All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீக்கா...

உங்க ரூட் எப்பவும் தனி என்பதை இந்த கதையிலும் நிரூபிச்சுட்டிங்க..

எனக்கு நம்ம ஜோசபின் வான்மதி போட்ட கமெண்ட் தான் ஞாபகம் வருது.

நீங்க ரைட்ல கையைக் காட்டி லெவ்ட்ல இன்டிகேட்டர் போட்டு.. எங்களை குழப்பி விட்டுட்டு நீங்க எப்படி நினைக்கறீங்களோ.. அப்படி ஸ்ட்ரைட்டா கதையை கொண்டு போவீங்க..

இந்த கதையிலும் அதுதான் நடந்தது. இராவணன் என்ற தலைப்பை பார்த்து.. டெரரர் ஆன்டிஹீரோ ரேன்ஜ்கு நினைத்து நாங்க.. ஆர்மி கோஷம் போட்டு.. ஹீரோயின் ஆர்மி கூட சண்டை போட்டால்.. இராவணனுக்கு அழகாய் அற்புதமாய் விளக்கத்தை இந்த கதையின் மூலம் தந்து அசத்திட்டிங்க..

வழக்கம் போல்.. நீங்க காட்டிய வெள்ளை சமாதான கொடி.. (இறுதி யூடிகள்) சூப்பர்..

நேர்மறை கருத்துக்களை கொண்ட அருமையான கதை..ஶ்ரீக்கா

வாழ்த்துக்கள்..
 
Last edited:

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்.. அற்புதமான வித்தியாசமான காவியம் தங்கள் பாணியில் ஆர்ப்பாட்டமாய்... இக்காவியத்தில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்கள் அன்பும் காதலும் மனதை நிறைத்து கருத்தில் கலந்து எங்கள் முன் நிழல் ஒவியங்களாய்....

கிருஷ் ராதை தம்பதியினரின் காதல் எங்கள் மனதை நெகிழ வைத்து எங்கள் முகத்தில் நிரந்தர புன்னகையை பூக்க வைத்து விட்டார்கள்... நிஜம் தான் ஸ்ரீ மேம் கிருஷ் தன் பேருரிமையை ராதை மேல் செலுத்தியதால் மட்டுமே அவள் அவன் ஆண்மையையே இழிவுப்படுத்திய போதும் அவனால் அவள் மேல் முதலிலிருந்தே மாறாத காதல் கொண்டு அவளை இம்மியும் தரம் தாழ்த்தாமல் தன்னில் சரி பாதியாய் அளவற்ற காதலுடனும் அவள் வேதனையுறும் போது தாயுமானவனாய் தாங்கி அரவணைத்து கொள்ள முடிந்தது... அற்புதமான காதல் தம்பதினர்..

கிருஷ் ராதைக்கு அற்புதமான சரிபாதியாகவும், பெற்றோருக்கு தலை சிறந்த மகனாகவும், தம்பி தங்கைக்கு பொறுப்பான அண்ணனாகவும் மற்றும் பாதுகாவலனாகவும், தன் நண்பனான மணிக்கு அனைத்துமாகவும், ஊர் மக்களுக்கு காக்கும் கிராமத்து கடவுளாகவும் எங்கள் நெஞ்சை நிறைத்து மறக்க முடியாதவானாகினான். அற்புதமானவன் நம் கிருஷ்..

கண்ணன் ஒரு தாயுமானவன் அனுவிற்கு... தன் பொறுமையாலும் அனுவிற்க்காக எதையும் செய்ய துணியும் குணமே நம் ராதுவை ஈர்த்து அவன் மேல் காதல் பைத்தியமாகி கண்ணனையும் தன் மேல் க்ரேஸியாக்கி.... ஹா! ஹா! நம் அதிரடி ராதுவிற்கு பொறுமையின் சிகரமாகிய கண்ணன்... ராது சின்ன பாண்டியே தான்.. ஹா! ஹா!

பாண்டியனை நினைத்தாலே புன்னகை மட்டுமல்ல தன்னை மறந்து அனைவரையும் சிரிக்க வைத்தவன்... இப்படி கூட ஒருத்தி மேல் காதல் கொள்ள முடியுமா? அப்பப்பா! அவளை கிணற்றில் வைத்து தாலி கட்டி சாதனை புரிந்து சரிதா அவன் காதலை புரிந்து கொள்ளும் வரை காத்திருந்து.. அழகான ஆர்ப்பாட்டமான காதல்...

