All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவிராமின் 'மறப்பதில்லை நெஞ்சே! நெஞ்சே!' - கதை திரி

Status
Not open for further replies.

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18517


அத்தியாயம் 2


வெளியில் அதிகமான சத்தம் கேட்க என்ன ஆனது என்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தனர் புதிதாக மணம் முடித்த இரு பெண்களும்.

அவர்கள் இருவரும் வெளியில் வர அங்கு வாசுகி தான் முகத்தினில் கோபம் கொப்பளிக்கக் கத்திக் கொண்டு இருந்தார்.

"என்ன சொல்றீங்க சொல்லுங்க... இது தான் உங்க வாக்க காப்பாத்துற அழகா???", வாசுகி வசுவினைப் பார்த்த வண்ணம் கேட்டுக் கொண்டு இருக்க..

அங்கிருந்த அனைவரும் வாசுகியினை எதிர்த்து பேச முடியாதவாறு நின்று இருந்தனர். திருமணம் செய்து வைக்கிறேன் என்று வாக்குக் கூறிவிட்டு அதை தவறிவிட்டதால் எதுவும் எதிர்த்துக் கூறும் நிலையில் யாரும் இல்லை.

"நான் அப்போவே என் புருஷன் கிட்ட சொன்னேன்.. இவனுக்கு சொந்தம்னு யாரு இருக்கா.. அதுவும் சொத்துல பங்கு கூடக் கேக்க மாட்டான்.. நீதி நேர்மை நியாயம் பேசிட்டு திரிவான்.. இவன் நம்ம நிஷாவுக்கு வேண்டாம் அப்படின்னு... தொழிலும் சொந்தமா இருக்கா.. கூலிக்கு தான் இவங்க கம்பெனிக்கு வேலைக்குப் போறான்... இவனை யாரு கட்டிப்பா.. அப்படியும் என் பொண்ணு சம்மதம் சொன்னாளே... நல்ல நேரம் அவள் தப்பிச்சா... இதோ இங்க நிக்குறாளே இவ தான் அவனுக்கு பொருத்தம். அவனும் அநாதை இவளும் அநாதை..", வாசுகிப் பேசிக் கொண்டே போக... வசுவின் ஓங்கிய கரம் பாதியில் நின்றது....

அவருக்கு முன் வாசுகியின் கன்னத்தில் இன்னொரு கரம் பதிந்தது...

தேவன் தான் அறைந்திருந்தார்...

எதுக்கு இப்போ என்னை அடிச்சிங்க... தேவன் அவரை அடக்க... "சும்மா இருங்க.. உங்களால வந்தது எல்லாம். இப்போ நம்ம பொண்ண யாரு கட்டிப்பாங்க...", வாசுகி கன்னத்தினைத் தாங்கிக் கொண்டு கேட்க.

"உன் பொண்ணு எங்கமா ", வசு நிதானமாகக் கேட்கவும்

அப்பொழுதுதான் அவருக்கு தன்னுடன் நிஷா இல்லை என்ற எண்ணமே வந்தது.. மண்டபத்தில் தன் மகள் இல்லை என்பதனைப் பார்த்ததில் இருந்து அவரின் உள்ளம் கொதிக்க. தேவன் தான் அவரை சமாதானப் படுத்தி கவின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். மண்டபத்தில் இருந்து அனைவரும் வந்து பின் விளக்கு ஏற்றி நெருங்கிய சொந்தம் மட்டும் இருக்கும் பொழுது தான் தேவன் அவரை வெளியில் விட்டார். அதுவரையிலும் கோபத்தில் இருந்தவர் தனது மகளினையே மறந்து இருந்தார்..

தேவனை விழி விரிய வாசுகி நோக்க... "வீட்டுக்கு வா.. அங்க போய் எல்லாம் பேசிக்கலாம்..", தேவன்.

"இதுதான் நீங்க வர கடைசி முறை இந்த வீட்டுக்கு.. ", என்று வசு தேவனிடம் அழுத்தமாகக் கூற தேவனும் சம்மதமாக தலையினை ஆட்டினார்.

அதன் பின் வாசுகியும் மகளினைக் காண வேண்டும் என்ற நோக்கில் எதுவும் பேசாமல் சென்றுவிட...

அப்பொழுதுதான் அங்கிருந்த அனைவரும் ஒரு நிம்மதி மனதில் படிய நாற்காலியில் அமர்ந்தனர். வாசுகி அநாதை என்ற வார்த்தையினை உபயோகப் படுத்தியதுமே அந்த வார்த்தையில் நொறுங்கிய மதி அவனது அறைக்குச் சென்று விட்டான். அவன் வலி உணர்ந்த கவினும் மதியினுடன் சென்றுவிட... அங்கு நடந்த அனைத்தினையும் கேட்டுக் கொண்டு இருந்த ஹம்சிக்கு அதிர்ச்சி என்றால் அவளருகில் நின்றிருந்த மதியின் மனைவி நிலாவிற்கு சொல்லவும் வேண்டுமா????? (😁😁😁ஹாஹா...யாருலாம் நிலா தான்னு முன்னாடியே கன்பார்ம் பன்னீங்க???? பொய் சொல்லாம சொல்லனும்😎 !)

மதி, சந்திரன் மற்றும் வேணியின் மகன் என்று தான் இதுவரையிலும் அவள் எண்ணி இருந்தாள். அவளுக்கு இந்த விவரம் அதிர்ச்சி. அவளை அநாதை என்று கூறியதும் எப்படி வலித்ததோ அப்படித்தானே அவனுக்கும் வலித்திருக்கும் என்று எண்ணி மிகவும் வருந்தினாள் அவனுக்கும் சேர்த்து..

அவனைப் பார்க்க வேண்டும் போன்று இருக்க.. அவனது அறைக்குச் செல்லவேண்டும் என்று வேணியிடம் நிலா கேட்க.. வேணி அவளினை அழைத்துக் கொண்டு செல்லுமாறு ஹம்சவர்த்தினியிடம் கூற... நிலாவினை அவனது அறைக்கு அழைத்துச் செல்ல.. மதியும் கவினும் கவினின் அறையிலேயே இருக்க.. அங்கு செல்லுமாறு வர்த்தினி சொல்லவும்... நிலா வரவும் ஹம்சி எழுந்து செல்ல..

நிலா மதியின் அருகில் சென்று அமர்ந்தாள். மதி ஜன்னல் புறம் திரும்பியிருந்தவனுக்கு நிலா வந்தது தெரியவில்லை. அதுவரையிலும் மதியின் பின் அமர்ந்து கவின் தான் ஆறுதலாக அவனது தோளினைப் பற்றி இருந்தான்.

நிலா அவனது தோளினைப் பற்றி திருப்ப முயற்சிக்க.. அவனது இடது கரத்தில் அவனது கண்ணீர் பட்டுத் தெரிப்பதனைக் கண்ட நிலா அவனது கரத்தினைத் தன் வலக் கரம் கொண்டு கொண்டு கோர்த்துக் கொள்ள..

அதுவரை தனது வலியினை அடக்கிக் கொண்டு இருந்த மதி அதற்கு மேல் முடியாது திரும்பி அவளை இருக்கமாக அணைத்திருந்தான். அவனது வலியினை இருக்கி தன்னை அணைத்திருக்கும் வலிமையில் நிலா உணர்ந்தாள். அவனது கைகள் தளரவில்லை. அவளும் அவனது வலி போக்க அவனது முதுகினைத் தடவிக் கொண்டே இருந்தாள். அவளுக்கு கண்ணீர் ஆறாக ஓடியது.. நிலாவிற்கு அவன் மீது காதல் எல்லாம் இல்லை. அப்பொழுது வலியில் துடிக்கும் குழந்தையாகத் தான் மதி தெரிந்தான்...

வெகு நேரம் கழிந்து சுயம் அடைந்தவன் அப்பொழுதுதான் தான் அணைத்திருப்பது கவின் அல்ல என உணர்ந்தான். உடனே அவளை விட்டு விலகியவன் நிலா என்று அறிந்து அவளின் முகம் பார்க்க முடியாமல் ஜன்னல் புறம் சென்று நின்று கொண்டான்.

வசு நிலாவினை பார்த்து கட்டிலில் அமர சொல்லியவர் மதியினை இழுத்து அவள் அருகில் அமர வைத்தார். மதி வசுவின் முகம் பார்க்க தயங்கினான். எங்கே தன்னை மீறி கதறி விடுவோமோ என்ற தயக்கம்...

அங்கிருந்த நாற்காலியினை மதியின் முன் இழுத்துப் போட்டவர் அவனின் முகத்தினைத் தன் முகம் காணச் செய்து அவன் விழிகளினை நேருக்கு சந்தித்து... "ஏனக்கு இரண்டு மகன் இல்லை.. ஐந்து மகன்.. இப்போ சொல்லு யாரு அநாதை", வசு கேட்ட நொடி...

