All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவிராமின் 'மறப்பதில்லை நெஞ்சே! நெஞ்சே!' - கதை திரி

Status
Not open for further replies.

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 23


அடுத்த நாள் காலை...

"கவின் உனக்கு வர சண்டே ஒரு வொர்க் இல்லைதான", வேணி.

"இல்லைமா. ஏன் கேக்குறீங்க", கவின்.

"உனக்குப் பொண்ணு பார்க்கப் போறோம்... அதான்", மதி கூறி சிரிக்க..

"மதி", உதய் அவனை அதட்ட..

"என்ன சொல்றீங்க... உதய்க்கு தான நிச்சயம்... எனக்கு என்ன", கவின்.

"மதி சும்மா சொல்றான்டா.. எனக்கு தான் நிச்சயம்.. அதான் அம்மா கேட்டாங்க.. அன்னைக்கு முழுவதும் நீ வீட்டில் தான் இருக்கனும் ", உதய்.

"நான் வராமல் இருப்பேனா.. ஆனால் நான் முழுவதும் அங்கே இருந்து என்ன செய்யப் போறேன்.. எனக்கு வேலை இருக்கு.. கொஞ்சம் நேரத்துல வந்துடுவேன்", என்றவன் அந்த இடத்தில்கொஞ்ச நேரம் இருப்பதே கடினம் என்று உணர்ந்தான். இதில் எப்படி வாழ் நாள் முழ்வதும் ஒரே வீட்டில் என்று நினைக்கும் பொழுதே முகம் சிவந்தது...

"நீ இருந்து தான் ஆக வேண்டும்... அதை அன்று பார்க்கலாம்.. இப்பொழுது சாப்பிடு",மதி.

ஹம்சிக்கு அன்று காலை எழவே முடியவில்லை. நிலா விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொல்லிக் கூற... அவளும் சரி என்று கூறி விட்டாள்.

நிலா மட்டும் ஆபிஸ் வரக் கண்ட மதி என்னவெனக் கேட்க... உடல்நிலை சரியில்லை எனக் கூற... அவனும் சென்றுவிட்டான்.

கவினுக்கு ஹம்சி வராததால் 1மணி நேரம் அமைதியாக இருந்தவன் அதன் பின் தாங்காமல் ஹம்சி எங்கே என்று ராஜுவிடம் கேட்க..

"அவளுக்கு உடலுக்கு முடியலைனு நிலா சொன்னானு மதி சொன்னான்டா..", ராஜு.

"ஓ... அதை இன்பார்ம் பண்ண மாட்டாங்களா மேடம். சரி. மதி கேண்டின் வரியா...", கவின்.

"இதோ.. இந்த பைல் சேவ் பன்னிட்டு வரென் டா. நீ போ.. நான் வரென்..", மதி.

"ம்ம்ம்.. சீக்கிரம் வாடா", கவின்.

"டீ சொல்லிருக்கேன் டா", கவின்.

"சரி.. என்ன பிரச்சினை சொல்லு... ", மதி.

"அது... அதுவந்து.. எனக்கு", கவின்.

கவின் கூற வரவும் மதியின் மொபைலில் அலறல் சத்தம். மதி ஒரு நிமிடம் என்றவன் அட்டண்டு செய்தவன் மறுபுறம் சொன்னதும் உடனே... ஹம்சிக்கு ரொம்ப உடலுக்கு முடியல போல டா.. நிலாக்கு இன்பார்ம் பண்ண சொல்றா.. நான் போய் சொல்லிட்டு வரென்..

"என்ன.. ஹம்சிக்கு என்ன ஆச்சு... வேண்டாம் நான் போய் பார்க்குறேன்... நீ ஆபிஸ் ல இரு ",என்று கூறிய கவின் வேகமாக பைக் எடுத்துச் சென்று விட்டான். கவின் போவதினையே பார்த்துக் கொண்டு இருந்த மதிக்கு கவினின் செயலில் சிறிது யோசனை. ஆனால் அதன் பின் வேலையினைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

விரைவில் வீட்டினை அடைந்த கவின் வெளியில் கதவைத் தட்ட.. கதவுத் தானாக திறந்தது.. உள்ளே செல்ல.. ஹம்சி கையில் மொபைலுடன் குறுகிப் படுத்துக் கொண்டு இருந்தாள். அவளின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க ஜுரம் வந்திருக்க... அவளை எழுப்ப முயற்சிக்க.. அவள் முனங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் உடையினைச் சரி செய்தவன் அவளினை எழுப்ப முயற்சிக்க... அவள் முனங்கியவாரே இருக்க... கவின் குடும்ப மருத்துவருக்கு அழைத்து வர சொல்லியவன்... அவளை சுத்தம் செய்து காத்திருந்தான். டாக்டர் ஊசி போட்டவர் மாத்திரையும் கொடுக்கச் சரி ஆகிவிடும் என்றார். அவரும் சென்றுவிட.. கவின் ஹம்சிக்கு மாத்திரையினைக் கொடுத்து உறங்க வைத்தான்.

ஹம்சி துயில் கொண்டு இருக்க... கவின் அவள் முகத்தினையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு ஹம்சி தான் உயிர் என்றிருக்க.. வேறு ஒருவளை எப்படி மணமுடிக்க முடியும்... அது சாத்தியமே இல்லை. வீட்டில் திரும்பப் பேசும்பொழுது வேண்டாம் எனக் கூறிவிட வேண்டும் என நினைத்தவன்... அவளின் மேஜை அருகில் இருந்த கடித முகப்பினைப் பார்த்தான். அதன் மேல் போட்டோ என்று இருக்க...

அதனைக் கையில் எடுத்துப் பார்த்தான். உள்ளே இரண்டு போட்டோ இருக்க... அதில் ஒன்றைக் கையில் எடுத்தவன் அதில் இருந்த உருவத்தினைப் பார்த்து விரக்தியாய் சிரித்தான். அதன் பின்னர் உதய் வெட்ஸ் ஹம்சி என்றிருக்க கோவத்தில் தூக்கி எறியப் போக.. நிலா ஹம்சி என்றவாறு உள்ளே நுழைந்தாள்.

"ப்ரோ ஹம்சி இப்போ எபப்டி இருக்கா....",நிலா.

"ஒன்னும் இல்லை. டாக்டர் ஒன்னும் இல்லை சொல்லிட்டாங்க.. ",கவின்.

கவினின் கையில் இருந்த போட்டோவினைப் பார்த்தவள் .. "ஓ.. கல்யாண மாப்பிள்ளை போட்டோ வந்திடுச்சா... ", நிலா.

"சரி நான் வரென் நிலா. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு", கவின்.

"சரிங்க அண்ணா... பை", நிலா.






தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 24

இரவு நேரம் வீட்டினை அடைந்த கவின் மிகுந்த மன அழுத்தத்தில் தான் இருந்தான். திருமண விசயத்தில் அவசரப் பட்டுவிட்டோம் என நினைத்தவன் மதியிடம் சொல்லி ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு மதியினைக் காணச் சென்றான். மதி, அறையில் அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்தவன்..

"ஹேய் ஹம்சி எப்படி இருக்கா டா. நிலாக்கு கால் பண்ணேன். ஃபீவர்னு சொன்னா. ஓகே தான", மதி.

"ம்ம்ம்... ஓகே தான்டா.. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.. ", கவின்.

"என்னடா எதுவும் சீரியஷ்னா மாடிக்குப் போகலாமா", மதி.

"பரவால்லா.. இங்கே யாரும் இப்போதைக்கு வரமாட்டாங்க... ", கவின்.

சரி எனக் கூறி இருவரும் கட்டிலில் அமர்ந்தனர்.

"எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைடா. ஏன் எதுக்குன்னு கேட்காத... அதுக்குக் காரணம் எனக்கேத் தெரில. ஆனால் இந்தக் கல்யாணம் நடந்தா நான் பைத்தியம் ஆனாலும் ஆச்சர்யப் பட இல்லை. நான் சொல்ல வரது உனக்குப் புரியுதா டா", கவின்.

"அப்போ ஏன் சரின்னு சொன்ன... நீ வேண்டாம் சொன்னால் பியூட்டி சரின்னு தான் சொல்லிருக்கும். அப்போ சரின்னு சொல்லிட்டு இப்போ வேண்டாம்னு எப்படி சொல்ல முடியும். அதுவும் சண்டே பொண்ணு வீட்டுக்கு வரோம் சொல்லியாச்சு", மதி பாவமாகக் கவினைப் பார்க்க

"இப்போ தானடா கேட்டிங்க.. அதுக்குள்ள பொண்ணு வீட்டிலேயே சம்மதம் வாங்கியாச்சா...", கவின் அதிர்ந்து கேட்க..

"சம்மதம் மட்டும் இல்லை. உனக்கு நிச்சயமும் அன்னைக்கு தான். கல்யாணம் மட்டும் உனக்கும் எனக்கும் ஒன்னா வைக்கலாம் அப்படின்னு ப்ளேன்", மதி கூற..

"ஷிட்.... ஏன் இப்படி எங்கிட்ட சொல்லாம", என்றக் கவின் எழுந்து ஜன்னல் ஓரமாய் நின்று கொண்டான்.

அவன் முகம் வேதனையினை அப்பட்டமாகப் பிரதிபலிக்க... "நான் பார்த்துக்குறேன்டா.. நீ பீல் பண்ணாத... இப்போ வரலன்னு சொன்னா தப்பாகிடும். நம்ம அங்கே போய்ட்டு வந்து பார்த்துக்கலாம். அந்தப் பொண்ணுகிட்ட பேசிக்கலாம். நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத", மதி கவினின் பின்னால் வந்து அவன் தோளினை பற்றிக் கொண்டுக் கூற... கவின் திரும்பி அவனை அணைத்துக் கொண்டான்.

இரவில் ஹம்சி வீட்டிலிருந்து அழைக்க... ஹம்சி தூங்கி விட்டாள் என்று கூறிய நிலா ஹம்சி பற்றிய யோசனையில் இருந்தாள். அவளுக்கு ஏதோ குழப்பமாகவே இருந்தது. ஹம்சி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாலும் அவள் முகத்தில் திருமணக் கலை இல்லை. அதுவும் திருமண செய்தி வந்ததில் இருந்து மிகவும் சோகமாகவே இருப்பதனைக் கண்ட நிலா என்னவாக இருக்கும் என யோசிக்கத் தொடங்கினாள். இவளின் முகம் எப்போழுது இருந்து இப்படி தொங்கியவாறு இருக்கின்றது என்று யோசிக்கத் தொடங்கியவளுக்கு பல மணி நேரம் கழித்தே பதில் கிடைத்தது. பதில் கிடைத்த அடுத்த நொடியே குழப்பம் வந்து ஒட்டிக் கொண்டது. அந்தக் குழப்பத்திற்கு தீர்வினைத் தனியாகத் தேட முடியாது என்றவள் மதிக்கு அழைக்கலாமா என நினைக்க அதன் பின் வேண்டாம் என நினைத்தவள்.. இதுக்கு சரியான ஆள் நம்ம ராஜு தான் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

ரொம்ப நேரம் கழித்து மணியினைப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள். மணி 12 எனக் காட்டியது. "அடச் சீ... இவ்வளவு நேரம் தூங்காம டைம் வேஸ்ட் பன்னிட்டனே... என்னடா நமக்கு வந்து சோதனை.. நிலா சீக்கிரம் தூங்குடி....", அடுத்த நொடியே உறங்கி விட்டாள்.

