All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவிராமின் 'மறப்பதில்லை நெஞ்சே! நெஞ்சே!' - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீகலா மேம்... உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி😘...

நான் எழுதும் நாவல் மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே...

niviiiram
(single😉)

கதையைப் பற்றி...
hero: கவின் சந்திரன்
Heroine: ஹம்ச வாகினி


காதல் களம். ஒரு சிறிய misunderstanding எப்படி வாழ்க்கையைத் திசை திருப்புகின்றது... கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினால் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்.. முறைத்துக் கொண்டு இருக்கும் கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரையும் நண்பர்களாக்கத் துடிக்கும் அவர்களின் உயிர் தோழர்கள்.. நேசம் நட்பாகுமா... இல்லையா...🤔

உங்களின் ஆதரவினை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்களின் நிவி...

நிறை குறை கூறத் தயங்க வேண்டியதில்லை... உங்களின் உளி போன்றக் கருத்துக்கள் என்னைப் போன்றவர்களைச் செதுக்கும் என்பதில் சந்தேகமில்லை... நன்றி😚
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14627நேசம் 1:

"என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்...
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்...
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்...
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்...

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்...
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்...

காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா...!
உயிர் வாழ்வதா, இல்லை போவதா...!
அமுதென்பதா... விஷமென்பதா...
உன்னை அமுத விஷமென்பதா...!!!

என் காதலே என் காதலே
என்னை என்ன…"

ஹெட்போனில் SPB பாடலைக் கேட்டுக் கொண்டே வந்தவள் பிரேக் போட மறந்தாள்.

டமால்ல்ல்.....

"ஹேய் பக்கி... கண்ணுத் தெரியலையா... ரோடு பார்த்து போகமாட்ட...",
ஒருவன்.

"சாரி அண்ணா... அவளுக்குக் கண்ணுத் தெரியாது", நிலா.

"என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது...", கோவமாக அவன்.

"லூசு மாதிரி....", நிலா.

"என்ன சொன்ன....?", ருத்திர மூர்த்தியானான்.

"லூசு மாதிரி... இவள் உங்க பைக் இடிச்சிட்டதால பாருங்க உங்களுக்குக் கண் தெரியாம போச்சு... ஐயோ பாவம்", பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் நிலா.

"என்ன சொல்ற... எனக்கு கண் தெரியலையா...", அவன்.

"ஆமா அண்ணா... அப்புறம் எங்கிட்ட கேட்கிறீங்க உங்கள பார்த்தா எப்பிடி இருக்குனு... அதான் சொன்ன...", நிலா.

"என்ன நக்கலா... சரி பேச்ச மாத்தாத... என் பைக் டேமேஜ் அகிருக்கு... கண் தெரியாம பைக் டிரைவ் பன்றீங்க இதை நான் நம்பனும்.. அப்படியே வா போலீஸ் ஸ்டேஷன்க்கு...",அவன்.

"சார். உண்மையாகவே எனக்குக் கண் தெரியாது சார். அவள் தான் எனக்கு தைரியம் வரனும் சொல்லி பைக் டிரைவ் பண்ண சொன்னா. நீ வாடி. பைக் டிரைவ் பண்ணு. சாரி சார். இனி இந்த மாதிரி நடக்காது...", ஹம்சவாகினி.

"என்னமா சொல்ற... கண் தெரியாதா...சாரிமா... நீங்க முன்னாடி போங்க... நான் என் பைக்க ஓரமா நிறுத்திப் பார்த்துக்குறேன். பார்த்து போங்கமா", அவன்.

"ரொம்ப நன்றி அண்ணா",நிலா.

"ஹேய் ஏன் டி பொய் சொன்ன. அவன் நம்மல ஸ்டேஷன் கூட்டிட்டு போய்ருந்தா என்ன ஆகுறது", ஹம்சவாகினி.

"அவன் பைக் கண்டிசன் பாத்தியா... முன்னாடி பக்கம் கண்ணாடி உடஞ்சிடுச்சி. நீ ஸ்கூட்டிய விட்டு பின்னாடி லைட்ட ஒடச்சிட்ட. இதுக்கு எல்லாம் பணம் தரனும். நாமே இப்போ தான் வேலையில் சேரப் போறோம். இதுல எங்க இதெல்லாம் சரி பண்றது. அதான் அப்படி சொன்ன... எப்படி என் சாமர்த்தியம்...", நிலா.

"தூ... சகிக்கல... அவன் ஏதோ நம்பிட்டதாலத் தப்பிச்சோம். இல்லைனா இப்போ ஆபீஸ்ல இருக்க மாட்டோம். ஸ்டேஷன்ல இருந்துருப்போம். சீக்கிரம் பைக்க எடு. லேட் ஆகுது", ஹம்சவாகினி.

"என்னைப் பாராட்ட உனக்கு மனசு வராதே... வா போகலாம்", நிலா.

நிலாவும் ஹம்சவாகினியும் ஒரு கட்டிடம் முன் நின்றனர். அவர்கள் வேலைக்குத் தேர்வான கம்பெனி. ஒரு வருட அக்ரீமென்ட் உடன் தான் சேர்ந்தனர். தன் பாதை மாறும் என நம்பிக்கையுடன் ஹம்சவாகினியும், தன் எதிர்காலம் இனி நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நிலாவும் கட்டிடத்திற்குள் நுழைந்தனர். லிப்ட்-ல் கூட்டம் இருப்பதைக் கண்ட நிலா படிக்கட்டில் செல்ல அனுமதி வேண்ட ஹம்சவாகினியும் நடக்கத் தொடங்கினாள். நல்ல வேளை... லிப்ட்-ல் சென்றிருந்தால் தாமதமாக நடக்க இருக்கும் விழிப்போர் அங்குத் தொடங்கி இருக்கும்.

"இதுக்கு மேல ஒரு அடி வைக்க முடியாது. நீ லிப்ட்ல வரியா... இல்லை நான் மட்டும் போகவா...", நிலா.

"அடியேய் நிலா. இனி வாய் திறந்த நீ அமாவாசை ஆகிடுவ பார்த்துக்க.. உன்னால் தான் டி நானும் நடந்துவறேன். வா", ஹம்சவாகினி.

"ஹிஹிஹி....", நிலா.

"நீ இங்கே என்ன பன்ற... அந்த பொண்ணு", பைக் ஆக்சிடென்ட்காரன்.

நிலா மைன்ட் வாய்ஸ்...."ஐயோ இவனா... அடியே நிலா எப்டியாவது சமாளி"

ஹம்சவாகினி அவனைப் பார்த்ததும் முன்பு போல் கண்ணில் கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டாள்.

"அண்ணா இங்கே தான் நான் வொர்க் பன்றேன். நீங்கள் இங்கே என்ன பன்றீங்க... அவள் என்கூட வருவா. அப்புறம் போய்டுவா...", நிலா.

"நான் உன்னை பார்த்தது இல்லையே. எந்த டீம் நீ", அவன்.

நிலா மைன்ட் வாய்ஸ்... "இவன் இங்கே தான் வொர்க் பன்றானா... போச்சு... இப்போ என்ன சொல்றது"

"நான் ECE டிபார்ட்மென்ட் அண்ணா. நீங்கள்", அவன் அந்தப் பிரிவாக இருக்கக் கூடாது எனக் கடவுளை வேண்டிக் கொண்டே நிலா ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தாள்.

"ஓ... நான் IT... அதான் தெரியலை போல... இருந்தும் 2 வருடம் ஆச்சு... உன்னை பார்க்கவே இல்லையே...", அவன்.

"அண்ணா நான் இன்று தான் ஜாய்ன் பண்ணப் போறேன். அதான் நீங்கள் என்னைப் பார்த்ததில்லை", நிலா.

"ஓ அப்படியா... சரி பை...", அவன்.

ஹம்சவாகினி ஜெர்க் ஆகி நின்றவள் தான். நிலா தான் லிப்ட் வெளியில் அழைத்து வந்தாள்.

"ஹம்சி... என்ன டி ஆச்சு", நிலா.

"அவன் என் டிபார்ட்மென்ட் டி. எப்படி அவன் கிட்ட சொல்லப் போறேன்... கண் தெரியும்னு... ", ஹம்சி.

"எப்படியாவது சமாளிச்சிடு டி. லேட் ஆகுது நான் போறேன்", எதிரில் இருந்த ரூம் உள்ளே சென்றாள்.

கட்டிடத்தில் 6 தளம். 4 மற்றும் 5வது தளம் இவர்களின் அலுவலகம். 6வது தளம் கேன்டீன்.

5வது தளம் இவர்கள் வேலை செய்யும் தளம். வலப்புறம் ஹம்சியின் டிபார்ட்மென்ட் பிளாக் D. இடப்புறம் நிலாவின் டிபார்ட்மென்ட் பிளாக் C.

உள்ளே நுழைந்தவள் முன்னாடி உட்கார்ந்தவனிடம் விவரம் கேட்க.. அவன் உள்ளே மேனேஜர்-ஐ பார்க்கச் சொன்னான். பிளாக்-ன் கடைசியில் ஒரு அறை இருந்தது. அங்கு தான் அவன் செல்லச் சொன்னான். அவளும் கதவினை அனுமதி வேண்டி

"எக்ஷ்க்யூஸ்மி சார்",ஹம்சி.

"எஸ்",.....

இரு சோடிக் கண்கள் தவற விட்டப் போரைத் தொடங்கியது.

பெயர் பலகையில் கவின் சந்திரன்.... கம்பீரமாக முகம் இருக்கத்துடன் பைல் பார்த்துக் கொண்டே யார் என நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.....


நேசம் தொடரும்...😊

ud weekly twice podren drs... ungalukku ok va...?

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you🤗

 

Attachments

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 2:

சில நொடிகளே... கண்களில் தீவிரத்துடன் ஹம்சியைப் பார்த்தான். ஹம்சியும் அவனை அதே தீவிரத்துடன் தான் பார்த்தாள். பின் உள்ளே வருமாறு அழைக்க...

"குட்மார்னிங் சார். நான் நியூ ஜாய்னீ... நேம் ஹம்சவாகினி. ப்ராசஸ் அஸ்ஸோசியெட். உங்கள மீட் பண்ண சொன்னாங்க", ஹம்சி.

"ஓகே மிஸ் ஹ... ஹம்சவாஹினி. உங்களுக்கு இன்னைக்கு ட்ரைனிங் ஸோ... ட்ரைனிங் இன்னும் 10 மினிட்ஸ்ல ஆரம்பம் ஆகிடும். அங்கே போர்ட் முன்னாடி காத்திருங்க", கவின்.

"ஓகே சார்", ஹம்சி.

ஹம்சி மைண்டு வாய்ஸ்... யாரப் பார்க்கக் கூடாதுனு நினைத்தேனோ அவனோட கம்பெனிக்கா வேலைக்கு வறனும்... முருகா... ஏன் என்னை இப்படி சோதிக்குறீங்க... இனி என்னலாம் ஆகப் போகுதோ...

"ஹலோ... நான் உனக்கு ட்ரைனிங் கொடுக்கப் போறேன். உனக்கு கண் தெரியாது... எப்படி வேலை செய்வ", கண்களில் முறைத்துக் கொண்டு கைகளைக் கட்டிக் கொண்டு அவள் பின் வந்து நின்றான் மதி.

"யாருக்கு கண் தெரியாது சொல்ற... நீ பார்த்த எனக்கு கண்....", திரும்பியவள் அதிர்ந்தாள்.

"இப்போ பார்க்கிறேன் உனக்குக் கண் நல்லா தெரியும்னு...", மதி.

"சாரி. அது வந்து...", ஹம்சி.

"க்கும்... என்ன நடக்குது இங்கே.. மதி ஸ்டார்ட்..", கவின்.

"ஓகே டா..", மதி.

"மை நேம் மதியரசன். ஐ ஆம் ஆல்ஸோ பிராசஸ் அஸ்ஸோசியேட். நம்ம ப்ராஜெக்ட்ல 4 மெம்பெர்ஸ். நான், கவின், ராஜு அப்புறம் நீங்க. கவின் தான் லீட். இங்கே தமிழ்-ல பேசலாம். வொர்க் தவிர... உங்கள பத்தி சொல்லுங்க?", மதி.

"ஹம்சவாகினி தமிழ்செல்வன். ப்ரம் பழநி", ஹம்சி.

பின் ஹம்சி,கர்ம சிரத்தையாக மதி கூறிய அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டிருக்க... தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போன்று தோன்ற... திரும்பிப் பார்த்தாள். கவின் அவனது வேலையில் மூழ்கி இருக்கக் கண்டவள் தனது மனம் செல்லும் திசையைக் கடிவாளம் போட்டு அடக்கினாள்.

ஹம்சியை பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் தன்னைப் பார்க்கப் போகிறாள் என்று உணர்ந்த கவின் அவன் வேலையைத் தொடர்ந்தான்.

மதி ஹம்சியிடம் சில கேள்விகளைத் தொடுத்து அவளின் பதிலில் திருப்தி அடைந்தவனாய் கவினிடம் ட்ரைனிங் முடிந்தது என்று கூற...

"சரி நீங்க மதியம் ப்ரேக் முடிஞ்சதும் வொர்க் ஸ்டார்ட் பன்னுங்க. நான் தான் உங்க லீட். ஸோ எதுவா இருந்தாலும் எங்கிட்ட தயங்காம கேளுங்க... மதி டேக் அ ப்ரேக். நானும் மதியம் வறேன். பை", கவின்.

"பை டா", புன்னகையுடன் தலையசைத்தான் மதி.

ஹம்சி வெளியில் செல்லத் தயாராக... மதி தடுத்தான்.

".....", எதுவும் பேசாது பயத்துடன் அவனைப் பார்க்க...

"கேன்டீன்ல என் கூட வந்து உட்காரு. நான் உங்கிட்டப் பேசனும்.. அந்த அருந்த வாலையும் கூட்டிட்டு வா", மதி.

"என்ன... ", ஹம்சி.

"கண் தான் தெரியாது.. காது கேட்கும் தான...", மதி.

"இவன் கிட்ட பொய் சொன்னதுக்கு இன்னுக் எவ்வளவு அசிங்கப் படனுமோ.. எல்லாம் அந்த நிலா எரும நாள வந்தது..." என்று புலம்ப...

எருமை என்ற வார்த்தை மட்டும் அவன் காதில் தெளிவாக விழ... "என்ன சொன்ன... மரியாதை நா என்னனு தெரியாது உனக்கு", மதி.

"என்னங்க ஐயா... சொல்லுங்கள்... உங்களுக்கு என்ன பிரச்சினை... நான் லஞ்ச் உங்க கூட சாப்பிடனும். அவ்ளோ தான... உங்களுக்கு எங்கூட உட்கார்ந்தா தான் சாப்பாடு இறங்கும் அப்பிடினா அதை நான் தடுக்க மாட்டேன். கண்டிப்பா நாங்க உங்க கூட தான் சாப்பிடுவோம்", ஹம்சி.

"உன்னை லாம் திருத்தவே முடியாது... சரி 5 மினிட்ஸ்ல வாங்க. நான் வறேன்", மதி.

"சரிங்க ஐயா...", ஹம்சி.

ஹம்சி வெளியில் வந்து பார்க்க... நிலாவின் பிளாக் வெறுமையாக இருந்தது. எங்கே அவளைக் காணவில்லை எனத் தேடியவள் பிளாக் உள்ளே நுழையப் போனாள். பின்னிருந்து யாரோ தன்னை தொட... அதிர்ந்து திரும்பினாள். அட ச்சி... நீ தானா...

"நீ யார டி நினைச்ச...", கேள்வியாக பார்த்தாள் நிலா.

"நான்... யாரையும் நினைக்கல... நீ எங்கே டி போன..", ஹம்சி.

"வாஸ் ரூம் போனேன் டி. உனக்கு வெய்ட் பன்னேன். நீ வர லேட் ஆகவும் போனேன். நீ போ", நிலா.

இருவரும் கேன்டீன் சென்றனர். அங்கே தனக்காக மதி காத்திருக்கவும், நிலாவிடம் என்ன சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தாள் ஹம்சி. நிலா, ஒரு மேஜை காலியாக இருப்பதைப் பார்த்தவள் அங்கு செல்லத் தொடங்க... ஹம்சி தடுத்தாள். கேள்வியாகப் பார்த்தவளிடம் மதியை விழிகளில் காட்ட... நிலா தடுமாறினாள்.

"அவன் பார்ப்பதற்குள் அங்கே போகலாம் வாடி", நிலா.

"நாம் அங்கே தான் போக போறோம். வா", ஹம்சி.

