All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

யார் அவள்? - கதை திரி

Status
Not open for further replies.

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5 - கொலை நான்கு பிணம் மூன்று



தன் வேகத்தை குறைத்து பூனை போல பதுங்கி சென்று உள்ளே ஜன்னலிடுக்கினூடாக பார்த்த விக்ரம், ராகுலின் பிணம் ரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சி கண்டு நடுநடுங்கிப்போனான். பின்னால் நின்றுகொண்டிருந்த ராதிகா விக்ரமின் நிலையைக்கண்டு இனி தன்னுயிரை காப்பாற்ற விக்ரமை நம்பி பிரயோஜனமில்லை என்பதை விளங்கிக்கொண்டாள்.

அந்த நேரத்தில் மழைத்தூறல் சத்தத்தையும் கிழித்துக்கொண்டு கேட்டது மனீஷாவின் கூக்குரல். விக்ரமும் ராதிகாவும் கெஸ்ட் ஹவுசில் தங்களது அறை ஜன்னலையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். சில நொடிகளில் ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே வந்து விழுந்தாள் மனீஷா. விழுந்ததில் நிச்சயம் உயிர் பிரிந்திருக்கும். இதைப்பார்த்துக்கொண்டிருந்த விக்ரமிற்கும் ராதிகாவிற்கும் கூட தமது உயிரும் இன்னும் சில நிமிடங்களில் பிரிந்துவிடும் என்றே எண்ணத்தோன்றியது. விக்ரமின் கையிலிருந்த துப்பாக்கி கையிலிருந்து விலகி கீழே விழுந்து விட்டது.

அதோ மேலே இன்னொரு உருவம்....... யாருமில்லை விஷாலிதான்...... எல்லா குழப்பமும் தீர்ந்துவிட்டது. சட்டென சுய நிலையுணர்ந்த விக்ரம் கீழே விழுந்து கிடந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேலே குறி வைக்கிறான். மழை தூறவில்லை, கொட்டுகிறது. அந்தக்கொட்டும் மழையில் அவ்வளவு தூரத்திற்கு குறி பார்த்து சுடுவது என்பது இயலாத காரியம், வெடிச்சத்தம் கேட்டு விஷாலி உஷாராகினால் தமக்குத்தான் ஆபத்து. ஆனால் அங்கே விஷாலின் பின் இன்னொரு உருவம். சட்டென மறைந்தும் விட்டது. அதே சமயம் விக்ரமும் ராதிகாவும் ஸ்விம்மிங் பூல் அருகே ஒளிந்து கொண்டு மேலே நோட்டம் விட்டதை மேலிருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ராதிகாவை அழைத்துக்கொண்டு ராகுல் இருந்த அறைக்கு பின்னால் சென்ற விக்ரம் "ராதிகா நிலமை கைய மீறி போய்ட்டு, நீ சீக்கிரமா ஆத்தங்கரைக்கு போ, அங்கதான் சிக்னல் கிடைக்கும். போலீசுக்கு கால் பண்ணு. நடந்த விசயத்த சொல்லு. சீக்கிரம்!.... நான் இங்க ஒளிஞ்சிருந்து அது யாருன்னு பார்க்கிறான். சான்ஸ் கிடைச்சா ரெண்டு பேரையும் போட்ருவன்."

"போலீசுக்கு சொல்லவா? அதனால வேற ப்ரோப்ளம் வராதா விக்கி?"

"என்ன வந்தாலும் சமாளிச்சுக்கலாம், எல்லாத்துக்கும் நம்ம உயிரோட இருக்கணும். சீக்கிரம் போ....." என்று கூறிவிட்டு விக்ரமும் கெஸ்ட் ஹவுஸை நோக்கி நகர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் ஆற்றங்கரையை அண்மித்த ராதிகா தாம் வந்திருந்த படகில் பதுங்கியிருந்தபடி போலீசுக்கு அழைப்பை மேற்கொள்ள கைபேசியை எடுக்கும் போது ஒரு துப்பாக்கி வெடிச்சத்தமும் அதைத்தொடர்ந்து சில வினாடிகள் கழித்து அலறல் சத்தமும் கேட்டது. அது நிச்சயமாக உயிர் பிரியும் வலியில் ஏற்பட்ட அலறல்தான் என்பது ராதிகாவுக்கு விளங்கிற்று. அங்கு துப்பாக்கி வைத்திருந்தது விக்ரம் மட்டும் தான். அதனால் விக்ரம்தான் சுட்டிருப்பான். விக்ரம் யாரை சுட்டானோ அந்த நபர் இறந்திருந்தால் வெடிச்சத்தத்துடன் அலறல் சத்தமும் கேட்டிருக்கும். ஆனால் வெடிச்சத்தம் கேட்டு சில வினாடிகள் கழித்து அலறல் சத்தம் கேட்ட படியால் விக்ரமின் குறி தப்பிவிட்டது. ஆகவே விக்ரமின் அலறல் சத்தம் தான் அது என முடிவெடுத்தபடி கைபேசியில் நூறை டயல் செய்தாள் ராதிகா.

“சார்! சார்!............ ஹெல்ப் பண்ணுங்க!....................என்ன யாரோ கொலை பண்ண துரத்துறாங்க. ப்ளீஸ் காப்பாத்துங்க சார்!"



ஹாஸ்ப்பிட்டலில் கட்டிலுடன் விலங்கிடப்பட்ட ராதிகா சோலையாற்றில் நடந்தவற்றை இன்ஸ்பெக்டர் கார்த்திக்கிடம் ஒப்புவித்த போது மீண்டும் சோலையாற்று கெஸ்ட் ஹவுசில் மாட்டிக்கொண்டதைப்போல உணர்ந்து பிரம்மை பிடித்தவள் போலாகி மீண்டும் “சார்! சார்!............ ஹெல்ப் பண்ணுங்க!....................என்ன யாரோ கொலை பண்ண துரத்துறாங்க. ப்ளீஸ் காப்பாத்துங்க சார்!" என்று கத்தி விட்டாள். எதிரே இருந்த கார்த்திக் கூட அதிச்சியிலிருந்து மீளவில்லை.

சில நிமிட அமைதியை குலைக்கும் வண்ணம் கார்த்திக்கின் செல்போன் அலற, கார்த்திக்கும் தண்ணீர் பாட்டிலை ராதிகாவிடம் கொடுத்து குடிக்கும் படி கூறிவிட்டு அறைக்கு வெளியே சென்றான்.

"தாமோதரன் சொல்லுங்க, எனி இன்போர்மேசன்?"

"யெஸ் சார், இங்க இன்னும் டெட் பாடீஸ் கிடைச்சிருக்கு." தாமோதரனின் குரலில் பதற்றம் நிறைந்திருந்தது.

ஆனால் இதை எதிர்பார்த்த கார்த்திக்கோ நிதானமாக "ஓகே, உடனே பாடி எல்லாத்தயும் மார்ச்சுவரிக்கு அனுப்பிடுங்க. எந்த இடத்தில பாடி எல்லாம் இருந்திச்சு?"

கார்த்திக்கின் நிதானம் புரியாத தாமோதரனும் "அது வந்து சார், போலீஸ் டாக் வந்துதான் கண்டுபிடிக்க முடியுமா இருந்துச்சு சார்."

"அது சரி தாமோதரன், எங்க இருந்து பாடிய ரிக்கவர் பண்ணினீங்க?"

"சார் காட்டுக்குள்ள ஒரு இருநூறு மீட்டர் தூரத்துல ஒரு பாழடைஞ்ச கிணறு ஒண்ணு இருந்திச்சு, அதுக்குள்ள தான் சார் இருந்துச்சு."

"ஓகே, மற்ற பாடில்லாம் எங்க இருந்திச்சு?"

"இல்ல சார், எல்லா டெட் பாடியும் அங்கதான் சார் இருந்துச்சு."

தாமோதரனின் பதில் கார்த்திக்கை குழப்ப "என்ன சொல்றீங்க தாமோதரன் எல்லா டெட் பாடியும் ஒரே இடத்தையா இருந்திச்சு?"

"ஆமா சார் ஒரே இடத்திலதான்."

"எத்தன டெட் பாடி ரிக்கவர் பண்ணினதா சொன்னீங்க தாமோதரன்?"

"சார் மொத்தம் மூணு டெட் பாடி. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு."

"என்ன சொல்றீங்க தாமோதரன்? மூணா? மொத்தம் நாலு டெட் பாடி இருக்கணும்?" இப்போது தாமோதரனின் பதற்றம் கார்த்திக்கிற்கு தொற்றிக்கொண்டது.

"இல்ல சார் மூணுதான் இருந்திச்சு."

"அப்படின்னா இன்னொரு டெட் பாடியும் அந்த இடத்தில தான் இருக்கணும். சேர்ச் பண்ணுங்க. அண்ட் அந்த டெட் பாடிஸ்ஸ போட்டோ எடுத்து எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் அனுப்புங்க."

"ஓகே சார்"

"அங்க ஏதாவது கத்தி கிடைச்சுதா தாமோதரன்?"

"இல்லையே சார், கத்திதான் அங்க ரூம்ல கிடைச்சுதே?"

"ஆமா கிடைச்சுதுதான், ஆனா அதனால ஒரு கொலைதான் நடந்திருக்கு. மீதி கொலைங்கள வேற ஒரு கத்தியாலதான் கொலைகாரன் பண்ணியிருக்கான். கேர்புல்லா சேர்ச் பண்ணுங்க. வீ நீட் தட் எவிடன்ஸ்."

"நான் பாத்துக்கிறேன் சார்."

"நமக்கு டைம் இல்ல தாமோதரன், இன்னும் கொஞ்ச நேரத்துல இறந்தவங்களோட பேரண்ட்ஸ் இங்க வந்துடுவாங்க. எதையாவது மிஸ் பண்ணியிருப்பீங்க. புரியுதா?"

"புரியுது சார்"

தாமோதரனுடனான அழைப்பை துண்டித்த பின் உடனடியாக கிருஷ்ணமூர்த்திக்கு கால் பண்ணிய கார்த்திக் தாமோதரன் அனுப்பும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் பண்ணி ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டுவருமாறு பணித்தான்.

சில நிமிட பதற்றங்களுக்கு பின்னர் நிதானித்த கார்த்திக்கிற்கு ஒரு பெண் எவ்வாறு மூன்று இறந்த உடல்களை இருநூறு மீட்டர் தூரம் கொண்டு சென்றிருப்பாள் என்பது மட்டும் புரியாத புதிராயிருந்தது.

'அது சரி நான் ஏன் ராதிகாவை முழுதாக நம்பிவிட்டேன். அவள் சொன்னதெல்லாம் உண்மை என்பதில் என்ன நிச்சயம்' என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கார்த்திக் அவனின் மனதில் எழுந்த கேள்விகளைக்கேட்க மீண்டும் ராதிகா இருந்த அறைக்குள் சென்றான்.

பயத்திலிருந்து சிறிது விடுபட்டிருந்த ராதிகா கார்த்திக்கை கண்டதும் ஏதோ சொல்ல முற்படுவது போல எத்தனித்தாள்.

"கார்த்திக் சார் கொஞ்சம் விலங்க ரிமூவ் பண்ணி விடுறீங்களா?"

"சாரி ராதிகா, நீங்க சொல்ற கதைல எனக்கு நம்பிக்கை இல்ல, நீங்க முழுசா உண்மைய சொல்றவரைக்கும் கை விலங்கு ரிமூவ் பண்றது கஷ்டம் " தான் ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடப்பது கார்த்திக்கிற்கு கொஞ்சமும் இஷ்டமில்லைத்தான், ஆனால் அவளிடமிருந்து சீக்கிரம் முழு உண்மையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என முனைப்பிலிருந்தான் கார்த்திக்.