நந்தினி மணி மேல் வைத்த காதலும் அதிரடியானதே...

உதயன் மஞ்சு காதல் ஓடும் நதி நீர் போல அழகானது...

கிருஷ் மணியின் புரிதல் அற்புதமானது... எந்த ஒரு அவனுக்கான நிகழ்ச்சியையும் கிருஷை முன்னிறுத்தி செய்தது அற்புதம்.. கிருஷ் மணிக்கு நண்பன் மட்டுமல்ல சகலமும் அவன் தான் என நிரூபித்தவன்...

கனகராஜ் செய்த துரோகத்தால் அனுவின் அம்மாவாகிய அபியின் பழி வாங்கும் படலம் ஆரம்பிக்க இவருக்கு துணையாக அபியின் அண்ணாகிய வேதாச்சலம் மாதவியின் குடும்பத்தை பழி வாங்க உதியமாகிய வஞ்சனை அனுவை கடத்தி சென்று கொல்லும் நிலைக்கு தள்ளியது... நாணயத்திற்கு இரு பக்கம் என்பது போல் அவரவருக்கு ஒவ்வொரு நியாயங்கள்...

மன்னிக்க முடியாத ஒரு கதாபாத்திரம் விக்னேஷ்.. இவனை தீயிலிட்டு கொளுத்தியது சரியான தண்டனை..

சிவசங்கரன் அற்புதமான தந்தை.. தனக்கு பிறவா பெண் குழந்தையான அனுவிற்கு தாயும் தந்தையுமாக மாறி அவளே சகலமும் என்று அவளுக்காகவே வாழ்த்து அனுவின் துன்பத்திலிருந்து மாற்றி கண்ணனை துணையாக வைத்து அவளுக்காகவே உயிர் துயர்ந்தவர்... எங்கள் நெஞ்சில் நிறைந்து இது போல் ஒரு தாயுமானவன் தனக்கு உண்டோ என ஏங்க வைத்தவர்... அற்புதம் ஸ்ரீ மேம்..

தாங்கள் படைத்த ஒவ்வொரு உணர்வு பூர்வமான எழுத்துக்களும் எங்கள் முன் நிழற் படங்களாய் தோன்றி நாங்களும் அதில் வாழ்ந்து இது முடிவுற்ற தருவாயில் இனிமேல் இவர்களுடன் நாங்கள் பயணிக்க முடியாதா என எங்களை ஏக்கம் கொள்ள செய்து விட்டீர்கள் ஸ்ரீ மேம்...

எங்கள் மனங்களை கொள்ளை கொண்ட அற்புதமான காவியம்...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 
Last edited:

Shanthigopal

Well-known member
சாந்திக்கா.. எப்படியிருக்கீங்க..😍😍😍

வாவ்.. உங்க விமர்சனம் படிச்சு எவ்வளவு நாள் ஆச்சு.. செம போங்க..
எப்படி இருக்கீங்க ராஜி... பத்திரமாக இருக்கிறீர்களா?
 
