All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நினைவிலும் நீதானடி என்னுயிரே..

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே..
###############################
முதல் அத்தியாயம், ------1


பிரம்பஞ்சமே
அன்பு என்னும்
ஒற்றை வார்த்தையில்
உள்ளயடங்கியதே...😍


''அன்பினி''... ஏய்..அன்பு எங்கடி போன...காலையிலிருந்து கண்ணலேயே தண்டுபடுலேயே...அன்பினின் அம்மாத்தா வைரம்மாள் வாசலுக்கு வந்தார்...தட்டு தடுமாறி ..கண்ணுக்கு மேலே கை வைத்து தூரத்தில் தெரிகிறாளா...பார்த்துக் கொண்டிருந்தார்...இந்த புள்ள எங்க தான் போச்சு...புலம்பியபடி நின்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்து கொண்டிருந்த தேன் மொழியை பார்த்தவர்...ஏ தேனு உன் கூட்டாளியை பார்த்தியா... எங்க போனா காலையில் காபித்தண்ணீ கூட குடிக்காமா போய்யிட்டா...
ஆத்தா அவ காலையில் எங்க போவா உனக்கு தெரியாதா...தினமும் இப்படி வாசலிருந்து அவ பெயரை ஏலம் விட்டுருக்க...ஆமாடி எனக்கு வேலை இல்லை பாரு....தினமும் சொல்லமா சொல்லாமா போவது தான் அவளுக்கு வேலையா போச்சு..இன்னிக்கு வரட்டும் அவ காலை நறுக்கி அடுப்பில வைக்கிறேன்....திட்டிக் கொண்டே உள்ளே போக...ஆத்தா...என்னடி...என்கிட்ட தான் இத்தனை திட்டு திட்டற...அவளை பார்த்தும் கண்ணு செல்லம் கொஞ்சதா போறே ....தினமும் இதே தானே நடக்கது....அவ எங்கயும் போக மாட்டா வந்துவிடுவா நீ உள்ளே போ ஆத்தா...அவரை அனுப்பினாள் தேன் மொழி...

அன்பு இருக்கடி உனக்கு தினமும் உன் அம்மாத்தா கோபபடுத்துவதே வேலையா போச்சு...திட்டிக் கொண்டே போனாள் அன்பினின் தோழி தேன்மொழி...

அன்பினி காற்றைப் போல பறக்க..போகும் வழியெல்லாம் இவ எதுக்கு இத்தனை வேகமா போற...தினமும் இவளுக்கு இதே வேலையா போச்சு...அங்கு நின்றுருந்த அன்பினி சித்தப்பா ஏகாம்பரம் புலம்பிய படி...ஏ..அன்பும்மா மெதுவா போடா..சொல்லி நிமர்ந்தவர் கண்ணுக்கு தெரியாத தூரம் காணவில்லை அவளை..காதில் வாங்கியபடி சரி...சித்தப்பூ...காற்றாய் பறந்திருந்தாள்... அன்பு மெதுவாடி என்ன தான் அவசரமோ...அவளுடைய பெரியம்மா...சத்தமிட....சரிரிரீ....ஒடினாள்...

அன்பினி செதுக்கிய சிலை போல இருக்கயா..சொல்லவதைப் போல பொன்னை வார்த்த எடுத்த தங்கச்சிலை ....இன்றைய நாகரிகம் போல இல்லாமல் பாவாடை தாவணி அணிந்த அழகி... பிறை நெற்றியில் சாந்து பொட்டும் வில்லாக வளைந்த புருவமும் நீண்ட கயல்விழிகளில் மையிட்டு நாசியில் ஓற்றை கல் மூக்குத்தி அவள் முகத்துக்கே அழகூட்ட..மெல்லிய இதழ்கள் பட்டு போல பளபளக்க...தாடையில் அழகுக்கு திருஷ்டி பட்டுவிடாத கரு மச்சம் இயற்கை அவளுக்கு அளிக்க ....மென்மையான இளந்தென்றல்...

