சொல்லலையாக்கா”

“இல்லை பாப்பா.
கோயிலுக்குப் போயிட்டு
வர்றோம்னு மட்டும் தான்
சொன்னாங்க”

“சமைச்சதை வேஸ்ட்
பண்ண வேண்டாம்.
அம்மா கிட்ட
சொல்லிக்கறேன் மயூர்”

“அத்தை கிட்ட சாரி
சொன்னேன்னு சொல்லு.
லன்ச்சுக்கு வர்றேன்னு
சொல்லு வருண்.கிச்சடி
எடுத்துட்டுப் போ.மாமா
விரும்பி சாப்பிடுவார்.
அக்கா...”

“உடனே போட்டு தம்பி
கார்ல வைச்சுடறேன்
பாப்பா”பூமணி
அங்கிருந்து செல்ல.

“நீ சரியா
சாப்பிடறதில்லைன்னு
பூமணி அக்கா
சொல்றாங்க மயூ”

“அவங்க அப்படித் தான்
சொல்லுவாங்க.உனக்குத்
தெரியாதா”

“அதை விட்டுடலாம்.
ஏன் மூக்குல பேசிட்டு
இருக்கே”

“என்னன்னே தெரியலை
வருண்.திடீர்னு சளி
பிடிச்சுடுச்சு”

“பாவம்.பச்சைப் பாப்பா”

“வருண்...”

“போய் குளிச்சுட்டு வா.
ரெண்டு பேரும் சாப்பிடலாம்”

“அத்தை உனக்கு வெயிட்
பண்ணிட்டு இருப்பாங்க
வருண்”

“இங்கயும் சாப்பிடுவேன்.
அங்கயும் சாப்பிடுவேன்.
பிப்டி பிப்டி”

“அப்ப சரி”

செய்தித்தாளைப் புரட்டிக்
கொண்டிருந்த வருணனை
அதிக நேரம் காக்க
வைக்காமல்,துரிதமாகக்
குளித்துத் தயாராகி
உணவருந்தும் மேஜைக்கு
வந்து சேர்ந்தாள் மயூரிகா.

பரிமாற வந்த பூமணியை
அனுப்பி விட்டு,தானே
மயூரிகாவிற்குத் தட்டு
வைத்துப் பரிமாறி விட்டு,
தனக்கும் போட்டுக்
கொண்டான் வருணன்.

“ஏன் சரியா
சாப்பிடறதில்லை?
மாமாவும்,அத்தையும்
புதுசா பெங்களூர்
போகலையே”

“பூமணி அக்கா என்
மேல இருக்கிற
பாசத்துல எதாவது
சொல்லுவாங்க.
அதையே பிடிச்சுட்டுப்
பேசிட்டு இருக்காதே
வருண்”

“நீ ரொம்ப மாறிட்டே
மயூர்”

தட்டில் இருந்து மயூரிகா
நிமிர்ந்து பார்க்க,
அவளுக்குச் சட்னி
ஊற்றினான் வருணன்.

“ஏன் வருண் இப்படி
சொல்றே?நான் எப்பவும்
போல தான் இருக்கேன்”

“நம்பிட்டேன்”

மதுவைப் பற்றிப் பேச
மறுப்பதைச் சொல்கிறானா?

“சரியா சாப்பிடறதில்லை.
சரியா தூங்கிறதில்லை.
இதெல்லாம் சரியில்லை
மயூ”

“அதெல்லாம் நான் நல்லா
தான் சாப்பிடறேன்.நேத்து
நைட் பூரி,முட்டை குருமா
புல்லா சாப்பிட்டேன்
தெரியுமா?கார்த்தியை
வேணும்னா கேட்டுப்
பாரு”

“சரி.கண்ணுல தூக்கம்
தெரியுதே”

“நிறைய யோசனை.
மதுவைப் பத்தி,உன்னைப்
பத்தி,ஸ்ரீயைப் பத்தி...”

பாதியில் நின்ற பேச்சில்,
அவள் முகத்தைக்
கேள்வியுடன் பார்த்தான்
வருணன்.

“ஸ்ரீயைப் பத்தி எதுக்கு
யோசிக்கறே மயூ”

“இல்லை...அப்பா
சொன்னதெல்லாம்
பொருந்தற மாதிரி ஸ்ரீ
ஒருத்தன் தான்
இருக்கான்.அதான்
அப்பா சொன்ன
மாப்பிள்ளை ஸ்ரீயோன்னு
ஒரு டவுட் வருண்.
ஆனா ஸ்ரீயா இருந்தா,
கல்யாணப் பேச்சு
எடுத்தவுடனே நமக்குத்
தெரிஞ்சிருக்குமே.நாம
எதாவது பண்ணி
மாப்பிள்ளையைத்
துரத்திடுவோம்னு
அப்பா இந்த தடவை
உஷாரா யாருன்னே
சொல்லலை வருண்”

“இது அநேகமா
குணவதியோட ஐடியாவா
இருக்கும் மயூ”

“இந்தப் பாட்டிக்கு எதுக்கு
இந்த வேலை”

“மாப்பிள்ளையைப் பத்தி
யோசிச்சுக் கவலைப் படாதே,
நான் பார்த்துக்கறேன்னு
சொன்னனா இல்லையா?நீ
எதுக்கு யோசிச்சு குழம்பிட்டு
இருக்கே மயூ?”

“இல்லை வருண்.நீ
இருக்கும் போது,நான்
எதுக்குக் கவலைப் படப்
போறேன்?திடீர்னு
தோணுச்சு”

“சும்மா மனசைப் போட்டுக்
குழப்பிட்டு இருக்காதே
மயூ.நான் எல்லாத்தையும்
பார்த்துக்குவேன்”

அவனைப் பாசத்துடன்
பார்த்தபடியே அவன் தட்டில்
கிச்சடியை வைத்தாள்
மயூரிகா.

“இல்லை வருண்.
இவ்வளவு நாள் மாதிரி
ஈஸியா வேண்டாம்னு
சொல்ல முடியாது.ஸ்ரீக்கு
என் மேல அப்படி ஒரு
இன்ட்ரெஸ்ட் இல்லை.
நான் மறுத்தா அவன்
எதுவும் நினைக்க
மாட்டான்.ஆனா
ஸ்ரீயோட பேமிலி,
முக்கியமா ஸ்ரீயோட
அம்மா.அவங்க
வருத்தப் படுவாங்க.
இவ்வளவு வருஷமா
இருக்கிற நட்புல,
என்னால விரிசல்
வந்துடுமோன்னு
எனக்குக்
கவலையாயிருக்கு
வருண்”

“என் மேல உனக்கு
நம்பிக்கை இல்லையா?
யார் மனசும் கஷ்டப்
படற மாதிரி எதுவும்
நடக்காது.இதோட நீ
ஸ்ரீயைப் பத்தின
யோசனையை,
கவலையை விட்டுடு.
பேசாம சாப்பிடு”

மயூரிகாவை நன்றாகச்
சாப்பிட வைத்து விட்டே
எழுந்தான் வருணன்.

“நான் கிளம்பட்டுமா மயூ”

“ம்”

“நான் கொடுத்த டைம்
ஞாபகம் இருக்கும்னு
நினைக்கிறேன்”

தன் முகம் பார்க்காமல்
தலை கவிழ்ந்தவளிடம் ஓர்
கூர்மையானப் பார்வையைச்
செலுத்தி விட்டுக் கிளம்பிச்
சென்றான் வருணன்.

இரண்டு மணியைத் தாண்டி
நேரம் விரைந்து கொண்டிருந்தது.

ஸ்ரீரங்கநாயகி டவர்ஸ் அலுவல்
அறையில் வருணனுக்கு
எதிராக அமர்ந்திருந்தாள்
தன்யஸ்ரீ.

“கார்த்தியைப் பத்தி
கம்பிளெயிண்ட் பண்ண
வந்திருக்கியா தன்யா”

“இல்லை வருண்.நான்
மயூவைப் பத்திப்
பேசலாம்னு வந்தேன்”

“........”

“இவ்வளவு நாளும் மயூ
மனசுல காதல் இருக்கிறது
தெரியாம நான்
என்னென்னவோ உளறி
இருக்கேன்”

“கார்த்தி சொன்னானா”

“இல்லை.அவர்
புலம்பினதுல இருந்து
நானா புரிஞ்சுக்கிட்டேன்”

“ம்”

“மயூ சந்தோஷத்துக்காக
எதையும் செய்யத் தயாரா
இருக்கிற நீங்க,அவளை
ஏன் மது கூட சேர்த்து
வைக்கலை வருண்”

“மயூ அதை விரும்பலை”

“.........”

“அவளுக்காக மது கிட்டப்
போய் யாரும் பேசக்
கூடாதுன்னு சொல்லிட்டா
தன்யா”

“.........”

“இன்னும் தெளிவா
சொல்லணும்னா,மது
அவளைத் தேடி வரணும்னு
இருக்கா”

“..........”

“மயூ விஷயத்துல,மயூ
பேச்சை மீறி என்னாலயோ,
கார்த்தினாலயோ எதுவும்
செய்ய முடியாது.
நாங்களும் மதுவுக்காகக்
காத்திருந்தோம்.இப்ப
மது வந்துட்டான்.
இனியும் நாங்க பேச
முடியாது.மயூ தான்
பேசணும்.மயூ என்ன
முடிவுக்கு வர்றாளோ,
அதை நாங்க
ஏத்துக்குவோம்.
எங்களுக்கு மயூ
விருப்பம் மட்டும்
தான் முக்கியம்”

இவர் என்ன இப்படிச்
சொல்கிறார்?மயூவுக்கும்,
மதுவுக்கும் இடையில்
என்ன பிரச்சனையாக
இருக்கும்?காதலர்கள்
பிரச்சனையில தலையிட
வேண்டாமென்றோ
இல்லை மயூ பேச்சை மீற
முடியாமலோ இவர்கள்
அமைதி காக்கிறார்கள்.
இப்படி இருந்தால் எப்படி
மயூ வாழ்க்கையைச் சரி
செய்வது.மயூ கோபித்தால்
கோபித்துக் கொள்ளட்டும்.
நான் மதுவிடம் பேசத்
தான் போகிறேன்.

“தனு உன்னை தான்
கூப்பிட்டு இருக்கேன்”

“ஆங்...சொல்லுங்க வருண்”

“மயூவுக்கு நல்லது
செய்யறதா நினைச்சு
எதாவது முட்டாள்தனம்
பண்ணி வைச்சுடாதே.
மயூ கோபத்தை நீ
பார்த்ததில்லை.அதுவும்
மது விஷயத்துல அவ
யார் தலையிடறதையும்
விரும்ப மாட்டா.உங்க
ரெண்டு பேரோட
உறவுலயும் எந்த
விரிசலும் வரக்
கூடாதுன்னு தான்
இதை சொல்றேன்.
புரிஞ்சு நடந்துக்கோ”

“ஓகே வருண்.நான் ம...”

கதவு மெலிதாகத் தட்டப்
பட்டது.

“எஸ் கமின்”

திறந்த கதவருகே
நின்றிருந்த மதுரகீதனைக்
கண்ட வருணன் விழிகளில்
தோன்றிய வியப்பு உடனே
மறைந்தது.இதழ்கள்
இகழ்ச்சிப் புன்னகை
ஒன்றைச் சிந்தியது.

“உள்ள வாங்க மிஸ்டர்
மதுரகீதன்”

அப்பெயரில் திரும்பிப்
பார்த்த தன்யஸ்ரீயின்
பார்வை மதுரகீதனை
அலசியது.

மயூவிற்குப் பொருத்தமானவர்
தான்.இவர் முகத்திலும்
சோகம் தெரிகிறது.
இவரிடம் கண்டிப்பாகப்
பேச வேண்டும்.

“கிளம்பு தனு.நாம
அப்புறம் பேசலாம்”

“ஓகே வருண்”

தன்யஸ்ரீ செல்ல வழி விட்டு
நின்றான் மதுரகீதன்.
அவனைப் பார்த்து சிநேகப்
புன்னகை புரிந்தாள்
தன்யஸ்ரீ.அவனும்
பதிலுக்குப் புன்னகைத்தான்.

“தனு...”வருணனின்
அதட்டலில் மதுரகீதனிடம்
பேசும் ஆசையைக் கை
விட்டு,ஒரு தலையசைப்புடன்
விடை பெற்றுச் சென்றாள்
தன்யஸ்ரீ.

தன்யஸ்ரீ பின்னால் கதவு
சாத்திக் கொள்ள,“வெல்கம்
ஹீரோ.உட்காருங்க
மிஸ்டர் மதுரகீதன்”
என்றான் இகழ்ச்சிப்
பார்வையோடு.

“தேங்க்ஸ் வருண்.உங்க
கோபம் நியாயமானது.
நீங்க என்னை
அடிச்சாலும் தப்பில்லை”

“அப்புறம்”

“மயூ உங்களைப் பத்தி
நிறைய பேசுவா.எனக்கும்
உங்க அன்பைப் பத்தித்
தெரியும்”

“ஓ!காதலிக்கிறவங்க
அவங்களைப் பத்தி மட்டும்
தான் பேசுவாங்கன்னு
நினைச்சனே”

“மயூ அப்படி இல்லை”

“அப்புறம்”

“என்ன அப்புறம்”

“ரோடு ரோடா நிற்காம
தைரியமா ஆபிஸ்சுக்கே
வந்திருக்கீங்களே!என்ன
விஷயம் மிஸ்டர்
மதுரகீதன்?மயூ
கல்யாணத்துக்கு வாழ்த்து
சொல்ல வந்தீங்களா?”