Srikala Tamil Novels சிஸ்டர் எழுதிய "ராதைக்கேற்ற ராவணன்"...
கிருஷ்ணார்ஜுன்... ஆளுமையும் அதிரடியும் தெளிவான சிந்தனையும் கொண்ட அரசியல்வாதியான ஒரு சூப்பர் ஹீரோ ❤❤ இவன் கட்டம் கட்டி ஒவ்வொருவரையும் தூக்குவது அருமை அருமை 👏 தனக்கு வலிக்க வைத்தவர்களை இவன் வச்சு செய்கிறான்... அவர்களுக்கு இவன் தரும் தண்டனைகளும் மிகச் சரியே 👍 தன் மனம் கவர்ந்தவளின் கிருஷ் என்று ஒரு சொல்லுக்கு மட்டும் மட்டுப்படும் இவனின் காதல் மனது அழகு...🥰 தன்னை வலிக்க செய்தவளை இவனும் வலிக்க செய்ய முயல்கிறான் ஆனால் அவளின் பக்க நியாயங்களை தெரிந்துகொண்டு இவன் ஆடும் ஆட்டம் அபாரம்... அனுராதா.... அவனின் ராதே... தன்னவன் தன்னால் கொண்ட மன வலிகளை போக்க இவள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அறியா வயதில் இவள் தெரியாமல் செய்த செயலால் இவளுக்கு ஏற்பட்ட வலிகளும் அதிகம்...
கண்ணன்... என்ன ஒரு அருமையான கதாபாத்திரம்... பாண்டியன்... சரிதா.. அதிரடியான இவனின் காதலும் அழகோ அழகு 🥰😍 உதயன் மஞ்சரி ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான காதல் 🥰 மணிமாறன.... எப்பொழுதும் நண்பனுக்கு துணை இருப்பவன் இவனின் நட்பும் அழகு நந்திதா உடனான இவனின் காதலும் அழகு 😍🥰
அபிராமி...வேதாசலம்.. சித்ரா.. இப்படிப்பட்ட மனிதர்களோடு தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 😞 சரியான தண்டனை இவர்களுக்கு.. ஒவ்வொரு அத்தியாயத்திற்கு பின்பும் நம்மை குழப்பத்திலேயே அடுத்தடுத்து என்ன என்ற ஆவலிலும் வைத்திருக்கிறார் ஆசிரியர் ...
ஒரு அருமையான கதை கொடுத்ததற்கு மிக்க நன்றிங்க sis...
Good luck dear 💐🥰❤
Keep rocking 🥰💐🌹
 

vijirsn1965

Bronze Winner
mam kadhai superb solla vaarthaikale illai avvalavu arumai ravananuiku koduththa velakkam unmail romba arputham perrurumaiudaiyavan kandippaha krishnarjun ninaivuiku varuvaan very very nice superb arumai mam(viji)
 

ilakkiyamani

Bronze Winner
hai mam கடைசி பதிவுகள் அனைத்தும் அருமை ,ராவணணுக்கு நிங்கள் கூறிய விளக்கம் அருமை. அழகான காதல் கதை, இனிமையான முடிவு சூப்பர்ப் sri mam.ungalin ella kadhaiyaiyum poondrue intha kadhaiyum migavum arumai :love:😍:love:
 

thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் மேடம்,

ராதைக்கேற்ற ராவணன்...இந்தத் தலைப்புக்கே உங்களுக்குத் தனிப் பாராட்டுக்கள் அளிக்க வேண்டும்...ராவணன் பேருரிமையுடையவன்...க்ருஷ்ணார்ஜூன் கடைசியில் தன் பேருரிமையை நிலைநாட்டுகிறான்.(y)(y)(y)

எத்தனை கதாபாத்திரங்கள்... ஜோடிகள் மட்டுமே ஐந்து...ஆனால் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைத்து ஜோடிகளுக்கும் அவரவர்க்குத் த்குந்த முக்கியத்துவம் தந்து...வாய்ப்பே இல்லை மேம். :smiley7::smiley7::smiley7:

பொதுவாக இந்த மாதிரி கதைகளில் எனக்கு பெயர்கள் அதிகம் நினைவில் இருக்காது...முக்கிய கதாபாத்திரங்கள் தவிர...ஆனால் ராதைக்கேற்ற ராவணன் கதையை யாரிடமாவது சொல்லச் சொன்னால் அழகாக எல்லா பாத்திரப் பெயர்களையும் நான் சொல்லி விடுவேன்...இதை உங்கள் எழுத்தின் சக்தியாகவே பார்க்கிறேன் நான்.🤝🤝🤝

ஆரம்பத்திலிருந்து கதைக்கான மீம்ஸ்களை பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். உடனே படிக்க வேண்டும் போல் ஆசையாக இருந்தும் கதை முடியட்டும் என ஆர்வமாகக் காத்திருந்து படித்து விட்டேன்.😊😊😊

அருமையான கதை...இதைப் போல் நீங்கள் இன்னும் நிறைய படைப்புக்களைத் தந்து எங்களை மகிழ்விக்க ஆசை கொள்கிறேன் மேம். 😍😍😍😘😘😘🥰🥰
🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க ராஜி... பத்திரமாக இருக்கிறீர்களா?
நாங்க நல்லாயிருக்கோம்..

Plz.. stay safe and happy..
 
Top