All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தாயோ!!!’ - கதை திரி

Status
Not open for further replies.

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4


வெளியே வந்த துஷா இளாவை கட்டியணைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்த பதிலுக்கு இளானியும் அணைத்துக் கொண்டாள்.



"வாவ் இளா நம்மளோட ஃப்ர்ஸ்ட் புராஜக்ட் சக்சஸ்ஃபுல்லா ஆயிட்டு !!
ஐ கான்ட் பீலீவ் இட் !!"


"எஸ் துஷ் ஐம் சோ ஹேப்பி !! பட் ஒரே ஒரு கவலை தான் "

"என்ன டி ?"

" அம்மு கிட்ட என்னோட தாங்க்ஸ் அ நான் சொல்லவே இல்லயே ? நீ தான் அவசரமா இழுத்துத்துட்டு வந்துட்ட "


" என்னது அம்முவா ?? எந்த அம்மு டி ? நான் எப்போ இழுத்து வந்தேன் ??" முழித்தால் துஷ்.


"அதான் டி அவரு"


"எவரு??"

"அமன்" என்று வெக்கப்பட்டு தன் பெரு விரலைக் கடித்தாள் இளா.


அதில் ஏகத்துக்கும் அதிர்ந்து நெஞ்சில் கை வைத்த துஷ் , " எதே அமன் எப்போ அம்மு ஆனாரு ??"


"அதுலாம் பார்த்த பத்து செகேண்ட்லையே ஆயிட்டாரு."


" இதுவேறயா.. இங்க பாரு இளா உங்க அப்பா பத்தி தெரியும்ல நீ எப்போ உங்க கம்பனிய நல்லபடியா ரன் பண்ணுறியோ அப்போ தான் உனக்கு கல்யாணம் மத்த நல்ல காரியம்லாம் நடக்கும். அதுவரைக்கும் உன் பப்பு உங்க அப்பாட்ட வேகாது பாத்துக்கோ."


"ஹே துஷ் !! இப்போ கூட எங்க அப்பா நினைக்குறதுக்கு தான் நான் ஹெல்ப் பண்றேன் !".


"எப்படி ?"


"ஸீ...இப்போ என் அப்பாக்கு எங்க நான் நம்ம கம்பனிய நடுத்தெருவுக்கு கொண்டு வந்துருவெனோ ன்னு ஒரு பயம் .. எனக்கும் கம்பனி பொறுப்பு ஏத்துக்க நாட் இன்ட்ரெஸ்டட்.. சோ நான் மட்டும் அம்முவ லவ் மேரேஜ் பண்ணிட்டேண்ணு வை என்னோட பொறுப்பு எனக்கு அப்புறம் என் அம்முக்கு தான சோ அவரு அவரோட கம்பனி என்னோடதுன்னு எல்லாத்தையும் பாத்துப்பாரு பிராப்ளம் சால்வ்டு பேபி !!" என்று பெருமை அடித்தாள்.


"ம்ம் உன் பகல் கனவுக்கு உன் அம்மு முதல்ல ஓகே சொல்லணுமே ??"


"சொல்லுவாரு வெயிட் அண்ட் வாட்ச் "


"அம்மா தாயே !! இந்த புராஜக்ட் முடியுற வரை கொஞ்சம் உன் சேட்டையை அடக்கி வச்சா நல்லா இருக்கும்.. அதுக்கு பிறகு நீ எதும் பண்ணு நா கேக்க மாட்டேன் ஓகே ?"


"இந்த டீல் எனக்கு ஓகே" என்றாள் இளா..


பின் இருவரும் பிஏ விக்ரமை பார்த்து மற்ற பார்மாலிடிஸ் முடித்து விட்டு தங்களின் அலுவலகத்துக்கு கிளம்பினர்.


*****


அங்கு ராஜேஷ் குமார் அவர்களின் வருகைக்காக காத்திருக்க தோழிகள் இருவரும் விரைந்து அவரின் அறைக்குள் சென்று தங்களின் வெற்றியை பகிர்ந்து கொண்டனர்.


ராஜேஷ் குமார்:

32722

அமீஷா :

32723



"அங்கிள் வீ ஆர் சக்ஸஸ் ஃபுல்லி அட்டம்ப்டட் தி மீட்டிங் .. அன்ட் தி ஒன் அண்ட் ஒன் ஏஎஸ் குரூப் ஆப் கம்பனி அஸ்செப்ட்ஸ் டு டை அப் வித் அவர் கம்பனி ..!!"- துஷ்.


"இட்ஸ் அமேசிங்.. ஐம் சோ பிரவுட் போத் ஆப் யூ" என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ராஜேஷ்.


"அங்கிள்.. ஒன்னு சொன்னா நீங்களே ரொம்ப சந்தோஷபடுவிங்க" என்று துஷா புதிர் போட அவர் என்னவென்று பார்க்கவும்,


"நான் கூட சில கொஸ்ட்டின்ஸ் ல தடுமாறிட்டேன் பட் எந்த இடத்துலயும் தடுக்காமல் இந்த புராஜக்ட் முழுசா நம்ம கைக்கு கிடைச்சதுக்கு முழு ரீசன் நம்ம இளா தான் அங்கிள்"


"வாட் ?? உண்மையாவா ??" என்று நம்ப முடியாமல் அவர் கேட்க ,


"யா பப்பா.!! உண்மை தான் !" என்றாள் இளா.


இளா சொன்னதும் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. தன் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவு ஆகி கொண்டிருப்பது போல தோன்றியது.
தன் மகள் தன்னை போலவே என்று பெருமையில் விம்மினார் அந்த பாசமுள்ள தந்தை..


இருக்காதா பின்னே அமன் கம்பனி எவ்ளோ பெரியது எத்தனையோ பேர் அதில் இணைந்து ஒரு பார்ட்டாக ஆகி விட மாட்டோமா என்றிருக்க தன் மகள் தன் திறனால் அதை வெற்றிகரமாக செய்திருக்கிறாள் என்றதும் அவர் அடைந்த உவகைக்கு அளவே இல்லை.


உடனே தன் மகளை அணைத்துக் கொண்டு , "இளா பேபி நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா உன்ன நினைச்சு ரொம்பவே ப்ரவுடா ஃபீல் பண்றேன்டா.. லவ் யூ மை சைல்டு" என்று சொல்லி அவள் நெற்றியில் பாசத்துடன் முத்தம் வைத்தார்..


தந்தை தன்னை அணைத்து இப்படி எல்லாம் பேசுவார் என்று கொஞ்சமும் எண்ணாத இளா சில நிமிடங்களுக்கு தடுமாறி நின்றாள். எப்போதுமே தன்னை திட்டுபவர், தன்னிடம் குறை மட்டுமே சுட்டி காட்டுபவர் பாசமே என்னவென்று காட்டாதவர் இப்படி நடக்கவும் அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை..


ராஜேஷ் குமார் ஒன்றும் கரடு முரடான ஆள் இல்லை. இளா பிறந்ததிலிருந்து ரொம்பவே பாசம் காட்டி வளர்த்த அன்பு தந்தை தான்.எல்லாம் ஒரு நாளில் போனது. இளா வுக்கு 3 வயதாகும் போது அவரின் தந்தை இராஜா ராம் மாரடைப்பில் மறைய அந்த துக்கத்தில் அவரின் மனைவி பத்மினியும் இறைவனடி சேர்ந்தார்.


தொடர்ந்து பெற்றோரின் இழப்பு ,கம்பனி பொறுப்பு முழுவதும் தன் பொறுப்பில் வந்தது , அவரும் கம்பனியின் நல்ல வளர்ச்சிக்கு வித்திட்டவர் தான் இருந்தாலும் இராஜா ராம் தனக்கென்று நிர்வகித்து வந்தவை அனைத்தும் அவர் நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் வந்ததால் அந்த 29 வயதில் அவர் கொஞ்சம் தடுமாறி தான் நின்றார்.


நிறைய உழைக்க வேண்டி இருந்தது. வீட்டிற்கு வரும் நேரம் குறைய ஆரம்பித்ததில் இளா வுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனது.


அவரின் மனைவி அமீஷாவிற்கு இளாவை கவனிப்பது மற்றும் கணவனின் வேலை டென்ஷன் பற்றி தெரிந்து அவர் அவரை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் இளா தான் தந்தையை ரொம்ப தேட தொடங்கினாள்.


நாளடைவில் தேடல் அதிகமானதே ஒழிய குறையவில்லை. அவரும் தன் மகளின் ஏக்கத்தை உணரவில்லை.
ஒரு நாள் அமீஷா வீட்டு ஹால் படியில் மேல் இருந்து கீழே இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்து ஹோஸ்பிட்டலில் அட்மிட் செய்ய பட்டார்.


அப்போது பரிசோதித்த டாக்டர் அவருக்கு கிழே விழுந்து வயிற்றில் அடி பட்டதால் கருப்பை வீக் ஆகிருக்கு இனி மேல் இன்னொரு குழந்தையை அவர் பெற முடியாது என்று விட்டார்.