“கல்யாண விஷயத்துல
விளையாடாதீங்க வருண்”

“நீங்க விளையாடாத
விளையாட்டா ஹீரோ”

தன் உணர்வுகளைக்
காட்டாது மறைத்து,
வருணனின் துளைக்கும்
பார்வையை எதிர்
கொண்டான் மதுரகீதன்.

“என்னைக் காயப் படுத்தப்
பேசறீங்கன்னு எனக்கு
நல்லாவே தெரியும் வருண்.
நான் தாங்கிக்குவேன்.நீங்க
யாரையோ மாப்பிள்ளைன்னு
சொன்னது மயூவுக்குத்
தெரிஞ்சா...அவ எவ்வளவு
வேதனைப் படுவா?அதை
யோசிக்க மாட்டீங்களா?என்
மேல இருக்கிற கோபத்தில
உங்க உறவுல விரிசலை
ஏற்படுத்திடாதீங்க வருண்”

“காயப் படுத்த சொல்றனா?
குட் ஜோக்!என் மாமா
நிஜமாலுமே மாப்பிள்ளை
பார்த்துட்டார் மதுரகீதன்.
ரொம்ப ரகசியமா
வைச்சிருக்கார்.ஆனா,
எனக்குத் தெரியும் அது
ஸ்ரீ தான்னு.ஐயம் சாரி
மிஸ்டர் மதுரகீதன்.நீங்க
ரொம்ப லேட்டா
வந்துட்டீங்க”

மதுரகீதன் முகம்
காட்டிய உணர்வுகளின்
வர்ணஜாலத்தை
மௌனமாகப்
பார்த்திருந்தான் வருணன்.

“நீங்க சொல்றது உண்மையா
இருந்தாலும்,நான் கவலைப்
படப் போறதில்லை வருண்.
உங்கனால என்னை
தண்டிக்க முடியும்.ஆனா
மயூவை பாதிக்கிற ஒரு
தண்டனையை உங்கனால
நிச்சயம் எனக்குக் கொடுக்க
முடியாது”

மதுரகீதனை உள்ளூர
மெச்சிக் கொண்டு,
வெறுமையான பார்வை
ஒன்றைச் செலுத்தினான்
வருணன்.

“என்னோட அன்பே
உனக்குக் கேடயமா
இருக்கிறதை நினைச்சா
எனக்கு வருத்தமாயிருக்கு
மது”

இது மயூ மீதுள்ள அன்பின்
வெளிப்பாடல்லவா?இந்தக்
கண்களில் கனலையும்,
கனிவையுமே நான் காண
வேண்டும்!வெறுமையை
அல்ல!

மனம் தாங்காது எழுந்து
மேஜையைச் சுற்றிச் சென்று
வருணன் அருகில்
நின்றான் மதுரகீதன்.

அவன் செய்கை புரியாது
குழப்பத்துடன் பார்த்தான்
வருணன்.

தயக்கத்துடன் தன் கரத்தை
வருணன் தலை மீது
வைத்துப் பரிவான
பார்வையால் அவனை
வருடினான் மதுரகீதன்.

“எப்பவும் சிரிச்சுட்டே
இருக்கிற வருணை,
கூலான வருணை,
அப்பப்பக் கோபமான
வருணை மட்டும் தான்
நான் பார்க்கணும்.
எனக்கு அந்த வருணைத்
தான் பிடிக்கும்”

தன் தலை மீதிருந்த
மதுரகீதன் கரத்தை
விலக்கி விட்டு எழுந்து
நின்றான் வருணன்.

“நீங்க என்கிட்ட இருந்து
விலகியே இருங்க
மதுரகீதன்.உங்களோட
அன்பு,பாசம்,நட்பு
எதுவும் எனக்குத்
தேவையில்லை”

“சரி.என்னை தண்டிக்க
முடியலையேன்னு
கவலைப் படாதே
வரு....”

“நான் ஒண்ணும்
கவலைப் படலை.
உன்னை தண்டிக்காம
விட்டுடுவேன்னு
நினைச்சியா?உனக்கே
தெரியாம உன்னை
தண்டிப்பேன்.மயூவைத்
தவிக்க விட்டதுக்கு
நான் உன்னை எப்பவும்
மன்னிக்க மாட்டேன்”

“உன் கோபம் எனக்குப்
புரியுது வருண்”

“எதுக்கு வந்திருக்கீங்கன்னு
சொல்றீங்களா?எனக்கு
நிறைய வேலையிருக்கு”

“நான் மயூவைப் பார்க்க
வந்தேன்.அவ கிட்டப்
பேசணும்”

“ஓ!எதுக்கு?பாவ
மன்னிப்புக் கேட்கவா?
இல்லை....உங்க
காதலைப் புதுப்பிக்கவா?”

வருணனின் இகழ்ச்சிப்
பார்வையும்,சிரிப்பும்
மதுரகீதன் மனதைக்
குத்திக் கிழிப்பதாக
இருந்தது.

“பதில் சொல்லுங்க மிஸ்டர்”

“மயூவைக் கல்யாணம்
பண்ணிக்கிறதுக்கு வருண்”

“நீங்க வருண்னு கூப்பிடறது
எனக்குப் பிடிக்கலை”

“ஐயம் சாரி வருணன்”

“எதுக்கு சாரி சொல்றீங்க?
ஒரு அப்பாவிப் பொண்ணு
மனசுல ஆசையை
வளர்த்துட்டு,அவளை
அம்போன்னு விட்டுட்டுப்
போனீங்களே.அதுக்கா?
என்ன தைரியத்துல
கல்யாணத்தைப் பத்திப்
பேசறீங்க?மயூனால நான்
இல்லாம வாழ
முடியாதுன்னு இன்னைக்கு
வந்து வசனம் பேசறீங்களே!
அன்னைக்கு மாயமா
மறைஞ்சு போனயே,
அப்ப மயூவைப் பத்தி
உனக்குத் தெரியாதா?
அன்னைக்கு உன் இதயம்
கல்லாயிடுச்சா?அவ
தவிப்பும்,துடிப்பும்
உன் கண்ணுக்குத்
தெரியலையா?”

என் கண்களுக்குத்
தெரியவில்லை.என்
இதயத்திற்குத் தெரிந்தது
வருண்.அவள் தவிப்பைப்
போக்கும் வழியறியாத
பாவியாகிப் போனேன்
வருண்.

“மயூவை,கார்த்தியை,
என்னை...எங்க
எல்லாரையும் நீ
ஏமாத்திட்டே மது”

புயலுக்கு முன்னான
அமைதி ஒன்று அங்கு
நிலவியது.

"எவ்வளவு பொய்?
எவ்வளவு நாடகம்?
இனியும் ஏமாறுவேன்னு
நினைச்சியா?உன்
கண்கள்ல தெரியற
காதல்ல,மயூ மனசு
உருகலாம்.நான்
உருக மாட்டேன்.
என்னையும் உன்
காதல் கடல்ல
மூழ்கடிச்சுடலாம்னு
கனவு காணாதே.நான்
வருணன்.எந்தக்
கடல்லயும் என்னை
மூழ்கடிக்க முடியாது.
ஆனா நான் என்
பொறுமையைக்
கை விட்டேன்னா.."

கதவை லேசாகத் தட்டி
விட்டுத் திறந்த மயூரிகா,
“வருண்...”எனத்
தொடங்கி விட்டுப்
பேச்சிழந்தாள்.

மதுரகீதனை அவள்
அங்கு எதிர்பார்க்கவில்லை.

“சார் உன்னைப் பார்க்க
வந்திருக்கார் மயூர்”நொடியில்
தன் கோபத்தை விடுத்து
இயல்பானான் வருணன்.

மது எதற்கு இங்கு
வந்தான்?ஏன் என்
மதுவின் முகம்
இத்தனை வேதனை
சுமந்திருக்கிறது?
வருணின் கோபத்தில்
வெளிப்படும் அனல்
வார்த்தைகளை என்
மதுவின் பூவிதயம்
எப்படித் தாங்கும்?

“உன்கிட்ட தான்
பேசிட்டு இருக்கேன்
மயூர்”வருணனின் குரல்
உயர்ந்திருந்தது.

“என்ன வருண்?ஏன்
சத்தம் போட...”
கையுயர்த்தி அவள்
பேச்சை நிறுத்தினான்
வருணன்.

“போ!போய் பேசிட்டு
வா.இன்னையோட உன்
பப்பி லவ்வுக்கு குட்பை
சொல்லிட்டு வா.நாங்க
பார்த்திருக்கிற
மாப்பிள்ளைக்கு சம்மதம்
சொல்லு.மாமாவும்,
அத்தையும் இனியாவது
நிம்மதியா இருக்கட்டும்.
உன் வாழ்க்கையை
நினைச்சு இனியாவது
அவங்க கவலைப்
படாம இருக்கட்டும்.
தாத்தாவும்,பாட்டியும்
கொள்ளுப் பேரனையோ,
பேத்தியையோ
பார்க்கணும்னு வருஷக்
கணக்குல சொல்லிட்டு
இருக்காங்க.அவங்க
ஆசை நிறைவேறட்டும்.
உன்னையே நினைச்சுட்டு
இருக்காம,எல்லாரையும்
நினைச்சுப் பாரு.உன்
குடும்பத்துக்கு
சந்தோஷத்தையும்,
நிம்மதியையும் கொடு”

வருணனின் குரலில்
இருந்த கடுமையோடு,
அதில் இருந்த
உண்மையும்
மயூரிகாவின் விழிகளைக்
கலங்கச் செய்ய,
உதடு கடித்துத் தன்
அழுகையை
அடக்கினாள் மயூரிகா.

“வேண்டாம் வருண்.நீங்க
இந்த மாதிரி மயூ கிட்டப்
பேசாதீங்க.அவ மனசு
தாங்காது”

“எங்க குடும்ப விஷயத்துல
நீங்க தலையிடாதீங்க
மிஸ்டர்.உங்கனால
தான் இங்க இவ்வளவு
பிரச்சனையும்”

வருணன் கோபம்
மதுரகீதனிடம்
திரும்பியதில்,பிரச்சனை
வெடித்து விடுமோ
என அஞ்சினாள்
மயூரிகா.

“இங்க இருந்து
போயிடுங்க மது.ப்ளீஸ்...”

மயூரிகாவின் கெஞ்சல்
குரலில்,அவளருகில்
சென்ற மதுரகீதன்,
கலங்கும் அவள் விழி
கண்டு,வருணனை
நோக்கி கனல் பார்வை
ஒன்றைச் செலுத்தினான்.

“இதுவே கடைசி தடவையா
இருக்கட்டும் வருணன்.என்
மயூ கிட்ட கடுமையாவோ,
குரலை உயர்த்தியோ
பேசிடாதீங்க.உங்க
கோபத்தை என் மேல
மட்டும் காட்டுங்க”

“மதூ...”

“நான் போயிடறேன் மயூ”

இறுதியாக வருணனை
நோக்கி ஓர் பார்வை
அம்பைச் செலுத்தி
விட்டு,மயூரிகாவைக்
கடந்து வெளியேறினான்
மதுரகீதன்.

நின்ற இடத்திலேயே
அசையாமல் நின்றிருந்த
வருணனை,தன்
கலங்கிய விழி வழியே
பார்த்தாள் மயூரிகா.
உணர்வுகள் பிரவாகித்த
அவள் முகத்தை
வெறுமனே
பார்த்திருந்தான் வருணன்.

“பப்பி லவ்வா?என்
கிட்டப் பேசாதே வருண்”

அக்கட்டிடமே அதிரும்படி
கதவை அறைந்து சாத்தி
விட்டு வெளியேறினாள்
மயூரிகா.

கார் பார்க்கிங்கிற்குச்
சென்று சற்று முன்
தான் நிறுத்திய காரில்
ஏறி,புயல் வேகத்தில்
கிளப்பிச் சென்றாள்
மயூரிகா.

அவளுக்காகக் காத்திருந்த
மதுரகீதன்,விநாடியும்
தாமதிக்காமல் தன்
காரைக் கிளப்பி,
அவளைப் பின்
தொடரத் தொடங்கினான்.

தன்னறை ஜன்னலில்
இருந்து நடப்பவற்றைக்
கைகளைக் கட்டிக்
கொண்டு பார்த்திருந்தான்
வருணன்.

கிடைத்தற்கரிய
பொக்கிஷத்தை நீ தவற
விட்டு விட்டாய் மது.
இனி நீ அப்பொக்கிஷத்தை
அடைவது அவ்வளவு
எளிதல்ல!

உன்னைப் பரீட்சித்துப்
பார்ப்பது சுவாரஸ்யமாகத்
தான் இருக்கும் என
நினைத்தவனாய்
புன்னகைத்தான் வருணன்.

கண்ணே!
கலங்கிய உன் கண்கள்
கணையாய்
எனைத் தாக்குதடி!
உயிர் கேட்குதடி!
பிழையானவன் நானே!
பூவே நீ தேம்பாதே!

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15744

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய மாலை வணக்கம்:)

கடந்த பகுதிக்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

அன்பான நன்றிகள்:):love:

கீதம் பதினொன்றில்

என்ன உள்ளது எனக்

காண்போமா?

வாசித்து உங்கள் கருத்தைச்

சொன்னால் மனமானது

நிறைவு கொள்ளும்.நன்றி:):)

ப்ரியமுடன்,
நித்திலா

15669


கறுப்புவெள்ளைப்
புகைப்படம் ஒன்றைப்
பார்த்துக் கொண்டிருந்த
பூர்ணிமாவின் விழிகள்
கண்ணீரைச் சிந்திக்
கொண்டிருந்தது.அவர்
விரல்கள் புகைப்படத்தை
மென்மையாக வருடிக்
கொடுத்தபடி இருந்தது.

"பூர்ணி"

கதிர்காமன் குரல்
கேட்டதும்,அவசரமாகத்
தன் கண்ணீரைத் துடைத்துக்
கொண்டு,புகைப்படத்தை
பீரோவின் கடைசி
தட்டில் வைத்து விட்டு
முன்னறைக்கு விரைந்தார்
பூர்ணிமா.

