All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் "என்னருகில் நீ இருந்தால்...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னருகில் நீ இருந்தால் - 5

imageedit_1_7362615469.jpg


” சரி தான். இப்போவே சப்போர்ட்டா.. என லதா தன் தலையில் கையே வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள்.. “

நிஷா , அவளை பார்த்து சிரித்து விட்டு.. தான் எடுத்து வைத்து இருந்த…. வீடியோவை திரும்ப ரிவைண்ட் செய்து பார்த்தாள்… ..


அதை கவனித்த.. லதா.. , என்ன பண்ணுற நிஷா… ‘

‘ இல்லடா.. அந்த ஆள் முகம் நல்லா தெரியுதானு பார்க்குறேன்… ”


அது... ஒன்னும் பிரச்சனை இல்லை.. எப்பிடியும் ராகவியே வச்சு பிடிச்சுருவாங்க என இருவரும் பேசி கொண்டே ..குணாகாகக் காத்து இருக்க..


அங்கே அலைபேசியே அனைத்து விட்டு.. குழப்பத்துடன். நின்ற குணாவைப் பார்த்து… ..


அவன் அருகில் வந்த குமரன்..” என்ன ஆச்சு குணா.. ஏதும் பிரச்சனையா? உன் முகமே சரி இல்லையே.. ”என கேட்க...


” ஆமா சார்.. லதா தான் போன்ல…எதோ பிரச்சனையாம்.. நேரல பார்த்து தான் சொல்லணும் சொல்லுறா.... இங்கே தான் அவளும் இருக்கா.. நாம வந்த வேலை முடியாம.. எப்படி போய் பார்க்குறது சார் அதான்…”


” ஹ்ம்ம்.. சிறிது..நேரம் குமரன்...யோசித்து விட்டு… ஒன்னும் பிரச்சனை இல்லை..குணா.. நாம போய் பார்க்கலாம்… எந்த பக்கம் இருக்காங்க.. விசாரிச்சியா .. ”


” கேட்டேன்.. சார்.. அந்த சீ – சா கிட்ட இருக்கிற ..மரம்.. கிட்ட இருக்கா.. சார்…” குணா சொல்ல...


” சரி வா போகலாம்…என குணாவிடம் குமரன் சொல்ல இருவரும்.. லதா சொல்லியே இடத்தை நோக்கி.. சென்றார்கள்.......


அங்கே..” லதா – நிஷா.. குணாவின் வரவுக்காக காத்து கொண்டு இருந்தார்கள்…. குணாவிடம் எப்படி விஷயத்தை.. சொல்வது… என லதாவிடம் கலந்து ஆலோசித்தாள்.. நிஷா..எதிர்ல வந்த குணா.. மற்றும் குமரனை முதலில் கவனித்தது..…..நிஷா.. தான்... .


லதாவிடம் ஹே யாரோ நம்மள நோக்கி வராங்க டா.. ஒரு வேலை.. அண்ணாவா இருக்குமோ… ஆனா கூட இன்னும் ஒருத்தர்.. வராப்புல..தெரியுதே யாரு அது.. இப்போ எப்படி அண்ணாக்கிட்ட. விஷயத்தை சொல்லுறது….


நிஷா சொன்னவுடன் திரும்பி பார்த்த.. லதாவின் முகம் மலர்ந்து விட.. நிஷா.. அவளை குழப்பத்துடன் பார்க்க.. அதற்குள் குணா. மற்றும் குமரன்.. அவர்கள் அருகே வந்துவிட்டார்கள் .


நிஷா ஏதோ சொல்ல வருவதற்குள் குணா. லதாவிடம்.. சொல்லு…. லதா. என்ன பிரச்சனை. எதுக்கு இவ்வளோ அவசரமா வர சொன்ன.. என குணா….கேட்க..

நிஷா.. இது தான் அண்ணாவா..அப்போ இது யாரு? என்று அருகில் நின்றுகொண்டு இருந்த குமரனை..பார்க்க.. .. .. இவனை எந்த அளவுக்கு நம்புறது என ஒரு சந்தேக பார்வையே குமரன் பக்கம் .. பார்த்து வைத்தாள்..”

அவளின் பார்வை உணர்ந்து திரும்பி பார்த்த குமரன் .. என்ன என்று கேட்க…..



அவன் சட்டேனே திரும்புவான் என எதிர்பார்க்காத நிஷா...பதட்டதுடன் அவனை பார்த்து.. ஒன்றும் இல்லை என தலையே மெல்ல அசைத்துவிட்டு.. குனிந்து கொண்டாள்...[ மனதுக்குள் முருகா இப்படியா பார்த்து வைப்பேன்.. என்ன நினைதுற்பாங்க என்ன பத்தி.. ]


அவளை பார்த்து குமரன் தனக்குள் சிரித்து விட்டு..” ம்.. சந்தேகம் படுறா…மனதுக்குள் நினைத்துவிட்டு.. …லதாவிடம் திரும்பி.. சொல்லுமா என்ன பிரச்சனை.. அப்படி என்ன நேருல தான் சொல்லுற அளவுக்கு….

லதா, ” அண்ணா.. அது..வந்து... என .. சிறிது நேரம் யோசித்துவிட்டு... .ராகவியோட செயலையும் .. பிறகு.. அவள் இங்கே வந்து சாக்லேட் வாங்கின அனைத்தையும் ஒன்று விடாமல்... அவனிடம் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் .. ”


குமரனும்.. குணாவும்.. …அதை கேட்டு...ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு… சரி.. அந்த ஆள் யாரும் தெரியுமா… .?


” அண்ணா தெரியலை அண்ணா எங்களுக்கு..….ஆனா நிஷா.. ராகவி அந்த ஆள் கிட்ட. சாக்லேட் வாங்குறத.. வீடியோ எடுத்து இருக்கா. …. , ”


என்னது வீடியோ..வா.. இப்போ கேட்பது . குணாவின் முறை ஆனது..


ஆமா.. வீடியோ மட்டும் இல்லை.. நிஷா. அந்த சாக்லேட்.. எடுத்து குடு …என லதா கேட்க..


நிஷா. வேகமாய்.. தனது பேக்கில் இருந்து அந்த சாக்லேட் பார் எடுத்து கொடுத்தாள் ….
அதை வாங்கி குணாவிடம் தந்தவள்….. ” இது தான் இதுக்கு தான் இப்போ அவள் இங்க வந்ததே.. இதை சாப்பிடலன்னா அவள் கை எல்லாம் நடுங்குதாம்…..என சொல்ல. இதை எல்லாம் கண்டுபிடிச்சது நிஷா.. தான் அண்ணா.என கூடுதல் தகவலையும் சேர்த்து சொன்னாள் …



குமாரனால். நிஷாவின் செயலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.. இந்த வயசுல. இப்படி ..நிதானமா செயல் பட.. முடியுமா.. என்ன அவளை கவனித்த படி... தன் கையில் இருக்கும் ஆதாரங்களை பார்த்தான்... ...


நிஷா.. அய்யோ… அது எல்லாம் இல்லை சார்.. . லதா தான்
முதல அவளோட நடவடிக்கை எல்லாம் சொன்னது.. அதுக்கு அப்புறம் தான். நாங்க சேர்ந்தே இவள தொடர்ந்து வந்தோம்.....……. எனச் .. சொன்னாள்



குமரன், மனதுக்குள்…’ ஹ்ம்ம் தன்னடக்கம்….”
அந்த வீடியோ..இப்போ உங்க கிட்ட இருக்கா .?? குமரன் கேட்க


ஆமா அண்ணா… , என லதா நிஷாவுக்கும் சேர்த்து பதில் சொன்னாள்


நான் அதை பார்க்கலாமா….என நிஷாவை பார்த்து கேட்க..


” இதோ சார்.. என தனது போனை எடுத்து அவன் இடம் தந்தாள்…
” அதை பார்த்துவிட்டு….குணாவிடம்… குணா நாம சந்தேக பட்ட மாதிரி தான் இருக்கு….”
இதை கேட்ட இரு பெண்களும்.. அதிர்ந்தனர்



” என்ன சார்…சொல்லுரிங்க…”


குமரன் , இவர்கள் முன்னே உளறி விட்டது புரிய... அது ஒன்னும் இல்லைமா.. நாங்க ஒரு கேஸ் பத்தி. பேசினோம்…. அதுக்கும் இதுக்கும்
ஏதோ தொடர்பு.. இருக்கிற மாதிரி இருந்தது அதான்… சொன்னேன்...” பிறகு
சரி.. நீங்க கிளம்புங்க.. நாங்க பார்த்துக்கிறோம்….”. என குமரன் தனது.. போனில் ப்ளுடூத் வழியே அந்த வீடியோ… தனது போனில் ஏற்றி விட்டு நிஷாவின் போனை.. அவளிடம் திருப்பி தந்தான்….. பிறகு யோசனை தோன்ற.. நிஷாவை. கேட்போமா வேணாமா என்று யோசித்து வேண்டாம் என முடிவு செய்துவிட்டான்...



லதா.. மற்றும் நிஷா.. ஏதோ. சாதித்துவிட்ட திருப்தி. உடன் கிளம்பினார்கள் ..

அப்போது.. கொஞ்சம் தூரம் சென்ற நிஷா திரும்பி வேகமாய் குமரன் - குணா அருகே வந்து நிற்க

குணா.. , என்னமா ஆச்சு…என நிஷாவை பார்த்து கேட்க..

லதாவும் அதற்குள் அவள் பின்ன மீண்டும் ஓடி வந்துவிட்டாள் .


‘நிஷா., இருவரையும் பார்த்து... , ” அண்ணா.., சார்.. தயவ செய்து.. விசாரணை.. அது இது-னு.. வீட்டுக்கு எல்லாம் வந்துராதிங்க.. சார்.. . எங்க அப்பாக்கு.. தெரிஞ்சது.. நான் தொலைஞ்சேன்…அப்புறம்.. ராகவி... பெயர் வெளியே வராம
பார்த்துக்கோங்க …. ப்ளீஸ் சார் அவ வாழ்க்கை பிரச்சனை சார், பார்த்துக்கோங்க.… ஓகே சார் ஓகே அண்ணா.. பாய்.. என சொல்லிவிட்டு.. மீண்டும் லதாவை இழுத்து கொண்டு ஓடி விட்டாள் ..]

அவ்வளோ நேரம் நிஷா செல்வதை பார்த்துக்கொண்டு இருந்த குமரன்..



“ சார்…” என குணா அழைக்க


“ குணா.. நாம இத பத்தி இங்க பேச வேண்டாம் வாங்க போகலாம்.. “.

இல்லை சார்.. அது . மேலும் குணா தயங்க..

என்ன குணா.., என குமரன் கேட்டான்..

இன்னைக்கு நீங்க பொண்ணு பார்க்க போகணும் சார். கொஞ்சம்

சீக்கிரம் வீட்டுக்கு போகணும்...… அம்மா .. உங்களுக்கு ஞாபகம் படுத்த சொன்னாங்க சார்.. என ஒரு வழியா குணா சொல்ல வந்ததை சொல்லிவிட...

அவனை பார்த்து..குமரன். ஒரு பெருமூச்சை.. விட்டான்...… .

” சார்…”

” சரி கிளம்பலாம் குணா..” என சொல்லிவிட்டு.. குமரன் தனது காரை பார்க் செய்த இடத்திற்கு சென்றான் குணாவுடன்...

*************************

இங்கே வீட்டில்.....


தனது செல்ல பெண்ணை பார்க்க போன…கிருஷ்ணன்..

“ அம்மாடி..ஷாலினி..”

ஏதோ வேலையாய் இருந்த ஷாலினி .. அதை விட்டுட்டு. தந்தையே பார்த்து.....சொல்லுங்க அப்பா..
அப்பா உனக்கு எது செய்தாலும்…. உன் நலன் காக தான் இருக்கும் நம்புறியா ம்மா…”



” என்ன அப்பா இப்பிடி கேட்டிங்க… நீங்க எது செய்தாலும். என் நம்மை காக தான் அப்பா…” [ மனதுக்குள்.....இந்த அப்பா இப்போ எதுக்கு நம்ம கிட்ட பேச வந்து இருக்காரு.. ஒரு வேலை அம்மா சொன்ன விஷயமா இருக்குமோ. என்கிற யோசனை ஒரு பக்கம் ஓடியது.....]


” அவள் கையே எடுத்து.. தன் கைக்குள் வைத்து…. ரொம்ப சந்தோசம்….ம்மா.. , இன்னைக்கு… உன்னை பெண் பார்க்க வராங்க..ம்மா…… பையன்.. போலீஸ் ஆபீசர்… ரெடியா இரும்மா.. என சொல்லி விட்டு மாலை..வர இருக்கும் குமரன் குடும்பத்துக்காக வாங்க வேண்டியே..பொருட்களை.. வாங்க சென்று விட்டார் ..

ஷாலினி.. , வரவன் போலீஸா …என யோசனையில் ஆழ்ந்துவிட்டாள் .[ ஏன் போலீஸ் ஆ இருந்தா கட்டிக்க மாட்டியா..ரொம்ப தான் டி]
பிறகு...……ஷாலினி.. தனது போனை.. எடுத்து.. அந்த புதியவனுக்கு அழைத்து பேசினாள் ….
” ஹலோ ”

———————–..


‘ இன்னைக்கு என்ன பொண்ணு பார்க்க… வராங்க.. ”

—————————

ஆனா…

————————-

“சரி நீங்க சொல்லுற மாதிரியே….செய்யுறேன்.. ஆனா எனக்கு பயமா இருக்கே .. ”

———————

நீங்க இருக்கிற. தைரியத்துல.. நான் இதுக்கு சம்மதிக்கிறேன்..”

————————-

” சரி நான் வச்சுடுவா…”

—————————

 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாலை நேரம்….

” குமரன் சீக்கிரம்,,,,,….. வீடு வந்துவிட.. ருக்மணி அம்மாவுக்கு அவ்வளோ சந்தோசம்.. அவரும் சிவநேசனும்.. ஷாலினியே பெண் பார்க்க கிளம்பி விட்டார்கள்.. குமரனை அழைத்து கொண்டு… ”


சாந்தி இல்லம்….


எல்லாம் ரெடியா ..சுமி… என வேகமாக வந்த கேட்க வந்த கிருஷ்ணனை.. பார்த்து..

” ஆச்சுங்க…நான் போயிட்டு.. ஷாலினி என்ன பண்ணுறனு பார்த்துட்டு வரேன்…”

‘ சரி.. ஆமா எங்கே உன் . அருமை. பொண்ணு. இன்னும் ஸ்கூல் முடிஞ்சுச்சு.. வரலையா…”
அப்போது……தான் லதாவுடன்.. வீட்டுக்குள் வந்த…. நிஷா.. அவரின் பேச்சை.. கேட்டு அரை வாசலில் நின்று விட்டாள் ….



” இல்லைங்க… இன்னும் வரல இப்போ வந்துவிடுவா..நினைக்கிறன்..”


” அப்பிடி அவ.. வந்த.. திருப்பி.. கொஞ்சம் நேரம் மாமி வீட்டுக்கு அனுப்பிவச்சுறு.. என் பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கும் போது…..உன் பொண்ணு அதான்.. அவ இங்க இருக்கனும் ஒன்னும் அவசியம் இல்லை.. இவ வாய் அடிக்கிறத… பார்த்து.. என் பொண்ண வேண்டாம் சொல்லிட்டா… எனக்கு தான் அவமானம்...”

அவரின் இந்த பேச்சை கேட்டு…… நிஷா.. உடைந்து போய் விட்டாள் …..ச்சே இப்படியா பேசுவாரு... ஏன் மேல அப்படி என்ன வெறுப்பு...என்ன மனுஷன் இவரு….. என இறுகி போய் நின்று இருந்தாள் …
லதா அவள் கை பிடித்து.... மச்சி... வருத்த படாத வா டா. போகலாம் நம்ம வீட்டுக்கு.. அங்கே இருந்து போன்ல சொல்லிக்கலாம் என வந்த சுவடு தெரியாமல்.. நிஷாவை அழைத்து கொண்டு போய்விட்டாள் ….

எப்போவும் இது நடப்பது தான்....

“ ஏங்க அவ சின்ன பொண்ணு.. அவள போய் இப்பிடி பேசுறிங்க...”.என சுமதி. கேட்க..
கிருஷ்ணன் , “ அது எல்லாம் எனக்கு தெரியாது.. உன் பொண்ணு வர கூடாது அவ்வளோதான்..... என்று சொல்லிவிட்டு சென்று விட..



சுமதி.. தான் சின்னவளை நினைத்து.. கண்ணீர் மட்டும் தான் விட முடிந்தது…[ மனதுக்குள்...கடவுளே எப்போ தான்... இந்த பொண்ணுக்கு விடியே போகுதோ... என நினைத்த படி தன் வேலையே பார்த்து கொண்டு இருந்தார்..]


மாலை 6.30 ..


. குமரன் மற்றும்.. சிவநேசன் – ருக்மணி.. தம்பதி. ..ஷாலினி வீட்டுக்கு வந்து விட்டனர்…. கூடவே .. குணாவும்…..

அனைவரையும் வர வேற்று ….அமர செய்தார்.. கிருஷ்ணன்…சுமதி.. தனது. பெண்ணை.. அழைத்து..வந்து. வந்தவற்கு நமஸ்காரம் செய்ய சொல்ல.



