All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவிராமின் 'மறப்பதில்லை நெஞ்சே! நெஞ்சே!' - கதை திரி

Status
Not open for further replies.

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 13:

என்ன டி இங்கே தனியா நீ
நிக்குற... வா சீக்கிரம் நேரம் ஆகுது. எனக்கு முக்கியமான க்ளாஸ் இருக்கு", நிலா.

"என்ன", கோவமாகக் கேட்டாள் ஹம்சி.

பின்ன காலையில் கெமிஸ்ட்ரி க்ளாஸ் என்றும் அதனால் எப்படியும் அட்டென்டன்ஸ் முடிந்ததும் பின் பக்கம் வந்துவிடுவேன் என்றும் கூறியவள் இப்படிக் கூறினாள் அவளும் முறைக்காமல் என்ன செய்வாள்.

"சாரி டி... அது வந்து", நிலா.

"எதுவும் சொல்லாத... எனக்கு எல்லாம் புரியுது. இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருக்குற இந்த மாடுலேசன மாத்து. வா", ஹம்சி.

"ஹி ஹி ஹி", நிலா.

"தூ...",ஹம்சி.

மதிய நேரம் நிலா 2 நாய்குட்டிகளைக் காணவில்லை என வருத்தத்தில் இருந்தாள். செக்யூரிட்டி மாறிவிட்டார். நாய்க்குட்டியை காணவில்லை. என்ன ஆனதோ என புலம்பிக் கொண்டு இருந்தாள். ஹம்சி தான் அவளை சாப்பிட அழைத்துச் சென்றாள்.

"என்ன நிலா. ஏன் டல் ஆ இருக்க", ரக்ஷீ.

"குட்டீஸ் காணோம். அதான்", நிலா.

"ஓ ஒரு பையன் அவன் வளர்த்துறேன் சொல்லி எடுத்துட்டுப் போனான்னு என் ப்ரன்ட்ஸ் பேசிக் கிட்டாங்க. யூ டோன்ட் வொரி நிலா", ரக்ஷி.

"ம்ம்ம். சரி", நிலா.

"ஹம்சி உனக்குப் பாடத் தெரியுமா🤔... ", கவின்.

"இதுவேரையா...", ராம்.

"இல்லை. ஏதோ சாமி பாட்டு மட்டும் பாடுவேன். ஏன் கேட்டீங்க..", ஹம்சி.

"அடுத்த வாரம் ஜோனல் லெவெல் காலேஜ் காம்பெடிசன். சிங்கிங் பேர் ஆ நீ பாடுறியா", கவின்.

"ஆனால் நான் சாமி பாட்டு மட்டும் தான் பாடி இருக்கேன்", கவின்.

"சரி. நீ ட்ரை பண்ணு அடுத்து பர்த்துக்கலாம்", கவின்.

"இங்கே என்ன நடக்குது?..",நிலா.

"இதோ... அவன் நடக்குறான். இந்த பக்கி நடக்குது... ஏன் கேட்குற", நிலா.

"டேய் உன்னை என் பீட்ஷாக்கு சாஸ் ஆக்கிடுவேன். என்னடா சொன்ன", அவன் பக்கி என்று கூறிய திம்ஸ் தீபா அவனை கொலை வெறியில் நோக்கிக் கொண்டு இருக்க

"தீபா அவனை நான் பார்த்துக்குறேன். நீ பீட்ஷா சாப்பிடு", சிரித்தவாறே கவின் கூறினான்.

"ஹா ஹா ஹா..", நிலா அண்டு ரக்ஷி.

"ரொம்ப சிரிக்காதீங்க... நான் கோவமா போறேன். பை", ராம்.

"ராம்", ஹம்சி.

"என்ன போகாதனு சொல்ல நீயாவது இருக்கியே ஹம்சிமா", ராம்.

"அதில்லை. நீங்க கோவமா போறீங்க. அதுல தெரியாம ரக்ஷி டிபன் பாக்ஸ் சேர்த்து எடுத்துட்டு போறீங்க", ஹம்சி.

"ஹாஹாஹா...", நிலா ரக்ஷி மற்றும் கவின் மூவரும் விழுந்து சிரிக்க...

"போறேன்", என்ற ராம் டப் என பாக்ஸை மேஜையில் வைத்துவிட்டு விறுவிறுவென்று சென்று விட்டான்.

"சரி நாளைக்கு மீட் பண்ணலாம் பை", சிரித்துக் கொண்டே கவின் ராமை பின் தொடர்ந்தான்.

"பை"...

மாலை நேரம் தனது கருப்பு நிற ஹோண்டா பைக்கில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தான். தூரத்தில் இருந்தே பார்த்த மதி அவனை அருகில் வருமாறு சைகை செய்தான்.

மதியின் தோளில் டாபி விளையாடிக் கொண்டு இருக்க... லில்லி மற்றும் சக்தி இருவரும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தனர்.

என்ன என்று கவின் கேட்க.. "இவன் தான் பர்ஸ்ட் டாபிய அவன் தோளில் வைக்கணும். பட் மாட்டேன் சொல்றான்", என லில்லி சைகையில் சொல்ல..

"இல்லை. இவள் தான்",என சக்தி கூற

"சரி 2 பேருக்கும் வேண்டாம் நான் வைக்குறேன்", என்றவன் அவன் தோளில் வைத்துக் கொண்டான்.

சக்தி லில்லி இருவருக்கும் டாபியைத் தோளில் வைப்பது என்பது ஒரு இமயமலை சாதனை. அதனை மதி மற்றும் கவின் இருவரும் செய்ய... அவர்களை ஏதோ சோட்டா பீமில் வரும் பீம் ஆகவே நினைக்கத் தொடங்கி விட்டனர்😄.

"நீங்கள் நிறைய லட்டு சாப்பிடுவீங்க தான", சக்தி.

"டேய் நிறைய லட்டு சாப்பிட்டு எப்பிடி டா இப்படி பிட்டா இருப்பேன்", கவின்.

"ஹாஹா...", மதி.

"இவன் எதுக்கு சிரிக்குறான். எதோ சரியில்லையெ.. ", என கவின் நினைக்க..

"பொய் சொல்றீங்க.. லில்லி இவங்க நிறைய லட்டு சாப்பிடாம எப்படி பவர் வரும்", சக்தி.

லில்லி அதை ஆமோதிப்பதாக சைகை செய்யவும் மதிக்கு சிரிப்பை அடக்கும் வழி தெரியாது சத்தமாக சிரித்துவிட...

கவின் அப்பொழுதுதான் தெளிந்தான். "அடேய் என்னை இன்னும் பச்சப் புள்ளனு நினச்சீங்களா... நான் லட்டு சாப்பிட்டு வித்தை காட்ட... உங்களை..", அவர்களைத் துரத்தி விளையாடி என ஒரு வழியாய் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

இருவரும் வீட்டினுள் நுழைய.. உதய் டீ உடன் வர.. இருவருக்கும் தெரிந்தது.. தாய் மகாபாரதம் பார்க்கிறார் என்று. மூவரும் டீ அருந்திக் கொண்டே சில நடப்புகளை பேச...

"உனக்கு நாள் பார்த்தோம்.. சனிக் கிழமை. நீ சண்டே போக ப்ராப்லம் இல்லை. ஓகே தான..", உதய்.

"எனக்கு ப்ராப்லம் இல்ல டா. பியூட்டி எங்க", மதி.

"தோட்டத்துல இருக்கு டா. நீ போ", உதய்.

"உனக்கு என்ன வேண்டும் சொல்லு டா.. எடுத்துட்டு வறேன்", உதய்.

"எனக்கு பஜ்ஜி டா... ", டிவி பார்த்துக் கொண்டே கவின் கூறினான்.

பீஸ்மர் கர்ணனிடம் உரையாடும் காட்சி. கவின் தாய் உடன் ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான். வெகு நேரம் ஆகியும் உதய் காணவில்லை என கவின் பார்க்க... அவன் தாயின் அருகில் உட்கார்ந்து அவனும் பார்த்துக் கொண்டிருக்கக் கண்டவன்... டேய்.....

"போ அந்த பக்கம் போ டா", வேணி.

"ம்மாஆ.....", கவின்.

"உதய். அவன் வாய்ல பஜ்ஜிய வை டா... சீக்கிரம்", வேணி.

"இதோ...", உதய்.

"ம்ம்ம்ம்...", என்று கொண்டே பஜ்ஜியை சுவைத்துக் கொண்டே அவனும் தொடரினைத் தொடர்ந்தான்😁.

பெரிய மாளிகை போன்ற வீடு. பின்க் நிறத்தில் பெயின்ட் செய்திருக்க... வீட்டினைச் சுற்றிலும் தோட்டம் அமைத்திருந்தனர். வீட்டின் முன், இடது வலது புறம் அனைத்தும் பூச்செடி. பின் புறம் முழுவதும் காய்கறி வகைகள். வீட்டிற்குத் தேவையான அனைத்தும் வீட்டிலேயே கிடைக்கும் வண்ணம் இருந்தது.

இடது புறத்தில் அடர்ந்த முல்லைக் கொடி. சுற்றிலும் மலர் மணம் பரப்ப... அதன் அருகில் சிறிய மண்மேடை. அங்கு அமர வசதியாய். அதன் அருகில் தான் வசு ஓய்வு எடுப்பார். மதி அங்கு வந்து அவர் அருகில் உட்கார்ந்தான்.

வசு அவனைப் பார்த்துவிட்டு அவர் அருகில் இருந்த இளஞ்சிவப்பு நிற ரோஜா மலரினை அவன் கையில் தர... அவனும் வாங்கி கைகளுக்குள்ளே பொறுத்திக் கொண்டான்.

"ஏன் எதுக்குனு கேட்க மாட்டியா டா", வசு.

"பியூட்டி. இதை நீ எங்கிட்ட கேட்டுத்தான் தெரிஞ்சிக்கனுமா?", மதி.

"நான் தப்பு பன்றனோனு தோணுதுப்பா..", வசு.

"நீ என்ன பன்னாலும் என் நல்லதுக்கு தான். ஸோ எதயும் யோசிக்காத. வா", மதி.

சனிக்கிழமை...
14630


அலங்கார வேலைகள் தொடங்கியது🤗🤗🤗

Hiii drs...

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you...

தங்களின் மேலான கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி😊

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 14:

மாளிகை போன்ற இல்லத்தின் அனைத்து இடங்களும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ண வண்ண ஒளியில் இல்லம் முழுவதும் பிரம்மிப்பாய் இருந்தது. வெளியில் அதிகம் யாரையும் அழைக்காமல் வீட்டினர் மட்டும் சேர்ந்து நிச்சயம் செய்ய முடிவு செய்து இருந்தனர். அதன்படி குடும்ப உறுப்பினர் மட்டுமே இருந்தனர்.