"கதவைத் திறந்து
வைச்சுட்டு உள்ள
என்னம்மா பண்றே?
காலம் கெட்டுக்
கிடக்குது"

"கதவு...மறந்துட்டேங்க.
உட்காருங்க.குடிக்கத்
தண்ணி கொண்டு வர்றேன்"

"வேண்டாம் பூர்ணி.
மாப்பிள்ளை வந்துட்டாரா"

"இல்லைங்க.அவர் தான்
வர சொன்னாராங்க"

"ம்.மது கிட்டப் பேசி
இருப்பாருன்னு நினைக்கிறேன்"

"மது என்ன சொல்லி
இருப்பாங்க"

"நான் ஏற்கனவே சொன்னது
தான் பூர்ணி.மதுனால
அந்தப் பொண்ணை மறக்க
முடியாது.அவன் வந்ததுல
இருந்து அவனை
கவனிச்சுட்டுத் தான்
இருக்கேன்.மது கிட்ட
உயிர்ப்பே இல்லை.மது
முன்னாடி எப்படிப்
பேசுவான்,சிரிப்பான்னு
யோசிச்சுப் பாரு"

"எனக்கும் வருத்தமா
தாங்க இருக்கு..
கல்யாணம் பண்ணா
சரியாயிடுவான்னு
நினைச்சேன்"

"மது தான் அந்தப்
பொண்ணை மறக்கலையே
பூர்ணி.மது வாழ்க்கையோட,
வர்ற பொண்ணு
வாழ்க்கையும் வீணா
போயிடும்.ஏற்கனவே
ஒரு பொண்ணு மனசை
உடைச்சுட்டோம்"

"என்னங்க பேசறீங்க?
நான் என்ன வேணும்னா..."

"மாமா,அத்தை"கந்தவேலின்
அழைப்பில் இருவரும்
அமைதியாயினர்.

"வாங்க மாப்பிள்ளை.
உட்காருங்க.காபி,ஜூஸ்
எதாவது குடிக்கறீங்களா"

"வேண்டாம் அத்தை"

"மது என்ன சொன்னான்
மாப்பிள்ளை"நேரடியாக
விஷயத்திற்கு வந்தார்
கதிர்காமன்.

"மாமா..."

"தயங்காம சொல்லுங்க
மாப்பிள்ளை"

"மது மனசுல இப்பவும்
அந்தப் பொண்ணு தான்
இருக்கா மாமா.அந்தப்
பொண்ணைத் தான்
கல்யாணம்
பண்ணிக்குவேன்னு
உறுதியா சொல்றான்
அத்தை"சொல்லி விட்டு
இருவரையும்
கவலையுடன் பார்த்தான்
கந்தவேல்.

என் மகனல்லவா?
எத்தனை காலம்
கடந்தாலும் காதலில்
உறுதியாகத் தான்
இருப்பான் என
நினைத்தார் கதிர்காமன்.

எதிர்பார்த்தது தான்
என்றாலும் பூர்ணிமா
மனது அதிரவே
செய்தது.அவர்
முகத்தில் பயம்
வெளிப்படையாகவே
தெரிந்தது.

"இப்ப என்ன மாமா
பண்றது"

"கல்யாணம் பண்ணி
வைக்க வேண்டியது
தான் மாப்பிள்ளை"

"எனக்கும் மது
கல்யாணம்
பண்ணிக்கணும்னு
ஆசையா தான் இருக்கு
மாமா.ஆனா...நிறைய
சிக்கல் இருக்கு.என்ன
பண்றதுன்னு ஒண்ணும்
புரியலை மாமா"

"அந்தப் பொண்ணு மது
கிட்டப் பேசுதா மாப்பிள்ளை"

"......."

"எப்படிப் பேசும்?
ஏமாத்துக்காரன்னு இல்லே
நினைச்சிருக்கும்"

"......"

"என் பையன் தங்கம்.
எந்தத் தப்பும் பண்ணாம
இப்படிக் குற்றவாளியா
நிற்கறானே.எனக்கு
மனசே ஆற மாட்டீங்குது"
கதிர்காமனின் பார்வை
மனைவியைக் குற்றம்
சாட்டியது.

"நான் என்னங்க
பண்ணுவேன்?என்னால
என் பையனை இழக்க
முடியாதுங்க"

"அப்ப தான் நீ என்
பேச்சைக் கேட்கலை.
இப்பவாவது கேளு பூர்ணி"

"........"

"மது சின்ன வயசுல
இருந்தே ரொம்பப்
பொறுப்பானவன்.
நமக்காக
ஒவ்வொன்னையும்
பார்த்துப் பார்த்து
செய்வான்.இப்ப
அவனுக்கு முப்பது
வயசாயிடுச்சு.
நம்மளை பாதிக்கிற
ஒரு செயலை
அவன் செய்வானா?
உன் பயத்தை ஒதுக்கி
வைச்சுட்டு யோசி பூர்ணி"

"........"

"என் முடிவு இது தான்.
அந்தப் பொண்ணு மதுவை
மன்னிச்சா,நாம போய்
பொண்ணு கேட்கலாம்.
இல்லைன்னா...மது
தலையில தனியா தான்
வாழணும்னு எழுதி
இருக்குன்னு நினைச்சுக்க
வேண்டியது தான்"

"நல்லதே நடக்கும்
மாமா.அந்தப் பொண்ணு
நம்ம மதுவுக்காகத் தான்
காத்திட்டு இருந்திருக்கு.
கண்டிப்பா மதுவை
ஏத்துக்கும்.அவன் நல்ல
மனசைப் புரிஞ்சுக்கும்"

"உங்க வார்த்தை
பலிக்கட்டும் மாப்பிள்ளை.
எனக்குத் தோப்புல
வேலையிருக்கு.நான்
கிளம்பறேன் மாப்பிள்ளை"

"சரிங்க மாமா"

மனைவியிடம் ஒரு தலை
அசைப்புடன் விடை பெற்றுச்
சென்றார் கதிர்காமன்.

மாமாவிடம் புதிதாகக்
கோபம் தென்படுகிறதே!
மது வாழ்க்கை குறித்த
கவலையாலா?அத்தை
புரிந்து கொள்ள
மறுப்பதாலா?

சில நிமிடங்களுக்கு
அமைதி நிலவியது.

"நீங்க என்ன நினைக்கறீங்க
மாப்பிள்ளை"

"மது அந்தப் பொண்ணைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டா
மட்டும் தான் சந்தோஷமா
இருப்பான் அத்தை.அவன்
அந்தப் பொண்ணைக்
கொஞ்சம் கூட மறக்கலை.
அந்த வீடு கூட அந்தப்
பொண்ணுக்காகத் தான்
கட்டி இருக்கான்னு
நினைக்கிறேன் அத்தை"

"அந்த வீட்டில ஒரு
பொண்ணோட ரசனை தான்
எனக்குத் தெரிஞ்சுது.
அப்பவே புரிஞ்சிருக்கணும்"

"மதுவோட சந்தோஷம்,
நிம்மதி எல்லாமே அந்தப்
பொண்ணு கிட்ட தான்
இருக்கு அத்தை"

"நானா வேண்டாம்னு
சொல்றேன்?மது
வேலைக்குப் போக
ஆரம்பிச்சவுடனே,
அவனுக்குக் கல்யாணம்
பண்ணனும்னு சொன்னவ
நான்.என் பையன்
மனைவி,குழந்தைகளோட
சந்தோஷமா வாழ்றதைப்
பார்க்கணும்னு எனக்கு
மட்டும் ஆசை
இருக்காதா?அந்தப்
பொண்ணு வீட்டில
ஒத்துக்க மாட்டாங்களே
மாப்பிள்ளை"

"அது உண்மை இல்லை
அத்தை"

"மாப்பிள்ளை..."புரியாத
பாவனையுடன் கந்தவேலின்
முகம் பார்த்தார் பூர்ணிமா.

"அந்தப் பொண்ணு இன்னும்
கல்யாணம் பண்ணிக்காம
இருக்கிறதுலயே,உண்மை
தெளிவா தெரியுதே அத்தை"

"என்ன உண்மை மாப்பிள்ளை"

"அந்தப் பொண்ணோட
விருப்பத்தை அவங்க
வீட்டில மதிக்கிறாங்க
அத்தை.அந்தப் பொண்ணு
வீட்டில இன்னொரு
பொண்ணும் இருக்கறப்ப,
சீக்கிரம் கல்யாணம் பண்ணத்
தானே பார்ப்பாங்க அத்தை?
அந்தப் பொண்ணு கிட்ட
அழகு,குணம்,படிப்பு,
பணம் எல்லாமே இருக்கு.
மாப்பிள்ளை வராம இருக்க
வாய்ப்பில்லை"

மாப்பிள்ளை சரியாகத் தான்
சொல்கிறார்.அப்போதே
அவளுக்கு மணமாகி
இருக்கும் என
நினைத்தேனே!உடனே
செய்யவில்லை என்றாலும்,
சில காலம் கழித்தாவது
செய்திருக்க வேண்டுமே!
நான்கு வருடங்கள் ஓடியும்
மணமாலை சூடவில்லை
என்றால்...

"மயூ விருப்பப்படி தான்
அவங்க வீடே இயங்கும்மா"
மதுரகீதனின் குரல்
பூர்ணிமாவின் செவியில்
எதிரொலித்தது.

பூர்ணிமா உள்ளம் பெரும்
அதிர்வைக் கண்டது.

"அந்தப் பொண்ணை விடுங்க.
அவங்க வீட்டையும் விடுங்க.
மது சொல்றதை வைச்சு
தான் நமக்குத் தெரியும்.
நாம மதுவைப் பத்தி மட்டும்
பேசுவோம் அத்தை"

"........."

"நான் கூட முதல்ல
என்ன இவன் யாரைப்
பத்தியும் நினைக்காம,
மயூவைத் தான் கல்யாணம்
பண்ணிக்குவேன்னு
சொல்றானேன்னு நினைச்சேன்
அத்தை.யோசிச்சுப்
பார்த்தப்ப தான் உண்மை
புரிஞ்சுது அத்தை.மாமா
சொல்ற மாதிரி மது
ரொம்பப் பொறுப்பான
பையன் அத்தை.நம்மளை
பாதிக்கிற எதையும் அவன்
செய்ய மாட்டான்.உங்க
வலி தெரிஞ்சவன் அவன்.
உங்களுக்கு மறுபடியும்
அப்படி ஒரு வலியைக்
கொடுப்பானா அத்தை?
அவன் ஆசையை
மனசுக்குள்ளயே பூட்டி
வைச்சுட்டு
வாழ்ந்திருப்பான் அத்தை.
மயூ வேணும்னு சொல்ல
மாட்டான்"

"........."

"மது நம்ம எல்லார்
மேலயும் எவ்வளவு பாசம்
வைச்சிருக்கான்?நம்மளுக்கு
வேதனையைக் கொடுப்பானா
அத்தை?உங்க பையனைப்
பத்தி நான் உங்களுக்கு
சொல்லத் தேவையில்லை.
நீங்களே பொறுமையா
யோசிச்சுப் பாருங்க அத்தை"

"......."

"நடக்கிறதை எல்லாம்
பார்த்தா...மது பேச்சைக்
கேட்டிருக்கணும்னு
தோணுது.நீங்க
அவசரப்
பட்டுட்டீங்களோன்னு
நினைக்கத் தோணுது.
இப்படி சொல்றதுக்காக
என்னை மன்னிச்சுடுங்க
அத்தை"

நான் அவசரப் பட்டு
விட்டேனா?கடவுளே!என்
மகனின் வாழ்வை நானே
பாலையாக்கி விட்டேனா?

"இன்னும் கொஞ்ச நாள்
பொறுமையா இருங்க
அத்தை.என்ன
நடக்குதுன்னு
பார்க்கலாம்.உங்க
பயத்தை எல்லாம்
விட்டுட்டு நிம்மதியா
இருங்க"

"சரிங்க மாப்பிள்ளை"

"மதுவை நினைச்சுக்
கவலைப் படாம இருங்க.
நாம பயப் படற மாதிரி
எதுவும் நடக்காது.
எல்லாம் நல்லதாவே
நடக்கும்.நான் கடைக்குக்
கிளம்பறேன் அத்தை"

"சரிங்க மாப்பிள்ளை"

கந்தவேல் சென்று விட,
அங்கேயே அமர்ந்திருந்தார்
பூர்ணிமா.அவர் காதுகளில்
கந்தவேலின் வார்த்தைகளே
ஒலித்துக் கொண்டிருந்தது.

நான் தவறு செய்து
விட்டேனா?

என் கண்கள் கண்டது
பொய்யில்லையே!

ஆனால்...மது பேச்சை
நான் கேட்டிருக்க
வேண்டுமா?அவள்...
மயூ...என் மகனை
மறக்கவில்லையா?

அந்தச் சின்னப்
பெண்ணின் இதயத்தை
நான் உடைத்து
விட்டேனா?

மாப்பிள்ளை என்ன
சொல்கிறார்?ஏன் அப்படிச்
சொல்கிறார்?

எப்படி இவ்வளவு
உறுதியாகச் சொல்கிறார்?
என் பயம் அர்த்தமற்றதா?

நான் அவசரப் பட்டு
விட்டேனா?அப்படி
இருந்தால்...நான்
பெரும் பாவம்
செய்தவளாகி
விடுவேனே!

பிரமை பிடித்தவர் போல
நெடு நேரத்திற்கு
அசையாமல்
அமர்ந்திருந்தார் பூர்ணிமா.

அறைக் கதவு தட்டப்
பட்டதில்,ஜன்னலில்
இருந்து திரும்பினான்
வருணன்.