மதி வசுவினை மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான்... அவனுக்கு ஆனந்தக் கண்ணீர் வடிந்தது... தான் அநாதை என்று கூறியதும் ஏன் வருந்தினோம் என்று அவனுக்கேத் தவறாகத் தோன்றியது... தனது பியூட்டி இருக்க... இப்படி யோசித்ததே தவறு என்று எண்ணியவன் அப்பொழுதுதான் மனம் லேசானது போல் உணர்ந்தான். நிலாவிற்கு அவர்கள் அன்பினைக் கண்டு உள்ளம் குளிர்ந்தது..

மதியினை சிறிது நேரம் கழித்து விலக்கியவர்.. நிலாவின் தலையினைக் கோதியவாறு.. "அரசிக் கண்ணு அவள் கூறு கெட்டவள் சொல்றான்னு நீயும் ஏன் கண்ணு வருந்தி நிக்குற.. உனக்கு அப்பா இருக்காக... மாமனார் இருக்காக மாமியார் இருக்காக. உன் புருஷன் இவன் இருக்கான்.. அதையெல்லாம் விட நானும் ஹம்சியும் உனக்கு இருக்கோம்.. நீ அதை நினைத்து மனச குழப்பிக்காதத்தா", வசு.

நிலா சம்மதம் என சிரித்துக் கொண்டே தலையினை ஆட்ட மதியும் நிலாவும் வசுவின் தோளில் ஆளுக்கொரு புறம் சாய்ந்து கொள்ள.. கவின் ஹம்சி இருவரும் உள்ளே வரவும் அதன் பின் அனைவரும் சடங்கு வேலைகளினைத் தொடங்கினர்.



நேசம் இணையும்🙏

💞💕💕💞💓💓❤💔💔💞💓💔💔❤❤💓❤💔💓💞💕💞

ஹாய் டியர்ஸ்....

இன்றிலிருந்து

ஞாயிறு , செவ்வாய் மற்றும் வெள்ளி

வாரம் மூன்று முறை பதிவு இடுகிறேன்😍😍😍

(முடிந்தவரை இடையில் பதிவும் உண்டு🤗🤗🤗)

தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி😍


 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18581


அத்தியாயம் 4



இரவு நெருங்கியது...

ஹம்சியின் குடும்பம் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினர். உதய் மதி கவின் மூவரும் மாடியில் சந்திரனுடன் உரையாடிக் கொண்டு இருந்தனர். வேணி மற்றும் வர்த்தினி, ஹம்சி மற்றும் நிலா இருவரினையும் அலங்காரப் படுத்திக் கொண்டு இருக்க. மாடிக்குச் சென்ற வசு அனைவரினையும் கீழே அழைக்க..

அவரவர் அறைக்குச் சென்றனர். வேணி வர்த்தினியிடம் சொல்லிக் கொண்டு வசுவிடம் சென்று விட..

ஹம்சி கவினது அறைக்குள் நுழைந்தாள். அறைக்குள் கவின் இல்லாது போக... உள்ளே தேடத் தொடங்கினாள்... பின்னிருந்து இரு கரங்கள் அவளை அணைக்கவும் ஹம்சி அதிர்ச்சி அடையாது நின்றாள். அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன்

"பயமே இல்லையா ஹனி", கவின்.

"இப்போ தான் என்னை உங்களுக்கு தெரியுதா", ஹம்சி

"என்னடி சொல்ற", கவின்.

"என்னை என்ன சொன்னீங்க... இப்போ", ஹம்சி.

"ஹான் என்ன சொன்னேன் ஹனி", என்று யோசித்தவன்... "ஹேய் சாரி டி... நீ எப்போவும் என் ஹனி தான்", கவின்.

"சரி இருக்கட்டும்.. இங்கே வந்து உட்காருங்க... நான் நிறைய பேசனும்", ஹம்சி.

கவினை கட்டிலில் அமரச் செய்தவள் அவன் அருகில் அமர்ந்து கொண்டு

"இங்கே என்ன நடக்குது... ப்லீஸ் சொல்லுங்க.. எனக்குத் தலையே வெடிச்சிடும் போல... ", ஹம்சி.

"எதை பத்தி கேட்குற.. சொல்லு ஹனி", கவின்.

"இன்னைக்கு நடந்தத பத்தி தான் கேட்குறேன்... எனக்கு எதுவுமே புரில... ", ஹம்சி.

"எனக்கும் நிறைய விஷயம் மர்ம்மாக தான் இருக்கு ஹனி.. எனக்குத் தெரியாத விஷயம் நான் எப்படி உனக்கு சொல்ல முடியும்", கவின்.

"எனக்குத் தெரிந்த விஷயம் சொல்றேன்", கவின்.

"ம்ம்ம்.. சொல்லுங்க.. மதி அண்ணா பத்தி சொல்லுங்க.. அண்ணா உங்க சகோதரன் இல்லையா.. அவங்க அப்படி சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது ", ஹம்சி.

"யாரு என்ன சொன்னாலும் மதி எனக்கு அண்ணன் தான்.. அதையும் தாண்டி எனக்கு உயிர் தோழனும் கூட சொல்லலாம்.. இல்லை அதுக்கும் மேல.. அவனுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த நிறைய உண்மை இருக்கு... அது இனி உனக்கும் நிலாவுக்கும் மட்டுமே தெரிய வரும். நிலா அவன் லைப்ல வந்தது யாருக்குப் பிடிக்குதோ இல்லையோ.. ஆனால் எனக்கு ரொம்ப சந்தோசம்..", கவின்.

"எனக்கும் அவங்க இரண்டு பேரும் சேர்ந்ததுல ரொம்ப சந்தொசம் தான்ங்க.. அந்த நொடி எனக்கு மன நிறைவா இருந்தது..", ஹம்சி.

கவின் ஹம்சியினை அணைத்துக் கொண்டான்.

"வசுக்கு இரண்டு பசங்க.. அப்பாவும், மதி அப்பாவும்.. அவங்களுக்கு விபத்துல இறந்திட அன்னையில் இருந்து மதிக்கு வசுதான் அப்பா அம்மா எல்லாமே... அம்மாக்கும் என்னை உதய் விட மதி தான் பிடிக்கும்.. அவன் மனசு அப்படி.. உதயும் நானும் இது வேணும் அது வேணும் சொல்லி அடம் பிடிப்போம். ஆனால் அவன் எதைக் குடுத்தாலும் ஏற்றுக் கொள்வான். இது வேண்டாம் அது வேண்டும்னு இதுவரை அவன் சொன்னதே இல்லை.. அப்படித்தான் மதிக்கு நிஷாவை பாட்டி திருமணத்துக்குப் பேசும் பொழுது கூட அவனுக்கு சம்மதம் தான் சொன்னான். ஆனால் அவன் முகத்தில் காதல் அப்படின்ற உணர்வு நான் பார்த்தது இல்லை.. இன்னைக்கு காலையில் வரைக்கும் அவன் முகம் கலை இல்லாம தான் இருந்தது.. ஆனால் நிலாவ கட்டிக்க சொல்லி சொன்னதும் அவன் உட்காரும் பொழுது அவன் முகத்தில் தெரிஞ்ச அந்த மலர்ச்சி தான் எனக்கு மன நிறைவ குடுத்திச்சி.. எதுக்கு அவன் மலர்ந்தான்னு எனக்குத் தெரியாது.. ஆனால் அவனுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம்னு புரிஞ்சி கிட்டேன். அவனோட வாழக்கையில் நிறைய மறைக்கப் பட்ட பக்கம் இருக்கு... அது அவனே நிலாகிட்ட சொல்லனும்.. நிலாவுக்குத் தெரியவரும் பொழுது உனக்கும் தெரியும்.. இப்போ நான் அதை சொல்ல முடியாது ஹனி.. ", கவின் கூறி ஹம்சியின் முகம் பார்த்தான்.

அவள் முகம் அமைதியாக இருக்க... இவன் அவள் முகத்தினை கரங்களில் ஏந்தி அவள் விழி பார்க்க.. ஹம்சி விழியினை அசைத்து சரி என்பது போல் கூற...

"உனக்கு நிலா பற்றியும் தெரியாது ஹனி.. நான் ஒத்துக்குறேன்.. நீ அவள் உயிர் தோழி தான்.. ஆனால் அவள் உங்கிட்ட இருந்து நிறைய மறைச்சி இருக்கா... எனக்கும் கல்லூரியில் இருக்கும் பொழுது தான் தெரியும்.. இப்படி ஒரு பொண்ணான்னு நான் வியந்த்து கூட உண்டு.. நிலா மதிக்குக் கிடைத்ததும் சரி.. மதிக்கு நிலா கிடைத்ததும் சரி.. கடவுள் ஆசி... இப்போ கூட இரண்டு பேரும் லவ் பண்ணல ஆனால் சீக்கிரம் ஒன்னு சேரனும்.. அவங்களுக்குள்ள லவ் வர வைக்கனும்.. அது வரைக்கும்", கவின்.