கவின் மற்றும் உதய் இருவரும் மதியை ரெடி செய்ய... வேணி மற்றும் வாசுகி நிஷாவை ரெடி செய்தனர்.

வசு மதியிடம் வந்தவர் அவன் முழு உருவத்தையும் கண்ணில் நிரப்பிக் கொண்டார்.

ஆறடி உயரத்திற்கும் சற்று அதிகமாய் மாநிறத்திற்கும் கூட, கூரான நாசி, அடர்ந்த புருவம் புன்னகை படர்ந்த விழிகள், படர்ந்த தோள், தினமும் ஜிம்மில் பயிற்சி செய்து அழகான தோற்றம் பெற்று இருந்தான். என்றும் அவனை பேன்ட் டிஷர்டில் பார்த்தவர் இன்று தான் வெண்மை நிற வேஷ்டி சட்டையில் பார்க்கின்றார்.

"என் கண்ணே பட்டிடும்... சுத்திப் போடனும் அரசு", வசு.

"பாட்டி இது என்ன ஓர வஞ்சனை. நான்", கவின்.

"என் பேரன் மூணு பேரும் மூணு இளவரசன்கள் தான்", வசு.

"வசு அப்போ நீ தான் எங்களுக்கு இளவரசியா", என்று உதய் கிண்டல் செய்ய..

"படவா..சீக்கிரம் வாங்க டா", வசு.

"சரிங்க பியூட்டி", மதி.

"எனக்கு இதில் சுத்தமா விருப்பமே இல்லை. நீ எதுக்கு இதுக்கு சம்மதம் சொன்ன... எனக்குப் பிடிக்கல சொல்ல வேண்டியது தான...", வாசுகி.

"அம்மா.. ஏன் அப்படி சொல்றீங்க... மாமாக்கு என்ன குறை... எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்", கண்களில் கனவுகளுடன் நிஷா கூறினாள்.

"நீ எப்படி டி என்க்குப் பிறந்த.. சை... என்னவோ பண்ணுங்க", என்று கூறிய வாசுகி கோவமாக சென்று விட்டார்.

பூவினை எடுக்கச் சென்று இருந்த வேணி உள்ளே வந்து நிஷாவினை அழைத்துக் கொண்டு சென்றார்.

மதியினைக் கவினும் உதயும் நிச்சய மேடையில் அமர வைத்து கேலி செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிஷாவை அழைத்து வந்த வேணி மதி அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தார். அதுவரை குனிந்த தலை நிமிராமல் வெட்கமே உருவாய் அமர்ந்து இருந்தாள் நிஷா.

நிஷா பார்க்கத் தெவிட்டாத அழகு. நல்ல நிறம். இடைதாண்டிய கூந்தலினைத் தாயின் வற்புறுத்தலால் முதுகு வரை வெட்டி விட்டு இருந்தாள். என்றும் அமைதியே உருவான முகம். எதையும் வெளிப்படையாய் பேச மாட்டாள். அவள் நினைப்பதை யூகிக்கவும் முடியாது. வீட்டினர் அனைவரும் அவள் அமைதியை ரசித்தனர்.

அ னைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இருக்க வசு அனைவரையும் அமைதியாக இருக்கும்படி செய்து நிச்சயம் வாசிக்க ஐயரை கூறவும் அவர் வாசிக்கத் தொடங்கினார்.

நிச்சயம் வாசித்து முடிக்க நிஷா பார்க்கும் பார்வையினை அறிந்த தேவன் நிஷாவின் அருகில் சென்று கண்களில் வேண்ட...

நிச்சயம் முடிந்து மோதிரம் அணிந்து அனைவராலும் மதி மற்றும் நிஷா ஆசீர்வதிக்கப்பட்டனர்.

அனைவரும் கவினை பாட வேண்டும் என்று சொல்ல...

உதயும் சேர்ந்து கொள்ள கவின் பாடத் தொடங்கினான்☺ ....

"கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல் நம் வீட்டில் எப்போதும்

கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

அண்ணி உன் வடிவில் அன்னையை பார்த்தேன் அன்பினை பார்த்தேன்
இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்
ஒன்றில் ஒன்றாக நெஞ்சங்கள் கலக்கும் பிறர்க்கென துடிக்கும்
இந்த வாழ்க்கை ஒரு ஆனந்தம்
திருமணங்கள் எல்லாமே சொர்க்கத்திலே முடிவாகும்
அண்ணி இவள் திருமணமோ சொர்க்கத்தையே உருவாக்கும்
நீங்கள் தரும் அன்பினிலே குழந்தையென மாறுது என் மணம்

கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

அழகான மல்லிப்பூ பொண்ண பாரு
வெக்கத்தால் ரோசாவா மாறுது பாரு
கன்னத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு
காதோடு காதல் சங்கதி பேசு

தம்பி உன் குறும்பை இவள் மிக ரசிப்பாள் குறும்புகள் செய்தால்
தாயை போல இவள் கண்டிப்பாள்
தம்பி நீ இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தால்
முட்டி போடச்சொல்லி தண்டிப்பாள்
எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு யாருமில்லை முன்னாலே
அண்ணி ஒரு சொல் சொன்னால் அடங்கிடுவேன் அன்பாலே
இறைவனுக்கு நன்றி சொல்வோம் இவள் நமக்கு கிடைத்தது ஒரு வரம்

கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல் நம் வீட்டில் எப்போதும்

கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ..."

பாடலைப் பாடி முடிக்க அதுவரையிலும் கட்டுப்படுத்தி இருந்த தன் அழுகையை அடக்கும் வழி தெரியாது நிஷா வெடித்து அழத் தொடங்க... தேவன் அவளை அழைத்துச் செல்லும்படி வாசுகியிடம் கூறி அனைவரிடமும்....

"நிஷா மகிழ்ச்சில பொங்கிட்டா. அவளுக்கு இந்தக் கல்யாணம் கனவு. அது நினைவானதுல சந்தோசம் தாங்காமல்...", தேவன் கூற

"புரியுது தேவா... நீ நிஷாவை போய் பாரு .. ", வசு.

நிஷா இருக்கும் அறைக்கு உள்ளே அழைத்துச் சென்ற பின் தேவா நிஷா இருவரும் பேசிக் கொண்டு இருக்க கையில் தண்ணீருடன் வாசுகி வந்தார்.

"நானும் அவளைப் போய் பார்க்குறேன் அத்தை", வேணி.

"போ மா... மதியை அழைச்சிட்டு வாங்க", என்று கவினிடமும் உதயிடமும் கூறிய வசு

"நீயும் போய் நிஷாவை பாருப்பா", என சந்திரனிடம் கூறினார்.

சந்திரன், தேவனின் நெருங்கிய சொந்தம் மட்டும் வந்திருக்க.. அவர்களை வழி அனுப்பியவர் நிஷா இருக்கும் அறைக்குச் சென்று அவர்கள் உடன் உறையாடிக் கொண்டு இருந்தார்.

இங்கு மதி வசுவின் மடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தான். அவரின் இரண்டு தோள்களிலும் கவின் மற்றும் உதய் உறங்க வசு யோசனையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தார்.

Hii drs..

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you..

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 15:

அதிகாலை சூரிய ஒளி அறையினுள் படரும் வரை இரவில் இருந்த நிலையிலேயே இருந்தனர். மதி தான் முதலில் கண் விழித்தான். பாட்டியும் உறங்கக் கண்டு... இரவு முழுவதும் இப்படியே உறங்கி விட்டோமே என்று நினைத்தவன் வசுவுக்கு கால் மறுத்து போய்விடும் என்று நினைத்தவன் கவினையும் உதயையும் நகர்த்தி படுக்க வைத்து வசுவை நன்றாக உறங்க வைத்தான். வசு அவன் எழுந்ததும் விழித்தாலும் கண் திறக்கவில்லை. அவர் தான் இரவு முழுவதும் உறங்கவில்லையே... இப்பொழுது உறங்கத் தொடங்கினார். கட்டில் 3 பேர் தாராளமாகத் தூங்கும் அளவு பெரியது. மதி எழுந்து ப்ரஸ் ஆகிவிட்டு வேணியிடம் சென்று அவர்களை எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டு ஜிம் சென்று வந்தவன் அவனின் காதலியிடம் வந்து சேர்ந்தான். அது வேறு ஒன்றும் இல்லை. வீட்டின் இடது புறம் உள்ள முல்லைக் கொடியின் அருகில் செவ்வந்திப் பூச்செடி வைத்து இருந்தார் வசு. அதன் நிறம் மற்றும் மணம் இரண்டிற்கும் அடிமை ஆனவன் தான் இதுவரை அதிலிருந்து மீண்டானில்லை. கவினுக்கு எப்படி ஜாதிமுல்லை பிரியமோ அதே போன்று உதய்க்கு தாழம்பூ மணம் பிரியம். மூவரும் அடிக்கடி தன் காதலி இவள் என்று பேசிக் கொள்வர். இளவயதில் இருந்து மூவரும் காதலித்துக் கொண்டு இருக்கின்றனர். என்றும் முதல் காதல் அழியாது அல்லவே😍...
டேய் நீ மட்டும் உன் ஆள பார்க்க வந்துட்ட என்னை எழுப்பலாம் இல்ல...",கவின்.
"நீ தினமும் இங்கே தான் டா இருக்க... நான் நாளைக்கு கிளம்பிடுவேன். அப்புறம் நான் இல்லாம என் டார்லிங் கஷ்டப் படுவா இல்லயா..", மதி.
"சரி சரி.. நான் உங்கிட்ட ஒண்ணு கேட்கனும் டா..", கவின்.
"சொல்லு டா", மதி.
"உனக்கு நிஷா மேல இன்டெரெஸ்ட் இருக்குதா. உனக்கு ஓகே வா இல்ல வசுக்காக ஒகே சொன்னியா...", கவின்.
"ஏன் அப்படி கேக்குற... என் சம்மதம் இல்லாம பியூட்டி எதுவும் செய்ய மாட்டாங்க தெரியும் தான", மதி.
"நான் உனக்கு சம்மதமானு கேட்டேன்", கவின்.
"சம்மதம் தான்டா...", மதி.
"ம்ம்ம். தெளிவா தான இருக்க...", கவின்.
"என்ன டா.. சொல்றா", மதி.
"இல்ல..என் பின்னாடி நிஷா வந்தா... அதான் உனக்கு அவளை பிடிக்கும்னு சொல்ல வைக்க தான் இப்படி கேட்டேன்... அவள் வந்துட்டு போய்ட்டா", கவின்.
"டேய். உன்னையலாம் வச்சிகிட்டு", என்று மதி கவினைத் துரத்தினான்.
ஒரு மண்டபம் அதில் பூக்கள் நிரம்பி இருக்க ஹம்சி அருகில் கவின் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு நின்றிருக்க... ஹம்சி அவள் கைகளை விடுவிக்கப் போராடிக் கொண்டு இருந்தாள். கவின் யாரும் அறியாவண்ணம் அவளை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றான். அவள் அவனை முறைக்க கவின் அவள் கைகளை சுவற்றில் வைத்து சிறை செய்தான். அவள் மிரண்டு விழிக்க கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தான். அவன் குழியில் விழுந்தவள் கைகளை அவிழ்க்கும் போராட்டத்தில் இருந்து அவன் கன்னக் குழியில் இருந்து மீழ முடியாமல் தவித்தாள். அவன் அவள் காதருகில் நெருங்க.. ஹம்சியின் சீரற்ற மூச்சினை கண்டவன் அவள் நெஞ்சில் கரம் பதித்து ஆசுவாசப் படுத்த முயல அவனைத் தள்ளி விட முயன்று தோற்றாள். அவன் மீண்டும் அவள் காதின் அருகில் சென்று இருக்க...
ஹம்சி மனம் படபடவென அடித்துக் கொண்டது. இன்னும் சில நொடியில் அவன் என்ன செய்வான் என விழி மூடி நின்றிருக்க...
கவின் அவள் காதருகில் ஹஸ்கி வாய்ஸில் "உன் லிப்ஸ்டிக் அழிஞ்சிடுச்சி.. சரி பண்ணு😜", என்றான்.
"என்ன ...🙃" என்றவள் போடா லூசு என்றவள் அவனை தள்ளி விட...
அவளை உலுக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து புசு புசுவென மூச்சினை இழுத்து விட்டபடி முறைத்துக் கொண்டு இருந்தாள் நிலா.
பின்ன... அவள் கனவில் தள்ளுகிறோம் என்று நினைத்து நிலாவினை பெட்டில் இருந்து தள்ளி விட்டிருந்தாள். அதன் பின் ஒரு போர்க்களமே நடந்து முடிந்தது🤣🤣🤣.
ஞாயிறு என்பதால் அன்று ஹம்சி நிலா இருவரும் உணவு சமைத்து உண்டு வீட்டிலேயே பொழுதினைக் கழித்தனர்.
ஞாயிறு நள்இரவு வீடு முழுவதும் அடர்ந்த இருட்டு... மெதுவாக ஒரு உருவம் பதுங்கி பதுங்கி அறையின் கதவினைத் திறந்தது. கதவின் க்றீச் என்ற சத்தம் அவ்வுருவத்தினை காட்டிக் கொடுத்து விடுமோ என்று பயந்து சிறிது நேரம் காத்திருந்து பின் திறக்க அமைதி மட்டுமே.... மெதுவாக அடிகளினை எடுத்து வைத்து உறங்கிக் கொண்டு இருந்த உருவத்தில் தான் செய்ய வந்த செயலைச் செய்து விட்டு மற்றொரு அறைக்குச் சென்று அதே செயலைச் செய்து திரும்பும் நேரம் அவ்வுருவம் அசைய... எங்கே மாட்டிக் கொண்டோமோ என பயந்து கட்டில் அடியில் உருண்டு கொண்டது. அசைந்த உருவம் மீண்டும் உறங்க அதன் பின் ஆசுவாசம் அடைந்த உருவம் வெளியில் வந்து மற்ற அறையில் இருந்த அனைவரது அறையின் கதவினையும் திறந்து விட்டு அலைபேசியில் சக்சஸ் என உரைத்தது.
Hii drs..
Forgive me with your love if there is a mistake...
Give your support drs...
Thanking you 😘😘😘