"கார்த்திக் சார் நான் சொன்னது பூராவுமே உண்மையா நடந்தது தான், அதான் நானே சொல்றனே அந்த விஷாலிய நான்தான் கொலை பண்ணினேன்னு, இதுக்கப்புறம் நான் எதுக்காக உங்ககிட்ட பொய் சொல்லணும்?"

"அப்பிடி நீங்க இதுவரைக்கும் சொன்னதா எனக்கு நினைவில இல்லையே மிஸ் ராதிகா!" கார்த்திக்கிற்கு ஏதோ தான் அவளிடமிருந்து உண்மையை கறந்துவிட்டோம் என பெருமையாக இருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவளிடம் போட்டு வாங்கினான்.

"அத நான் சொல்றதுக்கு முன்னாடியே நீங்க கால் கதைக்க போய்ட்டிங்களே......"

"சரி சொல்லுங்க, நீங்க இன்னைக்கு காலைல 8 மணிக்கு..... இல்ல நேற்று காலைல 8 மணிக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூம்க்கு கால் பண்ணி உங்கள யாரோ கொலை பண்ண துரத்துறதா சொல்லியிருக்கீங்க...." கார்த்திக் நேரம் இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்ததை அப்போதுதான் அவதானித்தான்.

ராதிகாவும் ஆம் என்பது போல தலையசைத்தாள்.

கார்த்திக் தொடர்ந்து "திரும்ப எதுக்காக நீங்க மறுபடியும் அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு போனீங்க? அந்த போட்லயே ஒளிஞ்சு இருந்திருக்கலாமே. அதுதானே உங்களுக்கு சேஃப்டி...." தனது சந்தேகத்தை கேட்டு முடித்தான்.

"அது வந்து.........அது வந்து......." ராதிகா இந்தக்கேள்வியை எதிர்பாராதவள் போல சற்றே தடுமாறியதை அவதானித்த கார்த்திக் " ஏன்னா விக்ரம் சாகல, விக்ரம பார்த்திட்டு தான் நீங்க அந்த போட்ல இருந்து வெளிய போயிருக்கீங்க. விக்ரமும் விஷாலியும் தான் கொலைகாரங்க. ஆம் ஐ கரெக்ட்?" துப்பறியும் சினிமாக்களில் கிளைமாக்சில் முடிச்சுக்களை அவிழ்ப்பதுபோல கூறி முடித்தான் கார்த்திக்.

"....................."

எதுவும் புரியாதவள் போல முழித்த ராதிகாவை பார்த்து மீண்டும் தனக்குள் இருந்த துப்பறிவாளனை தட்டி விட்டான் கார்த்திக், " என்ன மிஸ், போலீசையும் குறைச்சு எடை போட்டுடீங்களா? சோலையாத்தில மூணு டெட் பாடிய ரிக்கவர் பண்ணிட்டாங்க. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. ஸோ அது மனீஷா, அர்ஜுன், ராகுல்ன்னு கண்டுபிடிக்கிறதொண்ணும் பெரிய விஷயமில்லையே. ஏன்னா அர்ஜுன் அண்ட் ராகுலோட பாடிய நீங்க பார்த்ததா சொல்லியிருக்கீங்க."

ராதிகாவும் சற்று தெளிந்தவளாய் " கார்த்திக் சார் நீங்க சொல்றதும் ஓரளவுக்கு சரிதான், ஆனா அங்க நடந்ததோ வேற." என்று கார்த்திக்கின் துப்பறியும் மூளையை கேள்விக்குறியாக்கினாள்.

"அப்பிடீன்னா, என்ன நடந்திச்சு?"



ஆகஸ்ட் 22 , நண்பகல் 12.00 மணி

மூன்று மணி நேரமாக போலீஸின் வருகைக்காக போட் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலிருந்த சிறிய புதரினுள் உடலை முழுவதுமாக மறைத்தபடி காத்திருந்தாள் ராதிகா. மரண பயம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள், ஆனால் அதை அன்று முழுமையாக அனுபவித்துக்கொண்டிருந்தாள். செல்போனின் பற்றறியும் போலீஸ் கண்ட்ரோல் ரூம்க்கு கதைக்கும் போதே தீர்ந்துவிட்டது. இனி அந்த நீலமலைக்காட்டிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் காவல்துறையின் உதவி ஒன்றே அதற்கு வழி. இவ்வளவு காலமும் தமிழ்நாடு காவல்துறையை எள்ளி நகையாடியவள் இன்று வேண்டிக்கொண்டிருக்கிறாள், இவையெல்லாம் யாரென்று தெரியாத ஒரு பெண்ணால் என்று நினைக்கும் போது பயத்துடன் வெட்கமும் கலந்து வந்தது அவளுக்கு.

'இன்னும் எவ்வளவு நேரம் இங்கே ஒளிந்திருக்க முடியும்? எப்படியும் விக்ரமை கொன்றவள் நிச்சயம் என்னை கொல்லாமல் விடப்போவதில்லை. இங்கேயே முட்டாள் மாதிரி போலீஸ் வரும்வரை காத்துக்கொண்டிருப்பதா? இல்லை விஷாலி முந்துவதற்குள் நான் முந்திக்கொள்ள வேண்டுமா?' என்று பல எண்ணங்கள் ராதிகாவிடம் சுற்றிக்கொண்டிருந்தன. ராதிகாவின் நல்ல காலத்திற்கு விட்டிருந்த மழையும் கூட மீண்டும் தூறல் போட ஆரம்பித்திருந்தது. மூன்று மணித்தியாலங்களாக வெளியுலகை காணாது இருந்த ராதிகா போலீசை நம்பி பிரயோஜனமில்லை என்று முடிவெடுத்தவளாய் தலையை சிறிது உயர்த்தி நோட்டமிட ஆரம்பித்தாள்.

அங்கு அவள் கண்ட காட்சி அவளை மீண்டும் புதருக்கடியில் ஒளிந்துவிடச்சொல்லியது. ஒரு கையில் துப்பாக்கியுடன் விஷாலி அவர்கள் வந்த போட்டினை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தாள். அவள் அங்கு தேடுவது ராதிகாவைத்தான் என்பது ராதிகாவுக்கு புரியாமலில்லை.

'கையில் துப்பாக்கி வைத்திருப்பவளிடம் காலில் கூட விழ முடியாது. இப்போது வெளியே போவது முட்டாள்த்தனம்' என்று பயத்திலும் குளிரிலும் உறைந்து போனவள் மீண்டும் புதருக்கடியில் நங்கூரமிட்டாள்.

சில நிமிடங்களில் தனது தேடுதலை வேறு திசையில் மேற்கொண்டபடி அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தாள் விஷாலி. அடிக்கடி வெளியே தலையை உயர்த்தி விஷாலியை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ராதிகாவின் கண்ணிலிருந்து மறைந்து விட்டிருந்தாள் விஷாலி.

மீண்டும் என்ன செய்யலாமென யோசனையில் ஆழ்ந்த ராதிகாவிற்கு அப்போது அவள் காதில் கேட்ட குரல் கடலில் மூழ்கிக்கொண்டிருந்தவனுக்கு கையில் அகப்பட்ட துரும்பாக தெரிந்தது.

"ராதிகா..... ராதிகா....."

அந்த மயான அமைதியில் தூறிய மழைத்தூறல் நடுவிலும் ராதிகாவை யாரோ தேடிக்கொண்டிருப்பதை அந்த சோர்ந்து போன ஆண் குரல் காட்டியது.



- தொடரும்-​
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6 - யார் துரோகி?



"ராதிகா..... ராதிகா...."

'என்னை யார் தேடுகிறார்கள், விக்ரம் உயிருடன்தான் இருக்கிறானா? கடவுள் என்னை கைவிடவில்லை' என்று நம்பிக்கை கொண்டவளாய் மெதுவாக குரல் வந்த திசையை நோக்கி தலையை உயர்த்தி அவதானித்தாள் ராதிகா.

குரல் வந்த திசையில் ராதிகா இருந்த புதருக்கு ஒரு இருபதடி தூரத்தில் உடம்பில் குருதி வழிந்தோட ஒருவன் சுற்றும் முற்றும் எதையோ தேடியபடி ராதிகா இருந்த இடத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தான்.

'அது விக்ரமா?' என கண்ணை வெளியே விட்டு அவதானித்தவளுக்கு சென்றவனின் முகம் ஒருகணம் தெரிந்ததும் அதிர்ந்து போனாள்.

'என்ன அர்ஜுன் உயிருடனா இருக்கிறானா?' சட்டென அதிச்சியடைந்தவளுக்கு அர்ஜுனின் விசுவாசம் கண் முன்னே வர "அர்ஜுன் சத்தம் போடாத" என்று குரலை தாழ்த்தி எச்சரித்தாள். ராதிகாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய அர்ஜூனுக்கும் ராதிகாவை பார்த்தது மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. மகிழ்ச்சியில் நிலமை புரியாதவனாய் "ராதிகா" என நீலமலைகாடே அதிரும்படி கத்தி குதூகலித்தான் அர்ஜுன்.

"ஹலோ ராதிகா, என்ன சொல்றீங்க? அர்ஜுன் அப்போ சாகலையா? உங்கள காப்பாத்த வந்த அர்ஜுன் எதுக்கு உங்க பேர சொல்லி கத்தணும்? புரியலையே!....." இன்ஸ்பெக்டர் கார்த்திக் குழப்பத்தில் தத்தளித்தான்.

கார்த்திக்கை நோக்கி ஏளனமாக சிரித்த ராதிகாவும் "அர்ஜுன் என்ன காப்பாத்த வந்தான்னு யாரு சொன்னா?" சலித்துக்கொண்டாள்.

"அப்பிடீன்னா?"

"அவனும் விஷாலியும் தான் அவ்வளவு கொலையும் பண்ணினதே......."

"என்ன!!!!!!????" கார்த்திக் இந்த ட்விஸ்டை எதிர் பார்த்திருக்கவில்லை.

"ஆமா கார்த்திக் சார்...."

"அப்பிடீன்னா அந்தக்கத்தில இருக்கிற இன்னொரு கை ரேகை அர்ஜுனோடதானா?"

"அந்தக்கத்திய அர்ஜுன்தான் விஷாலிகிட்ட கொடுத்தான், அததவிர அர்ஜூன்கிட்ட இன்னொரு கத்தியும் இருந்திச்சு, அத நான் பார்த்தன் சார்."

"இன்னொரு கத்தியா? எங்க அது?"

"ரத்தக்கறையோட இன்னொரு கத்திய அர்ஜுன் இடுப்பில சொருகி வச்சிருந்தான். விக்ரமோட பாடிய அவன் தூக்கிட்டு போகும் போது பார்த்தன்."

அர்ஜுனிடமிருந்த கத்தியால்தான் எல்லா கொலைகளும் இடம்பெற்றிருக்கிறதென்பது கார்த்திக்கிற்கு அப்போது புரிந்தது.

"அப்புறம் என்னாச்சு?"

"அப்புறம்........ அர்ஜுன் என்கிட்ட வந்ததும் ஏதோ ஒரு துணிய முகத்துக்கு கிட்ட கொண்டு வந்தான், பிறகு கண் முழிச்சு பார்த்தப்ப கெஸ்ட் ஹவுஸ் ரூம்ல இருந்தேன். எனக்கு முன்னாடி விக்ரம் தோள்பட்டைல குண்டடி பட்ட காயத்தோட உயிர கையில பிடிச்சிட்டிருந்தான், விஷாலி விக்ரம்கிட்ட ஏதோ கோபமா பேசிகிட்டு அப்பிடியே என் கண் முன்னாடி என்னோட விக்கிய கத்தியால குத்தி கொன்னுட்டாள்......" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ராதிகாவின் கண்களை கண்ணீர் மறைத்து விட்டிருந்தது.

