All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? நிரந்தரியை திருமணம் செய்து அழைத்து வந்தாலும் சர்வா தள்ளி நின்று அவளின் நிலையை புரிந்து நடந்து கொள்ளும் பதிவு...

குலவேந்தர் இருவரின் நிலையையுமே புரிந்து எவ்வளவு அழகாக அவர்களுக்கு கொஞ்சம் கூட கஷ்டமே இல்லாமல் நடந்து ஒரு சிறந்த அன்புடைய அழகான மனம் கொண்ட மனிதர் என்று நிரூபித்து விட்டார்... அற்புதமான மனிதர்...

குளித்து விட்டு வந்த சர்வாவை அந்தரி ரசித்து வெட்கப்படுவது அழகென்றால் அவளை ஈர உடையில் கண்ட சர்வா மொத்த அழகும் குத்தகைக்கு எடுத்து அழகு ரதியாய் நிற்கும் தன்னவளை கண்டும் அந்த நிலையிலும் அவளை புரிந்து தன்னிடம் வர காத்திருக்கும் கண்ணியம் அழகோ அழகு..

எப்போதும் அசம்பாவிதங்களையே தன் குடும்பத்தில் கண்ட அந்தரிக்கு எதிர்மறை எண்ணம் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை... ஆனாலும் இந்த காதல் கொண்ட மனம் இருக்கே சில மணி துளிகளிலேயே காணாது எதிர்மறை எண்ணங்கள் தோன்றி தவிக்கிறது? சர்வா அவளின் இவ்வெண்ணத்தை மாற்றுவானா? எங்கு சென்றான் சர்வா அவளிடம் சொல்லாமல்?

சிவா ஏதாவது இருவருக்கிடையில் பெரிய பள்ளமா? அச்சோ! எங்கே போனான் சர்வா என்று எங்களையும் தவிக்க வைக்கிறீர்களே இது நியாயமா?

அருமையான பதிவு சிவா..
மிக மிக நன்றி சாந்தி. எப்போதும் போல ரசனையான உங்கள் பதிவு கண்டு ரசித்து மகிழ்ந்தேன். இன்று அவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கையின் ஆரம்பம் பதிவிடுவேன். அதன் பிறகு இவர்களின் வாழ்க்கையில் எல்லாம் நினைவாகவே இருக்கும்:love::love::love::love:
 
ilakkiyamani

Bronze Winner
shappa... intha niru ponnukku puriya vakkirathukkulla sarvavukku uyire poi uyire varukirathu ..😢🙄😢 nettru evlo vishayam nadantha piragum,ivanga pirinchu porangalaam ...😃😃😍😍lovely epi siva mam,ennum oru epi than ullatha...! eagerly waiting mam
 
Thank you so much ma. :love::love::love::love:
 
Banumathi Balachandran

Well-known member
நிரந்தரி இனி சர்வாவை விட்டு எங்கும் செல்ல மாட்டாள். சர்வா தான் பாவம் அவளுக்கு புரிய வைப்பதற்குள் ஒரு வழியாகி விட்டான்.

இன்னும் ஒரு பதிவில் சர்வா நிரந்தரியை சந்திக்க முடியாதா🥺
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? சர்வாவை காணாமல் அந்தரி பயந்து நடுங்கியதும், இருவரும் ஒன்று சேர்தலும் இருந்தாலும் சர்வாவிற்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என அவள் அவனை பிரிய நினைப்பதும் அதை கண்டு கொண்ட அவன் அவளுக்கு அவள் அதிர்ஷ்டமிக்கவள் என புரிய வைத்த பதிவு...

அசம்பாவிதங்களையே தன் வாழ்வில் கண்ட அந்தரிக்கு 10 நிமிடத்தில் வந்து விடு என்று சொல்லி சென்ற சர்வா இரவு 8 மணி ஆகியும் வரவில்லை எனில் யாருக்கு தான் பயமும் நடுக்கமும் வராது... அதுவும் அந்தரிக்கு ஏற்கெனவே என்ன நடந்து விடுமோ என்று இருப்பவளுக்கு... அவள் தவிப்பை தாங்கள் விவரித்த விதம் அருமை சிவா...

அவள் மூச்சு அடங்கும் நேரத்தில் சர்வாவின் குரலை கேட்டதும் அவனை கண்டதும் அந்தரிக்கு தன்னிலை பெற்று அவனிடம் தஞ்சம் புகுந்து விட்டாள்... அங்கே ஒரு அழகிய தாம்பத்தியம் நிகழ, சிவா அதை தாங்கள் விவரித்த விதம் இருக்கே இப்படி கூட கூடல்களை வர்ணித்து எழுத முடியுமா என பிரம்மிக்க செய்து விட்டீர்கள்...