நேற்று குட்டி எபி என்பதால் இன்று அப்டேட் செய்துள்ளேன்🤗🤗🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 16:

உதய் நிகிலுக்கு கால் செய்து சக்சஸ் எனக் கூறினான். நிகில் ஹோம் குழந்தைகளுடன் வெளியில் வெடி வைத்துக் கொண்டு இருந்தான். நிகில் உதயின் நண்பன்.

வீட்டின் வெளியில் பயங்கரமான வெடிச்சத்தம் கேட்க என்னவென்று அனைவரும் அதிர்ந்து வெளியில் வந்தனர். வெடி வெடித்ததில் ஒரே புகையும் தூசியும் இருக்க கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை.

"என்ன ஆச்சு" என்று பின் இருந்து மதி கேட்க

அனைவரும் சிரிக்கத் தொடங்க.. என்ன ஆச்சு இவங்களுக்கு என்று இவன் குழம்பினான்.

கடைசியில் வந்த கவின் "இங்கே என்ன பன்றீங்க எல்லாரும்... என்ன சத்தம்", என

மதி உட்பட அனைவரும் அவன் புறம் திரும்பியவர்கள் மேலும் நகைக்க.. மதி தன்னைக் கட்டுப்படுத்த முடியாது... வயிற்றைப் பிடித்து சிரிக்க ஆரம்பித்தான்.

இவங்களுக்கு என்ன ஆச்சு... பின்னாடி ஒரே புகையா வேற இருக்கு... யாராவது நைட்ரஸ் ஆக்சைடு போட்டு விட்டாங்களா.. அதான் இதுங்க இப்படி சிரிக்குதுங்க... இவன் என்ன இப்படி இருக்கான்.

"டேய் என்ன டா.. பேன்சி காம்பெடிசன்ல சேர்ந்து இருக்கியா.. இப்படி இருக்க..", கவின் மதியிடம் கேட்க..

"நீயும் அப்படிதான் டா இருக்க என் தவப் புதல்வனே..", சிரித்துக் கொண்டே வேணி கூற

கவினும் மதியும் தங்களைப் பார்த்துக் கொண்டனர்.

தனது முதுகில் இருந்து இரண்டு தேவதை இறக்கை வீற்று இருக்க... முகத்தில் வெண்மை நிறம் பூசப்பட்டு மூக்கின் நுனியில் சிவப்பு நிறத்தில் வண்ணம் பூசப் பட்டு தேவதையா இல்லை கோமாலியா என்று எண்ணும் வண்ணம் நின்று இருந்தனர்.

"என்ன இது யாரு வேலை", வசு

"உதய் தான்மா.. அவன் தான் இங்கே இல்லை. உதய்ய்ய்ய்...", சந்திரன்.

கவினும் மதியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு இணைந்து வீட்டின் உள்ளே நுழைய...

கதவினைத் திறந்ததும் மலர்கள் அவர்களினை அலங்கரிக்க.. டப் டப் என சத்தம். பலூன் சிலது வெடிக்கும் சத்தம்.

வெடி சத்தம் கேட்ட அதிர்ச்சியில் யாரும் வீட்டினை கவனிக்கவில்லை. வீட்டினைச் சுற்றிலும் மலர்களும் கான்டில் லைட்ஸ் மற்றும் நடுவில் பெரிய கேக் வைக்கப்பட்டு இருந்தது. மதி கவின் இருவரும் இணைந்தே சிரித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தனர். அவர்கள் அருகில் வர வர ஒளி அவர்களினைத் தொடர்ந்தது.

"டேய் உதய்... நீ தான்னு தெரியும் வா டா.. ", மதி.

கயிற்றில் இருந்து இருவரிடம் கத்தி வந்தது. இப்போதைக்கு வரமாட்டான் என நினைத்து அவர்கள் கேக்கில் இருந்த கேன்டிலை அனைத்தனர். இருவரும் வெட்டத் துவங்கும் வேளை அவர்களை மட்டுமே போகஸ் செய்த ஒளி மறைந்து பெரிய வெளிச்சம் வர... சுற்றிலும் குடும்பமே நிற்க... அதனுடன் லிட்டில் ஹோம் குழந்தைகள் அனைவரும்.... நிகில் உடன்...

இருவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் இணைந்து கேக் கட் செய்யும் காட்சி உதயினால் வீடியோ எடுக்கப் பட்டு இருந்தது.

குழந்தைகள் அனைவரும்... மொத்தக் குடும்பமும் விஷ் செய்து தங்களது கிப்ட் ஐ பரிசளித்து கொண்டாடினர்.

கவினும் மதியும் உதயை அணைத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கவின் மதி இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள்.

அன்றைய நாள் முழுவதும் குழந்தைகளுடனே கழித்தனர். மகிழ்ச்சியாய் கழிந்தது.

கவின் உதய் மதி இருவரும் மாடியில் உள்ள அறைகளில் இருந்தனர். கீழே மூன்று அறைகளில் வசு, இந்திரன் தம்பதி இருந்த அறையில் தேவன் தம்பதியினர் மற்றும் மற்ற அறையில் சந்திரன் வேணி இருந்தனர். மாடி கெஸ்ட் அறையினை நிஷாவிற்கு கொடுத்தும் இருந்தனர்.

மாடியில் இடது புறம் இரண்டு அறைகள் கவின், மதி மற்றும் வலது புறம் இரண்டு அறைகள் உதய், நிஷா. நடுவில் படிகள் பெரிதாக இருந்தது.

படிகளிலிருந்து இடது புறம் திரும்பியதும் கவின் அறை பின் மதி அறை. வலது புறம் முதலில் உதய் அறை பின் கெஸ்ட் ரூம்(நிஷா அறை).

கவின் மாலை நேரம் அவனின் அலைபேசியில் அழைப்பு வர... வேகமாக படிகளில் ஏறினான். அவன் இடப்புறம் திரும்பியதும் அருகில் இருந்த மேஜையில் ஒரு கிப்ட் பாக்ஷ் இருக்க... அவன் அதனைப் பார்க்க... "லவ் யூ மாமா... ஆல்வேஸ் யுவர் நிஷா" என்று இருக்க... அதனை மதியிடம் கொடுக்க எடுத்துச் சென்றான்.

அதற்குள் அவன் அலைபேசி அழைப்பு நின்று விட்டது. சரி இதைக் கொடுத்துவிட்டு அழைப்போம் என மதியிடம் சென்று

"உனக்கு என்ன வேண்டும் சொல்லு டா...", கவின்.

"விளையாடாத டா... எனக்கு பிலைட்க்கு நேரம் ஆகுது. என்ன சொல்லு..", மதி.

"நிஷா இந்த கிப்ட் உனக்கு மேஜைல வச்சு இருந்தா... ", கவின்.

"ஓ... கொடுடா..", மதி.

"இப்போ தான் நேரம் ஆகுது சொன்ன.. இப்போ ஆவலையா..", கவின்.

"என்னப்பா மதி. கிளம்பிட்டியா..", வசு.

"பியூட்டி.. இவன் நிஷா கிப்ட் கொடுக்க மாட்றான். என்ன கேளு", மதி வசுவின் மனநிலையினைக் கருத்தில் கொண்டு பேச்சை மாற்றினான்.

"நீ ஏன்டா அவன் கிப்ட் அ எடுக்குற... உனக்கு ஒரு பொண்ண பார்த்து அவள் கிப்ட் அ வச்சுக்க.. கொடு டா", வசு.