ஹம்சி கவினை அணைத்துக் கொண்டாள். "எனக்குப் புரியுதுங்க.. எனக்கும் அதே எண்ணம் தான்.. நான் நிலாவை தப்பா எதுவும் நினைக்கல.. நானும் காதலிக்குற விஷயத்த அவகிட்ட இருந்து மறைச்சு தானே இருந்தேன். ஆனால் அவள் அதை பத்தி ஒரு வார்த்தை கூட கேட்கல... நாம அவங்க இரண்டு பேரையும் சேர்த்தி வைப்போம்.. இனி அதான் வேலை", என்று அவனைக் கிள்ளி வைக்கவும்

"என்னடி பன்ற... அதுசரி.. ஆனால் எனக்கு கிஸ் வேணும்... ", என்றவன் அவளிடம் பெற்றுக் கொண்டே இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி தூங்கிப் போகினர்.


அத்தியாயம் 4


மதி அவனது அறையின் பால்கனியில் நின்று இருக்க... கதவுத் திறந்து தான் இருந்தது. வர்த்தினி உள்ளே நுழையச் சொல்லவும் நிலாவும் எந்தவிதப் பயமும் இல்லாமல் உள்ளே நுழைந்தாள். அவளின் தைரியம் கண்டு வர்த்தினியே வாயில் விரல் வைத்துக் கொண்டு வெளியேறினாள். மதியினைத் தேடியவள் அவன் பால்கனியில் நிற்பது அறிந்து அவளின் உடைகள் அங்கு இல்லாததால் அங்கிருந்த மதியின் கபோர்டில் இருந்து அவனது ஒரு டிஷர்ட் மற்றும் அவனது லோயர் ஒன்றினை எடுத்துக் கொண்டு பாத்ரூமில் நுழைந்தாள். பால்கனிக்கும் அவனது அறைக்கும் இடையில் உள்ள தடுப்பு மூடி இருப்பதால் சப்தமும் எழாது. அதனால் அவனுக்கு அவள் வந்ததும் தெரியாது. தன்னை சுத்தம் செய்து வெளியில் வந்தவள் இன்னும் மதி வெளியில் நிற்கக் கண்டாள். அங்கிருந்த பழங்களில் ஆப்பிள் ஒன்றினைக் கையில் எடுத்துக் கொண்டவள் நாற்காலியில் அமர்ந்து அதனை முழுவதும் உண்டவள் அதன்பின் அவனை நோக்கிச் சென்றாள்.

பால்கனி கண்ணாடியில் ஆனது தான் என்றாலும் அவன் மறுபுறம் திரும்பி இருக்க அவள் கதவு திறக்கும் ஓசை மட்டுமே அவனுக்குக் கேட்டது. அவனின் அருகில் சென்றவள்..

"ப்ரோ உங்க கிட்டக் கொஞ்சம் பேசனும்", நிலா.

அவள் அழைத்ததும் அவளின் விழிகளினை நோக்கிய மதி அழுத்தமாகப் பார்த்தான். அவனின் பார்வையில் என்ன அறிந்தளோ "அது அது வந்து... உங்க கிட்டக் கொஞ்சம் பேசனும்", நிலா என்ன அழைப்பது என்று தெரியாமல் விழிக்க...

முதல் முறை அவள் தடுமாறிப் பார்க்கிறான் மதி...

அது அவனுக்குள் புன்னகையினை வரவழைக்க "ம்ம்ம் சொல்லு", என்றவன் மறுபுறம் திரும்பிக் கொண்டான்.

"இது திடீர் கல்யாணம்...இந்தக் கல்யாணம் இரண்டு பேருக்கும் விருப்பம் இல்லாம நடந்து இருக்கு...", நிலா.

மதி அவளை முறைத்துப் பார்க்கவும்... "நீங்க ஏன் என்னை முறைச்சி பாக்குறீங்க.. இது விருப்பம் இல்லாம தான நடந்தது... நீங்க பண்றதுலாம் பார்த்தா கல்யாணம் செய்ததும் லவ்ல விழுந்துட்ட மாதிரி இருக்கு..." என்று மதியினைக் கூர்ந்து நிலா பார்க்கவும் அப்பொழுதுதான் மதி அவள் பக்கம் திரும்பி அவளை மேலிருந்து கீழ்வரைப் பார்த்தான். அவனுக்குச் சிரிப்பினை அடக்கும் வழித் தெரியாதுச் சத்தமாகச் சிரித்துவிட..

"சரி.. லவ்வில்லை ஒத்துக்குறேன்.. அதுக்கு ஏன் இப்படி சிரிக்குறீங்க... ", என்று அவள் கோபமாக நோக்கவும்...

"வாலு.. உன் டிரஸ் போடாம ஏண்டி என் டிரஸ் போட்டு இருக்க... ", மதி.

"என் டிரஸ் இருந்தா போட மாட்டோமா... கல்யாணத் தோழியா வந்தவளை பிடிச்சுக் கலயாணம் பண்ணி வச்சிட்டு கேக்குறாரு பாரு கேள்வி", நிலா முகத்தினைச் சுளிக்கவும்...

"சரி... தோழியா வந்த சரி... கழுத்த ஏன் நீட்டுன... மாட்டேன் சொல்ல வேண்டியது தான... ", மதி.

"இல்லை... பாட்டி சொல்றத தான் நான் கேட்பேன். என்னால மாட்டேன் சொல்ல முடியாது", என்று நிலா பின்புறம் திரும்பிக் கொள்ளவும்

"அதனால... என்ன சொல்ல வற்ற", மதி கேட்கவும்

"எனக்கு உங்க மேல லவ்லாம் இல்லை. லவ் வரவரைக்கும் வெயிட் பன்னனும்..", சொல்லிக் கொண்டே நிலா திரும்ப... மதி அவளினைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டு இருக்கவும் என்ன எனக் கேட்டாள்

"மேலே சொல்லு", என மதி கூற

"நான் சீக்கிரம் லவ் பண்ண டிரை பன்னுவேன்.. நீங்களும் டிரை பண்ணுங்க.. இல்லை அந்த நிஷாவ நினைச்சிட்டு தேவதாஸ் ஆகிட்டு சுத்துனா நான் மனுசியா இருக்க மாட்டேன்", என்று அவள் சொல்லி முடிக்கும் முன் மதி அவளை அணைத்து இருந்தான்.

நிலாவிற்கு ஒரு நொடி உலகமே நின்றது போல் ஆனது..

"என்ன பன்றீங்க... லவ் இல்லாம என் பக்கத்துல வந்தா கொன்னுடுவேன் சொல்லிட்டேன்", என்றவள் அவனைத் தள்ளிவிடவும்

"சரி... நானும் லவ் பண்ண டிரை பண்ணுறேன்... ஆனால் நிஷாவ மறக்கறது தான் கஷ்டம்", மதி அவளினை பார்த்துக் கொண்டே கூற...

தனது டிஷர்டின் காலரினை இழுத்துக் கொண்டு அவனருகில் சென்றவள்.. "டேய்... இதுதான் லாஸ்ட். இனி அவள் பேரு கூட உன் வாயில் வரக் கூடாது... வந்துச்சு கொன்னுடுவேன்", என்று அவனருகில் நெருங்கி ஒரு கரத்தினை அவனது கழுத்தினை அவள் உயரத்திற்கு வளைத்து மறு கரத்தில் அவன் காதிலும் வைத்து மிரட்ட...

அவளினை அப்படியே கரங்களினில் வளைத்தவன்... "கொன்னுடிவியா", என்றான்.

"போடா", என்றவள் அவனைத் தள்ளிவிட்டு அறையினுள் சென்றுவிட்டாள். மதி அவளின் செயல்களினை நினைத்துத் தலையினைக் கோதிப் புன்னகைத்தவன் உள்ளே நுழைந்து பார்க்க... அவள் மஞ்சத்தில் சரிந்து இருந்தாள்.

அவளின் அருகில் சென்றவன் "வாலு... பால் குடிச்சிட்டுப் படுடி", என எழுப்ப...

"ப்ரோ தூக்கத்துல எழுப்பாதீங்க... ப்லீஸ்...", நிலா.

இவளை என்ன பண்ணலாம் என்று நினைத்தவன் அவளின் அருகில் சென்றுக் கன்னத்தினைக் கடித்து வைக்க... அலறி எழுந்தவள் "டேய் ஏண்டா கடிச்ச... இரத்தக் காட்டேரி", நிலா.