"என்ன... உனக்காக நான் என் தோழிய விட்டு சாப்பிட வந்தா... நீ எனக்கு ஆப்பு வைக்கப் பாக்குற...", நிலா.

"இது உனக்குத் தேவையா டி நிலா.. அவள் வாடி சாப்பிடலாம் சொல்லி உன்னை கெஞ்சும்போது திமிரா இவள் கூட போறேன் சொன்னல... இது உனக்கு பத்தாது...", தன் சுட்டு விரலை முகத்திற்கு முன் நீட்டி அவளையே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

"யாரு டி உன் தோழி...நான் உனக்கு யாரு டி அப்போ...", ஹம்சி அழத் தயாரானாள்.

"இந்த நாயி இவ்ளோலாம் பீல் பண்ண மாட்டாளே... ஏதோ சரியில்லை டி நிலா... உசாறா இரு. என்ன பண்ணலாம்", நிலா மைண்டு வாய்ஸ்.

"நீ உன் தோழி கூட போய் சாப்பிடு.. நான் போறேன்.. நான் எப்படி போனால் உனக்கு என்ன", ஹம்சி.

நிலா, வேகமாக மதி மேஜை அருகில் சென்று மதிக்கு எதிரில் அமர்ந்தாள். ஹம்சி புன்னகையுடன் அவளுக்கும் மதிக்கும் இடையில் வந்து அமர்ந்தாள்.

"தயவு செய்து உன் அழுகை ட்ராமாவ இனி எப்பவும் பன்னிடாதமா முடியல...", நிலா.

"ஹி ஹி ஹி....", ஹம்சி.

"உங்க சேட்டைக்கு அளவே இல்லாமப் போய்கிட்டு இருக்கு... இங்கே ஒருத்தன் இருக்கன்றது தெரியுதா இல்லையா... என்ன சாப்பாடு கொண்டு வந்தீங்க... எடுங்க..", மதி.

"ஏன் பிடுங்கி சாப்பிடப் போறீங்களா... ஸாரி ப்ரோ... நம்ம ஹம்சி பண்ண புதினா சாதம்.. வெண்டைக்காய் பொறியல். இத நானே கஷ்டப்பட்டு அவள் மனசு நோகக் கூடாதுனு சாப்பிட்டு இருக்கேன். நீங்கள் இதை எப்படி சாப்பிடுவிங்க..", நிலா.

"அவ்ளோ கஷ்டமா என்மா சாப்பிடனும்... குடு... நானே சாப்பிடுறேன்.. உனக்கு கேன்டீன் சாப்பாடு வரும்..", மதி.

"ஆஹ்ன்.... ", நிலா...

அடப் பாவி. என்னை இப்படி சோதிக்குறியே பிள்ளையாரப்பா.. உனக்கு வாரம் ஒரு தேங்காய் உடைக்குறேன்ல... இப்படி என்னை பட்டினி போட்றியே... நிலா மைண்டு வாய்ஸ்.

"இன்னைக்கு திருப்தியா கேன்டீன் சாப்பாடு சாப்பிடு டி நிலா. ஹேப்பி...", ஹம்சி.

"ஈஈஈ... ஹேப்பி...", நிலா.

"டேய்... மதினு ஒருத்தன் இருப்பானே அவன் எங்க டா மாப்பிள...", ராஜு.

"என்னடா நக்கலா.. சாப்பாடு வாங்க இவ்ளோ நேரமா.. அங்கே யாரு கூட மொக்க போட்டு இருந்த...", மதி.

"இந்த நேரத்தில் யாருகூடடா மொக்க போடப் போறேன். எல்லாம் நம்ம கவின் தான். அவனுக்கு இப்போ சாப்பிடப் பிடிக்கலயாம். அவனை தான் வர சொல்லிட்டு இருந்தேன். அவன் வரல சொல்லிட்டான்", ராஜு.

"சரிடா. எதுவும் மூட் அவுட் ஆ இருக்கும். நீ சாப்பிடு", மதி.

"ஹாய்... நான் ராஜு.. உங்க ஸ்வீட் நேம் ப்ளீஸ்...", ராஜு.

"நான் லட்டு... இவள் ரசகுல்லா..", நிலா..

"என்னடா... இது...", ராஜு.

"ஸ்வீட் மாப்பிள... நீ தான கேட்ட", மதி.

"தாயே... தப்பு தான்... நீங்க எனக்கு மேல தான் ஒத்துக்குறேன். உங்க பேர சொன்னீங்கனா..", ராஜு.

"நான் ஹம்சவாகினி. இவள் நிலா", ஹம்சி புன்னகைத்தாள்.

"என்ன நிலா... வெண்ணிலாவா.. இல்லை கருப்புநிலாவா...", ராஜு.

"டேய்... மரியாதை கெட்டிடும் சொல்லிடேன். பசிக்குது .. சாப்பாட்ட தராம ஒலறிட்டு இருக்கான்", என்றவள் அவனிடம் இருந்து தட்டினை வாங்கியவள் சாப்பாட்டினை சாப்பிட ஆரம்பித்தாள்.

"என்ன டேய் ஆ... நான் 2 வருடம் சீனியர் டி. என்ன டேய் சொல்ற.... நீ என்னடா சிரிக்குற... என்னமா ஹம்சி இது..", ராஜு.

"மரியாதை குடுத்தா மரியாதை கிடைக்கும்... நீ தவறிவிட்டாய் ராஜூ... இனி உன் பாடு திண்டாட்டம் தான்", மதி.

"ஹா ஹா ஹா...",ஹம்சி.

"என்னடா சாப்பாடு இது... இதை எப்படி தினமும் சாப்பிடுறிங்க... கேன்டீன் சரியில்லைனா கம்ப்லைன்ட் பண்ணலாம்ல..", நிலா.

"இங்கே அப்படி தான் இருக்கும். யாரும் கேட்கவில்லை... அதான். நீ இன்னைக்கு மட்டும் தான சாப்பிடுவ.. அப்புறம் என்ன..", ராஜு.

"நான் பாத்துகுறேன் இந்த பிரச்சினைய...", நிலா.

மதி திருப்தியாக... விழிகளில் ஆனந்தத்துடன் சாப்பிடும் அழகைப் பார்த்த ஹம்சி... ஸ்னெகமாய் புன்னகைத்தாள்.

ராஜு, நிலா இருவரும் எழுந்து செல்ல...

"கவின் சார்... சாப்பிட வரலனு ராஜு சொன்னாங்க... உங்க கூட தான் சப்பிடுவாங்களா... நாங்க உங்க கூட இருக்கொம்னு சாப்பிட வரலையா அண்ணா... இனிமேல்...", ஹம்சி.

"அதுலாம் பிரச்சினை இல்லை ஹம்சி. அவன் மூட் அவுட்ல இருந்தா சாப்பிட வரமாட்டான். மத்த படி ஒன்னும் இல்லை", மதி.

"ஆமா... மூட் அவுட் அனால் சாப்பிட வரமாட்டங்க சரி. நீங்கள் அப்படியே விட்ருவீங்களா... நீங்கள் நல்ல நண்பர்கள்...", நிலா கோவத்துடன் வந்து அமர்ந்தாள்.

"சாப்பிட முடியலனா எப்படி வற்புறுத்த முடியும்", மதி.

"குழந்தை அழுதா.. சாப்பாடு தராம இருப்போமா.. அப்படி தான் எல்லாரும்... நாம் தான் சாப்பிட சொல்லி கட்டாயப் படுத்தனும். அவர் எங்கே சொல்லுங்க... நான் பார்த்துக்குறேன்...", நிலா.

"வெளிய இருக்கான். ஸ்டெப்ஸ் ல...", ராஜு.

மதி நிலாவை வியப்பாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

நிலாவுடன் கவின், அவர்களின் மேஜை அருகில் வந்து ஹம்சி இருக்கைக்கு அருகில் அமர்ந்தான்.

ஹம்சி அதிர்ந்தாள்.
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 3:

"நான் என் தொண்டை தண்ணி வற்றும் வரைக்கும் கூப்பிடேனேடா... இப்ப இவள் கூப்பிட்டதும் வர...", ராஜு.

"என் சாக்கி ப்ரோ... நான் கூப்பிட்டா தான் வருவாங்க... இப்போ என்னடா... சாப்பிட வந்தாச்சுல... போய் சாப்பாடு வாங்கிட்டு வா போ..", நிலா.

கவின் வழக்கம் என்பது போல் ஹம்சியின் டிபன் பாக்ஸை எடுத்து உண்ணத் தொடங்கினான். அது 2 பாக்ஸ் இருக்கும் கேரியர். குட்டி பாக்ஸ். கவின் சாப்பிட வரவில்லை என ராஜு கூற... அவளால் அடுத்த பாக்ஸ் சாப்பிட முடியவில்லை. அதைத் தான் கவின் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

"உனக்கு இவனை முன்னாடியே தெரியுமா...", மதி.

"ஆம். இவர் எங்க காலேஜ் சீனியர். ஹம்சி டிபார்ட்மென்ட் தான். இவர் போனதும் ரொம்ப மிஸ் பன்னொம். இல்லை ஹம்சி...", நிலா.

கவின் ஆச்சர்யமாக ஹம்சியைப் பார்த்தான். அவள் எனக்கு சம்பந்தம் இல்லை என்பதுபோல எழுந்து சென்றாள் கை கழுவ.

"நம்ப முடியலையே... நீங்கள் என்னை மிஸ் பன்னீங்க...", கவின்

"என்ன ப்ரோ இப்படி சொல்லிடிங்க... எனக்கு டைரி மில்க் சாக்கி சாப்பிடும் போதெல்லாம் உங்க நியாபகம் தான்", நிலா.

"உன்னை நம்புறென். ஆனால் உன் தோழி மேல் எனக்கு நம்பிக்கை இல்லை", நிலா.

"என்ன இப்படி சொல்றீங்க... நாம உட்காரும் இடத்துல தினமும் ஈவ்னிங் இருப்பா.. ஏன் கேட்டா... சிரிப்பா... அவளுக்கு நம்ம டைம் ஸ்பென்ட் பண்ண இடம் மிஸ் பண்ண முடியலை...", நிலா.

"எனக்கு நம்பிக்கை இல்லனா விடு நிலா. எனக்கும் சாப்பாடு போதும். வாங்க போகலாம்", கவின்.

மதி மற்றும் ஹம்சி இருவரும் கேன்டீன் வெளியில் காற்று வாங்கிக் கொண்டு இருந்தனர். 6வது மாடி என்பதால் வெளியில் பார்க்க அழகாக இருக்கும். அதுவும் அந்த கட்டிடம் பின் பக்கம் படிக்கட்டு இருக்கும். அது கட்டிடம் உள்ளே ஆபத்து எனில் வெளியில் செல்ல ஏதுவாக அமைக்கப் பட்டது. அந்தப் படிக்கட்டில் அமர்ந்து இருந்தனர்.

"பேசனும் சொன்னீங்க அண்ணா...", ஹம்சி.

"பேர் சொல்லியே கூப்பிடு ஹம்சி. நீங்கள் எங்க கூட இருந்தா ஹாப்பியா இருப்போம்னு தோனுச்சு. அதான் எங்க கூட சாப்பிட கூப்பிட்டேன்", மதி.

"என்ன ப்ரோ... அண்ணா சொல்லக்கூடாது சொல்லுறீங்களா... என்னை பார்த்ததும் எதுவும் லவ்ல விழுந்துட்டீங்களா... அப்படி எதுவும் இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க... நான் உங்கள ஒன்னும் சொல்ல மாட்டேன். ஜஸ்ட் இந்த காப்பிய மட்டும் தான் முகத்துல ஊத்துவேன்...", ஹம்சி.

"உன்னை போய் சொன்னேன் பாரு... என்னை நானே அடிச்சிக்கனும்...உன்னை...", ஹம்சியைத் துரத்தினான் மதி.

மதி அடிக்க வரவும்... அவள் வேகமாக சிரித்துக் கொண்டே படிகளில் இருந்து எழுந்து திரும்பி ஓட எத்தனிக்க... எதிரில் வந்த உருவம் மேல் மோதி நின்றாள். அவள் அதில் தடுமாற்றம் அடைய... பிடிக்க எதுவுமின்றி வேறு வழியில்லாமல் அவ்வுருவத்தின் சட்டையைப் பிடித்துக் கொண்டு நிற்கப் போராடினாள். மதி வந்து அவளைப் பிடித்து நிலையாக நிற்க வைக்கவும் அது யார் என்று பார்த்தாள். வடிவான முகம். கூறான நாசி. மாநிறத்திற்கும் கூட. அலை அலையான கேசம். ஆனால் முகத்தில் அமைதி. இவள் பார்க்கவும் சிறு புன்னகை.

"சாரி. திடீர்னு நடக்கவும் நான் ஷாக் அகிட்டேன். அதான் உங்கள பிடிக்கல", உதய் சந்திரன்.

"அதான பார்த்தேன். என்னடா இவர் நம்ம ஹம்சிய பிடிக்காம ஏதோ ஷாக் அடிச்ச மாதிரி இருக்காரே... ஹம்சி இருக்க அழகுக்கு எப்படியும் எல்லாரும் பார்க்கவாவது செய்யனுமே...", நிலா.

"அடியேய்... போதும் டி... இல்லை உன்னை ஸ்டெப்ஸ்ல தள்ளிடுவேன்", ஹம்சி.

"ஐயோ... நான் பயந்துட்டேன் பா.. எனக்கு டைம் ஆச்சு. பை", நிலா.

"ஹாய் நான் உதய் சந்திரன். உங்க நேம் ஹம்சவாகினி... ரைட்?", உதய்.

"உங்களுக்கு எப்படி தெரியும்...?", ஹம்சி.

ஐயோ.. உலறிட்டோமே... சரி சமாளிப்போம். "உங்க தோழி தான் சொன்னாங்க.. அப்புறம் எப்படி எனக்குத் தெரியும். சரி வாங்க... டைம் ஆகுதுள்ள... வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க... மதி எங்க போய்ட்டான்", உதய்.

"மதி ரூம் போனார். நானும் வொர்க் பன்னனும். பை", ஹம்சி.

"பை ஹம்சி.... நான் உன்னை வாகினினு கூப்பிடவா...", உதய்.

"யுவர் விஷ். பை உதய்", ஹம்சி.

ஹம்சி மைண்டு வாய்ஸ். 'இவன் என்ன கவின் மாதிரி இருக்கான். கொஞ்சம் வளரல, கவின் விட கொஞ்சம் கூட நிறம்... எப்படியோ போகட்டும் நமக்கு என்ன'.

தீவிரமாக யோசித்து இருக்கலாம். விதி யாரை விட்டது...?

ஹம்சி உள்ளே வர... மதி மற்றும் ராஜு கம்ப்யூட்டரில் புகுந்து இருந்தனர். கவின் பைலைப் பார்த்துக் கொண்டு இருந்தான். தான் தாமதமாக வந்து விட்டோம் என்று உணர்ந்தவள் மன்னிப்பு வேண்ட கவின் முன் நின்று இருந்தாள். அவன் கேள்வியாகப் பார்க்க..

"சாரி. லேட் ஆனதுக்கு...", ஹம்சி.

"நீ வந்தது லேட். இதுல இங்க நின்னு இன்னும் டைம் வேஸ்ட் பன்னாம போ. உனக்கு லஞ்ச் சாப்பிட தான் குடுத்தாங்க... ஓடி பிடிச்சு விளையாட இல்லை. ரைட். இனி வொர்க்ல சின்சியரா இரு. இல்லை நான் மனுசனா இருக்க மாட்டேன்", கவின்.

"ஆமா... இப்போ மட்டும் மனுசனாவா இருக்க.. போடா...", ஹம்சி வாய்க்குள் முணங்கினாள்...

"என்ன சொல்ற... உன்னை வொர்க் பண்ண போக சொன்னேன். இங்கே என்ன பன்ற...", கவின்.

"இதோ போய்டேன் சார். நீங்க புகைய விரட்டுங்க...", ஹம்சி.

என்ன சொல்றா.. புகையா... அவனுக்குக் கடந்த காலம் நினைவில் வந்தது...

"என்ன சந்தூ... புகை வருது... சீக்கிரம் விரட்டுங்க...", ஹம்சி.

"என்ன டி ஒலறிட்டு இருக்க... நான் செம கோவத்துல இருக்கேன். அவன் என் கையில் கிடச்சான் பிரட்கு ஜாம் ஆக்கிடுவேன்", கவின்.

"நீங்க கோவமா இருக்கனால தான் உங்க காதுல புகையா இருக்கு... அத தான் விரட்டுங்க...", ஹம்சி.