காலை ஹம்சி எழுப்பக் கண் திறந்தாள் நிலா...

"எவ்வளவு நேரம் கத்துறேன்... இப்படி கும்பகர்ணிமாதிரி தூங்கிட்டு இருக்க.. எழுந்து ரெடி ஆகுடி... இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு", என்ற ஹம்சி தனது புடவையினை சரி செய்து கொண்டு இருந்தாள்.

"இன்னும் ஃபைவ் மினிட்ஸ்டி. நைட் ரொம்ப லேட் ஆ தான் தூங்குன", நிலா தலையணையினை இழுத்து இரு கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு விட்டத் தூக்கத்தினைத் தொடங்கினாள்.

"சீக்கிரம் டி", ஹம்சி கூறிவிட்டு நிலாவிற்கும் தனக்கும் தேவையானவற்றை எடுத்து வைத்து நிலா குளிக்கத் தேவையானவற்றையும் டேபிலில் வைத்தவள் வீட்டிற்கு அழைத்துப் பேசத் தொடங்கி விட்டாள். பத்து நிமிடம் கழித்து எழுந்தவள் இருபது நிமிடத்தில் கிளம்பித் தயாராகி ஹம்சி முன் வந்து நிற்க இருவரும் ஸ்கூட்டியில் ஆபிஸ்க்கு வந்து சேர்ந்தனர்.

ஆபிஸ் வந்த நிலா ஹம்சியிடம் மேலே செல்லச் சொல்லிவிட்டு முதல் வேலையாக கார் பார்க்கிங்கில் அவனது பைக் நிறுத்திக் கொண்டு இருக்கும் ராஜுவிடம் சென்றாள்.

"இவள் என்ன இங்கே வரா.... சரி நமக்கு என்ன.. நாம போவோம்", என்றவன் நிலாவின் முகம் பார்க்காமல் செல்லும் முன் அவன் முன் வந்து நின்றவள் அவன் முகத்தினை பாவமாக பார்த்தாள்.

"இவள் இப்படி முகம் வச்சு பார்த்தது இல்லியே... என்னவா இருக்கும்", மைண்டு வாய்சில் ராஜு நினைக்க..

"ராஜு.. உங்கிட்டக் கொஞ்சம் பேசனும்", நிலா இழுத்துக் கொண்டே கூற... "

பார்ரா... இவள் நம்ம பேர முதல் முறை சொல்றா"

"இப்போவே பேசிட்டு தான இருக்க.. என்ன", ராஜு தன்னை மறந்து வாய் விட.. அய்யோ இவள் சும்மாவே நம்மள வச்சு செய்வா.. இதுல நான் கவுன்டர் குடுத்ததுக்கு என்ன பன்ன போறாலோ என அவன் பயந்து நிலாவினைப் பார்க்க..

நிலா அதே பாவமான முகத்தினை மாற்றாமல் "இப்போ இல்லை ராஜு.. இன்னைக்கு ஈவ்னிங்க உங்கிட்டப் பேசனும்... முக்கியமான விசயம் ", நிலா.

ராஜு வியப்பாக நோக்கினான்... என்ன இவள் ரியாக்சனே சரியில்லையே... சரி... சரின்னு தான் சொல்லுவோம் என்ன பன்னப் போறால்னு பார்ப்போம்.. "சரி. எங்கே சொல்லு நான் வேறேன்", ராஜு.

"எங்கேயும் நீ வர வேண்டாம்.. நான் உன் பிளாக்குக்கு வரேன். அங்கே தான் பேசனும்", நிலா...

"எதுக்கு.. சரி வா... வந்து பேசு", ராஜு.

நிலாவின் முகம் உடனே தௌசன் வால்ட் பல்பு போல் பிரகாசமாக... ராஜுவின் முகம் யோசனையில் சுருங்கியது...

"ஸரி.. ஆபிஸ் முடிஞ்சு நான் வரேன். யாரும் இல்லாதப்போ.. நீ மட்டும் இரு.. பேசலாம். இப்போ பை", என்றுக் கூறியவள் விரைவாக ஓடி விட்டாள்.

இவள் எதுக்கு இப்படி ரியாக்ட் பன்றா.. சரியில்லையே... தனியா எதுக்கு பேசனும்... என்று நினைத்துக் கொண்ட ராஜு அவனது பிளாக்கிற்கு சென்றான்.

ஹம்சி கவினுக்கு முன் வந்து அவளது வேலையில் கவனமாக இருந்தவள் தவறியும் அவன் முகம் பார்க்கவில்லை. அவளுக்கு நேற்று நடந்த எதுவும் தெரியாது. நிலாவும் எதுவும் கூறவில்லை. கவினுக்குத் தான் ஹம்சி உடல் நிலை பற்றிக் கவலை இருந்தும் அவனாக அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

ராஜுவிடம் சென்ற கவின் "ஏன்டா.. எத்தனை பைல் முடிச்சு இருக்க.. இப்படி விட்டத்தைப் பார்த்துட்டு இருக்க".

"இல்லைடா யோசனையில் இருந்தேன்... இன்னும் ஒன்னு கூட முடிக்கல", ராஜு விட்டத்தினைப் பார்த்துக் கொண்டே கூற..

மதி அவன் பக்கம் திரும்பியவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க...

மதியின் சிரிப்பினில் திரும்பிப் பார்த்த ராஜு எதுக்கு இவன் சிரிக்குறான் என நினைத்து மதியின் விழி செலுத்திய இடம் ராஜு பார்க்க... கவின் தன்னை சிவந்த முகத்துடன் முறைத்துக் கொண்டு இருப்பது புரிய... "அய்யோ எதோ ஆகிட்டு போலவே... இவன் வேற நம்மல முறைக்குறத பார்த்தா,,,"....

"என்னடா எதுவும் பைல் மிஸ்டேக் பன்னிட்டனா.. கொடுடா ரீடைப் பன்னி தரேன்", எனக் கூற

"பைல் எங்கே", கவின் கடித்த பற்களுக்கு இடையில் கேட்க..

"அது.. அதுவந்து... ஈவ்னிங் உள்ள முடிச்சுடுவேன்டா...ப்ளீஷ்", என்று ராஜு அவனைப் பாவமாக பார்க்க..

முறைத்துக் கொண்டே அவனிடத்தில் அமர்ந்து கொண்டான் கவின். அவன் சென்ற பின் தான் நிம்மதியான மூச்சு விட்டான் ராஜு.

"ஏன்டா அவன் வந்தா சொல்ல மாட்டியா... எப்படி முறைக்குறான் அவன்", ராஜு.

"அது சரி... அவன் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு இருந்த.. நான் என்ன சொல்ல.. அப்படி என்ன பலமான யோசனை", மதி.

நடந்த அனைத்தினையும் கூறிய ராஜு... அவன் சிந்தனைக்கு எட்டிய காரணத்தினையும் சேர்த்துக் கூற.. "அடேய்... உனக்கே இது ஓவரா இல்லை. எதுவும் மொக்கையா இருக்கப் போகுது பாரு...", மதி.

"உனக்குப் பொறாமை டா... ராஜுவப் பார்த்து", ராஜு கூற..

"அது சரி... ஈவ்னிங் பார்க்க தான போறேன்", மதி கூற..

அனைவரும் ஆபிஸ் முடிஞ்சு செல்ல.. ஹம்சியிடம் வேலை உள்ளது என்றும் தனியாகச் செல்லுமாரும் பொய்யாகக் காரணம் கூறிய நிலா..கவினிடம் ஹம்சியினை ட்ராப் செய்யக் கேட்க அவன் ஹம்சியினைப் பார்க்க... அவள் எதுவும் கூறாது கவின் பைக்கின் அருகில் சென்று நின்று கொண்டாள்... அன்று மாதிரி எவனாவது வந்தாள்... எதுக்கு என்று நினைத்தவள் அங்கு வந்து நிற்க.. கவினுக்கு அது தெரிந்தாலும் தன் மீது நம்பிக்கை கொண்டவள் மீது அப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

நிலா ராஜுவின் பிளாக்கிற்குச் சென்றாள். அங்கு மதி உள்ளே மறைந்து இருக்க.. ராஜு நிலாவினை எதிர்பார்த்து இருந்தான்.







தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்றஉங்களின் நிவி😍

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 26


கவினும் ஹம்சியும் வீட்டினை அடைந்தனர். ஹம்சியும் கவினை வீட்டினுள் வரச் சொல்லி அழைக்கவில்லை. கவினும் உள்ளே செல்லாது இருக்க... ஹம்சி கவினைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவளுக்கு கவினை அழைக்கவும் மனம் வரவில்லை. அதே நேரம் அவனை அழைக்காமல் இருக்கவும் மனம் வரவில்லை. கவினே அவள் தயங்குவது கண்டு வீட்டினை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஹம்சியும் எதுவும் கூறாது அவனை பின்தொடர
அவர்கள் வழக்கமாக வைக்கும் இடத்தில் இருந்து சாவியினை எடுத்தவன் உள்ளே சென்றான். அவனும் சோபாவில் அமர்ந்து கொள்ள ஹம்சி டீ போட்டு எடுத்துவரலாம் என்று சென்றுவிட்டாள். ஹம்சிக்கு அவனை ஒதுக்கவும் முடியவில்லை. அவனை ஏற்கவும் மனம் வரவில்லை. மனப் போரட்டமாகவே இருந்தாள். அவள் டீ போட்டு முடித்து வெளியில் வர, கவின் அங்கு இல்லை. என்னவோ எனப் பார்க்க அவன் பைக்கில் சீறிப் பாய்ந்தான். அவளும் யோசனையுடன் உள்ளே வர சோஃபா அருகில் புகைப்படம் இருக்கக் கண்டாள். அது கிழிந்து இருந்தது. கசக்கி உருவம் சுத்தமாக தெரியாதவாறு கிழிந்து இருக்க... அவளுக்கு அது கவினின் வேலை எனத் தெரிந்து போனது. வீட்டில் கொடுத்தப் புகைப்படம். அது ஹம்சவர்த்தினியின் கணவனாக ஆகப் போகுமவனின் புகைப்படம். அதனைத் தனக்கு என்று எண்ணிவிட்டான் போலும் என்று நினைத்தவள் அப்படியே அதையும் குப்பையில் போட்டாள். அதில் இருந்த புகைபடத்தினைப் பற்றி வீட்டில் கேட்டும் பார்த்துவிட்டேன் என்று பொய் கூறினாள். அவளுக்குப் பார்த்தவனின் புகைப்படமும் அதிலிருக்க அதை யார் அறிவர்?
கவினுக்கு வீட்டிற்கு வந்து குளிர்ந்த நீரில் குளித்தும் அவனுக்குக் கோபம் தணியவில்லை. தான் தானே அவளை வேண்டாம் என்று கூறினோம். "நாம் திருமணம் செய்ய அவளும் வேறு ஒருவனை திரு... இல்லை. அவள் செய்தாள் என்ன... ஆஆஆஅ...", என்று கத்தியவன் குளிர்ந்த நீருடனே வெளியில் வந்து பால்கனியில் வானம் பார்த்து நடந்தவற்றினை நினைக்கத் தொடங்கினான்.
ராஜு நிலாவிடம் என்ன கூறுவது என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டு இருக்க... நிலா ராஜு மட்டும் உள்ளே இருக்கின்றான் என உறுதி செய்து கொண்டவள் அவனிடம் வந்து புன்னகைக்க...
ராஜுக்கு எங்கிருந்து தைரியம் வந்த்தோ தெரியவில்லை... நிலா பேச வாய் திறக்கும் முன் பேச ஆரம்பித்தான்.
"நிலா எனக்குப் புரியுது... அழகா பொறந்தது தப்பு தான். அதிலும் கொஞ்சம் அறிவாப் பொறந்தாச்சு... மனசுல எந்த அளவுக்கு ஆசைய வளர்த்து வச்சிருக்கனு தெரில.. அது சரிப்பட்டு வராது.. காதல் இரண்டு பக்கமும் வரனும்.. ஒருத்தருக்கு மட்டும் வந்து இன்னொருத்தர வற்புருத்துனா அது தப்பு..", ராஜு கூறிக் கொண்டு இருக்க..
"என்ன சொல்ல வர்ற...", நிலா வாய் திறக்க அவளைக் கை நீட்டித் தடுத்தவன்..
"நான் சொல்றது ஒன்னு தான். நான் காதலுக்கு எதிரி இல்லை. ஆனால் இப்போ காதலிக்குற மூடிலும் இல்லை. உனக்கு என்னை எப்படி பிடிச்சதுன்னு எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு நீ தங்கையா தான் தெரியுற... அதனால்...", ராஜு அவள் முகம் பார்க்க..
நிலாவின் முகம் அடக்கப்பட்ட கோபத்துடன் இருக்க... ஒரு நொடி அதிர்ந்த ராஜு ஒரு அடி பின் வைத்து..."அதனால் எனக்கு உன் மேல்", என்றவன் அவன் கன்னத்தினைத் தேய்த்துக் கொண்டு இருந்தான்.
அருகில் அதிகமான சிரிப்புச் சத்தம் கேட்க... நிலா அங்கு என்ன எனப் பார்க்க.. மதி தான் வயிற்றினைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான். ராஜு அவள் அறைந்ததில் சுற்றுப்புறம் உணர சிலப் பல நொடிகள் ஆனது.
"காமெடி பண்ண உனக்கு நேரம் காலம் இல்லை.. மறியாதையா அமைதியா எங்கூடவா... ", என்றவள்...
"உங்களுக்குத் தான் பர்ஸ்டே கால் பன்னனும் நினைச்சேன். அப்புறம் தான் இந்த லூசுக்கு பன்னேன். எனக்கு ஒரு டவுட். அதை தான் உங்க கிட்ட க்ளியர் பன்னனும்", நிலா சீரியசாக பேசத் தொடங்க.. அதுவரை சிரித்துக் கொண்டு இருந்த மதி அதன் பின் அவனும் சீரியஸ் ஆனான். என்ன எனக் கேட்க..
"எனக்கு ஹம்சியும் சாக்கி ப்ரோவும் லவ் பன்றாங்களோன்னு டவுட். அதாவது எனக்கு எதுக்கு சந்தேகம் வந்ததுன்னா.. ஹம்சி இப்போ ஒழுங்கா சாப்பிடறது இல்லை. வீட்டில் கல்யாணம் பேசினாலும் சந்தோசம் இல்லை. ஒரே அமைதியும் வலியுமா இருக்கா... அவள் எப்போ இருந்து இப்படி இருக்கான்னு யோசிச்சேன். அப்போ தா நியாபகம் வந்தது. அவள் கடைசியா மகிழ்ச்சியா இருந்தது... அன்னைக்கு ஓவர் வொர்க் பார்த்தப்போ தான். அன்னைக்கு அவள் ஆபிஸ் விட்டு வெளியில் வரும் பொழுது அவள் முகம் சரியில்லை. அதே போல அதிலிருந்து ப்ரோவையும் அவாய்ட் பன்றா.. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு பார்க்கனும்.. ", நிலா.
"எனக்கும் கவின் கிட்ட அன்னைக்கு இருந்து சேஞ்ச் தெரியுது. அவன் ஹம்சிக்கு ஃபீவர் தெரிஞ்சதும் ஓடி வரும்பொழுது யோசிச்சேன். வா பார்க்கலாம்", மதி.
"நான் ஒன்னு சொல்லலாமா... சம்மதம் சொன்னா சொல்லுறேன்", ராஜு கூற, நிலா முறைத்ததில் அவன் இரண்டு கரங்களினையும் வாயில் வைத்துப் பொத்திக் கொண்டான். மதியும் "குட்", என்றவன் கேபினுக்கு அழைத்துச் சென்றான் இருவரையும்.
அதில் அன்று நடந்த சிசிடிவி ஆன் செய்து பார்க்க.. ஓடவிட்டுப் பர்த்துக் கொண்டே வந்தவர்கள் திடீரென கவின் அவளினை முத்தம் கொடுக்கவும் நிலா சட்டெனத் திரும்பிக் கொண்டாள். ராஜு ஆழ்ந்துபார்க்க அவனின் தலையில் தட்டியவன் அடுத்து என்ன நடந்தது என பார்க்கத் தொடங்க...
"சி கவின் ப்ரோ இப்படி பன்னுவார்னு எனக்குத் தெரியாமப் போச்சு... எல்லாப் பசங்களும் இப்படித்தான் போல.. அவங்க விருப்பத்துக்குக் கிஸ் பன்றது... ", என பொறிந்து தள்ளியவள் அவளின் கன்னத்தில் கை கொண்டுத் தடவிக் கொண்டாள். அவளுக்கும் ஒருவன் கன்னத்தில் இப்படி திடீரென்று இதழ் பதித்தான் அல்லவா..
"முழுசா பாக்காம ஒளராத... இங்கே பாரு ஹம்சியும் விரும்பிதான் அவன் கூட இருக்கா.. கடைசில அவன் தான் அவளைத் தள்ளி விடுறான். என்னன்னு நாம தான் யோசிக்கனும்", என்று மதி கூற...
"ஆமா. அப்போ இரண்டு பேரும் லவ் பன்றாங்க.. பட் ஏன் இப்படி பிரிஞ்சி இருக்கனும்", நிலா.
"என்னன்னு நாம கண்டு பிடிப்போம். ஃப்ர்ஸ்ட் அவங்க லவ் பன்றாங்களான்னு தெரியனும். அவன் ஹம்சிக்கு உடல் சரியில்லைன்னு ஃபீல் பன்னி போனது மட்டும் ரீசன் ஆ சொல்ல முடியாது. அதுக்கு அப்புறம் அவன் நார்மலா தான் இருந்தான்.. ஸோ...", மதி.
"நான் சொல்ல வரத கொஞ்சம்", ராஜு.
"சொல்லித் தொலை. திரும்ப காதல் கீதல்னு ஆரம்பிச்சா... அது அந்த பயம்... இரண்டு கன்னமும் சிவந்திடும்", ராஜு கன்னம் பொத்தி இருந்ததைப் பார்த்து நிலா சொல்ல..."ம்ம் சொல்லு", நிலா.
"ஹம்சி ஆபிசில் எப்போவும் கவினை காதலோட தான் பார்ப்பா.. அவள் பார்வையில் வேறுபாடு தெரியும். அப்போவே எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் உறுதியாத் தெரியாது. ஹம்சிக்கு உடல் சரியில்லைன்னு அடுத்த நாள் புல்லா என்னதான் ஹம்சிகிட்ட "இப்போ... இப்போ எப்படி இருக்குன்னு கவின் கேட்க வச்சான்... நானும் அவனைத் திட்டிகிட்டே கேட்டு சொன்னேன்", ராஜு.
"அப்போ ஆபிஸில் உனக்கு இதுதான் வேலை.. யாரு யாரை எப்படிப் பார்க்கிறாங்கன்னு.. ", மதி.
"டேய் நான் பார்க்கப் போய் தான் இரண்டு பேரும் லவ் பன்றாங்கன்னு தெரிஞ்சது. போடா", ராஜு.
"சரி. சரி... இப்போ அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சினை... நாம தான் சரி பன்னணும். என்ன பிரச்சினைனு நாம கண்டு பிடிப்போம்...", மதி.
"வரும் சண்டேக்குள்ளே நாம கண்டு பிடிக்கனும்", மதி கூற அனைவரும் ஆமோதித்தனர்.
பின் மூவரும் ஒரு முடிவுடன் வீட்டிற்குத் திரும்பினர்.
அடுத்த நாள் நிலா அவளுக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பு எடுத்துவிட.. அன்று ஹம்சி ஆபிஸ் வந்தவள் மதியும் ராஜுவும் விடுப்பு என்று கூறவும் கவின் மட்டும் உடன் இருக்க வேறு எதுவும் நினைக்காமல் வேலையில் மூழ்கினாள். அவளுக்கு மனம் முழுவதும் தனது திருமணம் பற்றியே இருந்தது...
மாறாக கவினுக்கு "சம்மதம் வேண்டாம் என அந்தப் பெண்ணிடம் எப்படி கேட்பது என்பது பற்றியே... ", சிந்தித்துக் கொண்டு இருந்தான்...
அன்றைய பொழுது இருவரும் யோசனையில் வேலைகளுடன் கழிய இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். நிலா வீட்டில் இல்லை என அறிந்து அவளுக்கு அழைக்க... அவளது மொபைல் ஸ்விட்ச் ஆப் என வர சலிப்பாக அப்படியே சோபாவில் படுத்துவிட்டாள்.
இரவு நேரம் வீட்டினை அடைந்த நிலா இருக்கும் களைப்பில் சுத்தம் செய்யாமல் அப்படியே அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். வெகு நேரம் கழிந்து எழுந்த ஹம்சி நிலா வந்துவிட்டது அறிந்து அவளும் அவள் அருகில் வந்து படுத்துக் கொண்டாள்.
கவின் மதியினைச் சந்திக்க அவனறைக்குச் செல்ல... "ரொம்ப டயேர்டா இருக்குடா... நாம நாளைக்குப் பேசலாம்", மதி. கவினும் சரி எனக் கூறியவன் வசுவிடம் சென்றவன் அவரின் மடியில் படுத்துக் கொள்ள அவரும் அவனின் தலையினைக் கோதிவிட்டுக் கொண்டு இருந்தார்.
அடுத்த நாள் ஆபிஸில் அனைவரும் வருகை புரிய... யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நிலாவிற்கு ஹம்சியின் மீது சிறு வருத்தம் தான். தன்னிடம் இதுபற்றி எதுவும் கூறவில்லை என்று... ஆனால் அது அவர்களுக்கேத் தெரியாத பொழுது நம்மிடம் எப்படிக் கூறுவாள் என்று சமாதனம் ஆகிக் கொண்டாள். மதிய நேரம் உதய் நிலா ராஜு மதியிடம் மட்டும் பேசிக் கொள்ள கவினும் ஹம்சியும் என்னவாக இருக்கும் என்று யோசிக்க... ஹம்சி அவர்களினையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்ட கவின், "ஏன் உன்னை தவிர வேற யார்கிட்டயும் பேசக் கூடாதா... இப்படி முறைச்சுப் பார்க்குற", எனக் கூற
"நீங்களும் தான் இப்போ அப்படிப் பார்த்தீங்க.. என்னை மட்டும் சொல்றீங்க..", ஹம்சி.
கவின் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்றுவிட்டான். தீவிரமாகப் பேசிய நால்வரும் சிரித்துக் கொண்டே வர... ஹம்சி அது பற்றிக் கேட்டும் அவள் ஒன்றும் சொல்ல வில்லை.





தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி....!!!!



 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 26

இப்படியே நாட்கள் இரண்டு கழிந்தது...

நிலா, ஹம்சியின் திருமணம் பற்றி ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. ஹம்சிக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

கவின் வீட்டில் அனைவரும் கவினுக்கும் உதயுக்கும் ஒரே நாளில் நிச்சயம் செய்வோம் என திட்டமிட.. உதயும் மதியும் கவின் இதைத் தடுக்க எதுவும் முயற்சி செய்யாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு பயம் இருக்கத் தான் செய்தது. ஹம்சியினை நினைத்து இந்த நிச்சயம் நடக்காதவாறு எதுவும் செய்து விடுவானோ என்று...

நிலாவிற்கு அந்தப் பயம் எதுவுமில்லை. ஹம்சி எப்படியும் தடுக்க மாட்டாள். அவர்கள் வீட்டில் மறுப்புத் தெரிவிக்கும் தைரியம் அவளுக்கு இல்லை என அறிந்தவள், இனி நடக்க வேண்டிய செயல்களினைத் திட்டமிட்டுக் கொண்டாள்.

சண்டே அதிகாலை வேளை கவினின் மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது... என்னவாக இருக்கும்.... ஹம்சியின் முகமே அவன் மனக் கண் முன் வர ஆழ்ந்து மூச்சினை எடுத்துக் கொண்டவன் உறுதியாக பார்க்கப் போகும் பெண்ணிடம் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மதி அவனறைக்கு வந்து அவன் முகம் கலை இல்லாது இருப்பதைக் கண்டு "என்னடா முகம் இப்படி இருக்கு... அந்தப் பொண்ணு கிட்ட என்ன சொல்லப் போற...???" எனக் கேட்க..

"எனக்கு சம்மதம் இல்லைனு சொல்லப் போறேண்டா... நான் வேறப் பொண்ண விரும்புறேன்னு சொல்லப் போற... ", கவின்.

"அப்படியா... யாருடா அந்தப் பொண்ணு... எனக்கு சொல்லல", மதி.

"அதை சொல்ல தான் நான் உங்கிட்ட வந்தேன். ஆனால் இனி அதை பத்தி சொல்ல முடியாது. அது நம்ம குடும்பத்துக்கு நல்லது இல்லை. எதுவா இருந்தாலும் எனக்குள்ளேயே இருக்கட்டும். அப்புறம் நம்ம வீட்டுக்குள்ளேயே இருக்க உனக்கு என் நியாபகம் தான் வரும்... இதை இன்னைக்கே முடிக்கனும். என் காதல் எனக்குள்ளேயே இருக்கட்டும். ஆனால் வேறு ஒரு பொண்ணு என் மனசில் வைக்க என்னால முடியாது. காலம் முழுக்க கல்யாணம் இல்லாமலே இருந்துடுறேன்", என்று வலிகள் நிறைந்து முகம் சிவக்க கூற... மதி அவனை இருக அணைத்துக் கொண்டான்...

மதிக்கும் கவினது வலி புரிந்தது... மதியும் அந்த வலியினை அனுபவித்தவனாயிற்றே... கவினுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் அவன் இல்லை. அவனால் இப்பொழுது முடிந்தது அணைப்பது மட்டுமே...

வீட்டினர் அனைவரும் தயாராகிக் கொண்டு இருக்க... கவினின் அறைக்குள் நிஷா வரவும் இருவரும் சூழ்னிலையில் இருந்து சகஜம் ஆகினர். வந்ததும் நிஷா கவினிடம் சென்றவள் "அத்தான் உங்களுக்கு நிச்சயம் நடக்கப் போகுதுன்னு கேள்விப் பட்டேன். உங்களுக்கு இதில் விருப்பம் தானா.. ", நிஷா கேட்க..

கவின் முகம் அதற்கு எந்த பிரதிபலிப்பும் தராமல் இருக்க..."உங்களுக்கு விருப்பம் இல்லையா அத்தான்... நான் வீட்டில் பேசவா அத்தான்... உங்களுக்குச் சம்மதம் இல்லைன்னு", நிஷா.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க ரெடியாகி கீழே வாங்க.. கவின் மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காம வா.. நடக்குறது நடக்கட்டும்.. அதுக்கு அப்புறம் எதுவும் பார்த்துக் கொள்ளலாம்...", மதி கூறிவிட்டு கீழே சென்றுவிட

மதி சென்றுவிட்டதனை அறிந்த நிஷா "அத்தான் நீங்க சரின்னு சொல்லுங்க.. இந்த நிச்சயம் நிக்க வேண்டியது என் பொறுப்பு... கவலைப் படாம இருங்க... நான் பார்த்துக்குறேன்", நிஷா..

கவின் எப்படி முடியும் என்பது போல் பார்க்க.. "அதை நான் பார்த்துக்குறேன்... நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க..", நிஷா.

கவின் எப்படியோ இது நின்றால் சரி என்று நினைத்தவன், "சரி", எனக் கூற

நிஷாவும் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று பிளான் போட ஆரம்பித்தாள்.

கவினிடம் "எதும் கவலை படாதீங்க அத்தான். நீங்க முகம் சிரிப்பா வச்சிக்கோங்க... மத்த எல்லாம் நான் பார்த்துக்குறேன்.. ", நிஷா.

அதன் பின் கவின் தயாராகிக் கீழே வர.. சந்திரன், வேணி, வசு, மதி, உதய், வாசுகி மற்றும் தேவன் கவினுக்காகத் தான் தயாராகிக் காத்துக் கொண்டு இருந்தனர். கவின் நிஷாவின் முகம் பார்க்க... நிஷா இரு விழிகளினையும் அசைத்து தைரியம் அளிக்க கவினும் நார்மல் ஆகி அவர்களுடன் சென்றான். அனைவரும் இரண்டு கார்களில் கிளம்பினர்.

வழியில் மதி நிலாவிற்கு கால் செய்ய... அவளும் இங்கே எல்லாம் தயார் என்று கூற... இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

கவின் குடும்பம் முழுவதும் பெண்ணின் வீட்டின் முன் வந்து இறங்க

பெண் வீட்டினர் அனைவரும் வரவேற்க வெளியில் வர...

வீடின் முன் இன்னொரு கார் வந்த்து. அனைவரும் என்ன எனப் பார்க்க...

காரிலிருந்து ரக்ஷி மற்றும் ராம் தம்பதி சகிதம் நடந்து வரக் கவின் ஓடிப் போய் "டேய்.. எப்படி மச்சி இருக்க... உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு", எனக் கூற..

"தள்ளு டா.. உன்னை யாரு பார்க்க வந்தா... நீ தான் என்னை இந்த ஊரில் இருக்கக் கூடாதுன்னு துறத்தி விட்டல.. அப்புறம் என்ன... நான் பொண்ணு வீட்டுக்கு சொந்தம். அங்கே வந்த.. பை", என்று கூறிய ராம் ரக்ஷி கரத்தினைப் பற்றி மதியிடம் சிறு தலை அசைப்புடன் உள்ளே அழைத்துச் செல்ல... கவின், அவன் கூறுவதும் உண்மை தானே என்று நார்மல் ஆகித் திரும்ப வீட்டினருடன் உள்ளே நுழைந்தான்.

அனைவரும் உள்ளே நுழைய... மதி அங்கிருந்து வெளியில் வந்து தனது அலைபேசியில் ராஜுக்கு அழைக்க... "வந்துட்டு தான் இருக்கேன்டா", ராஜு.

வசு அனைவரிடமும் பேசியவர் பொண்ணு வரச் சொல்லுங்க எனக் கூற... அதுவரை மதியிடம் பேசிக் கொண்டு இருந்த உதய் அந்த வார்த்தையினைக் கேட்டதும் நிமிர்ந்து உட்கார... ராஜு வந்துவிட்டதாகக் கூறவும் அவனை அழைக்க மதி வெளியில் சென்றுவிட்டான்.

அங்கிருந்த அனைவருக்கும் காபி கொடுத்தவள் உதயிடம் வந்து வெட்கத்துடன் கொடுத்துவிட்டு கவினிடம் செல்ல... அப்பொழுதுதான் நிமிர்ந்து அந்தப் பெண்ணை பார்த்தவன் கண்கள் தீப்பிழம்பாய் ஜொலிக்க... அவளுக்கு அவனின் பார்வையில் பயம் கவ்விக் கொள்ள உடனே உள்லே சென்று விட்டாள்.

அடுத்தப் பெண்ணையும் வர சொல்லுங்க எனக் கூற அந்தப் பெண்ணும் வந்தாள். வசு கவினிடம் நல்ல பாரு கவினு.. அப்புறம் பொண்ணு சரியில்லை சொன்ன சரிப்படாது எனக் கூற... கவின் வசுவினைப் பார்த்த பார்வையில் வசு அவனை பார்த்து சிரித்துவிட்டு அமைதியாகி விட்டார். கவினும் அப்பெண் செல்லும் வரை னிமிர்ந்து பார்க்கவில்லை. அப்பெண்ணும் கவினை நிமிர்ந்து பார்க்கவில்லை. அதுவரை அமைதியாக இருந்த உள்ளே ரக்ஷி அறைக்குள் சென்று பெண்ணிடம் பேசிக் கொண்டு இருக்க...

நிஷா வசுவிடம் சென்று காதருகில் எதுவோ கூற... அவரும் சரி எனக் கூறி விட்டார். "நீ போய் பொண்ணு கிட்டப்பேசு மா, என வசு அனைவருக்கும் கேட்குமாறு நிஷாவிடம் கூற அவளும் உள்ளே சென்றாள். சில நிமிடம் கடந்ததும் வெளியில் வந்த நிஷா கவினிடம் கட்டை விரலினை உயர்த்திக் காட்ட.. அப்பொழுதுதான் கவினுக்குப் போன உயிர் வந்தது...

வசு கவினிடம் பெண்ணிடம் போய் பேசுமாறு கூற எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர். உதய் தான் பெண் சம்மதம் கூறிய நாளிலிருந்தே அவனுக்குப் பார்த்தப் பெண்னுடன் உரையாடிக் கொண்டு இருக்கின்றானே,...அது குடும்பம் முழுவதும் தெரியுமாதலால் கவினுக்கு சம்மதம் தெரிவிக்க... உள்ளே செல்லும் முன் வெளியில் அவன் பார்த்தது,... நிலா, ரகஷி, ஹம்சி மற்றும் ஹம்சி.... ஆம்... ஹம்சிவாகினி மற்றும் ஹம்சவர்த்தினி.... அவனுக்கு ஒரு நொடி உலகம் சுற்றுகின்றதா என தோன்ற... இருந்தும் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு உள்ளே செல்ல... ஹம்சி தவிர மற்ற அனைவரும் வெளியில் சென்றுவிட... ஹம்சி ஜன்னல் அருகில் நின்று கொண்டாள்.