"ஏண்டி நான் உன் புருஷன்டி. திரும்பத் திரும்ப ப்ரோ சொல்லுற... இனி ப்ரோ சொன்னா கன்னம் இல்லை", என்றவன் அவள் இதழினைப் பார்க்க நிலாவின் கரங்கள் தாமாக வாயினை மூடிக் கொண்டன.

"அது... பாலைக் குடிச்சிட்டுப் படுத்துத் தூங்கு", மதி.

பாலினைக் கையில் எடுத்தவள் அனைத்தினையும் குடித்து முடிக்கும் முன் அவளிடம் பாதியில் பிடுங்கியவன்... மீதியினை அவன் குடித்து விட்டு மறுபுறம் சென்றுவிட.... நிலா அவளது பணியினைத் தொடர்ந்தாள்(தூக்கம் தான் நமக்கு ரொம்ப முக்கியம்).

நேசம் இணையும்🙏

தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி😍


 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
19714


அத்தியாயம் 5


💕💕💕💕💕💔❤💓💓💔💕💖💖💕💔💓❤💓💔💕💖💖💖💔💔💓❤💕💕💕💕💕💜💕💔💓💓💓💓💔

கவினின் அறை..

பொழுது புலரும் நேரம் ஹம்சி விழிகளினைத் திறந்தவள் கண்டது தன்னவனின் மார்பினைத் தான். தன்னை அணைத்த வண்ணம் உறங்கிக் கொண்டிருக்கும் தன்னவனின் சிகையினைக் கோதியவள் அவனின் அழகினை ரசித்துக் கொண்டே நிமிடம் பல கடத்த அவனின் அசைவிலும் அசைந்து இன்னும் நெருக்கமாக அணைக்கவும் அவனை மெதுவாக விட்டுப் பிரிந்தவள் அதன் பின் குளித்து பூஜை அறை சென்று பூஜை செய்து சமையல் அறையில் நுழைந்தாள். வேணி அவளினைக் கண்டு புன்னகை செய்தவர் காபியினை அவளிடம் குடுத்து பின் அனைவருக்கும் காபி தரச் சென்றாள்.

மதியினது அறைக்குச் சென்றவள் தட்டலாமா வேண்டாமா என யோசனை செய்து வேண்டாம் என முடிவு எடுத்தவளாய் கீழே வந்துவிட்டாள். வேணியும் ஹம்சியும் வர்த்தினியும் சமையலினை கவனித்துக் கொண்டனர். நேரம் கடந்து எழுந்த கவின்..... மேஜையில் காபி மட்டுமே இருந்தது. அவனருகில் ஹம்சி இல்லாது போக முகம் சுருக்கியவன் உடற்பயிற்சிக்குத் தயாரானான்.

மணி 8 ஆனது...

என்றும் அதிகாலை சீக்கிரம் எழும் பழக்கம் கொண்ட மதியும் அன்று நிம்மதியான உறக்கம் தழுவி இருந்தான். சூரிய வெளிச்சம் சிறிது சிறிதாக அந்த இடத்தினில் படர முதலில் கண் விழித்தது மதியே.. கண் விழித்தவன் கண்டது அவனின் முகம் அருகினில் தேவதையாய் உறக்கத்திலும் சிரித்த முகமாய் இருக்கும் நிலாவினைத் தான். மனதில் சூரியனும் நிலாவையும் ஒரே நேரத்தில் பார்க்குறேனோ என்று நினைத்துக் கொண்டவன் அசைய முற்பட முடியவில்லை... அவனது கரங்கள் இரண்டும் முன் பக்கமாய் ஒடுங்கி இருக்க அவனது காலகளின் மேல் தனது காலினைப் போட்டுக் கொண்டு அவனின் இடையில் தனது கரங்களினைப் போட்டுக் கொண்டு மார்பில் மூச்சு சீராய் ஏறி இறங்க நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அவனும் அப்பொழுதுதான் கவனித்தான். அவனுக்கு அவளின் செயலில் குழந்தைத் தனம் தெரிய... அவளாக விழிக்கும் வரைக் காத்திருப்பது என்று முடிவு செய்து கொண்டான். அவனுக்கு அந்த நெருக்கம் மிகத் தேவையாக இருந்ததுவோ!

அவனின் அலைபேசி சிணுங்கியது...

.......................

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ?
ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ....


அலைபேசியின் சிணுங்கள்களும் அவளினை எதுவும் செய்யாமல் இருக்க...

"நிலா... நிலா.." என்று அழைத்தவன் அவளிடம் சிறிது அசைவும் இல்லை எனவும் அவளின் இதழினைத் தீண்ட மனம் உந்தினாலும் மூளை அதனை மறுத்து அவள் கன்னத்தினை நன்றாக வலிக்கும் படிக் கடித்து வைக்க நிலாவின் ஆஆஆஆஆஆஆஆ என்ற சத்தத்தில் அவனுக்குக் காது ஜவ்வு கிழிந்து விடும் போல் ஆனது... வெளியில் கேட்டுவிடுமே என்று எண்ணியவன் அதற்கு மேல் தாமதிக்காமல் அவளின் இதழினைத் தன் கரம் கொண்டு மூடியவன் கோபாமாகப் பார்க்க... அவளுக்கு இன்னும் அவன் கடித்ததில் கன்னம் வலித்துக் கொண்டு தான் இருந்தது.

நிலாவின் கன்னம் நன்றாக புசுபுசு வென்று இருந்தால் அவனும் என்ன செய்வான்???

அப்பொழுதுதான் நிலா கவனித்தாள் எப்படி இவன் இவ்வளவு அருகில்?... வேகமாக அவன் கரத்தினை தட்டிவிட்டவள் என்ன இது??? என்று கோபமாகக் கேட்க... அவன் முகத்தில் புன்னகை மட்டுமே நிரம்பி இருக்க...

"என்ன விட்டு எழுந்து போங்க", நிலா முகம் சுருக்கி கோபமாகக் கூற

"நீ என்னை விட்டாதான் போக முடியும்...", மதி கூறவும் அப்பொழுதுதான் கவனித்தாள்.

தனது கால்கள் அவனை வளைத்து இருக்க.... வேகமாக அவனிடமிருந்து விலகியவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அவளின் செய்கையினை ரசித்தவன் அவள் போன வேகத்தில் திரும்பி வர எதாவது மறந்து விட்டாள் போல என்று எண்ணி அவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

ஆனால் முகம் மட்டும் அலம்பி வந்தவள் ப்ரஷ் கூட செய்யாது மதி குளியலறைக்குள் புகுந்து விட இவள் கீழே செல்லத் தொடங்கினாள்.

வசு, சந்திரன் மற்றும் உதய் மூவரும் சாப்பிட இவர்களுக்குக் காத்திருக்க.. நிலா மட்டும் மாடியில் இருந்து இறங்கக் கண்ட வேணி அவளினைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே விட்டார்.

"ஹாய் பார்பி என்ன ஷாக்...? போங்க எனக்கு ஒரு டீ கொண்டு வாங்க.. இப்படி என்ன பாத்துட்டே இருக்கப் போறீங்களா.?", நிலா மாடியில் இருந்து கீழே இறங்கியவள் வேணியின் கன்னத்தினை தட்ட்க் கூறவும் "சீ போய் குளிச்சிட்டு வாடி வாலு... உன்னை கொல்லப் போறேன் நான் ஓடு", என்று நிலாவின் காதினை வேணி திருக... அப்பொழுதுதான் அங்கிருந்த அனைவரும் நிலாவினைப் பார்த்தனர்.

ஹம்சி வர்த்தினியும் சமையல் அறையில் இருந்து வெளியில் வர... அவர்கள் கண்டது...

தலை முடிகள் கலைந்து இரவில் வைத்த குங்குமம் முகம் முழுவதுமாக... இதில் மதியின் உடை வேறு... வந்த சிரிப்பினை அடக்கிக் கொண்டு ஹம்சி உள்ளே ஓட... நிலா அவளினைப் பார்த்தவள்...

"மாமியாரே.. என்ன மட்டும் காத கிள்ளுறீங்க... அவளும் அப்படித்தான்... பெட் காஃபி தான் குடிப்பா... என்னை விடுங்க", நிலா.

"என் மருமகள் அதிகாலையிலேயே குளித்து சாமிக்கு விளக்குப் போட்டா... நீ மறியாதையா மேலே போ... இல்லை உனக்கு இன்னைக்கு முழுவதும் சாப்பாடே இல்லை", வேணி.