"அப்புறம்... அது என்ன ஜாம். இரத்தம் ரெட் கலர்ல இருந்தா ஜாம் ஆக்கிடுவிங்களா... நீங்களும் உங்க காட்டேரி புத்தியும்...", தலையில் அடித்துக் கொண்டவள் கிளம்பி விட்டாள்.

கவின் தான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு இருந்தான். அவளின் முகம் கொடுத்த பாவனையில்.

நினைவில் இருந்து வெளியில் வந்தவன்... தற்பொழுது அதை நினைத்து மேலும் முகம் இறுகியது. அவனால் அங்கு நார்மல் ஆக அமர முடியவில்லை. எனவே...

"மதி. 5 மினிட்ஸ். வந்துடுறேன்", கவின்.

"ஓகே டா..", மதி.

"இவரு மட்டும் பிரேக் எடுக்கலாம்... நாம எடுக்கக் கூடாது அப்படி தான... என்ன ஒரு வில்லத்தனம்.நீ என்ன ராஜு நினைக்குற..", ஹம்சி.

"ஏன் டி என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது... அவள் டா சொல்றா... நீ பேர் சொல்ற... மரியாதை வாயில வராதா...", ராஜு.

"நீ என்னை என்ன சொன்ன...", ஹம்சி.

"நான் என்ன டி சொன்ன", ராஜு.

"இப்போ டி சொல்றல.. அப்புறம் நாங்க டா சொன்னா என்ன...? கிவ் ரெஸ்பேக்ட் டேக் ரெஸ்பேக்ட்", ஹம்சி.

"சரி தான்", மதி.

"டேய் நீயுமா...", ராஜூ.

"க க க போ....", ஹம்சி.

"அது விஜய் சேதுபதிக்கு தான் நல்லா இருக்கும். நீ ட்ரை பன்னாத.. வொர்க் அ பாரு", ராஜு.

"அத......"ஹம்சி.

ஏதோ சொல்ல வாயைத் திறந்தவளை தன் கைகளால் அவளின் வாயைப் பொத்தியவன்...

"நான் எதுவும் சொல்லல தாயே.... நீ வேலையப் பாரு. கவின் வரும்போது இப்படி பேசிட்டு இருந்தா... உன்மேல இருக்கக் கோவத்துல என்னை கடிச்சுத் துப்பிடுவான்", ராஜு.

"அந்த பயம் இருக்கட்டும்", ஹம்சி.

கவின் சரியாக உள்ளே வர... ஹம்சி அவனை ஓரக் கண்ணால் பார்த்தவள்... அவன் அதை பார்த்து விட... அதன் பின் அவள் வேலையில் மூழ்கினாள்....

நேசம் தொடரும்...😊


வியாழன் மற்றும் வெள்ளி கிழமை ud update பண்ணலாமா drs... மாறாக உங்களின் விருப்பம் தெரிவித்தால் நான் மாற்றிக் கொள்கிறேன்...

forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you...

 
Last edited:

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 4:

அந்த நாள் வேலையில் கழிய... புறப்படும் நேரம்...

"போகும்பொழுது எந்த பைக்கு ப்ளான் போட்டு இருக்கீங்க...", மதி.

"ப்லாக் கலர் யமஹா பைக்... பின்னாடி லைட் உடஞ்சு இருக்கும்.. நம்பெர்...??", ஹம்சி.

"நீ அடங்கவே மாட்ட... உன்ன போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகாம விட்ட என்னை சொல்லனும்", மதி.

"பாஸ்... என்னனு கம்ப்லைன்ட் குடுப்பிங்க.. நான் உங்க பைக் இடிச்சிடேன்னா.. அதுக்கு ப்ரூப் இருக்கா...", ஹம்சி.

"லூசு... ட்ராஃப்பிக் ப்லேஸ்ல CCTV இருக்குல.. அப்புறம் என்ன..", மதி.

மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டனே...!!!(மைண்டு வாய்ஸ்...)

"நீங்க எங்கிட்ட மிஸ்பிகேவ் பன்னீங்க அதான் நான் இடிச்சென் சொல்லுவேன்.. எப்புடி...?", ஹம்சி.

"உன்னை சும்மா விடுறது தப்பு... இரு வறேன்...", மதி அவளைத் துரத்திக் கொண்டு பிளாக் முழுவதும் சுற்றினான். பிளாக்-ல் இவர்கள் மட்டுமே இருந்தனர். மற்ற அனைவரும் டைம் முடிந்ததும் சென்று விட்டனர்.

"ஆத்தி... இவள் செஞ்சாலும் செய்வா.. நம்ம தான் உசாறா இருக்கனும். என் குல தெய்வமே... கருப்பா... என்னை இவள் கிட்ட இருந்து காப்பாத்து... நான் உனக்கு மொட்டயே போடுறேன்.நம்ம இங்கே இருந்து எஸ்கேப் அகிடுவோம்...", ராஜு.

மதியிடம் இருந்து தப்பிக்கப் போராடியவள் அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி எதிரில் வந்தவன் மீது மோதிக் கொண்டாள். அவன் வேறு யாரும் இல்லை....

"போச்சு... அவனே தான் மாட்டுனோம்...", ஹம்சி மனதில் நினைத்த நொடி...

வலிய கரம் ஒன்று அவளின் கைகளினையும் மற்றொன்று அவளின் முதுகினையும் அணைத்துப் பிடித்தவாறு நிலை நிறுத்த...

"இது ஆபீஸ்னு தெரியுமா இல்லையா..", கவின்.

கூறியவன் அங்கிருக்கப் பிடிக்காமல் அறைக்குள் சென்று விட்டான்.

சில நொடிகளில் தான் எதிர்பார்த்தவனின் குரல் அவள் பின் கேட்க... அப்போ நாம யாரப் பிடிச்சிருக்கோம்... நிமிர்ந்தவள் ஏமாற்றம் அடைந்தவளாய் பின் நகர...

"ஆர் யூ ஓகே வாகினி", உதய்.

"யா... ஓகே. சாரி", ஹம்சி

"ஹேய் நோ ப்ராப்லம். மதி இன்னும் கிளம்பாம இருக்க.. அவன் ராஜு எங்கே?", உதய்.

"கிளம்பிட்டேன் உதய். இவள் பண்ண பிரச்சினைல அவன் இப்போ அவன் வீட்டுலயே இருப்பான். வா நாம போகலாம். வாமா பரதேவதை..", மதி.

"டேய் நான் பரதேவதையா...உன்னை...", ஹம்சி.

"மிஸ் ஹம்சவாகினி உங்க வொர்க் முடிச்ச பைல் எங்கே... கம் அண்டு ஷோ மி...", கவின்.

"நீ போய் பாரு.. அந்த அருந்த வாலு கிட்ட நான் சொல்லிடுறேன்", மதி.

"ஓகே பை வாகினி", உதய்.

"பை உதய்", ஹம்சி.

"சார் நான் உங்க மெயில்க்கு அனுப்பிட்டேன். நீங்க பார்க்கவில்லையா...", ஹம்சி.

"அப்படியா.. வந்து காட்டு...", கவின் இருகிய முகத்துடன் கூற...

அவன் கோபத்தில் இருப்பதை அறிந்து அவனருகில் சென்று மெயிலில் அவள் பைலை அவனிடம் காட்டினாள். அவன் பார்வையின் வித்தியாசம் உணர்ந்து அவள் நகர... அவன் அவள் இடையைப் பிடித்து அவன் மடியில் அமர்த்தினான். என்ன என்று உணர்வதர்குள் அவன் அவளின் இதழினைச் சிறை செய்தான். அவளும் விருப்பத்துடன் அவன் சிகை கோதினாள்.

நிமிடங்கள் கறைய... அவனுக்குத் தான் செய்யும் தவறு உணர்ந்து அவளைக் கீழே தள்ளினான். அவள் உணர்விலிருந்து வெளிவந்து கொண்டிருக்க.. அவன் அனல் கக்கும் எரிமலையாய் வார்த்தை அம்பினை அவளின் மனதில் எய்தான்.

"உனக்கு உணர்வுகள் உண்டா இல்லையா என நினைத்துக் கொண்டு இருந்தேன்.. இப்பொழுது உணர்கிறேன்.. உணர்வுகள் என்பது சிறிதும் உன்னிடம் இல்லை. உன்னால் எப்படி முடிந்தது.. என் கண் முன்னாடியே அவனுடன் அணைத்துக் கொண்டு... எனக்கு அருவருப்பாக இருக்கு. அவன் தீண்டியபோது உன் முகம் எப்படி இருந்ததோ... அப்படியே நான் தீண்டும் பொழுதும் இருக்கின்றாய்... இதற்கு என்ன பெயர்... இனி ஒரு நிமிடம் என் கண் முன்னாடி இருந்தாலும் நான் மனுசனாக இறுக்கமாட்டேன். போ", கவின்.

நான் உணர்வுகள் இல்லாதவளா... நான் அவனை விருப்பத்துடன் அணைத்தேனா.. அவனை நீ என்றல்லவா நினைத்து மகிழ்ந்தேன்.. அந்த ஒரு நொடியேனும் ஆசை காதலனின் கைகளில் உள்ளோம் என்றல்லவா நினைத்தேன்.. என்னை இப்படிக் கூற எப்படி மனம் வந்தது... என்னை தீண்ட அருவருப்பாக உள்ளதா... தவறு செய்த நீ இவ்வளவு பேசுகின்றாய்.. நான் ஏன் அழுது கொண்டிருக்கின்றேன். இனி அழ மாட்டேன் என உறுதி கொண்டவள்... எழுந்து நின்றாள்...

"நான் இங்கே பணி புரிய விரும்பவில்லை. நாளை வருகிறேன்.. எனக்கு எனது பான்டினைக் கேன்செல் செய்து கொடுங்கள். எனக்கும் உங்கள் முகத்தில் விழிக்க விருப்பம் இல்லை. இப்பொழுது நான் வருகிறேன்...", என்றுவிட்டு தன் பையினை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

"தான் பேசியது அதிகமோ என்று யோசிக்க... அவள் செய்தது தவறு தான். அப்படி இருக்க... நம் மீது தவறு என்ன.. நாம் கூறிய வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தி இருக்கும்... ஆனால் அது ஏன் எனக்கு வலிக்கின்றது.. அவள் கண்ணீர் பார்த்து என் உள்ளம் ஏன் தவிக்கின்றது...", என நினைத்துக் கொண்டே நிமிடங்களைக் கடத்தியவன் நேரம் போனதை அறிந்து இல்லம் வந்தவன் அவன் அறைக்குச் செல்லாது அலுவலக அறையில் இருந்த சோபாவில் சாய்ந்து கடந்த கால நினைவில் பயணித்தான்.

வெளியில் வந்த ஹம்சி முகம் சரியில்லை என்பதை உணர்ந்தவள் அவளிடம் எதையும் கேட்காது நிலா வாகனத்தினை ஓட்டினாள்... இருவரும் இல்லம் வந்து சேர்ந்தனர். நிலா, ஹம்சி மறுத்தும் பாலை மட்டும் குடிக்க வைத்துப் படுக்கச் சொல்லிவிட.. அவள் கடந்த காலம் பயணித்தாள்.

நாமளும் காடந்த காலத்துக்குப் போவோம்...(🤗)

ஹம்சி மற்றும் நிலா இருவரும் பள்ளியிலிருந்து உயிர் தோழிகள். அவர்கள் இருவரும் விரும்பி ஒரே கல்லூரியில் அவர்களுக்குப் பிடித்தப் பிரிவில் சேர்ந்தனர்.

ஹம்சியின் தாத்தா ராஜசேகர், பெற்றோர் தமிழ்செல்வன் மற்றும் வாணி. அவர்களுக்கு இரு பெண்கள். இரட்டையர்கள். ஹம்சவாகினி மற்றும் ஹம்ச வர்த்தினி. அதில் ஹம்சவாகினிக்கு மட்டும் பொறியியல் படிக்க விருப்பம். மற்றவளுக்கு பள்ளியில் ஓவிய ஆசிரியை ஆக விருப்பம். அதன்படி அவர்கள் விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க.. ஹம்சி நிலாவுடன் இந்தக் கல்லூரியில் வந்து சேர்ந்தாள்.

நிலாவிற்கு தாய் இல்லை. தாய் இறந்ததும் தந்தை மருமணம் செய்ய... அவள் நிலாவினை வெறுக்க... நிலாவிற்கு அவளிடம் விடுதலை பெற்றுத் தரவே இந்தக் கல்லூரியில் சேர்த்து ஒரு ஸ்கூட்டி மற்றும் வீடு என அனைத்தும் அளித்து அவளின் தேவைகளை பார்த்துக் கொள்கின்றார். ஆனால் அவளின் தேவை அதுவல்லவே...

சிலுசிலுவென்று தென்றல் வீச... வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க... மாலை வெயில் மேனியில் பட... பொறியியல் கல்லூரியில் தன் தோழியுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் ஹம்சி. தன் சீனியர் கண்ணில் விழக் கூடாது என்று ஒரு வழிப்பாதை வழியில் சென்று கொண்டிருந்தனர். அப்படியும் அவ்வழியில் வந்து கொண்டிருந்த மெக்கானிக்கல் சீனியர்ஸ் அவர்களைப் பார்த்து விட...

"ஓய்... எங்கே போரிங்க... இங்கே வாங்க... என்ன டிபார்ட்மென்ட்", சீனியரில் ஒருவன்.

"ஐடி அண்ணா... இவள்...", ஹம்சி.

"ஐடி தான் அண்ணா...", நிலா.

"அப்படியா... சரி.. ECE ல நிலா-ன்னு ஒரு பொண்ணு... பார்த்தீங்களா...", ஒருவன்.

"இல்லை அண்ணா... அவள் யாருனு தெரியாதே... என்ன பிரச்சினை சொல்லுங்க அண்ணா நான் உதவி செய்யுறேன்", நிலா.

ஹம்சி...."என்ன பன்னித் தொலைச்சாளோ தெரியலையே... சரி இப்போ இங்கே இருந்து தப்பிப்போம்", மனதில் நினைத்தாள்.

"அதெல்லாம் ஒண்ணும் தேவை இல்லை. நீங்கள் விஷ் பன்னிட்டு கிளம்புங்க...", இன்னொருவன்.

"குட் ஈவ்னிங் அண்ணா", என்று இருவரும் கூறிவிட்டுச் சென்றனர்.

"என்ன டி பண்ண... வந்த ஒரு நாள்ள உன் பேர் கல்லூரி முழுதும் தெரியுது...", ஹம்சி.

"நான் ஒண்ணும் பண்ணல டி. ஜஸ்ட் மெக்கானிகல்ல ஒரு சீனியர முகத்துல அறைஞ்சுடேன்.
அதுக்கு இப்படி வலை வீசித் தேடுறாங்க...", நிலா.

"என்ன அறைஞ்சுடியா... ஆ....", ஹம்சி.

"ஆமா. அதுக்கு ஏன் உன் வாட்டர் டேங்க இப்படித் திறக்குற... க்ளோஸ் த டோர். அவன் என்ன கிஷ் பண்ண சொன்னான். நான் அடிச்சேன்", நிலா.

"தெளிவா சொல்லு டி", ஹம்சி.

நிலா ஹம்சியிடம் பை சொல்லிவிட்டு அவள் டிபார்ட்மென்ட் தேடீச் சென்று கொண்டு இருந்தாள். அப்பொழுது அந்த வழியில் வந்த விஜய் அவளைப் பார்த்ததும் காதலில் விழுந்தான். (அது தான்பா... பார்த்ததும் காதல்...😁)...

"ஹேய் இங்கே வா... நீ எந்த டிபார்ட்மென்ட்...பேர் என்ன", விஜய்.

"என்ன சுடில வர காலேஜ்க்கு... நாளைக்கு புடவைல வரனும் சரியா...", ஜான்.

"டேய்...", விஜய் ஜானை முறைத்தான்.

"சாரி மச்சான். யூ கன்டினியூ...", விஜய்.

"ம்ம்ம்.. சொல்லு...", விஜய்.

"நிலா... ECE டிபார்ட்மென்ட்", நிலா.

"நல்லா தான் இருக்கு.. நான் விஜய். நிலா விஜய்... இனி யாரு கேட்டாலும் அப்படித்தான் சொல்லனும்... ஓகே வா...", விஜய்.

"என்ன... சொல்றீங்க... நான் போறேன்...", நிலா.

பொறுமையைக் கடைப்
பிடித்துக் கொண்டு இருந்தாள் நிலா.

"எங்க போற... நான் உன்னை லவ் பன்றேன். எனக்கு ஒரு கிஷ் குடுத்துட்டு போ...", எனக் கூறியவன் அவள் கையினைப் பற்ற...

ஜான் தன் கன்னத்தினைத் தேய்த்துக் கொண்டு இருந்தான். விஜயை அடித்தது அவனுக்கு அடித்தது போன்று கன்னம் எறிந்தது.