அழகியான அவளுக்கு அழகு என்பதை பொருட்டு இல்லாமல் பழகும் வெகுளியானவள் .....ஒடிக்கொண்டே..ஊரில் உள்ளவர்களுக்கு பதில் சொல்லிபடி ஒடியவள் மூச்சு வாங்க நின்றால் அந்த அழகான பழைய காலத்து வீட்டின் முன்...

சுற்றிலும் பசுமையாக மரமும் செடி கொடிகளும் நிறைந்த அதன் நடுவில் வெள்ளை நிறத்தில் மட்டும் பெயிண்ட் அடித்து கம்பீரமாக நின்றது...அந்த வீட்டில் உள்ள மனிதர்களைப் போலவே...பெரிய வாசலும் இருபக்கமும் திண்ணையும்...உள்ளே நுழைந்தவுடன் முற்றமும்...ஒருபக்கம் அடுப்பாங்கரை ..மறுபக்கத்தில் விருந்தினர்கள் வந்த அமர மரச்சேர்களும்...ஒவ்வொரு பொருளும் இடமும் பழையது அழியவில்லை பறைசாற்றி கொண்டிருந்தது...மரக் கைப்பிடி பிடித்து படிகளில் ஏறினால் அங்கு விசாலமான ஹாலும்...எதிரே எதிரே அறைகளும் ..பழையதை அப்படியே இந்த காலத்துகேற்ப மாற்றி அமைத்திருந்தார்கள் ....

ஏலே...ராசு...ராசு..கூப்பிட்டப்படி வந்த அழகம்மா எங்கடா போனிங்க....பால் கறந்தீங்களா..இல்லையா ..சத்தமிட்டபடி..பின்பக்கம் மாட்டு தொழவத்திற்கு போனார்...ஆத்தா...அங்கே இருங்க இதோ கொண்டு வரேன்...பாலைக் கறந்து கொண்டு வந்தவன்....அதை கையில் வாங்கியவர்...அவனை முறைத்துப் பார்த்தார்...ராசு...மண்டைச் சொறிந்தபடி...ஆத்தா இன்னிக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்...நாளைக்கி வெரசா வந்தரேன்....தினமும் இதே தான் ...போடா ...போய் மாட்டை எல்லாம் குளிப்பாட்டி வைக்கோல போடு ....எங்க உன்ற பொண்டாட்டி ...வந்துவிட்டாளா...இல்லை அம்மணி இன்னும் தூங்கிட்டு இருக்காளா....அய்யோ..ஆத்தா அவ அப்பவே வந்துட்டா....ம்ம்...போய் பார்க்கிறேன்...நீ போய் ஜோலியை முடி...சொல்லிவிட்டு உள்ளே போனார்...அஞ்சலை...ஏண்டி அஞ்சலை..கூப்பிட ஆத்தா..வந்துட்டேன் ...அவர் முன் வந்தவள் அவர் கையிலிருந்த பாலை வாங்கிக் கொண்டு போனாள்...சீக்கிரம் காபித் தண்ணீ போட்டு வா.. சொல்லியபடி வெளி வாசலுக்கு வந்தார்...அழகம்மா...அன்பினியும் அதே நேரத்தில் வாசலில் நிற்க...இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துவிட்டு .. காலையிலே வந்துட்டா...இவளை ஏண்டி..இரயில் எஞ்சின் போல மூச்சரைக்க ஒடி வரனுமா....மெதுவா வர மாட்டியா..அழகம்மா...திட்டிக் கொண்டிருக்க...அவர் திட்டுவதை கேட்டபடி சுற்றி சுற்றி பார்த்தாள்...என்னடி நான் பேசறேன் எங்கயோ பார்க்கிற...அவரும் பார்க்க ..மெதுவா அடியெடுத்து அவருகில் வந்தவள்...அவருடைய கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தமிட்டு கலகலவென்று சிரித்தாள்....அவள் முத்தமிட்டதை பார்த்தவர்..வெட்கி போய்.அவளைப் போலவே யாரும் பார்த்துவிட்டாங்களா சுற்றி பார்த்தவர்...ஏய் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்... கொஞ்சி குலவிகிட்டு இருக்கே....போடி அங்கிட்டு
அழகம்மா திட்ட...ஏய் கிழவி...நான் தானே கொடுத்தேன்...என்னமோ தாத்தா கொடுத்தமாதிரி சிலிர்த்துகிற.....சொல்லியவள்...எங்கே....என் மாமன காணாம்...அவருக்கு கொடுக்கனும் நினைப்பதெல்லாம் கிழவிக்கு கொடுக்க வேண்டியதா இருக்கு..
முணுமுணுப்படி உள்ளே எட்டிப் பார்த்தாள்...அவள் உள்ளே பார்ப்பதை பார்த்தவர்..வாய் மட்டும் ஏழு ஊருக்கு அடிப்பா ..அவனைக் கண்டதும் பொட்டி பாம்பாய் மாறிவிடுவாள்...வாயைப் பாரு...போய் எதும் வேறு ஜோலியை பாரு...அவள் தலையில் தட்டியவர்....அவன் உள்ளே தான் இருக்கான்....அவள் காதுயருகில் சொல்லிவிட்டு ...ஏண்டி அஞ்சலை...இன்னுமா காபித் தண்ணீ போடறவ....எம்புட்டு நேரமாகது...அன்பினி பார்த்து கண்ணையடித்துவிட்டு உள்ளே போனார்...அழகம்மா ....அன்பினி..இந்த வயசில இந்த கிழவி இப்படி கண்ணயடிதே...வயசில...அம்மாடியோ..எங்க தாத்தா..ஏன் இப்படி இருக்கிறார் புரிஞ்சிருச்சு...தனக்குள்ளே பேசியபடி....உள்ளே நுழைந்தாள்...