"நமக்கு டீ முக்கியமா இல்லை சாப்பாடு முக்கியமா??? இல்லை நாள் முழுவது சாப்பாடு இல்லாம இருக்க முடியாது... சாப்பாடு தான் இப்போ முக்கியம்", நிலாவின் மைண்டு வாய்ஸ்.

நேசம் இணையும் 🙏

💕💕💕💕💕💕💕💕💕💕💕


அத்தியாயம் 6

💔💕💔💕💜💓💜💓❤💖💕💔❤💓❤❤💓💜❤❤❤


குளித்து வெளியில் வந்த மதி நிலாவினைத் தேட அவள் அறையில் இல்லை. எங்கே போனா என்று யோசித்துக் கொண்டு அவன் இருக்க அப்பொழுதுதான் நிலா உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்தவன் அவளின் செயலில் தலையில் அடித்துக் கொண்டு நிலாவின் அருகில் சென்று அவள் காதினைப் பிடித்து திருகினான். திடீரென்று மதி தன்னருகில் வருவதும் இப்படித் தன்னை கோபமாகப் பார்க்கவும் "விடுடா என்னை என்ன நினச்சீங்க நீயும் பார்பியும்.. இனி காதை திருகுனா நான் சும்ம இருக்க மாட்டேன்", நிலா கோபமாக்க் கூறவும்...

"என்ன டா வா... உன்னை", என்றவன் தலையில் நன்றாகக் கொட்டவும் "ப்லீஸ் ப்ரோ சாரி", என்று பாவமாக முகம் வைத்தாள். அவளின் கெஞ்சலில் கோபம் குறைந்தாலும் அவளின் அழைப்பில் மீண்டும் கோபம் வர..

அவளை விட்டவன் கண்ணாடி மேஜையின் அருகில் சென்று நின்று கொண்டு " நான் நிஷாவ பார்க்கப் போலாம்னு இருக்கேன். எல்லாம் அவகிட்டப் பேசனும்", எனக் கூறவும் நிலாவிற்கு ஆத்திரம் கட்டுக் கடங்காமல் வந்தது.

வேகமாக அவனின் முதுகின் பின் சென்றவள் அவன் குளித்து முடித்து பனியன் மட்டுமே அணிந்து இருந்தான். முதுகில் நன்றாக பலத்த அடியினை கொடுத்தவள் அவன் வலியில் முதுகினைத் தேய்த்தவாறு திரும்பவும் "கொன்னுடுவேன்.. இனி அவள் பேச்சு இங்க வந்துச்சுனா... புரியுதா... இதுக்கு ஒரு வழி பன்றேன்", கூறியவள் பாத்ரூம் உள்ளே சென்றுவிட்டாள். மதிக்கு அவளின் செயலில் சிரிப்பு தான் வந்தது... அவளினை நினைத்துச்சிரித்துக் கொண்டவன் "ராட்சசி... என்ன அடி அடிக்குறா,.. இப்பவே இப்படி.. லவ் வந்துட்டா என்ன அடி வாங்கனுமோ ! ", என்று நினைத்துக் கொண்டவன் கீழே செல்லத் தொடங்கினான்.

அனைவரும் மதிக்கும் நிலாவிற்கும் காத்துக் கொண்டு இருக்க... கவினும் அப்பொழுதுதான் குளித்துக் கிளம்பி ஹம்சியினை இன்னும் விடிந்ததில் இருந்து விழிகளில் காணாமல் அவளினை மனதில் அர்ச்சனை செய்து கொண்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான். நிலாவும் குளித்து முடித்து அவள் இரவு அணிந்திருந்த புடவையினை அணிந்து கொண்டு வந்து அமர்ந்தாள். அனைவருக்கும் ஹம்சியும் வர்த்தினியும் பரிமாற... கவின் ஹம்சியினைக் கண்டு கொள்ளவே இல்லை. அவனின் செயல் அவளுக்குச் சிரிப்பினை வரவழைக்க வேண்டும் என்றே அவனை உரசியவாறேப் பரிமாறக் கொண்டிருக்க்க் கவினுக்குப் பொறுமை எல்லையினைக் கடந்தது.

கவினுக்குப் பிடித்த பால் பனியாரத்தினை எடுத்தவள் அவன் கோபத்தில் இருக்கிறான் என்று நினைத்து அவன் மீது நன்றாக சாய்ந்தவாறு "இந்தாங்க நானே பண்ணேன்.. எப்படி இருக்கு சொல்லுங்க..", என்று அனைவருக்கும் கேட்கும் படி கூற.. யாரும் அவர்களினைக் கண்டு கொள்ளாது உண்பதில் கவனம் ஆனார்கள்.

ஹம்சியின் அருகாமை கவினுக்கு மேலும் தூண்ட அவளின் ஆடை விலகிய இடயினை நன்றாக்க் கிள்ளியவன் அவளின் அதிர்ச்சியினைக் கண்டு கொள்ளாது "செமயா இருக்கு... இன்னும் வேணும்", என்று அவள் கண்களினைப் பார்த்துக் கொண்டு கூற.. அவ்வளவு தான் அவள் கவினை விட்டு பத்தடி தூரம் தள்ளி சென்று விட்டாள். வேணி அவனுக்குப் பரிமாற எடுத்துக் கொடுத்தாளும் வர்த்தினியிடம் கொடுத்து நழுவிக் கொண்டாள்.

வசு அனைவரிடமும் சில விவரம் பகிர்ந்தவர்... "ஒரு வாரத்துக்கு நம்ம கிராமத்துக்குப் போய்ட்டு வாங்க மூணு பேரும்... இங்க வேலை எல்லாம் சந்திரன் பாத்துக்கட்டும்", வசு.

"ஆமா அம்மா.. ஆனால் கிராமத்துக்குப் போகனுமா.. வேற இடத்துக்குப் போகலாமே.. நான் கம்பெனியப் பாத்துக்குறேன் கவின். மதி உதய் என்ன சொல்றீங்க", சந்திரன்.

"அதெல்லாம் வேண்டாம். கிராமத்துக்கு தான் நீங்க போகனும்... யாரையும் பர்மிஷன் கேக்கல போறீங்க.. அவ்வளவுதான்", வசு.

"கண்டிப்பா வசு.. எனக்கு ஓகே.. நான் இப்போ கூட ரெடி", என்று ஹம்சியினைப் பார்த்துக் கொண்டே கவின் கூற ஹம்சி அவனை உதைப்பேன் என்று கையினில் சைகை செய்து காட்டினாள். அவளினைப் பார்த்துக் கவினும் கண் அடிக்க அவள் வெட்கத்தில் திரும்பிக் கொண்டாள்.

"ஓகே வசு நான் ஸ்கூல்ல லீவ் சொல்லிடுறேன்.. அம்மு நீயும் சொல்லிடு..", உதய் கூற.. வர்த்தினியும் "சரிங்க பாட்டி... நான் சொல்லிடுறேன்", கூறினாள்.

வசு மதியினைக் கேள்வியாகப் பார்க்க... மதிக்கு என்ன கூறுவது என்று ஒன்றும் புரியவில்லை. இவள் ஒத்துக் கொள்வாளா இல்லை நம்மை திட்டுவாளா என்று வசுவினை பாவமாகப் பார்க்க..

"டார்லிங்... நாளைக்கு தான் போகனுமா... இன்னைக்கே ரெடி பண்ணலாமே... வாவ்... கிராமத்துக்குப் போறோம்... ஜாலி ஜாலி", என்று பால் பனியாரம் இரண்டினை எடுத்து ஒன்றாக வைத்தவள் ஆசையாகக் கூற... மதிக்கு மயக்கம் வராத குறைதான்.. அதிலும் வேணிக்கு உச்சகட்ட அதிர்ச்சி... எப்படி இவள் இப்படி குழந்தையாவே இருக்கா என்று சந்திரன் யோசிக்க...

வசு என்றும் போல் இன்றும் நிலாவினை ரசித்தார். நாளைக்கு கிளம்பிடுவீங்க அரசிக் கண்ணு... எஞ்சாய் பண்ணிட்டு வாங்க", வசு.

"டார்லிங்க் நீங்க வரலையா.. வாங்க நம்ம எல்லாரும் எஞ்சாய் பண்ணலாம்... ஹாப்பியா", நிலா கூறவும் வேணி தலையினில் அடித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார். அவளின் செயலில் நிலா என்னவோ என்று பார்க்க... கவின் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டான். உதய் வர்த்தினியிடம் வா என்று கூறிக் கொண்டு சென்றுவிட... சந்திரனும் அதற்கு மேல் அங்கு உட்காராது சென்றுவிட்டார். அவளின் கேள்வியில் ஹம்சியே அவளை பாவமாக தான் பார்த்தாள். வசு அவளினை அருகினில் அழைத்தவர்... :உங்களுக்கு தேனிலவுக்கு அங்க அனுப்புனா.. நான் எப்படி அங்க வர முடியும்", வசு கூறவும் நிலாவிற்கு அப்பொழுதுதான் அது விளங்கியது... வசு கூறவும் அவள் மதியினை பார்க்க.. மதிக்கு அதற்கு மேல் சிரிப்பினை அடக்கும் வழி தெரியாது போக... அவனும் எழுந்து சென்றுவிட்டான்.