"ராகிங் அளவோட இருக்கனும்... மீறினா... இப்படிதான். புரிந்ததா...", என்று கூறியவள் தன் டிபார்ட்மென்ட் உள்ளே சென்றாள்.

"ஐ லவ் யூ டி.. இப்ப தான் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...", விஜய்.

"டேய் மச்சான்... உன்னையே அடிச்சிட்டாளா...", ஜான்.

"விடுடா... ஈவ்னிங் அவள் என்னைப் பார்க்க வரனும். அதுக்கு நீ தான் பொறுப்பு. வா போகலாம்", விஜய்.


நேசம் 5:

நடந்தவற்றை நிலா கூற... ஹம்சி பயந்தாள்... நிலா தைரியசாலி. எதையும் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டுமே இருப்பது அவளுக்கு அரவே பிடிக்காது. ஆனால் ஹம்சி பயந்த சுபாவம் கொண்டவள்.

குணத்தில் எப்படி வேறுபாடு உள்ளதோ அதே போன்று தான் உருவத்திலும்... (ஆனால் வாய்க்கு மட்டும் இருவருக்கும் கோல்டு மெடல் தான் கொடுக்கனும்🤣) நிலா மஞ்சள் கலந்த வெண்மை நிறம். மாசு மருவற்ற முகமும் செவ்விதழும் பெற்றவள். வடிவான, பூசினார் போன்ற உடல்வாகு ஆனால் அதுதான் அவளுக்கு மிகுந்த அழகைக் கொடுக்கும். திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு.

ஹம்சி தூய வெண்மை நிறம். மாசு மருவற்ற முகமும் பின்க் நிற இதழ் பெற்றவள். சற்று அளவான, சிறுத்த இடை கொண்ட, நின்று பார்க்கும் அழகு.

"பிரச்சினை பண்ண மாட்டாங்களா டி... நாளைக்கு லீவ் போட்டிடலாமா..", ஹம்சி.

"சரி. நாளைக்கு லீவ் போடுறோம். அடுத்த நாள் பிரச்சினை பண்ண மாட்டாங்களா... என்ன நடந்தாலும் நான் பார்த்துக்குறேன். நீ பயம் இல்லாம வா..", நிலா.

"சரி டி", ஹம்சி.

நிலாவும் ஹம்சியும் பள்ளியில் இருந்தே நண்பர்கள். நிலா, ஹம்சி வீட்டினர் அனைவருக்கும் பழக்கம். நிலா உடன் என்பதால் மட்டுமே ஹம்சியை வெளியில் அனுப்பினர் ஹம்சியின் பெற்றோர். நிலாவின் தந்தை, இல்லம் மற்றும் ஸ்கூட்டி என அனைத்தையும் ஏற்றுக் கொள்ள.. இவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. கல்லூரி செல்லும் முதல் நாள் வந்து இருந்துவிட்டு வீடு திரும்பினர். நிலாவின் தந்தை அவளை ஹம்சி வீட்டில் விட்டவர் தான். அதற்கு பின் போனில் கூட அழைக்கவில்லை. அவளுக்குத் தெரியும் தந்தை தன் நினைவாகத் தான் இருப்பார் என்று.. ஆனால் விதி...!

கல்லூரியில் இருந்து இல்லத்தினை அடைந்தவர்கள் ப்ரஷ் ஆகிவிட்டு அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். ஹம்சி வீட்டிற்கு அழைத்து பேசுவது... நிலா அருகில் உள்ள குழந்தைகளுடன் ஹைட் அண்டு ஷீக் விளையாடுவது.. அசைன்ட்மென்ட் எதுவும் இருந்தால்.. இருவரும் இரவில் விழித்து முடித்துவிட்டு தான் உறங்குவர்.

ஹம்சி தான் சமையல் வேலை அனைத்தும் செய்வாள். நிலாவிற்கு தெரியாது என்று ஒன்றும் இல்லை. அவளுக்கு ஹம்சியின் கைப்பக்குவத்தில் அலாதி பிரியம். ஆனால் சண்டே மதியம் மட்டும் நிலா தான் சமையல். இரவில் இருவரும் ஹோட்டல் சென்று விடுவர். காலை என நீங்கள் கேட்க வருவது புரிகின்றது...(சண்டே, காலை என்பது இருக்கின்றதா எனக் கேட்கும் அளவிற்கு உறங்கும் ஜீவன்கள் இருவரும்... அப்புறம் எங்கே சமையல்😆)

"எப்படி கண்ணு இருக்க... நேரத்துக்கு சாப்பிடுங்க ரெண்டு பேரும்... கோயம்புத்தூர்ல யாராவது வீம்பு பண்ணா சொல்லு கண்ணு... நம்ம ஊரு தான். நான் வந்து அருவால்ல ஒரு வெட்டு வெட்டிடறேன். நிலா எங்க
போய்டுச்சு..", ராஜசேகர்.

"நல்லா இருக்கோம் கிங். உங்களோட பிரதிபலிப்பு தான் இங்க ஒருத்தி இருக்காளே.. அப்புறம் என்ன பயம். அவள் குட்டீஸ் கூட விளையாடுறா கிங்..", நாளைக்குப் பேச சொல்றேன்(ராஜசேகர் பெயரின் சுருக்கம் கிங். இந்தப் பெயர் யாரு வச்சிருப்பாங்கனு யோசிக்குறிங்க.. டவுட்டே வேண்டாம் நிலா தான்😄)

"சரி கண்ணு. பெரிய பாப்பா கிட்ட கொடுக்குறேன்", தாத்தா.

"என்ன டி வாகினி எப்படி இருக்க. காலேஜ் ஓகே வா", ஹம்ச வர்த்தினி.

"நல்லா இருக்கேன். காலேஜ் ஓகே தான். போக போக தான் தெரியும். உனக்கு எப்படி இருக்கு ஹம்சி..", ஹம்சி.(ஹம்சி வீட்டில் அனைவரும் ஹம்சவாகினியை வாகினி என்றும் ஹம்சவர்த்தினியை ஹம்சி என்றும் அழைப்பர். நிலா மட்டும் இதில் விதிவிலக்கு. ஹம்சவர்த்தினியை ஸ்வீட்டி என்பாள்.(அவள் ஸ்வீட் அதிகம் உண்பதால் அப்பெயர்😉)

"எனக்கும் அப்படித் தான் டி வாகினி", எனத் தொடங்கி 10 நிமிடம் பின்னர் அவள் தந்தையிடம் தர...

"பத்திரமா இருமா.. அம்மா கிட்ட பேசிட்டு போய் சாப்பிடுங்க.. நேரம் ஆகுது.. அம்மா கிட்ட கொடுக்குறேன்மா..", தமிழ்செல்வன்.

"சரிங்கப்பா.. ", ஹம்சி.

"வாகினி....", என ஆரம்பித்தவர்கள் அரை மணி நேரம் சென்ற பின்னர் நிலா வர அவளும் பேசிவிட்டு உண்பதற்குத் தயாரானார்கள்.

காலைக் கல்லூரி வந்து சேர்ந்தனர். வழக்கம் போல் நிலா ஹம்சியை அவள் டிபார்ட்மென்ட்-ல் விட்டுவிட்டு அவள் டிபார்ட்மென்ட் செல்ல வழியில் விஜய் நிற்க... அவனருகில் அவன் நண்பர்கள்.

"மச்சான் இது தான் உன் ஆளாடா.. நல்லா தான் டா இருக்கா...", திலீப்.

"உனக்கு நேரம் சரியில்லை டி மாப்பிள. விதி யாரை விட்டது", ஜான் மைண்டு வாய்ஸ்.

"என்னை ஏன்டா அடிச்ச..", கன்னத்தினைத் தடவியபடி திலீப் கேட்க..

"அவங்க நம்ம சிஸ்டர்டா.. மறியாதை இல்லாம பேசலாமா.. அதான் மச்சான் உன்ன டச் பன்னிடான்", ஜான்.

அவர்கள் தன்னை ஒன்றும் செய்யவில்லையே என யோசித்தவள் அவள் டிபார்ட்மென்ட் உள்ளே நுழைந்தாள்.

பின் விஐய் குழு அவர்கள் டிபார்ட்மென்ட் திரும்பியது.

இடைவேளைக்கு ஐந்து நிமிடம் முன்... கெமிஸ்ட்ரி வகுப்புச் செல்ல... ஹம்சி தூக்கக் கலக்கத்தில் இருந்தவள் கையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இடையில் பேனாவை வைத்துக் கொண்டு இடவலமாக ஆட்டிக் கொண்டு இருந்தாள். தூக்கக் கலக்கத்தில் இருந்தவள் கொஞ்சம் வேகமாக ஆட்ட...அவள் அருகில் இருந்த தீபா அவளை தெரியாமல் இடிக்க அது பறந்து சென்று ஒரு நெற்றியைப் பதம் பார்த்தது. நெற்றியில் கூர்முனை தீண்டியதில் நல்ல அழுத்தம் பதிந்து மீண்டது.

சுய நினைவை அடைந்தவள் நொடியில் நடந்தது புரிய... பாவமாக திரும்பிப் பார்க்க.. அந்த நபரின் கண்கள் அவளைத் திரும்பிப் பார்க்க...

இவள் தன் இரண்டு கரங்ளையும் கிராஸ் ஆக காதுக்குக் கொண்டு சென்று விழிகளில் பயத்துடன் மன்னிப்பு வேண்டினாள். அந்த பாவத்தில் சிரிப்பு வர கண்களைத் திருப்பி விட்டு அந்த நபர் சென்று விட்டார்.

இடைவேளை தொடங்க... ஹம்சி அந்த நபரைத் தேடி கண்டுபிடிக்க அந்த நபர் வகுப்பினுள் சென்று விட.. அவளும் அவள் வகுப்பினுள் நுழைந்தாள்.

மதியம் நிலாவிடம் கூறி அவளுடன்அந்த நபரினைக் காணச் செல்ல.. அந்த நபருடன் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் இருந்தனர். இவள் அந்த நபரின் பின் நின்று விழிக்க...

"ஹலோ பாஸ்... உங்க கிட்ட இவள் பேசனும்", நிலா.

நிலாவின் குரலைக் கேட்டவன் திரும்பிப் பார்க்க... ஹம்சி விழிகளில் அச்சத்துடன் இருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு நிலாவிடம் என்ன எனப் புருவம் உயர்த்த... அவள் அவளினைக் கைகாட்ட..

"சாரி. நான் தெரியாம உங்களை காயப் படுத்திட்டேன்", ஹம்சி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. வருத்தப் படவேண்டாம். சரி போகலாம்", அந்த நபர்.

"இல்லை அந்தப் பேனா எனக்கு முக்கியமான பேனா. அது வேண்டும்!", ஹம்சி.

"ஓ... சரி நாளைக்குத் தறேன். உன் பேர் என்ன?... ", அந்த நபர்.

அவளிடம் பதில் வராது போக... அவளை விசஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தவள்...

"இவள் பெயர் ஹம்சி. என் பெயர் நிலா. நான் ECE, இவள் IT. நீங்க?", நிலா.

"நான் 3 இயர் IT டிபார்ட்மென்ட்... கவின் சந்திரன்", கவின்.

"ஓ... அந்த கவின் நீங்க தானா...?", நிலா.

சிறு புன்னகையுடன் தலை ஆட்டியவன்...

"பை காய்ஸ். நிலா அண்டு ஹம்சி பை", கவின்.

"ஹாய் ஹம்சி. ஏன் பயந்து நிக்குறீங்க... கவின் ஒண்ணும் சொல்ல மாட்டான். ஆனால் அவன் நெற்றி வீங்குனதுக்கு காரணம் நீங்க தான்னு யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.. அவன் விசிறிகள் அடிக்கத் துரத்துவாங்க... ஹா ஹா ஹா", ரக்சிதா.

"ஆஹ்ன். சரி... ?", ஹம்சி.

"சாரி நான் என்னை இன்ட்ரோ கொடுக்கல.. நான் ரக்சிதா... யூ கால் மீ ரக்ஷி. நான் 2 இயர் IT. பீ ப்ரன்ட்ஸ்", என்று ரக்ஷி கை கொடுக்க...

"நான் IT... ", ஹம்சி... தொடங்க..

"ஐ நோ. ஹம்சவாகினி. IT ப்ரம் பழநி. இவள் உன் தோழி நிலா", ரக்ஷி.

"எப்படி?", நிலா.

"எல்லாம் அப்படித்தான். சரி க்ளாஸ் போங்க... நாளைக்கு மீட் பண்ணலாம். பை", ரக்ஷி.

"பை", கவின் நண்பர்கள்.

"பை", நிலா மற்றும் ஹம்சி.

"உனக்கு அவங்கள முன்னாடியே தெரியுமா டி", ஹம்சி.

"எனக்குத் தெரியாது டி. என் தோழி ஆய்ஷா தான் சொன்னா.. கவின் கவின்னு ஒரே கவின் புராணம் தான். என்னடானு கேட்டா... காலேஜ் டாப் சிங்கர் போல...", நிலா.

"சிங்கர் ஆஹ்...", ஹம்சி.

"ஐயோ உங்கிட்டயா சொன்னேன். நீயே ஒரு சாங்
பைத்தியம்.. நீ அவளுக்கு மேலே இருப்பியே... என்னடி நிலா உனக்கு வந்த சோதனை... ஐயஹோ...", நிலா.

"ஹேய்.. அப்போ அவர் கூட ப்ரன்ட்ஸ் ஆகிடலாம் டி", ஹம்சி விழிகளில் ஆர்வத்துடன் கேட்டாள்.

"அது நம்ம கையில் இல்லை செல்லம். அவங்க கையில் இருக்கு. பார்க்கலாம்", நிலா.

நட்பாகுமா...?


நேசம் தொடரும்...😊


Hiii drss...

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you...

ரொம்ப bore... எனில் கண்டிப்பாகத் தெரிவிக்கவும்...

தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்களின் நிவி😊...

அடுத்தப் பதிவுடன் விரைவில் சந்திக்கலாம்😉

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 6:

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …

இசையில் மெய் மறந்து தனது வேலையை மறந்து நின்று கொண்டிருந்தார் வசுந்தரா... வசு எனச் செல்லமாக அழைக்கப்படும் கவினின் பாட்டி.

பாடலைப் பாடி முடித்தக் கவின்...

"பூப்ப்ப்ப்......"என்று அவரின் காதருகில் கத்தினான்.

திடுமெனக் கேட்ட சப்தத்தில் அதிர்ந்தவர் அவனின் காதைத் திருகி கோவிலுக்கு அழைத்துச் செல்ல வந்தார்...

அனைவரும் சாப்பாடு மேஜையில் அமர்ந்து இருக்க...

"வசு நான் உன்னை ஈவ்னிங் பிக்கப் பன்னிக்குறேன். உதய் கிட்ட சொல்லிடு", கவின்.

"ஏன் டா... உன் ஹோம் போகல...", உதய்(கவினின் அண்ணன்).

"இல்லை டா உதய். எல்லாரும் டூர் போறாங்க... நாளைக்கு தான் வருவாங்க...", கவின்.

"நீயும் போக வேண்டியது தானப்பா... ஹேப்பி ஆ இருந்துட்டு வா...", சந்திரன்(கவின் தந்தை).

"நாளைக்கு காலேஜ்ல செமினார் இருக்குப்பா... இல்லன்னா போய்ருப்பேன்", கவின்.

"சரிப்பா.. சாப்பிட்டு கெளம்புங்க... நானும் ஆபிஸ் போய்ட்டுவறேன் வேணி. அம்மா வறென்", சந்திரன்.

"சரிங்க...", அம்சவேணி(கவின் தாய்).

"டேய் மதி கால் பன்னான் டா. இந்த வாரம் வீக் என்டு வீட்டுக்குவறேன் சொன்னான்", கவின்.

"என்னப்பா திடீர்னு வரான். நாம கட்டாயப் படுத்தினாலும் வரமாட்டானே. எப்படியோ நம்மல பார்க்க தோனுச்சுல... அதுவே சந்தோசம்...", வேணி.

"வரட்டும் அவன். இந்த முறை ஒரு சுத்து உடம்பு போட்டு அனுப்புறேன். அப்புறம் பாரு என் பேரன", வசு.(நாமலும் அப்படியே கூப்பிடுவோம்😉)

"பாட்டி அவன் தான் உங்க பேரன்... அப்போ உதய் யாரு?",கவின்.

"டேய்... நீ ஏன் டா.. என்னை கோர்த்து விடுற.. பாட்டி எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. நான் வறேன். பை", உதய்.