ராதிகாவின் உணர்விற்கு மதிப்பளித்து காத்திருந்த கார்த்திக்கிற்கு அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதும் தெளிவாக விளங்கியிருந்தது. ஆனால் இந்த கொலைக்கான காரணத்தை ராதிகா மறைப்பது ஏன் என்று மட்டும் அவனுக்கு விளங்கவில்லை.

"அப்புறமா என்ன நடந்திச்சு?"

"விக்ரமோட பாடிய வெளில அர்ஜுன் தூக்கிட்டு போனான். அந்த டைம்ல மயக்கத்தில இருந்த போல நடிச்சிட்டிருந்த நான் விசாலிய அட்டாக் பண்ணி அவளோட கத்திய பறிச்சுட்டன், அவ என்கிட்ட இருந்து கத்திய எடுக்க ட்ரை பண்ணினா. அந்த நேரத்துல எனக்குள்ள எப்பிடி அந்தமாதிரி ஒரு வெறி வந்துதுன்னே தெரியல. கத்தியால அவளக்குத்திட்டன். அத ரியலைஸ் பண்றதுக்குள்ள அவளும் என்ன தள்ளிவிட்டுட்டாள், அங்கருந்த டேபிள் தலைல இடிச்சதுல நானும் மயங்கிட்டன். அப்புறம் இங்க ஹாஸ்ப்பிட்டல்ல தான் கண் முழிச்சன், அதுக்கப்புறம் தான் விஷாலி இறந்துட்டான்னே எனக்கு தெரியும்"

கார்த்திக்கின் ஊகம் கிளைமாக்சில் ஒத்துப்போயிருந்தது. எனவே பெரிதாக ஆச்சர்யம் எதையும் கொடுக்கவில்லை.

"அர்ஜுன் என்ன ஆனான்?"

"தெரியல சார், விக்ரமோட பாடிய தூக்கிட்டுத்தான் போனான். மே பி எஸ்கேப் ஆகியிருப்பான்"

"போட் தான் அங்கேயே நிக்குதே? ரிப்பேர் ஆகி......."

"விக்ரமுக்கும் அர்ஜூனுக்கும் அந்தக்காடு பூரா அத்துப்படி... அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசில இருந்து அங்க போறவங்க. அதனால அவன் அங்கயிருந்து எங்க போயிருப்பான்னு தெரியல"

அர்ஜுன் எங்கோ தப்பிவிட்டான் என்பது மட்டும் கார்த்திக்கிற்கு புரிந்திருந்தது.

அந்த நேரம் சிணுங்கிய செல்போனில் ஆனந்தியின் பெயரைப்பார்த்ததும் தான் அவளுக்கு முன்னிரவில் "வர கொஞ்சம் லேட்டாகும்" என அனுப்பிய குறுஞ்செய்தி நினைவிற்கு வந்தது. 'கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்னன், இவ்வளவு லேட் ஆகும்னு சொல்லலையே.... பாவம் காத்திட்டு இருந்திருப்பாள்' என்று எண்ணியவாறே காதுக்குள் போனை வைத்த படி வெளியே வந்தான் கார்த்திக்.

"ஹலோ சொல்லும்மா."

"என்னங்க இன்னும் வேலை முடியலையா?"

"ஹ்ம்ம்..... இன்னும் முடியல, நீ எனக்காக காத்திட்டு இருக்க வேணாம். தூங்கும்மா. நான் வர விடிஞ்சிடும்னு நினைக்கிறன். இனியா பாப்பா என்ன செய்றாள்?"

"அவள்தான் அப்பா எங்க? அப்பா எங்கன்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்காள். நீங்களே உங்க செல்ல மகள்கிட்ட சொல்லிடுங்க." என்றவாறே போனை இனியா குட்டியின் காதில் வைத்தாள்.

"ஹலோ செல்லம், தூங்காம என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?"

"டாடி எப்ப வருவீங்க? எனக்கு கதை சொல்ல மாட்டிங்களா?"

"டாடி கொஞ்சம் வேலையா இருக்கன்மா, நாளைக்கு நிச்சயமா டாடி வந்து கதை சொல்றன். இன்னைக்கு மம்மி சொல்ற கதைய கேட்டிட்டு தூங்கும்மா. லேட் ஆகுதில்ல."

"மம்மிக்கு கதை சொல்ல தெரியாது டாடி, நீங்க வாங்க டாடி."

"இனியா சமத்து பிள்ளை, டாடி சொன்னா கேட்டுக்கணும். இன்னைக்கு அடம்பிடிக்காம தூங்குங்க. டாடி மோர்னிங் கதை சொல்லுவன். சரியாம்மா?"

"சரி டாடி, ஐ லவ் யூ டாடி. குட் நைட்" என்ற படி போனை ஆனந்தியிடம் இனியா கொடுக்க, மறுமுனையில் கார்த்திக்கின் கண்களோ ஈரமாகி இருந்தது.

"சரிங்க நானும் தூங்கப்போறன், நீங்க சீக்கிரம் வாங்க"

"சரி ஆனந்தி, நான் கால கட் பண்ணிடுறன்"

"என்னங்க மத்தது என்னன்னா........"

"என்ன சொல்லு ஆனந்தி?"

"என்னங்க காலைல நான் பேசினதுக்கு என்ன மன்னிச்சிடுங்க."

"ஹேய் உன்ன பத்தி எனக்கு தெரியாதா? பொண்ணுல பாசம் இருந்தா யாரா இருந்தாலும் அப்பிடித்தான் கோப பட்டிருப்பாங்க."

"நான் பேசினத கேட்டு நீங்க குழப்பிக்காதீங்க, நானோ நீங்களோ மனசால யாருக்கும் எந்தக்கெடுதலும் செய்யல, இப்பிடி ஒரு கஷ்டத்த கொடுத்த ஆண்டவனுக்கு அதுக்குரிய தீர்வையும் கொடுக்கத்தெரியும்."

"ஆண்டவன் என்ன செய்றானோ தெரியல, ஆனா நான் எப்பிடியும் நம்ம பொண்ண காப்பாத்திடுவன், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீ ஒண்ணும் யோசிக்காம போய் தூங்கும்மா."

"ஹ்ம்ம்.... சரிங்க, உங்கள நம்பாம வேற யார நான் நம்புவன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் ஆனந்தி.

கார்த்திக்கிற்கு ஆனந்தியின் பேச்சு சற்று ஆறுதலாகவே இருந்தது.

கார்த்திக் போனில் கதைத்துக்கொண்டிருக்கும் போது அவ்விடம் வந்த கிருஷ்ணமூர்த்தி கார்த்திக் கதைத்து முடிக்கும் வரை அருகிலே காத்துக்கொண்டிருந்தார்.

ஆனந்தியிடம் கதைத்துவிட்டு திரும்பிய கார்த்திக் "கிருஷ்ணமூர்த்திண்ணா பிரிண்ட் எடுத்துடீங்களா?"

"ஆமா தம்பி, அதான் உங்ககிட்ட குடுத்திட்டு போலாம்னு வந்தன்."

கிருஷ்ணமூர்த்தி கொண்டு வந்த புகைப்பட பிரதிகளை பார்த்த கார்த்திக், ராதிகாவின் வாக்கு மூலத்தை கிருஷ்ணமூர்த்திக்கு கூறினான்.

"கார்த்திக் தம்பி, இந்தப்பொண்ணு சொல்றத பார்த்தா தற்காப்புக்காகத்தான் அந்தக்கொலைய செய்திருக்குது. இந்தப்பொண்ணுக்கு உதவுறதால உங்க மனசாட்சிக்கு நீங்க பயப்படத்தேவையில்ல. கொலை பழிய அந்த ஓடிப்போன அர்ஜுன் பயல் மேல போட்டு இவள காப்பாத்துங்க. நியாயமா பார்த்தா அர்ஜுன் தானே குற்றவாளி. எதுவும் யோசிக்காதீங்க. இந்தப்பொண்ணோட அப்பா பெரிய கம்பனி முதலாளின்னு கேள்விப்பட்டன், பெங்களூர்ல கோடீஸ்வரங்களாம். நீங்க தப்பு பண்றீங்கன்னு மட்டும் யோசிக்காதீங்க."

"ஹ்ம்ம்..... அந்த தப்பிச்ச பையன எப்பிடியும் கண்டுபிடிச்சிடனும். அப்போதான் எனக்கு எந்த குற்ற உணர்வும் இருக்காதுண்ணே."

"சரி தம்பி, தேர்தல் பிரச்சார பாதுகாப்புக்கு போனவங்களும் வந்துட்டானுங்க, அவனுகளையும் ஸ்பாட்டுக்கு அனுப்பி காட்டுக்குள்ள தேட சொல்றன். மற்றது இன்னொரு விஷயம், இந்தப்பசங்களோட பேரன்ட்ஸ் கோயம்புத்தூருக்கு ப்லைட்ல வாறாங்களாம். எப்பிடியும் ஏர்லி மோர்னிங் வந்திடுவாங்கன்னு நினைக்கிறன். எதையும் சொதப்பிடாதீங்க, இனியா கண்ணுதான் நமக்கு முக்கியம். இந்தக்கழிசடை பசங்கள பற்றி யோசிக்க வேணாம்"

ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் கதைப்பதையே பிழையாக எண்ணும் பழமைவாதியான கிருஷ்ணமூர்த்தி ராதிகா மற்றும் அவளது நண்பர்களை கழிசடை என்று கூறியது கார்த்திக் எதிர் பார்த்ததுதான். அவன் எதிர்பார்க்காதது இன்னும் சிறிது நேரத்தில் ராதிகாவின் பெற்றோர் அங்கே வந்து விடுவார்கள் என்பது தான்.

கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிவிட்டு ராதிகாவினதும் மற்றைய நண்பர்களின் பெற்றோர் வந்ததும் அவர்களை கூட்டிவருமாறு சொல்லி அனுப்பிவிட்டான் கார்த்திக். பின்னர் வேக வேகமாக ராதிகா இருந்த வார்டுக்கு சென்றான் கார்த்திக்.

ஏன்? இன்னும் ராதிகா தன்னிடம் மறைத்து வைத்துள்ள அந்த ஒரு விடயத்தை கேட்பதற்குத்தான்!

"ராதிகா இன்னும் போலீஸ முட்டாளாக்க வேணாம், உங்களுக்கு தெரிஞ்ச உண்மைய மறைக்காம சொல்லிடுங்க. நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு கணமும் உங்களுக்குத்தான் நஷ்டம்" திடுதிடுப்பென உள்ளே நுழைந்த கார்த்திக் இவ்வாறு கூறியதும் ராதிகா எதுவும் புரியாமல் விழித்தாள், புரியாதது போல் நடித்தாள்.

"என்ன சொல்றீங்க கார்த்திக் சார், நீலமலைக்காட்டில அன்னைக்கு நடந்த சம்பவம் முழுதையும் நான் சொல்லிட்டன். வேற என்ன சொல்லணும். இனியும் சொல்றன்னா புதுசா கிரியேட் பண்ணித்தான் சொல்லணும்."

"மிஸ் நான் உங்ககிட்ட புதுக்கதை கேட்கல, பழைய கதை கேட்கிறன்."

"பழைய கதையா?" என்று எதுவும் விளங்காதது போல ராதிகா கேட்டாள்.