கார்த்திகேயனைக் கண்டு
உள்ளே வருமாறு தலை
அசைத்தான்.

"இந்த டைம்ல இங்க
வந்திருக்கே!தனுவைப்
பார்க்கவா"

"இல்லை.உன்னை தான்
பார்க்க வந்தேன்"

"எதுக்கு நிற்கறே?உட்காரு"
வருணனும் நகர்ந்து தன்
இருக்கையில் அமர்ந்து
கொண்டான்.

"நான் உட்கார வரலை"

"எதுக்குச் செல்லக் குட்டி
இப்ப மூஞ்சியைத் தூக்கி
வைச்சுட்டு இருக்கே"

"நீ ஒண்ணும் என்னைச்
செல்லக் குட்டின்னு கூப்பிட
வேண்டாம்.மதுவைப்
பார்த்தேன்.உன்னைப்
பார்க்க வந்திருந்தாரா"

"மயூவைப் பார்க்கணும்னு
சொன்னான்"

"நீ அவர் கிட்ட நல்லபடியா
பேசினயா"

"நல்லபடியா பேசற மாதிரி
அவன் நடந்துக்கலையே"

"மயூவை என்ன சொன்னே?
நான் கூப்பிடக் கூப்பிட
போயிட்டே இருக்கா.மது
கூட சண்டைப் போட்டயா?"

"நான் நியாயத்தை
சொன்னேன்.நல்லதை
எடுத்து சொன்னேன்.
அதுக்குப் பேர் சண்டையா"

"நீ என்ன அழகுல சொல்லி
இருப்பேன்னு எனக்குத்
தெரியும்.இது மயூவோட
வாழ்க்கைப் பிரச்சனை
வருண்.நீ உன்
கோபத்தைக் கொஞ்சம்
ஒதுக்கி வைச்சுட்டுப்
பேசு வருண்"

"நான் உன் அண்ணன்டா.
நீ எனக்கு புத்திமதி
சொல்றயா"

"நீ ஒழுங்கா நடந்துக்கிட்டா,
நான் ஏன் சொல்றேன்"

"இப்ப நான் என்ன
செய்யணும்னு நினைக்கறே?
நம்ம மயூவை விட்டுட்டு
சொல்லாமக் கொள்ளாம
ஓடிப் போனவன் கிட்டப்
போய் தன்மையா
பேசணுமா?மயூவைக்
கல்யாணம்
பண்ணிக்கங்கன்னு
கேட்கணுமா"

"இல்லைணா.நீ அமைதியா
இருந்தாலே போதும்"

"அமைதியா இருக்கணுமா?
நீ தெரிஞ்சு பேசறயா,
தெரியாமப் பேசறயா
கார்த்தி?மயூ எவ்வளவு
வேதனைப் பட்டா?நீ
பார்த்துட்டுத் தானே
இருந்தே?"

"முதல்ல வேதனைப்
பட்டாலும்,அப்புறம்
அமைதியாயிட்டாளே
வருண்"

"அமைதியாயிட்டா
வேதனை இல்லாமப்
போயிடுமா?மதுவை
நினைச்சு நினைச்சு
உள்ளுக்குள்ளயே அவ
ஊமையா அழுதது
எனக்குத் தான்
தெரியும் கார்த்தி"

"மயூவோட அந்த
வலியைப்
போக்கிறதுக்குத் தான்
சொல்றேன் வருண்.
மதுவோட பிரிவு
ஏற்படுத்தின ரணத்தை,
அவரோட உறவு
போக்கிடும்.அந்த
உறவை நீ தான்
ஏற்படுத்திக்
கொடுக்கணும்"

"........"

"நீ உன் கோபத்தைக்
குறைச்சுட்டு,என்ன
பண்றதுன்னு யோசி.
மயூவை எப்படி மது
கூட சேர்த்து
வைக்கிறதுன்னு யோசி"

"........."

"மது மயூவை எவ்வளவு
விரும்பறாருன்னு உனக்கே
தெரியும்.மயூவும் மது
வர்றதுக்காகக்
காத்திருந்தான்னு நமக்குத்
தெரியும்"

"இப்ப நீ மயூக்காக என்
கிட்டப் பேசறயா?
மதுவுக்காகப் பேசறயா"

"ரெண்டு பேருக்காகவும்"

"ஓ!மது மேல இன்னும்
பாசம் இருக்கு?அவன்
நம்மளை முட்டாளாக்கி
இருக்கான் கார்த்தி"

"மயூ சொல்றதை நான்
நம்பறேன் வருண்.என்னால
அவரைத் தப்பா நினைக்க
முடியலை.எனக்கு அவர்
மேல கோபம் வரலை"

"மயூவுக்குத் தான் காதல்
பைத்தியம் முத்திப் போய்
உளர்றானா...உனக்கு
என்னடா"

"நான் மது கூட நெருங்கிப்
பழகி இருக்கேன்.எனக்கு
அவரைப் பத்தித் தெரியும்.
மயூவை விளையாட்டா
ஏமாத்தலாம்னு சொன்னா
கூட ஒத்துக்க மாட்டார்.
ஒரு நொடி கூட என் மயூ
மனசு கஷ்டப் படக்
கூடாதுன்னு சொல்லுவார்
வருண்.விளையாட்டுக்குக்
கூட மயூ மனசு நோகக்
கூடாதுன்னு நினைக்கிறவர்
அவர்.உன் கோபத்தை
விட்டுட்டு யோசி,உண்மை
உனக்கும் தெரியும்"

"உங்க மது நல்லவராவே
இருக்கலாம்.அவன் பக்கம்
நியாயமும் இருக்கலாம்.
ஆனா தப்பும் இருக்கே!
அவன் பாட்டுக்கு ஓடிப்
போயிடுவான்.திடீர்னு
வந்து கல்யாணம்
பண்ணிக்கறேன்பா.நாம
உடனே நம்ம
பொண்ணைத் தூக்கிக்
கொடுத்துடணுமா"

"உன் கோபம் நியாயம்
தான்.எனக்கும் அவர்
அப்படி நடந்துக்கிட்டது
வருத்தம் தான்.ஆனா
அவர் நம்ம வீட்டு
மாப்பிள்ளை.காலம்
முழுக்க இருக்கப் போற
உறவு.நீயும்,மதுவும்
நட்பா இருக்கணும்னு
மயூ நினைப்பா.நீ மது
கிட்டப் பேசு.
நியாயத்தைக் கேளு.
ஆனா வார்த்தைகள்ல
நிதானம் இருக்கட்டும்"

தம்பி சொல்வதைக்
கன்னத்தில் கை வைத்துக்
கேட்டுக் கொண்டிருந்தான்
வருணன்.

இந்தப் பொடியன் எனக்கு
புத்தி சொல்கிறான்!

"என்னால இன்னும் நம்ப
முடியலை.நானே மது
கிட்டக் கேட்கறேன்.
அவர் என்ன சொ..."

"நீ மது கிட்டப் பேசக்
கூடாது.பேசுனேன்னு
தெரிஞ்சுது..."

"அப்ப நீ பேசு"

"........"

"ப்ளீஸ்ணா.மயூ
பேச்சை மீற முடியாதுன்னு
எல்லாம் சொல்லாதே.
எதாவது பண்ணு.
இவ்வளவு நாள் மது
இங்க இல்லை.நாமளும்
அமைதியா இருந்தோம்.
இப்ப மது திரும்பி
வந்துட்டார்.மயூ கண்
முன்னாடி வந்துட்டார்.
அவ மனசு என்ன பாடு
பட்டுட்டு இருக்கும்?
எதையாவது செஞ்சு
சீக்கிரம் அவங்களை
சேர்த்து வைச்சுடு"

"எனக்கு மயூ
சந்தோஷத்தை விட என்
கோபம் பெரிசில்லை
கார்த்தி.நான் மயூவுக்காக
எதுவும் செய்வேன்.நீ
கவலைப் படாம இரு.
பொறுமையா இரு.
முந்திரிக்கொட்டை
வேலை பண்ணி
வைக்காதே.அண்ணன்
எல்லாத்தையும்
பார்த்துக்குவேன்"

"நிஜம்மாவாணா?உன்
கோபத்தை விட்டுடுவியா?
மயூவையும்,மதுவையும்
சேர்த்து வைப்பியா?
மதுவை மன்னிச்சுடுவியா?
மதுவுக்காக இல்லைனாலும்
மயூவுக்காக செய்வே
இல்லே?"

"என் செல்லக் குட்டியோட
ஆசையை எப்படி
நிறைவேத்தாம
இருப்பேன்"

"தேங்க்ஸ்ணா.உன்
கோபத்தை நினைச்சு நான்
பயந்துட்டே இருந்தேன்.
சாரிணா.ஐ லவ் யூணா"
துள்ளிச் சென்று
வருணனை அணைத்துக்
கொண்டான் கார்த்திகேயன்.

சிரிப்புடன் சிறுபிள்ளை என
தான் நினைக்கும் தம்பியின்
முதுகில் தட்டிக் கொடுத்தான்
வருணன்.

அரைமணி நேரத்திற்கு
மேலாக மயூரிகாவைப் பின்
தொடர்ந்து கொண்டிருந்தான்
மதுரகீதன்.காரை நிறுத்து
மயூ என்ற அவன் மனதின்
அலறல் அவளை
எட்டவேயில்லை.

இந்த வருணுக்கு
என்னவானது?அவனால்
எப்படி மயூவிடம் கத்த
முடிந்தது?

அவள் நன்மைக்காகத் தான்
என்றாலும்,அதை இதமாக
சொல்ல முடியாதா?எனக்கு
வருகிற கோபத்திற்கு...
இவனை...இல்லை...
வருணை என்னால் எதுவும்
சொல்ல முடியாது.
மயூவை அல்லவா அது
பாதிக்கும்?

மயூரிகா கார் செல்லத்
தொடங்கிய பாதையைக்
கண்ட மதுரகீதன் கார்
பிரேக்கிட்டு நின்றது.

இது மயூவின் தோப்பிற்குச்
செல்லும் பாதையாயிற்றே!
இங்கு எதற்கு இந்த
நேரத்தில் செல்கிறாள்?
தனிமை நாடியா?நான்
செல்லலாமா?கூடாதா?

அந்த இடம் கடந்த
காலத்தை நினைவூட்டி
மதுரகீதனை
சோர்வடையச் செய்தது.

இங்கு தான் நாம்
கடைசியாக சந்தித்தோம்!
அது நம்முடைய கடைசி
சந்திப்பாக இருக்குமென்று
நான் நினைக்கவில்லையே
மயூ!

அன்று என்னால் உன்னை
விட்டுச் செல்ல
முடியவில்லையே!
உள்மனம்
அறிந்திருந்ததோ?இனி
பல காலம் கழித்தே
உன் அருகாமை
எனக்குக் கிட்டுமென்று!

என்னால் உனக்கு
எவ்வளவு துன்பம்?

தன் வலியை விழுங்கிக்
கொண்டு காரைக்
கிளப்பிய மதுரகீதன்
கண்களில் இருந்து
மயூரிகா மறைந்து
விட்டிருந்தாள்.

என்ன பழக்கம் இது?
எதற்கு இத்தனை வேகம்?

மனதில் தோன்றிய
கவலையோடு காரை
ஓட்டிச் சென்ற மதுரகீதன்,
தோப்பிற்கு வெளியே
நின்றிருந்த மயூரிகா கார்
அருகில் தன் காரை
நிறுத்தினான்.

நான் இப்போது மயூவிடம்
பேசுவது சரியா?

வருண் மயூ நன்மையை
நாடுபவன்.அது
மயூவுக்கும் தெரியும்.
அவளே சரியாகி விடுவாள்.

இல்லை...வருண்
அவ்வாறு பேசியிருக்கக்
கூடாது.மயூவிடம்
எவருமே குரலை
உயர்த்திப் பேச
மாட்டார்கள்.மயூவைப்
பற்றி இவனுக்குத்
தெரியாதா?எதற்காக
இந்தக் கடுமை?என்
மீதுள்ள கோபத்தை
மயூ மீது காட்டி
விட்டானா?

நான் தான்
இதற்கெல்லாம்
காரணம்.என்னை
மன்னித்து விடு மயூ.

என் மயூ வருத்தத்தில்
இருக்கிறாள்.இப்போது
நான் அவள் அருகில்
இருக்க வேண்டும்.
அவள் கோபம்
கொண்டாலும்
பரவாயில்லை.

காரில் இருந்து இறங்கி
மாந்தோப்பினுள்
சென்றான் மதுரகீதன்.

தோப்பின் நிசப்தம்
அச்சுறுத்துவதாக இருந்தது.

தோப்பில் ஒருவரும்
இல்லையா?ஏன்
இத்தனை அமைதியாக
இருக்கிறது?மயூ எங்கு
சென்றாள்?

அடர்ந்த மரங்கள்
மயூரிகாவை அவனுக்குக்
காட்டாமல் மறைத்திருக்க,
சுற்றிச் சுற்றிப் பார்த்துக்
கொண்டே நடந்தான்
மதுரகீதன்.

அமைதியான அத்தோப்பில்
யாரோ நீரில் குதித்த சத்தம்
தெளிவாகக் கேட்டது.

மதுரகீதன் இதயத் துடிப்பு
வேகம் கொண்டது.

"மயூ மயூ"என அழைத்துக்
கொண்டே கிணறு இருக்கும்
திசை தெரியாமல்
அங்குமிங்கும் ஓடி
கிணற்றைக் கண்டு
அதனருகில் ஓடினான்
மதுரகீதன்.

மயூரிகாவின் காலணிகள்
ஒழுங்கின்றிக் கிடக்க,
தன் காலணிகளை உதறி
கிணற்றினுள்
பாய்ந்தான் மதுரகீதன்.