"டேய் இப்படியேவா போக போற... ஸ்டூடென்ட்ஸ் எல்லாரும்... சார் கறை நல்லதுனு சொல்லப் போறாங்க... ", கவின்.

"என்ன டா உலறிட்டு இருக்க... என்னை கறை", உதய்.

"அட கொஞ்சம் உங்க சட்டைய பாருங்க அண்ணா... ", கவின்.

"அம்மா........", உதய்.

"மன்னிச்சிடு டா கண்ணா... கவின் உனக்கு சாம்பார் வேண்டுமாப்பா..", வேணி.

"அம்மா... உங்க சாம்பார் போதும்... நீங்க போய் மகாபாரதம் கன்டினியூ பண்ணுங்க... அவனை பாச மழையில் நனைய வச்சதே போதும்", என்றவன் சிரித்துக் கொண்டே கை கழுவி வந்தான்.

உதய் தன் சட்டையை மாற்றி விட்டுப் கல்லூரிக்குத் தயாரானான். கவினும் வசுவும் கோவிலுக்குச் சென்றனர்.

வசுந்தராவின் இளைய மகன் சந்திரன். அவரின் அன்பான அடக்கமான மனைவி அம்சவேணி(மகாபாரதம் பாக்கும் போது மட்டும் அவங்க இந்த உலகத்துல இருக்க மாட்டாங்க...😁). இவர்களின் மகன் உதய் சந்திரன் மற்றும் கவின் சந்திரன். மன்னிக்கவும் மதியரசன் அவர்களின் மூன்றாவது மகன்(அவனை விட்டது தெரிந்தால் என்னை அந்தக் குடும்பமே கொலை செய்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை😱)

வசுவின் மூத்த மகன் இந்திரனின் மகன் மதியரசன். இந்திரன் மற்றும் அவரின் மனைவி நிலாவதி இருவரும் மதியரசனுக்கு 5 வயது இருக்கும் பொழுது விபத்தில் இறந்து விட... அன்று முதல் மதி சந்திரன் மகன் ஆனான். இன்னும் சொல்லப் போனால் தான் பெற்ற மகன்களிடம் காட்டும் அதே அளவு அன்பினை வேணியும் செலுத்தும் அளவு மதி இருந்தான். மதி படிப்பில் படு சுட்டி. கவின் வயது தான் மதிக்கும். இருவரும் ஒரே காலேஜ் சேர நினைக்க... மதிக்கு அவன் எடுத்த மதிப்பெண்க்கு IITல் IT பிரிவு கிடைக்க.. மதி கவினுக்காக மறுக்க... சந்திரன் மற்றும் கவினின் பிடிவாதம் காரணமாக கவினும் மதியும் வேறு கல்லூரியில் சேர்ந்தனர். தற்பொழுது மதி சென்னையில் பயில... கவின் கோவையில் பயில்கிறான். உதய் கவினை விட 2 வயது மூத்தவன். அவன் கல்லூரி ப்ரபசர் ஆக பணிபுரிகிறான். சந்திரன் சிறிய அளவிலான IT கம்பெனி நடத்திக் கொண்டு இருந்தார். இதன் காரணமாகத் தான் கவின் மற்றும் மதி இருவரும் IT பிரிவில் சேர்ந்தனர்.

கவின் கோவில் பிரகாரத்தினைச் சுற்றிக் கொண்டு இருக்க...

"ஹேய் சுண்டல் கொட்டுது.. பார்த்துப் பிடிக்க மாட்டியா... உன்னை வச்சிகிட்டு ஒரு தீபம் கூட ஏற்ற முடியல.. என்னதான் பொண்ணூ நீ", தியா கத்திக் கொண்டு இருப்பதைக் கண்டான் .

"சாரி அம்மு. திரும்ப இதைப் பண்ண மாட்டேன். தீபம் ஏற்றியதும் உனக்கு திரும்ப சுண்டல் வாங்கித் தறேன். ஓகே வா", கைகளில் இருந்த சுண்டலைத் திட்டில் வைத்து விட்டு தீப்பெட்டியை தீபம் அருகில் வைத்து தனது கரங்களினை தோப்புக் கரணம் போடுவது போன்று வைத்து மன்னிப்பு வேண்ட...

"ம்ம்.. வாங்கித் தரனும் ", சரி அம்மு என்றவள் தீபம் ஏற்றினாள்.

அவர்களின் அருகில் வந்த நிலா அவளை அழைத்துக் கொண்டு சுண்டல் அருகில் செல்ல... அவர்களினை நினைத்துக் கொண்டே பாட்டியின் அருகில் வந்த கவின் போகலாம் என்க...

"இன்னைக்கு என் தோழி வர தாமதம் ஆகும் சொன்னா கவினு... நீ காலேஜ் போப்பா.. நான் அவளைப் பார்த்துட்டு வறேன்", வசு.

"என்ன வசு... தினமும் அவங்க வீட்டுக்கு தான போகனும் சொல்லுவ.. இன்னைக்கு இப்படி சொல்லுற...", கவின்.

"அதெல்லாம் காரணமா தான். போ டா. என்னை யாரும் கடத்திட்டு லாம் போக மாட்டாங்க...", வசு.

"அது சரி. உன்னை கடத்திட்டுப் போய்ட்டா என்னை தினமும் திட்ட ஆள் கிடையாது அதான் கேட்டேன்..", சிரித்துக் கொண்டே கவின் கூற...

"அடத் திருட்டுப் பயலே.. உன்னை.... போ டா..", வசு.

"பாட்டித் திருடா... நா பிடிக்குற", என்று அவனின் காலைக் கட்டிக் கொண்டு தியா கத்த...

ஒரு நொடி அதிர்ந்தான்.

"ஹேய் யாரு டி அவங்க.. விடுடி... என்ன பன்ற..", என நிலா கேட்க..

"திருடா... திருடா... நில்லா பிடி திருடா..", தியா.

கவின் திரும்பி அக்குழந்தையைத் தூக்கிக் கொள்ள... அப்பெண் அவனை பயந்து பார்க்க... அவனுக்கு ஹம்சியின் பயந்த முகம் ஒரு நொடி வந்து போனது. புன்னகைத்துக் கொண்டே...

"அம்மு இவங்க என் பாட்டி. நான் அவங்க பேரன். பாரு", என்று கூறியவன் வசுவைக் கட்டிக் கொள்ள... வசு அவனை கையில் அடித்து தியாவை வாங்கிக் கொள்ள...

"வசுப்பாட்டி இது உங்க பேரனா", தியா.

"ஆமாம் செல்லம். நீ இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட கண்ணு...", வசு.

"அம்மா தான் பாட்டி. நில்லா போய்ட்டா..", தியா.

"நாம அம்மாகிட்ட போகலாம் கண்ணு", வசு.

நிலா தியாவை கேள்வி கேட்கத் தொடங்கியதும் ஹம்சி அவளை அழைக்க... வசு பாட்டியின் பின் அவள் அன்னை வரப் பார்த்தவள் ஹம்சியிடம் சென்று விட்டாள். தியாவின் அன்னை வசுவிடம் வந்தவர் பேசிக் கொண்டு இருக்க.. கவின் சொல்லிக் கொண்டு காலேஜ் சென்று விட்டான்.

நிலாவும் ஹம்சியும் ஸ்கூட்டியில் காலேஜ்க்கு பறந்தனர்.

"ஹாய் ஹம்சி. ஹாய் நிலா... லஞ்ச் என்கூட வந்துடுங்க.. பை லஞ்ச்ல மீட் பண்ணலாம்", ரக்ஷி.

"சரி. ஆனால் எங்கே...", நிலா கத்த..

"நான் ஹம்சி க்ளாஸ்ல உங்கள பிக்கப் பன்னிக்குறேன்", ரக்ஷி.

"ஏன் டி சரி சொன்ன.. நம்ம பிரன்ட்ஸ் என்ன நினைப்பாங்க...", ஹம்சி.

"அட லூசு. கவின் ப்ரன்ட் ஆகனும்னு சொன்ன.. அப்புறம் இத விட்டா வாய்ப்பே இல்லை. வேண்டாம்னா சொல்லு. சொல்லிடலாம்", நிலா.

"அப்புறம்... நம்ம தனியா உட்கார்ந்து இருக்கக் கூடாதுனு அவங்க கிட்டக் கேட்டு அவங்க டீம் கூட சாப்பிடுறோம். ஸோ அவங்க நாம் போனால் எதுவும் நினைக்க மாட்டாங்க. அவங்க அவங்க டீம் கூட ப்ரீயா சாப்பிடட்டும். என்ன", நிலா.

"ம்ம்... சரி டி", மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள் ஹம்சி.

"நிலா... அவன் உன்னை பாத்துட்டே இருக்கான் டி", ஹம்சி.

"தெரியும் வா டி. அவன் தான் விஜய். என் டிபார்ட்மென்ட் முன்னாடி தான் இருப்பான். இப்போ இங்க இருக்கான். அவனை நான் பார்த்துக்குறேன். நீ வா", நிலா.

"இவன் தான் விஜய் ஆ... சரி டி", ஹம்சி.

விஜய் கண்களில் காதலுடன் நிலாவைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் காதல் கை கூடுமா... இல்லை கானல் நீராகுமா...


நேசம் 7:

"என்ன தான் பிரச்சினை... உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லு... ", நிலா.

"....",பப்பு.

"சொல்லமாட்டல... சரி நான் போறேன்... ", நிலா.

"....", பப்பு.

"இப்படி முகத்த வச்சா... என்ன தெரியும்... ஹம்சி வரதுக்குள்ள சொல்லு பப்பு", நிலா.

"....", பப்பு.

"அதுதான் பிரச்சினையா.. நான் பாத்துக்குறேன்...", நிலா.

"ரோசி... கம். என்ன பண்ணான் பப்பு. ஏன் அவன் கிட்ட பேச மாட்ற...", நிலா.

"...", ரோசி.

"சரி. அவனை மன்னிச்சு விடலாம். அவன் பாவம் இல்லை... வா...", நிலா.

ரோசி நிலாவின் அருகில் வந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு பப்புவை பார்த்தது. பப்புவும் நிலாவின் அருகில் சென்று அவள் கையினைப் பற்ற...

"குட். இனி பைட் பண்ணாதிங்க... பிஸ்கட் சாப்பிடுங்க... பை", நிலா.

"....."

ரோசி மற்றும் பப்பு இரண்டும் குட்டி நாய்க்குட்டிகள். வாட்ச்மேன் பார்த்துக் கொள்கின்றார். கல்லூரி வந்த நாளிலேயே அவளிடம் இணைந்து விட்டனர். அவர்களுக்கு மதிய இடைவேளை உணவு அவள் வசமானது. கொடுத்துவிட்டு ஹம்சி வர அவளுடன் ரக்சியும் வர மூவரும் கேன்டீன் சென்றனர். அங்கு இவர்களுக்குக் காத்திருந்த கவின் நண்பன் வரவேற்க...

கவின் அப்பொழுது தான் அங்கு வந்து சேர்ந்தான்.

"என்ன சாப்பாடு... வாங்க ஷேர் பண்ணிக்கலாம்...", ரக்ஷி.

"நாங்க 2 பேரும் ஒரே சாப்பாடு தான். புதினா சாதம் வெண்டைக்காய் பொறியல். நம்ம ஹம்சி பன்னது தான். உங்களுக்கு ஓகே வா..", தயங்கியபடி நிலா.

"எல்லாரும் சாப்பிடுங்க... இனிமேல் இப்படி தான் ஷேரிங் ", என்றவன் நிலாவின் பாக்ஸை ரக்சியிடமும் ரக்சியினதை அவன் நண்பனிடமும் ஹம்சியினதை அவனுக்கும் அவனுடயதை நிலாவிற்கும் தந்து சாப்பிட சொல்ல...

"இது நானும் ஹம்சியும் சாப்பிட்டுக்குறோம்... ", நிலா.

கவின் மற்றும் ராம் இருவரும் இதுவரை மதியவேளை அவர்களின் சீனியர் உடன் இருக்க... தற்பொழுது அவர்கள் முடிந்து சென்றுவிட... ராம், ரக்ஷி உடன் உணவருந்த கேட்க... கவினும் சரி என... ரக்ஷி ஹம்சி நிலா இருவரையும் அழைத்து விட... நண்பர்கள் ஆனார்கள்.

கவின் தாய் வழக்கமாக இருவர் உணவருந்தும் படி உணவு தந்துவிட.. அது நிலாவிற்கும் ஹம்சிக்கும் போதுமானதாய் இருக்க... அனைவரும் நட்புடன் உணவருந்தத் தொடங்கினர்.

அவர்களின் நட்பினைக் கண்ட விஜய்... தன் நண்பர்களுடன் சென்று விட்டான்.

"என்ன டி நிலா.. சீக்கிரம் வா... நாம் போறதுக்குள்ள அங்க ப்ரோக்ராம் முடிஞ்சிடும்", ஹம்சி.

"அந்த ப்ரோக்ராம் போறது நாம மட்டும் தான். அந்த அயன் பாக்ஸ் மண்டை பேசறத கேக்க இவ்வளவு ஆர்வம். என்னடி நிலா உனக்கு வந்த சோதனை... ", நிலா.

"ஹேய் சார்க்கு மரியாதை குடுடி. இப்படி பேசலாமா..", ஹம்சி.

"என்ன மேடம். நீங்க நேத்து யார பாராட்டிட்டு இருந்தீங்க", நிலா.

அஸ்சைன்மென்ட் மறந்து விட அவள் ப்ரொபசர் அவளை வெளியில் அனுப்பிவிட... அவரை இரவில் வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தாள் ஹம்சி. அதை நிலா கூறவும்...

"நான் யார டி பாராட்டுனேன். அப்படி எதுவும் இல்லையே...", ஹம்சி.

"ஹேய் இந்த முழு பூசணிக்காயை மறைக்குற வேலை வேற யாருகிட்டயாவது வச்சுக்க... என்ன அவசரம் இப்போ உனக்கு", நிலா.

அய்யோ... கண்டுபிடிச்சிட்டாளே....."அது... கவின் சாங் கேட்கனும் டி", ஹம்சி.

"அதை சொல்லு... பூனை ஏன் டிரஸ் இல்லாம போகுதுனு இப்ப தான தெரியுது...", நிலா.

"அடியே... அது பூனை இல்லை... எலி...", ஹம்சி.

"அது எனக்குத் தெரியாதா... ஒரு சேஞ் வேணும்ல.. பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது. ரைட்.", நிலா.

"உன்னை வச்சுகிட்டு", என்றவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

"நீ கவின் மேல இன்டெரேஸ்ட் காட்டுரத பார்த்தா எதோ சரியில்லையே..", நிலா.

"ஏன் டி என்னை இப்படி நினைக்குற... உனக்கு என்னைப் பத்தி தெரிஞ்சும் இப்படி சொல்ற... நண்பன் எப்பவும் காதலன் ஆக மாட்டான் டி", ஹம்சி.

"லூசு மாதிரி பேசாத ஹம்சி. நட்பு காதல் ஆகாது. ஒத்துக்குறேன். நட்புக்குள்ள காதல் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வந்தாலும் தப்பில்லை. ஆனால் நீயும் கவினும் இப்போ தான் பழக்கம். நம்ம ஏற்படுத்திகிட்ட உறவு. நீயா எதயும் போட்டு மனச கொலப்பிகாத.. உனக்கு கவின் நண்பன் அப்படினா... ஓகே... அது உன் விருப்பம். நான் ஜஸ்ட் பன்க்கு உன்னை கேட்டேன். நீ சீரியஸ் ஆகாத", நிலா.

"எப்படியும் அந்த அயன் பாக்ஸ் பேசி முடிக்க 2 மணி நேரம் ஆகும். ஸோ லேட் ஆ போகலாம் தப்பில்லை...",நிலா.

"கொஞ்சம் பாஸ்ட் ஆ வாடி. ப்ளீஸ்", ஹம்சி.

"சரி வா போகலாம்", நிலா.

ப்ரஷர்ஸ் வரவேற்பிற்கு தான் இருவரும் கிளம்பிக் கொண்டு இருந்தனர். அதில் கவின் பாடுகிறான் என ராம் கூற... அதிலிருந்து ஹம்சி அவன் பாடலைக் கேட்க ஆவலுடன் இருக்கின்றாள்.

அவர்கள் அங்கு சென்று அமர... முதலில் அங்கு யாரும் இல்லை. நேரம் ஆக வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்க... 1 மணி நேரம் ஆகியும் 500 பேராவது அமரும் இடத்தில் கிட்டத்தட்ட 10 பேர் என்று இருக்க... நிலா ஹம்சியை முறைத்துக் கொண்டு இருந்தாள். ஹம்சி தன் நிலையினை எண்ணி வருந்திக் கொண்டு தான் இருந்தாள். கவின் பாடலைக் கேட்க இப்படி உட்கார வேண்டியதாயிற்று என்று.