"மிஸ் ராதிகா, விஷாலியும் அர்ஜுனும் உங்க பிரெண்ட்ஸ கொலை பண்ணியிருக்காங்க, உங்களையும் கொலை பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க. அப்பிடீன்னா அதோட மோட்டிவ் என்ன? அவங்க காசுக்காகவோ பணத்துக்காகவோ கொலை பண்ணிட்டாங்கன்னு பொய் சொல்லாதீங்க. அத நம்புற அளவு முட்டாள் நான் இல்ல. உங்களோட கதைய கேட்கும் போதே இது ஒரு பழிவாங்கல்னு தெளிவா தெரியுது. அதே போல விஷாலி யாருன்னே தெரியாதுன்னும் சொல்லாதீங்க. உங்களுக்கு அவள் யாருன்னு தெரியும். அடலீஸ்ட் இப்பவாச்சும் யாருன்னு கெஸ் பண்ணியிருப்பீங்க. ஸோ டைம் வேஸ்ட் பண்ணாம எனக்கு தேவையான இன்போர்மேசன குடுத்தீங்கன்னா என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். இல்லன்னா வெரி சாரி, நீங்க செய்த தப்புக்கு தண்டனை அனுபவிச்சே ஆகணும். இஸ் இட் கிளியர்?"

கார்த்திக் மூச்சு விடாமல் தனது அனைத்து சந்தேகங்களையும் கேட்டதில் ராதிகாவிற்கு மூச்சு வாங்கியது. இவ்வளவு நேரமும் வெளிவராத பயம் எனும் உணர்வு இப்போது அவள் முகத்தில் வெளிப்பட்டது.

சில நிமிட அமைதியை பொறுத்துக்கொள்ள முடியாத கார்த்திக் சட்டெனத்திரும்பி "சாரி மிஸ் ராதிகா, என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது. உண்மை என்னான்னு முழுசா தெரியாம இதில இறங்கிறது எனக்குத்தான் ரிஸ்க்." என்று கூறிய படி வெளியே செல்ல முற்பட்டான்..... இல்லை இல்லை வெளியே செல்ல போவது போல பாசாங்கு செய்தான்.

"சார் நான் எல்லா உண்மையையும் சொல்லிடுறன்......" கார்த்திக் எதிர்பார்த்த அந்தப்பதில் கிடைத்தது.

ராதிகாவை முறைத்துப்பார்த்த கார்த்திக் "எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க மிஸ், நேரம் ரொம்ப குறைவா இருக்குது" பொறுமையிழந்தவனாக கத்தினான்.

"விஷாலிய இதுக்கு முன்னாடி நான் பார்த்தது கூட இல்ல, ஆனா அவள் எங்க எல்லாரையும் கொலை பண்றதுக்காக வந்திருக்காள்னதுமே அவள் மாணிக்கத்தோட பொண்ணாத்தான் இருப்பாள்னு புரிஞ்சுக்கிட்டேன்"

"யாரு மாணிக்கம்?"

"நீலமலைக்காட்டில இருக்கிற விக்ரமோட கெஸ்ட் ஹவுஸ்ல இருந்த வேலைக்காரர்."

"யார் அவர்? அவர் இப்போ எங்க?" என்று புருவத்தை உயர்த்தி நீலமலைக்காட்டில் நடந்த ரகசியத்தை கேட்க தயாரானான் கார்த்திக்.



- தொடரும்-​
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7 - பெண்ணாசை



"யார் அவர்? அவர் இப்போ எங்க?" என்று புருவத்தை உயர்த்தி நீலமலைக்காட்டில் நடந்த ரகசியத்தை கேட்க தயாரானான் கார்த்திக்.

"மாணிக்கம் ரொம்பகாலமா விக்ரமோட வீட்டில வேலை செய்து வந்தவர், இன் பாஃக்ட் மாணிக்கத்துக்கு சின்ன வயசா இருக்கும் போதே அங்க வேலைக்கு சேர்ந்துட்டார். முழுப்பெயர் மாணிக்கராஜா. அவருக்கும் விக்ரமோட அப்பா சண்முகவடிவேலுக்கும் ஒரே வயசுதான். சண்முகவடிவேல் கூடவே வளர்ந்தபடியா அவருக்கு மாணிக்கத்த ரொம்ப பிடிக்கும். விசுவாசத்துக்கு இன்னொரு பெயர் மாணிக்கம்னு அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பார்."

"ஓகே மிஸ், அதெல்லாம் சரி, இந்த கொலைகளுக்கும் மாணிக்கத்துக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லுங்க?" கார்த்திக் கதை கேட்க பொறுமையில்லாதவனாக இருந்தது ராதிகாவிற்கும் புரிந்தது.

"அதத்தான் சொல்ல வரன் சார், விக்ரமோட அப்பாட இந்த சிநேகிதம் விக்ரமோட அம்மா மஞ்சுளாதேவிக்கோ விக்ரமுக்கோ கொஞ்சம் கூட பிடிக்கல, அதாவது ஒரு வேலைக்காரன வீட்டில ஒருத்தனா பார்க்கிறது பிடிக்கல. இத தெரிஞ்சுக்கிட்ட விக்ரமோட அப்பா மாணிக்கத்த தான் புதுசா வாங்கின நீலமலைக்காடு பங்களாவுக்கு அனுப்பி அங்கேயே இருந்து அந்த பங்களாவ பார்த்துக்கொள்ளும்படி சொல்லியிருந்தார்"

"அப்புறம்?......."

ராதிகாவும் கார்த்திக்கின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தாள்.

"கார்த்திக் சார் நான் இப்ப இந்த ரகசியத்தை உங்ககிட்ட சொன்னா நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு எப்பிடி நம்புறது? எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு உங்க போலீஸ் புத்திய காட்டீட்டிங்கன்னா?"

"மிஸ் உங்களுக்கு வேற ஆப்சன் இல்ல, என்கிட்ட சொல்லாட்டி கோட்ல வக்கீல் முன்னாடி சொல்ல வேண்டி வரும். பரவால்லயா?"

"அதுக்கில்ல சார், நான் சொல்லப்போற விஷயம் செத்துப்போன என்னோட பிரெண்ட்ஸுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும், எங்க பேரண்ட்ஸ் யாருக்கும் தெரியாது. அதான்......." என்றபடி இழுத்தாள்.

தனக்கு அந்த ரகசியம் தெரிந்தால் மாத்திரமே ராதிகாவின் அப்பாவிடமிருந்து கிருஷ்ணமூர்த்தி சொன்னபடி ஏதாவது கறக்கலாம் என்ற விடயத்தில் தெளிவு பெற்றிருந்தான் கார்த்திக். எனவே தனக்கு கிடைக்கப்போகும் துருப்புசீட்டை அடைய சில பொய்களை சொல்லத்தயங்கவில்லை கார்த்திக்.

"நீ என்ன முழுசா நம்பலாம்மா, இந்தக்கொலைகள அர்ஜுன்தான் செய்தான்னு நிரூபிக்கிறது ஒண்ணும் எனக்கு பெரிய விஷயமில்ல. ஆனா அதெல்லாம் உன்னோட கைலதான் இருக்கு. நீ செய்த குற்றத்துக்கும் ஒரு விலை இருக்கு."

"நான் உங்கள நம்புறேன் சார், ஆனா நீங்கதான் நான் சொல்றத நம்பாம இன்னமும் என்னோட கைல விலங்கு மாட்டியிருக்கீங்க. நான் வாஷ் ரூமுக்கு போகணும். அடலீஸ்ட் அதுக்காச்சும் விலங்க கழட்டி விடலாமே."

தற்போது ராதிகா தன்னை முழுவதுமாக நம்புவதே தனக்கு அவசியம் என கண நேரத்தில் முடிவெடுத்த கார்த்திக் ராதிகாவின் கை விலங்கை திறந்து விட்டான்.

கை விலங்கிலிருந்து விடுபட்டதும் ராதிகா உடனடியாக வாஷ் ரூமுக்குள் சென்றாள்.

'ச்சா.... ஒரு பொண்ணுகிட்ட எப்பிடி விசாரணை பண்ணனும்னு கூட நமக்கு தெரியலையே, அவளும் பொம்பள போலீஸ்னா கேட்டிருப்பா, ஒரு ஆம்பளைகிட்ட எப்படி கேட்பா? நம்மதான் புரிஞ்சு நடந்திருக்கணும்' என்று தனது அசண்டையீனத்தை நினைத்து நொந்து கொண்டான் கார்த்திக்.

சிறிது நேரத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது.

"தேங்க்ஸ் கார்த்திக் சார், உங்களோட லைஃபே இந்த கேஸ் மூலமா மாறப்போகுது. நான் எல்லாத்தயும் சொல்லிடுறன்".

"சொல்லுங்க"

"இது மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சு, அப்போ நானும் விக்ரமும் பர்ஸ்ட் இயர் காலேஜ்ல படிச்சிட்டிருந்தோம். அப்ப வந்த பர்ஸ்ட் செமெஸ்டர் ஹாலிடேய்ஸ்ல முதல் தடவையா நாங்க நீலமலைக்காட்டில இருக்கிற விக்ரமோட பங்களாவுக்கு போனோம்."

"நாங்கன்னா யாரு யாரு?"

"நான், விக்ரம், அர்ஜுன்,ராகுல்,மனீஷா, மாதேஷ் அண்ட் ரீமா."

"யாரு மாதேஷ் & ரீமா?" கார்த்திக் ஆர்வமிகுதியில் புருவத்தை உயர்த்தினான்.

"மாதேஷ் அண்ட் ரீமா லவ்வர்ஸ். எங்களோட சீனியர்ஸ். மாதேஷ் தமிழ்நாடு ஹோம் மினிஸ்டர் ரங்கராஜோட பையன். ரீமா எம் எல் ஏ பழனியப்பனோட பொண்ணு. விக்ரமுக்கு மாதேஷ முன்னாடியே பழக்கம். அதனாடி அவங்களையும் கூட்டிகிட்டு போனோம்."

"அந்த டைம் மாணிக்கமும் அங்கதான் இருந்தாரா?"

"ஆமா, அவர் அங்கதான் இருந்தார்."

"சரி, அப்புறம்......."

"வழமையைப்போல நல்லா என்ஜாய் பண்ணினோம்......"

"வெயிட் வெயிட் வெயிட் ..... நீங்க அங்க என்ஜாய் பண்ணினதெல்லாம் நான் கேட்கல, அதுக்கு எனக்கு நேரமும் இல்ல. என்ன ப்ரோப்ளம் நடந்துச்சு. அத மட்டும் சொல்லுங்க..."

"சொல்றன் சார்."



மூன்று வருடங்களுக்கு முன்னர், நீலமலைக்காடு

"பிரெண்ட்ஸ் என்னையும் ரீமாவையும் இப்பிடி ஒரு இடத்துக்கு கூட்டி வந்து இவ்வளவு சந்தோசப்படுத்தின விக்ரமுக்கு தாங்க்ஸ் சொல்லி அவன வெளியாளாக்க நான் விரும்பல. அவன் என்னோட கூடப்பிறக்காத தம்பி. இ லவ் யூடா விக்ரம்." போதையில் எதையோ உளறிக்கொண்டிருந்தான் மாதேஷ்.

விக்ரமும் மாதேஷின் தோளுடன் தோள் கொடுக்க மீண்டும் ஆட்டம் பாட்டம் தொடங்கியது.

அனைத்து குடிமகன்களுக்கு குடிமகள்களுக்கும் ஓடி ஓடி பணிவிடை செய்து கொண்டிருந்தார் வேலைக்காரர் மாணிக்கம்.

சில மணி நேரம் தொடர்ந்த குடியும் கும்மாளத்தையும் தற்காலிகமாக இடை நிறுத்திய மாதேஷ் ரீமாவை தன்னருகே அழைத்து அணைத்துக்கொண்டான்.

"ரீமாவுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு. அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமுன்னு அடுத்த வாரம் வர்ற அவளோட பேர்த் டேக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருந்தன். ஆனா அத இன்னைக்கு குடுக்கிறதா முடிவு பண்ணிட்டன். பிகாஸ் டுடே இஸ் த ஹப்பியஸ்ட் டே இன் மை லைஃ ப்." என்று கூறிய படி உள்ளே தனது அறையினுள் சென்று ஒரு சிறிய பாக்ஸினை கொண்டு வந்தான் மாதேஷ்.

அனைவரின் கண்களும் அகலமாக விரிய உள்ளேயிருந்து ஒரு வைர நெக்லஸை எடுத்த மாதேஷ் அதனை ரீமாவின் கழுத்தினில் போட்டு விட்டான்.

இரத்தினக்கற்கள் பதித்த அந்த நெக்லஸினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா.

ஆனந்தக்கண்ணீர் சொரிந்து கொண்டிருந்த ரீமாவினை ஆரத்தழுவிக்கொண்டிருந்தான் மாதேஷ். இருவரும் "ஐ லவ் யூ", "உனக்காக எது வேணுமுன்னாலும் செய்வன்டி செல்லம்", "நீயில்லாம நானில்லை" போன்ற சினிமா வசனங்களை தம்மை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இருவரின் அந்நியோன்னியத்தையும் குலைக்கும் விதமாக அர்ஜுன் முந்திரிக்கொட்டை மாதிரி அந்த கேள்வியைக்கேட்டான்.

"மாதேஸ்ண்ணா இந்த நெக்லஸ் ஒரு அஞ்சு லட்சம் வருமா?"

காதல் மயக்கத்தில் இருந்த மாதேஷ் அர்ஜுன் குரல் கேட்டு திரும்பி "என்ன அஞ்சு லட்சமா? என்னோட டார்லிங்க்கு வெறும் அஞ்சு லட்சமா? இதில இருக்கிற ஒரு ரத்தினக்கல்லோட பெறுமதியை அஞ்சு லட்சத்தை தாண்டிடும்டா முட்டாள்" என்று அர்ஜுன் மீது வெறுப்பை உமிழ்ந்தான் மாதேஷ்.

"அப்பிடீன்னா இது எவ்வளவு வரும்?" ஆர்வ மிகுதியில் விக்ரம் வாயை தொறந்தான்.

"இதோட விலை அறுபது லட்சம்" விலையை சொன்னவுடன் நண்பர்கள் மத்தியில் ஒரு நிசப்தம்........

சில வினாடிகள் நீடித்த அமைதியை அர்ஜுனின் குரல் மீண்டும் குலைத்தது.

"ரீமா அக்கா நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க." என்று கூற ரீமாவும் பதிலுக்கு 'ஆம்' என்பது போல தலையசைத்தாள்.

இங்கு நடப்பதையெல்லாம் ஒரு மூலையில் நின்றபடியே நோட்டமிட்டுக்கொண்டிருந்தார் மாணிக்கம்.

நண்பர்கள் எல்லோரினதும் வஞ்சப்புகழ்ச்சியும் வாழ்த்துக்களும் ஓய அன்றைய தின கேளிக்கை கொண்டாட்டங்களும் முடிவுக்கு வந்தன. அடுத்த நாள் ஊருக்கு புறப்பட வேண்டியிருந்ததால் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கும்மாளத்தை முடித்துக்கொண்டனர் விக்ரமும் சகாக்களும்.

அனைவரும் தம் படுக்கைக்கு சென்ற பின்னரும் அவ்விடத்திலேயே அசையாமல் இருந்தாள் ராதிகா. விக்ரமுக்கும் ராதிகாவின் எண்ணம் என்னவாகவிருக்கும் என்று ஓரளவுக்கு விளங்கியிருந்தது.

"ராதிகா.......... என்ன யோசனை?" என்று சிரித்தபடியே கேட்டான் விக்ரம்.

முறைத்துப்பார்த்த ராதிகாவும் "விக்கி உனக்கு தெரியாதா?" என்று உறுமினாள்.

"சரிடி செல்லம், கோபிக்காத.... சீக்கிரமே உனக்கும் ஒரு நெக்லஸ் வாங்கித்தாறன். ஓகேயா?"

"எனக்கு நீ நெக்லஸ்ல்லாம் வாங்கித்தர தேவையில்லை...."

"அடடா, நான்தான் வீணா வாய குடுத்திட்டானா?" என்றபடி சிரிக்கத்தொடங்கினான் விக்ரம்.

"சிரிக்காத விக்கி, நான் சீரியசா கதைக்கிறன்" என்று மீண்டும் எரிந்து விழுந்தாள் ராதிகா.

"நெக்லஸும் வேணாம்கிற, சிரிக்கவும் வேணாம்னா, அப்ப என்னதான் வேணும்?"

"நெக்லஸ் வாங்கித்தர வேணாம்னு தான் சொன்னன், நெக்லஸே வேணாம்னு சொல்லல விக்கி."

"புரியல."

"எனக்கு அந்த நெக்லஸ் தான் வேணும்!!!!!"

"ராதிகா உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா? அத எப்பிடிடி ரீமா குடுப்பாள்? இல்ல, அத வாங்கத்தான் என்கிட்ட பணமிருக்கா? அறுபது லட்சமாம்..... " என்று வாயைப்பிளந்தான் விக்ரம்.

"உன்ன யாரு வாங்க சொன்னா, நீ எடுத்திடு.... சிம்பிள்...."

"களவெடுக்க சொல்றியா?"

"ஹேய் நீ ஒண்ணும் உத்தமன் மாதிரி என்கிட்ட நடிக்காத. நீயும் ராகுலும் அர்ஜுனும் சேர்ந்து அங்கிள் கிட்ட இருந்து பணம் எடுத்தது, ராகுலோட பழைய கேர்ள் பிரெண்ட் அனிதாவோட செயின எடுத்ததெல்லாம் தெரியாதுன்னு நினைச்சியா?"

"சரி சரி, எல்லாத்துலயும் உனக்கும் பங்கு கொடுத்தத மறந்துடாத....... எல்லாம் ஓகே. முன்ன செய்ததெல்லாம் சின்ன சின்ன திருட்டு. பிடிபட்டிருந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு செய்தது.. இது ரிஸ்க் அதிகம்டி."

"விக்கி உனக்கு அந்த நெக்லஸ் மேல ஆசை இல்லைன்னு மட்டும் சொல்லிடாத. அந்த நெக்லஸ மாதேஷ் எடுத்ததும் உன்னோட ரியாக்சன் என்னன்னு நானும் பார்த்தன். அது மட்டும் எங்ககிட்ட இருந்தா எவ்வளவு கெத்துன்னு தெரியுமா?" விக்ரமின் ஆசையை தூண்டினாள் ராதிகா.

"நீ சொல்றது எனக்கு புரியுது, தனியா எப்பிடி செய்றதுன்னு.........."

"தனியா இல்ல விக்கி, அதுதான் ரிஸ்க். கூட இருந்தவங்க எல்லாருக்கும் பங்கு இருந்தாத்தான் நமக்கு சேஃப்."

ராதிகா சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட விக்ரம் நள்ளிரவில் ரகசிய கூட்டத்தை கூட்டி அனைவரையும் கூட்டுகளவாணியாக்கினான்.

திட்டத்தைக்கேட்டு பயந்த அர்ஜுன் "மாட்டிக்கிட்டா நிச்சயம் ஜெயில்தான். அதோட இந்த நெக்லஸ வெளியில போடவும் முடியாது. போட்டா மாட்டிடுவம். இங்க வச்சு காணாம போனா அது நம்ம எடுத்ததுன்னு தெளிவா தெரிஞ்சிடும். ஸோ இப்ப எடுக்க வேணாம். தேவைன்னா பிறகு பார்த்துக்கலாம்." பயத்தை வெளிக்காட்டாமல் களவை பிற்போட ஐடியா கொடுத்தான்.

"அர்ஜுன் சொல்றதிலயும் பாயிண்ட் இருக்கு. இப்ப அவசரப்பட வேணாம்னு எனக்கும் தோணுது." அர்ஜூனுடன் துணைக்கு ராகுலும் இணைந்தான்.

"இல்லடா, முன்னாடி அந்த நெக்லஸ பார்த்தப்ப எனக்கும் அது எனக்கு சொந்தமாயிருக்கணும்னு தோணிச்சு. இப்போ ராதிகா சொன்னதுக்கப்புறம் அத விட்டு போக மனமில்ல. இன்னைக்கு விட்டா இனி சான்ஸ் கிடைக்காது. இப்போ எடுத்து எங்கயாவது மறைவா வச்சிடலாம். இன்னும் ஒரு வருஷத்துல மாதேஷ் அண்ட் ரீமாவுக்கு காலேஜ் முடிஞ்சிடும். அதுக்கப்புறம் அவங்கள பார்க்கவே போறதில்ல. அப்புறம் நம்ம ஆட்சிதான்."

"நாளைக்கு என்னடா பதில் சொல்லுவ?" இது பயத்தில் பேச்சு மூச்சற்று இருந்த மனீஷாவின் குரல்.

"அதான் மாணிக்கம் இருக்காருல்ல......" என்று சொல்லி விட்டு கபடச்சிரிப்பு சிரித்தான் விக்ரம்.

"டேய் விக்கி அவர் பாவம்டா, போலீஸ்கிட்ட மாதேஷ் போய்ட்டா நம்ம மாட்டிக்குவம்" அர்ஜுனுக்கு மனம் கேட்கவில்லை.

"அடேய் அரசியல் தெரியாம இருக்கிறியேடா, இந்த அறுபது லட்சம் எங்கேயிருந்து வந்திச்சு, அவ்வளவும் அவனோட அப்பா ஊழல் செய்து வந்த பணம். அதனால நிச்சயமா போலீஸ்ல கேஸ் போட மாட்டான். என்ன சொல்ற ராதிகா?"

"எனக்கும் இந்த சான்ஸ விட விருப்பமில்ல, அதேபோல இந்த விஷயம் எங்களுக்குள்ள மாத்திரம்தான் இருக்கணும். இது சக்ஸஸ் ஆச்சுன்னா எல்லாருக்கும் ஷேர் இருக்கு. மாணிக்கம் மேல இப்ப பழிய போட்டுட்டு அப்புறமா அவருக்கும் ஏதாவது செட்டில் பண்ணிடலாம்."

"அப்பிடீன்னா உடனடியா மாணிக்கத்த தலைமறைவாக சொல்லிடனும்." என்று மனீஷாவும் தன் பங்குக்கு ஐடியா கொடுத்தாள்.

குறுக்கிட்ட விக்ரமோ "மாணிக்கம் அப்பாவுக்கு ரொம்ப விசுவாசமான ஆளு, அதோட நேர்மை, உழைப்பு அப்பிடி இப்பிடீன்னு பிதற்றுற கேஸ். ஸோ அவர்க்கு எதுவும் தெரியாத மாதிரி நடந்துக்கணும். தெரிஞ்சா எல்லா பிளானும் சொதப்பிடும்." என்று கூற,

"விக்கி சொல்றதும் சரிதான், அப்பிடீன்னா மாணிக்கத்திட்ட வேற ஏதாவது சொல்லி ஊருக்கு அனுப்பிடனும்." என்று ராதிகா கூற,

"அதுவும் நைட்டோட நைட் அனுப்பிடனும், நாளைக்கு அந்தாள் இங்க இருந்த தடம் இருக்க கூடாது. அத நான் பார்த்துக்கிறன்." என்று விக்ரமும் தீர்வொன்றை கூற, மேலும் எதுவித சிக்கல்களும் இல்லாதது போல அனைவரும் அடுத்து திருட்டொன்றுக்கும் மறுநாள் நாடகம் ஒன்றிற்கும் தயாராகினர்.