ஷாலினி… எல்லாம் ஒரு எந்திரமாய் செய்துவிட்டு. உள்ளே சென்று விட்டாள் …

ருக்மணி….. எங்களுக்கு பொண்ண ரொம்ப படிச்சு இருக்கு.. …டேய்.. குமரா.. பெண்ணை நல்லா பார்த்துக்கோ… என சொல்ல..

அவனும் பார்த்தான்.. வீட்டை நல்ல சுற்றி பார்த்தான்.. ஹாலில் இருந்த ஷோகேசில் அடிக்கி.வைத்து.. இருந்த மெடல் கப்ஸ்….இவை அனைத்தும்.. தான்… [ நேரம் . டா…. இதுக்கு நீ வராமலே இருந்துர்கலாம்…]
அப்போது தான் குமரன் கண்ணில் அந்த போட்டோ தென் பட்டது… இது.. ‘


எங்க பொண்ணு தான் தம்பி….

அப்போது தான் சத்தமாகவே பேசிவிட்டது தோன்றியது…..

” ஒ”

” அவங்க இங்க இல்லையே….வெளியே போயிர்காங்கள ”


” இல்லை தம்பி.. கிளாஸ் க்கு போயிர்க்கா.. இப்போ வர நேரம் தான் என சுமதி சொல்லி கொண்டு போக..”


” கிருஷ்ணன் முகம் கருத்து விட்டது.., என்ன இது… இவ வீட்டுல இருந்தாலும் குற்றம்… வெளியே போனாலும் குற்றம்.. என மனதுக்குள் சபித்து… கொண்டு இருந்தார்..”
சிவா நேசன்.. ருக்மணி… காதில்…..என்னடி இவன் இங்க வந்து விசாரணையே நடத்துறான்… .”


” எனக்கு என்ன தெரியும்… நீங்க தான்..என்னனு கேளுங்க..”

” அப்போது தான் குணாவும் அந்த போட்டோவை பார்த்தான்..”
இது லதா ஓட.. தோழி ஆச்சே…. என மனதுக்குள் நினைக்க….”
நேசன், ” என்னப்பா குமார ஏதும் பிரச்சனையா..”


” அதற்குள் சுதாரித்து…, ” இல்லை பா ஏதும் பிரச்சனை இல்லை…என அமைதி ஆனான் ஆனால்.. அவனது மன நிம்மதி.. தொலைந்து போனது…”

அப்போ தட்ட.. மாத்திக்கலாம… என நேசன்.. கிருஷ்ணன் இருவரும் நிட்சையே தம்பூலம் .. மாற்றி கொள்ள… திருமண தேதி… நாளை ஐய்யர்.. இடம் கேட்டு… சொல்லுவதாக.. சொல்லிவிட்டார்… ருக்மணி அம்மையார்….”

தன் அனுமதி இல்லாமல் நடக்கும்.. அனைத்தையும்..குமாரனால்… வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது… எல்லாம்… விதி போல் நடக்கட்டும் என அதன் போக்கில் விட்டுவிட்டான்……”

மகன் ஏதும் பிரச்சனை செய்யவில்லை.. என்கிற நிம்மதி… பெற்றோர். முகத்தில்.. இருந்தது……


ஆனால்.. குணாவிற்கு… குமரனின் குணம் தெரிந்ததால்… அவனுக்கு வேண்டி.. இவன் கவலை கொண்டான்…


அவள் தொளில் தட்டி…” எல்லாம் சரியா போகும் மச்சி… வொர்ரி பண்ணிக்காத…….”என சமாதனம் செய்தான்….


நிஷாவிடம் இருக்கும் எதோ ஒன்ன்று.. ஷாலினி இடம் இல்லை.. அது என்ன என்பது.. தான் குமாரனால். சரியாக . சொல்ல முடியவில்லை….. இது சரியா.. அக்காவை..பார்க்க போய்.. தங்கை இடம் மனதை… பறி கொடுத்து விட்டு.. வந்து இருக்கிறேன்… என … இவனது எண்ணம் போன போக்கில் சற்று .. அதிர்ந்தான் போய்விட்டான்… யாருகாவுது தெரிந்தால் காரி துப்பி விடமாட்டாங்க என்று தோன்றியது. .என்னது நான் காதல்.. ஐயோ.. இது தான் காதலா…… ஒரு பெண்ணிற்கு செய்யும் துரோகம் ஆச்சே இது.. காலைலே பார்த்ததுகுள்ள… எப்பிடி காதல் வரும்… நான் ஏன் இப்படி நிஷா.. ஷாலினியே ஒப்பிட்டு.. பார்க்குறேன்…. அவன் மனம்.. டேய் .. குமார.. இது.. சரி இல்ல.. உன் போக்கும் சரி இல்லை…..ஒழுங்கா.. உன் வேலையே மட்டும் பாருடா .. டேய்.. .நிஷா. சின்ன குழந்தை…அவள்..மேல் காதலா.. போடா டேய்.. என அவன் மனம் அவனுக்கு எதிராக செய்யல பட்டது… இனி……




**********************************

ஹாய் பிரெண்ட்ஸ் இதோ அடுத்த எபி போட்டுட்டேன் ... padichchutu eppidi irukkunu sollunga.....
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னருகில் நீ இருந்தால் -6

imageedit_1_7362615469.jpg

ரொம்ப நேரம்… ஆகியும் நிஷா… வீட்டுக்கு வரவில்லை.. என்று.. சுமதி.. பதறிக் கொண்டு இருந்தார்…. ” எங்க…போனா இந்த பொண்ணு.. ஒரு போன் கூட இல்லையே…என வீடு வாசலில் அமர்ந்து விட..

கிருஷ்ணன்.. தன் பெண்ணிற்கு.. நல்ல இடம் அமைந்துவிட்டது.. என்கிற சந்தோஷத்தில்.. அடுத்து என்ன செய்ய - வாங்க வேண்டும் பணம்.. பற்றி சிந்தனையில் அமர்ந்து விட… சின்னவள் என்ன ஆனால் என்று கூட தோன்றவில்லை……

இதைக் கவனித்த சுமதி மனம் வேதனை…. அடைந்தது…. என்ன மனுஷன் இவரு…. என நிஷாவின் வருகைக்காக காத்து இருக்க…

இன்னும் காக்க..வைக்க மனம் இல்லாமல்… நிஷா.. லதாவின் தந்தை உடன் வீடு வந்து சேர்ந்தாள் ….



சரிங்க… அப்பா நீங்க கிளம்புங்க… என அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு... திரும்ப.. அங்க நிஷாவை பார்த்து..

சுமதி..ஏண்டி.. என்ன இவ்வளோ நேரம் ஆகிடுச்சு…… எங்க தான் டி போன…. போனா போன இடம் தானா உனக்கு...என கோபமாய் கேட்க...

‘ கிளாஸ் முடிஞ்சு அப்பிடியே லதா வீட்டுக்கு போய்டேன்.. ம்மா…. ” என தலை நிமிராமல்.. பதில் சொல்லிவிட்டு உள்ளே வேகமாய்.. போய்விட்டாள் … நிஷா……..[ இன்னும் கொஞ்சம் நேரம் நின்று இருந்தால் எங்கே அழுதுவிடுவோம் என்கிற பயம் தான் அவளுக்கு...]

சுமதி. என்ன ஆச்சு இவளுக்கு.. என வீட்டு கதவை அடைத்து.. விட்டு….. நிஷாவிடம் வந்து…” வா நிஷா.. சாப்பிட… நேரம் ஆச்சு பாரு…”

இல்லமா.. நான் சாப்பிட்டுட்டேன்… லதா வீட்டுலயே.. துங்க போறேன் ம்மா.. .. என ஜீவன் இல்லாத குரலில்.. சொல்லிவிட்டு.. தன் அறைக்குள்.. சென்றுவிட்டாள் …..

மனதுக்குள்.. ” அம்மாவுக்கு கூட.. ஷாலு நிச்சயம் பற்றி நம்ம கிட்ட பேச பிடிக்கல போல… என குமுறி கொண்டு வந்த அழுகையே.. அடைக்கியே படி… படுத்து கிடந்தாள் பிறகு ஏது ஏதோ.. யோசித்த படி...… அப்பிடியே உறங்கி போய் விட ….

சுமதிக்கு தான் அவள் நடவடிக்கை.. கொஞ்சம் பயத்தை கிளப்பியது.. என்ன இவ.. எவ்வளோ நேரம் ஆச்சு நாளும் வீட்டுக்கு வந்து தான் சாப்பிடவா.. இன்னைக்கு என்னடானா.. வெளியே சாப்பிட்டேன் சொல்லுறா ஒரு வேலை… தன் கணவன் பேசியதை.. கேட்டு இருப்பாளோ… ஐயோ…என்று இருந்தது.. சுமதிக்கு…. என்ன செய்வேன் நான்.. இப்போ.. அவர் பேச்சை கேட்டு புள்ள எப்பிடி எல்லாம் துடிச்சாளோ .. கடவுளே. என .ஓடி சென்று... ..நிஷா.. அறை கதவை .அவர்... தட்ட…. “ நிஷா ஏய் நிஷா கதவை திற “

ஏதோ சத்தம் கேட்குதே என நிஷா.. மெல்ல..கண்களை.திறந்து.. தூக்க..கலக்கத்தில்….. என்னம்மா….

டி.. கதவ திற…” வெளியே நின்று கொண்டு... சுமதி பதறினார்...

தூங்க விடும்மா… தூக்கமா வருது.. என மீண்டும்.. துங்க ஆரம்பிக்க…

அவளின் பதில் கேட்டு.. .. துங்க தான் செய்யராள… ஹப்பா…. என நிம்மதி உடன்..அவரும் உறங்க சென்றார்…

இங்கே…
வீட்டுக்கு வந்த.. குமரன்…மற்றும் அவனின் குடுப்பம்…. “ உணவை முடித்து.. விட்டு... சந்தோசமாக பேச ஆரம்பித்தார்கள்....

பொண்ணு நல்ல லட்சணமா இருக்க இல்லையாடா. குமரா… என ருக்மணி.. கேட்க...

.. குமரன்… ” எந்த பொண்ணு மா…” என்று கேட்க..

ருக்மணி… ” அதான் டா.. நம்ம ஷாலினி….’

” யாருமா.. ஷாலினி……”அவனது அடுத்த கேள்வியில்.

இப்போது ருக்மணி.. சிவநேசன் தம்பதிக்கு.. திக்கு.. என்று ஆகிவிட்டது.. என்ன ஆச்சு இவனுக்கு ……. டேய்.. குமரா…என சிவா நேசன்.. அதட்ட…”

” என்ன பா…ஷாலினி.. யாருன்னு தானே.. கேட்டேன்.. அதுல என்ன பா தப்பு…”

சிவா நேசன்… .. இவன் தெரிஞ்சு தான் பேசுறானா…” என்கிற குழப்பத்துடன்.. .. அது நீ கட்டிக்கிற.. போற புள்ளையோட பேரு டா…

” ஒ , சரி அம்மா அப்பா., எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது . நான் துங்க.. போறேன்… என போய்விட்டான்....”

அவன் செல்வதை பார்த்த ருக்மணி...

” என்னங்க… இவன் இப்பிடி பேசிட்டு போறான்….எனக்கு என்னமோ இது சரியா படல… என அவர் ..சொல்ல…

இருடி… நாம நெருக்கடி.. குடுத்து நால தான் சம்மதிசான்.. எல்லாம் சரியாய் போகும்…. போ போய் .. தூங்கு….என தன் ,, மனைவிக்கு சமாதனம் சொல்லி அனுப்பி வைத்தார்..சிவநேசன்…. அவர் மனதிலும் அதே குழப்பம்… என்னவானது இவனுக்கு ....” என அவர்..

குணாவை.. பார்க்க… அவன்.. எனக்கும் ஏதும் தெரியல அப்பா… என கையே விரித்தான்…”

சரி ப்பா . நீயும் கிளம்பு.. இல்லை.. குமரன் கூடவே தங்கிக்கோ….

” இல்ல அப்பா.. நான் கிளம்புறேன்.. அப்பா.. ” அம்மா வீட்டுல தனியா இருப்பாங்க...

” ஹ்ம்ம் ‘

குணாவும்…கிளம்பி சென்று.. விட… சிவநேசன்…. குமரன் என்ன செய்கிறான் என்று பார்க்க.. போனார்…

அங்கே…. அவன்.. தனது…. அறையில் இருந்த…. மேக் புக்கில் எதோ வேலை செய்து கொண்டு இருந்தான்…..”

அத பார்த்து விட்டு.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இதற்க்கு...என்று.. அவரும் சென்று விட்டார்….



...

நிஷா.. அவளிடத்தில்... உறங்கிவிட….. இங்க. குமரனை…தான். எதோ ஒன்று.. படுத்தி எடுத்தது..... அவன் தூக்கம் இன்றி தவித்து கொண்டு இருந்தான்.. இன்று கலையில் நடந்த.. அனைத்தையும் நினைத்து பார்த்து கொண்டு இருந்தான்…. .. நிஷாவிடம் இருந்து.. வாங்கியே விடியோவை… திரும்ப திரும்ப ஓட்டி பார்க்க…… எப்பிடி தனது விசாரணையே தொடங்கலாம் என்று… கொஞ்சம் தனது கவனத்தை… வேலைப் பக்கம் மாற்றினான்……[ நல்லாவே சமாளிக்கிறாய்….. ராசா….]

இப்பிடியே ஒரு வாரம் சென்று விட….

அன்று நிதானமாய் .. தனது வேலைகளை… செய்து கொண்டு இருந்தான்…… ருக்மணி.. குமரன் அருகே வந்து… பிரசாதம் எடுத்துக்கோ.. குமரா….

நீங்களே வச்சு விடுங்க.. அம்மா….என சிஸ்டத்தில் இருந்தது.பார்வை திருப்பாமல் அவன் சொல்ல...

அவர் சிரித்து விட்டு இன்னும் எத்தன காலத்துக்கு நான் வச்சு விடுவேன்… இனி ஷாலினி தான் எல்லாம்… என சொல்ல…அம்மாவின் பேச்சை கேட்டு குமரன்.. இறுகி போய் விட்டான்…. புதிதாய் முளைத்த காதல்.. அது காதல் தானா என்கிற குழப்பம் … .. ஷாலினியே நினைக்க முடியாமல்…நிஷாவை மறக்கவும் முடியாமல் …. .. இந்த ஒருவார காலம்மாய் .. அவன் தன் வேலை சுமையே மேலும்.. அதிக படுத்தி. கொண்டான்……..என்பது.. தனி கதை...

அப்புறம்.. குமரா ..…. இன்னும் ரெண்டு மாசத்துல.. கல்யாணம் .. எல்லாம் ஏற்பாடு.. அப்பா பார்த்துகிறேன் சொல்லிடாரு… உனக்கு சரி தானே. ப்பா …. என்னமோ எல்லாம் இவனை கேட்டு செய்வது போல் ருக்மணி அவனிடம் கேட்க…

அவனோ.. ” உங்க இஷ்டம் அம்மா… நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.. ம்மா… என்று அவர் பதில் எதிர் பார்க்காமல்… சென்று விட்டான் ”

முன்பு போல் குமரன் வீட்டில் அதிகம் பேசுவதை குறைத்து விட்டான் மகனின் இந்த மாற்றம்… எங்கே நாம தப்பு செய்கிறோமோ.. என்று.. அவரை நெருட... ருக்மணி.. ஒரு நிமிடம் யோசித்தார்… மறுநிமிடம்.. கல்யாணம் ஆகினா சரி ஆகிடும்… என அடுத்த வெளியே பார்க்க சென்று விட்டார்…[ யாருக்கு சரி ஆகிடும்… உங்க பையனுக்கா … ]

.

குணாவை பார்த்து விட்டு வரலாம் என்று… செல்ல.. வழியில்…

ஒரு ஆபீசில் இருந்து.. நிஷா.. வெளியே.. வந்தாள் அவளை கண்டதும்….. தனது…காரின் வேகத்தை.. குறைத்து.. நிறுத்தினான்….வண்டியே நிருத்ததடா… என்று அவன் மனம். சொல்ல.... அவனோ.. நான் என்ன காதலா சொல்ல போறேன்.. சும்மா பிரெண்டா தானே பேச போறேன்..… என்று தனது மனசாட்சியே அடக்கியே படி.. காரை நிறுத்தி.. விட்டு இறங்கி.. நிஷாவை நோக்கி…. நடந்தான்…..

சுற்றிலும் யாரு வருகிறாகள். போகிறார்கள் என பார்க்க கூட தோன்றாமல்..

பெஞ்சில்….எதோ யோசனையில் நிஷா.. அமர்ந்து இருக்க.. அவன் வந்தது கூட.. கவனிக்காமல்……….அவள் யோசனையில் முழ்கி இருந்தாள் …

குமரன்… தான்....” ஹலோ …” என அழைக்க.

நிஷா, திடுக்கிட்டு .., ஹலோ சார்.. என வேகமாக எழுந்து நின்றால்... …”

அவளின் பதட்டம் பார்த்த.. குமரன்.. “ ஹே ஈசி .. எதுக்கு இவ்வளோ பதட்டம்...

” ப்ளீஸ்.. உட்காருங்க… ” என அவள் பதட்டத்தை.. பார்த்து சொல்லிவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு அவனும் அதே பெஞ்சில் அமர்ந்தான்...

[ இவர் எப்பிடி இங்க..யோசித்து கொண்டே.. நிஷா.. அவனிடம். ] மெதுவாக..