"எனக்கு இப்போ கிப்ட் வேண்டாம் வசு. வெய்ட் பண்ணலாம். நல்லதே நடக்கும்", கவின்.

"என்ன டா... எதோ ஆல்ரடி பார்த்துட்ட போல... சரியில்லையெ..", மதி.

"அப்படியா கவின் கண்ணா..", வசு.

"அதெல்லாம் இல்லை வசு.... இதோ எனக்கு கிப்ட் வரப் போகுது... பை", கவின் அவனுக்கு வந்த அழைப்பினை கூறிவிட்டு அவனறைக்குச் சென்று விட்டான்.

"என்னடா அரசு இவன் இப்படி சொல்றான்", வசு.

"பியூட்டி நீ கை காட்டுற பொண்ணு தான் எனக்கும் உதய் கவின் மூணு பேருக்கும்" மதி.

"என்ன கொடுமை காரினு நினச்சியா டா. உங்கள் விருப்பம் தான்டா எனக்கு முக்கியம். அவன் உதய் இருக்க, அதுக்குள்ள யாரையும் பார்த்துடக் கூடாதுனு தான் நான் கேட்டேன். உனக்கும் உதய்க்கு அப்புறம் தான் கல்யாணம் செய்து வைப்பேன்", வசு.

"ஓ அப்போ லவ் அலவுட். அப்படித்தான பியூட்டி", வசு.

"ஏன் அரசு நீ யாரையாவது விரும்புறியா... அது தெரியாம நான் எதாவது ", வசு தொடங்க

"அச்சோ.. பியூட்டி... அப்படி எதுவும் இல்லை. கவின்க்கு இந்த குட் நியூஸ் சொல்ல தான் கேட்டேன்",என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

இருவரும் இணைந்து பிலைட் செல்ல கிளம்பினர்.

கவின் தன் அறையில் தனக்கு வந்த நம்பருக்கு அழைத்துக் கொண்டு இருந்தான்.

ஹம்சி நிலா இருவரும் ராம் கவினுக்குப் பிறந்த நாள் எனக் கூறவும் அவனுக்கு விஷ் செய்ய அழைத்தனர். அவன் எடுக்கவில்லை எனவும் நிலா கீழே குழந்தைகளுடன் விளையாடச் சென்று விட்டாள். ஹம்சி மட்டுமே அறையில் இருக்க... கவின் அழைப்பினைக் கண்டவள் எடுக்கலாமா வேண்டாமா என மனதில் போரிட்டுக் கொண்டு இருக்க அதற்குள் அழைப்பு துண்டிக்கப் பட்டது.

திரும்ப அழைப்பு வர... டக்கென எடுத்தவள் இதழ்கள் பிரிய மறுத்தது. கவின் ஹலோ.. என

"இவள் இதழ்களில் காற்று தான் வந்தது"

"ஹலோ... ஹம்சி", கவின் அவள் நம்பர் எனவும் பெயரினைக் கூற

"ம்ம்ம் ",என்ற பதில் மட்டுமே...

"என்ன சொல்லு", கவின்.

"உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல", ஹம்சி.

"என்னடி ஹம்சி நீ இப்படி பேசுனா.. அவன் என்ன நினைப்பான். அச்சோ..", ஹம்சி மைண்டு வாய்ஸ்.

"சரி. அவ்வளவு தானா", கவின்

"வேற என்ன", ஹம்சி.

"ஒரு கிப்ட்... இல்லை ஒரு கி...", கவின் கூற

அதற்குள் ஹம்சியிடம் இருந்து மொபைல் பறிக்கப் பட்டு இருந்தது. பாவம் கவின் என்ன கூற வந்தானோ அது காற்றோடு போனது...

"ஹாய் சாக்கி ப்ரோ... ஹாப்பி பொறந்த நாள் வாழ்த்துக்கள்... ட்ரீட் எங்கே ப்ரோ...", நிலா.

"என்ன வேணும் சொல்லு நிலா... " கவின்.

"எனக்கு என்ன ப்ரோ.. அஸ் யூஸ்வல் டைரிமில்க் தான்", நிலா.

"ஹம்சிக்கு", கவின்.

"அவகிட்டயே கேளுங்க ப்ரோ..", நிலா.

"என்னை வேண்டும்னு சொல்லு ஹம்சி", கவின்.

"என்ன ", ஹம்சி அதிர்ந்தாள்.

"என்னை வேண்டும்னு
சொன்னாலும் ஓகே", கவின்

"என்ன சொல்றீங்க", ஹம்சிக்கு வியர்த்தது.

"என்ன ட்ரீட் வேண்டும் சொல்லு டி...", நிலா.

"அய்யோ... இவள் வேற... இங்கே என்ன நடக்குதுனு தெரியாம... ", ஹம்சி மைண்டு வாய்ஸ்.

"யோசிச்சு சொல்லு... பை", கவின்.

ஹம்சி மொபைலைக் கையில் வைத்துக் கொண்டே சிலையாய் இருந்தாள்.

நிலா அவளை அழைத்து அழைத்துப் பார்த்து பொறுமை இழந்தவள் அவளின் தலையில் ஒரு டம்ளர் நீரினை ஊற்றினாள்..!!!

அப்படியும் அசையவில்லை ஹம்சி💘💘💘!!!

Hii drs...

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you...

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗🤗🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 17

மதி வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு வசு கவினுடன் காரில் ஏறினான்.

மூவரும் ஏர்போர்ட் வந்தடைந்தனர்.

"பியூட்டி இப்படி முகத்தை வச்சிருந்தா நான் எப்படி சந்தோசமா போவேன்...", என்று வசுவின் கையினைப் பற்றிக் கொண்டு மதி கூற...

"டேய் மதி நீ லாஸ்ட் வீக் சண்டே ஈவ்னிங் வந்துட்ட போல... அதுவரைக்கும் என்னடா பண்ண...", கவின் கேட்க...

"என்ன மதியமே வந்துட்டியா... நைட் தான நீ என்னைப் பார்க்க வந்த ...", எனக் கோவமாக மதியிடம் வசு கேட்க...

"இப்படி மாட்டி விட்டுடியே டா... கவினு.... உன்னைலாம்", என்று மனதில் நொந்தவாறு

"பியூட்டி அவன் சொல்றத நம்புறியே... நான் உன்னைப் பார்க்க வேண்டும்னு எவ்வளவு நேரம் காத்திருந்து அவசர அவசரமா வந்தேன்... என்னை போய்...", என்று வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

"டேய் படவா.. உன்னை", என தோளில் இரண்டு அடி வைத்தவர் அவனை இருக அணைத்துக் கொண்டார்.

சூழ்நிலையினை மாற்றிய கவினைக் கனிவுடன் கண்ட மதி அவனிடம் ஹைபை செய்து கொண்டு இருவருக்கும் விடையளித்துச் சென்றான்.

கல்லூரி வந்தடைந்த ஹம்சி படபடப்புடன் தான் இருந்தாள். மதியம் அவனை எப்படி சந்திக்கப் போகிறோம்... தனக்கு எந்தவித உணர்வும் இல்லை என்றால் சாதரணமாக இருக்கலாம். ஆனால் தான் அப்படி இல்லையே... முருகா... என்னை இப்படி சோதிக்குறியே... உனக்கு கருணை இல்லயா... என புலம்பிக் கொண்டே நேரம் கடத்தினாள்.

காலை இடைவேளை...

நிலா அவள் வகுப்புத் தோழியுடன் நடந்து வரக் கண்ட விஜய் அவள் அருகில் செல்வது போன்று செல்ல...

அவள் தைரியம் கண்டு ஒரு நொடி வியந்தான் விஜய். இவளுக்கு என்ன தைரியம்... அவள் பக்கத்துல போனால்..

அவன் அவளை நெருங்க சிறிது நேரம் முன் ஒருவன் அவனைத் தள்ளி முன் செல்ல... நிலாவினை நெருங்கியவன் அலறினான்...

அவன் அலறிய சத்தம் கேட்டு எல்லாரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். என்ன என்ன என்று கேட்ட வண்ணம் அனைவரும் இருக்க...

"என்ன ஆச்சு அண்ணா... அய்யோ என்ன திடீர்னு கையில் ரத்தம் வருது... சீக்கிரம் வாங்க... ஹெல்த் சென்டர் போகலாம்.. வாங்க", நிலா அவனை அழைக்க..

"இல்லை சிஸ்டர் நான் பாத்துக்குறேன்... நீங்க உங்க வேலையப் பாருங்க... வாடா போலாம்", என்றவன் கூட்டத்தில் இருந்த அவன் நன்பனைப் பார்த்துக் கூற இருவரும் அங்கிருந்து சென்றனர். எல்லாரும் அந்த நிகழ்வினைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தனர்.

"என்னடா... எப்படி அவன் கையில ரத்தம் எனக்கு ஒன்னும் புரியல...", ஜான்.

"காம்பஸ் வச்சு கிளிச்சா ரத்தம் வரும் தான...", விஜய்.

"வரும்டா.. அது சரி... ஆனால் அவனே அவனை எப்படிடா காயப் படுத்துவான்... மச்சான்... நீ என்ன டா சொல்ற...", எதுவோ புரிந்தபடி ஜான் கேட்க..

"நீ நினைக்குறது கரெக்ட் தான்", விஜய் புன்னகைத்தபடிக் கூறினான்.

"மச்சான் சிஸ்டர் சூப்பர்டா..", ஜான்.

"ம்ம்ம்... வா க்ளாஸ்கு டைம் ஆச்சு", விஜய்.

இருவரும் வகுப்பிற்குச் சென்றனர்.

"என்னடா ஆச்சு எப்படி திடீர்னு ரத்தம் வருது... அவளை இடிக்க தான போன", இடித்தவனின் நண்பன் கேட்க...

"வாய மூடிட்டு வா.. எல்லாம் அப்புறம் சொல்றேன்", அவன் வலியில் கத்தினான்.

மதிய வேளை...

ஹம்சி நார்மலாக இருந்தாள். கவின் நேற்று நடந்தது தொடர்பாக எதுவும் பிரதிபலிக்கவில்லை. அவன் சாதாரணமாக இருக்க அவளும் சாதாரணமாகவே இருந்தாள்...

"இன்னைக்கு ஒரு சம்பவம் நடந்தது... யாருக்கும் தெரியுமா..", ராம் தீவிரமாக கேட்க..

ரக்சி ஆர்வமாக என்ன என்று கேட்டாள்..

மற்ற மூவரும் ராமையே பார்க்க...

"என்னடா சொல்லித் தொலை", கவின்.

"ECE டிபார்ட்மென்ட் பக்கம் ஒருத்தன் நடந்து போகும் பொழுது அவனுக்கு கையில் தானா ரத்தம் வந்துடுச்சாம். எப்படி ஆச்சுனு எல்லாரும் பயந்து இருக்காங்க..", ராம்.