- தொடரும்-​
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8 - கூட்டுக்களவாணிகள்



"அப்புறம் என்னாச்சு?" கையில் கட்டியிருந்த மணிக்கூட்டில் நேரத்தைப்பார்த்தபடி கார்த்திக் நீலமலைக்காட்டு பங்களாவில் நடந்ததை அறிய ஆவலானான்.

எதிரிலிருந்த ராதிகாவும் அவனது ஆர்வத்துக்கு தீனி போட்டு கொண்டிருந்தாள்.

"அதுக்கப்புறம் எல்லாமே நாங்க பிளான் பண்ணினது போலவே நடந்துச்சு, மாணிக்கத்த ரெண்டு மாசம் அவரோட ஊருக்கு விக்ரம் பேசி அனுப்பிட்டான். மாதேஷ் தலை கால் புரியாத போதைல இருந்ததால அந்த நெக்லஸ எடுக்கிறதும் எங்களுக்கு கஷ்டமா இருக்கல. அடுத்த நாள் நெக்லஸ காணம்னு சொன்னதும் நாங்களும் எதுவுமே தெரியாத மாதிரி சேர்ந்து தேடினோம். அப்புறமா மாணிக்கத்தையும் காணோம்...... மாணிக்கம்தான் நெக்லஸ எடுத்திட்டு ஓடிட்டான்னு திருட்டு பழிய மாணிக்கம் மேல போட மாதேஸும் நம்பிட்டான். நாங்க எதிர் பார்த்தது போலவே அவனும் போலீசுக்கு போகல. எல்லாமே ஒரு மாசத்துக்கு பிரச்சனை இல்லாம போச்சுது. நெக்லஸையும் ரகசியமா பதுக்கி வச்சிருந்தோம். அப்புறமா ஒரு நாள் தான் திரும்ப பிரச்சனை தொடங்கிச்சு....."

"திரும்ப என்ன பிரச்சன?" கார்த்திக்கின் மனதில் தனக்கு முன்னாலிருப்பவள் ஒரு 'கொள்ளைக்காரியா?' என்பது போல் இருந்தது.

"மாதேஷ் அவங்க அப்பாவோட செல்வாக்க பயன்படுத்தி லோக்கல் ரவுடிங்ககிட்ட மாணிக்கத்தோட போட்டோவ கொடுத்து தேட சொல்லியிருந்தான். இந்த விஷயமே எங்களுக்கு தெரியல. அப்புறமா ஒரு மூணு வாரத்துக்கப்புறமாத்தான் லோக்கல் ரவுடி எல்லாருமே மாணிக்கத்த தேடிக்கிட்டிருக்கிற விஷயம் விக்ரமோட காதுக்கு எட்டிச்சு. ஊர்ல இருந்து வந்த மாணிக்கத்த அர்ஜுன் ரகசியமா ஒரு ஹோட்டல்ல தங்க வச்சிருந்தான். அப்போதான் மாணிக்கத்துக்கு விஷயமே தெரிஞ்சிருக்கு. நெக்லஸ திரும்ப கொடுத்திட சொல்லி மாணிக்கம் நச்சரிச்சின்னு இருந்தார். அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டியும் பார்த்தாரு. மாதேஷ்கிட்ட தான் எடுத்ததா சொல்லி சரணடையிறேன்னு கூட சொல்லி பார்த்தாரு. நாங்க எல்லாருமே கூட அப்போ பயந்திருந்தோம், ஸோ மாணிக்கம் சொல்ற படி சரணடைய வைக்கலாம்னு முடிவெடுத்தோம். ஏன்னா மாதேஸ்க்கு உண்மை தெரிஞ்சா நாங்க ஒருவரும் உயிரோட இருக்க முடியாது......."

"நெக்லஸ திரும்ப கொடுத்திடீங்களா? மாணிக்கத்துக்கு என்ன ஆச்சு?" நெஞ்சம் படபடக்க, மாணிக்கத்துக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பதை பதைப்பில் கேட்டான் கார்த்திக்.

"இல்ல சார், மாணிக்கத்த விக்ரம் கொன்னுட்டான்!!!!!!!!!!!!................." ரகசியத்தை போட்டுடைத்தாள் ராதிகா.

அதிர்ச்சியில் மூர்ச்சையாகிப்போன கார்த்திக்கின் கண்களும் கலங்கிவிட்டன மாணிக்கத்தின் முடிவு கேட்டு.

"ஏன் கொலை பண்ணினான்?" குரல் தழுதழுக்க சந்தேகத்தை கேட்டான் கார்த்திக்.

"ஒரு வாரமா மாணிக்கத்தை ஒவ்வொரு ஹோட்டலா ஷிஃப்ட் பண்ணிட்டே இருந்தோம். கைக்கு கிடைச்ச பொக்கிஷத்த விட்டு கொடுக்க விக்ரமுக்கு மனசே வரல. விக்ரம் எங்க எல்லாரையும் குழப்பி, ஆசையைக்காட்டி அவனோட முடிவுக்கு ஒத்துக்க வச்சிட்டான்."

"அவனோட ஆசைன்னா?"

"மாணிக்கத்த கொலை பண்ணிட்டா, மாணிக்கம் நெக்லஸ திருடிட்டு தலை மறைவாகின மாதிரியே இருக்கும். கொஞ்சம் நாள் போனா எல்லாமே ஆறிப்போயிடும். எப்பவும் பயந்துகிட்டே இருக்க தேவையில்லை, அப்பிடி இப்பிடின்னு ஏதேதோ சொல்லி பிரைன் வாஷ் பண்ணிட்டான்."

"அப்பிடீன்னா நீங்களும் கொலை பண்ண ஒத்துக்கிட்டீங்க?......................."

தலையைக்குனிந்து கொண்டிருந்தவள் "சார் நான் ஒத்துக்காம இருந்திருந்தா என்னையும் விக்ரம் கொலை பண்ணியிருப்பான். என்னோட நிலமைல இருந்து யோசிச்சு பாருங்க சார். அப்போதான் உங்களுக்கு புரியும்." என்று சொல்லியபடியே கண்ணை கசக்கினாள்.

"கொலை பண்ணீட்டு......... எப்பிடி பாடிய டிஸ்போஸ் பண்ணினீங்க?"

"அது தெரியல சார், கொலை பண்ண போறதா பிளான் போட்டது மட்டும்தான் எனக்கும் மனீஷாவுக்கும் தெரியும். பண்ணினது எல்லாமே விக்ரமும் அர்ஜுனும் ராகுலும்தான். எங்ககிட்ட எதுவுமே அப்புறம் சொல்லல, நாங்களும் கேட்கல."

"சரி அந்த நெக்லஸ் இப்ப எங்க இருக்கு?"

"அது வந்து சார்........."

"..........."

"கார்த்திக் சார் எனக்கு அப்பா கூட பேசணும், உங்க செல்போன கொஞ்சம் தருவீங்களா?"

எந்த நேரத்தில் என்ன சொல்ல வேண்டும், என்ன கேட்க வேண்டும் அதை எப்படி கேட்க வேண்டும் என ராதிகாவிற்கு நன்கு தெரிந்திருந்தது. அது கார்த்திக்கிற்கு புரியாமலில்லை. ஆனால் தற்போது ஒரு தொலைபேசி அழைப்பிற்காக அந்த விலைமதிப்பில்லா ஆபரணத்தின் இருப்பிடம் அறியாமல் விடுவது முட்டாள்த்தனம் என்பதையும் புரிந்து வைத்திருந்தான்.

"இன்னும் கொஞ்ச நேரத்தில இங்கயே நேர்ல வந்துடுவாங்க, அப்புறமா பேசிக்கலாமே?"

"இல்ல சார் எனக்கு பழசெல்லாம் கதைக்கும் போது என்னவோ மாதிரி இருக்கு, ஒரு ரெண்டு நிமிஷம் அவரோட குரல கேட்டாலே போதும். ப்ளீஸ்...."

"இப்போ பார்த்தீங்களா யாரு நம்பலன்னு, அவங்க இங்க வந்திட்டிருக்காங்கன்னு நான் சொன்னதில உங்களுக்கு நம்பிக்கை இல்ல. இட்ஸ் ஓகே. இந்தாங்க..... சீக்கிரம் பேசிட்டு கொடுங்க." என்று சொல்லிவிட்டு அவனது செல்போனை எடுத்துக்கொடுத்தான்.

செல்போனில் நம்பர்களை தட்டிய ராதிகா பேசத்தொடங்கினாள்.

"ஹலோ அப்பா, நான் ராதிகா பேசுறன்."

"........................................................................"

"ஹாஸ்ப்பிட்டல்லதான் இருக்கிறன், சீக்கிரம் வாங்கப்பா. உங்கள பார்க்கணும் போல இருக்கு"

மறுமுனையில் மீண்டும் பதில் வர கார்த்திக் ராதிகா பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"சார் அப்பா கூட பேசுறீங்களா?" என்று ராதிகா கேட்க கார்த்திக்கும் போனை வாங்கி காதில் வைத்தான்.

எதிர் முனையில் "ஹலோ இன்ஸ்பெக்டர், நான் மனோகர், ராதிகாவோட அப்பா. பொள்ளாச்சிக்கு கிட்ட வந்துட்டேன்."

"ஓகே சார், நேர்ல வாங்க நிறைய பேச வேண்டி இருக்கு."

"ஓகே இன்ஸ்பெக்டர், சீக்கிரம் வந்துடுறேன்." என்றபடி அழைப்பைத்தாண்டித்தார் மனோகர்.

"இப்ப ஓகேயா? கேஸ் பத்தி கதைக்கலாமா?"

"நிச்சயமா இன்ஸ்பெக்டர்." ராதிகாவின் முகத்தில் நிம்மதி எட்டிப்பார்த்தது.

"சொல்லுங்க அந்த நெக்லஸ் இப்ப எங்க இருக்கு?"

"நீலமலைக்காட்டிலதான் சார் இருக்கு."

"அந்த பங்களாவுல அப்பிடி எதுவும் கிடைச்சதா எங்க டீம் ஒண்ணும் சொல்லலையே!"

"பங்களாவுல இருக்குன்னு யாரு சொன்னா......"

"அப்போ!..........."

"அந்த பங்களாவுக்கு வடக்கு பக்கமா இருக்கிற காட்டுக்குள்ள ஒரு கிலோ மீட்டர் தூரமா போனா ஒரு நாவல் மரமொன்னு வரும் அதுக்கு பக்கத்திலேயே ஒரு கிணறும் இருக்கும். ரெண்டுக்கும் நடுவில மண்ணுக்குள்ள புதைச்சு வச்சிருக்கோம்."

"எவ்வளவு ஆழத்தில?"

"கிட்டத்தட்ட இரண்டடி ஆழமிருக்கும்"

‘இரண்டடி ஆழமானால் ஆயுதங்கள் வேண்டும். என்ன செய்யலாம்?’ என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தான் கார்த்திக்.

"சார் அந்த நெக்லஸ எடுத்து எனக்கு தந்தீங்கன்னா உங்களுக்கும் ஒரு ஷேர் தாறன். இது அப்பாக்கு தெரிய வேணாம். நமக்குள்ள இருக்கட்டும்." ராதிகாவிடமிருந்து வந்த இந்தச்சொற்கள் கார்த்திக்கிற்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.