‘ என்ன ஆச்சு சார்.. ஏதும் விசாரணையா…”

“.. போலீசா இருந்தா ….விசாரணைக்காக மட்டும் தான் வரனும்மா .. சும்மா இந்த பக்கம் வந்தேன்.. .. அப்பிடியே.. உங்கள பார்த்த உடனே…. பேசிட்டு போகலாம்னும்….”

” ஐயோ.. சார்.. நான் உங்கள விட சின்ன பொண்ணு... தான்... என்ன நீங்க.. நீங்க வாங்க எல்லாம் கூப்பிட… வேண்டாம்… நீனே.. சொல்லுங்க… அப்புறம் சொல்லுங்க.. ”

“ ஹ்ம்ம் சரி.... ஆமா என்ன இந்த பக்கம்.. ..என குமரன் கேட்க.. ”
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குமரனை… பார்த்து.. நிஷா…சோகமாய்.. புன்னைகைதாள் ….

அவளின் இந்த புன்னகையில் வேதனை நிறைந்து இருந்ததை… குமாரனால் சகித்து கொள்ள முடியவில்லை… ஏன் இவ்வளோ வேதனை… தான் பார்த்த வரைக்கும்... துரு துருவேன தெரிபவள்....… என்று நினைத்துவிட்டு… ..அவளை பார்த்து.. மெல்ல..” என்னம்மா… ஏதும் பிரச்சனையா… ஏன் முகம் இப்பிடி வாடி கிடக்கு... என்னையும், உன் பிரண்டா நினைச்சு சொல்லும்மா.. என் நால முடிஞ்சத உனக்கு செய்யுறேன்…[ பிரண்டு.. அதுவும் நீ…. அம்புட்டு….நல்லவனா.. ராசா நீ….]

நிஷா…. தன்னை சமாளித்து…. ஹ்ம்ம்…. இங்க நான் பார்ட் டைம் வேலை பார்க்குறேன்… சார்….”

குமரன், ” என்ன பார்ட் டைம் ஜோபா … அதுக்கு என்ன அவசியம்… இப்போ உனக்கு,..…அதான் அப்பா பார்துக்கிரரே… அதுவும்.. இல்லாம.. இப்போ நீ பிளஸ் டூ வேலைல.. கவன செளுத்துவியா… இல்லை படிப்புல கவனம் செளுத்துவியா…அது மட்டும் இல்லை... அது நால தான் நீ ஸ்கூல போன் யூஸ் பண்ணுறியா... ..”

அவனது கேள்வி சரி தானே.. ஆனால்… தன் தந்தை இடம் இருந்து எந்த ஒரு .. உதவி தனக்கு வேண்டாம் என்கிற வைராகியம்…அவளை வேலைக்கு போக வைத்தது. தந்தை மற்றும் அம்மாவிடம் கூட சொல்லாமல் முன்று வருடங்களாகவே இங்க தான் வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள் ..இதை இவன் இடம் எப்பிடி சொல்லுவது என அவள் மீண்டும் யோசனையில். முழ்கி போய்விட...



அவள் இடம் இருந்து எந்த ஒரு பதில் வராமல் போக ...மீண்டும்.. அவளை பார்த்து....



நிஷா.. நிஷா… ஆர் யு ஆல்ரைட்..என அவள் கண் முன் சொடுக்கிடான் குமரன்…

” ஹான்… ந…. நான் நல்ல தான் இருக்கேன் சார்… எனக்கு ஒன்னும் இல்லை… எனக்கு எங்க அப்பாவோட.. காச.. எடுத்துக்க இஷ்டம் இல்லை.. சார்… ஆகாத புள்ளைக்கு.. அவரும் செலவு செய்யனும் அவசியம் இல்லை.. அவன் இடம் திரும்பி.. நான் கிளம்புறேன் சார்… நேரம் ஆச்சு.. என திரும்பி பாராமல்… சென்றுவிட்டாள்…..

குமரன்.. அசையாமல்.. அப்பிடியே அமர்ந்து விட்டான்….” ஆகாத புள்ளையா .. என்ன சொல்லுறா... அன்னைக்கி வீட்டுல இவள பத்தி கேட்கும் பொது கூட. அவ அம்மா தானே பதில் சொன்னங்க.. இவ அப்பாவுக்கு இவள பிடிக்காதா..... அதுனால வேலைக்கு போறாளா ..அப்படி என்ன இவளுக்கும் இவ அப்பாக்கும் பிரச்சனை இருக்கும்... இவ்வளோ சின்ன வயசுல எப்பிடி சமாளிக்க முடியும் தனியா..... இது எப்படி சாத்தியம்…ஒவ்வொரு நாளும்.. இவள் எனக்கு…புதியவளாய்… தோன்றுகிறாள்…. … என தனக்குள்… சொல்லியே படியே.. குணாவை.. பார்க்க.. சென்றான்……..

……..

மறுநாள்…. காலை… யாருக்கும் காத்து இருக்காமல்… அழகாய்.. விடிந்தது…….

தன் வீடு தோட்டத்தில் . இருக்கும் அனைத்து ரோஜா.. செடிகளுக்கும்.. .தண்ணி….விட்டு கொண்டு இருந்தாள் …..நிஷா….

சுமதி…மகள்.. பார்த்துவிட்டு.. உள்ளே சென்று…..தன்.. கணவர்.. இடம் ” ஏங்க நிஷாக்கு… ஸ்கூல் பீஸ் கட்டனும்ங்க . அப்பிடியே… நேத்து ஏதோ….நோட் .. வாங்கணும் சொல்லிக்கிட்டு இருந்தா ….. என சொல்ல…..

கிருஷ்ணன்…… ஷாலினி.. கல்யாண…செலவு. எவ்வளோ இருக்கு தெரியுமா….”

” அதுக்கு என்னங்க பண்ணுறது.. சின்னவளுக்கு… பீஸ் கட்டமா இருக்க,… முடியுமா…. செலவு ஓட செலவா.. இதையும் தாங்க பார்க்கணும்…. “ சுமதி கேட்டுவிட...

மனைவியின் பேச்சு….அவருக்கு.. பிடிக்கவில்லை…. ..ச்சே. இவ பொறந்ததே ஒரு தண்ட செலவு.. இதுல இது வேற... என முனு முணுத படி... சில ருபாய்.. அடங்கியே.. ஒரு கட்டை எடுத்து.. டேபிள் மீது .. வீசினார்…இந்தா எடுத்துக்கோ . உன் பொண்ணு செலவுக்கு.. காசு…. என உள்ளே சென்று.. விட…..

அங்கே அமர்ந்து.. ஷாலினி.. வேடிக்கை.. பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்டாள் ……

சுமதி… இவரின் செயலில்… அதிர்ந்து போய்.. விட்டார்…. .. அப்பிடி என்ன பாவம் சின்னவள் செய்து விட்டால்… ஆன் பிள்ளையாய்.. பிறக்காதது… இவள் குற்றமா…. .. அது காக… இவளை இப்பிடி… வதைப்தா…இவர் தலைல தூக்கி வச்சு கொண்டடுறாரே அவர் பொண்ணு. அவ மட்டும் என்ன ஆண் பிள்ளையா..... என ஆற்றாமை… உடன்.. கிட்சென்குல்.. சென்று விட்டார்….”
இதை எதையும் கவனித்தாக காட்டி. கொள்ளமால்…. நிஷாவும்.. பள்ளிக்கு.. கிளம்பி.. தாய் இடம் வந்து ” அம்மா… நான் கிளம்புறேன் அம்மா டைம் ஆச்சு…அப்பிடியே சாயந்தரம் லேட்டா தான் வருவேன்.. . என சொல்ல…


சுமதி.. தன் கண்ணை துடைத்து கொண்டு…. . இரு நிஷா.. இந்த டிபன்…. . அப்புறம்.. நேத்து பீஸ் கட்டனும் சொன்னியே.. இந்த அதுக்கு… பணம்…. . என கிருஷ்ணன்.. கொடுத்த.. பணத்தை நீட்டினாள்.. சுமதி…

அதை பார்த்த நிஷாவின் உள்ளம் ஊமையாய்.. அழுதது… . ” தாயின் கைகளை பிடித்து… ” அம்மா எனக்கு இந்த பணம் வேண்டாம்… ம்மா.. நான் ஸ்கூல் பீஸ்.. என் செலவு.. பார்த்துப்பேன்.. மேலும் தன் பையில் இருந்து சில நோட்டுகளை எடுத்து தாய் இடம் கொடுத்து என் சாப்பாடு செலவுக்கான பணம் ம்மா இது.. அவர்கிட்ட கொடுத்துருங்க அப்பிடியே அம்மா.. இத நீங்க வச்சுகொங்க.. கல்யாணம் செலவுக்கு.. உதவும்… என சொல்லிவிட்டு நிஷா சென்று விட்டாள் ..”

சுமி ..மகள் செல்வதை...பார்த்துக்கொண்டே..., என்ன சொல்லிடு.. போற.. இந்த புள்ள.. பணத்துக்கு என்ன பண்ணுவா. ஆமா . இந்த பணம் ஏது இவளுக்கு... , என்று யோசித்த படி... மகள் சென்ற திசையில் பார்த்த படி நின்று இருந்தார்.. அந்த அன்பு தாய்...”

********************

குமரன் வீட்டில்…..

வழக்கம் போல்… அதே பரபரப்பு…. .. .. வீட்டுக்கு வர போகும் மருமகளுக்கு.. ருக்மணி.. புடவை. நகைன்னு தேர்வு.. செய்ய.. நல்ல.. நேரம் பார்த்து கொண்டு இருந்தார்….



குமரன்.. ..எதிலும்.. கலந்து கொள்ளாமல்… தாமரை இலையில் இருக்கும்… நீர் போல் இருந்தான்…இப்போது எல்லாம் இந்த கல்யாணம்.. சரியா.. ஷாலினி தனக்கு சரியான துனைவியா என்கிற குழப்பம்.. அவன் மனதுக்குல் அடிகடி.. எழுவதை அவனால்.. தடுக்க முடியவில்லை…. [ என்ன கொடுமை இது…. குமார உன் போக்கே சரி இல்லையே….இந்த விஷயம்….அந்த புள்ளைக்கு தெரியுமா..]

பெற்றோர் இடமும் பேச முடியாமல்…. குணா இடமும் சொல்ல முடியாமல்… அவன் தவித்து கொண்டு இருக்க….

இது தெரியாமல்… மீண்டும்… குமரனை… அழைத்து. கொண்டு…. புடவை.. எடுக்க… கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார்…..

இவ்வ முறையும்….நிஷாவிற்கு….குமரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை….

இவன்.. தான் இப்பிடி என்றால்.. ஷாலினி… எல்லாம் அமைதியாக இருந்து கவனித்து கொண்டு இருந்தால்…இல்லை.. .. தனக்கு தேவையானதை சேர்த்து சேகரித்து கொண்டு இருந்தாள் ….. இதை யார் அறிவார்…அல்லது அவள் செய்ய போகும்.. செயல் பற்றி…. தெரியே வரும் பொது… மற்றவர்களின். நிலை என்ன ஆகும் ….

இதற்க்கு இடையில் போதை பொருள்… கடத்தல் விசயமாக விசாரணை தொடர்ந்து நடந்து படி இருக்க.... குமரன்.. ராகவியே.. கண்காணிக்க .. குணாவை இடம் சொல்லி வைத்தான் ……

குமரனுக்கு ஏதும் தகவல் தேவை என்றால்.. லதாவிடம் சொல்லி…. நிஷாவிடம் கேட்டு தெரிந்து கொண்டான்..

ராகவி… தொடர்ந்து…… போதை பலகத்துக்கு அடிமை … … வேற யாரும் இதற்க்கு.. அடிமை ஆகிவிட்டார்களா .. என்று.. குணா… விசாரிக்க…. ..

அவளுடன். சென்று.. இன்னும்.. இரண்டு.. பெண்கள்… ஆறாம் வகுப்பு.. படிபர்வர்கள்… அடிமை ஆகிற்பத்து.. தெரியே வந்தது….

குமரனின்… கவலையுடன்...குணாவிடம்… என்ன குணா.. சின்ன பசங்க டா ..எப்பிடி இது நடந்தது...இதை பற்றி நாம ஸ்கூல்ல பேசியே ஆகணும்… இப்பிடியே.. போச்சின்ன… இது சரியாய் படல எனக்கு...எப்பிடி நடந்தது... …”

குணா., ” ராகவி.. உபயம்… தான் சார்… இது எல்லாம் .. சாக்லேட்.. குடுத்து பழக்கி விட்டுர்க்கா……..”



குமரன்,, சரி….குணா…நாம நாளைக்கு… ஸ்கூல்.ல.. பேசிவிடலாம்… .”



குணா, ” சரிங்க சார்…..” என தனது காபின் குள் போய் விட்டான்….



XXXXXXX மேட் ஹர்.செக் ஸ்கூல்….



தலைமை ஆசிரியர் அறையில் குமரன்.. மற்றும் குணா. நடந்து கொண்டு இருக்கும் பிரச்சனையே சொல்ல...அதைக் கேட்டு அவர்...

வாட்… என்ன சொல்லுரிங்க.. ஏசிபி.சார்… நடக்க வாய்ப்பே.. இல்லை.. எங்க ஸ்கூல் ல போதை பொருளா…அவர் பதறி தான் போனார்.. ஏன் என்றால்.. அங்க படித்து கொண்டு இருக்கும் அனைவரும் பெண் பிள்ளைகள்...



” டென்ஷன் ஆகாதிங்க மேடம்.....…..இதோ இதற்கான ஆதாரம்… என ஒரு பைல்… குமரன் கொடுக்க…”

” அதை வாங்கி பார்த்த… ப்ரின்சிபளின் .. முகம் பயத்தில் வெளுத்துபோனது...அவர் குரல் நடுங்க..... சார்.. . வெளியே இந்த விஷயம் தெரியாமல்.. விசாரணை பண்ணுங்க சார்.. ஸ்கூல் பேரு போச்சின்னா .. ரொம்ப கஷ்டம்… என சொல்ல..”

‘ ஓகே மேடம்… அத நாங்க பார்த்துக்கிறோம்… நீங்க எங்களுக்கு கோ ஒப்ரட் பண்ணினா மட்டும் போதும்… அப்போ நாங்க கிளம்புறோம்…. என அவர் இடம் விட பெற்று .. கிளம்பினார்கள்.. “ போகிற வழியில் நிஷா எங்கும் கண்ணனுக்கு தெரிகிறாளா என குமரனின் விழிகள் தேடியது தனி கதை....







இரவு குமரனுக்கு வீட்டுக்கு வர தாமதம் ஆகிவிட.. சோர்வுடன்.. தனது காரை பார்க் செய்து விட்டு.. மெல்ல வீட்டுக்குள் நடந்து வந்தான்... அவன் வருவதை பார்த்து..

சிவநேசன்,, மகனிடம்... ” என்ன ப்பா இன்னைக்கு இவ்வளோ நேரம்…

குமரன், ‘ என்ன பா… நான் என்னமோ இன்னைக்கு தான்…புதுசா லேட்டா .. வர மாதிரி கேட்குறிங்க… ”

அவன் தன்னை கேலி செய்கிறான் தெரிந்தும். கண்டுகொள்ளாமல்...

அதுக்கு இல்லைப்பா…, கல்யாணம் நாள் வேற நெருங்கி… வருது நீ இப்பிடி..நேரம் கழிச்சு வரியே..அதான் கேட்டேன்..”



அப்பா… நான் போலீஸ் வேலைல.. இருக்கேன்….தெரிஞ்சும் இப்பிடி பேசினா .. எப்பிடி அப்பா… அதுவும் இல்லாம… இப்போ ஒரு முக்கியமான.. கேஸ் விசாரணை… பண்ண வேண்டி இருக்கு…உங்களுக்கே தெரியும்.... அதான் லேட்டா வரேன் இது தெரிஞ்சும்..நீங்க இப்படி பேசினா எப்பிடி ப்பா.… “

” சரி பா.. கல்யாணம். இருக்கு.. லீவ் எப்போ கேட்க போற… “

” ..லீவா …. இல்ல அப்பா…. லீவ் இப்போ சொல்ல முடியாது இந்த கேஸ் ரொம்ப முக்கியம் அப்பா…”

நேசன் அதிர்ந்து..., ” என்ன லீவ் எடுக்க முடியாதா…அப்போ கல்யாணம்..’

அவரது எந்த கேள்விக்கும் அசராமல்.. குமரன்.. “

அப்பா… ஏன் அப்பா.. ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கிறேன் அது போதும்..’

அதை கேட்ட நேசன் “

அடேய்… நல்லா இருக்குடா. நீ பண்ணுறது . ரெண்டு நாள் லீவ் போதுமா.”

அப்பா.. ப்ளீஸ் .. அப்பா.. ரெண்டு நாள் லீவ் போதும்.. என்ன , என கண்டிப்புடன் சொல்லி விட்டான்….”

“என்ன இவன் இப்பிடி சொல்லிடு.. போறான்.. அவன் அவன் கல்யாணம் சொன்ன ரெண்டு….மாசம் லீவ் சொல்லாமலே போட்டுராணுக.. இவன் என்னனா. ரெண்டு நாள் லீவ் போதும் சொல்லிடு போறான்..அதுவரைக்கும் சரி தான்… என… நேசன்.. தன் அறைக்கு சென்று விட்டார்…

இங்கே குமரன்.. வழக்கம் போல் தன் மனதோடு போராடி கொண்டு இருந்தான்… இது சரியா.. … என்று யோசித்து.. .. யோசித்து… விடியும் பொது.. எழுந்தான்…. “ என்ன தான் ஆச்சு எனக்கு யோசிக்காத குமரா யோசிக்காத.....என தன்னை சமாதானம் செய்து
உறங்க சென்றான்.....
___________________________________________________


இங்க லதா…தோழில் இடம் , “ நிஷா… . எங்க மாமா.. ராகவி.. விஷயமா.. விசாரணை பண்ணும் பொது… ஒரு விஷயம் கண்டு பிடிச்சாரு…”

” என்ன விஷயம் டா….”