இதை அறிந்த அமீஷா துடித்தாரோ என்னவோ ராஜேஷ் துடித்து விட்டார். அவர் தனக்கு ஒரு ஆண் வாரிசு பிறந்தால் தன் பொறுப்பு அனைத்தையும் வளர்ந்த பின் அவனிடம் ஒப்படைத்து விடலாம் அதுவரை தான் இந்த ஓட்டம் என்று இருக்க இப்படியாகி விட்டது.


இனி என்ன செய்ய என்று நினைத்திருக்க அவர் நண்பர் ஒருவர் , "ஏன் ஆண்கள்தான் நிர்வாகம் பண்ணனுமா ? பெண்கள் பண்ண கூடாதா ?? இன்னும் எந்த காலத்துல இருக்க ராஜேஷ் ? உனக்கு வாரிசே இல்லாமல் இல்லயே .. இளா இருக்காளே அவளுக்கு நீ சொல்லி குடு அவ பார்த்துப்பா " என்று சொன்னதை நினைவில் வைத்து கொண்டு அவருக்கும் அந்த யோசனை பிடித்து விட அப்போது ஆரம்பித்தார் இந்த கடுமையை..


எங்கே பாசத்தை காட்டினால் போக்கு காட்டி விடுவாளோ என்று அஞ்சி கோப முகத்தை காட்டி அவளுக்கு ஒவ்வொன்றையும் பத்து வயதில் இருந்தே சொல்லி குடுக்க , பாசத்துக்கு கட்டுப்படும் நம் இளாவோ இதுவரை ஏங்கி இருந்த தந்தையின் பாசத்துக்கு மாறாக அவரின் கோபத்தை கண்டு நடுங்கி அதை ஏற்க முடியாமல் சொல் பேச்சு கேளாமல் நடக்க தொடங்கினாள்.


இப்படியே இவ்ளோ நாளும் தந்தை மகள் இருவரும் ஏட்டிக்கு போட்டியாக நடக்க , இன்று தன் மகள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினாரோ அதுபடி மகளும் , தன் தந்தையிடம் எந்த பாசத்தை கேட்டு ஏங்கி நின்றாளோ அதை அவரும் கொடுத்திருக்க படபட பட்டாசாய் பொரிபவள் வாய்பேசா கிள்ளையானாள்.



இதைக் கண்ட துஷாராக்கு மனம் நிறைந்து போனது. தன் தோழியின் ஏக்கத்தை அறிந்தவளாயிற்றே..!


அதன் பின் ஒருவாறு தன்னை சமாளித்த இளா " லவ் யூ டூ பப்பா !!" என்று தன் ஒட்டு மொத்த ஏக்கத்தையும் அவ்வரியில் புகுத்தி சொன்னாள்.


"ஓ மை ஏஞ்சல்! " என்று அவள் கன்னத்தை செல்லமாக தட்டி விட்டு மீண்டும் அணைத்தார். அந்த அணைப்பில் இவ்ளோ நாளாக அவள் தேடிய பாசமும் , அன்பும் , நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையையும் கொடுக்க அதை முழுவதுமாக அனுபவித்தாள் இளா.


தான் எதிர்பார்த்த அன்பு கிடைக்கவும் இதுவரை விளையாட்டு பிள்ளையாக இருந்தவள் தன் பப்பாவிற்காக இந்த புராஜக்ட் நல்ல படியா கட்டி முடிக்கும் வரை தன்னால் ஆன பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று மனதினில் உறுதி எடுத்தாள்.


அவளின் மனஉறுதியையும் , அமனின் கன்ஸ்ரக்சன் திட்டத்தையும் தகர்க்கவென ஒருவன் திட்டம் தீட்டி கொண்டிருப்பதை யார் அறிவாரோ ?


*****


இரவு பதினோரு மணி ,

ஊரே ஓரளவுக்கு அடங்கும் நேரம் அந்த பார் மட்டும் எப்போதும் அடங்காது என்பது போல் பளிச் பளிச் வண்ண விளக்குகளும் , வகை வகையான மதுபானங்களும் அங்குள்ள அடுக்குகளில் நிரம்பி வழிய , ஆண் பெண் பேதம் பாராமல் இஸ்டத்துக்கு அங்கு ஒலிக்கின்ற நாராசமான பாடல்களுக்கு ஆட்டம் என்ற பேரில் அத்து மீறல்கள் அரங்கேற , பெரும் புள்ளிகள் சிலர் தங்களின் ரகசிய பேச்சுவார்த்தைக்கும் , அந்தரங்க மீடிங்க்கும் வருகின்ற ஒரு இடமாகும்.


அங்கு மேசை முழுக்க பத்து வகையான
மது பாட்டில்கள் இடத்தை ஆக்கிரமித்து இருக்க ஏழு பாட்டிலையும் குடித்து விட்டு எட்டாவதையும் அவன் வாயில் சரிக்க அதை தடுத்து நிறுத்தினான் அவனின் நண்பன் சுனில்.


"டேய் மச்சி !! போதும் டா இப்போவே நீ டைட் ஆயிட்ட ! இதுக்கு மேல போச்சுன்னா அப்புறம் உங்க அப்பா உன்ன வீட்டுலயே சேர்க்க மாட்டாரு சொல்லிட்டேன் ".


"அதுலாம் நான் பத்து பாட்டில் அடிச்சாலும் அசராம இருப்பேன் " என்று வாய் குளரியபடி அந்த சரக்கு மொத்தத்தையும் வாயில் சரித்தான்.


"சொன்ன கேளுடா ! ஏன் டா இப்படி பண்ற ?"


"எல்லாம் அந்த **** அமனால தான் டா.. அவன் எப்போவும் என் வழியிலேயே குறுக்க வரான் டா பிளடி**** " என்று காதில் கேட்கமுடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தான் அவன்.


"டேய் விடுடா.. எப்போவும் போல சொதப்பிட்டு அடுத்த முறை பாத்துக்கலாம்" என்றான் சுனில்.


"என்னத்தடா பார்க்க சொல்ற எவ்ளோ நாளா கஷ்டப்பட்டு இந்த ஆயிரம் கோடி கவர்ன்மென்ட் புராஜக்ட் எனக்கு கிடைக்க , அவன் கம்பனி மானேஜர் அ வழிக்கு கொண்டு வந்து அவன் நிர்ணயச்ச தொகைய விட கம்மி ரேட்-க்கு ஒரு கொட்டேசன் ரெடி பண்ணி சப்மிட் பண்ணா கடைசி நேரத்தில அவன் எப்படிடா அதை விட கம்மியா ரேட் ஃபிக்ஸ் பண்ணான் ??"

"இப்போ அந்த புராஜக்ட் என் கைய விட்டு போச்சே.!! அடி மேல அடி வந்துட்டே இருக்கு. இவனால என் அப்பன் என்ன மதிக்க கூட மாட்டேங்குறான் டா அவனுக்கும் ஒரு நாள் வச்சுருக்கென்..*** "


" நீ சொன்னேன்னு தான் அவன் மானேஜர்ர தூக்கி எப்படி விசயத்த கறக்க முடியுமோ அப்படி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன் . அவனும் நம்மளுக்கு ஹெல்ப் பன்றதாதான் சொன்னான். கடைசில இப்படி அந்த அமன் கிட்டயே அப்புரூவல் ஆவான்னு கனவா கண்டேன்.. அதுக்கு பிறகு விசாரிச்சதில் தான் தெரியும் இது எல்லாமே அந்த அமனோட பிளான்ன்னு..அவன ஏமாத்த நாம பார்த்தோம் கடைசில பார்த்தா அவன் தான் நம்மல மொத்தமா ஏமாத்திருக்கான் " - சுனில்.



"விடுறா அந்த கெழம் ஆரியனோட இரத்தம் தான இவன் உடம்புலையும் ஓடுது..அவன் பெரிய கில்லாடி டா அவனோட டிரிக்ஸ் எல்லாதையும் பேரன்ட்ட சொல்லி கொடுத்துட்டு போயிருக்கான் அதுல தான் இப்படி ஆடிகிட்டு திரியுறான்.. இந்த ஆட்டத்தை நான் எப்படி முடிக்கிறேன்னு மட்டும் பாரு ? .. டேய் அமன் நீ அந்த புராஜக்ட் அ எப்படி முடிக்குறேன்னு நான் பாக்குறேன் டா..!!" என்று வன்மமாய் சூளுரைத்தான் அவன்.. அவன் தான் "உதித் வர்மா பட்டேல்".



தொடரும்.....