"மிஸ் ராதிகா, என்ன பார்த்தா உங்களுக்கு எப்பிடி தெரியுது. ஏன் ஷேர் குடுத்து மத்தவங்கள கொன்னது பத்தாதா? நானும் சாகணுமா? ஒரு பொண்ணு தற்காப்புக்காக ஒரு கொலை பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கு ஹெல்ப் பண்றன், அதுக்குரிய விலைய நான் சொல்லுவன். நியாயமா பார்த்தா அந்த விஷாலி ஒரு அப்பாவி. தன்னோட அப்பாவ கொன்னவங்கள பழி வாங்கியிருக்கா. பணத்தக்காட்டின உடனே நாய் மாதிரி நீங்க சொல்றதெல்லாம் செய்யுற ஆள்னு என்ன நினைச்சீங்களா? ஏதோ எனக்கும் அவசர பணத்தேவை இருக்கிறதால தப்பிச்சீங்க. இல்லைன்னா கம்பிதான் எண்ணியிருக்கணும். நியாயமா அந்த நெக்லஸ் யாருக்கு பொய் சேரணுமோ அவங்களுக்கு போய் சேரும். இனி கதைக்கிறத யோசிச்சு கதைக்கணும். அண்டர்ஸ்டாண்ட்?" கார்த்திக் தனது நேர்மையை கேலியாக்கியதாக எண்ணியவன் கோபக்கனலில் கொதித்துக்கொண்டிருந்தான்.

கார்த்திக்கின் பதிலில் நிலை குலைந்து போன ராதிகா கூனிக்குறுகிப்போனாள்.

"சாரி சார்................"

........................................................

"எக்ஸ்கியூஸ் மீ தம்பி, உள்ள வரலாமா?" என்று கேட்டபடி அறை வாசலில் வந்து நின்றார் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி.

"ஹ்ம்ம், வாங்க அண்ண, டெட் பாடியெல்லாம் வந்திடிச்சா?"

"ஆமா தம்பி, எல்லாத்தையும் மார்ச்சுவரில தான் வச்சிருக்கு. ராகுல்ங்கிற பையனோட பேரன்ட்ஸ் வந்திருக்காங்க தம்பி. அதான் உங்ககிட்ட சொல்லிடலாம்னு வந்தன் தம்பி."

"ஓகே, அவங்ககிட்ட போட்டோ காமிச்சு கான்பெர்ம் பண்ணிக்கிட்டிங்களா?"

"அதுக்குத்தான் தம்பி, போட்டோஸ வாங்கிட்டு போலாம்னு வந்தன்"

கிருஷ்ணமூர்த்தி பிரிண்ட் போட்டு கொடுத்த போட்டோக்களினை தான் வைத்திருப்பது கார்த்திக்கிற்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

"ச்சா..... இத மறந்துட்டனே, சரி அவங்க எங்க இருக்காங்க?"

"கீழ டாக்டரோட ரூம்லதான் வெயிட் பண்ண சொல்லியிருக்கன் தம்பி."

"வாங்க கீழ போலாம், அவங்ககிட்ட பக்குவமா விசயத்த சொல்லணும். அதோட இன்னொரு முக்கியமான விஷயம்........" என்று சொல்லிக்கொண்டே ராதிகா இருந்த அறையை விட்டு வெளியேறினர் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கும் ஹெட் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தியும்.



- தொடரும்-​
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9 - மாஸ்டர் மைண்ட்



பொள்ளாச்சியை ஆதவன் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்புச்செய்ய ஆரம்பித்திருந்ததால் ஹாஸ்பிட்டல் ஹாரிடோரிலுள்ள மின் விளக்குகள் அணைக்கப்பட்டு சூரிய ஒளி படர்ந்திருந்தது. இரவு முழுவதும் வெறிச்சோடிப்போயிருந்த ஹாஸ்பிட்டல் அப்போது சிறிது சன நடமாட்டத்தையும் காணத்தொடங்கியிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே கார்த்திக் டாக்டரின் ரூம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் அவன் கண்கள் பார்த்துச்சென்றாலும் அவனது எண்ணங்கள் முழுவதும் ராதிகாவின் வாக்கு மூலங்களை அசைபோட்டுக்கொண்டிருந்தது.

'எவ்வளவு அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சிருக்காள். இவளுக்கு உதவலாமா?’

தன்னோட உயிரை பாதுகாக்கிறதுக்காகதானே அந்த விஷாலியை கொலை பண்ணியிருக்காள். அப்போ இவளுக்கு உதவி பண்றதொன்னும் பாவம் இல்ல.’

‘ஆனா ஒரு நெக்லஸுக்காக ஒரு நல்ல மனுசன கொலை பண்ணியிருக்காளே, இவள் அந்தக்கொலையை பண்ணலாட்டியும் இவளுக்கும் அதில பங்கிருக்குத்தானே. ஏதோ நெக்லஸ திருடினதுதான் தான் செய்த தப்புண்ணும் அந்தக்கொலைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரியும் சொல்றாளே. யாராவது புதுசா அவளை பார்த்தா இந்தப்பூனையும் பால் குடிக்குமான்னு தானே யோசிப்பாங்க. சட்டத்துக்கு முன்னாடி இவள நிறுத்தினா நிச்சயம் ஆயுள் தண்டனைதான்.’

‘இவள ஜெயில்ல போட்டு என்ன ஆகப்போகுது? போன உசிரெல்லாம் வரவா போகுது. இனியா குட்டியாவது சந்தோசமா இருக்கட்டும்.’ என்று தனது மனசாட்சியுடன் சிறு உரையாடலை மேற்கொண்டிருந்தான் கார்த்திக்.

"என்ன தம்பி ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னீங்க?" என்ற கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி கார்த்திக்கிற்கு தன் கடமையை உணர்த்தியது.

"ஆமா மறந்துட்டேன், உடனே தாமோதரனுக்கு கால் பண்ணுங்க, அங்க கெஸ்ட் ஹவுஸுக்கு வடக்கு பக்கமா ஒரு கிலோமீட்டர் தூரத்தில இருக்கிற நாவல் மரத்துக்கும் கிணத்துக்கும் இடைல இருக்கிற மண்ண தோண்டி பார்க்கச்சொல்லுங்க."

"ஏன் தம்பி உள்ள என்ன இருக்கு?"

"தெரியல, தோண்ட சொல்லுங்க ஏதாவது கிடைக்கும்."

"சொல்லிடுறேன் தம்பி."

"அண்ணே தாமோதரன் நம்பிக்கையான ஆள் தானே?"

"நிச்சயமா நம்பலாம்."

"ஓகே, அங்க எது கிடைச்சாலும் என்கிட்டே சொல்ல சொல்லுங்க, மீடியாக்கு தெரிய வேணாம்."

"அப்படியே சொல்லிடுறேன்."

பேசிக்கொண்டே இருவரும் டாக்டர் சித்ரலேகாவின் அறையினுள் நுழைந்தனர். உள்ளே வந்திருந்தவர்கள் டாக்டர் பரந்தாமனும் அவரது மனைவியும் என்று உறுதிப்படுத்திய பின்னர் அவர்களது மகன் ராகுல் கொலைசெய்யப்பட்டுவிட்டான் என்கிற உண்மையை கார்த்திக் அவர்களிடத்தில் கூறினான். மரணச்செய்தியை சற்றும் எதிர்பாராத ராகுலின் அம்மாவிற்கு ஒரு கணம் இதயத்துடிப்பே நின்றுவிட்டது. ராகுலின் அம்மாவை ராகுலின் பிணத்தைக்காட்டுவதற்காக கான்ஸ்டாபில் கிருஷ்ணமூர்த்தி மார்ச்சுவரி நோக்கி அழைத்துச்செல்ல டாக்டர் பரந்தாமனுக்கு நடந்தவற்றை விளக்கி கொண்டிருந்தான் கார்த்திக்.

பெற்றோருக்கு பிள்ளை இறந்த விடயத்தை சொல்லுவதென்பது எவ்வளவு கடினமானதென்று கார்த்திக்கிற்கு அப்போதுதான் விளங்கியது. ராகுலின் அப்பாவை ஒருவாறு சமாதானப்படுத்தி கொண்டிருக்கும்போது மற்றுமொரு தம்பதியினரும் உள்ளே வந்து தம்மை விக்ரமின் பெற்றோர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து ராதிகாவின் தாய் தந்தையரும் மனிஷாவின் தகப்பனும் ஒன்றாக வந்து சேர்ந்தனர்.

கார்த்திக்கும் ராதிகாவின் தந்தை மனோகரிடம் "சார் உங்க பொண்ணு மேல பத்திரமா இருக்கிறா, கொஞ்சம் இங்க வெயிட் பண்ணுங்க சார். இவங்களோட பேசிட்டு வந்திடுறன்" என்று கூறியதும் பதற்றம் குறைந்தவராக அங்கிருந்த சோபாவில் மனைவியுடன் சென்றமர்ந்தார்.

விக்ரமின் பெற்றோருக்கும் மனீஷாவின் தகப்பனுக்கும் அவர்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தியை சொல்லி முடிப்பதற்குள் கார்த்திக்கிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது. கார்த்திக் தான் கொலைகாரன் போலவும் கொலைகாரனை இப்போது கண் முன் கொண்டுவரா விட்டால் கார்த்திக்கை கம்பி எண்ண வைத்துவிடுவதாகவும் தங்களது கவலையை கோபமாக மாற்றிக்கொண்டிருந்தார்கள் இண்டஸ்ட்ரியலிஸ்ட் சண்முகவடிவேலும் ஜட்ஜ் நாராயணசுவாமியும். முன்பு சமாதானமாக காணப்பட்ட டாக்டர் பரந்தாமன் கூட சற்று கோபத்தையும் இயலாமையும் காட்டிக்கொண்டிருந்தார். ஒரு புறம் தாய்மாரின் அழுகுரலும் சேர்ந்துகொண்டது. ராதிகாவின் தாய் கிருஷ்ணவேணியும் தந்தை மனோகரும் கூட மற்றவர்களுடன் கவலையை பகிர்ந்து கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் கார்த்திக் இயலுமானவரை நடந்த விடயங்களை அவர்களுக்கு விளக்க முனைந்து கொண்டிருந்தார்.

நடந்து கொண்டிருந்த களேபரத்தில் கார்த்திக் கையில் வைத்திருந்த போட்டோக்களை மேசை மீது போட்டிருந்தான். கிருஷ்ணமூர்த்தியும் ஒவ்வொருவராக மார்ச்சுவரிக்கு அழைத்து சென்று பிணங்களை அடையாளம் காட்ட சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார்.



"ஐயோ........ராதிகாம்மா..............ஐயோ................................."

அழுதுகொண்டிருந்தவர்களின் அழுகுரல் சிறிது ஓய்ந்த போது அந்த விசாலமான அறையே அதிரும்படி கேட்ட குரல் கேட்டு இன்ஸ்பெக்டர் கார்த்திக் விக்கித்துப்போனான்.

"ராதிகா என்ன விட்டு போய்ட்டியேம்மா.......கடவுளே....... ஏன் இப்பிடியொரு நிலமை......." அது கிருஷ்ணவேணியின் குரல்தான். முதலில் அதிர வைத்த குரல் மனோகரினுடையதென்றும் கார்த்திக்கிற்கு விளங்கிற்று.

சற்று குழப்பத்துடன் அவர்களிருவரருகே சென்ற கார்த்திக் ஒன்றும் விளங்காதவனாய் "சார் உங்க பொண்ணு உயிரோட இருக்கிறா. மேலதான் வச்சிருக்கம். ஏன் இப்ப வீணா டென்ஷன் ஆகுறீங்க?" என்று கேட்டான்.

இதைக்கேட்ட மனோகரும் குழப்பத்துடன் "அப்பிடீன்னா இது என்ன?" என்றபடி மேசையிலிருந்து எடுத்த ஒரு போட்டோவினைக்காட்டினார்.

குழப்பத்தின் உச்சியிலிருந்து கார்த்திக் அந்த போட்டோவை கையில் வாங்கிப்பார்த்தான்.