” இன்னும் ரெண்டு புள்ளைங்க.. ராகவி ஓட.. சேர்ந்து இருக்கிறது… “ என லதா


என்ன லட்டு சொல்லுற… இன்னும் ரெண்டு புள்ளைங்கள… ஐயோ..” நிஷா மேலும் பதறி தான் போனாள்...



” ஹ்ம்ம் ஆமா டா .. ஒன்னும் பிரச்சனை.. இல்லை.. அவங்க பார்த்துகிறேன் சொல்லிடாங்க… நீ கவலை படாத… ஆமா ஏன் உன் முகமே சரி இல்லை.. அப்பா ஏதும் சொன்னாரா…”

” அவர் ஏதும் சொல்லல நா தான் நான் ஆச்சரிய படனும்… இன்னைக்கு நேத்தா… பேசுறாரு.. மனுஷன்… .. சரி அத விடு… கெமிஸ்ட்ரி நோட்ஸ் குடு… படிக்க..
” நீ இந்த கெமிஸ்ட்ரி விட மாட்டியா இந்தா தாயே படி நல்லா படி..”


நோட்சை கையில் வாங்கி கொண்டே... நிஷா...

” ஹாஹா… லட்டு உனக்கு ஏன்.. இப்பிடி இந்த சுப்ஜெக்ட் மேல வெறுப்பு…’

” அட போம்மா… நீ .. அசிட் . உப்பு சக்கரைன்னு இது எல்லாம் ஒரு சுப்ஜெக்ட்…”

” ஆமா ஆமா.. உனக்கு பிடிச்ச… சுப்ஜெக்ட்…போலீஸ் டிபர்ட்மெண்ட்ல இருக்கும் பொது பாடம் எல்லாம் படிக்க தோன்றுமா… செல்லம்.. என நிஷா.. சொல்ல. ‘

லதா அவள் முதுகில் ஒன்றை போட்டு..” ரொம்ப பேசாத டி… உனக்கு ஒரு நாள் காதல் வரும்ல அப்போ பேசிக்கிறேன்….”

” ஹாஹா… காதல் எனக்கு…. ஹாஹா.. நல்ல ஜோக்.. படிக்கிற வேலையே பாரு…..”

” நடக்கும் ராசாத்தி…. எனக்கு கரு நாக்கு… நான் சொல்லுறது பலிக்குதா… இல்லையான்னு மட்டும் பாரு…..”

” ம் .. சரிங்க மேடம்.. அப்பிடி நடக்கும் போது... உன் நாக்க இழுத்து வச்சு சூடு வச்சுடறேன் இப்போ படிப்போமா…”

” இன்னும் ஒரே ஒரு.. கேள்வி டி.. அதுக்கு அப்புறம் படிப்போம்.. என்ன..” லதா கெஞ்ச...

” என்ன கேள்வி……….?? “என நிஷா கேட்க

” நீ உன் அக்காவ.. கட்டிக்க போரவர பார்த்தியா….. டா.. உங்க அக்காக்கு.. ஓகே தானே…..”

‘ நான் இன்னும் பார்கள.. அவ யார கல்யாணம் பண்ணிகிட்டா. எனக்கு . என்ன டா.. நம்ம படிப்பை பார்ப்போம்..வா. என படிக்க சென்று விட்டாள் ….நிஷா.. லைப்ரரி க்கு….”

லதா.. ஆனாலும் யாரு அந்த அப்பாவி… தெரியாமலே.. போச்சே….ச்சே. என நிஷா பின்னாள் .. சென்றால்…”.



இப்பிடி இரண்டு வாரம் சென்று இருக்க...

.. குமரன் வரவே வேண்டாம்.. என்று காத்து இருந்த… அந்த.. நாளும் .. வந்துவிட்டது.. இன்னும் இரண்டு நாளில் திருமணம்…. எல்லோர்க்கும்.. அழைப்பிதழ்.. கொடுத்து முடித்து விட்டார்.. நேசன்…

எப்போதும்.. துரு துருவென.. திரியும் நண்பன் இன்று.. தலையில் கையே வைத்து.. உட்காந்து..இருப்பதை பார்த்து. குணா. பதறி. அவன் அருகில் வந்து.... ” என்ன இவன் இன்னும் ரெண்டு நாள்ல. கல்யாணம் வச்சுக்கிட்டு.. இப்பிடி குடி..முழிகி. போன மாதிரி உட்காந்து கிடக்கான் … என அவன் அருகில் சென்று….

குமார.. டேய் குமரா…, என அவனை அழைக்க..

மெல்ல நிமிர்ந்து.. சொல்லு குணா.. என்ன ஆச்சு.. ஏதும் தகவல் அந்த .. போதை.. பொருள் சம்பந்தமா….”

” எப்போ பாரு…வேலை தானா உனக்கு... .. ஆமா ஏன் இப்பிடி உட்காந்து இருக்க நீ . என்ன ஆச்சு.. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு இப்பிடி இருந்தா எப்பிடி டா. “

குமரன்…” ஹ்ம்ம் ச்சு.. ஒன்னும்.. இல்லை டா… மனசு சரி இல்லை…. டா.. எதோ.. தப்பு நடக்க போற மாதிரி.. மனசு கிடந்தது பட படன்னு. அடிச்சுக்குது.. டா.. ஏன் தெரியல… இந்த கல்யாணம் .. சரியா வருமா எனக்கு தோன்றவே மாட்டேங்குது.. …” நண்பனிடம் புலம்பி. தள்ளிவிட்டான். குமரன்...





” டேய்.. என்ன டா பேசுற.. இன்னும் ரெண்டு நாள்ல…உனக்கு கல்யாணம்.. தெரிஞ்சு தான் பேசுறியா.. இல்லை…” குணா குமரனின் பேச்சில் அதிர்ந்து போய் கேட்க...

” எல்லாம் தெரிஞ்சு தான் டா பேசுறேன்.. குணா…”

” டேய்… மொதல எனக்கு ஒரு விஷயம் சொல்லு.. நீ... யாரையாவுது. காதலிக்கிறியா.. என்ன…”

” கண்டு விட்டான் தன் தோழன்….. என்கிற ஒரு பக்கம்..… பயம்.. ..இனி சொல்லி என்ன ஆக போகுது.. என கவலை ஒரு பக்கம்... இது நால .. அவளுக்கு ஏதும் அவமானம்.. வந்து விடுமோ.. என்கிற.. பதட்டம்…… வேகமாய்.. குணாவை.. பார்த்து.. ச்சீ.. ச்சீ… அப்பிடி ஏதும் இல்லை.. டா… எதோ ஒன்னும் சரி இல்லாத மாதிரி தோணிச்சு..... தானே சொன்னேன்.. .. என குமரன் சமாளித்துவிட... ’

குணா.. அவன் முதுகில் தட்டி. கொடுத்து.. அப்பிடி ஏதும் நடக்காது.. டா. உன் நல்ல மனசுக்கு.. எல்லாம் நல்லதாவே.. நடுக்கும் புரியுதா.. ரொம்ப யோசிக்காத...... வா இப்போ வீட்டுக்கு கிளம்பலாம்.. இன்னைல இருந்து இன்னும் நால் நாளைக்கி.. நீ ஆபீஸ் லீவ்… கிளம்பு.. இப்போ வீட்டுக்கு போயிட்டு.. குளிச்சுட்டு.. அப்பிடியே.. மண்டபம் கிளம்பலாம்.. என சொல்ல…

‘ எதுக்கு இன்னைக்கே மண்டபம்… அதுவும் நாலு நாள் லீவ் வேற சொல்லி இருக்க....”

” டேய்.. இப்பிடி அப்பா முன்னாடி உளறத… அவர் மனசு சங்கட பட போகுது.. இன்னைக்கே போனா தான் நலங்கு அது இது எல்லாம் செய்ய முடியும்…. சரியாய்.. ரொம்ப யோசிக்காத… இப்போ கிளம்பு.. என்று.. அவனை அழைத்து கொண்டு… குணா கிளம்பினான்….”

குமரன் மனதுக்குள்.. அவ்வளோ தானா . தன் காதல் ஆரம்பித்த உடன்.. தோல்வியே.. அடைந்து விட்டதா… வாழ்வில்.. முதல் முதலாய் மலர்ந்த நேசம்.. இவ்வளோ சீ க்கிரம் கருகி.. போகும் என்று அவன் நினைத்து கூட.. பார்க்க வில்லை…. இன்னும் இரண்டு நாளில்… தனக்கும் தான்.. நேசம் கொண்ட பெண்ணின்.. சகோதிரியே.. திருமணம் . செய்ய.. போகும் கொடுமை… என் எதிரிக்கும் வர கூடாது…என மனம் நோக.. வீட்டுக்கு.. கிளம்பினான்…..’



***********************


ஹாய் பிரெண்ட்ஸ் இதோ அடுத்த எபி......................................
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

rose-gun-concept-arts-love-heady-violence-48761697.jpg

என்னருகில் நீ இருந்தால்-7
கிருஷ்ணன்…’ எல்லா எடுத்து வச்சாச்சா …. இன்னும் கொஞ்சம் நேரத்துல… பெண். அழைக்க வந்துவிடுவாங்க.. .எதையும் மறந்துவிடாதே.. சுமதி.. அப்புறம் மண்டபம் போய்.. அத காணோம்.. இதை காணோம் சொல்ல கூடாது… என கண்டிப்புடன்.. சொல்லி கொண்டு.. வந்த விருந்தினரை.. கவனிக்க… சென்று விட்டார்…. .

அறையில் நிஷா…. பாட புத்தகத்தில்….. பார்த்து எதையோ.. செய்து கொண்டு இருக்க…அதை பார்த்த

சுமதி.. ஏண்டி… இன்னும் என்ன டி பண்ணுற… “

” என்ன அம்மா.. படிக்கிறேன்… இன்னும் நாளை மறுநாள்.. டெஸ்ட் அம்மா எனக்கு.. படிக்க வேண்டாமா நான் …’

‘ நல்லா படிச்சே போ.. உன் அக்கா.. கல்யாணம் ஞாபகம் இருக்கா.. இல்லையா.. உன்னக்கு.... “

‘ அதுக்கு என்னம்மா.. .. “ நிஷா சொல்ல..

” என்னது அதுக்கு என்னவா… நீயும் கிளம்பு டி… லூசு பெண்ணே…” அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே

” அவ எதுக்கு.. அங்கே ” என கிருஷ்ணன்.. அங்கே வந்து நின்றார்…[ இந்த மனுஷனுக்கு ஏன் கிருஷ்ணன் பேரு வச்சா…. பேசாமல்..துர்யோதன்னு.. வச்சு இருக்கனும்…]

” என்னங்க பேசுறிங்க.. இவள எப்பிடி தனியா . இங்க விட்டுட்டு போறது.. வையசு.. பொண்ணுங்க.. “

” எவனும்… உன் பொண்ண கொத்திக்கிட்டு.. போய் விட மாட்டன்.. இவ இங்கயே இருக்கட்டும்…. அங்கே வர நான் சம்மதிக்க.. மாட்டேன்…”

சுமதி.. சற்று கோபமாக.. என்ன பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு.. வயசு புள்ளையே இங்கே விட்டுட்டு.. எப்பிடி போறது.. நாம மட்டும் அதும் இல்லாம.. வார்த்தையே எல்லாம் வேற மாதிரி இருக்கே… என கணவன் இடம் சண்டை போட.. நிலைக்கு வந்து விட்டார் சுமதி...…”

அதற்குள்.. நிஷா.. சிறு.. பையுடன்… வந்து நின்று...தலைகுனிந்த..படி.. அம்மா…” நான் லதா வீட்டுல தங்கிக்கிறேன். .. எனக்கு.. டெஸ்ட் இருக்கு.. அந்த கூட்டத்துல.. எல்லாம் என் நால படிக்க.. முடியாது.. நீங்க எல்லாரும் கிளம்புங்க,.., நானும் போறேன்.. என யாரோட பதிலையும் எதிர்பாரமல் சொல்லிவிட்டு.. தனது சைக்களில். சிட்டாக பறந்துவிட்டாள்… சின்னவள்..

அவள் போவத்தை பார்த்து கொண்டு நின்று இருந்த

சுமதி… தன் கணவரை.. பார்த்து.. நீங்க பண்ணுறது.. நல்லதுக்கு.. இல்லை.. இப்போவே சொல்லிட்டேன்… என முகத்தை திருப்பி கொண்டு..உள்ளே சென்று விட்டார்…

ஷாலினி… தனது.. காதலன் இடம்.. தன் வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஒரு வரி விடாமல்.. சொல்லி முடித்தாள் …

அவன் தன் திட்டத்தை. அவளிடம் . சொல்ல..

இங்கே ஷாலினி முகம் மலர்ந்துவிட்டது…



“இது நல்ல யோசனையா இருக்கே... “ என்று.. ஷாலினி அவனை பாராட்டினாள்



“இது நால உன் வீட்டுல எல்லாருக்கும் பாதிப்பு ஆச்சே.. பரவா இல்லையா.. “ அவன் கேட்க..



“எனக்கு.. நீங்க நம்ம வாழ்கை தான் முக்கியம்.. நம்மக்கு தேவையான.. பணம் எல்லாம் எடுத்து வச்சிட்டேன்… கிளம்புறது தான் பாக்கி…… என சொல்லி விட்டு.. சிரித்தாள் .. ஷாலினி..



அந்த புதியவனும்.. அவளின் செய்கையே எண்ணி சிரித்து.. விட்டு.. சரி. ரெடியா.. இரு.. ஷாலினி நான் வந்துறேன்……….



ஷாலினி.. ” சரிங்க நான் வச்சுற்றேன்… அம்மா வராங்க…என வேகமாய் தனது செல் போனை அணைத்துவிட்டு.. கை பையில் போட்டுவிட்டு.. . நிமிர்ந்தாள்…..”



சுமதி.. கிளம்பு டி.. நேரம் ஆச்சு.. வா.. என அவளை அழைத்து.. கொண்டு.. முன் அறைக்கு வர.. ருக்மணி… இன்னும் சில பெண்கள் உடன்.. வந்து.. இவளுக்கு.. திருநீர் குங்குமம்.. வைத்து விட்டு.. அழைத்து. கொண்டு.. மண்டபம்.. கிளம்பினார்…

ஆனால்… சுமதியின் மனம்… தனது சின்ன மகள் இடமே நின்று விட்டது… ..

இங்கே.. நண்பர்கள் கூட்டம்.. குமரனை.. கேலி செய்து.. ஒரு வழி.. செய்து கொண்டு இருக்க.அதில் ஏதும் ஒட்டாமல்.... எல்லோருக்கும்… ஒரு சின்ன புன்னகை. மட்டும்.. சிந்தி விட்டு.. அமைதியாக வேடிக்கை.. பார்த்தான்…. மனதுக்குள்.. நிஷா.. இங்க வருவாளா .. . அப்பிடியே.. வந்தா.. என்ன பார்த்து…. என்ன சொல்லுவா…. [ ஹ்ம்ம் என்ன சொல்லுவா.. நீ தான் என் அக்காவ.. கட்டிக்க போற அந்த அப்பாவி.. ஜீவனா.. என்று
வருத்த படுவா.. சத்தியமா.. டூயட் பாட மாட்டா.. டா டேய்.. ]

என நினைத்து கொண்டு இருக்க..

குணா.. குமரா.. டேய் குமரா. என இரு முறை அழைத்த உடன்.. தான் குமரன்.. சுய உணர்வுக்கு.. வந்தான்…

‘ என்ன குணா.. ‘ என கேட்
கேட்டவனை ஒரு மாதிரி பார்த்த குணா..


டேய்.. உடம்புக்கு ஒன்னும் இல்லையே.. ஏன் இப்பிடி வேர்த்து கொட்டுது…. வா. கொஞ்சம் நேரம் தூங்கு.. நாளைக்கு காலைல.. சிக்கிரம் எழுந்திரிகனும்….. வா. என அழைத்து கொண்டு அவனுக்கு என்று கொடுத்த.. அறைக்கு.. வந்தார்கள்.. “

சரி நீ துங்கு.. நான் இதோ.. வந்துறேன்…

‘ குணா எங்க போற ..இப்போ.. அதுவும்... இந்த நேரத்துல.... குமரன் கேட்க..

அவனை பார்த்து சிரித்து விட்டு.. லதா கிட்ட பேச டா. ரொம்ப நேரமா கால் பண்ணுறா... என்ன எதுன்னு.. கேட்டுட்டு.. வந்துறேன்.. ‘



” சரி சரி பேசிட்டு வா டா.. ” என சொல்லிவிட்டு.. கட்டிலில் விழுந்தவன்.. அப்பிடியே உறங்கி விட்டான்….[ விடியே போகும் விடியல்.. குமரனுக்கு.. ?????? ]


இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே
….
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லதாவிடம் பேசிவிட்டு.. உள்ளே வந்த குணா.. குமரன் உறங்குவதை பார்த்துவிட்டு… .. அவனும்… உறங்க சென்றான்…..”