"அதுக்கு ஏன் எல்லாரும் பயந்து இருக்கனும்", ஹம்சி

"சும்மா ரத்தம் வருமா... ஏதாவது பேய் பிசாசு..", ராம் கேட்க..

"அடச் ச்சீ", ரக்சி கூறியவள்

"பக்கத்துல எதாவது பொண்ணு இருந்திருக்கும்", என்று ரக்ஷி கூற...

ஹம்சியும் நிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்ள...

"அவள் கையில காம்பஸ் இருந்திருக்கும்", என்று நிலா கூற...

கவினுக்குத் தெளிவாக விளங்கியது இது நிலாவின் வேலை தான் என்று...

"காம்பஸ் அவன் கையக் கிளிச்சிறுக்கும்... சிம்பில்", என்று நிலாவினைப் பார்த்த வண்ணம் கவின் கூற

நிலா கவினைப் பார்த்து புன்னகைத்தாள்.

"அந்தப் பொண்ணு என்ன லூசா.. கையில காம்பஸ் வச்சு சுத்திட்டு இருக்கு", ராம்.

"அம்மா... என்னை ஏன் கிள்ளுன.. ராட்சசி...", ராம்.

"உன்னை அத்தோட விட்டேன்னு சந்தோசப் படு", என்று கூறிய ரக்சி பை என்று சென்று விட்டாள்.

"இவள் ஏன்டா என்ன பார்த்து முறைச்சிட்டு போறா", ராம்.

"சொல்றேன். முதலில் சாப்பிடு", கவின்.

ஹம்சியும் நிலாவும் சிரிப்பை அடக்க முடியாது சிரித்துவிட்டு சென்றனர்.

கவின் என்ன நடந்திருக்கும் என்று கூற நிலாவினைச் சொல்லாமல்... ராம் வியந்தான்..

"சூப்பர்டா கவின். இப்படி தான் எல்லாப் பெண்ணும் இருக்கனும்...", என்று கூறினான்.

"தெளிஞ்சிட்டியா மச்சி...", கவின்.

"ரொம்ப... ஈஈஈ..", ராம்.

கல்லூரி வாழ்க்கை இப்படியே நகர்ந்தது...எந்தவித மாற்றமும் இன்றி..

இரண்டு வருடம் கழிந்து டிபார்ட்மென்ட் சிம்போசியம்...

Hii drss..

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you..

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 18

சிம்போசியம் பற்றியத் தகவல்( தோழியின் சந்தேகம் காரணமாக இந்தப் பதிவு)... பொறியியல் கல்லூரியில் சிம்போசியம் வருடம் ஒரு முறை நடப்பது.. தனது கல்லூரியில் அவர்களின் டிபார்ட்மென்ட் சார்ந்து போட்டிகள் நடத்துவர்.(சில விளையாட்டுப் போட்டியும் உண்டு ஓய்வு நேரத்தில்)... அதனை அந்தக் கல்லூரி மாணவர்கள் மற்ற கல்லூரிகளுக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு வரவேற்பு தந்து நல்ல படியாக நடத்தி முடித்து அந்த டிபார்ட்மென்டீன் முதல் பதவி வகிப்பவர் மூலம் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றுவர்.

ஹம்சி மற்றும் நிலாவிற்கு கல்லூரி இரண்டாம் வருடம் கடைசியில்... இரண்டு நாளில் சிம்போ...

கவின் மற்றும் ராம் இருவருக்கும் நான்காம் வருடம் கடைசி...

மதிய வேளை...

"என்னப்பா... எல்லாரும் சைலென்ட் ஆ இருக்கிங்க.. ", நிலா.

"சைலென்ட் இல்ல... நாளைக்கு அடுத்த நாள் சிம்போ... அதுக்கு டெக்கரேசன் டீம்ல நான் இருக்க. எப்படியும் நைட் ஆகிடும்.. அதான் என்ன பண்ணனு யோசிக்குறேன்..", ஹம்சி.

"நாங்க இருக்கோம் ஹம்சி. லேட் ஆச்சுனா.. நாங்க உன்னை வீட்டுல விடுறோம்... என்னடா கவின்", ராம்.

"வேண்டாம்னு அவங்க கிட்ட சொல்லலியா.. ",கவின்.

"என்கிட்ட கேக்கவே இல்லை. நான் நல்லா வரையுறேன்னு கண்டிப்பா நீ இருக்கணும் சொல்லிட்டாங்க... ரங்கோலி போடனும் ஆ...", ஹம்சி.

"சரி.. நாங்க ட்ராப் பன்றோம். நீ ப்ரீயா இரு", கவின்.

"ம்ம்ம்..", ஹம்சி.

"எனக்கும் அடுத்த வாரம் வரும் ஹம்சி. பட் என்ன யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க..", நிலா.

"நீ க்ளாஸ்ல இருந்தா தான உன்னை பத்தி தெரியும். மேடம் புல்டைம் அந்த மரத்தடிக் கிட்ட தான் இருக்கிங்க...", கவின்.

"ப்ரோ... நீங்க என்னைப் பாத்துடீங்களா", நிலா.

"நீ அங்க தனியா உட்கார்ந்து இருக்குறது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. நான் அந்த இடத்துக்கு மொபைல் சிக்னல் இல்லைனு வந்தப்ப பாத்தேன்", கவின்.

"ஓ.. அப்புறம்..", நிலா.

"அப்புறம் என்ன.. உன் டைம் பாஸ் இடம் அதுதான்னு தெரிந்தது..", கவின்.

"ஹிஹிஹி..", நிலா.

சிம்போ முதல் நாள் இரவு..

ஹம்சி அவள் வகுப்புத் தோழி கனிகாவுடன் வரைந்து கொண்டு இருந்தாள்...

தன்னை அழைத்துச் செல்ல வருகிறேன் என்று கூறியவன் எங்கே என அவள் தேடக் கவின் கையில் ஒரு பெட்டியுடன் உள்ளே நுழைய அவன் பின் ராம் வரக் கண்டவள் அதன் பின் வேலைகளை கவனித்தாள்.

அவர்களின் ப்ரபசர் அவர்களை அந்த பில்டிங் கடைசி அறைக்கு வரச் சொல்லிச் சென்று விட...

அவர் மிகவும் ஸ்ட்ரிக்ட் என்பதால் வேறு வழியின்றி சரி என ஒப்புக் கொண்டனர்.

அந்த அறையில் ஒரு மாணவன் இறந்து விட்டான் என்பதாலும் இரவில் அவ்வறையில் பலவித சப்தம் கேட்பதாலும் யாரும் அந்த அறைப் பக்கம் சென்றது இல்லை. அப்படி இருக்க இந்த இருட்டும் நேரத்தில் அந்த அறைக்கு அனைத்து மாணவர்களையும் அவர் அழைக்க.. அனைவரும் சலசலத்துக் கொண்டனர்.

அந்த அறை தான் அங்கிருக்கும் அறைகளிலே பெரிது. அனைத்து மாணவர்களும் விலாசமாக அமர்ந்து பணி செய்ய வசதியும் கூட..

அந்த அறையின் செய்தி அறிந்த ஹம்சி பயத்தின் உச்சியில் இருந்தாள். அவள் நம்ம நிலா அல்லவே😅...

அனைவரும் அறைக்குச் சென்று அமர்ந்து கொள்ள...

கனிகா மற்றும் ஹம்சி இருவரும் முதல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டனர். அவர்களுக்கு அடுத்த வரிசையில் மூன்றாவது பெஞ்சில் கவின் மற்றும் ராம் அமர்ந்தனர்.

தோரணம் கட்டப் பல டிசைனில் செய்து கொடுத்துக் கொண்டு இருந்தான். அதனை வாங்கி ராம் கட்டுபவர்களிடம் கொடுத்துக் கொண்டு இருந்தான்(ரொம்ப பெரிய வேலை😎)

ஹம்சியும் கனிகாவும் நல்ல வண்ணங்களில் வரைந்தும்... பின் ரங்கோலிக்கு டிசைனும் செலெக்ட் செய்து கொண்டு இருந்தனர்.

ப்ரபசர் அறிவுரை அளிக்க.. ஹம்சியின் விழிகள் கவின் மேல் தான் இருந்தது. எத்தனை முறைப் பார்த்தால் என்றால் அது அவளுக்கேத் தெரியாது...

கவின் சட்டென்று அவள் புறம் திரும்பிவிட.. அவள் வெட்கம் கொள்ள...

என்னவென்று விழிகளில் வினவினான் கவின்.

அவள் புன்னகைத்து மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

அனைவரும் அறிவுரை முடிந்ததும் அவரவர் பணிகளைத் தொடங்கினர். ஹம்சியும் கனிகாவும் ரங்கோலி போட ஆரம்பிக்க... அதன் பாதியில் கலர் தீர்ந்துவிட்டது. என்ன செய்வது என நின்று இருக்க .. ராம் வந்து அவளிடம் கேட்டுப் பின் கலர் வாங்கி வந்து தர அழகான மயில் வண்ண கோலம் முடிந்தது.

அதன் பின் அவர்கள் இருவரும் அறைக்குச் சென்றுவிட்டனர். அறையில் ஒரு சிலரே இருந்தனர். அவர்கள் பணி முடிந்ததும் செல்லத் தொடங்கினர்.

ஹம்சிக்குத் துணையாய் கனிகா இருக்க... ஹம்சியிடம் வந்த ராம் இன்னும் அரை மணி நேரத்தில் செல்லலாம் என்று கூற... கனிகாவிடம் வீட்டிற்குச் செல்லுமாறு கூறிவிட்டு ஹம்சி அவள் வீட்டிற்கு அழைப்பினை விடுத்தாள். அவள் வீட்டில் அனைவரிடம் பேசி முடித்து வைக்க மணி 8 ஆனது. இன்னும் வரவில்லை என நினைத்தவள் வெளியில் செல்ல கவின், ராம், அவர்களுக்கு உதவி செய்யும் 2 பெண்கள் மற்றும் இன்னும் ஒருவன் இருந்தான். பில்டிங் கடைசி பகுதியில் தோரணம் கட்டிக் கொண்டு இருந்தனர்.

டிசைன் வெட்டிக் கொண்டு இருந்தக் கவின், ஹம்சி வரவும் அவளை அறைக்குள் இருக்கும்படி விழிகளில் மொழிய...

அவளுக்கு வயிற்றில் பட்டம்பூச்சி பறந்தது... கவின் கண்களில் காதலுடன் அசைக்க... அவள் மனம் முழுவதும் நிரம்பிய சந்தோசத்துடன் அறைக்குள் சென்றாள்.

கவினும் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் விரைவாக காலதாமதமின்றி அனைத்தும் வெட்டி ராமிடம் கொடுத்தவன் அவளிடம் சென்றான்.

அவன் சொன்ன தைரியத்தில் அறைக்குள் வந்துவிட்டாள். ஆனால் அவள் மட்டும் தனியாக... அந்த அறைக்குள்...