 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பட்டூஸ்...!!!😘😘

எல்லாரும் நன்றாக இருக்கின்றீர்களா? இந்த வாரம் நல்ல விதமா போச்சா 🤗🤗 நம்ம கதையோட அடுத்த பதிவு போட்டாச்சு டார்லிங்ஸ் 🥳🥳 நேரம் எடுத்து படித்து உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்கள் நண்பிகளே 😍😍😁 அப்புறம் போன யூடி களுக்கு லைக் மற்றும் கமென்ட் பண்ண அனைவருக்கும் நன்றிகள்..❤❤❤ கீப் சப்போர்டிங் டார்லிங்ஸ் 🙋🥰🥰



அன்புடன் ,
ரசிகா 💜



கருத்துத் திரி :

 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 5


ஒரு வாரம் கழித்து ,


அன்று ஞாயிற்று கிழமை காலை பதினோரு மணி அளவில் அமனுக்கு கிடைத்த கவர்ன்மென்ட் புராஜக்ட்டின் கட்டுமான பணி தொடங்குவதற்கு அஸ்திவாரம் போட பூஜை ஒன்று அவ்விடத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அமனுக்கு இந்த பூஜை , கடவுள் மேல் லாம் நம்பிக்கை கிடையாது. அதை அவனது ஐந்து வயதிலேயே இழந்து விட்டான்.
ஆனாலும் மற்றவர்களுக்காக எதோ கடமைக்கு என்று அங்கு நின்றுக் கொண்டிருந்தான்.


அமன் தந்தை அசோக்கும் இன்னும் அவனது கம்பனியின் பொறுப்பில் இருப்பதால் அவரும் வந்திருந்தார்.


அவனது இந்த கட்டுமான பணிக்கு என்று தேர்ந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு துறையிலும் உள்ள அனைத்து நிறுவனத்தினறும் அங்கு திரண்டிருந்தனர். அதில் இளானி , துஷாரா மற்றும் ராஜேஷ் உம் வருகை தந்திருந்தனர்.



அமன் அங்குள்ள அனைவரிடமும் தொழில் நிமித்தமாக பேசிவிட்டு இவர்கள் புறம் வந்து ராஜேஷிடமும் கை குலுக்கி பேசி விட்டு இவர்களை கண்டுக்காமல் சென்று விட்டான்.


அங்கு வந்ததில் இருந்து அவனையே விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த இளாக்கு அவன் தன்னை கொஞ்சமும் கண்டு
கொள்ளாமல் போவதை பார்த்ததும் "புஷ்" என்று ஆனது. முகமும் உடனே தொங்கி விட்டது.


அவனது செய்கையில் பொங்கிய சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்த துஷா, தன் தோழியின் முக வாட்டத்தை கண்டு பொறுக்க முடியாமல் அவளை சகஜம் ஆக்கும் பொருட்டு " ஏய் இளா என்ன டி இதுக்கு போய் இப்படி ஆயிட்ட ? இன்னும் எவ்வளோவோ இருக்கு அதை எல்லாம் ஒரு கை பாக்க வேணாம் ?? கம்மான் இளா கெத்து !!கெத்து விட்டுறாத..!! " என்க


அவளை பார்த்த இளா "போடி நான் ஒன்னும் அதுக்கு ஃபீல் பண்ணல" .


"அப்போ.."


" இவன பார்க்கணும் ன்னு காலையில சாப்பிடாம பார்த்து பார்த்து மேக்கப் , டிரஸிங் ஸ்டைல்லாம் பண்ணிட்டு வந்தா இவன் இப்படி போறானே இதுக்கா சாப்பிடாம வந்தோம்ன்னு ஃபீல் பண்றேன் டி !!" என்று பாவமாய் முகத்தை வச்சுட்டு சொல்ல , அவளை வெட்டவா ? குத்தவா ? என்று பார்த்து


" நல்லா வந்துரும் என் வாயில உன்ன போய் சமாதான படுத்த வந்தேன் பாரு என்னை.?? "


" இதை வச்சு அடிச்சுக்கோ!!" என்று தன் ஹை ஹீல்ஸ் ஐ தூக்கி இளா காட்ட , மற்ற இடமாக இருந்திருந்தால் அதாலையே இளாவை அடி வெளுத்துறுப்பாள். இருக்கும் இடம் கருதி பல்லைக் கடித்து திரும்பி நின்று கொண்டாள் துஷா. இளாவும் திருப்பி அவளை டென்ஷன் ஆக்காமல் அமைதியா அவளின் சைட் அடிக்கும் பணியை செவ்வனே செய்தாள்..🤭


அமனையும் குறை சொல்ல முடியாது. அன்று அவளின் பேச்சும் , பார்வையும் அவனை ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது தான். இருந்தாலும் அவனுக்கு இருக்கும் வேலை பளுவில் அதை பற்றி அதிகம் யோசிக்க முடியாமல் வேலையில் மூழ்கி போனவன் அதோடு அவளை மறந்தும் விட்டான் . அதனால் தான் சட்டென்று அவளை இனம் காண இயலவில்லை.


பூஜையும் நல்ல படியாக முடிந்து முதல் கட்ட வேலையாக பேஸ்மெண்ட் போடுவதற்காக என்ஜினியர்கள் , கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் என பலர் ஆயத்தமாயினர்.

அது மொத்தம் பத்து பில்டிங் கட்டுவதற்க்கான அரசாங்கத்தின் புராஜக்ட் பிளான் ஆகும். ஒரு பில்டிங்க்கு ஏழு தளங்கள் வைத்து ஒவ்வொரு தளத்திற்கும் ஐந்து வீடுகள் என மொத்தம் முன்னூற்று ஐம்பது வீடுகள் கட்டும் பணி ஆகும்.


இவ்வீடுகள் அனாதரவான மக்களின் வீடில்லாத கோரிக்கையை ஏற்ற ஒரு நல்ல முதலமைச்சரின் திட்டம் ஆகும் . அதனாலே ஆயிரம் கோடி மதிப்பு கொண்ட மேலும் இதனை செய்து முடித்தால் பெறும் லாபம் என இதற்கு அத்தனை கிராக்கி.


ஒரே நேரத்தில் பத்து இடங்களிலும் பேஸ்மென்ட் பணி நடக்க ஜே.சி.பி.யால் நிலத்தை தோண்டும் நேரம் , "டம்ம்.....!! டமால்ல்..!! டும்ம்ம்..!!!" என்று பயங்கர ஓசையுடன் பத்து இடங்களிலும் குண்டுகள் வெடித்து அங்கு வேலை பார்த்த அத்தனை பேரூம் தூக்கி வீசப்பட்டனர்.
அதில் இளாவும் ஒருத்தி.



*****


பூஜை முடிந்தவுடன் சிலர் அப்போவே கிளம்பியிருக்க கொஞ்ச பேர் மட்டும் சற்று தள்ளி வேலை நடக்கும் இடத்தை பார்த்தவாறு நின்றனர். அப்போது அமனுக்கு கால் வர அங்குள்ள இரைச்சலில் பேச முடியாது அங்கிருந்து நகர்ந்து வெளியில் வந்து விட்டான்.


இளா அவன் வெளியில் செல்வதை கண்டு தானும் பின்னால் செல்ல பார்க்க , அப்போது ஒரு வயதான கட்டிட வேலை செய்யும் பெண்மணி தலையில் சிமெண்ட் சட்டியை ஏந்தியவாறு வெயிலில் நடக்க முடியாமல் வருவதை கண்டவள் அவருக்கு உதவும் பொருட்டு அவளும் அவ்விடத்திற்கு செல்ல இந்த அசம்பாவிதம் நடந்து முடிந்தது.


பாம் சத்தம் கேட்டு வெளியில் இருந்து ஓடி வந்த அமன் கண்டது எங்கும் புகை மூட்டமாய் வானம் கரும்புகையாய் மாறி காட்சியளித்த இடமும் மரண ஓலங்களும் தான்.


ஐந்து நிமிடத்திற்கு முன்பு வரை சாதாரணமாய் இருந்த இடம் இப்போது முற்றிலும் மாறாய் இரத்த பூமியாய் , அழுகையும் கூப்பாடுமாய் இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் சிலையாய் சமைந்தான்.


அத்தனை களேபரத்திலும் அவனை கண்டு ஓடி வந்த பிஏ விக்ரம் "சார்.. சார்..!!" என்று உலுக்கவும் நடப்பிற்க்கு வந்த அமன் உச்சக்கட்ட கோபத்தில் , "வாட் தி ஹெல் இஸ் ஹப்பென்னிங் ? ஹு இஸ் டிட் திஸ் பிளடி *** " என்று உறுமினான்.


" டோன்ட் நோ சார்.. சார் ஆர் யூ ஓகே..?" என்றான் தயக்கமாக.

அதில் கோவத்தை குறைத்து "யா..ஆம்புலன்ஸ் க்கு கால் பண்ணியா ?? "

"எஸ் சார். ஆன் தி வே.!!"

"ஓகே..கம் லெட்ஸ் கோ" என்று அவ்விடத்தை நோக்கி விரைந்தான்.


அங்கு பலர் பலத்த காயத்தோடும் , சிலருக்கு ஒரு கால் , கை போய் இன்னும் சிலரை பார்த்தால் நோ மோர் போல இருக்க அவற்றை பார்க்க முடியாமல் திரும்பினான். பின் இது வருத்தப்படும் நேரம் அல்ல என்றுணர்ந்து அவனும் விக்ரமும் சேர்ந்து காயம்பட்டவர்களை தூக்கி அம்புலன்ஸில் ஏற்றி கொண்டிருந்தனர்.