அது.......... விஷாலியின் போட்டோதான்..........

"சார் இது விஷாலியோட போட்டோ தானே..................." சந்தேகத்துடன் புருவத்தை உயர்த்தினான் கார்த்திக்.

"யோவ்.........இதுதான்யா என்னோட பொண்ணு ராதிகா!!!!" என்று விட்டு போட்டோவினை முகத்தோடு வைத்து அழத்தொடங்கினார்.

கார்த்திக்கிற்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப்போனது………வியர்த்துக்கொட்டியது. 'என்ன இறந்து போனது ராதிகாவா? அப்படீன்னா இவ்வளவு நேரமும் நான் விசாரிச்சுக்கிட்டிருந்தது..........”

"சார் அப்பிடீன்னா இது?" தனது செல்போனில் ராதிகாவுக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த போட்டோவை காட்ட அதை பார்க்காமல் அழுதுகொண்டிருந்தார் மனோகர்.

"இன்ஸ்பெக்டர் அந்த போட்டோவ கொஞ்சம் காட்டுறீங்களா?" இண்டஸ்ட்ரியலிஸ்ட் சண்முகவடிவேலின் குரல் கேட்டு திரும்பினான் கார்த்திக்.

போனை அவர் பக்கம் திருப்பியதும் "இது எங்க வீட்டில வேலை பார்த்த மாணிக்கத்தோட பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு......." என்று குண்டை தூக்கி போட்டார்.

"ஆர் யூ சுவர்?"

"யெஸ், இந்தப்பொண்ணுக்கு லாஸ்ட் இயர் வரைக்கும் நான் தான் ஸ்பான்சர் பண்ணிட்டிருந்தன். லாஸ்ட் இயர் கூட ஏதோ பாஃரின் காலேஜ்ல ஸ்காலார்சிப் கிடைச்சிருக்கிறதா வந்து மீட் பண்ணிட்டு போனாள்....."

"ஷிட் ஷிட் ஷிட்…........" என்று வாய்க்கு வந்தபடி தன்னைத்தானே திட்டியபடி மேலே ஓடினான் கார்த்திக்.

மின்னலென விரைந்து சென்றவனுக்கு காலியான அறை மாத்திரமே அங்கு கிடைத்தது. பின்னாலே எதுவும் புரியாமலே ஓடி வந்த கிருஷ்ணமூர்த்தியும் "என்ன தம்பி என்ன ஆச்சு?" என்று புரியாமல் விழித்தார்.

"அண்ணே ஏமாந்துட்டம்..... ஏமாத்திட்டா......"

"என்ன தம்பி சொல்றீங்க? ஒண்ணுமே புரியலையே!"

"அண்ணே இங்க உயிரோட இருந்தது ராதிகா இல்ல, அவள் தான் விஷாலி. இங்க அத்தனை கொலையும் செய்தது அவள்தான். விக்ரம்,ராதிகா,மனிஷா,ராகுல்னு அத்தனை பேரையும் பிளான் பண்ணி கொன்னிருக்காள். ராகுலை லவ் பண்ற மாதிரி நடிச்சு அர்ஜுனோட ஹெல்ப்போட யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி...... மாஸ்டர் பிளான்......." என்று தனது முட்டாள்தனத்தை நொந்தபடி விஷாலியின் புத்திசாலித்தனத்தை வியந்து கொண்டிருந்தான்.

"இப்போ என்ன தம்பி பண்றது?"

"எல்லா செக் போஸ்ட்டையும் அலர்ட் பன்னுங்கண்ணா, அவள் அவ்வளவு தூரம் போயிருக்க முடியாது."

"தம்பி அதுக்கு மேலிடத்தில் பெர்மிஷன் வாங்கணும். என்னன்னு சொல்றது? கையில கிடைச்ச குற்றவாளிய விட்டுட்டோமுன்னா?"

"அதுக்கெல்லாம் நேரமில்ல, ஏதாவது செய்தாகணும்?......"

"வேற ஏதாவது மிஸ் பண்றோமா தம்பி?"

"இப்பதான் ஞாபகம் வருது, அவள் யார்கூடயோ போன்ல பேசினா.... அந்த நம்பர ட்ரேஸ் பண்ணலாம்."

"அவகிட்டத்தான் போனே இருக்கலையே தம்பி.... அப்புறம் எப்பிடி......"

"என்னோட போன்லதான் பேசினா, நான்தான் குடுத்தன்...." என்று கூறும்போதே கார்த்திக்கிற்கு தான் எவ்வளவு முட்டாளாக இருந்துள்ளோம் என புரிந்தது.

"என்ன தம்பி, இப்பிடி இருந்திருக்கீங்க? சரி தம்பி அங்க ஏதோ தோண்டி பார்க்க சொன்னீங்க? அது என்ன?"

"அது ஒரு நெக்லஸ்னு சொன்னாள், ஐம்பது லட்சம் பெறுமதியானது."

"நிச்சயம் அதுவும் பொய்யாத்தான் இருக்கும் தம்பி, இப்பிடி ஏமாளியா இருந்திருக்கீங்களே!"

உடனடியாக தாமோதரனுக்கு அழைப்பை போட்ட கார்த்திக்கிற்கு தாமோதரன் சொன்ன விடயம் எரிகிற எண்ணெயில் பெட்ரோல் ஊற்றியது போல இருந்தது.

"சார் இங்க நீங்க சொன்ன இடத்துல ஒரு எலும்புக்கூடுதான் கிடைச்சிருக்கு. போரென்சிக் ஆட்களுக்கு சொல்லிட்டேன். செக் பண்ணியிருக்காங்க" இதுதான் தாமோதரன் சொன்ன செய்தி.

"தாமோதரன் நம்பிக்கையான ஆள்னு சொன்னீங்களே......" என்று பரிதாபமாய் கிருஷ்ணமூர்த்தியை பார்த்து கேட்டான் கார்த்திக்.

"நம்பிக்கையானவன்தான், எலும்புக்கூட்ட கண்டதும் பயந்திருப்பான் தம்பி. தம்பி இப்போ என்ன பண்ணலாம்? விஷயத்த மறைக்கவும் ஏலாது. வந்திருக்கிறவங்க எல்லாரும் பெரிய இடம். நிச்சயம் விஷயம் கமிஷ்னர் வரைக்கும் போய்டும்." கிருஷ்ணமூர்த்தி சொல்ல சொல்ல கார்த்திக் செய்வதறியாது பிரம்மை பிடித்தவன் போலானான். கண்களின் ஓரம் கண்ணீர்துளியும் எட்டிப்பார்த்தது.

கிருஷ்ணமூர்த்தியும் ராதிகா..... இல்லை இல்லை விஷாலி கால் செய்த நம்பரை ட்ரேஸ் செய்ய முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.



சில மணித்துளிகளின் முன்னர்

ஹாஸ்ப்பிட்டலில் ராகுலின் பெற்றோருக்கு நடந்தவற்றை கார்த்திக் விளக்கி கொண்டிருந்த வேளையில் மெதுவாக வெளியே வந்த விஷாலிக்காக அங்கு காத்துக்கொண்டிருந்தது மாருதி கார் ஒன்று. யாரும் சந்தேகிக்காத வண்ணம் அக்காரினுள் விஷாலியும் மெதுவாக ஏற உள்ளிருந்த வாலிபன் விஷாலியைக்கண்டதும் பெருமூச்சு விட்டான்.

"தாங்க் கோட், எங்க உன்ன பார்க்கேலாம போய்டுமோன்னு பயந்துட்டேன் விஷாலி." என்று சொல்லியபடி காரை நகர்த்தினான் அர்ஜுன்.

"எதுக்கு வீணா பயந்த? நான் போலீஸ் நீலமலைக்காட்டுக்கு வந்தப்பவே ஒரு பிளான் போட்டுட்டன். அதுக்கு தேவைப்பட்டாலும்ன்னு தான் ராதிகாவோட டிரஸ்ஸ நான் மாத்தி போட்டுக்கிட்டன். பட் அவளுக்கு என்னோட ட்ரெஸ்ஸ போடுறதுக்குள்ள போலீஸ் அங்க வந்திட்டாங்க. கடைசில அது ஒண்ணுக்கும் யூஸ் ஆகல."

"நீ பேசாம என்கூடவே வந்திருக்கலாம் விஷாலி, நீயில்லாம நான் ரொம்ப பயந்துட்டேன்."

"அர்ஜுன் நீ சொன்னது போல ராதிகாவோட பாடியையும் கிணத்துல போட்டுட்டு உன்கூட நான் வந்திருந்தா அங்க வந்த போலிஸுக்கு எதுவும் கிடைச்சிருக்காது. அப்பிடீன்னா உடனே சுத்தி புல்லா சேர்ச் பண்ண தொடங்கியிருப்பாங்க. மத்த மத்த ஸ்டேஷனுக்கு இன்போர்மேசன் போயிருக்கும். நம்ம நிச்சயமா மாட்டியிருப்பம். போலீஸ் வந்த நேரம் நான் உயிரோடயும் ராதிகா பாடியாவும் கிடைச்சதில வந்த கூமுட்டைங்க காட்டுக்குள்ள தேடலை. அதனாடிதான் உனக்கு டைம் கிடைச்சுது."

"ஷப்பா........ இவ்வளவெல்லாம் நான் யோசிக்கல, நீ புத்திசாலின்னு ஒத்துக்கிறன்." என்று சொன்னபடி அர்ஜுன் சிரிக்க விஷாலியும் 'சரி அர்ஜுன் இப்போ என்ன பிளான்?" என்று கேட்டால்.

"இன்னுமொரு இருபது நிமிசத்துல தமிழ்நாடு பார்டர தாண்டிடலாம்...... நமக்கு டைம் இருக்குல்ல?" என்று சந்தேகத்தொனியில் கேட்டான் அர்ஜுன்.

"டோன்ட் வொரி, தாராளமா இருக்கு. நான் ராதிகா இல்லைன்னு கண்டுபிடிக்கவே அவனுங்களுக்கு வன் அவர் எடுக்கும்."

"ஓகே, கேரளால பாலக்காட்டில என்னோட பிரெண்ட் ஒருத்தன் இருக்கிறான், அவன் நம்ம மும்பை போறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்து வச்சிருப்பான். அங்க கொஞ்ச நாள் ஸ்டே பண்ணிட்டு அப்பிடியே லண்டன்தான். சிம்பிள்......"

"அந்த போட் மாத்திரம் ரிப்பேர் ஆகியிருக்கலன்னா இன்னைக்கே போயிருக்க வேண்டியது, அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து......" என்று அலுத்துக்கொண்டாள் விஷாலி.

"எல்லாம் நல்லதுக்குன்னு யோசிச்சுக்கோ விஷாலி, இந்தியால கொஞ்ச லாஸ்ட்டா கொஞ்ச நாள் சந்தோசமா இருந்திட்டு போவமே."

“யெஸ் எல்லாமே நல்லதுக்குத்தான் அர்ஜுன். எல்லாமே பத்திரமா இருக்குதானே அர்ஜுன்?"

"உனக்கு பக்கத்தில இருக்கிற பாக்சிலதான் இருக்கு, நீயே செக் பண்ணிக்கோ"

விஷாலி அருகிலிருந்த பாக்ஸை திறந்ததும் ஐந்து உயிரை காவு வாங்கிய நெக்லஸ் மின்னிக்கொண்டிருந்தது. விஷாலி எதிர்பார்த்த வேறொரு பொருளும் அதில்தான் இருந்தது. அதைப்பார்த்ததும் விஷாலியின் முகத்திலும் பூரிப்பு தெரிந்தது.



- தொடரும்-​
 
Status
Not open for further replies.
Top