அவள் கெட்ட நேரமோ என்னவோ.. அறையில் மின் துண்டிப்பு ஆனது😲😲😲...

என்ன ஆனது...

Hii drs...

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you...

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 19 :

"என்னடா இது நமக்கு வந்த சோதனை... இங்கே ஒருத்தரும் இல்லை. இந்த ரூம் வேற சரியில்லை. சரி போய்டுவோமா...", என்று நினைத்த ஹம்சி லைட் ஆப் செய்யலாம் என செல்ல...

அவள் பாதிதூரம் சென்றதும் மின்துண்டிப்பு ஆனதும் பயம் வந்து விட... அவள் வந்த வழியில் திரும்ப அதுவரை எந்த சப்தமும் இல்லாது இருக்க... அவள் திரும்பியதும் சப்தம் கேட்டது... குழந்தை அழும் சப்தம்... அந்த இடத்தில் குழந்தை இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்க...

ஹம்சிக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது... அவளுக்கு வியர்வைத் துளிகள் பெருக... கைகள் உதற... கால்கள் நடுங்க அப்படியே அருகில் இருந்த பெஞ்சினைப் பற்றி நின்றவளின் கால்கள் நகர மறுத்தது.

அவள் அந்த இருட்டில் பார்க்க ஒன்றும் தெரியவில்லை. இருட்டில் பழக நேரம் எடுத்தது. ஒருவாறு கண்கள் இருட்டில் பழக.. அவள் நிமிர்ந்து பார்த்தாள்...

எதோ ஒரு உருவம் அவள் கண்களுக்குத் தெரிய... அந்த உருவம் அவள் பெஞ்சின் அருகில் சென்று எதுவோ தேட... பின் அவள் அருகில் வரத் தொடங்கியது...

இதோ... இதோ.. வந்துவிட்டது... நாம் தொலைந்தோம்... என அவள் கண்களினை மூடிக் கொண்டாள். அந்த உருவம் அவள் தோள் தொடும் நேரம் அவளின் பயம் அறிந்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டது.

ஹம்சி பயந்துக் கத்த வாய் திறக்க முயலும் முன் அணைத்தது கவின் தான் என அறிந்து கொண்டாள்😉

அவளின் சில்லிட்ட கைகளினை உணர்ந்த கவின் அவளின் முதுகில் தன் கரம் கொண்டு ஆசுவாசப் படுத்தினான். அவளுக்கு கவின் தன்னை அணைத்திருப்பது ஒன்றே போதும் என சப்தம் மறந்து அணைத்து இருந்தாள்.

கவினுக்கு அந்த சப்தம் குட்டிப் பூனை கத்தும் சப்தம் என அறிந்து கொண்டான். ஹம்சி அவனை விட்டு விலகாது இருக்க மெல்லப் பிரித்து நெற்றியில் இதழ் பதிக்க...

"கவின்... எங்கே இருக்க...", என்றவாறு ஒரு பெண் வர...

சட்டென இருவரும் பிரிந்து நின்றனர். அப்பெண்ணிற்கும்
அந்த இருட்டில் தெரியவில்லை என்பதால்

"போகலாம் கவின். ஹம்சி தூங்கிட்டாளா... வாங்க போகலாம்" அப்பெண்.

"வரென் பவி. ஹம்சியையும் கூட்டிட்டு வறேன்", கவின்.

"சரி கவின். நான் ராம் கிட்ட சொல்லிடுறேன்", பவி.

இருவரும் எதுவும் பேசும் நிலையில் இல்லை. எனவே கவின் பைக்கில் ஹம்சியும் ராம் அவனது பைக்கிலும் சென்று ஹம்சியினை நிலாவிடம் விட்டுவிட்டு வந்து விட்டனர்.

வந்த ஹம்சி சித்தபிரம்மை பிடித்தவள் போல் இருக்க... நிலா அனைத்து வேலைகளையும் முடித்து அவளிடம் வந்தவள் என்ன எனக் கேட்டாள்.

"அது... ஒரு டவுட் டி. அதான்", ஹம்சி.

"அப்படி என்னடியம்மா டவுட். இப்படி கையில் சுடும் பால் அ பிடிச்சுட்டு இருக்க அளவுக்கு", என்று நிலா கேட்க

அப்பொழுதுதான் உணர்ந்தாள்... தான் சுடு பாலை பிடித்திருக்கின்றோம் என்று...

உணர்ந்த நொடி பால் தரையில் கொட்டியது... கொட்டி விட்டிருந்தாள்.

"அப்படி என்ன டி டவுட். என்னனு சொன்னா தான் நான் க்ளியர் பண்ண முடியும். சொல்லு", நிலா.

"அது... நான்.... இல்லை... வந்து", ஹம்சி.

"சரி உன் தேஞ்சு போன ரேடியோவ ரெகார்ட் பன்னிட்டு சொல்லு... நான் தூங்கி எழுரென். பை", நிலா.

"சொல்றேன் டி... நான்... என் பிரண்ட் ஒரு பயனை விரும்புரா. ஆனால் அது லவ் தானானு சந்தேகம். அதை எப்படி தெரிஞ்சிக்கனும்", ஹம்சி.

"யாரு டி அவள்... அதுக்கு நீ ஏன் இப்படி இருக்க... எனக்குத் தூக்கம் வருது டி", நிலா

"சொல்லு டி... இதுக்கு பதில் சொல்லிட்டு தூங்கு..", ஹம்சி

"சரி.. சொல்லு என்ன சொல்லனும்... ஹாஆஆ" எனக் கொட்டாவி விட்டவாறு கேட்டாள் நிலா.

"அதான் அவளுக்கு அந்தப் பையனை பிடிக்கும். ஆனால் லவ் இருக்கானு எப்படிக் கண்டு பிடிக்க... ", ஹம்சி.

"அதுல..என்ன டி டவுட். அவளுக்கு அவனைப் பார்த்து க்ரஷ் கூட இருக்கலாம். என்ன இந்தக் காலேஜ் விட்டு போனாலும் அவள் அவனையே நினைக்குறாளானு பார்க்க சொல்லு. அப்பவும் நினைச்சா அப்போ கண்டிப்பா லவ் தான். போதுமா... தூங்க விடுடி. நீயும் தூங்கு", நிலா போர்வையினைப் போர்த்திக் கொண்டாள்.

ஆம். கல்லூரி முடிந்தும் நம் மனதில் கவின் இருந்தால் தான் காதல் என்று சரியாக மிகத் தவறான முடிவு ஒன்றினை எடுத்தாள்.

அவளினைக் குழப்பிய நம் அழகு தேவதை நிலா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்... அவளின் இந்த பதில் ஹம்சியின் வாழ்வில் பல திருப்புமுனை கொண்டு வந்துவிட்டது. அறிவோம்🤗

Hii drs...

Forgive me with your love if there is a mistake...

Give your support drs...

Thanking you...

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 20

கல்லூரிக் காலம் கவினுக்கும் ராமுக்கும் முடிந்தது... கவின் ரக்ஷி, ராம், நிலா, ஹம்சி அனைவரும் தனியாக கோவிலுக்குச் சென்று இருந்தனர்.

கோவிலில் சாமி தரிசனம் முடித்தவர்கள் ஹோட்டல் சென்று உரையாடிக் கொண்டு இருந்தனர்.

"ப்ரோ.. எனக்கு சாக்கி வாங்கித் தர இனி ஆளில்லையே... நோ ப்ரோ", நிலா.

"ஏன்மா உனக்கு சாக்கி தான் கவலையா.. பிரியுரோம்னு கவலை இல்லை.. அப்படித்தான...", ராம்.

"என்ன கவலை. எப்பிடியும் இங்க இந்தச் சென்னையில தான இருப்பீங்க.... அதுக்கு எதுக்கு கவலை. நீங்க நான் கூப்பிட்ட அடுத்த செக்கண்டு வந்துடுவீங்க.. என்ன எனக்கு சாக்கி தான் வாங்கி தர முடியாது... அதுக்காக உங்களை கூப்பிட முடியாதில்லை...", நிலா.

"என்ன எண்ணம்... நல்லா வருவ", ராம்.

"கொஞ்சம் சும்மா இருங்க... கவின் அப்புறம் என்ன பண்ண போறீங்க... வேலை.. திருமணம்", ரக்ஷி.

"அப்பா ஆபிஸ்ல தான் வேலை பார்க்கணும் ரக்ஷி. நானும் மதியும் இந்தப் பிரிவு எடுக்கக் காரணமே அதுதான். மதியும் இனி இங்கே வந்திடுவான். கம்பெனி இனி நாங்கள் பார்த்துப்பொம்", என்றான்.

" திருமணத்துக்கு இன்னும் இரண்டு வருடம் நேரம் இருக்கு ரக்ஷி", என்று ஹம்சியைப் பார்த்துக் கொண்டே கவின் கூற...

ஹம்சிக்கு உள்ளுக்குள் எதோ செய்தது. இருந்தும் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

"நீங்க ராம்", ரக்ஷி கேட்க

"நீங்கள் அன்னைக்கு வந்த பார்ட்டில ஒரு ஆன்டி இருந்தாங்களா.. அவங்க கணவர் கம்பெனில தான் ஜாய்ன் பன்னனும் சொல்லி ஸ்ட்ரிக்ட் ஆர்டர். ஸோ ஜாப்க்கு எந்த விதப் பிரச்சினையும் இல்லை. திருமணம் பற்றிலாம் நான் யோசிக்க எனக்குத் தகுதி இல்லை. நான் யாரும் இல்லாம இருக்கேன். என்னை நம்பி ஒரு பொண்ணு வந்து அவள் வாழ்க்கை தனிமையில் தான் கழியும்... ", ராம் கூற...

"சரி ஒரு நிமிடம் நான் ரெஸ்ட் ரூம் போய்டு வரென்", ரக்ஷி எழுந்து சென்று விட...

"எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கிங்களா.... எனக்கு பசில என் வயிறு கிச்முச் கிச்முச் சத்தம் போடுது. யோவ் பேரர் சாப்பாடு கொண்டு வந்து தாரியா இல்ல நான் உன்னை முதலாலி கிட்ட மாட்டி விடவா", நிலா.

"அக்கா இதோ கொண்டு வரென். இருங்க.. கோவம் மட்டும் படாதீங்க.. பயமா இருக்கு", பேரர்.

அனைவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க நிலா புரியாமல் அனைவரையும் பார்க்க...

அவர்கள் சிரிப்பினை மட்டும் நிறுத்தவில்லை. என்ன என்று திரும்பி பேரரைப் பார்த்தவள் முகத்தில் தீ ஜுவாலையே இருந்தது.

பின்னே... 50 வயது இருக்கும் ஒருவர் தன்னை அக்கா என்று கூறி அசிங்கப் படுத்தினால்... தான் மறியாதை இல்லாமல் கூறிய வினை என்று அறிந்தாள்...