அப்போது "இளா..ஆஆஆ
..!!" என்று கத்தியவாரு துஷாராவும் ராஜேஷும் அங்கு வர அவர்களை புருவம் சுருங்க பார்த்த அமன் " Mr. ராஜேஷ் ஆர் யூ ஓகே ..? " என்று இழுக்க


" நோ Mr. அமன்.. மை டாட்டர் இஸ் மிஸ்ஸிங் இன் திஸ் பாம் பிளாஸ்ட்.." என பதரியவாரு சொல்ல ,

"வாட்.?? டாட்டரா.. ?ஹூ இஸ் ஷீ?" என கேட்க , "இளானி குமார் சர்" என்றாள் துஷா. அதில் பேரு எங்கயோ கேட்டது போல தோன்ற ஆனால் முகம் சட்டென நினைவு வராமல் ,

"ஓகே கன்ஃபார்ம் இங்க தான் வந்தாங்களா ஆர் யூ சூர் ? "

"எஸ் சர் ஒரு லேடி கூட பேசிட்டு இந்த பக்கமா வந்தா அப்போ தான் பாம் பிளாஸ்ட் ஆச்சு" கதறியவாரு சொன்னாள்.


"ஓகே ! ஓகே ! ரிலாக்ஸ் டோண்ட் பேனிக்.! .. நான் போய் பாக்குறேன் " என்று விட்டு இன்னும் புகை மண்டலமாய் இருந்த இடத்தில் எல்லா மூலை முடுக்குகளிலும் போய் தேடி பார்க்க எங்கும் தென்படவில்லை.


விபத்தில் சிக்கிய கிட்டத்தட்ட முக்கால்வாசி பேரை ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டிருக்க இளாவும் எங்கு தேடியும் இல்லாமல் போக ஒரு வேளை அவளையும் அதில் ஏற்றி இருப்பார்களோ என்ற சந்தேகத்தோடு திரும்பி செல்ல எத்தனிக்கையில் மூலையில் ஒரு ஓரமாக ஒரு பெண் விழுந்து கிடப்பது அவனுக்கு தெரிய அங்கே ஓடினான்.


அப்பெண்ணின் அருகில் சென்று கீழ் அமர்ந்து அவளை திருப்பி முகம் பார்க்க முகத்தில் லேசாக கருமை நிறம் சூழ்ந்து ஆங்காங்கே சிராய்ப்பும் , கை , கால்களிலும் இரத்தமும் சிராய்ப்புமாக இருக்க அது அவள் தானா என்று உறுதி படுத்த நிமிர்ந்து பார்க்க ,

அங்கே அவனை போல் இளாவை தேடி கொண்டிருந்த துஷா, அமன் எங்கோ விரைந்து ஓடுவதை கண்டு அவளும் அவனை பின் தொடர அவன் அப்பெண்ணை பார்த்து கொண்டிருந்ததை கண்டு கிட்ட போய் பார்த்தவள் "இளா ஆஆ...! " என்று மடியில் தாங்கி கதறவும் எழுந்தவன் மீண்டும் அவளின் முகத்தை கண் இமைக்காமல் பார்த்தான்..


அவளின் நிலை உணர்ந்து துஷா வை நகர சொல்லி தானே அவளை தூக்கி கொண்டு வெளியில் வந்தான். அவன் இளா வை தூக்கி செல்லும் காட்சியை அவன் தந்தை அசோக்கும் யோசனையாக பார்த்து கொண்டிருந்தார்.


*****


மும்பையின் பாந்த்ரா நகரில் அமைந்துள்ள அவனது சொகுசு பாங்களாவில் , நடு ஹால் போன்ற இடத்தில் அமைந்த உயர்ரக சோஃபாவில் கால் மேல் கால் போட்டவாறு கையில் பீர் பாட்டிலை வைத்து சிப் சிப்பாக அருந்தி தன் எதிரே இருந்தவனிடம் "எப்படி டா..?" என்று புருவத்தை உயர்த்தி கேட்க ,


"பாஸ் நினைச்சா அது நடக்காம இருக்குமா ?? இனி அந்த அமன் எழும்புறது கொஞ்சம் கஷ்டம் தான்.." என்றான் எதிரில் உள்ளவன்.


" ஹாஹா.. ஹாஹாஹா... அவன் திரும்பி வருவான் டா " என்க அதில் மற்றவன் திகைக்க ,

" அவன் திரும்ப திரும்ப எழும்பும் போது நான் திருப்பி திருப்பி அடி குடுத்துட்டே இருப்பேன் ... ஒரு நாள் அவன் எழவே முடியாத அளவுக்கு நான் கொடுக்குற அடி அவனுக்கு கடைசி அடியா இருக்கும் அப்போ நான் தான் டா இங்க ராஜா..!! ஹாஹாஹா... வாடா அமன் உனக்காக ஐம் வெயிட்ங்.. !!" என்று கொக்கரித்தான் அந்த உதித்..



32788


தொடரும்.....💜




 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ தோழிமார்களே..!♥

உங்கள் ரசிகா வந்து விட்டேன் ..😍😍🥳 5ம் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..🥳🥳கொஞ்சம் சின்ன யூடி தான் அட்ஜஸ்ட் கரோ 🤗🤗🤗 மேலும் போன யூடிகளுக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்♥♥



அன்புடன்

ரசிகா 💜


கருத்துத் திரி :


 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -6


மும்பை சிட்டி ஹாஸ்பிட்டல்...


ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கபட்ட இளானிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். முகம் ,கை ,கால்கள் என அங்காங்கே ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளை சுத்தபடுத்தி இரத்தத்தை கட்டுபடுத்தி பேன்டேஜ் போட்டிருந்தனர்.


வலது நெற்றியின் ஓரத்தில் விழுந்திருந்த வெட்டு காயத்தை மூன்று தையல் போட்டு தைத்து இருந்தனர். வேறு எங்கும் உள்காயங்கள் எதும் உள்ளதா என சரிபார்த்து பின்னர் வெளிய வந்து அங்கு பரிதவிப்பாய் நின்றிருந்த ராஜேஷிடம் சென்று , "டோண்ட் வொர்ரி மிஸ்டர். ராஜேஷ் ..! யுவர் டாட்டார் இஸ் நவ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்..! இப்போ கொஞ்சம் மயக்கதுல இருக்காங்க மயக்கம் தெளிய நைட் ஆகலாம் இல்ல நாளைக்கு மார்னிங் கூட ஆகலாம் சோ டோண்ட் பேனிக்...ஓகே!" என்க

"டாக்டர் இப்போ போயி நாங்க பாக்கலாமா.??"

"இப்போ வேணாம் ! ஒரு ஹால்ஃப் அண்ட் அவர் ஆகட்டும் அப்புறம் ஒரு ஒருத்தரா போய் பாருங்க பேசென்ட்ட டிஸ்டர்ப் பண்ண வேணாம் ஓகே!!" என்று விட்டு செல்ல , ஐசியு அறையின் கண்ணாடி தடுப்பில் நின்று கொண்டு கண்கள் கலங்க தன் மகளை பார்த்து கொண்டிருந்தார் ராஜேஷ்.

விசயம் அறிந்து பதறி வந்த அமீஷாவும் தன் மகளின் நிலையை கண்டு துடித்து கொண்டிருக்க , துஷாராவும் அந்த வராண்டாவின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு தோழியை நினைத்து கண்ணீர் வடித்தாள்.


பின் அரை மணி நேரம் கழித்து ஒவ்வொருவராக இளாவை காண்பதற்காக செல்ல அவளின் இந்த வாடிய கொடி போல் படுத்திருந்த நிலையை கண்டு காண முடியாமல் வெளிய வந்து விட்டனர்.


அமன் அவளை இங்கு கொண்டு வந்து அவனுக்கு மிகவும் பரி்ச்சயமான மருத்துவரிடம் அவளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தி விட்டு அப்போதே சென்று விட்டான் அவனுக்கு தலைக்கு மேல் உள்ள பிரச்சனையால்.


இதற்கு யார் காரணம் என அறியாத சிறு குழந்தை அல்லவே அவன். முதலிலேயே இதன் பின்னணியில் இருப்பது உதித் தான் என்று ஊகித்து விட்டான். இருந்தாலும் அதை உறுதி படுத்தவே விரைவாக அவன் அலுவலகத்துக்கு சென்றான்.

அவன் செல்வதற்க்கு முன் அவனது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் குவிந்திருந்தனர் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள்.

மேலும் உதித்தின் ஆள் ஒருவன் , அமன் மீது நடந்த வெடிகுண்டு விபத்துக்கு அவன் தான் காரணம் என கூறி கேஸ் போட்டிருப்பதால் மும்பை போலீசார்களும் அவனது வீட்டையும் அலுவலகத்தையும் சுற்றி ரவுண்ட்அப் பண்ணிருந்தனர்.