நினைவிலும் நீதானடி முதல் அத்தியாயம் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் நானும் எழுத்துலகில் புதியவள்...என் முயற்சிக்கு உங்கள் ஆதரவு தாருங்கள் தோழிகளே..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே

நினைத்தும் உன்
மனதில் தோன்றும்
ஒற்றை சொல்
அன்பினி....

அனலரசு தன்னறையிலே யோகா தியானமும் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தான் ....ஆறயடி இரண்டு அங்கல உயரமும் கட்டுமஸ்தான உடம்பும் கருமையும் மாநிறமும் கலந்த இடைபட்ட நிறமும் ,நெற்றியில் முடி பரந்து விழுவதை அசால்ட்டாக ஒதுக்குவதும்,அடர்ந்த புருவங்களும் கூர்மையான கண்கள் அடுத்தவர்களை ஊடுருவிச் சென்று மனதிலே இருப்பதை கண்டறியும்...கூர் நாசியில் கோபத்தை தேக்கி புன்னகை மறந்துபோன இதழ்களும் இறுகிய போன முகத்துடன் கடுமையாக தெரிந்தாலும் தன்னிடம் வேலை செய்பவர்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதிலும் மீறினால் அடக்கி வைப்பதும் உண்டு ..வீட்டில் பொறுமையுடன் பேசுவது அப்பாத்தா அழகம்மாவிடம் மட்டுமே ...மற்ற இடங்களில் சூரியனின் வெப்பத்தை வார்த்தையாகவே உதிர்த்து செல்பவன் ..வயல் கரும்பு தோட்டம் தென்னம்பிள்ளை தன் தாத்தா காலத்தில் இருந்தை பார்த்துக் கொண்டும் தன் முயற்சியால் கரும்பு ஆலையைத் தொடங்கி நடத்தி வருபவன்...ஊரில் தான்தோன்றிய அலையும் இளவட்டங்களை தன் கரும்பு ஆலைத்தில் சேர்த்து அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து அவர்கள் குடும்பத்தை இன்னலின்றி நடத்த வழி செய்தால் அவ்வூரில் அனலரசின் மேல் மரியாதையும் அவன் பேச்சுக்கு மதிப்பும் இருக்கும்.அனலரசு சிறு வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்தால் அவர்கள் பாசம் கண்டிப்பு எதுவுமில்லாமல் வளரந்தால் வயதிற்கு மீறிய புத்தியும் எதையும் வரட்டும் பார்த்துக்கலாம் அதீத தைரியமும் யாரிடமும் தள்ளி நின்றே பழகவதும் அழகம்மா ஒருவரை மட்டுமே நெருங்கி பாசத்துடன் பேசுவான்..