கவினுக்கு அப்பொழுது தான் எல்லாம் விளங்கியது... உதய்க்கு பார்த்திருப்பது இவளது ட்வின். அவள் தான் உதய்க்கு சம்மதம் தெரிவித்து இருக்கின்றாள். அவளது புகைப்படம் பார்த்து அல்லவா ஹம்சி என்று நினைத்து இப்படித் தவறு செய்து விட்டோம் என்று நினைக்க... அவனுக்கே அவன் மேல் கோபம் வந்தது.. இதில் தான் செய்தவற்றை நினைத்து வருந்தியவன் ஹம்சி அருகில் சென்று அவள் தோளின் மேல் கை வைக்க... ஹம்சி திரும்பி அவன் கரத்தினை எடுத்து விட்டவள்...

"மிஸ்டர் கவின். நீங்க இந்த நிச்சயத்தை இப்போ நிறுத்தனும். இல்லை என் உயிர் பிரிந்து நிக்க வேண்டியதா இருக்கும். என்ன சொல்றீங்க... ", ஹம்சி.

"என்ன சொல்ற டி... ஏன் இப்போ நிச்சயம் நிருத்தனும்... என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்..", கவின்.

'இப்போ நீங்க வேண்டாம் சொல்றீங்களா இல்லை... நான் சொன்னது நடக்கனுமா", ஹம்சி கூற

"என்ன நடந்தது சொல்லு டி... பின்னாடி ரொம்ப வருத்தப் படுவ", கவின் கூற

ஹம்சி வெளியில் கரம் நீட்ட முகத்தில் அப்பட்டமான வலிகளுடன் கவின் வெளியில் வர... அவன் முகம் பார்த்த அனைவரும் யோசனை செய்ய...

"கவினு... உனக்குச் சம்மதம் தான.. பொண்ணு பிடிச்சிருக்கு தான...", வசு..

"இல்லை எனக்கு இப்போ கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லை. வேண்டாம் வசு. நான் வெளியில் இருக்கேன் வந்துடுங்க", கவின் கூரி விட்டு வெளியில் செல்ல.. அப்பொழுதுதான் உல்ளே நுழைந்த மதி மற்றும் ராஜு அவன் வெளியில் செல்வதைப் பார்த்துக் கொண்டே உள்ளே செல்ல... அனைவரும் அதிர்ச்சியில் தான் இருந்தனர்.

ஹம்சி கவின் வெளியேறியதும் பாத்ரூம் உள்ளே சென்றவள் அழுது கரைந்தாள். தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்.. ஆசை கைகூடியது என்று நினைக்க... அடுத்த நிமிடம் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டால்... அவளுக்கு அந்த நிகழ்வில் இருந்து வெளிவர நேரம் எடுத்தது..

கவின் வெளியேறியதும் உள்ளே வந்த நிலா ஹம்சி மற்றும் ரக்ஷி மூவரும் அவளைத் தேட ... உள்ளே பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்க அமைதி ஆகினர். அவர்களுக்கும் கவின் கூறியதில் அதிர்ச்சி தான். இப்பொழுதுதான் நிலா ஹம்சி இருவரும் நடந்த சம்பவம் அனைத்தினையும் கூறினர்... அதன் பின் தன்னவனுடன் இணையும் வேளை காத்திருந்தாள்.

கடந்த கால சம்பவம்(ரொம்ப ஆவலா எல்லாரும் காத்து இருக்கீங்களா.. சொல்றேன்...)

ஹம்சிக்கு கல்லூரி முடிந்து கவினை சந்திக்க முடிவு எடுத்து இருக்க... அதற்கு முதல் நாள் தான் உதய்க்கு மணமுடிக்க பெண் பார்த்திருந்த விவரம் கவினுக்கு தெரிவிக்கப் பட.. புகைப்படமும் அவனுக்குக் காட்டப்பட்டது... அதனை பார்த்த ஹம்சியின் முகம் அதிர்ந்து போக.. உடனே வசுவிடம் சென்றவன் அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லாம ஏன் வசு சம்மதம் பேசுறீங்க எனக் கேட்க..

"அடப் போடா.. சம்மதம் இல்லாம தான் அந்தப் பொண்ணும் அவனும் போனில் பேசிக்கிறாங்களாக்கும்... அங்க பாரு அவன் யாரோடப் பேசுறான்.. அவள் கூட தான்", வசு.

"அப்போ அந்தப் பொண்ணுக்கு சம்மதமா", இல்லை என்று கூறிவிடமாட்டார என்ற நட்பாசையில் கேட்க வசுவொ பூரண சம்மதம் என்றுக் கூற கவினுக்கு அன்றைய வலிகளினை சொல்லி முடியாது. அன்று முழுவதும் வலிகளிலேயே நாட்களினை கடத்தியவன் சாப்பிடக் கூட மறுத்தான்.

"தன் மேல் காதலே இல்லையா.. அவள் தன்னைப் பார்த்த பார்வையில் இருந்தது காதல் இல்லையா... தான் அவளை தீண்டிய பொழுது அவளுக்குக் காதல் உணர்வு இல்லையா... என் உணர்வுகளுக்கு அவளின் பிரதிபலிப்பு காதல் என்றல்லவா நினைத்தேன்... ", என்று மனம் உடைந்து இருந்தவன் காலையிலும் சாப்பிடாமலே இருக்க.. பொறுமை இழந்த வசு சாப்பிட வைத்து ராம் வரவும் அவனிடம் இவனைப் பார்த்துக் கொள்டா.. இன்று மதிக்கு வேறு வேலை இருப்பதால் வெளியூர் சென்று இருக்கிறான் என்று கூற..

ராமும் நிலா ஹம்சி சந்திக்க இருப்பதைக் கூற...

அனைவரும் சந்திக்கும் நேரமும் வந்தது...



தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்க்களின் நிவி...
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 27

நிலா ஹம்சி கவின் ராம் மற்றும் ரக்ஷி என அனைவரும் ஹோட்டலில் சந்தித்து நேரம் கழித்தனர். கவின் தவறியும் ஹம்சியினை விழிகளில் காணக் கூட இல்லை. ஹம்சி அவனிடம் காதலைக் கூற ஆவலுடன் அமர்ந்து இருக்க... நிலா ராம் ரக்ஷி மூவரும் அவர்களுக்குத் தேவையான சுவீட்டினை வாங்க முன்னே செல்ல...

"காதல் பற்றி என்ன நினைக்கிறீங்க கவின்..", ஹம்சி.

"அதெல்லாம் உனக்கு எதுக்கு... கதலிக்குறவங்களுக்கு தான் அதை பற்றிய பதில் தெரியனும்", கவின்.

"அப்போ.. நீங்க காதலிக்குறீங்களா... ", ஆமான்னு சொல்லுடா என ஹம்சி நினைத்துக் கொண்டு இருக்க..

கவினின் ஆழ்மனம் சொல்லச் சொல்லிக் கூற.. ஆம் என்று அவனை அறியாமல் கூறிவிட..

"உண்மையாகவா... யாரு அவங்க.. நீங்க யாரை லவ் பன்றீங்க.. சொல்லுங்க", ஹம்சி.

அப்பொழுதுதான் அவனுக்குத் தான் கூறியது உணர... ஒரு நொடி விழித்தவன் அதன் பின் சாதரணமாக...

"வேறு யாரு... நம்ம ரக்ஷி தான்... அவளும் ஓகே சொல்லிட்டா... இனி வீட்டில் சம்மதம் சொல்லிட்டா கல்யாணம் தான்... எல்லாரும் காதல் இருக்குற மாதிரி நடிப்பாங்க.. ஆனால் ரக்ஷி அப்படி இல்லை... எனக்கு என்ன வேணும்னாலும் செய்வா", எனக் கூறிய கவின் எழுந்து சென்றுவிட... ஹம்சிக்கு அவன் கூறிய வார்த்தைகள் சில நொடி பின்னரே செவியினை அடைந்தது... அப்படியானால்... அவனுக்கு தன் மேல் காதல் இல்லையா...அவன் நினைத்த அதே நினைவுகள் கேள்விகள் எல்லாம் இவள் கண் முன் வந்து போக... அவளுக்கு அந்த இடத்தில் உட்கார்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டு இருப்பது புரிய... அதன் பின்னரே ரெஸ்ட் ரூம் சென்றவள் அங்கு கதறி அழுது விட.. யாரோ வரும் சப்தம் கேட்க.. அதன் பின் தன்னை நிலைப் படுத்தியவள் நார்மல் ஆகி வெளியில் வந்து கவினின் முகம் காணாமல் நிலாவிடம் பொய்யாக புன்னகை புரிந்து அந்த நாளினைக் கடத்தினாள். அதன் பின் வீட்டினை அடைந்தவள் பலவாறு யோசித்து வீட்டில் கோவையிலேயே பணிபுரிய சம்மதம் பெற்று நிலாவுடன் நேர்காணல் சென்று தேர்வாகி கவினிடம் இருந்து தப்பிக்க வேலையில் கவனம் செலுத்த வேணுடும் என்று சேர்ந்தால். அந்தோ பரிதாபம் கவினே அங்கு மேனேஜர் ஆகிப் போக... அவள் எதிலிருந்து மீள வேண்டும் என எண்ணி இருந்தாளோ அதன் கையில் வசமாகச் சிக்கிக் கொண்டாள்.

தற்பொழுது நிச்சயம் முன் தான் நிலாவும் ரக்ஷியும் ஹம்சியிடம் நடந்தவற்றினை எடுத்துக் கூறினர். அதைக் கேட்ட ஹம்சி மகிழ்ச்சி ஒருபுறம் கோபம் ஒருபுறம் என்று இருந்தாள். மகிழ்ச்சி... கவின் தன்னை தான் விரும்பியுள்ளான் என்பது.

கோபம்... ஆம் ரக்ஷியும் ராமும் திருமணம் செய்தது பற்றிக் கூறவில்லை என்ற கோபம் தான்...ரக்ஷியும் ராமும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். கல்லூரியில் ஹம்சி நிலா வருவதற்கு முனிபிருந்தே விரும்பத் தொடங்கி இருந்தனர்.. அன்று பார்ட்டியில் ரக்ஷியினை பவினிடம் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து ஆடியவன் ராம் தான்...ராம் அவன் குடும்பம் இல்லை என்பது பற்றி யோசிக்க ரக்ஷி தான் அவனை சமாளித்து கொண்டு இருந்தாள். அது கவினுக்கும் தெரியும். இருவரும் பேசி முடிவெடுக்க வேண்டியது என்று கவினும் அது பற்றி பேசவில்லை. ஹம்சிக்கு கல்லூரி முடிந்த அந்த சந்திப்பின் அன்று தான் ரக்ஷியும் ராமும் காதலை வெளிபடுத்தினர். அன்று நடந்த சம்பவம் பற்றி கவினுக்குத் தெரிந்தவற்றினை ராமிடம் கூற ராமும் அவன் கூறுவது சரி என்றே எண்ணினான். கவினுக்குத் தெரிந்த விவரம் மட்டுமே ராமுக்கு தெரிய அவன் அப்படி நினைப்பதில் ஆச்சர்யம் இல்லையே... ரக்ஷியிடமும் ராமிடமும் இனி இங்கே இருக்கக் கூடாது.. ஒழுங்கா கல்யாணம் பன்னிகிட்டு வேலை சென்னைல வாங்கிட்டு அங்கே போய்டனும் என்று கூற... ராமின் பக்கத்து வீட்டு ஆன்டியின் கணவரும் சென்னையில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறிவிட்டதால் சரி என்று கூறியவன் ரக்ஷியின் வீட்டினில் சம்மதம் வாங்கி ரக்ஷியினைத் திருமணம் செய்து அதன் பின் இங்கு வரவே இல்லை.