உயிரே!
உனக்காகவே
நாளும் காதல் கீதம்
இசைத்தேன்!
நீ கேளாது
போனால்
கீதமேதடி?
என் ஜீவனும்
உன்னோடு தானடி!

கீதம் மயக்கும்...


நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15865

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய காலை வணக்கம்:)

கடந்த பகுதிக்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

அன்பான நன்றிகள்:love::love::)

மயூரிகா ஏன் கிணற்றில்

குதித்தாள் எனத் தெரிந்து

கொள்வோமா?

வாசித்து உங்கள் கருத்தை

ஒரு வார்த்தையிலேனும்

பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி:):)

அடுத்த பதிவு

வியாழனன்று.

ப்ரியமுடன்,
நித்திலா

15867

கிணற்றின் நீர் உடலைச்
சில்லிடச் செய்வதாய்
இருந்தது.மாமரங்கள்
தலையசைத்து மேலும்
குளிர்ச்சியூட்டிக்
கொண்டிருந்தன.

நீரினுள் தன் கையில்
சிக்கிய உடையை
மதுரகீதன் இறுகப்
பற்றி இழுக்க,
மயூரிகாவின்
துப்பட்டா அவன்
கையோடு வந்தது.

ஒரே நேரத்தில்
நீருக்கு மேல்
வந்தனர்
மதுரகீதனும்,
மயூரிகாவும்.

"யூ..ரா.."எனத்
தொடங்கியவள்
சுவாசம் சீரானது.

"நீங்களா?நீங்க
இங்க என்ன பண்றீங்க"

"சாரி மயூ"அவசரமாகத்
தன் கையில் இருந்த
துப்பட்டாவை அவள்
தோள் மீது போட்டு
விட்டான் மதுரகீதன்.

"எதுக்கு இப்ப இங்க
வந்தீங்க மதுரன்"

"சாரி மயூ...நான்...
வருண்...நீ..கோபமா.."
தெளிவாகச் சொல்லாமல்
வார்த்தைகளை
விழுங்கினான் மதுரகீதன்.

அவன் தடுமாற்றத்தைப்
புதிராகப் பார்த்தாள் மயூரிகா.

"வருண்...மயூ...நீ
கிணத்துல குதிச்சு..."

"தற்கொலை
பண்ணிக்கறேன்னு
நினைச்சீங்களா?நான்
தற்கொலை பண்ணிக்க
நினைச்சிருந்தா,நீங்க
என்னை விட்டுட்டுப்
போனீங்களே..
அப்பவே பண்ணி
இருக்கணும்.இ…"

"வேண்டாம் மயூ"
என்ற கதறலோடு
அவளை
அணைத்திருந்தான்
மதுரகீதன்.

அத்தனை நாள்
அவள் அடக்கி
வைத்திருந்த
அழுகை எல்லாம்
அவன் அணைப்பில்
வெடித்துச் சிதறியது.

"வேண்டாம்டா.
அழாதே கண்ணம்மா"

"விடுங்க...என்னை
விடுங்க..."என
அவனிடமிருந்து
தன்னைப் பிரித்துக்
கொண்டு கண்களில்
வடிந்த கண்ணீரோடு
அவனைப் பார்த்தாள்
மயூரிகா.

"ஏன் மதுரன்?ஏன்
என்னை விட்டுட்டுப்
போனீங்க மதுரன்?
நான் என்ன தப்புப்
பண்ணேன்?எதுக்கு
எனக்கு இவ்வளவு
பெரிய தண்டனை?
முதல்ல பொய்யா
என்னை விட்டுட்டுப்
போனீங்க...அப்புறம்...
நிஜமாலுமே என்னை
விட்டுட்டுப் போயிட்டீங்க.
எதுக்குப் பொய்
சொல்லணும்?அப்புறம்
எதுக்கு அதை உண்மை
ஆக்கணும்?நான் என்ன
நினைக்கிறது மது?நான்
உங்களை விட்டுப்
போயிடணும்னு
நினைச்சீங்களா?
உங்களுக்கு என்னைப்
பிடிக்கலையா?நான்
எதாவது தப்புப்
பண்ணிட்டனா?உங்க
மனசை
நோகடிச்சுட்டனா?என்
மேல கோபமா...ஏன்
எதுக்குன்னு ஒண்ணும்
புரியாமப் பைத்தியமாகி
இருப்பேன் மதுரன்.
எப்படி மதுரன் உங்கனால
உங்க மயூவைக் கஷ்டப்
படுத்த முடிஞ்சுது?"

அவள் கேள்விகளில்
கண்ணீர் தேங்கி நின்ற
விழிகளோடு
தன்னவளைப்
பார்த்திருந்தான்
மதுரகீதன்.

"எப்படி மது என்னைப்
பார்க்காம...என் கிட்ட
ஒரு வார்த்தை கூட
சொல்லாம...
கேட்காமப் போனீங்க?
வாரா வாரம் வந்து
பார்க்கறேன்னு
சொல்லிட்டு...வருஷக்
கணக்கில வராமப்
போயிட்டீங்களே
மதுரன்.உங்கனால
எப்படி உங்க
மயூவைப் பார்க்காம
இவ்வளவு வருஷம்
இருக்க முடிஞ்சுது
மது?உங்களுக்கு
என்னைப்
பார்க்கணும்னே
தோணலையா?
உங்களைப் பார்க்காம,
பேசாம என்னால தான்
இருக்க முடியலையா?
உங்க மயூவைப் பிரிஞ்சு
உங்கனால இருக்க
முடிஞ்சுது.ஆனா உங்க
மயூவுக்கு உங்க பிரிவைத்
தாங்கிற சக்தி இல்லை
மதூ...இல்லை..."
அவன் மார்பிலேயே
புதைந்து தேம்பினாள்
மயூரிகா.

"......."

"என்னை நீங்க
புரிஞ்சுக்கிட்டது இவ்வளவு
தானா?நீங்களா
யோசிச்சு...நீங்களா
முடிவு பண்ணி...
உங்களுக்குத் தெரியலை...
எனக்கு உங்களை விட
எதுவும் முக்கியம்
இல்லைன்னு
உங்களுக்குத் தெரியலை..."

"நான் நல்லது தான்
நினைச்சேன் கண்ணம்மா"

"சாரிடா"

"அழாதே குட்டி"

"வேண்டாம் கண்ணம்மா"

"ப்ளீஸ் மயூ"

"நீ இப்படி அழுகிறதை
என்னால பார்க்க முடியலை
மயூ"

"சாரிம்மா"

"உன் மது பேச்சைக்
கேட்க மாட்டியா மயூ"

தன்னவனின் கண்ணீர்க்
குரல் மயூரிகாவைச்
சென்றடைந்ததில்,அவள்
நிமிர்ந்து அவன் முகம்
பார்த்தாள்.அவள் கைகள்
தானாக உயர்ந்து
அவன் கன்னத்தில்
வடிந்திருந்த கண்ணீரைத்
துடைத்தது.

"உங்க கண்ணீரைப்
பார்க்கிற சக்தியும்
எனக்கு இல்லை மதுரன்"

"உன்னை இப்படி அழ
வைச்சுட்டனே மயூ"
அவளை அணைத்துக்
கொண்டவன் கண்ணீர்
மெதுவாக நின்றது.

அவள் அழுகை நின்ற
பின்னும்,அவளை விட்டு
விலகாமல் நின்றிருந்த
மதுரகீதன் உதடுகள்
"சாரி மயூ.சாரி
கண்ணம்மா"என
ஓயாமல் உச்சரித்துக்
கொண்டிருந்தது.

பின் அந்த
"சாரி மயூ" "ஐ
லவ் யூ மயூ"என்று
மாறியது.

சாரி மயூ எப்போது
ஐ லவ் யூ மயூவாக
மாறியது என்று
அவனுக்கும்
தெரியவில்லை.
அவளுக்கும்
தெரியவில்லை.

தவற விட்டத் தன்
கைப்பொம்மையை
மீண்டும் கண்டு விட்ட
குழந்தையாக,
மயூரிகாவை இறுகத்
தழுவிக் கொண்டு
நின்றிருந்தான்
மதுரகீதன்.

அவன் அணைத்ததும்
உடைந்து விட்ட
மயூரிகாவிற்கோ,தன்
காதோரம் ஒலித்துக்
கொண்டிருக்கும்
தன்னவன் குரல் தவிர
வேறு எதுவும்
நினைவில்லை.

காகம் ஒன்று விடாமல்
கரைந்த சத்தத்தில்,
தன்னிலை உணர்ந்து
விலகினாள் மயூரிகா.

அவன் முகம் பார்க்காமல்
திரும்பி நின்று,
"இங்கிருந்து போயிடுங்க
மது"என்றவள் குரல்
தடுமாறித் தழுதழுத்தது.

எந்தச் சத்தமும்
இல்லாததில் திரும்பிய
மயூரிகா,கண்களை மூடி
நின்றிருந்தவனைக்
கண்டாள்.அவன்
மனதில் பெரும்
போராட்டம் நடப்பதை
அவன் முகம் காட்டியது.

"நான் தப்புப்
பண்ணிட்டேன் மயூ.
என்னை மன்னிச்சுடு.
ஆனா ஒண்ணு மயூ...
நீ இல்லைன்னா...
நானும் இருக்க
மாட்டேன்..."

"மதூ.."அவள்
மறுப்பாகத் தலையசைக்க.

"இந்தப் பாவியை
மன்னிச்சுடு மயூ.இனி
நீ கண்ணீர் சிந்தற
மாதிரி நான் நடந்துக்க
மாட்டேன்"

தன் கண்ணீரைத்
துடைத்துக் கொண்டு
கிணற்றின் சுவற்றில்
பார்வை பதித்தாள்
மயூரிகா.

"என் பிரேஸ்லெட்டைக்
காணோம்.கார்ல வரும்
போது தான் கவனிச்சேன்.
காலையில இங்க
வந்திருந்தேன்.அதான்
கிணத்துக்குள்ள
விழுந்திருக்குமோன்னு
பார்க்கலாம்னு வந்தேன்"

"நான் பார்க்கிறேன் மயூ.
நீ மேல போ"

ஒரு தலை அசைப்புடன்
படிகளில் ஏறிய மயூரிகா,
வெளியே சென்று அருகில்
இருந்த மரத்தடியில்
காற்றில் உடல் நடுங்க
நின்றிருந்தாள்.

கடந்த பல நிமிடங்களுக்குப்
பிறகு கிணற்றில் இருந்து
வெளி வந்த மதுரகீதன்,
மயூரிகா அருகில் சென்று
அவள் கை பிடித்து
பிரேஸ்லெட்டை
அணிவித்தான்.

"தேங்க்ஸ் மதுரன்"

"நான் உன் கிட்டப்
பேசலாம்னு நினைச்சு
வந்தேன் மயூ.இப்படி
நடக்கும்னு நினைக்கலை.
வருணுக்கு உன் மேல
பாசம் அதிகம்.உன்
வாழ்க்கை வீணாகக்
கூடாதுங்கிற
அக்கறையில..."

"வருணைப் பத்தி
எனக்குத் தெரியும் மதுரன்"

"உனக்குத் தெரியும் மயூ.
நான் சொ...."

"நான் தனியா
இருக்கணும்னு
நினைக்கிறேன் மது.நாம
இன்னொரு நாள்
பேசலாம்.ப்ளீஸ்..."

"என்னால உன்னைத்
தனியா விட முடியாது மயூ"

"ப்ளீஸ் மதுரன்"

"ஓகே.நான்
போயிடறேன்"என்றவன்,
"ஸ்லிப்பரை மறந்துட்டியா?
நான் எடுத்துட்டு வரேன்"என
நகர,அவன் சட்டையைப்
பிடித்து இழுத்து
நிறுத்தினாள் மயூரிகா.

"சாரி.நானே
போட்டுக்கறேன்.நீங்க
எடுக்க வேண்டாம்.
நீங்களும் போடலை.
போட்டுட்டுக்
கிளம்புங்க"

மௌனமாக அவளுக்குத்
தலையசைத்து விட்டு,
அவள் விரும்பிய
தனிமையை அவளுக்கு
அளித்து விட்டுத்
தோப்பை விட்டு
வெளியேறினான்
மதுரகீதன்.

ஒன்றரை மணி நேரம்
கடந்த பின்பு,தோப்பில்
இருந்து வெளி வந்த
மயூரிகா,மதுரகீதன் கார்
நின்றிருப்பதையும்,
அவன் தனக்காகக்
காத்திருப்பதையும்
கண்டாள்.

இவன் செல்லவில்லையா?
மது எப்போதும் இப்படித்
தானே?

"நான் டிரைவ் பண்றேன்
மயூ"

"வேண்டாம் மதுரன்"

"உன்னால டிரைவ் பண்ண
முடியாது.சொன்னா கேளு"

"சரி.உங்க கார்ல
போகலாம்.என் கார் இங்க
நிற்கட்டும்.கார்த்தியை
எடுத்துட்டு வர
சொல்லிக்கறேன்"

"சரி"

காரில் ஏறி அமர்ந்த
இருவரும்,சில கணங்கள்
பார்த்திருந்து விட்டுப்
பார்வையை விலக்கிக்
கொண்டனர்.மயூரிகா
வீட்டை அடையும் வரை
காருக்குள் மௌனமே
ஆட்சி புரிந்தது.

"பை"என முணுமுணுத்து
விட்டுச் சென்றவளையே
பார்த்துக் கொண்டிருந்த
மதுரகீதன் மனது
வேதனையில்
துவண்டிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்து
நேராகத் தன் அறைக்குச்
சென்று படுக்கையில்
விழுந்தாள் மயூரிகா.