மொத்தம் முன்னூற்றுக்கும் மேற்பட்ட அந்த இடத்தில் இருந்தவர்களில் நூற்றி ஐம்பது பேருக்கு பலத்த காயங்களும், ஐம்பது பேருக்கு மேல் கவலை கிடமாகவும் மற்றும் சிலர் சிறிய காயங்களால் தப்பித்தனர். ஆனால் இறப்பின் எண்ணிக்கை இருபத்தி ஐந்து.


இதை அறிந்த அமனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது. அதற்கு மேலும் தூபம் போடுவது போல் விக்ரமும் உதித் தான் இதற்கு காரணம் என சொல்ல கண்மண் தெரியாத கோபம் தலைக்கேறி அவனை வெட்டி போடும் அளவிற்கு வந்து நின்றது. 'அப்பப்பா எத்தனை உயிர்கள் !!' என்று உள்ளுக்குள் மருகினான்.

இத்தனை நாள்கள் தனக்கு தொழில் முறையில் எவ்வளவோ இடையூருகளை உருவாக்கி தன்னை கீழிறக்க முயற்சிகளை மேற்கொண்டும் எதிலும் சளைக்காமல் வெற்றியை பதித்து வந்திருக்கிறான் அமன். ஆனால் எதிலும் ஒரு உயிர் போகும் அளவுக்கு இப்படி கீழ்த்தரமான காரியத்தை அவன் செய்தது இல்லை.


இப்போது இவனின் தரம் தாழ்ந்த செயலால் ஒன்றா இரண்டா இருபத்தி ஐந்து உயிர்கள் அல்லவா அநியாயமாக பறி போயிருக்கிறது. அதை நினைக்க நினைக்க தாளவில்லை அவனால்.


*****


அமனுக்கும் உதித்துக்கும் இன்று நேற்று ஆரம்பித்ததில்லை இந்த தொழில் போட்டி . அவனது தாத்தா ஆரிய சக்கரபோர்த்தி தொழில் தொடங்கிய நாளில் இருந்தே உதித் தாத்தா ரஜத் வர்மா பட்டேலும் அவருக்கு போட்டியாக கன்ஸ்ட்ரக்சன் தொழிலில் களமிறங்க அதில் தொடங்கியது போட்டி .


நாளாக ஆக போட்டி மனப்பான்மை அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. இவர் ஜெய்ப்பதும் அவர் தோற்ப்பதும் , பின் அவர் தோற்ப்பதும் இவர் ஜெய்ப்பதுமாக மாறி மாறி நடக்க ஒரு கட்டத்தில் சக்கரபோர்த்தியே எல்லாத்திலும் வெற்றியை பதிக்க அதுவரை வெறும் போட்டியாக இருந்தது பெரும் பகையாக வன்மமாக மாறியது .


அவருக்கு பின் அசோக் தனது திறமையை காட்ட , சக்கரபோர்த்தி நிறுவனம் எங்கும் கொடி நாட்டியது. இங்கும் பட்டேல் குடும்பத்துக்கு தோல்வி தான் ஏனெனில் ரஜத் பட்டேலின் ஒரே வாரிசு அமித் வர்மா பட்டேல் உதித்தின் தந்தை. அவருக்கு கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஈடுபாடு இல்லை . அவருக்கு அறிவியல் சார்ந்த படிப்பில் சேர்ந்து பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே கனவு.


அது ரஜத்துக்கு பிடித்தமின்மையை காட்ட தனக்கு பிறகு நீ தான் நம்ம கம்பெனியைப் பொறுப்பாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்த அதில் அமித்துக்கு உடன்பாடு இல்லாமல் போக இப்படியே தந்தைக்கும் மகனுக்கும் இடையே பனிப்போரே நிகழ , ஒரு கட்டத்தில் ரஜத் தான் சொல்வதை செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என்று மிரட்ட அதில் தன் தாயின் துடிப்பை காண இயலாமல் அரை மனதாக ஒத்து கொண்டார் அமித்.

அப்படியே நாள்கள் அது போல போக அவரது கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த உஷா என்ற பெண்ணை பார்த்து பிடித்து போய் திருமணமும் செய்து கொண்டார். இதில் ரஜத்துக்கு உடன்பாடு இல்லையென்றாலும் மேலும் எதுவும் கூறப் போய் மகன் எங்கு தன்னை அடியோடு ஒதுக்கி விட்டு சென்று விடுவானோ என்று அஞ்சி பேசாமல் இருந்து விட்டார் .

பிறகு அடுத்த வருடத்திலேயே உதித் பிறக்க அவருக்கு பேரன் பிறந்து தனது தொழிலை திறம்பட நடத்த வந்தது போலவே தோன்ற அவனை தன்னை போலவே வளர்த்து வந்தார். அவனும் அளவில்லாத பாசத்தோடும் அதோடு திமிரோடும் வளர தொடங்கினான்.


உதித் பிறந்த ஆண்டிலேயே அமனும் பிறந்திருக்க இருவரும் மூன்று வயதில் பள்ளியில் ஒன்றாகவே சேர்ந்து படித்தனர். இருவருக்கும் தாங்கள் யார் எந்த குடும்பம் என்பதை அறியாமலேயே ஒன்றாக பழகி நல்ல நண்பர்களாயினர்.


அவர்களது ஐந்து வயது வரை எந்த பிரச்சனை இல்லாமல் தோழர்களாக இருந்தவர்கள் அவர்களின் தாத்தாவின் கண்ணில் இந்த நட்பு பட்டு அவர்களை அடியோடு பிரிக்க வழி வகுத்தது.

ரஜத் தன் பேரனிடம் இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லி அவன் மனதில் அமன் பற்றிய நட்பினை மறக்க செய்து நஞ்சினை விதைத்தார். அங்கு சக்கரபோர்த்தியும் அதையே செய்ய அமனால் தான் எளிதில் அவனை நட்பு வட்டத்தில் இருந்து அகற்ற இயலவில்லை.


இப்படியே எல்லாத்திலும் போட்டி பொறாமையோடு உதித் வளர , அமன் அவன் என்ன செய்தாலும் கண்டுக்காமல் இருக்க என வருடங்கள் ஓடியது. ஆனால் என்றும் போல உதித்தின் இந்த செயலை அவ்வளவு எளிதில் அவன் விட மாட்டான் . தக்க சமயத்தில் பாடம் கற்பிப்பான்.


*****


இதற்குள் அமலாவிற்கும் விபத்து பற்றி தொலைக்காட்சி நியூஸ் வழியாக தெரிய வர அவரும் அமனுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என பயந்து அவனுக்கு அழைக்க அவன் எடுத்த பாடில்லை. அவன் தான் இப்பிரச்சினை காரணமாக அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டிருந்தான்னே.

பிறகு தன் கணவருக்கு அழைத்து கேட்க அவரும் , தனக்கும் அமனுக்கும் எதுவும் இல்லை என சமாதான படுத்தி நைட்டிற்குள் எல்லாத்தையும் முடித்து விட்டு வந்து விடுவதாகவும் , அதுவரை வெளியில் வராமல் இருக்குமாறு அறிவுறுத்தி விட்டு வைத்தார்.


*****

அலுவகத்தை சுற்றிலும் நிறைந்த மக்கள் மற்றும் போலீஸ் கூட்டத்தால் அவனால் அங்கு செல்ல முடியாமல் போக அதே நேரம் அவன் தந்தையிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வர அவர்களின் மற்ற யாருக்கும் தெரியாத இன்னொரு அவுட்ஹவுஸ்க்கு வருமாறு அழைத்து விட்டு வைத்து விட்டார் இப்பிரச்சினைக்கான தீர்வை காண.

அமனுக்கும் வேறு வழி இல்லாததால் அங்கு செல்ல அவனது தந்தையுடன் அவர்கள் கம்பனியுடன் அவனது தாத்தா காலத்தில் இருந்தே இன்வெஸ்ட்மெண்ட் செய்து கொண்டிருக்கும் பங்கீட்டாளர்கள் , நிறுவனத்தின் நிதி பற்றிய ஆலோசகர்கள் மற்றும் குடும்ப வக்கீல் உம் அங்கு இருந்தனர்.


அந்த நீள்வட்ட மேசையில் அமர்ந்து இருந்த அவர்களை கடந்து தன் இருக்கையில் அமர்ந்தவன் அவர்களின் கருத்தை சொல்லுமாறு பணிக்க வயதில் மூத்த ஆலோசகர் ஒருவர் , "இந்த இஸ்யூ அ இன்னும் வளர விடாம இன்னைக்கு நைட்டுக்குள்ள முடிக்கணும் அமன்.. அதுக்கு தான் நாங்க எல்லாரும் இப்போ இங்க வந்துருக்கோம். நீ என்ன நினைக்கிற ?" .