சிறிது நேரம் அன்று நடக்க வேண்டிய வேலைகளை சிந்தித்தவன் எழுந்த காலைவேளையை முடித்துவிட்டு ஆலையத்திற்கு செல்ல கிளம்பினான்..

அன்பினி வீட்டிற்குள் நுழையலாமா வேண்டாமா யோசித்தபடி நின்றவள் பார்த்த அஞ்சலை அன்புமா உள்ளே வராமல் என்ன யோசனை ... வாங்க உள்ளே சொல்லியவள்...அய்யா..மேலதான் இருக்காங்க...ஜாடை காட்டினாள்...
அதை பார்த்து சிரித்துபடி நுழைய நினைத்தவள் தோட்டத்தில் கிளிகள் சத்ததில் அதன் பக்கம் போனாள்...கிளிகளும் அவள் வரவில் ''கீச் கீச்'' சத்தமிட...சிகப்பி ,சின்னா...பெயர் சொல்லி அழைத்து கூண்டின் அருகில் சென்றாள் .இரண்டும் குதுக்கலாமாக பறந்து அவளின் கையருகில் வந்து குதித்து குதித்து ஆடியது...அதன் மூக்கை தட்டி தட்டி விளையாடி...எங்கே நான் சொல்வதை சொல்லுங்க....மாமா சொல்லு சொல்லு ...மாமு...சொல்லு கிளிகளிடம் பேச வைக்க கிளிகளும் அவள் சொல்வதைக் கேட்பதை போல சொல்லி பழக இம் இப்படி தான் சீக்கரம் மாமா சொல்லனும் சரியா கொஞ்சினாள்..
அங்கு அருகிலுள்ள மரத்தில் கொய்யா பழத்தை பறித்தவள் சின்னா, சிகப்பிக்கு கொடுக்கனும் சண்டை போடாமா சாப்பிடுங்க கூண்டில் உள்ளே வைத்தாள்...
இன்னிக்கு கொய்யா பழம் வைச்சேன் ...நாளைக்கு மாமா சொல்லே உங்களை வீட்டை விட்டு துரத்திவிட்டுருவேன்...கிளிகளை கொஞ்சிக் கொண்டிருந்தாள் அன்பினி..

அவள் மனதில் எந்நேரமும் ஒரே மந்திரம் மாமா மாமா அனலரசு மாமா மட்டுமே. தினமும் அவனை பார்க்கனும் பேசனும் அவனுடனே இருக்கனும் எண்ணியபடி வளைய வருவாள் .கனவிலும் அவன் தான் இருபத்து நான்கு மணிநேரமும் அவள் உருகும் வார்த்தை மாமா தான். தூக்கத்தில் கூட எழுப்பி கேட்டால் மாமா மாமா..அவள் தோழி தேன் மொழியிடம் ஊரில் உள்ள சொந்த பந்தம் எல்லரிடமும் பேசவது மாமா பற்றியே..மாமா பைத்தியம் பிடிக்க போக போவது கிண்டல் கேலி பேசினாலும் அவள் ஆசை மறுத்து பேச மாட்டார்கள் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பினி கிளிகளை கொஞ்சிவிட்டு நாளைக்கு பார்க்கலாம் சொல்லியபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.
''மாமா மாமா "" நீங்க எங்க இருக்கீங்க கூப்பிட்டபடி உள்ளே வந்தாள்.

''யாரடி'' என் பேரனை உரிமை கொண்டாடுவது, நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமா..போய் காலையில் பொழப்பை பார்க்கிறதே விட்டு தினமும் இதே வேலையா இங்கு சுற்றிகிட்டு இருக்கா நக்கலடித்தார் அழகம்மா .