அது மட்டுமில்லை... அவர்களுக்கு அருகில் இருந்த இளைஞர் கூட்டம் அதற்கு மேல் சிரிக்க... நிலாவினால் அதனை சமாளிக்க முடியவில்லை.

அய்யோ... இப்படி அவமானம் ஆகிட்டே... என்று வேகமாக ரக்ஷியைத் தேடி சென்று விட்டாள்.

ரக்சி முகம் சிவந்து இருக்க... என்ன ஆச்சு என நிலா கேட்டும் கூற மறுத்து விட்டாள்.

பின் வந்த நிலா பேரரை நன்றாக முறைத்துவிட்டு வந்திருந்த உணவில் ஐக்கியமானாள்.

கவின் ஹம்சியிடம் எந்த வித உணர்வுகளும் காட்டவில்லை. ஹம்சியும் நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டாள். அவளுக்கு இருப்பது காதலா என அறிய நாட்கள் தேவைப்பட்டது...

அனைவரும் பிரியும் நாள்
ஒருவாரு முடிவுக்கு வந்தது. கவின் ஹம்சியிடம் தனியாக ...

நீ கல்லூரி முடிச்சு வந்ததும் சந்திக்கலாம். நான் காத்திருப்பேன். பை எனக் கூறிட

ஹம்சி புன்னகையுடன் வலியும் சேர்ந்து கொள்ள தலையினை மட்டும் ஆட்டினாள். கவினுக்கு அவளை அணைத்து ஆருதல் சொல்ல வேண்டும் என்று இருந்தாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.

ஹம்சி விழிகளில் இரண்டு சொட்டு நீர் அவளை அறியாது விழ.. அதற்கு மேல் தாங்காதவன் அவளை இருக அணைத்துத் தன் வலியினையும் அவளின் வலியினையும் போக்கிக் கொண்டான். இருவருக்கும் அந்த அணைப்பு பிரிவின் வலிக்குத் தேவையாய் இருந்தது... அந்த ஒரு அணைப்பு அவர்களின் காதலை இருவருக்கும் பறை சாற்றியது...

தூரத்தில் இருந்து கண்ட ராம் இவர்களின் மனம் அறிந்து கொண்டான்.

இரண்டு வருடம் கல்லூரி வாழ்க்கை ஹம்சிக்கு பல ஏக்கங்களுடன் சென்றது. ஹம்சிக்கு இருப்பது காதல் தான் என அடுத்த மாதத்திலேயே கண்டு விட்டாள். இருப்பினும் கவின் சொன்ன மாதிரி கல்லூரி முடிந்த பின்னே அவனைச் சந்திக்க வேண்டும் என்று காத்திருந்தாள். நாட்கள் ஓடியது. மாதங்கள் ஓடியது.

சந்திக்கும் நாளும் வந்தது. அந்த ஒரு நாளில் நடந்த நிகழ்வு அவர்கள் இருவரையும் பிரியும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. பிரிவின் வலியில் இருவரும் வெந்து கொண்டுதான் இருந்தனர்.

அதிகாலை வேளை...

கடந்த கால நினைவில் இருந்து தற்கால நினைவிற்கு வந்து சேர்ந்தாள் ஹம்சி. என்றும் வருத்தம் தான் அளிக்கும் என்றாலும் அவள் மனம் அந்த நிகழ்வுகளையே நியாபகப் படுத்தும். உயிராகக் காதல் செலுத்தியதால் தான் இறைவன் என்னை சோதிக்கிறான் போலும். என் காதல் கானல் நீராகும்படி ஆனதே... என நினைத்துக் கொண்டு இருந்தவள் மணி 4 ஆக அதற்குப் பின் தான் உறங்கத் தொடங்கினாள்.

அதே வேளையில் தான் கவினும் தன் நினைவு அலைகளில் இருந்து மீண்டான். உறக்கம் அப்பொழுது தவழப் பின் அவனறைக்குச் சென்று துயில் கொள்ளத் தொடங்கினான்.

இருவரும் தனது நினைவலைகளில் இருந்து வெளிவந்தனர். ஆனால் மனக்கவலையில் இருந்து வெளிவரவில்லை. அவர்கள் இருவரும் மனம் விட்டுப் பேசினால் நடந்த நிகழ்வு ஒன்றும் இல்லை என அறிவர். கண்களில் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய் என்பதற்கு சரியான எடுத்துக் காட்டாய் திகழ்ந்தனர் கவின் மற்றும் ஹம்சி.

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗🤗🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 21


மதி காலையில் ஆறு மணிக்கு கையில் டீ உடன் கவின் அறைக்கு வந்தவன் அவனை எழுப்பி சுத்தம் செய்ய அனுப்பிப் பின் டீயினைப் பருகச் செய்தான். கவினுக்கு இருந்தத் தலைவலி இப்பொழுது பரவாயில்லை என்பது போல் இருந்தது. இருவரும் சிறிது நேரம் தோட்டத்தில் நடந்து கொண்டே உரையாடி விட்டு வீட்டினை அடைந்தனர்.

"கவின் பாட்டி உங்கிட்ட பேசனும் சொன்னாங்க... மதி நீயும் போப்பா. வந்து சாப்பிடுங்க... ", வேணி.

"உதய வர சொல்லு வேணி. அவன் கிட்ட பேசனும்", சந்திரன்.

"சரிங்க", வேணி.

"வசு.. இன்னும் கர்ண காவியம் முடியலையா", கவின்.

"வா டா.. அது முடியட்டும். நீ என்ன சொல்ற... உன் கலயானத்துக்கு நீ பொண்ணு பாத்தாச்சா... இல்லை நான் பார்க்கனுமா..", வசு.

"அதுலாம் அவனே பார்த்துருப்பான் பியூட்டி. என்னடா கவினு", மதி.

"என்ன சொல்ற கவினு. நீ சொன்னாதான் உங்கள் கல்யாணம் ஒன்னா வைக்க முடியும்", வசு.

"இப்போ வேண்டாம் வசு. கல்யாணம் செய்ய இப்போ வயசு இல்லை. அப்புறம் செய்யலாம். மதியும் நானும் அப்புறம் பண்ணிக்குறோம்", கவின்.

"உனக்கு வேண்டாம் அப்படினா சரி. அவனை ஏன்டா இழுக்குற... அவனுக்கு சீக்கிரம் பன்னினா உனக்கு என்ன", வசு.

"பியூட்டி கவினுக்கும் எனக்கும் ஒன்னா நடக்கனும். இப்போ உதய் மட்டும் பாருங்க", மதி.

"உங்களுக்கு இந்த ஒரு வருடம் தான் டைம். அதற்கு அப்புறம் என்ன கேட்கக் கூடாது சொல்லிட்டேன்", வசு.

"தேங்க் யூ வசு", என்றவன் வசுவின் கன்னத்தில் முத்தம் இட்டு ஓடிவிட்டான்.

"பியூட்டி மீ", என்று மதி வரவும்

"அடிங்க. ஓடுங்கடா... ", வசு திட்ட

மதி புன்னகைத்துக் கொண்டே சென்று விட்டான்.

மதியும் கவினும் ஆபிஸ் கிளம்பி கீழே வந்தனர்.

என்னடா உதய். அண்ணிகிட்ட பேசுனியா... முகம் 1000வால்ட் பல்பு போல பிரகாசமா இருக்கு", மதி.

"ஆமா டா. உனக்கு வரும்போது உன்னை வச்சுக்கிறேன். நான் உங்க ஆபிஸ் வரென். எனக்கு ஆடர்", உதய்.

கவின் முகம் இருகியது.

சாப்பிட்டு விட்டு மூவரும் இணைந்து ஆபிஸ் கிளம்பினர்.

ஹம்சி காலையில் தாமதமாக எழவும் அவளுக்கு வேண்டிய அனைத்தும் நிலா செய்து வைத்திருக்கத் தாமதிக்காமல் ஆபிஸ் கிளம்பினாள்.

காலையில் அவள் வீட்டிலிருந்து அழைப்பு வர...

"ஹம்சி உனக்கு மாப்பிள்ளைப் பார்த்துட்டோம். அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். நீ ஈவ்னிங் வா. அப்புறம் பேசிக்க்கலாம்", ஹம்ச வர்த்தினி.

"ம்ம்ம்.. பை", என்ற ஹம்சி ஆபிஸ் கிளம்பினால்.

"என்ன டி ஹம்சி. ஏன் முகம் இப்படி இருக்கு", நிலா.

"வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க டி. அதை சொல்லத்தான் கூப்பிட்டு இருக்காங்க", நிலா.

"ஓ... ஜமாய்....", நிலா.

"அமைதியா வா டி. ஆபிஸ் லேட் ஆச்சு", ஹம்சி.

இருவரும் ஆபிஸ் வந்தடைந்தனர். ஆபிசில் வேலை நேரம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. உதய் வந்து சிறிது நேரம் ஹம்சியிடம் பேசிவிட்டுச் சென்று விட...

கவின் இங்கு கொதித்துக் கொண்டு இருந்தான். அதில் நெய் ஊற்றுவதாய் நிலா வேறு...

மதியம் லஞ்ச்... மதி,ராஜு, கவின் ஹம்சி சாப்பிட அமர்ந்து இருக்க...

நிலா ராஜுவினை அழைத்துக் கொண்டு சாபிபாடு அனைவருக்கும் வாங்கி வந்தாள்.

"ஏன் சாப்பாடு கொண்டு வரல", மதி.

"இனி எல்லாருக்கும் இங்கே தான் சாப்பாடு. சாப்பிடுங்க", நிலா.

சாப்பாட்டினைச் சாப்பிட்ட அனைவருக்கும் அதிர்ச்சி. சாப்பாடு அருமையாக இருந்தது. சுற்றிலும் இருந்த அனைவரும் அதைத் தான் கூறிக் கொண்டு இருந்தனர்.

எப்படி என்று ராஜு கேட்க... இல்லாதக் காலரைத் தூக்கிக் கொண்டு அடியேன் தான் காரணம் எனக் கூற...

ராஜு இரண்டு கைகளையும் மேலே தூக்கி "தெய்வமே", என்றான்.

ஹம்சி நிலா இருவரும் சிரித்துவிட்டனர்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து வெளியில் படிக்கட்டில் அமர்ந்து இருந்தனர்.

மதியும் ஹம்சியும் தீவிரமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தனர்.

"என்ன நிலா அவள் ரொம்ப சந்தோசமா இருக்கா... என்ன ஆச்சு", கவின்.

"காலையில் அவள் வீட்டில் கல்யாணம் பத்தி பேசினாங்க... அந்த சந்தோசம் ப்ரோ... சந்தோசத்துல அவள் முகம் ரொம்ப அழகா இருக்குல ப்ரோ?", நிலா (ஏன் மா... நிலானு பேர வச்சிட்டு சூரியன் மாதிரி எல்லாரையும் சுட்டு எரிக்கிறதே வேலையா போச்சு உனக்கு... இனி என்னலாம் பண்ண போறானோ தெரிலையே🤷‍♀️)

வேகமாக எழுந்தவன் அதே வேகத்துடன் அறைக்குள் நுழைந்து விட்டான். ராஜு அவனைக் கண்டு..