இங்கே.. நிஷா… லதாவின் அறையில் உட்காந்து.. பிசிக்ஸ். படித்து கொண்டு இருந்தால்.. நாளை மறுநாள்… பரிட்சை….


Newton’s First Law of Motion:
I. Every object in a state of uniform motion tends to remain in that state of motion unless an external force is applied to it.

ஆனால்.. இந்த பிசிக்ஸ்… என்ன செய்தாலும்.. அவளுக்கு கஷ்டமாய் போய்விட.. .. .

எப்பிடியாவுது…… இதை முடிக்க.. வேண்டும் என்கிற எண்ணம் தான் தோன்றியது…..அவளுக்கு...

ச்சை . என்ன கொடுமை டா.. இது எப்பிடி படிச்சாலும்.. .. கஷ்டமா இருக்கே…. .. என்று டேபிளில். குத்தினால்.. நிஷா..

அப்போது தான் குணாவிடம் பேசிவிட்டு.. உள்ளே வந்த லதா.. இதை கவனித்து...…

” என்ன நிஷா.. என்ன ஆச்சு.. ஏன் இவ்வளோ டென்ஷன் ஆகுற … ”

‘ ஆ.. அது ஒன்னும் இல்லை லட்டு.. இந்த நியூ டன். லா.. கஷ்டமா இருக்குடா.. எரிச்சலா வருது. எனக்கு,...”

” அவள் சொல்லுவதை பார்த்து சிரித்த.. லதா.”

” இப்போ ஏண்டி.. சிரிக்கிரவ… ” என நிஷா.. மேலும் கோப பட…”

” ஹே ஹே கூல் பேபி… இதுக்கு போய்.. கோப படலாமா … உனக்காவுது லா.. தான் பிரச்சனை.. எனக்கு…. எல்லாமே கஷ்டமா.. இருக்கே டா.. அப்போ நான் எங்க போறது… என சொல்ல ”

” நிஷா.. , அவள் சொல்லும் தோரணையில் சிரித்துவிட்டாள்.. .. ” ஹே வாலு போ.. பக்கி.. அந்த பக்கம்.. படிக்கணும்.. நான்.. ”

” லதா… மெல்ல நிஷாவின் அருகில் வந்து.. .. அவள் முகத்தை.. கையில் ஏந்தி.. . நீ எப்போமே..இப்பிடி சந்தோசமா இருக்கனும் டா அதுதான் எனக்கு வேணும்.… ”

அவள் சொல்லுவதை புரிந்து கொண்ட நிஷா.. ” லதாவின் கைகளை.. இறுக்க பற்றி.. கொண்டு.. கண் கலங்க.. ” தேங்க்ஸ் டா…லட்டு… நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை...”

நிஷா.. மேலும். உடைந்து… போக விடாமல்.. .சட்டுன்னு..” போதும் நீ நல்லா உருண்டு பொரண்டு.. படிச்சு முடி.. நான் இப்பிடி உட்காந்து.. கனவு காணுறேன்.. நீ படிச்சா தான் நான் பாஸ் ஆகா முடியும்.. என நிஷாவிடம் சொல்ல..”

நிஷா… ” அடிப்பாவி…. உன்னை எல்லாம்.. என்று அவள் முதுகில் இரண்டு.. போட்டாள் …”

நீ என்ன அடிச்சு என்ன படிக்க சொன்னாலும்.. நாங்க படிக்க மாட்டோம்.. என லதா.. சொல்லிவிட.

இப்பிடி சிறிது.. நேரம் விளையாடி விட்டு.. படிக்க அமர்தார்கள்…இரு பெண்களும்…

_____________________________________________________________

ஷாலினி.. மண்டபத்தில்…..

” ஹலோ…”

“………………….”

” வந்துர்விங்கள…”

“…………………………..”

” அது எல்லாம் சரியாய் எடுத்து.. வச்சுட்டேன்…”

“…………………………..”

” கிளம்புறது மட்டும் தான்… நீங்க காலைல.. மண்டபத்துல… முதல் வரிசைல.. உட்காருங்க.. அப்போ தான் சரியாய் வரும்… ”

“………………………….”

” யாருக்கு எந்த சந்தேகம் வரல…”

” …………………………….”

” சரி சரி.. நேரம் கடத்தாம சீக்கிரம் வாங்க.. யாரோ வர மாதிரி இருக்கு.. நான் வச்சுடறேன்….”

” ……………………”

” ஹ்ம்ம் ” என அலைபேசியே வைத்து விட்டு.. உறங்க சென்றாள் ஷாலினி.…

அதற்க்கு.. முன்.. தந்தை.. தனக்கு.. வாங்கி..வைத்த நகை எல்லாம் ஒரு பாகில் வைத்து. கொண்டால்… மேலும்.. அவள் இடம் பத்திரமாக பார்த்துகொள் என்று கொடுத்த பணம் அனைத்தையும் .. பேக்கில் அடிக்கினால்…… மேலும் யாருக்கும் சந்தேகம் வர கூடாது.. என்று.. போலி நகைகளை.. அதன் பெட்டியில் சரியாக எடுத்து வைத்தாள் ……. எல்லாம் சரியாக இருகிறதா என்று ஒருமுறை பார்த்து விட்டு.. அதை பாத்திரமாக . யாரு கண்ணில் படாமல்.. வைத்து.விட்டு.. விடியல் காக காத்து இருந்தாள் …..[ நல்ல பொண்ணு டி நீ. ]

இது ஏதும் அறியாமல்.. தன் செல்ல பெண்ணின் கல்யாண வேளையில்… களைப்பு தெரியாமல்…ஓடி ஆடி... உழைத்து கொண்டு இருந்தார்…கிருஷ்ணன் .

ஹ்ம்ம் ஆண் பிள்ளையாய்.. பிறக்கவில்லை.. என்று.. நிஷாவை சிறு வயதில் இருந்து வெறுத்து வந்தார். கிருஷ்ணன்…. வார்த்தைகளால்.. அவளை.. கொன்றார்…ஆனால் இன்று… ??????

தான் தள்ளி வைத்த பிள்ளை…தான்.. தன் மானத்தை காப்பாற்ற.. இருப்பது பாவம் அவருக்கு.. விடிந்த பிறகு தான் தெரியே வரும் அப்போது இவரின் நிலை. என்னவோ…….

கல்யாண மண்டபம்… கலை கட்டி கொண்டு... இருக்க… . சிறுவர்கள்.. இங்கும் அங்குமாய்.. ஓடி ஆடி கொண்டு இருந்தார்கள்…. . எல்லாரும் இருக்கையில் அமர்ந்து.. பெண் மாப்பிள்ளை.. வாழ்த்த காத்து கொண்டு இருக்க ஒரு பக்கம்… .. சின்ன சின்ன செல்ல சண்டைகள் , , விசாரிப்பு… கவனிப்பு.. என்று.. ஒரு பக்கம் உறவினர் கூட்டம்…..

மணமகள்… தோழிகள்.. அனைவரும்.. கேலி செய்த படி.. அலங்காரம்.. செய்து கொண்டு நிற்க…
சுமதி ஒரு முறை வந்து…. எல்லாம் சரியாக இருகிறதா என்று… பார்த்து விட்டு போனார்…

இங்கே இதை நிலை தான்.. மணமகனுக்கும்… ..

ஆனால் ஏனோ தெரியேவில்லை காலையில் இருந்து.. குமரனது மனது பதறி கொண்டே இருந்தது.. ஆனால் தாய் இடம் சொன்னால்.. நன்றாக இருக்காது என்று. மனதுக்குள் போட்டு.. குழம்பி கொண்டு இருந்தான்… .

எல்லாம் சரியாக தான் போய் கொண்டு இருந்தது.. அவன் வந்து அமரும் வரை…….

தன் அக்காவிற்கு. திருமணம் என்று.. நிஷா.. இன்று.. விடுமுறை எடுத்து கொண்டு…. லதா வீட்டில் படித்து கொண்டு இருந்தால் இன்னும் சற்று நேரத்தில் தன் தலைஎழுத்து…மாற போவது தெரியாமல்.. ஒரு வேலை தெரிந்தது இருந்தால்.. என்ன செய்து இருப்பாள் ..????

ஹோமம்.. வளர்க்க…… ..

ஐயர்.. பெண்ணை.. மாப்பிள்ளையே அழைச்சுண்டு.. வாங்கோ… . என சொல்ல……. சுமதி… போய்.. ஷாலினியே அழைத்து வர போனார்.. . ருக்மணி.. குணாவை அழைத்து… . குமரனை அழைத்து வர சொல்ல…

அங்கே இருந்த அணைத்து உறவினரும்.. நண்பர்களும்… அட்ச்சதை தூவ காத்து இருந்தார்கள்…..

அந்த புதியவன்…. தான் மண்டபம் வந்துவிட்டத்தை.. ஷாலினி இடம் தெரிவித்து விட்டான்….

இனி…….

அவள் சொன்னது.. போல்.. அவன் முன் வரிசையில் அமர்ந்து.. நடந்து கொண்டு இருந்த…அனைத்தையும் பார்த்து மனதுக்குள் சிரித்து.. கொண்டு இருந்தான்…. …இந்த நாடகம் இன்னும் எவ்வளோ நேரம் என்று.. [ உனக்கு வாழ்வு….]




********************************

ஹாய் ப்ரெண்ட்ஸ் இதோ அடுத்த எபி போட்டுட்டேன்.... sorry friends morning ye poturpen.. inaikku ekadasi naala plus . oru training class anga poitathu naala ivvalo thaan epi kodukka mudinjathu...NO THITTU NO ADICHUFYIN :sick::eek::eek::eek:
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னருகில் நீ இருந்தால்-8




சுமதி.. மற்ற இரு பெண்கள் உடன்…. ஷாலினி.. அமைதி கலந்த அழகு உடன்.. வர… வந்த புதியவன்.. அவள் அழகை அள்ளி பருகி
கொண்டு இருந்தான்.. ஆனால்.. உரிமை உள்ளவனோ… யாருக்கோ வந்த விருந்து என்று அமர்ந்து இருந்தான்… … குமரனை கவனித்த.. குணா……அவன் அருகில்… சென்று..


” டேய் குமார.. என்னடா ஆச்சு ஏன் இப்பிடி பேய் அறைஞ்ச மாதிரி உட்காந்து இருக்க… .. கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருடா. . எல்லாரும் உன்னை தான் கவனிக்கறாங்க. .. பாரு.. என சொல்ல..”

” இல்ல குணா.. தலை ரொம்ப வலிக்குது….. ” குமரன் சொல்ல..

” ஹோமம் புகை உனக்கு சேரலை.. நினைக்கிறேன்.. கொஞ்சம் நேரம் தான் டா. பொறுத்துக்கோ… இப்போ கொஞ்சம் சிரியேன் டா..”

” குமரன் முடியாமல்.. ஏதோ என்று.. சிரித்து வைக்க.”

அதை பார்த்து குணா, குமரனை. முறைத்துவிட்டு.....“ இதுக்கு நீ சிரிக்கவே தேவை இல்லை டா.. சகிக்கல… என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து.. நின்றான்.... ‘

” குமரன்… , மனதுக்குள்… நிஷா நிஷா தப்பு பண்ணிட்டேனா .. உன்ன விட்டுட்டு...நான் எப்பிடி...….என்று.. பொலம்பி கொண்டு இருந்தான்.. என்ன செய்தால்.. இந்த திருமணம் நின்று விடும்… கண்ட உடன் காதல் என்று நம்பன் சொன்ன பொது சிரித்தவன்.. இன்று தனக்கும் இதை நிலை என்று.. மேலும் சோர்ந்து போனான்..”

இவனது மனதின் நிலை அறிமால்.. நாளை நடக்க பரீட்சைக்கு.. படித்து கொண்டால்..அவனது.. காதலி….. .

நேரம் ஆச்சு… சீக்கிரம் .. வந்து மாப்பிள்ளை பக்கத்துல உட்கார வைங்க பெண்ணை……. ஷாலினி.. மெல்ல அவனது அவன் அருகில் அமர…

ஐயர்.. . இந்த தாலி எடுத்து பொண்ணு கழுத்துல கட்டுங்கோ… . எடுத்து கொடுத்தார்… …
அப்போது.. தான் … . சார் ஒரு நிமிஷம் என்று சொல்லி... ஷாலினி.. எழுந்து விட்டாள் … குமரன் அருகில் இருந்து..


அவன் என்ன என்று. அவளை.. அப்போது தான்... நிமிர்ந்து பார்க்க..

[ ஏற்கனவே குமரனுக்கு தலைவலி படுத்தி எடுக்க..அதோடு.. அவன் மெல்ல ஷாலினியே நிமிர்ந்து பார்த்தான்... ]

அதற்குள்.. கிருஷ்ணன்… ஷாலினி அருகே வந்து. என்னம்மா என்ன பண்ணுற. இப்பிடி எல்லாம் பண்ண கூடாது.. முகூர்த்த.. நேரம் முடியே போகுது..…பாரு... உட்காரு.. அப்புறம் பேசலாம்… ”

இல்லை ப்பா இப்போவே பேசணும்….என அவள் ஒரு முடிவுடன்..சொல்ல..

கிருஷ்ணன் அவளை குழப்பமாக பார்த்தார்...

குமரன் மற்றும் இன்றி அனைவரும் ஷாலினியே பார்க்க..

மேலும் கிருஷ்ணன் எதோ சொல்ல போக…பரவாயில்லை ... சார்.. உங்க பொண்ணு எதோ சொல்லணும் சொல்லுறாங்களே.. சொல்லட்டும்.. [ மனதுக்குள் இந்த சார்.. நீங்க என் நிஷாவ படுத்துற பாடுக்கு தான்... ]

” சொல்லுங்க மிஸ் ஷாலினி.. என்ன விஷயம்..” என அவனும் கையில் வைத்து இருந்த..... தாலியே தட்டில் போட்டுவிட்டு எழுந்து விட்டான்

அவன் குரலில் இருந்த கடுமை.. அவளை ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது...பிறகு.

” எனக்கு இந்த கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை..” சொல்லிவிட்டாள் ஷாலினி...

கிருஷ்ணன் . அதிர்ந்து போய் நின்று விட்டார்… அனால் சுமதியோ.. கோபத்தில் ஷாலினி அருகே வந்து.. அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்து… விட்டு.. என்ன டி பேசுற… அதுவும் எப்போ எங்க வந்து என்ன பேசுற.. ”

குமரன் அவரை தடுத்து.. இருங்க ஆன்டி.. நீ சொல்லுமா.. என்ன பிரச்சனை உனக்கு என்ன கல்யாணம் பண்ண..”

” நீங்க ஒரு போலீஸ் ..” சிறுபிள்ளை தனமாக ஒரு கரணம் ஷாலினி சொல்ல..

அதை கேட்டு....

” தெரிஞ்சு தானே மன மேடை வரைக்கும் வந்த.. ‘ என குமரன் நக்கலாக கேட்டான்.”

” ஷாலினி கோபமாய் அவனை..பார்த்து..… அப்போ எங்க அப்பாவுக்கு கட்டு பட … வேண்டியே நிலை..”

” இப்போ மட்டும் கட்டு பாடு.. என்ன ஆச்சு காற்றோட போயிடுச்சா என்ன...மீண்டும் அதை நக்கல்..” அவனிடம்...

” ஷாலினி…, அவனது பேச்சு படிக்காமல்.. .. எனக்கு உங்கள பிடிக்கல.. அப்போ சொன்ன அப்பா ஏதும்…பிரச்சனை பண்ணுவாரு.. தான் இவ்வளோ நாள் காத்து இருந்தேன்.. அதோ.. அங்கே.. முதல் வரிசைல.. உட்காந்து இருக்காரே.. அவர தான் நான் கல்யாணம் பண்ணிக்க. போன்றேன்… என அவள் சொல்லி முடிக்க.. மீண்டும்.. சுமதி…மீண்டும்... அவள் கன்னத்தில் நாலு அரை அறைந்தார்..

” அடிப்பாவி மகளே…. என்ன காரியம் டி பண்ணிட்ட நம்ம குடும்ப மானத்த.. சாந்தி சிரிக்க வச்சுட்டியே… .. அங்கே பாரு உன் அப்பாவ நல்ல பாரு டி....… என் பொண்ணுக்கு அது பிடிக்கும்… அது நல்ல இருக்கும்… அப்பிடின்னு பார்த்து பார்த்து பண்ணின மனுசன இப்பிடி தலை குனியே வச்சுட்டியே.. டி.. நீ நல்ல இருப்பியா… என தலையில் அடித்து கொண்டு.. அழ ஆரம்பிக்க..

சிவநேசன்.. ருக்குமணி…. அதிர்ந்து… என்ன பேசுவது என்று தெரியாமல் நின்று.. கொண்டு இருந்தார்கள்.. குணாவுக்கு இப்போ குமரன் நிலை வந்துவிட்டது…

” என்ன டா இது இம்புட்டு நேரம் எதையோ பறிகொடுத்தவன் மாதிரி இருந்தான் இப்போ என்ன நா.. புயலா வேலை பார்குறான்.. ஒரு வேலை இவனுக்கும் இந்த கல்யாணம் ல இஷ்டம் இல்லையோ…..என்கிற குழப்பம்…. ” அவன் குமரனை பார்க்க..