கடைசியில் நிலாவின் அயன் பாக்ஸ் சாரி... 1ஸ்ட் இயர் கோஆர்டினேட்டர் தன் உரையை முடிக்க... கவின் பாடத் தயாரானான்.

ஒரு பெண் துதி பாடி ஆரம்பிக்க... மற்றவர்கள் கவினை காதல் பாடல் பாட சொல்லிக் கேட்க...

கவின் வந்து நின்றதும் அப்பொழுது தான் ஹம்சி அவனை விழிகளில் நிரப்புகின்றாள்.

அதிக உயரம் இல்லாமலும் குட்டையாகவும் இல்லாமல் ஹம்சிவிட சற்று உயரம்.. அலை அலையான கேசம்... மாநிறம்... தினமும் உடற்பயிற்சி செய்வதின் பலன் அவன் உடலில் தெரிய... கன்னம் குழி விழச் சிரிக்கும் பொழுது வரிசையான பற்கள்... விழிகளில் அமைதி... அடர்ந்த புருவம்... அதன் மத்தியில் சிறிய கோடு போன்று குங்குமம். வெண்மை நிற ஷெர்ட் முழங்கை வரை மடித்து விட்டு..கருப்புநிற பேன்ட்.

அருகில் விசில் சத்தம் கேட்கத் தொடங்க...

கவின் ஹம்சியின் விழிகளினை மட்டுமே பார்த்துக் கொண்டு பாடத் தொடங்குகின்றான்...

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது...!
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
அய்யய்யோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித் தந்தாளே
கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நில்லு
வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு...!
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதைப் போடும் காற்றாய் வந்தாயே
உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும் போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கை ஆறு
பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி...!
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா...!

கவின் வகுப்பினர் அனைவரும் அவனைத் தூக்கிக் கொண்டு சுற்ற... கைகள் தட்டும் ஓசை செவி நிரப்ப... ஹம்சி அப்பொழுதுதான் உணர்வு வர திரும்பிப் பார்த்தாள். கிட்டத்தட்ட அந்த இடம் முழுவதும் மாணவர்கள் நிரம்பி வழிய... நிலாவும் அவனுக்கு வாழ்த்தினைத் தெரிவிக்க சென்று இருக்க... தன்னை நினைத்து வெட்கினாள். அவன் இவ்வளவு பேர் இருக்கத் தன்னை மட்டும் எப்படி பார்த்து பாடுவது போன்று உணர்ந்தேன். தன் மன பிரம்மை... நண்பன் என்பதை நினைவில் கொள் ஹம்சி என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.

விதியின் திட்டம்???

Hii drs...

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you...

உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்களின் நிவி😍...🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 8:

"என்ன ஆனாலும் சரிதான்... இனி உங்கள் வாய்ஸ் இருக்குற இடம் தேடி கண்டிப்பா ஹம்சி கூட நானும் வந்துடுவேன். அதுல சந்தேகமே வேண்டாம். சும்மா செஞ்சிட்டிங்க...", நிலா.

"என்னமா செஞ்சான். பாடுனதா தான் எனக்கு நியாபகம்", ராம்.

"உங்களுக்கு நியாபக மறதி இல்லையா பாஸ். மறதினு நினச்சேன். தெளிவா தான் இருக்கிங்க...", நிலா.

"இதுக்கு தான் வாய் வச்சிட்டு சும்மா இருக்கனும் சொல்றது...", கவின்.

"என் வாய் சும்மா தான் டா இருக்கு... இவள் வாய் தான் நீளமா இருக்கு", ராம்.

"பாஸ் ஸ்கேல் இருக்கா...", நிலா.

"என்னை ஆளை விடு சாமி. நான் உன் வழிக்கே வரலை. தோ வந்துடேன் டா. ஏன் டா இவ்வளவு மெதுவா கூப்பிடுற... காதுல விழல பாரு", என்றவன் யாரும் அழைக்காமல் வேகமாக அவ்விடம் விட்டு நகர

"டேய் எங்க காதுலயும் விழல... சரி பொலச்சு போ...", கவின் சிரித்துக் கொண்டே நிலாவுடன் ஹம்சியை வந்தடைந்தனர்.

ஹம்சி அவனிடம் வாழ்த்து தெரிவிக்க கை கொடுக்க... கவின் அதை விடுத்து அவளை மெல்லிதாக அணைக்க ஹம்சி தான் தடுமாறினாள். கவின் அனைவரையும் அணைத்து மகிழ்ச்சியைப் பகிர... அவனின் செயலில் அவளுக்கு வேற்றுமை தெரியவில்லை. ஆனால் அவளுக்கு உணர்வுகள் பளிச்சென்று தெரிந்து கொள்ள...அதை மீண்டும் அடக்கினாள். மூவரும் கேன்டீன் செல்ல...

"ஹேய் கவின் நான் டுடே மாட்டிகிட்டேன். சாரி நான் வர முடியவில்லை", ரக்ஷி.

"அதுலாம் பிரச்சினை இல்லை ரக்ஷி. அப்புறம் என்ன ஆச்சு. யாருகிட்ட... வழக்கம் போல... ராகவ் சார் தானா", கவின்.

"என்ன மாட்டிகிட்ட... என்ன சொல்ற", ஹம்சி.

"சொல்றேன் ஹம்சி. ஆமாம் கவின். அவரே தான். அப்புறம் என்ன.. செம டோஸ். வாங்கிட்டு இப்போ தான் வந்தேன்.", என பெருமூச்சு விட்டாள் ரக்ஷி.

"மேடம் க்ளாஸ் போர் அடிச்சா பேக் டோர் வழியா எஸ் ஆகிடுவாங்க... அப்படி ஒரு முறை செய்ய... ராகவ் கிட்ட மாட்டிகிட்டா. அதே மாதிரி இன்னைக்கும் ஆகிடுச்சு. அப்படித்தான ரக்ஷி", ராம்.

"ம்ம்ம்..", சோகமாகத் தலையினை ஆட்டினாள் ரக்சி.

"நம்மல போலவே ஒரு பிறவி இருக்கு போலயே... நோ.. நம்ம என்னைக்கு மாட்டிருக்கோம்... ஸ்கூல்லயே மாட்டுனது இல்ல", நிலா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

"சரி... கவின் என்ன ட்ரீட்... கம் ஆன்...", ராம்.

"வாவ்.. ட்ரீட் ஆ... எப்போ...", நிலா.

"ஹலோ எதுக்கு இப்போ ட்ரீட்...?", கவின்.

"இன்னைக்கு உனக்கு அவ்ளோ பான்ஸ்... உனக்கு ஆல்ரடி நிறைய இருக்காங்க... இனி 1ஸ்ட் இயர் முழுவதும்... அதான்... மறுக்கக் கூடாது. டீல்", ராம்.

"ஆமாம். டீல்", நிலா.

"என்னனு நீயே யோசிச்சு வச்சிருப்பியே.. அதையும் சொல்லு", கவின்.

"பார்ட்டி போறோம். ஆனால்...", ராம்.

"இல்லை. கண்டிப்பா என்னால் முடியாது. நான் வறேன்", ரக்சி.

"இல்லை கண்டிப்பா இதுக்கு எல்லாரும் ஒத்துக்கனும். இது நீங்க பயப்படுற மாதிரி இல்லை", ராம்.

"எதுனாலும் ஓகே. இப்போ என்ன வேண்டும் சொல்லுங்க எல்லாரும். என் ட்ரீட்", கவின்.

"எனக்கு சாக்கி ப்ரோ. ஹம்சி உனக்கு டி", நிலா.

"எனக்கு எதுவும் வேண்டாம். எதுவும் சாப்பிடத் தோணல", ஹம்சி.

"உங்களுக்கு காய்ஸ்", நிலா.

"எனக்கு ப்ரூட்டி வித் சன்ட்விச். ரக்சிக்கு 5ஸ்டார்", ராம்.

"எனக்கு 5ஸ்டார் பிடிக்காது. நான் போறேன்.. பை", ரக்சி.

"நான் சொல்றத கேளு ரக்ஷி. இது பேமிலி பார்ட்டி. எங்க அப்பார்ட்மென்ட்ல பேமிலியா நடத்துற பார்ட்டி. எப்போவும் நான் அதை அட்டன்டு பண்ண முடியாது. அதான் உங்களை கூப்பிட்டேன். உங்களுக்கு இதுக்கு மேல் விருப்பம் இல்லைனா நான் கட்டாயப் படுத்தல", ராம்.

"என்ன பேசுர. எங்க அட்ரஸ் சொல்லு வறேன். இனி இப்படி பேசாத..", ரக்ஷி.

"ஹம்சி நீ எதுவும் சொல்லல...", ராம்.

"கண்டிப்பா வருவோம். பேமிலி பார்ட்டி சொல்லிடிங்க. நாங்க ய
இல்லாமலா", ஹம்சி.

"ஹேய் ஹம்சி. ஸீ மை சாக்கி ப்ரோ. என்கிட்ட 10 டைரி மில்க் இருக்கு. லவ் யூ சாக்கி ப்ரோ", நிலா.

கவின் பட்டர் ஸ்காட்ச் கோனை ஹம்சியிடம் தர... அவள் எதுவும் சொல்லாமல் உடனே வாங்கிக் கொண்டாள். எப்படி மறுப்பாள்... அவளுக்கு ஐஸ் வேண்டுமா இல்லை சாப்பாடு வேண்டுமா எனக் கேட்டால் ஐஸ் மட்டும் போதும் என்பவள்... அதுவும் அவளின் முக்கிய விருப்பமான பட்டர் ஸ்காட்ச்.

ராம் மற்றும் ரக்சி இருவருக்கும் அவர்களுக்குப் பிடித்ததை வங்கி வந்தான்.

எல்லாரும் தங்களுக்குப் பிடித்தவற்றை பிடித்தவர்களுடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

"நாளைக்கு ஈவ்னிங் 6 ஓ க்லாக் எல்லாரும் என் அபார்ட்மென்ட் வந்திட்டுங்க... பார்ட்டி செலெப்ரட் பண்ணலாம்", ராம்.

"நான் உங்களை வந்து பிக்கப் பண்ணிகுறேன். அட்ரஸ் மெஸ்ஸேஜ்ல சொல்லிடு நிலா", கவின்.

"கண்டிப்பா சாக்கி ப்ரோ", நிலா.

"ஹம்சி கன்னம் ரைட் சைடுல ஐஸ் இருக்கு க்ளீன் பண்ணு", கவின்.

"ம்ம்ம்... ", ஹம்சி.

அனைவரும் வகுப்பிற்குத் திரும்பினர்.

இரவு வீட்டில் ஹம்சி அனுமதி கேட்க... பல கேள்விகளுக்குப் பின் அனுமதி கிடைத்தது. நிலாவிற்கு அந்த வேலையும் இல்லை. அவள் என்ன செய்தாலும், கேட்க ஆள் இருந்தும் கேட்க முடியாது.

இப்படியே நேரம் கழிய... ஹம்சிக்கு எதுவோ போல் இருந்தது. தனது மனம் செல்லும் திசை திருப்புவதற்காக பல யோசனை செய்து கடைசியில் நடக்காத ஒன்றை நினைத்துக் கொண்டு உறங்கினாள்.

நிலாவிற்கு எதோ மனம் ஆர்பரித்தது. என்னவென்று உணர முடியவில்லை. சரி என்னவா இருந்தா என்ன.. என்ற மனநிலையில் இருந்தாள்.

ஒருவருக்கு ஒரு மாதிரி நினைவு என்று இருந்த அந்த இரவும் மறைந்து மறுநாள் வந்தது.

சன்டே.
ஹம்சி நிலா இருவருக்கும் என்றும் போல் அதிகாலை 2 மணிக்கு உதிக்க... தற்செயலாக ப்றெட் சாப்பிட்டு அதன் பின் நிலா சமையல் செய்து முடித்து இருவரும் உணவு உண்ணத் தொடங்கலாம் என்று இருக்க... கவின் மெஸ்செஜ் அனுப்பினான் 1 மணி நேரத்தில் வருவதாய். இப்பொழுது மணி 4. இனி தயாராக வேண்டும் என்று நினைத்து தயாராகி சாப்பிட்டு முடிக்க... கவின் வரவும் சரியாக இருந்தது. ஹம்சி ட்ரெஸ் எடுக்க மாடிக்குச் சென்றுவிட... கவின் அப்பொழுது வர... நிலா அவனையும் சாப்பிட சொல்லி சாப்பிட்டு முடித்தவன் கார் ஸ்டார்ட் செய்தும் ஹம்சி வராமல் இருக்க... நிலா கீழிருந்து கத்திக் கொண்டு இருந்தாள். இதோ வந்துட்டேன்...

அடர் நீல நிற காட்டன் புடவை. கோல்டென் பார்டர். அழகாக க்லிப் கொண்டு தனது கூந்தலினை அடக்கியவள் பாந்தமாக அவர்களினை நோக்கி வந்தாள். நிலா கேட்ட எதுவும் அவள் காதில் விழவே இல்லை. வரும்பொழுது கவினை பார்த்து அவள் கவினிடம் இருந்து தலையைத் திருப்பியவள் தான். அதன் பின் யாரையும் பார்க்கவில்லை. எதுவும் காதில் விழவும் இல்லை. நிலா மட்டும் பேசிக் கொண்டு இருப்பது புரிய... அதன் பின் அவளும் எதுவும் பேசவில்லை.

அவர்களின் வருகையை எதிர்பார்த்த ராம் அவர்களை அழைத்துச் செல்ல...

மூவரும் ராம் ரூமில் ரக்சிக்காக காத்திருந்தனர்.

நேசம் 9:

"சாரி காய்ஸ். லேட் பன்னிட்டேன். வாங்க போகலாம். என்ன அப்படி பார்க்குறீங்க...", ரக்ஷி.

"இது யாரு... எங்க ரக்ஷி எங்க போனா...", நிலா.

"அழகா இருக்க ரக்ஷி.. இந்த லெஹங்கால.. நீ புடவைலயே அழகா இருப்ப.. இதுல இன்னும் அழகா தெரியுர... கியூட்", ஹம்சி.

என்றும் புடவையில் இருக்கும் ரக்ஷி இன்று லெஹங்காவில் வந்திருந்தாள்.

"யா.. ரக்ஷி", கவின்.

"நான் பையனா பிறக்காம போய்டேன்... என் கண்ணு முன்னாடி 2 தேவதை... ஆனால் ஒண்ணும் உதவாது. பையன் ஆ இருந்தா 2 பேரயும் கல்யாணம் பண்ணிப்பேன்.. நம்ம விதி", நிலா.

"ஹேய் உனக்கு என்ன டி.. நீ எங்களை விட அழகு... என்ன சொன்னாலும் உன் அழகு நாங்கள் 2 பேரும் இல்லை. நல்லா புசுபுசுனு அமுல் பேபி மாதிரி", ரக்ஷி.

"ஹம்சி மாதிரி நீயும் என்னை கிண்டல் பன்ற ரக்ஷி", நிலா.

"உண்மை சொன்னால் அவள் ஒத்துக்க மாட்டாள் ரக்ஷி", ஹம்சி.

"ஹா ஹா... சரி...சீக்கிரம் வாங்க... ஆல்ரேடி டைம் ஆச்சு", ரக்ஷி.

"டேய் என்ன டா ஆச்சு... வா... போகலாம்", கவின்.

"ம்ம்ம்... வாங்க... போகலாம்", ராம்.

கவினுக்கு போனில் அழைப்பு வர அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றான்.

நிலா, ரக்ஷி, ஹம்சி என மூவர் உடன் ராம் வரக் கண்ட ஒரு பெண்மணி அவர்களை நோக்கி வந்தார்.

"என்ன ராம் கண்ணா... எவ்வளவு நாள் நான் உன்னை இங்கே வர சொல்லி இருக்கேன். இப்போதான் வர தோனுச்சா.. சரி... இதுல என் மருமகள் யாரு?... மூணு பேரும் தேவதை மாதிரி இருக்கிங்கமா", லதா.

"இல்லை லதாமா... இவங்க என் ப்ரன்ட்ஸ். கவின் வெளியில இருக்கான். அவன் ப்ரன்ட் வர சொல்லி இருந்தான்", ராம்.

"ஓ... சாரிப்பா. அவங்க வரட்டும் நீங்க வாங்க... வந்து நேம் ரிஜிஸ்டேர் பண்ணுங்க...", லதா.

"ஓகேமா. வாங்க காய்ஸ்", ராம்.