ஹம்சி அவளினைப் பார்த்து சிரித்துக் கொண்டு வசுவுடன் உள்ளே சென்றுவிட்டாள்.

கையில் வைத்திருந்த கடைசி பனியாரத்தினையும் உண்டவள் "அடச் சீ.. இது கூட தெரியாம ஜாலி ஜாலின்னு வேற சொன்னயேடி நிலா.. என்ன உனக்கு வந்த சோதனை... பிள்ளையாரப்பா... எனக்குக் குட்டி மூளைதான் ஒத்துக்குறேன்..., ஆனால் இப்படி இந்த சமயத்துல வேலை செய்யாமப் போறதுலாம் நியாயமில்லை... என்ன நினைச்சாங்களோ எல்லாரும்... இவன் வேற இப்படிப் பாத்துட்டு போறானே", என்று நினைத்தவள் அதன் பின் அறைக்குச் சென்றாள்.

Hiii all... naan mudinja alavukku seekiram ud poduren.. manichukonga drssss... konjam illa romba ve mind upset.. ippo ok😊

தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி 😉

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
20098


அத்தியாயம் 7

💔💔💓💓💓❤💓💔💕💕💖💖💖💔💓💚💗💚💛💙🧡💙🧡💜

மதி தனது அறையில் சிரித்த வண்ணம் அமர்ந்து இருக்க உள்ளே நுழைந்த நிலா அவன் சிரித்தபடி அமர்ந்திருக்கக் கண்டு "இதுலாம் நமக்குத் தேவை தான்... என்ன சொல்ல வராங்க கூட தெரியாம ஜாலி சொன்ன ல.. அதுக்கு தான் இவன் அப்படி சிரிக்குறான்" என்று நினைத்தவள்...

அவனது கபோர்டினைத் திறந்து அவனது டிஷர்ட் மற்றும் பேன்டினை எடுத்துக் கொண்டு செல்லக் கண்டவன் அவளிடம் வந்து அதனைக் கைகளில் பிடுங்கியவன் அவனுக்குப் பத்தாமல் போன டிஷர்டில் கருப்பு நிறத்தில் ஒன்றினை எடுத்துக் கொடுத்து... "ஈதை போடு.. சத்தியமா என்னால அதுல உன்னை பாத்துட்டு சிரிப்பக் கன்ட்றோல் பண்ண முடியாது", என்று கூற..

நிலாவும் முகத்தினை சுளித்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அதுவரை அவனது மொபைலில் இசை இசைக்க அவனுக்காகவே இசைத்தது போன்று இருந்தது,...

*****

தங்க நிலவுக்குள்
நிலவொன்று
மலருக்குள் மலர் என்று
வந்ததே
எந்தன் கனவுக்குள்
கனவொன்று
நினைவுக்குள் சுகம்
ஒன்று தந்ததே

கொடி முல்லை கொடி
கட்டும் மன்னனோ
இன்பச் சிறை பட்டு திரை
இட்ட கண்ணனோ
கொடி முல்லை கொடி
கட்டும் மன்னனோ
இன்ப சிறை பட்டு திரை
இட்ட கண்ணனோ

நிலவுக்குள் வண்ண
மலருக்குள்

*********

தனது ரிங்டோன் எப்படி மாறியது என்று யோசித்தவனுக்கு நிலாவின் மேல் சந்தேகம் வர... அவள் நம்ம கூட தான இருந்தா எப்படி மாத்தி வச்சா என்று யோசித்துக் கொண்டு இருந்தான். நிலா என்று பாடலில் வரவும் அவள் தான் காரணம் என்று உறுதியே செய்துவிட்டான்.

குளியல் அறையில் இருந்து கருப்பு நிற டிஷர்டினை அணிந்து கருப்பு நிற மதியின் லோயரினையும் அணிந்து கொண்டு வெளியில் வர... அன்று தான் மதி அவளின் அழகினை ரசிக்குறான்...

நிலாவின் மஞ்சள் கலந்த வெண்மை நிறம் அவள் அணிந்து இருந்த கருப்பு டீஷர்டிற்குப் பளிச்சென்று இருக்க... அவளின் கழுத்தில் அணிந்திருக்கும் தாளி அவளது அழகினை மேலும் கூட்டி இருக்க... அவளின் நெற்றியில் இட்டிருக்கும் திலகம் அவளின் முக அழகினில் ஜொலிக்க, அவளின் புசுபுசு கன்னம் நேற்று இட்ட சந்தனத்தின் விளைவால் மெருகு ஏறி இருக்க.. கைகளில் கண்ணாடி வளையல்... காதில் ஜிமிக்கி என்று தேவதையாய் (கொஞ்சம் லூசு போல தான்...) தெரிந்தாள்.

மதி அவளினையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் பார்வையினை அறிந்தவள்.. "என்ன லுக்... நிஷாவ விட நான் அழகு தான..?? ", நிலா.

"யாரு சொன்னா.. நீ அவளை விட அழகுன்னு... உனக்கே இது ஓவரா இல்லை", மதி அவளினை புருவம் உயர்த்திக் கேட்கவும் நிலாவிற்கு நிஷாவின் முகம் நினைவில் வந்தது... நிஷாவினை ஹம்சியுடன் இந்த வீட்டிற்கு வரும் பொழுது பார்த்து இருக்கின்றாள். ஏனோ அவளிடம் ஒவ்வாத்தன்மை இருப்பது போலவே உணர்ந்தாள். நிலாவின் குணத்திற்கு அவளிடம் பேசாமல் யாரும் இருக்க வாய்ப்பே இல்லை.. அப்படி இருக்க நிஷாவிடம் நிலாவே பல முறை சென்று பேசியும் அவள் பேசினாளில்லை.... ஆனால் மதியின் கூற்றில் உண்மை இருந்தது... என அவள் யோசித்தாள்.

"ஆமா.. நம்மல விட கலர். அழகான முடி... வெட்டிவிட்டு பறக்கும்... நமக்கு ரொம்ப நீளம் பறக்கவும் செய்யாது... நல்லா ஒட்டிய கன்னம்... நம்மல மாதிரி பெருசு இல்லை... அப்புறம் முக்கியமா அவள் நல்ல வடிவான உடல்.. நம்ம குண்டு ல" என்று யோசித்தவள் "ப்ச்... நான் ஏன் இப்படி இருக்கேன்", என்று மதியிடம் கேட்டாள்.

அவளின் ஒவ்வொரு செயலினையும் பார்த்துக் கொணிடிருந்தான் மதி... அவளின் முடியினை எடுத்து யோசித்தது... கன்னத்தினைத் தொட்டுப் பார்த்தது... இடையினை தீண்டி முகம் சுருக்கியது... என அவளின் முகம் சுண்ங்களில் புன்னகை செய்தவன் நிலாவின் அருகில் சென்று அவளினைத் திருப்பி அவளின் முடியின் பின்னலினை அவிழ்த்து சீப்பினை எடுத்து சீவ... நிலா எதுவும் கூறாமல் அவனுக்குத் தலையினை மட்டும் சரித்தவள் யோசனையிலேயே இருந்தாள். அவளினை நாற்காலியில் அமர்த்திய வண்ணம் முடிகளினை ஒழுங்கு படுத்தியவன் குட்டிக் கிளிப்பில் அடக்கி ஓரமாக அவளது இயற்கையிலேயே பறக்கக் கூடிய முடியினை எடுத்துவிட அது அழகாக சுருண்டு அவளின் கன்னத்தில் விழுந்தது. பின்னல் இடாது கிளிப் மட்டும் இட்டதால் ஃப்ரீயாக இருந்த கற்றைகளினை அவளின் முன்புறம் தவழவிட்டவன் அவளின் யோசனையினைக் கலைக்க.. "இந்த புசுபுசு கன்னம் எவ்வளவு அழகு தெரியுமா??.. அதுவும் இந்த முடி எவ்வளவு நீளம்... இந்த கண் இருக்கே", என்று கூறிய மதி அவளின் எதிரில் இருந்த கண்ணாடியில் அவளின் விழியினைப் பார்த்துக் கொண்டே இருக்க.. அவனின் கூற்றில் மனம் லேசாக இருக்க. அவனது கடைசி வார்த்தை தேக்கி நிற்கவும் திரும்பி அவன் முகம் கண்டு என்ன என்பதுபோல் புருவத்தினை உயர்த்திக் கேட்டான்.