மனதில் இருந்து எதோ ஒரு பாரம் இறங்கியது போல் இருந்தது குமரனுக்கு… ..இனி தன்னவளை எப்பிடியவுது தன்னோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் மனதுக்குள் கொண்டு இருந்தது…. .. அதை ஏதும் வெளி காட்டாமல்.. திருமணம் நின்று விட்ட… கோபத்தில் இருப்பது போல் நடித்து கொண்டு நின்று இருந்தான்…இறுகி.. போய்.. இருப்பது போல்… முகத்தை மாற்றிக்கொண்டு..



குனாவினால் கூட கண்டிப்பிடிக்க முடியவில்லை... அவனோ.. இவன் கோபத்தை கண்டு பதறி கொண்டு நின்று இருந்தான்....மெல்ல நண்பனை.. பார்த்து.. .... டேய்.. குமரா.....என அழைக்க..

சும்மா இரு குணா...என அவனை அதட்டிவிட்டு.. ஷாலினியே பார்த்து......ஹ்ம்ம் சரி இத என்கிட்டே முன்னாடியே சொல்லி இருக்காலமே.. … இப்போ இவ்வளோ பேரு முன்னாடி.. என்னையும் என் பெற்றோரையும் அசிங்க படுத்த வேண்டி என்ன இருக்கு …. காதும் காத்து வச்ச மாதிரி.. முடிக்க வேண்டியே விசயத்த…. இப்பிடி… வெளிச்சம் போட்ட.. என்ன அசிங்க படுத்த கரணம் என்னவோ….??

இப்போது ஷாலினிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை….ஏதோ சொன்னால் அவன் விலகி போய்விடுவான் என பேச அவனோ.. அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு.. படுத்தி எடுத்து கொண்டு இருந்தான்... ஒரு கட்டத்திற்கு மேல் அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்... எதோ யோசித்து.. மேலும் மேலும் குமரனை வார்த்தையால்.. கிழித்து கொண்டு இருந்தால்…… .. அவ்வளோ நேரம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தா சிவநேசன்.. கோபத்தில்...” என்ன மா வார்த்தை ரொம்ப வரம்பு மீறுது…. பார்த்து பேசு.. என்ன கிருஷ்ணன்….. இது நீங்க எங்களுக்கு குடுக்கும்.. மரியாதையா.. என்று கேட்க…

அதற்கும் அவர் ஏதும் பேசவில்லை….
சுமதி.. வேகமாய்.. அவள் அருகில் வந்து… இங்க இருந்து வெளியே போடி… முதல … என கத்த…


ஷாலினி.. அவரை பார்த்து.. சும்மா கத்தாதே ம்மா இங்கயே உங்களுக்கு பாராமா இருக்க மாட்டேன்.. நான் போறேன்.. என தனக்கு என்று ஒதுக்க பட்ட அறைக்கு சென்று.. அவள் எடுத்து வைத்து இருந்தா.. பேக் ..எடுத்து. கொண்டு.. வெளியே வந்தாள்

வந்து நேராக.. . அந்த புதியவன் அருகில் சென்று…. போலாம்… பாஸ்கர் இனி நமக்கு இங்க வேலை இல்லை…

அவனும் ஒரு . ஏளன புன்னகை ஒன்றை சிரித்து விட்டு அவள் உடன் கிளம்பினான்..

ருக்மணி.. ” போச்சி.. போச்சி எல்லாம் போச்சு.. என் பையன்.. வாழ்கையே நானே கெடுத்துட்டேன்… அய்யோ அன்னைக்கே சொன்னானே. இது சரியா வராதுன்னு..இப்பிடி பண்ணிட்டேனே.… எனஅவர் அழ தொடங்க..”

குமரன்.. ” அவர் அருகில் வந்து.. விடுங்க அம்மா இப்போ என்ன ஆச்சு.. இப்பிடி அழறிங்க
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதை அவ கல்யாணத்துக்கு அப்புறம் செய்யமே விட்டாலே.. அது வரைக்கும் சந்தோசம் நினைச்சுகோங்க

குமரா ….. தம்பி … என ருக்மணி.. மற்றும் சுமதி.. அதிரிச்சி அடைந்தார்கள்…

சாரி அத்தை... என அவன் அமைதி ஆகிவிட..

சரி எல்லாரும் கிளம்புங்க.. அதான் கல்யாணம் நின்னுடுச்சே ..என சிவா நேசன் சொல்ல..

சிவநேசன் கிளம்ப சொன்னதும்.. குமார அதிர்ந்துவிடான்..மனதுக்குள் [ எதாவுது யோசி குமரா இல்ல. அவ்வளோ தான்...என யோசித்தவன். இது தான் சரி நிஷாவ இப்பிடி தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்... ‘ NOTHING FARE IN LOVE AND WAR ‘ என களத்தில் இறங்கினான் நம் காதல் மன்னன் ]

குமரன்.. அவரை அவசரமாக தடுத்து... இல்லை அப்பா.. இப்போ இங்க எனக்கு கல்யாணம் நடந்து ஆகணும்… என கொஞ்சம் கடுமையாகவே சொன்னான் ..

என்ன டா.. சொல்லுற . இப்போ எப்பிடி கல்யாணம்.. நடக்கும் அதான்.. அந்த பொண்ணு .. போய்டாளே….

” ம்கும்.. இவரு இரண்டாவுது மகள் இன்னும் இருக்காள அவள … என்னக்கு கட்டிவையுங்க.. கொஞ்சம் கூட யோசிக்காமல் அவன் சொல்ல..

” என்ன டா பேசுற.. .. ”என நேசன் அதிர்ந்து போய் விட்டார்

” உண்மை தானே ப்பா .. நமக்கு இவ்வளோ அவமானம் இவரு பெரியே பெண்ணால….இப்போ.. அதை சின்ன பெண்ணை கட்டி வச்சு.. சரி பண்ணிக்க சொல்லுங்க அதாவுது .. தப்ப நேர் பண்ணிக்க சொல்லுங்க.. என்று மறைமுகமாக.. தனது வேலையே அவன் செயல் படுத்த தொடங்கினான்…..

சிவநேசன் யோசனை உடன்.. கிருஷ்ணனை பார்க்க.. சுமதி.. இவன் சொல்லுவது தானே சரி என்று.. வேகமாய் கணவர் அருகில் சென்று.. அவங்க சொல்லுற மாதிரி.. செய்துடலாம்ங்க ..

அவரால் இன்னும்.. நடந்த எதையும் ஜீரணிக்க முடியவில்லை.. . தான் உயிராய் வளர்த்த பெண்… அவரை அவமானம் படுத்தி..விட்டு சென்றுவிட்டாள்.. ஆனால்…இளையவள்.. ……….. ?? சுமதி இவ்வாறு கேட்ட உடன்.. ஏதும் சொல்லாமல்.. சரி என்று தலையே மட்டும் அசைத்தார்…

உடனே .நிம்மதியான சுமதி.. ருக்மணி.. கையே பிடித்து. ” அண்ணி.. ஏதோ தப்பு நடந்து போச்சு.. எங்கள மன்னிச்சுடுங்க.. . எங்க தப்ப நேர் பண்ண எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு….. கொடுங்க அண்ணி தம்பி சொல்லுற மாதிரி செய்துடலாம் அண்ணி..…” என அவர் கெஞ்ச

ருக்மணி.. ” என்ன சுமதி இது.. போதும் அழறத நிறுத்து.. உன் வீட்டு பெண் எங்க வீட்டுக்கு மருமகளா வரணும் ஆசை பட்டேன் அது பெரியவளா இருந்தா என்ன சின்னவளா இருந்தா என்ன…..எங்களுக்கு சம்மதம் ஆனா… சின்னவ இப்போ ரொம்ப சின்ன பொண்ணு ஆச்சே.. எப்பிடி.. என குமரன் வயிற்றில், நெருப்பை அள்ளி கொட்டினார்…

அவசரமாக.. குமரன்.. அவ இப்போ மேஜோர் தானே அம்மா.. அது எல்லாம் சரியாய் வரும்… ”

” இல்லடா .. இப்போ தானே ஸ்கூல் படிக்கிறா . ” ருக்மணி மேலும் தயங்க...

” அதும் ஒன்னும் பிரச்சனை இல்லை அம்மா. நம்ம வீட்டுல இருந்து படிப்ப தொடரட்டும்.. அம்மா.. ”

” அதுவும் சரி தான்.. சரி.. ஆமா எங்கே என் மருமகள்.. என அவர் கேட்க.. ”

” சுமதி.. சங்கடத்துடன்… அது.. அவ இங்க இல்லை அவ கூட படிக்கிற.. பிரெண்ட் வீட்டுல இருக்கா ….. நாளைக்கு பரீட்சை.. அதான்.. ”

” டேய் நாளைக்கு பரிட்சையாமே டா.. அவளுக்கு இப்போ கல்யாணம் எப்பிடி.. ” ருக்மணி மேலும் தயங்க...

இப்போது குமரனுக்கு இந்த உலகத்தில் எதிரி என்றால் அவன் தன் அம்மாவை தான் கை காட்டுவான்.. மனதுக்குள் ” அம்மா கொஞ்சம் பேசாம இரேன்.. நீயே எனக்கு ஆப்பு வச்சுர்வ போல இருக்கே.. எவ்வளோ கஷ்ட பட்டு... ஸ்கெட்ச் போட்டா.. .. சொதப்பி விட்டுருவ போல தெரியுதே.... என கடுப்பு ஆகினான்… ”

இவங்க கிட்ட பொறுமையா பேசினா.. எல்லாம் வேலைக்கு ஆகாது.. என்று.. குமரன்.. இப்போ, முடிவா என்ன தான் சொல்ல வரிங்க.. எனக்கு இன்னைக்கு.. இப்போ இங்க கல்யாணம் நடந்தே ஆகணும்.. நடக்குமா நடக்காத சும்மா இருந்தவன கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோ சொல்லிட்டு... இப்பிடி பேசுறிங்க.. என்று கடைசியாக கேட்குறேன் பதில் சொல்லுங்க...…..

பெரியவைகள் நால்வரும்.. வேற வழி இன்றி,, சரி என்று சொன்னார்கள்..

சுமதி.. வேகமாக.. தனது..போனில் இருந்து லதா வீட்டுக்கு தொடர்பு கொள்ள…

அதற்குள் .. அம்மா.. என அழைத்த படி.. நிஷா.. மண்டபம் வந்துவிட்டாள் … .

. சுமதி.. அம்மு… நீ எப்பிடி டா இங்க.. ”

லதா கூட கல்யாணத்துக்கு.. வந்தேன் அம்மா.. என்ன ஆச்சு ஏன் எல்லாரும் இப்பிடி நிக்கிறிங்க.. ஷாலினி எங்
எங்கே,.. என கேட்க..


சுமதி.. ஐயோ அம்மு நாம மோசம் போய்டோம் டா.. . அவ அந்த பாதகத்தி… இப்பிடி பண்ணிடாலே.. என நடந்த அனைத்தையும்.. சுருக்கமாக சொல்லி முடித்தார்… …”

” நிஷாவிற்கு ஒரு நிமிடம் கண்ணை கட்டி கொண்டு வந்தது..., அக்காவா இப்பிடி.. , இந்த அப்பா எங்கே போனார் இதை எப்பிடி தாங்கினார்…. என தந்தையே. தேடியது அவளது விழிகள்…அங்கே ஓரமாய்.. சேரில் அமர்ந்து.. எங்கையோ வெறித்த... படி இருந்தார்… எவ்வளோ பாசம்... வச்சு இருந்தார்.. அவ மேல .. ஒரே நாள்ல.. ஆளே மாறிட்டாரே….. என நிஷாவின் கண்கள் கலங்கியது… …

இன்னும் அவள் குமரனை கவனிக்கவில்லை அதற்குள்.. சுமதி.. நிஷா அருகில் வந்து… ” அம்மு.. அத விடுடா.. அம்மா காக ஒன்னு செய்வியா டா.... கண்ணா.. ”

நிஷா.. ” என்ன அம்மா நீங்க என்னனு சொல்லுங்க .. செய்யுறேன் அம்மா நீங்க தானே என் உலகம்.. என சொல்ல. ”



நிஷாவின் இந்த வார்த்தையே கேட்டு கிருஷ்ணனுக்கு யாரோ தன்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது....

” ஷாலினி எங்கள மட்டும் இல்ல மாப்பிள்ளை வீட்டையும் சேர்த்து.. தலை குனியே வச்சுட்டா.. நீ தான் டா அதை சரி பண்ணனும்….”

” நா நான் .. எப்பிடி மா… எனக்கு புரியல…” நிஷா சொல்ல..

” அம்மு.. நீ அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையே கல்யாணம் செய்துக்கணும் டா.. ”

தான் சரியா தான் கேட்டோமா.. என்று நிஷா.. நிற்க

” அம்மா நீங்க என்ன சொல்லுரிங்க நான் எப்பிடி அம்மா.. ” நிஷா தயங்கினாள்

” ஏண்டா.. ”

” இல்ல அம்மா.. நான் இப்போ தானே.. ஸ்கூல் ….?? ‘

” அது எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க டா.. மாப்பிள்ளையே படிக்க வைக்கிறேன் சொல்லிடாரு… நீ உன் சம்மதம் மட்டும் சொல்லு டா , இந்த கல்யாணம் நடக்கலைனா நானும் உன் அப்பாவும்.. உயிரே விட வேண்டியது தான்.. என தனது கடைசி வார்த்தையே அழுத்தி.. சொல்ல ”

நிஷா… உறைந்து போய் விட்டாள் ” ஒரு கல்யாணம் நின்று.. போனால்… இரு வீட்டார்க்கு.. எவ்வளோ அவமானங்கள்… , பாதிப்பு என்று.. அங்கே வந்த சில நிமிடத்தில்… கணித்து விட்டால்.. நிஷா.. ஆனால்… இந்த கல்யாணம்.. எப்பிடி.. இது சரியாய் வரும் …, அம்மா சொல்லிட்டாங்களே இனி அதுக்கு மறுபேச்சு எது.. என்று..’

நிஷா சுமதியே பார்த்து.. சரி அம்மா.. எனக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் அம்மா.. ”

சுமதிக்கு தெரியும் அவள் சம்மதிப்பாள்.. என்று..

சுமதி அவள் கைகளை பற்றி நன்றி டா குட்டி ம்மா... வா சீக்கிரம் என அவளை அழைத்து கொண்டு அவசரமாக.. ஒரு பட்டுபுடவையே கட்டிவிட்டு...அழைத்து வந்தார்கள்.....

தன் காதல் தேவதையே. மணப்பெண் அலங்காரத்தில் பார்த்து குமரன்.. மெய்.. மறந்து பார்க்க… .. .. அவன் .. மன அமைதி எதையோ சாதித்து விட்ட. .. .. போல்… .. இருக்க.. மனம் அமைதியானால் முகமும் அதோடு சேர்ந்து அழகு ஆகிவிடுமோ…. அப்பிடி தான் இருந்தது குமரனுக்கு…. ..

இதை அனைத்தையும் கவனித்த.. குணா…… என்ன இவன்.. ஒரு டைப்பா இருக்கானே…… .. ஷாலினி வரும் போதும் நிமிர்ந்து கூட பார்க்காதவன்.. இப்போ என்னடான்னா.. இப்பிடி பார்த்து வைக்கிறான்…முகத்துல கூட ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுதே.... எதோ சரி இல்லையே…. அவன் யோசிக்க...

நிஷா..மெல்ல அவன் அருகில் வந்து அமர்ந்தவள்.. யாரு தான் மாப்பிள்ளை.. .. என்று நிமிர்ந்து பார்த்தவள்.. மீண்டும் ஒரு முறை அதிர்ந்துவிட்டாள் ….. இவன்…. இல்ல. இவர்… ….. .. என விழி விரித்து பார்க்க… … அவனும்.. அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்….[ வெளங்கிடும் டா மக்க.. இப்பிடியே பார்த்த போதுமா.. தாலியே யாருப்பா கட்டுறது… அப்புறம் டூயட் ரோமன்ஸ் பண்ணிக்கலாம்.. கொஞ்சம் பூ லோகத்துக்கு வா ராசா… பாரு எல்லாரும் உன்ன தான் வேடிக்கை பார்க்குறாங்க..... ]



போதும் டா குமார பார்த்தது.. தாலியே வாங்கு எவ்வளோ நேரம் தான் கைல வச்சு இருப்பாரு... .. ஐயர்.. என குணா சொன்ன உடன் தான்… குமரன்…. ஹ்ம்ம் இதோ…. என அவசரமாக தாலியே வாங்கி.. நிஷாவின் கழுத்தில் கட்டினான்…. ” [ ஹே எல்லாரும் ஜோரா கை தட்டுங்க பா.. ஹீரோ கிடச்ச கேப் ல.. ராகேட்டே விட்டுடாரு…. ” ]

_______________________________________________________________





வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்


வெண்ணிலவே விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்


அழகே நீ ஓர் பூகம்பம் தானா
அருகே வந்தால் பூக்கம்பம் தானா
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும் பெண் தேகம் அதிசயம்


வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்


ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னைக் கண்டேனே புதிதாய்
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழை வரும்


வெண்ணிலவே விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்

உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்..
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்






என்னருகில் நீ இருந்தால் - 9


பட பட படபடப்பில் பார்த்தாலே பயம் ஏற
தட தட தடதடப்பில் உள் நெஞ்சில் ரயில் ஓட
வாயாடி பெண்ணாக வந்தாளே
என் நெஞ்சை பந்தாடி சென்றாளே

சின்ன சின்ன கண்ணாலே சிக்க வைச்சு போனாளே
சக்கரத்த போல தான் சுத்த வைச்சு போனாளே
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறை தொலைத்தேனே

ஒரு நாள் இரவில் நின்றேனே


மற மற என்றாலும் மனதோடு வந்தாலே
சர சர சர வெடியை திரி ஏற்றி சென்றாளே
அய்யயோ அய்யய்யோ யாரோ நீ

எந்நாளும் எனை ஆளும் மகாராணி


நல்ல படியாக திருமணம் முடியே.. பெரியவர்களுக்கு நிம்மதி.. ஆனது..