எல்லாம் உரிமை உள்ளவங்கதான். நான் பிறந்தவுடனே உன்ற பேரனுக்கு எனக்கும் முடிச்சு போட்டார் எங்க தாத்தாவு.. நீயென் கிழவி இடையில் வர..

ஆமாடி ஊர்ல இருக்கிற சிறுக்கி எல்லாம் என் பேரனை கொண்டாடுவீங்க ,நான் வேடிக்கை பார்க்கனுமா போடி போக்கத்தவளே..

அழகம்மா பேச பேச. கிழவி ஏன் உன் பேரன் சூடாகவே இருக்காரு தெரிஞ்சுருச்சு..பேரல தான் அனல் இருக்கு நினைச்சேன், உன் கூடவே இருக்காரு அது தான் எரிமலையா பொங்குகிறார்.எனக்கு மாமானுக்கு கல்யாணம் மட்டும் ஆகட்டும்,அப்பறம் இருக்கு, தினமும் உனக்கு ஐஸ்ல குளிப்பாட்டல நான் அன்பினி இல்லை சொல்லிப்புட்டேன்.

அட போடி என்னை ஐஸ்ல குளிப்பாட்டி கொஞ்சவது இருக்கட்டும், என் பேரன் அருகிலே நெருங்க முடியாது, போய் வேலையை பாரு..

ம்கூம் இந்த கிழவி இருக்கும்வரை
மாமனை நெருங்க முடியாது போல, எப்படி தான் புரியலேயே நகத்தை கடித்தப்படி நின்று கொண்டிருந்தாள்.

மாடிபடியிலிருந்து இறங்கும் காலடி ஓசை கேட்க திரும்பியவள் சிலையா நின்றாள். ஆறயடி மேல் உயரத்திலும் கம்பீரமான உருவத்திலும் இன்றைய நாகரிகம் போல இல்லாமல் வேட்டி சட்டையில் இறங்கி வருவதை பார்த்தவள் மதுரை வீரன் போல மயக்கிறானே என் மாமன் விழி அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்பனி அங்கு நிற்பதை கண்டு கொள்ளாமல் அப்பத்தா டிபன் எடுத்து வைங்க சொல்லிப்படி டைனிங் டேபிளுக்கு செல்ல,இதோ ராசா, சொல்லியபடியே அன்பினி பார்த்து இப்ப தெரியதாடி உன் பவிசு,ரம்பையே வந்தாலும் என் பேரனை மயக்க முடியாது,ம்கூம் தோள்பட்டையில் இடித்தபடி உள்ளே பார்த்தவர் அனலரசு திரும்பி இருப்பதை கண்டு அன்பினி பார்த்து கண்சிமிட்டினாள் அழகம்மா.

அப்ப என்ன நடிப்பு கிழவிக்கு...நினைத்தவள் இருவரையும் முறைத்தபடி நின்றாள், அழகு கிளி ஒருத்தி இங்கு நிற்பதை பார்க்காமல் பக்கி கிழவி பின்னால் போகுதே,லூசு மாமா உனக்கு இருக்கடா,நீயா,நானா பாத்திடலாம் உனக்காக காலையிலே அவசர அவசரமாக எழுந்து கிளிம்பி வந்தால் கண்டுக்காமா நீ போற,மனதிற்குள் திட்டிபடி நிமர்ந்து பார்க்க அனலரசு அவளை திரும்பி முறைத்தான்..யாரடி நீ என்னை கட்டுப்படுத்த ,நீ என்ன நினைக்கிற எனக்கும் தெரியும்,இனி உன்னை என் கண் முன்னால் பார்த்தேன் அவ்வளவு தான், பார்வையாலே எரித்துவிட்டு செல்ல வெலவெலத்து போனாள் அன்பினி...


ஹேய் தோழிகளே அடுத்த அத்தியாம் பதிந்து விட்டேன் எப்படி இருக்கு உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்வீங்களா அடுத்த பகுதி எழுத வசதியா இருக்கும் வணக்கம் நன்றி 😍 😍 😍
 
Top