அனைவரும் இவர்களிடம் நட்பாக... புது இடம் என்ற நினைவே இல்லாது பழகினர்.

அனைவரையும் அறிமுகப் படுத்திய ராம் கவினுடன் வெளியில் சென்று விட...

பெண்கள் மியூசிக் சேர் விளையாட.. ஆண்கள் அதனை தொடர்ந்து பாட்டு பாடி மகிழ என்று இருந்தனர்.

இந்த மாதிரி பல நாள் வேலை என்று இருந்தாலும் மாதத்தில் ஒரு நாள் மகிழ்ச்சி தரும் வகையில் பார்ட்டி கொண்டாடுவர். பார்ட்டி என்றால் குடி கூத்து தான் என்று பலர் நினைக்க... அதற்கு முற்றிலும் மாற்றாய்...

பெண்கள் தனியாக விளையாட.. ஆண்கள் அவர்களினை ஊக்கப்படுத்த.. பின் ஆண்களுக்கு பெண்கள் ஊக்கப்படுத்த என்று.. வயதானவர்களுக்கு பாட்டு பாடி மகிழ்விக்க... நாட்டியம் ஆடி தனது திறமையை வெளிப்படுத்துதல்.. இப்படி பெரியவர்கள் அனைவரும் இந்த நாளில் அனைத்துவிதமான விவரங்களையும் பகிர்ந்து கொள்வர். எல்லாருக்கும் இங்கு அனுமதி இல்லை. அந்தப் பகுதி குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே.. இல்லை அவர்களின் நம்பத் தகுந்த நண்பர்கள்...

கலந்து கொள்பவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்வர்.

கவின் மற்றும் ராம் வந்து அவர்களுடன் கலந்து கொண்டனர்.

அனைவரும் சில விளையாட்டுக்களை முடித்து.. தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பின் சாப்பிடத் தயாராகினர்.

ஹம்சியும் நிலாவும் ரக்ஷியை ஒரு வழி ஆக்கிவிட்டிருந்தனர். அவளின் அருகில் இருந்த சேர் எடுக்க வந்த பவின் அவளைத் தற்செயலாக மோதிட மன்னிப்பு கேட்டு விட்டு அதன் பின் அவளைப் பார்த்த வண்ணமே இருந்தான். அதனால் தான் அவர்கள் அவளை கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க.. குழந்தைகள் சிலர் பாட்டு பாடி நடனம் ஆட... அதன் பின் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். புதிதாக கல்யாணம் ஆனத் தம்பதி, காதல் புரிபவர்கள் நண்பர்கள் என... மெல்லிய இசையில் நடனம் ஆடத் தொடங்கினர். முகத்தில் கண் மட்டும் தெரியும்படி மாஸ்க் போட்டுக் கொள்ள வேண்டும்.
30 நிமிட நடனம் தான் விரும்பும் நபருடன் நடனம் ஆடலாம். நண்பர்களும் நடனம் ஆடினர். இசை தொடங்கியது...

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்!!!

லதா ராம் உடன் நடனம் ஆட அழைக்க.. அவனும் ஆடத் தயாரானான். ஹம்சி நிலா இருவரும் ஜோடி ஆக ஆடத் தயாராக ரக்ஷி கவின் மட்டும் மீதம் இருந்தனர். பவின் ரக்ஷி உடன் ஆட கேட்க... அவள் அவனுடன் மறுத்து கவினை அழைத்துக் கொண்டு ஆடத் தயாரானாள். அதற்குள் லதா வந்து ரக்ஷி உடன் ஆட வர.. அவர்கள் ஜோடி மாறினர். 10 நிமிடம் இப்படியே அங்குள்ள அனைவரும் ஆடிக் கொண்டிருக்க..

ஜோடி மாற்ற மைக்கில் சொல்லவும் அனைவரும் மாறினர். ஹம்சி லதாவிடம் செல்லத் திரும்ப அவளை ஒரு கை வலுக்கட்டாயமாக திருப்பி அவள் இடையினைப் பற்றி ஆடத் தொடங்க..

ரக்ஷி உடன் ஆடிக் கொண்டிருந்த லதா பக்கத்தில் இருந்த பெண் உடன் ஆடத் தொடங்க.. தனித்துவிடப்பட்ட அவளின் கையைப் பற்ற வந்த கையினை பலவந்தமாக தட்டி விட்ட மற்றொரு கை அவளினை அணைத்தவாறு ஆடத் தொடங்க...

அனைவரும் அவர்களின் இணையை மாற்றி ஆடத் தொடங்க... ஜோடி இல்லாது நின்ற நிலா வெளியில் செல்ல தனது பாதம் எடுத்து வைக்க... அங்கு இன்னொரு நபருக்கும் இணை இல்லை. இணையை மாற்றி ஆடிக் கொண்டால் நிலாவிற்கு ஒருவர் வேண்டுமே... அந்த நபர் அவள் உடன் ஆட அவளின் புறம் சென்று கை கொடுக்க.. நிலாவும் இணை கிடைக்க... ஆடத் தயாரானாள்.

முகம் தெரியாத அந்த நபர் தனது இடையில் அழுத்திய கரங்களில் நிலா தவித்தாள். அவளுக்கு மற்ற ஆண்களுடன் இப்படி ஒரு சூழ்நிலை இதுவரை இல்லை. இப்பொழுது நடப்பது கூட அவளுக்கு கற்பனையாகவே இருக்க... அந்த நபரின் கண்கள் அவளின் இரண்டு விழிகளில் விழுந்த நொடியில் இருந்து சிறிதும் இமைக்காது அந்த நொடியினை தனது வாழ் நாளின் பொக்கிஷம் ஆக அந்த நபர் சேமித்துக் கொண்டு இருக்க...

(நிலா ஜோடி இவர் தான். மன்னிக்கவும் இதில் யாராக இருக்கலாம் என்பதை நீங்கள் கண்டு கொள்ளுங்கள்... இல்லையா🤷‍♀️... அப்போ கண்டிப்பா அதற்கு 2ம் பாகம் தான். ஏன்னா? இதில் ஹீரோ ஹீரோயின் கவின் & ஹம்சி🤗... இவர்களின் பயணம் பின் நிலாவின் பயணம் தொடரும்... வழியிலேயே இறங்கி விடாமல் பயணத்தினைத் தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன்... என்னடா.. இவள் கதைய முடிக்கப் போராளான்னு நினைக்க வேண்டாம். நிலா அடுத்த கதைல ஹீரோயின்னு சொல்லவறேன் அவ்ளோதான். இப்போ நிலா கூட ஆடுனவர் தான் ஹீரோ😉... ஆனால் அவர் யார்... அதுதான் உங்களின் கண்டுபிடிப்பு... நான் கண்டிப்பா அடுத்தக் கதையில் தான் சொல்லுவேன்😍...)

Hii drs...

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you...

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 10:

தன் கண் முன் நடப்பவை கனவா... நினைவா என யோசித்துக் கொண்டு இருந்தாள் ஹம்சி. ஆம். அவள் இரவில் நினைத்தது ஒன்று... நடப்பது ஒன்று... இங்கு வந்தாலும் கவின் முகத்தினைக் கூடப் பார்க்க கூடாது என்று தான் சபதம் ஏற்றாள். ஆனால் அதற்கு மாற்றாய் அவனுடன் இப்படி இணைந்து ஆடிக் கொண்டிருப்போம் என்று நினைக்கவில்லை. அதன் அதிர்ச்சியில் அவள் இருக்க... அவள் இதழ் சேரும் நிலையில் கவின் இதழ் அருகில் இருக்க... சேரும் நொடியில் கவின் போனில் அழைப்பு வர... பவர் கட் ஆனது😉

போனை அடன்ட் செய்தவன் உடனே அங்கிருந்து விரைந்தான்.

ஆடிக் கொண்டிருந்த அனைவரும் பவர் கட் ஆனதும் சலசலத்தனர்.

நிலாவின் அருகில் இருந்த அந்த நபர் நிலாவின் இடையினை இன்னும் அழுத்தி அவள் காதருகில் குனிந்து "ஐ லவ் யூ ஸ்பார்க். ஜஸ்ட் நொவ் ஐ ஆம் பால் இன் லவ் வித் யூ!", கூற

நிலா அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நேரம் அவன் இப்படிக் கூற அவனை அறையும் நோக்கில் அவளது வலது கையினை மேலேத் தூக்க... அவன் நொடியில் அறிந்து கொண்டான். இடக்கையில் அவள் கையினைப் பற்றி இடையில் இருந்த வலது கையினால் அவளின் கன்னத்தினைப் பற்றி அவனின் இதழைப் பதித்தவன் இமைக்கும் நேரத்திற்குள் மறைந்தான்.

நிலா பொறுமையின் எல்லையைக் கடந்தவள் யூ...ஆஆஆ... எனக் கத்தினாள்.

ஹம்சி நிலாவின் அலறலில் நினைவினை அடைந்தாள். சுற்றுப்புறம் உரைக்க... நிலாவினை தேடினாள். ஒளி இல்லாத நிலையில் சிலர் போனில் வெளிச்சம் காட்ட.. அவள் அருகில் ஓடினாள். எல்லாரும் அவர்களைச் சூழ்ந்து கொள்ள... நிலா நிதானம் அடைந்து இருட்டில் பயந்துவிட்டதாகக் கூறவும் அனைவரும் அவளை ராமிடம் பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவர்கள் இடத்திற்கு செல்லத் தொடங்கினர்.

ராம் மூவரையும் அழைத்துக் கொண்டு அவன் ரூமிற்குச் சென்றான்.. கவின் பற்றி ரக்ஷி கேட்க... கவின் அப்பொழுது தான் முக்கியமான விஷயம் என்று காரில் செல்லச் செல்ல போனில் அழைத்து விவரம் கூறினான். அவனும் இவர்களிடம் அப்படியே சொல்ல... அனைவரும் நிலாவிடம் என்ன எனக் கேட்க.. அவள் எதுவும் கூறவில்லை. பயம் என்று கூற..

"நான் உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்.. வாங்க", ராம்.

"இல்லை ராம்.. நாங்க போய்க்கிறோம்... வா ஹம்சி", நிலா.

"நீங்க கூட்டிட்டு போங்க ராம். அவள் சொல்றத கேட்காதீங்க. நான் ஹாஸ்டல் போறேன். பை", ரக்ஷி.

"பாத்து போ ரக்ஷி", ராம்.

"ம்ம்ம். பை ", ரக்ஷி.

ராம், ஹம்சி மற்றும் நிலா மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

"பத்திரமா இருங்க. ஹம்சி நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணலாம். நிலா தைரியமா இரு. பை", ராம.

"சரி ராம். கவின் என்ன பிரச்சினை சொன்னாரா?", ஹம்சி.

"இல்லை ஹம்சி. நாளைக்கு கேட்டுக்கலாம். நீங்க இப்போ தூங்குங்க..பை", ராம்.

"பை", ஹம்சி மற்றும் நிலா.

கவின் தனது காரினை செலுத்தியது ஒரு பெரிய மருத்துவமனை முன்பு. அவன் வீட்டில் யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் மருத்துவரை வீட்டிரற்கே அழைக்கும் பட்சத்தில் இந்த மருத்துவமனை வருமாறு அழைப்பில் சொல்ல.. ஏதோ விபரீதம் தான் என உணர்ந்தான்.

பார்ட்டியில் நடந்த அனைத்தையும் மறந்தவன் அப்படியே ஓடி காரினை விரைவாய் செலுத்தி வந்து சேர்ந்தான்.

உள்ளே நுழைய... உதய் வந்து அவனை ஐசியூ முன் அழைத்துச் செல்ல... அங்கே சுவாசக் குழாயின் உதவியில் ஒரு உயிர் போராடிக் கொண்டு இருந்தது.

என்ன ஆயிற்று என்று அவன் அங்கிருந்த அனைவரையும் பார்க்க.. அவர்களிடம் பதில் இல்லை. அனைவரின் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. இவனுக்கும் பொறுமை இல்லை. எதையும் நினைக்கும் மன நிலையில் இல்லை. வேகமாக அவனது கால்கள் தள்ளாடிய போதிலும் முன் இடத்தில் இருந்த ஒரு திட்டின் அருகில் சென்று தொப்பென்று விழுந்தான்.

கீழே குனிந்த வண்ணம் விழிகளில் நீர் அருவியாய் கொட்ட... பிள்ளையாரின் பாதத்தினைப் பற்றி மனமுருக வேண்டினான். "நான் திரும்ப மேலே சென்று பார்க்கும் பொழுது அந்த ஜீவன் உயிட் பெற்று வர வேண்டும். என் கன்னங்களினை கிள்ள... என் காதினைத் திருக... என்னை அரவணைக்க... எனக்குத் திருப்பிக் கொடு".

அவன் தோளில் ஒரு கரம் படிய... திரும்பிப் பார்த்தவன் தனது ஒட்டுமொத்த வலியையும் கொட்டி விடும் நோக்கில் ஒருவனைக் கட்டி அணைத்து கதறினான். ஆண்மகன் என்றால் கண்ணீர் வராது... கதற மாட்டார்கள் என்று யார் சொன்னது. இதோ... இங்கு இவன் கதறுகிறான். அவனை அந்த நிலையில் பார்த்த அவனும் கண்ணீர் சிந்துகிறான். இருவரும் சற்று நிதானித்து மேலே செல்ல...

மருத்துவர் ஐசியூ அறையை விட்டு வெளியில் வர.. வேகமாக அவரின் அருகில் சென்றவன் என்னவென்றுக் கேட்க.. "நத்திங் டு வொர்ரீ. இப்போ கண் முழிச்சிடுவாங்க... ரூம் மாத்தினதும் பாக்கலாம்"

"எஸ் டாக்டர்", கவின்.

நேசம் 11:

ஐசியூவிலிருந்து மாற்றப்பட்டு வேறு அறைக்கு சென்றதும் அனைவரும் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த நர்ஸ் சத்தம் போடாமல் பார்க்க சொல்ல..

வசு கண் முழித்தார். அவர் சுற்றிலும் அனைவரையும் வலம் வந்தவர் கவின் அருகில் நின்ற மதியைக் கண்டதும் கண் கலங்க... அருகில் அழைக்க...

"பாட்டீ....", அதுவரையிலும் கண் கலங்கி மட்டும் இருந்தவன் பெறும் கேவலுடன் வசுவின் கைகளைப் பற்றி கைகள் நடுங்க குலுங்கி ஆழத் தொடங்கினான். தந்தை தாய் இறப்பிற்கு கூட இப்படி அழுததில்லை. அவனின் வாழ்நாட்கள் முழுவதும் வசுவுடன் கழிய... தந்தை தாயாக அவரின் விழிகளில், அரவணைப்பில் கண்டவன் துடித்தான்.

வசு திரும்பி கவினை விழிகளில் அழைக்க அவனும் மதியின் கரத்தின் மீது தன் கரத்தினைப் பதித்து வசுவின் தலையினைக் கோதினான்.

வசுவின் முகத்தில் சிறியப் புன்னகை. அனைவரும் அதில் தைரியம் அடைந்தனர். உதய் அவர்கள் இருவரிடமும் சென்று அணைத்துக் கொள்ள... வசு உதயிடம் கரத்தினைக் காட்ட.. உதயும் அவர்கள் கரத்தினைப் பற்றிக் கொண்டான். குடும்பம் மொத்தமும் அவர்கள் அன்பினைக் கண்டு என்றும் போல் நிம்மதியுடன் வெளியில் சென்றனர்.

கவின் மற்றும் மதி மட்டும் உள்ளே இருக்க... பாட்டி தனது சுவாசக் குழலை எடுக்க சொன்னார். கவின் மறுக்க... தனது கரத்தினைத் தூக்கி கவின் காதினைத் திருக முயற்ச்சிக்க.. கவின் குனிந்து காதினைக் கொடுத்தான். அவரும் புன்னகையுடன் வலிக்காதவாறு திருக... மதி சுவாசக் குழலை இறக்கினான்.

"டேய்... நான் உன் காதைத் திருகவாவது உயிரோட வருவேன் டா. அதுக்குள்ள போய்ட மாட்டேன்", வசு கவினிடம் சிரித்தபடி கூறினார்.

"பாட்டி. இப்படி பேசாதீங்க. ப்ளீஸ்", மதி.

"டேய் என்ன மரியாதைலாம் வருது... என்ன வேண்டும். காரியம் ஆகனும்னா தான் பாட்டி சொல்வ...", வசு.