நிச்சய இடத்தில்...

அனைவரும் அதிர்ச்சியில் இருக்க..

ஹம்சியின் தந்தை தமிழ் செல்வன் தான் பின் அனைவரையும் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

"பரவாயில்லை விடுங்க.. முன்னாடியே விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க... நம்ம உதய் ஹம்சி கல்யாணம் பற்றி இப்போ பேசுவோம்...", ஹம்சியின் தந்தை கூற அவள் தாய் உள்ளே சென்றுவிட்டார் வந்தக் கண்ணீரினை மறைக்க..

நடக்கும் எதுவும் புரியாமல் மதியும் ராஜுவும் வந்து நிற்க... பின் உதய்க்கும் ஹம்சவர்த்தினிக்கும் நிச்சயம் முடிந்தது. அதன்பின் அனைவரும் சிறிது நேரம் பின் வீடு வந்து சேர்ந்தனர். கவின் யாரிடமும் பேசாமல் அவனறைக்குச் சென்றுவிட... ராஜுவும் அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டான். ராமும் ரக்ஷியும் ராமின் வீட்டிற்குச் சென்று விட்டனர். நிலா அழைத்துத்தான் அங்கு வந்திருந்தனர் ரக்ஷியும் ராமும். நடந்த குழப்பங்களினை மதியும் நிலாவும் ராஜுவும் ஒரு நாள் முழுவதும் அலைந்து உண்மை கண்டறிந்து இதற்கு மூலக் காரணம் ஹம்ச வர்த்தினி மற்றும் ரக்ஷி தான் என அறிந்து அவர்களுக்கு தகவல் கூறி இருவரினையும் நிச்சயம் அன்று சர்ப்ரைஸ் செய்ய வைக்க நினைக்க... அங்கு நடந்தது அவர்களின் பிளேனிலேயே இல்லை.

அவர்கள் ஒன்று நினைக்க.. நடந்தது ஒன்று என்று ஆனது....


தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி...


 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 28


ஹம்சி அறையில் நிலா மற்றும் ஹம்ச வர்த்தினி மூவர் மட்டுமே இருந்தனர். ஹம்சி அழுத முகமாகவே இருக்க.. நிலாவிற்கு அவளிடம் என்னவெனக் கேட்க தயக்கம் இருக்க... ஹம்சவர்த்தினிக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அதனால் அவளும் எதுவும் கூறாமல் கவலை படியவே நின்று இருந்தாள். ஹம்சியின் தாயும் தமிழ் செல்வனிடம் புலம்பிக் கொண்டு இருந்தார்.

ஹம்சிக்கு நிஷாவின் அலைபேசியில் கேட்ட வார்த்தைகளே காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது...

கவினுக்கு காபி கொடுத்துவிட்டு உள்ளே சென்ற நொடி நிலாவும் ரக்ஷியும் தான் கவின் பற்றிய உண்மைகளைக் கூற அதில் ஹம்சி மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள். ஆனால்....

நிஷா ஹம்சியின் அறைக்கு வந்தவள்.. ஹம்சியிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூற நிலாவும் ரக்ஷியும் வெளியில் வந்து நிற்க...

"ஹம்சி உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்கனும். உங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்ல முடியுமா... ", நிஷா.

ஹம்சி அதிர்ந்து போனாள்.. இதுவே அவளுக்கு கவின் பற்றி தெரியாமல் இருந்தால் முழுசம்மதம் தெரிவித்து இருப்பாள். ஆனால் இப்பொழுது அப்படி அல்லவே...

அவளின் அதிர்ந்த முகம் பார்த்தவள்...

"என் ப்ரண்டு கவின் அத்தான சின்ன வயசில் இருந்து காதலிக்குறா.... அவளுக்கு அத்தான்னா உயிர். அத்தான் அதுக்கு மறுப்பு சொல்லிட்டா என்ன செய்யான்னு சொல்லவே இல்லை. அவள் இனி சொலிடுவேன்.. இந்த நிச்சயம் அதுக்குள் நடந்துட்டா அவளுக்கு இறந்து போறத தவிர வேற வலி இல்லைன்னு புலம்புறா... நீங்க வேண்டாம் சொல்லிட்டா.. அத்தான் கிட்ட நான் எப்படியாவது சம்மதம் வாங்கிடுவேன்", நிஷா.

"ஆனால் அவர் அந்த பொண்ண விரும்பனும்ல", ஹம்சி முகத்தில் வலியினை மறைத்து சாதரணமாக கேட்க

"அத்தானுக்கு அந்தப் பொண்ண ரொம்ப பிடிக்கும் அவள் லவ் பன்றான்னு சொன்னா போதும் அத்தான் ஒத்துக்குவார். நீங்க மட்டும் இந்த நிச்சயத்தினை நிறுத்திடுங்க... அடுத்து நான் பார்த்துக்குறேன்", நிஷா.

"அவள் கிட்ட போன் போட்டு தரேன் இருங்க", நிஷா.

"ஹலோ.. நான் மீனா பேசுறேன். நீங்க தான் ஹம்சியா.. நான் கவின என் உயிருக்கும் மேல விரும்புறேன். அவன் இல்லன்ன என் உயிர விடக் கூட நான் தயங்க மாட்டேன். உங்களுக்கு புரியுதா... ப்ளீஸ் எனக்காக அங்க நடக்குற நிச்சயத்தினை நிறுத்துங்களேன்", என அலைபேசியில் ஒரு பெண் கேட்க...

அப்பொழுதுதான் நிஷா கூறியது உண்மை தான் போலும் என்று ஹம்சி உணர்ந்தாள். அலைபேசியில் ஒலித்த வார்த்தைகளின் வலி ஹம்சிக்கு அப்பட்டமாக தெரிந்தது... ஹம்சிக்கு அவளின் நிலையில் தன்னை வைத்துப் பார்க்க..

கவின் வேண்டாம் என்று ஆன பிறகு உயிர் விடும் அளவிற்கு தான் வரவில்லையே... வேறு ஒருவனுக்குத் தானே வீட்டில் சம்மதம் கூறினோம். அப்படியே மற்றொருவனை வேண்டாம் என்று கூறினாலும் திருமணமே செய்யாது இருப்பேனே தவிர உயிர் விடும் அளவிற்கு தன் காதல் இருக்குமா என்று சுய பரிசோதனை செய்ய ஆரம்பித்தாள்.... இதுவரை அவள் கவின் கூட இல்லை என்றால் உயிர் விடுவோம் என்று யோசித்தது கூட இல்லையே என்பது புத்தியில் உரைக்க... கவினுக்கு தன்னுயிரினைக் கூட விடத் தயாராய் இருக்கும் இவள் தான் சரியான இணை எனத் தவறாகக் கணித்து அவளிடம் சரி எனக் கூரியவள்,... கவின் உள்ளே வரவும் அப்படிக் கூறினாள்.

நிலாவிற்குக் கால் செய்த மதி என்னவெனக் கேட்க... "நிஷா தான் அவளிடம் கடைசியாக தனியாகப் பேசினால். அதற்கு முன் நாங்கள் இருவரும் ப்ரோ பற்றி கூற அவளுக்கு சந்தோசம் தாங்கல... ஆனால் நிஷா போன அப்புறம் அவள் முகம் இருக்கமா தான் இருந்தது.. ஹம்சி ப்ரோ கிட்ட என்ன பேசுனா தெரில.. ஆனால் ஹம்சி தான் எதுவோ சொல்லி இருக்கா.. அதான் ப்ரோ வேண்டாம் சொல்லி இருக்கார்", நிலா.

"சரி நீ ராம் கிட்ட சொல்லிடு.. நான் ராஜுகிட்ட சொல்லிடுறேன்... இங்கே நான் பார்த்துக்குறேன்", மதி.

"ம்ம்.. சரி..", நிலா.

மதி சென்றது நிஷாவின் அறைக்கு...

நிஷா அப்பொழுதுதான் அவள் தோழியிடம் பேசிவிட்டு வெளியில் வர..

"நீ ஹம்சி கிட்ட என்ன பேசுன.. அவள் எதுக்கு கவினை வேண்டாம் சொல்லி இருக்கா..", மதி.

"ஹம்சி எங்கே வேண்டாம் சொன்னா... அத்தான் தான் வேண்டாம் சொன்னார்", நிஷா.

"எங்கிட்ட பொய் சொல்லாத.. என்ன நடந்தது உண்மைய சொல்லு... ஹம்சிகிட்ட நீ என்ன பேசுன", மதி பொறுமையாகக் கேட்க..

"நான் ஏன் பொய் சொல்லனும் அத்தான். கவின் அத்தான் தான் வேண்டாம் சொன்னார்", நிஷா கூற கையினை ஓங்கி விட்டான் மதி.. பின் சுயம் அடைந்தவன்...

"இப்போ நீ நடந்த உண்மை சொல்லலனா நடக்குறது வேற... சொல்லு... என்ன நடந்தது...", மதி.

கவினுக்காகத் தான் அப்படிக் கூறினேன் என்று நிஷா கூற அதுவரை அவள் மேல் கொலை வெறியில் இருந்தவன் அவள் மடத்தனத்தினை எண்ணி கோபமாக அங்கிருந்தக் கட்டிலில் அமர்ந்தான்.

இதனை அறியாத கவினும் என்ன ஆனது என்று தான் அறையில் யோசித்துக் கொண்டு பால்கனியில் நின்று இருந்தான். அப்பொழுதுதான் நிஷாவின் வேலையாக இருக்கும் என்று எண்ணி அவளறைக்கு வர மதியிடம் அவள் கூறிய அனைத்தினையும் கேட்டவன் மதியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். நிஷாவிற்கு நடப்பது எதுவும் புரியவில்லை... அவளின் முக பாவனையில் கவின் மெல்லிய புன்னகை ஒன்றினை சிந்தியவன்..

நடந்த சம்பவம் அனைத்தும் கூற... மதியும் தங்களது பிளேனினைப் பற்றிக் கூற.. நிஷாவிற்கு தனது முட்டாள் தனத்தினைப் பற்றி அசிங்கமாக இருந்தது...

"அத்தான்.. என்ன மன்னிச்சிடுங்க அத்தான்.. நான் ரொம்ப தப்புப் பன்னிட்டேன்... என்னால் தான் இவ்வளவு நடந்து போச்சு... ப்ளீஸ் அத்தான் என்னை மன்னிச்சிடுங்க... நான் இதை சரி பன்னிடுறேன் அத்தான்", என்று கவினின் அருகில் உட்கார்ந்து நிஷா மன்னிப்பு வேண்ட நிஷாவின் தலையினைக் கோதியவன் "இல்லை. இனி நான் பார்த்துக்குறேன்... நடக்குறது நல்லபடியா நடக்கும்", கவின்.

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி....


 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 29

அதிகாலை அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க.. யாரும் எதுவும் பேசவில்லை. வசு கவினின் மேல் கோபத்தில் இருந்தார். இங்கு சம்மதம் என்று கூறிவிட்டு இப்படி அவர்கள் முன்னிலையில் மறுப்புத் தெரிவித்து அவர்களினை கவலைக்கு உள்ளாக்கிவிட்டானே என்று... கவினும் மதியும் சாப்பிட அமர சந்திரன் எழுந்து கொள்ளத் தொடங்க

"அப்பா எல்லாருகிட்டயும் நான் பேசனும்... கொஞ்சம் நேரம் இருங்க", கவின்.