வருணனின் கோப முகமும்,
மதுரகீதனின் தவிப்பான
முகமும் மயூரிகாவின்
மனதில் மாறி மாறி
வந்து போனது.

"பாப்பா,பாப்பா"
பூமணியின் அலறலான
அழைப்பில் விழி திறந்தாள்.

இவர் போடும் சத்தத்தில்
ஊரே கூடி விடும்!

"என்னக்கா"

"நீ இந்த நேரத்துல வர
மாட்டியே பாப்பா.அதான்..."

தவறு என் மீது தானா?
நான் இப்படி நினைத்த
நேரத்தில் போவதும்,
வருவதுமாய் இருந்தால்,
தாத்தாவும்,பாட்டியும்
அம்மாஅப்பாவிடம் சொல்லி
விடுவார்கள்.இனி
நிதானமாக நடந்து கொள்ள
வேண்டும்.

"இப்பெல்லாம் நீ அடிக்கடி
யோசனையில மூழ்கிடறே
பாப்பா"

"இல்லைக்கா.பூஜைக்குப் பூ
பறிக்கறீங்களா”என்றாள்
பூமணி கையில் இருந்த
பூக்கூடையைப் பார்த்தபடி.

"ஆமாம் பாப்பா.பாட்டி பூ
பறிச்சுக் கட்ட சொல்லி
இருக்காங்க"

"சரிக்கா.நீங்க போய்
பூப்பறிங்க.நான் கொஞ்ச
நேரம் படுத்திருக்கேன்"

"எதாவது வேணும்னா
கூப்பிடு பாப்பா"

"சரிக்கா"

ஈர உடை காற்றிலேயே
உலர்ந்திருந்தாலும்,மாற்ற
நினைத்தவள்
குளியலறைக்குச் சென்று
நெடு நேரம் ஷவரில்
நின்று விட்டு வந்தாள்.

மயூரிகா தலை துவட்டத்
தொடங்கவும்,கதவு
தட்டப் பட்டு,"பாப்பா"
என்ற அழைப்பும் கேட்டது.

"உள்ள வாங்கக்கா"

"குளிச்சுட்டியா பாப்பா"

"ஏன்கா"

"பாட்டி உங்களை
ஐயாவுக்குப் போன் பண்ண
சொன்னாங்க பாப்பா.நீங்க
போனை எடுக்கலைன்னு
பாட்டியைக்
கூப்பிட்டிருக்காங்க.நான்
வந்து பார்த்தேன்.தண்ணி
சத்தம் கேட்டுச்சு.
குளிக்கறீங்கன்னு
சொன்னேன்.பேசிடு பாப்பா.
ரொம்ப நேரம் முன்னாடியே
கூப்பிட்டாங்க"

"சரிக்கா.நான் பேசிக்கறேன்"

பூமணியை அனுப்பி விட்டு
டிரெஸ்ஸிங் டேபிள் மீது
பார்த்தவள்,அங்கு தன்
கைபேசி இல்லாதது கண்டு
படுக்கையில் பார்த்தாள்.

எங்கு வைத்தேன்?போன்
சத்தமே கேட்கவில்லையே!

ம்ம்...போனை நான் எடுத்து
வந்த நினைவே இல்லையே.
காரில் இருக்கிறதா?அப்பா
எதற்கு அழைத்திருப்பார்?

அச்சோ!கார் தோப்பில்
நிற்கிறது.இப்போது என்ன
செய்வது?

கார்த்தியிடம் முதலில்
பேசலாம்.எப்படி மறந்தேன்?
இல்லை...அவனை இந்த
நேரத்தில் தொந்தரவு
செய்ய வேண்டாம்.

கார் சாவியைப் பூமணியிடம்
கொடுத்து,வீட்டில் எப்போதும்
இருக்கும் ஓட்டுனரை காரை
எடுத்து வர அனுப்பினாள்
மயூரிகா.

லேண்ட் லைனில் இருந்து
தந்தையை அழைத்துப் பேசத்
தொடங்கினாள்.

"அப்பா"

"ஏன்டா கண்ணு போனை
எடுக்கலை"

"நான் என் போனைக்
கார்லயே மறந்து
வைச்சுட்டேன்பா.
சாரிப்பா"

"பரவாயில்லை தங்கம்.
ஏன்டா கிளாஸ்சுக்குப்
போகலையா"

"போனேன்பா...
போரடிச்சுது...
வந்துட்டேன்"

"உன் விருப்பம் போல
செய் தங்கம்.சளி
பிடிச்சுடுச்சா மயூ"

"ஆமாம்பா.தனு என்னை
நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட
வைச்சுட்டாப்பா.அது
சேரலை.பூமணி அக்கா
ஏதோ ரசம் வைக்கிறேன்னு
சொன்னாங்க.சரியாயிடும்.
நீங்க கவலைப்
படாதீங்கப்பா"

"சரி தங்கம்.உடம்பைப்
பார்த்துக்கோ"

"சரிப்பா.அம்மாவை எப்படி
சமாளிக்கறீங்கப்பா"

"அதை ஏன்டா கேட்கறே?
நீ எப்படி இருக்கே,என்ன
பண்றேன்னு வருண்
கிட்டக் கேட்டு அவனை
ஒரு வழி பண்ணிட்டு
இருக்கா தங்கம்"

வருண் என்றதும் அவளிடம்
மௌனம் குடி கொண்டது.

"கவலைப் படாதேடா.
அம்மாவை நான்
பார்த்துக்கிறேன்"

"சரிப்பா"

"சும்மா தான்டா
கூப்பிட்டேன்.
குளிக்கறேன்னு பூவு
சொன்னா.நீ போய்
தலை துவட்டு தங்கம்.
ஏற்கனவே சளி.காய்ச்சல்
வந்துடப் போகுது.அப்பா
அப்புறம் பேசறேன்"

"சரிப்பா.வைச்சுடறேன்பா"

தந்தையிடம் பேசி முடித்து
விட்டுத் தோட்டத்தினுள்
சென்றவள்,மாமர நிழலில்
மரத்தில் சாய்ந்து அமர்ந்தாள்.

எத்தனை பொய் சொல்ல
வேண்டியதாக இருக்கிறது?
கடவுளே!

அவள் மனது வருணன்
பேச்சிலேயே உழன்று
கொண்டு இருந்தது.

எப்போதும் பொறுமையாக,
கனிவாக,அன்புடன்
சொல்வதை இன்று
கடுமையுடன் சொல்லி
இருக்கிறான்!

என் நன்மைக்காகத் தான்...
ஆனால் சொல்லிய விதம்
வேறுபட்டு விட்டது.

பப்பி லவ்வாம்!வரட்டும்
அவன்.அவனை கவனித்துக்
கொள்கிறேன்.மது
இருந்ததால் தான் அப்படி
எல்லாம் பேசி
இருக்கிறான்.

மது வந்ததில் இருந்து
தான் வருணிடம் இந்தக்
கோபமும்,கடுமையும்!

அவள் மனதில்
சொல்லொணாத வலியைச்
சுமந்திருந்த மதுரகீதன்
விழிகள் தோன்றியது.

வருண் கோபத்தில்
நாக்கைச் சாட்டையாகச்
சுழற்றி இருப்பானே!என்
மது மனது காயப்
பட்டிருக்கும்!

என் கண்ணீர் கண்டு
மேலும் துவண்டிருப்பான்.
நான் ஆறுதலாகப் பேசி
இருக்க வேண்டுமா?

என் மனதே
அமைதியற்று
இருக்கையில் நான்
எவ்வாறு அவனுக்கு
ஆறுதல் அளிப்பேன்?

கைபேசி ஒலித்ததும்
யாரெனப் பார்த்தவள்,புது
எண்ணைக் கண்டு
அலட்சியப் படுத்தினாள்.

சற்று முன் தான் அவள்
கைபேசி அவள் கைக்கு
வந்திருந்தது.

விடாமல் அடித்துக்
கொண்டே இருக்கவும்,
பொறுமையின்றி எடுத்துக்
காதில் வைத்தாள் மயூரிகா.

"ஹலோ"

"மயூரிகா தானே"

"ஆமாம்.நீங்க"

"நான்..நான் அபிநயா"

"சாரி.நீங்க யாருன்னு
தெரியலையே"

"நான்...மது..."

"மதுவா.."மயூரிகாவின்
முகத்தில் யோசனை
படிந்தது.

"எங்க என்கேஜ்மென்ட்
பத்தி உங்களுக்குத்
தெரிஞ்சிருக்குமே
மயூரிகா"

"ஓ!தெரியும்.சொல்லுங்க"

"எ..எனக்கும்,மதுவுக்கும்
அவர் கனடா போறதுக்கு
முன்னாடியே என்கேஜ்மென்ட்
நடந்துடுச்சு.ஒண்ணா தான்
கனடா போனோம்.அவர்
முதல் என்னை ஏத்துக்கலை
தான்.உங்களை மறக்க
முடியாதுன்னு சொன்னார்.
நான் அவருக்கு ஆறுதலா
இருந்தேன்.எங்களுக்குள்ள
நல்ல நட்பு உருவாச்சு.
ரொம்ப காலம் கழிச்சு
அவருக்கு இப்ப தான்
என்னைப் பிடிக்க
ஆரம்பிச்சுது"

பூகம்பம் வந்த பூமியாய்
ஆனது பூவை நெஞ்சம்!

"நட்பு காதலாகும்னு
நம்பினேன்.என் காதலுக்குப்
பதில் கிடைச்சுடும்னு
நிம்மதியா இருந்தேன்.
ஆனா எப்ப இங்க திரும்பி
வந்தமோ...அப்பவே என்
நிம்மதி தொலைஞ்சுடுச்சு.
நான் போன் பண்ணா
எடுக்கிறதில்லை.என்னை
அவாய்ட் பண்ண
ஆரம்பிச்சுட்டார்"

".........."

"அவர் உங்க கிட்டத்
தான் வந்திருக்கணும்.
தயவு செஞ்சு என்
மதுவை எனக்கே
கொடுத்துடுங்க மயூரிகா.
மது இல்லாம என்னால
வாழ முடியாது.நான்
தற்கொலை
பண்ணிக்குவேன்.
எனக்கு என் மது
வேணும்.அவரை
விட்டுடுங்க ப்ளீஸ்..."

அழுகையோடு ஒலித்த
குரல் அமிலமாய்
மயூரிகாவைத் தாக்கியது.

இணைப்பைத் துண்டித்த
மயூரிகா ஆசுவாசமாவதற்குள்
அவள் கைபேசி மீண்டும்
குரல் கொடுத்தது.

வாட்ஸ்அப்பைத்
தொட்டுத் திறந்து
தனக்கு வந்த
புகைப்படங்களைப்
பார்த்தாள் மயூரிகா.

கோபத்தில் செந்தனலாய்
மாறியது மயூரிகாவின்
மதிவதனம்.

உன்னவன்
நானென
உன் நெஞ்சம்
நித்தம் சொன்னது!
என் நிலா
நீயென
உன் நெஞ்சம்
மையல் கொண்டது!
என் வாழ்வே
நீயென
காதல் கீதம்
தந்தது!
கானலாகுமோ?
காவியம் பாடுமோ?

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16014

டியர் பிரெண்ட்ஸ்,

இனிய மாலை வணக்கம்:)

கடந்த பகுதிக்கு விருப்பம்

தெரிவித்த,கருத்தைப்

பகிர்ந்து கொண்ட

தோழமைகளுக்கு எனது

அன்பான நன்றிகள்:love::)

மயூரிகா கோபம் குறைந்ததா

என்று தெரிந்து கொள்வோமா?

வாசித்து உங்கள் கருத்தைப்

பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.அடுத்த பதிவு

திங்களன்று.

ப்ரியமுடன்,
நித்திலா

16017

அப்போது தான் வெளியில்
சென்று விட்டு வீட்டிற்குத்
திரும்பி இருந்தாள் வசந்தி.

தாயின் கவலை தோய்ந்த
முகம் கண்டு அவரருகில்
சென்று சோபாவில்
அமர்ந்தாள் வசந்தி.

"என்னாச்சும்மா?ஏன்
கவலையா இருக்கீங்க?
மது தான் இங்கயே
இருக்கப் போறானே"

"என் கவலை எல்லாம்
அவன் கல்யாணத்தை
நினைச்சு தான் வசு"

"அவன் கிட்டப்
பேசுனீங்களா?என்ன
சொல்றான்?"

"அவன் என்ன
சொல்லப் போறான்?
அதே பழைய கதை
தான்.இப்ப உன்
அப்பாவும் அவன் கூட
சேர்ந்துட்டார்.
மாப்பிள்ளை மதுவுக்குத்
தான் எப்பவுமே
சப்போர்ட் பண்ணுவார்"

"மது சந்தோஷமா
இருக்கணும்னு தானே
அவங்க நினைப்பாங்கம்மா?
மது வேற யாரையாவது
விரும்பி இருக்கலாம்.
நிறைவேறாதுன்னு
தெரிஞ்சும் எதுக்கு
அவளையே
நினைச்சுட்டு
இருக்கான்"

"மாப்பிள்ளை அவங்க
சம்மதிப்பாங்கன்னு
சொல்றார் வசு.
மயூவுக்கு இன்னும்
கல்யாணம்
ஆகலைன்னு
வேற சொல்றார்"

"ஓ!அவளுக்கு
இன்னும் கல்யாணம்
ஆகலையா?பாவம்மா.
ஆனாலும் அவ
அப்பாவுக்கு இவ்வளவு
பிடிவாதம் இருக்கக்
கூடாது.பொண்ணுக்குக்
கல்யாணம்
ஆகலைனாலும்
பரவாயில்லை.தான்
சொல்றவனைத் தான்
கல்யாணம்
பண்ணிக்கணும்னு
நினைக்கறாங்க.
இவ்வளவு வருஷம்
ஓடியும் அவங்க
மாறவே இல்லைம்மா"

".........."