ஆனால்.. நிஷா… ஏக பட்ட கேள்விகள் உடன்.. நின்று இருந்தாள்

அவள் மனம் புரிந்தது.. போல் குமரனும் ஏதும் பேசாமல் பெரியவர்கள் இடம் அசிர்வதாம் வாங்கினான்.. நிஷா உடன்…





இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த குணா... மெல்ல நண்பன் அருகில் வந்து “ என்னடா நடக்குது இங்கே. “



“ என்ன நடக்குது... பார்த்தா உனக்கு எப்பிடி தெரியுது.. “ என அவனும் குணா போலவே பதில் சொல்ல..

டேய்.. இந்த கல்யாணம் முதல செல்லுமா. நிஷாவுக்கு.௧௮ வயசு. ஆகிடுச்சா உனக்கு தெரியுமா...எப்பிடி நீ அவள கல்யாணம் பண்ணலாம் எனக்கு என்னமோ நீ அவசர பட்டுடியோ தோன்றது..என குண கவலையுடன் சொன்னான்

அதை கேட்டு..குமரன் உறுதியாக .அது எல்லாம் சரியா வரும் குணா.என் முடிவு சரிதான்....என சொல்ல..



எப்பிடி சொல்லுற ... .குணா தன்னுடையே சந்தேகம் தெளிவு படுத்து எண்ணி கேட்டான்..



நண்பன் தெரிந்துகொள்ளாமல் விடமாட்டான் என... புரிந்து.. அவன் சொல்ல ஆரம்பித்தான்... “ அன்னைக்கு நாம ஸ்கூல் போயி இருந்தோம்ல அப்போ.. அவளை பற்றி விசாரிச்சேன்.. birth certificate எல்லாம் பார்க்கும் பொது தான் தெரிஞ்சது.. அவ லேட் அட்மிஷனா சேர்த்து இருக்கான்னு.. இப்போ சொல்லு அவளை நான் கல்யாணம் சரியான வயசுல தானே பண்ணிற்க்கேன்..



குணா அவனை வாய் பிளந்து.. பார்த்தான்.. “ அடேய் .. இது எப்போ டா நடந்தது.... இந்த சீன்ல நான் எங்கே டா போனேன்...இப்போஹான் குணாவிற்கு குமரன் மேல் வலுவாக சந்தேகம் தோன்றியது...அவன் குமரனை. பார்த்து.. மச்சி.. நீ ஏதும் என் கிட்ட மறைக்களையே.. கேட்டுவிட்டான்...

நண்பன் கண்டுகொண்டான். என குமரனும்.. ச்சீ ச்சீ .. நான் உன் கிட்ட ஏதும் மறைப்பேனா ....கேஸ் விஷயமா கேட்க போய் தான் தெரியே வந்தது...எங்கே தான் மேலும் ஏதும் உளறி விடுவோம் என்று குமரன்.. அத்தோடு.. பேச்சை..நிறுத்திவிட்டு..வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்...

ஆனால் குணா மனதில்.. “ என்னமோ இருக்கு... இவன் சரி இல்லை.. கண்டுபிடிக்கிறேன்... இருடி.. மாப்பிள்ளை... என அமைதி ஆகிவிட்டான்..



.

எல்லாம் எந்திரமாய்.. நடந்து கொண்டு இருந்தது.. லதா சந்தோசத்துடன்.. நிஷாந்தினியே அணைத்து கொண்டாள்

” ஹே.. ஓவர் நைட்ல இல்ல... காலைல … மிசஸ் குமரன் ஆகிட்ட நம்பவே முடியலே என் நால.. என சொல்லியே படி நிஷாவை அனைத்து கொண்டாள் அவளுக்கும் ஷாலினி இப்பிடி செய்ததில். வருத்தம் இருந்தாலும் தோழிக்கு நல்ல வாழ்கை அமைந்துவிட்டதில் அவள் சந்தோசமாக இருந்தாள்

லதாவின் கொண்டாட்டத்தில்.. நிஷா கலந்து கொள்ளாமல்..அவளிடம்....

ச்சு..சும்மா இரு டி.. நீ வேற.. . அப்போது ல இருந்து பார்க்குறேன். இந்த மனுஷன் முறைக்கிற முறைப்புல.. எனக்கு குளிர் காய்ச்சலே வந்துரும் போல.. இருக்கு..அக்காவே கட்டிக்க முடியாத கோபத்துல இருக்காரோ என்னவோ… அம்மா சொன்னது நால தானே இந்த கல்யாணம். சம்மதிச்சேன்... இதுல .. . நீ வேற .. நேரம் காலம் தெரியாமல் . ” என நடந்தது.. ஏதும் தெரியாமல்.. அவள் பேச..

லதா.. , ஆமால . , இது எனக்கும் தெரியாமல் போச்சே. இப்போ என்ன டா பண்ணுறது .. சும்மாவே .. கடு கடுன்னு இருப்பாருன்னு என் மாமா சொல்லுவாரு டா.. என லதாவும் தன் பங்கிற்கு சொல்ல..
இப்போது.. நிஷாவிற்கு..உள்ளுக்குள் பயம் பிடித்து கொண்டது.. இவன் இடம் இப்போ எப்பிடி பேசுவது.. . ஐயோ பேசியே ஆக வேண்டுமே.. . நாம சொல்லுறத புரிந்து கொள்ளுவானா . புரியாமல் கொல்ல போகிறானா ஒன்னும் புரியல.. என்ன பண்ணுறது..இப்போ... என அவள் தன் கையே பிசைந்த படி. யோசனையில் . நின்று கொண்டு இருந்தாள்...


அவளை கவனித்து கொண்டு இருந்த குமரன்.. அவள் அருகில் வந்து அப்போ ..கிளம்பலாமா.

அவன் குரல் மிக அருகில் கேட்டதும்.. நிஷா பதறி...” ஹ்ம்ம் எங்க..” அவள் கேட்க..

” என்ன “..

” இல்ல எங்க கிளம்பனும்..”

” வீட்டுக்கு தான் வேறே எங்கே.. அவனும் சொல்ல...’

” என்ன வீட்டுக்கா ….” அவள் அதிர்ந்தாள்...

” பின்ன மண்டபத்துல எப்பிடி இருக்க.. முடியும்..”

” ஆமால…..” மேலும்.... என்ன பேசுவது நிஷா விரல் எண்ணுவதில் இறங்கிவிட.

அத எல்லாம் கவனித்து... கவனிக்காமல்... குமரன்... ” போலாமா…” என மீண்டும் கேட்க...

” ஹ்ம்ம்.. என சொன்னவள் தன் அம்மாவை. தேடினாள் …”

அதை பார்த்த .. குமரன் .. ” ஹ்ம்ம் யார தேடுற..

நிஷா, ” அது.. அம்மா..”

” அவங்க உள்ளே.. மண்டபம் காலி பண்ணுற வேலைல இருக்காங்க நீ இப்பிடி உட்காரு… . என அவன் சொல்ல…

” இல்ல ப்ப .. பரவாயில்லை…”

” உட்காரு.. அவன் .. மீண்டும் சொல்ல…”

” நிஷா… எங்கே கோப பட்டு திட்டி விடுவானோ என்கிற பயத்தில் அங்கே போட்டு இருந்த சேரில் அவசரமாக அமர்ந்தாள்.. “

.” அப்போது தான் சுமதி .. என்னங்க.. என்னங்க இங்க வாங்க.. என அலறி அடித்துபிடித்து. வெளியே வந்தார்...

கிருஷ்ணன்.. மனைவியின் பதட்டம் பார்த்து.. “ எ.. என்ன சுமதி என்ன ஆச்சு.. ஏன் இப்படி.. வர.. “

” என்னங்க அவ.. ஷா ... ஷாலினி கலட்டி வச்சுட்டு போன நகை எல்லாம் போலிங்க… . பணம் எல்லாம் வேற எடுத்துட்டு போயிட்டா போல இப்போ என்ன பண்ணுறது..என கிருஷ்ணன் இடம் கேட்க,,.”

” கிருஷ்ணன்..என்னது எல்லாம் எடுத்துகிட்டு போயிட்டாளா .. என மேலும் உடைந்து போனார் தான் வளர்த்த பெண்ணா இப்பிடி செய்துவிட்டாள் இதுக்கு அவ என்னக்கு கொன்று போட்டு இருக்கலாம் என அவருக்கு தோன்றியது... . அவரால் இன்னும் பேச முடியவில்லை.. சுமதியின் அலறல் கேட்டு.. குமரன் நிஷா. குணா… லதா மற்றும் சிவநேசன் ருக்மணியும் வந்து.. என்னவென்று வந்து கேட்க..

சுமதி அவர்களிடமும்

ஷாலினி நகை பணம் எல்லாம் தன்னோடு எடுத்து சென்றுவிட்டாள் என சொல்ல.. நிஷா தன்… அக்காவின் செய்யலை.. நினைத்து.. . மனம் வெறுத்தால்…

சுமதி சொன்னதை கேட்டு.. மற்றவர்களும் அதிர்ந்து போய்விட்டர்கள்.. . முன்பே எல்லாம் பிளான் செய்து வைத்து இருக்கிறாள் போல.. நல்ல வேலை இரு வீட்டார் சொந்தகள் எல்லாம் களைந்து சென்று விட்டார்கள் இல்லை என்றால்… இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருக்கும் மானம் போய் இருக்கும் …..

நிஷா.. தலை நிமிரவே இல்லை… அவமானத்தில் மனதுக்குள் இப்பிடி பண்ணிட்டியே ஷாலினி. எப்பிடி உனக்கு மனசு வந்தது இப்படி. செய்ய....பிறகு... அம்மாவோட இந்த கல்யாணம் முடிவு சரி தான்.. . நாம தான் எதையாவுது செய்து.. ஷாலினி செய்த. தவற சரி செய்யனும் அதுக்கு முதல் பரிகாரம் இந்த கல்யணம் மேலும் என்ன செய்யலாம்… என மனதுக்குள் யோசித்து.. கொண்டு இருந்தாள் .. நிஷாந்தினி.”

அவளின் முக மாற்றத்தை கவனித்த குமரன்.. . ” தன் தந்தையே பார்த்து... அப்பா ஒன்னும் பிரச்சனை இல்லை.. எல்லாத்துக்கும் நீங்க செட்டில் பண்ணிடுங்க நாம சீக்கிரம் கிளம்பலாம். என சொல்ல..

கிருஷ்ணன்.. இல்லை மாப்பிளை.. நானே எப்பிடியவுது….??

” என்ன மாமா சொல்லுரிங்க இப்போ எப்பிடி நீங்க தனியா சமாளிப்பிங்க..அதுவும்.. ரொம்ப லேட் ஆகிருச்சு.. அதுக்கு தான் நான் சொல்லுறேன்…”

” இல்ல அது வந்து…தம்பி.. “ என மேலும் அவர் தயங்க..

” மாமா..என்ன உங்க பையனா நினச்சுகோங்க நினைக்கிறது..என்ன .பையன் தான்.. நடந்தது எல்லாருக்கும் இழப்பு.. தான் நான் இல்லைன்னு சொல்லல.. அதுக்கு . ஒருதர்க்கு ஒருதர் உதைவியா இல்லேன்னா அப்புறம் என்ன உறவு… நாம எல்லாம் நீங்க.... சங்கட படாதிங்க வேணும்னா கடனா கொடுக்குறேன் எப்போ முடியுமோ அப்போ தாங்க உங்க பங்க சரியா. .. .. என அவன் சொல்லிவிட்டு .. திரும்ப .. சிவநேசன்.. எல்லாம் கொடுத்தாச்சு.. குமரா . கிளம்ப வேண்டியது தான் வீட்டுக்கு.. “
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுமதி.. ரொம்ப நன்றி .அண்ணே.. .. என சொல்லிவிட்டு அழுதே விட்டார் ..

அவர் அழுவதை பார்த்து நிஷாவும் கண் கலங்க…

குமரன்.. மனதுக்குள்.. டிரக் கேஸ்க்கு..தைரியமா செய்யல் பட்ட பெண்ணா இவள்… இப்போ இப்பிடி கண் கலங்கி நிக்கிறா.. . ஹ்ம்ம் மென்மையானவள் கூட.. தான்.. போல.. “

” என்னமா நீ பெரியே வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு சரி இப்போ பொண்ணு மாப்பிள்ளையே.. வீட்டுக்கு அழைச்சுட்டு போகணும்..

இப்போது மீண்டும் குமரன்..’ அப்பா.. நம்ம வீட்டுக்கே.. போயிடலாம்…’ முடிவ சொல்லிவிட...

” என்னடா சொல்லுற.. “ சிவநேசன் கேட்க...

” ஆமா அப்பா.. இப்போ நாம நிஷா வீட்டுக்கு போனோம்னா.. நிறையே பேரு பார்வைக்கு ஆள் ஆக வேண்டி இருக்கும். தேவை இல்லாமல் நெறைய பேர் கேள்விக்கு பதில் சொல்லணும்... அதுக்கு தான்.. இப்பிடியே கிளம்பிடலாம்..”

” அவன் சொல்லுவது சரி என்று அனைவருக்கும். தோன்ற. சரி குமார… கிளம்பலாம்.. நீங்க என்ன சொல்லுரிங்க. சம்பந்தி… ..என நேசன் கிருஷ்ணன் இடம் கேட்க…”

” நான் சொல்ல என்ன இருக்கு சம்பந்தி.. தம்பி சொல்லுறது சரி தான்.. எதுக்கு வீண் பேச்சு நாம இடம் கொடுக்க.. . உங்க வீட்டுக்கே போயிடலாம்.. .. என அவரும் சொல்லிவிட.... “

நம்ம இப்பிடி பேசிகிட்டே இருந்தா எப்பிடி... சீக்கிரம் கிளம்பலாம்
. . என சொன்னவரை நிமிர்ந்து பார்த்தாள் . சின்னவள்.. மேலும் ஏதும் பேசாமல் .. மேலும் அமைதியே நாடினாள் ..


எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்த பின்.. குமரன் வீட்டுக்கே.. கிளம்பினார்கள்………

****************

குமரன் வீடு…..

மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்.. . ..

நிஷா.. குமரன் உடன் உள்ளே வர.. . ருக்மணி.. வாம்மா.. என அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்று… விளக்கு எற்ற சொன்னார் ..

சரி என்று குமரன் உடன்.. சென்று.. பூஜை அறையில் இருந்த குத்துவிளைக்கை ஏற்றினாள் …..

குமரன்.. மனம்..” என்னவள்.. இவள்…
ருக்மணி.. ” சாமி நல்லா கும்பிட்டுகொங்க ரெண்டு பெரும் என சொல்ல..’


குமரன்.. ” கடவுளே இவள என்கிட்டே சேர்த்துட்ட.. அதை மாதிரி இவளுக்கு என் மனதையும் புரியே வைக்க உதவி செய் என கடுவுளை.. துணைக்கு அழைக்க..”

நிஷா..” சாமி.. எதோ அக்கா செய்த.. தப்பு நால இந்த கல்யாணம் நடந்துருச்சு.. . இவரு வேற கோபமா இருக்கிற மாதிரி இருக்கு.. ப்ளீஸ் சாமி.. எனக்கு கொஞ்சம் உதவி.. பண்ணேன்.. என இவள்.. வேறு மாதிரி வேண்ட.. [ கடவுள் குழம்பம இருந்தா சரி.. ]

ரெண்டும் பெரும் வாங்க என ருக்மணி இருவரையும் அழைத்து கொண்டு.. ஹால் க்கு வர..

சுமதி.. இருவருக்கும் பாலும் பழமும் ஊட்டிவிட..

நிஷா..மெல்ல அவனை திரும்பி பார்க்க.. ஹ்ம்ம்.. ஒரு மாற்றம்..தெரியவில்லை.. அவன் முகமோ இறுகி போய் இருக்க… அவன் என்ன மனநிலமையில் இருக்கிறான் என்று.. நிஷந்தினியால் கண்டு கொள்ளவே முடியவில்லை.. [ எங்களுக்கே புரியலை உனக்கு.. மட்டும் எப்பிடி மா புரியும்..]

மீண்டும் மனதுக்குள் ” என்ன பேச வேண்டும் என்று ஒரு முறை.. ஒத்திகை பார்த்து கொண்டாள் .. “

அனைவரும் அடுத்து கட்டம் என்ன என்று.. அமர்ந்து யோசிக்க.. .

அப்போது தான் குமரனுக்கு..போன் வந்தது. அவன் குணாவை தன்னுடன் அழைத்து கொண்டு.. போன் பேச சென்று விட்டன..

ருக்மணி.. சுமதி.. இரவு.. உணவு செய்ய.. கிட்சென் சென்று.. விட….

கிருஷ்ணன்.. சிவநேசன்.. கல்யாண வரு செலவை பார்க்க.. அமர்ந்து விட்டார்கள்.. இப்போது நிஷாவும்.. லதாவும் மட்டும் அமர்ந்து இருக்க.