சந்திரன் அமரவும்...

"நீங்க என் மேல் கோபமா இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது... நான் பண்ணது தப்பு தான்... இப்போ சொல்றேன்.. என் மனைவியா வரனும்னா அது ஹம்சி மட்டும் தான்... நீங்க நிச்சயம் பண்ண வேண்டியதுலாம் தேவையில்லை. நேரடியா எனக்கும் மதிக்கும் கல்யாணம் வைங்க.. நான் நேர்ல போய் என் அத்தை மாமகிட்ட பேசிட்டு கலயண நாள் குறிக்க சொல்லிட்டு வறேன்... இப்போ எனக்கு வேலை இருக்கு.. நான் வறேன்..பை", என்று கூறிய கவின் நொடியும் தாமதிக்காமல் அவனது பைக்கில் ஏறி ஹம்சி வீட்டிற்குப் பறந்தான்..

வசு ஆன்ந்த அதிர்ச்சியில் இருக்க.. குடும்பம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். வேணி வேகமாக கடவுளின் முன் சென்றவர் தீபம் ஏற்றி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். வேணிக்கு கவினின் போக்கில் மாற்றம் தெரிந்து தான் இருந்தது.. எதோ பரிகொடுத்தது போன்று இருந்த அவன் முகத்தினைக் காண சகிக்காமல் இருந்தார். எப்படியோ திருமணத்திற்கு சம்மதித்துவிட்டான் என்று நினைத்தவர் நிம்மதியாய் இருக்க... அவன் மறுப்புத் தெரிவித்த நொடி சந்திரனிடம் புலம்பி இருந்தார்.

இதில் மேலும் முக்கியமான விவரம்... வசுவின் திட்டம் தான் உதய் மற்றும் கவின் இருவருக்கும் ஹம்சி மற்றும் ஹம்சவர்த்தினி இருவரையும் பெண் முடிப்பது...

ஹம்சி மற்றும் நிலா கல்லூரி செல்லும் சமயம்...அவர் என்றும் கோவிலுக்கு வரும் பொழுது தான் ஹம்சியினைச் சந்தித்தார். அப்பொழுது அவருக்கு ஹம்சி நிலா இருவரினையும் மிகவும் பிடித்துவிட... தியாவின் அன்னை மூலம் அவர்கள் விவரம் அறிந்தவர்... தியாவின் அன்னை ஹம்சியின் குடும சொந்தம். உதய்க்கு ஹம்சியின் அக்கா மற்றும் கவினுக்கு ஹம்சி எனவும் நிலாவினை மதிக்கு முடிப்போம் என்று இருக்க.. தேவன் கேட்டுக் கொள்ள மதிக்கு நிஷாவினை முடிவு செய்துவிட்டார். அதன் பின் கவின் திருமணம் பற்றி இப்போழுது பேசதீர்கள் மதியுடன் தான் என்று கூறிவிட உதய்க்கு மட்டும் பேசி ஹம்சி வீட்டிலும் சம்மதம் சொல்லிவிட... உதயும் ஹம்சவர்த்தினியும் நட்பில் தொடங்கி காதலில் முடிக்க... ஹம்சவர்த்தினியின் மூலம் ஹம்சி கவினின் ஆபிஸில் வேலை செய்வதனை உறுதி செய்து கொள்ள... உத்யும் முதல் நால் அவளை பார்த்து வாகினி என்று கூற அவளுக்கு அடையாலம் தெரியவில்லை. சரி அவளுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று உதயும் ஹம்சியிடம் சொல்லவில்ல நான் உன் அக்காவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று.. அவன் ஹம்சியிடம் பேசுவதனை எல்லாம் கவின் தவறாக எடுத்துக் கொள்ளக் காரணம் ஹம்சி உதயுடன் திருமண காரணமாக பேசுகிறாள் என்று தான்.

வசுவிற்கு மனம் நிம்மதி ஆனது. நாம் பார்த்திருக்கும் பெண்களே தனது பேரன்களுக்கு அமைந்து விட்டது என்று.. மதிக்கு மட்டும் மாறி இருந்தாலும் நிலாவினை அதிகமாக அவருக்குப் பிடித்திருந்தது என்னவோ உண்மை...

ஹம்சியின் வீட்டினை அடைந்த கவின் நேரே உள்ளே சென்றவன்.... கிங் அமர்ந்து இருக்க.. அவரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்க் அவரும் தீர்க்காயுசா இருப்பா எனக் கூற... தமிழ்செல்வன் என்ன எனப் பார்க்க...

"நான் ஹம்சிகிட்ட கொஞ்சம் பேசனும் மாமா.. எனக்கு அனுமதி தருவீங்களா.. நீங்க பயப்பட வேண்டாம்.. நல்ல விஷயம் தான்", எங்க் கூற..

கவினின் மாமா என்ற அழைப்பில் விழித்தவர் புன்னகையுடன் சம்மதமாக தலையாட்டி அவளது அறைக்குள் கரம் நீட்ட... கிங்கிற்கு மிக சந்தொசம். தனது இரு பேத்திகள் வாழ்க்கையும் சீரானது என்று...

வெளியில் இருந்த ஹம்சவர்த்தினி ஹம்சியின் அன்னை இருவரும் "என்னடா நடக்குது" என்ற ரீதியில் நின்று இருந்தனர்...

உள்ளே சென்ற கவின் கண்டது அழுது அழுது முகம் சிவந்து முடி கலைந்து கால்களினை மார்பில் அணைத்துக் கட்டிக் கொண்டு படுத்திருந்த ஹம்சி தான்.

"ம்க்கும்.... ", என்று கவின் குரல் கொடுக்க... அதுவரை அழுது கரைந்தவள் கவின் உருவம் கண்ணில் தெரிய கனவோ என்று திரும்பிக் கொள்ள... அதுவரை அவளின் செயல்களினைப் பார்த்தவன் அதன் பின் நொடியும் தாமதிக்காது அவளின் அருகில் சென்று அவளினை கரம் கொண்டு எழுப்பி அவளின் அதிர்ச்சியான முகம் கண்டு சிறிது புன்னகைத்தவன் அவளின் இரு தோளினையும் பற்றி நெருங்கி கன்னம் தாங்கி அவளின் இதழில் மிக அழுத்தமாக இதழ் பதிக்க... ஹம்சிக்கு கனவில்லை என உணர.. அவளும் அவனின் இதழ் ஒற்றலில் மெய் மறந்து போக... இருவரும் பல நிமிடம் பின் நிமிர.... ஹம்சிக்கு அதற்கு மேல் தாங்காமல் கவினை இருக அணைத்து அழுது கதறினாள். கவினுக்கு அவளின் வலி புரிந்தது... அவளின் முதுகினை ஆறுதலாக தடவியவன் அவளினை அவனும் இருக அணைத்துக் கொண்டான்...

இருவரும் நீண்ட நேரம் அணைத்த வண்ணம் இருக்க...

ஹம்சியின் முகத்தினைத் தன் கரங்களில் ஏந்தியவன் "நான் உன்னை காத்திருக்க சொல்லிட்டு தான் போனேன் டி.. ஆனால் உன்னை நினைக்காமல் இருக்க முடியவே இல்லை. உன்கிட்ட சம்மதம் சொல்ல வர முன்னே அந்த போட்டொ பார்த்து என்னை எங்கே நீ மறந்துட்டயோன்னு நினைச்சேன்... என்னை மறந்து தான் அவனுக்கு ஓகே சொல்லிட்டன்னு நினைத்தேன்.. அது தப்புன்னு எனக்கு நேற்று தான் புரிந்தது... ", கவின்.

"நான் உங்களை மறக்குறதா... இப்போ வரைக்கும்... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களை என்னால மறக்க முடியாதுங்க... நிஷா தான்", என்று ஹம்சி கூற வர... நடந்த அனைத்தினையும் கவின் ஹம்சிக்குக் கூற... தன் தவற்றினை எண்ணி வெட்கியவள் அவன் கரத்தினை எடுத்து தன் கரத்தில் பொத்திக் கொண்டாள்.

அவள் முகம் நிக்கியவன் விழிகளினை சந்தித்து.. ஒட்டு மொத்தக் காதலினையும் விழியில் பரிமாறி..."ஐ லவ் யூ டி...என் வாழ்க்கை முழுக்க நீ எனக்கு வேணும்.. வில் யூ மேரி மீ", எனக் கூற..

அவனின் காதலில் கரைந்தவள் அவனின் நெற்றியில் இதழ் பதித்து "சீக்கிரம்", என்று கூற... அவளைத் தூக்கிச் சுற்றியவன் அவளின் சத்தத்தினையும் பொருட்படுத்தாது திரும்ப அவள் இதழ் தீண்டி விடுவித்து... வெளியில் அழைத்து வந்து

... "சீக்கிரம் கல்யாண நாள் பார்க்கலாம் மாமா.. உதய்க்கு கல்யாணம் முடிந்து அடுத்த மாதம் எனக்கும் மதிக்கும் கல்யாணம்... ", கவின் கூறும் பொழுது தான் நிலா வெளியில் சென்று இருந்தவள் உள்ளே வர கவின் கூரிய வார்த்தைகளினைக் கேட்டவள் ஆன்ந்தத்தில் ஹம்சியினை வந்து கட்டிக் கொண்டாள்...

பின்.."சாக்கி ப்ரோ.. என்னை டீல்ல விட்டீங்க... எனக்கு சாக்கி எங்க...", நிலா..

"உனக்கு எவ்வளவு சாக்கி வேணுமோ கேளு தறேன்..". கவின்...

"இப்போ போங்க.. நான் லிஸ்ட் போட்டு வைக்குறேன்...", நிலா.

"கிங்... எனக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாருங்க.. நானும் சிங்கிளா இருந்து போரடிக்குது,...", நிலா.

"அப்பாகிட்ட சொல்லலாம் கண்ணு", கிங்.

அதன் பின் நிலா அமைதியாகிவிட, கிங் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

அதன் பின் இருவீட்டினரும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து உதய்க்கு திருமண நாளும் குறித்து... அடுத்த நாள் திருமண நாள் என்றானது... நிலாவும் வேணியும் பிரியமான தோழிகளாகவே மாறிப் போயிருந்தனர்.. ஹம்சி கூட கிண்டல் செய்ய ஆரம்பித்து இருந்தாள்.. "அவங்க எனக்கு மாமியாரா இல்லை உனக்கான்னு தெரில டி... இவ்வளவு க்லோஸ் ஆகிட்டீங்க" என்று...

நிஷாவின் குடும்பம், ஹம்சியின் குடும்பம், வசுவின் குடும்பம், நிலாவின் தனதை, தியா வீட்டினர் என அனைவரும் குழுமி இருந்தனர்....ஆபிஸ் நண்பர்கள்... ஊர் முழுவதும் குழுமியிருக்க.. அழகான வேலைப்பாடு செய்து மணமேடை திகழ

ஆசிரமக் குழந்தைகளும் தியாவுடனே விளையாடிக் கொண்டு இருக்க...