"டேய் மதி. வாடா.. அவன் சூடாகிட்டான். என்னை தான் வச்சி செய்வான்", ராஜு

"அப்போ நீ போடா", மதி.

"டேய் அவங்கிட்ட என்னை தனியா அனுப்புரியே... இது
நியாயமா... தர்மமா...", ராஜு

"சரி சரி... வரோம்... வா ஹம்சி", மதி.

"பை டி.. ஈவ்னிங் மீட் பண்ணலாம்", ஹம்சி

அறைக்குள் வந்தவர்கள் வேலையில் கவனமாக நேரம் அப்படியே கடந்தது.

மாலை வரைக் கோபத்தினைக் கட்டுப் படுத்தியவன் அதற்கு மேல் தாங்காது ஹம்சியிடம் மேலும் பல பைல் கொடுத்து முடிக்கச் சொல்ல...

அதனை அறிந்த மதி அவளிடம் பைலைப் பகிர... அதனை அறிந்தக் கவின் ராஜு மதி இருவருக்கும் இல்லாத கிலைன்டை பார்த்து வரச் சொல்லி மாலுக்குச் செல்லச் சொல்ல.. வேறு வழி இல்லாமல் இருவரும் சென்று விட்டனர். மாலை நிலா வந்து அவளை அழைக்க... நேரம் ஆகும் என்பதால் அவளைச் செல்லுமாறுக் கூறிவிட... பல பத்திரம் கூறி நிலாவும் செல்ல...

ஹம்சி கவினிடம் தனியாக மாட்டிக் கொண்டாள். சிங்கத்திடம் மாட்டிய மான் ஆக....

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🌹🌹🌹

🤗🤗🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 22

ஹம்சி அனைத்து பைல்களையும் ஒருவழியாக முடிக்க எட்டு மணி ஆனது. முடித்து நிமிர கவின் அவனது இடத்தில் தான் கணினியைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான். சரி நாம் சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என்று நினைத்த ஹம்சி கவினிடம் சென்று...
"சார்... வொர்க் முடிஞ்சு. நான் கிளம்புறென்", ஹம்சி.
"இருங்க மிஸ்.... சாரி மிசஸ் ஹம்சி. கல்யாணக் கலை முகத்தில் தெரியுது. அவ்வளவு சந்தோசமா... ஒரு நாள் கூடப் பார்க்காமால் இருக்க முடியலையா... ஆபிஸ் வர சொல்லி", கவின் தொடர
அவனைக் கை நீட்டித் தடுத்தவள் "நான் சந்தோசமா இருந்தா உங்களுக்கு என்ன சார்... சாரி என் வொர்க் இன்னையொட முடிஞ்சு. என்ன மிஸ்டர், ஆமா கல்யாணம் தான். ரொம்ப சந்தோசமா இருக்கேன். என்னோட பாண்டு கேன்சல் பண்ண சொன்னேன். பன்னிட்டிங்களா", ஹம்சி
"நீ மட்டும் என்ன டி சந்தோசமா இருக்குறது. எனக்கும் தான் திருமணம் முடிவு ஆகிருக்கு... அப்புறம் நீ எனக்கு செய்த செயலுக்கு உன்னை சும்மா விடுவனா. பாண்டு கேன்சல் செய்ய மாட்டேன். உன்னை இனி டார்ச்சர் பன்றது தான் இனி என் வேலை", என்று கூறியவன்
ஹம்சியின் அருகில் வர ஹம்சி அசையாது பார்த்துக் கொண்டு இருக்க... ஒரே இழுவில் அவன் கைகளுக்குள் அடக்கமானாள். அவன் அவளை அணைத்த வண்ணம் அவளின் இடையினில் அழுத்தம் கூட்டி கழுத்தில் முகம் புதைக்க.. அவளிடம் எந்த வெளிப்பாடும் இல்லாததைக் கண்டவன்...
அவளைக் காயப் படுத்தும் பொருட்டு.. அவள் கன்னங்களினைக் கரங்களில் தாங்கி அவளது இதழில் போர் நடத்தினான். அவள் அதற்கும் எந்த வித உணர்வும் காட்டாது விரைப்பாய் நிற்க...
அவளை விடுவித்தவன்... கேள்வியாகப் பார்த்தான்.
லேசாகப் புன்னகைத்தவள் "செத்த பாம்ப எத்தனை முறை அடிச்சாலும் அதற்கு வலிக்காது மிஸ்டர் கவின்", ஹம்சி.
"யூ... கெட் லாஸ்ட்", என்றுக் கூறியவன் இருக்கையில் தொப்பென்று அமர்ந்து கொண்டான்.
ஹம்சி தனது பையினை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றவள் தன்னைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாது சத்தமாகக் கதறினாள். அவள் மனவலி குறையும் வரை அழுது தீர்த்தாள்.
"நாம அவளைக் காயப்படுத்த தான நினைச்சோம். நான் இப்போ சந்தோசமா தான் இருக்கனும். எனக்கு ஏன் இங்கே வலிக்குது" என்று தன் இதயத்தினை நீவி விட்டவன் என்ன நினைத்தானோ வேகமாக வெளியில் வந்தான்.
அவன் வெளியில் வர ஹம்சி சிவந்த முகத்துடன் வெளியில் வரவும்...
இருவரும் லிப்டில் உள்ளே செல்ல... ஹம்சி நடந்தே செல்வோம் என நினைத்து கதவு மூடும் சமயம் வெளியில் செல்லும் நொடி அவளை இழுத்து உள்ளே தள்ளினான். தள்ளியதில் கீழே விழப் போக அவளைத் தாங்க அவனும் வர அவனைத் தடுத்துச் சுவற்றினைப் பிடித்துத் தன்னை நிலைப்படுத்தினாள்.
லிப்டினை விட்டு வெளியில் வந்த ஹம்சி வெளியில் ஆட்டோ தேட... அவள் அருகில் வந்து பைக் நிற்கவும் நிமிர்ந்து பார்க்க கவின் தான். அவனை முறைத்துவிட்டு சில தூரம் நடந்தாள். அவன் பின் வராமல் அதே இடத்தில் நின்று இருக்க...
இவளுக்கு "எங்கே செல்வது... ஒரு ஆட்டோவினையும் காணவில்லையே..." என்று புலம்பிக் கொண்டு நிமிர இரண்டு பேர் மட்டும் இவளைப் பார்த்த வண்ணம் அருகில் வர...
பயந்து இவளும் திரும்பி கவின் இருக்கும் இடம் சென்றாள். கவின் அதே இடத்தில் நிற்க... "இவனுக்கு தெரிந்து தான் இருக்குத் திரும்ப வருவேன் அப்படின்னு", என்று முனங்கிவிட்டு அவன் பைக்கில் சென்று அமர்ந்தாள்.
கவின் வேகமாக பைக் ஸ்டார்ட் செய்ததில் அவன் இடையினில் கரம் பதித்தவள் அதன் பின் பைக் பின் கம்பியைப் பிடித்துக் கொண்டு வர முயற்சிக்க... கவின் பைக் அதற்கு ஒத்துழைக்காததால் அவன் தோளில் கரம் பதித்தே வரத் தொடங்கினாள்.
வீட்டினை அடைந்த ஹம்சி நிலாவிடம் கவின் வந்துள்ளான் என்று கூற...
நிலா கவினை உள்ளே அழைத்து வந்து அவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள். ஹம்சிக்குக் கால் வரவும் அவள் அட்டன்டு செய்து பேச...
"ஹம்சி கண்ணு நிலா கிட்டக் குடுமா... ", கிங்.
"சரி கிங்", இந்தா நிலா கிங்
"என்ன கிங் என்னைப் பார்க்காம இருக்க முடியலையா... அடுத்த வாரம் வந்துடுறேன்... கவலைய விடுங்க..." நிலா.
"நிலாக் கண்ணு நீங்க ரெண்டு பேரும் தான் என் கண்ணுக்குள்ளேயே இருக்கீங்க.. சீக்கிரம் வாங்க கண்ணு... வாகினிக்கு கல்யாணத்தில் சம்மதமா கண்ணு. உங்கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும் தோணுச்சி. வாகினி விருப்பம் இல்லாம செய்யக் கூடாதுல கண்ணு. நீ கேட்டு சொல்லு கண்ணு", கிங்.
கால் ஸ்பீக்கரில் தான் இருந்தது. கவின் ஹம்சியின் பதிலைக் கேட்க ஆவலுடன் இருக்க.. ஹம்சி கவினைப் பார்த்துக் கொண்டே எனக்கு முழு சம்மதம் என்று கூறினாள். அவள் சம்மதம் கூறிய ஆத்திரத்தில் "நான் வரென் நிலா. எனக்கு வொர்க் இருக்கு", என்றவன்
வேகமாக வீட்டினை அடைந்து வசுவின் அறைக்குச் சென்று...
"எனக்குப் பொண்ணுப் பாருங்க வசு. நான் கல்யாணம் பண்ணிக்குறேன். எனக்கு சம்மதம்", கவின்.
"என்ன ஆச்சு கண்ணா... என்ன திடீர்னு", வசு
"இல்லை வசு... எனக்கு சொல்லனும் தோனுச்சு. பாருங்க", கவின்.
"ஏற்கனவே பார்த்துட்டேன் டா. உனக்கும் உதய் கூடவே நிச்சயம் பன்னிடலாம். அப்புறம் மதி கூட கல்யாணம் பண்ணிக்கலாம். அடுத்த வாரம் தான் உதய்க்கு நிச்சயம்", வசு
"சரி வசு. நான் ரூம்ல இருக்கேன்", கவின்
"சரிப்பா", வசு.
அறைக்கு வந்தக் கவின் மனம் அழுந்த அதைப் போக்கும் வழி அறியாது மெத்தையில் படுத்துக் கிடந்தான்.
ஹம்சிக்கு தன் குடும்பம் பற்றிய கவலை. தான் சம்மதம் கூறிவிட்டதால் மிக சந்தோசத்துடன் இருப்பர். என்ன ஆனாலும் சரி திருமணத்தினை மட்டும் வேண்டாம் என்று கூறக் கூடாது என்ற முடிவுடன் இருந்தாள்.
நிலாவும் ஹம்சியும் வெகு நேரம் பின்னர் தூங்கத் தொடங்கினர். நிலா படுத்ததும் உறங்கி விட்டாள். ஹம்சிக்கும் கவின் போலவே அவ்விரவு தூங்கா இரவாகவே மாறியது.
தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி😍😍😍

 
Status
Not open for further replies.
Top