நிஷா.. லதாவிடம்….” லட்டு.. “

லதா.. அவள் குரலில் இருந்த.வெறுமை.. கண்டு கொள்ள.. இப்போ ஏதும் நெகடிவா.. இவ கிட்ட பேசினோம்னா. இன்னும் கஷ்ட படுவா என நினைத்து கொண்டு.. ” நிஷா.ம்மா.. என்ன டா..”

” நான் உன் மடில தலை வச்சு படுத்துகவா டா. லட்டு...எனக்கு என்னமோ ஒரு மாதிரி பயமா இருக்கு டா.. “

இது வழக்கம் போல் நடப்பது தான்…. கிருஷ்ணன்.. நிஷாவை வார்த்தையால் காயம்.. செய்யும் பொது எல்லாம். சுமதியால்.. மகளை தாங்க முடியாது தருணத்தில்.. லதா தான் அவளை தாயாய்.. மடி.. தாங்கினால்…….. அவளை தேற்றி அவளை வேதனை படாமல் பார்த்து கொள்ளுவாள்… நிஷாவை தனிமை நெருங்க விட… மாட்டாள்.. இதோ இன்றும் … அவளை மடி தாங்கி.. அவளுக்கு ஆறுதல் சொல்ல.. வந்துவிட்டால்…

இந்த நடப்பு தான் எவ்வளோ அதிசயம்…. அனைத்து உறவின் மொத்த உருவமாய் .. !!!

லதா அவளை தன் மடியில் .. சாய்த்து கொண்டு.. நிஷாவின் தலையே கோதி விட்ட படியே.. ‘ ஏன் டா மா இவ்வளோ வேதனை படுற.. என்ன குழப்பம் இப்போ உனக்கு..”

நிஷா, ” அக்கா ஏன் டா இப்பிடி செய்தா அம்மா அப்பாவ பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே டா ..அம்மாவை விட.. அப்பா அவர பத்தி. நினைச்சு பார்த்தாளா எப்பிடி எல்லாம் அவள பார்த்துகிட்டாறு தெரியுமா. அவளுக்குன்னு வாங்கின ஒவ்வரு பொருட்களையும் அவ்வளோ அன்பு...இருந்தது.. இந்த கல்யாண வேலைல அப்பாவை பார்க்க பார்க்க எனக்கு ஷாலினிமேல அவ்வளோ பொறமை வந்தது தெரியுமா. கொடுத்து வைத்தவள் எவ்வளோ நாள் சொல்லி இருக்கேன் உன்கிட்ட.. அப்பிடி பட்டவ ஏன்டா இப்பிடி பண்ணினா..ஒரு நிமிஷம் யோசிக்கவே இல்லையே டா...

அவள் கேட்காமலையே எல்லாம் செய்வாரு டா.. அவர எமாற்ற எப்பிடி மனசு வந்து இவளுக்கு.. . சரி அத கூட.. விடு.. . யாரோ.. முன் பின் தெரியாத ஒருவர்.. தனக்கு வாழ்கை துணையாய்.. வர போறாரு.. அந்த மனுசன அவரோட குடும்பம் பற்றி கூட நினைக்க முடியல.. எவ்வளோ பெரியே துரோகம் டா இது.. அவ்வளோ பேரு முன்னாடியும் எப்பிடி அவமானம் படுத்திட்டு போயிருக்கா எப்பிடி டா எப்பிடி அவளால முடிஞ்சது ..”

நிஷாவின் வார்த்தையில் இருந்த உண்மை லதாவுக்கு புரியாமல்... அதை கேட்டு... ” அவளுக்கு அவள் காதல் முக்கியம் டா. விடு..”

” காதல்.. அப்பிடி வெங்காய காதல் அது.. தான் முக்கியம்னா அப்பா ஓட பணம் எதுக்கு.. அப்போ மட்டும் காதல் தெரியலையா.. ‘ என மீண்டும் நிஷா.. கோபமாய்..கேட்க..

” பணம் டா அது.. அத கண்டா பிணம் கூட.. உயிர் பிழைக்கும்.. பழமொழி கேட்டது இல்லையா நீ அது மாதிரி தான் இதுவும்.. … உன் அக்கா மட்டும் என்ன விதி விளக்கா அவ சொல்லணும் நினச்சு இருந்தா இவ்வளோ நாள் பொறுத்து இருந்து இருக்க மாட்டா எவ்வளோ தைரியம்...பாரு அவளுக்கு அவனை மண்டபம் வரைக்கும் வர வச்சு அடையாளம்..காட்டி.. கையேடு எல்லாம் எடுத்துகிட்டு. போறான்னா எவ்வளோ நெஞ்சு அழுத்தம் இருக்கணும்...அப்பிடி பட்டவ கிட்ட நாம நல்ல மாதிரி எதிர் பார்க்க முடியுமா சொல்லு... லதா ஷாலினியே பற்றி அப்படியே சொல்ல...

” நிஷா.. அதுக்காக இப்பிடி பண்ணனும் ஒன்னும் அவசியம் இல்லையே.. இவ்வளோ செய்தவள்…. முன்னாடியே எல்லார் கிட்டையும் பேசி.. சொல்லிட்டு.. கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம்.. அட்லீஸ்ட் சம்பந்த பட்ட.. இவரு கிட்டையவுது சொல்லி எதையவுது செய்து.. இருக்கலாமே டா இப்பிடி பண்ணிடாலே.. “நிஷாவிற்கு..நெஞ்சம் பதறிக்கொண்டு இருந்தது...

லதா. ” விடு அவளுக்கு கொடுத்து வைக்கல.. அதை ஒருநாள் அவ உணர்வா டா நீ வருத்த படாத.. இப்போ நீ கஷ்டபட்டா . அது எல்லாரையும் பாதிக்கும்… முக்கியமா.. குமரன் சார .. நான் உனக்கு சொல்லி புரியே வைக்கணும் அவசியம் இல்லடா… இருந்தாலும் சொல்லுறேன் கேட்டுக்கோ.. . இனி உன் செயல் உன் அம்மா ஓட பெயரை காப்பாத்துற மாதிரி தான்... இருக்கனும் , எந்த காரணம் கொண்டு.. நீ உன் வீட்டுக்காரர் .. கிட்ட உன் அக்காவ பத்தி மட்டும் பேசி விடாத.. பெரியவங்க மனச கஷ்ட படுற மாதிரி நடந்துக்காத , அப்புறம் எப்பிடியும் நீ தான் இவர கல்யாணம் பண்ணிருப்ப. உன் அக்காக்கு கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும்..இல்லை எப்பிடியாவுது தெரிஞ்சுப்பா... இன் நேரம். அப்பிடி தெரிஞ்சு உன்கிட்ட.. போன் பண்ணினா என்ன ஆனாலும் சரி அவ கிட்ட பேசாத எது கேட்டாலும் முக்கியமா உங்க பர்சனல். பத்தி கேட்டாலும் அவகிட்ட சொல்லிடாதே... இது உன் லைப் இதுல உன் அக்கா மாதிரி ஆளுங்கள நுழையே விட்டுறாதே...... அப்புறம் ஆமை .புகுந்த வீடு மாதிரி ஆகிடும்.. சொல்லிட்டேன்..அவ கிட்ட கொஞ்சம் பார்த்து இருந்துக்கோ.. அப்புறம்.. உங்க ரெண்டு லைப் பற்றி நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க சரியா ” . இன்னும் ஒரு விஷயம் நீ பார்ட் டைம் ஜோப் போறது பற்றி. மேல படிக்கிற விஷயம் எல்லாம் சார் கிட்ட பேசிவிடு டா.. சரியா. என சுமதி சொலல் வேண்டிய எல்லாவற்றையும்.. லதா சொல்லி முடித்து இருந்தாள் … ” .

நிஷா. ‘ சரி லட்டு.. நான் பார்த்து நடந்துக்கிறேன்.. இன்னும் ஒரு டவுட் டா..”

” இன்னும் என்ன ம்மா.. “லதா மென்மையாக கேட்க...

” நாளைக்கு பிசிக்ஸ் எக்ஸாம் இருக்கே டா இன்னும் கொஞ்சம் தான் படிக்கனுமே.. அப்புறம் நான் வேலைக்கு வேற போகிறேனே.. “

‘ அது நீ சார் கிட்ட கேட்டுக்கோ.. என் தங்கமே நான் இந்த ஆட்டைக்கு வரல.. “

” ஏன் டா ..” நிஷா புரியாமல் லதாவை பார்க்க...

” நிஷா.. வேண்டாம் என் வாயே புடுங்காத.. அப்புறம் எதையாவுது சொல்லிடுவேன்.. “ லதா நிஷாவை கேலி செய்யே.

அவள் எதை சொல்ல வருகிறாள் என்று நிஷாவுக்கு புரிந்து விட..
நிமிர்ந்து லதாவை முறைத்து விட்டு. ” நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் “ நானே பார்த்துகிறேன்


லதா.. ” ஹாஹா என் செல்லத்துக்கு புருஞ்சு போச்சா.. என் சொல்லிவிட்டு மேலும் சிரிக்க..”

நிஷா.. அவள் மடியில் மேலும் முகத்தை புதைத்து…. ஷ்ஷு சும்மா இரு லட்டு.. அடி வாங்க போற. நீ... இப்போ… என முகம் சிவப்பை மறைத்து கொண்டு அவளை செல்லமாய்.. மிரட்ட…

இவர்கள் பேசுவதை.. குமரன் மட்டும் இன்றி.. பெரியவர்கள் நால்வரும் கேட்டு கொண்டு இருந்தார்கள்.... .

அனைவர்க்கும் ஆச்சரியம் .. என்ன மாதிரி பெண்கள் இருவரும் .. ருக்குமணி க்கு தன் மகனுக்கு இவள் தான் சரியான துணையோ.. என்று தோன்ற.. ..சிவநேசனும் அதை நினைக்க..

சுமதி.. மற்றும் கிருஷ்ணன்.. . தான் கொடுக்கும் பணத்தில் எதையும் செய்யாமல் உழைத்து படிக்கிறாள் தன் மகள் என்று பெருமை ஒரு பக்கம் வேதனை ஒரு பக்கம் என்கிற மனநிலைமை இவர்கள் இருக்க..

குணா.. என் லதாவா இவள்...லதாவுக்கு இவ்வளோ பேச தெரியுமா என்கிற.. பெருமை..

குமரன் நிலையோ.. சொல்லவேண்டியது இல்லை… லதா மேல் மரியாதையை கூட.. நிஷாவின் மேல் மேலும் காதல் பொங்கியது.. .. ஆனால்.. சொல்லும் தருணம் இது இல்லை என்று தன்னை சமாதனம் செய்தான்…பொறு மனமே என்று தனக்கு தானே சொல்லிகொண்டான்......

சிறிது நேரம் .. இருவரும் நாளையே எக்ஸாம் பற்றி பேச.. ஆரம்பிக்க..

அப்போது தான் வருது போல்.. ..

நிஷா.. என்று அழைத்து கொண்டு.. சுமதி அங்கே வந்தார்….

” என்ன அம்மா.. ” என்று லதா மடியில் இருந்து எழுந்து..அரம்ந்தாள் “

நேரம் ஆச்சு ரெண்டு பெரும் வாங்க.. சாப்பிட.. .. ம் நிஷா. நீ போய். மாப்பிள்ளையே அவர் கூட இருக்கிற தம்பியே. கையோட அழைச்சுட்டு வா . என்று சொல்ல..

நாங்களே வந்துட்டோம் அத்தை.. . வா டா குணா.. . என்று.. குமரன் வந்துவிட.. .

நிஷா.. பதத்துடன் லதா கையே பிடித்து கொண்டாள் .. ‘

அதை கண்டும் காணதது போல்… அவன் சுமதி..இடம்..….. சாப்பிட போலாம் . அத்தை எனக்கு செம்ம பசி.. என்று .

வாங்க எல்லாம் ரெடியா இருக்கு , நிஷா லதா நீங்களும் வாங்க . என சொல்லிவிட்டு. . சுமதி.. கிருஷ்ணனை தேடி சென்று விட..

லதா.. குணா பக்கம் போய் நின்று கொண்டாள் .இப்போது.. நிஷாவுக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை…. .

குமரன் . ஒரே நாளில் மாற்றம் வர போறது இல்லை.. என்று நினைத்து விட்டு.. நிஷா போலாமா சாப்பிட என கேட்க..

நிஷா., ” ம் போகலாம் .” என பேச்சை நிறுத்தி கொண்டாள்.. "



எல்லாரும் டைன்னிங் ஹாலில் இருக்க.

அனைவரும் அமர்ந்து விட.. . நிஷாவை குமரன் அருகில் அமர வைத்து.. ருக்குமணி சாப்பாட்டை பார்த்து பார்த்து பரிமாறினார்…. ..

சுமதி.. ” அம்மு .. இன்னைக்கு அண்ணி பரிமாறிட்டாங்க நாளைல இருந்து நீ தான் எல்லாம் செய்யனும் சரியா.. என சொல்ல.. “

நிஷா.. ‘ வேகமாய் சரி என்று தலை அசைத்தாள் .. “

ருக்மணி.. ” விடு சுமதி.. சின்ன புள்ளை தானே போக போக மெல்ல தெரிஞ்சுக்கட்டும்… இப்போ என்ன அவசரம்.. இதோ இவரு.. பிசினஸ்..காக வெளில் ஊருக்கு போய்டுவாரு.. இவன்.. பெரியே எ சி.. ன்னு.. போலீஸ் ஸ்டேஷன் கட்டி அழுவான்.. வீட்டுக்கு தோன்றும் பொது தான் அப்பாவும் பையனும் வருவாங்க..அப்புறம் நாங்க ரெண்டு பேரு தானே.. என சொல்ல..

சிவநேசன்… ” போதும் ருக்கு.. எங்க பெருமையே பேசாத.. .. உனக்கு துணைக்கு.. தான் ஆள் வந்தாச்சே அப்புறம் என்ன .

என்ன சொன்னிங்க எனக்கு துணைக்கா.. நல்லா சொன்னிங்க . இந்த கல்யாணம் எனக்கு துணை கொண்டு வர தான் நடந்ததா.. . .. என அவர் கோபமாய் பேச போக..

குணா. சிவநேசனை பார்த்து.. ” ஏன் அப்பா.. இப்பிடி வாயே கொடுத்து மாட்டிகிரிங்க.. தேவையா உங்களுக்கு இது.....என நக்கல் செய்ய..”

சிவநேசன் . டேய் குணா பேசாமல் சாப்பிட்டு…”

குணா, ” உங்க கோபம் எல்லாம் எங்க கிட்ட தான் அம்மா கிட்ட பேச முடியுமா..”

நேசன்.. ” டேய்.. குணா.. ‘ அவர் அதட்ட...

என்ன அங்கே பேச்சு.. ருக்மணி கேட்க...

இதோ.. சாப்பிட்டு இருக்கேன் ருக்கு.. நீ அந்த ரசம் இங்க கொடு….என எல்லாரும் சிரித்து பேசியே படி... சாப்பிட்டு முடித்தார்கள்....

கிருஷ்ணன் சிவநேசன்.. கையே பிடித்து.. அப்புறம் நாங்க கிளம்புறோம்.. சம்பந்தி..எங்கள மன்னிச்சுடுங்க..

சிவநேசன்.. ” எங்களுக்கு எந்த வருத்தம் இல்லை சம்பந்தி.. மனச போட்டு குழபிக்க வேண்டாம்.. என சமாதனம் சொல்ல..

கிருஷ்ணன்.. ” ரொம்ப நன்றி சம்பந்தி..

சுமதி.. நிஷாவிடம் ஒரு பையே கொடுத்து… இதுல உன் டிரஸ் யூனிபோர்ம் எல்லாம்.. இருக்கு அம்மு.. .. சரியா , அப்போ அம்மா கிளம்பட்டும்மா..

நிஷா, ‘ ஹ்ம்ம்.. ” என பேக்கை.. வாங்கி கொண்டாள் .அவளுக்கோ அழுகை வரும் போல் இருக்க..தன் கையில் இருக்கும் பேக்கை இறுக்கமாக பற்றி கொண்டாள் .[ மனதுக்குள்....ஒரே நாளில் தன் வாழ்கை இப்பிடி மாறி விட்டதே...

சுமதி.. லதா வாம்மா உன்ன உங்க வீட்டுல விட்டுறோம்..

லதா, ” இதோ ஆன்டி.. வாங்க கிளம்பலாம்..என்று நிஷாவிடம் வந்து இது உன்னோட புக்ஸ் பெக்.. ஓகே.. பாய் டா..

நிஷா அதையும் வாங்கி.. கையில் வைத்து கொண்டு.. நிற்க..

சுமதி. கிருஷ்ணன்..நேசன் ருக்மணி.. குமரன் இடம் விடை பெற்று லதாவை.. தன்னுடன் அழைத்து கொண்டு கிளம்பி விட..

கொஞ்சம் நேரம் குமரன் இடம் பேசிவிட்டு.. குணாவும் கிளம்பினான்.. ” பார்த்துகோடா.. நான் வரேன் “

” சரி டா “ அவனும் நண்பனை வழி அனுப்பிவைத்துவிட்டு...வந்தான்...


*********************************************

hai friends.. itho adutha epi potachu..................... padichutu sollungaa.. dearies.........................:love::love::love::love::love::love:
 
Last edited:
Status
Not open for further replies.
Top