அவளின் புருவம் உயர்த்தியதினைக் கண்டவன் அதன் பின் நொடியும் தாமதிக்காது அவளின் கன்னத்தினைக் கைகளில் ஏந்தி விழிகளின் அருகில் செல்ல நிலா இமைகளினைப் படபடத்து மூடிக் கொண்டாள். அவளின் இமைகளின் துடிப்பினை அறிந்தவன் மெல்லிய புன்னகை சிந்திப் பின் இமைகள் இரண்டிலும் இதழால் ஒற்றினான். அவன் இதழ் தீண்டி நிமிரும் சமயம் கதவுத் தட்டும் ஓசைக் கேட்டு நிலா அதிர்ச்சியில் விழிக்க.. மதியும் நிலாவினை விடுத்து வெளியில் சென்றான்.

நேசம் இணையும்
💔💔💓💓💕💕💖💓❤💕👅💔💓💔💕💕💖💖

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
20250


மதி நிலாவினை விடுத்து யாரென பார்க்க சென்றவன் கதவினைத் திறக்க ஹம்சி தான் நின்று இருந்தாள். அவளிடம் இருந்த சுடிதாரினை மதியிடம் கொடுத்தவள் "இப்போ இதை போட சொல்லுங்க அண்ணா... அப்புறம் உடை எடுத்து வரலாம்", என்று கூற...


அவனைத் தள்ளி ஹம்சியிடம் வந்தவள் "இந்த ஐடியா எனக்கு இல்லாம போச்சு பாரு டி... கொடு.. சாக்கி ப்ரோ கிட்ட இன்னைக்கு லீவ் சொல்லு டி .. ரொம்ப டயர்டா இருக்கு", நிலா.


"மேடம் அப்படி என்ன செய்தீங்க.


அவ்வளவு டயர்டு.. ", ஹம்சி.


"எல்லாம் இவன் தான்... சரி பாய் டி ", நிலா கூறியவள் இருவரினையும் காணாமல் உள்ளே உடை மாற்ற சென்று விட்டாள்.


மதி ஹம்சியின் பார்வையினைத் தாங்காது குனிந்து சிகை கோத ஹம்சியும் புன்னகைத்த வண்ணம் ஓடி விட்டாள்.


உள்ளே வந்தவன் அவள் உடை மாற்ற சென்று விட்டதனை அறிந்து சிறிது ஓய்வு எடுப்போம் என்று உறங்க... வெளியில் வந்தவள் அவனருகில் படுத்து அவனுக்கு முன் உறங்கி விட்டாள்.


இருவரும் நன்றாக உறங்கி எழ மதியம் ஆகி இருந்தது. முதலில் எழுந்த மதி நிலாவினை எழுப்பி இருவரும் மதிய உணவினை முடித்துக் கொண்டு ஹோமிற்குச் செல்லலாம் என்று மதி கூறவும் சம்மதம் தெரிவித்தாள் நிலா.


அன்றைய மாலை பொழுது ஹோமிலேயே இருவருக்கும் முடிந்தது. வீடு வராது மதி வேறு புறம் செல்ல என்ன என்பது போல் நிலா பார்க்க... பைக் ஜவுளிக்கடை முன் நின்றது. நிலாவும் என்ன என்பது போல பார்க்க... மதி புடவை செக்சனில் நுழைந்தவன் அவளின் நிறத்திற்கு பாந்தமாய் நான்கு புடவைகளினை எடுத்து அவளிடம் தந்தவன் அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.


வீட்டிற்கு வரும்வரையிலும் அவளது வாய் ஓயாது ஒலிக்க.. பொறுமை இழந்தவன் ஹாலில் யாரும் இல்லை என்பதனை உறுதி செய்து அவளினைத் தன்புறம் இழுத்தவன் தலையில் கொட்டி அவளது இதழில் தன் வலது சுட்டு விரல் கொண்டு அமைதி என விழிகளில் மொழிந்தவன் பின் மாடிக்குச் சென்று விட்டான்.


அடுத்த நாள் காலை அழகாக விடிய கிராமம் செல்ல எல்லா ஏற்பாடும் முடிந்து இருந்தது. அன்று கவினின் பெயருக்கு கடிதம் வரவே வாங்கியவன் அவனின் சூட்கேசில் வைத்து மூடி பின் நால்வரும் கிராமம் நோக்கிப் பயணித்தனர்.


எங்கு நோக்கினும் பசுமை பொருந்திய அழகிய குட்டி கிராமம் தான் வாகரை. இது வசுவின் சொந்த ஊர். வசுவின் திருமணம் நடக்கவே ஊரினை விட்டு பிறிந்தவர் அதன் பின் அங்கு சென்றதே இல்லை. ஆனால் அவருக்கு அங்கு செல்வாக்கு மிக அதிகம். அவரின் தந்தை மற்றும் தாய் இருவரும் இறந்த பின்னர் தனி ஆளாக வாழ்ந்து கவினின் தாத்தா அவரின் தைரியத்தினை விரும்பி குடும்பத்துடன் பெண் கேட்டு மணம் முடித்திருந்தார். வசுவின் வீடு கிராமத்தின் மூலையில் அழகான ஓட்டு வீடு அதனை சுற்றி வேலியும் உள்ளே ஒரு கிணறு, மரம், செடி என இருக்கும்.

காரில் பயணம் செய்து கொண்டே வெளியில் விழி விரித்தனர் நால்வரும். அருகில் ஓடும் ஓடை, சிலிர்க்கும் தென்றல், பசுமை நிறைந்த வனங்கள் என காணும் இடம் யாவும் மதி மற்றும் கவினிற்கு புதிது. ஆனால் ஹம்சி மற்றும் நிலாவிற்கு அவர்களது ஊரிலேயே பார்த்தாலும் இந்த கிராமம் இன்னும் அழகாகவே தெரிந்தது.

வீட்டினை அடைந்தவர்களுக்கு இடம் மிகவும் பிடித்துவிட தூய்மை செய்து வெளியில் நேரம் கழித்தனர்.


நிலாவும் ஹம்சியும் எதாவது சமைக்கலாம் என எண்ணி வசுவின் ஏற்பாட்டின் படி அருகில் இருந்த மகி என்னும் பெண் மூலம் காய்கறிகள் பெற்று சமயல் வேலையினைத் தொடங்கினர்.


மதியும் கவினும் அன்றையப் பொழுதினைக் கழிக்கக் கிணற்றுக்கு அருகில் இருந்த திட்டில் அமர்ந்து இருந்தனர்.


கவின் மதியிடம் அவனது திருமண வாழ்க்கையினைத் தொடங்க அறிவுரை கூற... இடையில் மதி கவினைத் தடுத்து அவன் மனதில் உள்ளவற்றினைக் கூற ஆனந்த அதிர்ச்சியில் விழி விரித்த கவின் மிகுந்த மகிழ்ச்சியுடன் மதியினை அணைத்துக் கொண்டான். விரைவில் ஹம்சியினை அறைக்கு வரக் கூறிய கவின் ஹம்சியிடம் அதனைக் கூற ஹம்சிக்கும் அளவில்லா மகிழ்ச்சியே.


"நம்ம இன்னைக்கு வாழ்க்கையை தொடங்லாம்.. ரெடி ஆ இரு" என்று கூறிய கவின் கண் சிமிட்ட அவனைத் தள்ளிவிட்ட ஹம்சி சூட்கேசினை எடுத்து அனைத்தினையும் வெளியில் வைத்துக் கொண்டு இருந்தாள். அவளின் கரத்தில் நேற்று கவினுக்கு வந்த கடிதம் கிடைக்க அதனை என்னவென்று காணப் பிரித்துப் படித்தவளின் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிகள்.


கவின் மதியுடன் வெளியில் சென்று இருக்க... நிலா ஆழ்ந்த நித்திரையில் மிதந்து கொண்டு இருந்தாள்.... ஹம்சியின் கரத்தில் உள்ள கடிதம் ??????

நேசம் இணையும் 🙏

Hiii drssss...

study work start agiduchu... ini Sunday update panra drsss... sry guys...
love u all...
also miss you all...
by
nivi😍

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
20612



💞💞💞💕💞💕💞💔💓💞💕💞💕💞💔💔💞💕💖💔💓❤💓💞💕💞💕💞


அத்தியாயம் 9❤


கடிதத்தினைப் பிரித்துப் படித்த ஹம்சி அதிர்ச்சியில் இருந்தாள். அவளுக்கு முடிவு எடுக்க நேரம் தேவைப்பட்டது..