உதய் மணமேடையில் உட்கார்ந்து இருக்க... ஹம்சி ஹம்சவர்த்தினியினை அழைக்க அறைக்குச் செல்லும் நேரம் அவள் கை பிடித்து மற்றொரு அறைக்கு இழுத்துச் செல்ல.. யாரென பார்த்தவள் கவின் எனவும் அமைதியாக இருக்க..

அவளின் அழகில் மயங்கி இருந்தக் கவின் அவளின் இதழினைப் பற்றி விடுவிக்க... ஹம்சி சிரித்தாள்.

அவளின் சிரிப்பில் கேள்வியாக புருவம் சுருக்க..

"இல்லை.. எனக்கு இந்த நிகழ்வு கனவில் நடந்தது... அப்போ தான் நான் உங்களை விரும்பறேன்னு கண்டு பிடிச்சேன்", என்று கூற அவனும் அவளின் கனவில் அவளின் காதல் எவ்வளவு ஆழமானது என அறிந்தான்...

பின் அனைவரும் மேடையில் சூழ்ந்திருக்க... நிலா, ஹம்சி, ரக்ஷி, நிஷா நால்வரும் ஹம்சவர்த்தினி அருகில் நின்றிருக்க.. உதய் அருகில் கவின், மதி, ராம், ராஜு நால்வரும் நின்று இருக்க.. தன்னவளின் கழுத்தில் தனது உரிமையினை நிலைநாட்டினான் உதய். ஹம்சியும் வெட்கத்துடன் தலகுனிந்தாள்.

அந்த அறிய நிகழ்வு படம் பிடிக்கப்பட்டது..

அடுத்த மாதம் திருமண நாள் மதிக்கும் கவினுக்கும் குறிக்கப்பட்டது...

"நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே !!!"


17687


கவினின் காதல் நெஞ்சம், ஹம்சியின் மறக்காத அழியாக் காதல் இரண்டும் திருமண பந்தத்தில் இணையும்... நிலா, மதி, ராம், ரக்ஷி, ராஜு என அவர்களின் நட்பு என்றும் அவர்களுக்குத் துணையாய்....

திருமண நிகழ்வு மற்றும் நிலாவின் ஹீரோ...

அதனை அடுத்த பாகத்தில் காணலாம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤

நன்றி🤗🤗🤗

அடுத்த பாகம்💕💕💕💕💕

"நெஞ்சில் இன்னும் நீயடி"

💕💕💕💕💕💕💕💕💕


இப்பொழுது தொடரும்,
"கையில் நான் ஏந்தும் காதல் நீதானே" முடிவுற்றதும்தினம் ஒரு பதிவுடன் வருகிறேன்....

தங்களின் நிறை குறைகளை எனக்குத் தெரிவிக்கவும் நண்பர்களே !

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி😍


 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiiii drrrrr frndssss😍😍😍

I am blessed for your huge support😘😘😘😘😘

Tqqq uuu so much for you support drrr frnds💞💞💞


I am going to continue a second part in this page !!!

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே !

படிக்காதவர்கள் படிச்சிட்டு வாங்க டியர்ஸ்😘😘😘😘


2வது பாகம்

"நெஞ்சில் இன்னும் நீயடி ! "

18296
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18297



அத்தியாயம் 1

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤💔💔💔💔💔💔💔💔💔💔💔💓💓💓💓💓💓💓💓💓💓💓❣❣❣❣❣❣❣❣❣❣
❣🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉



மங்கள வாத்தியம் முழங்க மனிதர்களின் ஆரவாரம் நிரம்ப கோலாகலமாய் அந்தப் பெரிய கல்யாண மண்டபம் திகழ்ந்தது. எங்கு பார்த்தாலும் பட்டுப்புடவையும் மல்லிகை பூவும் சூடிய பெண்களும் அவர்களின் பின் குட்டி போட்ட பூனையாய் இளைஞர்களும் சுற்றித் திரிந்தனர்.

கல்யாணப் பெண் ஹம்சி தன் இயற்கை அழகில் சிறிது செயற்கை சேர்த்து தங்கப் பதுமை போல் நடந்து வந்து கொண்டு இருந்தாள். கவின் அவளை விட்டு கண்களைத் திருப்பவில்லை. லைட் பின்க் வண்ணத்தில் தங்க ஜரிகை இட்டு அதே நிறத்தில் ஸ்டோன் பதித்து தலை நிறைய மல்லிகை சூடி மெதுவாக பாதம் பதித்து கவின் அருகில் அமர்ந்தாள். அவள் வந்து அமர்ந்ததும் அவன் தன்னை அடக்கும் வழி தெரியாது மெதுவாக அவளின் புறம் நகர்ந்தவன் ஹஸ்கி வாய்ஸில் "ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ப்" என்றான். அவனின் வார்த்தைகள் விட அவனின் மூச்சுக் காற்றின் ஸ்பரிசம் அவளின் கழுத்திற்கு அருகில் கூச... பெரும் அவஸ்தையாய் இருக்க.. முறைக்க முயன்று தோற்றாள். எங்கே அவள் முறைக்க... அவன் தான் கண்களால் அவளை விழுங்கிக் கொண்டிருந்தானே. அதற்கு மேல் அவன் புறம் அவள் திரும்பவே இல்லை. எங்கு பார்த்தாலும் வண்ண மலர்களின் தோரணம். கைகளில் அனைவரும் அர்ச்சதை எடுத்துக் கொண்டு இருந்தனர். இன்னும் சில நொடிகளில் திருமணம். கல்யாண மண்டபம் கோலாகலமாகக் காட்சியளித்தது.

"மாங்கல்யம் தந்துனானேனா..."... என ஐயர் வாழ்த்த கவின் ஹம்சியின் சங்குக் கழுத்தில் தன் உயிரின் காதலின் உரிமையினை நிலைநாட்டினான். அவனை அதுவரை விழிகளில் காணாமல் அவன் செய்த இடைத்தீண்டல்களின் காரணமாய் குனிந்தே இருந்த ஹம்சி கவின் விழிகளினை அந்த நொடி சந்திக்க... அவன் இமைகளினை மெதுவாக அசைத்து கண் சிமிட்ட அவள் புண்ணகைத்த வண்ணம் கவின் கரன்களினைப் பற்றி தோள் சாய... அங்கிருந்த நண்பர்கள் கூட்டம் ஆரவாரம் செய்ய... நிலா கவினிடம் சென்று "சாக்கி ப்ரோ.. இன்னும் நேரம் இருக்கு. இவள் நைட் ஆகிடுச்சுனு நினச்சுட்டா போல.." என்றாள்.

அதைக் கேட்ட வேணி... "ஏய் அருந்த வாலு.. அதுலாம் நீ பேசலாமா... வாய் உனக்கு" என்றார்.

"ஏன் எனக்குக் கல்யாண வயது தான.. நான் ஏன் பேசக் கூடாது? போங்க பார்பி", நிலா.

"போடி அருந்த வாலு", வேணி.

"நீங்க திட்டுறதுக்கு கூட சுயமா திட்ட மாட்டீங்க.. உங்க பையன பாலோ பன்றீங்க?.. என்ன பார்பி நீங்க?", நிலா.

"நீ மட்டும் எனக்கு மருமகளா வந்த.. உன்னை நான் கொடுமை படுத்தியே உன் வாயக் கொறச்சிடுவேன் டி", வேணி.

"அதுக்கு நீங்க இன்னொரு பையனைப் பெத்திருக்கனும் பார்பி. நொவ் சோ லேட்😁", நிலா.

"அதனால் நீ தப்பிச்சிட்ட... பொலச்சி போ", வேணி.

"ஹி ஹி ஹி...", நிலா.

"ஏங்க நீங்க மட்டும் ஆசிர்வாதம் பன்னுறீங்க.. நான்?", வேணி.

"நீ இந்த உலகத்துக்கு வந்துட்டியா வேணி. நிலா கூட இருந்தனா நீ எல்லாரையும் மறந்துடுற... அதான் கவின் பொறுமை இல்லாம இங்க வந்துட்டான்", ஏன்று சிரித்தார் சந்திரன்.

"அம்மாடி மருமகளே அடுத்து மதிக்குக் கல்யாண வேலையப் பார்க்கனும் நியாபகம் இருக்கா", வசு.

"ஆஹ்ன் அத்தை. இதோ போறேன். வாடி வாலு", வேணி.

"ஹலோ நான் என் ப்ரண்டு கூட இருக்கனும். நீங்க உங்க மருமகள ரெடி பண்ணுங்க... போங்க.. பெரிய மருமகள கூட்டிப் போங்க", நிலா.

"அம்மாடி அரசி. நீயும் வாம்மா.. வேணி உள்ளே வா", வசு.

மதி மாப்பிள்ளை என்பதற்கான அடையாளத்துடன் மணமேடையில் உட்கார்ந்திருந்தான். அருகில் கவின் மதி அவனுக்கு செய்த வேலையைத் தொடர்ந்தான்(மாப்பிள்ளைத் தோழனாம்😅). ராஜ் மற்றும் ராம், உதய் மூவரும் கவினைக் கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.

மணப்பெண் அறையில் இருந்து மணப்பெண் வெளியில் வந்தாள். அவள் இருபுறமும் வசு மற்றும் வேணி அவளை அணைத்த வண்ணம் அழைத்து வர.. மணப்பெண்ணின் முகத்தில் சிரிதும் மகிழ்ச்சி இல்லை. முகம் சிவந்து வாடிக் கிடந்தது. பெண்ணை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் அதிர்ச்சி அடையாத ஒரே ஜீவன் சந்திரன் மட்டுமே.. கவின் ஹம்சி ராஜ் ராம் ரக்ஷி ஹம்சி உதய் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதுவரை எந்தவித உணர்வும் இல்லாது இருந்த மதி அவளைக் கண்டு அதிர்ந்து எழுந்து நிற்க... பாட்டித் தன் பார்வையினால் அவனை அமைதி காக்க சொல்லவும் அமைதியாய் நின்று இருந்தான். அருகில் வந்ததும் அவன் பேசத் தொடங்க...

"அரசு. நான் சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிப்பேன் சொன்ன. நான் சொல்றேன். இவளை தான் நீ கல்யாணம் பன்னனும். இது என் விருப்பம்", வசு.

"எனக்கு சம்மதம் பாட்டி", மதி.

அதுவரை இருந்த சிறிய நம்பிக்கையும் அவளுக்கு மறைந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதிர்ந்தாலும் கவின் ஹம்சி இருவரும் ஒருவித நிம்மதி மனதில் படர்வதை உணர்ந்தனர். மகிழ்ச்சியுடனே அனைவரும் இருவரையும் வாழ்த்தினர்.

பலவித யோசனைகளில் மதி தாலியினை அவளின் கழுத்தில் அணிவிக்க.. பலவித வேதனைகளில் அவள் தாலியனை ஏற்க நிமிர... அவர்களுக்கு அருகில் இருந்தவர்களைக் கண்டவள்.. அதிலும் சிறு மகிழவே செய்தாள்.

இசை இசைக்க.. அர்ச்சதை தூவ திருமணம் முடிந்தது...👏👏👏❤❤❤💑

நேசம் இணையும்🙏
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
வாரம் மூன்று அத்தியாயம் உடன் வருகிறேன்😘😘😘😘😘

(வியாழன், சனி மற்றும் திங்கள்)

தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி😍🤗

 
Status
Not open for further replies.
Top