அதற்கு அவன் , " நீங்களே யோசிச்சு வச்சுருப்பிங்களே சொல்லுங்க " என்னும் விதமாய் பார்க்க அவர் தனது திட்டத்தை கூறலானார்.

அதாவது இப்போதைக்கு உதித் தான் இதற்கு காரணம் என தெரிந்தாலும் ஆதாரம் இல்லாமல் அவனை இப்போதைக்கு ஒன்னும் செய்ய முடியாது. எனவே வேறு ஒருவனை இதை செய்ததாக கோர்ட்டில் ஆஜர் படுத்தி விட்டால் எல்லாம் சரி ஆகிறும் என முடிவு செய்தனர்.


ஆரிய சக்கரபோர்த்தி காலத்திலேயே இந்த மாதிரி பல சிக்கல்கள் அவருக்கு நேரும் போது அவற்றில் இருந்து விடுபட இப்படி செய்வது உண்டு. இதற்காகவே ஒரு அடியாள் குழுவை ஏற்பாடு செய்து இன்று வரை சம்பளம் குடுத்து தீனி போட்டு வருகிறார்கள்.


அது இப்போது அமனுக்கும் உதவி புரிகிறது. அதன்படி ஒரு அடியாளை அமன் மீது உள்ள முன்பகை காரணமாக இக்காரியத்தை செய்ததாக வாக்குமூலம் குடுத்து கோர்ட்டில் ஆஜராக சொல்லி , அவனும் அப்புரூவலாக மாறியதால் கோர்ட் இதற்கும் அமனுக்கும் அவனது நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தீர்ப்பளித்து அமன் மீது சுமத்தப்பட்ட கேஸை தள்ளுபடி செய்தது.

இனி அமன் கம்பனியே இந்த புராஜக்ட்டை தொடர்ந்து செயல்படுத்துமாறு உத்தரவும் கொடுத்தது. இவ்வனைத்தையும் ஒரே இரவில் நடத்தி முடித்தனர் அமன் மற்றும் அவர்களின் குழுவினர்கள்.


அனைத்தும் முடிந்து சாவகாசமாக தன் இருக்கையில் அமர்ந்து தன் அலைபேசியை எடுத்த அமன் அதில் எண்ணற்ற மிஸ்டுகால்கள் தன் அன்னையிடம் இருந்து வந்திருப்பதை கண்டு புருவம் சுருக்கி பார்த்தவன் பிறகே அந்த விபத்து பற்றிய நினைவு வர அதனால் இருக்கும் என நினைத்தவன் அவரையும் அவர் அழைப்பையும் புறம்தள்ளி விட்டு எழும்ப சட்டென்று அவன் நினைவில் பளிச்சென வெட்டியது இளாவின் முகம்.


"ஷிட்... எப்படி மறந்தேன் .?" என்று தன்னையே திட்டிவிட்டு இளா தந்தைக்கு அழைப்பு விடுக்க யாரும் எடுத்தபாடில்லை. அதில் தோன்றிய எரிச்சலில் எதோ முணுமுணுத்து விட்டு மணியை பார்க்க நேரம் நள்ளிரவு பன்னிரண்டரை என்று காட்ட "இப்போது போகலாமா?" என யோசித்தவன் , போய்தான் பாப்போம் என்று ஹாஸ்பிட்டல் நோக்கி காரில் விரைந்தான்.


நேராக இளா அனுமதிக்கபட்ட ஐசியூ அறையின் முன் நின்றவன் அங்கே ராஜேஷ் இல்லாமல் துஷாரா மட்டும் இருப்பதை கண்டு அவளிடம் போய்
"ம்ம்.. க்க்கூம்ம்.." என்று தொண்டைய செறும , நிமிர்ந்து பார்த்த துஷா "அமன் சர்..! " என்று எழுந்து நின்றாள்.


"Mr. ராஜேஷ் எங்கே ??"

"அங்கிள் , ஆண்ட்டி இவ்வளோ நேரம் இங்க தான் இருந்தாங்க இப்போ தான் வீட்டுக்கு கிளம்பினாங்க"


"ஓ..ஓகே.. ஹவ் இஸ் ஷீ..? ஷீஸ் ஃபைன் நவ் ? "


"யா சர். இளானி இஸ் ஆல்ரைட்..!" என சொல்ல அவளின் பெயரை இப்போது மனதில் அழுத்தமாக பதிவு செய்து கொண்டான்.


"இப்போ அவங்களை பார்க்கலாமா?" எனக் கேட்க " ம்ம் சூர் சர்.. இன்னும் அவ கண் முழிக்கல . டாக்டர் நைட் இல்லனா நாளைக்கு மார்னிங் கண் விழிப்பாங்கன்னு சொன்னாங்க. வாங்க சர் போலாம்" என்று அறைக்குள் கூட்டி சென்றாள்.


முகத்தில் அங்காங்கே பேன்டேஜ் போட்டு கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க முகத்தை நிர்மூலமாக வைத்து படுத்திருப்பவளை காணும் போது மெல்லிய வலி அவன் இதயத்தில் தோன்றியது.

அதை என்னவென்று அவன் உணரும் முன்னே அந்நேரத்தில் சீஃப் டாக்டர் ரவுண்ட்ஸ் வந்து இளாவின் அறைக்குள் நுழைய அங்கே அமனை கண்டதும் பேச்சு கொடுக்க அவனின் கவனம் அங்கு திரும்பியது.

அவரிடம் இளாவின் நலனை பற்றி கேட்டு விட்டு பின் துஷாரா விடம் நாளை வருவதாய் சொல்லி விட்டு வீட்டிற்க்கு கிளம்பி சென்றான்.


அவன் வீட்டிற்குள் வரும் போது அங்கு ஹாலில் அமலா அவனுக்காக உறங்காமல் காத்திருக்க அவரை கண்டு கொள்ளாமல் தன் அறைக்கு செல்ல மாடியேறியவனை "அமன் கண்ணா..!" என்று தடுத்தவர் அவனை தொட போக ஒற்றை கையால் அவரை தள்ளி நிறுத்தி "ஐம் ஃபைன்" என்று மட்டும் சொல்லி விறுவிறுவென படியில் ஏறினான்.


அவன் வீட்டினுள் நுழையும் போதே அவனை முழுதாய் கண்களால் ஆராய்ந்து அவனுக்கு எதுவும் இல்லை என்ற மன நிம்மதியுடன் கிட்ட சென்று அவனை அணைக்க நினைத்தவர் , அவன் தள்ளி நிறுத்தவும் மனம் நோக நின்றவர் அடுத்த நொடியே அவன் தன்னிடம் பேசியதை கண்டு சந்தோசத்தில் கண் கலங்கி தன் மகன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தது அந்த அன்புமிக்க தாயுள்ளம்.


தன் அறைக்குள் வந்த அமனுக்கு தான் பல வருடங்கள் கழித்து தன் அன்னையிடம் சாதாரணமாக பேசியதை கூட உணராமல் அவன் மனம் முழுவதும் ஹாஸ்பிட்டலில் கண் மூடி படுத்திருந்த இளாவின் முகமே வியாபித்திருந்தது. "இது என்ன புதுசா ஒரு ஃபீல்.?" என அவன் எண்ண அந்த எண்ணமும் அவனுக்கு பிடித்தது..




தொடரும்.....💜
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே..!


அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் ..🥰🥰 படித்து உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்க் சென்று பதிவிடுங்கள்😍😍நன்றி தோழிகளே..💜💜


அன்புடன்
ரசிகா💜


கருத்துத் திரி :👇

 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே 🥰🥰🥰

எல்லாரும் நலமா ??🥰🥰

ஒன்னும் இல்ல பா ud தராம என்ன பண்றன்னு நீங்க கேட்கலாம்😁😁 பட் இப்போ என்னால் ud தர இயலவில்லை பட்டுஸ்🤗🤗🤗 அதற்காக மன்னிச்சூ 🫣🫣 ஒரு ஒன் வீக் அப்புறம் ud ஓட வரேன் மக்களே அதுவரை காத்திருக்குமாறு கேட்டு கொண்டு இப்போது தற்காலிகமாக விடை (1 week தான் 🤪🤪) பெறுகிறேன் 🏃🏃🏃🏃



அன்புடன்

ரசிகா 💜
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -7

மும்பை மாநகரம் என்றும் போல் எல்லாருக்கும் பரபரப்பாக விடிந்தது. இங்கு ஹாஸ்பிட்டலில் இளாவின் அறைக்குள் நின்றிருந்தவர்களுக்கு மட்டும் தவிப்புடனே விடிந்தது. அதற்கு காரணம் இன்னும் இளானி மயக்கத்தில் இருந்து எழுந்த பாடில்லை. டாக்டர்கள், நர்ஸ் என பலரும் ஆங்கு கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க அது வேறு மற்றவர்களுக்கு பயத்தை கிளப்பியது.