இருந்தாலும் அந்தரியின் தான் துரதுஷ்டமானவள் என்ற பயத்தில் அவனை பிரிய நினைத்து தான் சொல்வதை கடிதம் மூலம்... அதை படித்த விட்ட சர்வா கோபத்தில் அவன் வந்ததிலிருந்து அவளை நினைத்தது, குண்டு வீச்சில் தப்பித்தது, மண முடித்தது இன்றும் தப்பித்தது ஒவ்வொரு நிகழ்வையும் நேர் மறை எண்ணங்களாய் சொல்லியவன் ஆண்களுக்கும் கற்பு உண்டு என்பதை அற்புதமாக புரிய வைத்தான்..

அப்பப்பா! உங்கள் எழுத்து வடிவை கண்டு பிரம்மிக்கிறேன்... அபாரம் சிவா., வாழ்த்துக்கள்..
 
sivanayani

விஜயமலர்
நிரந்தரி இனி சர்வாவை விட்டு எங்கும் செல்ல மாட்டாள். சர்வா தான் பாவம் அவளுக்கு புரிய வைப்பதற்குள் ஒரு வழியாகி விட்டான்.

இன்னும் ஒரு பதிவில் சர்வா நிரந்தரியை சந்திக்க முடியாதா🥺
சொன்னா த்ரிள் போயிருமில்ல:love::love::love:
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? சர்வாவை காணாமல் அந்தரி பயந்து நடுங்கியதும், இருவரும் ஒன்று சேர்தலும் இருந்தாலும் சர்வாவிற்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என அவள் அவனை பிரிய நினைப்பதும் அதை கண்டு கொண்ட அவன் அவளுக்கு அவள் அதிர்ஷ்டமிக்கவள் என புரிய வைத்த பதிவு...

அசம்பாவிதங்களையே தன் வாழ்வில் கண்ட அந்தரிக்கு 10 நிமிடத்தில் வந்து விடு என்று சொல்லி சென்ற சர்வா இரவு 8 மணி ஆகியும் வரவில்லை எனில் யாருக்கு தான் பயமும் நடுக்கமும் வராது... அதுவும் அந்தரிக்கு ஏற்கெனவே என்ன நடந்து விடுமோ என்று இருப்பவளுக்கு... அவள் தவிப்பை தாங்கள் விவரித்த விதம் அருமை சிவா...

அவள் மூச்சு அடங்கும் நேரத்தில் சர்வாவின் குரலை கேட்டதும் அவனை கண்டதும் அந்தரிக்கு தன்னிலை பெற்று அவனிடம் தஞ்சம் புகுந்து விட்டாள்... அங்கே ஒரு அழகிய தாம்பத்தியம் நிகழ, சிவா அதை தாங்கள் விவரித்த விதம் இருக்கே இப்படி கூட கூடல்களை வர்ணித்து எழுத முடியுமா என பிரம்மிக்க செய்து விட்டீர்கள்...

இருந்தாலும் அந்தரியின் தான் துரதுஷ்டமானவள் என்ற பயத்தில் அவனை பிரிய நினைத்து தான் சொல்வதை கடிதம் மூலம்... அதை படித்த விட்ட சர்வா கோபத்தில் அவன் வந்ததிலிருந்து அவளை நினைத்தது, குண்டு வீச்சில் தப்பித்தது, மண முடித்தது இன்றும் தப்பித்தது ஒவ்வொரு நிகழ்வையும் நேர் மறை எண்ணங்களாய் சொல்லியவன் ஆண்களுக்கும் கற்பு உண்டு என்பதை அற்புதமாக புரிய வைத்தான்..

அப்பப்பா! உங்கள் எழுத்து வடிவை கண்டு பிரம்மிக்கிறேன்... அபாரம் சிவா., வாழ்த்துக்கள்..
நன்றி நன்றி நன்றி... இப்படி ஒருவர் ரசித்து வாசிக்கும்போது, என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது சாந்தி. நன்றி சொல்ல வார்த்தைகள் இன்றித் தவிக்கிறேன். இதை விட வேறு சொல்லத் தெரியவில்லை சாந்தி:love::love::love:
 
அருமை
சர்வா நிரந்தரியின்
மனசு புரிஞ்சுகிட்டு அவளுக்கு
தன்னை புரியவச்சு
அவள் மனச கவர்ந்துட்டான்
 
Top