"பியூட்டி. உனக்கு கொஞ்சமாவது தைரியம் இருக்கிறதா... எங்க கிட்ட மட்டும் உன் தைரியம் காட்டு. உன் குட்டி இதயம் அதுகிட்ட உன்னால பைட் பண்ண முடியல. இனி அத தைரியமா பைட் பன்னுனாதான் நீ என் பியூட்டி", ம்தி உள்ளே வலித்தாலும் வெளியில் புன்னகையுடன் வசுவினை கிண்டல் செய்ய...

"அரசு நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லனும். உன் முடிவு தான் முக்கியம். எனக்காக நீ சரினு சொல்லக் கூடாது. என்னப்பா..", வசு.

"நீங்க என்ன சொல்றீங்களோ அதை தான் நான் செய்வேன் பியூட்டி. என்னனு சொல்லு", மதி.

"நான் கேட்டதுக்கு நீ யாரையும் காதலிக்கல சொல்லிட்ட... சரி உனக்கு நான் பார்க்கலாம் நினைக்க... உன் மாமன் அவன் பொண்ண கட்டிக்க சொல்லி என் கால்ல விழுந்துட்டான் டா. நான் நீ சொல்லாம எப்படி சம்மதம் சொல்லனு யோசிக்க.. உன் அப்பன் அவன்கிட்ட வாக்குக் கொடுத்திருக்கான். என் பையனுக்கு தான் உன் பொண்ணு சொல்லி. அதுக்கு அப்புறம் நான் எதையும் யோசிக்காம சரினு சொல்லிட்டேன். ஆனால்", வசு தொடர...

"பாட்டி. நான் அப்போ சொன்னத தான் இப்பவும் சொல்றேன். நீங்க யார சொல்றீங்களோ அவங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. இதை நினைச்சு நீங்க வருத்தப் படாதீங்க... இப்ப நிம்மதியா ரெஸ்ட் எடுங்க...", மதி.

"உனக்கு சம்மதமா.. அதுதான் முக்கியம். ஆனால் அதில் ஒரு...", வசு திரும்ப ஏதோ சொல்ல வர..

"நான் சொல்றத கேளு பியூட்டி. நீ எதையும் யோசிக்காத. எனக்கு உன் வார்த்தை தான் முக்கியம். உன் வார்த்தையை நான் காப்பாற்றுவேன்", மதி.

"இல்ல...", வசு.

"போதும். ரெஸ்ட் எடு வசு. வாடா மதி நாம வெளியில் போகலாம்", கவின்.

அடுத்த 2 நாட்கள் கவின் விடுப்பு எடுக்க... மதிக்கு 1 வாரம் விடுப்பில் தான் வந்திருந்தான். 2 நாட்கள் மருத்துவமனையில் கழிய... வசு நன்றாகத் தேறிவிட்டார்.

வசு சரியானதும் தேவன் வீட்டிற்கு வந்து சம்மதம் பேசவும்... அனைவரும் பாட்டியிடம் சம்மதம் கேட்க வேண்டும் என.. பாட்டி மதியைப் பார்த்துக் கொண்டே எனக்கும் சம்மதம் எனக் கூறினார்.

தேவன், வசுவின் தங்கை பார்வதியின் மகளின் கணவர். தேவன் வாசுகி இருவருக்கும் பிறந்தவள் தான் நிஷா. நிஷாவைத் தான் மதிக்கு கல்யாணம் செய்து தர தேவன் கேட்டார். நிஷாவும் அவருக்குப் பேத்தி தான். மதியும் யாரையும் விரும்பவில்லை எனவும் நிஷாவிற்கு சரி என சம்மதம் கூறினார்.

மதியிடம் சம்மதம் கேட்க... அவன் பாட்டியின் விருப்பம் தான் என் விருப்பம். அவர் யாரை சொல்கிறாரோ.. அவரைத் தான் திருமணம் செய்வேன் என்று கூற... அனைவரும் மகிழ்ந்தனர்.

"அப்போ கல்யாணத்துக்கு நாள் குறிக்கலாம்ல", தேவன்.

"இல்லை. எனக்கு 3 வருடம் டைம் வேண்டும். நான் இன்னும் என் படிப்ப முடிக்கல. அதுவும் இல்லாம ஒரு வேலைக்கு போய் தான் திருமணம் பற்றி பேசனும்", மதி.

"அதான் நீ ஏற்கனவே... அது வந்து... நீ படிச்சிட்டு தானப்பா இருக்க... கல்யாணம் பன்னிட்டு படி. அதுலாம் பிரச்சினை இல்லை", தேவன்.

"என் பேரன் சொல்றது தான் முடிவு. அவனுக்கு எதிரா நான் எதுவும் செய்ய மாட்டேன். நிஷாவும் படிப்பு முடிக்க 3 வருஷம் ஆகும். அதனால் அப்புறம் பேசிக்கலாம்", வசு.

"எனக்கும் அது தான் சரினு படுது... நீ என்ன சொல்ற வேணி", சந்திரன்.

"அத்தை சொல்றது தாங்க எனக்கும் சரி", வேணி.

"சரி. கல்யாணம் இப்போ வேண்டாம். நிச்சயம் மட்டும் பண்ணிக்கலாம். அதுக்கு சம்மதம் தெரிவிப்பீங்கனு நம்புறேன்", தேவன்.

"அம்மா உங்க விருப்பம் தெரிவித்து", சந்திரன்.

"ம்ம்ம். நல்ல நாள் பார்க்கலாம். 1 வாரம் இருக்குல..", வசு.

"ரொம்ப சந்தோசம். நானும் நிஷாவ ஊருக்கு வர சொல்றேன்", தேவன்.

"சரி. உதய் கண்ணா... இந்த வாரத்தில் நடக்குற மாதிரி ஜோசியர் கிட்ட நாள் பார்க்க சொல்லனும். நாளைக்கு நாம் போகலாம்", வசு.

"சரிங்க பாட்டி", உதய்.


Hii drs...

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you...

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி😊

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராம் சென்றதும் ஹம்சி நிலாவிடம் என்ன என்று கேட்க... அவள் ஹம்சியை அணைத்துக் கொள்ள.. ஹம்சியின் முதுகில் ஈரம் உணர்ந்தவள் அவளைத் தேற்றினாள்.

என்ன எனக் கேட்க.. நிலா நடந்த அனைத்தையும் கூறினாள். அவள் கூறக் கேட்ட ஹம்சி அவனைக் கண்டறிந்து ஒரு வழி செய்ய வேண்டும் எனக் கூற...

நிலா ஹம்சியினைத் தடுத்துவிட்டாள். அவனை இனிப் பார்த்தால் எதுவும் முடிவு செய்வோம் எனக் கூறிட ஹம்சியும் சரி எனக் கூறிவிட்டாள்.(யாருனு இப்போவே பார்த்திருக்கலாம். விதி யாரை விட்டது???😉😉😉)

கல்லூரியில் சந்தித்த மூவரும் கவின் பற்றி ராமிடம் கேட்க, கவின் 2 நாட்கள் அவன் நண்பனுடன் வெளியூர் செல்வதால் விடுப்பு எடுத்துள்ளான் எனக் கூறினான்.

எதையும் கூறி நண்பர்களை வருத்தப் படுத்த வேண்டாம் என்று அப்படிக் கூறினான்.

ஹம்சி அந்த வகையில் 2 நாட்கள் யோசிக்க நேரம் கிடைக்க மகிழ்ச்சி தான் கொண்டாள். காரணம்!! அவள் கவின் உடன் நடனம் ஆடியதே நினைவில் உள்ளதால் எங்கே நாம் அவனை விரும்பிவிடுவோமோ என அச்சம் கொண்டாள். ஆனால் அவளுக்குத் தெரியவில்லை அவள் கவின் உடன் நடனம் ஆடக் காரணமே காதல் தான் என்று???(யார் அவளுக்குப் புரிய வைக்க!!!😅)

கவின் நாளைக் கல்லூரி வந்துவிடுவான். அவன் வரும்பொழுது நான் நார்மல் ஆக இருக்க்கனும் என்று நினைத்த ஹம்சி வெகுநேரம் கழித்து தூங்க ஆரம்பிக்க...நடுஇரவில் நிலா அதிர்ந்து விழிக்க அவளின் சப்தத்தில் ஹம்சி மிரண்டு விட்டாள். என்னவெனக் கேட்க... அவன் தான் கனவில் என்று கூறி விழிமூடிவிட... ஹம்சி அவளைத் திட்டிவிட்டு படுத்துவிட்டாள்.

"நான் ஹோம்ல இருக்கேன். ஈவ்னிங் அங்க வந்திடு டா", மதி.

"சரிடா. நான் 6 ஓ க்ளாக் வந்துடுறேன். பை", என்ற கவின் கல்லூரிக்குச் சென்றான்.

மதி ஹோமிற்குச் சென்றான். சிறிய வீடு. முன் பக்கம் அழகான கோலம் போட்டு அதன் நடுவே கம்பீரமாக பிள்ளையார் நிற்கிறார். இருபுறமும் பலவண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்க மேலே ஜாதிக்கொடி படர்ந்து மணம் பரப்பியது. அவன் உள்ளே நுழையக் கண்ட ஒரு குழந்தை அவன் கால்களைக் கட்டிக் கொண்டது. அவன் திரும்பாமலே யார் என அறிந்து கொண்டான்.

"என் டார்லிங் என்னை எப்பவும் பார்க்க வேண்டும் என்பதற்காக நான் ஒரு குட்டி கிப்ட் கொண்டு வந்திருக்கேன். அது என்னனு கண்டு பிடி", திரும்பி அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டே கேட்க

அக்குழந்தை என்ன என்று சைகையில் கேட்க..

"எல்லார்கிட்டயும் தான் காட்டுவேன். வா நம்ம உள்ளே போய் பார்க்கலாம்", மதி.

திடிரென அக்குழந்தை முகத்தை சுளித்து அழகு காட்டி அவனிடமிருந்து இறங்கி செடிகளின் புறம் ஒதுங்கி நின்று கொண்டது.

"டார்லிங். என்ன பன்ற... நான் வந்ததுல உனக்கு விருப்பம் இல்லையா.. என்னை விட்டுத் தள்ளிப் போற",மதி.

இல்லை எனத் தலையினை ஆட்ட...

"ஓ சாரி டார்லிங்... பர்கிவ் மீ", என்றவன் அக்குழந்தையின் அருகில் மண்டி இட்டு கன்னத்தில் இதழ் பதித்து அணைத்துக் கொண்டான்...

என்றும் அக்குழந்தையின் கன்னத்தில் இதழ் பதிக்கும் மதி அன்று மறந்துவிட கோவம் கொண்ட அப்பிஞ்சு அவன் இதழ் பதித்த ஆனந்தத்தில் அவன் இரண்டு கன்னங்களிலும் தன் செவ்விதழ்களைப் பதித்தது.

இருவரும் உள்ளே சென்று அனைவரையும் கண்டு மகிழ்ந்தவன் தனது கிப்டை பிரித்தான்.

அந்த கிப்ட்...?

மதி, கவின் மற்றும் உதய் மூவரும் ஹோமில் கடந்த வருடம் விழா கொண்டாடிய நேரம் அவர்களுக்கு நடுவில் ஒரு குட்டி அணில் அவ்வழியில் தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ள... அதனைக் கண்ட லில்லி துள்ளி ஓட மதி அதனை பட்டும் படாமலும் தூக்கி அவள் கையில் வைக்க அவள் சிலிர்த்தாள்.(லில்லி தான் அந்த குழந்தை😊) அதுவும் பயந்து ஓடப் பார்க்க.. அதனால் ஏற்பட்ட கூச்சம் அவளை உலுக்க.. தொப்பென்று அணிலினைக் கீழே போட... அங்கிருந்தக் குழந்தைகள் அனைவரும் அச்சோ! என சத்தமிட... என்ன ஆனதோ என பயந்த லில்லி அதனை ஆவலுடன் கைகளில் ஏந்தி எதுவும் ஆகவில்லை எனவும் மெதுவாக அதன் மேல் தடவினாள். அணில் என்ன நினைத்ததோ அவள் கைகளில் சுருண்டு கொண்டது. அதன் அருகில் ஆவலுடன் மதி, கவின் மற்றும் குழந்தைகள் என பார்த்துக் கொண்டிருக்க.. உதய் தன் மனப்பெட்டகத்தில் சேமித்தான்.

அதனை ஓவியமாக தீட்டி மதியிடம் தர, அதைத்தான் மதி இன்று கொண்டு வந்திருந்தான்.

அந்த ஓவியத்தினை அவன் பிரிக்க... அதனைப் பார்த்த குழந்தைகள் வாவ் என வியக்க... தயாளன் அந்த ஓவியத்தினை முன் புறம் மாட்ட அனுமதிக்க அது முன்புறம் மாட்டப்பட்டது. தயாளனுடன் சில மணி நேரம் பேசி விட்டு குழந்தைகளுடன் சேர்ந்து வகுப்பினை கவனிக்கச் சென்றான்.

தயாளன் லிட்டில் ஹோமினை நிர்வாகம் செய்கின்றார். கிட்டத்தட்ட 20 குழந்தைகள் உள்ளனர். அனைவரும் தெய்வத்தின் பிறப்பு என்று கூற வேண்டும். 5 பேருக்கு கண் தெரியாது. 2 பேருக்கு நடக்க முடியாது. சிலருக்கு பேச முடியாது. காது கேளாது. லில்லிக்கு பேச முடியாது. குழந்தையான அவளின் குழந்தையாக அணில் மாறியது. அவளின் உயிர் தோழன் சக்தி உடன் சேர்ந்து டாபி எனப் பெயர் வைத்து அதனைக் குழந்தையாக இன்று வரைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றாள். சக்தி தயாளனின் மகன். அவனுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இருப்பினும் இங்குள்ள குழந்தைகளுடனே இருப்பான். அதிலும் லில்லி தான் அவன் வாழ்நாளில் அதிகம் இருக்கும் நபர்.

ஹோமிற்கே வந்து பாடம் நடத்திச் செல்ல 2 ஆசிரியர்கள் இருந்தனர்.

கவின், உதய் மற்றும் மதி மூவருக்கும் பிடித்தமான ஒரு இடம் எதுவெனக் கேட்டாள் இதைத்தான் கூறுவார்கள்.

கல்லூரி வாசலில் விஜய் நிலாவினைப் பார்த்த வண்ணம் இருக்க... நிலா ஒரு நொடி யோசனை செய்ய... அவனின் அருகில் சென்றாள். விஜய் அவள் அருகில் வந்தும் தடுமாறாமல் நிற்க... அவள் அவன் விழிகளை ஊடுருவினாள். அய்யோ நமக்கு அந்தக் கண் நினைவில் இல்லையே... என்ன பண்ண... இப்படி வந்து இவனைப் பார்க்கிறோம்🙄... இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது🤔 ... சரி எதையாவது சொல்லுவோம்😉...

"அது... அது வந்து உங்க கண்ணில் தூசி", நிலா.

"என்ன", மெல்லிதாகப் புன்னகைத்த வண்ணம் விஜய் கேட்க

அய்யோ... அசிங்கப் படவே வந்து சேர்ந்திருக்கேன்.."இல்லை. உங்க கண் ரெட் ஆ இருக்கு.. அதான் கேட்டேன்", நிலா.

"ஓ அப்படியா... அதுல உனக்கு என்ன பிரச்சினை", யோசனையாக விஜய்.

சிக்கிட்டோம்... இனி என்ன செய்ய..."எனக்கு மட்டும் இல்லை. இந்த காலேஜ்க்கே பிரச்சினை. இப்படி மெட்ராஸ் ஐ வந்து இருக்க உங்களைப் பார்த்து இங்க இருக்க எல்லாருக்கும் வந்திடும்ல. அதான் கேட்டேன். பொதுநலம் பாஸ்", நிலா.

"ஓஹோ. அப்படி எதுவும் இல்லை. உன்னை நினைச்சு நைட் முழுவதும் தூங்கல.. அதான் கண் ரெட் ஆ இருக்கு", விஜய் சிரித்த வண்ணம் கூற

"யூ இடியட்", எனக் கூறியவள் விறுவிறுவென நடக்கத் தொடங்க.. அப்பொழுதுதான் அவளுக்கு ஹம்சியின் நினைவு வந்தது. வேகமாகத் திரும்பிப் பார்க்க..

ஹம்சி தீவிரமான முகத்துடன் நிலாவைத்தான் ஆராய்ச்சி செய்யும் வண்ணம் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இன்னைக்கு யார் முகத்துல முழிச்சோம்🙄?... நம்ம முகத்தக் கண்ணாடில பார்த்துட்டோமோ🤔?...இருக்கும். இப்படி சிக்குறோமே.. கைப்புள்ள ச்சீ நிலாப்புள்ள .. இனி இவளை சமாளிச்சிடு டி...😏

Hii drs..

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you..

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி😊

 
Status
Not open for further replies.
Top