எல்லாரையும் நன்றாக பயமுறுத்தி விட்டு சாவகாசமாக தன் கருமணிகளை மெதுவாக திறந்து செப்பு இதழ்களை சுருக்கி பார்த்தாள். முதலில் மங்கலாக தெரிந்த பிம்பங்கள் பின் செல்ல செல்ல தெளிவாக தெரிய ஆரம்பிக்கவும் தான் இருக்கும் இடம் வீடு போல் அல்லாமல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கவும் குழம்பியவள் இடப்பக்கமாக திரும்ப அங்கே டாக்டர் நர்ஸ் இருக்க கண்ணை சுருக்கி தனக்கு வலப்புறம் பார்க்க அவளின் அம்மா , பப்பா , துஷ் அவளையே பரிதவிப்பாக பார்த்தபடி இருக்க அப்போது தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள் .

"பப்பா , ம்மா நான் இங்க எப்படி..? ஆ..ஆ..அவுச்.!!" என்று தன் தலையில் ஏற்பட்ட காயம் வலி கொடுக்க முனங்கினாள்.

"இளா மா" ," ஏஞ்சல்" , "இளா" என ஒவ்வோருவரும் அவளின் முன சுணக்கத்தை பொறுக்காமல் அழைக்க "ஹா.. ஐம் ஃபைன் !" என்றாள் எல்லாருக்கும் பொதுவாக.

பின் அவளுக்கு சட்டென்று எதுவுமே நினைவு வராமல் போக எப்படி இப்படி ஆனது என்று துஷாரா விடம் கேட்க அவள் நடந்த அனைத்தையும் கூற
"ஓஓ.." என்று மட்டும் கேட்டுக் கொண்டாள்.

துஷாராவும் அமன் மேல் கேஸ் ஃபைல் ஆனது அதன் பிறகு நடந்த எதையும் சொல்லவில்லை . இடைப்பட்ட நாள்களில் இளாவுக்கு அமன் மீது உள்ளது வெறும் ஈர்ப்பு அல்ல உண்மையான அன்பு என்பதை உணர்ந்து கொண்டாள். அதை இளா புரிந்து கொண்டாளா என்பது அவளுக்கே வெளிச்சம்.

அதனால் இளா இருக்கும் நிலையில் இதை சொல்லி மேலும் அவளை கஷ்டபடுத்த விரும்பவில்லை.

டாக்டரும் அவளை நன்றாக செக்கப் செய்துவிட்டு இனி எந்த பிராப்ளமும் இல்லை நாளைக்கே டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று விட்டு சென்றார். மறக்காமல் அமனுக்கு கால் செய்து விவரத்தை கூறவும் நேராக ஆபீஸ் நோக்கி பயணித்தவன் யூ டர்ன் போட்டு இளாவை சந்திக்க போனான்.

இங்கு தன் பப்பா அம்மா விடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவர்கள் இதோ வருகிறோம் என்று சொல்லி விட்டு எங்கோ செல்ல அதற்காக காத்திருந்தவள் மெதுவாக "துஷ்" என அழைக்க "என்ன!" என்று புருவம் உயர்த்தி துஷாரா கேட்க ,

"அது வந்து.. அம்ம்.. க்கூம்ம் அமன்..?" என முடிக்கும் முன் , "உன் அம்முக் குட்டிக்கு ஒன்னும் ஆகலை " என்று கூறி கண்ணடித்தாள். அதில் கண்களை அகல விரித்து பார்த்தவள் "என் அம்முக்குட்டி ஆ ..?" என திணற "பின்னே என் அம்மக்குட்டி ஆ..??" என்று துஷா கலாய்க்க , "ம்ஹூம்... ம்ஹூம்.. போடி" என கன்னம் சூடேற சிணுங்கினாள்.

"நிஜமாவே ஒன்னும் இல்ல தான..?" லேசாக கண்கள் கலங்க கெட்டவளை அணைத்த துஷா, "ஹே லூசு உன் அன்பனுக்கு ஒன்னும் இல்ல..இதுக்கெல்லாமா அழுவாங்க" என்று கண்களை துடைத்து விட , "ம்ம்ம்ம்" என மூக்கை உறிஞ்சியவள் அப்புறம் உங்க எல்லாருக்கும் எதுவும் இல்லையே என கேட்க,

"அப்பாடா !!இப்போவாது கேட்டியே"

"போடி அதுலாம் இல்ல நான் கண் முழிக்கும் போதே உங்களை எல்லாம் ஸ்கேன் பண்ணிட்டேன்.. ஆல் ஆர் குட் !! சோ அப்போ கேக்கல. பட் இருந்தாலும் மனசு கேட்காம கேட்டுக்கிட்டேன் அவ்ளோ தான்" என முகத்தை வெட்டினாள் இளா.

"சரி டி பப்ளிமாஸ் ..! சும்மா ஃபன் ஃபன்" கூறி சிரிக்க முறைக்க முயன்று இளாவும் கடைசியில் சிரித்து விட்டாள். இருவரின் சிரிப்பு சத்தம் அந்த அறையையே நிறைத்தது.

*****

என்றும் வண்ண வண்ண விளக்குகளால் வெளிச்சமாக இருக்கும் அந்த ஃபார்ம் ஹவுஸ் இன்று இருளில் மூழ்கி கிடக்க அதன் நடு ஹாலில் இருந்த சோபாவில் தலைக்கீழாக படுத்து தலைப்பகுதி தரையில் விரிக்கும் மேட்டில் தொட்டு கொண்டும் , வயிற்றில் இருந்து கால் பகுதி வரை சோபாவின் சாயும் பகுதியில் இருக்க கண்களை மூடி கிடந்தான் உதித்.

அவனது வலது கையான கோவிந்த் என்பவன் ஹால்க்கு வெளியே நின்று கொண்டு உள்ளே போகவும் வெளியே வரவும் என அங்கையும் இங்கையுமாக நடந்து கொண்டு இருக்க , அந்த ஃபார்ம் ஹவுஸ் போட்டிக்கோவில் உயர்ரக கார் ஒன்று வந்து நின்றது. அதனை கண்டவன் விரைப்பாய் போய் சல்யூட் அடித்து டோரை திறக்க உதித்தின் தந்தை அமித் இறங்கி வீட்டுக்குள் சென்றார்.

அவர் ஆர்ப்பாட்டமாக "ஹலோ ! மை சன்.. ஹவ் ஆர் யூ ?" என்று கூறிக்கொண்டு அவனிடம் வர , அவரின் வரவை உணர்ந்தும் கண்களை திறவாமல் படுத்திருந்தான்.

"என்ன மை சன் ? இப்படி பொறுப்பே இல்லாமல் தலைகீழா படுத்து இருக்க. கமான் குயீக்..! பீ ரெடி !"

"எதுக்கு ?" என்று சலிப்புடன் கேட்க , "ஹான்.. உன் மாமியார் வீட்டுல இருந்து கையில அரெஸ்ட் வாரன்ட்டோட உன்னை கையும் களவுமாக பிடிக்க வாராங்கள்ள அதுக்கு தயாராக வேண்டாம்..?" ஏளனம் வழிந்தது அவர் குரலில்.

"வாட்... வாட் தி ****... அப்போ இதுக்கெல்லாம் நீங்க தான் காரணமா யூ****" கோவத்தில் கொதித்தான் உதித்.

"எஸ் மை சன்.. நானே தான் .. தன் பிள்ளை தப்பு பண்றதை தட்டிக் கேட்டு தக்க தண்டனை வாங்கிக் குடுக்குறது தான ஒரு நல்ல தந்தையோட கடமை." என்றார் அமித்.

"நீ எல்லாம் ஒரு அப்பாவா ?" பாய்ந்து அவர் சட்டையை பிடித்திருந்தான்.

சிரிப்புடன் அவன் கைகளை எடுத்து விட்டு "இதை நான் மாத்தி கேட்கணும்டா.. நீ எல்லாம் ஒரு பிள்ளையா ச்சீ... எத்தனை பேரோட உயிரை உன் வீணான போட்டி குணத்துக்காக கொன்றுருக்க .. உன்னலாம் கொன்னாலும் தப்பில்லைடா நாயே !!" என்று சீறினார்.

"ஹா.. ஹாஹா..ஹா.. இவ்ளோ பேசுற நீ உன் மகனை உத்தமனா வளர்க்க வேண்டியது தான.. எதுக்கு உன் அப்பன்ட்ட தாரை வார்த்து குடுத்த ? எல்லாம் உன்னால தான் நான் இப்படி நிக்குறேன்..இப்போ என்னமோ பெரிய யோகியன் மாதிரி பேசாத"

"ஆமாடா நீ சொல்றதுலாம் உண்மைதான் அதை நான் செஞ்சுருகனும் உன்ன அவர்ட்ட விட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு நான் இன்னும் வருந்தாத நாளே இல்லை.. என்ன செய்யுறது எல்லாம் முடிஞ்சு போச்சு ..இனி உன்ன திருத்ததான் பாக்குறேன் ஆனா நீ உன்னை இன்னுமே தரம் தாழ்த்திட்டே போற வேண்டாம்பா இதோட விட்ரு.. உள்ளே போயிட்டு வெளிய வரும் போது நல்லவனா திருந்தி வா உதித்" என்று ஒரு தந்தையாய் பரிதவிப்பாய் கேட்க ,

அதற்கு ஏளன சிரிப்பொன்றை சிந்தியவன் எதோ கூற வரும் முன் வீட்டின் முன்னால் சைரன் வைத்த போலீஸ் கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்க உடல் விரைக்க அப்படியே நின்றான்.