"அந்த மயூவே இப்ப
மதுவை ஏத்துக்கிறது
கஷ்டம் தான்மா.மது
மேல வெறுப்போட
தான் இருப்பா.
மதுவுக்கு ஏமாற்றம்
தான் கிடைக்கும்.
நீங்க அவனுக்குப்
புத்தி
சொல்லுங்கம்மா.
உங்க பேச்சை
அவன் மீற
மாட்டான்"

"இல்லை வசு.அவன்
என்னை விட்டு விலகி
ரொம்ப தூரம்
போயிட்டான்.என்
பேச்சைக் கேட்க
மாட்டான்.நான்
அபிநயாவைக்
கல்யாணம் பண்ணிக்க
சொல்லி அவனை
வற்புறுத்தினேன்.
அப்ப இருந்தே
எங்களுக்குள்ள ஒரு
திரை விழுந்துடுச்சு.
என் பாசத்தை வைச்சு
அவனைப் பணிய
வைக்க நினைச்சேன்.
நான் அப்படிப் பண்ணி
இருக்கக் கூடாது"

"நீங்க நல்லதுக்குத்
தானேம்மா செஞ்சீங்க.
அவனுக்குப் புரியலை.
அபிக்கு இன்னும்
கல்யாணம்
ஆகலைம்மா.
மதுன்னா அவளுக்கு
ரொம்பப் பிடிக்கும்.
நாம இப்பக்
கேட்டாலும் பொண்ணு
கொடுப்பாங்கம்மா"

"மயூ பத்தாதுன்னு
அபிநயா மனசுலயும்
ஆசையை வளர்த்து
அவ மனசை
உடைச்சுட்டேன்.
நான் எவ்வளவு
பாவம் பண்ணி
இருக்கேன்"

"அம்மா!!உங்க
மேல எந்தத் தப்பும்
இல்லை.உங்க பையன்
வாழ்க்கையைத் தானே
நீங்க பார்ப்பீங்க.தப்பு
செஞ்சதுனா அது அந்த
மயூ தான்.அவ நம்ம
மதுவை விரும்பி
இருக்கவே கூடாது.
மது உங்க பேச்சைக்
கேட்டிருந்தான்னா
இந்நேரம் சந்தோஷமா
வாழ்ந்துட்டு
இருந்திருப்பான்.நீங்க
இப்படிக் கவலைப் பட்டு
இருக்க மாட்டீங்க"

"அபிக்கு ஏன் இன்னும்
கல்யாணம் பண்ணாம
இருக்காங்க"

"அவ ஜாதகத்தில
எதோ பிரச்சனைன்னு
சொன்னாங்கம்மா"

"நமக்கு ஜாதகம் எல்லாம்
வேண்டாம்.மதுவை நல்லா
பார்த்துக்கிட்டா போதும்"

"நான் வேணா பேசிப்
பார்க்கட்டுமாம்மா"

"உன் அப்பா கிட்டத்
தான் முதல் பேசணும்.
எனக்குத் தலை
வலிக்குது வசு.நாம
அப்புறம் பேசலாம்.நீ
போய் பசங்க என்ன
பண்றாங்கன்னு பாரு"

"சரிம்மா"

தன் கணவரின்
உறுதியான முடிவை
எண்ணிய பூர்ணிமா
மனது மேலும்
மேலும் குழம்பி
அமைதியின்றித்
தவித்தது.

மாலை மயங்கி இருள்
சூழ்ந்திருந்தது.

அந்த மாலை நேரத்தில்,
இருளில் தன்னை
அமிழ்த்திக் கொண்டு
படுக்கையில்
கவிழ்ந்திருந்த மதுரகீதன்
விழிகள் சிவந்திருந்தது.
படுக்கையில் இருந்த
மயூரிகாவின் புகைப்படம்
மதுரகீதனின் கண்ணீரால்
நனைந்திருந்தது.

நான் உன்னை விட்டுச்
சென்றிருக்கக் கூடாது
மயூ.என்னைக்
காணாமல் நீ எவ்வளவு
துடித்திருப்பாய்?

உன்னைத் துன்புறுத்தவா
நான் உன்னை நேசித்தேன்?
கண்ணீர் அறியாத
உன்னைக் கதறி அழ
வைத்து விட்டேனே!

உன்னைப் பிரிந்த போது
ஏற்பட்ட வலியை விட
அதிக வலியை உன்
கண்ணீர் எனக்குத் தந்து
விட்டது மயூ.ஐயோ!
உன்னை இப்படி அழ
வைத்து விட்டேனே!
மயூ...என் மயூ!

இத்தனை காலமும்
இப்படித் தானே
துடித்திருப்பாய்?

வருண் கோபத்தில்
தவறே இல்லை.வருண்
என்னைக் கொன்றாலும்
ஏற்றுக் கொள்வேன்.
எனக்கான தண்டனையாக
ஏற்றுக் கொள்வேன்.

நீ என்னை நேசித்திருக்கக்
கூடாது மயூ.உன்
அன்பிற்குத் தகுதி
இல்லாதவன் நான்.

மயூ...என் மயூ..
உன்னை விட்டு இனி
ஒரு நொடியும் நான்
பிரிந்திருக்க மாட்டேன்
மயூ.உன் வலிகளைப்
போக்கி விடுவேன்
கண்ணம்மா.நீ
கண்ணீர் சிந்த விட
மாட்டேன் கண்ணம்மா.

என்னை ஏற்றுக் கொள்
மயூ.உன் மதுவை
மன்னித்து விடு!

நான் உன்னை விட்டுச்
சென்று விட்டேன் தான்.
ஆனால் உன்னை
நினைக்காமல்
இருந்ததில்லை மயூ.
உன்னைப் பார்க்க
மாட்டோமா என நான்
ஏங்காத நாளில்லை
மயூ.உன் குரல்
கேட்காமல் நான்
அடைந்த வேதனை
கொஞ்சமல்ல மயூ.

நான் வேதனைப்
பட்டால் பரவாயில்லை
மயூ.இந்த
வேதனைகளை நீ
அனுபவிக்கும்படி
ஆனதே!அதைத்
தான் என்னால்
தாங்கிக் கொள்ள
முடியவில்லை!
நான் பெருந்தவறு
இழைத்து விட்டேன்!

உன் பூவிதயம்
காதலின் கொடிய
வேதனையை
எப்படித் தாங்கியதோ?
உனக்கு ஏதேனும்
நேர்ந்திருந்தால்…அது
எனக்குத் தெரிய
வரும் மறுநொடி
நானும் இருக்க
மாட்டேன் மயூ!

ஆனால்,எனக்குத்
தெரியும் மயூ.நீ
எந்தத் தவறான
முடிவிற்கும் செல்ல
மாட்டாய்.நான்
பதட்டத்தில் எதையும்
யோசிக்காமல்
கிணற்றில் குதித்து
விட்டேன்.

தலையணை மீது
வைத்திருந்த
மயூரிகா படத்தை
வருடினான்
மதுரகீதன்.

"என்னால தானே
இன்னைக்கு வருண்
உன்கிட்ட அப்படிப்
பேசுனான்?என்னை
மன்னிச்சுடு மயூ.நீ
அழாதே.எல்லாம்
சரியாயிடும்.உன்
மது இனி எப்பவும்
உன்னை விட்டுப்
போக மாட்டான்.நீ
என்னை மன்னிச்சு
ஏத்துக்கோடா.ப்ளீஸ்
மயூ"என்று அவள்
எதிரில் இருப்பது
போல இறைஞ்சினான்.

மயூரிகா படத்தைப்
பார்த்துப் பேசிக்
கொண்டிருந்தவன்,
அப்படியே அதில்
முகம் புதைத்துக்
கொண்டான்.நீண்ட
நேரத்திற்கு அப்படியே
படுத்திருந்தான்
மதுரகீதன்.

வீட்டின் அழைப்புமணி
விடாமல் ஒலித்து
மதுரகீதனை எழுப்பியது.

புகைப்படத்தைப்
படுக்கையிலேயே வைத்து
விட்டு,முகத்தைத்
துடைத்துக் கொண்டு
அறையில் இருந்து
வெளியேறிய மதுரகீதன்,
விளக்குகளை உயிர்ப்பித்துக்
கொண்டே ஹாலிற்குச்
சென்று கதவைத்
திறந்தான்.

"என்ன மது வீடே
இருட்டாயிருக்கு?
லைட் கூடப்
போடாம என்ன
செய்யறே"

"ஒண்ணும்
இல்லை மாமா.
உள்ள வாங்க"

சோபாவில்
அமர்ந்தவன் அருகில்
அமர்ந்து கொண்டு
அவன் முகத்தைக்
கேள்வியாகப்
பார்த்தான் கந்தவேல்.

"ஏன் டல்லா இருக்கே"

"நல்லா தான் இருக்கேன்
மாமா"

"நீ சரியில்லை.
உண்மையைச் சொல்லு.
அந்தப் பொண்ணைப்
பார்த்தியா?பேசினயா?
உன்கிட்டப் பேசுச்சா?"

"பார்த்தேன் மாமா.
எங்க விஷயத்தைப்
பத்தி எதுவும் பேசலை.
பேச முடியலை"

"அதான் டல்லா
இருக்கியா?நாளைக்குப்
பேசு.நீ சொல்றதை
வைச்சுப் பார்த்தா,
அந்தப் பொண்ணு
உன்னைக் கண்டிப்பா
மன்னிச்சுடும்"

"ம்"

"உன் போன்
ஸ்விட்ச்ஆப்னு
வந்துதேன்னு தான்
பார்த்துட்டுப்
போகலாம்னு
வந்தேன் மது.நான்
கிளம்பறேன்"

"சாரி மாமா.நான்
தான் ஸ்விட்ச் ஆப்
பண்ணி வைச்சிருந்தேன்"

"பரவாயில்லை மது.
நான் வரேன்"

கந்தவேல் சென்று விட,
சோபாவில் ஒரு
மூலையில் கிடந்த தன்
கைபேசியை எடுத்து
உயிர்ப்பித்தான்
மதுரகீதன்.

திரை ஒளிரத் தொடங்கி
மயூரிகா படத்தைக் காட்ட,
பெரும் ஏக்கம் கொண்டது
மதுரகீதன் நெஞ்சம்.

அப்போதே அவளுடன்
பேசச் சொல்லி உள்ளம்
கெஞ்ச,தயக்கத்தோடு
மயூரிகாவின் பெயரை
அழுத்தினான் மதுரகீதன்.

இல்லை...வேண்டாம்!
மயூ ஏற்கனவே
வருத்தத்தில்,கோபத்தில்
இருக்கிறாள்.என்
அழைப்பு அதை
அதிகமாக்கி விடும்.

அன்று அவள் என்னைத்
தொடர்பு கொள்ள
முடியாதபடி செய்தேன்.
அப்போது அவள்
எத்தனை வேதனைப்
பட்டிருப்பாள்?என்னை
மன்னித்து விடு மயூ.
அன்று சரியாகத்
தெரிந்ததெல்லாம்
இன்று பெரும்
தவறாகத் தெரிகிறதே!
கடவுளே!நான் என்ன
செய்வேன்?

தன்னவளை அள்ளி
அணைத்து ஆறுதல்
படுத்த ஏங்கிய
மதுரகீதன்,அந்நாள்
விரைவில் வருமென
நம்பினான்.

இரண்டு நாட்கள்
கடந்திருந்தது.

விசாலமான
வரவேற்பறையில்
கவலை படிந்த
முகத்துடன்
அமர்ந்திருந்தார்
மகாலட்சுமி.

சத்யானந்தன்
அதிகாலையிலேயே
பண்ணைக்குச் சென்று
விடுவார்.கார்த்திகேயன்
ஒன்பது மணிக்குச்
செல்வதை வழக்கமாகக்
கொண்டிருந்தான்.
வருணன் மட்டும்
நினைத்த நேரத்திற்குச்
சென்று வருவான்.

வருணனின்
பெரும்பாலான நேரம்
அவன் மாமாவின்
பண்ணையிலும்,
தோப்புகளிலுமே கழிந்து
விடும்.பிற்பகலில்,
ஷாப்பிங் காம்ப்பிளெக்ஸ்
சென்று மயூரிகாவின்
பொறுப்புகளையும்
அவனே கவனித்து
வருகிறான்.

குமரகுருவும்,
சத்யானந்தனும்
நெருங்கிய நண்பர்கள்
என்பதால்
அவர்களுக்குள் எந்த
ஒரு போட்டியும்,
பொறாமையும்
இருந்ததில்லை.
மகாலட்சுமியை
மணந்து உறவான
பின்போ,அவர்கள்
பிணைப்பு பிரிக்க
முடியாததாக
மாறிப் போனது.

காலை உணவிற்காக
அறையில் இருந்து
வந்த கார்த்திகேயன்
தாயின் அருகில்
சென்று அமர்ந்தான்.

"என்னம்மா"

"வருணை
கவனிச்சியா?அவன்
முகமே சரியில்லை.
மயூ கூட சண்டைப்
போட்டானா"

"அதுக ரெண்டும்
அடிச்சுக்கும்.
சேர்ந்துக்கும்.
விடுங்கம்மா"

"எனக்கு அப்படித்
தோணலை கார்த்தி"

"தயவு செஞ்சு
அண்ணன் கிட்ட
கேட்டுடாதீங்க.நம்ம
கிட்ட சண்டைக்கு
வந்துடுவான்.அவனே
சரியாயிடுவான்.
விடுங்க"

"என்ன டிபன்மா"எனக்
கேட்டபடியே அங்கு
வந்தான் வருணன்.

"ஆப்பம் கண்ணா.
வா சாப்பிடலாம்"

பிள்ளைகள்
இருவருக்கும் பரிமாறத்
தொடங்கினார்
மகாலட்சுமி.