அந்த நேரம் கவினும் மதியும் வெளியில் சென்று இருந்தனர்.. நிலா உறக்கத்தில் இருந்தாள்.
பல மணி நேரம் யோசித்தவள் கடைசியில் ஒரு நல்ல முடிவுடன் அக்கடிதத்தினை மேஜையில் வைத்துவிட்டு அறையினுள் சென்றாள். அவள் வரும் வேளை அங்கு கடிதம் இல்லை. என்ன எனறு பார்க்க வெளியில் செல்ல மதி தான் கடிதத்துடன் வெளியில் நின்று இருந்தான். ஹம்சி கையில் கொண்டு வந்திருந்த கடிதத்தினை எடுத்துக் கொண்டு மதியிடம் சென்று "அண்ணா அதை கொடுங்க.. எரிச்சிடலாம்.. ", ஹம்சி.


மதி, ஹம்சியினை நோக்கியவன் "உனக்கு இதில் சந்தேகம் இல்லையா ஹம்சி. இந்தக் கடிதத்தில் இருக்க செய்தி???", மதி கேட்க...
"ஊரில் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க.. எல்லாத்தையும் நம்பிட்டு இருக்க முடியுமா... இதில் எனக்கு வருத்தம் இருக்கு தான் ஒத்துக்குறேன். ஆனால் நம்பிக்கை இல்லை அண்ணா", ஹம்சி.



அவளினைப் பெருமையாகப் பார்த்த மதி தோளோடு அணைத்துக் கொண்டான். நீ எதுவும் நினைக்காத ஹம்சி. நான் இதைப் பாத்துக்குறேன். கவினுக்கு இது தெரிய வேண்டாம். ஒரு வாரத்துல இதுக்கு முடிவு தெரியும். என்று மதி கூறும் நேரம் நிலா வெளியில் வந்தவள்... எதோ ரகசியம் போல என்று பார்த்துக் கொண்டு நிற்க... கவின் வரவும் அவனுடன் உள்ளே சென்றுவிட்டாள்.


மதியும் ஹம்சியும் எதுவும் நடக்கவில்லை என்பது போல உள்ளே வரவும் நிலாவிற்கே ஆச்சர்யம்.
என்னமா நடிக்குதுங்க...
"நாம பாக்கலனா இதுங்க நடிக்குறதுலாம் பாத்துட்டு உண்மைனு நம்பி இருப்போம். நிலா இதுங்க கிட்ட உஷாரா இரு டி. அதுவும் இவன் கிட்ட ரொம்ப உஷாரா இருக்கனும்.. "நிலாவின் மைண்டு வாய்ஸ்.
கவின் பல கனவுகளுடன் அன்று இருக்க ஹம்சி பல குழப்பத்துடன் இருந்தாள். மதி யோசனையில் இருக்க நிலா கோபத்தில் இருந்தாள். இரவு சமையல் முடித்து உணவு உண்டுவிட்டு உறங்கும் நேரம் வரும் வரை அனைவரும் வெளியில் பேசிக் கொண்டு இருந்தனர். ஆனால் ஒவ்வொருவர் மனநிலையும் வேறு.

கவினுக்கு ஹம்சியுடனான வாழ்க்கையினைத் தொடங்குவது பற்றி...


மதிக்கு இந்தப் பிரச்சினைக்கு காரணமானவரைக் கண்டு பிடிப்பது பற்றி...


ஹம்சிக்கு நம்பிக்கை பல மடங்கு இருக்க இது ஏன் என்ற குழப்பம்...


இவர்கள் எல்லாரையும் தாண்டி.. நிலாவிற்கு அந்தக் கடிதம் மேல் கண்...எப்பொழுது அதை எடுப்பது என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தாள்.
அவரவர் மனநிலையில் மூழ்க...
இரவும் கனிந்தது....



அறைக்குள் வந்த கவின் ஆசையுடன் ஹம்சியினைத் தழுவ ஹம்சியும் எந்த வித மன உளைச்சலும் இல்லாது முழுவதுமாக கவினுடன் இணைந்தாள். அவர்களின் காதல் அடுத்த கட்டத்திற்கு சென்றது...


அறைக்குள் வந்த மதி பாலினை குடித்துவிட்டு அயர்ந்து உறங்கி விட்டான். அவன் உறங்கியதினை அறிந்த நிலா அவனது மொபைலின் அருகில் இருந்த கடிதத்தினை எடுத்துப் பிரித்துப் படித்தாள்.


படித்தவளுக்கு கோபமா?? அதிர்ச்சியா...??? வலியா??? காதலா????


காதலா என்று மனம் உறுத்த... நிலாவின் செவிப்பறையில் ஒரு குரல் காதல் தான் என உரைத்தது...


ஒரு கடிதம் அவளுக்குள் காதல் கொண்டு வந்துவிட்டதா...
இல்லை... காதலை வெளிப்படுத்திவிட்டது... ஆனால் அறிந்த தருணம் காதலுக்கு சமாதியும் கட்டி விட வேண்டிய சூழ்நிலையா என எண்ணியவள் அதன் பின் உறங்க மறந்து போனாள்...


நிலாவின் எதையும் நினைக்காது உறங்கும் குணம் இன்றிலிருந்து அவளின் வாழ்க்கையில் அழிக்கப்பட்டுவிட்டது...


காலையில் எழுந்த மதி நிலாவினைத் தேட...

நிலா அறையில் இல்லை.. தினமும் தான் எழுப்பாமல் எழாதவள் இன்று அறையில் காணாது போக மதி தன்சுத்தம் செய்துவிட்டு வெளியில் சென்று பார்க்க... நிலா கிணற்றின் திட்டில் அமர்ந்து இருந்தாள்.

அவளின் முதுகு மட்டுமே தெரிந்தது...
மதி அவளினை பார்த்தவன் பின்னிருந்து அவளின் தோளில் கரம் பதிக்க... திரும்பியவள் விழிகளில் நீர் கோர்த்து இருந்தது...
மதிக்கு மனதில் வலி எழுந்தது... மதியினைப் பார்த்த நிலா அவன் புறம் திரும்பியவாறு அவனது கழுத்தினை வளைத்து அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்த மதிக்கு அதிர்ச்சி...



நிலாவினை கிணற்றின் திட்டில் இருந்து அப்படியே இறக்கியவன்.. அவள் இன்னும் தனது பிடியினை விலக்காதது கண்டு அவனும் அணைத்துக் கொண்டான். அவளின் அழுகை மட்டும் தீரவில்லை.


ஹம்சி அங்கு வந்தவள் இருவரையும் கேள்வியாகப் பார்த்துக் கொண்டே நிலாவின் மொபைலினை மதியிடம் தர.. அதில் இருந்த பெயரினைப் பார்த்துக் கொண்டே காலினை அட்டன்ட் செய்ய..
எதிரில் கூறிய செய்தியில் மதிக்கும் நெஞ்சில் ஒரு வலி..


நிலாவின் அழுகைக்குக் காரணம் இதுதான் போலும் என்று எண்ணியவன் அவளின் அழுகையினைக் கட்டுப் படுத்தினான்.


அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தவன் கவின் ஹம்சிக்கு விவரம் கூறி நிலாவினை அழைத்துக் கொண்டு சென்றான்...

ஒரு வேகத்தில் மதியினைக் கட்டிப் பிடித்து அழுதுவிட்டோமே என்று எண்ணிய நிலாவிற்கு மதி தங்களை எங்கு அழைத்துச் செல்கிறான் என்பது மட்டும் புரியவில்லை....

யோசனையிலும் கடிதத்தின் தாக்கமும் அவளுக்கு வலியினைக் கொடுக்க கார் ஜன்னலில் சாய்ந்து கொண்டாள்.


மதி அவள் முகத்தினில் தெரிந்த வலியில் விரைவில் காரினைச் செலுத்தினான்.


கவினுக்கு எங்கு செல்கிறோம் என்று தெரியும்..
அதே போல நிலாவினைப் பற்றிய பல உண்மைகள் தெரிய வரும் என்பதால் கவினுக்கு மனதில் வலியிலும் சரி என்றே தோன்றியது... ஆனால் ஹம்சிக்கு நடப்பது அனைத்தும் மர்மமாக இருந்தது...


நடப்பது ஒன்று... புரிதல் ஒன்று..


இதுதான் மதிக்கும் நிலாவிற்கும் நடக்கின்றது..


வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே என்று சுத்திக் கொண்டு இருந்தவள் நிலா... மனதில் என்னென்ன வலிகள் இருந்ததோ????


நிலா பற்றி அப்படி என்ன தான் உண்மை இருக்கு????


மதிக்கும் பாஸ்ட் இருக்கு... அது என்ன????


இதெல்லாத்துக்கும் அடுத்த வாரம் ஞாயிறு அன்று பதில்😍


தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி😍

 
Status
Not open for further replies.
Top