*****

என்னதான் உதித் தன் தாத்தாவிடம் வளர்ந்தாலும் அமித் தன் மகன் மீது எப்போதும் ஒரு கண் தள்ளியே வைத்திருப்பார். அவனுக்கு அளித்த சலுகைகள் , ஃபிரீடம் எல்லாம் சேர்த்து அவனை திமிராகவும் தேவையில்லாத பழக்கத்திற்கும் செல்லவும் வழி வகுத்தது. இதெல்லாம் அவன் தாத்தா கண்டுக் கொள்ளாமல் விட அமித் தான் மகனை நினைத்து கவலை கொள்வார்.

அந்த தவறான பழக்கத்தில் போதை பழக்கமும் ஒன்று. அந்த நேரத்தில் எல்லாம் தன்னை மறந்த நிலையில் அவன் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் சமயத்தில் அவர் தான் மகனை காப்பாற்றுவார்.

ஆனால் அவனோ இன்று வரை தாத்தாதான் தன்னை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டதாக நினைத்து கொண்டிருக்கிறான். அதற்காகவே அவன் பின்னால் ஒரு ஸ்பை-ஐ போட்டு அவன் எங்கு செல்கிறான் என்ன செய்கிறான் போன்ற விபரங்களை அறிந்து கொள்வார்.

அதன்படி அவனது சொகுசு பங்களாவில் அவனுக்கே தெரியாமல் அவர் வைத்த சிசிடிவி கேமராவில் அவன் அந்த பாம் பிளாஸ்ட் பண்ணதை பற்றி பேசிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ந்தவர் உடனே அந்த புட்டேஜை சேகரித்து அமனிடமும் போலீஸ் கமிஷ்னரிடமும் கொடுத்து உதித்தை காட்டி கொடுத்தார்.

அதனால் தான் ஒரே இரவில் அமனால் அந்த கேஸில் இருந்து வெளிவர முடிந்தது. அவனுக்கு பதிலாக ஒருவன் சரண்டர் ஆனாலும் இருபத்தைந்து உயிர்கள் சம்பந்தபட்ட விசயமானதால் அவனின் வாக்குமூலத்தை ஏற்க நீதிமன்ற ஆலோசகர் கூட்டம் மறுக்கும் சமயத்தில் அமித் அந்த புட்டேஜ் காப்பியை அமனுக்கு அனுப்பினார்.

அமனும் அவருக்கு ஒரு மகன் போலவே. அவர் அப்படி தான் பார்க்கின்றார். அதில் தன் மகனை காட்டிலும் தன்னை காப்பாற்ற நினைக்கும் அந்த நல்ல உள்ளதை நினைத்து நெகிழ்ந்த அமன் அதே சமயம் உதித்தால் அவர் அடைந்திருக்கும் மன வேதனையை எண்ணி தானும் மனம் வருந்தினான்.

அமித் குடுத்த கம்பிளைன்ட் பேரில் இரண்டு நாள்களாக போலீசார் உதித்தை தேட அவனோ போலீஸ் தன்னை பிடிக்க வருவதை அறிந்து தலைமறைவாகினான். அமித்தும் அவன் அடிக்கடி செல்லும் இடங்களை எல்லாம் போலீசுக்கு இன்ஃபார்ம் பண்ண எங்குமே அவன் இல்லை.

ஒரு வழியாக அவன் யாருக்கும் தெரியாமல் வாங்கி போட்ட இந்த ஃபார்ம் ஹவுஸ்க்கு வந்து தஞ்சம் அடைந்திருப்பதை எப்படியோ அறிந்த அமித் போலீசுக்கும் தகவல் சொல்லிவிட்டு இங்கே வந்து பேசிக் கொண்டிருக்கையில் போலீசும் வந்துவிட்டது.

*****

வீட்டினுள் அதிரடியாக நுழைந்த போலீஸ் படையினர் அங்கு ஹாலில் உதித் நிற்பதை கண்டு அவனிடம் விரைந்து சென்று , "உதித்.. நீங்க மிஸ்டர்.அமனோட கவர்ன்மென்ட் புராஜக்ட் நடக்கும் இடத்தில் பாம் ப்ளாஷ்ட் பண்ண குற்றத்துக்காக உங்களை அரெஸ்ட் பண்றோம் . அதுக்கான வாரன்ட் அப்புறம் ஆதாரமும் இருக்கு சோ நீங்க எந்த எஸ்கியூசும் சொல்ல முடியாது.. சோ போகலாமா ??" என எகத்தாளமாக இன்ஸ்பெக்டர் ஒருவர் கேட்க ,
கையை வாயில் புறமாக நீட்டி 'போகலாம்'என காட்ட ,

பின் திரும்பி "ஒன் மினிட்" என்று விட்டு தன் தந்தையிடம் வந்தவன் ,
"ரொம்ப சந்தோசமா இருக்கிங்க போல , இந்த அடிபட்ட பாம்பு இருக்குல்ல அது திரும்பி வரும் போது ரொம்ப வீரியமிக்கதா வருமாம். வந்து தன்னை அடிச்சவனை பார்த்து பட்டுனு கொத்தி போட்டு போயிருமாம்.. அது மாதிரி தான் நான். இன்னும் கொஞ்ச நாள் தான்.. நான் திரும்பி வரும் போது உங்க ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன்" என்றவன் போலீஸ் காரில் ஏறி சென்று விட்டான்.

*****

இங்கோ ஹாஸ்பிட்டலில் இளாவும் துஷாராவும் தங்களுக்குள் வளவளத்தபடி இருக்க பேச்சு அப்படி இப்படி என அவர்கள் ஃப்ரெண்ட்ஸ் ஸ்சோனிற்குள் நுழைய துஷாரா அவர்களின் இன்னொரு காலேஜ் மேட் ரியாவை பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

"இளா உனக்கு ஒரு விசயம் தெரியுமா நம்ம ரியாக்கு ஒருத்தன் ரெட் ரோஸ் போக்கே குடுத்து புரப்போஸ் பண்ணிட்டானாம் டி "

"என்ன அந்த சோடாபுட்டிக்காஆஆ.." வாயை பிளந்தாள் இளா.

"ஹே.! அதுலாம் காலேஜ் டைம்ல பா.. இப்போ அவ ரேஞ்சே வேற நம்மல விட அழகாயிட்டா பாத்துக்கோயேன்"

"ஹ்ம்ம்.. பார்த்தியா அவளுக்கு வந்த வாழ்வ.. அவளுக்குலாம் ஒருத்தன் புரப்போஸ் பண்றான்.. ஆனா இவ்வளோ அழகா இருக்குற என்னை இந்த அம்மு கண்டுக்கவே மாட்டேங்குறான்.. ஒருநாள் அவன் என்னை தேடி வருவான்ல அப்போ அவன சுத்தல்ல விடுறேன்.." என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள ,

அதைக் கண்டு தலையில் அடித்த துஷா "யாரு நீ..? இப்போ அமன் வந்து ரெட் போக்கே எடுத்து உன்கிட்ட நீட்டி 'ஹனி.. ஐ லவ் யூ ' னு சொன்னா உடனே இப்போ சொன்னியே அதெல்லாம் மறந்துட்டு அவன் கிட்ட ஓடிருவ..சும்மா சீன் போடாத டி " என்று சொல்லி முடிக்கவும் ,

அவர்களின் அறைக் கதவை தட்டி விட்டு ரெட் கலர் ரோஜா பூக்களால் சுற்றி கட்டப்பட்ட அழகிய போக்கேவுடன் உள்ளே வந்த அமன் நேராக இளானியிடம் சென்று
"ஹனி... ஐ லவ் யூ..!! " என்று நீட்ட அதிர்ச்சியில் படுக்கையில் இருந்து படக்கென்று எழுந்தமர்ந்தாள் இளானி..



தொடரும்...🏃🏃🏃


 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பட்டுஸ்..💜💜

எல்லாரும் எப்படி இருக்கீங்க..?🤗🤗
சொன்ன மாதிரியே ஒரு வாரத்தில் யூடி உடன் வந்துவிட்டேன்.. படித்து உங்க கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பட்டுஸ் 😍😍 கதைக்கு லைக் போடுறவங்க கொஞ்சம் கமென்ட் உம் பண்ணிட்டு போனா கொஞ்சம் எனக்கும் பூஸ்ட் ஏத்துன்ன மாதிரி இருக்கும்😁😁🏃🏃


அன்புடன்
ரசிகா💜💜


கருத்துத் திரி:

 
Status
Not open for further replies.
Top