"நீங்களும் சாப்பிடுங்கம்மா"

"உன் அப்பா வரட்டும்பா"

"சரிம்மா"

"மயூவைப் பார்க்கப்
போனயா கார்த்தி"

"போகலைணா"

மகாலட்சுமி கைபேசி
ஒலிக்க,"சாப்பிடுங்கப்பா"
என்று விட்டுச் சென்றார்.

"பெரிய சண்டையோ"
அண்ணன் முகத்தைக்
கூர்ந்தான் கார்த்திகேயன்.

"ரெண்டு நாளைக்கு
முன்னாடி கோவிச்சுட்டுப்
போனவ தான்.அப்புறம்
பேசவே இல்லை"

"நம்ப முடியலையே"

"போன் பண்ணேன்.
என்னைத் தனியா விடு
வருண்னு சொன்னா.
விட்டுட்டேன்"

"மது பேசி இருப்பாரா"

"பேசின மாதிரித் தெரியலை"

மகாலட்சுமி கைபேசியோடு
வந்து வருணனிடம்
கொடுத்தார்.

"உன் பாட்டி தான்
பேசறாங்க"

"சொல்லுங்க பாட்டி"
என்றான் கைபேசியைக்
காதில் வைத்து.

"என்னடா பிரச்சனை
உனக்கு?ரெண்டு நாளா
இந்தப் பக்கமே வரலை.
மயூ கூட சண்டையா?
புள்ளை முகம் வாடிக்
கிடக்குது"

"அதெல்லாம் இல்லை
பாட்டி"

"மயூவுக்கு உன் மேல
பாசம் அதிகம் வருண்.
அவ எதாவது சொல்லி
இருந்தாலும் அவ கிட்ட
கோவிச்சுக்காதே வருண்.
இப்படிப் பேசாம
இருக்காதே ராஜா"

"என்ன பாட்டி பேசறீங்க
நீங்க?மயூ கிட்ட என்னால
எப்படிக் கோபப் பட
முடியும்?நீங்களா எதாவது
நினைச்சுக்காதீங்க.மயூ
என்னை என்ன சொல்லப்
போறா?வரவர ஓவரா
கற்பனை பண்றீங்க நீங்க.
நான் அப்புறமா வீட்டுக்கு
வரேன்"

"தெரியுமே.உங்க ரெண்டு
பேருக்கு நடுவுல வரக்
கூடாதுன்னு தான்
நினைக்கிறேன்.ஆனா
முடியலையே"

"உங்க பொண்ணு கிட்டப்
பேசுங்க.கொடுக்கிறேன்"

"ரெண்டு பேரும்
என்னவோ பண்ணுங்க"

கைபேசியைத் தாயிடம்
கொடுத்து விட்டு,
வேகமாகச் சாப்பிடத்
தொடங்கினான் வருணன்.

"கோபப் படாதே வருண்"

"நாங்க என்னவோ
பயங்கரமா சண்டைப்
போட்டுப் பேசாம
இருக்கிற மாதிரி
சொல்றாங்க கார்த்தி"

"பாட்டிக்கு என்ன
சொல்லாம,பேரனை
ரெண்டு நாளா
பார்க்கலையே,வர
வைக்கலாம்னு
சொல்லுவாங்க.
போய் பார்த்துட்டு வா"

தம்பியின் பேச்சிற்கு
மௌனமாகத் தலை
அசைத்தான் வருணன்.

ஜாதிமல்லிப் பூக்களைக்
கோர்த்தபடியே
யோசனையில்
ஆழ்ந்திருந்தாள்
மயூரிகா.

வருண் ஏன் என்னைப்
பார்க்க வரவில்லை?

என்ன மயூ நீ?நீ
சொன்னதால் தான்
அவன் வரவில்லை.

என் முகத்தைப்
பார்த்தால் அவன்
கோபம் பன்மடங்கு
அதிகரித்து விடும்.
வராமலே இருக்கட்டும்.
நானே அவனை
அழைத்துப் பேசுகிறேன்.

அந்நேரம் அவள் கைபேசி
ஒலிக்க,அதில் தெரிந்த
எண்ணில் மயூரிகா
விழிகளில் வெறுப்பு
படர்ந்தது.கோபத்தைக்
கட்டுப் படுத்திக்
கொண்டு எடுத்துக்
காதில் வைத்தாள்.

"ஹலோ"அவள் குரல்
கடுமையாகி இருந்தது.

"என்ன முடிவு
எடுத்திருக்கீங்க மயூரிகா?
என் மதுவை
விட்டுடுவீங்க தானே?"

"மதுவுக்கு இனி என்
வாழ்க்கையில
இடமில்லை அபிநயா.
இனிமேல் எனக்குப்
போன் பண்ணாதீங்க"

"நிஜமா தான்
சொல்றீங்களா மயூரிகா"

"நிஜமா தான் சொல்றேன்"

"மதுவுக்கு உங்க
வாழ்க்கையில
இடமில்லைன்னு
நீங்களே மது கிட்ட
சொல்லுங்க மயூரிகா.
அப்ப தான் அவர்
உங்களைத் தேடி
வர மாட்டார்"

"நான் அவரைப்
பார்க்க விரும்பலை.
அதனால நீங்களே
அவர் கிட்ட சொல்லிடுங்க"

"நீங்க நிஜமாலுமே
மதுவை வேண்டாம்னு
சொல்றீங்களா மயூரிகா"

"ஆமாம்.ஆமாம்"
பொறுமை இழந்தவளாய்க்
கத்தினாள் மயூரிகா.

"சாரி சாரி.நானே
மது கிட்ட சொல்றேன்.
மயூரிகா உங்களை
வெறுத்துட்டாங்கன்னு
சொல்றேன்.அப்பவாவது
அவர் கனவுலகத்தில
இருந்து வெளிய
வரட்டும்"

"என்ன வேணும்னாலும்
சொல்லிக்கங்க.இனி
எனக்குப் போன்
பண்ணாதீங்க.
குட்பை"

"என் மது எனக்குக்
கிடைச்சுடுவார்.இனி
உங்களைத் தொந்தரவு
பண்ண மாட்டேன்.
தேங்..."

அபிநயா பேசி முடிக்கும்
முன்பே இணைப்பைத்
துண்டித்தாள் மயூரிகா.

கைபேசியை அணைத்து
வைத்து விட்டுப் பூ
கோர்ப்பதைத்
தொடர்ந்தாள் மயூரிகா.

கவனமின்றி ஊசி அவள்
கையில் குத்தி ரத்தம்
வரச் செய்தது.

"பாப்பா,வந்து சாப்பிடு"
பூமணி அங்கு வர.

"கொஞ்ச நேரம் கழிச்சு
வரேன்கா"

"உன் பெட் மேல
இருக்கிற டிரெஸ்ஸை
எல்லாம் அயன் பண்ணக்
கொடுத்துடட்டுமா"

"கொடுத்துடுங்கக்கா"

"நான் வேணா பூ
கோர்த்துத் தரட்டுமா"

"வேண்டாம்கா.நானே
கோர்க்கிறேன்.நீங்க
போங்க"

பூமணி சென்று விட,
தன் கவனத்தைப் பூ
கோர்ப்பதில் செலுத்த
முயன்று தோற்றாள்
மயூரிகா.

ச்சே!இந்நேரத்திற்கே
அழைத்து விட்டாள்!

தன் கோபத்தைக் கட்டுப்
படுத்த சில
நிமிடங்களுக்கு கண்
மூடி தியானித்தாள்
மயூரிகா.

ம்ஹூம்!நான் வேறு
எதாவது செய்ய
வேண்டும்.அவளை
நான் நினைக்கவே
கூடாது.

பூக்கூடையை எடுத்துக்
கொண்டு வீட்டினுள்
சென்று பூமணியிடம்
கொடுத்தாள் மயூரிகா.

பின் தன் அறைக்குச்
சென்று தனக்குத்
தேவையானவற்றை
எடுத்து வைத்தாள்.

அமைதி இழந்த
மனதின் கவனத்தைத்
திருப்பி தன் மனதிற்கு
அமைதி கொடுக்க
முயன்றாள் மயூரிகா.

பிற்பகல் பொழுது.

மயூரிகாவைக் காண
வந்த வருணன் அவள்
உறங்குவது கண்டு,சில
நிமிடங்கள் நின்று
அவளையே பார்த்துக்
கொண்டிருந்தான்.

மயூவிற்குப் பகலில்
உறங்கும்
பழக்கமில்லையே!
இரவெல்லாம்
தூங்காமல் இப்படிப்
பகலில் தூங்குகிறாளா?

அறையைச் சுற்றி வந்த
வருணன் பார்வையில்
கலர்ஸ்,க்ளூ,
ஸ்பார்கிள்ஸ்,
பெயிண்டிங் பிரஷ்கள்
உள்ளிட்டவை
ஜன்னலோரமாகத்
தரையில் கடை பரப்பி
வைக்கப் பட்டிருந்தது
பட்டது.

அதனருகில் சென்று
அதனோடு இருந்த
அட்டைப்பெட்டி,
தேங்காய் மூடி,சிறிய
மண் பானையை
எடுத்துப் பார்த்தான்
வருணன்.

மயூ அமைதி இழந்தால்
மட்டுமே இவற்றை
நாடுவாள்!அப்படி
என்ன நடந்திருக்கும்?

மதுவுடன் தோப்பில்
பேசியதன் விளைவா?
இருக்காது.அவன் மயூ
மனம் நோகும்படி
எதுவும் செய்ய
மாட்டான்.அதுவுமின்றி
மது தோப்பிற்கு
வெளியில் அல்லவா
காத்திருந்தான்?அவன்
தோப்பிற்குள் சென்ற
ஐந்து,பத்து
நிமிடங்களில்
அவர்களுக்குள்
எந்தப் பேச்சும்
நிகழ்ந்திருக்காது!

மயூவே என்னிடம்
சொல்வாள்.அப்போதே
கேட்டுக் கொள்கிறேன்.

மயூரிகா அருகில் சென்று
அவள் தலையை வருடிக்
கொடுத்து விட்டு,
சத்தமின்றி வந்த வழியே
திரும்பிச் சென்றான்
வருணன்.

நிலவு முழுவதுமாக
வளர்ந்திருந்தது.

தனது படுக்கையில்
வைத்திருந்த மாத
இதழ்களை ஒவ்வொன்றாக
எடுத்துப் புரட்டிக்
கொண்டிருந்தாள்
மயூரிகா.

அம்மா வந்தவுடன்
இந்த ஸ்வீட்டை
செய்யச் சொல்ல
வேண்டும்.பார்க்கும்
போதே ஆசையாக
இருக்கிறது.

அம்மா எப்படி
இத்தனை நாட்கள்
என்னைப் பார்க்காமல்
இருக்கிறார்கள்?பாவம்!
மலருக்காக உள்ளுக்குள்
மிகவும் ஏங்கி
இருப்பார்கள்
போலுள்ளது.

மலரும் இவ்வளவு
நாட்கள் வீட்டிற்கு
வராமல் இருந்ததில்லை.
வேலைகளை முடித்து
விட்டு நிரந்தரமாக வர
எண்ணியே வராமல்
இருந்திருக்க வேண்டும்.

அம்மாவும்,அப்பாவும்
மலரை அழைத்துக்
கொண்டு தான்
வருவார்கள் என
நினைக்கிறேன்.மலர்
வந்து விட்டால் வீடே
கலகலப்பாக மாறி
விடும்.

தங்கையை
நினைத்ததும் மயூரிகா
மனதில் இதம்
தோன்றியது.

புத்தகத்தைப்
புன்னகையுடன்
புரட்டியவள்,மணி
பதினொன்று ஆனதும்
புத்தகத்தை மூடி
வைத்து விட்டு
விளக்கை
அணைத்தாள்.

இரவு விளக்கின்
மெல்லிய வெளிச்சம்
அறையை
நிறைத்திருந்தது.

கண்கள் மூடி
இருந்தாலும்
உறங்காமல் தான்
இருந்தாள் மயூரிகா.

மதுரகீதன்
நினைவுகளில் மூழ்கிக்
கிடந்தவள்,தன் அறைக்
கதவு திறந்ததையோ,
அது மீண்டும் சாத்தப்
பட்டுத் தாழிடப்
பட்டதையோ
உணரவில்லை!

யாரோ அருகில்
அமர்ந்ததை
உணர்ந்ததும் அவள்
விழிகள் திறந்து
கொண்டது.

கத்தி விடுவாளோ என
அச்சம் கொண்டு
மயூரிகாவின் வாயைத்
தன் கரம் கொண்டு
பொத்தினான்
மதுரகீதன்.

தன் பெரிய கண்களில்
வியப்பைத் தேக்கி
மதுரகீதனைப்
பார்த்தாள் மயூரிகா.

"மதுவுக்கு இனி
என் வாழ்க்கையில
இடம் இல்லை"

மயூரிகாவின் கோபக்
குரல் மதுரகீதனின்
செவிகளில் மோதி
அவன் இதயத்தைத்
தாக்கியது.

"எனக்கு வேற வழி
தெரியலை மயூ.
என்னோட இந்தத்
தப்பையும்
மன்னிச்சுடு மயூ"

மயூரிகா விழிகள்
இமைக்க மறந்து
அவன் முகத்திலேயே
நிலைத்திருந்தது.

கண்ணம்மா!
உன் உள்ளம் கொண்ட
கண்ணன் நான்!
இன்று கள்வனானேன்!
காதல் செய்த சதியோ?
கடவுள் வகுத்த விதியோ?
தண்டிப்பாயா?
மன்னிப்பாயா?

கீதம் மயக்கும்...

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி
 
Status
Not open for further replies.
Top